Categories
Uncategorized

உயிரில் உறைந்த நேசம் -18

Free Download WordPress Themes and plugins.

உயிரில் உறைந்த நேசம் -18

ஆழியின் ஆவேசத்தை ஆண்டவனாலும் அடக்க இயலாதது போன்றே சிவாவின் ஆனந்தத்தையும் அடக்க இயலவில்லை .ஆஷிர்யாவின் அப்பா என்ற ஒரு வார்த்தை வற்றிய நதியான சிவாவின் வாழ்வினை வர்ண ஜாலங்கள் நிறைந்ததாக மாற்றிவிட்டது.

ஆஷிர்யாவின் மனதில் கிடைத்த இடம் தனது அம்முவை அதட்டி ,உருட்டியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் வருங்கால வண்ண வாழ்க்கையை சிவா கனவு கண்டு கொண்டிருந்த அதே நேரத்தில் தன் இருண்ட காலம் இறுதி ஊர்வலமாக மாறிவிட்டதை எண்ணி வர்த்தினியும் வார்த்தைகளற்ற மகிழ்ச்சியில் தன் இருப்பிடம் நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

இரு மனங்களும் இன்னல்கள் நீர்த்துபோனதில் நிறைந்த நிம்மதியுடன் சந்தித்திடும் நேரத்தை எண்ணி மனதில் மகிழ்ச்சியுடன் இருந்தனர். ஊருக்கு சென்ற பொழுது விமான பயணத்தை மேற்கொண்டவர்கள் டெல்லியை நோக்கி ரயிலில் வர்த்தினியின் பிடிவாதத்தால் வந்து கொண்டிருந்தனர்.

இரண்டு நாட்கள் மனதிற்கினியவளை கண்டிட இருந்த நிலையில் சிவா தன் மகள் , எழில், ஸ்ரீநிதியுடன் பிரகதி மைதானத்தில் நடைபெற்ற உலக புத்தக திருவிழாவிற்கு சென்றான்.

” ஏன்டா குடும்பமே என்னை குதறி எடுக்குறீங்க? ஒரு தாபாக்கு போனோமா நல்லா சாப்பிட்டோமா அப்படினு நிம்மதியா வாழறவனை புக் வாங்க கூட்டிட்டு வந்திருக்கியே?”, என்று புலம்பிய எழிலை இந்த தடவை முறைத்தது சிவா இல்லை அவனது செல்ல பெண் ஆஷிர்யா.

ஆஷிர்யாவின் முறைப்பில் சட்டென்று வாயை மூடிக் கொண்ட எழிலை மற்ற இருவரும் மிகவும் அதிசயமாக பார்த்தனர். “என்ன லுக் அடிதடி அம்முவும், முறைக்கும் முறுக்கு மீசை மூர்த்தியும் ஆன் தி வே. அப்படி இருக்கறப்ப இந்த சில்வண்டுகிட்ட வாயை கொடுத்து மாட்டிக்க எழில் ஒன்னும் மட்டி இல்லை”, என்று தன்னுடைய காலரை தூக்கி விட்டுக் கொண்ட எழிலை கண்டுகொள்ளாமல் புத்தக அரங்கினுள் நுழைந்த சிவா ஆஷிர்யாவிற்கு எந்த புத்தகம் வேண்டும் என்று கேட்டு அதை தேட தொடங்கி விட்டான்.

ஸ்ரீநிதியும் தனக்கு தேவையான நாவல்களை தேர்ந்தேடுத்து கொண்டு அனைவரும் காருக்கு வந்த பொழுது சிவா கொண்டு வந்து வைத்த புத்தகங்களை கண்ட எழில் மயங்கி விழாத குறைதான். பின்னே அதில் இருந்த சிட்னி ஷெல்டன் புத்தகங்களுடன் கார்கில் பிரம் சர்ப்ரைஸ் டு விக்டரி (kargil from sutprise to victory),தி பிளட் டெலிக்ராம்(The blood telegram), ஆன் இண்டியன் ஸ்பை இன் பாகிஸ்தான்(An Indian Spy in Pakistan) போன்ற புத்தகங்களும் அதனை ஆசையுடன் தடவிக் கொண்டிருந்த ஆஷிர்யாவையும் பார்த்தால் எழில் அதிர்ச்சியாகாமல் என்ன செய்வான்?

எழிலின் அதிர்ந்த முகத்தை கண்டு நக்கலாக சிரித்த சிவா “புஜ்ஜுமா இதுல இருக்குறது எல்லாம் அப்பா இன்னும் ஒரு மாசத்துல உங்களுக்கு படிச்சு சொல்றேன். அதுக்கடுத்து எலி மாமாக்கு கொடுத்துடலாம் செல்லம்”, என்று எழிலின் வயிற்றில் ஆசிடை சுரக்க செய்துவிட்டு காரை கிளப்பினான்.

ஆஷிர்யாவோ மிகவும் தீவிரமாக “அப்பா மம்மா வர்ரதுக்கு இன்னும் டூ டேய்ஸ் இருக்கு. அதுக்குள்ளே நாம இந்த புக்ஸ் முடிச்சிடுவோம். எலி மாமாவையும் நாம படிக்கிறப்பவே வர சொல்லுவோம்”, என்று சிவாவிடம் கூறிவிட்டு எழிலின் பக்கம் திரும்பி “மாமா ஹாஸ்பிடல் போய்ட்டு நேரா அந்த வீட்டுக்கு வந்துடுங்க. நாம இந்த த்ரீ புக்ஸும் படிக்கலாம்”, என்று கூறி சல்ப்யூரிக் ஆசிட் இல்லாமலே எழிலை கருக செய்து கொண்டிருந்தாள்.

” ஆத்தி அப்பனும், மகளும் நமக்கு நாமத்தை சாத்திடுவாங்க போல பேசாம ரெண்டு நாளைக்கு ஆன் டியூட்டில இருந்துகிட்டு பிஸின்னு சொல்லிடனும்”, என்று எழில் உடனடி உறுதிமொழி எடுத்துக் கொண்டான் .

ஆஷிர்யா, சிவாவின் அலப்பறைகளுடனும், புத்தகம் படிப்பதற்கு பயந்து வேலையே கதியாக கண்ணாமூச்சி ஆடிய எழிலின் கலாட்டாகளுடனும் இரண்டு நாட்கள் இரு நொடிகளாக இறைவனடி சேர்ந்தன .வர்த்தினி டெல்லியை வந்தடையும் நாளன்று விடிந்தும் விடியாத இருள் பிரிந்திடா நேரத்தில் ஆஷிர்யாவையும் அழைத்து கொண்டு சிவா ரயில் நிலையத்தை அடைந்திருந்தான்.

வர்த்தினி தன்னுடைய கம்பார்ட்மென்டிலிருந்து இறங்கியதும் முதலில் கண்ட காட்சி ஒரு கையில் ஆஷிர்யாவை தூக்கி வைத்து கொண்டு மற்றொரு கையில் டார்க் சாக்லேட் பாக்சுடன் நின்ற சிவாவைதான் .மூவரும் அருகில் வரும் வரை தான் இருந்த இடத்தில் இருந்து அசையாமல் புன் சிரிப்புடன் நின்றிருந்த சிவாவை முறைத்து கொண்டே அருகில் வந்த வர்த்தினி “புஜ்ஜுமா”, என்று ஆஷிர்யாவை நோக்கி கையை நீட்டிட அந்த சிலவண்டோ “மம்மா அப்பா கையில இருக்குற சாக்லேட் பாக்ஸ் வாங்கிக்கோங்க. அப்பாக்கு கை வலிக்கும்”, என்று சிவாவின் கையில் இருக்கும் பாக்ஸ் அவனுக்கு வலியை தருமோ என்று கவலைப்பட்டது.

மூர்த்தியும் ,மங்களாம்மாவும் ஆஷிர்யா சிவாவை அப்பா என்று கூப்பிட்டதற்கு ஆச்சரியப்பட்டார்கள் என்றால் ,வர்த்தினி தன்னுடைய மகள் தன்னிடம் பேசிய வார்த்தைகளை ஆச்சரியப்பட்டாள்.

இருந்தாலும் ஆஷிர்யாவிடம் “உங்க அப்பா ஹீரோனா கம்பார்ட்மென்ட்ல இருந்து நான் இறங்குறப்பவே என்னோட கையில சாக்லேட் கொடுத்து என்னையும் இறக்கி விட்டிருக்கனும். அதை செய்யாததால உங்க அப்பா ஸிரோ”, என்று கூறிவிட்டு சிவாவிடம் “இந்த சாக்லேட் 70 பெர்ஸன்ட் கோகோ தான் இருக்கும் எனக்கு100 பெர்ஸன்ட் கோகோ இருக்குற சாக்லேட் தான் வேணும்”, என்று கெத்தாக கூறிவிட்டு காரை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டாள் .

அதற்கும் புன்னகையுடன் நின்றிருந்த சிவாவை திரும்பி பார்த்தவள் “அந்த லக்கேஜ் எடுத்துட்டு வந்துடுங்க”, என்று கட்டளையிட்டு விட்டு காரில் டிரைவிங் சீட்டில் அமர்ந்துவிட்டாள். ஆஷிர்யா தன் மம்மாவின் பேச்சில் கவலையாக சிவாவின் முகத்தை பார்த்ததற்கு” டோன்ட் ஒரி புஜ்ஜும்மா மம்மா இப்பதான் பேக் டு போர்ம்க்கு வந்துருக்காங்க”, என்று கூறி விட்டு அவனது அம்மு இட்ட கட்டளையை (அதாங்க மூட்டையை தூக்கிட்டு வர சொன்னதை) நிறைவேற்றிவிட்டு முன்னிருக்கையில் மகளை மடியில் இருத்தி கொண்டு அமர்ந்தான்.

வர்த்தினி காரினை செலுத்தி கொண்டிருந்தாலும் அவளது முகத்தில் இருந்த புன்னகையே மற்ற மூவருக்கும் வர்த்தினியின் மனநிலையை பிரதிபலித்து விட்டது. எழிலின் வீட்டிற்கு முன் காரை நிறுத்திவிட்டு அனைவருக்கும் முன் உள்ளே சென்ற வர்த்தினியை பார்த்து சிவாவிற்கு தான் படப்போகும் அவஸ்தை நன்கு விளங்கிவிட்டது.

ஆஷிர்யா தான் “மம்மா நாம நம்மளோட வீட்டுக்கு போகாம எதுக்கு எலி மாமா வீட்டுக்கு வந்துருக்கோம்?”, என கேட்டாள்.” புஜ்ஜு நீ உன் அப்பாவோட வீட்டுக்கு போ .நான் என்னோட அப்பா வீட்டுல இருக்கேன்”, என்றுக் கூறியதோடு நில்லாமல் எழிலுக்கு ஹைபை வேறு கொடுத்த வர்த்தினியின் இந்த முகம் அங்கிருந்தோருக்கு நிறைவான மனநிலையை தந்தது.

” அம்மு இந்த அண்ணனுக்கு பெரிய பெருமையை தேடி தந்துட்ட. இந்த ரெண்டு பிசாசுங்களும் சேர்ந்துகிட்டு என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டாங்க”, என்று கண்ணீர் வடித்த எழிலை “டேய் எலி மாமாவும் என் பொண்ணும் பிசாசுங்களா? இங்க பாரு அவங்களை ஏதாவது சொன்ன உன்னோட எந்த சாப்பாட்டுல எதை கலப்பேன்னு எனக்கே தெரியாது”, என்று மிரட்டிய வர்த்தினியை கண்டு எழிலுக்கு எமலோகம் எதிரில் தெரிந்தது .

எழிலின் எல்லையில்லா கலாட்டாகளுடனும், ஆஷிர்யாவின் அறிவு பேச்சிலுமாக காலையுணவை முடித்தவர்கள் அடுத்து என்ன என்று யோசிக்கும் முன்பே வர்த்தினி சிவாவிடம் “மாமா நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்”, என்று கூறினாள்.

” ஓகே அம்மு !நம்ம வீட்டுக்கு போகலாம்”, என்று சிவாவும் கிளம்ப அவனுக்கு முன்னால் வந்து நின்ற எழில் சிவாவை முறைத்து விட்டு வர்த்தினியிடம் திரும்பியவன் “அம்மு கல்யாணத்துக்கு முன்னாடி நீ அங்கெல்லாம் போகக் கூடாது. மேல டெர்ரஸ்ல கார்டன் இருக்கு அங்க போய் பேசுங்க”, என்று கூறினான்.

வர்த்தினிக்கோ இந்த எழில் மிகவும் புதியவன் சிவா அளவிற்கு இல்லையென்றாலும் எழில் எப்பொழுதும் வர்த்தினியை பாதுகாக்க தன்னால் இயன்ற அளவு செய்திடுவான். அதுவும் வர்த்தினி செய்யும் குரங்கு சேட்டைகள் அனைத்திற்கும் இவன் தான் தண்டனை பெற்றிடுவான். அப்பேற்பட்டவனின் பாசம் வர்த்தினியை கண்கலங்கிட செய்தது.

எழிலின் பேச்சை கேட்டு மாடிப்படியை நோக்கி சென்ற வர்த்தினி “ஏன்டா மச்சான் எங்களுக்கு இனிதான் கல்யாணமாகணுமா? அம்மு பிறந்தப்ப இருந்து என்னோட லைப் அவதான். அவளோட லைப் நானும், என் பொண்ணும்தான்”, என்றுக் கூறிய சிவாவின் வார்த்தைகளில் அப்படியே நின்று விட்டாள். இவர்களின் வாக்குவாதத்தை பார்த்து கொண்டிருந்த மூர்த்திதான் “மாப்பிள்ளை நீ அம்முவை கூட்டிட்டு போ. எழில் நீ என்கூட குட்டிம்மாவை களறி கிளாஸ்ல சேர்த்து விடுறதுக்கு வா”, என்று நாட்டாமையாக கூறி எழிலை சிவாவின் வழியில் இருந்து அகற்றினர்.

அப்பொழுதும் அம்முவிடம் திரும்பிய எழில் “உனக்கு பிடிக்காத எதுவும் நடக்காது அம்மு. இவன் எதாவது எக்குத்தப்பா பேசுனா போட்டு தள்ளிடு. அதுக்கடுத்து வர்ர பிரச்சினையை நான் பார்த்துக்குறேன்”, என்று கூறிவிட்டு சிவாவிடம் “என் தங்கச்சி பத்திரம்”, என்று மிரட்டிவிட்டே சென்றான். எழிலின் மிரட்டலை கேட்ட சிவா வர்த்தினியிடம் “உன்னோட ரௌடிதனத்தை பற்றி தெரிஞ்சும் இந்த எலி ஏன் இவ்ளோ பில்ட்அப் செய்றானோ?”, எனக் கூறிக்கொண்டே தன் வீட்டை நோக்கி செல்ல ஆரம்பித்தான்.

வர்த்தினியும் அவனை பின் தொடர்ந்து எவ்வாறு தன்னுடைய பேச்சை ஆரம்பிக்குறது என்ற எண்ணத்திலேயே சென்றவள் தன் முன்னால் பெரிய டெடி பியருடன் சாக்லேட் பாக்ஸ் வைத்து கொண்டு நின்ற சிவாவை பார்த்து முறைக்க முயற்சித்து முடியாமல் சிரித்துவிட்டாள்.

” வெல்கம் டு அவர் நெஸ்ட் மை டியர் அம்முமா”, என்ற சிவாவிடம் அலட்சிய புன்னகையை செலுத்திவிட்டு உள்ளே சென்ற வர்த்தினி அங்கு ஹாலில் நடுநாயகமாக இருந்த பழங்கால ஊஞ்சலில் ஏறி அமர்ந்து கொண்டாள். அவளருகில் வந்தமர்ந்த சிவா “சொல்லுங்க மேடம் எப்ப நாம இந்த ஊர் உலகத்துக்காக கல்யாணம் பண்ணிக்கலாம்?”, என்று கேட்டதற்கு “அதெல்லாம் முடியாது”, என்று பட்டென்று பதில் கூறிய வர்த்தினி வீட்டை சுற்றி தன் கண்களால் நோட்டமிட்டாள்.

” இப்ப என்னதாண்டி உனக்கு பிரச்சினை கல்யாணம் பண்றதுல?”, என்ற சிவாவின் கேள்விக்கு “லவ் பண்ற பொண்ணுகிட்ட சொல்லாம அம்மாகிட்ட சொன்ன உனக்கு எதுக்கு கல்யாணம் ?போ போய் என் அம்மாகிட்ட பொண்ணு கேளு. அவங்க ஓகே சொன்னாங்கன்னா என்கிட்ட வந்து புரப்போஸ் பண்ணு. பிறகு நான் யோசிக்கிறேன்”, என்று கூறிய வர்த்தினியை யோசனையாக பார்த்த சிவா “ஓகே மேடம்”, என்றுக் கூறிவிட்டு “நீ ஏதோ பேசணும்னு சொன்ன”, என்று வர்த்தினியை மேலும் பேச தூண்டினான்.

சிவாவின் கேள்வியில் அமைதியான வர்த்தினி சில நிமிடங்களில் தன்னை சமன்படுத்திக் கொண்டு “இப்ப நான் சொல்றதால உங்க அன்பு மாறாதுன்னு எனக்கு தெரியும். இருந்தாலும் இதை சொல்லிட்டா எனக்கு ஒரு ரிலீஃப் கிடைக்கும்”, என்றுக் கூறிவிட்டு சிவா அங்கே வைத்திருந்த டார்க் சாக்லேட்டை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்.

அளவுக்கதிகமான மன உளைச்சலில் இருக்கும் பொழுது இவ்வாறு சாப்பிடுவது வர்த்தினியின் வழக்கம். அதை உணர்ந்த சிவா வர்த்தினியின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்து சிறிது அழுத்தம் கொடுத்தவன் “சொல்லுடாமா”, என்றான்.

” அப்பா இறந்ததுக்கப்புறம் ஊருக்கு கூட்டிட்டு போன அம்மா ரொம்பவே மாறிட்டாங்க. நான் செய்ற சின்ன சின்ன விஷயத்தையும் கண்டிச்சாங்க .அதுவும் மாமா வீட்டுல இருக்க வேண்டிய சூழ்நிலையில அவங்களோட டிப்ரெஸ்ஸன் அத்தனையும் என் மேல கோபமா காட்டினாங்க. ஒரு ஸ்டேஜ்க்கு மேல நானும் நிலைமையை புரிஞ்சிகிட்டு அவங்க என்ன சொன்னாலும் சரின்னு சொல்ல ஆரம்பிச்சுட்டேன்.

காலேஜ் சேர்ந்ததுக்கப்புறம் அடிக்கடி நீ யாரையாவது லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் அப்பா பேர்தான் கெட்டு போகும்ன்னு சொல்ல ஆரம்பிச்சாங்க. அது வரைக்கும் மாசத்துக்கு ஒரு தடவை என்கூட போன்ல பேசிட்டு இருந்த மூர்த்தி அப்பாவும் திடீர்னு பேசுறதை நிறுத்திட்டாங்க. நானே போன் பேச நினைச்சாலும் அம்மா விடல.

திடீர்னு ஒரு நாள் எனக்கு மாப்பிளை பார்த்திருக்குறதாகவும் ,ஒரே மாசத்துல கல்யாணம் அப்படினு சொன்னாங்க. எனக்கு கல்யாணத்தை பத்தி எந்த எக்ஸ்பெக்டேஷனும் இருந்தது இல்லை. அதனால நானும் சரி சொல்லிட்டேன். ஆனால் அம்மாகிட்ட மூர்த்தி அப்பா, தேவி அத்தை, சிவா மாமா எல்லோரையும் கூப்பிடுங்கனு சொன்னதுக்கு அதெல்லாம் ஒன்னும் தேவையில்லைன்னு சொல்லிட்டாங்க.

எனக்கு நீங்களும் அத்தையும் எங்க இருக்கீங்கன்னு தெரியாது. எல்லாமே ரொம்ப அவசரமா நடக்குறத பார்த்து ஒரு புரியாத பயம் மனசுல. யார்கிட்டேயும் சொல்லவும் முடியலை .மாப்பிளை போட்டோ மட்டும்தான் காமிச்சாங்க .சிங்கப்பூர்ல வேலை செய்றதால கல்யாணத்துக்கு முதல் நாள்தான் வாராருனு சொல்லிட்டாங்க.

நான் எதாவது கேட்டா அப்பாவோட பேரை காப்பாத்துற பொறுப்பு உனக்கு இருந்துச்சுன்னா பேசாம இருன்னு மட்டுமே சொன்னாங்க. சாதாரண என்னோட கேள்விக்கு பதில் சொல்றதால அப்பாவோட பேர் எந்த வகையிலே கெட்டு போகும்னு எனக்கு புரியவே இல்லை. அந்த மாப்பிளைகிட்ட இருந்தும் எனக்கு போன் எதுவும் வரலை .

சரி இனி விதிவிட்ட வழின்னு நானும் கல்யாணத்துக்கு ரெடி ஆகிகிட்டேன். கல்யாணத்தன்னிக்கு காலையில முகூர்த்த நேரத்துக்குதான் மாப்பிள்ளை வந்தார். வந்து பேருக்கு ஒரு ஹாய் சொல்லிட்டு வேற எதுவும் பேசலை கல்யாணம் முடிஞ்சதும் அவங்க வீட்டுல என்னை மட்டும் விட்டுட்டு எல்லோரும் கிளம்பிட்டாங்க. அவரோட”, என்று சொல்லிக்கொண்டிருந்த வர்த்தினியின் வாயை தன் கையால் மூடிய சிவா “அவனுக்கு மரியாதை தர தேவையில்லை அம்மு .அந்த நாதாரி பேர் ராஜேஷ்தானே? பேரை சொல்லியே சொல்லு “,என்று கூறினான்.
“ஓகே! ஓகே!”, என்று புன்சிரிப்புடன் கூறிய வர்த்தினி தன் கசந்த காலத்தை( கசப்பான நினைவுகளை கடந்த காலம் என குறிப்பிட விரும்பாமல் கசந்த காலம் என குறிப்பிட்டுள்ளேன் )கூற ஆரம்பித்தாள். ராஜேஷின் வீட்டில் முதல் நாளிலேயே வர்த்தினி வித்தியாசமாக உணர்ந்தாள். ஆனால் அது எதனால் என்று பகுத்தறிய முடியவில்லை. ராஜேசும் வர்த்தினியிடம் பேச கூட ஆர்வம் காட்டாமல் தன் அண்ணியின் அருகில் அமர்ந்து மிகவும் தீவிரமாக பேசி கொண்டிருந்தான்.

அந்த வீட்டில் தான் வேண்டாத பொருளாக இருப்பது போன்ற ஒரு எண்ணம் வர்த்தினிக்கு எழுந்ததும் நேராக ராஜேஷின் அருகில் சென்றவள் “ஹலோ! நான் ஹம்ஷவர்த்தினி மல்டிலிங்குஸ்டிக்ல போஸ்ட் கிராஜுவேஷன் முடிச்சிருக்கேன். இன்னிக்கு மார்னிங் நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிஞ்சிருக்கு. இப்ப உங்களை பத்தி எனக்கு தெரிஞ்சுக்கனும்”, என்று நேருக்கு நேராக கண்களை பார்த்து கூறினாள் .

வர்த்தினியின் பேச்சில் அதிர்ந்து பார்த்த ராஜேஷை முந்தி கொண்டு அவனுடைய அண்ணி அனிதா “அப்படி இல்லை அவரு ரொம்ப நாள் கழிச்சு எங்களை பார்க்குறதால பேசிட்டு இருக்கார். இனி காலத்துக்கும் உன்கூடதானே குப்பை கொட்ட போறாரு. இப்பவே உனக்கு என்ன அவசரம் ?”,என்று கண்களில் ஒரு வகை குரோதம் மின்ன கேட்டாள்.

” ஓஹ் ராஜேஷோட மவுத் பீஸ் நீங்கதானா? இது தெரியாம நான் அவர்கிட்ட கேள்வி கேட்டுட்டேனே!”, என்று வர்த்தினி தன் குரலில் ஆச்சரியம் காட்டி கூறவும் ராஜேஷ் சுதாரித்து கொண்டான்.” ஓகே ஹனி !நாம அப்புறம் பேசலாம்”, என்று அவனது அண்ணியிடம் கூறிவிட்டு வர்த்தினியை அழைத்து கொண்டு அவனது அறைக்கு சென்றவன் முதலில் கூறிய வார்த்தை “எனக்கு அனிதா ரொம்ப முக்கியமானவங்க. அவங்களுக்கு மரியாதை கொடுத்தா இந்த வீட்டுல நீ இருக்கலாம். இல்லைனா போய்ட்டே இரு”, என்று கூறிவிட்டு மறுபடியும் வெளியே சென்றுவிட்டான் .

இந்த வார்த்தைகள் வர்த்தினியை நொறுங்கிட செய்திடவில்லை மாறாக இதில் என்ன விஷயம் மறைந்துள்ளது என்றே சிந்திக்க செய்தது. அன்றிரவு மிகவும் நேரம் கழித்து அறைக்கு வந்த ராஜேஷ் வர்த்தினியிடம் “நான் இன்னும் த்ரீ டேய்ஸ்ல கிளம்பிடுவேன் .நீ நெக்ஸ்ட் மன்த் வந்துடு “,என கூறிவிட்டு உறங்க ஆரம்பித்துவிட்டான்.

அந்த நொடியில் வர்த்தினி தன் தந்தையின் பிரிவை எண்ணி மனம் வெதும்பி போனாள். ராஜேஷ் இங்கிருந்த மூன்று நாட்களும் “ராஜுவா! ராஜுவா!”, என்று அனிதா கூப்பிட அவளது பின்னேயே அலைந்து கொண்டிருந்தான் .அந்த நான்கு நாட்களிலேயே வர்த்தினிக்கு வாழ்க்கை வெறுத்துவிட்டது. ராஜேஷின் அம்மா, அப்பாவும் வர்த்தினியை கண்டு கொள்ளவில்லை.

ராஜேஷ் சிங்கப்பூர்க்கு கிளம்பிய அன்றே தன் அம்மாவின் வீட்டிற்கு வந்த வர்த்தினி அவளுடைய அத்தை கேட்ட “உன்னை துரத்தி விட்டும் மறுபடியும் வந்து தொலைஞ்சுட்டியா?”, என்ற கேள்வியில் ஏன் தான் பிறந்தோம் என்று எண்ண ஆரம்பித்துவிட்டாள். இதில் மாலதி வேறு மகளிடம் “உன்னோட மரியாதை புருஷன் கூட சேர்ந்து வாழறதுலதான் இருக்கு இனிமே இங்கெல்லாம் வரக்கூடாது”, என்று அறிவுரைக் கூறவும் அங்கிருந்த ஒரு ஹாஸ்டெலில் சென்று வர்த்தினி தங்கி கொண்டாள் .

அன்று முதல் ராஜேஷுக்கு தானே கால் செய்து சிங்கப்பூர் செல்ல தேவையான ஏற்பாடுகளை ஒவ்வொன்றாக கேட்டு செய்தவள் ஒரே மாதத்தில் விமானம் ஏறிவிட்டாள். விமானத்திற்குள் செல்லும் முன் ராஜேஷுக்கு அழைத்து தான் வந்து சேரும் நேரத்தையும் கூறிவிட்டு தன்னுடைய முதல் விமான பயணத்தை ரசித்து கொண்டே சாங்கி ஏர்போர்ட்டை வந்தடைந்தாள்.

இம்மிகிரேஷன் நடைமுறைகளை முடித்து கொண்டு வெளியே வந்து ராஜேஷை தேடியவளுக்கு அவன் எங்கும் காணவில்லை என்பது பெருத்த ஏமாற்றமாக இருந்தது. அங்கிருந்த என்கியூரி கவுன்ட்டரிலிருந்த போன் மூலமாக ராஜேஷை அழைத்தவள் தான் சாங்கி ஏர்போர்ட்டில் இருப்பதாகவும் அவன் எங்குள்ளான் எனவும் விசாரித்தாள்.

” ஓஹ் வந்துட்டியா? உன்கிட்ட அட்ரஸ் இருக்குதானே நீயே கேப் எடுத்துக்கிட்டு வந்துடு “,என கூறிவிட்டு வைத்துவிட்டான். அப்படியே திரும்பி போய்விடலாம் என்றே வர்த்தினி எண்ணினாள். ஆனாலும் தனக்கு என்று போக்கிடம் இல்லாத காரணத்தினாலும், அம்மாவின் மனநிம்மதிக்காகவும் மனதினை மாற்றிக் கொண்டு வெளியே வந்தவள் அங்கிருந்த வரிசையில் காத்திருந்து கேப் ஏறினாள்.

கேப்பில் ஏறியதும் டிரைவரிடம் என்னிடம் இந்திய பணம்தான் உள்ளது ஏதாவது எக்ஸ்சேஞ்சில் சிறிது நேரம் நிறுத்தினால் பணம் மாற்றி வந்துவிடுகிறேன் என கூறினாள். வர்த்தினி மாண்டரின் சைனீஷ் பேசியதிலேயே அகமகிழ்ந்து போன அந்த கேப் டிரைவர் “ஓகே லா” ,என உடனடியாக ஒத்து கொண்டார்.

பணம் மாற்றிவிட்டு தான் செல்ல வேண்டிய இடமான மரைன் டிரைவை அடைந்தவள் கேப் டிரைவரிடம் நன்றி உரைத்துவிட்டு எட்டாவது மாடியில் ராஜேஷ் குடியிருந்த வீட்டிற்கு தன்னுடைய பொதி மூட்டைகளையும் தூக்கி கொண்டு சென்றாள் .

வர்த்தினி எட்டாவது மாடியை அடைந்து அங்கிருந்த காலிங் பெல்லை பல முறை அழுத்திய பின்பே ராஜேஷ் கதவை திறந்தான் .”வந்துட்டியா ?நான் கூட அப்படியே தொலைஞ்சுடுவியோன்னு நினைச்சேன். அங்க கிட்சேன் இருக்கு. எனக்கு பில்டர் காபி தான் பிடிக்கும் அதை போட்டு கொண்டு வா”, என அப்பொழுதுதான் மனைவி முதல் முறையாக வருகிறாள் என்ற எண்ணமே இல்லாமல் ஏதோ வீட்டிற்கு வந்த பணிப்பெண்ணாக நினைத்து வர்த்தினிக்கு கட்டளையிட்டு விட்டு தன்னுடைய அறைக்குள் செல்லப்போன ராஜேஷை “ராஜேஷ் கொஞ்சம் நில்லுங்க”, என்று வர்த்தினி நிறுத்தி வைத்தாள்.

ராஜேஷ் நின்றதும் அவனது அருகில் வந்தவள் “நான் இன்னிக்கு வரேன்னு தெரிஞ்சும் நீங்க ஏன் ஏர்போர்ட்க்கு வரலை? அடுத்து வீட்டுக்கு முதல் தடவை வர பொண்டாட்டியை வேலைக்கு வந்தவ மாதிரி ட்ரீட் பண்றீங்க. இதுக்கெல்லாம் அசருற ஆள் நானில்லை. ரொம்பவும் ஓவரா செஞ்சீங்கன்னா இங்க 999க்கு கால் பண்ணிடுவேன்”, என்று மிரட்டிவிட்டு ராஜேஷ் நுழைவதற்கு நின்றிருந்த அறையினுள் நுழைந்து அங்கிருந்த படுக்கையில் படுத்து உறங்க ஆரம்பித்துவிட்டாள்.

இவள் சாதாரண பெண்ணல்ல என்ற எண்ணமே ராஜேஷிற்கு தோன்றியது. வேறு வழியில்லாமல் அவனும் உறங்க சென்றான் .நன்றாக தூங்கி எழுந்த வர்த்தினி வேலைக்கு தயாராகி கொண்டிருந்த ராஜேஷை “இன்னிக்கு லீவ் போடலியா?”, என்று கேட்டாள்.

” இன்னிக்கு சண்டே. எனக்கு வீக் டே தான் ஆப்”, என்றுக் கூறிய ராஜேஷ் வர்த்தினியிடம் ஒரு சாவியை கொடுத்துவிட்டு “பக்கத்துலதான் பேர் அண்ட் பிரைஸ்(fair and price) இருக்கு செவன் லெவேனும் (seven eleven)இருக்கு. உனக்கு தேவையானது வாங்கிட்டு வந்துக்கோ”, எனக் கூறிவிட்டு சிறிது பணத்தையும் அங்கிருந்த டேபிளில் வைத்துவிட்டு வேறு எதுவும் கூறாமல் வேலைக்கு சென்றுவிட்டான் .

“அட ஏடுகொண்டளவாட இவன்கிட்ட ஒவ்வொரு விஷயத்துக்கும் நான் போராடணும் போல”, என்று தனக்கு தானே புலம்பி கொண்டே எழுந்த வர்த்தினி குளித்து கிளம்பி பக்கத்தில் இருந்த கடையில் சிம் கார்டு வாங்கி தன்னுடைய அம்மாவிற்கு அழைத்து தான் வந்து சேர்ந்து விட்டதை தெரிவித்துவிட்டு தனக்கு தேவையானவற்றை வாங்கியவள் அருகிலிருந்த மேக் டொனால்ட்ஸில் வயிற்றுக்கும் சிறிது கவனித்து விட்டு வீட்டிற்கு வந்து அனைத்தையும் ஒதுங்க வைத்தாள்.

பேசுவதற்கோ, பழகுவதற்கோ யாருமில்லாமல் தனியாக ஹாரிபாட்டர் புத்தகத்தை படித்து கொண்டிருந்த வர்த்தினிக்கு மறுநாள் அதிகாலை மூன்று மணியளவில் மூச்சு முட்ட குடித்துவிட்டு வந்த ராஜேஷை கண்டு அளவு கடந்த அதிர்ச்சியே.

” என்னடி ரொம்ப திமிரா பேசுற வந்ததும்”, என்று ராஜேஷ் வர்த்தினியை நெருங்கியவாறு கூறவும் “ராஜேஷ் என்னது இது இப்படி ட்ரிங்க் பண்ணிட்டு வந்திருக்கீங்க?”, என்று சற்று குரலுயர்த்தியே வர்த்தினி கேட்டாள். “என்னது ட்ரிங்க் ஆஹ்? இது தேவாமிர்தம். நான் ஒரு பார் ஜெனரல் மேனேஜர். அப்படி இருக்கறப்ப குடிக்காம வந்தால் என்னோட குலதெய்வம் குத்தமாயிடும்”, என்று வேதாந்தம் பேசிய ராஜேஷ் வர்த்தினியின் விருப்பம் பற்றி சிறிதும் யோசிக்காமலே அவளுடன் தன்னுடைய இல்லறத்தை அறமற்ற அரக்க வழியில் துவங்கினான்.

வர்த்தினியின் ஒட்டு மொத்த தைரியமும் வடிந்து விட்டது ராஜேஷின் அரக்க குணத்தில். இதுவே தொடர்கதையாக மாறிய நிலையில் வர்த்தினி மிகவும் தளர்ந்து போனாள். இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் வர்த்தினிக்கு தான் கர்ப்பமடைந்திருப்பது தெரிய வந்தது. இதற்கு சந்தோசப்படுவதா வருத்தப்படுவதா என்று குழப்ப நிலையில் இருக்கும் பொழுதுதான் ராஜேஷின் மற்ற ஆட்டங்கள் வெளி வரத்துவங்கின.

வர்த்தினி தனக்கு நடைபெறும் கொடுமைகளை பற்றி அவளுடைய அம்மாவிடம் எதுவும் கூறவில்லை. வர்த்தினிக்கு அன்று காலை எழும்போதே சற்று அயர்ச்சி அதிகமாகவே இருந்தது. அதனால் அன்று ஹாஸ்பிடல் செல்ல வேண்டுமென முடிவெடுத்தவள் ராஜேஷிடம் “நான் இன்னிக்கு எஸ் ஜி ஹச் போகணும் வர முடியுமா?”, என்று மட்டும் கேட்டாள்.

அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு “உன்னை மாதிரி குண்டு கருப்பி கூட வந்தால் என்னோட இமேஜ் என்ன ஆகுறது? கட்டிகிட்ட பாவத்துக்கு காசு மட்டும் தரேன்”, என்று கூறிவிட்டு சென்றுவிட்டான். பதில் எதுவும் கூறாமல் சென்ற வர்த்தினி அன்றைக்கு தனக்கு ஏற்பட போகும் அதிர்ச்சியை அப்பொழுது அறியவில்லை.

நள்ளிரவில் வழக்கம் போல் வீடு திரும்பிய ராஜேஷ் அன்று தன்னுடன் எரிக்கா (Erica)எனும் பிலிப்பினோ பெண்ணொருத்தியை அழைத்து வந்தவன் தூங்கி கொண்டிருந்த வர்த்தினியை எழுப்பி “ஹாலில் போய் படு எங்களுக்கு பெட் வேணும்”, என்று கூறியதிலும் அப்பெண்ணை பார்த்ததிலும் வர்த்தினி மொத்தமாக உடைந்து போனாள்.

நாளொரு பெண்ணுடன் நள்ளிரவில் வீட்டிற்கு வந்த ராஜேஷின் ஆட்டம் தாங்க முடியாத நிலையில் வர்த்தினி வெடிக்க ஆரம்பித்தாள்.” ராஜேஷ் இதெல்லாம் சரி இல்லை .என்னாலே இந்த மாதிரி கண்ராவி எல்லாம் பொறுத்துக்க முடியாது”, என்று எகிறிய வர்த்தினியிடம் பதில் எதுவும் கூறாதவன் இரண்டு நாட்களில் நள்ளிரவில் அவனது அண்ணி அனிதாவுடன் வந்திறங்கினான்.

அனிதா வந்தவுடன் ராஜேஷின் படுக்கையறைக்குள் சென்றுவிட்டாள். அவளது பின்னே செல்ல போன ராஜேஷை “ராஜேஷ் இப்ப என்ன பண்றீங்கன்னு எனக்கு கொஞ்சம் சொல்ல முடியுமா?”, என்ற வர்த்தினியின் இறுகிய குரல் தடுத்து நிறுத்தியது .

ராஜேஷ் பதில் கூறும் முன்பே உள்ளே இருந்து வந்த அனிதா “உனக்கு என்ன தெரியணும் ?உன்னை சாகடிச்சா கூட யாரும் கேக்க நாதியில்லைன்னு உன்னை பொண்ணா தேர்ந்தேடுத்தது தெரியனுமா? இல்லை என்னோட ராஜுவாவை உனக்கு கொஞ்ச நாளைக்கு இந்த சொசைட்டிக்காக விட்டு கொடுத்தது தெரியனுமா?”, என்று எகத்தாளமாக கேட்டாள்.

அனிதாவின் கூற்றில் அதிர்ந்த வர்த்தினியை பார்த்த ராஜேஷ் “உன்னை மாதிரி கண்ணாடி போட்ட ஒரு குருடியை, கருப்பு பன்னியை பொண்டாட்டின்னு சொல்றதே எனக்கு அசிங்கம். கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு சிங்கப்பூர் கூட்டிட்டு வந்தாச்சு .என்னாலே ஒருத்தியோட மட்டும் வாழ முடியாது. இதுக்கெல்லாம் இஷ்டம்னா இரு இல்லையா செத்து தொலை. இன்சூரன்ஸ் பணம் வரும் அதை உங்கம்மாக்கு கொடுத்துடுறேன்”, என தெனாவெட்டாக கூறிவிட்டு இருவரும் ரூமுக்குள் சென்று விட்டனர்.

அளவுகடந்த அதிர்ச்சியில் வர்த்தினி உறைந்த அந்த நொடியில் தான் தன் குழந்தையின் முதல் அசைவை உணர்ந்தாள் .அந்த வினாடியில் தன்னுடைய விதியை தானே மாற்றி எழுத வேண்டும் எனும் எண்ணம் உதித்தது வர்த்தினியின் மனதில் .

விடியும் வரை உறங்காமல் காத்திருந்தவள் கதவை தட்டி அவர்கள் திறந்ததும் தன்னுடைய உடைமைகளை எடுத்து கொண்டு ஏர்போர்ட்டிற்கு நேராக சென்றாள் .அங்கு சென்று எமெர்ஜென்சி என்று டிக்கெட் கேட்டதும் இவளது கர்ப்பிணி தோற்றத்தை கண்டவர்கள் உடனடியாக ஓகே செய்தார்கள்.

இந்தியா வந்தவள் தன்னுடைய வீட்டிற்கு எந்தவித அறிவிப்பும் இல்லாமல் நேராக சென்றவள் தன்னுடைய அம்மாவின் மனநிலையை கணிக்க மறந்துவிட்டாள். வர்த்தினி திடீரென்று வரவும் மாலதிக்கு சற்று அதிர்ச்சியே !அதுவும் வர்த்தினியின் இறுகிய தோற்றம் அவரது மனதை பிசையவே செய்தது.

” என்னடி ஆச்சு?”, என்ற மாலதியின் கேள்விக்கு நடந்ததை கூறியவள் “நான் கொஞ்சம் தூங்கணும் அம்மா “,என்று தூங்கிவிட்டாள். ஆனால் அவள் எழுந்தபொழுது அடுத்த அதிர்ச்சியாக வர்த்தினியின் அம்மா மொத்தமாக தூங்கிவிட்டார்.

கண்ணீர் விடக்கூட இயலாத நிலையில் இருந்த வர்த்தினியை சுற்றியிருந்த சுற்றம் “இந்த திமிர் பிடிச்சவளால தான் இப்படி ஆயிடுச்சு” என்று வார்த்தைகளால் வதைத்தார்களே ஒழிய யாரும் ஆறுதல் அளிக்கவில்லை. அனைத்து காரியங்களும் முடிந்த நிலையில் அதே பகுதியில் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்த வர்த்தினி பக்கத்தில் இருப்பவர்களுக்கு ஹிந்தி மற்றும் பிற பாடங்களுக்கு டியூசன் எடுக்க ஆரம்பித்தாள்.

பகல் நேரம் முழுவதும் வயிற்றில் இருக்கும் குழந்தையுடன் பேசுபவள் மாலையில் டியூசனில் பிஸியாக இருந்தாள். பிரசவ வலியின் போதும் யாரும் பார்த்து கொள்ள இல்லாமலே ஹாஸ்பிடல் சென்று குழந்தை பெற்றெடுத்தவள் ஒரு வாரத்திற்கு மட்டும் குழந்தையை கையாள சிறிது தடுமாறினாள்.

இவையனைத்தையும் வர்த்தினி எந்த உணர்வுகளுமற்ற குரலில் கூறிய பொழுது சிவாவின் கண்கள் கண்ணீரை உற்பத்தி செய்து கொண்டிருந்தன.” சாரி டி அம்மு நான் உயிரோட இருந்தும் உன்னை இப்படி கஷ்டப்பட விட்டுட்டேனே!”, என்ற சிவாவின் குற்ற குரலில்தான் வர்த்தினி நிகழ் காலத்திற்கு திரும்பினாள் .

“நீ என்ன மாமா பண்ண முடியும்? என்னோட தலையெழுத்துக்கு ,புஜ்ஜும்மா ஒன்றரை வயசு வரைக்கும் அங்கேயே சமாளிச்சுட்டேன். திடீர்னு ஒரு நாள் புஜ்ஜுக்கு சாப்பாடு ஊட்டிட்டு இருக்கறப்ப ராஜேஷும், அவனோட அம்மாவும் வந்தாங்க வந்தவங்க டிவோர்ஸ் பேப்பர்ல சைன் பண்ண சொல்லி பிரச்சினை பண்ணுனாங்க. நான் முடியாதுனு சொல்லவும் ராஜேஷ் என்னை கத்தியால் குத்த வந்துட்டான். அதை பார்த்து புஜ்ஜுமா கதற ஆரம்பிச்சுட்டா. குழந்தை எதிர்ல அதுக்கு மேல ப்ரோப்ளேம் பண்ண இஷ்டமில்லாம நானும் சைன் பண்ணிட்டேன். அதுக்கடுத்து பாப்பா என்னை விட்டு கொஞ்சம் கூட நகராம ஓட்டிக்கிட்டே இருந்த அந்த டைம்லதான் என்னோட யூஜி படிச்ச ஒரு பிரண்ட் குர்கான்ல இந்த வேலையை பத்தி சொன்னா. நானும் உடனே ஷிப்ட் ஆகிட்டேன்”, என்று வர்த்தினி கூறி முடித்த பொழுது சிவாவின் பார்வை எங்கோ வெறித்து கொண்டிருந்தது .

சிவாவின் அந்த நிலை வர்த்தினிக்கு பார்க்கவே மிகவும் கஷ்டமாக இருந்தது. “மாமா என்ன ஆச்சு?”, என்ற வர்த்தினியின் குரலில் “அத்தை இல்லைனு தெரிஞ்சதும் நான் உன்னை பார்க்க வந்தப்ப தான் ராஜேஷும், அவனோட அம்மாவும் உன்கிட்ட பிரச்சினை பண்ணிட்டு போயிருந்தாங்க.

அப்பதான் முழுவிவரமும் தெரிஞ்சுகிட்டேன் .ஆனாலும் என்ன காரணத்துக்காக பிரிவுன்னு யாருக்கும் தெரியலை .இனிமே உன்னை தனியா விடக்கூடாதுனு முடிவு பண்ணிதான் உன்னோட பிரண்ட் மூலமா இங்க குர்கான் வரவழைச்சேன்.

ஆரம்பத்துல ஒவ்வொரு நாளும் வருவேன் .நீ புஜ்ஜுமாவை டே கேர்ல விட்டுட்டு போனதும் போய் பார்த்து கொஞ்ச நேரம் விளையாடிட்டு போவேன். அது என்னோட ப்ரண்ட் வைப் தான் நடத்துறாங்க. சுபாவை அங்க உன்னோட பாதுகாப்புக்காகதான் வேலைக்கு சேர்த்துவிட்டேன் .

லாஸ்ட் இயர் எனக்கு பார்டர்ல தொடர்ந்து இருக்க வேண்டிய நிலைமை. அப்பதான் மூர்த்தி மாமாகிட்ட பேசி எழிலை இங்க வரவழைச்சேன். நான் இல்லாதப்ப உங்க ரெண்டு பேரையும் ஒவ்வொரு வாரமும் வந்து பார்த்துட்டு வருவான்.

அன்னிக்கு புஜ்ஜுமா பாப்டி சாட் சாப்பிட சொல்லி தந்த உங்க அப்பா உங்களை அடிக்கிறவங்களை திருப்பி அடிக்கணும்னு சொல்லி தரலயா மம்மானு கேட்டப்ப தான் இதுக்கு மேலேயும் உங்களை தனியா விடக்கூடாதுனு முடிவு பண்ணுனேன். உன்னோட மனக்காயம் ஆறனும்னு நினைச்சுதான் தள்ளியிருந்தேன். ஆனால் தப்பு பண்ணிட்டேனோன்னு தோணுது”, என்று சிவா நீளமாக பேசிமுடித்து விட்டு வர்த்தினியை நிமிர்ந்து பார்த்த பொழுது சிவாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள் வர்த்தினி .l மன்னவன்
மறைத்த
மனம்
மங்கை
மாலை சூடிட
மாற்றிடுமா
மதம் கொள்ள
செய்யுமா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *