Categories
On-Going Novels Yuvanika

அத்தியாயம் – 6

Free Download WordPress Themes and plugins.

காதல்பனி 6

தோழிகளை அழைச்சு சொல்லிச் சொல்லி ரசிச்சு
ஆட்டம் போட முடியலையே
ஒரு எந்திரத்தை போல அட இங்கே உள்ள வாழ்க்கை
இதை எங்கே போயி சொல்ல.. மனம் இஷ்டப்படவில்லை
நம்மூரைப் போல ஊரும் இல்லை

அவன் உள்ளே நுழையும் போது அவளோ கையில் பூ ஜாடியுடன் தரையில் இருப்பவனை அடிக்க கையை ஓங்கி இருக்க அதை பார்த்தவனோ 

எந்தவொரு பதட்டமும் இல்லாமல் அவளை நெருங்கி அவள் கையிலிருந்த பூ ஜாடியைப் பொறுமையாக வாங்கிப் பக்கத்தில் வைத்தவன் கீழே வலியில் நிதானம் இல்லாமல் உருண்டு கொண்டிருந்தவனைக் காட்டி 

“எதுக்கு இவனை இப்படி அடிச்ச சாரா?” என்று மிக மிக நிதானமாக அவனும் தமிழில் கேட்க அது அவள் கோபத்திற்கு அவன் நிதானம் எண்ணை வார்த்தது போல் இருக்க, 

தன் முட்டைக் கண்களை அகல விரித்துக் காளி என அவனை அவள் உருத்து விழிக்க அந்தச் சூழ்நிலையிலும் அவள் விழிகளை ரசிக்கத் தான் செய்தான் கென்டிரிக். 

“ஏன் இப்படி செய்றனா? இந்த நாய்க்கு எவ்வளவு திமிர் இருந்தா என்ன டேட்டிங்குக்கு கூப்பிடும்?!” என்று கூறி தலையைச் சிலுப்பியவள் கோபத்தில் தன் ஹீல்ஸ் செருப்பால் கீழே இருந்தவன் வயிற்றில் எட்டி ஒரு உதை விட அவனோ “ஐயோ!” என்று அலறினான். 

அவள் சொன்ன பதிலில் திகைத்து நின்றவன் பின் கீழே இருந்தவனின் அலறலில் தெளிந்து 

“ஏய்! உனக்கு விருப்பம் இருந்தா இருக்குனு சொல்லு. இல்லனா இல்லன்னு சொல்லு. அதுக்கு எதுக்கு இவனை அடித்து இந்த பாடு படுத்தற?” என்று அவன் சாதரணமாகக் கேட்க 

“என்னது? விருப்பம் இருந்தா போக வேண்டியது தான்னு அதுவும் நீங்க…” என்றவள் சற்று இடைவெளி விட்டு அதை சொல்ல 

“நீங்க யாரு? நானும் எனக்கு விருப்பம் இல்லனு நல்ல விதமாவே சொல்லிட்டனே!” என்று கோபத்தின் உச்சிக்கே சென்றவள் வரிந்து கட்டிக் கொண்டு அவனிடமே சண்டைக்கு எகிற, 

அவனோ உணர்ச்சிவசப்படாமல் கல்லென நிற்க அதைப் பார்த்து இவள் தான் அமைதியாகிப் போனாள். 

“ஏய்! சும்மா சும்மா எதுக்கு இப்போ கோபப்படற? இங்க இதெல்லாம் சர்வ சாதாரணம். உங்க நாட்டு வழக்கப் படி உன்னை அவன் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கேட்கலைனு நினைக்கிறியா? இங்க கொஞ்சநாள் சேர்ந்து வாழ்வாங்க. பிடிச்சிருந்தா கல்யாணம் செய்துப்பாங்க. 

பிடிக்கலையா பிரிஞ்சிடுவாங்க. 
அதை வைத்து தான் அவன் கேட்டிருப்பான். உனக்குப் பிடிச்சிருந்தா சேர்ந்து வாழ்ந்துட்டு முடிவு பண்ணு” இதை அங்கிருந்தவனுக்காக சொன்னானா இல்லை தனக்காக சொன்னானா என்பது தான் அவனுக்கே தெரியவில்லை. 

அவன் சொன்னதைக் கேட்டு அவள் முகமோ அவமானத்தில் அக்னி என ஜொலிக்க 

“நான் என்ன ஒண்ணும் தெரியாத சின்னக் குழந்தையா இல்ல இந்த நாட்டுப் பழக்க வழக்கம் பற்றி எதுவும் தெரியாம இன்னைக்கு தான் இந்த ஊருக்கு வந்து இறங்கினேனா? எல்லாம் எனக்கும் தெரியும். 

ஏதோ படிப்புக்காகவும் வேலைக்காவும் வேற வழியில்லாம இப்படி வெளிநாடு வந்தா, எங்கப் பழக்க வழக்கம் பண்பாடு சமூக சிந்தனை நாட்டுப் பற்று என்று எல்லாத்தையும் துறந்து தான்தோன்றித் தனமா வாழணுமா என்ன? நெவெர்… ஐ கான்ட் டூ திஸ்! அப்படி ஒரு சூழ்நிலையில் உயிரை இழந்தாலும் இழப்பனே தவிர ஒருக்காலும் இதுக்கு சம்மதிக்க மாட்டேன்!” என்று அவள் உறுதி படக் கூற 

அதைக் கேட்டு அவனையும் அறியாமல் அவன் உடலில் சிறு நடுக்கம் ஓடி மறைந்தது. 

தன் ஆத்திரம் குறையாமல் சாராவே மேற்கொண்டு பேசினாள்.
“அப்புறம் இன்னொன்னும் தெரிஞ்சுக்கங்க. எங்க ஊர்ல எல்லாம் பெரியவங்க பார்த்துச் சொல்றவங்களைத் தான் கட்டிப்போம். 

கல்யாணம் முடிந்த பிறகு தான் பொண்ணையும் மாப்பிள்ளையுமே பார்த்துப் பேச விடுவாங்க. 
மத்தவங்க எப்படியோ?! நான் என் கலாச்சாரப் படி பெரியவங்க பார்த்து வைக்கிற இப்படி ஒரு வாழ்வைத் தான் வாழ நினைக்கிறேன். அதிலிருந்து நான் மாறவும் மாட்டேன்” என்று அவள் நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல, 

அவள் சொல்லச் சொல்லத் தன் விழி எடுக்காமல் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் கென்டிரிக். 

அவளோ அதையறியாமல் “நான் அப்பவே இவன் கிட்ட சொல்லிட்டேன் எனக்கு விருப்பம் இல்லனு. சரின்னு விட்டுப் போக வேண்டியது தானே? ஏதோ தப்பான வீடியோவ காட்டி நான் ஒத்துத் தான் ஆகணும்னு மிரட்டறான். 

அப்பவும் அந்த வீடியோ இருந்த போனை நான் உடைத்துப் போட்டுட்டேன். அப்படியிருந்தும் வேற காப்பிஸ் இருக்குனு சொல்றான். எவ்வளவு திமிர் இவனுக்கு?” 
என்றவள் தன் பக்கத்திலிருந்த பூ ஜாடியை எடுத்துக் கீழே இருந்தவனை மறுபடியும் தாக்க முற்பட, 

கென்டிரிக்கோ சாவகாசமாகத் தன் இடது கையால் அவள் தூக்கிய ஜாடியைப் பிடித்தவனோ “அவனே டிரிங்க்ஸ் சாப்டுட்டு நிதானம் இல்லாமல் இருக்கான். இதுல நீ வேற இதால அடிச்சி அவன் செத்து கித்துப் போய்டப் போறான்” என்று அவளை எச்சரிக்க 

“சாகட்டுமே! நானும் அவன் சாகணும்னு தானே இதை எல்லாம் செய்றேன்! இவன் உயிரோட இருந்தா தான அந்த வீடியோவ வைத்து மிரட்டுவான்?” என்று அவள் வாதிட

“அப்படி அவன் செத்தா நீ தான் ஜெயிலுக்குப் போகணும். பிறகு அதெல்லாம் டிவி பேப்பருனு உங்க ஊர் வரை பரவும். இது உனக்குத் தேவையா?” என்று கென்டிரிக் அவளுக்காகப் பேசவும் 

‘இது எனக்குத் தெரியாதா? நீ என்ன லூசா?!’ என்பது போல் அவனைப் பார்த்தவள் 

“நீங்க சொல்ற மாதிரி என் குடும்பத்துக்கு வேணா தெரியுமே தவிர ஊருக்கு எல்லாம் தெரியாது. அப்படி டிவி பேப்பர்ல எல்லாம் வர்றதுக்கு நானோ இவனோ ஒண்ணும் பெரிய பிரபலம் எல்லாம் இல்ல!” என்று அவள் விட்டேந்தியாகச் சொல்ல 

“நீ பிரபலம் இல்லை தான். ஆனா உன் கணவன் பிரபலம் ஆச்சே!” கென்டிரிக் கணீர் என்று சொல்ல 
‘அது யாருடா எனக்கே தெரியாத என் கணவன்?!’ என்று மனதுக்குள் நினைத்தவள் 

“யாரு சார் அவ்வளவு பெரிய பிரபலம்?” என்று நக்கலாகக் கேட்க 
இதுவரை தான் தூக்கிப் பிடித்திருந்த பூ ஜாடியுடன் அவள் நிற்க அதைப் பிடித்து தடுத்த படி பேசிக் கொண்டிருந்தவனோ ஒரே தள்ளலில் அவள் கையில் இருந்ததைக் கீழே தள்ளி விட்டுத் தன் வலது கையை ஸ்டைலாக பேண்ட் பாக்கெட்டினுள் விட்டபடித் தன் இடது கையின் ஆள் காட்டி விரலைத் தன்னுடைய நெஞ்சில் வைத்து அழுத்தி முகத்தில் பெருமிதத்துடன் அவள் முகத்தைப் பார்த்து, 

“தி வேர்ல்ட் பேமஸ் போட்டோகிராஃபர் அஸ்வத் கென்டிரிக்!” என்றவன் பின் தன் கண்ணில் கர்வத்துடன் “இட்ஸ் மீ!” என்றான். “இப்ப சொல்லு, அப்ப டிவி பேப்பர்னு எல்லாம் வரும் தானே?” என்று அவன் ஆர்ப்பரிக்க 

அவளோ ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டவள் போல் அதிர்ச்சியுடன் நிற்க 
தன் ஒற்றைப் புருவம் உயர்த்தி அவனோ என்ன என்பது போல் வினவ 
அவன் பார்வையைச் சந்திக்க முடியாமல் தலை குனிந்தவளோ பின் கண்ணில் ஒரு எதிர்பார்ப்புடனும் ஆர்வத்துடனும் நிமிர்ந்தவள் 

“அப்போ நீங்க என்ன லவ் பண்றிங்களா?” என்று கேட்க 
அவள் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் தன் மனதில் குறித்துக் கொண்டவனோ 

“நீ சொன்ன வார்த்தைய நான் சொல்லவில்லையே! நல்லா நியாபகப் படுத்திப் பாரு, நீ என் மனைவினு தான் சொன்னேன்!” என்று அவளுக்கு அவன் நியாபகப்படுத்த 

‘நான் கேட்ட வார்த்தைக்கும் மனைவிக்கும் அப்படி என்ன பெரிய வித்தியாசம் என்று நினைத்துக் குழம்பியவள் அதே குழப்பத்துடனே அவன் முகத்தைக் கேள்வியோடு பார்க்க

தன் நிதான நடையுடன் சென்று அங்கிருந்த இருக்கையில் கால் மேல் கால் போட்ட படி அமர்ந்தவனோ 

“நீ சொன்ன வார்த்தையை நான் சொல்லியிருந்தாலும் உங்க வழக்கப் படி இறுதியா நான் சொன்னதில தானே வந்து முடியப் போகுது? அதனால தான் நான் இதையே சொன்னேன்” என்று அவன் அலட்சியத்துடன் சொல்ல

‘எவ்வளவு கர்வம்? என்ன அலட்சியம்?’ என்று நினைத்தவளோ 

“அப்பவும் நீங்க கல்யாணம்னு சொல்லலையே?” என்று எடுத்துக் கொடுக்க 

தான் கோர்த்திருந்த கை விரல்களைப் பிரித்து இரண்டு கைகளையும் விரித்த படி அதே அலட்சியத்துடன் தன் தோள்களைக் குலுக்கியவனோ 

“ஓ! நான் அந்த வார்த்தைய என் வாயால சொல்லி நீ கேட்கணும்னு உனக்கு ஆசை இருக்கு. அதுக்கு என்னமோ நான் சொன்னதை நம்பாத மாதிரி ஏன் இந்த சீன்?” என்று அவன் அவளுக்குத் திருப்பிக் கொடுக்க
அவனுக்குப் பதில் கொடுக்க நினைத்து அவள் வாயைத் திறந்த நேரம்

“சரி நல்லா கேட்டுக்கோ, நான் தான் உன் கணவன் நீ தான் என் மனைவி. நம்ம இரண்டு பேருக்கும் தான் கல்யாணம் நடக்கப் போகுது. அதுவும் நீ சொன்ன மாதிரி உன் வீட்டுல இருக்கிற பெரியவங்களோட சம்மதத்துடன் தான் நடக்கப் போகுது. 

யு நோ ஒன் திங்? கென்டிரிக் எடுக்கற முடிவுல வேணா மாற்றம் வரலாம். ஆனா அஸ்வத் எடுக்கற முடிவுல என்னைக்குமே மாற்றம் வராது. பை த வே இப்போ இந்த வினாடி நம்ம கல்யாணத்தப் பற்றி முடிவு எடுத்தது அஸ்வத் தான். சோ நிச்சயம் நடக்கும்!” என்று அவன் இறுமாப்புடன் சொல்ல 

‘இது வரை இவன் பேச்சே எனக்குப் புரியலையாம். இதுல அந்த அஸ்வத் வேறயா?’ என்று தான் இருக்கும் மனநிலையில் அவன் பேச்சைக் கேட்டுக் குழம்பியவள் பின் அவன் முழு பெயரே அஸ்வத் கென்டிரிக் என்று உணர்ந்து அவன் சொன்ன பதிலில் தன் அதிருப்தியைக் காட்ட நினைத்தவள் 

“என்னமோ இந்தக் கல்யாணத்துல உங்களுக்கு மட்டும் தான் சம்மந்தம் இருக்குற மாதிரி பேசுறிங்க?” என்று கேட்க 

அவள் முகத்தையே ஒரு வினாடி பார்த்தவனோ உதட்டோரம் சிறிது வளைய 

“எங்கே உனக்கு விருப்பம் இல்லனோ இல்லை இந்த கல்யாணம் வேண்டாம்னு தான் சொல்லலிடு பார்க்கலாம்!” என்று அவன் பகிரங்கமாகவே சவால் விட 

அவன் விட்ட சவாலில் தன் மனதை அவன் நன்கு உணர்ந்திருக்கிறான் என்பதை அறிந்தவளோ வெட்கத்தில் முகத்தில் செம்மை ஏற தன் முகத்தை வேறு புறம் திருப்பிப் பார்வையை எங்கோ பதித்தாள் சாரா. 

அவள் செயலே அவனுக்கான பதிலைத் தந்துவிட அப்போதும் உன்னை விடுவேனா என்ற எண்ணத்தில் 

“ம்… சொல்லு” என்று மீண்டும் அவன் அவளை ஊக்க 

‘அதான் தெரியுது இல்ல? அப்பறம் என்ன மறுபடியும் சொல்லுனு வேற கேட்டுகிட்டு!’ என்று மனதால் அவனை அர்ச்சித்தவள் அவன் சொல்வதைப் போல் தன்னால் சொல்லிவிட முடியுமா என்று தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க
இருக்கையை விட்டு எழுந்தவனோ 

தன் வேக நடையுடன் அவளை நெருங்கி தன் வலது கையின் ஆள் கட்டி விரலால் அவள் முகத்தைப் பட்டும் படாமல் தொட்டுத் தன் புறம் திருப்பியவன் அவள் விழிகளோடு தன் விழிகளைச் சேர்த்துப் பிணைத்தபடி 

“ம்… சொல்லு சாரா… உன் வீட்டுல இருக்கிற பெரியவங்க கிட்ட நான் எப்போ வந்து பேச?” என்று அவன் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாத குரலில் கேட்க 

சாராதான் அதிர்ச்சிக்கு உள்ளானாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *