Categories
Uncategorized

அத்தியாயம் – 7

அத்தியாயம் 7:

 

மாலை நான்கு மணிக்கு, அவர்கள் அலுவலகத்திற்கு வந்திருந்த ஏதோ ஒரு துறைச் சார்ந்த விருந்தினருடன் பேசி சிரித்து, கலாய்த்து, தானும் ப்ல்ப் வாங்கி, நிசப்தமான அந்த அறையையே கலகலப்பாக்கிக் கொண்டிருந்தவன், ஸ்டேஷன் ஹெட் கருணாகரன் உள்ளே வந்து நின்றதும் நிமிர்ந்துப் பார்த்து சைகையாலே என்னவென்று இயம்பினான்.

அவர் தலையசைத்து விரலை மட்டும் உயர்த்தினார். ஆனால் அவர் முகம் சரியில்லை என்பதைக் கண்டுக் கொண்டவன் அந்த நிகழ்ச்சி முடியும் வரை அமைதிக் காத்தான். பின் விருந்தினரின் கைக்குலுக்கி விடைப் பெற்றவன், அவசரமாக வெளியேற, அங்கே அடுத்த நிகழ்ச்சிக்காக காத்திருந்த ஓவியாவிடம்,

“ஹே ஓவியா!!! பேச்சுக்கு நடுவுல கொஞ்சம் மூச்சும் விட்டுக்கோ” என்க, மற்ற நேரமாக இருந்தால், அவனை தலையில் கொட்டியோ, திட்டி விட்டோ செல்பவள், அமைதியாகவே உள்ளே நுழைய, ஏதோ சரியில்லையே என்றபடியே வரவேற்பறையைப் பார்த்தவன், அங்கே ஒட்டு மொத்த அலுவலகத்தினரும் கூட்டமாக நிற்க, வேகமாக நடந்தான்.

பள்ளி சீருடையில் இருந்த மாணவி, கையில் கத்தியை வைத்து மிரட்டிக் கொண்டிருந்தாள். அவள் அருகே செல்லவே பயந்தபடி அனைவரும் நிற்க, கார்த்திக் கதவை திறக்கவும் அனைவரது பார்வையும் இவன் மேல் விழுந்தது.

கருணாகரன் தான் அவன் கையைப் பிடித்து தன்னருகே இழுத்து, அவன் காதில்,

“இந்த பொண்ணு டெய்லி உன் ப்ரோக்ராம் கேட்பாளாம். உன் வாய்ஸ் கேட்டே லவ் பண்றாளாம். உன்னைப் பார்க்க வந்துருக்கா” என்று இது வழக்கம் தான் என்பது போல் சர்வ சாதாரணமாகச் சொல்ல, கார்த்திக் தான் அதிர்ந்தான்

“வாட்?” என்று சொல்லி விட்டு, முன்னே செல்ல முற்பட, கையைப் பிடித்து

“இப்போ என்ன லவ் பண்ண போறியா? நல்ல வாய்ஸ்க்கு இதுப்போல் ஃபேன்ஸ் இருப்பது நம்ம சேனல்க்கு தான் பெருமை. எல்லார்க்கிட்டேயும் போய் நம்ம லெவல் விட்டு இறங்கி பேசிட்டு இருக்க முடியாது. ஆப்போசிட்ல இருக்க அப்பார்ட்மென்ட்ல டாக்டர்ஸ் யாராவது ஸ்டே பண்ணியிருந்தால் வர சொல்லியிருக்கேன். கவலைப் படாதே. ப்ரஸ் வர வரை கொஞ்சம் அமைதியா இரு” என்றும் சொன்னார். அவரைப் பார்த்து முறைத்தவன்,

“சின்னப் பொண்ணு சார்” என்று சொல்லி விட்டு, அவளை நோக்கி வந்தான்.

“பக்கத்தில் வராதீங்க. கையை கிழிச்சிடுவேன்” என்று கத்தியை நாடிக்கு நேராகப் பிடித்தப்படி அவள் நிற்க,

“உனக்கு என்னை தானே பார்க்கணும். நீ முதலில் கத்தியை கீழே போடு”

“எனக்கு ஆர்ஜே கார்த்திக்கை பார்க்கணும்”

“நான் தான் கார்த்திக்” என்றதும், அவள் முகத்தில் சின்னதாய் ஒரு ஏமாற்றம் பரவ, அதையே தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு, அவளருகே சென்று சட்டென்று அவள் கையில் இருக்கும் கத்தியைப் பறித்து நொடிக்குள் கத்தியை அடுத்த கைக்கு மாற்றி தூக்கிப் பிடிக்கும் போது, அது அப்போது தான் உள்ளே வந்த தீபக்கின் மேல் பட்டு விட,

“சாரி சாரி” என்றான் வினாடிக்குள் ஏற்பட்ட பதட்டத்தில்.

“நத்திங்” என்று சொன்ன தீபக், அமைதியாகக் கூட்டத்தைப் பார்த்தபடி நிற்க, ஆஃபீஸ் பாய் கருணாகரனிடம் சென்று,

“இவர் டாக்டர்” என்றான்.

“ஹோ” என்றவரிடம் தீபக்கிடம் வந்து, “சாரி டு டிஸ்டர்ப் யு. இந்த பொண்ணு இப்படி பண்ணவும் சேஃப்டிக்காக” என்றார்.

“நோ ப்ராப்ளம்” என்றவன், அந்த பெண்ணையும், கார்த்திக்கையும் பார்த்தான்.

அவளையும் சோஃபாவில் அமரவைத்து தானும் அமர்ந்தவன்,

“என்ன படிக்கிற” என்றான்.

“10த்” என்றதும், கோபம் தலைக்கேற, கருணாகரனை ஒரு பார்வைப் பார்க்க, பார்வையை புரிந்தவர், அங்கிருந்த அனைவரையும் சைகையாலே உள்ளே செல்ல சொன்னார். அனைவரும் திரும்பி திரும்பிப் பார்த்தப்படியே உள்ளே செல்ல, இப்போது தீபக், கருணாகரன் மட்டும் இருந்தனர்.

“பாப்பா 10த் படிக்கிறீங்க. நிறைய படிக்க இருக்குமே. எப்படி உங்களுக்கு டைம் கிடைக்குது”

“வீட்டில் தனியாதானே இருக்கேன்” என்றான் சட்டென.

“ஏன் அம்மா அப்பா?”

“இரண்டு பேரும் வொர்க்கிங். வீட்டுக்கு வரவே 10 ஆகும். 9 மணி வரை பக்கத்து வீட்டு ஃப்ரெண்ட்ஸ் இருப்பாங்க. அப்புறம் ரொம்ப பயமா இருக்கும். அப்போதான் டிவி, ரேடியோ கேட்க பழகினேன். அப்போதான் உங்க ப்ரோக்ராம் கேட்பேன். ஒரு வருஷமா கேட்காமல் தூங்க மாட்டேன். அப்படியே கேட்டு உங்களை எனக்கு பிடித்து போச்சு. ஒவ்வொரு பாட்டும் எப்போ முடியும்ன்னு காத்திருப்பேன். ஒவ்வொரு பாட்டுக்கு இடையிலும் நீங்கள் பேசும் வரிகள் மெஸ்மரைஸிங்” என்று அவள் உருகி பேச அமைதியாகவே இருந்தனர்.

“நிறைய தடவை கால் பண்ணினேன். யாரும் சரியா ரெஸ்பான்ஸ் பண்ணல. மூன்று தடவை ஸ்கூல் விட்டதும் இங்கே வந்து உங்களை பார்க்க ட்ரை பண்ணேன். அந்த அக்கா உள்ளே விட மாட்டாங்க” என்று ரிஷப்ஷினிஸ்டை சுட்டிக் காட்டியவள், “அதான் சாரி” என்று தெளிவாகச் சொல்லி கத்தியை பேக் ஜிப்பில் போட,

‘இவ்வளவு தெளிவா இருக்கிற பெண்ணை எப்படி கன்வீன்ஸ் செய்வது?’ என்று முற்றிலும் குழம்பினான் கார்த்திக்.

“ஓகே பாப்பா. இனிமேல் என்னைப் பார்க்கணும்ன்னா இங்கே வராதீங்க. வீட்டுக்கு வாங்க. நானும் வீட்டுக்கு வரேன். உங்க அம்மா அப்பா சன்டே வீட்டில் இருப்பாங்க தானே” என்றான். தன் மனதிற்கு பிடித்த ஆர்.ஜே தன் வீட்டிற்கு வருகிறாரா? என்ற ஆர்வத்தில், வேகமாக தலையசைத்தாள்.

“இது என் நம்பர். எப்பொழுது வேண்டுமானாலும் பேசுங்க” என்று தன் விசிட்டிங்க் கார்டை தந்தவன், அவளுடனே வந்து ஆட்டோவில் ஏற்றி விட்டான்.

பின்னால் இருந்து பார்த்தப்படியே வந்த தீபக், கார்த்திக் அருகே வந்ததும், “ஐ அம் தீபக்” என்று கைக்குலுக்க, கார்த்திக்கும் பதிலுக்கு கைக்குலுக்கி, தன்னை அறிமுகப்பட்டுத்திக் கொள்ள,

“ரொம்ப தெளிவான பொண்ணா இருக்கேங்க. எனக்கு தெரிந்த டாக்டரிடம் சஜெஸ்ட் பண்றேன். கவுன்சிலிங் வர சொல்றீங்களா” என்றான்.

“இல்ல தீபக்!!! தெளிவான பொண்ணுங்களை எந்த கவுனுன்சிலிங்ம் ஒண்ணும் பண்ண முடியாது. அதே சமயம் டாக்டர்ட்ட கூட்டிட்டு போனால் நமக்கு ஏதோ பிரச்சனையோன்னு இன்னும் பலகீனம் தான் ஆகும். அந்த பொண்ணு படிப்பில் கான்சன்ட்ரேட் பண்ணினாலே சரியாகிடும். அதுவுமில்லாமல் இந்த வயதில் நம்ம பக்கத்தில் இல்லாத, பார்க்காத பொருள் மேல் இருக்கும் க்யூரியாசிட்டி அவ்ளோதான்” என்று சொல்ல, கடுப்பாகி விட்டான் தீபக்.”

‘டேய்!!! நான் டாக்டரா? நீயா?’ என்று மனதிற்குள்ளேயே திட்டியவன்,

“ஓகே கார்த்திக்” என்று சிரித்தமுகமாவே விடைப் பெற்றான் தீபக். இவனின் தோழி போலவே தீபக்கின் முதல் சந்திப்பும் இப்படியே இருக்க, வரும் நாட்களிலாவது தீபக் மனதில் நற்பெயரை அடைவானா கார்த்திக் என்று யார் அறிவார்?

அலுவலகத்தில் வரவேற்பறையில் நின்றிருந்த கருணாகரன், தீபக் எடுத்துக் கொடுத்ததாகச் சொல்லி ஐபாடை நீட்ட, அந்த பிரச்சனையில் கீழே விழுந்ததை கவனிக்காமல் விட்டதை எண்ணியப்படியே வாங்கும் போது, ரிசப்ஷினிஸ்ட் போனை நீட்டினாள்.

வாங்கி பேசியவன் முகம் அதிர்ச்சியில் உறைய, நிமிடத்தில், “பை சார். நைட் பார்ப்போம்” என்று வேக வேகமாக படியிறங்கி, வண்டியை உதைத்தான்.

 

“தொலைபேசியில் வந்த செய்தி இது தான். மாறன் மறுமுனையில்,

“கார்த்திக், அம்மாவும் நானும் உனக்காக வெயிட் பண்ணி பார்த்துட்டு, நாங்களே ஹாஸ்பிட்டல் வந்துட்டோம்” என்று சொல்ல, மௌனிகாவை காண கிடைத்த சந்தர்ப்பத்தை தவற விட விரும்பாமல் அடித்து பிடித்து கிளம்புகிறான்.

அன்று அரைமணி நேரம் காத்திருக்க வைத்த மௌனிகாவோ உடனே அழைத்து விட, கார்த்திக் அப்போது தான் இருக்கர வாகனத்தில் மருத்துவமனையை நோக்கி விரைந்துக் கொண்டிருந்தான்.

அவன் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்த போது, மாறன், காந்திமதி மௌனிகாவின் அறைக்கு வெளியே அமர்ந்திருந்தனர்.

“கன்சல்ட்டிங்க் ஓவரா” என்று படப்படப்புடன் கேட்டவனை, மாறன் புன்னகை முகமாகவும், காந்திமதி குழப்பத்துடனும் பார்த்தார்கள்.

“எல்லாம் கேட்டீங்களாப்பா” என்று அவளின் அறைக்குள் நுழைவதிலேயே குறியாக இருந்தவனைப் பார்த்து மாறனுக்கு சிரிப்பும் கூடவே சற்று கலக்கமும்.

“இப்படி மிஸ் ஆகிடுச்சே” என்று இவன் மெதுவாக புலம்பியது துல்லியமாக காந்திமதியின் காதில் விழ,

“என்ன மிஸ் ஆகிடுச்சு” என்றவருக்கு பதில் சொல்லாமல் எப்படி உள்ளே செல்வது தீவிரமாக யோசித்த போது, வெளியே வந்த ஒரு நர்ஸ், காந்திமதியின் பெயரை சொல்லிக் கூப்பிட்டு,

“டெஸ்ட் ரிப்போர்ட் வாங்கிட்டீங்களா?” என்றுக் கேட்டதும், தந்தையை முறைத்து விட்டு, அவர் கையில் இருந்த ஃபைலை வெடுக்கென்று பிடுங்கி, காந்திமதிக்கு முன்னால் உள்ளே சென்றான். அவன் உள்ளே நுழைந்த்தும், நீயா? என்பது போல் பார்வை செலுத்தியவள், உடனே பார்வையை விலக்கி தன் முன்னே இருந்த கம்ப்யூட்டரில் காந்திமதியின் பெயரை டைப் செய்தபடி அவன் முகத்தைப் பார்க்காமல் கையை மட்டும் நீட்டினாள், அவளிடம் கொடுத்து விட்டு, நன்றாக அவளைப் பார்த்தான். நீல நிற டாப்ஸில், அதே வண்ண துப்பட்டாவும் அணிந்து, காதில் தொங்கிக் கொண்டிருந்த காதணிகள், அவளுக்கு பதிலாக ஏதோ சொல்வது போலவே இருக்க, ரசித்துப் பார்த்தவன், அவள் டைப் செய்யும் அழகைப் பார்ப்பதற்காக கையைப் பார்க்க முற்பட்ட போது,

“உங்க காது சவ்வு வீக்கா இருக்கு. வேற ஒண்ணும் இல்ல. வொரி பண்ணிக்காதீங்க” என்றாள் காந்திமதியைப் பார்த்து.

“ஏன் அதை அன்னைக்கே சொல்லாமல் இப்போ சொல்றீங்க?” என்று இடையிட்டான் கார்த்திக்.

“உங்களை மாதிரி ஒருத்தர் கூட இருந்தால் இப்படி தான் இருக்கும்” என்று சொல்லிவிட்டு மீண்டும் காந்திமதியிடமே பேச ஆரம்பித்தாள்.

இதைத்தான் அவனுமே கேட்க நினைத்தான். ஆனால் அவளே சொல்லும் போது அதை ஒத்துக் கொள்ள மனமில்லாமல்,

“மேடம் நான் கேட்டதற்கு பதில்?”

“நீங்க பேஷண்டா?” என்றாள் முன் போலவே.

“ம்ம்க்கும் ஆனா ஊன்னா இதைக் கேட்டிர வேண்டியது. என் அம்மாவுக்காக நான் தான் பேச முடியும்”

அவள் அதற்கு மேல் ஒன்றும் பேசாமல், தன் பெயருக்கு ஏற்றார் போல் மௌனமாக அவனின் அன்னையைப் பார்த்தாள்.

‘எப்படி சமாளிக்கிறீங்க?’ என்பது போலும் இருந்த்து. ‘கொஞ்சம் வெளியே போக சொல்ல முடியுமா’ என்பது போலும் இருந்த்து. மனதிற்குள்ளேயே இங்கி பிங்கி போட்டவர், இரண்டாவதை செலக்ட் பண்ணி,

“கார்த்தி கொஞ்சம் வெளியே இருப்பா. அம்மா வரேன்” என்றார்.

“என்க்கிட்ட பேச மாட்டிங்க இல்ல” என்று கடுப்புடன் கேட்டான். இவள் அதே போஸில் மௌனமகாவே நிற்க,

“நீங்க பேச வேணாம். ஆனா நான் சொல்றதை மட்டும் கேளுங்க. ஐ லவ் யூ” என்று சொல்லிவிட்டு, எதிர்பார்த்தேன் என்பது போன்ற இவள் முறைப்பையும் அவன் அன்னையின் அதிர்வையும் பார்த்து சிரிப்புடன் வெளியேற போனவன், திரும்பவும் உள்ளே வந்து,

“அது எப்படிம்மா இது மட்டும் கேட்டுச்சு” என்று விட்டு அவளைப் பார்த்து கண்ணடித்து “சீ யூ டார்லிங்” என்று வெளியேறினான். அப்போது தான் மாலையில் அந்த பெண் நடந்துக் கொண்ட்து ஞாபகத்திற்கு வந்தது. ஏனோ தனக்கும் அந்த பெண்ணுக்கும் என்ன வித்தியாசம் என்பது போல் தோன்ற, சற்று குழம்பியவன், பின் ஒருவாறு தனக்கு சாதகமான விஷயங்களை மட்டும் யோசித்து, அவனே தெளிந்தான்.

கோகிலா

Categories
Uncategorized

அத்தியாயம் – 6

அத்தியாயம் – 6

தீபக்கிடம் விடைபெற்று வீட்டிற்கு வந்தவளுக்கு வழக்கத்திற்கு மாறாக  அன்று மனம் ஏனோ வெகு பாரமாக இருந்தது. எப்போதும் உள்ள தனிமைதான் இப்போதும். ஆனால் இன்று மட்டும் ஏன் இந்த  தனிமை இவ்வளவு கொடுமையாக இருக்கிறது என்பது இவளுக்கு புரியவில்லை.

எப்போதும் நிசப்தத்தை விரும்புபவளுக்கு இன்று இந்த மயான அமைதிக்கு பதில் அந்த காட்டுகூச்சல் கூட தேவலாம் போல என்ற எண்ணம் அவளையும் மீறி  அவளுள் கடலலையென ஆர்ப்பரித்தது.

எதனால் மனம் அலைபாய்கிறது? கல்யாணம் என்ற சொல்லை கேட்டதாலா? இல்லை  அந்த  கல்லாபெட்டி கார்த்தியை பார்த்ததாலா? சந்தோசம் என்பது நினைவு தெரிந்த நாளில் இருந்து இவள் வசம் இருந்ததில்லை. ஆனால் தன் வாழ்க்கையை தானே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்ற உரிமை கிடைத்ததிலிருந்து இப்படி நிம்மதியின்றி இவள் தவித்ததில்லை.ஆனால் இப்போது?

 எது நடந்ததோ… எது நடக்கிறதோ… அனைத்தும் நன்மைக்கே! என்ற கொள்கையை கொண்டு வாழ்ந்துக் கொண்டிருந்தவளை இன்று எது இப்படி தடுமாற… தடம் மாற செய்கிறது? கல்யாணமா? கார்த்திக்கா?

இத்தனை நாட்களாய் அன்னையை போல பேணிக்காத்த தீபக் ஆன்ட்டியிடம் எப்படி மறுப்பை சொல்வது? தன் மறுப்பிற்க்கு அவர்கள் மதிப்பளிப்பவர்கள் தான் என்றாலும், மதிப்பவர்களிடம் சரியான காரணம் இன்றி மறுப்பை சொல்வது மிகவும் கடினமான செயல் இல்லையா?

அப்படியே சொன்னாலும் அதெல்லாம் முடித்த கதை. இனி அதை பற்றி எண்ண வேண்டாம் என அவர்கள் கூறி, மேலும் மேலும் வாதம் நீண்டு வீண் விவாதங்கள் வந்து அதன் தொடர்ச்சியாய் இப்போது அவளின் துணை தேவைப்படுபவர்களுக்கும் தீபக்கிடமிருந்து கண்டனங்களும் கண்டிப்பும் கட்டாயம் வரும். அவனின் நிலையில் அவன் செய்வது சரியே எனினும் துணை நிற்பதாக வாக்கு கொடுத்துவிட்டு இப்போது பாதியில் விடுவது நியாயமா? 

சில வருடங்களுக்கு முன் வரை இவள் பட்ட கஷ்டங்களுக்கும், இப்போது சிலரால் அலைக்கழிக்கபடுவதற்க்கும் கல்யாணம் என்ற ஒற்றை சொல் போதுமானதாக இருந்ததால் இந்த தடுமாற்றமா? இல்லை அந்த கல்லாப்பெட்டி இவளின் இத்தனை கால வாழ்க்கையை தடம் மாற்றிவிடக்கூடும்…. என்ற அச்சத்தால் வந்த தடுமாற்றமா?

எதனால் என்று தெரியாத போதும் இந்த இரண்டு காரணங்களுமே இவளை இனி நிம்மதியாக இருக்க விடப்போவதில்லை என்ற எண்ணம் நாழிகைக்கு நாழிகை வலுத்து பலம் பெற்று இவளின் மனபலத்தை குறைத்தது.

‘என்ன ஒரு அநியாயம்? பெற்றோர்களால் இப்படி ஈவு இரக்கமின்றி தன் மகனிடம் நடந்துக் கொள்ளமுடியுமா? காலம் கெட்டுவிட்டது என்று சொல்வது இதனால் தானா?’

நண்பனிடம் அப்போதுதான் தன் காதல் கதையை சொல்லி மொக்கை வாங்கிய கடுப்பில் வீட்டுக்கு வந்த கார்த்திக்கின் காதில் அன்னையும் தந்தையும் பேசிக்கொண்டிருந்த அனைத்தும் விழுந்ததால் தான் அவன் மனம் இப்படி புலம்பியது!

புத்திசாலித்தனமா பேசறது ஒரு குத்தமா? என்ன… நான் கொஞ்சம் அதிகமா பேசுவேன்! அதுக்காக  ஒரு வாயாடி ஆர்ஜே கிட்ட என்னை மாட்டிவிட்டுட்டு, கல்யாணம் முடிஞ்சி இத்தனை வருஷம் கழிச்சி ஜாலியா தனிக்குடித்தனம் போக பெத்தவங்களே இப்படி சதி பண்ணுவாங்கன்னு நான் கனவுல கூட நினச்சி பார்க்கலையே!

கல்யாணம் பண்ண கையோட மகன் தனிக்குடித்தனம் போன அது சட்டப்படி தப்புன்னு ஆளாளுக்கு கொடி பிடிப்பாங்க.அந்த பையனையும் மருமகளையும் கண்டப்படி பேசுவாங்க. இப்ப இங்க இப்படி அரக்கத்தனமா ப்ளான் பண்ற பெத்தவங்களுக்கு  என்ன தண்டனை தரது? அம்மா அப்பா பண்ணா அது தியாகம்! அதுவே மகன் பண்ணா துரோகமா? என்னங்கடா உங்க நியாயம்!

அன்னைக்கு நம்ம வர்த் தெரியனும்ன்னு புதுசா வந்த ஓட்டவாய் ஓவியா என்கிட்டே வழிந்ததை என் கைய பிடிச்சிட்டு அந்த பொண்ணு  ப்ரபோஸ் பண்ணினான்னு எக்ஸ்ட்ரா மசாலா ஆட் பண்ணி சொன்னது தப்போ? கடைசியில அவ வீட்டுக்கு போய் எனக்கு பொண்ணு கேட்டுடுவாங்களா! ஹையோ… அவ ஒரு மணிநேரம் ரேடியோவில பேசறதை பக்கத்துல இருந்து கேட்டாலே காது வலியோட நெஞ்சு வலியும் வந்துடும். இந்த அழகுல ஆயுசுக்கும்ன்னா…. ஓட்டவாய் ஓவியா தான் எனக்குன்னு விதி இருந்தா  நான் ஓன் மேன் ஆர்மியாவே காலம் முழுக்க இருந்துடுவேன்!

‘கார்த்தி… சீக்கிரம் அவங்க பேச்சு வார்த்தைகுள்ள தலைய நுழைச்சி உன் வருங்கால சந்ததியை  காப்பாத்திக்கோ!’ இவனின் ஆழ்மனம் தந்த ஆலோசனையை அடிபிடித்து,

“யாருக்கு அப்பா ஆர்ஜே பொண்ணை கட்டி வைக்க போறீங்க?” என எதுவும் தெரியாத பால்வாடி பிள்ளையை போல கேட்டுக்கொண்டே உள்ளே வந்தவனை கண்டவர்கள் அதிர்ந்தனர்.

மாடியில் போட்ட துணிகளை எடுத்துக்கொண்டு வரும் போது பேச்சு சுவாரஸ்யத்தில் கதவை அடைக்காது அப்படியே விட்ட  தன் முட்டாள்தனத்தை எண்ணி வருந்திய மாறன்,

”அது ஒன்னுமில்ல கார்த்தி! நானும் உன் அம்மாவும் சும்மா பேசிட்டு இருந்தோம். நீ என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட?” என்று பேச்சை மாற்ற முயன்றார்.

“சும்மா பேசறவங்க சும்மா தானே ப்பா பேசனும். அதைவிட்டு பர்ட்டிகுலரா அது என்ன ஆர்ஜேவா பார்த்து கட்டிவைக்கனும்னு பேசிக்கறது?”

‘ஆரம்பிச்சிட்டான்! இனி உண்மையை சொல்லாம போனா பேசி பேசியே உசிர எடுத்துடுவான்!’ கடுப்பானவர், அவனின் அத்தை சொன்னது முதற்கொண்டு இவனுக்கு யாரும் பெண் கொடுக்க மாட்டார்கள் என்ற காந்திமதியின் பயம் வரை உள்ளதை உள்ளபடியே சொன்னவர்,அதன் பிறகு நடந்த தங்களின் உரையாடலை,

“அம்மா அப்படி பயந்ததும், ‘அவனுக்கு என்ன குறை காந்தி? ஆர்ஜே பொண்ணுங்க அவனை கட்டிக்க நான் நீன்னு  லைன்ல நிப்பாங்க. அதுல ஒன்னை பார்த்து கட்டிவச்சிடலாம்’ என ஆறுதலா சொல்லிட்டு இருக்கும் போதுதான் நீ வந்த கார்த்திக்!” என சாமார்த்தியமாய் மாற்றி சொன்னார்.

அப்பாவின் சாதூரியத்தை எண்ணி மனதுக்குள் அதிசயித்த கார்த்திக், “அதெல்லாம் செட்டாகாது ப்பா!” என நைசாக தன் எண்ணத்தை வெளியிட்டான்.

“ஏன் ப்பா?” என கேட்ட அன்னைப் பார்த்தவன்,

“இப்ப எப்படி ம்மா நான் பேசறது கேட்குது. இத்தனைக்கும் நான் சத்தமா கூட பேசலையே!” என ஆச்சரியமாய் கேட்டான்.

“குறைந்த சத்தத்துல வர குரலோ இசையோ எதுவா இருந்தாலும் எனக்கு நல்லாகேட்குது கார்த்தி. ஆனா காட்டுகத்தல்ல வர சத்தத்தை தான் என்னால கவனிச்சி அதுக்கு பதில் கொடுக்க  முடியல” என்றார் பரிதாபமாய்.

இதை தான் அவன் வீட்டில் நுழையும் போதே காந்திமதி மாறனிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.ஆனால் அப்போது அதில் அவ்வளவு கவனத்தை செலுத்தாது தன் வருங்காலத்தை எண்ணி கலங்கிக் கொண்டிருந்தவன், இப்போது தான் அன்னையின் வார்த்தைகளை மனதில் வாங்கினான்.

அந்த நிமிடத்தில் தான் முதல் முறையாக தன்னால் தான் அம்மாவிற்கு இப்படி ஒரு குறை வந்ததோ… என சிந்திக்க தொடங்கினான். ‘அடுத்த முறை கன்சல்டிங் போகும் போது மிஸ்.ஈஎன்டி கிட்ட நல்லா தெளிவா இதை கேட்டு தெரிஞ்சுக்கனும்’ என்று எண்ணியவனின் எண்ணம் ஈடேறபோவதில்லை என்பதை  இவன் அறிவானா?

மகனின் அக்கறையான விசாரிப்பில் மனம் மகிழ்ந்த காந்திமதி அவன் சொன்ன ‘அதெல்லாம் செட்டாகாது ப்பா!’ என்றதை மறக்க, மாறனோ,

“என்னமோ   அதெல்லாம் செட்டாகாது ப்பான்னு சொன்னியே கார்த்தி, அது எது ப்பா?” எனக்காரியத்தில் கண்ணாய் கேட்டார்.

‘இதுதான் நல்ல சந்தர்ப்பம்… தானாவந்து அப்பா கேட்கும் போதே நம்மோட ஆசையை சொல்லிடனும்’ எண்ணியவன்,

“அதான்ப்பா… எனக்கு ஆர்ஜே பொண்ணெல்லாம் சரிப்படாதுன்னு சொல்ல வந்தேன்!” என்றான்.

போனமாதம் வரை, ‘அந்த ரேடியோ ஆர்ஜே எனக்கு பூ கொடுத்து ப்ரபோஸ் பண்ணாங்க… இந்த ரேடியோ ஆர்ஜே எனக்கு பொக்கே கொடுத்து கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டாங்க… எங்க ரேடியோ ஆர்ஜே என்கிட்ட கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமான்னு பாட்டாவே படிச்சாங்க…’ இப்படி ஆயிரம் அளப்பறைகளை அவிழ்த்துவிட்டுக்கொண்டிருந்தவன், இப்போது இப்படி சொன்னால் அவர்களும் தான் என்ன செய்வார்கள்?

இத்தனை நாட்களாக அவன் செய்த பில்டப்புகளை எல்லாம் உண்மை என்று நம்பியவர்கள், ‘அவனுக்கு கூட வேலை செய்யும் பொண்ணு மேல ஒரு கண்ணு போல! அதான் இப்படி பேசிட்டு திரியுது பயபுள்ள’, என எண்ணிக்கொண்டு அந்த பெண்ணின் தலையிலேயே இந்த பாரத்தை இறக்கிவிட்டு தப்பித்துக் கொள்ளலாம் என ஆசையாசையாய் நினைக்க, இப்போது இவன் இப்படி சொன்னதும் அதைக்கேட்டவர்களோ அதிர்ந்துப்போய் அவனையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

பெற்றவர்களின் அதிர்ந்த தோற்றத்தைப் பார்த்தும் மனமிறங்காத கார்த்தி, ”ஆமாம் மா! எனக்கு உங்களைப் போல சாந்தமா அனாவசியமா வாயாடாத  சாது பொண்ணுதான் வேணும்!” என கூறி மேலும் அதிரவைத்தான்.

‘சாது பொண்ணு!’ என சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவனின் மனசாட்சி, ’யாரு… அந்த மிஸ்.தொமூகா! சாது? இதை நாங்க நம்பனுமா?’ என அவனை எதிர் கேள்விக் கேட்டது.

‘ஆமாம்… நம்பனும், நம்பித்தான் ஆகனும். ஏன்னா… அவதானே இனி என்னோட எல்லாம்!’ என பிரபு ஸ்டைலில் சொன்னதும், இதில் யாருக்காக பாவப்பட? என்ற ஆராய்ச்சியில் இறங்கியது அவனின் மனசாட்சி.

“கார்த்தி! பெண் பாவம் பொல்லாதுடா! அதுவும் வாயில்லா பூச்சிங்க சாபம் விட்டா அது ஏழேழு ஜென்மத்துக்கும் நம்ம தலைமுறைய தாக்கும்ப்பா!” காந்தி மதி  சாமிவந்து இறங்கியதைபோல மிரண்டுப்போய் அலறினார்.

அன்னையின் அலறல் எதனால் எனப் புரியாது தந்தையைப் பார்த்தவனுக்கு அவரின் அடக்கப்பட்ட சிரிப்பு கடுப்பை கிளப்பியது.

“என்ன… இப்ப என்னத்துக்கு இப்படி இளிக்கறீங்க? எனக்கும் சொன்னா நானும் கூட சேர்ந்து இளிப்பேன்” என்றான் எரிச்சலாக.

“உங்க அம்மா ஒரு பெண்ணோட அதுவும் சாது பெண்ணோட சாபத்துக்கு ஆளாக மாட்டாளாம். அதனால நீ அந்த விஷப்பரிட்சை எல்லாம் செய்ய வேணாமாம்!” என்றார் அவனின் எரிச்சல் குரலுக்கு சற்றும் குறையாத நக்கல் குரலில்.

தெனாவட்ட பார்த்தியா இந்த மாறன் குடும்பத்துக்கு! பெரிய சன் குழுமம் மாறன்னு நினைப்பு இவங்க ரெண்டு பேருக்கும். இவங்க சந்ததிக்கு நூறு டிவி சேனலை சேர்த்து வைச்சிட்டாங்க.அதுவே போதும் அதுக்கு மேல  இன்னும் ஏன் பாவத்தை சேர்த்து வைக்கனும்னு ஓவர் பீலிங்!

“நான் சொல்றதை சொல்லிட்டேன் எனக்கு ரொம்ப பேசாத எல்லாத்தையும் தன்னோட மௌனத்தில் சொல்ற பொண்ணுதான் வேணும். அப்படி யாராவது உங்க கண்ணுல சிக்கினா என்னை கல்யாணத்துல சிக்கவைங்க. இல்லைன்னா எனக்கு கல்யாணமே வேணாம்” வேகமாக மொழிந்தவன்,

“ம்மா… அடுத்த விசிட் நான் தான் உங்க கூட ஹாஸ்பிடல் வரப்போறேன். அப்பா நம்ம கூட வர வேண்டாம்!” என நிறுத்தி நிதானமாக தந்தையின் கண்களைப் பார்த்து சொன்னான்.

மௌனத்தில் பேசும் பெண்… ஹாஸ்பிடல் விஜயம்… இதெல்லாம் தன் மகனின் எண்ணம் மௌனிகாவிடம் மையம் கொண்டுள்ளதை மாறனுக்கு பறைசாற்றியது. மௌனிகாவின் நிலையை தன் நண்பனின் மூலம் நன்கு அறிந்தவருக்கு மகனின் ஆசை அவ்வளவு எளிதில் ஈடேறாது என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்தது.

’அந்த பொண்ணை பத்தி எல்லாத்தையும் சொல்லிட்டா இவன் தன் விருப்பத்தை மாத்திப்பானா? ம்க்கும்…  சொன்னா சொன்னதை  அப்படி கேட்கிறவனையா நான் பெத்துவச்சியிருக்கேன்? செய்யாதேன்னு ஒன்னை சொன்னா அதை செய்துட்டு நம்மகிட்ட வந்து ஆயிரம் பக்கத்துக்கு அதை பத்தி பேசிட்டு அப்புறம் ஆற அமர ஏன் அதை செய்ய வேணாம்னு சொன்னீங்கன்னு கேட்கற லூசையில்ல காந்தி பெத்து, என் தலையில கட்டிட்டா!’ 

‘இந்த பிரச்சனை எங்க போய் முடியப்போகுதோ… என் பொண்டாட்டிக்கு வைத்தியம் பார்க்க வந்த டாக்டர் மேலதான் இவனுக்கு லவ்வு வரனுமா? வந்தது தான் வந்ததே..  அது இவ காது சரியானதும் வந்திருக்க கூடாதா! இந்த பையன் இனி செய்ய போற லூசுத்தனத்தால அந்த பொண்ணு என் பொண்டாட்டிக்கு வைத்தியம் பார்க்க மாட்டேன்னு சொல்லிட்டா நான் என்ன பண்வேன்… அதை என்னன்னு காந்திக்கிட்ட சொல்வேன்… அடேய் கார்த்தி! நீ வாய தொறந்தாலே ஏதாவது வம்பு வந்து நிக்குதுடா” புலம்பி புலம்பியே அந்த இரவை ஓட்டினார் மாறன். அவரின் தூக்கத்தைக் கெடுத்தவனோ…  தன் தூக்கத்தை கெடுத்துவிட்டதாக மௌனியை வசைப்பாடிக் கொண்டிருந்தான்.அந்த  வசைப்பாட்டிற்கு சொந்தக்காரியோ வாழ்க்கையில் சொந்தமென எவரும் அவள் வசமில்லாததால் எதிர்காலத்தை எண்ணி  தூக்கத்தை தொலைத்துவிட்டு  விழித்திருந்தாள் விடியலுக்காக!

ராஜேஸ்வரி சிவகுமார்

Categories
Uncategorized

அத்தியாயம் – 5

அத்தியாயம் – 5

அவளை எப்படியாவது தன்னை திரும்பி பார்க்க வைத்து விட வேண்டும் என்கிற வலுவான எண்ணத்துடனும், உற்சாகத்துடனும் பைக்கை செலுத்த ஆரம்பித்தான்.

தன்னை சுற்றிலும் நடந்து கொண்டிருந்தவைகளை கண்டு கொள்ளாது வழக்கம் போல காதில் மாட்டி இருந்த ஹெட் போனில் இருந்து துள்ளலான பாடல் ஒலிக்க, அவனை அறியாமலே அந்த பாடலை பாடிக் கொண்டு அவளது மருத்துவமனை முன் சென்று நின்றான்.

பைக்கை நிறுத்திவிட்டு, உயரமான கட்டிடத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே சென்றவன் படியில் ஏறும் போது எதிரே வருபவரை கவனியாது நேரே சென்று மோதினான்.

தீபக்கிடம் இருந்து அழைப்பு வந்ததால் அவசரமாக லிப்டில் இருந்து வெளியேறியவள், வேகமாக படியிறங்க, எதிரே வந்தவன் வழியை கொடுக்காது மோதி வைத்தான்.

மோதிய அதிர்வில் கீழே விழப் போனவளின் இடையை பற்றி நிறுத்த முயற்சிதான். அவனது கரம் இடையில் பதிந்ததும் கொதித்து போனவள் “எருமை மாடு மாதிரி வந்து மோதுரீங்களே வெட்கமா இல்ல?” என்று சீறிக் கொண்டே அவனிடமிருந்து விலகினாள்.

அவளது கோபத்தில் சற்று ஜெர்கானவன் “இனம் இனத்தோடு தான் மோதும் மேடம்” என்றான் குறுநகையோடு.

அவளோ அவனிடம் பேச விரும்பாமல் “காது தான் செவிடுனா கண்ணும் குருடு போல இருக்கு” என்று கடித்து துப்பிவிட்டு நகர்ந்தாள்.

சிறிதும் அலட்டிக் கொள்ளாது அவள் வழியை மறித்து “உங்களை தான் பார்க்க வந்திருக்கேன் மிஸ். மௌ..னி..கா” என்றான் கேலியாக.

கண்களில் சீற்றத்துடன் திரும்பியவள் “என்னை எதுக்கு பார்க்கணும்? நீங்க பேஷண்ட்டா?” என்றாள் கடுமையாக.

அவளது கோபத்தை ரசித்தபடி “பேஷண்ட்டா இருந்தா நல்லா தான் இருக்கும். அடிக்கடி பார்க்க வரலாமில்ல” என்றான் .

ஏனோ அவனை பார்த்தாலே அத்தனை எரிச்சலாக இருந்தது அவளுக்கு.

‘ச்சே..சரியான வழிசல் கேஸ்’ என்று முணுமுணுத்துக் கொண்டே காரில் ஏறி அமர்ந்தாள்.

அதை கேட்டவன் லேசாக முகத்தை சுருக்கிக் கொண்டு கார் கண்ணாடியின் அருகே குனிந்து லேசாக தட்டி அவள் திறந்ததும் “ஹலோ தொமுக மேடம்! ரொம்ப பந்தா பண்ணாதீங்க. முன்ன பின்ன வழிசல் கேசை நீங்க பார்த்ததே இல்ல போல” என்றவன் தனது பாக்கெட்டில் இருந்து ஒரு காட்பரி சாகலேட்டை எடுத்து நீட்டினான்.

அவனை முறைத்துக் கொண்டே காரை ஸ்டார்ட் செய்தவள் ஜன்னலை மூடத் தொடங்கினாள்.

“நல்ல விஷயம் பேசும் போது ஸ்வீட் கொடுக்கணும்னு டிவியில சொல்லி இருக்காங்க. ஆனா நான் இப்போ எதுவும் நல்ல விஷயம் பேச போறதில்லை என்றாலும் ” என்று மேலும் பேச போனவனை கை நீட்டி தடுத்தவள் “கதவிலிருந்து கையை எடுங்க” என்றாள் கடுப்பாக.

அவளது கடுகடு முகத்தை பார்த்ததும் கையை எடுத்தான். அவசரமாக கதவை மூடிவிட்டு காரை வேகமாக கிளப்பிக் கொண்டு சென்றாள். அதையே பார்த்துக் கொண்டிருந்தவன் தாடையை தேய்த்தபடி ‘ஓவரா சீண்டிட்டோமோ’ என்று எண்ணிக் கொண்டே பைக்கில் ஏறி அமர்ந்தான்.

காரில் சென்று கொண்டிருந்தவளுக்கோ சொல்ல முடியாத எரிச்சல் மண்டியது. சிறுவயதில் இருந்து தனித்தே வாழ்ந்து பழகியவளுக்கு நிறைய பேசுபவர்களை கண்டால் அலர்ஜி. அவர்கள் இருக்கும் திசை பக்கமே செல்ல மாட்டாள். ஆனால் இந்த இரண்டு நாளாக இவனிடம் சிக்கிக் கொண்டு தலைவலியே வந்துவிட்டது. எங்கிருந்து வந்தான் இந்த இம்சை என்று அவனை அர்ச்சித்துக் கொண்டே தீபக் தனக்காக காத்திருந்த ஹோட்டலுக்கு சென்றாள்.

ஹோட்டல் பார்கிங்கில் காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தவளை மெல்லிய இசை வரவேற்றது. தீபக்கை கண்களால் தேடிக் கொண்டே மெல்ல நடந்தாள். அவனிருந்த மேஜையை கண்டு கொண்டதும் நேரே சென்றமர்ந்தாள். எதிரே இருந்த தண்ணீரை எடுத்து மடமடவென்று குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

அவளது செயலை பார்த்துக் கொண்டிருந்த தீபக்கிற்கு ஏதோ டென்ஷனில் வந்திருக்கிறாள் என்று புரிந்தது.

“என்ன பிரச்சனை மௌனி?”

தண்ணீர் பாட்டிலை கீழே வைத்தவள் கார்த்திக்கை பார்த்த அன்றிலிருந்து நடந்தவைகளை மெல்லிய குரலில் கூறினாள்.

அதை சிரிப்புடன் கேட்டுக் கொண்டவன் “இதை தான் தலையால தண்ணி குடிக்க வைக்கிறதுன்னு சொல்வாங்க போல” என்றான் கிண்டலாக.

எரிச்சலுடன் அவனைப் பார்த்து “ம்ச்…எப்படி தான் ஒரு மனுஷனால இவ்வளவு பேச முடியுதோ?” என்றாள்.

கைகளை கட்டிக் கொண்டு அமைதியாக இருந்தவன் “சரி விடு மௌனி! நான் உன்னை கூப்பிட்ட விஷயத்தை சொல்றேன்” என்றான்.

லேசாக தலையில் அடித்துக் கொண்டவள் “அதை மறந்தே போயிட்டேன். நீ சொல்லு” என்றாள் அவன் முகம் பார்த்து.

சற்றே யோசனையுடன் “எங்கம்மாவோட பிரெண்ட் பையன் டெல்லியில் டாக்டராக இருக்கான் மௌனி. அவங்க அந்த காலத்திலேயே காதல் திருமணம் பண்ணினவங்க. எங்கம்மா மூலியமா உன்னை பத்தி தெரிஞ்சு பெண் கேட்கிறாங்க. உன்னோட பதில் என்னன்னு தெரிஞ்சுகிட்டு மேற்கொண்டு முடிவு பண்ணலாம்னு அம்மாவுக்கு யோசனை” என்றான்.

அதுவரை கார்த்திக் ஏற்படுத்திய எரிச்சலில் இருந்து விடுபட்டவள் தீபக்கின் பேச்சில் அதிர்ந்து இதென்ன புது பிரச்சனை என்று மௌனமாக அவனை பார்த்தாள்.

“அம்மா தான் என்னை பேச சொன்னாங்க மௌனி. உன்னோட விருப்பத்துக்கு  தான் இங்க முக்கியத்துவம். நீ சொல்கிற பதிலை வைத்து அம்மா அவங்க பிரெண்ட் கிட்ட பேசுவாங்க” என்றான்.

கண்களை அழுந்த மூடியவளின் இமைகள் பாரம் தாங்காமல் வலித்தது. அன்னை, தந்தையை இழந்து மாமனிடம் வளர்ந்தவளுக்கு உண்மையான அரவணைப்பு கொடுத்தது தீபக்கின் அன்னை தான். மகனின் தோழியாக மட்டும் பார்க்காமல் தனது மகளை போலவே அன்பை காட்டுவார்.

அவரிடம் திருமணம் வேண்டாம் என்று எப்படி உரைப்பது என்று குழம்பி அவனிடமாவது தன் மனதில் உள்ளதை பகிர்ந்து கொள்ளலாமா என்று யோசித்தாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் “என்ன மௌனி?” என்றான் மென்மையாக.

“இதுவரை என்னோட திருமணத்தை பத்தி நான் எதுவும் யோசிச்சதில்லை தீபக். பல வருஷங்களுக்கு பிறகு இப்போ தான் சுதந்திர காற்றை அனுபவிச்சிட்டு இருக்கேன். நான் என்ன பண்ணனும்னு நினைக்கிறேனோ அதை செய்ய யாருடைய உத்தரவிற்காகவும் நிற்க வேண்டிய நிலை இப்போ தான் விலகி இருக்கு.  இந்த நேரத்தில்  திருமணம் எனக்கு என்ன வச்சிருக்கு என்று எதுவும் சொல்ல முடியாது” என்றாள் நெற்றியை அழுந்த தேய்த்தபடி.

அவளின் முன்னே இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கையில் கொடுத்தவன் “உன்னோட மனநிலை எனக்கு நல்லாவே புரியுது மௌனி. ஆனா எத்தனை நாளைக்கு நீ தனிச்சே வாழ்ந்திட முடியும்? அம்மா உனக்கு நல்லவொரு வாழ்க்கையை அமைச்சு கொடுக்கத் தான் பார்ப்பாங்க. இந்த மாப்பிள்ளை எப்படி என்னன்னு எல்லாம் நான் உனக்கு விசாரிச்சு சொல்லிடுறேன். சோ நீ ரொம்ப மனசை அலட்டிக்காம இரு” என்றான் நல்ல நண்பனாய்.

மெல்ல விழியுர்த்தி அவனை பார்த்தவள் “எனக்கு கல்யாணம் வேண்டாம் தீபக்” என்றவள் வழக்கமான தனது மௌனத்தை தொடர்ந்தாள்.

சிறிது நேரம் இருவரும் அமைதியாக அமர்ந்திருக்க, அதற்கு மேல் அவளை வற்புறுத்த மனமில்லாமல் எழுந்து கொண்டவன் “ஓகே மௌனி! உன் விருப்பம் தான். சாயங்காலம் அம்மாவை வந்து பார்த்து நீயே இதை சொல்லிடு” என்றான்.

பெருமூச்சுடன் எழுந்து “ம்ம்..சரி தீபக்” என்று கூறிவிட்டு ஹோட்டலை விட்டு வெளியேறினாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் மனதில் ‘நல்ல வாழ்க்கை அமையனும் அவளுக்கு’ என்று வேண்டிக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.

அவளை சீண்டுவதற்காகவே தனது வேலையை விட்டு வந்தவன் அதை முடித்ததும் அலுவலகத்திற்கு சென்றான்.

தனது ப்ரோக்ராமை முடித்துக் கொண்டு வெளியே வந்த கிரி “மச்சி! திடீர்னு எங்கடா போன?” என்றான்.

அவன் தோளில் கையை போட்டு இழுத்துக் கொண்டே காண்டீனிற்கு சென்று நாற்காலியில் அமர்ந்தவன் “எனக்கு லவ் வந்துடுச்சு மச்சி” என்றான்.

ஆ..வென்று வாயை திறந்து கொண்டு பார்த்தவன் “என்னடா இது! என்னவோ பார்சல் வந்த மாதிரி சொல்ற?” என்றான்.

அவனது முதுகில் ஓங்கி அடித்து “உண்மையா மச்சி! நானெல்லாம் லவ் பண்ணுவேன்னு கொஞ்சம் கூட நினைக்கல” என்றான் முப்பத்திரண்டு பல்லையும் காட்டி.

அவன் அடித்ததில் முதுகை தடவியபடி “டேய்! டோர் க்ளோஸ் பண்ணுடா முடியல. நீ லவ் பண்ற சரி. அந்த பொண்ணு உன்னை லவ் பண்ணுதா?”

விட்டத்தை பார்த்துக் கொண்டே “அதெல்ல்லாம் இன்னும் யோசிக்கலடா. ஆனா பொண்ணு செம சூப்பரா இருக்கா. என்ன ஒன்னு என்னை மாதிரி பேச மாட்டேன்றா” என்றான்.

அவனது அலப்பறைகள் தாங்காது பொறுத்து பொறுத்து பார்த்தவன் “டேய்! நிறுத்து! முதல்ல யார் அந்த பொண்ணு? உனக்கு எத்தனை நாளா பழக்கம்? அதை சொல்லு?” என்றான்.

கனவில் மிதந்த விழிகளுடன் “நேத்து தான் பார்த்தேன் டா. உண்மையை சொல்லனும்னா அவ மேல எனக்கு செம கடுப்பு. நாம எங்க போனாலும் பொண்ணுங்க தானா வந்து பேசி நம்மள சுத்துவாங்க. ஆனா இவளை நானா தேடி போயும் போடா போக்கத்தவனேன்னு சொல்லிட்டா” என்றான் பெருமையாக.

அவனது வீணா போன பெருமையை கண்டு கொலைவெறியாகி போனவன் இரு கைகளையும் அவன் கழுத்தில் வைத்து நெறித்து “நேத்து பார்த்த ஒரு பொண்ணுக்கு தான் இவ்வளவு பில்டப்பா?” என்றான் கடுப்பாக.

“அதென்ன அப்படி ஈஸியா கேட்டுட்ட…ஒரு நிமிஷம் முன்னாடி பார்த்தா கூட மனசை தட்டி உள்ளே உட்காரனும். இவ தான் நமக்குன்னு தோணனும். சில பேருக்கு காலம் காலமா வாழ்ந்தா கூட அந்த ஒட்டுதல் வரதில்லை” என்றான் சீரியசான குரலில்.

அவனது உளறல்களை கண்டு மேலும் கடுப்பான கிரி “அடேய்! இதெல்லாம் ரொம்ப ஓவர்! சரி சொல்லு! அந்த பொண்ணு என்ன பண்ணுது? எங்கே பார்த்தே? எப்படி பார்த்தா?” என்று கேள்விகளை அடுக்கினான்.

“பொறுமையா கேளுடா! ஒரே நேரத்தில் இத்தனை கேள்வியை கேட்டா நான் எப்படி பதில் சொல்றது? அதிலும் ஒரு காவியத்தை அவ்வளவு ஈஸியா சொல்லிட முடியுமா?”

அவனை நாலு அப்பு விட வேண்டும் என்கிற எண்ணத்தோடு முறைத்தவன் “என்னது காவியமா? மச்சி நீ போற ரூட் நல்லாயில்லை! நீ சொல்லு! அது காவியமா இல்ல மரண மொக்கையான்னு நான் சொல்றேன்” என்றான் எரிச்சலுடன்.

அவனது குரலில் இருந்த எரிச்சலையோ, கடுப்பையோ கண்டு கொள்ளாது கனவில் மிதந்தபடி அன்னைக்காக அவளை பார்க்க சென்றதில் இருந்து அவளது உதாசீனம் அவனை பாதித்தது வரை சொன்னவன். இப்போது அவளை சீண்டி விட்டு வந்தது வரை கூறி முடித்தான்.

சிறிது நேரம் அவனை அமைதியாக பார்த்து தொண்டையை கனைத்து உமிழ் நீரை வாய்க்கு கொண்டு வந்து காறி துப்புவது போல வந்து “ஏண்டா இதெல்லாம் ஒரு கதைன்னு வந்து என்கிட்டே சொல்ற பாரு…இதுல காவியமாம். அவ உன்னை செருப்பை கழட்டி அடிக்காம விட்டாளே” என்றான் புசுபுசு வென்று மூச்சு விட்டுக் கொண்டே.

அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் “எதுக்கு மச்சான் நீர் யானை மாதிரி மூச்சு விடுறே? நீ வேணா பாரு நானும் அவளும் சேர்ந்து டுயட் பாடுவோம் என் ப்ரோக்ராம்மில்” என்று மேலும் எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றினான்.

சேரை பின்னுக்கு தள்ளி எழுந்தவன் “நீ டுயட் பாடு பாடாம போ…ஆனா இன்னொரு தடவை இந்த காவியத்தை என் கிட்ட சொல்லிடாத” என்று கூறி வேகமாக வெளியேறினான்.

அவனை அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்துவிட்டு எழுந்தவன் “இப்போ எதுக்கு இவன் இவ்வளவு கோபப்படுறான்? என் காதல் கதை என்ன அவ்வளவு மொக்கையாவா இருக்கு?” என்று முணுமுணுத்துக் கொண்டே நகர்ந்தான்.

கார்த்திக்கின் வீட்டில் மனைவியிடம் பேச முயற்சித்துக் கொண்டிருந்தார் மாறன். காந்திமதியோ அவரிடம் பேசாமல் தவிர்க்க முயன்றார்.

“நேத்து என் தங்கச்சி என்ன சொன்னா காந்தி?”

அவர் கேட்டது காதில் விழுந்தாலும் சோர்ந்த முகத்துடனே காதில் விழாத மாதிரி அங்கிருந்து செல்ல முயன்றார்.

“உனக்கு நான் கேட்டது காதில் விழுந்துதுன்னு தெரியும் காந்தி. அவ என்ன பிரச்னையை கிளறி விட்டுட்டு போனா. அதை சொல்லு” என்றார்.

அதுவரை மனதிற்குள் குமுறி கொண்டிருந்தவர் “நம்ம பையன் பார்க்கிற வேலைக்கு எவனும் பொண்ணு கொடுக்க மாட்டானாம். உங்க தங்கச்சி சொல்லிட்டு போறா” என்றார்.

அதை கேட்டு கோபமானவர் “ஏன்? அவன் வேலைக்கு என்ன குறை?”

“நீங்களும் நானும் தான் மெச்சிக்கணும். யாரை கேட்டாலும் சட்டுன்னு ஆர்ஜேவா அப்படின்னு முகம் சுளிக்கிறாங்க” என்றார் வருத்தத்துடன்.

“இன்னைக்கு இருக்கிற சூழ்நிலையில் இந்த வேலையில் ஒன்னும் குறையில்ல காந்தி. மற்றவங்க சொல்றாங்கன்னு நம்ம பிள்ளையை நாமே குறைச்சு எடை போட கூடாது”.

“அதுகில்லைங்க…அவனுக்கு யாரும் பொண்ணு கொடுக்கலேன்னா என்ன பண்றது?”

“நீ தேவையில்லாம கவலைப்படுற காந்தி. அதெல்லாம் அவனுக்கு ஜாம்-ஜாம்னு கல்யாணம் பண்ணி வைப்போம்”.

“இவன் வாய்க்கு வர பொண்ணோட இருந்து பிழைக்கணுமே என்று தான் கவலையா இருக்குங்க” என்றார் மெல்லிய குரலில்.

“அதை விடு காந்தி! உனக்கு காதுல என்ன பிரச்சனை? இப்போ நல்லா தானே கேட்குது? ஆனா சில சமயம் சுத்தமா நாங்க பேசுறது உனக்கு கேட்கவே மாட்டேங்குதே ஏன்?” என்றார்.

உதட்டை பிதுக்கி “தெரியலங்க! இந்த மாதிரி அமைதியா இருந்தா எல்லாமே காதுல விழுது. சின்ன சின்ன சத்தம் கூட நல்லா கேட்குது. ஆனா இந்த பையன் வந்து டிவியை அலற விட்டு, மியுசிக் சிஸ்டத்தை அலற விட்டாலே எனக்கு காது வலிக்க ஆரம்பிச்சிடுது. அப்புறம் தலைவலி வந்து சுத்தமா எதுவுமே கேட்க மாட்டேங்குது” என்றார்.

“அவன் வந்தா நான் சொல்றேன் காந்தி. நீயே அவன் கிட்ட சொல்லி இருக்கலாமே. அவன் புரிஞ்சுகிட்டு இருப்பானேம்மா”.

சோர்வான முகத்துடன் “இல்லைங்க! அவன் இதை புரிஞ்சுக்க மாட்டான். சின்ன வயசிலேயே காதுல ஸ்பீக்கரை கட்டிக்கிட்டு பிறந்தவன். அவனால என்னோட கஷ்டத்தை புரிஞ்சுக்க முடியாது”.

“நீ விடு காந்தி! நான் சொல்கிறபடி அவனுக்கு சொல்லி இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரேன்”.

மெல்ல எழுந்தவர் “அவனுக்கு பொண்ணு பார்க்கலாமாங்க. கல்யாணத்தை பண்ணி வச்சிட்டு நாம தனியா போயிடலாம்” என்றார்.

அதை கேட்டு சிரித்த மாறன் “நீ தப்பிச்சுக்க கல்யாணம் பண்ணி வச்சு ஒரு பொண்ணை மாட்டி விடலாம்னு நினைக்கிறியே”.

அவர் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு “சத்தியமா முடியலங்க! நானும் பல விதமா சொல்லி பார்த்துட்டேன் சத்தமா வைக்காதடான்னு. ஆனா இப்படியே போனா என் காது சுத்தமா போயிடும். அதுக்கு தான் சீக்கிரம் கல்யாணத்தை பண்ணி வச்சிட்டு நாம இங்கே இருந்து கழண்டுக்கலாம்” என்றார்.

மாறனுக்கு மனைவியின் புலம்பலை கேட்டு அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை. அவருமே கார்த்தியின் அளப்பரைகளை கண்டு நொந்து தான் போயிருந்தார்.

“அவன் கல்யாணத்துக்கு ஒத்துக்கணுமே காந்தி” என்றார் யோசனையுடன்.

சற்று யோசித்து “அவனை மாதிரியே நிறைய பேசுற பொண்ணா…அவளும் ஒரு ஆர்ஜேவா பார்த்து கட்டி வச்சிடுவோம். அப்புறம் அவன் பாடு பக்கத்தில் வீட்டில் இருக்கிறவங்க பாடு” என்றார் சீரியசாக.

சுதாரவி

Categories
Uncategorized

அத்தியாயம் – 3

அத்தியாயம் 3:

 

எட்டடுக்குகள் இருப்பதே தெரியாமல் கண்ணாடிகளால் சூழப்பட்ட அந்த கட்டிடத்தின் அனைத்து தளங்களும் இரவு நேரத்திலும் பரப்பரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது.

தன் வேலை நேரம் முடிந்ததும் ஏதாவது அப்பாயின்மென்ட் இருக்கிறதா என்று வரவேற்பறைக்கு அழைத்துக் கேட்ட மௌனிகா, தன் கைப்பையை எடுத்து, அறையை விட்டு வெளியேறினாள்.

லிஃப்டினுள் நுழைந்து இவள் இருக்கும் மூன்றாம் தளத்திலிருந்து அடித்தளம் செல்வதற்கான பட்டனை அழுத்தினாள். சென்னையிலுள்ள பிரபலமான மருத்துவமனை. ஆதலால் ஒவ்வொரு தளத்திலும் நின்று சிலரை ஏற்றியும் வெளியேற்றியும் கொண்டிருக்க, பொறுமையாக நின்றிருந்தாள்.

எப்பொழுதும் பேஷண்ட்களிடமும், அவர்களோடு வந்திருப்பவர்களிடமும் பொறுமையை கடைபிடிப்பவள், இன்று கார்த்திக்கின் நடவேடிக்கையில் எரிச்சலுடன் நடந்துக் கொண்டாள்.

‘கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாதவன்!!!’ என்று மனதினுள் வைதபடியே, தன் கையில் வைத்திருந்த பேசியை பார்ப்பதும், நிமிர்ந்து எந்த தளத்தில் இருக்கிறோம் என்று பார்ப்பதுமாக இருந்தவள், தன் காரை பார்க் செய்திருந்த அடித்தளம் வரவும் வெளியே செல்ல முயன்ற போது, ஒரு வலிய கரம் அவள் வாயை பொத்தி, அந்த பலத்திலேயே அவளை மீண்டும் லிஃப்டில் தள்ள, முதலில் அதிர்ந்தவள்,

“ம்ம்ம்” என்ற திமிறலுடன் அவன் கையை வேறு குத்த ஆரம்பித்தாள். அவன் அதற்கெல்லாம் அசராமல் கையை எடுக்காமலே எட்டு என்கிற பட்டனை அழுத்தினான். ஏதோ ஒரு தளத்தில் லிஃப்ட்டின் கதவு திறக்கவும், அவளின் வாய் மீதிருந்த கையை எடுத்து விட்டு சற்று தள்ளி நின்றான்.

அவளும் மூன்றாம் நபர் முன் எதையும் காட்டிக் கொள்ளாமல் ஓரமாக நின்று அவனை முறைத்தாள்.

ஏழாவது தளம் வந்ததும் ஏறியவர் இறங்கி செல்லவும், மீண்டும் இருவர் மட்டும் தனித்து இருக்க, அவனை தன் கைப்பை உதவியுடன் நன்றாக அடித்தாள்.

“ஏன்டா இப்படி பண்ற? நம்ம காலேஜ் இல்ல இது ஹாஸ்பிட்டல்” என்றாள் தன் நண்பன் தீபக்கிடன்.

தீபக், “கீழே மட்டும் போயிருந்த தமிழ்நாட்டுக்கு இன்னைக்கு ஹெட் லைன்ஸ் நீ தான். உன் காருக்கு பின்னாடி தான் நிற்கிறானுக” என்று எரிச்சலுடன் மொழிந்து விட்டு, உரிமையாக அவள் கைப்பையை வாங்கி, அதிலிருந்த கைபேசியை எடுத்து அவளிடம் கொடுத்தான். அதற்குள் எட்டாவது தளம் வந்து விட, அங்கிருந்து டெரேஸ் என்று அம்புக்குறிக்காட்டிய படிக்கட்டுகளில் ஏறினான்.

தீபக் அனுப்பிய குறுஞ்செய்தியை படித்தபடியே மௌனிகாவும் அவனை பின் தொடர்ந்தாள். மொட்டை மாடியின் நான்கு புறமும் சென்று கீழேப் பார்த்தவன், அவள் முன் வந்து,

“நீ வைரலாக்கின வீடியோவோட எஃபெக்ட் பார்த்தியா?”

“என் கசின் அப்லோட் பண்ணினது. கண்டிப்பா நாங்க தான்னு கண்டிபிடிக்க முடியாது தீபக்” என்று நிதானமாக சொல்லி விட்டு, அங்கிருந்த ஸ்டோன் பெஞ்சில் அமர்ந்தாள்.

“யாரு?? அனிருத்க்கு கசின் சைஸ்ல இருந்துக்கிட்டு நான்தான் அடுத்த சுந்தர் பிச்சை ன்னு சொல்லிட்டு திரியுறவனா?” என்றதும்,

“அடிங்க” என்று அடிக்க போக, தீபக் ஏதோ ஒரு திசையை பார்த்து,

“டேய்!! எங்கேடா இருக்க நீ? உனக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று சொல்ல, இவள் புருவத்தை சுருக்கி தீபக்கை பார்க்க,

“உன்னிடம் மாட்டி சிக்கி சின்னபின்னமாக போற அந்த பாவப் பட்ட ஜீவனைத் தான் சொல்றேன்” என்றான். மொட்டைமாடியில் இருந்த ஏஸி மோட்டார் சத்தத்தில் அவளுக்கு காதில் விழவில்லை.

அதே திசையில் சில கிலோமீட்டர்கள் தள்ளி இருந்த ஹலோ எப்.எம் அலுவலகத்தில் இருந்த கார்த்திக்,

“ஏன்டா உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையாடா” என்று கையில் இருந்த பேப்பரை கசக்கி எறிந்தான்.

“நீங்க தான் பாஸ் ஹலோ எஃப். எம் ஸ்டார் பர்ஃபார்மர்” என்று ஃப்ரெஷர் ஒருவன் ஏற்றி விட, அவனை ஒரு பார்வை பார்த்தவன்,

“இப்போ என்ன ப்ரோக்ராம் பண்ண்ணும் அவ்ளோ தானே?? வா” என்று தன் அருகில் நின்றிருந்த புதிதாக வேலைக்கு வந்த அஜயை அழைத்துக் கொண்டு அறைக்கு சென்றான்.

புதிதாக வேலைக்கு வந்திருப்பவர்கள் பேச போகும் ஸ்கிரிப்ட்டை சரி பார்ப்பதும் அவனின் வேலை தான். அப்படி சரிப் பார்க்கும் போது, “என்னடா எழுதி இருக்கீங்க?” என்று கடிந்து, மருத்துவமனையில் பட்ட அவமானத்தை இவர்களிடம் கொட்டி தீர்த்து கொண்டான்.

“இன்னைக்கு ஒருநாள் நீங்க பண்ணுங்க சார். நாங்க ஏதாவது சொதப்பிட போறோம்” என்று இரட்டையர்கள் இருவர்கள் தொகுத்து வழங்க வேண்டிய நிகழ்ச்சிக்கு பதிலாக இவனை நிகழ்ச்சியை நடத்த சொல்ல,

“ஹான்.. இசையோடு நான் ராஜா சார் ப்ரோக்ராம் உடனே வருமே அதை யாருங்க பண்ணுவாங்க” என்றான் நக்கலான கேள்வியுடன்.

“உங்களை மாதிரி ஆளுக்கெல்லாம் தொடர்ந்து மூணு மணி நேரம் பண்றது ஒரு மேட்டரா சார்” என்றான் அஜய். அப்போது தான் கார்த்திக் அவர்களைப் பார்த்து, ‘மனசாட்சி இல்லையா’ என்றுக் கேட்டான்.

“சாங்ஸாவது செலக்ட் பண்ணியா?” என்றுக் கேட்டு பேச ஆரம்பித்தான்.

அன்றைய நாளில் கனவு என்ற தலைப்பைப் பற்றி பேசுவதாக ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்த்தால், முதலில் அழைப்பில் வந்த நபருடன் உரையாட ஆரம்பித்தான்.

“கெனவு இன்னா சார். குப்புறப்படுத்து தூங்கினா வந்துட்டு போகுது” என்று சென்னை செந்தமிழில் ஒருவன் வர, இந்தபுறம் கார்த்திக் இன்முகத்தோடு பேச ஆரம்பித்தான்.

‘எப்படி தான் இந்த குடிகாரனை எல்லாம் கார்த்திக் சார் சமாளிக்கிறாரோ’ என்று வியந்து பார்த்தப்படி நின்றிருந்தான் அஜய்.

 

அதே நேரம் மருத்துமனையின் மொட்டை மாடியில்,

“தனியா ஹாஸ்பிட்டல் கட்டணுங்கிறது என்னுடைய கனவு டா. எல்லாம் தெரிந்த நீயே இப்படி பேசுறது தான்….” என்று மேலும் தொடராமல் மௌனிகா நிறுத்த,

“அவன் கையில் இருக்க மீம் க்ரியேட்டர்ஸ் இந்த ஆட்சியே நிர்ணயிக்கியிற அளவுக்கு பவர்புல் ஆளுங்க. ஈஸ்வரன் சார் தங்கைப் பொண்ணுன்னு இவ்வளவு நாள் அடக்கி வாசிச்சாங்க. ஆனா நீ பண்ணியிருக்க வேலைக்கு தட்டிட்டு போலாம்னு வந்திருக்கானுக” என்று பதட்டத்துடனும் கவலையுடனும் தீபக் நிறுத்த,

“அந்த வீடியோ ஜஸ்ட் பயம் காட்ட போட்டது. நம்மளை பற்றி நினைக்காத மாதிரி அவங்களுக்கு பிரச்சனை இருந்தால் நம்மளை கண்டுக்க மாட்டான்னு..”

“ஆன்சைட்ல உட்கார்ந்துகிட்டு ஆப்படிக்கிற உன் கசின் அறிவாளி சொன்னானா?” என்று இடை மறித்தான் தீபக் நக்கலாக.

“ஹலோ!!! எங்களுக்கும் இருக்கு” என்று ஒருவிரலால் நெற்றியின் ஓரம் அவள் தட்டியபடி அவனைப் பார்க்க,

“ஒழுங்கா காதை குடைஞ்சோமா காசை வாங்கினோமான்னு இல்லாம அவன் காதிலேயே ஓட்டை போட போனால் விடுவானா?”

“சித்ராவோட அப்பா கமிஷனர் தானே. நமக்காக ஹெல்ப் பண்ண மாட்டாரா?” என்றுக் கேட்க,

“யார் அந்த சிலுக்குவார்ப்பட்டி சித்ராவா?” சி. சித்ராவுக்கு கல்லூரியில் ரேக்கிங்கில் சீனியர்கள் வைத்தது, இன்றும் தொடர்கிறது. அவள் யோசனையுடன் தலையசைத்து ஆமோதிக்க,

“அவ ஹனிமூன் போய் நமக்கு சனிமூனை இழுத்து வச்சிருக்கா. அவங்க ஹனிமூன்க்கு ஸ்பான்ஸரே அவனுக க்ரூப் தானாம். இதில் எப்படி அந்த ஆளு உனக்கு ஹெல்ப் பண்ணுவார்”

“ஓகே தீபக். இது என் பிரச்சனை எனக்கு பார்த்துக்க தெரியும். சொல்லிட்ட இல்ல. நீ போகலாம்” என்று அவள் நிமிர்வுடன் பதில் சொல்ல, அவளை முறைத்தவன்,

“திரும்பவும் ஏதாவது வம்பை விலைக் கொடுத்து வாங்காத. ஹாஸ்பிட்டல 24 அவர்ஸ் சர்வீலன்ஸ் கேமரா இருக்கு. பேசாமல் இங்கேயே டேரா போட்டுடு. அதான் உனக்கு சேஃப். மகளே வெளியே வந்த கண்டமாக்கி காக்காவுக்கு போட்டுருவானுங்க”

“டேய் லூசு, என் வொர்க்கிங்க் அவர்ஸ் முடிந்தால் என் ரூமே எனக்கு சொந்தமில்ல. உருப்படியா ஏதாவது ஐடியா சொல்லு” என்று தலையில் கை வைத்தாள்.

“ஆமா அவனுக ஏன் இவ்ளோ தூரம் வந்தானுக. வேற ஏதோ பண்ணி வச்சிருக்கியா?” என்று ஆராய்ச்சியுடன் அவளைப் பார்க்க, அவன் பார்வையை அலட்சியத்துடன் தவிர்த்தவள், தன் கைப்பையை மாட்டிக் கொண்டு,

“செல்ப் டிஃபன்ஸ் க்ளாஸஸ் போயிருக்கேன். என்னைப் பார்த்துக்க தெரியும்” என்று சொல்லி விட்டு படிக்கட்டை நோக்கி நடக்க,

“இன்னைக்கு ஒருநாள் என்னோடு வா” என்று கெஞ்சலுடன் சொல்லிவிட்டு  முன்னே நடந்தவன், தன் கைபேசியின் உதவியோடு அருகில் இருக்கும் ஓலாவை வரவழைத்தான்.

மருத்துவமனைக்கு வெளியே நின்றிருந்தவள், தீபக் புக் செய்த கார் அருகே வரும் போது, சற்று குனிந்து தான் வழக்கமாக கார் நிறுத்தும் இடத்தைப் பார்த்தாள். தீபக் சொன்னது போலவே, காருக்கு பின் இருந்த தூணின் மறைவில் ஒருவன் தலையை மட்டும் வெளியே நீட்டி மௌனிகாவிற்காக காத்திருந்தான். யார் இவன் என்ற யோசனையுடனே நின்றிருந்த போது, அவனும் வெளியே நின்றிருந்த இவளைப் பார்த்து விட்டான்.

இத்தனை பேர் இருக்கும் இடத்தில் என்ன செய்து விடமுடியும் என்ற தைரியத்தில் அவனை முறைத்தப்படியே மௌனிகா பின் சீட்டில் ஏறி அமர, தீபக் முன்னே சென்று அமர்ந்தான்.

 

கனவே நீ இல்லையேல் உலகம் இது இல்லையே

இரு கண்ணுக்குள்ளே கூடுக்கட்டி வாழ்கிறாய்

என்று ஸ்வேதாவின் குரல் கார் முழுவதும் இனிமையாக நிறைந்திருக்க, அதை மெய்மறந்து ரசித்தப்படி வந்த தீபக்கின் கைபேசி ஒளிர எடுத்துப் பார்த்தான்.

அவர்கள் பின் தொடர்ந்து வருவதாக பின்னால் அமர்ந்திருப்பவள் அனுப்பிய செய்தியில் அதிர்ந்தவன், பின்னே மௌனிகாவை திரும்பிப் பார்க்க, அவள் அமைதியாக புன்னகைத்தாள்.

“எப்படி கண்டுபிடிச்சாங்க?” என்று டிரைவர் அறியாமல் மெதுவான குரலில் தீபக் கேட்க,

“இது ஹலோ எப்.எம் 106.4 இணைப்பில் இருப்பது உங்கள் கார்த்திக்” என்று காரில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல் நிறைவுற்றதும் கார்த்திக்கின் குரல் கேட்க, அவள் தீபக்கிற்கு பதில் சொல்லாமல்,

“கார்த்திக்!!!!” என்று அவன் பெயரை யோசனையுடன் முணுமுணுத்தாள்.

அவளின் கவனம் சிதறுவதை பார்த்தவன் வேகமாக ப்ளேய்ரை அணைத்தான். அவள் மனதில் ஏற்பட்ட தடுமாற்றத்தை தீபக் முன் வெளிபடுத்த முடியாமல் அமைதியாகவே இருந்தாள்.

உங்கள் கார்த்திக் என்று கேட்டது உண்மையா? ஒருவேளை பிரம்மையோ!!! என்று இவள் இங்கு குழம்பிய வேளையில், அங்கே அலுவலகத்தில்,

“நண்பேன்டா” என்று கிரியை கட்டியணைத்தான் கார்த்திக். அவனுடைய வழக்கமான நிகழ்ச்சியை கிரி, தான் தொகுத்து வழங்குவதாக சொல்லி விட்டானே.

“மச்சி ஹாஸ்பிட்டலில் இருந்து நேரா வந்து இறங்கிட்டேன். பைக் எடுத்துட்டு வரல?”

“பிச்சிடுவேன். நான் பத்து மணிக்கு மேலே கேப் தேடி அலைய முடியாது” என்கவும், அஜயை அழைத்து,

“எக்மோர்ல டிராப் பண்ணு” என்றான். முதல்வகுப்பு டிக்கெட் எடுத்து, வழியெங்கும் ‘கார்த்திக் சார், நான் உங்க ஃபேன்’ என்ற பாராட்டுகளை பெற்று மின்சார இரயிலில் ஏறிய போது, வலதுபுறம் யாரோ இருவர் முதுகுக் காட்டி அமர்ந்திருக்க, “லவ்வர்ஸ் போல” என்றெண்ணியபடியே, இடதுபுறம் சென்றமர்ந்தான். ஏனோ மௌனிகா இ.என்.டி என்ற நேம் போர்டும் அவள் முகமும் கண்முன்னே வர,

“இன்னைக்கு டே வே ஸ்பாயில் ஆகிடுச்சு” என்று முணுமுணுத்து, அவனுக்கு முதுகுக் காட்டி அமர்ந்திருந்தவர் ஏதோ சண்டையிட்டுக் கொள்ள சுவாரசியமாக வேடிக்கைப் பார்த்தான்.

தீபக்கும், மௌனிகாவும் தான் பெரிய சேஸிங்கிலிருந்து தப்பித்து, மின்சார இரயில் ஏறி விட்டனர்.

“ஒழுங்கா உன் மாமா மூலமா டீல் பண்ணு. இப்படி எல்லாம் ஓடிட்டு இருக்க முடியாது” என்று தீபக் சொல்ல, அவள் மறுத்து,

“இன்சூரன்ஸ் பணத்தை எல்லாம் இன்வஸ்ட் பண்ணியிருக்கோம்” என்று தலையசைக்க, பின்னால் இருந்து பார்த்த கார்த்திக்கு ஏதோ காதலர்கள் சண்டை போல் தோன்றியது.

சிறியதாக செவ்வக வடிவில் இருந்த ஐபாடை, மௌனிகா தன் ஆள்காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையில் வைத்து சுழற்றிய விதத்தையும், அவளின் அழகிய விரல்களையும் ரசித்து பார்த்திருந்தவன், அவர்கள் இருவரும் எழுவதைப் பார்த்ததும், ஜன்னலின் வழியே வெளிக்காட்சிகளை பார்த்தப்படி பார்வையை திருப்பினான்.

‘எப்படியும் நம்மைப் பார்த்ததும் வந்து பேசுவார்கள்’ என்றெண்ணி அமர்ந்திருந்தவன், இரயில் நின்று சில நிமிடங்களாகியும் வராமல் போனதைக் கண்டு திரும்பிப் பார்க்க, அவர்கள் இருவரும் ஸ்டேஷனில் இறங்கி, இப்பொழுதும் அவனுக்கு முதுகுக் காட்டியபடியே, பேசிக் கொண்டே நடந்தனர்.

‘இது என்னடா இன்று கார்த்திக்கு வந்த சோதனை!!!’ என்று அவன் மனசாட்சியே அவனை கேலி செய்தது.

அவன் இறங்க வேண்டிய இடம் வரவும், எழுந்து கதவருகே வந்தவன் காலில் ஏதோ தட்டுபட, எடுத்துப் பார்த்தால், அவள் கையில் வைத்திருந்த, அதே சின்னஞ்சிறு ஐபாட்.

                                கோகிலா

Categories
Uncategorized

அத்தியாயம் – 11(1)

அத்தியாயம் – 11 (1)

மாடியில் டாங்கின் கீழ் அமர்ந்திருந்தவளின் மனம் எரிமலையாக கனன்று கொண்டிருந்தது. நிச்சயதார்த்தம் நின்று பத்து நாட்களுக்கு மேல் ஆகியிருந்தது. அந்த சம்பவத்திற்கு பின் முதன்முறையாக ஆபிஸ் சென்ற போது இப்படி நடந்து விட்டதே என்று விசாரிப்பதை விட, அனைவரின் கேள்வியிலும் அடுத்து என்ன செய்யப் போகிறாய் என்கிற ஆர்வமே தொக்கி நின்றது.

அதுவரை தன்னை கண்டு கொள்ளாதவர்களின் பார்வை கூட இப்போது தன் மேலேயே இருப்பது புரிந்தது. வீட்டு வாட்சமனில் இருந்து தெருவில் எப்போதாவது சிரிக்கும் ஆண்டி வரை அனைவருக்கும் அவளிடம் கேட்க ஆயிரம் கேள்வி இருந்தது.

ஒரு சிலர் தங்களது மனதிற்குள் எழுந்த கேள்விகளை விழுங்கியபடி பேசினர் என்றால் மற்றவர் நேரடியாகவே நிச்சயம் செய்ய இருந்த மாப்பிள்ளை என்ன ஆனான்? நீ இவனுடன் சென்று வாழப் போகிறாயா? என்று பல கேள்விகளை கேட்டனர்.

இந்தக் கேள்விகள் அவளை மட்டுமல்ல, அவளது குடும்பத்தையே துரத்தியது. அவளது தம்பியை பள்ளியில் கூட படிக்கும் மாணவர்கள் கேலி பேசி துளைத்தெடுத்தனர். டீச்சர்களோ மறைமுகமாக கேட்டனர். குடும்பத்தினர் அனைவரும் தங்களது வேதனையை அவளிடம் பகிர்ந்து கொண்டனர். ஆனால் அவளோ அனைத்தையும் உள்ளுக்குள்ளேயே வைத்து புழுங்கிக் கொண்டிருந்தாள்.

அன்னை தந்தை முன்பு தான் இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொண்டாள். அவர்களுக்கு தைரியத்தை கொடுத்தாள். ஆனால் உள்ளுக்குள் உடைந்து கொண்டிருந்தாள். அதே சமயம் சரவணன் மீது பயங்கர கோபத்தில் இருந்தாள். எந்த காலத்திலும் அவனை சந்தித்து விடக் கூடாது என்று வேண்டிக் கொண்டாள். அப்படி அவனை சந்தித்தால் கொலை செய்யும் அளவிற்கு அவனை தண்டிக்க வேண்டும் என்கிற ஆத்திரம் இருந்தது.

அவளைத் தவிர வீட்டில் இருந்தவர்கள் மெல்ல நடந்ததை மறந்து இயல்புக்கு திரும்ப ஆரம்பித்தனர்.

அன்று வேலை முடிந்து மிகுந்த அயர்ச்சியுடன் வீடு திரும்பியவளுக்கு வீட்டிருந்தவர்களைப் பார்த்ததும் அதிர்ச்சி. அவளது தந்தை வழி சொந்தங்களான பெரியப்பா, சித்தப்பா மற்றும் அத்தையும் குடும்பத்துடன் வந்திருந்தனர்.

அதைப் பார்த்ததுமே லேசாக இருந்த தலைவலி உச்சி மண்டைக்கு ஏறியது. மெல்ல காலணிகளை கழட்டிவிட்டு அவர்களைப் பார்த்து “வாங்க பெரியப்பா…வாங்க அத்தை…வாங்க சித்தப்பா” என்றாள்.

அவளது வரவேற்ப்பை கண்டு கொள்ளாத அத்தை “இன்னும் ஏன் இவளை வேலை அனுப்பிட்டு இருக்கே? நடந்த அசிங்கம் பத்தாதா? சட்டுபுட்டுன்னு மாப்பிள்ளையை பார்த்து தள்ளி விடுறதை விட்டுட்டு” என்றார் எரிச்சலாக.

அத்தையின் பேச்சை கேட்டு “என்ன விசாலம் பேசுற? புதுசா ஒருத்தனை பார்த்து கட்டி கொடுக்கிறதா? எவன் வருவான் இனி? நமக்குள்ள நடந்திருந்தா பரவாயில்ல. உலகம் முழுக்க பார்த்த பின்ன அடுத்தவன்  பொண்டாட்டியை எவன் கட்டுவான்?” என்றார் பெரியப்பா.

“அப்போ அந்தப்பய காலில் விழுந்தாவது கூட்டிட்டு போன்னு சொல்ல வேண்டியது தான்”.

மானுவின் தந்தையும், அன்னையும் அவர்கள் பேசுவதை கேட்டு மனதிற்குள் எழுந்த கசப்பை விழுங்கியபடி அமர்ந்திருந்தனர்.

மானுவோ முற்றும் துறந்த ஞானியைப் போன்று நின்றிருந்தாள்.

“அண்ணா! மானுவோட பிரச்னையை நான் பார்த்துகிறேன்”

“என்ன பார்ப்ப? ஊருல ஒருத்தனும் விட மாட்டேன்றான். உன் தம்பி பொண்ணுக்கு எவனோ தாலி கட்டிடானாமேன்னு. அடுத்தவன் நாக்கு மேல பல்லு போட்டு பேசுற மாதிரியா நாம வாழ்ந்திருக்கோம்” என்றார் கோபமாக.

“என் சம்மந்தி வீட்டுல எல்லாம் போனை பண்ணி கேட்கிறாங்க. உன் தம்பி வீட்டில் இப்படி நடந்திடுச்சாமேன்னு. எனக்கு மூஞ்சியை கொண்டு எங்க வச்சிகிறதுன்னு தெரியல” என்றார் கடுப்பாக.

இருகைகளையும் கட்டிக் கொண்டு முகம் இறுக கல்லாக நின்றிருந்தாள்.

அதுவரை இருந்த மௌனத்தை கலைத்து “அண்ணா! அக்கா! மானு பிரச்னையை நான் பார்த்துகிறேன். இதைப் பத்தி பேசுறதா இருந்தா நான் பதில் சொல்லத் தயாரா இல்லை” என்றார் .

அவரது பேச்சில் கோபமடைந்த விசாலம் “இதோ பாரு ஸ்ரீனி…நீ என்ன செய்வியோ தெரியாது. இவ அந்தப் பையனோட போய் வாழனும் இல்லேன்னா வேற மாப்பிள்ளையை பார்த்து கட்டி கொடுக்கணும். உனக்கு வேணா அசிங்கம் இல்லாம இருக்கலாம் ஆனா எங்களுக்கு கேவலமா இருக்கு” என்றார்.

அதையே ஆமோதித்த பெரியப்பா “நமக்கு வேறவழியில்ல ஸ்ரீனி. இந்த ஊர் நம்மளைப் பத்தி பேசுறதுக்கு இடம் கொடுக்கலாமா? அதோட விசாலம் சொன்ன மாதிரி சம்மதக்காரங்க எல்லாம் வேற கேள்வி கேட்கிறாங்க” என்றார்.

அதுவரை பொறுமையை இழுத்து பிடித்திருந்தவள் “யார் தப்பா பேசுறாங்க பெரியப்பா? இந்த ஊரா இல்ல நீங்க ரெண்டு பேருமா?” என்றாள் ஆத்திரமாக.

அவளது பாய்ச்சலைக் கண்டு பயந்து போன அவள் அன்னை “மானு! நீ பேசாம இரு” என்று அதட்டினார்.

ஆனால் பெரியவர்களோ அவளின் பேச்சில் அசிங்கப்பட்டதாக குதிக்க, அங்கே ஒரு ரணகளமே நடந்தது. ஸ்ரீநிவாசன் அவர்களை சமாதானப்படுத்த முயல, அவர்களோ மானசா எங்களை அவமானப்படுத்தி விட்டாள் என்று குதித்தனர்.

நடந்த பிரச்சனையில் அவளது தவறு எங்குமே இல்லை ஆனாலும் அவள் மீதான விமர்சனங்கள் வந்து விழுவதை கண்டு நொந்து போனாள். அதிலும் குடும்ப உறுப்பினர்களே இவ்வாறு தூற்றும் போது அனைத்தையும் துறந்து எங்காவது போய் விட வேண்டும் என்று எண்ணினாள்.

ஸ்ரீநிவாசன் அவர்களிடம் பேச முயன்று தோற்றுப் போனவர் மகளிடம் மன்னிப்பு கேட்குமாறு கூறினார்.

தந்தையின் பேச்சைக் கேட்டு அவர்களிடம் மன்னிப்பை கேட்டுவிட்டு அங்கிருந்து மொட்டை மாடிக்கு சென்று விட்டாள். அங்கிருந்த  கல்லில் அமர்ந்திருந்தவளின் முகம் கற்பாறையாக இறுகி இருந்தது. வெற்றிடத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.

சற்று நேரம் பொறுத்து தந்தை அவள் அருகில் அமருவதை உணர்ந்தாலும் திரும்பாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

“என்னம்மா” என்றார் கரகரப்பான குரலில்.

“மூச்சு முட்டுதுப்பா”

“எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் மா”.

“ஏன் பா? நான் என்ன தப்பு பண்ணினேன்? எல்லோரும் என்னை எதுக்கு கேவலப்படுத்துறாங்க?”

நீண்ட பெருமூச்சுடன் “நம்ம ஊருல அப்படி தான். தப்பு பண்ணினவன் நிம்மதியா சுத்துவான். அடிபட்டவனை தான் ஆயிரம் கேள்வி கேட்பாங்க”.

“அவன் ஆண் அப்படின்ற ஒரே காரணத்தினால செஞ்சதை எல்லாம் விட்டுட்டு என் பக்கம் எல்லா கேள்விகளும் வருதேப்பா”.

“யார் கேள்வி கேட்கிறாங்க மானு?”

“யார் கேள்வி கேட்கல? சிலர் தைரியமா கேட்கிறாங்க. மற்றவங்க மறைமுகமா கேட்கிறாங்க”.

“”இல்லம்மா பெரும்பாலும் இது போன்ற பேச்சுகளில் ஈடுபடுவது யார்? பெண்கள் தானே”

“என்ன சொல்ல வரீங்க? உங்க பொண்ணுக்கு இந்த நிலைமை வந்தாலும் நீங்க ஒரு ஆணா தான் சிந்திக்கிறீங்க இல்லையாப்பா?”

“நான் சொல்ல வருவதை நீ சரியா புரிஞ்சுக்கல. ஆண்கள் அடுத்தவங்க விஷயத்தை பேசுவதை விட பெண்கள் தான் அதிகமா பேசுறாங்கன்னு சொல்றேன்”.

“மச்..விடுங்கப்பா. இந்த சமுதாயமே ஆணுக்கான சமுதாயமாக தான் இருக்கு” என்றாள் அலுப்புடன்.

“நிச்சயமா! ஆனா அப்படி மாற்றினது யார்? நீங்க தான்”.

அவரின் பேச்சில் கோபம் கொண்டு முறைத்தவள் “இந்த குற்றத்தையும் எங்க மேல சுமத்தியாச்சா?”

“இன்னைக்கு இல்ல மானு. காலம் காலமா ஆண் என்பவன் இப்படித்தான் இருக்கணும்னு உருவாக்கி விட்டது குடும்பத்தில் இருக்கும் பெண்கள் தான்”.

அமைதியாக தந்தையை திரும்பி பார்த்தாள்.

“எந்த காலகட்டத்திலேயும் ஆணும், பெண்ணும் சமமாக நடத்தப்படவில்லை. இன்னைக்கு அது மாறி இருக்குன்னு சொல்லப்பட்டாலும்”.

“என்னப்பா சொல்றீங்க?”

“நீ யோசிச்சு சொல்லு? நீ பார்க்கும் படங்களில் ஆண் நல்லவனா மனைவியை அன்பா நடத்துகிறவனா இருந்தா அவனை உனக்கு பிடிக்குதா?”

அமைதியாக பார்வையை செலுத்தினாள்.

“மெல்லிய ஆண் மகனை பெண்ணுக்கு பிடிக்காது முரடன் உனை ரசித்தேன்…இப்படி பாட்டாவே எழுதிட்டாங்க..இப்படி சொல்லி சொல்லியே ஆணின் மனதிற்குள் சாதுவா, அமைதியா அன்பானவனா இருந்தா பெண்களுக்கு பிடிக்காது என்கிற தோற்றத்தை கொண்டு வந்துட்டாங்க. இது எல்லா ஆண்களுக்கு பொருந்தாது”.

“ம்ம்..”

“எல்லாத்துக்குமே ஒரு அளவுகோல் இருக்கில்லையா? அது இன்னைக்கு தாண்டி போய் அவன் மனதிற்குள் வக்கிரத்தை புகுத்த ஆரம்பிச்சிடுச்சு”.

“அதெப்படி பா சொல்றீங்க? அப்போ ஆண்களுக்கு கட்டுப்பாடு இல்லையா?”

”இருக்கும்மா! அது இல்லாதவங்களைப் பற்றி தான் இப்போ பேச்சு”.

“அப்போ ஆண்கள் என்ன தவறு செய்தாலும் அதுக்கு காரணம் பெண்களோட வளர்ப்பு தான் காரணம்னு சொல்றீங்களா?”

“அதை தான் சொல்றேன். காலம் காலமா ஆண்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்னன்னா பெண்கள் உனக்கு அடிமைப்பட்டவர்கள். உங்களை நீங்களே காயப்படுதிக்க ஆண்களை தூக்கி விட்டுடீங்க. வீட்டிலிருந்த பெண்கள் மெல்ல மெல்ல அவங்களை அறியாமலே இந்த நஞ்சை  கலந்திட்டு  இருந்திட்டாங்க. இன்னைக்கும் மகன் உசத்தியானவன் என்றும் மகளை அடுத்த நிலையில் வைத்திருக்கும் அம்மாக்களை நான் பார்த்திருக்கேன். அதனால தான் அவன் தான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற திமிரில் இன்னைக்கு அவனை போற்றி பாதுகாத்த பெண் இனத்தையே சித்ரவதை பண்ணிட்டு இருக்கான்”  என்றான் கண்களை மூடியபடி.

“ஆமாம் பா…நீங்க சொல்றது உண்மை தான். நானே இதை யோசிச்சிருக்கேன். என்னோட பிரெண்ட்ஸ் நிறைய பேர் படம் பார்க்கணும்னு சொல்லும் போதே அவளை அவன் நல்லா கொடுமை படுத்தனும். அதற்கு பிறகு ரெண்டு பேரும் புரிஞ்சுகிட்டு வாழனும் அப்படிப்பட்ட படங்கள் தான் பிடிக்கும்னு சொல்வாங்க. எனக்கே ஆச்சர்யமா இருக்கும். எப்படி நாம ஒரு பெண்ணா இருந்துகிட்டு இதை ஏற்றுக் கொள்ள முடியும்னு”.

“இது மாறனும் மானு. முதலில் ஆண் உசத்தி என்கிற எண்ணப் போக்கில் இருந்து மாறி வரணும். அதை வீட்டில் இருந்து ஆரம்ம்பித்தால் தான் இன்றைக்கு நடக்கிற குற்றங்கள் எல்லாம் குறையும்” என்றார்.

“நிச்சயமா பா! இப்போ என்னை இத்தனை பேர் கேள்வி கேட்ட மாதிரி அவனை யாரும் நிக்க வச்சு கேள்வி கேட்டிருந்தா அவனுக்குள்ள குற்ற உணர்ச்சி வந்திருக்கும். ஆனா அது நடக்காதே” என்றல் கசப்பான புன்னகையுடன்.

அவளது தலையை வருடிக் கொடுத்தவர் “நீ இதை எல்லாம் மனசுல வச்சுக்காதே. நான் பார்த்துகிறேன். எப்பவும் போல வாழ்க்கையை நம்பிக்கையோட சந்திக்க தயாரா இரு” என்றார்.

அவரது தோள்களில் சாய்ந்து கொண்டவள் “எனக்கு முரட்டுத்தனமான ஆணை விட, உங்களைப் போல அன்பான, அரவணைப்பா உள்ளவங்களை தான் பிடிக்கும் பா. அது போல துணையை தான் நான் விரும்புறேன். கணேஷ் அப்படி தான் இருப்பார்ன்னு நினைச்சேன். ஆனா தன்னோட மனசுல இருந்த குப்பையை கொட்டி அருவெறுப்பான முகத்தை வெளிப்படுத்திட்டார்” என்றாள்.

“விடும்மா! கெட்டதிலும் ஒரு நல்லது கணேஷின் குணம் வெளில வந்தது தான். உனக்கு இங்கே இருக்க கஷ்டமா இருந்தா வேற ஊருக்கு மாத்திட்டு போயிடுவோமா?”

“நாம ஏன் பா போகணும். அவனே இங்கே தைரியமா வாழ்ந்துகிட்டு இருக்கும் போது நாம ஏன் ஓடனும். என்னால இந்த சூழ்நிலையை சமாளிக்க முடியும் பார்த்துக்கலாம் பா” என்றாள்.

“தட்ஸ் மை கர்ல்…வா! அம்மா கலங்கி போய் உட்கார்ந்திருக்கா இவங்க பண்ணிட்டு போன அமர்களத்தில்” என்று அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.

சரவணனோ அன்றைய ஷோவிற்காக கிராண்ட் சோழாவில் தனது அறையில் ஆடைகளை சரி பார்த்துக் கொண்டிருந்தான். வழக்கம் போல அவனுடன் மாடல் அழகி ஒருத்தி ஒட்டிக் கொண்டு நிற்க, அதை பார்த்து பல்லைக் கடித்துக் கொண்டு நின்றான் சன்னி.

“எஸ்டூ! எல்லாம் பைனல் பண்ணியாச்சா?” என்றான் எரிச்சலை அடக்கியபடி.

அவனை நிமிர்ந்தும் பார்க்காது “ம்ம்..முடிஞ்சுது” என்றவன் “சோனு பேபி நீ போய் உன் ட்ரசஸ் செக் பண்ணு” என்று அவளை தள்ளி விட்டான்.

அவள் அறையை விட்டு வெளியேறியதும் “ஏண்டா! இன்னும் இப்படி இருக்க? உன் இஷ்டப்படி தான் ஒருத்திக்கு தாலி கட்டியாச்சே. அப்புறம் ஏன் இந்த பேபி எல்லாம்?”

புன்சிரிப்புடன் அவனது தோளில் கையைப் போட்டு “தாலி கட்டினா என்னடா? எஸ்டூ இப்படித்தான். இந்த பேபிஸ் இல்லாம நானில்லை” என்றான் .

“அப்போ அவ உன்னை திரும்பி கூட பார்க்க மாட்டா”

“இந்த எஸ்டூவோட பவர் தெரியும் போது அவ என் கிட்ட வந்துடுவா”

“நீயெல்லாம் திருந்துற ஜென்மம் இல்ல…எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் போயிட்டு ஷோ ஸ்டார்ட் பண்றதுக்குள்ள வரேன்” என்று கூறி கிளம்பியவன் கதவு வரை சென்று விட்டு “கதவை சாத்திட்டு அடக்க ஒடுக்கமா இரு. நான் வரப்ப ஏதாவது பேபி இங்கே இருந்தது விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை” என்றான்.

அவன் சொன்னதை கேட்டு சத்தமாக சிரித்துக் கொண்டான்.

கட்டிலில் அமர்ந்தவனின் மனம் மானுவிடம் சென்றது. அவளது தைரியமான பேச்சு பிடித்தது. தாலியை கழட்டி வீசியது பிடித்தது. ஆனால் அந்த தைரியம் தனக்கெதிராக திரும்பியதை அவன் விரும்பவில்லை. அவளை எப்படியாவது தன்னிடத்தில் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். ஒரு வேகத்தில் தாலியை கட்டியாகி விட்டது. அவளை தன்னிடத்திற்கு கொண்டு வருவதை பொறுமையாக கையால வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.

நமது கலாச்சராப்படி தாலி கட்டி விட்டால் நிச்சயமாக தன்னை மீறி அவள் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டாள் என்பதில் அவன் உறுதியாக இருந்தான். அவளே நினைத்தாலும் உறவுகள் அவளை அதைச் செய்ய விட மாட்டார்கள். அதோடு மீடியாவில் வேறு செய்தி வந்து விட்டதால் எவனும் அவளை திருமணம் செய்ய சம்மதிக்க மாட்டான் என்று எண்ணி சந்தோஷமாக சிரித்துக் கொண்டான்.

“மானு மை லவ்! உனக்கு இந்த எஸ்டூவை விட்டா வேற ஆப்ஷனே இல்லை” என்று கூறிக் கொண்டான்.

அதே சமயம் அவனுடைய மூளை அவளை எப்படி தன்னிடம் வரவழைப்பது என்று யோசிக்கத் தொடங்கியது. இம்முறையும் கீர்த்தியின் உதவியே தேவை என்று எடுத்து சொன்னது. ஆனால் திருமணம் நடந்த அன்றே அவளது உடைந்த பார்வை அவளிடம் இனி உதவி கிடைக்காது என்று சொன்னது. ஆனால் சரவணின் மனதோ ‘உன்னால முடியாதது உண்டா சரவணா? அதெல்லாம் கீர்த்தி பேபி உன் கிட்ட கோவிக்க மாட்டா’ என்று சொல்லிக் கொண்டான்.

தன் வாய் ஜாலத்தின் மீது அவனுக்கு அதிக நம்பிக்கை இருந்தது. அதனால் அவள் மூலமாகவே மானுவை மீண்டும் நெருங்க முடிவு செய்தான்.

பலவித யோசனையில் இருந்தவனை ஷோவிற்கான அழைப்பு வந்து கலைத்தது. அவசரமாக எழுந்து ரெப்ரெஷ் செய்து கொண்டு கிளம்ப தயாரானவன் சன்னி வராததைக் கண்டு அவனை போனில் அழைத்தான்.

“எங்கடா இருக்க? ஷோவுக்கு நேரமாச்சு”

“நடுத்தெருவில் இருக்கேன்”

“வாட்?”

“நடுத்தெருவில் இருக்கேன்னு சொன்னேன்”

“டேய்! எங்கே இருக்க?” என்றான் கடுப்பாக.

“டவுசரில் நிக்கிறேன் ”

“டேய்! கடுப்பை கிளப்பாதே…நீ எதுல நின்னாலும் கிளம்பி வருகிற வழிய பாரு”.

“டவுசரில் இருந்து வர அரை மணி நேரமாகும் டா”

“சன்னி! ஏண்டா! இங்கேருந்து போகும் போது புல் பாண்டில் தானே போனே”.

“அடேய்! டவுசர்ந்னு சொன்னது ஒரு ஹோட்டல் டா. என் பிரெண்டை பார்க்க வந்தேன். உனக்கு ஷோவுக்கு எவ்வளவு நேரமிருக்கு?”

“அப்போ நடுத்தெருவில் இருக்கேன்னு சொன்னியே அது?”

“அது அந்த தெருவோட பேருடா”

ஓங்கி தலையில் அடித்துக் கொண்டவன் “இன்னும் இருபது நிமிஷத்தில் நீ இங்கே இருக்கணும்” என்று கடுப்பாக கூறி போனை அனைத்தான்.

Categories
Uncategorized

அத்தியாயம் – 2

அத்தியாயம் – 2

மௌனிகா சொன்னதைக் கேட்டதும் கடுப்பான கார்த்தி, “காது கேட்கலைன்னு  உங்ககிட்ட வந்தா, பேஷன்ட் கூட வரவங்களை நீங்க ஊமையாக்கி வீட்டுக்கு அனுப்புவீங்களா? ‘ஒன்னு வாங்கினா ஒன்னு ப்ரீ!’ இந்த கான்செப்ட் இப்போ ஹாஸ்பிடல்ல கூட  ஃபாலோ பண்றீங்களா!”என்றான்  கொஞ்சம் கோபமாக.

அது ஏனோ தெரியவில்லை மௌனிகாவிற்கு கார்த்திக்கை பார்த்த முதல் பார்வையிலேயே பிடிக்கவில்லை. பிடித்தம் மட்டும் அல்ல.. பிடிக்காமையும் சிலருக்கு முதல் பார்வையிலேயே மின்னலாய் சட்டென்று வந்துவிடுகிறது.

இவள் முதலில் பார்த்தபோது, அவன் போனில் ஒலித்துக்கொண்டிருந்த பாடலா… அல்லது எப்போதும் நம் உள்ளுணர்வு பல நேரங்களில் நம்மை வழிநடத்துமே, அதைப்போன்று இவனால் இனி தொல்லைகள் வர வாய்ப்புக்கள் அதிகம் என்ற எண்ணம் தோன்றியதாலா…. எதனாலோ மௌனி, கார்த்திக்கை தன்னிடமிருந்து தள்ளியே வைக்க முடிவெடுத்தாள். இவளின் முடிவை அவ்வளவு சுலபத்தில் முடிக்க விட்டுவிடுவானா கார்த்திக்!

கார்த்திக்கின் கேள்வியில் எரிச்சலான மௌனி, ”பேஷன்ட்க்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கும் போது ஒருத்தர்தான் கூட இருக்கனும். நிறைய பேர் இருந்து சும்மா சின்னபிள்ளைதனமா நச்சு பண்ணிட்டு இருந்தா என்னால வேலை செய்ய முடியாது!” என்றாள்.

‘கபாலத்தை ஓபன் பண்ணி ரிஸ்க்கான ஆபரேஷன் செய்யப்போறதைபோல பில்டப்பை பாரேன்! காதுல ஒரு மெஷினைமாட்டி என்னோட ஒரு மாச சம்பளத்தை பிடுங்க போறதுக்கு இவ்வளவு அலட்டல் ஆகாது சாமி! என்னை வெளியே விரட்டிவிட நீங்க போடற ப்ளானை   எக்சிக்யுட் பண்ணவிட்டா  என்னோட கெத்து என்னாகறது மிஸ்.தொமுகா?’ சிலிர்த்தவன்,

 “அப்பா! நான் அம்மாகூட இருக்கேன் நீங்க வெளிய போறீங்களா… இல்ல, இல்ல. நீங்க வெளிய எல்லாம் போகவேண்டாம்.  நீங்க தான் சின்னபிள்ளைதனமா நச்சு பண்ணமாட்டீங்களே…. அதனால நீங்களும் இருக்கலாம். நோ ப்ராப்ளம்!” என்றான் பெருந்தன்மையாய்!

“சார்! நீங்க பேஷன்ட் கூட இருங்க!” என மாறனிடம் சொன்னவள், கார்த்திக்கிடம்  ‘நீ வெளியே போ!’ என்றாள் பார்வையில்.

‘நானெல்லாம் மூஞ்சிக்கு நேரா வெளிய போன்னு  சொன்னாலே அதை கொஞ்சம் கூட ரோஷம் இல்லாம ஒரு காதுல ப்ரீ என்ட்ரி கொடுத்து  அடுத்த காதுல எக்சிட் பண்ற ஆளு. என்கிட்டயேவா? ’ என தன் திறமையை தற்பெருமையாய்  எண்ணியவன்,

“நீங்க இங்க இருக்கறதுல  மேடம்க்கு எந்த அப்ஜெக்ஷனும் இருக்காதுன்னு நான் தான் சொன்னேனே அப்பா!” என தந்தையிடம் சொன்னவன்,

“ஓகே மேடம்! நீங்க உங்க ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணுங்க.உங்க எல்லா கேள்விக்கும் நான் மட்டும்தான் பதில் சொல்வேன். இடையில எங்க அப்பா ஒன்னும் பேசமாட்டார்” என மாறனுக்கு க்யாரண்ட்டி கொடுத்தான்.

கார்த்திக்கின் வளவளப்பில் கடுப்பானவள்,”அங்கிள்! உங்க சன்னை வெளிய போகச் சொல்றீங்களா, ப்ளீஸ்… எனக்கு அடுத்த அப்பாயின்மென்ட்க்கு டைம் ஆகுது!” என்றாள் ஒரு மன்றாடல் பார்வையை மாறனிடம் செலுத்தி.

மௌனிகா தன் மகனின் கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக வெளியே போக சொல்வதை பார்த்ததும், இங்கே வருவதைப்பற்றி அன்று பேசும் போது மகன் பேசிய பேச்சுக்கள் எல்லாம் அழைக்காமலேயே அவரின் நினைவுக்கு வந்தது.அதனால் வந்த நமுட்டு சிரிப்புடன் அவர் மகனைப் பார்க்க, அவனும்அதே நினைவில் தான் தந்தையை முறைத்துக்கொண்டிருந்தான். என்ன ஆனாலும் சரி இங்கிருந்து நகரப் போவதில்லை என்ற முடிவுடன் கார்த்தி வாயை திறக்க,

அதுவரை அங்கு நடந்துக்கொண்டிருந்த பேச்சுவார்த்தைகள் சரிவர கேட்காத போதும் அங்குள்ளவர்களின் உடல்  மொழியில் நடந்துக்கொண்டிருப்பதை புரிந்துக்கொண்ட காந்திமதி,  “கார்த்திம்மா! அம்மா கூட அப்பா இருக்கட்டும்பா. நீ வெளிய இரு!” என்றார்  தன் குரலில் கெஞ்சலையும் கொஞ்சலையும் கலந்து.

அன்னையின் பார்வையும் குரலில் வெளிவந்த அதே உணர்வை வெளிக்காட்டவே விருப்பமின்றி அவ்விடம் விட்டு வெளியேறினான் கார்த்திக்.

அன்று மாறன் இஎன்டி டாக்டரின் பெயராய் ஒரு பெண்ணின் பெயரை சொல்லவும் முகம் சுருக்கியவன்,

 “அப்பா! இவ்வளவு பெரிய ஊர்ல உங்களுக்கு ஒரு பொண்ணு இஎன்டி தான் கிடைச்சாங்களா? அந்த பொண்ணுக்கு என்ன வயசுப்பா இருக்கும்?” என்று அவர்களின் பிரச்சனைக்கு சம்மந்தமில்லாத ஒரு கேள்வியை எதையோ யோசித்துக்கொண்டே கேட்டான்.

“என்னப்பா.. ஒரு  இருபத்தியாறு இருக்குமா? சரியா தெரியலையேப்பா! அது ஏன் உனக்கு?” என சந்தேகமாய் மகனை பார்த்தார் மாறன்.

வயதைக் கேட்டதும் “சின்ன வயசு பொண்ணுன்னா இன்னும் பிரச்சனை அதிகம் பா!” என்றான் சீரியஸ்சாக.

“அப்பா… கார்த்தி! சத்தியமா நீ என்ன சொல்ல வரன்னே எனக்கு புரியலை ராசா! நீ எப்பவும் ரேடியோல பேசறதை போல பேசாம கொஞ்சம் புரியறாப்போல  பேசுப்பா.உனக்கு புண்ணியமா போகும்” என்றார்.

அழுதுவிடுவதைபோல நின்றுக்கொண்டிருந்த மாறனை பார்த்தவன் இதற்கும் மேல் அவரை மண்டை காயவிடவேண்டாம் என்ற நல்லெண்ணத்தில்,

“என்னைப் பார்க்கவும் என்கிட்டே வழியவும் தான்பா அந்த இஎன்டி பொண்ணுக்கு நேரம் சரியா  இருக்கும். அப்புறம் அவங்க எங்க அம்மாவுக்கு ட்ரீட்மென்ட்  கொடுத்து, சரிபண்றது? இதெல்லாம் வேலைக்கு ஆகாதுப்பா. வேற நல்ல இஎன்டியை நானே பார்க்கிறேன்பா!” என்றான் கறாராய்.

“என்ன கார்த்தி விளையாடறியா? நான் அந்த பொண்ணுகிட்ட எல்லா விஷயமும் பேசி, அப்பாயின்மென்ட்  வாங்கின பிறகு இப்ப வந்து இப்படி சொல்ற” கோபத்தில் பொரிந்தார் மாறன்.

“அப்ப நான் உங்க கூட ஹாஸ்பிடல் வரமாட்டேன்! எங்க போனாலும் இந்த பொண்ணுங்க பல்லை இளிச்சிக்கிட்டு பக்கத்துல வருவதை பார்த்து பார்த்து எனக்கு ஒரே எரிச்சலா இருக்குப்பா!” என்றவனைப் பார்த்த மாறன்,

“ஏன்ப்பா… நீ என்ன அம்புட்டு பெரிய அப்பாடக்கரா?” உண்மையான ஆச்சரியத்தில் வாயை பிளந்தார்.

“பின்ன! இல்லையாப்பா? இப்போ எல்லா சோசியல் மீடியாவிலும் என்னை போல ஆர்ஜேஸ் பாப்புலர். எல்லா டீவி சேனல்களும் எங்களை வெளிச்சம் போட்டு காட்டுது.நான் வேற அந்த டிவியில ஒரு ஷோக்கு  ஆங்கரா இருக்கேன் இல்லப்பா. அதனால போற இடத்தில் எல்லாம் பத்து பேராவது சூழ்ந்துக்கறாங்கபா. பல சமயம் பேமஸ்ஸா இருக்கறது பெருமையா இருந்தாலும் சில சமயம் சிலர் மேலவந்து விழுந்து பிடுங்கும் போது கொஞ்சம் வெறுப்பா தான்-ப்பா இருக்கு!” என்றவனின் வார்த்தைகளில்  உண்மை இருந்ததால் அவனை ஏதும் எதிர்த்து பேசாது,

“இந்த பொண்ணுக்கிட்ட  பேசும் போது அப்படி எல்லாம் மேல விழற டைப் போல தெரியல கார்த்தி. கட்டன்ரைட்டா பேசனதை போலதான் இருந்தது” என்றார்.

“உங்கமேல ஏன்ப்பா விழப்போறாங்க? என்னைப் பார்த்ததும் நிச்சயமா அதெல்லாம் நடக்கும்.அதனாலதான் நான் வரலைன்னு சொல்றேன்!” என்றவனிடம் அதற்க்கு மேல் வாதாட முடியாத மாறன் அவனிடம் சரியென சொல்லி தங்களின் அறைக்கு சென்றார்.

அதன் பிறகு ஹாஸ்பிடலுக்கு கிளம்பும் அன்று அன்னையை தந்தையுடன் தனியே அனுப்ப மனமில்லாத கார்த்திக், ’எவ்வளவோ பார்த்துட்டோம்! இந்த இஎன்டியை பார்க்க மாட்டோமா? நம்மை பார்த்ததும் கொஞ்சம் வழியறதை போல தெரிந்தால்… மூக்கை அப்படியே கட்பண்ணி விட்டுடலாம். அவங்கதான் தொமுகா ஆச்சே. மூக்கை என்னமோ  செய்து சரி பண்ணிக்கட்டும்’ என எண்ணி அவர்களுடன் கிளம்பினான்.  

இவன் நினைத்து வந்ததென்ன.. இங்கே நடப்பதென்ன…

மனதின் புழுக்கம், திரும்பும் திசையெங்கும் வீசிக்கொண்டிருந்த ஏசிக்காற்றை கூட உணரமுடியாது செய்தது. வெளியே வந்தவனால் அமைதியாக ஒரு இடத்தில் அமர முடியவில்லை.அவனின் இந்த ஐந்து ஆண்டு ஆர்ஜே வாழ்க்கை வரலாற்றில் இப்படி அவனை யாரும் நடத்தியதில்லை.இது வரை போகும் இடமெல்லாம் யாரவது அவனை அடையாளம் கண்டு அவனிடம் பேசவோ செல்பி எடுக்கவோ ஆர்வம் காட்டுவதையே பார்த்து பழகிவிட்டவனுக்கு மௌனியின் ‘எட்டி நில்லு எச்சரிக்கிறேன்!’ என்ற நடவடிக்கை அவனின் ஈகோவை சீண்டி வீறுகொண்டெழ வைத்துவிட்டது.

யாரென தன்னை அடையாளம் கண்டுக்கொண்டு தவிர்க்கிறாளா.. இல்லை தான் யார் என்றே தெரியாது இருக்கிறாளா… என்று குழம்பிப்போனான்.எதுவாக இருந்தபோதும் மௌனியின் ஒதுக்கம் இவனை அவளிடம் நெருங்க சொல்லியது.

முதன் முதலில் பார்த்த போது அவளின் கண்களில் ஒரு ஆச்சரியம்… பிரம்மிப்பு… இப்படி ஏதோ ஒன்று  சில வினாடிகள் தோன்றி மறைந்திருந்தாலும் சும்மா இருந்திருப்பானோ என்னமோ, ஆனால் ஒரு ஹான்சம் பிகரை பார்த்ததும் தோன்றும் ஒரு சாதாரண பளிச் கூட அவள் கண்ணில் இல்லாது போகவே அவளை எப்படியேனும் தன்னை கவனிக்க வைக்க வேண்டும் என முடிவெடுத்தான்.

தள்ளிவைக்க அவள் முடிவெடுக்க, தன்னையே நினைக்கவைக்க இவன் முடிவெடுக்க… யாரின் முடிவு இறுதியில் வெற்றிப்பெறப்போகிறதோ?

அனைத்து பரிசோதனைகளும் முடித்து மாறன் தம்பதியினர் வெளியே வரவும் அடுத்த பேஷன்ட் உள்ளே செல்வதற்கு முன்,

“எக்ஸ்கியூஸ்மி!” என மௌனியிடம் சென்று நின்றான் கார்த்திக்.

திடீரென உள்ளே வந்து நின்றவனை புரியாது பார்த்தவளிடம்,”பேஷன்டை எக்ஸாமின் பண்ணும் போதுதான் டிஸ்டர்ப் பண்ணக்கூடாது. இப்போ நான் பேசலாமல்ல?” என்றான்.

‘இனி பேச என்ன இருக்கு?’ என்று நெற்றியை சுருக்கியவள்,”நான் எல்லாத்தையும் உங்க அப்பாகிட்ட தெளிவா சொல்லிட்டேன்” என்று தன் பேச்சை சுருக்கி, அவனின் வெளிநடப்பிற்க்கு காத்திருப்பதை கண்ணில் காட்டினாள்.

தன் பேச்சை பெரிய கத்தரிக்கோல் கொண்டு அப்படியே வெட்டிவிட எண்ணுபவளைப் போல பேசியவளை,’ நான் பேசமாட்டேனான்னு அவனவன் மணிக்கணக்கா போனில் தவமிருக்கான். உனக்கு என் பேச்சைக்கேட்க கசக்குதா? அதுக்கு நான் ஒன்னும் செய்யமுடியாது. நான் பேசித்தான் ஆவேன், நீ அதைக் கேட்டுதான் ஆகனும்’ எண்ணிக்கொண்டே பார்த்தவன்,

“நீங்க தெளிவா சொல்லிட்டீங்க.ஆனா அதை அவர் எனக்கு தெளிவா சொல்லனுமில்ல.அது அவரால முடியாத காரியம். அதனாலதான் நான் அம்மாகூட இருக்கேன்னு சொன்னது.நீங்க அது தெரியாம என்னை வெளிய அனுப்பினதால இப்ப நீங்க மறுபடியும் எனக்கு எல்லாத்தையும்  தெளிவா சொல்லிடறீங்களா?” என படுபவ்யமாய் கேட்டான்.

நோயாளிகளின் நிலையைபற்றி  அவர்களின் உறவினர்கள் கேட்கும் போது, ஒரு மருத்துவராய்  சொல்லமாட்டேன் என்று மறுக்கமுடியாத காரணத்தால்,”அம்மாக்கு சில டெஸ்ட் பண்ண சொல்லியிருக்கேன். இன்னும் ஒரு மூனு நாலு சிட்டிங் வந்தாதான் அவங்க ப்ராப்ளம் என்னன்னு ஒரு முடிவுக்கு வரமுடியும். சோ டெஸ்ட் ரிசல்ட் வந்ததும் வர சொல்லியிருக்கேன்” என செய்தி வாசிப்பவளை போல சொல்லி முடித்தாள்.

‘காது கேட்காததுக்கு என்ன டெஸ்ட் பண்வாங்க? அதுதான் நாம பேசும்போதே அவங்களுக்கு சரியாய் கேட்கலைன்னு தெரியுதே. இன்னும் என்ன டெஸ்ட் செய்வாங்க? அதுக்கு பிறகு மூனு நாலு சிட்டிங்கா… எல்லாம் காசுக்குதான். இவங்க சம்பாரிக்க நம்மை அலையவிடுவாங்க’ எண்ணியவன்,

“இன்னைக்கே காது மிஷினை மாட்டிவிட்டுட்டா போதாதா? அதுக்கு எதுக்கு எங்களை அலைய விடனும்?” மனதின் எரிச்சலை அப்படியே குரலில் காட்டினான்.

‘ஏன் எதுக்கு காது கேட்கலைன்னு கண்டுபிடிக்காம காதுல மெஷினை மாட்டிட்டா போதுமா? படிச்ச முட்டாள்! என எண்ணியவள், ”அப்படியெல்லாம் செய்ய முடியாது சார். எல்லாத்தையும் ப்ரோசிஜெர் படித்தான் செய்யனும்” என்றாள்.

“அதான்… அந்த ப்ரோசிஜெர்ஸ் தான் என்னன்னு கேட்கறேன்?” என்றான் இவனும் விடாப்பிடியாக.

“நீங்க  இஎன்டி ஸ்பெஷலிஸ்ட்டா சார்?”

“ஹோ… ஸ்பெஷலிஸ்ட் கிட்டதான் பேசுவீங்களோ?”

என்ன சொன்னாலும் புரிந்துக்கொள்ளாது பேச்சை வளர்பவனை என்னதான் செய்வது எனப் பார்த்தவள்,

”அடுத்த பேஷன்ட்க்கு டைம் ஆகுது, ப்ளீஸ்… நீங்க என்ன கேட்கறதா இருந்தாலும் ரிஷப்ஷன்ல கேட்டுக்கோங்க.ப்ளீஸ்…” என்றாள்.

தங்களுடைய அப்பாயின்மென்ட் நேரம் வரும்வரை தான் கடுப்புடன் அமர்ந்திருந்தது இவனுக்கு நியாபகம் வர, தன்னைப்போல அடுத்தவர் அந்த கடுப்பை அனுபவிக்கக்கூடாது என எண்ணியவன்,

“ஓகே மிஸ்.இஎன்டி! மீண்டும் சந்திப்போம்!அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் கார்த்திக்!” என்று தன் வழக்கமான ஆர்ஜே ஸ்டைலில் விடைப்பெற்றான்.

‘இனிமே எங்க அம்மாகூட நான் தான் வருவேன். அப்ப நீ என்கிட்டே பேசித்தானே ஆகனும். அப்போ எப்படி என்னை நீ அவாய்ட் பண்றேன்னு பார்க்கிறேன்! பேசி பேசியே உன்காதுல ப்ராப்ளம் வரவைக்கல என் பெயர் கார்த்தி இல்ல! ’

‘உங்கள் கார்த்திக்….’ அவன் என்னமோ அதை எதார்த்தமாகத்தான் சொன்னான். ஆனால் அதை கேட்டவளுக்கு அது மனதின் வழியே நுழைந்து காதில் ரீங்காரித்துக் கொண்டே இருந்தது.

 இனிமே தான் காதுல ப்ராப்ளம் வரவைக்க போறேன்னு அவன் அங்க சபதம் எடுக்கிறான். ஆனா இங்க ஆல்ரெடி இவளுக்கு வந்தாச்சு. இப்ப இவ காதுக்கு எங்க போய் வைத்தியம் பார்க்கறது! 

 

                                            –  ராஜேஸ்வரி சிவகுமார்!

 

Categories
Uncategorized

அத்தியாயம் – 1

அத்தியாயம் – 1

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்

கண்ணில் என்ன கோபமென்றான் காதல் சொன்னான்

காற்றில் குழலோசை பேசும் பூமேடை மேலே

பாடலை ஒலிக்க விட்டு சாய்வாக நாற்காலியில் அமர்ந்தவன் கண்ணாடியே வழியே தெரிந்த நண்பனின் முகத்தை பார்த்து இருகைகளையும் அசைத்தான்.

அந்த பாடல் முடியும் வரை கண்களை மூடி அதன் வரிகளை அனுபவித்தான். இப்படியொருத்தி தன் வாழ்வில் வர வேண்டும் என்று கண்முன்னே இல்லாத காதலியின் உருவத்தை உருவகப்படுத்தி ரசித்துக் கொண்டிருந்தான்.

பாடல் முடிந்ததை உணர்ந்து ஹெட் போனை மாட்டிக் கொண்டு “நீங்க நான் ராஜா சாருடன் இணைவது உங்கள் கார்த்திக்” என்றான்.

“வணக்கம் கார்த்தி சார்”

எதிரே லைனில் இருப்பவனிடம் வளவளத்துக் கொண்டே அவனுக்கு தேவையான பாடலை போட்டு விட்டு கட்டை விரலை உயர்த்தி நண்பனுக்கு காண்பித்து  ரெக்கார்டிங் அறையை விட்டு வெளியே வந்தான்.

“என்ன மச்சி இன்னைக்கு ப்ரோக்ராம் அசத்தல் போல” என்றான் கிரி கிண்டலாக.

தனது பையை எடுத்துக் கொண்டு கிளம்பியவன் “கடைசில வந்தவன் விவகாரமான ஆள் மச்சி. அவன் ஆளுக்கு போட்ட பாட்டை பார்த்தே இல்ல. விடிய விடிய சொல்லித் தருவேன் கேட்டான் பாரு” என்று கூறி கண்ணடித்து விட்டு ஆபிசை விட்டு வெளியேறினான்.

பார்கிங்கில் நின்றிருந்த பைக்கை எடுத்துக் கொண்டு போக்குவரத்து குறைந்த சாலையில் பயணிக்க ஆரம்பித்தான்.

இரவு நேரம் ஈரப்பசையுடன் கூடிய காற்று உடலைத் தழுவ, மனமோ ராஜாவின் பாடல்களை அசைபோட்டபடி இருக்க, ஒருவித உற்சாகத்துடன் தனது வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தான்.

காந்திமதி – மாறன் தம்பதியின் சீமந்த புத்திரன் தான் கார்த்திக். வீட்டின் ஒரே பிள்ளை ஆதலால் கவலைகளற்று வளர்ந்தவன். தாய், தந்தை இருவருமே வாழ்க்கையை ரசித்து வாழ்பவர்கள். அதனால் அவனும் எந்தவொரு பிரச்சனையையும் மனதில் வைத்து புழுங்காமல் அது தீரும்போது தீரட்டும் என்று எண்ணுபவன்.

அவர்களின் வீட்டில் எந்நேரமும் சிரிப்பும், கும்மாளமுமாகவே இருக்கும்.  சிறிது நாட்களாக காந்திமதி மட்டும் பழையபடி இல்லாது தனக்குள் சுருக்கி கொண்டது போல் தோன்றியது. அவரது செயல்பாடுகளில் ஒரு மந்தநிலை தெரிந்தது. அதை பற்றியே எண்ணிக் கொண்டு வந்தவன் வீடு வந்ததும் வண்டியை பார்க்கிங்கில் போட்டுவிட்டு லிப்ட்டில் ஏறி தங்களின் தளத்திற்கு வந்தடைந்தான்.

தனது வீட்டின் வாயிலுக்கு வந்தபிறகும் கதவு திறக்கப்படாமல் இருப்பதை கண்டு யோசனையுடனே பெல்லை அடித்தான். ரெண்டு மாதங்களுக்கு முன்பு வரை அவன் லிப்ட்டில் வரும் போதே கதவு திறக்கப்பட்டிருக்கும். சிரித்த முகத்துடன் அவனுக்காக காத்திருப்பார் அன்னை.

இப்போதோ மூன்று நான்கு முறை பெல்லை அடித்த பிறகே மெல்ல கதவு திறக்கப்பட்டது. கதவை திறந்தவரின் முகத்திலோ புன்னகை மருந்திற்கு கூட இல்லை. சோர்வாக நின்றிருந்தவரை கண்டவன் “என்னம்மா உடம்பு சரியில்லையா? ரொம்ப டல்லா இருக்கீங்களே?” என்றான்.

“ம்ச்…அதெல்லாம் இல்ல கார்த்தி…டிரஸ் மாத்திட்டு வா சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று உள்ளே செல்ல சென்றார்.

அவரின் கைகளைப் பற்றி நிறுத்தியவன் “நீங்க போய் தூங்குங்க. நான் சாப்பிட்டுகிறேன்” என்றான் அவரின் முகத்தை ஆராய்ந்தபடி.

சிறிது நேரம் அவன் முகத்தையே பார்த்திருந்தவர் “என்னை தூங்க சொல்றியா?” என்றார்.

“ஆமாம்மா!”

ஒன்றும் பேசாது சமயலறைக்குச் சென்று உணவை எடுத்து மேஜை மேல் வைத்துவிட்டு “சாப்பிட்டிட்டு மீதம் இருக்கிறதை பிரிட்ஜ்ல வச்சிடு” என்று கூறி படுக்க சென்றார்.

யோசனையுடனே குளித்து முடித்து வந்தவன், உணவை முடித்துக் கொண்டு டிவியின் முன்பு அமர்ந்தான். சேனல்களை மாற்றிக் கொண்டிருந்தாலும் அன்னையின் நடவடிக்கையே மனதில் ஓடிக் கொண்டிருந்தது. என்னவாயிற்று அம்மாவிற்கு? அவரின் உற்சாகம் எங்கு சென்றது? என்று மனதை போட்டு உழப்பிக் கொண்டிருந்தான்.

அப்போது அறைக் கதவு மெலிதாக திறக்கும் சத்தம் கேட்க, மெல்ல திரும்பி பார்த்தான். தந்தை தான் மெதுவாக வந்து அவன் அருகில் அமர்ந்தார்.

“என்னப்பா தூங்கலையா?”

அவனை கவலையுடன் பார்த்தவர் “அம்மாவை கவனிச்சியா கார்த்தி? ரொம்ப சோர்ந்து போயிருக்கிற மாதிரி இல்ல?” என்றார்.

அவசரமாக டிவியை அனைத்தவன் “ஆமாம்ப்பா! நானும் அதை தான் யோசிச்சிட்டு இருந்தேன்” என்றான்.

“அவளுக்கு சரியா காது கேட்கலையோன்னு தோணுது கார்த்தி” என்றார் கவலையாக.

“என்னப்பா சொல்றீங்க?” என்றான் அதிர்ச்சியுடன்.

“நீ நல்லா கவனிச்சு பாரு கார்த்தி. நாம பேசி முடிச்சு ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு பிறகு தான் அவ பதில் சொல்றா. நம்ம கிட்ட அதை சொல்லாம மனசில் வச்சு தான் சோர்வா இருக்கான்னு தோணுது” என்றார்.

“ஆமாம் நானும் கவனிச்சேன் பா. உடனே பதில் சொல்லாம கொஞ்ச நேரம் கொடுத்து தான் பதில் சொல்றாங்க. இதில கவலைப்பட என்ன இருக்கு. இப்போ தான் மருத்துவ வசதிகள் நிறைய இருக்கு. டாக்டர் கிட்ட காண்பிச்சு சரி பண்ணிட்டா போச்சு” .

“ஒரு ரெண்டு நாள் கவனிச்சு பார்த்திட்டு முடிவுக்கு வருவோம் கார்த்தி. அவசரப்பட்டு டாக்டர் கிட்ட போக வேண்டாம்” என்றார்.

“சரிப்பா!” என்றவன் இருக்கையில் இருந்து எழுந்து கொண்டு  “போய் தூங்குங்க. அம்மாவுக்கு எதுவும் இருக்காது. அப்படியே இருந்தாலும் சரி பண்ணிடலாம்” என்று சமாதனப்படுத்தி அவரை அனுப்பி வைத்தான்.

விளக்குகளை அனைத்து வைத்து விட்டு அறைக்குள் சென்றவனின் சிந்தனை அன்னையை சுற்றியே ஓடியது.

வெகுநேரம் அதிலேயே உழன்று கொண்டிருந்து விட்டு விடியலின் நேரம் உறங்க ஆரம்பித்தான்.

மறுநாள் காலை எழுந்தவன் தனது பணிகளை செய்து கொண்டிருந்தாலும் கவனத்தை அன்னையின் மீது வைத்திருந்தான். அவர் பார்ப்பதற்கு சரியாக இருப்பது போல் தோன்றினாலும் மெல்லிய ஓசை அவரது காதை எட்டவே இல்லை. தந்தை பேசும்போது கூட மிகுந்த கவனம் வைத்தே புரிந்து கொள்ள முயன்றது போல் தோன்றியது.

அதற்கு அடுத்து வந்த நாட்களும் அவரை கண்காணிப்பதையே வேலையாக வைத்திருந்தான். அதில் அவன் புரிந்து கொண்டது என்னவென்றால், அவருக்கு கேட்பதில் குறைபாடு வந்திருக்கிறது. அதை வெளியே காட்டாவதாறு இருக்க அன்னை முயன்று கொண்டிருக்கிறார் என்பது தான்.

ஒருவாரம் சென்றிருந்த நிலையில் இரவு பணியில் இருந்து வந்தவன் தந்தையிடம் தான் கவனித்தவைகளை பகிர்ந்து கொண்டான்.

அவரும் சற்றே கவலையுடன் கூடிய குரலில் “நானும் பார்த்தேன் கார்த்தி! நம்ம கிட்ட சொல்லாம மறைக்கிறா” என்றார் துயரத்துடன்.

“டாக்டர் கிட்ட கூட்டிட்டு போய் காண்பிச்சிடுவோம் பா” என்றான் யோசனையுடன்.

“ம்ம்..”

“நான் நாளைக்கு விசாரிச்சிட்டு வந்து சொல்றேன் பா. எந்த ஹாஸ்பிடல் போகலாம்னு. அதுக்கு பிறகு அம்மாவை கூட்டிட்டு போகலாம்”.

அவர் சற்று யோசனையுடன் “நம்ம ஈஸ்வரனோட மருமகள் மௌனிகா  இஎன்டி ஸ்பெஷலிஸ்ட். அவன் கிட்ட சொல்லி அந்த பொண்ணு நம்பர் வாங்கி பேசி வச்சிருக்கேன். நாளைக்கு அம்மாவை அவங்க கிட்ட கூட்டிட்டு போய் காண்பிச்சிட்டு வந்துடுவோம்”.

“அம்மா ஒத்துக்குவாங்களாப்பா?”

“வெளில கூட்டிட்டு போகிற மாதிரி போயிட்டு அங்கே போயிடுவோம்” என்றார்.

“சரிப்பா! எனக்கு அம்மாவை இப்படி பார்க்க பிடிக்கல. நாளைக்கு போயிட்டு வருவோம்” என்று கூறி எழுந்து கொண்டான்.

 

காலை எழுந்ததும் பிரஷ் செய்துவிட்டு காப்பிக்காக அன்னையைத் தேடி வந்தவன், குக்கர் விசிலடிப்பது கேட்காமல் காய் அறிந்து கொண்டிருந்தவரை நோக்கிச் சென்றான்.

அடுப்பை அணைத்துவிட்டு “அம்மா! இன்னைக்கு காலை டிபன் மட்டும் வீட்டில் செய்ங்க. மதியம் வெளில சாப்பிட்டுக்கலாம்” என்றான் அவரின் முகம் பார்த்து.

அவன் முகத்தை ஊன்றி கவனித்தவர் “இன்னைக்கு மார்னிங் ப்ரோக்ராம் இல்லையா கார்த்தி” என்றார் பாலை அடுப்பில் வைத்தபடி.

“இல்லம்மா! அதனால தான் நாம வெளில போகலாம்னு சொல்றேன்” என்றான்.

அவர் கலந்து கொடுத்த காப்பி கோப்பையை வாங்கிக் கொண்டு வந்தவன் சோபாவில் அமர்ந்தபடி நாளிதழை பார்க்க ஆரம்பித்தான். சிறிது நேரம் அதில் மூழ்கியவன், போர் அடிக்க டிவியை போட்டு சேனல்களை மாற்ற ஆரம்பித்தான்.

அப்போது ஒரு சானலில் அவனது விருப்பபாடல் வர, அதை வாயைத் திறந்து கொண்டு பார்க்க ஆரம்பித்தான்.

மை டியர் மச்சான்

நீ மனச வச்சா

நாம உரசிக்கலாம்

நெஞ்சு ஜிகு ஜிகுன்னு

அப்போது அங்கே வந்த அவனது தந்தை “என்னப்பா உன் பாட்டு வந்துடுச்சா? அதுதான் கீழ வரைக்கும் கேட்டுசேன்னு நினைச்சேன்” என்றார்.

அசடு வழிந்தபடி தந்தையை பார்த்துவிட்டு சமையலறையை பார்க்க, அன்னையோ டிவியின் சத்தம் அவரை எதுவும் செய்யவில்லை.

அதில் சற்று கலங்கி போனவன் “நான் போய் கிளம்புறேன் அப்பா. இன்னைக்கு டாக்டர் கிட்ட போயிட்டு வந்துடுவோம்” என்றான் அன்னையை பார்த்தபடி.

அவர்கள் பேசியது எதுவும் அவர் காதில் விழவில்லை. பெருமூச்சுடன் எழுந்த மாறன் “சரிப்பா” என்றார்.

சற்று நேரத்தில் காலை உணவை முடித்துக் கொண்டு கிளம்பினர். ஒலாவில் பயணிக்கும் போது மெல்ல மகன் பக்கம் திரும்பியவர் “எங்கே போறோம் கார்த்தி” என்றார்.

அவர் கைகளை எடுத்து தன் கைகளில் வைத்துக் கொண்டவன் “அம்மா! உங்களை டாக்டர் கிட்ட காண்பிக்க தான் போயிட்டு இருக்கோம்” என்றான்.

ஒன்றும் புரியாமல் அவன் முகத்தையே பார்த்தவர் “என்ன சொல்ற?” என்றார்.

கைகளை வருடியபடி “கொஞ்சநாளா இந்த காந்திமதி நாங்க பேசுறது எல்லாம் கேட்காம நிம்மதியா இருக்காங்களாம். அவங்களை அப்படியே விட்டுடலாமா?” என்றான்.

அதை கேட்டதுமே சட்டென்று கண்கள் கலங்கி விட “உனக்கு எப்படி தெரியும்?” என்றார்.

“அப்பா தான் கவனிச்சு சொன்னாங்கம்மா. ஒன்னும் கவலைப்படாதீங்க. சின்ன பிரச்சனையாக தான் இருக்கும்” என்றான்.

கணவரையும், மகனையும் கண்கள் கலங்க பார்த்தவர் “ரொம்ப பயந்துட்டேன்” என்றார்.

அதை கேட்டு அவரது மூடை மாற்ற எண்ணியவன் “இங்க பாருங்க காந்திமதி. நீங்க இப்போ பேசிட்டு இருக்கிறது ஹலோ எப்எம்மின் ஆர்ஜே கார்த்தியோட. தொடர்ந்து என்னோட ப்ரோக்ராம்மை கேட்டீங்கன்னா உங்களோட காது நன்றாக கேட்க ஆரம்பிச்சிடும்” என்றான்.

அவன் பேசியது பாதி தான் அவர் காதில் விழுந்தது. மகன் தன்னை மாற்றவே முயற்சிக்கிறான் என்பதை உணர்ந்தவர் மெல்ல சிரித்து அவன் தலையை வருடினார்.

அதற்குள் அவர்கள் இறங்க வேண்டிய இடம் வர, தாயாரை இறக்கிவிட்டு டிரைவருக்கு பணத்தை கொடுத்தவன் ஆஸ்பத்திரியின் ரிஷப்ஷன் நோக்கி சென்றான்.

மாறனும், காந்திமதியும் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள, அவன் ரிஷப்ஷனிஸ்ட்டிடம் டாக்டர் மௌனிகாவை  பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தான்.

அவளோ “அப்பாயின்ட்மென்ட் வாங்கி இருக்கீங்களா சார்?” என்றாள்.

அப்போது அதை கேட்டு எழுந்து வந்த மாறன் “நேத்தே அவங்க கிட்ட பேசி இருக்கோம்மா அவங்க தான் இந்த நேரத்திற்கு வர சொன்னாங்க” என்றார்.

பேஷண்டின் பேரை எழுதிக் கொண்டு அவர்களை அமர சொன்னவள், டாக்டர் வரும் முன்பு அவரின் அறையை சுத்தம் செய்ய சொல்லி பைல்களை எல்லாம் டேபிளின் மீது வைக்க கூறினாள்.

அன்னை, தந்தையை அங்கே அமர வைத்துவிட்டு காரிடாருக்கு வந்து நின்று அங்கு போவோர் வருவோரை வேடிக்கை பார்த்தவண்ணம் நின்றிருந்தான் கார்த்தி. அவன் நின்றிருந்த இடத்திற்கு அருகில் லிப்ட் இருந்தது.

காரை பார்க் செய்துவிட்டு லிப்டில் ஏறிய மௌனிகா  மூன்றாம் தளத்தை அழுத்திவிட்டு கடிகாரத்தை பார்த்தவண்ணம் யோசனையில் நின்றிருந்தாள். சரியாக லிப்டின் கதவு திறக்கவும், கார்த்தியின் மொபைல் இசைக்க ஆரம்பித்தது.

ரா! நாம பீச்சு பக்கம் போத்தாம்

ஒரு டப்பாங்குத்து வேஸ்தாம்

நீ என்னுடைய ரவுடி பேபி!

என்று அலற ஆரம்பித்தது.

அந்த பாட்டின் ஓசையில் அதிர்ந்தவள், அவனை முறைத்து “மிஸ்டர்! இது ஹாஸ்பிடல்! இங்கே இப்படி சத்தமா பாட்டை அலற விட்டிருக்கீங்களே?” என்றாள் சிடுசிடுவென்று.

அவளை பார்த்த பின்பு அதிர்ச்சியில் பாட்டை அனைக்காமல் திகைத்து விழித்து கொண்டு நிற்க பாட்டு நிற்காமல் அலறிக் கொண்டிருந்தது.

அதில் மேலும் கடுப்பானவள் கோபத்தோடு அதிக சத்தமில்லாமல் ஆனால் அழுத்தமாக “மிஸ்டர்! பாட்டை ஆப் பண்றீங்களா” என்றாள்.

அப்போது தான் தன்னை சுதாரித்துக் கொண்டவன் “மிஸ்! இது பாட்டில்ல. ரிங்க்டோன்!” என்று கூறிவிட்டு போனை காதில் வைத்து “சொல்லுடா மச்சி” என்று நண்பனுடன் பேச ஆரம்பித்தான்.

திரும்பி நின்று பேசியவனின்  முதுகை முறைத்துவிட்டு கோபத்தோடு தனதறைக்குச் சென்றாள்.

அவள் அறைக்குள் சென்றமர்ந்ததும் ஏற்கனவே அப்பாயின்ட்மென்ட் வாங்கி இருந்தவர்களை ஒவ்வொருவராக அனுப்ப ஆரம்பித்தனர்.

சுமார் அரைமணி நேரம் சென்றிருக்க, பொறுமையிழந்த கார்த்தி ரிஷப்ஷனிஸ்ட்டிடம் “மிஸ்! உங்க டாக்டர் எப்போ எங்களை பார்ப்பாங்களாம்” என்றான் சற்று கோபத்தோடு.

அவளோ சங்கடத்துடன் “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார். நான் டாக்டர் கிட்ட கேட்டுட்டு வரேன்” என்று உள்ளே சென்றாள்.

வேறொரு பேஷண்ட்டை பார்த்து முடித்துவிட்டு அமர்ந்தவளின் முன் சென்று நின்ற ரிஷப்ஷனிஸ்ட் “மேம்! உங்க ரிலேடிவ் வந்திருக்காங்க. ரொம்ப நேரமா வெயிட் பண்றாங்க. அனுப்பலாமா?” என்றாள் மெல்லிய குரலில்.

சற்று அயர்ச்சியுடன் “ம்ம்..சரி! அவங்களை வர சொல்லு” என்றவள் எதிரே இருந்த கண்ணாடி தம்ளரில் இருந்து தண்ணீரை குடிக்க ஆரம்பித்தாள்.

அவள் ஒப்புக் கொண்டதும் மூவரும் அவளின் அறையை நோக்கி சென்றனர். அறைக் கதவை திறந்து கொண்டு முதலில் சென்ற காந்திமதியை தொடர்ந்து கடைசியாக நுழைந்தவனைக் கண்டதுமே முகத்தில் ஒருவித எரிச்சல் பரவ,  அதை முகத்தில் காண்பிக்காது அமைதியாக பார்த்தாள்.

அப்போது மீண்டும் கார்த்தியின் மொபைல் அலற ஆரம்பித்தது.

மை டியர் மச்சான்

நீ மனசு வச்சா

நாம உரசிக்கலாம்

நெஞ்சு ஜிகு ஜிகுன்னு

என்று அவளது நெஞ்சை பற்றி எரிய வைத்தது.

“உங்க மொபைலை ஆப் பண்ணிட்டு இங்கே இருக்கிறதுன்னா இருங்க. இல்லேன்னா தயவு செஞ்சு வெளியே போயிடுங்க” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு.

சட்டென்று மொபைலை ஆப் செய்து வைத்துவிட்டு அவளை பார்த்தவன் ‘பெரிய இவன்னு நினைப்பு! தொமுகவுக்கே( இஎன்டி – தொண்டை மூக்கு காது) இத்தனை அலப்பறை! ‘ என்று கழுவி ஊற்றிக் கொண்டே அன்னையைப் பற்றி தந்தை சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தான்.

அவர் சொல்வதை கேட்டுக் கொண்டே காந்திமதியை சோதித்துக் கொண்டிருந்தாள். தந்தை சொல்வதில் சமாதானம் அடையாதவன் தனது வழக்காமான பாணியில் அன்னை எப்பொழுதும் என்னென்ன செய்வார் என்பதையும் இப்போதிருப்பதையும் கூறி முடித்தான்.

அமைதியாக நாற்காலியில் நன்றாக சாய்ந்தமர்ந்து அவன் சொல்வதை முழுமையாக கேட்டுக் கொண்டவள் “நீங்க என்ன வேலை பார்க்குறீங்க?” என்றாள்.

சம்மதமில்லாத அவளது கேள்வியை கண்டு விழித்தவன் “ரேடியோ ஜாக்கி “ என்றான்.

கைகளை இறுக கட்டிக் கொண்டவளின் பார்வை ‘அதானே பார்த்தேன்!’ என்று கூறியது.

“நீங்க தினமும் இப்படித்தான் உங்கம்மா கிட்ட பேசுவீங்களா? உங்க போனில் எப்பவும் இவ்வளவு வால்யும் வைப்பீங்களா?” என்றாள் நக்கலாக.

“என்ன சொல்றீங்க?” என்றவனை தடுத்தவள் “நீங்க கொஞ்ச நாளைக்கு பேசாம இருந்தாலே உங்கம்மாவுக்கு காது கேட்கும்னு தோணுது” என்றாள் அமைதியாக.

 

 

                                                               -சுதா ரவி.

Categories
Completed Novels Sudha Ravi Uncategorized

அத்தியாயம் – 2

அத்தியாயம் – 2

அவளை பற்றிய விவரங்களை அறிந்திருந்தாலும், பேச்சு கொடுத்து கேட்டுக் கொண்டே சென்று இல்லத்தின் வாயிலில் வண்டியை நிறுத்தினார்.

அழகான சோலையின் நடுவே பழங்கால மூன்று கட்டிடங்கள் காமாட்சி அம்மாள் இல்லம் என்ற பெயர் பலகையுடன் நின்றது.

சிறுவர்கள் பள்ளி சீருடையுடன் ஒரு கட்டிடத்தில் நடமாடிக் கொண்டிருந்தனர். அந்த கட்டிடம் தான் பிள்ளைகளுக்கான கட்டிடம் போலும். ஆங்காங்கே சில மாணவர்கள் தோட்டத்தை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தனர். சுற்றுபுறத்தை ஆராய்ந்து கொண்டிருந்தவளை செந்தூரத்தின் குரல் கலைத்தது.

“வா தனம். இனி, இங்கே தானே இருக்க போற, பொறுமையா பார்த்துக்கலாம்” என்று கூறியபடி உள்ளே சென்றார்.

அவரை பின்தொடர்ந்தவள் அறைக்குள் நுழைந்தாள். அவளிடம் எதிரே இருந்த நாற்காலியை காட்டி அமர சொன்னார்.

“இல்ல மே…அக்கா. நான் நின்னுகிறேன். நீங்க சொல்லுங்க” என்றாள்.

“தனம்! எட்டு ஒன்பது மணி நேரம் பயணம் செஞ்சு வந்திருக்க. இந்த மரியாதை எல்லாம் வேண்டாம். நீ உட்கார்ந்தால் தான் பேச முடியும்” என்றார்.

மறுத்து பேசாமல் அவர் எதிரே நாற்காலியின் நுனியில் அமர்ந்தாள்.

தனது முன்னே இருந்த பைலில் அவளை பற்றிய விவரங்களை பதிந்து விட்டு அவளை நிமிர்ந்து பார்த்தவர் “உனக்கு இங்கே தனியா எந்த வேலையும் இல்ல . இங்கே இருக்கிற பசங்களுக்கு அன்பும், அரவணைப்பும் கொடுக்கணும்.  மற்றபடி இங்கே இவங்களுக்கு இந்த வேலை அப்படின்னு எதுவும் பிரிச்சு கொடுக்க மாட்டோம். எல்லோரும் எல்லா வேலையும் செய்வோம்” என்றவர் “வா நீ தங்க போகிற இடத்தை காட்டுகிறேன்” என்று கூறி அழைத்துச் சென்றார்.

சின்னஞ்சிறிய அறை ஒரு ஆளுக்கு போதுமானதாக இருக்கும். சுவரோரம் சிறிய ஒற்றை கட்டிலும், ஒரு மேஜையும் நாற்காலியும் இருந்தது.

அறைக்குள் நுழைந்து எதையும் பார்க்காது செந்தூரத்தின் முகத்தை பார்த்தவாறு நின்றாள்.

“நல்லா படுத்து தூங்கு . மதியம் சாப்பிடுற நேரத்திற்கு எழுந்திரிச்சுடு. அப்போ தான் வேலை நிறைய இருக்கும்” என்றவர் அவளுக்கு மற்ற விவரங்களை கொடுத்து விட்டு அறையை விட்டு வெளியேறினார்.

அவர் சென்றதும் துணிப்பையை மேஜை மேல் வைத்துவிட்டு கட்டிலில் அமர்ந்தார். சற்று நேரம் அமைதியாக அமர்ந்தவருக்கு உறக்கம் வரும் என்று நம்பிக்கை இல்லை. மெல்ல எழுந்து ஜன்னலருகே சென்று நின்றார்.

வெளியில் குழந்தைகள் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தினர். எல்லா வயதிலும் ஆங்காங்கே குழுமி இருந்தனர். சற்றே பெரிய பிள்ளைகள் விளையாட்டு ஆசிரியர் சொல்வதை கேட்டு விளையாடிக் கொண்டிருக்க, மற்ற சிறுவர்கள் குழுக்களாக பிரிந்து பேசுவதும், குதிப்பதுமாக இருந்தனர்.

தனம் பிள்ளைகளை ஆசையாக பார்த்துக் கொண்டு நின்றாள். அதிலும் அவளது பார்வை ஒரு பெண் குழந்தையின் மீதே இருந்தது. அவளது எண்ணங்கள் பின்னோக்கி பயணித்து தனது மகளின் நினைவுகளில் கரைந்தது. தான் சிறை செல்லும் போது இந்த வயதில் தானே இருந்தாள் என்றெண்ணி அந்த குழந்தையை பார்த்தாள்.

ரெட்டை ஜடை போட்ட அந்த எட்டு வயது சிறுமி தனது தோழிகளிடம் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தது. தனத்திற்கு அந்த குழந்தையை இழுத்து அணைத்து கொஞ்ச வேண்டும் போல் ஆசை எழுந்தது. அதே நேரம் அவளது ஆழ் மனதில் புதைந்திருந்த கடந்த காலத்தின் எச்சம் நினைவுக்கு வர, முக கசங்களுடன் வேகமாக சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.

கண்களை அழுந்த மூடி “வேண்டாம்! எனக்கு எந்த உறவும் வேண்டாம்!” என்று புலம்பலுடன் காலை குறுக்கிக் கொண்டு அப்படியே மடங்கி படுத்துக் கொண்டாள்.

விழிகளில் கண்ணீர் வழிந்தோடியது. மனமோ ‘எதற்கு ஆசைப்பட்டேன்? ஒரு சாதாரண வாழ்க்கை தானே! அது ஏன் எனக்கு கிடைக்காமல் போனது?’ என்று நெஞ்சம் குமுறியது. பல நாட்களுக்கு பிறகு அவளது இதயம் மறைந்திருந்த ரணங்களை கீறி குருதியை வரவழைத்தது.

அந்நேரம் வெளியில் குழந்தைகளின் சத்தம் காதை தீண்டிச் செல்ல, தன்னை மறந்து எழுந்து சென்று ஜன்னலின் வழியே உலகத்தின் கெட்டவைகள் எதுவும் தெரியாமல் விளையாடுபவர்களை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்.

அப்போது செந்தூரம் அழைப்பதாக ஒரு பெண் கூறிச் சென்றது. அவசரமாக சென்று முகம் கழுவி தலையை ஒதுக்கிக் கொண்டு செந்தூரத்தைக் காண சென்றாள்.

அவளைப் பார்தததும் புன்னகைத்து “வா தனம்! நல்லா தூங்கி எழுந்தியா?” என்றார் அன்பாக.

அவரது அன்பு இழையோடிய குரலைக் கேட்டதும் மனம் ‘எத்தனை நாட்களாகிற்று இத்தனை அன்பான விசாரிப்பைக் கேட்டு’ என்று கண்கள் தானாக தளும்பி நின்றது.

அவளது முகத்தையே ஆராய்ந்து கொண்டிருந்தவர் மெல்ல எழுந்து வந்து “அடடா! இப்போ என்ன கேட்டுட்டேன்னு கண்ணு கலங்குற? வா! இப்படி வந்து உட்காரு” என்று தோளைப் பிடித்து அழைத்துச் சென்றார்.

ஒரு பெண்ணை அழைத்து சூடாக காப்பி வரவழைத்துக் கொடுத்தார். நான் குடித்து முடிக்கும் வரை தனது வேலைகளில் ஆழ்ந்திருந்தவர் “குடிச்சிட்டியா தனம்…நாம கொஞ்சம் வெளில சுத்திப் பார்த்திட்டு வரலாமா?” என்று கேட்டு எழுந்து கொண்டார்.

நானும் அமைதியாக அவரை பின் தொடர்ந்தேன். ஆஸ்ரமத்தின் ஒவ்வொரு இடத்தையும் காண்பித்து அங்கிருப்பவர்களைப் பற்றி கூறிக் கொண்டே வந்தார்.

“இங்கே இருப்பவங்க எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் குடும்பத்தால கை விடப்பட்டவங்க தான் . ஆரம்ப நாட்களில் தங்களுடைய சோகத்தை எண்ணியே தங்களுக்குள்ளேயே உழன்று கொண்டிருந்தவங்க நாளடைவில் இது தான் நிதர்சனம் என்பதை புரிந்து கொண்டு வாழ ஆரம்பிச்சிட்டாங்க” என்றார்.

வயதானவர்கள் ஒருபுறம், சின்னஞ்சிறு குழந்தைகள் ஒருபுறம் என்று அந்த ஆசிரமம் சுமார் நூறு பேரை இணைத்திருந்தது. அங்கு வேலை செய்பவர்களுமே கடமைக்காக செய்யாமல் தங்கி இருந்தவர்களை தங்களது உறவாக எண்ணி உதவினர். செந்தூரத்தை வியப்பாக பார்த்து “எப்படி உங்களுக்கு இந்த மாதிரி ஒரு மனப்பான்மை வந்தது அக்கா? அதிலும் நீங்க செய்து கொண்டிருப்பது எத்தனை பெரிய உதவி” என்றாள் மலைப்பாக.

மரங்கள் சூழ்ந்த தோட்டத்தின் நடுவே போடப்பட்டிருந்த கல்லில் அமர்ந்தவர் “உட்காரு தனம்! என்ன கேட்ட எப்படி இந்த மாதிரி எண்ணம் வந்ததா? என்றவர் அவளைப் பார்த்துச் சிரித்து “ஒரு விஷயம் நமக்கு நடக்கும் போது தான் அதன் முழு தாக்கம் நம்மை வந்தடையும். அந்த நேரத்தில் சிலருக்கு ஞானோதயம் பிறக்கும். அப்படித்தான் எனக்கும்” என்றார்.

அவர் சொன்னதின் அர்த்தம் விளங்க சிறிது நேரம் எடுத்தது. புரிந்த பின்னோ விழிகள் விரிய “என்னக்கா சொல்றீங்க?” என்றாள்.

லேசாக தலையசைத்தவர் “புகுந்த இடத்துக்கும், பிறந்த இடத்துக்கும் நான் வேண்டாதவளா போயிட்டேன். எனக்கு ஆதரவு கொடுக்க யாருமில்லாம இந்த ஆசிரமத்தில் தான் நானும் இருந்தேன். என்னுடைய சேவை மனப்பான்மையை புரிந்து கொண்ட ஆசிரம தலைவி அவங்களுக்குப் பிறகு என்கிட்ட பொறுப்பை ஒப்படைசிட்டாங்க” என்றார்.

“உங்களை ஏன் குடும்பத்தில் ஒதுக்கி வச்சாங்க அக்கா? சொல்லலாம் என்றால் சொல்லுங்க”.

விரக்தியாக அவளைப் பார்த்து சிரித்து “புகுந்த வீட்டில் வாரிசு இல்லேன்னு ஒதுக்கி அவருக்கு வேறொரு கல்யாணம் பண்ணினாங்க. வாழாவெட்டியா போனதுனால பிறந்த வீட்டில் கொஞ்சம் கொஞ்சமா ஒதுக்கப்பட்டேன். ஒரு நேரம் உன்னை வச்சு சோறு போட முடியாது என்கிற வார்த்தையே வந்து விழுந்த பின், நொந்து போய் இந்த ஆசிரமத்தில் வந்து சேர்ந்துட்டேன்” என்றார்.

அவரின் சோகத்தை கேட்டு நெஞ்சடைக்க வெறித்தபடி அமர்ந்திருந்தாள். அவளது நிலையை உணர்ந்தவர் மெல்ல அவள் கைகளைத் தட்டி “தனம்! என்ன கஷ்டமா இருக்கா? எனக்கு அதெல்லாம் மறந்தே போச்சு. உண்மையை சொல்லன்னுனா என்னை சுத்தி இருக்கிற இவங்க தான் என் உறவுகள்” என்றார்.

“ரொம்ப கஷ்டமா இருக்கு அக்கா”

“எந்தவொரு கஷ்டத்தையும் மனசுல தூக்கிச் சுமக்காம நம்மை சேர்ந்தவங்க கிட்ட சொல்லி ஒரு தடவை அழுதுட்டோம்னா அந்த பாரம் குறைஞ்சு போயிடும்”.

“சொல்லி அழ ஒரு ஆள் வேணுமில்லையா அக்கா?”

அவளது புறம் நன்கு திரும்பி அமர்ந்தவர் “நிச்சயமா தனம்…நம்ம உணர்வுகளை, சுக துக்கங்களை புரிந்து கொள்ள கூடிய உறவு இருந்தா அந்த வாழ்க்கை வரம்”.

“உங்க கணவர் உங்களை விட்டுட்டு வேறொரு பெண்ணை மணந்து கொண்டாரே அவருக்கு உங்களை விட்டுக் கொடுக்கிறோம் என்று கொஞ்சம் கூட உறுத்தலையா?”

இருளை வெறித்தவர் “என்னாலையும் அதை புரிஞ்சுக்க முடியல தனம். அத்தனை வருடம் எல்லாமே நான் தான்னு வாழ்ந்தவர் வாரிசுக்காக என்னை எப்படி தூக்கிப் போட முடிஞ்சுதுன்னு சுத்தமா புரியல”.

“அப்போ தாம்பத்தியத்துக்கு என்ன தான் அர்த்தம். கல்யாணத்தப்போ சொல்கிற மந்திரங்களுக்கு அந்த நேர மரியாதை மட்டும் தானா?”

அவளது கையைத் தட்டிக் கொடுத்தவர் “விடு! தனம்! இதெல்லாம் முடிந்து போன விஷயம். நான் இப்போ நிம்மதியா இருக்கிறேன். நீயும் இங்கே இருக்கிறவங்களோட நிம்மதியா இருக்கணும்” என்றார்.

“நிம்மதி! நான் அதை இழந்து பல வருடங்கள் ஆச்சுக்கா” என்றவளை “வேண்டாம் விட்டுடு தனம். மனதை கீறி பழசை எல்லாம் வெளில எடுக்காதே” என்றார்.

“நீங்க தானே அக்கா சொல்லி அழுதிடுன்னு சொன்னீங்க? இதுநாள் வரை நெஞ்சுல ஏறி உட்கார்ந்த பாரம் புரையோடி புண்ணாக கிடக்கு. யார் மேலையும் நம்பிக்கையும் வரல…என் மனசை திறந்து சொல்ல முடியும்னு தோனல. முதல் முறையா உங்க கிட்ட நடந்த எல்லாத்தையும் சொல்லனும்னு தோணுது. என்னை தடுக்காதீங்க” என்றாள்.

அவளது கைகளை இறுகப் பற்றிக் கொண்டவர் நீண்ட பெருமூச்சுடன் “சொல்லு” என்றார்.

வெற்றிடத்தை வெறித்த கண்கள் தனது வாழ்க்கையை திரும்பி பார்க்க ஆரம்பித்தது.

பதினைந்து வயது தனம் அந்த அன்பான குடும்பத்தின் இளவரசி. தந்தைக்கு செல்ல மகள். அன்னைக்கு கடைக்குட்டி. அண்ணனுக்கு அன்பனா தங்கை.

பெரிய வசதிகள் ஏதுமில்லாத மத்திய தர குடும்பம். அதிக வருமானமில்லை என்றாலும் மகிழ்ச்சிக்கு குறைவேதுமின்றி இருந்தது.  அப்பாவுக்கு இருதய நோய் வரும் வரை. நோய் வந்துவிட்டது என்பதை உணரும் முன்பே ஆளை அடித்து போட்டது. திடீரென்று ஒரே நாளில் அந்தக் குடும்பம் நிம்மதியை இழந்தது.

அந்தக் குடும்பத்தின் வருமானத்தை கொண்டு வருபவர் இறந்து போக, வீட்டின் பொருளாதாரம் தள்ளாட ஆரம்பித்தது. வந்த வருமானம் கைக்கும், வாய்க்குமே சரியாக இருந்ததால் சேமிப்பு எதுவுமில்லை. அன்னை தந்தை வேலை செய்த கம்பனியில் துப்புரவு பணியாளராக சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தார். அந்த வருமானம் சாப்பாட்டு செலவிற்கே போதாமல் முதலில் தனம் பள்ளியில் இருந்து நிருத்தபட்டாள்.

இப்படியே இரண்டு வருடங்கள் ஓடியது. பையனை மட்டும் கடனை வாங்கியாவது பள்ளிக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். அப்போது தனத்திற்கு அவளது தாய் வழியில் தூரத்து உறவு முறையில் ஒருவர் பெண் கேட்டு வந்தனர்.

பதினேழே வயதான தனக்கு திருமணம் வேண்டாம் என்று அன்னையிடம் கெஞ்சிப் பார்த்தாள். தனத்தின் அன்னைக்கோ வருபவர்கள் ஒரு காசு செலவின்றி அவளை மணந்து கொள்ள தயாராக இருந்தது கண்டு அவளை எப்படியாவது தள்ளிவிட்டு விட என்பதில் குறியாக இருந்தார்.

பெண் பார்க்க தாயாரும், மகனும் மட்டுமே வந்தனர். தனத்தின் குடும்பத்தை போன்றே இள வயதிலேயே மாப்பிள்ளை சேகரின் தந்தை இறந்து போக, வீட்டு வேலை செய்தும், சமையல் வேலை செய்தும் மகனை வளர்த்திருக்கிறார் சுமதி.

சேகர் அன்னையின் கஷ்டம் உணர்ந்து படித்து இப்போது அரசாங்க உத்தியோகத்தில் இருக்கிறான். தங்களைப் போன்ற கஷ்டபட்ட குடும்பத்தில் இருந்து தான் பெண்ணெடுக்க வேண்டும் என்று வந்ததாக கூறினார் சுமதி.

இருகுடும்பதினருக்கும் பிடித்தம் ஏற்பட தங்களின் ஒப்புதலை அங்கேயே பரிமாறிக் கொண்டு வரும் வெள்ளியன்றே அருகில் இருக்கும் கோவிலில் திருமணத்தை முடித்துவிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

தனத்திற்கு கூட சேகரை பார்த்த பின்பு முதலில் இருந்த மறுப்பு குறைந்து போனது. அவளுமே உற்சாகத்துடன் திருமண நாளை எதிர்பார்த்தாள்.

இரு பக்கத்திலும் சேர்த்து மொத்தம் இருபத்தைந்து பேருடன் அந்த முருகன் கோவிலில் அழகாக முடிந்தது சேகர் தனாவின் திருமணம். மதிய உணவை முடித்துக் கொண்டு சேகர் வீட்டிற்கு கிளம்பினர். தனாவின் அன்னை அவளுடன் போகாது தனது தங்கையை அனுப்பி வைத்தார்.

காலணி வீடுகளில் ஒற்றை படுக்கை அறை கொண்ட வீடாக இருந்தது சேகரின் வீடு.  தனம் வீட்டினரை பார்த்து பார்த்து கவனித்தார் சுமதி. அதைக் கண்டு அன்னையை எண்ணி உள்ளுக்குள் மகிழ்ந்து போனான் சேகர்.

தனம் பயந்து கொண்டிருந்த தனிமையும் வந்தது. மணமக்களை அறைக்குள் அனுப்பி விட்டு ஆண்கள் வாயிலில் இருந்த இடத்தில் படுத்துக் கொள்ள, தனத்தின் சித்தியும் , சேகரின் அன்னையும் உள்ளேயே படுத்துக் கொண்டனர்.

மாலை வரை நன்றாக பேசிக் கொண்டிருந்த சுமதி இரவு நெருங்கத் தொடங்கியதும் தனக்குள்ளேயே முடங்கிப் போனார். தனத்தின் சித்தி சுமதியின் செய்கைகளை மௌனமாக கவனித்துக் கொண்டிருந்தார். உள்ளுக்குள் நெருடல் எழுந்தது. சுமதி இயல்பாக இல்லையோ என்று தோன்றியது. அவரிடம் ஏதோவொன்று போலியாகத் தோன்றியது.

அறைக்குள் நுழைந்த தனத்தை ஆசையுடன் பார்த்திருந்தார் சேகர். பதினேழு வயது பாவை பயத்துடன் அவரருகில் சென்றமர்ந்தாள்.

அவள் தன்னை நிமிர்ந்து பார்ப்பாள் என்று பார்த்துக் கொண்டிருந்தவர் அவள் பார்க்கவில்லை என்றதும் “தனம்! என்னை பாரேன்” என்றார் மெல்லிய குரலில்.

அவளோ மேலும் தலையை குனிந்து கொண்டாள். அவளது கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு “இங்கே பாரு தனம்! என்னைக் கண்டு பயப்படாதே” என்றார் மெதுவாக.

அவரின் கரம் பட்டதும் மேனி நடுங்க மெல்ல தலையசைத்தாள்.

“உனக்கு என்ன பிடிக்கும்? என்று மெல்ல அவளை பேச்சுக்குள் இழுத்தார். சற்றே பயம் குறைந்து இயல்பாக பேச ஆரம்பித்தவளிடம் தன்னுடைய விருப்பங்கள், ஆசைகள் என்று தானும் பகிர்ந்து கொண்டார். பேச்சோடு பேச்சாக அவரது கைகளும் தனது பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தது.

“எனக்கு ஒன்னு மட்டும் நீ உறுதி கொடுக்கணும் தனம்…எந்த காரணத்தை கொண்டும் அம்மாவை மரியாதை இல்லாம நடத்தக் கூடாது…மற்றபடி நீ உங்க வீட்டில் இருப்பது போல இருக்கலாம்” என்றார்.

அவரது கரங்கள் சொன்ன செய்தியில் மயங்கி இருந்தவளுக்கு அந்த விஷயம் பெரிதாகத் தெரியவில்லை. சம்மதமாக தலையசைத்து வைத்தாள். அதன்பின்னர் அங்கு பேச்சிற்கு இடமில்லாமல் போனது.

விடியலின் நேரம் அவளது சித்தி மெதுவாக கதவை தட்ட தன்னை சீர்ப்படுத்திக் கொண்டு அவசரமாக எழுந்து சென்று கதவைத் திறந்து வெளியேறினாள். காலணி வீடுகளில் மற்றவர் எழும்பும் முன் அவளை குளிக்க வைத்து வீட்டிற்குள் அழைத்து வந்தார்.

சுமதியோ மருமகளின் கண்ணில் படாது விருந்தினருக்கு காப்பியும், பலகாரம் தயாரிப்பதில் மும்மரமாக இருந்தார். மெல்ல விடியத் தொடங்க சேகரும் எழுந்து குளித்து விட்டு வந்து விருந்தினர்களுடன் பேசிக் கொண்டிருந்தான். அவனது பார்வை நிமிடத்திற்கொரு முறை தனத்தை தொட்டு மீண்டது.

இவற்றை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த தனத்தின் சித்திக்கு நிறைவாக இருந்தது என்றாலும் காலையில் இருந்து சுமதியின் நடத்த்தை மேலும் அவளுள் சந்தேகத்தை விதைத்தது.

வந்திருந்தவர்களுக்கு எந்தக் குறையுமின்றி விருந்துபச்சாரம் செய்து  அனைவரையும் அனுப்பி வைத்தார் சுமதி. எல்லோரும் சென்றதும் அறைக்குள் சென்ற சேகர் அங்கிருந்தபடியே “தனம்” என்றழைத்தான்.

அடுப்படியை மாமியாருடன் ஒழித்துக் கொண்டிருந்தவள் செய்வதறியாது விழிக்க, அவளை நிமிர்ந்து பார்த்த சுமதி மெல்லிய குரலில் “இதோ பார்! எல்லாமே முடிஞ்சு போச்சு என் மகனை கைக்குள்ள போட்டுக்கலாம்னு நினைக்காதே. அவன் ஆம்பளை அப்படித்தான் கூப்பிடுவான். நேத்தோட எல்லாம் முடிஞ்சு போச்சு. இனி, அவனே கூப்பிட்டாலும் நீ ஒதுங்கனும். என்னை காரணம் காட்டின அப்புறம் நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்” என்றார் மிரட்டலாக.

தனத்திற்கு ஒரு நிமிடம் நடப்பது எதுவுமே புரியவில்லை. எதற்காக மாமியார் தன்னை கணவனிடம் இருந்து விலக சொல்கிறார் என்று புரியாமல் நின்றாள்.

“என்ன பிரம்மஹத்தி மாதிரி நிற்கிற! போ! போய் அவனை சமாளிச்சிட்டு உடனே வா! என்றார்.