Categories
On-Going Novels Shenba

அத்தியாயம் – 21

அத்தியாயம் – 21

“சுமி! இன்னும் எவ்வளவு நேரத்துக்கு இப்படியே உட்கார்ந்திருப்ப? எழுந்து வா சாப்பிடலாம்” என்று அவளை அழைத்தான்.

“இல்ல கிஷோர்! நீங்க சாப்பிடுங்க. எனக்கு வேணாம்” என்றவளது விழிகள் அருவியெனப் பொங்கியது.

“இங்கே பாரு சுமி! நீ பட்டினி கிடக்கறதால நடந்ததெல்லாம் மாறிடப்போகுதா? வந்து சாப்பிடு. உன்னை இப்படிப் பார்க்க எனக்குக் கஷ்டமாயிருக்கு” எனச் சொல்லிக்கொண்டே அவளருகில் அமர்ந்தான்.

“என்னாலதான், எங்க அப்பாவுக்கு இந்த நிலைமை. எனக்காகவே வாழ்ந்த எங்க அப்பாவுக்கு நான் என்ன செய்தேன்? கடைசியில அவரைக் கொன்னுட்டேனே” என்றவள் பின்னந்தலையைச் சுவற்றில் இடுத்துக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

“ஏய்! பைத்தியமா உனக்கு?” என் அதட்டியவன், அவளது தலையைப் பிடித்தான்.

அவனது கரத்தை விலக்கியவள் வேகமாக எழுந்து தன்னறைக்கு ஓடினாள்.
நீண்ட பெருமூச்சுடன் காலை நீட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான் கிஷோர்.

“என்னடா இது? அவளை கூட்டிட்டு வரேன்னு வந்துட்டு, நீ காலை நீட்டிகிட்டு ஹாயா இங்கேயே உட்கார்ந்துட்ட. எங்கே அவள்?” என்று எரிச்சலுடன் கேட்டாள் மிதுனா.

“அவள் வருவா. நான் கூட்டிட்டு வரேன். உனக்கென்ன எங்கமேல புதுசா அக்கறை வந்திருக்கு” எனக் கேட்டுக்கொண்டே எழுந்தான்.

‘ம்க்கும்… உன்னையே அவள் எப்போ கழட்டிவிடலாம்னு நேரம் பார்த்துட்டிருக்கா. என்னைப் பார்த்தால் உனக்குக் கிண்டலாயிருக்கு’ என மனத்திற்குள் கிண்டலாக நினைத்துக்கொண்டவள், “அம்மா, உங்க ரெண்டு பேரையும் வரச்சொன்னாங்க. எதுவோ முக்கியமா பேசணுமாம்” என்றாள்.

“சரி, நீ போ. நாங்க வரோம்” என்றவன் தமக்கையை அனுப்பிவிட்டு, சுமித்ராவின் அறைக்கதவைத் தட்டினான்.

“சுமி! அம்மா நம்மல கூப்பிடுறாங்களாம். கொஞ்சம் வந்து என்னன்னு கேட்டுட்டு வந்திடு” என்றான்.

கண்களைத் துடைத்துக்கொண்டு கதவைத் திறந்தவள், ”நீங்க போங்க நான் முகத்தைக் கழுவிட்டு வந்திடுறேன்” என்றவள் மீண்டும் கதவை மூடினாள்.

அவளது பாராமுகத்தைச் சில நாள்களாக அனுபவித்த போதும், இந்த நிலையிலும் அவள் அப்படியே இருப்பது அவனுக்குச் சஞ்சலத்தையே கொடுத்தது. தலையைக் கோதிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

கங்காதரன் இறந்து முழுதாக, நான்கு தினங்கள் கடந்திருந்தன. தந்தையின் இழப்பில் முற்றிலுமாக முடங்கிப் போயிருந்த சுமித்ராவிற்கு ஆதரவாகவும், கங்காதரனின் ஈமக்கிரியைச் சடங்குகளையும் ஒரு குறையும் இல்லாமல் செய்துமுடித்தார் கேஷவ் நாத்.

நான்கு நாள்களாக கேஷவ்நாத்தும், மந்த்ராவும் சுமித்ராவின் வீட்டிலேயே தங்கியிருந்தனர். கிஷோரும் இரவு உறங்குவதற்கு மட்டுமே தங்களது வீட்டிற்குச் சென்று வந்துகொண்டிருந்தான்.

”சேச்சேச்சே… உங்க அப்பாவுக்கு குசேலர்னு நினைப்பு. இவர் ஃப்ரெண்டு செத்துப்போனா, இவருக்குத்தான் துக்கம் தொண்டையை அடைக்கும். நமக்குமா அடைக்கும். இவர்வரைக்கும் இங்கேயே தங்கிக்க வேண்டியதுதானே. என்னையும் இருஇருன்னு உயிரை எடுக்கறாரு. இந்த ரூம்ல ஏசின்னு பேருக்கு ஒண்ணு இருக்கே தவிர எதுக்கும் பிரயோஜனமில்ல. குளிர்காலத்துலயே இந்த வீட்ல இருக்கமுடியல. இன்னும் வெயில் காலத்துல சொல்லவே வேணாம்” என முணுமுணுத்தபடி அமர்ந்திருந்தார்.

”ஏம்மா! அப்பாவுக்கு நம்ம மேல எந்தச் சந்தேகமும் வரலையே…” என்ற மிதுனாவை ஆத்திரத்துடன் பார்த்தார் மந்த்ரா.

“பகல்ல பக்கம் பார்த்துப் பேசு. இராத்திரியில் அதுகூடப் பேசாதேன்னு சொல்வாங்க. உன் வாய்க் கொழுப்பாலதான் இன்னைக்கு இந்த நிலைக்கு வந்திருக்கோம். நீ மட்டும் அன்னைக்கு விலாவரியா போன்ல உன் வீட்டுக்காரன்கிட்ட கதை சொல்லாம இருந்திருந்தா, எப்போ யாருக்கு விஷயம் தெரியுமோன்னு பயப்படாம நிம்மதியா இருந்திருக்கலாம்” என்று மகளை மென்குரலில் கடிந்துகொண்டார்.

“நிம்மதியாவா… ரொம்பத்தான் நினைப்பும்மா உனக்கு! இந்நேரம் கல்யாணம் நின்னுபோச்சுன்னு உன் பையன் வானத்துக்கும், பூமிக்கும் குதிச்சிருப்பான். சுமித்ராவுக்கு ஏதாவது வேலை காட்டியிருப்பான். ஊரே சிரிச்சிருக்கும். இதெல்லாம் நடக்காம போனதுக்கு நான்தான் காரணம் அதைத் தெரிஞ்சிக்க…” என்றாள் எகத்தாளத்துடன்.

மகள் சொன்னதிலிருந்த உண்மையை உணர்ந்திருந்த மந்த்ரா சற்றுநேரம் மௌனம் காத்தார்.
“அதுக்காக உன் திருவாயைத் திறக்காதே. ஏதோ நம்ம நல்லநேரம் தப்பிச்சிட்டோம். உன் புருஷன்கிட்டக்கூட கங்காதரன் நம்ம வீட்டுக்கு வந்ததைப் பத்தி ஒரு வார்த்தைச் சொல்லக்கூடாது சொல்லிட்டேன். மீறி வெளியே வந்தது…” என்றவர் கண்களை உருட்டி மகளை எச்சரித்தார்.

அறைக்கதவு திறக்கும் சப்தம் கேட்டு இருவரும் திரும்பிப் பார்த்தனர்.

“மந்த்ரா! எதுக்கு எல்லோரையும் வரச்சொன்ன?” எனக் கேட்டுக்கொண்டே அங்கே வந்தார் கேஷவ்நாத்.

“இன்னும் எத்தனை நாளைக்கு நாம இங்கேயே இருக்கமுடியும்? நமக்கும் குடும்பம், பிசினஸ்னு ஆயிரம் வேலையிருக்கு. அதைக் கவனிக்கிற ஐடியாவே இல்லையா?” எனக் கேட்டார் மந்த்ரா.

“ம், புரியுது. ஆனா, சுமியைத் தனியா விட்டுட்டு எப்படிப் போகமுடியும்?” என்றார்.

“நம்ம வீட்டுக்குப் போகணும்னு சொன்னேன். அதுக்காக, சுமியைத் தனியா விடணும்னு சொல்லலையே” என்ற மனைவியை வியப்புடன் பார்த்தார் கேஷவ்நாத்.

“மந்த்ரா! நீயா பேசற? நானே இதை உன்கிட்ட எப்படிச் சொல்றதுன்னு தவிச்சிட்டிருந்தேன்” என்றவர் புன்னகைத்தார்.

“நீங்க எப்போதான் என்னைப் புரிஞ்சிட்டிருக்கீங்க?” என்று அலுத்துக்கொண்டவர், “ஈவ்னிங்கே கிளம்புவோம். அதைச் சுமிகிட்ட சொல்றதுக்குத் தான் வரச்சொன்னேன்” என்றார்.

“ரொம்பத் தேங்க்ஸ் மந்த்ரா” என்று பிரியத்துடன் மனைவியின் கரத்தைப் பிடித்துக்கொண்டார்.

“எனக்கே தேங்க்ஸா! நான் எது செய்தாலும், நம்ம குடும்பத்துக்கு நல்லதைத் தான் செய்வேன்” என்றவர் அர்த்தத்துடன் சிரித்தார்.

கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த சுமித்ரா, “கூப்பிட்டீங்களாமே ஆன்ட்டி!” என்றபடி அவரருகில் வந்து நின்றாள்.

“ஆமாம்மா!” என்றவர் அவளது கரத்தைப் பற்றித் தன்னருகில் அமரவைத்துக்கொண்டார்.

“எல்லாத்தையும் போட்டது போட்டபடி வந்தாச்சு சுமிம்மா! அதான் இன்னைக்கு வீட்டுக்குக் கிளம்பலாம்னு உன்கிட்டச் சொல்லத்தான் வரச்சொன்னேன்” என்றார்.

நிமிர்ந்து அவரைப் பார்த்தவளுக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. அவர்களெல்லாம் இருந்ததால்தான் தனது தந்தைக்குச் செய்ய வேண்டிய அனைத்துமே சரியாக நடந்தது. நான்கு நாள்களும் தான் என்ன நிலையில் இருந்தோம் என்று அவள் அறியாததா…

‘இவர்களெல்லாம் இருந்ததால் தான், தந்தையின் இழப்பிற்குப் பின்னும் தன்னால் அந்த வீட்டில் இருக்கமுடிந்தது. எங்கே பார்த்தாலும் அப்பா நிக்கிறது போலவே இருக்குமே. இப்போகூட அப்பா சுமிம்மான்னு என்னைக் கூப்பிடுறது போலவே தோணுதே. காலைல எழுந்ததும் குட்மார்னிங் சுமிம்மான்னு அப்பா சிரிச்சிகிட்டே சொல்றதை பார்க்கமுடியாம தவிப்பா இருக்குமே.

இந்த நினைப்பெல்லாம் இந்த நாலு நாளா என்னை ஆட்டிப்படைச்சாலும், தனிமைல இன்னும் அதிகமா இருக்குமேப்பா. நான் எப்படி தாங்கப்போறேன்? என்னையும் உங்களோடவே கூட்டிட்டுப் போயிருக்கலாமேப்பா!’ என நினைத்துக் கொண்டவளுக்கு கண்கள் தளும்பின.

வேகமாகக் கண்களைத் துடைத்துக்கொண்டவள், “புரியுது ஆன்ட்டி! நீங்கள்லாம் இத்தனை நாள் என்னோட இருந்ததுக்கே நான் ரொம்ப நன்றி சொல்லணும். ரொம்பத் தேங்க்ஸ் ஆன்ட்டி!” என்றாள்.

”தேங்க்ஸா! அடிதான் கிடைக்கப் போகுது உனக்கு. கிளம்பலாம்னு சொன்னது உன்னையும் சேர்த்துத்தான். இங்கே உன்னைத் தனியா விட்டுட்டு நாங்க எப்படி அங்கே நிம்மதியா இருக்கமுடியும்?” என்றவரைத் திகைப்புடன் பார்த்தாள்.

“ஆமாம்மா! ரொம்பச் சரியான டெசிஷன்” என்று புன்னகையுடன் ஆமோதித்த கிஷோரைப் பார்த்தாள்.

‘கடவுளே! இவங்களுக்கு எப்படிப் புரியவைப்பேன்? எதையும் சொல்லவும் முடியாம, மெல்லவும் முடியாம என்னைத் தர்மசங்கடத்துல நிறுத்திட்டியே… இதை எப்படிச் சரிபண்ணப் போறேன்?’ என உள்ளுக்குள் தவித்தாள்.

தயக்கத்துடன், “இல்ல ஆன்ட்டி! இது சரியா வராது. நான்…” என்றவளது வாயைப் பொத்தினார் மந்த்ரா.

“நீ எதுவும் பேசக்கூடாது. எங்க வீட்டுப் பொண்ணு நீ! உனக்கொரு கஷ்டம்னா, அது எங்களுக்கு இல்லையா? இப்படி ஒரு சூழ்நிலைல உன்னைத் தனியா விடுவோம்னு எப்படி எதிர்பார்த்த? கல்யாணத்துக்குப் பிறகு, நீ இருக்கப்போற வீடுதானே. எப்படிப் பார்த்தாலும், அது உன்னோட வீடு. அங்கே வந்து தங்க என்ன தயக்கம்?” என்றவரை எப்படிச் சமாளிப்பது எனப் புரியாமல் கைகளைப் பிசைந்தாள்.

‘என் மனசுல இருக்கறதை எப்படிச் சொல்வேன்? இல்லை, இனி சொல்லவே முடியாதா…’ யோசிக்க யோசிக்க மண்டை வெடித்துவிடும் போலிருந்தது அவளுக்கு.

“என்னம்மா தலைவலிக்குதா?” அன்பொழுகக் கேட்டார் மந்த்ரா.
முதலில் இல்லையென்பதைப் போல இடம்வலமாகத் தலையை அசைத்தவள், ஆமாம் என்று மேலும் கீழுமாகத் தலையை ஆட்டினாள்.

“நீயும் நாலஞ்சு நாளா சரியா சாப்பிடல தூங்கல இல்லயா அதான் அப்படியிருக்கு. வா ரெண்டு வாய் சாப்டுட்டுப் போய்க் கொஞ்சநேரம் படுத்துக்க. ஈவ்னிங் கிளம்புவோம்” என்றவர் கையுடன் அவளை அழைத்துச் சென்றார்.

கதவருகில் சென்றவர், “உனக்கு வேற தனியா சொல்லணுமா… நீயும் வந்து சாப்பிடேண்டா!” என்று மகனை ஒரு அதட்டல் போட்டவர், ”உங்களாஇயும் தான்” என்று கணவருக்கும் உத்தரவிட்டுவிட்டு வெளியே நகர்ந்தார்.

“உன்கூட சாப்பிடுறேன்னு ரெண்டுபேரும் வெயிட் பண்ணிட்டிருக்காங்க” என்றவர் டைனிங்கில் அவளை அமரவைத்தார்.

சாப்பிடவே மனதில்லாத போதும், தன்னால் சாப்பிடாமல் இருக்கிறார்களே என்ற எண்ணத்தால் அமைதியாக அமர்ந்தாள்.

“நீங்க ஆன்ட்டி!” என்றாள்.

“இதோ, எல்லோரும் சேர்ந்தே சாப்பிடுவோம்” என்று அவளருகில் அமர்ந்தார்.

பெயருக்கு ஏதோ கொறித்துவிட்டு எழுந்து சென்றாள்.

அலுவலகம் வரை சென்று வருவதாகக் கூறிவிட்டு கிஷோர் கிளாம்பிச் செல்ல, அவளைச் சற்றுநேரம் உறங்கச் சொல்லிவிட்டு, வழக்கம் போல மந்த்ராவும், மிதுனாவும் அறைக்குள் புகுந்துகொண்டனர்.

உறக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்த சுமித்ரா எழுந்து வெளியில் வந்தாள்.

ஹாலில் ஏதோ யோசனையுடன் அமர்ந்திருந்த கேஷவ்நாத்தின் அருகில் சென்று நின்றாள்.

தன்னருகில் அசைவை உணர்ந்து திரும்பிப் பார்த்த கேஷவ்நாத், “தூக்கம் வரலையாம்மா?” எனக் கேட்டார்.

“இல்ல அங்கிள்! அப்பாவோட ஞாபகமாவே இருக்கு” என்றவள் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.

”நடந்தது நடந்து போச்சு. அதையே நினைச்சிட்டு உன்னோட மனசையும், உடம்பையும் கெடுத்துக்காதேம்மா! இதுக்குத் தான் உன்னை எங்களோட கூட்டிட்டுப் போக முடிவு பண்ணோம். உனக்கு எப்போ இங்கே வரணும்னு தோணுதோ, தாராளமா நீ இங்கே வரலாம்” என்றபடி அவளது தலையை வருடிக் கொடுத்தார்.

கண்களைத் துடைத்துக்கொண்டு, “சரிக்க அங்கிள்! நான் எனக்குத் தேவையானதை எடுத்துக்கறேன்” என்றபடி எழுந்தாள்.

நான்கைந்து நாள்களுக்குத் தேவையான துணிமணிகளை எடுத்து வைத்துக்கொண்டாள். தன் பீரோவிலிருந்த பெற்றோரின் புகைப்படம் ஒன்றையும் எடுத்தாள்.
அந்தப் புகைப்படத்தைப் பார்க்கப் பார்க்க இதயம் கனத்துப் போனது. போட்டோவை நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்.

***************

“அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்!” சப்தமாகப் பாடிக்கொண்டே வீட்டின் பின்புறமிருந்த தோட்டத்திலிருந்த ஊஞ்சலில் வந்து அமர்ந்தான் விஜயேந்தர்.

தோட்டத்தின் ஒரு மூளையில் யோசனையுடன் நின்றிருந்த தமையனைப் பார்த்தான்.

“ப்ரோ! என்ன இங்கே தனியா நின்னுட்டிருக்கீங்க? எனி பிராப்ளம்?” எனக் கேட்டுக்கொண்டே அவனருகில் சென்றான்.

”ஆஹ்! என்ன கேட்ட?” என்றபடி திரும்பினான் மித்ரன்.

“ஏதாவது பிராப்ளமான்னு கேட்டேன்…” என்று மீண்டும் சொன்னான்.

“அதலெல்லாம் ஒண்ணுமில்ல” என்றவன், போனை அங்கிருந்த இருக்கையில் வைத்துவிட்டு, மற்றொரு இருக்கையில் அமர்ந்தான்.

“ஆஃபிஸ்ல வேலை எப்படியிருக்கு? பிடிச்சிருக்கா?” எனக் கேட்டான்.
“இந்தக் குசும்பு தானே வேணாங்கறது. ஜாலியா இருந்தவனைப் பிடிச்சி ஆஃபிஸ்ல உட்காரவச்சிட்டு, பிடிச்சிருக்கான்னு கேள்வி வேற…” சொல்லிக்கொண்டே அண்ணனின் அருகில் அமர்ந்தான்.

முறுவலித்த மித்ரன், “ஏன்டா சலிச்சிக்கிற? எப்படியும் இந்த வேலையை நீதான் பார்க்கணும். அப்பாவுக்கும் கொஞ்சம் ரெஸ்ட் வேணும்டா. அவருக்கும் வயசாகிடுச்சி” என்றான் அக்கறையுடன்.

“ப்ரோ! இப்படி உருகி உருகி பேசித்தான் வீட்ல இருக்கவங்களையெல்லாம் உங்க கைக்குள்ள போட்டு வச்சிருக்கீங்க. வாரத்துல அஞ்சு நாள் குர்காவூன்ல போய் உட்கார்ந்துக்கறது. இங்கே வர்ற ரெண்டு நாள்ல ஒருநாள் ஆஃபிஸுக்கு வரவேண்டியது. எல்லார்கிட்டயும், பாசமா பேசி அல்வா கொடுக்கவேண்டியது. அதையே தினம் செய்ற நாங்க கேணைங்க. நீங்க புத்திசாலி! அப்படித்தானே…” என்றான் அலுப்புடன்.

வாய்விட்டு நகைத்தவன், “நீ எப்படி வேணாலும் நினைச்சிக்க. நான் யாருக்கும் அல்வாவும் கொடுக்கல… ஐஸும் வைக்கல” என்றவன் சற்றுநேரம் தம்பியுடன் பேசிக்கொண்டிருந்தான்.

பேச்சு தன்னிடமிருந்தாலும், அவ்வப்போது ஏதோ யோசனை அவனுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை அண்ணனின் பேச்சில் உண்டான தடுமாற்றத்திலிருந்தே புரிந்துகொண்டான் இந்தர்.

“அண்ணா! ஆடிட்டர் அங்கிள் ஆஃபிஸ்லயிருந்து வந்திருக்காங்க. அப்பா உங்களை வரச்சொன்னாங்க” என்றபடி அங்கே ஓடிவந்தாள் பவித்ரா.

“ஓஹ்” என்றவன் எழுந்து செல்ல, இந்தர் காலைத் தூக்கி செண்டர் டேபிள் மீது நீட்டிக்கொண்டான்.

ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த தங்கையைப் பார்த்தவன், “பவி! இப்போல்லாம் உன் ஃப்ரெண்ட்ஸ் நம்ம வீட்டுப் பக்கமே வர்றதில்லையே ஏன்?” எனக் கேட்டான்.

“எல்லாம் உன்னாலதான்டா… வர்ற எல்லார்கிட்டயும் உன் வாய் சாமர்த்தியத்தைக் காட்டினா அப்படித்தான். நீ வீட்ல இருக்கேன்னாலே ஒருத்தியும் வரமாட்டேன்றா” என்றாள் கோபத்துடன்.

“என்னடி ஓவரா பேசற… அந்த அறுந்த வாலுங்களை, நான் என்ன பண்ணேன்” என்றான் அப்பாவியாக.

“என்ன பண்ணியாவா? எழுந்து வந்தேன் கொன்னுடுவேன்” என்றாள் கோபத்துடன்.

“கூல் கூல். எதுக்கு இப்போ வன்முறை?” என்றான்.

“போன வாரம் என் ஃப்ரெண்ட்ஸ் வந்திருந்தப்போ, நாங்க ஹைட் அண்ட் சீக் விளையாடிட்டு இருந்தோமில்ல…”

“ஆமாம். வீட்ல ஒரு இடம் பாக்கி இல்லாம அதகளம் பண்ணீங்களே…”

“அன்னைக்கு நீ என்னடா செய்த?”

“ஹால்ல உட்கார்ந்து புக் படிச்சிட்டிருந்தேன்” என்றான்.

“அதோட சும்மா இருக்கவேண்டியது தானே. என் ஃப்ரெண்ட்ஸ் உன்னைக் கிராஸ் பண்ணி ஓடும் போது நீ ஏண்டா சோஃபால இப்படியும் அப்படியுமா கைகாலைத் தூக்கிகிட்டு புரள்றாமாதிரி பண்ண?”
“ஏய்! பிச்சிடுவேன் உன்ன. ஒவ்வொருத்தியும் பீட்ஸாவும், பர்கரும் தின்னுட்டு புளிமூட்டை மாதிரி உருண்டுதான் போகுதுங்க. இதுல ஓடினா என்ன ஆகறது? இப்படியும் அப்படியும் ஓடினா, என்னால ஒரு இடமா பேலஸ் பண்ணி உட்கார முடியல இல்ல. ஏறக்குறைய பூகம்பம் வந்தது மாதிரிதானே…” என்றவனை முறைத்தாள்.

இப்படி கிண்டல் பண்ணா எவள் வருவா? இதுல விசாரணை வேற…” என்றாள் கடுப்புடன்.

“அதுக்குத்தான் யோகா, சைக்கிளிங்குன்னு போகணும். வீட்ல கொடுக்கற காசையெல்லாம் வயித்துக்குத் தீனியாக்கினா இப்படித்தான்” என்றவனது பார்வை அருகிலிருந்த அண்ணனின் போனில் நிலைத்தது.

‘அடடா! அண்ணணோட போன்’ என்று எடுத்தவன், ஏதோ தோன்ற லாக்கை ஓபன் செய்தான்.
ஓபன் ஆனதுமே கால் ஹிஸ்ட்ரியிலிருந்த மித்ரா என்ற பெயர்தான், அவனது கண்களில் பட்டது.

‘அட! நம்பர்லயிருந்து பேரை சேவ் பண்ணியாச்சா! நல்ல முன்னேற்றமா இருக்கே…’ என எண்ணிச் சிரித்துக்கொண்டான்.

இரண்டு நாள்களாக அவளது எண்ணிற்கு கிட்டதட்ட ஐந்து முறை போன் செய்திருக்கிறான். ஆனால், அவளுடன் பேசியதற்கான அறிகுறியே இல்லை.

அப்படியானால், அவளுடன் அண்ணன் பேசவே இல்லை. அதான் தலைவர் மூட் அவுட்டா! நம்மகிட்ட சொன்னா ஏதாவது சொல்யூஷன் கொடுக்கலாம். ஆனா, எங்கே? கேட்டா சின்னப் பையன்னுவாங்க. வேலைய பாருன்னுவாங்க. நமக்கென்ன முட்டிமோதி வரட்டும்’ என எண்ணிக்கொண்டே போனை எடுத்துக்கொண்டு எழுந்தான்.

Categories
On-Going Novels Yuvanika

அத்தியாயம் – 17

காதல்பனி 17

“ஐய்யோ! ஐயோ! அங்க என் புள்ளைய போலீஸ் புடிச்சிட்டுகிட்டுப் போய் அவன் ஜெயில்ல இருக்கான். ஒரு பக்கம் இங்க காடே பத்தி எரியுது. ஆனா இந்த கேடுகெட்ட சிறுக்கி மட்டும் இப்படி எவனோடவோ உல்லாசமா இருக்கா!” என்று கூடியிருந்த கூட்டத்தில் செங்கோடனின் தாய் குரல் ஆங்காரமாய் ஒலிக்க ஏ.கேவும் குழலியும் யார் என்ன ஏது என்று உணரும் முன்னே குழலியை நெருங்கித் தன் வலது காலைத் தூக்கி அவள் முதுகில் அவர் ஓர் உதை விட அதில் துடிதுடித்துப் போனவளை ஏ.கே அதிர்ச்சியுடன் பார்க்கும் போதே

“எத்தன நாளா இந்த கூத்து நடக்குது? எவ்ளோ நாள இவன் கூட பழக்கம் டி உனக்கு? நீ கெட்ட கேட்டுக்கு என் மகன விட இந்த வெள்ளைத் தோல்காரன் தான் உனக்கு வேணுமா? உன் ராங்கித்தனத்தால தான் நான் உன்ன வேணாம்னு சொன்னேன். என் மவன் கேட்டா தான? நீ தான் வேணும்னு ஒத்தக் கால்ல நின்னான். இதெல்லாம் பார்க்கவா அவன் உன்ன வேணும்னு கேட்டான்?” என்று மறுபடியும் நீட்டி முழங்கியவரோ அவள் கூந்தலைக் கொத்தெனப் பிடித்து இழுக்க

ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்த ஏ.கேவோ இப்போது இன்னும் இந்த செயலைப் பார்த்து சற்றும் யோசிக்காமல் செங்கோடனின் தாயின் கையைத் தட்டி விட, இவ்வளவு பேர் முன்னால் தான் தொடைக்குக் கீழே ஆடை எதுவும் இல்லாமல் இருப்பதை அறிந்த குழலியோ தன் நிலையை மறைக்க ஏ.கே வின் பின்னால் ஒளிய முயல

“என்ன டி என்ன? உன்ன கையும் களவுமா புடிச்ச உடனே உன் தப்ப மறைக்க இப்ப அசிங்கப்பட்டு இவன் பின்னாடி ஓடி ஒளியிறியா இல்ல இவன் தான் வேணும்னு அவன் கூட ஒட்டிக்கிட்டு நிக்கிறியா? என் புள்ளைய விட இந்த வெள்ளத்தோல்காரன் தான் உனக்கு ஒசத்தியோ? இவன் வேற என் கையை தட்டிவிடறான். டேய் டேய்.. நீ யாருடா என் கையத் தட்டிவிட? அவ என் வீட்டு மருமக டா! என் புள்ளைக்கும் அவளுக்கும் பரிசம் போட்டாச்சு. பரிசம் போட்ட அன்னிலிருந்து இவ அவனோட பொண்டாட்டி ஆகிட்டா. நீ என்னடான்னா இவ கூட கூத்து அடிச்சிகிட்டு இருக்க. எத்தன நாளா உங்களுக்குள்ள இந்த பழக்கம்? நீ பண்ண காரியத்துக்கு இன்னைக்கு உன் சாவு என் கையில தான் டி!” என்றவர் அவள் கையைப் பிடித்து இழுக்கப் போகும் நேரம்

“என்ன ஆச்சி குழலி?” என்ற கேள்வியுடன் வந்து நின்றார் வீரபாண்டியும் அவர் மனைவியும். தான் இருக்கும் நிலை உணர்ந்து அவரை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் அவளோ இன்னுமே ஏ.கேவின் முதுகுக்குப் பின் மறைந்து நிற்கவும் அதைப் பார்த்தவரோ சற்றும் யோசிக்காமல் தான் கட்டியிருந்த வேட்டியைக் கழற்றி அவளிடம் நீட்டி 

“இதைக் கட்டிக்கோ தாயி” என்று சொல்ல கண்ணில் கண்ணீருடன் வாங்கிக் கட்டிக் கொண்டாள் குழலி. பிறகு அங்கிருந்த அனைவரும் அவரவருக்குத் தோன்றிய கற்பனையைப் பார்த்தது போலவே எடுத்துச் சொல்ல செங்கோடனின் தாயோ ஒரு படி மேலே போய்

“இவ இவனோட பழகி இப்ப குழந்தையை வயித்துல வாங்கிட்டு அதை என் புள்ள தலையில கட்ட தான் இவ்வளவு நாள் வேணாம்னு சொன்ன கல்யாணத்துக்குச் சம்மதிச்சா போல!” என்று அவருடைய பங்குக்கு அவள் மேல் அசிங்கத்தை பூச , குழலியோ வாய் திறந்து ஒரு வார்த்தை கூட மறுப்புச் சொல்லவுமில்லை ஏன் குனிந்த தலையை நிமிர்த்தவும் இல்லை.

ஏ.கேவும் என்ன பேசுகிறார்கள் என்று தெரியாவிட்டாலும் தான் பிடித்த அவள் கையை விடவேயில்லை. குழலியும் அவன் கையை விலக நினைக்காமல் அவன் கைப் பிடியில் தான் இருந்தாள். இங்கு செங்கோடன் மட்டும் இருந்திருந்தால் ஏ.கே உயிருடனே இருந்திருக்க மாட்டானோ என்னவோ? ஆனால் ஊர்க்காரர்கள் வீரபாண்டி ஐயா சொல்லுக்குக் கட்டுபட்டு அமைதி காத்தனர். குழலியைப் பற்றியும் தெரியும் என்பதால் வீரபாண்டி ஐயா ஏதோ சொல்ல வாயைத் திறக்கும் நேரம்

“என்னமோ பெருசா என் பொண்ணு என் பொண்ணுனு வார்த்தைக்கு வார்த்தை சொல்லுவீங்களே? இப்போ உங்க வளர்ப்புப் பொண்ணு செஞ்சிருக்கிற காரியத்தப் பாருங்க! நான் எதச் சொன்னாலும் கேட்கறது இல்ல! இவள எல்லாம் வீட்டுக்குள்ள சேர்த்ததே அதிகம். இதுல உங்க பொண்ணா நெனச்சி செங்கோடன் அம்மா கேட்ட சீர்சனத்துக்கு ஒத்து கிட்டு நஞ்சை வாய்க்கா வரப்புனு எழுதி வெக்க இருந்திங்க இல்ல? அதுக்குத் தான் உங்களுக்கு இவ நல்ல மரியாதை செய்துட்டா.

ஒருவேளை இவ கேடுகெட்டத் தனத்தை மறைக்கத் தான் சீர்வரிசை வாங்கற பழக்கமே இல்லாத செங்கோடன் அம்மா கூட சீர்சனம் கேட்டா போல!” என்று அவர் மனைவி தன் பங்குக்கு குத்திக் காட்ட, செங்கோடனின் தாய் முகமோ அவமானத்தில் தொங்கி விட்டது. ஆனால் குழலிக்குத் தான் இந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தது.

அந்த நேரம் அங்கு வந்த சூர்யா என்ன நடந்தது என்று ஏ.கே விடம் ரகசியமாக கேட்க அங்கு நடந்ததை அவன் சொல்லவும் அதை அந்த ஊரார் முன் அவன் விளக்க நினைத்த நேரம்,

பிள்ளை இல்லாத தங்கள் சொத்துக்கு வாரிசாக தன் அண்ணன் அல்லது அக்கா பிள்ளைகளைத் தத்து எடுத்து அவர்களுக்கு சகலத்தையும் செய்வார் என்று மனக்கோட்டை கட்டியிருந்த வீரபாண்டி மனைவியின் எண்ணத்துக்கு எதிராக எங்கோயிருந்த மலைஜாதிப் பெண்ணான குழலிக்கு எல்லாம் செய்ய நினைக்கிறார் என்று இத்தனை நாள் மனதில் கருவிக் கொண்டிருந்தவரோ இன்னும் உன்னை விடுவேனா என்ற ஆத்திரத்தில் 

“அதான் கையும் களவுமா புடிச்சாச்சி.. அவளும் வாயத் தொறக்காம இருக்கா.. அப்பறம் என்ன? உங்க சாதில நீங்க வழக்கமா குடுக்கிற தண்டனையான கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அவள எந்த ஒட்டுறவும் இல்லாம ஊரை விட்டு ஒதுக்கி வைங்க” என்று வீரபாண்டி ஐயாவிடமிருந்து அவளைப் பிரிப்பதிலேயே அவர் மனைவி குறியாக இருக்க அதையும் அங்கிருந்த ஊர் மக்கள் வழி மொழியவும்
சூர்யாவுக்குத் தான் திக் என்று ஆனது. ஆனால் இப்போதும் குழலியோ வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

ஆளாளுக்குப் பேசவும் “இப்படி ஏதேதோ பேசினா எப்படி? இங்க என்ன நடந்ததுனு கண்ணால பார்த்தவங்கனு யாரும் இல்ல. ரெண்டு பேரும் ஒன்னா இருக்கறத வெச்சி வெறும் யூகத்துல தான் பேசுறிங்க. சம்மந்தப்பட்டவங்களும் வாயத் தொறக்கல. இந்த சூழ்நிலையில் நம்ம ஊர் வழக்கப் படி நம்ம முன்னோர்கள் செஞ்சதையே நானும் இங்க செய்றேன்” என்று வீரபாண்டி ஐயா முற்றுப்புள்ளி வைக்க இந்த வார்த்தையை அனைவருமே ஏற்றுக் கொண்டனர்.

சூர்யாவுக்கு அது என்னவென்று தெரியவில்லை என்றாலும் ஊருக்குக் கட்டுப்பட்டு அவனுமே அமைதி காத்தான். பிறகு குழலி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் வந்து அவளைக் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல அப்போதும் அவள் கையை விடாமல் இறுக்கப் பிடித்திருந்தான் ஏ.கே.

அவனுக்கு இங்கு நடந்த வாக்கு வாதங்கள் என்னவென்று தெரியவில்லை என்றாலும் இந்தக் காடு நெருப்புப் பற்ற குழலி தான் காரணம் என்பதால் தான் இந்த ஊர் மக்களும் அந்தப் பெண்மணியும் அவளைத் திட்டி அடிப்பதாக நினைத்தவன் அவளை அவர்களிடமிருந்து காப்பதாக நினைத்து அவள் கையை அவன் பிடித்திருக்க, குழலிக்குத் தான் இப்போது என்ன நடக்கப்போகிறது என்பது தெரியுமே! அதனால் அவனை ஏறிட்டவள் அவன் பிடியிலிருந்து தன் கையை வலுக்கட்டாயமாகப் பிரித்து எடுக்க விலகிச் செல்ல மனமே இல்லாமல் அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி சூர்யா இழுத்த இழுப்புக்கு விலகிச் சென்றான் ஏ.கே.

அந்த ஊர் காவல் தெய்வமான மலை மேல் கோவில் கொண்டிருக்கும் வனதேவதையான தன் தலையை ஒரு பக்கம் சாய்த்து நாக்கைத் துருத்திய படி உக்கிரப் பார்வையுடன் பல கைகளுடன் ஒரு காலை அரக்கன் மீது வைத்து அவனை வதம் செய்வது போல் ஏதோ உயிரோட்டமாக நேரிலே காட்சி தருவது போல் இருந்த மகாகாளி அம்மன் முன் எல்லோரும் கூடியிருக்க ஒரு ஓரமாக சூர்யாவும் ஏ.கேவும் இங்கு என்ன நடக்கப் போகிறது என்பதைக் கவனிக்க ஆரம்பித்தனர்.

அந்தத் தாயின் முன்பிருந்த தீ குழியில் தீ கனன்று கொண்டிருக்க குழலிக்கு மேனி முழுக்க நீர் ஊற்றி அந்த நீர் சொட்டச் சொட்ட அந்த பூ குழியில் நிற்கச் சொல்ல எந்த வித தயக்கமும் இல்லாமல் நின்ற அவள் கையில் அந்த மகாகாளியின் ஒரு கையில் எப்போதும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் தீ சட்டியை குழலியின் கையில் கொடுத்து என்ன நடந்தது என்று அவள் பக்க நியாயத்தைச் சொல்லச் சொன்னார்கள்.

இது அந்த ஊர் வழக்கம் தான். கண்ணால் பார்க்காத எந்த ஓர் உண்மை தெரிய வேண்டும் என்றாலும் இப்படித் தான் செய்வார்கள். அப்படி யாரேனும் பொய் கூறினால் அவர்கள் கட்டியிருக்கும் ஈர ஆடையையும் மீறி உடலில் நெருப்பு பற்றிக் கொள்ளும். அதேபோல் அந்தத் தாயிடம் இருந்து தீ சட்டியைப் பொய் சொல்பவர்களாலும் தப்பு செய்பவர்களாலும் வாங்கவே முடியாது. வாழை மரப் பட்டையையே தாங்கள் ஆடையாகக் கட்டி வந்து அந்த பூ குழியில் நின்றாலும் பொய் சொல்பவர்கள் அந்தத் தாயின் தண்டனையில் இருந்து மீள முடியாது என்பது அவர்களின் நம்பிக்கை.

இப்போது குழிலியை அங்கு நிற்க வைத்து இதுவரை வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லாத அவளைச் சொல்லச் சொல்ல அவளிடமிருந்து உடனே வந்த பதில்

“இந்தத் தாய் மீது ஆணையாக எங்களுக்குள் தப்பு நடந்தது உண்மை தான்!” என்ற வார்த்தை தான். அவள் சொன்னது ஆணித்தரமாக அந்த மலை முகடு எங்கும் கேட்கும் படி ஓங்கி ஒலிக்கவும் வீரபாண்டி ஐயாவே ஒரு வினாடி ஸ்தம்பித்துத் தான் போனார்.

முதலில் இது என்ன மாதிரி பழக்க வழக்கம் என்று சூர்யா கோபப்பட்டாலும் பிறகு அவர்கள் வழக்கம் என்று விட்டு விட்டவன் இப்போது குழலி சொன்ன இப்படி ஒரு பொய்யில் மிகவும் ஆடித் தான் போனான் அவன்.

ஆனால் இங்கு என்ன நடக்கிறது என்பதைச் சொல்லாமலே வெறும் பார்வையாளனாக நிற்க வைக்கப் பட்டிருந்தான் ஏ.கே. குழலி சொன்ன வார்த்தையில் முதலில் கலைந்தது வீரபாண்டி ஐயா மனைவி தான். 

“நான் தான் அப்பவே சொன்னனே! இவ வாய்க்கும் திமிருக்கும் இவ இப்படி எல்லாம் செய்றவ தானு.. நீங்க எங்க கேட்டிங்க? அது என்ன இப்போ தப்பு நடந்திடுச்சினு மழுப்புற? நாங்க கையும் களவுமா புடிச்சதால ஆச்சி.. இல்லனா இந்த உண்மைய மறைச்சி செங்கோடன தான கட்டியிருப்ப?” என்று இப்போது அவர் குழலியே ஒத்துக்கொண்டாள் என்பதால் எகத்தாளமாகப் பேச.

குழலி பூ குழியிலிருந்து இறங்கிய மறு நிமிடம் அவளை இழுத்து நாலு அரை அறைய சுருண்டு போய் கீழே விழுந்தவளைத் தன் பலம் கொண்ட மட்டும் அவள் நெஞ்சிலும் மார்பிலும் வயிற்றிலும் உதைத்த செங்கோடனின் தாய்

“உனக்கு எவ்வளவு ஏத்தம் இருந்தா இத்தன நாள் இப்படி ஒரு கேடுகெட்டத்தனத்த செய்துட்டு என் புள்ளைக்கு பொண்டாட்டி ஆகப் பார்ப்ப?” என்று ருத்ர தாண்டவம் ஆட வலியில் துடிதுடித்துப் போனாள் குழலி.

“எவ்ளோ திமிர் இருந்தா இவ்வளவு நேரத்துக்கு வாயத் தொறக்காம இருந்திருப்பா? ஏதோ இன்னைக்கு மட்டும் தான் தப்பு நடந்துடுச்சினு சொல்றா!”

“இன்னைக்கு ஒரு நாள் மட்டுமா இல்ல எத்தன நாள் பழக்கமோ? இவளை எல்லாம் மொட்டை அடிச்சி கரும்புள்ளி செம்புள்ளி குத்தணும்”

“அதோட விடக்கூடாது. செருப்பு மாலை போட்டு கழுத மேல ஏத்தி ஊரை விட்டே தொரத்தணும்”

“அதெல்லாம் விட பெருசா ஒட்டுத் துணி இல்லாம நிக்க வெச்சி எல்லாரையும் இவ மூஞ்சில காறித் துப்ப வெச்சி ஓட ஓட இவள சவுக்கால அடிச்சே ஊர் எல்லையில கொண்டு போய் விடணும்”

இப்படி ஊர்மக்கள் ஆளாளுக்கு அவளுக்குக் தங்கள் மாற்றி வேறு இனத்தில் தப்பு செய்தவளுக்கு கொடுக்க வேண்டிய தண்டனையைப் பற்றிப் பேசி அவளைக் கேவலப் படுத்த, பேச வேண்டிய வீரபாண்டி ஐயாவோ தன் வளர்ப்பு மகள் இப்படி செய்துவிட்டாளே என்ற அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க

“சும்மா ஆளாளுக்குப் பேசறத நிறுத்துங்க” என்ற அதட்டலுடன் கீழே விழுந்து அடிவாங்கிக் கொண்டிருக்கும் குழலியைத் தூக்கி நிறுத்தி அணைத்துக் கொண்டான் சூர்யா. மேலே ஏதோ பேச வந்த வீரபாண்டி மனைவியைக் கை நீட்டித் தடுத்தவன்

“இந்த வினாடியிலிருந்து இவ என் தங்கச்சி. இனி இவ மேல யார்னா கை வச்சிங்கனா நடக்கறதே வேற!” என்றவன் “ஏதோ ரெண்டு பேரும் காதலிச்சித் தப்புப் பண்ணிட்டாங்க. உங்க சாதி பொண்ண வெளிநாட்டுல இருந்து வந்து ஒருத்தன் காதலிக்கிறது என்ன அவ்வளவு பெரிய கொலைக் குத்தமா இல்ல மகாபாவமா? தப்பு செஞ்சத ஒத்துகின பிறகு ரெண்டு பேருக்கும் கல்யாணத்தப் பண்ணி வச்சி உங்க வழக்கப் படி ஊரை விட்டே அவங்க ரெண்டு பேரையும் ஒதுக்கி வச்சிட்டுப் போக வேண்டியது தான?

அப்படி இல்லனா இப்பவே ஒதுக்கி வச்சிடுங்க. நான் கூட்டிகிட்டுப் போய் அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடுறேன். அதை விட்டுட்டு குழலிய அடிக்கவோ இல்லை தண்டனைங்கிற பேர்ல அவள மானபங்கப் படுத்தவோ நெனச்சிங்க.. நான் மனித உரிமை ஆணையத்தின் மூலமா நடவடிக்கை எடுத்து போலீஸ கூட்டிகிட்டு வந்து உங்க எல்லாரையும் அரஸ்ட் பண்ண வேண்டியிருக்கும் சொல்லிட்டேன்!” என்று தன் அதிகாரத் தோரணையைப் பேச்சில் காட்டி நின்றிருந்தான் சூர்யா.

அவர்களுக்குள் என்ன நடந்தது என்பது ஏ.கேவின் மூலம் தெரியும் என்பதால் இந்தப் பெண் ஏன் இப்படி பொய் சொல்கிறாள் என்று குழம்பியவன் குழலிக்குக் கொடுக்கப்பட போகும் தண்டனைகளைக் காதில் வாங்கிய பிறகு நண்பனிடம் கூட கேட்காமல் இப்படி ஓர் தடாலடியான முடிவை எடுத்து அதை அனைவரிடமும் சொல்லியே விட்டான் அவன்.

சூர்யா சொல்லியதில் குழலிக்குத் தான் அதிர்ச்சி. எப்போது தன்னை ஒருவன் ஆடை இல்லாமல் பார்த்தானோ அப்போதே தான் வேறு ஒருவனைத் திருமணம் செய்ய தகுதி இல்லாதவள் என்று நினைத்தது அந்தப் பதினைந்து வயது சிறு பெண்ணான குழலியின் மனது. அதனால் தான் அவள் இப்படி ஒரு பொய்யைச் சொன்னது. 

ஆனால் இப்படி எங்கோ பிறந்து வளர்ந்த ஒரு வெள்ளைக்காரனுடன் தன் வாழ்வு இணையும் என்றோ இல்லை இணைத்துத் தான் தீர வேண்டும் என்றோ அவள் துளியும் நினைக்கவில்லை. அவளுக்குத் தெரிந்த ஏ.கே உருவத்தில் வெள்ளைக்காரனே தவிர அவனுடைய பிறப்போ இல்லை பூர்விகமோ பற்றி அவளுக்கு என்ன தெரியும்? இன்னும் சொல்லப் போனால் ஏ.கேவுக்கே தெரியாது எனும் போது குழலிக்கு அது சாத்தியமில்லை.
ஊரே சூர்யா சொன்ன வார்த்தையில் பயந்து ஸ்தம்பித்து அமைதியாக இருக்க முதலில் தெளிந்த வீரபாண்டி ஐயாவோ

“உங்க மிரட்டலுக்கு எல்லாம் இங்க யாரும் பயப்படுல. அப்படி எல்லாம் குழலியை மட்டும் இல்ல வேற யார்க்கும் செய்யவும் நான் விடமாட்டேன். ஆனா நிச்சயம் ஊரை விட்டு ஒதுக்கி வச்சிருப்பேன். ஆனா அதையும் என்னால செய்ய முடியாத அளவுக்குக் குழலிப் பாட்டி இவளுக்குக் கல்யாணம் பண்ணி வெக்கச் சொல்லி சத்தியம் வாங்கிட்டாங்க. அதனால நீங்க சொல்ற படியே அந்த தம்பிக்குக் கல்யாணம் பண்ணி இந்தப் பொண்ண கூட்டிட்டுப் போய்டுங்க. இதான் என் முடிவு. இதுக்கு இங்க எல்லாருமே கட்டுப்படுவாங்க. ஆனா இவ்வளவு நடந்தும் உங்க நண்பர் எதையும் ஒத்துகிட்டு சரினு சொல்லலையே?” என்று அவர் சந்தேகத்துடன் கேட்க

உண்மை தான்! தன்னை வைத்துத் தான் பிரச்சனையே என்பது தெரியாமல் ஒரு பார்வையாளனாய் நின்றிருந்தான் ஏ.கே. அவனுக்குப் புரிந்தது தெரிந்தது எல்லாம் குழலிக்கு ஏதோ ஆபத்து பிரச்சனை. அவள் ஏதோ செய்யக் கூடாத தப்பைச் செய்து விட்டாள் என்பது மட்டும் தான்.
குழலி ஏன் அப்படி ஒரு பொய்யைச் சொன்னாள் என்பதை அவளிடம் கேட்டே தீர வேண்டும் என்ற ஆதங்கத்தில் முதல்ல நான் கொஞ்சம் குழலி கிட்ட பேசனும்னு சொல்லி வீரபாண்டி ஐயாவிடம் அனுமதி வாங்கி அவளிடம் வந்தவன்.

“ஏன் குழலி அப்படி ஒரு பொய்யச் சொன்ன? உன் மனசுல என்ன திட்டம் வெச்சிருக்க? உங்களுக்குள்ள எதுவும் நடக்கலனு ஏ.கே என்கிட்ட சொல்லிட்டான். ஆனா நீ ஏன் இப்படி பண்ண? எனக்கு பதில் சொல்லு?” என்று கோபமாகக் கேட்கவும்

ஒரு ஆண் முன்னால் தான் ஆடையில்லாமல் நின்றதையோ அதனால் செங்கோடனை திருமணம் செய்ய முடியாது என்பதை மறுக்கவே தான் இப்படி ஒரு பொய்யை சொன்னது என்பதை வேற்று ஆண்மகனான சூரியாவிடம் சொல்ல தயங்கியவளோ தன்னுடைய லட்சியத்தை மனதில் வைத்து
“ஐயோ சார்! என் மனசுல தப்பான எந்த திட்டமும் இல்ல சார். நான் என் இனத்து பொண்ணுங்க மாதிரி வாழ விரும்பல சார். எனக்கு இந்த ஊர் இந்த ஜனங்களோட அடிமைக் கட்டுப்பாடு எதுவும் வேணா சார். நான் படிச்சு விவசாயத்துல பெருசா சாதிக்கணும்னு ஆசப்படுறேன் சார். அதுக்கு இந்த செங்கோடனும் ஊரும் விடாது. இங்கிருந்து நான் தப்பிக்க ஒரே வழி இந்தக் கல்யாணம் தான் சார். என் முன்னேற்றத்துக்கு ஒரு வாய்ப்பா தான் இத நான் நெனைக்கிறேன். ஏ.கே வோட சொத்து பணம் வெளிநாட்டு வாழ்க்க இது எதுக்கும் நான் ஆசப்படல. என்னோட லட்சியத்துக்கு நீங்க தான் சார் உதவி செய்யணும்.

எப்படியாவது இங்க இருந்து தப்பிக்க இப்போ இந்த கல்யாணம் நடந்தா போதும்னு தோனுது சார். சத்தியமா நான் அவரோட பொண்டாட்டினு உரிமை கொண்டாட மாட்டேன். நேரங்காலம் வரும்போது நான் அவரவிட்டு விலகிடுவேன். ஆனா இப்ப அவர்கிட்ட நீங்க எதுவும் சொல்ல வேணாம். நேரம் வரும்போது நானே சொல்லிக்கிறேன். தயவுசெஞ்சி என் கனவுக் கோட்டய இடிச்சிடாதீங்க சார். எனக்கு உதவி பண்ணுங்க” என்று அவள் உணர்ச்சி பொங்க கண்ணீரோடு கேட்கவும் திகைத்துப் போனான் சூர்யா.

‘இந்த கூட்டத்துல இப்படி ஒரு பொண்ணா? ஆச்சரியம் தான்! இவள பத்தி எனக்கு ரொம்ப தெரியாது தான். ஆனா நான் பார்த்த வரையில வீண் வம்பு பேசறவளோ இல்ல பகட்டு வாழ்க்கைக்கு ஆசப் படறவோ இல்ல தான். அப்ப இவ சொல்றது உண்மை தான். இவளோட உயர்ந்த லட்சியத்துக்கு நானும் ஏ.கேவும் உதவி செய்யறது தப்பில்லை தான் இதுக்கு எல்லாத்துக்கும் மேல ஒரு பெண்ணோட மானம் தான் இப்போ முக்கியம் என்று தனக்குள் முடிவெடுத்தவன்

“சரி குழலி. உன் லட்சியத்துக்கு நான் உதவி செய்றேன். ஏ.கேகிட்ட நான் பேசி சம்மதிக்க வெக்கிறேன். ஆனா அதுக்கப்புறம் உன்னால அவன் வாழ்க்கைக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது” என்று உறுதிபடக் கூறியவன் பின் ஏ.கேவிடம் சென்றான்.

ஆனால் ஏ.கேவின் சம்மதத்தைப் பெறவோ அவன் தலை கீழாக நிற்காத குறைதான். தானும் அவளும் சிறுபிள்ளை என்பதையும் இன்னும் திருமண வயதை எட்டவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி அறவே மறுத்தான். தனக்கு எதிர்கால லட்சியம் இருப்பதாகவும் அதுவரையில் தான் திருமணம் பற்றி யோசிக்கக் கூட முடியாது என்றான். ஆனாலும் சூர்யாதான் விடாப்பிடியாக நின்று குழலிக்கு ஊர்ப் பஞ்சாயத்தினால் நேரப்போகும் விபரீதத்தை எடுத்துரைத்து அதைத் தடுக்க அவளுக்கு உதவுமாறு மன்றாடியவன் கூடவே இவனுக்கும் குழலிக்கும் தப்பு நடந்து விட்டதாக ஊர் முன் குழலி சொன்னதை சொல்லியவன் அவங்க வழக்க படி இப்போ நீ தான் அவளை திருமணம் செய்ய வேண்டும் என்றவன்.

முதலில் அவளைத் திருமணம் செய்து இங்கிருந்து அழைத்துச் செல்லுமாறும் பிறகு தான் ஊருக்கு வந்ததும் அடுத்து என்ன செய்வது என்பது பற்றியும் ஆலோசிக்கலாம் என்றான். தான் வரும்வரை குழலியை அவன் பாதுகாப்பில் வைத்திருக்குமாறும் கேட்டுக் கொண்டான். கடைசி வரை குழலி அவன் பொறுப்பு இல்லை என்றும் நேரங்காலம் வரும்போது அவனை விட்டு விலகி விடுவாள் என்றும் உறுதி கூறினான்.

கடைசியாக ஊர் கட்டுப்பாட்டால் தன் உயிருக்கே ஆபத்து என்றும் அவனையும் ஊர் எல்லையைத் தாண்ட விடமாட்டார்கள் என்றும் பயம் காட்டினான். இவ்வளவு வார்த்தைகளில் அவள் சொன்ன பொய்கே இந்த திருமணம் நடக்க ஏ கே வுக்கு விரும்பம் இல்லை தான் ஆனால் அவளுடைய மானாத்தை காக்கவே வேறு வழியில்லாமல் பிறகு ஏ.கேவும் ஒப்புக்கொண்டான். திருமணம் முடிந்தது என்பதை விட குழலியின் லட்சியத்திற்கு தான் ஒரு சிறு உதவி செய்ததில் பெரும் மகிழ்ச்சி என்ற எண்ணத்தில் வந்து நின்றான் சூர்யா

அதன் பிறகு வீரபாண்டி ஐயா கேட்ட படி தன் சம்மதத்தை சொன்னான் ஏ கே
பின் காற்றின் வேகத்தில் அன்றே திருமணத்திற்கான நேரம் குறிக்கப் பட்டு அந்த மலை அடிவாரத்தில் இருவருக்கும் அவர்கள் வழக்கப் படி சில சடங்குகள் செய்யப் பட்டு ஏ.கேவை யானையிலும் குழலியை மூங்கில் கூடையையே பல்லாக்காக மாற்றி அதில் அவளை அமரவைத்து அழைத்து வந்தனர். மாப்பிள்ளையை யானையில் இருந்து இறங்க மச்சான் தன் தோள் கொடுத்து இறக்க வேண்டிய நேரத்தில் சந்தோஷத்துடன் தன் தோள் கொடுத்து ஏ.கேவை இறக்கினான் சூர்யா.

பின் பல்லாக்கில் இருந்த குழலி இறங்க அவள் பாதங்களை ஒரு அண்ணணாய் தன் இரு கைகளிலும் சூர்யா தாங்க ஏ.கேவோ அவள் பாதங்களுக்குப் பன்னீர் தெளித்து வலது காலில் உள்ள பெருவிரலுக்கு மட்டும் அவர்கள் வழக்கப் படி செப்பால் ஆன வளையத்தை மெட்டியாகப் போட்டவன் இதுவரை உன் தங்கையாய் நீ சுமந்தவளை இனி என்னுடன் என் இல்லற வாழ்வில் அவளை வாழ்நாள் முழுவதும் ஒரு சுகமாய் நான் சுமப்பேன் என்ற வார்த்தைக்கு எடுத்துக்காட்டாய் அவன் தன் கையில் அவள் பாதங்களை வாங்கிக் கொள்ள

பின் அந்த மகாகாளியின் முன் இருவீட்டாரும் உப்பு சர்க்கரையை மாற்றிக் கொள்ளும் போதும் சரி சூர்யா ஒரு அண்ணனாய் குழலி பக்கம் இருக்க வீரபாண்டி ஐயாவோ ஏ.கே பக்கம் இருந்து வாங்கிக் கொண்டார். பின் சடங்குகள் முடிந்து மூங்கில் நரம்பில் கருமணி கோர்க்க நடுவில் யானைத் தந்தத்தில் இருவருடைய பெயரும் பொறித்த பதக்கம் வைத்த மாலையைக் குழலிக்குப் போட்டு அவளைத் தன் மனைவியாக்கிக் கொண்டான் ஏ.கே.

திருமணம் அன்று தான் தன் தந்தை மூலம் ஏ.கே வின் பூர்வீகம் பற்றியும் அவன் தாத்தாவைப் பற்றியும் எல்லாம் தெரிந்து கொண்டான் சூர்யா.

முன்பு தன் பால்ய நண்பரின் குடும்பம் மூலம் தன் பேரன் பற்றிய தகவல்களை விசாரித்துத் தரச் சொன்ன குடும்பம் தான் சூர்யா குடும்பம். இது தெரியாமல் குழலியோடு இவர்கள் அன்றே எங்கு செல்வது என்று தெரியாமல் திணறினர். கூடவே குழலியின் விசாவுக்காக ஏ.கே ஊருக்குச் சென்று அதற்கான வேலைகளைப் பார்க்க வேண்டும் என்றால் குழலி அதுவரை இங்கு இந்தியாவில் இருக்க வேண்டும். இந்த ஊரிலேயே இருக்க கட்டுப்பாடு என்ற பெயரில் அவர்கள் யாரும் அனுமதிக்க வில்லை.

பிறகு வீரபாண்டி ஐயாவுக்குத் தெரிந்தவர்கள் மூலம் தங்க ஏற்பாடு பண்ண முடியுமா என்று கேட்கயிருந்த நேரம் வேலுச்சாமி தாத்தாவைப் பற்றி சூர்யாவுக்கு அவன் தந்தை தகவல் தர அவரிடம் அன்றே பேசியவன் அவர் உதவியால் மூணாறில் அவருக்குத் தெரிந்த நண்பர் கெஸ்ட் ஹவுஸில் அவர்களைத் தங்கச் சொன்னவர் சக்கரவர்த்தி தாத்தாவிடம் ஏ.கே தான் அவர் பேரன் என்பதை அனைத்தையும் பேசி குழலி அவர் வீட்டில் இருக்க வழி செய்வதாகக் கூற இதற்கு சரி என்று சம்மதித்தவன் தாத்தா சம்மதித்து ஏ.கே வை ஏற்றுக் கொள்ளும் வரை தன் நண்பனிடம் இதைப் பற்றிச் சொல்ல வேண்டாம் என்ற முடிவை எடுத்தான் சூர்யா.

வீரபாண்டி ஐயாவின் காரோ அந்த கெஸ்ட் ஹவுஸ்சை நோக்கிப் போக முன்புறம் அமர்ந்திருந்த சூர்யாவோ அடிக்கடி பின்புறம் அமர்ந்திருந்தவர்களைப் பார்க்க கணவன் மனைவி இருவரும் ஆளுக்கு ஒரு கதவு பக்கம் அமர்ந்து கண்ணாடி வழியாக மலைகளையும் காடுகளையும் பார்த்து வர மறந்தும் ஒருவர் முகத்தை ஒருவரும் பார்க்கவில்லை. எப்போதும் ஏ.கேவிடம் குறும்பாகவும் துடுக்காகவும் பேசும் குழலியால் இப்போது தன் கணவனிடம் அப்படி நடந்து கொள்ள முடியவில்லை. அதேபோல் தான் ஏ.கேவும். எப்போதும் அவள் முகத்தில் தவழும் சிறுபிள்ளைத் தனமும் அவள் கெண்டை மீன் விழிகளையும் ரசித்து அவள் அக்கறை பேச்சில் உருகி நிற்பவனால் இப்போது அவளை நிமிர்ந்தும் பார்க்க முடியாதவனாக போக ஏதோ அவனை தடுத்தது.

குழலிக்குத் தண்ணீர் வேண்டும் என்றாலும் அவள் சூர்யாவையே கேட்க ஏ.கேவிடம் எந்தச் சலனமும் இல்லை. அப்போது தான் சூர்யா மனதால் அந்த முடிவை எடுத்தான் இது குழ்நிலையால் நடந்த திருமணமாக இருந்தாலும் இறுதியில் இவர்கள் இருவரும் கணவன் மனைவி என்று கடைசி வரை வாழ வேண்டும் என்பது தான் அது 
.இரவு பத்துமணிக்கு கெஸ்ட் ஹவுஸ் வந்தவர்கள் பின் ஆளுக்கு ஓர் அறையில் முடங்க அந்த நேரத்தில் சூர்யாவை அழைத்த வேலுச்சாமி தன் பேரன் கிடைத்து விட்டான் என்ற செய்தியைக் கேட்டதும் இன்ப அதிர்ச்சியில் சக்கரவர்த்தி பேச்சி மூச்சில்லாமல் போய் விட இவ்வளவு நேரம் ஆஸ்பத்திரியில் இருந்து பார்த்தவரால் மேற்கொண்டு இதற்கு வழியாக ஏ.கேவையே இங்கு அழைத்து வரச் சொல்ல குழலியைத் தனியாகவும் விட்டுச் செல்ல முடியாது அதிலும் ஏ.கே இந்த விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்வானோ என்ற பயம் வேறு.

சரி குழலியை அழைத்துப் போகலாம் என்றாலும் இந்தத் திருமணத்தை அவரால் ஏற்றுக் கொள்ள முடியுமா? பிறகு அவர் உயிருக்கே ஏதாவது ஆபத்து வந்தால் என்ன செய்வது? என்றெல்லாம் பலவாறு யோசித்தவன் இறுதியாக தான் மட்டுமே சென்று அவரைப் பார்த்து அனைத்தையும் எடுத்துக் கூறி அவருக்குப் புரியவைப்பது என்ற முடிவுடன் ஏ.கேவை எழுப்பித் தனக்கு வேலை இருப்பதால் ஓர் இடத்திற்குப் போய் வருவதாகக் கூறியவன்

“நம்ம பிளான் படி நீ குழலிய இங்கேயே விட்டுட்டு போ டா. காலையில உனக்கு ஏழுமணிக்கு தான பிளைட்? அதுக்குள்ள நான் வரப் பார்க்கறேன். இல்லனாலும் அவ இங்க இருக்கட்டும். பக்கத்து கெஸ்ட் ஹவுஸ் வாட்ச்மேன் தாத்தாவோட மனைவிய குழலிக்குத் துணைக்கு இருக்கச் சொல்லு. அதுக்குள்ள நான் வந்துடுறேன்” என்றவன்

பின் குழலியை எழுப்பி “நான் இப்போ அவசர விஷயமா ஊருக்குப் போறேன் டா. காலையில ஏ.கேவும் கிளம்பிடுவான். சீக்கிரமே அவன் வெளிநாடு போய் உன் விசாக்கான வேலைகளை அவன் பார்த்தா தான் நீயும் எங்களோட வர முடியும். அதுவரை உனக்குத் துணையா நான் இங்க தான் இருப்பேன். ஆனா இப்போ நான் வெளிய போய்ட்டு வரேன். நான் சீக்கிரமே வரப் பார்க்கிறேன். ஒருவேளை தாமதம் ஆனா பக்கத்து கெஸ்ட் ஹவுஸ் வாட்ச்மேன் தாத்தா மனைவிய துணைக்கு வச்சிக்கோ” என்றவன் அவள் எதுவும் சொல்லாமல் ஒருவித பயத்துடன் இருப்பதைப் பார்த்ததும்

“என்ன குழலி எதுவா இருந்தாலும் சொல்லுமா” என்று இவன் ஊக்க

“எப்… போ… வரு…வீங்க சார்?” என்று அவள் திக்கித் திணறவும்

“அண்ணானு சொல்லிக் கூப்பிடு” என்று அவன் அவளைத் திருத்த

“எப்போண்ணா வருவீங்க? அவரும் இல்லாம நீங்களும் இல்லாம இந்த புது எடத்துல இருக்க எனக்குக் கொஞ்சம் பயமா கூட இருக்கு” என குழலி மிரளவும் அவளுக்கு இன்னும் சில தைரியங்கள் சொல்லிச் சென்றான் சூர்யா.

காலையில் கிளம்பத் தயாராக இருந்த ஏ.கே இன்னும் குழலி எழுந்திருக்காததை அறிந்தவன் அவளை எழுப்பிச் சொல்லி விட்டுப் போகலாமா வேண்டாமா என்று யோசிக்க, அதே நேரம் அந்த கெஸ்ட் ஹவுஸ் உள்ளே நுழைந்தான் செங்கோடன்.

நேற்று இரவே ஒரு அரசியல்வாதியின் உதவியுடன் வெளியே வந்தவன் குழலிக்குத் திருமணம் நடந்ததையும் அவளை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததையும் அறிந்தவன் வீரபாண்டி ஐயாவின் டிரைவர் மூலம் அவள் இருக்குமிடம் தெரிய வர காலை வரை பல்லைக் கடித்துப் பொறுமை காத்தவன் பின் அவன் உதவியுடன் தனக்குத் தெரிந்த ஒரு கத்துக்குட்டி வக்கீல் நண்பருடன் அவள் இருக்குமிடத்திற்கு வந்து சேர்ந்தான் அவன்.

தன் தாயோ இல்லை ஊராரோ குழலியைப் பற்றி எதைச் சொல்லியுமே அவன் நம்பவில்லை. ஏன் குழலியே சொன்னதைக் கூட பொய் என்று தான் நினைத்தான். தான் திரும்பவும் தப்பான வழிக்குப் போய் ஜெயிலில் மாட்டிக் கொண்டதில் தன்னை முழுமையாக வெறுத்துத் தன்னை வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் அவள் இப்படி ஒரு முடிவு எடுத்ததாக யோசித்தவன் அவளுக்கு விருப்பமே இல்லாமல் தான் இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்து கஷ்டப்படுவதாக உருவகப் படுத்திக் கொண்டவன் அவளுக்குத் தன் நிலையைப் புரிய வைத்துத் திரும்பத் தன்னுடன் அழைத்து வந்துவிடலாம் என்ற முடிவுடன் ஏ.கே விடம் பேசத் துணைக்கு ஒரு ஜுனியர் வழக்கறிஞரை அழைத்துச் சென்றான்.

ஏ.கேவைப் பார்த்ததும் அவன் காலில் விழுந்தவன் “என்னையும் என் மனைவியையும் பிரிச்சிடாதிங்க சாமி! எனக்கு அவ தான் உலகம் அவளுக்கு நான் தான் உலகம். சின்ன வயசுல இருந்து நாங்க விரும்பறோம். இன்னும் சொல்லப் போனா கல்யாணம் பண்ணிக்கப் போறோம் என்ற எண்ணத்துல சேர்ந்தே வாழ்ந்துட்டோம். அவளும் விரும்பி தான் அதுக்கு சம்மதிச்சா. இன்னமும் என்ன தான் அவ விரும்பறா. ஊர்க்காரங்க எல்லாம் என்ன சொல்லி அவள மிரட்டினாங்களோ தெரியல இப்போ உங்க தாலிய ஏத்துகிட்டா. ஆனா உங்கள கட்டிக்க அவளுக்குக் கொஞ்சம் கூட விருப்பமே இல்ல. அது எனக்குத் தெரியும். அதனால அவள என் கிட்ட திரும்ப அனுப்பிடுங்க. நாங்க எங்காவது போய் வாழ்ந்துக்குறோம். திரும்ப அந்த ஊருக்குக் கூட நாங்க போக மாட்டோம்” என்றெல்லாம் அவன் இல்லாததை இருப்பதாகப் பொய் சொல்லி அவன் நடிக்க அவனை விட அவன் கூட வந்தவன் ஒன்றுக்கு இரண்டாய் ஏற்றிச் சொல்ல என்ன செய்வது என்று புரியாமல் நின்றான் ஏ.கே.

அவனுக்கு ஏ.கேவை வெட்டிப் போட்டுவிட்டு குழலியைத் தூக்கிப் போக வெகு நேரம் ஆகாது. அதற்கும் அவன் தயார் தான். ஆனால் இப்போது தான் ஜாமீனில் வெளியே வந்தவன் மறுபடியும் வெளிநாட்டுக் காரனை ஏதாவது செய்யப் போக அது அவன் வாழ்வுக்கு இறுதி வரை தொல்லை என்பதால் இப்படி எல்லாம் நடித்து ஏமாற்ற வேண்டியதாயிற்று. அதிலும் பக்கத்தில் குழலி இல்லாத சமயத்தில் இவன் பேச நினைத்தது நடக்கவும் இன்னும் வாய் கூசாமல் பொய்களை அள்ளி விட்டான் செங்கோடன்.

ஆனால் சூர்யா தன்னிடம் இதுபோல் எதுவும் கூறவில்லை எனவும் முதலில் அவளைத் திருமணம் செய்யுமாறும் பிறகு அனைத்தும் பார்த்துக் கொள்ளலாம் என்று மட்டுமே கூறியதாகவும் சந்தேகத்துடன் ஏ.கே கேட்கவும்

“இல்லைங்க சாமி! அந்த சூர்யாவுக்கு இதுபத்தி ஒண்ணுமே தெரியாது. அவன் எங்கே இந்த ஊர்ல இருந்தான் எல்லாம் தெரிஞ்சிக்கறதுக்கு? அன்னைக்கு கூட நான் வாங்கி குடுத்த பாவாடை தாவணியத்தான் அவ பொறந்த நாளைக்குக் கட்டியிருந்தா. நீங்களே உங்க கண்ணால பார்த்தீங்க இல்ல?” என்று செங்கோடன் இவனை மடக்கவும் ஏ.கே யோசிக்க ஆரம்பித்தான்.

“இப்ப கூட உங்க கிட்ட இதை எல்லாம் சொல்றதுக்கு கூச்சப் பட்டுகிட்டு தான் அவ சொல்லாம இருப்பா. இங்கிருந்து போனதுக்கு அப்புறம் நீங்க கட்டினத் தாலியக் கழட்டிட்டு நான் அவளுக்குத் தாலி கட்டுவேன். இது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல சாமி. அதுக்கப்புறம் நாங்க யார் கண்ணுலயும் பட மாட்டோம்” என்று அவன் குழைவாகப் பேசவும்

முன்பே இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லாமல் ஊரார் கட்டாயத்திற்காகச் சம்மதித்ததாகச் சூரியா சொன்னதை யோசித்தவன் கூடவே நடக்காத தப்பை தங்களுக்குள் நடந்ததாக அவள் எல்லோரிடம் சொன்ன பொய் இவனிடம் அவள் செய்த தப்பை மறைக்கத் தான் என்றும் ஊருக்குப் பயந்தவள் பிறகு தன்னிடம் மட்டும் உண்மையைச் சொல்லி இவனுடன் சென்று விட இருந்தாளா என்று அவன் யோசித்ததை வாய் விட்டுக் கேட்டு விட அதற்கும் ஆமாம் சாமி போட்டான் செங்கோடன்.

இப்படி எல்லாம் இவனே யோசித்தானே தவிர குழலியிடம் இதெல்லாம் உண்மையா உனக்கு அவனுடன் போக விருப்பமா என்று எதுவும் கேட்கத் தோன்றவே இல்லை. அவளை அவன் விரும்பவும் இல்லை. குழலியின் இனத்தைப் பொறுத்தவரை ஒருமுறை நடக்கும் திருமணம் தான் அவள் வாழ்வுக்கான முதலும் முடிவுமான திருமணம் என்பதை ஏ.கே அறியவில்லை எனும்போது அவன் கட்டிய தாலியின் பவித்திரம் மட்டும் எங்கே தெரியப் போகிறது அவனுக்கு?

என்னென்னவோ பேசி குழலியை விட்டு விலக வைத்தவன் மேற்கொண்டு அவனைச் சுற்றி உள்ளவர்கள் யாருமே அவளிடம் தொடர்பு கொள்ளாமல் இருக்கும் படி சொல்ல அதற்கும் சம்மதித்துத் தன் மனைவியான பதினைந்து வயது குழலியை செங்கோடனிடம் விட்டு விட்டு இந்தியாவிலிருந்து கிளம்பினான் ஏ கே. சூரியா மூலமாகக் கூட குழலியின் வாழ்வுக்கு தான் இடைஞ்சல் ஆகி விடக் கூடாது என்ற எண்ணத்தில் இந்தியாவிற்கான மொபைல் சிம்மை உடைத்து எறிந்து விட்டு பிரான்ஸ் பறந்து சென்றான் அவன்.

இது எதுவுமே தெரியாமல் குழலி தன் அறையில் தூங்க, நண்பனை அனுப்பி விட்டு ஏ கே முழுமையாக சென்று விட்டானா என்பதை அறிந்து மனதில் நிம்மதியும் சந்தோஷமும் போட்டி போட அவள் அறைக் கதைவை தட்டினான் செங்கோடன்.

விழித்துத் தான் எங்கு இருக்கிறோம் என்று தடுமாறியவள் பின் கணவன் தான் கதவை தட்டுவதாக நினைத்து இவள் ஓடிப் போய் கதவைத் திறக்க அங்க செங்கோடனைக் காணவும் ஒரு வினாடி விழித்தவள்

“என்ன மாமா எப்படி இருக்க? எப்படியோ இந்த தடவ ஒரே நாள்ல உன் தோஸ்தோட அரசியல் சிபாரிசுல திரும்பி வந்துட்ட போல..” என்று இவள் முடிக்கக் கூட இல்லை

“குழலி வா நாம ரெண்டு பேரும் இந்த ஊரை விட்டே எங்கேயாவது போய் வாழ்வோம்” என்று எடுத்த எடுப்பிலேயே அழைக்கவும்

“என்ன மாமா விட்டா வாய் ரொம்பத் தான் நீளுது? எங்க யார் வீட்டுல வந்து யார கூப்பிடற? இது மட்டும் என் புருஷனுக்குத் தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா? நீ என்னமோ எனக்கு உரிமைக் காரன் மாதிரி நடந்துக்கிற! நான் இப்போ இன்னொருத்தரோட பொஞ்சாதியாக்கும்” என்று அவனுக்குப் பதில் கொடுத்தவள் எங்கே தன் கணவன் என்று அந்த வீட்டைச் சுற்றி வந்து அவள் தேட

“யார தேடுற? அந்த வெள்ளைக்காரனையா? நீ தான் உங்களுக்குள்ள புருஷன் பொண்டாட்டினு உறவு வச்சி பேசுற. ஆனா அவனோ நீயும் வேணாம் உன் உறவும் வேணாம்னு உன்ன என் கிட்ட விட்டுட்டுப் போய்ட்டான் போறவன், இப்படி படிப்பறிவு அழகு இல்லாதவ என் ஸ்டேட்டஸ்க்கு ஒத்துவராதவள நான் எப்படி என் நாட்டுல போய் மனைவினு சொல்லிக்கிறது? அதுவும் இல்லாம நான் வேற வழி இல்லாம தானே தாலியே கட்டினன்? அது என் நாட்டு வழக்கம் இல்லாதப்ப நான் ஏன் அதுக்கு மதிப்பு கொடுக்கனும்? உன் மொறப் பொண்ண நீயே கூட்டிட்டுப் போய் குடும்பம் நடத்துனு சொல்லிட்டு போய்டான். இது தெரியாம நீ பாட்டுக்கு பேசுற!” என்று கேட்டவன் இப்போது அவள் பேசிய பேச்சுக்கு வஞ்சம் தீர்த்துக் கொண்டான்.

அப்போதுதான் குழலிக்குத் தான் செய்த தவறு புரிந்தது. சூர்யாவிடம் சொன்னது போல் ஏ.கேவிடமும் முன்பே அனைத்தும் சொல்லியிருந்தால் இப்படி ஒரு விபரீதம் நிகழ்ந்திருக்காது என்று யோசித்தவள் இவன் சொல்வது போல் உண்மையிலேயே ஏ.கே இவனிடம் தன்னை ஒப்படைத்து விட்டுச் சென்று விட்டானோ என்று பயந்தவள் பின் அவன் அவ்வாறு செய்யக் கூடியவன் அல்ல என்று நினைத்து இருக்காது என்று உறுதியாக செங்கோடனிடம் மறுக்க

“இதுல பொய் சொல்ல எனக்கு என்ன இருக்கு? அவன் ஏதோ இப்போ வெளிநாடு போறானாமே? அதனால இனி அவ என் வாழ்க்கையில் வேணா. அதையும் நீயே அவகிட்ட சொல்லிடுனு இல்ல சொல்லிட்டுப் போனான்!” என்று அவன் சொல்ல

ஓடிச் சென்று தன் கணவனின் அறையை அவள் பார்க்க, உண்மை தான்! அவன் சம்மந்தப்பட்டது எதுவும் அங்கு இல்லை.

‘அப்போ நிஜமாவே தான் அவர் என்னை விட்டுட்டுப் போய்ட்டாரா? தாலினு கட்டிட்டா புருஷன் தான் நம் பெண்களுக்கு எல்லாம்னு ஆத்தா சொல்லுமே? சாகுற வரை அவ வாழ்க்கை முழுசுக்குமே அவன் தான் எல்லாம்னும் சொல்லுமே? அப்போ அவர் ஏன் என்ன விட்டுட்டுப் போனார்? அவருக்கு விருப்பம் இல்லாம தான் தாலி கட்டினார். ஆனா அவர் கூட இருக்கேன்ற ஒரு பாவ பரிதாபத்துல கூட எதுவும் சொல்லாம போய்ட்டாரே? உண்மைதான்.. அவருக்கு ஏத்த அழகும் தகுதியும் உள்ள பொண்ணு நான் இல்ல தான். ஆனா என்கிட்ட ஒரே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே?’ என்று பல கேள்விகள் அவள் மனதைப் போட்டுப் பிசையவும்

அவள் அப்படி ஸ்தம்பித்துப் போய் நிற்பதைப் பார்த்தவன் “வா குழலி நாம எங்காவது போய்டுவோம்” என்று மறுபடியும் அழைக்க

“சும்மா இதையே சொல்லாத மாமா. அவர் தான் எதுவும் யோசிக்காம ஏதோ சொன்னார்னா நீயும் அறிவில்லாம அதையே நடத்தச் சொல்ற! ஒழுங்கா நீ ஊர் போய் சேரு. எதுவா இருந்தாலும் சூர்யா அண்ணா வரட்டும். அப்புறம் நான் என் புருஷன் கிட்ட என்ன ஏதுனு பேசி கேட்டுக்கிறன். இப்போ நீ போ” என்று அவள் உத்தரவு இட

“என்ன டி எனக்கே வெளையாட்டு காமிக்கிறியா? இவ்வளவு நேரம் நான் பொறுமையா பேசினதே அதிகம். உன் மூஞ்சிக்கு என்ன விட அவன் கேட்குதா? ஒழுங்கா தாலி கட்டி குடும்பம் நடத்தலாம்னு நெனச்சா நீ குடும்பம் நடத்திட்டு தாலி கட்டச் சொல்ற.. வேற வழி இல்ல.. உன்ன இன்னைக்கு என்ன பண்ணப் போறன் பாரு” என்றவன் அவளிடம் தவறாக நடக்க முயல கோடாரி பிடித்த தன் கையால் அவனைத் தள்ளி விட்டு கண்மண் தெரியாமல் வீட்டை விட்டு ரோட்டில் ஓடியவள் முன் அந்த ஊர் போலீஸ் அதிகாரி ஒருவன் தன் ஜீப்பில் அமர்ந்து யாருடனோ பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவனிடம் ஓடி தனக்கு நடந்ததைச் சொல்லி உதவி கேட்க, அந்த அதிகாரியும் அவளுக்கு உதவுதாகக் கூறி வண்டியில் அமரச் செய்து கூட்டிச் செல்லும் வழியில் தன் சக நண்பர்களை போனில் அழைத்து எங்கேடா இருக்கீங்க சீக்கிரம் வாங்கடா இங்கே ஒரு கிளி மாட்டி இருக்கு என்று கூற அப்போதுதான் குழலி சிங்கத்திடம் தப்பி மீண்டும் புலியிடம் தான் சிக்கிக் கொண்டதை உணர்ந்தாள்.

‘ச்சே.. என்ன கேடுகெட்ட ஆண் சமூகம் இது? ஒரு பெண்ணின் சதைக்காக இப்படி அலைகிறதே! இதிலிருந்து காப்பாற்ற யாருமே இல்லையா?’ என்று மனதில் நினைத்து கொண்டவள் தன் கற்பை காப்பாற்ற என்ன ஆனாலும் பரவாயில்லை என்று ஓடும் வண்டியிலிருந்து அப்படியே கீழே உருள அதை சற்றும் எதிர்பார்க்காத அந்த அதிகாரி வண்டியை நிறுத்தி அவளைத் தேடுவதற்குள் சாலையோர பள்ளத்தில் அவள் விழுந்தாள். அந்த அதிகாரி இறங்கி தேட முயற்சிக்கும் போது மேலாதிகாரியிடம் இருந்து அவசரமாக வரும் படி அழைப்பு வர மனமே இல்லாமல் எங்கே போய்ட போற திரும்ப கிடைத்துதானே ஆகனும் என்ற முணுமுணுப்புடன் தன் வேலை பார்க்க சென்றான் அவன். 

தன் சக்தி எல்லாம் திரட்டி எழுந்து காடுமேடு எல்லாம் ஓடியவள் தன் ஆடை மரக்கிளையில் சிக்கினாலோ தான் எதன் மீது மோதினாலும் தன்னை ஒரு ஆண் மகன் தான் தொடுகிறான் என்ற பயத்தில் தவித்தவள் ஒரு இடத்தில் மரக்கிளையில் பலமாய் முட்டிக் கீழே விழுந்து தன் சுயநினைவை இழந்தாள் குழலி.

குளிரில் விறகுக் கட்டை என விரைத்துப் போய் இருந்தவளைக் அந்தப் பக்கம் வந்த அந்த ஊர் பெண்கள் சிலர் காப்பாற்றி சிகிச்சை அளிக்க இரண்டு தினங்கள் கழித்துத் தான் தன் நினைவைப் பெற்றவள் அப்போதும் ஒருவித பயத்தில் அவள் உடலோ தூக்கித் தூக்கிப் போட்டது.

மறுநாளே வருகிறேன் என்று சொல்லிச் சென்ற சூர்யாவால் இரண்டு நாட்கள் கழித்துத் தான் வர முடிந்தது. அதுவரை அவன் ஏ.கேவுக்கு தொடர்பு கொண்டே இருக்க அது உபயோகத்தில் இல்லை என்றே வந்தது. அந்த கெஸ்ட் ஹவுஸ் உரிமையாளரிடம் கேட்டு லேண்ட் லைன் நம்பர் வாங்கி குழலியிடம் பேச நினைக்க ஆள் இல்லாத வீட்டுக்கு லேண்ட் லைனே இல்லை என்று சொன்னார்கள். அந்த வீட்டைப் பார்த்துக் கொள்பவரே பக்கத்து வீட்டு வாட்ச்மேன் தாத்தா தான் என்றார்கள். சரி அந்த வீட்டு லேண்ட் லைனில் அழைத்துக் கேட்க அவரோ அங்கே யாரும் இல்லை என்றார். அவளுக்கு எதாவது ஆகி இருக்குமோ என்ற பயத்தில் சூர்யா வர அவனை ஆள் அரவம் இல்லாத வீடு தான் வரவேற்றது. பின் குழிலியின் அங்க அடையாளங்களைச் சொல்லி அக்கம் பக்கத்தில் விசாரிக்க ஒரு பெண்மணி தான் அவனைக் குழலி இருக்கும் வைத்திய சாலைக்கு அழைத்துச் செல்ல அவளைப் பார்த்துப் பயந்தவன் பின் விவரம் அறிந்து அவளைப் பார்த்துக் கொள்ள அவனையும் தன்னிடம் நெருங்க விடாத அளவுக்கு கத்தி கூச்சல் இட்டு அடிக்கடி சோர்ந்து போனவள் பிறகு மெல்ல மெல்ல யாரிடமும் பேசாமல் இறுகிய தன்மையுடனே உலாவ ஆரம்பித்தாள் குழலி.

தாத்தாவுக்குச் சரியானதும் அவரிடம் ஏ.கேவையும் குழலியையும் பற்றி அனைத்தையும் சொல்லியவன் குழலியை அவரின் பொறுப்பில் விட்டு விட்டு நண்பனைப் பற்றி அறியப் போனவனுக்கு அவன் அங்கு போயும் கிடைத்தது என்னமோ வெறும் பூஜ்ஜியம் தான்.

இங்கே இவளை விட்டுச் சென்ற ஏ.கேவால் இரண்டு நாள் தான் நிம்மதியாக சாதாரணமாக இருக்க முடிந்தது. அதன் பிறகு அவனால் அவனாகவே இருக்க முடியவில்லை. ஏதோ நடக்கக் கூடாத ஒன்று தன் வாழ்வில் நடந்ததாக உணர்ந்தான். சூர்யாவின் ஆலோசனை இல்லாமல் இப்படி குழலியை செங்கோடனிடம் விட்டு வந்தது தவறோ என்றும் எப்படியோ அவர்கள் அவள் கிராமம் போக மாட்டார்கள் எனும்போது எங்கு இருக்கிறார்களோ குழலி கஷ்டப்படுவாளோ அவள் வாழ்க்கை நன்றாக இருக்க செங்கோடனுக்கு எதாவது நல்லது செய்யலாமா என்றும் பலவாரு யோசித்தான்.

அவளை மறக்கவும் முடியாமல் சூரியா மூலமாக எப்படி இருக்கிறாள் கேட்டு அறியவும் முடியாமல் அப்படி அறிய ஆசைப் பட்டு எதாவது செய்யப் போக அது அவள் வாழ்வுக்கு எதிராகப் போனால் என்ன செய்வது என்று தவித்தவன் அதன் நினைவுகளை மறக்க நினைத்து கடுமையாக உழைத்தவன் ஏன் எதுக்கு இப்படி செய்கிறோம் என்று தெரியாமலே தமிழ் மொழி கற்றவன் அவர்களின் பழக்க வழக்கங்களை ஆராய்ந்து தன் வாழ்விலும் அதனைக் கடைப்பிடித்தான்.

ஒரு வருடம் கழித்துத் திரும்பவும் அவன் இந்தியா செல்ல வாய்ப்பு வர அதைப் பயன்படுத்தித் திரும்பவும் குழலியைப் பற்றி அறிய நினைத்தவன் அது சூரியாவுக்குக் கூட தெரியக் கூடாது என்று யோசித்து அவளை விட்டுவிட்டு வந்த அதே கெஸ்ட் ஹவுஸ் எல்லைக்குள் இருந்த போலீஸ் ஸ்டேஷனில் என்றோ எப்போதோ குண்டா கருப்பா மலைவாழ் இனத்தில் இருந்த ஒரு பெண்ணைப் பற்றி அவன் விசாரிக்க அங்கு சரியான தகவல் கிடைக்கவில்லை.

அதில் அவன் திரும்பத் திரும்ப வேறு வேறு விதமாக அவர்களைக் கேட்க அதில் கடுப்பான ஒரு போலீஸ் அதிகாரி “யோவ்! அதான் எதுவும் தெரியாதுனு சொல்றோம் இல்ல? ஒரு தடவைக்குப் பல தடவை கேட்குற! முழுமையான விவரம் சொன்னாலே இங்கு தெரியாதாம். இதுல எப்போவோ நடந்தது கேட்க வந்துட்டான்” என்று அதிகாரத் தோரணையைக் காட்டியவன் பின்னர் ஆவணங்கள் வைக்கும் கோப்பில் இருந்து ஒரு கோப்பை எடுத்துப் பிரித்து சில பேப்பர்களைத் தள்ளிப் பார்த்தவன்

“நீ சொன்ன இடத்துல சொன்ன தேதியில அங்கிருந்த ஒரு பொண்ண அந்த ஊர் காரனுங்களே நாலு பேரும் சேர்ந்து பலாத்காரம் பண்ணதுல அந்த பொண்ணு அந்த ஸ்பாட்டுலேயே இறந்து போய்டுச்சி. போதுமா? நீ கேட்ட தகவல் கிடைச்சிதா? இப்ப எடத்த காலி பண்ணு.

நாடு விட்டு நாடு வந்து தமிழ் பொண்ணா பார்த்து காதலிக்க வேண்டியது பிறகு ஊரை எதிர்த்துட்டு எங்கேயாவது கூட்டிட்டுப் போய் அந்த பொண்ணோட உல்லாசமா இருந்துட்டு அப்பறம் அம்போனு விட்டுட்டுப் போக வேண்டியது. உங்கள எல்லாம் நம்பி வந்ததுக்கு அந்த பொண்ணை நாலு பேரு என்ன நாற்பது பேர் சேர்ந்து வீணாக்க விட வேண்டியது.

பிறகு உங்களுக்கா ஞானோதயம் வந்து அவளைத் தேடி வந்து எங்க உசுரை எடுக்க வேண்டியது. போ அவ செத்துப் போய் மார்ச்சுவரில அனாதைப் பொணமா இருந்து நாங்க தான் எரிச்சோம். போதுமா? இல்ல இன்னும் வேற எதாவது உனக்கு தெரிய வேணுமா?” என்று அதே அதிகார குரலிலேயே முடித்தவன் தன் அடுத்த வேலைகளைப் பார்க்கப் போக தன் வாழ்வில் முதல் முறையாக ஸ்தம்பித்துப் போனான் ஏ.கே.

இப்படி ஒரு விஷயத்தை அவனால் நம்ப முடியவில்லை. இதையே வேறு யாராவது சொல்லி இருந்தால் நம்பி இருப்பானோ என்னவோ? போலீஸ் என்பதால் உண்மை என்றே நம்பினான். ‘அப்போ அந்த நாலு பேர் என்பது செங்கோடனும் அவன் நண்பர்களும் தானா? நானே அவ வாழ்க்கைய அழிக்கவும் அவ சாகவும் காரணமாகிட்டேனே’ என்று துடித்தவன் “குழலி எவ்வளவு துடிதுடிச்சி இருப்பா அவனுங்களால?” என்று வாய் விட்டுச் சொன்னவன்

‘ஒரு கணவனா தன் மனைவியைக் காப்பாற்ற வேண்டிய நானே இப்படி செய்துட்டேனே! என் கண்ணம்மா சாக நானே காரணமாகிட்டேனே! புருஷன் காரன் நான் இருக்கும் போதே என் மனைவி அநாதைப் பொணமா போயிருக்கா. அப்போ சூரியாவுக்குமே இது தெரியாதா? அப்படி தெரிந்திருந்தால் அவளை அவன் அநாதையாக விட்டிருக்க மாட்டானே?’ என்றேல்லாம் யோசித்தவன் அப்போது தான் ஒன்றை அறிந்தான்.

தான் குழலியைக் காதலித்ததாகவும் இப்போதும் அவளைக் காதலிப்பதாகவும் கண் கெட்ட பிறகு சூரியநமஸ்காரம் என்பது போல் அவள் உயிரும் உணர்வுமாய் தன்னுடன் இருக்கும் போது வராத காதல் இப்போது அவள் இறந்த பிறகு வந்ததில் முழுமையாக மாறியவன் தன்னைச் சுற்றி ஓர் வளையதைப் போட்டுக் கொண்டு சாராவைப் பார்க்கும் வரை இருந்தான் ஏ.கே வான அஷ்வத் கென்டிரிக்.

பாவம் அவனுக்குத் தெரியாது எங்கே இவன் அடிக்கடி வந்து தொந்தரவோ இல்லை வேறு யார் உயர் அதிகாரி மூலமாக அழுத்தம் கொடுக்காமல் இருக்கவே அந்த போலீஸ் அதிகாரி சொன்ன பொய் தான் அவள் இப்படி கொடூரமாக இறந்து விட்டாள் என்பது.

தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் இன்று மனைவியான சாராவிடம் கூறியவன்

“இப்போ சொல்லு சாரா, நாம பிரிஞ்சிடலாம்னு சொன்னதும் நான் உன் கிட்ட டிவோர்ஸ் கேட்டதும் சரி தான?”

அவள் எந்த பதிலும் சொல்லாமல் அவனை வெறித்துப் பார்க்க அவள் பார்வையை உணர்ந்தவனோ

“நீ என்ன கேட்கவரனு எனக்குப் புரியுது. கல்யாணம் பண்ணி இவ்வளவு தூரம் வந்த பிறகு பிரிஞ்சிடலாம்னு சொல்ற நீ அதற்கு எதுக்கு என் கழுத்துல தாலி கட்டின தான யோசிக்கிற?”

திடீர் என எழுந்தவன் அவள் முன் மண்டியிட்டு தரையில் அமர்ந்து அவள் இரண்டு கைகளையும் தன் இரண்டு கைகளுக்குள் கொண்டு வந்து இறுகிப் பிடித்தவனோ

“என் மனநிலையை உனக்கு முழுக்க சொன்னான் தான் உனக்கு புரியும் பொம்மி” என்றவன் “குழலிய நான் பார்த்ததுல இருந்து அவ மேல் எனக்கு ஒரு பிடித்தம் இருந்ததே தவிர நிச்சயம் எனக்கு காதல் இல்ல. ஏன் அவள அப்படி ஒரு நிலையில பார்க்கும் போது கூட காதலையும் மீறிய ஒரு காமப் பார்வை கூட வரல. அவளுக்குத் தாலி கட்டினது கூட அவ மானத்தை காப்பாற்றனுமேனு தான். கடமைக்கு கட்டினேன் பிறகு அவளுக்கு நல்லது செய்யறதா நினைத்து தான் அவ மாமா கிட்ட விட்டுட்டுப் போனேன். ஆனா அதுவே அவளை அழித்து..” என்றவன் மேற்கொண்டு சொல்ல முடியாத அளவுக்கு அவனுக்குத் தொண்டை அடைக்கவும் அதை செறுமி சரி செய்தவன்

“சின்னபின்னாமாக்கும்னு நான் நினைக்கல. ஐயோ என்னால தானே அப்படி நடந்துடுச்சினு நான் எனக்குள்ள ஒரு வட்டத்தப் போட்டுகிட்டு குற்ற உணர்ச்சியால அடிக்கடி துடிச்சேன். ஆனா அது வெறும் குற்ற உணர்ச்சி இல்ல அவ மேல நான் வச்சிருக்கிற காதல்னு பிறகு தான் தெரிஞ்சிது. எஸ் ஐ லவ் ஹெர்.. இப்படி ஒரு நிலையில் தான் நான் உன்னை பார்த்தேன். உன்னை என்றத விட உன் விழிகளப் பார்த்தேன். இறந்த குழிலியோட விழிகள் உன் கிட்ட இருந்ததால தான் அது எனக்கு சொந்தமான விழிகள்னு நான் அடிக்கடி சொன்னேன்.

என்னைத் தவிக்க வைக்கவோ தடுமாறவோ ஏன் என்னை சலனப்படுத்தவோ முடியும்னா அது குழலியால மட்டும் தான் முடியும். அதனால தான் அதனால தான் உன் கிட்ட நிறைய நேரத்துல நான் சலனப் பட்டேன். ஆனா கடைசி வரைக்கும் மனைவிக்கான அங்கீகாரத்த உனக்கு கொடுக்கவே என்னால முடியல. இதை எல்லாம் மறைத்து உன்னை கல்யாணம் பண்ணது தப்பு தான். நான் உனக்கு செய்தது துரோகம் தான்.

பிறகு உன் கிட்ட எல்லாத்தையும் சொல்லி நம்ம வாழ்க்கை இவ்வளவு தான் இதுக்கு மேல காதலையோ மனைவி என்ற அங்கீகாரத்தையோ என் கிட்ட எதிர்ப்பார்க்காத அதுக்கு சம்மதம்னா இருனு சொல்லலாம்னு இருந்தேன். ஆனா அதுவும் என்னால முடியல. ஒரு நேரம் உன் கிட்ட சலனப் படுறதும் பின் உன்ன விட்டு விலகுறதும் எனக்கு நரகமான வாழ்க்கையா பட்டுச்சி. அதனால தான் நிரந்தரமா நாம பிரிஞ்சிடலாம்னு முடிவு எடுத்தேன். அதுவும் இல்லாம அவ எங்கேனா வாழ்ந்தா கூட நாம காதலிச்ச பொண்ணு எங்கோ நிம்மதியா வாழறானு கூட எனக்கு ஒரு எண்ணம் வந்து நான் என் வாழ்க்கையப் பற்றியாவது யோசித்து இருப்பேன்.

ஆனா அவ உயிரோடவே இல்லனா நான் மட்டும் எப்படி வாழ சொல்லு? உன்ன எனக்கு பிடிக்கும் பொம்மி. உன் மேல அன்பு பாசம் அக்கறை எல்லாம் இருக்கு. ஆனா…. இப்போ நான் சொல்றத கேட்க உனக்குக் கஷ்டமா தான் இருக்கும். எனக்கு காதல்னா அது என் மனைவி குழலி கிட்ட மட்டும் தான்” என்றவன் அவள் ஏதோ சொல்ல வரவும் அவளைப் பேச விடாமல் தடுத்தவன்

“இதை எல்லாம் மறந்துட்டு நாம வாழலாம்னு தானே சொல்ல வர? இப்படி சொல்ற உன்னாலயே நிச்சயம் இதை மறந்து என் கூட வாழ முடியாது. தினம் தினம் அக்னியாய் இந்த விஷயம் உன்னை எரிக்கும். ஏன்னா..” என்று சற்றே இழுத்தவன் நடுங்கும் தன் விரல்களால் அவள் கையை எடுத்து தன் சட்டைக் காலரில் வைத்து அதை விலக்க பால் நிறமான அவன் மேனியில் மார்பு மத்தியில் I love கருங்குழலி என்று பச்சை குத்தியிருந்தான் அவன்.

அதைப் பார்த்தவளோ தன் கண்கள் விரிய கண்ணில் இருந்து கண்ணீர் வழிய தான் பெற்றெடுத்த குழந்தையை ஒரு தாய் எங்கே குழந்தைக்கு வலிக்குமோ என்ற பயத்தில் பட்டும் படாமல் அதன் மேனியைத் தொட்டுத் தடவுவாளே அப்படி தான் பொம்மி விரலால் அந்த இடத்தை வருடியவள் அதை உச்சிமுகர்ந்து முத்தம் வைத்தவள் பின் “மச்சான்!” என்ற கேவளுடன் அவன் கழுத்தைக் கட்டிக் கொள்ள

தன்னைத் திட்டுவாள் கோபப்படுவாள் வெறுப்பாள் என்று அவன் நினைத்திருக்க அவள் தன்னைக் கட்டிக் கொண்டு அழவும் தான் செய்த துரோகத்தில் வெந்தவன்

“ஐயோ பொம்மி! என்னை அடி திட்டு இப்படி நீ அழாதடி கண்ணம்மா” என்று அவன் அவள் முதுகு வருட

“உங்களுக்கு எவ்வளவு அன்பு பாசம் காதல் என் மேல! உங்க மனசுல என்ன இருக்கனு தெரியாம இவ்வளவு நாள் மக்கு மட்டியா இருந்து இருக்கனே. எல்லாத்தையும் நாம பார்த்த அன்னைக்கே பேசியிருந்தால் இவ்வளவு கஷ்டத்த நாம பட்டிருக்க மாட்டோமே. உங்க மனசுல எனக்கு மனைவிக்கான இடம் இல்லையானு நான் எத்தனை நாள் தவிச்சிருக்கேன்” என்று அவள் அவனைக் கட்டிக்கொண்டு கேவவும், ஸ்தம்பித்து நின்றான் ஏ.கே. அதுவும் ஒரு வினாடி தான். பிறகு அவளைத் தன்னிடம் இருந்து பிரித்தவன்

“இப்போ நீ என்ன சொன்ன பொம்மி? எனக்கு ஏதோ கொஞ்சம் புரிந்தும் புரியாமலும் இருக்கு. அதிலும் புரிந்ததை நம்பவோ என்னால் சுத்தமா முடியல” என்று அவன் கேட்க

“நான் தான் உங்க மனைவி குழலி மச்சான்” என்று அவள் சொல்ல

சட்டென தரையில் கால் மடக்கி அமர்ந்து விட்டான் ஏ கே. அவனுடன் சேர்ந்து தரையில் அமர்ந்தவள் அவன் கன்னங்களைத் தன் கைகளால் தாங்கியவள் 

“நிஜம் தான் மச்சான். நான் தான் உங்க குழலி” என்றவள் இவன் விட்டுச் சென்ற பின் செங்கோடனிடமிருந்து தப்பித்தது முதல் சக்கரவர்த்தி தாத்தாவிடம் வந்து சேர்ந்தது முதல் அனைத்தையும் சொல்லியவள் 

“நமக்குத் திருமணம் நடந்த அப்போ எனக்கு உங்களை பிடிக்குமோ இல்ல நான் உங்கள காதலித்தேனானு கேட்டா இல்லனு தான் சொல்லுவேன். என் ஆத்தா ஒரு பொண்ணு எப்போதும் தன்னையும் தன் உடலையும் பாதுகாக்கணும்னு சொல்லும். அதை வச்சி தான் நீங்க என்ன அப்படி பார்த்ததும் செங்கோடன மட்டும் இல்ல வேற யாரையும் கட்ட முடியாதுனு உங்களக் கட்டிக்க சம்மதிச்சேன். அப்பவும் உங்க அழகையும் தகுதியையும் பார்த்து விலகிடணும்னு உறுதியா இருந்தேன்.

நீங்க என்ன விட்டுப் போகும் போது கூட இதை என் கிட்ட இவர் சொல்லிட்டுப் போய் இருக்கலாம்னு தான் தோனுச்சி. சத்தியமா வருத்தமோ கோபமோ வரல. ஆனா அன்னைக்கு முழுக்க நடந்த கெட்ட சம்பவத்தால மன உலைச்சல்ல நான் கொஞ்சம் ஒரு மாதிரி ஆகிட்டேன். சூர்யா அண்ணா தான் உங்க தாத்தா கிட்ட என்ன கொண்டு வந்து சேர்த்தார். தாத்தாவும் என்ன அவர் பேத்தியா ஏத்துகிட்டார்” என்றவள் சூரியாவுக்கு அவன் தாத்தா விஷயம் எப்போது எப்படி தெரிய வந்தது என்று அனைத்தையும் சொன்னாள்.

“உங்கள அண்ணா தேடி கண்டுபிடிக்கறதுக்கு நிறைய முயற்சி எல்லாம் எடுத்தார். ஆனா இடையில அவங்க அம்மாவுக்கு விபத்தாகி அவரைப் பாத்துக்கிற நிலைமை வரவோ உங்க விஷயத்துல முழு வீச்சா ஈடுபட முடியல. சரி இனி நானும் தாத்தாவும் தான் வாழ்க்கையினு எடுத்துகிட்டோம். ஆனாலும் எனக்கு ஏதோ தப்பு செய்துட்ட மாதிரியே இருந்தது.

அதையும் வெளி உலகம் படிப்புனு நான் போகப் போக நமக்குள்ள நடந்தது வெறும் விபத்து தானு புரிஞ்சி கிட்டு அடுத்த கட்டத்தை நோக்கி வாழ ஆரம்பிச்சேன். தாத்தா எனக்குக் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்து பெண் பார்க்க மாப்பிள்ள வீட்டார் வரும்போது தான் நான் உணர்ந்தேன். என்னால வேற யாரையும் திருமணம் செய்து உங்க இடத்துல வேற யாரையும் வச்சிப் பார்க்க முடியாதுனு. ஏன்னா நான் அந்த அளவுக்கு உங்கள விரும்புறேன் மச்சான்” என்று கூறி அவன் முகமெங்கும் முத்த மழை பொழிந்தவளோ 

“அதற்குப் பிறகு திருமணமே வேணாம்னு மறுத்த என்னை தாத்தாவும் அண்ணாவும் வற்புறுத்தவே ஒருமுறை உங்கள நேர்ல பார்த்துப் பேசின பிறகு வேற திருமணத்திற்கு சம்மதிக்கிறனு சொன்னேன். அதுக்கு பிறகு சூர்யா அண்ணா வேற வழியில தேடி உங்களை கண்டுபிடித்தாங்க. உங்க அளவுக்கு தகுதிய வளர்த்துகிட்டதுக்கு அப்புறம் நானே உங்க கிட்ட வந்து பேசுற வரை அண்ணாவ உங்களை தொடர்பு கொள்ள வேண்டாம்னு சொன்னேன். என்னைப் பார்த்ததும் நீங்க தெரிஞ்ச மாதிரியே நடந்துக்கல. ஒருவேளை நிஜமாவே என்ன உங்களுக்கு அடையாளம் தெரியலனு தான் நினைச்சேன். நான் தான் பெயரிலிருந்து உருவத்துல இருந்து நிறைய மாறி இருந்தேனே?” என்று குழலி படபடத்துப் பேச

“இருக்கலாம்! நீ எவ்வளவு மாறி இருந்தாலும் உன் விழிகளை என்னால மறக்க முடியல குழலி. உன் பிறந்த நாள் அப்போ தான் ஸ்டீவ் மகன் மேத்யூஸ் பிறந்தான். அதனாலேயே நீயே வந்து திரும்ப பிறந்துட்டியோனு எனக்கு அப்படி ஒரு சந்தோஷம். கூடவே ஒட்டுதலும் அவன் கிட்ட அதிகமாச்சி. அந்தளவுக்கு உன் நினைவுகள் எனக்குள்ள இருந்தது. ஆனா நீ இறந்துட்டேனு உறுதியா நான் நம்பினதால உனக்கு இந்த விழிகள் இடையில கிடைச்சதுனு நினைச்சிட்டேன். அதனாலேயே நான் திரும்ப சூரியாவை தொடர்பு கொள்ளவில்லை. எங்கேடா குழலினு அவன் கேட்டா நான் எங்க போய் என் முகத்தை வச்சிக சொல்லு ஆமா அந்த போலீஸ் காரன் ஏன் அப்படி சொன்னான்னு தெரியல” என்று இறுகியிருந்த அவன் வாயைத் திறக்க

“அவங்க வேற ஒரு கெஸ்ட் ஹவுஸ்ல இப்படி நடந்ததை சொல்லி இருப்பாங்க. நீங்க என்னனு தப்பா புரிஞ்சி இருப்பீங்க” என்றவள் மறுபடியும் தான் முன்பு விட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்தாள்.

“அப்படி மாறி இருந்ததால நானா உங்களுக்கு சொன்னா தான தெரியும்? ஆனா உங்க வாயில இருந்து நான் உன்ன விரும்புறனு நீங்க சொல்ற வரை இதை தெரியப் படுத்தக் கூடாதுனு இருந்தேன். நீங்க கல்யாணத்துக்குக் கேட்டதும் என்னத் தவிர உங்க வாழ்க்கையில் வேறு யாரும் இல்லனு தெரிஞ்சதால மறுபடியும் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். பிறகு நீங்க நடந்துகிட்டதை வைத்து பார்க்கும்போது உங்களுக்கு என்னைத் தவிர வேற ஏதோ யார் மூலமா நடந்து இருக்கோனு நெனச்சேன். அப்படினா அதை நீங்க சொல்ற வரை என் விஷயத்தை சொல்லக் கூடாதுனு இன்னும் உறுதியா இருந்தேன். அப்பவும் நாம ஹனிமூன் போறதா இருந்தப்ப அங்கே சொல்லிடலாம்னு இருந்தேன். சூர்யா அண்ணாவ நான் தான் நம்ம ரிசப்ஷனுக்கு வரச் சொன்னேன். நீங்க அவர் கிட்ட ஏதாவது பேசுவிங்கனு பார்த்தா நீங்க என் கிட்ட சண்டை போட்டு பிரிவு வரை வந்துட்டிங்க என்றவள் ஓடி சென்று தன் அலமாரியில் வைத்து இருந்த யானை தந்ததால் ஆன அவன் கட்டிய கருகுமணியை எடுத்து வந்து காட்டியவள் கூடவே அப்போது திருமணத்தின் போது சூர்யா எடுத்த புகைப்படத்தையும் காட்ட பழைய ஞாபகத்தில் ஏ கே மூச்சு விடவும் முடியவில்லை பின் லேப்டாப்பை உயிர்பித்து ஸ்கைப் மூலம் சூர்யாவையும் அந்த குடும்பத்தையும் அவனிடம் பேச வைத்து தன் கணவனின் அவநம்பிக்கையையும் போக்கினால் அவன் மனைவி

இப்போ சொல்லுங்க நீங்க கேட்ட கையெழுத்தப் போட்டுத் தரவா? என்று அவள் அவனைச் சீண்டி இலகுவாக்க

“கொன்னே போட்டுடுவேன் டி! உனக்கு என்னைய விட்டுப் போகணும்னு எல்லாம் எண்ணம் இருக்கா?” என்று அவன் அவளை முறைக்க

“என்ன பெரிய முறைப்பு? சீன் படி பார்த்தா நான் தான் உங்களை முறைக்கணும். இல்ல இல்ல.. மொத்தோ மொத்துனு மொத்தனும். எப்படி வசதி? நான் சொன்னதை பண்ணவா?” என்று அவள் கோபப் பட, அவள் விளையாட்டாகச் சொன்னதை விடுத்தவன்

“ஆமா! நான் உன்னை அம்போனு விட்டுப் போனதுக்கு நீ என்ன கொன்னாலும் தப்பு இல்ல….”

“ஐயோ! ஏன் இப்படி பேசறீங்க? உங்க இடத்துல நான் இருந்தாலும் இந்த முடிவுத் தான் எடுத்திருப்பேன். நான் சொல்ல வந்தது செங்கோடன் சொன்னதை அப்படியே நம்புனிங்களேனு தான். அப்படி நான் தப்பு செய்திருந்தா உங்க கையால தாலி வாங்கி இருப்பனா? நான் என்ன அப்படிப் பட்டவளா? சத்தியமா அவன் சொன்ன மாதிரி எங்களு…” அவள் எதைச் சொல்ல வருகிறாள் என்பதை உணர்ந்தவனோ சட்டென அவள் வாயைத் தன் விரல்களால் மூடியவனோ

“நீ எதுவும் சொல்ல வேணாம் டி. என் மனைவியப் பற்றி எனக்குத் தெரியும். அந்த குள்ள நரி தான் என் மனசக் கலைக்க ஏதோ சொல்லி இருக்கும்” என்றவன் “என்னை மன்னிச்சிடு டி பொண்டாட்டி” என்றவன் அமர்ந்த வாக்கிலேயே அவன் அவள் பாதத்தைப் பிடிக்க

“என்ன மச்சான் மன்னிப்புனு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிகிட்டு. பழசை எல்லாம் மறந்துட்டு நாம இனி நமக்கான வாழ்க்கையை வாழ்வோம்” என்று முற்றுப்புள்ளி வைத்தாள் குழலி.

குழலியோ கணவனின் தோளில் சுகமாய் தூங்கிக் கொண்டிருக்க எங்கோ அவள் கைப்பேசி ஒலிக்க அதற்கான பிரக்ஞை சிறிதும் இல்லாமல் அவள் தூங்க உடனே அடுத்து ஏ.கேவின் கைப்பேசி பக்கத்திலிருந்த டேபிள் மேலிருந்து ஒலிக்க, தூக்கக் கலக்கத்திலே அதை எடுத்து அவன் 

“ஹலோ” என்றது தான் தாமதம்

“ஏன் டா தண்டம் சோம்பேறி செவிடா! எத்தனை தடவ டா போன் பண்றது? நேத்து நைட் சாப்பிட கீழ வாங்கனு போன் பண்ணதுக்கு இவ்வளவு நாள் கழித்து நான் என் பொண்டாட்டி குழலி கிட்ட பேசிட்டு இருக்கேன் நாங்க வரோம் போன வைங்கனு சொன்ன. மறுநாள் விடிஞ்சி இதோ இரவு சாப்பாட்டுக்கான நேரமே வந்துடிச்சி. ஒழுங்கா ரெண்டு பேரும் கீழ வந்து சாப்பிட்டு போங்க” என்று சொல்லி தாத்தா அதிகாரத்துடனே போனை வைக்க தாத்தா பேசும் போதே முழிப்பு கலைந்த குழலியோ நேரத்தைப் பார்த்து விட்டு வெட்கத்துடனும் பதட்டத்துடன் கணவனை பார்த்தவள் அவன் முகத்தில் ஒரு நிறைவை கண்டவளோ இவ்வளவு நேரமா தூங்கினோம் என்று எண்ண

இருக்காதா பின்ன? ஒருவர் மேல் ஒருவர் இத்தனை வருடம் கொண்டிருந்த அன்பு பாசத்தை இருவரும் பேசித் தீர்த்தவர்கள் கூடவே தங்கள் துணை மேல் தாங்கள் கொண்டிருந்த காதலையும் வெளிப்படுத்தத் தன் காதல் மனைவி உயிருடன் தன் கையில் இருந்தாலும் இது நிஜம் தானா நிஜம் தானா என்று ஏ.கே அவளை ஆக்கிரமிக்க அவளோ கணவனுக்கும் ஒரு படி மேலே போய் இத்தனை நாள் தான் காத்திருந்த காத்திருப்புக்கு பரிசாக நானே நானே என்று முத்ததால் அவனுக்குத் தெரியபடுத்த இவன் காதலில் அவளும் அவள் காதலில் இவனும் பனி என உருகிக் கொண்டிருக்க இதில் நேரம் போனது எங்கே அவர்களுக்கு தெரியப் போகுது?

பின் ஒரு நாள் அவனுக்கு சொந்தமான தீவுக்கு அழைத்துச் சென்றவன் அங்கு அவளைத் தான் எடுத்த போட்டோவையும் அவள் விழிகளை மட்டும் அவன் நிறைய இடத்தில் வரைந்து வைத்திருக்க, அதில் ஒரு படத்தில் மட்டும்

மருளும் விழிகளோ?!…
அல்லது….
மயக்கும் விழிகளோ?!…
யாருக்குத் தெரியும்?….
இம்மங்கையவளின் மனதைத் தவிர!…

என்று எழுதியிருக்க அதைத் தன் விழி விரித்து அவள் பார்த்திருக்கவும் பின்னால் சென்று அவளை அணைத்தவனோ

“நிச்சயம் மயக்கும் விழி தான் டி கருவாச்சி!” என்று காதல் பொங்க சொல்லி அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான் ஏ.கே.

தங்களுக்கான ஹனிமூனை கிரீஸ் நாட்டில் உள்ள சான்டோரரைனி தீவில் கொண்டாட ஏ.கே முடிவு செய்தான். அடர்ந்த மரங்களுக்கிடையில் ஒரு சிறு மலைக் குன்றின் மேலிருந்த கிளாஸ் ஹவுஸ் எனப்படும் முழுக்க முழுக்க கண்ணாடியால் கட்டப்பட்ட வீட்டிற்கு அழைத்துச் சென்றான். பகலில் உள்ளே இருந்த படியே காட்டை வெளிச்சத்தில் ரசித்தாலும் இரவில் அந்த ரம்மியமான கும்மிருட்டை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ரசித்து விடியா இரவாகவே அங்கிருந்த வரை கழித்தார்கள் இருவரும். ஒரு முறை குழலி

“நீங்க ஹனிமூனுக்கு வேற இடத்துக்குப் போறோம்னு சொன்ன உடனே என் கிராமத்துக்குத் தான் கூட்டிட்டுப் போறீங்களோனு நினைச்சேன்” என்று தன் கிராமத்தை நினைவு படுத்தினாள்.

“கூட்டிட்டுப் போறேன் குழலி. ஆனா இப்போ இல்ல. நீ நினைத்த மாதிரியே விவசாயத்துல எதையாவது செய்து சாதிச்சிடு. அதுக்குப் பிறகு நான் உன்னை அங்கே கூட்டிட்டுப் போறேன். பாருங்கடா என் மனைவி கருங்குழலியனு காட்ட! அதற்கு வேண்டியத எல்லாம் செய்து நான் உன்னைபடிக்க வைக்கிறேன்” என்றவனைத் தன் இறுகிய அணைப்பில் கட்டித் தழுவிக் கொண்டாள் குழலி.

நாட்கள் உருண்டோட குழலி உண்டாகி இருக்க முதல் மாதத்திலிருந்து ஒரு தாயாக இணையத்தில் இருந்து அறிந்தும் சூர்யாவின் மனைவியிடம் இருந்தும் கேட்டுத் தெரிந்து கொண்டு மனைவியை தாங்கினான் ஏ.கே.

ஒன்பதாம் மாத வளைகாப்புக்கு சூர்யாவும் அவன் குடும்பமும் வர ஏற்கனவே நண்பர்களுக்குள் சுமூகமாக இருந்தாலும் அங்கு ஏ.கேவோ குழலி பக்கத்திலேயே நின்று நேரத்துக்கு அவளுக்கு ஜுஸ் கொடுத்த படி இருந்தான். அவள் அசதியில் லேசாக முகம் சுருங்கினாலும் என்ன ஏது என்று கேட்டவன் இறுதியாக அவளைக் குனிய வைத்து முதுகில் வாழை இலை மேல் சங்கில் பால் இடும் நிகழ்வு வர அதைச் செய்ய விடாமல் இவன் தடுக்க

“அண்ணா இப்படி செய்தா தான் வயிற்றுல இருக்கிற குழந்த ஆணா பெண்ணானு தெரிய வரும். அதனால செய்ய விடுங்க” என்று சூர்யா மனைவி சொல்ல

“அதான் பெண் குழந்தைனு எங்களுக்கு ஸ்கேன்லயே தெரியுமே” என்று ஏ.கே பதில் கொடுக்க

“அடேய் சும்மா அடங்கு டா.. இதெல்லாம் ஒரு சாங்கியம் தான். அதனால பேசாம செய்ய விடு. அதுமட்டுமில்லாம நம்ம முன்னோர்கள் செய்ற சடங்குல ஏதாவது விஷயம் இருக்கும். உன்னால அதை கணிக்க முடியாது டா. ஹூம்… கல்யாணம் ஆனா உடனே காலங்காலத்துல வாழ்ந்திருந்தா இந்நேரம் உனக்கு ஆறு வயசுல பொண்ணு இருந்திருக்கும். என்னமோ இப்போ தான் புதுசா கல்யாணம் ஆனா மாதிரி இவன் அலப்பறை தாங்கலையே!” என்று சூர்யா சொல்ல

அவனுக்குப் பதில் கொடுக்க வாயைத் திறந்த கணவனை
“மச்சான்! நீங்க பேசாம இருங்க. பெரியவங்களுக்குத் தெரியும்” என்று குழலி சொன்னதும் கப்சிப் ஆனான் ஏ.கே.

விழா முடிந்ததும் தங்கள் அறைக்கு வர, மனைவி உடை மாற்ற உதவி செய்தவன் அவள் குளித்து வந்ததும் பால் டம்ளரை நீட்டியவனோ பின் இதமாய் அவள் கால்களைப் பிடித்து விட

“ஏன் மச்சான், அண்ணன் சொன்ன மாதிரி நீங்களும் நானும் பிரியாம இருந்தா இந்நேரம் நமக்கு ஆறு வயசுல குழந்தை இருந்திருக்கும் இல்ல?” என்று குழலி ஆதங்கப்பட

“அடி போடி.. அவன் தான் கூறு கெட்டத் தனமா பேசுறானா நீயுமா? அப்போ உனக்கு வயசு பதினைந்து டி. சின்ன பொண்ணு நீ. அப்போ போய் ஒரு கணவனா நான் உன் கிட்ட நெருங்கி இருப்பேனு நினைக்கிறியா? நீ என் மனசுல வந்த மாதிரி நானும் உன் மனசுல வந்துட்டேனானு பார்ப்பேன். அப்பவும் கொஞ்ச நாள் கழித்து தான் நம்ம வாழ்க்கையையே நான் ஆரம்பித்து
இருப்பேன்” என்று அவன் உறுதி படச் சொல்ல, தன் கணவனின் அன்பிலும் நியாய புத்தியிலும் உருகிப் போய் அவன் தோள் சாய்ந்தாள் குழலி.

இப்போது எல்லாம் தாத்தாவுக்கு அடுத்த படியாக அந்த ஊர் பொறுப்பை முழுமனதாக ஏற்றுக் கொண்டான் ஏ.கே. அதற்காக அவன் உயிராய் நேசிக்கும் தன் தொழிலையும் விடவில்லை. போட்டோஃகிராபி மாடலிங் சினிமா துறை அனிமேஷன் என்று அனைத்தையும் கற்க ஊருக்கு ஒதுக்குப் புறமாக இடம் பார்த்து ஒரு கல்லூரி கட்டி நிர்வகித்தவன் மேற்படிப்புக்கு வெளிநாடு செல்வோரின் விருப்பத்தை ஸ்டீவின் உதவியுடன் மேற்கொண்டான். அடிக்கடி வெளிநாடு போய் வந்தாலும் அவனுடைய நிரந்தர வாழ்விடம் இந்தியா என்று ஆனது.

ஒருமுறை தஞ்சாவூரையும் அதைச் சுற்றியும் உள்ள விவசாய விளைநிலங்கள் எல்லாம் புயல் மழையில் அடித்து நாசமாக அப்போது தான் அவனுக்கு விவசாயத்தின் அருமையே தெரிந்தது. அதிலும் வீட்டில் உள்ள நகை நட்டை அடகு வைத்துக் கடன் வாங்கி உழைத்து அவர்கள் விதைத்த நெற்பயிர்கள் எல்லாம் முற்றி அறுவடை பண்ண வேண்டிய நேரத்தில் அடித்த சூறைக் காற்றில் தலை சாய்ந்து தண்ணீரில் மூழ்க தங்கள் வீட்டுப் பிள்ளைகள் போல் வளர்த்த ஆடு மாடு கோழி எல்லாம் மடிந்து கிடப்பதைப் பார்த்து அவர்கள் வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு அழுவதைப் பார்த்தவனால் வாய் திறந்து ஆறுதல் கூட சொல்ல முடியாத நிலை. ஆயிரம் சேட்டிலைட்களை உருவாக்கி நாம் விண்ணுக்கு அனுப்பினாலும் இன்னும் இது மாதிரியான இயற்கையின் கோரத் தாண்டவத்திற்குப் பலியாகத் தான் வேண்டியிருக்கிறது என்று குமைந்தான்.

அந்த நேரத்தில் குழலியோ அறிவியல் ரீதியாக சாய்ந்த தென்னை மரங்களை எல்லாம் மீண்டும் நடவு செய்து காட்டி மற்றவர்களையும் செய்யச் சொல்லி அவர்கள் வயிற்றில் பாலை வார்த்தாள். ஏ.கேவுக்கும் உள்ளம் குளிர்ந்தது.

ஆயிரம் சூறாவளிகள் அடித்தாலும் அரசாங்கம் உதவிக்கு வருவதற்குள் அக்கம் பக்கம் ஊர்களிலும் இருந்தும் அழிந்த கிராமங்களில் இருந்து போய் வெளிநாடு வாழும் இந்தியர்களும் ஒரு நாள் ஒருவர் என அவர்கள் வாழ்ந்த தெருவை ஏற்றுக் கொண்டு அவர்கள் செய்யும் உதவிகளையும் இளைஞர் இளைஞிகள் தன்னார்வத் தொண்டர்களை எல்லாம் பார்க்க அவனுக்குப் பெருமையாகத் தான் இருந்தது. 

‘எல்லையில் நாட்டுக்காக சண்டையிடுவது தான் நாட்டுப் பற்றா? பிழைப்புக்காக எங்கோ போய் வாழ்ந்தாலும் தன் நாட்டுக்கும் ஊருக்கும் ஒன்று என்றால் துடிதுடித்துப் போய் ஓடி வந்து தன்னால் முடிந்ததை உதவுறான் பாரு அதுவும் தான் நாட்டுப்பற்று ஊர் பற்று’ என்று ஒருமுறை தாத்தா சொன்னதை இப்போது உணர்ந்தான் ஏ.கே

ஐந்து வருடங்களுக்கு பிறகு …அஸ்வத் தன் நெஞ்சையே மெத்தையாக்கி தூங்கி விட்ட தன் மகளை புரட்டி கீழே படுக்க வைக்க அதே நேரம் தன் ஐந்து மாத கருவைச் சுமந்த படி பாத்ரூமில் இருந்து வெளியே வந்தாள் குழலி. அவளை அமரச் சொன்னவன் எழுந்து சென்று கையில் பாலுடன் வந்து அதை குடிக்கச் சொல்ல அதை ஒரு மிடறு குடித்தவளோ

“இதெல்லாம் ரொம்ப அநியாயம் மச்சான்! முதல்ல பொண்ணுனு தெரிஞ்சப்போ கலரா இருக்கணும்னு வெறும் குங்குமப் பூவா கலந்து தந்தீங்க. இப்போ பையன்னு தெரிஞ்ச உடனே குடுக்க மாட்டேங்கறிங்க. இது சரி இல்ல” என்று அவள் குறை பட

குறை படும்போது சிணுங்கிய அவள் உதட்டை வருடியவனோ அவள் மடி சாய்ந்து
“தாத்தா அப்பா மாதிரி நான் இல்லையேனு எனக்கு சிறு குறை வருத்தம் இருக்கு குழலி. எத்தனையோ நாள் எனக்கு ஏன் என் அம்மா மாதிரி உருவம் கொடுத்தேனு கடவுளிடம் கேட்டிருக்கேன். அதுக்காக இந்த உருவம் பிடிக்கலனு இல்ல. இந்த ஊர் மக்கள் மாதிரி பிறந்து இருக்கலாமேனு ஒரு ஆசை ஏக்கம் அவ்வளவு தான்! நாளைக்கு என் பையனும் என்ன மாதிரி பிறந்து ஏங்கக் கூடாது இல்ல? அதே மாதிரி என் ஏக்கத்தையும் அவனைப் பார்த்து பூர்த்தி செய்துக்கலாம்னு தான் தரல” என்று அவன் உருகிய குரலில் சொல்ல

“இது நல்ல கதையா இருக்கே! அப்போ உங்க பொண்ணு மட்டும் உங்கள மாதிரி பிறந்து ஏங்கலாமா?” என்று குழலி மடக்கவும்

அவள் வயிற்றுப் பக்கம் தன் முகத்தைத் திருப்பியவனோ அழகான முத்தம் ஒன்றை அங்கு பதித்து விட்டு

“என் பொண்ணு உன்ன மாதிரி தான் பிறப்பானு எனக்குத் தெரியும் டி. அதனால தான் உன்ன மாதிரி கருவாச்சியா இருக்கக் கூடாதுனு தான் குங்குமப் பூ தந்தேன்” என்று சொல்லி அவன் சிரிக்க, திரும்பித் தூங்கும் தன் மகளைப் பார்த்தவளோ கணவன் சொன்னது போல் மகள் அச்சு அசலாக தன்னைப் போல் இருக்க நிறம் மட்டும் அப்படியே தன் கணவன் என்று நினைத்தவள் தனக்கும் அப்படி ஒரு ஏக்கம் இருக்கத் தானே செய்தது? என்று உணர்ந்தவளோ அவன் தலை கோதி

“நிறத்துல என்னங்க இருக்கு? அதான் குணத்துல உங்க அப்பா தாத்தாவையே நீங்க மிஞ்சிட்டீங்களே!” என்றவள் அவன் நெற்றியில் இதழ் பதிக்க தன் முகத்தை அவள் மேடிட்ட வயிற்றில் புதைத்துக் கொண்டான் ஏ.கே.

அந்த வருடத்திற்கான சுதந்திர தின விழாவில் ஒவ்வொரு துறையில் சாதித்தவர்களை விருது கொடுத்து கவுரவிக்கும் வகையில் விவசாயத் துறையில் அரபுநாட்டில் மட்டுமே விளையும் பேரீச்சம் பழங்களை நம் நாட்டிலும் விளைவிக்க முடியும் என்று கண்டுபிடித்து அதை விளைவித்து வெளிநாட்டுக்கே ஏற்றுமதி செய்து காட்டியதோடு மட்டுமில்லாமல் பல விவசாய உபகரணங்களைக் கண்டுபிடித்ததற்காகவும் செயற்கை முறையில் இல்லாமல் முழுக்க முழுக்க இயற்கை முறையில் அதிக விளைச்சல் தந்த கருங்குழலியைப் பாராட்டி கவர்னர் கையால் வேளாண் விஞ்ஞானி விருது வழங்க தாத்தா பக்கத்தில் தன் மகளை ஒரு மடியிலும் ஒரு வயது மகனை இன்னோர் மடியிலும் சாய்த்த படி கம்பீரமாய் அமர்ந்திருந்த, கணவன் பார்க்க அந்த விருதை வாங்கிக் கொண்டாள் குழலி.

தனிமையில் தான் நினைத்ததை சாதித்து விட்டதாக அவள் கணவனிடம் சொல்லிப் பெருமைப் பட

“இது மட்டும் இல்ல. இன்னும் நிறைய நீ இந்த துறையில சாதிக்கணும். அதுக்குக் கடைசி வரை நான் உனக்குத் துணையா இருப்பேன் குழலி. இந்த சமுதாயத்தில் நீ எங்கு சென்றாலும் உன் நடை வெற்றி நடையாகத் தான் இருக்கணும்” என்று அவன் பெருமை பொங்க சொல்ல
அவருடைய லட்சியத்தை விட தன்னுடைய லட்சியத்துக்கு பாடுபட துடிக்கும் பார்த்தவள் அன்று
அப்படி ஒரு சம்பவம் நடந்து தனக்கு இப்படி ஒரு கணவனைத் தந்த அந்த மகாகாளிக்கு மனதுக்குள் நன்றி சொன்னவளாய் அவன் தோள் சாய்ந்தாள் குழலி.

ஒரு கணவனாய் அவள் சுக துக்கங்களில் பங்கு கொண்டு அவள் ஆசைக்கும் எண்ணங்களுக்கும் அவள் லட்சியத்திற்க்கும் வித்திட்டு அவள் வளர்ச்சிக்கு உறுதுணையாய் அவன் இருக்கும் போது வெற்றி நடை என்ன இந்த சமுதாயத்தை நோக்கி வீர நடையே போடுவாள் இந்த ஏ.கே வின் கருங்குழலி! 

முற்று
நன்றி

Categories
On-Going Novels Shenba

அத்தியாயம் – 20

அத்தியாயம் – 20

அப்பாவுக்குப் பிடிச்ச ஆலு பரோட்டா, கடி, ஆனியன் ராய்தா ரெடி. பூந்தி ராய்தா சாப்பிடும்நேரத்துல ஊறவச்சிக்கலாம்” என்றவள் வரிசையாக சமைத்தவற்றை டேபிள் மீது அடுக்கி வைத்துவிட்டு மணியைப் பார்த்தாள்.
‘எட்டாகுது. அப்பா கிளம்பிப் போய் கிட்டதட்ட நாலு மணிநேரமாகுதே… ஒரு போன் செய்துப் பார்க்கலாமா!’ என்று தோன்றிய எண்ணத்தை அதேவேகத்தில் களைந்தாள்.

‘திருமணம் வேண்டாம் என்றதும் சரியென்று சொல்ல, இதென்ன சாதாரண விஷயமா? திருமண அழைப்பிதழ் வரை அனைத்தும் தயாராகி வந்தபிறகு வேண்டாமென்றால் அதன் விளைவுகள் எப்படியிருக்கும் என்று தெரியாதா?’ என்று அவளது மூளை எடுத்துச் சொன்னது.

தந்தைக்குத் தான் எவ்வளவு பெரிய சிரமத்தைக் கொடுத்திருக்கிறோம் என்று நினைத்தவளுக்குத் தன் மீதே கோபம் வந்தது. இனி, எந்தவொரு விஷயத்தையும் யோசிக்காமல், அவசரப்பட்டுப் பேசவோ, செய்யவோ கூடாது என்ற உறுதியெடுத்துக்கொண்டாள்.

‘அப்பா சொன்னதும் அங்கிருக்கும் அனைவரின் உணர்வுகளும் எப்படியிருக்கும்? அதை எப்படி வெளிப்படுத்துவார்கள் என்ற எண்ணம் தோன்ற, மனத்தில் பய உணர்வு எழுந்தது.

தன் அறைக்கு வந்து அமர்ந்தவளுக்கு திடீரென படபடப்பாகவும், நடுக்கமாகவும் உணர்ந்தாள். அன்னையின் படத்தை அணைத்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்.
ஆனாலும், உள்ளுக்குள் எந்த மாற்றமும் இல்லாமல், மேலும் மனம் பலவீனமாவதைப் போல உணர்ந்தாள்.

மணி ஒன்பது. இதுவரை தந்தை வரவில்லையே என்ற எண்ணம் மறைந்து பதட்டம் அதிகரித்தது.

‘லேட்டானா அட்லீஸ்ட் அப்பா ஒரு போனாவது செய்திருப்பாங்களே… ஏன் இன்னும் பண்ணல’ என்று நினைத்தவள் எழுந்து வந்து வராண்டாவில் நின்றாள்.

மேலும் பத்து நிமிடங்கள் காத்திருப்பது அவளுக்குப் பெரும் அவஸ்தையாக இருக்க, ஒருமுடிவுடன் தந்தையின் எண்ணுக்கு அழைத்தாள். இருதயம் வேகமாகத் துடிக்க, மறுமுனையில் தந்தையின் குரல் ஒலிக்கக் காத்திருந்தாள்.

அவள் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கி, அவரது மொபைல் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக வர, தவித்துப் போனாள்.

‘போன் முழு சார்ஜில் தானே இருந்தது! பிறகு எப்படி?’

இரு நிமிடங்களுக்குள் மனம் எங்கெங்கோ சுற்றிவர, தலையைப் பிடித்தபடி அப்படியே அமர்ந்துவிட்டாள்.

‘அப்பா! ப்ளீஸ் போனை ஆன் பண்ணுங்கப்பா!’ என்று அவளது பேதை மனம் பரிதவித்தது.

சட்டென எழுந்தவள், கேஷவ்நாத்தின் மொபைலுக்குத் தொடர்புகொண்டாள்.

இரண்டாவது ரிங்கிலேயே அவர் போனை எடுக்க, அவளது மனம் ஒரு நொடி சற்று ஆசுவாசமாகியது. ஆனால், அது நீடிக்க முடியாமல் செய்தது கேஷவ்நாத்தின் பதில்.

”என்ன சுமிம்மா! இந்த நேரத்துக்குப் போன் பண்ற?” என்று அவர் பாசத்துடன் கேட்டதும் இவளுக்குத் தலையில் சுத்தியலால் ஓங்கி அடித்ததைப் போலிருந்தது.

ஏதோ விபரீதம் என்று தோன்ற, கைகள் நடுங்கத் துவங்கியது. குரல் உடைய, “அங்கிள்! அப்பா…” என்றவளால் மேற்கொண்டு பேசமுடியவில்லை.

“சுமிம்மா! அப்பாவுக்கு என்ன?” என்று பதறினார் கேஷவ்நாத்.

அவளது விழிகள் உடைப்பெடுக்க, “அப்பா, உங்களைப் பார்த்துட்டு வரேன்னு தானே அங்கிள் வந்தாங்க” என்று அவள் முடிக்கும் முன், கேஷவ்நாத் திகைத்துப் போனார்.

“சுமிம்மா! நான் இப்போதான் வீட்டுக்கே வந்தேன்…” என்றவர் மந்த்ராவிடம் திரும்பி ஏதோ கேட்பது தெரிந்தும், அதிர்ந்த மனத்துடன் போனைத் தன்னிச்சையாக வைத்தாள் அவள்.

‘அப்பா! நீங்க உண்மையிலேயே அங்கே போகலையா?’ என நினைத்துக் கொண்டவள், “எங்கேப்பா இருக்கீங்க? ப்ளீஸ்ப்பா உங்க சுமிக்காக திரும்பி வந்திடுங்கப்பா! நான் இந்தக் கல்யாணத்தைக் கூட செய்துக்கறேன். நீங்க, எனக்கு வேணும்ப்பா! எனக்காக வந்திடுங்கப்பா!” என்று அரற்றியவள் மடங்கி அமர்ந்து அழத்துவங்கினாள்.

அவள் அழுது கரைந்துகொண்டிருக்க, அழைப்புமணி ஒலிக்கும் சப்தம் கேட்டதும், விருட்டென எழுந்தவள், “அப்பா!” என்றழைத்தபடி வாயிலை நோக்கி ஓடினாள்.

தந்தைதான் வந்துவிட்டார் என்ற எதிர்பார்ப்புடன் கதவைத் திறந்தவள் அங்கு நின்றிருந்த புதியவரைக் கண்டதும், புருவம் முடிச்சிடப் பார்த்தாள்.

அழுது சிவந்த விழிகளில் கேள்வியுடன், “நீங்க…?” என்றாள்.

“மிஸ்டர்.கங்காதரனோட வீடு…”

உடலில் பரபரப்பு தொற்றிக்கொள்ள, “ஆமாம். எங்க அப்பாதான்” என்றாவளது பார்வை எதையோ எதிர்பார்த்து வாசலைத் துழாவியது.

அவளது முகத்தைப் பார்த்தவர் என்ன எண்ணினாரோ, “வீட்ல பெரியவங்க யாராவது இருந்தா கூப்பிடுங்க…” என்றார்.

“பரவாயில்ல சொல்லுங்க…” என்றாள் தவிப்புடன்.

அதேநேரம் பக்கத்து வீட்டிலிருந்து எட்டிப் பார்த்த நடுத்தர வயது பெண்மணி, “என்ன சுமி!” என்று குரல் கொடுத்தபடி வேகமாக அங்கே வந்தார்.
.“சாரி மேடம்! இவங்க ஃபாதரை பக்கத்து ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்கோம்” என்றார் அவர்.

அவள் எது நடக்கக்கூடாது என்று நினைத்திருந்தாளோ அந்தச் செய்தி இடியாக அவளது தலையில் இறங்கியது. பேசக்கூட நா எழாமல், விழிகள் விரிய அதிர்ச்சியில் தள்ளாடிய சுமித்ரா நிலைக்கதவைப் பிடித்துக்கொண்டு நின்றாள்.

“ஹே ராம்!” என்ற அந்தப் பெண்மணி வந்தவரிடம் மற்ற விவரங்களைக் கேட்டுக்கொண்டு நன்றி சொல்லி அனுப்பிவைத்தவர், “சுமி! உட்டோ” என்று அவளை எழுப்பினார்.

எழுந்தவள் என்ன செய்வதெனத் தெரியாமல் திருதிருவென விழித்தாள்.

“ரெண்டு நிமிஷம் இரு!” என்றவர் மதில்சுவரருகே நின்றபடி தன் வீட்டினருக்குக் குரல் கொடுத்தார்.
அடுத்த அரைமணி நேரத்தில், ஐ.சி.யூவிலிருந்த தந்தையின் காலடியில் கண்ணீர் வழிய நின்றிருந்தாள்.

கங்காதரனின் வீட்டிற்கு வந்த கேஷவ்நாத், விஷயமறிந்தது நேராக மருத்துவமனைக்கு வந்துவிட்டார். அவரைக் கண்டதும் தேக்கிவைத்திருந்த கண்ணீரெல்லாம் அணையுடைத்துக் கொண்டு வெளிவர, கதறி அழுதாள் சுமித்ரா.

நண்பனின் நிலையைக் கண்டு தடுமாறிப்போயிருந்த கேஷவ்நாத், சுமித்ராவின் அழுகையில் நிலைகுலைந்து போனார். ஆறுதல் சொல்ல வேண்டியவரும் தன்னை மறந்து கண்ணீரில் கரைந்தார்.

அன்று இரவு முழுவதும் அழுகையிலும், தந்தைக்கு எதுவும் ஆகக்கூடாது என்று வேண்டுதலிலுமே கழிய, விடியும் நேரம் ஓய்ந்து போனவளாக அமர்ந்த நிலையிலேயே உறங்கிப் போனாள்.

“சுமி!” என்ற அன்பான அழைப்பில் திடுக்கிட்டு கண்விழித்தாள் சுமித்ரா.

சட்டென தான் எங்கே இருக்கிறோம் எனப் புரியாதவளுக்கு மீண்டும் அந்த அழைப்பு காதில் விழ திரும்பிப் பார்த்தாள்.

சாத்தான் வேதம் ஓதுகிறது என்று சொன்னால் எப்படி நம்பமுடியும்? அப்படித்தான் இருந்தது சுமித்ராவிற்கு. மந்த்ராவிடமிருந்து இப்படியொரு பாசமான அழைப்பா? திடுக்கிடலையும், வியப்பையும்விட, நெருடல் தான் ஏற்பட்டது அவளுக்கு.

மெல்ல எழுந்தவள் ஐ.சி.யூவின் கதவு வழியாக உள்ளே எட்டிப் பார்த்தாள்.
ஒளிர்ந்துகொண்டிருந்த மானிடரின் வெளிச்சத்தில் சுயநினைவின்றி கிடந்த தந்தையைக் காண்டதும், தொண்டை அடைத்தது.

துளித்த கண்ணீரைச் சுண்டிவிட்டவள், மீண்டும் வந்து இருக்கையில் அமர்ந்தாள்.

பக்கத்தில் அமர்ந்திருந்த மந்த்ராவின் விழிகளில் அத்தனை உக்கிரம்.

முகத்தைக் கழுவிக்கொண்டு வந்த கேஷவ்நாத்தைக் கண்டதும் சட்டென தனது பார்வையை மாற்றிக்கொண்டார் மந்த்ரா.

“சுமி! முகத்தைக் கழுவிகிட்டு வந்து காஃபி சாப்பிடுமா” என்றார் கேஷவ்நாத்.

“ம்” என்றவள் துவண்ட மலராகச் செல்வதைப் பார்த்தவருக்கு, வேதனையாக இருந்தது.
“மந்த்ரா! கிஷோருக்கு விஷயத்தைச் சொல்லிட்டியா?” எனக் கேட்டார்.

கணவரிடம் ஆழ்ந்த பார்வையை வீசியவர்,“அவசியம் சொல்லணுமா?” எனக் கேட்டார்.

“என்ன பேசற நீ? கங்கா என் ஃப்ரெண்ட் மட்டும் இல்ல. நம்ம சம்மந்தி. உன் பிள்ளை இங்கே இருக்க வேணாமா? நம்மள விட அவன் இங்கே இருந்தா சுமிக்கு ஆதரவா இருக்கும்” என்று படபடத்த கணவரை உள்ளுக்குள் கடுகடுத்த மனத்துடன் வெறித்துப் பார்த்தார்.

‘உன் ஃப்ரெண்ட் கல்யாணமே வேணாம்னு பிடிவாதமா இருக்கான். அவனைப் பார்க்க என் பிள்ளையை வரச்சொல்லணுமா?’ என்று முரண்டியது அவரது
மனம்.

அதேநேரம், அவர் கண்விழிக்கும் போது இருவரும் அருகருகில் நின்றிருந்தால் எப்படியிருக்கும்? அதிலும், சுமித்ராவிற்கு தனது தந்தை எங்களைச் சந்திக்க வரவில்லை என்றே நினைத்துக்கொண்டிருக்கிறாள். அப்படியிருக்க, அவளாக இந்த நேரத்தில் எதையும் வாயைத் திறந்து சொல்லப் போவதில்லை.
இதுதான் சரியான சந்தர்ப்பம். இந்தக் கங்காதரன் ஒரேயடியாக மண்டையைப் போட்டால், எல்லோருக்குமே நல்லது. எனக்குத் தெரிந்து இந்த ப்ரொஃபசர் இனி வீடு திரும்பறதுக்கு சான்ஸ் ரொம்பக் கம்மி. துரோகத்தைத் தாங்கறது அவ்வளவு கஷ்டமா? இவ்வளவு தூரமா ஒருத்தர் மேஎல பாசத்தையும், நம்பிக்கையையும் வைப்பாங்க. நினைக்கவே சிரிப்பாக இல்ல இருக்கு’ என்று நினைத்தவரது உதடுகள் இகழ்ச்சியாக வளைந்தன.

”மந்த்ரா!” என்று மெல்லிய குரலில் அதட்டலாக அழைத்தார் கேஷவ்நாத். “உனக்கு அவனைப் பிடிக்காதுன்னு தெரியும். அதுக்காக உன் அகங்காரத்தைக் காட்ட இது நேரமில்ல. முதல்ல கிஷோரைக் கிளம்பி வரச்சொல்லு” என்றார்.

“இந்த மனுஷனைக் கட்டிக்கிட்டு நான் படும்பாடு எனக்குத்தான் தெரியும்’ என நினைத்துக்கொண்டவர், “சரி” என்றார்.

முகத்தைக் கழுவிய சுமித்ராவின் மனம், அன்பான அரவணைப்பிற்கு ஏங்கியது. ஆறுதலான அணைப்பில் மனத்திலிருந்த பாரம் அனைத்தும் கரையும் வரை கதறியழ உள்ளம் ஏங்கியது.
‘அப்படிப்பட்ட நல்லிதயம் எங்கே இருக்கிறது?’ ஏங்கித் தவித்த மனத்துடன் ஐ.சி.யூவிற்கு வந்தாள்.

“சுமி! காஃபி சாப்பிடும்மா! நைட்கூட எதுவும் சாப்பிட்டிருக்க மாட்ட” என்ற கேஷவ் நாத்தின் அன்பைப் புறக்கணிக்க அவளுக்கு சற்றும் மனதில்லை.

இப்போதைக்குத் தன்னிடம் அக்கறைக் காட்ட இருக்கும் ஒரே மனிதர் அவர்தான். அவரையும் நான் வருத்தப்பட வைக்கப் போவதில்லை’ என்று நினைத்தபடி, அவர் நீட்டிய காஃபியை வாங்கிக்கொண்டாள்.

’அவளையே உற்று பார்த்தபடி அமர்ந்திருந்தார் மந்த்ரா.

“மந்த்ரா நான் வீட்டுக்குப் போய்ட்டு ஒரு மணி நேரத்துல வந்திடுறேன். அதுவரை நீ சுமிக்குத் துணையா இரு” என்றவர், “நான் போய்ட்டு வந்திடுறேம்மா! டாக்டர் ஒன்பது மணிக்குத்தான் வருவார் அதுக்குள்ள வந்திடுறேன்” என்றவருக்கு விடைகொடுத்து அனுப்பினாள்.

இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

திடீரென, “ஆன்ட்டி! அப்பா உண்மையாகவே நேத்து உங்க வீட்டுக்கு வரலையா?” எனக் கேட்டாள்.

மனத்திற்குள் சுள்ளென கோபம் பொங்கினாலும், அதை வெளிக்காட்டுவாரா மந்த்ரா!

“இல்லைன்னு சொல்லவேண்டிய அவசியம் என்னயிருக்கு சுமி!” என்று நைந்த குரலில் அவர்கூற, இப்போது சுமித்ராவின் முகம் தொங்கிப் போனது.

“ஆரம்பத்தில் உன்னை எனக்குப் பிடிக்காதுதான். ஆனா, எப்போ உன்னை என் மகனுக்குப் பிடிச்சதோ, அப்பவே நீ எங்க வீட்டுப் பொண்ணாகிட்ட. ஆயிரம் இருந்தாலும் நீ எங்க மருமக. உன்னிடம் பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்னம்மா இருக்கு?” என அவர் பேசப் பேச ஸ்தம்பித்துப் போனாள் சுமித்ரா.

”ஆன்ட்டி! உங்களை நான் தப்பா சொல்லல. அப்பா வரலைன்னா எங்கே போயிருப்பாங்க? திடீர்னு இப்படி ஆக என்ன காராணம்னு தெரியாம குழப்பத்துல கேட்டுட்டேன்” என்றவள் தலையைப் பிடித்துக்கொண்டாள்.

‘தலையைப் பிடிச்சிக்கிறியா நல்லாப் பிடிச்சிக்க. இனி, அடிக்கடி இப்படி மண்டைக்குடைச்சல் வரவேண்டியிருக்கு. அதையெல்லாம் நீ தாங்க வேண்டாமா?’ என்ற குரூர எண்ணத்துடன், அவளது முதுகை வருடிக் கொடுத்தபடி அமர்ந்திருந்தார் மந்த்ரா.

மருத்துவர் தனது பரிசோதனையை முடித்துக் கொண்டு வரவும், கேஷவ்நாத் வரவும் சரியாக இருந்தது.

‘இன்னமும் க்ரிட்டிக்கல் ஸ்டேஜை தாண்டல. அவருக்கு ஏதோ சொல்ல முடியாத மன அழுத்தம் தான் இதுக்குக் காரணம். இதுதான் அவருக்கு முதல் அட்டாக்கா?” எனக் கேட்டார்.

“இல்லை டாக்டர்! இது செகண்ட்…” என்றாள்.

தனக்குத் தேவையான சில தகவல்களை சுமித்ராவிடம் விசாரித்து அறிந்துகொண்டார். துவண்ட கொடியாக அவர் கேட்டதற்கெல்லாம் ஜீவனே அற்றவளைப் போலப் பதிலளித்தாள்.

“இன்னும் நாலு மணி நேரம் பார்க்கலாம்… இல்லன்னா…” என்றவர் எதுவும் சொல்லாமல் செல்ல, கண்களின் விளிம்பில் நின்று எட்டிப்பார்த்த கண்னீரைத் துடைக்கக்கூடத் தோன்றாமல் சுவற்றில் சாய்ந்து நின்றாள்.

மருத்துவருடனேயே சென்ற கேஷவ்நாத், ஏதோ பேசிவிட்டு தளர்ந்த நடையுடன் திரும்பிவந்தார்.

“சுமி! தைரியமா இரும்மா!” என்பதைத் தவிர அவரால் வேறெதுவும் அவளுக்கு ஆறுதலாகச் சொல்ல முடியவில்லை.

இருவரது முகங்களையும் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த மந்த்ராவிற்கு எரிச்சலாக வந்தது.

‘இந்த ஆளுக்காக நான் இங்கே வந்து காத்துக்கிடக்கணும்னு தலையெழுத்து’ என முனகிக்கொண்டே அமர்ந்திருந்தார்.
டாக்டர் சொன்னதைப் போலவே நான்கு மணி நேரத்தில் கண் விழித்தார் கங்காதரன். ஆனால், அவரது நிலைமை மேலும் மோசமாக டாக்டர்கள் குழுவே அவரது அறையில் திரண்டிருந்தனர்.

எப்படியும் தந்தை சரியாகி வந்துவிடுவார் என்று சிறு நம்பிக்கையைக் கையில் பிடித்துக் கொண்டு தவித்துக்கொண்டிருந்த சுமித்ராவின் தலையில் இடியை இறக்கினார் தலைமை மருத்துவர்.

“சாரி! போய்ப் பாருங்க” என்று அவர் சென்றுவிட, “அப்பா..!” என்று கத்தக்கூட முடியாமல் உள்ளே ஓடினாள் அவள்.

கட்டிலருகில் சென்றவள் சரிந்து அமர்ந்து அவரது கரத்தைப் பிடித்துக்கொண்டாள்.

“அப்பா! என்னை விட்டுட்டுப் போயிடாதீங்கப்பா! ப்ளீஸ்ப்பா! எனக்கு நீங்க மட்டும் போதும்ப்பா! வந்திடுங்கப்பா…” என்று அரற்றியவளை நடுங்கிய கரத்தால் தட்டிக்கொடுத்தார்.

பின்னாலேயே வந்த கேஷவ் நாத்தைக் கண்டவரது கண்கள் கண்ணீரைப் பொழிந்தன.
ஆக்ஸிஜன் மாஸ்கை எடுக்கும்படி சைகை செய்தவர், “கேச…வ்!” என சிரமத்துடன் அழைத்தார்.

“கங்காதர்! உனக்கு ஒண்ணுமில்ல. தைரியமா இரு” என்று அவரை ஆசுவாசப்படுத்த முயன்றார்.

“என்… பொ..ண்ணு… கல்.. யா..ண..ம்..” எனத் திக்கித் திணறினார்.

“கங்காதர்! உன் மகள் எங்க பொறுப்பு. இந்தக் கல்யாணம் நிச்சயம் நடக்கும்…” என்று அவரது நெஞ்சை நீவிக் கொடுத்தார்.

கங்காதரனின் பார்வை இயலாமையுடன் மகளின் முகத்தைப் பார்க்க முயல, அவளோ இது எதையும் உணராமல் அழுதுகொண்டிருந்தாள்.

“சு..மி! சு..மி..மா..! அப்..பா..வ..” என்றவரது பார்வை கதவருகில் நின்றிருந்த மந்த்ராவின் மீது படிந்தது.

மானசீகமாக மகளிடம் மன்னிப்பை யாசித்த கங்காதரனின் கரம் தொய்ந்து விழுந்தது.

Categories
On-Going Novels Shenba

அத்தியாயம் – 19

அத்தியாயம் – 19

கேஷவ்நாத்திற்குப் போன் செய்தபோது அவரது அலைபேசி தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாகவே வந்தது. வெகுநேரம் முயற்சி செய்தும் தொடர்ந்து அதேபோன்றே வர, சற்று சோர்ந்து போனார்.

அருகில் நின்றிருந்த சுமித்ரா, “அப்பா! ஆன்ட்டிக்குக் கால் பண்ணிப் பார்க்கலாமா?” எனத் தயங்கிக் கொண்டே சொன்னாள்.

“மந்த்ராவுக்கா…” என யோசித்தவர், சரியென தலையசைத்தார்.

மந்த்ராவுக்கு அழைத்ததும், முதல் இரண்டு முறை அவர் போனை எடுக்கவில்லை. மூன்றாம் முறை போனை எடுத்தவரிடம், அவர்களிடம் முக்கியமான விஷயம் பேசவேண்டும். கேஷவிற்குப் போன் போகவில்லை என்றும் சொன்னார்.

மந்த்ரா என்ன சொன்னாரோ, “சரி, ஈவ்னிங் வரேன்” என்று போனை வைத்தார்.

‘அவர் என்ன சொல்லப்போகிறார்’ என அறிந்து கொள்ளும் ஆவலுடன், தந்தையின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“கேஷவ் எங்கேயோ வெளியே போயிருக்கானாம்மா! அதான் ஈவ்னிங் வீட்டுக்கு வரேன்னு சொல்லியிருக்கேன்” என்றார்.

மெலிதாகப் புன்னகைக்க முயன்றவளது தலையைப் பரிவுடன் தடவிக்கொடுத்தார்.

“எல்லாம் நல்லபடியா நடக்கும். தெய்வமா உன் அம்மா உன்னோடவே இருப்பா” என்று ஆறுதலாகக் கூறினார்.

அவளும் ஆமென்பதைப் போல தலையை அசைத்தாள்.
“கண்ணா! அப்பாவுக்குப் பசிக்க ஆரம்பிச்சிடுச்சி. சூப்பரா கிச்சடி செய்து கொடேன்” என்றார் பாசத்துடன்.

“இதோ, அரைமணி நேரத்துல ரெடி பண்ணிடுறேன்ப்பா!” எனத் துள்ளலுடன் சமையலறைக்கு ஓடினாள்.

பாடல் ஒன்றை முணுமுணுத்தபடி சமைத்துக்கொண்டிருந்த மகளைப் பார்த்துக் கொண்டே டைனிங்கில் அமர்ந்திருந்தார் கங்காதரன். வெகுநாள்களுக்குப் பிறகு அவள் இயல்பாக இருப்பதைக் காண, அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தபோதும், ‘மகளுக்குக் கொடுத்த வாக்கை எப்படிக் காப்பாற்றப் போகிறேன்?’ என்ற அச்சமும் மனத்திற்குள் உலவிக்கொண்டே இருந்தது.

எப்படி, எங்கிருந்து ஆரம்பிப்பது எனத் தெரியாமல் ஒருவித அசௌகர்யத்துடனே இருந்தார். தனது மனத்திலிருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தி, மகளை மேலும் கலவரமாக்குவதில் அவருக்கு உடன்பாடில்லை.

‘என் மகளின் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக் கொடுப்பேன். இதனால் சில வேதனைத் தரத்தக்க நிகழ்வுகள் நேரும். ஆயினும், அவளுக்கான நல்வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பேன்’ என்று மீண்டும் மீண்டும் மனத்திற்குள் சொல்லிக்கொண்டார்.

கேஷவ் நிச்சயம் என்னைப் புரிந்து கொள்வான். சற்று வருத்தப்படுவான். ஆனாலும், எனக்குச் சாதகமாகவே நடந்துகொள்வான். கிஷோருக்கு இது பெருத்த ஏமாற்றத்தைத் தான் கொடுக்கும். இருந்தாலும், எடுத்துச் சொன்னால் புரிந்துகொள்வான்.

ஆனால், மந்த்ரா! என்று நினைத்ததுமே அவரையும் மீறி பெருமூச்சு எழுந்தது.
‘குடும்ப கௌரவம், பேர், புகழ் என்று ஆயிரம் பேச்சு பேசுவாள். அத்தனைச் சீக்கிரம் அவளைச் சமாளிக்கவும் முடியாது. நிச்சயம் இந்தப் பேச்சே பேசாதே என்று வாய்க்கு வந்ததையெல்லாம் வார்த்தைகளாக்கி பாம்பாகக் கொத்துவாள்.
சமாளிக்க வேண்டும். எல்லாவற்றையும் சமாளித்தே ஆகவேண்டும். என் சுமிக்காக அவர்களது ஏச்சுப் பேச்சுக்களைத் தாங்கித்தான் ஆகவேண்டும்’ என்ற தீர்மானத்திற்கு வந்தார்.

மாலையில் சொன்னது போலவே கேஷவ்நாத்தைப் பார்க்க அவரது வீட்டிற்குக் கிளம்பினார்.

தனிமையில் அமர்ந்திருந்த சுமித்ராவிற்கு படபடப்பாக இருந்தது. சிறு தவிப்பு மனத்திலிருந்தாலும், அதையும் மீறி ஏதோ ஒரு சந்தோஷம் மனத்தில் சாமரம் வீசிக்கொண்டிருந்ததும் உண்மை.

‘விஜய்க்குத் தான் நன்றி சொல்லவேண்டும்’ என்று நினைத்துக்கொண்டவளுக்குச் சட்டென மின்னலாக ஒரு யோசனைத் தோன்றியது.

‘அப்பாவிடம் பேசிவிட்டேன் என்று விஜய்யிடம் சொன்னால் நிச்சயம் மகிழ்ச்சியடைவான் என்று எண்ணியவள், வேகமாகத் தனது மொபைலில் இருந்த அவனது எண்ணுக்கு அழைத்தாள்.

***************

குடுகாவூனிலிருந்த அந்த அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது தளத்திலிருந்த விஜய்மித்ரனின் ஃப்ளாட்டிலிருந்து ஸ்டீரியோவின் சப்தம் மூடியிருந்த கதவைத் தாண்டி வெளியே கேட்கும் அளவிற்கு அலறிக்கொண்டிருந்தது.

லேப்டாப்பைப் பார்த்துக்கொண்டே கையிலிருந்த லெமன் டீயைச் சுவைத்துக் கொண்டிருந்தான் மித்ரன்.

“வால்யூமைக் குறைச்சி வச்சிக் கேளேன்டா! இப்படி அலற விட்டுட்டு உட்கார்ந்திருக்க. காது செவிடாகிடும் போல…” என்று அலுத்துக்கொண்டான் மித்ரன்.
“ப்ரோ! சில பாட்டுங்களை இப்படித்தான் கேட்கணும். இந்தப் பாட்டுல நம்ம தல பின்னுவாப்ல…” என்றவன் அமர்ந்த நிலையிலேயே முகத்தை அஷ்டக்கோணலாக்கி, கையை இப்படியும் அப்படியுமாகச் சுற்றினான்.

விஜய்மித்ரனுக்குச் சிரிப்பு ஒருபுறமென்றால், இன்னமும் விளையாட்டுத் தனத்துடன் இருக்கும் சகோதரனின் மீது, சற்று எரிச்சலும் வந்தது. வாரத்தில் நான்கு நாள்கள் தனது கம்பெனியைக் கவனிக்க மித்ரன் குடுகாவூனிலேயே தங்கிவிட, வார இறுதி நாள்களில் மட்டுமே அவனுக்கு ஜெய்பூர் வாசம்.

தாத்தாவின் கம்பெனிகளை ஆரம்பத்திலிருந்தே கவனித்துக் கொண்டிருப்பவர் அவனது தந்தைதான். அவரும் ஐம்பத்தைந்து வயதைக் கடந்துவிட்டார்.
‘படிப்பு முடிந்துவிட்டது. இனி, அலுவலகத்திற்கு வந்து எனக்கு உதவியாக இரு’ என்ற தந்தையிடம், ‘அவன் ரெண்டு வருஷம் ஃப்ரீயா இருக்கட்டும்’ என்று தம்பிக்காகப் பரிந்து பேசியவனே அவன்தான்.

ஆனால், அதைச் சாக்காக வைத்துக்கொண்டு இந்தர் அடிக்கும் லூட்டிகள், சமயத்தில் கடுப்பைத்தான் கிளப்பின. இன்னமும் இவன் பொறுப்பில்லாமல் ஊரைச் சுற்றி வருவதைப் பார்க்கக் கவலையாக இருந்தது. இருந்தாலும், தான் இருக்கும் இடத்தை எப்போதும் கலகலவென வைத்துக்கொள்ளும் தம்பியை அவனுக்கு மிகவும் பிடிக்கும். சமயங்களில் அவனிடம் சுள்ளென்று முகத்தைக் காட்டினாலும், அதற்குப் பின்னே பாசம் என்ற வலையில் சிக்கிக் கொண்டிருப்பதே காரணம்.

அன்று காலையில் தான் பரோடாவிலிருந்து திரும்பி வந்திருந்தான் மித்ரன். அவனை ஏர்போர்ட்டிலிருந்து அழைத்துவந்ததே இந்தர்தான். வந்த உடனேயே அலுவலகத்திற்குக் கிளம்பிச் சென்ற மித்ரன், அப்போதுதான் வீட்டிற்குத் திரும்பியிருந்தான்.

நிதானமாக டீயை உறிஞ்சிக்கொண்டிருந்தவன், சட்டென சுறுசுறுப்படைந்தான்.

“இந்தர்! வால்யூமைக் குறை. எனக்கு ஒரு ஆன்லைன் கால் வந்திருக்கு. பேசி முடிச்சிட்டு வர்றதுக்குள்ள ஆஃபிஸ்லயிருந்து ஏதாவது கால் வந்தா அட்டெண்ட் பண்ணு” என்று செல்போனை டீபாயின் மீது வைத்துவிட்டு, லேப்டாப்புடன் தனது அறைக்குச் சென்றான்.
“டோண்ட் வொர்ரி ப்ரோ!” என்றவன் சப்தத்தைக் குறைத்துவிட்டு, அண்ணனின் மொபைலைக் கையிலெடுத்தான்.

சற்றுநேரம் மொபைலை கையிலேயே வைத்திருந்தவன், லாக்கை ஓபன் செய்தான். வாட்ஸ் ஆப்பில் சிறிது நேரம் மேய்ந்தவன், போட்டோ கேலரிக்குச் சென்றான். வரிசையாக பார்த்துக்கொண்டே வந்தவனது கண்கள் ஒரு போட்டோவில் நிலைத்து நின்றது.

‘யாரிந்த பியூட்டி! அண்ணாவோட செல்ஃபி எடுத்திருக்கான்னா…’ என அவன் யோசித்துக்கொண்டிருக்கும் போதே, மித்ரனின் மொபைலுக்கு அழைப்பு வந்தது.

போனை ஆன் செய்து காதில் வைத்தவன், ஹலோ என்பதற்குள் மறுபுறமிருந்து வந்த உற்சாக அழைப்பில் சட்டென எழுந்து அமர்ந்தான்.

“ஹலோ விஜய்! நீங்க சொன்னபடியே நான் அப்பாகிட்ட பேசிட்டேன். அப்பாவும் சரின்னு சொல்லிட்டாங்க” என்றாள்.

இந்தருக்குள் இருந்த சி.ஐ.டி மூளை சட்டென விழித்துக்கொள்ள, “ஹலோ நீங்க யாரு?” என்றான் வேகமாக.

“நான்…” என்றவள் சுதாரித்துக் கொண்டு, “நீங்க யாரு?” என்றாள்.

“நீங்கதானே இந்த நம்பருக்குக் கால் பண்ணீங்க. நீங்கதான் முதல்ல சொல்லணும்” என்றான் வம்பாக.

“இது விஜய்யோட போன் தானே…”

“இல்லன்னு சொல்லலையே…”

தான் எவ்வளவு சந்தோஷமான விஷயத்தைச் சொல்கிறோம். இவன் நடுவில் நந்தியாக நின்று அதைக் குலைக்கிறானே என்ற எரிச்சல் அவளுக்கு.
“அவரோட போன்ல நீங்க பேசறீங்க. கேட்டா, என்னையே திரும்பக் கேள்வி கேட்கறீங்க” என்றாள் கடுப்புடன்.

“யாருன்னு சொன்னாதான், உங்க பேரைச் சொல்வீங்களா? அண்ணன் யாருன்னு கேட்டா, நான் என்ன சொல்றது?” என்று கேட்டான்.

“சாரி! நீங்க அவரோட பிரதர்னு தெரியாது. மித்ரா பேசினேன்னு சொல்லுங்க” இறங்கிய குரலில் சொன்னவள் போனை வைப்பதற்குள், “எங்கேயிருந்து பேசறீங்க? எனக் கேட்டான்.

“அவருக்குத் தெரியும்” என்றாள் அவள்.

“நான் தெரிஞ்சிக்க கேட்டேங்க…” என்றான் குறும்புடன்.

“அஹமதாபாத்லயிருந்து…” என்றாள் அவள்.

விஜயேந்திரனின் மூளைக்குள் மின்னல் அடித்தது.

“கண்டிப்பா சொல்லிடுறேன். வேற ஏதாவது விஷயமிருக்கா…” என அவன் கேட்டுக்கொண்டிருக்கும் போதே, தனது அறையிலிருந்து வெளியே வந்தான் விஜய்மித்ரன்.

“வெயிட் அண்ணா வந்தாச்சு!” என்றவன், ‘உனக்குத்தான்’ என்று சைகை செய்தபடி அண்ணனிடம் கொடுத்தான்.
யார் என்பதைப் போலத் தலையை அசைத்தவன், “ஹலோ!” என்றான்.

“விஜய்! நான்தான்…” என்றாள் அவள்.

“ஓ! சொல்லு மித்ரா! என்ன திடீர்னு எனக்குப் போன் பண்ணியிருக்க…” எனக் கேட்டுக்கொண்டே தனது அறைக்குச் சென்றான்.

“நான் அப்பாகிட்ட பேசிட்டேன். அப்பாவும் என்னைப் புரிஞ்சிகிட்டாங்க” என்றவள், நடந்தவற்றைச் சொன்னவளது குரலில் தெரிந்த சந்தோஷத்தைப் புரிந்து கொண்டு மிருதுவாக புன்னகைத்தான்.

“ஆரம்பத்திலேயே சரியா யோசிச்சிருக்கலாம். உங்க அட்வைஸுக்கு ரொம்பத் தேங்க்ஸ்!” என்றாள் நெகிழ்ச்சியுடன்.

எதுவும் சொல்லாமல் சில நொடிகள் மௌனமாக இருந்தான்.

“என்ன விஜய் எதுவுமே சொல்ல மாட்டேன்றீங்க? உங்களுக்குச் சந்தோஷம் தானே” எனக் கேட்டாள்.

நீண்ட மூச்செடுத்தவன், “ஒரு கல்யாணத்தை நிறுத்தி சந்தோஷப்பட நான் சாடிஸ்ட் இல்ல மித்ரா! என்னவோ முதல் பார்வையிலேயே உங்க ரெண்டு பேரையும் பார்த்தப்போ, நீ இயல்பா அந்தக் கல்யாணத்துல ஒட்டலன்னு எனக்குத் தோணுச்சி. அதுக்காக மட்டும்தான் பேசினேன்.

மத்தபடி உன்னோட கல்யாணத்தைக் கெடுக்கணுங்கறது என்னோட எண்ணம் இல்ல. இப்போ, நீ என்கிட்ட பேசினதுல இருந்து ஒண்ணு மட்டும் புரிஞ்சிது. ஒரு பொண்ணுக்குக் கல்யாணம்ங்கறது வாழ்க்கைல முக்கியமான விஷயம். அது நின்னு போச்சேன்னு உனக்கு வருத்தம் வரல. எதுலயிருந்தோ தப்பிச்ச சந்தோஷம்தான் தெரியுது. அது உண்மைதானே…” எனக் கேட்டான்.

மறுபுறம் சப்தமில்லாமல் இருக்க, “மித்ரா… இருக்கதானே” என்றான்.

“ம், இருக்கேன். நீங்க சொன்னதுக்கெல்லாம் ஆமாம்னு தலையாட்டினேன்” என்றாள்.

அவளது பதிலைக் கேட்டவன், வாய்விட்டு நகைத்தான்.

“போன்ல கேட்கற கேள்விக்கும் தலையாட்டல் தானா. ரொம்ப நல்லது. நான் சொன்னது உனக்குப் பிடிக்கலையோன்னு நினைச்சிட்டேன்” என்றான்.

“நீங்க சொன்னது எல்லாமே உண்மைதான் விஜய்! ஒரு கல்யாணம் நிக்குதுன்னா அதுக்குப் பின்னால எவ்வளவு பிரச்சனைகள் இருக்குன்னு எனக்கும் நல்லாவே புரியுது. ஆனா, இப்போ நான் சந்தோஷமா இருக்கேன் விஜய்! கூட்டுல அடைப்பட்டுக் கிடந்த பறவை சுதந்திரமா பறக்கறது மாதிரி… அகத்தியரோட கமண்டலத்துல அடைஞ்சி கிடந்த காவிரிக்கு விடுதலைக் கிடைச்சி பாய்ந்து காடுமேடெல்லாம் கரைபுரண்டு ஓடினது மாதிரி… இப்படில்லாம் சொல்லலாம். ஆனா, அந்தச் சந்தோஷத்தை இன்னும் முழுசா அனுபவிக்க நேரமாகும். அப்பா இன்னும் அவங்ககிட்ட பேசணும். அவங்க சம்மதிக்கணும். இது சுலபமா முடியக்கூடிய விஷயமில்ல. ஆனா, அப்பா மேல நம்பிக்கை இருக்கு விஜய்! அப்பா நிச்சயமா என்னை இந்த இக்கட்டுலயிருந்து காப்பாத்திடுவாங்க” என்றாள்.

“ம், நீ சொல்றது ரொம்ப கரெக்ட். பிரச்சனைகளை ஃபேஸ் பண்ணித்தானே ஆகணும். உனக்கு எந்த ஹெல்ப் வேணும்னாலும், எந்த நேரத்திலும் எனக்குக் கால் பண்ணலாம்” என்றான்.

“தேங்க்ஸ் விஜய்!” என்றாள் நெகிழ்ச்சியுடன்.

“ம், தைரியமா இரு. சரி நான் வைக்கிறேன்” என்றவன் போனை அணைத்தான்.

சற்றுநேரம் அப்படியே அமர்ந்திருந்தவன் கதவருகில் நிழலாட திரும்பிப் பார்க்காமலேயே, “என்ன இந்தர்?” என்று கேட்டான்.

“நீங்க ஒரு பொண்ணோட கல்யாணத்தை நிறுத்தியிருக்கீங்க. ஐ காண்ட் பிலீவ் திஸ்” என்றான் அதிர்ச்சியுடன்.

“விஷயத்தை அரைகுறையா தெரிஞ்சிகிட்டு உளறாதே” என்றவன் விருட்டென எழுந்தான்.

“கூல் ப்ரோ! நீங்க இப்படி ஒரு விஷயம் செய்றீங்கன்னா அதுக்குப் பின்னால ஏதாவது காரணம் இருக்கும். இப்படித்தான் நம்ம தலையோட படம் காதல் மன்னன்லயும்…” என்று பேசிக்கொண்டே தனக்குப் பின்னாலேயே வந்துகொண்டிருந்தவனை, நின்று முறைத்தான் மித்ரன்.

“உனக்கு இன்னும் பத்தே நாள் டைம் அதுக்குள்ள இந்த ஆட்டம் பாட்டத்தையெல்லாம் தூக்கித் தூரப் போட்டுட்டு ஆஃபிஸுக்கு வா” என்றான்.

“ப்ரோ! இதெல்லாம் அநியாயம். யாரோ ஒரு பொண்ணோட கல்யாணத்தை நிறுத்தறீங்க. நான் உங்க சொந்தத் தம்பி. என்னை இப்படி பிஸ்னஸ்ல மாட்டிவிடுறீங்க. நியாயமா” என்று போலியாகக் கதறினான்.

நின்று அவனை ஆழ்ந்த பார்வை பார்த்தவன், “சொன்னது சொன்னதுதான்” என்றவன் பைக் சாவியை எடுத்தான்.

‘சே! என்ன பண்ணாலும் வாயைத்திறக்க மாட்டேன்றாரே’ என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டவன், “நான் இவ்வளவு தூரம் யாரோ ஒரு பொண்ணுன்னு சொல்றேன்… நீங்க அதுக்குப் பஞ்ச் கொடுக்கறது மாதிரி அவ யாரோ ஒரு பொண்ணு இல்ல… அப்படின்னு ஆரம்பிச்சி எனக்கு ஷாக் கொடுக்கறது மாதிரி பேசினாதானே எனக்குக் கொஞ்சம் ஆறுதலா, சந்தோஷமா இருக்கும்” என்றான் குறுகுறுப்புடன்.
ஒரு கையில் ஹெல்மெட்டும், மற்றொரு கரத்தைப் பாக்கெட்டிலும் விட்டுக்கொண்டு சகோதரனைக் கிண்டலாக ஒரு பார்வை பார்த்தான் மித்ரன்.

“ஓவர் கான்ஃபிடென்ஸ் உடம்புக்கு ஆகாது தம்பி! அதிகமா கற்பனை பண்ணிக்காதே. அந்தப் பொண்ணு என் ப்ரொஃபசர் சாரோட பொண்ணு. அவ்வளவுதான்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டு வாசலை நோக்கி நடந்தான்.

கதவைத் திறந்தவன், “நைட் நான் வர லேட் ஆகும். நீ சாப்டுட்டு பூட்டிட்டு படுத்துக்க. பை” என்றவன் கிளம்பிச் செல்ல திவானில் சாய்ந்து அமர்ந்தான் இந்தர்.
“ப்ரொஃபசர் பொண்ணுன்னா… நாங்க எதுவும் நினைக்கக்கூடாதா? எத்தனைப் படம் பார்த்திருக்கோம் நாங்க… கத்திரிக்கா முத்தினா கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகணும். அஹமதாபாத்துக்குப் பின்னால இவ்ளோ பெரிய கதை இருக்கும் போலிருக்கே… கண்டுபிடிப்போம். அதைவிட நமக்கு என்ன வேலையிருக்கு?” என்று தனக்குத் தானே பேசிக்கொண்டவன், ஹெட்செட்டைக் காதில் மாட்டிக்கொண்டான்.

Categories
On-Going Novels Yuvanika

அத்தியாயம் – 16

காதல்பனி 16

கருங்குழலியின் முகத்தை அந்தக் கருவேலங்காட்டில் தூர இருந்து பார்த்து ஒரு நொடி ரசித்தவன் பின் அவளருகில் சென்று அவளின் பின்புறம் நின்று

“ஹாய் பிளாக்பெர்ரி ஃபுரூட்!” என்றழைக்க

அவன் அழைத்த வார்த்தை என்னவென்று தெரியவில்லை என்றாலும் அவன் குரலில் திரும்பியவள் அங்கே ஏ.கே வைப் பார்த்ததும் கண்கள் இடுக்க யோசித்தவள்

“ஓ… நீயா?” என்றவள் அவன் கையிலுள்ள கேமராவைப் பார்த்து விட்டு “என்ன உன் பட பொட்டி உனக்குத் திரும்ப கெடைச்சிடுச்சா? நான் மறுநாள் போய் தேடிப் பார்த்தேன் அங்க இல்ல. ஆனா அது உனக்குக் கெடைச்சிடுச்சி போல” என்று அவள் சொல்ல

அவள் ஏதோ கேட்கிறாள் என்பது தெரிகிறது. ஆனால் என்ன என்பது புரியாததால் அவன் என்ன என்பது போல் செய்கையால் கேட்க

“இது அன்னைக்குத் தொலைந்து போன பொட்டி தான?” என்று அவளும் தன் கண்ணில் கட்டை மற்றும் ஆள்காட்டி விரலையும் கோர்த்து வைத்தார் போல் வட்டம் இட்டு காட்டிச் செய்கையால் கேட்கவும், இப்போது ஏதோ கொஞ்சம் புரிந்தவனோ

“நோ நோ.. இட்ஸ் நாட் தட்” என்று சொல்ல

“அப்போ இல்லையா? அது கிடைக்கலையா?” என்றவள் அவன் கேட்காமலே “எனக்கு எப்படி நோ தெரியும்னு பார்க்கறியா? எங்க வீரபாண்டி ஐயா தெரியுமா உனக்கு? அவரு எப்போதும் காதுல ஒன்ன வச்சிகிட்டு எஸ் நோனு பேசுவாரு. நான் அப்படினா என்னனு கேட்டனா அப்போ தான் சொன்னாரு எஸ் னா ஆமாவாம் நோ னா இல்லையாம். அப்போ நீ சொன்ன நோவும் அதான?” என்று கேட்க

இப்போதும் அவள் கேட்பது புரியவில்லை என்றாலும் அவளிடம் பேசிக் கொண்டிருப்பதே அலாதி சந்தோஷத்தை அவனுக்குக் கொடுக்க ம்ம்ம்… என்று தலையாட்டினான் அவன்.

“சரி சரி கவலப் படாத.. இங்க தான் எங்கனா இருக்கும். நான் உன் பெட்டிய தேடித் தரேன்” என்றவள் திரும்பி தான் வெட்டும் வேலையைச் செய்ய, அவனோ இமியும் நகராமல் அங்கேயே இருக்க அதை உணர்ந்தவளோ அவனைத் திட்ட நினைத்து அவனிடம் திரும்ப

அதே நேரம் அவன் கைப்பேசியில் சூர்யாவிடமிருந்து அழைப்பு வரவும் எடுத்துப் பேசி முடித்தவனோ சற்றுத் தள்ளியிருந்த கல் மேட்டில் அமர்ந்து குழலியை உச்சி முதல் பாதம் வரை ஆராய அவன் வளர்ந்த நாட்டில் இருந்த பெண்களுக்கும் இவளுக்கும் உள்ள வேற்றுமையை ஆராயத் தோன்றியது அவனுக்குள்.

“டேய் ஏ.கே! நீ எங்க இருக்கனு உன் கிட்ட வழி கேட்டா ஒழுங்கா வழி சொல்ல மாட்டியா டா? நாம போகற இடத்துல எல்லாம் ஒரு மார்க் வைப்போமே அதை எல்லாம் பார்த்து வானு சொன்னியே அதுல ஈஸ்ட் இல்ல வெஸ்ட் டைரக்க்ஷனானு சொன்னியா டா? நான் வேற பக்கமா போய்ட்டுத் திரும்ப இந்த பக்கமா வந்தேன். இதெல்லாம் எனக்குத் தேவையா? இருடா ரெண்டு பேரும் ஒன்னா போகலாம்னு நான் சொன்னதக் கேட்காம நீ வந்துட்டு இப்போ என்ன சுத்த விட்டுட்டியேடா? இதுல உனக்குக் கால் பண்ணா இந்தக் காட்டுக்குள்ள டவர் வேற இல்ல காலும் போகல!”

என்று சூர்யா கேட்டு கொண்டே நண்பனிடம் வந்தவன் சுற்றி வந்த அசதியிலும் கடுப்பிலும் அவனைப் பார்த்த உடனே தமிழிலேயே அவனைத் தாளித்து எடுக்க, ஆனால் ஏ.கே விடமோ எந்தச் சலனமும் இல்லை.

நண்பனை நிமிர்ந்து பார்த்தவனோ பின் அவன் பார்வை பதிந்திருக்கும் திசையைப் பார்க்க அங்கு குழிலியைக் கண்டவனோ பின் நண்பனின் முகத்தைப் பார்த்து விட்டு

‘ஐய்யையோ! இந்த ஊரை விட்டுப் போறதுக்குள்ள இவன் நம்ம தோலை ஊர்ல இருக்கவங்க எல்லாம் உறிச்சி உப்புக் கண்டம் போட வச்சிடுவான் போல’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவனோ அதைத் தவிர்த்து

“என்ன டா ஏ கே! ஏதோ புதுவிதமான இடம் தெரிஞ்சிருக்கு. நான் அங்க போய் போட்டோ எடுக்கப்போறனு வந்துட்டு இப்போ இங்க எங்கயோ உட்கார்ந்து இருக்க!” என்று சூர்யா தன் நண்பனைக் கேட்க, அவனிடமோ குழலியை விட்டுவிட்டு நண்பனைப் பார்த்ததுக்கான சிறு சலனம் மட்டுமே.

‘ம்ஊம்.. இவன் நாம நெனைச்சத நடத்திக் காட்டாம விட மாட்டானு நெனைக்கிறேன்’ என்று யோசித்தவன் 

“டேய் எழுந்திருடா இங்கயிருந்து. இது என்ன உங்க நாடுனு நெனச்சியா?” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் ஆங்கிலத்தில் சொன்னவன் கூடவே அவன் கையைப் பிடித்து இழுக்க

அந்த இடத்தை விட்டுப் போக மனமே இல்லாமல் கல்மேடையை விட்டு எழுந்தவனோ நண்பனுடன் ஓர் அடி எடுத்து வைக்க

“ஏ.கே நீ ஒன்னும் கவலப் படாத.. உன் பொட்டிய தேடிக் கண்டுபிச்சி கொடுக்க வேண்டியது என் பொறுப்பு. வேற யார் னா அந்தப் பொருளை எடுத்திருந்தாலும் அது என் கிட்ட வந்து சேர்ந்திடும். அதனால நீ கவலப் படாம போ ஏ.கே” என்று குழலி சும்மா போறவனை அழைத்துச் சொல்ல

அவள் சொன்னது புரியவில்லை என்றாலும் வார்த்தைக்கு வார்த்தை அவள் சொன்ன ஏ.கேவில் குளிர்ந்தவனோ கண்ணில் ஒரு வித மின்னலுடன் அவளைப் பார்த்து நிற்க, அவள் அப்படி அழைத்ததில் அதிர்ச்சிக்கு உள்ளானது என்னமோ சூர்யா தான்!

‘அடப்பாவி! நீ மட்டும் தான் ஏதோ அந்தப் பொண்ணுக்குத் தெரியாம சைட் அடிக்கறனு பார்த்தா அந்தப் பொண்ணு என்னமோ ஏற்கனவே உன்ன தெரிஞ்சவ மாதிரி உன்ன பெயர் சொல்லி என்ன அழகா கூப்பிடுது! இதுல இவன் உள்குத்துப் பார்வ தெரியாம சும்மா போறவனக் கூப்பிட்டு வச்சி சொறிஞ்சி வேற விடுதே! அப்போ நாம நினைச்ச மாதிரி உப்புக் கண்டம் எல்லாம் இல்ல நேரா சங்கு தான் போல!’ என்று நினைத்தவன் அது எதையும் வெளியே சொல்லாமல்

“இருக்கட்டும் இருக்கட்டும்.. அதை நீங்க மெதுவாவே தேடிக் குடுங்க” என்று நண்பனிடம் சொன்னதற்கு இவன் அவளுக்குப் பதில் கொடுத்தவனோ அவனைப் பிடித்து இழுக்காத குறையாக இழுத்துச் சென்றான் சூர்யா.

ஏ.கேவை விட இரண்டு வயது தான் பெரியவனாக இருப்பதால் அன்றிலிருந்து நண்பனின் நடவடிக்கைகளை ஆராயா ஆரம்பித்தான் சூர்யா.

ஏ.கேவோ எப்போதும் போல் அவன் அவனாக இருக்க குழலியைப் பார்க்கும் போது மட்டும் அவன் முகத்தில் தோன்றும் கனிவும் கண்ணில் சுவாரசியம் தவிர வேறு விதமான அத்துமீறும் பார்வையோ பார்வைப் பரிமாற்றங்களோ இல்லை. ஏன்? அவளைப் பார்க்க நேர்ந்தால் அவளிடம் பேசக் கூட அவன் சுவாரசியம் காட்டவில்லை. நண்பனின் இந்த நடவடிக்கைகளைப் பார்த்தவன் தாங்கள் அமெரிக்காவுக்கே திரும்பப் போய்விடலாம் என்று நண்பனுக்குத் தெரியாமல் எடுத்த முடிவை மாற்றியிருந்தான் சூர்யா.

அப்படி மட்டும் அவன் முடிவில் உறுதியாக இருந்து அதை செயல்படுத்தியும் இருந்தால் பிறகு நடக்கவிருக்கும் சம்பவத்தைத் தடுத்து இருக்கலாமோ?! ஆனால் விதி வலியது இல்லையா? என்ன தான் மனிதன் தன் ஏழ்மையின் பயத்தையும் அவமானத்தையும் எதிர்த்து நின்று போராடி விதியை மதியால் வென்று வெற்றி கண்டாலும் அந்த விதி தர இருக்கும் அசிங்க அவமானங்களையும் மனதால் வரக்கூடிய வலியும் வேதனைகளையும் முன்கூட்டியே அறிந்து இதுவரை தடுத்து நிறுத்த முடியவில்லை. அப்படித்தான் அமெரிக்காவில் பிறந்த ஏ.கே வின் வாழ்விலும் இங்கு காட்டில் பிறந்த கருங்குழிலியின் வாழ்விலும் விதி தன் கடமையைச் செய்ய வருகிறது.

பிறந்து இத்தனை வருடத்தில் ஒரு முறை கூட தன் பிறந்த நாளைக் குழலி கொண்டாடியதே கிடையாது. அந்த நாள் அவள் தாய் தந்தையர் மரணித்த நாள் என்பதால் அதிக அக்கறை காட்டி அவர்கள் நினைவாக அழுவதோ இல்லை தன் பிறந்த தினத்தில் ஏதாவது தன்னை அலங்கரித்துக் கொள்ளவோ மாட்டாள். அன்றைய நாளும் எப்போதும் வரும் மற்றைய நாளைப் போல தான் அவளுக்கு.

ஆனால் இப்போது மாமன் என அவள் வாழ்வில் வந்திருக்கும் செங்கோடன் அப்படி நினைக்கவில்லையே! தன் எதிர்கால மனைவியாய் வரவிருக்கும் குழலிக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என்று நினைத்தவன் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் சூர்யாவின் உதவியுடன் சற்று அதிக விலை உயர்ந்த நெயில்பாலிஷ், மேக்கப் செட், தலைக்குப் போடும் ஹேர் பேண்ட் கிளிப் என்று வாங்கியவன்

கூடவே அவளுக்கு ஒரு நல்ல பாவாடை தாவணியும் வாங்கி இவை அனைத்தையும் ஒரு மஞ்சள் பையில் வைத்து அடைத்தவன் பிறந்த நாளுக்கு முதல் நாளே அவளிடம் ‘உன் பிறந்த நாள் பரிசு’ என்று சொல்லி அவளிடம் நீட்ட ‘எனக்கு எதுவும் வேணாம்’ என்ற பதிலுடன் அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் விலகிச் சென்று விட்டாள் குழலி.

அவள் செயலில் உன்னை விடுவேனா என்று மனதில் நினைத்தவனோ அதை எல்லாம் அவள் பாட்டியிடம் கொடுத்து அவளை இதை அனைத்தையும் போட வைப்பது உன் பொறுப்பு என்று உத்தரவு இட, அவளை எப்படிப் போட வைப்பது என்று தெரியாமல் கலங்கியவர் பின் வீரபாண்டி ஐயாவிடம் கொடுத்து அதை எல்லாம் அவர் வாங்கிக் கொடுப்பது போல் அவளிடம் கொடுக்கும் படி கேட்டுக்கொள்ள குழலிக்காக அவரும் அப்படியே செய்தார்.

செங்கோடனின் பிறந்த நாள் பரிசோ இப்போது வீரபாண்டி ஐயா தருகிற பிறந்த நாள் பரிசாக அவள் கையில் வந்து சேர்ந்தே விட்டது. அவள் நினைத்தது எல்லாம் செங்கோடன் ஒதுங்கி விட்டான் என்பதும் தன் பாட்டியும் இப்படி எல்லாம் செய்யக் கூடியவர் அல்ல என்பதும் தான்.

ஏற்கனவே சூர்யா செங்கோடனும் குழலியும் ஒருவரை ஒருவர் விரும்புவதாகவும் கூடிய விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்கப் போவதாகவும் ஏ.கே விடம் சொல்ல சற்றே நெற்றி சுருக்கி யோசித்ததை விட அவனிடம் வேறு எந்த மாற்றமும் இல்லை.

அதைப் பார்த்தவனோ ‘பயபுள்ள தெளிவாத் தான் இருக்கான். நாம தான் இவனத் தப்பா நெனச்சி பல சோதனைகளை வச்சிப் பார்க்கறோமோ?’ என்று மனதால் கேள்வி கேட்டுக் கொண்டா னே தவிர ஒரு முறை கூட ‘நீ குழலியை விரும்புறியாடா?’ என்ற கேள்வியை ஏ.கே விடம் கேட்கவில்லை சூர்யா.

அப்படி ஓர் எண்ணமே இல்லாதவனை நாம் கேட்டுப் பிறகு நாமே அதை அவன் மனதில் விதைத்ததாய் ஆகக் கூடாது என்று நினைத்தான் அவன்.

குழலியின் பிறந்த நாள் அன்று வீரபாண்டி ஐயா வீட்டுக்கு சூர்யாவும் ஏ.கேவும் வர அன்று செங்கோடன் வாங்கிக் கொடுத்த தாவணியை குழலி அணிந்திருப்பதைப் பார்த்த சூர்யாவோ செங்கோடன் மேல் குழலிக்கும் காதல் இருப்பதாகவே நினைத்தான்.

அன்று தங்களுடன் வந்து செங்கோடன் வாங்கிய ஆடையை இன்று குழலி போட்டிருக்கவும் ஒருவித கேள்வியுடன் ஏ.கே அவளைப் பார்க்க அவன் பார்வையின் கேள்வியை உணர்ந்த சூர்யாவோ

“இன்னைக்குக் குழலிக்குப் பிறந்த நாளாம். அதான் அவன் மாமன் வாங்கிக் கொடுத்ததைப் போட்டுகிட்டு இருக்கா” என்று சூர்யா ஏ.கேவின் காதில் சொல்ல அவளுக்கு அழகான வாழ்த்துச் சொன்னதோடு விடை பெற்றனர் இருவரும்.

இப்படியே நாட்கள் செல்ல ஒரு நாள் மதயானை ஒன்று அவள் பாட்டியைத் தூக்கிப் போட்டு விட அதில் குற்றுயிராய் இருந்தவர் தன் கடைசி நேர வேண்டுகோளாக வீரபாண்டி ஐயாவை அழைத்துத் தனக்குப் பின் தன் பேத்தி வாழ்வில் ஒரு துணை இருக்க வேண்டும் என்றவர் அதற்கு செங்கோடனையே திருமணம் செய்து வைக்கச் சொன்னவர் பிறகு குழலி கையையும் செங்கோடன் கையையும் பிடித்து வீரபாண்டி ஐயாவிடம் சேர்க்க அதே நேரம் அவர் உடலை விட்டு அவர் உயிர் பிரிந்தது.

பாட்டி இறந்ததில் ரொம்பவே மாறிப் போனாள் குழலி. அவளுடைய துருதுரு வாயாடித்தனம் எல்லாம் இல்லாமல் போனது. யாரிடமும் அதிகம் பேசுவதையே தவிர்த்தாள். பிறந்ததில் இருந்து தனக்கு தாய் தந்தையர் இல்லாதது கூட அவளுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. அப்போது ஆத்தா என்று அழைக்க பாட்டி இருந்தார்.

இப்போது அவரும் இல்லாமல் போகவும் நிஜமாவே தான் அநாதை ஆகிவிட்டோம் என்பதை உணர்ந்தவளால் எதிலும் ஒரு பற்றுதல் இல்லாமல் போனது அந்த பதினைந்து வயது சிறு குழந்தையான கருங்குழலிக்கு. அவளின் நடவடிக்கைகளை நாளுக்கு நாள் பார்த்து வந்த செங்கோடனோ ஒரு நாள் அவளிடம் வந்து அருகில் அமர்ந்தவன்

“ஏன் புள்ள நீ இப்போ எல்லாம் ஏதோ மாதிரி இருக்க? எனக்கு உன் கிட்ட பிடிச்சதே உன் துருதுருப்பு தான். அதனால தான் நான் அடிக்கடி உன் கிட்ட வம்பு பண்ணுவேன். நீ இப்படி இருக்கறத பார்க்கும் போது உன்ன தனியா விடவும் எனக்குக் கஷ்டமா இருக்கு. நான் என் ஆத்தா கிட்ட சொல்லி சீக்கிரமே நம்ம கல்யாணத்துக்கு நாள் பார்க்கச் சொல்லிடறன்.

மரம் வெட்டவோ வேற எந்த வம்பு தும்புக்கும் இனி நான் போக மாட்டேன் புள்ள. நீ சொல்ற மாதிரி எல்லாம் நான் இருக்கேன்” என்றவன் ஒருவித உறுதியுடனேயே அவள் முகம் பார்க்க அவளோ அவன் சொன்னதையெல்லாம் காதில் வாங்கினாலும் அதை விடுத்து கண்ணிமைக்கவும் மறந்து எங்கோ வெறித்த படி இருந்தாள். சற்று நேரம் அவள் முகத்தையே பார்த்தவனோ

“நான் இன்னைக்கே வீரபாண்டி ஐயா கிட்ட பேசுறன்” என்ற சொல்லுடன் விலகிச் சென்றவனோ சொன்னபடியே அவரிடம் பேசி இரண்டு தினங்களில் எல்லாம் அவளுக்குப் பரிசம் போடும் அளவுக்கு வந்திருக்க.

அதே போல் அவளிடம் சொன்ன மாதிரியே எந்த வம்பு தும்புக்கும் போவதை நிறுத்தி இருக்க. இனிமேல் தன் வாழ்வுக்குக் குழலி தான் எல்லாம் என்ற முடிவுக்கே வந்திருந்தான் அவன்.

பரிசம் விஷயத்திலும் குழலி எதிலும் கலந்து கொள்ளவில்லை. அவளுக்கு இன்றும் செங்கோடனை பிடிக்கவில்லை தான். ஆனால் இறக்கும் போது தன் பாட்டி சொன்ன வார்த்தையும் அதன் பிறகு அவனுடைய பேச்சும் என்று இன்று தான் இருக்கும் நிலையை எண்ணி அரை மனதாக ஒத்துக் கொண்டாள். அதேபோல் அவள் இருந்த மனநிலையில் செங்கோடன் ஆத்தா கேட்ட சீர் எல்லாம் அவளிடம் மறைக்கப்பட்டது. 

அதன் பிறகு வந்த நாட்களில் எல்லாம் முன்பு போல் இல்லை என்றாலும் ஏதோ சகஜ நிலையில் இருந்தாள் குழலி. ஒருநாள் அவள் இனத்தில் ஒரு பெண் பெரிய மனுஷியாகி விட அந்த ஊரில் இருக்கும் மற்ற வயசுப் பெண்கள் எல்லாம் அந்த பெண்ணின் சடங்குக்கு குலவி பாடி ஆட வேண்டும். அதில் அவர்கள் இனம் மாதிரியே ஆடை உடுத்தி பாடி ஆடியவள் பின் ஆட்டம் பாட்டம் முடிந்து காட்டு வழியே வர

“என்ன டி உன் மாமன் அநியாயத்துக்கு நல்லவன் மாதிரி வேஷம் போடுறான்? இத்தனை நாள் மரம் வெட்டினவ தான டி? இப்போ என்னமோ அது அரசாங்கத்துக்கு எதிரானது நான் செய்ய மாட்டனு வீம்பு புடிக்கறான். சும்மா தட்டிக் கொடுத்து நைசா என்னடா ஏதுனு கேட்டா நான் கட்டிக்கப் போற பொண்ணுக்குப் புடிக்காது அதனால நான் செய்ய மாட்டன் எனக்கு இப்போ கல்யாணம் ஆகப் போகுதுனு வேற சொல்றான்.

என்ன டி நீயும் உன் மாமனும் சேர்ந்து என்னோட வருமானத்துக்கு வேட்டு வெக்கிறிங்களா? ஒழுங்கா அவன பழைய மாதிரி வந்து மரம் வெட்டிக் கொடுக்கச் சொல்லு. இல்லனா திருந்தின அவன் மேல பழைய கேசை எதையாவது போட்டு உள்ள தள்ளிடுவேன். என்ன? சொல்லுறது புரிஞ்சிதா? இதையும் போய் சொல்லு டி உன் மாமன் கிட்ட” என்று அந்த வனத்துறை அதிகாரி குழலியை வழிமறித்து மிரட்ட

அவன் பேசியதில் முதலில் அவளுக்குத் தோன்றியது ‘அப்போ மாமா உண்மையாவே திருந்திடுச்சா?’ என்பது தான்

அந்த ஊர் அரசியல் வாதியின் தூண்டுதல் பேரிலும் இதோ இந்த வனத்துறை அதிகாரியின் உதவியோடு தான் செங்கோடன் இப்படி செய்து வந்தான். திடீரென்று செங்கோடன் நிறுத்தவோ இவனுக்கு அரசியல்வாதியிடம் இருந்து வந்த பணவரவு நின்று போகவே தான் இவன் இப்படி குழலியை மிரட்டியது. அவன் வார்த்தைக்கு வார்த்தை டி போட்டுப் பேசியதில் உள்ளுக்குள் கொதித்தாலும் அதை மனதுக்குள்ளே வைத்தவள்

“அது எல்லாம் என் மாமா இனி மரம் வெட்ற வேலைக்கு வராது. மீறி சும்மா சும்மா மறுபடியும் கூப்பிட்டு தொந்தரவு பண்ணிங்க இவ்வளவு நாள் செய்த தப்புக்குப் பரிகாரமா உங்கள எல்லாம் காட்டிக் கொடுத்துட்டு என் மாமா அப்ரூவலா மாறிடும் சொல்லிட்டேன். அப்படி பண்ணா யாருக்குத் தண்டனை அதிகம்னு உங்களுக்குத் தெரியும் இல்ல?” என்று அவனிடம் சட்டம் பேசியவள் எட்டி ஓர் அடி வைத்து முன்னே நடக்க அவள் கையைப் பிடித்தவனோ

“யார் கிட்ட டி சட்டம் பேசுற ? என்னையே மிரட்டுறியா?” என்றவன் அவளிடம் அத்துமீறி நடக்க முயற்சி செய்ய, அவனின் நோக்கம் புரிந்தவளோ அவன் அசந்த நேரம் பார்த்துக் கையைத் தட்டி விட்டு ஓட ஆரம்பிக்க அவளைத் தன் எண்ணம் நிறைவேறத் துரத்தியவன் இந்தக் காட்டிலே பிறந்து வளர்ந்த அவள் புள்ளி மானாய் சென்று எங்கோ மறையவும் அவளை எங்கு தேடியும் கிடைக்காததால்

அங்கு ஓரிடத்தில் மலைக் குவியலன இருந்த இலைச் சருகையும் காய்ந்த மரப் பட்டைகளையும் பார்த்தவனுக்குத் திடீர் என்று ஒன்று தோன்ற ஓடிச் சென்று தன் ஜீப்பில் வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து வந்தவன் தனக்கிருந்த ஆத்திரத்திலும் வெறுப்பிலும் இயலாமையிலும் தான் என்ன செய்கிறோம் என்பதை ஒரு நொடி கூட யோசிக்காமல் அதிலிருந்த பெட்ரோல் முழுவதையும் அங்கு ஊற்றி நெருப்பைப் பற்ற வைக்க சற்று நேரத்தில் எல்லாம் மளமளவென பக்கத்து மரங்களுக்கும் பிடித்துக் கொண்ட நெருப்பானது காட்டுத் தீயாக உருவெடுத்தது.

இதை அறிந்த கருங்குழலியோ தன்னைச் சுற்றி தீ இருக்க தான் தப்பிச்செல்லும் இடத்தில் அந்த அதிகாரி நிற்கவும் வெளிவர முடியாமல் அமைதி காக்க, மறைந்திருக்கும் இவள் வெளிவரக் காத்திருந்தவனோ பின் வேறு வழியில் அவள் தப்பிச் சென்று விட்டாள் என்று நினைத்துக் கொண்டு அந்த இடத்திலிருந்து சென்று விட அதே நேரம் தான் கட்டியிருந்த புடவையில் தீ பிடித்ததைப் பார்த்துப் பயத்தில் அனிச்சை செயலால் தன் புடவையைக் கழற்றி வீச இப்போது தான் பிறந்த மேனியாய் நிற்பதை உணர்ந்தவளோ அப்போது தான் தான் செய்த தவறை உணர்ந்தாள் குழலி.

‘இப்போது இப்படியே வெளியே தப்பித்துச் செல்லவும் முடியாது. காட்டுத் தீயை அறிந்து யாராவது காப்பாற்ற இங்கு வந்தால் அவர்கள் முன் இப்படியா போய் நிற்பது?’ என்ற எண்ணம் தான் அந்த உயிர் போகும் நேரத்திலும் வந்தது அவளுக்கு.

அதனால் தன் சதைகள் எரிந்து சாம்பலாக, தான் வெறும் எலும்புக் கூடாய் தான் வருகிறவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் அங்கே நின்றாள் அவள்.

இப்படி ஒரு கோர மரணத்தை ஏற்றுக் கொள்ள அவள் திடமாக இருந்தாலும் எரியும் தீ ஜுவாலையின் அனலில் தன் சதைகள் மெழுகென உருகப் போவதை உணர்ந்தவளோ ஒருவித படபடப்பில் கண்கள் இருள தான் நின்றிருந்த இடத்திலேயே மயங்கி விழ.

அதே நேரம் தன் மகளின் நிலை அறிந்து தங்கள் கண்ணீரை வானத்தில் தூரலென சிந்தினர் அவள் தாய் தந்தையர். முதலில் தூரலாக விழுந்த மழை பிறகு பெரும் மழையாய் கொட்ட யாருடைய உதவியும் இல்லாமல் இயற்கையாகவே அணைக்கப் பட்டது அந்த காட்டுத் தீ.

தீ அணைந்த சற்று நேரத்திற்கெல்லாம் அங்கு புகைப்படம் எடுப்பதற்காக சுற்றிக் கொண்டிருந்த ஏ.கே வின் கண்ணில் ஆடை இல்லாமல் படுத்திருக்கும் குழலி பட

முதலில் அவளுக்கு உயிர் இல்லையோ என்று பயந்தவன் பிறகு எதைப் பற்றியும் யோசிக்காமல் தான் அணிந்திருந்த டி ஷர்ட்டைக் கழற்றி அவளுக்குப் போட்டு விட்டவன் அவள் பக்கத்தில் மண்டி இட்டு அமர்ந்து அவளைத் தூக்கித் தன் தோள் சாய்த்து அவள் கண்ணங்களைத் தட்டி எழுப்ப அவளிடம் எந்த அசைவும் இல்லை.

‘சாதாரண மயக்கம் என்றால் ஏன் இந்த பெரு மழை குளிர்ந்த நீரைக் குடம் கொண்டு அவள் முகத்தில் கொட்டியது போல் பெய்தும் அவள் தெளியவில்லை? ஒருவேளை சுற்றி நெருப்பைப் பார்த்த அதிர்ச்சியில் ரொம்பவே பயந்து விட்டாளோ?’ என்று அவளின் நிலையை யூகித்து அவளைத் தன் கையில் தூக்கிச் சென்று தூரமாக ஓர் வளைவில் இருந்த கல்மண்டபத்தை அடைந்தவனோ 

அவளைத் தரையில் கிடத்திக் கை கால்களைத் தேய்த்து விட்டவன் பிறகு அவள் இரண்டு கன்னத்திலும் இரண்டு அடிகளைப் பலமாய் கொடுக்க அதிலும் பலன் இல்லை. அவளைப் பார்த்ததில் இருந்து இப்போது தூக்கி வந்து இதுவரை செய்யும் வரையுமே அவன் உதடுகளோ ‘குய்லி குய்லி’ என்று அவள் பெயரைத் தான் உச்சரித்தது.

இறுதியாக ஒரு முடிவுடன் அவள் முகத்தை எடுத்துத் தன் மார்பு மீது வைத்தவனோ ஒரே ஒரு வினாடி தயக்கத்துக்குப் பிறகு அவள் உதட்டில் தன் உதட்டை வைத்து அவளுக்கு முதல் உதவி செய்ய அதில் கொஞ்சமே தெளிந்தவள் தான் அந்த வன அதிகாரியிடம் மாட்டிக் கொண்டமோ என்ற எண்ணத்தில் அவள் கையைக் காலை உதைத்துத் திமிர

மயக்கத்தில் இருந்து தெளியும் போது ஏற்படும் சாதாரண திமிரல் என்று நினைத்து அவளைச் சட்டென அடக்கியவனோ தன் மார்பில் அவள் முகத்தை அழுத்திப் பிடித்து கூடவே அவள் கன்னத்தோடு தன் கன்னம் வைத்து இழைத்தவனோ அவள் காதில் தன் உதட்டை வைத்து 

“குய்லி பிளீஸ்! பி காம்.. ரிலாக்ஸ்.. ஐ எம் ஏ.கே” என்று சொல்ல அந்த ஏ.கே என்ற ஒரு வார்த்தையே அவளுக்குப் போதுமானதாய் இருக்க சற்றே அடங்கி அவன் கையிலே தளர்ந்தவளோ பின் தான் மயங்கும் போது இருந்த நிலை ஞாபகம் வர நிமிர்ந்து தன்னை ஆராய்ந்தவள் தான் முழுமையாக இல்லை என்றாலும் அவன் போட்டிருந்த சட்டையைத் தான் அணிந்திருப்பதை உணர்ந்தவளோ எந்தப் பெண்ணுக்கும் வரக் கூடாத ஒரு நிலை தனக்கு வந்து விட்டதை நினைத்தவளோ அவளையும் மீறி அவள் கண்ணில் கண்ணீர் வரவும் அதைப் பார்த்தவனோ அவளுக்கு உடலில் ஏதோ எங்கேயோ அடிபட்டு வலியோ என்று பதறி 

“இஸ் இட் பெய்னிங்?” என்று அவன் கேட்க தன் மாமன் முதல் இன்று பார்த்த அதிகாரி வரை தான் பார்த்த ஆண்களில் இவன் வேறு விதமாய் தன்னிடம் விரசமின்றி இருப்பதை உணர்ந்தவள், என்ன நினைத்தாளோ தெரியவில்லை. தன் முகத்தை அவன் நெஞ்சில் அழுந்த அவனை இறுக்கி அணைத்தாள் குழலி.

அவள் இன்னும் அந்த காட்டுத் தீயின் பயத்தால் தான் தன்னை அணைப்பதாக நினைத்தவன் அவள் நினைப்பது போல் தன் மனதில் அவளை அப்படியொரு கோலத்தில் பார்த்ததுக்கானதை கிஞ்சிதமும் நினைக்காமல் அவள் பயத்தைப் போக்க நினைத்தவனோ அவள் முகத்தை நிமிர்த்தி தன் தோள் வளைவில் வைத்தவனோ அதே போல் தன் முகத்தை அவள் தோளில் புதைய தன் பலம் கொண்ட மட்டும் அவளைத் தன்னுள் புதைத்துக் கொண்டான் ஏ.கே. 

அதே நேரம் காட்டில் ஏற்பட்ட தீயைப் பார்த்த ஒருசில பேர் அதை அணைக்க ஊரில் இருந்தவர்களைத் திரட்டி அழைத்து வர அவர்கள் அனைவரின் கண்ணில் பட்டது என்னமோ அறைகுறை ஆடையில் கட்டிப் பிடித்த படி முகத்தோட முகம் வைத்த படி இருந்த ஏ.கேவும் குழலியும் தான்.

Categories
On-Going Novels Yuvanika

அத்தியாயம் – 15

காதல்பனி 15

அஷ்வத்திடம் என்ன தான் கோபம் கொண்டு வீம்பாக பேசி விட்டு வந்தாலும் பொம்மியின் மனமோ கணவனைத் தான் சுற்றிச் சுற்றி வந்தது.

இந்தியா வந்து சேர்வதற்குள் அவள் யோசித்துக் கண்டது எல்லாம் கணவன் எதையோ மறைக்கிறான் என்பதைத் தான். ‘அப்படி நான் எதைத் தெரிஞ்சிக்கக் கூடாதுனு நினைக்கிறார்? நேற்று நடந்துகிட்டதைப் பார்த்தா அவருக்கு ஏதோ பெரிய வியாதி இருக்குற மாதிரியும் அதை நான் தெரிஞ்சிக்கக் கூடாதுனு மறைக்கிற மாதிரியும் இருந்தது. நிச்சயம் நேற்று அவர் பேசிய பேச்சு எதிலும் சுயம் இல்லை.

காலில் எண்ணை கொட்டிய போது எனக்காக துடித்தது, ஒரு நாள் இரவு முழுக்கத் தன் கொஞ்சலாலும் முத்தத்தாலும் என்னைச் சிவக்க வைத்தது இது தான் என் கணவன். இதெல்லாம் விட அவர் வாய் திறந்து தன் காதலைச் சொல்லவில்லை என்றாலும் என்னைப் பார்க்கும் போது எல்லாம் அவரிடம் தோன்றும் கனிவையும் கண்ணில் தோன்றும் காதலையும் நான் பார்த்துத் தானே இருந்தேன்! ஏதோ ஒரு விஷயத்தை அவர் மனசுக்குள்ளே போட்டு வைத்து அதை எனக்குத் தெரியக் கூடாதுனு நினைக்கிறார். அது என்னவாக இருக்கும்?..’ என்றெல்லாம் சிந்தித்தவள் திடீர் என்று உடலில் ஒரு சிலிர்ப்பும் நடுக்கமும் ஓட

‘ஒருவேளை அந்த விஷயமாக இருக்குமோ?’ என்று நினைத்தவள் ‘ச்சே ச்சே.. கண்டிப்பா அது இருக்காது. எப்போதும் என்னிடம் இருக்கும் விழியைப் பற்றி தானே அடிக்கடி கேட்கிறார். அதனால் ஏதாவது ஒரு பெண் விஷயமா இருக்குமோ? அதுவும் காதல் தோல்வி மாதிரி!’ என்று யோசிக்கும் போதே நெருஞ்சி முள்ளாய் மனதை ஏதோ ஒன்று குத்த ‘அப்படியே இருந்தாலும் அதை அவர் என் கிட்ட சொல்லலாமே? இது தான் விஷயம்னா ஒரு மனைவியா இதிலிருந்து நிச்சயம் நான் அவரை வெளிக் கொண்டு வந்தே தீருவேன்!’ என்று மனதில் உறுதியேற்றாள் சாரா.

வீடு வந்தவள் தாத்தாவிடம் தங்களுக்குள் நடந்த பிரச்னையைச் சொல்லாமல் அஷ்வத்துக்கு ஏதோ வேலை இருப்பதாக மட்டும் சொல்லி வைக்க, மறுநாளே வந்த அஷ்வத்தும் தாத்தாவிடம் எதுவும் சொல்லாமல் தன் மனைவியைத் தேடி மேலே வர, கணவனைப் தங்கள் அறையில் பார்த்தவள் எதுவும் நடக்காத மாதிரியே அவனை வாங்க என்று வரவேற்றவள் பின் தான் செய்து கொண்டிருந்த வேலையான கட்டிலின் விரிப்பை மாற்றிக் கொண்டிருக்க. மனைவியின் நிதானமான வரவேற்பிலும் செய்கையிலும் கொதித்தவனோ

“என்ன டி திமிரா? வரவே மாட்டேனு சொன்னவன் திரும்ப வந்துட்டானேனு அலட்சியமா? நான் ஒன்னும் உன்னைத் தேடி நீ வேணும்னு வரலை!” என்று மிதப்பாகச் சொல்ல, அப்போதும் அவள் எந்த வித பதிலும் சொல்லாமல் அமைதியாகத் தன் வேலைகளைப் பார்க்க அதில் இன்னும் கொதித்தவன்

“உன்னை நான் பார்த்ததிலிருந்து என் சந்தோஷம் போயிடுச்சி. என்னைக்கு நீ என் வாழ்க்கையில் வந்தியோ அன்னைக்கே என் நிம்மதியும் போயிடுச்சி. அதனாலே நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன். இழந்த என் சந்தோஷமும் நிம்மதியும் திரும்ப எனக்கு வேணும்னா உன்னை விட்டு நான் நிரந்தரமா விலகுறது தான்!” என்றவன் அவள் முன் தங்கள் விடுதலைப் பத்திரத்தை நீட்ட எந்த வித சலனமும் இல்லாமல் அதை வாங்கியவள் நிதானமாக படித்து முடிக்கவும் அவனோ தன்னிடமிருந்த பேனாவை அவள் முன் நீட்ட அவனை ஆராயும் பார்வை ஒன்றைப் பார்த்துக் கொண்டே வாங்கியவள் பின் அங்கிருந்த டேபிளில் வைத்து கையெழுத்து இட்டவள்

“ம்… நீங்க கேட்ட மாதிரியே நான் உங்க வாழ்க்கைய விட்டு விலகுறதுக்கு சம்மதம் என்று கையெழுத்துப் போட்டுட்டேன். வந்து எடுத்துக்கங்க” என்றவள் அந்த பத்திரத்தை டேபிளில் வைத்து விட்டு அவளோ சற்று விலகி நின்று விட, அஷ்வத்துக்குத் தான் அவள் செயலைப் பார்த்து மனதில் எண்ணில் அடங்காத கோபம் எழுந்தது. 

‘நான் கேட்ட உடனே கையெழுத்துப் போட்டுடுவியா டி ? அப்போ நான் உனக்கு வேணாமா? உனக்குள்ள நான் எந்த சலனமும் ஏற்படுத்தவே இல்லையா?’ என்று அவளைப் பார்த்து தன் மனதுக்குள் அவன் கேள்வி கேட்ட படி நிற்கவும்

“நீங்க விரும்பின மாதிரியே இனி உங்க வாழ்க்கைய நீங்க சந்தோஷமா வாழுங்க. அதுக்கு நான் இடைஞ்சலா இல்லாம உங்களை விட்டு விலகிடுறேன். அதுக்கு சம்மதம் சொல்லித் தான் கையெழுத்துப் போட்டிருக்கேன் வந்து எடுத்துக்கங்க” என்று டேபிளின் மேலிருந்த பேப்பரைக் காட்டி அவள் அழுத்தமாகச் சொல்ல

‘இவள் நம் விருப்பப் படி கையெழுத்துப் போடுவாளா இல்லை போட மாட்டேன் என்று முரண்டால் என்ன சொல்லி மிரட்டி இவளைச் சம்மதிக்க வைப்பது?’ என்றெல்லாம் அவன் யோசித்து வர, ஆனால் எந்த சிரமமும் இல்லாமல் அவன் எதிர்பார்த்தது கிடைத்தும் அவனால் சந்தோஷப் பட முடியாமல் ஏன் நான்கு அடியே தூரமிருந்த அந்த டேபிளைக் கூட நெருங்க முடியாமல் கால்கள் இரும்பு குண்டாய் கனக்க கைகள் உதற கண்கள் சொருக அதை விட அவன் நெஞ்சுக் கூடோ தலை அறுபட்ட புறாவாய் துடிக்க தனக்கு இந்த நிமிடமே மரணம் வந்து விட்டால் கூட எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தவனோ

இதை எதையும் அவளிடம் காட்டாமல் கண்ணை மூடித் தன்னை நிலைப்படுத்தியவனோ பின் தன் நிமிர் நடையுடன் சென்று அந்த பேப்பரைக் கையில் எடுத்து அவள் கையெழுத்து இட்ட இடத்தைப் பார்க்க அதில் ‘உங்களுக்கு என்னிடம் இருந்து விடுதலை வேண்டும் என்றால் அதை என் மரணத்தால் மட்டுமே கொடுப்பாள் இந்த சின்னாவின் பொம்மி!’ என்று எழுதி இருந்தாள் சாரா. அதைப் பார்த்ததும் அவனையும் மீறி அவன் கண்ணில் கண்ணீர் வழிந்தது. அதைத் துடைத்தவன் அடைத்த தொண்டையைச் சரி செய்த படி

“ஏய்! நான் உன்னைக் கையெழுத்துப் போடச் சொல்லிக் கொடுத்தா நீ என்ன டி பண்ணி வெச்சிருக்க?” என்று கோபத்தில் அவன் கர்ஜிக்க நினைக்க அந்தோ பரிதாபம்.. அவன் குரலோ மழையில் நனைந்த கோழி என வெடவெடக்கத் தான் செய்தது. 
இங்கு வந்ததில் இருந்து கணவனின் முகத்தையும் செயலையும் பார்த்தவளோ இப்போது அவன் குரலையும் அறிந்து கொண்டவளோ நிமிர்வுடன்

“ஏன் நான் என்ன செய்தேன்? நீங்க கேட்ட விடுதலையைத் தானே கொடுத்தேன்?” என்று இவள் கேட்க

“நான் கேட்டது கையெழுத்து. இது கையெழுத்தா? நீ படிச்சவ தானே? என்ன எழுதறோம்னு யோசிக்காமலேயே எழுதுவியா?”

“நான் எதையும் யோசிக்காம எழுதல. நல்லா யோசித்துத் தான் எழுதினேன்” அவனுக்கு உள்ளுக்குள் ஒரு வித பயமும் சந்தோஷமும் போட்டி போட ‘ஏன் டி என் மேல இவ்வளவு காதலை வெச்சிருக்க?!’ என்று தனக்குள்ளே கேள்வி கேட்டவனோ வெளியில்

“மண்ணாங்கட்டி! என்ன டி சும்மா இறப்பு அது இதுனு என்னை பயமுறுத்திறியா? நீ என்ன சொன்னாலும் செய்தாலும் நாம பிரியப்போறது போறது தான். நீ இப்போ இதுக்கு சம்மதிக்கலைனா நான் தாத்தா கிட்ட வேற மாதிரி நடந்துக்க வேண்டி வரும்” என்று அவன் கத்தவும் அவனை நெருங்கி அவன் கையிலிருந்த பத்திரத்தைப் பிடிங்கியவள் அதை சுக்கல் சுக்கலாகக் கிழித்து எறிய அவள் செயலில் “ஏய்!” என்று கத்தி ருத்திரமூர்த்தியாக நின்றவனை அவனின் கோபத்தால் சிறிதும் அசராமல் தன்னவனின் கையைப் பற்றி இழுத்துச் சென்று ஷோபாவில் அமர வைத்தவளோ தானும் அவன் பக்கத்தில் அமர்ந்து

“என்னை விட்டுட்டு உங்களால ஒரு நாள் கூட முழுசா இருக்க முடியல. கிளம்பி இதோ இப்போ என் முன்னாடி வந்து நிற்கறீங்க. நீங்க என்னை விட்டுட்டு ஆயுசுக்கும் இருப்பீங்களா? அன்னைக்கு நீங்க சொன்னதைத் தான் இப்போ நான் சொல்றேன். என் தாத்தாவா இருக்கும் போதே நீங்க அவரை விட்டது இல்ல. இப்போ உங்க தாத்தாவுக்கு ஏதாவது நடக்கவா விட்டு விடுவீங்க? ஏன் இப்படி நடிக்கறீங்க? என் மேல உங்களுக்கு அன்பு பாசம் ஏன் காதல் கூட இருக்கு. அதை எல்லாம் நிமிஷத்துக்கு நிமிஷம் மறைத்து மறந்து ஏன் பிரிவு விடுதலை வரை போறீங்க? அப்படி உங்க மனசுல என்ன தான் இருக்கு? எது உங்களை இப்படி மாற்றுது? அது என்னனு சொல்லுங்க நாம அதுக்கு ஏதாவது வழி இருக்கானு பார்ப்போம். பிறகு நானும் உங்க கிட்ட ஒன்று சொல்லனும்” என்றவள் ஒரு மனைவியாய் கணவனின் கஷ்டதைப் போக்க அவள் வழி செய்ய, மனைவி தன் மனநிலையை உணர்ந்து இருக்கிறாள் என்பதை அறிந்தவனோ வீம்புக்கென்று

“எனக்கு ஒன்னும் இல்லை. நான் எதையும் மனசுல போட்டு இருக்கலை. நீ எதையாவது சொல்லி என்னைத் திசை திருப்பாதே. எனக்கு வேண்டியது டிவோர்ஸ். அதை மட்டும் கொடு’’ என்று இவன் அதே பிடிவாதத்திலே இருக்க, அவன் முகத்தை ஒரு வினாடி தீர்க்கமாகப் பார்த்தவளோ

“அப்ப என் முடிவும் மாறாது. என் மரணத்தால் மட்டும் தான் அது நடக்கும். அந்த மரணத்தையும் இப்பவே ஏற்று உங்களுக்கு விடுதலை தர நான் தயார்” என்றவள் அங்கிருந்து எழப் போக, அவள் யூகம் தெரிந்து அவளை நகர விடாமல் இறுக்கிப் பிடித்தவனோ

“நீ சாக வேணாம் டி.. என்னுடைய பிரச்சனைக்கு நான் தான் டி சாகணும்” என்று முதல் முறையாக அவன் உடைய

“நீங்க முதல்ல என்ன பிரச்சனைனு சொல்லுங்க. அதற்குப் பிறகு நீங்க சாகலாமா இல்ல நான் சாகலாமானு நான் சொல்றேன்” என்று அவள் சொல்லவும், அவள் மடி சாய்ந்தவனோ முன்பு தன் வாழ்வில் நடந்தது அனைத்தையும் இதுவரை யாரிடமும் பகிராத தன் பாவச் செயலை சொல்ல ஆரம்பித்தான் அஷ்வத் இல்லை இல்லை ஏ.கே.!

தமிழ் நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையே இருக்கும் மலைப்பிரதேசம் தான் மகாதேவிபுரம் (இவ்வூர் என் கற்பனையே). இவ்வூர் முழுக்க முழுக்க மலைகளையும் காடுகளையும் அந்த காடுகளுக்கே ஏற்ற குளுமை, இருள் மற்றும் கொடிய விலங்குகள் என்றிருக்க நூறு வீடுகளே ஆன சிறிய கிராமம் அது. அந்த ஊரைச் சுற்றி காடுகளும் மலைகளும் இருந்ததால் அந்த ஊரைத் தள்ளி காட்டில் மலைவாழ் மக்களும் வாழ்ந்து வந்தனர்.

தன்னுடைய பத்தொன்பதாம் வயதில் தன் கேரியரை வளர்த்துக் கொள்ளத் தன் இந்திய வாழ் நண்பனான சூரியாவின் உதவியுடன் அவனின் ஆலோசனைப் படி மகாதேவிபுரத்தில் இருக்கும் மலைகளையும் காடுகளையும் விலங்குகளையும் படம் எடுக்க ஒரு போட்டோகிராப்பராகத் தன் நண்பன் சூரியாவுடன் அந்த மலைப் பிரதேசத்துக்கு வந்தவன் தான் ஏ.கே.

தன் கணவனின் ஆசைப் படி எப்போதோ கணவன் தனக்கு ஆண் குழந்தை பிறந்தால் இரு நாட்டு பெயரையும் சேர்த்து அஷ்வத் கென்டிரிக் வைக்க இருந்ததை ஞாபகம் வைத்து கரோலின் தன் மகனுக்கு அஷ்வத் கென்டிரிக் என்றே பெயர் வைக்க என்ன தான் கணவனுக்காக வைத்தாலும் கரோலின் மகனை ஏ.கே என்றே அழைத்து வர தன் தந்தை தமிழர் என்று தெரிந்தாலும் தன் தாயிடம் மேற்கொண்டு எதையும் அவன் கேட்காமல் விட்டு விட அதனால் அவனைச் சுற்றி இருப்பவர்களும் அவனை ஏ.கே என்றே அழைத்து வந்தனர்.

ஏ .கேவும் சூர்யாவும் அந்த ஊர் தலைவரைப் பார்க்க அவர் வீட்டுக்குப் போக அங்கு அவர் இல்லாததால் அவர் மனைவி அவர் வீட்டில் வேலை செய்யும் செங்கோடனிடம் அவர் இருக்கும் இடத்திற்கு இருவரையும் அழைத்துச் செல்லச் சொல்ல, அழைத்துச் சென்றவன் எங்கு சென்றும் அவரைக் காணாமல் தேடியவன் கண்ணில் வேறொன்று தென்பட்டது.

ஓர் இடத்தில் குளக்கரையில் வண்டி மாட்டை இரட்டை ஜடை பின்னல் போட்டு முடியின் நுனியில் ரிப்பன் கட்டி ஆண்கள் அணியும் மேல் சட்டையைப் போட்டிருந்தவளோ கணுக்கால் வரை அணிந்திருந்த பாவாடையைத் தண்ணீரில் நின்றிருந்ததால் இன்னும் தூக்கி முட்டி தெரிய சொறுகி இருக்க தன் வலது புற தோளில் தவழ்ந்த ஜடையை வலது கையால் பின்னுக்குத் தூக்கிப் போட்டவள் அதே கையில் பிடித்திருந்த வைக்கோலைக் குனிந்து ஆற்று நீரில் நனைத்து வண்டி மாட்டின் முதுகைத் தேய்க்க அவள் குனிந்து நிமிர்ந்து மாட்டைத் தேய்த்துக் கழுவும் அழகையும் கூடவே அவள் முன்னழகையும் பின்னழகையும் அடிக்கு ஒரு முறை முட்டிக்கு மேலும் கீழும் ஏறி இறங்கும் அவள் பாவாடையையும் கணுக்காலையும் செங்கோடன் வாய் திறந்து அவளை ஒரு வித விரசப் பார்வையுடன் ரசிக்க

“என்ன செங்கோடா.. இவங்க ரெண்டு பேரும் யாரு?” என்று யாரோ கேட்ட கேள்வியில் தெளிந்தவன் அவருக்குப் பதிலைத் தந்து விட்டு அங்கு மாடு தேய்ப்பவளைச் சீண்டி பார்க்கும் எண்ணம் எழ அவளிடம்

“ஏலே கருப்பி! நம்ம வீரபாண்டி ஐயா எங்கவே இருக்காரு?” என்று அவன் கத்திக் கேட்க, அவளோ மவுனமாக இருக்கவும் அதில் கோபமுற்றவன்

“அடி ஏய் கரி உருண்ட.. உன்னைத் தான் டி கேட்கேறேன்” என்று இவன் மறுபடியும் ஏலம் இடும் குரலில் கேட்க அவளிடம் மறுபடியும் மவுனம் மட்டுமே. தன்னை நிமிர்ந்து கூட பார்க்காமல் தன் பாட்டுக்கு வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்தவனின் முகத்தில் கோபம் ஏற அவன் மறுபடியும் வாயைத் திறக்கும் நேரம் அந்தக் குளக்கரையிலே சற்றுத் தூரமாக இருந்த அந்த ஊர் பெண்ணொருத்தி

“ஏலே கருங்குழலி! உன் மாமன் எவ்வளவு நேரமா உன் கிட்ட பெரிய ஐயா எங்கனு கேட்டுட்டு இருக்கான்.. நீ என்ன பதிலே சொல்லாம இருக்க?” என்று கேட்க

“இப்போ நீங்க என்னை என்னனு க்கா கூப்பிட்டீங்க?” என்று கேட்டவள் மாட்டைத் தேய்க்கும் வேலையில் மும்முரமாய் இருக்க

“இதென்ன கேள்வி? கருங்குழலி தான்!” என்று அவள் பதில் சொல்லவும் 

“அப்ப என் பெயர் கருங்குழலி தானே? யாரோ ஒரு கருப்பி கிட்ட கேட்டா நான் எப்படி க்கா பதில் சொல்வேன்?” என்றவள் அவனுக்கு இப்போதும் பதில் சொல்லாமல் அவள் தன் வேலையைப் பார்க்க

“அவ கிடக்கறா விடுங்க க்கா. நம்ம ஊர் ரோட்டுக்குத் தாரே வேணாம். இவ கிட்ட இருக்கிற கருப்பச் சுரண்டி எடுத்தாலே போதும் ரோட்டுக்குத் தார் ஊத்திடலாம். கூடவே இவளை வெச்சி ரோடு மேலே ரெண்டு உருட்டு உருட்டினா போதும் நம்ம ஊரு ரோட்டுல இருக்கிற மேடு பள்ளம் எல்லாம் சரியாகிடும். அப்படிப் பட்ட இவ பேசுற பேச்சையும் அடிக்கிற வாயையும் பாருங்க” என்று அவளைச் சீண்டல் என்ற பெயரில் கேவலப் படுத்தியவன் “எல்லாத்துக்கும் மேலே இந்த கரி உருண்டையோட மாமன்காரனான நான் வம்பிழுக்காம வேற யார் வம்பு இழுப்பாங்களாம்?” என்று உள்ளே புகைந்தாலும் வெளியே சிரித்துக் கொண்டே அவன் பதில் தர

“ஆமா.. இவருக்கு வெள்ளை வெளுனு மின்னுர வெளுத்தத் தோளு பாரு.. என்ன சொல்ல வந்துடாரு! ஆப்ப சட்டியக் கவுத்துப் போட்ட நிறமா இது இருந்துட்டுப் பேச்சப் பாரு” என்று அவனுக்குக் கேட்கும்படியே வாய் விட்டுக் குழலி முனுங்க, அதே நேரம் ஆற்றில் இலை தழையுடன் கூடிய கொடி ஒன்று வர அதை அவள் கழுவும் வண்டி மாடு எக்கித் தின்பதற்காக முன்னே ஓர் எட்டு வைத்து நகரப் பார்க்கவும் அதன் மூக்கணாங் கயிற்றை இறுக்கிப் பிடித்தவளோ

“அடி செருப்பால.. இந்த எடுபட்ட காளைக்குத் திமிரப் பாரு. இவ பசு மாட்ட மேய்க்கிறவ தானே ஆனா நாம காளை மாடு தானே என்ற அடங்காத் தனத்த நீ அடிக்கடி என் கிட்ட காட்டுற. நான் ஒரு நாள் போல ஒரு நாள் இருக்க மாட்டேன். என்னைக்கு உன் கால் ரெண்டையும் உடைத்து உன்னை உட்கார வைக்கப் போறேனு தெரியல” என்று மாட்டைச் சாடுவது போல் அவள் தன் மாமனைச் சாட, அவள் தன்னைத் தான் சாடுகிறாள் என்பதை அறிந்தவனோ பல்லைக் கடித்த படி விலக

இவ்வளவு நேரம் அவனை நிமிர்ந்து பார்க்காமல் தன் வேளையில் இருந்தவள் இப்போது அவன் முகம் போகும் போக்கைப் பார்க்க எண்ணி மாட்டின் முகத்தருகே வந்து நிமிர்ந்து பார்க்க முகம் முழுக்க மறைய அவள் விழிகள் மட்டும் கொம்பு வழியே தெரிய அவள் பார்க்கவும் அதே நேரம் இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது தெரியாமலே எதேச்சையாக ஏ.கே அவள் இருந்த இடத்தைப் பார்க்க அவனுக்குத் தெரிந்தது அவள் விழிகள் மட்டுமே தான். ஆனால் அவளோ கூட இருந்தவர்களைப் பார்க்காமல் தன் மாமனை மட்டும் தான் பார்த்தாள்.

பின் தன் வேலைகளை முடித்துக் கொண்டு தலையில் புல்லுக்கட்டுடன் மாலை நான்கு மணிக்குத் தன் குடிசைக்கு வந்தவள் அங்கு தன் பாட்டி கூன் விழுந்த முதுகுடன் புழக்கடையைப் பெருக்குவதைப் பார்த்தவள் தன் தலையில் இருந்ததை ஒரு ஓரமாக கீழே போட்டுவிட்டு 

“ஏன் ஆத்தா உனக்கு எத்தனை தடவை சொல்லுறது? நீ எந்த வேலையும் செய்யாத நான் வந்து எல்லா வேலையையும் பார்த்துக்கிறேனு. போ போய் ஒரு இடமா உட்காரு. நான் இதை சுத்தம் செய்றேன்” என்றவள் அவரிடமிருந்து துடைப்பத்தை வாங்கித் தோட்டத்தைக் கூட்டியவள் பின் மாட்டைத் தொழுவத்திலும் ஆடுகளைப் பட்டியிலும் கட்டியவள் கோழிகளை அதன் கூட்டில் அடைத்து விட்டு மலைக் குவியல் என இருந்த சாணக் குவியலில் இருந்து இரண்டு கை சாணத்தை எடுத்து அந்த நேரத்திலும் வரட்டி தட்டியவள்

பின் தலை ஒதுக்கி முன்பு மாதிரியே இரட்டை ஜடை பின்னலில் ரிப்பன் கட்டியவள் கைகால் முகம் கழுவி பொட்டிட்டு மழைக்கு நனையாமல் இருக்க தார் பாய்க்குள் அடைத்து வைத்திருந்த காய்ந்த வரட்டி இரண்டை எடுத்து அடுப்பு மூட்டி களி கிண்டி அதற்குத் தோதாக மொச்சைக் கொட்டை காய் போட்டு குழம்பு வைத்தவள் எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு திண்ணையில் இருக்கும் தன் பாட்டியிடம் வர, அவரோ தன் பேத்தி வந்ததில் இருந்து அவளைத் தான் வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க

“என்ன ஆத்தா இன்னைக்கு என்னைய புதுசா பார்க்கற மாதிரியே பார்க்கற?” என்று கேட்க ஒன்றும் இல்லை என்பது போல் அவரிடம் இருந்து சிறு தலை அசைப்பு மட்டுமே பதிலாக வந்தது.

“சரி சரி.. நான் எல்லா வேலையும் முடிச்சிட்டேன். நீ எதுவும் செய்யாத. அதே மாதிரி புழக்கடை பக்கம் நீ போறதா இருந்தா சிமிழ் விளக்க எடுத்துப் போ ஆத்தா. நீ பாட்டுக்கு போயிடாதே” என்றவள் “நான் இப்போ போனா தான் வேலை முடிச்சி வீரபாண்டி ஐயா வீட்டுல இருந்து திரும்ப வர முடியும். அதனால நான் கிளம்புறேன் ஆத்தா” என்று அவள் ஓர் எட்டு வைக்கவும்

“நீ இனி வேலைக்குப் போக வேணா தாயி!” என்று அவர் வாய் திறந்து தடுக்கவும் 

“எனக்கு மட்டும் இஷ்டமா ஆத்தா? அந்த மச்சி வீட்டு அம்மா பேசுற பேச்சு எதுவும் எனக்கும் தான் பிடிக்கல. என்ன செய்ய? குழந்தை இல்லாத நம்ம வீரபாண்டி ஐயா என்னைய அவர் சொந்தப் பொண்ணா பார்த்துப் பாசத்தைக் காட்டும் போது நான் எப்படி வேலைக்குப் போகாம இருக்க சொல்லு? ஆமாம்.. நீ ஏன் போக வேணானு சொல்லுற?” என்று கருங்குழலி கேட்க

“உன்னைய பகல்ல வேலைக்குப் போக வேணாம்னு நான் சொல்லல. இப்படி அந்தி சாய்ந்த நேரத்துல வேலைக்குப் போய் இருட்டின பிறகு காட்டு வழியா நீ திரும்ப குடிசைக்கு வர்றதுக்குள்ள நான் வயித்துல நெருப்பைக் கட்டிகிட்டுல்ல இருக்கேன்?” என்று அவர் பதில் தர 

“என்ன ஆத்தா நீ.. வர்ற வழில இருக்க காட்டு மிருகங்களுக்கா நீ பயப்படுற? சின்ன வயசுல இருந்து இங்கே வளர்ந்த எனக்கு எது எங்க எப்படி வரும்னு தெரியாதா? அதை எல்லாம் நான் பார்த்துக்கிறேன் நீ பயப்படாத” என்று தைரியம் சொல்ல

“நான் காட்டு மிருகத்துக்கா பயப்படறேன்? எல்லாம் இந்த மனுச மிருகங்களுக்குத் தான் பயப்படறேன்” என்று அவர் கலக்கமாகச் சொல்லவும், அவரைச் சற்று நேரம் உற்றுப் பார்த்தவள்

“யாரு அந்த செங்கோடனச் சொல்றியா? நீ பயப்படற அளவுக்கு அவனெல்லாம் ஒரு ஆளா?” என்று பயமின்றி இவள் கேட்கவும்

“வாய் மேலே ரெண்டு போடுவேன். அப்பன் ஆத்தா இல்லாத பொண்ணுனு உன்னைய உன் இஷ்டத்துக்குச் செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பா போச்சு. கொஞ்சம் கூட மட்டு மருவாதை இல்லாம உன்னைய விட பதினஞ்சி வயசுப் பெரியவன அவன் இவன்னா சொல்லுறது? இதில்லாம அவன் உன் மாமன்! நாளைக்கு உன்னைய கட்டிக்கப் போறவன். பார்த்துப் பவிசா நடந்துக்க. அவன் ஆத்தா கேட்டா உன்னை ஆய்ஞ்சிபுடுவா ஆய்ஞ்சி சொல்லிட்டேன்..

நீ ஏதோ வாய் துடுக்கா அவன் கிட்ட வம்பு பண்றேனு இத்தனை நாள் நான் நினைச்சிட்டு இருந்தா இன்னைக்கு என்னமோ அவனைக் கேவலமா பேசுனியாமே? அவன் இங்குட்டு வந்து உன் பேத்திய அடங்கி இருக்க சொல்லு பிறகு கோபம் வந்து நான் ஏதாவது செய்திடப் போறேனு மிரட்டிட்டுப் போறான். பத்தாததுக்கு இப்படி எல்லாம் இவ இருந்தா என் ஆத்தா இவள மருமகளா ஏத்துக்காதுனு வேற சொல்லிட்டுப் போறான். இந்த பேச்சு எல்லாம் நமக்குத் தேவையா சொல்லு?

“யாரு?.. அரசாங்கத்துக்கு எதிரா மரத்த வெட்டி திருட்டுத்தனம் பண்ற இந்த காடு வெட்டி கருவாயன, ஊர்ல இருக்கற பொண்ணுங்கள எல்லாம் பொண்டாட்டியா நெனச்சிப் படுக்கைக்குக் கூப்பிடற இந்தப் பொம்பளப் பொறுக்கிய நான் கட்டிக்கணுமா? இதுக்கு அவன் ஆத்தா வேற சம்மதிக்காதாமா? அதுக்கு வேற ஆள பார்க்கச் சொல்லு அந்த கிழவிகிட்ட.

உனக்கு நான் முன்னமே சொல்லிட்டேன் ஆத்தா. இப்பவும் சொல்லுறேன், அந்த செங்கோடனை நான் கட்டிக்க மாட்டேன்! கட்டிக்க மாட்டேன்!” என்று உறுதிபடக் கூறியவள் “சீக்கிரம் விரசா வந்திடுறேன்” என்ற சொல்லுடன் முன்னே நடக்க ஆரம்பித்தாள் கருங்குழலி.

அழகான வட்ட முகம். ஆனால் சற்றே கருத்த நிறம் தான்! அது கூட காடு மேடு எல்லாம் வெயிலில் சுற்றியதில் இன்னும் அடர்ந்த கருப்பாக அவர் பேத்தியைக் காட்டியது. பதினாலு வயதுக் குழந்தை இவள். ஆனால் அப்படி ஒரு குழந்தைத் தனம் துளியும் முகத்திலும் அவள் பேச்சிலும் இருக்காது. இதை எல்லாம் விட அவள் வயதையும் மீறி பதினெட்டு பத்தொன்பது வயதுப் பெண் என்று காட்டும் இவளுடைய உடல்வாகு. சற்றே பூசினாற் போல் இருப்பதால் செங்கோடனை விட குள்ளமாகத் தெரிவதால் தான் அவனுக்கு இவளைப் பிடித்து விட்டதோ?

“ஏற்கனவே கல்யாணம் வேணாம் என்பவள் இன்னும் செங்கோடனின் தாய் கேட்கும் சீர்வரிசைகளைச் சொன்னால் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாளே இவள்!

செங்கோடன் என்னமோ சமூகவிரோதமா நடந்துக்கறான் குடிக்கறான் கூத்தடிக்கறானு இவ சொல்றாளே, இவ தாத்தாவுக்கு நான் எத்தனையாவது பொண்டாட்டினு இவளுக்குத் தெரியுமா இல்ல அந்த ஆள் அடிக்காத கூத்தா?

வாய் பேசத் தெரியாத இவ அம்மா எங்களுக்கு மகளா பொறந்ததுக்கு ஊமச்சி போய் நமக்கு மகளா பொறந்திடுச்சேனு அந்த ஆள் எனக்கும் அந்த பொண்ணுக்கும் எவ்வளவு கஷ்டம் குடுத்தான்?

அவ வாழ்க்கையிலும் ஒரு நல்லவன் வந்தான்! அந்த வாழ்வாது உன் அம்மாவுக்கு கடைசி வரை நெலச்சிதா? வயித்துல இவ இருந்தப்போ குறைப் பிரசவத்திலே இவ பிறக்கும் போது அவ உயிரையே விட்டுட்டா. அதே நேரம் காட்டுல எரியுற தீயில மத்தவங்கள காப்பாத்தப் போய் அன்னைக்கே இவ அப்பனும் போய் சேர்ந்துட்டான்.

இப்படி பொறந்ததுல இருந்து யாரும் இல்லாம இருக்குறாளேனு இவளுக்குச் செல்லம் காட்டி இவ ஆத்தா பேசாத பேச்சை எல்லாம் இவ பேசறாளேனு நெனச்சி அன்னைக்கு உச்சி குளிர்ந்து சந்தோஷப்பட்டது தப்பா போச்சி. இன்னைக்கு இந்த வாய் தான் இவ வாழ்க்கைக்கு எதிராப் போகுமோ தெரியல?!

வாய் மட்டுமா? கூடவே பிடிவாதம் இல்ல நெறஞ்சிருக்கு? நம்ம இனம் மாதிரி ரவிக்கை இல்லாம மேலாக்கா ஒரு துணிய மட்டும் இறுக்கி கட்டுடினா எங்க கேட்குறா? அது எல்லாம் முடியாது ஆம்பள புள்ள சட்டை தான் வேணும்னு சந்தையில இருந்து வாங்கி வந்து போட்டுகிட்டுத் திரியறா. அது மட்டுமா? என்ன மாதிரி காதுக்கும் மூக்குக்கும் வளையம் போடுடினா அதும் வேணானு சொல்றா.

அவ ஒத்துகிட்ட ஒரே விஷயம் காலுக்கு தண்டம் போடுறது தான். இப்படி எல்லா விஷயத்துக்கும் சம்மதிச்சி விட்டு கொடுத்த செங்கோடையனின் அம்மா அவ படிக்கட்டும்னு சொன்னதுக்கு மட்டும் விடவே இல்லையே! அதனால நானும் இவள படிக்க வேணாமுன்னு சொல்ல, ஒரு நாள் முழுக்க சாப்பிடாம இந்த புள்ள அழுத அழுகை கொஞ்சமா நஞ்சமா?

ஆனா அப்படி இருந்தும் மறுநாள் காலை விடிஞ்சதும் அவ என் கிட்ட வந்து சொன்னது இன்னும் நெனவுல இருக்கு. இப்ப என்ன ஆத்தா? படிப்பு தான் வாழ்க்கையா? படிச்சா தான் சாதிக்க முடியுமா? நான் விவசாயத்தக் கத்துகிட்டு அதுல ஏதாவது புதுசா கண்டு பிடிக்குறன். அதே மாதிரி இந்த காட்டை எல்லாம் ஆராய்ச்சி பண்ணுவாங்களாமே அதேபோல நானும் நம்ம காட்டையே ஆராய்ச்சி பண்ணிட்டுப் போறனு எவ்ளோ மிடுக்கா சொன்னா என் பேத்தி?! அவ தன்னம்பிக்கையைப் பார்த்து நானே வாயடச்சி இல்ல போய்ட்டேன்!

இதெல்லாம் அந்த வீரபாண்டி ஐயா கொடுக்கிற இடம். இப்படி இருக்கிற இவளுக்கு அந்த மகாதேவி தான் நல்ல புத்தியக் கொடுத்து நல்லது செய்யணும்” என்ற பிரார்த்தனையுடன் தன் வேலையைப் பார்க்கப் போனார் அவர். ஐயா வீட்டுக்குத் தாமதமாகப் போன கருங்குழலி தன் வேலைகளை முடித்துக் கொண்டு கிளம்ப

“ஏன் டி எடுபட்டவளே! உனக்கு வேலைக்கு வர இவ்வளவு நேரமா? உன் ஆத்தாவுக்கு தான் தினமும் எங்க வீட்டு சோறு வேணுமே? அதை வேலை முடிச்சிப் பொழுதோட வந்து எடுத்துப் போகணும்னு தெரியாது? நீ வர தாமசம் ஆச்சினு இப்போ தான் தொழுவத்துல இருக்குற கழனிப் பானையில போய் கொட்டுனன். அதுலயிருந்து மேலாக்கா எடுத்துகிட்டுப் போய் உன் ஆத்தாளுக்குக் குடு” என்று ஐயா மனைவி அவளை விரட்ட

அது எதற்கும் பதில் சொல்லாதவளாக உன் சோறு எனக்கு வேண்டாம் என்ற ரீதியில் அந்த இடத்தை விட்டு அகன்று இருந்தாள் குழலி.

அவள் போவதைப் பார்த்து “இவ்ளோ திமிர் ஆகாது டி உனக்கு. இதுக்கெல்லாம் நீ பின்னாடி பெரிசா படுவ டி” என்று ஐயா மனைவி சாபமிட, அதைக் காதில் வாங்கினாலும் சற்றும் நிற்காமல் நடந்தாள் குழலி.

இப்படியே நாட்கள் செல்ல இரண்டு நாட்கள் கழித்துக் குழலி ஒரு மாலை வேலையில் காட்டில் ஒரு மரத்தில் ஒரு கிளை மட்டும் சரிந்து போய் அதில் நிறைய தேன் அடைகள் இருக்க அதில் தேனை எடுக்கக் கீழே மண்ணில் நெருப்பு மூட்டியவள் ஒரு கணமான சாக்கை உடலில் சுற்றி கையிலும் தன் விழியைத் தவிர முகத்திலும் சற்று கணமான துணியை சுற்றியவள் கையில் தீ பந்தத்துடன் சற்று தூரவே இருந்து அந்தத் தேன் கூட்டைப் பார்த்து இருக்க 

அதே நேரம் ஏ.கே வோ கையில் கேமராவுடன் அவள் எதிர் திசையில் இருந்து தெரியாமல் தேன் கூட்டை நெருங்க, அவனைப் பார்த்தவளோ தன் கையிலிருந்த தீ பந்தத்தைத் தூக்கிக் காட்டி அவனைத் தூரப் போ என்று தன் வலது கையால் சமிக்ஞை செய்ய

சட்டென அந்த தீ பந்தம் வெளிச்சம் வரும் திசையைப் பார்த்தவனோ அவள் செய்கையால் என்ன சொல்கிறாள் என்பதை மறந்து போனவனாக அந்த தீ ஜுவாலையின் வெளிச்சத்தில் அவள் கண்ணில் மின்னி மறையும் ஒளியைப் பார்த்தவனோ இவள் என்ன வேற்றுக் கிரகத்திலிருந்து வந்த தேவதையோ என அவன் அவள் விழிகளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டு ஸ்தம்பித்துப் போய் அவன் இருக்க

அவன் எங்கும் நகராமல் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவளோ வேறு எங்காவது ஓடிப் போ என்று இதுவரை தன் செய்கையால் சொல்லிக் கொண்டிருந்ததை மாற்றி இங்கே என்னிடம் வா என்று அவள் அழைத்துத் தன் கையிலிருந்த தீ பந்தத்தை அவள் சற்று வேகமாக ஆட்டவும் அதில் தன் நிலை கலைந்தவனோ அவள் தன்னிடம் இங்கே வா என்று சைகையால் அழைப்பதை மட்டும் உணர்ந்து “ஹூ இஸ் திஸ் ஏஞ்சல்?” என்று வாய் விட்டு கேட்ட படி அவளிடம் அவன் நெருங்க

தன் முகத்திலிருந்த துணியின் வாய் பகுதியை மட்டும் ஒதுக்கி

“ஏய் ஏய்.. கொஞ்சம் விரசா வா” என்று கத்தியவளோ அவன் நெருங்கியதும் “என்ன மனுஷன் யா நீ? நல்லா மெத்த படிச்சிட்டு வெளிநாட்டுல இருந்து நீ வந்திருக்கறதால எங்க மொழி புரியாதுனு தான செய்கையிலேயே தூர போனு சொல்லுறன்? நீ என்னனா அப்பவும் மரம் மாதிரி நிக்கற!” என்றவள் அவள் மூட்டிய தீயால் தேனீக்கள் பறக்க ஆரம்பிக்கவும்

அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு காடு மேடு எல்லாம் ஓடியவளோ அவனுக்கு ஒரு இடத்தில் மரக்கிளை தட்டி விட அதில் கீழே விழுந்தவனோ கூடவே சேர்ந்து அவளையும் இழுத்துக் கொண்டு உருள, பிறகு யானையைப் பிடிப்பதற்காக வெட்டி வைத்த அகழியில் தான் இருவரும் சேர்ந்து போய் விழுந்தனர். விழுந்தும் அவள் கையை அவன் விடாமல் பிடித்திருக்கவும் தன் கையை அவன் பிடியிலிருந்து உதறியவளோ

“ஓஹோனானா.. நீ நான் வளர்க்குற செவ்வந்தி (பசு மாடு) கணக்கா நல்லா வெள்ளையா இருக்கியே எங்க அந்த தேனீக்கள் போடுற ஓட்டையில உன் உடம்புக்கு ஏதாவது வந்து நீ கஷ்டப் படப் போறனு இழுத்துட்டு வந்தா என் கையையா புடிக்கற?” என்று எழுந்து நின்று இவள் எகிறவும் இதுவரை அவளை ஒரு தேவதை என நினைத்து இருந்தவனோ இப்போது அவள் குரலில் இவள் தான் முதல் நாள் அன்று மாட்டுக் கொம்புகளுக்கு இடையில் பார்த்த விழிகளுக்குச் சொந்தக்காரி என்று உணர்ந்தவனோ அவள் முகத்தை முழுசாக பார்க்கும் ஆவலில் அவள் முகத்தையே மறுபடியும் மெய்மறந்து பார்த்திருக்க

“என்னையா உன் கிட்ட இதே ரோதனையா போகுது! எப்போ பாரு இப்படியே பார்த்து நிக்கற?” என்றவள் “ஆமா.. உன் கையிலிருந்த பொட்டி எங்க?” என்று கேட்டவள் “சரி சரி.. இங்க தான் எங்கனா காட்டுல இருக்கும். நான் நாளைக்குத் தேடித் தரேன்” என்று பதிலும் அவளே சொல்ல, ஆனால் அதையெல்லாம் அவன் உணரும் தருவாயிலோ இல்லை தன் காமராவைக் காணோம் என்று தேடும் தருவாயிலோ தான் அவன் இல்லையே!

பிறகு மேல எப்படி ஏறுவது என்று பல வழிகளைத் தேடிப் பார்த்தவள் எதுவும் கிடைக்காமல் போக அந்த பள்ளத்தின் விளிம்பில் ஒட்டினார் போல் ஒரு தடித்த மரக்கிளை ஒன்று தாழ்ந்து போய் இருக்க பள்ளத்திலிருந்து எகிறி இரண்டு மூன்று முறை அதைத் தொட நினைத்தவள் அது முடியாமல் போகவும் சோர்ந்து போய் அவனிடம் திரும்பியவள்

“என்னால எகிற முடியல. நீ எட்டி அந்த கிளையைக் கொஞ்சம் இழுத்தா நாம அதையே புடிச்சி சுலபமா ஏறி மேலே போய்டலாம்” என்று இவள் சொல்ல அவனுக்கே ஆச்சரியம் தான். பிறந்ததில் இருந்து தமிழ் மொழியே அறியாதவன் இப்போது தான் இரண்டு மூன்று வருடங்களாக சூர்யாவிடம் பழகி அவன் பேசும் தமிழைத் தான் அதிலும் செய்கையில் சொல்லிக் காட்டும் தமிழைத் தான் என்னவென்று உணர்ந்து இருக்கிறான். இன்று இவளும் அவனைப் போல் செய்கையால் சொல்வதைப் பார்த்து அவளை மெச்சியவனோ அவள் சொன்னபடி எட்டியும் அவன் உயரத்துக்குமே அந்த கிளையைப் பற்ற முடியவில்லை.

பிறகு சுற்றும் முற்றும் பார்த்தவனோ எதுவும் கிடைக்காமல் போக உடனே ஒரு யோசனை தோன்ற தன் வலது கால் முட்டி மண்ணில் பட மடித்து வைத்தவனோ பின் தன் இடது கால் பாதமோ மண்ணில் புதைய அமர்ந்தவனோ அவளை தன் தொடை மீது ஏறி நின்று அந்த கிளையைப் பற்றச் சொல்லி செய்கையால் அவளிடம் சொல்ல

அவன் சொன்னதை உணர்ந்தவளோ தன் விழிகளை அகல விரித்துப் பேய் முழி முழிக்க அகழி போல் விரியும் அவள் விழிகளில் விழுந்தவனோ தன் கண்ணாலேயே ஏறு என்று சொல்ல, இவன் சொன்னதை வேறு யாராவது சொல்லி இருந்தால் இந்நேரம் அடித்து உதைத்து துவம்சம் பண்ணி இருப்பாள் குழலி. சொன்னது ஏ. கே என்பதாலும் அவனின் நோக்கம் வேறு என்பதாலும் இருட்டி விட்டதால் இங்கிருந்து தப்பிப் போனால் போதும் என்று நினைத்தவள் அவன் சொன்ன மாதிரியே அவன் தொடையில் கால் வைத்து ஏற அப்போதும் அந்த குள்ளச்சிக்கு அந்த கிளை எட்டவில்லை.

அதை கீழிருந்து அறிந்தவனோ அவளின் அனுமதி கேட்காமலே சற்றென அவளை இறுக்கிப் பிடித்த படி எழுந்தவனோ அவளைத் தன் நெஞ்சுக்கு மேலே தூக்கி இருக்க அதில் விதிர்விதிர்த்தவளோ மேற்கொண்டு எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்த கிளையைப் பற்றி ஏறியவள் பின் தன் கால்களை அந்தரத்தில் தொங்க விட்ட படி அவள் சரிய இருக்கவும் உடனே அவளிடம் நெருங்கி அவள் வலது பாதத்தை எடுத்து தன் தோளில் வைத்தவனோ ம் மேலே ஏறு என்று சைகை செய்ய சட்டன ஏறி மேலே வந்தாள் குழலி.

ஏறியவள் ஓடிச் சென்று ஒரு கோவில் மரத்தில் கட்டியிருந்த இரண்டு புடவைகளை மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க எடுத்து வந்தவள் அதில் ஒரு முனையை மரத்தில் கட்டி விட்டு மற்றொரு முனையை அவனுக்குக் கீழே போட அதை அவன் பற்றி ஏறி வரவும் அவன் வலு ஏறிய கைகளையே பார்த்தவள்

“பார்க்க தான் யா நீ மண் புழு கனக்கா இருக்க. ஆனா உள்ள என்னமோ சும்மா எங்க ஊர் ஐயனார் கனக்கா இருக்கையா!” என்று அவள் வியக்க 

“ஐயனார்!” என்று அவன் புருவம் உயர்த்த

“அது.. பெரிய கண்ணு, கையில அருவா, பெரிய மீசை” என்று செய்கையில் செய்தவள் அந்த மீசை என்னும் போது மட்டும் அவன் உதட்டின் மேலே தொட்டுக் காட்டி தன் விரல்களால் அவனுக்கு மீசை போல் வரைந்து காட்ட அவனுக்கு அப்போதும் புரியவில்லை

“சரி வா” என்றவள் ஊர் எல்லையில் அவனை விட்டு விட்டுத் தன் குடிசைக்கு வந்தாள் குழலி. இதுவரையுமே அவள் தன் தலையிலும் முகத்திலும் கட்டியிருந்த துணியை விலக்கவே இல்லை.

தன் இருப்பிடம் வந்த ஏ.கே பிறகு தன் நண்பனைத் தூங்க விடாமல் ஐயனார் யார் என்று கேட்டு கூகுளில் தேடித் தெரிந்து கொண்டது வேறு விஷயம்.

அதே மாதிரி இன்னோர் முறை பகலில் அவன் கேமரா லென்ஸ் மூலம் இயற்கையைப் பார்த்து ரசித்து கருவேலங்காட்டின் வழியாக வர, அப்போது குழலியோ அங்கிருந்த சீமக் கருவேல மரத்தை வெட்டிக் கொண்டிருக்க அதைப் பின்புறமாக இருந்து தன் கேமராவில் பார்த்தவனோ யாரோ என்று அசட்டையாக கேமராவை விளக்கும் நேரம் கருங்குழலியோ முகத்தைத் திருப்ப அப்போது அவன் கேமராவில் விழுந்தது அவள் விழிகளே! அதைக் குளோசப்பில் பார்த்தவனோ பின் முழுமையாக அவள் முகத்தை சூம் செய்து இவன் பார்க்க அவனுக்குக் கிடைத்ததோ கிரகண நேரத்தில் அவன் பார்த்து ரசித்த கருப்புச் சூரியனை ஒத்த வட்ட முகம்..

Categories
Deepi On-Going Novels

அத்தியாயம் – 20

கல்கி-20

கல்லையும் கரைத்திடும் காரிகையின் கண்ணீர்… ஆனால் இங்கோ கல்கியின் கண்ணீர் கிருபாகரனை கரைத்திடாமல் கல்லுளிமங்கனாக இறுகச் செய்தது.

சில நிமிடங்களேக் கண்ணீரை வெளியிட்ட கல்கி அதுவே இழுக்கென்றெண்ணி தன்னுடைய கண்ணீரை மீண்டும் கண்களுக்குள் இழுத்து அணைத்துக் கொள்ள முயற்சி செய்ததை பார்த்த கிருபாகரன் “பாவ்க்ஸ் அந்தக் கண்ணீர் வெளியில வரட்டும்… கண்ணீர் விடுறது தப்பான விஷயம் ஒன்னும் இல்ல… எதுக்காக ஒவ்வொன்னையும் உனக்குள்ளேயே இறுக்கி வைக்கணும்னு நினைக்கிற?

கோபமோ,ஆத்திரமோ, சந்தோசமோ,துக்கமோ எதுவாயிருந்தாலும் அப்பப்ப வெளிய விட்டுடு.. உனக்குள்ள அடக்கி வைக்கிறது உன்னை மட்டும் தான் பாதிக்கும்…எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்க பழகு கல்கி”,என்று கூறியவன் அதுவரை அவளிடமிருந்து சற்று விலகி அமர்ந்து கொண்டிருந்தான்.

அவளது கண்ணீர் நிறுத்தும் முயற்சியில் தன்னைக் கட்டுப்படுத்த இயலாமல் அவளது அருகில் நெருங்கி அமர்ந்து அவளை தன்னுடைய நெஞ்சில் புதைத்துக் கொண்டான். கல்கியும் அதன் பின்னர் தன் கண்ணீரை நிறுத்த முயலவில்லை.அவளது மனதில் இத்தனை ஆண்டுகள் தேக்கி வைத்திருந்த நினைவுகளை நீராக வெளியிட்டுக் கொண்டிருந்தாள்.

அவள் அழுது கொண்டிருப்பதைப் பார்த்தவன் “பாவ்க்ஸ்! 24 மணி நேரத்தில் 0.75 கிராம்ல இருந்து 1.1 கிராம் வரைக்கும்தான் கண்ணீர் உற்பத்தியாகும் ஒரு மனுஷனுக்கு… நீ விடுற கண்ணீரை பார்த்தா உனக்கு மட்டும் அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகுதோ?”, என்று நக்கலாக அவளிடமே கேள்வியை எழுப்பினான்.

கிருபாகரன் கூறிய சமாதானங்கள், அவன் எழுப்பிய கிண்டல்கள் எதற்கும் பதில் கூறாமல் சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள். பின்னர் தானே தெளிந்து அமர்ந்தவள் “நீ பேசறதெல்லாம் கேக்குறப்ப சரியா இருக்கிற மாதிரி இருக்கு கிருபா! ஆனால் கொஞ்ச நேரத்திலேயே நீ உன்னோட பிசினஸ் டெக்னிக்ஸ் எல்லாம் யூஸ் பண்ணி என்னை பிரைன் வாஷ் பண்றியோ அப்படின்னு தோணுது…

உனக்கு என்னை எப்படி லவ் பண்ணனும்னு தோணுச்சுனு சொல்லு கிருபா!”, என்று அவனின் கண்களை பார்த்து கேட்டவளை என்ன செய்வது என்றே கிருபாகரனுக்கு புரியவில்லை.

கிருபாகரன் பதில் கூறாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை கண்ட கல்கி “இந்தக் கேள்விக்கு மட்டும் இல்லை கிருபா!நிறைய விஷயங்களுக்கு எனக்கு உன்கிட்ட இருந்து பதில் வேணும்… நான் சிங்கப்பூரில் இருந்தப்ப மறுநாள் பேப்பர் ப்ரஷன்டேஷன் போறதுக்கு முன்னாடி யாரும் விஷ் பண்ணலையேனு தோாணுனதை விட எனக்குன்னு விஷ் பண்றதுக்கு யாருமே இல்லையே அப்படின்னு யோசிச்சு கிட்டு இருந்தப்ப உன்கிட்ட இருந்து வந்த போன் எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு தெரியுமா?

ஆனா என்னோட மனசு அந்த சந்தோஷத்தை அனுபவிக்க விடாம ஏதோ ஒரு வகையில் குழப்பிக்கிட்டே இருந்துச்சு… இப்பவும் அப்படித்தான் இருக்கேன். உன்கிட்ட பேசுறப்ப ஒரு பாதுகாப்பா இருக்கு. உன்னோட பேசிகிட்டே இருக்கணும், உன் பக்கத்துல இருக்கணும், உன்னோட நெஞ்சுல சாஞ்சுகிட்டே இருக்கணும் அப்படியெல்லாம் தோணுது…

ஆனால் அதுக்கு அடுத்த நிமிஷமே ஒரு குழப்பம் என் மனச ஆக்கிரமிக்கிறது”, என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் பினாத்திக் கொண்டிருப்பவள் தன்னுடைய பதிலில் திருப்தி அடைய மாட்டாள் என்றே கிருபாகரனுக்கு தோன்றியது.

சிறிது நேரம் பொறுத்தவன் “கல்கி வாயை மூடு… எதுவும் பேசக்கூடாது”, என்று விட்டு அவளுக்கு இனிப்பாக எதையோ கலந்து கொண்டு வந்து தந்தான். குடித்து முடித்தவுடன் “என்னத்த கலந்து கொடுத்த கேவலமா இருக்கு டேஸ்ட்”, என்று பழைய கல்கி திரும்பியிருந்தாள்.

“ஒன்னுமில்ல தண்ணியில சர்க்கரையை மட்டும் போட்டுக் கொண்டு வந்தேன்…உனக்கு டேஸ்ட் தெரியுதான்னு தெரிஞ்சுக்க…நீ தெளிவாக இருக்கிறன்னு புரிஞ்சு போச்சு… இப்ப நான் பேசுறேன்”, என்று கிருபாகரன் கூறியதும் கல்கி தன் இரு கைகளையும் எடுத்து பெரிய கும்பிடு போட்டாள்.

“வேண்டாம் கரன் நீ அளவுக்கு அதிகமா பேசுற… ஓரளவுக்கு தெளிஞ்சி இருக்குற நான் நீ பேசுறத கேட்டா ரொம்ப குழம்பி போறேன்”, என கல்கிக் கூறியதில் “வாய் வாய் இந்த வாய் மட்டும் இல்லனா ஒன்னும் பண்ண முடியாது”, என்று அவன் அவளது அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டு மீண்டும் தன்னுடைய தோளில் சாய்த்துக்கொண்டான். இம்முறை கல்கியும் மறுப்பு ஏதும் கூறாமல் வாகாக சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

“கல்கி! என்கிட்ட எப்பவுமே உனக்கு எப்படி லவ் வந்துச்சுன்னு கேட்காத! அதே கேள்வியை நானும் உன்கிட்ட கேட்க மாட்டேன்… இப்ப அரேஞ்ச் மேரேஜ் பண்ணிகிட்டவங்களுக்கு எல்லாம் லவ் வந்து இருக்கானு கேட்டா 20 வருஷம் கழிச்சு கேட்டாலும் அவங்களால பதில் சொல்ல முடியாது…

சும்மா வாய் வார்த்தையா வேணும்னா நாங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் லவ் பண்றோம் அப்படின்னு சொல்லிக்கலாம்… லவ் அப்படிங்கறது ஒரு புரிதல் மட்டுமே! நீ என்ன செய்வ அப்படிங்கிறதை என்னால ஓரளவுக்கு புரிஞ்சுக்க முடியுது… அதேமாதிரி என்னோட மனநிலை ,என்னோட செயல்கள் எல்லாத்தையும் நீயும் புரிஞ்சுக்கிற…

இந்த புரிதல் நம்ம வாழ்க்கைக்கு ரொம்பவே முக்கியம். அது நம்ம ரெண்டு பேருக்குமே நிறைய இருக்கு… சோ கல்யாணத்துக்கு அடுத்து லவ் பண்றோமா இல்லையா அப்படிங்கறதை நம்ம மனசுல நாமலே கேட்டுக்கலாம்… உன்கிட்ட நானோ, என்கிட்ட நீயோ கேட்டு அது ஒரு விதண்டாவாதமாகவோ, விவாதமாகவோ கொண்டு போகக் கூடாது…

நம்ம கல்யாணத்தில நாம முக்கியமா முடிவு செய்ய வேண்டிய ஒரே ஒரு விஷயம் நீ உன்னோட கடந்தகால கசட உன்னோட கணுக்கால் அளவு கூட வச்சுக்க கூடாது… டெய்லி தலைசீவுறப்ப கொட்டுற முடியை தூக்கி குப்பையில் போடுற…

ஐயோ! இவ்வளவு முடி கொட்டிடுச்சு அப்படின்னு அந்த முடிக்காக வருத்தப்படுறது இல்லை தானே! அது மாதிரிதான் கடந்த காலமும்… உன்னை யாரு எதுக்காக,என்ன காரணத்துக்காக விட்டுட்டு போனாங்க அப்படிங்கிறதை எல்லாம் சுத்தமா மறந்துடு…

ஒரு பாதுகாப்பான இடத்தில் வளர்ந்து, படிச்சு இன்னிக்கி உன்னோட சுய கால்ல நிற்குற… இதைவிட உனக்கு பெருசா என்ன வேணும்? இன்னும் நீ உலகத்தை, வெளி உலகத்தை முக்கியமாக பார்க்க ஆரம்பிக்கலை… பார்க்குறப்ப நீ எந்த அளவுக்கு ஆசீர்வதிக்கப்பட்டவ அப்படிங்கிறது உனக்கு புரியும்…

இதோ என்னோட தோளுல நீ சாஞ்சுகிட்டு இருக்கிற இந்த நிமிஷத்தை நான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்… அதே மாதிரி வாழ முயற்சி பண்ணி பாரு… இதெல்லாம் என்னோட கருத்துக்கள்.. உனக்கு இருக்கிற குழப்ப கருத்துக்கள் மாறி உன்னோட மனசு தெளிஞ்சதுக்கு அப்புறம் கரன் உன்னோட வாழ்க்கைய சந்தோஷமா வச்சுப்பான் அப்படின்னு உனக்கு தோணுறப்ப நாம கல்யாணம் பண்ணிக்கலாம்…

அதுக்காக பல வருஷம் காத்துகிட்டு இருப்பேன் அப்படியெல்லாம் நான் சொல்ல மாட்டேன்… நீ இங்கேயே இருந்தா நீ சரிவர மாட்ட… உனக்கு சரியான ஆளு பிகே தான்…

பிகே பேரில் மட்டும் பிசாசு வச்சுக்கல… நிஜமான பிசாசு…அன்னிக்கு நான் மீட்டிங் லேட்டா வந்ததுக்கு காரணமே பிகே தான்…. மீட்டிங் வர்றதுக்கு ரெண்டு மணி நேரத்துக்கு என்னை வொய் ப்ளட் சேம் ப்ளட்(why blood same blood) ஆக்கி தான் கான்பரன்ஸ் ஹாலுக்கு அனுப்பினாங்க… அப்ப நான் வச்ச ஒரே ஒரு கோரிக்கை இங்க திட்டுறதோட நிறுத்திக்கோங்க… தயவுசெஞ்சு என்னோட பாவ்க்ஸ் முன்னாடி என்னை திட்டிடாதீங்க அப்படின்னு தான்… ஆனா அந்த இடத்தில உன் முன்னாடியே வந்து திட்டினாங்க… அதுதான் பிகே!

பிகே கிட்ட ஒரு ஒரு மாசம் இருந்தாலே அவங்க காட்டுற வழியில் நெகட்டிவ் தாட்ஸ் அப்படின்னா என்னதுனு கேட்கிற நிலைமைக்கு வந்துடுவ…நான் பிகே கிட்ட பேசுறேன். நீ ரெடியா இருந்துக்கோ! அம்மாவும்,அப்பாவும் இன்னும் ரெண்டு நாள்ல திரும்ப வந்துடுவாங்க…

வந்ததுக்கப்புறம் நாம எல்லாம் பேசி ஒரு முடிவு எடுக்கலாம்”, என்று அவளது தலையைத் தடவியவாறு கூறியவனை நிமிர்ந்து பார்த்தவள் அவனது கண்களில் என்ன கண்டாளோ அவன் கூறியதற்கு தன் தலையை அசைத்து சம்மதம் தெரிவித்தாள்.

அன்றைய மாலை வரை கல்கியை தன்னுடனேயே வைத்துக் கொண்டிருந்தவன் ஆறு மணிக்கு மேல் அவளை அழைத்துக் கொண்டு அன்று போல் இன்றும் தன்னுடைய விரல்களுடன் அவளது விரல்களைப் பிணைத்துக் கொண்டு கல்கியின் வீட்டை நோக்கி நடை பயின்றான்.

“உனக்கு தெரியுமா கல்கி? எனக்கு அம்மா கூட இப்படி கையைப் புடிச்சிட்டு நடக்கணும்னு சின்ன வயசுல ரொம்ப ஆசை… ஆனால் அம்மா அப்ப டைம் ஸ்பென்ட் பண்ண முடியல… என்னோட ஆசையை அப்பா என்ன சொல்லுவார் தெரியுமா?

எல்லாத்துக்கும் ஆசைப்படக்கூடாது கண்ணா… கிடைக்கிறதை ஏத்துக்கோ! டெய்லி உன் அம்மா கூட உன்னால வெளியில்தானே நடக்க முடியல! வீட்டுக்குள்ளே நடக்க முடியும் தானே! அம்மா கிச்சனுக்கு போறப்ப அவங்க கையை பிடிச்சுகட்டு போ… அம்மா கார்ல ஏற போறப்ப கையை பிடிச்சுகிட்டே போய் ஏத்திவிடு… அப்படின்னு ரொம்ப சிம்பிளா சொல்லிக் கொடுத்தார்.

அப்பதான் அம்மா படற கஷ்டம் எல்லாம் புரிஞ்சது… அவங்களுக்கு என்னோட டைம் ஸ்பென்ட் பண்ண முடியல அப்படிங்கிற வருத்தம் இருந்திருக்கும்… ஆனால் அதை வெளிக்காட்டிக்கலை… அன்னிக்கு நீங்க என்ன நடத்தி கூட்டிட்டு போகலைன்னு இன்னிக்கு நான் அவங்க கூட சண்டை போட முடியாது கல்கி!

இப்பவும் அம்மாவை விட அப்பா கிட்ட தான் எனக்கும் நெருக்கம் ஜாஸ்தி… ஆனா ரெண்டு பேரையும் என்னோட பிரண்ட்ஸ் மாதிரி தான் நினைச்சு பேசுவேன்… அவங்களும் அதே மாதிரி தான் எங்கிட்ட ரியாக்ட் பண்ணுவாங்க… இத்தனை நாள் நீ இருந்த இடம் என்னை பொறுத்த வரைக்கும் ஒரு பெரிய குடும்பம்…

அந்தப் பெரிய குடும்பத்திலிருந்து ஒரு சின்ன குடும்பத்துக்குள்ள நீ வரப் போற… பழக்கவழக்கங்கள் வேறுபடலாம் ஆனால் நீ உன்னோட சுயத்துடன் இருந்து மத்தவங்களோட சுயத்தையும் கொஞ்சூண்டு புரிஞ்சிக்கிட்டா போதும். நம்மளோட வாழ்க்கை அழகா மாறிடும் கல்கி!

அதுக்கு மட்டும் முயற்சி பண்ணு… நீ எனக்கு தண்ணீரில் விழுந்த தூசியால கலங்கி போய் இருந்ததை குடிக்க யோசிக்கிறேன்னு சொன்னியே அந்தக் கலங்கலான தண்ணியை வடிகட்டி குடிக்கிறதுக்கு எனக்கு ரொம்ப நேரமாகாது… ஆனா அந்த நிமிஷத்துல நீ அதை ஏத்துக்கிற மனநிலையில் இல்லை…அதனால் தான் பேசாம போனேன்…

ஏற்கனவே நான் உனக்கு ரொம்ப அட்வைஸ் பண்ணிட்டேன்… என்னோட கேரக்டருக்கு இது பொருந்தாத விஷயம். அது கேட்கிறது உனக்கும் பொருந்தாத விஷயம்.சோ இதுக்கு அடுத்து இதை பத்தி நாம பேச வேண்டாம்… நான் பாட்டி கிட்ட பேசுறேன்.

பேசுனதுக்கு அப்புறம் கொஞ்ச நாள் நீ பாட்டி கூட இருக்க முயற்சி பண்ணு… உன்னோட மனநிலையில் மாற்றங்கள் வரும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு”, என்று கூறிக்கொண்டே அவளது வீட்டினுள் நுழைந்தவன் “எனக்கு ஒரு டீ மட்டும் போட்டுக் கொண்டு வா… ரொம்ப தலை வலிக்குது”, என்று சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

அன்றைய நாளுக்கு பின் அனைத்தும் துரிதகதியில் நடைபெற்று கல்கியும் பிகே வசம் சென்று விட்டாள். இதில் கல்கி தன்னுடன் தங்கி கொள்ள வேண்டுமென்றால் கிருபாகரன் ஒரு சிறு நிபந்தனை லிஸ்ட்டை பின்பற்ற வேண்டும் என்று கிருபாவதி கூறியபொழுது மற்றவர்களின் முகத்தில் வியப்பே தோன்றியது.

என்னவென்று கேட்டவனுக்கு கல்கியுடன் போனில் கடலை வறுக்கக் கூடாது, அடிக்கடி தெட்ஃபோா்ட் வரக்கூடாது. அப்புறம் பிகேவை கேட்காமல் எந்தவித பரிசும் கல்கிக்கு வரக்கூடாது என்று கிருபாவதி நீட்டிய லிஸ்டில் கடுப்பான கிருபாகரன் நேராக கல்கியின் முன்சென்று

“இந்த ஓல்டி சொல்றதுக்கெல்லாம் நான் கேட்க மாட்டேன்… உனக்கு எப்பல்லாம் பாவா கிட்ட பேசணும்னு தோணுதோ அப்போ உடனே எனக்கு கூப்பிடு… போன்ல பேசுறது போர் அடிச்சா சொல்லு அடுத்த நாள் உன் முன்னாடி வந்து நிப்பேன்.

உனக்கு ஏதாவது வேணும் அப்படின்னா நீயா போய் வாங்காத!எனக்கு ஒரு போன் பண்ணு நான் வாங்கிட்டு வந்து கொடுக்கிறேன்”, என்றவன் அவர்கள் அனைவரின் முன்னாக அவளை கட்டியணைத்து “குட் லக் கல்கி!பிசாசு கிட்ட உனக்கு பிக்கல் பிடுங்கல் நிறைய இல்லாம இருக்குறதுக்கு தான் இந்த குட்லக்”, என்று கூறி விடை அளித்தான்.

பிகே உடன் வசிக்க ஆரம்பித்த சிறிது நாட்களிலேயே கல்கியின் எண்ணங்களில் சிறு அளவு மாற்றம் தோன்ற ஆரம்பித்திருந்தது. அதனை அவள் உணர்ந்தாளோ இல்லையோ சுற்றி இருந்தோர் நன்றாக உணர்ந்து கொண்டனர். ஆனால் கல்கியின் இம்மாற்றங்கள் கிருபாகரனுக்கு மற்றொரு பிகேவை நாமலே உருவாக்கிவிட்டோமோ என்ற எண்ணத்தை தோற்றுவித்தது.

அன்றைய நாளுக்கு பின் அனைத்தும் துரிதகதியில் நடைபெற்று கல்கியும் பிகே வசம் சென்று விட்டாள். இதில் கல்கி தன்னுடன் தங்கி கொள்ள வேண்டுமென்றால் கிருபாகரன் ஒரு சிறு நிபந்தனை லிஸ்ட்டை பின்பற்ற வேண்டும் என்று கிருபாவதி கூறியபொழுது மற்றவர்களின் முகத்தில் வியப்பே தோன்றியது.

என்னவென்று கேட்டவனுக்கு கல்கியுடன் போனில் கடலை வறுக்கக் கூடாது, அடிக்கடி தெட்ஃபோா்ட் வரக்கூடாது. அப்புறம் பிகேவை கேட்காமல் எந்தவித பரிசும் கல்கிக்கு வரக்கூடாது என்று கிருபாவதி நீட்டிய லிஸ்டில் கடுப்பான கிருபாகரன் நேராக கல்கியின் முன்சென்று

“இந்த ஓல்டி சொல்றதுக்கெல்லாம் நான் கேட்க மாட்டேன்… உனக்கு எப்பல்லாம் பாவா கிட்ட பேசணும்னு தோணுதோ அப்போ உடனே எனக்கு கூப்பிடு… போன்ல பேசுறது போர் அடிச்சா சொல்லு அடுத்த நாள் உன் முன்னாடி வந்து நிப்பேன்.

உனக்கு ஏதாவது வேணும் அப்படின்னா நீயா போய் வாங்காத!எனக்கு ஒரு போன் பண்ணு நான் வாங்கிட்டு வந்து கொடுக்கிறேன்”, என்றவன் அவர்கள் அனைவரின் முன்னாக அவளை கட்டியணைத்து “குட் லக் கல்கி!பிசாசு கிட்ட உனக்கு பிக்கல் பிடுங்கல் நிறைய இல்லாம இருக்குறதுக்கு தான் இந்த குட்லக்”, என்று கூறி விடை அளித்தான்.

பிகே உடன் வசிக்க ஆரம்பித்த சிறிது நாட்களிலேயே கல்கியின் எண்ணங்களில் சிறு அளவு மாற்றம் தோன்ற ஆரம்பித்திருந்தது. அதனை அவள் உணர்ந்தாளோ இல்லையோ சுற்றி இருந்தோர் நன்றாக உணர்ந்து கொண்டனர். ஆனால் கல்கியின் இம்மாற்றங்கள் கிருபாகரனுக்கு மற்றொரு பிகேவை நாமலே உருவாக்கிவிட்டோமோ என்ற எண்ணத்தை தோற்றுவித்தது.

கல்கி தெட்ஃபோா்ட் சென்று ஒரு வருடம் கடந்த நிலையில் அன்றைய தினத்தின் நள்ளிரவில் பிகே விடமிருந்து காயத்ரி,தயா இருவருக்கும் அழைப்பு வந்தது. நடு இரவில் வந்த அழைப்பில் பதறிப்போன இருவரும் என்னவென்று எழுந்து கேட்டிட “ஒழுங்கு மரியாதையா இவங்க ரெண்டு பேருக்கும் சீக்கிரமா கல்யாணம் பண்ணி வச்சு தொலைங்க… இதுங்க போடுற சண்டையை பார்த்து எனக்கு பிபி வந்துடும்”, என்று கத்தியவர் “சீக்கிரமா டேட் பிக்ஸ் பண்ணிடு தயா”, என்று மகனுக்கு ஆணையிட்டுவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

இது வழக்கமான ஒன்றுதான் என்பது போல் இருவரும் தூங்க சென்றனா். ஏனெனில் கிருபா இங்கிருந்து அங்கே செல்லும் பொழுது என்னோட பாவ்க்ஸ்க்கு ப என அனைத்தும் பார்த்து பார்த்து வாங்கிச் செல்வான். ஆனால் அங்கே சென்ற பின்னர் கல்கியும்,கிருபாகரனும் சிறு குழந்தைகளை விட மோசமாக அடிதடி சண்டையில் ஈடுபடுவார்கள்.

ஒவ்வொரு முறையும் அவர்கள் சண்டையிடும் பொழுது பிகேவுக்கு எரிச்சல் உச்சபட்சம் ஆகிவிடும்… அப்பொழுதெல்லாம் இவ்வாறுதான் அழைத்து மகனையும், மருமகளையும் காய்ச்சி எடுப்பார். அதனைப்பற்றி மறுநாள் பேச்சு இருக்காது.

ஆனால் இம்முறை மறுநாள் விடிந்ததும் மீண்டும் அழைத்தவர் “டேட் பிக்ஸ் பண்ணியாச்சா?”,என்ற கேள்வியை எழுப்பினார். அவரது குரலில் இருந்த அலுப்பே ஏதோ பெரிய விஷயமாக நடந்துள்ளது என்பதனை காயத்ரிக்கு உணர்த்தியது.

” என்னாச்சு அத்தை? ரெண்டு பேரும் இந்த தடவை சண்டை போட்டு கை உடைஞ்சிடுச்சா இல்லை கால் உடைஞ்சிடுச்சா” என்று தன்னுடைய மாமியாரிடம் மகன் மருமகளின் குணத்தைப்பற்றி பற்றி புரிந்தவராக கேட்டார்.

“நேத்து கிருபா வந்திருக்கான்னு சொல்லி அவனை பார்க்க வந்த என்னோட ஃப்ரெண்ட் எட்வர்ட் முன்னாடி ரெண்டு பேரும் தலைமுடியை பிச்சிக்கிட்டு சண்ட போடுறப்ப பக்கத்துல நின்னு வேடிக்கை பாத்துகிட்டு இருந்த எட்வா்டை கீழே தள்ளிவிட்டு அவனோட தலையில அடி பட்டுடிச்சி… அவன்கிட்ட கெஞ்சி கூத்தாடி இதை போலீஸ் கேஸ் ஆகாம பண்றதுக்குள்ள என்னோட உயிரே போய் வந்துருச்சு!

இதுக்கு மேல இதுகளை வச்சு சமாளிக்க என்னால முடியாது… சீக்கிரமா கல்யாணம் பண்ணி வச்சு அதுகளுக்குள்ள அடிச்சிக்கிறதை தள்ளி நின்னு வேடிக்கை பார்க்கலாமா”, என்று பிகே கூறியதும் அடுத்த அரைமணி நேரத்தில் அடுத்த ஒரு மாதத்தில் திருமணத்தை முடித்து விட முடிவு செய்தனர்.

இவர்கள் திருமணத்திற்கு முடிவு செய்த பின்னர் அங்கிருந்து கிளம்பி வரும் நேரத்தில் கிருபாகரன் “பாவ்க்ஸ் கல்யாணத்துக்கு அப்புறமும் நாம எப்பவும் இப்படியே இருக்கணும்… நம்மளை நம்மளோட கல்யாணம் தொலைஞ்சு போக வைக்க கூடாது”, என்று உணர்வுபூர்வமாக பேசிக் கொண்டிருப்பதை கேட்ட பிகே

“டேய் கொன்னுடுவேன்! மரியாதையைக் கிளம்பி போயிடு… அடுத்த வாரம் கொண்டு வந்து உன்னோட பாவ்க்ஸை ஒப்படைச்சுடுறேன்… ரெண்டும் பிள்ளைங்களா? பிசாசுங்க”, என்று அலறி அடித்துக் கொண்டு சென்றார்.

கல்கி சென்னை வந்ததும் அவளைக் கூட்டிக் கொண்டு அவளுக்குத் தேவையான உடைகள், நகைகள் வாங்குவதில் கிருபாகரன் அவளுடனேயே அலைந்து கொண்டிருந்தான் …பத்து மணி நேரம் உடனிருந்தால் ஒன்பது ஒன்பது மணி நேரம் இருவரும் வழக்காடி கொண்டுதான் இருந்தனர்.

ஆனால் மீதி இருந்த ஒரு மணி நேரத்தில் இருவரும் பொழிந்த அன்பு மழையில் மற்றவர்களின் மண்டை தான் காய்ந்தது.மற்றவர்களை முடியை பிய்த்துக் கொள்ள வைத்துவிட்டு தங்களது மணநாளை இருவரும் ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தனர். கல்கி எதிர்பார்த்ததோ மிகவும் சிறிய அளவிலான திருமணத்தை…

ஆனால் அவளின் எண்ணத்திற்கு மாறாக திருமணம் மிகவும் பிரமாண்டமான அளவில் அனைவரும் கூடி இருக்கச்செய்து நடைபெற்றது. கிருபாகரன் கூறியது போன்றே கல்கியின் மனதில் காதலை உணர்ந்து இருந்ததால் அவளது வாய்மொழியாக கூட கேட்காமல் மணமேடைக்கு தூக்கி சென்று தன் அருகிலேயே மிகவும் நெருக்கமாக அமர்த்திக் கொண்டான்.

மாங்கல்ய தாரணம் முடிந்த பின்னர் மீண்டும் இருவரும் தங்களது குணத்தை வெளியிட ஆரம்பித்துவிட்டனர். அதுவரை தன்னுடைய ஸ்டைலில் கலக்கிக் கொண்டிருந்த பிகே இவர்கள் ஆரம்பித்த அடுத்த நொடியில் “நான் கிளம்புகிறேன்”, என்று கிளம்பிவிட்டார். அனைத்து சடங்குகளும் நிறைவு பெற்ற பின்னர் மாலை வரவேற்பிலும் அனைவரது மனமும் மகிழும் வண்ணமாக இருவரும் காட்சியளித்தனர்.

அன்றைய முதல் இரவு சடங்கிற்காக கல்கியை தயார் செய்து அனுப்பிவிட்டு ஹாலில் காயத்ரி,ப்ரியா,கிருபாவதி மூவரும் கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தனர். அதனைக் கண்ட தயா என்னவென்று விசாரித்ததற்கு

“யாருடைய கை உடையுமோ? யாருடைய கால் உடையுமோ? அந்த பயத்தில் தான் நாங்க இங்க உட்கார்ந்து இருக்கும்”, என்று கிருபாவதி கூறியதில் சிரித்தவர் “போங்க! போய் படுத்து தூங்குங்க… அவங்க வாழ்க்கையை அவங்க பாத்துப்பாங்க…

கை உடைஞ்சாலும், கால் உடைஞ்சாலும் புருஷன் பொண்டாட்டி மாத்தி,மாத்தி பாத்துப்பாங்க…அதைப்பற்றி நாம கவலைப்படத் தேவையில்லை”, என்று அனைவரையும் தூங்க விரட்டிவிட்டார்.

இவர்களின் எண்ணத்திற்கேற்ப கல்கி உள்நுழைந்ததும் அங்கிருந்த டேபிளில் தன்னுடைய கையிலிருந்த பிளாஸ்கை வைத்துவிட்டு நிமிர்ந்த நொடியில் கிருபாகரன் தன்னுடைய காலினால் அவளுடைய காலை வாரி விட்டிருந்தான்.

கல்கி சுதாரித்து அருகில் இருந்த சுவரைப் பிடித்துக்கொண்டு நின்ற பொழுது “அன்னைக்கு உன் வீட்ல வச்சு இப்படித்தான வாரிவிட்ட…அன்னிக்கே உன் கழுத்தை திருகி இருக்கணும்னு நினைச்சேன்… ஆனா முடியல”, என்று மல்லுக்கு நின்றான்.

“நீ காலை வாரிவிட்டு நான் அமைதியா இருக்கவா?”, என்று அவன் மேல் பாய்ந்த கல்கி அவனது சிண்டை பிடித்து ஆட்ட ஆரம்பித்து இருந்தாள். இருவரின் சண்டையும் ஒரு கட்டத்தில் வாழ்வின் அடுத்த கட்டத்தை எய்தச் செய்திருந்தது.

மறுநாளைய விடியலில் இவர்களின் வரவை கலவரத்துடன் எதிர்நோக்கி இருந்தவர்கள் புன்னகை முகமாக கீழே இறங்கி வந்த இருவரையும் கண்டு உலக அதிசயமாக வியந்தனர். தன்னுடைய பாட்டியின் அருகில் வந்து அமர்ந்தவன் “பாட்டி நீங்க எதிர்பார்க்கிற அளவுக்கு பெரிய சீன் எல்லாம் இல்லை… கிருபாகரன் இப்ப கிருபாகரன் கல்கியா மாறிட்டான்”, என்று புன்னகையுடன் மொழிந்ததில் தன்னையே உளியால் செதுக்கி கொண்டவளின் உள்ளத்து புன்னகை உதடுகளில் உருவம் கொண்டு உடையவனை நோக்கி உதடு குவித்தது.

Categories
Deepi On-Going Novels

அத்தியாயம் – 19

கல்கி-19

பூர்ணச்சந்திரனும்,முழு நித்திரை கொண்ட நிலவும் ஒருங்கே அமைந்திடாவிடினும் குழப்பமும்,தெளிவும் ஒரே நேரத்தில் மானுடர்க்கு மட்டும் தோன்றிடும் விந்தை என்னவோ? என்ற தீவிர ஆராய்ச்சியில் கிருபாகரன் ஈடுபட்டிருந்தான்.

பின்னே மதியம் கல்கிக்கு அவன் கூறிய விசயங்களில் கல்கி தெளிவு பெற்றிருப்பாள் என்ற தெளிவும்,அவள் தன் கருத்தில் இருந்து இறங்கிடாமல் அவனின் கழுத்தில் கத்தியை வைத்து விடுவாளோ! என்ற குழப்பமும் கிருபாகரனுக்கு ஒருங்கே எழுந்ததில் தான் மேலே கூறிய ஆராய்ச்சியின் ஆரம்பம்.

ஆனால் இவனின் ஆராய்ச்சிக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் கல்கி தன்னுடைய தீசிஸ்க்கு தேவையான வேலையை மட்டுமே செய்து கொண்டிருந்தாள்.கிருபாகரன் வந்ததோ,அவன் பேசிவிட்டு சென்றதோ எதையும் மனதில் ஏற்றிக் கொள்ள விரும்பாமல் தன் மனதையும்,மூளையையும் ஒருநிலைப்படுத்தி சிறிதுநேரம் அமர்ந்தவள் அதற்குப் பின் தெளிந்தவளாக வேலையில் ஈடுபட ஆரம்பித்து விட்டாள்.

பசித்த பொழுது கிருபாகரன் செய்த சாப்பாட்டில் மீதமிருந்ததை சூடு செய்து உண்டதுடன் “நீ செஞ்ச சாப்பாடு ஆறிப் போனாலும் நல்லா தான் இருக்கு… ஆனால் புலாவ்க்கு தயிர் பச்சடியும்,கத்திரிக்காய் போட்ட கறியும் தான் சரியான காம்பினேஷன்.

அடுத்த தடவை செய்றப்ப அதையே செஞ்சிடு… பிஷ் மஞ்சூரியன் நல்லா இல்லை”, என்று கிருபாவிற்கு ஒரு மெசேஜையும் தட்டிவிட்டு அவனை மேலும் கடுப்பு ஆக்கினாள்.”மகிழ்ச்சி” என்ற பதிலை மட்டுமே அவளுக்கு தட்டியவன் தன்னுடைய நித்திரையை கண்டிடச் சென்றான். மறுநாளில் அலுவலகத்தில் இருவரும் சந்தித்துக் கொண்ட போதிலும் முந்திய நாளின் முணுமுணுப்பு சிறிதுமின்றி அப்பொழுதுதான் புதிதாக சந்திப்பவர்கள் போல் நடந்து கொண்டனர்.

அன்றைய நாள் மட்டுமின்றி அதற்கடுத்து வந்த ஒரு மாதமும் இருவரும் அவரவர் வேலையில் ஆழ்ந்திருந்தனர். தனித்திருந்து பேசிட துளிகள் கிட்டிடாவிடினும் அத்துளிகள் ஏற்படுத்திக் கொள்ள இருவரும் முயலவில்லை.

கல்கி தீசிஸ் சப்மிட் செய்ய வேண்டியது இருந்ததால் அதற்கு விடுமுறை எடுத்து இறுதி வைவாவும் முடிந்த பின்னர் தென்காசிக்கு சென்று பிரியாம்மாவையும் பார்த்துவிட்டு வந்தாள்.அவரும் கிருபாகரன் உடனான திருமணத்தைப் பற்றிக் கேட்டதற்கு பதில் ஏதும் கூறாமல் கிளம்பி வந்து இருந்தாள்.

கல்கி வந்த மறுநாளே கிருபாகரனிடம் சென்று “கிருபா நாளைக்கு நான் உன்னோட வீட்டுக்கு வரேன்… எனக்கு லன்ச்சுக்கு நண்டு கிரேவியும், இறால் வருவலும் செஞ்சு வை”, எனக் கூறிவிட்டு சென்றாள். மறுநாள் இவள் கிருபாவின் வீட்டிற்கு சென்ற பொழுது வீட்டில் அவனைத் தவிர வேறு யாருமில்லை.

அது உள்ளே சென்ற பின்னர்தான் கல்கிக்கு தெரிய வந்தது.”ஆன்ட்டி,அங்கிள் எங்கே?”, என்று கேட்டவளிடம் “அவங்க ரெண்டு பேரும் பாட்டியை பார்க்க போயிருக்காங்க”, என கிருபாகரன் நக்கல் இழையோட பதில் கூறினான்.”ஓ”, என அவள் காட்டிய உணர்வில் “அப்புறம் மேடம்! என்ன கற்பனை எல்லாம் களை கட்டுதா? தனியா இருக்கிற இவனை நம்பி வீட்டுக்குள்ள வந்துட்டோம்… ஏதாவது செஞ்சுடுவானோ அப்படில்லாம் யோசிப்பீங்களே!”, என கிருபாகரன் கேள்வி எழுப்பியதற்கு “சமைச்சு வெச்சதை டைனிங் டேபிளில் எடுத்து வை எனக்கு பசிக்குது”, என அவனுக்கு ஆணையிட்டாள்.

அவள் ஆணையிட்டதற்கு எவ்வித மறுமொழியும் கூறாமல் தானே ஒரு தட்டில் எடுத்து போட்டுக்கொண்டு வந்தவன் அன்று போலவே இன்றும் அவளுக்கு ஊட்டி விட்டான். அவள் போதும் என்று கூறிய பின்னரும் மேலும் சிறிது ஊட்டி விட்ட பின்னரே தான் சாப்பிட அமர்ந்தான்.

“எதுக்கு கரன் இவ்வளவு சாப்பாடு ஊட்டிவிட்ட? என்னால முடியல பாரு…”, என புலம்பியவளை “எப்பெல்லாம் நான் ஊட்டி விடுறேனோ அப்ப எல்லாம் நீ அளவுக்கு அதிகமா பேசுற… அதுக்கு நான் அதைவிட பத்து மடங்கு பதில் பேசுவேன்… அதை கேக்குறதுக்கு உனக்கு தெம்பு வேணும் தானே! அதான் அளவுக்கதிகமா ஊட்டி விட்டேன்”, என்று கூறியவன்

“இன்னிக்கு ஒழுங்கு மரியாதையா என்கூட வந்து கிச்சனை கிளீன் பண்ணி கொடு”, என்று அவளையும் இழுத்து சென்று கிளீனிங் வேலையை முடித்தான். இருவரும் வந்து அமர்ந்த பின்னர் “சொல்லு கல்கி! என்ன பேசணும்னு முடிவு எடுத்து என்னை பார்க்க வந்திருக்க?”,என கிருபாகரன் கேட்ட பின்னரும் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து இருந்தவள் “நீ அன்னிக்குப் அவ்வளவு பேசிட்டு வந்தியே கிருபா! நீ சொன்ன மாதிரி எத்தனையோ இருக்கலாம்தான்… ஆனால் அத்தனையும் என்னை மட்டும்தானே பாதிச்சது”, என்று கூறி நிறுத்தினாள்.

அவள் பேசி முடிக்கட்டும் என்று காத்திருந்த கிருபாகரன் அவள் கூறிய பாதிப்பு என்ற வார்த்தையில் “நீ எந்த வகையில் பாதிக்கப்பட்ட கல்கி?”, என வினா எழுப்பினான்.

“என்ன பாதிக்கப்படலைன்னு நீ நினைக்கிற கிருபா?ஹோம்ல இருந்து வர்றாங்கன்னு தெரிஞ்சாலே படிக்கிற இடத்தில் இருந்து, போற எல்லா இடத்திலேயும் இது எந்த முறையில் பிறந்துச்சோ? யாா்கிட்ட ஏமாந்து இவளோட அம்மா பெத்து போட்டுட்டு போனாளோ? இந்த மாதிரி டயலாக்ஸ் நீ சொன்னியே படிச்சி வளர்ந்து நல்ல நிலமைக்கு வந்தாலும் இன்னிக்கு வரைக்கும் கேட்க வேண்டியது தான் இருக்கு…

அது போக படிக்கிற படிப்பு எல்லாமே யாராவது ஸ்பான்சர் பண்ண மாட்டாங்களா அப்படினு எதிர்பார்க்கனும். எனக்கு ஆன்ட்டி ஸ்பான்சர் பண்ணினதால எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா என்கூட வளர்ந்தவங்க நிறைய பேர் என்ன படிக்கணும்னு கூட யோசிக்க விரும்ப மாட்டாங்க… ஏன் தெரியுமா?

ஸ்பான்சர் பண்றவங்க இவங்க இத மட்டும் தான் படிக்கணும் அப்படின்னு சொல்லுவாங்க.இல்லைனா படிச்சுக்கிட்டு இருக்கிறப்பவே பாதியில எங்க சூழ்நிலை சரியில்லை, எங்களால தொடர்ந்து ஸ்பான்சர் பண்ண முடியாதுன்னு சொல்லிடுவாங்க. அதுபோக யாரும் கேட்க மாட்டாங்க அப்படிங்கற தைாியத்துல எங்க போனாலும் செக்ஸுவல் ஹராஸ்மெண்ட் மத்தவங்களை விட எங்களுக்கு ஜாஸ்தியாக இருக்கும்…

பிரச்சினைக்கு வெளியே இருந்து பார்க்கிறவங்களுக்கு ரொம்ப ஈசியா இருக்கும் கிருபா… ஆனால் பிரச்சினைககுள்ள இருக்கிறவங்களுக்கு மட்டும் தான் அதோட வலியும்,வேதனையும் புரியும்… எனக்கு உன்னை பிடிச்சிருந்தாலும் உன் மேல ஒரு நம்பிக்கை வரல இந்த நிமிஷம் வரைக்கும்… ஒரு நேரம் உன்னை மட்டுமே நம்பனும் அப்படின்னு நினைக்கிற மனசு அடுத்த நிமிஷம் அதற்கு எதிர்மறையா யோசிக்குது…என்ன முடிவு எடுக்குறதுனு தெரியாம ஒரே குழப்பமா இருக்கு…

உன்னை முழுசா நம்புறேன்… என்னால உன்னோட வாழ்க்கையும் சந்தோசமா இருக்கும் அப்படிங்கிற நம்பிக்கை எனக்குள்ள வரணும்… அந்த நம்பிக்கை வராத வரைக்கும் என்னால ஒரு முடிவை உனக்கு சொல்ல முடியாது.இன்னிக்கு என்னை பத்திரமாப் பாத்துக்கற, ரொம்ப கேர் எடுத்து பார்த்துக்கற நீ நாளைக்கு பாதியில என்னை விட்டுட்டு போக மாட்டேன்னு என்ன நிச்சயம்… வாழ்க்கையில் அடிபட்டு வர்றவங்களுக்கு எல்லாத்துலயும் ஒரு சந்தேகம் இருந்துகிட்டே தான் இருக்கும்… யாரையும் நம்ப தோணாது… என்னை பொறுத்த வரைக்கும் என்னோட படிப்பும், வேலையும் மட்டும் தான் என்னோட நம்பிக்கையா இருந்திருக்கு…

ஆனாலும் உன் மேல கொஞ்சூண்டு லவ் இருக்கோ என்னமோ? யார் கிட்டயும் ஷேர் பண்ணாத என்னோட மன உணர்வுகளை உங்கிட்ட மட்டும் தான் சொல்லியிருக்கேன்… கத்தி,கத்தி போல வார்த்தைகள் இந்த ரெண்டுமே இல்லாம நான் பேசுற ஒரே ஆள் நீ மட்டும்தான் கிருபா!”, என்று கல்கிக் கூறியதில் அவளையுமறியாமல் அவளது குரல் அவளுள்ளத்துக் காதலை அக்கள்வனுக்கு உணர்த்தியது.

அவள் பேசி முடிக்கட்டும் என்று காத்திருந்த கிருபாகரன் அவள் கூறிய பாதிப்பு என்ற வார்த்தையில் “நீ எந்த வகையில் பாதிக்கப்பட்ட கல்கி?”, என வினா எழுப்பினான்.

“என்ன பாதிக்கப்படலைன்னு நீ நினைக்கிற கிருபா?ஹோம்ல இருந்து வர்றாங்கன்னு தெரிஞ்சாலே படிக்கிற இடத்தில் இருந்து, போற எல்லா இடத்திலேயும் இது எந்த முறையில் பிறந்துச்சோ? யாா்கிட்ட ஏமாந்து இவளோட அம்மா பெத்து போட்டுட்டு போனாளோ? இந்த மாதிரி டயலாக்ஸ் நீ சொன்னியே படிச்சி வளர்ந்து நல்ல நிலமைக்கு வந்தாலும் இன்னிக்கு வரைக்கும் கேட்க வேண்டியது தான் இருக்கு…

அது போக படிக்கிற படிப்பு எல்லாமே யாராவது ஸ்பான்சர் பண்ண மாட்டாங்களா அப்படினு எதிர்பார்க்கனும். எனக்கு ஆன்ட்டி ஸ்பான்சர் பண்ணினதால எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா என்கூட வளர்ந்தவங்க நிறைய பேர் என்ன படிக்கணும்னு கூட யோசிக்க விரும்ப மாட்டாங்க… ஏன் தெரியுமா?

ஸ்பான்சர் பண்றவங்க இவங்க இத மட்டும் தான் படிக்கணும் அப்படின்னு சொல்லுவாங்க.இல்லைனா படிச்சுக்கிட்டு இருக்கிறப்பவே பாதியில எங்க சூழ்நிலை சரியில்லை, எங்களால தொடர்ந்து ஸ்பான்சர் பண்ண முடியாதுன்னு சொல்லிடுவாங்க. அதுபோக யாரும் கேட்க மாட்டாங்க அப்படிங்கற தைாியத்துல எங்க போனாலும் செக்ஸுவல் ஹராஸ்மெண்ட் மத்தவங்களை விட எங்களுக்கு ஜாஸ்தியாக இருக்கும்…

பிரச்சினைக்கு வெளியே இருந்து பார்க்கிறவங்களுக்கு ரொம்ப ஈசியா இருக்கும் கிருபா… ஆனால் பிரச்சினைககுள்ள இருக்கிறவங்களுக்கு மட்டும் தான் அதோட வலியும்,வேதனையும் புரியும்… எனக்கு உன்னை பிடிச்சிருந்தாலும் உன் மேல ஒரு நம்பிக்கை வரல இந்த நிமிஷம் வரைக்கும்… ஒரு நேரம் உன்னை மட்டுமே நம்பனும் அப்படின்னு நினைக்கிற மனசு அடுத்த நிமிஷம் அதற்கு எதிர்மறையா யோசிக்குது…என்ன முடிவு எடுக்குறதுனு தெரியாம ஒரே குழப்பமா இருக்கு…

உன்னை முழுசா நம்புறேன்… என்னால உன்னோட வாழ்க்கையும் சந்தோசமா இருக்கும் அப்படிங்கிற நம்பிக்கை எனக்குள்ள வரணும்… அந்த நம்பிக்கை வராத வரைக்கும் என்னால ஒரு முடிவை உனக்கு சொல்ல முடியாது.இன்னிக்கு என்னை பத்திரமாப் பாத்துக்கற, ரொம்ப கேர் எடுத்து பார்த்துக்கற நீ நாளைக்கு பாதியில என்னை விட்டுட்டு போக மாட்டேன்னு என்ன நிச்சயம்… வாழ்க்கையில் அடிபட்டு வர்றவங்களுக்கு எல்லாத்துலயும் ஒரு சந்தேகம் இருந்துகிட்டே தான் இருக்கும்… யாரையும் நம்ப தோணாது… என்னை பொறுத்த வரைக்கும் என்னோட படிப்பும், வேலையும் மட்டும் தான் என்னோட நம்பிக்கையா இருந்திருக்கு…

ஆனாலும் உன் மேல கொஞ்சூண்டு லவ் இருக்கோ என்னமோ? யார் கிட்டயும் ஷேர் பண்ணாத என்னோட மன உணர்வுகளை உங்கிட்ட மட்டும் தான் சொல்லியிருக்கேன்… கத்தி,கத்தி போல வார்த்தைகள் இந்த ரெண்டுமே இல்லாம நான் பேசுற ஒரே ஆள் நீ மட்டும்தான் கிருபா!”, என்று கல்கிக் கூறியதில் அவளையுமறியாமல் அவளது குரல் அவளுள்ளத்துக் காதலை அக்கள்வனுக்கு உணர்த்தியது.

அவளது காதல் மகிழ்ச்சியளித்தாலும் அவள் கூறிய வார்த்தைகள் புறத்தோற்றத்தில் மிகவும் மெச்சூா்டாக நடந்து கொள்ளும் கல்கியா இவள் என்று எண்ண வைத்தது.

“நீ உன் மனசை விட்டு ஷேர் பண்ணிக்கிட்டதுல ரொம்ப சந்தோசம் கல்கி! ஆனா நீ சொன்ன பல விஷயங்கள்ல எனக்கு உடன்பாடு கிடையாது… சொல்லப்போனால் நீ எதாலையும் பாதிக்கப்படல… வெளி உலகத்தில் இருக்கிறதை விட ரொம்ப பாதுகாப்பா வளர்ந்து வந்திருக்கிற”, எனக் கிருபாகரன் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே “என்ன பாதுகாப்பு கிருபா? ஒவ்வொருத்தர் கிட்டயும் பட்ட அசிங்கம் தான் எனக்கு கிடைச்ச பாதுகாப்பு”, எனக் கல்கி கோபாவேசத்துடன் கத்தினாள்.

அவளது கோபத்தை உணர்ந்தவனாக அருகில் இருந்த தண்ணீரை எடுத்துக் கொடுத்தவன் “முதல்ல இதைக் குடி… நீ பேசுறப்ப எதுவும் தலையிடாம அமைதியா கேட்டுகிட்டு இருந்தேன் தானே! அதே மாதிரி இப்ப நான் பேசி முடிக்கிற வரைக்கும் உணர்ச்சிவசப்படாம கேளு…

அப்படி எல்லாம் முடியாதுன்னு ஏறுக்கு மாறாக பேசினா பல்லை தட்டிடுவேன்”, என்று கிருபாகரன் அவளை சற்று அதட்டலாகவே பேசி அமைதியடையச் செய்தான். “நான் திரும்பவும் அதையே தான் சொல்றேன் கல்கி! நீ ரொம்ப பாதுகாப்பா வளர்ந்து வந்திருக்கிற… பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க.. வார்த்தைகளுக்கு வடிவம் கிடையாது, ஆனால் வடுவாக மாறுற சக்தி இருக்கு அப்படின்னு… அதனால வார்த்தைகளை பார்த்துப் பேசணும் அப்படின்னு சொல்லுவாங்க.

யாரோ வடிவம் தெரியாத வடுவை மட்டும் தான் உனக்கு கொடுத்து இருக்காங்க… நீ சொன்னியே ஹோம்ல இருக்கறவங்க படுற கஷ்டம்னு, மும்பை கல்யாண் ஏரியால இருக்கிற பொண்ணுங்க படுற கஷ்டத்தை விடவா நீ சொன்ன கஷ்டம் எல்லாம் பெருசு? அங்கங்க பிஞ்சு குழந்தைகள் செக்ஸுவல் ஹராஸ்மெண்ட்ல டெய்லி செத்துகிட்டு இருக்காங்களே அதைவிடப் பெரிய கஷ்டத்தையா நீ அனுபவிச்சிட்ட?

இன்னிக்கும் வெளியில போனா ஒரு நேர சாப்பாட்டுக்கு வழியில்லாத குழந்தைங்க எத்தனை பேரு பிச்சை எடுக்கிறாங்கனு உனக்கு தெரியுமா? என் கூட வந்தா நானே காமிக்கிறேன்… இந்த மாதிரி எந்தவொரு கஷ்டத்தையும் நீ அனுபவிக்கவே இல்லாம பாதிக்கப்பட்டேன் அப்படிங்கற வார்த்தையை உபயோகப்படுத்தாத…

வாழ்க்கையை அதோட போக்கில் வாழனும் கல்கி! இதை உனக்கு நான் பலமுறை சொல்லிட்டேன். முதல் நாள் நீ இண்டர்வியூ அட்டெண்ட் பண்ண வந்தப்ப அப்பா என்னை கூப்பிட்டு சொன்னது கல்கிக்கு ஆண்கள் மேல ஏதோ வெறுப்பு இருக்கு… அதை வெளிய காட்டிக்காம நடந்துக்கிறா… பாா்க்குறதுக்கு சாதாரணமாக தெரிஞ்சாலும் ஆண்கள் நிறைய பேர் வேலை பாா்க்குற இடத்துல இது சரி வராது அப்படின்னு சொன்னாரு…

நான் அப்போ உன்னை லவ் பண்ணல… ஆனாலும் உன் மேல எனக்கு ஒரு நம்பிக்கை இருந்துச்சு.கொடுக்கிற வேலையை உன்னை விட பெர்ஃபெக்டா யாராலயும் செய்ய முடியாதுன்னு… உனக்கு என் மேல நம்பிக்கை வா்றதும், வராததும் உன்னோட மனசாட்சிக்கு சாதாரணமா இருக்கலாம்… நானும் என்னை முழுசா நம்பனும்னு எப்பவும் சொல்லவே இல்லை…

நான் ஒரு பெர்ஃபெக்ட் மனுசனா இருப்பேன்னு யாராலயும் உத்தரவாதம் தர முடியாது. உன்னைக் கல்யாணம் பண்ணிகிட்டாலும் டெய்லி நமக்குள்ள கருத்து வேறுபாடு வரலாம்,வராமலும் போகலாம். ஆனா நாம நேரடியா பேசி தீர்க்கிற விஷயங்கள்ல நம்மளோட அன்பு பெருகத்தான் செய்யுமே தவிர குறையாது…

அந்த நம்பிக்கையை உனக்கு என்னால நிரூபிக்க முடியாது. ஆனால் உணர்த்த முடியும். அந்த உணர்வை புரிஞ்சிக்கிறதுக்கு நீ எப்ப ரெடியா இருக்கியோ அப்ப உன்னை தூக்கிட்டு போயி மணமேடையில் உட்கார வச்சி தாலி கட்டுவேன்… உன்னோட சம்மதத்தை கூட எதிர்பார்க்க மாட்டேன்…

நாளைக்கு லஞ்சுக்கு வர்றேன்னு நேத்து எந்த நம்பிக்கையில நீ சொன்ன கல்கி? அடுத்த நிமிஷம் உயிர்வாழுவோமா அப்படின்னு யாருக்கும் தெரியாது… இப்ப இந்த நிமிஷம், இந்த செகண்ட் மட்டும்தான் உறுதியானது… உறுதியான அந்த நிமிஷத்தை நீ வாழ்ந்து பாரு… அதை விட்டுட்டு முடிஞ்சு போனதுக்கும்,வர போறதுக்கும் உன்னோட மூளையை கசக்கிக்கிட்டு இருக்காதே!

நீ ஆராய்ச்சி பண்ற மண்ணு இல்ல மனுசனோட மனசு… கல்லும்,மண்ணும் இல்லாம இரத்தமும்,நாளமும் சேர்ந்த இதயத்தில் வருவதுதான் காதல்!

என்னோட வாழ்க்கையே நீ தான் அப்படிங்கிற டயலாக் எல்லாம் நான் சொல்ல மாட்டேன்… உன்னோட சுதந்திரத்தில் தலையிட மாட்டேன் அப்படிங்கற வார்த்தையும் நான் யூஸ் பண்ண மாட்டேன். உன்னோட உரிமை ,உன்னுடைய லட்சியம் எல்லாமே உன் சம்பந்தப்பட்டது…

அதுக்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது… அதுக்கு என்னுடைய துணை தேவைன்னு நீ நினைக்கிற பட்சத்துல என்னோட முழு ஒத்துழைப்பும் உனக்கு இருக்கும்…எனக்கு உன்கிட்ட இருந்து ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் தேவை…

உன்னோட நெகட்டிவ் தாட்ஸ் எல்லாத்தையும் மண்ணோட மண்ணா புதைக்காம அதை எரிச்சுடு… உனக்கு நம்பிக்கை வருதோ வரலையோ அதை பத்தியெல்லாம் நினைக்காத… நீ கடந்து வந்தது,உனக்கு கஷ்டமா இருந்தது அப்படின்னு நீ நினைக்கிற எதோடையும் கம்பேர் பண்ணாத!

என்னோட பாவ்க்ஸ் எப்பவுமே எனக்கு ஃபீனிக்ஸ் தான்… பின்னாடி வர்ற காலத்துல நம்மளோட 10 குழந்தைகளுக்கும் என்னோட ஃபீனிக்ஸ் பத்தி தான் நான் டெய்லி பெட் டைம் ஸ்டோரி சொல்லுவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு”, என கிருபாகரன் பேசி முடித்த பொழுது கல்கி முதல்முறையாக கண்ணீர் சிந்த ஆரம்பித்திருந்தாள்.

கல்கியின் இக்கண்ணீர் கல்யாணத்தில் முடிந்திடுமா? இல்லை கிருபாகரனின் காதலை கல்லறை கட்டிடுமா?

Categories
Deepi On-Going Novels

அத்தியாயம் – 18

கல்கி-18

கண்ணுக்குத் தெரியாத காற்றாக நினைத்திட வேண்டிய கடந்தகால கசடுகள், கண்ணில் கண்டிடாத காட்சியாக இருந்தாலும் கருத்தில் காலூன்றி கல்வெட்டுகளாக நிலைத்து நிற்கும்…

அதுவே கல்கியின் நிலை என்று அவள் கூறிய ஒரு உவமானத்திலேயே கிருபாகரனுக்கு தெள்ளத் தெளிவாக புரிந்தது.ஆனால் இவ்விஷயத்தில் தர்க்கம் புரிந்து தன்னவளின் தலையில் தன் கருத்துக்களை ஏற்றிட விரும்பாமல் அவளே தெளிந்து வரவேண்டும் என எண்ணியே மேலும் ஏதும் பேசாமல் வீட்டை விட்டு வெளியேறி வந்திருந்தான்.

கிருபா வெளியேறிய பின்னரும் அதே நிலையில் அமர்ந்திருந்த கல்கி அவளது மொபைலில் வந்த மெசேஜ் சத்தத்தில் தன்னிலை கலைந்து என்னவென்று எடுத்து பார்த்தாள். கிருபா தான் “அளவுக்கதிகமா யோசிச்சி அடுத்த தடவ என்னோட மண்டையை உடைக்கிறதுக்குப் பிளான் பண்றதை விட்டுட்டு திங்கட்கிழமை அன்னிக்கு ரஞ்சன் கூட இருக்குற மீட்டிங்க்கு இப்பவே கொஸ்டீன்ஸ் ரெடி பண்ண ஆரம்பி…

அதுவுமில்லாமல் எவ்வளவு ரொமான்டிக்கா கட்டிப் பிடிச்சிட்டு வந்தேன்… அதுக்கு பாராட்டி ஒரு கவிதை எழுதி எனக்கு அனுப்பி விடு.இந்த ரெண்டு வேலையும் உருப்படியா செஞ்சாலே உன்னோட மூளை கொஞ்சம் கம்மியா யோசிக்கும்… குட் நைட்”, என்ற மெசேஜை அனுப்பியிருந்தான்.

“இவனை காலை வாரிவிட்டதோட விட்டு இருக்கக்கூடாது… அளவுக்கதிகமான திமிரை குறைக்கிற மாதிரி கழுத்தை திருகி இருக்கணும்”, என்று வாய்விட்டுப் பேசியவள் அதையே அவனுக்கு மெசேஜ் ஆக அனுப்பி வைத்தாள். வீடு வந்து சேர்ந்த பின்னரும் கிருபாகரன் தன் மனம் கவர்ந்து தன் கையை முறிக்க இருப்பவளுடன் மெசேஜ் அனுப்பி அளவளாவி கொண்டிருந்தான்.

இருவரும் அனுப்பி விளையாடியதோ ஒருவரை ஒருவர் கையை வெட்டுவது,காலை வெட்டுவது என்பதுதான்… ஆனால் காண்போர்க்கு காதலர்களிடையே ஸ்வீட் நத்திங்ஸ் போய்க்கொண்டிருக்கிறது என்றே தோன்றும்… அவர்களின் வார்த்தை போர் இறுதியாக மறுநாள் செல்லவேண்டிய ஃபிளைட்டிற்கு கிளம்ப வேண்டிய நேரத்தை நெருங்கியதால் முடிவிற்கு வந்தது.

“ஓகே பாவ்க்ஸ்! ஏர்போர்ட் கிளம்பனும்… நீ பாா்த்து பத்திரமா இரு… எந்த விஷயமா இருந்தாலும், திட்டுறதா இருந்தாலும் கூட எனக்கு மெசேஜ் பண்ணு… டேக் கேர் டா”, என்று கிருபாகரன் அனுப்பிய செய்தியை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவள் அவனுக்கு பதில் அனுப்பாமல் அவனுடைய பாட்டிக்கு விருந்துக்கு அழைத்தமைக்கு ஒரு நன்றியை அனுப்பி விட்டு தூங்க சென்று விட்டாள்.

கிருபாகரன் சென்று சேர்ந்ததும் வந்தாகி விட்டது என்று ஒரு மெசேஜ் அனுப்பியவன், அடுத்த இரண்டு நாட்கள் கல்கியை தொடர்பு கொண்டிருக்கவில்லை. கல்கியும் அதனை கண்டுகொள்ளாமல் தான் இருந்தாள். ஆனால் ரஞ்சன் உடனான மீட்டிங்கை முடித்தவள் இவன் ஏன் எனக்கு எந்தவித மெசேஜும் செய்யவில்லை ,காலும் செய்யவில்லை… ஆனால் காவியக் காதல் போல பக்கம் பக்கமா பேசுவான்”, என்று கிருபாகரனை மனதில் தாளித்தாளே தவிர்த்து அவனுக்கு அழைத்திடவோ, செய்தி அனுப்பவோ எவ்வித முயற்சியும் செய்யவில்லை.

மாறாக கிருபாக் கூறி சென்ற தவிப்பின் தழுவல் தன்னையே உணர செய்யும் என்ற வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்தவள் தன்னைத்தானே உணர்ந்து கொள்ள முயற்சி மேற்கொண்டு இருந்தாள்.

அவனை எண்ணிக் கொண்டிருக்கும் பொழுதே கல்கியின் மொபைலுக்கு வந்த அழைப்பில் அதனை எடுத்துப் பேசியவள் எதிர்முனையில் இருந்து

தெட்ஃபோா்ட் நகரம்
உறங்கும் நேரம்
பாவ்க்ஸை பார்த்திடாமல்

தனிமை அழகானது
பனியும் பயங்கர குஷியில் பயணித்தது

என்று நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் பாடலின் வரிகளை தன் இஷ்டத்திற்கு மாற்றிப் பாடிய குரலில் கல்கிக்கு குதூகலம் பிறந்தது.

“அது எப்படி சாத்தானை நினைச்சா உடனே கழுதை கத்துது?”, என்று வாய்விட்டு யோசித்த கல்கியின் மனதின் தேடலை அறிந்தது போன்று “என்ன பண்றது பாவ்க்ஸ்? ரெண்டு நாளும் உன்னையே நெனச்சிகிட்டு இருந்தேன்…

வீட்டை விட்டு எங்கேயும் போகாம உன்னை நினைச்சுக்கிட்டே இருந்ததுல வைரமுத்து என்னோட வாயிலையும், கார்க்கி என்னோட கையிலயும் கவிதையா விளையாடுறாங்க… சரி இன்னிக்கு கவிதைக்கு லீவு விடலாம்னு நினைச்சு இங்க இருக்கிற மார்க்கெட்டுக்கு போனேன்… அங்க இருக்கிற ட்யூலிப் பூக்களை பார்த்து எனக்கு ஒரு சந்தேகம் வந்துருச்சு. அதை நிவர்த்தி பண்ண தான் உன்னை கூப்பிட்டேன்” என கிருபாகரனும் அவளை பேசிட செய்திடும் எண்ணத்துடன் சீண்டி கொண்டிருந்தான்.

“உனக்கு சந்தேகமா? ஆச்சரியமான விஷயம் தான்… கேட்டு தொலை”, என்று கல்கி பெரிய மனதுடன் கூறியதில் “அந்தப் பூவெல்லாம் ரொம்ப மென்மையா இருந்துச்சு கல்கி… அதைக் கையில் தொடுறப்ப இந்தப் பூ மாதிரி மென்மையா இருக்கிற என்னை நீ கோவை சரளா மாதிரி பறந்து பறந்து அடிக்கிற…

உனக்கு என்னை பாத்தா பாவமா தெரியலையா அப்படின்னு கேட்க தோணுச்சு… அதுதான் உடனே போன் பண்ணிட்டேன்”, என்று கூறி விட்டு அவளின் பதிலுக்காக காத்து இருந்ததில் கல்கியின் வாயிலிருந்து அனைத்து விதமான கெட்ட வார்த்தைகளையும் கிருபாகரன் கேட்டு விட்டே “ஐ மிஸ் யு பாவ்க்ஸ்…”, என்று ஆழமான காதலுடன் கூறினான்.

அத்துடன் “மிஸ் யூ வும், லவ் யூ வும் ஒருத்தரோட மனசை உணர்த்தாது கல்கி… ரெண்டு நாள் இல்ல, ரெண்டு வருஷம் பேசலைன்னாலும் என்னோட நினைவுகள், செயல்கள் ,என்னோட மூச்சு எல்லாத்துலயும் உன்னை பத்தின எண்ணங்களே கலந்திருக்கும்…

காத்துல இருக்கிற ஆக்சிஜனும், கார்பன்-டை-ஆக்சைடும் கண்ணுக்கு தெரியாது… அதே மாதிரி தான் எனக்குள்ள இருக்குற காதலும் உன் மேல இருக்குற கோபமும் உன்னோட கண்ணுக்குத் தெரியல… ஆனால் அந்தக் காற்றை நீ 24 மணி நேரமும் சுவாசிக்கிற…

சோ நீ சுவாசிக்கிற அந்தக் காற்றாக நான் இருக்கேன் அப்படிங்கிறத புரிஞ்சிக்க ஆரம்பிச்சிருக்க… ஆனால் உன்னுடைய வறட்டு எண்ணங்களை விட்டு நீ எப்போ சொல்ல போற?”, என்று கேள்வி கேட்டவனுக்கு “யோசிச்சு சொல்றேன் கிருபா!”, என்ற பதிலை கல்கி அளித்ததில் கிருபாகரனுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

கிருபாகரன் பேசிவிட்டு வைத்த பின்னர் தான் இவனுக்கு எதுக்கு என் மேல கோபம் வரணும் என்று கல்கி யோசித்தாள். “அத்துடன் கோபத்தை தவிர இந்த குரங்குக்கு வேற என்னத்த தெரியும்?”, என்று திட்டியும் கொண்டாள்.

கிருபாகரன் அங்கிருந்து வரும் வரை இருவரும் போனிலேயே தங்களின் காதலை வளர்க்காமல்,கலவரத்தை மட்டுமே ஒவ்வொரு நிமிடமும் நிலா காலமாக வளர்த்தனர். சனியன்று இரவு சென்னை வந்தடைந்த கிருபாகரன் வீட்டிற்கு சென்றதும் கல்கியை அழைத்து “நாளைக்கு நாம ரெண்டு பேரும் டேட்டிங் போறோம்”, என்றான்.

அதற்கு பதிலாக “உன் கூட டேட்டிங் வந்துட்டு கார்ட்டூன் பார்க்கிற அளவுக்கு எனக்கு பொறுமை கிடையாது கரன்… அதனால ஆன்ட்டி செஞ்சித்தர நொறுக்குத் தீனியை சாப்பிட்டுகிட்டே ஹவ் டு ட்ரைன் யுவர் டிராகன் (How to train your dragon)பாரு”, என்று கல்கி அளித்த பதிலில் “வாவ்! சூப்பர் ஐடியா…பேசாம நீயும் வீட்டுக்கு வந்துடு…
நாம ரெண்டு பேரும் சேர்ந்து பார்ப்போம்”, என கிருபாகரன் கூறியதில் கல்கி சிரித்துக்கொண்டே தூங்கச் சென்றாள்.

மறுநாள் கல்கி எதிர்பாராத நேரத்தில் அவளது வீட்டில் பிரவேசம் செய்த கிருபாகரன் அவள் கதவைத் திறந்த அடுத்த நொடியிலிருந்து “வா! வா! வா! நாம சீக்கிரமா கார்ட்டூன் பார்க்க ஆரம்பிக்கலாம்”, என்று நச்சரிக்க ஆரம்பித்தான். “கிருபா! எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு… என்னை டென்ஷன் பண்ணாம திரும்பிப் போயிடு”, என்று கல்கி உரைத்ததை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் தன் இஷ்டத்திற்கு கிச்சனுக்குள் சென்றவன்,

அவள் வைத்திருந்த ரவையுடன், சிறிது தயிர் சேர்த்து, வெங்காயம்,மிளகாய் நறுக்கிப்போட்டு எண்ணெயில் சூடாக பக்கோடா போன்று போட்டு எடுத்தான். இவனிடம் பேசுவதும் சுவற்றில் முட்டிக் கொள்வதும் ஒன்று என்று எண்ணிய கல்கி அங்கிருந்த சோபாவில் அமர்ந்து தன்னுடைய வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

பக்கோடா உடன் வந்தவன் அவளது அருகில் அமர்ந்து தன்னுடைய லேப்டாப்பை எடுத்து வைத்துக் கொண்டு அதில் தி வைல்ட் தோா்ன்பொ்ாிஸ்(The wild thornberries) பார்க்க ஆரம்பித்ததோடு இடையிடையே “பாவ்க்ஸ்! எலிசாவை பாரேன் எவ்வளவு சூப்பரா ப்ளே பண்ணி இருக்கா”, என்று கல்கியையும் சிறுபிள்ளை போல் நச்சரிக்க ஆரம்பித்தான்.

“கிருபா! பேசாம உன்னோட வேலையை பாரு… எனக்கு தீசிஸ் சப்மிட் பண்றதுக்கு ரெடி பண்ண வேண்டியது இருக்கு…”, என தன்னுடைய வேலையில் இருந்து முகம் நிமிர்த்தாமலே கூறியதும் மிகவும் சமர்த்துப் பிள்ளையாக அமர்ந்தவன் சிறிது நேரத்தில் எழுந்து கிச்சனுக்கு சென்றான்.

கிருபா சமையல் அறைக்குள் நுழைந்ததை உணர்ந்தவள் “எப்ப பாத்தாலும் தின்னுகிட்டு இருக்கிற இவன் எப்படி தான் கம்பெனியை கட்டி காப்பாத்துறானோ?”, என்று வாய்விட்டு புலம்பிக்கொண்டே தான் செய்யவேண்டியதை செய்து கொண்டிருந்தாள்.

ஏறத்தாழ ஒரு மணி நேரம் கடந்த நிலையில் தனது நாசி உணர்ந்த நறுமணத்தில் தலையை நிமிர்த்தி பாா்க்க அவளின் முன்பாக ஒரு தட்டில் சிக்கன் புலாவ்,பிஷ் மஞ்சூரியன் வைத்துக்கொண்டு அவளுக்கு ஊட்டி விடுவதற்கு ஏதுவாக கிருபாகரன் தனது கையில் எடுத்து வைத்து அவளது வாயின் முன் நீட்டிக் கொண்டு இருந்தான்.

உணவின் சுவையா?உரிமையுடன் அவன் நீட்டியதா? எதுவென பகுத்தறிய முடியாமல்,எவ்வித கலவரத்தையும் உண்டாக்காமல் கல்கி தன் வாய் திறந்து பெற்றுக்கொண்டாள்.பாதி உணவு உண்டு முடிந்த நிலையில்

“இப்படித்தான் மயக்கி நான் பிறக்க காரணமானவன் என்னோட அம்மாவுக்கு என்னை கொடுத்து இருப்பானோ?தான் மயங்கிப்போன அசிங்கத்தை வெளியே சொல்ல விருப்பம் இல்லாம நான் பிறந்ததும் அவங்களும் என்னை வீசிட்டு போயிட்டாங்களோ?”, என்று தன் இஷ்டத்திற்கு தன்னையும் அறியாமலே அனலை கொட்டிய கல்கியை கூர் பார்வை பார்த்தவன் பதில் ஏதும் கூறாமல் மீதி உணவையும் ஊட்டிவிட்டு முடித்ததும் அதே தட்டில் தனக்கும் எடுத்துக்கொண்டு வந்து அவளது அருகில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.

சாப்பிட்டு முடித்து அனைத்தையும் ஒழுங்கு செய்து விட்டு வந்து கல்கியின் அருகில் அமர்ந்தவன் அவளது கைகளை எடுத்து தன்னுள் புதைத்து கொண்டு “இதுதான் உன்னோட மனசை அாிச்சுகிட்டே இருக்கிற விஷயமா?”, என்று கேட்டான்.

அதற்குரிய பதிலை அவளிடம் எதிர்பாராதவன் போன்று “நான் சொல்றது உனக்கு அட்வைஸ் மாதிரி இருக்கலாம் கல்கி! ஆனா நிஜத்தை நீ புரிஞ்சுக்க முயற்சி பண்ணு… நீ பிறந்ததுல உன்னோட தப்பு எதுவும் இல்லை. அத மனசுல முதலில் நிலைநிறுத்து…

எதை வச்சு கல்கி உன்னோட அம்மா அப்பாகிட்ட ஏமாந்து போய் இருப்பாங்கன்னு நீயா முடிவு பண்ணிக்கிட்ட? ஒரு நேரம் ரொம்ப ஏழ்மையான நிலைமையில் நீ பிறந்து உன்னை வளா்க்கவே முடியாத சூழ்நிலையில் ஹோம்ல விட்டிருக்கலாம்… ரெண்டு பேருமே ஆக்சிடெண்டில் இறந்து போய் சொந்தக்காரங்க மூலமா விட்டிருக்கலாம்…

இந்த மாதிரி எத்தனையோ இருக்கலாம் இருக்கு.அதுபோக பிறந்து,வளர்ந்து,படிச்சி இன்னிக்கு ஒரு நல்ல நிலைமையில் இருக்கிற நீ இந்த மாதிரி முட்டாள் தனமா யோசிக்கிறது ரொம்ப கேவலமா இருக்கு… ஆண்கள் மட்டுமே தப்பு செய்றாங்கன்னு ஒரு தப்பான எண்ணத்தை உன் மனசுக்குள்ள நீ வெதச்சு வச்சிருக்க.

இப்ப இருக்குற காலகட்டத்துல ஆண்களும்,பெண்களும் எல்லாருமே தப்பு செய்றாங்க… யாரையும் நாம குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. அப்பா,அம்மா அப்படின்னு ஒரு குடும்ப சூழ்நிலையில் வளருறவங்களுக்கு மட்டும் பிரச்சனை இல்லையா? அப்படி அவங்களையெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்தா நீ தைரியமா நான் ஒரு சுயம்புனு சொல்லிக்கலாம்…

இந்தளவுக்கு வைராக்கியத்தோட படிச்சு வந்த நீ உனக்குள்ள இருக்கிற பாதுகாப்பற்ற தன்மையை தூக்கி குப்பையில் போடுறது ஒரு பெரிய விஷயமா?”,என்று கூறிக் கொண்டே வந்தவன் கல்கியின் கண்களில் வந்து போன உணர்வைக் கண்டு சிறிதுநேரம் நேரம் பேச்சை நிறுத்தினான்.

“என்ன அப்படி பாக்குற? நீ வெளி உலகத்துக்கு தைரியமா உன்னை காமிச்சுக்கிட்டு உள்ளுக்குள்ள ஒரு பாதுகாப்பு இல்லாத வாழ்க்கைதான் வாழ்ந்து இருக்க… அதுதான் உண்மை. உனக்குள்ள இருக்கிற பயம் தான் எல்லாத்தையும் ஒதுக்கி சந்தேகக் கண்ணோட்டத்தில் பார்க்கச் செய்யுது… வாழ்க்கையய அதோட போக்கில் வாழணும் கல்கி!

எப்பவோ நடந்த விஷயத்துக்கு இன்னிக்கு உட்கார்ந்து மூல காரணத்தை தேடுறது நம்மளை நாமளே முடக்கி முடமாக்குறதுக்கு சமம்…பேசுறது ஈஸி ஆனால் அனுபவிக்குறவங்களுக்கு தான் அதோட வலியும்,வீரியமும் தெரியும்…

நீ என்னோட ஃபீனிக்ஸ்… எாிஞ்சு சாம்பாலானாலும் திரும்ப உயிா்த்தெழுவ…சோ இவ்வளவு நாள் யோசிச்ச விஷயத்தை கொஞ்சம் பாஸிடிவா யோசிச்சு பாா்…ஹோம்ல வளா்றவங்க எல்லாம் தப்பான முறையில் பிறந்தவங்க இல்லை… வீட்டுல வளா்றவங்க எல்லாம் நல்ல முறையில் பிறந்தவங்க இல்லை…

பிறப்பும் ,இறப்பும் தானா அமையுறது… அதுக்கு முட்டாள்தனமான காரணங்களை கண்டுபிடிச்சு வாழ்றவங்க வாழ தகுதி இல்லாதவங்க… என்று நீண்ட உரையாற்றிய கிருபா கல்கியின் முகத்தை தன் கைகளில் ஏந்தி அவளது இதழ்களோடு இடைவிடாத யுத்தம் ஒன்றை இயக்கினான்.

சுவாசம் சீரற்று நுரையீரல் நுணலாக கத்திய பின்பே தனது கைகளையும், இதழ்களையும் விடுவித்துக் கொண்டவன் “இப்ப நான் உன்னை மயக்கிட்டேன்… உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்கோ!”, என்று கூறியதுடன் அவளது கைகளை பின்புறமாக வளைத்து பிடித்துக்கொண்டு அவளது முக உணர்வுகளை பார்த்துக் கொண்டிருந்தவன்

” எப்ப இருந்தாலும் நான் மட்டும்தான் கிருபாகரன் கல்கியா இருக்க முடியும்… அது கூடிய சீக்கிரம் நடந்தா உனக்கு நல்லது… இல்லை கொஞ்சம் லேட்டா நடந்தா எனக்கு நல்லது”, என்று புரியாத மாதிரி பேசியவன் அவளது கைகளை விடுத்து “நீ தெளிஞ்சதுக்கு அப்புறம் வந்து வீட்டுல அடி”, எனக் கூறிவிட்டு தன்னுடைய பொருட்களுடன் வெளியேறிவிட்டான்.

அவன் வெளியேறி சென்ற பின்னரும் அவன் கொடுத்த யுத்தத்தின் தாக்கத்தைவிட அவன் பேசிய வார்த்தைகளே கல்கியின் எண்ணங்களில் எரிமலையாக கொதித்துக் கொண்டிருந்தன.

எரிமலை வெடித்து சிதறி அழிவை உண்டாக்கிடுமா? இல்லை ஆறிய எரிமலைக் குழம்பில் இருக்கும் தாதுக்களை போன்று நன்மையை உண்டாக்கிடுமா?

Categories
On-Going Novels Yuvanika

அத்தியாயம் -14

காதல்பனி 14

இரவு கணவனும் மனைவியும் நடத்திய ஊடல் நாடகத்திற்குப் பின் தாமதமாக உறங்கியதால் மறுநாள் பொழுது விடிந்து வெகுநேரம் கழித்துத்தான் சாரா கண்விழித்தாள். நேரமாகி விட்டதால் பதறியடித்து எழுந்தவள் அஷ்வத்தைப் பார்க்க, இவளுக்கு முன்பே எழுந்து குளித்து அவன் தயாராகிக் கீழே இருப்பதை உணர்ந்தவள் தானும் தயாராகிக் கீழே வந்தாள்.

சிறிது நேரத்திலேயே டாக்டர் வந்து பொம்மியின் காலைப் பார்த்து பிளாஸ்டிக் சர்ஜரி வேண்டாம் என்ற பிறகு தான் அஷ்வத்தால் நிம்மதியாக இருக்க முடிந்தது.

ஒரு வார காலத்தில் சாராவுக்குக் கால்கள் சரியாகி விட இத்தனை நாளில் என்ன தான் கணவன் சகஜமாக இருந்தாலும் தனிமையில் முகம் கசந்து போய் அவன் யோசனையிலே இருப்பதைப் பார்த்தவள் அதிலும் தாத்தாவுக்குத் தெரியாமல் கணவன் அதை மறைப்பதைப் பார்த்தவளின் உள்ளமோ உருகி விட்டது.

கணவன் எதை நினைத்துத் துன்பப் படுகிறான் என்று அறிந்தவள் அவன் மனதில் இருக்கும் சஞ்சலத்தைப் போக்க நினைத்துத் தன் உடல் சரியான உடன் அவனை அழைத்துச் சென்று அவன் தாத்தா வளர்ந்த அநாதை இல்லத்தைக் காட்டி அதை அவர் இன்று வரை நடத்தி வருவதாகக் கூறியவள் இனி இது அவன் பொறுப்பு என்றவள் பின் முன்பு ஒருமுறை இந்த ஊருக்குள் மதக் கலவரம் நடக்க ஓரே ரத்தக்காடாக இருந்த ஊரையும் மனிதர்களையும் நல்வழிப் படுத்தியது தாத்தா தான் என்றவள்

ஒருமுறை ஊருக்குள் மழை இல்லாமல் வானம் பார்த்த பூமியாக ஊரே வறண்டு போக அதனால் விவசாயிகள் தற்கொலையில் செத்து மடிய பக்கத்து மாவட்டத்தில் இருந்து தர வேண்டிய தண்ணீர் தராமல் போக மிச்சம் இருக்கும் விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்பாற்ற நினைத்தவர் ஒரு தலைவனாக முன்னிருந்து அரசாங்கத்திடம் போராடி அந்த நீரை அவர் பெற்றுத் தர அதற்கு அவர் அடைந்த அசிங்க அவமானம் இழந்த இழப்புகள் என்று தான் கேள்விப்பட்டதை அனைத்தையும் சொன்னவள்

“அதன் பிறகு முழுக்க அரசாங்கத்தை நம்பி இருக்காமல் ஊரில் உள்ள அனைவரையும் திரட்டி அங்கங்கே குளம் குட்டை என்று வெட்டச் செய்தவர் மழை நீரை மக்கள் எப்படி எல்லாம் சேகரிக்க வேண்டும் என்ற வழி வகைகளையும் கற்றுக் கொடுத்தார். ஆனா அந்த நேரத்துல மட்டும் தாத்தா சுயநலமா தன் வாழ்க்கைய மட்டும் நினைத்து இருந்தார்னா இன்று இந்த ஊர் இவ்வளவு வளம் பெற்று இருக்காது” என்று அவள் சொல்லத் தன் மனைவி என்ன சொல்ல வருகிறாள் என்று அறிந்தவனோ மவுனம் காத்தான்.

அவள் எவ்வளவு எடுத்துரைத்தும் அவன் மனதில் ஏதோ ஒன்று அவனை சகஜ நிலையில் இருக்கவிடாமல் செய்து கொண்டு தான் இருந்தது. அதை அறிந்த அவன் மனையாள் அதையும் போக்கித் தான் தீருவேன் என்ற பிடிவாதத்துடன் இருக்க அதற்கும் நேரம் வந்தது.

ஒருமுறை தாத்தா வீட்டில் இல்லாத பொழுது அஷ்வத்தும் சாராவும் மட்டும் இருக்கும் நேரத்தில் ஒரு வயதானவர் தன் மூன்று வயது பேரனுடன் அவர்கள் வீட்டிற்கு வர அவரைப் பார்க்கும் போதே தெரிந்தது வசதி வாய்ப்பில் மிகவும் ஏழ்மையானவர் என்று. அஷ்வத் அவர்களை உள்ளே கூப்பிட்டு என்ன ஏது என்று கேட்க முதலில் தாத்தாவைக் கேட்டுத் தயங்கியவர் அஷ்வத்தின் பேச்சாலும் அணுகுமுறையாலும் தெளிந்து பிறகு என்னவென்று சொல்ல ஆரம்பித்தார் அவர்.

ஏழ்மையான குடும்பத்திலும் கீழ்ஜாதியில் இருந்து வந்தவரான இவருடைய ஒரே மகன் மேல்ஜாதிப் பெண்ணை விரும்ப அது தெரிந்து பெண் வீட்டார் எதிர்க்க அதில் இருவரும் ஊரை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கண்ணுக்குத் தெரியாமல் வாழ, அதனால் இவரும் இவர் மனைவியுமே தலை மறைவாக வாழ்ந்து வந்துள்ளனர்.

எங்கோ வாழ்ந்த அந்த காதலர்களுக்கும் ஆண் குழந்தை பிறந்த பிறகே அந்தப் பெண்ணின் குடும்பத்தார் கண்ணில் இவர்கள் சிக்கி விட, தன் மகள் என்றும் பார்க்காமல் அவளைக் கொன்றதோடு நில்லாமல் தன் மருமகனையும் பேரனையும் அவள் தந்தை கொல்ல வர அதில் தன் மகன் கத்திக் குத்துப் பெற்று உயிர் பிழைத்துத் தப்பித்துத் தன்னிடம் தன் பேரனை கொண்டு வந்து சேர்த்ததாகவும் அதன் பிறகு தன் மகன் உயிருடன் இல்லை என்றவர்

இன்று தன் பேரனின் உயிருக்காகவும் அவன் எதிர்கால வாழ்வுக்காவும் அந்த அரக்கர்களிடம் தன் மனைவியின் உயிரை பணயம் வைத்து இன்று தானும் தப்பித்து வந்ததாகக் கூறியவர் பின் அமைதி காக்க

அவரே மேற்கொண்டு சொல்லட்டும் என்று அஷ்வத்தும் அமைதி காக்க இதையெல்லாம் அங்கிருந்து கேட்ட பொம்மியோ அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்து கொண்டவள்

“சரி.. அதுக்கு இப்போ என்ன சொல்ல வரீங்க? அதுக்கு இங்க ஏன் வந்து இருக்கீங்க?” என்று முகத்தில் அடித்தார் போல் அவள் கேட்கவும், அந்தப் பெரியவரோ ஏதோ சொல்ல வந்து பின் அமைதியாகி விட அஷ்வதோ தன் மனைவியை வேற்று ஆட்கள் முன் திட்ட மனம் வராமல் ஓர் கண்டிக்கும் பார்வையை அவளிடம் செலுத்த அவன் பார்வையை அலட்சியம் செய்தவள்

“சொல்லுங்க.. இப்போ எதுக்கு இதெல்லாம் எங்க கிட்ட சொல்றிங்க? இதுல நாங்க என்ன செய்ய முடியும்னு நினைக்கிறீங்க? எங்க தாத்தா மூலமா உங்க மகனையும் மருமகளையும் கொன்னவங்கள உள்ள தள்ளணும்னு பார்க்குறீங்களா? அதெல்லாம் எங்களால் செய்ய முடியாது” என அவள் நறுக்குத் தெறித்தார் போல் பேச

“அப்படி எதுவும் எனக்கு வேணா தாயி! அவங்க எல்லாம் பெரிய இடம். அப்படிப் பட்டவங்கள எல்லாம் எதிர்த்துப் போராட என் உடம்பிலையும் வலு இல்ல மனசுலையும் தெம்பு இல்ல. இதெல்லாம் விட நான் பணம் இல்லாத ஏழை மா. ஏழைகளுக்கு நியாயம் என்னைக்குக் கிடைச்சிருக்கு சொல்லு! எனக்கு வேற ஒரு உதவி செய்யணும்..” என்றவர் சற்றுத் தயங்கி மீண்டும் மவுனம் காக்கவும்

“எதுவா இருந்தாலும் சொல்லுங்க ஐயா!” என்று அஷ்வத் அவரிடம் கேட்கவும்

“நான் இப்போ உங்க தாத்தா கிட்ட கேட்க வந்தது எல்லாம் இது ஒண்ணு தான் தம்பி, எந்த மேல்ஜாதிப் பொண்ணக் கல்யாணம் பண்ணதால என் பையனையும் என் மருமகளையும் கொன்னாங்களோ அவங்களுக்கு எதிரா இன்று கீழ்ஜாதில பிறந்த என் வம்சமான என் பேரன் வாழணும். என் வம்சம் தழைக்கணும். அதுக்காகத்தான் இவன ஐயா நடத்துற காப்பகத்துல விட்டுடலாம்னு நினைச்சேன். ஆனா ஐயா கிட்ட சிலது சொல்லணும்னு நினைத்து தான் இங்க வந்தேன். இப்போ உங்க கிட்ட சொன்னாலும் ஐயா கிட்ட சொன்னதுக்கு சமம் தானே அதனால உங்க கிட்டையே சொல்லிடுறேன்.

இவனக் கொல்ல அந்த அரக்கக் கூட்டம் எப்படியாவது வரும். அதனால என் பேரனை இங்கே வைத்திருக்காம ஏதோ ஒரு தேசத்துல யாரோ முகம் தெரியாதவங்க குழந்தைக்காக ஏங்கி நிற்கறவங்களுக்கு என் பேரனைத் தத்துக் கொடுத்திடுங்கையா. அவன் உயிருக்காக மட்டும் இதைச் சொல்லலை. என் பேரன் எங்கு இருந்தாலும் ஒரு குடும்பமா இருப்பானே என்ற ஆசையிலும் சுயநலத்திலும் தான் இதைக் கேட்டுக்கிறேன்” என்று நைந்த குரலில் சொல்லி அவர் பேரனைக் கட்டிக் கொண்டு கண்ணீர் விட

“நீங்க இப்படி செய்யுறதுனால உங்க பேரனுக்கு நீங்க எவ்வளவு பெரிய துரோகம் செய்றீங்கனு தெரியுமா?” என்று உடனே சாரா கேட்க

“இதுல என்ன மா துரோகம் இருக்கு?”

“பின்ன? அப்பா அம்மா தான் அவனுக்கு இல்ல. தாத்தா வான உங்க மூலமா அவனுக்குக் கிடைக்க வேண்டிய பாசத்தைக் கொடுக்காம போனா எப்படி? அப்போ அது துரோகம் இல்லையா?”

“அவன் என் கிட்ட இருந்தா தான் அவன் உயிருக்கே ஆபத்தாச்சே!”

“அவன் உயிருக்கு ஆபத்து என்றதால தான் நீங்க இதை செய்றீங்க. ஆனா நாளைக்கு உங்க பேரன் வளர்ந்து வந்து உங்க தியாகத்தையும் பாசத்தையும் புரிஞ்சிக்காம அன்னைக்கே என்னை அவங்க கிட்ட சாக விட்டு இருக்கலாமே! ஏன் இப்படி என்னை அநாதையா வளர விட்டீங்கனு கேட்டு உங்களை வெறுத்து ஒதுக்கினா என்ன பண்ணுவீங்க?”

“அப்படி ஒருக்காலும் என் பேரன் நினைக்க மாட்டான். இப்படி சூழ்நிலைக் கைதியா நான் நின்று என் உயிரே பிரியற நிலையில தான் இதைச் செய்தேனு அவன் புரிஞ்சிப்பான். அப்படியே என்னை வெறுத்தாலும் பரவாயில்ல. அவன் எங்கேயோ உயிரோட நல்லா இருப்பான் இல்ல? எனக்கு அது போதும் தாயி”

“நீங்க சொல்லுறது எதுவும் சரி வராது. வேணாம்.. நீங்க உங்க பேரனை இங்கிருந்து கூட்டிட்டுப் போங்க” என்று சாரா முடிவாக சொல்லி விட

அஷ்வத்தோ அந்தக் குழந்தையை எங்கு எப்படி பாதுகாப்பாக வளர்க்கலாம் என்றும் தனக்குத் தெரிந்த குழந்தை இல்லாத வெளிநாட்டுத் தம்பதியிடம் தத்துக் கொடுத்து வளர்க்கச் சொல்லலாமா இல்லை தான் நடத்தும் ஹோமிலேயே வளர்க்கலாமா என்று பலவாறு அவன் யோசித்துக் கொண்டிருக்க மனைவி சொன்னது எதையும் அவன் காதில் வாங்காததால் அவர் குழந்தையுடன் வெளியே செல்வதைப் பார்த்தவன்

“நில்லுங்க ஐயா! நீங்க சொல்ற மாதிரி உங்க பேரன் வளர்வதுக்கு நான் பொறுப்பு. அதுவும் அவன் உயிருக்கு ஆபத்து வராத இடமா பார்த்து வெளிநாட்டுல அவன் வளர நான் பார்த்துக்கிறேன். நீங்க உங்க பேரனை இங்கே விட்டுட்டு போங்க” என்று அவன் அவருக்குத் தைரியம் சொல்ல, அவரோ பொம்மியை தயக்கத்துடன் ஒரு பார்வை பார்க்கவும் உடனே அஷ்வத்

“பொம்மி! போ போய் அவர் கிட்டயிருந்து அந்தக் குழந்தையை வாங்கு” என்று மனைவிக்கு கட்டளை இடவும் 

கணவனின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் அவள் அந்தக் குழந்தையை வாங்க அந்தப் பெரியவரோ சந்தோஷத்தில் பேரனை நீட்டியவர் பின் தன்னிடமே அவனை இறுக்கிக் கொண்டு அவன் முகம் எங்கும் முத்த மழை பொழிந்தவர்

“இந்த தாத்தாவ நீ ஒரு நாள் புரிஞ்சிக்குவே டா” என்றவர் அவனை பொம்மியிடம் கொடுத்து விட்டுத் திரும்பியும் பார்க்காமல் அந்த இடத்தை விட்டுக் கண்ணீருடன் சென்றார் அந்த பெரியவர்.

அவர் சென்றதும் மனைவிடம் திரும்பியவன் அவள் குழந்தையை வேலையாட்களிடம் கொடுத்து விட்டு மேலே தங்கள் அறைக்குப் போவதைப் பார்த்தவனோ பின்னோடே இவனும் சென்று

“என்ன ஆச்சு உனக்கு? ஏன் அந்தக் குழந்தையைக் கூட்டிட்டு போகச் சொன்ன?” என்று மனைவியைக் கேட்க

“பின்ன.. வேற என்ன செய்யச் சொல்லுறீங்க? தாத்தாவையும் பேரனையும் பிரித்த பாவம் நமக்கு வேணாமேனு நினைச்சேன். அதுவும் இல்லாம நாளைக்கு அந்த பையன் வளர்ந்து இப்படி நமக்குத் தாத்தா துரோகம் செய்துட்டாருனு வருந்த மாட்டானா இல்ல அவரை தான் வெறுக்க மாட்டானா அப்புறம்….” அவள் முடிக்கக் கூட இல்லை

“நீ சொல்ற மாதிரி எல்லாம் செய்ய மாட்டான். அவன் உயிருக்காகத் தான் தன் தாத்தா இப்படி செய்தார் என்றதை அவனும் புரிஞ்சிக்குவான்”

“அந்த தாத்தாவுக்கு நீங்க சப்போர்ட்டா? அப்ப அவர் செய்யுறது துரோகம் இல்லைனு சொல்லுறீங்களா?” என்று மனைவி கூர்மையுடன் கேட்கவும்

“பின்ன இல்லையா? அவன் உயிரைக் காப்பாற்ற அவர் செய்யும் இந்த செயல் எப்படி துரோகமாகும்?” என்று அவனிடமிருந்து அம்பென வார்த்தைகள் வரவும், கணவனை நேருக்கு நேர் பார்த்துக் கேட்க மனம் வராமல் அவனுக்கு முதுகு காட்டித் திரும்பி நின்றவளோ 

“அப்போ ஏன் மச்சான் உங்க தாத்தா செய்தத மட்டும் துரோகம்னு நினைக்கிறீங்க? அவரும் இதைத் தானே செய்தார். நீங்க என்ன தான் அவர் கிட்ட அன்பா பேசி அவருக்கு வேண்டியதை பார்த்துப் பார்த்துச் செய்தாலும் எங்க கிட்ட எல்லாம் சகஜமா இருந்தாலும் நீங்க மட்டும் ஏன் மச்சான் இன்னும் பழசையே நினைத்து உள்ளுக்குள்ளே மறுகுறீங்க? அப்படி உங்கள என்னால பார்க்க முடியல….” மேற்கொண்டு எதையும் சொல்ல விடாமல் அவளைப் பின்புறமாக இறுக்கி அணைத்திருந்தான் அவள் கணவன்.

தன் வார்த்தைகளைக் கொண்டு தன்னையே மடக்கியத் தன் மனைவியை உள்ளுக்குள் மெச்சியவன் அதை விட ஒரு தாயைப் போல் தன் முகம் அறிந்து தன் மன உளைச்சலைப் போக்க நினைத்தவளின் தோளில் தன் முகம் புதைத்தவனோ 

“நீ என் அம்மாவா டா?!” என்று தொண்டை அடைக்கக் கரகரத்த குரலில் தன் உயிரே வதைப்படும் வேதனையைக் குரலில் கேட்டவன் கூடவே சூடான கண்ணீரை அவள் தோளில் நனைக்கவும் துடிதுடித்துப் போனாள் பொம்மி. அதை விட இதுவரை தன்னைத் தன் கணவன் ஒரு பொருட்டாவே எண்ணியதில்லையே என்று அவள் நினைத்ததற்கு மாறாக தன்னைக் கணவன் தன் தாய் இடத்தில் வைத்திருப்பதை உணர்ந்தவள் திரும்பி அவன் முகம் தாங்கி அவன் கண்ணீரைத் துடைத்து விட்டவள் அவனை அழைத்துச் சென்று கட்டிலில் அமர வைத்து தன் மடி தாங்க, தன் கோபம் வருத்தம் என அனைத்தையும் அவள் வருடலிலும் அவள் மடி சாய்தலிலும் தன் மனப் போராட்டங்கள் அனைத்தையும் தொலைத்தான் அவன்.

அதன் பிறகும் பழைய விஷயங்கள் அவனுக்கு ஞாபகம் வராமல் இல்லை. அப்படியே வந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தான் முன்பு இழந்ததற்கும் சேர்த்து இப்போது சுற்றி இருப்பவர்களுடன் வாழ நினைத்தான் அஷ்வத்.

வாழ்க்கை அதன் போக்கில் செல்ல இப்போதெல்லாம் ஊர் விஷயமாக இருந்தாலும் சரி தாத்தா நடத்தி வரும் எந்த ஒரு பொது விஷயமாக இருந்தாலும் சரி அஷ்வத்தே முன்னிருந்தான். அந்த அனுபவங்கள் அனைத்தும் அவனனுடைய மன மாற்றத்துக்கு வழி வகை செய்தது.

ஒருமுறை சற்றுத் தூரத்து உறவினர் வீட்டில் பிறந்த குழந்தையைத் தொட்டிலில் இட்டு பெயர் சூட்டும் விசேஷத்திற்கு பொம்மியும் சின்னாவும் சென்றிருக்க, விழா முடிந்த பிறகும் அந்தக் குழந்தையைப் பொம்மி விடாமல் வைத்திருக்க அதை ஒரு சில பெருசுகள் மறைமுகப் பேச்சுப் பேசினாலும் கண்டு கொள்ளாமல் பொம்மியிடமே விட்டிருந்தாள் அந்தக் குழந்தையின் தாய். அழகாக தங்கச்சிலை என இருந்த அந்தப் பெண் குழந்தை தூங்கிய பிறகு கூட பொம்மி தன் மடியில் வைத்திருக்கவும் அதைப் பார்த்த அந்தக் குழந்தையின் தாய்

“ஏன் அண்ணா, இன்னும் எவ்வளவு நாளைக்குத் தான் குழந்தையப் பெத்துக்காம தள்ளிப் போடப் போறீங்க? எனக்கு என்னமோ மதனி குழந்தையை வைத்திருக்கிறதப் பார்த்தா அவங்களுக்கு இப்பவே பெத்துக்க எண்ணம் தான் போல! நீங்க தான் தள்ளிப் போடுறீங்களோ?!” என்று அஷ்வத்திடம் துடுக்காக கேட்க, திடீர் என்று இப்படிக் கேட்டதில் அவனுக்கே என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவன் மனைவியைப் பார்க்க அவளுக்கும் வாய் திறந்து பதில் சொல்ல முடியாத நிலை தான்!

முன்பு எப்படியோ! ஆனால் இப்படி பால் சதையுடன் அழகாக குண்டு கன்னங்களுடன் இருக்கும் குழந்தையைப் பார்த்ததிலிருந்து அந்தப் பெண் சொல்வது போல் பொம்மிக்குள் ஒரு இனம் புரியாத மாற்றம் தான் மனதில். ‘இப்படி ஒரு குழந்தையை நாம் எப்போது சுமப்போம்?’ என்ற ஏக்கம் தான் அவளுக்கும் தோன்றியது.

அந்த ஏக்கம் மனைவியின் முகத்திலும் கண்ணிலும் வழிவதைப் பார்த்தவன் அதன் பிறகு ஒரு வினாடி கூடத் தன் பார்வையை விலக்காமல் அவளையே விழுங்குவது போல் அவன் பார்த்திருக்க, கணவனின் பார்வையைப் பார்த்தவளோ இன்னும் தடுமாறிப் போனாள் பொம்மி. அண்ணனின் விழுங்கும் பார்வையும் அதற்கு மதனியின் தடுமாற்றத்தையும் பார்த்த அந்தப் பெண்ணோ 

“என்ன மதனி, அண்ணன் உங்களைப் பார்க்கிற பார்வையப் பார்த்தா இன்னைக்கே குழந்தைக்கு அச்சாணி போட்டுடுவீங்க போல!” என்று பொம்மியின் காதில் ரகசியமாய் சொல்ல, வெட்கத்தில் முகம் சிவந்தவளோ கணவனை ஏறெடுத்துப் பார்க்க முடியாமல் இன்னும் தடுமாறிப் போனாள் பொம்மி.

அங்கிருந்து காரில் வீட்டுக்கு வந்து இங்கேயும் அதே கண்ணாமூச்சி தொடர, இரவு வெகுநேரம் கடந்து அவன் தூங்கின பிறகே இவள் மேலே தங்கள் அறைக்கு வந்தவள் கதவுக்கு தாழ்பாள் போட்டு விட்டு அவள் திரும்பும் நேரம் விளக்கை போட்டு விட்டு சட்டென்று அவளைத் தன் தலைக்கு மேலே தூக்கியிருந்தான் அஷ்வத்.

கணவன் தூங்கியிருப்பான் என்று நினைத்தவள் இப்படி அவன் தாக்குதலில் தடுமாறிப் பின் தன் கால் கொலுசும் கை வளையலும் சிணுங்க அவன் முடியை வலிக்காமல் தன் இரு கைகளால் பற்றியவள்

“என்னங்க இது விளையாட்டு? என்னைக் கீழே விடுங்க..” என்று அவள் சிணுங்க அப்போது பார்த்து அவள் புடவை விலக கிடைத்த இடைவேளையில் அவள் வெற்று வயிற்றில் தன் முகத்தை வைத்து இப்படியும் அப்படியுமாக புரட்டியவனோ இறுதியாக ஒர் முத்தத்தை அவள் வயிற்றுக் குழியில் பதிக்கவும் தன் சிணுங்களைக் கை விட்டு மொத்தமாக அவனிடம் அடங்கிப் போனாள் பொம்மி.

ஓர் முத்தத்திலேயே மனைவியின் மனநிலையை அறிந்தவனோ சின்னச் சிரிப்புடன் அவளைத் தூக்கிச் சென்று கட்டிலில் கிடத்தி தன் முத்தத்தால் அவள் முகமெங்கும் ஓவியம் தீட்டியவன் சட்டென்று கீழிறங்கி தன்னவள் வயிற்றிலேயே மீண்டும் முகம் புதைத்து நீண்ட ஆழ்ந்த முத்திரை ஒன்றை வைக்கவும்

மேல் கொண்டு நடக்கப் போவதை உணர்ந்தவளோ “மச்சான் வெளிச்சமா இருக்கு பாருங்க..” என்று அவனிடம் மிகவும் பலவீனமான குரலில் நினைவு படுத்த, சட்டென்று நிமிர்ந்தவனோ

“வெளிச்சம் இருந்தா என்ன டி?” என்று கேட்க வெட்கத்துடனும் ஒருவித எதிர்பார்ப்புடனும் பொம்மியோ விழிகளை மூடிக் கொள்ளவும், அவள் விழிகள் இரண்டின் மேலும் தன் இதழ் பதித்தவன்

“இன்னைக்கு எதுவும் நடக்காது பேசாம தூங்கு” என்று சொல்லி அவள் தலை கோதி விட

‘ஐயையோ! இவர் திரும்பவும் என்னை ஒதுக்க ஆரம்பிச்சிட்டாரோ?!’ என்று யோசித்தவள் கணவனின் வார்த்தையில் கலவரத்துடன் அவன் முகம் பார்க்கவும்

“அடியேய்.. எதுக்கு இந்த பயம்? நான் இன்னைக்குத் தான் வேண்டாம்னு சொன்னேன். எப்பவுமே வேண்டாம்னு சொல்லலையே? இன்னும் இரண்டு நாள்ல பாரீஸ்ல நமக்கு ரிசப்ஷன் பார்ட்டி வைத்திருக்கேன். அது முடிச்சிட்டு நேரா நம்ம ஹனிமூனுக்கு சுவிட்சர்லாந்து போறோம். அங்கே வைத்துத் தான் நம்ப வாழ்க்கையே நாம ஆரம்பிக்கப் போகிறோம்” என்று அவன் முடிக்க

தான் ஒன்று நினைத்து கலங்கியதை தன்னவன் வேறு விதமாக எடுத்துக் கொண்டாலும் அதை வெளிப்படுத்தாமல் ‘பின்ன எதுக்கு டா இப்படி எல்லாம் பண்ணின?’ என்று கண்களால் கேட்டவள் செல்லக் கண்டிப்புடன் அவன் தலையில் வலிக்காமல் கொட்ட, அவள் கேள்வியை அறிந்து வாய் விட்டுச் சிரித்தவனோ

“காலையில் இருந்து ஒரு மார்க்கமாவே பார்க்குறியா அதான் சும்மா உன்னைச் சீண்டிப் பார்க்கலாம்னு தான் டி.. உண்மையிலே உனக்கும் விருப்பம் இருக்கானு கன்பர்ம் பண்ணிக்கத் தான்..” என்றவன் “அப்பறம் என்ன சொன்ன? வெளிச்சமா இருக்கா? அங்கே ஹனிமூன் வந்து பாரு.. நமக்கான உலகமாய் நம்ம காட்டேஜ்ல இரவு பகல் நேரங்காலம் இல்லாம மழை வெயில் குளிர்னு எந்த காலநிலையையும் பொருட்படுத்தாம இன்னும் சொல்லப் போனா வெளியுலகத்துல என்ன நடக்குதுனே தெரியாத அளவுக்கு நீயும் நானும் ஓருடல் ஈருயிர் அளவுக்குத் தனிமையில இருக்கப் போறோம். அப்ப அங்க எதுக்குமே நீ எந்த மறுப்புமே சொல்லக் கூடாது நான் கொடுக்கற டிரஸ்ஸ போட்டுகிட்டு நான்..”

சட்டென அவன் வாயைத் தன் விரலால் அவள் மூடவும் கண்ணில் குறும்பு வழிய அவள் விரல்களை வலிக்காமல் கடித்தவனோ

“இன்னைக்குப் பார் உன் மச்சான் முத்தத்தாலே உன்னைப் பாடாய் படுத்தப் போறேன்” என்று காதல் வழிய சொன்னவனோ உண்மையிலேயே மனைவியை முத்தத்தால் முக்குளிக்கத் தான் வைத்தான் அஷ்வத்.

தாத்தாவிடம் சொல்லிக் கொண்டு தான் சொன்ன மாதிரியே தன் மனையாளைப் பாரீஸ் அழைத்துச் சென்றவனோ, அங்கு தன் நண்பன் ஸ்டீவிடமும் அவன் குடும்பத்தாரிடமும் தன் மனைவியை அறிமுகப்படுத்தியவன் அவர்களுடன் ஒரு நாளை சந்தோஷத்துடன் செலவழிக்க அவர்கள் ஆசைப்படி நீச்சல்குளம் சென்று குழந்தைகளுடன் இறங்கி ஆட்டம் பாட்டத்துடன் கும்மாளமிட்டு அந்நாளை சந்தோஷமாகக் கழித்தார்கள்.

அஷ்வத் ஏற்பாடு செய்திருந்த ரிசப்ஷன் நாளும் இனிதே விடிய தன் நண்பர்களுக்கும் தொழில் துறையினர் அனைவருக்கும் தன் மனைவியைச் சிரித்த முகமாக அறிமுகப் படுத்தியவன் அப்போது கூட்டத்தில் ஒருவனின் முகத்தைப் பார்த்த போது மட்டும் சற்றுத் தடுமாறியவனோ மனைவியின் தோள் மேலிருந்து பட்டனெ தன் கையை எடுத்து விட்டு கூட்டத்தைச் சகஜமாக எதிர் கொள்வது போல் அவன் இருக்க மேடை ஏறி அவனிடம் வந்த அந்த புதியவனோ அஷ்வத்திடம்

“என்ன ஏ கே.. எப்படி இருக்க? எனக்கு சொல்லாமலே ரகசிமா கல்யாணம் எல்லாம் பண்ணி கிட்ட போல நீ! இருந்தாலும் நான் வந்துட்டேன் பார்த்தியா?” என்று கேட்டவன் பின் சாராவிடம் “ வணக்கம் சகோதரி என் பெயர் சூர்யா! உன் கணவனோட உயிர் நண்பன்” என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான் அவன்.

அதன் பிறகு விழா முடியும் வரை பேருக்காக மனைவியிடம் பேசியவனோ வீட்டுக்கு வந்த பிறகு அந்தப் பேச்சுமே இல்லாமல் அவளிடமிருந்து ஒதுங்கி விட, கணவனின் ஒதுக்கத்தை சரி வர உணராமல் தூங்கி எழுந்தவளோ நேரத்தைப் பார்க்க அதுவோ இவர்கள் இந்நேரம் விமானத்தில் சுவிட்சர்லாந்தை நோக்கிப் பறக்க வேண்டியதைக் காட்ட ‘ஐயோ! பட்டப்பகல்ல இவ்வளவு நேரமா தூங்கிட்டோம்? அவர் வேற இன்று நைட்டே சுவிட்சர்லாந்துல இருக்கணும்னு சொன்னாரே?!’ என்று கணவனைக் காணாமல் சுற்றும் முற்றும் தேடியவள் பின் இறுதியாக அவன் கெஸ்ட் ரூமில் தனக்கு முதுகு காட்டி நிற்பதைப் பார்த்தவள் உள்ளே சென்று அவனைப் பின்புறமாக அணைத்து 

“சாரி மச்சான்.. டயர்ட்ல தூங்கிட்டேன். நீங்களாவது எழுப்பி இருக்கலாம் இல்ல? இப்போ நாம வேற ஃப்ளைட் அரேன்ஜ் பண்ண முடியாதா? அங்க போன பிறகு உங்க கிட்ட நான் ஒன்னு சொல்லணும்னு இருக்கேன்?” என்று அவன் தோள் சாய்ந்து கொஞ்ச, அணைத்த அவள் கைகளைத் தன்னிடமிருந்து விலக்கியவனோ

“எங்கே?” என்று அவள் முகம் பார்க்காமல் ஒற்றை வார்த்தையாக அவன் கேட்க, அவன் முன் வந்து நின்றவளோ சின்னச் சிரிப்புடன் அவன் முகம் பார்க்காமல்

“நீங்க சொன்ன சுவிட்சர்லாந்துக்குத் தான்” என்று சொல்ல

“அதெல்லாம் போக வேணாம்”

“ஏன்?” என்று அவள் அவன் முகம் பார்க்க, அவள் முகத்தை நேருக்கு நேர் கண்டவனோ ஒருவித இறுகிய தன்மையுடன்

“எனக்கு உடம்பு சரியில்ல பொம்மி. நாம போக வேணாம்” என்று அவன் கூற

“அச்சோ! என்னங்க என்ன ஆச்சு உடம்புக்கு? என்ன பண்ணுது?” என்று அவள் பதற

“ஒண்ணும் இல்ல.. லேசா தலைவலி தான்”

“நான் வேணும்னா தலை பிடித்து விடவா? என்று கேட்டவள் அவனை நெருங்க, அவளை விட்டு ஓர் அடி பின்னே நகர்ந்தவனோ 

“அதெல்லாம் வேண்டாம்.. லேசான வலி தான்”

“அப்ப இருங்க.. சூடா டீ போட்டு எடுத்துட்டு வரேன். அதைக் குடிச்சா தலை வலி போகும்” என்றவள் அவன் பதிலுக்குக் காத்திராமல் ஓடிப் போய் டீ போட்டு எடுத்து வந்து கட்டிலில் அமர்ந்து இருந்தவன் முன் பதட்டததுடன் கொடுக்க ஏதோ நினைவில் அவன் வாங்க இருவர் கையிலும் இல்லாமல் அந்த டீ கப்போ அவன் மேல் சரிந்து சூடான டீ கொட்டி விட 

“ஐயோ! சாரிங்க சாரிங்க.. சூடா கொட்டிடுச்சே!” என்றவள் “அந்த டீ ஷர்ட்டைக் கழட்டுங்க” என்று சொல்ல

“ஒண்ணும் கழட்ட வேணாம்.. நீ போ முதல்ல” என்று அஷ்வத் சிடுசிடுக்க

“நீங்க கழட்டுங்க நான் அதை அலசிப் போடுறேன்” என்று பொம்மி பிடிவாதம் செய்ய

“அது தான் வேணாம்னு சொல்றேன் இல்ல? நீ போ நான் அலசிக்கிறேன்” என்று அவன் மீண்டும் காட்டமாகப் பேச, அப்போதும் அவள் அங்கேயே நிற்கவும்

“அதான் உன்னைப் போனு சொல்றேன் இல்ல? போ டி..” என்று அவன் கொஞ்சம் பதட்டத்துடன் டென்ஷன் ஆகிக் கத்தவும்

‘இவர் ஏன் இந்த சின்ன விஷயத்துக்கு இப்படி டென்ஷன் ஆகிறார்?’ என்று அவள் யோசிக்கும் போதே பதட்டத்தில் அவனையும் மீறி முகம் வியர்க்க அவன் கைகள் நடுக்கத்துடன் அவன் நெஞ்சுப் பகுதியை இறுக்கி இறுக்கிப் பிடிப்பதைப் பார்த்தவளோ

‘இவர் உடம்புக்கு ஏதோ பிரச்சினையோ? எங்க நான் அதை தெரிஞ்சிக்கப் போறேனு தான் இப்படி எல்லாம் பதட்டப் படுறாரோ?’ என்று நினைத்தவள், உடனே அவனை நெருங்கி

“நீங்க ஒண்ணும் செய்ய வேண்டாம் நானே செய்றேன்” என்றவள் அவன் டீ ஷர்ட்டின் பட்டனைக் கழற்றுவதற்காகக் சட்டையில் கை வைக்க

“வேண்டாம்!..” என்ற கூக்குரலுடன் அவள் கையைத் தட்டி விட்டவனோ அதே வேகத்துடன் அவள் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டான் அஷ்வத். அவள் கண் கலங்கி அப்படியே ஸ்தம்பித்துப் போய் நிற்கவும்

“உனக்கெல்லாம் ஒரு தடவை சொன்னா புரியாது? போடினு தானே சொல்றேன்? பிறகு ஏன் நிற்கற? போடி இங்கிருந்து!” என்று மறுபடியும் அவன் கர்ஜிக்க, வாங்கிய அடியைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் அவள் அப்படியே அசராமல் நிற்கவும், மனைவியின் முகத்தில் ஒருவித பிடிவாதத்தைப் பார்த்தவன் 

“நான் சொல்றது கேட்காம இன்னும் ஏன் டி இங்கேயே நிற்கிற? என் வீட்டை விட்டுப் போ டி!” என்று அவன் நிதானமே இல்லாமல் வார்த்தைகளை நெருப்பெனக் கொட்ட, அவளோ மிகவும் நிதானமாக

“நான் ஏன் போகனும்? இது என் வீடு. நான் இங்கே தான் இருப்பேன்” என்றவள் அதே இடத்திலேயே கால் மாற்றி நிற்கவும்

“என் வீடு எப்படி டி உன் வீடு ஆக முடியும்?”

“ஏன்னா நான் உங்க மனைவி நீங்க என் கணவன். அதனால இது என் வீடு தான்”

“உன்னைத் தான் நான் என் மனைவியாவே ஏத்துக்கலையே! பிறகு நீ எப்படி என் மனைவி ஆக முடியும்?” என்று அவன் சீறிப் பாய, அவள் எந்த பதிலும் கொடுக்காமல் அமைதியாகவே இருக்கவும்

“சரி இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்க. நீ இங்கே இருக்கக் கூடாது. உன் கிட்ட பேசவோ ஏன் உன் முகத்தைப் பார்க்கக் கூட எனக்குப் பிடிக்கலை. அதனால என்னை விட்டு இந்த வீட்டை விட்டு என் வாழ்க்கைய விட்டுப் போ டி” என்று அவன் வார்த்தைகளைக் கத்தி என வீச

“ அப்போ எதுக்கு என்னைக் கல்யாணம் பண்ணீங்க?” என்று சாரா அமைதியாகக் கேட்க

“அது தான் நான் முன்னாடியே சொல்லி இருக்கேனே, எனக்குத் தேவையானது உன் கிட்ட இருக்குனு! உன் விழிகளுக்காகத் தான் நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இப்பவும் எனக்கு அது தான் வேணும்”

“ஓ… அப்படியா? அப்போ நான் உயிரோட இருக்கும் போதே உங்களுக்குச் சொந்தமான இந்த விழிகளை உங்க கிட்டவே கொடுத்திட்டு உங்கள விட்டு நான் போய்டவா?”

“அம்மா தாயே.. முதல்ல அதை செய் டி!”

“நீங்க எதைக் கேட்குறீங்கனு தெரிஞ்சி தான் கேட்குறீங்களா?”

“ஆமாம் தெரிஞ்சி தான் கேட்கிறேன்”

“அப்போ அதற்கான நேரம் காலம் வரும்போது சொல்லி அனுப்புறேன், வந்து வாங்கிக்கங்க” என்றவள் 
“இப்போ நான் போறவ என்ன ஆனாலும் என்ன நடந்தாலும் திரும்ப நான் இங்க வருவேனு மட்டும் நினைக்காதிங்க. குட் பாய் மிஸ்டர் அஷ்வத் கென்டிரிக்!” என்றவள் அவனைத் திரும்பியும் பாராமல் அந்த வீட்டை விட்டு வெளியேறினாள் சாரா.

“நானும் உன்னைத் தேடி வரவே மாட்டேன் போ டி” என்றவன் கண்ணில் நீர் மல்க எதிலிருந்தோ தப்பித்தவன் போல் அப்படியே கட்டிலில் அமர்ந்து விட்டான் அஷ்வத்.

மனைவியைத் தேடி வரவே மாட்டேன் என்றவன் அடுத்த நாளே அவளைத் தேடி தஞ்சாவூர் வந்து அவள் முன் தங்களுக்கான விவாகரத்துப் பத்திரத்தைக் கொடுத்து அவளைக் கையெழுத்துப் போடச் சொல்ல, எந்தச் சலனமும் இல்லாமல் அதை வாங்கியவள் கூடவே அவன் நீட்டிய பேனாவை வாங்கி கையெழுத்து இட்டாள் இந்தச் சின்னாவின் பொம்மி!..