Categories
K. Kokila On-Going Novels

அத்தியாயம் – 3

Free Download WordPress Themes and plugins.

அத்தியாயம் 3 :

‘கம்ப்யூட்டர் பின்னால் அவள் எழுதிய கோடிங் இருக்கிறதோ!!!…
கம்ப்யூட்டர் முன்னும் பின்னும் என்ன இருக்கிறதென்று சுற்றிப் பார்த்த காயத்ரி.. மானிட்டரையும், சி.பி.யூவையும் மாறி, மாறிப் பார்த்து பேந்த, பேந்த முழிக்க, இவள் செய்கை ஏற்கனவே கோபத்தில் இருந்த டீம் லீடர் குமரனை மேலும் கோபப்படுத்த,
“கெட் லாஸ்ட்… சீக்கிரம் மஹதியை அழைச்சிட்டு வாங்க” என்று கத்தினார். அதற்கு மேல் அவ்விடத்தில் நின்று குமரன் கோபத்தை அதிகப்படுத்தாமல், “இந்த மஹதி நாய் ஆஃபீஸ் வந்துச்சா..? எங்கே போய் தொலைந்ததோ” என்று அலுவலகம் முழுக்க கண்களை சுழல விட்டாள் காயத்ரி.
உடனே தன் அலைப்பேசியை எடுத்து அவள் நம்பரில் அழுத்தினால்… அதுவோ ‘நாட் ரீச்சபளில் இருப்பதாகச் சொல்ல’ காயத்ரிக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை.
மஹதி! மஹதி டாக்(dog) இப்படி மாட்டி விட்டு போயிட்டாளே’
அவள் குயூபிக்களில் சென்றுப் பார்த்தால், அவள் வருகை புரிந்ததற்கு அடையாளமாய் அவளுடைய ஹேண்ட்பேக்கும், Head can be heated but Heart must stay cool என்று அப்போதுதான் மார்க்கரால் எழுதப்பட்ட அவளது வொயிட் போர்டும், அவள் வருகையை சொல்லியது.
‘உன் மண்டைய கொண்டு போய் பர்னர்ல வைக்க..!’ என்று புலம்பி,
‘எங்கேடி போய் தொலைந்தாய்’ என்று ரெஸ்ட் ரூம், லைப்ரரி எல்லாவற்றையும் ஒருமுறை சுற்றி வந்து விட்டு, வெளியே லிஃப்ட் அருகே வந்தவள், தற்போது இருக்கும் ஏழாவது மாடியிலிருந்து கீழே செல்வதற்கான அம்புக் குறியை அழுத்தி விட்டு லிஃப்ட்க்காக காத்திருந்தாள்.
இடையில் அவளுடைய அலைபேசியில் இடைவிடாது முயற்சித்த படிதான்.
“நாயே! ஃபோன் அட்டென்ட் பண்ணு” என்ற குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு, தரைத்தளத்தில் உள்ள ஃபுட்கோர்ட்டிற்கு வந்தாள்.
மதியம் 12 மணி என்பதால் பெரிதாக கூட்டம் இல்லை. மஹதியை தேடி கண்களை சுழல விட்டபடியே, மீண்டும் அவளுக்கு அலைபேசியில் அழைப்பு விடுத்தாள்.
இம்முறை முதல் அழைப்பிலேயே விட்டாள். குறுஞ்செய்தியை பார்த்திருப்பாள் போலும்.
“ஏய்!! எங்கேடி இருக்க” என்று காயத்ரி கத்தினாள். மறுமுனையில் இருந்தவளோ இவளுக்கு பதில் சொல்லாமல்,
“வாவ்! சூப்பரா இருக்குண்ணா.. இந்த ஸ்வீட் நேம் என்ன சொன்னீங்க” என்றாள் அவள் அருகில் நின்றிருந்தவனிடம்.
“ஃபிர்ணி” என்றான் தலையில் செஃப் கேப் போட்டு நின்றவன்.
“அண்ணா! மேடம்ன்னு கூப்பிடாதீங்கன்னு எத்தனை தடவை சொல்றது?”
“நீங்க பெரிய கம்ப்யூட்டர் படிப்பெல்லாம் படிச்சவங்க மேடம். நான் சும்மா கிச்சன் ல வேலை பார்க்கிறவன்”
“நீங்க படித்த படிப்புக்கு இங்கே வேலை. எனக்கு அங்கே வேலை அவ்வளவுதான் படிச்சா கொம்பா வந்திருச்சு. மஹதின்னு பெயர் சொல்லியே கூப்பிடுங்க” என்று நீண்ட லெக்சர் கொடுத்து முடிக்கும் போது தான், ஒருத்தி தனக்காக ஃபோனில் காத்திருப்பது புரிய,
“சொல்லு காயூ! ” என்று பெரிய மனது பண்ணி கேட்டாள்.
“ஹப்பாடா!! ” என்று அவள் சொல்வதற்குள், மீண்டும் ஸ்வீட்டை வாயில் வைத்த மஹதி,
“அண்ணா! ரெசிபி சொல்லுங்க. வீட்டில் போய் ட்ரை பண்றேன்” என்று மீண்டும் அவனிடமே பேசினாள்.
அவன் சொல்ல ஆரம்பிக்க, மறுமுனையில் ஜியோ புண்ணியத்தில், இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த காயத்ரிக்கோ எரிச்சல்.
“ஏய் நான் ஒருத்தி லைன்ல இருக்கிறது ஞாபகத்தில் இருக்கிறதா? இல்லையா?” என்று பற்களை நறநறவென கடிக்க,
“ஹே காயூ… நீ இன்னும் லைன்லதான் இருக்கியா.. என்னம்மோ சொல்லிக்கிட்டு இருந்தியே என்ன?” என்று திரும்பவும் கூலாகக் கேட்க,
“ம்ம்ம்… நம்மளை வேலை விட்டு தூக்கப் போறங்கனு சொன்னேன்” என்றாள் காயத்ரி கோபத்துடன்.
“அச்சச்சோ!!! இனிமேல் நம்ம ஃபுட்கோர்ட்ல சாப்பிட முடியாதுன்னு சின்ன ஹார்ட்க்கு ஷாக் கொடுக்காதே” என்று கவலைப்பட,
‘இந்த சாப்பாட்டு பைத்தியத்தை வச்சுக்கிட்டு….’ என்று மறுமுனையில் முணுமுணுத்த காயத்ரி,
“எங்கேடி இருக்க?” என்று கோபமாகக் கேட்டாள்.
“நம்ம ஃபுட்கோர்ட்டை க்ராஸ் பண்ணும் போது, எல்லா ஃபுட்டும் என்னை வந்து சாப்பிடுன்னு அழைச்சிதா, அதான் ஆஃபீஸ்ல ஒரு அட்டென்டன்ஸ் போட்டு ஓடி வந்திட்டேன்” என்றாள் ஃபிர்ணியை உள்ளே தள்ளியபடி.
‘உன் மூக்கு நம்ம டீம் லீடர் கோபமா இருந்ததை சொல்லலயா’ என்று எரிச்சலுடன் மனதிற்குள் முணுமுணுத்துவிட்டு,”நானும் அதே கோர்ட்ல தான் ஆஜராகி இருக்கேன். மேடம் எங்கே இருக்கீங்க?” என்றாள் நக்கலாக.
மஹதி எங்கே இதையெல்லாம் காதில் வாங்கினாள். அவன் கவனமெல்லாம் தன் முன் பாயாசம் தயாரித்துக் கொண்டிருந்த குருவின் மேல் தான் இருந்தது.
“டேய்.. டேய்.. குரு.. பாயாசத்தை இறக்கறத்துக்கு முன் கிராம்பை எடுத்து தட்டிப் போட்டு இறக்கு.. வாசமா இருக்கும்” என்றாள்.
“டேஸ்ட் பிடிக்கலனுச் சொல்லிட போறாங்க அக்கா” என்றான் அந்த குரு கவலையுடன்.
“நீ ட்ரை பண்ணிப் பாரு.. இந்த பாயாசத்துக்காகவே நம் கடை மீல்ஸை வாங்கிச் சாப்பிடுறாங்களா இல்லையா பாரு”
“என்னம்மோ நீங்க சொல்றீங்க செய்யுறேன்” என்று இருமனதாக நகர்ந்தான் குரு.
“எங்கேடி இருக்க?” காயத்ரி மீண்டும் அதே பல்லவியை பாடவும்,
“கூல்.. கூல்… கூல் காயூ.. இங்கேதான் ஃபுட்கோர்ட்ல”
“இதைத்தான் அரை மணி நேரமா சொல்லிட்டு இருக்க.. எங்கேன்னு தெளிவா சொல்லுடி பன்னி” என்று dogல் இருந்து pigக்கு புரோமோஷன் கொடுத்தாள் காயத்ரி.
“மம்மிஸ் கிச்சன்” வாயில் ஸ்வீட் இருந்ததால் மஹதியின் வார்த்தை தெளிவாக புரியாமல்,
“என்னது மாமிஸ் கிச்சனா? நம்ம ஃபுட்கோர்ட்லயா” என்றாள் காயத்ரி.
“மாமியார் வீட்டுக்கு போற நாளை பத்தியே நினைச்சிக்கிட்டு இருந்தால் அப்படிதான் கேட்கும்… மம்மிஸ் காயூ” என்று மம்மிஸ்க்கு அழுத்தம் கொடுத்து அவள் சொல்ல,
“என் மாமியாரே நான் நாற்பதாயிரம் சம்பளம் வாங்கவும் தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சாங்க.. நீ அதுக்கே உலை வச்சிடுவ போல”
“கவலைப்படாதே காயூ… உனக்கு ஏதாவது ப்ராப்ளம்ன்னாலும் அந்த பழியை என் மேல் போட்டுக் கொண்டு உன் வேலையை காப்பாத்துவது என் பொறுப்பு”
“அடியே ஆத்தா! ஆணிய பிடுங்க வேணாம். உன் வேலையை உருப்படியா பார்த்தால் போதும்” என்று பேசிக்கொண்டே அவள் சொன்ன மாமிஸ்.. சாரி மம்மிஸ் கிச்சனுக்கு வந்து விட்டாள் காயத்ரி.
‘மம்மிஸ் கிச்சனின்’ கிச்சனுக்குள் நுழைந்துக் கொண்டு ரகளைப் பண்ணும் மஹதியிடம் பேசி சிரித்தப்படியே ஆண்களும், பெண்களும் மதிய உணவுத் தயாரிப்பதில் கவனமாக இருக்க, அங்கே அவளை முறைத்தப்படியே வந்து நின்றாள் காயத்ரி.
“இன்னும் சாப்பாடு ரெடியாகலடி… எனக்கு பசித்ததா?… அரசிக்கா கிச்சடி பண்ணி தந்தாங்க… சூப்பர் கிச்சடி தெரியுமா? நீ மிஸ் பண்ணிட்ட.. உன்னை தேடிப் பார்த்தேன் காணோமா.. தனியா வந்துட்டேனு கோபமாடி?”
“ஹய்யோ!!! கிச்சடிக்கு ரசிகர் மன்றம் வச்சுருக்கிற மொக்கை மோகனின் தங்கச்சியே, வரக்கோபத்திற்கு அந்த கொதிக்கிற ரசத்தை ஆற வச்சு உன் மூஞ்சியில் ஊத்திடுவேன்” என்றாள்.
“ஹா..ஹ..ஹா.. ஃபன்னி.. அதை சூடாவே ஊத்தினாத்தான் எஃபெக்ட்” பக்கென்று சிரித்தாள் மஹதி.
“அரசிக்கா வைக்கிற ரசத்தில் காரம் தூக்கலா இருக்கும் ஞாபகம் வச்சுக்கோ.. காலையில் இருந்து அந்த ஜெராக்ஸ் மண்டையன் மண்டைய காய வைச்சான்… இப்போ நீயா?”
“ஜெராக்ஸ் மண்டையனா?… அடிப்பாவி குமரனை சொல்றியா… அவரை அப்படி சொல்லாதேனு எத்தனை தடவை சொல்வது?”
“ஆமாம்… நம்மகிட்ட விஷயத்தை கேட்டுட்டு கிளையண்ட் கிட்ட ஒப்பிக்கிறான்.. சொந்தமா ஏதாவது பேசுறானா?”
“உனக்கு தெரிந்ததை வச்சு மட்டும் சொல்லாதா.. அவரிடம் ஏதோ இருக்க போய்தான் இவ்வளவு பெரிய கம்பெனியில் டீம் லீடரா இருக்கார்”
“சரிம்மா… ஆரம்பிச்சுடாதே… வா போகலாம்” என்று காயத்ரி மஹதி கையைப் பிடித்து இழுக்க,
“ஏய் நான் இன்னும் சாப்பிடலடி… சாப்பிட்டு வரேன்… பாயாசம் வாசம் வேற வா.. வா..ன்னு கூப்பிடுது” என்றாள் கொதிக்கும் பாயசத்தின் மேல் ஒரு கண்ணை வைத்தப் படியே.
“அப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ சாப்பிட்ட கிச்சடி எந்த கணக்குல சேரும்..”
“அது காலை சாப்பாடு கணக்கு”
“காலைச் சாப்பாடை 12 மணிக்கு சாப்பிட்டால் மதியம் சாப்பாடை 3 மணிக்கு மேல்தான் சாப்பிடணும்னு ரூல்ஸ் இருக்கு… நீ வா” என்றாள் காயத்ரி பிடியை தளர்த்தாமல்.
“மூணு மணிக்கு வந்தால் பாயாசம் தீந்து போயிடும்டி.. இரு குருக்கிட்ட எடுத்து வைக்க சொல்லிட்டு வரேன்” என்று குருவிடம் செல்ல,
“இவ பெரிய மகாராணி… எடுத்து வைக்கணுமாம்?” காயத்ரி முணுமுணுக்க, அதேநேரம் குரு,
“நீங்க ஸ்பெஷல் கஸ்டமர்க்கா.. உங்களுக்கு இல்லாமலா… எடுத்து வைக்கிறேன் போங்க” என்றான்.
“காலையில் சாப்பிடாமல் வந்தியா?… இது பெரிய அதிசயமாச்சே…” என்று லிஃப்ட்டை நோக்கி நடந்துக் கொண்டே வினவினாள் காயத்ரி.
“ஹாட்பேக்கில் இரண்டு தோசைதான் இருந்துச்சு.. காரசட்னிக்கு நாலு தோசையாவது சாப்பிட்டாதான் பசி அடங்கும்”
“அட ராமா!!! நாங்கெல்லாம் ஆஃபீஸ் வர அவசரத்துல சாப்பிடாமல் கூட வரோம்.. உன்னையெல்லாம்…” என்றவள், “நீயே ஊத்தி சாப்பிடுவன்னு நினைச்சிருப்பாங்க” என்று மஹதியின் அன்னைக்கு பரிந்துக் கொண்டு வந்தாள்.
“ஆமா.. பட் வீட்டுக்கு போகவே லேட் நைட் ஆகி, செம டயர்டு”
“என்னாத்த வேலை பார்த்தியோ?? அந்த ஆளு பக்கத்தில் போகவே பயமா இருக்கு”
“நானும் ஹரியும் ஃபுல்லா ரன் பண்ணிட்டு தானே போனோம்” என்று இப்போது தான் கொஞ்சம் சீரியஸாக யோசிக்க ஆரம்பித்தாள்.
“ஒருவேளை வேற ஃபைல் ரன் பண்ணிட்டீங்களோ” என்று நக்கலாகக் கேட்டவளை புன் சிரிப்புடன் பார்த்தாள் கூல் மஹதி.
மம்மிஸ் கிச்சன் செஃப் புதிதாய் செய்த ஸ்வீட்டை பவுலுடன் தூக்கி வந்தவள், ஸ்பூனால் அளாவிய படியே வர, லிஃப்ட்டில் நடக்கும் இந்த கூத்தையெல்லாம் சிரித்தப்படியே சிலர் பார்த்துச் செல்ல, காயத்ரிக்கு தான் அவமானமாய் போய் விட்டது.
“எல்லாரும் பார்க்கிறாங்கடி… ஆஃபீஸ்ல போயாவது சாப்பிட்டுக்கலாம்” என்று சொல்ல,
“நீ ஏன் அவங்களை பார்க்கிற” என்றாள் கூலாக மஹதி.

கல்லில் ஆடும் தீவே, சிறு கலக-கார பூவே
கண்ணால் வார்த்தை சொன்னால் என் கவிதை சேவல் கூவும்
– (கவிஞர் வைரமுத்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *