Categories
On-Going Novels ஷெண்பா

அத்தியாயம் – 16

அத்தியாயம் – 16

இருவரையும் மாறி மாறிப் பார்த்தான் சந்தீப்.

சுமித்ரா, சற்று அவஸ்தையுடன் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

விஜய்மித்ரனோ, இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கால் மேல் காலைப் போட்டுக்கொண்டு தலையை ஒரு பக்கமாகச் சாய்த்தபடி நிதானமாக அவனைப் பார்த்தான்.

“சார் யாரு? உன் ஃப்ரெண்டா?” என இயல்பாகக் கேட்டான் மித்ரன்.
அவள் சற்று திணறலுடன், “கி.ஷோரோட ஃப்ரெண்ட்” என்றாள்.

“ஓஹ்! ஹாய்! ஐயம் விஜய்மித்ரன்” என்றபடி கையை நீட்டினான்.

சந்தீப்பும் இருவரையும் கூர்ந்து பார்த்தபடி, “ஹாய்!” என்றான்.

‘கடவுளே! இவன் வந்திருக்கும் போதுதானா, விஜய் வரவேண்டும். இவன் கிஷோரிடம் என்னென்ன சொல்லிவைக்கப் போகிறானோ’ என்ற தவிப்புடன் திருதிருவென விழித்தபடி அமர்ந்திருந்தாள் சுமி.
“ஓகே சுமி! நான் கிளம்பறேன்” என்ற சந்தீப் அங்கிருந்து சென்றான்.

அவன் கண்ணிலிருந்து மறையும் வரை அமைதியாக இருந்த சுமித்ரா, விஜய்யின் முகத்தைப் பார்த்தாள்.

“எதுக்கு இப்போ இப்படிப் பார்க்கற?” என்றான்.

“நான் பேசினப்போ தெரியாத மாதிரி போனீங்க. இப்போ எதுக்கு வந்தீங்க?” என்றாள் கோபத்துடன்.

“திரும்ப அவனைக் கூப்பிட்டு, உட்கார வச்சிட்டுப் போகட்டுமா? அப்போ முழிச்சிட்டு உட்கார்ந்திருந்தது மாதிரியே இருக்கறியா?” என்று கிண்டலாகக் கேட்டான்.

“நீங்க சமயசந்தர்ப்பம் தெரியாம, ரொம்ப உரிமையா என்னைக் கூட்டிட்டுப் போறா மாதிரி வேற பேசறீங்க. அவன் கிஷோர்கிட்ட என்னென்ன சொல்லப் போறானோ” என்றாள் எரிச்சலுடன்.

“ஏன்? உன்மேல கிஷோருக்கு அவ்வளவு நம்பிக்கையா!” என்றவனை இமைகள் விரிய பார்த்தாள்.
அவனது வார்த்தைகள் நெஞ்சில் ஊசியாகக் குத்தியது.

‘அவன் சொல்வது உண்மைதானே. மடியில் கனமிருந்தால் தானே பயப்பட வேண்டும். ஆனால், இதை மறுக்கவும் முடியாதே. சந்தீப் ஏதேனும் சொன்னால், அதை நம்புவதோடு தனக்குத் தோன்றும் கற்பனைகளையும் சேர்த்தே அல்லவா குழப்பிக் கொள்வான். அதோடு விடுவானா?’ என அவளது எண்ணவோட்டம் எங்கெங்கோ சென்றது.

அவளது முகத்திற்கு நேராக சொடக்கிட்டு அழைத்தவன், “கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாம, நடக்கப் போறதைக் கற்பனை பண்ணிட்டிருக்கியா?” எனக் கேட்டான்.

“கிஷோர் மேல, உங்களுக்கு எதுக்கு இவ்வளவு காட்டம்?” என்றாள்.

“என்னது? உனக்கே இது காமெடியா தெரியல…” என்று சிரித்தான் விஜய்.

கீழுதட்டைக் கடித்தபடி அவனை ஓரவிழியால் பார்த்தாள் சுமித்ரா.

“அவன் மேலே காட்டமாக எனக்கு என்ன விஷயமிருக்கு? இல்ல, என்னிடம் இல்லாதது அவனிடம் என்ன இருக்கு? அவனுக்கு வேணா என்மேல காட்டம், பொறாமை எக்ஸட்ரா எக்ஸட்ரா எல்லாம் இருக்கலாம்” என்றான்.

அப்போதைக்கு மித்ரனின் மீதிருந்த கோபத்தில் அவனைக் காயப்படுத்த வேண்டும் என்ற வேகம் அவளுக்குள் எழுந்தது.

“நீங்க என்ன ஸ்பெஷல்? உங்கமேல எதுக்குக் கிஷோருக்குக் கோபம் வரணும்?” என்றாள்.

“சாம்பிளுக்கு ஒண்ணே ஒண்ணு சொல்லவா…” என்றபடி அவளது விழிகளை ஆழ்ந்து பார்த்தான்.

அவனது நேருக்கு நேரான பார்வையில் ஆழ்ந்ததைப் போல, மௌனமாக இருந்தாள்.
“இந்தச் சூழ்நிலையையே எடுத்துக்க. நாம ரெண்டு பேரும் பேசிட்டிருக்கறதை, கிஷோர் பார்த்தா…” என்று வேகமாக ஆரம்பித்தவன் முடிக்கும்போது மெல்லிய குரலில் முடித்தான்.

அவனது பதிலில், சட்டென நிமிர்ந்து அமர்ந்தாள் சுமித்ரா.

“உண்மை சுடுதா மித்ரா!” என்று கடினமான குரலில் கேட்டான்.

“அன்னைக்குக் கிஷோர் தப்பா நடந்துகிட்டார்ங்கறதுக்காக இனியும், அவர் அப்படியே தப்பா நினைப்பாருன்னு சொல்ல முடியுமா?” என்று வேகமாகக் கேட்டாள்.

அவன் வினோதமாகப் பார்த்தான்.

கண்களைச் சுருக்கியபடி, “ஆர் யூ கிரேஸி!” என்றான்.

“விஜய்!” என்றாள் அதட்டலாக.

“கூல் டவுன் மித்ரா! உன்னோட கோபத்தைக் காட்ட வேண்டிய இடத்தில் காட்டு. என்கிட்ட வேணாம். ஒரு சின்னக் குழந்தைக்கூட தன்னை யாராவது ரொம்ப சீண்டினா திருப்பி அடிக்கும். உனக்கு அதைப் பத்தி யோசிக்கக்கூட மூளை வேலை செய்யமாட்டேன்னுது” என்றான் காட்டமாக.

“விஜய்! நீங்க ஓவர் அட்வாண்டேஜ் எடுத்துக்கறீங்க” என்றாள்.

அவளை ஆழ்ந்து பார்த்தவன், “ஏன் மித்ரா? உன்மேல ஒரு ஃப்ரெண்டா எனக்கு அக்கறை இருக்கக்கூடாதா?” எனக் கேட்டான்.
“ஃப்ரெண்டோட அக்கறைக்கும் ஒரு அளவு இருக்கு. அது என்னோட வாழ்க்கையைத் தீர்மானிக்கிற அளவுக்கு இருக்கக்கூடாது. அதுக்குப் பேரு அக்கறை இல்ல உரிமை. அந்த உரிமையை நான் யாருக்கும் கொடுக்கல” என்றாள்.

அதுவரை அமைதியாகப் பேசிக்கொண்டிருந்த மித்ரன் சட்டென எழுந்து அவளது கரத்தைப் பற்றி, தரதரவென தன்னுடன் இழுத்துச் சென்றான்.

“விஜய்! கையை விடுங்க. நானே வரேன்” என்று அவள் பேசியதை அவன் காதிலேயே வாங்கவில்லை.

திருமண வரவேற்பு நடந்த இடத்திற்குப் பின்னாலிருந்த வராண்டாவில் ஆள் அரவமே இல்லை. அங்கே அழைத்துச் சென்றவன், அவளது கரத்தை விடுவித்தான்.
“இப்போ சொல்லு. இங்கே யாரும் வரமாட்டாங்க. உன்னோட கோபத்தை நீ முழுசா காட்டலாம்” என்றான்.

“என்னை என்ன பேசச்சொல்றீங்க விஜய்! நான் என்னோட முடிவை எங்க அப்பாகிட்ட சொல்லிட்டேன். கல்யாணம் இன்னும் ரெண்டு மாசத்துல. என்னோட லைஃபை பத்தி நீங்க கவலைப்படாதீங்க. கிஷோரை நான் எப்படியாவது மாத்திடுவேன்.

கிஷோர் நல்லவர்தான். என்ன சின்ன வயசுலயிருந்து பணத்துலயே வளர்ந்துட்டார். வீட்ல செல்லம். கொஞ்சம் பிடிவாதம். மத்தபடி என்மேல ரொம்பப் பிரியம். நிச்சயமா நான் சொன்னதைக் கேட்டுக்குவார். எப்படியும் கல்யாணமானா சரியாகிடும்” என்றவளை ஆயாசத்துடன் பார்த்தான்.

“உனக்கு மனசுல அன்னை தெரெசான்னு நினைப்பா?” எனக் கேட்டான்.

அவனது பேச்சு அவளுக்குச் சலிப்பைக் கொடுத்தது.

“ப்ளீஸ் விஜய்! நீங்க திரும்பத் திரும்ப ஆரம்பிச்ச இடத்துக்கே வரீங்க. அதை விட்டுடுங்க. ஐ கேன் மேனேஜ். இது என்னோட வாழ்க்கை அதைப் பாழாக்கிக்கமாட்டேன்” என்றவள், அவனது கரத்தைப் பிடித்துக்கொண்டாள்.

புன்னகையுடன் கையை விடுவித்துக்கொண்டவன், மெல்ல அவளது இரு தோள்களையும் பற்றினான்.

“திரும்பத் திரும்பப் பேச எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. அன்னைக்கு உன்னை அந்த இராத்திரி நேரத்துல தனியா விட்டுட்டிருந்தானே, அவனை நம்பித்தான் உன்னோட வாழ்க்கையைக் கொடுக்கப் போறியா? அவனுக்கு என்னவேணா கோபமிருக்கட்டும்… அதுக்காக இப்படி ஒரு வேலை செய்வானா?

அழுத முகமும், சோர்ந்து போன கண்ணுமா உன்னைப் பார்த்தப்போ எனக்கு எப்படியிருந்தது தெரியுமா? அதுக்கு ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு முன்னால தான், உன்னைப் பார்த்துப் பேசிட்டு போனேன். சப்போஸ், அந்தநேரத்தில் நான் அங்கே வராமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?” நிதானமாக அவன் ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டிருக்க, சுமித்ரா அழுத்தமாக நின்றிருந்தாள்.

“நீ சொன்னது மாதிரி உன்னோட விஷயத்துல நான் தலையிடக்கூடாது. ஆனா, மனசு கேட்கலையே. எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த வாத்தியார்… எனக்கு தெய்வம் மாதிரி. சொல்லப்போனா, எனக்கு அவர் ரோல்மாடல். அவரோட மகள் நல்லாயிருக்கணும்னு நான் நினைக்கக்கூடாதா?

எல்லாத்தையும் குதர்க்கமா பார்க்கணும்னா, தாராளமா பார்க்கலாம். ஆனா, உண்மைன்னு ஒண்ணு இருக்கே! அதை யாராலயும் மாத்த முடியாதே. சட்டத்துக்கு வேணா, சாட்சி தேவையா இருக்கலாம். நமக்கு நம்ம மனசாட்சிதான் சாட்சி” என்றான்.

இருவரும் நேருக்கு நேராகப் பார்த்தனர்.

”உன்மேல உரிமையை எதிர்பார்க்கல மித்ரா! அப்படி எதிர்பார்த்தா நான் சுயநலவாதி. எனக்கு, உன்னோட ஃப்ரெண்ட்ஷிப் மட்டும் போதும். உனக்கு நினைவு தெரிஞ்ச நாளா, என்னைத் தெரியும். ஒருநாளாவது நான் உன்னுடைய சூழ்நிலையை எனக்குச் சாதகமா பயன்படுத்திகிட்டு இருந்திருப்பேனா?

ஃப்ரெண்ட்ஷிப்ல என்னைக்குமே கள்ளம் இருக்கக்கூடாது மித்ரா! நானும் ஒரு தங்கையோடு பிறந்து வளர்ந்தவன். அதனால, உன்னோட சூழ்நிலையைப் புரிஞ்சிக்க முடியும். இதுக்குத் தனியா அக்கறையோ, இல்ல வேற எந்த உரிமையையும் எதிர்பார்த்தோ இதைச் செய்யல.

நெருப்பு சுடும்னு சொல்லத்தான் முடியும். கையைக் கொண்டு போய் நெருப்புல வச்சி இப்படித்தான் வலிக்கும்னு சொல்லமுடியுமா! இல்ல, அந்தக் காயம்தான் ஆறுமா?” பேசிக்கொண்டே அவளது தோளில் கையைப் போட்டபடி வராண்டாவின் மற்றொரு பக்கத்திற்கு அவளை அழைத்து வந்திருந்தான்.

சுவற்றில் ஒரு காலை ஊன்றி நின்றவன், அவளது இருகரங்களையும் தனது கைகளில் ஏந்திக்கொண்டான்.

“நான் உன்னோட வெல்விஷர்னு நம்பற தானே…” என்றான்.

“அதுல உங்களுக்குச் சந்தேகமே வேணாம். ஆனா…” என்றவளது வாயைப் பொத்தினான்.

“கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு” என்றான்.

“ம்” எனத் தலையை ஆட்டினாள்.

“நான் உன் கையைப் பிடிச்சிட்டிருக்கேன். ஓகே…”
“ம்ம்” என்று தலையை ஆட்டினாள்.
“நான் உன்னை அங்கேயிருந்து உன் கையைப் பிடிச்சிக் கூட்டிட்டு வந்திருக்கேன். இந்த வராண்டாவில் உன் தோள்மேல கையைப் போட்டு பேசிட்டிருந்தேன். இதுல என்மேல உனக்குக் கொஞ்சங்கூட கோபமோ… அருவருப்போ வரலையில்ல…” என்றான்.

“என்ன விஜய்? இப்படிக் கேட்கறீங்க! நான் உங்களைத் தப்பா நினைக்கல…” என்றாள்.

“அதேமாதிரி என்னை விலக்கி விட்டுட்டுப் போகவும் இல்ல” என்றான்.

“ம்ம்” என்றாள்.

“அப்போ நிச்சயமா நம்ம ரெண்டு பேரோட மனசுக்குள்ளேயும் எதுவுமே இல்லன்னு நம்பறதானே…”

“உங்களை எனக்குப் ப்ரூவ் பண்றீங்களா விஜய்!” எனக் கேட்டாள்.
“நீதான் அப்படி ஒரு கேள்வி கேட்டுட்டியே…” எனச் சிரித்தான்.

“என்மேல உங்களுக்குக் கோபம் இருந்தது இல்ல” என்றாள்.

“இல்லயே…” என்றவனை கண்கள் இடுங்கப் பார்த்தாள்.

“பொய்…” என்று புன்னகைத்தாள்.

“கோபம் இருந்ததுங்கறது இல்ல. இன்னமும் இருக்குங்கறது தான் உண்மை” என்று சொல்லிவிட்டுச் சிரித்தவனை, ஆயாசத்துடன் பார்த்தாள்.

“இதுக்கு மேல எதுவும் சொல்றதுக்கில்ல விஜய்” என்றவளை ஆழ்ந்து பார்த்தான்.
“ஓகே விஜய்! நான் கிளம்பறேன். ஃப்ரெண்ட்ஸ் என்னைத் தேடுவாங்க” என்றாள்.

“சரி” என்றவன், அவளது கரத்தை விடுவித்தான்.

“பை” என்றவள் மெல்ல நடந்துகொண்டே, அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

அவனும் கைகளை பாக்கெட்டில் விட்டபடி, அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் மேலும் இரண்டடி சென்றதும், “மித்ரா!” என்றழைத்தான்.
அவள் நின்று திரும்பிப் பார்க்க, நிதானமான நடையுடன் அவளை நெருங்கியவன், “கிஷோரை லவ் பண்றியா மித்ரா!” எனக் கேட்டான்.

அவன் கேட்கக்கூடாத கேள்வியை கேட்டுவிட்டதைப் போல, “சேச்சே…” என்று வேகமாகச் சொன்னவளை வியப்புடன் பார்த்தவன், வாய்விட்டு நகைக்க ஆரம்பித்தான்.

“மித்ரா! அவனை லவ் பண்றியான்னு கேட்டா… இப்படி ஒரு வெறுப்போட சேச்சேன்னு சொல்ற. அவனை எப்படிக் கல்யாணம் செய்துகிட்டு குடும்பம் நடத்தப்போற?” என்றவனை திகைப்புடன் பார்த்தாள்.

‘அவன் கேட்ட கேள்வி எனக்குப் புரிந்துதானே பதில் சொன்னேன். பின் எதற்காக அப்படியொரு பதிலைச் சொன்னேன்’ என்ற குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள்.

“அப்பாவுக்காக, காம்ப்ரமைஸ் பண்ணிக்கிறேன். கல்யாணத்துக்குப் பின்னால சரி பண்ணிக்கிறேன்னு நீ சொல்றதெல்லாம் வெறும் வாய்வார்த்தை. இப்போ ஒரு ரியாக்‌ஷன் கொடுத்த பாரு இதான் நிஜம். சினிமால வர்றா மாதிரி தாலி கட்டினதும் முடிஞ்சிபோறதில்ல கல்யாணம். வாழ்க்கையோட துவக்கம் தான் கல்யாணம்” என்றவனை தயக்கமும், அவஸ்தையுமாகப் பார்த்தாள்.

“விஜய்! என்னைக் குழப்பறீங்க…” என்றாள் பரிதாபமாக.

“குழம்பிட்டியா! அப்போ நிச்சயமா தெளிஞ்சிடுவ. நிதர்சனத்தைப் புரிஞ்சிக்க. சரி சரின்னு ஒரு வேலையை எடுத்துகிட்டு, அதுல போய் மாட்டினதுக்குப் பின்னால வாழ்க்கை போச்சேன்னு புலம்பறதுல அர்த்தமே இல்ல. சீக்கிரமே, நல்ல முடிவு எடுப்பன்னு நினைக்கிறேன்.

அப்படி நீ நல்ல முடிவை எடுத்தா, ஒரு பொண்ணோட லைஃபை சேவ் பண்ண சந்தோஷம் எனக்குக் கிடைக்கும். என்னோட உள்ளுணர்வு இதுவரை தப்பு பண்ணதில்ல. உன் விஷயத்திலேயும், அப்படியே நடக்கும்னு நம்பறேன்” என்றவன், “பத்திரமா போய்ட்டு வா. சாரை விசாரிச்சேன்னு சொல்லு” என்றபடி விடைபெற்றுக் கிளம்பினான்.

அங்கு வரும்வரை எந்தவொரு குழப்பமும் இல்லாமல் தெளிவாக இருந்தவளது மனம் இப்போது, சுழன்றடிக்கும் சூறாவளியின் வேகத்துடன் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

Categories
On-Going Novels ஷெண்பா

அத்தியாயம் – 15

அத்தியாயம் – 15

உடன் வந்த நண்பன் ஏதோ சொல்ல சிரித்துக்கொண்டே அவனது தோளில் தட்டிச் சிரித்த விஜய்மித்ரனை, இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் சுமித்ரா.

தோழிகளின் சிரிப்பொலியில் சட்டென தன்னை மீட்டுக்கொண்டாள்.

தாங்கள் இங்கே சிரித்துக்கொண்டிருக்க, அவள் அமைதியாக இருப்பதைக் கண்ட வன்யா, பட்டென அவளது கையில் தட்டினாள்.

“ஹேய் சுமித்ரா! நாங்க இங்கே பேசிட்டிருக்கோம். நீ யாரோட நினைப்புல இருக்க?” என்று கிண்டலாகக் கேட்டாள்.

“ம்க்கும்” என்று நொடித்துக் கொண்ட சங்கீதா, “பேரைச் சொன்னாத்தான் தெரியுமா உனக்கு!” என்று வன்யாவின் காலை வாருவதைப் போலச் சொன்னாலும், அது தனக்காகச் சொன்னது என்று சுமிக்குப் புரிந்தது.

கூந்தலை ஒதுக்கியபடி திரும்பியவள், “ம்ச்சு! கொஞ்ச நேரம் சும்மா இரேன் சங்கீ…” என்றவளது பார்வை, அங்கிருந்த கூட்டத்தினரை ஆராய்ந்தது.

ஆனால், அவள் யாரைத் தேடினாளோ… அவன் மட்டும், அவளது கண்களில் அகப்படவேயில்லை.

திடீரென, “ஹாய்!” என்றபடி எழுந்த நீத்து, “இருங்கடி, அண்ணாவோட ஃப்ரெண்ட்ஸ்” என்றபடி சுமித்ராவிற்குச் சற்று பின்னால் நின்றிருந்தவர்களை நோக்கி ஓடினாள்.
“ஹும்! நாம எத்தனை நாளு, இந்த நீத்து வீட்டுக்குப் போயிருக்கோம். இவனுங்கள்ல ஒருத்தன்கூட நம்ம கண்ணிலே படாவேயில்லையே” என்று பெருமூச்சுவிட்டாள் சங்கீதா.

“எல்லாத்துக்கு ஒரு கொடுப்பினை வேணும்டி” சொல்லிக்கொண்டே திரும்பிய வன்யா, “சங்கீ! ரொம்ப வழியாதே, உன் வீட்டுக்காரரும், என் வீட்டுக்காரரும் நம்மளதான் பார்த்துட்டிருக்காங்க” என்று சிரித்துக்கொண்டே பற்களைக் கடித்தபடி பேசினாள்.

“ஹும்! சுமி உனக்கும் இன்னும் ரெண்டு மாசம்தான் டைம். அதுக்குள்ள வாழ்க்கையை அனுபவிச்சிக்க” என்றாள் சங்கீதா.

“ரெண்டு பேரும் வாயை மூடுங்கடி. யார் காதிலேயாவது விழுந்தா அசிங்கம்” என்று மெல்லிய குரலில் அதட்டினாள் சுமி.

“அடுத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு பார்த்தா, நாம எப்படி லைஃபை என்ஜாய் பண்றது?” என்று கண்களைச் சிமிட்டிச் சொன்ன சங்கீதாவை, சங்கடத்துடன் பார்த்தாள்.

‘இவர்களுக்கு எதையும் சொல்லிப் புரியவைக்க முடியாது’ என்று நினைத்துக் கொண்டவள், மணமக்களைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

“சரிடி! நாமளும் கிஃப்டைக் கொடுத்துட்டு சாப்டுட்டு கிளம்புவோம்…” என்றாள் வன்யா.

இருவரும் அவர்களது கணவர்களுக்கு ஜாடைக் காட்ட, அவர்களிருவரும் எழுந்து வந்தனர்.

அதற்குள் நீத்துவும் வந்துவிட, “கிஃப்டைக் கொடுத்துட்டு வந்திடலாம் நீத்து” என்றாள் சுமி.

“ம், ஓகே… வாங்க” என அழைத்தாள் நீத்து.

“ஆனாலும், உனக்கு ரொம்பக் கல்நெஞ்சம்டி… அந்த ஹேண்ட்சம் பாய்ஸை எங்களுக்கு இண்ட்ரடியூஸ் பண்ணியிருக்கலாமில்ல” என்று நீத்துவின் காதைக் கடித்தாள் வன்யா.

“ஹலோ! அதுல ரெண்டு பேர் தான் பேச்சுலர். அதிலேயும் ஒருத்தர் ஆல்ரெடி என்கேஜ்ட். இப்போதைக்கு இருக்கறது மித்ரன் அண்ணா மட்டும்தான்” என்று பதிலளித்தாள் நீத்து.

விஜய் மித்ரனின் பெயரைக் கேட்டதுமே தன்னையறியாமல் பின்னால் திரும்பிப் பார்த்தாள் சுமித்ரா.
அவனோ, அவளிருந்த பக்கமாகப் பார்வையைத் திருப்பாமல், நண்பர்களுடன் மும்முரமாக பேசிக்கொண்டிருந்தான்.

‘இவன் இன்னும் என்னைப் பார்க்கவில்லை போலவே. இல்லையென்றால் நிச்சயமாக வந்து பேசியிருப்பான்’ என்று நினைத்தவளைப் பார்த்து அவளது மனசாட்சியே சிரித்தது.

‘நீ செய்த காரியத்தால் அவன் உன் சங்காத்தமே வேண்டாம் என்ற எண்ணத்தில் தானே, அன்று வெறும் குட் நைட்டுடன் போனை அணைத்தான். இருந்தும், எப்படி அவன் உன்னிடம் பேசுவான் என எண்ணுகிறாய்?’ என்று கேள்வி கேட்டது.

‘தானே சென்று பேசலாமா!’ என்று நினைத்தவள், ‘வேணாம். இந்த சங்கீதாவும், வன்யாவும் என்னைக் கிண்டலான பார்வையாலும், பேச்சாலுமே கூறுபோட்டுவிடுவர்’ என்றெண்ணிக்கொண்டாள்.

அவள் அங்கிருந்து செல்வதைப் பார்த்துக் கொண்டே, கையிலிருந்த குளிர்பானத்தை பருகிக் கொண்டிருந்தான் விஜய்மித்ரன்.

நண்பர்களுடன் பேசிக்கொண்டே வந்தவன் முன்னால் கூட்டமாக இருந்ததால், அவர்களுடன் பேசிக்கொண்டே சுமித்ரா அமர்ந்திருந்த இடத்திற்கு நேர்பின்னால் வந்து நின்றனர்.

நீத்துவும், சுமித்ராவும் அவனுக்கு முகம் தெரியாதபடி இருந்ததால், அவன் அவளைக் கவனிக்கவில்லை.

வெயிட்டர் கொண்டுவந்து கொடுத்த குளிர்பானத்தை எடுத்தபோது, “ஹேய் சுமித்ரா” என்று அவளது தோழி அழைத்தபோதுதான், சட்டென திரும்பிப் பார்த்தான்.

விரிந்திருந்த கூந்தலை ஒதுக்கியவளது கரத்தை அலங்கரித்துக் கொண்டிருந்த பிரேஸ்லெட், ‘அது அவளேதான்’ என்று அவனுக்குச் சொல்லாமல் சொல்லிவிட, மனம் கனிந்து போனது அவனுக்கு.

தான் கல்லூரி படிப்பை முடித்துவிட்டுச் செல்லும் முன்பாக கங்காதரனுக்கு ஒரு விலை உயர்ந்த பேனாவையும், சுமித்ராவிற்கு வெள்ளைக் கற்கள் பதித்த வொயிட் மெட்டல் பிரேஸ்லெட்டையும் வாங்கிப் பரிசளித்தான்.

சுண்டுவிரல் அளவு கனத்துடன் அழகிய உருளை வடிவமைப்பில் இருக்கும் அந்தப் பிரேஸ்லெட்டில், அவளுக்குப் பிரியமான பிள்ளயார் சிலை ஒன்றும், ‘மித்ரா’ என்ற வார்த்தையைக் குறிப்பதாக ‘எம்’ என்ற எழுத்தும் சிறு சங்கிலியில் கோர்க்கப்பட்டிருக்கும்.
அப்போது கழன்று வந்துவிடும் அளவில் இருந்தது, இப்போது அவளது கைக்கு எடுப்பாகச் சரியாக இருந்தது.

‘இன்னமுமா, இதைப் பத்திரமாக வைத்திருக்கிறாள்’ என்று நினைத்தவனது உதடுகளில் மெல்லிய முறுவல் பூத்தது.

அவளிடம் சென்று பேசலாம் என்று தோன்றிய சிந்தனையை, அதேவேகத்தில் துடைத்தெறிந்தான்.

அவளது பிடிவாதத்தை நினைத்ததும், ‘சென்ட்டிமெண்ட் ஃபூல்’ என்று மனத்திற்குள்ளேயே முனகியவனது முகம் மீண்டும் இளக்கத்தை விடுவித்து, கன்றியது.

அதற்குள் நண்பர்களது பேச்சொலி அவனது எண்ணங்களைக் கலைத்து நிகழ்வுக்குக் கொண்டு வந்தது.
மணமக்களுக்குப் பரிசுப் பொருளைக் கொடுத்துவிட்டு, பஃபேயில் ஆளுக்கொரு தட்டுடன் நின்றுகொண்டிருந்தனர். தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தாலும், சுமித்ராவின் நினைவு முழுவதும் விஜய்மித்ரனையே சுற்றி வந்தது.

‘நிச்சயமாக தன் மீது கோபத்திலிருப்பான். அவனை எப்படியாவது சமாதானப்படுத்தவேண்டும்’ என்ற உந்துதல் நேரமாக ஆக அதிகரித்தது அவளுக்கு.

”சுமி! உன்னோட ஃபேவரிட் கரேலா சப்ஜி அங்கே இருக்கு பார்க்கலையா…” என்றாள் வன்யா.

“இல்லையே…” என்றாள்.

“போ போ அங்கே கூட்டம் இல்ல. போய்ச் சீக்கிரம் வாங்கிட்டு வா” என்று தோழியை அனுப்பி வைத்தாள் வன்யா.

வெங்காயமும், அம்ச்சூர் வாசனையுமாக இருந்த பாகற்காய் வறுவலை சிறிதளவு எடுத்துக் கொண்டு திரும்பியவள், தன்னைக் கடந்து செல்ல முயன்றவனின் மீது முட்டிக்கொண்டாள்.

“சாரி சாரி” என்று வேகமாகச் சொன்னவள், அசையாமல் நின்றிருந்தவனை நிமிர்ந்து பார்த்தாள்.

குறுஞ்சிரிப்புடன் விழிகள் மின்ன, “விஜய்!” என்றவள் பளீரென்ற புன்னகையுடன், “எப்படியிருக்கீங்க?” என்றாள்.

“ம்ம்” என்று தலையை அசைத்தவன், அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

சுமித்ராவிற்கு யாரோ கன்னத்தில் அறைந்ததைப் போல முகம் சுருங்கிப் போனது.

‘அப்படி என்ன செய்துவிட்டேன்? இப்படி முகத்தைத் திருப்பிச் செல்ல’ என்று முரண்டிய மனத்தால், விழிகள் சட்டென கலங்கிவிட்டன.

கண்களை அழுந்த மூடித்திறந்தவள், முகத்தைத் துடைப்பதைப் போல, கண்களை நாசூக்காக ஒற்றிக்கொண்டு சென்றாள்.

“ஹேய் சுமி! என்னப்பா டல்லா இருக்க? பாகற்காய் கசக்குதா?” எனக் கேட்டாள் வன்யா.
“பின்னே, பாகற்காய் கசக்காம இனிக்குமா!” என்ற தோழிகளின் கேலியை இரசிக்கும் அளவிற்கு அவளது மனம் இயல்பாக இல்லை.

உணவை வீணாக்குவதற்குச் சங்கடமாக இருந்தபோதும் அப்போதிருந்த மனநிலையில் அவளால் உண்ண முடியவில்லை.

“எங்கேடீ போற?” எனக் கேட்டத் தோழிகளுக்கு, “சாப்டுட்டு வாங்க. நான் அந்தப் பக்கம் இருக்கேன்” என்றபடி நகர்ந்தாள்.

அருகிலிருந்த டஸ்ட்பின்னில் உணவைக் கொட்டிவிட்டு, தட்டை டப்பில் போட்டுவிட்டு கையைக் கழுவிக் கொண்டு சற்று தொலைவிலிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

இருந்த உற்சாகமெல்லாம் மொத்தமாக வடிந்ததைப் போலிருந்தது.

‘இந்தக் கல்யாணத்திற்கு வராமலேயே இருந்திருக்கலாம். வந்ததால் தானே விஜய்யை பார்க்க நேர்ந்தது. இல்லாவிட்டால் அவன் தன் மீது இத்தனைக் கோபத்துடன் இருக்கிறான் என்ற விவரமாவது தெரியாமல் இருந்திருக்கும்’ என்று நினைத்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.
மனம் ஏனோ நிலைகொள்ளாமல் தவித்தது.

‘எல்லாவற்றிற்கும் நான்தான் காரணம். அன்று அவன் பேசியபோதே தன் மனத்திலிருப்பதைத் தெளிவாகச் சொல்லி, அவனுக்குப் புரியவைத்திருக்க வேண்டும். அதைவிடுத்து கிஷோர் பேசிய பேச்சால்தானே, இவனைத் தவிர்த்தேன்’ மனத்திற்குள் பேசிக்கொண்டிருந்தவளுக்கு எரிச்சலாக வந்தது.

அவளது நினைவுகளைக் கலைப்பதைப் போல, “ஹாய் சுமி!” என்றபடி தன்னெதிரில் வந்தமர்ந்தவனைக் குழப்பத்துடன் பார்த்தாள்.
“வாட் சுமி! என்னைத் தெரியலையா?” என்று சற்று அதிர்ந்தது போலவே கேட்டான் அவன்.

வார்த்தைக்கு வார்த்தை தனது பெயரை உரிமையுள்ளவன் போல அவன் உச்சரிப்பதை, எரிச்சலுடன் பார்த்தாள்.

இழுத்துப் பிடித்த பொறுமையுடன், “சாரி தெரியல” என்றாள்.

“நான் சந்தீப்!” என்றான்.

‘சந்தீப்னா… அமெரிக்க பிரெஸிடெண்டா… பேரைச் சொன்னதும் தெரிய’ என நினைத்துக்கொண்டவள், “சாரி சார்! உண்மையிலேயே எனக்குச் சந்தீப்னு யாரையும் தெரியாது. அதுலயும் உங்களை எனக்குப் பார்த்த நினைவுகூட இல்லை” என்றாள்.

“மை காட்! இவ்வளவு அழகான பொண்ணுக்கு என்னைத் தெரியலைன்னு நினைக்கவே கஷ்டமா இருக்குங்க” என்றவன் என்னவோ பெரிய ஜோக் சொல்லிவிட்டதைப் போலச் சிரிப்பதை, அவள் கடுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“சார்! உங்ககூட பேசிட்டிருக்க எனக்குப் பொறுமையில்ல. கிளம்பறீங்களா” என்றாள்.

“அப்போ நான் யாருன்னு தெரிஞ்சிக்கவே வேணாமா?” என்றான்.

‘இந்த லூசை என்ன சொல்லித் துரத்துவது’ எனப் புரியாமல் பார்த்தாள்.

“ஓகே நானே சொல்லிடுறேன். நான் கிஷோரோட ஃப்ரெண்ட். அன்னைக்கு நீங்க ரெண்டுபேரும் டின்னருக்கு வந்தீங்களே… ம்ம், டிஸ்கோத்தே…” என்று சொல்லச் சொல்ல, சுமியின் கோபம் அவளது கண்களில் பிரதிபலித்தது.
“அதுக்கு… கிஷோர் ஃப்ரெண்டுன்னா நினைவு வச்சிக்கணுமா?” என்று முகத்திலடித்தார் போலக் கேட்டாள்.

இதற்கெல்லாம் அசருவேணா என்பதைப் போல அவன் அசையாமல் அமர்ந்திருந்தான் அவன்.

“நீ இந்தக் கல்யாணத்துக்கு வரேன்னு கிஷோர் சொல்லியிருந்தா, நானே கூட்டிட்டு வந்திருப்பேன். எனக்கும் பேச்சுத்துணைக்கு ஆள் கிடைத்திருக்கும்” என்றவனை இமைக்காமல் பார்த்தாள்.

‘அவன்தானே… நல்..லா சொல்வானே. அதுவும் உன்னிடம்… உன் ஃப்ரெண்ட் தானே அவனும்… எப்படியிருப்பான்?’ என கடுப்புடன் நினைத்துக் கொண்டாள்.

“ரிட்டர்ன் எப்படி? நைட்டே தானே கிளம்பற? நான் கார்லதான் வந்திருக்கேன். நானே உன்னை டிராப் பண்ணிடுறேன்” என்றான்.

அவள் ஏதோ சொல்வதற்குள், “சுமித்ரா! இன்னும் அரைமணி நேரத்துல கிளம்பிடலாம்” என்றபடி அவளருகில் வந்தமர்ந்தான் விஜய்மித்ரன்.

Categories
On-Going Novels வேத கௌரி

அத்தியாயம் – 18

உயிர் -18
ஓருக்கிணைந்த நீதிமன்ற வளாகமே ,காக்கி உடைகளாலும்,கருப்பு அங்கிகளாலும் நிரம்பியிருந்தது ,அங்கேயிருந்த மரத்தின் நிழலில் செந்தில் நின்றிருக்க, பாக்கியம் “தம்பி இன்னைக்கு தீர்ப்பு சொல்லிடுவாங்களா …? என்று கலங்கிய விழிகளை தனது சேலையின் முந்தானையால் துடைத்தபடி கேட்கவும் …
அவரின் கைகளை பிடித்து ,”பாட்டி கண்டிப்பா சிற்பிகா நிரபராதின்னு நிரூப்பிக்க தேவையான எல்லா சாட்சியும் நம்மகிட்ட இருக்கு,அவங்க கண்டிப்பா விடுதலை ஆகிடுவாங்க கவலையே படாதீங்க ..” என்று தேற்றினான். 
 காவல்துறை வாகனத்தில் இருந்து இறங்கி,இவர்களை நோக்கி வந்த கதிரேசன், “ செந்தில் நீ கேட்ட பேங்க் சலான். இது பெருமாள் பெயரில் தான் இருக்கு …” என்று சில ரசீதுகளை கொடுத்தான் …
“சூப்பர் கதிர், இது ஒண்ணு போதும் ,இதை வைச்சே அவன் வாயில் இருந்து உண்மையை வர வைக்கலாம் ..காலையில சித்தார்த்  என்கிட்டே  சில பேப்பர்ஸ் தந்தான். அதையும் இப்போ நீ தந்ததையும் ஜட்ஜ் கிட்ட சப்மிட் பண்ணா போதும் அவரே இன்னைக்கு சிஸ்டருக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு  விடுதலை பண்ணிடுவார், நீங்க வீட்டுக்கு போகும் பொழுது அவங்களையும் நிரந்தரமா உங்க கூட கூட்டிகிட்டு போகலாம் அதுக்கு நான் கியாரன்டி ” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது ,
இமயவரம்பன் கொலை வழக்கு விசாரணை அடுத்து துவங்க இருப்பதாக அறிவிப்பு வரவே அனைவரும் உள்ளே சென்றனர் ….   
“மிஸ்டர் செந்தில் ,டிபென்ஸ் தரப்பு குறுக்கு விசாரணையை தொடங்கலாம்..” என  நீதிபதி தனது அனுமதி வழங்க ..
“தேங்க் யூ மை லார்ட் ..! என்று தனது கருப்பு கவுனை சரி செய்தவாறே செந்தில் கூண்டில் நின்று இருந்த கல்லூரி  உதவியாளரை பார்த்து ,..
 “உங்க  பெயரென்ன…?” .
“ பெருமாள்  ..!”
“ எதுக்காக கொலை செய்திங்க  …?”
“ஐயா .. நான் எதுவும் செய்யலைங்க …” என்று பதறிய படியே அவசரமாக மறுத்து கூறினான் ..
“ஐ அப்ஜெக்ட் திஸ் யுவர் ஆனர்..! நண்பர்  சாட்சியை தவறான கண்ணோட்டத்தில் நகர்த்துகிறார் ..! என அரசு தரப்பு வக்கீல் குறுக்கிட..            
“அப்ஜெக்ஷன் ஓவர் ரூல்ட் …!”
“தேங்க் யூ மை லார்ட் ..! சொல்லுங்க பெருமாள் , நீங்க காலேஜ்ல என்ன வேலையில் இருக்கீங்க…!”
“ஐயா, நான் காலேஜ்ல அட்டெண்டரா இருக்கேங்க ..!”..
“எவ்ளோ வருஷமா ..?”
“ஐந்து வருஷமா அங்க வேலை பார்த்துட்டு இருக்கேன் …”
“சரி, சம்பவம் நடந்த அன்னிக்கு என்ன பார்த்தீங்க…?”
“வெளியில் கிளம்பணும் சீக்கிரம் வந்துடுறேன்னு காலேஜ் உள்ளே போன சின்னய்யா ரொம்ப நேரம் ஆகியும்  வரவேயில்லை ,சரி நாம போய்ப் பார்த்திடலாம்ன்னு போனப்ப , அவர் ரூம் கதவு திறந்தே இருந்துச்சு,வழக்கமா அப்படி இருக்காது சாத்தி தான்  இருக்கும், செக்யுரிட்டியூம் அப்ப இல்லை ,உள்ளே போய் பார்த்தா…. அவர்தலையில் அடிபட்டு கிழே விழுந்து கிடந்தார்..”
“ சரி …நீங்க போய் பார்க்கும் பொழுது அவர் பேசினாரா …?’ என்று செந்தில் குறுக்கிடவே …
 “ இல்லைங்க ,நான் அவரை கூப்பிட்டு பார்த்தேன் ,பேச்சுமூச்சு எதுவும் இல்லாமல் இருக்கவும்  , பயந்து வாட்ச்மேன் கிட்ட சொல்லி  போலீஸ்க்கு தகவல் கொடுத்தோம் …”
“சரி… கொலை செய்ததா சொல்லுற  சிற்பிகாவை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா …?”
“தெரியுங்க ..! அவங்க நான் வேலை செய்யுற காலேஜ்ல தான் டீச்சரா இருக்காங்க ..!’…
“இவங்க நடத்தையில் எப்படி ..? அதாவது உங்க சார்க்கும் ,அவங்களுக்கும்   எந்த மாதிரி உறவு  இருந்துச்சு ..? 
“அதெல்லாம் தெரியாதுங்க , ஆனா அப்பப்போ சார் இவங்களை கூப்பிட்டு பேசுவாரு ,ஏதோ இங்கிலீஷ்ல பேசுவாங்க , அது மட்டும் கேட்கும் ,படிக்காத எனக்கு அது ஒண்ணும் புரியாதுங்க. அவங்க அடிக்கடி சண்டை போட்டுப்பாங்க.
 சம்பவம் நடந்த அன்னிக்கு இவங்க வந்து இருக்குறதா வாட்சுமேன் சொல்லிக்கிட்டு இருந்தான் ..அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் கட்டிகிட்டாத கூட பேசிக்கிட்டாங்க …”
“ இல்லை யுவர் ஹானர் ..எனது கட்சிக்காரின் கணவர் பெயர்  சித்தார்த் இமயவரம்பன் … இந்த பெயர் குழப்பத்தால் இமயவரம்பனின் மனைவி என்று திரித்து கூறிவிட்டார்கள் …”
“மேலும்  சம்பவம் நடந்த அன்னிக்கு ,எனது கட்சிகாரர் சண்டையிட்டது உண்மை ,ஆனால்  கொலை செய்யவில்லை ,வேறு யாரோ செய்து விட்டு ,அதை சந்தர்ப்ப சூழ்நிலையால் அங்கு இருந்த இவர் மேல் பழி போடுகின்றனர் ..”
“ அதற்கு என்ன மோட்டிவேஷன் ..” என்று தெரிந்து கொள்ளலாமா …?”என அரசு தரப்பு வக்கில் கேட்க …
“ தாரளமாக அதை சொல்லுகிறேன் ,எனது கட்சிகாரர் பெயரில் உள்ள  நிலத்தில் இரும்புத்தாது இருப்பது தெரிந்து அவரை ஏமாற்றி அந்த இடத்தை கைப்பற்ற இமயவரம்பன் முடிவு செய்து , சம்பவ இடத்திற்கு வரச் செய்துள்ளார்… அதற்குண்டான சாட்சிகளை உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன் …” என்று சில பேப்பர்களையும்,தகவல்களையும் கொடுத்தான் செந்தில் …
“ மை லார்ட் ,எனது கட்சிகாரர் சிற்பிகா அன்று தற்காப்புக்காக இமயவரம்பனை தள்ளி விடவே அவர் மயங்கி விழுந்தது உண்மை ,ஆனால் அவர் தள்ளிவிட்டதால் மட்டுமே இறக்கவில்லை  …”,
“எதிர் தரப்பு வக்கீல் தனது வாதத்தால் வழக்கின் திசையையே மாற்ற முயலுகிறார் …திட்டமிட்டு கொலை செய்யவில்லை என்றாலும் சந்தர்ப்ப வசத்தால் செய்தார் என்பதை இதன் மூலமாக உறுதி செய்து அதிகபட்ச தண்டனையாக ,  இ.பி.கோ 304-ம் பிரிவின் படி பத்தாண்டுகள் சிறை தண்டனை வழங்கிட வேண்டி கேட்டுக்கொள்கிறேன்  ” என்று அரசு தரப்பு வக்கீல் குறுக்கே புகுந்து வாதிட்டார் ..
“இல்லை மை லார்ட் … வழக்கு இப்பொழுதான் சரியான பாதையில் செல்கிறது ..இது தான் உண்மையான பிரேத பரிசோதனை அறிக்கை ஏற்கனவே இங்கு அளிக்க பட்டு இருக்கும் அறிக்கை பொய்யானது,பிரேத பரிசோதனை செய்த குழுவில் உள்ள மருத்துவர் ஒருவர் இதை உறுதி செய்துள்ளார்.. “அது மட்டுமில்லை ,இங்கு சாட்சியாக உள்ள பெருமாள்  பொய்சாட்சி என்றும் தெரியவந்துள்ளது ..”
“ஐயா நான் உண்மையை தான் சொல்லுறேன் ,எனக்கு வேற ஏதுவும் தெரியாதுங்க …”என்று வேகமாக மறுக்க … 
“இவரது வங்கி கணக்கில் புதிதாக பத்து லட்சம் ரூபாய் டெபாசிட் பண்ணியிருக்காங்க..அதற்கான வங்கி சலான் இதோ ..சாதாரண கிளார்க்காக பணி புரிந்து குடிசை வீட்டில் வசிக்கும் இவருக்கு திடிரென்று எப்படி இவ்வளவு பணம் வந்தது ” என்று அதை குமாஸ்தா மூலமாக கொடுத்து அனுப்பினான் …
அதை பார்வையிட்ட நீதிபதி ,” யெஸ் ப்ரஷிட்…!”
“ஐயா ..இது எப்படி வந்ததுன்னு தெரியாதுங்க ,என் மேல வீண் பழி போடுறாங்க ..” என்று பெருமாள்  …
“ பெருமாள் சத்தம் போட்டு இல்லை இல்லைன்னு சொல்லுறதால்  பொய் உண்மை ஆகிடாது ..உங்க வங்கி கணக்கில் நீங்க கையெழுத்து போட்டு பணம் போட்டதுக்கான ரசீது இருக்கு , மேலும்  உங்கள் மனைவியை  காவலர்கள்  விசாரித்த பொழுது ,அவர் யாரோ உங்களுக்கு இந்த பணத்தை பொய்சாட்சி சொல்ல கொடுத்ததாக ஒப்புக்கொண்டு விட்டார் …நீங்களும் உண்மையை ஒத்துக்கிட்ட குறைந்த தண்டனை கிடைக்க வாய்ப்பு உண்டு …”
“ அந்த சனியன் சொல்லிடுச்சா , படிச்சு படிச்சு சொன்னேன் கேட்டாளா…” என்று மனதிற்குள் மனைவியை திட்டியவனின் முகமோ பயத்தில் வெளிறி இருண்டு போக..”
“என்ன பெருமாள் இப்போவாவது உண்மையை சொல்லுறிங்களா …?”
இனிமேலும்  மறைப்பது தனக்கு ஆபத்து என்று பயந்து ,” மன்னிச்சுடுங்க சார் …அன்னைக்கு நடந்ததை மறைக்காமல் சொல்லிடுறேன் … எங்க ஐயா வெகு நேரமா காணோம்ன்னு நான் அவர் ரூமுக்கு போனப்ப , ஒரு பொண்ணு வேக வேகமா திரும்பி பார்த்துகிட்டே வந்துச்சு , அப்போ தெரியாமல் என் மேல மோதி கிழே விழுந்து எழுந்து போய்டுச்சு ..  சாரோட ரூமுக்குள் போய் பார்த்தால் அவர் கிழே விழுந்து கிடந்தார் …”
“அந்த பொண்ணு யாருன்னு உங்களுக்கு தெரியுமா …?,        
“இல்லை எனக்கு அந்த பொண்ணை தெரியாது, நான் இதுக்கு முன்னால் காலேஜ்ல கூட பார்த்தது இல்லை …”
“ சரி ,இவ்வளவு நாளா பொய் சொன்ன நீங்க இப்போ மட்டும் உண்மை தான் சொல்றீங்கன்னு எப்படி நம்புறது …?…எதுக்காக உண்மையை மறைச்சீங்க …”
“சார் ..அன்னைக்கு இராத்திரி எனக்குஒரு போன்வந்தது, அதில் பேசினவங்க உன்னோட வீட்டு வாசல்ல ஒரு பணப்பை இருக்கும். அதை நீ எடுத்துகிட்டு உங்க முதலாளிய, அந்த சிற்பிகா தான் கொலை பண்ணினான்னும் ,அவங்க ரெண்டு பேருக்குள்ள ஏதோ இருக்கும்ன்னும் , ஏற்கனவே அவங்களுக்குள்ள அடிக்கடி சண்டை வரும்ன்னும் யார் வந்து கேட்டாலும் சொல்லனும்ன்னு சொன்னாங்க நானும் பணத்துக்கு ஆசை பட்டு அவங்க சொன்னதை அப்படியே சொல்லிட்டேன்” என்று அவனுக்கு தெரிந்த  உண்மையை சொன்னான்.
இதை முழுதும் கேட்டபிறகு செந்தில் “பிரேத பரிசோதனை அறிக்கையை யார் மாற்றியது …? இந்த பெருமாளுக்கு பணம் கொடுத்து பொய் சொல்ல சொன்னது யார் ..?என்று விசாரிக்க காவல் துறைக்கு உத்தரவு இடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் …”என்றான்.
நீதிபதியும் தன்னிடம் சமர்பிக்க பட்டவற்றை முழுவதும்  கவனமாக படித்து விட்டு ,” இங்கே சமர்ப்பிக்க பட்ட சாட்சியங்களின் படி கொலை பழி சுமத்த பட்ட சிற்பிகாவை நிரபராதி என்று இந்த வழக்கில் இருந்து  இந்நீதிமன்றம் விடுதலை செய்கிறது, மேலும் இந்த கொலை செய்த உண்மையான குற்றவாளி  யார்…? என்று கண்டுபிடிக்குமாறு காவல்துறைக்கு இந்நீதிமன்றம் உத்தரவிடுகிறது ..” என்று தீர்ப்பை படித்து முடித்தார் …
சித்தார்த்க்கு  பார்வையாளர் பகுதியில் இருந்த கதிரேசன் போன் மூலமாக தெரிவிக்க, சிற்பிகாவின் முகமோ பேராபத்தில்  இருந்து தப்பி வந்த ஒருவரின் முகம் போல புன்னகையில் இருந்தாலும் கண்ணில் இருந்து நீர் வழிந்து கொண்டேயிருந்தது …
“ ஆண்டவா ,நான் கும்பிடுற சாமி என்னை கைவிடலை ,கதிரு உடனே சித்து தம்பியை வரச் சொல்லு , அடுத்த முகூர்த்தத்தில் நம்ம குலதெய்வ கோவில்ல வைச்சு கல்யாணம் .இனியாவது சந்தோசமா இருக்கட்டும் …” என்று தனது மகிழ்ச்சியை பேத்தியை ஆரத் தழுவியபடியே தெரிவித்தார் ..  
“பாட்டி ,எங்களுக்கு தான் ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சே ,மறுபடி எதுக்கு ..? என்று  தயக்கத்துடன்  சிற்பிகா கேட்க ..
“ உங்களுக்காக இல்லைனாலும் ,எனக்காக ஒத்துக்கோடா, என் பேத்தி கல்யாணத்தை பார்க்கணும்ன்னு  எனக்கு ஆசையா இருக்கு … “ என்று ஏக்கத்துடன் சொல்லவும் ,மறுக்க தோன்றாமல் சம்மதிக்க . சித்தார்த்தும் தனது சம்மதத்தை போனிலேயே தெரிவித்தான் …

Categories
On-Going Novels வேத கௌரி

அத்தியாயம் – 17

உயிர் – 17
“நோம் என் நெஞ்சே, நோம் என் நெஞ்சே
இமை தீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவிலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே’….
பொருளுரை:   நோகும் என் நெஞ்சு, நோகும் என் நெஞ்சு,  இமைகளைத் தீயச் செய்யும் என் கண்ணீரைத் துடைத்து  எனக்கு பொருத்தமாக இருந்த என் காதலர்  இப்பொழுது பொருந்தாதவராக ஆகி விட்டார்.  நோகும் என் நெஞ்சு.
“விரும்பும் எதையும் பக்கத்தில் வைத்து ரசிக்கமுடியாமல் ,தூரத்திலிருந்து பார்த்தே…. காலத்தை ஓட்டும் வரம் வாங்கிட்டு வந்து இருக்கேன் போல”, என்று தன்னுள் நினைத்து கொண்டு எதிரே தயங்கி தயங்கி நடந்து வரும் தன்னவளை இமைக்க மறந்து பார்த்து இதயம் முழுவதும் நிரப்பிக் கொண்டான் …

விட்டுகொடுத்து போறதுதான் வாழ்க்கை ..ஆனால் காதலையே விட்டுகொடுத்துட்டு வாழுறது சாத்தியமா ..? அப்படின்னு இவள் புரிஞ்சு இப்படி பண்ணுரளா ..? இல்லை புரியாமல் இப்படி செய்யுறளா ….? புரியவேயில்லை ..” என்று தனக்குள் எண்ணியபடியே பார்த்திருந்தான்..

