Categories
Yuvanika

நீ சுவாசிக்கும் காற்றாவேன் என்னுயிரே !- அத்தியாயம் – 15

சுவாசம்  –  15

 

ஆண்களுக்கு அன்பின்

அர்த்தம் தெரிவதில்லை

என தவறாக

எண்ணி விடாதீர்கள்..

அவன் நேசிக்க ஆரம்பித்தால்

அன்னையின் அன்பையும்

தோற்கடித்து விடுவான்!!!

 

இதோ சிற்பி முடிவு செய்த படி டெல்லிக்கு வந்தாகிவிட்டது. ஆனால் இங்கு வருவதற்குள் ரதியிடம் படாத பட்டு விட்டான்  அவன். தான் எந்த தேசத்துக்கு சென்றாலும் சரி தான் வாழ்ந்த குப்பத்தையும் அங்கு பேசிப் பழகிய மொழியையும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற உறுதியில் இருந்தவள் ரதி. அதெல்லாம் விட சிறுவயதிலேயே தன் தந்தைக்கும் குடும்பத்திற்குமே தாயாய் இருந்ததால் அவர்களை விட்டுப் போகக் கூடாது என்று வாழ்ந்தவள்.

 

ஆனால் இன்று விதியோ சிற்பி மூலமாய் அவளுக்கு அந்த பிரிவைத் தந்தது. அதை கூட தாங்கிக்க முடியாமல் தன்னை ஒரு நெருக்கடியில் வைத்து தன்னை அழித்தவனையே அவள் தந்தை திருமணம் செய்த சொன்ன பிறகு கூட தன் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்தாளே தவிர தன் வீட்டார்  யாரையும் எதற்காகவும் விட்டுக் கொடுக்கவில்லை ரதி.

 

வாரத்திற்கு இரண்டு முறை என்று இப்போதும் தன் தந்தை வீட்டிற்குப் போய் அவர்களுக்கு தன்னால் முடிந்ததை செய்து வருபவளுக்கு கணவன் திடீர் என்று டெல்லிக்கு கிளம்பச் சொல்லவும் அவனை மட்டும் போகச் சொன்னவள்  தானும் குழந்தையும் இங்கேயே இருப்பதாக சொல்லி ரதி மறுக்க சிற்பியின் எந்த பிடிவாதமும் இம்முறை அவளிடம் எடுபட வில்லை.

 

பிறகு அவளின் தந்தை தான் அவளிடம் பேசி ஒருவழியாக சம்மதிக்க வைத்து தாங்களும் கொஞ்ச நாளில் அங்கு வருவதாக சொல்லி  அவர்களை அனுப்பி  வைத்தார் கந்தசாமி.   டெல்லி வந்த சிற்பி குடும்பத்தை  போ என்று விரட்டவில்லை அவன் தாத்தாஎனக்கு பிறகு என் அரசியல் வாழ்வுக்கு நீ இருப்பேன் என்றால் மட்டும் வா என்ற நிபந்தனையை மட்டும்  வைத்தார் அவர்.

 

அவர் மனைவி கங்கேஷ்வரியோ அவருக்கும் ஒரு படி மேலே போய் வெளி உலக பகட்டு வாழ்விற்காக ஆரத்தி சுற்றி இவர்களை வரவேற்று ரதிக்கும் குழந்தைக்கும் விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களை வாங்கிக் கொடுத்தவர் அதன் பிறகு தன் கடமை முடிந்தது போல் விலகிக் கொண்டார்.

 

ரதி மேற்கொண்டு படிக்கப் போகிறாள் என்ற போது கூட தனக்கு லேடிஸ் கிளப் மீட்டிங் இருப்பதாகவும் வெளி வேலைகளைப் பார்க்கவே சரியாக இருக்கும் என்பதால் குழந்தையை கிரஷ்ஷில் சேர்த்துவிட்டுப் போ என்று அவர்  சொல்லி விட.

 

பத்மாவதி தான் நிரல்யாவின் திருமணம் முடிந்த பிறகு சந்திராவை தான் பார்த்துக் கொள்வதாக நம்பிக்கை தர  அப்போது தான் ரதியாலும் சிற்பியாலும்  நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

 

இங்கு வந்ததும் சிற்பி பார்த்த முதல் வேலை தன்னுடன் படித்த வக்கீல்களோடு சேர்ந்து இனி பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது பதிவாகும் எந்த வழக்கிலும் அந்த அயோக்கியர்களுக்கு சாதகமாக வாதாடுவதில்லை என்ற வக்கீல்களின்  உறுதிமொழியுடன் ஒரு அமைப்பையும் அமைத்து அதை செயல்படுத்தவும் ஆரம்பித்தான்  அவன்.

 

அதுமட்டும் இல்லாமல் ஒரு நாள் சிற்பி வேலை முடித்து சற்று முன்னதாகவே வீட்டுக்கு வந்தவன்ரதி சீக்கிரம் கொஞ்சம் ரெடி ஆகு. நாம இப்போ வெளிய போகனும்என்று பரபரப்புடன் அவளிடம்   சொல்ல

 

அவன் பரபரப்பு புரிந்தாலும் எங்கு என்று கேட்காமல்  ஒரு அலட்சியத்துடன்  “நான் வரலை  எனக்கு வேலை இருக்கு நீ மட்டும் போங்கஎன்று இவள்  சொல்ல

 

ஓய்….  அப்படி என்ன டி  பெரிய வேலை? நான் எவ்வளவு பெரிய வேலைய முடிச்சிட்டு வந்து இருக்கேன். நீ என்னடானா ரொம்ப சலிச்சுக்கிற. நான் ஒண்ணும் டைம் பாஸ் பண்ண உன்ன கூப்பிடல. நீ யோசிச்சி உன்னால் செய்ய  முடியுமானு கேட்ட  விஷயத்த நெனவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கேன். அது என்னனு நீயே வந்து பாருஎன்று அவன் விடாபிடியாக நிற்க இவ்வளவு தூரம் அவன் பேசியதால் சிறிது யோசித்தவள்

 

பாப்பா தூங்குறா..” என்று அவனுக்கு நினைவு படுத்த

 

நான் சொர்ணா பாட்டியை (வேலைக்கார பாட்டி) பார்த்துக்க சொல்றேன்என்று அவன் அதற்கும் வழி சொல்ல அதன் பிறகே சம்மதித்து கிளம்ப ஆரம்பித்தாள் ரதி. எப்போது அவனிடம் தன் மனக்குமுறலை எல்லாம் கொட்டினோலோ அன்றிலிருந்து இப்போது எல்லாம்  அதிக பிடிவாதத்தை தவிர்த்திருந்தாள் ரதி.

 

காரில் கொஞ்ச தூரம் சென்றதும் பெரிய அடுக்குமாடி கட்டிடம் வர அதனுள்ளே  அழைத்துச் சென்றவன் லிப்டிலிருந்து அவர்கள் இறங்க வேண்டிய தளம் வந்ததும் இறங்கவிருந்த மனைவியைக் கை பிடித்து தடுத்தவன் ஒருவித எதிர்பார்ப்புடனும் டென்ஷனுடனும்  “ரதி!” என்றழைக்க

 

இப்படி கணவனை ஒருவித டென்ஷனுடனும் தவிப்புடனும் அவள் பார்ப்பது இது தான் முதல் முறை. ஏதோ அவன் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தவள் நின்று என்ன என்பது போல் பார்க்க

 

ஒரு சின்ன சர்ப்ரைஸ் இருக்கு. ஆனா அத உன்னோட கைய பிடிச்சு கிட்டு போய் காமிக்கணும்னு ஆசைப்படறேன்என்றவன் அவள் அனுமதி தருவதற்கு முன்பே மனைவியின் இடது கை விரல்களைத் தன் வலது கை விரல்களோடு கோர்த்தவன்  அங்கிருந்த  ஒர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றவன் உள்ளே ஓர் அறையில் ஒரு சுழல் நாற்காலியில்  அமரவைத்து  விலக அவளோ தன் கண் எதிரில் பார்த்த காட்சியில் கண்கள் விரிய மெய் மறந்து அமர்ந்து விட்டாள்.

 

ரதி! எப்படி இருக்கு?” அவனிடம் ஒரு எதிர்ப்பார்ப்பு

 

சிற்பி! என்ன போய் எம்.டி யா ஆக்கி இருக்க.. நான்..”

 

உன்னால மட்டும் தான் ரதி இதை சரியான முறையில் வழி நடத்த முடியும். அதற்கான தகுதி டெடிக்கேஷன் வில் பவர் எல்லாம் உன் கிட்ட தான் இருக்குஎன்று அவன் உறுதிபடவும் பெருமையாவும் சொல்ல,..

 

அவனிடமிருந்து பார்வையை விலக்கியவள் அந்த அறையிலிருந்த சுவர்களைப் பார்வையிட அங்கு சுவர் முழுக்க முதல் பெண் மருத்துவராய் இருந்த டாக்டர் முத்துலஷ்மி ரெட்டியின் புகைப்படம் அவருடைய பெயர் மேலும் அவருடைய சாதனை என்று ஆரம்பித்து ஒவ்வொரு பெண்ணாக  இன்று வின்வெளியில் கால் பதித்த கல்பனா சாவ்லா வரை இருந்தது. அதெல்லாம் பார்த்து   அவளுக்கு கொஞ்சம் புரிந்த மாதிரியும் புரியாத மாதிரியும் இருக்க அதை அவள் முகத்திலிருந்தே அறிந்தவன் அதைப் போக்கும் பொருட்டு

 

இந்நேரம் நீ கொஞ்சமாவது யூகித்து இருப்பனு நினைக்கிறேன். ஆமா.. இது பெண்களுக்காக நடத்தப் படுற அமைப்பு. பல துறைகள்ல பல திறமைகள் இருந்தும் சரியான வழிகாட்டுதலோ பொருளாதார உதவியோ இல்லாம கஷ்டப்படற பெண்களுக்கானது இந்த மையம். அதுகூட சேர்த்து பாலியல் துன்புறத்தலோ அல்லது அது சம்பந்தமா வேற எந்த பிரச்சனை வந்தாலும் அந்த பெண்கள் நம்ம கிட்ட தொடர்பு கொள்ளலாம்.

 

நாம அவங்கள கோர்ட் கேசுனு அலைக்கழிக்காம அவங்க பத்தின விபரங்களை ரகசியமா வச்சிருந்து அவங்கள பாதுகாத்து பிரச்சினையைத் தீர்த்து வைத்து நீதி வாங்கித் தரதும் முக்கியமான வேலை. முதல்ல இந்த அமைப்புக்கு சந்திரா பெண்கள் பாதுகாப்பு மையம்னு தான் பெயர் வைக்கலாம்னு நெனச்சேன். ஆனால் அது ரொம்ப சாதாரணமா ஏதோ பத்தோட ஒன்னா மத்த மாதர் சங்கம் மாதிரி இதையும் மத்தவங்க நெனைக்க கூடாதுனு யோசிக்கிறேன். நீயே ஒரு நல்ல பெயரா சொல்லேன் ரதிஎன்று ஆர்வத்துடன் சிறு பிள்ளையென  அவளிடமே அவன் கேட்க

 

இப்படி திடீர்னு கேட்டா எப்படி சொல்ல? சரி.. கொஞ்சம் டைம் குடு சிற்பி.. யோசிச்சு சொல்றேன்எனவும்

 

ஒன்னும் அவசரம் இல்ல.. நீ நிதானமா யோசிச்சு சொல்லு.. உனக்கு வேற ஒன்னு காமிக்கிறேன் வாஎன்றவன் இப்போது அவள் கையைப் பிடித்து மீண்டும் அந்த அலுவலகத்தின் முகப்பு பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு மாட்டியிருந்த சிறிய துணியை விலக்க அங்கு ‘for the women by the women of the women’ என்ற பெயர்ப் பலகை இருந்தது. கூடவே கதவில் பித்தளை தகட்டில் ‘managing director’

கீழே திருமதி. . ரதிதேவி சிற்பிவர்மன் என்று இருக்க அவள் கை விரல்களாலேயே அந்த எழுத்தை வருடியவன்

 

உனக்கு உயிர் கொடுத்து இந்த உலகத்தோடு நீ வாழ வழி செய்து, எதிர்காலத்தில் நீ  பல சாதனைகள் படைக்க தன்னம்பிக்கையும் தைரியத்தையும் தந்த உன் அப்பாவின் முதல் எழுத்தே   உனக்கு இனிஷியலா இருக்கட்டும். அதன் பிறகு உனக்கு சகலத்திலேயும் துணையா இருக்க  கணவனா  வந்த நான் உன் பெயருக்கு பின்னாடியே இருக்கேன்…” என்று அவன் பெயர் பலகையில் உள்ளதை சொல்லி விளக்க  ரதியால் அந்நேரம்  மெய்மறந்து அவன் முகத்தைப் பார்க்கத் தான் முடிந்தது. அதில் அவனுள் ஏதேதோ மாற்றங்கள் நடந்தாலும் அதையெல்லாம் தவிர்த்தவன் பிறகு அவளை  உள்ளே அழைத்துச் சென்று  

 

இப்போ இந்த அமைப்பை பற்றி சொல்கிறேன் நல்லா கேட்டுக்கஎன்று சொல்ல  ஆரம்பித்தான்.

 

பள்ளி கல்லூரி மற்றும் வேலைக்குப் போகும் பெண்கள் அதே போல் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களுக்கு ஏதாவது தெரிந்த மற்றும் தெரியாத ஆண்களால் பாலியல் துன்புறத்தல் மூலம் பேச்சாலோ செயலாலோ தொல்லை அனுபவித்தால் அதை பாதிக்கப்பட்ட பெண்கள்  வெளியே சொல்ல முடியாத பட்சத்தில் அதாவது அவர்களின் போட்டோ வீடியோ என்று அந்த ஆணிடம் சிக்கியிருந்தால் அவர்கள் நேரடியாக நம்மிடம் தொடர்பு கொண்டு நாம் கொடுக்கும் ஆலோசனைப் படி வழி நடக்கலாம்.

 

அவர்களின் இரகசியம் இங்கு காக்கப்படும். கூடவே அவர்கள் பெயர் வெளியே தெரியப்படுத்தாமல் அந்த அயோக்கியர்களுக்கு தக்க தண்டனை வாங்கி தரப்படும். இது தான் அவங்க நமக்கு கால் பண்ண வேண்டிய நம்பர்என்று  ஒரு போர்டை எடுத்து அதில் உள்ள நம்பரை காட்டியவன்இங்கு முழுக்க முழுக்க ரிட்டயர் ஆன .பி.எஸ் மற்றும்  மிலிட்டரி ஆபிசர்ஸ்  வேலைக்கு வைக்கலாம்னு இருக்கேன்.    

 

இதே மாதிரி சென்னையிலும் ஒரு ஆபிஸ் பில்ட் பண்ண போறேன். அங்கே மைதிலிம்மாவ  பார்த்துக்க சொல்லிட்டேன். மாதத்துக்கு ஒரு முறை சில முக்கிய இடங்கள்ல கேம்ப் போட்டு விழிப்புணர்வு வார்த்தைகள எடுத்துச் சொல்லப் போறோம். ஸ்கூல்ல  கட்டாயம் தற்காப்பு கலையும் செக்ஸ் கல்வி அவசியம்னு வலியுறுத்தப் போறோம்.

 

ஏதோ நம்மால் முடிந்த சின்ன விதை ரதி. இதுவே பிற்காலத்தில் வேறூன்றி பல இடங்களில் பெரிய விருட்சமாக வளர்ந்து எல்லோருக்கும் நன்மை செய்யட்டுமேஎன்று அவன் உற்சாகமாகச் சொல்ல

 

ஏன் சிற்பி அப்போ நாங்க எத்தனை பிறவி எடுத்தாலும் எங்கள நாங்களே  தற்காப்புக் கலைகளைக் கற்றுப் பாதுகாக்கவும், ரோட்டில் இறங்கி விழிப்புணர்வு என்ற பெயரில் மனிதச்சங்கிலி போட்டுக்கனும்னா அப்போ ஆண்களான நீங்க திருந்த வழியே இல்லையா? உங்களுக்கு உயிர் கொடுத்து நீங்க பிறக்க ஒரு தாயா, சாகறவரை உங்க இன்ப துன்பங்களில் பங்கேற்று உங்க வம்சத்துக்கு அடுத்த தலைமுறையைத் தர  ஒரு மனைவியாஉங்களை அன்பு பாசத்துல திளைக்க வைத்து  கனவுகளை நனவாக்க மகளா நாங்க இருக்கோம். இதையெல்லாம் விடவா உங்க காம வெறிகளை தீர்த்துக் கொள்ள கழுகா எங்களை வட்டம் இடறீங்க? ஆனா அதுக்குத் தான் நாங்க விரும்பியும் விரும்பாமலும் விபச்சாரி என்ற தொழிலை செய்றோமேஅங்க போய் தீர்த்துக்க வேண்டியது தானே?” என்று அவள் கனத்த இதயத்துடன் கேட்கவும்

 

இதுவரை அவனிடமிருந்த உற்சாகமெல்லாம் வடிய மனைவிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முதன் முறையாக தடுமாறினான் சிற்பி.

 

இதற்கு சிற்பி மட்டும் இல்லை எந்த ஆணால் தான் பதில் சொல்ல முடியும்? அதையே யோசித்தவள்ச்சு..” என்ற சலிப்புடன்.

 

இதெல்லாம் தன்னைச் சுற்றி என்ன நடக்குதுனு அறிந்து கூடவே  தனக்கு என்ன நடக்கப் போகுதுனு தெரிந்தவங்களால தான் சுயநினைவோட இருந்து நம்மை அணுக முடியும்அதே நீ எனக்கு போதை மருந்து  கொடுத்த மாதிரி யாராவது எந்த பொண்ணுக்காவது கொடுத்து அநியாயம் செய்திருந்தால்?..” என ரதி  கண்ணில் கனலோடு அவன் செய்ததை நினைவு படுத்திக் கேட்கவும்

 

மனைவி  சொன்னதைக் கேட்டு ஒரு வினாடி தன் கண்களை மூடித் திறந்தவனின் கண்ணில் அவளை விடவும் கனலோடு கூடவே  பரிதவிப்பு குற்றயுணர்ச்சி  கையாலாகாத தனம் என்று இப்படி ஏதேதோ பாவங்கள்  அவள் பார்வையில் பட  அதை அவள் யோசிக்கும் போதே ஒரு முடிவுடன் தன் வலது கையை சிற்பி வேகமாக அங்கிருந்த  சுவற்றில் மோதிக் கொள்ள

 

விருப்பமே இல்லாமல் சிற்பி செய்த அநியாயத்தையும் மீறி தந்தை சொன்ன ஒரே வார்த்தைக்காக சிற்பியைக் கல்யாணம் செய்தவள் தான் ரதி. அவன் அவளிடம் தவறாக நடந்துக்க மாட்டேன் என்று சொன்ன படியால் இன்றுவரை  இப்படிப் பட்ட பேச்சுகளை அவள் பேசியது இல்லை.

 

அன்று ரேஷ்மா சுவாதி விஷயத்தில் தன்னை மீறி கத்தியதோடு சரி. அதன் பிறகு இன்று தான் அவன்  செய்ததை எல்லாம் பேசி குத்திக் காட்டுகிறாள். தான் நின்ற நிலையிலேயே ஒருவித அதிர்ச்சியுடன் அவள் அவன் செய்கையையே பார்த்துக் கொண்டிருக்க அவனோ எவ்வளவு ஓங்கி அடித்தும் உடைந்து துவளாத தன் கையின் மேல் ஆத்திரம் கொண்டவனோ அந்த அறையை  கண்ணில் வெறியுடன் சுற்றித் தேடிப் பார்க்க ஒரு மூலையில் அவனுக்கு சாதகமான பொருளான கனமான இரும்பு கம்பி இருக்கவும் தாவிச் சென்று அதை எடுத்தவன் தன் இடது கையால் ஓங்கித் தன் மணிக்கட்டை அவன் குறி பார்க்கவும்அப்போது தான் தன் பிரம்மையில் இருந்து வெளி வந்தவளோஐயோ!” என்ற கூவலுடன் கணவன் கையில் இருப்பதை பிடுங்க நினைக்க அந்த பிடிவாதக்காரனோ விடவே இல்லை.

 

சொன்னா கேளு சிற்பி. அதைக் கீழ போடுஎன்று கெஞ்சி போராடியவள் அவன் இன்னும் பிடிவாதத்துடன் இருந்து அவளைத் தள்ளி விடவும் அவன் கையை இறுக்கப் பிடித்த படி அவன் மார்பில் சாய்ந்தவள்

 

இனிமே அப்படி சொல்ல மாட்டேன். சத்தியமா சொல்ல மாட்டேன். இது நம்ப பொண்ணு மேல் சத்தியம்என்று சொல்லி கேவ அப்போது தான் தன்  கையிலிருந்த இரும்புக் கம்பியைக் கீழே போட்டான் சிற்பி.

 

இது.. இது தான் டி உன் குணம்! உனக்கு அநியாயம் செய்த எனக்கே உன் கண்ணெதிரே ஏதாவது ஒன்னுனா துடிக்கிற பாரு.. இது தான் உன் உண்மையான குணம்! வீணா என்ன குத்திக் காட்டி என்னை  சாகடிக்கிறதா நினைத்து இன்னும் நீ அதையே நினைத்து உன் இயல்பை மாற்றிக்காதே.இனி ஒருமுறை உன் வாயில் பழைய விஷயங்கள் வந்தது.. பிறகு நான் எதைச் செய்யவும் தயங்க மாட்டேன்!” என்று அவன் எச்சரிக்க அந்த குரலே நான் சொன்னதை செய்வேன் என்பதை பட்ட வெளிச்சமாய் அவளுக்கு உணர்த்தியதுஉடலில் ஒருவித நடுக்கத்துடன் அவன் மார்பிலே முகம் புதைத்திருந்தவள்

 

இல்லை.. சொல்ல மாட்டேன்என்பதாக தலை அசைக்க மனைவியின்  நிலை உணர்ந்து அவளை இறுக்க அணைத்து அடிபட்ட கையால் அவள் முதுகை அவன்  வருட அதில் தெளிந்தவளோ அவனிடமிருந்து பிடிவாதமாக விலகி

 

ஏன் சிற்பி இப்படி பண்ணின? பாரு.. சதை  பிஞ்சி எப்படி ரத்தம் வருதுனு..” என்று ஏதோ அது அவனுக்குத் தெரியாது என்பது போல் சிறு குழந்தை என இவள் எடுத்துச் சொல்ல

 

இப்படி ஒரு குழந்தை மனசு படைச்சவளை போய்.. ச்சே…’ என்று மனதுக்குள் உறுமியவன்அதான் சொன்னனே.. நீ அப்படி பேசினா இனி இப்படி தான்!” என்று மீண்டும்  சர்வசாதாரணமாக அவன் அதை வலியுறுத்த, ஒரு நிமிடம் வாயடைத்துப் போய் நின்றாள் மனைவி. அடுத்த வினாடியே

 

சரி வா ஆஸ்பிட்டலுக்குப் போகலாம்என்று அழைக்க

 

ஏய்.. இதெல்லாம் ஒரு அடியா? எல்லாம் பிறகு போகலாம். அப்போ என்ன சொன்ன? ம்ம்ம்மயக்க மருந்து கொடுத்தாலோ குழந்தைகளையோ வயதானவர்களையோ குறி வைத்தால் அவங்க எப்படி சொல்ல முடியும்னு தான?” என்று வெகு தீவிரமாகக் கேட்டவன்

 

அதற்கும் நிச்சயமா ஏதாவது வழி செய்யுறேன் ரதி. என்ன நம்புஎன்று அவளுக்கு நம்பிக்கை ஊட்டம்ம்ம்…” என்று கணவனின் வார்த்தையை அப்போதைக்கு அரை மனதாக ஒத்துக் கொண்டவள் அவனை விடாப்பிடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கைக்கு  சிகிச்சை செய்தாள் ரதி

 

இது தான் ரதியின் இயல்பு. தனக்குத் தீங்கு செய்தவர்களுக்கும் ஒன்று என்றால் துடிப்பது. அதற்காக சிற்பி மீது காதல் எல்லாம் இல்லை. ஒருமுறை அவனுக்கு காலில் அடிபட்டு வந்த போது கூட என்ன ஏது என்று கேட்காமல் திரும்பிப் பார்க்காமல் போனவள் தான். ஆனால் இன்று அவள் கண்ணெதிரே எனும் போது அவளால் துடிக்காமல் இருக்க முடியவில்லை.

 

சிறுவயதில் அவளுடைய இயல்பை மீறி நடக்கக் காரணம் தாயின் நடத்தையோடு தங்களை ஒப்பிட்டுப் பேசியதால் தான். இப்போதோ இந்த சமூகத்தில் நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை பார்த்து கேட்டு தன் இயல்பை இழந்தாள் ரதி.

 

வீட்டிற்கு வந்த பிறகு கூட அவன் சொன்ன வார்த்தையிலிருந்து அவளால் வெளிவர முடியவில்லை.

 

என்னை அப்படி சொல்ல வேண்டாம்னு என்  வாயை  அடைக்கிறாரே தவிர மன்னிப்பு கேட்கனும் என்ற எண்ணம் அவருக்கு வரவே இல்லையே?’ என்று மனதால் கேள்வி கேட்க இன்னொரு மனமோஅவன் மன்னிப்பு கேட்டா மட்டும் நீ மன்னிச்சிடுவியா? அப்படிப் பட்ட தப்பையா அவன் செய்திருக்கான்?’ என்று போர்க் கொடி தூக்கம்ஊம்…. மன்னிக்கவே மாட்டேன்என்றவள் பிறகும் இதே யோசனையாகவே இருக்க தூக்கமும் வர மாட்டேன் என அடம்பிடிக்க இமை மூடாமல் விழித்திருந்தாள்.

Categories
On-Going Novels Yuvanika

சுவாசம் – 6

சுவாசம்  –  6

 

வெளியே அன்பே

இல்லாதவன் போல

நடிக்கும் எல்லா ஆணுமே

தனக்கு பிடிச்சவளையும்

பிடிச்சவங்களையும்

தன் மனசுக்குள் வைத்து

தன் உயிரை விடவும் உயர்வாய்

நேசிப்பது மறுக்கவே முடியாத உண்மை..!

 

தேவியின் உடல் நிலை மருத்துவர் சொன்ன படி ஒரு வாரம் சென்ற பிறகே சிறிது தேறியது. அடிக்கடி கண் விழித்துத் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று பார்த்தாலும் பக்கத்தில் இருப்பவர்களை உணர்ந்தாலும் வாய் திறந்து யாரிடமும் அவளால் பேச முடியாமல்  போக  அடுத்தப் பத்துத் தினங்கள் கழித்துத் தான் தெளிந்தாள் அவள்.

 

தேவிக்கு என்ன நடந்திருந்தாலும் அவள் தான் தன் மனைவி என்பதில் பிரதாப் உறுதியாக இருந்ததால் அவளுக்கு நடந்ததை அவளிடம் சொல்ல வேண்டாம் என்று அவன்  நினைக்க அதற்கு முன்பே ஒரு தந்தையாய் அவளிடம் அதைச் சொல்ல வேண்டாம் என்ற முடிவை எடுத்திருந்தார் கந்தசாமி.

 

எக்காரணத்தைக் கொண்டும் அவர் தன் மகளை விட்டு விடவும் இல்லை யாரிடமும் அவளை விட்டுக் கொடுக்க தயாராகவும் இல்லை. ஒரு தாயாய் தன் மகளைத் தன்னால் முடிந்த வரை பார்த்துக் கொண்டார் அவர். தேவிக்கு விஷயம் தெரியாமல் மறைத்ததால் போலீஸில் பகிரங்கமாகப்  புகார் கொடுக்காமல் இருந்தாலும் பிரதாப் தன் தந்தையின் பதவி பலத்தை வைத்து அந்தக் கயவன் யார் என்ன ஏது என்பதை விசாரிக்கச் சொல்லியிருந்தான்.

 

தேவியை வேலைக்கு வர  வேண்டாம் என்று பிரதாப் சொல்லி விட அதனால் தனக்கு கிடைத்த நேரத்தில் எல்லாம் மைதிலியே வந்து அவளைப் பார்த்து விட்டுப் போனார்.

 

என்ன தான் உடனிருப்பவர்கள் தேவியிடம் அவளுக்கு நடந்த கொடுமையை மறைக்க நினைத்தாலும் விதி வேறாகத் தான் நினைத்தது.

 

இப்படியே மூன்று  மாதம்  செல்ல இப்போதெல்லாம்  தேவிக்கு நரம்புத் தளர்ச்சி என்ற பெயரில் அடிக்கடி உடம்பு உதற ஆரம்பிக்க அதனால் தன்னால் முடிந்த வேலையை மட்டும் வீட்டிற்கு செய்து வர  ஒரு நாள்  தெருக் குழாயில் தண்ணீர் பிடிக்கப் போனவள் மயங்கி விழ அங்கிருந்தவர்கள் அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிந்ததும் தூக்கி நிறுத்த பலமில்லாமல் உடல் உதற சரிந்து விழுந்தவளைக் கூட்டத்திலிருந்த வயதான பாட்டி அவளுக்கு என்ன நோயோ என்று அறிய அவள் நாடியைப்  பிடித்துப் பார்க்க அப்போது தான் அவள் உண்டாகி இருப்பது தெரியவரவும் அதை அவர் அங்கேயே தேவியிடம் போட்டுடைக்க அந்த வார்த்தையிலும்  ஏற்கனவே மருந்தின் வீரியத்தில் உடல் சோர்வு எல்லாம் சேர்ந்து மயக்கத்துடன் கூடிய அதிர்ச்சியில் அன்று தன்னிலை இழந்தவள் தான் தேவி. அதன் பிறகு அவளிடம் மாற்றமே இல்லாமல் போனது.

 

கருவைக் கலைக்க நினைக்க மூன்று மாதமே என்றாலும் அது தேவியின் உயிருக்கு ஆபத்து என்றார் டாக்டர். வேறு வழியில்லாமல் அந்த குழந்தையை தேவியே சுமக்க வேண்டியதாயிற்று.

 

இந்த நிலையில் பிரதாப் கந்தசாமியிடம் தன் விருப்பத்தைச் சொல்லி தேவியைத் திருமணம் செய்து வைக்கச் சொன்னவன் அவளை ஆள் வைத்துத் தன் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்துக் கேட்க முடியவே முடியாது என்று  அவன் விருப்பதிற்கு  மறுத்து விட்டார் அவர்.

 

இப்போது தன்னிலை மறந்திருக்கும் அவள் பிறகு ஒரு நாள் தெளிவான பிறகு ஏன் தனக்கு இப்படி ஒரு வாழ்க்கையக் கொடுத்துக் கடைசி வரை தன்னைக் குற்ற உணர்ச்சியில் சாக வைத்தீர்கள் என்று தன்னைத் தன் மகள் கேட்கக் கூடாது என்றும் உண்மையாகவே தன் மகள் மேல் பாசம் இருந்தாலும் அவள் தெளிவாகும் வரை பொறுத்திருக்கும் படி அவர் பிரதாப்பின் பதவி அந்தஸ்தையும் மீறி மறுத்து விட அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தன் மகளைத் தான் தான் பார்த்துக் கொள்வேன் என்பதிலும்  உறுதியாக இருந்தார்  அவர்.

 

அறிவுமதி அப்போது தான் தன் படிப்பை முடித்தவள் என்பதால் தன் அக்காவான தேவிக்குத் தலை சீவ உடல் துடைக்க ஆடை மாற்ற சோறு ஊட்ட என்று ஒரு சிறு குழந்தையைப் போல் அவளைப்  பார்த்துக் கொண்டாள்.

 

அதற்காக தேவிக்குப்  புத்தி பேதலிக்கவோ அம்னீஷியாவோ இல்லை. சொல்லப் போனால் தன்னைச் சுற்றி நடப்பது அவளுக்குத் தெரியும் தான். ஆனால் அதிலெல்லாம் ஈடுபடவோ  எந்த ஒரு செயலையும்  விரும்பி செய்யவோ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டாள் தேவி.

 

அவளிருக்கும் அப்படிப்பட்ட நிலைக்கும் ஒரு நாள் முடிவு வந்து தானே ஆகவேண்டும்? அந்த நாளும் வந்தது.. அவளுடைய பிரசவத்தை வைத்து!

 

ஒரு நாள் நிறை மாத கர்ப்பினியான தேவியை நிற்க வைத்து அறிவுமதி ஆடை மாற்றி விட அதே நேரம் தேவிக்கு இடுப்பில் சுருக்கென்ற வலியுடன்  பனிக்குடம் உடைந்து அவள் காலுக்குக் கீழ ஆறென ஓட அதைப் பார்த்த தேவிக்கு அதிர்ச்சியுடன் கூடிய வலிப்பும் வந்து விட தன்னை மீறி கண்கள் சொருகி கை கால்கள் வெட்டு வெட்டென்று இழுத்த நேரம் அவளுக்கு பிரசவ  வலியும் வந்து விட இப்படிப்பட்ட ஒரு சிக்கலான சூழ்நிலை பெரும் சவாலாகவே இருந்தது மருத்துவர்களுக்கு.

 

பிரசவம் ஒரு பெண்ணுக்கு மறுபிறவி என்பார்கள். ஆனால் தேவி உண்மையிலேயே மறுபிறவி தான் எடுத்தாள். முன்பெல்லாம் யார் என்ன சொன்னாலும் காதில் வாங்காமல் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தவள் பிரசவத்திற்குப் பிறகு தன்னிடம் பேசுபவரின் முகம் பார்க்க ஆரம்பித்தாள். குழந்தை அழுதாலும் அதை வெறித்த பார்வை பார்ப்பவள் இன்று குழந்தைக்கு அவளாகவே பசியாற்றும் அளவிற்கு வந்திருந்தாள்.

 

 அதிலும் எப்போதும் குழந்தைக்குப் பால் தருவதற்கு முன் தங்கை தன்னைத் தூய்மை செய்வதையே இன்று தேவியே செய்ய அது தான் அறிவுமதியின் மகிழ்ச்சிக்குக் காரணமாய் இருந்தது. குழந்தை பிறந்த பிறகும் பிரதாப் திருமணத்தைப் பற்றி கந்தசாமியிடம் பேச

 

“தம்பி நான் திலுப்பி திலிப்பி இப்டி சொல்லிகிறதுக்கு என்ன மன்னிச்சிக்கோங்கோ. இப்போ ஒரு வேகத்துல முடிவு எடுத்துகினு அப்பால நீங்க எதுகாண்டியும் ஃபீல் பண்ணிக்க கூடாதுனு தான் சொல்லிக்கிறன். இப்ப நான் சொல்லிகின அல்லாத்தையும் என் பொண்ணு காண்டி தெளிவா இருந்துகினா சத்தியமா இத்தே  தான் சொல்லிகினு இருப்பா. அப்டி காண்டி அவ மாத்தி வேற எதுனா முடிவு எடுத்துகினா அத்த அவ வாயாலே சொல்லிக்கிறது தான் ரைட்டு. ஆனா அது இன்னா எப்போனு தெரியாத்தப்ப நீ ஏன் சாமி இப்டியே கீற? சீக்கிரமா உங்க அந்தஸ்துக்கும் அயகுக்கும் ஏத்த பொண்ணா பாத்து கல்லாணம் பண்ணிக்கோங்க” என்று அந்த பேச்சுக்கே முற்றுப்புள்ளி வைத்தார் அவர்.

 

இன்றும் தேவியிடம் தன் விருப்பத்தைச் சொல்லி திருமணம் செய்து அவளையும் குழந்தையையும் தான் வேலை பார்க்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல பிரதாப் தயார் தான். ஆனால் தேவியோ, எங்கே தான் அவளுக்கு வாழ்வு கொடுப்பதாக நினைத்து விடுவாளோ என்ற பயம் தான் அவனுக்கு!

 

இதற்கிடையில் ஒரு நாள் தாங்கள் தேவியின் வழக்கை  ரகசியமாக விசாரிக்கச் சொல்லியிருந்த கமிஷனரிடமிருந்து குற்றவாளியைப் பிடித்து விட்டதாகவும் தேவி வந்து பார்த்து இவன் தான் குற்றவாளி என்று சொல்லி விட்டால் தக்க தண்டனை வாங்கிக் கொடுக்கத் தயார் என்ற தகவல் வரவும் தன் தாயை அழைத்துக் கொண்டு போய் இப்போதெல்லாம் கொஞ்சமே தேறியிருந்த  தேவியிடம்  இந்த விஷயங்களைச் சொல்ல  எல்லாவற்றையும் கேட்டவள் எந்த வித  சலனமும் இல்லாமல் குழந்தையைத் தூக்கிக் கொண்டு  தன்  தந்தையுடன் பிரதாப் காரில் கமிஷனர் வீடு நோக்கிச் சென்றாள் தேவி.

 

இவர்கள் கமிஷனர் வீட்டிற்குப் போன நேரம் அவருக்கு ஏதோ முக்கியமான வேலை வந்து விட பிரதாப்பையும் அவர்களையும் விருந்தினர் அறையில் அமர வைத்த உதவி கமிஷனர் அவர்களுக்கு வேண்டியதை செய்து உபசரிக்க அது எதையும் ஏற்க முடியாத பதட்டமான மனநிலையில் இருந்தான்  பிரதாப். இன்னும் சொல்லப் போனால் தேவியை இப்படி சீரழித்தவனை அவள் கண் முன்னாலேயே துடிக்க துடிக்க அவன் உதிரத்தை எடுத்து தேவி பாதத்தில் அபிஷேகம் செய்யும் அளவுக்கு வெறியே இருந்தது  அவனுக்கு.

 

இவன் மனநிலை உணர்ந்து தானோ என்னமோ கமிஷனர் அவன் கண்ணில் படாமலும் அந்த குற்றவாளியைக் காட்டாமலும் நேரத்தைக் கடத்தினார். காலை பத்து மணிக்கு வந்தவன் இபொழுது மதியம் இரண்டு மணி வரை  அந்த வீட்டின் வரவேற்பறைக்கும் அந்த விருந்தினர் அறைக்கும்  ஓராயிரம் முறை நடந்து விட்டான். அவர் கைப்பேசிக்கோ பல லட்சம் முறை அழைத்தும் விட்டான் பிரதாப். ஆனால் எதற்கும் பலனில்லை. வந்திலிருந்து யாரும் சாப்பிடவுமில்லை. அவனுக்கு அது வேறு கோபம். தேவியோ இறுகிப் போய் அமர்ந்தவள் அமர்ந்தவள் தான்.  மேற்கொண்டு  பொறுக்க முடியாமல்  நேரே அங்கிருந்த உதவி கமிஷனரிடம் சென்று 

 

“என்ன ஸார், அந்த பொறுக்கி நாய் அவ்வளவு பெரிய ஆளா? இவன் தான் அக்கியூஸ்ட்டுனு தெரிஞ்சும் இவ்வளவு நேரத்துக்கு எங்க கிட்ட அவனப் பற்றி சொல்லாம  காட்டாம இருக்கிங்கனா  அப்ப அந்த எச்ச யாராவது அரசியல் வாதிக்குக் கையாளா தான்  இருப்பான் இல்லனா அவனே அரசியல்வாதியா இருப்பான். அது தான நீங்க இப்படி நடக்கக் காரணம். ஆனா நீங்க என்ன தான் அவனக் காப்பற்ற நினைத்தாலும் நான் இனி சும்மா இருக்கப் போறது இல்ல. இந்த நிமிஷமே டிவி பேப்பர்னு  போய் நானா  அவனானு பார்த்துக்கிறன்” என்று பிரதாப் அவரிடம் எகிற

 

“ஸார் ஸார்! கொஞ்சம் பொறுமையா இருங்க. இதுல ஒரு பெண்ணோட வாழ்க்கை சம்மந்தப்பட்டு இருந்ததால தான் கமிஷனர் ஸார் இப்படி பொறுமையா போறாரு. நான் இப்போ அவர அழைச்சிட்டு வரேன். நீங்க ரூமுக்குப் போங்க என்று ஏ.சி.பி சப்பைக் கட்டுக் கட்ட

 

உதவி கமிஷனர் சொன்ன அவர் என்ற வார்த்தையில் ஊர்ஜிதப் படுத்திக் கொண்டான் பிரதாப்  இப்படி செய்துது பெரிய ஆள் தான் என்பதை. அப்போது தான் அவருடன்   அங்கு  சற்று மேல் தட்டு ஆண்மகன் ஒருவன்  இருப்பதைப் பார்க்கவும் மௌனமாக அங்கிருந்து  வெளியேறினான் பிரதாப்.

 

சற்று நேரத்திற்கு எல்லாம் அந்த உதவி கமிஷனர் பிரதாப் இருக்கும் விருந்தினர் அறைக்கு வர அவன் பின்னால் வேறொருவன் வருவதைப்  பார்த்ததும் ‘இவனைத் தானே சற்று முன் ஏ.சி.பியுடன் அங்கு பார்த்தோம்?!’ என்று பிரதாப்பின் நெற்றியில் முடிச்சி விழ, அதே நேரம் உள்ளே வந்தவனைப் பார்த்ததும் குழந்தையை மைதிலியின் கையில் வீசிய தேவியோ பெண் புலியென பாய்ந்து அவன் சட்டையைப் பிடித்தவள்

 

“துத்தேரி! எனக்குத் தெரியும் டா எனக்குத் தெரியும்.. என்ன இப்டி நாசம் பண்ண பொறுக்கி கம்னாட்டி நீ தான்னு எனக்குத் தெரியும் டா. முன்னாடியே என்கிட்ட ராங்கா நடந்துகினதுக்கு செருப்படி வாங்கிகினவன் தான் டா நீ? அதோடு வுட்டியா டா? திருவிழால சின்னப் பொண்ணுகிட்ட ராங்கா நடந்துகினதும் இல்லாம தட்டி கேட்ட என்னையும் மெரட்டி உன்னையும் நாசம் பண்ணிடுவேனு சொன்னவன் தானே..  நீ தப்பு மேலே தப்பு பண்ணதுனால போலீஸாண்ட புடிச்சி குடுத்தேன்.. அதெல்லாம் மனசுல வெச்சிகினா என் வாழ்க்கைய இப்டி நாசம் பண்ண? அதும் நான் சுய நெனவே இல்லாதப்ப இப்டி செஞ்சிருக்கியே.. ச்சீ நீ எல்லாம் ஒரு ஆம்பளையா? உன் பழிய தீத்துக்கனும்னா என்னைய கொன்னு போட்டு இருக்கலாமே டா!” என்று வாயும் கையும் அவனை சரமாரியா அடிக்க  சோர்ந்து போயிருந்தாள் தேவி.

 

 அவள் நடத்தையை  பார்த்து  அவளைத்  தடுக்க வந்த உதவி கமிஷனரைத் தன் ஒற்றைப் பார்வையால் தடுத்து நிறுத்தியவனோ உலக்கையென இருக்கும் தன் இரு கைகளையும் பின்னால் கட்டிக்கொண்டு இரும்பென இருக்கும் தன்  உடலில் தேவி அடிக்கும் அடிகளை  எந்த வித மறுப்பும் இல்லாமல் வாங்கிக் கொண்டிருந்தான் நம் சிற்பிவர்மன்!

 

தன் பலம் கொண்ட மட்டும் அவன் முடியை இரு கைகளிலும் பிடித்து உளுக்கியவள் 

“நான் உன்ன செருப்பால அடிச்சதுக்காவா டா என் வாழ்க்கைய நாசம் பண்ண இல்ல உன்ன போலீஸ்ல புடிச்சி குடுத்தது காண்டி என்ன பழி வாங்குனியா? சொல்லு டா எதுக்காட டா என்ன இப்டி பண்ண?” என்று கேட்டு அவன் முகம் கழுத்து கன்னம் என தன் விரல்  நகங்களால் கீறியவள் அவனை எரிக்கும் சக்தியோ பலமோ தனக்கு இல்லையே என்ற இயலாமையில் தன்னையும் மீறி கண்ணில் கண்ணீர் பெருக கால்கள் துவள அப்படியே தரையில் மண்டியிட்டு அமர்ந்து கதறினாள் தேவி.

 

இவன் தான் குற்றவாளி என்று சொல்லாமலே தேவி நடந்து கொண்டதை வைத்து  சிற்பி  தான் அவளை வீணாக்கியவன் என்பதை அறிந்த அங்கிருந்தவர்களில் பிரதாப்புக்கோ தேவி மேல் தான் கோபம் வந்தது. இவனோடு இவ்வளவு நடந்திருந்தும் ஏன்  நம்மிடம் இவள் எதையும் சொல்லவில்லை என்பது தான் அது.

 

அந்த கோபம் எல்லாம் சிற்பியிடம் திரும்ப பிரதாப் அவன் மேல் பாய இருந்த நேரம் உள்ளே வந்தார் கமிஷனர். அங்கு நடக்கவிருந்த ரசவாதத்தைப் பார்த்தவர் ‘இதற்காகத் தானே நான் எதுவும் இப்போதைக்கு  சொல்ல வேண்டாம் என்று சொன்னேன்?!’ என்பது போல் அவர் உதவி கமிஷனரை முறைக்க அவரோ தலை குனிந்தார்.

 

அப்படி மட்டும் பிரதாப் சிற்பி மேல் கை வைத்திருந்தால் பிறகு  அவர் தானே  சிற்பியின் தாத்தாவான திருநீலகண்டத்திற்கு  பதில் சொல்ல வேண்டியிருக்கும்? அதுவுமில்லாமல் சிற்பிவர்மன்  இந்தியாவின் புகழ்பெற்ற முண்ணனி வழக்கறிஞர்களில் ஒருவன். அவன் மேல் கை வைத்தாலோ இல்லை  அவன் தான் குற்றவாளி என்பது தெரிந்தாலோ  வெளியுலகம் அவனை குற்றவாளி என்று ஏற்றுக் கொள்ளுமா இல்லை அப்படியே தான் விட்டுவிடுமா? எத்தனை பஸ் எரியும்?  சக வழக்கறிஞர்கள் சும்மா விடுவார்களா? பெரிதாக நியாயம் வேண்டி மனிதச் சங்கிலி என்ற பெயரில் போராடுவார்கள். இன்னும் என்னென்னமோ நடக்குமே! அதனால் பாதிக்கப்படப் போவது யார்? அப்பாவி பொதுமக்கள் தானே!’

 

ஒரு சாதாரண பஸ் கண்டக்டர் மேல் கை வைத்தாலே அதில் அரசியல் ஆதாயம் காணத் துடிப்பவர்கள் இங்கு இருக்கிறார்கள் என்னும் போது இப்போது இன்று ஆளும் கட்சியில் முன்பு மந்திரியாக இருந்த திருநீலகண்டத்தின் பேரன் என்றால் சும்மா இருப்பார்களா?  என்பதே  கமிஷனரின் எண்ணமாக இருக்க, அதனால் தான் அவர் சிற்பியின் தாத்தா வரும் வரை இவர்களைச் சந்திக்க விடாமல் இருந்தார்.

 

தேவி கொடுத்த அடிகளையும் பேச்சையும் வாங்கிய சிற்பி  எதற்கும்  மறுத்து ஒரு வார்த்தை பேசாமல் கையைக் கட்டிக் கொண்டு நின்றதைப் பார்த்ததும்  இன்னும் ஆச்சரியம் ஆகிப் போனார் அவர். அதே நேரம் உள்ளே நுழைந்தார்கள் சிற்பி தாத்தாவும் மாமாவும். உள்ளே வந்த மறுகணமே  அங்கிருந்த ஷோஃபாவில் கம்பீரமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்த திருநீலகண்டம்

 

எடுத்த எடுப்பிலே “நடந்த விஷயம் என்னனு எனக்குத் தெரியும். அதை எப்படி சரி பண்றதுனும் எனக்குத் தெரியும்” என்று பிசிர் இல்லாத குரலில் சொன்னவர் அங்கிருந்த உதவி கமிஷனரிடம் வெளியில் இருக்கும் தன் பி.ஏ விடம் இருக்கும் பெட்டியை வாங்கி வரச் சொல்ல அதன்படியே சென்று பெட்டி உள்ளே வந்ததும் அதைத் திறந்து  தேவி முன்  தள்ளியவர்

 

“இங்க பார் பாப்பா, பார்க்க சின்னப் பெண்ணா இருக்க! நான் சொல்றதக் கேளு. ஏதோ நடந்தது நடந்து போச்சி.. அதுக்காக உன்ன சும்மா விட மாட்டேன். என்ன இருந்தாலும் என் பேரன் தொட்ட பெண்ணாச்சே நீ! அதான் உனக்கு ஒரு விலை போட்டு எடுத்து வந்திருக்கேன். நீ வாழ்நாள்ள பார்த்திருக்காத  பணம் இந்த பெட்டியில இருக்கு. வாங்கிகிட்டு சத்தம் போடாம நழுவிடு.

 

வேணும்னா என் தொண்டன்ல எவனாவது ஒருத்தன உனக்குக் கல்யாணம் பண்ணி  வைக்கறேன். கூடவே அவனுக்கு அரசாங்கத்துல நல்ல வேலையா வாங்கித் தரேன். என்ன நான் சொல்றது? இதைக் கேட்டு அதே மாதிரி நடந்துகிட்டா உனக்கு நல்லது. இல்லனா நாளைக்கு உன் குடும்பத்துல நடக்க இருக்கிற எந்த கெட்டதையும் என்னால  தடுக்க முடியாது” என்று அவர் பேரம் பேச

 

அதைக் கேட்டுத் தன் தலையிலே அடித்துக் கொண்டு இன்னும் கதறி அழுதாள் தேவி. அவர் சொன்ன வார்த்தைக்கு பிரதாப்போ அவரை அடிக்கக் கை ஓங்கி விட அங்கிருந்த ஏ.சி.பி தான் அவனைத் தடுத்தார். அதைப் பார்த்த திருநீலகண்டன்

 

“என்ன தம்பி, இள ரத்தம் இல்ல? அதான் சும்மா துள்ற! நான் அரசியல்வாதி பா.. எனக்கெல்லாம் இப்படி வெட்டு ஒன்னு துண்டு ரெண்டா தான் பேசத் தெரியும். இதை விட்டா உங்களுக்கு வேற வழியே இல்ல பா.  இந்தப் பெண்ணோட குடும்பப் பிண்ணனிய எல்லாம் விசாரிச்சிட்டு தான் நான் வந்திருக்கன்” என்று அவர் மேலும் எகத்தாலமாகப் பேச

 

அவர் பேசப் பேச கை முஷ்டி இறுகக் கண்கள் மூடி பாறை என ஒரு கையாலாகாத தனத்துடன் நின்றிருந்தான் சிற்பி.

 

“ஏன் இல்ல? இதுக்கு வேற ஒரு வழி இருக்கு” என்று இதுவரை பேசாமல்  இருந்த சிற்பியின் மாமா  சொல்ல, அதை என்னவென்று யூகித்த திருநீலகண்டனோ 

 

“டேய் குமாரு! உன் வேலையப் பார்த்துட்டுப் போடா” என்று எகிற

 

“இதுவும் என் வேலை தான்” என்று அவருக்குப் பதில் கொடுத்தவர் சிற்பியிடம் திரும்பி

 

“சொல்லு வர்மா! எனக்கு உண்மையச் சொல்லு. நீ இந்தப் பொண்ணோட வாழ்க்கைய வீணாக்கினியா? அதாவது இந்த பெண்ணோட பெண்மைக்கு பங்கம் விளைவிச்சியா?” என்று அவர் சிற்பியிடம் கேட்க

 

“ஆமா!” என்று தயங்காமல் ஒத்துக்கொண்டான் அவன்.

 

“எதுக்காக அப்படி ஒரு கேடுகெட்ட செயல செய்தனு  நான் தெரிஞ்சிக்கலாமா?

 

“பெருசா காரணம் எல்லாம் ஒன்னும் இல்ல. இவ பத்து வயசுல என்ன செருப்பால அடிச்சா. அதுக்குப் பிறகும் என்ன பொறுக்கியாவே பார்த்தா. ஒரு கட்டத்துல என்ன ஜெயிலுக்கும் அனுப்பினா. அதை எல்லாம் மனசுல வச்சிகிட்டு தான் நான் இவளைப் பழி வாங்க இவ வாழ்க்கைய அழிச்சேன். இதுல ஒளிவு மறைவுனு எதுவும் இல்ல. இவளைக் கண்டாலே எனக்குப் பிடிக்காது. திமிர் பிடிச்சவ! பெண்களுக்கு உள்ள அடக்க ஒடுக்கம் எதுவும்   இல்ல.  எப்ப என்னைய போலீஸ்ல பிடிச்சிக் குடுத்தாளோ அப்பவே மனசுல தேக்கி வெச்சிருந்த கோபத்துக் கூட பழியுணர்ச்சியும் சேர்ந்து வெறியா மாறிடுச்சு.

 

இவ என்ன போலீஸ்ல பிடிச்சிக் கொடுத்ததால நான் ஒன்னும் ஜெயில்லையே இல்லை. என் மாமா உதவியால நான் வெளிய வந்துட்டேன்.  அப்பவே இவளை நான் ஏதாவது செய்யணும்னு தான் நினைச்சேன். ஆனா என் தாத்தாவும் என் மாமாவும் என்ன வெளிநாடு அனுப்பிட்டாங்க. அங்கே ரெண்டு வருஷம் இருந்தேன். அப்பவும் எனக்கு இவ மேல இருந்த வன்மம் குறையல.  ஒரு நண்பனோட திருமணத்திற்காக  இந்தியா வர வேண்டி இருந்தது.

 

அந்த நேரத்தை எனக்குப் பயன்படுத்திக்க  நினைச்சேன். அதே நேரம் இவளும் இவ படிச்ச காலேஜ்க்கு வரவோ இவ குடிச்ச ஜூஸ்ல இவளுக்கே தெரியாம போதை மருந்து கலந்து கொடுக்க வழி பண்ணினேன். அந்த மருந்து உடனே போதையைக் கொடுக்காது.  நம்பள சிறுக சிறுகத் தான் தன்னிலை மறக்க வைக்கும். இவ வெளியே வர இருக்கும் அந்த நேரத்தைக்  கணக்கிட்டு சற்று தள்ளி யாருக்கும் தெரியாமல் நான்  காத்திருந்து இவ மயங்கி விழுந்ததும் கார்ல தூக்கிப்  போட்டுட்டுப் போய் என்  நண்பனுடைய கெஸ்ட் ஹவுஸ்ல வெச்சி எனக்குள்ளே இருந்த இத்தனை நாள் வன்மத்தை தீர்த்திட்டேன்.. 

 

என் முகம் தெரியக் கூடாதுனு தான் இவளை முழு நேர போதையிலேயே வெச்சிருந்தேன். அது எதுக்குனா இவ என்னை அடையாளம் தெரிந்து போலீஸ்ல  காட்டிக் கொடுக்கக் கூடாதுனு இல்ல  இவளுக்குத் தன்னை யார் இப்படி செய்தாங்கனு தெரியாமலே இவ தவிக்கணும்னு தான் செய்தேன். அதன் பிறகும் அதே மயக்கத்திலேயே இருந்த இவளை   ரோட்டோரம் போட்டுட்டு உடனே வெளி நாடு கிளம்பிட்டேன். ஆனா நான் என்ன தான் மறைக்க நினைச்சாலும் இன்னைக்கு தமிழ்நாடு போலீஸ் கிட்ட மாட்டிகிட்டேன்” என்று  கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே  இல்லாமல் தன் மாமா கேட்ட கேள்விக்கு  தன் வாக்குமூலமாக அங்கிருக்கும் அனைவருக்கும் அனைத்தையும்  தெரியப் படுத்தினான் சிற்பி.

 

அவன் சொன்ன விஷயத்தைக் கேட்டு  அங்கிருந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு  மனநிலையில் இருக்க அதே நேரம் பளார் என்ற சத்தத்துடன் சிற்பியின் கன்னத்தைப் பதம் பார்த்திருந்தது அவன் மாமாவின் கரம்.

 

“ச்சீ!……  நான் வளர்த்த பிள்ளையாடா நீ? சின்ன வயசுல இருந்து நான் உனக்கு ஒழுக்கத்தைச் சொல்லித் தானேடா வளர்த்தேன்?  நீ கோபக்காரன்னு தெரியும். ஆனா இப்படி ஒரு கேவலமான ஜென்மமா இருப்பேனு நினைக்கலையே! நாங்க என்ன தான் வளர்த்தாலும் உனக்கு உன் அப்பன் புத்தி வந்துடிச்சி இல்ல? அவங்க ரத்தம் தானே உனக்கும் ஓடுது பிறகு நீ மட்டும் எப்படி இருப்ப? காதலிச்சிக் கை விட்டுப் போனதுக்கே உங்க அம்மா எப்படிப் பட்ட வாழ்வு வாழ்ந்து சாகற வரை நிம்மதி இல்லாம போனவ டா!

 

ஆனா இன்று நீ இந்த பெண்ணோட வாழ்க்கையப் பழி வாங்கறேன்ற பெயர்ல அழிச்சி இருக்க! இதைப் பார்த்து நான் சும்மா இருப்பேன்னு நினைக்கிறியா?   என்னால அப்படி இருக்க முடியாது. அதே நேரத்துல உன் தாத்தா சொல்ற மாதிரி அந்தப் பெண்ணை அசிங்கப்படுத்தவும்  முடியாது. அன்று உன் அம்மா கையில நீ ஆண் குழந்தையா  இருந்த. ஆனா இன்னைக்கு அந்தப் பொண்ணு கையில பெண் குழந்தை இருக்கு. அந்த குழந்தையை என்னால விட முடியாது. அதனால அந்த பெண்ணோட வாழ்க்கைய கெடுத்த நீயே அந்த பெண்ண கல்யாணம்  பண்ணி உன் குழந்தைக்கு நல்ல தகப்பனா வாழுற வழியைப் பாரு” என்று அவர் முடிக்க

 

“நான் பண்ணிக்க மாட்டேன்” என்ற சொல் அடுத்த வினாடியே  வில்லென அந்த சபையில் பாய்ந்தது.

 

அப்படி ஒரு சொல்லை அனைவரும் சிற்பியிடம் இருந்து  எதிர்பார்த்திருக்க, வந்தது என்னமோ வாழ்க்கையை இழந்தாலும் தன்மானத்தை இழக்க மாட்டேன் என்ற வீம்புடன் அங்கு அமர்ந்திருந்த தேவியின் வாயிலிருந்து!   அவள் மறுத்ததும் அந்த வினாடியே தன் மனதில் ஒரு வெறுமையை உணர்ந்தான் சிற்பி. அதைக் கேட்டு சிற்பியின் மாமா தேவியிடம்  ஏதோ சொல்ல வர, உடனே அந்த இடத்தைத் தன் வார்த்தையால் நிரப்பினார் மைதிலி

 

“எங்க வீட்டுப் பெண்ணை இப்படி வீணாக்கியவன் யாருனு தெரிந்து அவனுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கத் தான் அவனைக் கண்டுபிடிக்கச் சொன்னோமே தவிர எங்க பொண்ணுக்கு வாழ்க்கைப் பிச்சை கொடுங்கனு கெஞ்ச வரல.  எப்பவோ தேவி என் வீட்டு மருமகள் ஆக வேண்டியவ. இவனுடைய சூழ்ச்சியால இடையில இவ்வளவும் நடந்திடுச்சி. இப்பவும் அவ என் வீட்டு மருமக தான்.  இந்த வினாடியே அவ கழுத்துல தாலி கட்டி எங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போக நாங்க தயாரா தான்  இருக்கோம்.

 

இப்படி ஒரு நிலையில ஒரு பொண்ணு மேல உள்ள வன்மத்தையும் கோபத்தையும் போக்கிக்க அவளுக்கே தெரியாம அவ வாழ்க்கைய அழிச்சி சித்திரவதைப் பண்ணி சாகறவரை அவளைத் துடிக்க வெச்சவனே அதையும் கொஞ்ச கூட குற்ற உணர்ச்சியே இல்லாம நெஞ்சை நிமிர்த்திகிட்டு ஏதோ சாதனை செய்தது போல சொல்லிக் காட்ட  அவன் தாத்தாவோ அவனுக்கும் ஒருபடி மேல போய் பேரன்  செய்ததை தட்டிக் கொடுத்து எங்க பொண்ணுக்குப் பேரம் பேசி பணத்தக் கொடுத்தது இல்லாமல் கூடவே உன் குடும்பத்த அழிச்சிடுவேனு மிரட்டுறாரு.  இதுதான் எங்க குடும்ப வழக்கம்னு  வேற பெருமையா   சொல்லிக்கிறாரு.   

 

ஒரு பெண்ணைப்  பழி தீர்த்துக்க அவளை வன்கொடுமை செய்யறதும் காதலிக்க மறுத்தா உடனே முகத்துல ஆசிட் வீசுறதும் என்ன கலாச்சாரம் இது? இதுலயா ஒரு ஆணோட வீரம் அடங்கி இருக்கு?” என்றெல்லாம் கேட்டவர் சிற்பியின் மாமாவிடம் திரும்பி

 

“நீங்க என்ன சொன்னீங்க? உங்க வீட்டுப் பையன் எங்க வீட்டுப் பெண்ணோட பெண்மைய அழிச்சா உடனே நாங்க எங்க பெண்ணோட வாழ்க்கையையே பறிபோனதா நினைத்து ஏதோ இந்த உலகத்துல இனி அவ வேற ஒருவனைக் கல்யாணம் பண்ணி வாழவே தகுதி இல்லாம போய்ட்ட மாதிரி பேசி உங்க பையனையே தான கல்யாணம் பண்ணச் சொல்றிங்க..

 

அவன் செய்தது வன்கொடுமை! அதாவது எங்க பெண்ணோட விருப்பம் இல்லாம அதுவும் சுயநிலையை இழக்க வைத்து செய்திருக்கான். இங்கே அவனைத் தவிர இன்னும் நாலைந்து பேர் சேர்ந்து இப்படி செய்திருந்தா அப்பவும் அந்த ஐந்து ஆண்களையும் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கேட்பீங்களா இல்லைனா இவனையே கட்டித்தான் ஆகணும்னு வற்புறுத்துவீங்களா?. 

 

உங்களைச் சொல்லி தப்பு இல்ல.  காலம்காலமா ஒரு பெண்ணை ஒரு ஆண் சீரழிச்சா அவனுக்குத் தண்டனை கொடுக்காம அந்த பெண்ணுக்கு நல்லது செய்யறதா நினைச்சி  உடனே அவனையே கல்யாணம் பண்ணி வெச்சி அந்த பொண்ணுக்குத் தண்டனை தர்றது தானே வழக்கம்?

 

இதுக்கு ஒருகாலும் நான் சம்மதிக்க மாட்டேன். எங்களுக்கும் அரசாங்கத்துல செல்வாக்கு இருக்கு. என் கணவரும் கலெக்டர் தான். இந்த வினாடியிலிருந்து தேவி கலெக்டர் வீட்டு மருமக!”  என்று ஒரு பெண்ணாய் தேவிக்காக  வாதிட்டாலும் ஒரு தாயாய் தேவியின் மனநிலை உணர்ந்து கொண்டவரோ தேவியைக் கேட்காமலே அவள் தான் என் மருமகள் என்று சொல்லி அவள் துயர் துடைத்து  அரவணைக்கச் செய்தவரோ இறுதியாக திருநீலகண்டத்தைப் பார்த்து

 

“எதுவா இருந்தாலும் இனி நாம சட்டத்தின் மூலமாக சந்திக்கலாம்!” என்ற சவாலையும் விட்டார் மைதிலி.

அவர் பேசி முடித்ததும் உன்னால் முடிந்ததை நீ பார்த்துக் கொள் என்பது போல் திருநீலகண்டன் இருக்க தேவியோ ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டது போல் அதிர்ச்சியில் இருக்க சிற்பியோ தேவி அவனை மறுத்ததையும் மீறி இவன் யார் எங்களுக்கு இடையில் என்று பிரதாப்பை உக்கிர பார்வைப் பார்க்க

 

“எனுக்கு இதுல முயு சம்மதம் தான். ஆனா  தேவியாண்ட தான் கடசி முடிவு கீது” என்று முதல் முறையாகத் தன் வாய் திறந்தார் கந்தசாமி.

Categories
Deepi On-Going Novels

வெற்றிவேல்- அத்தியாயம் – 1

வெற்றிவேல்-1

“ஸ்ரீஸ்ரீநிவாசா கோவிந்தா
ஸ்ரீவேங்கடேசா கோவிந்தா
பக்த வத்சலா கோவிந்தா
பாகவத ப்ரிய கோவிந்தா”

என்ற வரிகள் சாம்பிராணி புகை மணமணக்க நார்த்தம்பட்டி நடுத்தெருவில் அமைந்திருந்த அந்த வீட்டில் ஒலித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் கோவிந்த நாமாவளிக்கு போட்டியாக அந்த வீட்டின் பூட்டப் படாத அறை ஒன்றினுள்ளிருந்து

“ராசாத்தி ஒன்ன கண்டுபிடிக்காத நெஞ்சு
கருகுன தோசை போல உதிருது
ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு
வெங்காய சருகு போல போகுது
வயசாகிப் போச்சு
வெட்டியா காலத்தை ஓட்டியாச்சு
பொன்மானே ஒன்னத் தேடுது
ராசாத்தி ஒன்ன கண்டுபிடிக்காத நெஞ்சு
கொரோனா வைரஸ் போல கொல்லுது”

என்னும் கட்டைக் குரல் கர்ண கொடூரமாக ஒலித்து அவ்வீட்டின் தலைவியான அலமேலுவை மூலையில் நிமிர்த்து வைத்திருந்த துடைப்பத்தை தூக்க வைத்தது.

துடைப்பத்தை தூக்கி கொண்டு உள்ளே சென்ற அலமேலுவை வரவேற்றதோ தரையில் தலையை வைத்துக்கொண்டு காலை தூக்கி கட்டிலில் வைத்தவாறு படுத்திருந்த அவரது அருந்தவப் புதல்வன் வெற்றிவேல்தான்.

அவனை அக்கோலத்தில் கண்டவுடன் ஏற்கனவே இருந்த ஆத்திரம் அதிகமாகி “ஏன்டா உனக்கு ராசாத்தி தேடுறதுக்கு கோவிந்த நாமாவளி பாடுற நேரம்தான் கிடைச்சுதா? கடைசி வரைக்கும் கல்யாணம் ஆகாம என் கையில இருக்குற கட்டையால அடி வாங்கிட்டு காலம் தள்ள போற”, எனக் கத்தினார்.

அவரது கத்தலை காலைநேர சுப்ரபாதமாக கேட்டுக்கொண்ட வெற்றிவேல் “அலமு! இந்த கெட்டப் உனக்கு செட் ஆகலை… அதனால மாமியார் கெட்டப்பை எடுப்பதற்கான வழியை கண்டுபிடிக்கிற வேலைய பாரு… வயசாகிட்டேப் போகுவதில்லையா? ஒரு மகனை பெத்து வச்சிருக்க. காலாகாலத்துல கல்யாணம் பண்ணி பேரப் பிள்ளையை பார்ப்போம்ன்னு இல்லாம வயசுக்கு வந்த பையனை எப்ப பார்த்தாலும் விளக்கமாறு வைச்சு சாத்துறது… இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை”, என பேசி கொண்டே சென்ற வெற்றிவேல் தன் மேல் விழுந்த அடிகளை தூசு தட்டுவது போல் தட்டி விட்டுக் கொண்டு நேராக எழுந்து அமர்ந்தான்.

இவர்களின் கலவரத்தில் வெடித்த சத்தத்தை கேட்ட வெற்றிவேலின் தந்தை துரைசாமி மகனின் அறைக்குள் நுழைந்தவாறே “ஏன் அலமேலு! காலங்காத்தால குழந்தையைப் போட்டு விளக்கமாறு வச்சி அடிக்கிற… அவனே நேத்து தோப்புல தண்ணி பாய்ச்சிட்டு வந்து லேட்டாதான் படுத்தான். நேரம் காலம் இல்லாமல் வேலை செய்றான். நீ வேற அவனை ஒழுங்காக கவனிக்க மாட்டேங்குற… கொஞ்சம் பிள்ளையை நல்லா கவனி”, என மனைவியை அதட்டுவது போன்று கெஞ்சியவர் மகனின் அருகில் சென்று அமர்ந்தவாறு அவனது தலையை பாசமாக தடவிக் கொடுத்தார்.

அவரது வருடலில் தனது தலையை சுகமாக தந்தையின் மடியில் வைத்துக்கொண்ட வெற்றிவேல் தாயை பார்த்து கண்ணை சிமிட்டினான்.” இந்த கொடுமையெல்லாம் பார்க்கணும்னு என் தலையில எழுதி இருக்கு”, என்று தலையிலடித்துக் கொண்ட அலமேலு “அப்பனும், மகனும் வந்து கொட்டிகிட்டு வீட்டைவிட்டு முதல்ல வெளியில போங்க. வீட்டில் இருந்துகிட்டு என் உசுர எடுத்துட்டு இருக்கீங்க”, என பொரிந்து விட்டு சமையல் அறைக்குள் சென்றுவிட்டார்.

மனைவி நகரவும் “ராஜா அப்பாதான் தரகா்கிட்ட சொல்லி உனக்கு பொண்ணு பாா்க்குறேன்னு சொல்லிட்டேனே! அதுக்குள்ள ஏன் இந்த மாதிரி எல்லாம் சோக பாட்டு பாடுற? உனக்கு என்ன வயசு ஆகுது? இப்பதானே 28 முடிஞ்சு 29 ஆரம்பிச்சிருக்கு”, என மகனிடம் பதவிசாக பேசிக்கொண்டிருந்த துரைசாமியை கண்ட வெற்றிவேலுக்கு குதூகலமாகிவிட்டது.

“என்னப்பா இப்படி பேசுறீங்க? 29 வயசாயிடுச்சு… காலாகாலத்துல கல்யாணம் பண்ணலனா கொரோனா வைரஸ் வருமாம், சார்ஸ் வைரஸ் வருமாம், நீபா வைரஸ் வருமாம்”, என விவசாயத்தை மட்டுமே அறிந்த தன்னுடைய தந்தைக்கு பீதியைக் கிளப்பிய வெற்றிவேல் அவரது அதிர்ந்த முகத்தை திருப்தியாக பார்த்துவிட்டு அறையை விட்டு வெளியேறினான்.

துரைசாமி,அலமேலு இவர்களின் ஒரே புதல்வன்தான் வெற்றிவேல். பிஎஸ்சி அக்ரிகல்ச்சர் படித்துவிட்டு தந்தைக்கு உதவியாக இருக்கும் நிலங்களை விவசாயம் பார்க்கிறேன் என சுற்றிக்கொண்டிருக்கும் வெற்றிவேலின் பெருமை நார்த்தம்பட்டி மட்டுமல்ல அதனை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களும் அறிந்த விஷயமாகும்.

அவனது பெருமையை அறிந்த காரணத்தினாலேயே பெண் கொடுத்திட பெண் வீட்டார்கள் தயங்கிக். கொண்டிருந்தார்கள். வீட்டில் துடைப்பம் எடுத்து சாத்தினாலும் வெளியில் தன் மகனை ஒரு வார்த்தை யார் கூறினாலும் அவர்களின் தலையை சீவி விட்டுதான் அலமேலு வேறு வேலை பார்ப்பார். துரைசாமி மகனை கண்ணு, ராஜா என சிறு குழந்தை போன்றுதான் கொஞ்சுவார்.

சாப்பிட்டு முடித்துவிட்டு மேலும் சிறிது நேரம் பெற்றோருடன் வம்பிழுத்த பின்னர் வெற்றிவேல் தங்களது தோட்டத்தில் களை எடுப்பதை மேற்பார்வையிட சென்றான். அவன் தோட்டத்திற்கு சென்று விட்டான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட அலமேலு தனது கணவரின் அருகில் வந்து “ஏன் மாமா! இந்த பயலுக்கு பொண்ணு பார்க்க சொன்னேனே! பார்த்தீங்களா? தரகர்கிட்ட எதுவும் சொல்லி இருக்கீங்களா?”, என வினவினார்.

“சொல்லியிருக்கேன் அலமேலு! தரகா் ஒரு நாலஞ்சு இடம் கொண்டு வந்தாரு. நாம பார்த்து பொண்ணு புடிச்சிருக்குன்னு சொல்றதை விட பொண்ணு வீட்ல முடிவு பண்றதுதான் நல்லா இருக்கும்னு தோணுச்சு. அதனால நம்ம பையன் போட்டோவையும், ஜாதகத்தையும் அவர்கிட்ட கொடுத்து அனுப்பிருக்கேன். எந்த இடம் தகைஞ்சி வருதோ அந்த இடத்தை முடிப்போம்”, என் மனைவிக்கு பதில் உரைத்த துரைசாமி மேலும் ஏதோ கூற தயங்குவதை அலமேலு உணர்ந்தார்.

“நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு புரியுது. நரம்பில்லாத நாக்கு என்ன வேணாலும் பேசும். அதுக்காக என் பையனுக்கு கல்யாணம் பண்ணாம வச்சி இருக்க முடியுமா? ஒத்த பொம்பள பிள்ளைய பெத்து இருந்தா கூட இவ்வளவு வேதனைப்பட்டு இருக்க மாட்டேன். 20, 22 வயசுல கல்யாணம் பண்ணி வேற வீட்டுக்கு அனுப்பிட்டு நிம்மதியா இருந்திருப்பேன். ஆனா இவனை வச்சிகிட்டு கழுதை மேய்க்கிறதுகூட ரொம்ப சுலபம் அப்படிங்கற மாதிரி எனக்கு நித்தமும் தோணுது. அந்த ஒரு காரணத்துக்காகவே இவனை கல்யாணம் பண்ணி வச்சி அன்னிக்கே தனிக்குடித்தனம் வச்சுடனும்”, என மேலும் பேசி தன் கணவரை திகிலடைய செய்துவிட்டு இவ்வளவு நேரம் தான் திட்டித்தீர்த்த மகனுக்கு ஆரஞ்சு ஜூஸ் எடுத்துக்கொண்டு அலமேலு கிளம்பிவிட்டார்.

மற்ற வீட்டில் நிலவுவது போல் இங்கு அம்மா மகன் இருவரும் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள். வெற்றிவேலுக்கு அனைத்திற்கும் அப்பாதான் வேண்டும். துரைசாமியும் மகனை ஒரு கடுஞ்சொல் அவன் பிறந்ததிலிருந்து கூறியதில்லை.

அலமேலு தோட்டத்துக்கு சென்ற பொழுது அங்கே களை பிடுங்குபவா்களை மேற்பார்வையிடாமல் ஒரு ஓரமாக அமர்ந்து தனது நோட்டில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்த வெற்றிவேலைக் கண்டவர் மனதில் திகிலடிக்க ஆரம்பித்தது.

ஏனெனில் மகன் நோட்டையும் பேனாவையும் எடுத்துவிட்டான் எனில் ஏதோ ஆப்படிக்க போகிறான் என்பது அலமேலு மட்டுமின்றி சுற்றியிருக்கும் கிராமங்களில் வாழும் அனைவருமே அறிந்திருந்தனர். இருந்தாலும் தன்னுடைய அதிர்ச்சியையும், பயத்தையும் வெளியே காட்டிக் கொள்ளாமல் வெற்றிவேலின் அருகே சென்றவர் “வெற்றி! இந்தா இந்த ஜூஸை குடிச்சிட்டு வேலையைப் பாரு”, என அவனிடம் தான் எடுத்து வந்திருந்த ஜூஸை தந்தார்.

அதனை கையில் வாங்கியவன் ” ஏன்ம்மா எப்பப் பார்த்தாலும் வயித்துக்குள்ள எதையாவது திணிச்சுட்டே இருக்க? என்னை மாதிரி திறமைசாலிகளுக்கு சாப்பாடுங்குறது நாலாவது பட்சமாகதான் இருக்கணும்”, என அலுத்துக் கொண்டே கூறினாலும் அடியில் தேங்கி இருந்த கடைசித்துளி வரை மிச்சம் வைக்காமல் குடித்து முடித்தான்.

“எல்லாரும் இரண்டாவது பட்சம்தான்னு சொல்லுவாங்க. நீ என்ன நாலாவது பட்சம்ன்னு வித்தியாசமா சொல்ற”, என அங்கே வேலை செய்துகொண்டிருந்த ஒரு ஒரு பாட்டி கேட்டவுடன் “ஒரு மனுஷனுக்கு முதலாவதா திறமை இருக்கணும். ரெண்டாவதா காதல் இருக்கணும். மூணாவதாவும் காதல்தான் இருக்கணும். இந்த மூணுமே இல்லேன்னாதான் சோறு₹, எனக்கூறிவிட்டு “இந்த விளக்கம் போதுமா?இல்லை இன்னும் கொஞ்சம் வேணும்னா சொல்லு பாட்டி… நல்லாவே சொல்லுவேன்”, என தன்னிடம் கேள்வி கேட்டவரை சிறிது நொந்துகொள்ள செய்துவிட்டு மீண்டும் தன்னுடைய வேலையில் வெற்றிவேல் ஆழ்ந்த பொழுது அவனது கையில் இருந்த பேனா அலமேலுவால் பிடுங்கப்பட்டது.

“புதுசு புதுசா யோசனை வர்றப்ப நோட்டுல எழுதி வைச்சாதான் என்னால நடைமுறையில் செய்ய முடியும். ஏன்மா இப்படி படுத்துற?”, என அலுத்துக் கொண்டவன் பேனாவை வாங்க முற்பட அவரோ “இப்ப என்ன கருமத்தை யோசிக்கிற? அதை முதல்ல சொல்லித்தொலை. அதுக்கு அடுத்து இந்தப் பேனாவை தா்றதா இல்லை இந்த பேனா வச்சு உன்னை போட்டுத் தள்ளுறதான்னு முடிவு எடுக்கிறேன்”, என பற்களைக் கடித்தவாறு கூறினார்.

வீட்டுக்குள் அடி என்ன மிதி கூட பெற்ற தாயிடமும், மனைவியிடமும் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் வெளியிடத்தில் சாத்து விழுந்தால் அசிங்கம் என்பதை உணர்ந்த வெற்றிவேல் “அது ஒன்னுமில்லைம்மா! அந்த கீழத்தெரு ராகவா இருக்கான் இல்லையா? புதுசா ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து இருக்கான்.

அவன் படிச்சது கெமிஸ்ட்ரிதான். ஆனா அவன் வேலைக்கு சேர்ந்த கம்பெனியோ மினரல் வாட்டர் கம்பெனி. அந்த மினரல் வாட்டர் கம்பெனில கொஞ்சம் வியாபாரம் டல்லா இருக்காம். அதனால என்னை காலைல பார்க்க வந்தவன் “ஏன்டா வெற்றி! நீ சொந்தமா ஒரு மினரல் வாட்டர் கம்பெனி ஆரம்பிக்கக் கூடாது அப்படின்னு கேட்டான். எனக்கும் உடனே ஆரம்பிச்சிடனும்னு தோணிச்சு. அதுக்காகதான் எவ்வளவு செலவாகும்ன்னு கணக்குப்போட்டு பார்த்துகிட்டு இருக்கேன்”, என்று அசால்ட்டாக உரைத்தான்.

அவன் ராகவன் பெயரைக் கூறிய பொழுதே அவனது வீட்டிற்கு சென்று அவனை மொத்துவதற்கு முடிவெடுத்த அலமேலு அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன்னுடைய மகனிடம் “ராஜா! ஏன் மினரல் வாட்டர் கம்பெனி சின்னதாக ஆரம்பிக்கிறதுக்கு பிளான் போடுற? பெருசா செய்யலாமே!”, என்று வினயமாகக் கூறினார்.

“எதுக்கு சிறுசா செய்றதுக்கே சோத்துல நீ விஷத்தை வச்சுடுவியோன்னு நான் பயந்துகிட்டு இருக்கேன். இதுல பெருசா செஞ்சா மண்டைய பொளந்துடமாட்ட”,என்று அன்னையை அறிந்தவனாக கூறிய வெற்றிவேல் “பாவம் பொழச்சு போகட்டும்மா… நம்மளால நாலு பேரு ஊருக்குள்ள நல்லா இருக்காங்க அப்படின்னா அதற்காக சந்தோசப்படனும் தவிர வருத்தப்படக் கூடாது”, என தத்துவம் பேசியவன் அன்னையின் கையில் இருந்த பேனாவைப் பிடுங்கி மீண்டும் தன் வேலையை ஆரம்பித்தான்.

அவனையே அலமேலு முறைத்துக் கொண்டிருப்பதை பார்த்த களை எடுத்துக்கொண்டிருந்த பாட்டி ஒருவர் அலமேலுவின் அருகில் வந்து “விடு அலமேலு! உன் பையன் சூதுவாது இல்லாம நல்லவனா இருக்கான். அந்த குணத்துக்காகவே நல்லா இருப்பான்”, என அவரை ஆறுதல் படுத்துமாறு கூறியதில் உண்மை இருந்தாலும் அவன் கூறும் திறமை என்ற ஒரு விஷயத்தால் மற்றவர்கள் மகனை தரமிறக்கிப் பேசுவதை அந்த தாயால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

ஆனால் அதை வெளிப்படையாகக் கூறாத அலமேலு “போங்க பெத்தம்மா! போய் உங்க வேலையை மட்டும் பாருங்க”, என அவரிடம் முறைத்துவிட்டு வெற்றியின் அருகில் வந்து சிறு குரலில் கூறியதைக் கேட்டதும் அவன் அதுவரை எழுதிக்கொண்டிருந்த நோட்டை தூக்கி போட்டுவிட்டு தாயை அதிர்ச்சியுடன் நோக்கினான். அவன் அதிர்ச்சியில் அலமேலுவின் கண்கள் ஆனந்தத்தை அள்ளித் தெளித்தன.

வெற்றிவேலின் திறமை என்னவோ? அலமேலுவின் ஆனந்தத்திற்கு காரணமான வெற்றிவேலின் அதிர்ச்சி என்னவோ?

Categories
On-Going Novels யுவனிகா

சுவாசம் – 5

சுவாசம்  –  5

 

ஒரு பெண் அழுதால் ஆயிரம்

கைகள் துடைக்க நீளும்

ஒரு ஆண் அழுதால் அவன்

கைகள் மட்டுமே துடைக்க நீளும்,

தன்னை தேற்றிக் கொள்ள

தெரிந்தவன் தான் ஆண்

 

நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஒவ்வொரு காலகட்டத்திலும்   உறவுகளையும் மீறி நிறைய பேர் அறிமுகம் ஆவார்கள். அதில் சிலரை ஐயோ இவர்களை முன்பே நாம் பார்த்திருக்கலாமே  என்றோ இன்னும் ஒரு சிலரை கடைசி வரை இவர்கள் முகத்தில் முழிக்கவே கூடாது என்றோ நினைப்பது மனித இயல்பு. ஆனால் விதியின் வழியை யார் அறிவரோ??…

 

தான் முதல் முறையாக பார்த்ததிலிருந்து கெட்டவனாகவே தோன்றிய சிற்பியைத் தேவி சந்திப்பாளா? அப்படி சந்தித்தால் மேலே சொன்ன இரண்டில் அவனை எதுவாக பார்க்க வைக்கப் போகிறது அவளின் விதி.

 

அதைப் போல் தன்னைச் சந்தித்த நாள் முதல் இன்று வரை தன்னைத் தப்பானவனாகவே நினைப்பது மட்டுமில்லாமல் இன்று தன்னை  ஜெயிலுக்கே அனுப்பிய தேவியை சிற்பி மன்னிப்பானா இல்லை காலம் போன போக்கில் விட்டு விடுவானா..

 

மூன்று வருடங்கள் கழித்து..

 

கலெக்டர் பங்களா ..

இருண்ட தன் அறையில் ஸோஃபாவில் நீண்ட நாட்களாக  வெட்டப் படாத தலைமுடியில் இருந்து முகத்தில்  மீசை தாடி என்று வளர்ந்திருக்க உடல் மெலிந்து போய் கண்ணுக்குக் கீழே கருவளையத்தோடு  கண்ணில் உயிர்ப்பே இல்லாமல் ஸோஃபாவில் தலை சாய்த்து விட்டத்தை வெறித்த படி அமர்ந்திருந்தது சாட்சாத் நம்ம பிரதாப்பே தான்!

 

அப்போது கவலை தோய்ந்த முகத்துடன் அவன் அறைக்கு  வந்த மைதிலி அங்கிருந்த திரைச்சீலைகளை விலக்கி அறை விளக்கைப் போட்டவர் மகன் பக்கத்தில் அமர்ந்து அவன் தலை முடியைக் கோதியவரோ

 

“பிரதாப்! என்ன பா நீ?  தினம் தினம் இப்படியே இருந்தா எப்படி? தேவிக்கு ஆறுதலா இருக்க வேண்டிய நீயே இப்படி ஒடஞ்சி போய் உட்கார்ந்தா பிறகு அவள யார் பார்த்துக்கிறது? என்ன தான் நீ அவ எதிர்ல தைரியமா இருந்தாலும் இப்படி தனியா வந்து மருகுறியே டா!

 

ஒரு தாயா இப்படி உங்க ரெண்டு பேரையும் பார்க்கும் போது என் மனசு என்ன பாடுபடும்னு கொஞ்சமாவது நினைச்சிப் பாரு பிரதாப். எப்போதும் தேவிய நான் என் மகளா தான் பார்த்திருக்கன். இனிமே அவள என் மருமகளா பார்த்துக்கறன். போடா.. போய் சீக்கிரமா அவ கிட்ட பேசி அவள இங்க கூட்டிட்டு வாடா” என்று மைதிலி குரல் தழுதழுத்துப் போய் மகனிடம் கெஞ்ச

 

வந்ததிலிருந்து  அவர் முகத்தைக் கூட பார்க்காமல் அமர்ந்திருந்தவனோ அவர் சொன்ன கடைசி வார்த்தையில் அடிபட்ட குழந்தையின் தவிப்போடு அவன் தாயின் முகத்தைப் பார்க்கவும்  அதில் தவித்தவளோ

 

“என்ன பிரதாப் பண்றது? அன்னைக்கு நாம பேசி வச்ச மாதிரியே உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் நடந்திருந்தா இந்நேரம் தேவி உன் மனைவியா இருந்திருப்பா! அதற்குப் பிறகு இப்படி ஒரு சம்பவம் அவளுக்கு நடக்க நாம விட்டிருக்க மாட்டோம்.

 

அப்படியே மீறி நடந்திருந்தாலும் நிச்சயம் என் மருமகள நான் விட்டிருக்க மாட்டேன். விதி என்ற பெயர்ல உங்க இரண்டு பேரோட வாழ்க்கையும்  இப்படி ஆகும்னு நான் கனவுல கூட நினைச்சிப் பார்க்கலையே பிரதாப்!” என்று மைதிலி கண்ணீர் விட, தாயின் கண்ணீரைப் பார்த்ததும் அவர் மடியில் தலை சாய்ந்தவனோ

 

“அம்மா அழாதிங்க.. அழாதிங்க மா. எனக்கு ஆறுதலா இருக்கற நீங்களே இப்படி உடைஞ்சி போய்ட்டா பிறகு நான் எப்படி மா தைரியமா இருக்கறது?” என்று  தழுதழுத்த குரலில் அவன்  கேட்கவும்

 

“இல்ல ராஜா! இனி நான் அழல.. அப்பவும் இப்பவும் நான் சொல்ற விஷயம்னா அது நீ சீக்கிரம் தேவி கிட்ட பேசி அவளக் கல்யாணம் பண்றது தான். அதை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த அம்மாவுக்காக செய் டா”

 

“எப்படி மா? எப்படி என்னை அதை செய்யச் சொல்றீங்க? தேவி இப்போ இருக்கற நிலையில என்னால அவ கிட்ட நெருங்கக் கூட முடியலையே மா! பிறகு எங்க நான் அவளக் கல்யாணம் பண்ண? மனசு முழுக்க ஆயிரம் ஆயிரம்  காதல அன்ப பாசத்த நேசத்த அவ மேல நான் வச்சிகிட்டு இருக்கன் மா. அதை எல்லாம் அவ புரிஞ்சிக்காம நான் ஏதோ அவளுக்கு வாழ்க்கை கொடுக்கறதா நினைச்சா அதை என்னால தாங்கிக்கவே முடியாது மா!” என்று குமுறியவன் 

 

“அதனால அவள நான் இப்படியே விடவும் மாட்டேன். அவ தான் என் மனைவி. எனக்கு இன்னும் கொஞ்ச நாள் அவகாசம் கொடுங்க மா. இப்போ தான் அவ தன்னைச் சுற்றி என்ன நடக்குதுனே புரிஞ்சிக்க ஆரம்பிச்சிருக்கா. சீக்கிரமே  நான் நேரம் பார்த்து அவ கிட்ட பேசி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கறேன் மா” என்று அவன் உறுதிபடச் சொல்லவும் மகனின் தலையை வருடியவளோ

 

“செய் பா.. அதைச் சீக்கிரம் செய். இப்போ சாப்பிட வாடா” என்று சொல்லி விடாப்பிடியாக அவனை அழைத்துச் சென்றார் மைதிலி.

