Categories
Uncategorized வேத கௌரி

அத்தியாயம் – 6

Free Download WordPress Themes and plugins.

உயிர் -6
 திருச்சி அரசு மருத்துவமனை முழுவதும் ஆட்கள் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு ,தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டு,பரபரப்பாக அங்கேயிங்கே நடப்பவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டுமிருந்தனர்.
சோழவந்தான், இறுகிய முகத்துடன் காரினுள் அமர்ந்து இருந்தார்.அவரின் அருகில் செல்லவே பயந்த அவரின் உதவியாளர்களும் , நண்பர்களும் சற்று பின்தங்கியே இருந்தனர் ..
ஐம்பதுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்கென நிறுத்தி வைக்கப்பட்டுயிருந்தனர் …..
கூட்டத்தில் நின்று பேசிக்கொண்டிருந்த ஆட்களில் ,சிலர் திடீரென்று, “கைது செய்,கைது செய் …!!”எங்கள் எதிர்காலத்தை கொன்றவனை கைது செய் ! ,கைது செய்யும் வரை  எங்கள் போராட்டம் தொடரும் …” என சப்தம் எழுப்பியவாறே ,சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட , மாநகர பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களும் வேறு வழியின்றி நின்றுவிட பயணிகளும் பொதுமக்களும் அவதிக்குள்ளாயினர்.          
நின்றுகொண்டிருந்த பேருந்தில் , பயணி ஒருவர் ,” என்னப்பா என்ன பிரச்சனை …??” என்றார் மற்றொரு பயணியிடம் ,
“ ***ஜாதி கட்சி தலைவர் சோழவந்தான் பையனை யாரோ கொன்னுட்டாங்க, கொன்னவனை கைது பண்ண சொல்லி பிரச்சனை நடத்துறாங்க ” …
“ இவனுங்களுக்கு இதே வேலையா போயிடுச்சு, கொன்னவனும் போயிடுறான்…..,செத்தவனும் போயிடுறான்….. ,ஆனா…. இப்படி கலவரம் பண்ணுற ஆட்களால் நாமதான் சாக வேண்டியிருக்கு…’ என்று சொல்லிக்கொண்டு இருந்தார் …         
சாலையோர கடைகளில் உள்ளவர்கள் ஷட்டரை கிழே இறக்கிவிட்டு உள்ளுக்குள் ஒளிந்து கொண்டனர் ..
தெருவோர தள்ளுவண்டி பழக்கடைகாரர் “ம்ம்ம்ம் …. இன்னைக்கு பொழப்புல மண்ணையள்ளி போட்டாச்சு, டேய் எல்லாத்தையும் எடுத்து உள்ளே வைச்சு, வண்டிய தள்ளுடா ,இங்க வந்து ஏதையாவது தள்ளிவிடபோறானுங்க…” என்று வியாபாரம் செய்ய முடியாத வெறுப்பில் தன் கடைப்பையனை திட்டிகொண்டு பழங்களை எடுத்து வைக்க ஆரம்பித்தார் …நம்மைவிட வலிந்தவரை தானே நாம் கண்டிப்போம் …..
உள்ளூர் ,வெளியூர் தொலைகாட்சிகள் அனைத்தும் லைவ் கவரேஜ் செய்து கொண்டிருந்தன…
அப்போது ,ஒரு சிலர் திடிரென்று அங்கிருந்த கற்களை வீசி கடைகளை அடித்து நொறுக்க ஆரம்பிக்கவும் ,பொதுமக்கள் அலறி அடித்து அகப்பட்ட சந்துபொந்துகளில் புகுந்து மறைய துவங்கினர் …
கலவரம் அதிகமாவதை உணர்ந்த காக்கிசட்டைகள் லத்தியை ஓங்கியபடியே ,மரத்தால் செய்யப்பட்ட தடுப்பான்களை தங்களின் முன்னே நீட்டியபடியே கலவரகாரர்களை நெருங்கினர் .
உயர் அதிகாரிகளுக்கு தகவல் பறந்து ,அவர்கள் தடியடிக்கு உத்தரவு கொடுக்க ,தடியடி நடத்தியும், புகைக்குண்டுகளை வீசியும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து ,ஒரு சிலரை கைது செய்து வேனில் ஏற்றினர் …
இமவரம்பனின் உடலை வாங்க மறுத்த சோழவந்தானிடம் , “ கொலையாளியை கைதுசெய்து விட்டோம்”, என்று சமரச பேச்சு வார்த்தை நடத்தி ,பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் ஒப்படைக்கபட்டது.
காவல்துறை வேனில் ஏற்றப்பட்ட ஒருவன் ..” என்ன மச்சான் ,இப்படி சீக்கிரம் முடிஞ்சுடுச்சு … !” என்றான் .
“கொலை பண்ணினவங்களை கைது பண்ணிட்டாங்க ,அதான் பிரச்சனை முடிஞ்சுபோச்சு …”,
“ என்னாது …! கொலையா …யாரை யார் பண்ணினது …??” என்றவனை ,
 “அது தெரியாமதான் வந்தியா …?”,என்று நக்கல் குரலில் சொல்லவும் …
“ யாருக்கு தெரியும் நம்ம தோஸ்து மாரி ,உடனே கிளம்பி வா ,கலவரத்துக்கு ஆளு வேணும் ,500 ரூபா காசும் ,சரக்கும் ,பிரியாணியும் தரேன்னு சொன்னான்  ,அதான் வந்தேன் ,என்னை மட்டும் எதுக்கு வந்தேன்னு விசாரிக்கறியே ….. , நீ என்ன காவேரில,   தண்ணிய தொறந்து விட சொல்லி போராட்டம் பண்ணவா ….. வந்த………?”,
“ நானும் காசுக்கு தான் பா வந்தேன் இல்லைன்னு சொல்லலை ,ஆனா….. என்ன மேட்டேர்ன்னு எனக்கு தெரியும்ப்பா..
“அப்படி என்னப்பா ….மேட்டரு ….?
 “அது ஒண்ணுமில்லை , சோழவந்தான் ஐயா இருக்காரு இல்ல….. அவரோட  பையனை யாரோ ….கொன்னுட்டாங்களாம்  , இப்போ விசாரிச்சதுல அவரு சம்சாரமே கொன்னுபுடுச்சாம்…”
 “அவரு பையனுக்கு தான் கல்யாணமே ஆகலையே …?”,
“ தெரியலை ,வெளியில் அப்படி தான் பேசிக்குறாங்க ,இதுலாம் பெரிய இடத்து விஷயம் ..நமக்கு எதுக்கு பெரிய இடத்து பொல்லாப்பு ..” என்றான்
“ அதுவும் சரிதான் மாப்பிள்ளை, வந்தோமா …நாலு கல்லை எடுத்து வீசினோமா ….. காசை பார்த்தோமான்னு போய்கிட்டே இருக்கணும் ,எப்படியும்….. சாயந்திரம் வெளில விட்டுவாங்க …அப்படி விட்டுடாங்கன்னா  …சந்தோசம் ….சரக்கு இல்லாமல் இருக்க முடியாது …” என்று கவலை பட ஆரம்பித்தான் …
அவரவர் கவலை அவருக்கு …….!!!!!
 பாக்கியம் வீட்டில் …
கதிரவனும் ,உமையாளும் திருக்கருகாவூர் சென்றிருக்க , அவர் தோழியின் பேத்தி ரீமா ,வெளிநாட்டில் இருந்து சுற்றுலாவிற்கு வந்து இவரின் வீட்டில் தங்கியிருந்தாள்.
அவளுக்கு உணவு பாரிமாறி கொண்டுடே , “இந்தம்மா…இதை கொஞ்சம் சாப்பிடு …” என்று பெரிய தட்டில் எண்ணெய் மினுமினுக்கும் மாங்காய் துண்டுகளை நீட்டினார் ,
அதை எடுத்து சுவைத்தவள்,” இது என்ன பாட்டி ,இட்ஸ் அமேசிங் ,என் கண்ணுல தண்ணி தண்ணியா வருது ,பட் ஐ லைக் திஸ் புட், இன்னும் கொஞ்சம் கிடைக்குமா ..?” என்று தமிழும் ஆங்கிலமும் கலந்து கேட்டாள் ,
 
“இது வேற ஒன்னும் இல்லை , மாங்காய் துண்டை எடுத்து நல்ல வெயிலில் காய வைச்சு ,இடிச்சு எண்ணெயில் போட்டு கொதிக்க வைச்சு உப்பு ,மிளகாய் போட்டது ,பழைய சோறுக்கும் ,கேழ்வரகு கூழுக்கும் அருமையா இருக்கும்மா …” என்றார் .
“ என்ன பாட்டி சொல்லுறிங்க ,இது எல்லாம் கெட்ட உணவுன்னு நாங்க படிச்சுருக்கோம் …”
“ இது கெட்ட உணவா …!!..??”, யாரை குறை சொல்லுறது … ?.நல்லது எல்லாம் கார்ப்பரேட்காரர்களுக்கு போய் பல வருஷமாயிடுச்சு,எல்லாமே வியாபாரமாகிடுச்சு ..நல்லதெல்லாம் அவனுங்க எடுத்துகிட்டு , நம்ம பாரம்பரியமான பழைய சாதம் ,பருப்பு வெங்காயம் ,உளுந்தங்கஞ்சி எல்லாம் கெட்டதுன்னும், , இந்த நூடுல்ஸ் ,பீஸா,பர்கரு ,சிக்கென் கட்லெட் இதெல்லாம் மட்டுமே….. நல்லதுன்னும் சொல்லுறானுங்க ,நீங்களும் அதையெல்லாம் ….. நம்பி  சாப்பிடறிங்க .. இன்னிக்கு பச்சைபுள்ளைங்களுக்கெல்லாம் சுகர் இருக்கு, எல்லாம் இந்த கார்ப்பரேட் காரங்களோட பணத்தாசை….” என்று ஆதங்கத்துடன் சொல்லி கொண்டே தனக்கும் சாப்பாடு போட்டு அமர்ந்தார் ….
“ ஏன் பாட்டி ,இதை உங்க அரசாங்கம் கேட்க மாட்டாங்களா கார்ப்பரேட் கம்பனியை .?” என்று சந்தேகத்துடன் ரீமா கேட்கவும் ..
“கார்ப்பரேட் கம்பெனி ஒவ்வொன்னையும் அரசாங்கம் தட்டிக்கேட்டா கவர்மெண்ட்டை எப்படி நடத்துறது…?” நமக்கே தெரியாம, நம்ம புள்ளைங்களுக்கு விஷத்தை கொடுத்திட்டு இருக்கோம் இங்க இயற்கை மாறலை ,மாறியது மனுசங்க தான் ..” என்று மேலும் சிலவிஷயங்களை பேசிக்கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்தவரின் பார்வையில் தொலைகாட்சியில் ஓடிக்கொண்டிருந்த நிகழ்ச்சியில் பட்டு கண்கள் நிலைத்து ,விரல்கள் எல்லாம் விரிந்து கொள்ள அதன் வழியே சாதம் தட்டில் சிந்தியது ,” கடவுளே ” என அதிர்ந்த  படியே கிழே சரிந்தார் …..
சிங்கார சென்னை ….
தனது பாதுகாப்பு பணியை முடித்து தங்கியிருந்த அறைக்கு திரும்பி கொண்டிருந்த சித்தார்த்தின்  பார்வையில், இளஞ்ஜோடிகள் பலர் இருசக்கர வாகனத்தில் ஒட்டி அமர்ந்து சென்றது பட்டதும் , “இப்படி தானே தன்னவளும் தன்னுடன் செல்ல ஆசைப்பட்டாள் ..” என்ற மனம் அவனின் அனுமதியின்றி ,அவனின் செல்லம்மாளிடம் சென்றது.
அன்றொரு நாள் ……
தனது விசாரணை காரணமாக வந்துவிட்டு பைக்கில் ஏறி புறப்பட சென்றவனை யாரோ அழைப்பது கேட்கவே திரும்பியவன் கண்களுக்கு அங்கே காமாட்சி காட்சியளிக்க ,” ஹேய் காமாட்சி, இங்க என்ன பண்ணிட்டு இருக்க …?என்றான் .
“எங்க காலேஜ் மேடம் ஒருத்தங்களை பார்க்க வந்தேன் , ரொம்ப நேரமா பஸ்க்கு வெயிட் பண்ணுறேன் வரவேயில்லை சித்து , நீ வீட்டுக்கு தானே போற நானும் உன் கூட வரவா …??” என்று கேள்வியோடு நோக்கியவளின் விழிகள் சோர்வை காட்டவும்  அவன் அதற்கு தலை அசைத்து சம்மதிக்க , வேகமாக அவனின் பைக்கில் ஏறி ,அவனை நெருக்கி …..அணைத்து அவளோடு, அவனை வளைத்து பிடித்தாள் அவனின் செல்லம்மா …..
 “ என்னடி இது …?? கொஞ்சம் தள்ளி உட்காரு ….” என்று பல்லை கடித்தான் சித்தார்த் ….
“ ஏன் …?”,,
“ எனக்கு ஒரு மாதிரி அன்ஈசியா இருக்குடி , பாக்குறவன் தப்பா நினைப்பாங்க…”
“ நினைச்ச நினைச்சுட்டு போகட்டும், எனக்கு இது தான் கம்பர்ட்டபிளா இருக்கு …” என்று குறும்புடன் சொன்னாள் .
 “ இடுப்புல இருந்து கையை எடு , சைடில கம்பி இருக்கு ,அதை பிடிச்சுக்கோ ….”என்று உறுதியான குரலில் சொல்லவும் …
 “ம் ம் ….வளர்ந்து கெட்டவன் முன்னாடி உட்கார்ந்து இருக்குறப்ப, நான் எதுக்கு கம்பியை பிடிக்கணும் …? நான் இப்படி தான் உட்காருவேன் …உனக்கு இஷ்டம் இருந்தா என்னை கூட்டிட்டு போ …இல்லைன்னா இங்கேயே விட்டுட்டு ,நீ மட்டும் கிளம்பு …”என்று வண்டியில் இருந்து கிழே இறங்கி விடவே …
வண்டியை கிளப்பி ,பக்கத்தில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டில் ஒரு ஆட்டோவை  அழைத்து வந்து  அவளை அதில் போக சொல்லிவிட்டு பதிலையும் எதிர்பார்க்காமல் கிளம்பிவிட்டான் …
தனது வேலைகளை முடித்து வீட்டிற்குள் நுழைந்தவனுக்கு ,சோபாவில் அமர்ந்து டிவியை வெறித்த படி இருந்தவளை கண்டு ,” ஆத்தா இன்னும் மலை இறங்கலை போலவே ..” என்று நினைத்து புன்னகையுடன் அதே சோபாவில் நெருங்கி அமர்ந்து ,” இன்னும் செல்லம்மாக்கு கோவம் போகலையா ….” என்று கூறியவனை முறைத்து ….
“ என் பேரு செல்லம்மா இல்லை …”  என்று முகத்தை திருப்பவும் …
 அவளின் முகத்தை தன் புறம் திருப்பி ,” உன் பேரு செல்லம்மா இல்லை ….காமாட்சி போதுமா …” ,இன்னும் என் மாமன்பொண்ணுக்கு என் மேல உள்ள கோபம் போகலையா ….?”,
“ம்ப்ச் …அதுலாம் ஒண்ணுமில்லை …!!”
“அப்புறம் ஏன் பேச மாட்டேன்ற ..??”
“பேசிக்கிட்டு தானே இருக்குறேன் ….!”
“நீ சரியா பேசலை ,கோவந்தான் உனக்கு …”
“அதான் இல்லைன்னு சொல்லுறேன்ல …”
“இல்லை ,நம்ம கல்யாணம் முடிவு பண்ணிய பிறகு ,நான் வரும் நேரம் வாசலிலே நிப்ப …அப்படி இல்லேன்னா உள்ளே நுழைந்ததும் தண்ணி கொண்டு வந்து தருவ ,இது ரெண்டுமே நீ இன்னைக்கு செய்யலை ,அப்போ கோவம்தானே…” என்று சொல்லி விட்டு …” சாரிடா செல்லம்மா ,மாமா பார்த்த தப்பா நினைச்சுகுவார் ,அதான் அப்படி வர சொன்னேன் ,எனக்கும் இது போல சில பல ஆசைகள் உண்டு “ என்று மெதுவாக அவளின் கைகளை பிடித்து வருடியபடியே  அவளின் தோள் சாய்ந்து …….
“ முத்தமிட்டால் பார்த்துக்கொண்டே துடைக்கிறாய்.
சட்டென இழுத்தணைத்து உலராத ஈரமுத்தத்தை
அழுத்தமாக பதித்துவிட்டு நகர்கிறாய்.
கொட்டிக்கிடக்கும் உன் அழகையெல்லாம்
கண்களால் தான் பார்க்க வேண்டுமா!
கைகளுக்கும் கண்கள் உண்டு தெரியும்தானே?!
உன் ஒட்டுமொத்த மர்மத்தையும்
உன்னுள்ளேயே வைத்துக்கொள்..
ஏனென்ற பெரியகாரணமெல்லாம் இல்லை.
காலம் முழுதும் உன்னை காதலிக்க விரும்புகிறேன் அவ்வளவே..
சமையலறையில் நீ எதிர்பாராத தருணத்தில் நான்
உன் இடைபற்றியவாறே கழுத்தில் பதிக்கும்
அக்கவித்துவ முத்தம்,உன்  மார்பில்  சாய்ந்து
இளைப்பாறும் அவ்வினிய இராப்பொழுதுகள். 
இவைகளை விட சொர்க்கம் பெரிதா என்ன…?!…
இத்தருணங்கள் விரைவில் வரவே
காத்து கிடக்குறேன் என் கண்மணியே …..” என்று உருகியவாறே கவிதை படித்தவனை கண்டு , உருகி முகம் மலர சிரித்தவளை பார்த்து .
“ அப்பாடி…..சிரிச்சாச்சா ! இப்போ எப்படி இருக்கு மூஞ்சி…முதலிலும் இருந்ததே …” என்று குறும்பு கொப்பளிக்க சொன்னவனை பார்த்து …
“போடா “ என்று தள்ளிவிட்டு எழுந்து அறைக்குள் ஓடினாள் ,ஓடியவளின் பின்னே சத்தமாக சிரித்தபடியே சித்தார்த்தும் சென்றான் …
வண்டியின் குலுங்கலில் நினைவு கலைந்தவனின் முகம், நேற்றைய நினைவில் இளகி,இன்றைய நிஜத்தில் இறுகியது…….
என்  விழியாய்   நீ   இருக்க ….
உன்  இமையாய் நான் இருக்க ……..
ஏன் பிரிந்தாய் என் விழியே …..
உனை காக்கும் உன் இமைய[த]னை ……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *