Categories
On-Going Novels Rajeswari Sivakumar

அத்தியாயம் – 18

எபி 18
“இதோ.. இப்ப தவிக்கறீங்க பாருங்க, இந்த தவிப்புக்கு தான் நான் அப்பல்லாம் எதையும் சொல்லல, உங்ககிட்ட சண்டை பிடிக்கல. தெரியாம ஒரு தப்ப செய்துட்டு, அதனால பாதிக்கப்பட்ட என்னைவிட நீங்க அதிகமா வருந்திட்டு இருக்கும் போது நான் எப்படி உங்களை திட்டமுடியும்? உங்ககிட்ட கத்த முடியும்?”
“அன்னைக்கு என்கிட்ட வீட்டு சாவிய கொடுக்காததுக்கு, நீங்க பட்டகஷ்டத்தை கண்ணுல பார்த்த பிறகும் நான் எப்படி உங்ககிட்ட கோபப்பட முடியும்? கல்யாணத்துக்கு நீங்க என்னை வேணும்னேவா லேட்டா கூட்டிட்டு போனீங்க?உங்களுக்கு திடீர்னு வேலை வந்ததால தானே அப்படி செய்தீங்க?அப்பவும் என்னை ரெண்டு நாள் முன்னாடியே எங்க அம்மா கூட அனுப்பாம தப்பு செய்துட்டேன்னு எத்தனை தடவை உங்களை நீங்களே குறை சொல்லி,எவ்வளவு தூரம் வருத்தப்பட்டீங்க. அதேபோலத்தானே அந்த பணம் விஷயமும். ஏற்கனவே தப்பு செய்துட்டோம்னு கில்டியா பீல் பண்ணிட்டு இருக்கறவங்ககிட்ட போய் எப்படி சண்ட பிடிக்கமுடிய்ம்?” என அவள் நியாயம் கேட்டதும் வாயடைத்துப்போனான் ஹரி.
‘கொஞ்ச நேரம் முன்னாடி ஊருக்கு நானும் கூட வருவேன்,இல்லன்னா நீங்களும் போகாதீங்கன்னு சின்னபிள்ளத்தனமா அடம்பிடித்தவள் இவள்தானா?’ என்ற சந்தேகம் இவனுக்கு வந்தது.
கோபம்,கொஞ்சல்,அநியாயம்,அடம்,அடாவடி,அத்துமீறல்… இதெல்லாம் எப்போது எப்படி செய்யவேண்டுமென புரிதல் தம்பதியருக்குள் வந்துவிட்டால் எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் அவர்களை ஒன்றும் செய்யாது!
“இவ்வளவு பொறுப்பா பேசற நீ ஈர டவலை பெட்ல போட்டதுக்கு ஏன் சண்ட பிடிக்கற? உன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்ஸை பார்கலன்னா அப்படி திட்டற லக்ஸ்?” என அப்பாவியாய் ஹரிக் கேட்டதும்,
“முன்னாடி நீங்க செய்த தப்பெல்லாம் ஒரே ஒரு தடவை உங்களுக்கு தெரியாம உங்களை மீறி நீங்க செய்தது. அப்படி தெரியாம செய்ததுக்கு நீங்க பீல் பண்ணி, அடுத்து முறை அப்படி ஒன்னு நடக்காம பார்த்துகிட்டீங்க.”
“ஆனா இப்ப சொன்னது… நான் டெய்லி கழுதையா கத்தியும் காதுல வாங்காம அதையே திரும்ப திரும்ப செய்யறதுமில்லாம அப்படி பண்ணதுக்கு பீல் பண்ணி ஒரு ஸாரி கூட சொல்லறது இல்ல.அப்புறம் நீங்க காலையில எழுந்த உடனே கையில போனை தூக்குறீங்க தானே? ஊரில் இருக்கறவங்களுக்கும் எல்லாம் குட்மார்னிங், சூப்பர், வாவ், சொல்லி கமண்ட் பண்ண தெரியுதில்ல? அப்படியே நம்ம பொண்டாட்டி என்ன செய்து வச்சிருக்கான்னு பார்த்து, அதுக்கு ஒரு ஸ்மைலிய தட்டிவிட்டா கொறஞ்சியா போய்டுவீங்க? நான் என்ன உங்களுக்கு அவ்வளவு முக்கியம் இல்லாம போயிட்டேனா? இந்த சின்ன சின்ன விஷயங்களை நான் என்னோட ஹஸ்பன்ட் கிட்ட இருந்து எதிர்பார்க்கறது என்ன தப்பா?அப்படி என் எதிர்பார்ப்பை வாயத்திறந்து சொல்லியும் அதை நிறைவேத்தாம தினமும் சொதப்பி வைக்கிற உங்கள நான் திட்டாம கொஞ்சுவனா?” எனக் கோபமாக கேட்டாள்.
மனதுக்கு பிடித்தவரிடமிருந்து பெரியதாக தான் எதிர்பார்க்கவேண்டுமென ஏதாவது விதிமுறைகள் இருக்கிறதா என்ன? லூசுத்தனங்களும்,அல்பத்தனங்களுக்கும் அன்புக்குரியவரிடமே வெளிப்படுகின்றன.
அடிப்பாவி! சண்டப்பிடிக்க இவளுக்கு கிடச்ச அல்பமான காரணத்தைப் பாரேன்!’ எண்ணியவன் அதை வெளியே சொல்ல பயந்து,“அப்ப… என்னப் பண்ணா நீ கொஞ்சுவ லக்ஸ்?” என ஜொள்ளிக் கொண்டே கேட்டான்.
“இப்ப நீங்க ஊருக்கு கிளம்பாம என்கூடவே இருந்தா!” என கண்ணடித்து அவள் சொன்னாள்.
‘இவ்வளவு சொல்லியும் கேட்காம இப்படி அழும்பு பண்றியே.. உன்னை என்ன பண்றது?’ என பார்வையால் இவன் கேட்க,
‘என்ன வேணா பண்ணிக்கோ!’ என பதில் பார்வைப் பார்த்தாள்.
‘இப்படியே இருந்துவிட கூடாதா…’ என மனம் எண்ணினாலும் நேரம் அதற்கு துணை நிற்கவேண்டுமே! தனது இன்றைய ஆகாய பயணம் இன்னும் அந்தரத்தில் தான் தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த ஹரி, “லக்ஸ் சோப்பு! இன்னும் நான் என்னப்பண்ணட்டும்னு நீ சொல்லவேயில்ல. சொல்லு. நான் இப்ப என்ன செய்யனும்னு நீதான் சொல்லனும். நீ என்ன சொன்னாலும் நான் அதை அப்படியே செய்யறேன்” என்றான்.
கர்வம், கவுரவம், நான் என்ற அகங்காரம்… இதையெல்லாம் விடுத்து முழுமொத்தமாய் தன் துணையிடம் சரணடைவது என்பது வெற்றிக்கு மெனக்கெடாமல் அதை அப்படியே முழுதாய் அனுபவிப்பது.இந்த சூட்சமத்தை அறிந்தவர்கள் ‘வாழ்க்கையை வாழ்கிறார்கள்!’ அறியாதவர்கள் அதை தண்டனையாய் அனுபவிக்கிறார்கள். எது வேண்டும் என தெரிந்தெடுக்கும் உரிமை அவரவர் கையில் ஆண்டவன் கொடுத்துவிட்டான்.தெளிந்த தேர்வு தெவிட்டாத இன்பத்தைத் தரும்.
என்ன சொல்ல முடியும்? போகாதே என சொல்லவும் முடியாது, நானும் வரட்டுமா? என கேட்கவும் முடியாது திணறியவள் இறுதியில், அவனின் மார்பில் சாய்ந்து கண்ணீர் குரலில் “என்ன சொல்லட்டும்?” எனக்கேட்டாள்.
அவளின் முகத்தை நிமிர்த்தி அதை துடைத்தவனோ,”அச்சோ… என்னோட ‘சில்க்’குட்டிடா நீ!” என்றான்.
அவனின் சில்க் கவனத்தை இந்த கொஞ்சல் கொஞ்சம் திசை திருப்ப, “என்ன சில்க்?” என இவள் மூக்கை உறிஞ்சிக்கொண்டு கேட்டாள்
“சாஃப்ட் சில்க்!அப்படியே பொழுதுக்கும் அணைச்சிட்டு இருக்கனும்ன்னு தோணற அளவுக்கு சாஃப்ட்!” என சொன்னதை செயலில் கட்டினான் ஹரி.
“ம்ஹும்… இல்ல, நீங்க சும்மா சொல்றீங்க.அப்படி இருக்கனும்னு நினைக்கறவங்க எப்படி விட்டுட்டு போவாங்க?” என அவள் அதிலேயே நின்றாள்.
“இப்ப இப்படி அடம் பண்றவ,முதலிலேயே நாம ரெண்டு பேரும் சேர்ந்தே கிளம்பலாம்னு சொல்லி இருக்கலாம்ல லக்ஸ்!” தாங்கமுடியாது மீண்டும் கேட்டான்.
“அப்ப… சொன்னா நீங்க ஆபிஸில் பெர்மிஷன் கேட்டுட்டு இருக்கனும்… அது உங்களுக்கு கஷ்டமா இருக்கும்.ஒரு ட்வென்டி டேஸ் தானே ஈஸியா அட்ஜஸ்ட் பண்ணிடலாம்னு நினச்சேன்.ஆனா… நாள் நெருங்க… நெருங்க,என்னால நார்மலா இருக்க முடியலை.அதுவும் இன்னைக்கு காலையில இருந்து ஒரே அழுகை அழுகையா வருது.என்னால கன்ட்ரோல் பண்ணவே முடியலை!அதான்…” என இழுத்தாள்.
‘இவனுக்கும் இதே மனநிலை தானே இருந்தது.என்ன… இவன் அறிவாளி…புத்திசாலி…நாலும் தெரிந்த வல்லவன்’!அதனால் இவனுக்கு அது முன்கூட்டியே தெரிந்துவிட்டது.இவனின் லக்ஸ் சோப்பு… வயசிலும்,அறிவிலும் அனுபவத்திலும்… இவனை விட கொஞ்சம் குட்டி! அதான்… ‘லேட் பிக்கப்’ என மனதினுள் நினைத்த ஹரி,
“எனக்கும் சேம் பீல் பேபி!” என வாயை விட்டு மீண்டும் வம்பில் மாட்டினான்.
“அப்ப போகாதீங்க…இல்ல என்னையும் உங்க கூட கூட்டிட்டு போங்க!” என பிரியா மீண்டும் ஆரம்பிக்க,
“என்னது…. மறுபடியும் மொதல்ல இருந்தா….!?” என அலறினான் ஹரி.

இருபத்தியிரண்டாம் நாள் அதிகாலை….
ஷோல்டர் பாகை மாட்டிக்கொண்டு,டிசர்ட்,ஜீன்ஸ் போட்டு ‘அல்ட்ராமாடர்ன்’ நங்கையாக வந்துக்கொண்டிருந்த பிரியாவை தொலைவிலிருந்தே பார்த்துவிட்ட ஹரி,”இன்டர்நேஷனல் லக்ஸ்!’ என முணுமுணுத்து, மெல்லியதாய் விசிலடித்தான்.
அவனை தொலைவிலேயே பார்த்தவள் பூவாய் மலர்ந்து சிரிக்க நினைக்கும் போதே எதையோ கண்ணில் கண்டு கடுப்பானாள்.
தன்னருகே வந்தும் நிற்காமல் அப்படியே நடந்து செல்பவளை,”லக்ஸ் பேபி! எப்படிடா இருக்க?மாமனை ரொம்ப மிஸ் பண்ணியாடா சோப்பு!”என அவளை கண்ணால் விழுங்கிக்கொண்டே, பாய்ந்து அவள் கையைப் பிடித்து கேட்க,
அதற்கு அவள்,“ஹேய்… யார் நீங்க? உங்களை இதுக்கு முன் நான் பார்த்ததே இல்ல! சும்மா போயிட்டிருக்கற என்னை கையப் பிடிச்சி இழுக்கறீங்க!” எனக் கடுப்பாக சொல்லி,தன்னை பிடித்து நிறுத்திய அவன் கையை விலக்கி, நிற்காமல் வேகமாக நடந்துக்கொண்டே இருந்தாள்.
“ஹோய் லக்ஸ் என்ன விளையாட்டுடா இது.நான் உனக்காக எவ்வளவு நேரமா காத்துட்டு இருக்கேன்.நீ என்னைக் கண்டுக்காம போற!” என சொல்லிக்கொண்டே அவளுடன் நடந்தவனை திரும்பியும் பார்க்காது பிரியா போய்க்கொண்டே இருந்தாள்.
‘ராட்சஷி! அன்னைக்கு மாஞ்சி மாஞ்சி அழுததென்ன… இன்னைக்கு என்னை சட்டைப்பண்ணாம போறதென்ன….இவளை ரிசீவ் பண்ண நடுராத்திரியில இருந்து நான் இங்க காத்துட்டு இருந்தா… என்னைக் கண்டுக்காம போறதப்பாரேன்! என மனதினுள் புலம்பிக்கொண்டே தன் மனைவியை தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தவனுக்கு அப்போது தான் சட்டையில் ‘ஷாக்’ அடித்தது. அப்படியே நின்றுவிட்டான்.
‘அய்யோ! அவசரத்துல என்னக் காரியம் பண்ணிட்ட-டா ஹரி! இப்ப இவளை எப்படி மரம் இறக்க போற?’ தலையில் கையை வைத்துக்கொண்டான்.
ஒரு வழியாய் அப்படி இப்படி அவனின் லக்ஸிடமிருந்து தனியாக பயணப்பட அனுமதிவாங்கிவிட்டான் ஹரி.அன்று காலையில் கூட ‘லக்ஸ விட்டுட்டு நான் எப்படி இருப்பேன்?’ எனக் கவலைப்பட்டவன், இப்போது, ‘நான் இல்லாம என் சோப்பு எப்படி இருக்கும்?’ எனக் கவலைப்பட ஆரம்பித்துவிட்டான். எதுக்காவது கவலைப்படறதே இவனுக்கு வேலையா போச்சு.
அன்று அங்கிருந்து ஊருக்கு கிளம்பும்போது, ‘என்னை ஏர்போர்ட்டில் ரிசீவ் செய்ய வரும்போது, நாம ரெண்டுப்பேரும் சேர்ந்து ஒன்னா வாங்கின அந்த டிசர்ட் போட்டுட்டு வரனும்,நானும் அதைத்தான் போட்டுட்டு வருவேன்.இதை திரும்ப இனி நான் சொல்லவே மாட்டேன், நான் வர அன்னைக்கு நீங்க இது நியாபகம் இல்லாம அந்த டிசர்ட் போட்டிருக்கலைன்னா நான் வந்த ஃப்ளைட்டிலேயே அப்படியே ஊருக்கு திரும்ப வந்துடுவேன்!’ பிரியா சொன்னது நியாபகம் வரவேண்டிய நேரத்தில் வராது, இப்போது வந்து அவனை மிரட்டியது.
அன்னைக்கு அப்படி வாய்கிழிய,தன் நெஞ்சை தொட்டுக்காட்டி,’இங்க எழுதிவச்சியிருக்கேன். இந்த ஜென்மத்துக்கு இல்ல, அடுத்த ஜென்மத்துக்கு கூட இது மறக்காது!’ என ஜம்பம் பண்ணிவிட்டு, இன்று கிளம்பும் அவசரத்தில் கைக்கு கிடைத்த ஒரு டிசர்ட்டை மாட்டிக்கொண்டு வந்து, வசமாய் பிரியாவிடம் மாட்டிக்கொண்டான் ஹரி.பாவம்!
‘ஏற்கனவே இருபத்தொருநாள் இவளை விட்டுட்டு இருந்ததுக்கு… இருபத்தொரு மாசம் உனக்கு தண்ணிக்காட்டப் போறேன்னு போனில் பயம் காட்டிட்டு இருந்தா. இப்ப இது வேற கூட சேர்ந்தா… இங்க இருக்க போகும் மூனு வருஷமும் நீ பிரமச்சாரி தானா? ஹரி… பாரினுக்கு வந்தும் உனக்கு ‘ஹனிமூன்’ இல்லடா. ’தனிமூன்’தான்!’ என அவனுள் இருந்த பிரியாவின் சரண் வேறு வெறுப்பேற்ற,
அதில் அரண்டவன், “லக்ஸ்!சோப்பு! மாமா இருட்டுல தூக்க கலக்கத்துல எதையோ தப்பா செய்துட்டேன்-டா!” என உளறிக்கொண்டே அவளைப் பின் தொடர்ந்தான் ஹரி.
இதற்குமேலும் நாம் அவனுடன் போய் அவன் அடிப்படுவதைப் பார்க்கவேண்டுமா என்ன?அவனுக்கு அதெல்லாம் கூச்சமா இருக்தாது.ஆனா நமக்கு இருக்குமே. அதனால நாம இங்கேயே,அடியோ உதையோ ஏதோ ஒன்னு, ‘பதினாறு பெற்று பெருவாழ்வு’ வாழ வாழ்த்தி,அவனிடமிருந்தும் அவன் லக்ஸிடமிருந்தும் விடைப் பெறுவோம்!
வாழ்க வளமுடன்!

Categories
On-Going Novels Rajeswari Sivakumar

அத்தியாயம் – 17

எபி 17
என்னசொன்னாலும் காதில் வாங்காது தான் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக்கொண்டிருந்த பிரியாவை, இதற்குமேல் தன்னால் தனியாக சமாளிக்க முடியாது என உணர்ந்த ஹரி அவளை அப்படியே குண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு ஹாலுக்கு சென்றான்.
அங்கே இருந்த நால்வரும் நெடுநேரமாய் உள்ளிருந்து ஏதோ சத்தம் வந்துக்கொண்டிருந்ததால், இவர்களின் அறைக்கதவைதான் கலவரமாக பார்த்துக்கொண்டிருந்தனர்.
“மா.. என்ன சொன்னாலும் காதுலயே வாங்காம அவ சொன்னதையே சொல்லிட்டு இருக்காமா. என்னால முடியலை. நீங்களாவது இவளுக்கு புரிய வைங்க.” என ஹரி அவளை மல்லிகாவின் அருகில்விட்டு, கடுப்புடன் சொன்னதும்,
மாமாவிடம் சொன்னால்தான் தன் காரியம் ஆகும் எனக் கணக்கிட்டு, “மாமா… அப்ப நான் ஏதோ தெரியாம, தனியா இருந்துப்பேன்னு சொல்லிட்டேன். அதை மனசுல வச்சிக்கிட்டு இப்ப என்னை அவங்களோட கூட்டிட்டு போகமாட்டேங்கறாங்க, பாருங்க மாமா” என பிரியா கண்ணில் நீர் தளும்ப ஹரியின் தந்தையிடம் சென்று புகார் செய்தாள்.
கண்ணில் கண்ணீரோடு மருமகள் பேசவும், அதை தாங்காத அவர், ”டேய்… என்னடா ரொம்ப பிகு பண்ற! குழந்தை தான் ‘அப்ப தெரியாம சொல்லிட்டேன்… இப்ப கூட வரேன்னு’ சொல்லுதில்ல… ஒழுங்கு மரியாதையா அவளையும் கூட்டிட்டு போ… இல்லையா நீயும் போகாம இங்கயே இரு.ஆபீஸில் ரொம்ப தொல்லை பண்ணா வேலைய விட்டுட்டு அவளை கூட்டிட்டு ஊர் வந்து சேர்!” என நாட்டாமையாய் பஞ்சாயத்து செய்தார்.
அவரின் பேச்சைக்கேட்டு டென்ஷன் ஆன ஹரி,”உங்களுக்கும் எனக்கும் நம்ம உயிரை எடுக்கன்னு நல்லா வந்து கிடைச்சிருக்காங்க பாருங்க ரெண்டு பேர்…!” என தன் அன்னையின் காதைக்கடித்தான். அதற்கு பதிலாய் ஒரு பரிதாமான ‘லுக்’கை அவர் கொடுத்தார்.
தந்தை இப்படி சொன்னபிறகு, தாயிடம் பேசுவது வேஸ்ட் என அறிந்த ஹரி,”ஆன்ட்டி… நீங்களாவது சொல்லிப் புரியவைங்களேன் உங்க பொண்ணுக்கு!” என சலிப்பாய் சரளாவைப் பார்த்து சொல்ல,
தன் அன்னையிடம் பஞ்சாயத்து போனால் தீர்ப்பு தனக்கு சாதகமாக இருக்காது என்பதை அறிந்த பிரியா,“இப்ப என்ன… என்னை உங்ககூட கூட்டிட்டு போகமாட்டீங்க! அவ்வளவுதானே! அதுக்கு எதுக்கு எல்லார்கிட்டையும் சப்போர்ட்டுக்கு போயிட்டிருக்கீங்க? நான் உங்க கூட வரல. போதுமா?.இப்போ இல்ல… எப்போவும் வரலை! இப்ப உங்களுக்கு சந்தோஷமா?” என அவனிடம் சொல்லி தங்களின் அறைக்கு வேகமாய் சென்று மறைய, ஹரி தன் தலையில் கைவைத்து அப்படியே சோபாவில் அமர்ந்து விட்டான்.
“ஹரி… பிரியாவை ஏன்டா இப்படி அழவைக்கற? நீ ஒன்னும் அவளை உன்கூட கூட்டிக்கொண்டு போகவேண்டாம் போடா! நாங்க எங்க கூட கூட்டிட்டு போறோம்.மூனு வருஷம் கழிச்சி வந்து நீ கால்ல விழுந்தாலும் அவளை உன்கூட நான் அனுப்ப மாட்டேன்!” என அவனின் அப்பா கோபமாக கத்த,
‘அய்யோ…இவர் வேற குறுக்கால காமெடி பண்ணிட்டிருக்கார்!’ என நினைத்த ஹரி,அவரை ஒன்றும்செய்ய முடியாத கோபத்தில் அவனின் அம்மாவை முறைத்தான்.
மகனின் கோபத்திற்கு ஆளான மல்லிகா,”ஏங்க அவனே பிரியாவை எப்படி சமாதானப்படுத்தறதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கான்! நீங்க வேற அவனை போட்டு தொல்லைப்படுத்தினா பாவம் அவன் என்ன செய்வான்?கொஞ்ச நேரம் சும்மா இருங்க. அவங்க ரெண்டுப்பேரும் பேசிக்கட்டும்.” என அவனின் துணைக்கு வந்தார்.
அப்போது அவனிடம் வந்த பிரியாவின் பெற்றோர் அவனை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது… எனத்தெரியாது சிறிது நேரம் தவித்தனர்.பிறகு ஒரு வழியாக சரளா,
“ஹரி!அவ எப்பவும் இப்படிதான்.இங்க அவ தனியா ஹாஸ்டலில் இருக்கவேண்டிய கட்டாயம் வந்தபோது,முதலில் ‘நான் தனியா இருந்துப்பேன்… நான் எல்லாத்தையும் பாத்துப்பேன்’னு ஜம்பமா சொன்னவள்,நாங்க ஊருக்கு கிளம்பும் நாள் வரும் போது,அவங்க அப்பாவை மட்டும் தனியா ஊருக்கு போக சொல்லி,என்னை அவ கூட இங்கேயே இருக்க சொல்லி ஒரே அழுகை.ஷப்பா… அப்ப அவளை சமாளிக்க ஒரு முழு நாள் தேவைப்பட்டது.”
“அவளோட வாய்தான் ‘நான் சமாளிச்சுப்பேன்”னு சொல்லும். ஆனா அவளால புடிச்சவங்களை விட்டு கொஞ்ச நாள் கூட தனியா இருக்க முடியாது. நாங்க உங்க அவசர கல்யாணத்துக்கு சம்மதிச்சதுக்கு இதுவும் ஒரு காரணம்.பாரினில் அவளால தனியா வருஷக்கணக்கா எல்லாம் இருக்க முடியாது.”
இப்ப கூட அவ முதலில் உங்களை தனியா போக எப்படி சம்மதிச்சான்னு எனக்கு சந்தேகம் வரவே தான் அன்னைக்கு ‘அவ ஓகே சொல்லிட்டாளா…!’னு திரும்ப திரும்ப கேட்டேன். நீங்க ‘ஆமாம்’னு சொன்னதும்… ‘பரவால்ல…நம்ம பொண்ணு வளர்ந்துட்டான்னு சந்தோஷப்பட்டேன். ஆனா… இப்ப இப்படி பண்ணுவான்னு நானும் எதிர்பார்க்கலை.”
“நாம இப்ப என்ன சொன்னாலும் அவ காது கொடுத்துகேட்க மாட்டா!நீங்க அவகிட்ட ஒன்னும் சொல்லாம கிளம்புங்க.ஒரு ரெண்டு நாள் இப்படியே இருந்துட்டு அப்புறம் நார்மலுக்கு வந்துடுவா!” என அவளின் வழக்கத்தை சொன்னார்.
அவளை இங்கே அழவைத்துவிட்டு இவனால் எப்படி கிளம்ப முடியும்! தங்களின் இந்த ‘இருபது நாள் பிரிவு’ அவளை பாதிக்கவில்லை என இவன் நினைத்துக்கொண்டிருக்கும் போதே அவளைவிட்டு செல்ல அவனால் முடியவில்லை. இப்போது இவ்வளவு தூரம் அவள் மனதை தெரிந்துக்கொண்ட பிறகு,அவளை வருந்த வைத்துவிட்டு சென்றுவிட முடிந்திடுமா இவனால்?
சர்வநிச்சயமாக முடியாது! என உணர்ந்த ஹரி,அங்கே அவனை சுற்றி இருப்பவர்களை ஒருமுறை பார்த்து, பெருமூச்சைவிட்டு உள்ளே சென்றான்.
‘பொண்டாட்டி அட்ஜஸ்ட் பண்ணாலும் ஏன் அடம் பிடிக்க மாட்டேன்றா!’ இப்படி கவலையா இருக்கு. அடம் பிடிச்சாலும் ‘ஏன் அட்ஜஸ்ட் பண்ணிக்க மாட்டேன்றா!’ அப்படி கஷ்டமா இருக்கு. என்ன மாதிரி ‘டிசைன்’ஐ மைன்ட்ல வச்சி புருஷன்களை படைச்சானோ… அந்த கடவுள்!
உள்ளே ஒரு கையால் ஜன்னல் கம்பியைப் பிடித்துக்கொண்டு, மறுகையால் கண்ணைதுடைத்துக்கொண்டிருந்த பிரியாவிடம் வேகமாக சென்ற ஹரி, ”லக்ஸ்!குட்டி… இப்ப எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்க?பாரு உன்னோட கண்ணு,மூக்கு,மூஞ்சி எல்லாம் எப்படி சிவந்துப்போச்சு! அழதாடா குட்டி!” என்றதும்,
“நீங்கதான் என்னைவிட்டுட்டு தனியா போகபோறேன்னு சொன்னீங்க இல்ல?அதனாலதான் அழறேன்…அப்படித்தான் அழுவேன்!அப்புறம் சாப்பிடவும் மாட்டேன்!”என தான் அடுத்தடுத்து செய்யப்போவதை அழுகுரலில் அடுக்கினாள்.
இதுவரை ‘அப்பாடக்கர் ஆளுடா!’ என பிரியாவை எண்ணிக் கொண்டிருந்த ஹரி, இப்போது, ‘என்னோட பேபி, லக்ஸ் சோப்பு இல்ல,பேபி சோப்பு!’ என செல்லம் கொஞ்சினான். என்னபட்டாலும் இவன் திருந்தறதாக் காணோம்!
‘நான் சொன்னதை செய்வேன்’ என்று அக்குரல் அச்சுறுத்த,”லக்ஸ் சோப்பு இப்ப நல்லபுள்ளையா மாமா சொல்றதை ஒழுங்கா கேளுங்க.எக்ஸாம் எழுதாம நீ இன்னைக்கே கிளம்பிவரது எல்லாம் சரிப்படாது… இரு… நான் முழுசா பேசிமுடிச்சதும் நீ சொல்ல வேண்டியதை சொல்லு, இப்ப குறுக்கால பேசாத. அதனால நான் இப்ப என்னோட ஹையர் அஃபிஷியலை அப்ரோச் பண்ணி என்னோட ஜர்னிய ஒரு ட்வென்டி டேஸ் டிலே பண்ணமுடியுமான்னு கேட்கனும்… என்னக் கேட்கட்டுமா?”என்றான்.
‘கடைசிநாள் வரை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, இப்போது போய் நான் இன்று போகவில்லை என சொல்வது சரிவருமா? அப்படி சொல்ல ஏதாவது வலுவான காரணம் இருக்கவேண்டாமா?என்னக்காரணம் சொல்லுவான்? ‘என் மனைவி என்னை தனியாக போகவிடமாட்டேன்றா’ என்றா? தன்னால் அவன் அலுவலகத்தில் அசிங்கப்படுவதா…?’ என எண்ணிய பிரியா,”வேணாம்… அது நல்லா இருக்காது”என உள்ளே போன குரலில் சொன்னாள்.
“அப்ப வேற என்னதான் பண்றது? நீயே சொல்லு. நீ என்ன சொன்னாலும் நான் அதை அப்படியே செய்யறேன்.”என்றவனுக்கு, ‘என்ன சொல்ல…?’ என விழித்தவள்,
“ம்ஹும்! எல்லாத்தையும் நானே தான் சொல்லனுமா?உங்களுக்கு தானா எதுவும் தோணாதா?” என இவள் சிடுசிடுத்தாள்.
அவளின் சிடுசிடுப்பு கூட இவனுக்கு சிணுங்கலாய் தெரிய,”ஆமாம். எல்லாத்தையும் என்னோட லக்ஸ்தான் சொல்லனும்.ஏன்னா அவ தான் என்னைய விட அறிவாளி! எவ்வளவு பெரிய பிரச்சனைன்னாலும் அதுக்கெல்லாம் எந்த ஒரு பிரச்சனையும் பண்ணாம அசால்ட்டா அதை எல்லாம் ஹாண்டில் பண்ணுவா!” என சொல்லிக்கொண்டு அவளை இழுத்து இறுக்கிக்கொண்டான்.
“அப்போ எந்த பிரச்சனையும் பண்ணாம,உங்களை புரிந்து நடந்துகிட்டது ஒரு குத்தமா? அதுக்கு தான் இந்த பனிஷ்மென்ட்டா? இனி பாருங்க எல்லாத்துக்கும் உங்ககிட்ட சண்டைப்போடறேன்” என மூக்கை சுருக்கி கேட்டவளின் அழகில் மயங்கியவன்,
சுருக்கிய மூக்கை லேசாக ஒரு செல்லக்கடி கடித்து,”எப்படி லக்ஸ் சண்டைப்போடுவ? ரெஸ்ட்லிங்ல இப்போ நம்ம நாட்டு லேடீஸ் நல்லா ஷைன் ஆகறாங்க.நீ கூட அதை கத்து வச்சியிருக்கியா?அப்படிதான் என்கிட்ட சண்டைப்போடபோறியா?” என விஷமமாய்க்கேட்டு கண்ணடித்தான்.
‘எவ்வளவு சீரியஸ்ஸா நான் பேசிட்டு இருக்கேன்.இப்ப வந்து இவன் எதைக்கேட்கிறான் பாரேன்!’ என எண்ணி பல்லைக்கடித்தவள்,”நோ டைவர்ஷன்! கேட்டதுக்கு பதில் வேணும்!” என காட்டமாய் சொன்னாள்.
“என்னக்கேட்ட?”
“ம்ம்ம்… எல்லாப் பிரச்சனையிலும் உங்க இடத்திலிருந்து யோசிச்சது தப்பா?” எனஅழுத்தமாய் இவள் கேட்டதும்,
“தப்புன்னு சொல்லல லக்ஸ்! உனக்கு என்னைவிட மெச்சுரிட்டி அதிகம்னு நான் நம்பினேன். அடிக்கடி நான் சறுக்குற போதெல்லாம் நீ அதை பெருசா எடுத்துக்காம,ரொம்ப சாதரணமா நடந்துகிட்டதால இப்போதும் உனக்கு இந்த கொஞ்ச நான் பிரிவு பெருசா தோணலைன்னு நினச்சேன்” என்றான்.
“எதைவச்சி, எந்த விஷயத்தை பார்த்து நீங்க இப்படி நினைச்சீங்க?”
“எல்லா விஷயத்திலும் தான். அன்னைக்கு உன்னை நான் வெளிய ரொம்ப நேரமா காக்க வைத்தேனே.. அதுக்கு நீ என்னை ஒன்னுமே சொல்லலையே! காச்சு மூச்சுன்னு கத்தி சண்டைப் பிடிக்க வேணாம், அட்லீஸ்ட் ஒரு வார்த்தையாவது நீ கோபமா கேட்டிருக்கலாமே.”
“அப்புறம் உங்க சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடியே வர சொல்லி உங்க வீட்டில் எல்லோரும் அவ்வளவு தூரம் சொல்லியும் நான் அன்னைக்கு மார்னிங் தான் கூட்டிப்போனேன், நீ அதுக்கும் ஒன்னும் சொல்லலையே! அடுத்து போனவாரம் நான் அந்த காசு விஷயத்துக்கு உன்கிட்ட கத்தினேனே… அப்பகூட நீ என்னை ஒன்னும் சொல்லலை.இப்படி எல்லாத்துக்கும் பெருசா நீ ரிஆக்ட் பண்ணாததால இது உன்னோட நேச்சர்னு நான் நினச்சேன்” என இது நாள் வரை அவளைப்பற்றி அவன் நினைத்து வந்ததை இன்று சொல்லிவிட்டான்.
அதைக்கேட்டவள் சிறிது நேரம் மௌனமாக இருக்கவும்அவள் தன் மேல் கோபம் கொள்ள வாய்ப்பில்லை, வருத்தம் கொண்டுவிட்டாளோ என எண்ணிய ஹரி,”ஹேய் லக்ஸ், நான் உன்னை எதுவும் தப்பா சொல்லல” என தவிப்பாய் சொல்லி, ஹரி அவளை அணைத்துக்கொண்டான்.

Categories
On-Going Novels Rajeswari Sivakumar

அத்தியாயம் – 16

எபி 16
ஊருக்கு கிளம்பும் ஹரியை வழியனும்பவும், பிரியா கிளம்பும்வரை அவளுக்கு துணை இருக்கவும் அவர்களின் பெற்றோர்கள் அங்கே வந்திருந்தனர்.ஹரிக்கு விமானம் நள்ளிரவில்தான் என்பதால் காலையிலேயே வந்திறங்கியவர்களிடம் ஹரி ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.ஆனால் பிரியா அவர்களின் ரூமில் இருந்தாள்.
வந்ததிலிருந்து மகளின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த சரளா,’இவ இன்னைக்கு என்னப் பண்ணி வைக்கப்போறாளோ?’என்ற திகிலிலேயே இருந்தார்.அவருக்கு தான் அவர் மகளின் நடவடிக்கைகள் அத்துப்படி ஆயிற்றே‘
‘இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பிடுவேன்…அதுவரைக்கும் ஆசையா என்கிட்ட பேசாம,இந்த லக்ஸ் ரொம்ப நேரமா அப்படி என்ன உள்ளப் பண்ணிட்டிருக்கா?’ என்ற எண்ணத்தில் தங்களின் அறைக்கு வந்த ஹரி அங்கே கட்டிலில் கவிழ்ந்துப்படுத்துக்கொண்டிருந்த பிரியாவின் முதுகு குலுங்கவே… அரண்டுப்போய் அவளருகில் சென்றான்.
“லக்ஸ்… பேபி! சோப்பு…! என்னடா பண்ற?அங்க ஹாலில் எல்லோர் கூடவும் இல்லாம ஏன் இங்க வந்து தனியாப் படுத்துட்டு இருக்க?தலை வலிக்குதா?என்னை பாரு லக்ஸ்! ஹேய்…சோப்புகுட்டி! திரும்பி என்னை பாரு…” என இவன்,அவளருகில் அமர்ந்து அவளை தன்பக்கமாய் திருப்ப முயற்சிக்க,
அவன் தொட்டதும் அவன் பக்கம் திரும்பியவள் பாய்ந்து அவனை இறுக்கக் கட்டிக் கொண்டாள்.
இது அவனின் இத்தனை மாத கல்யாண வாழ்க்கையில் முதல்முறை என்பதால், “ஹேய்…லக்ஸ் என்ன பண்ற?” என அவன் ஆனந்த அதிர்ச்சியில் அதிர்ந்து போய் கேட்க,
“ம்ம்ம்ம்… கட்டிப்புடிச்சிட்டு இருக்கேன்….” என இவள் அழுகுரலில் பதிலளித்தாள்.
“சூப்பர் சோப்பு-டா நீ! என்ன குட்டி… திடீர்ன்னு மாமன் மேல பாயற! என்ன மேட்டர்?” அடுத்து வரப்போவதை அறியாது இவன் அவளை அணைத்துக் கொண்டே, அசால்ட்டாய் கேள்வி கேட்க,
“நானும் உங்க கூட இப்ப வருவேன்!” என அமைதியாய் அவள் பதில் தந்தாள்.
முதலில் ஒன்றும் புரியாத ஹரி,”என்னடா லக்ஸ்! என்ன சொல்ற! எனக்கு ஒன்னும் புரியலை!” என்றான்.
“நான்… நீங்க இல்லாம இங்க… இருக்க மாட்டேன்! இப்ப நீங்க கிளம்பும் போது நானும் உங்க கூட வரப்போறேன்….” என தெளிவாக ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தி அழுத்தி சொன்னாள் பிரியா.
அந்த அழுத்தத்தால் ஹரியின் ‘இரத்த அழுத்தம்’ எகிறியது.’என்ன சொல்றா இவ!’ என்பதைப்போல அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
திகைப்பில் இருந்த ஹரியிடம், “ஆமாம்… நான் இப்பவே உங்க கூட வரப்போறேன்…“ என மீண்டும் சொன்னாள்.
அப்போது தான் கொஞ்சம் நிலைமையை புரிந்துக்கொண்ட ஹரி,“நடக்கற விஷயமா லக்ஸ் இது?இப்ப தீடீர்ன்னு டிக்கெட் எப்படி கிடைக்கும்? நான் போகப்போறது பாரிஸ் கார்னரா? பஸ்ல ஏறி உக்காந்துக்கிட்டு டிக்கெட் எடுக்கலாம்னு நினைக்க!”என்று நக்கலாக கேட்டதற்கு,
“ஈஈஈ…” என படுக்கேவலமாய் பல்லைக்காட்டிவிட்டு, ”நீங்க சொன்ன ஜோக்குக்கு இப்படித்தான் சிரிக்கமுடியும்!” என சொன்னவள், “அதெல்லாம் எனக்கு தெரியாது… ஒன்னு நீங்க இப்ப போகாதீங்க… இல்ல என்னையும் கூட்டிட்டு போங்க!”என திட்டவட்டமான பதில் அவளிடமிருந்து வந்தது.
அதில் அயர்ந்துப்போனவனோ,“ஹேய் சோப்பு,விசா வந்தபோதும் கேட்டேன்,அப்புறம் எனக்கு டிக்கெட் போடும் போதும் கேட்டேன்… ‘நான் தனியா கிளம்பட்டுமான்னு?’அப்பல்லாம் வாய திறக்காம,நல்லா மண்டைய,மண்டைய ஆட்டிட்டு இப்ப இப்படி அடம் பண்ணா நான் என்னதான் பண்ணமுடியும்?” எனஅதட்டினான்.
“அதெல்லாம் எனக்கு தெரியாது!நான் உங்களைவிட்டுட்டு இங்க தனியா இருக்கமாட்டேன்!”
‘இதை.. இதைத்தானே இத்தனைநாளாய் எதிர்பார்த்து காத்திருந்தான் ஹரி!இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ஹரிகுமாரா!’ என அவன் உள்ளம் குதியாட்டம் போட்டது.
“இப்ப சொல்றதை முன்னாடியே சொல்லியிருந்துக்கலாம்ல.நான் அதற்கு வேண்டிய அரேஞ்ஜ்மென்ட்ஸ் எல்லாம் செய்திருப்பேனே. ‘நீங்க இப்ப போகவேணாம், நாம சேர்ந்தே போகலாம்’னு சொல்லி இருந்திருந்தா, அப்படியே செய்திருக்கலாமே.” எனக் கடுப்புடன் ஹரிக் கேட்டதற்கு,
“ஒஹ்… அப்ப நீங்க உங்க ஜர்னிய தள்ளிப்போட பாசிபிளிட்டி இருக்கா?அப்ப ஒன்னும் பிரச்சனை இல்லை. அப்படியே செய்துடுங்க!” என படு கஷுவலாய் சொன்னாள்.
“அடியேய்… லாஸ்ட் மினிட்ல எப்படி அதை செய்ய முடியும்?”
“இப்ப ஒன்னும் லாஸ்ட் மினிட் இல்ல.உங்க ஃப்ளைட் கிளம்ப இன்னும் பன்னிரண்டு மணிநேரம், பாதிநாள் இருக்கு.அதுக்குள்ள அந்த ட்ரிப்பை கான்சல் பண்ணமுடியாதா?”
விபரமாக, விபரம் சொன்னவளை கொலைவெறியில் பார்த்தவன், இவளிடம் கோபமா பேசினா வேலைக்கு ஆகாது என்பதால், “லக்ஸ் குட்டி…இன்னும் இருபதே நாள்தான்-டா!கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா…. அப்புறம் நீ அங்க என்கிட்ட வந்துடலாம்.மாமாவே ஏர்போர்ட் வந்து உன்னை அழைச்சிக்கிறேன்”என தாஜா பண்ணினான்.
“இருபது…… நாள்! அவ்ளோ நாள் எல்லாம் என்னால அட்ஜஸ்ட் பண்ணமுடியாது…. ஒரு இருபது மணிநேரம்னா ட்ரை பண்ணலாம்….” என ‘போனால் போகிறது!’ என்றக்கணக்கில் சொன்னவள்”அப்ப நீங்க என்னைவிட்டுட்டு இரு…பது நாள் ஒரு கஷ்டமும் இல்லாம இருப்பீங்களா….?அவ்வளவு தானா உங்களுக்கு என்மேல இருக்கும் லவ்?” என கோபமாக கேட்டாள்.
“லவ்வா….” என அதிர்ந்த ஹரி, ”அது எங்க நம்மகுள்ள இருக்கு?” எனப் போட்டுவாங்க,
“அதை சொல்லத்தான் நான் உங்க கூட இப்போ வரேன்னு சொன்னது!அங்க போனதும் டீடைல்லா…இல்லல்ல ஃப்ளைட்டல சொல்றேன்.நானும் உங்ககூட இப்ப வருவேன்…”என சிறுக் குழந்தையாய் இவள் அடம் பிடித்தாள்.
“அய்யோ… ஏன்டீ… என்னை இப்படி படுத்தற?அன்னைக்கு நீதானடீ ‘ப்ளான் பண்ணதைப் போல நீங்க கிளம்புங்க,நான் பிறகு வரேன்’னு சொன்ன.அதை நம்பிதானே நான் எல்லாத்தையும் அரேஞ் பண்ணேன்.இப்ப வந்து இப்படி உயிரை எடுக்கறியே…!” என்ற இவனின் புலம்பலுக்கு,
“அது அப்போ… இது இப்போ!” என்ற இவளின் பதிலில் அவன் நொந்தேபோனான்.
“குட்டி… லக்ஸ்சோப்பு! கொஞ்சம் மாமன் சொல்றதை கேளுடா…” என கெஞ்சி,கொஞ்ஜி, “நான் இப்ப போறேன்… நீ உன்னோட அந்த எக்ஸாம்ஸ் எல்லாம் முடிச்சிட்டு வந்துடுடா… ப்ளீஸ்… குட்டி!நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சிக்கோடா…” என மீண்டும் வேண்ட,
“எனக்கு கண்டிப்பா எக்ஸாம் எழுதனும்னு ஒன்னும் இல்ல.’விசா’ கூட எனக்கு இருக்குல்ல… உங்க ப்ளைட்ல எனக்கு டிக்கெட் கிடைக்கலைன்னா… வேற ப்ளைட்ல… நான் தனியா கூட வந்துடுவேன்… அப்பவும் ஸ்ட்ரெயிட் ப்ளைட் இல்லைனாலும் பரவால்ல…ரெண்டு,மூனு இடத்தில், வேற வேற ப்ளைட்ல ஏறி, இறங்கினாலும் நான் ‘அட்ஜஸ்ட்’ பண்ணிப்பேன். எப்படியும்… நான் உங்க கூட இருக்கனும்… இருபது நாளெல்லாம் நான் உங்களைவிட்டு தனியா இருக்கமாட்டேன்….” என இவள் சொன்னதும்,
“அடியேய்… எத்தனை தடவை இதை சொல்ல சொல்லி உன்னை நான் கெஞ்சியிருப்பேன்… அப்போல்லாம் இதை சொல்லாம,எப்ப வந்து எதை சொல்ற லக்ஸ் நீ!”என இவன் கோபமாக அவளை இறுக்க,
“எப்போ சொல்வேன்… எதை சொல்வேன்னு எனக்கே தெரியாது.ஆனா சொல்லவேண்டிய விஷயத்தை சொல்லவேண்டிய ஆள்கிட்ட கரைக்ட்டா சொல்வேன்!” என வார்த்தையால் ஒரு ‘பன்ச்’,அவனின் மார்பில் தன் இதழால் அழுத்தி இன்னொரு ‘பன்ச்’ கொடுத்தாள் பிரியா.
அவளின் இரண்டு ‘பன்ச்’சால் ஹரியின் கோபம் பஞ்சராகி,”என் பட்டு!” என ஆசையாக அவளை அணைக்க,
““இப்போ என்ன பட்டு?” என அந்த ரணகளத்திலும் குதூகலமாய் கேட்டாள் அவனின் பட்டு.
‘நீ என்ன மாதிரி டிசைன் பேபி?’ என பார்வையால் கேட்ட ஹரி,“ம்ம்ம்… பலசமயம் பெருமையா… மெத்துமெத்துன்னு இருக்கறப் பட்டு சிலசமயம் ‘ஹான்டில்’ பண்ணமுடியாம படுத்துமில்ல… அந்த டைம் ‘பட்டு’ இது!” என அப்போதும் அவளின் கேள்விக்கு பல்லைக்கடித்துக்கொண்டே பதிலளிக்க,
அவனின் பதிலுக்கு இவள் சொன்ன,”தாங்க்ஸ்…” கேட்டு அவன் நொந்தேப்போனான்.
இதுவரை ‘தன்னளவுக்கு இவளுக்கு ‘தான்’ பிடித்தம் இல்லையோ!’ என எண்ணி வருந்திக்கொண்டிருந்த ஹரி, இப்போது ப்ரியாவின் சொல்லாலும் செயலாலும் ஆனந்தக்கடலில் மூழ்கிப் போனான்.
அவளின் இந்த ‘நீங்க இல்லாம என்னால இருக்கமுடியாது!’ என்ற வார்த்தைகளைக் கேட்கத்தானே அவன் காத்திருந்தான்.அதை அவள் இந்த இக்கட்டான சூழ்நிலையில் சொன்னாலும் அவனால் சந்தோஷப்படாமல் இருக்கமுடியவில்லை.ஆனால் ஏன் இந்த திடீர் மாற்றம்?
‘இப்ப பண்ற இந்த ஆர்பாட்டத்தை ஒரு வாரம் முன்னாடி பண்ணியிருந்தா கூட நான் என்னோட ட்ரிப்பை தள்ளிப் போட்டிருக்கலாமே! நேத்துவரைக்கும் நல்லாத்தானே இருந்தா? இல்லையோ… ஒரு நாலு அஞ்சு நாளா சோப்பு கொஞ்சம் டல்லாதான் இருந்தாளோ? நாமதான்,ஓவர் நினைப்புன்னு கண்டுக்காம விட்டுட்டமோ! எதுக்கு இந்த திடீர் மாற்றம்!’
“லக்ஸ் சோப்பு! நேத்துவரைக்கும் நல்லாதானே இருந்த! இப்ப என் இப்படி அடம்பிடிக்கற?” என மனதில் நினைத்ததை இவன் கேட்டதும்,
அவனின் விசாரிப்பில் வெகுண்டவள், “நான் நேத்துவரைக்கும் நல்லாயிருந்தேன்னு யார் சொன்னா உங்ககிட்ட? அவ்வளவு அழகா என்னை நீங்க கவனிச்சிட்டு இருக்கீங்க! நான் ஒரு வாரமா இப்ப சொன்னதை எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னு தவிச்சிட்டு இருந்தேன்.முதலில் இப்படிதான் இருக்கும், ஆனா போக போக சரியாயிடும்னு நினைச்சிட்டு என்னை நானே தேத்திட்டு இருந்தா… நாள் நெருங்க- நெருங்க என்னால முடியல.ம்ம்ம்… நான் மாட்டேன்! இங்க நீங்க இல்லாம இருக்கமாட்டேன்!” என கோபத்தில் ஆரம்பித்து சோகத்தில் முடித்தாள்.
“என்னது… ஒருவாரமா சொல்ல நினைச்சிட்டு இருந்தியா? மக்கு சோப்பு! அதை அப்பவே சொல்றதுக்கு என்ன! அப்படி சொல்லி இருந்தா நான் என்னோட ட்ரிப்பை போஸ்ட்போன் பண்ணியிருந்திருப்பேனே!”
‘ஒருவாரம் முன்னாடிவரை ட்ரிப்பை போஸ்ட்போன் செய்ய சான்ஸ் இருந்ததா?’ இதைக்கேட்டதும் வந்ததே ஆத்திரம் அவளுக்கு.
“எல்லாத்தையும் நான் தான் சொல்லனுமா? சோப்பு! நீ இல்லாம நான் தனியா போகமாட்டேன்னு, நீங்க சொல்றதுக்கு என்ன!” சண்டைக்கு வந்தவளிடம்,
“நீதானே-டி ட்வென்டி டேஸ் தானே நான் இங்க மானேஜ் செய்துப்பேன், நீங்க ப்ளான் பண்ணப்படி கிளம்புங்க, நான் பின்னாடி வரேன்னு வக்கனையா அப்ப சொன்ன?” இவனும் விடவில்லை.
“ஓஓஒ… இவர் நான் சொல்றதை தப்பாம அப்படியே ஃபால்லோ பண்றவர்தான். தினமும் டவலை பெட்ல போடாதீங்கன்னு சொன்னதை ஃபால்லோ பண்றீங்களா? பேஸ்புக்ல என்னை ஃபால்லோ பண்ண சொன்னேனே… அதை ஃபால்லோ பண்ணீங்களா? நான் முக்கியமா சொன்னதையெல்லாம் ஃபால்லோ பண்ணாம விட்டுட்டு, இதை மட்டும் பக்காவா அப்படியே ஃபால்லோ பண்ணியிருக்கீங்க. அப்படின்னா இப்ப நீங்க என்னைவிட்டுட்டு போகாதீங்கன்னு நான் சொல்றேன், இதையும் அப்படியே ஃபால்லோ பண்ணுங்க பார்க்கலாம்!”
எல்லாமும் நியாம்தான் காதலிலும் சண்டையிலும்! அதுக்காக இப்படியா… அநியாயமா பேசுவா ஒருத்தி? அயர்ந்து போய் விட்டான் ஹரி.
அதன் பின் சுமார் ஒருமணி நேரமாய் அவன் விதவிதமாய் அவளை சமாதானப்படுத்த முயற்சிக்க,இவள் ஒரே விதமாய்…’அதெல்லாம் எனக்கு தெரியாது!’ என்றே சொல்லிக்கொண்டிருந்தாள். அத்தோடுவிட்டாளா… என்றால் அதுவும் இல்லை, ‘அங்கே போய் பாச்சிலர் லைப் என்ஜாய் செய்ய ஆசைப்பட்டுதான் ஹரி வேண்டுமென்றே அவளை இங்கே விட்டுவிட்டு செல்ல நினைக்கிறான், இவன் தான் முதலிலே கல்யாணத்தை நிறுத்த நினைத்தவன் தானே, அதனால் தான் இப்போது இருபது நாள் தனியாக இருக்க ஆசைப்பட்டு இப்படி செய்கிறான்…’என அபாண்டமாய் அவன் மீது பழி சுமத்தினாள்.
பாவம் அந்த பச்சபுள்ள! பத்துநாளா பசலையில அது தவிச்ச தவிப்பு இவளுக்கு எங்க தெரியப் போகுது!அது பட்டக் கவலையில அதனோட ‘செம்பு கடா’ கழண்டு கீழ விழுந்துடுச்சி!

Categories
On-Going Novels Rajeswari Sivakumar

அத்தியாயம் – 15

எபி 15
ஏற்கனவே கடுப்பில் இருந்தவன், அன்னையிடம் பேசியதில் இன்னும் எரிச்சலோடு வீட்டிற்கு வந்தான். அவனின் முகத்தைப்பார்த்தே ‘மூட் அவுட்’ எனப் புரிந்துக்கொண்டவள், எதையும் அவனிடம் இப்போதைக்கு கேட்க வேண்டாமென எண்ணி அமைதியாக இருந்தது ஹரிக்கு பெருங்குற்றமாக தோன்றியது.
‘நம்மமேல அக்கறை,ஆசை,பாசம்னு ஏதாவது இருந்திருந்தா டல்லான முகத்தைப்பார்த்ததும் என்ன ஏதுன்னு விசாரிச்சிருந்திருப்பா.அப்படிதான் ஏதும் இவளுக்கு நம்மமேல இல்லையே! இருந்திருந்தா நம்மை தனியா போகவிட்டிருந்துப்பாளா?’
ஹரியின் அதிகப்படியான அன்பு, பிரியாவின் எல்லா நடவடிக்கைகளையும் குறையாகவே பார்க்க வைத்தது. இங்கே ‘பிடிக்காத மருமகள் எதை செய்தாலும் குற்றம்’ என்பது திரிந்து, ‘பிடித்தப் பொண்டாட்டி’ என்றானது!
பத்துநிமிடங்கள் போனபிறகும் அறையிலிருந்து ஹரி வெளியே வராது போகவே அங்கே சென்றவள், ”என்ன ஆச்சு? நீங்க ப்ரெஷ் ஆகிட்டு வெளிய வருவீங்கன்னு நான் வெளியே வெயிட் பண்ணா நீங்க இப்படி படுத்துட்டு இருக்கீங்க. தலை வலிக்குதா?” எனக்கேட்டு அவனின் நெற்றியை தொட்டுப்பார்த்தாள்.அங்கு சூடு இல்லாது போகவே தன்னையே பார்த்துக்கொண்டிருந்தவனிடம், ‘என்ன?’ எனக்கண்ணால் கேட்டாள்.
அவள் அப்படி கேட்டதும்,” உனக்கு என்ன வேணும், எனக்கு என்ன வேணும்னு எதையுமே வாயத்திறந்து சொல்லவோ கேட்கவோ மாட்டியா லக்ஸ்! உனக்கு இது இது வேணும்னு பார்த்து பார்த்து செய்யற அளவுக்கு எனக்குதான் புத்தியில்லாம போச்சு!நீயாவது உரிமையா என்கிட்ட வேணுங்கறதை கேட்டிருக்கலாம்ல.நீ உரிமை எடுத்துக்கற அளவுக்கு நான் உனக்கு இன்னும் க்ளோஸ் ஆகலையா?” பொரிந்து தள்ளிவிட்டான்.
“என்ன விஷயம்னு சொல்லாம நீங்க எதையோ பேசிட்டே போனா எனக்கு என்னன்னு புரியும்?” இவள் அமைதியாக கேட்டாள்.
தன்னுடைய பொருமலுக்கு பதிலாய் உரிமையோடு எகிறாமல், மூனாவது மனிதரிடம் பேசுவதைப்போல பொறுமையாய் இவள் பேசியதும் தவறாகிப்போனது. மெத்தையில் படுத்திருந்தவன் வேகமா எழுந்து, பர்சில் இருந்து எதையோ கையில் கொண்டு வந்து,
“இது என்னோட கிரெடிட்கார்டு. இது என்னோட டெபிட்கார்டு. இதில் தான் என்னோட சாலரி கிரெடிட் ஆகும். ரெண்டுத்துக்கும் பாஸ்வேர்ட் நம்ம மாரேஜ் டேட்.ரெண்டையும் நீ எப்போதும் உன்கூடவே வச்சிக்கோ! எனக்கு தேவைப்பட்டா உன்கிட்ட வந்து வாங்கிக்கறேன்” என சொல்லி தன் கையில் இருந்தவற்றை அவளிடம் கொடுத்தான்.
“உனக்கு காசு வேணும்னு என்கிட்ட நீ ஏன் கேட்கல?வெளிய போகும்போது பொண்டாட்டிக்கிட்ட வீட்டு சாவிய கொடுக்கனும்ங்கற சாதாரண விஷயம் கூட தெரியாத முட்டாள்தானே இவன்! இவன் கிட்டபோய் என்னத்தை கேட்கன்னு நீ எதையும் என்கிட்ட உரிமையா கேட்கறது இல்லையா?” மனவலியை குரலில் காட்டி அவளைப்பார்த்து கேட்டவனை சில வினாடிகள் பார்த்தபடியே நின்றவள், அவனருகில் சென்று அவனின் மார்பில் சாய்ந்துக்கொண்டு,அவனிதயத்தை தன் கைகளால் வருடிக்கொண்டிருந்தாள்.ஆயிரம் வார்த்தைகள் தராத ஆறுதலை ஹரிக்கு பிரியாவின் இச்செயல் தந்தது.
அப்படியே சிறிதுநேரம் சென்றிருக்க, அவன் தெளிந்துவிட்டான் என்பதை அவனின் முகம் இவளுக்கு சொல்ல, ”எதுக்கு இப்ப இவ்வளவு டென்ஷன்.நீங்க கோபமா கத்தும்போது,நானும் அப்படியே கத்தினா பிரச்சனைதான் பெருசாகும்.அதனாலதான் நான் அமைதியா இருந்தேன். இப்ப சொல்லுங்க என்ன ஆச்சு?” எனக்கேட்டபோது அவனால் அதற்கு மேல் சொல்லாமல் இருக்கமுடியவில்லை.
அவன் சொன்னதை பொறுமையாய் கேட்டவள்,” நானா போய் எங்க அம்மாகிட்ட காசு வேணும்னு கேட்டேன்? தேவைன்னா கேளுன்னு சொன்னதுக்கு, சரின்னு மட்டும்தானே நான் சொன்னேன் இதில் என்னோட தப்பு என்ன?.” இந்த வாதத்திற்கு பதில் வாதமிட ஹரியால் முடியாது போனது.
கோபமும் ஆதங்கமும் இவன் கண்ணை மறைத்திருந்த போது தவறாக தெரிந்து இவனை கத்த வைத்த ஒன்று, இப்போது குன்ற வைத்தது.என்ன சொல்லி சமாளிக்கபோகிறான்?
அமைதியாய் தலைக்குனிந்துக்கொண்டிருந்தவனை அப்படி பார்க்க பொறுக்காதவள்,அவனை அங்கிருந்த இழுத்துக்கொண்டுபோய் சோபாவில் அமரவைத்து அவன் மேல் ஒய்யாரமாய் சாய்ந்துக்கொண்டு, அவளன்னையை கைப்பேசியில் அழைத்தாள்.
பேசினாள்… பேசினாள்… பேசிக்கொண்டே இருந்தாள்.அடுத்தவாரம் வரப்போகும் அவளின் பிரெண்டின் பிறந்தநாளுக்கு இதை செய்தோம் அதை செய்தோம், இது வாங்கினோம் அது வாங்கினோம்…. என்று அடுக்கிக்கொண்டே போனாள்.அப்போதும் முடிக்காது இவளுக்கு வாங்கியதை அடுத்து, அடுக்க தொடங்கினாள்.
‘இவள் எதுக்கு இதையெல்லாம் என்மேல சாய்ந்துகிட்டு சொல்றா?ஹிஹி… பரவால்ல! இதுகூட நல்லாத்தான் இருக்கு.’
“அம்மா… இன்னைக்கு ஈவ்னிங் நாங்க வெளிய போகும்போது இன்னும் ரெண்டு செலக்ட் செய்துவச்சிட்டு வந்ததை வாங்கப்போறேன்!” என போனை ஸ்பீக்கரில் போட்டு பிரியா அறிவிக்க,
அதைக் கேட்ட அவளின் அம்மா,“ஏன்டீ எதுக்கு இவ்வளவு வாங்கற? இருக்கறது எல்லாம் உனக்கு போதாதா.காசு ஏதாவது வேணுமா பிரியா?” என அன்பாய்க் கேட்டார்.
அதைக்கேட்டுபிரியா, ’எஸ்.. இதுக்குதானே இவ்வளவு கதை சொன்னது!’ என குதூகலிக்க, ஹரியோ இறுகிப்போனான்.
“காசா? நாங்க ‘டீமானிடைசேஷன்’ வந்ததுல இருந்து நோ கேஷ் யூஸ் மம்மி! ஒன்லி கார்ட் யூஸ்! யூ நோ மம்மி! என்கிட்ட டெபிட், கிரெடிட் இப்படி பல கார்டுகள் இருக்கு.உனக்கு அவசரத்துக்கு ஏதாவது தேவைன்னா ராத்திரி பகல் பார்க்காம எப்போ வேணும்னாலும் என்னைக் கேட்கலாம். ஹரியே என்கிட்டதான் டெய்லி ‘பாக்கெட்மணி’ வாங்கிட்டு போறாங்க!” என இவள் செய்த ஆர்பாட்டத்தைக்கேட்ட சரளா,
“போதும்-டி! ரொம்பதான் ஓவரா பீத்திக்காத! நாங்க பார்க்காத கார்டுங்களா?உங்கப்பா அதையெல்லாம் எனக்கு எப்போவோ இருபது வருஷத்துக்கு முன்னாடியே வாங்கிதந்துட்டார்” என மகளிடம் போட்டிக்கு வந்தார்.
“இருக்கலாம்… ஆனால் நீங்க பாவம், அதில் செலவு செய்துட்டு வந்தா என்ன…ஏன்னு உங்க வீட்டுக்காரர்கிட்ட கணக்கு சொல்லனும். ஆனா நான் அப்படி எதுவும் சொல்ல தேவையில்லைன்னு ஹரி சொல்லிட்டாங்க. சோ.. என்னோட வீட்டுக்காரர்தான் பெஸ்ட்!” என பிரியா சொன்னதை கேட்டதும் சரளாவிற்கு உச்சிகுளிர்ந்துப்போனது. ஒரு அன்னைக்கு தன் மகளை அவளின் கணவன் தலையில் வைத்துக் கொண்டாடுகிறான்!’ என்பதைவிட வேறென்ன தேவைப்படப்போகிறது?
“அடிக்கழுதை! ஹரின்னு பெயரை சொல்றியா?இரு பாட்டிகிட்ட போட்டுக்கொடுக்கறேன்!”
“ஹோ.. என்னைப்பார்த்து பொறாமைதானே உங்களுக்கு? அதனாலதானே பாட்டிகிட்ட போட்டுக்குடுக்கறீங்க! ஐ நோ சரள்! ஐ நோ! ஷப்பா… உங்ககிட்ட பேசியே என்னோட டைம் எல்லாம் வேஸ்ட்டா போச்சு. நான் ஈவ்னிங் ஷாப்பிங் வேற போகனும். அதுக்கு இப்பயிருந்தே ரெடி ஆனாதான் சரியா இருக்கும்.ஓகே… பாய் சரள்!” என அடாவடியாய் பேசி போனை வைத்தவளை அப்படியே… கடித்து திண்பவனை போல பார்த்துக்கொண்டிருந்தான் ஹரி!
யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்! மணமாகி ஆண்டுகள் ஐம்பது ஆனாலும் மனைவியின் வாயிலிருந்து கணவனுக்கு புகழ்மாலை அவ்வளவு எளிதில் கிடைத்துவிடுமா என்ன?வழக்கமாக பெண்கள் அவர்களின் கணவன்மார்களை கணவனின் கண்ணுக்கு மறைவில் ‘ஆஹா…ஓஓஹோ!’ என புகழ்வார்கள் தான். ஆனால் கண்முன்…?
என்ன ஒரு சாமார்த்தியம்! பெரியதாக வளர்ந்திருக்கவேண்டிய ஒரு சாதாரண பிரச்னையை,அசாதாரணமாக கையாண்டு அதில் சம்மந்தப்பட்டவர்களிடம் எதையும் சொல்லாமலேயே சுமூகமாக முடித்து வைத்துவிட்டாள்.
‘ம்ம்ம்… இந்த சாமார்த்தியமேல்லாம் இருந்து என்ன பிரயோஜனம்? புருஷன்மேல கொஞ்சம் கூட லவ் இல்லையே!’ இவனுக்கு இவன் பிரச்சனைதான் பெருசா தெரியுது!
“என்ன… என்ன ஆன்னு பார்த்துட்டு இருக்கீங்க?” என அவள் அதட்டலாய் கேட்டதும்,
“என்னோட பட்டுடா நீ! ஆசைப்-பட்டு,நேசப்-பட்டு,பெருமைப்-பட்டு, கர்வப்-பட்டு பார்த்துட்டு இருக்கேன் என்னோட பட்டை!” என சொன்னவன், சொன்னது உண்மைதான் என்பதை செயலிலும் காட்டினான்.
அவனின் அத்துமீறிய அடாவடியில் சிக்கிக்கொண்டவள்,“என்ன.. ஓவரா ஐஸ் வைக்கறீங்க? கொடுத்த கார்டை எல்லாம் திருப்பி வாங்கிப்பீங்களா?” என சந்தேகமாய் பார்த்து கேலியில் இறங்கினாள்.
“மாமன் உனக்காக உயிரையேக் கொடுப்பேன். இதெல்லாமா பெருசு?” என இன்னும் மயக்கம் தெளியாமல் ஹரி சொன்னதும்,
“ஆமாம்! உயிரை கொடுக்கறதைவிட இதெல்லாம் தான் பெருசு! உயிரை யாருக்கு வேணும்ன்னாலும் கொடுக்கலாம். ஒன்னுத்துக்கும் ஒதவாத கட்சி தலைவர்களுக்கு கூடத்தான் அவங்க தொண்டர்கள் உயிரைக்கொடுக்கறாங்க.ஆனா சம்பாதித்த மொத்த சொத்தையும் தர சொல்லுங்க பாப்போம்! அப்படிப் பார்த்தா இந்த மாமாவ விட என்னோட மாமனார் தான் சூப்பர்!” என சொல்லி அவனின் மயக்கத்தை தெளியவைத்தாள் பிரியா.
‘அதானே! இவளுக்கு என்னைவிட எல்லோரும் சூப்பரா தெரிவாங்களே!

Categories
On-Going Novels Rajeswari Sivakumar

அத்தியாயம் – 14

எபி 14
அன்று வந்த வேலை விரைவிலேயே முடிந்துவிட,வீட்டிற்கு செல்ல காரில் ஏரியமர்ந்தான் ஹரி. அன்றோடு அலுவலகத்திற்க்கு அவன் வரவேண்டிய வேலைகள் எல்லாம் முடிந்திருந்தது. இனிமேல் அவன் இங்கு வரத்தேவையில்லை. இன்னும் மூன்று நாட்களில் அப்படியே வீட்டிலிருந்தே வெளிநாட்டிற்கு கிளம்பவேண்டியதுதான். இப்படி எண்ணும்போதே,’ஹும்! அப்படி கிளம்பினா அடுத்த இருபது நாளுக்கு என் சோப் என் கைக்கு கிடைக்காது!’ என்ற நினைப்பு இவனுக்கு உடனே வந்தது.
நாட்கள் நெருங்க நெருங்க பிரியாவைவிட்டு எப்படி போவது? என்ற எண்ணம் இவனை போட்டுப்படுத்தி எடுத்தது.அதைப்போல அவளுக்கும் ஏதாவது தோணுதான்னு அவளை இவன் ஆராய, அப்படி ஏதாவது உண்டாவதற்கான அறிகுறிகள் ஏதும் அவளிடம் இவனுக்கு தெரியவில்லை.
‘அவதான் ஏதோ தெரியாம நான் தனியா வரேன்னு சொல்லிட்டா. நீயாவது ‘வேணாம், அப்படி எல்லாம் உன்னை தனியாவிடமாட்டேன்’ சொல்லி நைஸா அவகூடவே ஜாயின்ட் அடிச்சியிருந்திருக்கலாம்ல! அதைவிட்டுட்டு அங்க கவுந்துக்கிடக்கற கம்பனிய நீ போய்தான் கையக்கொடுத்து தூக்கிவிடனும்ன்ற ரேஞ்சுக்கு எதுக்கு முன்னாடியே கிளம்பவேண்டியது, அப்புறம் எதுக்கு இப்படி தனியா புலம்ப வேண்டியது!’ கலிகாலத்தில் மற்றவரைவிட மனசாட்சி கேவலமாக கலாய்க்கும் போல!
‘அவ இந்த சின்ன பிரிவை ஈஸியா எடுத்துக்கறதைபோல நம்மால ஏன் எடுத்துக்க முடியலை? நாம ஏன் அவ விஷயத்துல இவ்வளவு வீக்கா இருக்கோம்? ச்சே! எப்பவும் எதிலயும் கவனத்தை செலுத்தமுடியாது, ஒரே எரிச்சலா இருக்கே!
சங்ககாலத்து பாடல்கள்ல தலைவிக்கு வரும் அந்த ‘பசலை நோய்’, இந்த காலத்துல தலைவனுக்கு வந்து தொல்லை செய்ய மாத்தி யோசிச்சியிருக்குது போல! அதுக்கு நான்தான் ‘லபாரட்ரி ராட்!’
‘ரெண்டுமாசம் ஒன்னா இருந்திருக்கோம்,அப்படி இருந்தும் என்னோட இந்த பிரிவு அவளை கொஞ்சம் கூடவா பாதிக்காது?இந்த பிரிவு எந்த பாதிப்பையுமே அவளுக்கு கொடுக்கமுடியாத அளவுக்கு கேனையவா நான் அவகிட்ட நடந்திருக்கேன்!’ இப்படி ஹரி ‘செல்ஃப் வாஷ்’ [சுய அலசல்] செய்துக்கொண்டிருந்த வேளையில்,அவனை அழைத்த பேசியையும் அதில் லைனில் இருந்த ஆளையும் மதித்து அதை காதில் வைத்து இவன் “ஹலோ!” சொல்ல,
“ஏன்டா ஹரி இப்படி நடந்துக்கற? நான் உன்னை என்னமோ பெரிய இவன்னு நினைச்சி ஊரெல்லாம் என் பையனை போல வருமான்னு வாயவிட்டுக்கிட்டு இருக்கேன்.நீ என்னடான்னா ஒன்னுத்துக்கும் ஒதவாத, ஓதவாகறையா இருக்க! நீ இப்படி ஒரு அல்பையா இருப்பேன்னு நான் கொஞ்சம் கூட நினச்சிப் பார்கலைடா!” ரேடியோ ‘ஆர்ஜெ’ போல வளவளத்த தன் அம்மாவின் பேச்சு சுத்தமாக ஹரிக்கு புரியவில்லை.
ஏற்கனவே பிரியா இவனை கொஞ்சம் கூட மிஸ் செய்யவில்லை! என்ற கடுப்பில் இருந்தவனை அன்னையின் புரியாத இந்த பேச்சு இன்னும் வெறுப்பேற்றியது.
“ம்மா! மனுஷனோட நிலைமை தெரியாம போனைப்பண்ணி டிஸ்டர்ப் செய்துட்டு,இப்ப எதுக்கு-ம்மா இப்படி பொலம்பற!” என எரிந்து விழுந்தான்.
அவனின் எரிச்சலை கண்டுக்கொள்ளாது, “பொண்டாட்டியை ஒழுங்கா பார்த்துக்க தெரியாதவனுங்க எல்லாம் ஏன்டா கல்யாணம் பண்ணிக்கறீங்க?” என எகிறினார் மல்லிகா.
ஏற்கனவே கழிவிரக்கத்தில் ,இருந்தவனிடம் மல்லிகா இப்படி கேட்டதும், “ம்மா… இப்ப நீ ஒழுங்கா பேசலைன்னா நான் போனை கட் பண்ணிடுவேன்!” என இவன் எச்சரிக்க,
அப்போதும் அடங்காதவர்,”பண்ணிதான் பாரு! அப்புறம் நான் யாருன்னு உனக்கு தெரியும்!” அவனின் அன்னையென நிரூபித்தார்.
“ஷப்பா… தாயே! மல்லிகா பரமேஸ்வரி! நீங்க யாருன்னு சொல்லவா இப்ப என்னை கூப்பிட்டீங்க? முடிலம்மா. என்னால சத்தியமா முடியலை. உங்ககூட இப்ப வாய் சண்டை போட தெம்பில்லை.ப்ளீஸ் –ம்மா! சொல்ல வந்ததை சொல்லுங்க சீக்கிரம்!” என்ற மகனின் வழக்கத்துக்குமாறான கெஞ்சலில் சாந்தமானவர், அன்று நடந்ததை சுருக்கமாக சொல்லிமுடித்தார்.
அதன்பின் “நீ பிரியாகிட்ட காசு கொடுக்கறதே இல்லையாடா ஹரி?” எனக் கேட்ட அன்னைக்கு,
இந்நாள்வரை ‘இதுவேண்டும், அதுவேண்டும்’ என எதையுமே பிரியா அவனிடம் கேட்டதே இல்லை.’தன்னை அவளுக்கு நெருக்கமாக இன்னும் அவள் உணரவே இல்லையா?’ என வருந்தியவன்,
“அவ இதுவரைக்கும் என்னை கேட்டதே இல்ல-ம்மா!” என சலிப்பாய் சொன்னான்.
அதைக்கேட்டவர் மீண்டும் சிங்கமாய் சிலிர்த்தெழுந்து, ”என்னடா பொண்டாட்டின்னா எல்லாத்துக்கும் புருஷன்கிட்ட கையேந்திட்டு இருக்கனும்னு நீயும் ஆசைப்படறியா? அவகேட்டாதான் இவர் தருவாராம்! ஏன் கேட்கலன்னா நீங்களா தேவைக்கு வச்சிக்கோன்னு கொடுக்கமாட்டீங்களோ? நீ இப்படி சொன்னது மட்டும் அவ மாமனார் காதில் கேட்டதோ, மொத்த சொத்தையும் அவ பெயருக்கு பத்திரம் பண்ணி, அதை அவ கைல கொடுத்துட்டுதான் மறுவேலைப் பாப்பாரு! தெரியுமில்ல” என அவனை வறுத்தெடுத்தார்.
இவர் இப்படி சாதாரணமாக சொன்னது ஹரிக்கு, ’ம்க்கும்! உங்க மருமகளுக்குதான் என்னைவிட மத்த எல்லோரையும் ரொம்ப பிடிக்குமே!அன்னைக்கு அவங்க மாமனார் ஊருக்கு கிளம்பும்போது, அவரை இவ போகவேணாம்னு மூக்கால அழுது தடுத்த அளவுக்கு கூட என்னை இப்ப தடுக்கலை!’ என புகைச்சலை ஏற்படுத்தி,
“ஏன்… உங்க மருமகளுக்காக, அவங்க மாமனார்தான் எல்லாத்தையும் செய்வாரா? அவ புருஷன் கூடத்தான் உயிரையும் கொடுப்பான்!” என சொல்ல வைத்தது.
மகன் பேசியதைக் கேட்ட மல்லிகாவிற்கு, ஒரு மருமகளுக்கு மாமியாராய் இல்லாது, ‘இப்படிபட்ட ஒரு வார்த்தை தன் கணவன் வாயில் இருந்து வரவேண்டும்!’ எனக் காத்துக்கொண்டிருக்கும் ஒரு சாதாரண பெண்ணாய் மனைவியாய், மனம் மலர்ந்துவிட்டது.
தன்னை நம்பிவந்தவளுக்கு இதைவிட ஒருவனால் வேறு என்ன செய்திட முடியும்! தன் வளர்ப்பில் எப்போதும் போல இப்போதும் பெருமையே கொண்டார்.அதன் வெளிப்பாடாய்,
“பெரு வச்சியே…சோறு வச்சியா?” எனக்கிண்டலடித்தார்.
“ப்ச்சு! போம்மா! நேரம்காலம் தெரியாம நீ வேற வெறுப்பேத்திட்டு இருக்க” என புலம்பினான்.
அவனின் வழக்கம் இதுவல்ல என அறிந்தவர்,” என்னடா ரொம்ப வேலையா? ஒரே டல்லா இருக்க!” என அன்னையின் அக்கறையோடு கேட்டார்.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல. சரளா ஆன்ட்டி ஏதாவது உன்கிட்ட சொன்னாங்களா? அதான் நீ என்னைப்போட்டு வறுத்து எடுக்கிறியா?” என சலிப்பாய் ஹரிக் கேட்டான்.
“இல்ல, இல்லடா! அவங்க எதுவும் சொல்லலை.அவங்க என்கிட்டயும் பிரியாகிட்ட போனிலும் எப்பவும் பேசுவதைப்போல எதார்த்தமாதான் பேசினாங்க. அவங்க அப்படி கேட்டதும் பிரியா, ‘இல்லம்மா, வேணாம். என்னோட ஹஸ்பன்ட் கொடுத்திருக்கார்ன்னு சொல்லாம, தேவைன்னா கேட்கறேன்னு சொன்னதால, நானாதான் உன்கிட்ட இப்ப கேட்கறேன்” என மல்லிகா விளக்கியதும்,
“ம்மா… எனக்கு குடும்பம், மனைவி, பொறுப்பு இதெல்லாம் ஒன்னும் தெரியலை போலம்மா. தெரிந்திருந்தா நான் ரெண்டு மாசமா என் கூட இருக்கறவளுக்கு, காசு தேவைப்படும்னு யோசிச்சு அவ கேட்கனும்னு நினைக்காம நானே கொடுத்திருப்பேன் இல்லம்மா?
இப்படிதான் நான் நிறைய சொதப்பறேன். இதுக்குதான் என்னோட கல்யாணத்துக்கு இன்னும் கொஞ்ச வருஷம் போகட்டும்னு சொன்னேன்.இப்ப பாருங்க, என்னால அவளை நல்லா பார்த்துக்க முடியல!” என அவனின் முந்தைய குளறுபடிகளையும் மனதில் எண்ணி சொன்னான்.
அதைக்கேட்டவருக்கோ மணம்முடித்த சில மாதங்களிலேயே வந்த இந்த பிரிவை தாங்கமுடியாது மருமகள் இவனை ஏதோ சொல்லபோய் அதற்குதான் இவன் இப்படி முகாரிப்பாடுகிறான் என எண்ணி, ”என்னம்மா! உன்னை முதலில் அனுப்பிட்டு இங்க தனியா இருக்கமாட்டேன், எக்ஸாம் முடிந்து மொத்தமா நாம கிளம்பலாம்னு பிரியா அடம் பண்றாளா?அதற்கு உன் ஆபீஸில் ஒத்துக்கலையா? அதனால ஹரி பையன் அழுதுட்டு இருக்கானா?” எனக்கேட்டார்.
ஏற்கனவே கபகபவென்று எரிந்துக்கொண்டிருந்த இவனின் வயிற்றில், இப்படி ஒரு கேள்வியைக்கேட்டு மல்லிம்மா சிட்ரிக் ஆசிட்டை ஊற்றினார்.
‘ம்க்கும்! அப்படி சொல்லிட்டுதான் மறுவேல பார்ப்பா உங்க மருமக! இன்னைக்கே ஃப்ளைட்டில் இடமில்லைன்னா கூட என்னை லக்கேஜ் வைக்கற கண்டெயினர்ல போட்டு பார்சல் பண்ண அவ ரெடியா இருக்கா! அவளா என்னை விட்டுட்டு இருக்கமுடியாம அடம் பிடிக்கபோறா!’ என நொந்தவன்,
“இல்லம்மா! அதெல்லாமில்ல!” என மனைவியை விட்டுக்கொடுக்காது, அரைக்குறையாய் எதையோ சொன்னான்.
அதற்கு சமாதானம் ஆகாதவர், ”இல்லன்னு நீ சொன்னா நான் நம்பிடுவேனா? அதெல்லாம் அப்படிதான், கல்யாணம் முடிந்த கொஞ்சநாளில் நீ அவளை தனியாவிட்டுட்டு ஊருக்கு கிளம்பினா அவளுக்கு கஷ்டமாதான் இருக்கும்.அதில் அவள் ஏதாவது உன்னை தொல்லை பண்ணா அதையெல்லாம் பெருசா எடுத்துக்காத ஹரி!” என சொன்னதோடு, இன்னும் சிலபல அறிவுரைகளை அவனுக்கு சொல்லி அவனை இன்னும் கடுப்பேற்றி வீட்டுக்கு அனுப்பினார்.

Categories
On-Going Novels Rajeswari Sivakumar

அத்தியாயம் – 13

எபி 13
‘ஹரி பிரியாவை உயிராய் சுமக்கிறான்!’ என்பதை இந்த ஒரு மாதத்தில் அவன் நன்கு புரிந்திருந்தான்.ஆனால் அவள்… இவனை எப்படி நினைக்கிறாள்… என்பதுதான் ஹரிக்கு தெரியவில்லை.
இவனுக்கு அவளிடம் எந்தக் குறையும் இல்லை. இவனை அவள் மிக அழகாக புரிந்து வைத்திருந்தாள்.இவனை அவள் படுகஷுவலாக ஹாண்டில் செய்தாள். இக்கட்டான நிலமையைக்கூட எந்த ஒரு மெனக்கேடலுமின்றி சாமர்த்தியமாக சமாளித்தாள்.ஆனாலும்… ஏதோ ஒன்று… அவளிடமிருந்து இவனுக்கு…. குறைவதைப்போல ஹரிக்கு அடிக்கடி தோன்றிக்கொண்டே இருந்தது.அது என்ன என்பது தான் தெரியவில்லை.
இவன் வம்பிழுத்தால்…அவளும் வாயடிக்கிறாள். அணைத்தால் அதில் அடங்குகிறாள்… இவனை அக்கறையாய் பார்த்துக்கொள்கிறாள்… இப்படி எல்லா விதத்திலும் அவள் சரியாதான் இருந்தாலும்… அவள்… அவனிடம் எந்த உரிமையும் எடுத்துக்கொள்ளவில்லையோ… என இவனுக்கு ஒரு சந்தேகம் இருந்துக்கொண்டே இருந்தது.
அவளின் அம்மா இங்கிருந்த போது,’பிரியா அவளுக்கு பிடிச்சவங்ககிட்ட ரொம்ப உரிமை எடுத்து,பயங்கரமா அடம் பிடிப்பா.அவங்க இவ கூடவே இருக்கனும்,இவளுக்கு எல்லாத்தையும் அவங்க பாத்து பாத்து செய்யனும்,இவளுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கனும்… இப்படி ரொம்ப எதிர்ப்பார்ப்பா ஹரி.அவ அப்படி உங்ககிட்ட நடந்துகிட்டா… கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க… அவ இன்னும் சின்னபொண்ணுதானே! போக போக சரியாயிடுவா.நீங்க அவளை கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க!’ என சொன்னது,இப்போதிருக்கும் இவனின் ‘லக்ஸ் பேபி’க்கு பொருந்துவதைப்போல் தெரியவில்லை.
ஏனெனில்… எதற்கும் பிரியா ஹரியிடம் அடம் பிடிக்கவுமில்லை…. சண்டை போடவுமில்லை.அவன் என்ன சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு அவள் செயல்படுவது… அவளுக்கு இவனைப் பிடித்தமில்லாமல்.,கல்யாணம் செய்துவைத்த கட்டாயத்தால் இவனிடம் ஒரு மாதிரி செயற்கைத்தனமாய் இருப்பதாய் தோன்றியது.
இவனின் இந்த எண்ணம் சரியே என்பதைப்போல அவர்களுக்கிடையே ஒரு நிகழ்வு நடந்தது.
அன்று குளித்துவிட்டு வந்த ஹரி அறையில் பிரியா போனில் எதையோ நொண்டிக்கொண்டிருந்ததை பார்த்ததும் அவளை சீண்டும் பொருட்டு மெதுவாக அவள் பின் சென்று,அவள் தோளின் வழியே தலையை நீட்டி, அவள் முகத்தருகே போய், தன் தலையில் இருந்த தண்ணீரை கைக் கொண்டு சிலுப்ப,அதுப் பிரியாவின் முகத்தில் பட்டு,அவளை சிலிர்க்கவைத்தது.
அவளின் கன்னத்தில் வந்த சிலிர்ப்பை ஆசையாக ஒருக் கையில் தடவிக்கொண்டே,”பட்டுகுட்டி-டா நீ” எனக் கொஞ்சி மறுகையால் அணைத்தான்.
இதைப்போன்ற அணைப்புக்களும்,கொஞ்சல்களும் அவர்களுக்குள் மிக சகஜமாகிப் போயிருந்தது.அதனால் அணைத்தவனின் மேல் மொத்தமாக சாயந்த பிரியா,”எதுக்கு இப்ப பட்டு?” என ஒய்யாரமாய்க் கேட்டாள்.
“இந்த பட்டு எதுக்குன்னா… தண்ணிபட்டதும் சிலுத்துக்கற உன்னோட இந்த ஸ்கின்னா பாத்து வந்தது.”என இவன் கொஞ்சிகொண்டிருக்கும் போது, அவனின் அலுவலகத்தில் இருந்து, அவர்கள் இருவருக்கும் ‘விசா’ ரெடியாகி விட்டதாகவும்,டிக்கெட் எப்போது போடலமேன கேட்டு போன் வந்து ஹரியை திகைக்க வைத்தது.
முதலில் இவர்கள் கிளம்புவதாக முடிவெடுத்த தினத்தில், பிரியாவால் கிளம்பமுடியாத சூழ்நிலை இப்போது உருவாகியிருந்தது.வழக்கத்துக்கு மாறாக சென்னையில் பெய்த கடும் மழையால் அவளின் கடைசி இரண்டு கல்லூரித்தேர்வுகள், இவர்களின் பயண நாளுக்கு பதினைந்து நாட்களுக்கு பிறகே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனால்… ஹரி இன்னும் சிறிது நாட்கள் கழித்து ‘ஆன்சைட்’ செல்ல அலுவலகத்தில் அனுமதி பெற்று, அவளின் தேர்வுகள் முடிந்ததும் இருவரும் சேர்ந்தே கிளம்புவதா… இல்லை தான் முதலிலும்,பிரியா அவளின் தேர்வுகளை முடித்தும், வருவதா… என்பதை முடிவெடுக்கும் பொறுப்பை, பிரியாவிடம் கொடுத்திருந்தான்.அதற்கு அவள் சட்டென்று அளித்த பதிலில் இவன் மனதில் அடிவாங்கினான்.
“நீங்க உங்க ஆபீஸில் ஆல்ரெடி கிளம்பற டேட்டை இன்ஃபார்ம் பண்ணிட்டீங்களே… இப்ப போய் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சிக் கிளம்பறேன்னு எக்ஸ்க்யூஸ் கேட்டா நல்லாவா இருக்கும்?அதனால நீங்க முதலில் கிளம்பிடுங்க.நான் எக்ஸாம் முடிச்சிட்டு வரேன்.அதில் எனக்கொன்னும் பிரச்சனை இல்லை! எப்படியும் ஒரு ட்வென்டி டேஸ்ல நான் அங்க வந்துடுவேன். நான் இங்க மானேஜ் பண்ணிக்கறேன். நீங்க கவலைப்படாம கிளம்புங்க!”என்று அவள் பொறுப்பாய் பெரிய மனுஷியாய் சொன்னதைக் கேட்ட ஹரி,’தன் மனைவி எவ்வளவு பொறுப்பாய் எல்லாவிஷயத்தையும் புரிந்துக்கொண்டு நடக்கிறாள்!’ என எண்ணி நியாயப்படி பெருமைதான் பட்டிருக்கவேண்டும்.
ஆனால்… அவன் எதையோ இழந்ததைப்போல உணர்ந்தான்.திருமணம் முடிந்த இருமாதங்கள் கூட முடியாத நிலையில் இருபது நாள் பிரிவு… என்பதை ‘தான்’ கொடுமையாக உணர்வதைப் போல இவள் உணரவில்லையா?
‘அவ்வளவு நாள்…. நான் தூங்கி எழும்பொழுது இந்த முகம் கண்ணுக்கு முன்னாடி இல்லன்னா… அந்த நாள் எப்படி எனக்கு நல்லா போகும்! நான் நினைச்சபோது இவகிட்ட பேசமுடியலைன்னா… என்னோட பகல் எப்படி போகும்?அவ்வளவு நாள் இவ என் பக்கத்துல இல்லைன்னா… என்னால நைட் எப்படி தூங்க முடியும்? இருபது நாள்…. இவ இல்லாம நான் எப்படி இருக்கபோறேன்!’என எண்ணி… எண்ணி உடைந்துப்போனான் ஹரி.
அவளே இப்படி சொல்லும் போது,’இல்ல நான் உன்கூடவே இருந்து உன்னை கூட்டிட்டே போறேன்!’னு சொல்லவும் முடியாம,’நான் இல்லாம நீ இருபது நாள் தனியா இருந்துடுவியா?’னு கேட்கவும் முடியாம தவித்துப்போனான்.
முதலில் எப்படியும் ‘நாம் இருவரும் சேர்ந்தே போகலாம்’ என்றுதான் பிரியா சொல்வாள் என்று உறுதியாக நம்பிக்கொண்டிருந்த ஹரி,அதனால் அலுவலகத்தில் தன் பயணத்தை என்ன சொல்லி தள்ளிப்போடலாம்… என யோசித்துக்கொண்டிருக்க,அவளின் இந்த பதில் அவனை நிலைக்குலைய செய்தது.’என்னோட லக்ஸ் என்னைவிட்டுட்டு அவ்வளவு நாள் இருந்துடுவாளா…?!’
அதற்குபின் வந்த நாட்களில் ஹரியிடம் அவனின் துள்ளல் கொஞ்சம் குறைந்துதான் போனது.வெளி ஊருக்கு போகும் போது, என்னதான் கையேடு சார்ஜர் எடுத்துவைத்தாலும்,வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன் நாம், செல்லை ஃபுல் சார்ஜ் செய்வோமே… அதைப்போல கிளம்புவதற்கு நாட்கள் நெருங்க நெருங்க,ஹரி தன் ‘லக்ஸ்சோப்’பிடம் சார்ஜ் ஏற்றிக்கொண்டிருந்தான்.அவள் என்ன வேலை எங்கிருந்து செய்தாலும்,படிக்கும் போது கூட அவளை ஒட்டிக்கொண்டு அலைந்தான்.
பிரியா,முதலில் இதைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாலும் பின் அவளுமே… அவனைப்போலவே நடந்துக்கொண்டாள். இப்படியே நாட்கள் செல்ல ஹரி கிளம்பும் நாளும் நெருங்கி வந்துக்கொண்டிருந்தது.
அன்று உறவினர்களின் திருமணத்தில் சந்தித்துக்கொண்ட ஹரி,பிரியா பெற்றோர்கள், அவர்களின் பிள்ளைகள், அவர்களின் வாழ்க்கையை எப்படி சிறப்பாக நடத்தி செல்கிறார்கள்’ எனப் பெருமை பேசிக்கொண்டிருந்த போது பிரியா தன்னன்னையை பேசியில் அழைத்தாள். இருவரும் அன்றைய நிகழ்ச்சிகளை பேசி கொண்டிருக்கும்போது, பிரியாவின் தோழிக்கு அடுத்த வாரம் பிறந்தநாள் வரப்போவதாக அவள் சொன்னாள்.
மேலும் அதற்கு நண்பர்கள் கூடி, செய்ய போகும் ஏற்பாடுகளைப்பற்றி அவள் சொல்ல, இவர் அந்த செலவிற்கு ‘மணி ட்ரான்ஸ்பர்’ செய்யட்டுமா? எனக்கேட்க, தேவை என்றால் கேட்பதாக அவள் சொல்லி, பேசியில் பேச்சை முடித்தாள்.
இது ஒரு சாதாரண விஷயம் தான். ஆனால் அதை அருகிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த மல்லிகாவினால் அதை அப்படி எடுத்துக் கொள்ளமுடியவில்லை.
‘இந்த ஹரிப் பையன் கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கவேயில்லை! அவன் என்ன அவனோட பொண்டாட்டிக்கு செலவுக்கு கூட பணம் தரமாட்டானா? ‘என் பையன் உங்க பொண்ணை பத்திரமா பார்த்துப்பான்னு’ நான் சொன்னதை நம்பிதானே இவங்க படிச்சிட்டு இருக்கும் சின்ன பொண்ணை கல்யாணம் பண்ணிக்கொடுத்தாங்க. இந்த தடிமாடு என்ன இப்படி பண்ணி வச்சியிருக்கான்!’ என மனதில் ஹரியை தாளித்துக்கொண்டிருந்தவர், அதை அவனின் தலையில் கொட்டும் நல்ல நேரத்திற்கு காத்துக் கொண்டிருந்தார். அடுத்த அரைமணி நேரத்தில் அந்த நேரம் அவரிடம் வந்துசேர்ந்தது.

Categories
On-Going Novels Rajeswari Sivakumar

அத்தியாயம் – 12

எபி 12
அன்று ஒரு வேலையாய் வெளியே சென்று அப்போதுதான் வீட்டிற்கு திரும்பிய ஹரியை, பிரியா வரவேற்கும் புன்னகையுடன் பார்க்க,அவன் முகம் கொஞ்சம் வாடினால் போலிருந்தது.
“என்ன.. என்ன ஆச்சு! ஏன் டல்லா இருக்கீங்க?” என இவள் பதைப்புடன் கேட்டதும்,
அவளருகில் வந்தமர்ந்து, அவளின் மடியில் தலைவைத்து,அவளின் கையை தன்னிடுப்பில் போட்டு கொண்டு ”பீவர் வரும்போல இருக்கு லக்ஸ்! உடம்பெல்லாம் வலிக்குது!” என்றான்.
அப்படி அவன் சொன்னதும், அவன் வசமிருக்கும் ஒரு கை போக,மீதமிருந்த மறுகையை கொண்டு அவனின் கழுத்திலும், நெற்றியிலும் இவள் சோதித்துப்பார்த்தால்… ‘ஆமாம். அவனுக்கு ஜுரம் அனல் போல அடித்துக்கொண்டிருந்தது.
‘அப்பா…’அன்றிலிருந்து ஆரம்பித்தது தம்பதியர் இருவருக்கும் சோதனைக்காலம். ஹரியை ஜுரம் படுத்தியது என்றால்…. ப்ரியாவை இவன் படுத்தி எடுத்துவிட்டான்.
‘ஒரு வயது குழந்தைக்கு ஜுரம் வந்திருந்தால்… அது கூட இப்படி அதன் அன்னையை பாடாய்படுத்தி இருக்காது!’ என பார்ப்பவர் சொல்லும் அளவிற்கு ஹரி பிரியாவை தொல்லைப்படுத்திவிட்டான்.
இருபத்திநான்கு மணிநேரமும் அவனுக்கு பிரியா அவனருகிலேயே இருக்கவேண்டும். அவள் அப்படி-இப்படி நகர்ந்தால்…”லக்ஸ்…பேபி! சோப்பு….” என ஈனக்குரலில் அழைத்துவிடுவான். இவன் தூங்குகிறானேன, அவள் அப்போதுதான் அப்படி போயிருப்பாள்….அதற்குள் அவன் குரல் கொடுக்க,அக்குரல் முடியும் முன் அவனருகில் வந்துவிடுவாள் இவள்.இரவில் தூக்கத்தில் கூட அவள் அருகில் இருக்கிறாளா… என அழைத்து ‘சேக்’ பண்ணிக்கொள்வான். இது ஒரு வகை என்றால்…அடுத்து,
பிரட் சாப்பிட பிடிக்கவில்லையென ஒரு அட்டகாசம்,மாத்திரை சாப்பிட கசக்கிறது… என அதற்கு ஒரு அமர்க்களம்… படுத்தே இருக்கபிடிக்கவில்லையென ஒரே நச்சரிப்பு,கஞ்சி உரைப்பின்றி சப்பென்று இருப்பதாக சொல்லி,அதைக் குடிக்கமாட்டேனேன அதற்கு ஒரு அடம்…
’ஷப்பா!’ இவனுக்கு ஜுரம் இருந்த மூன்றே நாட்களில்,பிரியாவை குழந்தைகளின் மருத்துவமனையில் மூன்று வருடமாக பணியில் இருந்ததைப்போல உணரவைத்தான்.
நான்காம் நாள் நன்றாக ஜுரம் விட்டுவிடவே, ஹரி தெம்பாக உணர்ந்தான்.அப்போதுதான் அவனுக்கு கடந்த மூன்று நாட்களில் பிரியாவை அவன் படுத்தியப்பாடெல்லாம் நினைவுக்கு வந்து அவனை வருத்தியது.
‘அச்சோ… பாவம் என்னோட லக்ஸ்! அவளே ஒரு பேபி! அவகிட்ட போய் நான் பேபியாட்டம் நடந்துகிட்டேனே…!எப்படித்தான் என்னை மானேஜ் பண்ணாளோ.நார்மலா இருக்கும் போது ஹீரோவாட்டம் இருக்கும் நான்… உடம்புக்கு முடியலைன்னா மட்டும் ஏன் காமெடி பீஸ்ஸாயிடறேன்! இந்த மல்லி மம்மியோட வளர்ப்பே சரியில்லை! என்னை எப்படி வளர்த்து வச்சியிருக்காங்க பாரு! எனக்கு உடம்புக்கு முடியலைன்னு தெரிந்தும் அவங்க இங்க வராம பிரியாவே பாத்துப்பான்னு ஏன் சொன்னாங்க?’ என நினைத்த ஹரி அதை பிரியாவிடம் கேட்க அவளிடம் சென்று,
“லக்ஸ்!எனக்கு முடியாத போது,நீ அம்மாவ உன்கூட துணைக்கு கூப்பிட்டிருக்கலாம்ல! மூனு நாளும் என்கூடவே உன்னை உக்காரவச்சி ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.சாரி-டா சோப்பு!” என்றான்.
ஹரி குடிக்க ஜூஸ் போட்டுக்கொண்டிருந்த பிரியா,”இதுல எனக்கு என்ன கஷ்டம் இருக்கு! போன்ல பேசும்போது அவங்க வருட்டுமான்னு தான் கேட்டாங்க.நான் தான் என்னால முடியலைனா கூப்பிடறேன்னு சொன்னேன். ஏன்… உடம்பு முடியாத போது நீங்க உங்க அம்மாவ ரொம்ப மிஸ் பண்ணீங்களா…?நான் உங்களை சரியா கவனிச்சுக்கலையா…” என குறையாக கேட்டாள்.
‘அம்மாவ மிஸ் பண்ணேனா… சாதாரண தலைவலி வந்தாக்கூட, என் பக்கத்துல அம்மா இருக்கனுமே.ஆனா… இந்த மூனு நாள் நான் ஏன் அவங்களை மிஸ் பண்ணலை! இவ இப்படி கேட்டதும் தானே எனக்கே அது நியாபகம் வருது.என்னோட அம்மாகிட்ட கிடைக்கும் அதே பாதுகாப்பை இவகிட்டையும் பீல் பண்றேனா…அதான் எனக்கு முடியாத போதும் அவங்களை நான் தேடலையா?இது எனக்கு புரியனும்னு தான் அவங்களும் வரலையா? என இவன் தன் போக்கில் எண்ணிக் கொண்டிருந்தான்.
தனது கேள்விக்கு ஹரியிடமிருந்து பதில் வராது போகவே முகம் வாடிய பிரியா, ”ஸாரி… நீங்க உங்க அம்மாவை இவ்வளவு எதிர்பாத்திருப்பீங்கன்னு நான் நினைக்கலை.அதான் நான் அவங்ககிட்ட.’சாதாரண பீவர்க்கு எதுக்கு நீங்க அலையனும்.நானே பாத்துக்கறேன்’னு சொல்லிட்டேன்.நான் அப்படி சொல்லலைன்னா… அவங்க கண்டிப்பா வந்திருப்பாங்க. நீங்க உங்க அம்மாவை மிஸ் பண்ண நான் காரணமாயிட்டேன். ஸாரி!” என சொல்லிக்கொண்டே ஜூஸ் கிளாசை அவனிடம் கொடுத்துவிட்டு,சமையல் மேடையில் இருக்கும் ஜூஸ் மேக்கரை எடுத்து ‘சிங்க்’கில் போட்டாள்.
அப்போதுதான் அவள் முகத்திலும் குரலிலும் இருந்த மாறுபாட்டை கவனித்த ஹரி,”மூனு நாளா எனக்கு வேலை செய்து என்னோட சோப்பு தேஞ்சிப் போச்சேன்ற கவலையில நான் அப்படி சொன்னா… நீ அதை வேற மாதிரி நினைச்சிக்கிறியே…. உன்னை இப்ப என்னப் பண்றது…?” எனக்கேட்டுகொண்டே பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்த அவளின் கைகளை பின்னிருந்து அணைத்துப்பிடித்து, அவனும் அவளோடு சேர்ந்து,’தன்’ வேலையை செய்ய தொடங்கினான்.
உதவி செய்வதைப்போல அருகில் நின்றுக்கொண்டு அவளை வேலை செய்யவிடாமல் சிலுமிஷம் பண்ணிக்கொண்டிருந்த ஹரியிடம்”கைய விடுங்க.நீங்க செய்யற வேலையால தண்ணி எவ்வளவு வீணாப்போகுது பாருங்க” என்றாள்.
அவள் எப்போதும் தன்னை பெயர் சொல்லி அழைக்காமல் இருப்பதைப் பார்த்த ஹரி,” ஹோய்…லக்ஸு!ஒரு மாமா…,அத்தான்…,ஹனி… டார்லிங்… இப்படி எதையாவது சொல்லி, என்னை கூப்பிடாம ஏன் எப்போவும் என்கிட்ட மொட்டையா பேசற. இது என்ன கெட்ட பழக்கம் சோப்பு!” எனக்கேட்டுக்கொண்டே குழாயில் தண்ணீரை கையில் பிடித்து,அவள் கையின் மேல் ஊற்றிக்கொண்டிருந்தான்.
“.நீங்க சொன்ன பெயர் ஏதுவும் உங்களுக்கு மேட்ச் ஆகாது. செட்டாகாத பெயரை சொல்லி எப்படி கூப்பிட முடியும்? உங்களுக்கு இருக்கும் வாய்க்கு உங்களை ‘ஓட்டை வாய்’னு சொல்றதுதான் சூப்பரா செட்டாகும். அப்படி கூப்பிடட்டா?” என இவள் நயமாய் கேட்க,
“ஓய்… சோப்பு! என்ன நக்கலா?” எனக்கேட்டு அவளை அழுத்திப்பிடிக்க,
“ஹப்பா… வலிக்குது!” என சொல்லிக்கொண்டே இவள் வலியில் சுருங்கிய முகத்துடன் அவனை திரும்பிப் பார்த்து சொல்ல,
“அச்சோ…. என்னோட பட்டு-டா நீ!” என அவளை ஒருகையால் அணைத்து மறுகையால் அழுத்திப்பிடித்த கைகளை உதட்டினருகே கொண்டு சென்று முத்தமிட்டுக்கொண்டிருந்தான்.
அவனின் முத்தத்தால் எழுந்த சிலிர்ப்பை அடக்க,”இந்த பட்டு எதுக்கு” அவனை திசைதிருப்ப கேட்டாள்.
அவளின் எண்ணத்தை புரிந்துக்கொண்ட அவளின் எண்ணநாயகன், மீண்டும் ஒரு முத்தத்தை வைத்து,”ம்ம்ம்ம்… இந்த பட்டு… கொஞ்சம் டைட்டா பிடிச்சதும் உன் முகம் கசங்கிபோச்சில்ல…அதுக்கு!” என்றான்.
எப்படியாவது அவளை ‘சரண்’ என சொல்லவைத்து விட எண்ணிய ஹரி, “லக்ஸ்… நான் முன்னாடி சொன்னாமாதிரி கூப்பிட பிடிக்கலைன்னா… என்னோடஒரிஜினல் பெயரையே சொல்லு.அதுவே செம்ம ‘மாஸ்ஸா’ இருக்கும்” என ஸீன் போட்டான்.
“உங்களுக்கு என்மேல ஏன் இந்த கொலைவெறி! பாட்டி முன்னாடி நான் உங்கள பெயர் சொல்லிக்கூப்பிட்டா என்னை அவங்க வெட்டிபலி போட்டுடுவாங்க!”
“அப்போ எல்லோரும் இருக்கும் போது வேணாம்.நாம தனியா இருக்கும் போது பெயரை சொல்லி கூப்பிடு!”
“ம்ம்ம்… அப்படியா சொல்றீங்க?ஓகே… தனியா இருக்கும் போது கூப்பிடறேன்!”
“வாவ்…நான் உன்னை ‘லக்ஸ் பேபி’னு சொல்றதைப்போல நீ என்னை செல்லமா என்ன சொல்லி கூப்பிடப்போற?” என நூல்விட்டு பார்த்தான்.
அதற்கு அவள் “ஹா… செல்லப்பெயரா?அதெல்லாம் தானா… ஒரு ஃப்ளோல வரனும் சார்!” என பட்டென்று சொன்னதும்,
‘இவ நம்மமேல ஒரு இது… வந்ததால, அப்படி ஒரு பெயரில் நம்ம நம்பரை சேவ் பண்ணலை போல!’ என நினைத்து ஹரி கொஞ்சம் அப்செட் ஆனான்.
அப்போது பிரியாவின் போன், ‘மலர்கள் கேட்டேன் வானமே தந்தனை…’ என அவளைப் பாராட்டி அழைத்தது.வந்த அழைப்புக்கு அவள் பதில் கொடுத்துக்கொண்டே அந்தப்பக்கம் போக, அந்த பாடலில் ஈர்க்கப்பட்ட ஹரியோ அதை தன் போனில் யுட்டுபில் தேடி கேட்க தொடங்கினான். அதைக்கேட்டு முடித்தவனுக்கோ அந்த பாடல் அவனின் லக்ஸ் சோப்புகேன்றே பாடப்பட்டதை போல தோன்றியது.
’அடப்பாவி! பாரதிக்கு பாக்கறதிலெல்லாம் கண்ணன் தெரிந்தா அது அவரோட பக்தியைக் காட்டுது.ஆனா உனக்கு இப்படி எல்லாத்திலும் அவள ஜாயின்ட் பண்ண தோணினா…அது எதைக் காட்டுது? நீ போற ரூட்டு சரியில்லைன்னு காட்டுது! இதெல்லாம் நல்லதுக்கு இல்ல ஹரி!’ எச்சரிக்கை விடுத்த மனசாட்சியின் குரலைக்கேட்க ஹரியிடம் நேரமில்லை.
“லக்ஸ்! உன்னோட ‘காலர் ட்யூன்’ சூப்பரா இருக்கு. இந்த பாட்டு, பசங்க அவங்க வைஃப்பை இல்லன்னா லவ்வரைப் பார்த்துப் பாடறதை போலவே இல்ல?” எனக்கேட்டு வம்பில் மாட்டினான்.
“ஏன்? ஏன் அப்படி சொல்றீங்க?”
இந்த ஒத்தை வரி கேள்வியிலேயே அனுபவப்பட்டவன் உஷாராகிருக்கனும்.ம்ம்ம்… அவன் நேரம் அதுக்கு ஒத்துழைக்கலையே!
“இல்ல, கேட்டதைக் கொடுக்காம, வேற ஒன்னை தந்தா… அது கண்டிப்பா லவ்வர் இல்லன்னா வைஃப்பா தானே இருக்கனும்?” என இவன் பிரியாவை மனதில் வைத்து சொல்ல,
அதைக்கேட்டவளோ, ”ஹும்… அனுபவம் பேசுதோ? என்னமோ நாலு லவ்வர், பத்து வைஃப் வச்சிட்டு சமாளிக்க முடியாததை போல சலிச்சிக்கறீங்க?” என நக்கலாகக் கேட்டாள்.
தங்களின் பேச்சின் பாதை அபாயகரமான கொண்டைஊசி வளைவில் போவது இப்போது தான் பல்ப் எரிந்து ஹரிக்கு காட்டிக்கொடுத்தது.
“ஹிஹிஹி… லக்ஸ் அப்படிபட்ட அனுபவமெல்லாம் எனக்கு இல்ல. உனக்கு தெரியாதா என்னபத்தி! ஏதோ இந்த பாட்டைக் கேட்டதும் சும்மா அப்படி தோணுச்சி!” என வழிந்தான்.
முதலில் வாயக் கொடுத்துட்டு அப்புறம், ‘வேணாம்… நான் ‘வாக் அவுட்’ ஆகிக்கறேன்னு சொன்னா அதெல்லாம் செல்லாது!
“இந்த பாட்டைக் கேட்டதும் இதன் வரிகளோட கடவுளை சம்மந்தப் படுத்தி பாக்கதான் எனக்கு தோணுச்சி.’நாம நம்ம தகுதிக்கு சாதாரண ஒன்னைக்கேட்டா கடவுள் அவர் தகுதிக்கு தகுந்த ஒன்னிதான் நமக்கு தருவார்!’ இதைதான் நான் இந்த பாட்டுல இருந்து புரிஞ்சிகிட்டேன். ஆனா… உங்களுக்கு ஏன் அப்படி தோணலை? என்மேல குறை சொல்றதுக்கு இந்த பாட்டை யூஸ் பண்ணிக்கறீங்களா? ம்ம்ம்…தப்பு உங்க மனசுல இருக்குன்னு இப்ப எனக்கு தோணுதே.. நான் என்ன செய்யட்டும்?” என புருவம் உயர்த்தி பிரியாக் கேட்டதும்
‘இனி இவகிட்ட வாயே குடுக்ககூடாது சாமி’ என எண்ணியவன். தப்பித்தால் போதுமென அங்கிருந்து ஓடிவிட்டான்.

Categories
On-Going Novels Rajeswari Sivakumar

அத்தியாயம் – 11

எபி 11
பெரியவர்களின் துணை இல்லாது தம்பதியினர் மட்டுமே தங்களின் வாழ்க்கை பயணத்தை தொடங்கிய அந்நாள் மிகவும் இனியதாகவே அவர்களுக்கு சென்றது.அந்நாள் மட்டுமன்று, அதை தொடர்ந்துவந்த அனைத்து நாட்களுமே இனிதாகவே சென்றது. அப்படி செல்ல ஹரியின் பங்கு அதிகமாக இருந்தது.
தனியாக தன்னால் எல்லா பொறுப்புக்களையும் சரிவர செய்யமுடியுமா? என மிரண்டுக்கொண்டிருந்த பிரியாவை அப்படி எதையும் தனியாக செய்யவிடவில்லை ஹரி.எங்கும் எதிலும் அவன் அவளுடனே இருந்தான்.
அவள் எங்கிருந்தாலும் அங்கு, அவளுக்கு துணையாக அவனும் இருந்தான்.ஏற்கனவே அவ்வீட்டில் எது-எது எங்கெங்கே இருக்கிறது என்பதை இரு வீட்டு பெரியவர்களும் அவளுக்கு சொல்லி,சில முக்கியமான வேலைகளையும் சமையலையும் அவளுக்கு பழக்கி இருந்தார்கள்தான்.
அவர்கள் சொன்னவிதம், ‘இதெல்லாம் ஒரு மனைவியின் கடமை, இதையெல்லாம் அவள் கட்டாயமாக செய்யத்தான் வேண்டும், அவள் இப்படிதான் இருக்கவேண்டும்!’ என்ற விதத்தில் இருந்தது.
ஆனால் ஹரி சொன்னவிதமோ, ‘நீயும் நானும் சமம், இங்கு நான் உன்னைவிட ஒரு படி மேல் என்ற எந்த விதிமுறையும் இல்லை, நாம் இரண்டுப் பேரும் ஈக்வல் பார்ட்னர்ஸ்’ என்ற விதமாக இருந்தது.
எல்லாவற்றிலும், வீட்டு வேலைகளில் கூட ‘உன்னால முடிந்ததை நீ செய், என்னால முடிந்ததை நான் செய்யறேன். சிலசமயம் நம்ம ரெண்டு பேராலும் முடியாத போது, யாரும் எதையும் செய்யாம விட்டுடலாம்!’ என அவன் சொன்னது, அவனை அப்படியே கண்ணெடுக்காமல் சைட் அடிக்க வைத்தது.
அவள் பார்த்தவரை அவளின் பெற்றோர்களாகட்டும், ஹரியின் பெற்றோர்களாகட்டும் இருவருமே மனமொத்த தம்பதிகள்தான். ஆனால் அவளின் அப்பாவோ மாமனாரோ அவர்களின் மனைவி, பாத்திரம் தேய்க்கும் போது இவர்கள் அங்கே நின்றுக்கொண்டு அதை கழுவி கொடுத்திருப்பார்களா?
அவர்கள் மனைவியர் தனியாக சமைக்கும் போது அவளுக்கு காய் நறுக்கி கூட தரவேண்டாம், அவளின் அருகில் துணையாய் நின்றுக்கொண்டு எதையாவது பேசிக்கொண்டிருத்திருப்பார்களா?
துவைத்த துணிகளை உலர்த்து போதும், உலர்த்தியத்தை எடுக்கும் போதும் உதவி செய்யவில்லை என்றாலும் கூடவே ஒரு பேச்சுதுணைக்கு சென்று இருந்திருப்பார்களா?
‘மனைவி அங்கே தனியே வேலை செய்துக்கொண்டிருக்க, ஹாலில் டிவியையோ போனையோ நாம் நொண்டிக்கொண்டிருக்கிறோமே’ என அவர்கள் எப்போதாவது உள்ளம் குறுகுறுத்திருப்பார்களா?அவர்கள் தான் அப்படி நினைக்கவில்லை,அவர்களின் துணைவியராவது அக்குறுகுறுப்பை அவர்களிடம் எதிர்பார்த்திருந்திருப்பார்களா!
தன் தந்தையிடமும் மாமனாரிடமும் கனவில் கூட காணமுடியாத காட்சிகளை இங்கு ஹரி பிரியாவிற்கு கண்கூடாக காட்டிக் கொண்டிருந்தான். அவனின் இந்த அக்கறையான செயல்களுக்காகவே அடங்காத அவனின் வாயை கூட ‘போனால் போகிறது, பொறுத்துக்கொள்ளலாம்!’ என முடிவிற்கு ஒரே நாளில் வந்திருந்தாள் பிரியா.
இதைப்போன்ற கணவனின் சிறுசிறு அனுசரணையான செயல்கள்தானே, ஆண்டாண்டுகளாக அம்மாவின் வீட்டில் ஆனந்தமாக இருந்த பெண்களை, மணம் முடிந்த ஆறே மாதத்தில், அரைநாள் கூட அங்கே நிம்மதியாக இருக்கவிடாது செய்துவிடுகிறது.
இன்று மட்டுமன்று இனிவரும் நாள்களில் கூட, ‘இவ்வளவு சீக்கிரம் ஏன்டா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்?’ என்ற எண்ணத்தை இவன் தனக்கு வரவிடமாட்டான் என்ற நம்பிக்கையை பிரியாவிற்கு கொடுத்திருந்தான் ஹரி. நம்பிக்கை! அதுதானே எல்லா உறவுகளுக்கும் அடிப்படை!
இருவரின் பொழுதுகளும் புதுமணத்தம்பதிகளுக்கே உரிய வகையில் கழியவில்லை என்றாலும் மிக இனிதாகவே கழிந்தது.எப்போதாவது பிரியா கல்லூரிக்கு செல்ல வேண்டியிருந்தால் ஹரியே அவளை அழைத்துக்கொண்டு போய் கூட்டி வந்தான்.வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதாகட்டும் இருவரில் யாருக்காவது ஏதாவது தேவையானது வாங்கவேண்டியிருந்தாலும் இருவருமே சேர்ந்து ஷாப்பிங் சென்றுவந்தனர்.ஆக மொத்தத்தில் ஏறக்குறைய இருவரும் எப்போதும் சேர்ந்தே இருந்தனர்.
அதற்காக இருவரும் ஆதர்ஷ தம்பதியினராய் வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள் என பெருமைப்பட்டு கொள்ளும்படி எல்லாம் இவர்கள் இருந்துவிடவில்லை.
‘ஹரி பிரியா ஜோடி ஈருடல் ஓருயிர் போலவா, இல்லை வள்ளுவனும் வாசுகியையும் போலவா… அதுவும் இல்லை என்றால், ‘நீ வடக்கேன்றால் நான் தெற்கு!’ என்றா… இதில் எதில் இவர்களின் ஜோடியை சேர்ப்பது?’ என பார்ப்பவர்கள் மட்டுமல்ல, இந்த ஜோடிகளே குழம்பிப் போய்தான் இருந்தனர்.
பல சமயம் ஹரி படுமட்டமாக சொதப்பிவைத்து, ‘இதற்கு கண்டிப்பாக பிரியா கோபித்துக்கொள்வாள், அவளிடமிருந்து தனக்கு திட்டு நிச்சயம்!’ என இவன் எண்ணி வருந்திக் கொண்டிருக்கும் போது அவள், இதெல்லாம் ஒன்னும் பெரிய விசயமே இல்லை என அவனின் அந்த சொதப்பலை அப்படியே தூசாக தட்டிவிட்டு போவாள்.
சிலசமயம் எதற்கு திட்டுகிறாள், ஏன் தன்னிடம் கோபம் கொள்கிறாள் என தெரியாது அவனின் மூளையை, அவன் போட்டு கசக்கிய கசக்கலில் அது ட்ரைவாஷ் போகவேண்டிய நிலைக்கும் சென்றது.
அரைநாள் அங்க மூடிய கதவுக்கு வெளியே காக்க வைத்தபோது வராத கோபம், இவளுக்கு ஈர டவலை பெட்டில் போடும்போது ஏன் வருது? ராட்சஸி! அதுக்கு போய் என்னமா கத்தறா!
அவங்க சொந்தக்காரங்க கல்யாணத்திற்கு ரெண்டு நாள் முன்னாடியே ஊருக்கு போகமுடியாம இவனுக்கு ஆபீஸில் வேலை வந்து, அன்னைக்கு காலையில அவசர அவசரமா ஓடிப்போய் ஓடிவந்தபோது, ’வேலையில் இதெல்லாம் சகஜம் தானே!’ சொல்லி அதுக்கு பெருசா ஒன்னும் சொல்லாதவ, வாட்சப்ல இவ போட்ட ஸ்டேடஸ்க்கு கமண்ட் பண்ணலைன்னா காது ஜவ்வு கிழிந்து போகும் அளவுக்கு கத்தறா! இவளை புரிஞ்சிக்க முடியலையே! என பாவமாய் ஹரி புலம்பியதை கேட்டக்கூட ஆளில்லை.
ஆக மொத்தத்தில் பிரியா ஹரியை, ‘எப்போது எப்படி இவள் ரியாக்ட் செய்வாள்?’ என அறியமுடியாத ஒரு நிலையிலேயே வைத்திருந்தாள். திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் ஒரு சிறந்த மனைவியாய் தேர்ச்சி பெற்றிருந்தாள் பிரியா.அறியாபிள்ளையான ஹரிதான் ஏகப்பட்ட ‘ஹரியர்’ வைத்துக் கொண்டிருந்தான்.
இப்படியே அல்லாடல்களுடன் ஹரி,பிரியாவுக்கு கல்யாணம் முடிந்து ஒரு மாதம் முடிந்திருந்தது. இருவருக்குள்ளும் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி ஊடலும் இல்லை… கூடலும் இல்லை. ஆனால் அழகான ஒரு நெருக்கம் வந்திருந்தது.
ஹரி பிரியாவின் அருகாமைக்கு அடிமையாகிப் போயிருந்தான். ‘அவளுக்கும் அப்படியா…!’ என அறிந்துகொள்ள அவன் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக தோல்வியையே தழுவியது.
அன்று ஹரி பிரியா இருவருக்கும் வேலை ஏதும் இல்லாததால் இருவரும் ஒன்றாக அமர்ந்து லேப்டாப்பில் ஹரியின் பேஸ்புக் பார்த்துக் கொண்டிருக்கும் போது,அவனை டாக் செய்து இருந்த ஒரு போஸ்ட்டைப் பார்த்து அதிர்ந்தான் ஹரி.
அதில் ஒரு வருடம் முன்பு அலுவலகத்தில் நடந்த ஒரு பார்ட்டியில் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோவை ஹரியின் நண்பன், ‘கல்யாண வாழ்க்கையில் வெற்றிகரமாக முப்பத்தொறாவது நாளில் அடியெடுத்து வைக்கும் என் நண்பனுக்கு பரிசு!’ என இவனின் ஒரு மாத கல்யாண நாளை கொண்டாடும் விதமாக ஷேர் பண்ணியிருந்தான்.அதில் ஹரியுடன் வேலை செய்யும் ஒரு வடக்கிந்திய பெண் மிகநெருக்கமாக அவனின் தோளில் கைப்போட்டு நின்றுக் கொண்டிருந்தாள். அதைப்பார்த்த ஹரி ‘பிரியா தன்னை தவறாக எடுத்துக்கொண்டுவிட்டால்…’ என பயந்து, வேண்டுமென்றே தன்னை மாட்டிவிட எண்ணி, பரிசுக்கொடுத்த நண்பனை பலியிட கொலைவெறியில் இருந்தான்.
சாதாரண கணவன் மனைவி போல வாழ்ந்துக்கொண்டிருந்தால், தன்னை தன் குணத்தை எண்ணத்தை அவளுக்கு உணர்த்தி இருந்திருக்கலாம். அப்படி இருந்தால் இதை பார்த்து ‘பிரியா என்னை சந்தேகப்படுவாளோ?’ என ஹரி பயந்திருக்கமாட்டான்.ஆனால் இவர்கள் கணவன் மனைவியாக வாழாத இந்நிலையில் ‘தன்னைப் பற்றி அவள் தவறாக நினைத்தால், என்ன சொல்லி அவளுக்கு தன்னை புரியவைப்பது?’என ஹரி குழம்பிப்போனான்.
அந்த போட்டோவை பார்த்து அவளின் ரியாக்ஷன் எப்படி இருக்கிறது…! என இவன் நோட்டமிட, அங்கு சண்டை சந்தேகம்… இப்படி ஏதும் வருவதற்கான அறிகுறி ஏதுமில்லை.’என்னைக்குதான் இவ சரியா ரியாக்ட் பண்ணியிருக்கா?’ என கடுப்பானவன், இதற்குமேல் அவளின் ரியாக்ஷனுக்கு காத்திருக்காமல் ஹரியே தன்னிலைவிளக்கம் தர,
“லக்ஸ்! இந்த பொண்ணு நார்த் இந்தியன்-டா. அவளுக்கு நம்ம கல்ச்சர் அவ்வளவா தெரியாது!” எனத்தொடங்கினான்.
“அதுக்கு நான் என்னப் பண்ணனும்?” என கேட்டு ஒருப் புரியாத பார்வைப் பார்த்தாள் பிரியா.
அதேப் பார்வையை ஹரியும் அவளை நோக்கி செலுத்தி,”நீ ஏதும் தப்பா நினச்சிக்கலையா?” எனக் கேட்டான்.
“அவங்களுக்கு நம்ம கல்ச்சர் தெரியாததுக்கெல்லாம் நான் ஏன் தப்பா நினைச்சிக்கனும்?”
‘இப்படி குண்டக்கமண்டக்க பேசி, இவ நம்மல பைத்தியம் ஆக்காம விடமாட்டா போல!’ எரிச்சல்ப் பட்டவன்,
“அவ என்கூட நெருக்கமா என்மேல கை போட்டுட்டு நிக்கறதை பாத்து உனக்கு என்மேல ஏதும் கோபம், இல்ல சந்தேகம் ஏதும் வரலையா? அந்த போட்டோல இருந்த மத்தவங்களைப்போல தான் அவளும் எனக்கு ஜஸ்ட் ஒரு பிரெண்ட். அவ்வளவுதான். அதுக்கு மேல ஒண்ணுமில்ல” என்று விளக்கிக்கொண்டிருந்தவன் அவளின் அனல் பார்வையில் திகைத்தான்.
“என்னை எப்படி நீங்க இவ்வளவு கேவலமா நினைக்கலாம்?”
திடீரென இவள் இப்படி சண்டைக்கு ஏன் வருகிறாள் என சத்தியமாக ஹரிக்கு புரியவில்லை.
“நான் என்ன… எப்போ உன்னை கேவலமா நினச்சேன்?” விட்டா அழுதிடும் நிலைக்கு போனவனாய் ஹரிக் கேட்டான்.
“அப்படி நினைச்சதால தானே இப்படி பேசறீங்க!”
“அடியேய் லக்ஸ் சோப்பு! சும்மா சும்மா காண்டாக்காம சொல்ல நினைக்கறதை ஒழுங்கா சொல்லு!” பல்லைக்கடித்தான்.
“என்ன… இப்ப இப்படி கோபமா கத்தினா நீங்க பண்ணது ஒன்னும் இல்லைன்னு ஆகிடுமா? இல்ல நீங்க கத்துறதைப் பார்த்து நான் பயந்து வாய மூடிட்டு போய்டுவேனா?” என சிங்கமாய் சிலிர்த்தவளைப் பார்த்து,
“லக்ஸ்! என்னால முடியல! ஏன் நீ கோபப்படறன்னு சொல்லிட்டு கோபப்படு சோப்பு!” என கெஞ்சினான்.
“ம்ம்ம்… உங்களை பத்தி எனக்கு தெரியாதா?அதை நீங்க விளக்கி வேற சொல்லனுமா? சும்மா உங்க பக்கத்துல யார் நின்னாலும் உங்களை தப்பாதான் நினைச்சி நான் சந்தேகப்படுவேன்னு நீங்க எப்படி என்னை நினைக்கலாம்? என்னோட நினைப்பெல்லாம் என்ன அவ்வளவு மட்டமாவா இருக்கும்? என்னை பத்தி எப்படி நீங்க இப்படி நினைக்கலாம்? இதான் நீங்க என்னை புரிஞ்சிவச்சிட்டிருக்கும் அழகா?” எனப் படபடவென பொரிந்தவள் லேப்டாப்பை அவன் மடியிலேயே பொத்தென்று போட்டுவிட்டு, அவர்களின் அறைக்கு சென்று கதவடைத்துக்கொண்டாள்.
பொண்டாட்டி தன்னை தப்பா நினைச்சி, சண்டைப்போடக்கூடாதுன்னு இவன் ஒரு விளக்கம் கொடுக்க போய், அதே விளக்கத்தாலேயே அவ இவனை, ‘என்னை எப்படி நீங்க தப்பா நினைக்கலாம்?’ எனக் கேட்டு, சண்டப்போட்டுகிட்டு போனா இவன் நிலைமை இப்ப எப்படி இருக்கும்?
‘என் பொண்டாட்டி என்னை நல்லா புரிந்து வச்சியிருக்கா?’ என சந்தோஷப்படுவதா?’ இல்ல… ‘நம்ம பக்கத்துல ஒரு பொண்ணு ஓட்டிகிட்டு நிக்கறதைப் பார்த்தும் இவளுக்கு கடுப்பு வரலையே, நம்ம மேல இவளுக்கு ஒரு இது… இல்லையா?’ என ஆராய்ச்சியில் இறங்குவதா? இல்ல… ‘கோச்சிட்டு போனவளை என்ன செய்து சமாதானப்படுத்தலாம்?’ என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருங்குவதா? எதை செய்யலாம்? யோசனையில் இறங்கினான் ஹரி.
எதுக்கு,ஏன்,எப்படி,எப்போ… ‘எது நடந்தாலும் அது நன்றாகவே நடந்தது!’ இந்த ‘சம்சார வாழ்க்கையின் தாரக மந்திரம்’ இன்னும் ஹரிக்கு புரியவில்லை.இதைபோல இன்னும் சிலபல அடிகள் பலமாக விழுந்தால் வைகை பாடம் அவனுக்கு புரிந்துவிடும். அதுவரை… அச்சோ… பாவம் ஹரி!

Categories
On-Going Novels Rajeswari Sivakumar

அத்தியாயம் – 10

எபி 1௦
அன்றைய விடியல் ஹரியின் திருமணவாழ்க்கையைப் போல வண்ண மயமாகவே விடிந்தது.தம்பதியர் மட்டுமே தனியாக தங்களின் வாழ்க்கையில் பயணிக்கபோகும் முதல் விடியல் இது.
முதலில் கண்விழித்த ஹரிக்கு அவனின் ‘வழவழ லக்ஸ் சோப்’பின் முகம்தான் கண் முன் தெரிந்தது.கடந்த இத்தனை நாட்களில் அவளை, காலையில் இவன் கண்விழிக்கும் போது பார்த்ததில்லை.
அதனால்… ’அடப்பாவி ஹரி! கண்ணைத்திறந்தவுடனே அவ முகம் முன்னாடி வர அளவுக்கு உனக்கு முத்திப்போச்சா!’ என ஆச்சரியப்பட்டுக்கொண்டே கனவா..நினைவா என செக் செய்ய, மிகஅருகில் தெரிந்த முகத்தை இவன் ஆசையாக தொட,தொட்டக் கையின் மேல் பட்டென்று ஒரு அடி விழுந்து,நினைவுதான் என அவனுக்கு உணர்த்தியது.
எழுப்புவதற்கு ஆளில்லாததாலும்,சீக்கிரமாக எழும்ப கட்டாயமில்லாததாலும் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்த பிரியா, அதற்கு வந்த சிறுதடங்கலை தட்டிவிட்டு மீண்டும் தன் துயிலை தொடங்க, அவளின் இச்செயலால் ஹரிக்கு சிரிப்போடு செல்லக் கோபமும் வந்தது.’கையையா தட்டிவிடற?இப்ப என்னப்பண்ணுவ…’ என்று அவளின் பட்டுக்கன்னத்தில் அழுத்தி ஒரு முத்தத்தை வைத்தான்.
அது பிரியாவின் தூக்கத்தை நன்றாக கலைத்துவிடவே, கண் திறந்தவள் தன் முகத்துக்கு மிக நெருக்கமாக இருந்த ஹரியின் முகத்தைப்பார்த்து முதலில் அதிர்ந்து பின் நிதானத்திற்கு வந்து,அவனை விழியால் ‘என்ன?’ என்றாள்.
சோப்பின் விழி விசாரிப்பில் சொக்கிப் போனவனோ “குட் மார்னிங்!” என்றான்.
அதற்கு பதில் வார்த்தையில் சொல்லாமல்,எல்கேஜி குழந்தைப்போல தன் வலக்கையை நெற்றிக்கு கொண்டுப்போய் ஒரு ‘சல்யூட்’வைத்துவிட்டு, அவனை அப்படியே தள்ளிவிட்டு குளியலறைக்கு சென்றாள்.
‘இவளின் இந்த விசித்திர நடவடிக்கை ஏன்…?’ என அறிய இவன் காத்திருக்க, வந்தவள் இவனைப் பார்த்து “குட் மார்னிங்!” என முன்பு செயலில் சொன்னதை, இப்போது வார்த்தையில் சொன்னாள்.
ஹரியின்,”இதை நான் சொல்லும் போது ஏன் திருப்பி சொல்லலை?” என்ற வினாவிற்கு,
அதற்கு,”அப்ப நான் பல்லு விலக்கலை!” என்ற விடை கிடைத்தது.
‘எக்குத்தப்பா எதையாவது சொல்றதே இவளுக்கு வழக்கமா போச்சு’, என எண்ணி “குட் மார்னிங்க்கும், பல்லு விலக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?” என்ற சந்தேகத்தை இவன் கேட்க,
அதற்கு பிரியா, “சின்ன வயசுல இருந்தே… பல்லு விலக்காம நான் வாயையே திறக்கமாட்டேன்! இதுல எப்படி குட்மார்னிங் சொல்றது?” எனக் கேட்டதோடு விட்டிருந்தால் அன்றைய காலையும் வழக்கமான காலையாகவே ஹரியின் வாழ்க்கை வரலாற்றில் இடம் பெற்றிருக்கும்.
ஆனால் அதற்கு பிறகு அவள் கேட்ட கேள்வியும், செய்த சேஷ்ட்டையும் ஹரிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுத்ததோடல்லாமல், அவனின் சுயசரிதையில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய காலையாக அவ்விடியலை மாற்றியது!
”நீங்க எப்படி பிரஷ் பண்ணாம காபி குடிக்கறீங்க? அதைப் பாக்கும் போது எனக்கு… உவாய்க்…” என்று வாந்தி எடுப்பதைப்போல இவள் பண்ணிய ஆக்ஷனில் சிலிர்த்து எழுந்த ஹரி,.
“என்ன… என்ன லக்ஸ் சொன்ன? நான் பல்லு தேய்க்காம காபி குடிக்கறதைப் பார்த்து உனக்கு என்ன வரும்னு சொன்ன… ம்ம்ம்ம்… என்ன, என்ன சொன்ன… இப்ப எப்படி உங்களுக்கு உவாய்க்… வருதுன்னு பாக்கறேன். ’இனிமே இப்படித்தான்!’ என் சோப்பு மேடம்!” என்று அவளின் ஆக்ஷனுக்கு தண்டனை கொடுக்க அவளை நெருங்க,
அவன் அருகில் வர ஆரம்பித்ததும், அவனின் அடுத்த செயல் என்னவாக இருக்குமென ஊகித்த பிரியா அங்கிருந்து ஓட்டமெடுக்க,
ஓடியவளை தாவிப்பிடித்து தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தவன், ”எவ்வளவு நாள் உன்னால ஓடி ஒளிய முடியும் லக்ஸ்!” என்றக் கேலிச் சிரிப்புடன் கேட்டான்.
“ம்ஹும்…ம்ஹும்! இப்ப ஏதாவது பண்ணீங்க…. கண்டிப்பா வாமிட் பண்ணிடுவேன்.ப்ளீஸ்… வேணாம்…” என இவள் கெஞ்ச,
“ம்ம்ம்… நீ வாமிட் பண்ற அளவுக்கு இப்ப நான் ஏதாவது உன்னை பண்ணணும்னு எதிர்பார்க்கறியா லக்ஸ்? அப்படியா? பொண்டாட்டியின் எதிர்பார்ப்பை பொய்யாக்க மாட்டான் இந்த ஹரி!” என வசனம் பேசியவன் அவளை வலுக்கட்டாயமாய் தன் பக்கம் திருப்பி,அவளின் முகத்தருகே குனிந்தான்.
தெளிவாக தெரியாத அளவிற்கு மிக அருகில் இருந்த ஹரியின் முகத்தைப்பார்த்த பிரியா, ”ப்ளீஸ்… ப்ளீஸ்! இப்ப வேணாமே” என கெஞ்சினாள்.
அவள் அப்படி கெஞ்சியது இவனுக்கு இன்னும் கிளுகிளுப்பை ஏற்ற,”ப்ளீஸ்… ப்ளீஸ்! இப்ப வேணுமே!” என கொஞ்சினான்.
இனி இவனை கண்ட்ரோல் செய்யமுடியாதென எண்ணிய பிரியா, கண்ணை இறுக்கி, முகத்தை சுருக்கி, கீழுதட்டை பலம்கொண்டமட்டும் பல்லால் கடித்து தடுப்பூசிக்கு தயாராவதைப் போல நின்றிருந்தாள்.
அவள் நின்றிருக்கும் நிலையைப் பார்த்தவன், வந்த சிரிப்பை உதட்டில் அடக்கி, ”சோப்பு! என்னாதிது? உன்னோட லிப்ஸ்க்கு என்னோட லிப்ஸ்ஸால ஆசையா ஒரு ஹாய் சொல்லலாம்னு வந்தா ‘ஹெபாடிடிஸ்-பி இன்ஜெக்ஷன்’ போட்டுக்கப்போற எபெக்ட் தர! ச்ச! போச்சு, போயே போச்சு! என்னோட ரொமாண்டிக் மூடு மொத்தமா போச்சு!” எனக் கடுமையாக சொன்னான்.
அவன் கோபம் கொண்டுவிட்டானேன எண்ணி கண்ணைத் திறந்தவள் அவனின் பேச்சிற்கு சம்மந்தமில்லாத பாவத்தை அவனின் முகத்தில் பார்த்து,”உங்க மூடு தான் போயிடுச்சுல்ல, அப்ப நானும் இப்ப போட்டுமா?” என பரிதாபமாக கேட்டவளை இவன் முறைக்கவும்,
”ப்ளீஸ்… இப்ப வேணாம்! முதல் முதல்ல குடுக்கறது டர்ட்டியா இருக்க வேணாம். ப்ளீஸ்!” எனக்கண்ணை மூக்கை வாயை என முகத்தில் இருக்கும் புலன்களை சுருக்கி அவள் கேட்டதும்,
“இப்படி கேட்டா நான் எதையாவது எக்குத் தப்பா பண்ணிடுவேன். அப்புறம் என்னை குறை சொல்லகூடாது!” என மிரட்டியவனை இப்போது பாவமாக பார்த்து,”ப்ளீஸ்!” என வாயசைத்தாள்.
இவ்வளவு தூரம் வந்தபிறகு ஒன்றையும் கொடுக்காது,வாங்காது அப்படியே அவளை சும்மாவிட ஹரியின் உள்ளே இருக்கும் பொல்லாதவன் அனுமதிக்காததால்,”ஓகே சோப்பு! நான் கொடுத்தாதான் அது டர்ட்டி. இப்பதான் ஃப்ரஷ்ஷா பிரஷ் பண்ணிட்டு வந்த நீ கொடுத்தா அப்படி இல்லைல. சோ நீயே கொடு!” என தன் உதட்டை குவித்து காட்டினான் ஹரி.
‘இவங்க என்ன லூசுத்தனமா பேசறாங்க? பிரெஷ் பண்ணாம கொடுத்தாலும் வாங்கினாலும் வாமிட் வரத்தானே செய்யும்!’ என யோசித்தவளுக்கு அப்போதுதான் அவனின் குறுக்குபுத்தி பற்றி, பல்ப் எரிய, ‘அச்சோ… இன்னைக்கு இவன் என்னை விடமாட்டான் போல இருக்கே!’ என நொந்த பிரியா,”முள்ளு மேல சேலைப் பட்டாலும் சேலை மேல முள்ளு பட்டாலும் சேதாரம் என்னவோ சேலைக்குத்தான்!” என எதையோ உளறிவைத்தாள்.
அவள் சொல்லவருவது புரிந்ததால் வந்த சிரிப்புடன்,”ஹோ… அப்படியா மேடம்! அதுதானா இப்ப பிரச்சனை. நீங்கதான் இப்ப சேலையே கட்டலையே? அப்ப நமக்கு சேதாரம் ஏதும் இல்லல?” என நக்கலாய் கேட்டான்.
அவனின் நக்கலில் இருந்தே தான் சொல்லவருவது அவனுக்கு புரிந்துவிட்டது என்பதை உணர்ந்தவள்,இனியும் இங்கிருந்து இவனிடம் பேசிக்கொண்டிருந்தால் நினைத்ததை சாதித்துவிடுவான் என எண்ணி அவனின் கன்னத்தில் முத்தமொன்றை வைத்துவிட்டு அங்கிருந்து ஓட ஆயத்தமெல்லாம் செய்துக்கொண்டு அவனின் வலக்கன்னத்திற்கு தன்னுதட்டை எடுத்து சென்றாள்…. சென்றது மட்டுமே அவளுக்கு தெரியும். அடுத்து நடந்ததற்கு அவள் சத்தியமாக பொறுப்பில்லை!
அவள் திடீரென தன் வலப்பக்கம் முகத்தைக்கொண்டுவரவும், ‘ஏன்.. என்ன ஆச்சு?’ என கேட்க அவளின் முகத்திற்கு நேரே தன் முகத்தை திருப்பிய ஹரிக்கும் அந்த வினாடி என்ன நடந்து என தெரியவில்லை.அதன் பிறகு நடந்த சம்பவத்திற்கு அவனும் பொறுப்பில்லை!
செயற்கைக்கோள்களையே அசால்ட்டாக, எண்ணிய இலக்கில் குறிப்பார்த்து ஏவும் திருநாட்டை தாய்நாடாய் கொண்ட இவளால் ஒரு சாதாரண செயலை குறிதவறாமல் செய்யமுடியவில்லை.வெளியே சொன்னாள் வெட்கக்கேடு!
சும்மாவே ஹரியின் வாய் அடங்காது. இவளை கண்ணால் கண்டநாள் முதல் வம்பிழுத்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் அதுக்குபோய் இவள் வான்டேட்டா காம்ப்ளிமென்ட் கொடுத்துட்டு வந்திருக்கா! அய்யோ! இனி என்னென்ன ஆட்டம் போடபோகுதோ?
முதலில் ‘டார்கெட் அச்சீவ்ட்’ என அகமகிழ்ந்து அங்கிருந்து ஓட ஓரடியை எடுத்துவைத்தவளுக்கு அப்போதுதான் தன் குறி தவறிபோய் வேறொரு இடத்தை தாக்கிய உண்மை விளங்கியது.சேதாரம் பலமாக இருந்தால்? அவ்வளவுதான்! அடுத்த அடி எடுத்துவைக்காமல் அவள் திருதிருவென விழித்துக் கொண்டிருந்தாள்!
அதுவரை லக்ஸ் சோப்பின் அதிரடி ஆஃப்பரில் ஆடிப்போய் இருந்த ஹரியை இந்த திருட்டு முழியே இவ்வுலகிற்கு அழைத்து வந்தது. ‘அடியேய் என் சோப்புகுட்டி! வாமிட்டா வரும்! மகளே! இன்னைக்கு நீ என்கிட்ட வசமா மாட்டின’ என குஷியானவன்,
“ஹேய் என்னடா சோப்பு! இப்படி பண்ணிட்ட! வாமிட் வரும், தரமாட்டேன்னு நீ சொன்னதும் நான்தான் வேணாம்னு சொல்லிட்டேனேடா. அப்புறம் ஏன்மா இப்படி? ஏன்டாம்மா இப்படி ஒரு காரியத்தை செய்துட்ட? சோப்பு…. நீ தப்பா புரிஞ்சிட்டு இருக்கடா. நான் இங்க கேட்கவே இல்ல. நீயா ஏன்டா இப்படி செய்த? அச்சோ… இப்போ உனக்கு வாமிட் வந்தா நான் என்ன செய்வேன்?” என ரொம்ப ஓவராக அவள் மேல் பரிதாபப்படுபவனை போல ஆக்ட் செய்து, அதற்கு அவளிடம் சிலபல அடிகளை வாங்கிக்கொண்டான்.
அடித்து ஓய்ந்துபோய் இருந்தவளிடம் “சோப்பு! இப்ப நடந்ததிலிருந்து நான் ஒரு மாரல் கத்துகிட்டேன். அது.. ஆண்டவன் நமக்கு ஒன்னை கொடுக்கனும்னு நினச்சிட்டான்னா அதை யாராலும் தடுக்க முடியாது!” என வசனம் பேசி மீண்டும் அவளை வெறுப்பேற்றினான்.
அதைக்கேட்டவளோ “கொடுத்தது நானு!” என கடுப்புடன் சொன்னாள்.
“அதையே தான் நானும் சொல்றேன். டர்ட்டின்னு சொன்னவங்களையே கொடுக்க வச்சிட்டான்ல அந்த கோபியர் கிருஷ்ணன்! எங்கம்மா இருந்த விரதமெல்லாம் வீண் போகலை” என வம்படித்தவனை, ’அடப்பாவி! என்னமா கலாய்க்கிறான்’ எனக் கடுப்பானவள் மேலும் நன்றாக நாலு அடிகளை அடித்தாள்.
அப்போதும் அடங்காதவன்,”இப்படி அடிச்சி,ஓதச்சி எல்லாம் நீ ஒன்னும் கிஸ் அடிக்க வேணாம் என்னை. இந்தா! வாங்கிக்க இப்பவே. நீ கொடுத்ததை திருப்பி கொடுத்துடறேன்.” என்று அருகில் வந்தவனிடம் மிஞ்சினால் வேலைக்காகது என அறிந்தவள்,”ப்ளீஸ்! போதும்… வேணாம்,நான் அழுதுடுவேன்!” என கெஞ்சினாள்.
அதுவரை அவளுடன் வம்பு வளர்த்துக்கொண்டிருந்தவனை அவளின் இந்த கெஞ்சல் கொஞ்சம் அசைத்துபார்க்க,”ஓகே லக்ஸ். நீ இவ்வளவு கெஞ்சறதால உன்னை இப்ப சும்மா விடறேன்.பட் ஒரு கண்டிஷன்… டெய்லி நான் மார்னிங் கண்விழிக்கும் போது, நீ இன்னைக்கு சொன்னதைப்போல ஆக்ஷன்ல குட்மார்னிங் சொல்லனும். டீல் ஓகே வா?”என பேரம் பேசினான்.
அப்பேரம் அவளால் ஒத்துக்கொள்ளப்பட்டு அன்று முதல் ஹரியின் காலைப்பொழுது, அவனின் லக்ஸின் ‘குட்மார்னிங்’ல் தான் விடிந்தது.

Categories
Rajeswari Sivakumar Uncategorized

அத்தியாயம் – 9

எபி 9
இங்கே ஒருவனை முழுமொத்தமாய் தன்னிடம் சரணடைய வைத்தது தெரியாமல்,நிம்மதியாக தூங்கிய பிரியா கண்விழித்ததும் தன்னருகில் அமர்ந்து தன்னைப் பார்த்துக்கொண்டிருந்த ஹரியிடம்”டைம் என்ன ஆச்சு?” எனக்கேட்டுக்கொண்டே எழுந்தமர்ந்தாள்.
அவள் கேட்டதற்கு பதிலளிக்காமல் “தலைவலி இப்ப எப்படி இருக்கு லக்ஸ்?” என கேட்டவனிடம்,
“போயே போச்சு!”என்று சொல்லி பளிச்சென்று சிரித்தாள் பிரியா.
அதைக்கேட்டு நிம்மதிப் பெருமூச்சைவிட்டவன்,”உன்கிட்ட பேசனும் லக்ஸ்! இப்ப பேசலாமா?” எனக்கேட்டான்.
“இருங்க… நான் இன்னும் ப்ரெஷ் ஆகனும்… அப்புறம் காபி போடனும்.. ம்ம்ம்… அப்புறம் ஈவ்னிங் வேற என்ன சொன்னாங்க அம்மா…” என யோசித்து,”ஹாங்க்… விளக்கு வைக்கனும்! எனக்கு இவ்வளவு வேலைங்க இருக்கு, அதையெல்லாம் நான் முடிச்சிட்டு வந்ததும் நாம பேசலாம்!” என அடுத்து தான் செய்யவேண்டிய வேலைகளின் லிஸ்ட்டை அவனிடம் அளித்து,அங்கிருந்து சென்றாள்.
சென்றவளையே பார்த்துக்கொண்டிருந்த ஹரி, இவளையும், இவ நடவடிக்கைகளையும் பார்த்தா கோபமாக இருக்காப்போல தெரியவில்லையே! நான் பண்ணக் கூத்துக்கு எப்படி ஒருத்திக்கு கோபம் வராமல் இருக்கும்? இவளால எப்படி… இப்படி நார்மலா இருக்கமுடியுது!’ என யோசித்து மண்டை காய்ந்துப் போனான்.
‘இனிமே இப்படித்தான்!’ எனபாவம் ஹரிக்கு தெரியாது. அவனை மண்டை காயவிட்டவள் தன் வேலைகளை எல்லாம் முடித்து, அவன் கையில் காபியைக் கொடுத்து,”ஹும்… இப்ப பேசலாம்!” என சொல்லி அவனருகில் அமர்ந்தாள்.
இவ்வளவு நேரம் ‘பேசவேண்டும்!’ என சொல்லி,காத்திருந்தவனுக்கு இப்போது எப்படி பேச்சை ஆரம்பிப்பது… என தெரியவில்லை.அதனால் அப்படியே சிறிது நேரம் அவன் அமைதியாக அமர்ந்திருக்க,
“நான் நல்லாத்தான் காபி போட்டிருக்கேன்! ஆல்ரெடி கொஞ்சம் டேஸ்ட் பண்ணிட்டேன்… சோ தைரியமா நீங்க குடிக்கலாம்!” என இவள் தைரியம் கூறினாள்.
அவளின் பேச்சைக்கேட்டு சிரித்துக்கொண்டே கையில் இருந்த காபியை குடித்த ஹரி,”நீ டேஸ்ட் பண்ணித் தந்ததா லக்ஸ் இந்த காபி?அதனாலதான் செம்ம டேஸ்ட்டா இருக்கு!” என்றான்.
ஹரி சிரித்தாலும் அது அவனின் வழக்கமான சிரிப்பாய் இல்லாதது போல் இருக்கவே,”ஏன் ரொம்ப டல்லா இருக்கீங்க? என்ன மேட்டர்!” என்றாள்.
அதற்குமேல் அமைதியாய் இருக்கமுடியாது ஹரி,”லக்ஸ்! ரொம்ப ஸாரி-டா! நான் காலைல நம்ம வீட்டு சாவியை உன்கிட்ட கொடுக்க மறந்து போனேன். வேணும்ன்னே அப்படி செய்யல.தெரியாமதான் அப்படி நடந்து போச்சு!” என்றதும்,
“ம்ம்ம்… நானும் அப்படித்தான் இருக்கும்ன்னு புரிஞ்சிக்கிட்டேன்!” என்றாள் பிரியா சாதாரணமாக.
“எப்படி… எப்படி நான் எதையும் உன்கிட்ட விளக்காமலேயே உனக்கு புரிந்தது லக்ஸ்!” என இவன் பரபரப்பாக கேட்க,
“இதை போய் ஏன் விளக்கிட்டு இருக்கனும்? இத்தனை நாளா நீங்க இங்க தனியாவே இருந்து பழக்கப்பட்டவங்க. இப்படி வீட்டை பூட்டி, சாவிய யார்கிட்டயும் இதுவரை தந்திருந்திருக்க மாட்டீங்க.சில சமயம் அத்தை இங்க வந்தாலுமே,நீங்க வேலைக்கு போகும் போது அவங்க வீட்டில தான் இருந்திருப்பாங்க.அதனால் நீங்க அவங்ககிட்டயும் வீட்டு சாவிய கொடுத்துட்டு வெளிய போய் இருக்க வாய்ப்பிருந்திருக்காது. சோ… இன்னைக்கு காலையிலயும் என்கிட்ட இன்னொரு சாவியக் கொடுக்கனும்னு உங்களுக்கு தோணாததில் தப்பொன்னும் இல்லையே! நான் உங்க இடத்தில் இருந்திருந்தாலும் இப்படிதான் சொதப்பியிருந்துப்பேன்!” எனக் கூலாக அவனிடம் சொன்னாள் பிரியா.
அப்படி அவள் சொல்லி முடித்ததும் அவளை இழுத்து,”என்னோட பட்டு-டா நீ!”என்று இறுக்கி அணைத்திருந்தான் ஹரி.
மூச்சுக்கூட விடமுடியாது அவ்வளவு இறுக்கமான அணைப்பு.அதில் சுகமாக இருப்பதை விடுத்து,”அது என்ன பட்டு! அப்போ… நான் லக்ஸ்மீ இல்லையா?” என மிகமுக்கியமான சந்தேகத்தைக்கேட்டாள் ஹரியின் ‘லக்ஸ் பேபி!’
‘இந்தமாதிரி நேரத்துல இப்படி ஓரு கேள்விய என்னோட சோப்பால மட்டும்தான் கேட்கமுடியும்!’ என நினைத்த ஹரி, “லக்ஸ் சோப்பு… டெய்லி யூஸ் பேபி! பட்டு… ஸ்பெஷல் அக்கேஷன்! இனி இந்த மாதிரி ‘ஸ்பெஷல் பட்டு’ நான் அடிக்கடி உனக்கு கொடுத்துட்டே இருப்பேன்!”என்று, கண்ணடித்து தன்னணைப்பை இன்னும் இறுக்க,
அதில் அடங்காது பட்டைப்போல அவனிடமிருந்து நெளிந்து வழுக்கி,”இப்ப அப்படி சொல்ற அளவுக்கு என்ன ஸ்பெஷல் அக்கேஷன்?” என முட்டையிலிருந்து எட்டிப்பார்க்கும் கோழிக்குஞ்சாய் தலையை மட்டும் தூக்கி அவனிடம் கேள்விக் கேட்டாள் பிரியா.
“ஷப்பா… மாமன் ஆசையா கொஞ்சினா… அதை அப்படியே அக்செப்ட் பண்ணிக்கனும்.அதைவிட்டுட்டு ஆராய்ச்சிப் பண்ணக்கூடாது லக்ஸ்!” என சொன்னவனிடம்,அவள் ‘என்ன ஸ்பெஷல் அக்கேஷன்னு எனக்கு தெரியனும்!’ எனக்கண்ணால் அடம்பிடிக்க,
“இப்ப… நான் சொன்ன இந்த பட்டு எதுக்குன்னா…’என்னோட பொண்டாட்டி எவ்வளவு புத்திசாலியா இருக்கா! என்னை அப்படியே சரியா புரிந்துவச்சியிருக்கா…ன்னு’ உன்னை நினைச்சி நான் பெருமையா பீல் பண்றதுக்கு. ‘பட்டு’ன்னாலே ஒரு பெருமை,கெத்து தானே! என்னோட கெத்து லக்ஸ்-டா நீ” என்றான் உள்ளத்திலிருந்து.
சிறிது நேரம் அவனின் கொஞ்சலில் மூழ்கி இருந்தவளுக்கு அவனை வம்பிழுக்கும் எண்ணம் எட்டிப்பாக்க,”நான் எப்ப இப்படி உங்களை சொல்வேன்?நீங்க எப்ப என்னை இப்படியெல்லாம்… உலரவைக்க போறீங்க!”என தன் கண்ணை உருட்டிக் கேட்டாள்.
அதைக்கேட்ட ஹரி மென்னகையுடன் “சொல்லுவ பேபி! கண்டிப்பா… கூடிய சீக்கிரம் சொல்வ! அதுவும் நான் எதுவும்…. பண்ணாமலே நீயே வான்டட்டா வந்து என்கிட்ட சொல்லத்தான் போற.இப்பவே நீ மனசுல அப்படித்தான் நினைச்சிட்டு இருக்க.இன்னும் கொஞ்ச நாள்ல அதை வெளியேயும் சொல்லுவ!” என அவளின் ‘பிரியா’ஸ் சரண்’னை பார்த்த தைரியத்தில் சவால் விட்டான்.
“ஹும்… பாவம் நீங்க.இப்படியே காலமெல்லாம் காத்துட்டு இருக்கவேண்டியது தான்….” என சொல்லி சிரித்தாள் பிரியா.
இப்படியே சிறிது நேரம் வம்படியாய் பொழுது போக,”நீ என்னதான் ஈஸியா எடுத்துகிட்டாலும் நான் பண்ணது ரொம்ப பெரிய தப்புதான் லக்ஸ். நான் மனப்பூர்வமா உன்கிட்ட ஸாரி கேட்டுக்கறேன்-டா! நிஜமாவே உனக்கு என்மேல கோபம் இல்லையா லக்ஸ்?அவ்வளவு நேரம் வெளிய நீ காத்துட்டு இருந்தபிறகும் உனக்கு எப்படி கோபம் வராம இருக்கும்!” என நெடுநேரமாய் அவன் மனதினை போட்டு அறித்துக்கொண்டிருந்ததை கேட்டே விட்டான் ஹரி.
அவனின் கேள்விக்கு, ”அது எப்படி கோபம் வராம இருக்கும்?முதலில் பூட்டின வீட்டை பார்த்ததும் எனக்கு கொஞ்ச நேரம் ஒன்னும் புரியலை.அடுத்து என்ன செய்றதுன்னு தெரியாமத்தான் உங்களுக்கு கால் பண்ணேன்.ஆனா நீங்க எடுக்கலை.அப்படியே தொடர்ந்து மூனுதடவை கால் பண்ணியும் நீங்க எடுக்காதபோது, பர்ஸ்ட் என் அம்மா மேல தான் எனக்கு செம்ம கடுப்பு வந்தது. ‘கல்யாணம் வேணாம்ன்னு சொன்னவளை கட்டாயமா கட்டிவச்சி என்னை பூட்டின கதவுக்கு காவல் காக்க வச்சிட்டாங்க’ன்னு அவங்களைதான் நல்லா திட்டுட்டு இருந்தேன்” என்று சொல்லி, இவ்வளவு நேரமாய் படபடவென வெடித்தவள், அப்போதுதான் இழுத்து வைத்திருந்த மூச்சை வெளியே விட்டாள்.
அவள் இழுத்துவிட்ட மூச்சைப்பார்த்து, ”டேய் லக்ஸ், பார்த்துடா, பார்த்து மெதுவா சொல்லு. ஒன்னும் அவசரமில்லை!” என சொல்லி அவளுக்கு தண்ணீரைக் கொடுத்தான்.
அதை வாங்கி, குடிக்காது அந்தப்பக்கம் வைத்தவள் பைன்னாசியருக்கு கதை சொல்லும் புதுமுக இயக்குனரைபோல கடமையே கண்ணாக, “அப்புறம்… நாலாவது தடவையா உங்களுக்கு கால் பண்ணும்போது, அம்மாமேல இருந்த கோபம்,எரிச்சல்,கடுப்பு… அப்படியே உங்க மேல திரும்புச்சு. ’சும்மா…லக்ஸ்,பேபின்னு சொல்லிட்டு சுத்த தான் இவங்க லாயக்கு! இவங்க அம்மா என்னடான்னா… என்னோட பிள்ளைதான் ‘பொறுப்பு பொன்னம்பலம்’ னு டமாரம் அடிச்சிட்டு திரியறாங்க. ஆனா… இவங்களுக்கு ஒரு சாவிய கூட ஒழுங்கா கொடுக்க துப்பில்லை!’னு நல்லா உங்களை திட்டிகிட்டே அஞ்சாவது தடவையா கால் பண்ணேன்” என்றதும், ஹரி மீண்டும் தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் கொடுத்து,”இதை குடிச்சிட்டு நல்லா தெம்பா என்னை திட்டு!” என்றான்.
அவனை முறைத்தவள், “நடந்தது என்னன்னு சொல்லிட்டிருக்கும் போது இப்படி அடிக்கடி டிஸ்டர்ப் செய்தா எனக்கு பிடிக்காது!” என்று கறாராய் சொன்னதும், ஹரி ஒரு கையால் தன் வாய்ப்பொத்தி, மற்றொன்றால் ‘மேலே தொடருங்கள்!’ என சைகை செய்தான்.
அதை ஒரு புன்சிரிப்புடன் ‘ஹும்! அது!’ என கெத்தாய் ஒரு தலையசைப்போடு ஏற்றுக்கொண்டு, ”அப்பவும் நீங்க எடுக்கலைன்னதும் தான் ‘இவங்க ஏன் என் போனை அட்டென்ட் பண்ணமாட்டேங்கறாங்க… ரொம்ப பிஸியோன்னு நினச்சு, கொஞ்சநேரம் கழிச்சி கால் பண்ணலாம்ன்னு முடிவெடுத்து சும்மா உட்கார்ந்திருந்தேன்.”
’”அப்படி வெட்டியா இருக்கும்போது, உங்க நிலமையில இருந்து யோசிச்சபோது தான்… எனக்கு உண்மை புரிய ஆரம்பிச்சது. அதுக்கு அப்புறம் எப்படி உங்கமேல கோபப்பட முடியும்! அதன்பிறகு நான் பண்ண கால் எல்லாம் ‘சீக்கிரம் வீட்டுக்கு வாங்க!’னு சொல்லத்தான்” என ஹரியின் கேள்விக்கு நெடுநீண்ட விளக்கம் கொடுத்தாள் பிரியா.
‘தன்னால் எல்லாம் முடியும்!’ என மார்தட்டிக்கொண்டவன் ஒரு சிறு கல் தடுக்கி தடுமாறிப்போன இடத்தில், ’தன்னால் இதை சரியாக செய்யமுடியுமா?’ எனத்தயங்கிவள் வென்று, நின்றிருக்கிறாள்! இதைப்போல விந்தைகள் நிறைந்தது தான் குடும்பவாழ்க்கை!
தான் இவ்வளவு பேசிப் பிறகும் முகம் தெளியாத ஹரியை நார்மல் ஆக்க,”நீங்க சிரிச்சிட்டு இருந்தாலே ‘சுமார் மூஞ்சி குமாரு!’ போல தான் இருப்பீங்க.இப்படி சோகமா இருந்தா ’சாதா மூஞ்சி சுகுமாரு!’போல கேவலமா இருக்கு.” என்று வம்பிழுத்தாள்.
அப்போதும் லேசாக சிரித்த ஹரி,”உன்னை அவ்வளவு நேரம் அங்க உக்காரவச்சதை என்னால ‘டைஜெஸ்ட்’ பண்ணவே முடியலை லக்ஸ்!” என்றான் வேதனை நிறைந்த குரலில்.
அவனின் வேதனையை புரிந்துகொண்ட பிரியா,”சம்சாரவாழ்க்கையில இதெல்லாம் சாதாரணமப்பா!” என்று சிரித்துக்கொண்டே சொல்லி,அவனையும் சிரிக்க வைத்தாள்.
இப்படியே பேச்சோடு பேச்சாக பிரியா இரவு உணவாக ‘உப்புமா’ செய்தாள்.அப்போது பழைய ஹரி திரும்பியிருந்தான்.உணவை ஒரு வாய் எடுத்து வைத்த ஹரி,” லக்ஸ் பேபி!’என்னதான் உப்புமா’ன்ற பெயரிலேயே உப்பு இருந்தாலும், நாமலும் நம்ம டேஸ்ட்க்கு அதுல உப்பை போடனும்டா!” என ‘சிவாஜி’குரலில் சொல்ல,பிரியாவும் அதை வாயில் போட்டுப் பார்க்க,உப்புமாவில்… பெயரில் மட்டுமே உப்பு இருந்தது.
“நீ மண்ணை கொடுத்தாலும் சூப்பரா இருக்குன்னு,சிரிச்சிட்டே சாப்பிடறதுக்கு உன் மாமன் கேரக்ட்டர் ஆர்டிஸ்ட் இல்லடா…பேபி!” அவன் இப்போது ‘மேஜர்’குரலில் மேலும் கலாய்க்க,நொந்தே போனாள் பிரியா.
அவளின் நொந்த பார்வையை தாங்காத ஹரி,தன் மண்டையை போட்டுடைத்து கண்டு சொன்ன அறிய ஐடியாவால் அதிகமாக உப்பு போட்ட சட்டினி அரைக்கப்பட்டு, அதனுடன் அந்த உப்பில்லாத ‘மா’ அவர்களின் வயிற்றிற்குள் தள்ளப்பட்டது.
அப்படி தள்ளிக்கொண்டிருக்கும் வேளையில் ஹரி,”லக்ஸ்! என்னோட போன் நம்பர் உனக்கு எப்படி கிடைச்சது?” என மெதுவாக போட்டு வாங்க,
அவனின் கேள்வியில் முதலில் திகைத்த பிரியா,”அப்ப… நீங்க பிஸியா இருந்ததால என்னோட போனை அட்டென்ட் பண்ணலைன்னு நான் நினச்சது தப்பு! என்னோட நம்பரே உங்ககிட்ட இல்ல,அப்படித்தானே?” எனக் கோபமாய்க் கேட்டாள்.
‘ம்க்கும்! இதுக்குதான் பொண்டாட்டி புத்திசாலியா இருக்கக் கூடாதுன்னு சொல்றாங்க போல!’ என சலித்த ஹரி, ”பூவை பூன்னும் சொல்லலாம்… புஷ்பம்னும் சொல்லலாம்!” எனப் பொதுப்படையாக சொன்னான்.
அதற்கு பிரியா,” இப்ப, நீங்க என்ன சொல்லப்போறீங்க?”என அதட்ட,
“ம்ம்ம்… பிஸியா இருந்ததால அட்டென்ட் பண்ணலைன்னும் சொல்லலாம்… பிசியாயிருக்கும் போது, தெரியாத நம்பர்ல இருந்து கால் வந்ததால… அட்டென்ட் பண்ணலைன்னும் சொல்லலாம்…” என இழுத்தான்.
“பத்து நாளா… கூடவே இருக்கும் பொண்டாட்டியோட போன் நம்பரை தெரிஞ்சிக்கனும்ங்கற சாதாரண விஷயம் கூட உங்களுக்கு தெரியலை! இதுல அதை சொல்ல வைக்கறேன்… இதை சொல்ல வைக்கறேன் சவால் வேற?” என கேவலமாய் கழுவி ஊற்றினாள்.
“டெண்டுல்கரே நிறைய தடவை ‘டக்அவுட்’ ஆயிருக்கார். அதுக்காக அவரோட திறமையை நாம குறைச்சி எடை போட்டுட முடியுமா லக்ஸ் பேபி?” என அவள் ஊற்றியதை துடைத்துக்கொண்டே இவன் கேட்க,
“இந்த வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்ல! இப்பவாவது என்னோட நம்பரை ‘சேவ்’ பண்ணி வச்சியிருக்கீங்களா… இல்ல…” என அவள் கேட்டுக்கொண்டிடுக்கும் போதே,”அதெல்லாம் எப்பவோ பண்ணிட்டேன்” என்றான் ஹரி.
“இதுக்கே பத்து நாள் தேவைப்பட்டிருக்கு! மத்ததுக்கெல்லாம் எவ்வளவு நாள் தேவைப்படுமோ…!”
“நாம பாரின் போறதுக்குள்ள உன்னை சொல்ல வைக்கிறேன் லக்ஸ் பேபி!”
“நம்பிட்டேன்….!”
“லக்ஸ்… நான் கேட்டதுக்கு,அதான்… என் நம்பர் எப்படி… தெரியும்னு கேட்டேனே…அதுக்கு நீ இன்னும் பதிலை சொல்லலையே!”என அப்போதும் விடாது இவன் கேட்க,
“உங்க போன் பத்துநாளா, இதோ…, இந்த டேபிள் மேல தானே தேமேன்னு இருந்தது! அதிலிருந்து எனக்கு ஒரு ‘மிஸ்டுகால்’ கொடுத்தா மேட்டர் ஓவர்!” என அசால்ட்டாய் சொல்லி சென்றவளை,
‘ஆமால்ல…! இவளுக்கு தோணினது ஏன் எனக்கு தோணாம போச்சு!? ஹப்பா! இவ நிஜமாலுமே பெரிய ‘அப்பாடக்கர்’ தான்-டா!’ என மீண்டும் நினைத்து திறந்த வாய் மூடாது அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.