Categories
Uncategorized

வெற்றிவேல்-2

வெற்றிவேல்-2

அலமேலுக் கூறியதில் அதிர்ந்து விழித்த வெற்றிவேல் “என்னை பெத்த தாயே! இனிமே புதுசா எந்த கருமத்தையும் ஆரம்பிக்க மாட்டேன்… இந்த களை எடுக்குறதை வேடிக்கை பார்க்காம கூட சேர்ந்து நானும் களைப்பிடுங்குறேன். எனக்கு வேற ஏதாவது வேலை நீ வைச்சிருந்தாலும் அதையும் சொல்லு. செஞ்சு முடிக்கிறேன்”, என பம்மியவனாக களை எடுப்பவர்களுடன் அவனும் சென்று களை பிடுங்க ஆரம்பித்தான்.

“அது அந்த பயம் இருக்கணும்”, என தன்னைத்தானே மெச்சிக் கொண்ட அலமேலு துரைசாமி வருவதைப் பார்த்து விட்டார். “அவனே இப்பதான் உருப்பட ஆரம்பிச்சிருக்கான். அதுக்குள்ள இந்த மனுஷனை யாரு வர சொன்னது? வீட்ல உட்கார்ந்து இன்னும் விலாவரியா ஊா் கதையை பேச வேண்டியதுதானே!”, என வாய்விட்டுப் புலம்பியவர் அவர் அருகில் வந்தவுடன் “ஏன் மாமா! நான் சித்த நேரத்துல வீட்டுக்கு வந்துடுவேன்ல உங்களை அதுக்குள்ள யாரு தோட்டத்துக்கு வரச்சொன்னது?”, என கோபமாகக் கேட்டார்.

“இவ ஒருத்தி எப்பப் பார்த்தாலும் அந்த ரோட்டுக் கடையில் புரோட்டா கொத்துற சத்தம் மாதிரியே சத்தம் கொடுத்துட்டுருப்பா”, என்ற துரைசாமி “பையனுக்கு ஜூஸ் எடுத்துட்டு வந்தவ போனையும் சேர்த்து எடுத்துட்டு வந்திருக்கணும்ல… எத்தனை தடவை கூப்பிடுறது? உன்கிட்ட முக்கியமான விஷயத்தை பேசி இப்பவே முடிவு பண்ணனும் அப்படின்னு சொல்லிதான் நானே கிளம்பி வந்துட்டேன்”, என அலமேலுவின் அருகில் அமர்ந்துகொண்டார்.

தந்தை வந்தவுடன் அங்கிருந்து நகர்வதற்கு எத்தனித்து தனது காலை ஒரு அடி முன்னால் வைத்த வெற்றிவேல் தன் அம்மா கூறிய வார்த்தைகள் மீண்டும் காதில் ஒலித்ததில் எடுத்து வைத்த காலை அப்படியே பின்வாங்கி வேலை செய்வது போல் குனிந்து கொண்டான்.

தான் வந்தவுடன் மகன் தன்னை நோக்கி வர எத்தனித்ததையும் பின்னர் தயங்கி பின்னோக்கிச் சென்றதையும் கண்ட துரைசாமி தன் மனைவின் புறம் திரும்பி “அலமு! குழந்தையை எதுவும் சொன்னியா? இல்லைன்னா பிள்ளை இந்நேரம் நான் வந்து உட்கார்ந்த வேகத்துக்கு என் மடியில ஓடி வந்து படுத்துருக்குமே! எதுவும் திட்டி வச்சிருக்கியா என்ன?”, என கோபமாக கேட்டார்.

கண்ணில் கனலுடன் “நாலு கழுத வயசாச்சு. இன்னும் அவனை குழந்தை பிள்ளைன்னு சொல்லிகிட்டு திரியாதீங்க… கல்யாணம் பண்ணி வச்சா அடுத்த 10 மாசத்துல பேரப்பிள்ளை வந்துரும். அவனை கொஞ்சுறதை விட்டுட்டு உருப்படியான வேலையை பாருங்க.

நான் இப்பதான் அது இதுன்னு சொல்லி அவனை மிரட்டி வச்சிருக்கேன்”, என அலமேலு பொரிந்ததும் மற்றதை எல்லாம் விட்டுவிட்டு “என்னது பிள்ளையை மிரட்டுனியா? அவன் குழந்தைடி.. நீ மிரட்டுனுதுல பயந்துருப்பானே! இப்படி எல்லாம் பண்ணாதே! எதுவா இருந்தாலும் அன்பா சொல்லு கேட்டுப்பான்”, என துரைசாமி மீண்டும் மகனுக்கு வக்காலத்து வாங்கியதுடன்,

“அப்படி என்னதான் சொல்லி மிரட்டி வைச்விருக்க”, எனக் கேட்டதும் “ஒன்னும் சொல்லலை. அந்த ராகவன் பையன் இருக்கான் இல்லையா? அவன் வேலை பார்க்குற கம்பெனி நஷ்டத்தில் ஓடுதாம்.அதனால இவனை மினரல் வாட்டர் கம்பெனி ஆரம்பிக்க சொல்லி ஐடியா குடுத்திருக்கான். அதுக்கு இந்த கிறுக்கு பயலும் சாின்னு சொல்லி கணக்கு போட்டுட்டு இருந்தான். அதெல்லாம் வேண்டாம்ன்கு சாதாரணமா சொன்னா கேட்டாதானே!

அதனாலதான் உனக்கு ஒரு பொண்ணு தகையுற மாதிரி இருக்கு. நீ அந்தக் கம்பெனி இந்த கம்பெனின்கு ஆரம்பிச்சு கோக்குமாக்கு வேலை பண்ணுனா காலத்துக்கு உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன் அப்படின்னு சொன்னேன். அதை கேட்டுதான் அய்யா இப்படி போய் பம்மிகிட்டு வேலை செஞ்சுட்டு இருக்கார். அதை நீங்க கெடுத்துக் குட்டிச்சுவராக்காம நீங்க வந்த விஷயத்தை முதலில் சொல்லித் தொலைங்க”, என அலமேலு அதட்டலுடன் துரைசாமியை அடக்கினார்.

மனைவி மகனை அடக்கிய விதம் வருத்தம் அளித்தாலும் புது கம்பெனியா என்ற திகில் மனதில் பரவியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் துரைசாமி தன் வந்த வேலையைக் கூற ஆரம்பித்தார்.

“தரகர் போன் பண்ணியிருந்தார். ராமலிங்காபுரத்துல ஒரு பொண்ணு ஜாதகம் நம்ம பயலுக்கு பொருந்திருக்காம்.அவங்க வீட்ல இருந்து எப்ப வர்றீங்கன்னு கேட்டு தரகருக்கு போன் பண்ணிருக்காங்க. நான் உன்கிட்ட கலந்து பேசிட்டு சொல்றேன்கு சொன்னேன். பொண்ணு பிகாம் படிச்சிருக்கு. கூட பிறந்தவங்க ஒரு அண்ணன், ஒரு அக்கா. இது தான் கடைசி பெண்”, என வீட்டு நிலவரத்தை துரைசாமி கூறியதும் சற்று யோசித்த அலமேலு “வர்ற வெள்ளிக்கிழமை வர்றோம்ன்னு சொல்லிடுங்க. நானே வெற்றிகிட்ட விஷயத்தை சொல்லுறேன். நீங்க சொல்றேன்னு சொல்லிட்டு சொதப்பி வைங்க… அதனால நீங்க அப்படியே நடையைக் கட்டுங்க. நான் அப்புறமா வரேன்”, என விஷயத்தை உள்வாங்கிய அலமேலு கணவரை அவ்விடத்தில் இருந்து துரத்தி விட்டுவிட்டு மகனின் பக்கம் தன் பார்வையைத் திருப்பினார்

ஆரம்பத்தில் அன்னை மிரட்டியதில் வேலை செய்யவென உள்ளே சென்றவன் நேரம் செல்ல செல்ல இயற்கையிலேயே அமைந்த பொறுப்பின் காரணமாக வேலையை மிகவும் நன்றாக செய்து கொண்டிருந்தான். அதனை பார்த்த அலமேலுவிற்கு தன்னை அறியாமல் புன்னகை விரிந்தது.

சிறிது நேரத்தில் வேலை முடிந்து அனைவரும் மேலே ஏறி வரவும் அவர்கள் சிந்திய உழைப்பின் ஊதியத்தை வெற்றிவேல் அளித்ததுடன் தனக்கான ஊதியத்தையும் எடுத்துக்கொண்டான்.

வழக்கமாக யார் யாருக்கு எவ்வளவு தந்தான் என்று ஒரு நோட்டில் எழுதி வைக்கும் பொழுது தன்னுடைய பெயரையும் சேர்த்து எழுதினான். அதனைப் பார்த்துக்கொண்டிருந்த அலமேலு “ஏன்டா மவனே! வருமானம் நம்ம வீட்டுக்குதானே வரப்போகுது. அதுல உனக்கு தனியா சம்பளம் வேற கேக்குதா?”, என கேட்டு மகன் கூறப்போகும் பதிலுக்காக ஆவலுடன் அவனது வாயைப் பார்த்தார்.

அலமேலுவின் ஆவலை சற்றும் பொய்யாக்காமல் “என்னம்மா பேசுற? அந்த காலத்திலேயே சொல்லி வச்சிருக்காங்க. ஒரே தாய் வயத்துல பிறந்தாலும் நாம சாப்பிடுற வாயும் வயிறும் வேறதான். அப்படி இருக்குறப்ப அப்பா சம்பாத்தியமும்,உன் சம்பாத்தியமும் எனக்கு உடமைபட்டது ஆகாது. உங்க காலத்துக்கு பின்னாடி இன்னாருடைய மகன் அவங்க சொத்தை அனுபவிக்கிறான் அப்படின்னு சொல்லுவாங்க. இதை விடுத்து நான் சேர்த்து வைத்த சொத்துன்னு சொல்ல மாட்டாங்க.

அது மட்டுமில்லை. நீ திடீர்னு எனக்கு கல்யாணம் பண்ணி வச்சா வரப்போற பொண்டாட்டிக்கு ஏதோ ஏழெட்டு சவரன்ல காலுக்கு ஒரு கொலுசு, இடுப்புக்கு ஒட்டியாணம் அப்படின்னு வாங்கி தர நினைச்சா அப்ப உன்கிட்ட காசு கேட்க முடியுமா? அதெல்லாம் வேலைக்காகாது. என் கையில காசு இருந்தாதான் கெத்து”, என கூறிவிட்டு தன்னுடைய சட்டையில் இருந்த காலரை தூக்கி விட்ட அவனை முதுகில் செல்லமாக நாலு அடி போட்ட அலமேலு மகன் விளையாட்டாகக் கூறினாலும் தங்களின் பணத்தை அவன் வெட்டியாக செலவழிக்க மாட்டான் என்பதை அறிந்திருந்ததில் மனம் பூரித்துப் போனார்.

அலமேலுவின் மனம் எப்படி பூரியாக உப்பலாம் என வெற்றிவேல் எண்ணினானோ என்னவோ? உடனடியாக அம்மோய், அம்மோய் என அவரது சேலை நுனியை பிடித்து திருக ஆரம்பித்தான்.

“இப்ப என்ன கர்மத்துக்கு இந்த கூத்து பண்ணிக்கிட்டு இருக்க? என்ன விஷயம் சொல்லு”, என அலமேலு வள்ளென்று விழுந்தவுடன் “அப்பா வந்தாரே! என்ன பேசினாரு?”, என வினவினான்.

அவன் வினவியதும் மகனை மேலும் கீழுமாக பார்த்தவர் “ராமலிங்காபுரத்துல ஒரு பொண்ணு தகைஞ்சுருக்கு. வெள்ளிக்கிழமை பொண்ணு பாா்க்க போறோம். இப்ப சொன்னியே கெத்து அந்த கெத்தை அன்னைக்கு கொஞ்சம் நீ காமிச்சா சந்தோசப்படுவேன். அதை விட்டுட்டு அங்கேயும் வந்து இதே மாதிரி கோணங்கித்தனம் பண்ணிட்டு இருந்தா வீட்டுக்கு வந்தவுடனே அகப்பையை எடுத்து சாத்தி விட்டுருவேன்”, என மகனிடம் உரைத்தவர் அவனையும் அழைத்துக் கொண்டு கிளம்பினார்.

வீட்டிற்கு செல்லும் வழியெல்லாம் வெற்றிவேல் வேறு வேறு விதமாக பெண்ணின் பெயரை கேட்டும் அலமேலுக் கூறவில்லை. அவருக்கே அது தெரியாத பொழுது தனக்கு எப்படிக் கூறுவார் என அறியாத வெற்றி ” இந்த அம்மா ஓவரா படுத்துது… முதல்ல என் பொண்டாட்டி வீட்டுக்கு வந்த உடனே உன் மாமியார் சரியில்லை, மாமியார்கிட்ட சண்டை போடுன்னு சொல்லி தூண்டிவிடனும். அப்பதான் இது அடங்கும்”, என தனது மனதிற்குள் சூளுரைத்துக்கொண்டான்.

தன்னுள் சூளுரைத்துக் கொண்ட வெற்றி தன்னுடைய மனையாள் தன் அம்மாவுடன் சேர்ந்து கொண்டு தன்னையே தனிக்குடித்தனம் வைக்கும் திறமை மிக்கவளாக இருக்கப் போகிறாள் என்பதை அந்த நொடியில் அறிந்திருக்கவில்லை.

அறியும் நேரத்தில் என்ன செய்திடுவானோ! பாவம். இவ்வாறு பல சிந்தனையுடன் அம்மாவும்,மகனும் வீட்டை அடைந்த பொழுது துரைசாமி தரகரிடம் கூறி வெள்ளிக்கிழமையன்று பெண் பார்க்க வருகிறோம் என்பதை உறுதிப்படுத்தியிருந்தார். அலமேலு வந்தவுடன் யாரையெல்லாம் உடன் அழைத்து செல்ல வேண்டும் எனக் கேட்டவரிடம்

“அதெல்லாம் ஒன்னும் வேணாம் மாமா! நாம மூணு பேரும் போய் பார்த்துட்டு வருவோம். அது என்ன பொருட்காட்சியில இருக்கிற பொம்மையா? பொம்பளைப் பிள்ளை. பார்த்து எல்லாம் முடிவாச்சுன்னா உறுதி பண்றன்னைக்கு சொந்தபந்தத்துகிட்ட சொல்லிக்கலாம்”, என ஒரேயடியாக முடித்துவிட்டு மகனிடம் திரும்பியவர்

“ஏன்டா! இந்த மூஞ்சியில வெள்ளை அடிச்சு எதையாவது செஞ்சு கொஞ்சம் பார்க்குற மாதிரி செஞ்சிட்டு வா. தலையை பாரு எப்பப் பாத்தாலும் முள்ளம்பன்றி மாதிரி முடியெல்லாம் நீட்டிக்கிட்டு இருக்கு. அதெல்லாம் சரி பண்ணிட்டு இந்த பியூட்டி பார்லர்ல போய் ஏதாவது செஞ்சிட்டு வா. நான் வேணும்னா காசு தரேன்”, என நக்கலாக முடித்தார்.

அவரது பேச்சைக் கேட்ட வெற்றிவேல் “என்ன அலமு அழிச்சாட்டியம் ஓவர் ஜாஸ்தியா இருக்கு. எனக்கு கல்யாணம் ஆகப்போகுது. அதனால நீ என்னோட இமேஜை டேமேஜ் பண்ணாம இருக்கணும். பியூட்டி பார்லர் அதெல்லாம் எதுக்கு? அழகு இல்லாதவங்கதான் அந்த வேலையெல்லாம் செய்வாங்க. பேரழகனா பிறந்த எனக்கு அதெல்லாம் தேவையே கிடையாது.

பொண்ணு என்னை விட கலர் கம்மியா இருந்தா என்ன செய்றது? அதுக்காக ஒரு வாரம் குளிக்காம இருந்து கொஞ்சம் என்னோட கலரை கம்மி பண்ணிக்கலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன். இதைப் பத்தி உன்னோட ஐடியா என்னம்மா?”, எனக் கேட்டு நங்கென்று கொட்டு ஒன்றை தன்னுடைய உச்சந்தலையில் வாங்கிக்கொண்டான்.

இத்தகைய அலப்பறையுடன் வெள்ளிக்கிழமை அன்று மூவரும் ராமலிங்காபுரத்திற்கு சென்றால் பெண் வீட்டார் ஒரு பெரும் கும்பலையேக் கூட்டி வைத்திருந்தனர்.

அந்தக் கும்பலை பார்த்த வெற்றிவேல் தன்னுடைய அப்பாவிடம் ” அப்பா ஏதோ ஒரு படத்துல சரத்குமாரும் வடிவேலும் பொண்ணு பார்க்க போவாங்களே! இதை பாா்க்குறப்ப அது மாதிரியே இருக்குதானே!”, எனக் கேட்கவும் அவர் பாவமாக அவனை ஒருப் பார்வைப் பார்த்தார்.

இதுக்கு மேல பேசினா இந்த மனுஷன் தாங்க மாட்டார் என எண்ணி அவன் தன்னுடைய வாயை மூடிக் கொண்டான். அமைதி காத்தால் மட்டுமே அகப்பையிலிருந்து தப்பிக்க முடியும் என அவன் அறியாததா?

இவர்கள் சென்று அமர்ந்தவுடன் பெண்ணின் தாயார் தன்னுடைய சொந்தங்கள் அனைவரையும் அறிமுகப்படுத்திவிட்டு “எங்க பொண்ணு இருக்காளே அவளுக்கு வெள்ளை மனசு. சூதுவாது தெரியாம வளர்ந்துட்டா. எது நல்லது எது கெட்டதுன்னு நாம சொல்லி தந்தாதான் தெரியும்”, என தன் பெண்ணின் பெருமையை பேச ஆரம்பித்துவிட்டார்.

அலமுவிற்கு அவரது அந்த அதிகப்படியான பேச்சு சுத்தமாக பிடிக்கவில்லை. இருப்பினும் பெண்ணை பார்க்கலாமே என அமைதிக் காத்தார். இவர்கள் பார்க்க வேண்டிய பெண் தன்னுடைய கையில் காப்பியுடன் வந்து முதலில் அலமேலுவிற்கும் துரைசாமிக்கும் கொடுத்துவிட்டு வெற்றிவேலின் கையில் தராமல் அவனது முன்னாலிருந்த டேபிளில் அதை வைத்து விட்டு எடுத்துக்கோங்க என கொஞ்சலாகக் கூறியபின் தனது தாயின் அருகே சென்று நின்று கொண்டாள்.

ஏனோ வெற்றிவேலுக்கும் அவளது செய்கைகளை பார்த்தவுடன் மனதில் சற்று ஏமாற்றமே பரவியது. அவன் அந்த காபி டம்ளரை தன் கையினால் கூட தொடவில்லை. ஏனெனில் அதற்கு முன்னரே பெண்ணின் அம்மா “எங்க பொண்ணு உங்ககிட்ட கொஞ்சம் கேள்வி எல்லாம் கேட்கணும்னு சொல்றா”, என்றவுடன் வெற்றிவேல் அப்பெண்ணைப் பார்த்து “கேளும்! கேட்டுத் தொலையும்”, எனக் கூறினான்.

அதனை எல்லாம் கண்டுகொள்ளாத அப்பெண் அதற்கடுத்துக் கேட்ட கேள்விகளும், அதற்கான பதிலை தெரிந்து கொண்ட பின்னர் அவள் கூறிய வார்த்தைகளிலும் எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் வெற்றிவேலே வெடித்துவிட்டான்.

அவள் என்னதான் கேட்டாலோ? பெண்பார்க்க பல வண்ணக் கனவுகளுடன் சென்றவன் கழனி தண்ணி குடித்து கொம்பினால் முட்டித் தள்ளும் காளையாக மாறியதன் காரணம் என்னவோ?

Categories
Uncategorized

சந்திரோதயம்-4

சந்திரோதயம்-4

ஆத்ரேயனின் மாற்றங்கள் மற்றவர்களிடம் பெரிதான பாதிப்பை ஏற்படுத்தாத பொழுதிலும் ராஜேந்திரனிடம் அளவுக்கதிகமான பாதிப்பை ஏற்படுத்தின.

அவனை காணும் நொடியில் எல்லாம் “மகாபாரதமும், ராமாயணமும் உலகமே கொண்டாடுற கதையாய் இருக்கிறப்ப இவன் அதுல வர்ற ஒவ்வொரு சீனுக்கும் புது விளக்கத்தை கொடுத்துட்டு இருக்கானே! பகவானே! ஏன் இப்படி எனக்கு மட்டும் சோதனையை தா்ற?”, என புலம்பிக் கொண்டே இருந்தார்.

பெண்கள் பின்னாடியே சுற்றுகிறான் என்று எண்ணிய ஆரோகன் இப்பொழுதெல்லாம் அமைதியாக தன்னுடைய தாத்தாவின் அருகில் வந்து அமர்ந்து கொண்டு அவர் புலம்புவதை மட்டுமே கேட்க ஆரம்பித்திருந்தான்.

தன்னருகில் வந்து அமர்ந்த
ஆரோகனைப் பார்த்த ராஜேந்திரன் பேசாம இவனுக்கு கதையெல்லாம் சொல்லலாமா என யோசிக்க ஆரம்பித்தார். அவரது யோசனையை கண்டுகொண்ட ஜானகி “ஏன் ஒருத்தனுக்கு கதை சொல்றேன்னு சொல்லி கிருஷ்ண பரமாத்மாவை விட பெரிய ஆளாக்கி வச்சிருக்கீங்க… அது பத்தாதா? இவனை விட்டுடுங்க… செய்றதெல்லாம் ஏட்டிக்குப் போட்டியான வேலை. வெட்டியா உட்கார்ந்து புலம்பாம ஆத்ரேயன் மாடி வீட்டுல புதுசா வந்திருக்கிற பாப்பாக்கு உடம்பு சரியில்லைன்னு பார்க்கப் போகணும்னு சொன்னான்.

அவனை கூட்டிட்டு போயி பார்த்துட்டு வாங்க”, என அவருக்கு வேலை ஏவினார். “என்னது மாடிவீட்டில் வந்திருக்கிற பாப்பாவா? அவங்க வந்தது நேத்து காலையிலதானே ஜானு!”, என ராஜேந்திரன் சற்று அதிர்ச்சியுடன் வினவியதும் கிச்சனில் இருந்து வெளிவந்த வருணா “அவங்க டெம்போல இருந்து ஜாமான் இறக்குறப்பவே இவன் போய் அந்த பொண்ணுகிட்ட பிரண்ட் ஆகிட்டான். இப்ப காய்ச்சல்ல ரே!ரே! அப்படின்னு இவனோட பேரை சொல்லி பொலம்புற அளவுக்கு வந்தாச்சு.

அங்க கொஞ்சம் ஃப்ரூட்ஸ் வாங்கி வச்சிருக்கேன். அதை எடுத்துட்டுப் போய் பார்த்துட்டு வாங்க”, என தன்னுடைய பங்குக்கு கூறிவிட்டு சென்றாள். எல்லாம் என்னோட நேரம் என புலம்பிய ராஜேந்திரன் ஆத்ரேயனை மாடி வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் தன்னுடைய மகன் வீட்டிற்கு கிளம்பி விட்டார்.

அவர் மாமா வீட்டிற்கு கிளம்புகிறார் என்பதை அறிந்தவுடன் அவர் அருகில் வந்த ஆத்ரேயன் “தாத்தா! மாம்ஸோட பாப்பாவை ரொம்ப கேட்டதா சொல்லுங்க. இந்த வாரம் ஆலியா கூட அவுட்டிங் போறதால அடுத்த வாரம் வந்து அவளைப் பார்க்கிறேன்னும் சொல்லிடுங்க”, என்றதும் ராஜேந்திரன் திகிலடைந்த பார்வை ஒன்றை பார்த்தார்.

அவரது பார்வையை எல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய பாட்டியை அழைத்துக்கொண்டு மேல் வீட்டில் உடம்பு சரியில்லாமல் இருக்கும் தர்ஷினியை காண தன்னுடைய அண்ணனையும் அழைத்துக்கொண்டு ஆத்ரேயன் சென்றுவிட்டான்.

அதற்குப் பின்னரான ஆத்ரேயனின் நடவடிக்கைகளில் இராஜேந்திரன் தன்னுடைய மகன் வழி பேத்தியை அவனது கண்ணில் காட்டாமல் இருப்பதற்காக தீவிர முயற்சிகள் எடுக்க ஆரம்பித்துவிட்டார்.

அவனது வயதோ அல்லது குழந்தைத்தனமோ இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய மற்ற தோழிகளுடன் சேர்ந்து அந்த அபார்ட்மெண்ட் முழுவதும் ஆத்ரேயன் கலக்கிக் கொண்டிருந்த நேரத்தில் வீட்டில் இருப்போரை மேலும் கலங்கச் செய்யுமாறு ஒரு நிகழ்வு அதற்கு அடுத்து வந்த சில மாதங்களில் ஏற்பட்டது.

சந்துரு நடத்தும் தொண்டு நிறுவனத்தில் வாலண்டியராக இருந்த விக்னேஷின் திருமணத்தில் கலந்துகொண்டு அதற்குப் பின்னான நேரத்தில் பீச் செல்ல முடிவெடுத்து ஒரு பெரும்படையே கடற்கரைக்கு சென்று ஆட்டம் போட்டுவிட்டு எலெக்ட்ரிக் ட்ரெயினில் வீட்டிற்கு திரும்பினர்.

அதில் பொது கம்பார்ட்மெண்டில் கூட்டமாக இருந்த காரணத்தினால் ட்ரெயின் ஆரம்பத்திலேயே இருந்த லேடிஸ் கம்பார்ட்மெண்டில் வருணா தன் இரு மகன்களுடன் ஏறி விட்டாள்.

வருணாவை தொடர்ந்து சில பெண்களும் ஏறியதில் இரண்டு குட்டிகளையும் அவள் சமாளித்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையுடன் சந்துரு அதற்கடுத்த கம்பார்ட்மெண்டில் மீதமிருந்த பையன்களுடன் ஏறிக் கொண்டான்.

ஆனால் அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்த பின்னர் இறங்கி வந்த வருணாவின் முகம் கோபம், ஆத்திரம் என்ற கலவையான உணர்வை காட்டியது.அதனைப் பார்த்த சந்துருவுக்கு மட்டுமின்றி அவனுடன் இருந்த மற்றவர்களுக்கும் ஆச்சரியமே!

ஏனெனில் வருணாவிற்கு விளையாட்டிற்கு கூட கோபப்பட தெரியாது. கோபமென்ற ஒன்று இல்லாமல் இருக்க போய்தான் சந்துருவின் வீட்டில் சண்டை,சச்சரவுகள் எதுவும் நிகழ்வதில்லை. பொதுவாக சந்துரு கோபப்பட்டாலும் அந்த நேரத்திற்கு அமைதியாக இருந்துவிட்டு சில மணித்துளிகள் கழிந்த பின்னர் தன் கணவனிடம் சென்று

“அப்போ ஏதோ ஹை பிட்சில் பேசிட்டு இருந்தீங்களே ஜி! அந்த மாதிரி பேசினா காதுல கொய்ன்னு கேட்குது… அதனால இனிமே கொஞ்சம் சவுண்ட் குறைச்சு பேசுங்க”, என அதையும் சாதாரணமாக கூறிவிட்டு சென்று விடுவாள். அப்பேற்ப்பட்ட வருணாவின் முகம் கோபத்தை காட்டியதில் ஆச்சரியப்பட்டு நின்றவர்கள் தங்களின் அருகில் வந்தவுடன் என்னாச்சு என்று கோரஸாகக் கேட்டனர்.

சந்துருவிடம் இருந்து கேள்வியை ஏற்கனவே எதிர்பார்த்து இருந்த வருணா “ஜி! நம்ம வீட்ல போய் பேசிப்போம்”, என ஒரே வார்த்தையில் முடித்து விட்டாள். அவளது பின்னால் நின்றிருந்த நாகலட்சுமிடம் கார்த்திக்கும், சூர்யாவும் என்னாச்சு என சைகையில் வினவியதற்கு அவள் பதில் கூறு முன்னர் அவர்களின் புறம் திரும்பிய வருணா

“அங்க என்னடா உங்களுக்கு ஜாடை வேண்டிக்கிடக்கு? ! எவனாவது வாயை திறந்தா கொன்னுடுவேன் … வீட்டுக்கு வாங்க! எல்லாருக்கும் இருக்கு கச்சேரி!”, என தன் கட்டுப்பாட்டை இழந்து சிறிது சத்தமாகவேக் கூறினாள். இவ்வளவு கலவரத்திலும் ஆத்ரேயன்,ஆரோகன் இருவரையும் தன்னுடைய இரு கைகளில் பிடித்தவாறு அவர்களை இழுத்துக் கொண்டு நடந்தாள்.

முன்னால் வந்த கார்த்திக்கும், சூர்யாவும் “விடுங்க அண்ணி! நாங்க அவங்களை தூக்கிக்குறோம்”, என்று கூறியதும் “ஒன்னும் வேண்டாம். இவனுங்க நடந்தே வரட்டும்”, என பற்களைக் கடித்தவாறு கூறியதிலேயே பிள்ளைகள்தான் ஏதோ சேட்டை செய்துள்ளார்கள் என சந்துரு புரிந்துகொண்டான்.

அவனது எண்ணப்படியே சந்துருவின் அருகில் வந்த சூர்யா “என்னண்ணா அண்ணி இவ்ளோ கோவப்படுற அளவுக்கு இவனுங்க என்னத்த செஞ்சு வச்சாங்க? அப்படியே செஞ்சாலும் அதை எல்லாம் தூசு மாதிரி தட்டி விட்டுட்டு போறவங்க இன்னிக்கு ஏன் புதுசா கோவப்படுறாங்க?”, என வினவினான்.

அவனை மேலும் கீழுமாக பார்த்த சந்துரு “வருணாவைக் கூப்பிட்டு என்ன விஷயம்ன்னு நீ கேட்டதா சொல்றேன். உனக்கு இங்கேயே பதில் சொல்லுவா”, என்றதும் “ஐயா சாமி! உங்க குடும்ப பஞ்சாயத்துல என்னை கோர்த்து விடாதீங்க! ஆள விடுங்க!”, என்றவன் பின்புறமாக இருந்த மற்றவர்களுடன் பேசிக் கொண்டே வந்தான்.

ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தவுடன் வருணா வாய்விட்டு எதுவும் சொல்லாமல் சந்துருவின் மடியில் படுத்து அழத்தொடங்கினாள்.

அதுவரை சாதாரணமாக எண்ணிக்கொண்டிருந்த சந்துரு வருணாவின் அழுகையில் பதறிப் போனான்.”வருணா! என்னாச்சு ஏன் அழுகுற? சொல்லுமா! யாராவது ஏதாவது பிரச்சனை பண்ணிட்டாங்களா? அப்படியே பண்ணியிருந்தாலும் அங்கேயே நீ அடி வெளுத்துட்டு வந்திருக்க வேண்டியதுதானே! அதுக்கு பின்னாடி வர பிரச்சினையை நான் பார்த்துப்பேன்தானே!”, என சந்துரு பலவிதங்களில் அவளை சமாதானப் படுத்திக் கொண்டிருக்கும் பொழுதே ஏற்கனவே அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த சந்துருவின் அம்மா அப்பாவும், வருணாவின் அம்மா அப்பாவும் வெளியே வந்தனர்.

ஹாலுக்கு வந்ததும் அனைவரும் சுற்றியிருக்க மகள் தன்னுடைய கணவனின் மடியில் படுத்து அழுது கொண்டிருப்பதைக் கண்ட ராஜேந்திரன் வேகவேகமாக அவளது அருகில் வந்து “புத்தி கித்தி கெட்டுப் போச்சா? என்ன பண்ணிக்கிட்டு இருக்க? எழுந்து தொலை”, என அவளை உலுக்கி எழுப்பினார்.

அவரது சத்தம் கேட்கும் வரை அமைதியாக அழ மட்டுமே செய்து கொண்டிருந்த வருணா அவரது குரல் கேட்ட நொடியில் ஆவேசம் வந்தவளாக “எல்லாமே உங்களாலதான்! உங்களால மட்டும்தான் இப்படி ஆச்சு”, என கத்த தொடங்கினாள்.

அவளது கத்தலில் பயந்து பின்வாங்கிய ராஜேந்திரனை கண்ட சந்துரு “வருணா! பெரியவங்களை என்ன பேச்சு பேசுற? என்னாச்சுன்னு முதல்ல சொல்லு”, என சற்று குரலை உயர்த்தி கூறினான். அவனின் குரலில் தனது ஆவேசத்தை சற்றே அடக்கிய வருணா ஆத்ரேயனை நோக்கி தன் கைகளை நீட்டியவாறு “இவன் என்ன பண்ணினான் தெரியுமா ஜி?”, என சிறு குழந்தையாக குறை கூற ஆரம்பித்தாள்.

“என்ன பண்ணுனான்? அதை முதல்ல சொல்லு”, என ஜானகியும் அதட்டியதில் தனது அழுகையை முழுதாக நிறுத்திய வருணா ஆத்ரேயன் செய்த செயலைக் கூற ஆரம்பித்தாள். “லேடிஸ் கம்பார்ட்மெண்டில் ஏறுன ஆரம்பத்துல அமைதியா இருந்தான். அந்த ஸ்டேஷன்ல காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் ஏறுவாங்க உங்களுக்கு தெரியும்தானே! கொஞ்சம் காலேஜ் பொண்ணுங்க அதே கம்பார்ட்மெண்டில் ஏறுனதும் என்ன செஞ்சான் தெரியுமா?

போனவாரம் அழுது அடம் பிடிச்சு அவங்க அருமை தாத்தா வாங்கி தந்த சன் கிளாஸை எங்க வச்சிருந்தான் அப்படின்னு தெரியலை… டக்குனு எடுத்து மாட்டுறான். பேண்ட் பாக்கெட்டுக்குள் அந்த விளையாட்டு கன் இருக்கு இல்லையா? அதை எடுத்து ஷர்ட்டை ஒரு பக்கம் மட்டும் உள்ளே திணிச்சுவிட்டு அந்த கன் தெரியுற மாதிரி வைக்கிறான்.

அது எல்லாத்தையும் விட அடுத்து செஞ்சதுலதான் என் மனசு பதறி போச்சு. அவ்வளவு நேரம் உட்கார இடமில்லாமல் நான் நின்னுகிட்டு இருந்ததுனால ரெண்டு பேரையும் இறுக்கிப் பிடிச்சு நின்னுகிட்டு இருந்தேன். அந்த பொண்ணுங்களை பார்த்த உடனே இதெல்லாம் செஞ்சிட்டு டக்குனு என்ன பிடிச்சு தள்ளிவிட்டுட்டு என் கையில் இருந்து வெளியில் வந்து கம்பி எதையும் பிடிக்காமல் கை ரெண்டையும் பின்னாடி கட்டிகிட்டு நிக்குறான்.

ட்ரெயின் ஆட்டத்துல முன்னாடி வந்து விழுந்துட்டாலோ, இல்லைன்னா கீழே விழுந்தாலோ என்ன ஆகும்? நானும் கூப்பிட்டுகிட்டே இருக்கேன். ஆத்ரேயா! வாம்மா! அம்மா பக்கத்துல வந்து அம்மா கையை பிடிச்சுக்கோன்னு கெஞ்சுறேன். கொஞ்சம் கூட கேட்காமல் அம்மா எல்லார் முன்னாடியும் முழு பேரை சொல்லி கூப்பிடாதீங்க அப்படின்னு சொல்றான்…

அந்த பொண்ணுங்க எல்லாம் இவனை பார்த்து சிரிக்குறாங்க”, என வருணா கூறியதில் அனைவருக்கும் சற்று அதிர்ச்சியே! சிறுக்குழந்தை கம்பியை பிடிக்காமலேயே தாயையும் பிடிக்காமலும் நின்றதில் ஏதேனும் நிகழ்ந்திருந்தால் என்னவாயிருக்கும் என்ற பதட்டம் அனைவருக்கும் இருந்தாலும் சந்துரு “சரி அதுதான் எதுவும் நடக்காமல் நல்லபடியாதானே வந்துட்டான். பிறகு ஏன் நீ அழுகுற?”, எனக் கேட்டதற்கு வருணா பதில் கூறும் முன்னர் அவ்வளவு நேரம் அமைதியாக அம்மா அழுவதையும் பேசுவதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆத்ரேயன் இப்பொழுது தன் தந்தையிடம் திரும்பி

“அப்பா! அதெல்லாம் இல்லைப்பா… நான் ஸ்டெடியாகதான் நின்னேன். அந்த கோ்ள்ஸ் என்னை பார்த்து சிரிச்சாங்கன்னு மட்டும் அம்மா சொல்றாங்க இல்லையா? அதுல ரெண்டு பேரு வந்து எனக்கு கிஸ் பண்ணிட்டு போனாங்க தெரியுமா? இவ்வளவு கியூட்டா இருக்க அப்படின்னு சொல்லி கொஞ்சுனாங்க”, என தான் போட்டிருந்த சட்டையின் காலரை தூக்கிவிட்டு பெருமையாகக் கூறினான்.

ஆரோகனோ அம்மா அழுவதைத் தாங்காமல் அவளது துப்பட்டாவை பற்றியவாறு அவனது மெதுகுரலில் அழாதிங்கம்மா என முணுமுணுத்துக் கொண்டிருந்தான். ஆத்ரேயன் கூறியதில் கடுப்பாகி அவனை அடிப்பதற்காக வருணா கை ஓங்கிட ராஜேந்திரன் தன் செல்ல பேரன் அடிவாங்குவது பொறுக்காமல்

“குழந்தை ஏதோ செஞ்சிட்டான்… அதுக்காக அடிக்க செய்வியா?”, என இருவருக்கும் இடையில் வந்தார்.” நான் ஏன் அழுதேன் கேட்டீங்க இல்லையா? ஏன்டா இப்படி பண்றன்னு கேட்டதுக்கு கிருஷ்ணா கோவர்த்தன மலையை எந்த பிடிப்பும் இல்லாமல் ஒத்த விரலில் தூக்கி வச்சுக்கிட்டு நின்னாராம். அதை பார்த்துதான் பிருந்தாவனத்தில் இருந்த எல்லா பொண்ணுங்களும் அவர்கிட்ட மயங்கிட்டாரங்களாம்….

அவா் அம்மா என்ன இப்படியா எல்லார் முன்னாடியும் கீழே போடுன்னு சொன்னாங்க? நீங்கதான் இப்படி சொல்றீங்க? இனிமே இந்த மாதிரி சொல்லாதீங்க அப்படின்னு எனக்கு திரும்ப சொல்றான். அதைக் கேட்டு எனக்கு எப்படி இருக்கும்?”, என வருணா மீண்டும் ஆவேசத்தின் உச்சத்திற்கு செல்ல சந்துரு அவளை கட்டுப்படுத்தினான்.

இவ்வளவு கலவரம் நடந்து கொண்டிருக்கும் பொழுது அனைத்திற்கும் தான் கூறிய கதைகள்தான் காரணமா என ராஜேந்திரன் தன்னுடைய பார்வையாலேயே தன் சம்பந்தியிடம் வினவ அவரோ நீங்க நல்லதுக்கு செஞ்சது அவன் இப்படி யூஸ் பண்ணிக்குறான். பெரிய ஆளானா மாறிவிடுவான்”, என சமாதானம் கூறி அழைத்துச்சென்றார்.

வருணாவும் சிறிது நேரத்தில் சமாதானமாகி விட இக்கலவரம் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்களில் சூர்யா மட்டும் முன்வந்து ஆத்ரேயனை தன்னுடைய அருகில் அழைத்து அவனது காதில் ஏதோ முணுமுணுத்தான். அதனை கண்டுவிட்ட சந்துரு “என்னடா சொல்ற?”, என சூர்யாவிடம் வினவ அவன் “ஒன்னும் இல்லைண்ணா!”, என வருணாவின் ஆவேசத்தை கண்முன்னால் கண்ட பயத்தில் கூற

ஆத்ரேயனோ “அப்பா! பொண்ணுங்க முன்னாடி இப்படி எல்லாம் செய்யக்கூடாது… நாம செய்யணும் ஆனால் நாம செய்றதே தெரியக் கூடாதுடா.. அப்படி இருந்தாதான் கோ்ள்ஸ் இன்னும் நல்லா பாா்ப்பாங்க அப்படின்னு சித்தப்பா சொல்றாரு”, என முழுவதுமாக போட்டு கொடுத்தான்.

ஆத்ரேயன் கூறி முடித்த நொடியில் கிச்சன் வாசலில் இருந்து சூர்யாவை நோக்கி அகப்பை பறந்து வந்தது.

அதற்குப் பின்னரான நாட்களில் வருணா ஆத்ரேயனிடம் சற்று அதிகமாகவே கண்டிப்பைக் காட்டினாள். ரயிலில் நடந்த நிகழ்வில் வருணா கண்ணீர் சிந்தியதைக் கண்ட ஆத்ரேயனும் அவளது ஒருமுறைப்பிற்கு அடங்க ஆரம்பித்திருந்தான். அதெல்லாம் எப்பொழுதாவதுதான்.

ஆனால் முழு நேர வேலையாக தர்ஷினி, ஆலியா என வீட்டின் அருகிலும், பள்ளியில் காவ்யா, சங்கவி தனு என்ற அவனது தோழிகளுடனும் விளையாடுவது மட்டுமே ஆத்ரேயன் செய்து கொண்டிருந்தான். தான் விளையாட செல்லும் இடங்களுக்கெல்லாம் ஆரோகனை அழைத்துச் சென்று அவனை ஓரிடத்தில் அமர்த்தி விடுவான்.

இவனது தோழிகள் ஆரோகனிடம் பேசச் சென்றால் “ஆரோக்கு கேர்ள்ஸ் கூட பேசுறது சுத்தமா பிடிக்காது. அப்படி நீங்க போய் பேசினாலும் அவன் அழ ஆரம்பிச்சுடுவான். அதனால அவனை அழ வைக்காம நாம மட்டும் விளையாடுவோம்”, எனக் கூறி திசை திருப்பும் வேலையை ஆத்ரேயன் செய்து கொண்டிருப்பதை பல நாட்கள் யாரும் அறியவில்லை.

ஒரு நாள் ஆலியாவின் அம்மா தான் செய்த பிரியாணியை எடுத்துக்கொண்டு வருணாவின் வீட்டிற்கு வந்தவர் பிரியாணி கொடுத்ததுடன் ஆரோகனைப் பார்த்து “ஆரோ இதுல ஆன்ட்டி மட்டன் பிரியாணியும், சிக்கன் ப்ரையும் வச்சிருக்கேன். சாப்பிட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லு…

ஆத்ரேயா எப்பவும் ஆலியா கூட வீட்டுக்கு வர்றான். நீ வர்றதே இல்லை. நீயும் வந்தா அவங்களோட சேர்ந்து விளையாடலாம் இல்லையா?”, என சாதாரணமாக உரைத்தார்.

மட்டன், சிக்கன் என்றதிலேயே ஆரோகனினட முகம் அஷ்ட கோணலாக மாறியது. அத்துடன் நில்லாமல் ஆலியாவுடன் வந்து விளையாடு என்றுக் கூறியவுடன் வேகமாக ஓடிச்சென்று தன் அம்மா துப்பட்டாவின் பின்னால் ஒளிந்து கொண்டான். அதனை பார்த்து சிரித்த ஆலியாவின் அம்மா

“என்ன வருணா இவன் இப்படி ஷை டைப்பா இருக்கான்”, என கேட்டார். “அதெல்லாம் இல்லை, அவன் நான்வெஜ் எதுவும் சாப்பிட மாட்டான். வெஜிடேரியனா இருக்கான்”, என்று வருணா பதில் உரைத்ததும் “சரி! ஆத்ரேயனுக்கு கொடுத்துட்டு நீங்களும் சாப்பிட்டு பார்த்து எப்படி இருந்ததுன்னு சொல்லுங்கள்”, எனக் கூறி விட்டு வெளியேறிவிட்டார்.

அவர் வெளியேறிய பின்னர்தான் தன்னுடன் அழைத்து வந்த தன்னுடைய மகளை காணோம் என்பதை உணர்ந்து மீண்டும் உள்ளே வந்தவர் “வருணா! ஆலியா எங்கே? என் கூடதான் வந்தா. அதுக்கடுத்து ஆளைக் காணோமே!”, என்றவுடன் “இங்கதான் எங்கயாவது இருப்பா… ஆத்ரேயா எங்க இருக்க? ஆலியா பாப்பாவா அவங்கம்மா தேடுறாங்க பாரு”, என்றவுடன் தங்களின் அறையிலிருந்து வெளிவந்த ஆத்ரேயாவின் கைகளை இறுக்கிப் பிடித்தவாறு ஆலியாவும் வந்தாள்.

வெளியே வந்தவுடன் ஆலியாவிடம் ஏதோ சிறு குரலில் உரைத்த ஆத்ரேயன் அவளுக்கு டாட்டா காட்டிவிட்டு அவர்கள் வெளியேறும் வரை அமைதியாக இருந்தான். அவர்கள் வெளியேறியவுடன் “என்னம்மா இப்படி பண்றீங்க? அதுதான் நான் ஆலியா கூட பேசிட்டு இருக்கேன்னு உங்களுக்கு தெரியுது இல்லையா? நீங்க ஆத்ரேயா, ஆத்ரேயான்னு கத்துறீங்க? அவங்க அம்மாகிட்ட ஆலியா இங்க விளையாடிட்டு அப்புறமா வரட்டும்னு சொல்லியிருக்கலாம் இல்லையா?”, என அலுத்துக்கொண்டவன் பிரியாணியை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்து விட்டான்.

“எல்லாம் என் நேரம்டா” என்ற வருணா ஆரோகனிடம் திரும்பி “ஆரோகுட்டி நீ ஏம்மா யார் கூடவும் விளையாடமாட்டேங்குற? எல்லார் கூடவும் விளையாடனும். அப்பதான் உனக்கு நிறைய ப்ரண்ட்ஸ் கிடைப்பாங்க”, என அவனுக்கு எடுத்துரைத்தாள்.

அதுக்கு பதிலாக ஆரோகன் வாய் திறந்து பேசாமல் ஆத்ரேயனையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வையிலேயே இவன்தான் மிரட்டி வைத்துள்ளான் என உணர்ந்து கொண்ட வருணா தரையில் அமர்ந்தவாறு மகனை தன்னுடைய மடியில் அமர்த்திக்கொண்டு “என்னாச்சு ஆரோ! அம்மாகிட்ட சொல்லு”, என்றவுடன்

” இல்லைம்மா! ஆத்ரேயாதான் சொன்னான். அவன் எந்த கேர்ள்ஸ் கூட பேசுறப்போ நான் அங்க நிக்கக் கூடாது. அவனோட பிரண்ட்ஸ் யாராவது வந்து என்கிட்ட பேசுனா உடனே நான் கத்தி அழ ஆரம்பிச்சுடனும். அவங்களோட அம்மாக்கள் வந்து என்கிட்ட பேசினாங்கன்னா நான் உங்க துப்பட்டாவை பிடிச்சிக்கிட்டு ஒழிஞ்சுக்கணும். இல்லைனா நீங்க செஞ்சி தர்ற பேபிகார்ன் ஃப்ரைல கரப்பான்பூச்சியை வச்சி ஃப்ரை பண்ணி தந்திடுவேன் அப்படின்னு சொல்லிருக்கான்.

அதுதான் அப்படி செஞ்சேன். எனக்கு கரப்பான்பூச்சி எல்லாம் வேண்டாம்மா. அதெல்லாம் பேட்”, என மழலை மாறாமல் உரைத்தவனை எண்ணி ஐயோ என மனம் வருந்தினாலும் ஆத்ரேயனின் கேடித்தனத்தை எண்ணி வருணாவிற்கு ஆத்திரம் அணை உடைத்தது.

உங்களது ஆத்திரங்களோ, அறிவுரைகளோ ஆத்ரேயனின் அட்ராசிட்டிசை அணை போட்டு தடுக்க முடியாது என்னும் விதமாக அவனது வளர் பருவங்கள் அங்கை,மங்கைகள் சூழ அணையா விளக்காக பிரகாசமாக இருந்தது.

அந்த ஆண்டு பள்ளி இறுதி நாட்கள் முடிந்த பின்னர் வந்த விடுமுறையில் சந்துருவின் குடும்பம் சுற்றுலா சென்றனர். சுற்றுலா சென்ற இடத்தில் ஆத்ரேயன் செய்த செயலால் ஒரு குடும்பமே பெரும் துயரத்திற்கு ஆளானது.

அத்துயரத்தினால் ஆத்ரேயனின் அட்ராசிட்டிஸ் முடிவிற்கு வந்தனவா? இல்லையெனில் அதனை காரணமாக வைத்து அதிகமானதா?

Categories
Uncategorized

வெற்றிவேல்-1

வெற்றிவேல்-1

“ஸ்ரீஸ்ரீநிவாசா கோவிந்தா
ஸ்ரீவேங்கடேசா கோவிந்தா
பக்த வத்சலா கோவிந்தா
பாகவத ப்ரிய கோவிந்தா”

என்ற வரிகள் சாம்பிராணி புகை மணமணக்க நார்த்தம்பட்டி நடுத்தெருவில் அமைந்திருந்த அந்த வீட்டில் ஒலித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் கோவிந்த நாமாவளிக்கு போட்டியாக அந்த வீட்டின் பூட்டப் படாத அறை ஒன்றினுள்ளிருந்து

“ராசாத்தி ஒன்ன கண்டுபிடிக்காத நெஞ்சு
கருகுன தோசை போல உதிருது
ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு
வெங்காய சருகு போல போகுது
வயசாகிப் போச்சு
வெட்டியா காலத்தை ஓட்டியாச்சு
பொன்மானே ஒன்னத் தேடுது
ராசாத்தி ஒன்ன கண்டுபிடிக்காத நெஞ்சு
கொரோனா வைரஸ் போல கொல்லுது”

என்னும் கட்டைக் குரல் கர்ண கொடூரமாக ஒலித்து அவ்வீட்டின் தலைவியான அலமேலுவை மூலையில் நிமிர்த்து வைத்திருந்த துடைப்பத்தை தூக்க வைத்தது.

துடைப்பத்தை தூக்கி கொண்டு உள்ளே சென்ற அலமேலுவை வரவேற்றதோ தரையில் தலையை வைத்துக்கொண்டு காலை தூக்கி கட்டிலில் வைத்தவாறு படுத்திருந்த அவரது அருந்தவப் புதல்வன் வெற்றிவேல்தான்.

அவனை அக்கோலத்தில் கண்டவுடன் ஏற்கனவே இருந்த ஆத்திரம் அதிகமாகி “ஏன்டா உனக்கு ராசாத்தி தேடுறதுக்கு கோவிந்த நாமாவளி பாடுற நேரம்தான் கிடைச்சுதா? கடைசி வரைக்கும் கல்யாணம் ஆகாம என் கையில இருக்குற கட்டையால அடி வாங்கிட்டு காலம் தள்ள போற”, எனக் கத்தினார்.

அவரது கத்தலை காலைநேர சுப்ரபாதமாக கேட்டுக்கொண்ட வெற்றிவேல் “அலமு! இந்த கெட்டப் உனக்கு செட் ஆகலை… அதனால மாமியார் கெட்டப்பை எடுப்பதற்கான வழியை கண்டுபிடிக்கிற வேலைய பாரு… வயசாகிட்டேப் போகுவதில்லையா? ஒரு மகனை பெத்து வச்சிருக்க. காலாகாலத்துல கல்யாணம் பண்ணி பேரப் பிள்ளையை பார்ப்போம்ன்னு இல்லாம வயசுக்கு வந்த பையனை எப்ப பார்த்தாலும் விளக்கமாறு வைச்சு சாத்துறது… இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை”, என பேசி கொண்டே சென்ற வெற்றிவேல் தன் மேல் விழுந்த அடிகளை தூசு தட்டுவது போல் தட்டி விட்டுக் கொண்டு நேராக எழுந்து அமர்ந்தான்.

இவர்களின் கலவரத்தில் வெடித்த சத்தத்தை கேட்ட வெற்றிவேலின் தந்தை துரைசாமி மகனின் அறைக்குள் நுழைந்தவாறே “ஏன் அலமேலு! காலங்காத்தால குழந்தையைப் போட்டு விளக்கமாறு வச்சி அடிக்கிற… அவனே நேத்து தோப்புல தண்ணி பாய்ச்சிட்டு வந்து லேட்டாதான் படுத்தான். நேரம் காலம் இல்லாமல் வேலை செய்றான். நீ வேற அவனை ஒழுங்காக கவனிக்க மாட்டேங்குற… கொஞ்சம் பிள்ளையை நல்லா கவனி”, என மனைவியை அதட்டுவது போன்று கெஞ்சியவர் மகனின் அருகில் சென்று அமர்ந்தவாறு அவனது தலையை பாசமாக தடவிக் கொடுத்தார்.

அவரது வருடலில் தனது தலையை சுகமாக தந்தையின் மடியில் வைத்துக்கொண்ட வெற்றிவேல் தாயை பார்த்து கண்ணை சிமிட்டினான்.” இந்த கொடுமையெல்லாம் பார்க்கணும்னு என் தலையில எழுதி இருக்கு”, என்று தலையிலடித்துக் கொண்ட அலமேலு “அப்பனும், மகனும் வந்து கொட்டிகிட்டு வீட்டைவிட்டு முதல்ல வெளியில போங்க. வீட்டில் இருந்துகிட்டு என் உசுர எடுத்துட்டு இருக்கீங்க”, என பொரிந்து விட்டு சமையல் அறைக்குள் சென்றுவிட்டார்.

மனைவி நகரவும் “ராஜா அப்பாதான் தரகா்கிட்ட சொல்லி உனக்கு பொண்ணு பாா்க்குறேன்னு சொல்லிட்டேனே! அதுக்குள்ள ஏன் இந்த மாதிரி எல்லாம் சோக பாட்டு பாடுற? உனக்கு என்ன வயசு ஆகுது? இப்பதானே 28 முடிஞ்சு 29 ஆரம்பிச்சிருக்கு”, என மகனிடம் பதவிசாக பேசிக்கொண்டிருந்த துரைசாமியை கண்ட வெற்றிவேலுக்கு குதூகலமாகிவிட்டது.

“என்னப்பா இப்படி பேசுறீங்க? 29 வயசாயிடுச்சு… காலாகாலத்துல கல்யாணம் பண்ணலனா கொரோனா வைரஸ் வருமாம், சார்ஸ் வைரஸ் வருமாம், நீபா வைரஸ் வருமாம்”, என விவசாயத்தை மட்டுமே அறிந்த தன்னுடைய தந்தைக்கு பீதியைக் கிளப்பிய வெற்றிவேல் அவரது அதிர்ந்த முகத்தை திருப்தியாக பார்த்துவிட்டு அறையை விட்டு வெளியேறினான்.

துரைசாமி,அலமேலு இவர்களின் ஒரே புதல்வன்தான் வெற்றிவேல். பிஎஸ்சி அக்ரிகல்ச்சர் படித்துவிட்டு தந்தைக்கு உதவியாக இருக்கும் நிலங்களை விவசாயம் பார்க்கிறேன் என சுற்றிக்கொண்டிருக்கும் வெற்றிவேலின் பெருமை நார்த்தம்பட்டி மட்டுமல்ல அதனை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களும் அறிந்த விஷயமாகும்.

அவனது பெருமையை அறிந்த காரணத்தினாலேயே பெண் கொடுத்திட பெண் வீட்டார்கள் தயங்கிக். கொண்டிருந்தார்கள். வீட்டில் துடைப்பம் எடுத்து சாத்தினாலும் வெளியில் தன் மகனை ஒரு வார்த்தை யார் கூறினாலும் அவர்களின் தலையை சீவி விட்டுதான் அலமேலு வேறு வேலை பார்ப்பார். துரைசாமி மகனை கண்ணு, ராஜா என சிறு குழந்தை போன்றுதான் கொஞ்சுவார்.

சாப்பிட்டு முடித்துவிட்டு மேலும் சிறிது நேரம் பெற்றோருடன் வம்பிழுத்த பின்னர் வெற்றிவேல் தங்களது தோட்டத்தில் களை எடுப்பதை மேற்பார்வையிட சென்றான். அவன் தோட்டத்திற்கு சென்று விட்டான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட அலமேலு தனது கணவரின் அருகில் வந்து “ஏன் மாமா! இந்த பயலுக்கு பொண்ணு பார்க்க சொன்னேனே! பார்த்தீங்களா? தரகர்கிட்ட எதுவும் சொல்லி இருக்கீங்களா?”, என வினவினார்.

“சொல்லியிருக்கேன் அலமேலு! தரகா் ஒரு நாலஞ்சு இடம் கொண்டு வந்தாரு. நாம பார்த்து பொண்ணு புடிச்சிருக்குன்னு சொல்றதை விட பொண்ணு வீட்ல முடிவு பண்றதுதான் நல்லா இருக்கும்னு தோணுச்சு. அதனால நம்ம பையன் போட்டோவையும், ஜாதகத்தையும் அவர்கிட்ட கொடுத்து அனுப்பிருக்கேன். எந்த இடம் தகைஞ்சி வருதோ அந்த இடத்தை முடிப்போம்”, என் மனைவிக்கு பதில் உரைத்த துரைசாமி மேலும் ஏதோ கூற தயங்குவதை அலமேலு உணர்ந்தார்.

“நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு புரியுது. நரம்பில்லாத நாக்கு என்ன வேணாலும் பேசும். அதுக்காக என் பையனுக்கு கல்யாணம் பண்ணாம வச்சி இருக்க முடியுமா? ஒத்த பொம்பள பிள்ளைய பெத்து இருந்தா கூட இவ்வளவு வேதனைப்பட்டு இருக்க மாட்டேன். 20, 22 வயசுல கல்யாணம் பண்ணி வேற வீட்டுக்கு அனுப்பிட்டு நிம்மதியா இருந்திருப்பேன். ஆனா இவனை வச்சிகிட்டு கழுதை மேய்க்கிறதுகூட ரொம்ப சுலபம் அப்படிங்கற மாதிரி எனக்கு நித்தமும் தோணுது. அந்த ஒரு காரணத்துக்காகவே இவனை கல்யாணம் பண்ணி வச்சி அன்னிக்கே தனிக்குடித்தனம் வச்சுடனும்”, என மேலும் பேசி தன் கணவரை திகிலடைய செய்துவிட்டு இவ்வளவு நேரம் தான் திட்டித்தீர்த்த மகனுக்கு ஆரஞ்சு ஜூஸ் எடுத்துக்கொண்டு அலமேலு கிளம்பிவிட்டார்.

மற்ற வீட்டில் நிலவுவது போல் இங்கு அம்மா மகன் இருவரும் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள். வெற்றிவேலுக்கு அனைத்திற்கும் அப்பாதான் வேண்டும். துரைசாமியும் மகனை ஒரு கடுஞ்சொல் அவன் பிறந்ததிலிருந்து கூறியதில்லை.

அலமேலு தோட்டத்துக்கு சென்ற பொழுது அங்கே களை பிடுங்குபவா்களை மேற்பார்வையிடாமல் ஒரு ஓரமாக அமர்ந்து தனது நோட்டில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்த வெற்றிவேலைக் கண்டவர் மனதில் திகிலடிக்க ஆரம்பித்தது.

ஏனெனில் மகன் நோட்டையும் பேனாவையும் எடுத்துவிட்டான் எனில் ஏதோ ஆப்படிக்க போகிறான் என்பது அலமேலு மட்டுமின்றி சுற்றியிருக்கும் கிராமங்களில் வாழும் அனைவருமே அறிந்திருந்தனர். இருந்தாலும் தன்னுடைய அதிர்ச்சியையும், பயத்தையும் வெளியே காட்டிக் கொள்ளாமல் வெற்றிவேலின் அருகே சென்றவர் “வெற்றி! இந்தா இந்த ஜூஸை குடிச்சிட்டு வேலையைப் பாரு”, என அவனிடம் தான் எடுத்து வந்திருந்த ஜூஸை தந்தார்.

அதனை கையில் வாங்கியவன் ” ஏன்ம்மா எப்பப் பார்த்தாலும் வயித்துக்குள்ள எதையாவது திணிச்சுட்டே இருக்க? என்னை மாதிரி திறமைசாலிகளுக்கு சாப்பாடுங்குறது நாலாவது பட்சமாகதான் இருக்கணும்”, என அலுத்துக் கொண்டே கூறினாலும் அடியில் தேங்கி இருந்த கடைசித்துளி வரை மிச்சம் வைக்காமல் குடித்து முடித்தான்.

“எல்லாரும் இரண்டாவது பட்சம்தான்னு சொல்லுவாங்க. நீ என்ன நாலாவது பட்சம்ன்னு வித்தியாசமா சொல்ற”, என அங்கே வேலை செய்துகொண்டிருந்த ஒரு ஒரு பாட்டி கேட்டவுடன் “ஒரு மனுஷனுக்கு முதலாவதா திறமை இருக்கணும். ரெண்டாவதா காதல் இருக்கணும். மூணாவதாவும் காதல்தான் இருக்கணும். இந்த மூணுமே இல்லேன்னாதான் சோறு₹, எனக்கூறிவிட்டு “இந்த விளக்கம் போதுமா?இல்லை இன்னும் கொஞ்சம் வேணும்னா சொல்லு பாட்டி… நல்லாவே சொல்லுவேன்”, என தன்னிடம் கேள்வி கேட்டவரை சிறிது நொந்துகொள்ள செய்துவிட்டு மீண்டும் தன்னுடைய வேலையில் வெற்றிவேல் ஆழ்ந்த பொழுது அவனது கையில் இருந்த பேனா அலமேலுவால் பிடுங்கப்பட்டது.

“புதுசு புதுசா யோசனை வர்றப்ப நோட்டுல எழுதி வைச்சாதான் என்னால நடைமுறையில் செய்ய முடியும். ஏன்மா இப்படி படுத்துற?”, என அலுத்துக் கொண்டவன் பேனாவை வாங்க முற்பட அவரோ “இப்ப என்ன கருமத்தை யோசிக்கிற? அதை முதல்ல சொல்லித்தொலை. அதுக்கு அடுத்து இந்தப் பேனாவை தா்றதா இல்லை இந்த பேனா வச்சு உன்னை போட்டுத் தள்ளுறதான்னு முடிவு எடுக்கிறேன்”, என பற்களைக் கடித்தவாறு கூறினார்.

வீட்டுக்குள் அடி என்ன மிதி கூட பெற்ற தாயிடமும், மனைவியிடமும் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் வெளியிடத்தில் சாத்து விழுந்தால் அசிங்கம் என்பதை உணர்ந்த வெற்றிவேல் “அது ஒன்னுமில்லைம்மா! அந்த கீழத்தெரு ராகவா இருக்கான் இல்லையா? புதுசா ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து இருக்கான்.

அவன் படிச்சது கெமிஸ்ட்ரிதான். ஆனா அவன் வேலைக்கு சேர்ந்த கம்பெனியோ மினரல் வாட்டர் கம்பெனி. அந்த மினரல் வாட்டர் கம்பெனில கொஞ்சம் வியாபாரம் டல்லா இருக்காம். அதனால என்னை காலைல பார்க்க வந்தவன் “ஏன்டா வெற்றி! நீ சொந்தமா ஒரு மினரல் வாட்டர் கம்பெனி ஆரம்பிக்கக் கூடாது அப்படின்னு கேட்டான். எனக்கும் உடனே ஆரம்பிச்சிடனும்னு தோணிச்சு. அதுக்காகதான் எவ்வளவு செலவாகும்ன்னு கணக்குப்போட்டு பார்த்துகிட்டு இருக்கேன்”, என்று அசால்ட்டாக உரைத்தான்.

அவன் ராகவன் பெயரைக் கூறிய பொழுதே அவனது வீட்டிற்கு சென்று அவனை மொத்துவதற்கு முடிவெடுத்த அலமேலு அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன்னுடைய மகனிடம் “ராஜா! ஏன் மினரல் வாட்டர் கம்பெனி சின்னதாக ஆரம்பிக்கிறதுக்கு பிளான் போடுற? பெருசா செய்யலாமே!”, என்று வினயமாகக் கூறினார்.

“எதுக்கு சிறுசா செய்றதுக்கே சோத்துல நீ விஷத்தை வச்சுடுவியோன்னு நான் பயந்துகிட்டு இருக்கேன். இதுல பெருசா செஞ்சா மண்டைய பொளந்துடமாட்ட”,என்று அன்னையை அறிந்தவனாக கூறிய வெற்றிவேல் “பாவம் பொழச்சு போகட்டும்மா… நம்மளால நாலு பேரு ஊருக்குள்ள நல்லா இருக்காங்க அப்படின்னா அதற்காக சந்தோசப்படனும் தவிர வருத்தப்படக் கூடாது”, என தத்துவம் பேசியவன் அன்னையின் கையில் இருந்த பேனாவைப் பிடுங்கி மீண்டும் தன் வேலையை ஆரம்பித்தான்.

அவனையே அலமேலு முறைத்துக் கொண்டிருப்பதை பார்த்த களை எடுத்துக்கொண்டிருந்த பாட்டி ஒருவர் அலமேலுவின் அருகில் வந்து “விடு அலமேலு! உன் பையன் சூதுவாது இல்லாம நல்லவனா இருக்கான். அந்த குணத்துக்காகவே நல்லா இருப்பான்”, என அவரை ஆறுதல் படுத்துமாறு கூறியதில் உண்மை இருந்தாலும் அவன் கூறும் திறமை என்ற ஒரு விஷயத்தால் மற்றவர்கள் மகனை தரமிறக்கிப் பேசுவதை அந்த தாயால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

ஆனால் அதை வெளிப்படையாகக் கூறாத அலமேலு “போங்க பெத்தம்மா! போய் உங்க வேலையை மட்டும் பாருங்க”, என அவரிடம் முறைத்துவிட்டு வெற்றியின் அருகில் வந்து சிறு குரலில் கூறியதைக் கேட்டதும் அவன் அதுவரை எழுதிக்கொண்டிருந்த நோட்டை தூக்கி போட்டுவிட்டு தாயை அதிர்ச்சியுடன் நோக்கினான். அவன் அதிர்ச்சியில் அலமேலுவின் கண்கள் ஆனந்தத்தை அள்ளித் தெளித்தன.

வெற்றிவேலின் திறமை என்னவோ? அலமேலுவின் ஆனந்தத்திற்கு காரணமான வெற்றிவேலின் அதிர்ச்சி என்னவோ?

Categories
Rajeswari Sivakumar Uncategorized

அத்தியாயம் – 9

எபி 9
இங்கே ஒருவனை முழுமொத்தமாய் தன்னிடம் சரணடைய வைத்தது தெரியாமல்,நிம்மதியாக தூங்கிய பிரியா கண்விழித்ததும் தன்னருகில் அமர்ந்து தன்னைப் பார்த்துக்கொண்டிருந்த ஹரியிடம்”டைம் என்ன ஆச்சு?” எனக்கேட்டுக்கொண்டே எழுந்தமர்ந்தாள்.
அவள் கேட்டதற்கு பதிலளிக்காமல் “தலைவலி இப்ப எப்படி இருக்கு லக்ஸ்?” என கேட்டவனிடம்,
“போயே போச்சு!”என்று சொல்லி பளிச்சென்று சிரித்தாள் பிரியா.
அதைக்கேட்டு நிம்மதிப் பெருமூச்சைவிட்டவன்,”உன்கிட்ட பேசனும் லக்ஸ்! இப்ப பேசலாமா?” எனக்கேட்டான்.
“இருங்க… நான் இன்னும் ப்ரெஷ் ஆகனும்… அப்புறம் காபி போடனும்.. ம்ம்ம்… அப்புறம் ஈவ்னிங் வேற என்ன சொன்னாங்க அம்மா…” என யோசித்து,”ஹாங்க்… விளக்கு வைக்கனும்! எனக்கு இவ்வளவு வேலைங்க இருக்கு, அதையெல்லாம் நான் முடிச்சிட்டு வந்ததும் நாம பேசலாம்!” என அடுத்து தான் செய்யவேண்டிய வேலைகளின் லிஸ்ட்டை அவனிடம் அளித்து,அங்கிருந்து சென்றாள்.
சென்றவளையே பார்த்துக்கொண்டிருந்த ஹரி, இவளையும், இவ நடவடிக்கைகளையும் பார்த்தா கோபமாக இருக்காப்போல தெரியவில்லையே! நான் பண்ணக் கூத்துக்கு எப்படி ஒருத்திக்கு கோபம் வராமல் இருக்கும்? இவளால எப்படி… இப்படி நார்மலா இருக்கமுடியுது!’ என யோசித்து மண்டை காய்ந்துப் போனான்.
‘இனிமே இப்படித்தான்!’ எனபாவம் ஹரிக்கு தெரியாது. அவனை மண்டை காயவிட்டவள் தன் வேலைகளை எல்லாம் முடித்து, அவன் கையில் காபியைக் கொடுத்து,”ஹும்… இப்ப பேசலாம்!” என சொல்லி அவனருகில் அமர்ந்தாள்.
இவ்வளவு நேரம் ‘பேசவேண்டும்!’ என சொல்லி,காத்திருந்தவனுக்கு இப்போது எப்படி பேச்சை ஆரம்பிப்பது… என தெரியவில்லை.அதனால் அப்படியே சிறிது நேரம் அவன் அமைதியாக அமர்ந்திருக்க,
“நான் நல்லாத்தான் காபி போட்டிருக்கேன்! ஆல்ரெடி கொஞ்சம் டேஸ்ட் பண்ணிட்டேன்… சோ தைரியமா நீங்க குடிக்கலாம்!” என இவள் தைரியம் கூறினாள்.
அவளின் பேச்சைக்கேட்டு சிரித்துக்கொண்டே கையில் இருந்த காபியை குடித்த ஹரி,”நீ டேஸ்ட் பண்ணித் தந்ததா லக்ஸ் இந்த காபி?அதனாலதான் செம்ம டேஸ்ட்டா இருக்கு!” என்றான்.
ஹரி சிரித்தாலும் அது அவனின் வழக்கமான சிரிப்பாய் இல்லாதது போல் இருக்கவே,”ஏன் ரொம்ப டல்லா இருக்கீங்க? என்ன மேட்டர்!” என்றாள்.
அதற்குமேல் அமைதியாய் இருக்கமுடியாது ஹரி,”லக்ஸ்! ரொம்ப ஸாரி-டா! நான் காலைல நம்ம வீட்டு சாவியை உன்கிட்ட கொடுக்க மறந்து போனேன். வேணும்ன்னே அப்படி செய்யல.தெரியாமதான் அப்படி நடந்து போச்சு!” என்றதும்,
“ம்ம்ம்… நானும் அப்படித்தான் இருக்கும்ன்னு புரிஞ்சிக்கிட்டேன்!” என்றாள் பிரியா சாதாரணமாக.
“எப்படி… எப்படி நான் எதையும் உன்கிட்ட விளக்காமலேயே உனக்கு புரிந்தது லக்ஸ்!” என இவன் பரபரப்பாக கேட்க,
“இதை போய் ஏன் விளக்கிட்டு இருக்கனும்? இத்தனை நாளா நீங்க இங்க தனியாவே இருந்து பழக்கப்பட்டவங்க. இப்படி வீட்டை பூட்டி, சாவிய யார்கிட்டயும் இதுவரை தந்திருந்திருக்க மாட்டீங்க.சில சமயம் அத்தை இங்க வந்தாலுமே,நீங்க வேலைக்கு போகும் போது அவங்க வீட்டில தான் இருந்திருப்பாங்க.அதனால் நீங்க அவங்ககிட்டயும் வீட்டு சாவிய கொடுத்துட்டு வெளிய போய் இருக்க வாய்ப்பிருந்திருக்காது. சோ… இன்னைக்கு காலையிலயும் என்கிட்ட இன்னொரு சாவியக் கொடுக்கனும்னு உங்களுக்கு தோணாததில் தப்பொன்னும் இல்லையே! நான் உங்க இடத்தில் இருந்திருந்தாலும் இப்படிதான் சொதப்பியிருந்துப்பேன்!” எனக் கூலாக அவனிடம் சொன்னாள் பிரியா.
அப்படி அவள் சொல்லி முடித்ததும் அவளை இழுத்து,”என்னோட பட்டு-டா நீ!”என்று இறுக்கி அணைத்திருந்தான் ஹரி.
மூச்சுக்கூட விடமுடியாது அவ்வளவு இறுக்கமான அணைப்பு.அதில் சுகமாக இருப்பதை விடுத்து,”அது என்ன பட்டு! அப்போ… நான் லக்ஸ்மீ இல்லையா?” என மிகமுக்கியமான சந்தேகத்தைக்கேட்டாள் ஹரியின் ‘லக்ஸ் பேபி!’
‘இந்தமாதிரி நேரத்துல இப்படி ஓரு கேள்விய என்னோட சோப்பால மட்டும்தான் கேட்கமுடியும்!’ என நினைத்த ஹரி, “லக்ஸ் சோப்பு… டெய்லி யூஸ் பேபி! பட்டு… ஸ்பெஷல் அக்கேஷன்! இனி இந்த மாதிரி ‘ஸ்பெஷல் பட்டு’ நான் அடிக்கடி உனக்கு கொடுத்துட்டே இருப்பேன்!”என்று, கண்ணடித்து தன்னணைப்பை இன்னும் இறுக்க,
அதில் அடங்காது பட்டைப்போல அவனிடமிருந்து நெளிந்து வழுக்கி,”இப்ப அப்படி சொல்ற அளவுக்கு என்ன ஸ்பெஷல் அக்கேஷன்?” என முட்டையிலிருந்து எட்டிப்பார்க்கும் கோழிக்குஞ்சாய் தலையை மட்டும் தூக்கி அவனிடம் கேள்விக் கேட்டாள் பிரியா.
“ஷப்பா… மாமன் ஆசையா கொஞ்சினா… அதை அப்படியே அக்செப்ட் பண்ணிக்கனும்.அதைவிட்டுட்டு ஆராய்ச்சிப் பண்ணக்கூடாது லக்ஸ்!” என சொன்னவனிடம்,அவள் ‘என்ன ஸ்பெஷல் அக்கேஷன்னு எனக்கு தெரியனும்!’ எனக்கண்ணால் அடம்பிடிக்க,
“இப்ப… நான் சொன்ன இந்த பட்டு எதுக்குன்னா…’என்னோட பொண்டாட்டி எவ்வளவு புத்திசாலியா இருக்கா! என்னை அப்படியே சரியா புரிந்துவச்சியிருக்கா…ன்னு’ உன்னை நினைச்சி நான் பெருமையா பீல் பண்றதுக்கு. ‘பட்டு’ன்னாலே ஒரு பெருமை,கெத்து தானே! என்னோட கெத்து லக்ஸ்-டா நீ” என்றான் உள்ளத்திலிருந்து.
சிறிது நேரம் அவனின் கொஞ்சலில் மூழ்கி இருந்தவளுக்கு அவனை வம்பிழுக்கும் எண்ணம் எட்டிப்பாக்க,”நான் எப்ப இப்படி உங்களை சொல்வேன்?நீங்க எப்ப என்னை இப்படியெல்லாம்… உலரவைக்க போறீங்க!”என தன் கண்ணை உருட்டிக் கேட்டாள்.
அதைக்கேட்ட ஹரி மென்னகையுடன் “சொல்லுவ பேபி! கண்டிப்பா… கூடிய சீக்கிரம் சொல்வ! அதுவும் நான் எதுவும்…. பண்ணாமலே நீயே வான்டட்டா வந்து என்கிட்ட சொல்லத்தான் போற.இப்பவே நீ மனசுல அப்படித்தான் நினைச்சிட்டு இருக்க.இன்னும் கொஞ்ச நாள்ல அதை வெளியேயும் சொல்லுவ!” என அவளின் ‘பிரியா’ஸ் சரண்’னை பார்த்த தைரியத்தில் சவால் விட்டான்.
“ஹும்… பாவம் நீங்க.இப்படியே காலமெல்லாம் காத்துட்டு இருக்கவேண்டியது தான்….” என சொல்லி சிரித்தாள் பிரியா.
இப்படியே சிறிது நேரம் வம்படியாய் பொழுது போக,”நீ என்னதான் ஈஸியா எடுத்துகிட்டாலும் நான் பண்ணது ரொம்ப பெரிய தப்புதான் லக்ஸ். நான் மனப்பூர்வமா உன்கிட்ட ஸாரி கேட்டுக்கறேன்-டா! நிஜமாவே உனக்கு என்மேல கோபம் இல்லையா லக்ஸ்?அவ்வளவு நேரம் வெளிய நீ காத்துட்டு இருந்தபிறகும் உனக்கு எப்படி கோபம் வராம இருக்கும்!” என நெடுநேரமாய் அவன் மனதினை போட்டு அறித்துக்கொண்டிருந்ததை கேட்டே விட்டான் ஹரி.
அவனின் கேள்விக்கு, ”அது எப்படி கோபம் வராம இருக்கும்?முதலில் பூட்டின வீட்டை பார்த்ததும் எனக்கு கொஞ்ச நேரம் ஒன்னும் புரியலை.அடுத்து என்ன செய்றதுன்னு தெரியாமத்தான் உங்களுக்கு கால் பண்ணேன்.ஆனா நீங்க எடுக்கலை.அப்படியே தொடர்ந்து மூனுதடவை கால் பண்ணியும் நீங்க எடுக்காதபோது, பர்ஸ்ட் என் அம்மா மேல தான் எனக்கு செம்ம கடுப்பு வந்தது. ‘கல்யாணம் வேணாம்ன்னு சொன்னவளை கட்டாயமா கட்டிவச்சி என்னை பூட்டின கதவுக்கு காவல் காக்க வச்சிட்டாங்க’ன்னு அவங்களைதான் நல்லா திட்டுட்டு இருந்தேன்” என்று சொல்லி, இவ்வளவு நேரமாய் படபடவென வெடித்தவள், அப்போதுதான் இழுத்து வைத்திருந்த மூச்சை வெளியே விட்டாள்.
அவள் இழுத்துவிட்ட மூச்சைப்பார்த்து, ”டேய் லக்ஸ், பார்த்துடா, பார்த்து மெதுவா சொல்லு. ஒன்னும் அவசரமில்லை!” என சொல்லி அவளுக்கு தண்ணீரைக் கொடுத்தான்.
அதை வாங்கி, குடிக்காது அந்தப்பக்கம் வைத்தவள் பைன்னாசியருக்கு கதை சொல்லும் புதுமுக இயக்குனரைபோல கடமையே கண்ணாக, “அப்புறம்… நாலாவது தடவையா உங்களுக்கு கால் பண்ணும்போது, அம்மாமேல இருந்த கோபம்,எரிச்சல்,கடுப்பு… அப்படியே உங்க மேல திரும்புச்சு. ’சும்மா…லக்ஸ்,பேபின்னு சொல்லிட்டு சுத்த தான் இவங்க லாயக்கு! இவங்க அம்மா என்னடான்னா… என்னோட பிள்ளைதான் ‘பொறுப்பு பொன்னம்பலம்’ னு டமாரம் அடிச்சிட்டு திரியறாங்க. ஆனா… இவங்களுக்கு ஒரு சாவிய கூட ஒழுங்கா கொடுக்க துப்பில்லை!’னு நல்லா உங்களை திட்டிகிட்டே அஞ்சாவது தடவையா கால் பண்ணேன்” என்றதும், ஹரி மீண்டும் தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் கொடுத்து,”இதை குடிச்சிட்டு நல்லா தெம்பா என்னை திட்டு!” என்றான்.
அவனை முறைத்தவள், “நடந்தது என்னன்னு சொல்லிட்டிருக்கும் போது இப்படி அடிக்கடி டிஸ்டர்ப் செய்தா எனக்கு பிடிக்காது!” என்று கறாராய் சொன்னதும், ஹரி ஒரு கையால் தன் வாய்ப்பொத்தி, மற்றொன்றால் ‘மேலே தொடருங்கள்!’ என சைகை செய்தான்.
அதை ஒரு புன்சிரிப்புடன் ‘ஹும்! அது!’ என கெத்தாய் ஒரு தலையசைப்போடு ஏற்றுக்கொண்டு, ”அப்பவும் நீங்க எடுக்கலைன்னதும் தான் ‘இவங்க ஏன் என் போனை அட்டென்ட் பண்ணமாட்டேங்கறாங்க… ரொம்ப பிஸியோன்னு நினச்சு, கொஞ்சநேரம் கழிச்சி கால் பண்ணலாம்ன்னு முடிவெடுத்து சும்மா உட்கார்ந்திருந்தேன்.”
’”அப்படி வெட்டியா இருக்கும்போது, உங்க நிலமையில இருந்து யோசிச்சபோது தான்… எனக்கு உண்மை புரிய ஆரம்பிச்சது. அதுக்கு அப்புறம் எப்படி உங்கமேல கோபப்பட முடியும்! அதன்பிறகு நான் பண்ண கால் எல்லாம் ‘சீக்கிரம் வீட்டுக்கு வாங்க!’னு சொல்லத்தான்” என ஹரியின் கேள்விக்கு நெடுநீண்ட விளக்கம் கொடுத்தாள் பிரியா.
‘தன்னால் எல்லாம் முடியும்!’ என மார்தட்டிக்கொண்டவன் ஒரு சிறு கல் தடுக்கி தடுமாறிப்போன இடத்தில், ’தன்னால் இதை சரியாக செய்யமுடியுமா?’ எனத்தயங்கிவள் வென்று, நின்றிருக்கிறாள்! இதைப்போல விந்தைகள் நிறைந்தது தான் குடும்பவாழ்க்கை!
தான் இவ்வளவு பேசிப் பிறகும் முகம் தெளியாத ஹரியை நார்மல் ஆக்க,”நீங்க சிரிச்சிட்டு இருந்தாலே ‘சுமார் மூஞ்சி குமாரு!’ போல தான் இருப்பீங்க.இப்படி சோகமா இருந்தா ’சாதா மூஞ்சி சுகுமாரு!’போல கேவலமா இருக்கு.” என்று வம்பிழுத்தாள்.
அப்போதும் லேசாக சிரித்த ஹரி,”உன்னை அவ்வளவு நேரம் அங்க உக்காரவச்சதை என்னால ‘டைஜெஸ்ட்’ பண்ணவே முடியலை லக்ஸ்!” என்றான் வேதனை நிறைந்த குரலில்.
அவனின் வேதனையை புரிந்துகொண்ட பிரியா,”சம்சாரவாழ்க்கையில இதெல்லாம் சாதாரணமப்பா!” என்று சிரித்துக்கொண்டே சொல்லி,அவனையும் சிரிக்க வைத்தாள்.
இப்படியே பேச்சோடு பேச்சாக பிரியா இரவு உணவாக ‘உப்புமா’ செய்தாள்.அப்போது பழைய ஹரி திரும்பியிருந்தான்.உணவை ஒரு வாய் எடுத்து வைத்த ஹரி,” லக்ஸ் பேபி!’என்னதான் உப்புமா’ன்ற பெயரிலேயே உப்பு இருந்தாலும், நாமலும் நம்ம டேஸ்ட்க்கு அதுல உப்பை போடனும்டா!” என ‘சிவாஜி’குரலில் சொல்ல,பிரியாவும் அதை வாயில் போட்டுப் பார்க்க,உப்புமாவில்… பெயரில் மட்டுமே உப்பு இருந்தது.
“நீ மண்ணை கொடுத்தாலும் சூப்பரா இருக்குன்னு,சிரிச்சிட்டே சாப்பிடறதுக்கு உன் மாமன் கேரக்ட்டர் ஆர்டிஸ்ட் இல்லடா…பேபி!” அவன் இப்போது ‘மேஜர்’குரலில் மேலும் கலாய்க்க,நொந்தே போனாள் பிரியா.
அவளின் நொந்த பார்வையை தாங்காத ஹரி,தன் மண்டையை போட்டுடைத்து கண்டு சொன்ன அறிய ஐடியாவால் அதிகமாக உப்பு போட்ட சட்டினி அரைக்கப்பட்டு, அதனுடன் அந்த உப்பில்லாத ‘மா’ அவர்களின் வயிற்றிற்குள் தள்ளப்பட்டது.
அப்படி தள்ளிக்கொண்டிருக்கும் வேளையில் ஹரி,”லக்ஸ்! என்னோட போன் நம்பர் உனக்கு எப்படி கிடைச்சது?” என மெதுவாக போட்டு வாங்க,
அவனின் கேள்வியில் முதலில் திகைத்த பிரியா,”அப்ப… நீங்க பிஸியா இருந்ததால என்னோட போனை அட்டென்ட் பண்ணலைன்னு நான் நினச்சது தப்பு! என்னோட நம்பரே உங்ககிட்ட இல்ல,அப்படித்தானே?” எனக் கோபமாய்க் கேட்டாள்.
‘ம்க்கும்! இதுக்குதான் பொண்டாட்டி புத்திசாலியா இருக்கக் கூடாதுன்னு சொல்றாங்க போல!’ என சலித்த ஹரி, ”பூவை பூன்னும் சொல்லலாம்… புஷ்பம்னும் சொல்லலாம்!” எனப் பொதுப்படையாக சொன்னான்.
அதற்கு பிரியா,” இப்ப, நீங்க என்ன சொல்லப்போறீங்க?”என அதட்ட,
“ம்ம்ம்… பிஸியா இருந்ததால அட்டென்ட் பண்ணலைன்னும் சொல்லலாம்… பிசியாயிருக்கும் போது, தெரியாத நம்பர்ல இருந்து கால் வந்ததால… அட்டென்ட் பண்ணலைன்னும் சொல்லலாம்…” என இழுத்தான்.
“பத்து நாளா… கூடவே இருக்கும் பொண்டாட்டியோட போன் நம்பரை தெரிஞ்சிக்கனும்ங்கற சாதாரண விஷயம் கூட உங்களுக்கு தெரியலை! இதுல அதை சொல்ல வைக்கறேன்… இதை சொல்ல வைக்கறேன் சவால் வேற?” என கேவலமாய் கழுவி ஊற்றினாள்.
“டெண்டுல்கரே நிறைய தடவை ‘டக்அவுட்’ ஆயிருக்கார். அதுக்காக அவரோட திறமையை நாம குறைச்சி எடை போட்டுட முடியுமா லக்ஸ் பேபி?” என அவள் ஊற்றியதை துடைத்துக்கொண்டே இவன் கேட்க,
“இந்த வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்ல! இப்பவாவது என்னோட நம்பரை ‘சேவ்’ பண்ணி வச்சியிருக்கீங்களா… இல்ல…” என அவள் கேட்டுக்கொண்டிடுக்கும் போதே,”அதெல்லாம் எப்பவோ பண்ணிட்டேன்” என்றான் ஹரி.
“இதுக்கே பத்து நாள் தேவைப்பட்டிருக்கு! மத்ததுக்கெல்லாம் எவ்வளவு நாள் தேவைப்படுமோ…!”
“நாம பாரின் போறதுக்குள்ள உன்னை சொல்ல வைக்கிறேன் லக்ஸ் பேபி!”
“நம்பிட்டேன்….!”
“லக்ஸ்… நான் கேட்டதுக்கு,அதான்… என் நம்பர் எப்படி… தெரியும்னு கேட்டேனே…அதுக்கு நீ இன்னும் பதிலை சொல்லலையே!”என அப்போதும் விடாது இவன் கேட்க,
“உங்க போன் பத்துநாளா, இதோ…, இந்த டேபிள் மேல தானே தேமேன்னு இருந்தது! அதிலிருந்து எனக்கு ஒரு ‘மிஸ்டுகால்’ கொடுத்தா மேட்டர் ஓவர்!” என அசால்ட்டாய் சொல்லி சென்றவளை,
‘ஆமால்ல…! இவளுக்கு தோணினது ஏன் எனக்கு தோணாம போச்சு!? ஹப்பா! இவ நிஜமாலுமே பெரிய ‘அப்பாடக்கர்’ தான்-டா!’ என மீண்டும் நினைத்து திறந்த வாய் மூடாது அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.

Categories
Uncategorized வேத கௌரி

அத்தியாயம் – 11

உயிர் -11
சென்னை ……….
YMCA மைதானம் NCC மாணவர்களால் நிரம்பி வழிந்தது ,  கல்லூரியின் தற்போதைய மாணவர்களை வழிநடத்தும் பொறுப்பு சித்தார்த்திடம் ஒப்படைக்க பட்டிருக்கவே, அவர்களை அழைத்து மற்ற மாணவர்களோடு அனுப்பிவிட்டு தனது நண்பன் சைதன்யாவும் அங்கு   இருக்கவே அவனோடு சேர்ந்து கொண்டான் ..
அவனின் விழிகளோ ஒரு எதிர்பார்ப்புடனும் ஆசையுடனும் ஏதோ ஒன்றை தேடி  தவித்து கொண்டிருந்தன ,அவனின் தேடலை உணர்ந்த சைதன்யன் ,”என்ன மச்சான் தேடுற…?” என கேட்க ..
“ இல்லை நண்பா ,ஒரு பொண்ணோட  பதக்கம்  என்கிட்டே இருக்கு ,அதை அவகிட்ட ஒப்படைக்க தான் தேடிட்டு இருக்கேன் ..என்னோடது அந்த பொண்ணுகிட்ட இருக்கு அதை வாங்கணும் …” என்று கூற …
“ நீ பதக்கத்தை  மட்டும்தானே சொல்லுற ,தேடுறதை  பார்த்தா அப்படி தெரியலையே ..” என கேலி குரலில் கேட்க ..
‘ அடங்க மாட்டியா நீ ..” என அவன் தோளில் அடித்தான் …
“….ரெண்டு வருஷமா   ncc பங்ஷன் எதையும் நீ மிஸ் பண்ணாம  , குறிப்பா  சென்னையில் நடந்தா  தவறாம கலந்துக்குற …இப்போ கூட  டுயூட்டிக்கு  லீவ் போட்டு வந்துயிருக்குற … அப்போ இது ரொம்ப முக்கியமோன்னு தோணுது … அது என்ன வரலாற்று நிகழ்வுன்னு   நான் தெரிஞ்சுக்கலாமா..” என்று கேள்வி எழுப்ப ,அன்று நடந்தவைகளை நண்பனிடம் பகிர்ந்தான் ..  
 சித்தார்த் முதுகலை இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருக்கும் பொழுது .சென்னையில் நடைபெற்ற ncc மாணவர்களுக்கான விழாவில் , நண்பர்களோடு அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கும்பொழுது,கல்லூரி குழு விவாதம் நடந்து கொண்டிருப்பதாகவும் ,அதில் யார் சிறந்த கருத்துகளை சொல்பவர்களுக்கு பரிசு என்று அறிவிக்கப்பட்டது …,
 அவனுடைய ஆசிரியர் ,”சித்து, எனக்கு கொஞ்சம் வெளியில் வேலையிருக்குப்பா ..நீ இந்த போட்டிக்கு நடுவரா இருந்து  குறித்து வை, நான் வந்துடறேன் ..” என்று இவனிடம் பொறுப்பை ஒப்படைத்து சென்றார் ..
 கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் நிறைய காமெடிகள் நடந்தேறிய அரங்கத்தில்…. இன்றைய இளைய சமுதாயத்தின் நகைச்சுவை திறனை எண்ணி தனக்குள்… தலை குனிந்து புன்னகைத்த படியே குறிப்பேட்டில் மதிப்பெண்களை எழுதி கொண்டிருந்தவன்… அந்த குரலின் வசீகரத்தால் அல்லாது … அவள் சொன்ன கருத்துக்களினால் நிமிர்ந்து அமர்ந்தான். 
 மலர்ந்த புது பூவை போல அமைதியாகவும் அதே சமயம் தனது கருத்துகளை ஆணித்தரமாக எடுத்து கூறிய அவளின் முகத்தை தன் மனதிற்குள் தன்னை அறியாமலே பதிய தொடங்கினான் ….
 “ஆண் .பெண் சமத்துவத்தை வளர்க்க பாலியல் சமத்துவத்தை  நாம நம்மளோட வளரும் பிள்ளைகளுக்கு கண்டிப்பா கத்து கொடுக்கணும்…”எந்த ஒரு நிகழ்ச்சியும் செய்தியாக மட்டுமே கடந்து போனால் தீர்வே கிடைக்காமல் இன்னும் சீரழிஞ்சு போய்விடும்”…நம்மால் முடிந்த அளவு கண்டிப்பா போராடணும் ..’ என்று பல கருத்துகளை பகிர்ந்து கொண்டாள் ..
‘அவரவர் மனப்பக்குவதிற்கு ஏற்ப ஓவியன் , கலைஞன் ,நிருபர் ,விஞ்ஞானி ,தச்சன்,சிற்பி , ஏன் எல்லாவற்றையும் விட உலகத்துக்கே உணவளிக்கும் தெய்வமான விவசாயியாகவோ ஆகட்டுமே ,படிக்குற எல்லோருமே மருத்துவராகவோ..பொறியாளராகவோ மட்டுமே ஆகணும்ன்னு திணிக்கபடுகிறது சரியா ….?  ” என்று அவள் பேசி முடித்ததும்…  “எக்ஸ்லண்ட்” என்றது அவன் மனம்.
  நடுவராய் அமர்ந்திருக்கும் போது தத்தம் உணர்வுகளை முகத்தில் வெளிப்படுத்தக் கூடாது என்பதால் எவ்வித சலனமுமின்றி அவனையுமறியாமல் அவள் கடந்து செல்லும் வரை அவளையே பார்த்திருந்தான்.
 நிகழ்ச்சிகள் முடிந்து சிறந்த கருத்துகளை பகிர்ந்த பரிசு மாணவி சிற்பிகா என்றும் , NCC பயிற்சியில் சிறந்த மாணவன் விருது சித்தார்த்திற்கு என்றும் அறிவிப்பு வரவே இருவரும் மேடையேற விருந்தினர் பதக்கத்தையும் ,ஷீல்ட்டையும்   அடுத்தது தரவே இருவரும் தங்களுக்கு உரியதை பெற்று கொண்டு ,பரிசு கிடைத்த உற்சாகத்தில் தனது மாணவர்களோடு கொண்டாடினர் ..
 வீட்டிற்கு வந்த பிறகே ,கேடயத்தில் தனது பெயருக்கு பதில் வேறு பெயரை பார்த்தவனுக்கு,பெயர் மட்டுமல்லா  அவளிடம் ஏதோ ஒரு வசீகரமும்  இருக்கு என்பதை உணர்ந்தான் …அன்றில் இருந்து அவளை ncc சம்ந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளிலும் தேட தொடங்கியதை சொல்லி முடித்தான் …
“ அப்போ உன்னை அந்த பொண்ணு இம்ப்ரெஸ் பண்ணிட்டான்னு சொல்லு ..இந்த கௌதமபுத்தரையும் காதல் கொள்ள வைத்த  மங்கை பேர் என்னவோ …?
 ”அவள் மேல எனக்கு  இருக்குறது காதலா …? இல்லை ஒரு பெண்ணில் மேல் எழும் ரசனையா … எனக்கே தெளிவா தெரியலை ..சப்போஸ் அவ கிடைச்சுட்டா பிறகு சொல்லுறேன் நண்பா ..” என அவன் மனம் அவனுக்கே தெரியாமல் பதிலளித்தான்
“உரிக்க உரிக்க ஒன்னுமில்லையே
காதல் ஒன்னுமிலையே …
ஏமாற்றுமே காதல் ஏமாற்றுமே … என படத்தின் பாடலை கொண்டு கேலி செய்தான் …
  சித்தார்த் தன் தேடல் பணியை தொடர  ,தேடிய உருவம் கண்ணில்படாமல் போகவே , நண்பனையும் அழைத்து கொண்டு தனது ஜூனியர் மாணவர்களை வழிநடத்தி, விழா முடிந்ததும் அனைவரையும் அழைத்துக்கொண்டு ஊர் திரும்பினான்  
அவன் தேடியது அவனின் வீடு தேடி வரும் நாள் அருகில் வர போவதை அவனுக்கு சொல்பவர் யார் ….?”…..
அழகிய மணவாளம் 
விடிவானில் தோன்றும் கதிரவன் கட கடவென மேலழுந்து பிரகாசமாய்  வீசும்  ஒளி , வயல் வெளியின் பசுமை காற்றில் அலைகளாக ஆடும்பயிர்கள் மீது பாய்ந்தது , பறவைகளின் கூவல்கள் ,சலசலத்து ஓடும் தண்ணீர்  , துள்ளி வரும்  மீன்கள் , கொக்குகளின் தவமிருப்பு ,என கிராமத்தின் அழகியலுக்கு ஏற்றார் போல திருச்சியில் இருந்து சில மைல்  தொலைவில் உள்ளது அழகிய மணவாளம் என்ற கிராமம் ….
அங்கே  பழமையும் புதுமையும் கலந்த வீட்டின், சாமியறையில்”
“அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண்டின்புற
இன்னம்  பாலிக்கு மோவிப் பிறவியே
போற்றி போற்றி …
“அன்பெனும் பிடிக்குள் அகப்படும்
மலையே போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி …” என்று  பாடிக்கொண்டே பூஜையை முடித்தார் கோதை ..
எதிரில் கைகுவித்து நின்றிருந்த மகன் சித்தார்த்திற்க்கு  தீபாராதனையை காட்டி,..”இமயா ,எம்பெருமான் துணை என்னைக்கும் உனக்கு இருக்கும்ப்பா …” என  அவனுக்கு தன் கையாலேயே விபூதியையிட்டார் ….“
“ அம்மா இப்போ புறப்பட்டதான்  போக முடியும் …நேரமாச்சும்மா …எனக்கு சாப்பாடு எடுத்து வைங்க …” என அவசர படுத்தினான்
“விடியற்காலை தானே சென்னையில் இருந்து வந்த , உடனே போகணுமா…”
“அம்மா..ஏற்கனவே ரெண்டு நாள் லீவ் , இன்னிக்கு ஏதோ கட்சி மீட்டிங்  ,பந்தோபஸ்து இருக்கு  கண்டிப்பா போகணும்மா ..”   
“சரிப்பா ..நீ போய் துணி மாத்திட்டு வா  . அதுக்குள்ளே  அம்மா உனக்கு தோசை ஊத்தி எடுத்துட்டு வறேன் …”என்று  சமையலற்குள் சென்று அவனுக்கு தேவையானவற்றை கவனித்து சாப்பிட செய்தார் ..
கோதையிடம் விடைபெற்று புறப்பட எண்ணியவனை ,’ சித்து …தம்பி ..சித்து ..” என்று அழைத்தார்  ஊர் பெரியவர் மாசிலாமணி …
சத்தம் கேட்டு  வெளியே வந்த  சித்தார்த் , வெளியே திண்ணையில்   மாசிலாமணி அமர்ந்து இருப்பதை பார்த்து ,” வாங்க மாமா  ,நல்லாயிருக்கீங்களா…?” சொல்லியிருந்தால் நானே வந்து பார்த்து இருப்பேனே …” என்றான் .
 “எனக்கு என்னப்பா நல்லாயிருக்கேன் ….டுயூட்டி கிளம்பியாச்சா ..,?கோதை எங்க காணோம் ..? என்று சுற்றிலும் பார்த்து  தேட …
 “ அம்மா பின்கட்டுல இருக்காங்க மாமா ,இருங்க வர சொல்லுறேன் ..” என்று சொல்லிக்கொண்டுருக்கும் பொழுதே , எளிமையான காட்டன் புடவை, காதில் சிறிய தோடு ,சாந்தமான முகம் , நெற்றியில்  மெல்லிய விபூதி கீற்று சகிதம் வந்த கோதை .. “ வாங்க அண்ணே , கன்னுக்குட்டி பாலுக்கு கத்திகிட்டே இருந்தது ,அதை அவுத்து விட்டு இருந்தேன், இருங்க அண்ணா பிடிச்சு தொழுவத்தில் கட்டிட்டு வந்துடுறேன் …”
 “ வேலையை முடிச்சுட்டே வாம்மா “ என கோதையிடம் சொல்லிவிட்டு , சித்தார்த் புறம் திரும்பி “.ஒண்ணுமில்லை  தம்பி  , என் சிநேகிதன்  வீடு வாடகைக்கு வேணும்ன்னு கேட்டாரு  , மண்ணச்சநல்லூருல தாசில்தாரா மாத்தல் கிடைச்சுருக்காம் , நம்ம ஊரில் வீடு கிடைச்சா…. போக வர வசதியா இருக்கும்ன்னு நினைக்குறான்  , உங்க வீட்டு  மாடி காலியாதானே இருக்கு, கோதைகிட்ட கேட்டேன்  …அது உன்கிட்ட கேட்கணும்னு சொல்லிடுச்சுப்பா ..’
 “ அம்மா  நீங்க சொன்னதா சொல்லிக்கிட்டு இருந்தாங்க  ,அப்பாவும் பொண்ணு மட்டும்தான், எங்களுக்கு  எதுவும் பிரச்சனையில்லை ,அவங்களுக்கு சம்மதம்ன்னா வரச்சொல்லிடுங்க மாமா  …”
 “ சரி தம்பி ,நான் அவன்கிட்ட  பேசிடுறேன் , ரெண்டொரு நாளில்  வரேன்னு தகவல் கொடுத்து இருக்கான் ..வாடகை எல்லாம் எப்படி என்னான்னு சொல்லிடேன் …”
 “ நீங்களே எல்லாம் பார்த்து பேசிடுங்க மாமா , எனக்கு டுயூட்டி  நேரமாச்சு , இன்னும் ஏதாவது கேட்கனும்ன்னா அம்மா கிட்ட  கேட்டுக்கோங்க” .
 கோதை அவனின் பையுடன்  வரவே ,“ சரி மாமா , கிளம்புறேன் ,போயிட்டு வாரேன் அம்மா  , ஏதாவது தேவைன்னா  போன் பண்ணுங்க ..” என  பையை வாங்கி  கொண்டு   கையசைத்து சொல்லும் சித்தார்த்தையே இருவரும் சிறிது நேரம் பார்த்து கொண்டிருந்தனர் ..
 “ இருவத்தேழு வயசாகிடுச்சு கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கலாம்ன்னு சொன்னா பிடிகொடுத்தே பேச மாட்டேங்குது தம்பி, IPS முடிச்சுட்டு தான் பண்ணிக்குவேன்னு  பிடிவாதமா இருக்கான், நீங்களாவது சொல்ல கூடாதா அண்ணா …” என்று ஏக்கத்துடனும் ஆயாசத்துடனும் பேசினார்
 “ விடு கோதை ,.பொறுப்பான பையன் ஏதுக்கு கவலை படுற..?”, இமயன் மனசுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும் ,அவன் சொல்லுறதும் சரி தானே IPS ட்ரைனிங் எங்க போடுவாங்கன்னு தெரியாது  , பொஞ்சாதியையும்  கூடவே அழைச்சிட்டு போக முடியாது,இன்னும் ரெண்டு வருஷத்துக்கு பிறகே பார்ப்போம் …”
 ‘நீங்க சொல்லுறதும் சரி தாண்ணே, எல்லாத்துக்கும் நேரம் காலம்ன்னு ஒன்னு இருக்குள்ள, நீங்க சொன்னவக எப்போ குடி வாறங்க  வீட்டுக்கு ….?”
 “இன்னும் ரெண்டொரு நாளில் வந்துடுவாங்க , முதலில் சரவணன் மட்டும் தான் வாரான் ,அவன் பொண்ணு வரதுக்கு  ஒரு வாரம் ஆகுமாம் …”
 “ஓ அப்படியா , ரொம்ப சந்தோசம் வரட்டும், பாருங்க  வந்தவங்களை உட்கார வைச்சு பேசிக்கிட்டே இருக்கேன், இருங்க அண்ணே ,காபி எடுத்துட்டு வரேன்..” என்று வீட்டினுள் நுழைய ,..
 “ எதுவும் வேண்டாம்மா ,நான் கிளம்புறேன் காலையில் வந்தாதான் இமயனை பார்க்க முடியும்ன்னு வந்தேன் ,வயலுக்கு தண்ணி காட்டணும்  ,அவுக வந்த உடனே கூட்டிட்டு வாறேன் …” என விடைபெற்று சென்றார்.
 வீட்டுக்குள் நுழைந்த கோதையின் பார்வை, சித்தார்த் வயிற்றில் இருக்கும் பொழுதே எல்லை பாதுகாப்பு போரில் இறந்த தன் கணவன் சுந்தரத்தின்  நிழற்படத்தில் நிலைத்தது.
  “ என்னங்க ,நம்ம பையனுக்கு உங்க ஆசைப்படியே சித்தார்த் இமயவரம்பன்னு   பேர் வச்சிட்டேங்க ,இன்னைக்கு அவன் நல்லா படிச்சு போலீஸ் வேலைக்கு போய்கிட்டு இருக்கான் ,இது மட்டும் போதாதாம்  IPS ஆகனும்ன்னு படிச்சுட்டும் இருக்கான் ..தெய்வமா இருந்து நீங்க இதையும் நல்லபடியா நிறைவேத்தணும் ..” என்று மானசீகமாக பேசிக்கொண்டே வேண்டுதல் வைத்தார்.
 சரவணன், தில்லைநாயகி பெற்றோர் பார்த்து திருமணம் செய்த தம்பதியர் .அவர்கள்  குடும்ப வாழ்க்கையின் அன்பு பரிசாக பிறந்தவள் தான் சிற்பிகா ,தில்லைநாயகி ஓரளவு வசதி படைத்த குடும்பத்தில் வாழ்ந்து பழக்கப்பட்டவள் , அதுபோலவே ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டாலும் சரவணனின் சம்பாத்தியம் போதவில்லை ,சிறு சிறு சண்டைகளும் சமதானங்களுமாக போய் கொண்டு இருந்த அவர்கள் வாழ்வில் திடீரென்று  சோழ வந்தான் வடிவில் புயல் வீச ஆரம்பித்தது ….
  சரவணின் நண்பன்  சோழவந்தான் வசதியான குடும்பத்தை சேர்ந்தவன் , தில்லைநாயகியின் அழகில் மயங்கி வீட்டிற்கு அடிக்கடி வந்து  தன் வசதியை அவளுக்கு காண்பித்து அவளை தன் வலையில் விழ வைத்தான் ,அவளும்  ஆசை பட்டு அவனோடு ஊர் சுற்ற ஆரம்பித்தாள் ..
அரசல்புரசலாக இதை தெரிந்த  சரவணன்  நாயகியை கண்டிக்க ..”ஒரு மஞ்ச கயித்தை கழுத்துல கட்டிட்டா மனசுல இருக்குற ஆசை எல்லாத்தையும்  தனியா தூக்கி வச்சிரனுமா….?’,
 “ நான் என்ன சொல்லுறேன் நீ என்ன சொல்லுற ..” என்று கேட்க …
“ ஆமாம் ,கல்யாணம் ஆன இந்த நாலு வருஷத்தில் எனக்கு என்ன செஞ்சு இருக்கீங்க…இதோ இந்த ஓட்டு வீட்டில் தான் வாழ முடியுது , மாச கடைசியில்  அங்க இங்க கடன் வேற …” என்று குத்தலாக பேசவே …
 “முடிவா என்னதான் சொல்லவர …என்று அடக்கிய ஆத்திரத்துடன் கேட்க ..   
 “உங்களால் என்னை  வசதியா வச்சிக்க முடியுமா..?? 
 ‘ நமக்கு 3 வயசுல ஒரு பெண் பிள்ளை இருக்குன்னு உனக்கு தெரியுதாயில்லையா …?”
 “நான் ஏன் இந்த சனியன் பார்க்கணும் …?”,இதுனால் தான் இவ்வளவு நாள் உன்னோடு இருந்தேன் …”  என்று ஆங்காரத்துடன் கத்தி பக்கத்தில் கீழே அமர்ந்து இருந்த குழந்தையை அடிக்க துவங்கினாள்…
 குழந்தையை அடிக்கவே ,சரவணனும் தில்லைநாயகியை அடிக்க ,அவர் அழுதுகொண்டே ஊர்பஞ்சயாத்தை கூட்டி ..”எங்க வீட்டில் இருந்து வரதட்சனை கேட்டு வாங்கிட்டு வர சொல்லி தன்னை அடித்து விட்டார்.” என்று அழுது நாடகமாடி புகார் கொடுத்து விடவே .. ,
 ஊர்மக்களும் அதை உண்மை என நம்பி சரவணனுக்கு புத்தி  சொல்லி ,அவளை சமாதான படுத்தி அனுப்பிவிட ,எதுவும் பேசாமல் வீடு திரும்ப ,அங்கு தில்லைநாயகியோ வீட்டை விட்டு கிளம்புவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார் ..
தனக்காக இல்லையென்றாலும் தனது பெண் குழந்தைக்கு அவள் முக்கியம் என்பதை உணர்ந்து “தில்லை ஏதோ அந்த நேரம் புத்தி மாறிப் போச்சு ,நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் ,நம்ம குழந்தைகாக மன்னிச்சுடுறேன் , நாம வேற எங்காவது வெளியூர் போய்டலாம் …” 
 “ யாரு யாரை மன்னிக்குறது ,அந்த அளவு நான் ஒன்னும் தப்பு பண்ணலை ,எனக்கு பிடிச்ச வாழ்க்கைய வாழ போறேன் … இனி உன்னோடு வாழ முடியாது, எனக்கு சோழவந்தானோடு  வாழ பிடிச்சிருக்கு … அவர் என்னை வசதியா பார்த்துப்பார்  ,எனக்கு வசதி , அதன் வழியா கிடைக்குற கௌரவம் தான் வேணும் …”என்று சொல்லி வீட்டை விட்டு வெளியேறினாள் ,
 சரவணன்  இனியும் சேர்ந்து வாழ்வது வீண் என்று நினைத்து  விவகாரத்துக்கு விண்ணப்பிக்க,  ,விவகாரத்தின் போது கூட பெண் குழந்தை  அம்மாவிடம் என்று தீர்ப்பு வரவே ,நாயகி  தான் வைத்து கொள்ளமுடியாது என்று சொல்ல , அவளிடம் கொடுக்க முடியாது என்று சரவணன் தானே வளர்த்தார் ..      
 ஒரு பெண் அழுதுகொண்டே ஏதாவது கூறினால் ,அது உண்மையாக மட்டுமே இருக்கும் என்ற அறியாமை கலந்த அறிவுஜீவித்தனமே  காரணம் என்பதை யார் உணர்வார்கள் ……???”
 மனைவியின் தவறால் ஊரே தன்னை தன் குடும்பத்தை தவறாக குற்றவாளியை போல் பார்ப்பதும் ,புத்தி சொல்கிறேன் என்று அவர்களின் குத்தாலனா பேச்சும் பிடிக்காமல் மிகவும் இடிந்து போனான் , சொந்த ஊரை விட்டே போக முடிவு செய்தான்  சரவணன்.
 அவனின்  அன்னை   ,” சரவணா ,நீ கண்டிப்பா போய்த்தான் ஆகணுமா ..?”
“ ஆமாம்மா ,இந்த விஷயம் ஊருபுரா தெரிஞ்சு ,இன்னும் இருக்குற மானம் ,மரியாதையை எல்லாம் போனபிறகு ,பேரு கேட்டு ஊரைவிட்டு போறதைவிட ,அதுக்கு இப்போவே கௌரவமா போயிடுறது நல்லதும்மா ..” என குரல் தழுதழுக்க சொன்னார் .
 “ உன் மேல எனக்கு எந்த கோவமும் இல்லை .இனிமேலும் கவனமாயிருப்பா  ,நண்பன்னு சொல்லிக்கிட்டு யாரையும் உள்ளே விடாதே ,நம்பிக்கையானவங்களா  பார்த்து பழகு ,எந்த ஒரு மனுசனும் சந்தர்ப்ப சூழ்நிலை அமையுற வரை நல்லவங்கதான்  ,பின்னால யாரையும்  குறை சொல்லி பிரயோஜனம் இல்லை ,நாமதான் பார்த்து நடந்த்துக்கணும்  …” என்று கலங்கிய விழிகளுடன் மகனை அனுப்பி வைத்தார் … தனது மகளுடன் வெளியூரில் சென்று வாழஆரம்பித்தார்… 
 வண்டி குலுங்கலில் தனது நினைவில் இருந்து மீள துவங்கியவர் பேருந்து தனது இயக்கத்தை துண்டிக்க எந்த இடம் என்று பார்க்க ஆரம்பித்தார் …நடத்துனர் சரவணனின் அருகே வந்து ,” சார் திருச்சி வந்துடுச்சு ,நீங்க இங்க இறங்கி ஒரு ஆட்டோ இல்லை டாக்சி பிடிச்சு போய்டுங்க சார் ….”
 “ ரொம்ப நன்றி தம்பி ..” தனது பொருட்களுடன் அழகிய மணவாளம் நோக்கி புறப்பட்டார் ……… 

பெருவளை வாய்க்கால் ,கடம்ப வாய்க்கால் என்ற இரண்டு வாய்க்கால் பாய்ந்து அழகிய மணவாளத்தை வளப்படுத்தி கொண்டிருக்க .சரவணன் இவரது மகள் சிற்பிகா இவர்களின் வாழ்க்கையையும் வளமாக்குமா ….????

Categories
Uncategorized

உறவாக வேண்டுமடி நீயே – டீசர்

#TEASER#

#TITLE  :  உறவாக வேண்டுமடி நீயே….#

“என்ன ணா இன்னும் கிளம்பலையா?”

“ம்ஹும்… நோ…”

“அண்ணா…”  என்று துருவன் ஆரம்பிக்கவும்  

“டோன்ட் டீச் மீ துருவன்! லிஸன்.. எனக்கு  யாரும் கட்டளை இடக் கூடாது. எனக்கு விருப்பமானதை  நான் தான் செய்வேன். சோ நான் வந்து பார்க்கிறேன் இல்லைனா அவங்களை எப்படி வரவழைக்கணுமோ அப்படி வர வைப்பேன். அதில் தான் ஒரு பிசினஸ்மேனின் பவர் இருக்கு. சோ டேக் இட் ஆர் லீவ் இட். இன்னும் பதினைந்து நாள் நான் இங்கே தான் இருக்கப் போகிறேன்.  பை பை!” என்று இவன் அழைப்பைத் துண்டிக்க, இவன் குரலில் இனி என்னைத் தொந்தரவு செய்யாதே என்ற கட்டளை இருந்தது. இது தான் அடங்காத் தனம் கொண்ட தொழில் சாம்ராஜ்யத்தின் மன்னனாய் விளங்கும் பிஸினஸ் மேக்னட் அபிரஞ்சன். 

**********************************************

“உங்களுடன் டை அப்புக்கு நான் உடன் பட மட்டேன். பிறகு உங்கள் சரிவுக்கும்…”

“ஹா… ஹா… ஹா… மகாராணியாரின் சமஸ்தானத்துடன் இணைந்து இங்கு யாரும் கொஞ்சி விளையாட சித்தமாய் இல்லை” என்று நக்கல் அடித்தவன் நான் கட்டி ஆண்டு கொண்டிருக்கும் என் சாம்ராஜ்ஜிய கோட்டையிலிருந்து உன்னால் ஒரு செங்கல்லைக் கூட அசைக்க முடியாது”

“ஒரு செங்கல் என்ன? உங்கள் கோட்டையையே தூள்தூளாகத் தகர்த்துவிட்டால்?” இவ்வளவு நேரம் இல்லாத நிமிர்வுடன் இவள் சொல்ல

“ஓ… சவாலா? இப்படிப் பட்ட பொருளை நான் விற்கிறேன் என்றால் அதற்குப் பின்னால் எத்தனை பேர் இருப்பார்கள் என்று  நீ யோசிக்கவில்லை. இப்பொழுதும் நீ சொன்ன குற்றச்சாட்டை எல்லாம் நான்  மறுக்கவில்லை ஒத்துக்கொள்கிறேன். பட் உன்னால் என்ன செய்ய முடியும் என்று தான் கேட்கிறேன். பல ஓநாய்களுக்கு ரத்த ருசி காட்டியும்,  அடக்க முடியாத பல மதம் கொண்ட யானைகளை பணம் என்னும் அங்குசத்தால் அடக்கியும் நான் தான் ராஜா எனும் மமதையில் திரிந்த சிங்கத்துக்குப் பதவி மோகத்தை இன்னும் இன்னும்  ஊட்டி இன்று நான் சொல்வதையெல்லாம் கேட்கும் சர்க்கஸ் சிங்கமாகவும் மாற்றி என்னுடைய இந்த சாம்ராஜ்ஜியத்தை அமைதத்தவன் நான். அவ்வளவு சீக்கிரம் என் கோட்டையை அழிக்க விட்டுவிடுவேனா?

ஆனால் நீ தான் இப்போது  சவால் விடுகிறாயே.. அப்போது நானும் பதில் சவால் விடவில்லையென்றால் எப்படி?” தன் முழு உயரத்திற்கும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு எழுந்து நின்றவன் “இங்கு வருகிற வரை உன் தொழிலை அழிக்க வேண்டும் என்பது மட்டும் தான் என் எண்ணமாக இருந்தது. ஆனால் இப்போது சொல்கிறேன்.. டை அப்புக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் என் தொழிலை அழிப்பேன் என்று சொன்னாய் அல்லவா? ஆனால் நான் உன் தொழிலை அழிக்க மாட்டேன். ஏனென்றால் அது என்னிடம் வரப் போகும் தொழிலாயிற்றே!” அவள் புரியாமல் பார்க்கவும்

“உன்னால் இந்த தொழிலை மேற்கொண்டு நடத்த முடியாத அளவுக்குப் பல பிரச்சனைகளை நான் கொடுக்க, அதைத் தாங்க முடியாமல் உன் கம்பெனியை டேக் ஓவர் செய்யச்  சொல்லி நீயே என்னிடம் வந்து நிற்பாய்! நோ.. நோ.. அப்படி சொல்லக் கூடாது.. கெஞ்சுவாய்! அப்படி செய்ய  வைப்பான் இந்த அபிரஞ்சன்!” அவன் முடிப்பதற்குள் தானும் எழுந்து நின்றவள்

“ஐயோடா! என்ன ஒரு ஓவர் கான்ஃபிடன்ஸ்! நெவர்.. ஒருபோதும் நடக்காது. ஃபார் யுவர் கைன்ட் இன்ஃபர்மேஷன்.. சூரியன் உதிப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது மிஸ்டர். அபிரஞ்சன்!”

“ஹா… ஹா… இஸ் இட்? மேடம்! நீ சொல்வது பேச்சு வழக்கு. டு யூ நோ சயின்ஸ்? அது தெரியாமல் பேசுகிறாயே! மேடம்.. சூரியன் என்றைக்கு உதித்திருக்கு, அஸ்தமனம் ஆகியிருக்கு? அது ஒரே இடத்தில் தான் இருக்கு. பூமி தான் தன் சுற்றலை நிறுத்தாம சுற்றிட்டு இருக்கு. அதுக்காக சூரியனுக்கு எல்லாம் இப்படி பில்ட் அப் கொடுக்கலாமா? நீ சொல்கிற மாதிரி அது உதிக்காமல் இருப்பதற்காக இந்த பூமியைச் சுற்றாமல் நிறுத்தவும்  தயங்க மாட்டான் இந்த அபிரஞ்சன்!” அவன் குரலில் அப்படி ஒரு மமதை!

விழிகள் விரிய அவனைப் பார்த்தவள் ‘அப்போது என்னைக் கொலை பண்ணக் கூடத் தயங்க மாட்டேன் என்று சொல்கிறானா?’ என்று அவள் மனதிற்குள் கேட்ட கேள்விக்கு ‘ஏன்? நீயும் தான் அவனை இங்கிருந்து உயிரோட போக மாட்டாய் என்று மிரட்டின’ என அவள் மனசாட்சி எடுத்துச் சொல்ல

“வெல்.. ஆல் தி பெஸ்ட் மிஸ்டர். அபிரஞ்சன்! பார்ப்போம்.. யாருடைய சுழற்சியை யார் நிறுத்துகிறார்கள் என்று பார்ப்போம்!” என்று சொல்லி இவளும் இந்த சவாலை ஏற்க  

விரைவில்…….

   

Categories
Uncategorized ஷெண்பா

அத்தியாயம் – 7

அத்தியாயம் – 7

“ஹலோ அங்கிள்!” என்ற கிஷோர் சாவியைச் சுழற்றிக் கொண்டே வந்து அவரருகில் அமர்ந்தான்.

வெளியில் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த கங்கதரன், “வாப்பா!” என்றவர், “சுமிம்மா, கிஷோர் வந்தாச்சு. நீ ரெடியா?” என்று குரல் கொடுத்தார்.

“வரேம்ப்பா!” என்றவள், “வாங்க கிஷோர்! அஞ்சே நிமிஷம்” என்று அறைக்குள்ளிருந்தே குரல் கொடுத்தாள்.

“வாவா…” என்றவன் கங்காதரனுடன் பேசிக்கொண்டிருந்தான்.

“சாரி! ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிட்டேனா” எனக் கேட்டுக்கொண்டே வந்தவளை வைத்தக்கண் வாங்காமல் பார்த்தான்.

ரோஜா நிற அனார்கலி சுடிதாரில் தேவதையாக வந்து நின்றவளை, அவன் விழுங்கி விடுவதைப் போலப் பார்க்க, அவள் கண்களை உருட்டிக் காட்டினாள்.

சிரிப்பை அடக்கிக்கொண்டு எழுந்தவன், “ஓகே அங்கிள்! நாங்க கிளம்பறோம். பதினோரு மணிக்கெல்லாம் சுமியைக் கொண்டுவந்து விட்டுடுறேன். கூடக் கொஞ்சம் நேரம் ஆச்சுன்னா பயந்துடாதீங்க” என்றான்.

கங்காதரன் திகைப்புடன் அவனைப் பார்க்க, “என்னது டின்னர் முடிக்க நடுராத்திரி ஆகுமா என்ன? இதை ஏன் முதல்லயே சொல்லல… அங்கிள் வரேன்னு சொன்னாங்களே எங்கே…” என்று படபடத்தாள் சுமித்ரா.

கிஷோருக்கு கடுகடுவென வந்தது.

“எல்லாத்துலயும் டௌட்டா உனக்கு… இந்தா போன் நீயே அப்பாகிட்ட கேட்டுப்பாரு…” என்று அவளை முறைத்தவன் கங்காதரனின் பக்கமாகத் திரும்பினான்.

“என்மேல நம்பிக்கை இல்லன்னா, டின்னரைக் கேன்சல் பண்ணிக்கலாம் அங்கிள்!” என்றவன் தலையைக் கோதிக்கொண்டு அவருக்கு முதுகு காட்டி நின்றான்.
சுமித்ரா தயக்கத்துடன் தந்தையைப் பார்க்க, “அப்படி நாங்க எதுவும் சொல்லலையே கிஷோர். நீ இந்த வீட்டு வருங்கால மாப்பிள்ளை. உன்மேல நம்பிக்கை இல்லாமலா, என் பொண்ணை உனக்குக் கல்யாணம் செய்துகொடுக்கச் சம்மதம் சொன்னேன்” என்று நிதானமாகப் பேசினார்.

அவர் பக்கமாகத் திரும்பியவன், “சாரி அங்கிள்! உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை சுமிக்கு இல்லையே…” என்று கூறியபடி அவளைப் பார்த்தான்.

சுமித்ராவின் முகம் லேசாக கறுத்தது. அவனது இந்தப் பேச்சை அவளால் சகிக்க முடியவில்லை. அவனது நடவடிக்கை அற்பத்தனமாக தெரிந்தது அவளுக்கு. ஆனால், தந்தைக்காக அமைதியாக இருந்தாள்.

மகளின் முகத்தைப் பார்த்தே அவளது மனநிலையை உணர்ந்துகொண்ட கங்காதரனுக்குச் சங்கடமாக இருந்தது.

கிஷோரை சிறுவயதிலிருந்தே அவருக்குத் தெரியுமாதலால்… அவனைப் பற்றி நன்றாகவே அறிந்திருந்தார். மூக்கிற்கு மேலே கோபம் வரும். ஆனால், அடுத்த நொடியே அதை மறந்துவிட்டு அவர்களிடம் நட்பு பாராட்டுவான். ஆனால், அவரறியாத அவனது மறுபக்கத்தை தனது மகள் அவ்வப்போது பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை.

“அம்மாடி! கிளம்பு. நேரமாகுது” என்று மகளைச் சமாதானமாகத் தட்டிக்கொடுத்து அனுப்பினார்.

வழக்கமான புன்னகையைத் தொலைத்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தாள் சுமித்ரா.

‘இப்போதெல்லாம் அடிக்கடி இப்படிச் சந்தோஷத்தைத் தொலைத்துவிட்டு, அதைத் தேடி ஓடுவதையே வழக்கமாக்கிக் கொண்டதாக’ தோன்றியது அவளுக்கு.

“சுமி டார்லிங்! இந்த டிரெஸ் உனக்குச் சூப்பராயிருக்கு” என்றான்.

அவனது பேச்சு மனத்திற்குள் இருந்த எரிச்சலை மேலும் கிளப்பிவிட, வாயைத் திறக்காமல் அமர்ந்திருந்தாள்.

காரை ஓரமாக நிறுத்தியவன், “சுமி! என் மேல கோபமா? சாரி சாரி சாரி… இனிமேல் இப்படி எதுவும் நடக்காது. கொஞ்சம் சிரியேன். ப்ளீஸ்மா!” என்று கெஞ்சலாகச் சொன்னான்.

அவள் அமைதியாக இருக்க, “சுமி ப்ளீஸ்… உன்னைக் கோச்சிக்க எனக்கு உரிமை இல்லையா?” என்று கேட்டான்.
விழிகளை உயர்த்தி அவனைப் பார்த்தாள்.

“சுமி! ஒரு தடவை எனக்கு எக்ஸ்க்யூஸ் கொடுக்கக் கூடாதா…” என்றான்.

சட்டென திரும்பிப் பார்த்தவள், “நான் என்ன சொல்லிட்டேன்னு நீங்க ஓவர் ரியாக்ட் பண்றீங்க கிஷோர்! உங்ககிட்ட நான் இதை எதிர்பார்க்கவே இல்லை” என்றவளுக்கு கோபத்தில் மூச்சு வாங்கியது.

அவளது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“என்கிட்ட கோச்சிக்க உரிமை இல்லையான்னு கேட்கறீங்களே… அதே உரிமை எனக்கு இல்லையா…?” என்று கேட்டாள்.

அவளது பதிலைக் கேட்டதும் அவனுக்கு உச்சி குளிர்ந்து போனது.

“இருக்குன்னு தானே நானும் சொல்றேன். உனக்கு என்மேல; எனக்கு உன்மேல. நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல யாரும் கிடையாது” என்றான்.

அவனது பதிலிலிருந்த முழு அர்த்தத்தையும் உணராமல், மெலிதாகப் புன்னகைத்தாள்.

அந்த ஆடம்பர ஹோட்டலின் முன்பாகக் காரை நிறுத்தினான். வேலட் பார்க்கிங்கிற்கு சாவியைக் கொடுத்துவிட்டு, அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.

“சுமி டூ மினிட்ஸ் ரிசப்ஷன்ல உட்காரு. அப்பா வந்தாச்சான்னு கேட்டுட்டு வரேன்” என்றவன் சற்று நகர்ந்து சென்றான்.

போனை எடுத்து தந்தைக்கு அழைத்தவன், “அப்பா! எங்கே இருக்கீங்க… எங்கே இருந்தாலும் உடனே கிளம்பி ஹோட்டலுக்கு வரீங்க. ஏனா…? நீங்க ஏன் வரலைன்னு சுமி கேட்டா…” என்றவன் நடந்ததைச் சொல்லிவிட்டு, “இப்போ என் வாழ்க்கையே உங்க கைலதான் இருக்கு. அரைமணி நேரத்துல வரீங்க. டின்னரை முடிச்சிட்டு நீங்க கிளம்பிடுங்க…” என்றவன் போனை அணைத்துவிட்டு அவளருகில் வந்து அமர்ந்தான்.

“கிளம்பற நேரத்துக்கு யாரோ வந்துட்டாங்களாம். ஹாஃபனார்ல வந்துடுவாங்க. அதுவரைக்கும் நாம இங்கேயே வெயிட் பண்ணுவோம்” என்றான்.

அவளும் சரியென தலையை ஆட்டினாள்.
பத்து நிமிடம் அவள் அமர்ந்திருந்த நேரத்திற்குள் கிஷோருக்கு இரண்டு மூன்று போன் வரவும் அவன் எழுந்து சென்று பேசிக்கொண்டிருந்தான். அவளுக்கு வெட்டுவெட்டென்று அமர்ந்திருக்க, சங்கடமாக இருந்தது.

எழுந்து அவனருகில் சென்றவள், “கிஷோர்! வரும்போது ஆப்போசிட்ல ஒரு புக் ஷாப் பார்த்தேன். கொஞ்ச நேரம் அங்கே போய்ட்டு வரலாமா? எனக்கும் கொஞ்சம் கலெக்‌ஷன்ஸ் வாங்க வேண்டியிருக்கு” என்றாள்.

அவனுக்கோ புத்தகங்கள் என்றாலே அலர்ஜி.

“நீ வேணா போய்ட்டு வந்துடேன். அப்பா வந்துட்டா நான் உனக்குக் கால் பண்றேன்” என்றான்.

சரியென்றவள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த அந்தச் சாலையைக் கடந்துவரவே ஐந்து நிமிடங்கள் ஆனது.
புத்தகங்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தவள், தனக்குப் பின்னால் வந்து நின்றவனைக் கவனிக்கவில்லை.

“கடைக்கு வந்தா புக்ஸ் மட்டும்தான் பார்க்கணும்னு இல்லை மேடம்! கொஞ்சம் அக்கம் பக்கமும் திரும்பிப் பார்க்கலாம்” என்றான் மித்ரன்.

அவனது குரலைக் கேட்டதும் திரும்பிப் பார்த்தவள், “ஹலோ நீங்க எங்கே இந்தப் பக்கம்? இன்னைக்கு ஊருக்குக் கிளம்பறேன்னு சொன்னீங்க” எனக் கேட்டாள்.

“ம், கிளம்பிட்டே இருக்கேன். எதிர் ஹோட்டல்லதான் தங்கியிருக்கேன். பவி சில புக்ஸ் கேட்டா அதான் இங்கேயே வாங்கிட்டு போயிடலாம்னு வந்தேன். நீ என்ன இந்தப் பக்கம்?”

“கிஷோரோட டின்னருக்கு வந்தேன். அங்கிளுக்காக வெயிட் பண்ணிட்டிருக்கோம்” என்றாள்.

“ஓஹ்! குட்” என்றான்.

“இஃப் யூ டோண்ட் மைண்ட். நீங்களும் எங்களோட டின்னருக்கு ஜாயின் பண்ணிக்கோங்களேன் விஜய்!” என்றாள்.

“நீ கேட்டதே போதும்மா. ட்ராவல் இருக்கறதால, ஏழு மணிக்கெல்லாம் லைட்டா சாப்டுட்டேன்.”

மித்ரன் தேவையான புத்தகங்களை வாங்கிக் கொண்டதும், இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.
மீண்டும் போக்குவரத்து நெரிசல் இரண்டு நிமிடங்கள் நின்றவன், “இப்படியே நின்னா நின்னுட்டே இருக்கணும். வா” என்று வேகமாக அவளது கரத்தைப் பற்றி மறு பக்கத்திற்கு அழைத்து வந்தான்.

“ஹப்பா! கொஞ்சம் விட்டிருந்தா என்ன ஆகி இருக்கும்?”

“இன்னும் அங்கேயே நின்னுட்டிருந்திருக்கணும். சிக்னல் போட்டாலும் நிற்காம போறாங்க. அப்போ நிக்கிறவங்க அங்கேயே இருக்கமுடியுமா?” எனக் கேட்டான்.

“அதுக்காக இப்படித்தான் ஓடிவரணுமா… ஒரு நிமிஷம் எனக்குக் கண்ணைக் கட்டிடுச்சி…” என்றாள்.

சிரித்துக்கொண்டே, “ஓகே. ரிலாக்ஸ்! உன்னோட கிஷோர் வெயிட் பண்ணிட்டிருப்பார் கிளம்பு” என்று அவளை அனுப்பிவிட்டு, ஹோட்டலின் பக்கவாட்டிலிருந்த லிஃப்டை நோக்கி நடந்தான்.

சுமி ரிசப்ஷனிற்குச் சென்ற அதேநேரம், கேஷவ்நாத்தும் அங்கே வந்து சேர்ந்தார். மூவருமாக ஏதேதோ பேசிக்கொண்டே டின்னரை முடித்தனர். கிஷோர் சிரித்துப் பேசியபோதும் ஏதோ இறுக்கமாகவே இருப்பதைப் போல, சுமித்ராவிற்குத் தோன்றியது.

அடுத்த சில நிமிடங்களில் கேஷவ்நாத் கிளம்பிவிட, தாங்களும் கிளம்பிவிடுவோம் என்ற நினைப்புடன் கிஷோரைப் பார்த்தாள். அவனோ, ஹோட்டலின் பக்கவாட்டை நோக்கி நடந்தான்.
புரியாமல் அவனைப் பின்தொடர்ந்த சுமித்ரா, அவன் சென்ற இடத்தைப் பார்த்ததும் கால்கள் தள்ளாட, தயங்கி நின்றாள்.

“சுமி!” என்று கையை நீட்டியவன், அவள் திகைத்து நிற்பதைக் கண்டதும், “என்ன?” என்றான்.

“இதென்ன கிஷோர்… நைட் பப்புக்குக் கூட்டிட்டு வந்திருக்கீங்க” என்றவளது முகம் சுணங்கியது.

“ஏன்? வந்தால் என்ன?” என்றான்.

“என..க்கு இதெல்லாம் பழக்கமில்ல” என்றாள்.

அவளது கண்களை ஊடுருவியவன், “பழகிக்க” என்றபடி அவளது கரத்தைப் பற்றி விறுவிறுவென உள்ளே இழுத்துச் சென்றான்.

திகைப்பும், தவிப்புமாக அவன் பின்னால் செல்வதைத் தவிர அவளுக்கு வேறு வழி தெரியவில்லை.
வெளியில் அமைதியாகயிருந்த அந்த இடம் இப்போது, ஏதோ பாதாளக் குகை போலக் காட்சியளித்தது. வண்ண வண்ண விளக்குகளும், இசையென்ற பெயரில் காதைக் கிழிக்கும் இரைச்சலும் அவளது அச்சத்தை அதிகரித்தன.

கீழேயிருந்த கதவு ஒன்றைத் திறந்து உள்ளே சென்ற பின்பே வெளியே பார்த்தது எதுவுமே இல்லை என்பதைப் போலிருந்தது. பிரம்மாண்டமான அந்த அறையின் தரைத் தளம் முழுவதும், விளக்குகள் மின்னிமின்னி மறைந்து கொண்டிருந்தன.

போதையும், கூத்துமாக அந்த அறையே அவளுக்குப் பயங்கரமாகத் தெரிந்தது. இங்கேயே நின்றால் தனக்குப் பைத்தியமே பிடித்துவிடும் என்ற முடிவுடன் கிஷோரைப் பார்த்தாள்.

“கிஷோர்! ப்ளீஸ் கிளம்பலாம். எனக்கு இந்த ஸ்மெல்லும், இடமும் குமட்டிகிட்டு வருது” என்றாள்.
திரும்பி அவளைப் பார்த்தவன், அந்தப் பக்கமாக வந்த வெயிட்டரை அழைத்து, ஒயின் டம்ளரை எடுத்து உறிஞ்சியவனைத் திகைப்புடன் பார்த்தாள்.

ஒரே மடக்கில் வாயில் சரித்துக்கொண்டு, “மொடா குடிகாரன்னு நினைச்சிடாதே. அக்கேஷனா தான்” என்றவன் யாரையோ தேடினான்.

“ஹாய் கிஷோர்!” என்று சப்தம் வந்த திசையைப் பார்த்துக் கையை அசைத்தவன், “வா சுமி! என் ஃப்ரெண்ட்ஸ் அங்கேயிருக்காங்க” என அழைத்துச் சென்றான்.

அவன் இழுத்த இழுப்பிற்கெல்லாம் பலியாட்டைப் போலச் சென்றாள் சுமித்ரா.

அவனது நண்பர்கள் கிட்டதட்ட பத்துபேர், தங்கள் மனைவிகளுடன் வந்திருந்தனர். எல்லோருமே பணத்தில் புரளுபவர்கள் என்பது அவர்களைப் பார்த்தபோதே தெரிந்தது. முகமும், கையும் மட்டுமே தெரிய உடையணிந்திருந்த சுமிக்கு, அங்கிருந்த நவநாகரீக மங்கைகளைக் கண்டு கூச்சகமாக இருந்தது. அவர்கள், அவளைப் பார்த்து ஏதோ கிசுகிசுக்க, ‘அங்கிருந்து ஓடிவிடலாமா!’ என்றிருந்தது.

“நம்மகூட டின்னர் சாப்பிடுறேன்னு சொல்லிட்டு ஏமாத்திட்டியேடா” என்றான் ஒருவன்.

அப்போதுதான் சுமிக்கு ஏதோ புரிவது போலிருந்தது.

“சாரி ஃப்ரெண்ட்ஸ்! அடுத்தமுறை கட்டாயம் உங்க ஆசையை நிறைவேத்திடுறேன்” என்றவன் சுமியின் தோளைச் சுற்றிக் கையைப் போட்டான்.

“கிஷோர்!” அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில், உதடு பிரியாமல் அழைத்தாள்.

நிச்சயமாக அவளது குரல், அவனுக்குக் கேட்காமலிருக்க வாய்ப்பேயில்லை. இருந்தும் அவன், அவள்புறமாகத் திரும்பவேயில்லை. அவள் அவனது கரத்தை விலக்க முற்பட, அவனது பிடி இன்னும் இறுக்கமானது. அவள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே நான்காவது பெக்கை குடித்துக் கொண்டிருந்தான் அவன்.

பாம்பின் பிடியில் சிக்கிக்கொண்ட முயல்குட்டியைப் போல, மனத்திற்குள் துடித்துக் கொண்டிருந்தாள். தனது வலியைக் காட்டி எல்லோரின் பார்வைக்கும் காட்சிப்பொருளாக்கிக் கொள்ள விரும்பாதவளாக, பற்களைக் கடித்துக்கொண்டு மௌனமாக இருந்தாள். அங்கே நிலவிய கூச்சலும், அவர்களது சிரிப்பும் அவளுக்கு நாராசமாக இருந்தது.

“என்ன கிஷ்! உன் ஃபியான்ஸி பேசமாட்டாங்களா?” எனக் கேட்டாள் ஒருத்தி.

“அப்படியெல்லாம் இல்ல. அவளுக்குத் தலைவலி” என்று சமாளிப்பாகச் சிரித்தான்.

‘கிஷ்ஷாம் கிஷ்! கிஷோர்ன்னு கூப்பிட்டா வாய் சுளுக்கிக்குமா இவளுக்கு!’ என எரிச்சலாக வந்தது அவளுக்கு.

ஒருவழியாக அனைவரும் சாப்பிட்டு முடித்ததும், இன்னும் சற்றுநேரத்தில் கிளம்பிவிடலாம் என்று நினைத்தவளது எண்ணத்தில் இடிவிழுவதைப் போல, நான்கைந்து ஜோடிகள் டிஸ்கோ ஸ்டேஜை நோக்கி நடந்தனர்.

“ஹேய் கிஷோர்! எங்ககூட சாப்பிடத்தான் வரல. அட்லீஸ்ட், ஸ்டேஜுக்காவது வரலாமில்ல” என்று ஒருவன் குரல் கொடுக்க, மற்றவர் அதை வழிமொழிந்தனர்.

அவனும் மறுக்கமுடியாமல் எழ, சுமித்ரா அழுத்தமாக அமர்ந்திருந்தாள்.

“சுமி! கம்” என்றான்.

“நான் வரல” என்றாள்.

“என்னை அவமானப்படுத்தனும்னே ஒவ்வொரு வேலையும் செய்வியா” என்றான் கோபத்துடன்.

“நீங்கதான், என்னை அசிங்கப்படுத்தறீங்க” என்றவளுக்கு விழிகள் தளும்பின.

அவனுக்குள்ளிருந்த சாத்தானும், உள்ளே சென்றிருந்த போதையென்ற மிருகமும் அவனது நிதானத்தை இழக்க வைத்தது.

“நீ அழுதாலும் எழுந்து வர்ற” என்று அவளது கரத்தைப் பற்றி இழுத்தான்.

அவனது வலிமைக்கு முன்னால், அவளது மென்மையான தேகம் போராட முடியாமல் தவித்தது.

வலியில் முகத்தைச் சுருக்கியவள், “கையை விடுங்க கிஷோர்!” என்றாள்.

“ஏன்? அவன் பிடிச்சிட்டிருக்கும்போது நல்லா இருந்ததா” கிண்டலாகக் கேட்டவனை இமைக்க மறந்து பார்த்தாள்.

அவளது ஸ்தம்பித்த பார்வையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, டிஸ்கோ ஸ்டேஜிற்கு இழுத்துச் சென்றான்.

அவளது கரத்தைப் பிடித்திருந்த அவனது கரங்கள் அவளது இடையில் பதிய, அவனை ஓங்கி அறையவேண்டும் என்று எழுந்த வேகத்தை சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

“கிஷோர்! என்னோட பொறுமைக்கும் அளவிருக்கு” என்றவளது குரல் தழுதழுத்தது.

“அதையேதான் டார்லிங் நானும் சொல்றேன்” என்றவன் வேகமாக அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்தான்.

எங்கிருந்து தான் அவளுக்கு அவ்வளவு பலம் வந்ததோ, அவனை உதறித் தள்ளிவிட்டு ஒரே ஓட்டமாக வாசலில் வந்தே நின்றாள்.

எவ்வித இரைச்சலும் இல்லாம, உடலைத் தழுவிய தென்றல் காற்றும் அவளுக்குப் பெரும் ஆறுதலாக இருக்க, கண்களும் கசிந்தன. கையிலிருந்த கடிகாரத்தில் மணியைப் பார்த்தாள். பத்தரை ஆகியிருந்தது.

‘தன்னைத் தேடிக் கிஷோர் வருகிறானா!’ என்று திரும்பிப் பார்த்தாள். இவ்வளவு நடந்த பிறகும் அவளது பேதை மனம் அவன் வருவான் என்று நம்பினாள். ஆனால், அவன் வரவேயில்லை.
மனத்திலிருந்த ஆற்றாமையும், அவன் கொடுத்த ஏமாற்றமும் கண்ணீராக ஊற்றெடுத்தது.

‘இப்போது, வீட்டிற்கு எப்படிச் செல்வது? தனது கைப்பையை பப்பின் உள்ளேயே விட்டுவிட்டு வந்துவிட்டது புரிந்தது. மீண்டும் உள்ளே சென்று எடுத்துவர, சுத்தமாகத் தைரியமில்லை.
கிஷோர் அவளைத் தேடி வராததிலிருந்தே, தன்மீது பெரும் கோபத்திலிருக்கிறான் என்று அவளுக்குப் புரிந்தது.

ஏதேனும் டாக்ஸி கிடைத்தால் சென்றுவிடலாம் என்ற எண்ணத்துடன், ஹோட்டலின் லாபியை நோக்கி நடந்தாள். அவள் அங்கிருந்த பார்க்கிங் வேலட்டில் சென்று விசாரித்துக் கொண்டிருக்க, “மித்ரா!” என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

விஜய்மித்ரனைக் கண்டதுமே, அவளது மனத்திற்குள் பெரும் நிம்மதியாக உணர்ந்தாள்.

அவளது முகத்தை ஆழ்ந்து பார்த்தவன், “வீட்டுக்குத் தானே… நான் டிராப் பண்ணிடுறேன்” என்றான் இறுகிய குரலுடன்.

வேண்டாம் என்று மறுக்கவோ, இவன் எப்படித் தன் மனத்தைப் படித்தான் என்று எண்ணிப் பார்க்கவோ அப்போது அவளால் முடியவில்லை.

அவன் டிரைவர் சீட்டின் பக்கத்துச் சீட்டில் அமர்ந்துகொள்ள, அவள் பின்னால் உட்கார்ந்தாள்.
வீட்டிற்கு வரும் வரை இருவருமே எதுவுமே பேசவில்லை. மௌனமாகவே வீட்டு வாசலில் அவளை இறக்கிவிட்டான்.

பின்னாலேயே அவனும் இறங்கி நிற்க, “உள்ளே வாங்களேன்” என்றாள்.

“இருக்கட்டும். நான் இப்படியே கிளம்பறேன். அப்புறம், சாருக்கு விளக்கம் சொல்லணும்” என்றவனது முகத்தைப் பார்க்க முடியாமல், தலையைக் குனிந்துகொண்டாள்.

திரும்பி இரண்டடி நடந்தவளை, “மித்ரா!” என்றழைத்தான்.

அவள் நின்றதும் அவளருகில் சென்றவன், “வைர ஊசிங்கறதுக்காக யாரும் கண்ணுல குத்திக்கமாட்டாங்க. உனக்குப் புரியும்னு நினைக்கறேன்” என்றவன் அவளது பதிலுக்குக் காத்திருக்காமல் கிளம்பினான்.

Categories
Uncategorized

அத்தியாயம் – 10

அத்தியாயம் – 10

தன்னிடம் வெறுப்புடன் பேசி விட்டு சென்றவன் மலரின் முன்பு கண்ணீருடன் நின்றதை கண்டதும் கார்த்திகாவின் மனது பற்றி எரிந்தது. அத்தை மகளான தனக்கு இருக்கும் உரிமையை விட, மாமன் மகள் இரெண்டாம் பட்சம் தான் என்று இத்தனை நாள் எண்ணி இருந்தாள். ஆனால் இன்றோ தன்னை விட அவனுக்கு அவள் முக்கியமாக போய் விட்டாள்.

எப்படியாவது விஜயனே அவளை வெறுக்கும் படி வைக்க வேண்டும் என்று மனதில் கருவிக் கொண்டாள். இங்கே அவள் ஒன்றை மறந்து விட்டாள். தனது செயல்களுக்கு மலரிடமிருந்து எந்த எதிர்வினையும் வரவில்லை எனும் போது அவள் மீதான அன்பு கூடிக் கொண்டு தான் போகுமே தவிர குறையாது.

‘நான் இந்த வீட்டில் கல்யாணம் பண்ணி வந்த பிறகு உன் கண் முன்னாடியே அவரோட வாழறேண்டி. நீ தினம் தினம் பார்த்து பார்த்து சாகனும்டி. அதுக்காகவே உனக்கு கல்யாணம் ஆக விடாம தடுக்கிறேன்’ என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அப்போது அவளை இடித்துக் கொண்டு அங்கே வந்த பவானி “வழிவிடு! எப்பவும் அடுத்தவங்க வழியில் இடைஞ்சலா நிற்கிறதே உன் வேலையா போச்சு” என்று கடுப்படித்துக் கொண்டு தோட்டத்துக்கு சென்றாள்.

மலரும் அண்ணனும் நிற்கும் இடத்திற்கு சென்றவள் “என்ன அண்ணனே பண்ணி வச்சிருக்கே? நீ எப்படி அவளை கட்டிக்க சம்மதம் சொல்லலாம்? இதோ நிற்கிறாளே இவளுக்கு கேட்க நாதியில்லேன்னு தானே எல்லோரும் அவ வாழ்க்கையை ஏலம் போடுறீங்க?” என்றாள் கோபமாக.

தங்கையின் கேள்வியில் அதிர்ந்தாலும் “பவானி! நீ இதில தலையிடாதே! சின்ன பொண்ணு பேசாம இரு!” என்றான்.

அவனை கூர்ந்து பார்த்தவள் “யாருன்னே சின்ன பொண்ணு? இவளுக்கும் என் வயசு தானே அப்போ நான் கேட்கலாம்” என்றாள் அழுத்தமாக.

“நான் கிளம்புறேன் பவானி. இனிமே பேச எதுவுமில்ல. பேசாம போ” என்றான் எரிச்சலாக.

“நில்லுங்க அண்ணா! அவ பாட்டுக்கு அட்டூழியம் பண்ணுவா நாம எல்லாத்தையும் பொறுத்துகிட்டு போகனுமா? இது உங்க வாழ்க்கை அண்ணா. இதோ இவளுக்கு தனக்கு ஒன்னு வேணும்னு கேட்க கூட தெரியாது. நீங்க மலரை விட்டுட்டு அவளை கல்யாணம் பண்ணினா சத்தியமா உங்க கிட்ட என் உசுரு இருக்கிற வரை பேச மாட்டேன் சொல்லிட்டேன்” என்றாள் கண்களில் கண்ணீர் வழிய.

அதைக் கண்டு பதறிய மலர் “என்ன பேசுற பவானி? அவங்க மேல எந்த தப்பும் இல்ல. குடும்பத்துக்காக தன்னோட ஆசையை விட்டுக் கொடுக்கிறாங்க. நீ அவங்களுக்கு பக்கபலமா இருக்கணும் பவானி” என்றாள் அழுகையுடன்.

அவளை முறைத்துக் கொண்டே “தியாகச் செம்மலே! உன்னளவிற்கு நான் நல்லவ இல்ல. என்னால இதை மன்னிக்க முடியாது. அண்ணா நான் விளையாட்டுக்கு சொல்றேன்னு நினைக்காதீங்க. நிச்சயமா உங்க கிட்ட ஒரு வார்த்தை பேச மாட்டேன். அவளையும் அண்ணியா ஏத்துக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றாள்.

அவள் சென்றதும் இருவருக்கும் மூச்சு முட்டுவது போலிருந்தது. அந்த சூழலே அனலில் நிற்பது போல் தோன்றியது. ஒருவர் மீது ஒருவர் ஆசை வைத்தது பாவமென்றால் விருப்பமே இல்லாத ஒருத்தி அதை உடைத்து பார்க்க நினைப்பது எத்தகைய பாவம்? சற்று நேரம் அப்படியே நின்றவன் தலையை அழுந்தக் கோதிக் கொண்டு அங்கிருந்து எதுவும் பேசாமல் சென்றான்.

மலரோ அங்கிருந்த படியில் அப்படியே அமர்ந்து விட்டாள். இனி, வரும் நாட்களில் இந்த வீட்டின் நிம்மதி பறி போகும் என்பதற்கு சாட்சியாக பவானி பேசி விட்டு சென்றிருக்கிறாள். அவர்களின் திருமணத்திற்கு தன்னால் இங்கிருக்க முடியுமா? அவர்களின் வாழ்க்கையை கண் கொண்டு பார்க்க முடியுமா? அதை தன்னால் தாங்க இயலுமா? என்று எண்ணி நடுங்கினாள்.

போக்கிடத்திற்கு கூட வழியில்லாமல் போன தன் நிலையை எண்ணி கலங்கினாள்.

பிரபாவும் தனது அண்ணன் மகளை எண்ணி ஒருபுறமும், தன் மகனின் திருமண வாழ்வை எண்ணி சோர்ந்து போய் அமர்ந்திருந்தார். தனது மகனின் திருமணத்தை தன் விருப்பத்திற்கு ஏற்ப செய்ய இடமில்லாமல் என்ன வாழ்க்கை இது? இந்த வீட்டிற்கு வாழ்க்கைப்பட்டு வந்தது முதல் மாமியாரின் பேச்சை மீறி எதையும் செய்து விடவில்லை. தனக்கான மரியாதை எங்கேயும் தரப்படவில்லை என்று தெரிந்தாலும் இது தான் பெண்களின் வாழ்க்கை என்று அதை அப்படியே ஏற்றுக் கொண்டார்.

அந்த வீட்டில் சமையல்கட்டு தான் அவரது நிரந்தர இடம். அங்கே கூட அங்கம்மாளின் ஆதிக்கம் தான். அவர் சொன்னவற்றை மட்டுமே சமைக்க முடியும். மொத்தத்தில் அந்த வீட்டின் அடிமையாக மட்டுமே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார். கணவரின் அன்பிருந்தாலும் அன்னையை மீறி அவரால் எதுவும் செய்து விட முடியாது. அதிலும் அலமேலு விஷயத்தில் அங்கம்மாள் அதி தீவிரமாக இருப்பார்.

இப்போது பிரபாவின் எண்ணமெல்லாம் விஜயன், கார்த்திகா திருமணத்திற்கு முன்பு மலரின் திருமணத்தை முடித்து அங்கிருந்து அனுப்பி விட வேண்டும் என்பது தான். கார்த்திகா திருமணமாகி வந்துவிட்டால் மலரின் நிலை இங்கு கவலைக்கிடமாக மாறி விடும் என்று எண்ணி இதை யோசித்தார். ஆனால் தன் எண்ணத்தை எப்படி நிறைவேற்றுவது என்று புரியாமல் அமர்ந்திருந்தார்.

எப்படியாவது அனைவரையும் சமாதானம் செய்து அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து அங்கிருந்து அனுப்பி விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.

தண்ணீர் குடிக்க உள்ளே நுழைந்தவன் அன்னை அமர்ந்திருந்த கோலத்தைக் கண்டு மனம் வருந்தினான்.

“அம்மா! ஏன் இருட்டில உட்கார்ந்திருக்கீங்க?” என்றவன் குடத்திலிருந்து தண்ணீரை எடுத்து அருந்த ஆரம்பித்தான்.

கலங்கியிருந்த கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து வந்தவர் “என் பிள்ள வாழ்க்கையே இருட்டாகப் போகுது. நான் இருட்டில் உட்கார்ந்திருந்தா என்ன?” என்றார் சோர்வாக.

குடித்து கொண்டிருந்த தண்ணீர் செம்பை கீழே வைத்து விட்டு அன்னையின் அருகில் சென்றவன் “அம்மா! தயவு செஞ்சு கலங்காதீங்க! இன்னும் எதுவும் கெட்டுப் போகல. நான் மாமா வந்ததும் பேசி பார்க்கிறேன்” என்றான்.

அதுவரை இருந்த சோர்வு நீங்கி விரிந்த விழிகளுடன் “அவர் ஒத்துக்குவாரா விஜயா? பொண்ணுக்காக பார்ப்பாரா?” என்றார் பதட்டமாக.

“இல்லம்மா! அத்தையை விட மாமா தெளிவா யோசிப்பார். விரும்பாத மாப்பிள்ளைக்கு கட்டி வைக்க நிச்சயம் ஒத்துக்க மாட்டார். நீங்க அமைதியா இருங்க” என்றான்.

“எல்லாம் கூடி வந்தா நம்ம குலதெய்வத்துக்கு பொங்க வைப்போம் விஜயா” என்றார் சற்றே உற்சாகமான குரலில்.

அன்னையை உற்சாகப்படுத்த கூறினாலும் அவன் மனதில் உறுதியாக அது நடந்து விடும் என்று தோன்றவில்லை. மூன்று பெண்களும் தங்களின் ஆசைக்கு விஷத்தை வைக்கவே முயற்சிப்பார்கள் என்றே தோன்றியது. அதை வெளிக்காட்டாது “ம்ம்..சரிம்மா” என்று கூறிவிட்டு தன்னறைக்குச் சென்றான்.

எண்ணங்கள் அவனை சூழ்ந்து கொள்ள ஆரம்பித்தது. மலர் பெற்றோர் இன்றி அடைக்கலமாக தங்கள் வீட்டிற்கு வந்த நாளில் இருந்து அவள் மீதான அன்பு மலரத் தொடங்கி இருந்தது. ஆரம்பத்தில் பவானியிடம் காட்டும் அக்கறை போன்றிருந்தது வளர வளர அவள் மீதான ஈர்ப்பாக மாறியது. அவளது மென்மையான சுபாவமே காதல் கொள்ள வைத்தது. அதிர்ந்து பேசாத குணமும், அன்பாக நடந்து கொள்ளும் விதமும் அவனது மனதை புரட்டி போட்டது.

தங்களது ஆசைக்கு பாட்டியிடம் இருந்து தான் எதிர்ப்பு வரும் என்று நினைத்தான். ஆனால் கார்த்திகா தங்கள் வாழ்வில் குறுக்கே வருவாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவளுடனான திருமணத்திற்கு சம்மதம் சொல்லி விட்டாலும், அவளை மனைவியாக எண்ண முடியவில்லை. அதிலும் அவள் நடத்திக் கொண்டிருக்கும் நாடகத்தை நினைத்து வெறுப்பு தான் வந்தது.

எப்படியாவது மாமாவிடம் பேசி அவருக்கு புரிய வைத்து இந்த திருமணத்தை நிறுத்தி விட வேண்டும் என்று யோசித்தான். அதே நேரம் அன்னையும், மகளும் சதியாலோசனையில் இறங்கி இருந்தார்கள்.

“இங்க பாருடி நாளைக்கு அப்பா வந்தவுடனே அவர் கண்ணுல நீ பட்டுடாதே. நான் முதல்ல அழைச்சிட்டு போய் எல்லா விஷயத்தையும் சொல்லி சரி பண்ணிடுறேன். அதுக்கு பிறகு நீ அவரை பார்க்க வா” என்றார் அலமேலு.

“அப்பா ஒத்துக்குவாராம்மா?”

“ம்ம்..அவரை ரொம்ப யோசிக்க விடக் கூடாடி. நான் ஒன்னு சொல்றேன் கேளு. நீ வந்து அப்பாவை பார்க்காதே. படுக்கையிலேயே இரு. கிணத்துல விழுந்ததுல உடம்புல அடின்னு சொல்லிடுறேன். அப்போ தான் பதறி போவாரு” என்று மகளுக்கு தவறான வழியை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார் அலமேலு.

அவர் சொன்னதைக் கேட்டதும் “ஆமாம்ம்மா இப்படி பண்ணினா தான் அப்பா பயந்து போய் ஒத்துக்குவார்” என்றாள் உற்சாகமாக.

சற்றே யோசனையுடன் மகளை பார்த்தவர் “அதுக்கு முன்னே நமக்கு ஒரு வேலை இருக்கு கார்த்தி. உங்க கல்யாணத்துக்கு முன்னே அந்த குட்டியை இங்கிருந்து விரட்டி விட்டுடனும். அப்போ தான் உன் வாழ்க்கை நிம்மதியா இருக்கும்” என்றார்.

“என்ன சொல்றம்மா?”

“ஆமாடி! அவளுக்கு ஏதாவதொரு மாப்பிள்ளையை பார்த்து ஒட்டி விட்டுடுவோம்”.

“வேண்டாம்மா! அவ இந்த வீட்டுலையே இருக்கனும்மா! நாங்க வாழறதை பார்த்து அவ வயிறு எரிஞ்சு சாகனும்” என்றாள் இறுகிய குரலில்.

மகளை முறைத்தவர் “புரியாம பேசாதே கார்த்தி! விஜயன் விருப்பபட்டு இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கல. அரை மனசா இருக்கிற ஆம்பளையை கைக்குள்ள போட்டுகிறது ரொம்ப கஷ்டம். அதுவும் அவன் விரும்பின பொண்ணு முன்னாடி இருக்கும் போது. அதனால அவளை தாட்டி விட்டா தான் உன் வாழ்க்கை சரியா போகும்” என்றார்.

“இல்லம்மா! எனக்கு என் வாழ்க்கையை காப்பாத்திக்க தெரியும். மாமாவை எப்படி என் பின்னாடி சுத்த வைக்கனும்னு தெரியும். ஆனா அவ அதெல்லாம் இங்கிருந்து பார்க்க்கனும். அதனால அவ கல்யாண பேச்சை எடுக்காதீங்க. அப்படியே வந்தாலும் அதை எப்படியாவது தடுத்திடுங்க” என்றாள்.

மகளின் முகத்தை வழித்து நெட்டி முறித்தவர் “இப்போ தாண்டி என் பொண்ணுன்னு நிரூபிக்கிற. நீ பாட்டுக்கு அவ பின்னாடி சுத்திட்டு இருந்தியேன்னு கவலையா போச்சு. என்ன இருந்தாலும் மாமனை கட்டிக்கிட்டு இங்கே ஆட்சி செய்ற மாதிரி வருமா சொல்லு” என்றார்.

“ம்ச்…எனக்கு அப்போ புரியலம்மா. இப்போ தான் தெரியுது. நீ சொன்ன மாதிரி வெளில கட்டி கொடுத்தா இந்த மாதிரி இருக்க முடியாது. அதுவும் இங்கே பாட்டி எனக்கு தான் ஆதரவா இருப்பாங்க. அத்தையும் ஒரு ஊமை. நான் தான் ராணி மாதிரி இருப்பேன் இங்கே” என்றாள்.

“இனி, உன்னைப் பத்தி எனக்கு கவலையில்ல கார்த்தி. உங்கப்பாவை ஒத்துக்க வச்சிட்டா போதும்” என்று கூறி நிம்மதியாக தலையை சாய்த்தார்.

ஒரு திருமண பந்தத்திற்கு தேவை இரு மனங்களின் அன்பு. ஆனால் இங்கு நடப்பதோ விருப்பமில்லாமல் ஒருவனை அந்த பந்தத்திற்குள் நுழைக்க முயலுகிறார்கள். தாலியை கட்டி விடலாம் ஆனால் வாழ்க்கையை அவன் தானே வாழ வேண்டும். அதை அந்த பிடிவாதக்காரி உணரவில்லை. அவனை மிரட்டி தாலி கட்டிக் கொண்டாள் வாழ்ந்து விடலாம் என்று பைத்தியகாரத்தனமாக எண்ணுகிறாள்.

அவளின் அர்த்தமற்ற பிடிவாதத்தால் கெடப் போவது அனைவரின் நிம்மதியும் என்பதை அவள் உணரவில்லை. உணரும் போது அனைத்தும் கடந்து போயிருக்கும்.

விடியலுக்காக ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதத்தில் காத்திருந்தனர்.

விடிந்ததும் தில்லையும், விஜயனும் வயலுக்குப் போய் விட, அங்கம்மாள் மட்டும் கூடத்தில் அமர்ந்திருந்தார். அப்போது ஸ்டேஷனுக்கு போன வில்லு வண்டி வந்து நிற்க, அதிலிருந்து இறங்கினார் சண்முகம்.

மாப்பிள்ளையின் தலை தெரிந்ததும் “அலமு! மாப்பிள்ளை வந்தாச்சு பாரு” என்று குரல் கொடுத்தார்.

தோளில் துண்டை உதறி போட்டுக் கொண்டு உள்ளே வந்தவர் பவ்யமாக நின்று கொண்டிருந்த அங்கம்மாளிடம் “நல்லா இருக்கீங்களா?” என்றார்.

“நல்லா இருக்கேன் உட்காருங்க மாப்பிள்ளை” என்று கூறினார்.

அவர் அமரவும் சமயலறையில் இருந்து அவசரமாக தண்ணீர் செம்புடன் வந்த பிரபா “வாங்க அண்ணா” என்றார்.

“ம்ம்…நல்லா இருக்கியாம்மா” என்று கேட்டுவிட்டு தண்ணீரை அருந்தினார்.

அதற்குள் அலமேலு அறையிலிருந்து வேகமாக அங்கே வந்தார்.

“வாங்க…வந்துடீங்களா?” என்று கேட்டவரின் குரலில் அழுகையின் சாயல்.

பிரபாவிற்கும், அங்கம்மாளிற்கும் எதற்கு இந்த அழுகை என்று புரியாமல் பார்த்தனர்.

சண்முகமோ “பிள்ளை எங்க அலமு உறங்கராளா?” என்றார்.

அதைக் கேட்டதுமே விம்மி வெடித்து அழ ஆரம்பித்தார்.

சண்முகத்திற்கு ஒன்றும் புரியவில்லை “என்னாச்சு அலமு எதுக்கு அழுகுற?” என்று அதட்டினார்.

“நீங்களே வந்து பாருங்க உங்க பிள்ளைய” என்று புடவை தலைப்பால் வாயை பொத்திக் கொண்டு அழுதார்.

சண்முகத்துக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. அங்கம்மாளும் இவ ஏன் இப்படி கண்ணை கசக்குறா கார்த்தி நல்லாத்தானே இருந்தா என்று யோசித்தார்.

அழுகையுடன் கணவரை கூட்டிக் கொண்டு அறைக்கு சென்றார். அங்கு கார்த்தி நலிந்து போய் படுத்திருப்பதை கண்டதும் பதறி போனவர் “என்னாச்சு கார்த்திக்கு?” என்றார் கோபத்தோடு.

ஓவென்று அழுகையுடன் “கிணத்துல குதிச்சிட்டாங்க” என்றார்.

“என்னது!”

“ஆமாங்க! மாமனை கட்டிக்கணும்னு அம்மா கிட்ட சொல்லி இருக்கா. அதுக்கு அம்மா உங்கப்பா விஜயனுக்கு கொடுக்க விரும்ப மாட்டாங்கன்னு சொன்னாங்க. அதனால கிணத்துல குதிசிட்டா” என்று தனது கதையை எடுத்து விட்டார்.

மகளின் நிலை கண்டு கலங்கி போய் நின்றார் அந்த தந்தை. அதன் பின்னே உள்ளே நாடகத்தை அவர் அறியார்….

Categories
Uncategorized

அத்தியாயம் – 9

அத்தியாயம் – 9

மகனிடம் பேசி விட்டு வீடு நோக்கி சென்றவருக்கு அன்னையிடம் பேசிவிட பலத்த யோசனை. தான் சொல்லப் போவதை அவர் எப்படி எடுத்துக் கொள்வார்? சூழ்நிலையை உணர்ந்து முடிவெடுப்பாரா? கார்த்திகா இதற்கு என்ன செய்வாள் என்று பல்வேறு யோசனையுடன் வீடு சென்றார்.

கூடத்தில் சென்றமர்ந்தவர் “பிரபா கொஞ்சம் தண்ணி கொண்டு” என்று மனைவியை அழைத்தார்.

ஒரு சிறிய செம்பில் தண்ணீர் கொண்டு வந்த பிரபாவின் முகம் களையிழந்து காணப்பட்டது.

மனதிலிருந்த சோர்வில் அவர் கொடுத்த தண்ணீரை வாங்கி மடமடவென்று குடித்தவர் “அம்மா எங்க இருக்காங்க?” என்றார் மனைவியிடம் செம்பை கொடுத்துவிட்டு.

“அவங்க அறையில தான் இருக்காங்க” என்று கூறிவிட்டு சமயலறைக்கு சென்றார் பிரபா.

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அன்னையின் அறை நோக்கி சென்ற கோவிந்தன் அங்கம்மாள் அமர்ந்திருந்த நாற்காலிக்கு எதிரே சென்றமர்ந்தார்.

மகனின் முகத்தைப் பார்த்தே அவர் ஏதோ முக்கியமாக பேச வந்திருப்பதை கண்டு கொண்டவர் “என்ன கோவிந்தா? என்ன விஷயம் முகம் சோர்ந்து போயிருக்கே?” என்றார்.

அன்னையை யோசனையுடன் நோக்கியவர் “இந்த கல்யாணத்தைப் பத்தி தான் பேசனும்மா” என்றார்.

கூர்மையாக மகன் முகத்தை ஆராய்ந்தவர் “மாப்பிள்ளை வந்ததும் அலமேலுவை விட்டு பேசி சீக்கிரம் முஹுர்த்த தேதியை குறிக்கனும்” என்றார்.

லேசாக தாடையை தடவிக் கொண்டு “அம்மா! நான் சொல்றதை கொஞ்சம் சரியா புரிஞ்சுக்குங்க. கொஞ்ச நேரம் அமைதியா கேளுங்க” என்றார்.

எதுவும் பேசாது அவரையே சிறிது நேரம் பார்த்தவர் “ம்ம்..சொல்லு” என்றார்.

“எனக்கும் கார்த்திகா மேல அக்கறை இருக்கு. அதுக்காக அவ மட்டும் ஆசைப்படுற காரணத்துக்காக விஜயன் வாழ்க்கையை பணயம் வைக்கணுமா?”

சற்று நேரம் அமைதியாக இருந்தவர் “நம்ம குடும்பத்துக்கு யார் மருமகளா வரணும்னு நாம தான் முடிவு பண்ணனும். அவன் ஆசைப்படுகிறவளை விட அவன் மேல ஆசை வச்சிருக்கிறவளால அவன் வாழ்க்கை கெட்டுப் போகாது” என்றார் அழுத்தமாக.

அன்னையின் கூற்றில் ஒரு நிமிடம் அதிர்ந்தவர் “அம்மா! உங்களுக்கு விஜயன் மலரை விரும்புறது தெரியுமா?” என்றார்.

கோபமாக அவரை முறைத்து “எது நடக்க கூடாதுன்னு நினைச்சு அந்தப் பெண்ணை வளர்க்க வேண்டாம்னு சொன்னேன்னோ அது நடந்திருக்கு. நானும் இந்த வீட்டில் தான் இருக்கேன் கோவிந்தா. என் கண்ணில் எதுவும் தப்பாது. ஆனா மலர் இந்த வீட்டுக்கு மருமகளாக முடியாது!” என்றார்.

அன்னையின் கோபத்தைக் கண்டு அதிர்ந்தவர் “அம்மா! நீங்க இத்தனை நாள் அந்த பொண்ணு மேல காட்டின துவேஷத்தை சாதரணமா நினைச்சிட்டேன். உங்களுக்கு ஏன் அவ மேல இவ்வளவு வெறுப்பு. ரொம்ப நல்ல பொண்ணும்மா. விஜயன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னா அவளை கட்டி வச்சா தான் நல்லாயிருக்கும்” என்றார்.

“கோவிந்தா! நிறுத்து! இதுக்கு மேல பேசினா என்ன செய்வேன்னு தெரியாது. இந்த வீட்டுக்கு மருமக என் பேத்தி தான். இதை மாற்ற நினைக்காதே” என்று கூறி விட்டு அறையை விட்டு வெளியேறினார்.

அன்னையின் கோபம் கண்டு சோர்ந்து போனவர் அறையை விட்டு வெளியேறும் நேரம் அலமேலு அழுத கண்களோடு அவர் முன் வந்து நின்றார்.

“ஏன் அண்ணே என் பொண்ணு உன் பையனுக்காக கிணத்துல குதிச்ச பிறகும் அவளை கட்டி வைக்க உனக்கு மனசு வரல இல்ல” என்று கத்தி அழ ஆரம்பித்தார்.

அவரது அழுகையைக் கண்டு கோவிந்தனுக்கு சங்கடமாக போய் விட்டது.

“என்ன இது அலமு! நான் அப்படி சொல்லவே இல்லையே” என்று சமாளித்தார்.

அவரோ “பொய் சொல்லாத அண்ணே. நான் தான் நீங்க பேசினதை கேட்டேனே. மலரை கட்டி வைக்கனும்னு நீங்க சொல்லல” என்று ஆர்பாட்டம் செய்ய ஆரம்பித்தார்.

அவரின் அழுகுரல் கேட்டு வீட்டினர் அனைவரும் அங்கு கூடிவிட, அங்கம்மாள் மகளை சமாதானப்படுத்த முயல, கார்த்திகாவோ மாமனை பார்த்து “ஏன் மாமா அம்மாவை அழ வைக்கிறீங்க? இதெல்லாம் வேண்டாம்னு தானே கிணத்துல விழுந்தேன். எதுக்கு என்னை காப்பாத்துனீங்க? நான் செத்திருந்தா உங்க விருப்பம் போல நடந்திருக்கலாமே” என்றாள் அழுகையுடன்.

கோவிந்தனோ அப்போதும் விடாது “என்னம்மா கார்த்தி இப்படி பேசுற? எனக்கு எல்லோரும் ஒன்னு தானம்மா. உன் வயசுக்கு அவசரப்பட்டு முடிவெடுக்கிற. ரெண்டு பக்கமும் ஆசை இருந்தா சரி. ஒருத்தரை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்றது என்ன சந்தோஷத்தைக் கொடுக்கும் சொல்லு?” என்றார்.

அதைக் கேட்டதும் அதுவரை மௌனமாக கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த அலமேலு ஓவென்று தலையில் அடித்துக் கொண்டு “என் பெண்ணை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்ட அண்ணே? அவ என்னவோ விஜயன் கையைப் பிடிச்சு இழுத்து கட்டிக்க சொன்ன மாதிரி சொல்றியே உனக்கே வெட்கமா இல்லையா? என் பொண்ணு என்ன ஒன்னுமில்லாதவளா? எனக்கு நல்லா வேணும்னு என் பொறந்து வீட்டு சொந்தம் வேணும்னு வந்து நின்னதுக்கு இதை விட அசிங்கப்படுத்த முடியாது” என்று கத்த ஆரம்பித்தார்.

அங்கம்மாளுக்கு மகன் பேசியதில் படுபயங்கரமாக கோபம் வர “கோவிந்தா! என்ன பேசுறேன்னு புரிஞ்சு தான் பேசுறியா? உன் பையனுக்காக அவ உசுரையே விட தயாரா இருக்கா அதை கூட புரிஞ்சுக்கலேன்னா நீ எல்லாம் பெரிய மனுஷன்னு சொல்லிக்காதே” என்றவர் அலமேலு பக்கம் திரும்பி “சும்மா கத்துறதை நிறுத்திட்டு மாப்பிள்ளை வந்தா பேசி நாளை குறிக்கப் பாரு…அப்புறம் யாரு இந்தக் கல்யாணத்தை தடுக்கிறாங்கன்னு பார்க்கிறேன்” என்றவர் ஓரமாக நின்று கையை பிசைந்து கொண்டிருந்த பிரபாவை முறைத்தார்.

தான் எதுவுமே செய்யாமல் கையாலாகாமல் நின்றிருக்கும் போது எதற்கு இந்த தேவையில்லாத பேச்சு? நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களில் பாதிப்பென்னவோ தனக்கு தான். ஆனால் பழி என்னவோ தன் மேல் விழுந்து கொண்டிருக்கிறது என்றெண்ணி வழக்கம் போல தனது துயரத்தை விழுங்கிக் கொண்டு நின்றார் பிரபா.

மலரோ கொல்லைபுற கதவருகே நின்று  நடந்த அனைத்தையும் பார்த்து விட்டிருந்தாள். அவளது மனமோ சூனியமாக இருந்தது. என்று அவன் திருமணத்திற்கு சம்மதம் சொன்னானோ அன்றே அவளது மனம் மரணித்திருந்தது. இப்போது நடப்பவைகளை எல்லாம் ஒரு பார்வையாளராக மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள். உடலும், மனமும் உயிரற்று போய் நாட்கள் ஆகிறது.

கார்த்திகாவின் செயல்களை எண்ணி அவள் மீது கொண்டிருந்த நட்பிற்கு அவள் செய்த துரோகத்தை எண்ணி நெஞ்சம் விம்மியது. விரும்பாத ஒன்றை அடைய எதற்காக இத்தனை பிரயத்தணப்படுகிறாள். அதனால் இவளுக்கு என்ன கிடைக்கப் போகிறது? யாருக்கும் மகிழ்ச்சியைத் தராத வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டு அதில் என்ன சாதிக்க நினைக்கிறாள்? என்று எண்ணிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அங்கம்மாள் சமாதானப்படுத்த முயற்சிக்க, அலமேலுவோ ,மகளைக் கட்டிக் கொண்டு ரகளை செய்தார். அவரது ஆர்ப்பாட்டத்தைக் கண்டு அங்கம்மாளுக்கே அலுத்துப் போனது. சிறிது நேரம் அவர் ஆட்டத்துக்கு ஆடியவர் அடங்காமல் அழுது கொண்டிருப்பவரை கண்டு “அலமு! நிறுத்து! சும்மா அழுது ஆகாத்தியம் பண்ணாதே! முதல்ல கண்ணைத் துடை. எதுவும் கையை மீறி போகல. என் பேரன் உன் பொண்ணுக்கு தான். நல்ல காரியம் நடக்க வேண்டிய வீட்டில் ஒப்பாரி வைக்காதே” என்று அதட்டினார்.

Categories
Rajeswari Sivakumar Uncategorized

அத்தியாயம் – 7

எபி 7
பிரியாவின் வீட்டிலிருந்து மதியம் கிளம்புவதாக இருந்தவர்கள், ‘இரவு கிளம்பலாம்’ என ஹரி சொன்னதும் புதுமணத்தம்பதியரை அப்போது வர சொல்லி,மல்லிகா அவரின் கணவருடன் அங்கே சென்று வேண்டியதை கவனிப்பதாக சொல்லி மதியமே சென்றார்.
அவன் இப்படி சொன்னது தன்னக்காகத்தான் என்பதை பிரியா அறிந்ததால்…தனக்காக இவ்வளவு பார்க்கும் ஹரிக்கு ‘தொல்லைக் கொடுக்காமல் இருக்கவேண்டும்’ என எண்ணிக் கொண்டாள்.அவளின் இந்த நல்லெண்ணமே ஹரிக்கு பிற்காலத்தில் வருத்தத்தை வரவைக்கப் போகிறது… என்பதை பேதை இவள் அறிவாளா?
இரவு சீக்கிரமா உணவுண்டு ஹரியும்,பிரியாவும் அவனின் காரிலேயே அங்கிருந்து கிளம்பி,தங்களின் வீட்டை சென்றடைந்தனர். அவனின் வீடு,அண்ணா நகரில் உள்ள ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் மூன்றாம்மாடியில் இருந்தது.
தம்பதினருக்கு ஆலம் சுற்றி அவர்களை உள்ளே அழைத்த மல்லிகா,பிரியாவின் பயத்தை அவளின் கண்ணில் கண்டு,சிறிது நேரம் அவளை தன்னுடனே அமர்த்தி பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
ஹரியைப் போலவே அவனின் அம்மாவும் கலகலப்பாக பேசவே,பிரியாவிற்கு நேரம் சுவாரசியமாக போனது.அவள் சற்று தெளிந்ததைப் போல தோன்றவே மல்லிகா, ”பிரியா! மீதிய நாம நாளைக்கு பேசிக்கலாம். இப்ப நேரம் ரொம்ப ஆகிப்போச்சு. நீ போய் படுமா!”என்றார்.
அதற்கு தலையாட்டிய பிரியா,”அத்தை நாளைக்கு நான் எத்தனை மணிக்கு எழுந்துக்கனும்?” என சிறுப்பிள்ளைப் போல கேட்டதும்,
சிரித்துக்கொண்டே மல்லிகா,”உங்க ப்ரொபசர் கிட்ட பேசறதைப்போல ஏன் நீ என்கிட்ட பேசற? உங்க அம்மாக்கிட்ட எப்படி இருப்பியோ அப்படியே என்கிட்டயும் இரு.இந்த மாதிரி எல்லாத்துக்கும் பயந்துக்கிட்டு நீ இருந்தா ஹரி உன்னை ஈஸியா ஏமாத்திடுவான்-மா.”என அவளுக்கு கொஞ்சம் தைரியம் சொல்லி,”ம்ம்ம்ம்… உனக்கு எப்போ தூக்கம் தெளியுதோ அப்ப எழுந்துக்கோ! ஒன்னும் பிரச்சனை இல்லை”என்றார்.
“ம்ஹும்… அதெல்லாம் தானா தெளியாது.அலாரம் வச்சு அதை அலறவிட்டாதான் தெளியும்!”என அசடு வழிந்துக்கொண்டே சொல்லிய பிரியாவைப் பார்க்க மல்லிகாவுக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை.
“அப்ப ஒரு ஏழுமணிக்கு எழுந்துக்க முடியுமா உன்னால?” என்றதும்,
“ஆஆஆ…. அவ்வளவு நேரம் தூங்கலாமா நான்!அம்மா என்னை டெய்லியும் ஆறு மணிக்கு எழும்பிடனும்ன்னு ஆயிரம் தடவை சொல்லி… சொல்லி அனுப்பினாங்க. நீங்க என்னை ஏழுமணி வரை தூங்க சொல்றீங்க! நீங்க சோ… ஸ்வீட் அத்தை .’ஐ லவ் யு… அத்தை! எனக் கூறி மல்லிகாவின் கன்னத்தில் இவள் ஒரு முத்தத்தை வைக்கவும், அதற்கு சொந்தக்காரன், ரொம்ப நேரமாய் அறைக்கு அவள் வராததால் அவளை தேடி அங்கு வந்து, அவளை முறைக்கவும் சரியா இருந்தது.
ஹரியின் பார்வைக்கு அர்த்தம் அவனின் பாவைக்கு வேண்டுமென்றால் புரியாமல் இருக்கலாம்… ஆனால் அவனின் அன்னைக்கு மிகச்சரியாக புரிந்தது.
ஒரு நமுட்டு சிரிப்புடன் அவர்,”என் பையன்கிட்ட சொல்லவேண்டியதை மாத்தி என்கிட்ட சொல்றியா பிரியா?” விஷமமாய் கேட்டார்.
இதற்கு ‘அவளின் பதில் என்னவாக இருக்கும்!’ என அறிய ஆவலாக ஹரி அவளையே பார்க்க,”சேச்சே!அப்படியெல்லாம் இல்ல அத்தை.நாம நிஜமா மனசுல பீல் பண்ணாதானே அது வார்த்தையா வாயில வரும்! இப்ப அப்படி உங்ககிட்ட சொல்லனும்னு தோணுச்சி அதான் சொல்லிட்டேன்.மாத்தி எல்லாம் ஒன்னும் நான் சொல்லலை!” என அப்பாவியாக விளக்கம் கொடுத்து உள்ளே செல்ல,
அதைக்கேட்ட ஹரி சொன்னவளை விட்டுவிட்டு, மல்லிகாவை முறைக்க, அவரோ… அடக்கமாட்டாது சிரித்தார்.
“என்ன சிரிப்பு வேண்டிகிடக்கு உங்களுக்கு! ஒரே பூரிச்சிப் போய் சிரிக்கறீங்க! மருமக உங்களை லவ் பண்றேன்னு சொன்னதும் பொங்கி-பொங்கி சிரிப்பு வருதா?அதைப் பையனைப் பார்த்து சொல்லலையேன்னு கொஞ்சமாவது வருத்தம் இருக்கா உங்களுக்கு?” என செம்மக் கடுப்புடன் தாயிடம் காய்ந்தான் ஹரி.
“டேய்… என்னடா இது அநியாயமா இருக்கு! சொன்னவளை விட்டுட்டு என்கிட்ட கோபப்படற! நானா அவளை, அப்படி சொல்ல சொன்னேன்” என அவனை மேலும் வம்பிழுத்தார் மல்லிகா.
“ஆமா…! இவ்வளவு நேரமா நைசா அவகிட்ட எதை எதையோ பேசி நீங்க தான் அவளை அப்படி சொல்ல வச்சியிருக்கீங்க!”என இவன் அவரின் மேல் அநியாயமாய் குற்றம் சுமத்த,
“அதையே நீயும் ஃபாலா பண்ணி உன்கிட்டயும் சொல்ல வைத்தால் நான் இதைவிட இன்னும் சந்தோஷப்படுவேன் ஹரி!” என அவர் அமைதியாக சொல்லி,”ஹரி!அவ இன்னும் குழந்தையா தான் நடந்துக்குறா.அவளை நீதான் பத்திரமா பார்த்துக்கனும்.நீ ரொம்ப பொறுப்பானவன்னு நம்பித்தான் நான் உனக்கு இப்ப அவசரமா கல்யாணம் பண்ணி வச்சேன். அம்மா நம்பிக்கையை நீ காப்பாத்தனும் ஹரி!”என்றார்.
“அதெல்லாம் இந்த ஹரி ஜமாச்சிடுவான் மல்லி மேடம்! நீங்க எதுக்கும் கவலைப் படாதீங்க!” என அசால்ட்டாய் சொல்லி தன்னறைக்கு சென்றான்.
அறையில் அவளின் பெட்டிகளிடம் அமர்ந்துக்கொண்டிருந்தவளைப் பார்த்து,”ஹேய் லக்ஸ்!என்ன… எங்க அம்மாக்கு கவனிப்பெல்லாம் ஸ்பெஷலா இருக்கு! என்ன மேட்டர்!” என்றான்.
‘தான் சொன்னதையும்,செய்ததையும் அவன் கவனிக்கவில்லை’ என நினைத்திருந்த பிரியா,இக்கேள்வியில் சிறிது தடுமாறித்தான் போனாள்.பின் நடந்ததை அவள் சொல்ல,
அதைக்கேட்டவன்,”நான் கூடத்தான் அன்னைக்கு இதையே சொன்னேன்.அப்ப எனக்கு இந்த ஸ்பெஷல் கவனிப்பெல்லாம் கிடைக்கலையே… அது ஏன் லக்ஸ் மீ! ம்ம்ம்… சொல்லு… அப்ப ஏன் எனக்கு இதெல்லாம் கிடைக்கலை?” எனக் கேட்டுக்கொண்டே அவளருகில் செல்ல,
அவனின் குரலிலும் முகத்திலும் கோபமின்றி குறும்பே நிறைந்திருப்பதைப் கண்டு இவளும்,”ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் எல்லாம் கேட்டு கேட்டு வாங்ககூடாது! எப்ப தேவையோ அப்ப அதெல்லாம் தானாக் கிடைக்கும்!” என்றாள்.
அவளின் பதிலில் மகிழ்ச்சியடைந்த ஹரி,”வாங்கறேன்!நிச்சயமா வாங்கறேன்! ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்டை கூடிய சீக்கிரம் இதே வாயில் இருந்து வாங்கிக் காட்றேனா இல்லையான்னு நீயும் பாக்கத்தானே போற லக்ஸ் மீ!” என்றான்.
அதற்கு,“மகிழ்ச்சி!” என சொல்லி இவள் சிரிக்க,
”அடிங்க!” என அவன் மிரட்ட, அப்பொழுது ஆனந்தமாக கழிந்தது.
பிரியா அவளின் ‘பொருட்களை எப்படி எங்கே வைப்பது’என மல்லிகாவை கேட்க,அதற்கு அவர் இன்னும் கொஞ்சம் நாட்களில் இருவரும் ஃபாரின் போக வேண்டியுள்ளதால், அவளின் ‘சூட்கேஸில் உள்ள அவளுடைய பொருட்கள் எல்லாம் அப்படியே இருக்கட்டும், அன்றாட தேவைக்கு வேண்டியதை, அங்குள்ள கப்போர்டில் வைத்துக் கொள்’ என சொன்னது சரியாகப்படவே அதன் படியே செய்தாள்.
மல்லிகா அங்கிருந்த இரு நாட்களுக்குள் அவருக்கும் இவளுக்கும் ஒரு நல்ல உறவு உருவாகியிருந்தது.எதையும் அதிகாரமாய் சொல்லாமல் அன்பாய் அவர் சொன்னது இவளை அவரிடம் இன்னும் நெருங்க வைத்தது.அதற்கும் மேல், இவள் தன் தந்தையிடம் செல்லம் கொஞ்சுவதை போல ஹரியின் அப்பாவிடமும் செல்லம் கொஞ்சும் அளவுக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டாள்.
இத்தனை ஆண்டுகளாக அம்மாவும்,மகனும் பொழுதுக்கும் அடித்துக்கொண்டாலும்… அவர்களுக்குள் இருக்கும் நெருக்கம் இவருக்கு மகனிடம் இருந்ததில்லை.அடுத்து ஒரு மகளும் இவருக்கு இல்லாததால்,ஆதரிக்க யாருமின்றி தன் வீட்டிலேயே தனியாகிப் போனார்.
தன் வீட்டில் தனக்கு சப்போர்ட் செய்ய, ஒரு துணை கிடைக்காதா… என ஏங்கிக்கிடந்த அவருக்கு பிரியாவின் வரவு அவ்வளவு ஆனந்தத்தை கொடுத்தது.மரு-மகளுடன் சேர்ந்து மனைவியையும், மகனையும் நன்றாக ஓட்டி,அவரின் இத்தனை நாள் ஆசையை தீர்த்துக்கொண்டார்.அவருக்கு மகனைவிட மருமகள் ‘சம்திங் ஸ்பெஷல்’ தான்!
இவரின் வேலையின் நிமித்தம் மூன்றாம் நாள் முடிவில் சொந்த ஊருக்கு பயணப்படும் போது கூட ‘பிரியாவை தங்களுடனே அழைத்து செல்லலாமா…’ என யோசிக்கும் நிலைக்கு வந்துவிட்டார்.அவரின் யோசனையை அறிந்த அவரின் மனைவியும்,மகனும் அவரை ‘அன்பாக’ அடக்கினர்!
ஹரியின் பெற்றோர்கள் அவர்களின் ஊருக்கு செல்ல,அடுத்து வந்த பிரியாவின் பெற்றோர்களும் சில நாட்கள் அங்கே தங்கியிருந்து, குடும்பம் நடத்துவதற்கு வேண்டிய சிலபல அறிவுரைகளை அவளுக்கு சொல்லி அவர்களும், திருமணம் முடிந்த பத்தாம் நாள் காலை ஹரியின் வீட்டிலிருந்து ‘வத்தலகுண்டு’ கிளம்ப ஆயத்தமாயினர்.
அன்று பிரியாவிற்கு அவளின் கல்லூரியில், சிறிது வேலை இருப்பதால்,மதியத்துக்குள் வீட்டிற்கு வந்துவிடலாம் என எண்ணி, அவளும் அவளின் பெற்றோருடனே காலை எட்டு மணிக்கே கிளம்பினாள்.
ஹரிக்கும் அவனின் அலுவலகத்திலிருந்து அழைப்பு வரவே அவனும் பதினோரு மணியளவில் அலுவலகம் சென்று, ஒரு மூன்று மணி நேரத்தில் வீட்டிற்கு வந்துவிடுவதாக பிரியாவிடம் சொன்னான்.
இப்படி அவரவர் பணி நிமித்தம் அனைவரும் வெளியே செல்ல,மதியம் தன் வேலைகள் அனைத்தையும் முடித்து, தன் இல்லம் திரும்பி வந்த பிரியா மூடிய கதவைப் பார்த்து முழித்துக்கொண்டு நின்றாள்.கிட்டதட்ட ஒரு மூன்று மணி நேரமாக அவளின் முழி அப்படியேதான் மூடியக் கதவையே பார்த்துக்கொண்டிருந்தது.