 

அங்கு தேவி வீட்டில் காலை நேர பரபரப்பு எதுவும் இல்லாமல் ஏதோ கடமைக்கென்று அவரவர் தன் வேலைகளைப் பார்க்க மருந்துக்குக் கூட அங்கிருந்தவர்கள் யார் முகத்திலும் சந்தோஷம் இல்லை. சின்ன வயதிலிருந்தே அறிவுமதி அமைதியானவள் தான். எண்ணி ஒன்றிரண்டு வார்த்தை தான் பேசுவாள்.

 

இப்போதெல்லாம் அது கூட இல்லை. அவள் சமையலில் ஏதோ வேலையாக இருக்க அடுத்தவள் அமுதரசியோ  திறந்த வாயை மூடாதவள் ஆனால்  இப்போதெல்லாம் வாயே திறப்பதில்லை. அவளும் அறிவுக்கு உதவியாக இருக்க இதில் அந்த வீட்டில் முன்பு போல் சகஜமாக இருக்கும் ஒரே ஆள் கதிர் மட்டும் தான்.

 

அவன் தன் படிப்பில் கவனமாக இருக்க இவர்களின் தந்தை கந்தசாமியோ காலையிலேயே பீடி சுருட்டும் தன் வேலையில் மும்முரமாக இருக்க அந்த நேரம் பார்த்து அந்த வீட்டின் மவுன நிலையைக் கலைத்தது நடுக்கூடத்தில் தூளியில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு மாத கைக் குழந்தையின் வீல் என்ற அழு குரல்.

 

அந்த சத்தத்தில் அறிவு தன் கையிலிருந்த பாத்திரத்தை நழுவ விட அமுதரசியோ இப்போது என்ன செய்வது என்பது போல் கையைப் பிசைந்து கொண்டிருக்க, கதிர் எழுந்து வந்து தொட்டிலை ஆட்டி குழந்தையின் அழுகையை நிறுத்த நினைக்க, ஆனால் அந்தக் குழந்தையோ அழுகையை நிறுத்தின பாடில்லை.

 

குழந்தை பசிக்காகத் தான் அழுகிறது என்பதை அறிந்த கந்தசாமியோ “எம்மா அறிவு! பாப்பா பசிக்கு அயிவுது பாரு. ரவ பால் எடுத்துகினு வா. அமுது! என் கை கயிவ ஒரு குண்டான்ல தண்ணி மொண்டுகினு வா. அதுக்கு முந்தி கதிரு! இந்த பீடி கட்ட அல்லாம் எடுத்து அப்பால வைய்” என்று கொஞ்சமும் பிசிர் இல்லாத குரலில் தன் பிள்ளைகளுக்கு  வேலை இட அனைவரும் அவர்  சொன்னதைச்  செய்தனர்.

 

அறிவு, தந்தை கேட்ட பாலை ஒரு கிண்ணத்தில் கொடுத்தவள் கூடவே தந்தை சொல்லாமலே தூளியிலிருந்த குழந்தையைத் தூக்கி அவர் மடியில் படுக்க வைக்க அன்று தேவி ஒரு மாத குழந்தையாய் இருந்த கதிருக்கு எப்படி ஸ்பூனால் பால் புகட்டினாலோ அப்படியே அவர் இன்று அந்தக் குழந்தைக்குச் செய்யப் போக, அதே நேரம் திடீரென்று ஓடி வந்து அவர் முன் மட்டியிட்டு அமர்ந்த கதிரோ

 

“வேணா நைனா.. அந்த பால பாப்பாக்கு குடுக்காத” என்று சொல்லித் தடுக்கவும்

 

“ஏன் டா வோணான்ற?”

 

“இப்டி மாட்டுப் பால் குடுத்தா அப்பால பாப்பாக்கு நோவு எதிர்ப்பு சத்து இல்லாம பூடுமாம். பக்கத்து வூட்டு அக்கா சொல்லிக்கினாங்க. அத்தால இத்த குடுக்க வேணாம். நான் அக்காவ பால் குடுத்துக்கச் சொல்றன்” என்றவன் தந்தையின் பதிலுக்குக் காத்திராமல் அந்த பிஞ்சி மொட்டை பயத்துடனே தன் கையில் ஏந்தியவனோ அந்தக் கூடத்திலேயே ஒரு பகுதியில்  புடவையை மறப்பாய் கட்டித் தொங்க விட்டிருக்க அந்த மறப்புக்குள் போனவன் எங்கோ வெறித்த படி குத்து காலிட்டு சுவரில் சாய்ந்த நிலையில் அமர்ந்திருந்த தேவியை நெருங்கியவனோ

 

“எக்கா பாப்பா பசியில அயிவுது பார். இந்தா நீ பசியாத்து எக்கா” என்று குழந்தையை அவள் முன் நீட்ட, எதுவும் எனக்கு கேட்கவில்லை என்பது போல் தேவியோ  அமர்ந்திருக்க இதுவரை பசிக்கு அழுது கொண்டிருந்த குழந்தையோ தாயின் வாசத்தை உணர்ந்தாலும் அவளுடைய கதகதப்பான கை இன்னும் தன்னைத் தீண்டவில்லை என்பதை அறிந்தவளோ அவள் அரவணைப்பு வேண்டும் என்ற எண்ணத்தில் இன்னும் பெருங்குரல் எடுத்து அழ,

 

அந்தக் குரல் தேவியை கொஞ்சமே கொஞ்சம் அசைத்ததோ என்னவோ! அதில் எங்கோ வெறித்திருந்தவளின் உடலோ ஒரு முறை தூக்கிப் போட தன்  கண்ணிமைகளை அசைத்தாள் தேவி.

 

அவள் முட்டியின் மேல் குழந்தையைத் தான் பிடித்த படி வைத்தவனோ “எனுக்கு அம்மா இல்ல.. அத்தால நான் மாட்டுப் பால் குடிச்சிகினேன். பாப்பாக்கு தான் அம்மா நீ கீறியே க்கா! அப்பால ஏன் அது மாட்டு பால் குடிச்சிக்கனும்? உனுக்கு தெரியாத்து இல்ல.. அப்டி செஞ்சிகினா பாப்பா ஒடம்பு வீக்கா பூடும் இல்ல?” என்று கதிர்  அவளை கேள்வி கேட்க அதற்குள் குழந்தையோ தன் தாயின் கழுத்து மார்பு என்று தனது பிஞ்சிக் கை காள்களால் உதைக்கவும் உடலில் ஒருவித  சிலிர்ப்பு ஓட எந்த வித மறுப்பும் இல்லாமல் குழந்தையை வாங்கினாள் தேவி. இதையெல்லாம் சற்றுத் தூரயிருந்து பார்த்துக் கொண்டிருந்த அறிவோ

 

“கதிரு! உனுக்கு இஸ்கூலுக்கு டைம் ஆச்சி. நீ கெளம்பு” என்று சொல்ல அவன் விலகியதும்  கையில் வெந்நீர் பாத்திரம் மற்றும் சுத்தமான துணியுடன் தேவியிடம் வந்தவள் இப்போதும் தேவி குழந்தையை மடியில் வைத்த படி எங்கோ வெறித்த பார்வையுடன் அமர்ந்திருப்பதைப் பார்த்தவள் அவளிடமிருந்து குழந்தையை வாங்கிக் கீழே படுக்க வைத்து விட்டு 

 

பின் தேவியின் மாராப்பை விலக்க எங்கோ வெறித்திருந்த தன் பார்வையின் நிலையிலேயே தேவி  தங்கையின் கையை இறுக்கப் பிடித்தவளோ பின் அவளுக்கு முதுகு காட்டி அமர்ந்து  தானே தன் மார்பை அந்த வெந்நீரால் தங்கை கொண்டு வந்த ஆடை கொண்டு சுத்தம் செய்தவள் பின் கீழேயிருந்த குழந்தையைத் தூக்கித் தன் மடி மீது வைத்துப் பால் தர, இதெல்லாம் பார்த்த தங்கைக்குக் கண்ணில் கண்ணீரே வந்து விட்டது.

கண்ணீருடன் தேவியின் தோளில் சாய்ந்தவளோ

“எக்கா… எக்கா…. நீ இப்டி இருக்கணும்னு தான நான் வேண்டிக்கினன்?” என்று அழுகையின் ஊடே சொன்னவள் 

 

“அம்மு செல்லம்! நீங்கத் தான் அம்மாவ மாத்தினீங்களா சாமி?” என்று குழந்தையிடம் கேள்வி கேட்டவள் குழந்தை ம்ம்ம்…. என்று சப்புக் கொட்டி பால் குடிக்கவும் அதில் நெகிழ்ந்து போய்  குழந்தையின் நெற்றியில் ஒரு முத்தத்தைத் தந்து விட்டுத் தன் சந்தோஷத்தை தந்தையிடம் சொல்ல ஓடினாள் அறிவுமதி.

 

ஒரு தாய் தான் பெற்ற குழந்தைக்குப் பால் கொடுப்பதில் மற்றவர்களுக்கு என்ன பெரிய சந்தோஷம் இருக்க முடியும்? ஆனால் இவர்களுக்கு சந்தோஷம் தான்!

 

பத்து வயதிலிருந்து தன் குடும்பத்தைப் பார்த்துக் கொண்ட தேவிக்கு இன்று தன் தேவையையும் தன் மகளின் தேவையையுமே பார்த்துக் கொள்ள முடியாத அளவுக்கு அப்படி  என்ன நடந்தது?

 

சிற்பியைப் போலீஸில் மாட்டி விட்ட பிறகு மூன்று வருடம் தேவியின் வாழ்வு சாதாரணமாகத் தான் போனது. கல்லூரி இளங்கலை முடித்தவுடன் மேற்கொண்டு முதுகலை படிக்கப் போகிறேன் என்று சொன்னவளை வேண்டாம் என்று தடுத்த பிரதாப் அவளை சிறிது நாட்கள் கணிணி ஆசிரியராக வேலை பார்க்கச் சொல்ல அதையே தட்டாமல் செய்தாள் தேவி.

 

மும்பையில் சுங்கத் துறையில் வேலை செய்த பிரதாப் எப்போதாவது சென்னை வந்து போக அதில் அதிகமாக தேவியின் அருகாமையை இழந்தவனோ  தன்னுடைய பதவி உயர்வையும் அவள் படிப்பையும் ஒரே இடத்தில் வைக்க முடிவு செய்திருந்தான் அவன். அதனால் தேவியைத் தான் விரும்புவதாகப் பொற்றோரிடம் சொல்லி திருமணத்திற்குச் சம்மதம் கேட்க

 

ஏற்கனவே தனக்கு சந்தேகம் இருந்தது என்ற சொல்லுடன் அவன் விருப்பத்திற்குச் சம்மதித்தார்  அவன் தாய் மைதிலி. ஆனால்  பிரதாப்பின் அப்பா மட்டும் தேவியின் பின்புலத்தை நினைத்துக் கொஞ்சம் யோசிக்க அதையும் மகனின் விருப்பம் என்ற பெயரில் எதை எதையோ பேசி அவரையும்  கரைய வைத்து சம்மதத்தை வாங்கினார் மைதிலி. அவருக்குத் தங்கள் இரண்டு பிள்ளைகளும் நன்றாக இருக்க வேண்டும்  என்பதுதான் ஆசை.

 

தந்தையிடம் சம்மதத்தை வாங்கிய பின் முழு வீச்சாய் தன் வேலையில் இறங்கி பதவி உயர்வை வாங்கியவன் தன் காதலை தேவியிடம் சொல்வதற்காக ஓடோடி வர

 

அவன் வருவதற்கு முந்தைய நாள் தேவி தான் படித்த கல்லூரியில் பழைய மாணவர்களுக்கான கூட்டம் ஒன்றில் பங்கேற்கப் போனவள் காணாமல் போய் விட எங்கு தேடியும் கிடைக்கவில்லை அவள். மறுநாள் காலையிலேயே வந்த பிரதாப்பும் அவளை எங்கெல்லாமோ தேட பலன் தான் இல்லை.

 

கல்லூரியில் விசாரித்ததில் எல்லோரும் எப்போதோ சென்று விட்டார்கள் என்ற பதில் தான் கிடைத்தது. அவள் நண்பர்கள் தெரிந்தவர்கள் அவள் எப்போதும் போகுமிடம் என்று ஒன்றையும் விடாமல் விசாரிக்க அவள் வந்ததற்கான தடயமே  இல்லை என்றார்கள்.

 

‘கந்தசாமி அங்கிளோட பேச்சைக் கேட்டுப் போலீஸ்ல ரிப்போர்ட் தராமல் இருந்தது தப்பு. இனி போலீஸ் உதவியோட தான் தேவியைத் தேட வேண்டும்’ என்ற முடிவுடன் பிரதாப் காரை எடுக்க நினைக்க

 

“கலிகாலம் டா! சீக்கிரம் உலகம் அழியப் போறதுனு சொல்றது நிஜம் தான் போல.. சின்னப் பொண்ணு! என்னமா குடிச்சிட்டு குப்ப மேடு  சாக்கடைனு கூட தெரியாம இல்ல விழுந்து கிடக்குது! இதுங்க எல்லாம் எங்க நாட்டுக்கு நல்லது செய்யப் போகுதுங்க?” என்று ஒருவர் சொல்ல

 

“அட ஆமா யா..  நீ சொல்றது சரி தான். இதுல அந்தப் பொண்ண அடிக்கடி கலெக்டர் வீட்டுல நான் பார்த்து இருக்கன் பா. இது தான் கொடுமையிலும் கொடுமை” என்று இரு பெரியவர்கள் பேச்சுவாக்கில் பேசிக் கொண்டு போக, அவர்கள் பேச்சு சுரீர் என்றது பிரதாப்புக்கு.

 

‘அது தேவியாக இருக்காது என்றாலும் யாராவது அவளை அப்படி செய்திருந்தால்?’ என்ற உள்ளுணர்வில் காரை விட்டு இறங்கி ஓடிச் சென்று பார்த்த பிரதாப்பின் இதயம் ஒரு வினாடி நின்று தான் போனது. அங்கு சாட்சாத் நிதானம் இல்லாமல் விழுந்து கிடந்தவள் தன்னுடைய வருங்கால மனைவியாய் பாவித்த அவனுடைய தேவி தான்! அவளைத் தூக்கித் தன் மடியில் போட்டவனோ

 

“தேவி மா! தேவி! இங்க பாருடா.. உன் பிரதாப் வந்திருக்கன். என்ன பாரு மா” என்று பலமுறை அவள் கண்ணத்தில் அடிக்க எதற்கும் அவளிடம் பலனில்லை. அவனுக்குக் கண்ணீரே வந்து விட்டது. நேற்றிலிருந்து காணாமல் இருந்தவள் கிடைத்து விட்டாள் என்று சந்தோஷப் படுவதா இல்லை இப்படி பேச்சு மூச்சு இல்லாமல் கிடக்கிறாளே என்று வருந்துவதா?

 

எதுவும் புரியாமல் கண்ணீர் விட்டவன் அவளைத் தூக்கித் தன் காரில் போட்டு மருத்துவமனைக்குச் செல்ல வழியிலேயே தன் வீட்டுக்கும் தன் குடும்ப மருத்துவருக்கும் தகவல் சொல்ல இவன் கார் மருத்துவமனை வாசலில் நிற்கும் போதே அங்கு  எல்லாம் தயாராகவே இருந்தது. கூடவே அங்கு மைதிலியும் இருக்க, தேவியிருந்த கோலத்தைப் பார்த்ததுமே அவருக்குள் ஒரு திகிலைப் பரப்பியது என்னவோ உண்மை தான்.

 

முழுமையாகத் தேவியைப் பரிசோதித்த மருத்துவர் அவளுக்குப் போதை மருந்து அதிகம் கொடுக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டுள்ளதாகச் சொல்ல அதைக் கேட்ட வினாடியே உறைந்து போனான் பிரதாப். தேவியை யாரோ கடத்திப் போயிருப்பார்கள் என்பது அவன் யூகித்தது தான்.

 

அதிலும்  தேவிக்கு இருக்கும் திறமையில் அவர்களிடமிருந்து தப்பி வந்து விடுவாள் என்றே அவன் நம்பினான். ஆனால் இப்படி ஒன்று அவளுக்கு நடந்திருக்கும் என்பதை இந்த வினாடி அவளை மருத்துவமனையில் சேர்க்கும் வரை அவன் நினைத்துக் கூட பார்க்க வில்லை.

 

மைதிலி ஏற்கனவே ஒரளவு யூகித்தவர் என்பதால் “டாக்டர்! தேவி உயிருக்கு ஆபத்து இல்லயே?” என்று கேட்க

 

“உயிருக்கு இப்போதைக்கு ஆபத்து இல்ல. ஆனா அதையும் உறுதியா நிலையா சொல்ல முடியாது. அவளுக்கு அளவுக்கு அதிகமா போதை மருந்தைக் கொடுத்திருக்காங்க. ஒருவேளை அதை வலுக்கட்டாயமா செலுத்தி இருக்கலாம்னு நினைக்கிறன். அந்த டோஸ் அவள முழு நேர மயக்கத்துல வைக்கத் தான் அப்படி செஞ்சி இருக்காங்க.

 

இப்போதுமே அவளுக்கு மயக்கம் தெளிய எவ்வளவு நேரம் ஆகும்னு சொல்ல முடியாது. என்னுடைய யூகப் படி பார்த்தா தன்னைச் சுற்றியும் தனக்குமே  என்ன நடக்குதுனு  தெரியாமே இருக்கும். கை கால் உடம்பில் வளு இருக்காது.

 

இன்னும் சொல்லப் போனா யாரவது இந்த போதை மருந்து எடுத்திருக்கும் அந்த நபர் மேல அந்த  நேரத்துல  நீங்க கொதிக்கிற எண்ணையையே ஊற்றினா கூட அவங்களுக்கு வலியோ அதைத் தடுக்கணும் என்ற உணர்வோ இருக்காது. மொத்தத்தில் சொல்லனும்னா அவங்க உயிருள்ள ஒரு பொருள் மாதிரி தான் இருப்பாங்க.

 

அவ்ளோ வீரியமுள்ள போதை மருந்தைத் தான் தேவிக்கும்  கொடுத்திருக்காங்க. பல வருடமா இந்த போதைப் பழக்கத்துல இருந்தாலோ இல்ல பல பேருக்கு இதைக் கொடுத்துப் பரிசோதித்து கண்ணால அவர்களைப் பார்த்து உணர்ந்தால் மட்டும் தான் இதை இவ்வளவு அளவு என்ற பெயர்ல சுலபமா பயன்படுத்த முடியும்.

 

இதுல கொடுமை என்னனா தனக்கு என்ன நடந்ததுனு நீங்க யார்னா சொன்னா தான் அவளுக்கே தனக்கு நடந்த வன்கொடுமை பற்றி தெரியும். ஒருவேளை  அப்படி ஒன்று நடந்த இடத்திலே அவள் தெளிந்து இருந்தா ஏதோ தனக்கு நடந்த  விபரீதத்தை உணர்ந்து இருப்பாளோ என்னமோ? ஆனா இப்போ இங்கு வந்து நாம அவள முழுமையா பரிசோதித்து பார்த்துகிட்ட தால அவளுக்கு ஏதோ விபத்து ஆச்சினு கூட சொல்லலாம்”

 

இதுவரை வாயே திறக்காத பிரதாப் “அப்படியே சொல்லிடலாம்  அங்கிள்!” என்று சொல்ல

 

“அப்படி பண்ணலாம் பிரதாப்! ஆனா இப்படி ஒரு கேடுகெட்டத் தனத்த செய்தவன் யாருனு தெரியாமலே போய்டுமே? ஏதோ ஒரு பர்சன்ட் தனக்கு நடந்தத வச்சி யூகிச்சி அந்த பெண்  சொல்ல வாய்ப்பு இருக்கு. அதிலும் தேவி மாதிரி டேலன்டான பொண்ணுங்க கொஞ்சம் மன தைரியத்தோட மூளையிடம்  போராடுனா நிச்சயம் அவனக் கண்டு பிடிக்கலாம்.

 

ஆனா அதை யோசிக்கச் சொல்லி நாம அவளுக்குப்  பிரஷர்  கொடுத்தா தேவிக்கு  புத்தி பேதலிச்சிப் போகவும் வாய்ப்பு இருக்கு. அதனால தான் தேவிக்கு அப்படி ஒரு பிரஷர் கொடுக்கவா வேண்டாமானு யோசிக்கறன்”

 

“வேணாம் அங்கிள்! எனக்கு என் தேவி உடல் நிலை தேறி வந்தாலே போதும்” என்று பதைபதைத்தான் பிரதாப்.

 

“அதே தான் நானும் யோசிக்கறன் பிரதாப். அதிலும் தேவி உடம்பு ரொம்ப பலவீனமா இருக்கு. இப்பவே அவ ஒருவாரம் ஐ.சி.யூல இருந்தா தான் கொஞ்சமாவது நாம அவள பழைய தேவியா பார்க்க முடியும்” என்று இப்போது தேவி இருக்கும் நிலையைக் கண்ணாடியாய் வயதிலும் அனுபவத்திலும் பெரியவரான அந்தக் குடும்ப மருத்துவர் சொல்லி முடிக்க

 

இதை எல்லாம் ஆரம்பித்ததில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த தேவியின் தந்தை வெளியில் ஊமையாகக்  கண்ணீர் விட்டாலும் உள்ளுக்குள் ரத்தக் கண்ணீரே வடித்தார் அவர்.

Categories
On-Going Novels Sudha Ravi வட்டத்துக்குள் சதுரம்

அத்தியாயம் -12

அத்தியாயம் – 12

உடலில் உள்ள உதிரமெல்லாம் வடிந்து போன உணர்வு அவனுக்கு. இனி, என்ன இருக்கிறது தன் வாழ்வில்? தான் குடும்பத்திற்காக பார்ப்பது போல் அவர்கள் தனக்காக யோசிக்கவில்லையே? தன் உணர்வுகளுக்கு அங்கு மரியாதை இல்லையா? என்று யோசித்து வெற்றிடத்தை வெறித்தபடி நின்றான்.

கோபம், அழுகை ஆங்காரம் எல்லாம் கலந்த கலவையாக அவன் முன்னே வந்து நின்றாள் பவானி.

“அவ்வளவு சொன்ன பிறகும் அவளை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டீங்க இல்ல?”

இயலாமையுடன் கூடிய பார்வையில் “மாமா என் காலில் விழுந்துட்டாங்க பவானி” என்றான் நெஞ்சில் எழுந்த வலியுடன்.

“இப்படிப்பட்ட பெண்ணை பெத்தா ரோட்டில் போறவன் வரவன் காலில் தான் விழனும்” என்றாள் எரிச்சலாக.

அவனோ “பவானி! மாமா எவ்வளவு பெரிய மனுஷன். ஊரில் அவருக்கு எவ்வளவு மரியாதை இருக்கு. அவர் போய் என் காலில்” என்றவன் முகத்தை அழுத்தி துடைத்துக் கொண்டான்.

“ஏன் அண்ணே நீங்க  அதை செய்யல? உங்க  காதல் உங்களுக்கு  வேண்டாமா? விருப்பம் இல்லாத ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க அவ என்னவெல்லாம் சாகசம் பண்றா…ஆனா நீங்க விரும்பின பெண்ணை கல்யாணம் பண்ணிக்க எதுவுமே செய்யாம பழியை தூக்கி அடுத்தவங்க பேர்ல போடுறீங்க”.

அவளின் கேள்வி சாட்டையடியாக அவனை தாக்க “என்னம்மா செய்ய சொல்ற? பெத்தவங்களை எதிர்த்துகிட்டு அவ கழுத்தில் தாலியை கட்ட சொல்றியா?” என்றான்.

“செஞ்சா தான் என்ன? உங்களுக்கு விருப்பம் இல்லேன்னு தெரிஞ்சும் அவங்க தங்கச்சிக்காக உங்க வாழ்க்கையை பணயம் வைக்கும் போது நீங்க அவ கழுத்தில் தாலி கட்டினா தப்பு என்ன?”

“ம்ச்..பவானி நீ சின்ன பொண்ணும்மா. உனக்கு வாழ்க்கையை விளையாட்டா பார்க்கிற. தாலி கட்டிட்டா பிரச்சனை முடிஞ்சுதுன்னு நினைக்கிற. அதற்குப் பிறகு உள்ள வாழ்க்கையை நீ புரிஞ்சுக்கல. எல்லா உறவுகளையும் ஒதுக்கிட்டு வாழ்ந்திட முடியாதும்மா” என்றான்.

அவனை முறைத்து “ஆமாம் அவளை கட்டிக்கிட்டு உறவுகளோட சந்தோஷமா வாழ்ந்திடுவீங்க. இந்த நிமிஷத்தோட உங்களுக்கும் எனக்குமான பேச்சும், உறவும் முடிஞ்சு போச்சு” என்றவள் தோட்ட வீட்டினுள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டாள்.

ஒரு அழகிய பந்தமாக தொடங்கப்பட வேண்டிய உறவு ஆரம்பிக்கும் முன்பே ஒவ்வொரு உறவாக வெட்டிக் கொண்டு செல்வதைக் கண்டு கலங்கி நின்றான். தனக்கு இந்த வாழ்க்கை நிறைய வைத்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டான்.  ஆனால் மலரின் நிலையை எண்ணி பயந்தான். கார்த்திகா எந்தக் காரணம் கொண்டும் அவளை காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.

வீட்டிற்குள்ளோ இவனது மனதிற்கு நேர்மாறாக இருந்தது நிலைமை. அங்கம்மாள் மிகுந்த உற்சாகத்துடன் மாப்பிள்ளையிடம் பேசிக் கொண்டிருந்தார்.

“ஊருக்கு போயிட்டு உங்க வீட்டு ஆளுங்க கிட்ட பேசி சீக்கிரம் தேதி வைக்கிற வேலையை பாருங்க மாப்பிள்ளை” என்றார்.

“ஆமாங்க அத்தை. என் பொண்ணு கல்யாணத்தை அப்படி இப்படி பண்ணிட முடியாதில்ல. நல்லா தடபுடலா நடத்தனும்” என்றார் பெருமையுடன்.

கார்த்திகா தூணோரம் சாய்வாக அமர்ந்தபடி தந்தை பேசுவதை ரசித்துக் கொண்டிருந்தாள். அனைத்து தடைகளையும் கடந்து தான் நினைத்ததை சாதிக்கப் போவதற்கான அறிகுறி அவள் முகத்தில் தெரிந்தது.

அலமேலுவும் சொல்ல முடியாத மகிழ்ச்சியுடன் அண்ணனிடம் “அண்ணே! என் பொண்ணுக்கு நீங்க எடுக்கிற புடவை நகை எல்லாம் பிரமாதமா இருக்கணும். நீங்க பொண்ணு எடுக்கிற இடம் ஏப்பை சாப்பையான இடமில்லை சொல்லிட்டேன்” என்றார் மிரட்டலாக.

கோவிந்தன் அவர்களின் உற்சாகத்தில் கலந்து கொள்ளாமல் ஒருவித தவிப்புடன் அமர்ந்திருந்தார். தங்கை அப்படி சொன்னதும் வேறுவழியில்லாமல் “அப்படி எல்லாம் எங்க வீட்டு மருமகளை விட்டுடுவோமா என்ன அலமு?” என்றார்.

அப்போது காப்பி எடுத்துக் கொண்டு வந்த பிரபாவிடம் “என்ன அண்ணி என் பெண்ணை மாமியார் கொடுமை பண்ணுவீங்களா? என்றார் அலமு.

பிரபாவோ மனதிற்குள் ‘க்கும்…அம்மாவும் பொண்ணுமா சேர்ந்து என்னை கொடுமை பண்ணாம இருந்தா சரி தான்’ என்று எண்ணிக் கொண்டார். ஆனால் அதை வெளியில் சொல்ல முடியாமல் ஒரு அசட்டு சிரிப்புடன் “எங்க வீட்டுக்கு வர மகாலட்சுமி அண்ணி அவ” என்றார்.

அங்கம்மாளோ மருமகளை ஒரு பார்வை பார்த்து விட்டு “நானிருக்கும் போது என் பேத்தியை இந்த வீட்டில் ஒரு சொல்லு சொல்ல விட்டுடுவேனா” என்றார்.

சண்முகம் அங்கு நடப்பவற்றை சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருந்தார். அந்த வீட்டில் தன் மகள் ராணி போல வாழப் போகிறாள் என்றெண்ணி கண் கலங்கினார். அந்த வீட்டின் மொத்த சந்தோஷத்தையும் அவள் துடைத்தெறியப் போகிறாள் என்பதை அவர் உணரவில்லை.

அன்றைய பொழுது பெரியவர்கள் எல்லாம் உற்சாகத்துடன் திருமண சடங்குகளுக்கான முறைகளைப் பற்றியும், செய்ய  வேண்டியவை பற்றியும் பேசிக் கொண்டிருக்க, சிறியவர்கள் மூவர் அவரவர் அறையில் அடைந்திருந்தனர். கார்திகாவோ எழுந்து குதிக்க முடியாமல் தனது உற்சாகத்தை மறைத்துக் கொண்டு கஷ்டப்பட்டு அவளது அறையில் அமர்ந்திருந்தாள்.

விஜயனை நேரடியாகப் பார்த்து என்னை விட்டுவிட்டு அவளை மணக்க நினைத்தாயே பார் ஒரே நாளில் அனைத்தையும் மாட்டிட்டேன்னு சொல்லணும் என்று நினைத்தாள். ஆனால் இனி திருமணம் வரை நேருக்கு நேர் சந்திக்க அனுமதி கிடைக்காது என்று தெரியும்.

திருமணம் முடிந்து பார்த்துக் கொள்ளலாம் அவனை என்று எண்ணி அமைதியாக இருந்தாள்.

மாலையே அவர்களை அழைத்துக் கொண்டு சண்முகம் கிளம்பி விட்டார். திருமணம் பேசி முடிவான பிறகு அங்கிருக்க வேண்டாம் என்று கூறி தங்கள் ஊருக்கு கிளம்பி விட்டனர். வழியனுப்ப அனைவரும் வாயிலுக்கு வர, இறுகிய முகத்துடன் விஜயனும் வந்து நின்று கொண்டான். பவானி கார்த்திகாவை திரும்பி கூட பார்க்கவில்லை. என்னிடம் நெருங்காதே என்று முகத்தில்  அறைந்தார் போல் கூறி விட்டாள். திருமணத்திற்கு பிறகு அவளை ஒரு கை பார்த்து கொள்ளலாம் என்று எண்ணி அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டாள்.

அவர்கள் சென்றதும் இழவு விழுந்த வீடு போலானது. விஜயன் தோப்பிற்கு செல்லாமல் தன்னறைக்குள் முடங்கிக் கொண்டான். பிரபாவோ துக்கத்தை அடக்க கொல்லையை சுத்தம் செய்ய போய் விட்டார். மலரும், பவானியும் தோட்ட வீட்டிற்குள் புகுந்து கொண்டனர். கோவிந்தன் மட்டும் அன்னையிடம் சிக்கிக் கொண்டார்.

“இங்கே பாரு கோவிந்தா அலமு சீக்கிரமே தேதிய குறிச்சிடுவா. நாம வெள்ளனவே எல்லா வேலையும் முடிச்சிடனும். நமக்கு நேரமே பத்தாது சொல்லிட்டேன்” என்றார்.

அவரோ உள்ளுக்குள் இருந்த வருத்தத்தை வெளிக்காட்டாதவாறு “ம்ம்..சரிம்மா” என்றார்.

“எங்க உன் பொண்டாட்டி? எவ்வளோ வேலை இருக்கு என்ன பண்ணிட்டு இருக்கா?” என்றார் கோபமாக.

“கொல்லையில இருக்காம்மா”.

அங்கம்மாளோ கோபத்துடன் “சரியா போச்சு! பிள்ளை கல்யாண வேலை இருக்கு இவ விளக்கமத்தை தூக்கி கிட்டு போயிட்டாளுக்கும்” என்று நொடித்துக் கொண்டார்.

வேலையாளை அனுப்பி அவரை கூடி வர சொல்ல சோர்ந்த முகத்துடன் வந்தவர் “என்னத்தை காப்பி தண்ணி வேணுமா?” என்றார்.

மகனை பார்த்து முறைத்தவர் “உன் பொண்டாட்டிக்கு கூறு கேட்டு போச்சு கோவிந்தா” என்றார் கடுமையாக.

அவர் என்ன பேசுகிறார் என்று புரியாமல் பிரபா நிற்க, கோவிந்தனோ அன்னையிடம் எதிர்த்து பேச முடியாமல் மௌனமாக நின்றார்.

“என்ன இந்த முழி முழிக்கிற? உன் பிள்ளைக்கு கல்யாணம் பேசி இருக்கோம். நீ என்னவோ பேயறைஞ்ச மாதிரி நிக்கிற?” என்றார் எரிச்சலாக.

பிரபாவோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் “கொல்லை குப்பையா கிடந்துச்சு அத்தை அது தான் பெருக்க போனேன்” என்றார்.

“அடியே இவளே! நானென்ன பேசுறேன் நீ என்ன பதில் சொல்ற? கல்யாண வேலை கிடக்கு. நீ என்னன்னா தொடப்பத்தை தூக்கி கிட்டு சுத்திகிட்டு இருக்க. உனக்கு கிறுக்கு தான் பிடிச்சிருக்கு” என்றார் எரிச்சலாக.

மனதிற்குள் ‘கிறுக்கு பிடிக்காத குறை ஒன்னு தான்’ என்று நொடித்துக் கொண்டவர் “நாளைக்கேவா கல்யாணம். இப்போ தானே முடிவாகி இருக்கு பார்த்துக்கலாம்” என்று அசட்டையாக சொல்லி விட்டு சென்று விட்டார்.

மருமகளின் செயலைக் கண்டு அங்கம்மாளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்ன இவ இப்படி பேசிட்டு போறா என்று பார்த்தார்.

சிந்தனையுடனே எழுந்து உள்ளே சென்றவர் பவானியைத் தேட அவளை காணவில்லை என்றதும் தோட்டத்திற்கு சென்றார்.

“பவானி! அடியே சின்ன சிறுக்கி…எங்கே இருக்க?” என்றார் சத்தமாக.

பட்டென்று தோட்ட வீட்டின் கதவை திறந்து கொண்டு வந்தவள் “என்ன பாட்டி? எதுக்கு இப்படி கத்துற?” என்றாள் எரிச்சலாக.

“சித்த என்னோட வா! பரண் மேல இருக்கிறதெல்லாம் சுத்தம் பண்ணுவோம்” என்றார்.

“அதென்ன இழவுக்கு சுத்தம் பண்ணனும் இப்போ? பண்டிகை எல்லாம் தான் முடிஞ்சு நாளாச்சே” என்றாள் கடுப்பாக.

தாவங்கட்டையில் கையை வைத்து அவளை மேலும் கீழுமாக பார்த்தவர் “என்னடி ஆத்தாளுக்கும், மவளுக்கும் பேய் பிடிச்சிருக்காடி. அவ என்னடான்னா சிலுப்பி கிட்டு போறா. நீ என்னடான்னா இழவை பத்தி பேசிட்டு இருக்க. மரியாதையா வா வந்து சுத்தம் பண்ணிக் கொடு” என்றார்.

“முடியாது! எனக்கு உடம்பு வலிக்குது” என்று முறைத்துக் கொண்டு நின்றாள்.

அவளை முறைத்து விட்டு “சரி சரி அவளை வர சொல்லு. நான் பண்ணிக்கிறேன்” என்று கூறி விட்டு நடந்தார்.

“பாட்டி! செங்கையை கூப்பிட்டு செய்ய சொல்லுங்க. மலர் இனி இந்த வேலை எல்லாம் செய்ய மாட்டா” என்றாள் கோபமாக.

சட்டென்று திரும்பியவர் “ஏன் செஞ்சா என்ன குறைஞ்சு போயிடுவாளா?” என்றார்.

“அவ எதுக்கு செய்யணும்?”

“சோறு போட்டு வளர்ததுக்கு செஞ்சா தப்பில்லை” என்றார் வன்மத்துடன்.

அதுவரை அவர்கள் பேசுவதை கேட்டபடி சுருண்டு படுத்திருந்தவள் கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து வந்து “நான் வரேன் பாட்டி” என்று அவர் பின்னே சென்றாள்.

பவானி டென்ஷனாகி “ஏய்! நீ போகாதே! அவங்க பேசுற பேச்சுக்கு வேண்டாம் மலரு” என்று கையைப் பிடித்துக் கொண்டாள்.

அவளது பிடியிலிருந்து கையை விடுவித்துக் கொண்டவள் “இத்தனை வருஷம் சாப்பிட்ட சோத்துக்கு என் கடமையை செய்ய விடு” என்றாள் கண்களில் வலியுடன்.

அவளது வார்த்தைகள் நெஞ்சில் பதிய கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட “மலரு! இதெல்லாம் நல்லாயில்ல. நாங்க என்னைக்காவது உன்னை அப்படி நினைச்சிருக்கோமா? வேண்டாம் மலரு” என்றாள்.

மெல்ல அவள் கைகளில் இருந்து கையை விடுவித்துக் கொண்டவள் பாட்டியின் பின்னே சென்றாள்.

அவசரமாக அன்னையிடம் ஓடியவள் “உங்க அண்ணன் பொண்ணு தானேம்மா மலரு. அவ இந்த வீட்டுக்கு வரதுக்கு முன்னமே எப்படி நடத்துறாங்க பாட்டி. தயவு செய்து உங்க மௌனத்தை உடைச்சு அவளுக்கு உதவி செய்யப் பாருங்கம்மா” என்று கெஞ்சினாள்.

அவளை வெற்றுப் பார்வை பார்த்தவர் “ஊருக்கு தான் நான் பெரிய வீட்டு மருமக. வீட்டுக்குள்ள உங்க பாட்டிக்கு வேலைக்காரி. அதை தாண்டி எதையுமே நான் செஞ்சிட முடியாது” என்றார்.

அவளோ ஆத்திரமாக “அப்போ ஏன் மா அவளை இங்கே வளர்த்தீங்க? அப்படியே விட்டிருக்க வேண்டியது தானே?” என்றாள்.

“மனசு கேட்காம அழைச்சிட்டு வந்துட்டேன். நம்ம் மனுஷங்க மனசாட்சியோட இருப்பாங்கன்னு நினைச்சு” என்றார் முந்தானையால் கண்களைத் துடைத்தபடி.

அன்னையை பரிதாபமாக பார்த்துவிட்டு “இந்த நிமிஷம் வரை இந்த குடும்பத்தில் பிறந்ததை பெருமையா நினைச்சிட்டு இருந்தேன் மா. ஆனா இப்போ அருவெறுப்பா உணருறேன்” என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றாள்.

பாட்டியின் பின்னே சென்ற மலர் இறுகிய முகத்தோடு பாட்டி சொன்ன வேலைகளை செய்து கொடுத்துக் கொண்டிருந்தாள். அவளது முகத்திலேயே அவள் மனதின் எண்ணங்கள் தெரிந்தது. இனி, தன் வாழ்க்கையில் எதுவுமில்லை. அது இழுத்துச் செல்லும் பாதையில் செல்லலாம். இறந்த பின்பு ஆன்மா எங்கு சென்றால் என்ன என்கிற நிலையில் இருந்தாள் அவள்.

 

Categories
On-Going Novels Yuvanika

சுவாசம் – 4

சுவாசம்  –  4

 

ஒரு பெண் சிரிக்கும் போது

அழகாகத் தெரிவாள்…

அவளை சிரிக்க வைத்து

ரசிக்கும் ஒரு ஆண்

அதை விட அழகாக தெரிவான்…!

 

அன்று தன் தாயின் வற்புறுத்ததால் பதிமூன்று  வயதில் வீட்டை விட்டு டெல்லி போன வர்மனோ தன் தாயின் மேலுள்ள கோபத்தாலும் அவர்களே பேசட்டும் என்ற வீம்பாலும் இருந்து விட, அதன் பிறகு அவன் இங்கு வரவே இல்லை.

 

மகனின் விருப்பம் இல்லாமல் அவனைப் பிடிவாதமாக அனுப்பி வைத்த சந்திரவதிக்கு அன்று  புற்றுநோய்  ஆரம்பக் கட்டத்தில் இருக்க அதைத் தன் மகனிடமும் அண்ணனிடமும் மறைத்தவள்  தான் படும் கஷ்டத்தை மகன் பார்க்கக் கூடாது என்பதற்காகவும் தன் இறுதி காலத்திற்குப் பிறகு மகன் தன்னை ஏன் அவன் தாத்தா வீட்டு உறவில் ஒட்ட விட வில்லை என்று குறை சொல்லக் கூடாது என்பதற்காகவும் மகனை  தன் மாமனாருடன் அனுப்பி வைத்தாள் சந்திரவதி.

 

அதன் பிறகு தன் நோயை அண்ணனிடம் சொன்னாலும் கடைசி வரை தன் மகனிடம் மட்டும் தெரிவிக்கவோ பிறர் தெரியப்படுத்தவோ விடவில்லை அவள். இந்த நோயால் படாத பாடுபட்டவள் நோயின் வீரியத்தால்  கடைசி காலத்தில் தன் மகனைப் பார்க்க வேண்டும் என்று விரும்ப மாமனின்  மூலமாக அதை அறிந்த வர்மனோ தாயைப் பார்க்க வர. சந்திரவதி தன் மகனைப் பார்த்த சந்தோஷத்தில் வர்மாவின் கையைப் பிடித்துக் கொண்டே அன்றே  இறந்தும் விட, தன் தாயின் இறுதிக் காரியத்தை முடித்து அங்கேயே இருந்தான் வர்மன்..

 

அன்று சிறுவயது பிடிவாதத்தால் தன் தாயை இழந்த அவன் தன்னை வளர்த்த தன் மாமனோட கடைசி காலத்திலாவது அவருடன் இருக்கலாம் என்று முடிவு செய்து இங்கேயே இருந்தான் வர்மன். தாயின் இழப்பு துயரத்தில் இருந்தவனை அவன் நண்பர்கள் வெளியே அழைத்து வர, அப்போது அங்கு நடந்தது தான் தேவிக்கும் அவனுக்குமான  இவ்வளவு பிரச்சனை!

 

நான் தான் வர்மன் என்று அவன்  சொன்னதும் நம்ப முடியாத தன்மையுடன் ஆ…. என்று வாய் பிளந்து அவனைப் பார்த்தாள் தேவி.

 

அன்று பார்த்த வர்மனுக்கும் இன்று பார்க்கும் வர்மனுக்கும் மடுவுக்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு பட்ட வெளிச்சமாய் அவள் கண்களுக்கு  தெரிந்தது. அன்று கன்னம் ஒட்டி முகத்தில் கண் மட்டும் எடுத்துக் காட்ட முட்டை கண்  என்று ஒல்லியாக கருப்பாக  எப்போதும் இடுப்பில்  கைலியிலேயே சுற்றிக் கொண்டிருந்தவன்  தான் இன்று சற்று மாநிறத்தில் இருபத்தி மூன்று வயது ஆண் மகனின் கம்பீரத்துடன் டீ  ஷர்ட் ஜீன்ஸ் பேண்ட் சகிதம் கண்ணில் பவர் போட்டிருக்க அவன் உடையும் பேச்சுமே   சொன்னது அவன் நன்கு படித்த மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவன் என்று.

 

ஆனால் இதை எல்லாம் விட தேவியின் கண்களுக்கு அவன் ஒரு ரவுடி பொறுக்கி என்று முன்பே அவள் மனதில் பதிந்து போனதால் இப்போது அவன்  தன் தாய்க்காக மொட்டை அடித்து மீசை தாடி மழித்திருந்த கோலம் கூட அவள் கண்களுக்கு அவனை ஏதோ  சினிமா படங்களில்  வரும் பெண்களை துரத்தும் வில்லனாகவே காட்டியது

 

அவள் வாய் பிளந்து நிற்கவும்

“ஏய்…. நீ கேட்ட வர்மா நான் தான்! இப்போ சொல்லு நீ யார் டி?….”  என்று அவன் அதிகார தோனியில் கேட்க

 

“தோடா..  அதுங்காட்டியும் மறந்து பூட்சா உனுக்கு? அடேய் இடிமாடு! அப்போ நீ என்ன அடயாளம் கண்டுக்கலயா?” என்று அவள் பயமின்றி எதிர் கேள்வி கேட்கவும்..

 

இப்போதும் அவன் தன் விழி சுருக்கி யோசிக்க  சற்று தள்ளியிருந்த அவன் நண்பர்களில் ஒருவன் அவனிடம் நெருங்கி அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் 

“டேய் நீ இந்த ஊரை விட்டுப் போறதுக்கு மின்ன இந்த பொண்ணு கையால தான் டா அடி வாங்கிக்கினு போன” என்று கிசுகிசுக்க, சடாரென அவன் புறம் வேகமாகத் திரும்பியவனோ “டேய் நான் அடி வாங்கினத மட்டும் சொன்னியே! திரும்ப அவளுக்கு நான் அடி கொடுத்ததை சொன்னியா டா?” என்று மூச்சுக் காற்றில் சூடேற வர்மா கேட்க

 

“டேய் வர்மா! அவ உன் கிட்ட மட்டும் தான் டா அடி வாங்கி இருக்கா. ஆனா அவ இதுவரைக்கும் எத்தனை பேருக்கு அடி கொடுத்திருக்கா தெரியுமா? அப்போ அதைத் தான எண்ணிக்கையா வச்சி சொல்ல முடியும்? இப்ப கூட பாரு நம்ம பாலு நெஞ்சில எப்படி ஏறி மிதிக்கிறானு!” என்று மறுபடியும் அந்த நண்பன் அவளை ஒரு திமிர் பிடித்தவள் என்கிற ரீதியில் அவளைப் பற்றி எடுத்துச் சொல்ல உடனே தன் கோபத்தை அவளைப் பிடித்திருந்த  கையின் அழுத்ததில் இவன் காட்டவும், வலி தாங்க முடியாமல் அந்த ஒல்லிக் குச்சி உடம்புக் காரி ஸ்ஸ்….. ஸ்…. ஆ… என்று துடிக்க

 

“அடியேய் குல்ஃபி! உன்னை எங்கையோ பார்த்து இருக்கோமேனு அப்பவே நினைச்சேன் டி.  இப்ப தான் தெரியுது நீ தான் அந்த ராங்கிக்காரினு! இன்னும் நீ திருந்தல இல்ல? ஒரு ஆம்பளப் பையன் நெஞ்சில காலை வச்சிருக்க? எடு டி அந்த காலை!” என்று அவன் குரலை உயர்த்தாமலே அதே நேரம் எரிமலையின் சீற்றத்துடன் அவன் வெடிக்க, தன் கை வலியையும் மீறி அவன் வார்த்தையை அலட்சியம் செய்தவளோ

 

“இப்போ இவன் நெஞ்சில வச்ச காலை நான் கண்டி அன்னிக்கே உன் நெஞ்சில வச்சி ருத்ர தாண்டவம் ஆடிக்கினேனு வை..  இன்னைக்கு நீ என் கையப் புடிச்சி கீய மாட்ட டா! பொறுக்கி ச்சீ….. கைய வுடுறா பரதேசி! அன்னிலிருந்து  இன்னிக்கு வரிக்கும் இப்டி உன்ன மெரிக்கணும்னு தான் டா டெய்லி உன்ன தேடிக்கினேன்” என்று அடிபட்ட பாம்பென அவள் சீற,சிற்பிக்கோ ஆச்சிரியம் கலந்த அதிர்ச்சி!

 

“என்னது? தினம் தினம் என்ன தேடினாளா?  ஒரு ஆண் மகனான நானே அன்றைய விஷயத்த மறந்துட்ட  போது இவ ஏன் மறக்காம இருக்கா? அதிலும் என் மேல இவ்வளவு வன்மத்தை வளர்த்துக் கொண்டு! இவள் இன்று சொல்லும் வரைக்குமே எனக்கு இவள் முகம் ஞாபகம் இல்லையே?” என்று மனதால் பலதையும் நினைத்தவனோ அதை எல்லாம் விடுத்து அவள் சொன்ன பொறுக்கி என்ற வார்த்தையை மட்டும் எடுத்தவனோ

 

“ஆமா டி.. நான் பொறுக்கி தான்! அப்போ பொறுக்கி என்ன செய்வான் தெரியுமா?” என்று நிறுத்தி நிதானமாகக் கேட்டவனோ அவளை  உச்சி முதல் பாதம் வரை விழுங்கும் பார்வையால் மொய்க்க, இதுவரை நெஞ்சை நிமிர்த்தி இருந்தவளோ இப்போது அவன் பார்வையில் கூனிக் குறுகிப் போய் கீழே விழுந்து இருந்தவனின் நெஞ்சிலிருந்து காலை எடுத்தவளோ

 

“கைய வுடுடா பொறுக்கி!  நான் போறன்..” என்று கூறி தன் கையை அவனிடமிருந்து விடுவிக்க அவள் போராட,  இன்னும் அவள் கையை அழுத்திப் பிடித்தவனோ

 

“அப்பறம் என்ன டி சொன்ன? என் நெஞ்சில காலை வைக்கணும்னு தான ?அப்படி மட்டும் நீ வச்சி இருந்தா நான் சும்மா இருப்பனு நினைக்கிறியா?”  என்று அவன் ஆழ்ந்த குரலில் சொல்ல, என்ன செய்திருப்பான் என்று ரதிதேவி யோசிக்கும் போதே அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்தவனோ

 

“உன்ன நாஸ்தி பண்ணி இருப்பன் டி!” என்றான் நிதானமாக.

 

அவன் குரலை விட அவன் கண்ணில் வந்து போன குரோதத்தில் தேவியின் உடல் தானாகவே நடுங்க ஆரம்பித்தது. அந்த நடுக்கத்தை அவளைப் பிடித்திருந்த கையில் உணர்ந்தவனோ மேற்கொண்டு அவளைச் சீண்ட நினைக்க, அதே நேரம் அவன் கைப்பேபேசி அழைக்கவும் எடுத்துப் பார்க்க நிரல்யா காலிங் என்று வரவும் முகத்தில் ஒரு மென்மை பரவ அதைப் பார்த்தவனோ சட்டென அவள் கையை உதறியவனோ

 

“ஒழுங்கா  ஓடிப் போ. இனிமே எவன்கிட்டவாது நீ வம்பு பண்ணுறதைப் பார்த்தேன் பிறகு உன்னை என்ன செய்வனே  தெரியாது” என்று மிரட்டி அவளை  அனுப்பினான் சிற்பிவர்மன்.

 

இதுவரை அவனிடம் எகிறியவளோ கடைசியாக அவன் சொன்ன வார்த்தையிலும் பார்வையிலும் விதிர்விதிர்த்துப் போய் மவுனமாக விலகிச் சென்றாள் தேவி.  அவள் அந்த தெருவைத் தாண்டும் வரையுமே விடாமல்  அழைத்துக் கொண்டேயிருந்த போனை அவன் ஆன் செய்ய

 

“போன் எடுக்க இவ்வளவு நேரமா? அப்படி எங்கடா போன?” என்று எடுத்தவுடனே உரிமையாகக் கேட்டது ஒரு பெண் குரல்.

 

“இப்போ நீ எதுக்கு டி பண்ண? முதல்ல அத சொல்லு”

 

“……” அந்த பக்கம் அமைதியாக இருக்கவும்

 

“உன் கிட்ட தாண்டி கேட்குறன். இப்போ எதுக்கு போன்  பண்ண?” 

 

“டேய் சும்மா அடங்குடா! நீ எகிறினா நான் அடங்கறவனு நினைச்சியா? அதெல்லாம் என் கிட்ட வேலைக்கு ஆகாது தம்பி” என்றவள் “இப்போ நான் கேட்கறதுக்கு பதில் சொல்லு. எதுக்கு தாத்தா பாட்டி எல்லாம் வேணாம் சொல்லிட்டு அங்கே சென்னையிலேயே இருக்க போறனு சொன்னியாம் பாட்டி என் கிட்ட சொல்லி ரொம்ப வருத்தப் பட்டாங்க. வேணும்னா உன் மாமாவையும் இங்க கூட்டிகிட்டு வரச் சொல்றாங்க. அதனால நீ அவரையும் கூட்டிட்டு இங்கேயே வந்திடுடா…..” அவள் முடிக்க கூட இல்லை

 

“நான் அங்க வர மாட்டேன் டி. இனிமே என் கடைசி காலம் எல்லாம் என் மாமாவோட தான். அவரும் அங்க வரமாட்டார். அதனால இனி எங்களை  எங்க இஷ்டத்துக்கு வாழ விடச் சொல்லு அந்த பெரியவர”

 

“டேய் அவர் உன் தாத்தா டா!”

 

“அதனால தான் பெரியவர்னு சொன்னேன்”

 

உன் அம்மா இல்லாத இடத்துல நீ ஏன் டா தனியா இருக்கணும்?”

 

“என் அம்மா உயிருடன் இருக்கும் போதே அவங்க கிட்ட இருந்து என்ன பிரிச்சவர் தானே இவர்? இவ்வளவு நாள் அங்க இருந்ததே அதிகம். அதனால இனி என்னை அங்க வரச் சொல்லாத” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான் வர்மன்.

 

வர்மா இங்கிருந்து அவன் தாத்தாவுடன் ஊருக்குப் போன மறுநாளே அவன் அப்பா ஞானேந்திரன் இறந்து விட தன் அறையை விட்டு வெளியே வராமல் இருந்த வர்மனை அவன் தந்தைக்கு இறுதிக் காரியம் செய்யச் சொல்லி அங்கு வந்திருந்த அத்தனை பேர் சொல்லியும் எதுவும் செய்யவில்லை அவன்.

 

அந்த கோபத்தில் அவன் பாட்டி கங்கேஸ்வரி அவனிடம் எந்த ஒட்டுதலும் இல்லாமல் விலகியே இருக்க, திருநீலகண்டனோ அவனுக்கு வேண்டியதை எல்லாம் அவன் கேட்காமலே செய்தவர் படிக்க வைத்தவர் ‘நீ வரியா வா இருக்கியா இரு போறியா போ’ என்ற படி தன் கவுரவத்துக்காக அவனைத் தன் பேரன் என்று சொல்லிக் கொண்டார் அவர்.

 

அதனாலோ என்னவோ தனிமையில் இருந்த அவனுக்குத் துணையாக ஆகிப் போனாள் நிரல்யா. அவனை விடச் சிறியவள். இரண்டு பேரும் ஒரே பள்ளியில் படிக்க சாப்பாட்டு நேரத்தில் தனியாக அமர்ந்திருக்கும் வர்மனிடம் வந்து வள வள என பேசிய அவளை மிகவும் பிடித்தது வர்மனுக்கு.

 

அப்படி ஆரம்பித்த நட்பு இன்று வரை வளர்ந்து  பி.எல்  படித்த சிற்பியை வாடா போடா என்று அழைக்கும் அளவுக்கு வளர்ந்தது. 

 

மாடலிங் படித்து வரும் நிரல்யாவிற்கு  கல்லூரியில் விடுமுறை கிடைக்காததால் வர்மனின் தாய் சாவுக்கு அவள்  வரவில்லை. அது தான் இப்போது அவனுடைய கோபத்திற்குக் காரணம். அவன் தாத்தா பாட்டி கூட வராததை எல்லாம் அவன் நினைக்க கூட தயாராக இல்லை. ஆனால் தன் தோழியான தனக்கு இருக்கும் உறவான நிரல்யா வர வேண்டும் என்று எண்ணினான் அவன்.

 

அதன் பிறகு அந்தக் குப்பத்தில் கோவில் திருவிழா வர ஒரு நாள் பக்கத்துக்  குப்பத்து பையன் ரதியின் பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் காலையில் இருந்து  அவளைச் சீண்டி  வரம்பு மீறி  வம்பு வளர்த்துக் கொண்டிருந்தான்.

 

இரவு கூத்தின் போது ஊரே அங்கு கூடியிருக்க இருட்டில் ஒதுக்குப் புறமாக அந்த பெண் ஒதுங்க அதைப் பயன்படுத்திக் கொண்டு அவளைப் பின்தொடர்ந்து  சென்ற அந்த இளைஞன் சற்று வரம்பு மீறி நடக்க அதில்  அவள் பயத்தில் கை கால் உதற அழுது கொண்டு நிற்கவும் எதிர்பாராமல் அங்கு வந்த சிற்பியோ அவனின் நோக்கம் உணர்ந்து அவனை அடித்துப் பின்னி எடுக்க ஒரு கட்டத்திற்கு மேல் அடி பொறுக்க முடியாமல் சிற்பியிடமிருந்து தப்பி ஓடி விட்டான் அந்த இளைஞன்.

 

அதே நேரம் அங்கு தேவி வர சிற்பி ஒரு பெண்ணுடன் இருப்பதைப் பார்த்தவள் அந்த பெண்ணிடம் அவன் வரம்பு மீறினால் கத்தி ஊரையே கூட்டி விடலாம் என்ற எண்ணத்தில் அவள் சற்று மறைந்து நின்று அவர்களைக் கவனிக்க..

 

“இப்போ என்ன நடந்துடுச்சினு அழற?  வயசுப் பொண்ணுனா இப்படி நடக்கறது எல்லாம் சகஜம் தான்.  நடந்தது நடந்து போச்சி.  அதுக்காக ஏன் இன்னமும் இப்படியே நிற்கிற? போய் மறுபடியும் உட்கார்ந்து கூத்து பார். இல்லையா வீட்டுக்குப் போ” என்று அதட்ட, அந்த பெண்ணோ  எந்த பதிலும் சொல்லாமல் அழுது கொண்டே இருக்கவும் அதில் கோபமுற்றவன்

 

“இங்க நடந்தது யாருக்கும் தெரிய வேணாம்னு  நினைக்கிறேன். ஆனா  விட்டா நீ அழுதே ஊரைக் கூட்டி சொல்லிடுவ போல. இதுக்கு மேல இங்க நிற்காம ஒழுங்கா வீடு போய் சேரு. ம்ம்.. போ போ..” என்று அவன் மீண்டும் விரட்ட அழுது கொண்டே அந்த பெண் நகரவும்

 

“ஏய் நில்லு! பிடிச்சி இழுத்ததுல பின்புற ஜாக்கெட் கிழிஞ்சிருக்கு பாரு. தாவணியால  போர்த்திகிட்டு போ” என்று அவன் கட்டளை இடவும் அதன்படியே செய்தவளோ விட்டால் போதும் என்று ஓடி விட்டாள் அவள்.

 

இதை எல்லாம் துண்டு துண்டாகக் கேட்ட தேவியோ சிற்பி தான் அந்த பெண்ணிடம்  தவறாக நடந்து விட்டு இப்போது மிரட்டி அனுப்பி வைக்கிறான் என்று நினைத்தவள் அந்த பெண் போனதும் மறைவில் இருந்து வெளியே வந்து 

 

“டேய் சோமாரி! கயிதை! கஸ்மாலம்! உனுக்கு அல்லாம் ஈவு இரக்கம் மனசாட்சி கீதா  இல்லையா டா?” என்று தேவி மரியாதை இல்லாமல் கத்தவும், அவள் குரலைக் கேட்டு குதூகலத்துடன் திரும்பி  ஏய் குல்ஃபி என்று அழைக்க வந்தவன் அவள் கத்தலில் அதை மாற்றி

 

“அடச்சீ..  ஏன் டி இந்த இரவு நேரத்துல இப்படி கத்தற?” என்று அவன் கோபப் பட

 

“நான் அப்டி தான் கூவுவேன். அந்த பொண்ண பார்த்தா ரொம்ப சின்ன பொண்ணா கீது. அதாண்ட போய் உன் ஆம்பள திமிர காட்டினு கீற இல்ல? ரவ கூட வெக்கமே இல்லாம நீ  செஞ்சிகினு என்ன கூவ வோணாம்னு அதட்டுறியா?”

 

“அடிங்க…. யார் டி இவ? நான்  தப்பா நடந்துகிட்டத நீ பார்த்தியா டி? ஆளும் மூஞ்சியும் பாரு.. வந்துட்டா பெரிய நியாயவாதி! என்னமோ கண்ணால பார்த்த மாதிரியே கத்திட்டு இருக்கா. மறுபடியும் நீ கத்தி பாரு அடிச்சி மூஞ்ச மொகர எல்லாம் பேத்துடுவேன்” என்றவன்  கண்ணில் வெறுப்புடன் அடிக்கக் கை ஓங்கிக் கொண்டு அவளிடம் நெருங்கினான் சிற்பி.

 

பின்ன? அந்த பெண் சம்பந்தப்பட்ட விஷயம் வெளியில் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று அவன் நினைத்திருக்க இவளோ அந்த பெண்ணுடன் தன்னை சம்மந்தப்படுத்திப் பேசியது மட்டுமில்லாமல் கூடவே ஊரைக் கூட்டுவது போல் கத்தவும் அவனுக்கு வந்ததே கோபம்..

 

“ஏய் நாதாரி பயலே…. அந்த பொண்ண மெரட்டி உருட்டுனா போல எனுக்கும் மெர்சல் காமிக்கிறியா?  நீ குடுக்குற இந்த சவுண்டுக்கெல்லாம் இந்த ரதிதேவி அசர மாட்டா.  நீ என்ன அடிச்சி கொண்ணுகினாலும்  சரி நான்….”

 

“ப்ம்ச்….”  என்ற நீண்ட நெடிய சத்தம் ஒன்று  இருட்டை கிழித்துக் கொண்டு அந்த இடமெங்கும் எதிரொலிக்கவும் தான் தேவி உணர்ந்தாள் அவன் தன் இரு கைகளையும் பின்புறமாகக் கட்டித் தன் இதழ்ழோடு அவன்  இதழ் பொருத்தி முத்தம் தந்தான் என்பதை!

 

அவனோ அவள் சொன்ன ரதிதேவி என்ற  பெயரில் புருவம் வில் என வளைய ஆச்சரியத்துடன் உள்ளுக்குள் ரசித்தவனோ அவள் தன்னை நம்பாமல் கத்திக் கூப்பாடு போடவும் கோபத்துடன்  மிரட்ட அவளிடம் நெருங்கியவனோ அவள் இருகைகளைப் பின்னால் பிடித்துக் கொண்டு ஒரு கையால் அவள் வாயை மூட நினைக்க  ஆனால் அவள் அல்லி இதழ்களை நெருக்கத்தில் பார்க்க  அவனையும் மீறி நடந்தது தான் இந்த இதழ் ஒற்றல்!

 

முதலில் அவன் தந்த முத்தத்தில் ஒன்றும் புரியாமல்  அதிர்ச்சியில் இருந்தவளோ பின் அவனிடமிருந்து திமிர அதை உணர்ந்தவனோ தன்  முகத்தை மட்டும் விலக்கி அவள் விழிகளை அசராமல் பார்த்து

 

“ஏய்…. குல்ஃபி! ஒரு முத்தம் தான் டி! அதுவே மாமாவ உள்ளுக்குள்ள என்னென்னமோ செய்து டி.. அதை எப்டி சொல்ல? சும்மா நீ திமிர திமிர  உன்ன என் தோள் மேல தூக்கிப் போட்டுட்டு போய் யாரும் இல்லாத இடத்துல நீ கதற கதற உன்ன முழுசா ஆளணும் டி!” என்று கண்ணில் குறும்பாய் உதட்டைக் குவித்து ஓர் பறக்கும்  முத்தத்துடன் அவன் சொன்ன நேரம் என்ன நேரமோ பாவம் ஒரு நாள் அவன் சொன்னது தான் நடக்கப் போகிறது என்பதை அவன் அறியவில்லை.

 

அவன் கொடுத்த முத்தத்தில் உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தவளோ இப்போது அவன் சொன்ன வார்த்தையில் வெளிப்படையாவே உடல் நடுங்க கண்ணில் கண்ணீர் வழிய அவள் தேம்பவும் அதை பார்த்தவனோ அவளை விட்டு விலக அடுத்த நொடியே மரத்திலிருந்து விழும் சருகென கீழே அமர்ந்தாள் தேவி. அவளுடனே தரையில் மண்டியிட்டு அமர்ந்தவனோ

 

“ஏய் குல்ஃபி! என்ன நடந்துச்சினு இப்ப அழற? கத்தி ஊரைக் கூட்டி நீ மரியாதை இல்லாமல் பேசுன.  அதான் உன்னோட வாய் அடைச்சேன்…” என்று அவன் திமிராகச் சொல்ல  அந்த  வார்த்தைகளில் முன்பை விட அவள் தேம்பவும்

 

அவள்  தேம்பலை நிறுத்துவாள்  என்று பொபறுத்துப்  பொறுத்துப் பார்த்தவன் அதை அவள் செய்ய  மாட்டாள் என்றதும்   இறுதியில் “ரதிதீதீதீ!…” என்று  அவன்   உரக்க அழைக்கத் தன் தேம்பலை நிறுத்தி அவள் அவன் முகம் பார்க்கவும் அவள் விழிகளைப் பார்த்தவனோ

 

“இங்க பார், நான் ஒன்னும் சும்மா சொல்லல. நீ இப்படியே உட்கார்ந்து அழுதுட்டு இருந்தினா நிச்சயம் நான் சொன்னத செய்வன். அது நடக்கனும்னா இங்கேயே இரு. இல்ல வேணாம்னா ஒழுங்கா எழுந்து வீட்டுக்குப் போற வழியப் பாரு” என்று அவன் கொஞ்சமும் பிசிர் இல்லாத குரலில் சொல்லவும் விறு விறுவென அங்கிருந்து எழுந்து செல்ல ஆரம்பித்தாள் தேவி.

 

சிற்பிக்கோ ஆச்சரியம்! “என்னமா சண்டை போட்டா கத்தினா?! ஆனா இவ்வளவு பலவீனமா இருந்து அழறது மட்டும் இல்லாம  பெட்டிப் பாம்பா அடங்கிப் போறாளே?!’ என்ற எண்ணம் தான் எழுந்தது அவனுக்குள்.

 

பாவம் அவனுக்குத் தெரியாதே? தன் தாயின் நடத்தைக்குப் பிறகு என்ன தான் தேவி தைரியமாக இருந்தாலும் இந்த மாதிரி பேச்சுக்கும் நடத்தைக்கும் அவள் முழுவதுமாக உள்ளுக்குள் சுருங்கிப் போய் விடுவாள்  என்று!

 

      

வீட்டுக்கு வந்தவளால் எளிதில் அவன் தந்த அதிர்ச்சியிலிருந்து வெளி வர முடியவில்லை. அதிலும் ஏதோ தான்  தவறு செய்தது போல் தவித்தவள் அவளுக்கு இருந்த மன உளைச்சலில் ஜுரமே வர இரண்டு  நாள் படுத்த படுக்கையாய் இருந்தாள் தேவி .இந்த சம்பவத்திற்குப் பிறகு இரண்டு பேருக்கும் சந்திப்பதற்கான வாய்ப்பே  அமையவில்லை.

 

அதன் பிறகு ஒருவாரம் கழித்து இரண்டு குப்பத்து பசங்களுக்குள்ளேயும் அடி தடி பிரச்சனை வர அதில் தன் நண்பனை அடித்தவனை சிற்பி வெளுத்து வாங்கிக் கொண்டிருக்க அந்த சூழ்நிலையில் தான் மறுபடியும் அவனைப் பார்த்தாள் தேவி.

 

அடி வாங்கிய அந்த இளைஞன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்க அவனோ அந்த ஊர் கவுன்சிலர் மச்சான் என்பதால் அவனை அடித்தது யார் என்ன ஏது என்று போலீஸ் இவர்கள் குப்பத்திற்கு நேரில் வந்து விசாரிக்க குப்பமே சிற்பியைக் காட்டிக் கொடுக்காமல் அமைதி காக்க

 

ஆனால் தேவியோ அவன் மேல் இது நாள் வரையிருந்த கோபம் ஆத்திரம் வஞ்சம் எல்லாம் சேர்த்து சிற்பி தான் குற்றவாளி என்று போலீஸில் சொல்லி தீர்த்துக் கொண்டாள் சிற்பியின் மேலிருந்த வன்மத்தை.

 

அன்று ஊரார் பார்க்க அவள் மேல் கொலை வெறியுடன்  ஜீப்பில் ஏறியவன் தான்  சிற்பிவர்மன்.

Categories
Uncategorized

உறவாக வேண்டுமடி நீயே – டீசர்

#TEASER#

#TITLE  :  உறவாக வேண்டுமடி நீயே….#

“என்ன ணா இன்னும் கிளம்பலையா?”

“ம்ஹும்… நோ…”

“அண்ணா…”  என்று துருவன் ஆரம்பிக்கவும்  

“டோன்ட் டீச் மீ துருவன்! லிஸன்.. எனக்கு  யாரும் கட்டளை இடக் கூடாது. எனக்கு விருப்பமானதை  நான் தான் செய்வேன். சோ நான் வந்து பார்க்கிறேன் இல்லைனா அவங்களை எப்படி வரவழைக்கணுமோ அப்படி வர வைப்பேன். அதில் தான் ஒரு பிசினஸ்மேனின் பவர் இருக்கு. சோ டேக் இட் ஆர் லீவ் இட். இன்னும் பதினைந்து நாள் நான் இங்கே தான் இருக்கப் போகிறேன்.  பை பை!” என்று இவன் அழைப்பைத் துண்டிக்க, இவன் குரலில் இனி என்னைத் தொந்தரவு செய்யாதே என்ற கட்டளை இருந்தது. இது தான் அடங்காத் தனம் கொண்ட தொழில் சாம்ராஜ்யத்தின் மன்னனாய் விளங்கும் பிஸினஸ் மேக்னட் அபிரஞ்சன். 

**********************************************

“உங்களுடன் டை அப்புக்கு நான் உடன் பட மட்டேன். பிறகு உங்கள் சரிவுக்கும்…”

“ஹா… ஹா… ஹா… மகாராணியாரின் சமஸ்தானத்துடன் இணைந்து இங்கு யாரும் கொஞ்சி விளையாட சித்தமாய் இல்லை” என்று நக்கல் அடித்தவன் நான் கட்டி ஆண்டு கொண்டிருக்கும் என் சாம்ராஜ்ஜிய கோட்டையிலிருந்து உன்னால் ஒரு செங்கல்லைக் கூட அசைக்க முடியாது”

“ஒரு செங்கல் என்ன? உங்கள் கோட்டையையே தூள்தூளாகத் தகர்த்துவிட்டால்?” இவ்வளவு நேரம் இல்லாத நிமிர்வுடன் இவள் சொல்ல

“ஓ… சவாலா? இப்படிப் பட்ட பொருளை நான் விற்கிறேன் என்றால் அதற்குப் பின்னால் எத்தனை பேர் இருப்பார்கள் என்று  நீ யோசிக்கவில்லை. இப்பொழுதும் நீ சொன்ன குற்றச்சாட்டை எல்லாம் நான்  மறுக்கவில்லை ஒத்துக்கொள்கிறேன். பட் உன்னால் என்ன செய்ய முடியும் என்று தான் கேட்கிறேன். பல ஓநாய்களுக்கு ரத்த ருசி காட்டியும்,  அடக்க முடியாத பல மதம் கொண்ட யானைகளை பணம் என்னும் அங்குசத்தால் அடக்கியும் நான் தான் ராஜா எனும் மமதையில் திரிந்த சிங்கத்துக்குப் பதவி மோகத்தை இன்னும் இன்னும்  ஊட்டி இன்று நான் சொல்வதையெல்லாம் கேட்கும் சர்க்கஸ் சிங்கமாகவும் மாற்றி என்னுடைய இந்த சாம்ராஜ்ஜியத்தை அமைதத்தவன் நான். அவ்வளவு சீக்கிரம் என் கோட்டையை அழிக்க விட்டுவிடுவேனா?

ஆனால் நீ தான் இப்போது  சவால் விடுகிறாயே.. அப்போது நானும் பதில் சவால் விடவில்லையென்றால் எப்படி?” தன் முழு உயரத்திற்கும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு எழுந்து நின்றவன் “இங்கு வருகிற வரை உன் தொழிலை அழிக்க வேண்டும் என்பது மட்டும் தான் என் எண்ணமாக இருந்தது. ஆனால் இப்போது சொல்கிறேன்.. டை அப்புக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் என் தொழிலை அழிப்பேன் என்று சொன்னாய் அல்லவா? ஆனால் நான் உன் தொழிலை அழிக்க மாட்டேன். ஏனென்றால் அது என்னிடம் வரப் போகும் தொழிலாயிற்றே!” அவள் புரியாமல் பார்க்கவும்

“உன்னால் இந்த தொழிலை மேற்கொண்டு நடத்த முடியாத அளவுக்குப் பல பிரச்சனைகளை நான் கொடுக்க, அதைத் தாங்க முடியாமல் உன் கம்பெனியை டேக் ஓவர் செய்யச்  சொல்லி நீயே என்னிடம் வந்து நிற்பாய்! நோ.. நோ.. அப்படி சொல்லக் கூடாது.. கெஞ்சுவாய்! அப்படி செய்ய  வைப்பான் இந்த அபிரஞ்சன்!” அவன் முடிப்பதற்குள் தானும் எழுந்து நின்றவள்

“ஐயோடா! என்ன ஒரு ஓவர் கான்ஃபிடன்ஸ்! நெவர்.. ஒருபோதும் நடக்காது. ஃபார் யுவர் கைன்ட் இன்ஃபர்மேஷன்.. சூரியன் உதிப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது மிஸ்டர். அபிரஞ்சன்!”

“ஹா… ஹா… இஸ் இட்? மேடம்! நீ சொல்வது பேச்சு வழக்கு. டு யூ நோ சயின்ஸ்? அது தெரியாமல் பேசுகிறாயே! மேடம்.. சூரியன் என்றைக்கு உதித்திருக்கு, அஸ்தமனம் ஆகியிருக்கு? அது ஒரே இடத்தில் தான் இருக்கு. பூமி தான் தன் சுற்றலை நிறுத்தாம சுற்றிட்டு இருக்கு. அதுக்காக சூரியனுக்கு எல்லாம் இப்படி பில்ட் அப் கொடுக்கலாமா? நீ சொல்கிற மாதிரி அது உதிக்காமல் இருப்பதற்காக இந்த பூமியைச் சுற்றாமல் நிறுத்தவும்  தயங்க மாட்டான் இந்த அபிரஞ்சன்!” அவன் குரலில் அப்படி ஒரு மமதை!

விழிகள் விரிய அவனைப் பார்த்தவள் ‘அப்போது என்னைக் கொலை பண்ணக் கூடத் தயங்க மாட்டேன் என்று சொல்கிறானா?’ என்று அவள் மனதிற்குள் கேட்ட கேள்விக்கு ‘ஏன்? நீயும் தான் அவனை இங்கிருந்து உயிரோட போக மாட்டாய் என்று மிரட்டின’ என அவள் மனசாட்சி எடுத்துச் சொல்ல

“வெல்.. ஆல் தி பெஸ்ட் மிஸ்டர். அபிரஞ்சன்! பார்ப்போம்.. யாருடைய சுழற்சியை யார் நிறுத்துகிறார்கள் என்று பார்ப்போம்!” என்று சொல்லி இவளும் இந்த சவாலை ஏற்க  

விரைவில்…….

   

Categories
On-Going Novels Sudha Ravi வட்டத்துக்குள் சதுரம்

அத்தியாயம் – 11

அத்தியாயம் – 11

தன் வீட்டிலிருந்து பாட்டி வீட்டுக்கு கிளம்பும் போது அத்தனை உற்சாகமாக கிளம்பிய மகள் ஒருவாரத்திற்குள் காய்ந்த சருகை போல கிடக்கும் நிலை கண்டு அந்த தகப்பனுக்கு மனம் உடைந்து போனது.

என்ன இல்லை அவளுக்கு? இளவரசியாக வளர்த்த தங்களை மறந்து யாரோ ஒருவனுக்காக உயிரை விட துணிந்திருக்கிறாளே என்று எண்ணி அழுது விட்டார்.

தந்தை முன் முடியாமலிருப்பது போல் போர்த்திக் கொண்டிருப்பது போல் படுத்திருந்த கார்த்திகாவிற்கு கூட ஒரு நிமிடம் தந்தை யின் அழுகை அசைத்துப் பார்த்தது. நாம பண்றது தப்போ என்று அந்த நிலையில் சற்றே யோசித்தாள். அதை தொடர்ந்திருந்தால் அனைத்தும் நன்றாக இருந்திருக்கும். ஆனால் மீண்டும் அவளது மனம் முருங்கை மரம் ஏற, கல்யாணம் ஆகிடுச்சுன்னா அப்பா சரியாகிடுவாங்க என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள்.

அலமேலுவோ அழுகையை அடக்குவது போல் நின்றிருந்தார். மகளின் அருகே சென்று தலையை வருடிக் கொடுத்தவர் “உன் விருப்பத்தை மீறி இந்த அப்பான் என்ன செய்துடுவேன் கார்த்தி. என் கிட்ட சொல்லி இருக்கலாமே? அதுக்குள்ள எதுக்கு அவசரப்பட்டு இப்படியொரு முடிவை எடுத்த? உனக்கு ஏதாவது ஆகி இருந்தா எங்க நிலைமை என்ன? கருவேப்பில்லை கொத்தாட்டம் ஒரே ஒரு பிள்ளையை வச்சிருக்கோம்” என்று புலம்பினார்.

அதுவரை கண்களை மூடிக் கொண்டு படுத்திருந்தவள் மெல்ல அப்போது தான் கண் விழிப்பது போல கண்களை திறந்து தந்தையைப் பார்த்தாள். வலிய வரவழைத்துக் கொண்ட கண்ணீருடன் “அப்பா!” என்றாள்.

அவளது கையைப் பற்றிக் கொண்டவர் “நான் இருக்கேன்மா உனக்கு” என்றார் அழுத்தமாக.

மெல்ல எழுந்தமர்ந்து தந்தையின் முகத்தைப் பார்த்து “என்னை மன்னிச்சிடுங்கப்பா. எனக்கு வேற வழி தெரியல. மாமா மட்டும் தான் என் வாழ்க்கையில் வேணும்னு நினைச்சேன். எல்லோரும் வேண்டாம்னு சொல்லிடுவாங்கன்னு தான் இப்படி பண்ணிட்டேன்” என்றாள் பொய்யான அழுகையுடன்.

அவளின் கண்ணீரை உண்மை என்று நம்பியவர் அதை தடுக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு அங்கிருந்து எழுந்தார்.

தந்தையின் முகத்தில் இருந்த தீவிரத்தைக் கண்டு அன்னையிடம் கண்களாலேயே காரியம் வெற்றி தான் என்று உணர்த்தினாள்.

அதை அறியாது மருமகனிடம் பேசிவிடும் தீவிரத்துடன் கூடத்திற்கு சென்றார்.

அதே நேரம் தோப்பில் தந்தையின் முன்பு நின்றவன் “என்னய்யா செய்யப் போறீங்க? இந்த திருமணம் நடந்தா ஒருத்தருக்குமே நிம்மதி இருக்காது. இப்படியொரு திருமணம் தேவையா சொல்லுங்க?” என்றான் விஜயன்.

அவரோ குழப்பத்துடன் “எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல விஜயா? அவ கிணத்துல குதிச்சு உன்னைத் தான் கட்டிக்கணும்னு சொல்றா. அதை மீறி நாம ஏதாவது செய்யப் போக அவளுக்கு ஏதாவது ஆகிடுச்சுன்னா என்ன செய்றது?” என்றார் பயத்துடன்.

அவரை கூர்ந்து பார்த்தவன் “அப்போ மலருக்கு ஏதாவது ஒன்னு ஆனா பரவாயில்லையா? என்றான் தீவிரமான குரலில்.

அவனது கேள்வியில் அதிர்ந்தவர் “என்னப்பா சொல்ற? மலரு…அது” என்று இழுத்தார்.

“அவளும் சாகுறதுக்கு முயற்சி பண்ணினா என்ன செய்வீங்க?” என்றான் வெறுப்பான குரலில்.

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல விஜயா…என்றவர் சற்று நேரம் அமைதியாக யோசித்து “பேசாம நீ மலரை கூட்டிட்டு எங்கேயாவது போயிடு. எல்லாம் சரியானதும் இங்கே வந்துடலாம்” என்றார்.

“அதானே பார்த்தேன்…அப்போ நீங்க முடிவெடுக்க மாட்டீங்க? இதை நீங்க சொல்லனும்னு அவசியம் இல்ல. ஊருக்கு பெரிய மனுஷனா இருக்கிற நீங்க வீட்டில் நடக்கிற பஞ்சாயத்துக்கு தீர்ப்பு சொல்ல மாட்டீங்க. இந்த ஊர் தலைவர் நீங்க. உங்க வீட்டுப் பிள்ளை இப்படி பெண்ணை இழுத்திட்டு போனா நாளை இந்த ஊர் உங்களை எப்படி மதிக்கும்? அதே நீங்க சரியான முடிவெடுத்து சேர்த்து வச்சா எல்லோருக்கும் நிம்மதி கிடைக்கும்” என்றான் அவரை ஆழ்ந்து பார்த்தபடி.

“எல்லாம் சரி டா ஆனா என் தங்கச்சி மனசு வருந்தினா இந்த குடும்பத்துக்கே ஆகாம போயிடும்” என்றார் கலக்கமான குரலில்.

தன் மனதில் எழுந்த ஆதங்கத்தினை எப்படி வெளிப்படுத்துவதென தெரியாமல் கண்களை மூடி நின்றவன் “அப்போ உங்க பையன் வாழ்க்கையை விட உங்க தங்கை கண்கலங்க கூடாது அது தான் முக்கியம் இல்லையா?” என்றான் வெற்றுக் குரலில்.

அவர் குரலில் இருந்த உணர்வை புரிந்து கொள்ளாதவர் “உனக்கு தெரியாது விஜயா வீட்டுப் பெண்கள் கலங்கினா குடும்பத்துக்கு ஆகாது” என்றார்.

இதற்கு மேலும் தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கை போக உள்ளுக்குள் எதுவோ உடைந்த உணர்வுடன் “சரி நான் வீட்டுக்கு கிளம்புறேன்” என்றான்.

“நில்லு தம்பி” என்றவரை ஒருவித நப்பாசையுடன் பார்த்தான். அவர் தன் மனதை புரிந்து கொண்டாரோ என்று. ஆனால் அவரோ “நானும் வரேன். மாப்பிள்ளை வந்திருப்பார்” என்றார்.

எதுவும் பேசாமல் அமைதியாக பைக்கை எடுத்தவனின் மனது ரணமாகி இருந்தது. அவர் கூறியது போல மலரை அழைத்துக் கொண்டு எங்காவது சென்று விடலாமா என்று யோசித்தான். தான் விரும்பும் பெண்ணை மணக்க இத்தனை தடைகளா? அதுவும் சொந்தத்திலேயே கூடவே வளர்ந்த ஒருத்தியை மணக்க இத்தனை போராட்டமா? தனது மனமே இத்தனை வலியுடன் இருக்கிறதே, அவளின் நிலை என்னவோ? எதையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் உள்ளுக்குள் வைத்து புழுங்கிக் கொண்டிருப்பாள். அவளுக்கு எந்த விதத்தில் நிம்மதியை அளிக்கப் போகிறேன். நிச்சயம் மாமாவிடம் கூறி விட வேண்டும். தன் மனதில் மலருக்கு மட்டுமே இடம் இருக்கிறது என்பதை சொல்லிவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.

கோவிந்தனுக்கும் மகனின் ஆசை புரிந்தாலும் கார்த்திகாவின் செயல் அவரை பயமுறுத்தி இருந்தது. அவன் தான் வேண்டும் என்று கிணற்றில் குதித்தவளை மீறி இன்னொருத்திக்கு எப்படி மணம் செய்து வைக்க முடியும் என்றெண்ணினார். மகன் மீது ஆசை வைத்துள்ள மலர் நடப்பவற்றை அமைதியாக பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள். அப்படி என்றால் அவளின் ஆசையில் அத்தனை தீவிரம் இல்லை என்று தானே அர்த்தம் என்று தானே ஒரு அர்த்தத்தை கற்பித்துக் கொண்டார். அவள் மனதை மாற்றி வேறொருவனுக்கு கட்டி கொடுத்து விடலாம் என்று முடிவு செய்து கொண்டார்.

அவரவர் சிந்தனையில் இருந்தபடியே வீடு வந்து சேர்ந்தனர். முதலில் இறங்கி உள்ளே சென்றார் கோவிந்தன். விஜயன் பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே நுழையும் நேரம் கோவிந்தன் தங்கை கணவரிடம் பாசமாக பேசிக் கொண்டிருந்தார்.

அதை பார்த்துக் கொண்டே சென்றவன் நேரே அத்தையின் கணவரின் முன்பு சென்று நின்றான்.

அவனைப் பார்த்தவர் கோவிந்தனை மறந்து “மருமகனே! உங்களை தான் தேடிட்டு இருந்தேன்” என்றார் கலக்கமான குரலில்.

இறுகிய முகத்துடனே “சொல்லுங்க மாமா” என்றான்.

விஜயனின் குரல் கேட்டதும் அங்கு வந்த அங்கம்மாள் அவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருப்பதை கண்டதும் தூணோரமாக சாய்ந்து நின்றார். மலரும் ஒரு ஓரமாக நின்று கவனிக்கலானாள்.

“என் பொண்ணு இப்படி ஒன்னை பண்ணி வைப்பான்னு நினைக்கவே இல்ல. அவளுக்கு உங்க மேல விருப்பம் இருக்குன்னு சொல்லி இருந்தா அடுத்த நிமிஷம் மச்சான் கிட்ட பேசி உங்க கல்யாணத்தை நடத்தி வச்சிருப்பேன்” என்றார்.

அவர் அப்படி சொன்னதும் அவனது உள்மனது குத்த ஆரம்பித்தது. இவரும் தன் மகளின் மனதை பார்க்கிறாரே தவிர என்னுடைய சம்மதத்தைப் பற்றி கவலைப்படவில்லை. எனக்கென்று ஒரு விருப்பம் இருக்கும் என்று இவர்கள் ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள் என்று யோசித்தான்.

அவரோ கோவிந்தனிடமும் “என் பெண்ணோட ஆசையை நிறைவேற்றி வச்சிடுங்க மச்சான்” என்று கையைப் பிடித்துக் கொண்டார்.

நிலைமை கை மீறி போய் கொண்டிருந்ததை கண்டவன் மாமனிடம் பேசிவிட முடிவு செய்தான்.

“மாமா! நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க” என்று அவன் ஆரம்பித்ததும் அதுவரை ஒதுங்கி நின்ற அங்கம்மாள் “விஜயா! மாப்பிள்ளையை பேச விடு” என்று தடுத்தார்.

பாட்டியை முறைத்தவன் மாமனிடம் திரும்பி “மாமா! கல்யாணத்துக்கு ரெண்டு பேரின் விருப்பமும் முக்கியம். இங்கே நீங்க எல்லோரும் கார்த்திகாவின் மனசை மட்டும் பார்க்குறீங்க. எனக்கு இதில் விருப்பமான்னு யாருமே யோசிக்கல” என்றான் சற்றே கோபமாய்.

அதுவரை உள்ளே இருந்து நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அலமேலுவும், கார்த்திகாவும் அதிர்ந்து போய் வேகமாக கூடத்திற்கு வந்தனர்.

சண்முகமோ மருமகனின் பேச்சில் இருந்த விருப்பமின்மையை உணர்ந்து கொண்டவர் உள்ளுக்குள் அதிர்ந்தார். அவனது பேச்சை மகள் கேட்டால் மீண்டும் ஏதாவது செய்து கொள்வாளோ என்று பயந்து அங்கிருந்தவர்கள் யாரும் எதிர்பார்க்கும் முன் அந்த செயலை செய்திருந்தார்.

அனைவரின் முன்பும் படாரென்று மருமகனின் காலில் விழுந்து விட்டார்.

“மாப்பிள்ளை!”

“மச்சான்!”

“என்னங்க!”

“அப்பா!” என்று அங்கிருந்தவர்கள் அலறிக் கொண்டு அவர் அருகில் சென்றனர்.

அவரோ “என் பெண்ணை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லுங்க மாப்பிள்ளை” என்று அவர் கேட்க, அவனோ விதிர்த்துப் போய் மாமனை தூக்கினான்.

யாருமே அதை எதிர்பார்க்கவில்லை. அனைவரின் முகமும் வேதனையை சுமந்தது. ஊரே மரியாதையாக வணங்கும் ஒருவர் தன் மகளின் பொய்யான நடத்தைக்காக சொந்த மருமகனின் காலில் விழுந்திருந்தார்.

அவரின் செயல் கண்டு மலர் உடைந்து போனாள். அவளது மனம் உள்ளுக்குள் கதறியது. இப்படியொரு தந்தை கிடைக்க கார்த்திகா கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் தந்தையின் பாசத்தை தவறாக பயன்படுத்தும் அவளை எண்ணி வேதனை அடைந்தாள். தனக்கு இப்படியொரு உறவு இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காதோ என்று எண்ணினாள்.

விஜயனோ அவரின் செயலால் சுக்கு நூறாக உடைந்திருந்தான். தன் மாமன் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தான். அவரின் உயரம் கண்டு அவனுக்கு எப்போதுமே பெருமை உண்டு. சண்முகம் இருக்கும் ஊரில் அவரின் பேச்சுக்கு மறு பேச்சு என்பதே எழாது. அன்பானவர், பண்பானவர் என்று  அவர் மீது அத்தனை மரியாதை வைத்திருந்தார்கள். அவை அனைத்தையும் தனது செயலால் நாசப்படுத்தி விட்டாள் என்று கார்த்திகாவின் மீது கொலைவெறி எழுந்ததது.

சண்முகமோ எவரை பற்றியும் கவலைப்படாது அவனது கைகளைப் பற்றிக் கொண்டு “மருமகனே! என் பெண்ணை கை விட்டுடாதீங்க” என்று கெஞ்சிக் கொண்டிருந்தார்.

அதுவரை சிறு நம்பிக்கையாவது இருந்தது அவன் மனதில். ஆனால் மாமன் செய்த விஷயத்தில் முற்றிலுமாக நம்பிக்கை தொலைந்து போனது. முடிந்தது! எல்லாம் முடிந்தது! இனி, எதுவும் நம் கையில் இல்லை. இதற்கு பிறகு மறுக்க நமக்கு வாய்ப்பே இல்லை என்பதை புரிந்து கொண்டவனின் மனம் இறுகிய இரும்பாக மாறி போனது.

தன்னிடம் கேட்டுக் கொண்டிருந்த மாமனிடம் “என்ன மாமா செஞ்சீங்க? என் காலில் விழுந்து என் மனசை காயப்படுத்திடீங்க. அது பாவம் மாமா…உங்க விருப்பம் போல நடக்கும்னு உத்திரவு போட்டா செஞ்சிட்டு போறேன்” என்றான் உள்ளுக்குள் அழுது கொண்டு.

கலங்கிய கண்களுடன் “ரொம்ப சந்தோஷம் மருமகனே! அவ எங்க வீட்டு மகாலட்சுமி. அவளுக்கு உங்க மேல கொள்ளை ஆசை மருமகனே. என் பொண்ணு ஆசைப்பட்டதை செய்யலேன்னா நானெல்லாம் ஒரு தகப்பனா?” என்றவரை பார்த்தவரின் விழிகள் கோவிந்தனை இகழ்ச்சியாகப் பார்த்தது.

மகனின் பார்வையை உணர்ந்து கொண்டவர் தலையை குனிந்து கொண்டார்.

அலமேலுவுக்கும், கார்த்திகாவிற்கும் அவர் காலில் விழுந்தது அதிர்ச்சியாக போனது. அவர் இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. மகளுக்காகத் தானே விழுந்தார் என்று அலமேலு சமாளித்துக் கொண்டார். ஆனால் கார்த்திகாவின் மனதில் வடுவாக அமர்ந்து கொண்டது. அதிலும் விஜயன் மீது கோபமாக வந்தது. இவன் ஒத்துக் கொண்டிருந்தால் அப்பா விழுந்திருக்க மாட்டாரே என்று அப்போதும் அவன் மீது தவறை கண்டுபிடித்தாள்.

அவன் திருமணத்திற்கு சம்மதம் சொன்னவுடன் சந்தோஷத்தோடு அவனை அணைத்துக் கொண்டார் சண்முகம். அங்கம்மாளோ மாப்பிள்ளையிடம் “என்ன இருந்தாலும் அவன் காலில் நீங்க விழுந்தது தப்பு மாப்பிள்ளை. நாம சொன்னா அவன் கேட்காம போயிடுவானா என்ன” என்றார் பேரனை முறைத்தபடி.

பாட்டியை நிமிர்ந்தும் பார்க்காது “நீங்க எல்லாம் பேசிட்டு இருங்க நான் போய் முகம் கழுவிட்டு வரேன்” என்று அங்கிருந்து சென்றான்.

கொல்லைபுறம் வந்தவனுக்கு மூச்சு அடைத்தது. உடல் அனலில் இட்ட புழுவாக துடித்தது. தன்னைச் சுற்றி உள்ள அனைவரும் அவர்களின் ஆசையை தன் மீது துணித்து விட்டனர் என்பதை உணர்ந்தவனுக்கு நெஞ்சு வலித்தது.

ஓரிடத்தில் நிற்க முடியாமல் மெல்ல நடந்தவனின் பார்வையில் கண்கள் வெற்றிடத்தை வெறிக்க, தோட்ட வீட்டில் சோக சித்திரமாக அமர்ந்தவளின் மீது பார்வை படிந்தது. அவளைக் கண்டதும் அவளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம் என்கிற எண்ணமே எழுந்தது.

அவள் முன்னே சென்று நின்றவன் “மலரு!” என்று முதன் முறையாக பெயரை சொல்லி அழைத்தான்.

அவன் அழைத்ததும் திடுக்கிட்டு நிமிர்ந்தவள் அந்த நிமிடம் தன்னை மறந்து “இத்தனை நாள் இல்லாம இப்போ வந்து என் பெயரை சொல்லி கூப்பிடுறீங்களே மாமா! போச்சு! எல்லாம் முடிஞ்சு போச்சு!” என்று தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

அவளது அழுகை அவனை புரட்டி போட்டது. அவனால் அந்த சூழ்நிலையை கையால முடியவில்லை. குடும்பத்தை எதிர்த்து மலரை கைபிடிக்க எதுவோ தடுத்தது. ஆனால் அதை அவளது அழுகை அசைத்துப் பார்த்தது.

சற்றே தீவிரமான முகத்துடன் “இதெல்லாம் வேண்டாம் மலரு! நாம எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு போயிடலாமா?” என்றான்.

அதுவரை உணர்ச்சிப் பெருக்கில் அழுது கொண்டிருந்தவள் அவனது வார்த்தையைக் கேட்டு சட்டென்று அழுகையை நிறுத்தி விட்டு “அவ எனக்கு செஞ்சதை நாம அவளுக்கு திருப்பி செய்யணுமா மாமா? நட்புக்கு துரோகம் பண்ணி அதன் மேல இந்த வாழ்க்கையை அமைச்சுக்க பார்க்கிறா. அதோட நான் இந்த வீட்டில் கிடைச்ச அன்பால தான் இந்தளவுக்கு வளர்ந்து நிற்கிறேன். அவங்களுக்கு எதிரா என்னால ஒரு விரலை கூட அசைக்க முடியாது. வேணாம் மாமா! இந்த ஜென்மத்தில் இது தான் விதின்னு இருந்தா அப்படியே நடக்கட்டும் விட்டுடுங்க. இனிமே என்கிட்டே வந்து பேசாதீங்க” என்று கண்ணீர் வழிய கூறி விட்டு தோட்ட வீட்டினுள் நுழைந்து கதவடைத்துக் கொண்டாள்.

அவள் சொல்லிவிட்டு சென்ற செய்தியில் இருந்த உண்மை அவனை தாக்க ‘இந்த உணர்வு அவளுக்கு ஏன் இல்லாமல் போனது? இத்தனை பேரின் நிம்மதியை குலைக்க அவளால் எப்படி முடிகிறது? அப்படி என்ன சாதித்து விடப் போகிறாள் இந்த வாழ்க்கையின் மூலம்? என்கிற கேள்வி எழுந்தது. ஆனால் அதற்கான விடை தான் தெரியவில்லை.

வாழ்நாள் முழுவது வரும் பந்தத்தை வெறுப்பும், பொய்யும் கலந்து ஆரம்பிப்பது அந்த வாழ்க்கைக்கு என்ன கொடுக்கும்?

Categories
On-Going Novels

அத்தியாயம் – 3

சுவாசம்  –  3

 

பெண்ணிற்கு

வழித்துணையாக

வருபவன்….

காதலனாகவோ

கணவனாகவோ“…

தான் இருக்க வேண்டும்

என்பதில்லை,

கண்ணியம் தவறாத

நண்பனாகவும்இருக்கலாம்

 

ஒரு தாய் தன் துன்பத்தையும் வீட்டில் இருக்கும் சகோதரிகளின் கஷ்ட நஷ்டங்களையும் தான் பெற்ற மகனிடம் சொல்லி வளர்த்தால் தானே  எதிர்காலத்தில் வரும் மனைவி மற்றும் மற்ற  பெண்களின் கஷ்டம் தெரியும்? இதை எதையும் சொல்லாமல் அவர்களே புரிந்து நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி சாத்தியம் என்பது தேவியின் கருத்து.

 

“நைனா காலையிலே வூட்ல சோறு கீதுனு துண்ணாத. நான் காசியண்ண கடையான்ட உனுக்கு மட்டும் நாஷ்டா சொல்லி கீறேன். கட பையனான்ட குடுத்தனுப்பும். அத்த துண்ணு. இப்போ நான் காலேஜிக்கு போய்ட்டு அப்பால கலெக்டர் ஐயா வூட்டுட்டுக்கும் போய்கினு வரேன்” என்று தன் தந்தையிடம் சொன்னவள்  எல்லோரும் பள்ளிக்குச் சென்ற பிறகு தானும் கிளம்பிச் சென்றாள் தேவி.

 

கல்லூரி முடிந்து மாலை கலெக்டர் வீட்டுக்கு வந்தவள் தோட்டக்காரனில் இருந்து உள்ளே வேலை  செய்பவர்கள் வரை அனைவரும் அவரவர் வேலையை ஒழுங்காக அன்று செய்தார்களா என்று மேற்பார்வை பார்த்தாள் அவள். இப்போது இரண்டு வருடமாகத் தான் இந்த மேற்பார்வை வேலை. அதற்கு முன்பு சாதாரண வீட்டு வேலைக்கு வந்தவள் தான் தேவி.

 

தமிழ்நாட்டில் நேர்மையான கலெக்டரில் சதானந்தனும் ஒருவர். அவர் மனைவி மைதிலி பண்ணாட்டு நிறுவனம் ஒன்றில் சி.இ.ஓவாக இருக்கிறார்.  அவர்களுடைய ஒரே மகன் பிரதாப் தேவியை விட ஜந்து வயது பெரியவன்.

 

நேர்மையான அதிகாரியான சதானந்தனுக்கு சமூக விரோதிகளால்  தினமும் தொல்லைகள் தொடர ஒரு கட்டத்தில் அவர் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கினார்கள்.

 

சதானந்தனும் அவர் மனைவியும் காரில் போய் கொண்டிருக்கும் போது ஆள் அரவம் இல்லாத ஒரு இடத்தில் வழிமறித்து சில ரவுடிகள் அவரையும் அவர் மனைவியையும்  கடுமையாகத் தாக்கி விட அதில் அவர்கள் இறந்து விட்டார்கள் என்று நினைத்து காரோடு அவர்களைக் கொளுத்த நினைக்க அதைப் பார்த்த பதினைந்து வயது சிறுமியான தேவியோ கூச்சலிட்டு ஊரையே கூட்டி விட பிறகு அந்த ரவுடிகள் தப்பித்தால் போதும் என்று ஓடி விட சதானந்தனும் அவர் மனைவியும் உயிர் பிழைத்தார்கள். அதற்கு நன்றியாக அவளுக்கு   பண உதவி செய்ய அவர்கள் எவ்வளவோ முன்வந்தும் இதெல்லாம் வேண்டாம் என்று மறுத்தவள் தனக்கு ஒரு வேலை வேண்டும் என்று கேட்க

 

பதினைந்து வயது பெண்ணாக இருந்தாலும் அவளை வேலைக்கு வைத்துக் கொண்டால் அது அரசாங்கத்துக்கு எதிரான குழந்தைத் தொழிலாளர்கள் என்ற வரையறையில் சேர்ந்துவிடும் என்பதால் சதானந்தன் ஒரு கலெக்டராய்  முடியாது   என்று மறுக்க,

 

“ஐயா! பாஞ்சி வயசு பொண்ணா நான் படிக்கப் போவாம, ஊதாரியா சுத்துற பெத்தவங்களுக்கு வேலைக்கு போய் சம்பாதிச்சி குடுத்துகினா தான தப்பு? அத்தான கொயந்த தொயிலாளர்? நான் ஒன்னியும் அப்டி செய்லியே? நான் இஸ்கூலுக்கு போய்ட்டு வந்த அப்பால நேரத்துல தான வேலை செஞ்சிகிறனு சொல்றன்? என் நைனாவோட கால் நல்லா இருந்தாங்காட்டி நான் ஏன் வேலைக்கு வரப் போறனு எல்லாம் கேட்டுக்க மாட்டேன். அவர் கால் நல்லா இருந்தா காட்டி கூட  நான் வேலை கேட்டுகினு வந்திருப்பன்.

 

எனுக்கு வேண்டியத வாங்கறதுக்கு நான் தான சம்பாதிச்சிகனும்? வெளிநாட்டுல படிக்க சொல்லோ வேலைக்குப் போய்க்குவாங்களாமே! அவங்களுக்கு வோண்டியத அவங்களே பாத்துக்குவாங்களாமே?” என்று அதை மேற்கோள் காட்டிப் பேசியவள் “இங்க கீற பசங்க கூட அப்டி போறத்து தான் நல்லது. அப்டி செஞ்சிகினா தான் உயப்போட அருமையும் அத்தால வர்ற துட்டோட மதிப்பும் இன்னும் பெத்தவங்க பட்டுகிற கஸ்டமும் தெரியும்னு சொல்றீங்கோ!

 

ஆனா அத்த செய்யறதுக்கு வர்ற எங்களாண்ட  மட்டும் ஏன் கொயந்த தொயிலாளர்கள்னு செய்ய வுடாம தடுத்துக்கிறீங்க?” என்று தேவி அவரை நேருக்கு நேர் பார்த்துக் கேட்க

 

ஒரு சேரிப் பெண் இந்த பதினைந்து வயதிலேயே கலெக்டரான தன்னிடமே வெளிநாட்டில் வாழும் வாழ்க்கை முறையைச் சுட்டிக் காட்டி வாதிடவும் வாயடைத்துப் போனார் அவர்.

 

இதையெல்லாம் பார்த்த மைதிலியோ தனக்கு ஒரு மகள் இருந்தால் இப்படித் தானே தன் கணவனிடம் வாதாடுவாள் என்று பூரித்தவரோ அவளை வாரி அணைத்துக் கொண்டார். அப்படி இந்த வீட்டுக்கு   வந்தவள் தான் தேவி.

 

வெளியூரில் ஏரோநாட்டிக் படிப்பு படித்துக் கொண்டிருந்த பிரதாப் ஒரு முறை விடுமுறையில் வீட்டுக்கு வர அங்கு பாவாடைச் சட்டையில் சென்னைத் தமிழில் பேசி வளைய வந்த தேவியை முதலில் ஒரு அசுவாரசியத்துடன் அவளைப் பார்த்தவன் பிறகு நீ எட்டியே இரு என்ற விலகலுடனே இருக்க, அதெல்லாம் கொஞ்ச நாள் தான்.  திரும்ப அவன் ஊருக்குப் போனதிலிருந்து அவனுக்கு தேவியின் சிரிப்பு, பேச்சு, அவளுடைய முகம் என அவனை இம்சிக்க அவளைக் காண வேண்டும் என்றே அடிக்கடி விடுமுறையில் வீட்டுக்கு வந்து போனான். அதன் விளைவு அவளை ஒருதலையாக காதலிக்க ஆரம்பித்திருந்தான் பிரதாப்.

 

வீட்டில் நுழைந்து அனைத்தையும் சரிபார்த்தவள் அடுத்து சமையல் வேலை செய்யும் காளியம்மாவிடம் வந்த தேவி

 

“ஐய்ய காளி, உனுக்கு அறிவு கீதா? எத்தினி தபா சொன்னாலும் ஏன் தான் நீ கேட்டுக்க மாட்ற? கலெக்டர் ஐயாவுக்கு சக்கர போட்டுக்காத சத்துமாவு கஞ்சி வெக்கணும் அம்மாவுக்கு காப்பி நம்ம சின்ன ஐயாவுக்கு பாதாம் பாலுனு அல்லாத்தையும் அல்லாருக்கும்  வெக்க சொன்னா  நீ பெரிய ஐயா கஞ்சில சக்கரய கலந்து வெச்சி கீற. அம்மா காலில குடிக்கற டீ ய இப்போ போட்டு வச்சி கீற. ஏன் காளி இப்டி அல்லாத்தையும் மாத்தி மாத்தி செஞ்சி கீற?”

 

“நான் இன்னா செய்ய தேவி? இன்னிக்கி ராவுக்கும் குடிச்சிகினு வந்து என் வூட்டுக்காரன் இன்னாத்த பண்ணுவானோனு ஓசனையாவே கீது. அப்பால எப்டி எனுக்கு இங்க வேலை ஓடும்?” என்று அந்த காளி கண்ணைக் கசக்க

 

“அடி போடி..  நான் எத்தினி தபா சொல்லிக்கினேன்? என் பேச்ச கேட்டுக்கினியாடி? என்னங்காட்டியும் நீ அஞ்சி மாசம் தான் பெரியவ. இத்தெல்லாம் கல்லாணம் பண்ணிக்கிற வயசா? ஒயிங்கா படிடினு சொன்னா கேட்டுக்காம காதல் முக்கியோம்னு கல்லாணம் பண்ணிக்கின இல்ல? இப்போ பாரு டெய்லி கண்ணக் கசக்கிகினு நிக்கிற! அத்தோட்டு தான் அவசரப் பட்டுக்கக் கூடாதுனு பெரியவங்க சொல்லிக்கினாங்க” என்று அவளுக்கு அறிவுரை சொன்னவள் கூடவே அவரவர்களுக்கு வேண்டியதைச் செய்து டிரேயில் வைத்து

 

“இந்தா இத்த எடுத்துகினு போய் சாப்பாட்டு  மேசையில வை” என்றவள் அந்த இடத்தைச் சுத்தம் செய்ய ஆரம்பிக்க

அதை வாங்கிய காளியோ நகராமல் அதே இடத்திலேயே நிற்கவும்

 

“ஐய இன்னாத்துக்கு இன்னும் நின்னுனுகீற?…..” என்று கேட்க ஆரம்பித்த தேவியோ அங்கு சமையலறை வாசலில் ஆறடிக்கு சற்றே ஒரு பிடி உயரமாக நல்ல சிவந்த மேனி அலை அலையான கேசம் கலையான முகம் முறுக்கேறிய ஜிம் பாடி. இப்போது தான் குளித்து விட்டு வந்திருப்பான் போல! அவன் உடலில் அடித்திருந்த பாடி ஸ்பிரேவே அதைச் சொல்ல தான் அணிந்திருந்த கை இல்லாத டீ ஷர்ட்டில் மார்பின் குறுக்கே இரண்டு கைகளையும் கட்டியபடி நிலைப் படியில் சாய்ந்து நிற்கும் தோரணையே  போதும் பார்ப்போர் யாரும் அவனை அழகன் என்று ஒத்துக் கொள்ள! அதிலும் மீசை இல்லாமல் இருக்கும் அவனை ஒரு வடநாட்டு ஹீரோ என்றே அனைவரும் அடித்துச் சொல்வர்.

 

அப்படி அங்கு நின்றிருந்தது வேறு யாரும் இல்லங்க, நம்ம பிரதாப் தாங்க!

 

காளி வாசல்படியை நெருங்கவும் ஒதுங்கி அவள் போக வழி விட்டவன் அவள் பின்னாலேயே போக நினைத்த தேவிக்கு மட்டும் வழி விடாமல் அவன் வழி மறித்து  நிற்க, தேவிக்கோ டென்ஷனில்  கை கால்கள் எல்லாம் சில்லிட ஆரம்பித்தது. இப்போது என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் தன் கையைப் பிசைந்து கொண்டு நின்றாள் அவள்.

 

யாருக்கும் பயப்படாத தேவி கூட  சற்றே பயப்படுவது இல்லை இல்லை அது பயம் கூட இல்லை சற்றே அடங்கிப் போவது பிரதாப்புக்கு மட்டும் தான். ஆனால் அவன் அவளை அடிக்கவோ திட்டவோ மாட்டான். அதிக பட்சம் அவள் தலையில் கொட்டுவதோட சரி.  இதோ இப்போது கையைக் கட்டிக்கொண்டு அசராத பார்வை பார்க்கிறானே அந்த பார்வை ஒன்றே போதும் அவள் அடங்கிப் போக. இன்று நீ செய்த தவறை நீயே சொல் என்பது போல் அவன் பேசாமல் நிற்கவும்

 

“சொம்மா சொம்மா ரொம்பத் தான் மெரட்டினுகீறாரு இவரு! நான் இன்னா பண்ணிக்கினேன்? சின்ன வயசுலோ இருந்து நான் பேசினுகீற பாஷை! அத்த திடீர்னு வுடச் சொன்னா எப்டி முடியும்? அத்த புரிஞ்சிக்காம எப்போ பாரு மொறச்சினு கீறாரு. படா பேஜாரா கீது இவராண்ட…  அட போங்க பா! இன்னைக்கு நான் ஜகா வாங்கிக்க மாட்டேன். நானா அவுரானு ஒரு கை பாத்துக்கலாம்!” என்று மனதில் நினைத்தவளோ பின்பறம் திரும்பி மேடையை ஒழுங்கு பண்ண, ஆனால் அவனோ ‘நீயும் எவ்வளவு நேரம் தான் இருப்பேனு பார்க்கறேன்’ என்ற படி பிடிவாதமாக நின்றான்.

 

அட! இவங்க இரண்டு பேரும் இப்படி முட்டிகிட்டு நிற்க நடந்த பிரச்சனை தான் என்ன?

 

எப்போது பிரதாப் அவளைக் காதலிக்க ஆரம்பித்தானோ அப்போதே  இவள்  தான் என்  வருங்கால மனைவி என்ற முடிவில் இருந்தான். அதற்காக அவளிடம் தவறாக பேசவோ நடக்கவோ ஏன் இன்று வரை அப்படி ஒரு பார்வை கூட பார்த்தது இல்லை. ஆனால் அவள் தான் கடைசி வரை என்பதில் உறுதியாக இருந்தவனோ தன்னுடைய படிப்புக்கும் அந்தஸ்துக்கும் ஏற்ற மாதிரி அவளை மாற்ற நினைக்க நடை உடை பாவனை என்று எல்லா விதத்திலும் மாறிய தேவியால் அவள் சேரி தமிழை மட்டும் மாற்ற முடியவில்லை.

 

அவன் சொல்வது போல் வெளி இடத்தில் கொஞ்சமே கொஞ்சமாக மாறினாலும் தன் சேரி மக்களிடமோ இல்லை தன் உறவுகளிடமோ அவளால் அப்படி பேசாமல் இருக்க முடியவில்லை. இப்போது கூட அவள் குப்பத்து ஆளான காளியிடம்  அப்படி பேசி தான் இவனிடம் இப்படி  மாட்டிக் கொண்டாள்.

 

எவ்வளவு நேரம் தான் அவளால் இல்லாத வேலையை செய்வதாகவே நடிக்க முடியும்? அவன் இப்போதைக்கு தான் வாயைத் திறக்காமல் நகர மாட்டான் என்பதை அறிந்தவளோ சுடிதார் துப்பட்டாவால் தன் இரு கைகளைத் துடைத்த படியே நங் நங் என்று தரையில் தன் பாதம் பதிய கொஞ்சம் கோபத்துடன் அவன் முன் வந்து நின்றவளோ

 

“இப்போ இன்னா நான் செஞ்சிகினது தப்பு தான்! ஒத்துக்கிறன்.. அதுக்காண்டி சொம்மா சொம்மா என்ன மொறைக்காதிங்க. பொறந்ததுல இருந்து பேசினு கீற பாஷை! ரவ ரவையா தான் மாறும். அதுக்கு ரவ இல்ல நெறயவே டைம் குடுங்க சார்…” என்று அவள் முடிக்கக் கூட இல்லை.

 

ஆரம்பத்திலிருந்து அவள் செய்கையையும் பேச்சையும் ஒரு வித சுவாரஸ்யத்துடன் பார்த்து இருந்தவனோ இப்போது நங் என்று அவள் தலையில் கொட்ட வீட்டிலேயே உடற்பயிற்சி செய்கிறேன் என்ற பெயரில் பல இரும்பு தட்டுகளைக் கம்பியில் கோர்த்துத் தூக்கியவனின் கையால் ஒரு கொட்டு என்று வாங்கினால் அது சாதாரண கொட்டாகவா இருக்கும்?

 

அவளுக்கு வலியில் தன்னை மீறி கண் கலங்கி விட்டது. அப்போது தான் தான்  செய்த மற்றொரு தவறை உணர்ந்தவள் வலித்த தன் தலையை தடவிக் கொண்டே ஒரு கண் மூடித் தன் நாக்கை சிறிதாக நீட்டி அதை மேல்  இதழில் பதிய “ஸ்ஸ்ஸ்…” என்று முனங்கியவளோ பிறகு  “சாரி பிரதாப்” என்று சொல்ல

 

“உனக்கு ஒவ்வொரு முறையும்  நான் சொல்லிட்டே இருக்கணுமா? நீ பேசுற பாஷையாவது மாற கொஞ்ச நாள் ஆகும்னு சொன்ன! விட்டுட்டேன். ஆனா என் பெயர் சொல்லி கூப்பிடணும்னு நான் சொன்னத விட்டுக் கொடுக்க முடியாது. ஒழுங்கா இந்த சார் மோர் எல்லாம் விட்டுட்டு பிரதாப்னு கூப்பிட்டுப் பழகு” என்று அவன் குரலை உயர்த்தாமலே கட்டளை இட சரி என்று தலை ஆட்டினாள் தேவி.

 

வந்த புதிதில் சின்ன ஐயா என்று அழைத்தவளைப் பிறகு நாகரீகம்  என்ற பெயரில் ஸார் என்று கூப்பிட வைத்தவனோ இப்போதும் அதே நாகரீகத்தை சொல்லியே அவளைத் தன் பெயர் சொல்லி கூப்பிட வைக்கிறான் அவன். அப்படி கூப்பிட்டாலாவது தன்னிடம் ஒரு வித நெருக்கம் ஏற்படாதா என்ற எண்ணம் பிரதாப்புக்கு.

 

“இன்னும் ஏன் இங்கேயே நிற்குற? இன்றைய பாடத்த படிக்கணும்னு உனக்கு எண்ணம் இன்னும் வரலையா? சீக்கிரம் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் என்ன கொடுக்கணுமோ கொடுத்துட்டு உனக்கான சத்துமாவு கஞ்சி எடுத்துட்டு ஸ்டடி ரூம் வந்து சேரு” என்று சொல்லி அவள் பதிலுக்குக் கூட காத்திராமல் அங்கிருந்து விலகிச் சென்றான் பிரதாப்.

 

நன்றாகப் படித்த தேவி பனிரெண்டாவதில்  பள்ளியிலேயே முதல் மாணவியாக மதிப்பெண் எடுத்திருக்க அவளைத் தன்னை போல் கலெக்டராகப் படிக்கத் தூண்டினார் சதானந்தன். மைதிலியோ அவளை ஒரு லெக்சரராக பார்க்க ஆசைப் பட்டார். ஆனால் பிரதாப்போ அவளுக்கு விருப்பப் பாடமான விண்வெளி ஆராய்ச்சித் துறையை படிக்க வைக்க நினைத்தான். அது உண்மை தான்! தேவிக்கும் அதைப் படிக்க தான் ஆசை. அப்படி ஒரு ஆசை அவளுக்கு வந்ததும் பிரதாப்பால் தான்.

 

சிறுவயதிலிருந்தே பிரதாப் தான் செய்த பிராஜெக்ட்களை பொக்கிஷமாக வைத்து பாதுகாப்பான். அதெல்லாம் இன்று வரை அவன் ஸ்டடி ரூமில் இருக்கும். அந்த அறையைச் சுத்தம் செய்யும் போது எல்லாம் தேவி காகித அட்டைகளால் ஆனா சாட்டிலைட் மற்றும் விண்வெளி புகைப்படங்களை எல்லாம் பார்த்து வியந்தவள் அது தொடர்பான கேள்விகளைப் பிரதாப்பிடம் கேட்டு அறிய அவள் ஆர்வத்தைப் பார்த்தவனோ தினமும் மாலை நேரத்தில் அதற்கான வகுப்புகளை அவளுக்கு  எடுக்க ஆரம்பித்தான்.

 

இப்போது கூட அது சம்பந்தமாகச் சொல்லிக் கொடுக்கத் தான் அவளை ஸ்டடி ரூம் வரச் சொன்னது.  இப்படி என்ன தான் அவள்  ஆசைக்குத் துணையாக இருந்தாலும் சரி அதற்காக எல்லாம் அவளை எடுத்த உடனே அந்த துறைக்கான படிப்பை அவன் படிக்க வைக்க வில்லை. முதலில் கம்ப்யூட்டர் சம்மந்தமான டிகிரியை அவள் முடித்த பிறகு அவளைத் திருமணம் செய்து தன்னுடைய மனைவியாய் அவள் ஆன பிறகு அவளைப் அந்த படிப்பை  படிக்க வைக்க நினைத்தான்.

அந்த துறை சம்பந்தப் பட்ட படிப்புக்குக் கொஞ்சம் இல்லை நிறையவே செலவாகும் என்னும் போது அதற்கான செலவை இப்போது செய்தால் நிச்சயம் தேவி ஒத்துக் கொள்ள  மாட்டாள். அதனால் தான் அவளை உரிமை உள்ளவளாய் ஆக்கிய பிறகு படிக்க வைக்க நினைத்தான் அவன்.

அதே போல் இந்த படிப்பு பற்றிய கனவுகளை வெறும் ஆசை என்ற வரையில் இருந்ததை லட்சியம் என்று அவளுக்குள் மாற்றியவனும் பிரதாப் தான்

அதனால் தானோ என்னவோ யாரிடமும் அதிகம் பேசாத தேவி கூட பிரதாப்பிடம் கொஞ்சம் உரிமை கலந்த கெஞ்சலுடன் பேசுவாள். தாம் தான் வீட்டில் பெரியவள் என்பதால் தன்னை விட பெரியவனான பிரதாப்பை ஒரு உடன்பிறவா சகோதரனாக வழி நடத்தும் குருவாக உற்ற தோழனாக நினைத்தது அந்த இருபது வயது தேவியின் மனது. இப்படியே இருவரும் அவரவர் எண்ணத்தில்  சென்று கொண்டிருக்க

 

தேவியின் வாழ்வில் எவ்வளவோ விஷயங்கள் வந்து போனாலும் இந்த பத்து வருடம் ஆகியும் அவளால் மறக்க முடியாத ஒரே விஷயம் சிற்பி அவளிடம் அப்படி செய்ததைத் தான்! அதிலும் அந்த தெருப் பக்கம் வரும் போது எல்லாம் அவள் உடல் கூச கொஞ்ச நேரம் இரும்பென இறுகிப் போய் விடுவாள் அவள்.

 

இன்று விடுமுறை என்பதால் காலையிலேயே அவள் அந்த தெருப்  பக்கமாக  வர அங்கிருந்த டீ கடை ஒன்றில் ஏழெட்டு ஆண்கள் அமர்ந்திருக்க அதில் ஒருவனுடைய கைப்பேசியில் இருந்து

….

ரவி வர்மன் எழுதாத கலையோ

ஹா ஹா ஹா

ரதி தேவி வடிவான சிலையோ

ஹா ஹா ஹா

கவி ராஜன் எழுதாத கவியோ….

கரை போட்டு நடக்காத நதியோ

ம்ம்ம்ம்ம்ம்ம்……

ரவி வர்மன் எழுதாத கலையோ

ஹா ஹா ஹா

என்ற பாடல் ஒலிக்க  அதை கேட்ட தேவியின் உடலோ விரைத்தது.

 

“இவனுங்களுக்கு இதே பொயப்பா பூட்சி! நான் போ சொல்லோ வர சொல்லோ அல்லாம் எத்தா ஒரு பாட்ட போட்டு என்ன கலாய்காகிறானுங்கோ சோமாரிப் பசங்க.. இவனுங்க அல்லாரையும் தூக்கிப் போட்டு மெரிக்கணும் போல கீது!” என்று கோபம் தலைக்கேற முணுமுணுத்துக் கொண்டே அந்த இடத்தை கடக்க நினைத்தாள் தேவி.

 

தேவிக்கு சிறு வயதிலிருந்தே கண் மண் தெரியாமல் தன்னை மீறி கோபம் வரும் என்றால் அதற்கு இரண்டு காரணங்கள் தான் இருக்கும். ஒன்று அவள் தாய் செய்த செயலுடன்  அவளை சம்பந்தபடுத்திப் பேசினாலோ அல்லது வாலிபப் பையன்கள் சீண்டினாலோ அவளுக்குக் கோபம் வரும். பருவ வயதில் பெண்களைச் சீண்டுவது சகஜம் என்றும் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விட்டால் அந்த வம்பு செய்யும் பையன்கள் விலகி விடுவார்கள் என்பது எதுவும் தேவிக்குத் தெரியவில்லை.

 

அவள் தாயின் நடத்தை அவளை சகஜமான வாழ்வில் இருந்தே தூர நிறுத்தி வைத்தது. தேவிக்கு கொஞ்சம் இல்லை ரொம்பவே ஒல்லியான உடல்வாகு. ஏதோ எலும்புக் கூட்டில் ஒரு போர்வையைப் போர்த்தினால் போல இருப்பாள்.

 

பிரதாப் கூட  காற்று மழைப் புயலில் அடிக்கடி வெளியே போகாதே என்று சீண்டுவான். ஒருசில நாளில் இன்னும் ஒரு படி மேலே போய் பேராஷூட்டில் உனக்குப் பறக்க ஆசையா என்று கேட்டு அவளிடம் குடையைக் கொடுத்து காற்று வேகமாக வரும் திசையில் நிற்கச் சொல்வான்.

 

பிரதாப் மற்றும் கூட படிப்பவர்கள் என்ன சொன்னாலும் சிரித்த முகமாக விலகிப் போகும் அவளால் அதே சில குப்பத்துப் பசங்கள் சீண்டினால் மட்டும் அமைதி காக்க முடியவில்லை.

 

ஒரு நாள்  அப்படித் தான்.  ஃபிப்டி கேஜி தாஜ்மஹால் என்்கே எனக்கா என்று ஒரு தடியன் பாட நேரம் பார்த்து அவனுக்கே தெரியாமல் மறைவாக நின்று கல்லால் அவன் மண்டையை உடைத்தாள் தேவி.

 

மற்றொரு நாளும்  இப்படித் தான்.

ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி

சடையில் அடிச்சே என்னை சாச்சுப்புட்டாஎன்று  வேறு ஒருவன்  பாட, இம்முறை நேருக்கு நேர் நின்று  அவன் சட்டையைப் பிடித்து அவனை துவைத்து எடுத்து விட்டாள் அவள்.

 

ஆனால் இவள் இப்படி நடந்து கொள்வதால் தான் அவளை எல்லோரும் சீண்டுகிறார்கள் என்பது பாவம் அவளுக்குத்  தெரியவில்லை. அப்படி தன் மெல்லிய தேகத்தை வைத்துப் பேசியவர்களையே சும்மா விடாத தேவி இப்போது  அவள் பெயரையே பாட்டாகப் பாடினால் சும்மா இருப்பாளா?

 

அவள் அந்த டீ கடை பெஞ்சை நெருங்கும்  போதோ

ரதி தேவி வடிவான சிலையோ

விழியோரச் சிறுப் பார்வை போதும்

நான் விளையாடும் மைதானம் ஆகும்

இதழோரச் சிரிப்பொன்று போதும்

நான் இளைப்பாரும் மலர் பந்தல் ஆகும்

கையேந்தினாய் வந்து விழுந்தேன் பெண்ணே

கருங்கூந்தலில் நான் தொலைந்தேன் கண்ணே

 

என்ற வரிகளை தேவியை விடச் சின்ன வயதுப் பையன் பாடிக்கொண்டிருக்க அதை கேட்டவளோ   இன்னும் உக்கிரமாக அவனை நெருங்கி  அவன் அமர்ந்திருந்த பெஞ்சை எட்டி உதைக்க, அவனோ “ஐயோ வர்மான்னா!” என்ற கூச்சலுடன் தலை குப்புற கீழே விழுந்தான்.

 

அவன் சாதரணமாக விழுந்திருந்தால் கூட தேவி ஐயோ பாவம் என்று விட்டிருப்பாளோ என்னமோ? அவன் சொன்ன வர்மா என்ற பெயரில் பத்து வருடங்களுக்கு முன்பு ருத்ர தேவியாக நின்றவளோ இப்போதும் அதே போல் மாறி கீழே விழுந்த அவன் நெஞ்சின் மேல் தன் வலது காலைத் தூக்கி வைத்தவளோ

 

“யாரு? அந்த இடி மாடு தான் உன் அண்ணாத்தையா? எங்க இப்போ வரச் சொல்லு பாப்போம் உன் நொண்ணாவ!” என்றவள் அவன்  சட்டையைக் கொத்தெனப் பிடித்தவளோ கூடவே அவனை அறைய கை ஓங்க, அதே நேரம் அவள் கையைப் சட்டெனப் பிடித்தது ஒரு ஆண் கரம். கூடவே அவள் கையைப் பிடித்து முறுக்கியவனோ

 

“ஒரு ஆம்பளப் பையன அடிக்க நீ கை ஓங்கினதே தப்பு. இதுல உன்ன விட சின்னப் பையன் நெஞ்சில கால வைக்கிறியா? மரியாதையா காலை எடு டி!” என்று அவன் முதல் முறையாக பார்க்கும் பெண்ணை ஏக வசனத்தில் மிரட்ட, சும்மா விடுபவளா தேவி?

 

“நீ யார் டா அத்த சொல்ல? உன் சோலியப் பாத்துகினு போ. இல்லாங்காட்டி  அந்த இடிமாடு வர்மாவ இஸ்துகினு வா. அவனாண்ட நான் பைசல் பண்ணிக்கறதுக்கு கணக்கு ஒன்னு கீது”  என்று அவள் பெண் சிங்கம் என கர்ஜிக்க

கையைப் பிடித்திருந்தவனின் புருவங்களோ சற்றே மேலேறி  நெற்றி சுருங்க யோசனையைக் காட்டியது

 

“இன்னா நான் சொல்றது பிரியல? இப்போ கூவுனானே ஒரு பேரு வர்மானு!  அந்த இடிமாடு வர்மாவ  இட்டாந்துடு. நானும் பத்து வருசமா அவனத் தான் தேடினு கீறேன்” என்று அவள் அதே பிடியிலேயே நிற்கவும்

 

“நான் தான் டி அந்த வர்மா!” என்று சற்று அழுத்தி நிதானமாகச் சொன்னான்  அவள் கையைப் பிடித்திருந்தவன். உண்மை தான்! அன்று தேவியிடம் அடி வாங்கித் திரும்ப அவளுக்கு ஒன்றுக்கு மூன்றாகக் கொடுத்த அதே சிற்பிவர்மன் தான் இப்போது தேவியின் கண்ணெதிரே அவள் கையைப் பிடித்து கொண்டிருக்கும் வர்மன்.

Categories
Uncategorized

அத்தியாயம் – 10

அத்தியாயம் – 10

தன்னிடம் வெறுப்புடன் பேசி விட்டு சென்றவன் மலரின் முன்பு கண்ணீருடன் நின்றதை கண்டதும் கார்த்திகாவின் மனது பற்றி எரிந்தது. அத்தை மகளான தனக்கு இருக்கும் உரிமையை விட, மாமன் மகள் இரெண்டாம் பட்சம் தான் என்று இத்தனை நாள் எண்ணி இருந்தாள். ஆனால் இன்றோ தன்னை விட அவனுக்கு அவள் முக்கியமாக போய் விட்டாள்.

எப்படியாவது விஜயனே அவளை வெறுக்கும் படி வைக்க வேண்டும் என்று மனதில் கருவிக் கொண்டாள். இங்கே அவள் ஒன்றை மறந்து விட்டாள். தனது செயல்களுக்கு மலரிடமிருந்து எந்த எதிர்வினையும் வரவில்லை எனும் போது அவள் மீதான அன்பு கூடிக் கொண்டு தான் போகுமே தவிர குறையாது.

‘நான் இந்த வீட்டில் கல்யாணம் பண்ணி வந்த பிறகு உன் கண் முன்னாடியே அவரோட வாழறேண்டி. நீ தினம் தினம் பார்த்து பார்த்து சாகனும்டி. அதுக்காகவே உனக்கு கல்யாணம் ஆக விடாம தடுக்கிறேன்’ என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அப்போது அவளை இடித்துக் கொண்டு அங்கே வந்த பவானி “வழிவிடு! எப்பவும் அடுத்தவங்க வழியில் இடைஞ்சலா நிற்கிறதே உன் வேலையா போச்சு” என்று கடுப்படித்துக் கொண்டு தோட்டத்துக்கு சென்றாள்.

மலரும் அண்ணனும் நிற்கும் இடத்திற்கு சென்றவள் “என்ன அண்ணனே பண்ணி வச்சிருக்கே? நீ எப்படி அவளை கட்டிக்க சம்மதம் சொல்லலாம்? இதோ நிற்கிறாளே இவளுக்கு கேட்க நாதியில்லேன்னு தானே எல்லோரும் அவ வாழ்க்கையை ஏலம் போடுறீங்க?” என்றாள் கோபமாக.

தங்கையின் கேள்வியில் அதிர்ந்தாலும் “பவானி! நீ இதில தலையிடாதே! சின்ன பொண்ணு பேசாம இரு!” என்றான்.

அவனை கூர்ந்து பார்த்தவள் “யாருன்னே சின்ன பொண்ணு? இவளுக்கும் என் வயசு தானே அப்போ நான் கேட்கலாம்” என்றாள் அழுத்தமாக.

“நான் கிளம்புறேன் பவானி. இனிமே பேச எதுவுமில்ல. பேசாம போ” என்றான் எரிச்சலாக.

“நில்லுங்க அண்ணா! அவ பாட்டுக்கு அட்டூழியம் பண்ணுவா நாம எல்லாத்தையும் பொறுத்துகிட்டு போகனுமா? இது உங்க வாழ்க்கை அண்ணா. இதோ இவளுக்கு தனக்கு ஒன்னு வேணும்னு கேட்க கூட தெரியாது. நீங்க மலரை விட்டுட்டு அவளை கல்யாணம் பண்ணினா சத்தியமா உங்க கிட்ட என் உசுரு இருக்கிற வரை பேச மாட்டேன் சொல்லிட்டேன்” என்றாள் கண்களில் கண்ணீர் வழிய.

அதைக் கண்டு பதறிய மலர் “என்ன பேசுற பவானி? அவங்க மேல எந்த தப்பும் இல்ல. குடும்பத்துக்காக தன்னோட ஆசையை விட்டுக் கொடுக்கிறாங்க. நீ அவங்களுக்கு பக்கபலமா இருக்கணும் பவானி” என்றாள் அழுகையுடன்.

அவளை முறைத்துக் கொண்டே “தியாகச் செம்மலே! உன்னளவிற்கு நான் நல்லவ இல்ல. என்னால இதை மன்னிக்க முடியாது. அண்ணா நான் விளையாட்டுக்கு சொல்றேன்னு நினைக்காதீங்க. நிச்சயமா உங்க கிட்ட ஒரு வார்த்தை பேச மாட்டேன். அவளையும் அண்ணியா ஏத்துக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றாள்.

அவள் சென்றதும் இருவருக்கும் மூச்சு முட்டுவது போலிருந்தது. அந்த சூழலே அனலில் நிற்பது போல் தோன்றியது. ஒருவர் மீது ஒருவர் ஆசை வைத்தது பாவமென்றால் விருப்பமே இல்லாத ஒருத்தி அதை உடைத்து பார்க்க நினைப்பது எத்தகைய பாவம்? சற்று நேரம் அப்படியே நின்றவன் தலையை அழுந்தக் கோதிக் கொண்டு அங்கிருந்து எதுவும் பேசாமல் சென்றான்.

மலரோ அங்கிருந்த படியில் அப்படியே அமர்ந்து விட்டாள். இனி, வரும் நாட்களில் இந்த வீட்டின் நிம்மதி பறி போகும் என்பதற்கு சாட்சியாக பவானி பேசி விட்டு சென்றிருக்கிறாள். அவர்களின் திருமணத்திற்கு தன்னால் இங்கிருக்க முடியுமா? அவர்களின் வாழ்க்கையை கண் கொண்டு பார்க்க முடியுமா? அதை தன்னால் தாங்க இயலுமா? என்று எண்ணி நடுங்கினாள்.

போக்கிடத்திற்கு கூட வழியில்லாமல் போன தன் நிலையை எண்ணி கலங்கினாள்.

பிரபாவும் தனது அண்ணன் மகளை எண்ணி ஒருபுறமும், தன் மகனின் திருமண வாழ்வை எண்ணி சோர்ந்து போய் அமர்ந்திருந்தார். தனது மகனின் திருமணத்தை தன் விருப்பத்திற்கு ஏற்ப செய்ய இடமில்லாமல் என்ன வாழ்க்கை இது? இந்த வீட்டிற்கு வாழ்க்கைப்பட்டு வந்தது முதல் மாமியாரின் பேச்சை மீறி எதையும் செய்து விடவில்லை. தனக்கான மரியாதை எங்கேயும் தரப்படவில்லை என்று தெரிந்தாலும் இது தான் பெண்களின் வாழ்க்கை என்று அதை அப்படியே ஏற்றுக் கொண்டார்.

அந்த வீட்டில் சமையல்கட்டு தான் அவரது நிரந்தர இடம். அங்கே கூட அங்கம்மாளின் ஆதிக்கம் தான். அவர் சொன்னவற்றை மட்டுமே சமைக்க முடியும். மொத்தத்தில் அந்த வீட்டின் அடிமையாக மட்டுமே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார். கணவரின் அன்பிருந்தாலும் அன்னையை மீறி அவரால் எதுவும் செய்து விட முடியாது. அதிலும் அலமேலு விஷயத்தில் அங்கம்மாள் அதி தீவிரமாக இருப்பார்.

இப்போது பிரபாவின் எண்ணமெல்லாம் விஜயன், கார்த்திகா திருமணத்திற்கு முன்பு மலரின் திருமணத்தை முடித்து அங்கிருந்து அனுப்பி விட வேண்டும் என்பது தான். கார்த்திகா திருமணமாகி வந்துவிட்டால் மலரின் நிலை இங்கு கவலைக்கிடமாக மாறி விடும் என்று எண்ணி இதை யோசித்தார். ஆனால் தன் எண்ணத்தை எப்படி நிறைவேற்றுவது என்று புரியாமல் அமர்ந்திருந்தார்.

எப்படியாவது அனைவரையும் சமாதானம் செய்து அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து அங்கிருந்து அனுப்பி விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.

தண்ணீர் குடிக்க உள்ளே நுழைந்தவன் அன்னை அமர்ந்திருந்த கோலத்தைக் கண்டு மனம் வருந்தினான்.

“அம்மா! ஏன் இருட்டில உட்கார்ந்திருக்கீங்க?” என்றவன் குடத்திலிருந்து தண்ணீரை எடுத்து அருந்த ஆரம்பித்தான்.

கலங்கியிருந்த கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து வந்தவர் “என் பிள்ள வாழ்க்கையே இருட்டாகப் போகுது. நான் இருட்டில் உட்கார்ந்திருந்தா என்ன?” என்றார் சோர்வாக.

குடித்து கொண்டிருந்த தண்ணீர் செம்பை கீழே வைத்து விட்டு அன்னையின் அருகில் சென்றவன் “அம்மா! தயவு செஞ்சு கலங்காதீங்க! இன்னும் எதுவும் கெட்டுப் போகல. நான் மாமா வந்ததும் பேசி பார்க்கிறேன்” என்றான்.

அதுவரை இருந்த சோர்வு நீங்கி விரிந்த விழிகளுடன் “அவர் ஒத்துக்குவாரா விஜயா? பொண்ணுக்காக பார்ப்பாரா?” என்றார் பதட்டமாக.

“இல்லம்மா! அத்தையை விட மாமா தெளிவா யோசிப்பார். விரும்பாத மாப்பிள்ளைக்கு கட்டி வைக்க நிச்சயம் ஒத்துக்க மாட்டார். நீங்க அமைதியா இருங்க” என்றான்.

“எல்லாம் கூடி வந்தா நம்ம குலதெய்வத்துக்கு பொங்க வைப்போம் விஜயா” என்றார் சற்றே உற்சாகமான குரலில்.

அன்னையை உற்சாகப்படுத்த கூறினாலும் அவன் மனதில் உறுதியாக அது நடந்து விடும் என்று தோன்றவில்லை. மூன்று பெண்களும் தங்களின் ஆசைக்கு விஷத்தை வைக்கவே முயற்சிப்பார்கள் என்றே தோன்றியது. அதை வெளிக்காட்டாது “ம்ம்..சரிம்மா” என்று கூறிவிட்டு தன்னறைக்குச் சென்றான்.

எண்ணங்கள் அவனை சூழ்ந்து கொள்ள ஆரம்பித்தது. மலர் பெற்றோர் இன்றி அடைக்கலமாக தங்கள் வீட்டிற்கு வந்த நாளில் இருந்து அவள் மீதான அன்பு மலரத் தொடங்கி இருந்தது. ஆரம்பத்தில் பவானியிடம் காட்டும் அக்கறை போன்றிருந்தது வளர வளர அவள் மீதான ஈர்ப்பாக மாறியது. அவளது மென்மையான சுபாவமே காதல் கொள்ள வைத்தது. அதிர்ந்து பேசாத குணமும், அன்பாக நடந்து கொள்ளும் விதமும் அவனது மனதை புரட்டி போட்டது.

தங்களது ஆசைக்கு பாட்டியிடம் இருந்து தான் எதிர்ப்பு வரும் என்று நினைத்தான். ஆனால் கார்த்திகா தங்கள் வாழ்வில் குறுக்கே வருவாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவளுடனான திருமணத்திற்கு சம்மதம் சொல்லி விட்டாலும், அவளை மனைவியாக எண்ண முடியவில்லை. அதிலும் அவள் நடத்திக் கொண்டிருக்கும் நாடகத்தை நினைத்து வெறுப்பு தான் வந்தது.

எப்படியாவது மாமாவிடம் பேசி அவருக்கு புரிய வைத்து இந்த திருமணத்தை நிறுத்தி விட வேண்டும் என்று யோசித்தான். அதே நேரம் அன்னையும், மகளும் சதியாலோசனையில் இறங்கி இருந்தார்கள்.

“இங்க பாருடி நாளைக்கு அப்பா வந்தவுடனே அவர் கண்ணுல நீ பட்டுடாதே. நான் முதல்ல அழைச்சிட்டு போய் எல்லா விஷயத்தையும் சொல்லி சரி பண்ணிடுறேன். அதுக்கு பிறகு நீ அவரை பார்க்க வா” என்றார் அலமேலு.

“அப்பா ஒத்துக்குவாராம்மா?”

“ம்ம்..அவரை ரொம்ப யோசிக்க விடக் கூடாடி. நான் ஒன்னு சொல்றேன் கேளு. நீ வந்து அப்பாவை பார்க்காதே. படுக்கையிலேயே இரு. கிணத்துல விழுந்ததுல உடம்புல அடின்னு சொல்லிடுறேன். அப்போ தான் பதறி போவாரு” என்று மகளுக்கு தவறான வழியை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார் அலமேலு.

அவர் சொன்னதைக் கேட்டதும் “ஆமாம்ம்மா இப்படி பண்ணினா தான் அப்பா பயந்து போய் ஒத்துக்குவார்” என்றாள் உற்சாகமாக.

சற்றே யோசனையுடன் மகளை பார்த்தவர் “அதுக்கு முன்னே நமக்கு ஒரு வேலை இருக்கு கார்த்தி. உங்க கல்யாணத்துக்கு முன்னே அந்த குட்டியை இங்கிருந்து விரட்டி விட்டுடனும். அப்போ தான் உன் வாழ்க்கை நிம்மதியா இருக்கும்” என்றார்.

“என்ன சொல்றம்மா?”

“ஆமாடி! அவளுக்கு ஏதாவதொரு மாப்பிள்ளையை பார்த்து ஒட்டி விட்டுடுவோம்”.

“வேண்டாம்மா! அவ இந்த வீட்டுலையே இருக்கனும்மா! நாங்க வாழறதை பார்த்து அவ வயிறு எரிஞ்சு சாகனும்” என்றாள் இறுகிய குரலில்.

மகளை முறைத்தவர் “புரியாம பேசாதே கார்த்தி! விஜயன் விருப்பபட்டு இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கல. அரை மனசா இருக்கிற ஆம்பளையை கைக்குள்ள போட்டுகிறது ரொம்ப கஷ்டம். அதுவும் அவன் விரும்பின பொண்ணு முன்னாடி இருக்கும் போது. அதனால அவளை தாட்டி விட்டா தான் உன் வாழ்க்கை சரியா போகும்” என்றார்.

“இல்லம்மா! எனக்கு என் வாழ்க்கையை காப்பாத்திக்க தெரியும். மாமாவை எப்படி என் பின்னாடி சுத்த வைக்கனும்னு தெரியும். ஆனா அவ அதெல்லாம் இங்கிருந்து பார்க்க்கனும். அதனால அவ கல்யாண பேச்சை எடுக்காதீங்க. அப்படியே வந்தாலும் அதை எப்படியாவது தடுத்திடுங்க” என்றாள்.

மகளின் முகத்தை வழித்து நெட்டி முறித்தவர் “இப்போ தாண்டி என் பொண்ணுன்னு நிரூபிக்கிற. நீ பாட்டுக்கு அவ பின்னாடி சுத்திட்டு இருந்தியேன்னு கவலையா போச்சு. என்ன இருந்தாலும் மாமனை கட்டிக்கிட்டு இங்கே ஆட்சி செய்ற மாதிரி வருமா சொல்லு” என்றார்.

“ம்ச்…எனக்கு அப்போ புரியலம்மா. இப்போ தான் தெரியுது. நீ சொன்ன மாதிரி வெளில கட்டி கொடுத்தா இந்த மாதிரி இருக்க முடியாது. அதுவும் இங்கே பாட்டி எனக்கு தான் ஆதரவா இருப்பாங்க. அத்தையும் ஒரு ஊமை. நான் தான் ராணி மாதிரி இருப்பேன் இங்கே” என்றாள்.

“இனி, உன்னைப் பத்தி எனக்கு கவலையில்ல கார்த்தி. உங்கப்பாவை ஒத்துக்க வச்சிட்டா போதும்” என்று கூறி நிம்மதியாக தலையை சாய்த்தார்.

ஒரு திருமண பந்தத்திற்கு தேவை இரு மனங்களின் அன்பு. ஆனால் இங்கு நடப்பதோ விருப்பமில்லாமல் ஒருவனை அந்த பந்தத்திற்குள் நுழைக்க முயலுகிறார்கள். தாலியை கட்டி விடலாம் ஆனால் வாழ்க்கையை அவன் தானே வாழ வேண்டும். அதை அந்த பிடிவாதக்காரி உணரவில்லை. அவனை மிரட்டி தாலி கட்டிக் கொண்டாள் வாழ்ந்து விடலாம் என்று பைத்தியகாரத்தனமாக எண்ணுகிறாள்.

அவளின் அர்த்தமற்ற பிடிவாதத்தால் கெடப் போவது அனைவரின் நிம்மதியும் என்பதை அவள் உணரவில்லை. உணரும் போது அனைத்தும் கடந்து போயிருக்கும்.

விடியலுக்காக ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதத்தில் காத்திருந்தனர்.

விடிந்ததும் தில்லையும், விஜயனும் வயலுக்குப் போய் விட, அங்கம்மாள் மட்டும் கூடத்தில் அமர்ந்திருந்தார். அப்போது ஸ்டேஷனுக்கு போன வில்லு வண்டி வந்து நிற்க, அதிலிருந்து இறங்கினார் சண்முகம்.

மாப்பிள்ளையின் தலை தெரிந்ததும் “அலமு! மாப்பிள்ளை வந்தாச்சு பாரு” என்று குரல் கொடுத்தார்.

தோளில் துண்டை உதறி போட்டுக் கொண்டு உள்ளே வந்தவர் பவ்யமாக நின்று கொண்டிருந்த அங்கம்மாளிடம் “நல்லா இருக்கீங்களா?” என்றார்.

“நல்லா இருக்கேன் உட்காருங்க மாப்பிள்ளை” என்று கூறினார்.

அவர் அமரவும் சமயலறையில் இருந்து அவசரமாக தண்ணீர் செம்புடன் வந்த பிரபா “வாங்க அண்ணா” என்றார்.

“ம்ம்…நல்லா இருக்கியாம்மா” என்று கேட்டுவிட்டு தண்ணீரை அருந்தினார்.

அதற்குள் அலமேலு அறையிலிருந்து வேகமாக அங்கே வந்தார்.

“வாங்க…வந்துடீங்களா?” என்று கேட்டவரின் குரலில் அழுகையின் சாயல்.

பிரபாவிற்கும், அங்கம்மாளிற்கும் எதற்கு இந்த அழுகை என்று புரியாமல் பார்த்தனர்.

சண்முகமோ “பிள்ளை எங்க அலமு உறங்கராளா?” என்றார்.

அதைக் கேட்டதுமே விம்மி வெடித்து அழ ஆரம்பித்தார்.

சண்முகத்திற்கு ஒன்றும் புரியவில்லை “என்னாச்சு அலமு எதுக்கு அழுகுற?” என்று அதட்டினார்.

“நீங்களே வந்து பாருங்க உங்க பிள்ளைய” என்று புடவை தலைப்பால் வாயை பொத்திக் கொண்டு அழுதார்.

சண்முகத்துக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. அங்கம்மாளும் இவ ஏன் இப்படி கண்ணை கசக்குறா கார்த்தி நல்லாத்தானே இருந்தா என்று யோசித்தார்.

அழுகையுடன் கணவரை கூட்டிக் கொண்டு அறைக்கு சென்றார். அங்கு கார்த்தி நலிந்து போய் படுத்திருப்பதை கண்டதும் பதறி போனவர் “என்னாச்சு கார்த்திக்கு?” என்றார் கோபத்தோடு.

ஓவென்று அழுகையுடன் “கிணத்துல குதிச்சிட்டாங்க” என்றார்.

“என்னது!”

“ஆமாங்க! மாமனை கட்டிக்கணும்னு அம்மா கிட்ட சொல்லி இருக்கா. அதுக்கு அம்மா உங்கப்பா விஜயனுக்கு கொடுக்க விரும்ப மாட்டாங்கன்னு சொன்னாங்க. அதனால கிணத்துல குதிசிட்டா” என்று தனது கதையை எடுத்து விட்டார்.

மகளின் நிலை கண்டு கலங்கி போய் நின்றார் அந்த தந்தை. அதன் பின்னே உள்ளே நாடகத்தை அவர் அறியார்….