Categories
On-Going Novels வேத கௌரி

அத்தியாயம் – 12

Free Download WordPress Themes and plugins.

உயிர் -12
கிராமத்திற்க்கு சென்ற சரவணன் , மாசிலாமணியின் வீடு விசாரித்து செல்ல …”அடடே சரவணா ..வாப்பா…இன்னைக்கு வரேன்னு சேதி சொல்லியிருந்தால் நானே உன்னை அழைக்க வந்துருப்பேன் ..வீட்டை கண்டுபிடிக்க கஷ்ட்டப்பட்டியா…?”
“இல்லை மணி இது என்ன டவுனா வீடு தெரியலைன்னு சொல்லுறதுக்கு ,உன் வீட்டை கேட்டவுடனே ,இதோ இந்த தம்பி தான் கூடவே வந்து விட்டுது ..”என அருகில் இருந்த இளைஞனை காட்ட …
“ ஆமாம் சித்தப்பா ,அவரு நம்ம கோவில்கிட்ட உங்க வீட்டை பத்தி விசாரிச்சுட்டு இருந்தாரு , நான் இந்த பக்கம் தான் போறேன் வாங்கன்னு கூட்டிட்டு வந்தேன் ..யாரு உங்க சொந்தமா …? ஆர்வத்துடன் விசாரிக்க ….
“ என் சிநேகிதன்பா…தாசில்தாரா இங்க மாத்தலாகி வந்துருக்காரு ..” என பெருமையுடன் சொல்ல …
 மடித்து கட்டிய வேட்டியை கீழிறக்கி “ஐயா வணக்கம் “ என்று பணிவு காட்ட ..
 அவனின் மரியாதையை கண்டு புன்னகை முகத்துடன் தலை அசைத்து ஏற்று கொண்டார் சரவணன் .
 “சரிங்கையா ,நீங்க ரெஸ்ட் எடுங்க பிறகு வாறன் … என்று புறப்பட…
“மாசி.. உங்க ஊர் கோவில் ரொம்ப பிரபலம்ன்னு கேள்விப்பட்டு இருக்கேன்,ஆனா இப்போ தான் பார்த்தேன் , ரொம்ப நல்லாயிருக்குப்பா …”
“ஆமாம் சரவணா , கோவில்ல உள்ள மூலவர் சுந்தர ராஜ பெருமாள்  பதினெட்டு அடி உயரத்தில ,திருமகள் ,நிலமகள் சகிதம் நின்ற திருக்கோலத்தில் இருக்கிறார் ,இங்கிருந்து பார்த்தால் ஸ்ரீரங்கம் ராஜ கோபுரமும் ,திருச்சி மலைக்கோட்டையும் பார்க்க்கலாம்ப்பா …”என்று பெருமையுடன் சொன்னவாறே வீட்டிற்குள் அழைத்து சென்றார்  ..
சரவணன் அழகிய மணவாளம் வந்து கோதையின் வீட்டில் குடியேறி ..ஒருவாரம் சென்றிருக்க , விரிந்த விழிகளும் ,திறந்த வாயுமாக, தட்டுடன் தொலைக்காட்சியை பார்த்து கொண்டிருந்த சிற்பிகாவின் அருகிலேயே சோபாவில் அமர்ந்த சரவணன் ,”கொடும்மா ,நான் ஊட்டி விடுறேன் ..” என்று உணவை ஊட்டி கொண்டிருந்தார்.
அவளுடைய முகத்தையும் ,திரையையும் மாறி மாறி பார்த்தவர் …” சாப்பிடுறப்போ இதெல்லாம் பார்க்கணுமாடா செல்லம் ..?”என கேட்க, அவள் டிவியில் கணவன் மனைவி சண்டையிடுவதையும் அதை ஒரு பிரபலம் தீர்த்து வைப்பதையும்  பார்த்து கொண்டுந்தாள்.. 
“ஏம்ப்பா ,பார்த்தா என்ன ..?”…
“ தீர்வு சொல்லுறேன்னு ஒரு  குடும்பத்துக்குள்ளயே காதும் காதும் வைச்சு முடிக்க வேண்டிய பிரச்சனையை , இப்படி  ஊருக்கே வெளிச்சம் போட்டுக் காட்டுறதும் , மேலும் அவங்க உணர்ச்சியை தூண்டி விட்டு கீழ்த்தரமா பேச வைக்குறதும் நல்லாவாயிருக்கு …இதை பார்த்து மக்கள் திருந்தவா போறாங்க? … இல்லை அறிவா வளர போகுது ..? போம்மா..”  என குறை பட …. 
“ஐயோ ..அறிவை வளர்க்குறதுக்காக  இல்லைப்பா ..’நாலு விஷயம் தெரிஞ்சுகிறதுல ,தப்பே இல்லை …!”..
“ஒழுங்கா ,முதலில் சாப்பிடு ,பிறகு தெரிஞ்சுகலாம்.. நேரமாகுது ..”
“ப்ச் ,ஏன்பா தொல்லை பண்றீங்க,நம்ம தாடிபுலவர்  என்ன சொல்லியிருக்காரு தெரியுமா …?”…
“என்ன  சொல்லியிருக்காரு ..”
 “ காதுக்கு வேலையில்லாத போது வயித்திக்கு “ஈ “யின்னு  சொன்னார் …”
 “ என்னது ..??”ஈ, ஈ”…  என்று குழப்பமாக கேட்கவும் ..
 “ ஐயோ …ஈ ஈ ன்னு இழுக்காதிங்க ஜஸ்ட்  ஈ  அவ்வளவுதான்,“ஈ ன்ன, ஈ இல்லை, சோறு துன்னுன்னு அர்த்தம் …!! கிண்டலாக சொல்ல
  “நானும் அதைதான் சொல்றேன் ..” என்றார் சிரித்தபடியே ..
 “ஐயோ அப்பா ,காதுக்கு வேலையில்லாதப்ப தான் ,சாப்பிட சொல்லியிருக்காரு ,நான் இப்போ வேலை கொடுத்து இருக்கேன் ,உங்களுக்கு வெளக்கம் சொல்லியே முடியாது போல, இப்படி அறிவாளி பிள்ளையை பெத்துட்டு ஏன்தான் இப்படி மக்கா இருக்கீங்க தெரியலை ….”
 “ சரி சரி நான் மக்காவே இருந்துட்டு போறேன்  , என் பொண்ணுதான் இவ்வளோ அறிவா இருக்காளே ..அது போதும் எனக்கு …!..முகம் முழுவதும் மலர்ச்சியும் பெருமிதமாய் சொல்லவும் ,சிற்பிகா அப்படியே உருகி போனள்…               
 “ம்ஹும் .இத்தனை வருஷமா ,அம்மா இல்லாத குறை தெரியாம வளர்த்துயிருக்கீங்க,   நீங்க அப்பாவா கெடைச்சதுக்கு நான் புண்ணியம் செஞ்சு இருக்கணும் ..” என்று கலங்கியவளை தோளில் சாய்த்து ..”காலேஜ்க்கு கிளம்புடா நேரமாச்சு …” என்றார் …
 கல்லூரிக்கு கிளம்பி வந்தவளிடம் ,” அறிவு மட்டும் இல்லை, அழகிலும் எந்த குறையும் இல்லை ,மகாலட்சுமி மாதிரி இருக்கடா காமாட்சி ..” என பெருமையாக சொன்னவரை …
 கால்களை தரையில்  உதைத்து..” அப்பா  ..உங்களுக்கு எத்தனை தடவை சொல்லுறது  அழகா சிற்பிகான்னு பேர் வைச்சுட்டு இப்படி காமாட்சின்னு பழம்பஞ்சாங்கம் பேரை சொல்லாதீங்கன்னு …” என்று சினுங்கினாள் …
 “அதில்லடாமா ….நம்ம வழக்கப்படி முதலில் குலதெய்வம்  பேர் வைச்ச பிறகு தான், நமக்கு பிடிச்ச பேர் வைக்கணும் , அதுபடி உனக்கு முதலில் வைச்சது தான் காமாட்சி ….” உனக்கு பிடிக்கலைன்னா இனி அப்படி சொல்லமாட்டேன் …”
 “ அந்தபயம் இருக்கட்டும்  சரவணா ….”
 “அப்பா பெயரை சொல்லுறியா கழுதை ….என்று காதை பிடித்து திருக …
 “பேர் சொல்ல பிள்ளை வேணும்ன்னு சொல்லவேண்டியது,அப்புறம் நாங்க பேர் சொன்னா அடிக்க வேண்டியது .. என்ன கொடுமைடா ..”
 “சரிடா ..வா புறப்படலாம் நேரமாகுது …சிற்பி நான் உன்னை காலேஜ்ல விட்டுட்டு காரை சர்விஸ்க்கு விட்டுடுறேன் …மதியம் உன் காலேஜில் வந்து கொடுத்துடுவாங்க …நீ எடுத்துட்டு வந்துடுறியாம்மா …இன்னும் இந்த இடம் உனக்கு பழகலையே வழி தெரியுமா ….”
 “சரிப்பா …நான் வழி கேட்டு வந்துடுறேன்ப்பா…ஒன்னும் பிரச்சனையில்லை …”என்று சொல்ல இருவரும் புறப்பட்டு சென்றனர் …       
 கல்லூரி கேண்டீனில்   டீ வாங்கி கொண்டு திரும்பியவளை  யாரோ வேண்டுமென்றே இடிக்க , சூடான டீ அவள் கை முழுவதும் பரவியது ….பழக்க தோஷத்தில் “முட்டாள் ..” என்று சிற்பிகா திட்ட , இடித்தவனுடன் இருந்தவர்கள் “நீயும் தெரியாம இடிச்ச ,அவனும் தெரியாம இடிச்சான் ,அவனை முட்டாள்ன்னு திட்டுற ,நீ ரொம்ப பெரிய அறிவாளியா..? என்று கேள்வி எழுப்பி வம்பு இழுக்க ஆரம்பிக்க …
 கல்லூரியில் ncc மாணவர்களுக்கு தனது விடுமுறையில் அவன் நண்பர்களுடன் பயிற்சியளிக்க வந்த சித்தார்த் , பயிற்சி முடித்து கேண்டீன் சென்று அமர அங்கு சிற்பிகா அமர்ந்து இருப்பதை  பார்த்து அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை ..” ஊர் ஊரா  உன்னை தேடி அழைஞ்சா நீ இந்த காலேஜா ..” என்று வியந்து …“, திருத்தமான முகமைப்பு ,நிறச்சாயம் தேவைபடாத நீரோட்டம் மிக்க உதடு .’ என மனதில் உருவகிக்க …. “இப்படி ரசிக்க தான் தேடுனியா …மாறிப்போன அந்த தகரத்தை கொடுக்கன்னு பொய் வேற …”  என்று மனச்சாட்சி இடித்துரைக்க ….அதை அப்படியே அமிழ்த்தி ,அவளுக்கு தெரியாமல் அவளை ரசிக்க தொடங்கினான் ..
சிற்பிகாவை ஆரம்பத்தில்  இருந்தே பார்த்து கொண்டுயிருந்த சித்தார்த் பார்வையில் , சிலர் சிற்பியிடம் வேண்டும் என்றே வம்பு செய்தது தெரிந்து, அவன் நண்பர்களுடன் சேர்ந்து அந்த கும்பலிடம் இருந்து காப்பாற்றினான் … அவனுக்கு நன்றி சொல்லி சென்று விட்டாள் …
மாலையில் வீடு திரும்ப பைக் எடுக்க வந்த இடத்தில ,ஒரு காரின் முன் நின்று கொண்டு ,திரும்பி திரும்பி பார்த்து கொண்டிருந்தாள் சிற்பிகா  ,
 அவள் என்ன செய்கிறாள் என்பதை சுவாரசியத்துடன் பார்த்து கொண்டுயிருந்தவன் , அவள் தவிப்பதை உணர்ந்து …காரின் அருகில் சென்று ..” என்னாச்சு கார் ஏதும் ரிப்பேரா …” என்று கேட்கவும் …
தனது வலதுகரத்தை அவன் முன்னே நீட்டவும் ,அதை கவனித்த போது ,டீ பட்ட இடங்கள் கொப்பளித்து இருந்தது ,
“ நான் ஊருக்கும் புதுசு , எப்படி பஸ்சில் போகணும்ன்னு தெரியாது ,அப்பாக்கு போன் பண்ணா எடுக்க மாடேங்குறார் , கை வலிக்குது வண்டி ஓட்ட முடியலை …என்று கண்கள் கலங்க சொன்னவளை பார்த்து ,
“ எந்த ஏரியா..” என்று கேட்க ,அவள் அவனின் ஊரை சொல்லவும் அதிசயத்து பார்க்க…,அவனோடு வந்த நண்பன் ..” உங்க ஊர் தானே சித்து ஒட்டிட்டு போ , நான்  உன் பைக் எடுத்துட்டு வந்து வீட்டில் விட்டுடறேன் …என்று சொல்லவும் ..
“அவள் பிளிஸ் … “ என்று கெஞ்ச ,சம்மத்தித்து அவள் நீட்டிய சாவியை வாங்கி காரில் ஏற சிற்பிகாவும் ஏறிக்கொள்ள ஊரை நோக்கி பயணப்பட்டது …..
“ உன்னோடு சண்டை போட்டுகொண்டே
கொஞ்சம் அழுது நிறைய சிரித்து
பேசிக்கொண்டே உன் அன்பை
நான் மட்டும் பகிர்ந்து கொண்டு
காரில் மட்டும்மல்ல வாழ்க்கை முழுவதும் பயணிக்க
வேண்டும் என்று மனம் மத்தளம் கொட்டுதே … என்று மனதில் தோன்ற காரை செலுத்தியவனின் மனமோ இறக்கை இல்லாமல் விண்ணில் பறந்தது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *