Categories
On-Going Novels Yuvanika

அத்தியாயம் – 17

காதல்பனி 17

“ஐய்யோ! ஐயோ! அங்க என் புள்ளைய போலீஸ் புடிச்சிட்டுகிட்டுப் போய் அவன் ஜெயில்ல இருக்கான். ஒரு பக்கம் இங்க காடே பத்தி எரியுது. ஆனா இந்த கேடுகெட்ட சிறுக்கி மட்டும் இப்படி எவனோடவோ உல்லாசமா இருக்கா!” என்று கூடியிருந்த கூட்டத்தில் செங்கோடனின் தாய் குரல் ஆங்காரமாய் ஒலிக்க ஏ.கேவும் குழலியும் யார் என்ன ஏது என்று உணரும் முன்னே குழலியை நெருங்கித் தன் வலது காலைத் தூக்கி அவள் முதுகில் அவர் ஓர் உதை விட அதில் துடிதுடித்துப் போனவளை ஏ.கே அதிர்ச்சியுடன் பார்க்கும் போதே

“எத்தன நாளா இந்த கூத்து நடக்குது? எவ்ளோ நாள இவன் கூட பழக்கம் டி உனக்கு? நீ கெட்ட கேட்டுக்கு என் மகன விட இந்த வெள்ளைத் தோல்காரன் தான் உனக்கு வேணுமா? உன் ராங்கித்தனத்தால தான் நான் உன்ன வேணாம்னு சொன்னேன். என் மவன் கேட்டா தான? நீ தான் வேணும்னு ஒத்தக் கால்ல நின்னான். இதெல்லாம் பார்க்கவா அவன் உன்ன வேணும்னு கேட்டான்?” என்று மறுபடியும் நீட்டி முழங்கியவரோ அவள் கூந்தலைக் கொத்தெனப் பிடித்து இழுக்க

ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்த ஏ.கேவோ இப்போது இன்னும் இந்த செயலைப் பார்த்து சற்றும் யோசிக்காமல் செங்கோடனின் தாயின் கையைத் தட்டி விட, இவ்வளவு பேர் முன்னால் தான் தொடைக்குக் கீழே ஆடை எதுவும் இல்லாமல் இருப்பதை அறிந்த குழலியோ தன் நிலையை மறைக்க ஏ.கே வின் பின்னால் ஒளிய முயல

“என்ன டி என்ன? உன்ன கையும் களவுமா புடிச்ச உடனே உன் தப்ப மறைக்க இப்ப அசிங்கப்பட்டு இவன் பின்னாடி ஓடி ஒளியிறியா இல்ல இவன் தான் வேணும்னு அவன் கூட ஒட்டிக்கிட்டு நிக்கிறியா? என் புள்ளைய விட இந்த வெள்ளத்தோல்காரன் தான் உனக்கு ஒசத்தியோ? இவன் வேற என் கையை தட்டிவிடறான். டேய் டேய்.. நீ யாருடா என் கையத் தட்டிவிட? அவ என் வீட்டு மருமக டா! என் புள்ளைக்கும் அவளுக்கும் பரிசம் போட்டாச்சு. பரிசம் போட்ட அன்னிலிருந்து இவ அவனோட பொண்டாட்டி ஆகிட்டா. நீ என்னடான்னா இவ கூட கூத்து அடிச்சிகிட்டு இருக்க. எத்தன நாளா உங்களுக்குள்ள இந்த பழக்கம்? நீ பண்ண காரியத்துக்கு இன்னைக்கு உன் சாவு என் கையில தான் டி!” என்றவர் அவள் கையைப் பிடித்து இழுக்கப் போகும் நேரம்

“என்ன ஆச்சி குழலி?” என்ற கேள்வியுடன் வந்து நின்றார் வீரபாண்டியும் அவர் மனைவியும். தான் இருக்கும் நிலை உணர்ந்து அவரை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் அவளோ இன்னுமே ஏ.கேவின் முதுகுக்குப் பின் மறைந்து நிற்கவும் அதைப் பார்த்தவரோ சற்றும் யோசிக்காமல் தான் கட்டியிருந்த வேட்டியைக் கழற்றி அவளிடம் நீட்டி 

“இதைக் கட்டிக்கோ தாயி” என்று சொல்ல கண்ணில் கண்ணீருடன் வாங்கிக் கட்டிக் கொண்டாள் குழலி. பிறகு அங்கிருந்த அனைவரும் அவரவருக்குத் தோன்றிய கற்பனையைப் பார்த்தது போலவே எடுத்துச் சொல்ல செங்கோடனின் தாயோ ஒரு படி மேலே போய்

“இவ இவனோட பழகி இப்ப குழந்தையை வயித்துல வாங்கிட்டு அதை என் புள்ள தலையில கட்ட தான் இவ்வளவு நாள் வேணாம்னு சொன்ன கல்யாணத்துக்குச் சம்மதிச்சா போல!” என்று அவருடைய பங்குக்கு அவள் மேல் அசிங்கத்தை பூச , குழலியோ வாய் திறந்து ஒரு வார்த்தை கூட மறுப்புச் சொல்லவுமில்லை ஏன் குனிந்த தலையை நிமிர்த்தவும் இல்லை.

ஏ.கேவும் என்ன பேசுகிறார்கள் என்று தெரியாவிட்டாலும் தான் பிடித்த அவள் கையை விடவேயில்லை. குழலியும் அவன் கையை விலக நினைக்காமல் அவன் கைப் பிடியில் தான் இருந்தாள். இங்கு செங்கோடன் மட்டும் இருந்திருந்தால் ஏ.கே உயிருடனே இருந்திருக்க மாட்டானோ என்னவோ? ஆனால் ஊர்க்காரர்கள் வீரபாண்டி ஐயா சொல்லுக்குக் கட்டுபட்டு அமைதி காத்தனர். குழலியைப் பற்றியும் தெரியும் என்பதால் வீரபாண்டி ஐயா ஏதோ சொல்ல வாயைத் திறக்கும் நேரம்

“என்னமோ பெருசா என் பொண்ணு என் பொண்ணுனு வார்த்தைக்கு வார்த்தை சொல்லுவீங்களே? இப்போ உங்க வளர்ப்புப் பொண்ணு செஞ்சிருக்கிற காரியத்தப் பாருங்க! நான் எதச் சொன்னாலும் கேட்கறது இல்ல! இவள எல்லாம் வீட்டுக்குள்ள சேர்த்ததே அதிகம். இதுல உங்க பொண்ணா நெனச்சி செங்கோடன் அம்மா கேட்ட சீர்சனத்துக்கு ஒத்து கிட்டு நஞ்சை வாய்க்கா வரப்புனு எழுதி வெக்க இருந்திங்க இல்ல? அதுக்குத் தான் உங்களுக்கு இவ நல்ல மரியாதை செய்துட்டா.

ஒருவேளை இவ கேடுகெட்டத் தனத்தை மறைக்கத் தான் சீர்வரிசை வாங்கற பழக்கமே இல்லாத செங்கோடன் அம்மா கூட சீர்சனம் கேட்டா போல!” என்று அவர் மனைவி தன் பங்குக்கு குத்திக் காட்ட, செங்கோடனின் தாய் முகமோ அவமானத்தில் தொங்கி விட்டது. ஆனால் குழலிக்குத் தான் இந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தது.

அந்த நேரம் அங்கு வந்த சூர்யா என்ன நடந்தது என்று ஏ.கே விடம் ரகசியமாக கேட்க அங்கு நடந்ததை அவன் சொல்லவும் அதை அந்த ஊரார் முன் அவன் விளக்க நினைத்த நேரம்,

பிள்ளை இல்லாத தங்கள் சொத்துக்கு வாரிசாக தன் அண்ணன் அல்லது அக்கா பிள்ளைகளைத் தத்து எடுத்து அவர்களுக்கு சகலத்தையும் செய்வார் என்று மனக்கோட்டை கட்டியிருந்த வீரபாண்டி மனைவியின் எண்ணத்துக்கு எதிராக எங்கோயிருந்த மலைஜாதிப் பெண்ணான குழலிக்கு எல்லாம் செய்ய நினைக்கிறார் என்று இத்தனை நாள் மனதில் கருவிக் கொண்டிருந்தவரோ இன்னும் உன்னை விடுவேனா என்ற ஆத்திரத்தில் 

“அதான் கையும் களவுமா புடிச்சாச்சி.. அவளும் வாயத் தொறக்காம இருக்கா.. அப்பறம் என்ன? உங்க சாதில நீங்க வழக்கமா குடுக்கிற தண்டனையான கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அவள எந்த ஒட்டுறவும் இல்லாம ஊரை விட்டு ஒதுக்கி வைங்க” என்று வீரபாண்டி ஐயாவிடமிருந்து அவளைப் பிரிப்பதிலேயே அவர் மனைவி குறியாக இருக்க அதையும் அங்கிருந்த ஊர் மக்கள் வழி மொழியவும்
சூர்யாவுக்குத் தான் திக் என்று ஆனது. ஆனால் இப்போதும் குழலியோ வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

ஆளாளுக்குப் பேசவும் “இப்படி ஏதேதோ பேசினா எப்படி? இங்க என்ன நடந்ததுனு கண்ணால பார்த்தவங்கனு யாரும் இல்ல. ரெண்டு பேரும் ஒன்னா இருக்கறத வெச்சி வெறும் யூகத்துல தான் பேசுறிங்க. சம்மந்தப்பட்டவங்களும் வாயத் தொறக்கல. இந்த சூழ்நிலையில் நம்ம ஊர் வழக்கப் படி நம்ம முன்னோர்கள் செஞ்சதையே நானும் இங்க செய்றேன்” என்று வீரபாண்டி ஐயா முற்றுப்புள்ளி வைக்க இந்த வார்த்தையை அனைவருமே ஏற்றுக் கொண்டனர்.

சூர்யாவுக்கு அது என்னவென்று தெரியவில்லை என்றாலும் ஊருக்குக் கட்டுப்பட்டு அவனுமே அமைதி காத்தான். பிறகு குழலி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் வந்து அவளைக் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல அப்போதும் அவள் கையை விடாமல் இறுக்கப் பிடித்திருந்தான் ஏ.கே.

அவனுக்கு இங்கு நடந்த வாக்கு வாதங்கள் என்னவென்று தெரியவில்லை என்றாலும் இந்தக் காடு நெருப்புப் பற்ற குழலி தான் காரணம் என்பதால் தான் இந்த ஊர் மக்களும் அந்தப் பெண்மணியும் அவளைத் திட்டி அடிப்பதாக நினைத்தவன் அவளை அவர்களிடமிருந்து காப்பதாக நினைத்து அவள் கையை அவன் பிடித்திருக்க, குழலிக்குத் தான் இப்போது என்ன நடக்கப்போகிறது என்பது தெரியுமே! அதனால் அவனை ஏறிட்டவள் அவன் பிடியிலிருந்து தன் கையை வலுக்கட்டாயமாகப் பிரித்து எடுக்க விலகிச் செல்ல மனமே இல்லாமல் அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி சூர்யா இழுத்த இழுப்புக்கு விலகிச் சென்றான் ஏ.கே.

அந்த ஊர் காவல் தெய்வமான மலை மேல் கோவில் கொண்டிருக்கும் வனதேவதையான தன் தலையை ஒரு பக்கம் சாய்த்து நாக்கைத் துருத்திய படி உக்கிரப் பார்வையுடன் பல கைகளுடன் ஒரு காலை அரக்கன் மீது வைத்து அவனை வதம் செய்வது போல் ஏதோ உயிரோட்டமாக நேரிலே காட்சி தருவது போல் இருந்த மகாகாளி அம்மன் முன் எல்லோரும் கூடியிருக்க ஒரு ஓரமாக சூர்யாவும் ஏ.கேவும் இங்கு என்ன நடக்கப் போகிறது என்பதைக் கவனிக்க ஆரம்பித்தனர்.

அந்தத் தாயின் முன்பிருந்த தீ குழியில் தீ கனன்று கொண்டிருக்க குழலிக்கு மேனி முழுக்க நீர் ஊற்றி அந்த நீர் சொட்டச் சொட்ட அந்த பூ குழியில் நிற்கச் சொல்ல எந்த வித தயக்கமும் இல்லாமல் நின்ற அவள் கையில் அந்த மகாகாளியின் ஒரு கையில் எப்போதும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் தீ சட்டியை குழலியின் கையில் கொடுத்து என்ன நடந்தது என்று அவள் பக்க நியாயத்தைச் சொல்லச் சொன்னார்கள்.

இது அந்த ஊர் வழக்கம் தான். கண்ணால் பார்க்காத எந்த ஓர் உண்மை தெரிய வேண்டும் என்றாலும் இப்படித் தான் செய்வார்கள். அப்படி யாரேனும் பொய் கூறினால் அவர்கள் கட்டியிருக்கும் ஈர ஆடையையும் மீறி உடலில் நெருப்பு பற்றிக் கொள்ளும். அதேபோல் அந்தத் தாயிடம் இருந்து தீ சட்டியைப் பொய் சொல்பவர்களாலும் தப்பு செய்பவர்களாலும் வாங்கவே முடியாது. வாழை மரப் பட்டையையே தாங்கள் ஆடையாகக் கட்டி வந்து அந்த பூ குழியில் நின்றாலும் பொய் சொல்பவர்கள் அந்தத் தாயின் தண்டனையில் இருந்து மீள முடியாது என்பது அவர்களின் நம்பிக்கை.

இப்போது குழிலியை அங்கு நிற்க வைத்து இதுவரை வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லாத அவளைச் சொல்லச் சொல்ல அவளிடமிருந்து உடனே வந்த பதில்

“இந்தத் தாய் மீது ஆணையாக எங்களுக்குள் தப்பு நடந்தது உண்மை தான்!” என்ற வார்த்தை தான். அவள் சொன்னது ஆணித்தரமாக அந்த மலை முகடு எங்கும் கேட்கும் படி ஓங்கி ஒலிக்கவும் வீரபாண்டி ஐயாவே ஒரு வினாடி ஸ்தம்பித்துத் தான் போனார்.

முதலில் இது என்ன மாதிரி பழக்க வழக்கம் என்று சூர்யா கோபப்பட்டாலும் பிறகு அவர்கள் வழக்கம் என்று விட்டு விட்டவன் இப்போது குழலி சொன்ன இப்படி ஒரு பொய்யில் மிகவும் ஆடித் தான் போனான் அவன்.

ஆனால் இங்கு என்ன நடக்கிறது என்பதைச் சொல்லாமலே வெறும் பார்வையாளனாக நிற்க வைக்கப் பட்டிருந்தான் ஏ.கே. குழலி சொன்ன வார்த்தையில் முதலில் கலைந்தது வீரபாண்டி ஐயா மனைவி தான். 

“நான் தான் அப்பவே சொன்னனே! இவ வாய்க்கும் திமிருக்கும் இவ இப்படி எல்லாம் செய்றவ தானு.. நீங்க எங்க கேட்டிங்க? அது என்ன இப்போ தப்பு நடந்திடுச்சினு மழுப்புற? நாங்க கையும் களவுமா புடிச்சதால ஆச்சி.. இல்லனா இந்த உண்மைய மறைச்சி செங்கோடன தான கட்டியிருப்ப?” என்று இப்போது அவர் குழலியே ஒத்துக்கொண்டாள் என்பதால் எகத்தாளமாகப் பேச.

குழலி பூ குழியிலிருந்து இறங்கிய மறு நிமிடம் அவளை இழுத்து நாலு அரை அறைய சுருண்டு போய் கீழே விழுந்தவளைத் தன் பலம் கொண்ட மட்டும் அவள் நெஞ்சிலும் மார்பிலும் வயிற்றிலும் உதைத்த செங்கோடனின் தாய்

“உனக்கு எவ்வளவு ஏத்தம் இருந்தா இத்தன நாள் இப்படி ஒரு கேடுகெட்டத்தனத்த செய்துட்டு என் புள்ளைக்கு பொண்டாட்டி ஆகப் பார்ப்ப?” என்று ருத்ர தாண்டவம் ஆட வலியில் துடிதுடித்துப் போனாள் குழலி.

“எவ்ளோ திமிர் இருந்தா இவ்வளவு நேரத்துக்கு வாயத் தொறக்காம இருந்திருப்பா? ஏதோ இன்னைக்கு மட்டும் தான் தப்பு நடந்துடுச்சினு சொல்றா!”

“இன்னைக்கு ஒரு நாள் மட்டுமா இல்ல எத்தன நாள் பழக்கமோ? இவளை எல்லாம் மொட்டை அடிச்சி கரும்புள்ளி செம்புள்ளி குத்தணும்”

“அதோட விடக்கூடாது. செருப்பு மாலை போட்டு கழுத மேல ஏத்தி ஊரை விட்டே தொரத்தணும்”

“அதெல்லாம் விட பெருசா ஒட்டுத் துணி இல்லாம நிக்க வெச்சி எல்லாரையும் இவ மூஞ்சில காறித் துப்ப வெச்சி ஓட ஓட இவள சவுக்கால அடிச்சே ஊர் எல்லையில கொண்டு போய் விடணும்”

இப்படி ஊர்மக்கள் ஆளாளுக்கு அவளுக்குக் தங்கள் மாற்றி வேறு இனத்தில் தப்பு செய்தவளுக்கு கொடுக்க வேண்டிய தண்டனையைப் பற்றிப் பேசி அவளைக் கேவலப் படுத்த, பேச வேண்டிய வீரபாண்டி ஐயாவோ தன் வளர்ப்பு மகள் இப்படி செய்துவிட்டாளே என்ற அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க

“சும்மா ஆளாளுக்குப் பேசறத நிறுத்துங்க” என்ற அதட்டலுடன் கீழே விழுந்து அடிவாங்கிக் கொண்டிருக்கும் குழலியைத் தூக்கி நிறுத்தி அணைத்துக் கொண்டான் சூர்யா. மேலே ஏதோ பேச வந்த வீரபாண்டி மனைவியைக் கை நீட்டித் தடுத்தவன்

“இந்த வினாடியிலிருந்து இவ என் தங்கச்சி. இனி இவ மேல யார்னா கை வச்சிங்கனா நடக்கறதே வேற!” என்றவன் “ஏதோ ரெண்டு பேரும் காதலிச்சித் தப்புப் பண்ணிட்டாங்க. உங்க சாதி பொண்ண வெளிநாட்டுல இருந்து வந்து ஒருத்தன் காதலிக்கிறது என்ன அவ்வளவு பெரிய கொலைக் குத்தமா இல்ல மகாபாவமா? தப்பு செஞ்சத ஒத்துகின பிறகு ரெண்டு பேருக்கும் கல்யாணத்தப் பண்ணி வச்சி உங்க வழக்கப் படி ஊரை விட்டே அவங்க ரெண்டு பேரையும் ஒதுக்கி வச்சிட்டுப் போக வேண்டியது தான?

அப்படி இல்லனா இப்பவே ஒதுக்கி வச்சிடுங்க. நான் கூட்டிகிட்டுப் போய் அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடுறேன். அதை விட்டுட்டு குழலிய அடிக்கவோ இல்லை தண்டனைங்கிற பேர்ல அவள மானபங்கப் படுத்தவோ நெனச்சிங்க.. நான் மனித உரிமை ஆணையத்தின் மூலமா நடவடிக்கை எடுத்து போலீஸ கூட்டிகிட்டு வந்து உங்க எல்லாரையும் அரஸ்ட் பண்ண வேண்டியிருக்கும் சொல்லிட்டேன்!” என்று தன் அதிகாரத் தோரணையைப் பேச்சில் காட்டி நின்றிருந்தான் சூர்யா.

அவர்களுக்குள் என்ன நடந்தது என்பது ஏ.கேவின் மூலம் தெரியும் என்பதால் இந்தப் பெண் ஏன் இப்படி பொய் சொல்கிறாள் என்று குழம்பியவன் குழலிக்குக் கொடுக்கப்பட போகும் தண்டனைகளைக் காதில் வாங்கிய பிறகு நண்பனிடம் கூட கேட்காமல் இப்படி ஓர் தடாலடியான முடிவை எடுத்து அதை அனைவரிடமும் சொல்லியே விட்டான் அவன்.

சூர்யா சொல்லியதில் குழலிக்குத் தான் அதிர்ச்சி. எப்போது தன்னை ஒருவன் ஆடை இல்லாமல் பார்த்தானோ அப்போதே தான் வேறு ஒருவனைத் திருமணம் செய்ய தகுதி இல்லாதவள் என்று நினைத்தது அந்தப் பதினைந்து வயது சிறு பெண்ணான குழலியின் மனது. அதனால் தான் அவள் இப்படி ஒரு பொய்யைச் சொன்னது. 

ஆனால் இப்படி எங்கோ பிறந்து வளர்ந்த ஒரு வெள்ளைக்காரனுடன் தன் வாழ்வு இணையும் என்றோ இல்லை இணைத்துத் தான் தீர வேண்டும் என்றோ அவள் துளியும் நினைக்கவில்லை. அவளுக்குத் தெரிந்த ஏ.கே உருவத்தில் வெள்ளைக்காரனே தவிர அவனுடைய பிறப்போ இல்லை பூர்விகமோ பற்றி அவளுக்கு என்ன தெரியும்? இன்னும் சொல்லப் போனால் ஏ.கேவுக்கே தெரியாது எனும் போது குழலிக்கு அது சாத்தியமில்லை.
ஊரே சூர்யா சொன்ன வார்த்தையில் பயந்து ஸ்தம்பித்து அமைதியாக இருக்க முதலில் தெளிந்த வீரபாண்டி ஐயாவோ

“உங்க மிரட்டலுக்கு எல்லாம் இங்க யாரும் பயப்படுல. அப்படி எல்லாம் குழலியை மட்டும் இல்ல வேற யார்க்கும் செய்யவும் நான் விடமாட்டேன். ஆனா நிச்சயம் ஊரை விட்டு ஒதுக்கி வச்சிருப்பேன். ஆனா அதையும் என்னால செய்ய முடியாத அளவுக்குக் குழலிப் பாட்டி இவளுக்குக் கல்யாணம் பண்ணி வெக்கச் சொல்லி சத்தியம் வாங்கிட்டாங்க. அதனால நீங்க சொல்ற படியே அந்த தம்பிக்குக் கல்யாணம் பண்ணி இந்தப் பொண்ண கூட்டிட்டுப் போய்டுங்க. இதான் என் முடிவு. இதுக்கு இங்க எல்லாருமே கட்டுப்படுவாங்க. ஆனா இவ்வளவு நடந்தும் உங்க நண்பர் எதையும் ஒத்துகிட்டு சரினு சொல்லலையே?” என்று அவர் சந்தேகத்துடன் கேட்க

உண்மை தான்! தன்னை வைத்துத் தான் பிரச்சனையே என்பது தெரியாமல் ஒரு பார்வையாளனாய் நின்றிருந்தான் ஏ.கே. அவனுக்குப் புரிந்தது தெரிந்தது எல்லாம் குழலிக்கு ஏதோ ஆபத்து பிரச்சனை. அவள் ஏதோ செய்யக் கூடாத தப்பைச் செய்து விட்டாள் என்பது மட்டும் தான்.
குழலி ஏன் அப்படி ஒரு பொய்யைச் சொன்னாள் என்பதை அவளிடம் கேட்டே தீர வேண்டும் என்ற ஆதங்கத்தில் முதல்ல நான் கொஞ்சம் குழலி கிட்ட பேசனும்னு சொல்லி வீரபாண்டி ஐயாவிடம் அனுமதி வாங்கி அவளிடம் வந்தவன்.

“ஏன் குழலி அப்படி ஒரு பொய்யச் சொன்ன? உன் மனசுல என்ன திட்டம் வெச்சிருக்க? உங்களுக்குள்ள எதுவும் நடக்கலனு ஏ.கே என்கிட்ட சொல்லிட்டான். ஆனா நீ ஏன் இப்படி பண்ண? எனக்கு பதில் சொல்லு?” என்று கோபமாகக் கேட்கவும்

ஒரு ஆண் முன்னால் தான் ஆடையில்லாமல் நின்றதையோ அதனால் செங்கோடனை திருமணம் செய்ய முடியாது என்பதை மறுக்கவே தான் இப்படி ஒரு பொய்யை சொன்னது என்பதை வேற்று ஆண்மகனான சூரியாவிடம் சொல்ல தயங்கியவளோ தன்னுடைய லட்சியத்தை மனதில் வைத்து
“ஐயோ சார்! என் மனசுல தப்பான எந்த திட்டமும் இல்ல சார். நான் என் இனத்து பொண்ணுங்க மாதிரி வாழ விரும்பல சார். எனக்கு இந்த ஊர் இந்த ஜனங்களோட அடிமைக் கட்டுப்பாடு எதுவும் வேணா சார். நான் படிச்சு விவசாயத்துல பெருசா சாதிக்கணும்னு ஆசப்படுறேன் சார். அதுக்கு இந்த செங்கோடனும் ஊரும் விடாது. இங்கிருந்து நான் தப்பிக்க ஒரே வழி இந்தக் கல்யாணம் தான் சார். என் முன்னேற்றத்துக்கு ஒரு வாய்ப்பா தான் இத நான் நெனைக்கிறேன். ஏ.கே வோட சொத்து பணம் வெளிநாட்டு வாழ்க்க இது எதுக்கும் நான் ஆசப்படல. என்னோட லட்சியத்துக்கு நீங்க தான் சார் உதவி செய்யணும்.

எப்படியாவது இங்க இருந்து தப்பிக்க இப்போ இந்த கல்யாணம் நடந்தா போதும்னு தோனுது சார். சத்தியமா நான் அவரோட பொண்டாட்டினு உரிமை கொண்டாட மாட்டேன். நேரங்காலம் வரும்போது நான் அவரவிட்டு விலகிடுவேன். ஆனா இப்ப அவர்கிட்ட நீங்க எதுவும் சொல்ல வேணாம். நேரம் வரும்போது நானே சொல்லிக்கிறேன். தயவுசெஞ்சி என் கனவுக் கோட்டய இடிச்சிடாதீங்க சார். எனக்கு உதவி பண்ணுங்க” என்று அவள் உணர்ச்சி பொங்க கண்ணீரோடு கேட்கவும் திகைத்துப் போனான் சூர்யா.

‘இந்த கூட்டத்துல இப்படி ஒரு பொண்ணா? ஆச்சரியம் தான்! இவள பத்தி எனக்கு ரொம்ப தெரியாது தான். ஆனா நான் பார்த்த வரையில வீண் வம்பு பேசறவளோ இல்ல பகட்டு வாழ்க்கைக்கு ஆசப் படறவோ இல்ல தான். அப்ப இவ சொல்றது உண்மை தான். இவளோட உயர்ந்த லட்சியத்துக்கு நானும் ஏ.கேவும் உதவி செய்யறது தப்பில்லை தான் இதுக்கு எல்லாத்துக்கும் மேல ஒரு பெண்ணோட மானம் தான் இப்போ முக்கியம் என்று தனக்குள் முடிவெடுத்தவன்

“சரி குழலி. உன் லட்சியத்துக்கு நான் உதவி செய்றேன். ஏ.கேகிட்ட நான் பேசி சம்மதிக்க வெக்கிறேன். ஆனா அதுக்கப்புறம் உன்னால அவன் வாழ்க்கைக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது” என்று உறுதிபடக் கூறியவன் பின் ஏ.கேவிடம் சென்றான்.

ஆனால் ஏ.கேவின் சம்மதத்தைப் பெறவோ அவன் தலை கீழாக நிற்காத குறைதான். தானும் அவளும் சிறுபிள்ளை என்பதையும் இன்னும் திருமண வயதை எட்டவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி அறவே மறுத்தான். தனக்கு எதிர்கால லட்சியம் இருப்பதாகவும் அதுவரையில் தான் திருமணம் பற்றி யோசிக்கக் கூட முடியாது என்றான். ஆனாலும் சூர்யாதான் விடாப்பிடியாக நின்று குழலிக்கு ஊர்ப் பஞ்சாயத்தினால் நேரப்போகும் விபரீதத்தை எடுத்துரைத்து அதைத் தடுக்க அவளுக்கு உதவுமாறு மன்றாடியவன் கூடவே இவனுக்கும் குழலிக்கும் தப்பு நடந்து விட்டதாக ஊர் முன் குழலி சொன்னதை சொல்லியவன் அவங்க வழக்க படி இப்போ நீ தான் அவளை திருமணம் செய்ய வேண்டும் என்றவன்.

முதலில் அவளைத் திருமணம் செய்து இங்கிருந்து அழைத்துச் செல்லுமாறும் பிறகு தான் ஊருக்கு வந்ததும் அடுத்து என்ன செய்வது என்பது பற்றியும் ஆலோசிக்கலாம் என்றான். தான் வரும்வரை குழலியை அவன் பாதுகாப்பில் வைத்திருக்குமாறும் கேட்டுக் கொண்டான். கடைசி வரை குழலி அவன் பொறுப்பு இல்லை என்றும் நேரங்காலம் வரும்போது அவனை விட்டு விலகி விடுவாள் என்றும் உறுதி கூறினான்.

கடைசியாக ஊர் கட்டுப்பாட்டால் தன் உயிருக்கே ஆபத்து என்றும் அவனையும் ஊர் எல்லையைத் தாண்ட விடமாட்டார்கள் என்றும் பயம் காட்டினான். இவ்வளவு வார்த்தைகளில் அவள் சொன்ன பொய்கே இந்த திருமணம் நடக்க ஏ கே வுக்கு விரும்பம் இல்லை தான் ஆனால் அவளுடைய மானாத்தை காக்கவே வேறு வழியில்லாமல் பிறகு ஏ.கேவும் ஒப்புக்கொண்டான். திருமணம் முடிந்தது என்பதை விட குழலியின் லட்சியத்திற்கு தான் ஒரு சிறு உதவி செய்ததில் பெரும் மகிழ்ச்சி என்ற எண்ணத்தில் வந்து நின்றான் சூர்யா

அதன் பிறகு வீரபாண்டி ஐயா கேட்ட படி தன் சம்மதத்தை சொன்னான் ஏ கே
பின் காற்றின் வேகத்தில் அன்றே திருமணத்திற்கான நேரம் குறிக்கப் பட்டு அந்த மலை அடிவாரத்தில் இருவருக்கும் அவர்கள் வழக்கப் படி சில சடங்குகள் செய்யப் பட்டு ஏ.கேவை யானையிலும் குழலியை மூங்கில் கூடையையே பல்லாக்காக மாற்றி அதில் அவளை அமரவைத்து அழைத்து வந்தனர். மாப்பிள்ளையை யானையில் இருந்து இறங்க மச்சான் தன் தோள் கொடுத்து இறக்க வேண்டிய நேரத்தில் சந்தோஷத்துடன் தன் தோள் கொடுத்து ஏ.கேவை இறக்கினான் சூர்யா.

பின் பல்லாக்கில் இருந்த குழலி இறங்க அவள் பாதங்களை ஒரு அண்ணணாய் தன் இரு கைகளிலும் சூர்யா தாங்க ஏ.கேவோ அவள் பாதங்களுக்குப் பன்னீர் தெளித்து வலது காலில் உள்ள பெருவிரலுக்கு மட்டும் அவர்கள் வழக்கப் படி செப்பால் ஆன வளையத்தை மெட்டியாகப் போட்டவன் இதுவரை உன் தங்கையாய் நீ சுமந்தவளை இனி என்னுடன் என் இல்லற வாழ்வில் அவளை வாழ்நாள் முழுவதும் ஒரு சுகமாய் நான் சுமப்பேன் என்ற வார்த்தைக்கு எடுத்துக்காட்டாய் அவன் தன் கையில் அவள் பாதங்களை வாங்கிக் கொள்ள

பின் அந்த மகாகாளியின் முன் இருவீட்டாரும் உப்பு சர்க்கரையை மாற்றிக் கொள்ளும் போதும் சரி சூர்யா ஒரு அண்ணனாய் குழலி பக்கம் இருக்க வீரபாண்டி ஐயாவோ ஏ.கே பக்கம் இருந்து வாங்கிக் கொண்டார். பின் சடங்குகள் முடிந்து மூங்கில் நரம்பில் கருமணி கோர்க்க நடுவில் யானைத் தந்தத்தில் இருவருடைய பெயரும் பொறித்த பதக்கம் வைத்த மாலையைக் குழலிக்குப் போட்டு அவளைத் தன் மனைவியாக்கிக் கொண்டான் ஏ.கே.

திருமணம் அன்று தான் தன் தந்தை மூலம் ஏ.கே வின் பூர்வீகம் பற்றியும் அவன் தாத்தாவைப் பற்றியும் எல்லாம் தெரிந்து கொண்டான் சூர்யா.

முன்பு தன் பால்ய நண்பரின் குடும்பம் மூலம் தன் பேரன் பற்றிய தகவல்களை விசாரித்துத் தரச் சொன்ன குடும்பம் தான் சூர்யா குடும்பம். இது தெரியாமல் குழலியோடு இவர்கள் அன்றே எங்கு செல்வது என்று தெரியாமல் திணறினர். கூடவே குழலியின் விசாவுக்காக ஏ.கே ஊருக்குச் சென்று அதற்கான வேலைகளைப் பார்க்க வேண்டும் என்றால் குழலி அதுவரை இங்கு இந்தியாவில் இருக்க வேண்டும். இந்த ஊரிலேயே இருக்க கட்டுப்பாடு என்ற பெயரில் அவர்கள் யாரும் அனுமதிக்க வில்லை.

பிறகு வீரபாண்டி ஐயாவுக்குத் தெரிந்தவர்கள் மூலம் தங்க ஏற்பாடு பண்ண முடியுமா என்று கேட்கயிருந்த நேரம் வேலுச்சாமி தாத்தாவைப் பற்றி சூர்யாவுக்கு அவன் தந்தை தகவல் தர அவரிடம் அன்றே பேசியவன் அவர் உதவியால் மூணாறில் அவருக்குத் தெரிந்த நண்பர் கெஸ்ட் ஹவுஸில் அவர்களைத் தங்கச் சொன்னவர் சக்கரவர்த்தி தாத்தாவிடம் ஏ.கே தான் அவர் பேரன் என்பதை அனைத்தையும் பேசி குழலி அவர் வீட்டில் இருக்க வழி செய்வதாகக் கூற இதற்கு சரி என்று சம்மதித்தவன் தாத்தா சம்மதித்து ஏ.கே வை ஏற்றுக் கொள்ளும் வரை தன் நண்பனிடம் இதைப் பற்றிச் சொல்ல வேண்டாம் என்ற முடிவை எடுத்தான் சூர்யா.

வீரபாண்டி ஐயாவின் காரோ அந்த கெஸ்ட் ஹவுஸ்சை நோக்கிப் போக முன்புறம் அமர்ந்திருந்த சூர்யாவோ அடிக்கடி பின்புறம் அமர்ந்திருந்தவர்களைப் பார்க்க கணவன் மனைவி இருவரும் ஆளுக்கு ஒரு கதவு பக்கம் அமர்ந்து கண்ணாடி வழியாக மலைகளையும் காடுகளையும் பார்த்து வர மறந்தும் ஒருவர் முகத்தை ஒருவரும் பார்க்கவில்லை. எப்போதும் ஏ.கேவிடம் குறும்பாகவும் துடுக்காகவும் பேசும் குழலியால் இப்போது தன் கணவனிடம் அப்படி நடந்து கொள்ள முடியவில்லை. அதேபோல் தான் ஏ.கேவும். எப்போதும் அவள் முகத்தில் தவழும் சிறுபிள்ளைத் தனமும் அவள் கெண்டை மீன் விழிகளையும் ரசித்து அவள் அக்கறை பேச்சில் உருகி நிற்பவனால் இப்போது அவளை நிமிர்ந்தும் பார்க்க முடியாதவனாக போக ஏதோ அவனை தடுத்தது.

குழலிக்குத் தண்ணீர் வேண்டும் என்றாலும் அவள் சூர்யாவையே கேட்க ஏ.கேவிடம் எந்தச் சலனமும் இல்லை. அப்போது தான் சூர்யா மனதால் அந்த முடிவை எடுத்தான் இது குழ்நிலையால் நடந்த திருமணமாக இருந்தாலும் இறுதியில் இவர்கள் இருவரும் கணவன் மனைவி என்று கடைசி வரை வாழ வேண்டும் என்பது தான் அது 
.இரவு பத்துமணிக்கு கெஸ்ட் ஹவுஸ் வந்தவர்கள் பின் ஆளுக்கு ஓர் அறையில் முடங்க அந்த நேரத்தில் சூர்யாவை அழைத்த வேலுச்சாமி தன் பேரன் கிடைத்து விட்டான் என்ற செய்தியைக் கேட்டதும் இன்ப அதிர்ச்சியில் சக்கரவர்த்தி பேச்சி மூச்சில்லாமல் போய் விட இவ்வளவு நேரம் ஆஸ்பத்திரியில் இருந்து பார்த்தவரால் மேற்கொண்டு இதற்கு வழியாக ஏ.கேவையே இங்கு அழைத்து வரச் சொல்ல குழலியைத் தனியாகவும் விட்டுச் செல்ல முடியாது அதிலும் ஏ.கே இந்த விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்வானோ என்ற பயம் வேறு.

சரி குழலியை அழைத்துப் போகலாம் என்றாலும் இந்தத் திருமணத்தை அவரால் ஏற்றுக் கொள்ள முடியுமா? பிறகு அவர் உயிருக்கே ஏதாவது ஆபத்து வந்தால் என்ன செய்வது? என்றெல்லாம் பலவாறு யோசித்தவன் இறுதியாக தான் மட்டுமே சென்று அவரைப் பார்த்து அனைத்தையும் எடுத்துக் கூறி அவருக்குப் புரியவைப்பது என்ற முடிவுடன் ஏ.கேவை எழுப்பித் தனக்கு வேலை இருப்பதால் ஓர் இடத்திற்குப் போய் வருவதாகக் கூறியவன்

“நம்ம பிளான் படி நீ குழலிய இங்கேயே விட்டுட்டு போ டா. காலையில உனக்கு ஏழுமணிக்கு தான பிளைட்? அதுக்குள்ள நான் வரப் பார்க்கறேன். இல்லனாலும் அவ இங்க இருக்கட்டும். பக்கத்து கெஸ்ட் ஹவுஸ் வாட்ச்மேன் தாத்தாவோட மனைவிய குழலிக்குத் துணைக்கு இருக்கச் சொல்லு. அதுக்குள்ள நான் வந்துடுறேன்” என்றவன்

பின் குழலியை எழுப்பி “நான் இப்போ அவசர விஷயமா ஊருக்குப் போறேன் டா. காலையில ஏ.கேவும் கிளம்பிடுவான். சீக்கிரமே அவன் வெளிநாடு போய் உன் விசாக்கான வேலைகளை அவன் பார்த்தா தான் நீயும் எங்களோட வர முடியும். அதுவரை உனக்குத் துணையா நான் இங்க தான் இருப்பேன். ஆனா இப்போ நான் வெளிய போய்ட்டு வரேன். நான் சீக்கிரமே வரப் பார்க்கிறேன். ஒருவேளை தாமதம் ஆனா பக்கத்து கெஸ்ட் ஹவுஸ் வாட்ச்மேன் தாத்தா மனைவிய துணைக்கு வச்சிக்கோ” என்றவன் அவள் எதுவும் சொல்லாமல் ஒருவித பயத்துடன் இருப்பதைப் பார்த்ததும்

“என்ன குழலி எதுவா இருந்தாலும் சொல்லுமா” என்று இவன் ஊக்க

“எப்… போ… வரு…வீங்க சார்?” என்று அவள் திக்கித் திணறவும்

“அண்ணானு சொல்லிக் கூப்பிடு” என்று அவன் அவளைத் திருத்த

“எப்போண்ணா வருவீங்க? அவரும் இல்லாம நீங்களும் இல்லாம இந்த புது எடத்துல இருக்க எனக்குக் கொஞ்சம் பயமா கூட இருக்கு” என குழலி மிரளவும் அவளுக்கு இன்னும் சில தைரியங்கள் சொல்லிச் சென்றான் சூர்யா.

காலையில் கிளம்பத் தயாராக இருந்த ஏ.கே இன்னும் குழலி எழுந்திருக்காததை அறிந்தவன் அவளை எழுப்பிச் சொல்லி விட்டுப் போகலாமா வேண்டாமா என்று யோசிக்க, அதே நேரம் அந்த கெஸ்ட் ஹவுஸ் உள்ளே நுழைந்தான் செங்கோடன்.

நேற்று இரவே ஒரு அரசியல்வாதியின் உதவியுடன் வெளியே வந்தவன் குழலிக்குத் திருமணம் நடந்ததையும் அவளை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததையும் அறிந்தவன் வீரபாண்டி ஐயாவின் டிரைவர் மூலம் அவள் இருக்குமிடம் தெரிய வர காலை வரை பல்லைக் கடித்துப் பொறுமை காத்தவன் பின் அவன் உதவியுடன் தனக்குத் தெரிந்த ஒரு கத்துக்குட்டி வக்கீல் நண்பருடன் அவள் இருக்குமிடத்திற்கு வந்து சேர்ந்தான் அவன்.

தன் தாயோ இல்லை ஊராரோ குழலியைப் பற்றி எதைச் சொல்லியுமே அவன் நம்பவில்லை. ஏன் குழலியே சொன்னதைக் கூட பொய் என்று தான் நினைத்தான். தான் திரும்பவும் தப்பான வழிக்குப் போய் ஜெயிலில் மாட்டிக் கொண்டதில் தன்னை முழுமையாக வெறுத்துத் தன்னை வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் அவள் இப்படி ஒரு முடிவு எடுத்ததாக யோசித்தவன் அவளுக்கு விருப்பமே இல்லாமல் தான் இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்து கஷ்டப்படுவதாக உருவகப் படுத்திக் கொண்டவன் அவளுக்குத் தன் நிலையைப் புரிய வைத்துத் திரும்பத் தன்னுடன் அழைத்து வந்துவிடலாம் என்ற முடிவுடன் ஏ.கே விடம் பேசத் துணைக்கு ஒரு ஜுனியர் வழக்கறிஞரை அழைத்துச் சென்றான்.

ஏ.கேவைப் பார்த்ததும் அவன் காலில் விழுந்தவன் “என்னையும் என் மனைவியையும் பிரிச்சிடாதிங்க சாமி! எனக்கு அவ தான் உலகம் அவளுக்கு நான் தான் உலகம். சின்ன வயசுல இருந்து நாங்க விரும்பறோம். இன்னும் சொல்லப் போனா கல்யாணம் பண்ணிக்கப் போறோம் என்ற எண்ணத்துல சேர்ந்தே வாழ்ந்துட்டோம். அவளும் விரும்பி தான் அதுக்கு சம்மதிச்சா. இன்னமும் என்ன தான் அவ விரும்பறா. ஊர்க்காரங்க எல்லாம் என்ன சொல்லி அவள மிரட்டினாங்களோ தெரியல இப்போ உங்க தாலிய ஏத்துகிட்டா. ஆனா உங்கள கட்டிக்க அவளுக்குக் கொஞ்சம் கூட விருப்பமே இல்ல. அது எனக்குத் தெரியும். அதனால அவள என் கிட்ட திரும்ப அனுப்பிடுங்க. நாங்க எங்காவது போய் வாழ்ந்துக்குறோம். திரும்ப அந்த ஊருக்குக் கூட நாங்க போக மாட்டோம்” என்றெல்லாம் அவன் இல்லாததை இருப்பதாகப் பொய் சொல்லி அவன் நடிக்க அவனை விட அவன் கூட வந்தவன் ஒன்றுக்கு இரண்டாய் ஏற்றிச் சொல்ல என்ன செய்வது என்று புரியாமல் நின்றான் ஏ.கே.

அவனுக்கு ஏ.கேவை வெட்டிப் போட்டுவிட்டு குழலியைத் தூக்கிப் போக வெகு நேரம் ஆகாது. அதற்கும் அவன் தயார் தான். ஆனால் இப்போது தான் ஜாமீனில் வெளியே வந்தவன் மறுபடியும் வெளிநாட்டுக் காரனை ஏதாவது செய்யப் போக அது அவன் வாழ்வுக்கு இறுதி வரை தொல்லை என்பதால் இப்படி எல்லாம் நடித்து ஏமாற்ற வேண்டியதாயிற்று. அதிலும் பக்கத்தில் குழலி இல்லாத சமயத்தில் இவன் பேச நினைத்தது நடக்கவும் இன்னும் வாய் கூசாமல் பொய்களை அள்ளி விட்டான் செங்கோடன்.

ஆனால் சூர்யா தன்னிடம் இதுபோல் எதுவும் கூறவில்லை எனவும் முதலில் அவளைத் திருமணம் செய்யுமாறும் பிறகு அனைத்தும் பார்த்துக் கொள்ளலாம் என்று மட்டுமே கூறியதாகவும் சந்தேகத்துடன் ஏ.கே கேட்கவும்

“இல்லைங்க சாமி! அந்த சூர்யாவுக்கு இதுபத்தி ஒண்ணுமே தெரியாது. அவன் எங்கே இந்த ஊர்ல இருந்தான் எல்லாம் தெரிஞ்சிக்கறதுக்கு? அன்னைக்கு கூட நான் வாங்கி குடுத்த பாவாடை தாவணியத்தான் அவ பொறந்த நாளைக்குக் கட்டியிருந்தா. நீங்களே உங்க கண்ணால பார்த்தீங்க இல்ல?” என்று செங்கோடன் இவனை மடக்கவும் ஏ.கே யோசிக்க ஆரம்பித்தான்.

“இப்ப கூட உங்க கிட்ட இதை எல்லாம் சொல்றதுக்கு கூச்சப் பட்டுகிட்டு தான் அவ சொல்லாம இருப்பா. இங்கிருந்து போனதுக்கு அப்புறம் நீங்க கட்டினத் தாலியக் கழட்டிட்டு நான் அவளுக்குத் தாலி கட்டுவேன். இது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல சாமி. அதுக்கப்புறம் நாங்க யார் கண்ணுலயும் பட மாட்டோம்” என்று அவன் குழைவாகப் பேசவும்

முன்பே இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லாமல் ஊரார் கட்டாயத்திற்காகச் சம்மதித்ததாகச் சூரியா சொன்னதை யோசித்தவன் கூடவே நடக்காத தப்பை தங்களுக்குள் நடந்ததாக அவள் எல்லோரிடம் சொன்ன பொய் இவனிடம் அவள் செய்த தப்பை மறைக்கத் தான் என்றும் ஊருக்குப் பயந்தவள் பிறகு தன்னிடம் மட்டும் உண்மையைச் சொல்லி இவனுடன் சென்று விட இருந்தாளா என்று அவன் யோசித்ததை வாய் விட்டுக் கேட்டு விட அதற்கும் ஆமாம் சாமி போட்டான் செங்கோடன்.

இப்படி எல்லாம் இவனே யோசித்தானே தவிர குழலியிடம் இதெல்லாம் உண்மையா உனக்கு அவனுடன் போக விருப்பமா என்று எதுவும் கேட்கத் தோன்றவே இல்லை. அவளை அவன் விரும்பவும் இல்லை. குழலியின் இனத்தைப் பொறுத்தவரை ஒருமுறை நடக்கும் திருமணம் தான் அவள் வாழ்வுக்கான முதலும் முடிவுமான திருமணம் என்பதை ஏ.கே அறியவில்லை எனும்போது அவன் கட்டிய தாலியின் பவித்திரம் மட்டும் எங்கே தெரியப் போகிறது அவனுக்கு?

என்னென்னவோ பேசி குழலியை விட்டு விலக வைத்தவன் மேற்கொண்டு அவனைச் சுற்றி உள்ளவர்கள் யாருமே அவளிடம் தொடர்பு கொள்ளாமல் இருக்கும் படி சொல்ல அதற்கும் சம்மதித்துத் தன் மனைவியான பதினைந்து வயது குழலியை செங்கோடனிடம் விட்டு விட்டு இந்தியாவிலிருந்து கிளம்பினான் ஏ கே. சூரியா மூலமாகக் கூட குழலியின் வாழ்வுக்கு தான் இடைஞ்சல் ஆகி விடக் கூடாது என்ற எண்ணத்தில் இந்தியாவிற்கான மொபைல் சிம்மை உடைத்து எறிந்து விட்டு பிரான்ஸ் பறந்து சென்றான் அவன்.

இது எதுவுமே தெரியாமல் குழலி தன் அறையில் தூங்க, நண்பனை அனுப்பி விட்டு ஏ கே முழுமையாக சென்று விட்டானா என்பதை அறிந்து மனதில் நிம்மதியும் சந்தோஷமும் போட்டி போட அவள் அறைக் கதைவை தட்டினான் செங்கோடன்.

விழித்துத் தான் எங்கு இருக்கிறோம் என்று தடுமாறியவள் பின் கணவன் தான் கதவை தட்டுவதாக நினைத்து இவள் ஓடிப் போய் கதவைத் திறக்க அங்க செங்கோடனைக் காணவும் ஒரு வினாடி விழித்தவள்

“என்ன மாமா எப்படி இருக்க? எப்படியோ இந்த தடவ ஒரே நாள்ல உன் தோஸ்தோட அரசியல் சிபாரிசுல திரும்பி வந்துட்ட போல..” என்று இவள் முடிக்கக் கூட இல்லை

“குழலி வா நாம ரெண்டு பேரும் இந்த ஊரை விட்டே எங்கேயாவது போய் வாழ்வோம்” என்று எடுத்த எடுப்பிலேயே அழைக்கவும்

“என்ன மாமா விட்டா வாய் ரொம்பத் தான் நீளுது? எங்க யார் வீட்டுல வந்து யார கூப்பிடற? இது மட்டும் என் புருஷனுக்குத் தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா? நீ என்னமோ எனக்கு உரிமைக் காரன் மாதிரி நடந்துக்கிற! நான் இப்போ இன்னொருத்தரோட பொஞ்சாதியாக்கும்” என்று அவனுக்குப் பதில் கொடுத்தவள் எங்கே தன் கணவன் என்று அந்த வீட்டைச் சுற்றி வந்து அவள் தேட

“யார தேடுற? அந்த வெள்ளைக்காரனையா? நீ தான் உங்களுக்குள்ள புருஷன் பொண்டாட்டினு உறவு வச்சி பேசுற. ஆனா அவனோ நீயும் வேணாம் உன் உறவும் வேணாம்னு உன்ன என் கிட்ட விட்டுட்டுப் போய்ட்டான் போறவன், இப்படி படிப்பறிவு அழகு இல்லாதவ என் ஸ்டேட்டஸ்க்கு ஒத்துவராதவள நான் எப்படி என் நாட்டுல போய் மனைவினு சொல்லிக்கிறது? அதுவும் இல்லாம நான் வேற வழி இல்லாம தானே தாலியே கட்டினன்? அது என் நாட்டு வழக்கம் இல்லாதப்ப நான் ஏன் அதுக்கு மதிப்பு கொடுக்கனும்? உன் மொறப் பொண்ண நீயே கூட்டிட்டுப் போய் குடும்பம் நடத்துனு சொல்லிட்டு போய்டான். இது தெரியாம நீ பாட்டுக்கு பேசுற!” என்று கேட்டவன் இப்போது அவள் பேசிய பேச்சுக்கு வஞ்சம் தீர்த்துக் கொண்டான்.

அப்போதுதான் குழலிக்குத் தான் செய்த தவறு புரிந்தது. சூர்யாவிடம் சொன்னது போல் ஏ.கேவிடமும் முன்பே அனைத்தும் சொல்லியிருந்தால் இப்படி ஒரு விபரீதம் நிகழ்ந்திருக்காது என்று யோசித்தவள் இவன் சொல்வது போல் உண்மையிலேயே ஏ.கே இவனிடம் தன்னை ஒப்படைத்து விட்டுச் சென்று விட்டானோ என்று பயந்தவள் பின் அவன் அவ்வாறு செய்யக் கூடியவன் அல்ல என்று நினைத்து இருக்காது என்று உறுதியாக செங்கோடனிடம் மறுக்க

“இதுல பொய் சொல்ல எனக்கு என்ன இருக்கு? அவன் ஏதோ இப்போ வெளிநாடு போறானாமே? அதனால இனி அவ என் வாழ்க்கையில் வேணா. அதையும் நீயே அவகிட்ட சொல்லிடுனு இல்ல சொல்லிட்டுப் போனான்!” என்று அவன் சொல்ல

ஓடிச் சென்று தன் கணவனின் அறையை அவள் பார்க்க, உண்மை தான்! அவன் சம்மந்தப்பட்டது எதுவும் அங்கு இல்லை.

‘அப்போ நிஜமாவே தான் அவர் என்னை விட்டுட்டுப் போய்ட்டாரா? தாலினு கட்டிட்டா புருஷன் தான் நம் பெண்களுக்கு எல்லாம்னு ஆத்தா சொல்லுமே? சாகுற வரை அவ வாழ்க்கை முழுசுக்குமே அவன் தான் எல்லாம்னும் சொல்லுமே? அப்போ அவர் ஏன் என்ன விட்டுட்டுப் போனார்? அவருக்கு விருப்பம் இல்லாம தான் தாலி கட்டினார். ஆனா அவர் கூட இருக்கேன்ற ஒரு பாவ பரிதாபத்துல கூட எதுவும் சொல்லாம போய்ட்டாரே? உண்மைதான்.. அவருக்கு ஏத்த அழகும் தகுதியும் உள்ள பொண்ணு நான் இல்ல தான். ஆனா என்கிட்ட ஒரே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே?’ என்று பல கேள்விகள் அவள் மனதைப் போட்டுப் பிசையவும்

அவள் அப்படி ஸ்தம்பித்துப் போய் நிற்பதைப் பார்த்தவன் “வா குழலி நாம எங்காவது போய்டுவோம்” என்று மறுபடியும் அழைக்க

“சும்மா இதையே சொல்லாத மாமா. அவர் தான் எதுவும் யோசிக்காம ஏதோ சொன்னார்னா நீயும் அறிவில்லாம அதையே நடத்தச் சொல்ற! ஒழுங்கா நீ ஊர் போய் சேரு. எதுவா இருந்தாலும் சூர்யா அண்ணா வரட்டும். அப்புறம் நான் என் புருஷன் கிட்ட என்ன ஏதுனு பேசி கேட்டுக்கிறன். இப்போ நீ போ” என்று அவள் உத்தரவு இட

“என்ன டி எனக்கே வெளையாட்டு காமிக்கிறியா? இவ்வளவு நேரம் நான் பொறுமையா பேசினதே அதிகம். உன் மூஞ்சிக்கு என்ன விட அவன் கேட்குதா? ஒழுங்கா தாலி கட்டி குடும்பம் நடத்தலாம்னு நெனச்சா நீ குடும்பம் நடத்திட்டு தாலி கட்டச் சொல்ற.. வேற வழி இல்ல.. உன்ன இன்னைக்கு என்ன பண்ணப் போறன் பாரு” என்றவன் அவளிடம் தவறாக நடக்க முயல கோடாரி பிடித்த தன் கையால் அவனைத் தள்ளி விட்டு கண்மண் தெரியாமல் வீட்டை விட்டு ரோட்டில் ஓடியவள் முன் அந்த ஊர் போலீஸ் அதிகாரி ஒருவன் தன் ஜீப்பில் அமர்ந்து யாருடனோ பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவனிடம் ஓடி தனக்கு நடந்ததைச் சொல்லி உதவி கேட்க, அந்த அதிகாரியும் அவளுக்கு உதவுதாகக் கூறி வண்டியில் அமரச் செய்து கூட்டிச் செல்லும் வழியில் தன் சக நண்பர்களை போனில் அழைத்து எங்கேடா இருக்கீங்க சீக்கிரம் வாங்கடா இங்கே ஒரு கிளி மாட்டி இருக்கு என்று கூற அப்போதுதான் குழலி சிங்கத்திடம் தப்பி மீண்டும் புலியிடம் தான் சிக்கிக் கொண்டதை உணர்ந்தாள்.

‘ச்சே.. என்ன கேடுகெட்ட ஆண் சமூகம் இது? ஒரு பெண்ணின் சதைக்காக இப்படி அலைகிறதே! இதிலிருந்து காப்பாற்ற யாருமே இல்லையா?’ என்று மனதில் நினைத்து கொண்டவள் தன் கற்பை காப்பாற்ற என்ன ஆனாலும் பரவாயில்லை என்று ஓடும் வண்டியிலிருந்து அப்படியே கீழே உருள அதை சற்றும் எதிர்பார்க்காத அந்த அதிகாரி வண்டியை நிறுத்தி அவளைத் தேடுவதற்குள் சாலையோர பள்ளத்தில் அவள் விழுந்தாள். அந்த அதிகாரி இறங்கி தேட முயற்சிக்கும் போது மேலாதிகாரியிடம் இருந்து அவசரமாக வரும் படி அழைப்பு வர மனமே இல்லாமல் எங்கே போய்ட போற திரும்ப கிடைத்துதானே ஆகனும் என்ற முணுமுணுப்புடன் தன் வேலை பார்க்க சென்றான் அவன். 

தன் சக்தி எல்லாம் திரட்டி எழுந்து காடுமேடு எல்லாம் ஓடியவள் தன் ஆடை மரக்கிளையில் சிக்கினாலோ தான் எதன் மீது மோதினாலும் தன்னை ஒரு ஆண் மகன் தான் தொடுகிறான் என்ற பயத்தில் தவித்தவள் ஒரு இடத்தில் மரக்கிளையில் பலமாய் முட்டிக் கீழே விழுந்து தன் சுயநினைவை இழந்தாள் குழலி.

குளிரில் விறகுக் கட்டை என விரைத்துப் போய் இருந்தவளைக் அந்தப் பக்கம் வந்த அந்த ஊர் பெண்கள் சிலர் காப்பாற்றி சிகிச்சை அளிக்க இரண்டு தினங்கள் கழித்துத் தான் தன் நினைவைப் பெற்றவள் அப்போதும் ஒருவித பயத்தில் அவள் உடலோ தூக்கித் தூக்கிப் போட்டது.

மறுநாளே வருகிறேன் என்று சொல்லிச் சென்ற சூர்யாவால் இரண்டு நாட்கள் கழித்துத் தான் வர முடிந்தது. அதுவரை அவன் ஏ.கேவுக்கு தொடர்பு கொண்டே இருக்க அது உபயோகத்தில் இல்லை என்றே வந்தது. அந்த கெஸ்ட் ஹவுஸ் உரிமையாளரிடம் கேட்டு லேண்ட் லைன் நம்பர் வாங்கி குழலியிடம் பேச நினைக்க ஆள் இல்லாத வீட்டுக்கு லேண்ட் லைனே இல்லை என்று சொன்னார்கள். அந்த வீட்டைப் பார்த்துக் கொள்பவரே பக்கத்து வீட்டு வாட்ச்மேன் தாத்தா தான் என்றார்கள். சரி அந்த வீட்டு லேண்ட் லைனில் அழைத்துக் கேட்க அவரோ அங்கே யாரும் இல்லை என்றார். அவளுக்கு எதாவது ஆகி இருக்குமோ என்ற பயத்தில் சூர்யா வர அவனை ஆள் அரவம் இல்லாத வீடு தான் வரவேற்றது. பின் குழிலியின் அங்க அடையாளங்களைச் சொல்லி அக்கம் பக்கத்தில் விசாரிக்க ஒரு பெண்மணி தான் அவனைக் குழலி இருக்கும் வைத்திய சாலைக்கு அழைத்துச் செல்ல அவளைப் பார்த்துப் பயந்தவன் பின் விவரம் அறிந்து அவளைப் பார்த்துக் கொள்ள அவனையும் தன்னிடம் நெருங்க விடாத அளவுக்கு கத்தி கூச்சல் இட்டு அடிக்கடி சோர்ந்து போனவள் பிறகு மெல்ல மெல்ல யாரிடமும் பேசாமல் இறுகிய தன்மையுடனே உலாவ ஆரம்பித்தாள் குழலி.

தாத்தாவுக்குச் சரியானதும் அவரிடம் ஏ.கேவையும் குழலியையும் பற்றி அனைத்தையும் சொல்லியவன் குழலியை அவரின் பொறுப்பில் விட்டு விட்டு நண்பனைப் பற்றி அறியப் போனவனுக்கு அவன் அங்கு போயும் கிடைத்தது என்னமோ வெறும் பூஜ்ஜியம் தான்.

இங்கே இவளை விட்டுச் சென்ற ஏ.கேவால் இரண்டு நாள் தான் நிம்மதியாக சாதாரணமாக இருக்க முடிந்தது. அதன் பிறகு அவனால் அவனாகவே இருக்க முடியவில்லை. ஏதோ நடக்கக் கூடாத ஒன்று தன் வாழ்வில் நடந்ததாக உணர்ந்தான். சூர்யாவின் ஆலோசனை இல்லாமல் இப்படி குழலியை செங்கோடனிடம் விட்டு வந்தது தவறோ என்றும் எப்படியோ அவர்கள் அவள் கிராமம் போக மாட்டார்கள் எனும்போது எங்கு இருக்கிறார்களோ குழலி கஷ்டப்படுவாளோ அவள் வாழ்க்கை நன்றாக இருக்க செங்கோடனுக்கு எதாவது நல்லது செய்யலாமா என்றும் பலவாரு யோசித்தான்.

அவளை மறக்கவும் முடியாமல் சூரியா மூலமாக எப்படி இருக்கிறாள் கேட்டு அறியவும் முடியாமல் அப்படி அறிய ஆசைப் பட்டு எதாவது செய்யப் போக அது அவள் வாழ்வுக்கு எதிராகப் போனால் என்ன செய்வது என்று தவித்தவன் அதன் நினைவுகளை மறக்க நினைத்து கடுமையாக உழைத்தவன் ஏன் எதுக்கு இப்படி செய்கிறோம் என்று தெரியாமலே தமிழ் மொழி கற்றவன் அவர்களின் பழக்க வழக்கங்களை ஆராய்ந்து தன் வாழ்விலும் அதனைக் கடைப்பிடித்தான்.

ஒரு வருடம் கழித்துத் திரும்பவும் அவன் இந்தியா செல்ல வாய்ப்பு வர அதைப் பயன்படுத்தித் திரும்பவும் குழலியைப் பற்றி அறிய நினைத்தவன் அது சூரியாவுக்குக் கூட தெரியக் கூடாது என்று யோசித்து அவளை விட்டுவிட்டு வந்த அதே கெஸ்ட் ஹவுஸ் எல்லைக்குள் இருந்த போலீஸ் ஸ்டேஷனில் என்றோ எப்போதோ குண்டா கருப்பா மலைவாழ் இனத்தில் இருந்த ஒரு பெண்ணைப் பற்றி அவன் விசாரிக்க அங்கு சரியான தகவல் கிடைக்கவில்லை.

அதில் அவன் திரும்பத் திரும்ப வேறு வேறு விதமாக அவர்களைக் கேட்க அதில் கடுப்பான ஒரு போலீஸ் அதிகாரி “யோவ்! அதான் எதுவும் தெரியாதுனு சொல்றோம் இல்ல? ஒரு தடவைக்குப் பல தடவை கேட்குற! முழுமையான விவரம் சொன்னாலே இங்கு தெரியாதாம். இதுல எப்போவோ நடந்தது கேட்க வந்துட்டான்” என்று அதிகாரத் தோரணையைக் காட்டியவன் பின்னர் ஆவணங்கள் வைக்கும் கோப்பில் இருந்து ஒரு கோப்பை எடுத்துப் பிரித்து சில பேப்பர்களைத் தள்ளிப் பார்த்தவன்

“நீ சொன்ன இடத்துல சொன்ன தேதியில அங்கிருந்த ஒரு பொண்ண அந்த ஊர் காரனுங்களே நாலு பேரும் சேர்ந்து பலாத்காரம் பண்ணதுல அந்த பொண்ணு அந்த ஸ்பாட்டுலேயே இறந்து போய்டுச்சி. போதுமா? நீ கேட்ட தகவல் கிடைச்சிதா? இப்ப எடத்த காலி பண்ணு.

நாடு விட்டு நாடு வந்து தமிழ் பொண்ணா பார்த்து காதலிக்க வேண்டியது பிறகு ஊரை எதிர்த்துட்டு எங்கேயாவது கூட்டிட்டுப் போய் அந்த பொண்ணோட உல்லாசமா இருந்துட்டு அப்பறம் அம்போனு விட்டுட்டுப் போக வேண்டியது. உங்கள எல்லாம் நம்பி வந்ததுக்கு அந்த பொண்ணை நாலு பேரு என்ன நாற்பது பேர் சேர்ந்து வீணாக்க விட வேண்டியது.

பிறகு உங்களுக்கா ஞானோதயம் வந்து அவளைத் தேடி வந்து எங்க உசுரை எடுக்க வேண்டியது. போ அவ செத்துப் போய் மார்ச்சுவரில அனாதைப் பொணமா இருந்து நாங்க தான் எரிச்சோம். போதுமா? இல்ல இன்னும் வேற எதாவது உனக்கு தெரிய வேணுமா?” என்று அதே அதிகார குரலிலேயே முடித்தவன் தன் அடுத்த வேலைகளைப் பார்க்கப் போக தன் வாழ்வில் முதல் முறையாக ஸ்தம்பித்துப் போனான் ஏ.கே.

இப்படி ஒரு விஷயத்தை அவனால் நம்ப முடியவில்லை. இதையே வேறு யாராவது சொல்லி இருந்தால் நம்பி இருப்பானோ என்னவோ? போலீஸ் என்பதால் உண்மை என்றே நம்பினான். ‘அப்போ அந்த நாலு பேர் என்பது செங்கோடனும் அவன் நண்பர்களும் தானா? நானே அவ வாழ்க்கைய அழிக்கவும் அவ சாகவும் காரணமாகிட்டேனே’ என்று துடித்தவன் “குழலி எவ்வளவு துடிதுடிச்சி இருப்பா அவனுங்களால?” என்று வாய் விட்டுச் சொன்னவன்

‘ஒரு கணவனா தன் மனைவியைக் காப்பாற்ற வேண்டிய நானே இப்படி செய்துட்டேனே! என் கண்ணம்மா சாக நானே காரணமாகிட்டேனே! புருஷன் காரன் நான் இருக்கும் போதே என் மனைவி அநாதைப் பொணமா போயிருக்கா. அப்போ சூரியாவுக்குமே இது தெரியாதா? அப்படி தெரிந்திருந்தால் அவளை அவன் அநாதையாக விட்டிருக்க மாட்டானே?’ என்றேல்லாம் யோசித்தவன் அப்போது தான் ஒன்றை அறிந்தான்.

தான் குழலியைக் காதலித்ததாகவும் இப்போதும் அவளைக் காதலிப்பதாகவும் கண் கெட்ட பிறகு சூரியநமஸ்காரம் என்பது போல் அவள் உயிரும் உணர்வுமாய் தன்னுடன் இருக்கும் போது வராத காதல் இப்போது அவள் இறந்த பிறகு வந்ததில் முழுமையாக மாறியவன் தன்னைச் சுற்றி ஓர் வளையதைப் போட்டுக் கொண்டு சாராவைப் பார்க்கும் வரை இருந்தான் ஏ.கே வான அஷ்வத் கென்டிரிக்.

பாவம் அவனுக்குத் தெரியாது எங்கே இவன் அடிக்கடி வந்து தொந்தரவோ இல்லை வேறு யார் உயர் அதிகாரி மூலமாக அழுத்தம் கொடுக்காமல் இருக்கவே அந்த போலீஸ் அதிகாரி சொன்ன பொய் தான் அவள் இப்படி கொடூரமாக இறந்து விட்டாள் என்பது.

தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் இன்று மனைவியான சாராவிடம் கூறியவன்

“இப்போ சொல்லு சாரா, நாம பிரிஞ்சிடலாம்னு சொன்னதும் நான் உன் கிட்ட டிவோர்ஸ் கேட்டதும் சரி தான?”

அவள் எந்த பதிலும் சொல்லாமல் அவனை வெறித்துப் பார்க்க அவள் பார்வையை உணர்ந்தவனோ

“நீ என்ன கேட்கவரனு எனக்குப் புரியுது. கல்யாணம் பண்ணி இவ்வளவு தூரம் வந்த பிறகு பிரிஞ்சிடலாம்னு சொல்ற நீ அதற்கு எதுக்கு என் கழுத்துல தாலி கட்டின தான யோசிக்கிற?”

திடீர் என எழுந்தவன் அவள் முன் மண்டியிட்டு தரையில் அமர்ந்து அவள் இரண்டு கைகளையும் தன் இரண்டு கைகளுக்குள் கொண்டு வந்து இறுகிப் பிடித்தவனோ

“என் மனநிலையை உனக்கு முழுக்க சொன்னான் தான் உனக்கு புரியும் பொம்மி” என்றவன் “குழலிய நான் பார்த்ததுல இருந்து அவ மேல் எனக்கு ஒரு பிடித்தம் இருந்ததே தவிர நிச்சயம் எனக்கு காதல் இல்ல. ஏன் அவள அப்படி ஒரு நிலையில பார்க்கும் போது கூட காதலையும் மீறிய ஒரு காமப் பார்வை கூட வரல. அவளுக்குத் தாலி கட்டினது கூட அவ மானத்தை காப்பாற்றனுமேனு தான். கடமைக்கு கட்டினேன் பிறகு அவளுக்கு நல்லது செய்யறதா நினைத்து தான் அவ மாமா கிட்ட விட்டுட்டுப் போனேன். ஆனா அதுவே அவளை அழித்து..” என்றவன் மேற்கொண்டு சொல்ல முடியாத அளவுக்கு அவனுக்குத் தொண்டை அடைக்கவும் அதை செறுமி சரி செய்தவன்

“சின்னபின்னாமாக்கும்னு நான் நினைக்கல. ஐயோ என்னால தானே அப்படி நடந்துடுச்சினு நான் எனக்குள்ள ஒரு வட்டத்தப் போட்டுகிட்டு குற்ற உணர்ச்சியால அடிக்கடி துடிச்சேன். ஆனா அது வெறும் குற்ற உணர்ச்சி இல்ல அவ மேல நான் வச்சிருக்கிற காதல்னு பிறகு தான் தெரிஞ்சிது. எஸ் ஐ லவ் ஹெர்.. இப்படி ஒரு நிலையில் தான் நான் உன்னை பார்த்தேன். உன்னை என்றத விட உன் விழிகளப் பார்த்தேன். இறந்த குழிலியோட விழிகள் உன் கிட்ட இருந்ததால தான் அது எனக்கு சொந்தமான விழிகள்னு நான் அடிக்கடி சொன்னேன்.

என்னைத் தவிக்க வைக்கவோ தடுமாறவோ ஏன் என்னை சலனப்படுத்தவோ முடியும்னா அது குழலியால மட்டும் தான் முடியும். அதனால தான் அதனால தான் உன் கிட்ட நிறைய நேரத்துல நான் சலனப் பட்டேன். ஆனா கடைசி வரைக்கும் மனைவிக்கான அங்கீகாரத்த உனக்கு கொடுக்கவே என்னால முடியல. இதை எல்லாம் மறைத்து உன்னை கல்யாணம் பண்ணது தப்பு தான். நான் உனக்கு செய்தது துரோகம் தான்.

பிறகு உன் கிட்ட எல்லாத்தையும் சொல்லி நம்ம வாழ்க்கை இவ்வளவு தான் இதுக்கு மேல காதலையோ மனைவி என்ற அங்கீகாரத்தையோ என் கிட்ட எதிர்ப்பார்க்காத அதுக்கு சம்மதம்னா இருனு சொல்லலாம்னு இருந்தேன். ஆனா அதுவும் என்னால முடியல. ஒரு நேரம் உன் கிட்ட சலனப் படுறதும் பின் உன்ன விட்டு விலகுறதும் எனக்கு நரகமான வாழ்க்கையா பட்டுச்சி. அதனால தான் நிரந்தரமா நாம பிரிஞ்சிடலாம்னு முடிவு எடுத்தேன். அதுவும் இல்லாம அவ எங்கேனா வாழ்ந்தா கூட நாம காதலிச்ச பொண்ணு எங்கோ நிம்மதியா வாழறானு கூட எனக்கு ஒரு எண்ணம் வந்து நான் என் வாழ்க்கையப் பற்றியாவது யோசித்து இருப்பேன்.

ஆனா அவ உயிரோடவே இல்லனா நான் மட்டும் எப்படி வாழ சொல்லு? உன்ன எனக்கு பிடிக்கும் பொம்மி. உன் மேல அன்பு பாசம் அக்கறை எல்லாம் இருக்கு. ஆனா…. இப்போ நான் சொல்றத கேட்க உனக்குக் கஷ்டமா தான் இருக்கும். எனக்கு காதல்னா அது என் மனைவி குழலி கிட்ட மட்டும் தான்” என்றவன் அவள் ஏதோ சொல்ல வரவும் அவளைப் பேச விடாமல் தடுத்தவன்

“இதை எல்லாம் மறந்துட்டு நாம வாழலாம்னு தானே சொல்ல வர? இப்படி சொல்ற உன்னாலயே நிச்சயம் இதை மறந்து என் கூட வாழ முடியாது. தினம் தினம் அக்னியாய் இந்த விஷயம் உன்னை எரிக்கும். ஏன்னா..” என்று சற்றே இழுத்தவன் நடுங்கும் தன் விரல்களால் அவள் கையை எடுத்து தன் சட்டைக் காலரில் வைத்து அதை விலக்க பால் நிறமான அவன் மேனியில் மார்பு மத்தியில் I love கருங்குழலி என்று பச்சை குத்தியிருந்தான் அவன்.

அதைப் பார்த்தவளோ தன் கண்கள் விரிய கண்ணில் இருந்து கண்ணீர் வழிய தான் பெற்றெடுத்த குழந்தையை ஒரு தாய் எங்கே குழந்தைக்கு வலிக்குமோ என்ற பயத்தில் பட்டும் படாமல் அதன் மேனியைத் தொட்டுத் தடவுவாளே அப்படி தான் பொம்மி விரலால் அந்த இடத்தை வருடியவள் அதை உச்சிமுகர்ந்து முத்தம் வைத்தவள் பின் “மச்சான்!” என்ற கேவளுடன் அவன் கழுத்தைக் கட்டிக் கொள்ள

தன்னைத் திட்டுவாள் கோபப்படுவாள் வெறுப்பாள் என்று அவன் நினைத்திருக்க அவள் தன்னைக் கட்டிக் கொண்டு அழவும் தான் செய்த துரோகத்தில் வெந்தவன்

“ஐயோ பொம்மி! என்னை அடி திட்டு இப்படி நீ அழாதடி கண்ணம்மா” என்று அவன் அவள் முதுகு வருட

“உங்களுக்கு எவ்வளவு அன்பு பாசம் காதல் என் மேல! உங்க மனசுல என்ன இருக்கனு தெரியாம இவ்வளவு நாள் மக்கு மட்டியா இருந்து இருக்கனே. எல்லாத்தையும் நாம பார்த்த அன்னைக்கே பேசியிருந்தால் இவ்வளவு கஷ்டத்த நாம பட்டிருக்க மாட்டோமே. உங்க மனசுல எனக்கு மனைவிக்கான இடம் இல்லையானு நான் எத்தனை நாள் தவிச்சிருக்கேன்” என்று அவள் அவனைக் கட்டிக்கொண்டு கேவவும், ஸ்தம்பித்து நின்றான் ஏ.கே. அதுவும் ஒரு வினாடி தான். பிறகு அவளைத் தன்னிடம் இருந்து பிரித்தவன்

“இப்போ நீ என்ன சொன்ன பொம்மி? எனக்கு ஏதோ கொஞ்சம் புரிந்தும் புரியாமலும் இருக்கு. அதிலும் புரிந்ததை நம்பவோ என்னால் சுத்தமா முடியல” என்று அவன் கேட்க

“நான் தான் உங்க மனைவி குழலி மச்சான்” என்று அவள் சொல்ல

சட்டென தரையில் கால் மடக்கி அமர்ந்து விட்டான் ஏ கே. அவனுடன் சேர்ந்து தரையில் அமர்ந்தவள் அவன் கன்னங்களைத் தன் கைகளால் தாங்கியவள் 

“நிஜம் தான் மச்சான். நான் தான் உங்க குழலி” என்றவள் இவன் விட்டுச் சென்ற பின் செங்கோடனிடமிருந்து தப்பித்தது முதல் சக்கரவர்த்தி தாத்தாவிடம் வந்து சேர்ந்தது முதல் அனைத்தையும் சொல்லியவள் 

“நமக்குத் திருமணம் நடந்த அப்போ எனக்கு உங்களை பிடிக்குமோ இல்ல நான் உங்கள காதலித்தேனானு கேட்டா இல்லனு தான் சொல்லுவேன். என் ஆத்தா ஒரு பொண்ணு எப்போதும் தன்னையும் தன் உடலையும் பாதுகாக்கணும்னு சொல்லும். அதை வச்சி தான் நீங்க என்ன அப்படி பார்த்ததும் செங்கோடன மட்டும் இல்ல வேற யாரையும் கட்ட முடியாதுனு உங்களக் கட்டிக்க சம்மதிச்சேன். அப்பவும் உங்க அழகையும் தகுதியையும் பார்த்து விலகிடணும்னு உறுதியா இருந்தேன்.

நீங்க என்ன விட்டுப் போகும் போது கூட இதை என் கிட்ட இவர் சொல்லிட்டுப் போய் இருக்கலாம்னு தான் தோனுச்சி. சத்தியமா வருத்தமோ கோபமோ வரல. ஆனா அன்னைக்கு முழுக்க நடந்த கெட்ட சம்பவத்தால மன உலைச்சல்ல நான் கொஞ்சம் ஒரு மாதிரி ஆகிட்டேன். சூர்யா அண்ணா தான் உங்க தாத்தா கிட்ட என்ன கொண்டு வந்து சேர்த்தார். தாத்தாவும் என்ன அவர் பேத்தியா ஏத்துகிட்டார்” என்றவள் சூரியாவுக்கு அவன் தாத்தா விஷயம் எப்போது எப்படி தெரிய வந்தது என்று அனைத்தையும் சொன்னாள்.

“உங்கள அண்ணா தேடி கண்டுபிடிக்கறதுக்கு நிறைய முயற்சி எல்லாம் எடுத்தார். ஆனா இடையில அவங்க அம்மாவுக்கு விபத்தாகி அவரைப் பாத்துக்கிற நிலைமை வரவோ உங்க விஷயத்துல முழு வீச்சா ஈடுபட முடியல. சரி இனி நானும் தாத்தாவும் தான் வாழ்க்கையினு எடுத்துகிட்டோம். ஆனாலும் எனக்கு ஏதோ தப்பு செய்துட்ட மாதிரியே இருந்தது.

அதையும் வெளி உலகம் படிப்புனு நான் போகப் போக நமக்குள்ள நடந்தது வெறும் விபத்து தானு புரிஞ்சி கிட்டு அடுத்த கட்டத்தை நோக்கி வாழ ஆரம்பிச்சேன். தாத்தா எனக்குக் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்து பெண் பார்க்க மாப்பிள்ள வீட்டார் வரும்போது தான் நான் உணர்ந்தேன். என்னால வேற யாரையும் திருமணம் செய்து உங்க இடத்துல வேற யாரையும் வச்சிப் பார்க்க முடியாதுனு. ஏன்னா நான் அந்த அளவுக்கு உங்கள விரும்புறேன் மச்சான்” என்று கூறி அவன் முகமெங்கும் முத்த மழை பொழிந்தவளோ 

“அதற்குப் பிறகு திருமணமே வேணாம்னு மறுத்த என்னை தாத்தாவும் அண்ணாவும் வற்புறுத்தவே ஒருமுறை உங்கள நேர்ல பார்த்துப் பேசின பிறகு வேற திருமணத்திற்கு சம்மதிக்கிறனு சொன்னேன். அதுக்கு பிறகு சூர்யா அண்ணா வேற வழியில தேடி உங்களை கண்டுபிடித்தாங்க. உங்க அளவுக்கு தகுதிய வளர்த்துகிட்டதுக்கு அப்புறம் நானே உங்க கிட்ட வந்து பேசுற வரை அண்ணாவ உங்களை தொடர்பு கொள்ள வேண்டாம்னு சொன்னேன். என்னைப் பார்த்ததும் நீங்க தெரிஞ்ச மாதிரியே நடந்துக்கல. ஒருவேளை நிஜமாவே என்ன உங்களுக்கு அடையாளம் தெரியலனு தான் நினைச்சேன். நான் தான் பெயரிலிருந்து உருவத்துல இருந்து நிறைய மாறி இருந்தேனே?” என்று குழலி படபடத்துப் பேச

“இருக்கலாம்! நீ எவ்வளவு மாறி இருந்தாலும் உன் விழிகளை என்னால மறக்க முடியல குழலி. உன் பிறந்த நாள் அப்போ தான் ஸ்டீவ் மகன் மேத்யூஸ் பிறந்தான். அதனாலேயே நீயே வந்து திரும்ப பிறந்துட்டியோனு எனக்கு அப்படி ஒரு சந்தோஷம். கூடவே ஒட்டுதலும் அவன் கிட்ட அதிகமாச்சி. அந்தளவுக்கு உன் நினைவுகள் எனக்குள்ள இருந்தது. ஆனா நீ இறந்துட்டேனு உறுதியா நான் நம்பினதால உனக்கு இந்த விழிகள் இடையில கிடைச்சதுனு நினைச்சிட்டேன். அதனாலேயே நான் திரும்ப சூரியாவை தொடர்பு கொள்ளவில்லை. எங்கேடா குழலினு அவன் கேட்டா நான் எங்க போய் என் முகத்தை வச்சிக சொல்லு ஆமா அந்த போலீஸ் காரன் ஏன் அப்படி சொன்னான்னு தெரியல” என்று இறுகியிருந்த அவன் வாயைத் திறக்க

“அவங்க வேற ஒரு கெஸ்ட் ஹவுஸ்ல இப்படி நடந்ததை சொல்லி இருப்பாங்க. நீங்க என்னனு தப்பா புரிஞ்சி இருப்பீங்க” என்றவள் மறுபடியும் தான் முன்பு விட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்தாள்.

“அப்படி மாறி இருந்ததால நானா உங்களுக்கு சொன்னா தான தெரியும்? ஆனா உங்க வாயில இருந்து நான் உன்ன விரும்புறனு நீங்க சொல்ற வரை இதை தெரியப் படுத்தக் கூடாதுனு இருந்தேன். நீங்க கல்யாணத்துக்குக் கேட்டதும் என்னத் தவிர உங்க வாழ்க்கையில் வேறு யாரும் இல்லனு தெரிஞ்சதால மறுபடியும் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். பிறகு நீங்க நடந்துகிட்டதை வைத்து பார்க்கும்போது உங்களுக்கு என்னைத் தவிர வேற ஏதோ யார் மூலமா நடந்து இருக்கோனு நெனச்சேன். அப்படினா அதை நீங்க சொல்ற வரை என் விஷயத்தை சொல்லக் கூடாதுனு இன்னும் உறுதியா இருந்தேன். அப்பவும் நாம ஹனிமூன் போறதா இருந்தப்ப அங்கே சொல்லிடலாம்னு இருந்தேன். சூர்யா அண்ணாவ நான் தான் நம்ம ரிசப்ஷனுக்கு வரச் சொன்னேன். நீங்க அவர் கிட்ட ஏதாவது பேசுவிங்கனு பார்த்தா நீங்க என் கிட்ட சண்டை போட்டு பிரிவு வரை வந்துட்டிங்க என்றவள் ஓடி சென்று தன் அலமாரியில் வைத்து இருந்த யானை தந்ததால் ஆன அவன் கட்டிய கருகுமணியை எடுத்து வந்து காட்டியவள் கூடவே அப்போது திருமணத்தின் போது சூர்யா எடுத்த புகைப்படத்தையும் காட்ட பழைய ஞாபகத்தில் ஏ கே மூச்சு விடவும் முடியவில்லை பின் லேப்டாப்பை உயிர்பித்து ஸ்கைப் மூலம் சூர்யாவையும் அந்த குடும்பத்தையும் அவனிடம் பேச வைத்து தன் கணவனின் அவநம்பிக்கையையும் போக்கினால் அவன் மனைவி

இப்போ சொல்லுங்க நீங்க கேட்ட கையெழுத்தப் போட்டுத் தரவா? என்று அவள் அவனைச் சீண்டி இலகுவாக்க

“கொன்னே போட்டுடுவேன் டி! உனக்கு என்னைய விட்டுப் போகணும்னு எல்லாம் எண்ணம் இருக்கா?” என்று அவன் அவளை முறைக்க

“என்ன பெரிய முறைப்பு? சீன் படி பார்த்தா நான் தான் உங்களை முறைக்கணும். இல்ல இல்ல.. மொத்தோ மொத்துனு மொத்தனும். எப்படி வசதி? நான் சொன்னதை பண்ணவா?” என்று அவள் கோபப் பட, அவள் விளையாட்டாகச் சொன்னதை விடுத்தவன்

“ஆமா! நான் உன்னை அம்போனு விட்டுப் போனதுக்கு நீ என்ன கொன்னாலும் தப்பு இல்ல….”

“ஐயோ! ஏன் இப்படி பேசறீங்க? உங்க இடத்துல நான் இருந்தாலும் இந்த முடிவுத் தான் எடுத்திருப்பேன். நான் சொல்ல வந்தது செங்கோடன் சொன்னதை அப்படியே நம்புனிங்களேனு தான். அப்படி நான் தப்பு செய்திருந்தா உங்க கையால தாலி வாங்கி இருப்பனா? நான் என்ன அப்படிப் பட்டவளா? சத்தியமா அவன் சொன்ன மாதிரி எங்களு…” அவள் எதைச் சொல்ல வருகிறாள் என்பதை உணர்ந்தவனோ சட்டென அவள் வாயைத் தன் விரல்களால் மூடியவனோ

“நீ எதுவும் சொல்ல வேணாம் டி. என் மனைவியப் பற்றி எனக்குத் தெரியும். அந்த குள்ள நரி தான் என் மனசக் கலைக்க ஏதோ சொல்லி இருக்கும்” என்றவன் “என்னை மன்னிச்சிடு டி பொண்டாட்டி” என்றவன் அமர்ந்த வாக்கிலேயே அவன் அவள் பாதத்தைப் பிடிக்க

“என்ன மச்சான் மன்னிப்புனு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிகிட்டு. பழசை எல்லாம் மறந்துட்டு நாம இனி நமக்கான வாழ்க்கையை வாழ்வோம்” என்று முற்றுப்புள்ளி வைத்தாள் குழலி.

குழலியோ கணவனின் தோளில் சுகமாய் தூங்கிக் கொண்டிருக்க எங்கோ அவள் கைப்பேசி ஒலிக்க அதற்கான பிரக்ஞை சிறிதும் இல்லாமல் அவள் தூங்க உடனே அடுத்து ஏ.கேவின் கைப்பேசி பக்கத்திலிருந்த டேபிள் மேலிருந்து ஒலிக்க, தூக்கக் கலக்கத்திலே அதை எடுத்து அவன் 

“ஹலோ” என்றது தான் தாமதம்

“ஏன் டா தண்டம் சோம்பேறி செவிடா! எத்தனை தடவ டா போன் பண்றது? நேத்து நைட் சாப்பிட கீழ வாங்கனு போன் பண்ணதுக்கு இவ்வளவு நாள் கழித்து நான் என் பொண்டாட்டி குழலி கிட்ட பேசிட்டு இருக்கேன் நாங்க வரோம் போன வைங்கனு சொன்ன. மறுநாள் விடிஞ்சி இதோ இரவு சாப்பாட்டுக்கான நேரமே வந்துடிச்சி. ஒழுங்கா ரெண்டு பேரும் கீழ வந்து சாப்பிட்டு போங்க” என்று சொல்லி தாத்தா அதிகாரத்துடனே போனை வைக்க தாத்தா பேசும் போதே முழிப்பு கலைந்த குழலியோ நேரத்தைப் பார்த்து விட்டு வெட்கத்துடனும் பதட்டத்துடன் கணவனை பார்த்தவள் அவன் முகத்தில் ஒரு நிறைவை கண்டவளோ இவ்வளவு நேரமா தூங்கினோம் என்று எண்ண

இருக்காதா பின்ன? ஒருவர் மேல் ஒருவர் இத்தனை வருடம் கொண்டிருந்த அன்பு பாசத்தை இருவரும் பேசித் தீர்த்தவர்கள் கூடவே தங்கள் துணை மேல் தாங்கள் கொண்டிருந்த காதலையும் வெளிப்படுத்தத் தன் காதல் மனைவி உயிருடன் தன் கையில் இருந்தாலும் இது நிஜம் தானா நிஜம் தானா என்று ஏ.கே அவளை ஆக்கிரமிக்க அவளோ கணவனுக்கும் ஒரு படி மேலே போய் இத்தனை நாள் தான் காத்திருந்த காத்திருப்புக்கு பரிசாக நானே நானே என்று முத்ததால் அவனுக்குத் தெரியபடுத்த இவன் காதலில் அவளும் அவள் காதலில் இவனும் பனி என உருகிக் கொண்டிருக்க இதில் நேரம் போனது எங்கே அவர்களுக்கு தெரியப் போகுது?

பின் ஒரு நாள் அவனுக்கு சொந்தமான தீவுக்கு அழைத்துச் சென்றவன் அங்கு அவளைத் தான் எடுத்த போட்டோவையும் அவள் விழிகளை மட்டும் அவன் நிறைய இடத்தில் வரைந்து வைத்திருக்க, அதில் ஒரு படத்தில் மட்டும்

மருளும் விழிகளோ?!…
அல்லது….
மயக்கும் விழிகளோ?!…
யாருக்குத் தெரியும்?….
இம்மங்கையவளின் மனதைத் தவிர!…

என்று எழுதியிருக்க அதைத் தன் விழி விரித்து அவள் பார்த்திருக்கவும் பின்னால் சென்று அவளை அணைத்தவனோ

“நிச்சயம் மயக்கும் விழி தான் டி கருவாச்சி!” என்று காதல் பொங்க சொல்லி அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான் ஏ.கே.

தங்களுக்கான ஹனிமூனை கிரீஸ் நாட்டில் உள்ள சான்டோரரைனி தீவில் கொண்டாட ஏ.கே முடிவு செய்தான். அடர்ந்த மரங்களுக்கிடையில் ஒரு சிறு மலைக் குன்றின் மேலிருந்த கிளாஸ் ஹவுஸ் எனப்படும் முழுக்க முழுக்க கண்ணாடியால் கட்டப்பட்ட வீட்டிற்கு அழைத்துச் சென்றான். பகலில் உள்ளே இருந்த படியே காட்டை வெளிச்சத்தில் ரசித்தாலும் இரவில் அந்த ரம்மியமான கும்மிருட்டை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ரசித்து விடியா இரவாகவே அங்கிருந்த வரை கழித்தார்கள் இருவரும். ஒரு முறை குழலி

“நீங்க ஹனிமூனுக்கு வேற இடத்துக்குப் போறோம்னு சொன்ன உடனே என் கிராமத்துக்குத் தான் கூட்டிட்டுப் போறீங்களோனு நினைச்சேன்” என்று தன் கிராமத்தை நினைவு படுத்தினாள்.

“கூட்டிட்டுப் போறேன் குழலி. ஆனா இப்போ இல்ல. நீ நினைத்த மாதிரியே விவசாயத்துல எதையாவது செய்து சாதிச்சிடு. அதுக்குப் பிறகு நான் உன்னை அங்கே கூட்டிட்டுப் போறேன். பாருங்கடா என் மனைவி கருங்குழலியனு காட்ட! அதற்கு வேண்டியத எல்லாம் செய்து நான் உன்னைபடிக்க வைக்கிறேன்” என்றவனைத் தன் இறுகிய அணைப்பில் கட்டித் தழுவிக் கொண்டாள் குழலி.

நாட்கள் உருண்டோட குழலி உண்டாகி இருக்க முதல் மாதத்திலிருந்து ஒரு தாயாக இணையத்தில் இருந்து அறிந்தும் சூர்யாவின் மனைவியிடம் இருந்தும் கேட்டுத் தெரிந்து கொண்டு மனைவியை தாங்கினான் ஏ.கே.

ஒன்பதாம் மாத வளைகாப்புக்கு சூர்யாவும் அவன் குடும்பமும் வர ஏற்கனவே நண்பர்களுக்குள் சுமூகமாக இருந்தாலும் அங்கு ஏ.கேவோ குழலி பக்கத்திலேயே நின்று நேரத்துக்கு அவளுக்கு ஜுஸ் கொடுத்த படி இருந்தான். அவள் அசதியில் லேசாக முகம் சுருங்கினாலும் என்ன ஏது என்று கேட்டவன் இறுதியாக அவளைக் குனிய வைத்து முதுகில் வாழை இலை மேல் சங்கில் பால் இடும் நிகழ்வு வர அதைச் செய்ய விடாமல் இவன் தடுக்க

“அண்ணா இப்படி செய்தா தான் வயிற்றுல இருக்கிற குழந்த ஆணா பெண்ணானு தெரிய வரும். அதனால செய்ய விடுங்க” என்று சூர்யா மனைவி சொல்ல

“அதான் பெண் குழந்தைனு எங்களுக்கு ஸ்கேன்லயே தெரியுமே” என்று ஏ.கே பதில் கொடுக்க

“அடேய் சும்மா அடங்கு டா.. இதெல்லாம் ஒரு சாங்கியம் தான். அதனால பேசாம செய்ய விடு. அதுமட்டுமில்லாம நம்ம முன்னோர்கள் செய்ற சடங்குல ஏதாவது விஷயம் இருக்கும். உன்னால அதை கணிக்க முடியாது டா. ஹூம்… கல்யாணம் ஆனா உடனே காலங்காலத்துல வாழ்ந்திருந்தா இந்நேரம் உனக்கு ஆறு வயசுல பொண்ணு இருந்திருக்கும். என்னமோ இப்போ தான் புதுசா கல்யாணம் ஆனா மாதிரி இவன் அலப்பறை தாங்கலையே!” என்று சூர்யா சொல்ல

அவனுக்குப் பதில் கொடுக்க வாயைத் திறந்த கணவனை
“மச்சான்! நீங்க பேசாம இருங்க. பெரியவங்களுக்குத் தெரியும்” என்று குழலி சொன்னதும் கப்சிப் ஆனான் ஏ.கே.

விழா முடிந்ததும் தங்கள் அறைக்கு வர, மனைவி உடை மாற்ற உதவி செய்தவன் அவள் குளித்து வந்ததும் பால் டம்ளரை நீட்டியவனோ பின் இதமாய் அவள் கால்களைப் பிடித்து விட

“ஏன் மச்சான், அண்ணன் சொன்ன மாதிரி நீங்களும் நானும் பிரியாம இருந்தா இந்நேரம் நமக்கு ஆறு வயசுல குழந்தை இருந்திருக்கும் இல்ல?” என்று குழலி ஆதங்கப்பட

“அடி போடி.. அவன் தான் கூறு கெட்டத் தனமா பேசுறானா நீயுமா? அப்போ உனக்கு வயசு பதினைந்து டி. சின்ன பொண்ணு நீ. அப்போ போய் ஒரு கணவனா நான் உன் கிட்ட நெருங்கி இருப்பேனு நினைக்கிறியா? நீ என் மனசுல வந்த மாதிரி நானும் உன் மனசுல வந்துட்டேனானு பார்ப்பேன். அப்பவும் கொஞ்ச நாள் கழித்து தான் நம்ம வாழ்க்கையையே நான் ஆரம்பித்து
இருப்பேன்” என்று அவன் உறுதி படச் சொல்ல, தன் கணவனின் அன்பிலும் நியாய புத்தியிலும் உருகிப் போய் அவன் தோள் சாய்ந்தாள் குழலி.

இப்போது எல்லாம் தாத்தாவுக்கு அடுத்த படியாக அந்த ஊர் பொறுப்பை முழுமனதாக ஏற்றுக் கொண்டான் ஏ.கே. அதற்காக அவன் உயிராய் நேசிக்கும் தன் தொழிலையும் விடவில்லை. போட்டோஃகிராபி மாடலிங் சினிமா துறை அனிமேஷன் என்று அனைத்தையும் கற்க ஊருக்கு ஒதுக்குப் புறமாக இடம் பார்த்து ஒரு கல்லூரி கட்டி நிர்வகித்தவன் மேற்படிப்புக்கு வெளிநாடு செல்வோரின் விருப்பத்தை ஸ்டீவின் உதவியுடன் மேற்கொண்டான். அடிக்கடி வெளிநாடு போய் வந்தாலும் அவனுடைய நிரந்தர வாழ்விடம் இந்தியா என்று ஆனது.

ஒருமுறை தஞ்சாவூரையும் அதைச் சுற்றியும் உள்ள விவசாய விளைநிலங்கள் எல்லாம் புயல் மழையில் அடித்து நாசமாக அப்போது தான் அவனுக்கு விவசாயத்தின் அருமையே தெரிந்தது. அதிலும் வீட்டில் உள்ள நகை நட்டை அடகு வைத்துக் கடன் வாங்கி உழைத்து அவர்கள் விதைத்த நெற்பயிர்கள் எல்லாம் முற்றி அறுவடை பண்ண வேண்டிய நேரத்தில் அடித்த சூறைக் காற்றில் தலை சாய்ந்து தண்ணீரில் மூழ்க தங்கள் வீட்டுப் பிள்ளைகள் போல் வளர்த்த ஆடு மாடு கோழி எல்லாம் மடிந்து கிடப்பதைப் பார்த்து அவர்கள் வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு அழுவதைப் பார்த்தவனால் வாய் திறந்து ஆறுதல் கூட சொல்ல முடியாத நிலை. ஆயிரம் சேட்டிலைட்களை உருவாக்கி நாம் விண்ணுக்கு அனுப்பினாலும் இன்னும் இது மாதிரியான இயற்கையின் கோரத் தாண்டவத்திற்குப் பலியாகத் தான் வேண்டியிருக்கிறது என்று குமைந்தான்.

அந்த நேரத்தில் குழலியோ அறிவியல் ரீதியாக சாய்ந்த தென்னை மரங்களை எல்லாம் மீண்டும் நடவு செய்து காட்டி மற்றவர்களையும் செய்யச் சொல்லி அவர்கள் வயிற்றில் பாலை வார்த்தாள். ஏ.கேவுக்கும் உள்ளம் குளிர்ந்தது.

ஆயிரம் சூறாவளிகள் அடித்தாலும் அரசாங்கம் உதவிக்கு வருவதற்குள் அக்கம் பக்கம் ஊர்களிலும் இருந்தும் அழிந்த கிராமங்களில் இருந்து போய் வெளிநாடு வாழும் இந்தியர்களும் ஒரு நாள் ஒருவர் என அவர்கள் வாழ்ந்த தெருவை ஏற்றுக் கொண்டு அவர்கள் செய்யும் உதவிகளையும் இளைஞர் இளைஞிகள் தன்னார்வத் தொண்டர்களை எல்லாம் பார்க்க அவனுக்குப் பெருமையாகத் தான் இருந்தது. 

‘எல்லையில் நாட்டுக்காக சண்டையிடுவது தான் நாட்டுப் பற்றா? பிழைப்புக்காக எங்கோ போய் வாழ்ந்தாலும் தன் நாட்டுக்கும் ஊருக்கும் ஒன்று என்றால் துடிதுடித்துப் போய் ஓடி வந்து தன்னால் முடிந்ததை உதவுறான் பாரு அதுவும் தான் நாட்டுப்பற்று ஊர் பற்று’ என்று ஒருமுறை தாத்தா சொன்னதை இப்போது உணர்ந்தான் ஏ.கே

ஐந்து வருடங்களுக்கு பிறகு …அஸ்வத் தன் நெஞ்சையே மெத்தையாக்கி தூங்கி விட்ட தன் மகளை புரட்டி கீழே படுக்க வைக்க அதே நேரம் தன் ஐந்து மாத கருவைச் சுமந்த படி பாத்ரூமில் இருந்து வெளியே வந்தாள் குழலி. அவளை அமரச் சொன்னவன் எழுந்து சென்று கையில் பாலுடன் வந்து அதை குடிக்கச் சொல்ல அதை ஒரு மிடறு குடித்தவளோ

“இதெல்லாம் ரொம்ப அநியாயம் மச்சான்! முதல்ல பொண்ணுனு தெரிஞ்சப்போ கலரா இருக்கணும்னு வெறும் குங்குமப் பூவா கலந்து தந்தீங்க. இப்போ பையன்னு தெரிஞ்ச உடனே குடுக்க மாட்டேங்கறிங்க. இது சரி இல்ல” என்று அவள் குறை பட

குறை படும்போது சிணுங்கிய அவள் உதட்டை வருடியவனோ அவள் மடி சாய்ந்து
“தாத்தா அப்பா மாதிரி நான் இல்லையேனு எனக்கு சிறு குறை வருத்தம் இருக்கு குழலி. எத்தனையோ நாள் எனக்கு ஏன் என் அம்மா மாதிரி உருவம் கொடுத்தேனு கடவுளிடம் கேட்டிருக்கேன். அதுக்காக இந்த உருவம் பிடிக்கலனு இல்ல. இந்த ஊர் மக்கள் மாதிரி பிறந்து இருக்கலாமேனு ஒரு ஆசை ஏக்கம் அவ்வளவு தான்! நாளைக்கு என் பையனும் என்ன மாதிரி பிறந்து ஏங்கக் கூடாது இல்ல? அதே மாதிரி என் ஏக்கத்தையும் அவனைப் பார்த்து பூர்த்தி செய்துக்கலாம்னு தான் தரல” என்று அவன் உருகிய குரலில் சொல்ல

“இது நல்ல கதையா இருக்கே! அப்போ உங்க பொண்ணு மட்டும் உங்கள மாதிரி பிறந்து ஏங்கலாமா?” என்று குழலி மடக்கவும்

அவள் வயிற்றுப் பக்கம் தன் முகத்தைத் திருப்பியவனோ அழகான முத்தம் ஒன்றை அங்கு பதித்து விட்டு

“என் பொண்ணு உன்ன மாதிரி தான் பிறப்பானு எனக்குத் தெரியும் டி. அதனால தான் உன்ன மாதிரி கருவாச்சியா இருக்கக் கூடாதுனு தான் குங்குமப் பூ தந்தேன்” என்று சொல்லி அவன் சிரிக்க, திரும்பித் தூங்கும் தன் மகளைப் பார்த்தவளோ கணவன் சொன்னது போல் மகள் அச்சு அசலாக தன்னைப் போல் இருக்க நிறம் மட்டும் அப்படியே தன் கணவன் என்று நினைத்தவள் தனக்கும் அப்படி ஒரு ஏக்கம் இருக்கத் தானே செய்தது? என்று உணர்ந்தவளோ அவன் தலை கோதி

“நிறத்துல என்னங்க இருக்கு? அதான் குணத்துல உங்க அப்பா தாத்தாவையே நீங்க மிஞ்சிட்டீங்களே!” என்றவள் அவன் நெற்றியில் இதழ் பதிக்க தன் முகத்தை அவள் மேடிட்ட வயிற்றில் புதைத்துக் கொண்டான் ஏ.கே.

அந்த வருடத்திற்கான சுதந்திர தின விழாவில் ஒவ்வொரு துறையில் சாதித்தவர்களை விருது கொடுத்து கவுரவிக்கும் வகையில் விவசாயத் துறையில் அரபுநாட்டில் மட்டுமே விளையும் பேரீச்சம் பழங்களை நம் நாட்டிலும் விளைவிக்க முடியும் என்று கண்டுபிடித்து அதை விளைவித்து வெளிநாட்டுக்கே ஏற்றுமதி செய்து காட்டியதோடு மட்டுமில்லாமல் பல விவசாய உபகரணங்களைக் கண்டுபிடித்ததற்காகவும் செயற்கை முறையில் இல்லாமல் முழுக்க முழுக்க இயற்கை முறையில் அதிக விளைச்சல் தந்த கருங்குழலியைப் பாராட்டி கவர்னர் கையால் வேளாண் விஞ்ஞானி விருது வழங்க தாத்தா பக்கத்தில் தன் மகளை ஒரு மடியிலும் ஒரு வயது மகனை இன்னோர் மடியிலும் சாய்த்த படி கம்பீரமாய் அமர்ந்திருந்த, கணவன் பார்க்க அந்த விருதை வாங்கிக் கொண்டாள் குழலி.

தனிமையில் தான் நினைத்ததை சாதித்து விட்டதாக அவள் கணவனிடம் சொல்லிப் பெருமைப் பட

“இது மட்டும் இல்ல. இன்னும் நிறைய நீ இந்த துறையில சாதிக்கணும். அதுக்குக் கடைசி வரை நான் உனக்குத் துணையா இருப்பேன் குழலி. இந்த சமுதாயத்தில் நீ எங்கு சென்றாலும் உன் நடை வெற்றி நடையாகத் தான் இருக்கணும்” என்று அவன் பெருமை பொங்க சொல்ல
அவருடைய லட்சியத்தை விட தன்னுடைய லட்சியத்துக்கு பாடுபட துடிக்கும் பார்த்தவள் அன்று
அப்படி ஒரு சம்பவம் நடந்து தனக்கு இப்படி ஒரு கணவனைத் தந்த அந்த மகாகாளிக்கு மனதுக்குள் நன்றி சொன்னவளாய் அவன் தோள் சாய்ந்தாள் குழலி.

ஒரு கணவனாய் அவள் சுக துக்கங்களில் பங்கு கொண்டு அவள் ஆசைக்கும் எண்ணங்களுக்கும் அவள் லட்சியத்திற்க்கும் வித்திட்டு அவள் வளர்ச்சிக்கு உறுதுணையாய் அவன் இருக்கும் போது வெற்றி நடை என்ன இந்த சமுதாயத்தை நோக்கி வீர நடையே போடுவாள் இந்த ஏ.கே வின் கருங்குழலி! 

முற்று
நன்றி

Categories
On-Going Novels Yuvanika

அத்தியாயம் – 16

காதல்பனி 16

கருங்குழலியின் முகத்தை அந்தக் கருவேலங்காட்டில் தூர இருந்து பார்த்து ஒரு நொடி ரசித்தவன் பின் அவளருகில் சென்று அவளின் பின்புறம் நின்று

“ஹாய் பிளாக்பெர்ரி ஃபுரூட்!” என்றழைக்க

அவன் அழைத்த வார்த்தை என்னவென்று தெரியவில்லை என்றாலும் அவன் குரலில் திரும்பியவள் அங்கே ஏ.கே வைப் பார்த்ததும் கண்கள் இடுக்க யோசித்தவள்

“ஓ… நீயா?” என்றவள் அவன் கையிலுள்ள கேமராவைப் பார்த்து விட்டு “என்ன உன் பட பொட்டி உனக்குத் திரும்ப கெடைச்சிடுச்சா? நான் மறுநாள் போய் தேடிப் பார்த்தேன் அங்க இல்ல. ஆனா அது உனக்குக் கெடைச்சிடுச்சி போல” என்று அவள் சொல்ல

அவள் ஏதோ கேட்கிறாள் என்பது தெரிகிறது. ஆனால் என்ன என்பது புரியாததால் அவன் என்ன என்பது போல் செய்கையால் கேட்க

“இது அன்னைக்குத் தொலைந்து போன பொட்டி தான?” என்று அவளும் தன் கண்ணில் கட்டை மற்றும் ஆள்காட்டி விரலையும் கோர்த்து வைத்தார் போல் வட்டம் இட்டு காட்டிச் செய்கையால் கேட்கவும், இப்போது ஏதோ கொஞ்சம் புரிந்தவனோ

“நோ நோ.. இட்ஸ் நாட் தட்” என்று சொல்ல

“அப்போ இல்லையா? அது கிடைக்கலையா?” என்றவள் அவன் கேட்காமலே “எனக்கு எப்படி நோ தெரியும்னு பார்க்கறியா? எங்க வீரபாண்டி ஐயா தெரியுமா உனக்கு? அவரு எப்போதும் காதுல ஒன்ன வச்சிகிட்டு எஸ் நோனு பேசுவாரு. நான் அப்படினா என்னனு கேட்டனா அப்போ தான் சொன்னாரு எஸ் னா ஆமாவாம் நோ னா இல்லையாம். அப்போ நீ சொன்ன நோவும் அதான?” என்று கேட்க

இப்போதும் அவள் கேட்பது புரியவில்லை என்றாலும் அவளிடம் பேசிக் கொண்டிருப்பதே அலாதி சந்தோஷத்தை அவனுக்குக் கொடுக்க ம்ம்ம்… என்று தலையாட்டினான் அவன்.

“சரி சரி கவலப் படாத.. இங்க தான் எங்கனா இருக்கும். நான் உன் பெட்டிய தேடித் தரேன்” என்றவள் திரும்பி தான் வெட்டும் வேலையைச் செய்ய, அவனோ இமியும் நகராமல் அங்கேயே இருக்க அதை உணர்ந்தவளோ அவனைத் திட்ட நினைத்து அவனிடம் திரும்ப

அதே நேரம் அவன் கைப்பேசியில் சூர்யாவிடமிருந்து அழைப்பு வரவும் எடுத்துப் பேசி முடித்தவனோ சற்றுத் தள்ளியிருந்த கல் மேட்டில் அமர்ந்து குழலியை உச்சி முதல் பாதம் வரை ஆராய அவன் வளர்ந்த நாட்டில் இருந்த பெண்களுக்கும் இவளுக்கும் உள்ள வேற்றுமையை ஆராயத் தோன்றியது அவனுக்குள்.

“டேய் ஏ.கே! நீ எங்க இருக்கனு உன் கிட்ட வழி கேட்டா ஒழுங்கா வழி சொல்ல மாட்டியா டா? நாம போகற இடத்துல எல்லாம் ஒரு மார்க் வைப்போமே அதை எல்லாம் பார்த்து வானு சொன்னியே அதுல ஈஸ்ட் இல்ல வெஸ்ட் டைரக்க்ஷனானு சொன்னியா டா? நான் வேற பக்கமா போய்ட்டுத் திரும்ப இந்த பக்கமா வந்தேன். இதெல்லாம் எனக்குத் தேவையா? இருடா ரெண்டு பேரும் ஒன்னா போகலாம்னு நான் சொன்னதக் கேட்காம நீ வந்துட்டு இப்போ என்ன சுத்த விட்டுட்டியேடா? இதுல உனக்குக் கால் பண்ணா இந்தக் காட்டுக்குள்ள டவர் வேற இல்ல காலும் போகல!”

என்று சூர்யா கேட்டு கொண்டே நண்பனிடம் வந்தவன் சுற்றி வந்த அசதியிலும் கடுப்பிலும் அவனைப் பார்த்த உடனே தமிழிலேயே அவனைத் தாளித்து எடுக்க, ஆனால் ஏ.கே விடமோ எந்தச் சலனமும் இல்லை.

நண்பனை நிமிர்ந்து பார்த்தவனோ பின் அவன் பார்வை பதிந்திருக்கும் திசையைப் பார்க்க அங்கு குழிலியைக் கண்டவனோ பின் நண்பனின் முகத்தைப் பார்த்து விட்டு

‘ஐய்யையோ! இந்த ஊரை விட்டுப் போறதுக்குள்ள இவன் நம்ம தோலை ஊர்ல இருக்கவங்க எல்லாம் உறிச்சி உப்புக் கண்டம் போட வச்சிடுவான் போல’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவனோ அதைத் தவிர்த்து

“என்ன டா ஏ கே! ஏதோ புதுவிதமான இடம் தெரிஞ்சிருக்கு. நான் அங்க போய் போட்டோ எடுக்கப்போறனு வந்துட்டு இப்போ இங்க எங்கயோ உட்கார்ந்து இருக்க!” என்று சூர்யா தன் நண்பனைக் கேட்க, அவனிடமோ குழலியை விட்டுவிட்டு நண்பனைப் பார்த்ததுக்கான சிறு சலனம் மட்டுமே.

‘ம்ஊம்.. இவன் நாம நெனைச்சத நடத்திக் காட்டாம விட மாட்டானு நெனைக்கிறேன்’ என்று யோசித்தவன் 

“டேய் எழுந்திருடா இங்கயிருந்து. இது என்ன உங்க நாடுனு நெனச்சியா?” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் ஆங்கிலத்தில் சொன்னவன் கூடவே அவன் கையைப் பிடித்து இழுக்க

அந்த இடத்தை விட்டுப் போக மனமே இல்லாமல் கல்மேடையை விட்டு எழுந்தவனோ நண்பனுடன் ஓர் அடி எடுத்து வைக்க

“ஏ.கே நீ ஒன்னும் கவலப் படாத.. உன் பொட்டிய தேடிக் கண்டுபிச்சி கொடுக்க வேண்டியது என் பொறுப்பு. வேற யார் னா அந்தப் பொருளை எடுத்திருந்தாலும் அது என் கிட்ட வந்து சேர்ந்திடும். அதனால நீ கவலப் படாம போ ஏ.கே” என்று குழலி சும்மா போறவனை அழைத்துச் சொல்ல

அவள் சொன்னது புரியவில்லை என்றாலும் வார்த்தைக்கு வார்த்தை அவள் சொன்ன ஏ.கேவில் குளிர்ந்தவனோ கண்ணில் ஒரு வித மின்னலுடன் அவளைப் பார்த்து நிற்க, அவள் அப்படி அழைத்ததில் அதிர்ச்சிக்கு உள்ளானது என்னமோ சூர்யா தான்!

‘அடப்பாவி! நீ மட்டும் தான் ஏதோ அந்தப் பொண்ணுக்குத் தெரியாம சைட் அடிக்கறனு பார்த்தா அந்தப் பொண்ணு என்னமோ ஏற்கனவே உன்ன தெரிஞ்சவ மாதிரி உன்ன பெயர் சொல்லி என்ன அழகா கூப்பிடுது! இதுல இவன் உள்குத்துப் பார்வ தெரியாம சும்மா போறவனக் கூப்பிட்டு வச்சி சொறிஞ்சி வேற விடுதே! அப்போ நாம நினைச்ச மாதிரி உப்புக் கண்டம் எல்லாம் இல்ல நேரா சங்கு தான் போல!’ என்று நினைத்தவன் அது எதையும் வெளியே சொல்லாமல்

“இருக்கட்டும் இருக்கட்டும்.. அதை நீங்க மெதுவாவே தேடிக் குடுங்க” என்று நண்பனிடம் சொன்னதற்கு இவன் அவளுக்குப் பதில் கொடுத்தவனோ அவனைப் பிடித்து இழுக்காத குறையாக இழுத்துச் சென்றான் சூர்யா.

ஏ.கேவை விட இரண்டு வயது தான் பெரியவனாக இருப்பதால் அன்றிலிருந்து நண்பனின் நடவடிக்கைகளை ஆராயா ஆரம்பித்தான் சூர்யா.

ஏ.கேவோ எப்போதும் போல் அவன் அவனாக இருக்க குழலியைப் பார்க்கும் போது மட்டும் அவன் முகத்தில் தோன்றும் கனிவும் கண்ணில் சுவாரசியம் தவிர வேறு விதமான அத்துமீறும் பார்வையோ பார்வைப் பரிமாற்றங்களோ இல்லை. ஏன்? அவளைப் பார்க்க நேர்ந்தால் அவளிடம் பேசக் கூட அவன் சுவாரசியம் காட்டவில்லை. நண்பனின் இந்த நடவடிக்கைகளைப் பார்த்தவன் தாங்கள் அமெரிக்காவுக்கே திரும்பப் போய்விடலாம் என்று நண்பனுக்குத் தெரியாமல் எடுத்த முடிவை மாற்றியிருந்தான் சூர்யா.

அப்படி மட்டும் அவன் முடிவில் உறுதியாக இருந்து அதை செயல்படுத்தியும் இருந்தால் பிறகு நடக்கவிருக்கும் சம்பவத்தைத் தடுத்து இருக்கலாமோ?! ஆனால் விதி வலியது இல்லையா? என்ன தான் மனிதன் தன் ஏழ்மையின் பயத்தையும் அவமானத்தையும் எதிர்த்து நின்று போராடி விதியை மதியால் வென்று வெற்றி கண்டாலும் அந்த விதி தர இருக்கும் அசிங்க அவமானங்களையும் மனதால் வரக்கூடிய வலியும் வேதனைகளையும் முன்கூட்டியே அறிந்து இதுவரை தடுத்து நிறுத்த முடியவில்லை. அப்படித்தான் அமெரிக்காவில் பிறந்த ஏ.கே வின் வாழ்விலும் இங்கு காட்டில் பிறந்த கருங்குழிலியின் வாழ்விலும் விதி தன் கடமையைச் செய்ய வருகிறது.

பிறந்து இத்தனை வருடத்தில் ஒரு முறை கூட தன் பிறந்த நாளைக் குழலி கொண்டாடியதே கிடையாது. அந்த நாள் அவள் தாய் தந்தையர் மரணித்த நாள் என்பதால் அதிக அக்கறை காட்டி அவர்கள் நினைவாக அழுவதோ இல்லை தன் பிறந்த தினத்தில் ஏதாவது தன்னை அலங்கரித்துக் கொள்ளவோ மாட்டாள். அன்றைய நாளும் எப்போதும் வரும் மற்றைய நாளைப் போல தான் அவளுக்கு.

ஆனால் இப்போது மாமன் என அவள் வாழ்வில் வந்திருக்கும் செங்கோடன் அப்படி நினைக்கவில்லையே! தன் எதிர்கால மனைவியாய் வரவிருக்கும் குழலிக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என்று நினைத்தவன் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் சூர்யாவின் உதவியுடன் சற்று அதிக விலை உயர்ந்த நெயில்பாலிஷ், மேக்கப் செட், தலைக்குப் போடும் ஹேர் பேண்ட் கிளிப் என்று வாங்கியவன்

கூடவே அவளுக்கு ஒரு நல்ல பாவாடை தாவணியும் வாங்கி இவை அனைத்தையும் ஒரு மஞ்சள் பையில் வைத்து அடைத்தவன் பிறந்த நாளுக்கு முதல் நாளே அவளிடம் ‘உன் பிறந்த நாள் பரிசு’ என்று சொல்லி அவளிடம் நீட்ட ‘எனக்கு எதுவும் வேணாம்’ என்ற பதிலுடன் அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் விலகிச் சென்று விட்டாள் குழலி.

அவள் செயலில் உன்னை விடுவேனா என்று மனதில் நினைத்தவனோ அதை எல்லாம் அவள் பாட்டியிடம் கொடுத்து அவளை இதை அனைத்தையும் போட வைப்பது உன் பொறுப்பு என்று உத்தரவு இட, அவளை எப்படிப் போட வைப்பது என்று தெரியாமல் கலங்கியவர் பின் வீரபாண்டி ஐயாவிடம் கொடுத்து அதை எல்லாம் அவர் வாங்கிக் கொடுப்பது போல் அவளிடம் கொடுக்கும் படி கேட்டுக்கொள்ள குழலிக்காக அவரும் அப்படியே செய்தார்.

செங்கோடனின் பிறந்த நாள் பரிசோ இப்போது வீரபாண்டி ஐயா தருகிற பிறந்த நாள் பரிசாக அவள் கையில் வந்து சேர்ந்தே விட்டது. அவள் நினைத்தது எல்லாம் செங்கோடன் ஒதுங்கி விட்டான் என்பதும் தன் பாட்டியும் இப்படி எல்லாம் செய்யக் கூடியவர் அல்ல என்பதும் தான்.

ஏற்கனவே சூர்யா செங்கோடனும் குழலியும் ஒருவரை ஒருவர் விரும்புவதாகவும் கூடிய விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்கப் போவதாகவும் ஏ.கே விடம் சொல்ல சற்றே நெற்றி சுருக்கி யோசித்ததை விட அவனிடம் வேறு எந்த மாற்றமும் இல்லை.

அதைப் பார்த்தவனோ ‘பயபுள்ள தெளிவாத் தான் இருக்கான். நாம தான் இவனத் தப்பா நெனச்சி பல சோதனைகளை வச்சிப் பார்க்கறோமோ?’ என்று மனதால் கேள்வி கேட்டுக் கொண்டா னே தவிர ஒரு முறை கூட ‘நீ குழலியை விரும்புறியாடா?’ என்ற கேள்வியை ஏ.கே விடம் கேட்கவில்லை சூர்யா.

அப்படி ஓர் எண்ணமே இல்லாதவனை நாம் கேட்டுப் பிறகு நாமே அதை அவன் மனதில் விதைத்ததாய் ஆகக் கூடாது என்று நினைத்தான் அவன்.

குழலியின் பிறந்த நாள் அன்று வீரபாண்டி ஐயா வீட்டுக்கு சூர்யாவும் ஏ.கேவும் வர அன்று செங்கோடன் வாங்கிக் கொடுத்த தாவணியை குழலி அணிந்திருப்பதைப் பார்த்த சூர்யாவோ செங்கோடன் மேல் குழலிக்கும் காதல் இருப்பதாகவே நினைத்தான்.

அன்று தங்களுடன் வந்து செங்கோடன் வாங்கிய ஆடையை இன்று குழலி போட்டிருக்கவும் ஒருவித கேள்வியுடன் ஏ.கே அவளைப் பார்க்க அவன் பார்வையின் கேள்வியை உணர்ந்த சூர்யாவோ

“இன்னைக்குக் குழலிக்குப் பிறந்த நாளாம். அதான் அவன் மாமன் வாங்கிக் கொடுத்ததைப் போட்டுகிட்டு இருக்கா” என்று சூர்யா ஏ.கேவின் காதில் சொல்ல அவளுக்கு அழகான வாழ்த்துச் சொன்னதோடு விடை பெற்றனர் இருவரும்.

இப்படியே நாட்கள் செல்ல ஒரு நாள் மதயானை ஒன்று அவள் பாட்டியைத் தூக்கிப் போட்டு விட அதில் குற்றுயிராய் இருந்தவர் தன் கடைசி நேர வேண்டுகோளாக வீரபாண்டி ஐயாவை அழைத்துத் தனக்குப் பின் தன் பேத்தி வாழ்வில் ஒரு துணை இருக்க வேண்டும் என்றவர் அதற்கு செங்கோடனையே திருமணம் செய்து வைக்கச் சொன்னவர் பிறகு குழலி கையையும் செங்கோடன் கையையும் பிடித்து வீரபாண்டி ஐயாவிடம் சேர்க்க அதே நேரம் அவர் உடலை விட்டு அவர் உயிர் பிரிந்தது.

பாட்டி இறந்ததில் ரொம்பவே மாறிப் போனாள் குழலி. அவளுடைய துருதுரு வாயாடித்தனம் எல்லாம் இல்லாமல் போனது. யாரிடமும் அதிகம் பேசுவதையே தவிர்த்தாள். பிறந்ததில் இருந்து தனக்கு தாய் தந்தையர் இல்லாதது கூட அவளுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. அப்போது ஆத்தா என்று அழைக்க பாட்டி இருந்தார்.

இப்போது அவரும் இல்லாமல் போகவும் நிஜமாவே தான் அநாதை ஆகிவிட்டோம் என்பதை உணர்ந்தவளால் எதிலும் ஒரு பற்றுதல் இல்லாமல் போனது அந்த பதினைந்து வயது சிறு குழந்தையான கருங்குழலிக்கு. அவளின் நடவடிக்கைகளை நாளுக்கு நாள் பார்த்து வந்த செங்கோடனோ ஒரு நாள் அவளிடம் வந்து அருகில் அமர்ந்தவன்

“ஏன் புள்ள நீ இப்போ எல்லாம் ஏதோ மாதிரி இருக்க? எனக்கு உன் கிட்ட பிடிச்சதே உன் துருதுருப்பு தான். அதனால தான் நான் அடிக்கடி உன் கிட்ட வம்பு பண்ணுவேன். நீ இப்படி இருக்கறத பார்க்கும் போது உன்ன தனியா விடவும் எனக்குக் கஷ்டமா இருக்கு. நான் என் ஆத்தா கிட்ட சொல்லி சீக்கிரமே நம்ம கல்யாணத்துக்கு நாள் பார்க்கச் சொல்லிடறன்.

மரம் வெட்டவோ வேற எந்த வம்பு தும்புக்கும் இனி நான் போக மாட்டேன் புள்ள. நீ சொல்ற மாதிரி எல்லாம் நான் இருக்கேன்” என்றவன் ஒருவித உறுதியுடனேயே அவள் முகம் பார்க்க அவளோ அவன் சொன்னதையெல்லாம் காதில் வாங்கினாலும் அதை விடுத்து கண்ணிமைக்கவும் மறந்து எங்கோ வெறித்த படி இருந்தாள். சற்று நேரம் அவள் முகத்தையே பார்த்தவனோ

“நான் இன்னைக்கே வீரபாண்டி ஐயா கிட்ட பேசுறன்” என்ற சொல்லுடன் விலகிச் சென்றவனோ சொன்னபடியே அவரிடம் பேசி இரண்டு தினங்களில் எல்லாம் அவளுக்குப் பரிசம் போடும் அளவுக்கு வந்திருக்க.

அதே போல் அவளிடம் சொன்ன மாதிரியே எந்த வம்பு தும்புக்கும் போவதை நிறுத்தி இருக்க. இனிமேல் தன் வாழ்வுக்குக் குழலி தான் எல்லாம் என்ற முடிவுக்கே வந்திருந்தான் அவன்.

பரிசம் விஷயத்திலும் குழலி எதிலும் கலந்து கொள்ளவில்லை. அவளுக்கு இன்றும் செங்கோடனை பிடிக்கவில்லை தான். ஆனால் இறக்கும் போது தன் பாட்டி சொன்ன வார்த்தையும் அதன் பிறகு அவனுடைய பேச்சும் என்று இன்று தான் இருக்கும் நிலையை எண்ணி அரை மனதாக ஒத்துக் கொண்டாள். அதேபோல் அவள் இருந்த மனநிலையில் செங்கோடன் ஆத்தா கேட்ட சீர் எல்லாம் அவளிடம் மறைக்கப்பட்டது. 

அதன் பிறகு வந்த நாட்களில் எல்லாம் முன்பு போல் இல்லை என்றாலும் ஏதோ சகஜ நிலையில் இருந்தாள் குழலி. ஒருநாள் அவள் இனத்தில் ஒரு பெண் பெரிய மனுஷியாகி விட அந்த ஊரில் இருக்கும் மற்ற வயசுப் பெண்கள் எல்லாம் அந்த பெண்ணின் சடங்குக்கு குலவி பாடி ஆட வேண்டும். அதில் அவர்கள் இனம் மாதிரியே ஆடை உடுத்தி பாடி ஆடியவள் பின் ஆட்டம் பாட்டம் முடிந்து காட்டு வழியே வர

“என்ன டி உன் மாமன் அநியாயத்துக்கு நல்லவன் மாதிரி வேஷம் போடுறான்? இத்தனை நாள் மரம் வெட்டினவ தான டி? இப்போ என்னமோ அது அரசாங்கத்துக்கு எதிரானது நான் செய்ய மாட்டனு வீம்பு புடிக்கறான். சும்மா தட்டிக் கொடுத்து நைசா என்னடா ஏதுனு கேட்டா நான் கட்டிக்கப் போற பொண்ணுக்குப் புடிக்காது அதனால நான் செய்ய மாட்டன் எனக்கு இப்போ கல்யாணம் ஆகப் போகுதுனு வேற சொல்றான்.

என்ன டி நீயும் உன் மாமனும் சேர்ந்து என்னோட வருமானத்துக்கு வேட்டு வெக்கிறிங்களா? ஒழுங்கா அவன பழைய மாதிரி வந்து மரம் வெட்டிக் கொடுக்கச் சொல்லு. இல்லனா திருந்தின அவன் மேல பழைய கேசை எதையாவது போட்டு உள்ள தள்ளிடுவேன். என்ன? சொல்லுறது புரிஞ்சிதா? இதையும் போய் சொல்லு டி உன் மாமன் கிட்ட” என்று அந்த வனத்துறை அதிகாரி குழலியை வழிமறித்து மிரட்ட

அவன் பேசியதில் முதலில் அவளுக்குத் தோன்றியது ‘அப்போ மாமா உண்மையாவே திருந்திடுச்சா?’ என்பது தான்

அந்த ஊர் அரசியல் வாதியின் தூண்டுதல் பேரிலும் இதோ இந்த வனத்துறை அதிகாரியின் உதவியோடு தான் செங்கோடன் இப்படி செய்து வந்தான். திடீரென்று செங்கோடன் நிறுத்தவோ இவனுக்கு அரசியல்வாதியிடம் இருந்து வந்த பணவரவு நின்று போகவே தான் இவன் இப்படி குழலியை மிரட்டியது. அவன் வார்த்தைக்கு வார்த்தை டி போட்டுப் பேசியதில் உள்ளுக்குள் கொதித்தாலும் அதை மனதுக்குள்ளே வைத்தவள்

“அது எல்லாம் என் மாமா இனி மரம் வெட்ற வேலைக்கு வராது. மீறி சும்மா சும்மா மறுபடியும் கூப்பிட்டு தொந்தரவு பண்ணிங்க இவ்வளவு நாள் செய்த தப்புக்குப் பரிகாரமா உங்கள எல்லாம் காட்டிக் கொடுத்துட்டு என் மாமா அப்ரூவலா மாறிடும் சொல்லிட்டேன். அப்படி பண்ணா யாருக்குத் தண்டனை அதிகம்னு உங்களுக்குத் தெரியும் இல்ல?” என்று அவனிடம் சட்டம் பேசியவள் எட்டி ஓர் அடி வைத்து முன்னே நடக்க அவள் கையைப் பிடித்தவனோ

“யார் கிட்ட டி சட்டம் பேசுற ? என்னையே மிரட்டுறியா?” என்றவன் அவளிடம் அத்துமீறி நடக்க முயற்சி செய்ய, அவனின் நோக்கம் புரிந்தவளோ அவன் அசந்த நேரம் பார்த்துக் கையைத் தட்டி விட்டு ஓட ஆரம்பிக்க அவளைத் தன் எண்ணம் நிறைவேறத் துரத்தியவன் இந்தக் காட்டிலே பிறந்து வளர்ந்த அவள் புள்ளி மானாய் சென்று எங்கோ மறையவும் அவளை எங்கு தேடியும் கிடைக்காததால்

அங்கு ஓரிடத்தில் மலைக் குவியலன இருந்த இலைச் சருகையும் காய்ந்த மரப் பட்டைகளையும் பார்த்தவனுக்குத் திடீர் என்று ஒன்று தோன்ற ஓடிச் சென்று தன் ஜீப்பில் வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து வந்தவன் தனக்கிருந்த ஆத்திரத்திலும் வெறுப்பிலும் இயலாமையிலும் தான் என்ன செய்கிறோம் என்பதை ஒரு நொடி கூட யோசிக்காமல் அதிலிருந்த பெட்ரோல் முழுவதையும் அங்கு ஊற்றி நெருப்பைப் பற்ற வைக்க சற்று நேரத்தில் எல்லாம் மளமளவென பக்கத்து மரங்களுக்கும் பிடித்துக் கொண்ட நெருப்பானது காட்டுத் தீயாக உருவெடுத்தது.

இதை அறிந்த கருங்குழலியோ தன்னைச் சுற்றி தீ இருக்க தான் தப்பிச்செல்லும் இடத்தில் அந்த அதிகாரி நிற்கவும் வெளிவர முடியாமல் அமைதி காக்க, மறைந்திருக்கும் இவள் வெளிவரக் காத்திருந்தவனோ பின் வேறு வழியில் அவள் தப்பிச் சென்று விட்டாள் என்று நினைத்துக் கொண்டு அந்த இடத்திலிருந்து சென்று விட அதே நேரம் தான் கட்டியிருந்த புடவையில் தீ பிடித்ததைப் பார்த்துப் பயத்தில் அனிச்சை செயலால் தன் புடவையைக் கழற்றி வீச இப்போது தான் பிறந்த மேனியாய் நிற்பதை உணர்ந்தவளோ அப்போது தான் தான் செய்த தவறை உணர்ந்தாள் குழலி.

‘இப்போது இப்படியே வெளியே தப்பித்துச் செல்லவும் முடியாது. காட்டுத் தீயை அறிந்து யாராவது காப்பாற்ற இங்கு வந்தால் அவர்கள் முன் இப்படியா போய் நிற்பது?’ என்ற எண்ணம் தான் அந்த உயிர் போகும் நேரத்திலும் வந்தது அவளுக்கு.

அதனால் தன் சதைகள் எரிந்து சாம்பலாக, தான் வெறும் எலும்புக் கூடாய் தான் வருகிறவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் அங்கே நின்றாள் அவள்.

இப்படி ஒரு கோர மரணத்தை ஏற்றுக் கொள்ள அவள் திடமாக இருந்தாலும் எரியும் தீ ஜுவாலையின் அனலில் தன் சதைகள் மெழுகென உருகப் போவதை உணர்ந்தவளோ ஒருவித படபடப்பில் கண்கள் இருள தான் நின்றிருந்த இடத்திலேயே மயங்கி விழ.

அதே நேரம் தன் மகளின் நிலை அறிந்து தங்கள் கண்ணீரை வானத்தில் தூரலென சிந்தினர் அவள் தாய் தந்தையர். முதலில் தூரலாக விழுந்த மழை பிறகு பெரும் மழையாய் கொட்ட யாருடைய உதவியும் இல்லாமல் இயற்கையாகவே அணைக்கப் பட்டது அந்த காட்டுத் தீ.

தீ அணைந்த சற்று நேரத்திற்கெல்லாம் அங்கு புகைப்படம் எடுப்பதற்காக சுற்றிக் கொண்டிருந்த ஏ.கே வின் கண்ணில் ஆடை இல்லாமல் படுத்திருக்கும் குழலி பட

முதலில் அவளுக்கு உயிர் இல்லையோ என்று பயந்தவன் பிறகு எதைப் பற்றியும் யோசிக்காமல் தான் அணிந்திருந்த டி ஷர்ட்டைக் கழற்றி அவளுக்குப் போட்டு விட்டவன் அவள் பக்கத்தில் மண்டி இட்டு அமர்ந்து அவளைத் தூக்கித் தன் தோள் சாய்த்து அவள் கண்ணங்களைத் தட்டி எழுப்ப அவளிடம் எந்த அசைவும் இல்லை.

‘சாதாரண மயக்கம் என்றால் ஏன் இந்த பெரு மழை குளிர்ந்த நீரைக் குடம் கொண்டு அவள் முகத்தில் கொட்டியது போல் பெய்தும் அவள் தெளியவில்லை? ஒருவேளை சுற்றி நெருப்பைப் பார்த்த அதிர்ச்சியில் ரொம்பவே பயந்து விட்டாளோ?’ என்று அவளின் நிலையை யூகித்து அவளைத் தன் கையில் தூக்கிச் சென்று தூரமாக ஓர் வளைவில் இருந்த கல்மண்டபத்தை அடைந்தவனோ 

அவளைத் தரையில் கிடத்திக் கை கால்களைத் தேய்த்து விட்டவன் பிறகு அவள் இரண்டு கன்னத்திலும் இரண்டு அடிகளைப் பலமாய் கொடுக்க அதிலும் பலன் இல்லை. அவளைப் பார்த்ததில் இருந்து இப்போது தூக்கி வந்து இதுவரை செய்யும் வரையுமே அவன் உதடுகளோ ‘குய்லி குய்லி’ என்று அவள் பெயரைத் தான் உச்சரித்தது.

இறுதியாக ஒரு முடிவுடன் அவள் முகத்தை எடுத்துத் தன் மார்பு மீது வைத்தவனோ ஒரே ஒரு வினாடி தயக்கத்துக்குப் பிறகு அவள் உதட்டில் தன் உதட்டை வைத்து அவளுக்கு முதல் உதவி செய்ய அதில் கொஞ்சமே தெளிந்தவள் தான் அந்த வன அதிகாரியிடம் மாட்டிக் கொண்டமோ என்ற எண்ணத்தில் அவள் கையைக் காலை உதைத்துத் திமிர

மயக்கத்தில் இருந்து தெளியும் போது ஏற்படும் சாதாரண திமிரல் என்று நினைத்து அவளைச் சட்டென அடக்கியவனோ தன் மார்பில் அவள் முகத்தை அழுத்திப் பிடித்து கூடவே அவள் கன்னத்தோடு தன் கன்னம் வைத்து இழைத்தவனோ அவள் காதில் தன் உதட்டை வைத்து 

“குய்லி பிளீஸ்! பி காம்.. ரிலாக்ஸ்.. ஐ எம் ஏ.கே” என்று சொல்ல அந்த ஏ.கே என்ற ஒரு வார்த்தையே அவளுக்குப் போதுமானதாய் இருக்க சற்றே அடங்கி அவன் கையிலே தளர்ந்தவளோ பின் தான் மயங்கும் போது இருந்த நிலை ஞாபகம் வர நிமிர்ந்து தன்னை ஆராய்ந்தவள் தான் முழுமையாக இல்லை என்றாலும் அவன் போட்டிருந்த சட்டையைத் தான் அணிந்திருப்பதை உணர்ந்தவளோ எந்தப் பெண்ணுக்கும் வரக் கூடாத ஒரு நிலை தனக்கு வந்து விட்டதை நினைத்தவளோ அவளையும் மீறி அவள் கண்ணில் கண்ணீர் வரவும் அதைப் பார்த்தவனோ அவளுக்கு உடலில் ஏதோ எங்கேயோ அடிபட்டு வலியோ என்று பதறி 

“இஸ் இட் பெய்னிங்?” என்று அவன் கேட்க தன் மாமன் முதல் இன்று பார்த்த அதிகாரி வரை தான் பார்த்த ஆண்களில் இவன் வேறு விதமாய் தன்னிடம் விரசமின்றி இருப்பதை உணர்ந்தவள், என்ன நினைத்தாளோ தெரியவில்லை. தன் முகத்தை அவன் நெஞ்சில் அழுந்த அவனை இறுக்கி அணைத்தாள் குழலி.

அவள் இன்னும் அந்த காட்டுத் தீயின் பயத்தால் தான் தன்னை அணைப்பதாக நினைத்தவன் அவள் நினைப்பது போல் தன் மனதில் அவளை அப்படியொரு கோலத்தில் பார்த்ததுக்கானதை கிஞ்சிதமும் நினைக்காமல் அவள் பயத்தைப் போக்க நினைத்தவனோ அவள் முகத்தை நிமிர்த்தி தன் தோள் வளைவில் வைத்தவனோ அதே போல் தன் முகத்தை அவள் தோளில் புதைய தன் பலம் கொண்ட மட்டும் அவளைத் தன்னுள் புதைத்துக் கொண்டான் ஏ.கே. 

அதே நேரம் காட்டில் ஏற்பட்ட தீயைப் பார்த்த ஒருசில பேர் அதை அணைக்க ஊரில் இருந்தவர்களைத் திரட்டி அழைத்து வர அவர்கள் அனைவரின் கண்ணில் பட்டது என்னமோ அறைகுறை ஆடையில் கட்டிப் பிடித்த படி முகத்தோட முகம் வைத்த படி இருந்த ஏ.கேவும் குழலியும் தான்.

Categories
On-Going Novels Yuvanika

அத்தியாயம் – 15

காதல்பனி 15

அஷ்வத்திடம் என்ன தான் கோபம் கொண்டு வீம்பாக பேசி விட்டு வந்தாலும் பொம்மியின் மனமோ கணவனைத் தான் சுற்றிச் சுற்றி வந்தது.

இந்தியா வந்து சேர்வதற்குள் அவள் யோசித்துக் கண்டது எல்லாம் கணவன் எதையோ மறைக்கிறான் என்பதைத் தான். ‘அப்படி நான் எதைத் தெரிஞ்சிக்கக் கூடாதுனு நினைக்கிறார்? நேற்று நடந்துகிட்டதைப் பார்த்தா அவருக்கு ஏதோ பெரிய வியாதி இருக்குற மாதிரியும் அதை நான் தெரிஞ்சிக்கக் கூடாதுனு மறைக்கிற மாதிரியும் இருந்தது. நிச்சயம் நேற்று அவர் பேசிய பேச்சு எதிலும் சுயம் இல்லை.

காலில் எண்ணை கொட்டிய போது எனக்காக துடித்தது, ஒரு நாள் இரவு முழுக்கத் தன் கொஞ்சலாலும் முத்தத்தாலும் என்னைச் சிவக்க வைத்தது இது தான் என் கணவன். இதெல்லாம் விட அவர் வாய் திறந்து தன் காதலைச் சொல்லவில்லை என்றாலும் என்னைப் பார்க்கும் போது எல்லாம் அவரிடம் தோன்றும் கனிவையும் கண்ணில் தோன்றும் காதலையும் நான் பார்த்துத் தானே இருந்தேன்! ஏதோ ஒரு விஷயத்தை அவர் மனசுக்குள்ளே போட்டு வைத்து அதை எனக்குத் தெரியக் கூடாதுனு நினைக்கிறார். அது என்னவாக இருக்கும்?..’ என்றெல்லாம் சிந்தித்தவள் திடீர் என்று உடலில் ஒரு சிலிர்ப்பும் நடுக்கமும் ஓட

‘ஒருவேளை அந்த விஷயமாக இருக்குமோ?’ என்று நினைத்தவள் ‘ச்சே ச்சே.. கண்டிப்பா அது இருக்காது. எப்போதும் என்னிடம் இருக்கும் விழியைப் பற்றி தானே அடிக்கடி கேட்கிறார். அதனால் ஏதாவது ஒரு பெண் விஷயமா இருக்குமோ? அதுவும் காதல் தோல்வி மாதிரி!’ என்று யோசிக்கும் போதே நெருஞ்சி முள்ளாய் மனதை ஏதோ ஒன்று குத்த ‘அப்படியே இருந்தாலும் அதை அவர் என் கிட்ட சொல்லலாமே? இது தான் விஷயம்னா ஒரு மனைவியா இதிலிருந்து நிச்சயம் நான் அவரை வெளிக் கொண்டு வந்தே தீருவேன்!’ என்று மனதில் உறுதியேற்றாள் சாரா.

வீடு வந்தவள் தாத்தாவிடம் தங்களுக்குள் நடந்த பிரச்னையைச் சொல்லாமல் அஷ்வத்துக்கு ஏதோ வேலை இருப்பதாக மட்டும் சொல்லி வைக்க, மறுநாளே வந்த அஷ்வத்தும் தாத்தாவிடம் எதுவும் சொல்லாமல் தன் மனைவியைத் தேடி மேலே வர, கணவனைப் தங்கள் அறையில் பார்த்தவள் எதுவும் நடக்காத மாதிரியே அவனை வாங்க என்று வரவேற்றவள் பின் தான் செய்து கொண்டிருந்த வேலையான கட்டிலின் விரிப்பை மாற்றிக் கொண்டிருக்க. மனைவியின் நிதானமான வரவேற்பிலும் செய்கையிலும் கொதித்தவனோ

“என்ன டி திமிரா? வரவே மாட்டேனு சொன்னவன் திரும்ப வந்துட்டானேனு அலட்சியமா? நான் ஒன்னும் உன்னைத் தேடி நீ வேணும்னு வரலை!” என்று மிதப்பாகச் சொல்ல, அப்போதும் அவள் எந்த வித பதிலும் சொல்லாமல் அமைதியாகத் தன் வேலைகளைப் பார்க்க அதில் இன்னும் கொதித்தவன்

“உன்னை நான் பார்த்ததிலிருந்து என் சந்தோஷம் போயிடுச்சி. என்னைக்கு நீ என் வாழ்க்கையில் வந்தியோ அன்னைக்கே என் நிம்மதியும் போயிடுச்சி. அதனாலே நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன். இழந்த என் சந்தோஷமும் நிம்மதியும் திரும்ப எனக்கு வேணும்னா உன்னை விட்டு நான் நிரந்தரமா விலகுறது தான்!” என்றவன் அவள் முன் தங்கள் விடுதலைப் பத்திரத்தை நீட்ட எந்த வித சலனமும் இல்லாமல் அதை வாங்கியவள் நிதானமாக படித்து முடிக்கவும் அவனோ தன்னிடமிருந்த பேனாவை அவள் முன் நீட்ட அவனை ஆராயும் பார்வை ஒன்றைப் பார்த்துக் கொண்டே வாங்கியவள் பின் அங்கிருந்த டேபிளில் வைத்து கையெழுத்து இட்டவள்

“ம்… நீங்க கேட்ட மாதிரியே நான் உங்க வாழ்க்கைய விட்டு விலகுறதுக்கு சம்மதம் என்று கையெழுத்துப் போட்டுட்டேன். வந்து எடுத்துக்கங்க” என்றவள் அந்த பத்திரத்தை டேபிளில் வைத்து விட்டு அவளோ சற்று விலகி நின்று விட, அஷ்வத்துக்குத் தான் அவள் செயலைப் பார்த்து மனதில் எண்ணில் அடங்காத கோபம் எழுந்தது. 

‘நான் கேட்ட உடனே கையெழுத்துப் போட்டுடுவியா டி ? அப்போ நான் உனக்கு வேணாமா? உனக்குள்ள நான் எந்த சலனமும் ஏற்படுத்தவே இல்லையா?’ என்று அவளைப் பார்த்து தன் மனதுக்குள் அவன் கேள்வி கேட்ட படி நிற்கவும்

“நீங்க விரும்பின மாதிரியே இனி உங்க வாழ்க்கைய நீங்க சந்தோஷமா வாழுங்க. அதுக்கு நான் இடைஞ்சலா இல்லாம உங்களை விட்டு விலகிடுறேன். அதுக்கு சம்மதம் சொல்லித் தான் கையெழுத்துப் போட்டிருக்கேன் வந்து எடுத்துக்கங்க” என்று டேபிளின் மேலிருந்த பேப்பரைக் காட்டி அவள் அழுத்தமாகச் சொல்ல

‘இவள் நம் விருப்பப் படி கையெழுத்துப் போடுவாளா இல்லை போட மாட்டேன் என்று முரண்டால் என்ன சொல்லி மிரட்டி இவளைச் சம்மதிக்க வைப்பது?’ என்றெல்லாம் அவன் யோசித்து வர, ஆனால் எந்த சிரமமும் இல்லாமல் அவன் எதிர்பார்த்தது கிடைத்தும் அவனால் சந்தோஷப் பட முடியாமல் ஏன் நான்கு அடியே தூரமிருந்த அந்த டேபிளைக் கூட நெருங்க முடியாமல் கால்கள் இரும்பு குண்டாய் கனக்க கைகள் உதற கண்கள் சொருக அதை விட அவன் நெஞ்சுக் கூடோ தலை அறுபட்ட புறாவாய் துடிக்க தனக்கு இந்த நிமிடமே மரணம் வந்து விட்டால் கூட எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தவனோ

இதை எதையும் அவளிடம் காட்டாமல் கண்ணை மூடித் தன்னை நிலைப்படுத்தியவனோ பின் தன் நிமிர் நடையுடன் சென்று அந்த பேப்பரைக் கையில் எடுத்து அவள் கையெழுத்து இட்ட இடத்தைப் பார்க்க அதில் ‘உங்களுக்கு என்னிடம் இருந்து விடுதலை வேண்டும் என்றால் அதை என் மரணத்தால் மட்டுமே கொடுப்பாள் இந்த சின்னாவின் பொம்மி!’ என்று எழுதி இருந்தாள் சாரா. அதைப் பார்த்ததும் அவனையும் மீறி அவன் கண்ணில் கண்ணீர் வழிந்தது. அதைத் துடைத்தவன் அடைத்த தொண்டையைச் சரி செய்த படி

“ஏய்! நான் உன்னைக் கையெழுத்துப் போடச் சொல்லிக் கொடுத்தா நீ என்ன டி பண்ணி வெச்சிருக்க?” என்று கோபத்தில் அவன் கர்ஜிக்க நினைக்க அந்தோ பரிதாபம்.. அவன் குரலோ மழையில் நனைந்த கோழி என வெடவெடக்கத் தான் செய்தது. 
இங்கு வந்ததில் இருந்து கணவனின் முகத்தையும் செயலையும் பார்த்தவளோ இப்போது அவன் குரலையும் அறிந்து கொண்டவளோ நிமிர்வுடன்

“ஏன் நான் என்ன செய்தேன்? நீங்க கேட்ட விடுதலையைத் தானே கொடுத்தேன்?” என்று இவள் கேட்க

“நான் கேட்டது கையெழுத்து. இது கையெழுத்தா? நீ படிச்சவ தானே? என்ன எழுதறோம்னு யோசிக்காமலேயே எழுதுவியா?”

“நான் எதையும் யோசிக்காம எழுதல. நல்லா யோசித்துத் தான் எழுதினேன்” அவனுக்கு உள்ளுக்குள் ஒரு வித பயமும் சந்தோஷமும் போட்டி போட ‘ஏன் டி என் மேல இவ்வளவு காதலை வெச்சிருக்க?!’ என்று தனக்குள்ளே கேள்வி கேட்டவனோ வெளியில்

“மண்ணாங்கட்டி! என்ன டி சும்மா இறப்பு அது இதுனு என்னை பயமுறுத்திறியா? நீ என்ன சொன்னாலும் செய்தாலும் நாம பிரியப்போறது போறது தான். நீ இப்போ இதுக்கு சம்மதிக்கலைனா நான் தாத்தா கிட்ட வேற மாதிரி நடந்துக்க வேண்டி வரும்” என்று அவன் கத்தவும் அவனை நெருங்கி அவன் கையிலிருந்த பத்திரத்தைப் பிடிங்கியவள் அதை சுக்கல் சுக்கலாகக் கிழித்து எறிய அவள் செயலில் “ஏய்!” என்று கத்தி ருத்திரமூர்த்தியாக நின்றவனை அவனின் கோபத்தால் சிறிதும் அசராமல் தன்னவனின் கையைப் பற்றி இழுத்துச் சென்று ஷோபாவில் அமர வைத்தவளோ தானும் அவன் பக்கத்தில் அமர்ந்து

“என்னை விட்டுட்டு உங்களால ஒரு நாள் கூட முழுசா இருக்க முடியல. கிளம்பி இதோ இப்போ என் முன்னாடி வந்து நிற்கறீங்க. நீங்க என்னை விட்டுட்டு ஆயுசுக்கும் இருப்பீங்களா? அன்னைக்கு நீங்க சொன்னதைத் தான் இப்போ நான் சொல்றேன். என் தாத்தாவா இருக்கும் போதே நீங்க அவரை விட்டது இல்ல. இப்போ உங்க தாத்தாவுக்கு ஏதாவது நடக்கவா விட்டு விடுவீங்க? ஏன் இப்படி நடிக்கறீங்க? என் மேல உங்களுக்கு அன்பு பாசம் ஏன் காதல் கூட இருக்கு. அதை எல்லாம் நிமிஷத்துக்கு நிமிஷம் மறைத்து மறந்து ஏன் பிரிவு விடுதலை வரை போறீங்க? அப்படி உங்க மனசுல என்ன தான் இருக்கு? எது உங்களை இப்படி மாற்றுது? அது என்னனு சொல்லுங்க நாம அதுக்கு ஏதாவது வழி இருக்கானு பார்ப்போம். பிறகு நானும் உங்க கிட்ட ஒன்று சொல்லனும்” என்றவள் ஒரு மனைவியாய் கணவனின் கஷ்டதைப் போக்க அவள் வழி செய்ய, மனைவி தன் மனநிலையை உணர்ந்து இருக்கிறாள் என்பதை அறிந்தவனோ வீம்புக்கென்று

“எனக்கு ஒன்னும் இல்லை. நான் எதையும் மனசுல போட்டு இருக்கலை. நீ எதையாவது சொல்லி என்னைத் திசை திருப்பாதே. எனக்கு வேண்டியது டிவோர்ஸ். அதை மட்டும் கொடு’’ என்று இவன் அதே பிடிவாதத்திலே இருக்க, அவன் முகத்தை ஒரு வினாடி தீர்க்கமாகப் பார்த்தவளோ

“அப்ப என் முடிவும் மாறாது. என் மரணத்தால் மட்டும் தான் அது நடக்கும். அந்த மரணத்தையும் இப்பவே ஏற்று உங்களுக்கு விடுதலை தர நான் தயார்” என்றவள் அங்கிருந்து எழப் போக, அவள் யூகம் தெரிந்து அவளை நகர விடாமல் இறுக்கிப் பிடித்தவனோ

“நீ சாக வேணாம் டி.. என்னுடைய பிரச்சனைக்கு நான் தான் டி சாகணும்” என்று முதல் முறையாக அவன் உடைய

“நீங்க முதல்ல என்ன பிரச்சனைனு சொல்லுங்க. அதற்குப் பிறகு நீங்க சாகலாமா இல்ல நான் சாகலாமானு நான் சொல்றேன்” என்று அவள் சொல்லவும், அவள் மடி சாய்ந்தவனோ முன்பு தன் வாழ்வில் நடந்தது அனைத்தையும் இதுவரை யாரிடமும் பகிராத தன் பாவச் செயலை சொல்ல ஆரம்பித்தான் அஷ்வத் இல்லை இல்லை ஏ.கே.!

தமிழ் நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையே இருக்கும் மலைப்பிரதேசம் தான் மகாதேவிபுரம் (இவ்வூர் என் கற்பனையே). இவ்வூர் முழுக்க முழுக்க மலைகளையும் காடுகளையும் அந்த காடுகளுக்கே ஏற்ற குளுமை, இருள் மற்றும் கொடிய விலங்குகள் என்றிருக்க நூறு வீடுகளே ஆன சிறிய கிராமம் அது. அந்த ஊரைச் சுற்றி காடுகளும் மலைகளும் இருந்ததால் அந்த ஊரைத் தள்ளி காட்டில் மலைவாழ் மக்களும் வாழ்ந்து வந்தனர்.

தன்னுடைய பத்தொன்பதாம் வயதில் தன் கேரியரை வளர்த்துக் கொள்ளத் தன் இந்திய வாழ் நண்பனான சூரியாவின் உதவியுடன் அவனின் ஆலோசனைப் படி மகாதேவிபுரத்தில் இருக்கும் மலைகளையும் காடுகளையும் விலங்குகளையும் படம் எடுக்க ஒரு போட்டோகிராப்பராகத் தன் நண்பன் சூரியாவுடன் அந்த மலைப் பிரதேசத்துக்கு வந்தவன் தான் ஏ.கே.

தன் கணவனின் ஆசைப் படி எப்போதோ கணவன் தனக்கு ஆண் குழந்தை பிறந்தால் இரு நாட்டு பெயரையும் சேர்த்து அஷ்வத் கென்டிரிக் வைக்க இருந்ததை ஞாபகம் வைத்து கரோலின் தன் மகனுக்கு அஷ்வத் கென்டிரிக் என்றே பெயர் வைக்க என்ன தான் கணவனுக்காக வைத்தாலும் கரோலின் மகனை ஏ.கே என்றே அழைத்து வர தன் தந்தை தமிழர் என்று தெரிந்தாலும் தன் தாயிடம் மேற்கொண்டு எதையும் அவன் கேட்காமல் விட்டு விட அதனால் அவனைச் சுற்றி இருப்பவர்களும் அவனை ஏ.கே என்றே அழைத்து வந்தனர்.

ஏ .கேவும் சூர்யாவும் அந்த ஊர் தலைவரைப் பார்க்க அவர் வீட்டுக்குப் போக அங்கு அவர் இல்லாததால் அவர் மனைவி அவர் வீட்டில் வேலை செய்யும் செங்கோடனிடம் அவர் இருக்கும் இடத்திற்கு இருவரையும் அழைத்துச் செல்லச் சொல்ல, அழைத்துச் சென்றவன் எங்கு சென்றும் அவரைக் காணாமல் தேடியவன் கண்ணில் வேறொன்று தென்பட்டது.

ஓர் இடத்தில் குளக்கரையில் வண்டி மாட்டை இரட்டை ஜடை பின்னல் போட்டு முடியின் நுனியில் ரிப்பன் கட்டி ஆண்கள் அணியும் மேல் சட்டையைப் போட்டிருந்தவளோ கணுக்கால் வரை அணிந்திருந்த பாவாடையைத் தண்ணீரில் நின்றிருந்ததால் இன்னும் தூக்கி முட்டி தெரிய சொறுகி இருக்க தன் வலது புற தோளில் தவழ்ந்த ஜடையை வலது கையால் பின்னுக்குத் தூக்கிப் போட்டவள் அதே கையில் பிடித்திருந்த வைக்கோலைக் குனிந்து ஆற்று நீரில் நனைத்து வண்டி மாட்டின் முதுகைத் தேய்க்க அவள் குனிந்து நிமிர்ந்து மாட்டைத் தேய்த்துக் கழுவும் அழகையும் கூடவே அவள் முன்னழகையும் பின்னழகையும் அடிக்கு ஒரு முறை முட்டிக்கு மேலும் கீழும் ஏறி இறங்கும் அவள் பாவாடையையும் கணுக்காலையும் செங்கோடன் வாய் திறந்து அவளை ஒரு வித விரசப் பார்வையுடன் ரசிக்க

“என்ன செங்கோடா.. இவங்க ரெண்டு பேரும் யாரு?” என்று யாரோ கேட்ட கேள்வியில் தெளிந்தவன் அவருக்குப் பதிலைத் தந்து விட்டு அங்கு மாடு தேய்ப்பவளைச் சீண்டி பார்க்கும் எண்ணம் எழ அவளிடம்

“ஏலே கருப்பி! நம்ம வீரபாண்டி ஐயா எங்கவே இருக்காரு?” என்று அவன் கத்திக் கேட்க, அவளோ மவுனமாக இருக்கவும் அதில் கோபமுற்றவன்

“அடி ஏய் கரி உருண்ட.. உன்னைத் தான் டி கேட்கேறேன்” என்று இவன் மறுபடியும் ஏலம் இடும் குரலில் கேட்க அவளிடம் மறுபடியும் மவுனம் மட்டுமே. தன்னை நிமிர்ந்து கூட பார்க்காமல் தன் பாட்டுக்கு வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்தவனின் முகத்தில் கோபம் ஏற அவன் மறுபடியும் வாயைத் திறக்கும் நேரம் அந்தக் குளக்கரையிலே சற்றுத் தூரமாக இருந்த அந்த ஊர் பெண்ணொருத்தி

“ஏலே கருங்குழலி! உன் மாமன் எவ்வளவு நேரமா உன் கிட்ட பெரிய ஐயா எங்கனு கேட்டுட்டு இருக்கான்.. நீ என்ன பதிலே சொல்லாம இருக்க?” என்று கேட்க

“இப்போ நீங்க என்னை என்னனு க்கா கூப்பிட்டீங்க?” என்று கேட்டவள் மாட்டைத் தேய்க்கும் வேலையில் மும்முரமாய் இருக்க

“இதென்ன கேள்வி? கருங்குழலி தான்!” என்று அவள் பதில் சொல்லவும் 

“அப்ப என் பெயர் கருங்குழலி தானே? யாரோ ஒரு கருப்பி கிட்ட கேட்டா நான் எப்படி க்கா பதில் சொல்வேன்?” என்றவள் அவனுக்கு இப்போதும் பதில் சொல்லாமல் அவள் தன் வேலையைப் பார்க்க

“அவ கிடக்கறா விடுங்க க்கா. நம்ம ஊர் ரோட்டுக்குத் தாரே வேணாம். இவ கிட்ட இருக்கிற கருப்பச் சுரண்டி எடுத்தாலே போதும் ரோட்டுக்குத் தார் ஊத்திடலாம். கூடவே இவளை வெச்சி ரோடு மேலே ரெண்டு உருட்டு உருட்டினா போதும் நம்ம ஊரு ரோட்டுல இருக்கிற மேடு பள்ளம் எல்லாம் சரியாகிடும். அப்படிப் பட்ட இவ பேசுற பேச்சையும் அடிக்கிற வாயையும் பாருங்க” என்று அவளைச் சீண்டல் என்ற பெயரில் கேவலப் படுத்தியவன் “எல்லாத்துக்கும் மேலே இந்த கரி உருண்டையோட மாமன்காரனான நான் வம்பிழுக்காம வேற யார் வம்பு இழுப்பாங்களாம்?” என்று உள்ளே புகைந்தாலும் வெளியே சிரித்துக் கொண்டே அவன் பதில் தர

“ஆமா.. இவருக்கு வெள்ளை வெளுனு மின்னுர வெளுத்தத் தோளு பாரு.. என்ன சொல்ல வந்துடாரு! ஆப்ப சட்டியக் கவுத்துப் போட்ட நிறமா இது இருந்துட்டுப் பேச்சப் பாரு” என்று அவனுக்குக் கேட்கும்படியே வாய் விட்டுக் குழலி முனுங்க, அதே நேரம் ஆற்றில் இலை தழையுடன் கூடிய கொடி ஒன்று வர அதை அவள் கழுவும் வண்டி மாடு எக்கித் தின்பதற்காக முன்னே ஓர் எட்டு வைத்து நகரப் பார்க்கவும் அதன் மூக்கணாங் கயிற்றை இறுக்கிப் பிடித்தவளோ

“அடி செருப்பால.. இந்த எடுபட்ட காளைக்குத் திமிரப் பாரு. இவ பசு மாட்ட மேய்க்கிறவ தானே ஆனா நாம காளை மாடு தானே என்ற அடங்காத் தனத்த நீ அடிக்கடி என் கிட்ட காட்டுற. நான் ஒரு நாள் போல ஒரு நாள் இருக்க மாட்டேன். என்னைக்கு உன் கால் ரெண்டையும் உடைத்து உன்னை உட்கார வைக்கப் போறேனு தெரியல” என்று மாட்டைச் சாடுவது போல் அவள் தன் மாமனைச் சாட, அவள் தன்னைத் தான் சாடுகிறாள் என்பதை அறிந்தவனோ பல்லைக் கடித்த படி விலக

இவ்வளவு நேரம் அவனை நிமிர்ந்து பார்க்காமல் தன் வேளையில் இருந்தவள் இப்போது அவன் முகம் போகும் போக்கைப் பார்க்க எண்ணி மாட்டின் முகத்தருகே வந்து நிமிர்ந்து பார்க்க முகம் முழுக்க மறைய அவள் விழிகள் மட்டும் கொம்பு வழியே தெரிய அவள் பார்க்கவும் அதே நேரம் இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது தெரியாமலே எதேச்சையாக ஏ.கே அவள் இருந்த இடத்தைப் பார்க்க அவனுக்குத் தெரிந்தது அவள் விழிகள் மட்டுமே தான். ஆனால் அவளோ கூட இருந்தவர்களைப் பார்க்காமல் தன் மாமனை மட்டும் தான் பார்த்தாள்.

பின் தன் வேலைகளை முடித்துக் கொண்டு தலையில் புல்லுக்கட்டுடன் மாலை நான்கு மணிக்குத் தன் குடிசைக்கு வந்தவள் அங்கு தன் பாட்டி கூன் விழுந்த முதுகுடன் புழக்கடையைப் பெருக்குவதைப் பார்த்தவள் தன் தலையில் இருந்ததை ஒரு ஓரமாக கீழே போட்டுவிட்டு 

“ஏன் ஆத்தா உனக்கு எத்தனை தடவை சொல்லுறது? நீ எந்த வேலையும் செய்யாத நான் வந்து எல்லா வேலையையும் பார்த்துக்கிறேனு. போ போய் ஒரு இடமா உட்காரு. நான் இதை சுத்தம் செய்றேன்” என்றவள் அவரிடமிருந்து துடைப்பத்தை வாங்கித் தோட்டத்தைக் கூட்டியவள் பின் மாட்டைத் தொழுவத்திலும் ஆடுகளைப் பட்டியிலும் கட்டியவள் கோழிகளை அதன் கூட்டில் அடைத்து விட்டு மலைக் குவியல் என இருந்த சாணக் குவியலில் இருந்து இரண்டு கை சாணத்தை எடுத்து அந்த நேரத்திலும் வரட்டி தட்டியவள்

பின் தலை ஒதுக்கி முன்பு மாதிரியே இரட்டை ஜடை பின்னலில் ரிப்பன் கட்டியவள் கைகால் முகம் கழுவி பொட்டிட்டு மழைக்கு நனையாமல் இருக்க தார் பாய்க்குள் அடைத்து வைத்திருந்த காய்ந்த வரட்டி இரண்டை எடுத்து அடுப்பு மூட்டி களி கிண்டி அதற்குத் தோதாக மொச்சைக் கொட்டை காய் போட்டு குழம்பு வைத்தவள் எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு திண்ணையில் இருக்கும் தன் பாட்டியிடம் வர, அவரோ தன் பேத்தி வந்ததில் இருந்து அவளைத் தான் வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க

“என்ன ஆத்தா இன்னைக்கு என்னைய புதுசா பார்க்கற மாதிரியே பார்க்கற?” என்று கேட்க ஒன்றும் இல்லை என்பது போல் அவரிடம் இருந்து சிறு தலை அசைப்பு மட்டுமே பதிலாக வந்தது.

“சரி சரி.. நான் எல்லா வேலையும் முடிச்சிட்டேன். நீ எதுவும் செய்யாத. அதே மாதிரி புழக்கடை பக்கம் நீ போறதா இருந்தா சிமிழ் விளக்க எடுத்துப் போ ஆத்தா. நீ பாட்டுக்கு போயிடாதே” என்றவள் “நான் இப்போ போனா தான் வேலை முடிச்சி வீரபாண்டி ஐயா வீட்டுல இருந்து திரும்ப வர முடியும். அதனால நான் கிளம்புறேன் ஆத்தா” என்று அவள் ஓர் எட்டு வைக்கவும்

“நீ இனி வேலைக்குப் போக வேணா தாயி!” என்று அவர் வாய் திறந்து தடுக்கவும் 

“எனக்கு மட்டும் இஷ்டமா ஆத்தா? அந்த மச்சி வீட்டு அம்மா பேசுற பேச்சு எதுவும் எனக்கும் தான் பிடிக்கல. என்ன செய்ய? குழந்தை இல்லாத நம்ம வீரபாண்டி ஐயா என்னைய அவர் சொந்தப் பொண்ணா பார்த்துப் பாசத்தைக் காட்டும் போது நான் எப்படி வேலைக்குப் போகாம இருக்க சொல்லு? ஆமாம்.. நீ ஏன் போக வேணானு சொல்லுற?” என்று கருங்குழலி கேட்க

“உன்னைய பகல்ல வேலைக்குப் போக வேணாம்னு நான் சொல்லல. இப்படி அந்தி சாய்ந்த நேரத்துல வேலைக்குப் போய் இருட்டின பிறகு காட்டு வழியா நீ திரும்ப குடிசைக்கு வர்றதுக்குள்ள நான் வயித்துல நெருப்பைக் கட்டிகிட்டுல்ல இருக்கேன்?” என்று அவர் பதில் தர 

“என்ன ஆத்தா நீ.. வர்ற வழில இருக்க காட்டு மிருகங்களுக்கா நீ பயப்படுற? சின்ன வயசுல இருந்து இங்கே வளர்ந்த எனக்கு எது எங்க எப்படி வரும்னு தெரியாதா? அதை எல்லாம் நான் பார்த்துக்கிறேன் நீ பயப்படாத” என்று தைரியம் சொல்ல

“நான் காட்டு மிருகத்துக்கா பயப்படறேன்? எல்லாம் இந்த மனுச மிருகங்களுக்குத் தான் பயப்படறேன்” என்று அவர் கலக்கமாகச் சொல்லவும், அவரைச் சற்று நேரம் உற்றுப் பார்த்தவள்

“யாரு அந்த செங்கோடனச் சொல்றியா? நீ பயப்படற அளவுக்கு அவனெல்லாம் ஒரு ஆளா?” என்று பயமின்றி இவள் கேட்கவும்

“வாய் மேலே ரெண்டு போடுவேன். அப்பன் ஆத்தா இல்லாத பொண்ணுனு உன்னைய உன் இஷ்டத்துக்குச் செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பா போச்சு. கொஞ்சம் கூட மட்டு மருவாதை இல்லாம உன்னைய விட பதினஞ்சி வயசுப் பெரியவன அவன் இவன்னா சொல்லுறது? இதில்லாம அவன் உன் மாமன்! நாளைக்கு உன்னைய கட்டிக்கப் போறவன். பார்த்துப் பவிசா நடந்துக்க. அவன் ஆத்தா கேட்டா உன்னை ஆய்ஞ்சிபுடுவா ஆய்ஞ்சி சொல்லிட்டேன்..

நீ ஏதோ வாய் துடுக்கா அவன் கிட்ட வம்பு பண்றேனு இத்தனை நாள் நான் நினைச்சிட்டு இருந்தா இன்னைக்கு என்னமோ அவனைக் கேவலமா பேசுனியாமே? அவன் இங்குட்டு வந்து உன் பேத்திய அடங்கி இருக்க சொல்லு பிறகு கோபம் வந்து நான் ஏதாவது செய்திடப் போறேனு மிரட்டிட்டுப் போறான். பத்தாததுக்கு இப்படி எல்லாம் இவ இருந்தா என் ஆத்தா இவள மருமகளா ஏத்துக்காதுனு வேற சொல்லிட்டுப் போறான். இந்த பேச்சு எல்லாம் நமக்குத் தேவையா சொல்லு?

“யாரு?.. அரசாங்கத்துக்கு எதிரா மரத்த வெட்டி திருட்டுத்தனம் பண்ற இந்த காடு வெட்டி கருவாயன, ஊர்ல இருக்கற பொண்ணுங்கள எல்லாம் பொண்டாட்டியா நெனச்சிப் படுக்கைக்குக் கூப்பிடற இந்தப் பொம்பளப் பொறுக்கிய நான் கட்டிக்கணுமா? இதுக்கு அவன் ஆத்தா வேற சம்மதிக்காதாமா? அதுக்கு வேற ஆள பார்க்கச் சொல்லு அந்த கிழவிகிட்ட.

உனக்கு நான் முன்னமே சொல்லிட்டேன் ஆத்தா. இப்பவும் சொல்லுறேன், அந்த செங்கோடனை நான் கட்டிக்க மாட்டேன்! கட்டிக்க மாட்டேன்!” என்று உறுதிபடக் கூறியவள் “சீக்கிரம் விரசா வந்திடுறேன்” என்ற சொல்லுடன் முன்னே நடக்க ஆரம்பித்தாள் கருங்குழலி.

அழகான வட்ட முகம். ஆனால் சற்றே கருத்த நிறம் தான்! அது கூட காடு மேடு எல்லாம் வெயிலில் சுற்றியதில் இன்னும் அடர்ந்த கருப்பாக அவர் பேத்தியைக் காட்டியது. பதினாலு வயதுக் குழந்தை இவள். ஆனால் அப்படி ஒரு குழந்தைத் தனம் துளியும் முகத்திலும் அவள் பேச்சிலும் இருக்காது. இதை எல்லாம் விட அவள் வயதையும் மீறி பதினெட்டு பத்தொன்பது வயதுப் பெண் என்று காட்டும் இவளுடைய உடல்வாகு. சற்றே பூசினாற் போல் இருப்பதால் செங்கோடனை விட குள்ளமாகத் தெரிவதால் தான் அவனுக்கு இவளைப் பிடித்து விட்டதோ?

“ஏற்கனவே கல்யாணம் வேணாம் என்பவள் இன்னும் செங்கோடனின் தாய் கேட்கும் சீர்வரிசைகளைச் சொன்னால் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாளே இவள்!

செங்கோடன் என்னமோ சமூகவிரோதமா நடந்துக்கறான் குடிக்கறான் கூத்தடிக்கறானு இவ சொல்றாளே, இவ தாத்தாவுக்கு நான் எத்தனையாவது பொண்டாட்டினு இவளுக்குத் தெரியுமா இல்ல அந்த ஆள் அடிக்காத கூத்தா?

வாய் பேசத் தெரியாத இவ அம்மா எங்களுக்கு மகளா பொறந்ததுக்கு ஊமச்சி போய் நமக்கு மகளா பொறந்திடுச்சேனு அந்த ஆள் எனக்கும் அந்த பொண்ணுக்கும் எவ்வளவு கஷ்டம் குடுத்தான்?

அவ வாழ்க்கையிலும் ஒரு நல்லவன் வந்தான்! அந்த வாழ்வாது உன் அம்மாவுக்கு கடைசி வரை நெலச்சிதா? வயித்துல இவ இருந்தப்போ குறைப் பிரசவத்திலே இவ பிறக்கும் போது அவ உயிரையே விட்டுட்டா. அதே நேரம் காட்டுல எரியுற தீயில மத்தவங்கள காப்பாத்தப் போய் அன்னைக்கே இவ அப்பனும் போய் சேர்ந்துட்டான்.

இப்படி பொறந்ததுல இருந்து யாரும் இல்லாம இருக்குறாளேனு இவளுக்குச் செல்லம் காட்டி இவ ஆத்தா பேசாத பேச்சை எல்லாம் இவ பேசறாளேனு நெனச்சி அன்னைக்கு உச்சி குளிர்ந்து சந்தோஷப்பட்டது தப்பா போச்சி. இன்னைக்கு இந்த வாய் தான் இவ வாழ்க்கைக்கு எதிராப் போகுமோ தெரியல?!

வாய் மட்டுமா? கூடவே பிடிவாதம் இல்ல நெறஞ்சிருக்கு? நம்ம இனம் மாதிரி ரவிக்கை இல்லாம மேலாக்கா ஒரு துணிய மட்டும் இறுக்கி கட்டுடினா எங்க கேட்குறா? அது எல்லாம் முடியாது ஆம்பள புள்ள சட்டை தான் வேணும்னு சந்தையில இருந்து வாங்கி வந்து போட்டுகிட்டுத் திரியறா. அது மட்டுமா? என்ன மாதிரி காதுக்கும் மூக்குக்கும் வளையம் போடுடினா அதும் வேணானு சொல்றா.

அவ ஒத்துகிட்ட ஒரே விஷயம் காலுக்கு தண்டம் போடுறது தான். இப்படி எல்லா விஷயத்துக்கும் சம்மதிச்சி விட்டு கொடுத்த செங்கோடையனின் அம்மா அவ படிக்கட்டும்னு சொன்னதுக்கு மட்டும் விடவே இல்லையே! அதனால நானும் இவள படிக்க வேணாமுன்னு சொல்ல, ஒரு நாள் முழுக்க சாப்பிடாம இந்த புள்ள அழுத அழுகை கொஞ்சமா நஞ்சமா?

ஆனா அப்படி இருந்தும் மறுநாள் காலை விடிஞ்சதும் அவ என் கிட்ட வந்து சொன்னது இன்னும் நெனவுல இருக்கு. இப்ப என்ன ஆத்தா? படிப்பு தான் வாழ்க்கையா? படிச்சா தான் சாதிக்க முடியுமா? நான் விவசாயத்தக் கத்துகிட்டு அதுல ஏதாவது புதுசா கண்டு பிடிக்குறன். அதே மாதிரி இந்த காட்டை எல்லாம் ஆராய்ச்சி பண்ணுவாங்களாமே அதேபோல நானும் நம்ம காட்டையே ஆராய்ச்சி பண்ணிட்டுப் போறனு எவ்ளோ மிடுக்கா சொன்னா என் பேத்தி?! அவ தன்னம்பிக்கையைப் பார்த்து நானே வாயடச்சி இல்ல போய்ட்டேன்!

இதெல்லாம் அந்த வீரபாண்டி ஐயா கொடுக்கிற இடம். இப்படி இருக்கிற இவளுக்கு அந்த மகாதேவி தான் நல்ல புத்தியக் கொடுத்து நல்லது செய்யணும்” என்ற பிரார்த்தனையுடன் தன் வேலையைப் பார்க்கப் போனார் அவர். ஐயா வீட்டுக்குத் தாமதமாகப் போன கருங்குழலி தன் வேலைகளை முடித்துக் கொண்டு கிளம்ப

“ஏன் டி எடுபட்டவளே! உனக்கு வேலைக்கு வர இவ்வளவு நேரமா? உன் ஆத்தாவுக்கு தான் தினமும் எங்க வீட்டு சோறு வேணுமே? அதை வேலை முடிச்சிப் பொழுதோட வந்து எடுத்துப் போகணும்னு தெரியாது? நீ வர தாமசம் ஆச்சினு இப்போ தான் தொழுவத்துல இருக்குற கழனிப் பானையில போய் கொட்டுனன். அதுலயிருந்து மேலாக்கா எடுத்துகிட்டுப் போய் உன் ஆத்தாளுக்குக் குடு” என்று ஐயா மனைவி அவளை விரட்ட

அது எதற்கும் பதில் சொல்லாதவளாக உன் சோறு எனக்கு வேண்டாம் என்ற ரீதியில் அந்த இடத்தை விட்டு அகன்று இருந்தாள் குழலி.

அவள் போவதைப் பார்த்து “இவ்ளோ திமிர் ஆகாது டி உனக்கு. இதுக்கெல்லாம் நீ பின்னாடி பெரிசா படுவ டி” என்று ஐயா மனைவி சாபமிட, அதைக் காதில் வாங்கினாலும் சற்றும் நிற்காமல் நடந்தாள் குழலி.

இப்படியே நாட்கள் செல்ல இரண்டு நாட்கள் கழித்துக் குழலி ஒரு மாலை வேலையில் காட்டில் ஒரு மரத்தில் ஒரு கிளை மட்டும் சரிந்து போய் அதில் நிறைய தேன் அடைகள் இருக்க அதில் தேனை எடுக்கக் கீழே மண்ணில் நெருப்பு மூட்டியவள் ஒரு கணமான சாக்கை உடலில் சுற்றி கையிலும் தன் விழியைத் தவிர முகத்திலும் சற்று கணமான துணியை சுற்றியவள் கையில் தீ பந்தத்துடன் சற்று தூரவே இருந்து அந்தத் தேன் கூட்டைப் பார்த்து இருக்க 

அதே நேரம் ஏ.கே வோ கையில் கேமராவுடன் அவள் எதிர் திசையில் இருந்து தெரியாமல் தேன் கூட்டை நெருங்க, அவனைப் பார்த்தவளோ தன் கையிலிருந்த தீ பந்தத்தைத் தூக்கிக் காட்டி அவனைத் தூரப் போ என்று தன் வலது கையால் சமிக்ஞை செய்ய

சட்டென அந்த தீ பந்தம் வெளிச்சம் வரும் திசையைப் பார்த்தவனோ அவள் செய்கையால் என்ன சொல்கிறாள் என்பதை மறந்து போனவனாக அந்த தீ ஜுவாலையின் வெளிச்சத்தில் அவள் கண்ணில் மின்னி மறையும் ஒளியைப் பார்த்தவனோ இவள் என்ன வேற்றுக் கிரகத்திலிருந்து வந்த தேவதையோ என அவன் அவள் விழிகளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டு ஸ்தம்பித்துப் போய் அவன் இருக்க

அவன் எங்கும் நகராமல் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவளோ வேறு எங்காவது ஓடிப் போ என்று இதுவரை தன் செய்கையால் சொல்லிக் கொண்டிருந்ததை மாற்றி இங்கே என்னிடம் வா என்று அவள் அழைத்துத் தன் கையிலிருந்த தீ பந்தத்தை அவள் சற்று வேகமாக ஆட்டவும் அதில் தன் நிலை கலைந்தவனோ அவள் தன்னிடம் இங்கே வா என்று சைகையால் அழைப்பதை மட்டும் உணர்ந்து “ஹூ இஸ் திஸ் ஏஞ்சல்?” என்று வாய் விட்டு கேட்ட படி அவளிடம் அவன் நெருங்க

தன் முகத்திலிருந்த துணியின் வாய் பகுதியை மட்டும் ஒதுக்கி

“ஏய் ஏய்.. கொஞ்சம் விரசா வா” என்று கத்தியவளோ அவன் நெருங்கியதும் “என்ன மனுஷன் யா நீ? நல்லா மெத்த படிச்சிட்டு வெளிநாட்டுல இருந்து நீ வந்திருக்கறதால எங்க மொழி புரியாதுனு தான செய்கையிலேயே தூர போனு சொல்லுறன்? நீ என்னனா அப்பவும் மரம் மாதிரி நிக்கற!” என்றவள் அவள் மூட்டிய தீயால் தேனீக்கள் பறக்க ஆரம்பிக்கவும்

அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு காடு மேடு எல்லாம் ஓடியவளோ அவனுக்கு ஒரு இடத்தில் மரக்கிளை தட்டி விட அதில் கீழே விழுந்தவனோ கூடவே சேர்ந்து அவளையும் இழுத்துக் கொண்டு உருள, பிறகு யானையைப் பிடிப்பதற்காக வெட்டி வைத்த அகழியில் தான் இருவரும் சேர்ந்து போய் விழுந்தனர். விழுந்தும் அவள் கையை அவன் விடாமல் பிடித்திருக்கவும் தன் கையை அவன் பிடியிலிருந்து உதறியவளோ

“ஓஹோனானா.. நீ நான் வளர்க்குற செவ்வந்தி (பசு மாடு) கணக்கா நல்லா வெள்ளையா இருக்கியே எங்க அந்த தேனீக்கள் போடுற ஓட்டையில உன் உடம்புக்கு ஏதாவது வந்து நீ கஷ்டப் படப் போறனு இழுத்துட்டு வந்தா என் கையையா புடிக்கற?” என்று எழுந்து நின்று இவள் எகிறவும் இதுவரை அவளை ஒரு தேவதை என நினைத்து இருந்தவனோ இப்போது அவள் குரலில் இவள் தான் முதல் நாள் அன்று மாட்டுக் கொம்புகளுக்கு இடையில் பார்த்த விழிகளுக்குச் சொந்தக்காரி என்று உணர்ந்தவனோ அவள் முகத்தை முழுசாக பார்க்கும் ஆவலில் அவள் முகத்தையே மறுபடியும் மெய்மறந்து பார்த்திருக்க

“என்னையா உன் கிட்ட இதே ரோதனையா போகுது! எப்போ பாரு இப்படியே பார்த்து நிக்கற?” என்றவள் “ஆமா.. உன் கையிலிருந்த பொட்டி எங்க?” என்று கேட்டவள் “சரி சரி.. இங்க தான் எங்கனா காட்டுல இருக்கும். நான் நாளைக்குத் தேடித் தரேன்” என்று பதிலும் அவளே சொல்ல, ஆனால் அதையெல்லாம் அவன் உணரும் தருவாயிலோ இல்லை தன் காமராவைக் காணோம் என்று தேடும் தருவாயிலோ தான் அவன் இல்லையே!

பிறகு மேல எப்படி ஏறுவது என்று பல வழிகளைத் தேடிப் பார்த்தவள் எதுவும் கிடைக்காமல் போக அந்த பள்ளத்தின் விளிம்பில் ஒட்டினார் போல் ஒரு தடித்த மரக்கிளை ஒன்று தாழ்ந்து போய் இருக்க பள்ளத்திலிருந்து எகிறி இரண்டு மூன்று முறை அதைத் தொட நினைத்தவள் அது முடியாமல் போகவும் சோர்ந்து போய் அவனிடம் திரும்பியவள்

“என்னால எகிற முடியல. நீ எட்டி அந்த கிளையைக் கொஞ்சம் இழுத்தா நாம அதையே புடிச்சி சுலபமா ஏறி மேலே போய்டலாம்” என்று இவள் சொல்ல அவனுக்கே ஆச்சரியம் தான். பிறந்ததில் இருந்து தமிழ் மொழியே அறியாதவன் இப்போது தான் இரண்டு மூன்று வருடங்களாக சூர்யாவிடம் பழகி அவன் பேசும் தமிழைத் தான் அதிலும் செய்கையில் சொல்லிக் காட்டும் தமிழைத் தான் என்னவென்று உணர்ந்து இருக்கிறான். இன்று இவளும் அவனைப் போல் செய்கையால் சொல்வதைப் பார்த்து அவளை மெச்சியவனோ அவள் சொன்னபடி எட்டியும் அவன் உயரத்துக்குமே அந்த கிளையைப் பற்ற முடியவில்லை.

பிறகு சுற்றும் முற்றும் பார்த்தவனோ எதுவும் கிடைக்காமல் போக உடனே ஒரு யோசனை தோன்ற தன் வலது கால் முட்டி மண்ணில் பட மடித்து வைத்தவனோ பின் தன் இடது கால் பாதமோ மண்ணில் புதைய அமர்ந்தவனோ அவளை தன் தொடை மீது ஏறி நின்று அந்த கிளையைப் பற்றச் சொல்லி செய்கையால் அவளிடம் சொல்ல

அவன் சொன்னதை உணர்ந்தவளோ தன் விழிகளை அகல விரித்துப் பேய் முழி முழிக்க அகழி போல் விரியும் அவள் விழிகளில் விழுந்தவனோ தன் கண்ணாலேயே ஏறு என்று சொல்ல, இவன் சொன்னதை வேறு யாராவது சொல்லி இருந்தால் இந்நேரம் அடித்து உதைத்து துவம்சம் பண்ணி இருப்பாள் குழலி. சொன்னது ஏ. கே என்பதாலும் அவனின் நோக்கம் வேறு என்பதாலும் இருட்டி விட்டதால் இங்கிருந்து தப்பிப் போனால் போதும் என்று நினைத்தவள் அவன் சொன்ன மாதிரியே அவன் தொடையில் கால் வைத்து ஏற அப்போதும் அந்த குள்ளச்சிக்கு அந்த கிளை எட்டவில்லை.

அதை கீழிருந்து அறிந்தவனோ அவளின் அனுமதி கேட்காமலே சற்றென அவளை இறுக்கிப் பிடித்த படி எழுந்தவனோ அவளைத் தன் நெஞ்சுக்கு மேலே தூக்கி இருக்க அதில் விதிர்விதிர்த்தவளோ மேற்கொண்டு எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்த கிளையைப் பற்றி ஏறியவள் பின் தன் கால்களை அந்தரத்தில் தொங்க விட்ட படி அவள் சரிய இருக்கவும் உடனே அவளிடம் நெருங்கி அவள் வலது பாதத்தை எடுத்து தன் தோளில் வைத்தவனோ ம் மேலே ஏறு என்று சைகை செய்ய சட்டன ஏறி மேலே வந்தாள் குழலி.

ஏறியவள் ஓடிச் சென்று ஒரு கோவில் மரத்தில் கட்டியிருந்த இரண்டு புடவைகளை மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க எடுத்து வந்தவள் அதில் ஒரு முனையை மரத்தில் கட்டி விட்டு மற்றொரு முனையை அவனுக்குக் கீழே போட அதை அவன் பற்றி ஏறி வரவும் அவன் வலு ஏறிய கைகளையே பார்த்தவள்

“பார்க்க தான் யா நீ மண் புழு கனக்கா இருக்க. ஆனா உள்ள என்னமோ சும்மா எங்க ஊர் ஐயனார் கனக்கா இருக்கையா!” என்று அவள் வியக்க 

“ஐயனார்!” என்று அவன் புருவம் உயர்த்த

“அது.. பெரிய கண்ணு, கையில அருவா, பெரிய மீசை” என்று செய்கையில் செய்தவள் அந்த மீசை என்னும் போது மட்டும் அவன் உதட்டின் மேலே தொட்டுக் காட்டி தன் விரல்களால் அவனுக்கு மீசை போல் வரைந்து காட்ட அவனுக்கு அப்போதும் புரியவில்லை

“சரி வா” என்றவள் ஊர் எல்லையில் அவனை விட்டு விட்டுத் தன் குடிசைக்கு வந்தாள் குழலி. இதுவரையுமே அவள் தன் தலையிலும் முகத்திலும் கட்டியிருந்த துணியை விலக்கவே இல்லை.

தன் இருப்பிடம் வந்த ஏ.கே பிறகு தன் நண்பனைத் தூங்க விடாமல் ஐயனார் யார் என்று கேட்டு கூகுளில் தேடித் தெரிந்து கொண்டது வேறு விஷயம்.

அதே மாதிரி இன்னோர் முறை பகலில் அவன் கேமரா லென்ஸ் மூலம் இயற்கையைப் பார்த்து ரசித்து கருவேலங்காட்டின் வழியாக வர, அப்போது குழலியோ அங்கிருந்த சீமக் கருவேல மரத்தை வெட்டிக் கொண்டிருக்க அதைப் பின்புறமாக இருந்து தன் கேமராவில் பார்த்தவனோ யாரோ என்று அசட்டையாக கேமராவை விளக்கும் நேரம் கருங்குழலியோ முகத்தைத் திருப்ப அப்போது அவன் கேமராவில் விழுந்தது அவள் விழிகளே! அதைக் குளோசப்பில் பார்த்தவனோ பின் முழுமையாக அவள் முகத்தை சூம் செய்து இவன் பார்க்க அவனுக்குக் கிடைத்ததோ கிரகண நேரத்தில் அவன் பார்த்து ரசித்த கருப்புச் சூரியனை ஒத்த வட்ட முகம்..

Categories
On-Going Novels Yuvanika

அத்தியாயம் -14

காதல்பனி 14

இரவு கணவனும் மனைவியும் நடத்திய ஊடல் நாடகத்திற்குப் பின் தாமதமாக உறங்கியதால் மறுநாள் பொழுது விடிந்து வெகுநேரம் கழித்துத்தான் சாரா கண்விழித்தாள். நேரமாகி விட்டதால் பதறியடித்து எழுந்தவள் அஷ்வத்தைப் பார்க்க, இவளுக்கு முன்பே எழுந்து குளித்து அவன் தயாராகிக் கீழே இருப்பதை உணர்ந்தவள் தானும் தயாராகிக் கீழே வந்தாள்.

சிறிது நேரத்திலேயே டாக்டர் வந்து பொம்மியின் காலைப் பார்த்து பிளாஸ்டிக் சர்ஜரி வேண்டாம் என்ற பிறகு தான் அஷ்வத்தால் நிம்மதியாக இருக்க முடிந்தது.

ஒரு வார காலத்தில் சாராவுக்குக் கால்கள் சரியாகி விட இத்தனை நாளில் என்ன தான் கணவன் சகஜமாக இருந்தாலும் தனிமையில் முகம் கசந்து போய் அவன் யோசனையிலே இருப்பதைப் பார்த்தவள் அதிலும் தாத்தாவுக்குத் தெரியாமல் கணவன் அதை மறைப்பதைப் பார்த்தவளின் உள்ளமோ உருகி விட்டது.

கணவன் எதை நினைத்துத் துன்பப் படுகிறான் என்று அறிந்தவள் அவன் மனதில் இருக்கும் சஞ்சலத்தைப் போக்க நினைத்துத் தன் உடல் சரியான உடன் அவனை அழைத்துச் சென்று அவன் தாத்தா வளர்ந்த அநாதை இல்லத்தைக் காட்டி அதை அவர் இன்று வரை நடத்தி வருவதாகக் கூறியவள் இனி இது அவன் பொறுப்பு என்றவள் பின் முன்பு ஒருமுறை இந்த ஊருக்குள் மதக் கலவரம் நடக்க ஓரே ரத்தக்காடாக இருந்த ஊரையும் மனிதர்களையும் நல்வழிப் படுத்தியது தாத்தா தான் என்றவள்

ஒருமுறை ஊருக்குள் மழை இல்லாமல் வானம் பார்த்த பூமியாக ஊரே வறண்டு போக அதனால் விவசாயிகள் தற்கொலையில் செத்து மடிய பக்கத்து மாவட்டத்தில் இருந்து தர வேண்டிய தண்ணீர் தராமல் போக மிச்சம் இருக்கும் விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்பாற்ற நினைத்தவர் ஒரு தலைவனாக முன்னிருந்து அரசாங்கத்திடம் போராடி அந்த நீரை அவர் பெற்றுத் தர அதற்கு அவர் அடைந்த அசிங்க அவமானம் இழந்த இழப்புகள் என்று தான் கேள்விப்பட்டதை அனைத்தையும் சொன்னவள்

“அதன் பிறகு முழுக்க அரசாங்கத்தை நம்பி இருக்காமல் ஊரில் உள்ள அனைவரையும் திரட்டி அங்கங்கே குளம் குட்டை என்று வெட்டச் செய்தவர் மழை நீரை மக்கள் எப்படி எல்லாம் சேகரிக்க வேண்டும் என்ற வழி வகைகளையும் கற்றுக் கொடுத்தார். ஆனா அந்த நேரத்துல மட்டும் தாத்தா சுயநலமா தன் வாழ்க்கைய மட்டும் நினைத்து இருந்தார்னா இன்று இந்த ஊர் இவ்வளவு வளம் பெற்று இருக்காது” என்று அவள் சொல்லத் தன் மனைவி என்ன சொல்ல வருகிறாள் என்று அறிந்தவனோ மவுனம் காத்தான்.

அவள் எவ்வளவு எடுத்துரைத்தும் அவன் மனதில் ஏதோ ஒன்று அவனை சகஜ நிலையில் இருக்கவிடாமல் செய்து கொண்டு தான் இருந்தது. அதை அறிந்த அவன் மனையாள் அதையும் போக்கித் தான் தீருவேன் என்ற பிடிவாதத்துடன் இருக்க அதற்கும் நேரம் வந்தது.

ஒருமுறை தாத்தா வீட்டில் இல்லாத பொழுது அஷ்வத்தும் சாராவும் மட்டும் இருக்கும் நேரத்தில் ஒரு வயதானவர் தன் மூன்று வயது பேரனுடன் அவர்கள் வீட்டிற்கு வர அவரைப் பார்க்கும் போதே தெரிந்தது வசதி வாய்ப்பில் மிகவும் ஏழ்மையானவர் என்று. அஷ்வத் அவர்களை உள்ளே கூப்பிட்டு என்ன ஏது என்று கேட்க முதலில் தாத்தாவைக் கேட்டுத் தயங்கியவர் அஷ்வத்தின் பேச்சாலும் அணுகுமுறையாலும் தெளிந்து பிறகு என்னவென்று சொல்ல ஆரம்பித்தார் அவர்.

ஏழ்மையான குடும்பத்திலும் கீழ்ஜாதியில் இருந்து வந்தவரான இவருடைய ஒரே மகன் மேல்ஜாதிப் பெண்ணை விரும்ப அது தெரிந்து பெண் வீட்டார் எதிர்க்க அதில் இருவரும் ஊரை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கண்ணுக்குத் தெரியாமல் வாழ, அதனால் இவரும் இவர் மனைவியுமே தலை மறைவாக வாழ்ந்து வந்துள்ளனர்.

எங்கோ வாழ்ந்த அந்த காதலர்களுக்கும் ஆண் குழந்தை பிறந்த பிறகே அந்தப் பெண்ணின் குடும்பத்தார் கண்ணில் இவர்கள் சிக்கி விட, தன் மகள் என்றும் பார்க்காமல் அவளைக் கொன்றதோடு நில்லாமல் தன் மருமகனையும் பேரனையும் அவள் தந்தை கொல்ல வர அதில் தன் மகன் கத்திக் குத்துப் பெற்று உயிர் பிழைத்துத் தப்பித்துத் தன்னிடம் தன் பேரனை கொண்டு வந்து சேர்த்ததாகவும் அதன் பிறகு தன் மகன் உயிருடன் இல்லை என்றவர்

இன்று தன் பேரனின் உயிருக்காகவும் அவன் எதிர்கால வாழ்வுக்காவும் அந்த அரக்கர்களிடம் தன் மனைவியின் உயிரை பணயம் வைத்து இன்று தானும் தப்பித்து வந்ததாகக் கூறியவர் பின் அமைதி காக்க

அவரே மேற்கொண்டு சொல்லட்டும் என்று அஷ்வத்தும் அமைதி காக்க இதையெல்லாம் அங்கிருந்து கேட்ட பொம்மியோ அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்து கொண்டவள்

“சரி.. அதுக்கு இப்போ என்ன சொல்ல வரீங்க? அதுக்கு இங்க ஏன் வந்து இருக்கீங்க?” என்று முகத்தில் அடித்தார் போல் அவள் கேட்கவும், அந்தப் பெரியவரோ ஏதோ சொல்ல வந்து பின் அமைதியாகி விட அஷ்வதோ தன் மனைவியை வேற்று ஆட்கள் முன் திட்ட மனம் வராமல் ஓர் கண்டிக்கும் பார்வையை அவளிடம் செலுத்த அவன் பார்வையை அலட்சியம் செய்தவள்

“சொல்லுங்க.. இப்போ எதுக்கு இதெல்லாம் எங்க கிட்ட சொல்றிங்க? இதுல நாங்க என்ன செய்ய முடியும்னு நினைக்கிறீங்க? எங்க தாத்தா மூலமா உங்க மகனையும் மருமகளையும் கொன்னவங்கள உள்ள தள்ளணும்னு பார்க்குறீங்களா? அதெல்லாம் எங்களால் செய்ய முடியாது” என அவள் நறுக்குத் தெறித்தார் போல் பேச

“அப்படி எதுவும் எனக்கு வேணா தாயி! அவங்க எல்லாம் பெரிய இடம். அப்படிப் பட்டவங்கள எல்லாம் எதிர்த்துப் போராட என் உடம்பிலையும் வலு இல்ல மனசுலையும் தெம்பு இல்ல. இதெல்லாம் விட நான் பணம் இல்லாத ஏழை மா. ஏழைகளுக்கு நியாயம் என்னைக்குக் கிடைச்சிருக்கு சொல்லு! எனக்கு வேற ஒரு உதவி செய்யணும்..” என்றவர் சற்றுத் தயங்கி மீண்டும் மவுனம் காக்கவும்

“எதுவா இருந்தாலும் சொல்லுங்க ஐயா!” என்று அஷ்வத் அவரிடம் கேட்கவும்

“நான் இப்போ உங்க தாத்தா கிட்ட கேட்க வந்தது எல்லாம் இது ஒண்ணு தான் தம்பி, எந்த மேல்ஜாதிப் பொண்ணக் கல்யாணம் பண்ணதால என் பையனையும் என் மருமகளையும் கொன்னாங்களோ அவங்களுக்கு எதிரா இன்று கீழ்ஜாதில பிறந்த என் வம்சமான என் பேரன் வாழணும். என் வம்சம் தழைக்கணும். அதுக்காகத்தான் இவன ஐயா நடத்துற காப்பகத்துல விட்டுடலாம்னு நினைச்சேன். ஆனா ஐயா கிட்ட சிலது சொல்லணும்னு நினைத்து தான் இங்க வந்தேன். இப்போ உங்க கிட்ட சொன்னாலும் ஐயா கிட்ட சொன்னதுக்கு சமம் தானே அதனால உங்க கிட்டையே சொல்லிடுறேன்.

இவனக் கொல்ல அந்த அரக்கக் கூட்டம் எப்படியாவது வரும். அதனால என் பேரனை இங்கே வைத்திருக்காம ஏதோ ஒரு தேசத்துல யாரோ முகம் தெரியாதவங்க குழந்தைக்காக ஏங்கி நிற்கறவங்களுக்கு என் பேரனைத் தத்துக் கொடுத்திடுங்கையா. அவன் உயிருக்காக மட்டும் இதைச் சொல்லலை. என் பேரன் எங்கு இருந்தாலும் ஒரு குடும்பமா இருப்பானே என்ற ஆசையிலும் சுயநலத்திலும் தான் இதைக் கேட்டுக்கிறேன்” என்று நைந்த குரலில் சொல்லி அவர் பேரனைக் கட்டிக் கொண்டு கண்ணீர் விட

“நீங்க இப்படி செய்யுறதுனால உங்க பேரனுக்கு நீங்க எவ்வளவு பெரிய துரோகம் செய்றீங்கனு தெரியுமா?” என்று உடனே சாரா கேட்க

“இதுல என்ன மா துரோகம் இருக்கு?”

“பின்ன? அப்பா அம்மா தான் அவனுக்கு இல்ல. தாத்தா வான உங்க மூலமா அவனுக்குக் கிடைக்க வேண்டிய பாசத்தைக் கொடுக்காம போனா எப்படி? அப்போ அது துரோகம் இல்லையா?”

“அவன் என் கிட்ட இருந்தா தான் அவன் உயிருக்கே ஆபத்தாச்சே!”

“அவன் உயிருக்கு ஆபத்து என்றதால தான் நீங்க இதை செய்றீங்க. ஆனா நாளைக்கு உங்க பேரன் வளர்ந்து வந்து உங்க தியாகத்தையும் பாசத்தையும் புரிஞ்சிக்காம அன்னைக்கே என்னை அவங்க கிட்ட சாக விட்டு இருக்கலாமே! ஏன் இப்படி என்னை அநாதையா வளர விட்டீங்கனு கேட்டு உங்களை வெறுத்து ஒதுக்கினா என்ன பண்ணுவீங்க?”

“அப்படி ஒருக்காலும் என் பேரன் நினைக்க மாட்டான். இப்படி சூழ்நிலைக் கைதியா நான் நின்று என் உயிரே பிரியற நிலையில தான் இதைச் செய்தேனு அவன் புரிஞ்சிப்பான். அப்படியே என்னை வெறுத்தாலும் பரவாயில்ல. அவன் எங்கேயோ உயிரோட நல்லா இருப்பான் இல்ல? எனக்கு அது போதும் தாயி”

“நீங்க சொல்லுறது எதுவும் சரி வராது. வேணாம்.. நீங்க உங்க பேரனை இங்கிருந்து கூட்டிட்டுப் போங்க” என்று சாரா முடிவாக சொல்லி விட

அஷ்வத்தோ அந்தக் குழந்தையை எங்கு எப்படி பாதுகாப்பாக வளர்க்கலாம் என்றும் தனக்குத் தெரிந்த குழந்தை இல்லாத வெளிநாட்டுத் தம்பதியிடம் தத்துக் கொடுத்து வளர்க்கச் சொல்லலாமா இல்லை தான் நடத்தும் ஹோமிலேயே வளர்க்கலாமா என்று பலவாறு அவன் யோசித்துக் கொண்டிருக்க மனைவி சொன்னது எதையும் அவன் காதில் வாங்காததால் அவர் குழந்தையுடன் வெளியே செல்வதைப் பார்த்தவன்

“நில்லுங்க ஐயா! நீங்க சொல்ற மாதிரி உங்க பேரன் வளர்வதுக்கு நான் பொறுப்பு. அதுவும் அவன் உயிருக்கு ஆபத்து வராத இடமா பார்த்து வெளிநாட்டுல அவன் வளர நான் பார்த்துக்கிறேன். நீங்க உங்க பேரனை இங்கே விட்டுட்டு போங்க” என்று அவன் அவருக்குத் தைரியம் சொல்ல, அவரோ பொம்மியை தயக்கத்துடன் ஒரு பார்வை பார்க்கவும் உடனே அஷ்வத்

“பொம்மி! போ போய் அவர் கிட்டயிருந்து அந்தக் குழந்தையை வாங்கு” என்று மனைவிக்கு கட்டளை இடவும் 

கணவனின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் அவள் அந்தக் குழந்தையை வாங்க அந்தப் பெரியவரோ சந்தோஷத்தில் பேரனை நீட்டியவர் பின் தன்னிடமே அவனை இறுக்கிக் கொண்டு அவன் முகம் எங்கும் முத்த மழை பொழிந்தவர்

“இந்த தாத்தாவ நீ ஒரு நாள் புரிஞ்சிக்குவே டா” என்றவர் அவனை பொம்மியிடம் கொடுத்து விட்டுத் திரும்பியும் பார்க்காமல் அந்த இடத்தை விட்டுக் கண்ணீருடன் சென்றார் அந்த பெரியவர்.

அவர் சென்றதும் மனைவிடம் திரும்பியவன் அவள் குழந்தையை வேலையாட்களிடம் கொடுத்து விட்டு மேலே தங்கள் அறைக்குப் போவதைப் பார்த்தவனோ பின்னோடே இவனும் சென்று

“என்ன ஆச்சு உனக்கு? ஏன் அந்தக் குழந்தையைக் கூட்டிட்டு போகச் சொன்ன?” என்று மனைவியைக் கேட்க

“பின்ன.. வேற என்ன செய்யச் சொல்லுறீங்க? தாத்தாவையும் பேரனையும் பிரித்த பாவம் நமக்கு வேணாமேனு நினைச்சேன். அதுவும் இல்லாம நாளைக்கு அந்த பையன் வளர்ந்து இப்படி நமக்குத் தாத்தா துரோகம் செய்துட்டாருனு வருந்த மாட்டானா இல்ல அவரை தான் வெறுக்க மாட்டானா அப்புறம்….” அவள் முடிக்கக் கூட இல்லை

“நீ சொல்ற மாதிரி எல்லாம் செய்ய மாட்டான். அவன் உயிருக்காகத் தான் தன் தாத்தா இப்படி செய்தார் என்றதை அவனும் புரிஞ்சிக்குவான்”

“அந்த தாத்தாவுக்கு நீங்க சப்போர்ட்டா? அப்ப அவர் செய்யுறது துரோகம் இல்லைனு சொல்லுறீங்களா?” என்று மனைவி கூர்மையுடன் கேட்கவும்

“பின்ன இல்லையா? அவன் உயிரைக் காப்பாற்ற அவர் செய்யும் இந்த செயல் எப்படி துரோகமாகும்?” என்று அவனிடமிருந்து அம்பென வார்த்தைகள் வரவும், கணவனை நேருக்கு நேர் பார்த்துக் கேட்க மனம் வராமல் அவனுக்கு முதுகு காட்டித் திரும்பி நின்றவளோ 

“அப்போ ஏன் மச்சான் உங்க தாத்தா செய்தத மட்டும் துரோகம்னு நினைக்கிறீங்க? அவரும் இதைத் தானே செய்தார். நீங்க என்ன தான் அவர் கிட்ட அன்பா பேசி அவருக்கு வேண்டியதை பார்த்துப் பார்த்துச் செய்தாலும் எங்க கிட்ட எல்லாம் சகஜமா இருந்தாலும் நீங்க மட்டும் ஏன் மச்சான் இன்னும் பழசையே நினைத்து உள்ளுக்குள்ளே மறுகுறீங்க? அப்படி உங்கள என்னால பார்க்க முடியல….” மேற்கொண்டு எதையும் சொல்ல விடாமல் அவளைப் பின்புறமாக இறுக்கி அணைத்திருந்தான் அவள் கணவன்.

தன் வார்த்தைகளைக் கொண்டு தன்னையே மடக்கியத் தன் மனைவியை உள்ளுக்குள் மெச்சியவன் அதை விட ஒரு தாயைப் போல் தன் முகம் அறிந்து தன் மன உளைச்சலைப் போக்க நினைத்தவளின் தோளில் தன் முகம் புதைத்தவனோ 

“நீ என் அம்மாவா டா?!” என்று தொண்டை அடைக்கக் கரகரத்த குரலில் தன் உயிரே வதைப்படும் வேதனையைக் குரலில் கேட்டவன் கூடவே சூடான கண்ணீரை அவள் தோளில் நனைக்கவும் துடிதுடித்துப் போனாள் பொம்மி. அதை விட இதுவரை தன்னைத் தன் கணவன் ஒரு பொருட்டாவே எண்ணியதில்லையே என்று அவள் நினைத்ததற்கு மாறாக தன்னைக் கணவன் தன் தாய் இடத்தில் வைத்திருப்பதை உணர்ந்தவள் திரும்பி அவன் முகம் தாங்கி அவன் கண்ணீரைத் துடைத்து விட்டவள் அவனை அழைத்துச் சென்று கட்டிலில் அமர வைத்து தன் மடி தாங்க, தன் கோபம் வருத்தம் என அனைத்தையும் அவள் வருடலிலும் அவள் மடி சாய்தலிலும் தன் மனப் போராட்டங்கள் அனைத்தையும் தொலைத்தான் அவன்.

அதன் பிறகும் பழைய விஷயங்கள் அவனுக்கு ஞாபகம் வராமல் இல்லை. அப்படியே வந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தான் முன்பு இழந்ததற்கும் சேர்த்து இப்போது சுற்றி இருப்பவர்களுடன் வாழ நினைத்தான் அஷ்வத்.

வாழ்க்கை அதன் போக்கில் செல்ல இப்போதெல்லாம் ஊர் விஷயமாக இருந்தாலும் சரி தாத்தா நடத்தி வரும் எந்த ஒரு பொது விஷயமாக இருந்தாலும் சரி அஷ்வத்தே முன்னிருந்தான். அந்த அனுபவங்கள் அனைத்தும் அவனனுடைய மன மாற்றத்துக்கு வழி வகை செய்தது.

ஒருமுறை சற்றுத் தூரத்து உறவினர் வீட்டில் பிறந்த குழந்தையைத் தொட்டிலில் இட்டு பெயர் சூட்டும் விசேஷத்திற்கு பொம்மியும் சின்னாவும் சென்றிருக்க, விழா முடிந்த பிறகும் அந்தக் குழந்தையைப் பொம்மி விடாமல் வைத்திருக்க அதை ஒரு சில பெருசுகள் மறைமுகப் பேச்சுப் பேசினாலும் கண்டு கொள்ளாமல் பொம்மியிடமே விட்டிருந்தாள் அந்தக் குழந்தையின் தாய். அழகாக தங்கச்சிலை என இருந்த அந்தப் பெண் குழந்தை தூங்கிய பிறகு கூட பொம்மி தன் மடியில் வைத்திருக்கவும் அதைப் பார்த்த அந்தக் குழந்தையின் தாய்

“ஏன் அண்ணா, இன்னும் எவ்வளவு நாளைக்குத் தான் குழந்தையப் பெத்துக்காம தள்ளிப் போடப் போறீங்க? எனக்கு என்னமோ மதனி குழந்தையை வைத்திருக்கிறதப் பார்த்தா அவங்களுக்கு இப்பவே பெத்துக்க எண்ணம் தான் போல! நீங்க தான் தள்ளிப் போடுறீங்களோ?!” என்று அஷ்வத்திடம் துடுக்காக கேட்க, திடீர் என்று இப்படிக் கேட்டதில் அவனுக்கே என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவன் மனைவியைப் பார்க்க அவளுக்கும் வாய் திறந்து பதில் சொல்ல முடியாத நிலை தான்!

முன்பு எப்படியோ! ஆனால் இப்படி பால் சதையுடன் அழகாக குண்டு கன்னங்களுடன் இருக்கும் குழந்தையைப் பார்த்ததிலிருந்து அந்தப் பெண் சொல்வது போல் பொம்மிக்குள் ஒரு இனம் புரியாத மாற்றம் தான் மனதில். ‘இப்படி ஒரு குழந்தையை நாம் எப்போது சுமப்போம்?’ என்ற ஏக்கம் தான் அவளுக்கும் தோன்றியது.

அந்த ஏக்கம் மனைவியின் முகத்திலும் கண்ணிலும் வழிவதைப் பார்த்தவன் அதன் பிறகு ஒரு வினாடி கூடத் தன் பார்வையை விலக்காமல் அவளையே விழுங்குவது போல் அவன் பார்த்திருக்க, கணவனின் பார்வையைப் பார்த்தவளோ இன்னும் தடுமாறிப் போனாள் பொம்மி. அண்ணனின் விழுங்கும் பார்வையும் அதற்கு மதனியின் தடுமாற்றத்தையும் பார்த்த அந்தப் பெண்ணோ 

“என்ன மதனி, அண்ணன் உங்களைப் பார்க்கிற பார்வையப் பார்த்தா இன்னைக்கே குழந்தைக்கு அச்சாணி போட்டுடுவீங்க போல!” என்று பொம்மியின் காதில் ரகசியமாய் சொல்ல, வெட்கத்தில் முகம் சிவந்தவளோ கணவனை ஏறெடுத்துப் பார்க்க முடியாமல் இன்னும் தடுமாறிப் போனாள் பொம்மி.

அங்கிருந்து காரில் வீட்டுக்கு வந்து இங்கேயும் அதே கண்ணாமூச்சி தொடர, இரவு வெகுநேரம் கடந்து அவன் தூங்கின பிறகே இவள் மேலே தங்கள் அறைக்கு வந்தவள் கதவுக்கு தாழ்பாள் போட்டு விட்டு அவள் திரும்பும் நேரம் விளக்கை போட்டு விட்டு சட்டென்று அவளைத் தன் தலைக்கு மேலே தூக்கியிருந்தான் அஷ்வத்.

கணவன் தூங்கியிருப்பான் என்று நினைத்தவள் இப்படி அவன் தாக்குதலில் தடுமாறிப் பின் தன் கால் கொலுசும் கை வளையலும் சிணுங்க அவன் முடியை வலிக்காமல் தன் இரு கைகளால் பற்றியவள்

“என்னங்க இது விளையாட்டு? என்னைக் கீழே விடுங்க..” என்று அவள் சிணுங்க அப்போது பார்த்து அவள் புடவை விலக கிடைத்த இடைவேளையில் அவள் வெற்று வயிற்றில் தன் முகத்தை வைத்து இப்படியும் அப்படியுமாக புரட்டியவனோ இறுதியாக ஒர் முத்தத்தை அவள் வயிற்றுக் குழியில் பதிக்கவும் தன் சிணுங்களைக் கை விட்டு மொத்தமாக அவனிடம் அடங்கிப் போனாள் பொம்மி.

ஓர் முத்தத்திலேயே மனைவியின் மனநிலையை அறிந்தவனோ சின்னச் சிரிப்புடன் அவளைத் தூக்கிச் சென்று கட்டிலில் கிடத்தி தன் முத்தத்தால் அவள் முகமெங்கும் ஓவியம் தீட்டியவன் சட்டென்று கீழிறங்கி தன்னவள் வயிற்றிலேயே மீண்டும் முகம் புதைத்து நீண்ட ஆழ்ந்த முத்திரை ஒன்றை வைக்கவும்

மேல் கொண்டு நடக்கப் போவதை உணர்ந்தவளோ “மச்சான் வெளிச்சமா இருக்கு பாருங்க..” என்று அவனிடம் மிகவும் பலவீனமான குரலில் நினைவு படுத்த, சட்டென்று நிமிர்ந்தவனோ

“வெளிச்சம் இருந்தா என்ன டி?” என்று கேட்க வெட்கத்துடனும் ஒருவித எதிர்பார்ப்புடனும் பொம்மியோ விழிகளை மூடிக் கொள்ளவும், அவள் விழிகள் இரண்டின் மேலும் தன் இதழ் பதித்தவன்

“இன்னைக்கு எதுவும் நடக்காது பேசாம தூங்கு” என்று சொல்லி அவள் தலை கோதி விட

‘ஐயையோ! இவர் திரும்பவும் என்னை ஒதுக்க ஆரம்பிச்சிட்டாரோ?!’ என்று யோசித்தவள் கணவனின் வார்த்தையில் கலவரத்துடன் அவன் முகம் பார்க்கவும்

“அடியேய்.. எதுக்கு இந்த பயம்? நான் இன்னைக்குத் தான் வேண்டாம்னு சொன்னேன். எப்பவுமே வேண்டாம்னு சொல்லலையே? இன்னும் இரண்டு நாள்ல பாரீஸ்ல நமக்கு ரிசப்ஷன் பார்ட்டி வைத்திருக்கேன். அது முடிச்சிட்டு நேரா நம்ம ஹனிமூனுக்கு சுவிட்சர்லாந்து போறோம். அங்கே வைத்துத் தான் நம்ப வாழ்க்கையே நாம ஆரம்பிக்கப் போகிறோம்” என்று அவன் முடிக்க

தான் ஒன்று நினைத்து கலங்கியதை தன்னவன் வேறு விதமாக எடுத்துக் கொண்டாலும் அதை வெளிப்படுத்தாமல் ‘பின்ன எதுக்கு டா இப்படி எல்லாம் பண்ணின?’ என்று கண்களால் கேட்டவள் செல்லக் கண்டிப்புடன் அவன் தலையில் வலிக்காமல் கொட்ட, அவள் கேள்வியை அறிந்து வாய் விட்டுச் சிரித்தவனோ

“காலையில் இருந்து ஒரு மார்க்கமாவே பார்க்குறியா அதான் சும்மா உன்னைச் சீண்டிப் பார்க்கலாம்னு தான் டி.. உண்மையிலே உனக்கும் விருப்பம் இருக்கானு கன்பர்ம் பண்ணிக்கத் தான்..” என்றவன் “அப்பறம் என்ன சொன்ன? வெளிச்சமா இருக்கா? அங்கே ஹனிமூன் வந்து பாரு.. நமக்கான உலகமாய் நம்ம காட்டேஜ்ல இரவு பகல் நேரங்காலம் இல்லாம மழை வெயில் குளிர்னு எந்த காலநிலையையும் பொருட்படுத்தாம இன்னும் சொல்லப் போனா வெளியுலகத்துல என்ன நடக்குதுனே தெரியாத அளவுக்கு நீயும் நானும் ஓருடல் ஈருயிர் அளவுக்குத் தனிமையில இருக்கப் போறோம். அப்ப அங்க எதுக்குமே நீ எந்த மறுப்புமே சொல்லக் கூடாது நான் கொடுக்கற டிரஸ்ஸ போட்டுகிட்டு நான்..”

சட்டென அவன் வாயைத் தன் விரலால் அவள் மூடவும் கண்ணில் குறும்பு வழிய அவள் விரல்களை வலிக்காமல் கடித்தவனோ

“இன்னைக்குப் பார் உன் மச்சான் முத்தத்தாலே உன்னைப் பாடாய் படுத்தப் போறேன்” என்று காதல் வழிய சொன்னவனோ உண்மையிலேயே மனைவியை முத்தத்தால் முக்குளிக்கத் தான் வைத்தான் அஷ்வத்.

தாத்தாவிடம் சொல்லிக் கொண்டு தான் சொன்ன மாதிரியே தன் மனையாளைப் பாரீஸ் அழைத்துச் சென்றவனோ, அங்கு தன் நண்பன் ஸ்டீவிடமும் அவன் குடும்பத்தாரிடமும் தன் மனைவியை அறிமுகப்படுத்தியவன் அவர்களுடன் ஒரு நாளை சந்தோஷத்துடன் செலவழிக்க அவர்கள் ஆசைப்படி நீச்சல்குளம் சென்று குழந்தைகளுடன் இறங்கி ஆட்டம் பாட்டத்துடன் கும்மாளமிட்டு அந்நாளை சந்தோஷமாகக் கழித்தார்கள்.

அஷ்வத் ஏற்பாடு செய்திருந்த ரிசப்ஷன் நாளும் இனிதே விடிய தன் நண்பர்களுக்கும் தொழில் துறையினர் அனைவருக்கும் தன் மனைவியைச் சிரித்த முகமாக அறிமுகப் படுத்தியவன் அப்போது கூட்டத்தில் ஒருவனின் முகத்தைப் பார்த்த போது மட்டும் சற்றுத் தடுமாறியவனோ மனைவியின் தோள் மேலிருந்து பட்டனெ தன் கையை எடுத்து விட்டு கூட்டத்தைச் சகஜமாக எதிர் கொள்வது போல் அவன் இருக்க மேடை ஏறி அவனிடம் வந்த அந்த புதியவனோ அஷ்வத்திடம்

“என்ன ஏ கே.. எப்படி இருக்க? எனக்கு சொல்லாமலே ரகசிமா கல்யாணம் எல்லாம் பண்ணி கிட்ட போல நீ! இருந்தாலும் நான் வந்துட்டேன் பார்த்தியா?” என்று கேட்டவன் பின் சாராவிடம் “ வணக்கம் சகோதரி என் பெயர் சூர்யா! உன் கணவனோட உயிர் நண்பன்” என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான் அவன்.

அதன் பிறகு விழா முடியும் வரை பேருக்காக மனைவியிடம் பேசியவனோ வீட்டுக்கு வந்த பிறகு அந்தப் பேச்சுமே இல்லாமல் அவளிடமிருந்து ஒதுங்கி விட, கணவனின் ஒதுக்கத்தை சரி வர உணராமல் தூங்கி எழுந்தவளோ நேரத்தைப் பார்க்க அதுவோ இவர்கள் இந்நேரம் விமானத்தில் சுவிட்சர்லாந்தை நோக்கிப் பறக்க வேண்டியதைக் காட்ட ‘ஐயோ! பட்டப்பகல்ல இவ்வளவு நேரமா தூங்கிட்டோம்? அவர் வேற இன்று நைட்டே சுவிட்சர்லாந்துல இருக்கணும்னு சொன்னாரே?!’ என்று கணவனைக் காணாமல் சுற்றும் முற்றும் தேடியவள் பின் இறுதியாக அவன் கெஸ்ட் ரூமில் தனக்கு முதுகு காட்டி நிற்பதைப் பார்த்தவள் உள்ளே சென்று அவனைப் பின்புறமாக அணைத்து 

“சாரி மச்சான்.. டயர்ட்ல தூங்கிட்டேன். நீங்களாவது எழுப்பி இருக்கலாம் இல்ல? இப்போ நாம வேற ஃப்ளைட் அரேன்ஜ் பண்ண முடியாதா? அங்க போன பிறகு உங்க கிட்ட நான் ஒன்னு சொல்லணும்னு இருக்கேன்?” என்று அவன் தோள் சாய்ந்து கொஞ்ச, அணைத்த அவள் கைகளைத் தன்னிடமிருந்து விலக்கியவனோ

“எங்கே?” என்று அவள் முகம் பார்க்காமல் ஒற்றை வார்த்தையாக அவன் கேட்க, அவன் முன் வந்து நின்றவளோ சின்னச் சிரிப்புடன் அவன் முகம் பார்க்காமல்

“நீங்க சொன்ன சுவிட்சர்லாந்துக்குத் தான்” என்று சொல்ல

“அதெல்லாம் போக வேணாம்”

“ஏன்?” என்று அவள் அவன் முகம் பார்க்க, அவள் முகத்தை நேருக்கு நேர் கண்டவனோ ஒருவித இறுகிய தன்மையுடன்

“எனக்கு உடம்பு சரியில்ல பொம்மி. நாம போக வேணாம்” என்று அவன் கூற

“அச்சோ! என்னங்க என்ன ஆச்சு உடம்புக்கு? என்ன பண்ணுது?” என்று அவள் பதற

“ஒண்ணும் இல்ல.. லேசா தலைவலி தான்”

“நான் வேணும்னா தலை பிடித்து விடவா? என்று கேட்டவள் அவனை நெருங்க, அவளை விட்டு ஓர் அடி பின்னே நகர்ந்தவனோ 

“அதெல்லாம் வேண்டாம்.. லேசான வலி தான்”

“அப்ப இருங்க.. சூடா டீ போட்டு எடுத்துட்டு வரேன். அதைக் குடிச்சா தலை வலி போகும்” என்றவள் அவன் பதிலுக்குக் காத்திராமல் ஓடிப் போய் டீ போட்டு எடுத்து வந்து கட்டிலில் அமர்ந்து இருந்தவன் முன் பதட்டததுடன் கொடுக்க ஏதோ நினைவில் அவன் வாங்க இருவர் கையிலும் இல்லாமல் அந்த டீ கப்போ அவன் மேல் சரிந்து சூடான டீ கொட்டி விட 

“ஐயோ! சாரிங்க சாரிங்க.. சூடா கொட்டிடுச்சே!” என்றவள் “அந்த டீ ஷர்ட்டைக் கழட்டுங்க” என்று சொல்ல

“ஒண்ணும் கழட்ட வேணாம்.. நீ போ முதல்ல” என்று அஷ்வத் சிடுசிடுக்க

“நீங்க கழட்டுங்க நான் அதை அலசிப் போடுறேன்” என்று பொம்மி பிடிவாதம் செய்ய

“அது தான் வேணாம்னு சொல்றேன் இல்ல? நீ போ நான் அலசிக்கிறேன்” என்று அவன் மீண்டும் காட்டமாகப் பேச, அப்போதும் அவள் அங்கேயே நிற்கவும்

“அதான் உன்னைப் போனு சொல்றேன் இல்ல? போ டி..” என்று அவன் கொஞ்சம் பதட்டத்துடன் டென்ஷன் ஆகிக் கத்தவும்

‘இவர் ஏன் இந்த சின்ன விஷயத்துக்கு இப்படி டென்ஷன் ஆகிறார்?’ என்று அவள் யோசிக்கும் போதே பதட்டத்தில் அவனையும் மீறி முகம் வியர்க்க அவன் கைகள் நடுக்கத்துடன் அவன் நெஞ்சுப் பகுதியை இறுக்கி இறுக்கிப் பிடிப்பதைப் பார்த்தவளோ

‘இவர் உடம்புக்கு ஏதோ பிரச்சினையோ? எங்க நான் அதை தெரிஞ்சிக்கப் போறேனு தான் இப்படி எல்லாம் பதட்டப் படுறாரோ?’ என்று நினைத்தவள், உடனே அவனை நெருங்கி

“நீங்க ஒண்ணும் செய்ய வேண்டாம் நானே செய்றேன்” என்றவள் அவன் டீ ஷர்ட்டின் பட்டனைக் கழற்றுவதற்காகக் சட்டையில் கை வைக்க

“வேண்டாம்!..” என்ற கூக்குரலுடன் அவள் கையைத் தட்டி விட்டவனோ அதே வேகத்துடன் அவள் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டான் அஷ்வத். அவள் கண் கலங்கி அப்படியே ஸ்தம்பித்துப் போய் நிற்கவும்

“உனக்கெல்லாம் ஒரு தடவை சொன்னா புரியாது? போடினு தானே சொல்றேன்? பிறகு ஏன் நிற்கற? போடி இங்கிருந்து!” என்று மறுபடியும் அவன் கர்ஜிக்க, வாங்கிய அடியைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் அவள் அப்படியே அசராமல் நிற்கவும், மனைவியின் முகத்தில் ஒருவித பிடிவாதத்தைப் பார்த்தவன் 

“நான் சொல்றது கேட்காம இன்னும் ஏன் டி இங்கேயே நிற்கிற? என் வீட்டை விட்டுப் போ டி!” என்று அவன் நிதானமே இல்லாமல் வார்த்தைகளை நெருப்பெனக் கொட்ட, அவளோ மிகவும் நிதானமாக

“நான் ஏன் போகனும்? இது என் வீடு. நான் இங்கே தான் இருப்பேன்” என்றவள் அதே இடத்திலேயே கால் மாற்றி நிற்கவும்

“என் வீடு எப்படி டி உன் வீடு ஆக முடியும்?”

“ஏன்னா நான் உங்க மனைவி நீங்க என் கணவன். அதனால இது என் வீடு தான்”

“உன்னைத் தான் நான் என் மனைவியாவே ஏத்துக்கலையே! பிறகு நீ எப்படி என் மனைவி ஆக முடியும்?” என்று அவன் சீறிப் பாய, அவள் எந்த பதிலும் கொடுக்காமல் அமைதியாகவே இருக்கவும்

“சரி இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்க. நீ இங்கே இருக்கக் கூடாது. உன் கிட்ட பேசவோ ஏன் உன் முகத்தைப் பார்க்கக் கூட எனக்குப் பிடிக்கலை. அதனால என்னை விட்டு இந்த வீட்டை விட்டு என் வாழ்க்கைய விட்டுப் போ டி” என்று அவன் வார்த்தைகளைக் கத்தி என வீச

“ அப்போ எதுக்கு என்னைக் கல்யாணம் பண்ணீங்க?” என்று சாரா அமைதியாகக் கேட்க

“அது தான் நான் முன்னாடியே சொல்லி இருக்கேனே, எனக்குத் தேவையானது உன் கிட்ட இருக்குனு! உன் விழிகளுக்காகத் தான் நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இப்பவும் எனக்கு அது தான் வேணும்”

“ஓ… அப்படியா? அப்போ நான் உயிரோட இருக்கும் போதே உங்களுக்குச் சொந்தமான இந்த விழிகளை உங்க கிட்டவே கொடுத்திட்டு உங்கள விட்டு நான் போய்டவா?”

“அம்மா தாயே.. முதல்ல அதை செய் டி!”

“நீங்க எதைக் கேட்குறீங்கனு தெரிஞ்சி தான் கேட்குறீங்களா?”

“ஆமாம் தெரிஞ்சி தான் கேட்கிறேன்”

“அப்போ அதற்கான நேரம் காலம் வரும்போது சொல்லி அனுப்புறேன், வந்து வாங்கிக்கங்க” என்றவள் 
“இப்போ நான் போறவ என்ன ஆனாலும் என்ன நடந்தாலும் திரும்ப நான் இங்க வருவேனு மட்டும் நினைக்காதிங்க. குட் பாய் மிஸ்டர் அஷ்வத் கென்டிரிக்!” என்றவள் அவனைத் திரும்பியும் பாராமல் அந்த வீட்டை விட்டு வெளியேறினாள் சாரா.

“நானும் உன்னைத் தேடி வரவே மாட்டேன் போ டி” என்றவன் கண்ணில் நீர் மல்க எதிலிருந்தோ தப்பித்தவன் போல் அப்படியே கட்டிலில் அமர்ந்து விட்டான் அஷ்வத்.

மனைவியைத் தேடி வரவே மாட்டேன் என்றவன் அடுத்த நாளே அவளைத் தேடி தஞ்சாவூர் வந்து அவள் முன் தங்களுக்கான விவாகரத்துப் பத்திரத்தைக் கொடுத்து அவளைக் கையெழுத்துப் போடச் சொல்ல, எந்தச் சலனமும் இல்லாமல் அதை வாங்கியவள் கூடவே அவன் நீட்டிய பேனாவை வாங்கி கையெழுத்து இட்டாள் இந்தச் சின்னாவின் பொம்மி!..

Categories
On-Going Novels Yuvanika

அத்தியாயம் – 13

காதல்பனி 13

அவர்கள் அந்த வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் தன் மனைவி தன்னிடம் எதுவும் பேசாததால் அவள் முகத்தை அடிக்கடி பார்த்தவன் பின் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தி

“ஏன் பொம்மி உனக்கு விருப்பம் இல்லாமல் தாத்தாவுக்காகவும் கடமைக்காகவும் தான் என்னைக் கல்யாணம் பண்ணியா? அப்போ உன் மனசுல காதலனா கணவனா நீ அடிக்கடி சொல்ற உன் மச்சானா நான் எப்போதும் இருந்ததே இல்லையா? சரி இதெல்லாம் கூட வேண்டாம், ஒரு நண்பனாகக் கூடவா நீ என்னை நினைக்கல? அந்த வீட்டுக்கு நீ போனாலே உன்னை என்னவெல்லாம் பாடு படுத்துவாங்க என்று தெரிந்திருந்தும் ஏன் டி என் கிட்ட எதுவும் சொல்லாம கிளம்பி வந்த?

அங்க போய் அவ்வளவு அடி வாங்கினதைக் கூட என் கிட்ட சொல்லாம மறைச்சிட்டியே டி! நீ தூக்கத்துல உளறி உன் காலை நான் பார்த்த பிறகு நான் எவ்வளவு துடித்துப் போனேன் தெரியுமா டி? அதை விட நீ சொல்லாம மறைச்சது தான் என்னை அதிகமாகவே உடைய வைச்சிடுச்சு. நிஜமாகவே மனசு ரொம்ப ரணமாகிடுச்சி டி பொம்மி எனக்கு!” என்று கணவன் முகம் கசந்து போய் கண்கள் கலங்க சொல்லவும் அவளுக்கே ஒரு மாதிரி ஆகி விட்டது.

‘சொல்லு சொல்லுனா நான் என்னனு சொல்ல? எனக்கு ஏதாவது ஒன்னு என்றால் துடித்துப் போறாரு அன்பா பார்த்துக்கிறார் சரி. ஆனால் இன்று வரை உன்னை விரும்புகிறேனு சொல்லவே இல்லையே?! அன்று கூட எனக்கு உன் மேல காதலே வராதுனு இல்ல சொல்லிட்டுப் போனாரு! பிறகு எப்படி நான் இவர் கிட்ட என் சுக துக்கத்தைப் பகிர்ந்துக்க முடியும்?’ என்று பலவற்றை நினைத்து மனதால் நொந்தவள் திடீர் என்று ஞாபகம் வர

‘ஆமா, இவர் தான் சக்கரவர்த்தி தாத்தாவோட உண்மையான பேரன் என்கிற உண்மையை அந்தப் பாட்டி போட்டு உடைச்சிடுச்சே! பிறகு ஏன் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட இவர் கேட்கல? ஏன் அவர் முகத்துல கூட எந்த வித மாறுதலையுமே இவர் காட்டல? ஏன் இதை என்கிட்ட மறைச்சனு திட்ட கூட இல்லையே! ஏன்?’ என்று நினைத்துக் கொண்டு அவள் கணவன் முகம் பார்க்க அவனோ இறுகிய முகத்துடன் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். 

தாத்தா வீட்டின் முன் காரை நிறுத்தியவன் இறங்கி சாராவை தூக்கிக் கொண்டு உள்ளே நுழையவும், வெளி வாசலிலேயே நின்றிருந்த தாத்தா பதட்டத்துடன் வியர்க்க விறுவிறுக்க அவனிடம் ஓடி வந்தவர்

“என்ன சின்னா என்ன ஆச்சி?” என்று கேட்க, உடல்நிலை சரியில்லாத நிலையில் அவர் பதட்டப்படுவதைப் பார்த்தவன்

“ஒன்றும் இல்ல நீங்க ஒரு இடமா பேசாம உட்காருங்க” என்று அஷ்வத் அவரிடம் எரிந்து விழ, அதில் அவர் முகமோ குழந்தை என சுருங்கிவிட்டது. சாராவைத் தன் அறைக்குக் கொண்டு வந்து அவளைக் கட்டிலில் படுக்க வைக்க

“ஏன் தாத்தா கிட்ட இப்படி கோபமா பேசுறிங்க?” என்று சாரா கேட்க

“….. “ அவனோ மவுனமாக அவளுக்கு வேண்டியதைச் செய்ய

“உங்களைத் தான் கேட்கிறேன். நீங்க அப்படிப் பேசினதும் சின்னக் குழந்தை மாதிரி அவர் முகம் எப்படி சுருங்கிப் போய்டுச்சு தெரியுமா?”

அப்போதும் அவன் மவுனமாகவே அவள் காலுக்குக் கீழே தலையணைகளைக் கொடுத்து அவள் சற்று சாய்ந்து அமர உதவி செய்ய, அவன் கையை இறுக்கிப் பற்றியவள்

“என் மேல என்ன கோபம் இருந்தாலும் அதை என்கிட்ட காட்டுங்க. பிளீஸ் தாத்தாகிட்ட எதுவும் வேண்டாம். அப்புறம் அவருக்கு ஏதாவது உடம்புக்கு ஒன்னு கிடக்க ஒன்னு வந்துடப் போகுது” என்று அவள் கெஞ்ச

“பேசாம உன் வேலையைப் பார்த்துகிட்டு போடி. அவர் உனக்கு தாத்தாவா இருக்கும் போதே நான் அவருக்குக் கஷ்டம் கொடுத்தது இல்ல. இப்போ என் தாத்தானு தெரிஞ்ச பிறகா அவருக்குக் கஷ்டத்தைக் கொடுப்பேன்?” என்று அவன் அவளுக்குப் பதிலடி கொடுக்க, இப்போது சாரா மவுனம் காத்தாள். அவள் தலை குனிந்து அமர்ந்து இருப்பதைப் பார்த்தவன்

“என்ன கோபம் இருந்தாலும் நான் மட்டும் உரிமையா உன்கிட்ட காட்டணும். ஆனா நீ மட்டும் உரிமையா உன் கஷ்டங்களை என் கிட்ட சொல்லாத!” என அவன் வார்த்தைகள் சீறிப் பாய, இப்போதும் சாரா அமைதியையே தத்து எடுக்க

“இப்படியே மவுனமாகவே இருந்து என்னை விட்டு விலகி விலகிப் போ. ஒரு நாள் நீ எல்லாத்தையும் என் கிட்ட சொல்லணும்னு நினைக்கும் போது நான் உன் பக்கத்துலேயே இருக்க மாட்டேன். உன்ன விட்டு ரொம்ப தூரம் போய் இருப்….” வார்த்தைகளை அவன் முடிக்கக் கூட இல்லை

“மச்சான்!” என்ற கதறலுடன் அவன் தோள் சாய்ந்த சாரா “உங்க கிட்ட சொல்லாம விட்டது தப்பு தான். உங்க கிட்ட மட்டும் இல்ல தாத்தா கிட்ட கூட அவங்க செய்ததை சொல்லாமப் போனதுக்குக் காரணம் எந்தப் பிரச்சினையும் என்னால வேணாம்னு தான். உங்களுக்குத் தெரியாது மச்சான் நான் எந்த மாதிரி சூழ்நிலையில என்ன மாதிரி மனநிலையில இந்த வீட்டுக்கு வந்தேன்னு.

நான் இங்க வரும்போது எனக்கு வயசு பதினைந்து. அது கொஞ்சம் தெளிவான வயசு தான். ஆனா அந்த வயசிலேயும் என்னை நானே சரியா பார்த்துக்க முடியாத அளவுக்கு ஒரு மனநோயாளியா தான் இந்த வீட்டுக்கு வந்தேன். ஒரு சின்ன சத்தமோ சண்டையோ யாராவது அதட்டியோ திட்டியோ பேசினா உடனே அழுவேனே தவிர ஏன் எதுக்குனு எதுவும் கேட்க மாட்டேன். அப்படி ஒரு நிலையில இருந்தப்ப தான் இந்தப் பாட்டி என்னைப் பாடாய்ப் படுத்தி எடுத்துச்சி. அப்போதெல்லாம் என் துன்பத்துல இருந்த நான் அடப் போனு விட்டுட்டேன். அதுக்குப் பிறகு தாத்தாவுக்காவும் இப்போ உங்களுக்காகவும் தான் யார் கிட்டையும் எதுவும் சொல்லாம பொறுத்துப் போறேன்.

“எல்லாத்துக்கும் மேல…” இதைச் சொல்லும்போதே விசும்பியவள் “அன்னைக்கு நீங்க தான உன்மேல எனக்கு காதல் இல்ல. அது வரவும் வராதுனு சொன்னிங்க. அப்படிப் பட்ட நான் இன்னைக்கு உங்க மனைவியான பிறகும் இதுவரை நீங்க உங்க மனசைத் திறந்து எதுவும் சொல்லாத போது நான் மட்டும் மனைவியா என் உரிமைய எடுத்துகிட்டு உங்க கிட்ட எல்லாத்தையும் எப்படிச் சொல்ல முடியும்? என்று கதறலுடன் அவள் தன் மனக் குமுறலைச் சொல்ல, அவனுக்குமே அவள் வார்த்தையிலும் குமுறலிலும் கண் கலங்கி விட்டது. அவள் எதைச் சொல்ல வருகிறாள் என்பதைப் புரிந்து கொண்டவன்

“நான் வாய் திறந்து சொல்லலைனாலும் என் செயல்களே உனக்கு உணர்த்தலையா பொம்மி? அப்பவும் நமக்கு திருமணம் ஆன அன்று இரவு நான் உன்கிட்ட பேச தான் இருந்தேன்” என்று இவனும் கண்ணில் நீர்த் துளிகளுடன் அவள் தலையை வருடிக் கூறிக் கொண்டிருக்கும் போதே பொம்மியை மேல் அறையில் விட்டுவிட்டு கீழே அஷ்வத் வருவான் என்று அவன் தாத்தா காத்திருக்க, அவன் வரவே இல்லை என்றவுடன் மேலே வந்தவர் அவன் அறை வாசலிலே நின்று கொண்டு

“ஏம்பா சின்னா! பொம்மிக்கு பெருசா ஒன்றும் இல்லை இல்ல பா?” என்று இவர் உள்ளே போக தயங்கிக் கொண்டு சற்று உரக்கக் கேட்க, அதில் கணவனும் மனைவியும் தங்களுடைய பேச்சிலிருந்து தெளிய, அஷ்வத்தோ

“தாத்தா உள்ளே வாங்க” என்றவன் சாராவுக்கு அங்கு என்ன நடந்தது என்பது முதல் அனைத்தும் சொல்ல, அவரால் வள்ளியம்மை செய்ததை ஜீரணிக்கவே முடியவில்லை.

“என் பேத்திய யாரும் இல்லாத அநாதைனு சொல்ல அந்தப் பொம்பள யாரு டா? நீ வா உண்டு இல்லைனு நல்லா நாளு வார்த்தை நாக்கைப் பிடிங்கிக்கிற மாதிரி கேட்டுட்டு வரலாம்” என்று அவர் தன் உடல் நிலையையும் மீறிப் பாய

“ஐயோ போதும் நில்லுங்க! இப்படி நீங்க எதாவது செய்து எங்க உங்களுக்கும் அந்த வீட்டுக்கும் எந்த உறவும் இல்லாம போய்டுமோனு தான் இத்தனை நாள் நான் எதையும் உங்ககிட்ட சொல்லல. இப்பவும் சொல்லி இருக்க மாட்டேன். எல்லாம் இவரால தான் வந்தது” என்று சாரா பதைபதைக்க

“ஏய் அப்ப நான் கேட்டது தான் தப்புனு சொல்றியா?” என்று அஷ்வத் ஒரு வித இறுகிய தன்மையுடன் கேட்க 

“இல்லையா பின்ன? இத்தனை நாள் உங்க கண்ணுக்குத் தெரியாத மனைவி இன்று தான் நான் உங்க கண்ணுக்கு மனைவியா தெரிஞ்சேனா? ஏதோ புதுசா என் மேல அக்கறை மாதிரி அங்கே தாம் தூம்னு குதித்து எல்லாத்தையும் கெடுத்திடிங்க” என்று சாரா அஷ்வத்தைச் சாட

“வேணா பொம்மி என் மனநிலையை இப்போ நான் உன் கிட்ட சொல்லியும் நீ திரும்பத் திரும்ப இப்படியே சொல்லாத விட்டுடு”

“ஏன் சொன்னா என்ன? நான் சொல்வேன் தான்! இத்தனை நாள் இல்லாமல் இப்போ என்ன என் மேல புதுசா அக்கறை பாசம் எல்…”

“போதும் வாயை மூடு டி!” என்ற கர்ஜனையுடன் கையை ஓங்கி இருந்தான் அஷ்வத்.

தாத்தா அப்படிச் சொல்லவும் எங்கே இவர் அங்கே எதாவது கேட்கப் போய் பிரச்சனை அதிகம் ஆகிவிடுமோ என்று பயந்து என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசிக் கொண்டே போன சாரா கணவனின் கர்ஜனையிலும் கை ஓங்களிலும் தான் நிகழ்வுக்கு வந்தாள். அந்த நிலையிலும் அடுத்து தனக்கு என்ன நடக்கப் போகிறது என்பதை உணர்ந்து அச்சத்தில் முகம் வெளிற கண்களை அவள் மூடிக் கொள்ளவும், தான் செய்ய இருந்த காரியத்தில் இருந்து சுய நினைவைப் பெற்றான் அஷ்வத். 

“உன் மேல் நான் வைத்து இருக்கிற பாசத்தைப் பற்றி உனக்கு என்ன டி தெரியும்? எதையும் புரிஞ்சிக்க முடியாத முட்டாளா நீ இருந்துட்டு இப்ப என்னைக் குறை சொல்றியா? இவளும் அங்கே எதுவும் கேட்க மாட்டாளாம் என்னையும் கேட்க விட மாட்டாளாம். மீறிக் கேட்டா என்ன இது புதுசா அக்கறைனு என்னையே கேள்வி கேட்பாளாம். உனக்கு எல்லாம் நீ முதல் முதல்ல பார்த்த அஷ்வத்தா நான் இருந்தா தான் டி சரி!” என்றவன் தன் மனவலியைத் தன் குரலில் காட்டி அங்கிருந்து விலகிச் சென்றான் அஷ்வத்.

இதையெல்லாம் பார்த்த தாத்தா யாருக்குப் பேசுவது என்று தெரியாமல் இருந்தவர் இந்த சூழ்நிலையில் அவனுடன் சேர்ந்து நாமும் சண்டை வளர்த்தால் சரி வராது என்று நினைத்து 

“ஏன் பொம்மி இப்படி அவனுக்கு கோபம் வர்ற மாதிரி பேசுற? நீ பேசுனதக் கேட்டு எனக்கே கோபம் வரும்போது அவனுக்கு வராதா? இனிமேல் அவன் கிட்ட இது மாதிரி எல்லாம் பேசாத” என்று சற்று வருந்தும் குரலில் சொன்னவர் “சரி நீ ஓய்வு எடும்மா. நான் பிறகு வந்து உன்னைப் பார்க்கிறேன்” என்று சொல்லி அவரும் விலகி விட, கணவனின் மனம் நோக பேசிவிட்டோமே என்ற எண்ணத்தில் சாராவுக்குத் தான் கண்களில் நீர் கோர்த்து விட்டது.

அதன் பின் மருத்துவரை வரவழைத்துத் தாத்தாவின் உடல் நிலையைப் பரிசோதனை செய்யச் சொன்னவன் அவர் உடல்நிலை நல்ல முறையில் இருப்பதைத் தெரிந்த பிறகே அவரிடம் தன் தந்தையைப் பற்றி பேச ஆரம்பித்தான் அஷ்வத்.

அவரை நேருக்கு நேர் பார்த்து அவன் கேட்ட முதல் கேள்வியே என் அப்பா கார்த்திகேயன் தான் உங்க மகனா? அப்போ நான் உங்க சொந்தப் பேரனா என்பது தான்!

மனைவி அடித்த கூத்தில் மாமாவிடம் எங்கே பேசுவது என்ற குற்ற உணர்ச்சியில் அஷ்வத்துக்கு ரகசியம் தெரியும் என்பதை சாரா தாத்தாவிடம் சொல்லிக் கொள்வாள் என்று வேலுச்சாமி தாத்தா இருந்து விட, சாராவோ இங்கு வந்த பிறகு நடந்த பிரச்சனையில் தாத்தாவிடம் அதை தெரியப் படுத்தாமல் விட்டு விட, அதனால் அஷ்வத் இப்படிக் கேட்டதும் இவனுக்கு எப்படித் தெரியும் என்ற அதிர்ச்சியில் அவர் மவுனமாக நிற்கவும்

“சொல்லுங்க தாத்தா உங்களைத் தான் கேட்டேன்” என்று அஷ்வத் மீண்டும் அழுத்திக் கேட்கவும், அவர் ‘ஆமாம்’ என்று தலை அசைக்க.

“ஏன் தாத்தா எல்லாத்தையும் மறைத்து இப்படி பண்ணீங்க? அந்த அளவுக்கா நான் உங்களுக்கு வேண்டாத பேரனா ஆகிட்டேன்?” என்று தொண்டை அடைக்க அவனையும் மீறி கண்கள் கலங்க அவன் கேட்க, துடித்துப் போனார் பெரியவர்.

“இப்படி ஒரு வார்த்தைய நீ சொல்லி நான் கேட்கக் கூடாதுனு தான் உன் கண்ணு முன்னாடியே நான் வராம இத்தனை வருஷம் உன்னைப் பார்க்காம இருந்தேன். ஆனா நான் உன் மேல வச்ச பாசம் என்னைக் கடைசி வரை அப்படி இருக்க விடல டா சின்னா!” என்று நா தழுதழுக்க அவர் சொன்னதைக் காதில் வாங்காமல்

“எதுக்கு தாத்தா என்னை வெறுத்து ஒதுக்கினீங்க? என் கிட்ட இருக்கிற எது உங்களை என்னை வெறுத்து ஒதுக்க வச்சிது? என் உருவமா? உங்க நாட்டுப் படி உங்க வம்சப் படி இன்னும் சொல்லப் போனா உங்கள மாதிரி என் உருவம் இல்லனா அதுக்கு நான் என்ன தாத்தா செய்ய முடியும்? உங்களை மாதிரியோ இல்லை என் தந்தை மாதிரியோ உருவத்தில் நான் இல்லாதததுக்கு நான் எப்படி காரணமாக முடியும்? நான் என் தாய் மாதிரி அவங்க உருவத்துல பிறந்தது என் குத்தமா?

உங்களுக்கு ஒன்னு தெரியுமா? நான் பிறந்ததில் இருந்து என் தந்தையை அதான் உங்க மகன இந்த வினாடி வரை போட்டோவுல கூட பார்த்தது இல்லை. திரும்பவும் நான் கேட்கிறேன் இதில் என் தவறு என்ன இருக்கு தாத்தா? ஒருவேளை நீங்க என்னை வெறுக்க அது தான் காரணம்னா அதுக்கு நீங்க அப்பவே என்ன கொன்னுப் போட்டு இருக்கலாமே!” என்று தன் தாத்தா தன்னை வெறுக்க தன் உருவம் தான் காரணம் என்பதில் உறுதியாக இருந்தவன் அதையே கேள்வியாக திரும்பத் திரும்ப உயிரே பிரியும் குரலில் கேட்டது மட்டும் இல்லாமல் அவரை வார்த்தையால் சாட்டை கொண்டு அடிக்கவும் 

“ஐயோ… சின்னா இப்படி எல்லாம் பேசாதடா நான் உன்ன வெறுத்ததே இல்ல டா இப்படி ஒரு வார்த்தையை நீ சொல்லி கேட்கவா நான் இவ்வளவு நாள் உயிரோட இருந்தேன்?!” என்று துடித்தவர் அப்படியே சரிந்து விழ அவரை ஒரே தாவில் இறுக்கிப் பிடித்து ஸோஃபாவில் அமர வைத்தவன் வியர்வையால் நனைந்த அவர் முகத்தைத் துண்டால் துடைத்து விட்டு

“என்ன தாத்தா பண்ணுது உங்களுக்கு? எதாவது குடிக்க வேணுமா தாத்தா?” என்று அவர் முகம் வருடி அவன் துடிதுடித்துப் போய் கேட்கவும், இந்த நிலையிலும் தனக்காகத் துடிக்கும் தன் பேரனின் அன்பில் அனைத்தையும் கொட்டிக் கதறி விட்டார் தாத்தா.

“இல்ல டா இல்ல.. நான் உன்னை என்றும் வெறுத்ததும் இல்லை இனிமேலும் வெறுக்க முடியாது! அன்று எனக்கு இருந்த வீம்பும் எனக்கான கடமையும் தான் என்னை உன்னிடமிருந்து விலகி இருக்க வைத்ததே தவிர நீ சொல்ற காரணப் படி உன் உருவம் இல்ல டா. நீ உருவத்தால் உன் தாயைப் போலும் வெளிநாட்டுக் கலாச்சாரப் படி நீ வளர்ந்து இருந்தாலும் உன் உடம்புல ஓடுறது என் ரத்தம் டா. இன்னும் சொல்லப் போனா உன் அப்பன விட என்னை விட மேம்பட்ட குணம் உன் கிட்ட தான் டா இருக்கு.

அதை எல்லாம் என் கண்ணெதிரில் பார்த்து நான் எவ்வளவு பூரித்துப் போகுறேன் தெரியுமா? இப்படிப் பட்ட உன்னை சிறு வயதுல இருந்தே பார்த்து மகிழாம விட்டுட்டேனேனு நான் தினம் தினம் என் மனசுக்குள்ள எவ்வளவு துடி துடித்துப் போறேனு உனக்குத் தெரியுமா டா சின்னா?” என்று அவன் கையில் முகம் புதைத்து அவர் கதறவும், இதை எல்லாம் பார்த்த அஷ்வத்தின் மனமோ இளகி விட்டது. அதிலும் தன் கையில் அவரின் சூடானக் கண்ணீரை உணரவும் தன் கோபத்தை விட்டான் அஷ்வத்.

“தாத்தா உங்க உடல் நிலை தெரியாம நான் தான் ஏதேதோ பேசிட்டேன். தாத்தானு நீங்க எல்லாம் இருந்தும் நான் அநாதையா வளர்ந்தேனு கோபம். இதை எல்லாம் விட இப்போ பொம்மி என் வாழ்க்கையில் வரலனா கடைசி வரைக்கும் நீங்க என்னைத் தேடி வந்திருக்க மாட்டிங்களேனு ஆதங்கம். அதான் உங்க மனசு கஷ்டப் படுற மாதிரி பேசிட்டேன். இதை இன்றோட விடுங்க தாத்தா. முடிஞ்சது முடிஞ்சதாகவே இருக்கட்டும். எனக்கு எந்த விளக்கமும் வேணாம். நான் எதைப் பற்றியும் தெரிஞ்சிக்க விரும்பலை” என்று வாழ்க்கையே வெறுத்துப் போய் கசந்த குரலில் சொல்லியவன்

“எனக்கு நீங்க கடைசி வரை வேணும். அதுக்கு உங்க உடம்பு நல்லா இருக்கனும். அதனால இந்தப் பேச்சை இதோட மறந்திடுவோம். என்னைக்கும் நான் உங்க பேரன் தான்! அந்த அன்பும் பாசமும் என்னைக்கும் எனக்கு மாறாது” என்று இறுதியாக அவன் இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க

”இல்ல சின்னா இல்ல.. நான் எல்லாத்தையும் சொன்னா தான் எனக்கு நிம்மதி என் மனபாரமும் குறையும். இப்பவும் நான் என் மேலே தப்பு இல்லனு சொல்ல மாட்டேன். நான் செய்தது தப்பு தான். உனக்கு அன்பு பாசத்தக் காட்டாம உன்னை விட்டு ஒதுங்கி இருந்து துரோகம் செய்திட்டேன். அதுக்காக எல்லாம் இந்த தாத்தாவ வெறுத்துடாத டா சின்னா. அதே மாதிரி நான் உன்னைப் பேரனா ஏத்துக்காம வெறுத்துப் போய் தான் ஒதுக்கினேன் என்று நினைக்காத டா” என்று நா தழுதழுக்க அவனிடம் கேட்டுக் கொண்டவர் தன் வாழ்வில் நடந்ததையும் எதனால் தன் பேரனைப் பிரிய நேரிட்டது என்பதையும் கூற ஆரம்பித்தார் அவர். 

இன்று கர்னல் சக்கரவர்த்தியாய் இருக்கும் இவர் தான் ஒருகாலத்தில் தாய் தந்தையர் குலம் கோத்திரம் என்று எதுவும் தெரியாமல் ஏன் தன் பெயர் என்ன என்பது கூடத் தெரியாமல் கிடைத்ததைச் சாப்பிட்டு ரோட்டோரம் படுத்து ஏழு வயது வரை தன்னால் முடிந்த வேலைகளைச் செய்து தன் வாழ்நாளை ஓட்டி வந்தவர்.

அவருடைய ஏழாவது வயதில் தெய்வம் என வந்தவர் தான் தெய்வ சிகாமணி ஐயா! அவருடைய இளவயதில் அவருக்கு ஏற்பட்ட காதல் தோல்வியால் திருமணமே செய்து கொள்ளாமல் தன் வாழ்வையும் சொத்தையும் ஓர் அநாதை இல்லம் கட்டி அவர் சேவை செய்து வர அப்போது அவர் கண்ணில் இவர் பட தன் இல்லத்துக்கு அழைத்துச் சென்று இவருக்கு அவர் வைத்த பெயர் தான் சக்கரவர்த்தி என்பது.

அன்றிலிருந்து தனிப்பட்ட முறையில் இவரை மட்டும் கண்காணித்தவர் இவர் பண்பிலும் குணத்திலும் கவரப்பட்டு அவரைத் தன் சொந்த மகனாக வளர்க்க மட்டும் இல்லாமல் கூடவே நாட்டுப் பற்றையும் அவருக்கு ஊட்டி வளர்க்க, சக்கரவர்த்தியோ ஒரு படி மேலே போய் இந்த நாட்டிற்காகத் தான் எதையும் இழக்கவும் தயார் என்ற மனநிலையில் வளர்ந்தார்.

நாட்டிற்காக எல்லைப் பணியில் இருந்த சக்கரவர்த்தி ஒருமுறை அந்த வருடத்திற்கான லீவில் வீட்டிற்கு வர அவருக்குப் பெண் எல்லாம் பார்த்து நாளைக்குத் திருமணம் என்று சொல்ல முதலில் தன் பிறப்பைப் பற்றி தாய் தந்தையர் உடன்பிறப்பு என்று குடும்பமாக இருந்த அந்த பெண்ணிடம் சொன்ன பிறகு தான் தனக்குத் திருமணம் என்று இவர் நினைத்து சிகாமணி ஐயா பார்த்த பெண்ணான குணவதியிடம் சொல்ல பெயருக்கு ஏற்றபடி நல்ல குணமான அந்தப் பெண் இதை எல்லாம் தெரிந்த பிறகு தான் இந்த திருமணத்திற்குச் சம்மதித்ததாகக் கூற பின் அவர்கள் திருமணம் இனிதே முடிந்தது வாழ்க்கையும் நல்லபடியாகவே சென்று கொண்டிருக்க. அவர்களுடைய மூன்றாவது திருமண ஆண்டில் கார்த்திகேயன் பிறந்து விட இன்னும் மகிழ்ச்சியாக சென்றது குடும்ப வாழ்க்கை.

கார்த்திகேயனின் ஐந்தாவது வயதில் தெய்வ சிகாமணி ஐயா இறந்து விட, இப்போது நாட்டை விட ஐயா விட்டுச் சென்ற பணிகள் முழுவதையும் பார்ப்பது என சக்கரவர்த்தியிடம் வந்து சேர்ந்தது. அதுவும் நல்ல முறையில் போய் கொண்டிருக்க கார்த்திகேயனின் பதினேழாவது வயதில் தாய் குணவதியும் இறந்து விட தந்தைக்கும் மகனுக்கும் உள்ள பிணைப்பு இன்னும் இறுகியது.

தன்னைப் போல் மகனை ராணுவத்தில் சேரச் சொல்ல மகனோ தனக்கு ராணுவத்தை விட விவசாயத்தில் தான் விருப்பம் என்றும் அந்தத் துறையின் மூலம் நாட்டிற்கும் தான் பிறந்த இந்த ஊர் மக்களுக்காகவும் நல்லது செய்ய நினைப்பதாகக் கூற அதைக் கேட்டு அகமகிழ்ந்த தந்தை அதற்கான வழி வகைகளைச் செய்ய அதன்படி நல்ல முறையில் விவசாய சம்பந்தப்பட்ட படிப்பை கார்த்திகேயன் படித்து முடித்தவர் அதே துறையில் மேல்படிப்பை வெளிநாட்டில் படிக்க ஆசைப் பட அதற்கும் வழி வகை செய்தார் சக்கரவர்த்தி. 

வெளிநாடு சென்றும் தான் உண்டு தன் படிப்பு உண்டு என்றிருந்த கார்த்திகேயன் மீது அந்த நாட்டுப் பெண்ணான கரோலினுக்குக் காதல் வர அதை அவரிடமே சொல்ல முதலில் அதை மறுத்தவர் பின் அவள் பிடிவாதத்திலும் காதலிலும் அவள் காதலை ஏற்றுக் கொண்டவர் தங்கள் இருவரின் காதலையும் தன் தந்தை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்ற எண்ணத்தில் படிப்பு முடியும் போது யாருக்கும் தெரியாமல் அங்கேயே மோதிரம் மாற்றித் திருமணம் முடித்து கரோலினாவை தன் மனைவியாகவே இந்தியாவுக்கு அழைத்து வந்து விட்டார் கார்த்திகேயன்.

கரோலினிக்கு எந்த ஒரு ஒட்டுதலும் இல்லாத ஒரு அண்ணனைத் தவிர தாய் தந்தையர் என்று யாரும் இல்லாததால் அவள் வீட்டுப் பக்கம் இந்த திருமணத்தில் எந்த எதிர்ப்பும் இல்லை.

மகன் இப்படி வந்து நிற்கவும் முதலில் கோபப்பட்ட சக்ரவர்த்தி அமெரிக்காவில் இருக்கும் தன் நண்பர் குடும்பத்தின் துணையோடும் அவரின் கண்காணிப்பிலும் தான் தன் மகனை அமெரிக்கா அனுப்பியவர் இன்று அவர்களுக்கே தெரியாமல் தன் மகன் காதலில் உறுதியாக இருந்து இப்படி ஒரு காரியத்தைச் செய்யவும் சரி என்று தன் மகனுடைய சந்தோஷத்துக்காக இரு கரம் நீட்டி அவர்கள் இருவரையும் ஏற்றுக் கொண்டார் அவர்.

என்ன தான் மகன் காதலித்தாலும் வெளி நாட்டிலேயே நான் வாழ விரும்புகிறேன்அதனால் உங்களுக்குத் தகவல் மட்டும் தான் சொல்ல வந்தேன் என்று சொல்லாமல் என் நாடும் நான் பிறந்த ஊரும் தான் எனக்கு முக்கியம் என்று என் உயிர் என் மண்ணில் தான் போக வேண்டும் என்று சொல்லி பிடிவாதத்துடன் தன் மனைவியையும் இங்கு அழைத்து வந்து தன் ஆசிர்வாதத்திற்காக வந்து நிற்கும் தன் மகனை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டார் அவர்.

இது உண்மையும் கூடத் தான்! என்ன தான் கரோலினைக் காதலித்தாலும் என்னுடன் என் நாட்டிற்கு தான் நீ வந்து வாழ வேண்டும் என்று அவளிடம் இவர் சொல்லி விட கருத்த தேகமும் பேசும் விழிகளும் அலை அலையாய் கேசமும் அதை விட முறுக்கு மீசை என ஒரு கிரேக்க வீரன் போல் தெரிந்த கார்த்திகேயனை விட்டுக் கொடுக்க மனம் இல்லாமல் கரோலினும் சரி என்று வந்து விட்டாள்.

அவர்களுக்கு இந்திய முறைப் படி திருமணம் செய்து மருமகளுக்கு வேண்டியதை எல்லாம் பார்த்து பார்த்து அவள் பயன்படுத்த மேல்நாட்டு பாணியில் அனைத்தும் செய்தார் சக்கரவர்த்தி.

என்ன தான் வீட்டில் அவளுக்கு ஏற்ற வசதிகள் கிடைத்தாலும் வெளி இடத்தில் பீச் பார்க் ஓட்டல் கிளப் நைட் பார்ட்டி டின்னர் பப் என்று எதுவும் இல்லாததால் எண்ணி முப்பது நாட்களில் எல்லாம் இந்த இடமே வேண்டாம் என்று கணவனையும் மாமனாரையும் தன் நாட்டிற்கே அவள் கூப்பிட அதற்கு இருவரும் ஒத்துக் கொள்ளாததால் என்ன டா வாழ்க்கை என்று நொந்து போய் ஒரு சில நாட்களிளேயே இந்த வாழ்க்கையே எனக்கு வேண்டாம் என்று ஒதுங்கும் அளவுக்கு கரோலினின் மனநிலை மாறியது.

இந்த நேரத்தில் அவர்களுக்குத் திருமணம் நடந்து முப்பதைந்தாவது நாள் காலையில் வயலுக்குச் சென்ற கார்த்திகேயனைப் பாம்பு கடித்து விட வெறும் சடலமாகத் தான் தூக்கி வந்தார்கள். தனக்குப் பிறகு தன் மகன் தான் அனைத்திற்கும் என்றிருந்த நேரத்தில் வாழ வேண்டிய வயதில் தன் மகன் போய் விட முதலில் துவண்டாலும் பின் நடக்க வேண்டியது அனைத்தையும் ஒரு தந்தையாக இருந்து செய்தார் சக்கரவர்த்தி.

கார்த்திகேயனின் உடலைப் புதைத்த மறுநாளே இளவயதான மருமகளையும் அவள் பிற்கால வாழ்க்கையையும் எண்ணி அவளுக்கு எந்த சடங்கும் செய்யாமல் வெறுமனே கார்த்திகேயன் கட்டிய தாலியைக் கழற்றித் தன் மகன் படத்தின் முன்னே வைக்கச் சொல்லி விட அதன் படியே செய்த கரோலின் அன்றே தான் தன் நாட்டிற்கே போவதாகச் சொல்லி பிடிவாதமாக நிற்கவும் எந்த கணவனை நம்பி வந்தாளோ அவனே இன்று உயிருடன் இல்லை எனும் போது இனி யாருக்காக இந்த பெண் இங்கு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவரும் போகச் சொல்லி விட்டார்.

தன் தாய்நாடு சென்ற கரோலின் ஐம்பத்தைந்து நாள் கருவைச் சுமந்து இருப்பதாக உறுதி ஆகி விட, இந்தச் செய்தியைக் கேட்ட சக்கரவர்த்தி தன் வம்சத்துக்கு ஒரு வாரிசு வரப் போகிற எண்ணத்தில் தன் மகனை கூட போய் பார்க்காதவர் முதல் முறையாக மருமகளை அமெரிக்கா சென்று பார்க்க, தன் வீட்டில் மாமனாரைப் பார்த்தவள் உள்ளே எழுந்த கலவரத்தை மறைத்து

“வாங்க எப்படி இருக்கீங்க?” என்று பட்டும் படாமல் அவரை வரவேற்க 

“நான் நல்லா இருக்கேன் மா. நீ உண்டாகி இருக்கிறதா கேள்விப் பட்டேன். அதான் உன்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாம்னு வந்தேன்” என்று இவரு எடுத்தவுடனே கூப்பிட

“வீட்டுக்கா?! யார் வீட்டுக்கு? நான் எதற்கு வரனும்?”

“என்னமா இப்படிக் கேட்குற? உன் வயிற்றில் வளர்வது என் குலசாமி மா! அது பேரனோ பேத்தியோ எதுவா இருந்தாலும் அது என் வம்சம் மா!”

“சரி நீங்க சொல்ற மாதிரி இது உங்க வம்சமாவே இருக்கட்டும். அதுக்காக எல்லாம் என்னால அங்கே வர முடியாது”

“ஏன் முடியாது? அது உன் வீடு”

“இல்ல.. என்னிக்கு உங்க புள்ள இறந்தாரோ அப்பவே அந்த உறவு எல்லாம் முறிஞ்சி போச்சு”

“இருக்கலாம்.. ஆனா இப்போ உன் வயிற்றுல வளர்ற எங்க குழந்தையால ஏன் திரும்ப உறவப் புதுப்பிக்கக் கூடாது?”

“இல்ல.. எந்த புது உறவும் எனக்கு வேணாம். எனக்கு உங்க ஊர் பழக்க வழக்கம் இடம்னு எதுவுமே பிடிக்கல. அதனால நான் வரலை”

“வேணும்னா நீங்க இங்க வந்து என் கூட இருங்க. நான் அதற்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்க மாட்டேன்”

இவ்வளவு நேரம் பொறுமையா க இருந்தவர் இந்த வார்த்தையில் ஓர் கர்ஜனையுடன்

“என்ன சொன்ன?” என்று எழுந்து நின்றவர் “நான் யாருனு தெரியுமா? என் பிறப்பு பற்றி தெரியுமா? எனக்கான கடமையும் பொறுப்பும் பற்றி உனக்குத் தெரியுமா? இதை எல்லாம் விட என் ஐயாவுக்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தை மீறி என்னை நன்றி கெட்டவனா மாற்ற பார்க்கிறீயா? முடியாது! என் உயிரே போகும் நிலை வந்தாலும் நான் அதை மட்டும் செய்யவே மாட்டேன்” என்று அவர் தன் நிலையிலையே இருக்க

“அப்ப உங்களுக்கு பேரன் என்ற கடமையோ பொறுப்போ இல்லையா?”

இந்த கேள்வியில் அவர் ஒருநிமிடம் தயங்கி நிற்கவும்

“நீங்க எப்படி உங்க கடமையில் இருந்து விட்டு வர மாட்டிங்களோ அதே மாதிரி நான் என் வாழ்வுக் கொள்கையில் இருந்து வெளி வரமாட்டேன். என்ன ஆனாலும் என் வாழ்வு இங்கே தான். நான் உங்க வீட்டுக்கோ ஏன் அந்த நாட்டுக்கு கூட வரமாட்டேன். நீங்க போகலாம்”

“நீ என்ன வரமாட்டேனு சொல்றது? உன் வயிற்றில் வளர்வது என் வம்சம்! எப்படியாவது என் குலக்கொழுந்த நான் என் வீட்டுக்குக் கூட்டிட்டே போவேன். கோர்ட்டில் கேஸ் போட்டாவது இதை நான் செய்தே தீருவன்!”

“இன்னைக்கு சொல்றேன் நீ எழுதியே வச்சிக்கோ. என் உயிர் பிரியறதுக்குள்ள என் பேரனோ பேத்தியோ என்னைத் தேடி வந்து என் கூட என் வீட்டுல இருக்காங்களா இல்லையானு! இதை நடத்தியே காட்டுவான் இந்த சக்கரவர்த்தி!” என்று அவர் சவால் இடவும்

எங்கே தன் பிள்ளையை வைத்துத் திரும்ப அந்தப் பட்டிக்காட்டு வாழ்க்கைக்குத் தன்னை இழுத்து விடுவாரோ என்று பயந்த கரோலின்

“ஓ…. அப்படியா? என் பிள்ளைய பிரித்துக் கூட்டிட்டுப் போவேனு நீங்க என் கிட்டயே சவால் விடுறீங்களா? இப்போ நான் சொல்றேன் நீங்க கேட்டுக்கங்க. இந்தக் கரு என் வயிற்றுல இருக்கிறதால தான நீங்க சொந்தம் கொண்டாடி இவ்வளவு பேசுறீங்க? இந்த வினாடி இந்த நிமிடமே இந்தக் கரு எனக்கு வேணாம்னு நான் அழிச்சிட்டா நீங்க சொன்னது எல்லாம் நடக்குமா?” என்று அவள் பதில் கேள்வி கொடுக்கவும், அவள் வார்த்தையில் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்ட அவரைப் பார்த்து ஓர் ஏளனச் சிரிப்புடன்

“என்ன, நான் இப்படி செய்ய மாட்டேனு நினைக்கிறீங்களா? செய்வேன் நிச்சயம் செய்வேன். நீங்க ஒன்னும் இருபத்தி நாளு மணி நேரமும் என்னைக் கண்காணித்து காவல் காக்க முடியாது. அதே மாதிரி நான் இப்படிச் செய்தா ஏன் இப்படி செய்தேனு நீங்க கேள்வி கேட்க முடியாது. அதை கேட்கும் உரிமை என் கணவனுக்கு மட்டும் தான் உள்ளது. அதனால என் பிள்ளைய நான் என்ன வேணா செய்யலாம். இப்ப சொல்லுங்க நான் என்ன செய்ய?”

“அப்படி எதுவும் செய்திடாதமா” என்று அவர் பதறவும்

“இங்கே இருந்தாவது உங்க வம்சம் வளரும். என்னைக் கூப்பிட்டா இது தான் நடக்கும். இன்னோனு.. இப்போ சரினு சொல்லிட்டு நாளைக்குக் குழந்தை பிறந்த பிறகு உங்க வம்சத்தை மட்டும் அழைத்துக் கொள்ளலாம்னு எண்ணம் எதுவும் வைச்சிகாதீங்க அப்படி எதாவது செய்திங்கனா இப்போ நான் எதுவும் சொல்ல மாட்டேன். அப்போ என்ன செய்றனு மட்டும் பாருங்க!” என்று அவள் சூளுரைக்கவும்

“அப்படி எதுவும் செய்திடாத மா” என்று அவர் மறுபடியும் மன்றாட தான் முடிந்தது

“அப்போ வெறும் வாய் வார்த்தையா இல்லாம எனக்கு ஒரு சத்தியம் பண்ணித் தாங்க. என்னையோ என் பிள்ளையையோ சொந்தம் கொண்டாடிகிட்டு தேடி வரமாட்டேனு” என்று அவள் அவரை சூழ்நிலைக் கைதியாய் நிற்க வைக்கவும்,

அவரால் என்ன தான் செய்ய முடியும்? மகனும் இல்லை யாருடைய ஆதரவும் இல்லை. எல்லாவற்றுக்கும் மேல் இது அவரது வம்சத்து உயிர் பிரச்சனை. அதனால் அவள் கேட்ட சத்தியத்தை வேறு வழியேயில்லாமல் அவர் செய்து கொடுக்க

“இந்த சத்தியத்தைக் கடைசிவரை காப்பாற்றுவீங்கனு நினைக்கிறேன். இப்படி ஒரு உறவு இருக்கிறதே என் பிள்ளைக்குத் தெரியவேணாம். நானும் அப்படித் தான் வளர்ப்பேன்” என்று அவள் முடித்து விட, பிறந்த போது தான் அநாதையானோமே என்பதை விட இப்போது நாம் அநாதையானோமே என்ற மனக்குமுறலுடன் வீடு திரும்பினார் அவர்.

அதன் பிறகு கரோலின் அந்த வினாடியே யாருக்கும் சொல்லாமல் ஜெர்மன் போனவள் குழந்தை பிறந்து அஷ்வத்துக்கு நான்கு வயது இருக்கும் போது தான் அமெரிக்கா வந்தாள்.

அதற்கு முன்பே சக்கரவர்த்தியின் நண்பர் குடும்பம் மகனின் தொழில் விஷயமாக லண்டன் சென்று விடவும் கரோலின் அமெரிக்கா வந்ததையோ அவளுக்கு ஆண் குழந்தை பிறந்ததோ சக்கரவர்த்திக்குத் தெரியாமல் போக கொஞ்ச நாளிலே நண்பரும் இறந்து விட என்ன குழந்தை அது எப்படி இருக்கும் என்ற ஆயிரம் ஆயிரம் ஆசைகள் மனதில் இருந்தாலும் சும்மா சும்மா நண்பன் குடும்பத்தைத் தொந்தரவு பண்ண வேணாம் என்று நினைத்து விதி இருந்தால் அவனே என்னை தேடி வரட்டும் என்று மனதை தேற்றிக் கொண்டு ஒதுங்கி விட்டார் சக்கரவர்த்தி.

“ஆனால் மனதிற்குள் அன்பு பாசம் பரிதவிப்பு தேடல் வெறுமை என்று உன்னைக் காணும் வரை ஒரு நடைப் பிணமாகத் தான் வாழ்ந்து வந்தேன். இப்ப சொல்லுடா சின்னா, அந்த நேரத்துல நான் வேற என்ன பண்ண?” என்று ஒரு வித பரிதவிப்புடன் கேட்டு அவர் அவன் முகம் பார்க்கவும்

‘தாத்தா நான் தான் சொன்னேன் இல்ல? என்ன நடந்து இருந்தாலும் நான் உங்களை வெறுக்கவோ இல்லை உங்களை விட்டுப் போகவோ மாட்டேனு. இப்போனு இல்ல எப்பவும் நான் உங்க மேல வைச்ச பாசம் என்னைக்கும் குறையாது. இப்போ எதுக்கு நீங்க சொல்வதை இதை எல்லாம் கேட்டேனா உங்க மனபாரம் குறையட்டுமேனு தான்” என்று அவருக்கு ஆறுதல் கூறி அந்த இடத்தை விட்டு விலகினான் அவன்.

ஆயிரம் தான் அவருக்காகப் போலியாக சமாதானம் சொன்னாலும் தன் தாயும் தாத்தாவும் தனக்குப் பெரிய அநியாயம் செய்ததாகவே அவனுக்குப் பட்டது. அதிலும் தன் தாத்தா செய்ததை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.

‘அப்போ நான் பிறந்ததில் இருந்து நான் எப்படி இருப்பேனு கூட இவரு என்னைப் பார்த்ததே இல்லையா?’ இந்த எண்ணம் அவனைப் பாடாய் படுத்தக் கண்ணில் அவனையும் மீறி கண்ணீர் தான் வந்தது.

இதற்கு இடையில் மனைவியின் முகம் பார்க்காமல் அவளுக்கு உணவு கொடுத்து மருந்து மாத்திரைகள் கொடுக்கவும் அவன் தவறவில்லை.

இரவு படுக்கத் தன் அறைக்கு வந்தவன் மனைவியின் முகம் பார்க்காமல் எங்கோ பார்த்துக் கொண்டு

“பிளாஸ்டிக் சர்ஜரி செய்றதுல எக்ஸ்பெர்ட்டான என் பிரண்ட் ஒருத்தன் லண்டன்ல இருக்கான். அவன் நாளைக்கு வரான் உன் கால செக்கப் பண்ண. அப்படி எதாவது பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தான் ஆகணும்னா செய்துக்கோ” என்று அவன் பட்டும் படாமல் சொல்ல

கணவனின் முகம் திருப்பலை உள்ளுக்குள் ரசித்தவள் அவன் சொன்ன செய்தியில் சிரிப்பு வர

“ஐயோ மச்சான்! உங்க அழிச்சாட்டியத்துக்கு ஒரு அளவே இல்லையா? ஏதோ கொஞ்சம் சூடான எண்ணெய் கால்ல கொட்டிடுச்சி. அதனால ஏதோ மேல் தோல் வழுக்கிடுச்சி அவ்வளவுதான். இதுக்கு எல்லாம் யாராவது பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணுவாங்களா?” என்று அவள் சிரிப்புடன் கேட்கவும் கோபத்துடன் அவளிடம் வந்தவன்

“உன்னை மதியமே நாளு அறை விட்டு இருக்கணும். செய்யாம விட்டது தப்பா போச்சி. இரு அதுக்கும் சேர்த்து வச்சி இப்போ கொடுக்கிறேன்” என்று சொல்லியவன் அவளை அடிக்க கையை ஓங்க, அவன் கையால் விழும் அடிக்குப் பயந்து வழக்கம் போல் அவள் விழிகளை மூடிக் கொள்ளவும் மனைவியை அடிக்கும் எண்ணத்தை விட்டு விட்டு விலகி வந்து, அவள் பக்கத்தில் கட்டிலில் அவளுக்கு முதுகு காட்டி படுத்தவன் 

“யாரு தான் நான் சொல்லுறதைக் கேட்பீங்க? இல்ல யாருக்கு தான் நான் வேணும்? என் அம்மாவுக்கு என்னை விட அவங்க வாழ்க்கை தான் முக்கியம். என் தாத்தாவுக்கு அவர் ஊர் முக்கியம். உனக்கு உன் பிடிவாதம் தான் முக்கியம். ஆக மொத்தம் யாருக்கும் நான் தேவை இல்லை அப்படி தான போங்க போங்க எல்லா..”

அனைத்து ரகசியமும் தெரிந்து தன் கணவன் மனவேதனையில் பரிதவிப்பதை பார்த்தவள் அதை போக்க நினைத்து அவனை மேற்கொண்டு பேச விடாமல் கட்டிலில் உருண்டு போய் அவனைத் தன் புறமாக திருப்பியவள் சற்றும் யோசிக்காமல் அவன் இதழ்களைத் தன் இதழ்களால் மூட தன் மனைவியிடம் இருந்து தனக்குக் கிடைத்த முதல் இதழ் முத்தத்தின் மயக்கத்தில் கண்மூடி இருந்தவனோ அவள் இதழின் குளிர்ச்சியில் தன் உள்ளத்தின் தகிப்பு குறைவதை உணர்ந்தவனோ பின் தன் கண்களைத் திறந்து நீயா கொடுத்த என்று அவன் அவளைப் பார்க்க கணவனின் கண்ணில் கேட்ட செய்தியை உணர்ந்தவளோ சிறு வெட்கத்துடன் “சாரி” என்ற சொல்லுடன் அவன் மார்பில் அவள் முகம் புதைக்கவும்

“ஓ…. சாரிக்கு தான இது? நல்ல ஆள் தான் டி நீ! இப்படி முத்தம் கொடுத்தா உன் சாரிய நான் ஏத்துக்குவேனா?அதெல்லாம் முடியாது..” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே தன் முகம் நிமிர்த்தி மறுபடியும் அவன் இதழைச் சிறை செய்தவள் தன் இதழாலேயே இனி இந்தப் பேச்சு வேணாமே என்பது போல் அவள் கண்டனம் தெரிவிக்கவும் காலையில் அவள் பேசிய பேச்சுக்கான தண்டனையை அவன் தன் இதழாலே அவள் இதழுக்கு கொடுக்கவும் அன்றைய இரவு இருவருக்கும் கூடல் இல்லாத ஊடலுடனேயான இரவாக இனிமையாக கழிந்தது..

Categories
On-Going Novels Yuvanika

அத்தியாயம் – 12

காதல்பனி 12

ஒரு வாரம் கழித்துத் தான் திரும்ப வருவேன் என்று சொல்லி விட்டுச் சென்றவன் எந்த வித முன் அறிவிப்புமின்றி நான்காவது நாளே வந்து நின்றான் அஷ்வத் வெளி வாசலிலேயே அமர்ந்திருந்த தாத்தாவிடம் பேசி நலம் விசாரித்த பின்பு பொம்மியைத் தேடிப் பார்த்தவன் அவள் எங்கும் இல்லை என்றவுடன் அவள் மொபைலுக்கு அழைக்க முழு அழைப்பும் போனதே தவிர அவள் எடுக்கவேயில்லை. அதில் எரிச்சலுற்றவன் திரும்ப தாத்தாவிடமே வந்து

“எங்க தாத்தா அவ?” என்று கேட்க, சேரில் அமர்ந்தபடியே சற்றுக் கண் அயர்ந்து இருந்தவர் திடீர் என்று அவன் குரலில் கண் விழித்து அவன் என்ன கேட்டான் என்பது புரியாமல் விழிக்க

“அவ தான் தாத்தா! என் பொண்டாட்டி எங்க?” என்று அவன் சற்றுக் குரலை உயர்த்தி மறுபடியும் கேட்கவும்

“பொம்மியா? அந்தப் புள்ள காட்டுப் பக்கம் இல்ல போய் இருக்கு! மருந்தோட தாக்கத்தால நான் தான் உன் கிட்ட சொல்ல மறந்துட்டேன்”

“சரி, அப்போ நான் அங்கேயே போய் பார்த்துக்கிறேன்” என்று சொல்லி அவன் அங்கு இருந்து போக எத்தனிக்கவும்

“இப்போ தானே சின்னா வந்த? குளிச்சிட்டு சாப்பிடு. அதற்குள்ள பொம்மி வந்திடுவா”

“அதெல்லாம் என் பொண்டாட்டி வந்த பிறகே செய்துக்கிறேன்” என்று நில்லாமல் அவருக்குப் பதில் கொடுத்த படியே சென்று மறைந்தான் அஷ்வத்.

தாத்தாவுக்கோ சிறு நிம்மதி! ‘வந்த உடனே மனைவியைத் தேடுகிறானே? அப்போ இவர்களுக்குள்ள இருந்த பிரச்சனை தீர்ந்துடிச்சினு தானே அர்த்தம்’ என்று நினைத்தார் அவர்.

சாராவோ அங்கே சமாதி முன் சோகப் பதுமை என நின்றிருக்க அவளை பார்த்தவன் எதுவும் பேசாமல் அவள் பக்கத்தில் போய் இவன் நிற்க.

ஏதோ உந்துதலில் திரும்பிப் பார்த்தவள் கனவில் வந்த அவன் பிம்பமோ என்று நினைத்து எதுவும் பேசாமல் மறுபடியும் திரும்பிக் கொண்டவள் சாமாதியைத் தொட்டு வணங்க அவனும் அதே போல் செய்யவும் அதில் கலைந்தவள்

“மச்சான் வந்துட்டீங்களா?” என்ற கூவலுடன் அவனை அணைத்துக் கொள்ள, வெகு நாள் கழித்து அவள் அழைத்த மச்சான் என்ற அழைப்பில் சிலிர்த்தவன்

“இது கனவு இல்ல நான் நிஜம் தான் டி கண்மணி!” என்றவன் அவளை ஆரத் தழுவிக் கொண்டான் அவள் கணவன்.

“ஆமா உன் போன் எங்க? உனக்கு எத்தனை தடவை நான் கால் பண்றது?”

“எனக்கு யார் போன் பண்ணப் போறாங்க? அதான் மொபைல சைலண்ட்ல போட்டு வீட்டிலேயே வச்சிட்டு வந்துட்டேன். அதுவும் இல்லாம நீங்க இன்னைக்கு வர்றது எனக்குத் தெரியாதே!” என்று அவள் மழலையாய் மிழல

“ம்ம்ம்… ஐ மிஸ் யூ டி! நீ என்ன மிஸ் பண்ணியா?” என்று அவன் கேட்க

“ம்ம்ம்….” என்றவள் தன் பலம் கொண்ட மட்டும் அவனை ஆரத் தழுவவும்

“இவ்வளவு தானா உன் மிஸ் யூ?” என்று கேட்டவன் நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்ணனு இப்போ காட்டுறேன் பாரு” என்றவன் எலும்புகள் நொறுங்கும் அளவுக்கு அவளை இறுக்க அணைத்தவன் இந்த மூணு நாளும் உன்னைப் பார்க்காம நான் தவிச்சிப் போய்ட்டேன் தெரியுமா? உன்னை எப்போ பார்ப்போம்னு இருந்துச்சு. சதா உன் ஞாபகம் தான்! ஆனா நீ என்னை நினைச்சிருக்கவே மாட்ட இல்லடி? என்று அவன் குறைபடவும்

‘நானா நினைக்கலை? நீங்க இந்த மூணு நாள் தான் தவிச்சீங்க. நான் எத்தனை வருஷமா உங்க வருகைக்காகத் தவிச்சிப் போய் காத்துகிட்டு இருக்கேன்னு தெரியுமா?’ என்று மனதுக்குள் நினைத்தவள் ஏக்கத்துடன் அவனை நிமிர்ந்து பார்க்கவும், அவள் விழி வீச்சில் தன் வசம் இழந்தவனோ

“இப்படி எல்லாம் பார்க்காத டி. அப்புறம் அன்று மாதிரி உன் உதடு என் கிட்ட படாத பாடுபடும்” என்று அவன் கண் சிமிட்டிக் கெஞ்சவும், வெட்கத்துடன் அவன் மார்பிலேயே தலை சாய்த்தாள் சாரா. இருவருக்குள்ளும் நெருக்கம் இல்லை என்றாலும் ஏதோ பேச்சிலும் சீண்டலிலும் சிரிப்பிலும் நாட்கள் சென்றன.

இதற்கிடையில் புதுமணத் தம்பதிகளுக்கு விருந்து வைக்க என்று அவர் மாமாவுக்காக முறை செய்ய வேலுச்சாமி தாத்தா சாராவையும் அஷ்வத்தையும் அழைக்க, அஷ்வத்தோ புதிதாக ஓர் உறவு வருகிறதே என்ற எண்ணத்தில் கிளம்ப சாராவோ வேறு வழியில்லாமல் தாத்தாவுக்காக கிளம்பிச் சென்றாள்.

வேலுச்சாமி தாத்தா வீடோ திருச்சி நகருக்குள் ஏதோ ஒரு கிராமம் என்பதால் இருவரும் நான்கு நாட்கள் சற்று நிதானமாகத் தங்கி வர வேண்டும் என்று தாத்தா கட்டளை இட்டு விட அவர் உடலும் சற்றுத் தேறி இருந்ததாலும் அஸ்வத் தாத்தாவுக்காக இந்தியா வந்து இங்கேயே இருந்து சாராவைக் கல்யாணம் செய்ததினால் முன்பு போல் அஸ்வத் மேல் வேலுச்சாமி தாத்தா கோபம் காட்டாததால் இருவரையும் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்து அதை செயல் படுத்தியும் விட்டார் சக்ரவர்த்தி தாத்தா.

சரியாக வேலுச்சாமி தாத்தா அஸ்வத் சாராவுடன் அவர் வீட்டு வாசலில் வர அதே நேரம் வாசல் முற்றத்தில் சேரில் அமர்ந்திருந்த அவர் மனைவியோ கார் வந்து நின்றதையும் அதிலிருந்த அஸ்வத் சாரா தன் கணவனையும் பார்த்தவர் என்னமோ அவர்கள் யாரையும் பார்க்காத மாதிரி அங்கிருந்த வேலையாட்களிடம்

அடியேய் செல்வி அறிவிருக்குதா டி உனக்கு? நாட்டாம ஊட்டு நாயி சந்தனக்காட்டில் ஏறுதேன்னு வண்ணான் ஊட்டு நாய் வெள்ளாவில ஏறுச்சாம்…. அந்த கதையால இருக்கு..ம்க்கும் பசு மாட்டுத் தொழுவத்துல கட்டிப் போட வேண்டிய கன்னுக் குட்டிய இப்படிக் கட்டிப் போடாம விட்டு வச்சிருக்கியே, பாரு அது என்ன பண்ணுதுன்னு! ரோட்டுல போற நாய் கிட்டேயும் சாக்கடையில உருளுற பன்னிக் குட்டி கிட்டேயும் சிநேகம் வச்சிகிட்டு ஜோடி போட்டுட்டுத் திரியுது! ஏன் நாயேன்னா எட்டி மூக்கை நக்குமாம். அதை அதை வைக்க வேண்டிய இடத்துல வைக்கலனா நம்ம கவுரத மருவாதி தான் போகும். எல்லாம் என் வீட்டு மனுஷன சொல்லணும். பஞ்சம் பிழைக்க வந்ததுங்களுக்கெல்லாம் ஊருக்குள்ள தங்க இடம் தந்தாரு பாரு, அதான் அதுங்க புள்ளைங்கள்ல இருந்து அதுங்க வளர்க்குறவங்க வரை இப்படி சகட்டு மேனிக்குத் திரியுதுங்க.

இந்தா செல்வி, கன்னுக் குட்டிய நான் வீட்டு வழியா புடிச்சிட்டு வந்து பின் பக்கமா தரேன். நீ பின் பக்கமா வந்து என் கிட்ட இருந்து வாங்கிட்டுப் போய் தொழுவத்துல கட்டு. அதுக்கு முன்னாடி இந்த நாய வெளி வாசல்ல கட்டு. அப்படியே அந்தப் பன்னிய அடிச்சித் துரத்தி விடு” என்று தன் பெருத்த உடலை சமாளிக்க முடியாமல் மூச்சுத் திணறிய படி அவர் கத்திக் கொண்டிருக்கவும்

காரிலிருந்து இறங்கிய அஸ்வத் இதைக் கேட்டுச் சாதாரணமாக இருக்க சாராவுக்கு உடலும் முகமும் கூசி சிவந்து போக, அவர் கணவரோ 

“ஏன் டி வள்ளியம்மா! உனக்கு தான் சத்தம் போட்டு பேசினா உடம்புக்கு ஆகாது இல்ல, பிறகு ஏன் டி கத்துற? அந்த மூணும் குழந்தைங்க மாதிரி ஒண்ணா விளையாடிகிட்டு இருக்குங்க. அதுங்களப் பிரிக்கச் சொல்ற! செல்வி, அதெல்லாம் கட்டிப் போட வேணாம். மூணையும் ஓட்டிகிட்டுப் போய் தொழுவத்துல விடு. அதுங்க அங்க விளையாடட்டும்” என்று அதிகார தோரணையில் பேசியவர் “இவளுக்கு இவ உடம்பத் தூக்கிட்டு நடக்கறதே கஷ்டமா, இதுல கன்னுக் குட்டிய இழுத்துகிட்டுப் போறாளாம் போக்கத்தவ!” என்று முணுமுணுத்துவிட்டு 

“அதை விட இங்க வந்து பாரு, நம்ம சக்கரவர்த்தி மாமா வீட்டுப் பேரனும் பேத்தியும் வந்து இருக்காங்க” என்று அவர் தன் மனைவியை அழைக்கவும்

“அதான் என் பெருத்த ஒடம்ப வச்சிகிட்டு என்னால நடக்க முடியலன்னு நீங்களே சொல்லிட்டீங்க இல்ல? நான் எழுந்து வந்து வரவேற்காம போனா அஸ்வத் தம்பி ஒன்றும் நெனைச்சுக்காது. வாங்க தம்பி வாங்க! சீமையில இருந்து வந்த தம்பி நீங்க தானா? உன் தாத்தா எப்படி இருக்காரு? உன் கல்யாணத்துக்கு நான் வரல. இதான் நீ கட்டிக்கிட்டவளா? ஏன் தம்பி ராசா கணக்கா இருக்கற நீங்க சீமையில பார்க்காத பொண்ணா? இவள…. “ என்றவர் வார்த்தையை மாற்றி “இந்த ஊர் பொண்ண கட்டிக்கிட்டிங்க” என்று அந்தப் பெண்மணி கேலி பேசவும்

“ஏன் இல்ல? இந்த உலகத்துல இருக்குற எல்லா நாட்டு அழகிகளையும் பார்த்து மட்டும் இல்ல பழகியும் இருக்கேன். ஆனா எனக்கான உலக அழகியும் நான் விரும்பறவளும் என்னையே ஆளப் போற பட்டத்து ராணி இங்க தான இருக்கா!” என்று அவருக்கு அதிகாரமாக பதில் சொன்னதோடு மட்டுமில்லாமல் வலது கையால் தன் மனைவியை இழுத்துத் தன்னோடு அவன் அணைக்கவும், அவன் பேச்சையும் செயலையும் பார்த்த வள்ளியம்மா ‘இவன் கிட்ட அதிரடியா பேசினா சரி வராது கொஞ்சம் குழைந்து தான் போகணும்’ என்று நினைத்தவள்

“ஹி… ஹி…. நான் பொதுவா சொன்னேன் அஷ்வத் தம்பி. உனக்கு ஏத்த ராஜாத்தி நம்ம சாரா தான்னு எனக்குத் தெரியாதா இல்ல நான் தான் மறந்திடுவேனா? நீங்க இரண்டு பேரும் இங்க இருக்குற வரைக்கும் உங்க பட்டத்து ராணிய நான் எப்படி கவனிச்சிக்கிறேனு உன் உலக அழகி மனைவி பொம்மி பார்க்கத் தான போறா”என்று அவனுக்கு கேட்கும் படி சொன்னவர்

‘அரசன் குடுமியையும் அம்பட்டன் புடிப்பான்! உன் பட்டத்து ராணி குடுமியும் இந்த வள்ளியம்மா கையில தான்’ என்று உள்ளுக்குள் கருவிக் கொண்டே அவர் தழைந்து போக, கணவனின் பேச்சில் உள்ளம் குளிர அவனிடம் ஒட்டி நின்ற சாரா அந்தப் பாட்டியின் பேச்சில் விதிர் விதிர்த்துப் போய் அவரைப் பார்க்க

“கிராமத்து ஆட்களைப் பற்றி எனக்குத் தெரியாதா பாட்டி? மனசுல எதையும் வச்சிக்காம எதுவா இருந்தாலும் எதார்த்தமா பேசுவிங்க. அதனால நான் பெருசா எடுத்துக்கல. ஆனா நான் எதார்த்தமா சொல்லல. முழு மனசா உணர்ந்து என் பொம்மி எனக்குக் கிடைச்சத வச்சி தான் சொன்னேன்” என்று அவன் விளக்கம் கொடுக்க

“அட என்ன டி நீ? வந்தவங்கள வாசல்லயே நிக்க வெச்சிப் பேசிக்கிட்டு! நீ வா தம்பி உள்ள” என்று வேலுச்சாமி தாத்தா அவர்கள் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்து உள்ளே அழைத்துச் சென்று விட அதனுடன் முடிந்தது அவர்கள் உரையாடல்.

வீட்டிற்கு வந்த அடுத்த நிமிடமே வேலுச்சாமி தாத்தா சில நிலங்களையும் ஆட்களையும் பார்க்க என்று அஷ்வத்தை வெளியே அழைத்துச் சென்றவர் மதியம் உணவுக்கு தான் அவனை வீட்டிற்கு அழைத்து வர காலையில் இவர்கள் அனைவரும் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டதால் மதியம் இவர்களுக்கு விருந்து வீட்டிலேயே தயாராகி இருந்தது.

அவர்கள் இருவரும் உணவுக்கு வந்த நேரம் தாத்தாவைத் தேடி யாரோ ஒருசிலர் வந்து அவரை மட்டும் வெளியே அழைத்துச் சென்று விட இவனை மட்டும் உணவு மேடையில் அமர வைத்த பாட்டி வேலையாள் மூலம் அவனுக்கு உணவு பரிமாற ஏற்பாடு செய்ய. வந்ததிலிருந்து தன் மனைவியைக் கண்ணில் காணாமல் தேடியவன் சரி உணவு பரிமாறவாது அவள் வருவாள் என்று அவன் எதிர்பார்த்து இருக்க அங்கு வேலையாளைப் பார்த்தவன்

“பொம்மி எங்க? நீங்க போய்ட்டு அவள அனுப்புங்க” என்று சொல்ல

“இல்லங்க ஐயா! அவங்க ஏதோ கொஞ்சம் வேலையா வெளியே போய் இருக்காங்க. அதான் பெரியாத்தா என்ன உங்களுக்குப் பரிமாறச் சொன்னாங்க” என்று அவள் இழுக்கவும் 

“எங்க போய் இருக்கா? என் கிட்ட சொல்லாம! சரி அவ வரட்டும். அவ வந்த பிறகே நான் சாப்டுக்கறேன்”

‘அச்சோ! பெரியாத்தா இதைக் கேட்டா திட்டுவாங்களே! அந்த பொம்மி பொண்ணு இப்போ எப்படி வரும்? அதைத் தான் வேலை செய்ய மிளகாய் குடோனுக்கு அனுப்பி இருக்காங்களே! இப்போ என்ன சொல்லி சமாளிக்கறதுன்னு தெரியலையே?’ என்று வேலை செய்யும் அந்தப் பெண் கையைப் பிசைந்து கொண்டு நின்றவள் அஷ்வத் உணவு மேஜையை விட்டு எழுந்திருக்கவும்

“ஐயா… ஐயா… கொஞ்சம் இருங்கையா. அம்மா எங்க போய் இருக்காங்கனு தெரியல. இதோ பெரியாத்தா கிட்ட கேட்டு கையோட கூட்டிட்டு வரேன். அது வரை நீங்க சாப்பிட்டு இருங்க. உங்களுக்குப் பரிமாறின பொறவு நான் போறேன்” என்று அவள் சொல்லவும்

“இல்ல.. எனக்கு எதுவும் வேணாம். முதல்ல அவ வரட்டும் அப்பறம் நான் சாப்பிட்டுக்கிறேன் என்று அவன் கறாராகச் சொல்லவும் உடனே அவள் ஓடிப் போய் பாட்டியிடம் என்ன சொன்னாளோ உடனே அவரோ தன் பெருத்த உடலைத் தூக்கிக் கொண்டு அவனிடம் ஓடி வந்தவர் 

“அஷ்வத் தம்பி, உட்காருங்க உட்காருங்க! நான் பரிமாறுறேன். அந்தக் கழுதைக்கு உங்க ஞாபகம் எங்க இருக்கு? புருஷன்காரன் வருவானே நம்ம கையால சாப்பாடு பரிமாறி பக்கத்துலயிருந்து பார்த்துக்கிடலாம்னு இல்லாம இங்க அவ வயசு சினேகிதிங்களப் பார்க்கவும் அரட்டை அடிக்கவும் போய்ட்டா. நாம போய் இப்போ கூப்பிட முடியுமா? அது நல்லா தான் இருக்குமா? 

வயசு பொண்ணுங்க நாளு பேரு ஒண்ணு சேர்ந்தா அவ்வளவு சீக்கிரமாவா வருவாளுங்க? அந்தப் பொண்ணு பொழுது சாய்ந்த பிறகு தான் தம்பி வரும். அதனால நீங்க சாப்பிட வாங்க. அந்தக் கழுதைக்காக நீங்க ஏன் பசியா இருக்கீங்க? ஐயர் வர்றவரைக்கும் அமாவாசை காத்திருக்குமா சொல்லுங்க” என்று அவர் நீட்டி முழங்கி அவனுக்குப் பரிந்து பேசுவது போல் சாராவை அவர் மறை முகமாகக் குற்றம் சாட்டவும்

“இருக்கட்டும் பாட்டி, அவ மெதுவாவே வரட்டும். அவங்க சிநேதிகளை எல்லாம் பார்த்து ரொம்ப நாள் ஆகிடுச்சி இல்ல? அதனால அவ போனதுல என்ன தப்பு இருக்கு? அவ எப்ப வராளோ வரட்டும். அவ வந்த பிறகே எவ்வளவு நேரம் ஆனாலும் நான் சாப்டுக்கிறேன். என் மனைவி கையால பரிமாறி நான் சாப்டா தான் பாட்டி எனக்கு திருப்தியா இருக்கும்” என்று அவன் மனைவிக்குப் பரிந்து பேசியது மட்டுமில்லாமல் அவள் வந்தால் தான் பச்சைத் தண்ணி என்றாலும் குடிப்பேன் என்ற ரீதியில் அவன் பேசிவிட்டு அமர்ந்து விடவும்

அதைப் பார்த்த வள்ளியம்மா பாட்டிக்கு ஒரு பக்கம் கோபமாகவும் இன்னொரு பக்கம் பகீர் என்றும் இருந்தது. கோபம் ஏனென்றால் இவ்வளவு சொல்லியும் மனைவியை விட்டுக் கொடுக்காமல் மனைவிக்கு ஜிங்குஜா போடுகிறானே என்றது தான் அது. பயம் எதற்கென்றால் தாத்தாவும் அஷ்வத்தும் வெளியே போன பிறகு சாராவைப் படுத்தி எடுக்க வேண்டும் என்ற முடிவில் அவளை மிளகாய்களை மூட்டைப் பிடிக்க வேலையாட்களில் வேலையாளாக வேலை செய்ய சாராவை அவர் மிளகாய் மண்டிக்கு அனுப்பியிருந்தார். 

அதை இங்கு அஷ்வத்திடமோ இல்லை தன் கணவனிடமோ அவர் சொல்ல முடியுமா? அவள் இங்கில்லை என்பதை மறைக்கத்தான் தன் கணவனை வெளியே அனுப்பினது. அஷ்வத்திடம் ஏதாவது பொய் சொல்லி சமாளித்து விடலாம் என்று அவர் நினைத்தது. ஆனால் அஷ்வத் மனைவி மனைவி என்று உருகோ உருகு என்று உருகி மேலும் இவர் பேச்சு எதையும் காதில் வாங்காமல் விடாக்கண்டன் கொடாக்கண்டனாக இருக்கவும் உள்ளுக்குள் அவனை வசை பாடியவர் இப்போது இவனுக்கு சாப்பாடு கொடுக்கவில்லை என்றால் தன் கணவனிடம் இன்று முழுக்கத் திட்டு வாங்க வேண்டியிருக்கும் என்று நினைத்தவர் வேண்டா வெறுப்பாக வேலையாளிடம் கண்ணைக் காட்டியவர் 

“இந்தா செல்வி! போ போய் அந்த பொம்மி பொண்ணக் கூட்டிகிட்டு வா. அவ புருஷன் சாப்பிடாம உட்கார்ந்து இருக்கானு சொல்லி கூட்டிகிட்டு வா. அப்பவாது அந்த பொண்ணுக்கு புருஷன் ஞாபகம் இருக்கானு பார்ப்போம்” என்று பொடி வைத்துப் பேசி வேலையாளை அனுப்பியவர் 

“மணி மூணு ஆகுது. அவ வயிறு முட்ட சாப்டு இருப்பா. இது தெரியாம இந்தப் புள்ள இப்படிப் பசி பட்டினியா அவளுக்காகக் காத்து கிடக்கு” என்று வாய் விட்டுப் புலம்பியவர் 

“இதோ வந்திடுவா தம்பி. இங்கையே உட்கார்ந்து இருங்க. சித்த எனக்கு உள்ள கொஞ்சம் வேலை இருக்கு இதோ வரேன்” என்று அவர் சென்று விட.

அவர் சாராவை ஏத்திவிட்டுப் பேசியதில் அஷ்வத்துக்கு சிறிதும் பாட்டி மீது சந்தேகமோ தன் மனைவி மேல் கோபமோ வரவில்லை. தன் மனைவி எங்கே அவளை இப்போதே காண வேண்டும் என்ற ஆசை தான் அவனுக்கு அதிகமானது. அவன் தன் மனைவியையே நினைத்துக் கொண்டு அமர்ந்து இருக்க 

“என்னங்க இன்னும் சாப்பிடாம என்ன பண்றீங்க?” என்று அந்த அறையின் வாசலில் சாராவின் குரல் கேட்கவும், நிமிர்ந்து அவளைப் பார்த்த அஷ்வத் அவள் கோலத்தைக் கண்டு அதிர்ந்து இருக்கையை விட்டு எழுந்தே விட்டவன் 

“என்ன டி என்ன ஆச்சி? ஏன் இப்படி இருக்க? என்ன டி கோலம் இது!” என்ற கூவலுடன் அவன் அவளிடம் நெருங்கவும்

“ஐயோ! கிட்ட வராதிங்க.. அங்கேயே நில்லுங்க” என்று அவனுக்கு மேல் கூவியவள் அப்போது தான் தான் செய்த தவறை உணர்ந்தாள் சாரா. 

காலையில் பாட்டி அவளை உருட்டி மிரட்டி மிளகாய் மண்டிக்கு அனுப்பி வைக்க அங்கே போனவள் தான் அணிந்திருந்த சாதாரண புடவையின் மேல் ஆண்கள் போடும் முழுக்கை சட்டையை அணிந்து தலையில் ஒரு துணியைக் கட்டிக் கொண்டு தரம் பிரித்து வந்த காய்ந்த மிளகாய்கள் எல்லாவற்றையும் மற்றவர்களுடன் சேர்ந்து சாக்குப் பையில் அடைத்து மூட்டை பிடிக்க ஆரம்பித்தாள் சாரா. 

இது ஒன்றும் அவளுக்குத் தெரியாததோ இல்லை செய்யாத வேலையோ இல்லை. அவள் சின்ன வயதில் இருந்தே இதெல்லாம் செய்து தான் இருக்கிறாள். ஆனால் இடையில் இப்போது ஏற்பட்ட சில மாற்றத்தால் அவள் வெளி நாடு போக வேண்டி இருந்ததால் இந்த வேலைகளைச் செய்யாமல் கொஞ்சம் இடைவேளை விட்டு இருந்ததால் இப்போது இந்த வேலைகளைச் செய்ய அவளுக்குச் சிரமமாக இருக்க மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வேலை செய்தவள் தன் கணவனின் தகுதியையும் பேரையும் புகழையும் எண்ணி துக்கம் நெஞ்சடைக்க வேலை செய்து கொண்டிருந்தவள். 

அந்த நேரத்தில் தான் வேலைக்காரப் பெண் அஷ்வத் சாப்பிடாமல் இருப்பதாகவும் அதனால் பாட்டி கூப்பிடுவதாக வந்து சொல்லவும் கணவன் சாப்பிட வில்லை என்ற எண்ணத்தில் பாட்டியின் கோபத்தை அலட்சியம் செய்தவள் வேலைகளை அப்படியே போட்டு விட்டு கழுத்தில் வியர்வை வடிய முகத்தில் எண்ணை பிசு பிசுப்பு மின்ன கையிலும் முகத்திலும் கழுத்திலும் மிளகாயின் எரிச்சலுடன் அதை விட உடல் முழுக்க மிளகாயின் நெடியுடன் கணவனிடம் வந்து நின்றாள் பொம்மி. அந்த கோலத்தை பார்த்து தான் அஷ்வத் அப்படி கேட்டது அதற்கு அவள் பதறி விலகவும் கண்ணில் கூர்மையுடன் அவன் அவளைப் பார்க்க 

“என் மேல எல்லாம் மிளகாய் நெடிங்க. அது உங்களுக்கு ஒத்துக்காதேனு தான் நான் விலகினேன்” என்று அவள் தான் விலகியதற்கு விளக்கம் கொடுக்கவும் 

“மிளகாய் நெடியா? அது ஏன் உன் மேல வருது?” என்று அவன் கண்களைச் சுருக்கிக் கேட்கவும் 

“அது வந்து.. மிளகாய் மண்டிக்குப் போய் இருந்தேன் இல்ல? அதான்..” என்று அவள் குரல் தந்தி அடிக்கவும் 

“மிளகாய் மண்டியா? அங்க எதுக்கு நீ போன? நீ உன் பிரண்ட்ஸ பார்க்க இல்ல போனதா பாட்டி சொன்னாங்க!” 

“பாட்டி பொய் சொல்லி இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தவள் அட அந்த பிரண்ட்ஸ் எல்லாம் மிளகாய் மண்டியில தானங்க வேலை செய்றாங்க? அப்போ அவங்களப் பார்க்க அங்க தானங்க போகனும் போனா சும்மா இருக்க முடியுமா அப்படியே அவங்களுக்கு உதவியா அவங்க கூட சேர்ந்து மிளகாய்யை மூட்டை கட்டறதுல உதவியா வேலை செய்துட்டு வந்தேன். ஏன், உங்க மனைவி இப்படி ஒரு வேலை செய்யறதால உங்களுக்கு அசிங்கமாவோ அவமானமாவோ கவுரவ குறைச்சலாவோ இருக்கா என்ன?” என்று அவள் அவன் கண்ணைப் பார்த்துக் கேட்கவும் 

“அட ச்ச.. இதுல என்ன டி இருக்கு? என் மனைவி என்ன ஊர் கதை பேசினாளா இல்ல ஊரைத் தான் ஏமாற்றினாளா? உழைச்சா தான? எந்த வேலை செய்து உழைத்தாலும் தப்பு இல்ல” என்று அவன் சொல்லும் போதே அவனையும் மீறி அவன் குரல் கனிந்து போய் ஒலிக்கவும், அவன் குரலிலும் அவன் சொன்ன வார்த்தையிலும் உள்ளம் குளிர்ந்தவளின் கண்கள் தன்னையும் மீறி கலங்கி விட அதை கணவனிடம் இருந்து மறைத்தவள் 

“சரி நீங்க போய் சாப்பிடுங்க. நான் செல்வி அக்கா கிட்ட சொல்லி பரிமாறச் சொல்றேன்” என்று அவள் சொல்லவும் 

“நீ சாப்டியா?” 

எங்கே காலையிலிருந்து அவள் பச்சைத் தண்ணீர் கூட குடிக்கவில்லையே! பிறகு எப்படி சாப்பிட? இதைச் சொன்னால் கணவன் கோபப் படுவான் என்று அறிந்தவள் 

“ம்ம்ம்… நான் போன உடனே பிரண்ட் வீட்டுல கொஞ்சம் சாப்டேன்” என்று அவன் கண்களை நேருக்கு நேர் பார்க்காமல் அவள் தலை குனிந்து சொல்லவும், அவள் சொல்வது பொய் என்று உணர்ந்தவனோ 

“சரி அப்போ நீ போய் வேலைய கண்டினியூ பண்ணு. அது முடிஞ்சி எப்போ நீ வந்து உன் கையால பரிமாறுவாயோ அப்போ நான் சாப்பிட்டுக்கிறேன் என்று சொன்னவன் சென்று ஹாலில் இருந்த ஷோபாவில் அமர்ந்து விட, அவன் பின்னே சென்றவள்

“பிளீஸ்! நான் சொல்றதக் கேளுங்க. செல்வி அக்காவப் பரிமாறச் சொல்றேன் சாப்பிடுங்க. நீங்க ஏங்க பசியா இருக்கீங்க?” என்று அவள் கெஞ்ச 

நீ சொல்வது எதுவும் என் காதில் விழவில்லை என்பது போல் கைகளை தன் மார்பில் கட்டியவனோ உதட்டை அழுத்த மூடி முகத்தில் ஒரு பிடிவாதத்துடன் கண்களை மூடி ஸோஃபாவில் பின்புறமாக தலை சாய்த்து அவன் அமர்ந்து விட

கணவனிடம் நின்று நின்று பார்த்தவள் அவன் கொஞ்சம் கூட அசரவில்லை என்றதும் கண்ணில் நீர் வழிய அங்கிருந்து சென்றவள் தலை குளித்து வேறு புடவை கட்டி புத்தம் புது பூவாக அவன் முன் வந்து நின்றவள் 

“சாப்பிட வாங்க” என்று அழைக்க 

அப்போதும் அவன் தன் கண்களைத் திறக்காமல் அவள் சொன்னதைக் காதிலேயே வாங்காதவன் போல் அமர்ந்து இருக்க, அதைப் பார்த்தவள் எப்படி பிடிவாதம் பாரு குழந்தை மாதிரி என்று கணவனின் பிடிவாதத்தை உதட்டில் சிறு சிரிப்புடன் ரசித்தவள் அவனை நெருங்கி அவன் தலை முடியைக் கோதி 

“ஏ.கே போதும் பிடிவாதம், வாங்க சாப்பிட. சரி உங்க பொண்டாட்டியே பரிமாறுறேன் வாங்க” என்று அவன் தாடையைப் பிடித்து அவள் கெஞ்சவும் கண்களைத் திறந்து அவளைப் பார்த்தவன் தலை குளித்து முடியை முன்புறமாக போட்டு அதிலிருந்து ஈரம் சொட்டச் சொட்டத் தன் முன் ஓர் ரவிவர்மா ஓவியமென நின்றிருந்த.

தன் மனைவியின் அழகை கண்களால் அவன் பருகிக் கொண்டிருக்க அவள் குனிந்த படி நின்று அவன் தாடையைப் பிடித்ததில் அவள் கூந்தலோ முன்பக்கமாகச் சரிந்து அவன் முகத்தருகில் நர்த்தனம் ஆட அதிலிருந்து உருண்டோடி வழிந்த நீரோ சொட்டுச் சொட்டாகச் சரியாக அவன் நெஞ்சில் விழ அதன் ஈரமோ அவன் ஆடையையும் மீறி அவன் நெஞ்சில் இறங்கி அவனைக் குளிர்விக்க ஒருவித கிறக்கத்துடனே அவனோ அவளைப் பார்த்து இருக்கவும், பெண்ணவளோ அவன் பார்வையில் சிவந்து போய் 

“என்னங்க அப்படிப் பார்க்குறீங்க?” என்று மயக்கும் குரலில் அவள் கேட்க, உதடுகளை அதிகம் பிரிக்காமல் மொட்டெனப் பிரித்து அவள் கேட்ட விதத்தில் தன்னுள் ஒரு மாற்றத்தை உணர்ந்தவனோ சட்டென அவள் உதடுகளைத் தன் ஆள் காட்டி விரலால் வருடி விட அதில் அவளோ தன் கண்கள் மூடி அந்த இன்பத்தை அனுபவிக்க 

அதே நேரம் எங்கோ பாத்திரம் விழ அந்த சத்தத்தில் இருவரும் தாங்கள் இருக்கும் இடத்தையும் செயலையும் உணர்ந்து தங்கள் ஏகாந்த நிலையிலிருந்து வெளியே வர அதில் தெளிந்த சாரா ஓட்டமும் நடையுமாக சாப்பாட்டு அறையை நோக்கி சென்றவள் அவனுக்கு உணவை எடுத்து வைக்கவும் அவள் பின்னேயே வந்த அஷ்வத் தன்னை நிமிர்ந்து கூட பார்க்காமல் தனக்காக உணவைப் பரிமாறும் மனைவியைப் பார்த்தவன் 

“ஏன் பொம்மி என்ன தான் அவசரம் என்றாலும் இப்படி சோப்பு நுரையெல்லாம் அப்படியே இருக்குற மாதிரியா குளிச்சிட்டு வருவ?”

‘ஐயோ! அப்படியேவா வந்துடோம்’? என்று அவனை பார்த்து கேட்டவள் கூடவே தன் கழுத்து கை கால் என்று ஆராயவும் 

“அதுலயும் அவசரத்துல துணி துவைக்கற சோப்பு போட்டா குளிச்சிட்டு வருவ?” என்று அவன் மறுபடியும் ஒரு துள்ளலான குரலில் சொல்லவும், இதுவரை நிஜம் என்று நம்பியவள் அவன் குரலின் பேதத்தை உணர்ந்து 

“என்னது துணி சோப்பா?!” என்று நம்பாத குரலில் கேட்டு அவள் மறுபடியும் உதடு குவிக்கவும் 

“ஆமாம் ஆமாம்! எனக்கு என்னமோ அப்படித் தான் இருக்கு. நீ வேணா என் கிட்ட வாயேன் உன்னக் கட்டிப் பிடிச்சி வாசம் பார்த்துச் சொல்றேன்” என்று மயக்கும் குரலில் சொன்னவன் தன் ஆள் காட்டி விரலை நீட்டி மறுபடியும் அவள் உதட்டின் வரி வடிவத்தை வருடியவன் 

“அதிலும் நான் சொன்ன சோப்பு நுரை இங்க தான் இருக்கு” என்று அவன் சொல்லவும் அவன் செயலில் உடலில் மின்சாரம் பாய, அவன் கையைக் கெட்டியாகப் பிடித்தவள் 

“என்னங்க இது விளையாட்டு? பிளீஸ் சாப்பிடுங்க” என்று அவள் கொஞ்சும் கிளியாய் மிழையவும் 

“அதுக்கு முதல்ல நீ என் கைய விட்டா தான டி நான் சாப்பிட முடியும்?” என்று ஒரு வித சிரிப்புடன் அவன் சொல்லவும் அதில் பட்டென அவன் கையை உதறி விட்டு அவள் சற்றுத் தூர விலகி நிற்கவும் அவள் செயலில் வாய் விட்டுச் சிரித்தவனோ 

“நீயும் உட்கார் பொம்மி சாப்பிடலாம்” என்று அழைக்க 

“இல்ல நீங்க சாப்பிடுங்க. நான் பிறகு சாப்டுறேன்” என்று சொல்லிக் கொண்டே அவள் பரிமாற, அவள் கையைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்தவனோ அவள் எழ முடியாத அளவுக்கு அவளைத் தன் மடியில் அமர வைத்து 

“நீ எல்லாம் அப்புறம் தனியா ஒண்ணும் சாப்பிட வேணாம். இப்பவே சாப்பிடு” என்றவன் அவளுக்குத் தட்டில் உள்ள உணவைப் பிசைந்து ஊட்டி விட ஒரு வினாடி அவன் முகத்தையே பார்த்தவள் பின் எந்த வித மறுப்பும் சொல்லாமல் அவன் கொடுத்த உணவை வாங்கிக் கொள்ள அதன் பின் அவளை மடியில் அமர வைத்த படியே அவனும் சாப்பிட்டு முடிக்க. 

இதெல்லாம் பார்த்த பாட்டிக்குத் தான் வயிறு தீ பந்தமாக எரிந்தது. 

‘இவனையும் இவளையும் இங்கேயிருந்து போறதுக்குள்ள பிரிச்சி ஆளுக்கொரு திசையா அனுப்பி விடலாம்னு நான் நினைச்சா இதுங்க என்னமா கொஞ்சிக் குலாவுதுங்க! ஏன் டி எனக்கு சாப்பாடு கொடுக்காம போனனு இவன் கோபப் படுவான்னு பார்த்தா என்னமா மடிமேல உட்கார வச்சி ஊட்டி விடறான்! இவனை எல்லாம் என்ன செய்ய? அப்பாவுக்குத் தப்பாம இல்ல இந்தப் பையன் பொறந்திருக்கான்! இருக்கட்டும் இருக்கட்டும்.. இவன் அப்பனும் ஆத்தாவும் வாழாமப் போன மாதிரியே இவனும் வாழாமப் போக நான் சீக்கிரமே வழி பண்றேன்!’ என்று அந்தப் பாட்டி மனதில் சூளுரைக்க 

சாப்பிட்டு முடித்த உடனே மறுபடியும் சாரா மிளகாய் மண்டிக்குச் செல்ல நினைக்க அவளைப் போக விடாமல் தடுத்தவன் அவள் உடல் அசந்து போய் இருப்பதைப் பார்த்ததாலே அவளைத் தூங்கி ரெஸ்ட் எடுக்கச் சொன்னவன் பின் மாலை அவளை எழுப்பி வெளியே கிளம்பச் சொல்ல ரொம்ப நாள் கழித்து இன்று அவள் செய்த வேலையால் எழுந்திருக்க முடியாமல் அசதியில் படுத்திருந்தவளிடம் வந்த அஷ்வத் 

“என்ன பொம்மி நான் சொல்லிகிட்டே இருக்கேன் எழுந்திருக்காம படுத்துகிட்டே இருக்க! ம்ம்ம்ம்.. சீக்கிரம் கிளம்பு அப்ப தான் இருட்டுறதுக்குள்ள மலை மேல ஏறி இந்த திருச்சி நகரின் அழகை இரவு விளக்கு வெளிச்சத்துல பார்க்க முடியும்” என்று அவன் படபட வென்று சொல்லவும் 

“என்னது இப்போ நாம மலை மேல ஏறப் போறோமா? உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கா? அதுவும் இன்னைக்கேவா? வேணாங்க.. நாம இன்னோர் நாள் போலாமே! இன்னைக்கு வேண்டாங்க” என்று அவள் மறுக்க 

“அதெல்லாம் முடியாது. நான் சொன்னது சொன்னது தான்! இந்த ஊர்ல என்ன ஸ்பெஷல்னு நான் நெட்ல போட்டுப் பார்த்தப்ப நிறைய இடத்தை விட இந்த இடம் தான் என்னைக் கவர்ந்தது. அதான் உடனே போகணும்னு முடிவு பண்ணிட்டேன்” என்று சொன்னவன் மேற்கொண்டு அவளைப் பேச விடாமல் குளிக்கச் சென்று விட

சாராவுக்கும் ஆசை தான் மலை மேல் ஏறி இந்த நகரின் அழகை ரசிக்க! ஆனால் இன்று வந்ததிலிருந்து கொஞ்சம் கூட உட்காராமல் அவள் நின்றபடியே வேலை பார்த்ததில் அவள் கால்கள் இரண்டும் வலி எடுத்த படி இருக்க இப்போது அவளால் எப்படி அத்தனைப் படிகள் ஏற முடியும்? 

‘எழுந்து நின்றாலே கால்கள் இரண்டும் நடுங்குதே இப்போ இதை இவர் கிட்ட எப்படி சொல்றது?’ என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கவும் குளியல் அறையிலிருந்து வெளியே வந்த அஷ்வத் அவள் இப்போதும் படுத்திருப்பதைப் பார்த்தவன் 

“என்ன பொம்மி நான் இவ்வளவு சொல்லியும் இன்னும் எழுந்திருக்காமல் படுத்துகிட்டே இருக்க?” என்று ஓர் அதட்டலுடன் கேட்கவும் வேறு வழியில்லாமல் எழுந்து குளித்துக் கிளம்பினாள் சாரா. அங்கே போனதும் தாயுமானவர் சந்நிதி வரை கூட அவளை ஏற விடவில்லை அஷ்வத். தன் கையில் அவளைக் குழந்தை என ஏந்தியவன் 

“நீ எவ்வளவு டயர்டா இருக்கேனு எனக்குத் தெரியும். ஆனா நீ உள்ளவே அடைந்து இருந்தா இன்னும் டயர்டா இருக்கும்னு தான் பிடிவாதமா வெளியே அழைத்து வந்தேன். இந்த மலைப்பகுதிக்கு வந்தால் உனக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்னு தான். நீ ஒண்ணும் நடக்க வேணாம். நானே உன்னைத் தூக்கிக்கிட்டுப் போறேன்” என்று சொன்னவன் அதன் படியே அவளை ஏந்திக் கொண்டு முதல் படியில் காலை வைக்க. அவன் தூக்கியதும் பதறித் துடித்த சாரா 

“என்னங்க இது பொது இடத்துல வந்து இப்படி எல்லாம் நடந்துக்குறீங்க? முதல்ல என்னை இறக்கி விடுங்க. நான் நடந்தே வரேன்” என்று அவள் பிடிவாதமாக மறுக்கவும், அதை விட பிடிவாதத்துடன் 

“என்ன டி நான் என்ன எங்க நாடு மாதிரி பொது இடத்துல வச்சி உனக்கு என்ன லிப் டூ லிப் கிஸ்ஸா கொடுத்தேன்? என் மனைவியால நடக்க முடியாது. அதனால தூக்கினேன் அவ்வளவு தானே? இதே மாதிரி நீ ரொம்ப பண்ண இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்ன அந்த லிப் டூ லிப் கிஸ்ஸ நான் உனக்கு கொடுத்துடுவேன். யார் சுற்றி இருக்காங்கனு எல்லாம் பார்க்க மாட்டேன்” என்று அவளை மிரட்டியவன் உண்மையாகவே முத்தம் கொடுப்பதற்காக அவள் முகம் நோக்கி குனியவும்

“அச்சசோ!” என்று தன் கையால் வாய் மூடியவள் இனிமே நான் எதுவும் பேச மாட்டேன் என்பது போல் தலையை ஆட்டியவள் அதன் படியே பேசாமல் இருக்க. என்ன தான் கணவன் விடாப்பிடியாகத் தூக்கி வருவது ஒரு வகையில் மனதில் கோபமாக இருந்தாலும் ஒரு தாய் போல் தன் முகம் பார்த்துத் தன் உடல் வேதனைகளை அறிந்து கொள்ளும் கணவன் தனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சியின் எல்லையில் இருந்தாள் சாரா.

அவனின் செயலையும் தோற்றத்தையும் கண்டு சிலர் அவர்களை உற்றுப் பார்த்தும் இன்னும் சிலர் ‘பொண்ணு மசக்கையா இருக்கா போல! அதான் அவ புருஷன் தூக்கிகிட்டுப் போறான்’ என்றெல்லாம் சொல்லவும் சாராவுக்கு வெட்கத்துடன் கூடிய சந்தோஷம் மனதில். 

மேலே சென்று விநாயகரைத் தரிசித்துப் பிறகு அங்கிருந்து காவேரியை ரசித்தவர்கள் சிலு சிலுவென்று காற்று உடலிலும் முகத்திலிலும் மோத இருட்டில் சிறு சிறு வெளிச்சத்தில் எறும்பு போல ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்து செல்லும் ரயில் பெட்டிகளை ரசித்தவர்கள் பின் அங்கிருந்து செல்ல மனமே இல்லாமல் கிளம்ப இப்போதும் அஷ்வத் அவளை நடக்க விடவேயில்லை.

இருவரும் சிரித்த முகமாக வீடு வந்ததில் வேலுச்சாமி தாத்தா சந்தோஷப் பட வழக்கம் போல வள்ளியம்மா பாட்டி கருவிக் கொண்டே ஒதுங்கிச் சென்றார்.

இங்கு இருவருக்கும் ஒரே அறை என்பதால் எங்கு படுப்பது என்ற தயக்கத்தில் சாரா நின்றிருக்க அப்படி எந்த வித தயக்கமும் இல்லாமல் கட்டிலில் படுத்த அஷ்வத் 

“என்ன பொம்மி கால் வலிக்குதுனு சொல்லிட்டு நின்னுகிட்டே இருக்க? வா வந்து படு” என்று சொல்ல 

“இல்ல நான் வேணும்னா கீழேயே படுத்துக்கவா?”

“ஏன் எதற்கு?” 

“……” அவள் மவுனமாக இருக்கவும் 

அவள் முகத்தில் சில குழப்பங்களைப் பார்த்தவன் எழுந்து கட்டிலில் அமர்ந்து 

“இங்க பாரு டி, நீ என் மனைவி நான் உன் கணவன்.கணவனுக்கான உரிமை தெரிந்து தான் நான் உன் கழுத்துல தாலி கட்டினேன். தாலின்னா என்ன கணவன்னா என்ன தெரியாத அளவுக்கு நான் ஒண்ணும் சின்னத்தம்பி பிரபு இல்ல! எனக்கான உரிமையும் கடமையும் காதலும் என்னனு எனக்கு நல்லாவே தெரியும். 

ஆனா இப்போ எதுவும் வேண்டாம் கொஞ்ச நாள் போகட்டும்னு தான் நான் அமைதியா இருக்கேன். ஆனா நீ நான் ஏதோ உன்னைப் பிடிக்காம வேற வழி இல்லாம உன்னைக் கல்யாணம் பண்ணி பேருக்குனு சிரிச்சிப் பேசறேனு நீ பாட்டுக்கு ஏதோ முட்டாள் தனமா யோசிச்சிகிட்டு இருக்காத. இதுவரை யோசிச்சிருந்தா அதை மறந்திடு. அதே மாதிரி இனிமே யோசிக்காத அளவுக்கு அதைத் தூக்கித் தூரப் போடற வழியைப் பாரு. 

மீறி நான் யோசிப்பேன்னு நீ பிடிவாதமா இருந்து யோசிச்சா உன்னைக் கொன்னே போட்டுடுவேன் சொல்லிட்டேன்” என்று அவளுக்குக் கோபமாக விளக்கம் கொடுத்தவன் அதே கோபத்துடன் கட்டிலில் படுத்து கையை நெற்றியில் வைத்துத் தன் முகத்தை மறைத்த படி கண்களை மூடிக் கொள்ள

‘அட நம்ம புருஷனுக்கு சின்னத்தம்பி பிரபு கூட தெரிஞ்சிருக்கே!’ என்று அந்த நேரத்திலும் மனதில் அவனுக்குக் கவுண்டர் கொடுத்தவள் ‘இதை எல்லாம் கொஞ்சம் சிரிச்சிகிட்டே சொன்னா தான் என்னவாம் இவர்?’ என்று முணுமுணுத்துக் கொண்ட சாரா பேசாமல் கட்டிலின் மறுபுறம் வந்து படுத்துக் கொள்ள 

மனைவியை அணைத்துக் கொண்டு படுக்க அஷ்வத்துக்கும் ஆசை தான். எங்கே நாம் அதைச் செய்யப் போக மனைவி மறுபடியும் நான் ஏதோ வேண்டா வெறுப்பாக செய்வதாக நினைப்பாளோ என்று நினைத்துப் பேசாமல் படுத்துத் தூங்கிப் போனான் அவன். 

சற்று நேரம் தான் தூங்கியிருப்பான் அவன். அதன் பிறகு சாராவோ குழந்தை என கை கால்களைப் பரப்பி ரங்க ராட்டினம் சுற்ற ஆரம்பிக்க முதலில் தூக்கத்தில் அவளுக்கு என்னமோ ஏதோ என்று நினைத்தவன் பின் அவள் செய்கையில் சிரிப்பு வர அவள் சுழலும் இடங்களுக்கு ஏற்க அவளுக்கு இடம் விட்டு இவனும் கட்டிலிலேயே படுக்க

அப்போதும் அவன் மனையாள் சும்மா இல்லாமல் தன் இரண்டு கால் பாதங்களையும் தூக்கி அவன் முகத்திலும் கழுத்திலும் போட அதில் முழுமையாக தூக்கம் கலைந்தவன் அவளை நிமிர்ந்து பார்க்க மல்லாக்க படுத்து இருந்தவள் கட்டிலின் விளிம்பில் தலை கீழே தொங்க அவள் படுத்திருந்த கோலத்தைப் பார்த்தவன் மனதில் பயம் சூழ அவளைத் தூக்கிச் சரியான வாக்கில் படுக்க வைத்தவன் 

“இவ செய்யற சாகசத்தப் பார்த்தா அந்த ஸ்பைடர் மேனே தோற்றுடுவான் போலிருக்கே!” என்று வாய் விட்டு அவன் புலம்ப

“ம்ம்ம்… ஆமா மச்சான்” என்று அவள் பதில் கொடுக்கவும் ‘இவள் முழித்துத் தான் இருக்கிறாளோ?’ என்று ஒரு வினாடி அவள் முகத்தை உற்றுப் பார்த்தவன் அவள் உண்மையாவே தூக்கத்திலேயே அவனுக்குப் பதில் கொடுக்கவும் வாய் விட்டுச் சிரித்தவன் 

“என் செல்ல பொம்மி, என் மனசை உன் நினைவுகளால வலை பின்றதுல நீ ஸ்பைடர் உமன் தான் டி” என்று காதல் வழியும் குரலில் சொன்னவன் அவள் நெற்றி முடியை ஒதுக்கி அங்கு இதழ் பதித்தவன் தன் மனைவிக்காக அந்த முழுக் கட்டிலையும் விட்டுவிட்டு முதல் முறையாக அவன் தரையில் துணி விரித்துப் படுத்துத் தூங்க முயற்சிக்க, அப்போதும் உங்களை விடுவேனா என்று அவன் மனையாளோ சற்று நேரத்திற்கெல்லாம் உருண்டு புரண்டு அவன் மேலேயே தொபுக்கடீர் என்று விழ, அதிலிருந்து அவன் மீள்வதற்குள் திடீர் என்று சாராவே 

“ஸ்…. ஆ…. ஐயோ பாட்டி, வலிக்குது பாட்டி! அடிக்காதிங்க” என்று அவள் பிதற்ற ஆரம்பிக்கவும், ஒரு பதற்றத்துடன் அவன் அவள் பேசுவதைக் கேட்க ஆரம்பிக்க 

“ஐயோ அம்மா வலிக்குதே! நான் பாட்டினு சொல்ல மாட்டேன். இங்கிலீஷ் படிச்ச வேலைக்காரி தான் நான். அதனால நான் உங்கள மேடம்னே சொல்றேன். இல்ல இல்ல இது எதையுமே நான் ரெண்டு தாத்தா கிட்டேயும் சொல்ல மாட்டேன்.

நான் இன்னைக்கு அவரோட வந்திருக்கேன். இப்போ போய் வேலைக்குப் போகச் சொன்னா அது அவருக்குத் தன்மானப் பிரச்சனை இல்லையா? அச்சோ நான் வேலைக்குப் போறேன். கால் வலிக்குது உங்க கையில இருக்குற குச்சியக் கீழ போடுங்க” 

இப்படி எல்லாம் தங்கு தடையின்றி ஏதேதோ வார்த்தைகளைச் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறியவள் இறுதியாகக் கண்ணில் கண்ணீர் வழிய 

“ஏன் மச்சான் என்னை இங்க கூட்டிகிட்டு வந்தீங்க? இந்த பாட்டி என்னை எப்போதுமே எப்படி எல்லாம் பாடாப்படுத்தும் தெரியுமா? என்னால தாத்தா கிட்ட எதுவும் சொல்ல முடியாது. இப்போ உங்க கிட்ட கூட சொல்ல முடியல. கால்ல பச்சைக் குச்சியால எப்படி அடிச்சாங்க தெரியுமா? இப்பவும் வலிக்குது மச்சான் காலு. எனக்கு தான் யாருமே இல்லையே இதை எல்லாம் சொல்ல!” என்று அவள் தேம்ப, அவளைத் தன்னிடமிருந்து புரட்டிக் கீழே படுக்க வைத்தவன் 

“நான் இருக்கேன் டி கண்ணம்மா உனக்கு” என்று சொல்லி அவள் கண்ணீரைத் துடைத்து விட்டவன் உடல் அசதியில் இப்போதும் அவள் தூக்கக் கலக்கத்தில் தான் உளறுகிறாள் என்பதை அறிந்தவன் எழுந்து அவள் பாதமருகில் அமர்ந்து அவள் பாதங்களைத் தூக்கித் தன் மடி மீது வைத்து ஆடைகளை விலக்கி ஆராய அவள் கால்களிலோ அங்கங்கே ரத்தம் கட்டிப் போய் இருந்தது. எதுவும் பேசாமல் தன் மனதுக்குள்ளேயே எரிமலையென குமுறியவன் இதமாக அவள் கால்களை வருடிப் பிடித்து விட 

“ம்ம்ம்… அப்படி தான் ஆத்தா! இன்னும் கொஞ்சம் பிடிச்சி விடேன்” என்ற கெஞ்சலுடன் கணவன் பிடித்து விடும் இதத்திலேயே எந்த முணுமுணுப்பும் இல்லாமல் தூங்கிப் போனாள் சாரா. 

ஆனால் அவனோ தூங்காமல் விடிய விடிய அவளுக்குக் கால் பிடித்து விட்டவன் விடியும் நேரம் மனைவியைத் தூக்கிக் கட்டிலில் படுக்க வைத்தவனோ தானும் எதையும் அறியாதவன் போல அவளுடனேயே படுத்திருக்க 

இரவு நடந்தது எதையும் அறியாத சாரா காலையில் எழுந்துத் தன் வேலைகளைப் பார்க்கச் சென்று விட, அவள் அந்த அறையை விட்டுச் செல்லும் வரை தூங்குவது போல் படுத்திருந்த அஷ்வத்தோ ஏதோ யோசனையிலேயே இருந்தவன் பின் எழுந்துத் தன் வேலைகளை முடித்துக் கொண்டு பச்சைத் தண்ணீர் கூட குடிக்காமல் தனக்கு வெளியே வேலை இருப்பதாக சாராவிடம் மட்டும் சொல்லியவன் அவள் பதிலைக் கூட எதிர் பார்க்காமல் சென்று விட்டான் அஷ்வத் .

இரவெல்லாம் தூங்காதது போல் கண்கள் சிவந்து போய் வெளியே செல்லும் கணவனையே பார்த்துக் கொண்டிருந்த சாராவிடம் வந்த பாட்டி. 

“என்ன டி என்ன? இப்போ தான் ஏதோ புருஷன புதுசா பார்க்கற மாதிரி பார்த்துகிட்டு இருக்க! போ போய்.. உள்ள வேலையப் பாரு” என்று அவளை விரட்ட, சாராவோ மவுனமாய் சமையல் கட்டுக்குள் செல்ல அவள் பின்னோடே வந்த பாட்டி 

“ஐயோ…. ஐயோ… ஐயோ… என்னடி மாய்மாலம் செய்த? என்னமா உன் புருஷன் உருகுறான்! அப்படியே உன்னை உள்ளங்கையில வச்சித் தாங்குறான்! கொஞ்சறது என்ன மடியில உட்கார வச்சி ஊட்டி விடறது என்ன? இதை எல்லாம் நான் என்னனு சொல்ல? அவன் தான் அப்படி இருக்கானா உனக்கு எங்கடி போச்சு அறிவு?

காக்கா கான்னு கத்துச்சாம் அழலனு ஆம்படையானக் கட்டிக்கிட்டாளாம்! அந்த மாதிரி இல்ல நீ அவனக் கட்டிக்கிட்டு நடுக் கூடத்துல நின்ன!” என்று அவர் அவளை வசை பாட, இப்போதும் சாரா எதுவும் பேசாமல் சமையலுக்கான காய்கறிகளை வெட்டிக் கொண்டிருக்க 

“ஆம ஆத்த கெடுத்துச்சாம் ஊம ஊரை கெடுத்துச்சாம்! அந்த மாதிரி எதையும் பேசாம ஊமையா இருந்தே நீ எல்லாத்தையும் சாதிச்சிட்ட டி! 

“ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரிய விரட்டின மாதிரி எங்கிருந்தோ வந்த வேலைக்கார நாயி நீ இன்னைக்கு அந்த சக்கரவர்த்தி கிட்ட இருந்து எங்களப் பிரிச்சிட்ட இல்ல?” 

“……” இப்போதும் சாரா மவுனமாக இருக்க 

“எங்களப் பிரிச்சது கூட பரவாயில்ல டி. கடைசியில எங்கேயோ இருந்த இந்த கடன்காரனக் கொண்டு வந்து சேர்த்துட்ட இல்ல? அதைத் தான் டி என்னால ஜீரணிக்க முடியல” 

இப்போதும் சாரா எதுவும் பேசாமல் அடுப்பில் கடாய் வைத்து வடைக்கு எண்ணையை ஊற்றியவள் பின் மவுனமாக மற்ற வேலைகளைப் பார்க்க 

இப்போது தான் எதைச் சொன்னாலும் பேசாமல் இருக்கும் இவள் தான் நேற்று இவள் கணவனிடம் கொஞ்சி கெஞ்சிப் பேசியதைத் தூர இருந்து பார்த்தவர் இன்னும் அதை மனதில் வைத்துக் கொண்டு

“என்ன டி வேலைக்கார நாயே உனக்கு ரொம்பத் தான் துளிர் விட்டுப் போச்சா. என் கிட்ட வாங்கின அடி எல்லாம் மறந்து போச்சா? நான் இருக்கும் போதே என்னமா சிரிச்சி சிரிச்சி அவன் கிட்ட பேசுற! நேற்று மதியத்துக்கு மேல மறுபடியும் வேலைக்குப் போகாம அவன் கூட ஊர் சுற்ற வெளியே கிளம்பிட்ட இல்ல நீ?” என்றவர் ஓங்கி அவள் முதுகில் ஒன்று வைக்க 

“ஸ்…. அம்மா!” என்று சாரா வலியால் வாய் விட்டு முனங்கவும் 

“ அடியாத்தீ முத்தத்து முருங்கைப் பூ முதுகிலே விழுந்து முதுகெல்லாம் வலிச்சதாம். அப்படி இல்ல இருக்கு! நான் சும்மா ஒரு தட்டு தட்டினதுக்கு வலிச்ச மாதிரி என்னமா நடிக்கிற” என்று சொன்னவர் மீண்டும் அவள் வலது தோள் பட்டையைத் தட்டி விட அவளோ எண்ணெய்யில் இருந்த வடையை எடுக்கும் நேரம் அவர் அப்படிச் செய்யவே எண்ணெய்த் தளும்பி தரையிலும் அவள் காலிலும் கொட்டி விட சாராவோ எரிச்சலால்

”ஐயோ! அம்மா..” என்று அலறவும்
ஒரு வினாடி அவள் காலில் கொட்டிய எண்ணெயால் அவள் அலறுவதை கேட்டு திகைத்தவர் மறுநொடியே

“என்ன டி அம்மா? இது என்ன உன் அப்பன் வீட்டுப் பணம்னு நெனச்சியா? கொஞ்சம் கூட வேலையில் கவனமே இல்ல. எங்க எந்த நேரமும் புத்திய புல் மேய விட்டா இப்படித் தான் நடக்கும். 

நல்ல வேளை நான் உனக்குப் பின்னாடி தூர நின்னுகிட்டு இருந்தேன். இல்லனா என் மேலையும் கொட்டியிருக்கும். கடன்காரி கடன்காரி.. அது அதுங்கள வைக்க வேண்டிய இடத்துல வச்சி இருக்கனும். நாயக் குளிப்பாட்டி நடு வீட்….”

“போதும் வாய மூடுங்க. இதுக்கு மேல என் மனைவிய பத்தி ஒரு வார்த்தை சொன்னீங்க, மரியாதை கெட்டுடும் ஜாக்கிரதை!” என்று அந்த அறையின் வாசலில் ஓங்கி ஒலித்தது அஷ்வத்தின் குரல். 

‘இவன் எப்போ வந்தான்?!’ என்று அவர் வாய் பிளந்து பார்த்து இருக்க, கணவன் தன்னை நெருங்கவும் எங்கே கணவன் சுடு எண்ணெய்யில் கால் வைத்துவிடுவானோ என்று பயந்த சாரா 

“மச்சான் கிட்ட வராதிங்க. எனக்கு ஒண்ணும் இல்ல” என்று அவனைத் தடுக்க 

“அதெல்லாம் எனக்குத் தெரியும் டி” என்றவன் கொட்டியிருந்த எண்ணெய்யில் கால் படாமல் சுற்றி வந்து அலேக்காக அவளைத் தூக்கி ஹாலில் உள்ள ஸோஃபாவில் அமர வைத்தவன் உடனே தன் கைப்பேசியில் அவன் தாத்தாவுக்கு அழைத்துத்

“தாத்தா, பொம்மி காலில் எண்ணெய் கொட்டிடுச்சி. இப்போ எதுவும் கேட்காதிங்க. உடனே டாக்டருக்குப் போன் பண்ணி இங்கே வரச் சொல்லுங்க. அதுக்குள்ள நான் அவளுக்கு ஏதாவது ஃபர்ஸ்ட் எய்ட் பண்றேன்” என்று சொல்லி வைத்தவன் அதே வேகத்துடன் ஃபிரிஜ்ஜைத் திறந்து ஐஸ் கட்டியைத் தேடியவன் அது இல்லாமல் போகவும் அங்கு உள்ளே அரைத்து வைத்திருந்த இட்லி மாவை வெளியே எடுத்துத் தன் கைகளால் வாரி வாரி அவள் பாதத்தில் பூசி விட, அதைப் பார்த்த பாட்டியோ 

“டேய்… டேய்.. டேய்… கடன்காரா ஏன் டா எங்க வீட்டு அரிசிய எல்லாம் இப்படி வீண் ஆக்குற? அதுவும் இந்த அனாதைக் குட்டிக்காக!” என்று பாட்டி கூப்பாடு போட 

“வாய மூடுங்க. யார் அனாதை? அவளுக்குத் தாலி கட்டின புருஷன் குத்துக் கல்லாட்டாம் நான் நல்லா தான் இருக்கேன். அதெல்லாம் விட அவளைக் கண்ணுக்குள்ள வச்சிப் பார்த்துகிட்ட அவ தாத்தா கூட இன்னும் உயிரோட தான் இருக்கார். பிறகு எப்படி அவ அனாதை ஆவா? 

இப்ப என்ன உங்க வீட்டு எண்ணெய் கொட்டிடுச்சி அவ்வளவு தானே? அதுக்கு எவ்வளவு காசுன்னு சொல்லுங்க. உங்க காசை விட லட்சமாக கோடியாக உங்களுக்குத் திருப்பித் தந்துடறேன். ஆனா அதுக்காக இன்னோர் தடவை என் மனைவிய அனாதைனோ வேலைக்காரினோ சொன்ன… அவன் முடிக்கக் கூட இல்லை

“தரித்திரம் தரித்திரம்.. மூதேவி மூதேவி.. இது என் வீட்டுக்கு வந்த நேரம் எண்ணெய வேற கொட்டிடுச்சி. இன்னும் என்ன என்ன கஷ்டத்தை எல்லாம் நாங்க அனுபவிக்கப் போறோமோ தெரியல! இதுல இந்த வேலைக்காரி அனாதை நாய நாங்க வேலைக்காரினும் அனாதை…” பாட்டியும் முழுமையாகச் சொல்லி கூட முடிக்கவில்லை. அதற்குள் அஷ்வத் 

“ஏய்..” என்ற கூச்சலுடன் அங்கிருந்த ஓர் மர நாற்காலியைத் தூக்கியவன் அருகிலிருந்த அலங்கார ஷெல்ஃபின் கண்ணாடிக் கதவில் ஓங்கி அடிக்க அந்தக் கண்ணாடியோ சுக்கல் சுக்கலாக உடைந்து சிதறியது. 

“ஒரு பொம்பளைனு தான் நான் உங்கள சும்மா விடறேன். இப்போ நீங்க பேசின வார்த்தையை வேற யார்னா உங்க வயசு ஒத்த ஆண் மட்டும் பேசி இருந்தா இங்க நடக்கறதே வேற மாதிரி இருக்கும் சொல்லிட்டேன். அதனால உங்க வாய மூடிட்டு சும்மா இருங்க. 

இல்ல அந்தக் கண்ணாடி நொருங்கின மாதிரி நீங்களும் என் கையால நொருங்கித் தான் போகணும்னு ஆசைனா அதுக்கும் நான் தயார் தான்” என்றவன் தன் டி ஷர்டின் கையை சுருக்கி கொண்டு அவர் முன் ஓர் எட்டு எடுத்து வைக்கவும், சாரா “மச்சான்” என்று அவனை அழைத்த நேரம் 

“என்ன அஷ்வத் என்ன ஆச்சி?” என்று கேட்டுக் கொண்டே வேலுச்சாமி தாத்தா உள்ளே வர, தன் வீட்டு வேலையாட்கள் முன்னாள் தன்னை அசிங்கப் படுத்தியது மட்டும் இல்லாமல் தன்னை அடிக்கவும் கை ஓங்கிக் கொண்டு வந்த அவனை சும்மா விடக் கூடாது என்ற எண்ணத்தில் வாயைத் திறக்க நினைத்தவர் உண்மையாவே அவன் அடித்து விடுவானோ என்ற எண்ணத்தில் பயந்து போய் வாயை மூட அதே நேரம் தன் கணவனைப் பார்த்தவர் இப்போது அஸ்வத் தன்னை அடிக்க முடியாது என்ற தைரியத்தில் 

“என்ன டா சும்மா குதிக்கிற? யாரும் இல்லாத அனாதையா உன் தாத்தா வீட்டுக்கு வேலைக்கு வந்தவ தான இவ? இன்னும் சொல்லப் போனா என் வீட்டு மாட்டுத் தொழுவத்துல கூட கட்டிப் போட லாயக்கு இல்லாதவ டா இவ. நீ சொல்றியே அவ தாத்தானு அவரு உன் தாத்தா டா முட்டாள். உன் அப்பா கார்த்திகேயனைப் பெத்தவரு டா அவரு. நீ வாழ வேண்டிய வாழ்க்கை அவர்கிட்டயிருந்து நீ பெற வேண்டிய அன்பு பாசம் எல்லாத்தையும் இந்த அனாதை நாய் அனுபவிச்சிட்டு இருக்கு. இது தெரியாம பேசுறான் கிறுக்குப் பய. உண்மையிலே உனக்குச் சூடு சுரணை இருந்தா உன் இடத்தையே பறிச்சிகிட்டு இன்னைக்கு வாழ்வாங்கு வாழ்வு வாழற இவள அடிச்சுத் துரத்து டா…” 

“பளார்…” என்று ஓர் அறை விழ அந்த நேரத்திலும் எங்கே அஷ்வத் தன்னை அடித்து விட்டானோ என்று பாட்டி பயந்து போய் பார்த்தவர், அடித்தது தன் கணவர் என்றதும் அவர் பேசாமல் இருந்து விட 

“இதுக்கும் மேல ஒரு வார்த்தை பேசின இங்கு ஒரு கொலை விழும் சொல்லிட்டேன்” என்றவர் “அஷ்வத் தம்பி இந்தப் பிரச்சனையை இதோட விடுங்க. நாம போய் பொம்மியப் பார்க்கலாம். 

“இல்ல தாத்தா” என்று ஒரு கை தூக்கி அவரைத் தடுத்தவன் “அவங்க சொன்னது எல்லாம் உண்மையா? அதாவது பொம்மியைப் பற்றியும் என் அப்பாவைப் பற்றியும்..” என்று ஈட்டியென அவன் வார்த்தைகள் வெளி வர 

“தம்பி.. அது வந்து தம்பி.. இப்போ எதுக்கு அது?” என்று அவர் மென்று விழுங்கவும்

“எனக்கு இப்பவே தெரிந்து ஆகணும்” 

“ஆமாம்! ஆனா அதுல இன்னும் கொஞ்சம் விஷயங்கள் இருக்கு” என்று அவர் சொல்லி கொண்டிருக்கும் போதே வெளியே டாக்டரின் கார் வந்து நிற்கவும் அவர் அதோடு பேச்சை நிறுத்திக் கொள்ள. 

“பொம்மி எப்படி இருந்தாலும் அவ என் மனைவி தான். எதுக்காவும் எந்த விஷயத்துக்காகவும் என் மனைவிய நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று அஷ்வத் கடித்த பற்களுக்கு இடையே ஒவ்வொரு வார்த்தையையும் ஆணி அடித்தாற் போல் சொல்லவும் இதுவரை மனதில் பெரும் சஞ்சலத்துடன் இருந்த சாரா கணவனின் வார்த்தையில் சற்று அமைதியாக. பின் மருத்துவர் வந்து அவளுக்கானதை எல்லாம் பார்த்துச் சென்றதும்

“இவ நேற்றே தூக்கத்துல உளறினா தாத்தா. நாம வீட்டில இல்லாதப்போ பச்சைக் குச்சியால காலில் அடிச்சி இருக்காங்க. இவ என் கிட்ட எதுவுமே சொல்லாம மறைச்சது மட்டுமில்லாம நான் கூப்பிடதும் வெளிய வந்திருக்கா. வந்தும் என் கிட்ட சொல்லல. தூக்கத்துல உளறினதப் பார்த்து நானா தான் அவ காலைப் பார்த்தேன். எங்கு பார்த்தாலும் ரத்தம் கட்டி வீங்கிப் போய் இருந்துச்சி. அப்பவே முடிவு பண்ணேன் பொம்மிகிட்டையோ இவங்ககிட்டையோ எதுவும் கேட்கக் கூடாது கையும் களவுமாகத் தான் பிடிக்கனும்னு. 

அதான் வெளியே போய் கொஞ்ச நேரத்துல வரலாம்னு பார்த்தேன். அதுக்குள்ள இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணி வச்சிட்டாங்க. இவ அலறலைக் கேட்டு நான் உள்ள வர்றதுகுள்ள என் பொம்மிய என்னவெல்லாம் பேசிட்டாங்க இவங்க. இப்பவும் இவங்க பேச்ச நான் நம்பத் தயாரா இல்லை. நீ சொல்லு பொம்மி அவங்க சொன்னது எல்லாம் உண்மையா?’ என்று அவன் தன் மனைவியைப் பார்த்துக் கேட்க, அவளோ கணவனை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தலை குனிந்தவள் ஆமாம் என்று தலை ஆட்டவும் 

“நீ ஏன் டி இதற்குத் தலை குனியற? அப்பா அம்மா பணம் காசுன்னு எதுவும் இல்லாம பிறந்து ஒருத்தவங்க வீட்டுல வேலை செய்யறது என்ன அவ்வளவு பாவமா இல்லை கொலைக் குத்தமா? அப்படினா அம்மா இருந்தும் யாரும் இல்லாம வளர்ந்த நானும் அனாதை தான் டி. 

இன்னைக்கு வேர்ல்டு ஃபேமஸ் போட்டோ ஃகிராப்பரா இருக்குற நான் ஒரு அடி மட்டத்து ஆண் மகனா எவ்வளவு கஷ்டத்தையும் அசிங்க அவமானத்தையும் தாங்கி எப்படிப் பட்ட வேலையையும் செய்து வந்து இருப்பேன்னு யோசிச்சிப் பாரு. உன் புருஷனும் ஒரு காலத்துல வேலைக்காரன் தான் டி” என்றவன் பாட்டியிடம்

“உங்களுக்கு எல்லாம் வேலைக்காரியா இருந்தவ தான் இப்போ பல கோடிக்கு அதிபதி. அவ கூப்பிட்டா அவளுக்கு கையைக் கட்டி வேலை செய்ய எத்தனை ஆயிரம் பேர் காத்து இருக்காங்க தெரியுமா?” என்றவன் தாத்தாவிடம் திரும்பி

“இனி நாங்க ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க முடியாது தாத்தா. சோ நாங்க இப்பவே கிளம்பறோம். நீங்க எப்போ வேணாலும் எங்க வீட்டுக்கு வாங்க போங்க பேசுங்க. ஆனா என் மனைவியை மதிக்காத யாரும் என் வீட்டுக்கு வரக் கூடாது” என்று சொன்னவன் அவர் பதிலைக் கூட எதிர் பார்க்காமல் தன் பொருட்களை எடுத்து வைத்து அவன் கிளம்ப சாராவுக்குத் தான் ஒன்றும் புரியவில்லை. 

‘முன்பு பார்க்கும் போது எல்லாம் என்னிடம் வெறுப்பை உமிழ்ந்தவரா இவர்? ஏதோ அவருடைய தேவைக்காக என்னைக் கல்யாணம் பண்ணவரா இன்று யாரிடமும் என்னை விட்டுக் கொடுக்காம இருக்கார்? அதுவும் வயசு வித்தியாசம் பார்க்காம அடிக்கப் போகிற அளவுக்கு!’ என்று அவள் பல வாறு யோசித்து கொண்டு நிற்க 

அவளைத் தூக்கி காரில் அமர வைத்து அவனும் அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்ய கார் தஞ்சாவூரில் இருக்கும் அவன் தாத்தா வான சக்கரவர்த்தி வீட்டை நோக்கி பறந்தது .

Categories
On-Going Novels Yuvanika

அத்தியாயம் – 11

காதல்பனி 11

சாரா மட்டும் இல்லை, பாசத்துக்கு அடி பணியாமல் இதுவரை திடகாத்திரமாக இருந்து வந்த தாத்தா கூட அங்கு அவர் அறைக்குச் சென்றவர் நெஞ்சு வலியில் மயங்கி சரிந்து விட இங்கு சாராவும் நினைவு தப்பி விழுந்து விட இதற்கெல்லாம் காரணமான அஷ்வத்தோ இதை எதையும் அறியாமல் அறிந்து கொள்ளவும் விரும்பாமல் ஃபிரான்சை நோக்கிப் பறந்து கொண்டிருந்தான்.

முதலில் வேலையாட்கள் தான் தாத்தாவின் நிலைமையைப் பார்த்து விட்டு சாராவைத் தேடிச் சொல்லச் செல்ல, அங்கு அவளிருந்த நிலையைப் பார்த்தவர்கள் அவள் மயக்கத்தைத் தெளிய வைத்தப் பிறகு அவர்கள் குடும்ப டாக்டருக்குத் தகவல் சொன்னவர்கள் பின் தாத்தாவுக்கு உறவான அவர் மனைவியின் சகோதரனான வேலுச்சாமி ஐயாவை அழைத்து விவரம் சொன்னார்கள்.

அதன் பிறகு டாக்டர் உதவியுடன் ஆம்புலன்ஸ் வரவழைத்துத் தாத்தாவை ஆஸ்பிடலில் சேர்த்துப் பரிசோதித்ததில் தாத்தா அபாய நிலையைத் தாண்ட அவருக்கு இருபத்தி நான்கு மணி நேரத்திற்குக் கெடு வைக்க சாராவுக்கு மேற்கொண்டு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இந்த நிலையில் அவள் அஷ்வத்தை மறந்தே போனாள்.

அதே நேரம் ஆஸ்பிடல் வந்த வேலுச்சாமி 
“சாரா மாமாவுக்கு என்ன ஆச்சு? இப்போ எப்படி இருக்கார்?” என்று கேட்க, இதுவரை தனக்குத் துணைக்கு யாருமே இல்லையே என்று இருந்தவள் அவரைப் பார்த்ததும் அவர் மேல் சாய்ந்து “தாத்தா!” என்று கதறி அழ, “எல்லாம் அந்த கடன்காரனால வந்தது. அவன் வந்துட்டுப் போனதால தான் இப்படி எல்லாம் நடக்குது. உன்ன யாரு அவனக் கூட்டிட்டு வரச் சொன்னா? வரேனு என் கிட்ட ஒரு வார்த்தையாவது சொல்லி இருக்கலாம் இல்ல வந்த பிறகு நான் வர்ற வரைக்குமாவது அவனப் பிடித்து வச்சிருந்திருக்கலாம். மாமாவ அவன் கிட்டப் பேச விட்டுட்டு இப்போ இந்த நிலைக்கு அவரைக் கொண்டு வந்து வச்சிருக்க. சரி நடந்த வரைக்கும் விட்டுடுவோம். மாமாவை நான் என்ன சொல்லியாவது சமாளிச்சிக்கிறேன். நீ அவனை மறந்துட்டு வேற ஒரு கல்யாணம் பண்ணிக்கிற வழியப் பாரு” என்று அது ஆஸ்பிடல் என்பதையும் மறந்து தன் மெல்லிய உடல் வாகையும் மீறி அவர் சத்தம் போட

அவளோ தன் வழக்கமான பல்லவியான முடியாது என்பதாகவே தலையை ஆட்ட

“அதானே! மாறிடுவியா நீ?..” என்றவர் ஏதோ மேற் கொண்டு சொல்ல வரும் நேரம் தாத்தாவின் அறையில் இருந்து வெளியே வந்த டாக்டர் இன்னும் அவர் அபாய நிலையைத் தாண்டவில்லை என்றும் நாளை காலை வரை பொறுத்திருந்து பார்க்கலாம் என்ற வார்த்தையையே அவர் மறுபடியும் சொல்லி விட்டுச் சென்று விட.

அதன் பிறகு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது யார் வந்தார்கள் யார் போனார்கள் என்ன பேசினார்கள் கேட்டார்கள் அதற்கு நாம் என்ன பதில் தந்தோம் என்ன சாப்பிட்டோம் என்று எதுவும் தெரியாமல் ஒரு வித இறுகிய மனநிலையிலேயே இருந்தாள் சாரா.

இருபத்தி நான்கு மணி நேர கெடுவுக்குப் பிறகு மறுநாள் தாத்தா அபாயத்தைத் தாண்டி விட அதை அங்கிருந்தவர்களிடம் கூறிய டாக்டர் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் வெளியே இருந்த படியே தாத்தாவைப் பார்த்துச் செல்லச் சொல்ல அவர் கண் விழிக்கும் வரை போக மாட்டேன் என்ற பிடிவாதத்துடன் சாரா அங்கேயே இருந்தாள்.

மாலை கண் விழித்த தாத்தா சாராவிடம் பேச வேண்டும் என்று கூப்பிடச் சொல்ல, அவர் எதிரில் அழக் கூடாது என்ற திடத்துடன் உள்ளே சென்றாள் சாரா.

“தாத்தா உங்களுக்கு ஒண்ணும் இல்ல. நீங்க சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவிங்க. நான் இங்க தனியா இல்ல தாத்தா எனக்குத் துணையா வேலுச்சாமி தாத்தா இருக்கார்” என்று அவர் தனக்காகக் கவலைப் படுவார் என்ற எண்ணத்தில் சாரா தைரியம் சொல்ல

“அப்போ சி..ன்..னா..? அவன் சொன்ன மாதிரியே வீட்டை விட்டுப் போய்ட்டானா பொம்மி? அப்ப அவனுக்கு இந்த தாத்தா வேணாமா?” என்று அவர் கேட்கும் போதே குரல் உடைந்து கண்களில் இருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர் வழிந்தோடியது.

இதுவரை மனதிலிருந்த திடம் பறந்து போக அந்த கண்ணீரில் துடிதுடித்துப் போனவள்

“தாத்தா மச்சானப் பத்தி இப்போ எதுவும் பேச வேணாம். நீங்க முதல்ல வீட்டுக்கு வாங்க….”

“நான் வீட்டுக்கு வந்தா மட்டும் அங்க சின்னா இருப்பானா? மாட்டானே… நான் அவன் பிறந்ததில் இருந்து இதுவரை அவனைப் பார்க்காத வரை அவனைத் தொட்டு அணைக்காத வரை எனக்கே தெரியாமல் எனக்குள்ள இருந்த பாசம் இன்று அவனைப் பார்த்துக் கையால் அரவணைச்சப் பிறகு வந்துடுச்சே பொம்மி! அவன் இல்லாத அந்த வீட்டுல நான் எப்படி இருப்பேன் பொம்மி?”

“தாத்தா.. அவர் வந்துடுவார் தாத்தா. ஏதோ கோபம் அவ்வளவு தான்! அது கூட உங்க மேல இல்ல என் மேல தான். அதான் இந்தளவுக்குப் பேசிட்டார். பாருங்க, உங்க மேல அவருக்கு இருக்கிற பாசமே திரும்ப அவர உங்க கிட்ட கூட்டிட்டுத் தான் வரப் போகுது. வந்து இப்போ உங்ககிட்ட அவர் பேசினதுக்கு எல்லாம் மன்னிப்புக் கேட்கத் தான் போறார். நம்புங்க தாத்தா..”

“உனக்கும் அவனுக்கும் என்ன பிரச்சனை பொம்மி? அவன் ஏன் ஏதேதோ கேட்கிறான்? அன்று….” என்று ஏதோ அவர் சொல்ல வரும் நேரம் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட

“தாத்தா இப்போ எதுவும் நீங்க சொல்ல வேணாம். எல்லாம் என் மேல தான் தப்பு. அவர் ஊருக்குக் கிளம்புனு சொன்ன உடனே ஏன் எதுக்குனு கேட்காம உங்களைப் பற்றி சொல்லாமலும் தப்பு பண்ணிட்டேன். பிறந்ததில் இருந்து நீங்க பார்க்காத உங்க பேரனை பார்க்கப் போறீங்களேன்ற ஆர்வத்துல நான் அவரக் கூட்டிட்டு வந்தது என் தப்பு தான்” என்று சாரா அவர் நெஞ்சை நீவி விட்ட படியே மறுக

“அவன் இப்படி எதுவும் கேட்கல பொம்மி. அவன் என்கிட்ட கேட்டது உன் கண்ணைப் பற்றி தான் மா! அன்னைக்குக் கோவில் நில விஷயமா நான் போயிருந்தப்ப என்னைப் பார்க்க வந்தவன் இதைத் தான் கேட்டான். உனக்கு எப்போ எப்படி ஆக்ஸிடென்ட் நடந்தது, எப்படி யாரால் உனக்கு இந்த கண் கிடைத்தது என்று எல்லாம்..” என்று விட்டு விட்டுப் பேசிய படி அவர் மூச்சுத் திணறவும், அதைக் கேட்டு சாரா மனதுக்குள் அதிர்ச்சியுடன் கூடிய பெரும் வலியில் ஏதோ ஒன்று வெடித்துச் சிதறியது.

‘அப்போ அவர் அவ்வளவு அவசரமா கிளம்பினது என் கிட்ட கேட்டுக் கிடைக்காத இந்த விழிகள் சம்பந்தப் பட்டத என் உறவினர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளத் தான்! அதுக்குத்தான் அவர் வந்தாரா?..’ என்று சாரா உள்ளுக்குள் கேள்வி கேட்டுக் கரைந்து கொண்டிருந்த நேரம்

“என்ன மா ஏதோ கொஞ்ச நேரம் பேசிட்டுப் போய்டுவேனு பார்த்தா இவ்வளவு நேரம் பேசிட்டுருக்க? அதிலும் பெரியவருக்கு மூச்சித் திணறுது. உடனே என்னக் கூப்பிடாம நீ பாட்டுக்கு அவர் முகத்தையே பார்த்துட்டு இருக்க!” என்று அதட்டிய படி நர்ஸ் உள்ளே வந்து அவருக்கு மாஸ்கைப் போட்டு விட, வெளியே வந்த சாராவுக்கு சர்வமும் அடங்கிப் போனது.

அதன் பிறகு தாத்தாவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் போக அவர் சின்னா பெயரையே பிதற்றிய படி இருக்க, டாக்டரோ அந்த சின்னாவை அழைத்து வந்தால் தான் தாத்தாவின் இறுதிக் காலமாவது நிறைவாய் போகும் என்று சொல்லி விட அதைக் கேட்டு சாரா தான் மரணத்தின் வாயிலுக்கே சென்று விட்டாள். மறுபடியும் மயங்கி விழுந்த அவளை டாக்டர்ஸ் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

மயக்கம் தெளிந்தவள் யாரிடமும் பேசாமல் எங்கோ வெறித்த படி ஏதோ யோசனையிலேயே இருந்தவள்

‘எப்போதோ சிறு வயதில் அவர் மேல் கொண்ட காதலால் அறியா வயதில் அவனையே மனதால் கணவனாக நினைத்ததால் இன்று என் கொள்கை லட்சியம் எல்லாம் விட்டு வெளிநாடு சென்று எனக்குப் பிடிக்காத மாடலிங் தொழிலைச் செய்தது எதனால்? எல்லாம் அவர் மேல் வைத்த காதலால் தானே!

அவருக்கு இணையாக இந்தத் துறையில் சாதித்து ஜெயித்து அவர் மனசுல இடம் பிடிக்கணும் என்ற காரணத்தால தானே நான் அவர் இருக்கும் இடம் தேடிப் போனேன்? 

முதன் முதலில் அவர் என்னைப் பார்த்து நீ தான் என் மனைவினு சொன்ன போது நான் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத போதே அவருக்குத் தெரிய வேண்டாமா அவர் மீதான என் காதல் எவ்வளவு ஆழமானது என்று?

அதன் பிறகு அவர் ஒவ்வொரு முறையும் என்னை வார்த்தையால் சிடுசிடுத்தப் போதும் நான் அவர் மேலுள்ள பாசத்தால தானே பொறுத்துப் போனேன்?

அன்று அவர் கையாலயே என்னை மரணம் வரை அழைத்துச் சென்றாரே, அந்த வினாடிக்குப் பிறகு கூட நான் அவரை வெறுக்கவில்லையே?! அதுவரை அவர் மேல் நான் காதலுடன் இருந்தது உண்மை தானே?

எப்போது அவர் இந்தியா கிளம்பச் சொன்னாரோ அப்போதே தாத்தாவை மனதில் நிறுத்தித் தானே நானும் எந்த மறுப்பும் சொல்லாமல் உடனே கிளம்பி வந்தேன்?

ஆனா அவரோ என் விழியைப் பற்றிக் கேட்ட எந்த கேள்விக்கும் என்னிடமிருந்து எந்த பதிலும் கிடைக்காததால் என் உறவுகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளத் தானே அவ்வளவு அவசரமா இந்தியா வந்து இருக்கார்!

அதனால தான் அன்று தனியா தாத்தாவைப் பார்க்கப் போயிருக்கார். அவரிடமிருந்து அவருக்கு வேண்டிய பதில் கிடைக்கலனு தெரிஞ்சவுடனே ஊருக்குக் கிளம்ப நினைத்த நேரத்துல தான் இவ்வளவு பிரச்சனை நடந்து வார்த்தை தடித்து இன்று தாத்தாவோட உயிருக்கே ஆபத்தா வந்து முடிஞ்சிடுச்சே!

முன்பு என் தன்மானத்தையும் கவுரவத்தையும் விட்டு என் காதலுக்காக அவர் முன்னாடி நின்றேன். ஆனா எப்போ அவர் என் மேல காதலே இல்லனு சொல்லிட்டாரோ இதுக்குப் பிறகும் நான் போய் நின்னா அது கேவலமாச்சே! ஆனா இப்போ தாத்தா இருக்கிற நிலைமைக்கு அவர் இங்க இருந்தாகனுமே! நிச்சயம் என்னைத் தவிர வேலுச்சாமி தாத்தாவோ இல்லை வேறு யாரோ அவரிடம் பேச முடியாது. ஆனால் காதலே இல்லனு சொல்றவர் கிட்ட நான் எப்படிப் போய் நிற்பேன்?’

நினைக்கும் போதே நெஞ்சில் ஈட்டி ஒன்று பாய்ந்தது போல் வலிக்க அதை விடக் கண்ணில் உதிரமே கண்ணீராகக் கொட்டியது சாராவுக்கு. இப்படியாக யோசித்தவளுக்கு திடீர் என்று ஒன்று தோன்ற

‘ஆமாம், நான் ஏன் ஓர் காதலியா அவர் மனைவியா என் காதலைச் சொல்லி தாத்தா உயிரைக் காப்பாற்றச் சொல்லி அவரிடம் யாசித்து நிற்கணும்? அதான் அவர் போகும் போது ஒண்ணு சொன்னாரே, அவருக்கு வேண்டிய பொருள் என் கிட்ட இருக்குனு. அப்போ அது என்னவா இருக்கும்? தாத்தா கிட்ட கூட என் விழியைப் பற்றி விசாரித்து இருக்கார்.

அன்று எனக்கு மரணத்தைக் காட்டிய போது கூட இந்த விழிகள்னு தானே பேசினார்? அப்போ அவருக்கு வேண்டியது எல்லாம் என்னிடமிருக்கும் இந்த விழிகள் தானே? இது போதுமே எனக்கு! இதையே வைத்து தாத்தா உயிரைக் காப்பாற்ற அவரை வழிக்குக் கொண்டு வர வைக்க’

என்று முடிவெடுத்தவள் அதன் பிறகு ஒரு வினாடி கூட தாமதிக்காமல் தாத்தாவைச் சென்று பார்த்தவள் அஷ்வத்தை அழைத்து வருவதாக அவருக்கு வாக்களித்து விட்டு வேலுச்சாமி தாத்தா எவ்வளவு தடுத்தும் கேட்காமல் பாரீஸ் பறந்து சென்றாள் சாரா.

அங்கு இந்தியாவை விட்டு பாரீஸ் வந்த அஷ்வத்துக்கோ இருப்புக் கொள்ளவில்லை. ‘அவ கிட்ட அவ்வளவு கடுமையா பேசிட்டு வந்தோமே! அவ எப்படி இருக்கா என்ன செய்றா?’ என்று பரிதவித்துத் தான் போனான் அவன். 

அந்த பரிதவிப்பே யாரிடமும் அவனை நெருங்க விடாமல் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் ஒருவித இறுகிய தன்மையுடனேயே அவனை இருக்க வைத்தது. 

‘ஏன், பொறந்ததுல இருந்து அவ என் கூட தான் இருந்தாளா? இத்தனை வருஷமா அவ இல்லாம நான் வாழல? அதே மாதிரி இப்பவும் வாழ வேண்டியது தான்! அவ இல்லனா என்னால வாழ முடியாதா என்ன?’

என்று இந்தக் கேள்விகளை எல்லாம் வாய் விட்டுத் தன்னை தானே பல முறை அவன் கேட்டுக் கொள்ள அதற்கான பதிலோ இல்லை அவளை மறக்க முடியும் என்ற திடகாத்திரமும் அவனுக்கு வரவேயில்லை. அவளை வேண்டாம் என்று சொன்னவன் தான் இப்போது அவளை நினைத்து கசந்து போகிறான்.

இப்போது அவன் எண்ணம் எல்லாம் அவனுக்கு அவள் வேண்டும்! அதற்காக அவள் மேல் காதல் எல்லாம் இல்லை. ஆனால் அவன் பக்கத்திலேயே அவள் இருக்க வேண்டும். அதுவும் வாழ் நாள் முழுவதும்.

இப்படி ஒரு எண்ணம் அவனுக்கு ஒருபுறம் வந்து போக அவளை வேண்டும் என்றும் வேண்டாம் என்றும் ஒரு நிலை இல்லாத தன்மையில் குழம்பியவன் தன் மேலேயே கோபமும் ஆத்திரமும் வர அதனால் தன்னைத் தானே வெறுத்தவன் இது இப்படியே நீடித்தால் எங்கே தனக்குப் பித்துப் பிடித்து விடுமோ என்று பயந்தவன் தன் ஈகோ பிடிவாதம் எல்லாம் விடுத்து சாராவைத் திரும்ப சந்தித்தால் என்ன என்று நினைத்தவன்.

பிறகு அந்த எண்ணத்தைக் கைவிட்டவனோ கடைசியாக அவளிடம் பேசி அவள் குரலையாவது கேட்க வேண்டும் என்ற ஆவலில் தன் கைப்பேசியிலிருந்து அவன் இந்தியாவுக்கு அழைக்கவிருந்த நேரம் அவன் ஆபிஸ் அறையிலிருந்த கார்ட்லெஸ் போன் அலற வேண்டா வெறுப்புடன் அதை எடுத்து என்ன என்று இவன் கேட்க இந்தியாவிலிருந்து சாரா என்பவர் அவனைப் பார்க்க வந்திருப்பதாகச் சொல்லவும் 

இதுவரை நெருப்பு வளையத்துக்குள் இருந்த படி தன்னைத் தானே பொசுக்கிக் கொண்டிருந்தவனோ சாரா வந்து விட்டாள் என்று அவள் பெயரைக் கேட்டதும் வெண் பஞ்சு மேகக் கூட்டத்திலிருந்து உதிரும் பனி மழை அனைத்தும் அவன் தேகத்தைக் குளிர்வித்தது போல் மனதாலும் உடலாலும் குளிர்ந்தவன் தன்னை மீறிக் கண் கலங்கத் தொண்டை அடைக்க அவளை உள்ளே அனுப்பச் சொன்னவன் தன் உணர்ச்சிகளை ஒருநிலைப் படுத்தித் தன் டேபிள் மேலிருந்த பொருட்களை ஒழுங்கு படுத்தி ஒதுக்கி வைத்தவனோ பிறகு ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்து தன்னை சமன் செய்து கொண்டவன் ஒரு வித எதிர்பார்ப்புடன் அவள் வரவுக்காக இவன் காத்திருக்க

வந்தாள் அந்த மங்கை எந்த வித சலனமும் இல்லாமல் உணர்ச்சித் துடைத்த முகத்துடன்! அவனைப் பார்க்கும் போது எல்லாம் அவள் விழிகளோ அவளையும் மீறி அவன் மேல் கொண்ட காதலை எப்போதும் பிரதிபலிக்கும். ஆனால் இன்றோ அவள் நுழையும் போதே அவன் பார்த்ததோ அந்த காதல் இல்லாத அவள் விழிகளைத் தான்!

அது மட்டும் இல்லாமல் அந்த விழிகளோ ஒரு வித நிமிர்வுடனும் பிடிவாதத்துடனும் ஜொலிப்பதைப் பார்த்தவன் கூடவே அவள் பார்வையில் தான் அன்னியப் பட்டு நிற்பதை உணர்ந்தவனின் மனதுக்குள் எதிர்பார்ப்பு என்னும் கோட்டை உடைய அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல்

“வா பொம்மி!” என்று வெகு இயல்பாக அழைத்தவன் எழுந்து வந்து ஸோஃபாவில் அமர்ந்து அவளையும் அமரச் சொல்ல, அவன் வா என்று அவளை அழைக்கும் போது தன் இயல்பாய் இருந்தவள் இறுதியில் பொம்மி என்று அவன் அழைத்ததில் உள்ளுக்குள் ஏதோ ஒன்று தடம் மாற, 

உடனே இப்போது உள்ள தன் இயல்பைத் தொலைக்க இருந்தவள் கண்ணை மூடி அன்று அவன் சொன்ன வார்த்தைகளைத் தன் மனக் கண் முன் ஒரு வினாடி கொண்டு வந்தவள் சிரமப்பட்டுத் தன்னை ஒருநிலைப் படுத்தியபடி அவன் எதிரில் வந்து அமர்ந்தாள் சாரா. 

“உங்களால் எனக்கு ஒரு உதவி வேணும்” என்று எந்தவொரு முகஸ்துதியோ விளக்கமும் இல்லாமல் அவள் ஆரம்பிக்கவும் அவனோ எந்த வித சலனமும் இன்றி அவள் முகத்தைப் பார்த்தவனோ அப்படியே பார்த்த படியே இருக்க சற்று நேரம் பொறுத்தவள் ‘இவரா என்ன ஏதுனு கேட்கமாட்டார்’ என்று உணர்ந்தவள் மறுபடியும் அவளாகவே

“தாத்தாவுக்கு ஹார்ட் அட்டாக்! ரொம்ப சிவியர்னு டாக்டர் சொல்றார். அவர்…. அவர்….” என்று திக்கியவள் கண்ணிலிருந்து கண்ணீர் அருவியாய் கொட்ட அவன் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தலை குனிய. 

அதைக் கேட்டு உள்ளுக்குள் அவனுக்குப் பதறினாலும் அது எதையும் வெளியே காட்டிக்கொள்ளாமல் அவன் எப்போதும் போல் வாய் திறக்காமல் இருக்கவும் தன் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவள்

“தாத்தா இறுதி நாட்கள்ல இருக்கிறார். அதனால அவர் விருப்பபட்டதைச் செய்து அவரை நிம்மதியா வழி அனுப்புங்கனு டாக்டர் சொல்றார்” என்று திடத்தை வர வழைத்துக் கொண்டு ஓர் கசந்து போன குரலில் சொன்னவள்

பின் தன் தொண்டையைச் செறுமி சரி செய்து “அவருடைய விருப்பம் ஆசை எல்லாம் நீங்க அவர் பக்கத்துல இருக்கணும் என்றது தான்” என்றவள் சற்றுத் தயங்கி “அதனால நீங்க கொஞ்ச நாள் இந்தியாவுக்கு வந்து அவர் கூட தங்கி இருக்க முடியுமா? இதை எனக்கு நீங்க ஒரு உதவியா செய்யுங்களேன் ப்ளீஸ்!” என்று தன்னை மீறி அவள் குரல் தழைந்து போய் கெஞ்ச.

‘ச்சீ… காதலே இல்ல நீ எனக்கு எந்த வகையிலும் தேவை இல்லனு சொல்றவர் கிட்ட போய் இப்படி கெஞ்சிட்டு இருக்கோமே?’ என்று நினைத்து அவன் முன்னால் கூனிக் குறுகியவள் ‘எல்லாம் என்னை ஆதரித்து வளர்த்த என் தாத்தாவுக்காகத் தானே?’ என்று மறு நொடி நினைத்தவள் நிமிர்ந்து அவனை திடமாகவே பார்க்க

தாத்தாவின் நிலையைக் கேட்டு அஷ்வத்துக்கும் உள்ளுக்குள் கஷ்டம் தான். ஆனால் அதை எல்லாம் விடுத்தவன் ‘அப்ப இவ தாத்தாவுக்காகத் தான் இங்க வந்தாளா? என்னைக் கெஞ்சி சம்மதிக்க வைத்து திரும்ப என்னை இந்தியாவுக்குக் கூட்டிப் போகப் பார்க்கறா. இதெல்லாம் தாத்தாவுக்காக மட்டும் தானா? அப்ப இவளுக்கு நான் வேணாம்! உரிமையா நான் இங்க தான் இருப்பேன் எனக்கு நீங்களும் வேணும் தாத்தாவும் வேணும். அதனால தாத்தாவ எப்படியோ பேசி சம்மதிக்க வச்சி இங்க கூட்டிட்டு வந்துடறேனு சொல்லத் தான் இவ வந்து இருக்கானு பார்த்தா, தாத்தாவுக்கு உடம்பு சரியில்ல அதனால நீங்க இந்தியா வாங்கனு இல்ல கூப்பிடறா!

அதுவும் எப்படி? யாரோ மூணாவது மனிதனிடம் வந்து கெஞ்சி உதவி கேட்பது போல் இல்ல இவ கேட்கறா!’ என்று உள்ளுக்குள் அவள் மேல் ஆத்திரம் பொங்கியது அவனுக்கு. ஆனால் அன்று, நீ எனக்கு யாரோ தான் என்று அவளிடம் அவன் சொல்லி விட்டு வந்தது மட்டும் நினைவில் இல்லாமல் போனது ஏனோ என்று தான் தெரியவில்லை.

“உன் தாத்தாவுக்கு உடம்பு சரியில்லனா அதுக்கு எதுக்கு நான் இந்தியா வரணும்? நாளைக்கு உன்னை கட்டிக்கப் போறவனைக் கூட்டிட்டுப் போய் நிறுத்த வேண்டியது தானே உன் தாத்தா முன்னாடி” என்று அவன் எகத்தாளமாகப் பேச

“இல்ல இல்ல.. என்ன கட்டிக்கப் போறவறா நான் உங்களக் கூப்பிடல. யாரோ உங்களுக்குத் தெரிஞ்ச பெரியவர் என்ற மனிதாபிமானத்தால கூட நீங்க வரலாம் இல்ல?” என்று அவள் கேட்கவும்

“அப்போ உன்னை கட்டிக்கப் போறவன் என்ற எண்ணத்துல நீ வந்து என்ன கூப்பிடல?” என்று கூர்மையாக அவன் பதிலுக்குக் கேட்க

‘அதான் நமக்குள்ள எதுவும் இல்லனு சொல்லிட்டிங்களே அப்புறம் என்ன?’ என்று மனதில் நினைத்துக் கொண்டவள் அவசரமாக இல்லை என்று தலை அசைக்கவும், அவள் சொன்ன பதிலில் தன் வலது கை விரல்களை மடக்கி ஸோஃபாவில் ஒரு குத்து விட்டவன்

“நீ வந்து கூப்பிட்டதும் நான் வந்துடுவேனு எந்த நம்பிக்கையில இங்கே வந்த?”

“எல்லாம் உங்களுக்குச் சொந்தமான பொருள் ஒண்ணு என் கிட்ட இருக்கு என்ற நம்பிக்கையில தான்! எல்லாம் இந்த விழியால தான்!” என்று அவள் தன் விழியைச் சுட்டிக் காட்டவும் அதுவரை அவள் மேல் இனம் புரியாத ஒரு வித கோபத்தில் அமர்ந்து இருந்தவனோ தன் முகத்தில் யாரோ குளிர் நீரைக் கொட்டியது போல் விதிர்விதிர்த்து எழுந்து நின்றான் அஷ்வத்.

உண்மையில் அவன் ஊரிலிருந்து கிளம்பியது முதல் இப்போது அவளைப் பார்க்கும் இந்த வினாடி வரை அவனுக்கு அந்த விழிகளைப் பற்றி சிந்தனையோ நினைப்போ துளி கூட இல்லை. அவளை விட்டு வந்தோமே எப்படி இருக்காளோ என்ன செய்கிறாளோ என்று முழுக்க முழுக்க அவளைப் பற்றியே அவன் நினைத்திருக்க, அவள் அந்த விழியை ஞாபகப் படுத்தவும் அதை இப்படி மறந்து போனோமே என்று தன் மேலேயே கோபம் கொண்டவன் உடனே

“ஓ…. எனக்கு வேண்டிய பொருள் உன் கிட்ட இருந்தா நீ என்ன சொன்னாலும் நான் கேட்பேனு நினைத்தீயா இல்ல உன்ன விட்டு வந்ததால அதை மறந்து போய்ட்டேனு நினைத்தீயாயா? முன்பு வேணா உன்னைப் பற்றிய விவரங்கள் எனக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனா இப்ப உன் வீடு வாசல் எல்லாம் எனக்குத் தெரியும் என்னும் போது பிறகு பொறுமையா பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன்.

அப்படியே நீ கண் காணாம என்னை விட்டு எங்கே போனா கூட உன்னைத் தேடி கண்டு பிடித்து எனக்கான பொருளைப் பாதுகாக்காம விட மாட்டேன். அதனால இந்த விழிகளை வைத்து உன் இஷ்டத்துக்கு என்ன ஆட்டிப் படைக்கலாம்னு மட்டும் நினைக்காதே. அதெல்லாம் உன் கனவிலும் நடக்காது தெரிஞ்சிக்கோ!” என்று அவன் உறும

எந்த விழிகளைப் பிடிமானமாக வைத்து இவனை இந்தியா வரவழைத்துத் தாத்தாவின் உயிரைக் காப்பாற்றி விடலாம் என்று நினைத்திருந்தாளோ அதையே அவன் ஒன்றும் இல்லாமல் செய்து விடவும் அவளுக்குக் கோபம் கொப்பளித்தது. இதுவரை அவனிடம் தான் கட்டிக் காத்து வந்த பொறுமை எல்லாம் பறந்து போக புயலென அந்த இடத்தை விட்டு எழுந்தவள் அவன் டேபிளிலிருந்த பென் ஸ்டான்டில் இருந்து பேனா ஒன்றை எடுத்தவள் அதன் கூர் முனையைத் தன் கண்ணெதிரே வைத்து

“உங்களுக்கு எப்போதுமே உங்க சுயநலம் தான் முக்கியம் இல்ல? நீங்க எங்க இருந்தாலும் உங்க பொருளைப் பாதுகாப்பிங்க அப்படி தானே? உங்களுக்கு நான் வேணாம் ஏன் உங்க சொந்தபந்தம் கூட யாரும் வேணாம். ஆனா என் கிட்ட இருக்கிற இந்த விழிகள் மட்டும் உங்களுக்கு வேணும். இப்போ உங்க பொருள் என் கிட்ட இருக்கு. அப்போ இதை நான் என்ன வேணா செய்யலாம் இல்ல? இந்த வினாடியே இதை யாருக்கும் இல்லாமல் என்று அவள் முழுமையாக முடிக்கக் கூட இல்லை.

“சாராராராஆஆஆஆஆஆஆ……!” என்று அந்த இடமே நடுங்கும் படி கர்ஜித்தவன் அவள் அடுத்து என்ன செய்யப் போகிறாள் என்பதை அறிந்து மின்னல் என விரைந்து சென்று அவள் பேனாவைப் பிடித்திருந்த வலது கையைப் பிடித்துத் தடுத்தவன் “என்ன டி திமிரா? உன் இஷ்டத்துக்கு என்னமோ செய்யப் பார்க்கற?” என்று அவன் மறுபடியும் உறும
நல்ல வேளை அந்த இடம் கண்ணாடியால் சூழ்ந்திருந்தது. இல்லையென்றால் இவன் போட்ட சத்தத்திற்கு அலுவலக ஊழியர்கள் உள்ளே ஓடி வந்திருப்பார்கள்.

“ஏன் நான் செய்யக் கூடாது? இப்படி தான் செய்வேன்” என்று அவளும் பதிலுக்கு உறும அவனோ ஆத்திரத்தில் பிடித்திருந்த அவள் மணிக்கட்டை சற்று அழுத்திப் பிடித்தான். வலி இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவள் அப்படியே நிற்கவும் அதில் கோபம் அதிகமாக அவன் இன்னும் அழுத்திப் பிடிக்கவும் எங்கே எலும்பு நொருங்கி விடுமோ என்று பயந்தவள் வலியில் கண்களில் நீர் கோர்க்க

“எனக்கு ரொம்ப வலிக்குது ஏ.கே! ப்ளீஸ் கையை விடுங்க” என்று அவள் கெஞ்ச, அவ்வளவு தான். அவனிடமிருந்த கோபம் ஆத்திரம் எல்லாம் பாலைவனத்தில் ஊற்றிய நீராய் அந்த நிமிடமே மறைந்து போக அவளை இழுத்து அணைத்தவன்

“ஏன் டி ஏன் டி இப்படி எல்லாம் செய்யற? ஒரு நிமிஷத்துல என் மரணத்த எனக்கே காட்டிட்டியே டி! வேணா சாரா, இனிமே வார்த்தையால கூட இப்படி எல்லாம் பேசாத சாரா!” என்று குமுறியவன் கண்ணில் இருந்து அவனையும் மீறி கண்ணீர் வழிய, அதைத் தன் நெற்றியில் வழிந்தோட உணர்ந்தவளோ தான் இருக்கும் நிலை அறிந்து அவனிடமிருந்து விலகப் பார்க்க, அவனோ அவள் விட்டு விலகாத அளவுக்கு இன்னும் அவளை இறுக்கி அணைத்தான்.

“அஷ்வத் விடுங்க” என்று அவள் சொல்ல

“ம்உம்…. நான் உனக்கு எப்பவும் ஏ.கே தான்” என்றவன் இன்னும் அவளை இறுக்கி அணைக்க, அவன் அணைப்பில் மூச்சுத் திணற ‘இவர் ஏ.கே சொல்லாமல் விட மாட்டார் போல’ என்று நினைத்தவள்

“ஏ.கே என்ன விடுங்க. நாம இரண்டு பேரும் இப்போ சண்டை போட்டுக்கிட்டு இருந்தோம். அதை மனசுல வச்சி கிட்டு நடந்துக்கங்க” என்று அவள் அவனுக்குப் பழசை ஞாபகப் படுத்தவும்

“அந்த சண்டையையும் கோபத்தையும் தான் உன் ஏ.கே என்ற அழைப்பு என்னை ஒண்ணும் இல்லாம பண்ணிடுச்சே!” என்று அவன் சொல்ல

“உங்களுக்குக் கோபம் போய்டுச்சி. எனக்குப் போகலையே! கை எப்படி வலிக்குது தெரியுமா?” என்று அவள் சிணுங்க

சட்டென தன் பிடியிலிருந்து அவளை விடுவித்தவன் அவள் கையை எடுத்துப் பார்க்க அவன் பிடித்த இடமோ கன்றிப் போயிருந்தது. அந்த இடத்தைத் தன் விரலால் வருடியவன் “சாரி கண்ணம்மா” என்ற சொல்லுடன் அந்த இடத்திலேயே அவன் தன் இதழ் பதிக்க, அவன் மீசையின் குறுகுறுப்பு அவளுக்குள் ஏதேதோ செய்தாலும் சட்டென தன் கையை உறுவிக் கொண்டவளோ

“நான் தாத்தா விஷயமா உங்க கிட்டப் பேச வந்தேன்” என்று அவள் எடுத்துச் சொல்லவும்

“ம்ம்ம்….” என்றவன் டேபிள் மீதிருந்த கைப்பேசியை எடுத்து தன் பி.ஏ வை அழைத்தவன் இன்னும் இரண்டு மணிநேரம் கழித்து இந்தியாவுக்குச் செல்லும் எந்த பிளைட்டாக இருந்தாலும் அதில் மூன்று டிக்கெட்களை புக் செய்யச் சொன்னவன் கூடவே டாக்டர் வில்லியம்சும் தங்கள் உடன் வருவதற்கும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யச் சொன்னான்.

இன்னும் சாரா நம்பாத பார்வையுடன் அவனையே பார்த்திருக்கவும் அவளிடம் வந்தவன் “இப்போ நம்ம கூட வரப் போறவர் பெரிய ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட். அவர் பையன் ஆட் கம்பெனி ஆரம்பிக்க நான் தான் அவருக்கு நிறைய உதவி செய்திருக்கேன். சோ அந்த தைரியத்துல தான் அவர கேட்காமலே டிக்கெட் போடச் சொல்லிட்டேன். கண்டிப்பா அவரும் வருவார். அதனால பயப்படாத தாத்தாவுக்கு ஒண்ணும் ஆகாது”

என்று அவளுக்குத் தைரியம் சொன்னவன் மறைமுகமாக தான் வருவதற்கும் சம்மதம் தெரிவித்து அவள் சாப்பிட்டாளா என்று கேட்டு அவள் சாப்பிட்ட பின் அவளை ரெஸ்ட் எடுக்க வைத்தவன் பின் தன் வேலைகளை முடித்துக் கொண்டு குறித்த நேரத்தில் அவளுடனே இந்தியா கிளம்பினான் அஷ்வத்.

இந்தியா வந்து அவன் அழைத்து வந்திருந்த டாக்டர் மூலம் தாத்தாவின் நிலைமை என்னவென்று பார்க்க அவர் கொஞ்சம் சீரியஸான கண்டிஷனில் இருப்பது உண்மை தான் என்றாலும் அது உடலால் என்பதை விட அவர் மனதால் பலவீனப் பட்டு இருப்பது தெரியவர, அவர் இப்போதும் இடைவிடாமல் முணு முணுக்கும் சின்னா என்ற பெயருக்கு உரிமைக்காரனான அஷ்வத்தையே பேசச் சொன்னார் அந்த டாக்டர்.

முதலில் அவரைப் பார்த்ததும் கண் கலங்கிய அஷ்வத் பின் மனதில் திடத்தை வரவழைத்துக் கொண்டு அவரை நெருங்கியவன்

“தாத்தா நான் உங்க சின்னா வந்திருக்கேன். என்னைக் கொஞ்சம் கண்ணத் திறந்து பாருங்க. இனிமே நான் உங்களை விட்டுப் போக மாட்டேன் தாத்தா. நான் அப்படி எல்லாம் பேசினது தப்பு தான். என்னைப் பாருங்க தாத்தா, நான் உங்க சின்னா வந்திருக்கேன்” என்று அவர் காதருகில் ஏதோ பொய்யாக இல்லாமல் அவனையும் மீறி குரல் தழைந்து போய் அவன் சொல்ல

அவன் சொன்னதை எல்லாம் கேட்டு ஒரு வினாடி அவர் முகத்தில் மின்னல் போல் ஓர் ஒளி வந்து போனாலும் அடுத்த வினாடியே அவர் முகம் இது பொய்யோ என்ற நினைப்பில் நம்பிக்கை இல்லாமல் வேதனையைப் பிரதிபலிக்க, இமைகளை அவர் திறக்க நினைத்தாலும் திறக்க முடியாத அளவுக்கு இமைகள் மூடியே இருக்க, ஆனால் அவர் கரு விழிகளோ மூடிய இமைகளுக்குள் ஒரு வித பரிதவிப்புடன் இங்கும் அங்கும் ஓடி மறைய, அதைப் பக்கத்திலிருந்து பார்த்த சாராவோ உடனே அஷ்வத்தின் கையைப் பற்றி அவர் நெற்றி புருவம் கன்னம் என்று வருடியவள்

“தாத்தா உண்மையாவே உங்க பேரன் சின்னா தான் வந்து இருக்கார். அதுவும் நான் சொன்ன மாதிரியே உங்க கிட்ட மன்னிப்பு கேட்க தான் வந்து இருக்கார். கொஞ்சம் கண்ணைத் திறந்து அவரைப் பாருங்க தாத்தா” என்று சாரா சொல்லும் போதே அவள் குரல் உடைவதைப் பார்த்தவனோ அவள் கையைப் பற்றி அவளுக்குத் தைரியம் அளித்தவன் பின் ஒரு குழந்தைக்குச் செய்வது போல் தாத்தாவின் தலை முடியைக் கோதி விட்டு தலையை வருடியவன்

“என் செல்ல தாத்தா தானே நீங்க? சின்ன வயசுல இருந்து நான் தனியாவே வளர்ந்துட்டேன் தாத்தா. எனக்குனு யாருமே இல்ல. அம்மா அப்பா தாத்தா பாட்டி கூடப் பிறந்தவங்கனு இப்படி யாருமே இல்ல. நான் தனியா அனாதையா தான் வளர்ந்தேன். சாரா மூலமா நீங்க எனக்குக் கிடைத்து இருக்கீங்க.

நான் அப்போ எல்லார் கிட்டையும் இழந்த அன்பு பாசம் எல்லாம் உங்க கிட்டயிருந்து எனக்குத் திரும்பக் கிடைக்கும்னு நினைச்சேன். நீங்க என்னனா மறுபடியும் என்ன அனாதையா விட்டுட்டு போகப் பார்க்கறீங்க. உண்மையாவே நீங்க என்னை உங்க பேரனா நினைக்கிறது நிஜம்னா எழுந்து வந்து நான் இழந்த அன்பு பாசத்தை எனக்குக் கொடுங்க. இல்லனா அப்புறம் உங்க இஷ்டம்…”

என்று சொல்லும்போதே அவனுக்குத் தொண்டை அடைக்க அதே நேரம் மூடிய தாத்தாவின் கண்ணிலிருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர் வழிந்தோடியது. அதைப் பார்த்ததும் அவசரமாக அவர் கண்ணீரைத் துடைத்தவன்

“எனக்குத் தெரியும் தாத்தா நீங்க வந்துடுவீங்கனு” என்று சொல்லி அவர் நெற்றியில் இதழ் பதித்து விட்டு விலகினான் அஷ்வத். அதன் பிறகு தாத்தாவுடைய உடலில் முன்னேற்றம் இல்லை என்றாலும் பின்னடைவு இல்லை.

நான்கே நாட்களில் வீட்டுக்கு வந்த அவரை மேலே தங்க வேண்டாம் என்று கீழேயே தனி அறையில் தங்க வைத்து சாராவும் அஷ்வத்தும் அவருக்கு எந்த சிரமமும் இல்லாமல் பார்த்துக் கொண்டனர். அஷ்வத் வந்தது வேலுச்சாமி தாத்தாவுக்கு முதலில் பிடிக்கவில்லை என்றாலும் தன் மாமாவின் உடல் நிலைக் கருதி அவரும் ஒதுங்கி விட தாத்தாவிடம் இன்னும் சற்று முன்னேற்றமே ஏற்பட்டது.

இதற்கிடையில் ஒரு நாள் அஷ்வத் பாரீஸ் சென்று தனக்கான ஒரு வேலையை முடித்துவிட்டு வருவதாக தாத்தா விடம் சொல்ல, அவனை நம்பாத தன்மையுடன் அவர் அவனைப் பார்க்கவும் அவசரமாக அவர் அமர்ந்திருந்த சேரை நெருங்கி அவர் முன் மண்டியிட்டு அமர்ந்தவனோ

“அன்னைக்கு நான் சொன்ன வார்த்தை எதுவுமே தற்காலிகமா உங்க உயிரைக் காப்பாற்றணும் என்பதற்காக நான் சொன்ன பொய்யான வார்த்தைகள் இல்ல தாத்தா. நிச்சயம் நான் திரும்பி வருவேன் என்ன நம்புங்க” என்று அவர் கையைப் பிடித்துக் கொண்டு அவன் உறுதி அளிக்கவும்

“அப்போ நீ திரும்பி வரும் போது உனக்கும் பொம்மிக்கும் நான் கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன் சின்னா. உனக்கு இதுல சம்மதம் தானே

“இதை நீங்க என் கிட்ட கேட்கணுமா? தாராளமா ஏற்பாடு பண்ணுங்க தாத்தா” என்று அஷ்வத் முழு மனதுடன் சம்மதம் தெரிவிக்கவும் நெகிழ்ச்சியுடன் அவனை உச்சி முகர்ந்தவர் அவன் உச்சியில் தன் இதழ் பதித்தார் சின்னாவின் தாத்தா.

சாராவிடம் அவர் திருமணத்தைப் பற்றிப் பேசவும் எப்படி இந்த திருமணத்தைத் தடுப்பது என்று குழம்பியவள் அவர் உடல் நிலைக் கருதி சரி என்று அவருக்குத் தலையை ஆட்டி விட்டு நேரே அஷ்வத்தைத் தேடி அவன் அறைக்குச் செல்ல அங்கே அவன் லேப்டாப் முன் ஏதோ வீடியோ காலில் பிஸியாக இருக்கவும் வந்த வழியே அவள் திரும்பச் செல்ல நினைத்த நேரம் “வா பொம்மி!” என்று அவன் அழைக்கவும்

அவள் அவன் கட்டிலின் ஓரம் வந்து நிற்கவும் வெகு இயல்பாக அவள் கையைப் பிடித்து இழுத்துத் தன் பக்கத்தில் அமர வைத்தவனோ அவள் தோள் மேல் கை போட்டுத் தன்னுடன் அவளை அணைத்துக் கொண்டவன் “ஸ்டீவ் கிட்ட தான் பேசுறேன். நீயும் ரெண்டு வார்த்தை பேசு அவன் கிட்ட” என்று சொல்லவும் இவளும் இரண்டொரு வார்த்தை பேசி முடிக்கும் வரை தன் கை அணைப்பிலேயே அவளை வைத்திருந்தவன் மேத்தியூஸ்க்கு என்னைப் பார்க்காம இருக்க முடியலையாம். குட்டி பாய் என்னை ரொம்பத் தேடுறானாம்” என்று அவளிடம் சொல்லிய படியே லேப்பை ஷட் டவுன் பண்ணி வைத்தவன் “சொல்லு பொம்மி என்ன விஷயம்?” என்று கேட்க

“அது வந்து..” என்று தயங்கியவள் கட்டிலில் இருந்து எழப் பார்க்க, மறுபடியும் அவள் தோள் மேல் கை போட்டு தன்னுடனேயே அமர வைத்தவன் “என்னிடம் என்ன தயக்கம் பொம்மி?” என்று அவன் இயல்பாகக் கேட்கவும்

“இல்ல.. தாத்தா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றாரு..” என்று அவள் தயங்கத்துடனே சொல்லவும்

“பண்ணட்டுமே!”

“அவர் நம்ம ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம் நடத்த நாள் பார்க்கிறாரு” என்று அவள் அழுத்தி எடுத்துச் சொல்லவும்

“அதான் எனக்குத் தெரியுமே! என் கிட்ட தாத்தா சொல்லிட்டாரே”

‘என்னது சொல்லிட்டாரா? நான் இவருக்குத் தெரியாதுனு இல்ல நினைச்சேன்?’ என்று மனதுக்குள் யோசித்தவள்

“அப்போ அதுக்கு நீங்க என்ன பதில் சொன்னீங்க?” என்று அவள் திணறிய படி கேட்கவும்

“நீ என்ன சொன்ன பொம்மி?” என்று அவன் அவள் கண்களைப் பார்த்துக் கேட்க

“நான் வேணாம்னு சொல்ல தான் இருந்தேன். ஆனா தாத்தா உடல் நிலையைக் கருதி தான் சரினு சொல்லிட்டேன்” என்று அவள் மெல்லிய குரலில் தன் சம்மதத்தைச் சொல்லி முடிக்கவும், அதைக் கேட்டு அவன் மனதுக்குள் ஒரு வெறுமை படர்ந்தாலும் அதை விடுத்தவன்

“நானும் அவருக்காகத் தான் பொம்மி சரினு சொன்னேன். விடு நம்ம இரண்டு பேருக்கும் விருப்பம் இல்லைனாலும் தாத்தாவுக்காகப் பண்ணிப்போம். அதனால அவர் உயிர் காப்பாற்றப்படும்னா அதைச் செய்யறதுல தப்பும் இல்ல” என்று சொல்லியவன் கட்டிலில் கால் நீட்டி கண்கள் மூடிப் படுத்து விட

‘உன் மேல எனக்குக் காதலே இல்ல அது எனக்கு வரவே வராதுனு சொன்னவர் இப்போ கடமைக்காக என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறாரா? கடைசியில எனக்குக் கிடைச்சது கடமைக்கான வாழ்வு தானா?’ என்று மனதில் நினைத்து நொந்தவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் வைக்காமல் எழுந்து சென்றாள் சாரா.

பாரீஸ் சென்றவன் தனக்கான வேலைகளை முடித்துக் கொண்டு தாத்தாவிடம் சொன்ன மாதிரியே கல்யாணத்திற்கு முதல் நாள் இந்தியா திரும்பினான் அஷ்வத்.

திருமண நாள் அன்று வரையுமே சாராவின் மனமோ ஒரு பக்கம் பனிமலையாய் குளிர்ந்தும் மற்றொரு பக்கம் எரிமலையாய் குமுறிக் கொண்டும் இருந்தது.

‘எந்த அஷ்வத்தோடு திருமணம் நடக்க வேண்டும் என்று ஆசைப் பட்டாளோ அந்தத் திருமணம் சிறிது நேரத்தில் நடக்கப் போகிறது. ஆனால் மனம் ஒத்துக் காதலோடு இல்லை! தாத்தாவுக்காகக் கூட அஷ்வத் இந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை. அவருக்கு வேண்டியது எல்லாம் என்னிடம் இருக்கும் இந்தக் கண்கள் தான்!’ என்று யோசித்து அறிந்து கொண்டவள் மனதால் கஷ்டப்பட்டு அழுது கரைந்தாள் சாரா.

இங்கே இவள் இப்படி இருக்க அங்கே அவனோ எந்த வித மனப் போராட்டமும் இல்லாமல் சர்வசாதாரணமாக மாப்பிள்ளை கோலத்தில் கிளம்பி இருந்தான் அஷ்வத்.

தாத்தாவின் குலதெய்வக் கோவிலில் காலை எட்டு மணிக்கு முகூர்த்தம் என்பதால் எல்லோரும் நிதானமாகக் கிளம்பி கோவில் சென்று எந்த வித ஆர்ப்பாட்டமும் ஆடம்பரமும் இல்லாமல் சுற்றத்தார் சொந்தபந்தம் என்று கொஞ்ச பேர் முன்னிலையில் சாராவின் கழுத்தில் தாலியைக் கட்டினான் அஷ்வத்.

தாலியைக் கட்டும் போது மட்டும் ஒரு வினாடி அவன் தயங்கினானோ என்ற சந்தேகம் சாராவுக்கு. ஏனெனில் அவனுள் தடுமாற்றத்தை அவள் கண்டுகொண்டாள். இருவரும் தாத்தாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க அவர் கண்ணே கலங்கி விட்டது. பிறகு அனைவரும் கிளம்பி வீட்டுக்குச் செல்ல.

ஒரு வயதான பெண்மணி கையால் பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் ஆலம் சுற்றி உள்ளே அழைத்து அவர்களுக்குப் பாலும் பழமும் கொடுத்து முடித்துப் பின் வந்த சொந்தங்கள் அனைவரும் சென்று விட எப்போதும் போல் அன்றாடம் தங்கள் வேலையைப் பார்க்க அவர் அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

தாத்தாவின் உடல் நிலைக் கருதி இரவு எந்த வித சாங்கிய சம்பிரதாயமோ பூ அலங்காரமோ வேண்டாம் என்று உறுதியாக அஷ்வத் சொல்லி விட பெரியவர்களும் இருவரும் சேர்ந்தே முடிவு எடுத்தப் பிறகு நாம் ஏன் வற்புறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் விலகி விட்டனர்.

இரவு உணவு முடித்துத் தன் அறைக்கு வந்த அஷ்வத் சாரா தன் அறைக்கு வந்ததும் தன் வாழ்வில் நடந்ததை எல்லாம் அவளிடம் கூறித் தன் மனமாற்றம் குறித்தும் இனி நம் வாழ்வு எப்படி இருக்கப் போகிறது என்றும் பேச நினைத்து அவள் வருகைக்காக அவன் காத்திருக்க

ஐயோ பரிதாபம்! சாராவோ எப்போது அவன் மனைவியாக அவன் தாலியைத் தன் கழுத்தில் வாங்கினாளோ அந்த வினாடியிலிருந்து இந்த வினாடி வரை அவன் கண்ணில் அவள் படவே இல்லை. இப்போதுமே மேலே வந்தவள் அவன் அறைக்குப் போகாமல் முன்பு தாத்தா பயன்படுத்திய அறைக்குள் சென்று அடங்கி விட்டாள் சாரா.

தாத்தாவோ வேலையாட்களோ மேல வர வழியில்லாத காரணத்தாலும் அஷ்வத் தன்னை எதிர்பார்க்க மாட்டார் என்ற எண்ணத்தாலும் அவள் இப்படி ஒரு முடிவை எடுக்க ஆனால் அதை அவள் அஷ்வத்திடம் சொல்லாமல் விட்டது தான் தப்பானது. அவள் அவனைப் பார்த்துப் பேசி இருந்தாலோ இல்லை அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதைக் கேட்டு இருந்தாலோ இருவருக்குள்ளும் இதுவரை நடந்ததற்கும் இனி நடக்கவிருக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வையாவது கண்டிருக்கலாம். என்ன செய்வது? விதி யாரை விட்டது?

அவளுக்காகக் காத்திருந்த அஷ்வத் தன்னை மீறித் தூங்கியவன் காலையில் எழுந்து அறையில் அவளைத் தேடியவன் அவளைக் காணாது அறையிலிருந்து வெளியே வர, அதே நேரம் அவனுக்கு எதிர்திசையில் இருந்த தாத்தாவின் அறையிலிருந்து வெளியே வந்தாள் சாரா. குளித்து முடித்து வெளியே வந்த அவளைப் பார்த்ததே போதும் என்ற நிம்மதியுடன் வேறு எதுவும் பேசாமல் தன் வேலையைப் பார்க்க விலகிப் போனான் அஷ்வத்.

அதன் பிறகு நாட்கள் இப்படியே சென்று கொண்டிருக்க சாராவும் அவனிடம் பேசவில்லை அவனும் அவளிடம் பேச முயற்சிக்கவும் இல்லை. சாராவும் எப்போதும் போல் தாத்தா அறையைத் தான் பயன்படுத்தி வந்தாள்.

திருமணம் நடந்த மூன்றாம் நாள் அஷ்வத் பாரீஸ் சென்று சில வேலைகளை முடிக்க வேண்டி இருந்ததால் தான் நாளைக்குக் கிளம்புவதாகத் தாத்தாவிடம் சொல்லி விட்டு சாராவைத் தேடி மேலேயிருந்த இப்போது அவள் பயன்படுத்தும் அறைக்கு வந்தவன் அவள் டேபிள் முன் அமர்ந்து எழுதிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும்

“என்ன பொம்மி எழுதற? என்ற கேள்வியுடன் அவன் அவள் அறைக்குள் திடீர் என நுழையவும், சாரா அவன் குரலில் விதிர்விதிர்த்து எழுந்து நின்றே விட அதைப் பார்த்தவன் மனதில் குறித்துக் கொண்டாலும் அதைக் கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் அவளிடம் வந்தவன்

“எனக்கு முக்கியமான ஒரு அசைன்மெண்ட் கிடைச்சிருக்கு. அதை முடிக்க நான் நாளைக்குப் பாரீஸ் போறேன் பொம்மி” என்று சொல்ல

“திரும்ப எப்போ வருவீங்க?” அவளையும் மீறி அவள் கேட்டு விட

‘ஆமா நான் இங்கே இருந்தா மட்டும் என் கூடவே ஒட்டிகிட்டு திரிஞ்ச பாரு! கல்யாணம் அன்னைக்கு என் முகத்தைப் பார்த்த. அதோட இன்று தான் என் முகத்தை பார்க்கற. ஆனா கேள்வி மட்டும் எப்போ வருவீங்கனு!’ என்று மனதுக்குள் கேள்வி கேட்டுக் கொண்டவன் 

“எப்படியும் திரும்பி வர ஒரு வாரம் ஆகும் பொம்மி”

“அவ்வளவு நாளா?” என்று வாய் விட்டுச் சொன்னவள் அவளையும் மீறி கண்கள் கலங்கி விட, அஷ்வத்துக்கும் கஷ்டம் தான். இருவரும் பார்த்துக் கொள்ளவில்லை பேசவில்லை என்றாலும் ஒரே வீட்டில் இருக்கிறோம் என்ற நிம்மதியாவது அவனுக்கு இருந்தது. ஆனால் இப்போது அதுவும் பறிபோகப் போகிறது என்றால் அவனுக்கும் அது வேதனையாகத் தான் இருந்தது.

“தாத்தா தான் இப்போ நல்லா இருக்கிறாறே நீ ஏன் அங்க வந்து படிப்பைத் தொடரக் கூடாது பொம்மி?” என்று அஷ்வத் கேட்க

தாத்தாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனதில் இருந்து படிப்பும் வேண்டாம் வெளிநாடும் வேண்டாம் என்று சாரா உறுதியாகச் சொல்லி மறுத்து விட்டு அவள் இங்கேயே இருந்து விட அதைத் தான் இப்போது அஷ்வத் ஞாபகப் படுத்தி அவளைத் திரும்ப படிப்பைத் தொடரச் சொல்லித் தன்னுடன் வரும்படி அழைத்தது.

“இல்ல.. நான் வரல. இங்கேயே நான் ஏதாவது படிச்சிக்கிறேன். தாத்தாவ விட்டு நான் எங்கேயும் போக விரும்பல” என்று சாரா பதிலளிக்கவும்

“ம்ம்ம்..” என்றவன் அவளை மேற்கொண்டு வற்புறுத்தாமல் விட்டு விட

“நீங்க திரும்ப வந்துடுவீங்க தானே? என்று அவளே மீண்டும் கேட்க

“ம்ம்ம்…. என்ன தான் என் வேலையை எல்லாம் ஸ்டீவ் கிட்ட கொடுத்துட்டு வந்தாலும் நானும் அடிக்கடி போய் பார்க்கணும் தான டா?” என்று அஷ்வத் கனிவாய் கூற

“ம்ம்ம்…” என்று அவள் அமைதியாய் நிற்கவும்

‘அப்ப நான் போய்ட்டு வரட்டுமா?” என்று ஒரு வித எதிர்பார்ப்புடன் அவன் கேட்க, வாயைத் திறந்து அவனுக்குப் பதில் சொல்லாமல் ஏதோ தன் கழுத்து தான் சுளுக்கி கொண்டதோ என்பது போல் மிக மெல்லியதாகத் தலையை ஆட்டினாள் சாரா.

அதில் திருப்தி இல்லாமல் அன்று போல் இன்றும் அவளை அணைத்து விடை பெற நினைத்தவன் ஆசையுடன் அவள் முன் ஓர் எட்டு எடுத்து வைக்க சாராவும் அன்று போல் கண்ணில் மிரட்சியுடன் பின்னே ஓர் அடி எடுத்து வைத்தாள்.

அதில் சற்றுத் தயங்கி அவள் முகம் பார்த்தவன் அவள் விழிகளில் பயத்தையும் மீறி ஏக்கத்தைப் பார்த்தவனோ ஒரே எட்டில் அவளை நெருங்கி இறுக்கி அணைத்தவன் தன் மீசைமுடியும் மூச்சுக்காற்றும் அவள் செவிமடல்களைத் தீண்ட அவள் முகத்தைத் தன் மார்பில் அழுத்தப் புதைத்தவனோ 

“எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திரும்பி வரப் பார்க்கிறேன் டி கண்ணம்மா!” என்று அவள் காதுக்குள் ரகசியம் பேசியவன் அவள் முகம் நிமிர்த்தி நெற்றியில் தன் இதழ் பதித்து “சரி உன் இஷ்டப் படி நீ இங்கேயே இரு. ஆனா அங்க என் ஃபிரண்ட்ஸ் எல்லாருக்கும் நம்ம கல்யாணத்தைத் தெரியப்படுத்த ஒரு ரிசப்ஷன் அரேன்ஜ் பண்ணியிருக்கேன். அப்போ எந்த மறுப்பும் சொல்லாம நீ என் கூட வந்து தான் ஆகணும்” என்று அவன் சொல்ல

“எதுக்கு? இப்போ இதெல்லாம் தேவையா? வேணாமே..” என்று அவள் மறுப்புத் தெரிவிக்கவும்

“ஏன், நீ என் மனைவி தானே? தாத்தாவுக்காகவே இருந்தாலும் நமக்கு நடந்தது கல்யாணம் தானே? அப்போ நான் அதைத் தெரியப் படுத்துறதுல என்ன இருக்கு?” என்று அவன் சற்று கோபமாகக் கேட்கவும்

‘ஆமா.. கல்யாணம் என்னமோ நிஜம் தான், நானும் உங்க மனைவி தான்! அதனால இப்போ பெருசா நம்ம ரெண்டு பேர் வாழ்க்கையிலும் அப்படி என்ன மாற்றம் வந்துடிச்சி?’ என்று மனதுக்குள் நினைத்தவள் அமைதிகாக்கவும், அவள் வாய் வார்த்தையாக சொல்லவில்லை என்றாலும் அவள் முகத்திலிருந்தே அதை அறிந்தவன்

‘இந்தக் கஷ்டம் எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் தான் பொம்மி. உன் கிட்ட என் மனசுல இருக்கிறத எதையும் பகிர்ந்துக்காம என்னால் உன்னை விட்டு விலகியிருக்க முடியாத ஓரே காரணத்திற்காக அவசரமாக இந்தக் கல்யாணாத்திற்கு சம்மதிச்சேன் டி’ என்று மனதுக்குள் நினைத்தவன் அந்த உண்மையைச் சொல்லாமல் “தாத்தாவுக்காக உன்னைத் திருமணம் செய்துகிட்டேன் தான். ஆனா எல்லாம் சீக்கிரமே நல்ல மாதிரியா முடியும்” என்று உணர்ந்து சொன்னவன் அவளை ஆரத் தழுவவும் எல்லாம் மறந்து அவளும் அவனை ஆரத் தழுவினாள் சாரா.

“அப்ப நான் போய்ட்டு வரட்டுமா?” என்று பிரியவே மனமில்லாமல் அவன் கேட்க

“ம்ம்ம்.. சீக்கிரமே வந்துடுங்க” என்றவள் தான் முகம் புதைத்திருக்கும் அவன் மார்பிலேயே தன் இதழ் பதித்து விடை கொடுக்கவும்

“ஏன், அந்த முத்தத்தை இங்க கொடுத்தா தான் என்ன?” என்று அவன் கேட்க

“எங்கே?’ என்று நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள் அவன் அவனுடைய இதழைச் சுட்டிக் காட்டவும் வெட்கத்தில் தலை குனிந்தவள் பிறகு சற்று நேரம் கடந்தும் அவனிடம் எந்த அசைவும் இல்லாமல் போகவே மறுபடியும் நிமிர்ந்து அவன் முகம் பார்க்க, அதில் அவன் கண்ணில் ஒரு வித எதிர்பார்ப்பைப் பார்த்தவள் உடனே தன் நுனிக் காலால் எக்கி அவன் கழுத்தை வளைத்தவள் அவன் நெற்றியில் அழுத்தத்துடன் கூடிய ஓர் அழகிய முத்தத்தை வைக்க

“என்ன டி, நீ கொடுத்த பில்டப்ப பார்த்து நானே ஒரு நிமிஷம் அசந்து போய்ட்டேன். ஆனா கடைசியில இங்க கொடுக்கத் தானா?” என்று அவன் அவளைச் சீண்ட, அவன் சீண்டலில் வெட்கத்துடன் அவனிடமிருந்து விலகப் பார்த்தவளைப் பிடித்து நிறுத்தியவன்

“நீ கொடுக்கலனா என்ன? நான் தரேன்” என்றவன் அவள் விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள் இதழை மென்மையாகச் சிறை செய்தவனோ பின் கொஞ்சம் கொஞ்சமாக அந்த முத்தத்திலேயே அவன் அழுத்தத்தைக் கூட்டவும் பெண்ணவளுக்கோ முதல் முறையாக அவனிடமிருந்து இப்படிப் பட்ட முத்தத்தைப் பெற்றவளோ முதலில் சிலிர்த்தவள் பின் அவன் வேகத்தில் உடலில் ஓர் நடுக்கம் ஓட, அதை உணர்ந்து அவளை விட்டு விலகி நின்றவனோ

“சாரி டா கண்மணி” என்று சொல்ல

“இல்ல இல்ல.. எனக்கு ஒண்ணும் இல்ல” என்று அவசரமாக அவள் சொன்ன பதிலில் உங்கள் முத்தம் இன்னும் வேண்டும் என்பதை அறிந்தவனோ

“ஹா… ஹா….” என்று வாய்விட்டுச் சிரித்தவனோ “என்னை ரொம்பவே மாத்திட்டு வர டி பொம்மி” என்றவன் அவளைத் தூக்கி ஓர் சுற்று சுற்றிப் பின் அணைத்துக் கொண்டவன் சில சில்மிஷங்களிலும் பேச்சிலும் அவளைச் சிவக்கவும் சிரிக்கவும் வைத்தவன் அதே மனநிலையுடன் விலகிச் சென்றான் அஷ்வத். 

Categories
On-Going Novels Yuvanika

அத்தியாயம் – 9

காதல்பனி 9

ஸ்டீவ்விடம் மட்டும் சில வார்த்தைகளைச் சொன்னவன் யாருக்கும் எந்த உறுத்தலும் இல்லாமல் அவளை வெளியே அழைத்து வர. 

அதுவரை பேசாமல் இருந்தவன் பார்க்கிங் ஏரியாவுக்கு வந்தவுடன் 

“குடிகாரி, நீ எல்லாம் ஒரு தமிழ்ப் பொண்ணா?” என்று கேட்க 

இவ்வளவு நேரம் அவனையே பிடிமானமாகக் கொண்டிருந்தவளோ இப்போது அவன் அவளைத் தன்னிடமிருந்து விலக்கி நிறுத்திக் கேள்வி கேட்கவும், எந்த ஒரு பிடிமானமும் இல்லாமல் தடுமாற அவளை ஒரு கையால் பிடித்து நிறுத்தியவனோ மறுபடியும் அதே கேள்வியைக் கேட்க 

“யார் சொன்னா நான் தமிழ் பொண்ணுன்னு? நான் ஒண்ணும் தமிழ் பொண்ணு இல்ல! என் அப்பா பேரு ஒண்ணும் தமிழ் இல்ல!” என்று சற்று தள்ளாடிய படியே பதில் சொன்னவளோ பிறகு கண்ணைச் சுருக்கிக் கொண்டு தன் வலது கையின் ஆள் காட்டி விரலால் மோவாயைத் தட்டிய படி யோசித்தவள் பின் கண்களைத் திறந்து உதட்டைப் பிதுக்கி

“என்ன பேருன்னு மறந்து போச்சே!” என்று அவள் சொல்ல 

“ஆமாம்… பின்ன? இந்த குடி குடிச்சா எல்லாம் மறந்து தான் போகும்” என்று கென்டிரிக் கடுப்பாக 

“ஹாங்…. குடியா? நானா? அது என் குடும்பத்துக்கே இல்லையே! பிறகு நான் மட்டும் எப்படி குடிப்பேன்?” என்று அவள் அதிகாரத் தோரணையுடன் கேள்வி கேட்கவும் அதைக் கேட்டு அவன் முறைக்க

“ஹி… ஹி… ஹி… நெசமா தான் நான் குடிக்கலங்க. வேணும்னா நான் ஊதறேன் நீங்களே பாருங்களேன்” என்றவள் அதைச் சொன்னது மட்டுமில்லாமல் ஓர் தள்ளாட்டளுடனே அவனை நெருங்கி முகத்தில் ஊதவும் 

“ஏய்…” என்று அவளை உலுக்கியவன் 

“என்ன இப்படி செய்ற? நான் யார் தெரியுமா?” என்று கேட்டவன் பின் “வா…” என்று அவளைப் பிடித்து இழுக்கவும் 

அவன் இழுப்புக்குச் செல்லாமல் அதே இடத்திலேயே நின்றவள் மறுபடியும் ஏதோ யோசிப்பது போல் விரலால் தன் நெற்றிப் பொட்டைத் தட்டிக் கொண்டவள் திடீர் என்று

“ஆஆஆ…ங் ஞாபகம் வந்துடுச்சி” என்க.

“என்னது?” 

“நீங்க கேட்டதுக்குப் பதில்” 

“அது தான் என்னனு கேட்டன்?” என்று அவன் பல்லைக் கடிக்கவும்

“அத தான சொல்ல வரேன் இருங்க… இருங்க…” என்றவள்

“நீங்க யாருனு எனக்குத் தெரியாது. என் அப்பா பெயர் மறந்து போச்சு. ஆனா நான் யார் தெரியுமா? தி வேர்ல்ட் ஃபேமஸ் போட்டோகிராஃபர் அஸ்வத் கென்டிரிக்கோட மனைவி!” அவளால் நிற்கக் கூட முடியாமல் தடுமாறியவள் அப்போதும் அன்று அவன் சொன்னது போலவே இன்று இவள் ஸ்டைலாக நின்று கொண்டு தன் இடது கையின் ஆள்காட்டி விரலை அவன் செய்தது போல் தன் நெஞ்சில் வைத்துச் சொன்னவள் பேலன்ஸ் தவறி கீழே விழப் போக, 

“ஏய்..” என்ற கூவலுடன் கென்டிரிக் பிடிக்க வர அதற்குள் தொப்பென தரையில் அமர்ந்தே விட்டாள் சாரா.

“இதுவரை உன்னை வெளியே கூட்டிட்டு வந்தது இல்லையேன்ற ஒரே காரணத்திற்காக இன்று கூட்டிட்டு வந்ததுக்காகத் தான் நீ என்ன இந்த பாடுபடுத்துறியா?” என்று கென்டிரிக் கடிந்து கொள்ள

அதற்கு அவள் ‘ம்ம்ம்…’ என்றும் ‘ம்கும்’ என்று இரண்டு விதமாகவும் தலையை ஆட்டவும் 

“இப்போ எதுக்கு இரண்டு பக்கமும் தலைய ஆட்டற?” 

“இது நீங்க என்ன முதல் முறையா கூட்டிட்டு வரேனு சொன்னதுக்கு” என்று மேலும் கீழுமாக தலை அசைத்துச் சொன்னவள் 

“இது நான் ஒன்னும் உங்களைப் பாடுபடுத்தலை” என்பதற்கு என்றவள் மறுபடியும் நிதானம் இல்லாமல் தொங்கிப் போயிருந்த தன் தலையை இட வலமாக ஆட்டிச் சொல்லவும் 

அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவனோ அசைந்த படியே இருந்த அவள் தலையைத் தன் இரு கைகளால் தாங்கிப் பிடித்து நிறுத்திய படி 

“சரி சரி இப்போ கிளம்பு” என்று அவள் கையைப் பிடித்து தூக்கவும் உடனே அவன் கையைத் தட்டி விட்டவளோ மறுபடியும் தலையை இட வலமாக அசைத்து அவன் முகம் பார்த்து மறுக்கவும் 

“ஏன் இப்போ என்ன ஆச்சு?” 

“என்ன தூக்கிட்டுப் போய் கார்ல உட்கார வைங்க” என்று குழைவாகச் சொன்னவள் அவன் முன் சிறு குழந்தையாகத் தன் கைகள் இரண்டையும் தூக்கிக் காட்டவும் 

அவள் செயலில் ஒரு வினாடி திகைத்தவனோ மறுநொடியே 

“என்னால முடியாது! இப்போ எழுந்து வராம இதே மாதிரி உளறிட்டு இருந்தா உன்னை இங்கேயே விட்டுட்டு போய்டுவன்” என்று அவன் மிரட்ட 

“போங்க, எனக்கென்ன? நான் இங்கேயே படுத்துக்கறேன். பாதுகாப்புக்குத் தான் ஸ்டீவ் அண்ணா இருக்காரே” என்றவள் சொன்னது போல் தரையிலேயே தலை சாய்த்துப் படுத்து விட 

“ஏய்.. ஏய்.. என்ன பண்ற லூசே?” என்று கேட்ட படி தூக்கி உட்கார வைத்து அவளை உலுக்கியவன் 

“என்னது ஸ்டீவ் அண்ணணா?” என்று வியந்தவன் 

“என்ன விளையாடறியா? நான் எப்படி உன்னைத் தூக்க முடியும்? இந்த ஊருக்கு வேணா அது சரிப்பட்டு வரலாம். ஆனா உங்க ஊர் படி தப்பு. சோ வம்பு பண்ணாம கிளம்பு” என்றவன் இன்னும் அவளை சற்று நெருங்கி அமர்ந்தவனோ அவளை மேலே எழுப்ப நினைக்க 

அவன் சொன்ன பதிலில் அந்த நிதானம் இல்லாத நேரத்திலும் அவனைப் பார்த்து தன் கண்களைப் பட பட என கொட்டியவளோ 

“ஹய்.. யார் என்ன சொல்றதுக்கு இருக்கு? மனைவியை கணவன் தூக்காம வேற யார் தூக்குவாங்களாம்?” என்றவள் தன் வலது கையின் ஆள் காட்டி விரலை அவன் நெஞ்சில் வைத்து அழுத்தியவள் 

“நீங்க என் புருஷன் நான் உங்க பொண்டாட்டி” என்று ஒரு வித போதையுடன் உளறியவள் உடனே அதே கையால் அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்தவளோ அவன் நெஞ்சிலேயே தன் கன்னத்தை வைத்து அழுத்தியவள் 

“ப்ளீஸ் மச்சான்..” என்று அவள் கெஞ்சலுடன் கொஞ்சவும் அவன் உடலில் திடீர் என்று ஓர் அதிர்வு! அதில் அவன் சிலையென அமர்ந்து விட அவளோ மறுபடியும்

“மச்சான் தூக்குங்க” என்றவள் பூனைக் குட்டியாய் தன் கன்னத்தை அவன் மார்பின் மேலுள்ள சட்டையில் உரச

அவளின் கெஞ்சலோ உரசலோ அவள் அழைத்த மச்சான் என்ற அழைப்போ எதுவோ அவனை அவளைத் தூக்கச் சொல்லி உந்த எந்த வித மறு பேச்சும் இல்லாமல் அவளைக் குழந்தை என தன் கைகளில் ஏந்தினான் அஷ்வத். 

அதில் குஷியானவளோ தன் இடது கையால் அவன் அணிந்திருந்த காலர் இல்லாத டி ஷர்ட்டின் கழுத்துப் பகுதியை சற்றென பற்றி தன் முகத்தை அவன் கழுத்து வளைவில் புதைக்க, அவள் செயலில் ஒரு வினாடி விதிர் விதிர்த்து நின்றவனோ பின் அந்த இடத்திலிருந்து கார் வரை உள்ள ஐந்து அடியையும் மிக மிக நிதானமாகக் கடந்தான் அவன்.

அவளைக் காரில் அமரவைத்த பிறகும் விலக முடியாமல் அவளை அணைத்த படி சற்று நேரம் இருந்தவனோ பின் ஒரு பெருமூச்சுடன் அவளை விட்டு விலகி வந்து காரை எடுத்தாவன். 

அவள் வீட்டின் முன் காரை நிறுத்தி 

“இறங்கு சாரா” என்று சொல்ல

அவளோ அவன் அணைத்த மயக்கத்திலே இறங்காமல் அப்படியே அமர்ந்திருக்க

“என்ன சாரா, இடம் வந்துடிச்சி பாரு இறங்கு” என்று அவன் சற்று குரலை உயர்த்தவும்

அதில் விழி உயர்த்தி அவனைப் பார்த்தவள் இப்போதும் முன்பு போல் முடியாது என்பதாக தலை அசைக்கவும், அவளின் எண்ணத்தை அறிந்தவனோ நமட்டு சிரிப்பில் உதட்டோரம் சுழிய

“என்ன இங்கயிருந்து உன்னை தூக்கிட்டு போய் உள்ளே விடணுமா?” என்று அவன் இலகுவாகக் கேட்க

“அதெல்லாம் இல்லை எனக்கு வேற ஒண்ணு வேணும்” என்றவள் இமைகளைத் தாழ்த்தி தன் கை விரல்களைப் பார்த்துக் கொண்டே 

“எனக்கு ஐ லவ் யு னு சொல்லனும்! அதுவும் சாதாரணமா இல்ல இறுக்கி அணைத்து ஒரு உம்மாவோட சொல்லனும்” என்றாள் காதல் வழியும் குரலில். 

அவள் மறுபடியும் தூக்கச் சொல்வாள் என்று அவன் நினைத்திருந்தான். அதனால் இது வரை ஒரு இலகுத் தன்மையுடன் இருந்தவனோ அவள் ஏதோ கேட்கக் கூடாத ஒன்றைக் கேட்டுவிட்டது போல் கோபத்தில் முகம் கடினமுற, தன் முகத்தை அவளிடமிருந்து திருப்பி நேர் கொண்ட பார்வை பார்த்தவனோ

“அதெல்லாம் என்னால சொல்ல முடியாது” என்றான் குரலில் சற்று கடுமையைக் காட்டி ஓர் அலட்சியத்துடன்.

அவன் முகத்தைப் பார்க்காமலே எப்போதும் போல் அவன் குரலில் உள்ள கடுமையை அலட்சியம் செய்தவளிடம் விளையாட்டுத் தனம் மேலும் தலை தூக்க. இப்போது வரை அவள் இழுத்த இழுப்பிற்குத் தான் அவன் அசைகிறான் என்பதை அந்த மயக்க நிலையிலும் உணர்ந்து கொண்டவள். இப்போது தான் பிடித்த பிடிவாதம் தான் ஜெயிக்கிறது என்று தெளிவுற்றவள்

“இப்போ நான் சொன்னதை செய்யலனா நான் காரை விட்டு இறங்கவே மாட்டேன் இப்படியே தான் உட்கார்ந்து இருப்பேன்” என்றவள் கையைக் கட்டிக் கொண்டு அமர்ந்துவிட 

இதைக் கேட்டு ஏற்கனவே இருந்த கோபம் அவனுக்கு தலைக்கு ஏற முகம் ரத்தமென சிவக்க 

“ஓ… அப்படியா? அப்ப எனக்கும் என்ன செய்யணும்னு தெரியும்! சரி, நானும் இந்த இடத்த விட்டுப் போகல. அதுவும் நைட் மட்டும் தான். விடிஞ்சதும் டிரைவர வேற ஒரு கார் எடுத்து வரச் சொல்லி நான் போய்க்கிறேன். இந்த கார் இங்கேயே தான் இருக்கும். நீ எவ்வளவு நேரம் வேணாலும் இருந்துக்கோ. இப்போ நான் தூங்கப் போறேன். சோ டிஸ்டர்ப் பண்ணாத” என்றவன் சீட்டின் லிவரைப் பின் புறமாக இழுத்து விட்டு கைகளைக் கட்டியபடி அதில் சாய்ந்து கண்களை மூடிக்கொள்ள.

அவன் செயலைப் பார்த்தவள் ‘ஓ… உர்ராங்குட்டான்! உனக்கு இவ்வளவு வீம்பா? அதையும் தான் பார்க்கறேன்’ என்று நினைத்தவள் 

‘போகணும்னா சார் இப்பவே காரை வரவைத்து போக வேண்டியது தானே? அது என்ன காலையில? ஏன்னா நைட் முழுக்க சார் எனக்கு பாதுகாப்புக்கு இருக்குறாராம்! உர்ராங்குட்டான்… இப்பவும் வாயத் திறந்து காதலை சொல்ல மாட்டாராம், ஆனா பாதுகாப்பா மட்டும் இருப்பாராம்! உங்க கிட்டயிருந்து இந்த அன்பு பாதுகாப்பை விட உங்க காதல் தானே எனக்கு வேணும்!’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவள் உடனே தன் சீட் பெல்டைக் கழட்டிய படி 

“ம்ம்ம்… நீங்க இங்கே தூங்கறதால எனக்கு ஒண்ணும் இந்த கார் வேண்டாம்” என்றவள் டோர் லாக்கில் கை வைக்கும் நேரம் கண் விழித்து அவளைப் பார்த்தவன்

“ம்ம்ம்… இப்ப தான் குட் கேர்ள்! அப்ப வீட்டுக்குள்ள போய் சமத்தா படுத்து தூங்கு” என்று அவன் சொல்ல 

கதவைத் திறந்து இடது காலைக் கீழே வைத்தவள் திரும்பி அவனைப் பார்த்து 

“எனக்கு காரும் வேண்டாம் வீடும் வேண்டாம் ரோடே போதும்! க்கும்…” என்று தன் உதட்டை ஒரு பக்கம் வளைத்து அவனுக்குப் பழிப்புக் காட்டியவள் தலை சிலுப்பலுடன் காரை விட்டு இறங்க 

‘அடிப்பாவி… இவ்வளவு நேரம் நிதானமே இல்லாம மச்சான் மச்சான்னு என் மேல அப்படி சாய்ந்தா. இப்போ என்னனா எனக்கே பழிப்பு காட்டிட்டு தலைய வேற சிலுப்பிட்டு இறங்கறா! அப்ப இவ்வளவு நேரம் நடிச்சாளா இல்லனா நிமிஷத்துக்கு நிமிஷம் மாறுர அன்னியனா இவ?’ என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே

ஒரு தள்ளாடலுடன் காரை விட்டு இறங்கியவள் கார் கதவில் சாய்ந்த படியே தன் தடுமாற்றத்தைச் சமன் செய்தவள் தான் சொன்னது போலவே தன் வேக நடையுடன் காரின் எதிர் திசையில் நடக்க ஆரம்பிக்க 

“அவள் வேகத்தைப் பார்த்தவனோ நிச்சயம் இவ கிட்ட அன்னியன் தான் இருக்கான்!” என்று வாய் விட்டுச் சொல்லியவனோ காரை விட்டு இறங்கி அதை லாக் செய்து விட்டு அவள் பின்னாலேயே போனவன் 

“ஏய்… ஏய்….” என்று இவன் கூப்பிட அப்போதும் அவள் திரும்பிப் பார்க்காமல் போய் கொண்டிருக்க, அதில் கடுப்பானவன்

“பிசாசே! நடு ராத்திரியில நல்லா பிசாசு மாதிரியே டிரஸ் பண்ணிகிட்டு உலாவரா பாரு!” என்று வாய் விட்டு புலம்பியவனோ அவள் நடக்கும் போது அவளிடமிருந்து நழுவி கீழே விழுந்து கிடந்த துப்பட்டாவைக் குனிந்து எடுத்தவனோ கடுப்பில் நிமிர்ந்து

“நில்லுடி…. சாரா” என்று சொல்ல வந்தவனோ அந்த டி என்ற வார்த்தையை மென்று முழுங்கிய படி 

“ஏய்…. சாரா!” என்று ஒரு அதட்டல் போட 

அந்த குரலுக்குக் கட்டுப் பட்டு அதே இடத்திலேயே நின்றாளே தவிர அப்போதும் சாரா திரும்பி அவனைப் பார்க்கவில்லை. 

தன் வேக நடையுடன் இரண்டே எட்டில் அவளை நெருங்கியவனோ 

“ஏய் நடு ரோட்டுல இப்படி குடிச்சிட்டு திரிந்தா போலீஸ்காரன் பிடித்து உள்ளே வச்சிடுவான். ஒழுங்கா வீட்டுக்கு வா சாரா” என்று அவன் அவள் கையைப் பிடிக்க அவன் கையைத் தட்டி விட்டவளோ அவனை உறுத்து விழித்த படி

“என்ன எப்போ பாரு என்னய ஏய்… ஏய் னு கூப்பிட்டு இருக்க? அதே மாதிரி என் பெயர் சொல்லியும் கூப்பிடுறிங்க!” என்று அவள் அவனை அதட்ட 

‘வேற எப்படி மா நான் உன்னை கூப்பிட?’ என்று அவன் தன் புருவம் உயர்த்தி கண்ணாலேயே வினவ, அவ்வளவு தான்! இவ்வளவு நேரம் அவளிடமிருந்த எஃகுத் தன்மை விலகி மறுபடியும் பூனைக் குட்டியாக அவன் மார்பில் சுருண்டவள் அவன் கண்ணாலேயே கேட்ட கேள்விக்குப் பதிலாக 

“அம்மு சொல்லுங்க, செல்லம் சொல்லுங்க, பட்டுமா சொல்லுங்க, குட்டிமா சொல்லுங்க, கண்ணம்மா சொல்லுங்க, ராஜாத்தி இல்லனா ராசாத்தி சொல்லுங்க. முக்கியமா டி போட்டு கூப்பிடுங்க. இப்படி எவ்வளவோ செல்லப் பெயர் இருக்கே!” என்று குழைந்தவள்

“அப்படி இல்லனா உங்க ஊர் வழக்கப் படி டார்லிங் டியர்னு கூப்பிடுங்க” என்று அவள் கெஞ்ச

இவ்வளவு நேரம் விரைப்புடன் இருந்தவள் இப்போது மறுபடியும் தடுமாற்றத்துடன் அவன் தோளில் சாயவும் அவளை ஒரு கையால் அவளை அணைத்துப் பிடித்தவனோ 

“ம்ம்.. கூப்பிடலாம் கூப்பிடலாம் பிறகு ஒரு நாள் நீ சொல்ற மாதிரி கூப்பிடலாம். இப்போ வா போகலாம்” என்றழைக்க

அவன் மார்பில் இருந்த படியே முகத்தை முடியாது என்பது போல் இட வலமாக ஆட்டியவள் 

“ஒரு உம்மா இல்ல, ஐ லவ் யூ இல்ல, நான் கேட்ட செல்லப் பெயரும் இல்ல. பிறகு நான் எதுக்கு வரணும்? ஏன் மச்சான் நான் உங்க மனைவி தானே? அதுவும் காதல் மனைவி தானே? பிறகு ஏன்…” என்றவள் பாதியிலேயே தூக்கத்துக்கான கொட்டாவியை விட

“நீ இப்படி கேட்கும் போதே உனக்கு பதில் தெரியலையா? நமக்கு இன்னும் கல்யாணம் ஆகலனு! அதுவும் இல்லாம இது ரோடு. இங்க வச்சி நீ இப்படி எல்லாம் வம்பு பண்ற” என்று அவன் நயமாக எடுத்துச் சொல்ல

“யோவ்… ரோஸ் மில்க்! இதெல்லாம் உனக்கு ஓவரா தெரியல? நான் எங்கயா நடு ரோட்டுல கேட்டேன்? அழகா சமர்த்தா காருக்குள்ள இல்ல கேட்டேன். அதுவும் இல்லாமல் நீங்க தான நான் உங்க மனைவி நீங்க என் கணவன்னு எல்லாம் அன்னைக்கு டயலாக் அடிச்சிங்க” என்றவள் பொறுமை இழந்த ஓர் வேகமூச்சுடன் நிமிர்ந்து அவன் சட்டையை உலுக்க, உடனே அவள் கையைப் இறுக்கப் பற்றியவன் 

“சரி சரி நான் தான் மறந்துட்டேன். இப்போ வா போகலாம்” என்றவன் அவளை இழுத்துச் செல்ல

“ஏய்.. ஏய்.. ரோஸ் மில்க் என் கையை விடு நான் வரல. ப்ச்ச் உஉம்.. நான் வரல” என்றவளை எதுக்கும் அசராமல் அவன் இழுத்துச் செல்லவும்

“ஐயோ மச்சான்! என்ன எங்க கூட்டிப் போறிங்க?” என்று உதடு பிதுக்கிக் கேட்கவும் அவள் வீட்டு வாசல் வரவும் சரியாக இருக்க, இடது கையால் அவளை அணைத்தவனோ தன் வலது கையால் காலிங் பெல்லை அழுத்த நினைத்து அவன் கையை உயர்த்தும் நேரம் சட்டென அவன் கையை மடக்கிப் பிடித்தவளோ அவனையும் இழுத்துக் கொண்டு தரையில் அமர்ந்து விட. 

“நான் உள்ள போகல ரோஸ் மில்க். நீங்க வேற குடிச்சது மட்டுமில்லாமல் உங்க மேல எல்லாம் ஊத்திக்கிட்டீங்களா அதோட என்ன கட்டிப் பிடிச்சதால நான் தான் ஏதோ குடிச்ச மாதிரி என் மேல எல்லாம் ஒரே நாத்தம்.

இப்போ நான் உள்ள போனா என் ரூம்மெட்ஸ்ங்க ஏதோ நான் குடிச்சிட்டு வந்ததா நினைப்பாளுங்க. என்ன அசிங்கமா பார்ப்பாளுங்க. ஏன்னா அவளுங்க குடிச்சிட்டு வந்தா நான் அசிங்கமா திட்டுவேன். அதான் வேண்டாம்னு சொல்றேன். 

சோ நான் வெளில இங்கேயே உங்க மடில தலை வச்சிப் படுத்துக்கிறேன். நான் தூங்கின பிறகு என்னை இங்கேயே விட்டுட்டு நீங்க வேணா போங்க மச்சான்” என்றவள் அழகாக கையை காலை நீட்டி அவன் மடியில் தலை வைத்துப் படுத்து விட

முதலில் அவள் சொன்ன பொய்யில் திகைத்தவன் பின் அவள் கெஞ்சலுடன் மடியில் தலை சாய்க்கவும் அவனுக்கு அப்படியே உருகி விட

“சாரா வெளில படுக்காத குளிரும். எழுந்திரு என் வீட்டுக்குப் போகலாம். எழுந்திரு சாரா” என்றவன் அவள் தோளில் கை வைத்து உலுக்க, கண்களை மூடியிருந்த நிலையிலே அவன் கைகளைக் கெட்டியாகப் பிடித்தவளோ

“இன்னும் என்ன மச்சான் சாரா போரான்னிட்டு” என்றவள் அவன் கையைத் தன் கழுத்துக்குக் கீழே வைத்துக் கொண்டு தூங்கி விட

“நீ எல்லாம் சொன்னா கேட்க மாட்ட. என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்” என்றவன்

“ரெண்டு கிளாஸ் குடிச்சதுக்கே என்னை இந்த பாடு படுத்துறியே? நீ மட்டும் ஒரு பாட்டில் குடிச்சி இருந்தா ஒரு வழி பண்ணி இருப்ப!” என்று வாய் விட்டு சலித்தவனோ அவளைத் தூக்கித் தன் தோள் மேல் போட்டுக் கொண்டு அவன் நடக்க. அதில் தெளிந்தவளோ 

“ஏய்.. ஏய்.. ரோஸ் மில்க்! என்னை எங்க கூட்டிட்டுப் போற?” என்று அவள் பழைய பல்லவியையே திரும்ப பாடிய படி அவன் முதுகைப் பூனைக் குட்டியாய் பிராண்ட.

அதற்குள் காரிடம் வந்தவனோ கார் கதவைத் திறந்து சீட்டில் அவளை அமர வைத்து 

“பேசாம வா. என் வீட்டுக்குத் தான் கூட்டிட்டுப் போறேன்” என்று அவன் சொல்ல 

“ஓ….. நம்ம வீட்டுக்கா?” என்றவள் அவன் சொன்ன படியே பேசாமல் அமைதியாகி விட, அவளுக்கு சீட் பெல்டைப் போட்டுவிட்டு மறுபுறம் வந்து காரை ஸ்டார்ட் செய்யும் நேரம் அவன் போட்டிருந்த பெல்டை அவள் கழட்டவும் அதைப் பார்த்தவனோ

“இப்போ ஏன் கழட்டற?” என்று உறும

“எனக்கு சீட் பெல்ட் எல்லாம் வேணாம் மச்சான். நான் உங்க கூட பக்கத்துல நெருங்கி உட்கார்றதுக்கு அது இடைஞ்சலா இருக்கும்” என்றவள் அவள் அமர்ந்திருந்த சீட்டின் நுனியில் சற்று தள்ளி வந்து அவனை ஒட்டினாற் போல அமர்ந்து அவன் இடது கையை எடுத்துத் தன் தோளைச் சுற்றிப் போட்டுக் கொண்டு அவன் மார்பிலேயே தன் தலையை சாய்த்துக் கொள்ளவும்.

“இப்படி இருந்தா நான் எப்படி வண்டிய ஓட்டுறதாம்?” 

“நீங்க ஒரு கையால வண்டிய ஓட்டுங்க மச்சான்” என்றவளோ இன்னும் அழுத்தமாக அவன் மீது ஒட்டிக் கொண்டாள். 

அவள் பிடிவாதத்தில் சிறிதே கோபம் எட்டிப் பார்த்தாலும் அதை விடுத்து ஒரு பெருமூச்சுடன் அவள் சொன்ன படியே செய்ய நினைத்து அவன் காரை ஸ்டார்ட் செய்யும் நேரம் 

“ஆங்…. நிறுத்துங்க நிறுத்துங்க” என்று சாரா கூப்பாடு போட

“இப்போ என்ன?” என்றான் அஸ்வத் பல்லைக் கடித்துக் கொண்டு 

“அது.. நான் கேட்டதை சொன்னதை எதையுமே நீங்க செய்யலையா, அது என் மனசுக்கு ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு மச்சான். அதான் உங்களுக்கு பதில் நானே…” என்று அவள் இழுக்கவும் 

“நீயே…” என்று இவன் ஒரு மாதிரி குரலில் எடுத்துக் கொடுக்கவும்

“ஹி… ஹி… ஹி.. அதனால நான் என்ன சொல்லப் போறனா என்று அசடு வழிய ஐ லவ் யூ! ஐ லவ் யூ! ஐ லவ் யூ!” என்றவள் அவள் சொன்ன ஒவ்வொரு ஐ லவ் யூ க்கும் அவன் மார்பில் சாய்ந்து இருந்த படியே தன் இடது கையின் விரல்களை அவன் நெஞ்சில் வைத்து ஒவ்வொரு விரலாகப் பிரித்தெடுத்து தலையை ஆட்டிய படியே சொல்லி வந்தவள் கடைசியாக நான்காவது விரலைப் பிரிக்கும் போது மட்டும்

“ஐ லவ் அஸ்வத் மச்சான்” என்று அழுத்திச் சொன்னவள் ஐந்தாவது விரலைப் பிரித்து 

“je t’aime” (ஐ லவ் யூ க்கு ஃபிரென்ச் வார்த்தை) என்று சொல்ல

இன்னேரம் வேறு ஒரு ஆண்மகனாக இருந்திருந்தால் இப்படி ஒரு பெண் தன் உள்ளார்ந்த அன்புடன் தன் காதலைச் சொல்லிக் கேட்டிருந்தால் சந்தோஷத்தில் இறுக்கி அணைத்து அவளுக்கு முத்த மழை பொழிந்திருப்பான். ஆனால் இவனோ எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமல் அமர்ந்திருக்க. 

தான் அவனை அணைத்த படி இப்படி ஒரு வார்த்தையை சொன்னதில் கோபமுற்று அவன் எதுவும் பேசாததில் சற்றே தைரியம் வரப் பெற்றவள் அவன் மார்பிலிருந்து தன் முகத்தை மட்டும் நிமிர்த்தி 

“அதேபோல நீங்க உம்மா கொடுக்கலைனா என்ன? நான் கொடுக்கறேன்” என்றவள் உதட்டைக் குவித்த படி அவன் கன்னத்தைக் குறி வைக்க அதை உணர்ந்தவனோ அவள் முத்தத்தைத் தவிர்க்க நினைத்து உடலில் ஒரு நடுக்கத்துடன் பட்டென அவன் தன் முகத்தை வலது புறமாகத் திருப்பிக் கொள்ளவும் அதே நேரம் அவன் காது மடலை ஒட்டினாற் போல் 

“ப்பச்சக்” என்ற சத்தத்துடன் அவள் இதழ் அங்கு பதியவும் சரியாக இருக்க, உடல் விரைக்க முதல் முதலில் காதலோடு ஒரு பெண் தரும் முத்தத்தின் சுகத்தை அவன் கண்கள் மூடி அனுபவிக்க, அந்த நிலையில் அவனுக்கு வேர்வை கசிய அவள் இதழ் பதித்த இடத்தில் நீரின் பளபளப்பைப் பார்த்தவளோ அதை தன் எச்சில் என்று தவறாக யூகித்து

“ஐயோ! உம்மா கொடுக்கும் போது எச்சி பட்டுடிச்சா? அப்ப இருங்க துடைத்து விடுறேன்” என்றவள் அப்போது தான் தன் கைகள் எங்கே என்று தேட அவள் வலது கையோ அவனை அணைத்த படி நெருங்கி அமர்ந்ததில் அவன் முதுகுக்கும் சீட்டுக்கும் இடையில் சிக்கிக்கிக் கொண்டிருக்க, இடது கையோ அவள் ஒன்று இரண்டு ஐந்து என்று சொல்லி முடிக்கும் போதே அவன் தன் கையால் அதை சிறை பிடிக்கப் பட்டிருக்க அவைகளைப் பார்த்தவளோ 

‘இப்போது இரண்டு கையும் இல்லாமல் எப்படி துடைப்பது?’ என்று யோசித்தவள் ‘சரி கை இல்லனா என்ன? நான் எப்படியாவது துடைத்தே தீருவேன்’ என்ற முடிவுக்கு வந்தவளோ சற்றே எம்பி தன் கன்னத்தையே துணியாக்கி அவள் எச்சில் பட்ட இடத்தைத் துடைக்க 

அவள் துடைக்கிறேன் என்ற பெயரில் முகத்தை இப்படி அப்படி என்று அசைக்கவும் அவனுக்குள் நீருபூத்த நெருப்பாய் இருந்த உணர்ச்சிகளில் தன் வசம் இழந்தவனோ சட்டேன அவளை இறுக்க அணைத்து முகம் நிமிர்த்தி அவள் இதழ்களைச் சிறை செய்ய நினைத்து அவன் குனிய, 

அவன் மீசையின் நுனி கூட அவள் மேல் உதட்டின் வரி வடிவத்தை தொட்டு விட அதே நேரம் அவளோ தன் காதலனின் முதல் முத்தத்தை அனுபவிக்க நினைத்து மயக்கத்துடனே தன் கண்களை அகல விரித்து வைத்த படி அவள் அவனையே பார்த்திருக்க, 

அந்த விழி வீச்சில் தன் நிலை பெற்றவனோ ஒரு வேக மூச்சுடன் அவள் முகத்தைத் தன் மார்பில் வைத்து அழுத்தி தன் உதடுகள் இரண்டையும் அவள் உச்சந்தலையில் வைத்துப் புதைக்க முத்தம் இல்லாமல் இப்படி புதைத்ததே அவன் மனதுக்கு ஒரு வித அமைதியை தந்திருந்தது.

அவன் முத்தம் தராமல் தவிர்த்தது மட்டுமில்லாமல் மவுனமாய் அமர்ந்து இருக்கவும் 

“நீங்க இப்போ ட்ரிங்க்ஸ் சாப்பிட்டு இருக்கிறதால தானே மச்சான் உம்மா கொடுக்கல? சரி சரி.. நாளைக்கு ட்ரிங்க்ஸ் சாப்பிடாம இருக்கும் போது உம்மா கொடுங்க” என்று அவள் குழந்தையாய் சொல்ல, அதைக் கேட்டவனின் உதட்டில் அவனையும் மீறி ஒரு மென் நகை படற 

‘இவ சாப்பிட்டு என்ன சொல்றா பாரேன்’ என்று நினைத்தவன் சிறு குழந்தை என அவள் தலை முடியைக் கலைத்து விட்டவனோ என்னவென்று சொல்ல முடியாத ஒருவித மனநிலையுடன் அவளை அணைத்த படியே காரை ஓட்டி வந்து தன் வீட்டின் முன் நிறுத்தியவனோ அவளிடம் ஒரு கார்டை கொடுத்து 

“இந்த கார்டை ஸ்வைப் பண்ணி இந்த **** நாலு டிஜிட் நம்பர பிரஸ் பண்ணா டோர் ஓப்பன் ஆகும். நீ உள்ள போ நான் காரை ஷெட்ல விட்டுட்டு வரேன்” என்று அவன் சொல்ல

“சரி” என்று சொல்லி அந்த கார்டை வாங்கியவளோ அவன் சொன்ன நம்பரை மனப்பாடம் செய்து கொண்டே இறங்கினாள் சாரா. 

காரை ஒரு வட்டமடித்து பக்கவாட்டில் இருந்த ஷெட்டில் நிறுத்தி விட்டு அவன் வர, சாராவோ அவன் சொன்னதைச் செய்யாமல் வெளி வாசல் கதவருகிலேயே உட்கார்ந்த வாக்கிலே கதவில் சாய்ந்த படியே தூங்கிக் கொண்டிருக்க அதைப் பார்த்தவனோ அவளை நெருங்கி

“கார்டு எங்க சாரா? உன்னை உள்ளே தானே போகச் சொன்னேன் இங்க ஏன் தூங்கற?” என்று அவன் கேட்க

கார்ட் தன் கைப்பையில் பத்திரமாக இருப்பதாகக் காட்டியவள் 

“நாம உள்ள போக வேணாம் மச்சான். ரெண்டு பேரும் இங்க வெளியவே தூங்குவோம்” என்றவள் அவனும் உட்கார்ந்து தூங்க சற்றுத் தள்ளி அமர்ந்து இடம் கொடுக்க 

“ஆரம்பிச்சிட்டியா? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ரோட்டுல என்னமோ போருக்கு நடந்து போற மாதிரி நடந்து போன! இப்ப நீயா உள்ளே நடந்து வர்றதுக்கு என்ன?”

“நான் வர மாட்டேனு சொல்லல, வரேன். ஆனா முதல் முறையா உங்க மனைவி உங்க வீட்டுக்கு வந்து இருக்கேன். நாள் கிழமை நட்சத்திரம்னு இப்படி எதுவும் பார்க்கலைனாலும் பரவாயில்லை. இப்படி நடுராத்திரியிலா வருவாங்க? 

அதிலும் நான் இப்போ என் வலது கால வச்சி உள்ள போகணும். நீங்க வேற குடிச்சிட்டு என்ன கட்டிப் பிடிச்சதால என் மேல எல்லாம் ஒரே நாற்றம். அதனால நான் வரலை இங்கேயே படுத்துக்கிறேன். உங்களுக்கு குளிருதுனா நீங்க வேணா உள்ள போங்க” என்றவள் அந்த கார்டை அவனிடம் கொடுக்க

அவள் நீங்க தான் குடிச்சிருக்கிங்க என்று சொன்னதில் மறுபடியும் கடுப்பானவனோ 

“நீ அடங்கவே மாட்டியா டி….” என்று சொல்ல வந்தவன் அதை விழுங்கிய படி அந்த கார்டை வெடுக்கென்று பிடுங்கியவனோ எழுந்து சென்று கதவைத் திறந்து விட்டு திரும்ப அவளிடம் வந்து

“இங்க பாரு சாரா, இப்பவே குளிர்ல உனக்கு உடம்பு நடுங்குது. இன்னும் போகப் போக உன்னால தாங்க முடியாது. அதனால ஒழுங்கா என் கூட உள்ள வந்துடு” என்று அவன் பொறுமை இழந்த குரலில் சொல்ல 

அப்போதும் அவள் வரமாட்டேன் என்பது போல் மறுப்பாக தலை அசைக்கவும் 

“நீ சொன்னா கேட்க மாட்டியே” என்றவன் குனிந்து குழந்தை போல் அவளைத் தன் கைகளில் ஏந்திக் கொள்ள 

“ஏய்.. ம்கும்… ம்கும்… நான்… வரல….” என்று அவள் அவனிடமிருந்து திமிறி விடு பட நினைக்க, ஆனால் அவனோ உடும்புப் பிடியாக பிடித்திருக்கவும் சற்றே தன் திமிறலை விடுத்தவள் மூச்சு வாங்க 

“பிளீஸ் மச்சான் அட்லீஸ்ட் நீங்களாவது உங்க வலது கால எடுத்து வச்சி உள்ள போங்களேன். இப்போ நீங்க என்ன தூக்கி இருக்கறதால நாம இரண்டு பேருமே அப்படி போறதுக்கு சமம் தான் அது” என்று அவள் கெஞ்சவும்

“இந்த விஷயத்துல மட்டும் தெளிவா இரு” என்று சொல்லி தன் நெற்றியோடு அவள் நெற்றியை ஒரு முட்டு முட்டியவனோ தான் அணிந்திருந்த ஷுவை வெளி வாசலிலேயே கழட்டி விட்ட பிறகே அவள் சொன்னது போல் வலது கால் வைத்தே உள்ளே போனான் அஷ்வத்.

தன் அறையிலுள்ள படுக்கையில் அவளைத் தன் மார்புமேல் சாய்த்த படியே அமரவைத்து அவள் முடிகள் அனைத்தையும் ஒன்றாகத் திரட்டி அவள் தலையில் போட்டிருந்த கிளட்சிலே அதை அடக்கியவன் 
பின் ஜெர்கின் மற்றும் காது, கழுத்து, கை என்று அவள் அணிந்திருந்த அனைத்தையும் கழட்டிப் பிறகு படுக்கையில் அவளை சாய்த்தவன் பின் அவள் பாதத்தை எடுத்துத் தன் மடியில் வைத்து அவள் அணிந்திருந்த ஹீல் செருப்பையும் கழட்டி அவளைச் சரியான வாக்கில் படுக்க வைத்துப் போர்வையால் போர்த்தியவன் அறையின் கதகதப்பை அதிகப் படுத்திவிட்டுத் தனக்கான உடைகளை எடுத்துக் கொண்டு அவன் விருந்தினர் அறைக்குச் செல்ல எத்தனிக்க. 

அதேசமயம் படுக்கையில் நிலையில்லாமல் புரண்ட படி இருந்தவளைப் பார்த்ததும் கையிலிருந்த ஆடைகளை அங்கிருந்த சோஃபாவில் வீசிவிட்டு அவளை நெருங்கி

“என்ன சாரா உனக்கு என்னடாமா பண்ணுது?” என்று முதல் முறையாக கரிசனத்துடன் அவன் கேட்க

“எனக்கு வயிறு எல்லாம் வலிக்குது மச்சான். அப்புறம் இங்கே” என்றவள் தன் நெஞ்சின் மேல் கைவைத்து 

“இங்கு ஒரே எரிச்சலா இருக்கு” என்றவள் அதே மாதிரி தொண்டைக் குழியைக் காட்டி

“இங்கே எனக்குப் பிடிக்காதது ஏதோ இருக்கு. ஆனா அது என்னனு தான் தெரியல” என்று சொல்ல 
‘ஒருவேளை வெறும் வயிற்றோடு ட்ரிங்க்ஸ் குடிச்சதனால இப்படி இருக்குமோ?’ என்று நினைத்தவன் எழுந்து சென்று சிறிது நேரத்தில் கையில் எலுமிச்சை சாருடன் கொஞ்சம் அதிகப் படியாவே உப்பு நீர் கலந்த டம்ளருடன் வந்தவன் 

ஒரு கையால் அவளைத் தூக்கி நிறுத்தி தன்னுடன் அணைத்த படி பாத்ரூம் வாசல் வரை வந்தவன் பின் குழந்தைக்குப் புகட்டுவது போல் அந்நீரை அவளுக்குப் புகட்ட அதன் சுவை பிடிக்காமல் அவள் மறுக்க

“வயித்துல ஒன்னுமே இல்லடமா. பசியினால தான்மா வயிறு வலிக்குது. இப்போ இதை நீ குடிச்சிட்டா உனக்கு சாப்பிட ஏதாவது கொடுப்பேனாம். அதனால சமர்த்தா இத குடிச்சிடு” என்று அவன் சிறு குழந்தைக்குச் சொல்வது போல் அவளுக்கு எடுத்து சொல்ல 

சாரா எதற்கு அசைந்தாலோ இல்லையோ சாப்பாடு என்ற வார்த்தைக்கு உடனே கட்டுப் பட்டு ஒரே மூச்சாக அனைத்து நீரைக் குடிக்கவும் உடனே அவள் வயிற்றிலிருந்த அனைத்தும் வாந்தியாக வெளிவரத் துடிக்க, அவள் உமட்டும் போதே அவன் கதவைத் திறந்து வாஷ்பேஷன் அருகில் அழைத்துச் செல்வதற்குள் 

அவன் ஆடை, அவள் மேல், பாத்ரூம் தரை என்று அவள் வயிற்றிலிருந்த அனைத்தையும் வாந்தியாக எடுத்திருக்க எந்தவொரு தயக்கமோ அருவருப்பும் இல்லாமல் இதமாக அவள் தலை பிடித்துத் தாங்கியவன் பிறகு அவள் உடையையும் தன் உடையையும் நீரால் சுத்தம் செய்த பிறகே அவளைத் தூக்கி வந்து சோஃபாவில் அமரவைத்தான். 

பிறகு தன் டி ஷர்ட் ஒன்றை எடுத்து வந்து எந்தவொரு தயக்கமும் இல்லாமல் ஈரம் பட்டிருந்த அவள் மேலாடையைக் களைய முற்பட,

“வேணாம் மச்சான், நீங்க போங்க. நானே மாத்திக்கிறேன்” என்று அந்த நிலையிலும் அவள் தடுக்க

“நீ இப்ப இருக்கற நிலைமைல உன்னால முடியாது. பரவாயில்லை நானே மாத்தி விடறேன். நீ எதுவும் ஃபீல் பண்ணாத” என்று அவன் சமாதானப் படுத்திய பிறகே அனுமதித்தாள்.

பிறகு அவளை ஒரு குழந்தை என பாவித்துத் தன் ஆடையை அவளுக்கு அணிவித்து சோஃபாவிலேயே படுக்க வைத்தவன்.

பின் பாத்ருமைச் சுத்தம் செய்து தானும் குளித்து இரவு உடைக்கு மாறிய பின் ப்ரூட் மில்க் ஷேக் போட்டு எடுத்து வந்து அவளை எழுப்பித் தன் கைவளைவில் அவளை வைத்த படியே புகட்ட முதலில் கொஞ்சம் குடித்தவள் பிறகு ஞாபகம் வந்தவளாக

“அப்ப உங்களுக்கு?” என்று கேட்க 

“நான் சாப்பிட்டேன் நீ சாப்பிடு” என்று அவன் இதமாகச் சொல்ல, அவன் அப்படி சொல்லியும் தனியே குடிக்க மனம் வராமல் அந்த டம்ளரை அவன் உதட்டருகே நகர்த்திச் சென்றவள் கண்ணாலேயே அவனைக் குடிக்கச் சொல்ல எந்தவொரு மறுப்பும் இல்லாமல் ஒரு மிடறு குடித்தவன் பின் அவளுக்குக் கொடுக்க அதை முழுவதுமாக குடித்து முடித்தவள் 

“அச்சு குட்டி யு ஆர் சோ ஸ்வீட் டா செல்லம்” என்று கொஞ்சியவள் எக்கி அவன் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு அவன் மார்பிலேயே தலை சாய்த்துக் கொள்ள

சிறிது நேரம் அவனும் அவளை அணைத்தபடியே அமர்ந்திருந்தவன் பின் அவளைக் கட்டிலில் படுக்க வைத்து விட்டு விலக அவன் இரவு உடையைக் கொத்தாகப் பிடித்தவள்

“எங்க போற அச்சு?” என்று விழி திறக்காமல் கேட்க

“நீ இங்க தூங்கு நான் கெஸ்ட் ரூம் போறேன்” 

“அதெல்லாம் வேணாம் அச்சு. என்ன தனியா விட்டுப் போகாத. என் கூட இங்கேயே இரு” என்று கெஞ்சவும் 

எதுவும் சொல்லாமல் அவள் பிடித்திருந்த விரல்களை அவன் தளர்த்தவும், தன் பிடியை இன்னும் அழுத்திப் பற்றியவள்

“ப்ளீஸ் மச்சான் போகாதிங்க. என்ன வேணா உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனா உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஐ நோ யு டோன்ட் லவ் மீ. பட் ஐ லவ் யு. ஏன் மச்சான் நான் கருப்பா இருக்கேனு தான் என்னை உங்களுக்குப் பிடிக்கலையா? நான் உங்க வாழ்க்கை முறைக்கு ஒத்து வர மாட்டேனு எனக்குத் தெரியும் மச்சான். 

ஆனா என்ன பண்ண? உங்களை என்னால எந்த காரணத்துக்காவும் விட்டுக் கொடுக்க முடியாதே! நீங்க என்ன திட்டினாலும் சண்டை போட்டாலும் எனக்கு நீங்க தான் வேணும். பிகாஸ் ஐ லவ் யு” என்று மூச்சு விடாமல் இப்படி எல்லாம் பிதற்றியவள் அவனைக் கட்டிக் கொண்டே தூங்கியும் விட்டாள் சாரா.

அவளை விட்டு விலகத் தோன்றாமல் அணைத்தபடி இருந்தவனோ அவள் சொன்னதையெல்லாம் கேட்ட பிறகு 

‘இது என்ன மாதிரியான அன்பு? அன்பு பாசம் எல்லாம் தாண்டினதா இல்ல இருக்கு இவ காதல்? இது வரை வாய் வார்த்தையாக என் காதலைக் கூட நான் சொல்லலையே! பிறகு ஏன் இவ இப்படி இருக்கா?

நான் இவ கிட்ட பேசப் பழகக் காரணம் வேற ஆச்சே! அது நாளைக்கு தெரிய வரும்போது என்னை பண்ணுவா? அப்பவும் இதே காதலோட இருப்பாளா? இருக்கக் கூடாதே! நீ என்ன விட்டு விலகித் தான் இருக்கனும் சாரா. அதுக்கு நான் இப்போதிருந்தே உன்னை விட்டு விலகனும்’ என்று நினைக்கும் போதே அவனுக்கு அவனையும் மீறி கண் கலங்கி விட்டது. 

‘இதுவரை எத்தனையோ பெண்கள் காதலைச் சொல்லியிருந்தாலும் இவ காதல் உண்மையானதா இருக்கே! இவ நடிக்கிறானு கூட சொல்ல முடியாது. ஏன்னா குடிச்சா மனசுல இருக்கிற உண்மை மட்டும் தானே வெளிய வரும் பொய் வராது. 

அப்ப இது நிஜம் தான். ஆனா இதை வளர விடக் கூடாது. இது வேண்டானுதானே இத்தனை வருஷமா நான் ஓடி ஒளிஞ்சேன்? ஆனா விதி இப்படி பட்ட சூழல்ல மாட்டி விட்டுடிச்சே! இதை நான் எப்படி சமாளிக்கப் போறேனோ?!’ என்று பலவாறு யோசித்தவன் தன்னையும் மீறி அங்கேயே அவளுடனே உறங்கிப் போனான் அஸ்வத்

Categories
On-Going Novels Yuvanika

அத்தியாயம் – 8

காதல்பனி 8

“இல்ல இல்ல… வேணாம்! உண்மையாவே இப்போ இருக்கறவரு மாயாவக் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சா? அதனால அவ சம்பந்தப் பட்டது அவருக்குத் தெரியவே வேண்டாம்” என்றவள் பிறகு குரலைத் தாழ்த்திய படி கண்களில் கெஞ்சலுடன் 

“அதனால நீங்களே பாருங்க” என்று அவள் சொல்லவும் 

அந்த குரலில் திரும்பி அவள் முகம் பார்த்தவனோ அவள் விழிகளில் கெஞ்சலைப் பார்க்கவும் ஓர் பெருமூச்சுடன் காரைக் கிளப்பிச் சென்றான் கென்டிரிக். 

அவள் தங்கியிருக்கும் இடம் வந்தவுடன் காரை நிறுத்தியவன் அவள் இறங்கி விடுவாள் என்று நினைத்து அமைதி காக்க அவளோ வண்டி நின்றது கூடத் தெரியாமல் ஏதோ சிந்தனையில் அமர்ந்திருக்கவும் அவளைத் திரும்பிப் பார்த்தவனோ 

“ம்.. இறங்கு” என்று சொல்லவும் 

அங்கு திடீர் என்று அவன் குரல் ஒலித்ததில் அதிர்ந்து போய் அவன் முகம் பார்த்தவளோ அப்போது தான் தன் வீட்டு முன்னாடி வண்டி நிற்பதையே உணர்ந்தவள் 

‘நாம அட்ரெஸ் சொல்லலையே?! பிறகு எப்படி சரியா வந்து நிறுத்தினான்?’ என்று நினைத்த படியே வண்டியை விட்டு இறங்கியவள் ஏதோ அன்ன நடை என்பார்களே அது போல் அடி மேல் அடி வைத்து மெல்ல நடந்து சென்று தன்னிடமுள்ள சாவியால் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போய் திரும்ப கதவை சாத்தும் வரை கென்டிரிக் அந்த இடத்தை விட்டுப் போகவில்லை. அதன் பிறகே அவன் கிளம்பிச் செல்ல, அதைக் கதவிடம் இருந்த படி கார் சத்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தவளோ

அதுவரை கட்டுப்படுத்தி வைத்திருந்த அழுகையை இனி மேல் கட்டுப்படுத்தவே முடியாது என்பது போல் அது பீறிட, வலது கையால் தன் வாய் பொத்தி அழுதவளோ தன் அறைக்கு வந்தவுடன் மாயா அங்கே இல்லை என்பதால் தன் நெஞ்சே வெடித்து விடும் போல் அழுது கரைந்தாள் சாரா. 

“இப்படித் தான் காதலர்கள் எல்லோரும் இருப்பாங்களா?! கட்டிப் பிடித்து நெத்தியில ஒரு முத்தம் கொடுத்து ஐ லவ் யு னு சொல்லலை! இது என் நம்பர், இனி இப்படித் தனியா போய் எதுவும் செய்யாதடினு உருகல! கடைசியா இறங்கும் போது கூட நான் இருக்கேன்னு என் கைய அழுத்தி ஆறுதல் படுத்தல! 

இதெல்லாம் விட நான் இறங்கின பிறகாவது என்ன கூப்பிட்டு குட் நைட் சொல்லுவாருனு நான் எதிர் பார்த்து நடந்தா அப்படி எதையும் சொல்லாம போய்ட்டாரு…” என்று வாய் விட்டுக் கதறியவளோ கடைசியாக 

“அப்போ என் மேல உண்மையாவே காதல் இல்லையா?” என்றவள் கட்டிலில் குப்புறப் படுத்துத் தலையணையில் தன் முகம் புதைத்தவள் தன் உள்ளக் குமுறலில் வலது கையால் படுக்கையைக் குத்திக் கொண்டாள் சாரா.

அவ்வளவு சீக்கிரம் அவளால் இன்று நடந்ததை ஜீரணிக்கவே முடியவில்லை. என்ன செய்வது அந்தளவுக்கு கென்டிரிக்கை விரும்ப ஆரம்பித்திருந்தாள் அவள்!

ஒரு வழியாக அழுது ஓய்ந்தவள் நிதானமாக யோசித்ததில். அவள் மனமோ, 

‘நீ சொன்னதற்காகத் தானே அந்த வீடியோ சம்பந்தப் பட்டதை அவங்க எடுத்தாங்க? அப்போ அது காதல் இல்லையா?’ என்று எடுத்துச் சொல்லவும் 

‘ஆமாம் செய்தார் தான். ஆனாலும் நான் சொன்ன மாதிரி எல்லாம் அவர் செய்யலையே? இப்படி எல்லாம் தான சினிமாவுல காட்டறாங்க?’ என்று மறுபடியும் வாதிட்டது அவள் இன்னோர் மனது. 

அவனை உயிராக விரும்புவதால் அவன் செயல்களுக்கு ஆதரவாக ஒரு மனமோ பரிந்து பேசியது. ஆசை கொண்ட இன்னோர் மனமோ தன் ஏக்கங்களை எல்லாம் சொல்லி அவனைத் திட்டித் தீர்த்தது. 
இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் அந்த இரவு முழுக்கத் தூங்காமல் அவள் தவித்துக் கொண்டிருக்க, அங்கே அவனோ அவளிடம் திருமணத்திற்குக் கேட்டு விட்ட நிம்மதியில் இத்தனை நாள் இருந்த தவிப்புகள் விலகித் தூங்கிப் போனான் கென்டிரிக்.

அவனுக்காவது அவள் விழிகளைப் பார்த்து ஒரு மயக்கம், இப்போதோ அவள் மேல் வேட்கை. அதனால் காதலைச் சொல்லாமல் கல்யாணத்தைக் கேட்டான். 

ஆனால் அவள் எப்படி அவன் கேட்ட உடனே சம்மதித்தாள்? இது தான் கண்டதும் காதல் என்பதா?! 

மறுநாள் காலை தாமதமாக எழுந்தவள் ஷூட்டிங் போகாமல் ரூமிலேயே அடைந்திருக்க, அன்று மாலை தான் வந்தாள் மாயா. வந்தவள், வந்ததும் வராததுமாக கட்டிலில் அமர்ந்து புக் படித்துக் கொண்டிருந்த சாராவின் கழுத்தைக் கட்டிக் கொண்டவள் 

“ஹேய்… இன்னைக்கு என்ன நடந்தது தெரியுமா? நான் ஷாப்பிங் பண்ண மால் போயிருந்தப்ப, திடீர்னு ரோஹித் என் முன்னாடி வந்து நின்னான். நான் கூட பயந்துட்டேன். எங்க தனியா இருக்கறதைப் பார்த்துட்டு வம்பு பண்ணத்தான் வந்தானோனு நினைத்தேன். கடைசியில எவ்வளவு பம்மு பம்மி என்னமா தழைந்து போய் என் முன்னாடி நடுங்கிய படி 

‘மன்னிச்சிடுங்க! இனிமே நான் உங்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டேன். இன்னும் சொல்லப் போனா உங்க பக்கமே வரமாட்டேன். இந்தாங்க உங்க வீடியோ. என்கிட்ட வேற எந்த காப்பியும் இல்லனு’ சொன்னவன் 

என் முகத்தைப் கூடப் பார்க்காம என் கிட்ட ஒரு சிப்பக் கொடுத்துட்டு ஒரே ஓட்டமா ஓடிப் போய்ட்டான். அவனைப் பார்த்தா நல்லா அடி வாங்கி இருக்கான்னு தெரியுது. அவன் நடையில கூட சிறு தடுமாற்றம் தெரியுமா? 

அப்பாடா… எப்படியோ அவன் என் வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையும் இல்லாம விலகினானே, அதுவே போதும்! இதெல்லாம் என் பாய் ஃபிரெண்ட் என் மேலுள்ள லவ்ல தான் அவனை அந்த பாடுபடுத்தி இவ்வளவு தூரம் அந்த வீடியோவைக் கொடுக்க வைத்து இருக்காங்க” என்று சொல்லி சந்தோஷப் பட்டாள். 

ஆனால் சாராவுக்குத் தெரியுமே இதை கென்டிரிக் அவளுக்காகத் தான் செய்தான் என்று! அவன் செய்வான் என்று தெரியும். ஆனால் இன்றே செய்தது தான் சாராவுக்குப் பிடிபடவில்லை. இவ்வளவு நேரம் கென்டிரிக் மீதிருந்த சுணக்கங்கள் விலகி மறுபடியும் மனதுக்குள் சந்தோஷம் குடி கொள்ள ஆரம்பித்தது.

சாரா கேட்டுக் கொண்டதற்காக மாயாவின் பிரச்சினையைத் தீர்த்த கென்டிரிக், அதை அவளிடம் சொல்லுவான் என்று ஒவ்வொரு நொடியும் அவன் அழைப்புக்காக எதிர் பார்த்துக் காத்திருக்க, அவனோ அவளை அழைக்கவேயில்லை. 

‘ஏன், எல்லாத்தையும் முடிச்சிட்டேன் இனி அவனால எந்த தொந்தரவும் இருக்காதுன்னு சார் ஒரு போன் பண்ணி சொல்ல மாட்டாராம்மா?!’ என்று மனதுக்குள் பொருமியவள் பின் அவனுக்கு நேரம் இருக்காது என்று அவளே சமாதானம் ஆகிப் போனாள்.

இரவு வரை தான் அந்த சமாதானம் கூட நீடித்தது. இரவு பத்து வரை பொறுத்துப் பார்த்து கோபத்தில் அவளே அவனை அழைத்து சண்டை இட நினைத்தவள் அப்படி சண்டையிட்டால் எங்கே அவன் கோபித்துக் கொண்டு இருக்கிற சுமூகமான உறவும் கெட்டுவிடுமோ என்று யோசித்தவள் அவனுக்கு வாட்ஸப்பில் வெறும் தாங்க்ஸ் என்று இவள் மெசேஜ் மட்டும் அனுப்ப, ஆனால் அவனோ ஆன்லைனில் இல்லை. 

அவன் எப்போது ஆன்லைனுக்கு வருவான் என்று இவள் எதிர்பார்த்துக் காத்திருக்க பதின்னொன்றரை மணிக்கு வந்தவனோ அவள் மெசேஜ்ஜைப் பார்த்து விட்டு வெறுமனே கேள்விக் குறி போட்டனுப்ப, அதைப் பார்த்தவள் 

‘ஏன் சார்க்கு எதுக்குன்னு கூட கேட்க முடியாதாமா? அது என்ன கேள்விக் குறி?’ என்று கடுப்பானவள் அவனுக்குத் திரும்ப பதில் கொடுக்காமல் இருந்தாள். 

அப்படி இருப்பதை பார்த்து ‘அவனே கால் பண்ணுவான் இல்லனா அட்லீஸ்ட் மெசேஜ்லயாவது என்னன்னு கேட்பான்’ என்ற முடிவுடன் இவள் அமைதி காக்க அவனோ அரைமணிநேரம் ஆன்லைனில் இருந்து விட்டு எந்த ஒரு ரியாக்ஷனும் இல்லாமல் ஆப் லைனுக்குச் சென்று விட அதை பார்த்தவளின் மனதிற்குள் இருந்த கோபம் ஆத்திரம் எல்லாம் விலகி வெறுமை மட்டுமே வர அதனால் அவளையும் மீறி அவளுக்கு கண் கலங்கியது. 

பின் எந்த ஒரு எதிர்பார்ப்பும் வேண்டாம் என்று நினைத்தவள் உடனே ‘மாயா விஷயமா முடிச்சதுக்கு. அவன் அந்த மெம்மரி சிப்ப எடுத்துட்டு வந்து கொடுத்துட்டான். அதுக்குத் தான் தாங்க்ஸ்’ என்று அவனுக்கு மெசேஜ் அனுப்பியவள் பிறகு தூங்கி விட
மறுநாள் இரவு ஆன்லைனில் வந்தவனோ அவள் அனுப்பியதைப் பார்த்து விட்டு ம்ம்ம்… என்ற பதில் மெசேஜ்ஜை அனுப்ப அதை பார்த்தவளோ இது என்ன பதில் என்று குழம்பித் தான் போனாள். அவளால் அவனைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. 

‘அவனே தானே வந்து கல்யாணம் பண்ணிக்கிறனு கேட்டான்? பிறகு ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கிறான்?’ என்று யோசித்துத் தவித்துத் தான் போனாள் சாரா. 

இப்படியே இருவருக்குள்ளும் எந்த சம்பந்தமும் இல்லாமல் சென்று மறைய திடீரென்று ஒரு நாள் இரவு கென்டிரிக்கிடமிருந்து வாட்ஸப்பில் அவளுக்கு மெசேஜ் வந்தது. ஒருவாரம் கழித்து அவனிடமிருந்து வரும் மெசேஜ் என்பதால் இவளோ ஆசையுடனும் பரபரப்புடன் ஓபன் செய்து பார்க்க, 

‘வரும் சண்டே மாலை ஆறு மணிக்கு வெளியே போகணும். ரெடியா இரு உங்க ஊர் பொண்ணா இரு’ அவ்வளவு தான் அந்த மெசேஜ்ஜில் இருந்தது. 

அதைப் படித்தவள் ‘பெரிய ஆபிசர்! தன் கீழே வேலை செய்றவங்களுக்கு ஆர்டர் போடுறாரு!’ என்று நினைத்தவள் ‘அது என்ன எங்க ஊர் பொண்ணு மாதிரினு?’ இவள் மெசேஜ் அனுப்ப 

அதற்கு உடனே அவனிடமிருந்து வந்ததோ ஒரு பிக்சர் மெசேஜ். ‘நான் கேட்ட கேள்விக்கும் இந்த சல்வார் பிக்சருக்கும் என்ன சம்பந்தம்?’ என்று அவள் யோசித்து அந்த படத்தை மறுபடியும் பார்க்கவும் தான் தெரிந்தது, 

‘இப்படி ஒரு சல்வார் போட்டுட்டு வா என்பதைத் தான் சார் சிம்பாலிக்கா சொல்றாரு என்று. அடப் பாவி உர்ராங்குட்டான்! இதைக் கூட நேரடியா சொல்ல மாட்டியா? இப்படி நீ ஒவ்வொரு முறையும் ஸ்டிக்கரும் பிக்சரும் போட்டு அனுப்பறத நான் புரிந்து நடந்துக்கிறதுக்குள்ள என் ஆயுசு முடிஞ்சிடும் போல இருக்கே!’ என்று நினைத்தவள் பதிலுக்கு அவனுக்கு ‘சரி’ என்று பதில் மெசேஜ் அனுப்ப ஜயோ பரிதாபம் அவனோ அதற்குள் ஆப் லைன் போய் இருந்தான்.

எந்த ஒரு டென்ஷனும் இல்லாமல் அவன் சொன்ன நாளும் வர, மிதமான ஆரஞ்சு கலரில் வெள்ளை நிறக் கற்கள் பதித்து வேலைப்பாடுகள் செய்யப்பட்ட சல்வாரை அணிந்தவள் காதுக்கும் கழுத்துக்கும் அதற்கு மேட்ச்சாக அதே வெள்ளை நிறக் கற்கள் பதித்த அணிகலன்களும் வலது கை முழுக்க வெள்ளை நிற மெட்டல் வளையல்களும் போட்டுக்கொண்டாள். 

லூஸ் ஹேர் சின்ன ஸ்டிக்கர் பொட்டு அதற்கு மேல் ஒரு மெல்லிய சந்தனக் கீற்று. துப்பட்டாவைப் பின் பண்ணாமல் ஒரு பக்கத் தோளில் தவழ விட்ட படித் தன் அலங்காரத்தை முடித்தவள் கண்ணாடியில் பார்க்க, அவன் எதிர்பார்த்த படி ஒரு பக்கா தமிழ் பெண்ணாக இருப்பதில் திருப்தியுற்றவள் அவன் வரவுக்காக வெளியிலேயே வாசலில் அவள் காத்துக் கொண்டிருக்க 

அவன் சொன்ன மாதிரியே ஆறு மணிக்கு வந்து தன் காரை அவள் முன் அவன் நிறுத்த அதில் ஏறி அமர்ந்தவள், தான் இப்போது எங்கே போகப் போகிறோம் என்று அவளும் கேட்கவில்லை அவனும் சொல்லவில்லை. 

‘வாய் திறந்து தன்னை அவன் பாராட்டவில்லை என்றாலும் கண்ணாலாவது ஒரு மெச்சுதல் பார்வை பார்க்க மாட்டானா?’ என்று நினைத்து இவள் அடிக்கடி தன் விழிகளால் அவனை ஓரப் பார்வை பார்த்து வர அவனோ அவளை முழுதாகப் பார்த்தானா என்பதே சந்தேகம் தான். வழி முழுக்க எந்தவொரு பேச்சுவார்த்தையின்றிப் போனது. 

ஓர் அப்பார்ட்மெண்ட் முன்பு காரை நிறுத்தி விட்டு அவளை இறங்கச் சொல்லியவன் காரை பார்க் செய்துவிட்டு வரும் போது அவன் கையில் ஒரு கிஃப்ட் பாக்ஸ் இருக்க, அதைப் பார்த்தவள் 

‘ஓ.. ஏதோ பங்ஷன் போல! அப்பாடா… அப்ப இவர் சொல்லாமலே கொஞ்சமாவது நல்லாவே டிரஸ் பண்ணோம்!’ என்று நினைத்தவள் அவனுடன் இணைந்தே நடந்தாள். அந்த பிளாட்டில் பதிமூன்றாவது மாடியில் நடுத்தரக் குடும்பங்கள் பல இருக்க, அதில் ஒரு வீட்டின் முன் நின்று அவன் தன் காலணிகளைக் கழட்டவும் இவளும் சென்று கழட்டும் நேரம் அவளுடைய துப்பட்டா கிரில் கேட்டில் மாட்டிக்கொள்ள, அதைக் கிழியாத அளவுக்குப் பார்த்து எடுத்தவள் திரும்பிப் பக்கத்தில் அவனைப் பார்க்க, பார்த்தவள் அப்படியே விக்கித்து நின்றுவிட்டாள் சாரா. 

ஏனெனில் பக்கத்தில் நின்றிருந்த கென்டிரிக் அங்கில்லை. வாசலில் இருந்த படியே அவள் விழிகளைச் சுழற்றி அவன் எங்கே என்று அந்த வீட்டினுள் அவனைத் தேட, அவனோ ஸோஃபாவில் அமர்ந்த படி அங்கிருந்த இரண்டு பெரியவர்களிடம் பேசிக் கொண்டிருந்தான். 

‘ரொம்பவும் தெரிந்தவர்கள் போல, அதான் இவ்வளவு உரிமையா போய் பேசிட்டு இருக்கான்! சரி, இருக்கட்டும் ஆனால் என்னைப் பத்தி ஏன் அவன் யோசிக்கவே இல்ல?’ என்று வாசலில் இருந்த படியே அவள் மனதால் நொந்து கொண்டிருக்கவும் 

“வாங்க சாரா! ஏன் வெளியவே நிக்கிறிங்க?” என்று இவளைக் கேட்ட படி கையில் சில பைகளுடன் வெளியிலிருந்து இவளை நோக்கி வந்து கொண்டிருந்தான் ஸ்டீவ். அவனைப் பார்த்தவள் தன்னுடைய சீப் என்ற முறையில் அப்போதும் அவள் தயங்கி நிற்கவும், 
“என் வீடு தாங்க! அதனால தயங்காம உள்ள வாங்க. என் மூன்றாவது மகன் மேத்தியூஸ்க்கு இன்று முதல் வருட பிறந்த நாள். அதான் கென்டிரிக் உங்கள இங்க கூட்டிட்டி வந்திருக்கான். அதனால தயங்காம உள்ளே வாங்க”

என்று அவளை அழைத்தவன் வீட்டின் உள்ளே சென்று

“என்ன டா, சாரா கிட்ட எதுவும் சொல்லலையா? அப்ப கூட இருந்து கூட்டிட்டி இல்ல வந்திருக்கணும்? அவங்களை விட்டுட்டு நீ பாட்டுக்கு வேக வேகமா இங்க வந்து உட்கார்ந்துட்டியா?” என்று அங்கு அமர்ந்திருந்த கென்டிரிக்கை அவன் கடிக்கவும் 

“உன்னை கூட்டிட்டு வந்த நான் இங்க உள்ள வந்து உட்கார்ந்து இருக்கனா அப்ப நீயும் என் கூடவே வந்திருக்கணும் இல்ல? எதுக்கு இப்போ நீ இந்த சீன் போடற?” என்று கென்டிரிக் அங்கு இருப்பவர்களுக்குத் தமிழ் தெரியாது என்பதால் அவளைத் தமிழில் சாட

‘கூட்டிட்டு வந்த இவருக்கு நான் வந்தனானு பார்க்கத் தெரியாதாம், ஆனா நான் பார்க்கணுமாம்! பேசாம இப்படியே உள்ள போகாம நம்ம வீட்டுக்குப் போய்டுவோமா?’ என்று நினைத்தவள் பின் என்ன நினைத்தாளோ உள்ளே சென்று விட்டாள் சாரா.

அதற்குள் உள்ளிருந்து தன் மனைவியை அழைத்து வந்த ஸ்டீவ் 
“இவ ஜோஸ்லின், என் மனைவி! இந்த குட்டி பாய்க்கு தான் இன்று பர்த் டே” என்றவன் தன் கையிலிருந்த மேத்தியூசை அவளிடம் கொடுக்க 

குழந்தையை வாங்கியவள் ‘இவங்க எல்லார் கிட்டயும் கென்டிரிக் என்ன சொல்லி வச்சிருக்காருனு தெரியலையே?!’ என்று அவள் தயக்கத்துடனே தான் இருந்தாள். 

ஆனால் பாப் கட்டிங்கோடு ஸ்கர்ட் டாப் என்று அந்த நாட்டு பாணியிலிருந்த ஜோஸ்லின் அவளிடம் எந்த தயக்கமும் இல்லமல் பழக, பின் சாராவும் கொஞ்சம் சகஜ நிலைக்கு வந்தாள்.

அதன் பிறகு சற்று நேரத்திற்கெல்லாம் ஜோஸ்லினின் அண்ணா தங்கை தம்பி என்று அவர்கள் குடும்பமும் ஸ்டீவ்வின் நண்பர்கள் என்று ஒரு சிலரும் வந்து விட, அன்றைய பிறந்த நாள் நிகழ்ச்சி ஆரம்பமானது.

அங்கங்கே ஆண் பெண் என்று தனக்குத் தெரிந்தவர்கள் ஒருவர் மற்றொருவருடன் பேசிக் கொண்டிருக்க குழந்தைகள் ஒரு பக்கம் ஆட்டம் போட சாரா மட்டும் தனித்திருந்தாள்.

அவளை அழைத்து வந்த கென்டிரிக்கை அங்கு அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் அனைவருடனும் பட்டும் படாமலும் பேசியவன் ஸ்டீவ்வின் தாய் தந்தையருடன் மரியாதையாக நடந்து கொண்டவன் இறுதியில் அன்றைய விழாவின் நாயகனான மேத்தியூஸ்ஸிடம் மட்டும் அதிக அன்பு பாசத்துடன் இருந்தான். 

கென்டிரிக் மட்டும் இல்லை. அந்த குழந்தையும் அப்படித் தான்! அவனைப் பார்க்காத வரை சமர்த்தாக எல்லோரிடமும் சுற்றி வந்தவனோ அவனைப் பார்த்த பிறகு கென்டிரிக்கிடம் தாவியவன் பின் அவனை விட்டு இறங்கவே இல்லை. 

அவன் தலை முடியையும் மீசையையும் தன் கரத்தால் பிடித்து இழுப்பதும் தன் பால் பற்களால் அவன் மூக்கையும் கன்னத்தையும் எச்சில் பட கடிப்பதும் பேச்சு முழுமையாக வராததால் அவனிடம் ஆ… ஊ… என்று கதை பேசுவதுமாக இருந்தான் மேத்தியூஸ். 

அவன் செய்த சேட்டைகளைப் பார்த்து அவனைத் தூக்க வந்த அவன் தாயிடம் கூட போகாமல் அவனின் கழுத்தைக் கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டம் பண்ணவும் அதை பார்த்து கென்டிரிக்கே தூக்க வேண்டாம் என்று அவர்களைத் தடுத்து விட அதனால் அவனிடமிருந்து கொண்டே கேக்கை வெட்டினான் மேத்தியூஸ். 

அதற்கு ஸ்டீவ்வோ அவன் மனைவியோ எந்த ஒரு எதிர்ப்பும் முகச்சுளிப்பும் காட்டவில்லை. எங்கள் எல்லோரையும் விட கென்டிரிக்குக்குத் தான் முழு உரிமை என்பது போல் அவர்கள் ஒதுங்கியே இருந்தார்கள். 

அங்கிருந்தவர்களும் அப்படியே இருக்க அதில் குஷியான மேத்தியூஸ் இன்னும் கென்டிரிக்கிடம் சலுகையுடன் ஆர்ப்பாட்டம் பண்ண அதில் தன் நிலை மறந்து வாய் விட்டுச் சிரித்து குழந்தையுடன் ஐக்கியமானான் கென்டிரிக்.

அவன் அந்த குழந்தையிடம் பழகுவதையும் இப்படி சிரித்த முகமாக இருப்பதையும் பார்த்த சாராவுக்கோ உள்ளுக்குள் ஏதேதோ மாற்றங்கள் ஏற்படவும் எங்கே தன்னை மீறி எதையாவது வெளிப்படுத்தி விடுவோமோ என்று பயந்தவள் அந்தக் கூட்டதை விட்டு சற்று விலகி நின்று கொண்டாள் சாரா.

அவனிடம் ஏற்பட்ட மாற்றத்தை பார்த்ததா இல்லை அந்த குழந்தையிடம் மட்டும் அப்படி என்ன ஒட்டுதல் என்ற எண்ணமா, காரிலும் சரி இங்கு அழைத்து வந்ததிலிருந்து தன்னிடம் பேசாததா இல்லை இது அனைத்துமே அவளின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியதா எதுவோ ஒன்று அவளைக் குழப்ப 

அங்கு விழாவில் வைத்திருந்த டிரிங்க்ஸ்யை கூல் டிரிங்ஸ் என்று நினைத்து ஒன்றுக்கு இரண்டு கிளாஸாகக் குடித்தவள் குடித்து பழக்கம் இல்லாததால் நிதானம் இல்லாமல் தடுமாற அதை அங்கிருந்தவர்கள் யாரும் அறிவதற்கு முன்பே அவளை அறிந்து கொண்டான் கென்டிரிக்.

Categories
On-Going Novels Yuvanika

அத்தியாயம் – 7

காதல்பனி 7

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா

“அப்.. அப்போ நீங்க என்ன சீண்டிப் பார்க்கக் கேட்கலையா?!” என்று அவள் திக்கித் திணறிக் கேட்க 

“இதுவரை இந்த விஷயத்தில் நான் எந்த ஒரு பெண் கிட்டையும் விளையாடினது இல்லை சாரா. இனியும் அப்படித் தான்! அதே மாதிரி என் கல்யாணத்தைப் பத்தி நான் பேசின முதலும் கடைசியுமான பொண்ணு நீ மட்டும் தான்!” என்று அவன் சொன்ன பதிலில் மனம் குளிர்ந்தவள் 

“ஆனா நீங்க இவ்வளவு அவசரப்படுறீங்களே!” என்று அவள் இழுக்க 

“என் நிலைமை உனக்குப் புரியல சாரா. அதனால் தான் என் அவசரமும் உனக்குப் புரியல” என்று அவன் இயல்பாகச் சொல்ல. 

‘தன் மேல் எவ்வளவு காதல் இருந்தா இப்படியெல்லாம் அவசரப்படுறதும் இல்லாமல் அதை அவரே வாய் விட்டும் சொல்லுவார்?!’ என்று நினைக்கும் போதே அவள் மனதில் மத்தாப்புகள் பூக்க சந்தோஷத்தில் அவள் தன் இமைகளை மூடிக் கொண்டாள். 

இதுவரை அவள் விழிகளையே பார்த்துக் கொண்டிருந்தவனோ அவள் செயலில் கோபமுற்று “ஏய் ஏன் இப்போ கண்ண மூடற?” என்று அன்று போல் இன்றும் அவன் அதட்ட 

‘இவ்வளவு நேரம் நல்லா தான பேசிட்டு இருந்தாருன்னு’ நினைத்தவளோ அதிர்ந்து போய் அவன் முகம் பார்த்து விழிக்க 
அதில் கலைந்தவனோ இப்போது வரை தன் விரல் அவள் கன்னம் தாங்கியிருப்பதை உணர்ந்து பட்டென தன் கையை விலக்கிக் கொண்டவனோ. 

“சரி வா நேரமாகுது, இங்கிருந்து போகலாம்” என்று அழைக்க 
அவளோ கீழே இருந்தவனைத் தயக்கத்துடன் பார்க்கவும் “அவன் போதை தெளிஞ்சா தன்னால எழுந்து போய்டுவான்” என்று சொல்லிய படி 

அவன் முன்னே நடக்க அப்போதும் அவள் அங்கேயே நிற்கவும் கதவுக் குழியில் கை வைத்தவனோ அவளைத் திரும்பியும் பார்க்காமல் 

“இனிமே அவன் கிட்ட இருக்கிற வீடியோவுக்கு நான் பொறுப்பு. உனக்கு என் மேல நம்பிக்கை இருந்தா இப்போ வா. இல்லனா உன் இஷ்டம்” என்றவன் தன் வேக நடையுடன் அங்கிருந்து விலகி விட 

‘நம்பிக்கை இருந்தாவா? இவர் மேல வராம எனக்கு வேற யார் மேல வருமாம்?’ என்று நினைத்த படி ஒரு நொடி கூடத் தயங்காமல் ஓட்டமும் நடையுமாக அவனைப் பின் தொர்ந்து சென்றாள் சாரா. 

பங்ஷன் நடக்கும் இடத்திற்கு வந்தவனோ அங்கிருந்த ஒரு சில பேரிடம் பேசி விடை பெற்று இறுதியாக சாராவிடம் வந்து 

“என்ன கிளம்பலாமா?” என்று கேட்கவும் திணறித்தான் போனாள் அவள். 

‘ஏதோ கல்யாணம் வரை சொன்னான் தான். அதுக்காக இவ்வளவு பேர் முன்னாடி இப்படியா உரிமையாக வந்து நிற்பான்?!’ என்று அவள் திகைத்துப் போய் பார்க்கவும் 
தன் பாக்கெட்டிலிருந்த கர்சிப்பை எடுத்து அவள் முகத்தைத் துடைத்துச் சரி செய்வது போல்

“என்ன இவ்வளவு பேர் முன்னாடி இப்படி முழிக்கிற? ஒழுங்கா முகத்தை வைச்சிட்டு என் கூட வா” 
என்று அவன் கடித்த பற்களுக்கு இடையே உறுமவும் அவன் சொன்ன படியே கிளம்பி அவனுடன் சென்றாள் சாரா.

டிரைவர் கார் கதவைத் திறந்து விட அவனைப் போகச் சொல்லிவிட்டுத் தானே காரை ஓட்டிய படி சிறிது தூரம் வந்தவனோ ஓர் இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு

“இப்போ சொல்லு உனக்கும் அவனுக்கும் என்ன பிரச்சனை?” என்று பக்கத்தில் அமர்ந்து இருந்தவளிடம் கேட்க 

“எனக்கும் அவனுக்கும் எந்த பிரச்சனையும் இல்ல. அவன் எங்க கூட படிக்கிறான் என்றதை தவிர” என்றவள் மேற்கொண்டு சொல்ல ஆரம்பித்தாள். 

இவள் கூட படிக்கும் மாயாவும் இவளும் இந்தியாதான். இவள் தமிழ்நாடு அவள் வடநாடு. தங்கியிருப்பதும் ஒரே வீட்டில் தான். உடன் படிக்கும் ரோஹித் எனும் வடநாட்டு இளைஞனும் மாயாவும் காதலித்தனர். 

ஆனால் அவன் போதைக்கு அடிமையானதைக் கண்டுபிடித்து மாயாவிடம் சொல்லி அவனிடமிருந்து அவளை விலக்கினது சாரா தான். 

மாயாவை அடைவதற்கு முன்பே அவளைப் பிரிந்ததில் ஏமாற்றமடைந்த ரோஹித் அவளிடம் ஏதேதோ சொல்லி சமாளிக்க அது எதையும் மாயா ஏற்கவில்லை.

அதற்கு மாயா சொன்ன காரணம் ‘வேற யார் சொல்லியிருந்தாலும் நான் நம்பியிருக்க மாட்டேன். ஆனா உன்னைப் பற்றி சொன்னது சாரா என்னும்போது நிச்சயம் நான் இத நம்பறேன். இனி என் முகத்துலயே முழிக்காத’ என்று சொல்லி விலகி வந்து விட்டாள்.

அதிலிருந்து அவன் குறியும் கோபமும் சாரா என்றானது. சாராவிடம் பேசி எப்படியாவது சமாளித்துத் திரும்பவும் மாயாவிடம் உறவைப் புதுப்பிக்க நினைத்தான். ஆனால் சாராவோ அவன் தன்னிடம் பேசக் கூட இடம் கொடுக்கவில்லை.

அதில் வெறி ஏற சாராவை விடுத்து மறுபடியும் மாயாவிடம் மறைமுகமாக நெருங்கியவன் அவள் உடை மாற்றும் அறையில் அவளுக்கே தெரியாமல் வீடியோ எடுத்து அவளை மிரட்ட அதில் பயந்து அவன் சொல்வதற்கு எல்லாம் சம்மதிப்பது போல் நடித்தவள் 

அவர்கள் இருவரும் தனிமையில் சந்திக்கும் நாளை மட்டும் கூடுமானவரை தள்ளிப் போட்டுக்கொண்டே வர முதலில் அவளை நம்பியவன் இன்று நடந்த விழாவில் தான் மாயா நடிக்கிறாள் என்பதும் அப்படி செய்யச் சொன்னதே சாரா தான் என்பதையும் அறிந்து கொண்டான் ரோஹித். 

“எல்லாம் அந்த மாயாவால் வந்தது. இன்னைக்கு பார்ட்டிக்கு வரும்போதே நான் அவகிட்ட சொன்னேன் உன் புது பாய் ஃபிரண்டை கூட்டிட்டு வராதடினு! கேட்டா தான? அவன் கெஞ்சரானு வரச் சொல்லிட்டா. அதப் பார்த்த ரோஹித் சும்மா விடுவானா? 
அவகிட்ட போய் இவன் வம்பு பண்ண, ஏதோ நம்ப கேர்ள் ஃபிரண்டு கிட்ட எவனோ வம்பு பண்றான்னு நினைச்சிட்டு 

‘அவ என் மனைவியா ஆகப் போறவ. இனிமே அவகிட்ட எதாவது தொந்தரவு வச்சிகிட்டா உன்னை சும்மா விட மாட்டேனு’ அவ புது பாய் பிரண்டு ரோஹித்தை மிரட்டி அனுப்பிட்டான். 

இந்த மாயாவாது சும்மா இருந்திருக்கலாம். இவ பங்குக்கு அவனை தனியா பார்த்து 
ஆமா நான் அவரத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறன். உன்கிட்ட இப்போ நடந்து கிட்டது எல்லாம் வெறும் நடிப்பு தான். இப்படி என்ன நடிக்கச் சொன்னதே சாராதான்னு அந்த லூசு சொல்லியிருக்கு. 

எல்லாம் புது பாய் ஃபிரண்டு இருக்குற தைரியம். ரூமுக்கு தானே அந்த கழுத வரணும்? அப்ப இருக்கு அதுக்கு!” என்று அனைத்தையும் சொல்லி முடித்து விட்டு கோபத்தில் இயல்பாக மாயாவை அர்ச்சித்துக் கொண்டிருந்தாள் சாரா.

“இதுல நீ ஏன் அங்கே அவனை தேடிப் போனேனு வரலையே?” என்று இதுவரை அமைதியாக இருந்தவன் இப்போது கேட்க, அந்த குரலோ ‘இது எதுவுமே எனக்குத் தேவையில்லாதது. நீ ஏன் போன என்றதை மட்டும் சொல்லு’ என்று குறிப்பு காட்டியது. 

அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவளோ அவன் குரலைப் போலவே அவன் முகமும் எந்த உணர்ச்சியும் இல்லாமல் இருக்க, அதைப் பார்த்தவளோ

‘நாம மட்டும் ஏன் இவ்வளவு உணர்ச்சி வசப்படறோம்?’ என்று நினைத்தவள் சிறிது நேரம் தன்னைச் சமன் செய்தவள்

“மாயா கொஞ்சம் அளவுக்கு மீறி டிரிங்க்ஸ் சாப்பிட்டு நிதானம் இல்லாமல் இருப்பதால் பக்கத்து பில்டிங்ல ஒரு அறையில படுக்க வைத்து இருப்பதாகவும் நான் அங்கு அவ கூட துணைக்கு இருந்தா அவ பாய் ஃபிரண்டு போய் கார் எடுத்து வந்துவிடுவார் என்று அவர் சொல்லி அனுப்பினதா ஒரு பேரர் வந்து சொன்னான். 

நிஜமாவே மாயா அதிகம் குடிச்சிருந்தா. அதனால தான் அவளுக்கு உதவி செய்ய அங்க போனேன். ஆனா அங்கே அவ இல்லை ரோஹித் இருந்தான்”

அவனோ போதையில் மாயாவுக்கும் அவள் பாய் ஃபிரண்டுக்கும் இப்போது அவர்களுக்குள் நடந்தது எல்லாம் சொன்னவன் இறுதியாக இதற்கெல்லாம் காரணமான சாராவைப் பழிவாங்க பொய் சொல்லி இங்கு அவளை வர வைத்து டேட்டிங் கூப்பிட, அந்த நேரம் தான் கென்டிரிக் வந்தான். 

இவை அனைத்தையயும் சிறு குரலில் அவள் கூறி முடிக்கவும்.

“யார் வேணா எது வேணா சொன்னாலும் இப்படித் தான் எதைப் பற்றியும் யோசிக்காம முன்னெச்சரிக்கை எதுவும் இல்லாமல் கிளம்பிப் போய்டுவியா?” என்று அவன் சிடுசிடுக்கவும் 

“நான் ஒன்னும் உடனே கிளம்பிப் போகல. எனக்கும் ஏதோ சரியில்லாத மாதிரி தப்பா தான் பட்டுது. அதனால முதல்ல உண்மையாவே மாயா அங்கே இல்லையானு சுற்றித் தேடிப் பார்த்துட்டு அவ இல்லனு உறுதிப்படுத்திக்கிட்டேன். 

அப்பவும் உடனே போகாம என் ரூம் மேட் ஒருத்திக்குப் போன் பண்ணி இப்படி ஒரு பிரச்சினை, நானோ மாயாவோ வர லேட் ஆச்சுனா போலீஸை கூட்டிட்டு வந்து காப்பாத்தச் சொல்லலாம்னு பார்த்தா அவ போன் ரிங் போச்சே தவிர எடுக்கவே இல்ல. 

அதனால அவளுக்கும் எங்க டீம் லீடருக்கும் பட்டும் படாம நான் வர லேட் ஆனா இங்கே வரச் சொல்லி மெசேஜ் அனுப்பினேன். இதோ நீங்க வேணா பாருங்க” என்று அவள் மொபைலில் இருந்து அனுப்பிய மெசேஜ்ஜை அவனிடம் காட்டியவள் 

“நான் ஒன்னும் தத்தி இல்ல” என்று ரோஷத்தில் அவள் வாய்க்குள்ளேயே முணுமுணுத்துக் கொள்ள.

அது அவன் காதில் தெளிவாகவே விழுந்திருக்க உடனே அவள் போனை வாங்கி அதில் உள்ள மெசேஜ்ஜைப் பார்த்தவன் 

“எது நான் பத்து மணிக்குள்ள வரலனா போலீஸோட இங்க வந்து தேடவும்ணு ஏதோ இருக்கே! இதுவா? இந்த ஒரு மெசேஜ் போதுமா உன்னைக் காப்பாத்த? 

அவன் குடிச்சிட்டு இருந்ததால தப்பிச்ச! அதே மாதிரி அவன் தனியா இருந்தான். இதே ஒரு ஐந்து ஆறு பேர் இருந்திருந்தா என்ன செய்வ? 

அதுவும் இல்லாம நீ வந்த உடனே உன்னை வேற இடத்துக்குத் தூக்கிட்டுப் போயிருந்தா என்ன செய்திருப்ப? இதெல்லாம் விட நீ சொன்ன மாதிரி போலீஸ் வர்றதுக்குள்ள உனக்கு என்ன வேணும்னாலும் நடந்திருக்கலாம். 

அதுக்குப் பிறகு அவங்க வந்திருந்தா உன் நிலைமை என்னாகியிருக்கும்னு யோசிச்சியா? 

இப்படி எல்லாம் யோசிக்காம முட்டாள் மாதிரி செய்துட்டு இதுல நான் தத்தி இல்லைன்னு பெருமை வேற!” என்று அவன் கோபம் இல்லாமல் வார்த்தைகளைக் கடித்துத் துப்ப

அவன் சொன்ன அனைத்தையும் கேட்ட பிறகே தான் செய்த தவறையும் முட்டாள் தனத்தையும் உணர்ந்து தலை குனிந்தாள் சாரா.

தன் கையிலிருந்த அவள் போனில் அவன் சில நம்பர்களைத் தட்டி ரிங் கொடுக்கவும் அது அவன் போனுக்கு அழைத்தது. உடனே அதை கட் செய்தவன் 

“இது என் பெர்சனல் நம்பர். இனி எதை செய்யறதா இருந்தாலும் எங்கே போறதா இருந்தாலும் என்கிட்ட சொல்லு. மெசேஜ் பண்ணாத கால் பண்ணு நான் அட்டன் செய்யற வரை” என்றவன் போனை அவளிடம் கொடுத்து விட்டு காரை ஸ்டார்ட் செய்தவன் 

“வீடியோ உன் சம்பந்தப் பட்டதுன்னு தான் நான் பொறுப்பு ஏத்துக்கறனு சொன்னேன். அது மாயா சம்பந்தப் பட்டதுனா அப்போ அவ பாய் ஃபிரெண்டே பார்த்துப்பான் இல்ல? நான் ஒதுங்கிக்கவா?” என்று அவன் கேட்க அவன் குரலே இதில் துளியும் எனக்கு விருப்பமில்லை என்பதை தெளிவாகவே அவளுக்கு வெளிப்படுத்தியது. 

அதைக் கேட்டுப் பதறியவள்