 “சொந்தங்களை இழந்தாலும் அனாதைன்னு தோணலை நீ என் கூட இருந்தவரை … ஆனா இப்போ  நீதான் வேணும்ன்னு  கேட்கவும் முடியலை …உனக்காக தான் அழுறேன்னு யார் கிட்டயும் சொல்லவும் முடியலை ….!!” என்று உள்ளுக்குள்ளே பேசிக்கொண்டு அவனை நெருங்கினாள் ..
 
“ சித்து …எப்படி இருக்கீங்க …?” என்று மெல்லிய குரலில் கேட்ட்டாள்

“ நல்லா இருக்கேன்னு சொல்லனும்ன்னு ஆசைப்படுறேன் ,ஆனா உன்கிட்ட பொய் சொல்லமுடியலை , நீ என்கூட இல்லாமல்  வெறுமையா வெறுப்பாயிருக்குடா… நான் IPS ஆனதுக்கு ஊரே வாழ்த்து சொன்னாலும் இதோ நீ அனுப்பின இந்த வாழ்த்து அட்டை மட்டும்தான் எனக்கு சந்தோசத்தை கொடுத்ததுன்னு சொன்னா நீ நம்புவியா…”

“ நான் அனுப்பலை …” என்று அவரசப்பட்டு வேகமாக சொல்லவும் …
“ ஆமாம் நீ அனுப்பலை ,என் காமாட்சி அனுப்பின போதுமா ..!! சரி கிளம்பு நம்ம வீட்டுக்கு போகலாம் …”
“ இல்லை நான் வரலை , என்னை பார்க்க வந்ததுக்கு சந்தோசம் ..” என்று அழுகையுடன் சொல்லி போக முற்பட …
” மனசுக்கு பிடிச்சவங்களை இழக்கும் போது வரும் கண்ணீரை விட ..அவர்களை இழக்க கூடாது என்று நினைக்கும் போது ,வரும் கண்ணீருக்கு தான் வலி அதிகம்ன்னு எனக்கு தெரியும் ..அந்த வலியை என் காமாட்சிக்கு நான் எப்போதும் தர மாட்டேன் …” என்று கையை பிடிக்க …
 
“ப்ளிஸ் இமயா ..!! கைய விடுங்க …நான் போகணும் …!!”

“போடி போ …ஆனா போறதுக்கு முன்னாடி எனக்கும் , நம்ம கல்யாணத்திற்கும் ஒரு முடிவு சொல்லிட்டு போ ..” என்று அழுத்தமாக கேட்க …
“ என் முடிவுதான் அப்போவே சொல்லிட்டேனே …”…
“ எதுக்கு என் லைப்ல வந்த ,எதுக்கு பழகின,எதுக்கு கல்யாணத்துக்கும் ஒத்துகிட்ட , ,இந்த காதல் கருமாதியெல்லாம் இல்லாம, மத்தவங்களை போல நானும் சந்தோசமா தானே இருந்தேன், என் மனசுலையும் ஆசையை வளர்த்து ,கனவுல மிதக்க வைச்சு ,இப்போ முடியாதுன்னு சொல்ல எப்படி உனக்கு மனசு வருது சொல்லுடி …” என்று அடக்கப்பட்ட கோவத்துடன் சொன்னான் …
அவனின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் ,கண்ணில் நீருடன் ,அவனையே பார்த்துகொண்டிருந்தாள்.
அவள் அழுகையை பார்த்து, சற்றே சாந்தமாக குரலை இதமாக மாற்றி கொண்டு ,” சிற்பிமா என்னை புரிஞ்சுக்கோடி …”
“இட்ஸ் ஓவர் நவ் ,ட்ரை டூ அன்டர்ஸ்டேன்ட் தி பேக்ட்…”
 
“பேக்ட் …ஆ …என்ன பேக்ட் ..??’
“ நொண்டியோட வாழ வேண்டாம் ,மீறி என்னை வற்புறுத்தினா…. செத்து போய்டுவேன்” என்று சொல்லி முடிக்கும் முன்னே அவள்  கன்னத்தில் “பளார் “ என்று அறைந்து விட்டான் ..
 சற்றும் எதிர்பாராத அறையின்  வேகத்தில்,கன்னத்தை  பிடித்தவாறே தடுமாறி கிழே விழ போனவளை தாங்கி ,” மனுசனை கொலைகாரனாக்காத , என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு, “  ரெண்டு வருஷமா உன்னை தேடி கண்டுபிடிச்சு இருக்கேன் …” என்று சொல்லி அவளது கண்ணீரை துடைத்து ,பட்டென்று அவளை அணைத்து பிடித்தபடியே ,’ என்ன வார்த்தை சொல்றடி ..நீ போயிட்டா… நானும் உன்னோடவே வந்துடுவேன்னு வசனம் எல்லாம் பேசமாட்டேன் …இன்னும் ஒரே மாசம் டைம் கொடுக்கிறேன் ,நீயா வரணும் ,இல்லை…. எப்படி வரவைக்கணும்ன்னு எனக்கு தெரியும் ..” என்று சொல்லிச் சென்றான்.
சோழவந்தானுக்கு வாரிசுகள் இல்லை , மனைவியின் வற்ப்புறுத்தல் காரணமாக சொந்தத்தில் ஒரு குழந்தையை தத்துதெடுத்து இமயவரம்பன் என பெயரிட்டு வளர்க்க தொடங்கினர் …
இமயவரம்பன் தன் வளர்ப்பு தந்தையை போலவே, சீட்டு கம்பெனி,பங்கு வர்த்தகதில் முதலீடு இப்படி பல ஆசை வார்த்தைகளை மக்களுக்கு காட்டி ஏமாற்றி பணம்   சேர்ப்பது,  மது மாதுபோன்ற  சுகபோக வாழ்க்கை என உல்லாச வாழ்க்கை வாழ்ந்து  கொண்டிருந்தான் ..
 
அவனின் நண்பன் ஒருவன் கொல்லிமலை அடிவாரத்தில் சில இடத்தில் இரும்பு தாது இருப்பது தெரிய வந்ததாகவும்,அந்த இடத்தை வாங்கி கொடுத்தால் , ஒரு நிறுவனம் கமிஷனாக பல கோடிகளை தரும் என்று சொல்லவே, சோழவந்தானிடம் தெரிவித்து, இருவரும் அந்த இடத்தின் உரிமையாளர்களை தேடதொடங்கினர் …
 
இமயவரம்பன் தனது ஆட்கள் மூலம் அந்த இடத்தின் உரிமையாளரை கண்டுபிடித்ததில் சிற்பிகாவும் ஒருவள் என்று தெரிந்து, அவளிடம் அந்த இடத்தை விலைக்கு கேட்கவே, அவள் அந்த இடத்தை தான் விற்கபோவது இல்லை அங்கு ஒரு ஆசிரமம் நடத்த போவதாக சொல்லவும், இமயவரம்பன்  அந்த இடத்தின் அருகில் வேறு இடம் இருப்பதாகவும் அதையும் சேர்த்து எடுத்து கொள்ள சொல்லவும்.. ,,அந்த யோசனை நன்றாக படவே ,அதற்கு வேண்டிய வேலைகளை அவனுடன் சேர்ந்து செய்துகொண்டிருந்தாள் ….
 
இமயவரம்பன் அழைக்கவே, சிற்பி  ஹாஸ்டலில் இருந்து கிளம்பி பத்திரத்தை எடுத்துக்கொண்டு அவனை பார்க்க அவனறைக்குள் நுழையும் போது..
“ அப்பா ,சிற்பிகாவை வரச் சொல்லியிருக்கேன் . அந்த லூசுக்கு அதில் இரும்புத்தாது இருக்குன்னு தெரியாது  , அந்த இடத்தோட மதிப்பே தெரியாமல் ,ஆதரவற்றோர் ஆசிரமம் கட்டப்போறேன் ,சேவை பண்ணப்போறேன்னு உளறிக்கிட்டு இருக்கு, வெத்து மண்ணை வாங்கிட்டு,தங்கத்தை நமக்கு கொடுக்க சம்மதிச்சுட்டேன்னு எழுதி வைச்சு இருக்கேன். இன்னைக்கு எப்படியாவது அந்த இடத்தை எழுதி வாங்கிடுறேன்,  டீல் முடிச்சுட்டு பேசுறேன், அப்பா….. அப்புறம், நான் சொன்ன கல்யாண விஷயம் யோசனை பண்ணி சொல்லுங்க…” என்று போனை துண்டிக்க …. 
 
”  ஏற்கனவே உங்கப்பாவும் அந்த மினிஸ்டரும் சேர்ந்து கோல்மால் செய்யுறாங்கன்னு தெரியும் இருந்தாலும் ,நான் யார்கிட்டவும் எதையும்  சொல்லலை, கடைசியில் என்கிட்டவும் இந்த வேலையை காட்டிட்டல்ல”, என்றாள் அங்கு நடந்த உரையாடல்களை கேட்டுகொண்டே வந்த சிற்பிகா .
 
“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை சிற்பிகா …” என்று மறுத்து கூற … 
“என்ன அப்படி இல்லை , என்னை விசாரிக்க  கொல்லிமலைக்கு ரெண்டு போலீஸ் காரங்களை அனுப்பியது யார் …?”அப்படியே விசாரிச்சாலும் வேற ஏதாவது சொல்லி விசாரிச்சு இருந்தால் சந்தேகம் வந்து இருக்காது ..அந்த லூசுங்க அப்ளையே பண்ணாத பாஸ்போர்ட்க்கு வெரிபிக்கேஷன் பண்ணினப்பவே எனக்கு சந்தேகம் வந்தது , இனிமேல் கோடி ருபாய் கொட்டி கொடுத்தாலும் இந்த இடம் உங்களுக்கு கிடையாது,நான் இதை கவர்மென்ட் கிட்ட ஒப்படைக்கிறேன் ..” என்று திரும்ப நினைக்கும் பொழுது அவள் கையில் உள்ள பத்திரத்தை பிடுங்க எண்ணி அருகில் வர..
 
சிற்பிகா தற்காப்புகாக அவனை பிடித்து தள்ளிவிட்டு  வேகமாக வெளியேறி விடுதிக்கு சென்று விட்டாள், போலீஸ் வந்து சொல்லும்போது தான் அவன் இறந்த விசயமே அவளுக்கு தெரிந்தது …” என தனக்கு நடந்தது,தெரிந்தது அனைத்தையும் சொல்லிமுடித்தாள் …
 
“ இவ்வளவு நடந்து இருக்கு, இந்த அண்ணன் கிட்ட சொல்லனும்ன்னு உனக்கு தோணவே இல்லையா சிற்பி … நான் உன் சொந்த அண்ணன் இல்லைன்னு தானே சொல்லலை “, என்று தழுதழுக்க கதிரேசன் சொல்லவும் …
 
“ ஹும், கட்டுன புருஷன் போலீஸ் ACP, எனக்கே…. சொல்லலை ” என்று குறைபட ..
 
“ இல்லை சித்து  சென்னைக்கு அப்பா கல்லறைக்கு போயிட்டு , அங்க வந்து   உங்கட்ட சொல்லணும்ன்னு இருந்தேன் ,அதுக்குள்ள என்னஎன்னவோ நடந்துடுச்சி. .கதிர் அண்ணா, நான் உங்களை என் கூடப்பிறந்தவரா தான் பார்க்கிறேன், ஆனா உங்களுக்கு கஷ்டம் கொடுக்க கூடாதுன்னு  சொல்லலை,மன்னிச்சுடுங்க அண்ணா ..” என்று கண்ணீருடன் சொல்ல ..
“மன்னிப்பு எல்லாம் வேண்டாம் , இனிமேலாவது என் மச்சான் சித்து  கூட சந்தோசமா வாழ்ந்தால் அதுவே போதும் …”என்று விழிகளை துடைத்துவாறே,
“கதிர் ,நான் கிளம்புறேன் , ஜெய் சொன்ன விசயங்களை வைச்சு நான் சோழவந்தானை கொஞ்சம் விசாரிச்சு பார்க்கிறேன் … சப்போஸ் சென்னை போற மாதிரி இருந்தால் …நாளைக்கு முதற்கட்ட விசாரணைக்கு கோர்ட்க்கு வரணும், சிற்பியை நீயே அழைச்சுட்டு வந்துடு …..” என்று கைகுலுக்கிய வாறே சிற்பியிடம் தலையசைத்து கண்ணால் விடைபெற்றான் ……  

சோழவந்தான் வீட்டில் ….
அவரை சந்திக்க வந்திருப்பதாக சொல்லிவிட்டு,அவருக்காக காத்திருந்தான்…
“ .வாங்க ACP சார்…என்று சோகம் அப்பிய முகத்துடன் வரவேற்ற படியே  சோபாவில் அமர்ந்தார் …
“ சார் உங்க மகன் இறந்த விஷயமா உங்கட்ட சில தகவல் கேட்கலாம்ன்னு வந்துருக்கேன் …”
“ அவன் இறந்த துக்கத்தில் இருந்தே வெளிவர முடியலை, மேலும் மேலும் விசாரிக்கிறேன்னு உங்க ஆட்கள் எங்க மனசை ரணப்படுத்துறாங்க …” என்று தேர்ந்த நடிகர்போல, துக்கத்துடன் இருப்பதை போல நடித்தார் ….
“ சாரி சார் …கொலையாளியை கண்டிபிடிக்க சில விசாரணைக்கு  ,உங்க ஒத்துழைப்பும் தேவைப்படும் , அதை தவிர்க்க முடியாது இல்லையா …?”
“கண்டிப்பா …இப்போ என்ன தகவல் வேணும்ன்னு கேளுங்க எனக்கு தெரிஞ்சதை சொல்லுறேன் …”
“ உங்க மகன் கொலை செய்யப்பட்ட அன்று நீங்க எங்கேயிருந்தீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா ….?” என்ற கேள்விக்கு அவரின் முகம் வெளிறி போய் சரியானதை கவனிக்க தவறவில்லை சித்தார்த்..
“வீட்டிலிருந்தேன் ..” என்றவரின் ஒற்றை சொல் பதிலை கேட்டவன் ..
 
“லுக் மிஸ்டர் சோழவந்தான் ,இங்கு இன்வெஸ்டிகேஷனுக்காக வந்துருக்கேன் ,உங்களை பேட்டி எடுக்க இல்லை ,சோ டெல் அஸ் த ட்ரூத்,அந்த நேரத்துல எங்க இருந்தீங்க..?” என்று சற்றே குரல் உயர்த்தி கேட்க வெலவெலத்து போனவர் …
“வெளியில் போயிருந்தேன் ,தட்ஸ் மை பர்சனல் ..” என்று பதிலளிக்க மறுக்க …
மேலும் இமயவரம்பன் பற்றி அவரிடம் விசாரித்த சித்தார்த் ,”ஓகே சார் ,தேங்க்ஸ் பார் யுவர் கோப்ரேஷன் .” என்றான் ….
“யூ ஆர் மோஸ்ட் வெல்கம் ACP சார் ,ஐ வில் பி ,அட் யுவர் சர்விஸ் அட் எனி டைம் ..” என்றார் கைகுலுக்கிய படியே ….
சித்தார்த் சென்றபிறகு ,” என்னதான் விசாரிச்சாலும் உன்னால் ஒன்னும் பண்ணமுடியாது …அடுத்தவாரம் நாங்க ஆளையே மாத்த போறோம் …” என்று உரக்க சிரிக்க,
 
விதியோ…… “அதற்கு முன்னால் அவனால் உன் தலைவிதியே மாற போகிறது” என்று கைகொட்டி சிரித்தது.

மறுநாள் மாலை ..
“ வணக்கம் ACP சார் ….நான் தான் டாக்டர் சௌந்தர் ..” என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு சித்தார்த் இருக்கையின் அருகில் அமர ,
அவரின் வணக்கத்தை ஏற்றுக்கொண்டு, “ சொல்லுங்க என்ன விஷயமா..? பார்க்கணும்ன்னு சொன்னிங்க …” என்று கேட்க …
“ இமயவரம்பன் உடம்பில் போட்ட ஒரு பெயின்கில்லர் இன்ஜெக்செனால தான் உயிர் போயிருக்கு, என்று நான் தான் ரிப்போர்ட் கொடுத்தேன் ,ஆனா இப்போ வேற ரிப்போர்ட் இருக்கு ,கேசும் வேற மாதிரி போகுது ,எனக்கு ஒன்னும் புரியலை …வாட்ஸ் கோயிங் ஆன் சித்தார்த் சார் …?” தப்பு நடந்துருக்குன்னு எனக்கு தெரியாது ,ஆனா MR.இமயவரம்பன் இறந்தது இந்த ****** இன்ஜெக்சன் போட்டதுனால மட்டும்தான் ,அடிபட்டதுனால கிடையாது.. “ என்று உறுதியாக கூறினார் டாக்டர் சௌந்தர் .
“ என்ன சொல்லுறிங்க டாக்டர் ,ஒரே ஒரு இன்ஜெக்சன் போட்டா உயிர் போயிடுமா ..?என்னால நம்பவே முடியலை என்றுத் தன் அதிர்ச்சியை அப்பட்டமாக காட்டினான் சித்தார்த்…
“ எஸ் சார் ..பொதுவா பெயின் கில்லர் கில்லர்ஸ் ஐ.எம் முறையில் தான் பேசன்ட்ஸ்க்கு யூஸ் பண்ணுவோம் , ஐ மீன் தசைப் பகுதியில் தான் போடணும், அதுதான் முறை ,இந்த மாதிரியான பெயின் கில்லர் இன்ஜெக்சனை நேரடியா ஐ.வி ,அதாவது நரம்பு மூலமாக போட்ட பேஷன்ட்டோட கண்டிஷன்ஸ் பொறுத்து அவங்க உயிர் போகும், நார்மல் பேஷன்ட்ஸ் என்றால் 15 மினிட்ஸ் ஆகும்,இதுவே பிரஷர் , ஹார்ட் பேஷன்ட் என்றால் சடன்லி டெத் தான் ..” என்று விரிவாக விளக்கினார் …
அந்த ரிப்போர்டில் கண் பதித்த சித்தார்த் யோசனையில் இருக்க,” ,நீங்க இப்போ பார்த்துட்டு இருக்குற இந்த ரிப்போர்ட் தான் உண்மை , கோர்ட்டில் நாங்க கொடுத்தாத இருக்குற அடாப்சி ரிப்போர்ட் மாறியிருக்கு , ஆனா யார் ரிப்போர்ட் மாத்தின எதுக்கு மாத்தினாங்கன்னு தெரியலை …நான் அன்னைக்கு நைட்டே ஒரு கருத்தரங்கில் கலந்துக்கணும்னு சிங்கப்பூர் போய்ட்டு நேத்து தான் வந்தேன்… நேத்து பேப்பரில் இதை பத்தி படிச்சுட்டு தான் சந்தேகப்பட்டு உங்களுக்கு போன் பண்ணினேன் ….”
,” சார் அப்புறம் ஒரு விசயம் எனக்கு தோணுது, என்னோடு வொர்க் பண்ணின லேடி டாக்டர் ரித்திகா ஒரு வாரமா காணோம், அவங்களும் போஸ்ட்மார்ட்டம் செய்யும் போது கூட இருந்தாங்க, இதுக்கும் அவங்களுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்குமோ அப்படின்னு தோணுது, ஏன்னா அவங்களோட நடவடிக்கை அப்படி தான் இருந்தது ,இதை நான் சொன்னேன்னு யார்கிட்டவும் சொல்லிடாதிங்க சார் ..” என்று சொல்லவும் ..
“ உங்களுக்கு இதனால் எந்த தொந்தரவும் வராமல் நான் பார்த்துக்குறேன் , டாக்டர் ரித்திகா பத்தின விவரங்கள் விசாரிச்சுட்டு மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கணுமோ கண்டிப்பா நான் செய்யுறேன் ..உங்க ஹெல்புக்கு தேங்க்ஸ் சௌந்தர்…” என்று கைகுலுக்க , சௌந்தர் விடைபெற்று சென்றான் …
அப்பொழுது ஜெய் போனில் அழைக்கவே ,” சார் சோழவந்தான் ஆட்களை பிடிச்சு விசாரிச்சுட்டேன் ,அவனுங்க இமயவரம்பனை கொலை பண்ணலை, ஆனா நாங்க போகும் போது அவன் இறந்துகிடந்தான், யாரு பண்ணினாங்கன்னு தெரியலை சொல்லுறானுங்க , இந்த விஷயம் சோழவந்தானுக்கு தெரிஞ்ச பணம் தர மாட்டார்,அதுனால் நாங்க பண்ணினதா அவர் கிட்ட பொய் சொன்னோம்ன்னு சொல்லுறாங்க … “
“ நல்லா விசாரிச்சுட்டியா ஜெய் ..”
“ எவ்வளவு அடிச்சு கேட்டாலும் இதை தான் சொல்லுறாங்க,எனக்கும் இவனுங்க சொல்லுறது உண்மையா இருக்கோன்னு தோணுது சார் ..”
“சரி ஜெய், அவனுங்களை நம்ம கஸ்டடியில் கொஞ்ச நாள் அடைச்சு வைச்சுடு ,,இந்த விஷயம் யாருக்கும் தெரியகூடாது …” என்று உத்தரவுயிட்டு சிந்தனையில் ஆழ்ந்தான் ..
யார் இந்த ரித்திகா ….? இவளுக்கும் இந்த கொலைக்கும் என்ன சம்மந்தம் …? ஒரே மர்மமா இருக்கே ….? என்று யோசனையில் ஆழ்ந்தான் ….
சுழலும் பூமியில் சுழலும் மர்மங்கள் நிறைந்து கிடக்கும் ..இதை படைத்தவன் தவிர யாரிவர் ……

Categories
On-Going Novels ஷெண்பா

அத்தியாயம் – 14

அத்தியாயம் – 14

ஞாயிற்றுக்கிழமை என்பதால் நிதானமாக எழுந்து குளித்துவிட்டு, அமர்ந்திருந்தாள் சுமித்ரா.

சோஃபாவின் பின்பக்கத்தில் ஈரக்கூந்தலை படறவிட்டபடி, கால்களை டீபாயின் மீது நீட்டிக்கொண்டு கண்களை மூடி அமர்ந்திருந்தாள்.

தாளிடாமல் மூடியிருந்த கதவு மெல்லத் திறப்பதை அறியாமல் சாய்ந்திருந்தவளின் அருகில் மெல்லக் குனிந்தது அந்த உருவம்.

கழுத்தருகில் சூடான மூச்சுக்காற்று பட்டதும் கண்களைத் திறந்த சுமி, பதறிப் போய் எழுந்து நின்றாள்.

அடுத்த நொடியே விழிகள் மின்ன, “நீத்து!” என்றபடி தோழியை அணைத்துக் கொண்டாள் சுமித்ரா.

“ரொம்ப பயந்துட்டியோ?” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் அவள்.

“எருமை! சத்தமே இல்லாம கிட்டவந்து முகத்தைக் காட்டினா, பயப்படாம என்ன பண்ணுவாங்க? ஒரு நிமிஷம் பகீர்னு ஆகிடுச்சி” என்றபடி இரண்டு போடு போட்டாள்.

“ஹேய்! காலங்கார்த்தால உன்னைப் பார்க்க ஆசையா வந்திருக்கேன். இப்படி அடிக்கிற” எனப் போலியாகக் கோபித்துக்கொண்டாள் நீத்து.

“சாரி சாரி! உட்காரு” என்றவள், “எப்போ பரோடாலயிருந்து வந்த? தனியா வந்திருக்க… உன் ஹப்பி வரலையா?” எனக் கேட்டுக்கொண்டே தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள்.

“ரெண்டு பேரும்தான் வந்தோம். ஒரு வேலையிருக்கு முடிச்சிகிட்டு வரேன்னு என்னை இறக்கி விட்டுட்டுப் போயிருக்கார். அப்பா எப்படியிருக்காங்க? ஹெல்த் நல்லாயிருக்கா? இப்போ வேலைக்குப் போகலயில்ல…” என்று வரிசையாக விசாரித்தாள்.

“நல்லாயிருக்காங்க நீத்து! அட்டாக்குக்குப் பின்னால, எனக்கு அப்பாவை வேலைக்கு அனுப்ப விருப்பமில்ல. ஈவ்னிங்ல பசங்க சிலர் டியூஷனுக்கு வருவாங்க. ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணக்கூடாதுன்னு சொல்லிட்டேன். இன்னைக்கு சண்டே இல்லயா… அவங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் பார்க்ல மீட் பண்ணி பேசிக்குவாங்க. ஒன்பது மணிக்கு வந்துடுவாங்க” என்றாள்.

“ஓஹ் நைஸ்!”

“ம், அப்புறம் சொல்லு… நீ என்ன திடீர்னு இந்தப் பக்கம்?”

“அண்ணாவுக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகியிருக்கு. உன்னை இன்வைட் பண்ணத்தான் வந்தேன்” என்றாள்.

“வாவ்! ஒரு வழியா உங்க அண்ணா கல்யாணத்துக்குச் சம்மதிச்சிட்டாங்களா?” எனச் சிரித்தாள்.
“இல்லனா அவனை யார் விட்டது?” என்று புன்னகைத்த நீத்து, “ஆமா, உன் ஃப்ரெண்ட் ஒருத்தன் இருப்பானே… கிஷோர் அவன் எப்படியிருக்கான்?” என்று கேட்டாள்.

“ம்ம்… நல்லாயிருக்கார்” என்றாள்.

“என்னடி அவனுக்கு இவ்ளோ மரியாதை…” என அவள் கேட்டுக்கொண்டிருக்கும் போதே, உள்ளே வந்தார் கங்காதரன்.

பரஸ்பரம் விசாரித்துக் கொண்டவர்கள், பொதுவாக பேச ஆரம்பித்தனர்.

சிறிது நேரத்திலேயே அவளது கணவன் வந்துவிட, திருமண அழைப்பிதழை அவரிடம் கொடுத்தனர்.

“அங்கிள் நீங்க ரெண்டு பேரும் கண்டிப்பா கல்யாணத்துக்கு வரணும். பஸ் அரேஞ்ச் பண்ணியிருக்கு. சனிக்கிழமை மதியானம் கிளம்பினா, மறுநாள் ஈவ்னிங் ரிசப்ஷன் முடிஞ்சதும் கிளம்பி வந்திடலாம்” என்றாள்.

“அன்னைக்கு எனக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கும்மா. நான் சுமியை அனுப்பி வைக்கிறேன்” என்றார்.

அவள் எவ்வளவோ சொல்லியும், சுமியை மட்டும் அனுப்பி வைக்கிறேன் என்றே பிடிவாதமாக இருந்தார் கங்காதரன்.

அவர்கள் கிளம்பும் நேரம் கார் வரை வந்த சுமித்ரா, “சாரி நீத்து! அப்பாவை விட்டுட்டு என்னால வரமுடியாது. ப்ளீஸ் புரிஞ்சிக்க” என்றாள்.

“என்னடி விளையாடுறியா? உனக்காகத்தான் நான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன். நீ வரலன்னா என் ஹப்பி என்னைக் காய்ச்சி எடுத்திடுவார். நீதான் ஃப்ரெண்ட் ஃப்ரெண்டுன்னு உயிரை விடுற. அவங்களுக்கெல்லாம் உன் நினைப்பே இல்லன்னு பேசியே என்னைக் கொன்னுடுவார். அதனால, நீ வர்ற” என்றாள்.

“இல்ல நீத்து! அப்பாவோட ஹெல்த்…”

“யேய்! என்ன ஒரேடியா உருகுற. அங்கிள் நல்லாயிருக்கார். நீ சும்மா அதையே சொல்லிச் சொல்லி ஒண்ணுமில்லாதவரை நோயாளியா நினைக்கவச்சிடாதே. புரியுதா?” என்றாள் கண்டிப்புடன்.

“இதுவரைக்கும் அப்பாவை விட்டுட்டு நான் எங்கேயுமே வந்ததில்ல…” என்றாள்.

“ஹேய் அவர் சின்னக்குழந்தை இல்ல. மிஞ்சி மிஞ்சிப் போனா ஒன்றரை நாள் தனியா இருக்கப் போறாங்க. டெல்லியிலிருந்து சங்கீதாவும், பெங்களூரிலிருந்து வன்யாவும் வரேன்னு சொல்லிட்டாங்க. அவங்களுக்கு வாட்ஸ் அப்-லதான் இன்விடேஷன் அனுப்பினேன். எத்தனை வருஷம் கழிச்சி நாமெல்லாம் மீட் பண்ணப்போறோம்.” என்றாள் நீத்து.

அவளுக்குமே தோழிகளைப் பார்க்கவேண்டுமென்ற ஆசையிருந்தாலும், சற்று யோசனையாகவும் இருந்தது.

“ஓகேப்பா! வரப்பார்க்கறேன்” என்றாள்.

“இந்தச் சாக்கெல்லாம் எனக்கு வேணாம். நான் உன்னை மட்டும்தான் நேர்ல வந்து இன்வைட் பண்ணியிருகேன். சோ, உனக்கு நோ எக்ஸ்க்யூஸ்… பை” என்றவள் கிளம்ப, யோசனையுடன் வீட்டிற்குள் வந்தாள் சுமித்ரா.

*****************
“ப்ரோ…!” என்றழைத்தபடி மித்ரனின் அறைக்குள் நுழைந்தான் இந்தர்.

பெட்டியில் உடைகளை அடுக்கிக் கொண்டிருந்த மித்ரன் திரும்பிப் பார்த்தான்.

“என்ன ப்ரோ? நேத்துத்தான் குர்காவுன்லயிருந்து வந்தீங்க… இன்னைக்கே கிளம்பறீங்களா?” எனக் கேட்டான்.

“ஒரு வெட்டிங் ரிசப்ஷனுக்காகக் கிளம்பிட்டிருக்கேன்” என்றான் மித்ரன்.

“ஓஹ்! வேர்?”

“பரோடா!”

“பரோடாவா?” என்றவனுக்கு மூளைக்குள் மின்னலடித்தது.

“என்ன ப்ரோ! இப்பல்லாம் அடிக்கடி அந்தப் பக்கம் போய் வர்றா மாதிரியிருக்கு” என்றான் விஷமத்துடன்.

உடைகளை அடுக்கியபடி முகத்தை மட்டும் திருப்பிப் பார்த்தான் மித்ரன்.
நிமிர்ந்து, “அதுல உனக்கென்ன கஷ்டம்?” எனக் கேட்டான்.

“ம்ம், எனக்கென்ன கஷ்டம்? இப்போதான் கொஞ்ச நாளைக்கு முன்னால, அஹமதாபாத் வரைக்கும் போய்ட்டு வந்தீங்க. இப்போ பரோடா…”

“அது, காலேஜ் அலுமினிக்காக. இது, ஃப்ரெண்டோட மேரேஜ் ரிசப்ஷன்” என்றான்.

“இருந்தாலும், ரெண்டும் பக்கத்துப் பக்கத்துல வருதே…” என்றான்.

இடுப்பில் கையை வைத்தபடி தம்பியைப் பார்த்தவன், “அதுக்கும் இதுக்கும் கிட்டதட்ட நூற்றி இருபது கிலோமீட்டர் டிஸ்டன்ஸ்” என்றான்.

“ஓ! கார்ல ஒரு ஒன் அவர்ல போய்டலாமில்ல…” என்று தீவிர முகபாவத்துடன் கேட்டான்.

கழுத்தைத் தடவியபடி திரும்பியவன், “இப்போ எதுக்கு இந்தக் குறுக்குக் கேள்வியெல்லாம் கேட்டுட்டிருக்க? உனக்கு என்ன தெரியணும்?” என்றான்.

“நான் உங்களைச் சந்தேகப்பட்டுக் கேட்கறேன்னு நினைச்சிட்டீங்களா ப்ரோ! சேச்சே… அடிக்கடி அந்த ஏரியாவிலேயே இப்போல்லாம் வேலை வருதே… அதுதான், கொஞ்சம் புரியாத புதிராயிருக்கு.”

அருகில் வந்து அவனது தோளில் கையைப் போட்டவன், “தேவையில்லாத விஷயத்துக்கெல்லாம் மூளையைக் கசக்காம, அப்பாவுக்குப் பிஸ்னஸ்ல ஹெல்ப் பண்ணு. தொழிலைக் கத்துக்கோ. நீ கேட்ட எக்ஸ்க்யூஸ், இன்னும் ரெண்டே மாசத்துல முடியுது. இதுவரை என்ஜாய் பண்ணது போதும். கம்பெனிக்கு வர்றதுக்கு ரெடியாகிக்க” என்றான் நிதானமாக.

‘மனசுல தோணின சந்தேகத்தைக் கேட்டது குற்றமா!’ என எண்ணிக்கொண்டே கட்டிலில் அமர்ந்தான் இந்தர்.

வார்ட்ரோபை மூடியபடி, “என்னடா, சொன்னதுக்கு சரின்னு ஒரு வார்த்தை வாயிலிருந்து வரல. அதுக்குக்கூட கஷ்டமாயிருக்கா?” எனக் கேட்டான் மித்ரன்.

“அதான், நீங்களே சொல்லிட்டீங்களே. இனி அப்பீல் ஏது?” என்று பெருமூச்சு விட்டான்.

சகோதரனின் ஆதங்கத்தைக் குறுஞ்சிரிப்புடன் பார்த்துக்கொண்டே, தனது வேலையில் முனைப்பாக இருந்தான் மித்ரன்.
“அப்புறம் என்னைக்கு ரிட்டர்ன்?”

“நைட் ரிசப்ஷன் முடிஞ்சதும். இல்லன்னா, மார்னிங் தான் கிளம்பணும்” என்றான்.

“இந்த இல்லன்னா…க்கு என்ன மீனிங்ன்னு தெரிஞ்சிக்கலாமா?” என்றவனை ஆழ்ந்த பார்வை பார்த்தான்.

“ப்ளைட் கிடைக்கறதைப் பொறுத்து” என்றான் அழுத்தமாக.

“ஓ..கே ப்..ரோ! கல்யாணத்துக்குக் கிளம்பற நேரம், எதுக்கு டென்ஷனாகிகிட்டு. நீங்க கிளம்புங்க” என்றான்.

“நான் டென்ஷனாகல… இப்போ நீதான் ஆஃபிஸ் வரணுமேன்னு கடுப்புலயிருக்க” என்றவன், ஷோல்டர் பேகை எடுத்துத் தோளில் குறுக்காக மாட்டிக்கொண்டான்.

கட்டில் மீதிருந்த பாஸ்போர்ட்டை எடுத்து ஜெர்க்கினின் உள்பாக்கெட்டில் வைத்தபடி, “ஓகே ரெண்டு நாள்ல வந்துடுவேன். டேக் கேர்” என்று தம்பியின் தோளில் தட்டிவிட்டு நகர்ந்தவன் சட்டென நின்றான்.

“இந்தர்… உன்னோட பேச்சைக் கொஞ்சம் குறைச்சிக்க. எப்பவும் நாம பேசறதைவிட, அடுத்தவங்களைப் பேசவச்சி அவங்களைப் பத்தி புரிஞ்சிக்க ட்ரை பண்றது நல்லது” என்றான்.

‘இந்த அவமானம் உனக்குத் தேவையா’ எனக் கண்ணாடியில் தெரிந்த தனது உருவத்திடம் கேட்டுக்கொண்டான் இந்தர்.

******************

“நல்லவேளை சுமி! நீ கல்யாணத்துக்கு வந்துட்ட. இந்த ரெண்டு லூசுங்களும் கல்யாணத்துக்கு வரேன்னு சொல்லிட்டு, ரிசப்ஷனுக்கு வந்து நிக்குதுங்க” என்றபடி உச்சிவகிட்டில் குங்குமத்தை வைத்துக்கொண்டிருந்தாள் நீத்து.

“அதுக்காவது வந்தோமேன்னு சந்தோஷப்படு. எங்க வீட்ல இருக்கறதுங்களை சமாளிச்சிட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுது” என்ற வன்யா, “சுமி! இந்தச் சோளியோட நாட்டைப் போடேன்” என்றபடி சுமித்ராவின் எதிரில் வந்து நின்றாள்.

சங்கீதா, நீத்துவின் காதில் ஏதோ கிசுகிசுக்க, இருவரும் அடக்கமட்டாமல் சிரித்தனர்.
“ஏய்! எருமைங்களா… என்ன சொல்லிச் சிரிக்கிறீங்கன்னு எனக்குத் தெரியும். அடங்குங்க. பாவம் சுமி டார்லிங்! புரியாம முழிக்கிறா” என்று கலகலத்தாள் வன்யா.

“நான் வேணா சுமிக்கு விளக்கமா சொல்றேன்” என்ற சங்கீதா, சுமித்ராவை நோக்கிச் செல்ல, மற்ற தோழிகள் கலகலவென நகைத்தனர்.

“ஏய்! என்கிட்ட அடிவாங்காதே. நீ ஏதோ சென்சார் விஷயம் சொல்லப் போறேன்னு தெரியுது. பேசாம போயிடு” என்று போலியாக மிரட்டினாள் சுமித்ரா.

“ஹேய்! மிரட்டுறதுன்னா ஸ்ட்ராங்கா மிரட்டணும். இப்படிச் சிரிப்பை அடக்கிக்கிட்டு மிரட்டக்கூடாது” என்றாள் சங்கீதா.

“அதானே… ஆனா, சுமிகூட வளர்ந்துட்டாடீ. அதான் சிரிக்கிறா” என்ற வன்யாவின் மீது அங்கிருந்த தலையணையை தூக்கி அடித்தாள் சுமித்ரா.

“பின்னே, இன்னும் ரெண்டு மாசத்துல மிசஸ்.கிஷோர் ஆகப்போறாளே. இன்னும் புரியலைனா எப்படி?” என்று சிரித்தாள் நீத்து.

மூவரும் ஏதாவது சொல்லிக்கொண்டிருங்கள் என்பதைப் போல எதையும் காதில் வாங்காமல் வளையலை கையில் அடுக்கிக்கொண்டிருந்தாள் சுமி.

“பார்த்தியா நம்ம சுமிமாதிரி ஒரு நல்ல பொண்ணைப் பார்க்கவே முடியாது. எவ்வளது பவ்யமா இருக்கா…” என வேண்டுமென்றே அவளைச் சீண்டினாள் சங்கீதா.

“ராட்சஷிங்களா! பேசாம கிளம்புங்க…” என்றவள், சேலையை எடுத்துக்கொண்டு நகர்ந்தாள் சுமித்ரா.

“சுமி! ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லுடீ…” என்ற சங்கீதாவை முறைத்தவள், “இனியும் ஏதாவது பேசினா, அடிதான் வாங்குவ” என்றவள் முறைத்தபடி உள் அறைக்கு நகர்ந்தாள்.

சங்கீதாவும், வன்யாவும் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க, “போதும்டீ அவளை ரொம்ப ஓட்டாதீங்க. வெளியில போனதும் இப்படி ஏதாவது கிண்டலடிச்சி என்னையும் சீண்டி வைக்காதீங்க. என் மாமியார் வீட்ல பார்த்தா அவ்வளவு தான்” என்ற நீத்து புடவை முந்தியை இழுத்துச் சொருகிக் கொண்டு, “சுமி ரெடியானதும் மூணு பேரும் பின்னால கார்டனுக்கு வந்துடுங்க” எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

குங்கும நிறத்தில் பொன்நிற வேலைப்பாட்டுடன் இருந்த டஸர் சில்க் புடவையில் பாந்தமாக வந்து நின்றாள் சுமித்ரா.

“வாவ்! கலக்கற சுமி! இன்னைக்கு எத்தனைப் பேரோட கண்ணு உன் மேலன்னு தெரியல” என்று மயங்கிச் சரிவதைப் போல நடித்தாள் வன்யா.

“ஆமாம் ஆமாம். அதுக்கு முன்னாடி அவள் ஏற்கெனவே எங்கேஜ்டுன்னு சொல்லிடுவோமா…” என்று இரகசியம் போலக் கேட்டாள் சங்கீதா.

“நீங்க ரெண்டு பேரும் இப்படியே பேசிட்டிருங்க… உங்க பக்கத்துலயே நான் வரப்போறதில்ல” என்று கடுகடுத்தாள் சுமித்ரா.

“ஓகே பேபி! வாவா, மணி ஏழாகப் போகுது” என்றபடி கதவைப் பூட்டினாள் வன்யா.

மூவருமாக ரிசப்ஷன் நடக்கவிருக்கும் ஹோட்டலில் பின்பக்கத்திலிருந்த கார்டனுக்குச் சென்றனர்.

லேசாக வெளிச்சம் குறைந்த அந்தநேரத்தில் மின்விளக்குகள் கண்ணைப் பறிக்க, ஒரு சொர்க்கலோகம் போலிருந்தது அவ்விடம். மூவரும் ஒரு இடம் பார்த்து அமர்ந்தனர்.

வந்திருந்தவர்களில் தொன்னூற்றொன்பது சதவீதத்தினர் பெரும் செல்வவந்தர்கள் என்பது அவர்களது நடையுடை பாவனையிலேயே தெரிந்தது. எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் தலையசைப்பும், கைக்குலுக்கலுமாக சுற்றி வந்தவர்களைப் பார்த்தவளுக்குச் சிரிப்புதான் வந்தது.

அதிலும், தன்னிடம் இத்தனை நேரம் ஓயாமல் பேசிச் சிரித்துக்கொண்டிருந்த நீத்து, அமைதியாக வந்தவர்களை வரவேற்றுப் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்து நகைத்தாள்.

“என்னடி! சொன்னா நாங்களும் சிரிப்போமில்ல” என்றாள் வன்யா.

தான் பார்த்ததைச் சொல்லிச் சிரித்தவள், “இப்படி உள்ளே ஒரு வாழ்க்கை வெளியே ஒரு வாழ்க்கைதான் பணக்கார வாழ்க்கை போல…” என அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மணமக்கள் மேடைக்கு வந்து சேர்ந்தனர்.

அதுவரை அமைதியாக இருந்த அந்த இடம், இளமைப் பட்டாளம் சூழச்சூழ ஆரவாரத்திலும், ஆட்டம் பட்டத்திலும் களைகட்ட ஆரம்பித்தது.

“நீ சொன்னது தப்பாகிடுச்சி சுமி! இங்கே பாரு இவங்க பண்ற அட்டகாசத்தை” என்றாள் சங்கீதா.
மூவரும் ஒருபக்கமாக அமர்ந்தபடி நடப்பதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தனர்.

வெல்கம் டிரிங்குடன் அங்கு வந்த நீத்து, தோழிகளுக்கு அவற்றைக் கொடுத்துவிட்டு சற்றுநேரம் அவர்களருகில் அமர்ந்தாள்.

“ஹப்பா! கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கணும். இந்தக் கும்பலெல்லாம் இருக்கும் வரைதான் நான் இங்கே உட்காரமுடியும்” என்றவள், நன்றாக சாய்ந்து அமர்ந்தாள்.

பெரிய எல்.இ.டி திரையில் தெரிந்த கல்யாண கலாட்டாக்களை இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த சுமித்ராவின் விழிகள் சட்டென அழகாக விரிந்தன.

ஒரு கையில் பூங்கொத்துடனும் மறுகையை பாக்கெட்டில் விட்டபடி, யாருடனோ சிரித்துப் பேசியபடி வந்துகொண்டிருந்தான் விஜய்மித்ரன்.

Categories
On-Going Novels வேத கௌரி

அத்தியாயம் – 16

உயிர் -16

“ஞாயிறு போய்விழத் திங்கள் வந்தெய்திடச்செவ் 
வாயனல் சோரப் புதன் அம்பு தூவ நல்வியாழன் வர 
வேயுறு வெள்ளி வலை சோர, நானுன்னை மேவுதற்குத் 
தாய் சனியாயினளே, ரகுநாத தளசிங்கமே” 

இப்பாடலின் பொருள்: 
சூரியன் அஸ்தமிக்கச் சந்திரன் தோன்ற, சிவந்த வாயிலிருந்து 
வெப்பக்காற்று வீச, மன்மதன் பாணமெய்ய, 
தென்றல் வீச, மூங்கிலையத்த அழகிய வளையங்கள், நான் உன்னை வந்து சேர்வதற்குத் தாய் குறுக்கே நிற்கின்றாளே …. 

இரண்டு நாட்களுக்குப் பிறகு காரிலேயே தனது பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு சென்னைக்குப் பயணமானாள் சிற்பிகா , காரின் கியர் மாற்றி ,ஆக்சிலேட்ரரை மிதிக்க, கார் வேகமெடுத்து, சாலையில் ஓட ஆரம்பித்தது..!..மிதமான வேகத்தில் வண்டியை செலுத்தினாள். 

சாலையில் நெரிசல் இல்லாமல் இருக்கவும், வேகத்தை அதிகரித்து ஓட்ட ஆரம்பிக்க, தீடிரென ஒருவர் சாலையைக் கடக்க முயல அதிர்ந்து ,” ஓ மை காட் “ எனக் கத்தினாள் ,பயபந்து உடம்புக்குள் ஓட ,குழம்பிபோனவளாய் ,ஸ்டியரிங்கை சரக்கென வளைத்து ,பிரேக்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தவும், உச்சபட்ச வேகத்தில் அங்குச் சாலையோரம் நின்று இருந்த லாரியின் பின்புறத்தில் “ டமார்ர்ர் “ என்று மோதி நின்றது … 

அருகில் இருந்தவர்கள் ஒருகணம் என்ன நடந்தது என்று புரியாமல் ஸ்தம்பித்துப் போனார்கள், சூழ்நிலை புரியவே சிலநிமிடங்கள் பிடித்தது .. பதறியடித்துக் காரை நோக்கி ஓடினார்கள் .. 

கசக்கி போட்ட காகிதம் போலக் காரின் ஒரு பகுதி உருக்குலைந்து போயிருந்தது, சிற்பிகா ஸ்டியரிங்கின் மீது கவிழ்ந்து கிடந்தாள் ….சில நல்ல உள்ளங்கள் அவளைக் காப்பற்றி மருத்துவமனையில் சேர்த்து . அவளது போனில் எமர்ஜென்சி என்று இருந்த சித்தார்த்துக்குத் தகவல் கொடுக்க, அவன் தில்லைநாயகிக்கு அழைத்துச் சொல்லிவிட்டு அவனும் கிளம்பி விமான நிலையம் வர அங்குப் பனிமூட்டம் காரணமாக விமானச் சேவை ரத்து செய்யப்பட்டு இருக்க , ரயில் முலம் சென்னைக்கு கிளம்பினான் …. அவன் உயிரில் உறைந்தவள் அவனைப் பிரிந்த சேதி அறியாமலே …. 

“உன்னால் கண்டு கொள்ளப்படாத நலன் விசரிக்கபடாத 
பொழுதுகளில் தான் 
உணர்கிறேன் …. 
நானும் ஓர் அனாதை என்பதை ….!!!. என்று தனக்குள் புலம்பிய படியே மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான் சித்தார்த் , சிற்பிகா நலமாகக் கண்முழித்து வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டாதாகவும் சொல்லவே அங்குச் சென்று சிற்பிகாவை பார்க்க சென்றால் ,நாயகியின் அனுமதி இல்லாமல் யாரும் பார்க்க முடியாது என்று மறுத்து விட்டனர் ,,, 
நாயகியின் வரவுக்காகக் காத்திருந்த ஒவ்வொரு நொடியும் அவனுக்குப் பல யுகங்களாகக் கடந்து கொண்டிருக்க …அப்பொழுது நாயகி அங்கு வந்தார் ,அனாலும் இவனைச் சட்டை செய்யாமல் கடந்து போகவே …” அத்தை “ என்று சித்தார்த் அழைக்கவே …. 
சுற்றுபுறத்தை சுற்றி பார்த்து விட்டு ,” யாருக்கு யார் அத்தை ..? “ என்று அதிகாரமாகக் கேட்க … 
இதைக் கேட்ட சித்து உள்ளுக்குள் ஏதோ உடைந்து போனது போல் உணர்ந்தாலும் , சிற்பிகாவை முதலில் பார்க்க வேண்டும் என்ற துடிப்புடன், “ நான் சிற்பிகாவை பார்க்கணும் ..” என்றான் .. 

“ என் பொண்ணை யாரும் பார்க்க அனுமதிக்க முடியாது “ என்றார் … 

“ என் பொண்டாட்டியை பார்க்க யார்கிட்டவும் அனுமதி வாங்க தேவையில்லை ..” என்று அழுத்தமாகக் கூறவும்… 
“காதலிச்சுட்ட பொண்டாட்டி ஆகிட முடியாது ,கல்யாணம் பண்ணிகிட்டதான் பொண்டாட்டி …” என்று நக்கலாகச் சொல்லவும் … 

“ எங்க ரெண்டுபேருக்கும் திருச்சியில் ரெஜிஸ்டர் மேரேஜ் முடிஞ்சுடுச்சு, சிற்பி சென்னை வரதுக்கு முன்னாலே …” என்று உறுதியான குரலில் நேர் பார்வையுடன் .. 
ஒரு நிமிடம் அதிர்ந்தாலும் பிறகு சுதாரித்து ,” என் பொண்ணு உன்னைப் பார்க்க விருப்பபடலை,சோ நீ போகலாம் ,இல்லை செக்யுரிட்டி கிட்ட சொல்லி வெளிய தள்ள சொல்லவா ..?.” என்றார் அதட்டலாக 

“ அவளே சொல்லட்டும் என்னைப் பார்க்க விருப்பமில்லைன்னு , நீங்க என்னா சொல்லுறது நானே போயுடுறேன் ..” என்றான் முடிவாக … 
“ சரி வா “ என்று தோள்களைக் குலுக்கி திரும்பி நடக்கவே ,அவனும் பின்தொடர்ந்தான் .. 
இருவரும் கதவை திறந்து உள்ளே நுழைவதை படுக்கையில் அமர்ந்து பார்த்த சிற்பிகா சித்தார்த்தை பார்த்த உடனே தலையைத் திருப்பிக்கொண்டாள். 
நாயகியோ அவளின் அருகில் சென்று ,அவளின் தலையை வருடி ” சிற்பி சித்து உன்னைப் பார்க்கணும்ன்னு வந்து இருக்கார் ,பாரும்மா ..” என்றார் .. 

தலையைத் திருப்பாமல் “ எனக்கு யாரையும் பார்க்க பிடிக்கலை ,போ சொல்லுங்கள் ..” என்றாள் .. 

“ என்னடா இப்படிச் சொல்லுற உனக்கும் அவருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு ,என் பொண்டாட்டியை பார்க்குறேன்னு சொல்லுறவர்கிட்ட நான் எப்படிம்மா..போகச் சொல்ல முடியும் …?” 
“ ஒரு பேப்பர்ல கையெழுத்து போட்டுட்டா நான் அவர் பொண்டாட்டி ஆகிட முடியுமா ..? என்று கேலியாக அவன் முகம் பார்க்காமல் திரும்பியவாறே சொல்ல … 
“ கண்டிப்பா அந்தப் பேப்பர் உறுதிபடுத்த முடியாதுதான் ,நானும் நீயும் கொண்ட அன்பையும் ,பாசத்தையும் ..எது சொல்லுறத இருந்தாலும் என்னைப் பார்த்து பேசு ..” என்று அவள் புறம் நெருங்க … 
“ எனக்கு யாரையும் பார்க்கவோ,பேசவோ பிடிக்கலை ,வெளியில் போகலாம் ..” என்றாள் உறுதியாக .. 

“ அச்சோ மாப்பிள்ளை ,அவ அடிபட்ட பயத்திலையும்,மருந்து வேகத்திலும் ஏதோ உளறுறா …நீங்க வெளியில் இருங்க ..பிறகு பேசிக்கலாம் ..” என்று தேன் தடவிய குரலில் சொல்ல … 

சிற்பிகா ஏன் இப்படிப் பேசுகிறாள்,நாயகியின் உண்மை முகம் ஏது என்று புரியாமல் குழப்பத்துடனே அறையை விட்டு வெளியே வந்து இருக்கையில் குழப்பத்துடன் தலையை குனிந்து  அமர்ந்து இருந்தவனின் அருகில் வந்து ….

“ இன்னும் போகலையா நீ , மந்திரி பொண்ணுன்னு மடக்கி போட்ட பல சொத்துகளுக்கு அதிபதி ஆகலாம்ன்னு நினைப்பு இருந்தால் அதை அடியோடு அழிச்சுடு, அவ கோடீஸ்வரி ,உன்னைப் போல மாசம் சம்பளம் வாங்குற பிச்சைகாரனை எப்படி ஏத்துக்குவா ..? அப்படியே அவ ஏத்துகிட்டாலும் என்னால் ஒத்துக்க முடியாது …வந்துட்டான் கல்யாணம் ஆகிடுச்சு கருமாதி ஆகிடுச்சுன்னு அனாதை பய …’ என்று இளிவான குரலில் பேசவும் … 
“ வாயை மூடுங்க , இத்தனை நேரம் , நான் உங்களுக்குப் பெரியவங்கன்னு மரியாதை கொடுத்தேன் ,என்னை அனாதை,வெறும்பயல் அப்படின்னு சொல்லுற உரிமை உங்களுக்குக் கிடையாது …உங்க புத்தி உங்க பொண்ணுக்கும் இருக்கும்ன்னு நினைச்சுடுவேன் .அவளைப் பிரிஞ்சுடுவேன்னு மட்டும் நினைக்காதிங்க ..என் சிற்பியை பத்தி எனக்குத் தெரியும் இப்போ அவ பேசினது கூட ,எனக்கு நல்லது பண்ண தான் பேசிருப்பா …அவளை எப்படி வர வைக்கணும்ன்னு எனக்குத் தெரியும் ..” என்றவனை மேலும் கீழுமாகப் பார்த்த நாயகி …. 

“ என்னா வெளியில் போய் எனக்கும் அவளுக்கும் கல்யாணம் ஆகிடுச்சுன்னு அந்தப் பேப்பர் காமிக்கப் போறியா …?முகத்தைச் சுழிக்க … 
“ கண்டிப்பா அப்படி ஒரு இழிவான காரியத்தை நான் பண்ண மாட்டேன் , என் காதலை புரிஞ்சு என் காமாட்சி வருவா …அது வரை நான் காத்துருப்பேன் ..அது அவளுக்கும் புரியும் …” தன்னை நிருபித்துக் காட்ட வேண்டும் என்ற வேகம் ,தில்லைநாயகி வீசிய வார்த்தைகள் அவனுக்குள் ஏற்படுத்த ..எந்த பதிலுமே சொல்லாமல் அவ் விடத்தை விட்டு நகர்ந்து சென்றான் …. 

நாம் அடைகின்ற அவமானம் கூடச் சில நேரங்களில் சில முடிவுகளை எடுக்கத் தூண்டும் , யாருக்குமே தன்மானம் என்பது மிகவும் உன்னதமான விஷயம் …! அந்தத் தன்மானத்தைச் சீண்டுகிற சம்பவம் நடக்கும்போது ஆத்திரம் வரும் ,அதையெல்லாம் விடத் தனது நிலையை உயர்த்திக்காட்ட வேண்டும் என்ற வேகமும் வரும் …. 
”வலக்கரம் பிடித்து வளம் வர நினைத்தேன் …. 
உறவெனும் கவிதை உயிரினில் வரைந்தேன் 
இதுவா உந்தன் நியாயங்கள் ..? 
எனக்கேன் இந்தக் காயங்கள் …? 

காரில் அடிபட்டு ,மருத்துவமனையில் சேர்ந்து , அதில் தன் இடது காலில் முழங்காலுக்கு கிழே சிதைந்து எடுத்துவிட , செயற்கை கால் பொருத்தப்பட்டு ஓரளவுக்கு நடமாடும் நிலையில் வீட்டிற்கு செல்லலாம் என்று மருத்துவர் அறிவுறுத்த , அவளை கூட்டி செல்ல அங்கு வரவே , “ சிற்பிமா … நான் எனக்கு கல்யாணமே ஆகலைன்னு சொல்லியிருக்கேன் … உறவுகார பொண்ணுன்னு தான் தெரியும் ..மத்தவங்க முன்னால் அம்மான்னு சொல்லிடாத ..” என்று தலையில் கையை வைக்க அதை தட்டி விட்டு …
“ ஓ நீங்க எனக்கு அம்மாவா , யாருங்க சொன்னது , பெத்துட்ட அம்மாவாகிட முடியுமா ..?..நீங்க என் பொண்ணுன்னு வெளியில் சொல்லிடாதிங்க ..எனக்கு அதை விட வேற அவமானம் கிடையாது … இவ்ளோ நாள வராத பாசம் இப்போ பொத்துகிட்டு வருதா ..? நான் உங்களை அம்மான்னு இதுவரை சொன்னதே இல்லையே, இனிமேலும் சொல்ல போறது கிடையாது ..‘ என்று கோவத்தில் வார்த்தைகளை வீச ….
“ என்ன சிற்பிமா ,இப்படி பேசுற, உங்க அப்பா என்னை பத்தி தப்பா ஏதும் சொல்லியிருக்காரு , அதான் இப்படி பேசுற …”
“அவரை பத்தி பேசுறதுக்கு உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை ,அவர் உங்களை பத்தி ஏதுமே தப்பா பேசினதே கிடையாது, பொதுவா குழந்தைகளுக்கு தாய் தான் முக்கியம்ன்னு சொல்லுவாங்க, குறிப்பா பெண் பிள்ளைகளுக்கு தாய் கத்துக்குடுக்க கூடிய பல விசயங்கள் செய்ய வேண்டியது இருக்கு , இதில் நீங்க ஏதாவது எனக்கு செஞ்சு இருக்கீங்களா .. “ என்று தனது ஏக்கங்களை அக்கினி குழம்புகளாய் பேச்சின் முலம் வீசினாள் .
“ முடிவா என்ன சொல்லவர ..” என்று கோவத்தில் நாயகி கேட்க …
“உங்ககூட வரமுடியாது ,நான் என் வழிய பார்த்து போறேன் ..” என்று தீர்க்கமாக சொல்ல ..
“ சும்மா போறேன் போறேன்னு சொன்ன எப்படி ..எங்க அம்மா பாக்கியம் உனக்கு கொடுத்த பத்திரம் அதை கொடுத்துட்டு போ.. “
“ சை நீங்க எல்லாம் ஒரு பொண்ணா… அதை வாங்க தான் இத்தனை நடிப்பா .. கேட்டுயிருந்தால் நானே கொடுத்து இருப்பேனே ..”
“ அதோட வேல்யு தெரியுமா உனக்கு , பல கோடி அது ,அந்த போலீஸ்காரனை நம்பி போகபோறியா ..?, அவன் நீ பேசின பேச்சுக்கு திரும்பி கூட பார்க்க மாட்டான் …” என்று முகத்தை சுழித்து கேட்க …
“ யார் சொன்ன என் இமயன் அப்படி கிடையாது , இப்போ இதே நிலைமையில் போனாலும் என்னை ஏத்துகுற மனசு இருக்கு, ஆனா நான் போகமாட்டேன் ,அப்புறம் பல கோடின்னு சொன்னிங்களே அது எனக்கு வேண்டாம், எங்க அப்பா எனக்கு தேவையான அளவு பணமும்,நல்ல கல்வியும் கொடுத்துட்டு போய் இருக்கார் ..”
“உங்க அப்பனை போலவே பொழைக்கதெரியாமல் இருக்கியே .., சரி எப்போ பத்திரம் கிடைக்கும் ..”
“ பரவாயில்லை பொழைக்க தெரியாமலே இருந்துட்டு போறேன்..இன்னும் ரெண்டு நாளில் உங்களை தேடி அந்த பத்திரம் வரும் ,,கவலை படாதிங்க நான் ஏமாத்த மாட்டேன் ..” என்று விடை பெற்று சென்னையில் இருக்கும் அவர்களது வீட்டிற்க்கு வந்து அந்த பத்திரத்தை எடுத்து படிக்க தொடங்கினாள்..
அதில் கொல்லிமலைஅடிவாரத்தில் பாக்கியம் பெயரில் இருந்த இடம் இவளின் பெயருக்கு மாற்றப்பட்டு இருந்தது,ஆனால் இதை உபயோக படுத்தவோ அல்லது விற்க்கவோ வேண்டுமெனில் அவளது திருமணத்திற்கு பிறகே செய்யமுடியும் என்று இருப்பதை படித்து தெரிந்து கொண்டாள் ..
நாயகியிடம் பத்திரத்தை கொடுத்தால் ஏதாவது முடிவு செய்து தன்னை ஏதோ ஒரு சிக்கலில் சிக்க வைத்து விடுவார் என்று எண்ணி,இரவோடு இரவாக யாருக்குமே தெரிவிக்காமல் கேரளாவில் உள்ள தன் தோழியின் ஊருக்கு சென்று விட்டாள் ..
அங்கே கல்லூரியில் சேர்ந்து முதுகலை கடைசி வருட படிப்பையும் முடித்துமேலும் ஒரு வருடம் வேலை செய்துவிட்டு, பத்திரத்தை பாக்கியத்திடமே ஒப்படைத்து விட்டு அவர்களை பார்த்து வரலாம் என்று கொல்லிமலைக்கு திரும்பியவளை ,அவளது பாட்டியும் கதிரேசனும் வற்புறுத்தவே அவர்களோடு இருக்காமல் திருச்சி கல்லூரியில் விரிவுரையாளராக பணியில் சேர்ந்தாள் …
எப்படியோ சிற்பிகா இங்கு இருப்பதை தெரிந்து கொண்ட நாயகி அவளை அந்த இடத்தை தனக்கு கொடுக்க வேண்டும் என அவளை தொந்தரவு தர ஆரம்பிக்க, அந்த இடத்தை நாயகியிடம் ஒப்படைக்க ஒத்துக்கொண்டு, அதற்கு ஈடாக தான் ஆரம்பிக்க நினைக்கும் ஆதரவற்றோர் இல்லத்துக்கு வேற இடம் தரவேண்டும்னு , ஒப்புக்கொண்டு நாயகியின் திருச்சி வந்து இருப்பதாகவும் தன்னை வந்து பார்க்க சொல்லவே அவர் தங்கியிருந்த விடுதிக்கு சென்றாள் ….,
அங்கே சென்று வரவேற்பறையில் காத்து இருக்கும்பொழுது …நாயகியிடம் ….” “இது எப்படி நாயகி சாத்தியாப்படுமா ..?” என்ற குரல் கேட்டது
“ எல்லாம் சரியாவரும் சீனா டாக்டர் , மனிதனுக்கு கண்ணில் உள்ள கார்னியா பாதிக்க பட்ட பார்வை போய்டும் ,அதுக்கு பதிலா மனித கார்னியாவுக்கு பல விலங்குகளை பரிசிலித்தோம், ஆடு, நாய் ,பன்றி பசுவெல்லாம் முயன்றோம் ,இதில் பன்றியோட கார்னியா தான் மனிதனுக்கு பொருந்துதுன்னு சொல்லியிருக்கார்,இந்த ஆராய்ச்சியை அவங்க பத்து வருஷமா செய்து இருக்காங்க,” “ சீனாகாரங்க அதை இங்கவும் பரிசோதனை பண்ணி பார்க்கணும்ன்னு விருப்பபடுறாங்க , அவங்களுக்கு தேவையான டாக்டர் , பரிசோதனைக்கு ஆட்கள் இதுல்லாம் நாம செய்துகொடுத்தால் பல ஆயிரம் கோடி நமக்கு கிடைக்கும் …” என்று கண்கள் மின்ன ஆசை வார்த்தைகளை சொல்லிகொண்டிருந்தார்…
“ அது எல்லாம் சரிதான் நாயகி, ஆளுங்க எப்படி ஒத்துக்குவாங்க .. இங்க இதை பண்ணின ஏதாவது பிரச்சனை வந்துடாத ..?”.”
“ இங்க பாருங்க ,யாரும் ஒத்துக்க மாட்டாங்க, என்னோட அனாதை இல்லத்துல இருந்து பத்து பேரை எடுத்துக்கோங்க, யாராவது கேட்ட அவங்களுக்கு உடம்பு சரியில்லாமல் ஹாஸ்பிடல் இருக்காங்கன்னு சொல்லிடலாம் ..,இவங்களை தனியா எங்காவது வைச்சு பார்த்துக்கலாம் “
“ இல்லை வயசுப்பையன் தான் வேணும்னாலும் சொல்லு காலேஜ்ல இருந்துகூட யாரையாவது தூக்கிடலாம் ….” என்று விடை பெற்று சோழவந்தான் வெளியேறினார்
“ இவர் எப்படி இங்க இவரும் இந்த விசயத்துக்கு கூட்டா..” என்று யோசித்தாள், ஏனேனில் அவள் வேலை செய்யும் கல்லூரியின் சேர்மன் தான் சோழவந்தான், குழப்பத்திலும்,அந்த ஆராய்ச்சியில் நடந்து கொண்டிருக்கும் அவலங்கள் பற்றிய சிந்தனையிலேயே பத்திரத்தை ஒப்படைக்காமல் விடுதிக்கு திரும்பினாள் …

மேலும் சொல்லமுயன்றபொழுது, சித்தார்த்தின் அலைபேசி ஒலிக்க, அதன் அழைப்பை ஏற்று காதில் வைக்க , “ ஹலோ… ACP சித்தார்த் சாரா …?…
“ யெஸ் நான் தான் சொல்லுங்க ..”
“நான் டாக்டர் சௌந்தர் பேசுறேன் …இமயவரம்பன் கொலை கேஸ் விஷயமா கொஞ்சம் உங்களிடம் தனிய பேசணும் ..போனில் வேண்டாம் நேரில் மீட் பண்ணனும் …”
‘ஓகே சார் , கண்டிப்பா பார்க்கலாம் ,நானே உங்களை பார்க்க வரேன்.. உங்களுக்கு எந்த இடம் வசதியோ அதையே சொல்லுங்க..நான் வந்துடுறேன் ..
“ ஓகே சார் , எனக்கு இப்போ டுயூட்டி இருக்கு , ஈவினிங் ஆறுமணிக்கு தென்னூர் சுயம்பு விலாஸ் ஹோட்டல் வந்துடுங்க …நானும் வந்துடுறேன் …”
“ஓகே சௌந்தர் …சுயூர் ஐ வில் கம் சிக்ஸ் ஓ கிளாக் ..” என்று சொல்லி துண்டித்தாலும் எதற்கு பேசனும் என்று சொல்கிறார் என்றே யோசனையில் அழ்ந்தவனை ,கதிர் தோளில் தட்டி ,” என்ன சித்து போனில் யார் …?…
“ டாக்டர் சௌந்தர் ஏதோ பேசணும் சொன்னார் ..” நாளைக்கு மீட் பண்ணுறேன்னு சொல்லியிருக்கேன் …பிறகு நம்ம செந்தில் தான் சிற்பிகா தரப்பு வக்கீலா ஆஜராக சொல்லியிருக்கேன் ..ஓகே தானே ”
“சரி சித்து ….ஏம்மா ,சிற்பி உனக்கும் இமயவரம்பனுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு ஊரே சொல்லுதே …ஏன்மா ..இது யார் கிளப்பிவிட்ட புரளி ..” என்று சிற்பிகாவிடம் சந்தேகமாய் கேட்க ….
“ அண்ணா ,நான் எனக்கும் இமயாக்கும் கல்யாணம் ஆகிடுச்சு ன்னு தான் சொன்னேன் ,இவர் பேர் சித்தார்த் இமயவரம்பன் தானே ,அதான் நான் என் கணவர் இமயவரம்பன் சொன்னேன் …” அந்த பிராடு பேர் இமயவரம்பன் உடனே எல்லாம் சேர்த்து கிளப்பிவிட்டுடாங்க …”
“ஹும்ம் ..நல்லா சொல்லுருறாங்கைய்யா டிடைலு …” என்று வடிவேலு பாணியில் சொல்ல முவரும் சேர்ந்து புன்னகைத்தனர் ….
இவர்களின் புன்னைகை நிலைக்குமா ….??…..

Categories
On-Going Novels ஷெண்பா

அத்தியாயம் – 13

அத்தியாயம் – 13

அலுவலகத்திலிருந்து சோர்வுடன் வீட்டிற்குள் நுழைந்தாள் சுமித்ரா.

“மணி எட்டாகுதே, நீ இன்னும் வரலையேன்னு இப்போதான் கிஷோருக்குப் போன் பண்ணி வச்சேன். நீ வந்துட்ட” என்றார் கங்காதரன்.

அவனது பெயரைக் கேட்டதும் மனத்திற்குள் சிறுசலிப்பு வந்தாலும், அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் முறுவலித்தாள்.

‘என்ன ஆனாலும், நாளைக்கு உன் வாழ்க்கையில் ஒரு அங்கமாக ஆகவிருப்பவன். எடுத்ததற்கெல்லாம் அவனை நினைத்து சலிப்பையும், எரிச்சலையும் வளர்த்துக் கொள்ள நினைக்காதே சுமி. அவனிடம் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டும் பார்’ என்று அவ்வப்போது மனத்திற்குள் சொல்லிக்கொண்டாலும், அதைச் செயல்படுத்துவது தான் பெரும் சிரமமாக இருந்தது அவளுக்கு.

தனது சிந்தனைகளைச் சற்று ஓரங்கட்டியவள், “கொஞ்சம், வெளியே போய்ட்டு வந்தேன்ப்பா. உங்களுக்குச் சொல்லணும்னு நினைச்சேன். ஏதோ நினைப்புல மறந்துட்டேன்” என்றாள்.

கங்காதரன், யோசனையுடன் மகளைப் பார்த்தாள்.

“கிஷோர் உன்னை வீட்ல விட்டுடுறேன்னு சொன்னானாம். நீ வேணாம்னு பிடிவாதமா மறுத்துட்டியாம்…” என்றார்.

‘இவனை என்னவென்று சொல்வது! இதையெல்லாம் அப்பாவிடம்…’ என்று எண்ணியவளுக்கு எரிச்சல்தான் தோன்றியது.

“நான் என்னோட வேலையா வெளியே போறேன். இருக்குற வேலையெல்லாம் விட்டுட்டு அவர் எதுக்கு வரணும்! இதைச் சொன்னா கேட்க மாட்டார். அதான், கொஞ்சம் ப்ரெஸ் பண்ணிச் சொன்னேன்ப்பா!” என்றாள்.

“ஓஹ்!” என்றவர், “ஈவ்னிங் கேஷவ் இன்விடேஷன் எடுத்துட்டு வந்து கொடுத்துட்டுப் போனான். பூஜை ஷெல்ஃப்ல வச்சிருக்கேன் எடுத்துப் பாரும்மா!” என்றார்.

“சரிப்பா! கைகால் கழுவிட்டு வந்து பார்க்கறேன்” என்றவள் தனது அறைக்குச் சென்றாள்.

மகள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த கங்காதரனுக்கு, பெரும் கவலையாக இருந்தது. ‘அவளிடம் மனம் விட்டுப் பேசவேண்டும்’ என நினைத்துக் கொண்டார்.

உடையை மாற்றிக்கொண்டு வந்தவள், இரவு உணவு தயாரிக்கிறேன் என்று சமையலறைக்குள் புகுந்துகொண்டாள்.

“அப்பா! சாப்பிடலாமா” எனக் கேட்டாள்.
மகளையே உற்று நோக்கியவர், “நீ இன்னும் இன்விடேஷனைப் பார்க்கவே இல்லையேம்மா!” என்றார் வருத்தத்துடன்.

தன்னையே கடிந்துகொண்டு, “சாரிப்பா! மறந்துட்டேன்” என்றவள், பூஜையறையை நோக்கி நடந்தாள்.

அவர், “சுமிம்மா” என்றதும், திரும்பிப் பார்த்தாள்.

“கொஞ்சம் வா. உன்கிட்ட பேசணும்” என்று அவளை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றார்.

அவளுக்கு உள்ளுக்குள் பதட்டமாக இருந்தது.

அவர் அங்கிருந்த சிமெண்ட் பெஞ்ச்சில் அமர, அவள் மாடி சுற்றுச் சுவரின் மீது சாய்ந்து நின்றாள்.

“உட்காரும்மா…”

“இல்லப்பா! நிக்கிறேன்” என்றாள்.

அவளருகில் வந்து நின்றவர், “அப்பா மேல கோபமாடா!” எனக் கேட்டார்.

“இப்படி ஒரு டௌட் எதுக்குப்பா? நான் கோபப்படுற அளவுக்கு நீங்க என்ன பண்ணீங்க…” என்று மெலிதாகப் புன்னகைத்தாள்.

“இல்லம்மா! நான் ஏதோ தப்பு பண்ணிட்டா மாதிரியே தோணுது. உன் அம்மா இருந்திருந்தா, நான் கவலைப்பட வேண்டிய அவசியமே இருந்திருக்காது. ஒரு ஆணுக்கு, மனைவின்னு ஒருத்தி இருக்காறாளாங்கறது முக்கியமில்லம்மா. ஆனா, குழந்தைகளுக்கு அம்மாங்கற உறவு கண்டிப்பா வேணும்” என்றவரது முகம் கவலையை வெளிப்படையாகக் காட்டியது.

அவரது கரத்தைப் பற்றிக்கொண்டவள், “நீங்க கவலைப்படுற அளவுக்கு எதுவுமே இல்லப்பா! நீங்க கண்டதையும் நினைச்சிக் குழம்பிக்காம, கல்யாண வேலையைப் பாருங்க” என்றாள்.

“என்னோட கவலையே உன்னோட கல்யாணத்தைப் பத்தித்தாம்மா!” என்ற தந்தையைத் தவிப்புடன் பார்த்தாள்.

“உன்னோட விருப்பத்தைக் கேட்டுத்தானேம்மா, இந்தக் கல்யாணத்தை முடிவு செஞ்சேன். உனக்கு விருப்பமில்லன்னா, வற்புறுத்துவேன்னு நினைச்சிட்டியா?” எனக் கேட்டார்.

“ஏம்ப்பா அப்படியெல்லாம் நினைக்கறீங்க. நான் மனசாரதான் கல்யாணத்துக்குச் சம்மதிச்சேன். இப்போ எதுக்கு தீடீர்னு இந்தச் சந்தேகம்?

“இது சந்தேகமே இல்லம்மா… நிச்சயதார்த்தம் நடந்தப்போ நீ கல்யாணப் பொண்ணுக்கு இருக்கும் துறுதுறுப்பும், சந்தோஷமும் உன் முகத்துல இருந்தது. ஆனா, நீ அங்கே வேலைக்குப் போக ஆரம்பிச்ச பத்து நாள்லயே… அதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிட்டே இருந்தது.

நானும் புதுசா வேலைக்குப் போறதால வரும் அலுப்புன்னு நினைச்சிகிட்டேன். அன்னைக்கு கிஷோரோட நீ டின்னருக்குப் போய்ட்டு வந்தப்ப, என்னோட முகத்தைக்கூட நிமிர்ந்து பார்க்கல. சரி, கிஷோர் டின்னர் போலாம்னு சொல்லும் போதே நீ வேணாம்ங்கற மனநிலைல தான் இருந்த… அதனால உங்க ரெண்டுபேருக்கும் சின்ன உரசல் ஏதாவது வந்திருக்கும்னு நினைச்சேன்.

மறுநாள் காலைலயே கேஷவ் நம்ம வீட்டுக்கு வந்தப்பதான், எனக்கு லேசா சந்தேகம் வந்தது. இத்தனை நாளா நானும் கவனிச்சிட்டிருந்தேன். கல்யாண தேதி மாத்தி இன்விடேஷன் வந்ததும் ஆசையா நீ எடுத்துப் பார்க்கலைன்னதுமே, நீ இயல்பா இன்னைன்னு புரிஞ்சிகிட்டேன். உன்கிட்ட பேசியே ஆகணும்ங்கற முடிவுக்கு வந்தேன்” என்றார்.

‘நீ பதில் சொல்லியே ஆகவேண்டும்’ என்ற அர்த்தம் பொதிந்த பார்வையுடன், மகளின் முகத்திலேயே பார்த்துக்கொண்டிருந்தார்.

அவளும் தயக்கத்துடன் அவரைப் பார்த்தாள்.

“சுமி! நான் உன் அப்பா! என்கிட்ட தயங்கவேண்டிய அவசியம் இல்லயே” என்றவர், “சொல்லமுடியாத அளவு…” என்றவர் சங்கடத்துடன் பார்வையை அகற்றிக்கொண்டு கேட்க வந்ததை பாதிலேயே நிறுத்தினார்.

“சேச்சே அதெல்லாம் இல்லப்பா…” என்றவள் மெல்லிய குரலில் நடந்ததைச் சொல்லிமுடித்தாள்.

“இதுக்காக நீங்க வொர்ரி பண்ணிக்காதீங்கப்பா! கல்யாணத்துக்குப் பிறகு தெரிய வேண்டியது, முன்னாலயே தெரிஞ்சிடுச்சி. இப்பவே எல்லாத்துக்கும் தயாராயிருக்க எனக்கு ஒரு வாய்ப்பா நினைச்சிக்கிறேன். சின்ன வயசுலயிருந்து கிஷோரோட ஒரு பக்கத்தையே பார்த்து வளர்ந்துட்டேன்.

இப்போ, இன்னொரு பக்கத்தைப் பார்த்ததும் பயம்னு சொல்ல முடியாது. சின்ன அதிருப்தி வந்துடுச்சி. இது நம்ம கிஷோர்ங்கறதால இருக்கலாம்ப்பா! மத்தபடி இந்தக் கல்யாணம் வேண்டாம்னு நினைக்கிற அளவுக்கு எதுவும் இல்லை”
என்றாள்.

மகளின் வார்த்தைகளால் தான் சமாதானமாகவில்லை’ என்பதைப் போல அவரது முகம் இன்னமும் தெளிவில்லாமல் இருந்தது.

“என்னோட வார்த்தையை நம்பலையாப்பா!”

“இல்லம்மா! முதல் கோணல் முற்றும் கோணல் மாதிரி இது எல்லாத்துக்கும் பிள்ளையார் சுழியா அமைஞ்சிடக்கூடாதேன்னு இருக்கு” என்றார்.

“அப்போ நான் சொன்னது கரெக்ட்தான். உங்களுக்கு என்மேல நம்பிக்கை இல்லை” என்று புன்னகையுடன் சொன்னவளை, ஆயாசத்துடன் பார்த்தார்.

“சின்னப் பிள்ளையிலிருந்தே, உங்களையே பார்த்து வளர்ந்தவப்பா நான். அன்பு, பாசம், பொறுமை, நிதானம்னு எனக்கு எல்லாமே சொல்லிக் கொடுத்திருக்கீங்க. நிச்சயமா, தப்பான முடிவை எடுக்கமாட்டேன். ஒண்ணை மட்டும் புரிஞ்சிக்கிங்க.

கிஷோர் மேல எனக்கு எந்தக் கோபமும் இப்போ இல்ல. வருத்தம் மட்டும்தான் இருக்கு. நிச்சயமா கல்யாணத்துக்குப் பிறகு அவரை மாத்திடுவேன்னு நம்பறேன்” என்றவளை கங்காதரன் கூர்ந்து நோக்கினார்.

நாக்கைக் கடித்துக் கொண்டவள், “உங்க பார்வைக்கான அர்த்தம் நல்லாவே புரியுதுப்பா! கல்யாணத்துக்குள்ள என்னை நான், தயார் பண்ணிக்குவேன். எல்லாத்துக்குமே முதல்ன்னு ஒண்ணு இருக்கு இல்லயா. அதையே, நான் கடந்து வந்துட்டேனே.

என் வாழ்க்கையை நான் சீராக்கிக்குவேன்ப்பா! ஏன்னா, நான் உங்க வளர்ப்பு. என் கழுத்துல தாலி ஏறும் வரைக்கும் நான் உங்க பொண்ணுதாம்ப்பா! எந்த நல்லது கெட்டதுன்னாலும், கங்காதரனோட மகள்னுதான் சொல்வாங்களே தவிர… இன்னார் வீட்டு வருங்கால மருமகள்னு சொல்லமாட்டாங்கப்பா” என்று தெளிவாகப் பேசியவளை மெல்லிய புன்னகையுடன் பார்த்தார்.

“இப்போ திருப்தியாப்பா! சாப்பிடலாமா! எனக்கு ரொம்பப் பசிக்குது” என்றாள்.

“ம், போலாம்மா!” என்றவர், அவளது தலையில் கையை வைத்து, “அந்தக் கடவுளும், உன் அம்மாவும் எப்பவும் உனக்குத் துணையா இருப்பாங்கடா” என்றவரது கண்களில் மெலிதாக ஈரம் படர்ந்தது.

புன்னகைக்க முயன்றவளது இமைகளும் நனைய, உதட்டைக் கடித்தபடி மெல்லத் தலையைக் குனிந்துகொண்டாள்.

**************
தந்தையிடம் மனம்விட்டுப் பேசியதாலோ என்னவோ, சுமித்ரா மீண்டும் தனது பழைய நிலைக்கு மாறியிருந்தாள். இரவு உணவிற்குப் பிறகு எப்போதும் போலத் தந்தையுடன் சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்தாள்.

அவருக்கு மாத்திரைகளைக் கொடுத்து அறையின் விளக்கை நிறுத்திவிட்டுத் தனது அறைக்குச் செல்லத் திரும்பினாள்.

தந்தையிடம் பேசிய பின்பும் திருமண அழைப்பிதழைப் பார்க்கவில்லை என்பது நினைவில் வர, பூஜையறையிலிருந்த ஒரு அழைப்பிதழை எடுத்துக்கொண்டு திரும்பினாள்

ஹாலில் புன்னகையுடன் ஹாலில் நின்றிருந்த தந்தையைக் கண்டதும், லேசான வெட்கத்துடன் தனது அறைக்கு ஓடினாள்.

மகளின் இந்த நடவடிக்கையே போதும் என்பதைப் போல மலர்ந்த முகத்துடன் படுக்கையில் சாய்ந்தார் கங்காதரன்.

அறைக்கு வந்தவள், தலையிலேயே மெல்லத் தட்டிச் சிரித்துக்கொண்டாள்.

முதுகிற்குத் தலையணை ஒன்றை வைத்தபடி, படுக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்தவள், அலாரம் வைப்பதற்காக மொபைலை எடுத்தாள்.

அப்போது தான் கவனித்தாள், தான் தந்தையுடன் பேஎசிக்கொண்டிருந்த நேரத்தில் இருமுறை கிஷோரிடமிருந்து மிஸ்டு கால்கள் வந்திருந்தன.

அதைப் பார்த்துக்கொண்டிருந்த போதே, ‘சுமி! தூங்கிட்டியா?’ என அவனிடமிருந்து குறுஞ்செய்தி ஒன்றும் வந்தது.

முறுவலுடன், ‘இல்லை’ என்று பதிலனுப்பினாள்.

‘உனக்கு ஆட்சேபணை இல்லன்னா, கால் பண்ணட்டுமா?’ என்று மற்றுமொரு தகவல் வர, ‘ம்ம்’ என்று பதிலனுப்பினாள்.

அடுத்த நிமிடமே கிஷோரிடமிருந்து அழைப்பு வர, “ஹலோ” என்றாள்.

“சாப்டியா சுமி!” என்றான்.

“ம், நீங்க?” என்றாள்.

“அதெல்லாம் ஆச்சு” என்றவன், “இன்விடேஷன் பார்த்தியா?” என்று இளகிய குரலில் கேட்டான்.
“பார்த்துட்டே இருக்கேன். என் கைலதான் இருக்கு” என்றாள்.

“ஓஹ்! நீயுமா… நானும் கைலயே தான் வச்சிருக்கேன். நீ என் கைக்கு வர, இன்னும் ரெண்டு மாசம் இருக்கு…” என்று பெருமூச்சு விட்டான்.

“ஹலோ! என்ன பேச்சு ரூட்டு மாறுது” என்றாள்.

“நீ ஏன் தப்பா நினைச்சிக்கிற? கல்யாணம் செய்துக்கப் போறவங்களுக்கு நடுவில் இப்படிப் பேசறதெல்லாம் சகஜம் தானே…” என்றான்.

அவள் மௌனமாக இருக்க, “கோபமா சுமி!” என இறங்கிய குரலில் கேட்டான்.

அவளுக்கு என்ன தோன்றியதோ, “இல்ல சொல்லுங்க” என்றாள்.

“ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சிக்கக்கூடாது” என்றான்.

“அப்போ என்னவோ தப்பா கேட்கப்போறீங்க. அப்படித்தானே…” என்றாள்.

“ஹேய்! எல்லாத்துக்கும் குதர்க்கமா யோசிக்காதே” என்றான்.

“அப்போ நீங்க நேரா விஷயத்தைச் சொல்லணும். இப்படி தேவையில்லாத கேஎள்வியெல்லாம் கேட்கக்கூடாது” என்றாள்.

“சரி சரி. நம்மளோட இந்தச் சந்தோஷத்தைக் கொண்டாட, லஞ்சுக்குப் போகலாமா?” எனக் கேட்டான்.

அவள் சட்டென மௌனமாகிவிட, அவனுக்கு அவஸ்தையாகிப் போனது.

‘திரும்ப முருங்கைமரம் ஏறிட்டாளோ’ என்ற நினைப்புடன் தலையில் அடித்துக் கொண்டான்.
தயக்கத்துடன், “சுமி!” என்றான்.

“உங்க வேலையைத் திரும்ப ஆரம்பிச்சிட்டீங்க இல்ல” என்றாள் கடுப்புடன்.

தலையிலேயே அடித்துக்கொண்டவன், “சாரி சுமி! உனக்குப் பிடிக்கலைன்னா வேணாம்” என்றவன் சட்டென போனை வைத்தான்.

அவன் போனை வைத்ததும், சுமித்ராவிற்கே பாவமாகிப் போனது.

அவனது சில பழக்கவழக்கங்கள் பிடிக்கவில்லை என்பதற்காக, அவனுடைய சின்னச் சின்ன விருப்பங்களைக் கூட மறுப்பது முறையல்ல என்று நினைத்தாள்.

இதே இருவரும் மனமொத்திருந்தால், தான் மறுத்திருக்கவே போவதில்லை என்பதும் புரிந்தது. தானும் சற்று விட்டுக்கொடுத்துப் போவதில் தவறில்லை என்று நினைத்தாள்.

உடனே, “உங்க விருப்பப்படி லஞ்சுக்குப் போகலாம்” என்று அவனது எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.

தேங்க்யூ தேங்க்யூ என்று பத்து தேங்க்யூவுடன் இதயம் துடிப்பது போன்ற ஸ்மைலியுடனும் அவனும் ஒரு தகவலை அனுப்பினான்.

அதைப் பார்த்ததும் மெலிதாக முறுவலித்தவள், ‘கொஞ்சம் டைம் கொடுங்க கிஷோர். நிச்சயமா நம்ம கல்யாண வாழ்க்கையை, நான் மோசமாக்கிட மாட்டேன்’ என்று எண்ணியபடியே திருமண அழைப்பிதழை பார்த்தபடியே உறங்கிப் போனாள்.

Categories
On-Going Novels ஷெண்பா

அத்தியாயம் – 11

அத்தியாயம் – 11

அறைக்குள்ளேயே கோபத்துடன் நடந்துகொண்டிருந்த கிஷோரின் சிவந்திருந்த கண்களில், அத்தனை ஆவேசம்.

“என்னோட அமைதியை, உங்களுக்குச் சாதகமா பயன்படுத்திக்கலாம்னு மட்டும் நினைக்காதீங்க. அப்படி ஏதாவது ஐடியாயிருந்தா, அதை இந்த நிமிஷத்தோட தலைமுழுகிடுங்க.”

சுமித்ரா சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவனது காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்க, ஆத்திரத்துடன் கையில் கிடைத்த பிளவர் வாஸைத் தூக்கி எதிரிலிருந்த கண்ணாடியில் வீசினான்.

அவனது ஆத்திரத்திற்கு ஈடுகொடுக்கமுடியாத அந்த ஆளுயர பெல்ஜியம் கண்ணாடி, உடைந்து சில்லுச் சில்லாகச் சிதறியது.

சப்தம் கேட்டு ஓடிவந்த மந்த்ராவும், மிதுனாவும் திகைத்து நின்றிருக்க, கிஷோர் வெறித்த பார்வையுடன் கட்டிலில் அமர்ந்திருந்தான்.

“உனக்கென்னடா புத்திகித்தி கெட்டுப் போச்சா! எவ்ளோ காஸ்ட்லியான கண்ணாடி இப்படித் தூக்கிப் போட்டு உடைச்சிருக்கியே. கூடவே அந்தக் கிரிஸ்டல் பிளவர் வாஸ் வேற…” என்று புலம்பினாள் மிதுனா.

தனது பேச்சைக் காதில் வாங்காமல் அமர்ந்திருக்கும் தம்பியைப் பார்த்து, அவளுக்கு எரிச்சல்தான் வந்தது.

“நான் கேட்டுட்டிருக்கேன் வாயைத் திறக்காம உட்கார்ந்திருக்கான் பாரு… டேய்!” என்றவளை சட்டென நிமிர்ந்து பார்த்தான்.

“என்ன பண்ணணும்ங்கற? உன் வேலையை மட்டும் பார்த்துட்டுப் போ. அக்கான்னு ஒரு மரியாதைக்குப் பேசாமயிருந்தா, என்கிட்டயே எகிருற…” என்று காட்டுக்கத்தலாகக் கத்தினான்.

மெல்ல அவனை நோக்கி வந்த அன்னையின் பின்னால், தஞ்சமாகிக் கொண்டாள் மிதுனா.

“கிஷோர் என்னாச்சு?” எதுவுமே நடக்காதது போல மிருதுவான குரலில் கேட்டார் மந்த்ரா.

“என்ன நடக்கணும்? நீங்க சொன்ன ஒரே காரணத்துக்காக அவளைத் தேடிப் போனேன். என்னவோ பெரிய இவ மாதிரி பேசறா. அப்படியே ரெண்டு அறை விட்டிருப்பேன். நீங்க சொன்ன ஒரே காரணத்துக்காகத்தான் விட்டேன். கல்யாணத்தை நிறுத்திடுவாளாம். எப்படி? எப்படி நிறுத்துவா? நான் இருக்கும் போது விட்டுடுவேணா… உடம்பு முழுக்க ஈகோ!” என்றவனுக்கு மேல்மூச்சு வாங்கியது.

“அவள் சொன்னதுல என்ன தப்பு? உன்னைப் பிடிக்கலன்னு விலகினா, உன்னால என்ன செய்யமுடியும்?” என்ற மந்த்ராவை எரிப்பதைப் போலப் பார்த்தான்.

“எப்படி? எப்படி? எப்படி முடியும்?” என ஆங்காரத்துடன் கத்தியவனைத் திகைப்புடன் பார்த்தனர் இருவரும்.

“நா..ன் நினைக்கணும். அவள் எனக்கு வேணும்னு நான்தான் நினைச்சேன். அதேமாதிரி அவள் எனக்கு வேணாம்னாலும், நான்தான் நினைக்கணும்” என்று கர்ஜித்தான்.

மந்த்ரா, மகனையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

“அம்மா! நான் அவளை எவ்ளோ லவ் பண்றேன். அவளைத் தொட எனக்கு உரிமை இல்லையா? நான் அவகிட்ட அத்துமீறியாம்மா நடந்துகிட்டேன்! என்னோட பிரியத்தை வெளிப்படுத்தினது தப்பா! பிடிக்கலைன்னா மெதுவா சொல்லியிருக்கலாம் இல்ல.

என்னவோ செய்யக்கூடாததை செய்துட்டா மாதிரி, அத்தனைப் பேருக்கு முன்னால என்னைத் தள்ளிவிட்டுட்டு ஓடுறா. என் ஃப்ரெண்ட்ஸ், அங்கே இருந்தவங்கன்னு…” என்றவன் தலையைக் கோதிக் கொண்டான்.

“அந்தநேரத்துல எனக்கு எப்படியிருந்திருக்கும்னு சொல்லுங்க. ஒவ்வொருத்தரோட பார்வையும் என் மேலதாம்மா இருந்தது. எனக்குன்னு ஒரு மரியாதை இருக்கும்மா. அன்னைலயிருந்து இன்னைக்கு வரைக்கும், அவளை என் மனசுக்குள்ள வச்சிருக்கேன்.

என்னையே சுத்திச் சுத்தி வந்தவங்களையெல்லாம் இவளுக்காகவே ஒதுக்கினேம்மா! என்னை எவ்ளோ அசிங்கப்படுத்திட்டா தெரியுமா! என்னோட நிலைல வேற எவனாவது இருந்திருந்தா, நடக்கறதே வேற. நான் என்னன்னா, அவகிட்ட போய் மன்னிப்பு கேட்டுட்டு வரேன்.

இதுல வீட்ல அத்தனைப் பேரும், அவளுக்கு ஆதரவா பேசிட்டிருக்கீங்க. செய்யக்கூடாத பாதகத்தைச் செய்துட்டா மாதிரி, என் முகத்துக்கு நேரா கைநீட்டி பேசறாம்மா! அவளோட திமிரை அடக்க, எனக்கு எவ்வளவு நேரம் ஆகும். ஆனா, அந்தத் திமிர்தான் அவகிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்சது” என்றவன் சற்றுநேரம் தலையை உயர்த்தி கண்களை மூடி நின்றிருந்தான்.

கடுகடுத்த முகத்துடன் கேட்டுக்கொண்டு நின்றிருந்த மந்த்ரா, நீண்ட பெருமூச்சு எடுத்து தன்னைச் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

“கிஷோர்! போதும் உனக்கு ஓவரா ஏறிப் போயிருக்கு. போய் கெஸ்ட் ரூம்ல இரு. ரூமைக் க்ளீன் பண்ணச் சொல்றேன்” என்றார்.

கண்களைத் திறந்து பார்த்தவன், “அம்மா! என்னோட சுமிம்மா! என்னோட தேவதைம்மா!” என்று கெஞ்சும் குரலில் சொன்னான்.

அதுவரை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த மிதுனா, “என்னடா பெரிய தேவதை! சுமி, சுமின்னு அவளையே சுத்திச் சுத்தி வர்ற உன்னையே, வேணாம்னு சொல்ல தயாராதானே இருக்கா. அவளைப் போய்…” எனப் பேசிக்கொண்டே சென்றவளின்மீது போட்டோ ஃப்ரேம் வந்து விழ, “ஐயோ! அடிக்கிறாம்மா!” என்றபடி அன்னையின் பின்னால் மறைந்து கொண்டாள்.

“நீ ஒருத்தி!” என்றவர், வேகமாக கிஷோரின் கரத்தைப் பற்றினார்.

“விடுங்கம்மா… அவளை, அக்கான்னு பார்க்க மாட்டேன்” என்றவனை இழுக்க முடியாமல் இழுத்து கட்டிலில் அமரவைத்தார்.

“என் சுமியை நான் என்ன வேணா சொல்வேன். அதைக் கேட்கவும் அவளைத் தப்பா பேசவும் யாருக்கும் உரிமையும் இல்ல, அதிகாரமும் இல்ல. என்னோட சுமி! மை லவ்!” என்று உறுமினான்.

“சரி, அவள் உன்னோட சுமிதான். முதல்ல நீ படு…” என்றவர் மிதுனாவை வெளியில் செல்லும்படி கண்ணால் ஜாடை காட்டினார்.

மகனைச் சமாதானம் செய்துவிட்டு அவர் வெளியில் வந்தபோது, பெரும் குழப்பத்தில் இருந்தார்.

“என்னம்மா இப்போ என்ன திட்டம் போட்டுட்டிருக்க?” எனக் கேட்டா மிதுனா.
“இவனை நம்பி, அவளை கட்டிவைக்க ஒத்துகிட்டது தப்பா போயிடும் போலயிருக்கு. இப்போ இருக்கற நிலையில அவள் தன்னோட தாத்தாவை பார்க்கக்கூட சம்மதிக்கமாட்டான்னு நல்லா தெரியும். கல்யாணத்துக்குப் பின்னால நாம கொடுக்குற பிரஷர்ல, சுமி அவளோட தாத்தாவோட சமாதானமாக நிறைய வாய்ப்பு இருக்கு. அதே அளவுக்கு ஆகாமலிருக்கவும் சான்ஸ் இருக்கு. அதாவது அவள் நமக்கு எதிரா திரும்பவும் சான்ஸ் இருக்கு. இந்தப் பையன் அவள்கிட்ட இப்பவே இப்படி மயங்கியிருந்தா சொல்லவா வேணும். இவனே நம்ம திட்டத்துக்கு ஒத்துக்கமாட்டானே…” கவலையும், குழப்பமுமாகச் சொன்னார்.

“நீங்க இப்படி டென்ஷன் ஆகற அளவுக்கு எதுவுமே இல்லை” என்ற மகளை அதிசயமாகப் பார்த்தார்.

“எப்படியும் தாத்தா சொத்து, பேத்திக்குத்தான். சுமியோட அம்மா அவங்க அப்பாவுக்கு ஒரே பொண்ணு. வேற வாரிசே இல்ல… அப்போ நியாயமா அந்தச் சொத்து இவளுக்குத் தானே வரும்” என்றாள்.

“அறிவுக்கொழுந்து தான் நீ! இது தெரியாதா எனக்கு. ஒருவேளை அவள் அந்தச் சொத்தே வேணாம்னு எழுதிகொடுத்துட்டா… இந்த விஷயத்துல கிஷோரும் அவளோட பேச்சைத்தான் கேட்பான். பல விஷயங்கள்ல அவன் என்னை மாதிரின்னாலும், சில விஷயங்கள்ல அவன் உங்க அப்பாவையே கொண்டு வந்திருக்கான்” என்றார்.

“ஓ! இப்படி ஒரு விஷயம் இருக்கா…”

“கூடவே இன்னொரு விஷயத்தையும் நீ மறந்துட்ட. இப்போதைக்கு அந்தக் கிழவனோட சொத்தை நிர்வாகம் பண்றது அவரோட ஒண்ணுவிட்ட அண்ணன் மகன். பேத்தி மேலே வர்ற விரக்தியில கிழவன் எல்லாத்தையும் அந்தக் குடும்பத்துக்கு எழுதி வச்சிட்டா…” என்ற சந்தேகத்தை எழுப்பினார் மந்த்ரா.

“ஆமாம்மா! நீ சொல்றது ரொம்ப கரெக்ட். இப்போ என்ன பண்ணப் போறீங்க?”

“உன் தம்பியோட அவசர புத்திக்கும், அந்த ராங்கிக்காரியோட புத்தி எதையாவது ஏடாகூடமா யோசிச்சி கல்யாணத்தை நிறுத்தறேன்னு கிளம்பறதுக்குள்ள முடிவு எடுக்கணும். அதுக்கு ஒரே வழி… ஆறு மாசம் தள்ளி வச்ச கல்யாணத்தை, மூணு மாசத்துல நடத்தப் போறேன். இன்னைக்கே இதைப் பத்தி கங்காதரன்கிட்ட உங்க அப்பாவை பேசச் சொல்றேன்.

சுமியோட தாத்தாவுக்கு நானே பத்திரிகை அனுப்பப் போறேன். ஆனா, அனுப்பினது நாமதான்னு அவருக்கே தெரியக்கூடாது. அதுக்கு முன்னால உன் தம்பி அந்தக் கிழவனுக்கு அறிமுகமாகணும். அதுக்கு வேலை விஷயமா இடம் பார்க்கணும்னு உன் தம்பியை ஜெய்பூருக்கு அனுப்பப் போறேன்.

நானும் எப்போ எந்தக் குண்டு வெடிக்குமோன்னு, வயத்துல நெருப்பைக் கட்டிக்காம கொஞ்சமாவது நிம்மதியா இருப்பேன். நீ உன் வீட்டுக்காரருக்கு போனைப் போட்டு, நாளைக்குக் காலைல இங்கே வரச்சொல்லு. ரெண்டு பேரும் போய் இன்விடேஷன் டிசைன் செலக்ட் பண்ணி பிரிண்டிங் கொடுத்துட்டு வந்துடுங்க” என்றார்.

அன்னையை விழியகலாமல் பார்த்தாள் மிதுனா.

“எவ்ளோ வேகமா பிளான் போடுறம்மா!” என்றாள் மெச்சுதலாக.

“பிளான் போடுறது பெரிசு இல்லை. அதைச் சரியா செயல்படுத்தணும். சும்மா பேசிட்டே நின்னா, எதுவும் நடக்காது. உங்க அப்பாவுக்குப் போனைப் போட்டு உடனே, கிளம்பி வீட்டுக்கு வரச்சொல்லு. ஈவ்னிங் சுமித்ரா வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடி, நாங்க அவங்க வீட்ல இருக்கணும்” என்றார்.

************

கேட்டைத் திறந்த சுமித்ரா அங்கே இருந்த கேஷவ்நாத்தின் காரைக் கண்டதும் பெரிதாக எதுவும் நினைக்காமல் வீட்டிற்குள் நுழைந்தாள்.

“எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லண்ணா! ஆறு மாசம் ரொம்ப தள்ளி இருக்கறதா சம்மந்தி வீட்ல அன்னைலயிருந்தே சொல்லிட்டிருந்தாங்க. நாமளும் பிஸினஸ் டெவெலப்லெண்ட் அது இதுன்னு இருக்கறதால, கல்யாணத்தை சீக்கிரம் முடிச்சிட்டா, ரெண்டு பேரும் சேர்ந்து பார்த்துப்பாங்க. சுமியும் எங்க வீட்டுக்கு வந்துட்டா… வேலை வேலைன்னு அலையறவனை அவள் கவனிச்சிக்குவா” என்று சொல்லிக்கொண்டிருந்த மந்த்ராவின் குரலைக் கேட்டதும் வாசலிலேயே நின்றாள் சுமித்ரா.

அவர்கள் வந்திருக்க்கும் காரணத்தைக் கேட்டவளுக்கு, ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கணக்கிடத் தெரியாதவளா அவள்!

முகத்தில் எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டாமல் தன்னை இயல்பாக்கிக் கொண்டு உள்ளே சென்றாள்.

“வா சுமி! ஆஃபிஸ் வேலையெல்லாம் எப்படிப் போகுது?” அன்பொழுகக் கேட்ட மந்த்ரா அவளது கரத்தைப் பற்றித் தன்னருகில் அமரவைத்துக் கொண்டார்.

“ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா, சேலஞ்சிங்கா இருக்கு ஆன்ட்டி! எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” என்றாள்.

“ம், கூடவே கிஷோரும் இருக்கான். அப்புறம் என்ன?” என்று சிரித்தவரை மௌனமாக முறைத்துப் பார்த்தாள் சுமித்ரா.

அடுத்ததாக அவளது பார்வை கேஷவ்நாத்திடம் செல்ல, அவர் சங்கடத்துடன் அவளது பார்வையைத் தவிர்த்தார்.

அவர்களது பேச்சு திருமணத்தைச் சுற்றியே இருந்தது. பேச்சிற்கு நடுநடுவே மந்த்ரா, அவளையும் ஏதேனும் கேட்டுக்கொண்டே இருந்தது வேறு எரிச்சலைக் கிளப்பியது.

“நான் டீ போட்டுட்டு வரேன் ஆன்ட்டி!” என்று சமையலறைக்குள்ளேயே சற்றுநேரம் இருந்தாள்.
டீயை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு இதோ வந்துவிடுகிறேன் என்றவள், உடைமாற்றும் சாக்கில் மேலும் ஒரு பத்து நிமிடங்களை கடத்தினாள்.

வெகுநேரம் அறைக்குள்ளேயே இருக்கமுடியாது என்று உணர்ந்து வெளியே சென்று அவர்களுடன் அமர்ந்தாள்.

“சரி கங்காதரா! நாங்க எல்லா ஏற்பாட்டையும் பண்ணிடுறோம். இன்விடேஷன் ரெண்டு நாள்ல வந்துடும். வந்ததும் எடுத்துட்டு வரேன்” என்றவர் எழுந்து நின்றார்.

“ஹப்பா! கிளம்பிவிட்டார்கள்’ என்ற நிம்மதி உணர்வு மனத்தில் எழுந்ததும், அதுவரையிருந்த அவஸ்தை மறைந்து அவளது முகம் மெல்ல இளகியது.

அவர்களை வழியனுப்பி விட்டு வந்த கங்காதரன், மகளின் கையைப் பற்றி அழைத்து வந்தார்.

“சுமி! நீ இன்னும் ஆறே மாசம்தான் என்கூட இருக்கப் போறேன்னு நினைச்சிட்டிருந்தேன். இப்போ அது இன்னும் ரெண்டே மாசம்னு குறைஞ்சிடுச்சி. உன்னை விட்டுப் பிரியணும்னு மனசு வலிச்சாலும்… என்னோட கடமை முடியுதுன்னு ரொம்பச் சந்தோஷமா இருக்கும்மா! உன் அம்மா இப்போ இல்லைங்கறது தான்ம்மா ஒரே குறை” என்றவரது இமைகள் நனைந்தன.

தந்தையின் கண்ணீரைத் துடைக்கக்கூட மனமில்லாமல் எழுந்து தன்னுடைய அறையிலிருந்த அன்னையின் புகைப்படத்தின் முன்பாக சென்று நின்றாள்.

‘அம்மா! நீங்க இருந்திருந்தா இந்தக் கல்யாணம் நடக்காமலே போயிருக்கலாம். அப்பாவைப் பார்க்கும்போதெல்லாம் அவர்கிட்ட எல்லாத்தையும் மறைக்கிறோமேன்னு கஷ்டமா இருக்கும்மா! ஆனா, எந்தச் சூழ்நிலையையும் நான் சமாளிச்சிடுவேம்மா… அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. நீ எப்பவும் எனக்குத் துணையாயிருந்தா போதும்மா!’ என்று அன்னையின் படத்தைப் பார்த்து மானசீகமாக வேண்டிக்கொண்டாள்.
அலுவலகத்திலிருந்து நேரம் கழித்தே வந்த மித்ரன், இரவு உணவை முடித்துக்கொண்டு அறைக்கு வந்தமர்ந்தான்.

காலையில் சுமித்ராவின் நம்பரை அழித்ததிலிருந்தே மனம் ஒரு நிலையில் இல்லை.

‘அவளுக்கு வேண்டுமானால் என்னுடைய அக்கறை அதிகப்பிரசங்கித்தனமாகத் தெரியலாம். ஆனால், அவள் என்னுடைய ஆசிரியரின் மகள். அவருடைய நலனில் எனக்கும் அக்கறையிருக்கிறது. அவளுடைய வாழ்க்கையை அவள் சீராக்கிக்கொள்ள முடியுமென்ற எண்ணம் இருக்கையில், நான் தலையிடுவது சரியில்லை. இருந்தாலும், இப்போது அவளது மனநிலை எப்படியிருக்கிறது எனத் தெரியவேண்டும்’ என்று நினைத்துக் கொண்டே புரொஃபசரின் போனுக்கு அழைத்தான்.

சூடாக்கிய பாலை டம்ளரில் ஊற்றிக்கொண்டிருந்த சுமித்ரா, “சொல்லுப்பா மித்ரன்! எப்படியிருக்க?” என்ற விசாரிப்பில் சட்டெனத் திரும்பிப் பார்த்தாள்.

பாலுடன் தந்தையின் அறைக்குச் சென்றவள், டம்ளரை மேஜை மீது வைத்துவிட்டு படுக்கையைத் தட்டிப் போட்டாள்.

கைகள் வேலையைச் செய்துகொண்டிருந்தாலும், செவிகள் அவர்களது உரையாடலைச் செவிமடுத்துக் கொண்டிருந்தது.

இருவருமே பொதுவான விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தனர். சற்று ஆசுவாசமானவள் அறையிலிருந்து வெளியேறியவளது காதுகளில் தனது பெயர் அடிபடுவதைக் கேட்டு நின்று கவனித்தாள்.

“நல்லாயிருக்காப்பா! இன்னைக்கு அவளோட மாமியார் வீட்லயிருந்து வந்திருந்தாங்க. கல்யாணத்தை இன்னும் ரெண்டே மாசத்துல முடிச்சிடணும்னு முடிவு பண்ணியிருக்கோம்…” என்றார்.
‘கடவுளே! இதற்கு விஜய்யின் பதில் என்னவாக இருக்கு’ என்று எண்ணியபடி ஷெல்ஃபிலிருந்த மாத்திரையை எடுத்தாள்.

“வாழ்த்தா… நீயே சொல்லிடேன்” என்றவர், மகள் கொடுத்த மாத்திரையை வாங்கிக் கொண்டு, போனை அவளிடம் கொடுத்தார்.
“மித்ரன் உனக்குக் வாழ்த்துச் சொல்லணுமாம்” என்றார் சிரிப்புடன்.

போனை வாங்கிக்கொண்டு ஹாலுக்கு வந்தவள் தயக்கத்துடன், “ஹலோ!” என்றாள்.

தனது குரலில் ஏன் இத்தனை நடுக்கம் என்று அவளுக்குப் புரியவேயில்லை.

அவன் மௌனமாக இருக்க, “விஜய்!” என்றாள்.

சீறலாக மூச்சுவிட்டவன், “குட் நைட்!” என்ற ஒற்றை வார்த்தையுடன் இணைப்பைத் துண்டித்தான்.

கையிலிருந்த மொபைலையே சற்றுநேரம் பார்த்துக்கொண்டிருந்தவள் ஆயாசத்துடன் போனைத் தந்தையிடம் கொடுத்தாள்.

“பேசிட்டியாம்மா!”

“ம்ம்” என்று புன்னகைத்தாள்.

“ரொம்ப நல்லப் பையன். நம்ம பேமலி மேல ரொம்ப அக்கறை வச்சிருக்கான். காலேஜ்ல படிக்கும் போதே உன்னைப் பத்தியும், உன் படிப்பைப் பத்தியும் விசாரிச்சிட்டே இருப்பான். அவனோட பிஸ்னஸை ஆரம்பிச்சதும் தான் என்கிட்ட பேசறதே கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சி போச்சு.

அதுக்கு அப்புறம் காலேஜ் அலுமினில பார்த்துகிட்டதோட சரி. அதுவும் எனக்கு அட்டாக் வந்ததுலயிருந்து வேலைக்குப் போகக்கூடாதுன்னு வி.ஆர் வாங்க வச்சிட்ட. இந்த வருஷம் அலுமினிக்கும் போக முடியல. இருந்தாலும், என்னை வந்து பார்த்துட்டுப் போனான்.
ரொம்பத் திறமையான, பொறுப்பான பையன்! ஒருநாளைக்கு இந்த ஊரே அவனைப் பத்திப் பேசும் பார்த்துட்டே இரு” என்று அவனைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க, சிறுமுறுவலுடன் கேட்டுக்கொண்டிருந்தாள்.

தனது தந்தைக்கு அவன் மீது ஒரு பாசமும், அவனுக்குத் தந்தையின் மீதும் தனி மரியாதையும் இருப்பது அவளுக்குப் புரிந்தது.

‘நானும் காலையில் அவனை வெட்டிவிடுவதைப் போல பேசியிருக்கவேண்டாம். அந்தக் கோபத்தின் விளைவுதான் இந்தக் குட்நைட்’ என்று நினைத்துக் கொண்டவளுக்குத தனது கவலைகளையும் மீறிச் சிரிப்பாக வந்தது.

Categories
On-Going Novels வேத கௌரி

அத்தியாயம் – 14

உயிர் -14
“விழியின் ஓரம்
ஓர் இமையோடு
உறங்கும் நீராக
இருந்து வாழ
விரும்பினேன் உனது நாளாக …..

தேனீர் கோப்பையில் மொய்க்கும் ஈக்களைப் போல அச்சம் வந்து தொற்றிக்கொள்ள , அந்த கோப்பையை கையிலெடுத்ததும் அத்தனை ஈக்களும் பறப்பதை போன்று  ஆகாயத்திற்கும் பூமிக்கும் நடுவில் அந்தரத்தில் இருப்பதை போல தனது காதலுடன் இருவரும் இருந்தனர் …
 வீட்டின் முன்புறம் உள்ள திண்ணையில் சிற்பியும் ,கோதையும், சரவணன் வாசலில்லுள்ள  கட்டிலிலும்  அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்த போது……
“எங்க காட்டுக்கும் பெய்யும் மழை
எருக்கலங் காட்டுக்கும் பெய்யும் மழை
வாண்ணத்தி வாசலிலே
வளத்தோடும் பெய்யும் மழை
ஊசிபோல மின்னி மின்னி
உலகமெல்லாம் பெய்யும் மழை
காசி போலே மின்னி மின்னிக்
கடை தெருவெல்லாம் பெய்யும் மழை
வட்டி வளருதுன்னு
வயக்காடெல்லாம் பெய்யும் மழை
சோழத்துப் பொண்டுகளா
சோத்துக்கு அழுவுறாங்களாம்
சோறு போடுங்காத்தோ சோறு “ என்று பாடலை பாடிக்கொண்டு ஊர்சிறுவர்கள் கையில் மண்சட்டியை வைத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாக உணவை வாங்கிக் கொண்டிருந்தனர் ….
அதை விசித்திரமாக  பார்த்த சிற்பிகா ,” ஏன் அத்தை இவங்க இப்படி வீடு வீடா சாப்பாடு வாங்கி சாப்பிடுறாங்க ,இவங்களுக்கு சாப்பாடு கிடைக்காத அவங்க வீட்டில் ..?” என்று பரிதாபமாக கேட்க …
“ அப்படி இல்லை சிற்பி , இதுபோல வீடு வீடா  சாப்பாடு வாங்கி ,ஒரு இடத்தில் வைச்சு அதை ஒண்ணா கலந்து இவங்களுக்குள் பகிர்ந்து சாப்பிடுவாங்க ,பிறகு அந்த மண்சட்டியை ஊர் முஞ்சந்தியில் வைச்சு உடைச்சுட்டு, அதை சுத்தி ஒப்பாரி பாட்டு பாடி திரும்பி பார்க்காமல் வந்துடுவாங்க …அப்படி செய்தால் மழை வரும்ன்னு ஒரு நம்பிக்கை ..இதை மழைச் சோறுன்னு சொல்லுவாங்க …” என்று விளக்கம் கொடுத்து விட்டு தங்கள் பங்கு உணவை அச்சிறுவர்களுக்கு போட்டு அனுப்பிவைத்தார்…
“ இப்படி பண்ணா…. மழை வரும்ன்னு சொல்லுறது உண்மையா ..?” என்று ஆச்சிரியத்துடன்  கேட்க …
“ம்ம் ,மழை வரும்மா …” என்று சரவணனும் சொல்ல …
“அப்போ ,மழைவராம கஷ்ட்டப்படுற ஊர்லலெல்லாம் இப்படி பண்ண சொல்லலாமே …” என்று கேலியுடன் சொல்லவும் ..
அதற்கு சரவணன் “ சில சடங்குகளுக்கு சில காரணம் இருக்கும்மா ..மழை வருதோ இல்லையோ , கஷ்ட்டபடுற குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள் ,இந்த ஒரு வேளை உணவையாவது சாப்பிடுறது , அடுத்து ஏழை பணக்காரன் ஜாதி  வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் சரிசமமா உணவை பகிர்ந்து சாப்பிடுறதுன்னு சில நல்ல விசயங்களும் இருக்கும்மா “ என்று நீண்ட விளக்கம் கொடுக்க …கோதையும் அதை ஆமோதித்தார் …  
சிறுவர்கள் சென்ற சிறிது நேரத்தில் மழைமேகம் திரண்டு ,பளிச்சென்ற மின்னல் கீற்றோடு ,இடி முழங்க ,மேகம் கரைந்து ,ஊசிகற்றைகளாய் தூறல் தூவ ஆரம்பித்தது ….
சட்டென்று அனைவரும் வீட்டுக்குள் புகுந்து கொள்ள , “ அச்சச்சோ நான் நம்ம செவங்காளையையை வெளியிலேயே கட்டிபோட்டுட்டேனே ,பாவம் மழையில் நனையுமே …” என்று தன் வளர்ப்புபிள்ளையான மாட்டின் மீது பரிதாபபட்டு கவலையுடன் நிற்கவும் ,அந்நேரம் பணி முடிந்து வந்த சித்தார்த் அதைக்கேட்டு தான் சென்று தொழுவத்தில் கட்டிவிடுகிறேன் என்று சென்றுவிட்டான்  ,
சிறிதுநேரத்தில்   மின்சாரம் தடைபட, கோதை டார்ச்லைட் , குடை ரெண்டையும் எடுத்துக்கொண்டு செல்லமுற்பட ,சிற்பிகா அவரை தடுத்து அவள் வாங்கி கொண்டு சென்றாள் ..
காளையை கட்டிவிட்டு தன்  தலை மேல்விழுந்த மழைத்துளிகளை  உதற எண்ணி ,தலையை சிலுப்ப , அதேநேரம் பின்வாசல் கதவை திறந்த சிற்பிகாவின் மேலும் சில நீர்த்துளிகள் பட்டது ..                 
நெற்றி வகிட்டில் பட்ட நீரால் , உடல் சிலிர்த்து தலைகுனிய ,அந்நீர் வகிட்டில் இருந்து நெற்றி வழியே கூர் நாசியின் மீது பயணித்து ,மூக்கின் நுனியில் நின்று ,அவள் செவ்விதழ் பட்டு , அந்த சிறு ஒளியிலும் மின்னியது …
தன்னை அறியாமலே அவளின் மீது  காதல் பார்வையை பதிய செய்ய, அவனது விழி வீச்சில் கன்னங்கள் செம்மையுற விழிகள் தாழ்ந்தன  , அந்நொடி காதலிப்பதும் காதலிக்கபடுவதும் மனித வாழ்க்கை இருத்தலின் ஆதார ரகசியங்கள் என்று இருவருமே உணர்ந்தனர் …
இடியின் ஓசையாலும் ,கோதையின் வரவாலும் இருவரும் நினைவிற்கு வந்து வீட்டிற்குள் நுழைய .” ஏம்மா சிற்பி நீ ஏதோ ஹாஸ்பிடல் அட்ரெஸ் கேட்டியே…இவனுக்கு  தெரியும், கேளு சொல்லுவான் ..” என்று சொல்ல ..
“ எந்த ஹாஸ்பிடல் ,யாருக்கு…. என்ன உடம்புக்கு …? என்று விசாரிக்க …
“ எனக்கு இல்லை, என் ப்ரென்ட் கேட்டா, அவ வெளிமாநிலத்தை சேர்ந்தவ , எனக்கு தெரியலை ,அதான் அத்தைகிட்ட கேட்டேன் …” என ஒரு முகவரியை காட்டவும் , அதை பார்த்து விட்டு எப்படி போக வேண்டும் என்று விவரித்தான் …
மறுநாள் ஒரு வழக்கின் மருத்துவ  விசாரணைக்காக  சிற்பிகா விசாரித்த  அதே மருத்துவமனைக்கு வந்த சித்தார்த், மருத்துவரை  பார்த்துவிட்டு வெளியேறும் பொழுது ,
அங்கு ஒரு அறையுனுள் சிற்பிகா நுழைவதை பார்த்தான்  , நேற்று  விசாரித்தது  நியாபகம் வரவே , அவளிடம் செல்வோம் என்று நினைத்து நடந்து  செல்லும்போது ,  பெண் மருத்துவர் ஒருவர் ,” இந்த காலத்து பிள்ளைகளுக்கு இது எல்லாம் சர்வசாதாரணமா போச்சு, எவனோடவோ அலைய வேண்டியது , அப்புறம் கலைச்சுடுங்கன்னு காலில் விழுந்து  நம்ம உயிரை எடுக்கவேண்டியது  …” என்று சத்தமிட்டவாறே வெளியே வரவே ,
அவர் எதற்கு சத்தமிடுகிறார் என்பதை காவலன் மூளை உடனே கண்டுபிடித்ததால் அவனின் முகம் கோவத்தில் சிவந்ததது. தன் அலைபேசியை எடுத்து சிற்பிக்கு தொடர்பு கொள்ள , அவளோ அவனது அழைப்பை துண்டிக்க , மறுபடி தொடர்ந்து அழைக்கவே ,..
“இமயன்  ,முக்கியமான  கிளாசில் இருக்கேன் , அப்புறம் பேசுறேன் ..” என்று அவனின் பதிலையும் எதிர்பாராமல் அலைபேசியை அணைத்து நிமிர்ந்தவளின் பார்வையில் தன்னை பார்வையாலேயே எரிக்க முற்படும் சித்தார்த் படவே….. அவளுக்கு அந்த நொடி உள்ளுக்குள் ஒரு வித பயம் ஓடியது. ” அது வந்து ..” என்று வார்த்தைகள் தந்தியடிக்க …
தன் கையை உயர்த்தி ,” எந்த விளக்கமும் எனக்கு தேவையில்லை , உடனே என்கூட வா ..”என்று  இழுத்து சென்று தனது பைக்கின் அருகே சென்று கையை விட்டு ,” காலேஜ்ல முக்கியமான வேலையிருக்கா…. இல்லை வீட்டுக்கு போகலாமா …?” என்று அழுத்தமான குரலில் கேட்க ….
“ இல்லை வீட்டுக்கு போக வேண்டியது தான் …” என்றாள் உள்ளே போன குரலில்
அவனின் கோபம் வண்டியின் வேகத்திலிருந்தே சிற்பிக்கு தெரிந்தது . அன்றொரு நாள் ,பைக்கில் ஏற்றி செல்லாமல் தன்னை  ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தது நியாபகம் வந்து ,” அன்னைக்கு மட்டும் பார்க்குறவங்க தப்பா நினைப்பாங்க, இப்போ நினைக்க மாட்டாங்களா, துர்வாச முனிவருக்கு கோவம் வந்தா இது எல்லாம் தோணாது போல …” என்று அவனை மனதிற்குள் திட்டினாலும் அவனை எப்படி சமாளிப்பது என்ற பயம் ஓடியது …
வீட்டிற்க்கு வந்து அவளின் கையை பிடித்து அறைக்கு அழைத்து சென்றவன் ,” நீ எல்லாம் படிச்சவளா ..கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா ..இது தான் உதவி செய்யுற லட்சணமா , உனக்கும் அதுபோல இருந்தா அவ உனக்கு ஹெல்ப் பண்ணுறேன்னு சொன்னாளா ….” என்று கோவத்தில் வார்த்தைகளை விட ….
“ எந்த சலனமும் இல்லாமல் அவனையே பார்த்து ,காயப்பட்டு தரையில் விழுந்த பறவை போல் பரிதாப  பார்வை பார்த்தாள் …
,அவளின் அந்த பார்வை ,சித்தார்த்தின் கண் வழியே பாய்ந்து அவன் இதயத்தை என்னவோ செய்தது…
சிற்பிகாவின் கண்கள் லேசாக கலங்க ஆரம்பித்தது ,முத்து போல ஒரு துளி கண்ணில் இருந்து கிளம்பி கன்னங்கள் வழியே ஓடியது. உதடுகளை பற்களால் அழுந்த கடித்து ,அவனையே பார்த்தவள் , அப்படியே அமர்ந்து கால்களுக்கு இடையே முகத்தை புதைத்து குலுங்கி அழ ஆரம்பித்தாள் ..
அதை பார்த்து ,பதறி போனவனாக அவசரப்பட்டு அப்படி சொல்லிவிட்டேனோ …?, என இதயம் பதறியது , அவளை பற்றி நன்கு தெரிந்தும் ,காயபடுத்தி விட்டேனே ., தோளை பிடித்து உலுக்கி ..” ஐயோ …!! என்ன காமாட்சி இது …?, எழுந்திரு … அழாதே ..ப்ளிஸ்.. சாரிம்மா.. சாரி…”
“போடா . என்கிட்டே பேசாதே .” என்று திரும்பி அமரவே ..
“ப்ளிஸ்டி ..நான் சொல்லுறதை கொஞ்சம் கேளு..”..
“ நான் சொல்லவந்ததை நீ கேட்டியா ..ஒண்ணும் சொல்ல வேண்டாம் போ ..இது தான் நீங்க என்னை புரிஞ்சுகிட்டதா …” என்று கண்ணில் வலியுடன் கேட்க ..
“ சாரிடி ..தப்புதான் ,நான் அப்படி சொல்லியிருக்க கூடாது … என் பிரியம்ல ..  ”
“பேசாதே ..போயிடு ,வேணாம் ,யாரும் என் மேல பிரியமா இருக்க வேண்டாம்..போ ..”
“உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்டி , யாரும் உன்னை ஏதாவது தப்பா பேசிடக்கூடாதுன்னு தான் கோவப்பட்டேன் ,உன்னை சந்தேகப்பட்டு இல்லை, என்னை நம்பு ப்ளிஸ் ..” என்று அவனும் கண்கலங்க ,மெல்ல தன் தலையை தூக்கி பார்த்தாள் …
முகம் சிவந்து, உதடுகள் துடித்து கொண்டிருக்க ,கண்களை நேராக பார்த்து ,பாவமாக ..நிஜமா ..?”
“ சத்தியமாடி நம்பு ..கண்ணை தொடை …’ என்று அவளது  தோள்களை இழுத்து தனக்கு மிக நெருக்கமாக நிறுத்தினான் . அவள் அதிர்ந்து .  மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டு .மிரட்சியாக அவனை பார்க்க . சித்தார்த்தின் முகத்துக்கும் அவளது முகத்துக்கும் ஒரு அரை இன்ச் இடைவெளிதான் இருந்தது . அவனது சூடான மூச்சுக்காற்று அவளது பளிங்கு முகத்தில் பட்டு தெரித்தது, சிற்பிகா விழிகளை விரித்து,  ஒரு பயப்பார்வை பார்த்தாள்.
“உன்னை சந்தேகப்பட்டு தான் திட்டினேன்னு நீ எப்படி டி நினைக்கலாம்?என் காதல் மேல நீ வச்சிருக்கிற நம்பிக்கை இவ்வளவு தானா?  அப்போ…. இந்த மாதிரி ஒரு சூழ்நிலைல என்னை பார்த்தா …. நீ சந்தேகபடுவியா? அறிவுகெட்டவளே ……உன்னை  யாரும் தப்பா  நினைச்சிட கூடாதுன்னு தான் கோவப்பட்டு திட்டினேனே தவிர சந்தேகப்பட்டு இல்ல….
சித்தார்த்  முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, அவளுடைய கண்களை கூர்மையாக பார்த்துகொண்டு, “சொல்றேன்ல..? எனக்கு உன் மேல எப்பவுமே சந்தேகம் வராது….. புரிஞ்சதா…??”…

அவ்வளவுதான்….!!  பட்டென்று அமைதியானாள். அவன்  கண்களையே இமைக்காமல் பார்த்தாள். அந்த விழிகளில் உணர்ந்தாள் அவனின்  காதலை..!! அந்த  பார்வை ஒரு நொடியில் அவனின் காதலை அவளுக்கு உணர்த்தியிருக்க . அவளால் பேச முடியவில்லை. அவளுடைய கண்கள் மட்டும் படபடவென துடித்துக் கொண்டிருக்க ,அவனது பிடியை சற்று தளர்த்தினான் . 
உடனே ஓரடி பின்னால் நகர்ந்து கொண்டாள். சற்று முன் இழுத்துப் பிடித்த மூச்சை.. இப்போது தாராளமாக விட்டாள். கொஞ்ச நேரம் அப்படியே நின்று அவன்  முகத்தையே பார்த்து . பின்பு தயங்கி தயங்கி கதவை நோக்கி மெல்ல நகர்ந்தாள். கதவை திறந்து வெளியேறும் முன், மீண்டும் ஒரு முறை  திரும்பி பார்க்க, 
முக இறுக்கத்தை தளர்த்திக் கொண்டு, இதழ் விரித்து, அழகாக புன்னகைத்த அவனின் முகம் பார்க்க . சிற்பிகாவிற்கு  வெட்கம் தாளது . பட்டென்று முகத்தை திருப்பிக் கொண்டு  துள்ளி ஓடினாள்  ,
“ஏதோதோ என்னை செய்தாய்
என்னடா என்னை செய்தாய்
துடிக்கும் ஆசை பிறக்கும்போது
வெளிச்ச மேகம் தரிக்க தோன்றும்
சில நொடி இமை இமைக்கும்போதே
சிறகுடன் நான் பறக்கிறேன் ….

Categories
On-Going Novels ஷெண்பா

அத்தியாயம் – 10

அத்தியாயம் – 10

காரிலிருந்து இறங்கிய இராமநாதன், நிமிர்ந்து வீட்டைப் பார்த்தார்.

“என்ன தாத்தா புதுசா பார்க்கறா மாதிரி பார்க்கறீங்க” எனச் சிரித்துக்கொண்டே கேட்டான் மித்ரன்.

உள்ளேயிருந்து ஓடி வந்த இந்தர், “ஹலோ கிரான்ப்பா!” என்றவன், “வீடு வளர்ந்துடுச்சான்னு பார்க்கறார் அண்ணா!” என்றான்.

“வாடா பேரான்டி! இன்னைக்கு வெளியே எங்கேயும் போகலையா?” என்றபடி அவனது தோளில் கையைப் போட்டு அணைத்துக் கொண்டார் இராமநாதன்.

“நீங்க வர்றீங்கன்னு தெரிஞ்சி எப்படிப் போவேன்?” என்றவனது பின்னந்தலையிலேயே செல்லமாகத் தட்டினார்.

“வாங்க மாமா! இப்பவாவது நம்ம வீட்டுக்கு வரணும்னு உங்களுக்குத் தோணுச்சே” என்றார் வித்யாவதி.

சிரித்தவர், “சிவராமனும், மித்ரனும் இருக்க பிஸ்னஸ் பத்தி என்னம்மா கவலையிருக்கு?” என்றார்.

“ஆனா, உங்களைப் பத்தி எங்களுக்குக் கவலையிருக்கு மாமா! வயசான காலத்துல உங்களை அங்கே தனியா விட்டுட்டு, நாங்க இங்கே நிம்மதியா இருக்கமுடியுமா?” எனச் சொல்லிக்கொண்டே, வேளையாள் கொண்டு வந்த ஜூஸ் டம்ளரை வாங்கி மாமனாருக்குக் கொடுத்தார் வித்யா.

“கிரான்ப்பாவைப் பார்த்தா எழுபத்தி மூணு வயசுன்னு யாராவது சொல்வாங்களாம்மா? பாருங்க இன்னும் ஆர்ம்ஸ்லாம் எப்படி கன் மாதிரி வச்சிருக்காருன்னு” என்று அவரது புஜத்தை அழுத்திச் சொன்னான்.

“ஆமாம்டா… பார்க்கத் தெரியலனாலும், வயசானது ஆனது தானே” என்றார்.

“அம்மா சொல்றதுலயும் பாயிண்ட் இருக்கு தாத்தா!” என்றான் இந்தர்.

புன்னகையுடன் அன்னையின் அருகில் அமர்ந்த மித்ரன், “ஆமாம்மா! தாத்தா நாலு மாசத்துக்கு முன்னால பார்த்தது மாதிரியில்ல. கொஞ்சம் டல்லா தெரியறாங்க” என்றான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லடா கண்ணா! உங்களையெல்லாம் பார்க்காம இருக்கறதே, எனக்கு ஒரு குறைதான். இப்போதான் வந்துட்டேனே. இனி, சரியாகிடுவேன்” என்றார் அவர்.

“இல்லனாலும், நாங்க சரியாக்கிடுவோம்” என்றான் இந்தர்.

“சரி சரி போதும். மாமா லஞ்ச் ரெடியா இருக்கு. வாங்க சாப்பிடலாம்” என்று அழைத்த வித்யாவதி, டைனிங்கிற்குச் சென்றார்.

இந்தருக்கும் ஒரு போன் கால் வந்துவிட, தாத்தாவிடம் சொல்லிவிட்டு அவனும் நகர்ந்துவிட்டான்.

“வாங்க தாத்தா! உங்க ரூமுக்குப் போகலாம். ரிஃப்ரெஷ் பண்ணிட்டு வாங்க சாப்பிடலாம்” என்றான் மித்ரன்.

“சரிப்பா!” என்று அவர் எழுந்துச் செல்ல, அவரது கைப்பெட்டியுடன் அவருடனேயே சென்றான் மித்ரன்.

ப்ரீஃப்கேஸை அதனிடத்தில் வைத்தவன் திரும்பி நிதானமாக அவரைப் பார்த்தான்.

“தாத்தா! சம்திங் ஃபிஷி” என்ற பேரனைப் பார்த்துப் புன்னகைத்தார்.
“இந்தக் கேள்வியை எப்பவோ எதிர்பார்த்தேன். நீ மெதுவா கேட்கற” என்றார்.

அவரெதிரில் வந்து கைகட்டி நின்றவன், “தாத்தா! உங்களோட வயோதிகத்துக்கு மீறின உற்சாகத்தோடவே பார்த்தவன் நான். அத்தையைப் பத்தி பேசும் போது மட்டும்தான் உங்களோட மனசுல இருக்கும் வலி தெரியும்” என்றவன் அவரது முகம் மெல்ல இறுகுவதைப் பார்த்தான்.

அவரது கரத்தைப் பிடித்துக் கொண்டு, “சாரி தாத்தா! நான் அத்தையைப் பத்திப் பேசியிருக்கக்கூடாது” என வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னவன், “உங்க மனசுல ஏதோ இருக்குன்னு மட்டும் தெரியுது. உங்களுக்கு எப்பச் சொல்லணும்னு தோணுதோ, அப்பச் சொல்லுங்க” என்றவன் அறையிலிருந்து வெளியேறினான்.

வத்தக் குழம்பு, கீரை மசியல், சுரைக்காய் கூட்டு, பீட்ரூட் பொரியல், கறிவேப்பிலைத் துவையல், சாலட், அப்பளம் என்று மேஜையை நிறைத்திருந்தார் வித்யாவதி.

மருமகளது கைமணத்தில் தயாராகியிருந்த வத்தக் குழம்பையும், சுரைக்காய் கூட்டையும் ஒரு பிடிபிடித்துக் கொண்டிருந்தார் இராமநாதன்.

“ம், பிரமாதம் வித்யாம்மா! உன் கைப்பக்குவம் யாருக்கும் வராது” என்று ஸ்லாகித்துக் கொண்டார்.

வேண்டாவெறுப்பாக உணவை விழுங்கிக் கொண்டிருந்த இந்தர், ஐயோ பாவமாக அவரைப் பார்த்தான்.

“இந்தச் சப்பாத்தியைச் சாப்பிட்டுச் சாப்பிட்டு நாக்கு செத்துப் போச்சு. என்னயிருந்தாலும், சாப்பாட்டு விஷயத்துல மட்டும் திருப்தியே வரமாட்டேன்னுது” என்றபடி இரசித்துச் சாப்பிட்டார்.

“ஏன் கிராண்ட்பா! இதான் சாக்குன்னு எங்க அம்மா தினம் தமிழ்நாட்டுச் சமையலா செய்து என்னைக் கொல்லாம கொல்லப் போறாங்க” எனப் புலம்பினான்.

“வாயை மூடிட்டு சாப்பிடுடா! தினமும் சப்பாத்தியும், குல்சாவும் தானே சாப்பிடுற” என்று திட்டிக் கொண்டே பீட்ரூட் பொரியலை அவனது தட்டில் வைத்தார்.

“என் ஃப்ரெண்ட் கூப்பிட்டவே, கிளம்பிப் போயிருக்கணும். தாத்தா மேலயிருந்த பாசம் இப்போ, கொலை முயற்சி வரைக்கும் கொண்டு வந்து விட்டுடுச்சி” என்று புலம்பிக் கொண்டே உணவை விழுங்கிக் கொண்டிருந்தான்.

ஆனால், அங்கிருந்தவர்கள் அவனை ஒரு பொருட்டாகவே எண்ணாமல் தங்களது வேலையில் கவனமாக இருந்தனர்.

“வெரி குட் ஃபேமிலி” என்றபடி எழுந்தான்.

“டேய்! கொஞ்சம் ரசம் போட்டுக்கோடா” என்ற அன்னையின் வார்த்தைக்கு, “வீணா கொலை கேஸ்ல மாட்டிக்காதீங்கம்மா!” என்று முனகியபடி நகர்ந்தான்.

“காதுல விழறாமாதிரி பேசறானா பாறேன்” என்றபடி தனது வேலையைப் பார்க்கலானார் வித்யா.

மதிய உணவிற்குப் பிறகு, சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்த மித்ரன், அலுவலகம் வரை சென்று வருவதாகக் கூறிவிட்டுக் கிளம்பிவிட்டான்.

“வித்யா! சிவா எப்போ வருவான்?” எனக் கேட்டார்.

“நைட் வந்திடுவார் மாமா!” என்றார்.

“சரிம்மா!” என்றவர் தனது அறைக்குச் செல்ல, “மாமா! உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றார் வித்யா.

கண்ணாடியைக் கழற்றித் துடைத்து மாட்டியவர், “இங்கே வேணாம் இந்தரும், பவியும் எப்ப வேணாலும் வந்துடுவாங்க” என்றவர் ஆஃபிஸ் அறைக்குச் சென்றார்.

அந்த வீட்டைப் பொறுத்தவரை, அலுவலக அறையில் யாரேனும் பேசிக்கொண்டிருக்கும் போது அவர்களது அனுமதி இல்லாமல், மற்றவர்கள் அங்கே செல்வதில்லை என்பது எழுதப்படாத சட்டம்.

“சொல்லும்மா!” என்றார்.

அவரை ஆழ்ந்து பார்த்த வித்யா, “நீங்க, எங்ககிட்ட எதையோ மறைக்கறீங்க மாமா! நானும் கேட்க வேணாம்னு, நாலு மாசமா பொறுமையா காத்திருந்தேன். காசிக்குப் போய்ட்டு வரேன்னு போனீங்க. அதுக்குப் பிறகு, நீங்க இங்கே வரவேயில்ல. ஆனா, இன்னைக்கு உங்களைப் பார்த்ததும், கேட்காம இருக்கமுடியல. ஏன் இப்படி ஆளே சோர்ந்து தெரியறீங்க?

உடம்புக்கு எதுவும் முடியலையா? எங்ககிட்ட சொல்லாம மறைக்கறீங்களா? இல்ல சொல்ல விருப்பம் இல்லையா? நீங்க ஊர்லயிருந்து வந்தபிறகு மித்ரன் உங்களை வந்து பார்த்தப்போ ஊருக்குப் போய்ட்டு வந்ததுல டயர்ட்னு சொல்லியிருக்கீங்க. ஆனா, இப்போ உங்களைப் பார்க்கும்போது, என்னவோ விஷயமிருக்குன்னு மட்டும்தான் நினைக்கத் தோணுது” என்று வரிசையாக கேள்விகளை அடுக்கினார்.

வாக்கிங் ஸ்டிக்கை இருகைகளாலும் பற்றியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்த இராமநாதனின் உடல் லேசாகக் குலுங்கியது.

பதறிப்போன வித்யாவதி, “மாமா! என்னாச்சு மாமா? ப்ளீஸ்! எதுவாக இருந்தாலும் மனசுவிட்டுப் பேசுங்க மாமா” என்றவருக்கு அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை.
டேபிள் மீதிருந்த தண்ணீரைக் கொண்டுவந்து கொடுத்தார்.

வாங்கிப் பருகியவர், மெல்லத் தன்னைச் சீர்படுத்திக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தார்.

“வாழ்க்கைல நான் பார்க்காத விஷயங்கள் இல்லம்மா! என் கூடப் பிறந்தவங்க, பெத்தவங்க, கட்டினவன்னு அத்தனைப் பேரும் போன பின்னாலயும், என்னைக்காவது என் மகளைப் பார்ப்பேன்னு மனசுல ஒரு சின்ன நப்பாசை இருந்தது. ஆனா, இனி அதுவும் நடக்காதும்மா! சோகத்துலயே பெரிய சோகம், புத்திர சோகம். இப்போ, நான் அதை அனுபவிச்சிட்டிருக்கேன்” என்றவரைத் திகைப்புடன் பார்த்தார் வித்யாவதி.

“என்ன மாமா சொல்றீங்க? காஞ்சனா இறந்துட்டாளா?” அதிர்ச்சியுடன் கேட்ட வித்யாவதி தலையிலேயே அடித்துக் கொண்டார்.
“ஏன் மாமா எங்ககிட்ட மறைச்சிட்டீங்க? ஒருமுறையாவது அவளை நாங்க பார்த்திருப்போமில்ல. அண்ணி அண்ணின்னு என்னைச் சுத்திச் சுத்தி வந்தது இன்னமும் என் கண்ணுலயே நிக்குதே மாமா! அவளை எப்படிக் கண்டுபிடிச்சீங்க? எங்கேயிருந்தா? நீங்க ஒருமுறையாவது அவகிட்ட பேசினீங்களா?” என்று படபடவென பேசினார்.

“அந்தக் கொடுப்பினைக் கூட எனக்கு இல்லம்மா! அந்தப் பண்டிட்டோட வீட்டைவிட்டுப் போனவ, கொஞ்ச நாள் சூரத்ல இருந்திருக்காங்க. அப்புறம், அஹமதாபாத் வந்திருக்காங்க. அங்கே, அவங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கு…” என்றவர் நிறுத்தினார்.

“பெ..பெண் குழந்தையா!”

“ஆமாம்மா! என் பேத்தி” என்றபோது அவரது முகத்தில் பூரிப்பும், அன்பும் போட்டிப் போட்டுக்கொண்டு வெளிப்பட்டது.

“குழந்தை பிறந்த ரெண்டே வருஷத்துல காஞ்சனா இறந்துட்டாளாம். ரெண்டு வருஷத்துக்கு முன்னால, நம்ம வக்கீலோட பொண்ணு கல்யாணம் பாம்பேல நடந்தது இல்லயா…”

“ஆமாம் மாமா! நம்ம மித்ரன்கூட ரிசப்ஷனுக்குப் போய்ட்டு வந்தானே…”

“ஆமாம். அவரோட பொண்ணுக்குக் குழந்தை பிறந்திருந்ததுன்னு சொன்னதால, கல்யாணத்துக்குத் தான் போக முடியலைன்னு அவரோட வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போ அவங்க கல்யாணச் சிடியைப் பார்த்துட்டிருந்தாங்க. நானும் பேசிகிட்டே, பார்த்துட்டிருந்தேன். அப்போதான் அந்தப் பண்டிட்டைப் பார்த்தேன். அவனை நான் ரெண்டே முறைதான் பார்த்திருக்கேன். ஆனா, அவனோட முகம், எனக்கு மறக்கல. வக்கீல்கிட்ட விசாரிச்சேன். அஹமதாபாத்ல இருக்கற, என் நண்பர்கள்னு சொன்னார்.

மனசுக்குள்ள எரிமலை குமுறிகிட்டிருந்தாலும், என் மகளைப் பார்க்கணும்ங்கற ஏக்கம் என்னை அரிக்க ஆரம்பிச்சது. உங்ககிட்டலாம் சொல்லாமலே போனேன். ஆள் வச்சி அவங்க வீட்டைக் கண்டுபிடிச்சேன். யாரைப் பார்க்கணும்னு ஆசையோட போனேனோ, அவளை ஃபோட்டோலதான் பார்த்தேன்” என்றவர் குலுங்கி அழுதார்.

அவரது மனக்குமுறல் கரையும் வரை அழட்டும் என்று வித்யாவதியும் அமைதியாக அமர்ந்திருந்தாலும், அவரது விழிகளும் கலங்கிச் சிவந்திருந்தன.

“அந்தப் பண்டிட்டோட முகத்தைப் பார்க்கக்கூட முடியல. என் மக மகாராணி மாதிரி வாழவேண்டியவ… அவளை காதல்ங்கற பேர்ல கடத்திட்டுப் போய், ஒரு வேலைக்காரி மாதிரி நடத்தியிருப்பான். சாப்பிடுறதைத் தவிர சமையலறைக்குப் போகாத என் பொண்ணு, நம்ம வீட்டு சமையலறை அளவே இருக்கற வீட்ல குடித்தனம் நடத்தியிருக்கா. என் மகளுக்குத் துள்ளித் துள்ளிக் குதிச்சி ஓடத்தான் தெரியும் வித்யா! அவளைச் சுத்திச் சுத்தி அந்த இருபதடி வீட்டுக்குள்ளேயே நடக்க வச்சிருக்கான். எப்படிச் செல்வச் செழிப்புல ஒரே மகளா வளர்ந்தா… அவளை இன்னும் என்னவெல்லாம் பாடு படுத்தியிருப்பான்” என்று குமுறினார்.

“இத்தனை வருஷம் கழிச்சி போனீங்களே மாமா அட்லீஸ்ட், நம்ம காஞ்சியோட பொண்ணையாவது உங்களோட அழைச்சிட்டு வந்திருக்கலாமே…” என்று கலங்கினார் வித்யா.

“கேட்டேம்மா! என் பொண்ணைத்தான் என்கிட்டயிருந்து பிரிச்சி என்னைத் தனிமரமா நிக்கவச்சிட்ட. என் கடைசி காலத்துலயாவது என் பேத்தியோட இருக்கணும். என்கிட்ட அவளைக் கொடுத்துடுன்னு கேட்டேன். முதல்ல மறுத்தவன், கடைசியா உங்க பேத்தி விரும்பினா, கூட்டிட்டுப் போங்கன்னு சொன்னான்.

நானும் அவளைக் கூட்டிட்டு வந்துடலாம்னு இருந்தேன். என்னவோ தெரியலம்மா… ஏன் என் அம்மாவை ஏத்துக்கலன்னு கேட்டா என் முகத்தை எங்கே வச்சிக்கிறதுன்னு ஒரு தயக்கம். என்னை நேருக்கு நேரா பார்த்து வரமுடியாதுன்னு முகத்தில அடிச்சா மாதிரி சொல்லிடுவாளோன்னு ஒரு பயம். அதனால போன்ல தான் என் பேத்திகிட்ட பேசினேன்.

நான் நினைச்சா மாதிரியே தான் பேசினா… உங்க பொண்ணு உங்களுக்கு எப்படியோ, அப்படித்தான் எங்க அப்பாவுக்கு நான் பொண்ணு. இத்தனை வருஷத்துல எங்க அம்மாவைக் கண்டுபிடிச்சி கூட்டிட்டுப் போகணும்னு தோணாத உங்களுக்கு இப்போ பேத்தின்னு உரிமை கொண்டாட எப்படி மனசு வருதுன்னு கேட்டா…

இன்னைக்கு ஏதோ ஒரு ஆர்வத்துல கூட்டிட்டுப் போற நீங்க, என்னைத் தூக்கிப் போட எவ்வளவு நேரமாகும்னு கேட்டாம்மா! என் மகளை ஒதுக்கிவச்சாலும், அவளோட நினைவில்லாம ஒரு நிமிஷம் இருந்திருப்பேனாம்மா… நான் அப்படிப் பட்டவனா சொல்லும்மா!” என்று கண்கள் கசிய கேட்ட மாமனாரைப் பார்த்த வித்யாவிற்குப் பாவமாக இருந்தது.

“அவ அப்படிக் கேட்டலும், நீங்க எடுத்துச் சொல்லியிருக்கலாமே மாமா! நீங்க அவளை மட்டும் கூப்பிட்டது தான் மாமா அவளோட கோபத்துக்குக் காரணம். அவங்க ரெண்டு பேரையுமே நீங்க கூப்பிட்டிருக்கணும்” என்ற மருமகளை உறுத்து விழித்தார்.

“என் மகளைக் கொன்ன கொலைகாரன் அவன். அவனோட மூச்சுக் காத்துக்கூட என் வீட்ல படக்கூடாது வித்யா!” என்றார் கோபத்துடன்.

“உங்க பேத்தி அவரோட இரத்தம் மாமா!”

“இருக்கலாம். ஆனா, இந்த மேஜர் இராமநாதனோட ஜமீன் வாரிசு அவள். இத்தனைச் சொத்துக்கும் அவதான் வாரிசு. தேவதை மாதிரி வாழவேண்டியவ என் பேத்தி!” என்றவரது கண்களில் ஒரு பெருமிதம் தெரிந்ததை ஆச்சரியத்துடன் பார்த்தார் வித்யா.

“உனக்குத் தெரியுமா வித்யா! அவளுக்குக் கல்யாணம். மாப்பிள்ளை அந்த ஊர்லயே பெரிய பிஸ்னஸ் மேனாம். சின்ன வயசுல இருந்தே ஒருத்தரை ஒருத்தரைத் தெரியுமாம். கட்டினா இவளைத்தான் கட்டுவேன்னு சொல்லிட்டானாம் மாப்பிள்ளை. எனக்கு விஷயம் லேட்டாதான் தெரிஞ்சிது.

இல்லன்னா, நான் கட்டாயம் போயிருப்பேன். என் பொண்ணோட வாழ்க்கையைத் தான் எனக்குப் பார்க்கக் கொடுத்துவைக்கல. என் பேத்தி வாழப் போறதையாவது சந்தோஷமா பார்த்துட்டு வந்திருப்பேன். நீ பார்க்கறியா அவளோட போட்டோவை” என்று ஆவலுடன் கேட்டார்.

“நிச்சயமா மாமா!” என்றார் வித்யா.

“இதோ இவள் தான் என் பேத்தி சுமித்ரா!” என்றவர் மொபைலில் இருந்த அவளது புகைப்படத்தைக் காட்டினார்.

“கண்ணெல்லாம் அப்படியே நம்ம காஞ்சியே மாமா! சின்ன வயசுல அவளும் இப்படியே தானே இருப்பா” என்றார் ஆச்சரியத்துடன்.

“ஆமாம் வித்யா!” என்றவர் கண்கள் நிறைய பேத்தியைப் பார்த்தார்.

“நீங்க ஒரு முறை மட்டும்தான் அவகிட்ட பேசினீங்களா?”

“ரெண்டு முறை பேசினேன்மா… ரெண்டாவது முறை அவள் பிடிகொடுக்கவே இல்ல. சரி கொஞ்ச நாள் விட்டுப் பிடிப்போம்னு விட்டுட்டேன். நம்ம வக்கீலைத் தவிர, யாருக்குமே இந்த விஷயம் தெரியாது. இப்போதான் உன்கிட்ட சொல்லியிருக்கேன். சிவாவுக்கு மட்டும் தெரிஞ்சா போதும் வித்யா.

பசங்களுக்கு இப்போதைக்குத் தெரியவேணாம். சின்ன வயசுல மித்ரன் இது யார் தாத்தான்னு கேட்கும் போதெல்லாம் செத்துப் போன உன் அத்தைன்னு சொல்லியிருக்கேன். என்னோட வார்த்தைதான் என் பொண்ணைக் கொன்னுடுச்சோன்னு என் மனசுல குத்திகிட்டே இருக்கும்மா!” என்றவர் குலுங்கிக் குலுங்கி அழுதார்.
“மாமா எல்லாம் சரியாகிடும். சுமித்ராவோட கல்யாணம் நடக்கட்டும். நாம அவங்ககிட்ட பேசி எல்லாத்தையும் சரிபண்ணிடுவோம். முடிஞ்சா நம்மளோடவே கூட்டிட்டு வர ட்ரை பண்ணுவோம்” என்று மாமனாருக்குத் தைரியம் சொன்னார் வித்யாவதி.

“ம், நானும் அதைத்தான் நினைச்சிட்டிருக்கேன். என்னால என் பேத்தி மனசு கஷ்டப்படக்கூடாது. அதான், கொஞ்ச நாளைக்கு விலகியே இருக்கலாம்னு வந்துட்டேன். சீக்கிரமே என் பேத்தி, என்கிட்ட வந்திடுவா” என்றவர் பேத்தியின் புகைப்படத்தையே அன்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்.