Categories
Uncategorized

வெற்றிவேல்-3

Free Download WordPress Themes and plugins.

வெற்றிவேல்-3

வெற்றிவேல் குடும்பத்தினர் பார்க்கச் சென்றிருந்த பெண்ணான மகேஸ்வரி கேட்ட கேள்விகளில் இவளுக்கா வெள்ளை மனசு என்ற எண்ணம் வெற்றிக்கு உதித்தது.

மகேஸ்வரி கேள்விகள் கேட்க வேண்டும் என்று கூறியதும் சரியென ஒத்துக்கொண்ட வெற்றி குடும்பத்தினரிடம் அவள் முதலில் கேட்டதோ வெற்றியின் பள்ளி காலத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை பற்றியும், பேச்சுப் போட்டிகளை பற்றியும் மட்டுமே!

இவ எதுக்கு இந்தக் கேள்வியெல்லாம் கேட்குறா என வெற்றி யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே மகேஸ்வரி வெற்றியைப் பார்த்து “இந்த போட்டியில எல்லாம் நீங்க தோத்துப்போனீங்களாமே!”, என ஒருவித நக்கலுடன் ராகம் இழுத்துக் கேட்டாள். அவளது நக்கலை உணர்ந்து இருந்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத வெற்றி “ஆமா! தோத்துதான் போனேன்… அதுக்கு என்ன இப்ப?”, என தெனாவட்டாகவே பதில் கூறினான்.

அவனது பதிலில் இருந்தாவது தன்னுடைய வாயை அடக்காமல் அடுத்து ஒவ்வொன்றாக கேட்டுக் கொண்டே வந்தவள் அவன் தோல்வியுற்ற அனைத்து விஷயங்களையும் வரிசையாக கேட்டதில் சற்று சுதாரித்துக் கொண்ட அலமேலு “இப்ப என்னமா வேணும் உனக்கு? மாப்பிள்ளை என்ன படிச்சிருக்கான், என்ன வேலை பார்க்குறான்னு நீ கேட்டிருந்தா அது நியாயம். அதை விட்டுட்டு என்னென்னமோ கேட்டுகிட்டு இருக்க”, சற்றுக் கோபமாகவே வினவினார்.

அலமேலுவின் பேச்சுக்கு பதிலாக மகேஸ்வரி வாயிலிருந்து வார்த்தைகள் வரும் முன்னர் அவளது அம்மா “நீங்க என்னங்க? இந்த மாதிரி எல்லாம் மிரட்டுனா என் மகள் பயந்துடுவா”, என இடையில் நுழைந்தார். அப்பொழுது வெற்றிவேல் தன்னுடைய அம்மாவின் கையைப் பிடித்து அழுத்தி நீ பேசாம இரு என கண் ஜாடை காட்டி விட்டு மேலே கேளுங்க என அவர்களை கேள்வி கேட்குமாறு தூண்டினான்.

அவள் அவனது தோல்விகளை வரிசைப்படுத்திய விதத்தில் அமைதியாக இருந்துவிட்டு இறுதியாக “ஆமா எல்லாத்தையும் விலாவாாியா இம்புட்டு டீடைல்ஸ் கலெக்ட் பண்ணி வச்சிருக்கிற நீங்க என்னத்துக்காக பொண்ணு பார்க்க வர சொன்னீங்க? இந்த கேள்வி எல்லாம் நேரா கேட்கறதுக்கு பதிலா போன்லயே கேட்டு இருக்கலாமே!”, என அவன் எழுந்து நின்றவாறு வினவினான்.

வெற்இருக்கு.ுவதற்காகவே காத்திருந்தது போல் “உங்க ஊர்ல இருந்து போன வாரம் ராகவன் வந்து பொண்ணு பாா்த்துட்டு போனாரு. அப்ப அவர்தான் சொன்னாரு. எங்க ஊர்ல வெற்றின்னு ஒருத்தன் போ்ல மட்டும் வெற்றியை வச்சுட்டு எல்லாத்துலயும் தோத்து போய் சுத்திட்டு இருக்கான்.அவனை எல்லா போட்டியிலும் இதுவரைக்கும் நான் தான் ஜெயிச்சுட்டு இருக்கேன்.

அவனுக்கும் பொண்ணு பாா்த்துட்டு இருக்குறதா கேள்விப்பட்டேன். எங்க உன் போட்டோ அவனுக்கு போய் இந்த விஷயத்துல ஜெயிச்சுடுவானோன்னு நெனச்சேன் அப்படின்னு சொன்னாரு. அப்படி அவர் சொல்றப்பவே எல்லாத்துலயும் தோத்துப்போன உங்களைப் பார்க்கணும்னு எனக்கு ஆசை வந்துருச்சு. அதனால உங்க வாயால நீங்க எதுல எல்லாம் தோத்து இருக்கீங்கன்னு தெரிஞ்சுக்க நினைச்சுதான் அம்மா அப்பாகிட்ட சொல்லி உங்களை பொண்ணு பார்க்க வர சொன்னேன்.

கடைசில பார்த்தா நீங்க ஒரு தோத்தாங்குளி”, எனக்கூறி சிரிக்க ஆரம்பித்தாள். தான் செய்ததுடன் தன் சொந்த பந்தங்கள் அனைவரும் சிரிப்பதற்கும் அவள் பேசிய பேச்சுக்கள் காரணம் என்பதை நொடியில் அவள் உணர்ந்தாளா உணரவில்லையா என்பது யாருக்கும் தெரியவில்லை.

அவள் சிரித்து முடியும் வரை அமைதி காத்த வெற்றிவேல் “அப்ப அந்த ராகவன் கூட பேசி வச்சிட்டு என்னை வர சொல்லியிருக்க… அப்படிதானே!”, என அதுவரை பேசிக் கொண்டிருந்த மரியாதைப் பன்மையை கைவிட்டு அவளிடம் கேட்டான்.

அவன் கேட்டதில் சற்று அதிர்ந்த அவளது முழியிலேயே இது இருவரும் சேர்ந்து செய்த பிளான் என்பது அவனுக்கு புரிந்து போனது. இருப்பினும் அதனை பற்றி கண்டுகொள்ளாமல் “பரவாயில்லை… நீ என்ன என்னை வேணாம்னு சொல்றது. நான் சொல்றேன். இந்த மாதிரி நாலு பேரை வரவழைச்சு அதுல எது பெஸ்ட் அப்படின்னு தேர்ந்தெடுக்கிற நீ எனக்கு பொண்டாட்டியா வர்றதுக்கு சுத்தமா தகுதியே கிடையாது.

நான் எல்லாத்துலயும் தோத்துப்போறவன்தான். ஆனா நான் விட்டுக் கொடுக்குறதனாலதான் இன்னொருத்தன் ஜெயிக்கிறான். உனக்கு உங்க அம்மா வெள்ளை மனசுன்னு சொன்னாங்க. ஆமா! ஆமா! ரொம்ப வெள்ளையா இருக்கு.

இப்படியே இரு இல்லன்னா பாசிப் பிடிச்சு பச்சையா மாறிடப் போகுது”, என வெற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவனது கையை பிடித்த துரைசாமி கிளம்பலாம் என இழுத்தார்.

“ஒரு நிமிஷம் இருங்க”, என அவரிடம் கூறிவிட்டு மகேஸ்வரியை நோக்கி திரும்பியவன் “ஒருத்தன் தோத்துப் போறதாலதான் இன்னொருத்தன் ஜெயிக்கிறான். அவன் ஜெயிச்சதால நீ தோத்தவனாயிட்ட அப்படின்னு சொல்றதைவிட ஜெயிச்சவன்கிட்ட போய் அவன் தோத்ததாலதான் உன்னால ஜெயிக்க முடிஞ்சுச்சு அப்படி சொல்லி பார்க்கலாமே! அதை விட்டுட்டு நீ தோத்தாங்குளி, ஒன்னுக்கும் லாயக்கில்லாதவன் அப்படின்னு நோகடிக்குறதை என்னைக்கு விட்டு தொலைக்கிறோமோ அன்னைக்குதான் பால்டாயிலும், பிளீச்சிங் பவுடரும் போட்டு உங்க மன அழுக்கை கழுவி விடத் தேவையில்லை”, என நீளமாகப் பேசியதுடன்

“இப்பவும் நீ எனக்கு, என் குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு இல்லைன்னு சொல்லி உன்னை வேண்டாம்னு நான் தோத்துப் போறதாலதான் அந்த ராகவன் ஜெயிச்சு உன்னை கல்யாணம் பண்ணிக்க போறான். உங்க ரெண்டு பேருக்கும் இந்த வாழ்க்கை நான் போட்ட பிச்சை”, என்று அழுத்தந்திருத்தமாக கூறிவிட்டு தன்னுடைய தாய், தந்தையருடன் வெளியேறிவிட்டான்.

வீட்டிற்கும் வரும் வழியிலேயே வெற்றியும், அலமேலுவும் சாதாரணமாக பேச ஆரம்பித்து விட்டனர். ஆனால் துரைசாமிதான் மிகவும் சோகமாக இருந்தார்.

அவரது சோகத்தை பார்த்த வெற்றி “என்ன தொர! இம்புட்டு சோகமா இருக்க? அந்த பொண்ணு பாா்க்க போன வீட்டுலருந்த கும்பலில் ஒரு அம்மாவை பார்த்து நீ சைட் அடிப்பதை நான் பார்த்துட்டேன். அம்மாகிட்ட சொல்லிலாம் தரமாட்டேன்”, என சாதாரணமாக ஆரம்பித்து ஒருவித சிரிப்புடனே முடித்தான்.

அதுவரை சோகமாக இருந்தவர் மனைவியின் புறம் திரும்பி “அலமு! இந்தப் பையன் சொல்றதெல்லாம் நம்பாதே! ஏறுக்குமாறா சொல்லி எருதுக்கு பதிலா என்னை வச்சி ஏரோட்டிடுவான். அம்புட்டு கோக்குமாக்கு பிடிச்சவன். நீ அதெல்லாம் நம்பாதம்மா!”, என விட்டால் காரிலேயே அவரின் காலில் விழுந்து இருப்பார்.

“அந்த அளவுக்கு திறமை உங்களுக்கும், உங்க பையனுக்கும் இல்லை… அப்படியே வம்புசம் மாறாமல் வந்து வாச்சுருக்கான்”, என நொடித்துக்கொண்ட அலமேலு மீண்டும் சாதாரணமாக தன்னுடைய மகனுடன் பேச ஆரம்பித்தார்.

அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பாா்த்த துரைசாமி “ரெண்டு பேருக்கும் கொஞ்சம் கூட வருத்தமா இல்லையா?”, என தன் மனதில் இருந்த கேள்வியை கேட்டவுடன் “ஏன் வருத்தப்படனும்?”, என்னும் கேள்வி வெற்றியின் வாயில் இருந்து அடுத்த நொடியில் சீறி வந்தது.

“அந்தப் பொண்ணு பேசினதுல உனக்கு வருத்தம் இல்லையா வெற்றி!”, என மீண்டும் மகனிடம் அதே கேள்வியைக் கேட்டவுடன் “இதுல வருத்தப்பட என்ன இருக்கு? இவ்வளவு பேசுது… ராகவன் வேலை பார்க்குற கம்பெனி நட்டத்துல ஓடுது. எனக்கு நல்லாவே தெரியும். மிஞ்சி போனா ரெண்டு மூணு மாசத்துல இழுத்து மூடிடுவாங்க. அப்ப இந்த பிள்ளை என்னத்த செய்யும்?விட்டு தள்ளுங்க. அது புத்திக்கு தெரியுறது அம்புட்டுதான். பொண்ணு பாா்க்குறதுல இதெல்லாம் சாதாரணம்”, என தன்னுடைய காலரை தூக்கி விட்டவன் மீண்டும் கார் ஓட்டுவதில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.

அவனையே சிறிது நேரம் பார்த்தவர் “ஏன் வெற்றி என்னிக்காவது நீ நாம தோத்துப் போறமே அப்படின்னு சொல்லி கொஞ்சம் வருத்தப்பட்டிருந்தாலும் மேல வந்து இருப்பதானே?”, என வினவினார். அவரது கேள்வியில் அலமேலுவும் வெற்றியும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்.

“நான் என்ன கேட்டேன்னு ரெண்டு பேரும் இப்படி சிரிக்கிறீங்க?”, என துரைசாமி இடை புகுந்தவுடன் “அப்பா! நீ பேசறது உனக்கு காமெடியா இல்லையா? இது என்ன சினிமாவா? அதை நினைச்சு பீல் பண்ணுனதும் ஜெயிக்கிறதுக்கு. நம்ம மகன் தோத்துப் போறதுக்கு வருத்தப்பட்டுருந்தா இந்நேரம் மேல போயிருப்பான் அப்படின்னு கனவு காணுறதை விட்டுட்டு போட்டியிலும், ஆரம்பிக்கிற தொழிலுலயும் தோத்துப் போனாலும் நாம ஆரம்பிச்சு வச்ச தொழில உருப்படியா நடத்துறானேன்னு சந்தோஷப்படு. காமெடி பண்ணாம அடுத்த பொண்ணு பாா்க்குறதுக்கு ஏற்பாடு பண்ணு”, என மிகவும் சாதாரணமாக கூறினான்.

அவனது பதிலில் மனைவியைத் திரும்பிப் பார்த்தவருக்கு அவரிடமிருந்து புன்முறுவலே பதிலாகக் கிடைத்தது. ஏனெனில் வெற்றி சிறுவயதில் ஏதாவது போட்டியில் தோற்றுவிட்டால் அதற்கு அவன் வருத்தப்படாது பார்த்துக்கொண்டவா் அலமேலுதான்.

தந்தையிடம் செல்லம், கொஞ்சல், பாசம் என்று அளவுக்கு அதிகமாக இருந்தாலும் வாழ்வினை எளிதாக கடக்க கற்றுக்கொடுத்தவர் வெற்றியின் அம்மா! அவன் முதல் முறை ஓட்டப்பந்தயத்தில் தோற்று விட்டு வந்த பொழுது பக்கத்து வீட்டு பாட்டி “ஏன்டா! போயும் போயும் விளையாட்டுலயா தோத்துப்போன”, என வினவிய நொடியில் அவனை தூக்கி மடியில் வைத்து கொஞ்சிய அலமேலு “ராசா! நீ தோத்து இன்னொருத்தனை ஜெயிக்க வச்சிருக்கே! உன்னால ஒருத்தன் ஜெயிச்சுட்டான்”, என அதனையே சற்று மாற்றிப் பேசினார்.

அந்த நொடியில் வெற்றிவேலின் மனதில் தோல்வியையும் சந்தோசமாக ஏற்றுக் கொள்ளும் ஒரு விதையை விதைத்தவர் அலமேலு! அதுவே இந்நாள் வரை நீடித்த பொழுது கவலைப்படாத துரைசாமி இப்பொழுது மகனின் கல்யாண விஷயத்தில் என்றதும் அவரினால் வருத்தப்படாமல் இருக்க இயலவில்லை.

அவர்கள் வீடு வந்து சேர்ந்த நொடியே தரகர் அழைத்து தவறான இடத்தை காட்டியதற்காக மன்னிப்பு கேட்டதுடன் வேறு ஒரு பெண் வெற்றியைதான் திருமணம் செய்து கொள்வேன் என அடம் பிடிப்பதாகக் கூறினார். என்னது மறுபடியுமா என துரைசாமி அதிர்ந்ததும் தரகரிடமிருந்து போனை பறித்து பேசிய அந்நபரின் வார்த்தைகளில் துரைசாமி பேசுவதை ஸ்பீக்கரில் கேட்டுக்கொண்டிருந்த ஒட்டுமொத்த குடும்பமும் மறுநாள் சனி என்று கூட பாராமல் அவ்வீட்டின் முன் நின்றிருந்தனர்.

அவ்வீட்டிலும் வெற்றியின் வெற்றி பெறாக் கதைகள் விவாதிக்கப்படுமா? இல்லையெனில் துவளாத தோல்விகள் தூசாக தட்டிவிடப்படுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *