Categories
Short Stories

வானப்ரஸ்தம் – ஹேமா

Free Download WordPress Themes and plugins.

7 replies on “வானப்ரஸ்தம் – ஹேமா”

ரொம்ப அருமையான கதை. யதார்த்தத்தை அப்படியே சொல்லி இருக்கீங்க ஹேமா .இதை படிக்கும் போது என் மனசுல தோணினதை இங்க இப்போ சொல்றேன். இதை இங்க சொல்லலாமான்னு தெரியலை…

முந்தைய தலைமுறையால இப்போ இருக்கும் காலத்துக்கு தகுந்தாப்போல ஒத்து போகமுடியலை. இளைய தலைமுறையால அவங்களோட ஒத்து போகமுடியலை. இதுல இடையில மாட்டிக்கிட்டு தவிக்கும் இன்றைய தலைமுறையோட நிலைமை தான் கொடுமை.

அப்பா அம்மாவுக்காக பாக்கறதா…. இல்ல, நம்மை அப்பாம்மாவா ஆக்கினவங்களுக்காக பாக்கறதா… பெரியவங்களை பாத்துக்கறதுக்கு வீட்டில் இருக்கறதா…. இல்ல பெற்ற பிள்ளைகளோட வளத்துக்காக வேலைக்கு போகறதா…. பெரியவங்களுக்காக அவங்க கூடவே நம்ம ஊரிலையே இருக்கறதா… இல்ல, பிள்ளைகளுக்காக வெளிநாட்டில் இருப்பதா… இதில் யாருக்காக பாக்கறது?

எப்போதும் முதிய, இளைய தலைமுறைக்கு வரிஞ்சிகட்டிக்கொண்டு வக்காலத்து வாங்கும் இந்த சமுகம் கூட, இந்த இரு தலைமுறைக்கு இடையில் மாட்டிக்கொண்டு சிக்கி தவிக்கும் இன்றைய தலைமுறையை கவனத்தில் கொள்வதே இல்லை…. எங்களால எங்க பெற்றோரையும் விட்டுக்கொடுக்க முடியலை. எங்க பிள்ளைகளையும் குறை சொல்ல முடியலை.

அவரவர் இடத்தில் அவரவர் செய்வது சரிதான். நாளைக்கு எங்களுக்கும் எங்க பெற்றோரோட நிலைமைதான் வரும்ன்னு தெரிந்து, அதை அப்படியே சந்தோசமா ஏத்துக்கறதுக்கு தயாராகவே இருக்கும் எங்க மனசு,அதே நிலமையில் இப்போ இருக்கும் எங்க பெற்றோரை நினைத்து குறுகுறுக்குதே ஏன்?

அருமை ராஜி! நீங்கள் சொல்வது போல் ரெண்டு தலைமுறைக்கு நடுவில் சிக்கித் தவிக்கும் நம்மை மாதிரி உள்ளவங்க நிலைமை தான் மோசம். போன தலைமுறைக்கு இளைய தலைமுறையின் வாழ்க்கை முறையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை…இளைய தலைமுறைக்கு அறிவுரையை கண்டாலே ஓடுகின்ற குணம்….இது எங்கள் வாழ்க்கை நாங்கள் இப்படி தான் வாழ்வோம் என்கிறது இவர்களின் குணம்…ஆனால் போன தலைமுறையினரோ இப்படித் தான் எங்கள் முன்னோர்கள் வாழ்ந்தார்கள் அவர்கள் அடிச்சுவட்டை பின்பற்றி தான் வாழ்ந்தோம், அதையே நீங்களும் கடைபிடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம்…இவர்கள் இருவரையும் சேர்ப்பது இந்தியா, பாகிஸ்தானை சேர்ப்பது போல் தான்….

கரெக்ட் ராஜி. இடைப்பட்ட தலைமுறை தான் மாட்டிக்கிட்டு முழிக்கிறோம். நீங்க சொல்லியிருக்கிற இந்த வரிகள் நூத்துக்கு இருநூறு பெர்சன்ட் உண்மை.

“அப்பா அம்மாவுக்காக பாக்கறதா…. இல்ல, நம்மை அப்பாம்மாவா ஆக்கினவங்களுக்காக பாக்கறதா… பெரியவங்களை பாத்துக்கறதுக்கு வீட்டில் இருக்கறதா…. இல்ல பெற்ற பிள்ளைகளோட வளத்துக்காக வேலைக்கு போகறதா…. பெரியவங்களுக்காக அவங்க கூடவே நம்ம ஊரிலையே இருக்கறதா… இல்ல, பிள்ளைகளுக்காக வெளிநாட்டில் இருப்பதா… இதில் யாருக்காக பாக்கறது?”

இந்த எண்ணம் தோன்றாத நாட்கள் வெகு குறைவு. சில சமயம் எவ்வளவு கம்ப்ரமைஸ் பண்ணி செஞ்சாலும் பெரியவர்களுக்கு அது நிறையாக தோன்றுவதில்லை. இந்த கதைல வர்ற மாதிரி நிதர்சனத்தை புரிந்து கொள்ளும் பெரியவர்கள் ரொம்ப குறைவு. சூழ்நிலையை புரிந்து கொண்டு அதை எந்த மனக்குறையும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளும் புரிதல் இனி மிகவும்அவசியம், அதுதான் காலத்தின் கட்டாயமும் கூட (including us). தேங்க்ஸ் ராஜி அண்ட் சுதாக்கா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *