Categories
Uncategorized வேத கௌரி

அத்தியாயம் – 4

Free Download WordPress Themes and plugins.

உயிர் -4
தங்கம் உருக்கித் தழல் குறைத்து எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ’ என்று, அந்தி வானத்தின் அழகைக் கண்டு பாடல் இசைத்தான் பாரதி,அப்படிப்பட்ட அந்தி வேளையில் .சூரியபகவான் தன் கடமையை திருச்சி நகர மக்களுக்காக செவ்வனே செய்து முடித்து ஒய்வு எடுக்க கிளம்பினார்.
மகளிர் விடுதியில் சிற்பிகா ,தனது உடமைகளையே தலைகீழாக புரட்டி கண்ணில் நீருடன் ஏதையோ தேடி கொண்டு இருந்தாள்
“ எங்கே போயிருக்கும்..?” எப்படி போயிருக்கும்..?” யார் எடுத்திட்டு போயிருப்பா..?, நேற்று இரவு தூங்கும் போதும் என் கையில் தானே இருந்தது,காலையில் மேஜை மீது வைத்த நியாபகம் ,என் பொருட்களை யாரும் தொடுறது பிடிக்காதுன்னு தெரிஞ்சு இளமதியும் எடுத்து இருக்க வாய்ப்பேயில்லை , என்னறையுனுள் என்னனுமதியின்றி இரவு தூக்கத்தில் வரும் அவனின் நினைவு கனவை தவிர வேறு எவரும் வருவதுயில்லை ,அப்படியே வந்தாலும் என் பார்வை படாமல் வெளியில் போக வழியுமில்லை “ இப்படி ஆயிரம் கேள்விகள் அவளுக்குள் அலை அலையாக ஓடிக்கொண்டு இருந்தது .
அவளின் அறையை பகிர்ந்து கொள்ளும் இளமதி, கையில் உள்ள வாக்மேனில் பாட்டை ரசித்து தலையை ஆட்டிக்கொண்டே உள்ளே நுழைந்தவள் ,அங்கு இறைந்து கிடைந்த பொருளையும் ,பைத்தியம் போல எதையோ தேடும் சிற்பிகாவையும் கண்டு திடிக்கிட்டு ,
“சிற்பி ,என்னப்பா என்ன தேடுறா ?, இங்க பாரு இந்த கேசட்டில் பாட்டு அருமையாயிருக்கு ,இந்த குரல் சான்சே இல்லை, யாரோட குரல் ?” என்று கேட்டு கொண்டு இருக்கும்பொழுதே ,
வேகமாக அவளின் புறம் வந்து வாக்மேனை பிடிங்கி ,இளமதியின் கன்னத்தில் இடி வந்து விழுந்தது போல தன் கையை இறக்கினாள்,
“ என்னோட பொருள் எதையும் தொடக்கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் ,உன்னை யாரு தொட சொன்ன …?”போ இங்க இருந்து ,இனிமே என் பொருளை என்னை கேட்கமால் எடுத்தால் தெரியும் “ என்று கோவத்துடன் கத்தியவளை கண்டு,
”ஒரு பாட்டு கேட்டது குத்தம்மா ? அதுக்கு இப்படி பேய் பிடிச்சவ போல ஆடுறா?…
“ஆமா ,என்னோடத எடுத்த இப்படி தான் “ என்று சீறினாள் ,
“ அம்மா தாயே ,இனி தொடவே மாட்டேன் “ எப்பொழுதும் அமைதியாய் இருப்பவளின் கோவத்தில் அது அவளுக்கு எவ்வளவு முக்கியம் என்று உணர்ந்த இளமதி கன்னத்தை பிடித்து கொண்டே ஆதங்கத்துடனே அறையை விட்டு வெளியேறினாள்
வேக வேகமாக வாக்மேனை சுழலவிட்டு அதில் இருந்து வந்த குரலை கேட்டு ,அப்படியே கால்களை மடக்கி அந்த இடத்திலேயே அமர்ந்தாள்,
“விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே

உன் நினைவே போதுமடி
மனம் மயங்கும் மெய் மறக்கும் ம்… ம்…. ம்….
புது உலகின் வழி தெரியும்
பொன் விளக்கே தீபமே”……..
“ பொருளோ ,மனிதரோ  எது நமக்கு ரொம்ப பிடிக்குதோ,அது நம்மகிட்ட இல்லைன்னா மனசு அதை தீவிரமா தேடும் அப்படின்னு சொல்லுறது ரொம்ப சரி” ,இமயா உன்னோடு சேர வழியில்லையான்னு மனசு தேடுதுடா ,உன் நினைவுகளோடு காலம் கடத்தும் எனக்கு, துணையாய் இருப்பது ,இந்த குரல் மட்டுமே …இதாவது … எனக்கே எனக்குன்னு இருக்குமா..?” நீ தான் வேணும்ன்னு கேட்கவும் முடியலை …உனக்காக தான் அழுறேன்னு யார்கிட்டவும் சொல்லவும் முடியலை ….” என்று மனது ஓலமிட்டது …..
காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் …
சித்தார்த் IPS….
என்று பொன்னிற எழுத்துகளில் பொறிக்கப்பட்ட பெயர் பலகையை சுழற்றி யோசனையில் ஆழ்ந்த சித்தார்த், பின் தன் செல்போனில் இருந்து யாரையோ அழைத்தான் .
“ஹலோ …இப்போ உன் போனில் ஒரு அட்ரசும் போட்டோவும் வரும் பாரு ,பேரு இமய வரம்பன் ,அவனை பத்தி அந்த ஏரியால போய் விசாரிச்சு பாரு. , “முக்கியமான விஷயம். யூனிபார்ம்ல போகதே . நார்மல் ட்ரெஸ்ல போ,
“ஓகே சார் ,நீங்க கேட்ட தகவல் சீக்கிரம் கொடுக்குறேன் “
அவனின் நம்பிக்கைக்குரிய சப் இன்ஸ்பெக்டரிடம் . பேசிவிட்டு , மீண்டும் மற்றொரு எண்ணுக்கு அழைத்தான்.
“ கதிரவா , உடனே கிளம்பி கார்ப்பரேஷன் காம்ப்ளெக்ஸ் தெரியும்தானே ? அங்க வந்திருங்க.”
“ஓகே . அரைமணி நேரத்துல வந்துடறேன் சித்து ”
தானும் இப்போது கிளம்பினால் சரியாக இருக்கும் என்று எண்ணியவன், ஜீப்பை வீட்டிற்க்கு எடுத்து செல்ல சொல்லிவிட்டு ,அவனும் பழைய பேருந்து நிலையத்தை நோக்கி தனது புல்லட்டை செலுத்தினான் .
அங்கு இருந்த ஜூஸ் கடையில் ஹெல்மட் அணிந்து , கதிரவனுக்காக காத்து இருந்தான், சிறிது நேரத்தில் கதிரவன் வரவும்,கைகுலுக்கி சம்பிரதாய விசாரிப்புகளுக்கு பிறகு ,
” இந்த பைல்ல எல்லா விவரமும் இருக்கு, ,மேட்டர் வெரி கன்பிடன்சியல் கதிரவா, வேற யாருக்கும் தெரியக்கூடாது , தீர விசாரிச்சு பதில் சொல்லு , சீக்கிரம் தகவல் வேணும் “
அவனின் உரையாடலை கேட்டவாறே பைலை மேற்பார்வை பார்த்து கொண்டே, “கண்டிப்பா சித்து , நானும் இந்த விஷயம் பத்தி கேள்வி பட்டேன், ஆல்ரெடி பாதி விசாரணை முடிச்சுட்டேன், நாம சந்தேக பட்ட நபரை பின்தொடர ஒரு ஆள் அனுப்பியாச்சு, சதுரங்க வேட்டை படத்தில் இருக்குறதைவிட கிரிமினலா இருப்பான் போல … “
“ வெரிகுட், போலீஸ்காரனை என்னன்னு நினைச்சுட்டு இருக்காங்க? மேல இருந்து ப்ரஷர் வருதேன்னு தான் பொறுத்துட்டு போறோம் ,இல்லை பொளந்து கட்டிடுவோம்ன்னு தெரியலை போல அவனுக்கு …” என்று ஆக்ரோசமாய் சீரியவனை ,
‘ கூல் சித்து, கிட்டத்தட்ட விசாரணை முடிய போகுது, பிறகு வைச்சுக்கலாம் கச்சேரியை “ என்று தோளில் தட்டி கொடுத்தான் ,
“ஏதாவது சாப்பிடுறியா, ஜூஸ் ஆர்டர் பண்ணவா “ என்று சித்தார்த் கதிரவனை பார்த்து கேட்க ,
“வேண்டாம் சித்து, என் மனைவி உமையாளை ஹாஸ்பிடல் அழைச்சுட்டு போகணும் கிளம்புறேன்” என்று விடை பெற ,
“ ஒ சாரி சித்து ,உமையாள் எப்படி இருக்காங்க மறந்தே போயிட்டேன்,”

“ நல்லாயிருக்கா, போன வாரம் தான் வளைகாப்பு முடிஞ்சது , கொல்லிமலையில் வசதி பத்தாதுன்னு நான் இங்கவே இருக்க சொல்லிட்டேன் “

“நல்லது ,எனக்கு நாளையியிருந்து ஒரு வாரம் சென்னையில் PM வராருன்னு ட்யுட்டி போட்டுயிருக்காங்க, பிறகு ஒரு நாள் வரேன்,டைம் கிடைச்சா வீட்டுக்கு அழைச்சுட்டு வா கதிரவா, நானும் கிளம்புறேன் “ என்று விடைபெற்று ,

தனது வண்டியை நோக்கி சென்றவனின் விழி வட்டத்தில் , சாலையை கடக்க யாரேனும் வருவார்களா என்று எதிர்பார்த்து தயங்கி தயங்கி பயந்த படியே கடந்த இளம்பாவை படவும் கூர்ந்து நோக்கினான் …
“முகத்தில் விரிந்த முறுவலுடன் ,”அடியே …செல்லம்மா நீ இன்னும் மாறவேயில்லையாடி …?!! என்று தன் மனத்தினுள் ,தன்னவளுடன் உரையாடி ,அவளுருவத்தை மனபெட்டகத்தில் அடைத்து அழுந்த பூட்டினான் ,

“எங்கேயும் ..எப்போதும் ,என் மனசு உன்னை தாண்டி தீவிரமா தேடுது காமாட்சி ..என்கிட்ட வந்துடுடி சீக்கிரம் ..முடியலைடி …” என்று புலம்பியவனின் வாகனமோ வீடு நோக்கி சென்றது …

வீட்டின் உள்ளே நுழையும்பொழுதே,வரவேற்பறையில் ”அடடே இதோ தம்பியே வந்துடுச்சு ரொம்ப நல்லது, தம்பி சௌக்கியமா இருக்கீங்களா…?”, எங்களை அடையாளம் தெரியுதா..?“ என்று கேட்டவாறே ஒரு பெரியவர் எழுந்தார் .
“ வணக்கம் ஐயா,உட்காருங்க .பெரியவங்க நீங்க எழுந்துகிட்டு “ என்று அமர வைத்து,”நம்ம ஊருக்காரங்க உங்களை மறக்க முடியுமா , நானே ஊருக்கு வந்து உங்களை எல்லாம் பார்க்கனும்ன்னு இருந்தேன் …”, என்று முடிக்கும் முன்பே …

“இது தான் பரம்பரைகுணம்ன்னு சொல்லுறது ,அப்படியே நம்ம கோதை போலவே மரியாதை , அந்த மகராசி இன்னும் கொஞ்ச நாள் இருந்து இதையெல்லாம் பார்த்து சந்தோசப்பட கொடுத்து வைக்கலை…” என்று தோளில் கடந்த துண்டை எடுத்து கண்கலங்கினார் ,
சித்தார்த் அமைதியாக ,” பாட்டியம்மா இவங்களுக்கு சாப்பிட ஏதாவது கொடுங்க” என்று வள்ளியம்மை பார்த்து சொல்லவும் ,

“ அது எல்லாம் அமோகம முடிஞ்சது தம்பி ,வள்ளியம்மை கைநனைக்காம விட மாட்டேனு சொல்லிடுச்சு, அடுத்த வாரம் நம்ம ஊர் கோவில் கொடை வருது, தம்பி இங்கு இருக்குறது கேள்விப்பட்டோம் ,அதுக்கு உங்களை அழைச்சிட்டு போகலாம்னு வந்தோம் தம்பி “ என்று பத்திரிக்கை ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்து,

,”அவசியம் வரணும் தம்பி ,நாங்க எல்லோரும் எதிர்பார்த்துட்டு இருப்போம் , உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு வள்ளியம்மை சொல்லிச்சு ,சம்சாரத்தையும் அழைச்சுட்டு வரணும்…” என்றார்
“ அவ வேலை விசயமா வெளியூர் போயிருக்கா, முடிஞ்ச அளவு நான் வர பார்க்குறேன் “

“ சரிங்க தம்பி, நாங்க புறப்படுறோம், இன்னும் நம்ம ஊர்க்காரக நிறைய பேரை அழைக்க வேண்டியிருக்கு “ என்று விடைபெற்று செல்ல,

காவலனின் மனமோ நிகழ்கால சிறையில் இருந்து விடைபெற்று பின்னோக்கி சென்றது ..

அன்றொரு நாள்…
“ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா – நாங்க
எண்ணி வந்த வரம் கொடுக்க – வாரும் அம்மா
ஆயிரம் கண் படைச்சவளே பாரம்மா – இங்கு
உன்னை அன்றி வேறு கதி – ஏதம்மா “

சிம்ம குரலி L.R ஈஸ்வரியின் கனத்த குரல் காற்றை கிழித்து டெசிபல் அளவு அதிகரித்து கொண்டே .உடலில் பட்டு ஒரு வித சிலிர்ப்பை கொடுத்து கொண்டுயிருந்தது ,
ஆகாயத்தில் வானவேடிக்கைகளின் வர்ண ஜாலங்கள் , கிழிருந்து மேலே நோக்கி பறந்து சென்ற வான வெடிகள் ,குறிப்பிட்ட தூரத்தை அடைந்ததும் ,”டொம்..!! என்ற சத்தத்துடன் வெடித்து ,அழகாய் வண்ண வண்ண நெருப்பு பூக்களை உதித்து ,கிழே கொட்டி கொண்டுருந்தன .
தெருவில் வெளிச்சத்தை வாரியிறைக்க அம்மன் ஊர்வலம் போய் கொண்டுயிருந்தது ,பளிச்சென்று அலங்கார சொருபினியாய் பல்லாக்கில் அமர்ந்து இருக்க ,பக்தர்கள் அதை தூக்கிகொண்டு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நிறுத்த மக்கள் வீட்டு வாசலில் கும்பம் வைத்து வழிபட்டார்கள் .
சித்தார்த்தின் வீட்டின் முன் நின்ற அம்பிகையை வழிபட்டு பல்லாக்கு அந்த இடத்தை விட்டு போன பின்பும் கைகுவித்து நின்று இருந்தவளை ,
“ வேண்டுதல் பலமாயிருக்கும் போல, அப்படி என்ன வேண்டிகிட்ட “ என்று கேட்டான்,
“சித்து ..”
“என்னடி ,உன் சித்துக்கு என்ன வைச்சு இருக்க …?“
“ அப்பாக்கு அடுத்து என்னை நேசிக்கும் நீங்க எனக்கு கிடைக்கணும் அதைவிட வேற எதுவும் தேவையில்லைன்னு வேண்டிகிட்டேன் ..” என நெகிழ்ந்த குரலில் சொல்லியவளை இடுப்பில் கை போட்டு வளைத்து ,
‘காமாட்சி, என் வாழ்க்கையில் கிடைச்ச வரம் நீ ,அதை அந்த கடவுளே நினைத்தாலும் மாத்த முடியாது “ என்று மனம் திறந்தவனின் நெஞ்சில் சாய்ந்தாள் ,
“ என்னடி எப்போதும் என் நெஞ்சிலே சாய்ந்துகிற “
“நமக்கே நமக்குன்னு ஒருத்தவங்க இருப்பாங்கல்ல ,அப்படி இருக்கவங்க நெஞ்சில் சாயுறது என்ன ஒரு சுகம் தெரியுமா..?” ,எல்லா கஷ்டங்களும் கரைஞ்சுடுமாம்,..” என்றவளை
விரலால் தலையை கோதி, இறுக்கி அணைத்தவனின் மனம் ,” காதலிப்பதும்,காதலிக்கப்படுவதும் என்ன ஒரு விந்தையான உணர்வு ….?”என்று நினைத்தது ,
கையில் இருந்த சிகரெட் விரல்களை சுடவே ,அவள்தான் நினைவுகளை நிறைய கொடுத்து விட்டு ,நிம்மதியை முழுவதும் எடுத்து சென்றுவிட்டாளே …??” நச்சுப்புகை உள்ளே சென்று அத்தனை உறுப்புகளையும் தடுமாறச் செய்ய ,தடுமாற்ற உணர்வில் தன் மனவேதனையின் வீரியம் குறைக்க முயன்றான் .
“உயிராய் உருகி
ஜென்மம் ஜென்மாய் தொடரும்
இந்த பந்தம் என்று நினைக்கையில்
உதடு நோகாமல் சொல்லிவிட்டாய்
வேண்டாம் என்று ..
நெஞ்சம் நொறுங்குதடி…. “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *