Categories
Deepi On-Going Novels

அத்தியாயம் – 20

கல்கி-20

கல்லையும் கரைத்திடும் காரிகையின் கண்ணீர்… ஆனால் இங்கோ கல்கியின் கண்ணீர் கிருபாகரனை கரைத்திடாமல் கல்லுளிமங்கனாக இறுகச் செய்தது.

சில நிமிடங்களேக் கண்ணீரை வெளியிட்ட கல்கி அதுவே இழுக்கென்றெண்ணி தன்னுடைய கண்ணீரை மீண்டும் கண்களுக்குள் இழுத்து அணைத்துக் கொள்ள முயற்சி செய்ததை பார்த்த கிருபாகரன் “பாவ்க்ஸ் அந்தக் கண்ணீர் வெளியில வரட்டும்… கண்ணீர் விடுறது தப்பான விஷயம் ஒன்னும் இல்ல… எதுக்காக ஒவ்வொன்னையும் உனக்குள்ளேயே இறுக்கி வைக்கணும்னு நினைக்கிற?

கோபமோ,ஆத்திரமோ, சந்தோசமோ,துக்கமோ எதுவாயிருந்தாலும் அப்பப்ப வெளிய விட்டுடு.. உனக்குள்ள அடக்கி வைக்கிறது உன்னை மட்டும் தான் பாதிக்கும்…எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்க பழகு கல்கி”,என்று கூறியவன் அதுவரை அவளிடமிருந்து சற்று விலகி அமர்ந்து கொண்டிருந்தான்.

அவளது கண்ணீர் நிறுத்தும் முயற்சியில் தன்னைக் கட்டுப்படுத்த இயலாமல் அவளது அருகில் நெருங்கி அமர்ந்து அவளை தன்னுடைய நெஞ்சில் புதைத்துக் கொண்டான். கல்கியும் அதன் பின்னர் தன் கண்ணீரை நிறுத்த முயலவில்லை.அவளது மனதில் இத்தனை ஆண்டுகள் தேக்கி வைத்திருந்த நினைவுகளை நீராக வெளியிட்டுக் கொண்டிருந்தாள்.

அவள் அழுது கொண்டிருப்பதைப் பார்த்தவன் “பாவ்க்ஸ்! 24 மணி நேரத்தில் 0.75 கிராம்ல இருந்து 1.1 கிராம் வரைக்கும்தான் கண்ணீர் உற்பத்தியாகும் ஒரு மனுஷனுக்கு… நீ விடுற கண்ணீரை பார்த்தா உனக்கு மட்டும் அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகுதோ?”, என்று நக்கலாக அவளிடமே கேள்வியை எழுப்பினான்.

கிருபாகரன் கூறிய சமாதானங்கள், அவன் எழுப்பிய கிண்டல்கள் எதற்கும் பதில் கூறாமல் சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள். பின்னர் தானே தெளிந்து அமர்ந்தவள் “நீ பேசறதெல்லாம் கேக்குறப்ப சரியா இருக்கிற மாதிரி இருக்கு கிருபா! ஆனால் கொஞ்ச நேரத்திலேயே நீ உன்னோட பிசினஸ் டெக்னிக்ஸ் எல்லாம் யூஸ் பண்ணி என்னை பிரைன் வாஷ் பண்றியோ அப்படின்னு தோணுது…

உனக்கு என்னை எப்படி லவ் பண்ணனும்னு தோணுச்சுனு சொல்லு கிருபா!”, என்று அவனின் கண்களை பார்த்து கேட்டவளை என்ன செய்வது என்றே கிருபாகரனுக்கு புரியவில்லை.

கிருபாகரன் பதில் கூறாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை கண்ட கல்கி “இந்தக் கேள்விக்கு மட்டும் இல்லை கிருபா!நிறைய விஷயங்களுக்கு எனக்கு உன்கிட்ட இருந்து பதில் வேணும்… நான் சிங்கப்பூரில் இருந்தப்ப மறுநாள் பேப்பர் ப்ரஷன்டேஷன் போறதுக்கு முன்னாடி யாரும் விஷ் பண்ணலையேனு தோாணுனதை விட எனக்குன்னு விஷ் பண்றதுக்கு யாருமே இல்லையே அப்படின்னு யோசிச்சு கிட்டு இருந்தப்ப உன்கிட்ட இருந்து வந்த போன் எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு தெரியுமா?

ஆனா என்னோட மனசு அந்த சந்தோஷத்தை அனுபவிக்க விடாம ஏதோ ஒரு வகையில் குழப்பிக்கிட்டே இருந்துச்சு… இப்பவும் அப்படித்தான் இருக்கேன். உன்கிட்ட பேசுறப்ப ஒரு பாதுகாப்பா இருக்கு. உன்னோட பேசிகிட்டே இருக்கணும், உன் பக்கத்துல இருக்கணும், உன்னோட நெஞ்சுல சாஞ்சுகிட்டே இருக்கணும் அப்படியெல்லாம் தோணுது…

ஆனால் அதுக்கு அடுத்த நிமிஷமே ஒரு குழப்பம் என் மனச ஆக்கிரமிக்கிறது”, என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் பினாத்திக் கொண்டிருப்பவள் தன்னுடைய பதிலில் திருப்தி அடைய மாட்டாள் என்றே கிருபாகரனுக்கு தோன்றியது.

சிறிது நேரம் பொறுத்தவன் “கல்கி வாயை மூடு… எதுவும் பேசக்கூடாது”, என்று விட்டு அவளுக்கு இனிப்பாக எதையோ கலந்து கொண்டு வந்து தந்தான். குடித்து முடித்தவுடன் “என்னத்த கலந்து கொடுத்த கேவலமா இருக்கு டேஸ்ட்”, என்று பழைய கல்கி திரும்பியிருந்தாள்.

“ஒன்னுமில்ல தண்ணியில சர்க்கரையை மட்டும் போட்டுக் கொண்டு வந்தேன்…உனக்கு டேஸ்ட் தெரியுதான்னு தெரிஞ்சுக்க…நீ தெளிவாக இருக்கிறன்னு புரிஞ்சு போச்சு… இப்ப நான் பேசுறேன்”, என்று கிருபாகரன் கூறியதும் கல்கி தன் இரு கைகளையும் எடுத்து பெரிய கும்பிடு போட்டாள்.

“வேண்டாம் கரன் நீ அளவுக்கு அதிகமா பேசுற… ஓரளவுக்கு தெளிஞ்சி இருக்குற நான் நீ பேசுறத கேட்டா ரொம்ப குழம்பி போறேன்”, என கல்கிக் கூறியதில் “வாய் வாய் இந்த வாய் மட்டும் இல்லனா ஒன்னும் பண்ண முடியாது”, என்று அவன் அவளது அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டு மீண்டும் தன்னுடைய தோளில் சாய்த்துக்கொண்டான். இம்முறை கல்கியும் மறுப்பு ஏதும் கூறாமல் வாகாக சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

“கல்கி! என்கிட்ட எப்பவுமே உனக்கு எப்படி லவ் வந்துச்சுன்னு கேட்காத! அதே கேள்வியை நானும் உன்கிட்ட கேட்க மாட்டேன்… இப்ப அரேஞ்ச் மேரேஜ் பண்ணிகிட்டவங்களுக்கு எல்லாம் லவ் வந்து இருக்கானு கேட்டா 20 வருஷம் கழிச்சு கேட்டாலும் அவங்களால பதில் சொல்ல முடியாது…

சும்மா வாய் வார்த்தையா வேணும்னா நாங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் லவ் பண்றோம் அப்படின்னு சொல்லிக்கலாம்… லவ் அப்படிங்கறது ஒரு புரிதல் மட்டுமே! நீ என்ன செய்வ அப்படிங்கிறதை என்னால ஓரளவுக்கு புரிஞ்சுக்க முடியுது… அதேமாதிரி என்னோட மனநிலை ,என்னோட செயல்கள் எல்லாத்தையும் நீயும் புரிஞ்சுக்கிற…

இந்த புரிதல் நம்ம வாழ்க்கைக்கு ரொம்பவே முக்கியம். அது நம்ம ரெண்டு பேருக்குமே நிறைய இருக்கு… சோ கல்யாணத்துக்கு அடுத்து லவ் பண்றோமா இல்லையா அப்படிங்கறதை நம்ம மனசுல நாமலே கேட்டுக்கலாம்… உன்கிட்ட நானோ, என்கிட்ட நீயோ கேட்டு அது ஒரு விதண்டாவாதமாகவோ, விவாதமாகவோ கொண்டு போகக் கூடாது…

நம்ம கல்யாணத்தில நாம முக்கியமா முடிவு செய்ய வேண்டிய ஒரே ஒரு விஷயம் நீ உன்னோட கடந்தகால கசட உன்னோட கணுக்கால் அளவு கூட வச்சுக்க கூடாது… டெய்லி தலைசீவுறப்ப கொட்டுற முடியை தூக்கி குப்பையில் போடுற…

ஐயோ! இவ்வளவு முடி கொட்டிடுச்சு அப்படின்னு அந்த முடிக்காக வருத்தப்படுறது இல்லை தானே! அது மாதிரிதான் கடந்த காலமும்… உன்னை யாரு எதுக்காக,என்ன காரணத்துக்காக விட்டுட்டு போனாங்க அப்படிங்கிறதை எல்லாம் சுத்தமா மறந்துடு…

ஒரு பாதுகாப்பான இடத்தில் வளர்ந்து, படிச்சு இன்னிக்கி உன்னோட சுய கால்ல நிற்குற… இதைவிட உனக்கு பெருசா என்ன வேணும்? இன்னும் நீ உலகத்தை, வெளி உலகத்தை முக்கியமாக பார்க்க ஆரம்பிக்கலை… பார்க்குறப்ப நீ எந்த அளவுக்கு ஆசீர்வதிக்கப்பட்டவ அப்படிங்கிறது உனக்கு புரியும்…

இதோ என்னோட தோளுல நீ சாஞ்சுகிட்டு இருக்கிற இந்த நிமிஷத்தை நான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்… அதே மாதிரி வாழ முயற்சி பண்ணி பாரு… இதெல்லாம் என்னோட கருத்துக்கள்.. உனக்கு இருக்கிற குழப்ப கருத்துக்கள் மாறி உன்னோட மனசு தெளிஞ்சதுக்கு அப்புறம் கரன் உன்னோட வாழ்க்கைய சந்தோஷமா வச்சுப்பான் அப்படின்னு உனக்கு தோணுறப்ப நாம கல்யாணம் பண்ணிக்கலாம்…

அதுக்காக பல வருஷம் காத்துகிட்டு இருப்பேன் அப்படியெல்லாம் நான் சொல்ல மாட்டேன்… நீ இங்கேயே இருந்தா நீ சரிவர மாட்ட… உனக்கு சரியான ஆளு பிகே தான்…

பிகே பேரில் மட்டும் பிசாசு வச்சுக்கல… நிஜமான பிசாசு…அன்னிக்கு நான் மீட்டிங் லேட்டா வந்ததுக்கு காரணமே பிகே தான்…. மீட்டிங் வர்றதுக்கு ரெண்டு மணி நேரத்துக்கு என்னை வொய் ப்ளட் சேம் ப்ளட்(why blood same blood) ஆக்கி தான் கான்பரன்ஸ் ஹாலுக்கு அனுப்பினாங்க… அப்ப நான் வச்ச ஒரே ஒரு கோரிக்கை இங்க திட்டுறதோட நிறுத்திக்கோங்க… தயவுசெஞ்சு என்னோட பாவ்க்ஸ் முன்னாடி என்னை திட்டிடாதீங்க அப்படின்னு தான்… ஆனா அந்த இடத்தில உன் முன்னாடியே வந்து திட்டினாங்க… அதுதான் பிகே!

பிகே கிட்ட ஒரு ஒரு மாசம் இருந்தாலே அவங்க காட்டுற வழியில் நெகட்டிவ் தாட்ஸ் அப்படின்னா என்னதுனு கேட்கிற நிலைமைக்கு வந்துடுவ…நான் பிகே கிட்ட பேசுறேன். நீ ரெடியா இருந்துக்கோ! அம்மாவும்,அப்பாவும் இன்னும் ரெண்டு நாள்ல திரும்ப வந்துடுவாங்க…

வந்ததுக்கப்புறம் நாம எல்லாம் பேசி ஒரு முடிவு எடுக்கலாம்”, என்று அவளது தலையைத் தடவியவாறு கூறியவனை நிமிர்ந்து பார்த்தவள் அவனது கண்களில் என்ன கண்டாளோ அவன் கூறியதற்கு தன் தலையை அசைத்து சம்மதம் தெரிவித்தாள்.

அன்றைய மாலை வரை கல்கியை தன்னுடனேயே வைத்துக் கொண்டிருந்தவன் ஆறு மணிக்கு மேல் அவளை அழைத்துக் கொண்டு அன்று போல் இன்றும் தன்னுடைய விரல்களுடன் அவளது விரல்களைப் பிணைத்துக் கொண்டு கல்கியின் வீட்டை நோக்கி நடை பயின்றான்.

“உனக்கு தெரியுமா கல்கி? எனக்கு அம்மா கூட இப்படி கையைப் புடிச்சிட்டு நடக்கணும்னு சின்ன வயசுல ரொம்ப ஆசை… ஆனால் அம்மா அப்ப டைம் ஸ்பென்ட் பண்ண முடியல… என்னோட ஆசையை அப்பா என்ன சொல்லுவார் தெரியுமா?

எல்லாத்துக்கும் ஆசைப்படக்கூடாது கண்ணா… கிடைக்கிறதை ஏத்துக்கோ! டெய்லி உன் அம்மா கூட உன்னால வெளியில்தானே நடக்க முடியல! வீட்டுக்குள்ளே நடக்க முடியும் தானே! அம்மா கிச்சனுக்கு போறப்ப அவங்க கையை பிடிச்சுகட்டு போ… அம்மா கார்ல ஏற போறப்ப கையை பிடிச்சுகிட்டே போய் ஏத்திவிடு… அப்படின்னு ரொம்ப சிம்பிளா சொல்லிக் கொடுத்தார்.

அப்பதான் அம்மா படற கஷ்டம் எல்லாம் புரிஞ்சது… அவங்களுக்கு என்னோட டைம் ஸ்பென்ட் பண்ண முடியல அப்படிங்கிற வருத்தம் இருந்திருக்கும்… ஆனால் அதை வெளிக்காட்டிக்கலை… அன்னிக்கு நீங்க என்ன நடத்தி கூட்டிட்டு போகலைன்னு இன்னிக்கு நான் அவங்க கூட சண்டை போட முடியாது கல்கி!

இப்பவும் அம்மாவை விட அப்பா கிட்ட தான் எனக்கும் நெருக்கம் ஜாஸ்தி… ஆனா ரெண்டு பேரையும் என்னோட பிரண்ட்ஸ் மாதிரி தான் நினைச்சு பேசுவேன்… அவங்களும் அதே மாதிரி தான் எங்கிட்ட ரியாக்ட் பண்ணுவாங்க… இத்தனை நாள் நீ இருந்த இடம் என்னை பொறுத்த வரைக்கும் ஒரு பெரிய குடும்பம்…

அந்தப் பெரிய குடும்பத்திலிருந்து ஒரு சின்ன குடும்பத்துக்குள்ள நீ வரப் போற… பழக்கவழக்கங்கள் வேறுபடலாம் ஆனால் நீ உன்னோட சுயத்துடன் இருந்து மத்தவங்களோட சுயத்தையும் கொஞ்சூண்டு புரிஞ்சிக்கிட்டா போதும். நம்மளோட வாழ்க்கை அழகா மாறிடும் கல்கி!

அதுக்கு மட்டும் முயற்சி பண்ணு… நீ எனக்கு தண்ணீரில் விழுந்த தூசியால கலங்கி போய் இருந்ததை குடிக்க யோசிக்கிறேன்னு சொன்னியே அந்தக் கலங்கலான தண்ணியை வடிகட்டி குடிக்கிறதுக்கு எனக்கு ரொம்ப நேரமாகாது… ஆனா அந்த நிமிஷத்துல நீ அதை ஏத்துக்கிற மனநிலையில் இல்லை…அதனால் தான் பேசாம போனேன்…

ஏற்கனவே நான் உனக்கு ரொம்ப அட்வைஸ் பண்ணிட்டேன்… என்னோட கேரக்டருக்கு இது பொருந்தாத விஷயம். அது கேட்கிறது உனக்கும் பொருந்தாத விஷயம்.சோ இதுக்கு அடுத்து இதை பத்தி நாம பேச வேண்டாம்… நான் பாட்டி கிட்ட பேசுறேன்.

பேசுனதுக்கு அப்புறம் கொஞ்ச நாள் நீ பாட்டி கூட இருக்க முயற்சி பண்ணு… உன்னோட மனநிலையில் மாற்றங்கள் வரும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு”, என்று கூறிக்கொண்டே அவளது வீட்டினுள் நுழைந்தவன் “எனக்கு ஒரு டீ மட்டும் போட்டுக் கொண்டு வா… ரொம்ப தலை வலிக்குது”, என்று சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

அன்றைய நாளுக்கு பின் அனைத்தும் துரிதகதியில் நடைபெற்று கல்கியும் பிகே வசம் சென்று விட்டாள். இதில் கல்கி தன்னுடன் தங்கி கொள்ள வேண்டுமென்றால் கிருபாகரன் ஒரு சிறு நிபந்தனை லிஸ்ட்டை பின்பற்ற வேண்டும் என்று கிருபாவதி கூறியபொழுது மற்றவர்களின் முகத்தில் வியப்பே தோன்றியது.

என்னவென்று கேட்டவனுக்கு கல்கியுடன் போனில் கடலை வறுக்கக் கூடாது, அடிக்கடி தெட்ஃபோா்ட் வரக்கூடாது. அப்புறம் பிகேவை கேட்காமல் எந்தவித பரிசும் கல்கிக்கு வரக்கூடாது என்று கிருபாவதி நீட்டிய லிஸ்டில் கடுப்பான கிருபாகரன் நேராக கல்கியின் முன்சென்று

“இந்த ஓல்டி சொல்றதுக்கெல்லாம் நான் கேட்க மாட்டேன்… உனக்கு எப்பல்லாம் பாவா கிட்ட பேசணும்னு தோணுதோ அப்போ உடனே எனக்கு கூப்பிடு… போன்ல பேசுறது போர் அடிச்சா சொல்லு அடுத்த நாள் உன் முன்னாடி வந்து நிப்பேன்.

உனக்கு ஏதாவது வேணும் அப்படின்னா நீயா போய் வாங்காத!எனக்கு ஒரு போன் பண்ணு நான் வாங்கிட்டு வந்து கொடுக்கிறேன்”, என்றவன் அவர்கள் அனைவரின் முன்னாக அவளை கட்டியணைத்து “குட் லக் கல்கி!பிசாசு கிட்ட உனக்கு பிக்கல் பிடுங்கல் நிறைய இல்லாம இருக்குறதுக்கு தான் இந்த குட்லக்”, என்று கூறி விடை அளித்தான்.

பிகே உடன் வசிக்க ஆரம்பித்த சிறிது நாட்களிலேயே கல்கியின் எண்ணங்களில் சிறு அளவு மாற்றம் தோன்ற ஆரம்பித்திருந்தது. அதனை அவள் உணர்ந்தாளோ இல்லையோ சுற்றி இருந்தோர் நன்றாக உணர்ந்து கொண்டனர். ஆனால் கல்கியின் இம்மாற்றங்கள் கிருபாகரனுக்கு மற்றொரு பிகேவை நாமலே உருவாக்கிவிட்டோமோ என்ற எண்ணத்தை தோற்றுவித்தது.

அன்றைய நாளுக்கு பின் அனைத்தும் துரிதகதியில் நடைபெற்று கல்கியும் பிகே வசம் சென்று விட்டாள். இதில் கல்கி தன்னுடன் தங்கி கொள்ள வேண்டுமென்றால் கிருபாகரன் ஒரு சிறு நிபந்தனை லிஸ்ட்டை பின்பற்ற வேண்டும் என்று கிருபாவதி கூறியபொழுது மற்றவர்களின் முகத்தில் வியப்பே தோன்றியது.

என்னவென்று கேட்டவனுக்கு கல்கியுடன் போனில் கடலை வறுக்கக் கூடாது, அடிக்கடி தெட்ஃபோா்ட் வரக்கூடாது. அப்புறம் பிகேவை கேட்காமல் எந்தவித பரிசும் கல்கிக்கு வரக்கூடாது என்று கிருபாவதி நீட்டிய லிஸ்டில் கடுப்பான கிருபாகரன் நேராக கல்கியின் முன்சென்று

“இந்த ஓல்டி சொல்றதுக்கெல்லாம் நான் கேட்க மாட்டேன்… உனக்கு எப்பல்லாம் பாவா கிட்ட பேசணும்னு தோணுதோ அப்போ உடனே எனக்கு கூப்பிடு… போன்ல பேசுறது போர் அடிச்சா சொல்லு அடுத்த நாள் உன் முன்னாடி வந்து நிப்பேன்.

உனக்கு ஏதாவது வேணும் அப்படின்னா நீயா போய் வாங்காத!எனக்கு ஒரு போன் பண்ணு நான் வாங்கிட்டு வந்து கொடுக்கிறேன்”, என்றவன் அவர்கள் அனைவரின் முன்னாக அவளை கட்டியணைத்து “குட் லக் கல்கி!பிசாசு கிட்ட உனக்கு பிக்கல் பிடுங்கல் நிறைய இல்லாம இருக்குறதுக்கு தான் இந்த குட்லக்”, என்று கூறி விடை அளித்தான்.

பிகே உடன் வசிக்க ஆரம்பித்த சிறிது நாட்களிலேயே கல்கியின் எண்ணங்களில் சிறு அளவு மாற்றம் தோன்ற ஆரம்பித்திருந்தது. அதனை அவள் உணர்ந்தாளோ இல்லையோ சுற்றி இருந்தோர் நன்றாக உணர்ந்து கொண்டனர். ஆனால் கல்கியின் இம்மாற்றங்கள் கிருபாகரனுக்கு மற்றொரு பிகேவை நாமலே உருவாக்கிவிட்டோமோ என்ற எண்ணத்தை தோற்றுவித்தது.

கல்கி தெட்ஃபோா்ட் சென்று ஒரு வருடம் கடந்த நிலையில் அன்றைய தினத்தின் நள்ளிரவில் பிகே விடமிருந்து காயத்ரி,தயா இருவருக்கும் அழைப்பு வந்தது. நடு இரவில் வந்த அழைப்பில் பதறிப்போன இருவரும் என்னவென்று எழுந்து கேட்டிட “ஒழுங்கு மரியாதையா இவங்க ரெண்டு பேருக்கும் சீக்கிரமா கல்யாணம் பண்ணி வச்சு தொலைங்க… இதுங்க போடுற சண்டையை பார்த்து எனக்கு பிபி வந்துடும்”, என்று கத்தியவர் “சீக்கிரமா டேட் பிக்ஸ் பண்ணிடு தயா”, என்று மகனுக்கு ஆணையிட்டுவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

இது வழக்கமான ஒன்றுதான் என்பது போல் இருவரும் தூங்க சென்றனா். ஏனெனில் கிருபா இங்கிருந்து அங்கே செல்லும் பொழுது என்னோட பாவ்க்ஸ்க்கு ப என அனைத்தும் பார்த்து பார்த்து வாங்கிச் செல்வான். ஆனால் அங்கே சென்ற பின்னர் கல்கியும்,கிருபாகரனும் சிறு குழந்தைகளை விட மோசமாக அடிதடி சண்டையில் ஈடுபடுவார்கள்.

ஒவ்வொரு முறையும் அவர்கள் சண்டையிடும் பொழுது பிகேவுக்கு எரிச்சல் உச்சபட்சம் ஆகிவிடும்… அப்பொழுதெல்லாம் இவ்வாறுதான் அழைத்து மகனையும், மருமகளையும் காய்ச்சி எடுப்பார். அதனைப்பற்றி மறுநாள் பேச்சு இருக்காது.

ஆனால் இம்முறை மறுநாள் விடிந்ததும் மீண்டும் அழைத்தவர் “டேட் பிக்ஸ் பண்ணியாச்சா?”,என்ற கேள்வியை எழுப்பினார். அவரது குரலில் இருந்த அலுப்பே ஏதோ பெரிய விஷயமாக நடந்துள்ளது என்பதனை காயத்ரிக்கு உணர்த்தியது.

” என்னாச்சு அத்தை? ரெண்டு பேரும் இந்த தடவை சண்டை போட்டு கை உடைஞ்சிடுச்சா இல்லை கால் உடைஞ்சிடுச்சா” என்று தன்னுடைய மாமியாரிடம் மகன் மருமகளின் குணத்தைப்பற்றி பற்றி புரிந்தவராக கேட்டார்.

“நேத்து கிருபா வந்திருக்கான்னு சொல்லி அவனை பார்க்க வந்த என்னோட ஃப்ரெண்ட் எட்வர்ட் முன்னாடி ரெண்டு பேரும் தலைமுடியை பிச்சிக்கிட்டு சண்ட போடுறப்ப பக்கத்துல நின்னு வேடிக்கை பாத்துகிட்டு இருந்த எட்வா்டை கீழே தள்ளிவிட்டு அவனோட தலையில அடி பட்டுடிச்சி… அவன்கிட்ட கெஞ்சி கூத்தாடி இதை போலீஸ் கேஸ் ஆகாம பண்றதுக்குள்ள என்னோட உயிரே போய் வந்துருச்சு!

இதுக்கு மேல இதுகளை வச்சு சமாளிக்க என்னால முடியாது… சீக்கிரமா கல்யாணம் பண்ணி வச்சு அதுகளுக்குள்ள அடிச்சிக்கிறதை தள்ளி நின்னு வேடிக்கை பார்க்கலாமா”, என்று பிகே கூறியதும் அடுத்த அரைமணி நேரத்தில் அடுத்த ஒரு மாதத்தில் திருமணத்தை முடித்து விட முடிவு செய்தனர்.

இவர்கள் திருமணத்திற்கு முடிவு செய்த பின்னர் அங்கிருந்து கிளம்பி வரும் நேரத்தில் கிருபாகரன் “பாவ்க்ஸ் கல்யாணத்துக்கு அப்புறமும் நாம எப்பவும் இப்படியே இருக்கணும்… நம்மளை நம்மளோட கல்யாணம் தொலைஞ்சு போக வைக்க கூடாது”, என்று உணர்வுபூர்வமாக பேசிக் கொண்டிருப்பதை கேட்ட பிகே

“டேய் கொன்னுடுவேன்! மரியாதையைக் கிளம்பி போயிடு… அடுத்த வாரம் கொண்டு வந்து உன்னோட பாவ்க்ஸை ஒப்படைச்சுடுறேன்… ரெண்டும் பிள்ளைங்களா? பிசாசுங்க”, என்று அலறி அடித்துக் கொண்டு சென்றார்.

கல்கி சென்னை வந்ததும் அவளைக் கூட்டிக் கொண்டு அவளுக்குத் தேவையான உடைகள், நகைகள் வாங்குவதில் கிருபாகரன் அவளுடனேயே அலைந்து கொண்டிருந்தான் …பத்து மணி நேரம் உடனிருந்தால் ஒன்பது ஒன்பது மணி நேரம் இருவரும் வழக்காடி கொண்டுதான் இருந்தனர்.

ஆனால் மீதி இருந்த ஒரு மணி நேரத்தில் இருவரும் பொழிந்த அன்பு மழையில் மற்றவர்களின் மண்டை தான் காய்ந்தது.மற்றவர்களை முடியை பிய்த்துக் கொள்ள வைத்துவிட்டு தங்களது மணநாளை இருவரும் ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தனர். கல்கி எதிர்பார்த்ததோ மிகவும் சிறிய அளவிலான திருமணத்தை…

ஆனால் அவளின் எண்ணத்திற்கு மாறாக திருமணம் மிகவும் பிரமாண்டமான அளவில் அனைவரும் கூடி இருக்கச்செய்து நடைபெற்றது. கிருபாகரன் கூறியது போன்றே கல்கியின் மனதில் காதலை உணர்ந்து இருந்ததால் அவளது வாய்மொழியாக கூட கேட்காமல் மணமேடைக்கு தூக்கி சென்று தன் அருகிலேயே மிகவும் நெருக்கமாக அமர்த்திக் கொண்டான்.

மாங்கல்ய தாரணம் முடிந்த பின்னர் மீண்டும் இருவரும் தங்களது குணத்தை வெளியிட ஆரம்பித்துவிட்டனர். அதுவரை தன்னுடைய ஸ்டைலில் கலக்கிக் கொண்டிருந்த பிகே இவர்கள் ஆரம்பித்த அடுத்த நொடியில் “நான் கிளம்புகிறேன்”, என்று கிளம்பிவிட்டார். அனைத்து சடங்குகளும் நிறைவு பெற்ற பின்னர் மாலை வரவேற்பிலும் அனைவரது மனமும் மகிழும் வண்ணமாக இருவரும் காட்சியளித்தனர்.

அன்றைய முதல் இரவு சடங்கிற்காக கல்கியை தயார் செய்து அனுப்பிவிட்டு ஹாலில் காயத்ரி,ப்ரியா,கிருபாவதி மூவரும் கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தனர். அதனைக் கண்ட தயா என்னவென்று விசாரித்ததற்கு

“யாருடைய கை உடையுமோ? யாருடைய கால் உடையுமோ? அந்த பயத்தில் தான் நாங்க இங்க உட்கார்ந்து இருக்கும்”, என்று கிருபாவதி கூறியதில் சிரித்தவர் “போங்க! போய் படுத்து தூங்குங்க… அவங்க வாழ்க்கையை அவங்க பாத்துப்பாங்க…

கை உடைஞ்சாலும், கால் உடைஞ்சாலும் புருஷன் பொண்டாட்டி மாத்தி,மாத்தி பாத்துப்பாங்க…அதைப்பற்றி நாம கவலைப்படத் தேவையில்லை”, என்று அனைவரையும் தூங்க விரட்டிவிட்டார்.

இவர்களின் எண்ணத்திற்கேற்ப கல்கி உள்நுழைந்ததும் அங்கிருந்த டேபிளில் தன்னுடைய கையிலிருந்த பிளாஸ்கை வைத்துவிட்டு நிமிர்ந்த நொடியில் கிருபாகரன் தன்னுடைய காலினால் அவளுடைய காலை வாரி விட்டிருந்தான்.

கல்கி சுதாரித்து அருகில் இருந்த சுவரைப் பிடித்துக்கொண்டு நின்ற பொழுது “அன்னைக்கு உன் வீட்ல வச்சு இப்படித்தான வாரிவிட்ட…அன்னிக்கே உன் கழுத்தை திருகி இருக்கணும்னு நினைச்சேன்… ஆனா முடியல”, என்று மல்லுக்கு நின்றான்.

“நீ காலை வாரிவிட்டு நான் அமைதியா இருக்கவா?”, என்று அவன் மேல் பாய்ந்த கல்கி அவனது சிண்டை பிடித்து ஆட்ட ஆரம்பித்து இருந்தாள். இருவரின் சண்டையும் ஒரு கட்டத்தில் வாழ்வின் அடுத்த கட்டத்தை எய்தச் செய்திருந்தது.

மறுநாளைய விடியலில் இவர்களின் வரவை கலவரத்துடன் எதிர்நோக்கி இருந்தவர்கள் புன்னகை முகமாக கீழே இறங்கி வந்த இருவரையும் கண்டு உலக அதிசயமாக வியந்தனர். தன்னுடைய பாட்டியின் அருகில் வந்து அமர்ந்தவன் “பாட்டி நீங்க எதிர்பார்க்கிற அளவுக்கு பெரிய சீன் எல்லாம் இல்லை… கிருபாகரன் இப்ப கிருபாகரன் கல்கியா மாறிட்டான்”, என்று புன்னகையுடன் மொழிந்ததில் தன்னையே உளியால் செதுக்கி கொண்டவளின் உள்ளத்து புன்னகை உதடுகளில் உருவம் கொண்டு உடையவனை நோக்கி உதடு குவித்தது.

Categories
Deepi On-Going Novels

அத்தியாயம் – 19

கல்கி-19

பூர்ணச்சந்திரனும்,முழு நித்திரை கொண்ட நிலவும் ஒருங்கே அமைந்திடாவிடினும் குழப்பமும்,தெளிவும் ஒரே நேரத்தில் மானுடர்க்கு மட்டும் தோன்றிடும் விந்தை என்னவோ? என்ற தீவிர ஆராய்ச்சியில் கிருபாகரன் ஈடுபட்டிருந்தான்.

பின்னே மதியம் கல்கிக்கு அவன் கூறிய விசயங்களில் கல்கி தெளிவு பெற்றிருப்பாள் என்ற தெளிவும்,அவள் தன் கருத்தில் இருந்து இறங்கிடாமல் அவனின் கழுத்தில் கத்தியை வைத்து விடுவாளோ! என்ற குழப்பமும் கிருபாகரனுக்கு ஒருங்கே எழுந்ததில் தான் மேலே கூறிய ஆராய்ச்சியின் ஆரம்பம்.

ஆனால் இவனின் ஆராய்ச்சிக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் கல்கி தன்னுடைய தீசிஸ்க்கு தேவையான வேலையை மட்டுமே செய்து கொண்டிருந்தாள்.கிருபாகரன் வந்ததோ,அவன் பேசிவிட்டு சென்றதோ எதையும் மனதில் ஏற்றிக் கொள்ள விரும்பாமல் தன் மனதையும்,மூளையையும் ஒருநிலைப்படுத்தி சிறிதுநேரம் அமர்ந்தவள் அதற்குப் பின் தெளிந்தவளாக வேலையில் ஈடுபட ஆரம்பித்து விட்டாள்.

பசித்த பொழுது கிருபாகரன் செய்த சாப்பாட்டில் மீதமிருந்ததை சூடு செய்து உண்டதுடன் “நீ செஞ்ச சாப்பாடு ஆறிப் போனாலும் நல்லா தான் இருக்கு… ஆனால் புலாவ்க்கு தயிர் பச்சடியும்,கத்திரிக்காய் போட்ட கறியும் தான் சரியான காம்பினேஷன்.

அடுத்த தடவை செய்றப்ப அதையே செஞ்சிடு… பிஷ் மஞ்சூரியன் நல்லா இல்லை”, என்று கிருபாவிற்கு ஒரு மெசேஜையும் தட்டிவிட்டு அவனை மேலும் கடுப்பு ஆக்கினாள்.”மகிழ்ச்சி” என்ற பதிலை மட்டுமே அவளுக்கு தட்டியவன் தன்னுடைய நித்திரையை கண்டிடச் சென்றான். மறுநாளில் அலுவலகத்தில் இருவரும் சந்தித்துக் கொண்ட போதிலும் முந்திய நாளின் முணுமுணுப்பு சிறிதுமின்றி அப்பொழுதுதான் புதிதாக சந்திப்பவர்கள் போல் நடந்து கொண்டனர்.

அன்றைய நாள் மட்டுமின்றி அதற்கடுத்து வந்த ஒரு மாதமும் இருவரும் அவரவர் வேலையில் ஆழ்ந்திருந்தனர். தனித்திருந்து பேசிட துளிகள் கிட்டிடாவிடினும் அத்துளிகள் ஏற்படுத்திக் கொள்ள இருவரும் முயலவில்லை.

கல்கி தீசிஸ் சப்மிட் செய்ய வேண்டியது இருந்ததால் அதற்கு விடுமுறை எடுத்து இறுதி வைவாவும் முடிந்த பின்னர் தென்காசிக்கு சென்று பிரியாம்மாவையும் பார்த்துவிட்டு வந்தாள்.அவரும் கிருபாகரன் உடனான திருமணத்தைப் பற்றிக் கேட்டதற்கு பதில் ஏதும் கூறாமல் கிளம்பி வந்து இருந்தாள்.

கல்கி வந்த மறுநாளே கிருபாகரனிடம் சென்று “கிருபா நாளைக்கு நான் உன்னோட வீட்டுக்கு வரேன்… எனக்கு லன்ச்சுக்கு நண்டு கிரேவியும், இறால் வருவலும் செஞ்சு வை”, எனக் கூறிவிட்டு சென்றாள். மறுநாள் இவள் கிருபாவின் வீட்டிற்கு சென்ற பொழுது வீட்டில் அவனைத் தவிர வேறு யாருமில்லை.

அது உள்ளே சென்ற பின்னர்தான் கல்கிக்கு தெரிய வந்தது.”ஆன்ட்டி,அங்கிள் எங்கே?”, என்று கேட்டவளிடம் “அவங்க ரெண்டு பேரும் பாட்டியை பார்க்க போயிருக்காங்க”, என கிருபாகரன் நக்கல் இழையோட பதில் கூறினான்.”ஓ”, என அவள் காட்டிய உணர்வில் “அப்புறம் மேடம்! என்ன கற்பனை எல்லாம் களை கட்டுதா? தனியா இருக்கிற இவனை நம்பி வீட்டுக்குள்ள வந்துட்டோம்… ஏதாவது செஞ்சுடுவானோ அப்படில்லாம் யோசிப்பீங்களே!”, என கிருபாகரன் கேள்வி எழுப்பியதற்கு “சமைச்சு வெச்சதை டைனிங் டேபிளில் எடுத்து வை எனக்கு பசிக்குது”, என அவனுக்கு ஆணையிட்டாள்.

அவள் ஆணையிட்டதற்கு எவ்வித மறுமொழியும் கூறாமல் தானே ஒரு தட்டில் எடுத்து போட்டுக்கொண்டு வந்தவன் அன்று போலவே இன்றும் அவளுக்கு ஊட்டி விட்டான். அவள் போதும் என்று கூறிய பின்னரும் மேலும் சிறிது ஊட்டி விட்ட பின்னரே தான் சாப்பிட அமர்ந்தான்.

“எதுக்கு கரன் இவ்வளவு சாப்பாடு ஊட்டிவிட்ட? என்னால முடியல பாரு…”, என புலம்பியவளை “எப்பெல்லாம் நான் ஊட்டி விடுறேனோ அப்ப எல்லாம் நீ அளவுக்கு அதிகமா பேசுற… அதுக்கு நான் அதைவிட பத்து மடங்கு பதில் பேசுவேன்… அதை கேக்குறதுக்கு உனக்கு தெம்பு வேணும் தானே! அதான் அளவுக்கதிகமா ஊட்டி விட்டேன்”, என்று கூறியவன்

“இன்னிக்கு ஒழுங்கு மரியாதையா என்கூட வந்து கிச்சனை கிளீன் பண்ணி கொடு”, என்று அவளையும் இழுத்து சென்று கிளீனிங் வேலையை முடித்தான். இருவரும் வந்து அமர்ந்த பின்னர் “சொல்லு கல்கி! என்ன பேசணும்னு முடிவு எடுத்து என்னை பார்க்க வந்திருக்க?”,என கிருபாகரன் கேட்ட பின்னரும் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து இருந்தவள் “நீ அன்னிக்குப் அவ்வளவு பேசிட்டு வந்தியே கிருபா! நீ சொன்ன மாதிரி எத்தனையோ இருக்கலாம்தான்… ஆனால் அத்தனையும் என்னை மட்டும்தானே பாதிச்சது”, என்று கூறி நிறுத்தினாள்.

அவள் பேசி முடிக்கட்டும் என்று காத்திருந்த கிருபாகரன் அவள் கூறிய பாதிப்பு என்ற வார்த்தையில் “நீ எந்த வகையில் பாதிக்கப்பட்ட கல்கி?”, என வினா எழுப்பினான்.

“என்ன பாதிக்கப்படலைன்னு நீ நினைக்கிற கிருபா?ஹோம்ல இருந்து வர்றாங்கன்னு தெரிஞ்சாலே படிக்கிற இடத்தில் இருந்து, போற எல்லா இடத்திலேயும் இது எந்த முறையில் பிறந்துச்சோ? யாா்கிட்ட ஏமாந்து இவளோட அம்மா பெத்து போட்டுட்டு போனாளோ? இந்த மாதிரி டயலாக்ஸ் நீ சொன்னியே படிச்சி வளர்ந்து நல்ல நிலமைக்கு வந்தாலும் இன்னிக்கு வரைக்கும் கேட்க வேண்டியது தான் இருக்கு…

அது போக படிக்கிற படிப்பு எல்லாமே யாராவது ஸ்பான்சர் பண்ண மாட்டாங்களா அப்படினு எதிர்பார்க்கனும். எனக்கு ஆன்ட்டி ஸ்பான்சர் பண்ணினதால எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா என்கூட வளர்ந்தவங்க நிறைய பேர் என்ன படிக்கணும்னு கூட யோசிக்க விரும்ப மாட்டாங்க… ஏன் தெரியுமா?

ஸ்பான்சர் பண்றவங்க இவங்க இத மட்டும் தான் படிக்கணும் அப்படின்னு சொல்லுவாங்க.இல்லைனா படிச்சுக்கிட்டு இருக்கிறப்பவே பாதியில எங்க சூழ்நிலை சரியில்லை, எங்களால தொடர்ந்து ஸ்பான்சர் பண்ண முடியாதுன்னு சொல்லிடுவாங்க. அதுபோக யாரும் கேட்க மாட்டாங்க அப்படிங்கற தைாியத்துல எங்க போனாலும் செக்ஸுவல் ஹராஸ்மெண்ட் மத்தவங்களை விட எங்களுக்கு ஜாஸ்தியாக இருக்கும்…

பிரச்சினைக்கு வெளியே இருந்து பார்க்கிறவங்களுக்கு ரொம்ப ஈசியா இருக்கும் கிருபா… ஆனால் பிரச்சினைககுள்ள இருக்கிறவங்களுக்கு மட்டும் தான் அதோட வலியும்,வேதனையும் புரியும்… எனக்கு உன்னை பிடிச்சிருந்தாலும் உன் மேல ஒரு நம்பிக்கை வரல இந்த நிமிஷம் வரைக்கும்… ஒரு நேரம் உன்னை மட்டுமே நம்பனும் அப்படின்னு நினைக்கிற மனசு அடுத்த நிமிஷம் அதற்கு எதிர்மறையா யோசிக்குது…என்ன முடிவு எடுக்குறதுனு தெரியாம ஒரே குழப்பமா இருக்கு…

உன்னை முழுசா நம்புறேன்… என்னால உன்னோட வாழ்க்கையும் சந்தோசமா இருக்கும் அப்படிங்கிற நம்பிக்கை எனக்குள்ள வரணும்… அந்த நம்பிக்கை வராத வரைக்கும் என்னால ஒரு முடிவை உனக்கு சொல்ல முடியாது.இன்னிக்கு என்னை பத்திரமாப் பாத்துக்கற, ரொம்ப கேர் எடுத்து பார்த்துக்கற நீ நாளைக்கு பாதியில என்னை விட்டுட்டு போக மாட்டேன்னு என்ன நிச்சயம்… வாழ்க்கையில் அடிபட்டு வர்றவங்களுக்கு எல்லாத்துலயும் ஒரு சந்தேகம் இருந்துகிட்டே தான் இருக்கும்… யாரையும் நம்ப தோணாது… என்னை பொறுத்த வரைக்கும் என்னோட படிப்பும், வேலையும் மட்டும் தான் என்னோட நம்பிக்கையா இருந்திருக்கு…

ஆனாலும் உன் மேல கொஞ்சூண்டு லவ் இருக்கோ என்னமோ? யார் கிட்டயும் ஷேர் பண்ணாத என்னோட மன உணர்வுகளை உங்கிட்ட மட்டும் தான் சொல்லியிருக்கேன்… கத்தி,கத்தி போல வார்த்தைகள் இந்த ரெண்டுமே இல்லாம நான் பேசுற ஒரே ஆள் நீ மட்டும்தான் கிருபா!”, என்று கல்கிக் கூறியதில் அவளையுமறியாமல் அவளது குரல் அவளுள்ளத்துக் காதலை அக்கள்வனுக்கு உணர்த்தியது.

அவள் பேசி முடிக்கட்டும் என்று காத்திருந்த கிருபாகரன் அவள் கூறிய பாதிப்பு என்ற வார்த்தையில் “நீ எந்த வகையில் பாதிக்கப்பட்ட கல்கி?”, என வினா எழுப்பினான்.

“என்ன பாதிக்கப்படலைன்னு நீ நினைக்கிற கிருபா?ஹோம்ல இருந்து வர்றாங்கன்னு தெரிஞ்சாலே படிக்கிற இடத்தில் இருந்து, போற எல்லா இடத்திலேயும் இது எந்த முறையில் பிறந்துச்சோ? யாா்கிட்ட ஏமாந்து இவளோட அம்மா பெத்து போட்டுட்டு போனாளோ? இந்த மாதிரி டயலாக்ஸ் நீ சொன்னியே படிச்சி வளர்ந்து நல்ல நிலமைக்கு வந்தாலும் இன்னிக்கு வரைக்கும் கேட்க வேண்டியது தான் இருக்கு…

அது போக படிக்கிற படிப்பு எல்லாமே யாராவது ஸ்பான்சர் பண்ண மாட்டாங்களா அப்படினு எதிர்பார்க்கனும். எனக்கு ஆன்ட்டி ஸ்பான்சர் பண்ணினதால எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா என்கூட வளர்ந்தவங்க நிறைய பேர் என்ன படிக்கணும்னு கூட யோசிக்க விரும்ப மாட்டாங்க… ஏன் தெரியுமா?

ஸ்பான்சர் பண்றவங்க இவங்க இத மட்டும் தான் படிக்கணும் அப்படின்னு சொல்லுவாங்க.இல்லைனா படிச்சுக்கிட்டு இருக்கிறப்பவே பாதியில எங்க சூழ்நிலை சரியில்லை, எங்களால தொடர்ந்து ஸ்பான்சர் பண்ண முடியாதுன்னு சொல்லிடுவாங்க. அதுபோக யாரும் கேட்க மாட்டாங்க அப்படிங்கற தைாியத்துல எங்க போனாலும் செக்ஸுவல் ஹராஸ்மெண்ட் மத்தவங்களை விட எங்களுக்கு ஜாஸ்தியாக இருக்கும்…

பிரச்சினைக்கு வெளியே இருந்து பார்க்கிறவங்களுக்கு ரொம்ப ஈசியா இருக்கும் கிருபா… ஆனால் பிரச்சினைககுள்ள இருக்கிறவங்களுக்கு மட்டும் தான் அதோட வலியும்,வேதனையும் புரியும்… எனக்கு உன்னை பிடிச்சிருந்தாலும் உன் மேல ஒரு நம்பிக்கை வரல இந்த நிமிஷம் வரைக்கும்… ஒரு நேரம் உன்னை மட்டுமே நம்பனும் அப்படின்னு நினைக்கிற மனசு அடுத்த நிமிஷம் அதற்கு எதிர்மறையா யோசிக்குது…என்ன முடிவு எடுக்குறதுனு தெரியாம ஒரே குழப்பமா இருக்கு…

உன்னை முழுசா நம்புறேன்… என்னால உன்னோட வாழ்க்கையும் சந்தோசமா இருக்கும் அப்படிங்கிற நம்பிக்கை எனக்குள்ள வரணும்… அந்த நம்பிக்கை வராத வரைக்கும் என்னால ஒரு முடிவை உனக்கு சொல்ல முடியாது.இன்னிக்கு என்னை பத்திரமாப் பாத்துக்கற, ரொம்ப கேர் எடுத்து பார்த்துக்கற நீ நாளைக்கு பாதியில என்னை விட்டுட்டு போக மாட்டேன்னு என்ன நிச்சயம்… வாழ்க்கையில் அடிபட்டு வர்றவங்களுக்கு எல்லாத்துலயும் ஒரு சந்தேகம் இருந்துகிட்டே தான் இருக்கும்… யாரையும் நம்ப தோணாது… என்னை பொறுத்த வரைக்கும் என்னோட படிப்பும், வேலையும் மட்டும் தான் என்னோட நம்பிக்கையா இருந்திருக்கு…

ஆனாலும் உன் மேல கொஞ்சூண்டு லவ் இருக்கோ என்னமோ? யார் கிட்டயும் ஷேர் பண்ணாத என்னோட மன உணர்வுகளை உங்கிட்ட மட்டும் தான் சொல்லியிருக்கேன்… கத்தி,கத்தி போல வார்த்தைகள் இந்த ரெண்டுமே இல்லாம நான் பேசுற ஒரே ஆள் நீ மட்டும்தான் கிருபா!”, என்று கல்கிக் கூறியதில் அவளையுமறியாமல் அவளது குரல் அவளுள்ளத்துக் காதலை அக்கள்வனுக்கு உணர்த்தியது.

அவளது காதல் மகிழ்ச்சியளித்தாலும் அவள் கூறிய வார்த்தைகள் புறத்தோற்றத்தில் மிகவும் மெச்சூா்டாக நடந்து கொள்ளும் கல்கியா இவள் என்று எண்ண வைத்தது.

“நீ உன் மனசை விட்டு ஷேர் பண்ணிக்கிட்டதுல ரொம்ப சந்தோசம் கல்கி! ஆனா நீ சொன்ன பல விஷயங்கள்ல எனக்கு உடன்பாடு கிடையாது… சொல்லப்போனால் நீ எதாலையும் பாதிக்கப்படல… வெளி உலகத்தில் இருக்கிறதை விட ரொம்ப பாதுகாப்பா வளர்ந்து வந்திருக்கிற”, எனக் கிருபாகரன் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே “என்ன பாதுகாப்பு கிருபா? ஒவ்வொருத்தர் கிட்டயும் பட்ட அசிங்கம் தான் எனக்கு கிடைச்ச பாதுகாப்பு”, எனக் கல்கி கோபாவேசத்துடன் கத்தினாள்.

அவளது கோபத்தை உணர்ந்தவனாக அருகில் இருந்த தண்ணீரை எடுத்துக் கொடுத்தவன் “முதல்ல இதைக் குடி… நீ பேசுறப்ப எதுவும் தலையிடாம அமைதியா கேட்டுகிட்டு இருந்தேன் தானே! அதே மாதிரி இப்ப நான் பேசி முடிக்கிற வரைக்கும் உணர்ச்சிவசப்படாம கேளு…

அப்படி எல்லாம் முடியாதுன்னு ஏறுக்கு மாறாக பேசினா பல்லை தட்டிடுவேன்”, என்று கிருபாகரன் அவளை சற்று அதட்டலாகவே பேசி அமைதியடையச் செய்தான். “நான் திரும்பவும் அதையே தான் சொல்றேன் கல்கி! நீ ரொம்ப பாதுகாப்பா வளர்ந்து வந்திருக்கிற… பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க.. வார்த்தைகளுக்கு வடிவம் கிடையாது, ஆனால் வடுவாக மாறுற சக்தி இருக்கு அப்படின்னு… அதனால வார்த்தைகளை பார்த்துப் பேசணும் அப்படின்னு சொல்லுவாங்க.

யாரோ வடிவம் தெரியாத வடுவை மட்டும் தான் உனக்கு கொடுத்து இருக்காங்க… நீ சொன்னியே ஹோம்ல இருக்கறவங்க படுற கஷ்டம்னு, மும்பை கல்யாண் ஏரியால இருக்கிற பொண்ணுங்க படுற கஷ்டத்தை விடவா நீ சொன்ன கஷ்டம் எல்லாம் பெருசு? அங்கங்க பிஞ்சு குழந்தைகள் செக்ஸுவல் ஹராஸ்மெண்ட்ல டெய்லி செத்துகிட்டு இருக்காங்களே அதைவிடப் பெரிய கஷ்டத்தையா நீ அனுபவிச்சிட்ட?

இன்னிக்கும் வெளியில போனா ஒரு நேர சாப்பாட்டுக்கு வழியில்லாத குழந்தைங்க எத்தனை பேரு பிச்சை எடுக்கிறாங்கனு உனக்கு தெரியுமா? என் கூட வந்தா நானே காமிக்கிறேன்… இந்த மாதிரி எந்தவொரு கஷ்டத்தையும் நீ அனுபவிக்கவே இல்லாம பாதிக்கப்பட்டேன் அப்படிங்கற வார்த்தையை உபயோகப்படுத்தாத…

வாழ்க்கையை அதோட போக்கில் வாழனும் கல்கி! இதை உனக்கு நான் பலமுறை சொல்லிட்டேன். முதல் நாள் நீ இண்டர்வியூ அட்டெண்ட் பண்ண வந்தப்ப அப்பா என்னை கூப்பிட்டு சொன்னது கல்கிக்கு ஆண்கள் மேல ஏதோ வெறுப்பு இருக்கு… அதை வெளிய காட்டிக்காம நடந்துக்கிறா… பாா்க்குறதுக்கு சாதாரணமாக தெரிஞ்சாலும் ஆண்கள் நிறைய பேர் வேலை பாா்க்குற இடத்துல இது சரி வராது அப்படின்னு சொன்னாரு…

நான் அப்போ உன்னை லவ் பண்ணல… ஆனாலும் உன் மேல எனக்கு ஒரு நம்பிக்கை இருந்துச்சு.கொடுக்கிற வேலையை உன்னை விட பெர்ஃபெக்டா யாராலயும் செய்ய முடியாதுன்னு… உனக்கு என் மேல நம்பிக்கை வா்றதும், வராததும் உன்னோட மனசாட்சிக்கு சாதாரணமா இருக்கலாம்… நானும் என்னை முழுசா நம்பனும்னு எப்பவும் சொல்லவே இல்லை…

நான் ஒரு பெர்ஃபெக்ட் மனுசனா இருப்பேன்னு யாராலயும் உத்தரவாதம் தர முடியாது. உன்னைக் கல்யாணம் பண்ணிகிட்டாலும் டெய்லி நமக்குள்ள கருத்து வேறுபாடு வரலாம்,வராமலும் போகலாம். ஆனா நாம நேரடியா பேசி தீர்க்கிற விஷயங்கள்ல நம்மளோட அன்பு பெருகத்தான் செய்யுமே தவிர குறையாது…

அந்த நம்பிக்கையை உனக்கு என்னால நிரூபிக்க முடியாது. ஆனால் உணர்த்த முடியும். அந்த உணர்வை புரிஞ்சிக்கிறதுக்கு நீ எப்ப ரெடியா இருக்கியோ அப்ப உன்னை தூக்கிட்டு போயி மணமேடையில் உட்கார வச்சி தாலி கட்டுவேன்… உன்னோட சம்மதத்தை கூட எதிர்பார்க்க மாட்டேன்…

நாளைக்கு லஞ்சுக்கு வர்றேன்னு நேத்து எந்த நம்பிக்கையில நீ சொன்ன கல்கி? அடுத்த நிமிஷம் உயிர்வாழுவோமா அப்படின்னு யாருக்கும் தெரியாது… இப்ப இந்த நிமிஷம், இந்த செகண்ட் மட்டும்தான் உறுதியானது… உறுதியான அந்த நிமிஷத்தை நீ வாழ்ந்து பாரு… அதை விட்டுட்டு முடிஞ்சு போனதுக்கும்,வர போறதுக்கும் உன்னோட மூளையை கசக்கிக்கிட்டு இருக்காதே!

நீ ஆராய்ச்சி பண்ற மண்ணு இல்ல மனுசனோட மனசு… கல்லும்,மண்ணும் இல்லாம இரத்தமும்,நாளமும் சேர்ந்த இதயத்தில் வருவதுதான் காதல்!

என்னோட வாழ்க்கையே நீ தான் அப்படிங்கிற டயலாக் எல்லாம் நான் சொல்ல மாட்டேன்… உன்னோட சுதந்திரத்தில் தலையிட மாட்டேன் அப்படிங்கற வார்த்தையும் நான் யூஸ் பண்ண மாட்டேன். உன்னோட உரிமை ,உன்னுடைய லட்சியம் எல்லாமே உன் சம்பந்தப்பட்டது…

அதுக்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது… அதுக்கு என்னுடைய துணை தேவைன்னு நீ நினைக்கிற பட்சத்துல என்னோட முழு ஒத்துழைப்பும் உனக்கு இருக்கும்…எனக்கு உன்கிட்ட இருந்து ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் தேவை…

உன்னோட நெகட்டிவ் தாட்ஸ் எல்லாத்தையும் மண்ணோட மண்ணா புதைக்காம அதை எரிச்சுடு… உனக்கு நம்பிக்கை வருதோ வரலையோ அதை பத்தியெல்லாம் நினைக்காத… நீ கடந்து வந்தது,உனக்கு கஷ்டமா இருந்தது அப்படின்னு நீ நினைக்கிற எதோடையும் கம்பேர் பண்ணாத!

என்னோட பாவ்க்ஸ் எப்பவுமே எனக்கு ஃபீனிக்ஸ் தான்… பின்னாடி வர்ற காலத்துல நம்மளோட 10 குழந்தைகளுக்கும் என்னோட ஃபீனிக்ஸ் பத்தி தான் நான் டெய்லி பெட் டைம் ஸ்டோரி சொல்லுவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு”, என கிருபாகரன் பேசி முடித்த பொழுது கல்கி முதல்முறையாக கண்ணீர் சிந்த ஆரம்பித்திருந்தாள்.

கல்கியின் இக்கண்ணீர் கல்யாணத்தில் முடிந்திடுமா? இல்லை கிருபாகரனின் காதலை கல்லறை கட்டிடுமா?

Categories
Deepi On-Going Novels

அத்தியாயம் – 18

கல்கி-18

கண்ணுக்குத் தெரியாத காற்றாக நினைத்திட வேண்டிய கடந்தகால கசடுகள், கண்ணில் கண்டிடாத காட்சியாக இருந்தாலும் கருத்தில் காலூன்றி கல்வெட்டுகளாக நிலைத்து நிற்கும்…

அதுவே கல்கியின் நிலை என்று அவள் கூறிய ஒரு உவமானத்திலேயே கிருபாகரனுக்கு தெள்ளத் தெளிவாக புரிந்தது.ஆனால் இவ்விஷயத்தில் தர்க்கம் புரிந்து தன்னவளின் தலையில் தன் கருத்துக்களை ஏற்றிட விரும்பாமல் அவளே தெளிந்து வரவேண்டும் என எண்ணியே மேலும் ஏதும் பேசாமல் வீட்டை விட்டு வெளியேறி வந்திருந்தான்.

கிருபா வெளியேறிய பின்னரும் அதே நிலையில் அமர்ந்திருந்த கல்கி அவளது மொபைலில் வந்த மெசேஜ் சத்தத்தில் தன்னிலை கலைந்து என்னவென்று எடுத்து பார்த்தாள். கிருபா தான் “அளவுக்கதிகமா யோசிச்சி அடுத்த தடவ என்னோட மண்டையை உடைக்கிறதுக்குப் பிளான் பண்றதை விட்டுட்டு திங்கட்கிழமை அன்னிக்கு ரஞ்சன் கூட இருக்குற மீட்டிங்க்கு இப்பவே கொஸ்டீன்ஸ் ரெடி பண்ண ஆரம்பி…

அதுவுமில்லாமல் எவ்வளவு ரொமான்டிக்கா கட்டிப் பிடிச்சிட்டு வந்தேன்… அதுக்கு பாராட்டி ஒரு கவிதை எழுதி எனக்கு அனுப்பி விடு.இந்த ரெண்டு வேலையும் உருப்படியா செஞ்சாலே உன்னோட மூளை கொஞ்சம் கம்மியா யோசிக்கும்… குட் நைட்”, என்ற மெசேஜை அனுப்பியிருந்தான்.

“இவனை காலை வாரிவிட்டதோட விட்டு இருக்கக்கூடாது… அளவுக்கதிகமான திமிரை குறைக்கிற மாதிரி கழுத்தை திருகி இருக்கணும்”, என்று வாய்விட்டுப் பேசியவள் அதையே அவனுக்கு மெசேஜ் ஆக அனுப்பி வைத்தாள். வீடு வந்து சேர்ந்த பின்னரும் கிருபாகரன் தன் மனம் கவர்ந்து தன் கையை முறிக்க இருப்பவளுடன் மெசேஜ் அனுப்பி அளவளாவி கொண்டிருந்தான்.

இருவரும் அனுப்பி விளையாடியதோ ஒருவரை ஒருவர் கையை வெட்டுவது,காலை வெட்டுவது என்பதுதான்… ஆனால் காண்போர்க்கு காதலர்களிடையே ஸ்வீட் நத்திங்ஸ் போய்க்கொண்டிருக்கிறது என்றே தோன்றும்… அவர்களின் வார்த்தை போர் இறுதியாக மறுநாள் செல்லவேண்டிய ஃபிளைட்டிற்கு கிளம்ப வேண்டிய நேரத்தை நெருங்கியதால் முடிவிற்கு வந்தது.

“ஓகே பாவ்க்ஸ்! ஏர்போர்ட் கிளம்பனும்… நீ பாா்த்து பத்திரமா இரு… எந்த விஷயமா இருந்தாலும், திட்டுறதா இருந்தாலும் கூட எனக்கு மெசேஜ் பண்ணு… டேக் கேர் டா”, என்று கிருபாகரன் அனுப்பிய செய்தியை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவள் அவனுக்கு பதில் அனுப்பாமல் அவனுடைய பாட்டிக்கு விருந்துக்கு அழைத்தமைக்கு ஒரு நன்றியை அனுப்பி விட்டு தூங்க சென்று விட்டாள்.

கிருபாகரன் சென்று சேர்ந்ததும் வந்தாகி விட்டது என்று ஒரு மெசேஜ் அனுப்பியவன், அடுத்த இரண்டு நாட்கள் கல்கியை தொடர்பு கொண்டிருக்கவில்லை. கல்கியும் அதனை கண்டுகொள்ளாமல் தான் இருந்தாள். ஆனால் ரஞ்சன் உடனான மீட்டிங்கை முடித்தவள் இவன் ஏன் எனக்கு எந்தவித மெசேஜும் செய்யவில்லை ,காலும் செய்யவில்லை… ஆனால் காவியக் காதல் போல பக்கம் பக்கமா பேசுவான்”, என்று கிருபாகரனை மனதில் தாளித்தாளே தவிர்த்து அவனுக்கு அழைத்திடவோ, செய்தி அனுப்பவோ எவ்வித முயற்சியும் செய்யவில்லை.

மாறாக கிருபாக் கூறி சென்ற தவிப்பின் தழுவல் தன்னையே உணர செய்யும் என்ற வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்தவள் தன்னைத்தானே உணர்ந்து கொள்ள முயற்சி மேற்கொண்டு இருந்தாள்.

அவனை எண்ணிக் கொண்டிருக்கும் பொழுதே கல்கியின் மொபைலுக்கு வந்த அழைப்பில் அதனை எடுத்துப் பேசியவள் எதிர்முனையில் இருந்து

தெட்ஃபோா்ட் நகரம்
உறங்கும் நேரம்
பாவ்க்ஸை பார்த்திடாமல்

தனிமை அழகானது
பனியும் பயங்கர குஷியில் பயணித்தது

என்று நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் பாடலின் வரிகளை தன் இஷ்டத்திற்கு மாற்றிப் பாடிய குரலில் கல்கிக்கு குதூகலம் பிறந்தது.

“அது எப்படி சாத்தானை நினைச்சா உடனே கழுதை கத்துது?”, என்று வாய்விட்டு யோசித்த கல்கியின் மனதின் தேடலை அறிந்தது போன்று “என்ன பண்றது பாவ்க்ஸ்? ரெண்டு நாளும் உன்னையே நெனச்சிகிட்டு இருந்தேன்…

வீட்டை விட்டு எங்கேயும் போகாம உன்னை நினைச்சுக்கிட்டே இருந்ததுல வைரமுத்து என்னோட வாயிலையும், கார்க்கி என்னோட கையிலயும் கவிதையா விளையாடுறாங்க… சரி இன்னிக்கு கவிதைக்கு லீவு விடலாம்னு நினைச்சு இங்க இருக்கிற மார்க்கெட்டுக்கு போனேன்… அங்க இருக்கிற ட்யூலிப் பூக்களை பார்த்து எனக்கு ஒரு சந்தேகம் வந்துருச்சு. அதை நிவர்த்தி பண்ண தான் உன்னை கூப்பிட்டேன்” என கிருபாகரனும் அவளை பேசிட செய்திடும் எண்ணத்துடன் சீண்டி கொண்டிருந்தான்.

“உனக்கு சந்தேகமா? ஆச்சரியமான விஷயம் தான்… கேட்டு தொலை”, என்று கல்கி பெரிய மனதுடன் கூறியதில் “அந்தப் பூவெல்லாம் ரொம்ப மென்மையா இருந்துச்சு கல்கி… அதைக் கையில் தொடுறப்ப இந்தப் பூ மாதிரி மென்மையா இருக்கிற என்னை நீ கோவை சரளா மாதிரி பறந்து பறந்து அடிக்கிற…

உனக்கு என்னை பாத்தா பாவமா தெரியலையா அப்படின்னு கேட்க தோணுச்சு… அதுதான் உடனே போன் பண்ணிட்டேன்”, என்று கூறி விட்டு அவளின் பதிலுக்காக காத்து இருந்ததில் கல்கியின் வாயிலிருந்து அனைத்து விதமான கெட்ட வார்த்தைகளையும் கிருபாகரன் கேட்டு விட்டே “ஐ மிஸ் யு பாவ்க்ஸ்…”, என்று ஆழமான காதலுடன் கூறினான்.

அத்துடன் “மிஸ் யூ வும், லவ் யூ வும் ஒருத்தரோட மனசை உணர்த்தாது கல்கி… ரெண்டு நாள் இல்ல, ரெண்டு வருஷம் பேசலைன்னாலும் என்னோட நினைவுகள், செயல்கள் ,என்னோட மூச்சு எல்லாத்துலயும் உன்னை பத்தின எண்ணங்களே கலந்திருக்கும்…

காத்துல இருக்கிற ஆக்சிஜனும், கார்பன்-டை-ஆக்சைடும் கண்ணுக்கு தெரியாது… அதே மாதிரி தான் எனக்குள்ள இருக்குற காதலும் உன் மேல இருக்குற கோபமும் உன்னோட கண்ணுக்குத் தெரியல… ஆனால் அந்தக் காற்றை நீ 24 மணி நேரமும் சுவாசிக்கிற…

சோ நீ சுவாசிக்கிற அந்தக் காற்றாக நான் இருக்கேன் அப்படிங்கிறத புரிஞ்சிக்க ஆரம்பிச்சிருக்க… ஆனால் உன்னுடைய வறட்டு எண்ணங்களை விட்டு நீ எப்போ சொல்ல போற?”, என்று கேள்வி கேட்டவனுக்கு “யோசிச்சு சொல்றேன் கிருபா!”, என்ற பதிலை கல்கி அளித்ததில் கிருபாகரனுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

கிருபாகரன் பேசிவிட்டு வைத்த பின்னர் தான் இவனுக்கு எதுக்கு என் மேல கோபம் வரணும் என்று கல்கி யோசித்தாள். “அத்துடன் கோபத்தை தவிர இந்த குரங்குக்கு வேற என்னத்த தெரியும்?”, என்று திட்டியும் கொண்டாள்.

கிருபாகரன் அங்கிருந்து வரும் வரை இருவரும் போனிலேயே தங்களின் காதலை வளர்க்காமல்,கலவரத்தை மட்டுமே ஒவ்வொரு நிமிடமும் நிலா காலமாக வளர்த்தனர். சனியன்று இரவு சென்னை வந்தடைந்த கிருபாகரன் வீட்டிற்கு சென்றதும் கல்கியை அழைத்து “நாளைக்கு நாம ரெண்டு பேரும் டேட்டிங் போறோம்”, என்றான்.

அதற்கு பதிலாக “உன் கூட டேட்டிங் வந்துட்டு கார்ட்டூன் பார்க்கிற அளவுக்கு எனக்கு பொறுமை கிடையாது கரன்… அதனால ஆன்ட்டி செஞ்சித்தர நொறுக்குத் தீனியை சாப்பிட்டுகிட்டே ஹவ் டு ட்ரைன் யுவர் டிராகன் (How to train your dragon)பாரு”, என்று கல்கி அளித்த பதிலில் “வாவ்! சூப்பர் ஐடியா…பேசாம நீயும் வீட்டுக்கு வந்துடு…
நாம ரெண்டு பேரும் சேர்ந்து பார்ப்போம்”, என கிருபாகரன் கூறியதில் கல்கி சிரித்துக்கொண்டே தூங்கச் சென்றாள்.

மறுநாள் கல்கி எதிர்பாராத நேரத்தில் அவளது வீட்டில் பிரவேசம் செய்த கிருபாகரன் அவள் கதவைத் திறந்த அடுத்த நொடியிலிருந்து “வா! வா! வா! நாம சீக்கிரமா கார்ட்டூன் பார்க்க ஆரம்பிக்கலாம்”, என்று நச்சரிக்க ஆரம்பித்தான். “கிருபா! எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு… என்னை டென்ஷன் பண்ணாம திரும்பிப் போயிடு”, என்று கல்கி உரைத்ததை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் தன் இஷ்டத்திற்கு கிச்சனுக்குள் சென்றவன்,

அவள் வைத்திருந்த ரவையுடன், சிறிது தயிர் சேர்த்து, வெங்காயம்,மிளகாய் நறுக்கிப்போட்டு எண்ணெயில் சூடாக பக்கோடா போன்று போட்டு எடுத்தான். இவனிடம் பேசுவதும் சுவற்றில் முட்டிக் கொள்வதும் ஒன்று என்று எண்ணிய கல்கி அங்கிருந்த சோபாவில் அமர்ந்து தன்னுடைய வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

பக்கோடா உடன் வந்தவன் அவளது அருகில் அமர்ந்து தன்னுடைய லேப்டாப்பை எடுத்து வைத்துக் கொண்டு அதில் தி வைல்ட் தோா்ன்பொ்ாிஸ்(The wild thornberries) பார்க்க ஆரம்பித்ததோடு இடையிடையே “பாவ்க்ஸ்! எலிசாவை பாரேன் எவ்வளவு சூப்பரா ப்ளே பண்ணி இருக்கா”, என்று கல்கியையும் சிறுபிள்ளை போல் நச்சரிக்க ஆரம்பித்தான்.

“கிருபா! பேசாம உன்னோட வேலையை பாரு… எனக்கு தீசிஸ் சப்மிட் பண்றதுக்கு ரெடி பண்ண வேண்டியது இருக்கு…”, என தன்னுடைய வேலையில் இருந்து முகம் நிமிர்த்தாமலே கூறியதும் மிகவும் சமர்த்துப் பிள்ளையாக அமர்ந்தவன் சிறிது நேரத்தில் எழுந்து கிச்சனுக்கு சென்றான்.

கிருபா சமையல் அறைக்குள் நுழைந்ததை உணர்ந்தவள் “எப்ப பாத்தாலும் தின்னுகிட்டு இருக்கிற இவன் எப்படி தான் கம்பெனியை கட்டி காப்பாத்துறானோ?”, என்று வாய்விட்டு புலம்பிக்கொண்டே தான் செய்யவேண்டியதை செய்து கொண்டிருந்தாள்.

ஏறத்தாழ ஒரு மணி நேரம் கடந்த நிலையில் தனது நாசி உணர்ந்த நறுமணத்தில் தலையை நிமிர்த்தி பாா்க்க அவளின் முன்பாக ஒரு தட்டில் சிக்கன் புலாவ்,பிஷ் மஞ்சூரியன் வைத்துக்கொண்டு அவளுக்கு ஊட்டி விடுவதற்கு ஏதுவாக கிருபாகரன் தனது கையில் எடுத்து வைத்து அவளது வாயின் முன் நீட்டிக் கொண்டு இருந்தான்.

உணவின் சுவையா?உரிமையுடன் அவன் நீட்டியதா? எதுவென பகுத்தறிய முடியாமல்,எவ்வித கலவரத்தையும் உண்டாக்காமல் கல்கி தன் வாய் திறந்து பெற்றுக்கொண்டாள்.பாதி உணவு உண்டு முடிந்த நிலையில்

“இப்படித்தான் மயக்கி நான் பிறக்க காரணமானவன் என்னோட அம்மாவுக்கு என்னை கொடுத்து இருப்பானோ?தான் மயங்கிப்போன அசிங்கத்தை வெளியே சொல்ல விருப்பம் இல்லாம நான் பிறந்ததும் அவங்களும் என்னை வீசிட்டு போயிட்டாங்களோ?”, என்று தன் இஷ்டத்திற்கு தன்னையும் அறியாமலே அனலை கொட்டிய கல்கியை கூர் பார்வை பார்த்தவன் பதில் ஏதும் கூறாமல் மீதி உணவையும் ஊட்டிவிட்டு முடித்ததும் அதே தட்டில் தனக்கும் எடுத்துக்கொண்டு வந்து அவளது அருகில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.

சாப்பிட்டு முடித்து அனைத்தையும் ஒழுங்கு செய்து விட்டு வந்து கல்கியின் அருகில் அமர்ந்தவன் அவளது கைகளை எடுத்து தன்னுள் புதைத்து கொண்டு “இதுதான் உன்னோட மனசை அாிச்சுகிட்டே இருக்கிற விஷயமா?”, என்று கேட்டான்.

அதற்குரிய பதிலை அவளிடம் எதிர்பாராதவன் போன்று “நான் சொல்றது உனக்கு அட்வைஸ் மாதிரி இருக்கலாம் கல்கி! ஆனா நிஜத்தை நீ புரிஞ்சுக்க முயற்சி பண்ணு… நீ பிறந்ததுல உன்னோட தப்பு எதுவும் இல்லை. அத மனசுல முதலில் நிலைநிறுத்து…

எதை வச்சு கல்கி உன்னோட அம்மா அப்பாகிட்ட ஏமாந்து போய் இருப்பாங்கன்னு நீயா முடிவு பண்ணிக்கிட்ட? ஒரு நேரம் ரொம்ப ஏழ்மையான நிலைமையில் நீ பிறந்து உன்னை வளா்க்கவே முடியாத சூழ்நிலையில் ஹோம்ல விட்டிருக்கலாம்… ரெண்டு பேருமே ஆக்சிடெண்டில் இறந்து போய் சொந்தக்காரங்க மூலமா விட்டிருக்கலாம்…

இந்த மாதிரி எத்தனையோ இருக்கலாம் இருக்கு.அதுபோக பிறந்து,வளர்ந்து,படிச்சி இன்னிக்கு ஒரு நல்ல நிலைமையில் இருக்கிற நீ இந்த மாதிரி முட்டாள் தனமா யோசிக்கிறது ரொம்ப கேவலமா இருக்கு… ஆண்கள் மட்டுமே தப்பு செய்றாங்கன்னு ஒரு தப்பான எண்ணத்தை உன் மனசுக்குள்ள நீ வெதச்சு வச்சிருக்க.

இப்ப இருக்குற காலகட்டத்துல ஆண்களும்,பெண்களும் எல்லாருமே தப்பு செய்றாங்க… யாரையும் நாம குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. அப்பா,அம்மா அப்படின்னு ஒரு குடும்ப சூழ்நிலையில் வளருறவங்களுக்கு மட்டும் பிரச்சனை இல்லையா? அப்படி அவங்களையெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்தா நீ தைரியமா நான் ஒரு சுயம்புனு சொல்லிக்கலாம்…

இந்தளவுக்கு வைராக்கியத்தோட படிச்சு வந்த நீ உனக்குள்ள இருக்கிற பாதுகாப்பற்ற தன்மையை தூக்கி குப்பையில் போடுறது ஒரு பெரிய விஷயமா?”,என்று கூறிக் கொண்டே வந்தவன் கல்கியின் கண்களில் வந்து போன உணர்வைக் கண்டு சிறிதுநேரம் நேரம் பேச்சை நிறுத்தினான்.

“என்ன அப்படி பாக்குற? நீ வெளி உலகத்துக்கு தைரியமா உன்னை காமிச்சுக்கிட்டு உள்ளுக்குள்ள ஒரு பாதுகாப்பு இல்லாத வாழ்க்கைதான் வாழ்ந்து இருக்க… அதுதான் உண்மை. உனக்குள்ள இருக்கிற பயம் தான் எல்லாத்தையும் ஒதுக்கி சந்தேகக் கண்ணோட்டத்தில் பார்க்கச் செய்யுது… வாழ்க்கையய அதோட போக்கில் வாழணும் கல்கி!

எப்பவோ நடந்த விஷயத்துக்கு இன்னிக்கு உட்கார்ந்து மூல காரணத்தை தேடுறது நம்மளை நாமளே முடக்கி முடமாக்குறதுக்கு சமம்…பேசுறது ஈஸி ஆனால் அனுபவிக்குறவங்களுக்கு தான் அதோட வலியும்,வீரியமும் தெரியும்…

நீ என்னோட ஃபீனிக்ஸ்… எாிஞ்சு சாம்பாலானாலும் திரும்ப உயிா்த்தெழுவ…சோ இவ்வளவு நாள் யோசிச்ச விஷயத்தை கொஞ்சம் பாஸிடிவா யோசிச்சு பாா்…ஹோம்ல வளா்றவங்க எல்லாம் தப்பான முறையில் பிறந்தவங்க இல்லை… வீட்டுல வளா்றவங்க எல்லாம் நல்ல முறையில் பிறந்தவங்க இல்லை…

பிறப்பும் ,இறப்பும் தானா அமையுறது… அதுக்கு முட்டாள்தனமான காரணங்களை கண்டுபிடிச்சு வாழ்றவங்க வாழ தகுதி இல்லாதவங்க… என்று நீண்ட உரையாற்றிய கிருபா கல்கியின் முகத்தை தன் கைகளில் ஏந்தி அவளது இதழ்களோடு இடைவிடாத யுத்தம் ஒன்றை இயக்கினான்.

சுவாசம் சீரற்று நுரையீரல் நுணலாக கத்திய பின்பே தனது கைகளையும், இதழ்களையும் விடுவித்துக் கொண்டவன் “இப்ப நான் உன்னை மயக்கிட்டேன்… உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்கோ!”, என்று கூறியதுடன் அவளது கைகளை பின்புறமாக வளைத்து பிடித்துக்கொண்டு அவளது முக உணர்வுகளை பார்த்துக் கொண்டிருந்தவன்

” எப்ப இருந்தாலும் நான் மட்டும்தான் கிருபாகரன் கல்கியா இருக்க முடியும்… அது கூடிய சீக்கிரம் நடந்தா உனக்கு நல்லது… இல்லை கொஞ்சம் லேட்டா நடந்தா எனக்கு நல்லது”, என்று புரியாத மாதிரி பேசியவன் அவளது கைகளை விடுத்து “நீ தெளிஞ்சதுக்கு அப்புறம் வந்து வீட்டுல அடி”, எனக் கூறிவிட்டு தன்னுடைய பொருட்களுடன் வெளியேறிவிட்டான்.

அவன் வெளியேறி சென்ற பின்னரும் அவன் கொடுத்த யுத்தத்தின் தாக்கத்தைவிட அவன் பேசிய வார்த்தைகளே கல்கியின் எண்ணங்களில் எரிமலையாக கொதித்துக் கொண்டிருந்தன.

எரிமலை வெடித்து சிதறி அழிவை உண்டாக்கிடுமா? இல்லை ஆறிய எரிமலைக் குழம்பில் இருக்கும் தாதுக்களை போன்று நன்மையை உண்டாக்கிடுமா?

Categories
Deepi On-Going Novels

அத்தியாயம் – 17

கல்கி-17

இறுமாந்திருந்த இதயத்தின் லயம் இன்னுயிரானவளின் இதழ்கள் விரித்து இசைத்திட போகும் இனிய மொழிகளைக் கேட்டிட ஆவலுடன் காத்திருப்பதை உணர்ந்த கிருபாகரன், தானும் அவ்வாறே காத்திருப்பதாக சாம்பல் நிற வஸ்து மூலம் சங்கேத ஒலிகளை இதயத்திற்கு அனுப்பி பொறுமை காத்திட சொன்னான்.

அவனது காத்திருப்பிற்கு கிட்டிய பரிசாக கல்கி காயத்ரியின் கேள்வியில் முதலில் வாய்விட்டு சிரித்தாள்.”நீங்க கேட்ட கேள்வியே தப்பு ஆன்ட்டி…கிருபாவை பொறுத்தவரைக்கும் எதையுமே நேரடியா செய்வான்…

கேர்ள் ஃபிரண்ட்ஸ் வச்சிருந்தாலும் இந்நேரம் எல்லார் முன்னாடியும் கூட்டிட்டு வந்து இருப்பானே தவிர்த்து இப்படி பேரை மட்டும் சொல்லிட்டு திரிய மாட்டான்… அதோட பொண்ணுங்கள மதிக்கிறவன நான் எப்படி தப்பா நினைக்க முடியும்.

சோ எனக்கு தெரிஞ்சி இது ஏதாவது கார்ட்டூன் கேரக்டரோ,இல்லைனா வீடியோ கேம்ல வர்ற கேரக்டராகவே இருக்கலாம்… அதுவுமில்லாம உங்க பையன் நாலஞ்சு கேர்ள் ஃபிரண்ட்ஸ் வச்சுக்கிற அளவுக்கு ஒர்த் இல்லை… அந்தப் பொண்ணுங்க ஒரு விரலை நீட்டி பேசினாலே அந்த விரலை உடைச்சிட்டு வர்றவங்களுக்கு எப்படி கேர்ள் பிரண்ட் அமையும்?”, என்று கேட்டுவிட்டு மறுபடியும் சிரித்த கல்கி எதிர்பாராத நொடியில் கிருபாகரன் அவளைத் தாவி அணைத்திருந்தான்.

“டேய் கிருபா! நான் இங்க தான் டா இருக்கேன்”, என்று காயத்ரி அலறிய பின்னும் கல்கியை விலக விடாதவன் தன்னுடைய கை அணைப்பில் அவளை இறுக்கிப் பிடித்தவாறே “நான் சொன்னது கரெக்ட் ஆயிடுச்சா அம்மா? கல்கி என்னை எவ்வளவு கரெக்டா புரிஞ்சு வச்சிருக்கா பாருங்க”, என்று காயத்ரியிடம் பெருமையாக கூறியவன் “ஐ லவ் யூ பாவ்க்ஸ்”, என உரைத்துவிட்டு “நீங்க ரெண்டு பேரும் பேசி முடிச்சிட்டு சீக்கிரமா வாங்க”, என்றதுடன் வீட்டுக்குள் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான்.

அவனது ஓட்டத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான மன நிலையில் உள்ளான் என்பது மற்ற இருவருக்கும் புரிந்தது. நின்று கொண்டிருந்த கல்கியை “உட்கார் கல்கி… உன்கிட்ட இன்னும் கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு”, என்று அவளை அமர்த்திய காயத்ரி

“நீ சொன்ன மாதிரி மோனா (mouna) கேரக்டரும், எலிசா(Elisha) கேரக்டரும் கார்ட்டூனில் வர்றவங்க தான்… இந்த மோனா, எலிசா கேரக்டர்ஸ் எதையாவது சாதிக்கிற மாதிரி வர்றவங்க… நான் கல்யாணம் பண்ணி வந்தவுடனே வீட்டைப் பார்த்துக்கறதுல மட்டும்தான் கவனம் செலுத்தினேன்… தயாக்கு அவரோட பிசினஸ்ல இருந்த கவனம் வீட்டிலேயும் இருந்துச்சு…

கிருபா எனக்கு அஞ்சு வருஷம் கழிச்சு தான் பிறந்தான். அவன் பிறக்குறதுக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடி தான் அத்தை அவங்களோட ஒட்டு மொத்த சொத்தையும் ரெண்டா பிரிச்சு ஒரு பாகத்தை எனக்கு கொடுத்தாங்க.கொடுக்கிறப்ப இதுல உனக்கு எந்த தொழில் மேல ஆர்வம் இருக்கோ அதை ஆரம்பி…

ஒரு பொண்ணா இருந்துகிட்டு எதுக்காகவும்,புருஷனா இருந்தாலும் அவங்கிட்ட கையேந்தக் கூடாது…உன்னோட சுய சம்பாத்தியம் காலத்துக்கும் உனக்கு இருக்கணும்… தொழிலில் லாப,நஷ்டம் முக்கியம் கிடையாது.உன்னோட தன்னம்பிக்கை மட்டும் தான் முக்கியம்… அப்படின்னு சொல்லி கொடுத்தாங்க.

அத்தை சொன்னது எனக்கு ரொம்ப பிடிச்சது.இத்தனை நாள் வேஸ்ட் பண்ணதுக்கு இனிமே உருப்படியா ஏதாவது செய்யணும்னு இந்த கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஆரம்பிச்சேன்… கிருபா பிறந்து ஒரு ஆறு மாசம் என்னால தொழில்ல சரியா கவனம் செலுத்த முடியல… ஆனால் தயா எப்பவும் போல அவர் பிசினஸ வெற்றிகரமா நடத்திக்கிட்டு இருந்தார்.

அதிலே எனக்கு ஒரு வகையான கோபம் வந்துச்சு… டெய்லி தயா கூட சண்டை போட ஆரம்பிச்சேன். உங்க பையனையும், உங்களையும் நான் பார்த்துக்கிட்டா போதும் அப்படின்னு நினைச்சு தான் நீங்க எந்த உதவியும் செய்யல…நீங்க இனிமே பையன பார்த்துக்கோங்க… நான் என் தொழிலை பாக்கணும். இதை நான் சொன்னப்ப தயா எதுவுமே பேசாம ஒத்துக்கிட்டார்.

அதுக்கு அடுத்து கிருபாவுக்கு ஆறு வயசு ஆகுற வரைக்கும் தயா தான் பாத்துகிட்டார்… நான் பிசினஸ்ல ஜெயிக்கணும்னு வெறியில எப்ப பாத்தாலும் ஓடிக்கிட்டே இருந்தேன். அதுக்காக தயா கிருபா கிட்ட என்னை பத்தி ஒரு நாளும் குறையா சொன்னது கிடையாது… இந்த மாதிரி கார்ட்டூன் கேரக்டர்ஸை காமிச்சி உங்க அம்மா மாதிரி சாதனை பண்றவங்க இவங்க அப்படிங்கறத அவனோட மனசுல ஆழமாக பதிய வச்சிட்டார்.

அதனால அவனுக்கும் கார்ட்டூன் பிடிச்ச அளவுக்கு அதுல சாதனை பண்ற பெண்கள் கேரக்டர்ச ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சிருச்சி… நானும் ஒரு கட்டத்துல குடும்பத்தையும், பிசினஸையும் புரிஞ்சுகிட்டு நடக்க ஆரம்பிச்சதுக்கப்புறம் கிருபா இந்த கார்ட்டூன்ஸ் பார்க்கிறது நிறுத்த எவ்வளவோ முயற்சி பண்ணேன்…

ஆனால் இன்னிக்கு வரைக்கும் என்னால அது முடியல”, என்று கூறிய காயத்ரி கல்கியின் பதிலையோ, வேறு கேள்விகளையோ எதிர்பார்க்கவில்லை… உன்னிடம் நான் கூற வேண்டும் என நினைத்தேன், கூறிவிட்டேன் என்ற நிலையில் பேசிவிட்டு “உள்ளே போவோமா கல்கி?”, என்று கேட்டு அவளை உள்ளே அழைத்து கொண்டு வந்து விட்டார்.

கல்கியும்,காயத்ரியும் வீட்டினுள் நுழைந்த பொழுது பாட்டி கூறியது போன்றே அங்கு சிறு விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.கல்கி அமர்ந்ததும் “நாமளே எடுத்து போட்டுக்கலாம்”, என்று தயா கூறிக்கொண்டிருக்கும் பொழுதே கிருபாகரன் கல்கிக்கு பரிமாற ஆரம்பித்திருந்தான்.

கல்கியும் எந்தவித பிகுவும் செய்யாமல் அவனை அது எடுத்து வை, இது எடுத்து வை என்று ஏவிக் கொண்டிருந்தாள்.மற்றவர்கள் இதனை கண்டு சிரித்தாலும் எந்த வித கமெண்டும் அடிக்க வில்லை.ஆனால் இவற்றை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்த பாட்டி மட்டும் சற்று நேரம் கழித்து

“சிகே கொஞ்சம் இங்க என்னோட ப்ளேட்டையும் கவனி”, என்று கூறியதும் அங்கிருந்த மிளகாய்த் துவையல் எடுத்து அவருக்கு பரிமாறிவிட்டு கல்கியின் அருகில் அமர்ந்துகொண்டான்.கிருபா அமர்ந்ததும் அவனுக்கு மட்டும் கேட்குமாறு “பரிமாற மட்டும் செஞ்ச… ஊட்டி விடலையா?”, என்று கேட்டு அவனை கடுப்பேற்றிய கிருபாவதியை முறைத்துவிட்டு அனைவருக்கும் கேட்குமாறு

“பிகே இன்னும் கொஞ்சம் மிளகாய் துவையல் வைக்கவா”,என்று சத்தமாக கேட்டான்.பாட்டி பதில் கூறும் முன்னர் கல்கி “அது என்ன பிகே? சிகே?”, என்று கேள்வி எழுப்பியதும் பாட்டி “பெரிய கிருபா, சின்ன கிருபா”, என்று தனது சட்டை காலரை தூக்கி விட்டவாறு கூறினார்.

ஆனால் கிருபாகரனோ “அதெல்லாம் இல்லை பாவ்க்ஸ்… பிசாசு கிருபான்னு நேரடியா சொல்ல முடியாமல் எங்க தாத்தா நான் பிறந்ததும் அடம்பிடிச்சு எனக்கு கிருபாகரன்ன்னு பேரு வச்சிட்டு பிகே,சிகே அப்படின்னு கூப்பிட ஆரம்பிச்சார்… பாட்டிக்கு முதல் தடவையே சந்தேகம் வந்து கேட்டதுக்கு ரெண்டு பேரையுமே ஒரே பெயரில் கூப்பிட விருப்பப்பட்டுதான் பெரிய கிருபா,சின்ன கிருபான்னு சுருக்கி சொல்றேன்னு எஸ்கேப் ஆயிட்டார் …

இவங்களும் நம்பிட்டாங்க”, என்று குழந்தைகளுக்கு கூறும் கதை போல் ஒரு கதை கூறியவன் கல்கியை பார்த்து தன் கண்களை சிமிட்டினான்.பாட்டி மற்றும் பேரனின் கால்வாரல்களுடன் சிறுவிருந்து பெருவிருந்து போல் களைகட்டியது.

அனைவரும் சாப்பிட்டு முடித்தவுடன் தயாவும்,கிருபாகரனும் பாத்திரங்களை எடுத்து சென்று கழுவ ஆரம்பித்தனர். அதனை வித்தியாசமாக பார்த்த கல்கியிடம் “நம்ம வீட்டில பாத்திரம் கழுவுறதற்கு காலையிலயும்,சாயங்காலமும் ஒருத்தவங்க வருவாங்க…

அவங்களுக்கு வெள்ளிக்கிழமை சாயங்காலமும்,சனி,ஞாயிறும் லீவு கொடுத்துடுவோம்… வீட்டுவேலை எல்லாத்தையும் நாங்களே ஷேர் பண்ணி செஞ்சுடுவோம்”, என்று காயத்ரி கூறியதில் அவர்களின் எளிமை கல்கிக்கு நன்றாக புரிந்தது.

கிருபாவும்,தயாவும் கிச்சனை கிளீன் செய்துவிட்டு வந்த பின்னர் இவர்களுடன் வந்து இணைந்து கொண்டனர்.பொதுவாகப் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே “எக்ஸ்க்யூஸ் மீ!”, என்று கூறிவிட்டு உள்ளே சென்ற பாட்டி சிறிது நேரத்திற்குப் பின்னர் கையில் ஒரு பரிசு பெட்டியுடன் வந்தார்.

அதனை கல்கியின் கையில் வைத்து “இதை நீ கண்டிப்பா ஏத்துக்கணும் கல்கி! உனக்காக நான் தேடிப்பிடிச்சு வாங்கிட்டு வந்தது”, என்று கூறியவரின் பரிசை மறுக்க விருப்பமில்லாமல் பெற்றுக்கொண்டவளை குறுகுறுவென்று பார்த்த கிருபாகரன் அவளது முக உணர்வுகளை தன்னுடைய அகத்தில் ஏற்றிக் கொள்ள முனைந்து கொண்டிருந்தான்.

“என்ன கிருபா? கல்கி முகத்தில் என்ன இருக்குன்னு இப்படி பாக்குற”, என்று அதனையும் மாட்டிவிட்ட பாட்டியை பிகே என்று முறைத்தான். இறுதியாக கல்கி விடைபெறும் முன்னர் பாட்டி

“கல்கி! நீ எந்த முடிவு எடுத்தாலும் எங்களுக்கு சம்மதம் தான்… யாரும் எதற்காகவும் உன்னை வற்புறுத்த
மாட்டாங்க… கிருபா உனக்கு தொந்தரவு கொடுத்தா கொஞ்சம் கூட யோசிக்காம நீயே அடிச்சாலும் சரி, இல்ல கம்ப்ளைன்ட் கொடுத்து லாடம் கட்ட வச்சாலும் சரி… என்னோட முழு சப்போர்ட் உனக்கு உண்டு…

நாளைக்கு காலைல நாங்க ரெண்டு பேரும் தெட்ஃபோா்ட்(Thetford) கிளம்பிடுவோம்… என்னோட நம்பர் நோட் பண்ணிக்கோ! எந்த நேரமா இருந்தாலும் நீ என்னைக் கூப்பிடலாம்”, என்று அவரது எண்ணைக் கொடுத்து கட்டி அணைத்து விடை கொடுத்தார்.

பாட்டி கூறியதைப் போன்றே காயத்ரியும் “நீ எது செஞ்சாலும் என்னோட முழு சப்போர்ட்டும் உனக்கு தான் கல்கி!”, என்று கூறியதும் கிருபாகரன் “யூ டூ புரூட்டஸ்”, என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கூறினான். அவனது இந்தப் பாவத்தில் அவனை தன் பக்கமாக திருப்பிய தயா “என்னோட சப்போர்ட்டும் கல்கிக்கு தான் மகனே!”, என்று கூறி அவ்விடத்தில் ஒரு சிரிப்பலையை ஏற்படுத்தினார்.

அவர்களுடன் இணைந்து சிரித்த கிருபாகரனை “என்ன சிகே நீயும் சிரிக்கிற?”, என்று பாட்டி வினவியதும் “கல்கியும்,நானும் வேற வேற இல்ல… அப்ப கல்கிக்கு சப்போர்ட் பண்றது எல்லாம் எனக்கு தானே!”, என்று அப்பொழுதும் கல்கியை நான் விட்டுத்தர மாட்டேன் என்பதை அனைவருக்கும் உணர்த்தினான். இப்பேச்சை மேலும் வளரவிடாமல் கல்கி “நான் கிளம்புகிறேன்”, என்று கிளம்ப தயாரானதும் கிருபா தன்னுடைய கார் சாவியை எடுத்துக்கொண்டு

“வா! வா! நான் உன்னை விட்டுட்டு வர்றேன்”, என்று அவளது கையை பற்றியவாறு வெளியேறினான். “கிருபா உனக்கு கிறுக்கா புடிச்சிருக்கு? எப்ப பார்த்தாலும் கைய புடிச்சு இழுக்குற… கையை விடு”, என்று எரிச்சலுடன் கூறியவளிடம் “உன்னோட கைய முதல்தடவையா பிடிச்சப்பவே கடைசி வரைக்கும் விடக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்…

அதனால இந்த டயலாக் இனிமே சொல்லாத”, என்றவன் அவளது கையிலிருந்த பரிசுப் பெட்டியை தன் கையில் பிடுங்கி கொண்டதுடன் அவளது ஒரு விரலை மட்டும் பிடித்தவாறு நடக்க ஆரம்பித்தான்.

கார் சாவியை எடுத்துக்கொண்டு வந்தவன் இப்போது நடத்திக் கூட்டிக்கொண்டு போவதைப் பார்த்து இவள் முறைத்ததில் “கொஞ்சம் நடப்போம் கல்கி… சாப்பிட்டது செமிக்கும்.உன்னை விட்டுட்டு வர்றப்ப நான் ஆட்டோல வந்துடுறேன்”, என கிருபாகரன் கூறியதற்கு எவ்வித மறுப்பும் கூறாமல் கல்கியும் அவனுடன் இணைந்து நடக்க ஆரம்பித்தாள்.

வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்ற பின்னர் கிருபாகரன் “கல்கி!நான் ஒரு விஷயம் கேட்கிறேன். அதுக்கு உன்னோட மனசுல இருக்கிற பதிலை நீ சொல்லணும்”, என்று உரைத்தவன் அவளது மற்ற விரல்களையும் இணைத்து தன்னுடைய பிடியில் வைத்துக் கொண்டான்.

அவனது முஸ்தீபுகளை பார்த்து இதழ்க்கடையில் இளமுறுவலை இயற்றியவள் “பதில் சொல்ல மாட்டேன்னு சொன்னாலும் நீ கேட்காம இருக்கப் போறது இல்லை… அதனால கேட்டு தொலை”, என்று சம்மதம் அளித்தாள். அவள் வாய் மொழியைக் கேட்டு அடுத்த நொடியில் “கல்கி! வெளியிலே எல்லா ஆம்பளைங்களோடயும் நீ சாதாரணமா பேசினாலும் ஆண் வர்க்கத்தின் மேல ஏதோ வெறுப்பா இருக்கிற மாதிரி தெரியுது… அதாவது நீ ஆண்களோட பேசுவ…

ஆனால் உன்னோட மனசுக்குள்ள அவங்க கூட பேச பிடிக்காது… அதை உன்னோட உணர்வுகள் மூலமா கூட வெளிக்காட்ட மாட்ட… அதே மாதிரி அடிச்சா மட்டும் தான் நாம தைரியசாலியா இந்த உலகத்துக்கு முன்னாடி காட்டிக்க முடியும்னு நீ கொஞ்சம் இல்லை! இல்லை !ரொம்பவே அராத்து தனமா நடந்துக்குறயோனு எனக்கு தோணுது…

உன்னோட மனசுல அப்படி என்ன வெறுப்புனு நீ சொன்னாதான் என்னால தெரிஞ்சிக்க முடியும்… நான் கேட்டதெல்லாம் என்னோட கணிப்பு தானே தவிர்த்து அது தான் அப்படின்னு உறுதியா சொல்ல முடியாது… அதனாலதான் உன்கிட்ட நேரடியா கேட்கிறேன்”, என்று கிருபா கூறி முடித்த பொழுது தன்னுடைய விரல்களை பிடித்திருந்த அவனின் விரல்களை ஒடித்து விடுமளவுக்கு கல்கி இறுக்கினாள்.

அவளது இறுக்கத்திலேயே தன்னவளின் இதயத்தை ஆட்டுவிக்கும் வலியை உணர்ந்தவன் போன்று “கல்கி! உன்னை இவ்வளவு இறுக்கமா ஆக்குற விஷயத்தை நான் தெரிஞ்சிக்க விரும்பல…”, என்று கூறியவன் மேலே எதுவும் பேசாமல் அவளுடன் அமைதியாக நடந்து வந்தான்.

இருவரும் கிளம்பும் பொழுது இருந்த மனநிலை தலைகீழாக மாறி தங்களுக்குள் இறுகிப்போய் கல்கியின் அபார்ட்மெண்டை அடைந்தனர்.வாசலில் இருந்தவாறு திரும்ப யத்தனித்த கிருபாகரனை இம்முறை கல்கி கை பிடித்து இழுத்துக்கொண்டு தன்னுடைய வீட்டை நோக்கி சென்றாள்.

கிருபாவும் எவ்வித மறுப்புமின்றி அவளுடன் சென்றான். வீட்டிற்குள் நுழைந்தவள் கிருபாவை “முதல் தடவையா என் வீட்டுக்குள்ள வர்ற… வலது காலை எடுத்து வச்சு வா!”, என்று அந்த இறுகிய சூழ்நிலையிலும் கெத்தாகவே உரைத்தாள். அவள் அவ்வாறு கூறியதும் அவளை வெளியே இழுத்தவன் அவளது வலது பாதத்தின் மேல் தனது இடது பாதத்தை வைத்து,கை இரண்டும் கோர்த்துக்கொண்டு வலது காலைவைத்து வீட்டினுள் வந்தான்.

கல்கியின் கையால் அடியை எதிர்பார்த்திருக்க அவளோ தனது காலினை கொண்டு கிருபாகரனின் காலை வாரிவிட்டு இருந்தாள். அவன் சுதாரித்து எழு முன்னர் “எழுந்து பேசாம உட்கார்ந்து நான் சொல்றத கேட்கிறதா இருந்தா மட்டும் இரு… இல்ல என் கூட வம்பு இழுக்க போறதா இருந்தா இங்கே இருந்து பால்கனிக்கு இழுத்துட்டுப் போயி உன்னை தள்ளி விட்டு விடுவேன்”, என்று கல்கி மிரட்டியதில்

“இவ பேசி முடிச்சதுக்கப்புறம் இப்ப தள்ளிவிட்டதற்கு காலை உடைக்காம போகக்கூடாது”, என்ற முடிவை மனதில் எடுத்துக்கொண்ட கிருபாகரன் அமைதியாக அங்கிருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்தான்.

கிருபாகரன் அமரவும் கிச்சனுக்குள் சென்ற கல்கி ஒரு கிளாஸில் அவனுக்கு தண்ணீர் கொண்டு வந்து வைத்ததுடன் “குடிச்சிக்கிட்டே இரு… நான் வந்துடுறேன்”, என்று தன்னுடைய படுக்கை அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

நீரைக் குடிக்காமல் நீரில் இருந்த துரும்பை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த கிருபாகரன் கல்கி வரும் வரை அதனை எடுத்து போடாமல் அப்படியே வைத்திருந்தான்.அவனுக்கு ஏனோ கல்கி இதை வேண்டுமென்றே போட்டது போன்று தோன்றியது.

“என்ன கிருபா அந்தத் துரும்பை எடுத்து போட்டுட்டு தண்ணிய குடிக்க வேண்டியது தானே!”, என்று அவனது எண்ணத்தை உண்மையாககுவது போன்று இகழ்ச்சியான புன்னகையுடன் கல்கி கேட்டுக் கொண்டே அவன் முன் வந்தாள். அந்தத் துரும்பு சிறிது சிறிதாக கரைந்து தண்ணீர் முழுவதும் கலங்கலாக மாறியதால்தான் கிருபாகரன் குடிப்பதற்கு யோசித்துக் கொண்டிருந்தான்.

ஆனால் கல்கி இவ்வாறு கூறியதும் “இந்த தண்ணியும், தூசும் வச்சி நீ என்ன சொல்ல நினைக்கிற கல்கி?அதை சொல்லு முதல்ல”, என்று அழுத்தமாக கேட்டதற்கு கல்கி அவனுக்கு எதிராக கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்தாள்.

“தண்ணியில கலந்த தூசு அதை அதை எடுத்துப் போட்டுட்டு குடிக்க முடியாத அளவுக்கு கலங்கலாக்கிடுச்சு…

அதை குடிக்க முடியாம நீ தயங்கிட்டு இருக்குற…அந்த தூசு மாதிரி தான் மனுஷங்களோட நாக்கால வந்த வார்த்தைகள் என்னோட மனசுல ஆழமா பதிஞ்சு இருக்கு… அதை தூக்கி போட்டுட்டு வெறுப்பை விருப்பமா மாத்திக்க முடியுமா?”,என்று கல்கி ஆழ்ந்த குரலில் கேட்டதற்கு கிருபாகரனால் பதில் கூற முடிந்தாலும் அவளை மேலும் புண்படுத்த வேண்டாம் என்று எண்ணி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

கல்கியும் வேறு எதுவும் கூறாமல் சுவற்றை வெறித்தவாறு அமர்ந்திருந்தாள். கிருபாகரனின் மொபைல் ஒலி எழுப்பி அங்கிருந்த அமைதியை அடக்கம் செய்ததில் எழுந்தவன் “ஓகே பாவ்க்ஸ்! டேக் ரெஸ்ட்… நான் ஊருக்குப் போயிட்டு ஒரு வாரத்தில் வந்துடுவேன்… அதுக்குள்ள நீ யோசிச்சி ஒரு முடிவு எடுத்து வை”, என்று கூறியவன் அவளை எழுப்பி ஆரத்தழுவி இருந்தான்.

அதில் உடல் விரைத்து நின்றவளது காதினுள் “தாபத்தின் தழுவல் தடம் மாறலாம்… தவிப்பின் தழுவல் தன்னையே உணரச் செய்யும்”, என்று உரைத்தவன் அவளது நெற்றியில் நீண்டதொரு அழுத்தத்தை பதித்துவிட்டு வெளியேறினான்.

கல்கி கூறிய வார்த்தைகள் கிருபாகரனை அவளது வாழ்வில் இருந்து வெளியேற்றுமா? இல்லை கிருபாகரன் கூறிய வார்த்தைகள் கல்கியை உணரச் செய்யுமா?

Categories
Deepi On-Going Novels

அத்தியாயம் – 10

காதல்பனி 10

காலையில் வழக்கம் போல் கண் விழித்த அஷ்வத்துடைய உடலோ சோர்வில் துவள, அதை விட அவன் எழ முடியாத அளவுக்குத் தன் கைகளாலும் கால்களாலும் அவனை இறுக்கிப் பிடித்திருந்தது மட்டுமில்லாமல் அவன் மார்பிலேயே தன் முகத்தை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள் சாரா.

அந்தக் காட்சியில் முதலில் சற்று மிரண்டவன் பின் தெளிந்து ‘நான் இவள விட்டுத் தூர விலகணும்னு நினைக்கிறன். ஆனா அதை அவ்வளவு சுலபமா என்ன செய்ய விட மாட்டா போல இவ!’ என்று மனதுக்குள் சலித்துக் கொண்டவன் அவளுடையத் தூக்கம் கலையாத வண்ணம் மெல்ல அவளை விட்டு விலகியவன் தன் காலைக் கடன்களை முடிக்கத் தனக்கான மாற்று உடையுடன் கெஸ்ட் ரூம் சென்று விட்டான் அஷ்வத்.

தன் கடமைகளை முடித்து அவன் திரும்ப வரும் வரையிலும் சாரா எழவில்லை. குழந்தை போல் கை கால்களை விரித்துக் கொண்டு கட்டிலில் ஒரு கோணத்தில் அவள் தூங்க, அவளையே சிறிது நேரம் பார்த்தவனோ அவளை எழுப்ப மனம் வராமல் விலகியவன் தன் அலுவல் வேலைகள் சிலதை வீட்டில் இருந்த படியே முடித்தவன் அப்படியே தன் அலுவலகத்திற்குப் போன் பண்ணவன் சாராவுக்கு மாற்று உடையை எடுத்து வரச் சொல்லவும் மறக்கவில்லை.

அவன் கேட்ட ஆடையும் வந்து விட அதன் பிறகும் தாமதிப்பது சரியில்லை என்று நினைத்து அவளை எழுப்பச் சென்றவன் அவளிடம் அன்பு கொண்டவன் போல் நடந்து கொள்ளக் கூடாது என்ற கொள்கையுடன் முதலில் அவள் மேல் நீரை ஊற்றி எழுப்ப நினைத்தவன் பிறகு நேற்று அவள் ஆடை நீரில் நனைந்ததில் அவள் உடல் சில்லிட்டுப் போய் இருந்ததை நினைத்து அந்த எண்ணத்தைக் கை விட்டவனோ வெளியே சென்று காலிங் பெல்லை அலற விட்டான் அஷ்வத்.

கலையாத தன் தூக்கக் கலக்கத்தில் காலிங் பெல் சத்தத்தில் எழுந்து அமர்ந்த சாரா முழுமையாக தெளியாத ஒரு மயக்கத்தில் பேந்த பேந்த விழித்தபடி அவள் முழிக்க , அதே நேரம்

“என்ன குடிகாரி, போதை தெளிஞ்சிதா இல்ல இன்னும் தெளியலையா? ஆனா சும்மா சொல்லக் கூடாது உன்னை. என்னமா அன்னைக்கு பேசின!? நான் அப்படி நான் இப்படி என் பண்பாடு என் கலாச்சாரம் என் சமுகம்! அது கூட வேற என்னமோ சொன்னியே, அது என்ன? ஆங்…. என் சமுக சிந்தனை! அப்பறம் என்ன? நான் டேட்டிங் போக மாட்டேன், நான் குடிக்க மாட்டேன், பிடிவாதம் எல்லாம் பிடிக்க மாட்டேனு அன்னைக்கு என்னமோ மைக் வைத்து கூப்பாடு போடாத குறையா பேசின! ஆனா இன்னைக்கு நீ என்ன பண்ணி இருக்க?” என்று அஷ்வத் அவளை கிண்டலாகக் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைய

திடீர் சத்தத்தில் எழுந்து அமர்ந்த நேரத்தில் அவன் குரலும் கேட்க ‘இவர் எங்கே தன் அறைக்கு?’ என்று நினைத்தவள் அவன் பட பட என்று பேச ‘இவருக்கு இவ்வளவு பேசத் தெரியுமா?’ என்று முதலில் வியந்தவள் அவன் சொன்ன குடிகாரி கோபம் கொண்டு

“யாரைப் பார்த்து என்ன வார்த்தை பேசுறிங்க? நான் குடிகாரியா! என் குடும்பத்துக்கு அந்த குடியோட நாற்றம்னாலே என்னனு தெரியாது. என் தாத்தா அதை தொட்டது கூட இல்ல. அப்படி அவரால வளர்க்கப் பட்ட அவர் பேத்தியாகிய என்னைப் போய் குடிகாரினு எப்படி சொல்லலாம்? அதுவும் என் ரூம் மெட்ஸ்ங்க குடிச்சிட்டு வந்தாலே சாட்டைய எடுத்து அவளுங்களை விலாசாத குறையா துரத்தி அடிக்கிற என்னையப் போய்……” அவள் முடிப்பதற்குள்

“ஆமாம் ஆமாம்… சொன்னாங்க இந்த ஊரே சொன்னாங்க! உன் தாத்தா அப்பானு உங்க குடும்பமே குடிக்காதுன்றத சொன்னாங்க. அதை நானும் ஒத்துக்கறன். ஏன்னா அவங்க குடிக்கக் கொஞ்சமாவது இருக்கணும் இல்ல? அதான் அவங்களுக்கு மிச்சமே வெக்காம எல்லாத்தையும் நீயே குடிச்சிட்டியே! அப்புறம் எப்படி அவங்க குடிப்பாங்க?

அம்மாடியோ! இங்கேயே பிறந்து வளர்ந்த எங்க ஊர் பொண்ணுங்களால கூட முடியாதுமா முழுசா ரெண்டு பாட்டில் குடிக்க! நீ என்னமா குடிக்கிற? நான் பிடிங்கி வைக்க வைக்க என் கையிலிருந்து திரும்பவும் பிடிங்கி இல்ல குடிக்கிற நீ? இதுல நேத்து பார்ட்டில என்னமா ஆட்டம் போட்டு கலாட்டா வேற பண்ணிட்ட. உன்னால எனக்கு எவ்வளவு அசிங்கம் தெரியுமா? இனிமே ஜென்மத்துக்கும் உன்னை வெளியே கூட்டிட்டுப் போவேனு மட்டும் நினைக்காத. அது மட்டும் நடக்காது குடிகாரி!”

“திரும்பத் திரும்ப அப்படிச் சொல்லாதிங்க. நான் குடிச்சிருக்க மாட்டன். சரி நீங்க சொல்றதை போல நான் தான் உங்களை அசிங்கப் படுத்திட்டேன் இல்ல, அப்பறம் எதுக்கு என்னப் பார்க்க என் வீட்டுக்கு வந்தீங்களாம்?” என்று அவள் மிடுக்காக கேட்க

“என்னது உன் வீடா? நேத்து நீ குடிச்சிட்டு ரோட்டுல விழுந்து புரண்டு கிடந்த உன்னை என் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்ததுக்கு இதுவும் சொல்லுவ இன்னமும் சொல்லுவ. ஹலோ மேடம்! கொஞ்சம் உங்க குடி மயக்கத்துல இருந்து வெளிய வந்து நல்லா உங்க கண்ணைத் திறந்து வச்சி சுத்திப் பாருங்க. இது என் வீடு. நீ தான் என் வீட்டுல இருக்க” என்று அவன் அவளைக் குத்திக்காட்ட

அப்போது தான் அவள் அந்த இடத்தையே தன் கண்களால் வட்ட மிட, அவன் சொல்வதைப் போலவே அது அவன் அறை என்பதைக் காட்டியது. ‘நேற்று அவன் கூட பார்ட்டிக்குப் போனது வரை நினைவு இருக்கு. அதன் பிறகு தான் எப்படி இங்கு வந்தோம்?’ என்பது என்ன யோசித்தும் நினைவில்லாமல் போக ‘ஒருவேளை இவர் சொல்வது போல் நேத்து குடித்து தான் இருப்பமோ? ஆனா அப்படி நடக்க சாத்தியம் இல்லையே! இது தெரியாம வீராப்புல இவர் கிட்ட எக்குத் தப்பா இல்ல வார்த்தைய விட்டுட்டோம்?’ என்று அவள் பலவாறு யோசித்துக் கொண்டிருக்க

அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனோ அவள் முகத்தில் வந்து போன பாவனையை விட அவள் விழியில் வந்து போன பாவனையில் தன் நிலை இழப்பதை உணர்ந்தவனோ உடனே “சீக்கிரம் கிளம்பு, எனக்கு மணி ஆகுது” என்ற கட்டளையுடன் அவன் வெளியே செல்ல

சரி என்ற தலை அசைப்புடன் கிளம்ப நினைத்தவளோ “ஐயோ….” என்று கூப்பாடு போட கதவு வரை சென்றவனோ அவள் குரலில் பதட்டம் எழ “என்ன என்ன? என்ன ஆச்சு சாரா?” என்ற வினாவுடன் அவன் ஓடி வர அவள் இருந்த மனநிலையில் அவன் பதட்டம் மனதில் படாமல் போக தான் அணிந்திருந்த டி ஷர்ட்டைக் காட்டியவளோ “இது நான் போட்டுட்டுப் போன டிரஸ் இல்லையே?” என்று பதற

“நேத்து நீ அடிச்ச கூத்துக்கு இன்னும் உன் டிரஸ் அப்படியே இருக்குமா? அந்த டிரஸ் முழுக்க வாந்தி. அதனால தான் இதைப் போட்டேன்” என்று சொல்லிக் கொண்டே வந்தவன் என்னவென்று சொல்ல முடியாத ஒரு பாவம் அவள் விழிகளில் வந்து போனதைப் பார்த்தவுடனே “நான் ஒண்ணும் உனக்குப் போட்டு விடல. ஹவுஸ் மேட் லேடி தான் மாத்தி விட்டாங்க” என்று பிசிர் இல்லாமல் அவன் சொல்ல அவளோ தன் விழிகளைத் தாழ்த்திக் கொள்ள.

“சும்மா சும்மா இப்படியே உட்கார்ந்துட்டு இருக்காம சீக்கிரம் எழுந்து குளிச்சிட்டு கிளம்பற வழியப் பாரு. எனக்கு டைம் இல்ல” என்றவன் “இந்தா நீ குளிச்சிட்டு மாத்திக்கறதுக்கான டிரஸ். இதை கொடுக்கத் தான் வந்தேன். என்ன ஏதேதோ பேச வச்சிட்ட” என்று சொல்லி ஒர் கவரை கட்டிலில் வைத்தவன்

“இங்க பார் வேலை செய்ய வரவங்க என் துணிய மட்டும் தான் துவைப்பாங்க. உன் துணிய எல்லாம் துவைக்க மாட்டாங்க. அதனால ஒழுங்கா உன் துணிய எல்லாம் மெஷின்ல போட்டு துவைச்சி இப்பவே கையோட எடுத்துக்க. அதையும் சீக்கிரமா செய். ஆனா இப்போ நீ போட்டுருக்கிற என் டீ ஷர்ட்ட மட்டும் துவைக்காத. நான் அத வேலையாள் கிட்ட கொடுத்து துவைச்சிக்கறேன்” என்று அவளுக்குக் கட்டளை இட

‘சரி’ என்ற முணுமுணுப்புடன் பாத்ரூம் வாசல் வரை சென்றவளை “ஏய் நில்லு” என்று அவன் குரல் தேங்க வைக்க ‘இப்போ என்ன?’ என்ற கேள்வியுடன் நின்றவளிடம் வந்தவன் ஒரு துவாலையை நீட்டி “இந்தா இத யூஸ் பண்ணிக்க” என்று சொல்ல

முகமெல்லாம் பூரிப்புடன் கண்களில் ஒரு ஒளியுடன் அதைப் பெற்றுக் கொண்டவள் “இது உங்களுதா?” என்று கேட்க

‘இல்லை வேலையாட்கள் உபயோகப் படுத்துவது’ என்று சொல்ல வந்தவன் அதைச் சொல்ல முடியாமல் அவனை ஏதோ தடுக்க “இல்ல கெஸ்ட் யார்னா வந்தா யூஸ் பண்றது” என்று அவன் கத்தரித்தால் போல் சொல்ல, அதைக் கேட்டவளின் முகமோ ஒளி இழக்க அதைப் பார்த்தவனின் மனதிலோ அவனையும் அறியாமல் சிறு வலி எழத் தான் செய்தது.

அவன் சொன்ன படியே அவள் எல்லாம் முடித்து கிளம்பி வர அவசரம் அவசரம் என்று பறந்தவனோ எந்த ஒரு அவசரமும் இல்லாமல் லேப்டாப்பில் மூழ்கி இருக்க, அவள் வந்ததைப் பார்த்தவன் “சரி போகலாமா?” என்று கேட்ட படி அங்கேயே அமர்ந்திருக்க

“ம்….” என்றவள் தயக்கத்துடனே அவன் முகத்தை இரண்டு மூன்று முறை ஏறெடுத்துப் பார்க்க, அதை உணர்ந்தவனோ அவளை நிமிர்ந்து பார்த்து “என்ன?” என்று கேட்க

நாக்கு வரண்டு போய் இருந்ததில் திக்கித் திணறி “குடிக்கத் தண்ணி கிடைக்குமா?” என்று கேட்டவள் தன் வலது கையின் கட்டை விரலைக் கொண்டு சென்று அதையே செய்கையாகவும் கேட்க

“அங்க இருக்கு கிச்சன்” என்று அந்த வீட்டின் வலது மூலையைக் காட்டியவன் அவள் அங்கு சென்றதும் வெறுமனே வைத்திருந்த லேப்டாப்பை மூடி வைத்தவன் எழுந்து தன் அறைக்குச் சென்று அழுக்குத் துணிகள் போட்டு வைக்கும் கூடையில் அவள் கழட்டிப் போட்ட அவன் டி ஷர்ட்டை எடுத்து மடித்து கப்போர்டில் தன் நல்ல துணிகளுக்கு நடுவே வைத்துக் கொண்டான் அஷ்வத்.

தண்ணீர் குடிக்கக் கிச்சனுக்குச் சென்ற சாரா அங்கு காலையிலிருந்து சமைத்ததற்கோ இல்லை சாப்பிட்டதற்கோ என்று எந்த அறிகுறியும் இல்லாமல் இருப்பதையும் டைனிங் டேபிளில் வெறும் ஜுஸ் குடிச்சதுக்கான டம்ளர் மட்டும் இருப்பதைப் பார்த்தவள் ‘அப்போ இவரும் எதுவுமே சாப்பிடலையா?’ என்ற கேள்வியுடன் ஃபிரிஜ்ஜைத் திறந்து தண்ணீர் பாட்டிலை எடுக்க அதே நேரம் அங்கு அஷ்வத் வர

“ஆமா நீங்க காலையிலிருந்து எதுவுமே சாப்பிடாம பசியாவா இருக்கிங்க? நான் வேணா உங்களுக்கு எதாவது சமைத்துத் தரவா?” என்று கரிசனத்துடன் கேட்க

அவள் பசியாக இருப்பாள் என்பதற்காகத் தான் அவன் அவளை அவ்வளவு அவசரப் படுத்தியதே. இப்போது அவளே அவன் பசியைப் பற்றி கேட்கவும் உள்ளுக்குள் அவனுக்கு ஏதேதோ முட்டி மோத அதையெல்லாம் விடுத்தவன்

“நான் சாப்பிடலைனு உன் கிட்ட சொன்னனா? இல்ல எதாவது செய்து தரச் சொல்லி உன் கிட்ட கேட்டனா? உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு. இப்போ கிளம்பறியா? எனக்கு டைம் ஆகுது” என்று முகத்தில் அடித்தது போல் அவன் சொல்லவும் கையில் எடுத்த அந்த பாட்டில் நீரைக் கூட குடிக்காமல் திரும்பவும் அவள் ஃபிரிஜ்ஜிலேயே வைத்து விட, அதைப் பார்த்தவனோ

“நான் என்ன உன்னை தண்ணி கூட குடிக்க கூடாதுனு சொல்ற அளவுக்கு கொடுமைக்காரனா என்ன? ஒழுங்கா எடுத்த அந்த தண்ணிய குடிச்சிட்டு வா” என்றவன் சென்று காரில் அமர்ந்து விட

கண்ணில் நீர் முட்ட அவன் சொன்னதுக்காக வேண்டா வெறுப்புடன் அந்த தண்ணியைக் குடித்தவள் பின் கிளம்பிச் செல்ல மீதமிருந்த அந்த கார் பயணம் முழுவதும் இருவரும் அமைதியாய் பயணித்தனர்.

‘சரியான பில் பில்’ என்று சாரா வாய்க்குள்ளே முணுமுணுக்கவும் என்ன என்று திரும்பிப் பார்த்து கண்களால் அவன் கேட்கவும் ஒன்றும் இல்லை என்பதுபோல் தோள்களைக் குலுக்கி கொண்டாள் அவள்.

இதுவரை இல்லாத ஏதோ ஓர் உணர்வு அவள் இறங்கும் போது அவள் பிரிவை அவனுக்கு உணர்த்த அவள் எந்த ஒரு வார்த்தையும் சொல்லாமல் இறங்கிப் போன பிறகும் அவள் திரும்பிப் பார்க்க மாட்டாளா என்ற எண்ணத்தில் ‘திரும்பிப் பார் சாரா! ஒரேயொரு முறை என்னைத் திரும்பிப் பார் சாரா! பாரு டி…” என்று போகும் அவளையே பார்த்த படி அவன் மனதாலேயே கேட்டுக் கொண்டிருக்க, அவனைத் திரும்பியும் பார்க்காமல் உள்ளே சென்று மறைந்தாள் சாரா. 

முதல் முறையாக மனதில் ஏமாற்றத்துடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றான் அஷ்வத்

நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருக்க முன்பு போல் இருவருக்கும் எந்த தொடர்பும் இல்லாமலிருக்க சாராவின் வாழ்வில் முக்கியமான மற்றும் மறக்க முடியாத நாளும் ஒன்று வர, இத்தனை நாள் எப்படியோ! தன் கணவன் என்று அஷ்வத் தன் வாழ்வில் வந்த பிறகு சாராவுக்குத் தனியாக அந்த நாளைக் கொண்டாட விருப்பமில்லை.

ஆனால் அதை அவனிடம் சொல்லவும் முடியாமல் சொன்னாலும் அவன் தன்னுடன் இருக்கவோ எங்காவது வெளியில் வரவோ மாட்டானே என்று பலவாறு யோசித்தவள் இறுதியில் என்ன ஆனாலும் பரவாயில்லை என்ற முடிவுடன் இவ்வளவு நாள் கழித்து அவனுக்கு அழைக்க அவன் போனோ ஸ்விட்ச் ஆப் என்று வந்தது. சற்று நேரம் கழித்து அவள் மறுபடியும் அழைக்க இப்போது நாட் ரீச்சபல் என்று வந்தது. வேண்டாம் என்று விடாமல் இவள் மறுபடியும் அழைக்க இம்முறை ரிங் போனதே தவிர அவன் எடுக்கவேயில்லை.

பெண்ணவளுக்கோ அவன் கூடவே இல்லையென்றாலும் அவன் குரலையோ இல்லை அவன் முகத்தையோ ஒரு முறையாவது பார்க்க மாட்டோமா என்று காதல் கொண்ட மனதோ ஏங்க இப்போது அஷ்வத் எங்கே இருப்பான் என்பது தெரியாமல் ஒருவித தவிப்புடனே இருந்தவள் பின் ஸ்டீவ்வுக்கு அழைத்து அஷ்வத் எங்கே ஏது என்று கேட்டு விசாரித்தாள்.

அவன் இருக்குமிடம் சற்று தூரம் என்பதால் போக தாமதமாகும் என்பதை ஸ்டீவ் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்காமல் அவனைப் பார்த்தே தீருவேன் என்ற பிடிவாதத்துடன் அவனை நாடி அவன் இருக்கும் இடத்திற்கே சென்றாள் சாரா.

ஊருக்கு சற்று வெளியே இருந்த அந்த இடத்திற்குச் சென்றவள் வெளி கேட் காவலரிடம் கென்ட்ரிக்கைப் பார்க்க வேண்டும் என்று சொல்ல அவர்கள் மறுக்க. அவள் எவ்வளவு சொல்லியும் அந்த காவலர்கள் அவளை உள்ளே விடாமல் தடுக்க. ஏதோ ராணுவ அதிகாரிகள் அவர்கள் ரகசிய கிடங்கைப் பார்க்க விடாமல் ஆயிரத்தி எட்டு விதிகள் போட்டு ஆதாரம் கேட்டு விரட்டுவார்களே அது போல் அவளை நடத்த, அதில் கடுப்பானவள்

“நான் அவர் வருங்கால மனைவியாய் ஆகப் போறவள். உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் கென்டிரிக்கையே அழைத்து என்னைப் பற்றி கேளுங்கள். அவர் மறுத்தால் நான் போய் விடுகிறேன்” என்று சொல்ல அப்படி சொல்லும் போதே சாராவுக்கு உள்ளுக்குள் உதைப்பு தான். எங்கே அஷ்வத் தன்னைத் தெரியாது என்று சொல்லி அசிங்கப் படுத்திவிடுவானோ என்று!

உடனே அதற்கு மட்டும் ஒத்துக் கொண்டவர்கள் அவளைத் தன் மொபைலில் போட்டோ எடுத்து அதை அஷ்வத் பி.ஏ வுக்கு அனுப்பிக் கேட்க, உடனே அவனோ பக்கத்திலிருந்த அஷ்வத்திடம் முழு விவரத்தையும் சொல்லி அனுமதி கேட்க ஒரு வினாடி அந்த போனில் சாராவின் புகைப்படத்தைப் பார்த்த அஷ்வத் என்ன நினைத்தானோ மறுக்காமல் அவளை அனுப்பச் சொன்னான்.

பின் இங்கு சாராவிடம் இதுவரை இருந்த அலட்சியம் மாறி ஒரு வித மரியாதையுடன் அவளை அவர்கள் உள்ளே அனுப்ப அங்கே அவளைத் தலை முதல் பாதம் வரை ஸ்கேன் செய்தவர்கள் அவளை அழைத்துப் போக கார் வரும் வரை வி.ஐ.பி க்கான வெயிட்டிங் ரூமில் அமர வைத்து ஜூஸ் கொடுத்து உபசரித்தனர்.

‘இன்னும் உள்ள போக கார் வருமா? அப்படி இது என்ன மாதிரியான இடம், எதுக்கு இவ்வளவு பாதுகாப்பு?’ என்று அவள் யோசித்துக் கொண்டிருந்த நேரம் தமிழர் போல் முக அமைப்புடன் ஓர் இளைஞன் அந்த அறையின் உள்ளே நுழைந்து

“வெல்கம் மேடம்! நான் சேரோட பி.ஏ” என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டவன் “உங்களுக்கெண்டு கார் ரெடியா இருக்கு. போவமா மேடம்?” என்று பவ்வியமாக அவளை அழைக்க அவன் பேசின பிறகு தான் தெரிந்தது அவன் ஓர் இலங்கைத் தமிழன் என்பது அவளுக்கு.

அவன் தன்னைச் சாதாரணமாக அறிமுகப்படுத்தி இருந்தால் யோசித்திருக்க மாட்டாள். அவன் பி.ஏ என்று சொன்னதில் தான் குழம்பினாள். அஷ்வத்தின் பி. ஏ வைத் தான் அவளுக்கு முன்பே தெரியுமே! அதனால் இவன் யார் என்று அவள் கொஞ்சம் தயங்க.

அதை அறிந்தவனோ “மேடம், சேர்க்கு நிறைய பிஸினஸ். அதுக்கெண்டு தனிய தனிய பி.ஏ இருந்தாலும் இங்க அவர் ஆத்மார்த்தமா ஒரு மனநிறைவோட செய்யுற இந்த சேவைக்கு நான் தான் மேடம் அவருக்கு ரைட் ஹான்ட், பி.ஏ எல்லாமே. சோ எந்த தயக்கமும் இல்லாம நீங்க என்ன கூட வாங்கோ” என்று அவன் அழைக்க

இப்போது எந்த தயக்கமும் இல்லாமல் கிளம்பியவள் வழி நெடுகிலும் சுற்றி கொஞ்சம் மரங்கள் அடர்ந்திருக்க அங்கங்கே மரங்களின் முக்கியத்துவம் பற்றி எழுதியும் பிற்காலத்தில் சுத்தமான மூச்சுக் காற்றுக்காக நாம் படப் போற கஷ்டத்தைப் பற்றியும் அழகான ஒவியமாக பல பலகைகளில் வரைந்திருக்க அதையெல்லாம் பார்த்ததில் சாராவுக்குள் அவ்வளவு சந்தோஷம்.

‘ஒருவேளை இதை எல்லாம் அஷ்வத் மட்டும் எழுதச் சொல்லி இருந்தால்? என்று நினைத்தவள் அப்போ என் கணவர் இயற்கையை நேசிக்கிறவர் தான். அதனால் நான் வந்த வேலை இதுவரை கஷ்டம் இல்லாமல் முடிந்தது போல் இப்பவும் சுலபமாக நல்ல மாதிரியா முடிஞ்சிடும்’ என்று அவள் நினைக்கும் போதே சற்று தூரம் தள்ளி

தனி மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி சொன்னான். ஆனால் இங்கு ஒரு நாடே (சோமாலியா நாட்டு மக்களின் புகைப்படங்களைப் போட்டு) தண்ணீர் உணவு இல்லாமல் அழிகிறது. அதற்காக நாம் ஜெகத்தினை அழிக்க வேண்டாம் இயற்கையுடன் கூடிய வாழ்வை வாழ வழி செய்வோம் என்றும்

இன்னும் ஓர் இடத்தில் ‘தமிழன் என்று பெருமை கொள்ளும் தமிழா! ஆதி காலத்தில் இருந்து வந்த உன் தமிழனுக்கு ஓர் நாட்டில் இடமில்லை என்று (இலங்கை தமிழர்கள்) துரத்தப் படுகிறார்களே, அவர்களுக்கு ஒரு தமிழனாய் இந்த தேசம் முழுவதும் உன் கால் தடம் பதித்திருக்கும் நீ என்ன செய்தாய்? என்று எழுதியிருக்க

இதுவரை ஒரு அசட்டையுடன் அமர்ந்திருந்தவள் இந்த வாசகத்தைப் பார்த்தவுடன் ‘உண்மை தானே!’ என்ற முணுமுணுப்புடனும் உத்வேகத்துடனும் அவள் நிமிர்ந்து அமர முன் சீட்டில் அமர்ந்து இருந்த படியே அவளின் செயலைப் பார்த்த அந்த பி.ஏ

“இதெல்லாம் இங்கே நடக்கிற ஃபங்ஷன்ல சேர் கதைக்கேக்க சொல்றது மேடம். அவரிண்ட பேர் போட வேண்டாமெண்டு ஸ்டிரிக்டா சொல்லிட்டார். சோ அவரிண்ட பேர் இல்லயெண்டாலும் அவர் சொன்ன வார்த்தைகளாச்சும் போட விட்டாரெண்டு நாங்களும் சம்மதிச்சி இதையெல்லாம் எழுதி வச்சிருக்கிறம். உள்ள வந்து பாருங்கோ மேடம். சேர் பேச்சால மட்டும் இல்ல செயலாலையும் நிறைய செய்திருக்கார். ஆனா அதையெல்லாம் எந்த ஒரு பப்ளிசிட்டியும் இல்லாம கனக்க (நிறைய) வெளி உலகத்திக்குக் காட்டாம தேவப்பட்டா மட்டும் மற்றவேக்குத் தெரியிற மாதிரி வச்சிருக்கார்” என்று அவன் அஷ்வத் புகழ் பாட

‘அப்படி என்ன தான் செய்து இருக்கார் உங்க ஸார்? அதையும் தான் பார்க்கறனே!’ என்று மனதில் நினைத்துக் கொண்டவளோ வெறுமனே அவனுக்குச் சிரித்த முகமாகத் தலையை ஆட்டினாள் சாரா.

இவள் இப்படியே ஜன்னல் வழியாகப் பார்த்து வர திடீர் என்று ஓர் இடத்தில் கார் நிற்க அந்த பி.ஏ வந்து அவள் பக்கக் கார் கதவைத் திறந்து விட்டவன்

“மேடம் கொஞ்சம் இறங்க முடியுமோ? உள்ளயும் கார் போவும். ஆனா நீங்க இங்க இருந்தே நடந்து வந்திங்கெண்ட உங்களுக்குப் பாக்கவும் பிடிக்கும் பிளஸ் நாங்க ஏன் இப்பிடி எல்லாம் செய்து இருக்கமெண்டு உங்களுக்கு விளங்கும்” என்று அவன் சொல்ல சரி என்று சொல்லி காரை விட்டு இறங்கியவள் அங்கிருந்த ‘கார்த்திகேயன் கனவு இல்லம் உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்ற பெயர் பலகையின் வளைவைப் பார்த்தவள் உடலில் தீ சுட்டாற் போல் அதிர்ந்து நிற்க, அவளைப் பார்த்தவனோ

“மேடம் இதான் சேரோட அப்பாண்ட பேர். உங்களுக்கு தெரியும் தானே அவரும் உங்கட ஊர் தானே மேடம்” என்று அவன் சொல்ல, அவன் சொன்ன வார்த்தைகளில் தெளிந்தவள் ‘நாம அஷ்வத்த பற்றி முன்பே விசாரிச்சி வச்சிருக்கலாமோ? இப்படி அடிக்கடி ஷாக்காகாம இருந்திருக்கலாம்’ என்று நினைத்தவள் ம்ம்ம்…. என்று சொல்லி அவனுடன் இணைந்து நடக்க வாசலில் வாழை மரம் மற்றும் மா இலைத் தோரணம் கட்டித் தெரு எங்கும் மாக் கோலம் போட்டு அழகான தமிழில் ‘நல்வரவு’ என்று எழுதியிருந்தது. அதைப் பார்த்த சாராவின் மனதுக்குள் அப்படி ஒரு ஆனந்தம்! ஏதோ தான் தமிழ் நாட்டுக்கே வந்து விட்ட நிம்மதி அவளுக்கு. ‘இதெல்லாம் யாருக்காக?’ என்று நினைத்தவள்

“எதாவது ஃபங்ஷனா? யாராவது முக்கிய தமிழ் வி.ஐ.பி வந்து இருக்காங்களா?” என்று அந்த பி.ஏ விடம் அவள் கேட்க

“ஓமோம் மேடம் வி.ஐ.பி தான். ஆனா அதுக்கெண்டு ஆரும் வெளில இருந்து வர வேண்டாம். ஏனெண்டா எங்கட சேர விட இங்க ஒருத்தரும் எங்களுக்கு பெரிய வி.ஐ.பி இல்ல மேடம்” என்று அவன் பெருமையோடு சொல்ல

‘ஓ… அப்ப இதெல்லாம் அஷ்வத் மச்சானுக்கா?’ என்று யோசித்தவள் அது ஏன் என்று அவனிடம் கேட்பதற்குள் அவனே 

“மேடம் இங்க இருக்கிறவங்க முக்காவாசிப் பேர் இலங்கைத் தமிழர்கள், அகதியளா நாடு, வீடு வாசல், சொந்த பந்தமெண்டு எல்லாத்தையும் இழந்துட்டு வந்தவங்கள் நான் உள்பட. அப்பிடி வந்த எங்கள எந்த நாட்டு அரசும் சுமூகமான முறையில வரவெச்சு அடைக்கலம் குடுக்காது. அப்படியே குடுத்தாலும் எங்களைத் தனித் தன்மையோட வாழ விடாது. அப்பிடி நாங்க வாழணுமெண்டா பல வருசம் நாங்க கால ஊண்டி நின்டா தான் முடியும். அதுவும் எங்கட பிள்ளையள் தான் பிற்காலத்தில வாழ முடியும்.

ஆனா இன்டைக்கு எங்கண்ட அஷ்வத் சேரால நாங்க எங்கட நாட்டில சுதந்திரமா இருக்கிற போல தனித் தன்மையோட சகலவித வசதியளும் பெற்று வீடு வாசலோட இங்க வாழுறம். அதோ அது தானுங்கோ சேர் எங்களுக்குக் கட்டிக் குடுத்த அப்பார்ட்மெண்ட்” என்று சற்று தூரத்தில் இருந்த கட்டிடத்தைக் காட்டியவன் “அது பக்கத்துல இருக்கிறது பிளே கிரவுண்ட். இந்த பக்கம் லைப்ரரி. அங்க முழுக்கத் தமிழ் புக்ஸ் தான் இருக்கு. என்னும் இந்த பக்கம் இருக்கிறது ஆபிஸ் பில்டிங். இங்க வெறும் இலங்கைத் தமிழர் மட்டும் இல்ல சோமாலியாவுல பாதிக்கப் பட்ட பொம்பிளயளும் குழந்தையளும் இங்க இருக்கினம்.

இந்த கம்பஸ்குள்ளயே ஒரு சில பேர் ஸ்கூல் வேணுமெண்டு கேட்டாங்கள். ஆனா சேர் தான் எல்லாரும் எல்லாரோடையும் ஒண்டா பழகணும். அத சின்ன வயசில இருந்தே எங்கட பிள்ளையளுக்கு நாம கத்துக் குடுக்கணுமெண்டா அவங்க வெளிய போய் படிக்கட்டும் இங்க தனியா வேண்டாமெண்டு சொல்லிட்டார். ஆனா தரமான கல்வி கற்க வழி செய்து இருக்கார். அதே மாதிரி இந்த ஆபிஸ்ல தமிழர்கள் மட்டுமில்லாமல் மற்ற நாட்டாரும் வேலை செய்யிறாங்க. பாதிக்கப் பட்ட தமிழருக்காக இப்பிடி ஒரு இடத்த அமைக்கணுமெண்டு சேர் அப்பாண்ட கனவாம். அது கூட இப்பிடி பாதிக்கப்பட்ட பல நாட்டவரையும் சேத்து இந்த ஹோமை சேர் உருவாக்கி இருக்கார்.

இதுக்காக அவர் நிறய கஷ்டங்களையும் பிரச்சினையளையும் சந்திச்சி இருக்கார். இந்த நாட்டு உயர் அதிகாரிகள் முதல்கொண்டு அரசியல்வாதிகள் வர நிறய வி.ஐ.பிகளை தெரிஞ்சி இருந்ததால எல்லாத்தையும் சமாளிச்சி இன்டைக்கு இதை உருவாக்கி இருக்கார். அதை எல்லாம் நேரில இருந்து பார்த்தவன் நான் மட்டும் தான் மேடம். அவர புகழ்ணும்னு என்டதுக்காக நான் இப்படி எல்லாம் சொல்லேல மேடம். உண்மையாவே ஹி இஸ் எ சூப்பர் பேர்சன் மேம்! இன்டைக்கு சேருக்கான நாள். இன்டைய தினத்த சேர் வாழ்க்கையில மறக்க முடியாத நாளா சொல்லுவார்” அப்படி அவன் சொல்லிக் கொண்டு வரும்போதே சாராவோ,

‘மறக்க முடியாத நாளா? அப்போ இவருக்குப் பழசு எல்லாம் இன்னும் ஞாபகம் மட்டும் இருந்தா அப்போ என் நிலைமை?!’ என்று நினைத்தவள் அப்படியே சட்டென நின்று விட.

“என்னங்க மேடம் கால் வலிக்குதோ? இன்னும் கொஞ்சத் தூரம் தான் அங்க வந்திட்டுது” என்று பதட்டப் பட

“ஒண்ணும் இல்லை” என்று சொல்லியவள் அவனுடன் சகஜமாக நடக்கவும்

“அப்பிடி என்ன நாளெண்டு கேட்டதில அவர் தன்னோட கேரியரை ஆரம்பிச்ச நாளெண்டு சொன்னாரு. அந்த நாள் முழுக்க எங்களோட தான் இருப்பார். இந்த வருசம் நீங்களும் எங்களோட இருக்கிங்க. அடுத்த வருசம் கல்யாணம் முடிச்சு உரிமையோட அவர் கூட வாங்க மேடம்” என்று அவன் அவளைப் பேச விடாமல் பேசிக் கொண்டே போக, இதற்கும் சிரித்த முகமாக “ம்ம்ம்…” என்றாள் சாரா.

பிறகு ஓர் கட்டிடத்தின் உள் அவளை அழைத்துச் செல்ல அங்கே அஷ்வத்தைப் பார்த்த மாத்திரத்தில் அவன் அணிந்திருந்த பட்டு வேட்டிச் சட்டையைப் பார்த்து ஆனந்த அதிர்ச்சிக்கு ஆளானாள் சாரா.

அவளைப் புடவையில் பார்த்தவனோ மெச்சுதலுடன் கூடிய ஒரு பாராட்டுப் பார்வையைப் பார்த்தவன் அது பொய்யோ என்னும் படியாக உடனே குற்றம் சாட்டும் பார்வையைப் பார்க்க ‘இப்போ நான் என்ன தப்பு செய்தனு இவர் இப்படி என்ன முறைக்கறாரு’ என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவளைத் தன்னிடம் வரும் படி அவன் கண்ணாலேயே அழைக்கவும் ‘இது என்ன டா புதுசா இவர் நம்மள கண்ணாலேயே கூப்பிடறாரு!’ என்று குழம்பியவள் பின் எந்த ஒரு மறுப்பும் சொல்லாமல் அவனை நெருங்க.

சட்டென தன் வலது கையை அவள் தோள் மேல் போட்டவன் அவளைத் தன்னுடன் இறுக்கிக் கொண்டவனோ இவள் தான் என்னுடைய வருங்கால மனைவி என்று எல்லோருக்கும் அறிமுகப் படுத்த அவன் செய்கையிலும் சொன்ன வார்த்தையிலும் விழி விரித்து அவனையே அவள் பார்த்திருக்கவும் அங்கிருந்த இள வட்டங்கள் சந்தோஷத்தில் வாழ்த்து சொல்ல பெரியவர்கள் ஆசிர்வாதம் பண்ண “சாரா, ஆசிர்வாதம் பண்றாங்க பார்” என்ற அவன் குரலில் கலைந்தவள் பின் அங்கிருந்த அனைவரிடமும் சகஜமாகப் பழக ஆரம்பித்தாள் சாரா.

அங்கிருந்த வரை அவனும் அவள் தோள் அணைத்து இடைத் தழுவி எங்கு சென்றாலும் அவள் கை பற்றிய படியே இருக்க ஏற்கனவே அவன் செய்து வரும் நல்ல காரியங்களால் மனதில் பூரிப்புடன் மெய் மறந்து இருந்தவளோ இப்போது அவன் இப்படி எல்லாம் உரிமையுடன் நடந்து கொள்வும் முழுமையாக அவளே அவன் பால் சாய்வது மட்டுமில்லாமல் அவன் முன்பு செய்தது எல்லாம் மறந்து போக அவளும் அவனுடன் ஒன்றத்தான் ஆரம்பித்தாள்.

அங்கு நடந்த பாட்டு, நடனம், விளையாட்டு என்று அனைத்துப் போட்டிகளையும் அவனுடன் சேர்ந்துப் பார்த்து மகிழ்ந்தவள் பிறகு சாப்பாடு நேரத்தில் அங்கு சமைத்த மசாலா கலந்த காரசாரமானத் தமிழ் உணவுகளை அவன் எந்தவொரு தயக்கமும் இல்லாமல் ருசித்துச் சாப்பிடவும்.

பக்கத்தில் அமர்ந்து இருந்தவளோ சாப்பிடுவதை விடுத்து அவனையே ஆ…. என்று வாய் பிளந்து பார்த்துக் கொண்டுருக்க, அவள் அமைதியில் அவள் புறம் திரும்பியவனோ என்ன என்று புருவம் உயர்த்தி வினவ, அதில் கலைந்தவளோ ஒன்றும் இல்லை என்று கண்ணாலேயே பதில் சொல்லவும் சரி என்று விடுத்தவனோ வெகு இயல்பாக அவள் இலையிலிருந்த உருளைக் கிழங்கை எடுத்துச் சாப்பிட இதையெல்லாம் பார்த்த சாராவுக்கோ மயக்கம் போட்டு விழாத குறை தான்.

இதுவரை அவளைப் பாடாய் படுத்தியது போதாது என்று இறுதியாக கொண்டு வந்து கொடுத்த ஐஸ் க்ரீம் ப்ரூட் சாலட்டை இருவரும் எதிரெதிர் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, அப்போது அவள் உதட்டோரம் வழிந்த ஐஸ் க்ரீமை எந்த வித லஜ்ஜையும் இன்றி கை நீட்டித் தன் விரலால் துடைக்க, தன்னை ஏதோ பேய் அறைந்தார் போல் அவள் விழித்துக் கொண்டிருக்கும் போதே துடைத்த அந்த விரலைத் தன் நாக்கில் வைத்துச் சுவைத்தவனோ அவளைப் பார்த்துக் குறும்புச் சிரிப்புடன் கண் சிமிட்டி விட்டு அவள் பக்கமிருந்த ஐஸ்கிரீம் ப்ரூட் சாலட்டை எடுத்துக் கொண்டுத் தன் பக்கமிருந்ததை அவள் பக்கம் நகர்த்தி வைக்க.

பெண்ணவளுக்கோ இது இன்பமான அதிர்ச்சியாக இருந்தது. ‘ஆமாம்! இன்னைக்கு இவருக்கு என்ன ஆச்சி? எனக்குத் தான் பேய் அறைஞ்ச மாதிரி இருக்குனா இவரு என்னமோ பேயே பிடிச்ச மாதிரி இல்ல நடந்துக்கறாரு!’ என்று யோசிக்க அதையும் மீறி அவன் செயலில் உச்சி முதல் பாதம் வரை அவளுக்குள் சிலிர்க்க, வெட்கத்துடன் தலை தாழ்த்தி அவன் சுவைத்துத் தந்த ஐஸ்கிரீம் ப்ரூட் சாலட்டை சுவைக்க ஆரம்பித்தாள் சாரா.

அதன் பிறகும் அவளிடம் சகஜமாக இருந்தவன் அங்கிருந்து அவளை அழைத்துக் கொண்டுத் தன் குட்டி விமானம் மூலம் கார் இருக்கும் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தவனோ அவளுடனே காரில் ஏறிக் கிளம்பினான். எப்போது அவள் உதட்டோர ஐஸ்கிரமைச் சுவைத்தானோ அப்போதிருந்தே மற்றவர் முன்னே தன் பார்வையை அவள் மேல் படிய விட்டவனோ இப்போது யாரும் இல்லாமல் தாங்கள் இருவர் மட்டும் பயணிக்கும் இந்த ஏகாந்த இரவு நேர வேளையில் அடிக்கடித் தன்னவளை அவன் உரிமைப் பார்வைப் பார்த்து வர, அந்தப் பார்வையை உணர்ந்த பெண்ணவளோ வெட்கத்தில் சிவந்த படி ஒரு வித தவிப்புடன் நெளிந்தாள்.

“என்ன சாரா குளிருதா? என்று இதுவரை அவள் கேட்டிராத ஒருவித குரலில் அவன் கேட்க

‘குளிரா? முழுக்க மூடி இருக்கிற காருக்குள்ள எப்படி குளிர் வரும் இது குளிரால இல்லை எல்லாம் நீ பார்த்த பார்வையால தானு நான் எப்படி சொல்ல? சரி, இப்போ நான் என்ன சொல்லணும்? ஆமாம் குளிருதுனு சொல்லணுமா இல்லனு சொல்லணுமா?’ என்று யோசித்தவள் ஆமாம் சொல்ல வாய் திறக்கும் நேரம் அவள் நாக்கு மேல் அன்னத்தில் ஒட்டிக் கொண்டு குரலே எழுப்ப முடியாத அளவுக்குச் சண்டித் தனம் செய்ய. அவள் நிலை அறிந்தவனோ காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு

“குளிருனு தான் நினைக்கிறன்” என்றவன் பின் சீட்டிலிருந்த அவன் ஜெர்கினை எடுத்துக் கொடுக்க

“இல்ல இல்ல… எனக்கு வேணாம். உங்களுக்கும் தான குளிரா இருக்கும்? அதனால நீங்க போட்டுக்கங்க”

“நம்ம ரெண்டு பேருக்குமே குளிரிதுனு சொல்ற. அப்போ நாம இரண்டு பேருமே போட்டுப்போம்” என்று அவன் மிருதுவாக சொல்ல, அவன் குரலில் உள்ள மாறுதல் அவள் மனதில் பட்டாலும் அது எப்படி என்பது போல் அவள் முழிக்க அதை அவள் விழிகளின் வழியே அறிந்தவனோ “இப்படி!” என்று சொல்லி ஜெர்கினை அணிந்து கொண்டவன் பின் அவளைத் தூக்கித் தன் மடிமேல் அமர வைத்தவனோ அந்த ஜெர்கினால் அவளையும் சேர்த்து மூட

அவன் எப்படியோ?! ஆனால் பெண்ணவளோ மிகவும் தடுமாறியே போனாள். ஒரு காதல் பார்வைப் பார்க்க மாட்டானா என்று அவள் காத்திருக்க, அவனோ இன்று அவளைச் சந்தித்ததிலிருந்து செல்லமாய் சீண்டிக் கொண்டிருக்கவும் அதனால் ஒரு வித மயக்கத்தில் அவளோ இந்த பூமியிலே இல்லாமல் வேறு எங்கோ சஞ்சரித்துக் கொண்டிருந்தவள் அவன் இப்படி அணைக்கவும் அன்று போதையில் அவளுள் ஏற்படாத பல மாற்றங்கள் இன்று அவளுக்குள் ஏற்பட. இதெல்லாம் விட அவனுக்கே உள்ள வாசம் அவள் சுவாசத்தில் கலந்து அவள் நுரையீரல் வரை சென்று நிரப்ப அந்த வாசம் இன்னும் வேண்டும் என்பது போல் அவனுள் புதைந்தாள் சாரா.

“நம்ம இரண்டு பேரையும் சேர்த்து வைத்து ஜெர்கின் ஸிப்ப கிளோஸ் பண்ணுவேன் சாரா. ஆனா உனக்கு மூச்சு முட்டுமேனு தான்….” என்று அவன் குறுநகையோடு இழுக்க 

அவன் சொன்ன வார்த்தையிலும் தன் செயலிலும் முகத்தில் செம்மை ஏற அவனைப் பார்க்க முடியாமல் அவன் கழுத்து வளைவிலேயே முகம் புதைத்தவள்

“உங்களுக்கு இப்படி எல்லாம் கூட என் கிட்ட பேச வருமா?” என்று அவள் ஹஸ்கி வாய்சில் கேட்க, அதே ஹஸ்கி வாய்ஸிலேயே கண்ணில் ஓர் ஒளியுடன்

“இது காரா இருக்கு இல்லனா உன்ன…” என்று அவன் முழுமையாக முடிப்பதற்குள் தன் தளிர் விரலால் அவன் வாயை மூடியவள் “போதுமே!” என்று சிணுங்க

அவள் விரலின் மென்மையில் கரைந்தவனோ முதல் முறையாக இதழ் பிரிக்காத ஒரு இதழ் ஒத்தடத்தை அவன் அங்கு பதிக்க, இப்போது கரைவது சாராவின் முறையாயிற்று. அவள் கேட்டது போல் முழுமையாக ஒரு காதலனாய் அவன் அவளிடம் சீண்ட, இதே நிலை நீடித்திருந்தால் ஒருவேளை அவள் எதிர்பார்த்த ஐ லவ் யூ என்ற வார்த்தையையும் அவன் சொல்லியிருப்பானோ என்னவோ?! ஆனா சாரா இருந்த மனநிலையில் இதை நீடிக்க வேண்டும் என்று கொஞ்சமும் யோசிக்காமல் “ஆமா இன்னைக்கு உங்க வாழ்வில் ஏதோ முக்கியமான நாளுனு சொல்றாங்களே! அப்படி என்ன நாள்?” என்று அவள் கேட்க

அவள் கேட்ட அடுத்த நொடியே அவன் உடல் விரைப்புற, தாறுமாறாக ரத்த ஓட்டம் எகிற கோபத்தில் கண்ணும் முகமும் சிவந்தது. அதைப் பார்த்தவளோ ‘ஏன், இப்போ அப்படி என்ன கேட்டோம்?’ என்று நினைத்தவள் அவனை விலக நினைத்த நேரம் அவனே அவளை உதறி விட, அதை உணர்ந்தவளோ பக்கத்திலிருந்த சீட்டின் நுனியைப் பிடித்துக் கொண்டு தடுமாறிய படி அமர்ந்து விட்டாள் சாரா. கொலைவெறியுடன் அவளைப் பார்த்தவனோ

“ஏய்… யார் நீ? எதுக்கு என்னச் சுத்தி சுத்தி வர? நான் எங்க போறேன் வரனு வேவு பார்க்கறதே உனக்கு வேலையா?” என்று அவன் கர்ஜிக்க

‘இதுவரை என்னிடம் மென்மையாக குழைந்தவர் இவரா?’ என்று அதிர்ந்தவள் அவன் கேட்டதற்கு இல்லை என்பது போல் தலையசைக்க

“என்ன இல்ல? வேவு பார்க்காமத் தான் நான் இருந்த இடத்த சரியா தெரிஞ்சிகிட்டு அங்க வந்தியா? ஆமா நீ யாரு? சரி, எனக்கு உன்னைப் பற்றி எதுவும் தெரிய வேணாம். உனக்கு இந்த விழி எப்படி கிடைத்ததுனு மட்டும் சொல்லிடு. எனக்கு நிச்சயமா தெரியும் இது உனக்குச் சொந்தமான விழி இல்லனு. இந்த விழி யாருடையதுனும் எனக்கு நல்லா தெரியும். இது இடையில தான் உனக்குக் கிடைச்சிருக்கு. சொல்லு எப்போ எப்படி கிடைச்சிது?” என்று அவன் கேட்க, அவன் என்ன கேட்கிறான் என்பது புரியாதவளாக தெரியாதவளாக இவள் அடிபட்ட குழந்தை என மலங்க மலங்க விழிக்க, அதற்கும் கோபம் கொண்டவன்

“இதோ இந்தப் பார்வை தான்! இந்தப் பார்வை கூட எனக்குப் பிடித்த தெரிந்த விழியில இருந்து பார்க்கிற பாரு, அப்போ தான் அந்த வினாடி தான் நான் என் வசம் இழக்கிறேன். அதிலேயும் இன்று நீ வர்ற வரைக்கும் நான் எப்படி இறுகிப் போய் இருந்தேன் தெரியுமா? ஒரு ஜடமா, உயிருள்ள பொருளா இருந்தேன். ஆனா அதே நீ வந்த பிறகு உன் விழியை நான் பார்த்த பிறகு இதோ இப்போ குழைந்தேன் பார் அப்படி மாறிடுறேன் டி! எங்கிருந்து டி வந்த? என் வாழ்கையையே புரட்டிப் போட்டு என்னை மயக்க வந்த மாய மோகினியா டி நீ?

ம்… இப்போ சொல்லு! உனக்கு எப்போ ஆக்ஸிடென்ட் நடந்தது? அதுல உன் கண்ணுக்குப் பாதிப்பு ஏற்பட்டதால தான இந்தக் கண்ணு உனக்கு கிடைத்தது? ம்…. சொல்லு” என்று அவன் மீண்டும் மீண்டும் அவளைக் கேட்க

இம்முறை மட்டும் சற்று சிரமப் பட்டு வாயைத் திறந்தவள் “இல்ல… எனக்கு அப்படி எந்த ஆக்ஸிடென்ட்டும் நடக்கல என்று திக்கித் திணறி அவள் சொல்ல

“ச்சூ…. ஆக்ஸிடென்ட் எல்லாம் உனக்குத் தெரிந்து தான் நடக்குமா? உனக்கு தெரியாம கூட நடந்திருக்கலாம் இல்ல? அதில உனக்கு அம்னீஷியா வந்து நீ பழசை எல்லாம் மறந்து கொஞ்ச நாள் சுத்தி இருக்கலாம் இல்ல? இல்லனா சுயநினைவையே இழந்து நீ படுத்த படுக்கையா கூட இருந்தப்ப உனக்கே தெரியாம இந்த விழியை உனக்கு வச்சிருக்கலாம் இல்ல? இதை எல்லாம் நீ சரியான பிறகு உன் வீட்டுல இருக்கறவங்க உன் கிட்ட சொல்லி இருப்பாங்க தான? அப்போ அதை எல்லாம் கொஞ்சம் ஞாபகப்படுத்திப் பார்த்து இப்போ சொல்லு” என்று ஏதோ யாருக்கோ நடந்தது போல் அவன் கதை கதையாகச் சொல்லிக் கேள்வி கேட்க

‘அடப்பாவி! இப்போ இவர் சொல்றதப் பார்த்தா உண்மையாவே எனக்கே தெரியாம என் வாழ்க்கையில் இது போல ஏதாவது நடந்து இருக்குமோனு எனக்கே டவுட் வருதே!’ என்று அந்த நிலையிலும் யோசித்தவள் இல்ல… அப்படி எதுவும் நிஜமாவே நடக்கல என்று சொல்ல வந்தவள் அவள் இல்லை என்று ஆராம்பிக்கும் போதே இடை வெட்டியவன்

“என்னது, இல்லையா? அப்ப குடும்பமே சேர்ந்து என்ன ஏமாத்தணும்னு முடிவு பண்ணி இன்னும் என்னென்ன எல்லாம் மறைக்கப் பார்க்கிறிங்க? எல்லாம் எதுக்கு? என் பணத்துக்குத் தானே உன்னை என் பின்னால சுத்த விட்டு இருக்கு உன் குடும்பம்? இப்போ தெரிஞ்சிக்கோ நீ எப்படி சுத்தினாலும் என் கிட்டயிருந்து ஒரு பைசா கூட நீ வாங்க முடியாது!” என்று ஏளனத்துடன் அவன் அவளை மிரட்ட, அவன் இவ்வளவு தூரம் பேசும் வரை அமைதியாக இருந்தவளோ ‘என்ன நான் குட்ட குட்ட என்னமோ ரொம்ப தான் என்ன கொட்டுறாரு இவரு! என்று சினந்தவள் இரு இதோ வரேன்’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவள்

“ஆமா, இது என் கண்ணு கிடையாது தான்! இப்போ அதுக்கு என்னன்றிங்க? அதே மாதிரி நீங்க எப்படிக் கேட்டாலும் நான் இது யாருடைய கண்ணுனு சொல்ல மாட்டேன் தான். அதிலேயும் நீங்க சொல்ற மாதிரி உங்க சொத்தையெல்லாம் எழுதி வாங்கற வரைக்கும் நான் தெரிய……” அதுவரை தான் சாராவால் பேச முடிந்து.

அதன் பிறகு அவளால் குரலே எழுப்ப முடியாத ஒரு நிலையில் அவள் இருந்தாள். அதுவும் சாதாரணமான நிலையில் இருக்கவில்லை. அவள் அன்பு காதலன் அவளை மேற்கொண்டு பேச முடியாத அளவுக்கு இல்லை இல்லை மேற்கொண்டு அவள் சுவாசிக்கவே முடியாத அளவுக்குத் தன் இரு வலிய கரங்களால் அவள் குரல் வலையை அழுத்திப் பிடித்திருந்தான் அஷ்வத். அவன் ஏதோ ஆத்திரத்தில் அவள் கழுத்தைப் பிடிக்காமல்

“என்ன டி சொன்ன, என் சொத்தா? அது வேணும்னா எடுத்துக்க டி. அது மட்டும் இல்லாமல் இந்த உலகத்தைக் கூட உனக்கு எழுதி வைக்கிறேன் எடுத்துக்க. ஆனா இந்த விழி உனக்கு எப்படி வந்ததுனு மட்டும் சொல்லிடு” என்று அவன் தன் கைகளில் அழுத்தம் கொடுக்க, முதலில் சாதாரணமாக நினைத்தவள் பின் அவன் கையின் அழுத்தத்தில் மூச்சுக் காற்றுக்காகத் திணறியபடி அவள் தலையை இப்படியும் அப்படியுமாக அசைக்கவும், அதையும் அவள் சொல்ல மறுப்பதற்கான அறிகுறியாக நினைத்தவன்

“என்னது, சொல்ல மாட்டியா? அப்போ இனி நீ உயிரோடவே இருக்கக் கூடாது. உன் சாவு என் கையில தான் டி! நீ செத்துப் போ…” என்றவன் தன் வலியக் கரங்களை இன்னும் அவள் தொண்டை மேட்டில் வைத்து அழுத்தினான். 

கண்ணில் கண்ணீர் முட்ட தரையில் துள்ளி விழுந்த மீனைப் போல் மூச்சுக் காற்றுக்காகத் தன் உதட்டைத் திறந்து திறந்து மூடியவள் அனிச்சை செயலாகத் தன் கையால் அவன் கையை அவள் விலக்க முயல, அவனோ இரும்பென தன் பிடியில் இருந்தான். யாருக்காக இந்த உயிரை சுமந்து கொண்டு இருந்தாளோ யாருடன் வாழ ஆசைப் பட்டாளோ அந்த உயிர் காதலனின் கையாலேயே இன்று தன் உயிர் போகப் போவதைப் பார்த்தவள்

‘அப்போ இன்றுடன் என் வாழ்வு முடிந்து விட்டதா? இவரிடம் எந்த ரகசியத்தையும் சொல்லாமலே நான் சாகப் போகிறேனா? பிறகு நான் எடுத்துக் கொண்ட லட்சியமும் தாத்தாவுக்குக் கொடுத்த வாக்கும் என்ன ஆவது?’ என்று பலவற்றையும் அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவள் கருவிழிகள் இரண்டும் அசையாமல் அவன் முகத்திலேயே நிலைத்திருக்க கடைசியாக அவன் முகத்தைத் தன் கண்களில் நிரப்பிக் கொண்ட படியே அவள் கண்கள் சொருக உயிர் விடும் நேரத்தில் அவள் தன் கால்களையும் கைகளையும் அடித்துக் கொண்ட நேரம் காரிலிருந்த மியூசிக் பிளேயரைத் தெரியாமல் அவள் கைகளோ ஆன் செய்து விட

“நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்…”

என்று பாம்பே ஜெயஶ்ரீயின் குரலில் ஒலித்த பாரதியார் பாடலில் தெளிந்து தன்னிலை உணர்ந்து தான் செய்து கொண்டிருக்கும் காரியத்தை அறிந்தவனோ சட்டென தீ சுட்டாற் போல் அவள் கழுத்திலிருந்து தன் கைகளை விளக்கியவனோ ஒரு வேக மூச்சுடன் தன் கோபத்தை சமன் செய்தவனோ அவள் படும் கஷ்டத்தைச் சட்டை செய்யாமல் ஏன் அவளைத் திரும்பியும் பார்க்காமல் உடனே காரை எடுத்தவன் அவள் வீட்டின் முன் காரை நிறுத்தித் தன் மொபைலிலிருந்து மாயாவை அழைத்தான்.

ஆனால் சாராவோ அசையக் கூட முடியாமல் சீட்டில் சரிந்திருந்தாள். மாயா வந்ததும் வேறுவழியின்றி தானே அவளைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று சாராவுக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் அவளைப் பார்த்துக் கொள்ள சொன்னவனோ மேற்கொண்டு ஒரு நொடி கூட தாமதிக்காமல் உடனே கிளம்பியே விட்டான் அவன்.

சாராவிடம் என்ன ஏது என்று கேட்பதற்குள் அஷ்வத்தின் பர்ஸனல் டாக்டர் மாயாவைத் தொடர்பு கொண்டு பேசியவர் அதன் பிறகு அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சாராவுக்கு வேண்டியதைச் செய்தவர் அவளைப் ஃபுல் ரெஸ்ட் எடுக்கும் படி கூறிவிட்டுச் சென்று விட, சாராவின் கழுத்தில் உள்ள காயத்தைப் பார்த்த பிறகு மாயா அவளிடம் எதுவும் கேட்காமல் தனிமை கொடுத்து விலகி விட

‘எவ்வளவு எதிர்பார்ப்புடன் இன்றைய நாள் விடிந்தது? அவரைப் பார்த்த பிறகும் எப்படி எல்லாம் இனிமையாக கழிந்தது. பிறகு கடைசியா ஏன் இப்படி ஆச்சி? இப்படி இவர் எனக்கு மரண பயத்தைக் காட்டவா நான் இவரைத் தேடி வந்தேன்?’ என்று எல்லாம் யோசித்து யோசித்துக் கண்ணீர் விட்டதில் சாராவுக்கு ஜுரமே வந்து விட. அதை விட எதையும் சாப்பிடவோ பேசவோ முடியாமல் பாடாய் பட்டுக்கொண்டிருந்தாள் அவள் .

அவளை விடவும் அஷ்வத்தோ அந்த விழிகளுக்கு மரண பயத்தைக் கொடுத்தோமே என்று நினைத்து நினைத்து அவன் அங்கு பாடாய் பட்டுப் போனான். அவளின் உடல் நிலையை நிமிடத்திற்கு ஒரு முறை அறிந்து கொண்டவனோ மறந்தும் அவளைப் போய் பார்க்கவோ பேசவோ முயற்சிக்கவில்லை. ஆனால் அவள் உடல்நிலை சரியான மறுநாளே இந்தியாவுக்குச் செல்ல இரண்டு பிளைட் டிக்கட்டைப் புக் செய்து அதில் ஒன்றை அவளுக்கு அனுப்பியவன் அன்று மாலையே கிளம்பி இருக்கும் படி ஒரு மெசேஜ்ஜையும் அவளுக்கு அனுப்பி வைத்தான்.

அவன் சொன்ன நேரத்திற்கே கிளம்பி ஏர்போர்ட் வந்தவள் அவனிடம் எதுவும் பேசாமல் ஒதுங்கியே இருக்க அவனோ அவள் கழுத்தையும் முகத்தையும் ஆராய்ந்தவிட்டு ப் பிறகு ஒன்றும் பேசாமலே ஒதுங்கிக் கொண்டான்.

இந்தியாவில் சென்னை வந்தவர்கள் அங்கிருந்து திருச்சி விமான நிலையம் வந்து சேர்ந்தவர்கள் பின் ஹோட்டலில் ரூம் புக் செய்தவன்

“உனக்கு ரொம்ப டயர்டா இருந்தா ரெஸ்ட் எடுத்துட்டு மதியம் லன்ச் சாப்டுட்டே கிளம்பலாம் சாரா. அப்படி இல்ல உனக்கு ஓகே னா ஒன் ஹவர் டைம் எடுத்துட்டு பிரஷ் ஆகிக்க. நாம போகுற வழியிலேயே சாப்டுக்கலாம் .உங்க வீட்டுக்குத் தான் போறோம். எப்படிப் போகணும்னு வழி சொன்னீனா வண்டி புக் பண்ணிடுவேன்” என்று அவன் சொல்ல

ம்ம்ம்… என்றவள் தனக்கான ரூம் சாவியைக் கேட்க அவள் இப்படி ஒதுங்கி இருப்பது பிடிக்காமல் அவளை மாற்றும் முயற்சியாக நினைத்து அவனோ

“உனக்குத் தனியா எல்லாம் ரூம் இல்ல. இருவருக்கும் சேர்த்து ஒரே ரூம் தான் புக் பண்ணி இருக்கேன்” என்று அவன் அவளைச் சீண்ட, அந்தச் சீண்டலில் கலந்து கொள்ளாமல் அவள் அவனைப் பார்த்து முறைத்த முறைப்பில் அடுத்த நொடியே அவள் கையில் அவள் ரூமுக்கான சாவி இருந்தது.

தன் ரூமுக்கு வந்ததும் தன்னிடமிருந்த போனின் மூலம் தன் வீட்டிற்கு அழைத்தவள் தாங்கள் இந்தியா வந்து விட்டதாகக் கூறி ஒரு சில வார்த்தைகளைப் பேச அந்தப் பக்கத்திலிருந்து என்ன பதில் வந்ததோ அதற்குப் பதிலாக அவர்களுக்கு சரி என்றவள் உடனே அவனை நாடிச் சென்று ஒரு மணிநேரத்தில் கிளம்பி விடுவதாகக் கூறியவள்

சொன்ன மாதிரியே அவள் கிளம்பி வர ஏதோ சுடிதாரில் வருவாள் என்று அவன் எதிர்பார்த்திருக்க அவளோ அழகான பிஸ்தா கலர் காட்டன் புடவையும் அதற்கேற்ற நகைகளுடன் வந்தவள் வழியிலேயே காரை நிறுத்தச் சொல்லி பூவும் கண்ணாடி வளையளும் வாங்கிக் கொண்டவள் வீட்டிலேயே உணவுக்குச் சொல்லி விட்டதால் வெளியில் எதுவும் சாப்பாடு வேண்டாம் என்று மறுத்துவிட அவனும் அவளை மேற்கொண்டு வற்புறுத்தாமல் விட்டவன் ஆனால் அடிக்கடி அவளைக் கண்களால் விழுங்குவதை மட்டும் நிறுத்தவில்லை.

அவள் வீடோ தஞ்சாவூரில் வசந்தக் கோட்டை என்னும் ஊரில் இருக்க நல்ல செழுமையான வளமான வயல் வெளிகளை எல்லாம் தாண்டி கார் ஒரு மச்சு வீட்டின் முன் நிற்க அவனை இறங்கச் சொன்னவள் தானும் இறங்கி அங்கு வெளி வாசலிலேயே நின்றிருந்த கட்டுமஸ்தான உடல் வாகுடன் கம்பீரமாய் இருந்த வயதான பெரியவரின் காலில் விழுந்து “என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க தாத்தா” என்று சாரா கூற அவள் விழ அஷ்வத் என்ன நினைத்தானோ திடீர் என்று அவளைப் பின்பற்றி அவனும் அவர் காலில் விழ சாரா எழுவதற்குள் விழுந்ததால் இருவரும் சேர்ந்தே ஆசிர்வாதம் வாங்க அதில் கண்கலங்கிய அந்த பெரியவர் “ரெண்டு பேரும் மனம் ஒத்து சந்தோஷமா அமோகமான வாழ்வு வாழணும்” என்று அவர் வாழ்த்தும் போதே அவர் நா தழுதழுத்து விட அதை உணர்ந்த சாராவோ அவர் கையை ஆறுதலாய் பற்ற அதில் அவர் தெளிந்ததும்

“இவர் தான் என் தாத்தா. மிலிட்டரில கர்னலா இருந்ததால இவரை கர்னல் சக்கரவர்த்தினு கூப்பிடுவாங்க” என்று அவள் அவரை அஷ்வத்துக்கு அறிமுகப் படுத்தியவள் “தாத்தா இவரு..” என்று அவள் ஆரம்பிக்கும் போதே “கமான் மை டியர் யங் பாய்” என்றவர் அறிமுகத்திற்காக அவன் நீட்டிய கையை இறுக்கப் பற்றி குலுக்கியவரோ ஒரு வேகத்துடன் அவனை இழுத்து ஆரத்தழுவவும், அதில் அவன் மூச்சுச் திணறிய நேரத்தில் “என்ன யா உடம்பு வச்சிருக்க? ஏதோ மைதா மாவைப் பிசைந்த மாதிரி. பாரு இப்பவே என் உடம்பு சும்மா கின்னுனு கர்லா கட்ட மாதிரி இருக்கு. அப்போ உன் வயசுக்கு எல்லாம் பார்க்க நான் எப்படி இருந்து இருப்பேன் தெரியுமா? சும்மா அய்யனார் கணக்கா இல்ல இருப்பேன்?” என்று தினமும் ஜிம் போய் உடலைக் கட்டுகோப்பாய் வச்சிருக்கும் அவனை அவர் வார

“போதுமே! ஆரம்பிச்சிட்டிங்களா உங்க வேலைய? அவரே இன்னைக்குத் தான் உங்களைப் பார்க்கிறார். பிறகு நீங்க எப்படி இருந்திங்கனு அவருக்கு எப்படித் தெரியும்? பாட்டி இல்லை என்றதால சும்மா கதை அளக்க வேண்டாம். அதுக்கும் மேல நீங்க சொன்ன அய்யனார் எப்படி இருப்பார்னு கூட அவருக்குத் தெரியாது” என்று சாரா தாத்தாவை வார

“ஏன் தெரியாது? கத்தையா மீசை வச்சி நல்ல ஜிம் பாடியா கையில அருவாளோட இந்த ஊர் எல்லையில் ஒரு கால மடக்கி பெரிய பெரிய கண்ணோட உட்கார்ந்து இருக்குமே ஒரு பொம்மை! அது தானே அய்யனார்?” என்று இதுவரை அவர்கள் பேச்சில் கலந்து கொள்ளாமல் இருந்தவன் இப்போது சாராவை வார, அவன் சொன்ன பதிலில் அவள் வாய் பிளந்து நிற்க.

“ஹா… ஹா… என்று சிரித்தவர் செர்டன்லி கரெக்ட் மை டியர் யங் பாய்” என்று அவன் தோள் தட்டிப் பெருமைப் பட்டவர் “பார்த்தியா என் பேரனை?” என்று அவர் சாராவிடம் கேட்க, வாய் கொள்ளா சிரிப்புடன் “அதான் பார்க்குறேனே” என்று தலை ஆட்டியவள் “கொஞ்ச நேரம் இருவரும் இங்கேயே இருங்க” என்று சொல்லி உள்ளே சென்றவள் திரும்பி வரும்போது அவள் கையில் ஆரத்தி தட்டு இருக்க அவனுக்கு ஆலம் சுற்றிய பிறகே அவனை உள்ளே போக விட்டாள் சாரா.

உள்ளே வந்தால் அவனுக்கு என்று விருந்தில் எல்லா வகை அசைவ உணவும் இருக்க “வா சின்னா சாப்பிடலாம்” என்றவர் அவனுக்கு இலை வைத்துப் பரிமாறவும், தாத்தா பெயரை மாற்றிச் சொன்னதால்

“என் பெயர் அஷ்வத்!” என்று அவன் சொல்ல, உடனே சாரா

“எங்க ஊர் வழக்கப் படி பேத்திய கல்யாணம் பண்ணிக்கப் போறவங்கள எல்லாம் சின்னானு தான் பெயர் சொல்லி கூப்பிடுவாங்க” என்று அவள் சொல்ல

ஓ… என்றவன் உங்கள் விருப்பம் என்பது போல் அமைதியாகி விட 

“நீங்களும் உட் காருங்க தாத்தா. உங்க ரெண்டு பேருக்கும் நான் பரிமாறுறேன்” சாரா அவரைத் தடுக்க

“இல்ல பொம்மி, சின்னாவுக்கு நானே பரிமாறேன்” என்று சொன்னவர் சொன்னது போல் அவரே பரிமாற, அவர் செயலைப் பார்த்த அஷ்வத்துக்குத் தான் சற்று வியப்பாய் போனது. ‘முதன் முதலாய் பார்க்கும் ஒருத்தன் கிட்ட அதுவும் தன் பேத்தி ஜாதி மதம்னு பார்க்காம வேற்று நாட்டான் ஒருத்தனை விரும்பறனு சொல்லி வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தா இவர் என்ன இப்படி எல்லாம் உபசரிக்கிறார்? ஒருவேளை இது தான் தமிழர் பண்பாடோ?!’ என்று அவன் யோசிக்க

“நீயும் உட்கார்ந்து சாப்பிடு பொம்மி” என்று தாத்தா சாராவிடம் சொல்ல அதில் கலைந்தவனோ

“அது என்ன பொம்மி?” என்று அவன் கேட்க

“எனக்கு சாரானு கூப்பிட பிடிக்கல. அதான் என் அம்மா பெயரான பொம்மாயிய என் பேத்திக்கு வைத்து பொம்மினு கூப்பிடுறேன்” என்று தாத்தா விளக்கம் கொடுக்க

“ஓ…” என்றவன் “வா பொம்மி நீயும் உட்கார்ந்து சாப்பிடு” என்று அஷ்வத் அவளையும் சாப்பிடக் கூப்பிட

‘என் வீட்டுல உட்கார்ந்துகிட்டு என்னையே சாப்பிடச் சொல்றாரா இவரு? அதுவும் என் தாத்தா கூப்பிடற பெயரை வச்சி!’ என்று மனதுக்குள் குமைந்தவள்

“இல்ல வேணாம்… நான் அப்பறம் சாப்பிடுறேன்” என்று சொல்ல, தாத்தாவும் அஷ்வத்தும் ஒரு சேர மறுபடியும் அவளைச் சாப்பிடச் சொல்ல வேறு வழியில்லாமல் தட்டில் சாதம் வைத்து ரசம் ஊற்றிச் சாப்பிட ஆரம்பித்தாள் சாரா.

“என்ன இதை மட்டும் சாப்பிடற?” என்ற கேள்வியுடன் அஷ்வத் அவளைப் பார்க்க, அவள் தாத்தாவோ

“இன்னைக்கு நீ கவிச்சி சாப்பிட மாட்ட இல்ல பொம்மி? நான் தான் உனக்கு வேற சமைக்கச் சொல்ல மறந்துட்டேன். வடிவாச்சி இருந்தா தெரிஞ்சிருக்கும். அது இன்னைக்கு வேலைக்கு வரலனு மூர்த்திதான் சமைச்சான். நானும் வேற சொல்லலையா..” என்று அவர் குற்ற உணர்வில் பேசிக் கொண்டே போக

“விடுங்க தாத்தா. இப்போ என்ன, அதான் ரசம் இருக்கில்ல?” என்றவள் சாப்பிட

“சாயந்திரம் காட்டுப் பக்கம் போனீனா உன் கூட சின்னாவையும் கூட்டிப் போமா” என்று அவர் சொல்ல

“சரி தாத்தா” என்றவள் சாப்பிட்டு முடித்து விட “நீங்க நிதானமா சாப்பிட்டு மெல்ல வாங்க. நான் கொஞ்சம் எனக்கான வேலையைப் பார்க்கிறேன்” என்று அஷ்வத்திடம் சொன்னவள் எழுந்து சென்று விட, அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அவனுக்குப் பரிமாறியவர் பின் அவனை அழைத்துச் சென்று மேலே உள்ள அவன் அறையைக் காட்ட, அதுவோ ஒரு இளவரசர்கள் தங்குவது போல் சகல வசதியுடன் இருந்தது. பாத்ரூமில் உள்ள பாத் டப் முதல் கொண்டு அனைத்து இடத்திலும் ரசனையும் கலைநயமுமாய் இருக்கவும், அதைப் பார்த்தவன்

“இதை எல்லாம் எப்போ யாருக்காக செய்தது தாத்தா?” என்று கேட்க

“இதெல்லாம் எப்பவோ வந்து போற விருந்தாளிகளுக்காக செய்தது சின்னா. எல்லாமே மேல் நாட்டுப் பாணியில இருக்கும். அதனால தான் உன்னை இங்கு தங்கச் சொல்றேன். உனக்கு வேறு மாற்றனும்னாலும் சொல்லு நான் மாற்றிடுறேன். இப்போ ஏதாவது வேணும்னாலும் எதிர் அறையில இருக்குற என்னையோ இல்ல கீழ இருக்கிற பொம்மியோட அறைக்கோ வந்து கேளு” என்றவர் நெகிழ்ச்சியுடன் அவன் தலையை வருடி “ரெஸ்ட் எடுப்பா” என்று கூறி அவனுக்கு ஏசியைப் போட்டு விட்டு விலகி விட, அவரின் பாசத்தில் தலை சுற்றி நின்றவனோ

‘என்னைப் பார்த்தா இவர் ஏன் இவ்வளவு எமோஷ்னல் ஆகறாரு? நாமளும் ஏன் அவரைப் பார்த்தவுடனே சாராவைப் பின் பற்றி கால்ல விழுந்தோம்? நான் இங்கு எதுக்காக வந்தேன் அதை மறந்து எதுக்கு இவர் கிட்ட இவ்வளவு தன்மையா நடந்துக்கிறேன்?!’ என்று பலவாறு யோசித்தவன் உடல் அசதியில் தன்னை மீறி தூங்கியே விட, திரும்ப சாரா வந்து மாலை அவனை எழுப்பும் போது தான் எழுந்தான் அவன். உடனே அவள் கிளம்பச் சொல்ல என்ன ஏது என்று கேட்காமல் அவனும் கிளம்பினான்.

வண்டி வேண்டாம் என்று சொல்லிக் குறுக்கு வழிப் பாதைகளில் அவனை நடத்தியே கூட்டிச் சென்றவள் சற்று ஒதுக்குப் புறமாக இருந்த ஒரு இடத்தில் ஒரு சாமாதி கட்டப்பட்டு இருக்க அங்கு அவனை அழைத்துச் சென்றவள் ஏற்கனவே சுத்தமாக இருந்த சாமாதியின் மேல் பகுதியை இவள் கையால் மறுபடியும் துணி கொண்டு சுத்தம் செய்து தான் கொண்டு வந்திருந்த பூவை மாலையாகப் போட்டு அவனையும் போடச் சொன்னவள். அதே மாதிரி அங்கு எரிந்து கொண்டிருந்த அணையா விளக்கில் எண்ணை ஊற்றியவள் அதன்படியே அவனையும் செய்யச் சொல்ல எதற்கும் தட்டாமல் உடனே செய்தவன் அவள் வணங்கி எழுந்ததும் ஓர் இடம் பார்த்து தரையில் அவள் அமர, அவள் எதிரில் அமர்ந்தவனோ

“யாருடைய சமாதி சாரா இது? உன் பாட்டிதா?” என்று கேட்க ஒரு வினாடி அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்தவளோ மறுவிநாடியே

“ஆமாம்” என்று சொல்லி விட

“ஓ…. அப்ப உன் அப்பா அம்மா எங்க?”

“நான் பிறந்தப்பவே இறந்துட்டாங்க”

“அப்ப உன் தாத்தா தான் உன்ன வளர்த்தாரா?”

“ம்ம்ம்… ஆமா”

“அவருக்கு உன் மேல ரொம்ப பாசமோ?”

சட்டென நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள் “ஏன் அப்படி கேட்குறிங்க?” என்று கேட்க

“இல்ல.. நேற்று நாம இந்தியா போகப் போறோம் என்றதை பற்றியே நான் உன் கிட்ட சொல்லலை. நீ என்னைக்கோ சொன்னதை வைத்து திடீர்னு தான் பிளைட் புக் பண்ணினேன். அப்படி இருக்கும் போது நீ உன் தாத்தா கிட்ட நாம வர்றத பற்றி எதுவும் சொல்லி இருக்க முடியாது. ஆனா நீ என்ன கூட்டிட்டு வந்தப்ப தாத்தா உன் கிட்ட சண்டை சச்சரவே பண்ணல. ஏன்? உங்க ஊர்ல எல்லாம் வேற்று ஜாதி மதம் இனத்துலயிருந்து கல்யாணம் பண்ணினா கத்தி கடப்பாரையோட இல்ல எதிர்ப்பிங்க? அப்படி கல்யாணம் பண்ணவங்களையும் சேர்த்து இல்ல எதிர்ப்பிங்க? இங்க நாம இன்னும் கல்யாணமே பண்ணல தான். ஆனா அவரு இவ்வளவு அமைதியா இருக்கார்னா அது உன் மேல இருக்குற பாசம் தானே?” என்று அவன் கேட்க,

அவனுக்குப் பதிலாக தன் கண்ணோடு அவன் கண்களை உறவாட விட்டவளோ “என்னை பிடிக்கும் தான். ஆனா என்னைய விட….” என்றவள் சற்று நிறுத்தி நிதனாமாக “முதல் பார்வையிலேயே அவருக்கு உங்களை தான் ரொம்பப் பிடிச்சிருக்கு” என்று அழுத்திச் சொல்ல.

“ம்ம்ம்…. எனக்கும் அவரைப் பார்த்தா உள்ளுக்குள் ஏதோ பண்ணுது தான்” என்று அவனும் யோசனையில் இழுக்கவும்

“என்ன? என்ன? அப்படி என்ன பண்ணுது?” என்று இவள் ஆர்வத்துடன் கேட்கும் போதே அவன் போனில் அழைப்பு வர அதை அவன் எடுத்துக் கொண்டு சற்று தூர சென்று விட, அவள் கேட்க வந்தது எதுவுமே கேட்க முடியாமல் போய் விட்டது. பேசி விட்டு வந்தவனோ “ஆமா, தாத்தா இப்போ எங்க இருக்கார்?” என்று அவன் கேட்க

“அவரு ஏதோ கோவில் நில விஷயமா கோவில் வரைக்கும் போய் இருக்கார். ஏன் என்ன விஷயம்?”

“இப்போ நான் அவரைப் பார்க்கணும். என்ன கூட்டிட்டுப் போறியா?” என்று அவன் அவசரப் பட

“நானா? நான் அங்க வரல. இப்போ ஏன் இவ்வளவு அவசரம்? ராத்திரிக்குள்ள தாத்தா வீட்டுக்கே வந்துடுவாரே?”

“இல்ல.. நான் இப்பவே பார்க்கணும்” என்று அவன் பிடிவாதம் பிடிக்கவும்

“சரி சரி.. கொஞ்ச தூரம் போன உடனே நம்ம காட்டு வீடு வந்திடும். அங்க யார்னா வேலை செய்றவங்களைக் கூட்டிப் போகச் சொல்கிறேன்” என்றவள் அதே அவசரத்துடன் கிளம்பிச் சென்று அங்கிருந்தவர்களுடன் அவனை அனுப்பி வைத்தாள் சாரா.

இரவு உணவை முடித்துக் கொண்டு அவரவர் தங்கள் அறைக்குச் சென்று விடத் தன் அறைக்குச் சென்ற அஷ்வத்தோ சிறிது நேரத்திற்கு எல்லாம் சாராவைத் தேடி அவள் அறைக்குச் சென்றான். அவள் அறையோ பத்தடிக்குப் பத்தடி என்று சின்னதாக இருந்தது. ஒருபக்க மூலையில் குடிக்க மண்பானை தண்ணீர் குடமும் அதை ஒட்டினாற் போல் டேபிள் சேர் இருக்க அதன் பக்கத்தில் ஒரு சின்ன பீரோ. அதை ஒட்டி பாத்ரூம் கதவு. இன்னோர் பக்க சுவரிலிருந்த ஷெல்ப் முழுக்கப் புத்தகங்கள். ஒருவர் மட்டுமே படுக்கக் கூடிய சின்னக் கட்டில். ஏசி, தேவைக்குப் பயன்படுத்த ஒரு பேன், லைட். இதை எல்லாம் பார்த்தவனோ தன் அறையை ஒப்பிட்டுப் பார்த்து 

‘இவள் ஏன் இப்படி ஒரு அறையில் இருக்கிறாள்?’ என்று நினைத்தவன் அவள் அங்கில்லாததால் அவள் எங்கிருக்கிறாள் என்பதை அறியும் எண்ணத்தில் முதல் முறையாக அவள் நம்பருக்கு அழைக்க அதுவோ அங்கிருந்த டேபிளில் தான் இருப்பதை

‘உன்ன விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணும் இல்ல..’
என்ற பாட்டோடு இசைத்துக் காட்டியது. அவள் தனக்காக வைத்திருக்கும் பாடலைத் திரும்பக் கேட்க நினைத்தவனோ மறுபடியும் அழைக்க, அது இசைந்து கொண்டிருக்கும் போதே பின்புறத் தோட்டத்துக்குச் செல்லும் கதவைத் திறந்து கொண்டு சாரா உள்ளே நுழைந்தவள்.

எதிர்பாராமல் அவனை அங்கு பார்த்ததில் அதிர்ந்து நின்றவள் அங்கு தன் போனிலிருந்து ஒலித்த பாடலைக் கேட்டு ஒருவித சங்கடத்துடன் ஓடிச் சென்று அதை நிறுத்தியவள் பின்

“சொல்லுங்க என்ன விஷயம்?” என்று அவனிடம் கேட்க

“நான் நாளைக்கே ஊருக்குப் போறேன் சாரா”

“என்னது நாளைக்கா?” என்று வாய் விட்டு அதிர்ந்தவள் ‘இவர் எதற்கு வந்தார்? இப்போ உடனே எதுக்குப் போறனு சொல்றார்?’ என்று அவள் யோசிக்க

“நான் மட்டும் போகிறேன் நீ இங்கேயே இரு. உனக்கு தான் லீவு இருக்கில்ல? அதுவரை இருந்துட்டு சரியா லீவு முடியறப்போ வா”

“இல்ல வேணா… நா நாளைக்கு உங்க கூடவே வந்திடுறேன்”

“வர வேணாம். ரொம்ப நாள் கழித்து தாத்தாவைப் பார்க்கிற. அவரும் உன் மேல ரொம்ப பாசமா இருக்கார். அதுவும் இல்லாமல் வீட்டுல யாருமே அவருக்குத் துணையா இல்ல. இப்போ நீயும் கிளம்பிட்டா அவர் மனசு கஷ்டப்படாதா?”

“அப்ப நீங்க போகறது மட்டும் அவர் மனசுக்குக் கஷ்டத்தைக் கொடுக்காதா?”

“நான் யாரோ தானே? அதனால நான் போனா அவருக்குக் கஷ்டம் இருக்காது. ஆனா நீ பேத்தி! நீ போனா இருக்கும். யாரும் இல்லாத அவருக்குப் பேத்தி நீ தானே துணையா இருக்கணும்?” என்றவனிடம் ஏதோ சொல்ல வந்தவளோ பின் வேண்டாம் என்ற முடிவுடன் அமைதி காக்க

“சரி உடம்ப பார்த்துக்கோ. லீவ் முடிஞ்ச உடனே சீக்கிரம் வந்திடு. டேக் கேர்” என்றவனோ ஒரு வித எதிர்பார்ப்புடன் அவளிடம் நெருங்க, பெண்ணவளுக்கும் ஆசை தான் அவன் தோள் சாய்ந்து ஓர் இறுகிய அணைப்பைப் பெற வேண்டும் என்று. ஆனால் அதன் பிறகு அவன் வலியையும் வேதனையையும் இல்ல தருவான் என்ற எண்ணத்தில் கண்களில் பயம் சூழ அவள் அவனைப் பார்க்கவும், அந்த விழிகளில் பயத்தைப் பார்த்தவனோ ஒரு வினாடி கூட தாமதிக்காமல் அவளை விட்டு விலகிச் சென்றான் அஷ்வத்.

எப்போது அவள் அவனால் மரணத்தைத் தொட்டு வந்தாளோ அதற்கு முன்பு வரை அவனிடம் காதலை யாசித்தவள் அதன் பிறகு அவனிடமிருந்து மன்னிச்சிடு என்ற ஒற்றை வார்த்தையைத் தான் எதிர்பார்க்கிறாள். அன்றைய சம்பவத்திற்கு விளக்கம் கூட அவளுக்கு வேண்டாம். ஒரு கோபத்திலோ ஏதோ ஒரு வேகத்திலோ மனிதர்கள் இப்படி நடந்து கொள்வது இயல்பு. அதன் பிறகு அந்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பார்கள். ஆனால் அஷ்வத்தோ அவளிடம் இயல்பாக பேசுகிறான். முன்பை விட அக்கறையாக இருக்கிறான். முன்பை விட இப்போது எல்லாம் அவன் பார்வையும் அதிகமாகவே அவள் மேல் படிந்து மீள்கிறது. இப்படி எல்லாம் நடந்து கொள்கிறான் தான். ஆனால் மன்னிப்பு மட்டும் அவன் வாயிலிருந்து வரவில்லை. தவறு என்று உணர்ந்தாலும் அதை அவன் சொல்ல ஈகோ பார்க்கிறான் என்பது சாராவின் எண்ணம்.

பாவம் பெண்ணவளுக்குத் தெரியவில்லை ஒருவர் தான் செய்ததைத் தவறு என்று அறிந்து அதை உணர்ந்தால் தான் மன்னிப்பு கேட்பார்கள் என்று. உண்மை தானே இந்த வினாடி வரை அஷ்வத் தான் செய்ததைத் தவறு என்று உணரவேயில்லையே! பிறகு எப்படி கேட்பான்? இதை எல்லாம் விட அவன் செய்ததைச் சரி என்றே உணர்கிறான். இது எங்கே பெண்ணவளுக்குத் தெரியப்போகிறது?

அவன் மன்னிப்புக் கேட்காததனால் அவன் பேச்சும் காட்டும் அக்கறை என்று எல்லாம் போலி வேஷம் என்று தான் தெரிகிறது அவளுக்கு. இப்படியே இருவரும் இரு துருவமாய் இருக்க, இவர்கள் இருவரின் போராட்டத்திற்கு முடிவு மறுநாள் காலையே வந்தது.

மறுநாள் காலை உணவுக்காக அமர்ந்தவன் “தாத்தா! நான் ஊருக்குப் போறேன். அடுத்த முறை வரும்போது கல்யாணத்த சீக்கிரம் வச்சிக்கலாம். உங்க பக்கத்துலயிருந்து யாரை எல்லாம் கூப்பிடனுமோ அவங்கள்ள முக்கியமானவங்கள மட்டும் கூப்பிடுங்க. என் பக்கத்துலயிருந்து யாரும் வர மாட்டாங்க. என் அப்பா தமிழர் தான். ஊரும் தமிழ் நாடுனு தெரியும். பட் எந்த ஊருனு தெரியாது. இப்போ அவரு உயிரோடவும் இல்ல. என் அம்மா…” என்றவனோ ஒரு வினாடி நிறுத்திப் பின் தொண்டையைச் சரி செய்தவன் “அவங்க அமெரிக்கன் இன்னும் இருக்காங்க. ஆனா வேறொரு லைப்ல செட்டில் ஆகி கணவன் குழந்தைகள்னு தனியா இருக்காங்க. சோ அவங்க என் கல்யாணத்துக்கு வர மாட்டாங்க. அதனால நீங்க எல்லா ஏற்பாடும் செய்துடுங்க. கல்யாணம் முடிஞ்ச உடனே நான் சாராவ கையோட கூட்டிட்டுப் போய்டுவேன். அப்பறம் இன்னொன்னு, நீங்க எப்படி எடுத்துப்பிங்கனு தெரியல. நிச்சயம் தப்பா எடுத்துக்காதிங்க.

உங்களுக்கு சாரா மட்டும் தான். அவ என் கூட வந்த பிறகு நீங்க ஏன் இங்க தனியா இருக்கணும்? நீங்களும் எங்க கூடவே வந்திடுங்க” என்று முதலில் சரளமாக ஆரம்பித்தவன் பின் கொஞ்சம் யோசனையுடனே முடித்தான் அஷ்வத்.

இதை எல்லாம் கேட்ட சாரா ‘ஐயோ! இவர் ஏன் இப்பவே இதை எல்லாம் சொல்றார்?’ என்று நினைக்க

“என்னது உன் கூட வரணுமா? என்னை என்ன பத்தோட பதினொன்னா இந்த நாட்டுல வாழுறவன்னு நினைச்சியா? இந்த நாட்டோட மகன் டா! என் தாய் மண்ணுக்காவும் அவள் பிள்ளைகளான என் சகோதர சகோதிரிகளுக்காகவும் என் உயிரையும் துச்சமா மதித்து பல குண்டடிகளை இராணுவத்தில் இருக்கும் போது பட்டவன் டா. இராணுவத்தில இருந்து வந்த பிறகும் நான் இங்க சும்மா உட்கார்ந்து இருக்கனு நினைச்சியா? நமக்கு எல்லாம் உயிர் நாடியான சோறு போடுற விவசாயத்த வளர்த்துட்டு வரன் டா. போய் பாரு தமிழ்நாட்டில் தண்ணி இல்லாம எத்தனை இடம் காய்ந்து இருக்குனு. ஆனா இன்னைக்கு என் ஊர நான் எவ்வளவு பசுமையா வச்சிருக்கேன் தெரியுமா? அதுக்கு நானும் என் ஊர் மக்களும் உழைச்ச உழைப்பு பட்ட கஷ்டம் இழந்த இழப்பு எவ்வளவு தெரியுமா? இதை எல்லாம் விட்டுட்டு நான் உன் கூட வரணுமா? இப்படி தான் முன்னாடி ஒருத்தன் சொன்னான்…” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அறிந்து கொண்ட சாரா சட்டென அவர் கையைப் பிடித்து அழுத்தவும் அதில் மேற்கொண்டு சொல்ல வந்த வார்த்தையை மென்று முழுங்கியவர்

“இப்போ கேட்டுகோ, உன் ஊர் தொழில் வீடுனு எல்லாத்தையும் நீ விட்டுக் கொடுத்துட்டு வந்தா தான் என் பேத்திய உனக்குக் கட்டித் தருவேன். அதுவும் இங்கே வந்து என் கூட சேர்ந்து விவசாயம் தான் பார்க்கணும். இதுக்குச் சம்மதம்னா என் பேத்திய கல்யாணம் பண்ணிக்கோ இல்லனா நீ கிளம்பலாம்” என்று ஏக வசனத்தில் மூச்சிரைக்கப் பேசியவர் உடனே தன் அறைக்குச் செல்லத் திரும்ப, இதுவரை அவர் பேசிய பேச்சில் அமைதி காத்தவனோ 

“ஹலோ மிஸ்டர் சக்கரவர்த்தி! என்னை பார்த்தா உங்களுக்கு எப்படித் தெரியுது? நீங்க இழுத்த இழுப்புக்கு எல்லாம் வர்ற நாய் குட்டி, அப்படியே வீட்டோட வாசல்லையே கட்டிப் போட்டுடலாம்னு நினைச்சிங்களோ? என் கிட்ட உங்க பாச்ச பலிக்காது மிஸ்டர். அப்படி எல்லாத்தையும் விட்டுக் கொடுத்துத் தான் நான் உங்க பேத்தியக் கட்டணும்னு எந்த அவசியமும் எனக்கில்ல. அவளை நீங்களே பார்த்துக்கோங்க. குட் பாய் டு ஆல் ஆஃப் யூ” என்ற சொல்லுடன் தன் அறைக்குச் சென்று துணிகளை எடுக்கவும் அவன் பின்னோடே வந்த சாரா

“ஏன் இப்படி எல்லாம் பேசுறிங்க? அவர் வயசுல பெரியவர் தானே? ஏதோ கோபத்துல நாளு வார்த்தை பேசுவார் தான். நீங்க கொஞ்சம் பொறுத்துப் போனா என்ன? நேத்து பேசும் போது கூட இப்படி ஒரு பிளான் வச்சிருக்கறதா நீங்க என் கிட்ட சொல்லலையே?”

“நேத்து நைட் உன்னைப் பார்க்கற வரைக்கும் இல்ல தான். அதற்குப் பிறகு தான் தோன்றியது அதான் உடனே செயல்படுத்த நினைச்சேன்” என்றவன் தன் சூட்கேஸை எடுக்க

“நீங்க பாட்டுக்கு உங்க பேத்திய நீங்களே பார்த்துக்கோங்கனு சொல்றிங்களே, உங்க மனைவிய இப்படித் தான் பாதியிலேயே விட்டுட்டுப் போவீங்களா?”

எடுத்த சூட்கேஸைக் கீழே வைத்தவன் “நமக்கு இன்னும் கல்யாணம் ஆகல சாரா” என்ற பதிலைக் கொடுக்க

“சரி கல்யாணம் ஆகல. ஆனா நாம இரண்டு பேரும் விரும்பறோம் தானே? அப்போ உங்க காதலுக்கு என்ன மதிப்பு இருக்கு?”

எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் அவள் முகத்தைப் பார்த்தவனோ “காதலா? நான் உன்னக் காதலிக்கிறனு எப்போ சொல்லி இருக்கேன்? நல்லா யோசித்துப் பாரு. ஒரு முறை கூட நான் உன் கிட்ட காதலிக்கிறன் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினதே இல்லையே?” என்று அவன் ஆணித்தரமாக சொல்ல, யோசித்ததில் நெஞ்சில் வலியுடன் ஆமாம் என்று அவளுக்குப் பட

“சரி காதலை சொல்லல. கல்யாணம் பண்ணிக்கறனு சொன்னீங்களே இப்போ அதுக்கு என்ன சொல்ல வரிங்க?” என்று கண்களில் வழியத் துடிக்கும் கண்ணீரை அடக்கிக் கொண்டு அவள் கேட்க

“இங்கே பார் நான் உன்னை விரும்பல. கடைசி வரைக்கும் உன்னைய விரும்பவும் மாட்டேன். எனக்குத் தேவையான பொருள் உன்கிட்ட இருக்குது. அதுக்காகத் தான் உன்கிட்ட பழகினேன். மற்ற படி வேற எதுவும் இல்ல. என்னை விட்டுட்டு உன் தாத்தா சொல்றவனை கட்டிக்கோ. பாய்..” என்று எந்த ஒரு சலனமும் இல்லாமல் சொன்னவன் ஒரு வேகத்துடன் அங்கிருந்து சென்றே விட்டான் அஷ்வத்.

பெண்ணவளோ எந்தவொரு சலனமும் இல்லாமல் தரையில் வேர் ஊன்றியவள் போல் நின்றே விட்டாள். தன் வாழ்வில் நடந்ததை எல்லாம் மறந்து யாருக்காக இன்று வரை உயிர் சுமந்து வாழ நினைத்தாளோ யாரைத் தன் உலகமென எண்ணினாளோ எந்தக் காதலை அவனுக்குள் விதைப்பேன் என்று சபதம் கொண்டாளோ அவனோ இன்று காதலே இல்லை அது வரவும் வராது என்று வார்த்தைகளை அமிலமென அவள் மேல் ஊற்றவும் வாழ்வில் தான் தோற்று விட்டதை உணர்ந்தவளோ கண்கள் சொருக நூலருந்த பட்டமென தரையில் மயங்கி விழுந்தாள் சாரா.

Categories
Deepi On-Going Novels

அத்தியாயம் – 16

கல்கி-16

வெள்ளியன்று விடியும் பொழுதே கல்கியின் மனநிலை மகிழ்ச்சியாக இருந்தது. அது எதனால் என்று அவள் சிந்தித்திட விரும்பவில்லை. சற்று விரைவாகவே அலுவலகத்திற்குக் கிளம்பியவள் தன்னுடைய சீட்டிற்கு வந்து அமர்ந்த பின்னர் தான் கிருபாகரன் அனுப்பியிருந்த மெசேஜை பார்த்தாள்.

“பாவ்க்ஸ் ஐ லவ் யூ! நீ இப்ப சிரிச்சுட்டு போனது என்ன கிறுக்கனா ஆக்குது… இந்த சிரிப்பை எப்பவும் உன்னோட முகத்தில பாக்கணும்னு ஆசைப்படுறேன்… அத உன் கூடவே இருந்து பாக்கணும்னு தான் நான் விரும்புறேன்… சீக்கிரமா என்னோட லவ்வ ஏத்துக்கிட்டு நம்ம வீட்டுக்கு வந்துடு.

எனக்கும் மோனா,எலிசா இவங்க எல்லாம் போர் அடிச்சுட்டாங்க”, என சீரியசாக ஆரம்பித்து விளையாட்டாக முடித்து இருந்தான்.”சொன்னாலும், சொல்லலைன்னாலும் நீ கிறுக்கன் தான்”, என்று வாய்விட்டு கூறிக்கொண்ட கல்கி தன்னுடைய வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டாள்.

கல்கிக்கு மாறாக கிருபாவதியுடன் வெளியில் சுற்றிக் கொண்டிருந்த கிருபாகரன் தன்னுடைய பாட்டியிடம் தான் காணும் ஒவ்வொரு பொருளையும் கைநீட்டி காமித்து “பாட்டி இத கல்கிக்கு வாங்கலாம்… ரொம்ப பொருத்தமா இருக்கும்”, என்று நச்சரித்துக் கொண்டிருந்தான்.

இவனது நச்சரிப்பில் கடுப்பான கிருபாவதி “டேய்! வாயை மூடுறியா? இல்லையா? என்னோட புருஷனுக்கே நான் எதுவும் வாங்கினது கிடையாது… அப்படி இருக்கிற பட்சத்தில் என்னோட பேரன் பொண்டாட்டிக்கு நான் ஏண்டா வாங்கணும்? அதுவுமில்லாம என்னை மாதிரி யூத் போடுற டேஸ்ட் எல்லாம் உன்னோட பாவ்க்ஸ்க்கு ஒத்து வராது…

நீ வாங்கித் தந்தாலே வாங்கிக்க மாட்டா. இதுல நான் வாங்கித் தந்தா உனக்கு தான் அடி விழும். என்ன உங்க பாட்டிய வச்சு என்னை கரெக்ட் பண்ண பார்க்கிறாயா? அப்படின்னு கேட்பா… உன்னால பதில் சொல்ல முடியுமா? அதனால பேசாம நான் ஷாப்பிங் பண்ற எல்லாத்தையும் தூக்கிக்கிட்டு வாயை மூடிட்டு வா.

கல்கி வீட்டுக்கு வரப்ப உன்னோட மத்த கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் பத்தி நான் சொல்லாம இருக்க ட்ரை பண்றேன்”, என்று கூறி விட்டு அவர் தன்னுடைய ஷாப்பிங் வேலையை ஆரம்பித்து விட்டார். இருவரும் ஒரு மீட்டிங் அட்டென்ட் பண்ண வேண்டியது இருந்ததால் அதனை முடித்துவிட்டு ஆபீஸ் போகிறேன் என்ற கிருபாகரனை இழுத்துக்கொண்டு ஷாப்பிங் செய்ய வந்திருந்தார்.

பாட்டியின் ஷாப்பிங்கில் பரிதாப நிலையை எய்திய கிருபாகரன் தன்னுடைய மொபைலை எடுத்து காயத்ரியை அழைத்தவன் “அம்மா! பாவ்க்ஸ் உங்ககிட்ட அட்ரஸ் கேட்டா நீங்க அட்ரஸ் மெசேஜ் பண்ணாதீங்க… அதுக்கு பதிலா உன்னை கூட்டிட்டு வருவதற்கு ஆள் அனுப்பியிருக்கேன்…

நீ அந்த ஆளோட வந்துடுன்னு மட்டும் சொல்லுங்க”, என்று கூறியதும் “உன்கிட்ட அட்ரஸ் கேட்காமல் என்கிட்ட எப்படி கேட்பா?, என்று காயத்ரி பதில் கேள்வி கேட்டாா்.அவரின் கேள்வியில் தன்னுடைய திருட்டுத்தனத்தை கூறுவதா? வேண்டாமா என்று கிருபாகரன் மனதிற்குள்ளேயே பட்டிமன்றம் நடத்திக் கொண்டான்.

“சொல்லு கிருபா! கல்கியை ஏதாவது பொய் சொல்லி ஏமாத்தி வச்சிருக்கியா?”, என்று காயத்ரி சற்று அதட்டலுடன் கேட்டதில் “கல்கி ஒரு தடவை நம்ம வீடு எங்க இருக்குன்னு கேட்டப்ப நான் ஆவடியில் இருக்கிறதா சொல்லிட்டேன்”, என்று கிருபாகரன் கூறியதும் எதுவும் பேசாமலே காயத்ரி அழைப்பைத் துண்டித்து விட்டார்.

கிருபாகரனுக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது.காயத்ரிக்கு பொய் கூறுவது சுத்தமாக பிடிக்காத காரணத்தினால் சிறுவயதிலிருந்தே மகனுக்கும் அதையே போதித்து இருந்தார். ஆனால் இதுவரை பின்பற்றியவன் இன்று தன் வாழ்க்கையின் முக்கிய பகுதியான வாழ்க்கை துணையாக போகிறவளிடம் சிறு விஷயமாக இருந்தாலும் அதில் பொய்யுரைத்து இருப்பதை அவரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. கிருபாகரனுக்கும் அது புரிந்துதான் இருந்தது.

காயத்ரியை சமாளித்துவிடலாம் என்று இருந்தாலும் கல்கியை அழைத்து வர அவர் இனி கிருபாகரனை அனுப்ப மாட்டார் என்பது உறுதியான நிலையில் அவனால் வேறு எதுவும் செய்ய முடியும் என தோன்றவில்லை. வேறு வழி இன்றி பாட்டியுடன் ஷாப்பிங் முடித்து விட்டு வீட்டிற்கு வந்த அவனுக்கு காயத்ரியின் கோபாவேசம் சுமந்த முகமே கண்ணில் பட்டது.

இருவரது முகபாவனையும் கண்ட கிருபாவதி “என்ன பிரச்சனை காயத்ரி?”, எதுக்கு நீ இவ்வளவு கோவமா இருக்க?”, என்று தன்னுடைய மருமகளிடம் விசாரணையை ஆரம்பித்தார். அவர் கேட்பதற்காகவே காத்திருந்தது போல உடனடியாக கிருபாகரன் செய்த செயலை காயத்ரி தன்னுடைய மாமியாரிடம் கொட்டிவிட்டார்.

காயத்ரி கூறியதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த கிருபாவதி “உனக்கு என்ன ஆச்சு காயத்ரி? தெளிவா தானே இருந்த! இந்த மாதிரி சின்ன விஷயத்துக்கெல்லாம் நீ அவனை கண்ட்ரோல் பண்ணலாமா? என்ன மாமியார் என்கிற ஈகோ உனக்கு அடிபட ஆரம்பிக்குதா?

லவ்வர்ஸ் அவங்க என்ன பேசிக் கொண்டாலும் அதை நீ கேட்டது தப்பு…அவன் உன்னோட பையன். உன்கிட்டே ஒரு உதவி கேட்டால் முடியும், முடியாது அதோடு நிறுத்திக்கணும்… அதுக்கு மேல நீ கேட்கிறது தப்பான விஷயம். இந்த தப்பை வாழ்க்கையில் என்னைக்குமே பண்ணாத உன்னோட பையன் கடைசி வரைக்கும் உனக்கு வேணும்னா…

ஒரு கம்பெனிய மேனேஜ் பண்ற உன்னால இந்த ஒரு சின்ன விஷயத்தை அவன் ஏன் சொல்லி இருப்பான்னு அப்படிங்கறது புரிஞ்சிக்க முடியாதுன்னு சொன்னா அதை நம்புறதுக்கு நான் முட்டாள் இல்லை…கல்கி வர்ற நேரத்துக்கு இந்த மாதிரி மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு இருக்காமல் சந்தோசமா மீதி வேலையெல்லாம் போய் பாரு”, என்று மருமகளிடம் காய்ந்தவர் கிருபாகரன் புறம் திரும்பி

“கல்கிக்கு நீ சொன்ன பொய் இன்னும் தெரிஞ்சிருக்காதுனு நினைச்சிகிட்டு இருக்கியா கிருபா? அவ எப்பவோ கண்டுபிடிச்சி இருப்பா… ஆனாலும் ஏதோ ஒரு காரணத்துக்காக அதை வெளிக்காட்டிக்காம இருக்கா… இதே விஷயத்தை நீ வாழ்க்கையில் என்னிக்குமே திரும்பவும் பண்ணக்கூடாது…

இந்த தடவ நான் வந்ததிலிருந்து உன்கிட்ட நிறைய குற்றங்களை கண்டுபிடிச்சுகிட்டு இருக்கேன்… நான் தொழில் கற்றுக் கொடுத்த கிருபாகரன் இந்த மாதிரி இருக்க மாட்டான். தொழிலில் நேர்மை இருக்கணும், பொய் இருக்கக் கூடாது…அதை இன்னிக்கு வரைக்கும் ஃபாலோ பண்ற நீ வாழ்க்கையிலேயும் கடைபிடிக்க கத்துக்கோ”, என்று பேரனுக்கும் கொட்டு வைத்து விட்டு எழுந்தார்.

தன்னுடைய அறை வாசல் வரை சென்ற கிருபாவதி காயத்ரியை நோக்கி “சாயங்காலம் கல்கியை கூட்டிட்டு வர்றதுக்கு கிருபாகரனையே அனுப்பு… வர்றப்பவே அடி வாங்கிட்டு வரட்டும்”, என்று புன்னகை முகமாக கூறிவிட்டுத் தன்னுடைய அறையினுள் நுழைந்தார்.

பாட்டி உள்ளே செல்லும் வரை அமைதி காத்தவன் அவரது தலை மறைந்த அடுத்த நொடியே காயத்ரியை கட்டிப்பிடித்து கெஞ்சி,கொஞ்சி சமாதானம் படுத்திவிட்டே தன்னுடைய அறைக்கு சென்றான். கல்கி தான் கூறிய பொய்யை கண்டுபிடித்து இருப்பாள் என்று அவனுக்கும் தெரியும். ஆனால் அதனைப் பற்றி அவனிடம் இதுவரை எதுவும் கேட்கவும் இல்லை, தெரிந்ததை பற்றி காட்டிக் கொள்ளவும் இல்லை.

இதனையே சிந்தித்துக் கொண்டிருந்தவன் அலுவலகத்திலிருந்து வந்த ஃபோன் காலினால் தன்னுடைய வேலையில் மூழ்கி விட்டான். ஐந்து மணி போல் கல்கியிடம் இருந்து வந்த மெசேஜில் “கிருபா! என்னை பிக்கப் பண்ண வர்றது நீதானே! அதனால ஒரு அரை மணி நேரம் கழிச்சு வா… நான் இப்பதான் ஆபீஸ்ல இருந்து வந்துகிட்டு இருக்கேன்… வீடு வந்து சேர ஆறு மணி ஆயிடும்…

காயத்ரி ஆன்ட்டி 6 மணிக்கு உன்னை கூப்பிட ஆள் வரும்னு சொல்லி மெசேஜ் போட்டு இருக்காங்க. வந்த உடனே என்னால கிளம்ப முடியாது… ஆறரை மணிக்கு அபார்ட்மென்டுக்கு வெளியே வந்து கிட்டு எனக்கு கால் பண்ணு… நான் கீழே இறங்கி வரேன்”, என்று இருந்ததை கண்ட கிருபாகரன் “அடப்பாவி நான் தான் வருவேன்னு தெளிவா தெரிஞ்சு வச்சிருக்கா… அப்படின்னா அடிவாங்குவது கன்ஃபார்மா?”, என்று வாய் விட்டு பேசி கொண்டவன் மாடியில் இருந்து கீழே இறங்கி சென்று பாட்டியிடமும்,அம்மாவிடமும் கல்கியின் மெசேஜை பற்றி கூறிவிட்டு வேறு எதுவும் உதவி தேவையா என்றும் கேட்டுவிட்டு தன்னவளை தன் அகத்தில் அழைத்து வந்தது போன்றே தன் வீட்டிற்கும் அழைத்து வர தன்னை தயார்படுத்திக் கொள்ள சென்றான்.

சரியாக ஆறரை மணிக்கு கல்கியின் அப்பார்ட்மெண்ட் முன் சென்று நின்றவன் அவளது எண்ணிற்க்கு ஒரு அழைப்பை விட்டுவிட்டு காத்திருக்க தொடங்கியிருந்தான். மேலும் சிறிது நேரம் காத்திருக்க வேண்டி இருக்கும் என்று கிருபாகரன் எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது இவன் அழைப்பு விடுத்து அடுத்த சில நொடிகளிலேயே கல்கி இவனது கார் கதவை தட்டினாள்.

அழகிய ஆரஞ்சு வண்ண சல்வாரில் ஓவியமாக நின்றவளை “வெல்கம் டு அவர் பேரடைஸ் கல்கி”, என்று வரவேற்றுக் கொண்டே கார் கதவை திறந்து விட்டவன் அவள் அமர்ந்ததும் தான் அவளிடம் ஏதோ வித்தியாசமாக தெரிந்ததை உணர்ந்தான். அது என்னவென்று உற்றுநோக்கினால் அவளுக்கு பொருந்தாத விதமாக சிறிது பதட்டம் அவளது கண்களில் தென்பட்டது.

“பாவ்க்ஸ் இப்ப எதுக்கு நீ டென்ஷனா இருக்க? நம்ம வீட்டுக்கு தானே வரப்போற? பீ கூல்”, என்று கிருபாகரன் அவளது கையை பிடித்து ஆறுதல்படுத்தியதில் வெகுண்டெழுந்த கல்கி “கிருபா எடுக்கறதுக்கு எல்லாம் என் கையை பிடிக்குற வேலை வச்சுக்காதே!அடுத்த தடவை கையை பிடிச்ச உனக்கு கை இருக்காது”, என்று அவனை ஒரு விரல் நீட்டி மிரட்டினாள்.

கல்கியின் பேச்சுக்கு பதிலாக திரும்பப் பேச போன கிருபாகரனுக்கு வீட்டிலிருந்து கிளம்பும் பொழுது “கல்கி என்ன பேசினாலும், அடிச்சாலும் நீ பதில் பேசாம, அடி வாங்கிட்டு அமைதியா தான் வரணும் கிருபா”, என்று அவனது பாட்டி கட்டளையிட்டு அனுப்பியது ஞாபகம் வந்ததால் எதுவும் கூறாமல் “ஓகே! நாம வீட்டுக்கு போகலாம்”, என்று காரை கிளப்பினான்.

அவனது அமைதியில் கல்கி ஆச்சரியப் பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் தன்னுடைய காரை கிளப்பிய கிருபாகரன் “கல்கி! நான் உன்கிட்ட ஒரு பொய் சொல்லிட்டேன்”, என்று பேச்சை ஆரம்பித்தான். “என்னது உன்னோட வீடு ஆவடியில் இருக்குன்னு சொன்னியே! அதுவா?”,என்று கல்கி கேட்டதும்,

“உனக்கு தெரிஞ்சு இருக்கும்னு எனக்கு தெரியும்… ஆனாலும் இத்தனை நாள் நீ இத பத்தி என்கிட்ட எந்த கேள்வியும் கேட்கலையே! ஏன்?”, என கிருபாகரன் பதில் கேள்வி கேட்டான் .என்னை என்ன முட்டாள்னு நினைச்சியா? ஆவடியில் இருந்து ஆபீஸ்க்கு வர்றதுக்கும், இங்க என்னை பார்க்க வரதுக்கும் எவ்வளவு நேரம் ஆகும்னு என்னால கால்குலேட் பண்ண முடியாதா? நீ ஏதோ ஒரு காரணத்துக்காக சொல்லி இருக்கே!

அத வந்து ஏன் சொன்ன? எதுக்கு சொன்னனு நான் ஏன் கேட்கணும்? அது தேவையே இல்லாத விஷயம்… நான் அப்படி கேட்டிருந்தால் பொய் தான் சொன்னேன் , அதுனால உனக்கு என்னன்னு கேட்டு இருப்ப … என்று கல்கி பேசிக்கொண்டிருக்கும் நேரத்திலேயே தனது வீட்டின் முன் வந்து காரை நிறுத்திய கிருபாகரன் அவள் இறங்குவதற்கும் கதவினை திறந்து வைத்தான்.

ஆனால் கல்கியை இறங்க விடாமல் “கல்கி! உனக்கு பேக் சைடு ல ஒரு கவர் இருக்கு… அதை எடுத்துக்கிட்டு கீழே இறங்கு”, என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு கூறி விட்டு நகர்ந்து நின்று கொண்டான்.அதில் என்ன இருக்கிறது என்று தெரியாமலே அந்த கவரை எடுத்த கல்கி கீழே இறங்கும் பொழுது தயா, காயத்ரி, பாட்டி என்று அனைவரும் வீட்டின் வாசலுக்கு வந்தே அவளை வரவேற்றனர்.

தயாவும் ,பாட்டியும் “வெல்கம் கல்கி”,என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே காயத்ரி வேகமாக வந்து அவளை கட்டி அணைத்து இருந்தார். அத்துடன் கல்கியின் கையில் இருந்த கவரை பார்த்து “இதெல்லாம் எதுக்கு கல்கி? நம்ம வீட்டுக்கு வர்றதுக்கு வாங்கிட்டு வரனுமா? என்று அன்புடன் கடிந்து கொண்டார்.

காயத்ரி கூறிய பின்னர் தான் தன்னுடைய கையிலிருந்த இருந்த கவரை பார்த்த கல்கிக்கு திக்கென்றானது. ஏனெனில் அதில் இனிப்புகளும்,பழங்களும், ஒரு பொக்கேயும் இருந்தன. தன் புறம் நின்று கொண்டிருந்த கிருபாகரனை திரும்பிப் பார்த்தவள் கண்களாலேயே நன்றியும் கூறிக் கொண்டாள்.

இவர்களின் கண்களின் பாசையை கண்டு கொண்ட பாட்டி “ரெண்டு பேரும் வீட்டுக்குள்ள வந்து கண்ணும் கண்ணும் நோக்கியாவை கன்டினியூ பண்ணுங்க… எனக் கூறியதும் அனைவரும் உள்ளே சென்றனர். உள்ளே சென்று அமர்ந்ததும் கல்கி “விருந்துக்கு இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் ஆன்ட்டி?”, என்று காயத்ரியை பார்த்து கேட்கும் போது தான் அவர்களின் முகத்தில் இருந்த சிரிப்பைக் கண்டு தான் மட்டுமே இவ்விருந்துக்கு அழைக்கப்பட்ட விருந்தாளி என்பதை உணர்ந்து கொண்டாள்.

அவள் புரிந்து கொண்டாள் என்பதை அறிந்தவர்கள் தங்களுக்குள்ளேயே புன்னகையை பரிமாறிக் கொண்டார்கள். பாட்டி தான் “நம்ம குடும்பத்துல நம்மளுக்கு தேவைப்பட்டால் நாமலே விருந்த அப்பப்ப அன்ன்வுன்ஸ் பண்ணிக்கணும்”, என்று கூறிவிட்டு கல்கியைப் பார்த்து கண்ணை சிமிட்டினாா்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே கிச்சனுக்குள் சென்ற கிருபாகரன் திரும்பி வரும்பொழுது கையில் டீ டிரேயுடன் கல்கிக்கு பிடித்த மாதிரி டார்க் சாக்லெட்டை எடுத்துக் கொண்டு வந்தான்.அவன் இந்த வேலைகளை எல்லாம் செய்வதை ஆச்சரியமாக பார்த்த கல்கியை தட்டிக் கொடுத்த பாட்டி “என்ன கல்கி! கிருபா இந்த வேலை செய்றது ஆச்சரியமா இருக்கா?

இது மட்டும் கிடையாது… இந்த வீட்டுல எல்லாரும் அவங்கவங்க வேலையை மட்டும் செய்யாம மத்தவங்க வேலைக்கும் ஹெல்ப் பண்ணுவாங்க… காயத்ரிக்கு சமைக்க இஷ்டமில்லை அப்படின்னாலும் அவங்க ரெண்டுபேர்ல யாராவது ஒருத்தர் சமைச்சுடுவாங்க”,என்று கூறியவர் கிருபாகரன் புறம் திரும்பி

“கண்ணா! நான், கல்கி, அம்மா மூணு பேரும் தோட்டத்தில உட்காந்து பேசிக்கிட்டு இருக்கோம்… நீங்க ரெண்டு பேரும் மீதி இருக்கிறத சமைச்சு முடிச்சுட்டு, எல்லா அரேஞ்ச்மென்ட்டும் பண்ணிட்டு எங்களை கூப்பிடுங்க”, என்றவர் கல்கியின் கையை பிடித்துக்கொண்டு தோட்டத்திற்கு செல்ல ஆரம்பித்தார்.காயத்ரியும் அவர்களை பின்தொடர்ந்து சென்றார்.

இவர்கள் மூவரும் செல்வதைப் பார்த்த தயா “கண்ணா! என் நிலைமையை விட உன் நிலைமை ரொம்ப மோசமாக இருக்கும் போல இருக்கே!”, என தன் மகனை நினைத்து பரிதாபப்படுவது போல் செய்ததில் “ஒன்னும் பிரச்சனை இல்லப்பா… அடி வாங்குறது ,திட்டு வாங்குறது இதெல்லாம் நமக்கு புதுசா என்ன?என்னோட நிலைமையைப் பத்தி நாம அப்புறமா பேசிக்கலாம்… இப்ப வாங்க மீதி சமையலை சமைச்சு முடிக்கனும்”, என்று தன்னுடைய அப்பாவை அழைத்துக் கொண்டு கிச்சனுக்குள் புகுந்து கொண்டான்.

மூவரும் தோட்டத்தில் வந்து அமர்ந்ததும் பாட்டி தான் முதலில் பேச்சை ஆரம்பித்தார்.” சொல்லு கல்கி! கிருபா உன் கிட்ட லவ் சொன்னது எங்க எல்லாருக்கும் தெரியும்… அதைப் பத்தி நீ என்ன முடிவு எடுத்திருக்க?”, என நேரடியாக விஷயத்திற்கு தாவினார். பாட்டியின் கேள்வியில் சிறிதும் பதட்டப்படாமல்

“எனக்கு எதுவுமே தோணல பாட்டி… என்னுடைய எண்ணங்கள் வேறு. அப்படி இருக்கிற பட்சத்தில ஒரு குடும்பத்தில் என்னால அடாப்ட் ஆகி இருக்க முடியாது… இதை நான் கிருபாவுக்கு பல தடவை சொல்லிட்டேன்… ஆனாலும் அவன் புரிஞ்சிக்கிற மாதிரி தெரியல”, என்று பட்டென்று உரைத்த கல்கியை காயத்ரி ஏனென்று கேட்க விழைந்தார்.

ஔஔஅதனைப் புரிந்து கொண்ட பாட்டி “காயத்ரி! கொஞ்ச நேரம் அமைதியா இரு, என்று தன்னுடைய மருமகளை அடக்கினார். “ஓகே கல்கி! இந்த விஷயத்த இதோட விட்டுடு…

ஆனா நான் உன்கிட்ட பொதுவான சில விஷயங்களைப் பத்தி பேசணும். என்னோட வயசு 73 .ஆனாலும் இப்ப வரைக்கும் எனக்குப் பிடிச்ச மாதிரி தான் நான் வாழ்றேன்… என்னுடைய கணவர் இறந்து போனதுக்கு அப்புறம் எல்லாத்தையும் வெறுத்த நிலைமை எனக்கும் வந்துச்சு…

கொஞ்ச நாள் ரொம்ப இறுக்கமா திரிஞ்சேன்… ஆனால் அதுல என்னோட கஷ்டம் கூடத்தான் செஞ்சதே தவிர குறையவே இல்லை… ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு எண்ணம் ,அதை செயல்படுத்தும் விதம் வித்தியாசப்படும்… ஆனால் அதை வெளிய காட்டிக்காம இருக்கிற மாதிரி நாம ஏன் நடிக்கணும்?

நம்மளோட உணர்வுகளை வெளிப்படையாக காட்டுவதால் நமக்கு என்ன நஷ்டம் வந்துடப் போகுது? உனக்குப் லவ், கல்யாணம் இதெல்லாம் பிடிக்கலைன்னா அதுக்குன்னு ஒரு காரணம் இருக்கும்… அந்தக் காரணத்தை சொல்லிட்டு விலகிப்போ…

உனக்கு நான் சிம்பிளா ஒரு கதை சொல்கிறேன்…அதுக்கடுத்து முடிவு பண்ணு… ஒரு காட்டுல சிங்கக்கூட்டம் மட்டும்தான் வாழ்ந்துகிட்டு இருந்துச்சு… அந்தக் கூட்டத்துக்கு தலைவன் ஒரு பலம் பொருந்திய சிங்கம் இருந்தான்…. ஆனால் யார்கூடயும் அண்டாமல், செய்யாமல் தான் மட்டும் தனித்து இருந்தான்…

அவனுடைய பார்வையிலேயே யாரும் பக்கத்துல போக மாட்டாங்க… இங்கே நான் அவன்னு சொல்றது அந்த சிங்கம் கூட்டத்தோட தலைமை சிங்கத்தை… திடீர்னு அந்தக் கூட்டம் முழுமைக்கும் இரையே கிடைக்காத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுச்சு… ஒருநாள் பொறுத்துக்கலாம்,ரெண்டு நாள் பொறுத்துக்கலாம்… ஆனால் மாசக்கணக்குல அப்படிங்கிற பட்சத்தில் மனுஷங்களாலயும் சரி, மிருகங்களாலும் சரி பசி பொறுக்க முடியாது…

அப்ப மீதி இருக்கிற கூட்டம் எல்லாம் சேர்ந்து ஒரு முடிவு பண்ணாங்க… நம்மள விட்டு, நம்ம கூட்டத்தோடு சேராம ஒதுங்கி நிற்கிற அவனை அடிச்சு நாம எல்லாரும் சாப்பிட்டால் நம்மளுக்கு ஒரு நேரம் திருப்தியான சாப்பாடு கிடைக்கும் அப்படின்னு முடிவு எடுத்தாங்க…

அந்த முடிவை கொண்டு போய் அவன்கிட்ட நேரடியா சொல்லவும் செஞ்சாங்க… அந்த நிமிஷத்துல அந்த சிங்கக்கூட்டம் தலைவனுக்கு புரிஞ்சது…நாம யாரோடையும் ஒத்துவாழல… அதனாலதான்தலைவனா இருந்தாலும் நம்மள விட்டுட்டு இந்த முடிவு எடுத்து இருக்காங்க…

ஆனால் காலம் கடந்து வந்த ஞானோதயம் எந்த விதத்திலேயும் அந்த சிங்கக் கூட்ட தலைவனை காப்பாத்தலை… இந்தக் கதையை எனக்கு யார் சொன்னாங்க தெரியுமா? அவங்க தாத்தா இறந்து போனப்ப நான் உலகத்தையே வெறுத்து இருந்த சூழ்நிலையில் என்னோட பேரன் எனக்கு சொன்னான்.

அவன் புக்குல படிச்ச கதையை குழந்தைத்தனமாக சொன்னான்… கதை சின்னப்புள்ளத்தனமா இருந்தாலும் அதோட கருத்து நம்ம எல்லாருக்குமே தேவையான ஒரு கருத்து.ஊரோட ஒத்துவாழனும் கல்கி! ஆனால் அதே நேரத்தில அந்த ஊருல நீ வித்தியாசமாய் இருக்கணும்…

எல்லாரும் மதிக்கிறாங்க,மதிக்கல அப்படிங்கிறது இரண்டாவது விஷயம்… நான் சொன்ன விஷயங்கள் எல்லாமே ரொம்ப குழப்பமா இருந்தாலும் இதை நீ திரும்ப திரும்ப யோசிச்சு பாக்குறப்ப உனக்கு நான் சொல்ல வந்தது சரியா புரியும் .

உன்னோட மனசுல இருக்குறத கிருபாகரன் கிட்ட நேரடியா பேசிடு… உனக்கு வயசுல மூத்தவளா நான் சொல்றது ஒரே ஒரு விஷயம் மட்டும் தான். உன்னோட கருத்துக்களை எப்பவுமே அடுத்தவங்க மேல திணிக்காதே! அவங்க கருத்துக்களை நீ ஏத்துக்கிட்டாலும், ஏத்துக்கலைனாலும் அத உன்னுடைய உணர்வுகள் வெளிக்காட்டக் கூடாது…

வாழ்க்கை கொஞ்ச நாள்தான் கல்கி! நாளைக்கு காலையில நாம உயிரோட எழுந்திருப்போமா அப்படிங்கிறது நமக்கே தெரியாத நிலையில் இருக்கிற நிமிஷத்தை இருக்கிற செகண்ட்டை என்ஜாய் பண்ணி வாழ கத்துக்கோ!

நான் அடுத்த தடவை வர்றப்ப உன் கிட்ட இருந்து ஒரு நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கிறேன்… அதே மாதிரி கைநீட்டி அடிக்கிறதுக்கு முன்னாடி, வாய் பேசுறதுக்கு முன்னாடி அதைப் பல தடவை உன் மனசுல ஓட்டிப்பாரு…அப்பவும் சாினுபட்டா மட்டும் செய்… தைரியம் தேவை தான். ஆனால் அளவுக்கு அதிகமான தைரியம் ஆபத்து… அதை புரிஞ்சு நடந்துக்கோ!

நான் ஏதாவது உன்னை வருத்தப் படுத்துற மாதிரி பேசி இருந்தா ஐ ஆம் சாரி”, என்று பாட்டி பேசி முடித்த பொழுது கல்கிக்கு புரிந்தும் புரியாத நிலைமையே இருந்தது. ‘ஓகே காயத்ரி! நீ கல்கி கூட ஏதாவது பேசணும்னா பேசிட்டு வா… நான் வீட்டுக்குள்ள போறேன்.

இந்த பையன் என்ன செஞ்சு வச்சிருக்கான்னு தெரியல… போய் பார்த்தால்தான் தெரியும்.ஏதாவது சொதப்பி வச்சிருந்தா நான் சரி பண்ணி வைக்கிறேன் நீ வரதுக்கு முன்னாடி”,என்ற பாட்டி உள்ளே இருந்து சென்றுவிட்டார்.

பாட்டி பேசியதற்கே எந்தவித உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் அமர்ந்திருந்த கல்கியை கண்ட காயத்ரி, தானும் பேசினால் அவள் மேலும் குழம்பி விட வாய்ப்பு உண்டு என்று எண்ணி எதுவும் பேசாமலே சென்றுவிடலாம் என நினைத்தார்.

“ஆனால் கல்கியோ உங்களுக்கு என்ன சொல்லணுமோ அதை சொல்லுங்க ஆன்ட்டி”, என்று கேட்டதும் தானும் அப்பொழுதே பேசி விடுவது என முடிவெடுத்தார்.” கல்கி! உன்னை வேலைக்கு எடுக்குறப்ப கிருபா உன்னை லவ் பண்ணலை…

ஆனால் அவன் உன்னை லவ் பண்றதா வந்து சொன்ன உடனே நானும்,தயாவும் நீ எது செய்றதா இருந்தாலும்,அது கல்கியோட மனச எந்த விதத்திலேயும் கஷ்டப்படுத்தக் கூடாது அப்படின்னு தான் சொன்னோம்… அவன் கொஞ்சம் முரட்டுத்தனமா பிஹேவ் பண்ணுனாலும் ரொம்பவும் நல்லவன்… நானும் அவனை நல்ல படியா தான் வளர்த்திருக்கேன் அப்படின்னு நம்புறேன்…

உனக்கு கிருபாவை பிடிச்சாலும், பிடிக்கலைன்னாலும் அதை தைரியமாக எங்ககிட்ட நேரடியா சொல்லிடு… ஆனா உடனே சொல்லாமல் யோசிச்சு முடிவெடு”, என்றவருக்கு சரி ஆண்ட்டி”, என்ற பதிலை மட்டுமே கல்கி அளித்தாள்.

திடீரென்று ஞாபகம் வந்தவராக காயத்ரி கல்கியிடம் “கல்கி!இந்த மோனா,எலிசா இந்த பேரை எல்லாம் கேட்டுட்டு அதனாலதான் நீ கிருபாவை வேண்டாம்னு சொல்றியா?”, என்று ஒருவித பதட்டத்துடன் கேட்டார். அதேநேரம் இவர்களை உள்ளே அழைத்துச் செல்ல வந்த கிருபாவும் இந்தக் கேள்வியில் அங்கேயே தயங்கி நின்று விட்டான். கல்கி இந்தக் கேள்விக்கு கூறிய பதிலில் காயத்ரியும்,கிருபாகரனும் இனி எதுவும் செய்ய முடியாது என்ற நிலைக்கு சென்றுவிட்டனர்.

கல்கியின் பதில் கிருபாகரனை விரட்டி துரத்துமா ?இல்லை தன்னுடைய பதிலால் கல்கி வில்லங்கத்தை இழுத்துக் கொண்டாளா?

Categories
Deepi On-Going Novels

அத்தியாயம் – 15

கல்கி-15

அறையினுள் நுழைந்தவரை கண்டு இவரா சேர்மன் என்ற அதிர்ச்சியில் கல்கி எழுந்து நின்றதும், அவரின் வரவை உணர்ந்து காயத்ரியும்,தயாவும் எழுந்து விட்டனர்.

ஆனால் கிருபாகரன் அப்பொழுதுதான் தன்னுடைய மடிக்கணினியில் மிகவும் தீவிரமாக எதையோ ஆராய்ந்து கொண்டிருந்தான். உள்ளே வந்தவரோ தயாவை தன் கையால் தள்ளி செல் என்று சைகை செய்துவிட்டு, நேராக காயத்ரியிடம் சென்று கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்ட பின்னர், கல்கியையும் கட்டியணைத்து “எப்படி இருக்க கல்கி?”, என்று விசாரித்தார்.

கல்கி பதில் கூறும் முன்னர் தன்னுடைய இருக்கையில் அமர்ந்து அதனை ஒரு சுழற்று சுழற்றி கால் மேல் கால் போட்டு அமர்ந்தவர் “மிஸ்டர்.கிருபாகரன் இவ்ளோ நேரம் லேப்டாப்ல என்ன தீவிரமா பார்த்துகிட்டு இருந்திங்கன்னு எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுங்க”, என்று அதிகாரத்துடன் ஆணையிட்டார்.

“அது உங்க டிரெஸ்ஸிங் ஸ்டைலை பார்த்து கல்கி மிரண்டுட்டாங்க… அதுதான் எங்க மந்திரிக்க போகலாம்னு கூகிள் ஆண்டவர்கிட்ட அப்ளிகேஷன் போட்டு கேட்டுகிட்டு இருந்தேன்”, என்ற அவனின் பதிலை கேட்டு மற்றவர்கள் வாயை திறந்திடும் முன் “கரன் கீப் கொய்ட்”, என்று கல்கி தான் அவனை அடக்கினாள்.

“ஓகே! லெட்ஸ் ஸ்டார்ட் தி மீட்டிங்”, என்றவர் “கல்கி! நான் கிருபாவதி… இந்த கான்செர்னோட சேர்மன்”, என்று மட்டும் கூறிவிட்டு தன் முன் வைக்கப்பட்டிருந்த பைலை எடுத்து பார்க்க ஆரம்பித்தார்.

அவர் படித்து முடிக்கும் வரை இருந்த அமைதியை “இதை நான் உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கலை கிருபாகரன்”, என குரலை உயர்த்தாமலே தன்னுடைய ஏமாற்றத்தை குரலில் உணர்த்தி கலைத்தாா்.

“சாரி மிஸஸ்.கிருபாவதி”, என்ற கிருபாகரனின் குரலில் உண்மையான குற்ற உணர்ச்சி இருந்தது. “சாரி அப்படிங்குற வார்த்தை அடுத்த தப்புக்கான அஸ்திவாரம் கிருபாகரன்”, என்று கர்ஜித்தவர்,

ஒரு ஸ்தாபனத்தை நிர்வாகம் செய்றவன் சாரி கேட்க கூடாது… அப்படி கேட்குறப்ப அந்த தலைமையில இருக்குற தகுதியை இழந்துடுறான். கட்டடம் கட்டி பணம் வாங்குறதோட நம்ம வேலையை முடிச்சுகிட்டா சந்தையிலே மாடு விக்கிறவனுக்கும் நமக்கும் என்ன பெரிய வித்தியாசம்னு சொல்லுங்க…

கட்டி தர கட்டடத்துக்கு ஆறு மாசத்துக்கு ஒரு தடவை பராமரிப்பு பண்ண முடியாத அளவுக்கு நம்ம கம்பெனி மோசமான நிலைமையில் இல்லை… இந்த பராமரிப்பு வேலையை பார்த்திருந்தா கட்டடம் கை மாறுனது எப்பவோ தெரிஞ்சிருக்கும். அன்ட் இப்ப ஏற்பட்ட செலவு உங்களோட சேலரில இருந்து டிடெக்ட் ஆயிடும்.இதுக்கடுத்து இப்படி ஒரு தப்பு நடந்தது நீங்க வேற வேலை தேட வேண்டியது இருக்கும்.. திஸ் இஸ் தி லாஸ்ட் வார்னிங் பார் யூ கிருபாகரன்”, என்று தேர்ந்த தொழிலதிபராக பேசி முடித்து விட்டு கல்கியின் பக்கம் திரும்பினார்.

“வெல் டன் கல்கி… இந்த பொசிஷனுக்கு உங்களை கிருபாகரன் செலக்ட் பண்ணுனப்ப நாங்க எல்லோருமே ரொம்பவே யோசிச்சோம்.அப்ப கிருபா தான் கல்கிகிட்ட கண்டிப்பா செய்ற வேலையில டெடிகேஷன் இருக்கும். அவங்க ஒழுங்கா பெர்பார்மன்ஸ் பண்ணலைனா நான் என்னோட பொசிஷன்ல இருந்து விலகிடுறேன்னு சொன்னார்.இன்னிக்கு கிருபா சொன்னதை நீங்க நிரூபிச்சிடீங்க”, என்று மனம் திறந்து பாராட்டியவர்

“பட் அதுக்காக கம்பெனி பார்ட்னர்க்கு நீங்க தியரிக்கும், ப்ராக்டிகலுக்கும் கிளாஸ் எடுத்தது தப்பான விஷயம்… மிஸ்டர். தயா எட்டு மாசத்துக்கு முன்னாடி சொன்னதை ஞாபகம் வச்சுகிட்டு இப்ப பதிலடி தர நீங்க நாளைக்கு ஏதோ ஒரு காரணத்தால உங்களை வெளியே அனுப்பிட்டா எங்களை பழிவாங்க மாட்டிங்கன்னு என்ன நிச்சயம்?”,என்று ஏவுகணைகளாக கேள்விகளை தொடுத்தார்.

கிருபாவதியின் கேள்விகளில் சற்றும் அசராத கல்கி அவரது கேள்விகளை தன்னுடைய எரிமலைக் குழம்பில் எரிப்பதற்கு தயாரானாள்.அதனை உணர்ந்தவன் போன்று கிருபாகரன் அவளது கையை பற்றி தடுத்திட விழைய, கல்கியோ கையை விடுவித்து கொள்ளாமலே

“பர்ஸ்ட் இந்த ஆப்பர்சூனிட்டியை எனக்கு கொடுத்ததுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் மிஸஸ்.கிருபாவதி… மிஸ்டர்.தயா இன்டெர்வியூல ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்குனு சொன்னப்ப அதை நிரூபிக்கிற நிலைமையில் நானில்லை… பட் இப்ப என்னால் நிரூபிக்க முடிஞ்சதை சொன்னேனே தவிர அவருக்கு கிளாஸ் எடுக்கலை.

கம்பெனி பார்ட்னரா இருந்தாலும், சேர்மனா இருந்தாலும் அவங்க சொன்னது தப்புனு நிரூபிக்க நேரடியா பேசுவேனே தவிர பழிவாங்குற அளவுக்கு போக எனக்கு தெரியாது.சோ நான் சொன்னது என்னோட கருத்துகளை மட்டும்தான்”, என்று நிமிர்வாகவே கூறி முடித்தவளைக் கண்டு மற்றவர்களின் மனம் மெச்சுதலைக் கொண்டது.

“ஓகே கல்கி! உங்களோட கருத்துகள் உங்களுக்கு சரியா இருக்கும். எல்லோரும் அதை ஏத்துக்கனும்னு நினைக்கிறதோ, இல்லை அடுத்தவங்களோட கருத்தை நிரூபிக்க நினைக்கிறதோ தப்பு… தலைமைக்கு தன்னடக்கம் இருக்கோ இல்லையோ தன் எண்ணங்களை தனக்கு கீழ் வேலை செய்றவங்க மேல திணிக்கிற புத்தி கண்டிப்பா இருக்க கூடாது.

மிஸ்டர்.தயா இப்ப அவர் சொன்னதை கரெக்ட்னு நிரூபிச்சா உங்களால என்ன செய்ய முடியும் ? காாியமும், வீாியமும் காாிகையோட கண்ணசைவில் இருக்கனுமே தவிர, கத்தி போல காயப்படுத்துற வாா்த்தைகளில் இருக்கக் கூடாது… இதே தப்பை திரும்பவும் இன்னொரு முறை பண்ணாதீங்க”, என்று சிம்மமாக கர்ஜித்த கிருபாவதியை கல்கிக்கு மிகவும் பிடித்து போனது.

அதற்கு பின்னர் முக்கிய பைல்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது கிருபாகரனை நோக்கி”கிருபா! கல்கி மிரண்டு போற அளவுக்கு என்னோட டிரஸ்ஸிங்ல என்ன குறை?”, என்று கேட்ட கிருபாவதி கருப்பு நிற ஸ்லிம்ஃபிட் ஜீன்ஸ்,செமி ஃபார்மல் சா்ட் அணிந்து, பாப் கட் செய்யப்பட்டிருந்த முடியில் சிவப்பும் பழுப்பும் கலந்த நிறத்தில் கலாிங் செய்து,அதில் Dolce and Gabbana DG2027B குளிர் கண்ணாடியை நிறுத்தி வைத்து,கையில் போட்டிருந்த உடைக்கு பொருத்தமாக வாட்சும் கட்டி நவீன யுவதியாக இருந்த வரை பார்த்து இப்படி கூறினால் அந்த இளைஞியால் பொறுத்து கொள்ள இயலுமா?

அவன் வாயை திறந்து பதில் கூறிடும் முன்னர்

They call us crazy youngsters
Time is running out but who cares we’re running free
Hell yeah, we’re crazy youngsters
We don’t apologize, we’re mad and running free

‘Cause we got, hey, we got a lot of things to do
Hey, we got a lot of things to prove
(Yeah we got) yeah we got a lot of room to grow
(Hey) yeah we got a lot of miles to go
So we keep driving, we keep driving

என்ற எஸ்டர் டீனின் கிரேஸி யங்ஸ்டர்ஸ் ஆல்ப பாடல் கிருபாவதியின் மொபைலில் இருந்து ஒலித்து கிருபாகரனை பற்கள் நறநறக்க செய்தது.

அவர் போனில் மூழ்கியதும் காயத்ரியின் புறம் திரும்பியவன் “உங்க மாமியாரோட அலம்பல்க்கு அளவில்லம்மா”, என்று அங்கலாய்த்ததில் கல்கிக்கு ஆச்சரியம் உண்டானது.சேர்மன் கிருபாகரனின் பாட்டி என்பதை பற்றி ஊகித்திருந்தாள்.

ஏனெனில் பேரனும்,பாட்டியும் உயரத்தை தவிர உருவ அமைப்பில் அச்சில் வார்த்தது போன்றே இருந்தனர்.ஆனால் காயத்ரியின் அம்மாவாக இருக்கும் என்றெண்ணி கொண்டிருந்தவளுக்கு இது சற்று வியப்பளித்தது.

கிருபாவதி போனில் பேசி முடித்தவுடன் கல்கி கிளம்புவதாக கூறவும் “கல்கி வர வெள்ளிக்கிழமை சாயங்காலம் வீட்டுல ஒரு சின்ன விருந்துக்கு ஏற்பாடு பண்ணிருக்கேன்… நீ கண்டிப்பா வரனும்”, என்று அழைப்பு விடுத்து ,அவளது ஒப்புதல் பெற்ற பின்னரே வெளியேற சம்மதித்தார்.

கல்கியை பின்தொடர்ந்து செல்ல எழுந்த கிருபாகரனை “கிருபா! எனக்கு இப்ப புதுசா ஸ்டார்ட் பண்ணியிருக்குற ப்ரொஜெக்ட்டை பத்தி சொல்லு”, என அவனது எண்ணத்திற்கு ஆப்படித்தார். “பிகே… இதெல்லாம் நல்லாயில்லை”, என கூறியவனுக்கு பதிலாக “கரன் கீப் கொய்ட்”, என்று கல்கியை போன்று இமிடேட் செய்ததில் அனைவரும் சிரித்துவிட்டனர்.

“என்னோட பாவ்க்ஸ் எவ்ளோ திறமையா என்னை அடக்குனா… அதை பார்த்து பொறாமைப்படாம புது ப்ரொஜெக்ட்டை பத்தி உங்க பிள்ளையை எக்ஸ்ப்ளெய்ன் பண்ண சொல்லுங்க… எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு”, என்று அவர்களின் பதிலை எதிர்பாராமல் வெளியேறிவன் நேராக சென்றது கல்கியின் அறைக்கு தான்.

கதவை தட்டி விட்டு உள் நுழைந்தவனை உணர்ந்தாலும், தலையை நிமிர்த்தாமலே தன்னுடைய வேலையில் ஆழ்ந்திருந்தவளை கண்டு பெருமூச்சு எழுந்தது.

“பாவ்க்ஸ்! பாட்டி எப்பவுமே ஒர்க்னு வந்துட்டா ஒபாமாக்கே கிளாஸ் எடுத்த மாதிரி பேசுவாங்க… நீ அதுக்காக எல்லாம் பீல் பண்ணாதே! உன்னை விட எனக்கு தான் திட்டு ஜாஸ்தியா விழுந்துச்சு, ஆனால் நான் ஏதாவது பீல் பண்றேனா?”, என்று கிருபாவதி பேசியதற்குதான் அவளின் அமைதி என்பது போல் சமாதானப்படுத்தியவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தவள்,

“என்னை ஏன் வேலைக்கு எடுத்த?”, என்று நேரடியாகவே கேட்டாள். “உன்னை லவ் பண்ணுனேன்… அதான் ரஞ்சனோட ஒழுங்கின்மையை காரணமா வச்சு உன்னை தூக்கி என்னோட பக்கத்துல வச்சு பார்த்துக்குறேன்”, என்று கிருபாகரன் கூறியதற்கு கல்கி சிந்திய இகழ்ச்சியான முறுவலே அவன் கூறியதை நம்பவில்லை என்றுரைத்தது.

“நான் இங்க வந்து பல மாசத்துக்கு உனக்கு என் மேல லவ் கிடையாது… அப்படி ஆரம்பத்துலயே தெரிஞ்சிருந்தா இந்நேரம் உனக்கு பரலோகத்தை காமிச்சிருப்பேன்… வேற என்னமோ இருக்கு.அந்த உண்மையான காரணத்தை மட்டும் சொல்லு”, என்று கல்கி பதில் கூறியதில் கிருபாகரனுக்கு ஏற்பட்ட பரமானந்தத்திற்கு அளவில்லை.

ஆனாலும் அதனை வெளிக்காட்டாமல் “பெட்டர் பரலோகத்தை காமி அப்புறம் நம்மளோட புராண புறா விடாத காதலை பத்தி சொல்றேன்”, என்றுக் கூறிவிட்டு வெளியேறிவிட்டான். “கிறுக்கன்”, என்று வழக்கம்போல் அவனை திட்டிக்கொண்ட கல்கி தன்னுடைய வேலையில் மீண்டும் ஆழ்ந்தாள்.

கிருபாகரன் தன்னுடைய கேபினில் வந்தமரவும் காயத்ரியும்,கிருபாவதியும் இணைந்து வந்து அவனெதிரில் அமர்ந்தனர். “என்ன சிகே காலுல விழுந்து சமாதானப்படுத்திட்டியா?”, என்ற பாட்டியை முறைத்தவன்

“எதுக்கு என் தலையை துண்டாக்குறதுக்கு பிளான் போடுறீங்க பாட்டி?”, என்று கேட்டதில் இருவரும் சிரித்துவிட்டனர்.”நாங்க ரெண்டு பேரும் ஷாப்பிங் போறோம் கண்ணா… கல்கியை கூப்பிடலாம்னு பிளான் பண்ணிருக்கோம்”, என்று காயத்ரி கூறியதற்கு

“நோ வேம்மா… ஏற்கனவே அவ டெர்ரா்… இதுல பாட்டியோட சேர்ந்தா கொஞ்சம் நஞ்சம் வர லவ்வையும் நஞ்சாக்கி விட்டுடுவாங்க”, என்ற கிருபாகரனுக்கு “இப்ப வரைக்கும் அந்த ஐடியா இல்லை… ஆனால் வெள்ளிக்கிழமை இம்ப்ளிமென்ட் பண்ணிடுறேன்”, என்ற பாட்டி “வா காயத்ரி! நாம போகலாம்”, என மருமகளைக் கூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார்.

கிருபாகரனுக்கு இப்பொழுது நிஜமாகவே கவலை ஆரம்பித்துவிட்டது. கல்கி அடித்தாலோ,திட்டினாலோ பதிலுக்கு இவனும் செய்துவிடுவான்.ஆனால் அவனின் காதலை மறுத்துவிட்டால் அவனால் மறுக்க இயலாதே! மனதில் நிலைத்தவளை வேண்டாமென்று!

இப்படியே யோசித்து சூடானதில் வேலை செய்ய விருப்பமின்றி “மோனாவை பார்க்க போகிறேன் …அப்பதான் உன்னையும், பாட்டியையும் சமாளிக்க தேவையான பூஸ்ட் கிடைக்கும்”, என்று கல்கிக்கு ஒரு மெசேஜை அனுப்பிவிட்டு வெளியேறிவிட்டான்.

கிருபாவின் மெசேஜை படித்தவள் அவனுக்கு “என்ஜோய்”,என்ற பதிலை தட்டியதுடன் அவனது செய்தியில் இருந்த உள்ளர்த்தத்தை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.அவரவர் வேலைகளில் அழகிய துளிகளை கடந்திட வியாழனன்று நான்கு மணிக்கு கல்கியை அழைத்து “நானே உன்னை கூட்டிட்டு போறேன் பாவ்க்ஸ்… கொஞ்சம் பேசணும்”, என்று கிருபாகரன் கூறியதும் மறுக்காமல் சரியென்று ஒப்புதலளித்தாள்.

இருவரும் வேலையை முடித்து காரிலேறிய பின்னரும் மௌனத்தை தொடர்ந்ததில் கிருபாகரன் தான் “கல்கி! உன்னை நான் எதுக்காக வேலைக்கு எடுத்தேன் தெரியுமா? அம்மாவும், பிரியா ஆன்ட்டியும் உன்னோட படிப்பை பத்தி, நீ செலக்ட் பண்ணுன பீல்ட் பத்தி என்கிட்ட தான் கேட்டாங்க…

எனக்கு ரொம்பவே ஆச்சரியம்… நம்ம ஊர் பொண்ணுங்க இப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்க மாட்டங்களேன்னு யோசிச்சாலும் எனக்கு அப்பவே உன்னோட கட்ஸ் மேல ஒரு ஹீரோயின் ஒர்க்சிப் வந்துடுச்சு… நான் மேனேஜ்மென்ட்ல வந்ததும் ஜியோலஜி டிபார்ட்மென்ட் கொண்டு வந்தேன்.

பட் அது பிசினெஸ்க்காக ஆரம்பிச்சது… உனக்காக இல்லை… ஆனால் ரஞ்சன் வேலையிலே எனக்கு திருப்தி இல்லாம யாரை போடலாம்னு யோசிச்சப்பதான் உன்னோட ஞாபகம் வந்து கேட்டோம். சோ நான் ஏதோ உள்நோக்கத்தோட உன்னை வேலைக்கு எடுத்தேன் மட்டும் நினைச்சிடாதே!

நான் நாளைக்கு ஆபிஸ்க்கு வரமாட்டேன்… அன்ட் சண்டே பாட்டியோட கிளம்புறேன். நாளைக்கு எல்லோர் முன்னாடியும் இதெல்லாம் சொல்ல விருப்பமில்லாமதான் இப்ப கூட்டிட்டு வந்தேன்”, என்று கூறி முடிக்கும் பொழுது கல்கியின் அபார்ட்மென்ட் வந்திருந்தது.

எதுவும் கூறாமலே காரிலிருந்து இறங்கிய கல்கி அவன் அமர்ந்திருந்த பக்கம் வந்து “கிருபா! நீ சொல்றதுக்கு முன்னாடியே லவ் பண்ற பெண்ணுக்காக வேலையை தர அளவுக்கு நீ ஒர்த் இல்லைனு எனக்கு தெரியுமே!”, என்று வடிவேல் பாணியில் கூறிவிட்டு புன்னகை முகமாகவே அவனுக்கு விடை கொடுத்தாள்.

இப்புன்னகை மறுநாள் அவனது வீட்டிற்கு செல்லும் பொழுது நிலைத்திடுமா? இல்லை நிரந்தரமாக மறைந்திடுமா?

Categories
Deepi On-Going Novels

அத்தியாயம் – 14

கல்கி-14

தலை சாய்ந்திருக்கும் தலைவனை தன் மடி தாங்கினாலும் தன்னகத்தே வித்திட்டு விருட்சமாக வளா்த்து வைத்துள்ள எண்ணத்தை மாற்ற விரும்பிடாத கல்கி தன்னுடைய குரலில் இறுக்கத்தைக் காட்டி “கிருபா எழுந்திரு”, என்றுக் கூறினாள்.

“ப்ப்ச்… கொஞ்சம் நேரம் சும்மா இரு பாவ்க்ஸ்… இந்த நிமிசத்தை என்னை அனுபவிக்க விடு”, என்று கிருபாகரன் அவள் என்ன கூற வருகிறாள் என்பதை கேட்க விரும்பாமல் கூறியதில் அவனின் தலைமுடியை பிடித்து கல்கி ஆட்ட ஆரம்பித்திருந்தாள்.

அதற்கும் அசைந்திடாமல் “வாவ்… ரொம்ப சூப்பரா மசாஜ் பண்ற பாவ்க்ஸ்… இன்னும் கொஞ்சம் வேகமா செஞ்சா நல்லாருக்கும்”, என்றுக் கூறியவனை அடிப்பதற்கு எதுவும் கிடைக்காமல் கல்கி தான் பின்வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

“கிருபா விளையாடாமல் எழுந்திரு”, என்ற கல்கியின் வார்த்தைகளில் இம்முறை எதுவும் கூறாமல் தலையை நிமிர்த்தியவன் எழுந்து அவளுக்கெதிரே இருந்த சேரில் அமர்ந்து கொண்டதோடு அவளையே உற்று நோக்கினான். அவனது வாய் திறந்து கேட்டிடா கேள்விகளுக்கான பதிலை, கண்டறியும் விதமாக இருந்த அப்பார்வைக்கும் பாவையிடம் எவ்வித பிரதிபலிப்பும் ஏற்படவில்லை.

மாறாக “நீ எப்படி குரங்காட்டி வித்தை காட்டுனாலும் என்னோட பதில் நோ தான்… கிருபா! எனக்கு லவ், கல்யாணம் இதெல்லாம் சுத்தமா இஷ்டமில்லை… ஏன் எதுக்குன்னு கேட்டா காரணம் சொல்ல முடியாது…

நான் சொல்ற காரணம் உனக்கு சாதாரணமானதா இருக்கலாம்… பட் எனக்கு அது ரொம்ப பெருசா தெரியலாம், அதனால திரும்ப திரும்ப என்கிட்ட லவ் சொல்லாதே”, என்று கல்கி சற்றே நீளமாக பேசி முடித்தாள்.

“ஓகே! உனக்கு இஷ்டமில்லாததால என்னை வேற பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணிக்க சொல்ற டயலாக் சொல்லாம விட்டுட்ட கல்கி”, என்று கிருபாகரன் கூறியதற்கு கல்கி வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.

“கிருபா! உனக்கென்ன பைத்தியமா? நீ கல்யாணம் பண்ணிக்கிறதும், பண்ணாததும் உன்னோட இஷ்டம்… எனக்கு பிடிக்கலைங்கிறதுக்காக உன்னோட பர்சனல் விசயத்துல சின்னதா கருத்து சொல்ற தப்பை கூட நான் செய்யமாட்டேன்”, என்று கல்கி அவனது முகத்தை நோக்கி கூறியதில் கிருபாகரனின் புன்னகை விரிந்தது.

“இதுதான் நீ பாவ்க்ஸ்… இந்த மாதிரி எல்லோரும் சிந்திக்க மாட்டாங்க… தனக்கு பிடிக்கலைன்னா இப்படி செய், அப்படி செய்னு தன்னோட கருத்துகளை அடுத்தவங்க மேல திணிக்க முயற்சி செய்வாங்க… எந்தவித மேல்பூச்சும் இல்லாத, பச்சோந்தித்தனம் இல்லாத உன்னை லவ் பண்றதை நினைச்சு என்னோட மனசு அவ்ளோ கர்வப்படுது…

உன்னை காதலிக்கவே தைரியம் வேணும்…அந்த தைரியம் எனக்கிருக்குனு தற்பெருமையோட சொல்லிக்கிறப்ப, உன்னை கல்யாணம் பண்ணி டெய்லி உங்கிட்ட அடி வாங்குவேன் அப்படிங்கிறதையும் பெருமையா சொல்லிக்கிறேன் கல்கி”, என்று அப்பொழுதும் தன்னிலையை தெளிவாக எடுத்துரைத்த கிருபாகரனுக்கு கிறுக்கு முத்திவிட்டதோ என்று தான் கல்கிக்கு தோன்றியது.

மேலும் பேசி இருக்கும் இதமான மனநிலையை கெடுத்து கொள்ள விரும்பாத கிருபாகரன் “ஓகே கல்கி! தூங்கலாம்… நாளைக்கு கிளம்பனும், போய் சேர்மன்க்கு ரிப்போர்ட் சப்மிட் பண்ணனும்”, என்று எழுந்தவன் கல்கி தன்னறைக்குள் நுழைந்திட கால் வைக்கும் பொழுது

“பாவ்க்ஸ்”, என்றழைத்து நிறுத்தினான். என்னவென்று பார்வையால் கேட்டவளிடம் “இல்லை மூணாவது ஹனிமூன்க்கு இங்கேயே வருவோமே! நல்லாதானே இருக்கு… வேற இடமெல்லாம் அடுத்தடுத்த பிள்ளைங்களுக்கு போய்க்கலாம்”, என்று கூறியவனை ஒன்றும் செய்ய இயலாமல் பதில் எதுவும் தராமல் தன்னறைக்குள் புகுந்து கொண்டாள்.

கிருபாகரன் தான் “பிள்ளைங்க பிறந்ததும் சொல்றதுக்கு இன்டெரெஸ்டிங்கா நம்ம காதல் வாழ்க்கைல ஒன்னும் நடக்காது போல இருக்கு”, என்று புலம்பி கொண்டே தூங்க சென்றான்.

மேலும் பேசி இருக்கும் இதமான மனநிலையை கெடுத்து கொள்ள விரும்பாத கிருபாகரன் “ஓகே கல்கி! தூங்கலாம்… நாளைக்கு கிளம்பனும், போய் சேர்மன்க்கு ரிப்போர்ட் சப்மிட் பண்ணனும்”, என்று எழுந்தவன் கல்கி தன்னறைக்குள் நுழைந்திட கால் வைக்கும் பொழுது

“பாவ்க்ஸ்”, என்றழைத்து நிறுத்தினான். என்னவென்று பார்வையால் கேட்டவளிடம் “இல்லை மூணாவது ஹனிமூன்க்கு இங்கேயே வருவோமே! நல்லாதானே இருக்கு… வேற இடமெல்லாம் அடுத்தடுத்த பிள்ளைங்களுக்கு போய்க்கலாம்”, என்று கூறியவனை ஒன்றும் செய்ய இயலாமல் பதில் எதுவும் தராமல் தன்னறைக்குள் புகுந்து கொண்டாள்.

கிருபாகரன் தான் “பிள்ளைங்க பிறந்ததும் சொல்றதுக்கு இன்டெரெஸ்டிங்கா நம்ம காதல் வாழ்க்கைல ஒன்னும் நடக்காது போல இருக்கு”, என்று புலம்பி கொண்டே தூங்க சென்றான்.

மறுநாள் சென்னை வந்தவர்களை வரவேற்க யாரும் வரவில்லை என்பதால் ஏர்போர்ட்டில் டாக்சி புக் செய்து முதலில் கல்கியை அவளது அபார்ட்மென்ட்டில் விட்டுவிட்டு “பாவ்க்ஸ்… நல்லா தூங்கு, பாவா கனவுல வந்து தொந்தரவு செஞ்சா உடனே போன் பண்ணிடு…

உங்கிட்ட சொல்றதுக்கு நிறைய கதை இருக்கு. அதையெல்லாம் பேசுவோம்”, என்று கண்சிமிட்டியவனின் கண்களில் குறும்பில்லை, மாறாக அளவுகடந்த அக்கறையே தென்பட்டது.

“குட் நைட் கிருபா… கிறுக்குத்தனமா உளறாம போய் ரிப்போர்ட் ரெடி பண்ணு… நாளைக்கு நாம ரெண்டு பேரும்தான் மீட்டிங்ல உட்காரனும்”, என்று கூறி கல்கி மறையும் வரை பார்த்திருந்தவன் தன் வீட்டிற்கு செல்லுமாறு டிரைவரிடம் கூறினான்.

வீட்டை அடைந்தவன் பெற்றவர்களிடம் சிறிது உரையாடிவிட்டு உல்லாசமாக தூங்க சென்றால் அவனது உள்ளம் உறங்கவிடாமல் கல்கியின் எண்ணங்களை எழுப்பி விட்டு இம்சை செய்தது. அத்துடன் அவளுரைத்த ரிப்போர்ட் ரெடி பண்ணு என்ற வார்த்தையும் ஞாபகத்தில் வந்து அதற்கான வேலையில் இறங்கினான்.

காலையில் அலுவலகத்திற்கு கிளம்பி கொண்டிருந்த கல்கியின் மொபைல் ஒலி எழுப்பியதில் யாரென்று பாா்த்ததில் கிருபாகரன் தான் அழைத்திருந்தான்.சிங்கப்பூரில் இருவரையும் சேர்த்து செல்ஃபி எடுத்தவன்

“பாவ்க்ஸ்… உன்னோட மொபைல் உடைஞ்சிடுச்சு இல்லையா?அதனால் இந்த மொபைலை யூஸ் பண்ணிக்கோ…போட்டோஸ அழிக்கிறதும்,அப்படியே வச்சுக்கிறதும் உன்னோட இஷ்டம்…ஆனால் டெலிட் பண்றதுக்கு முன்னாடி இது மாதிரி அழகான போட்டோ திரும்ப எடுக்க சந்தர்ப்பம் கிடைக்குமானு ஆயிரம் தடவை யோசி…

என்று கிருபாகரன் பேசியதில் அந்த போட்டோகளை அழிக்க சொல்கிறானா இல்லை வேண்டாம் என்கின்றானா எனும் குழப்பமே கல்கிக்கு தோன்றியது.குழப்பத்தினாலா இல்லை பிடித்தத்தினாலா என்று தெரியாமலே கல்கியும் அந்த நிழலோவியங்களை அழித்திடவில்லை.

கல்கியின் நினைவு நரம்புகளை நிகழ்காலத்திற்கு தரையிறக்கும் விதமாக மொபைல் மீண்டும் ஒலி எழுப்பியதும் அதனை அட்டென்ட் செய்ததில் “குட் மாா்னிங் பாவ்க்ஸ்”, என்ற கிருபாகரனின் குரல் குதூகலமாகக் கேட்டது.

பதிலுக்கு குட் மாா்னிங் கூறியவளிடம் “கல்கி இன்னிக்கு தானே சோ்மனோட பா்ஸ்ட் மீட்டிங் உனக்கு என்றுக் கேட்டவனுக்கு ஆமாம் என்றதும் “சூப்பா் பாவா மட்டும் தனியா எத்தனை தடவை மாட்டிருக்கேன் இந்த தடவை நீயும் சேர்ந்து மாட்டுனது ரொம்ப சந்தோசமா இருக்கு…

எனக் கிருபாகரன் கூறியதில் “உனக்கு கண்டிப்பா கிறுக்கு தான் பிடிச்சிருக்கு கிருபா…நான் வேலைக்கு கிளம்பிட்டு இருக்கேன்…இந்நேரம் என்னை கெட்ட வார்த்தை பேச வச்சிடாதே”, என்று எகிறிவிட்டு அழைப்பை துண்டித்த கல்கிக்கு அவன் கூறிய சோ்மன் மீட்டிங் சற்று உறுத்தலை ஏற்படுத்தியது.

ஏனென்றால் காயத்ரி ஒரு முறை கல்கியிடம் “இந்த கன்ஸ்ட்ரக்சன் கம்பெனிக்கு மட்டுமில்லை, நம்மளோட மீதி இருக்குற பிசினெஸ் எல்லாத்துக்கும் சேர்மன் ஒரே ஆள் தான்… இதை நான் ஸ்டார்ட் பண்ணுனதால இங்க மேனேஜ்மேன்ட் எல்லாம் என்னோட பார்வையிலே இருக்கு…

ஆனால் எந்த ஒரு பிரச்சினையா இருந்தாலும் அவங்க தலையீடு கண்டிப்பா இருக்கும் கல்கி”, என்று கூறியிருந்தார். ஆனால் அந்த சேர்மன் யாரென்று அவர் குறிப்பிடவில்லை.

இப்பொழுது கிருபாகரனும் சற்று அளவுக்கதிகமாக சேர்மனை பற்றி பயமுறுத்துவது போல் கூறியதில் யாரந்த மனிதர் என்ற எண்ணம் கல்கியினுள் அலுவலகம் வரும் வரை நீடித்தது.

அலுவலகத்தை அடைந்த பொழுது கல்கி எதிர்பார்த்த மாதிரி இல்லாமல் எப்பொழுதும் இருப்பதை விட சற்று அதிக மகிழ்ச்சியுடனே அனைவரும் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

மற்றவர்களின் முகத்தில் கண்ட மகிழ்ச்சியில் கிருபாகரன் தன்னை பயமுறுத்த அவ்வாறு கூறியுள்ளான் என முடிவு செய்த கல்கி அவனது மேல் ஒரு கடுப்பை ஏற்படுத்தி கொண்டு தன்னுடைய வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள். சரியாக பதினொரு மணிக்கு அவளை அழைத்த கிருபாகரன் நேராக எம் டி கான்பரென்ஸ் ஹாலுக்கு வருமாறுக் கூறினான்.

அவனின் அழைப்பிற்காகவே காத்திருந்தவள் கிருபா மெயில் செய்திருந்த ரிப்போர்ட்டுடன், தான் தயாரித்த ரிப்போர்ட்டையும் எடுத்து கொண்டு மீட்டிங்கிற்கு சென்றாள்.

கல்கி சென்ற பொழுது தயா,காயத்ரி மட்டுமே அமர்ந்திருந்தனர்.அவர்களை பார்த்ததும் “குட் மோர்னிங் மிஸஸ் காயத்ரி அன்ட் மிஸ்டர் தயா”, என்றவள் அவளுக்கான இருக்கையில் அமரும் முன்னர் தனது கையில் இருந்த ரிப்போர்ட்டுகளின் நகலை இருவர் முன்னும் வைத்துவிட்டு கிருபாகரன் வருகிறானா என வாசல் பக்கம் பார்த்தவாறு அமர்ந்தாள்.

கல்கி வந்து பத்து நிமிடங்கள் கழித்தே உள் நுழைந்தவன் அங்கிருந்த எக்ஸ்டென்ஷனில் எண்களை அழுத்திவிட்டு ஸ்பீக்கரை ஆன் செய்தவன் “கல்கி! லெட்ஸ் ஸ்டார்ட்… சேர்மன் இஸ் ஆன் லைன்”, என்று விட்டு அவளது அருகில் வந்தமர்ந்தான். ஆனால் அவனது கட்டளைக்கு கீழ்படியாமல் “முதல லேட்டா வந்ததுக்கு சாரி கேளு கிருபா… அன்ட் கம்பெனி பார்ட்னர்ஸ் இருக்காங்க, அவங்களுக்கு விஷ் பண்ணு”, என அவனுக்கே அதிகாரம் செய்தவளை எண்ணி போன் வழியாக கேட்டு கொண்டிருந்தவருக்கு புன்முறுவல் பூத்தது.

“சாரி கல்கி”, என்ற கிருபாகரனை முறைத்து கொண்டிருந்தவளை “ஓகே! என்ன நடந்துச்சுனு முதல சொல்லுங்க”, என்று காயத்ரி இடையிட்டு திசை திருப்பினார்.

“அஞ்சு வருசத்துக்கு முன்னாடி நாம காஜ்ஜியர்ல கட்டி கொடுத்த ஒரு ரிசார்ட் இடிஞ்சு விழுந்துட்டதாகவும், அதுக்கு அம்பது கோடி நஷ்ட ஈடு தரலைன்னா நம்மளோட கம்பெனி மேல கேஸ் போடுவோம்னு ஒரு மெயில் அந்த ரிசார்ட்டோட ஆஃபிஸியல் ஐடியில இருந்து வந்திருந்துச்சு…

அதை கன்பார்ம் பண்ணிகிட்டு நானும், மிஸ்.கல்கியும் காஜ்ஜியர் போய் பார்த்தோம்… அப்பதான் ஓனர் மாறுனது தெரிஞ்சது, அன்ட் அவங்க நம்மளை ஏமாத்துனதை மிஸ்.கல்கி நிரூபிச்சதும் நம்ம சைடு இருந்து எடுக்க வேண்டிய ஆக்சன்ஸ் எல்லாம் எடுத்தாச்சு”, என்று கிருபாகரன் கூறி முடித்ததும்,

தயா “கல்கியிடம் எப்படி கண்டுபிடிச்சிங்க மிஸ்.கல்கி?”, என்றுக் கேட்டார்.”பர்ஸ்ட் இந்த மாதிரி ஒரு ஆப்பர்சூனிட்டி கொடுத்ததுக்கு என்னோட நன்றியை தெரிவிச்சுக்குறேன்”, என்று ஆரம்பித்த கல்கியை பார்த்த கிருபாகரனின் மைன்ட் வாய்ஸ் “ஆரம்பத்துலயே எனக்கு ஆப்படிச்சுட்டியே அக்கம்மா”, என்றலறியது.

அதற்கு மேல் அவனை எண்ணவிடாமல் “நாங்க காஜ்ஜியர் போனப்பவே அவங்க நடந்துகிட்ட விதமே சரியில்லை… அதுக்கடுத்து இடிஞ்ச கட்டிடத்தை சோதனை பண்ணுனப்ப அவங்க மேல தப்பு இருக்குறது நிரூபணம் ஆயிடுச்சு… நீங்க இந்த ஸ்லைட்ஸ் கொஞ்சம் பார்த்தா அதுக்கடுத்து நான் எக்ஸ்ப்ளெய்ன் பண்றது இன்னும் தெளிவா புரியும்”, என்ற கல்கி ப்ரொஜெக்ட்டரில் சில படங்களை ஓடவிட்டாள்.

“இதுல இருக்குறது ஹவானா ஓல்ட் டவுன்(Hawana old town)… இது கடலுக்கு ரொம்ப பக்கத்துல இருந்ததால கடல் தண்ணியிலே இருக்குற உப்பு தன்மையால சீக்கிரமா சிதிலமாயிடுச்சு… இதே பார்முலாவை தான் காஜ்ஜியர்ல யூஸ் பண்ணிருக்காங்க…

நாம உபயோகப்படுத்துற சிமெண்ட்ல இருக்குற ஜிப்சமும்(Gypsum),அல்கலை சல்பேட்டும்(Alkalai sulfate) உப்பு வகையை சேர்ந்தது… அப்படிங்கிற பட்சத்துல டி ஐசிங் சால்ட்டும்(De icing salt),ஸீ வாட்டர் ஸ்ப்ரேவும்(Sea water spray) கட்டடத்து மேல தெளிச்சா மழை பெய்றப்ப அந்த கலவை உட்புறம் நுழைந்து சுலபமா ஒரு கட்டடத்தை இடிஞ்சு விழ வைக்கும்…

அதுவும் குறுகிய காலத்துல நடக்கும்… சாதாரணமா பார்க்குறவங்களுக்கு இந்த வித்தியாசம் தெரியாது. ஆனால் ஜியாலஜி படிக்கிறப்ப இதுவும் ஒரு முக்கியமான விஷயமா சொல்லி தருவாங்க… அதை வச்சு பார்த்தப்ப தான் இடிஞ்சு கிடந்த கற்களில் உப்பு படிஞ்சிருந்ததுக்கான அடையாளம் தெரிஞ்சது”, என்றுக் கூறி சற்று நிறுத்தியவள் உரையை முடித்துவிட்டாள் என்று எண்ணும்பொழுதே “இப்ப தியரியும், பிராக்டிகலும் ஒன்னோட ஒன்னு பிணைஞ்சதுனு உங்களுக்கு புரிஞ்சிருக்கும் மிஸ்டர்.தயா”, என்று அவர் கல்கியின் இன்டெர்வியூ பொழுது பேசியதற்கு கொட்டு வைத்துவிட்டே அமர்ந்தாள்.

கல்கி கூறியதைக் கேட்ட காயத்ரியும், கிருபாகரனும் தங்கள் இதழ்களுக்கிடையில் புன்னகையை புதைத்ததை கண்ட தயா கிருபாகரனுக்கு ஒரு மெசேஜை தட்டிவிட்டதுடன் “செக் யுவர் மொபைல் மிஸ்டர்.கிருபா”, என்று ஆணையிட்டார்.

அதை திறந்து பார்த்தவன் அதிலிருந்த “மகனே! எனக்கே இந்த நிலைமைன்னா நீ ரொம்பவே பாவம்… வெல்கம் டு அடி வாங்காமல் பல்பு வாங்குவோர் சங்கம்”, என்ற வார்த்தைகளை பார்த்தவன் அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து காயத்ரிக்கு அனுப்பி விட்டு நிமிரும்பொழுது அங்கிருந்த போன் ஒலி எழுப்பி அப்பொழுதைய விபரீதத்தை அவனுக்கு உணர்த்தியது.

அவனது முகத்தையே பார்த்து கொண்டிருந்த கல்கி அவனது அருகே குனிந்து “என்னாச்சு கரன்?”, என வினவியதற்கு “சேர்மன் இப்ப வருவாங்க”, என்றுரைத்தான்.

“சோ வாட்?”, என்று அதற்கும் பதில் கேள்வி கேட்டவளின் காதருகில் சென்று “கிழிகிழினு கிழிச்சு தோரணம் கட்டி என்னை தொங்க விடுவாங்க பாவ்க்ஸ்”, என்று பாவமான குரலில் கிருபாகரன் கூறி கொண்டிருக்கும் பொழுதே அந்த அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்த கல்கி உள்ளே நுழைந்தவரை கண்டு இவரா? என்று ஆச்சரியத்தில் கடலின் ஆழத்தை காட்டும் கண்களுடன் எழுந்து நின்றுவிட்டாள்.

உள்ளே நுழைந்தவர் முன் நுணலாவாளா? இல்லை நுட்பமானவள் எனும் பெயர் பெறுவாளா?

Categories
Deepi On-Going Novels

அத்தியாயம் – 13

கல்கி – 13

உயிரினுள் உலவும் மூச்சாக, தன் உள்ளத்துள் உதைத்து கொண்டிருப்பவளின் நினைவுகளுடன் இரு நாட்களை மிகவும் இலகுவாக கடத்திய கிருபாகரனுக்குத் திங்கள் காலை மிகவும் ஆரவாரத்துடனே விடிந்தது.

ஞாயிறன்று இரவு மிகவும் தாமதமாக வந்து உறங்கியவனை எழுப்பி விட அவனதறைக்குள் நுழைந்த காயத்ரி, “தயா…! இங்க சீக்கிரம் வாங்க”, என்று கூச்சலிட்டாா். காயத்ரியின் கூச்சலில் பதறியடித்து மேலே வந்த தயா கண்டதோ தாயின் மடியில் படுத்து கொண்டு கையால் காற்றில் கிறுக்கிக் கொண்டிருந்த கிருபாகரனை தான்….

“என்னாச்சு காயூ? எதுக்காக அப்படிக் கத்துன?”, என்று கேட்ட தயாவை முறைத்துவிட்டு, “நான் உங்க சீமந்த புத்திரனை எழுப்ப வந்தப்ப கால் உடையல அப்படினு தனியா புலம்பிட்டு இருந்தான்… அதான் கூட சேர்ந்து புலம்புறதுக்கு உங்களை கூப்பிட்டேன்… நீங்க திருவாரூர் தோ் மாதிரி ஆடி அசைஞ்சு வரதுக்கு முன்னாடி என்னை இழுத்து பிடிச்சு
உட்கார வச்சு கிறுக்கிகிட்டு இருக்கான்…”

என்று கொலைவெறியுடன் கூறிய காயத்ரியிடமிருந்து தான் தப்பிக்கும் பொருட்டு, ” கண்ணா…! என்ன பண்ற இதென்ன காலையிலேயே அம்மாவை டென்ஷன் செய்ற பழக்கம்?” என்று சற்று அதட்டல் தொனியில் கூறிய தயாவை, “ரொம்ப கெட்ட கனவுப்பா அதனால் தான் எழுந்து காலை பாா்த்துகிட்டு இருந்தேன்… அந்நேரம் அம்மா வரவும் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்குறேன்…இது ஒரு தப்பா?”, என்று கதையளந்த கிருபாகரனிடம், “அப்படி என்ன கனவு கண்ணா?”, என இப்பொழுது காயத்ரி ஆா்வமாகக் கேட்டார்.

“எனக்கும், பாவ்க்ஸ்க்கும் கல்யாணம் முடிஞ்சதுக்கப்புறம் ஒரு நாள் அப்பா போன் பண்ணி எலீசா வந்துட்டானு சொல்றாா்… நானும் அவசரம் அவசரமா கிளம்பி ரூமை விட்டு வெளியே போகக் கால் வைக்குற வரைக்கும் அமைதியா இருந்த கல்கி, ‘எங்க போற கிருபா’னு கேட்டா…

நானும் மறைக்கனும் அப்படிங்கிற எண்ணமில்லாம எலீசாவை பாா்க்கப்போறேனு சொல்லிட்டு அடுத்த ஸ்டெப் வச்சதும் இன்னொரு காலுல ஒரு கட்டையை வச்சு போட்டுட்டா… அதுல ப்ராக்சா் (Fracture) ஆன மாதிரி வந்த கனவோட பாதிப்பை தான் நீங்க பாா்த்தீங்கம்மா…” என்று கிருபாகரன் கூறி முடிக்கவும் காயத்ரி வாய் விட்டு சிாிக்க, தயா பேஸ்தடித்துப் போய் நின்றிருந்தாா்.

“தயா…! குற்றம் செய்றவங்களை விட செய்ய தூண்டி விடுறவங்களுக்கு தான் தண்டனை அதிகம் தெரியுமா?”, என்ற காயத்ரியின் கால் வாரல்களுடன் அவ்வீட்டின் காலை நேரம் மிகவும் மகிழ்ச்சியுடன் களைகட்டியது.

அதே மகிழ்ச்சியுடன் அலுவலகம் கிளம்பியவனுக்கு அங்கே தனக்கு முன்னரே வேலையில் ஆழ்ந்திருந்த கல்கியை கண்டு அவனது இதழ்களில் அழகிய புன்னகை பூத்தது.

அன்றையக் காலைப் பொழுது கலகம் ஏதுமின்றி கடந்திட மதிய உணவு இடைவேளைக்கு பின் வந்த ஒரு மின்னஞ்சல் கல்கி, கிருபாகரன் இருவரையும் சந்திக்கச் செய்தது. அதுவரை அவனை பாா்த்திட விரும்பாமல் தன்னுடைய வேலையில் மூழ்கி இருந்தவளை இந்த மெயில் அவனை கண்டிடும் நிா்பந்தத்தை ஏற்படுத்தியதை வெறுத்தவளாக கிருபாகரனை காண அவனது அறையை நோக்கிச் சென்ற கல்கியின் கண்கள் கனலை கக்கிக் கொண்டிருந்தன.

கல்கியின் நிலையை போன்றே கிருபாகரனும் அனல் வீசும் பார்வையைத் தான் எதிரிலிருந்த லேப்டாப்பில் செலுத்திக் கொண்டிருந்தான். கல்கி உள்ளே நுழைந்ததை கூட உணராமல் இருந்தவனிடம், “கிருபா…! என்ன நடந்துச்சு? அவங்க சொல்ற மாதிரி நடக்குறதுக்கான வாய்ப்பே இல்லை”, என்று கல்கி கோபமாக உரைத்ததில் தெளிந்தவன் அவளை அமருமாறு கூறினான்.

“நேத்து நைட் நடந்துருக்குனு சொல்லிருக்காங்க கல்கி… பட் நமக்கு மெயில் அனுப்புனது இப்பதான்… இதுல என்ன இருக்குனு தெரியாம நாம அவங்க கண்டிஷன்ஸ் எதையும் ஏத்துக்க தேவையில்லை… நாம ரெண்டு பேரும் இன்னிக்கு ஈவினிங் பிளைட்ல காஜ்ஜியர்( Khajjiar இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் ஓா் அழகிய நகரம்) கிளம்புறோம்…

இதுக்கு முன்னாடி இருக்குற ரிப்போர்ட்ஸ் எல்லாம் எடுத்துக்கோ… நான் நம்மளோட லீகல் அட்வைஸரை டெல்லியிலே இருந்து அங்க கிளம்பச் சொல்லிட்டேன்… உண்மை தெரிஞ்சதுக்கப்புறம் பார்த்துக்கலாம்”, என்று கூறிய கிருபாகரனின் குரலில் இருந்த கோபம் கல்கிக்கு நன்கு புரிந்தது.

“ஓகே கிருபா!”, என்று கிளம்ப முனைந்தவளை, “கல்கி! வீட்டுக்குப் போய் தேவையான டிரஸ் எல்லாம் எடுத்துகிட்டு ஏர்போர்ட் வந்துடு… அதுக்குதான் டைம் சரியா இருக்கும்”, என்றவன் தன்னுடைய மொபைலை எடுத்து யாருக்கோ அழைத்துப் பேச ஆரம்பித்தான்.

அவனையே சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்த கல்கி தன்னுடைய கேபின்க்கு வந்து பேகை எடுத்து கொண்டு கிருபாகரன் கூறியதை செயல்படுத்தக் கிளம்பினாள். வீட்டிற்கு வந்து ஏர்போர்ட்டிற்கு கிளம்பிச் சென்றவள் அங்கு கிருபாகரனை கண்டு சற்று ஆச்சரியமடைந்தாள். ஆனால் அவனது முகத்தில் ஓடிய எரிச்சலில் எதுவும் பேசாமல் அவனது அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

பிளைட்டிற்கு செல்லும் வரை மிகவும் தீவிரமாக போனில் பேசிக் கொண்டிருந்த கிருபாகரன் தங்களுக்கான இருக்கையை தேடி அமரும் பொழுது கல்கியே அவனுக்கு பிடித்தமான ஜன்னலோர இருக்கையை விட்டு தந்தாள். “தேங்க்ஸ் கல்கி”, என்றதோடு, “இப்பவே கொஞ்சம் தூங்கிக்கோ கல்கி… நாம ரீச் ஆனதும் நிறைய வேலை இருக்கும்… ஒழுங்கா ரெஸ்ட் எடுக்க முடியாது”, என்ற கிருபாகரனின் வார்த்தைகளில் இருந்த உண்மை புரிந்ததால் கல்கியும் கண்களை மூடி உறங்க முயற்சி செய்தாள். என்ன முயன்றாலும் உறக்கம் என்பது துளியளவும் எட்டி பார்க்காமல் போன காரணத்தினால் கண்களை திறந்து கிருபாவை பார்த்திட அவனோ ஆகாயத்தை வெறித்துக் கொண்டிருந்தான்.

வேலைக்கு சேர்ந்த இத்தனை மாதங்களில் கிருபாகரன் இவ்வாறு இருந்தால் அடுத்து அவனிடம் சிக்குபவா்கள் அடி வாங்காமல் தப்புவதில்லை என்பதை கல்கி நன்கு உணா்ந்திருந்தாள்.

இருந்தாலும் கிருபாகரனின் இந்நிலையை விரும்பிடாத கல்கி, “கிருபா…! இதுக்காக நீ ஏன் டல்லா இருக்க? அவனுங்க கண்டிப்பா ஏதோ கோல்மால் செஞ்சிருக்கானுங்க… அதை மட்டும் நாம கண்டுபிடிச்சா போதும்… என்று வழக்கமில்லாத வழக்கமாக ஆறுதலுரைத்தாள்.

“நான் அதையெல்லாம் யோசிக்கல பாவ்க்ஸ்… இந்த காஜ்ஜியா்க்கு தான் நம்மளோட மூணாவது குழந்தை பிறந்த பிறகு ஒரு சாா்ட் ஹனிமூன் வர பிளான் பண்ணியிருந்தேன்… இவனுங்க இப்ப செஞ்ச வேலையால நான் இன்னொரு இடம் கண்டுபிடிக்கனும்”, என்று கூறியவனை எதுவும் செய்யாமல் திரும்பிய கல்கிக்கு இதழோரத்தில் இளநகை தோன்றியது.

கல்கியின் புன்னகையை கண்டவன், “பப்பு…! இப்படியெல்லாம் சிரிச்சா பாவா கண்ட்ரோலை இழந்துடுவேன்.. பின்விளைவுகளுக்கு நீ என்னை அடிக்கக் கூடாது… அதனால சிரிக்காம ஏன் சிரிச்ச அப்படினு சொல்லிடு”, என்று கிருபாகரன் கூறியதற்கு அவனை பார்த்து அதே சிரிப்புடன்,

“ஒரு பொண்டாட்டிக்கே இங்கே வழியில்லையாம்… இதுல ஒன்பது பொண்டாட்டி கேக்குதாம் காலொடிஞ்சவனுக்கு”, என்று கூறிய கல்கி அவனுக்கு அடுத்த ஆப்பைக் கூறும் முன் தன்னுடைய கையினால் அவளது வாயை மூடினான்.

ஆனால் கல்கியோ அவனது கையை எடுத்து விட்டதுடன், “அதெப்படி கிருபா? உங்களோட அடுத்த கேள்விக்கு நான் பதில் சொல்லாம விடுறது? பின்விளைவுகளுக்கு நான் அடிக்கலாம் மாட்டேன்… அறுத்துடுவேன்”, என்று என்று கழுத்தைச் செய்கையால் காட்டிட கிருபாவின் முகம் ஆயிரம் வோல்ட்ஸ் பல்பாக மின்னியது.

அது ஏனென்று கேட்டு அவனின் பதிலை தெரிந்து கொள்ளும் ஆர்வமில்லாமல், “இப்ப போற இடத்துல பிரச்சினையை ஈஸியா சமாளிச்சுடலாமா கிருபா?”, என யோசனையுடன் கேட்டாள்.

“அவனுங்க மொள்ளமாரித்தனம் செஞ்சா, பிசினெஸ்ல இருக்குற நாம அதை விட கேடியா இருப்போம்னு அவன் மறந்துட்டான்… அவன் எப்படி இந்த ஏமாத்து வேலையை செஞ்சான் அப்படிங்கிறதை கண்டுபிடிக்கதான் நாம போறோம்… சோ அதை பத்தி கவலைப்படாதே”, என்று மிகவும் எளிதாக கூறிய கிருபாகரனின் குரலில் சமாதானமடைந்த கல்கி இப்பொழுது நிம்மதியாக கண்களை மூடி உறங்கத் தொடங்கினாள்.

விமானம் காங்ரா(Gangra) ஏர்போர்ட்டை அடைந்து தரை இறங்கும் வரை கல்கியின் உறக்கத்தை கலைத்திடாதவன், அனைவரும் இறங்கிய பின்னரே அவளை எழுப்பி அழைத்து வந்தான். அவர்கள் காங்ராவை அடைந்த பொழுதே இருட்ட ஆரம்பித்திருந்தது.

ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்ததும் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டிரைவர் காருடன் காத்திருந்தார். “கல்கி! இங்க இருந்து காஜ்ஜியர் போக மூணு மணி நேரமாகும்… போற வழியிலேயே சாப்பிட்டு போகலாமா? இல்லை அங்கே போய் சாப்பிடுவோமா?”, என்று கிருபாகரன் கேட்டதற்கு “சாப்பிட்டே போவோம் கிருபா!”, என்று கல்கி மிகவும் சாந்தமாக பதிலளித்தாள்.

உடனே ஏர்போர்ட்டிலிருந்து சிறிது தூரத்தில் அமைந்திருந்த ஒரு உணவகத்திற்கு அழைத்து சென்றவன் ரொட்டியுடன் மத்ராவும்(Madra) வேண்டும் என்று கூறினான். ஆர்டர் எடுத்தவர் நகர்ந்ததும், “மத்ரா அப்படினா என்னது?”, என்றாள் கல்கி.

“கொண்டைக்கடலையை தயிர் கறியில் சமைக்கிறதுதான் மத்ரா…. ஊறவச்ச கடலையை ஏலக்காய், கிராம்பு, கருப்பு ஏலக்காய், கிராம்பு பொடி, சீரகம், புளி, மஞ்சள் பொடி எல்லாத்தையும் தயிரோட சேர்த்து கை விடாம சின்ன தீயில் வைச்சு கிண்டிகிட்டே இருக்கனும்…. அதுல போடுற வாசனை பொருட்களோடு உப்பும் சேர்த்துக்கனும்…. இந்த மாதிரி சமைக்கிறதுதான் பஹடி(Pahadi) அதாவது உண்மையான மலை சுவை நிறைந்த உணவு அப்படினு சொல்லுவாங்க”, என்று கிருபாகரன் கூறிய செய்முறையை செய்து கொண்டு வந்து வைத்திருந்ததை எடுத்து சாப்பிட்ட கல்கிக்கு அதன் சுவை நாவின் நாளங்களை எழுப்பி இரண்டு ரொட்டியை அதிகமாக உள்ளே தள்ள செய்தது.

சாப்பிட்டு முடித்ததும் பயணத்தை தொடங்கிய பொழுது டிரைவர் அருகில் அமராமல் தன்னருகில் வந்தமர்ந்த கிருபாகரனை புருவம் நெறிய பார்த்தவள் ஏதும் கூறாமல் தன்னுடைய ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு பாடல்களை கேட்க ஆரம்பித்தாள்.

சிறிது நேரத்தில் தன்னுடைய காதிலிருந்து ஹெட்செட் உருவப்படுவதை உணர்ந்து கண்களை திறந்தவள் கிருபாகரன் அந்த பாடலை கேட்டு முகம் சுளிப்பதை பார்த்து கண்களில் கனலை ஏற்ற தயாரானாள்.

அவனும் அதனை புரிந்தவனாக எதுவும் டிரைவர் முன்பு பேசிட விரும்பாமல் தன்னுடைய ஐ பேடை எடுத்து அதிலிருந்த பாடல்களை அவளுக்காக ஒலிக்க விட்டதுடன் கண்களை மூடிக் கொண்டான்.

அவ்வாறு கண்களை மூடிய பொழுது கல்கியின் தலையை இழுத்து தன்னுடைய தோளில் சாய்த்துக் கொண்டதோடு, அவளது கைகளை எடுத்து தன்னுடைய ஒரு கையால் பிடித்தும் கொண்டான். கைகளில் அவன் தந்த அழுத்தத்தை தாண்டிய ஒரு பாதுகாப்புணர்வு அவனது தோளில் இருந்து தலையை நிமிர்த்தவோ, கையை உருவிடவோ கல்கியை அனுமதிக்கவில்லை.

அவர்கள் அடைய வேண்டிய இடத்தை அடைந்து டிரைவர்க்கு கிருபாகரன் பணம் தந்த பொழுது, “ஆப் சுந்தர் ஜோடி ஹைன் சாப்”, என்றுக் கூறிவிட்டு சென்றதில் கிருபாகரன் வாய்விட்டு சிரித்ததோடு, “கல்கி! அவன் நாம ரெண்டு பேரும் அழகான ஜோடின்னு சொல்லிட்டு போறான்”, என்றதோடு அவளது முகத்தை பார்க்க அதில் முதல்முறையாக கண்கள் கலங்கிய நிலையில் இருந்த கல்கி அவனுக்கு தென்பட்டாள்.

ஏன்? எதற்கு? என்றுக் கேட்டு அவளை வேதனைப்படுத்த விரும்பாமல் தங்களுக்கென்று புக் செய்திருந்த ரெசார்ட்டிற்கு அழைத்துச் சென்றான். அது இரு அறைகள் ஒரு மினி கிட்சேன், ஒரு ஹால், ஒரே ஒரு குளியலறை கொண்ட குடிலாக இருந்தது.

கல்கி எதையோ எண்ணி மனதிற்குள் குமைகிறாள் என்பது புரிந்தவனாக அவளது அறைக்குள் அழைத்துச் சென்றவன், நெற்றியில் அழுத்தமான முத்தமொன்றை பதித்து கட்டிலில் அமர வைத்து, “பப்புக்குட்டி… எதுவும் யோசிக்காமல் தூங்கு, காலையிலே நிறைய வேலை இருக்கு… குட் நைட்”, என்று கூறிவிட்டு அங்கிருந்த மற்றொரு அறைக்குள் நுழைந்து கொண்டான்.

கிருபாகரன் விட்டுச் சென்ற பின் சிறிது நேரம் தலையைத் தாங்கியவாறு அமர்ந்திருந்தவள் அப்படியே படுத்துவிட்டாள். மறுநாள் கிருபாகரன் வந்து கதவு தட்டியதும் அப்படியே எழுந்து வந்தவள் அவன் தயாராகி இருப்பதை பார்த்து, “வெய்ட் கரன்… இன்னும் டென் மினிட்ஸ்ல நான் ரெடி ஆயிடுறேன்”, என்று கூறியதோடு தன்னுடைய உடைகளை அள்ளிக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்துவிட்டாள்.

கிருபாகரன் தான் கல்கி விளித்த கரனில் மகிழ்ச்சியுடன் கலந்த அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தான். அவள் குளிக்க சென்றிருந்ததால் குடிலுக்கு வெளியில் வந்து இயற்கையை ரசித்து கொண்டிருந்தவனின் முன்பு அடுத்த பத்தாவது நிமிடத்தில் ரெடியாகி வந்து நின்றவளை அப்பொழுதே கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கிருபாகரனுக்கு தலை விரித்தாடியது.

இருப்பினும் கடமை அழைத்ததில் பிரச்சினையின் மூலகாரணமான இடத்திற்கு சென்றனர். அங்கே சென்ற பொழுது இவர்களது லீகல் அட்வைஸருடன் பத்துப் பேர் புடை சூழ ஒருவன் அமர்ந்திருந்தான். கிருபா சென்று அமர்ந்ததும் சம்பிரதாய அறிமுகப்படலத்திற்கு பின், “என்ன பிரச்சினை?”, என்று கிருபாகரன் கேட்டான்.

“அதான் மெயில் அனுப்பியிருந்தோமே!”, என்று கூறியவனை, “ராம் தாகூர்… திரும்ப ஒரு தடவை சொல்லுங்க”, என்று அழுத்தமாக ஆணையிட்டான்.

“நேத்து திடீர்னு காலையில மூணு மணிபோல கட்டிடம் தூள் தூளா இடிஞ்சு விழுந்துடுச்சு… வாங்கி ஒரு வருசத்துல இடிஞ்சுடுச்சுனு வாங்குனவன்கிட்ட கேட்டா, நான் நிலத்தை ஆராய்ச்சி செஞ்சு தான் கட்டுனேன்… ஆராய்ச்சி செஞ்சவங்களும், கட்டுனவங்களும் ஒரே கம்பெனினு உங்களை கைகாட்டுனான்…

அவன் சொன்னதும் எனக்கு தெரிஞ்சுடுச்சு… நீங்க ஆராய்ச்சினு சொல்லி பணம் பறிச்சதோட, தரமில்லாத பொருளை வச்சு கட்டடம் எழுப்பிருக்கீங்க… அதான் தாக்கு பிடிக்கலை… நான் இதுல போட்ட முதலீட்டோட, நீங்க ஏமாத்துனத்துக்கும் சேர்த்து நஷ்ட ஈடா அம்பது கோடி தந்துடுங்க…

உங்க மேல வழக்கு போடாம மன்னிச்சு விட்டுடுறேன்”, என்று அவன் பேசி முடிக்கும் வரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த கிருபாகரன் கல்கியின் புறம் திரும்பி, “கல்கி! உங்க டீமை கூட்டிட்டு போய் செக் பண்ணுங்க”, என்று அவளிடம் உரைத்து விட்டு அமைதியாகி விட்டான்.

“என்னது ஒரு பொண்ணு செக் பண்ணி காசு தர போறியா?”, என்று எகிறிய தாகூரை கல்கி முறைப்பதை பார்த்தவன், அவளை போகுமாறு சைகை செய்துவிட்டு, “அவங்ககிட்ட உன்னோட வாய் திறந்து நீ ஏதாவது பேசுனா, அடுத்த வார்த்தை பேச உயிரோட விடமாட்டாங்க…

அப்படி அவங்க உன்னை போட்டுத் தள்ளி பிரச்சினை எதுவும் வந்துச்சுனா, கிருபாகரன் கல்கியாகிய நான் அதை ஒண்ணுமே இல்லாம செஞ்சுடுவேன்… சோ எங்க வேலை முடியுற வரைக்கும் அமைதியா உட்கார்… இல்லை உன்னை ஒரேடியா தூங்க வச்சுடுவேன்”, என்று சிரித்துக்கொண்டே கிருபாகரன் மிரட்டியதில் தாகூரும் அவனது அல்லக்கைகளும் அமைதியாகி விட்டனர்.

இந்த கட்டடத்தை கட்டியவன் மதராஸி, அதனால் பிரச்சினை செய்தால் பணம் கிடைக்கும் என்றெண்ணியவர்கள் கிருபாகரனைப் பற்றி அறியாமல் அவர்களே அவனிடம் மாட்டிக்கொண்டனர்.

அன்றைய நாளும், அதற்கடுத்து வந்த ஒரு வாரமும் அவ்விடத்தை கல்கி தன் ஆராய்ச்சி புத்தியோடு மட்டுமின்றி, புலனாய்வு புத்தியோடும் சல்லடையாக சலித்ததில் அவர்களுக்குச் சாதகமான விஷயத்தை கண்டறிந்துவிட்டாள்.

அவளறிந்ததை வைத்து கிருபாகரனும் சில பல வேலைகள் செய்து தாகூரை உள்ளே தள்ளியதோடு, அவனது மேல் மோசடி வழக்கும் தொடர்ந்துவிட்டான். அனைத்து பிரச்சினைகளும் முடிந்து ஊருக்கு செல்லும் நாளிற்கு முந்தைய இரவில் இருவரும் குடிலில் அமர்ந்து பாலருந்தி கொண்டிருக்கும் பொழுது கிருபாகரன் வேகமாகத் தன்னறைக்குள் சென்று அங்கிருந்த கிடாரை எடுத்து வந்தமர்ந்தான். கல்கி பார்த்து கொண்டிருக்கும் பொழுதே அவளது கண்களை பார்த்தவாறே,

I’m lookin’ for a place to go so I can be all alone
From thoughts and memories
So that when the music plays I don’t go back to the days
When love was you and me

Oh, oh moja droga jacie kocham
Means that I love you so
Moja droga jacie kocham
More than you’ll ever know
Kocham ciebie calem serce
Love you with all my heart
Return and always be
My melody of love

என்று பாபி வின்டனின் வரிகளை இசையாக மீட்டியதோடு இனிய குரலிலும் பாடினான்.

பாடி முடித்த கையோடு கல்கியின் முன் வந்து மண்டியிட்டவன், “நான் இப்ப சுவாசிக்குற இந்த சுவாசம் சுருங்கி, ரத்தமெல்லாம் சுண்டுனதுக்கப்புறமும், உன்னோட சுண்டுவிரலை பிடிச்சுக்கிட்டு இந்த உலகத்தோடு ஒவ்வொரு மூலைக்கும் போய், இயற்கையை ரசிக்கிறப்ப, அதுக்கு போட்டியா இருக்குற உன்னோட மனசோட அழகை ஆராதிக்கனும் பாவ்க்ஸ்”, என்று உள்ளம் உருக்கும் குரலில் கூறியவன் தரையில் அமர்ந்தவாறு அவளது மடியில் தலை சாய்த்திருந்தான்.

மடி சாய்ந்தவனை மணவாளனாக்கிடுவாளா? மனம் குமைந்திட காரணம் கூறி மனதை உடைத்திடுவாளா?

சுவாசம்
சுருதி சேர்ந்திட
சுந்தர இதயத்தின்
சிறைக்கதவு

சிதறிடும் நாளெதுவோ!

Categories
Deepi On-Going Novels

அத்தியாயம் – 12

கல்கி – 12

கல்கியின் கை நடுக்கத்தை உணர்ந்த கிருபாகரன் உடனடியாக அவளது கைகளை விடுவித்து விட்டு, “பாவ்க்ஸ்…! எதுவா இருந்தாலும் நம்ம ஊர்ல போய் பேசிக்கலாம்… சிங்கப்பூர்ல போயி என்னோட சிங்கக்குட்டி அடி வாங்கிட்டு வந்துருக்கானேனு என் அம்மாவை புலம்ப வச்சிடாதே”, என்று கூறிவிட்டு இன்னும் கேப்ஸுல் கீழிறங்க எவ்வளவு நேரமாகும் என பார்க்கத் தொடங்கிவிட்டான்.

கிருபாகரன் எழுந்து சென்றதும் டேபிளில் இருந்த மொஜிடோவை எடுத்துக் குடித்த கல்கி தன்னை ஆசுவாசப்படுத்தி கால் மேல் கால் போட்டு கொண்டு, “கிருபா! இங்க வந்து உட்கார்….. கீழ போறதுக்கு முன்னாடி உன்கூட பேசணும்”, என்று அதிகார தோரணையில் உத்தரவிட்டாள்.

அவளது உத்தரவில் எதுவும் பேசாமல் எதிரில் வந்தமர்ந்தவனிடம், “என்னோட கை நடுக்கம் உனக்கு கிண்டலா தெரிஞ்சதா?”, என்று கூர்மையான பார்வையுடன் கேட்டதில் எதிரிலிருந்தவனோ வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்திருந்தான்.

“சின்னப்புள்ளத்தனமான கேள்வியா இருக்கே கல்கி….. நான் கையை பிடிச்சதும் இவன் லவ் சொன்ன அன்னிக்கே பல்லை தட்டிருந்தா, இங்க வந்து நம்மகிட்ட பேச தைரியம் வந்துருக்குமான்னு தான் உனக்குத் தோணிருக்கும்….. என்னை உன்கிட்ட லவ் சொன்னப்ப அடிக்காம விட்டதால் உன் மேல உனக்கு வந்த கோபம் தான் அந்த கை நடுக்கத்துக்கு காரணம்”, என்று கூறிய கிருபாகரன் இப்பொழுது அவளது எதிரில் முடிந்தால் அடித்துக் கொள் என்ற தோரணையில் இருந்தான்.

“ஆமாம்… நீ சொன்னது கரெக்ட்… ஒரே ஒரு விஷயம் தவிர, பல்லை தட்டிருக்கனும்னு நினைக்கல, சங்கை அறுத்துருக்கணும்னு நினைச்சேன்”, என்று கல்கி கூறுவதற்கும் கேப்ஸுல் கீழிறங்கி அதனுடைய கதவு திறப்பதற்கும் சரியாக இருந்தது.

கேப்ஸுலை விட்டு கீழிறங்கி வெளியே வரும் வரை எதுவும் பேசாமல் வந்த கிருபாகரன், “கல்கி! நம்மளுக்கு கேப் புக் பண்ணிருக்கேன்… நீ தங்கியிருக்குற அபார்ட்மென்ட்ல தான் நானுமிருக்கேன்… சோ ஒரே கேப்ல போய் அங்க வைச்சு பேசிக்கலாம்”, என்று கூறினான்.

கல்கியும் எதுவும் பேசாமல் கேப் வந்ததும் அமைதியாக ஏறி அமர்ந்தாள். அபார்ட்மென்ட் வந்ததும் இருவரும் மேலேறி வரும் வரை இருந்த மௌனம் நீங்க, “கிருபா! உன்கிட்ட இப்பவே பேசி முடிச்சிடனும்னு நினைக்கிறேன்… இல்லை, என்கிட்ட இருந்து இப்போதைக்கு தப்பிக்கிறதா நினைச்சு பேசுறதைத் தள்ளிப்போடலாம்னு ஒரு எண்ணம் உனக்கு இருந்தால், எப்பவுமே பேசமுடியாது”, என்று மிகவும் அழுத்தமாகக் கூறினாள்.

“தட்ஸ் குட்… எனக்கும் இப்பவே பேசணும், எங்க வச்சு பேசலாம்னு நீயே முடிவெடு”, என்ற கிருபாகரனுக்கு அவனது அறைக்கே செல்லலாம் என்று அவனை நோக்கி கல்கி தன் சுட்டுவிரலை நீட்டினாள்.

“ஓகே! லெட்ஸ் கோ”, என்றவாறு தன்னுடைய அறைக்கு அழைத்து சென்றவன், “அஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணு கல்கி… ரெப்ரெஷ் பண்ணிட்டு வாரேன்”, என்று சென்றவன் டிரஸ் மாற்றிக் கொண்டு இரண்டு ஐஸ்கிரீம் பவுல்களுடன் வந்தமர்ந்தான்.

“சொல்லு கல்கி”, என்று கையில் ஒரு பவுலை எடுத்துக்கொண்டவன் அவள் எடுத்துக்கொண்டாளா? இல்லையா? என கண்டுகொள்ளாமல் ஐஸ்கிரீமை ரசித்து சுவைக்க ஆரம்பித்தான்.

“எனக்கு லவ் பண்றதுல எல்லாம் சுத்தமா இஷ்டம் கிடையாது கிருபா… வேண்டாம்னு சொன்னதுக்கப்புறமும் எனக்கு டின்னர் அரேன்ஜ் பண்ணி, நாடு விட்டு நாடு வந்து ஸீன் போடுறதால உன்னோட மனசுல ஹீரோவா இமேஜின் பண்ணிக்காத… உன்னை வெறும் ஸீரோன்னு நினைச்சு மதிக்காம போய்கிட்டே இருப்பேன்…

இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங்… இன்னொரு முறை இந்த மாதிரி பிஹேவ் பண்ணுன அடிச்சு முகரையை பேத்துருவேன்”, என்று கல்கி கோபப்படாமல் நிதானமாக பேசியதைக் கேட்டவன் ஐஸ்கிரீம் காலியான பவுலை கீழே வைத்துவிட்டு நிமிர்ந்து அமர்ந்தான்.

“கல்கி! உன்னை லவ் பண்றேன் அப்படிங்குற காரணத்துக்காக நீ பேசுறதுக்கெல்லாம் பல்லை காட்டிட்டு இருப்பேன்னு நினைக்காத… முகரையை பேத்துருவேன் சொல்றதெல்லாம் ரொம்பவே அதிகம்… எனக்கு உன்னை பிடிச்சிருக்குனு சொல்றதை விட, தைரியமா இருக்குற உன்னோட ஆட்டிட்யுட் பிடிச்சிருக்கு…

உனக்காக நான் சிங்கப்பூர் வரலை… நான் வந்து டூ டேஸ் ஆச்சு, சோ இஷ்டத்துக்கு கற்பனை பண்ணாம இரு… உனக்கு இப்ப லவ் பண்ண பிடிக்கலைன்னா நோ ப்ரோப்லேம்…

ஊருக்கு போனதும் உன்னை பொண்ணு கேட்டு வாரேன்… கல்யாணம் பண்ணிப்போம், அதுக்கடுத்து உனக்கு தோணுச்சுன்னா லவ் பண்ணு… இல்லையா? வீட்டுல சண்டை போட ஆளில்லாம இருக்குற காயத்ரி கூட சண்டை போட்டு ரணகளமாக்கு… நானும், தயாவும் வேடிக்கை பார்க்குறோம்…

பட் எங்கிட்ட பேசுறப்ப வார்த்தைகளை பார்த்து பேசு… இல்லை, நீள்ற கையை நிரந்தரமில்லாமாக்கிடுவேன்”, என்று மிரட்டலும், கேலியும் கலந்து கூறிய கிருபாகரனுக்கு கல்கியின் இகழ்ச்சியான புன்னகையே பதிலாக கிடைத்தது.

“ஓ! நீ மிரட்டுறியா? லவ் பண்ணவே யோசிக்குற நான் எப்படி கல்யாணம் பண்ணிக்க மட்டும் சம்மதிப்பேன்னு நினைச்ச….. நீ ஒதுங்கி இருக்குற வரைக்கும் தான் மரியாதை… உனக்கெல்லாம் கையை நீட்ட மாட்டேன், கழுத்தை திருகிடுவேன்…. அதை மனசுல வச்சுகிட்டு ஒதுங்கி போ”, என்ற கல்கி எதிர்பாரா நொடியில் கிருபா அவளது கழுத்தை பிடித்திருந்தான்.

மிகவும் அழுத்தி பிடிக்காமல் அவள் மூச்சு விடுவதற்கு ஏற்றவாறு பிடித்திருந்தவன் அவளது கைகளை மற்றொரு கையால் இறுக்கி பிடித்தவாறு “கழுத்தை திருக பர்ஸ்ட் நீ இருக்கணுமே!”, என்று அவளது கண்களை பார்த்து கூறிக் கொண்டிருக்கும் பொழுதே ஆ… ஆ…. என்ற அலறலுடன் கைகளை உதறினான்.

கிருபா கைகளை பிடித்ததுமே தன்னுடைய முழங்காலினை சிறிது மடக்கி தூக்கிய கல்கி அவனை முழுபலத்துடன் எட்டி உதைத்திருந்தாள். ‘”என்ன… என்னோட பலம் இப்ப தெரியுதா? கல்யாணம்னு ஒன்னு உனக்கு நடக்க முன்னாடியே பேமிலி பிளானிங் பண்ணி விட்டுடுவேன்…. பி கேர்புல்…. நாளைக்கு ஏர்போர்ட்க்கு கிளம்புறதுக்கு எனக்கு வேக்கப் கால் பண்ணிடு… குட் நைட்”, என்றுவிட்டு தன்னுடைய ஹாண்ட்பேகை எடுத்தவள் அதிலிருந்த பெப்பர் ஸ்பிரேவை எடுத்து அந்த அறையில் ஆங்காங்கு தன்னுடைய மூக்கை மூடியவாறு தெளித்துவிட்டதில் திருப்தியடைந்து வெளியேறினாள்.

அவளது செய்கையினால் கோபப்படவேண்டிய கிருபாகரனோ “உன்னை கல்யாணம் பண்ணி குறைஞ்சது பத்து பிள்ளைங்களாவது பெத்துக்க பிளான் பண்ணிருக்குற எனக்கு நீ பேமிலி பிளானிங் பண்ணிடுவியா?”, என்று இதழ்களில் புன்னகை பூத்திட தன்னுள் கேட்டவாறு கண்களில் காதலுடன் நின்றுகொண்டிருந்தான்.

பெப்பர் ஸ்பிரே தெளித்ததில் மூக்கில் நெடி ஏறி தொடர்ந்து தும்மல் வரவும் நனவுலகிற்கு திரும்பியவன் அவ்வளவு நேரம் நின்றிருந்த ஹாலிலிருந்து பெட்ரூமினுள் வேகமாக நுழைந்ததும் செய்த முதல் வேலை காலையில் எழுவதற்கு அலாரம் வைத்ததுதான்…..

சரியான நேரத்திற்கு எழுப்பவில்லையென்றால் அவனது ரவுடி அவனை சென்னை செல்லுமுன் சாத்துக்குடி ஜூஸாக்கிடுவாளே !என்ற அழகிய கற்பனையே அலாரம் வைக்க தூண்டியது….

அலாரத்தின் அலறலுடன் எழுந்து கடமையாக கல்கியை எழுப்பி விட்டபின்னரே கிருபாகரன் கிளம்ப தொடங்கினான். இருவரும் கிளம்பி ஏர்போர்ட்க்கு செல்லும் வழியெங்கும் கிருபாகரனும் டிரைவரும் வாய் மூடாமல் பேசியவண்ணம் வந்ததில் கல்கி கடுப்பாகி போனாள்.

கேப் விட்டு இறங்கியதும் இருவரது லக்கேஜ்களையும் ஒரே ட்ரோலியில் வைத்து கிருபாகரன் தள்ளிக் கொண்டு வர, எதுவும் கூறாமல் அவனுடன் அமைதியாக வந்த கல்கியை கண்டவனுக்கு “ஏதோ பெருசா பிளான் போடுறாளோ?”, என்ற எண்ணம்தான் தோன்றியது.

” டேய் கிறுக்கா! அவ என்ன பிளான் பண்ணினாலும் யோசிக்காம நடையை கட்டு”, என்று மனசாட்சி மண்டையில் கொட்டியதால் கிருபாவும் ஏர்போர்ட் நடைமுறைகளை முடிக்கும் வரை அமைதியாகவே வந்தான். பிளைட்டில் அருகருகே அமர்ந்து விமானம் விண்ணில் பறக்க தொடங்கியதும்,மேகங்களை பார்த்துக் கொண்டிருந்தவனை “கிருபா”, என்ற கல்கியின் குழப்பம் குழைத்த குரல் திரும்ப செய்தது.

“என்ன கல்கி?”, என்றுக் கேட்டதும் “பாலி கொடுத்த புடவை நீ வாங்குனதா?”, என்ற அரும்பெரும் சந்தேகத்தைக் கேட்டவளை கிருபாகரன் முறைத்த முறைப்பில் அவ்வழியே சென்ற ஹோஸ்டஸ் “எனி ப்ரோப்லேம் மேடம்?”, என்று வினவினாள்.

“நத்திங்”, என்று கல்கி பதிலளித்த பின்னரும் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த கிருபாகரனை பார்த்தவாறேதான் சென்றாள்.கிருபாவும் அவளையே பார்த்துக்கொண்டிருக்க “அவங்களை அப்புறம் சைட்டடி… இப்ப பதில் சொல்லு”, என்ற கல்கியின் புறம் திரும்பியமர்ந்தவன்

“உனக்கு ஏதாவது தரனும் அப்படின்னு எனக்கு தோணுச்சுனா நானேதான் கொடுப்பேன்…. எனக்கு இந்த இன்டெர்மீடியேட்டர் வைச்சு செய்ற எந்த வேலையும் பிடிக்காது…. அன்ட் நீ புடவை கட்டுனா ரொம்ப அமைதியான,அடக்க ஒடுக்கமான,பொண்ணா தெரியுற….. எனக்கு அந்த கெட்டப்ல உன்னை பார்க்க பிடிக்கலை…

சோ நம்ம கல்யாணத்துக்கு வேற டிரஸ் பார்த்து செலக்ட் பண்ணிடு”, என்றுக் கூறிவிட்டு தன்னுடைய கையிலிருந்த கல்கியின் பார்த்திபன் கனவில் கண்களை பதித்து கொண்ட கிருபாகரனுக்கு தன்னருகில் இருந்த கல்கியின் பாா்வையைக் கண்டிட இயலவில்லை.

சென்னை ஏர்போர்ட்டை அடைந்து வெளிவரும் வரை அவரவர் எண்ணங்களில் சுழன்றபடி வந்தவர்களை தயாவும், காயத்ரியும் புன்னகை முகத்துடன் வரவேற்றனர். இருவரும் ஒரு சேர “காங்கிராட்ஸ் அன்ட் வெல்கம் பேக் கல்கி”, என்று அவளிடம் கைகொடுத்து வாழ்த்து தெரிவித்த நேரத்தில் கிருபாகரன் பார்க்கிங் நோக்கி நடக்க தொடங்கியிருந்தான்.

” வா கல்கி….. போற வழியில் பேசிக்கலாம்” என்ற காயத்ரி கல்கியின் கைப்பற்றியவாறு காரினை அடைந்த பொழுது கிருபாகரனும், தயாவும் பின்னிருக்கையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

“என்ன தயா?”, என்று காயத்ரி கேட்டதும், தயாவை முந்திக் கொண்டு “அம்மா எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு…. அப்பா உங்க பக்கத்துல உட்கார்ந்தா ஏதாவது பேசிட்டே டிரைவ் பண்ணுவார்…. அதான் பின்னாடி வர சொல்லிட்டேன்….

உங்க ரெண்டு பேர்ல யார் டிரைவ் பண்ணுனாலும் எங்களுக்கு பிரச்சினை இல்லை…. அதனால நீங்களே ஓட்டுங்க”, என்ற கிருபாகரனை பார்த்து புன்னகை சிந்திய காயத்ரி தானே டிரைவிங் சீட்டில் அமர்ந்தவர் கல்கியின் புறம் திரும்பி “நீயும் கண்ணை மூடி ரெஸ்ட் எடும்மா…. உன்னோட அபார்ட்மென்ட் வந்ததும் எழுப்பி விடுறேன்”, என்றுரைத்து விட்டு காரை நகர்த்த தொடங்கினார்.

அவர்கள் மூவரின் செய்கைகளையும் சற்றும் கண்டு கொள்ளாமல் வந்த கல்கியை கண்டு காயத்ரி பெருமிதத்துடன் கண்ணாடி வழியே மகனை கண்டிட அவனோ நன்கு தூங்கியிருந்தான். “இவன்லாம் என்னத்தை லவ் பண்றானோ?”, என்று மானசீகமாக தலையிலடித்துக் கொண்டு கல்கியின் அபார்ட்மென்டிற்கு முதலில் வந்தவர் கல்கி இறங்கும் நொடியில் “ரெஸ்ட் எடுத்துகிட்டு மண்டே(Monday)வேலைக்கு வந்தால் போதும் கல்கி… டேக் கேர்”, என்றவாறு அவளிடம் விடைபெற்றார்.

கல்கி இறங்கும் பொழுதாவது கிருபாகரன் கண் முழித்திடுவான் என்று எதிர்பார்த்தவர் அவன் இன்னும் தூங்கிக் கொண்டிருப்பதை கண்டு “தயா இவன் நிஜமாவே அந்த பொண்ணை லவ் பண்றானா?ஒரு சின்ன லவ் பீல் கூட காமிக்க மாட்டேங்குறான்…. அந்த மோனா,எலிசாவை பார்க்குறப்ப மட்டும் வாயிலே ஈ போறது கூட தெரியாம நிப்பான்…

இப்ப தூக்கம் தான் முக்கியம்கிற மாதிரி தூங்குறான்… இவன்லாம் எப்படிதான் லவ்க்கு கல்கிகிட்ட சம்மதம் வாங்கப்போறானோ?”, என்று புலம்பிக் கொண்டே வீடு வந்தவர் பின்னால் திரும்பி பார்த்தால் தயாவும் தூக்கியவாறு இருந்தார்.

இருவரையும் எழுப்பி உள்ளே வந்தமர்ந்ததும் மூவருக்கும் வெயிலுக்கு இதமாகக் குடித்திட கையில் ஜிகர்தண்டாவுடன் வந்த காயத்ரி கிருபாகரனிடம் அவன் சென்ற வேலையைக் குறித்து மட்டுமே பேசினார். தயாவும் அவ்வாறே பேசவும், “நீங்க ரெண்டு பேரும் கல்கியை பத்தி எதுவும் கேட்கலை?”, என்று கிருபாகரனே ஆரம்பித்தான்.

“கண்ணா இது உன்னோட லவ்…. பெத்தவங்களா எங்ககிட்ட சொன்னப்ப எங்களுக்கும் பிடிச்சிருந்ததால சம்மதம் சொன்னோம்… கல்கிக்கும்,உனக்கும் நடுவுல நடக்குற எந்த விஷயமும் எங்களுக்கு தெரியனும்னு அவசியமில்லை…..

அன்னிக்கு சொன்னதுதான் இப்பவும் சொல்றோம்…… உன்னோட மனநிலையை மட்டும் பார்க்காதே…. கல்கி என்ன நினைக்கிறா? அவளோட முடிவு என்ன? அப்படினு அவளோட உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்து நடந்துக்கோ…. உன்னோட ஈகோ,முரட்டுத்தனம் எதுவும் இந்த விஷயத்துக்கு நல்லதில்லைனு மனசுல ஞாபகம் வச்சுகிட்டு செய்”,என்று தயா நீளமாக பேசியதை காயத்ரியும் தன் தலையசைப்பின் மூலம் ஆமோதித்தார்.

பெற்றவர்களுக்காக சரி என்று தலையாட்டிய கிருபாகரன் இதனை நடைமுறைப்படுத்துவானா?என்பது அவனே அறிந்திடா விஷயம்…. அது மட்டுமின்றி திங்களன்று அவன் தெளிவுபடுத்தி கொள்ள வேண்டிய கேள்வி ஒன்று அவனது மனதை அரித்துக் கொண்டிருந்தது.

அவனறிந்த விடை உண்மையாயின் கல்கியின் விஷயத்தில் கிருபாகரனின் செயல்முறைகள் ஜீவனை சேர்த்திடுமா? ஜீவிதத்தை தொலைத்திடுமா?

காற்றானக் காதல்
காரிகையின் உளியால்
கண்ணன் கையில்
கைகோர்த்திடும் நாள்
கனிந்திடுமா!