Categories
On-Going Novels

அன்பின் விழியில்! அத்தியாயம் – 4,5

எபி 4

     இவர்களின் முடிவை அறியாத சஞ்சய், கலர்கலராய் எதிர்க்கால கனவுகளை கண்மூடி கண்டுக்கொண்டிருக்க, அவனின் கனவை, கனவாக்கவேன ஈஸ்வரன் அவனை அழைத்தார்.

   “சஞ்சு! அத்தை உன்கிட்ட ஏதோ பேசணுமாம். இரு, அவகிட்ட போனை தரேன்!” எனக்கூறி தன் மனைவியிடம் கைப்பேசியை கொடுத்துக்கொண்டே, ”அவன்கிட்ட என்ன சொல்லனும்ன்னு நினைக்கிறியோ அதை நீயே சொல்லிடு! என்றார்.

     ஈஸ்வரி பேசியை வாங்கி ஹலோ சொல்வதற்குள், “அத்தை! எப்படி இருக்கீங்க!” என்ற சஞ்சுவின் குரல் அவரின் காதில் மோதியது.

         என்னத்தான், நெடுங்காலம் பேசாது, பார்க்காது இருந்தாலும், மிகவும் பிடித்தமானவர்களின் குரல் காதில் ஒலிக்கும் போது மனம் அதன் வசப்படத்தான் செய்கிறது, எவ்வளவு தடுத்தும்!

    “இப்போதான் இந்த அத்தைய விசாரிக்க உனக்கு நேரம் கிடைச்சுதா சஞ்சு! நீ கூட என்னை மறந்துட்ட இல்ல?” எனக் குரல் தழுதழுக்க ஈஸ்வரி கேட்க, அதைக் கேட்டு கொண்டிருந்தவானாலும் அத்தழுதழுப்பை குரலில் வராது கட்டுபடுத்த முடியவில்லை!

        அடைத்த தொண்டையை முழுதும் சரிப்படுத்த முடியாவிடினும், பேசவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், முடிந்தவரை சரிசெய்து,      

         “இதுக்குதான்! இப்படி பேச ஆரம்பிச்சதும் அழுது வடிவீங்கன்னு தான் நான் இவ்வளவு நாள் பேசாம இருந்தேன். ரெண்டு வருஷத்துப் பிறகும் உங்களால நடந்ததை மறக்க முடியாதபோது, அப்போவே நாம பேசியிருந்தோம்ன்னா, அந்த சூழ்நிலையில் யாராலும் யோசிச்சு பேச முடிந்திருக்காது. தேவையில்லாம பிரச்சனை தான் இன்னும் பெருசாகி இருக்கும்” என சஞ்சய் முதலில் பொறுப்பாய் தன் அத்தைக்கு தன்னை புரிய வைத்தான். பிறகு,

      “நான் ரெண்டு வருஷம் கழிச்சாவது ’எப்படி இருக்கீங்க?’ன்னு கேட்டேன். நீங்க இன்னும் அதுகூட என்னை கேட்கலை. ரெண்டுவருஷமா உங்க சப்போர்ட் இல்லாம நான் எவ்வளவு கொடுமைய அனுபவிக்கறேன்னு உங்களுக்கு தெரியுமா? என்னை கொஞ்சம் கூட பிடிக்காதவங்க கூட நான் காலம் தள்ளிட்டு இருக்கேன். நீங்க அதை பத்தி கேட்காம, உங்க முகாரியை  பாடறீங்க” என மருமகனாய் அத்தையிடம் செல்லம் கொஞ்சினான்.

இதுதான், இதற்குதான் நித்தி ஈஸ்வரிக்கு இவனின் வருகை தெரிவதற்கு முன் இவனை அங்கிருந்து ஓட்டிவிட எண்ணினாள். சஞ்சு  அவளின் அம்மாவுக்கு மிகவும் பிடித்தவன்.

       அவன் எதை.. யாரை சொல்கிறான், என்பதை அறிந்ததால் வந்த சிரிப்புடன், “நான் இருக்கும் போது யாரால் உன்னை கொடுமை படுத்தமுடியும்? இப்பதான் நீ என்கிட்ட வந்துட்ட இல்ல! பாத்துக்கலாம். யார் உன்னை என்ன சொல்றாங்கன்னு நாம பாத்துடலாம் சஞ்சு” என்றார் ஈஸ்வரி.

        “அப்படியே, உங்க பொண்ணுகிட்டயும் நீங்க தான் எனக்கு சப்போர்ட் பண்ணனும் அத்தை!” என சந்தடிசாக்கில் தன்னுடைய எண்ணத்தையும் அவரிடம் வெளிப்படுத்தினான் சஞ்சய்.

         தன் மாப்பிள்ளையின் சாமார்த்தியத்தை மனதினுள் மெச்சிக்கொண்ட ஈஸ்வரி, “ஏன் சஞ்சு திடீர்ன்னு உனக்கு இப்படி ஒரு விபரீத ஆசை! முன்னாடி எல்லாம் அவளை கண்டாலே உனக்கு ஆகாதே. அவளை வெறுப்பேற்றுவதை வேலையா கொண்டிருந்த நீ, ஏன் இப்படி மாறிட்ட?” என தன் சந்தேகத்தைக் கேட்டார்.

    அவரின் கேள்விக்கு பதிலை உரியவளிடம் தான் முதலில் சொல்ல எண்ணிய சஞ்சய், ”முதலில், பாத்தாலே பிடிக்கலை! அப்புறம் பாக்க, பாக்கவும் பிடிக்கலை! ஆனா, இப்ப பாக்காமலே இருந்ததால பிடிச்சிடுச்சு அத்தை!” என்று சினிமா வசனத்தை அவனுக்கு தகுந்தாற்போல் மாற்றி சொன்னான்.

          அவனின் பதிலில் உண்மை இல்லை என்பதை அறிந்தாலும் அவனின் ஆசையில் தவறான நோக்கம் இருக்காது என்பதை நன்கறிந்ததால் அதற்கு மேல் கேள்வி கேட்டு அவனை துருவாமல், “தைரியம் இருந்தா இதை அவகிட்ட நேரில் சொல்லேன் பாக்கலாம்!” என சவால் விட்டார்.

      “அது இல்லைன்னு தானே  வெக்கமே இல்லாம இவ்வளவு நேரம் உங்ககிட்ட சொல்லிட்டிருக்கேன்!” என வழிந்தான்.

      அவனின் மானம்கெட்ட பேச்சைக்கேட்டு அவனின் மாமனும் அத்தையும் மனம்விட்டு சிரித்தனர். அதை தனக்கு சாதகமாக்கி கொள்ள எண்ணிய சஞ்சு,

     “அத்த! என்னோட ஆசைய மாமா உங்ககிட்ட சொல்லப்போறேன்னு சொன்னார். சொல்லிட்டாரா, அதுக்கு உங்க பதிலை நீங்க இன்னும் சொல்லலையே?” என மெதுவாக கேட்டான்.

         அவனின் பேச்சால் விளைந்த சிரிப்பை அடக்கிய ஈஸ்வரி, ”இந்த விஷயத்தில் உன்னோட ஆசையும், என்னோட பதிலும் மட்டும் போதாதே சஞ்சு. இன்னும் ரெண்டு பேரோட சம்மதம் வேணுமே” என்றார்.

       “அந்த ரெண்டு பேர்ல ஒருத்தர் எப்போதோ சம்மதத்தை சொல்லிட்டார். இன்னும் சொல்ல போனா, அவங்கதான் முதலில் என்னை முந்திகிட்டு, அவங்க ஆசையை என்கிட்ட சொன்னது. ஆனா, இன்னொருத்தரோட சம்மதம்  தான், கொஞ்சம் பயமா இருக்கு” என விஷயத்தை போட்டுடைத்தான் சஞ்சய்.

       “என்ன? என்ன சொல்ற சஞ்சு! நிஜமாவா? நீ நிஜமாவா சொல்ற! அவங்களுக்கும் ஆசையா? அப்படியா சொல்ற! அப்பன்னா உன்னோட பயத்துக்கு அவசியமே இல்லை சஞ்சு. அவங்களே உன்னோட ஆசையை நிறைவேற்றி வைத்துவிடுவாங்க. கவலையேப்படாத நீ. மேலிடத்தில், அவங்க பேச்சுக்கு அப்பீலே கிடையாது.” என முதலில் ஆச்சரியமாய் பரபரப்புடன் பேச ஆரம்பித்த ஈஸ்வரி, இறுதியில் தன் மருமகனை ஆறுதல் படுத்தவும் தவறவில்லை.

       “இப்ப நீ வேறெதுவும் பேசாது, நாங்க வந்ததும் அமைதியா எங்கள வந்து பாத்துட்டு, உன் வால சுருட்டிகிட்டு உங்க வீட்டுக்குள்ள போய் அடஞ்சிக்கோ. வரவேண்டியவங்க வரட்டும், நாம மற்றவற்றை அவங்க வந்ததும் பாத்துக்கலாம்” என்றார் ஈஸ்வரி.

  அவரின் பேச்சை மனம் ஏற்க முரண்டு பிடித்தாலும், மூளை அதுதான் சரி என அறிவுறுத்தவே அரைமனதாக, ”சரி! நீங்க சொல்றபடியே செய்யறேன். நீங்க வந்ததும் அங்க நான் வரேன். ஆனா, நான் இப்ப  எங்க வீட்டில் தங்க முடியாது.”

“அம்மாவும், அப்பாவும் வந்ததும் பூஜை ஏதோ பண்ணிட்டு தான் வீட்டில் தங்கனும்ன்னு சொல்லிட்டாங்க. அதுவரை நான் ஹோட்டலில் தான் இருந்தாகனும். ரெண்டு நாள் முன்னாடி வந்தது அங்க வீட்டை சுத்தம் பண்ணி, அம்மா கொடுத்த லிஸ்டில் இருக்கும் சாமான்களை வாங்கி வைக்கத்தான்” என்றான்.

    “அப்படியா? அப்ப நீ ரெண்டு நாளும் நம்ம வீட்டில தான் சாப்பிடனும்!” என்ற அத்தையின் கட்டளையில் அகம் மகிழ்ந்த சஞ்சு, அதை வெளிக்காட்டாது, “காலையில நீங்க வேலைக்கு கிளம்பறதுல பிஸியா இருப்பீங்க. மதியம் வீட்டில் நீங்க யாரும் இருக்க மாட்டீங்க. அதனால நான் நைட் மட்டும் சாப்பிட வரேன் அத்தை!” இதற்கு தன் அத்தையிடம் இருந்து மறுப்பு வரும் என்று தெரிந்தே சொன்னான்.

         “அதெல்லாம் எனக்கு தெரியாது. நீ மூனு வேளையும் நம்ம வீட்டில் தான் சாப்பிடனும்” என அத்தையும் மருமகனின் மனதில் நினைத்ததையே சொன்னார்.

         ‘இதை தானே நான் எதிர்பார்த்தேன்!’ என உள்ளம் துள்ள சஞ்சு சம்மதித்தான். அவர்களின் பேச்சு முடிந்த நிலையில் ஈஸ்வர தம்பதிகளின் பயணமும் முடிந்தது.

      வீட்டிற்கு வந்த பெற்றோர்களின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த நித்தியால் அவர்கள் என்ன நினைக்கிறார்கள், என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

     வந்தவுடன் கைகால்களை கழுவி, காபியை கூட குடிக்காது, அவளின் அன்னை சமையலறைக்குள் சென்று மறைய, தந்தையும் ஓட்டப்பந்தைய வீரனாய் மனைவியின் பின் சென்று மறைந்தார்.

         ‘என்ன இந்த அம்மா,வந்ததும் சமைக்க உள்ள போய்ட்டாங்க! ஈவ்னிங் வெளிய போறதாதானே காலையில பேசிக்கிட்டோம்.அதை மறந்துட்டு அப்பாவும், என்கிட்ட ஒன்னும் சொல்லாம அவங்க பின்னாடியே ஓடிப்போயிட்டார்!’

      ‘அந்த ‘கரிசட்டி’ வந்ததை அம்மாகிட்ட சொன்னாரா, இல்லையான்னு கேக்கலாம்ன்னு பார்த்தா முடியலையே! இப்ப இவங்களை பாக்க அது இங்க வந்தாலும் வரும். அது வரதுக்குள்ள கதவ பூட்டிட்டு வெளிய போய்டலாம்ன்னா இவங்க இப்ப யாருக்கு விருந்து சமைச்சிட்டு இருக்காங்கன்னு தெரியலையே!’ என மனதினில் புலம்பிக்கொண்டிருந்த நித்தி, சமையலறையிலிருந்து யாரேனும் வெளியே வருகிறார்களா? என பொறுத்து, பொறுத்து பார்த்துவிட்டு, அங்கிருக்கும் யாரும் வெளியே வரும் நோக்கில் இல்லை என்பதை அறிந்து, அவளே உள்சென்றாள். அங்கே….

        தடபுலடாய் ‘மாப்பிளை விருந்து’ தயாராகிக் கொண்டிருந்தது!

            தன் சொந்த வீட்டிலேயே என்ன நடக்கிறது என்பது தெரியாமல், ஒருவர்  இருப்பது எவ்வளவு கொடுமையான நிலைமை தெரியுமா! அந்த நிலைமையை  தான் பாவம் நித்தி இப்போது அனுபவித்துக்கொண்டு இருக்கிறாள்.

  இரண்டு நாட்களுக்கு முன் இரவில் தன் பெற்றோர் கல்யாண விருந்து சமைத்துக் கொண்டிருந்ததை பார்த்து திகைக்க ஆரம்பித்தவள் தான்! இன்றுவரை அத்திகைப்பையே தொடர்ந்துக் கொண்டிருக்கிறாள். அவளை சுற்றி நடக்கும் விஷயங்களை அவளால் நம்ப முடியா விட்டாலும், அது நடந்துக்கொண்டு தான் இருந்தது.

   அன்று இவர்களின் வீட்டிற்கு வந்த சஞ்சய், தன் அத்தையையும் மாமனையும் அதற்கு முன்பு ஒன்றுமே நடவாததை போல நலம் விசாரித்ததென்ன? அதற்கேற்ப அவர்களும் அவனை வரவேற்று விருந்து படைத்ததென்ன!

    அவ்விருந்து அன்று மட்டுமா நடந்தது? அதை தொடர்ந்து வந்த இரண்டாம் நாளான இன்றும் கூட அது தொடர்கிறது! இரண்டு நாட்களாக காலையில் கல்லூரிக்கு கிளம்பும் அவளின் அன்னை, ‘மதியம் சஞ்சய் வந்தால் அவனுக்கு சாப்பாடு போடு!’ என்று மட்டும் சொல்லி சென்றிருந்தால், போனால் போகிறது, ‘பரதேசிக்கு! சாப்பாடு போட்டால் புண்ணியம் கிடைக்கும்! என்ற எண்ணத்தில் அதை முகம் சுளிக்காது செய்திருப்பாளோ என்னமோ!

      ஆனால் அவளின் அன்னை, “சஞ்சுக்கு சாப்பாடு சூடா இருந்தாதான் பிடிக்கும் நித்தி. அதனால அவனுக்கு மட்டும் தனியா கொஞ்சம் சாதம் அப்புறம் வடிச்சிடு. அவனுக்கு ரெண்டு கூட்டு, பொரியல் இருந்தாலும் அப்பளம் இல்லைன்னா சாப்பாடு இறங்காது, அதனால அது ரெண்டு பொரிச்சி வச்சிடு.” என்று முதல் நாளும்,

         “தயிர்வடை கொழம்பு சஞ்சுக்கு ரொம்ப பிடிக்கும் நித்தி, அதனால அதையே இன்னைக்கு பண்ணிடறேன். அப்புறம் கொஞ்சம் வடைமாவு பிரிட்ஜ்ல எடுத்து வச்சிருக்கேன் அதை அவன் சாப்பிடும் போது சூடா போட்டு கொடுத்துடுடா. அவனுக்கு வடை சூடா நல்லா மொருமொருன்னு இருந்தாதான் பிடிக்கும்” என இரடண்டாம் நாளும் சொல்லி சென்ற வார்த்தைகள் அவளினுள் இருக்கும் சிங்கத்தை சீன்டிவிட்டுவிட்டது!

  “ஓட்டல்ல தங்கிகிட்டு, அங்க சாப்பிடாம இங்க வந்து சாப்பிடறதே ஓசி சாப்பாடு! இதுல தொரைக்கு சூடா போடனுமா? ஹாங் அப்பளம் இல்லைன்னா சார்க்கு சாப்பாடு தொண்டையில இறங்காதாம்! ‘சிங்க்’ல தண்ணி அடைச்சிகிட்டு போலன்னா குத்தறத்துக்கு வச்சியிருக்கற குச்சிய வாய்க்குள்ள விட்டு குத்தினா, எப்படி இறங்காம போகும்?! ‘காக்காக்கு போடற வடைய இதுக்கு போடலாம்ன்னு’ ப்ளான் பண்ணிட்டு இருக்க என்கிட்ட போய், இவங்க ‘சூடா… மொருமொரு’ன்னு சுட்டுத்தர சொல்றாங்க.!’ எனக்கடுப்பானாள் நித்தி.

            இவளின் இந்த கடுப்பிற்கு காரணம், ஈஸ்வரி, சஞ்சுவுக்கு சாப்பாடு எப்படி இருந்தால் பிடிக்கும், எதெல்லாம் அவனுக்கு பிடிக்கும் என்று சொன்னார்களோ, அப்படியேதான், அதெல்லாமும் தான் நித்திக்கும் பிடிக்கும்

           .தனக்கு பிடித்ததை, பிடித்தவிதத்தில் தன் தாய் தனக்கு செய்துக் கொடுப்பதை போல,வேறு ஒருவனுக்கு செய்துகொடுப்பதை நித்தியால் பொறுத்துக் கொள்ளவும்  முடியாது, அவர்களின் நடவடிக்கையை தடுக்கவும் முடியாது தவித்துக்கொண்டிருந்தாள்.

              ‘அன்று இதே நிலைமையில் தான் சஞ்சுவும் இருந்தான்’ என்பதை இவள் அறியவில்லை. அவனின் இவள் மேலான வெறுப்புக்கு முக்கிய காரணமும் இதே ‘பொறுத்துக் கொள்ளமுடியாத மனநிலைதான்!’

       ஒத்தமனதுடையவர்கள் வாழ்க்கையில் ஒத்துப்போவார்கள்!’ என்ற நியதி எல்லா இடத்திலும் எடுபடுவதில்லை. இருமனம் இணைவதற்கு சில நேரம்  ‘விதி’ வகை செய்கிறது. பல நேரம் ‘விதி’ மீறல் துணையாகிறது.   

          இங்கே இருமனம் இணைவதற்கு இருவரின் எண்ணங்களும், விருப்பங்களும் ஒன்றாக இருப்பது தான் மிகப்பெரிய பிரச்சனை!    

            எப்போதும் நித்தியை சீண்டிக்கொண்டும், அவளை திட்டிக்கொண்டும் இருக்கும் சஞ்சய், வழக்கத்துக்கு மாறாக அவளிடம் இப்போது நல்லப்பிள்ளைபோல நடந்துக்கொண்டான்.’காரியம் ஆகணும்ன்னா கயித்துமேல கூட கண்ண மூடிகிட்டு நடக்கறவனாச்சே இவன்!

முன்புதான் ஒரு ‘பொசசிவ்’ அப்படி நடந்துக்கொண்டான். இப்போது அவனின் மனம் நன்கு தெளிந்தப்பிறகும் அப்படி நடப்பதற்கு இவனுக்கு என்ன கிறுக்காப் பிடித்திருக்கிறது!

 

எபி 5

அந்த இரண்டு நாட்களும் அவன் அமைதியாக வந்து, அவள் என்ன சொல்கிறாளோ, அதை அப்படியே செய்து,நித்தியை, ’இவன் என்ன இப்படி நடந்துக்கிறான்?’ என குழப்பி,கிறுக்கு பிடிக்க வைத்துக் கொண்டிருந்தான்.

மூன்றாம் நாள் மாலை நித்யா அவளின் வகுப்பிற்கு செல்வதற்காக லிப்ட்டில் இருந்து வெளியே வந்தபோது அவள் பார்வையில் தொலைவில் சஞ்ஜய்யுடன் இருவர் வருவது தெரிந்தது. அந்த இருவரில் ஒருவரை பார்த்ததும் இவள் கண்களில் இருந்து கண்ணீர் துடைக்க துடைக்க வழிந்துக்கொண்டே இருந்தது. அவளால்,அவளின்  நிலைமையையும் கண்ணீரையும் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அவர்கள் தன்னை பார்க்கும் முன் வேகமாக லிப்ட்டில் சென்று கடைசி தலத்தின் எண்ணை அழுத்தி லிப்ட்டை இயங்க வைத்தாள். அது மேலே செல்ல செல்ல இவளின் உணர்ச்சிகள் கட்டுக்குள் வந்து, சிறுது சிறிதாக கீழே வர ஆரம்பித்தது.

‘தான் சமன்பட்டுவிட்டோம்!’ என்ற நம்பிக்கை வந்ததும் நித்தி தரைத்தளத்திற்கு லிப்ட்டில் இருந்து வெளியே வருவதற்கும் சஞ்சய் தன் குடும்பத்தோடு அங்கே வருவதற்கும் சரியாக இருந்தது.

அந்த மூவரில் ஒருவர் இவளைப் பார்த்து, ”நித்தி…! எப்படி மா இருக்க?” என ஆசையாய்க் கேட்டதும் அவருக்கு, ”நல்லா இருக்கேன் மாமா! நீங்க…?” என பதிலுடன், கேள்வியும் கேட்டாள்.

அதற்கு அவர் அளித்த பதிலை கேட்டுக்கொண்டிருந்தவளையே கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்த இன்னொரு ஜீவனை இவள் கண்டுக்கொள்ளாமல், முன்பு பேசியவரிடம் மேலும் சில வார்த்தைகள் பேசி அங்கிருந்து கிளம்பிவிட்டாள். அப்படி செல்பவளை பார்த்துக்கொண்டிருந்த அந்த ஜீவன்,

”பாருங்க! என்னை அவ கண்டுக்கவேயில்லை! என் மேல அவளுக்கு கோபம் இருக்கும்னு தெரியும். அதனால அவகிட்ட இருந்து ஒரு முறைப்பாவது கிடைக்கும்னு பார்த்தா, அறிமுகமே இல்லாத புதியவர்களை பார்ப்பதைப்போல கூட அவ என்னை பார்க்கலைங்க!”

“அவ இப்படி நடந்துகிட்டது எனக்கு எப்படி இருக்குன்னு தெரியுமா உங்களுக்கு? டேய், சஞ்சு அவ என்னையே கண்டுக்கலை! உன்னை எப்படி-டா ஏத்துப்பா?” என தன் கணவரிடமும் மகனிடமும் புலம்பிக்கொண்டிருந்தார் பத்மாவதி….ஸ்ரீநிவாசனின் மனைவி, சஞ்ஜய்யின் தாய்.

அவர்கள் சண்டையில் தன்னை கோர்த்துவிட்ட தாயை முறைத்த சஞ்சு, ”ம்மா! அவ உங்ககிட்ட பேசாததால என்னை ஏத்துக்க மாட்டான்னு சொல்றது என்ன லாஜிக் ம்மா?” என எரிச்சல் பட்டான்.

மகனின் எரிச்சலில் சட்டென்று சிரித்த பத்மா,”அவகிட்ட நான் தானேடா உனக்கு சிபாரிசு பண்ணனும்! எனக்காக தான் அவ போனாப் போகுதுன்னு உன்னை அக்செப்ட் பண்ணிப்பா. என்னோட தயவு இல்லாம அவ எப்படி-டா உனக்கு ஓகே சொல்லுவா?” என எகத்தாளமாய்க் கேட்டார்.

தான் முன்பு செய்துவைத்த குளறுபடிகளால் அன்னையின் நக்கலில் உண்மை இருப்பதை உணர்ந்த சஞ்சு, அவள் ‘தனக்காக தன்னை ஏற்றுக்கொள்ள, என்ன செய்யவேண்டும்!’ எனக் கணக்கிட தொடங்கினான்.

ஸ்ரீநிவாசன் தன் குடும்பத்துடன் ஈஸ்வரனின் இல்லத்திற்கு சென்றார். வந்தவர்களை ஆனந்த  கண்ணீருடன்  வரவேற்றனர் ஈஸ்வரன் தம்பதியினர். என்னதான் தொலைபேசியில் தொடர்பில் இருந்தாலும் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்த நண்பர்கள் அவர்களுக்குள் மூழ்கிவிட, ஈஸ்வரியும் பத்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருக்க, அவரவர் மனதில் உள்ளதை அவர்களே பேசிக்கொள்ளட்டும் என நினைத்த சஞ்சு,அங்கிருந்த ஒரு அறைக்குள் சரணுடன் சென்றான்.

“என்ன ஈஸ்வரி, இப்படி இளைச்சிப் போயிட்ட?” என பத்மா கேட்டது தான் தாமதம் அவரை “அண்ணி!” எனக்கட்டிக்கொண்டு கதறிவிட்டார் ஈஸ்வரி.

“ஏன் அண்ணி! எப்படி, என்னை நீங்க அப்படி நினைக்கலாம்? நான் அப்படிப்பட்டவளா? என்னைப் பற்றி உங்களுக்கு தெரியாதா? நீங்க எப்படி அண்ணி என்னை தப்பா நினச்சீங்க? என்னையும், நித்தியையும் பார்க்காம, எங்க கூட பேசாம இரண்டு வருஷங்களா உங்களால எப்படி அண்ணி இருக்க முடிந்தது?”

“நானாவது வெளிய போய் கொஞ்சம் என்னோட கவலைய மறந்துடறேன். ஆனா நித்தி தான் பாவம் அண்ணி. அவ உங்களை எவ்வளவு மிஸ் பண்றா தெரியுமா? வெளிய சொல்லலையே தவிர அவ நீங்க இல்லாம ரொம்ப தவிக்கறா. அதை எங்களுக்கு தெரியாம சாமார்த்தியமா மறைச்சிக்கிட்டு, எங்களுக்காக எங்களை கேலி கிண்டல் பண்ணி, விரட்டிகிட்டு வெளிய சும்மா சிரிச்சிகிட்டு இருக்கா. நீங்க அவகிட்ட  கூட இத்தனை நாளா பேசலை இல்ல?” என இத்தனை ஆண்டுகளாய் மனதினுள்  அடைத்து வைத்திருந்ததை பெருமழையென கொட்டித்தீர்த்தார் ஈஸ்வரி.

அவர் கதறியதை கண்ணீரோடு பார்த்தும் கேட்டும் கொண்டிருந்த பத்மா என்ன சொல்லி அவரை சமாதானப்படுத்துவது? என அறியாது திகைத்தார்.

ஈஸ்வரி கேட்டது அனைத்தும் சரியே! அன்று சொன்ன ஒரு சொல்லால் ஈஸ்வரி எப்படி துடிதுடித்துபோயிருப்பார்? என்பதும் தெரியும் தான்! அன்று தானுமே அப்படி பேச வேண்டும் என நினைத்து பேசவில்லை. எதிர்பாராது விளைந்த பேரிழப்பு விளைவித்த அதிர்ச்சியில் அப்படி பேசினாலும், ’தவறி செய்தாலும், தவறு… தவறு தானே!’ அதனால் ஏற்பட்ட வலியை காலம் போக்கிவிட்டாலும் வடு… அப்படியே இருக்குமே! அவ்வடுவைப் பார்க்கும் போதெல்லாம் வலியும் நியாபகத்திற்கு வருமே அப்போது என் செய்வது?

“நடந்தது நடந்துப் போச்சு. இன்னும் அதையே நினைச்சிட்டு இருந்தா அடுத்து நடக்க போறதை யார் வந்து செய்வாங்க ஈஸ்வரி? நான் அன்னைக்கு அப்படி பேசினது தப்புதான். அதுக்கு எனக்கு மன்னிப்பே இல்லை.பேசிமுடிச்ச அடுத்த நிமிஷத்திலையே அதை நான் உணர்ந்துட்டேன். அதன் பிறகும் ஏன் இங்க இருந்து போனீங்கனு தானே நினைக்கற? உங்களையெல்லாம் அப்ப பாக்கமுடியாம, தப்பு பண்ண குறுகுறுப்பில் தான், நான் இங்க இருந்து போனது. நான் பண்ண தப்புக்கு தண்டனையா ரெண்டுவருஷம் உங்களை எல்லாம் விட்டு தனியா இருந்தது போதும்ன்னு நினச்சுதான் இப்ப திரும்ப வந்துட்டேன்.” என்று பத்மா சொன்னதும்,

“இனிமே நீங்க எங்களை விட்டுட்டு எங்கயும் போகக்கூடாது அண்ணி! நாம இழந்ததே போதும்.இனியும் எதையும் இழக்க நமக்கு தெம்பில்லை” என சொல்லி அவரின் கைகளைப் பிடித்துக்கொண்டார் ஈஸ்வரி.

பெண்கள் பேசி, அழுது ஒருவழியாய் சமாதானமாக, அங்கிருந்த ஆண்களோ அடுத்து நடக்க இருப்பதை பற்றி யோசிக்க ஆரம்பித்திருந்தனர். நித்தியிடம் பேசும் பொறுப்பை பத்மாவிடம் கொடுக்க எல்லோரும் ஏகமனதாக முடிவெடுக்க,சஞ்சுவோ… தன் குஷ்பு இட்லியை தானே வேகவைக்கும் முயற்சியில் இறங்க முடிவெடுத்தான்.

அங்கிருந்த பெரியவர்கள் தங்களின் பேரனின் மழலைப் பேச்சில் நேரம் போனது தெரியாது அமர்ந்திருக்க,அப்போது தான் ஈஸ்வரனுக்கு அவளின் வண்டியில் செல்லாது ஆட்டோவில் சென்ற மகளை, கிளாஸில் இருந்து அழைத்துவரவேண்டும் என்பது நியாபகம் வந்து அவர் கிளம்பினார்.

அதுவரை ‘அவளை எப்படி அணுகி, தன் மனதில் உள்ளதை எல்லாம் சொல்வது?’என யோசித்துக்கொண்டிருந்த சஞ்சு,”மாமா! நான் போய் நித்திய அழைச்சிட்டு வரேன். நீங்க அடுத்து ஆகவேண்டியதை பேசி முடிங்க” என அப்போதும் தன் காரியத்தில் குறியாக அவர்களுக்கு நியாபகப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றான்.

அவன் நித்தியின் கோச்சிங் சென்டருக்கு போவதற்கு முன்பே, அவன் முன் செய்த வினை அவனுக்கு முன் அங்கே போய் நின்றது! இதைதான் ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்றார்களோ…!

வகுப்பு முடிந்து வெளியே வந்த நித்யா அங்குமிங்கும் விழியை வீசி தன் தந்தையை தேட, அதில் சஞ்சு வந்து விழுந்தான். அவனைப் பார்த்தவளோ ‘இவன் எதற்கு இங்க வந்திருக்கான்..?’ என யோசிக்கும் வேளையில் அவனே அவளிடம்,”மாமா அங்க அப்பாம்மாக்கூட பேசிட்டு இருக்கறதால உன்னை கூட்டிட்டு வர என்கிட்ட சொன்னாங்க” என்றான்.

‘இவனை எதுக்கு அப்பா அனுப்பினாங்க?அப்படியே அவர் அனுப்பினாலும் இந்த ‘அலட்டல் அர்னால்ட்’ அதுக்கு எப்படி ஒத்துகிட்டார்! இவரோட ரேன்ஜ்க்கு டிரைவர் வேலையெல்லாம் இவர் பார்க்க தகுமா?’ என்று இவள் நக்கலாக நினைத்துக்கொண்டிருக்கும் போதே சஞ்சுவுக்கு வினை, ’வினய்’ வடிவில் வந்தது.

“டேய்… சஞ்சய் நீ எப்போ ஆன்சைட்ல இருந்து வந்த? இங்க என்னடாப் பண்ணிட்டிருக்க?” எனக் கேட்டுக்கொண்டே தன்னிடம் வந்த தன் பழைய நண்பனை பார்த்து சிரித்த சஞ்சு வெள்ளந்தியாய் “நித்திய கூட்டிட்டு போக வந்தேன்-டா!” என்றான்.

வினய் சஞ்சய்யின் பள்ளி,கல்லூரி தோழன் மட்டுமில்லாது நித்யா, சஞ்சய்யின் குடும்ப நண்பனும் கூட.அதனால் சிறுவயதில் அவன் இவர்களின் வீட்டிற்கு அடிக்கடி வருவதும்,அங்கே உண்வதும் சாதாரணமாக நடக்கும் விஷயம். அவனுக்கு சஞ்சய், நித்யா இருவருக்குமிடையே இருக்கும் ‘நல்லுறவை!’ பற்றி நன்றாகவே தெரியும். எனவே தான் சஞ்சு அவளை ‘அழைத்துக்கொண்டு போக வந்திருக்கிறான்!’ என்பதை நம்பாமல் அதிசயமாகப் பார்த்தான். அப்படி பார்த்ததோடல்லாமல் சஞ்சுவை நித்தியிடம் நன்றாக மாட்டியும் விட்டான்!

வினய் சஞ்சுவை அப்படியே கொஞ்சம் தூரம் தள்ளிக்கொண்டுப்போய், ”ஏன்டா, உனக்கும் நித்திக்கும் தான் ஆகாதே. அப்புறம் எப்படி நீ அவளுக்காக இங்க வந்திருக்க?” என கேட்டான்.

அதற்கு சஞ்சு நிதானமாக, ”நான் எப்போடா அப்படி சொன்னேன்?” என திருப்பி கேட்க,

“அதை நீ தனியா சொல்லவேற செய்யனுமா? அதுதான் ஊரறிந்த ரகசியமாச்சே!” என்றான்.

அவனின் பேச்சில் இருந்த உண்மையில் கடுப்பான சஞ்சு,”எனக்கு எப்பவுமே அவளை ரொம்ப பிடிக்கும்டா!” என அநியாயமாய் பொய் சொன்னான்.

 “என்னது! உனக்கு அவளை பிடிக்குமா? இது எப்போதிருந்து? முன்னாடி எல்லாம் நீ இவளை திட்டிட்டே தானே-டா இருப்ப!”

“ஒருத்தரை நாம எப்பவாவது திட்டினா அவங்களை நமக்கு பிடிக்காதுன்னு அர்த்தமாயிடுமா?”

“அடப்பாவி!அப்ப எல்லாம் நீ எப்பவாவதா அவளை திட்டுவ? எப்பவும் தானேடா அதை செய்துட்டு இருப்ப!” என உண்மையை இவன் சொல்ல,

“அது அதிகப்படியான அன்பினால செய்ற சின்ன சின்ன விஷயங்கள்.அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாதுடா!” என சாமார்த்தியமாய் தன் தவறை மறைத்தான்.

   “ஹோ!அப்ப நம்ம பிரெண்ட் ரோஷன் இவளை ரொம்ப பிடிச்சியிருக்கறதாகவும், இவளைத்தான் லவ் பண்ணப்போறேன்னும் உன்கிட்ட சொன்னதுக்கு நீ அவனிடம் சொன்னதெல்லாம் அந்த அதிகப்படியான அன்பினால்தானா?” என வியந்து அந்த சரித்திர நிகழ்வு நடந்த நாளுக்கே சஞ்சுவை கூட்டிப்போனான் வினய்.

அன்று ரோஷன், நித்தியை லவ் பண்ணுவதாக சொன்னதை கேட்டதும் சஞ்சு அப்படியே  அதிர்ச்சியில் சிலையாக சமைந்தான். இவனின் அதிர்ச்சியைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வினய், ‘இந்த கதையில,சினிமால வருமே அதைப்போல பிடிக்காது,பிடிக்காதுன்னு சொல்லிட்டே இந்த பயபுள்ள நித்திய லவ்வு கிவ்வு பண்ணுதா?’ என சீரியஸ்ஸாக யோசிக்க, சம்மந்தப்பட்டவனோ,

’அடப்பாவி ரோஷன்! ஆழம் தெரியாம ஆழ்துளை கிணத்துல காலை விட ஆசைப்படறியேடா !உன் கண்ணை உன் கண்றாவி காதல் மறைச்சாலும் ஒரு நல்ல நண்பனா, நீ அதில் விழுந்து விடாமல் நான், என் உயிரைக்கொடுத்து  உன்னைக் காப்பாற்றுவேன்!’ என மனதினுள் சூளுரைத்துக்கொண்டிருந்தான். எடுத்த சபதத்தை நிறைவேற்ற, 

“ஏன்டா ரோஷன்! போயும் போய் வேகாத ‘பீஸா பேஸ்’ போல இருக்கும் அந்த மூஞ்சி தானாடா உனக்கு லவ் பண்றதுக்கு கிடைச்சுது! இதுக்கு பதிலா நீ கண்ணை திறந்துகிட்டே கூவத்தில் விழுந்திருக்கலாம்டா. அவளை பார்க்கும் போதெல்லாம் எனக்கு வயித்த பிரட்டிட்டு வாந்தி வருதேடா.உனக்கு அப்படி வரலையா? அவளைப் போய் எப்படிடா பிடிச்சியிருக்கு!  ம்ம்ம்… அந்த மூஞ்சிய கண்ணு இல்லாதவன் கூட பிடிச்சி இருக்குன்னு சொல்லமாட்டானே! அப்புறம் உனக்கு போய் எப்படிடா அவளை? நீ என்ன பெரிய தியாகியா?அவளை போய் பிடிச்சியிருக்குனு சொல்ற?அப்படியே இவளை பிடிச்சியிருக்குன்னு எவனாவது சொன்னாலும்,அப்படி சொல்றவனோட டேஸ்ட் படு கேவலமா இருக்கும்னுல்ல நான் இவ்வளவு நாளா  நினைச்சிட்டு இருந்தேன். கடைசியில பார்த்தா அந்த ‘படுகேவலமானபார்ட்டி!’ நீயாடா? அய்யோ ரோஷன்! நான் இதை சத்தியமா எதிர்பார்க்கவே இல்லடா. உன்னோட ஸ்டைல், டிரெஸ்ஸிங் இதெல்லாம்  பார்த்து நான் தான் உன்னோட டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்னு தப்பா நினச்சிட்டேனோ!” என ரோஷனைப் பார்த்து நக்கலாய் கேட்டு வைத்தான்.

சஞ்சுவின் இவ்வளவு பேச்சைக் கேட்டப்பிறகு ரோஷனின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருந்தது? அதை இந்த நிகழ்விற்கு கூட்டிப்போனவனே இப்போது நிகழ்க்காலத்தில் சொல்கிறான்.  

 “இப்படி அப்ப நீ கதைகதையா சொன்னதைக் கேட்டு,தன்னோட ஆசை அப்படியே அழிச்சிட்டு, அழுதுகிட்டே ஆந்திரா பக்கம் போனவன் தான்டா நம்ம ரோஷன். அதுக்கப்புறம் ஆள் அட்ரஸே தெரியலை.” என தன்பாட்டிற்கு வினய் புலம்பிய புலம்பல்  கேட்க வேண்டியவனின் காதில் மட்டுமில்லாது, கேட்கக்கூடாதவளின் காதிலும் விழுந்து விட்டது.

சஞ்சுவை அந்தபக்கம் வினய் தள்ளிக்கொண்டு போய் நெடுநேரமாகியும் இருவரின் பேச்சும் முடியும் விதமாக தெரியாததால், அவர்களின் அருகில் சென்று, தான் காத்திருப்பதை அவர்களின் கண்ணில் காட்ட நினைத்த நித்தி,அவர்களிடம் சென்றபோதுதான் அந்த ‘சரித்திர நிகழ்வு’ பகிரப்பட்டது.பேச்சு சுவாரஸ்யத்தில் அவளின் அண்மையை நண்பர்கள் தாமதமாக அறிந்தபோதோ,

நித்தி தன் கையில் இருந்த போனில் ‘ஓலா ஆட்டோ’வை அழைத்துக் கொண்டிருந்தாள்.,அதில் ஏறும் போது அவள் சஞ்சுவை பொசுக்குவதைப்போல பார்த்துவிட்டு செல்ல மறக்கவில்லை!

‘இன்று அவளுடன் தனியே போகும்போது முன்னெல்லாம் தான் ஏன் அப்படி நடந்துக்கொண்டேன் என்பதையும்,இப்போது தன் மனதில் இருப்பதையும் அவளிடம் சொல்லிவிட வேண்டும்’ என்ற சஞ்சுவின் ஆசையில் மண் விழுந்தது. அவள் இவனிடம் முறுக்கிக்கொண்டு போவதை தடுக்க வழியின்றி பரிதாபமாக சஞ்சு பார்த்துக் கொண்டிருந்தான்.

நித்தியின் ஆட்டோ சென்றப்பிறகும் தன்னிடம் பேசிக்கொண்டே இருந்த வினய்யை முறைத்த சஞ்சு,”இன்னும் நீ சொல்றதுக்கு வேற ஏதாவது பாக்கி இருக்காடா?” எனக்கேட்டு, ’எங்க இருந்துதான் கிளம்பி வருவீங்களோ கூட இருக்கறவன் வாழ்க்கையில மண்ணை அள்ளிப்போட! உனக்கெல்லாம் ஏன்டா அம்னிஷியா வரமாட்டேங்குது?’ என முணுமுணுத்து, “நல்லா வருவடா நீ!” என உரக்க சொன்னதும்,

“ரொம்ப தாங்க்ஸ் டா சஞ்சய்! நான் இப்ப என்னப்படிக்கறேன்னு கூட தெரியாம எனக்கு விஷ் பண்ணப்பாரு, இந்த மாதிரி திடீர்ன்னு எதிர்ப் பார்க்காத நேரத்துல கிடைக்கும் வாழ்த்துக்களுக்கு தான் பவர் அதிகம்-ன்னு எங்க பாட்டி சொல்வாங்கடா! ரெண்டு வருஷமா நான் ‘யுபிஎஸ்சி ’எக்ஸாம் அட்டென்ட் பண்ணிட்டு இருக்கேன். அதுக்கு தான் இங்க கோச்சிங் வந்தது .இப்ப உன்னோட வாழ்த்தைக்கேட்டதும் கண்டிப்பா இந்த முறை என்னோட எக்ஸாம்சை பாஸ் பண்ணிடுவேன்னு நம்பிக்கை வந்துடுச்சுடா. ரொம்ப ரொம்ப… தாங்க்ஸ் சஞ்சய்!” என சொல்லி வினய் விடைப்பெற்றுக்கொண்டதும் சஞ்சய் நொந்துப் போனான்.

இவன் நினைத்து வந்ததென்ன? இங்கு நடந்து முடிந்ததென்ன! ‘எம்.ஈ’ முடித்த எருமை இவன் வாழ்க்கையில் விளையாட இங்கு கோச்சிங் வரும் என இவன் எதிர்பார்த்திருப்பானா? அப்படி வந்தவன் ஒரு ‘ஹாய்,ஹலோ’ சொல்லி போகாமல், என்றோ நடந்ததை நியாபகத்தில் வைத்திருந்து, அதை இன்று சொல்லி இவனுக்கு ஆப்பு வைப்பானேன இவன் கனவிலும் நினைத்திருப்பானா! எதிர்பாராதது, எதிர்பார்க்காதவர்களிடமிருந்து, எதிர்பாராத நேரத்தில் நிகழ்ந்து விடுவது தான் வாழ்க்கை!

இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை. மாற்றம் ஒன்றே நிரந்தரம். நேற்று ‘வேகாத பீசா பேஸாக’ தெரிந்தவள் இன்று கும்மென்ற ‘குஷ்பு இட்லியாக’ தெரிவது தான் மாற்றம். மனதுக்கு பிடித்திருந்தால் பார்வையிலும் மாற்றம் வருகிறது. இந்த ஞானம் இப்போது வந்து என்ன பிரயோஜனம்? படவேண்டியத்தை பட்டுத்தானே ஆகவேண்டும்!

‘தாயின் தயவில்லாமல் தானே, தனியே தன் ‘குஷ்பு இட்லியை’ வேகவைத்து விடலாம்!’ என எண்ணி இறுமார்ந்த சஞ்சு, படுகேவலமாய் தோற்றுப்போய் இனி ‘அன்னையின் துணையின்றி ஒன்றும் நடக்காது!’ என புரிந்துக் கொண்டான்.

Categories
On-Going Novels

வெண்ணிலாவின் காதல்! பதிவு – 4

 

              கமலா வள்ளியின் நெருங்கிய தோழி… கமலா தான் வெண்ணிலாவை பற்றி சுந்தாியிடமும்…. சூா்யா பற்றி வள்ளியிடம் சொல்லி பெண் பாா்க்க ஏற்பாடு செய்தாா். …

       பெண் பாா்க்க செல்வதால் சுந்தாி பரபரப்புடன் இருக்க…  சூா்யாவோ தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் ஆபீஸ் செல்வதற்கு ரெடியாகி வந்தான்….  சூா்யா எங்கடா போற என்றாா் செல்வம்…

          ஆபீஸ் என்றான் ஒற்றை வாா்த்தையில்…..  நா சொன்னது ஞாபகம் இல்லையா என்றாா் சுந்தாி கோபமாக….எல்லாம் இருக்கு மா…. இன்னைக்கு முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு…நா போகணும்…..

      செல்வம் அதற்குள் விடு சுந்தாி இன்னும் டைம் இருக்குல…. அவன் மீட்டிங் முடிஞ்சி நேர அங்க வரட்டும் நம்ப முன்னாடி போலாம்… சுந்தாியும் அவன் எப்படியோ வந்தால் சாி என நினைத்து …. சாிடா அப்பா சொல்ற மாதிாி செய்….ஆனா அவ தா உன் பொண்டாட்டி மறந்துடாத என்ற படி அவனை செல்ல அனுமதித்தாா்…. அவனோ இறுக்கமான முகத்துடன் கிளம்பி சென்றான்……

       அங்கே நிலா விருப்பம் இல்லாமல்…. முகத்தை தூக்கி வைத்து கொண்டு இருக்க சுமி அவளை அலங்காித்து கொண்டு இருந்தாள்…..

    கமலா…. சுந்தாி…..செல்வம் மூவரும் வெண்ணிலா வீட்டுக்கு வர….வள்ளி அவா்களை வரவேற்று அமர வைத்தாா்…. மாப்பிள்ளை வரவில்லையா என வள்ளி கேட்க….

      அவனுக்கு முக்கியமான மீட்டிங் இருக்குனு ஆபீஸ் போய் இருக்கா…. கொஞ்ச நேரத்தில் வந்துடு வா என்று சுந்தாி சிறிது தயக்கத்துடன் சொல்ல… 
நம்ப அவசரமா பொண்ணு பாக்க அரெஜ் பண்ணிடோம் … முக்கியமான வேலைய தள்ளி போட முடியாது பரவாயில்லை பொறுமையாக வரட்டும் என்றாா் வள்ளி…
  
             சாி வெண்ணிலாவ கூட்டிவா இவங்க பாா்க்கட்டும் என கமலா சொல்ல…. நிலாவை அழைத்துவர  சொல்லி சுமியிடம் கூறினாா் வள்ளி….
       
        நிலா வந்து யாரையும் நிமிா்ந்து கூட பாா்க்காமல் தலை குனிந்த படி இருந்தால்..
நிலா மாப்பிள்ளை இன்னும் வரல ரொம்ப வெட்க படாம நிமுந்து பாரு மா என கமலா அவளை கேலி செய்ய…

     எப்போதும் கமலா ஆண்டினு நிலா அவங்ககிட்ட நல்லா பேசுவ…. ஆனால் இன்னைக்கு அவா்கள் மேல் கோவம் பற்றி கொண்டு வர….  அவன நா பாா்க்க கூட விரும்பல.. நல்லவேளை அவன் வரல.. எவன் முன்னாடியும் நா மேக்கப் பண்ணிட்டு பொம்ம மாதிாி நிக்க வேண்டிய அவசியம் இல்லனு மனதில் நினைத்த படி நிமிா்ந்து பாா்த்தால்….
  
       சுந்தாி நிலாவிடம் வந்து அவள் தலைய வாஞ்சயாக தடவி கொடுத்த படி தேவதை மாதிாி இருக்கமா என்றாா்… நிலா மனதில் நா எப்படி இருக்கனு உங்கள கேட்டனா என நினைத்து கடிந்து கொண்டால்…

         செல்வம் தனது மொபைலில் இருந்த சூா்யா போட்டோவை வள்ளிடம் காட்டினாா்…  சூா்யா போட்டோவில் சிாித்த முகத்துடன் பாா்த்ததும் எந்த பெண்ணுக்கும் பிடிக்கும் படி அழகாக இருந்தான்… நிலாவிடம்  காட்டும்படி சொல்லி சுமியிடம் வள்ளி கொடுக்க…

      சுமி போட்டோ பாத்துட்டு ஏய் நிலா செமயா இருக்கான் டி… ஆண்டி சூப்பர தா உனக்கு பையன் பாத்து இருக்காங்க பாரு டி என்று நிலா காதில் முனு முனுத்த படி நீட்ட….நிலா போட்டோவை பாா்க்காமல்…. 
      
          வேணாம் டி….உனக்கும் அம்மாக்கும் பிடிச்சா போதும் என்றாள்…. எங்க சூா்யாவும் இப்படி தா மா எங்களுக்கு பிடிச்சா அவனுக்கும் போதும் என்றாா் சுந்தாி…

   சுமி மீண்டும் வற்புறுத்த நிலா மறுத்து விட்டால்….

   சுந்தாி.. வெண்ணிலாக்கு எல்லாா் முன்னாடியும் பாா்க்க வெட்கமா இருக்கு போல…  ( வெட்கம் நீங்க பாத்தீங்க… அய்யோ இந்த குடும்பத்துல தா என் வாழ்க்கையா…நா எவ்வளோ கற்பனை பண்ண அவனை நினைச்சி .. அது எல்லாம் கற்பனையாகவே முடிய போகுதா என்று மனதில் நினைத்து கொண்டால்) நீ அந்த போட்டோவ நிலா போனுக்கு அனுப்பிடுமா அவ உள்ள போய் பாத்துகிடட்டும் என்றாா் வள்ளி.. . சுமி செல்வம் எண்ணில் இருந்து நிலாவிற்கு அனுப்பினால்..

           நிலா நீ கல்யாணத்து அப்பறம் வேலைக்கு போக வேண்டாம் மா… சூா்யாவும் இவரும் வேலைக்கு போய்டு வாங்க …. நா மட்டும் தனியா  இருக்கனும் நீ வந்துட்டா…நம்ப ரெண்டு பேரு தா….உன்ன நா நல்ல பாத்துக்குறனு….. உண்மையான பாசத்தோடு சொல்ல….

     அவளோ  ஆமா…. ஆபீஸ் கூட போகம முழு நேரமும் அந்த நரகத்துல உங்க கூட இருக்கனும்… அய்யோ எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லனு கத்தி சொல்லனும் போல இருக்கு..ஆனா முடியாதே என நினைத்த படி உள்ளுக்குள் மறுகி கொண்டு இருந்தால்….

       நிலாவை உள்ள அனுப்பு வள்ளி நம்ப பேசலாம் என்றாா் கமலா…. இதற்காகவே காத்திருந்தவள் போல நிலா வேகமாக மாடிக்கு சென்று அவளுடைய வேலை அழுவதை தொடா்ந்தாள்…..

      கமலா உங்க குடும்பத்த பற்றி நிறைய சொல்லி இருக்கா…. மாப்பிள்ளைக்கும் பொண்ண புடிச்சி இருக்குனு அவா் வாயால சொல்லிட்டா எனக்கு நிம்மதியாக இருக்கும்னு வள்ளி சொல்ல….

டைம் வேற ஆகுது சூா்யா இன்னும் வரல…. அவனுக்கு போன் பண்ணி பாருங்க அண்ணா என்றாா் கமலா….   

     பல முறை அழைத்த பின் சூா்யா அழைப்பை ஏற்றான்…. அவனிடம் பேசிய சுந்தாி இன்னும் வரமா என்னடா பண்ற …. உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கோம்… சீக்கிரம் வாடா… 

        அம்மா மீட்டிங் முடியல …என்னால வர முடியாது மா ….. இத விட உனக்கு மீட்டிங் முக்கியமா…. சாி  போனை அவங்க கிட்ட குடு்க்குற…. பொண்ண பிடிச்சி இருக்குனு நீயே சொல்லு அப்போத அவங்களுக்கும் நிம்மதி என்ற படி வள்ளிடம் போனை கொடுத்தாா்…

அவன் போகமல் இருந்தால் தடைபடும் என்று எண்ணினான்… ஆனால் அம்மா தான் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்பே சொல்லி போனை கொடுக்க….அவனால் என்ன செய்ய முடியும்… முக்கியமான மீட்டிங் வர முடியல.. எனக்கு கல்யாணத்தில் சம்மதம் என்று சொல்ல.. வள்ளி பரவாயில்லை மாப்பிள்ளை… நீங்க சம்மதம் சொன்னதே எனக்கு சந்தோஷம் என்ற படி போனை வைத்தாா்……

      அப்பறம் என்ன எல்லாருக்கும் சம்மதம்…. சீக்கிரம் கல்யாணத்த முடிச்சிடலாம் என்றாா் கமலா…. ஆமா இல்லனா அதுகுள்ள நிலா மனசு மாறிட்டா என வள்ளி நினைக்க…. ஆமா இல்லனா சூா்யா மனசு மாறிட்ட என்ன பண்றது….என சுந்தாியும் ஒன்று போல் நினைத்து…. அடுத்த முகூா்த்ததில் திருமணத்தை முடித்து விடலாம் என்று சுந்தாி கூறினாா்….

             அடுத்து நடக்க வேண்டியதை பாா்க்கலாம் என்ற படி விடை பெற்றனா் மூவரும்…..

நிலாவிடம் வந்த வள்ளி பாக்க நல்ல குடும்பமா இருக்காங்க… உன்ன நல்ல சந்தோஷமா பாத்துபாங்க என்று சொல்ல.. நிலாவோ சந்தோஷமா என் வாழ்க்கைல அதுக்கு இடம் இல்லை என்று நினைத்து…. அம்மா என்னால கல்யாணத்து அப்பறம் வேலைக்கு போகாம இருக்க முடியாது…என் கோியா் எனக்கு முக்கியம் என்றாள்.. சாி நிலா நா அவங்கிட்ட பேசுற… நீ சம்மதம் சொன்னதோ எனக்கு போதும்…

    பொியவா்கள் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த வேண்டும் என்று நினைக்க…நிலா சூா்யா மறுத்து விட சித்ரா பௌர்ணமி அன்று திருமணம் கோவிலில் நெருக்கமான சிலரை மட்டும் அழைத்து நடத்த ஏற்பாடு செய்யபட்டது…..

      இதற்கு இடையில் சூா்யா நிலாவுடன் பேச போனில் அழைக்க அவள் புது எண்ணாக இருக்க அழைப்பை ஏற்கவில்லை….  நான் உன் உடன் பேச வேண்டும் திருமணத்தை பற்றி சூா்யா என்று குறுஞ்செய்தி அனுப்பினான்… அதை பாா்த்த நிலா இவன் வேற உயிர வாங்குற…. போனில் பேசினால் எங்கே விருப்பம் இல்லை என தன்னையும் மீறி கூறிவிடுவோம் அதன் பின் அம்மா என யோசித்தவள்…. அவன் எண்ணை பிளாக் பண்ணிட்டா…

      சூா்யா பல வழிகளில் முயற்சிக்க நிலா தவிா்த்து விட்டால்… அவா்கள் ஒருவரை ஒருவா் பாத்து கொள்ளாமலே  திருமண நாளும் வந்தது….

        விமல் பட்டு வேஷ்டி சட்டைய கொண்டு வந்து சூா்யாவிடம் கொடுக்க… இதற்கு மேலும் தடுக்க முடியாது என்று சூா்யா உடை மாற்றி வந்தான்…. அவனுக்கு விமல் மாலை அணிவித்து கையில் பூ செண்டு கொடுத்தான்… ஏன்டா கொஞ்சம் சிாிடானு விமல் சொல்ல அவனா கடுப்பில் கையில் இருந்த பூ செண்டில் இருந்த பூக்களை கசக்கி அதை தூக்கி போட்டான்…
  
        விமல் சிாித்து கொண்டே நா கொடுத்ததும் இப்படி பண்ணுவனு நினைச்ச டா… நீ லேட் என்ற படி மறைத்து வைத்து இருந்த இன்னொரு பூ செண்டை எடுத்து நண்பேன்டா என்று சொல்லி கொடுத்தான்… 

     சூா்யா கடுப்பில் அவனை அடிக்க கை ஓங்க பவி அங்கே வந்து அத்தை அண்ணாவை குப்பிட்டு வர சொன்னாங்கனு கூறினாள்…. அப்பா நா தப்பிச்ச என்று நினைத்த விமல் சூா்யாவை மண பந்தலுக்கு அழைத்து சென்றான்..

       கொஞ்ச நேரத்தில் நிலாவை அழைக்க அவளோ நான் சாமி கும்பிட வேண்டும் என்றாள்…வள்ளி திருமணம் முடிந்து தம்பதியாக போகலாம் இப்ப மண பந்தலுக்கு வா என சொல்ல… நிலா பிடிவாதம் பிடிக்க சாி சுமி அவள கூப்டு போ… நிலா ஐந்து நிமிடத்திற்குள் வந்து விடு என்ற படி நகா்ந்தாா்…
   
      கோவில் மூலவரான சிவன் சன்னதி முன் கண்களை மூடி நின்ற நிலா… உன்ன பாக்க கூடாதுனு தா நினைச்ச ஆனா என்னால முடியல… நா எந்த அளவுக்கு என் காதல் மேல  நம்பிக்கை வச்சி இருந்தனோ.. அதே அளவுக்கு உன் மேலயும் நம்பிக்கை வச்ச…. நீ அவரை கண்டிப்பா என் கூட சோ்த்து வைப்பனு நினைச்ச என்ன ஏமாத்திட்ட…. கடைசியில் அவனை பாா்த்த சித்ரா பௌர்ணமி அன்னைக்கே யாரோ ஒருத்த கூட என் வாழ்க்கைய முடிவு பண்ணிட்ட …என்ன ஏமாத்திட்ட என்று கண்களில் நீா் வழிய நின்றிருந்தால்… நிலா என்ன டி பண்றனு சுமி கண்களை துடைத்து இழுத்து செல்ல..

    அங்கே மரத்தின் அடியில் பிச்சைகாரன் போன்ற தோற்றத்தில் அமா்ந்து இருந்த ஒருவன் நிலா முன் வேகமாக வந்து நிற்க…. நிலா பயந்து சுமியை கட்டி கொண்டாள்… சுமி அவனிடம் வழி விடு என சொல்ல அவனோ நகராமல் வாய்க்கு வந்த படி பேச தொடங்கினான்…

மகன்றில் (ஆணும் பெண்ணும் ஒன்றை விட்டு ஒன்று பிாியாத ஓா் நீா் வாழ் பறவை) போல காலத்திற்கும் வாழ நீயும் அவனும் ஆசை கொள்ள…

சூழ்வினை தொடா்ந்திட பிறவி பல எடுத்தும் பிாிவினையே துணை கொண்டீா்….

பிரிவினை ஏற்க மாட்டோமென நின்ற உங்கள் காதல் யுகங்களை கடந்தும் உயிா் கொள்ளாது இருக்குமோ……???

வான் நடுமையம்(உச்சி) தனில் முழு நிலா இருந்திட…. உங்கள் கைகள் உரசி கண்கள் கலந்த நொடி …ஜென்மம் பல கடந்து இரு உடல்கள் ஓர்உயிராய் வாழ்ந்திடவே பிறவி கொண்ட உன் காதல் உயிா் கொண்டது…

கோமகன் அவன் ஓவியம்தனில் மங்கை உன்தன் மையெழுதி… அவனின் மையிருட்டு நீக்கினாய்…..

ஆனால் அவனோ உண்மை அறியாது
விலகி நின்று துயா் பல அளித்திடுவான்…. போராட்டம் பல செய்தே உங்கள் ஜென்ம பந்தம்தனை அவனுக்கு நீ உணா்த்திட வேண்டும் என்பதேவிதி….

கலக்கம் கொள்ளாதே சிந்தையில் அவனை (சிவனை) வைத்து வணங்கிய பின் வாடி தவித்திட விடுவானோ…

பிறை தொழும் (பௌர்ணமி) நாள்தனில் பிறைசூடியவன் (ஈசன்) அருள் பெற்றாய்….

பிறவி பல எடுத்த கன்னிகை நீ அவனை பிரிந்து தவித்திட்டாய்….

பிணிதனை போக்கி நலவு (நன்மை)பெற்றிட
பிணிவீடு (துன்பம் நீங்கும்) தருணம் நெருங்கிற்று…..

புலம்புநீா் (கண்ணீா்) விடுத்து புன்சிரிப்பை புனைந்து கொள் …

மனம் போல் வாழ்வு மலா்ந்திடும்…..

நீ ஏங்கி தவிக்கும் நின்துணை எட்டி விடும் தூரத்தில் தான் இருக்கிறது….. 

போ …போ.. போ …போ.. என்று சொல்ல

சுமி யோவ் என்ன புலம்பிட்டு இருக்க வழிய விடுனு நிலாவை அழைத்து சென்றாள்… நிலாவோ அவரையே திரும்பி பாா்த்த படி சொன்றாள்….

Categories
On-Going Novels

வாழ்வே நீதானடி! அத்தியாயம் -16

 அத்தியாயம்- 16

ஸ்கூட்டியில் வீடு போய் சேர்ந்தவள் தனதறைக்குள் சென்று கதவை சாத்தியதும் அப்படியே படுக்கையில் விழுந்தாள். மனமோ ஹர்ஷாவை சுற்றி வந்து கொண்டிருந்தது. இவன் அம்மா பேச்சைக் கேட்டு சத்தியம் பண்ணினான். ஆனால் இப்போ என்னவோ ஓவரா என் மேல அக்கறை இருக்கிற மாதிரி பேசுறானே? என்று எண்ணிக் கொண்டே கண்களை மூடினாள்.

ஆபிசில் இருந்தாலும் ஹர்ஷாவிற்கும் அவளைப் பற்றிய எண்ணங்களே. தன்னை விட்டு விலகிப் போக அவளை அனுமதிக்கக் கூடாது என்று நினைத்தான்.அதே சமயம் தன்னுடைய சூழ்நிலையும் அவள் புரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணினான்.

மாலை வரை கஷ்டப்பட்டு நேரத்தை தள்ளியவன் ஒரு முடிவோடு பைக்கை எடுத்துக் கொண்டு ஹரிணி தங்கி இருக்கும் அபார்ட்மென்ட்டிற்குச் சென்றான்.

தங்கள் ஆபிசில் அவள் சேரப் போகிறாள் என்றறிந்ததுமே எங்கே தங்கப் போகிறாள் என்னவென்று அனைத்து விவரங்களையும் சேகரித்து வைத்திருந்தான். அதனால் கஷ்டப்படாது அவள் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். காலிங் பெல்லை அடித்து விட்டு ஒருவித டென்ஷனுடன் சுவற்றில் தாளம் போட்டுக் கொண்டே நின்றான்.

சற்று நேரத்தில் படாரென்று கதவு திறக்கப்பட பின்னால் நின்றவளைப் பார்த்து தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக முகத்தை திருப்பிக் கொண்டான்.

சின்னஞ்சிறிய கால் சட்டைப் போட்டுக் கொண்டு மேலே இடுப்பு தெரியுமளவுக்கு ஒரு டாப்சும், தூக்கிப் போடபட்ட கொண்டையுமாக கதவை பிடித்தபடி நின்றாள். அவன் முகத்தை திருப்பிக் கொண்டு நிற்பதை பார்த்தவள் சுவாரசியமாக அவனை ஆராய்ந்து விட்டு “மிஸ்டர் ஹர்ஷா! கதவு இந்த பக்கம் இருக்கு” என்றாள்.

சடாரென்று திரும்பியவன் அவளைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்து “சீக்கிரம் கதவை சாத்தித் தொலை” என்றான் கடுப்புடன்.

கதவை மெதுவாக சாத்திவிட்டு அவன் முன்னே சென்று இடுப்பில் கை வைத்து பார்த்துக் கொண்டே “ஏன் ஹர்ஷா! இப்போ உன்னைப் பார்த்தா ஏதோவொரு பெரிய மனுஷன் சின்ன வீட்டுக்கு வந்த மாதிரி ஒரு தோரணையில் இருக்கு” என்று சிரிக்க ஆரம்பித்தாள்.

அவளது பேச்சைக் கேட்டு மேலும் டென்ஷன் ஆனவன் “ஏய்! முதல்ல போய் டிரெஸ்ஸை மாத்து. இந்த டிரசோட வந்து கதவை திறக்குறியே வெட்கமா இல்ல” என்றான் கடுப்பாக.

அப்போதும் விடாது “அப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ காண்பிபிச்சியே ஒரு ரியாக்ஷன் அதுதான் வெட்கமா?” என்று கேலி செய்தாள்.

அவனோ கொலைவெறியாகி ஒற்றை விரலை நீட்டி மிரட்டலாக “மரியாதையா போய் டிரஸ் மாத்திட்டு வா. நாம கொஞ்சம் பேசணும்” என்றான்.

அவனை மேலும் டென்ஷன் படுத்தாமல் உள்ளே சென்று ஒரு முழு பேண்டை மாட்டிக் கொண்டு வந்தவள் நேரே சமயலறைக்குச் சென்று அவன் வருவதற்கு முன் தயாரித்து வைத்திருந்த பக்கோடாவை இரு கப்புகளில் எடுத்து கொண்டு வந்தாள்.

அவள் கையிலிருந்ததை பார்த்தவன் கடுப்புடன் ‘இவ என்னை சீரியசா பேச விட மாட்டா போல இருக்கே. ஆண்டவா காப்பாத்து’ என்று கூறிக் கொண்டு “இங்க பாரு ஹனி” என்றான்.

உடனே அவன் பக்கம் நன்றாக திரும்பி அமர்ந்து பார்த்துக் கொண்டே  “என் பேர் ஹரிணி மிஸ்டர். ஹர்ஷா” என்றாள் அழுத்தமாக.

நறநறவென்று பல்லைக் கடித்தவன் “இப்போ இது ரொம்ப முக்கியமா?” என்றான்.

பக்கோடாவை மென்று கொண்டே “இல்லையா பின்ன? எனக்கு நெருங்கினவங்க மட்டும் தான் அப்படி கூப்பிடனும். அவங்களுக்கு மட்டும் தானே அந்த உரிமை இருக்கு” என்றாள்.

இப்படியே பேசிக் கொண்டிருந்தால் சொல்ல வேண்டியதை சொல்ல முடியாமல் போகலாம் என்றெண்ணி “சரி அதை விடு! இப்போ நான் என்ன சொல்ல வரேன்னா…நீ பெரிய தைரியசாலியா இருக்கலாம். ஆனா சில இடங்களில் ஒதுங்கி தான் போகணும். உன்னோட பாதுகாப்பு முக்கியம் இல்லையா?” என்றான்.

பக்கோடாவை ஆராய்ந்து கொண்டே “இன்னும் கொஞ்சம் அரிசி மாவு போட்டிருக்கலாம் போல இருக்கு. பரவாயில்லை நல்லா தான் போட்டிருக்கேன்” என்றாள்.

அவள் தனது பேச்சிற்கு பதில் கொடுக்காமல் ஏதோ பேசவும் எரிச்சலுடன் “என்ன ஹரிணி? நான் என்ன சொல்ல வரேன் நீ என்ன பேசிட்டு இருக்க?” என்றான்  அதட்டலாக.

அவனை நிமிர்ந்து பார்த்து “நம்ம ஆபிசில் யாருக்கு இப்படி நடந்தாலும் வீடு தேடி போய் இப்படித் தான் அட்வைஸ் பண்ணுவீங்களா மிஸ்டர். ஹர்ஷா” என்றாள் நக்கலாக.

“லூசுத்தனமா பேசாதே! மற்றவங்களும் நீயும் ஒண்ணா?”

கையை கட்டிக் கொண்டு அவனைப் பார்த்து “சொல்லுங்க நான் எந்த வகையில் உங்களுக்கு நெருக்கம். உங்க மனைவியா? காதலியா? இல்ல சொந்தக்கார பெண்ணா?” என்றாள்.

அவளது கேள்வி அவனை உசுப்பி விட வேகமாக எழுந்தவன் அவளது முகத்தைப் பற்றி அழுத்தமாக அவளிதழில் முத்திரையை வைக்க, நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது இணையை சந்தித்த இதழ்கள் பிரிய மனமில்லாது போக, அவளோ அவனைப் பிடித்து தள்ள போராடிக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்திற்குப் பிறகு  அவனே அவளை விடுவிக்க அவளோ மிகுந்த கோபத்துடன் “வெளில போடா! இனிமே என் மூஞ்சியில முழிக்கவே முழிக்காதே. என்னை என்னன்னு நினைச்சே? அந்த மாறனுக்கும் உனக்கும் என்னடா வித்தியாசம்? அம்மா சொன்ன பெண்ணை கட்டிக்க போறேன்னு சொன்னவன் இப்போ எதுக்குடா எனக்கு முத்தம் கொடுத்த? போ வெளியே!” என்று கத்தினாள்.

அவனோ அவளது கோபத்தைக் கண்டு மிரண்டு போய் “ஹனி! நான் சொல்றதைக் கேளு” என்று ஆரம்பிக்கும் முன்பே “போன்னு சொல்றேன்! அந்த பேரை சொல்ற உரிமையை இழந்து ரொம்ப நாள் ஆச்சு” என்று கூறி கதவை திறந்து கொண்டு நின்றாள்.

அவளது நடத்தையில் கோபம் ஏற்பட “உனக்கு என்னடி அவ்வளவு ஈகோ? என்னோட சூழ்நிலையை புரிஞ்சுக்காம அப்படி என்னடி கோபம் உனக்கு” என்றான் கதவை நோக்கி நகர்ந்து கொண்டே.

“வேண்டாம்டா ஏதாவது அசிங்கமா சொல்லிட போறேன். நாம மேற்கொண்டு பேசினா கேவலம். விட்டுடு! இனிமே எக்காரணம் கொண்டும் என் விஷயத்தில் தலையிடாதே” என்று கூறி அவன் முகத்திலேயே கதவை அறைந்து சாத்தினாள்.

அதில் அவமானடைந்தவன் கோபத்துடன் இரண்டு இரண்டு படிகளாக இறங்கி வேகமாக பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான். பால்கனியில் இருந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் மனம் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

‘என்ன நினைச்சு முத்தம் கொடுத்தான்? கட்டிக்க போறது வேற பெண்ணைன்னு சொல்லிட்டு எனக்கு முத்தம் கொடுத்தா என்ன அர்த்தம்?’ என்று பொங்கிக் கொண்டிருந்தாள்.

பைக்கில் சென்று கொண்டிருந்தவனின் மனமோ கோபத்தில் உழன்று கொண்டிருந்தது. என்ன சொல்லிட்டா என்னைப் பார்த்து? இவளை விட்டுட்டு வேற யாரையாவது நான் கட்டுவேனா? எப்படி அந்த வார்த்தையை சொல்லலாம்? மாறனும் நானும் ஒண்ணா? என்று கோபப்பட்டான். அம்மாவிடம் செய்திருந்த சத்தியம் மறந்து விட்டது அவனுக்கு வசதியாய்.

தன்னுடைய பிளாட்டிற்கு வந்த பிறகும் அவனால் நடந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனம் முழுவதும் கோபத்துடன் பால்கனியில் சென்று அமர்ந்தான். அப்போது அன்னையிடமிருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்க மனமில்லாமல் அப்படியே விட, விடாது அடித்தது அலைப்பேசி.

விருப்பமில்லாமல் எடுத்து அலைப்பேசியை காதில் வைத்ததுமே “என்னடா நான் பண்ணினா போனை எடுக்க மாட்டியா?” என்றார் கோபமாக.

பல்லைக் கடித்தவன் “மா! வண்டி ஓட்டிகிட்டு இருந்தேன். இப்போ தான் வீட்டுக்குள்ள வந்தேன். என்ன விஷயம்னு சொல்லுங்க” என்று கடுகடுத்தான்.

“நான் காலையில சொன்னது தான். அத்தை கிட்ட பேசிட்டு சொல்றேன். ஒரு நல்ல நாளா பார்த்து தாம்பூலத்தை மாத்திக்கலாம்” என்றார் விடாப்பிடியாக.

ஏற்கனவே எரிமலையாக இருந்தவன் அவரின் பேச்சில் வெடித்து “காலையில தான் அவ்வளவு தூரம் சொன்னேன்னே மா. மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறீங்களே” என்றான்.

“இங்க பாரு நான் சொன்னது சொன்னது தான். ஏன் மறுபடியும் எவளையாவது பார்த்து வச்சிட்டியா? சத்தியம் பண்ணினது மறந்து போச்சா?” என்றார் அழுகையுடன் கூடிய குரலில்.

‘ஆமாம்! ஒருத்திய பார்த்ததுக்கே இந்த பாடு. இதுல இன்னொருத்தியா’ என்று நினைத்துக் கொண்டு “அம்மா! நீங்க என்ன சொன்னாலும் சரி என்னால இப்போ கல்யாணத்துக்கு ஒத்துக்க முடியாது” என்றான் உறுதியாக.

‘நீ அப்படி வரியா’ என்று நினைத்துக் கொண்டவர் “சரி! நீ கல்யாணத்துக்கு ஒத்துக்க வேண்டாம். அடுத்த மாசத்துல ஒரு நல்ல நாளா பார்த்து நிச்சய்ம் பண்ணிக்குவோம். நீ எத்தனை வருஷம் கழிச்சு வேணாலும் கல்யாணம் பண்ணிக்கோ. உனக்கு நிச்சயம் பண்ணினவ காத்துகிட்டு இருப்பா” என்றார்.

அதுவரை பொறுமையாக இருந்தவன் தாங்க முடியாமல் “என்னால வேற எவளையும் கட்ட முடியாது. நான் காதலிச்சவளை தவிர. அதனால எனக்கு கல்யாணம் பண்ற ஆசையை விடுங்க” என்று கூறி போனை அனைத்து வீசினான்.

அந்த பக்கம் இருந்தவரோ அதிர்ச்சியின் உச்சத்துக்கு சென்றார். மீண்டும் மீண்டும் போனை அடித்துப் பார்க்க, சுவிட்ச் ஆப் என்று வந்தது.

மனைவியின் பேச்சைக் கவனித்துக் கொண்டே படித்திருந்த ஹர்ஷாவின் தந்தைக்கு நடந்த அனைத்தும் புரிந்து போனது. மனைவியின் செய்கையில் சற்றே அதிருப்தியாகி போனவர் முகத்தை சுளித்து தனது கருத்தை தெரிவித்தார்.

அதை உணராத யமுனா “பார்த்தீங்களா? வேலைக்குப் போனவுடனே எப்படி மாறி போயிட்டான். நாம என்ன சொன்னாலும் கேட்டுகிட்டு இருந்தவன் இப்போ இப்படி மாறி போயிட்டானே” என்று புலம்ப ஆரம்பித்தார்.

மனைவியிடம் தனது கருத்தை சொல்ல முயல ஒரு கையைத் தூக்கி “நேழ்ழ பன்ழ்ழ்ஹ தூஊஉ தப்பூஊஊ” என்றார்.

அவர் சொன்னது புரியாமல் “இவன் நமக்கு சரிபட்டு வர மாட்டாங்க. மூத்த பிள்ளையாச்சே குடும்பத்தை சீர் தூக்கி விடுவான்னு நினைச்சேன். ஆனா இவன் நட்டாத்தில் விட்டுடுவான் போல இருக்கு” என்று  புலம்ப ஆரம்பித்திருந்தார்.

மனைவியின் செயலை அதிருப்தியுடன் பார்த்துக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டார். அவருக்குத் தெரியும் எப்படி இருந்த ஹர்ஷா, அவரின் உடல்நிலைக் காரணாமாக தன்னை மாற்றிக் கொண்டு இந்த அளவிற்கு பொறுப்பாக இருக்கிறான். இப்போது மனைவி தேவை இல்லாமல் அவனை காயப்பப்டுத்திக் கொண்டிருக்கிறாள் என்றே எண்ணினார்.

அதே நேரம் அன்னையிடம் கோபமாக பேசியவன் மனம் நொந்து போய் தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தான். ஒரு பக்கம் அன்னையின் பிடிவாதம், மறுபக்கம் ஹரிணி கொஞ்சமும் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்கிறாள் என்று யோசித்தபடி அமர்ந்திருந்தான்.

 

ஹரிணியும் அவனைப் பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் பலவாறாக யோசித்தவள் மடமடவென்று தனது துணிகளை பெட்டியில் அள்ளிப் போட்டுக் கொண்டு அறை தோழியிடம் ஊருக்கு செல்வதாக தகவலை அறிவித்து விட்டு பேருந்து நிலையத்திற்கு ஆட்டோப் பிடித்துச் சென்றாள்.

அரை மணி நேர பயணத்திற்குப் பிறகு பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தவள் டிக்கெட்டை வாங்கிக் கொண்டு தான் செல்ல வேண்டிய பஸ்ஸில் அமர்ந்தாள். ஜன்னலோர இருக்கை அமைய, நிம்மதியாக சாய்ந்து கண்மூடிக் கொண்டாள். நடு இரவில் சென்று கதவை தட்டினால் வீட்டில் பயந்து விடுவார்கள் என்று தெரிந்தும் மூச்சு முட்டுவதை தவிர்க்க கிளம்பி இருந்தாள்.

அவள் பக்கத்தில் யாரோ அமரவும், மெல்ல தலையை திருப்பிப் பார்க்க யாரோ ஒரு வயதான பெண்மணி அமர்ந்திருந்தார். லேசாக புன்னகைத்து விட்டு மீண்டும் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

தன் மீது மரியாதை இருந்திருந்தால் இப்படியொரு வேலையை செய்திருப்பானா? தான் செய்த தவறுகளை சரி செய்யாமலே இப்படி நடந்து கொண்டால் அனைத்தையும் மறந்து விட்டு அவன் பின்னே போய் விடுவேன் என்று நினைத்தானா? பெண்களை அவ்வளவு பலவீனமானவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறானா? என்று எரிச்சலுடன் எண்ணிக் கொண்டாள்.

இப்படியே பல்வேறு சிந்தனைகளுடன் தான் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி, ஆட்டோ பிடித்து இரவு ஒரு மணிக்கு வீட்டின் கதவை தட்டினாள். வெகு நேரத்திற்குப் பிறகே வந்து கதவைத் திறந்த ராஜம் பெண்ணை கண்டதும் அதிர்ச்சியாகி விட்டார்.

“என்னடி இது இந்த நேரத்தில் வந்து நிற்கிற?” என்றார்.

அவரை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தவள் “மா! பசிக்குது ஒரு ரெண்டு தோசை ஊத்திக் கொடேன்” என்றாள் பாகை சோபாவில் போட்டு விட்டு அமர்ந்தபடி.

ராஜமோ டென்ஷனாகி “ஏண்டி கேட்ட கேள்விக்கு பதில் சொல்றியா? எதுக்கு இந்த நேரத்தில் கிளம்பி வந்த?” என்றார்.

ஏற்கனவே கடும் மன உளைச்சலில் இருந்தவள் ராஜத்தின் தொடர் கேள்வியில் கடுப்பாகி “நீங்க ஒன்னும் கொடுக்க வேண்டாம். என்னை தொந்திரவு பண்ணாதீங்க” என்று கூறி விட்டு பாகை தூக்கிக் கொண்டு தன்னறைக்குச் சென்றாள்.

மகளின் சோர்ந்த முகத்தை பார்த்த மணிவண்ணன்  “ராஜம்! அவளுக்கு தோசையை ஊத்திக் கொடு” என்றார் அதட்டலாக.

“இல்லைங்க! அவ எதுவும் சொல்லாம போறா” என்று ஆரம்பித்தவரை தடுத்து நிறுத்தி “போய் தோசையை ஊத்து. எதுவா இருந்தாலும் காலையில் பேசிக்கலாம்” என்றார்.

கணவரின் பேச்சைக் கேட்டு தோசை ஊத்தி தட்டில் வைத்து மகளின் அறைக் கதவை தட்டிக் கொடுத்து விட்டு வந்தார். அவளுக்கிருந்த பசியில் மடமடவென்று சாப்பிட்டு விட்டு தட்டை சிங்கில் போட்டு கை கழுவி விட்டு வந்து படுத்தாள்.

ராஜமோ முணுமுணுத்துக் கொண்டே விளக்குகளை அனைத்து விட்டு சென்றார்.

மறுநாள் காலை பத்து மணி வரை அடித்து போட்டார் போல் உறங்கி எழுந்தாள். மெதுவாக தன் வேலைகளை முடித்துக் கொண்டு கீழே வந்தவளை ‘உர்ர்’ ரென்ற முகத்துடன் வரவேற்றார் ராஜம்.

அவரை ஓரக் கண்ணால் பார்த்துவிட்டு சோபாவில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டு டிவி பார்க்க ஆரம்பித்தாள்.

சிறிது நேரம் பொறுமையாக அவளைப் பார்த்தவர் “உன் மனசில் என்ன தான் நினைச்சிட்டு இருக்க? நேத்து என்னடான்னா நேரம் கெட்ட நேரத்தில் வந்த. எதுக்கு வந்தேன்னும் சொல்லல. என்ன பிரச்சனைனும் சொல்லல” என்றார் கோபத்துடன்.

மெல்ல அவரைத் திரும்பி பார்த்தவள் “சும்மா தான் வந்தேன்” என்று விட்டு மீண்டும் டிவியை பார்க்க ஆரம்பித்தாள்.

“என்ன தில்லுமுல்லு பண்ணின? வேலையை விட்டு விரட்டி விட்டுடானா?” என்றார் சந்தேகத்துடன்.

புன்னகையுடன் “கிரேட் மா! உன் பெண்ணை பத்தி நல்லா தெரிஞ்சு வச்சிருக்க. முழுசா அனுப்பல. ஆனா சஸ்பென்ட் பண்ணி இருக்காங்க ஒரு வாரத்துக்கு” என்றாள்.

அதைக் கேட்டதும் அவசரமாக எழுந்தவர் “நினைச்சேன்! நீ எல்லாம் ஒரு இடத்தில் அடங்கி எங்கே வேலை பார்க்க போறேன்னு. அப்படி என்னதான் பண்ணி வச்சே?”

டிவியில் இருந்து கண்ணை அகற்றாமலே “ஒருத்தன் என்கிட்டே மோசமா நடந்து கிட்டான் செருப்பால அடிச்சேன்” என்றாள்.

அவளது செயலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவர் “நீ என்ன ஜாக்கி சான்னு நினைப்பா? ஆபிஸ்ல உள்ள மேலதிகாரிகள் கிட்ட புகார் கொடுக்க வேண்டியது தானே. அதை விட்டுட்டு எதுக்கு அடிச்ச?”

“ம்மா ப்ளீஸ்! என்னால எல்லாம் புகார் கொடுத்து அவங்க தீர்ப்பு கொடுக்கிற வரை பொறுக்க முடியாது. நான் இப்படித் தான்” என்றாள்.

தாவங்கட்டையில் கையை வைத்துக் கொண்டு “ஏண்டி இதை எல்லாம் கேள்விப்பட்டா ஒரு பய உன்னை கட்ட மாட்டானுங்களே. வெளியிலையே இப்படி இருக்கிரவ வீட்டில் எப்படி நடந்துப்பாளோன்னு பயப்பட மாட்டானுங்க”.

“உதை வாங்குறதுக்கு எவன் ரெடியா இருக்கானோ அவன் கட்டிப்பான். மா! பசிக்குது சாப்பாடு போடுங்க” என்றாள்.

Categories
On-Going Novels

வாழ்வே நீதானடி! அத்தியாயம்- 15

அத்தியாயம் -15

அடுத்து வந்த நாட்கள் இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே அலைந்தனர். அதோடு கம்பனிக்கு முக்கியமான வேலை ஒன்று வந்துவிட, ஹர்ஷா அதில் பிஸியாகி போனான்.

ஹரிணியோ அந்த சமயத்தில் தனது நட்பு வட்டத்தை பெருக்கிக் கொண்டிருந்தாள். ஹர்ஷாவிற்கு fans க்ளப் உருவானது போல் ஹரிணிக்கும் குறுகிய காலத்திற்குள் ஆண்களின் மத்தியில் ஒரு கிரேஸ் உருவாகி இருந்தது.

சற்று டீசென்ட்டாக இருப்பவர்கள் அவளது ஆடை அலங்காரம், நடை உடை பாவனை வரை கண்களாலேயே தொடர்ந்தனர். ஆனால் ஜொள்ளு விடும் ஆசாமிகளோ அவளிடம் பேசி, பழகிக் கொள்ள விருப்பட்டனர். இவற்றை எல்லாம் உணர்ந்தாலும் கண்டுகொள்ளாமல் இருந்தாள் ஹரிணி.

அதிலும் ப்ரொடெக்ஷன் டிபார்ட்மென்ட் மாறனுக்கு இவள் மீது தீராத காதல் வந்து தொலைத்திருந்தது. கம்பனியில் சேர்ந்து மூன்று மாதத்திற்குள்ளாக இவை எல்லாம் நடந்திருந்தது. ஆனால் ஹர்ஷவிற்கும், அவளுக்கும் இடையில் இருந்த இடைவெளி மட்டும் நாளுக்கு நாள் பெருசாகிக் கொண்டே போனது.

இருவரும் தங்கள் நிலையில் இருந்து இறங்கத் தயாரில்லாமல் இருந்தனர்.

அன்று காலை ஆபிசிற்கு கிளம்பும் போது அன்னையிடம் இருந்து போன் வந்தது.

“எப்படி இருக்கிற ஹர்ஷா? வேலை எல்லாம் எப்படி போகுது?”

“நல்லா இருக்கேன் மா. நீங்க, அப்பா, தம்பி எல்லாம் எப்படி இருக்கீங்க?”

“எல்லோரும் நல்லா இருக்கோம் பா”.

“என்னம்மா இந்த நேரத்தில் கூப்பிட்டு இருக்கீங்க? எதுவும் அவசரமா?”

“ஒண்ணுமில்ல ஹர்ஷா! நம்ம சரோஜா அத்தை ரெண்டு நாள் முன்னாடி வந்திருந்தாங்க. அவங்க பொண்ணுக்கு உன்னை கேட்கலாம்னு. அதுக்கு தான் கூப்பிட்டேன்”.

“என்ன! கல்யாணமா? எனக்கா? மா! எனக்கு இப்போ தான் இருபத்தி மூணு வயசாகுது. இப்போ என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. அந்த பொண்ணுக்கு என்ன பதினஞ்சு வயசா? போய் படிக்க வைக்க சொல்லுங்க” என்று படபடவென பொரிந்தான்.

அவனது வேகம் கண்டு அடங்கி வைத்திருந்த கோபம் மேலெழ “ஏண்டா? பத்தொன்பது வயசில காதலிக்க முடிஞ்ச உன்னால இருபத்தி மூணு வயசில் கல்யாணம் பண்ணிக்க முடியாதா?” என்றார்.

அவ்வளவு நேரம் அமைதியாக பேசிக் கொண்டிருந்தவன் இந்த கேள்வியில் எரிமலையாகி விட “மா! ப்ளீஸ்! நான் இன்னும் அஞ்சு வருஷத்துக்கு கல்யாணம் பண்ணிகிறதா இல்லை. இதுக்கு மேல என்னை கட்டாயப்படுத்தினா நான் ஊர் பக்கமே வரமாட்டேன் சொல்லிட்டேன்” என்று கூறி போனை அனைத்தான்.

அதன் பின்னர் இருமுறை போன அடித்து ஓய, அதை கண்டு கொள்ளாமல் தனது வண்டியை எடுத்துக் கொண்டு ஆபிசிற்கு கிளம்பினான். அவன் உள்ளே நுழைந்து பார்கிங்கில் வண்டியை வைக்கும் நேரம், ஹரிணியும் வந்தாள்.

தனது இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கியவள், கட்டி இருந்த புடவை தடுக்க தடுமாறி வண்டியோடு கீழே விழப் போனாள். அதைக் கண்டு இவன் அவசரமாக அவள் அருகில் செல்லும் போது, இவனுக்கு முன்பே அங்கே மாறன் ஆஜராகி இருந்தான்.

அவளது ஸ்கூட்டியை தாங்கிப் பிடித்துக் கொண்டு நின்றவன் “பார்த்து ஹ!னி ஏதாவது அடிபட்டுடுச்சா?” என்று பதறினான்.

மாறன் அவளை ஹரிணி என்று அழைத்ததையும், அவள் அதற்க்கு மறுப்பு சொல்லாமல்  நின்றதையும் பார்த்து பல்லைக் கடித்துக் கொண்டு தனது வண்டியின் ஸ்டாண்டை போட்டுவிட்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்தான்.

ஹரிணியோ ஓரக் கண்ணால் ஹர்ஷாவைப் பார்த்து விட்டு மாறனிடம் “ரொம்ப தேங்க்ஸ் மாறன். நீங்க இல்லேன்னா வண்டியை கீழே விட்டிருப்பேன்” என்றாள்.

அவனோ மேலும் பல்லிளித்துக் கொண்டு “நான் சரியான நேரத்தில் உங்களுக்கு ஹெல்ப் பண்ண வந்துட்டேன் ஹரிணி” என்றான் வழிசலாக.

அவனிடமிருந்து கவனமாக வண்டியை வாங்கிக் கொண்டவள் “நீங்க கிளம்புங்க மாறன்” என்றாள் சற்று கடுப்பான குரலில்.

அவனோ அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் “வச்சிட்டு வாங்க சேர்ந்தே போகலாம்” என்றான் விடாப்பிடியாக.

வேறுவழியில்லாமல் வண்டியை நிறுத்தி விட்டு அவனுடன் சேர்ந்து நடந்தாள். அப்போது அவளை பார்வையாலேயே ஆராய்ந்தவன் “இந்தப் புடவை உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு ஹரிணி” என்றான் ஜொள் வடிய.

அதுவரை இருந்த பொறுமை பறந்து போக அவன் பக்கம் திரும்பியவள் “இங்கே பாருங்க மாறன். நான் எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன். லேடீஸ் கிட்ட பேசும் போது கவனத்தோட பேசுங்க” என்று கூறிவிட்டு விடுவிடுவென நடக்க ஆரம்பித்தாள்.

அவனோ அதற்கெல்லாம் அசருவேனா என்பது போல் வேக நடையுடன் அவளுடன் இணைந்து கொண்டான்.

வேறுவழியில்லாமல் அவனுடனே ஆபிசிற்குள் நுழைந்தாள். தனது அறைக்குள் நுழையும் முன்பு வாயிலைப் பார்க்க அங்கு மாறனோடு வந்து கொண்டிருந்தவளைப் பார்த்ததும் மேலும் கொதி நிலைக்குச் சென்றான்.

எல்லோரும் தங்களை கவனிக்க வேண்டு என்றே மாறன் அவளுடன் வலுக்கட்டாயமாக வந்தான். ஒருவழியாக அவனிடமிருந்து தப்பித்து தனது இடத்திற்கு வந்து அமர்ந்ததும் சந்தியா அவளை நோக்கி வந்தாள் “என்ன ஹரிணி இவனோட வர?” என்றாள் எரிச்சலுடன்.

அவளை நிமிர்ந்து பார்த்து “அதை ஏன் கேட்கிற…என் வண்டியில இருந்து இறங்கும் போது விழப் பார்த்தேன். அந்த நேரம் இவன் வந்து ஹெல்ப் பண்ணினான். அப்புறம் அட்டை மாதிரி ஒட்டிக்கிட்டு வழிஞ்சுகிட்டே வந்தான்” என்றாள் எரிச்சலுடன்.

“உனக்கு அவனைப் பத்தி தெரியல ஹரிணி. இந்நேரம் நீயும் அவனும் லவ்வர்ஸ் மாதிரி ஆபிஸ் முழுக்க சொல்லி வச்சிருப்பான்” என்றாள் கோபமாக.

சாய்வாக நாற்காலியில் அமர்ந்து கொண்ட ஹரிணியோ “அப்படி மட்டும் அவன் பண்ணட்டும் அவனுக்கு இருக்கு கச்சேரி” என்றாள்.

அவளை மேலும் கீழும் பார்த்த சந்தியா “உன் கிட்ட ஒன்னு சொல்ல மறந்துட்டேன் ஹரிணி. நீ புடவை கட்டுறதை விட்டுட்டு பேசாம சுடிதார் போட்டுட்டு வரலாமே” என்றாள்.

அவளை யோசனையாக பார்த்து “ஏன் சந்தியா எனக்கு புடவை நல்லா இல்லையா?” என்றாள்.

“அதெல்லாம் இல்ல ஹரிணி. நீ சேர்ந்த புதுசில் ஒருநாள் புடவை கட்டிட்டு வந்தப்ப நாம்ம ஹர்ஷா தான் என்னைக் கூப்பிட்டு அந்த பெண்ணை பார்த்தா ரொம்ப குட்டியா இருக்கு. புடவை எல்லாம் கட்டிட்டு வர சொல்லாதேன்னு சொன்னார்” என்றாள் கண்சிமிட்டி.

“வாட்? அவன் யாரு என்னை புடவை கட்டிட்டு வர வேண்டாம்னு சொல்ல?” என்று வேகமாக நாற்காலியை விட்டு எழுந்தாள்.

அவள் என்ன செய்யப் போகிறாள் என்று உணர்ந்த சந்தியாவோ பதறி போய் “மூணு மாசத்துக்கு முன்னே சொன்னது ஹரிணி. விடு! ஹர்ஷா நல்ல டைப் தான்” என்றாள்.

அவளோ வரிந்து கட்டிக் கொண்டு ஹர்ஷாவின் அறையை நோக்கிக் கிளம்பினாள்.

“ஹரிணி! இப்போ எதுக்கு இவ்வளவு கோபப்படுற? சொன்னா கேளு! போகாதே” என்று தடுத்துப் பார்த்தாள்.

அதையெல்லாம் கேட்டால் அவள் ஹரிணி இல்லையே. நேரே சென்று கதவை தட்டவும் இல்லாது வேகமாக திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.

தனது கணினியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தவன், அனுமதியின்றி உள்ளே நுழைந்தவரை கடித்து விடும் கோபத்தோடு நிம்ர்ந்தான். அங்கே ஆங்காரமாக நின்றவளைக் கண்டதும் ‘இவ எதுக்கு இப்படி சாமியாடிட்டு வந்து நிக்கிறா? ஞாயப்படி நான் தான் கோபப்படனும்’ என்று யோசனையுடன் பார்த்தான்.

“என்ன இங்கே நீ பாஸ்-ன்னு திமிர் காட்டுறியா?” என்று எடுத்தவுடன் எகிறினாள்.

அவளது கேள்வியில் சற்று நிதானத்துக்கு வந்தவன் நன்றாக நாற்காலியில் சாய்ந்து கொண்டு “பாஸ்சுக்கு எப்படி மரியாதை கொடுக்கணும்னு தெரியாம போச்சே உனக்கு” என்றான் சுற்றியபடி.

“இங்கே பார்! நான் என்ன டிரஸ் போடணும், யார் கூட பேசணும் பழகனும்னு நான் தான் முடிவு பண்ணனும். அனாவசியமா என் விஷயத்தில் தலையிட்ட நடக்கிறதே வேற” என்றாள் மிரட்டலாக.

அவள் சொன்னதைக் கேட்டு கடுப்புடன் “இங்கே பார் என் அனுமதி இல்லாம அறைக்குள்ள வந்ததே தப்பு. தேவையில்லாம உளறிட்டு நிற்கிற. நீயா வெளிய போறியா இல்ல நானே அனுப்பவா?” என்றான்.

அவன் அப்படி சொன்னதுமே வேகமாக அவன் இருக்கைக்கு அருகில் சென்று குனிந்து அவன் முகத்தருகே பார்த்து “என்ன உன் திமிரை காட்டுறியா? ரொம்ப தான் மாறி போயிட்டே ஹர்ஷா நீ” என்று சிலிர்த்துக் கொண்டவள் அங்கிருந்து கதவருகே சென்று “பொட்டலம் மடிக்க போறவளை கட்டிகிறதுக்கே இந்த திமிரா?” என்று கேட்டுவிட்டு அவசரமாக வெளியே சென்றாள்.

அவள் சொன்ன வார்த்தைகளில் ஆத்திரமடைந்து நாற்காலியை விட்டு எழும் முன் அவள் வெளியேறி இருந்தாள்.

கோபத்துடன் கையிலிருந்த பேனாவை தூக்கி எரிந்து விட்டு தலையை பிடித்தபடி ஜன்னலோரம் சென்று நின்றான்.

‘படுத்துறாளே! இவளை சமாளிச்சு..எங்க அம்மாவை சமாளிச்சு கல்யாணம் பண்ணிக்கணும். அதுக்குள்ள நான் பைத்தியமா போய்டுவேன் போல இருக்கே’ என்று புலம்பிக் கொண்டிருந்தான்.

வெளியில் சென்றவளோ தந்து இடத்தில் சென்று அமர்ந்து கொண்டவள் ‘மவனே! என்னை விட்டு ஒதுங்கி போக முயற்சியா செஞ்ச? விடமாட்டேன்!’ என்று கூறிக் கொண்டு தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.

மதியம் வரை இருவரும் ஒருவித பதட்டத்திலேயே இருந்தனர்.

லஞ்ச் டைமில் சந்தியாவுடன் சென்ற போது “ஏன் ஹரிணி உனக்கு ஹர்ஷாவை முன்னாடியே தெரியுமா? உங்களுக்குள்ள ஒரு ஸ்பார்க் இருக்கிற மாதிரி ஒரு பீல்” என்றாள் மெதுவாக.

அவளைப் பார்த்து லேசாக சிரித்து விட்டு “ம்ம்..ரெண்டு பேரும் ஒரே காலேஜ் தான் எனக்கு சீனியர் அவன்” என்றாள்.

உதட்டைக் குவித்து லேசாக சீட்டி அடித்து “அது மட்டும் தானா? இல்ல வேற எதுவும் இருக்கா?” என்றாள் சுவாரசியமான பார்வையுடன்.

சட்டென்று நின்று “இப்போ என்ன தெரியனும் உனக்கு? ஆமாம்! நாங்க லவ்வர்ஸ் தான். ஆனா பிரிஞ்சிட்டோம்” என்றாள் சலிப்புடன்.

அதில் சற்று அதிர்ச்சியாகி “ஏன் ஹரிணி? என்ன ப்ரோப்லேம்? சொல்லனும்னா சொல்லு?” என்றாள்.

“ம்ச்…எங்க லவ் அவங்க வீட்டில் தெரிஞ்சு அவனை மடக்கி போட்டு இருக்காங்க” என்றாள்.

“ஒ…ஏன் நீங்க போராடலையா?”

அவளை பார்த்து “நான் போராடிகிட்டு தான் இருக்கேன். ஆனா  அவன் குடும்பம் தான் முக்கியம்னு முறுக்கி கிட்டு சுத்துறான்” என்றாள் சலிப்புடன்.

“ஹர்ஷாவா இப்படி? ஆச்சர்யமா இருக்கு” என்றவள் அவளது கையைப் பற்றி “சீக்கிரம் வா ஹரிணி இந்த கதையை எல்லோருக்கும் சொல்லணும்” என்றாள்.

அவளை திரும்பிப் பார்த்து முறைத்து “நானா சொல்கிற வரை யாருக்கும் எங்க கதை தெரியக் கூடாது சந்தியா. மீறி சொன்னேன்னு வை நடக்கிறதே வேற” என்றாள் மிரட்டலாக.

“என்ன ஹரிணி இப்படி சொல்ற? நீ சொல்றதும் சரி தான்…உங்க ரெண்டு பேருடைய சண்டையை நான் மட்டும் பார்த்து ரசிக்கிறேன்” என்றாள் சிரிப்புடன்.

“உனக்கு என் நிலைமை சிரிப்பா இருக்கா? என்று முறைத்தாள்.

பேசிக் கொண்டே தங்கள் தோழிகள் இருந்த மேஜையில் சென்று அமர்ந்தனர். அனைவரும் ஏதேதோ கதைகள் பேச, சற்று மன நிலை மாறி அவர்களின் பேச்சில் கவனம் வைக்க ஆரம்பித்தாள்.

அப்போது மாறனும், அவனது நண்பர்களும் வந்து  இரண்டு மேஜை தள்ளி அமர்ந்தனர். மாறனின் நண்பன் ஒருவர் “என்னபா புது கிளியை மடக்கிட்ட போல” என்றான் சிரிப்புடன்.

அவனோ “இன்னும் இல்லப்பா! நிறைய உழைக்க வேண்டி இருக்கும்” என்றான்.

“பொய் சொல்லாத மாறா! காலையில தான் பார்த்தேனே. ஒரே அடியா ஈசிகிட்டு வந்தியே” என்றான்.

“ஆமாம் மச்சி! ஆனா ஓவர் சீன் போடுறா” என்றான்.

அவர்கள் பேசுவதை காண்பித்த சந்தியா “நான் சொன்னேன் இல்ல ஹரிணி. இவனுங்க கும்பல் இப்படித்தான் பண்ணுவானுங்க” என்றாள்.

அவர்கள் தன்னைப் பற்றி இழிவாக பேசுவதை பார்த்து கொதித்துப் போயிருந்தவள் சடாரென்று நாற்காலியை தள்ளி விட்டு எழுந்து அவர்களது மேஜையை நோக்கிச் சென்றாள்.

சந்தியாவோ பயத்தில் அவளது கையைப் பற்றி இழுத்து “ஹரிணி! வேண்டாம் போவாதே” என்றாள் நடுக்கத்துடன்.

அவளோ எதையும் காதில் வாங்கும் மன நிலையில் இல்லை. நேரே அவர்களின் முன் சென்று நின்றவள் மாறனிடம் “எழுந்திரிடா! அடுத்து வீட்டு பெண்கள்ன்னா அவ்வளவு இளக்காராம போச்சா? வெளில வேலைக்கு வந்துட்டா பார்க்கிறவன் கூட எல்லாம்…ப…அவசியம் இல்லை. உன் வீட்டில் வேலைக்கு போகிற பெண்களை எல்லாம் அதுக்கு தான் அனுப்புறியா?” என்றாள் ஆங்காரமாக.

அவள் தங்கள்  முன் வந்து நின்று பேசியதுமே அதிர்ச்சியடைந்த மாறன், அவளது வார்த்தையில் கோபமுற்று “ஏய்!” என்று அடிக்க கையை ஓங்கி இருந்தான்.

இவளோ அதற்குள் காலில் கிடந்த செருப்பை கழட்டி அவனை அடித்திருந்தாள்.

அப்போது தான் காண்டீனிற்குள் நுழைந்த ஹர்ஷாவின் கண்களில் இந்த காட்சிகள் பட்டது.  அவள் செருப்பால் அடித்ததைக் கண்டு மாறனின் நண்பர்கள் அவளிடம் சண்டையிட ஆரம்பித்திருந்தனர். ஒரு நிமிடம் தயங்கியவன் வேகமாக சென்று ஹரிணியின் பக்கம் நின்றான்.

“என்ன நடக்குது இங்கே?” என்றான் அதட்டலாக.

அவனைக் கண்டதும் மேலும் எரிச்சலடைந்த மாறன் “ இவ என்னை ஒரு ஆம்பிள்ளைன்னு கூட பார்க்காம செருப்பால அடிச்சிட்டா” என்றான் அவளை முறைத்தபடி.

ஹரிணியோ ஹர்ஷாவை தள்ளிக் கொண்டு அவனை நோக்கி பாய்ந்தவள் “யாரைப் பார்த்து அவ, இவன்னு சொல்ற? வாங்கின அடி பத்தாதா?” என்று குதித்தாள்.

அவளது கைகளைப் பற்றி தன் பக்கத்தில் இழுத்துக் கொண்டவன் “கொஞ்சம் நேரம் சும்மா இருக்கியா” என்று வள்ளென்று விழுந்தான்.

அவனையும் முறைத்து விட்டு மாறனை கொலைவெறியோடு பார்த்தாள்.

“என்ன மாறன் இது? ஆபிசில் இப்படியா நடந்துப்பீங்க?’ என்றான் அழுத்தமான குரலில்.

அவனை நக்கலாக பார்த்து “எனக்கு நீயெல்லாம் அட்வைஸ் பண்ண வேண்டியது இல்லை. உனக்கு முன்னாடி நாலு வருஷமா நான் இங்கே வேலை பார்க்கிறேன்” என்றான்.

“அதெல்லாம் சரி தான். ஆனா லேடீஸ் கிட்ட பார்த்து நடந்துக்க வேண்டாம்?”

இவன் என்ன என்னை கேள்வி கேட்பது என்று கடுப்பான மாறன் “எல்லா புண்ணாக்கும் எனக்குத் தெரியும். உன்னை இங்க யாரும் நாட்டாமை பண்ண கூப்பிடல” என்றான்.

அவ்வளவு நேரம் அமைதியாக வேடிக்கைப் பார்த்தவள் அவன் ஹர்ஷாவை அவமானப்படுத்துவதை பார்த்து குனிந்து காலில் இருந்த இன்னொரு செருப்பை எடுத்து அவன் மீது வீசி “இந்த நாய் கிட்ட எல்லாம் பேச்சு வார்த்தை நடத்தக் கூடாது. ஓட ஓட விரட்டனும்” என்றாள்.

அவளின் செயல் மேலும் மாறனையும், அவன் நண்பர்களையும் கோபப்படுத்த அவர்கள் அவளை அடிக்கப் பாய்ந்தனர். ஹர்ஷா அவர்களிடம் இருந்து அவளை காப்பாற்றி  சந்தியாவிடம் ஒப்படைத்து கூட்டிச் செல்ல கூறினான்.

அவளை அங்கிருந்து அழைத்துச் செல்வதற்குள் போதும் போதும் என்றானது.

ஹர்ஷாவும் அவனது நண்பர்களுமாக மாறனையும் அவன் தோழர்களையும் சமாளித்து பிரச்னையை முடிவுக் கொண்டு வர ஒரு மணி நேரம் ஆனது.

அதன் பின் அலுவலகத்தில் ஹரிணியின் மீது அவர்கள் புகார் கொடுக்க, இவளும் மாறன் மீது புகார் கொடுக்க விசாரணை ஆரம்பமானது. ஹரிணியின் தோழிகள் நடந்தவற்றை எடுத்துக் கூறியதால் அவள் மீது தப்பில்லை என்று ஒத்துக் கொண்டனர். ஆனால் செருப்பால் அடித்தும், தேவையில்லாத பிரச்னையை உருவாக்கியதற்கும் அவளை ஒரு வாரத்திற்கு சஸ்பென்ட் செய்தனர்.

மாறனையும் அதே மாதிரி சஸ்பென்ட் செய்து வார்னிங் கொடுத்து அனுப்பினர். இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு வெளியில் வந்தனர்.

மாறன் அவள் அருகில் சென்று “என்னை செருப்பால அடிச்ச இல்ல…அதுக்கு உன்னை அழ வைக்கிறேண்டி” என்று கூறி விட்டு சென்றான்.

இவளோ கொஞ்சமும் அசராது “சரி தான் போடா” என்று விட்டு தனது பையை எடுத்துக் கொண்டு கிளம்பு போது ஹர்ஷா அழைப்பதாக கூறினாள் சந்தியா.

அவளிடம் “இவன் எதுக்கு இப்போ கூப்பிடுறான்? அதெல்லாம் பார்க்க முடியாதுன்னு போய் சொல்லு” என்றாள்.

சந்தியா பதில் சொல்லும் முன் ஹரிணியின் போன் அடிக்க, அதில் புதிய நம்பராக இருக்கவும் யோசனையுடன் எடுத்து காதில் வைத்தாள்.

“ஹனி மரியாதையா வந்து என்னை பார்த்திட்டு போ. இல்லேன்னா நானே வந்து எல்லோர் முன்னாடியும் தூக்கிட்டு போய்டுவேன்” என்றான் ஹர்ஷா.

பட்டென்று போனை அனைத்து விட்டு சந்தியாவிடம் “எல்லாம் உங்க பாஸ் தான். நான் வரலேன்னா வந்து தூக்கிட்டு போயிடுவானாம். சும்மா உதார் விடுறான்” என்றவள் அவன் அறை நோக்கிச் சென்றாள்.

கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்ததும் டேபிளின் அருகே நின்றவன் வேகமாக அவளிடம் வந்து “அறிவு இருக்கா உனக்கு? என்ன தான் தைரியமான பெண்ணா இருந்தாலும் இப்படியா பண்ணுவ?’ என்றான் எரிச்சலுடன்.

அவனை ஆழ்ந்து பார்த்து விட்டு “இதை கேட்கத் தான் கூப்பிட்டியா? நான் கிளம்புறேன்” என்று திரும்பப் போனாள்.

அவசரமாக அவளது கையைப் பற்றியவன் “ராட்சசி! ஏண்டி புரிஞ்சுக்க மாட்டேன்ற? எந்த நேரமும் உனக்கு நான் பாதுகாப்பு கொடுக்க முடியுமா?”

அவனை கூர்மையாக பார்த்துக் கொண்டே “அது தான் எப்பவோ கொடுக்க மாட்டேன்னு சொல்லி தான் ஒதுங்கி போயிட்டியே. இப்போ என்ன திடீர் கரிசனம்?” என்றாள் கேலியாக.

அவளது கையை சட்டென்று உதறி “சை…அதை விடவே மாட்டியா நீ” என்றான்.

அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு “வேண்டாம் ஹர்ஷா! எனக்கு என்னை பார்த்துக்க தெரியும். தயவு செஞ்சு காலேஜில் என்னை ப்ரோடேக்ட் பண்ணின மாதிரி இங்கே பண்ண வேண்டாம். அங்கே நான் உன் காதலி. ஆனா இப்போ நமக்குள்ள எதுவும் இல்லை. தேவை இல்லாம என் வழியில் குறுக்கே வராதே. கஷ்டமோ நஷ்டமோ நானே பார்த்துகிறேன்” என்று கூறி கதவை திறந்து கொண்டு வெளியில் சென்றாள்.

அவள் சொன்ன வார்த்தையில் அதிர்ச்சியடைந்து நின்றான்.

Categories
On-Going Novels

வாழ்வே நீதானடி! அத்தியாயம் -14

அத்தியாயம்- 14

“மேம்! நீங்க போகலாம். ஸ்ட்ரைட்டா போய் முதல் லெப்ட்ல இருக்கிற ரூம்” என்று கூறி அவளது கனவை கலைத்தாள் ரிஷப்ஷனிஸ்ட்.

மெல்ல எழுந்து தலையாட்டி விட்டு நடந்தவள் அவள் சொன்ன அறை முன்பு சென்று நின்றதும் கதவில் இருந்த பெயரைக் கண்டு ஜெர்க்காகி நின்றாள்.

“ஹர்ஷா” என்கிற பெயர் பலகை அவள் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றாலும் ‘உலகத்திலேயே அவன் ஒருத்தன் தான் ஹர்ஷாவா’ என்றெண்ணிக் கொண்டு கதவை தட்டினாள்.

“எஸ் கமின்” என்று குரல் வரவும் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவளின் பார்வை அங்கே நின்றவனைக் கண்டு தடுமாறியது.

காதில் போனுடன் நின்றவன் கையசைத்து நாற்காலியில் உட்காருமாறு பணிந்தான். அவனிடம் அவளை பார்த்ததினால் எந்த உணர்வும் எழுந்த மாதிரி தெரியவில்லை. முகமோ மிகவும் இறுக்கமாக இருந்தது.

ஹரிணியோ அவனை அங்குலம் அங்குலமாக அளந்தாள்.

‘பக்கி நல்லா தான் இருக்கான். என்னை விட்டு பிரிந்ததில் கொஞ்சம் கூட வருத்தம் தெரியவே இல்லை. முதலில் பார்த்ததை விட நல்லாவே இருக்கான்’ என்று மனதிற்குள் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தாள்.

அவனோ கொஞ்சமும் அவள் பக்கம் திரும்பாது போன் பேசி முடித்துவிட்டு அவள் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்து அவளை கூர்மையாக பார்த்துக் கொண்டே “நியு ஜாய்னி மிஸ். ஹரிணி” என்றவன் சற்று நிறுத்தி “மிஸ் தானே?” என்றான் கேள்வியாக.

அதைக் கேட்டதும் கொதிநிலைக்கே  போனவள் “மிஸ். ஹரிணி தான்” என்றாள் அழுத்தமாக.

நாற்காலியில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டவன் “நல்ல ஸ்கோர் வாங்கி இருக்கீங்க. காலேஜ் டாப்பர். அதே மாதிரி இங்கேயும் நல்லா வொர்க் பண்ணுவீங்கன்னு எதிர்பார்க்கிறேன்” என்றான்.

‘அடேய்! உனக்கே இது ஓவரா தெரியல? இருபது அரியர் வச்சு முடிச்ச நீயே இங்கே மேனேஜரா உட்கார்ந்திருக்கும் போது நானெல்லாம் வேலை செய்ய மாட்டேனா?’ என்று கவுண்டர் கொடுத்துக் கொண்டாள் மனதிற்குள்.

அவளிடம் இருந்து பதில் எதுவும் வராது போகவே “நீங்க எப்பவுமே இப்படி தானா மிஸ். ஹரிணி” என்று மிஸ்ஸில் ஒரு அழுத்தத்தைக் கொடுத்தான்.

அவனது கேலியில் கடுப்பானவள் “வாழ்க்கையில் நான் ஒன்னை நினைச்சிட்டா அதிலிருந்து மாறவே மாட்டேன் சார். நிச்சயமா என்னோட உழைப்பை இந்த கம்பனிக்கு கொடுப்பேன்” என்றாள்.

அவள் வேண்டுமென்றே தன்னை சீண்டுவதற்காக தான் சொல்கிறாள் என்பதை புரிந்து கொண்டவன் பல்லைக் கடித்துக் கொண்டு “ஓகே! நீங்க எந்த டிபார்ட்மெண்டில் இருக்கணும்னு மிஸ்.சந்தியா சொல்வாங்க. அதுவரை வெளில வெயிட் பண்ணுங்க” என்றான் கடுப்புடன்.

அவனை முறைத்துக் கொண்டே எழுந்தவள் “இனிமே தாண்டா உனக்கு இருக்கு! வேலைல சேர்ந்திட்டு உன்னை தேடி வந்து சீண்டலாம்னு நினைச்சேன். ஆனா அந்த கடவுளே நல்லதொரு சான்சை கொடுத்திருக்கார். செத்தடி நீ!’ என்று கருவிக் கொண்டே வெளியில் சென்றாள்.

அவள் வெளியில் சென்றதும் ‘ஊப்’ என்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன் ‘இப்போவே கண்ணை கட்டுதே. எப்படி சமாதானப்படுத்த போறேன்னு தெரியலையே. கண்ணுலேயே தீப்பெட்டி பாக்டரி வச்சிருப்பா போல. ஏன்னா முறை முறைக்கிறா’ என்றெண்ணிக் கொண்டான்.

சிறிது நேர காத்திருப்புக்கு பிறகு சந்தியா அவளை அழைத்துச் சென்றாள். அவளுக்கான பணிகளை எடுத்துக் கூறி விட்டு கிளம்பும் போது “லஞ்ச் டைமில் சந்திக்கலாம் ஹரிணி” என்று கூறி விட்டு சென்றாள்.

மதியம் வரை ஆர்வத்துடன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த சந்தியா “  ஹரிணி! முதல்நாளே இப்படி எல்லாம் வேலை செய்யாதீங்க. லஞ்ச் டைம் ஆகிடுச்சு வாங்க போகலாம்” என்றழைத்தாள்.

மூடி வைத்து விட்டு அவளுடன் பேசிக் கொண்டே காண்டீன் நோக்கி சென்றார்கள். அங்கு ஆங்காங்கே குழுக்களாக பிரிந்து அமர்ந்து சிரிப்பும், கேலியுமாக பேசிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அங்கிருந்த இளம் வயது பெண்கள் குழுவிற்கு ஹரிணியை அழைத்துச் சென்ற சந்தியா “பிரெண்ட்ஸ் நம்ம டீமில் மற்றுமொரு மெம்பெர். இவங்க ஹரிணி” என்று அறிமுகப்படுத்தி வைத்தாள்.

அனைவரும் ஒருவர் மாற்றி ஒருவர் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள, நேரம் போனதே தெரியாமல் அவர்களுடன் ஒன்றிப் போனாள்.

உணவை முடிக்கும் வேலையில் திடீரென்று அனைவரும் அமைதியாகி விட, என்னவென்று அறிந்து கொள்ள அவர்களை பார்க்க அனைவரும் காண்டீன் வாயிலை பார்த்துக் கொண்டிருந்தனர். அங்கு ஹர்ஷா உள்ளே வந்து கொண்டிருந்தான் புன்னகை மன்னனாக.

அதைக் கண்டதும் எரிச்சல் தாங்க முடியாமல் எதிரே இருந்த தண்ணீரை எடுத்து தொண்டையில் கவிழ்த்துக் கொள்ள அது மூக்கில் ஏறி இருமல் வரத் தொடங்கியது.

அவளது இருமலில் தங்களை நிதானித்துக் கொண்டவர்கள் ஹரிணியிடம் கவனத்தை திருப்பினர். சற்று இருமல் குறைந்ததும் சந்தியா அவளைப் பார்த்து சிரித்து “இந்த குரூப் ஹர்ஷா fans குரூப் ஹரிணி. நாங்க ஒவ்வொரு நாளும் அவர் என்ன டிரஸ் பண்ணிட்டு வாரார். அவர் லுக்கில் என்ன சேஞ் இருக்குன்னு பார்க்கிறது தான் எங்களுக்கு வேலை” என்றாள்.

முக்கில் மட்டும் ஏறி இருந்த தண்ணீர் இப்போது உச்சி மண்டைக்கு ஏற ‘அடபாவி! இந்த ரெண்டு வருஷத்தில் பொட்டலம் மடிக்கிற பெண்ணை கட்டிக்கிட்டு கோலி சோடா வித்துகிட்டு இருப்பேன்னு நினைச்சா…இங்கே வந்து இத்தனை பிகரை மடக்கி வச்சிருக்க’ என்று காய்ந்தாள்.

அவனோ அவள் இருக்குமிடம் பார்க்காது தனது நண்பர்களுடன் சிரித்து பேசியபடி உணவை உண்டு கொண்டிருந்தான்.

ஆரம்பத்தில் அவனது ஒதுக்கம் இப்போது சற்று அதிகமாகவே அவளை தாக்கியது. ‘அப்போ அவன் என்னை நினைக்கவே இல்லையா? அவ்வளவு தானா? என்னை பற்றிய பாதிப்புகள் அவனுக்கு இல்லையா?’ என்று பல்வேறு சிந்தனைகள் அவளை ஆக்கிரமிக்கத் தொடங்கியது.

அதற்குள் மற்றவர்கள் உணவை முடித்துக் கொண்டு கிளம்ப, மெல்ல யாரும் அறியாமல் அவனைப் பார்த்துக் கொண்டு அவர்களின் பின்னே சென்றாள். அவனோ அவள் பக்கம் சிறிதும் திரும்பவில்லை.

தங்களது இடத்திற்கு சென்றதும் அவளால் இயல்பாக வேலை செய்ய மனம் வரவில்லை. தான் மட்டும் தான் இந்த இரண்டு வருடங்களாக அவனைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தோமா? அன்னையின் பேச்சைக் கேட்டு அனைத்தையும் மறந்து விட்டானா? என்று யோசித்து தலைவலியை வரவழைத்துக் கொண்டாள்.

உணவை முடித்துக் கொண்டு வந்தவன் தனதறைக்கு செல்லும் போது அவள் முகத்தை சுருக்கியபடி அமர்ந்திருப்பதை பார்த்து அவளது நிலையை உணர்ந்து கொண்டான்.

உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே ‘ராட்சசி என்னோட சூழ்நிலையை புரிஞ்சுக்காம என்னை எப்படி படுத்தின. இப்போ நல்லா அனுபவி’ என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

மாலை அவசரமாக வேலைகளை முடித்துக் கொண்டு ஆபிசிலிருந்து கிளம்பி வெளியே வந்தாள். ஆரம்பித்தது பிரச்சனை. ஆபிஸ் இருந்தது ஒதுக்குபுறமான ஏரியா. காலையில் வரும்போதே பல போராட்டத்துடன் ஆட்டோவில் தான் வந்திறங்கி இருந்தாள். ஆபிஸ் வாயிலில் ஆட்டோ கிடைக்காது. ஒரு பர்லாங் தூரத்திற்காவது நடக்க வேண்டும். ஏற்கனவே தலைவலி மண்டையை பிளக்க, ஹன்ட்பாகை எடுத்து தலைமீது சாய்த்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

மாலை வெயில் வேறு மண்டையை பிளக்க, வழியும் வியர்வையை துடைத்தபடி தெருமுனைக்கு வந்திருந்தாள். அங்கு ஒரே ஒரு ஆட்டோ மட்டுமே நின்றிருந்தது. அதன் அருகில் சென்று விசாரிக்க, காலையில் கொடுத்ததை விட இரண்டு மடங்கு கேட்டான். அதைக் கேட்டதும் எரிச்சலுடன் சுற்றுவட்டாரத்தைப் பார்த்தாள். வேறு ஆட்டோ வருவதற்கான சுவடே தெரியவில்லை. எரிச்சலுடன் என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தாள்.

அப்போது அவளைத் தாண்டிச் சென்றது ஒரு பைக். ஹர்ஷா தான் அவளை கடந்து சென்றான். அவன் வந்து உதவுவானோ என்று பார்க்க, அவனோ அங்கே ஒருத்தி நிற்கிறாளே என்று திரும்பியும் பார்க்காது விர்ரென்று  சென்றான்.

ஆத்திரம் தொண்டையை அடைக்க, அவசரமாக ஆட்டோவில் ஏறி அமர்ந்தவள் “போகலாம்” என்றாள். மனமோ தன்னுடன் அழைத்து செல்ல வேண்டாம். அட்லீஸ்ட் நின்று என்ன பிரச்சனை என்றாவது கேட்டு சென்றிருக்கலாம் தானே? அதை கூட செய்ய மனமில்லையா? என்று கடுப்பானாள்.

இருக்கும் மன நிலையில் அந்த ஆட்டோக்காரன் எவ்வளவு கேட்டிருந்தாலும் கொடுத்திருப்பாள். வீட்டிற்கு வந்து தனது அறைக்குள் நுழைந்தவள் படுக்கையில் விழுந்தாள். அவன் தன்னை ஒதுக்கிச் செல்வதை எண்ணி அழுகை எல்லாம் வரவில்லை. மாறாக கோபம் பொங்கி எழுந்து கொண்டிருந்தது.

எழுந்தமர்ந்தவள் கால்களை மடக்கிக் கொண்டு முட்டியில் முகத்தை வைத்தபடி யோசித்து ‘கொஞ்சம் கூட என்னோட உணர்வுகளை புரிஞ்சுக்காம எட்டியா உதைக்கிற…உனக்கு இருக்குடா கச்சேரி! நீயா நானான்னு பார்த்திடுவோம்’ என்று சபதமிட்டுக் கொண்டாள்.

அதன் பிறகு அவளுள் ஆசுவாசம் எழுந்தது. கண்களை மூடிக் கொண்டவளை உறக்கம் தழுவியது.

அவளது நாயகனும் அவளைத் தான் நினைத்துக் கொண்டிருந்தான்.

‘ராட்சசி! நான் தான் போறேன்னு தெரியுதில்ல. என்னை கூப்பிட்டு இருக்கலாம் இல்ல…அப்படி என்ன ஒரு ஈகோ உனக்கு’ என்று மனதிற்குள் கடிந்து கொண்டான்.

இவ திருந்த மாட்டா! நாம தான் வழிக்கு கொண்டு வரணும் என்று எண்ணினான். இருவரும் அவரவர் பக்கத்தை மட்டுமே யோசித்தனரே தவிர, அடுத்தவரின் தரப்பை யோசிக்க மறந்தனர்.

மறுநாள் காலை எழுந்ததுமே தந்தைக்கு அழைத்தவள் “அப்பா என்னோட ஸ்கூட்டியை நான் சொல்கிற அட்ரசுக்கு போட்டு விட்டுடுங்க. இங்கே அது இருந்தா தான் என்னால மானேஜ் பண்ண முடியும்” என்றாள்.

“சரிம்மா! ஆனா அங்கே டிராபிக் அதிகம் பார்த்து ஒட்டு” என்று கூறி வைத்துவிட்டார்.

பயணம் பற்றிய கவலை ஓய்ந்ததில் நிம்மதியாக கிளம்ப ஆரம்பித்தாள். முதல்நாள் எப்போதும் போல் பேன்ட் ஷர்ட் போட்டுக் கொண்டு சென்றிருந்தாள். ஆனால் அங்கு வேலை செய்யும் பெண்களில் முக்கால்வாசி பெண்கள் சுடிதார் அணிந்தே வந்திருந்தனர். ஒன்றிரண்டு பேர் புடவையும் அணிந்து கொண்டு வந்திருந்தனர்.

தன்னிடம் இருந்த உடைகளை கட்டிலின் மீது எடுத்து போட்டு எதை அணிந்து கொள்ளலாம் என்று சற்று நேரம் யோசித்தாள். சுடிதார் அணிந்து செல்லலாம் என்கிற யோசனையுடன் எடுத்தவள், பக்கத்தில் தீபாவளிக்கு அன்னை எடுத்துக் கொடுத்திருந்த புடவையைக் கண்டாள்.

ஒருநிமிடம் கண்மூடி யோசித்தவள் ‘மவனே! என்னைக் கண்டா ஓடுற? இன்னைக்கு உனக்கு வைக்கிறேண்டா ஆப்பு’ என்று கூறிக் கொண்டே புடவையை அணிய ஆரம்பித்தாள்.

மிதமான அலங்காரத்துடன் கிளம்பியவள் ஆட்டோ பிடித்து ஆபிஸிற்கு வந்து சேர்ந்தாள். அவன் அவளுக்கு முன்பே வந்திருந்தான். அதனால் சற்று ஏமாற்றத்துடன் தனது சீட்டில் அமர்ந்து வேலையைத் தொடங்கினாள். அதற்குள் முதல்நாள் பார்த்தா ஹர்ஷா fans கிளப் தோழிகள் அவளை சூழ்ந்து கொண்டு புடவை அவளுக்கு அழகாக இருப்பதாக கூறினர்.

‘நீங்க எல்லாம் பிளாட் ஆகி என்ன செய்ய? ஆக வேண்டியவன் இன்னும் வரலையே’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

மதியம் வரை அவன் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. அதை எண்ணி மேலும் நொந்து போனாள். ‘என்ன செய்றான் உள்ளேயே உட்கார்ந்துகிட்டு? பேசாம உள்ள புகுந்து ஒரு கேட்வாக் கொடுத்திடுவோமா?’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

அப்போது அவனது அறைக் கதவு திறக்கப்பட்டு சந்தியாவுடன் பேசிக் கொண்டே இவளைக் கடந்து சென்றான். அப்போது அவன் முகத்தில் தெரிந்த புன்னகையைக் கண்டு உள்ளுக்குள் எரிமலையென கோபம் பொங்கத் தொடங்கியது.

அறையிலிருந்து வெளியில் வந்ததுமே அவளது உடையைப் பார்த்து விட்டான். ஆனால் நேரடியாகப் பார்த்தாள் அவளுக்கு இடம் கொடுத்தது போல் ஆகிவிடும் என்பதால் கண்டு கொள்ளாதவன் போல் சென்றான்.

அவனது மனமோ அவளை தாளித்து கொட்டிக் கொண்டிருந்தது ‘பிசாசு! இப்போ எதுக்கு புடவை கட்டிக்கிட்டு வந்திருக்கா? எப்பவும் பேண்டும், சட்டையுமா தானே அலைவா? எல்லாப் பயலும் இவளையே தான் சைட் அடிக்கிறானுங்க…வேணும்னே என்னை டென்ஷன் படுத்தவே கட்டிட்டு வந்திருக்கா’ என்று கடுகடுத்துக் கொண்டான்.

சற்று யோசித்து சந்தியாவிடம் “அந்த புது பொண்ணு கிட்ட புடவை எல்லாம் கட்டிட்டு வர வேண்டாம்னு சொல்லுங்க சந்தியா” என்றான்.

நடந்து கொண்டிருந்தவள் சற்று அதிர்ந்து போய் “என்ன சொல்றீங்க ஹர்ஷா? நாங்களே வாரம் ஒருநாள் புடவை கட்டிட்டு தானே வருவோம். அப்போ நீங்க எதுவும் சொல்லல” என்றாள் கேள்வியாக.

அப்போதுதான் என்ன சொன்னோம் என்று உணர்ந்தவன் அதை எப்படி சமாளிப்பது என்று புரியாமல் சற்று தடுமாறி “அதில்லை சந்தியா! அந்த பொண்ணு ஸ்கூல் பொண்ணு மாதிரி இருக்கு. அது தான் சொன்னேன்” என்று உளறி கொட்டினான்.

அவனை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டே “சரி ஹர்ஷா சொல்லிடுறேன்” என்றபடி நடக்கத் தொடங்கினாள். உள்ளுக்குள் சிறு நெருடல் எழத்தொடங்கி இருந்தது.

இங்கோ ஹரிணி அவனை கைமா பண்ணும் எண்ணத்தில் இருந்தாள். காலேஜில் இருக்கும் போது ஒரு பொண்ணையும் திரும்பி பார்க்காதாவன் இங்கே கோபியர் கொஞ்சும் ரமணண்ணா சுத்திகிட்டு இருக்கான். இவனோட அத்தனை fans-சையும் இவனை விட்டு ஓட வைக்கல என் பேரு ஹரிணி இல்லை என்று சூளுரைத்துக் கொண்டாள்.

அவளது எண்ணத்தை அறியாத ஹர்ஷாவோ எப்படி அவளை சமதானப்படுத்தி தன் வழிக்கு கொண்டு வருவது என்கிற யோசனையுடன் சுற்றிக் கொண்டிருந்தான்.

அன்று ஆபிஸ் முடிந்து தெருமுனைக்கு நடந்த செல்ல ஆரம்பித்தாள். அப்போது தனது பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவனின் பார்வையில் ஆடி அசைந்து சென்று கொண்டிருந்தவள் பட, தனது கோபத்தை எல்லாம் மறந்து அவசரமாக அவள் அருகில் சென்று வண்டியை நிறுத்தினான்.

அதை உணர்ந்தவளோ கண்டு கொள்ளாதவள் போல முன்னே நடந்து செல்லத் துவங்கினாள்.

அவளது செயலைக் கண்டு கடுப்பானவன் “ஹனி! நில்லு” என்றான் சத்தமாக.

அவன் ஹனி என்று சொன்னதும் சட்டென்று நின்றவள் “ஹரிணி! என்ன வேணும் சார் உங்களுக்கு” என்றாள் கடுப்பாக.

அவனோ பார்வையாலேயே வருடியபடி “நீ தான் வேணும்னு சொன்னா” என்றான் வம்படியாக.

முகம் இறுக அவன் அருகே சென்றவள் “என்ன லந்தா? இந்த பேச்செல்லாம் உன்கூட சுத்துறவங்க கிட்ட வச்சுக்கோ” என்றபடி நடக்கத் தொடங்கியவளை விடாது வண்டியை தள்ளியபடி பின்னே நடந்தான்.

அதைக் கண்டு கடுப்பானவள் “என்ன செய்ற? ஆபிஸ்ல இருக்கிறவங்க எல்லாம் தப்பா பேச போறாங்க” என்று காய்ந்தாள்.

“ஹனி நில்லு! உன்னை நானே கொண்டு விட்டுடுறேன்” என்றான்.

மெல்ல நின்று திரும்பிப் பார்த்தவள் “முதலில் போன் பண்ணி பெர்மிஷன் கேளு” என்றாள் கிண்டலாக.

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரியாமல் “எதுக்கு? புரியல” என்றான்.

“சத்தியம் பண்ணி இருக்கிற ஹர்ஷா. உங்க அம்மா பேச்சை கேட்பேன்னு. இப்போ நான் வந்து உன் பைக்கில் உட்கார்ந்தா உன்னோட அம்மாவுக்கு எதிரா போன மாதிரி ஆகிடும். அதுக்கு தான் கேட்க சொன்னேன்” என்றாள் நக்கல் குரலில்.

அவள் சொன்னதைக் கேட்டவுடன் கண்கள் சிவக்க அவளை முறைத்தவன் “ச்சே…நீ மாறவே இல்லடி. அன்னைக்கும் என்னோட சூழ்நிலையை புரிஞ்சுக்கவே இல்லை. இப்பவும் புரிஞ்சுக்கல. உன்னைப் போய் லவ் பண்ணினேனே” என்று முறைத்துக் கொண்டு பைக்கை வேகமாக உதைத்து ஏறி அமர்ந்து அவளை திரும்பியும் பார்க்காது பறந்தான்.

அவனது கோபத்தைக் கண்டு பயப்படாமல் நின்றவள் ஒருவித சலிப்புடன் ‘இப்பவும் என்னைப் பத்தி நினைக்கவே இல்லையேடா. உன் குடும்பத்தை சொன்னதை மட்டும் பிடிச்சு தொங்கிகிட்டு என்னை காயப்படுத்தி கிட்டு இருக்க. ஆனா உன்னை உணர வைக்காம விட மாட்டேன்’ என்று எண்ணிக் கொண்டே தளர் நடையுடன் ஆட்டோ நிற்குமிடத்தை அடைந்தாள்.

Categories
On-Going Novels

வாழ்வே நீதானடி! அத்தியாயம் – 13

அத்தியாயம்- 13

அவளை மலைப்பாக பார்த்துக் கொண்டே “உனக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டா யோசிக்காம என்னைக் கேட்கலாம் ஹரிணி” என்றான்.

அவளும் மெல்லிய சிரிப்புடன் “வேற வழியே இல்லை அத்தான். நீங்க தான் பண்ணனும். நோ சாய்ஸ்…இப்போதைக்கு என் மனசில் உள்ளதை யார் கிட்டேயும் பகிர்ந்துக்க கூடிய சூழ்நிலையில் இல்லை. உங்களைத் தவிர…அதே சமயம் என்னுடைய எதிர்காலத்தை இந்த விஷயத்துக்காக பணயம் வைக்கவும் தயாராக இல்லை” என்றாள் அழுத்தமான குரலில்.

அவளது பக்குவமான பேச்சு அவனை பிரமிக்க வைத்தது. இந்த சின்ன வயதிற்குள் எத்தனை தெளிவு, உறுதி. இந்த வயது இளைஞர்களுக்கு எல்லாம் இப்படி பட்ட தெளிவும், உறுதியும் இருந்து விட்டால் காதல் பெயரில் நடக்கும் கொலைகளும், தற்கொலைகளும் குறையும் என்று எண்ணிக் கொண்டான்.

அதே சமயம் மனதிற்குள் ஹர்ஷாவிடமும் பேசிப் பார்க்க வேண்டும் என்று ஒரு எண்ணம் தோன்றியது. அவன் தான் தனக்கானவன் என்று இவள் உறுதியாக இருக்கும் போது, அவன் அன்னையின் பேச்சைக் கேட்டு உண்மையிலேயே இவளை ஒதுக்கிச் சென்றிருந்தால் எதிர் காலம் பாதிக்கப்படுமே என்று யோசித்தான்.

இருவரும் அவரவர் சிந்தனையில் மூழ்கியபடியே வீடு வந்து சேர்ந்தனர். நிவியோ இருவரின்  முகத்தையும் மாறி மாறி ஆராய்ந்து கொண்டே பேசிக் கொண்டிருந்தாள். அவர்கள் என்னவோ இப்போதே தங்களது திருமணத்தைப் பற்றி பேசி முடித்த மாதிரி அவளுக்கு அவ்வளவு டென்ஷன்.

ஹரிணி எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாது மிக இயல்பாக கனேஷிடமும், கிரியிடமும் வாயடித்துக் கொண்டிருந்தாள்.

இரவு உணவை முடித்துக் கொண்டு கிரி கிளம்பிச் சென்று விட, தனக்கென ஒதுக்கப்பட்ட அறையில் சென்று படுத்து விட்டாள் ஹரிணி.

மறுநாள் நிவியின் மாமியார், மாமனாரை சென்று பார்த்து விட்டு ஊருக்கு பஸ் ஏறி விட்டாள்.

கிரியின் மூலம் விஷயத்தை அறிந்து கொண்ட கணேஷிற்கும் அவர்களிடையே வந்த பிரிவு வருத்தத்தை அளித்தது. ஆனால் ஹரிணி தனது முடிவில் தெளிவாக இருப்பதை அறிந்து தேற்றிக் கொண்டான்.

ரெண்டு, மூன்று நாட்களுக்குப் பிறகு ஹர்ஷாவை அழைத்தான் கிரி.

“சொல்லுங்க கிரி எப்படி இருக்கீங்க?” என்றவனது குரலிலேயே அவனது வருத்தம் தெரிந்தது.

“ம்ம்…நல்லா இருக்கேன் ஹர்ஷா. அப்புறம் எக்ஸாம் எல்லாம் எப்படி பண்ணுனீங்க?”

“நல்லா பண்ணி இருக்கேன் கிரி”.

“அடுத்து என்னன்னு யோசனை பண்ணிட்டீங்களா? எதுவும் இண்டர்வியு அட்டென்ட் பண்ணுணீங்களா?”

“இல்ல கிரி…கொஞ்சநாள் அம்மாவோட இருந்து கடையை பார்த்துகிட்டு அப்புறமா வேலைக்கு போகலாம்னு ஒரு எண்ணம்”

“ஒ…அதுவும் நல்லது தான். அப்புறம் சொல்லுங்க..என்னெனவோ கேள்விபட்டேன் உண்மையா?”

தங்களது பிரச்சனையைப் பற்றிக் கேட்டதும் சற்று நேரம் மௌனமாக இருந்தவன் “ஆமாம் கிரி. அம்மாவுக்கு எங்க லவ் தெரிஞ்சு போச்சு. அதனால சத்தியம் வாங்கிட்டாங்க” என்றான் பெருமூச்சுடன்.

“அப்போ அம்மா பேச்சைக் கேட்டு உங்க லவ்வை தலை முழுகிட்டீங்க இல்லையா?”

“அப்படி இல்லை கிரி…இப்போ என் குடும்பம் எதிர்காலத்தை பற்றிய பயத்தோட இருக்காங்க. அதனால அவங்க என்னை பிடிச்சு வைக்க முயற்சி பண்றாங்க. எப்படி இருந்தாலும் நான் இப்போவே கல்யாணம் பண்ணிக்க போறதில்லை. அதனால பின்னாடி சமதானப்படுதிக்கலாம் என்கிற எண்ணத்தில் சத்தியம் பண்ணிக் கொடுத்திட்டேன்” என்று தன் பக்க நியாயத்தை எடுத்துரைத்தான்.

அவன் தரப்பு வாதம் நியாயமானதாகவே தோன்றி விட “நீ சொல்றது சரி தான் ஹர்ஷா. ஆனா ஹரிணி தான் ஹர்ட் ஆகிட்டா” என்றான்.

“ம்ம்…எனக்கும் புரியுது. ஆனா என் பக்கத்தை அவ யோசிக்கவே இல்லை கிரி. அதுதான் கஷ்டமா இருக்கு” என்றான்.

“விடுங்க ஹர்ஷா! காலப்போக்கில் எல்லாம் சரியாகும். ஆனா எனக்கு உங்க கிட்ட ஒரே ஒரு கேள்வி இருக்கு அதுக்கு மட்டும் பதில் சொல்லிடுங்க”.

“கேளுங்க கிரி”

“உங்க அம்மாவுக்கு பண்ணி கொடுத்த சத்தியத்திற்காக ஹரிணியை விட்டு கொடுக்கிற எண்ணம் உங்களுக்கு இருக்கானு மட்டும் சொல்லுங்க”.

அவன்  என்ன கேட்கிறான் என்பதை புரிந்து கொண்ட ஹர்ஷா “இந்த ஜென்மத்தில் எனக்கு பொண்டாட்டின்னு ஒருத்தி இருந்தா அது ஹரிணி மட்டும் தான்” என்றான் உறுதியாக.

அவனது கூற்றில் சற்று நிம்மதியான கிரி “இது போதும் ஹர்ஷா. உங்களுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் தயங்காம கேளுங்க” என்றான்.

“நிச்சயமா கிரி! உங்களை மட்டும் தான் கேட்பேன். எங்க காதல் வெற்றியடைய நீங்க மட்டும் தான் உதவ முடியும்” என்றான் கிண்டலாக.

“அடபாவிகளா! என்னை மீடியேட்டர் வேலை பார்க்க வச்சுட்டீங்களே” என்றான் அழு குரலில்.

“ஹாஹா கிரி! காதலில் இதெல்லாம் சகஜம் தான்” என்றவன் சற்று நிறுத்தி “எங்களுக்குள்ள இப்போ இந்த பிரிவு கூட நல்லது தான் கிரி. அவளும் நல்லபடியா படிப்பை முடிக்கட்டும். நானும் என் குடும்பத்தை தூக்கி விட கால அவகாசம் தேவைப்படுது. காதலில் இருந்தா என்னால எதையும் சரியா செய்ய முடியாது.அதனால கவலைப்படாமல் இருங்க கிரி. ஹரிணியை என்னைத் தவிர வேற யாரும் கட்ட முடியாது” என்றான்.

அவனது தெளிவான பதிலில் நிம்மதியடைந்தவன் “அது தான் ஊருக்கே தெரியுமே ஹர்ஷா. இந்த ரெண்டு டிசைனும் தான் ஒன்னுக்கு ஒன்னு பொருந்தும்-னு” என்றான் கிண்டலாக.

மெல்லிய குரலில் சிரித்தவன் “ரொம்ப தேங்க்ஸ் கிரி போன் பண்ணினதுக்கு. என்னோட சூழ்நிலையை சரியா புரிஞ்சுக்காம கோச்சுகிட்டு போயிட்டா ஹரிணி. என்னை யாராவது சரியா புரிஞ்சுக்க மாட்டாங்களான்னு தவிச்சுகிட்டு இருந்தேன். இப்போ உங்க கிட்ட பேசியதில் கொஞ்சம் நிம்மதியா இருக்கு” என்றான்.

“சியர் அப் மேன்! இன்னும் இது போன்ற சூழ்நிலைகள் நிறைய வரும் உன் வாழ்க்கையில். நீ உன் எண்ணத்தில் உறுதியாக இருந்தால் எல்லாவற்றையும் முறியடிச்சிடலாம்” என்று அவனை உற்சாகப்படுத்தினான்.

“தேங்க்ஸ் கிரி…சீக்கிரம் என்னோட கடமைகளை எல்லாம் முடிச்சிட்டு அவளை தூக்குறேன்” என்றான்.

“நடத்துங்க…நடத்துங்க…ஆல் தி பெஸ்ட்” என்று கூறி அலைப்பேசியை வைத்தான்.

 

 விடுமுறை முடிந்து கல்லூரி திறந்ததும் ஹர்ஷா ஹாஸ்டலுக்குத் திரும்பினாள். அவளிடத்தில் பழைய உற்சாக துள்ளளோ, விளையாட்டுத்தனமோ எதுவுமில்லை. தானுண்டு படிப்புண்டு என்று இருக்கத் தொடங்கினாள்.

ஹர்ஷாவும் கடையின் வியாபாரத்தை மேம்படுத்த வழிமுறைகளை மேற்கொண்டான். ஆனால் அவனது அன்னையோ கடையை விட்டு-விட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்று விரும்பினார். அதனால் கடையையும் பார்த்துக் கொண்டு வேலைகளுக்கு எழுதி போட தொடங்கினான். சில, பல இண்டர்வியுக்களும் அட்டென்ட் செய்தான்.

இப்படியே ஆறு ஏழு மாதங்கள் கழிந்தது. ஹரிணி அவனது எண்ணங்களை தூர வைத்துவிட்டு தனது வேலையில் கவனம் செலுத்த பெரிதும் முயற்சி செய்தாள். சில நேரம் அதில் வெற்றியும் பெற்றாள். பல நேரம் தோல்வியும் கண்டாள்.

ஹர்ஷாவிற்கோ அவளது எண்ணங்கள் மட்டுமே உற்சாக பானமாக இருந்தது. நாளெல்லாம் உழைத்து களைத்து படுப்பவனுக்கு ஹரிணியை பற்றிய எண்ணங்கள் தான் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் ஆசையை தூண்டியது.

சுமார் பத்து மாதங்கள் கடந்த நிலையில் அவன் அப்பளை செய்த மல்டிநேஷனல் கம்பனியொன்றில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. சென்னையில் இருந்த கம்பனியில் உடனே வந்து சேரும் படி ஆர்டர் வந்ததது. அதைக் கண்டதும் அன்னை, தந்தையின் முகங்களில் அத்தனை சந்தோஷம். இதற்காக தானே இத்தனை போராட்டம். எங்கே அவன் பொறுப்பில்லாமல் தனது வாழ்க்கையை அழித்துக் கொள்வானோ? என்று பயந்தவர்களுக்கு வேலை கிடைத்தது மகிழ்ச்சியை கொடுத்தது.

குடும்பத்தினரின் ஆசியுடன் சென்னைக்கு கிளம்பினான். அப்போது அவன் அருகில் வந்த அன்னை கைகளைப் பற்றிக் கொண்டு “ரொம்ப சந்தோஷம் பா…பிள்ளைகளை இப்படி பார்க்கத் தான் எல்லா பெத்தவங்களும் ஆசைப்படுவாங்க. உன் கிட்ட சத்தியம் வாங்கினேன்னு உனக்குள்ள கோபம் இருக்கும். காதல் நம்ம வளர்ச்சியை அழிக்க தான் செய்யும். இதை எப்பவும் உன் மனசில் வச்சுக்கோ. உன்னை பெத்த எங்களுக்கு தெரியும். உன் மனசுக்கு பிடித்த மாதிரி ஒரு வாழ்க்கையை அமைச்சு தர. அதனால இப்போ இருக்கிற மாதிரி மனசை எங்கேயும் அலைபாய விடாம கவனமா இரு” என்றார்.

அன்னையின் பேச்சைக் கேட்டவன் மனதிற்குள் ‘நீங்க சொல்கிற அந்த காதல் தான் மா என்னை இன்னும் உயிர்ப்போட வச்சிருக்கு. என் மனசுக்கு பிடிச்ச வாழ்க்கைன்னா அது ஹரிணியோட மட்டும் தான். அவளை கட்டக் கூடாதுன்னு சத்தியத்தை வாங்கிட்டு எப்படி எனக்கு பிடிச்ச வாழ்க்கையை அமைச்சு தரப் போறீங்க?’ என்றெண்ணியவன் பெருமூச்சுடன் “சரிம்மா” என்றபடி கிளம்பினான்.

அண்ணனுடன் பேருந்து நிலையத்திற்கு வந்த சஞ்சய் “அண்ணி கிட்ட சொன்னீங்களா அண்ணா வேலை கிடைச்சதை?” என்று கேட்டான்.

“இல்லடா! அதெல்லாம் வேண்டாம்” என்றான் சோர்வாக.

சஞ்சையோ விடாப்பிடியாக “நீங்க தான் சொல்லக் கூடாது. நான் சொல்லலாம் இல்லையா?” என்றான்.

“இல்ல சஞ்சய்! விட்டுடு! நான் பார்த்துகிறேன். நீ கடையையும், அம்மா, அப்பா ரெண்டு பேரையும் பார்த்துக்க. அதோட படிப்பையும் விட்டுடாதே” என்றான்.

“சரிண்ணா” என்று கூறி ஆரத்தழுவி வழியனுப்பி வைத்தான்.

சென்னை சென்று சுமார் ஒரு மாதம் வரை சற்று தடுமாறியவன் பின்னர் தனது கடுமையான உழைப்பாலும், பண்பான பேச்சாலும் அனைவரையும் கவர்ந்தான். ஒவ்வொரு நாளும் தன்னை மெருகேற்றிக் கொண்டான். அதுநாள் வரை ஏதோ ஒரு வகையில் சண்டையிட்டுக் கொண்டு திரிந்தவன், இப்போதெல்லாம் புன்னகை மன்னனாக மாறி இருந்தான்.

ஆறு மாதங்களில் அவனது திறமையை புரிந்து கொண்ட நிறுவனத்தினர் தேவையான சலுகைகளை அளித்து அவனுக்கான மதிப்பை அளித்தனர்.

ஹரிணியும் படிப்பில் கவனத்தை வைத்து கஷ்டப்பட்டு இறுதி வருட தேர்வுகளை எழுதி முடித்தாள். இங்கே அவளது குணத்திலும் மாறுதல் ஏற்பட்டிருந்தது. துள்ளலும், துடுக்குமாக சுற்றிக் கொண்டிருந்தவள் முணுக்கென்றால் கோபப்பட்டு சண்டையிடுவதை வழக்கமாக கொண்டிருந்தாள்.

அவர்களின் பிரிவு இருவரின் குண இயல்புகளையும் மாற்றி இருந்தது.

ஒருவழியாக அவளின் தேர்வுகளை முடித்துக் கொண்டு ஊர் போய் சேர்ந்தாள். தேர்விற்கு முன்பே கேம்பஸ் இண்டர்வியு மூலம் சென்னையில் நல்ல நிறுவனத்தில்  வேலையும் கிடைத்திருந்தது.

இந்த இரண்டு வருடத்தில் கிரிக்கும் திருமணமாகி இருந்தது. ஹரிணியும் அன்னையும், அக்காவும் அவள் கிரியை திருமணம் செய்து கொள்வாள் என்று எதிர்பார்த்து ஏமாந்து போய் இருந்தனர்.

கல்லூரி வாழ்க்கையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தவளிடம் மறுநாளே பிரச்னையை ஆரம்பித்தார் ராஜம். கணவரிடம் சொல்லி உடனே ஹரிணிக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணத்தை முடித்து விட வேண்டும் என்றார்.

“என்னம்மா இப்போ தானே காலேஜ் முடிச்சு வந்திருக்கா. அதுக்குள்ள மாப்பிள்ளை பார்க்க சொல்ற?” என்றார் ஹரிணியின் தந்தை.

“இவளை எல்லாம் இத்தனை நாள் விட்டு வச்சதே தப்புங்க. நிவி மாதிரி இவ அடக்க ஒடுக்கமா எல்லாம் இருக்க மாட்டா. இவளை எவன் கையிலாவது பிடிச்சு கொடுத்தா தான் நமக்கு நிம்மதி” என்றார் கடுப்பாக.

“என்ன இது ராஜம்! குழந்தையை போய் இப்படி பேசுற?” என்று கடிந்து கொண்டார்.

“குழந்தையாம் குழந்தை. மடியில போட்டு தாலாட்டுங்க. இங்கே பாருங்க நாம செலவு பண்றப்பவே இவ அடங்க மாட்டேன்றா. வேலைக்கு போய் நாலு காசை பார்த்திட்டா நம்ம பேச்சை கேட்கவே மாட்டா சொல்லிட்டேன்” என்றார்.

அதுவரை அன்னையும், தந்தையும் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவள் “ம்மா! வேலைக்கு போன பிறகு இல்ல. இப்போவே சொல்றேன் கேட்டுகோங்க. இன்னும் மூணு நாலு வருஷத்துக்கு நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். அப்புறம் இன்னொன்னு நீங்க சொல்றதுக்காக யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். என் மனசுக்கு பிடிச்சிருந்தா மட்டும் தான் பண்ணிக்குவேன்” என்றாள் அழுத்தமாக.

அதைக் கேட்டதும் ரத்த அழுத்தம் உச்சி மண்டைக்கு ஏற “பார்த்தீங்களா-பார்த்தீங்களா! நான் தான் சொன்னேனே. இவ யாருக்கும் அடங்க மாட்டா.சரியான பிடாரி!” என்றார் ஆத்திரத்துடன்.

மகள் பேசியதில் அதிர்ந்து போயிருந்த மணிவண்ணன் சற்று நிதானித்துக் கொண்டு “நிறுத்து ராஜம்” என்று மனைவியை அதட்டி விட்டு மகளின் புறம் திரும்பி “என்ன இது ஹரிணி! உன்கிட்ட இருந்து இப்படியொரு பேச்சை எதிர்பார்க்கல” என்றார் கோபமாக.

தந்தையின் கோபத்தைக் கண்டு அசராமல் “நான் என்னப்பா தப்பு பண்ணினேன். எப்பவும் அம்மா என்னை வீட்டை விட்டு விரட்ட தான் பார்க்கிறாங்க. எனக்கு எது நியாயம்னு படுதோ அதை உடைச்சு பேசுறது தப்பா? அதுக்காக என்னை பத்தொன்பது வயசிலேயே கட்டிக் கொடுத்து அனுப்ப பார்த்தாங்க. அக்கா இருக்கான்னா அது அவளோட குணம். எல்லோரும் ஒரே மாதிரி இருந்திட முடியாது. நான் வெளிப்படையா பேசுறது தப்புன்னா சாரி என்னால மாத்திக்க முடியாதுப்பா” என்றாள் உறுதியாக.

மகள் பேசுவதில் உள்ள நியாயம் புரிந்ததும் சற்று அமைதியானவர் “அதெல்லாம் சரிம்மா…ஆனா அம்மா கிட்ட மரியதையா பேசலாம் இல்லை. உனக்கு என்ன விருப்பம்னு அன்பா பேசினா அவளும் புரிஞ்சுப்பா” என்றார்.

“நீங்க வேறப்பா நான் வாயைத் திறந்தாலே அவங்களுக்கு ஆகாது. இதில அன்பா எங்கே பேசுறது?”

அவள் சொன்னதைக் கேட்டதும் மேலும் ‘தை-தை’ என்று குதித்தவரை அடக்கிவிட்டு மகளிடம் “உன் ஆசைப்படியே ரெண்டு மூணு வருஷத்துக்கு வேலைக்கு போக அனுப்புறோம்மா. அதுக்கு மேல எங்களால அனுமதிக்க முடியாது சரியா?” என்றார்.

கணவர் சொன்னதில் சம்மதப்படாமல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அலைந்தார் ராஜம். இரண்டு நாட்களுக்குப் பிறகு வேறு வழி இல்லை என்றதும் மகளுடன் சாதரணமாக பேசத் தொடங்கினார். ஹரிணியும் புதிய வேலையில் சேருவதற்கான மும்மரத்தில் இருந்தாள். வேலைக்கு கிளம்பும் நாளும் வந்தது. தாயும், மகளும் என்னதான் முறைத்துக் கொண்டிருந்தாலும் கிளம்பும் நேரம் அவளுக்கு விபூதி பூசி நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தி அனுப்பினார்.

தனது தோழியின் மூலம் சென்னையில் தங்குவதற்கு ஏற்பாடுகளை முன்னரே செய்திருந்தாள். முதல்நாளே கிளம்பி தோழி ஏற்பாடு செய்திருந்த அபார்ட்மென்ட்டிற்கு சென்று இறங்கிக் கொண்டாள். தனதறையில் தங்குவதற்கு ஏற்றார் போல மாற்றிக் கொண்டு, மறுநாள் வேலைக்குச் செல்ல வேண்டியவற்றை எடுத்து வைத்துவிட்டு படுத்தாள்.

அங்கு வந்ததில் இருந்தே மனம் ஏனோ ஒருவித தவிப்புடன் இருந்தது. வார்த்தைகளில் சொல்ல முடியாத உணர்வை கொடுத்தது. வெகுநாட்களுக்குப் பிறகு மனம் ஹர்ஷவை நாடியது. என்ன பண்ணிட்டு இருப்பான்? வேலைக்குப் போயிருப்பானா? கடையை பெருசாக்கி சூப்பர் மார்கெட் ஆக்கி இருப்பானா?ம்ம்..கடைசியில பொட்டலம் மடிக்க தான் போயிருப்பானா? என்று எண்ணிக் கொண்டே உறங்கினாள்.

மறுநாள் காலை அவசரமாக எழுந்து தயாராகி ஆபிசில் சென்று நின்றாள். மேனேஜர் மீட்டிங்கில் இருப்பதாகவும் சற்று நேரம் காத்திருக்கும்படி கேட்டுக் கொண்டாள் ரிஷப்ஷனிஸ்ட். அதன் பேரில் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டு போவோர் வருவோரை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

அப்போது அங்கு வேலை பார்க்கும் இரு பெண்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டே அவளை கடந்து சென்றனர்.

“சார் இன்னைக்கு வந்திருக்கிற கெட்டப் செம இல்ல. சான்சே இல்ல! அவர் சிரிக்கிறப்ப கன்னத்துல விழுற குழியில முதல் நாளே விழுந்துட்டேன் யா” என்றாள் ஒருத்தி.

அதை கேட்டதுமே ஹர்ஷாவின் கன்னத்தில் விழும் குழி ஞாபகம் வர, தன்னை மறந்து அமர்ந்திருந்தாள்.

Categories
On-Going Novels

வாழ்வே நீதானடி! அத்தியாயம் – 12

அத்தியாயம் – 12

திவாகரும், சேகரும் இவர்களிடையே இப்படியொரு நிகழ்வை சற்றும் எதிர்பார்க்கவில்லை. யோசனையுடனே அங்கிருந்து அறைக்கு சென்றவர்கள் “டேய்! என்னடா சொன்ன அந்த பொண்ணை? உன்னை பத்தி பேச கூட மாட்டேன்னு சொல்லிட்டு போயிட்டா” என்றார்கள்.

அவர்களை நிமிர்ந்து பார்த்தவன் “எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலடா. எல்லாமே என் கையை மீறி நடந்து போச்சு. அவ என்னை தப்பா புரிஞ்சுகிட்டா”.

இருவரும் அவன் தோள் தட்டி “விடு ஹர்ஷா! கொஞ்ச நாள் போனா எல்லாம் சரியாகும்” என்றார்கள்.

மறுவாரம் தேர்வு இருந்த காரணத்தால் அனைவரும் இதை மறந்து படிப்பில் மூழ்கி போயினர். அதோடு அவர்களுக்கு இறுதி தேர்வாதளால் மிகவும் கடுமையாக உழைத்தனர். இதில் தடுமாறி போனவள் ஹரிணி தான். அவளால் ஹர்ஷாவின் செய்கையை ஒத்துக் கொள்ள முடியாமல் உள்ளுக்குள் தவித்தாள். தேர்வில் கவனம் செலுத்த முடியாமலும், தடுமாறிக் கொண்டிருந்தாள்.

ஏனோ தானோவென்று தேர்வை முடித்தவளுக்கு அடுத்து ஹர்ஷாவை இனிக் கல்லூரியில் பார்க்க முடியாது என்று எண்ணியவுடன் துயரம் நெஞ்சை அழுத்தியது. அதே சமயம் அவன் அவளை சந்திக்க வந்த போது மறுத்து அனுப்பினாள். அவனுடைய சூழ்நிலை புரிந்தாலும், தன்னிடம் கேட்காமல் எப்படி சத்தியம் செய்யலாம் என்கிற எண்ணமே அவனிடமிருந்து அவளை ஒதுங்க செய்தது.

மனதில் அழுத்திய பாரத்துடனே தனது ஊருக்கு கிளம்பிச் சென்றான் ஹர்ஷா. அவன் கிளம்பி விட்டான் என்று அறிந்து கொண்ட பின்னரே தானும் விடுமுறைக்கு ஊருக்கு கிளம்பினாள்.

எப்போது உற்சாகமும், கும்மாளமுமாக இருக்கும் மகள் ஊரிலிருந்து வந்த அன்றிலிருந்து அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பதை பார்த்த ராஜம் “என்னடி ஆச்சு? வரும் வழியில பேய் அடிச்சிடுச்சா என்ன? இவ்வளவு அமைதியா இருக்க?” என்றார்.

அன்னையை மெல்ல நிமிர்ந்து பார்த்தவள் “மா! கடுபேத்தாம போறியா இல்ல உன்னோட ஸ்பெஷல் பிளவர் வாசை போட்டு உடைக்கவா?” என்றாள்.

வேகமாக அவள் அருகில் சென்றவர் தலையில் நன்றாக ஒரு குட்டு குட்டி “என்ன ஹாஸ்டலில் யார் கிட்ட சண்டை போட்டுட்டு வந்த? உன்னால ஒரு இடத்தில் கூட ஒழுங்கா இருக்க முடியாதா ஹரிணி? பொம்பளை பிள்ளையா அடக்க ஒடுக்கமா உன் அக்கா மாதிரி இருக்க தெரியாதா?” என்றார் கடுப்புடன்.

அதுவரை அமைதியாக அமர்ந்திருந்தவள் அவரின் அறிவுரையைக் கேட்டு கொதித்தெழுந்து “மா! போதும் நிறுத்துங்க! இப்போ என்ன நான் அமைதியா இருந்தாலும் உங்களுக்கு ஆக மாட்டேங்குது. அவ்வளவு தானே? இரு!” என்றவள் அறையில் இருந்த சிஸ்டத்தில் பாடலை சத்தமாக ஒலிக்க விட்டு வேண்டுமென்றே குதித்து ஆட ஆரம்பித்தாள்.

அதைக் கண்டதும் கடுப்பாகி தலையில் அடித்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினார். அடுத்த நிமிடம் அறைக் கதவை அறைந்து சாத்திவிட்டு கட்டிலில் விழுந்தவளின் மனம் ஹர்ஷாவை சுற்றி சுற்றியே வந்தது. அவன் படிப்பை முடித்துவிட்டு போய் விட்டான். தன்னால் இன்னும் இரு வருடங்களுக்கு அந்த கல்லூரியை விட்டு அசைய முடியாது. இல்லையென்றால் ஹர்ஷாவின் அன்னையை ஒரு கை பார்த்திருக்கலாம் என்று பலவாறு எண்ணிக் கொண்டு படுத்திருந்தாள்.

ஊரிலிருந்து வந்து பத்து நாட்கள் இப்படியே சென்றது. உலக சிந்தனையே இல்லாது போன்று தனக்குள்ளேயே மூழ்கி இருந்தாள். தங்கை லீவில் வந்ததும் தன்னைத் தேடி வருவாள் என்று காத்திருந்த நிவேதிதாவோ எரிச்சலடைந்து அன்னையை அழைத்தாள்.

“என்னம்மா உங்க சின்ன பொண்ணு இப்படி இருக்கா? கல்யாணம் பண்ணி போயிட்டா என்னை மறந்திடுவாளா?” என்று எண்ணையில் இட்ட அப்பளமாக பொரிந்தாள்.

“அதை ஏன் கேட்கிற? ஹாஸ்டலிலிருந்து வந்த அன்னையில் இருந்து உன் தங்கை சரியில்லடி. அறைக்குள்ளேயே அடைஞ்சு கிடைக்கிறா. என்னன்னே புரியல” என்றார் சலிப்பாக.

“என் மாமியார் வேற கேட்கிறாங்க, உன் தங்கை உன்னை வந்து எட்டி கூட பார்க்கலையேன்னு. மரியாதையா அவளை அனுப்பி வைக்கிற வழியை பாருங்கம்மா. இல்லேன்னா இவங்க கிட்ட இடிபடனும்”.

“க்கும்…நான் சொல்றதை கேட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பா மகராசி” என்று அலுத்துக் கொண்டவர் “அனுப்பி வைக்கிறேன்…நீ கவலைப்படாதே” என்றார்.

அன்னையின் குரலில் தெரிந்த நிச்சயமின்மையை எண்ணி கோபமடைந்தவள் “அவ மட்டும் வரலேன்னா இருக்கு அவளுக்கு” என்று கூறி போனை அனைத்து ஆங்காரத்துடன் படுக்கையில் தூக்கிப் போட்டாள்.

லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கணேஷ் அவளின் செய்கையைக் கண்டு யோசனையுடன் பார்த்து “என்ன பிரச்சனை நிவி? ஏன் இவ்வளவு கோபம்” என்றான்.

அவளோ முகத்தை சுருக்கி “மச்..எல்லாம் என் தங்கச்சின்னு ஒருத்தி இருக்காளே அவ தான் பிரச்சனை” என்றாள்.

ஹரிணியை பற்றி என்றதும் இருக்கையை விட்டு எழுந்தவன், அவள் அருகில் சென்று “ஹரிணிக்கு என்ன?” என்றான் பதட்டத்துடன்.

அதுவரை தங்கையை பற்றி புலம்பிக் கொண்டிருந்தவள் அவனது பதட்டடதைக் கண்டு எரிச்சலடைந்து “என்ன மச்சினி பக்கம் காத்து அடிக்குதோ? இவ்வளவு பதறுறீங்க?” என்றாள் ஏகத்தாளமாக.

அவளது பேச்சில் கடுப்பானவன் லேசாக தலையில் கொட்டி “நீ என்ன லூசா? இப்படி எல்லாம் உளறி வைக்காம என்ன பிரச்சனைன்னு சொல்லு?”

“என்னத்தை சொல்றது? அவளுக்கு இப்போ வெகேஷன் தானே? ஊருக்கு வந்து பத்து நாள் ஆகுது. இப்போ வரை நம்மளை பார்க்க வரல”.

மீண்டும் பெரிதாக கொட்டி “இதுக்கு தான் இவ்வளவு பேச்சு பேசினியா? கொஞ்ச நாள் அம்மா கூட இருந்து ரெஸ்ட் எடுத்திட்டு வருவாளா இருக்கும்” என்றான்.

“க்கும்” என்று நொடித்துக் கொண்டவள் “நீங்க வேற ஊரில் இருந்து வந்ததுல இருந்து மேடம் அறைக்குள்ளேயே இருக்காங்களாம். வழக்கமான ஆட்டம் இல்லேன்னு சொல்றாங்க” என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்டதும் குழப்பம் எழ ‘ஒரு வேளை ஹர்ஷா விஷயமாக இருக்குமோ? இருவருக்கும் நடுவில் ஏதாவது பிரச்சனையா?’ என்று யோசித்தவன் ‘சரி நாளைக்கு அவளுக்கே போன் பண்ணி பேசிடுவோம் என்று எண்ணிக் கொண்டான்.

அதைப் பெற்றி மேலும் நிவேதிதாவிடம் பேசி குழப்பாமல் அமைதியாக விட்டு விட்டான்.

மறுநாள் ஆபிஸ் கிளம்பிக் கொண்டிருக்கும் போது வாயில் மணி அழைக்க, சட்டை பட்டனை அட்ஜஸ்ட் செய்து கொண்டே சென்று கதவை திறந்தவனுக்கு இன்ப அதிர்ச்சி. மலர்ந்த முகத்துடன் நின்றிருந்தாள் ஹரிணி.

“வாங்க மேடம்” என்று அழைத்துக் கொண்டே நகர்ந்து வழி விட்டான்.

அதற்குள் சமயலறையில் இருந்து எட்டிப் பார்த்த நிவி, தங்கையைப் பார்த்ததும் வேகமாக வந்து “வாடி! இப்போவாவது வரணும்னு தோனுச்சே” என்றாள் அலுப்புடன்.

அலுப்பாக சோபாவில் சென்றமர்ந்து கொண்டவள் “அப்படி எல்லாம் உடனே வந்துட்டா என் இமேஜ் என்ன ஆகுறதுக்கா. அதிலேயும் உன்னை பார்க்க வரும் போது எப்படி எல்லாம் டார்சேர் பண்ணலாம்னு யோசிக்க டைம் வேண்டாமா?” என்றாள் குறும்புடன்.

அவள் எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தவன் “வந்தவுடனே உன்னோட வாலை அவிழ்த்து விட்டாச்சா” என்றான் கிண்டலாக.

இருவருக்கும் காலை உணவை எடுத்து வைத்து விட்டு அழைத்தவள் “ஏண்டி  நீ என்னவோ ரொம்ப அமைதியா இருக்கேன்னு அம்மா சொல்லிட்டு இருந்தாங்க? ஆனா நீ எப்பவும் போல தான் தாவிகிட்டு இருக்க” என்றாள் யோசனையுடன்.

கணேஷுடன் எழுந்து சாப்பிட சென்றவள் தட்டில் தாளம் போட்டுக் கொண்டே “ஏன் நிவி நம்பி சாப்பிடலாமா?” என்றாள் கிண்டலாக.

வழக்கம் போல அக்காவுடன் வளவளத்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருப்பவளை யோசனையுடன் பார்த்துக் கொண்டே சாப்பிட்டான் கணேஷ்.

அவள் சாதரணமாக இருப்பது போல் காட்டிக் கொள்ள முயலுகிறாலோ என்றே தோன்றியது அவனுக்கு. அவளிடம் இயல்பான துருதுருப்பு இல்லாதது போல் தோன்றியது. அக்காவிடமும், தங்கையிடமும் விடை பெற்றுக் கொண்டு ஆபிசிற்கு கிளம்பியவன் போகும் வழியிலேயே தம்பிக்கு அழைத்து ஹரிணியை பற்றி கூறினான்.

“சரி அண்ணா! நான் சாயங்காலம் வீட்டுக்கு வரேன். அவ கிட்ட பேசி பார்க்கிறேன். எனக்கு தெரிஞ்சு எதுக்கும் அப்செட் ஆகிற ஆள் இல்லை ஹரிணி” என்றான் கிரி.

“இல்லடா! அவ ரொம்ப கஷ்டப்பட்டு தன்னை நார்மலா இருக்கிற மாதிரி காட்டிக்க முயற்சி பண்றா”.

சற்று யோசனையுடன் “அப்படியா சொல்றீங்க? அப்போ நான் ஹர்ஷா கிட்ட பேசி பார்க்கவா?”

“முதல்ல ஹரிணி கிட்ட பேசி பாரு கிரி. உன்கிட்ட ப்ரீயா பேசுவா. என்ன விஷயம்னு தெரிஞ்சுகிட்டு அதுக்கு பின்னாடி ஹர்ஷா கிட்ட பேசலாம்” என்றான்.

“ம்ம்..சரி அண்ணா. நான் சாயங்காலம் வரேன்” என்று கூறி அலைபேசியை வைத்தான்.

அங்கே அக்காவுடன் வீட்டில் இருந்தவளோ தனது எண்ணங்களுக்கெல்லாம் பூட்டு போட்டு விட்டு வலுகட்டாயமாக நிவியுடன் செலவழித்துக் கொண்டிருந்தாள்.

கணேஷ் வரும் நேரம் இருவரும் அவனை எதிர்பார்த்திருக்க, அவனுடன் கிரியும் வருவதைக் கண்டதும் சற்று உற்சாகமானாள் ஹரிணி.

“அடேடே! கிரி அத்தான் வாங்க…வாங்க” என்று வரவேற்றாள்.

“என்ன மேடம் வெற்றிகரமா ரெண்டாவது வருஷத்தை முடிச்சிட்டு வந்தாச்சா?” என்று கேட்டபடி அவளெதிரே அமர்ந்தான்.

“அதை விடுங்க! நீங்க பொண்ணு பார்த்தீங்களா இல்லையா?”

அவளை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே “அதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் நடக்குமா ஹரிணி” என்றவனின் மனம் அவள் பேச்சை மாற்றுகிறாளோ என்று தோன்றியது.

“ஏன் அத்தான் அவ்வளவு கஷ்டமா உங்களுக்கு பொண்ணு கிடைக்கிறது” என்றாள் கேலியாக.

சிறிது நேரம் கிண்டல், கேளிகளுக்குப் பிறகு மெல்ல சோபாவிலிருந்து எழுந்தவன் “ஹரிணி உன்கிட்ட பேசணும் வெளில போகலாமா?” என்று கேட்டான்.

அவன் கேட்டதுமே சற்று உடல் இறுகி போக “ம்ம்..சரி அத்தான்” என்று எழுந்தாள்.

இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த நிவிக்கு சந்தேகம் எழுந்தது. அண்ணனிடமும் தலையசைத்து விட்டு வெளியே செல்ல, ஹரிணியும் அவன் பின்னே சென்றாள். அமைதியாக அவனுடன் காரில் பயணித்தாள். இருவரும் அவரவர் சிந்தனையில் உழன்றிருந்தனர்.

இங்கு நிவியோ மனதிற்குள் சந்தோஷத்தோடு குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தாள். கணேஷ் குளியலறைக்குள் நுழையும் வரை பொறுத்திருந்தவள், அவன் சென்றதும் அவசரமாக போனை எடுத்துக் கொண்டு ஹாலிற்கு சென்றாள்.

“அம்மா! உனக்கொரு சந்தோஷமான விஷயம் சொல்லப் போறேன்”.

“என்னடி? கல்யாணம் ஆகி ஒரு மாசம் தான் ஆச்சு அதுக்குள்ளயா?” என்றார் அதிர்ச்சியாக.

அன்னையின் அதிர்ச்சியைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டவள் “அம்மா! நான் அதை சொல்லல! உன் சின்ன பொண்ணு இங்கே வந்திருக்காள் இல்ல. அவளை பார்க்க என் மச்சினர் உடனே ஓடி வந்துட்டார். இப்போ அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வெளில போயிருக்காங்க. அனேகமா கல்யாணத்துக்கு ஒத்துக்குவான்னு நினைக்கிறேன் மா” என்றாள்.

அதைக் கேட்டதும் மகிழ்ந்து போனவர் “உண்மையாவா சொல்ற நிவி. நான் கூட இவ இருந்த இருப்பை பார்த்து என்னவோ ஏதோன்னு நினைசுட்டேண்டி. அங்காளம்மா இந்த கல்யாணம் நல்லபடியா முடியனும்” என்று வேண்டுதல் வைக்க ஆரம்பித்தார்.

“சரிம்மா உன் மாப்பிள்ளைக்கு தெரியாம பேசுறேன். நான் நாளைக்கு பேசுறேன்” என்று கூறி அலைபேசியை வைத்தாள்.

காரில் பயணித்துக் கொண்டிருந்தவர்களோ யார் பேச்சை முதலில் ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.

சிறிது தூரம் சென்றவன் ஒரு சின்னஞ்சிறிய கோவிலின் முன்பு நிறுத்தி விட்டு “வா ஹரிணி” என்று கூறி முன்னே சென்றான்.

இருவரும் அமைதியாக கடவுளை வணங்கி விட்டு பிரகாரத்தில் சென்று அமர்ந்தனர்.

அவளை திரும்பிப் பார்த்து “சொல்லு உனக்கும் ஹர்ஷாவுக்கும் என்ன பிரச்சனை?” என்றான்.

சற்று நீண்ட நெடிய பெருமூச்சை விட்டவள் கால்களை நன்றாக நீட்டி போட்டுக் கொண்டு “எல்லா காதலையும் வரது தான். பெருசா எதுவும் இல்லை” என்றாள் போவோர் வருவோரை வெறித்தபடி.

அவள் சொல்வது புரியாதவனாக “என்ன சொல்ற?”

அவனை திரும்பிப் பார்த்து லேசாக சிரித்து “ஹர்ஷாவோட அம்மாவுக்கு தெரிஞ்சு போச்சு எங்க காதல். அதனால அவன் கிட்ட சத்தியம் வாங்கிட்டாங்களாம். என்னை மீறி எந்த பெண்ணையும் கட்டக் கூடாதுன்னு. இந்த பக்கியும் சத்தியம் செஞ்சிட்டு வந்திருக்கான்” என்றாள் கடுப்பாக.

இதை சற்றும் எதிர்பார்க்காதவன் “அப்படியா? என்ன இது ஹரிணி. இதை  நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல. ஆனா அவனோட நிலைமையில் அவனும் என்ன தான் செய்வான் சொல்லு” என்றான் ஆறுதலாக.

அதைக் கேட்டதும் கடுப்புடன் “ஆமாம் ஒன்னும் செய்ய முடியாதில்ல. அவனோட சூழ்நிலை அப்படி. ஆனா இதே ஒரு பொண்ணு செஞ்சிருந்தா உங்க ஆண் இனம் என்ன பண்ணி இருப்பீங்க? அவ மேல அசிட் ஊத்தியோ, இல்ல கழுத்தறுத்து போட்டோ, இல்ல பெட்ரோல் ஊத்தி கொளுத்தியோ விட்டு இருப்பீங்க. ஆனா காலம் காலமா உங்க இனத்தால ஏமாற்றப்பட்டும் அதனால வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவிச்சுகிட்டும் வாய் மூடி மௌனியா இருந்து கிட்டு இருக்கோம்”.

“இல்ல நான் என்ன சொல்ல வரேன்னா” என்று ஆரம்பித்தவனை தடுத்து நிறுத்தியவள் “நானா இவனை போய் காதலிச்சனா? என் ஹாஸ்டல் சுவரேறி குதிச்சு என்னை பார்க்க வந்து, என் பின்னாட்டியே சுத்தி என்னை காதலிக்க வச்சது யாரு? இவன் தானே? அப்போவெல்லாம் வராத குடும்ப பாசம் இப்போ எங்கே இருந்து வந்துது. காதலிக்க ஆரம்பிக்கும் போது தெரியாதா இவனுக்கு எதிர்ப்பு வரும்னு…ஆனா எனக்கு தெரியும்! அதை சமாளிக்கிற தைரியம் இருந்துது, இருக்கு இனிமேயும் இருக்கும். அது ஏன் அவனுக்கு இல்லை?” என்றாள் ஆணித்தரமாக.

அவள் கைகளை தட்டிக் கொடுத்த கிரி “நீ சொல்றதெல்லாம் சரி ஹரிணி. அவனோட சூழ்நிலை அவனுக்கு மட்டுமே தெரியும். நான் வேணா அவன் கிட்ட பேசி பார்க்கவா?” என்றான் ஆதரவாக.

கிண்டலான சிரிப்புடன் “காதலில் சிபாரிசு உதவாது அத்தான். அவங்க அவங்களா உணரனும். என்னை அவன் குடும்பத்துக்காக விலக்கிட்டு போனவன், அவனா திரும்பி என்னைத் தேடி வரணும். அதுவரை அவனுக்காக காத்திருப்பேன். என்னை பார்க்காமலே வேண்டாம்னு சொன்ன அவங்க அம்மா அவங்க வாயாலேயே நீ தான் என் மருமகள்னு சொல்லணும். அது தான் எனக்கும், என் காதலுக்கும் மரியாதை” என்றாள் இறுக்கமான குரலில்.

அவளின் பிடிவாதத்தை கண்டு அயர்ந்து போய் அமர்ந்திருந்தான் கிரி. பின்னர் யோசனையுடன் “இந்த வருஷத்தோட அவன் படிப்பு முடிஞ்சு போயடுவானே ஹரிணி. அப்புறம் எப்படி உங்களுக்குள்ள சரியாகும்?” என்றான் கவலையுடன்.

உறுதியான பார்வையுடன் “அதனால என்ன அத்தான். எவ்வளவு தூரம் எட்டி இருந்தாலும் எங்க மனசு கிட்ட தான் இருக்கும். என்னால அவனை மறக்க முடியாத மாதிரி அவனாலையும் என்னைத் தவிர வேற யாரையும் கட்ட முடியாது. இந்த ஜென்மத்தில் அவன் பொண்டாட்டி நான் தான். மீறி அவன் அம்மா எதுவும் கோல்மால் பண்ணினா உள்ள புகுந்து ஆட்டத்தை கலைக்கவும் தயங்க மாட்டேன்” என்றாள் இறுக்கமான குரலில்.

அதைக் கேட்டதும் சத்தமாக சிரித்தவன் “எப்பா! ஹரிணி ஹர்ஷாவை நினைச்சா பாவமா இருக்கு போ” என்றபடி எழுந்து கொண்டான்.

Categories
On-Going Novels

அன்பின் விழியில்! பதிவு – 2,3

எபி 2

        தாய்,தந்தை,மகன் என வீட்டில் இருந்த அனைவரும் தன்னை தனியே விட்டுவிட்டு சென்றுவிட்ட போதிலும், இது அன்றாடம் நடக்கும் வழக்கம் என்பதால் அதற்கெல்லாம் மனம் தளராத நித்தி, அவளின் அடுத்த வேலைகளை கவனிக்க தொடங்கினாள்.

  இங்கொன்றும் அங்கொன்றும் இறைந்து கிடந்த துணிகளை எல்லாம் வாஷிங் மெஷினில் போடும் போதே, சுமார் மூன்று வருடங்களுக்கு முன் தான் இப்படி தன் துணிகளை அப்படியே எறிந்து விட்டு காலேஜுக்கு போன நியாபகம் அவளின் அனுமதி இல்லாமலே அவளுக்கு வந்தது.அதனோடு கூடவே அவளை தலையில் வைத்து கொண்டாடியவர்களின் நினைவுகளும் வரிசையில் நின்றது.

‘அவங்க மட்டும் இப்போது இருந்தால்? எனக்கு இந்த நிலை வந்திருக்குமா! என்னோட உயிர்னு நான் நினச்சவங்க எல்லாம் என்னை தனியா தவிக்க விட்டுட்டு போனபிறகும் எப்படி என்னால உயிரோடு இருக்க முடியுது? அவங்களோட உயிர் என்கிட்ட இருக்கறதாலதானா!’

      ‘ச்ச! இன்னைக்கு என்ன ஆச்சு எனக்கு! எதுக்கு எனக்கு பழசு எல்லாம் இப்ப நியாபகம் வருது? எனக்கு யாரும் வேணாம்!சரண் மட்டும் போதும்!’ என இவள் எண்ணும் போதே இவள் கண் முன் ஒரு முகம் தோன்றி, “நான் கூடவா வேண்டாம் உனக்கு!” என அதிசயித்தது.

அதற்கு இவள்,”வேணாம்! எனக்கு யாரும் வேண்டாம்!என்னை வேணாம்னு விட்டுட்டு போனவங்களை பற்றி நான் ஏன் நினைக்கனும்?நான் யாரையும் நினைக்க மாட்டேன்,யாருக்காகவும் ஏங்கவும் மாட்டேன்.எல்லாம் இந்த அப்பாவால வந்தது. தேவையில்லாம எதை எதையோ பேசி என் மூடை கெடுத்துட்டார். வரட்டும் அவர்! இன்னைக்கு ஈவ்னிங் நல்லா பூஜை என்கிட்ட இருக்கு!’ என சொல்லிக்கொண்டே செய்ய வேண்டிய அடுத்த வேலைக்கு சென்றாள் நித்யா.

          மதியம் பன்னிரண்டு மணிவரை அவளின் லேப்டாப்பில் இருக்கும் பாடத்தில்  மூழ்கியிருந்த நித்தியை, சரணின் பள்ளி முடியும் நேரம் நெருங்குகிறது என்பதை அவளின் கைபேசி, அலாரம் அடித்து நினைவுபடுத்த, அவனை அழைக்க வீட்டைப் பூட்டிவிட்டு கிளம்பினாள் நித்தி.

         சரணின் பள்ளி இவர்களின் பிளாட்டுக்கு அருகில் தான் உள்ளது. காலையில் தாத்தா,பாட்டியுடன் பள்ளிக்கு செல்வதும், மதியம் தன் அன்னையுடன் வருவதும் அவனது வழக்கம்.

         நித்தியின் ஸ்கூட்டி கட்டிடத்தின் கேட்டை தாண்டி போகும் வரை அவளையே பார்த்துக் கொண்டு வாட்ச்மேனிடம் அவரின் அறையில் நின்றுக்கொண்டு  பேசிக்கொண்டிருந்தவன், அவள் சென்றதும் அவரிடம் விடைப்பெற்று தன் வீடிருக்கும் இரண்டாவது தளத்திற்கு செல்ல தொடங்கினான்.

            ‘இப்ப இவ திரும்பி வந்தவுடனே போய் பேசலாமா…’ என ஆசை அலைபாய, ‘இல்ல, ஈவ்னிங் அத்தை,மாமா வந்தவுடனே போகலாம்!’ என அறிவு அணை போட, ‘ம்ம்ம்ம்… அதுவரைக்குமா இவளை கிட்டக்க பார்க்க காத்துட்டு இருக்கனும்?’  என ஆசை அணைமீற, ‘இப்ப தனியா போய் இவகிட்ட மாட்டினா, உன்மூஞ்சியிலேயே கதவ அடைச்சி சாத்திடுவா!’ என அறிவு அறிவுறுத்த,, ‘இப்ப என்னப் பண்றது?’ என ஆசைக்கும் அறிவுக்கும் இடையே இங்கொருவன் அல்லாடிக் கொண்டிருந்தான்.

   எப்போதும் போல இறுதியில் ஆசை தான் அறிவை  வென்றிடுமா..!?

        பள்ளியிலிருந்து சரணை அழைத்து வந்து, அவனுக்கு உணவுக் கொடுத்து, தானும் உண்டு, அப்பாடா! என்று நித்தி ஹாலில் வந்து அமரவும் அழைப்பு மணி அவளை அழைக்கவும் சரியாக இருந்தது.

       “மம்மி! நானு..! நானு! நான் போய் பாக்கறேன் யாருன்னு?” என்று நித்தியை முந்திக்கொண்டு சரண் கதவுக்கருகில் ஓட,

            “ஹேய்! குட்டி உங்களால லாக் ஓபன் பண்ண முடியாது மா!” என சொல்லிக் கொண்டே பூட்டை திறந்து,கதவில் இருக்கும் சங்கிலியை எடுக்காமலேயே அதை சிறிதாக திறந்து யார் என்று பார்த்த நித்தி, வெளியில் நிற்பவனை பார்த்ததும், கதவை திறக்காமல் அப்படியே அதிர்ந்து நின்றாள்.

  அவள் தன்னை பார்த்து அதிர்ந்து நின்றதை கவனித்தவனும் அதை கண்டுக்கொள்ளாமல், கதவுக்கும் சங்கிலிக்கும் இடையே இருந்த இடைவெளியில் தன் கையை விட்டு, லாக்கை எடுத்து, கதவை திறக்க முடியாது, அதன் முன் வழியை மறைத்தாற்போல் இன்னும் நின்றுக் கொண்டிருந்தவளை பார்த்து,

      “ஹலோ! வழியவிட்டு நகர்தீங்கன்னா கதவை திறக்க வசதியா இருக்கும்! மேடம்க்கு வசதி எப்படி?” என அவளின் வசதி தான் அவனுக்கு மிக முக்கியம் போல வினவினான்.

      அவனின் கேள்வியில் அனிச்சை செயல்போல நித்தியும் வழி விட்டு விலகினாள்.

      அவள் வழி விலகவும் வசதியாக கதவைத்திறந்து , ஏதோ… வீட்டின் உரிமையாளனை போல அமர்த்தலாக உள்ளே வந்தவனை பார்த்த சரண் தன் தாயிடம்,

      “மம்மி…! யாரு இவங்க?” என மேடை ரகசியம் பேச,அதைக்கேட்ட புதியவன்,       

           “சரண்! இவங்க உன்னோட ‘மம்மி’ன்னா, நான் உன்னோட ‘டாடி’!”  ‘இன்னைக்கு திங்கள்ன்னா… நாளைக்கு செவ்வாய்!’ என்று மிக சாதாரணமாக சொன்னான்.

      அவனின் வழக்கத்திற்கு மாறாக,இன்று அவன் தன்னிடம் சகஜமாக பேசியதை நம்ப முடியாது சிலையாக சமைந்தவளை புதிவனின் பதில் உயிர் கொள்ள வைத்து, “யாரு? யாருக்கு டாடி!” என நக்கலாக கேட்கவும் வைத்தது.

        “நானும் இதையே கேட்கலாமல்ல! ‘யாரு? யாருக்கு மம்மின்னு! நீ இவனுக்கு மம்மின்னா, இவனோட டாடி நானா தானே இருக்கனும்?  வேறு  யாருக்கு அந்த உரிமை இருக்கு?” என புதியவன் வியாக்கியானம் பேசினான்.

                          “ஆதரவு  தேவைப்படும் போது, அதைக்கொடுக்காத உறவு, பிறகு உரிமை கொண்டாடிட்டு வரதுல என்ன நியாம் இருக்கு?” என இவள் எரிச்சல் பட,

                  “அந்த நேரத்துல  என்னோட ஆதரவு யாருக்கு முக்கியமா தேவைப்படும்ன்னு யோசிக்கற அளவுக்கு உனக்கு மூளை இல்லைன்னாலும், எனக்கு இருந்தது. அதனாலதான் நான் அப்போ அப்படி நடந்துகிட்டேன்” என்று பதில் வந்தது.

      அவனின் பதிலில் இன்னும் கடுப்பானவள், “ஏன் எதுக்கு அப்படி நடந்துகிட்டீங்கன்னு உங்ககிட்ட யாரும் இங்க விளக்கம் கேட்டு காத்துட்டு இல்ல!” என படபடக்க,

       “ஆனா… நான் கிட்டதட்ட இரண்டு வருஷமா அதுக்குதான், அதான் விளக்கம் கொடுக்கத்தான் காத்துட்டு இருக்கேன்.” என அவன் நிதானமாக அவள் விழிகளையே பார்த்துக்கொண்டு சொன்னான்.

           ம்க்கும். இவர் எப்ப மத்தவங்களுக்கு,அதுவும் எனக்கு புரியறாப்போல பேசியிருக்கார், இப்ப பேச! இவருக்கு இவர் மட்டும்தான் ‘அறிவாளி ஆளவந்தான்’ன்னு நினைப்பு! இந்த முசுடுகிட்ட பேசி ஒருபலனும் நமக்கு கிடைக்கபோறதில்லை, அதனால முடிந்த அளவுக்கு இதை இங்கயிருந்து இப்போதைக்கு சுமுகமா கிளப்பிட்டோம்னா  மத்தத ஈவ்னிங் அப்பா வந்து பாத்துப்பாங்க’ என மனதில் நினைத்த நித்தி,

      “அப்பா வந்தப் பிறகு நீங்க அவர்கிட்ட பேசிக்கங்க..இப்ப சரணை நான் தூங்க வைக்கனும்.அதனால நீங்க…” என இவள் இழுக்க,

      “கொஞ்சநேரம் நான் அவன்கிட்ட பேசிட்டு இருக்கட்டுமா? அப்புறம் அவன் தூங்கட்டும்” என சொல்லி புதியவன்,தன் கைகளை விரித்து  சரணை தன்னிடம் வரும்படி அழைக்க, ‘அவனிடம் போகட்டுமா?’ என சரண் தன் தாயிடம் அனுமதிக் கேட்பதை போல பார்த்தான்.இதைப் பார்த்த அந்த புதியவன்,

     “சரண் குட்டி! டாடி கிட்ட வரதுக்கு கூடவா உங்க மம்மிகிட்ட பர்மிஷன் கேப்பீங்க! உங்க மம்மி ஒன்னும் சொல்லமாட்டாங்க, என்கிட்ட வாங்க.” என்று தான் சரணுக்கு யார் என்பதை மீண்டும் ஒருமுறை அறிவுறுத்தி, அவனை தன்னிடம் அழைத்தான்.

 அவனின் பேச்சில் வந்த எரிச்சலை மறைத்து, “இல்லல்ல,. அவன் இப்ப தூங்கலைன்னா சிடுசிடுன்னு பொழுதுக்கும் அழுதுட்டே இருப்பான். அதனால அவன் இப்ப தூங்கட்டும்.நீங்க போயிட்டு அப்பா வந்ததும் வரீங்களா?” என நயமாக மீண்டும் சொன்னாள் நித்தி.

         “சரி! அவன் தூங்கட்டும்.அவன் தூங்கறவரை நான் கொஞ்ச நேரம் இங்கேயே உங்க கூடவே இருக்கட்டுமா?அங்க நம்ம வீட்டுக்கு போனா தனியா இருக்கனும். அம்மாப்பா இப்ப என்கூட வரலை.அங்கபோனா, எனக்கு ஏதேதோ பழைய நியாபகங்கள் எல்லாம் வரும்.அதான் கொஞ்சநேரம் இங்க உங்க கூடவே இருக்கேனே. கொஞ்ச நேரம் தான் .ரொம்ப நேரமெல்லாம் இருக்கமாட்டேன்.ப்ளீஸ், இருக்கட்டுமா?” என பாவமாய் கேட்டான் புதியவன்.

            இப்ப இவள் என்ன பேசுவாள்! எதை சொல்லி இவனை இங்கிருந்து கிளப்புவாள்?அதிர்ச்சியில் அவளுக்கு ‘அடுத்து என்ன சொல்ல!’ என்று தோன்றவில்லை.

 ‘தி கிரேட் சஞ்சய் ஸ்ரீநிவாஸ்’ அவகிட்ட கெஞ்சிட்டு, அதுவும் ப்ளீஸ்ன்னு வேற சொல்லிட்டு இருக்கார்! என்னடா இது  ஒரே அதிசயமா இருக்கு!’ என மனதினுள் நினைத்த நித்தி, அவனுக்கு சம்மதமாய் தன் தலையை ஆட்டி, சரணிடம்,

        “பப்பு! நீங்க அவங்க கூட கொஞ்ச நேரம் விளையாடறீங்களா?” எனக்கேட்டாள்.

      தினமும் இந்த நேரத்தில் வலுக்கட்டாயமாய் தூங்கவைக்கபட்ட சரணுக்கு இன்று அதில் இருந்து விடுதலை கிடைக்கும் போல இருக்கவே,கிடைத்த வாய்ப்பை அப்படியே பற்றி, “ஹேய்… இப்ப நான் தூங்க வேணாமா? டாடி கூட விளையாடட்டா மம்மி? டாடி கூட என்ன விளையாடட்டும்? இங்கயா? இல்ல நாங்க வெளிய போய் விளையாடட்டுமா?டாடி கூட வெளிய போன நீங்க என்னை திட்டமாட்டீங்க தானே! இல்ல, நான் ‘அன்நோன் பர்சன்ஸ்’ கூட போகலை இல்ல, நம்ம டாடி கூட தானே போறேன்! சோ நீங்க என்னை ஒன்னும் சொல்லமாட்டீங்க!” என சரமாரியாய்க்  கேள்விகள் கேட்டு,அதற்கு முக்கியமான கேள்விக்கு பதிலையும் தானே கொடுத்துக்கொண்டு, வார்த்தைக்கு வார்த்தை ‘டாடி’ சொல்லி நித்தியை கடுப்பேற்றிய சரண்,  

           “டாடி…! உங்களுக்கு எந்த கேம் பிடிக்கும்? எங்க விளையாடலாம் டாடி?, மம்மிய கூட நம்ம கேம்ல சேர்த்துக்கலாமா?” எனக்கேட்டு வைத்தான்     

      ‘ஆஹா.. இதுக்கு நான் நினைக்கும்  பதிலை கொடுத்தா என் முன்னாடி நின்னுட்டு இருக்கும் டிராகுலா சத்தியமா என் ரத்தத்தை குடிச்சிடும்!’ என அஞ்சிய சஞ்சய்,

          “இப்ப நாம மட்டும் விளையாடலாம் சரண்! மம்மி ரெஸ்ட் எடுக்கட்டும். அப்புறம் மம்மிய நம்ம கூட சேர்த்துக்கலாம்.ஓகே வா?” என்றான்.

   சரணின் டாடி மழையில் அதுவரை வேண்டாவெறுப்பாக நனைந்துக் கொண்டிருந்தவள் அதற்கு மேல் பொறுக்கமுடியாது,“அவன்தான் குழந்தை. தெரியாம உங்களை டாடின்னு சொல்றான், நீங்களும் அதை அப்படியே ஏன் சொல்றீங்க, அவன்கிட்ட நீங்க அப்படி இல்லைன்னு சொல்றதுக்கு என்ன?” என சஞ்சயிடம் காய்ந்தாள்.

         “சரி, நீ சொன்னதை போலவே நான் டாடி இல்லைன்னு சொல்லிடறேன், அப்புறம், அவன் ‘அப்ப யார் என்னோட டாடி?’ன்னு கேட்டா என்ன சொல்வ? யாரைக் காட்டுவ? அதுக்கு ஆளை ரெடி பண்ணிட்டியா!” தான் கேட்பது தவறு எனத்தெரிந்தும் கேட்டான் சஞ்சய்!

              இதற்கு என்ன பதில் சொல்வது எனத்தெரியாது வாழ்க்கையிலேயே முதல் முறையாக கேள்விக்கு பதிலளிக்க முடியாது, ‘இனி இது தொடரும்…!’ என்ற உண்மையறியாது, முழித்துக்கொண்டு நின்றாள் நித்தியலட்சுமி!

          அவளின் திகைப்பை பார்த்த சஞ்சய்,’நம்ம ஆளு முட்டக்கண்ண போட்டு முட்டமுட்டயா முழிச்சிட்டு நின்னாலும் கூட செம்ம க்யூட் தான்! சும்மா சொல்லக்கூடாது என்னோட பேபி செம்ம அழகு!’ என நினைக்கும் போதே அவன் உள்ளிருந்து ஒரு குரல் ‘இது உன் ஞானகண்ணுக்கு இப்பதான் தெரிந்ததா ராசா! அவ அழகுன்னு முன்னாடி எல்லாம்  உனக்கு தெரியலையா?’ எனக்கேட்டு அவனை டிஸ்டர்ப் செய்தது. இதுக்கெல்லாம் டிஸ்டர்ப் ஆகிட்டா அவன் எப்படி சஞ்சய் ஆவான்!

           ‘புத்தருக்கே… அவரோட இருபத்தி ஏழாம் வயசுல தான் ஞானம் கிடச்சுதாம், அதுக்காக அவர்கிட்ட போய் “இப்பதான் உனக்கு ‘ஞானம்’ கிடைச்சுதா… அப்ப இத்தனை நாளாய் ‘அறிவு’ இல்லாமையா  இருந்த?’ன்னு உன்னால  கேட்க முடியுமா…! சில விஷயங்களை எல்லாம் ‘என்ஜாய் பண்ணனும்,என்கொயரி பண்ணகூடாது’ சோ… நீ மூடிட்டு உன்னோட வேலைய பாரு!’ எனக்கூறி மனசாட்சியே…. இன்றி தன் மனசாட்சியை அடக்கிய சஞ்சய்,

            “என்ன கேட்டதுக்கு பதிலை சொல்லாம என்னை ‘சைட்’ அடிச்சிட்டு இருக்க!” என்று நித்தியை மேலும் அதிர்ச்சியடைய செய்தான்.

           ‘என்னடா இது… இந்த ‘சிடுமூஞ்சி குமாரு’, இப்படி பேசுது? புள்ளய அதோட அப்பாடக்கர் கம்பனில போட்டு பிழி பிழின்னு பிஞ்சிட்டாங்களா….! அதான் மூளை கலங்கிப்போச்சா?’ என்று தீவிர யோசனையில்  நித்தி இருக்கும் போதே…

             “டாடி…! விளையாட போகலாமா…?” என சரண் ஒரு கேள்வியை கேட்டு அங்கிருந்த இருவரின் பேச்சுக்கும், நினைப்பிற்கும் தடை விதித்தான்.

          சரணின் அழைப்பு, சஞ்சயின் பேச்சிற்கு தடைவிதித்த போதும், அவனின் ஆழ்ந்த பார்வைக்கு எந்த தடையையும் விதிக்க முடியவில்லை. ’நான் கேட்ட வினாவிற்கு எப்போது விடையளிக்க போகிறாய்…?’ என்று அவனின் விழி அவளை விசாரிக்க தவறவில்லை.

        ‘போடா டேய்! நீ வாயால் கேட்டாலே உன்னையெல்லாம் நான் ஒரு மனுஷனா மதிக்கமாட்டேன்! இந்த அழகுல கண்ணால கேள்வி கேட்டா… நாங்க பதில் சொல்லிடுவோமா!’ என நினைத்து எதிர் பார்வை பார்த்தாள் நித்தி,.

         அவளின் பார்வையில் இருந்து அவள் மனதை அறிந்தவனோ,  ‘உன்கிட்ட பதிலை வாங்காம உன்னை விடமாட்டேன்!’ என தன் எண்ணத்தை அவளுக்கு தெரிவித்து, அங்கிருந்து செல்ல விருப்பமற்று அப்படியே நின்றான்.

அவனுக்கு ‘அவள் கடந்த இரண்டாண்டுகளில் ஒரு நொடியாவது தன்னை பற்றி ஏதாவது எண்ணியிருப்பாளா?’ என்பதை அறிய ஆவல் அதிகமாக இருந்தது.

‘அவளின் வாழ்க்கையில் தனக்கு இந்த நொடிவரை ஒரு சிறு இடம் கூட இல்லை! தன்னை அவள் ஒரு பொருட்டாய் நினைத்துப் பார்த்திருக்க மாட்டாள்!’ என்பது நிச்சயமாக இவன் அறிந்த ஒன்றுதான்! இருந்தாலும் ஆசை யாரை விட்டது?

பல நேரங்களில் நாம் நம்அறிவு சொல்லும்படி நடந்திருந்தால் எவ்வளவோ அனர்த்தங்களை தடுத்திருக்கலாம். ஆனால் ஆசைக்கொண்ட மனதின் அறிவு, எங்கே வேலை செய்கிறது?

விழிவழியே விசாரணையை தொடுத்த தந்தையோ,தற்காலிகமா விசாரணையை தள்ளிவைத்து மகனுடன் விளையாட அங்குள்ள பூங்காவிற்கு செல்ல,விடையளிக்க மறுத்த தாயோ செல்லும் அவர்களை தடுக்கும் வழியறியாது தனித்து நின்றாள்.

 

எபி 3

           மாலையில் தாயும் தந்தையும் சேர்ந்தே வீடு வருவது, அவர்களின் வழக்கம்தான் எனினும்,அன்று தாய்க்கு மறைத்து, ஒன்றை தந்தைக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த நித்தி, தந்தையை பேசி மூலம் தொடர்பு கொண்டாள்.

        அவள் சொல்ல விழையும் விடயம் அவளின் தந்தைக்கு, சொல்ல வேண்டியவனே எப்போதோ அதை சொல்லிவிட்டான் என்பதை இவள் அறிவாளா?

       “அப்பா… அப்பா! இங்க அந்த ‘கரிசட்டி’ வந்திருக்கு பா. இப்போதான் நம்ம வீட்டுக்கு வந்து என்னோட பேசிட்டு, நம்ம சரண் கூட விளையாட போறேன்னு வெளிய பார்க்குக்கு கூட்டிட்டு போயிருக்கு. நீங்க இன்னைக்கு அம்மாவ கூட்டிட்டு வராம சீக்கிரம் இங்க வாங்கப்பா. அம்மா வருவதற்குள்ள நாம அதை இங்க இருந்து ஓட்டி விட்டுடலாம்” எனப் படபட பட்டாசாய் பொறிந்தாள் நித்தி.

  “என்னடாம்மா… என்ன சொல்ற?அது என்ன கரிசட்டி! யாருடா அது?” என அவளின் தந்தையின் கேள்வியிலும் உஷாராகாத நித்தி,

        “அதான்-பா அந்த சிடுமூஞ்சி!” என்று அப்போதும் வந்தவனின் நிஜ பெயரை சொல்லாது, அவனுக்கு இவள் வைத்த பட்டப்பெயர்களையே சொல்லிக் கொண்டிருந்தாள்.

         என்ன நித்தி! லஞ்ச் முடிந்து இங்க பாங்க்ல கஸ்டமர்ஸ் வர ஆரம்பிச்சிட்டாங்க-மா. இப்ப போய் எதை எதையோ சொல்லி, விளையாடிட்டு இருக்க. ஒழுங்கா சொல்ல வந்ததை சொல்லுடாம்மா. எனக்கு நிறைய வேலை இருக்கு” என தன் தந்தை வழக்கத்திற்கு மாறாய் சலித்துக்கொள்ளும் போதுதான் தன் தவறை உணர்ந்தாள் நித்தி.

       ஆத்திரத்திலும் அவசரத்தும் தானே நம் மனதினுள் உறைந்திருப்பவை எல்லாம் உருகி, வெளியே வருகின்றது!‘

         ஐயையோ…. நான் மனசுல அவனுக்கு வச்ச  பெயர்களை எல்லாம் அப்பாகிட்ட உளறிட்டேனே…! இப்போ என்ன சொல்லி சமாளிக்கறது!’ என முதலில் திகைத்த நித்தி,

  “அப்பா… பக்கத்து வீட்டுக்காரங்க வந்திருக்காங்க-பா.” என மிக மெதுவாக சொன்னாள்.

   “யார்டா… யாரோட வீட்டுக்காரங்க வந்திருக்காங்க!”என தெரிந்தோ தெரியாமலோ,அப்போதும் தவறாகவே ஈஸ்வரன் கேட்க,

     அப்பாவின் இந்த கேள்வியில் அதிர்ந்த நித்தி, ”சஞ்சய் வந்திருக்காங்க-பா!” என சொல்ல வந்ததை ஒரு வழியாய் சொல்லி முடித்தாள்.

         “யாரு… சஞ்சுவா வந்திருக்கான்..? அவன் கூட வேற யார் யார் ம்மா வந்திருக்காங்க?” என வீட்டிற்கு வந்த விருந்தாளிகளை குசலம் விசாரிப்பதை போல குஷியாக விசாரித்தார்.

            ஏற்கனவே தனக்கு வேண்டியவர் அவனுடன் வராததால் கோபத்தில் இருந்தவள் அப்பாவின் விசாரணையில் இன்னும் கடுப்பாகி, “ம்ம்ம்ம்…. அவன் கூட யாரெல்லாம் வந்திருக்காங்கன்னு எனக்கு தெரியாது-பா. யார் வந்தாலும் வரலைன்னாலும் நமக்கென்ன-பா வந்தது?” என சிடுசிடுத்தாள்.

      “அவனை நான் எப்படி வேணும்ன்னாலும் சொல்லலாம்.நீ எப்படி அவன்னு சொல்லலாம்?என்னடாம்மா! புது பழக்கமெல்லாம் கத்துட்டு வரீங்க போல இருக்கு!” என அவளின் ‘அவன்’ பதத்தால், ஒரு தந்தையாய் கண்டித்தார்.

   “ஸாரிப்பா!  அவர்…ன்னு சொல்லும் போது ‘டங்கு ஸ்லிப்’ ஆயிடிச்சி! இப்ப நீங்க இங்க வரீங்களான்னு கேட்டேனே…. அதுக்கு முதலில் பதிலை சொல்லுங்க. அப்புறம் என்னை திட்டலாம்.”

            “இல்லடாம்மா! இப்போ இங்கயிருந்து என்னால நகர கூட முடியாதே–டா. பாத்துக்கலாம். எது வந்தாலும் நாம பாத்துக்கலாம். நான் எப்போதும் வரும் நேரத்துக்கே அம்மாவ கூட்டிக்கிட்டே வரேன்.கொஞ்சம் வேலை இருக்கு நித்தி. அதனால இப்ப போனை வைக்கறேன்-டா?” என வேகமாக கூறி மகளிடமிருந்து தப்பித்தால் போதுமென பேசியை துண்டித்தார்  ஈஸ்வரன்.

       ‘என்ன இவர் மேட்டரோட சீரியஸ் தெரியாம பட்டுன்னு பேசி, பொட்டுன்னு போனை வச்சிட்டார்! கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாது இந்த பரமுக்கு. எல்லாம் மிசஸ்.பரமு கொடுக்குற இடம்.’ என மனதினுள் தாயையும், தந்தையும் தாளித்துக்கொண்டிருந்தாள் நித்தி.

          அங்கே போனை வைத்த ஈஸ்வரனும் மனதினுள் தாளித்துக் கொண்டுதான் இருந்தார். ஆனால்… வேறொருவனை! அப்போதும் திருப்தியடையாத அவர், போனில் அவனை அழைத்து,

       “டேய்! இங்க வரப்போறேன்னு சொன்ன. ஆனா எப்போ வருவேன்னு சொல்லலை. இன்னைக்கு காலையில்தான் நீங்க இங்க இந்த வாரம் வரப்போறீங்கன்னு தகவல் கிடைத்தது.உடனே உன்னை போன்ல பிடிக்க நினைத்தா  லைன் கிடைக்கலை.சரி நைட் பேசிக்கலாம்னு இருந்தேன்.ஆனா நீ என்னடா இப்ப இப்படி திடுதிப்புன்னு இன்னைக்கே வந்து குதிச்சிருக்க! இதெல்லாம் நல்லாவாடா இருக்கு? இப்ப, சீனியும் பத்துவும் கூட வரலையா? அவங்க எப்போ வராங்க?” எனக்கேள்வி மேல் கேள்வி கேட்டு எதிர் முனையில் இருப்பவரை துளைத்தெடுத்தார்.

         ‘ஆங்… நான் வெளிய வந்த ஐந்தே நிமிஷத்துல மாமாக்கு நியூஸ் போயாச்சா?என் ‘குஷ்புஇட்லி’ செம்ம பாஸ்ட் தான்!’ என எண்ணியவன்,” நான் ஈவ்னிங் உங்களுக்கு சப்ரைஸ் கொடுக்கலாம்ன்னு தான் சொல்லலை மாமா. அதுக்குள்ள உங்க பொண்ணு உங்ககிட்ட சொல்லியாச்சா? அம்மாவும், அப்பாவும் இப்ப என்கூட வரலை அவங்க நம்ம ஊரில் இருக்கும் கோவிலுக்கு போயிட்டு, நாளை மறுநாள் தான் வருவாங்க மாமா” என்றது எதிர்முனை.

         “சஞ்சு! நானும், உன்னோட அத்தையும் வரவரைக்கும் நீ நித்திகிட்ட எதையும் சொல்ல வேணாம். உங்க அத்தைகிட்ட கூட நான் எதையும் சொல்லலை.சீனியும், பத்துவும் வந்ததும் நாம விஷயத்தை பேசிக்கலாம் என்ன…?”

    “அப்போ இன்னும் ரெண்டு நாள் காத்துட்டு இருக்கனுமா நான்! அதெல்லாம் முடியாது.சாயங்காலம் நீங்க வந்ததும், நாம விஷயத்தை பேசிடலாம்.” எனப்பிடிவாதமாய் கூறினான் சஞ்சய்.

       “டேய்… ஏன்டா இவ்வளவு அவசரப்படற! ஆரம்பத்திலேயே நித்தி வேணாம்ன்னு சொல்லிட்டா அப்புறம் நம்மால ஒன்னும் பண்ண முடியாது. அவ யார் சொன்னா கேப்பாளோ… அவங்க வரட்டும் அப்புறம் நாம இந்த விஷயத்தை ஆரம்பிக்கலாம். நான் சொல்றதை கேளுடா!” என்று ஈஸ்வரன் சொல்ல,

          “எல்லாம் அவங்க கொடுத்த இடம் தான்! எப்பவும் இவ பேச்சுக்கு அவங்களுக்கு தலையாட்டி தான்  வழக்கம். இப்ப மட்டும் இவளை என்ன சொல்லிடப் போறாங்க! அவங்ககிட்டயும் இவ ரெண்டு வருஷமா பேசாம தானே இருக்கா? இப்ப மட்டும் அவங்க சொன்னா கேட்டுப்பாளா!” என சஞ்சய் கேட்டான்.

    “உன்னோட அவசரத்துக்கு இங்க ஒன்னும் வேலை நடக்காது. இவ்வளவு நாள் பொறுத்திருந்ததை போல இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துகிட்டு தான் இருக்கனும்.நான் ஈவ்னிங் வரும் போதே அத்தைகிட்ட நீ வந்திருக்கேன்னும், மத்தவங்களும் இங்க வரப் போறாங்கன்னும் சொல்லி அழைச்சிட்டு வரேன். அப்புறம் மீதிய பாத்துக்க வேண்டியது உன்னோட சாமார்த்தியம்” எனப் பெரும் பொறுப்பை சஞ்சயின் தலையில் கட்டினார் ஈஸ்வர

      “அதெல்லாம் எங்க அத்தையை சமாளிக்க எங்களுக்கு நல்லாவே தெரியும். அத்தைப்பொண்ணை சமாளிக்கறதை நினைச்சா தான், லைட்டா பாடி ஷிவர் ஆகுது!” என்றான் பாவமாய்.

            “இதையெல்லாம் நீ முன்னாடியே யோசிச்சியிருக்கனும் மாப்பிள்ளை! ஆல்ரெடி வச்சிகிட்ட ஆப்புக்கு இப்போ ஒன்னும் பண்ண முடியாது. அடியோ… ஓதையோ எது கிடைச்சாலும் ஏத்துக்க வேண்டியது தான். வேற வழியே இல்லை!” என்று மேலும் அவனை நடுங்கவைத்துவிட்டே போனை வைத்தார் ஈஸ்வரன்.

    தன்னுடைய உரையாடலை முடித்துக்கொண்டு பணியில் ஈடுபட்ட ஈஸ்வரனுக்கு அடுத்த ஒரு மணி நேரம் வரை மூச்சு விடுவதற்க்கு கூட நேரமின்றி போனது.

     அதன் பிறகு, அவருக்கு கிடைத்த சிறிது ஓய்வையும் அவரின் செல்ல மகள், பேசியில் பேசிய பேச்சு களவாடி விட்டது.அப்போதுதான்  அவசரத்தில் அவர் கவனிக்காது விட்ட, ‘கரிசட்டி!’ ‘சிடுமூஞ்சி!’ இவ்விரண்டும் அவர் கண்முன்னே வந்து நின்றது.

         ‘நித்திம்மா… உனக்கு என்னோட மாப்பிள்ளை முகம், ‘கரிசட்டி’ போலவா-டா இருக்கு! என்னதான் அவன் கொஞ்சம் கறுப்புன்னாலும், அதுக்காக ‘கரிசட்டியா?!’

       ‘சஞ்சு… இந்த பெயர் உனக்கு தேவையாடா? நாளைக்கு என்ன வேணும்ன்னாலும்  நடக்கலாம்ன்னு முன்னாடி நீ உஷாரா ஒழுங்கா இருந்திருந்தா, இந்த பெயரெல்லாம் உனக்கு கிடைச்சியிருக்குமா!’

         ‘அய்யோ! என்னால சிரிப்பை அடக்கமுடியலையே.  நீ காட்டும் கெத்துக்கு, இந்த பெரு ஹாஹா… மரண அடிடா மாப்ள!’ என மனதினில் தன் மகளிடம், மாப்பிள்ளையிடமும் பேசிமுடித்த ஈஸ்வரன்,

          இன்னும் சிறிது நேரத்திற்கு பிறகு,நேரில் தன் மனையாளிடம் எப்படி பேச்சை தொடங்குவது?. என்று எண்ணலானார்.

       தன் மாமனிடம் பேசி முடித்த சஞ்சய்யும், அதே தான் நினைத்துக்கொண்டிருந்தான்.’அத்தையை எப்படியாவது பேசி சம்மதிக்க வச்ச்சிடலாம், ஆனா இந்த குஷ்பு இட்லியை தான் எப்படி கரைட் பண்றதுன்னு தெரியலை! பேசி கரைட் பண்ற மாதிரியா நாம முன்னாடி அவ கிட்ட நடந்தோம்! ஒன்னும் பேசவே முடியாதபடில அப்ப அவகிட்ட அடிக்கடி வாயவிட்டு வச்சியிருக்கோம். அவ நம்மகிட்ட இப்ப சாதாரணமா பேசறதே ரொம்ப கஷ்டமா இருக்கும் போல! இதுல, நான் என்னோட ஆசைய அவகிட்ட எப்படி சொல்றது? அவ அதை எங்க சரியாய் புரிஞ்சிக்கறது!’

          ‘இப்ப உங்கண்ணுக்கு குஷ்பு இட்லியா தெரியறவ, முன்னாடி ஏன்-பா வேற மாதிரி தெரிந்தா? இனி நீ செத்தடா சஞ்சய்! என்னென்ன பிலிம் காட்டின அவகிட்ட! இப்ப அவ காட்டப்போறா. நல்லா பாத்து ரசி!’ என அவன் மனசாட்சி வேறு அவனை வெறுப்பேற்றியது.

           இப்படித்தான் உள்ளே இருந்துக்கொண்டு உடையவரின் தவறை அடிக்கடி சுட்டிக் காட்டிக்கொண்டே இருப்பதால் தான், இதை அதான் மனசாட்சியை, இப்போது அதிகமானவர்கள் தன்னுள் வைத்துக் கொள்வதில்லை போல!

            ஒரு உயிர், தன்னுடைய வளமான வாழ்க்கையில் முதலடியை இன்று எடுத்து வைக்க போவதை எண்ணி ஆனந்தமாய் அந்திமாலைக்கு காத்திருக்க, மற்றொரு உயிரோ… இங்கே வந்தமர்ந்துக்கொண்டு தன்னுயிரை வாங்கும் அந்த இன்னொரு உயிரை இங்கிருந்து அனுப்ப வழிப்பார்த்து மாலைக்கு காத்திருந்தது.

          இப்படி ஏதோ ஒருஎதிர்பார்ப்பில், ‘எப்போது வரும்…? என்ற ஆவலில் இரு உயிர்கள் காத்துக்கொண்டிருந்த மாலையும், தன்னுடன் மாற்றத்தை அழைத்துக்கொண்டு வந்தே விட்டது.அம்மாற்றம்… யாரின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவரப்போகிறது!?

      வீட்டிற்கு வரும் வழியிலேயே ஈஸ்வரன் தன் மனைவியிடம் சஞ்சய் வந்திருக்கிறான் என்றும், அவனின் இப்போதைய மாற்றத்தையும் ஆசையையும் கூறி, ‘அடுத்து என்ன செய்யலாம்?’  என்ற ஆலோசனையையும் கேட்டார்.

     அதற்கு ஈஸ்வரி, ”அவன் மட்டும் ஆசைப்பட்டா போதுமாங்க? இப்படித்தான் முன்னாடியும் ஆசைப்பட்டாங்கன்னு நாம சேர்த்து வச்சது என்ன ஆச்சு? இப்ப அவன் ஆசை மட்டும் போதாதுங்க. எல்லோருடைய ஆசையும்,முக்கியமா ஆசியும் வேணும்ங்க.அப்ப தான் இனி எந்த பிரச்சனையும் வராதுன்னு நான் நினைக்கிறன்.போன தடவை நாம பட்டதே போதும்! அதனால நாம இழந்ததும் போதும்!” என்று தன் முடிவை கூறினார்.

        “ஈஸ்வரி! எதையும், எதையும் இணைச்சி முடிச்சி போடற நீ. இயற்கையா நடந்த இழப்புக்கு நாம மத்தவங்களை குறை சொல்லக்கூடாது. போனதையே நினைத்துக்கொண்டிருந்தால், நாம இங்க வாழமுடியாது.” எனக்கண்டித்தார் ஈஸ்வரன்.

            “இயற்கையா நடந்த இழப்புக்கு மத்தவங்களை போல, நான் யார்  மேலயும் பழிப்போடலங்க! புரிஞ்சிக்காம விட்டுட்டுப் போனவங்களை பத்தி தான் நான் கவலைப்படறது.மறுபடியும் சேர்ந்து, மீண்டும் ஒரு பிரிவுன்னா என்னால தாங்கவே முடியாது. அதான் சேர்வதற்கு முன்பே எல்லாத்தையும் தெளிவா பேசிக்கலாம்ன்னு சொல்றேன்.”

           “சஞ்சய் ஆசை எந்த தடங்கலும் இல்லாம சுமுகமா நிறைவேறிட்டா, என்னைவிட சந்தோஷப்படறவங்க வேற யார் இருக்க போறாங்க? இது மட்டும் நடந்துட்டா ‘சரணின் எதிர்காலத்தை பற்றிய என்னோட பயமும் போகும்” என்று நான்கையும் ஆராய்ந்தறிந்து அவருக்கு பதிலளித்தார் ஈஸ்வரி.

          “சஞ்சய் ஆசை, உன்னோட பயம்,சரணின் எதிர்காலம் இப்படி எதையெதையோ யோசிக்கற நீ, இதில் உன் பொண்ணோட விருப்பம் முக்கியம்னு ஏன் யோசிக்க மாட்டேங்கற! அவ இதுக்கு சம்மதிப்பாளா? அவளோட சம்மதம்தான் இங்க ரொம்ப முக்கியம்” எப்போதும் போல் இப்போதும் தன் மகளின் விருப்பமே முக்கியம் என்றார் ஈஸ்வரன்.

         “இதில் அவளோட விருப்பத்தை கேட்காம நாம எப்படிங்க முடிவெடுக்க முடியும்? நமக்கு பிறகு சரணுக்கு இவள் துணையா இருப்பா. ஆனா, இவளுக்கு யார் இருப்பா? இந்த கவலை எனக்கு இல்லைன்னா நீங்க நினைக்கறீங்க? சரணுக்காக அவள் தனியாவே இருந்துடுவாளோன்னு நான் எத்தனை நாள் தவிச்சிருக்கேன்னு தெரியுமா உங்களுக்கு? என்னை என்ன அவ்வளவு சுயநலவாதியாவா நினைச்சிட்டீங்க!” என வேதனையுடன் கேட்டவர் மேலும்,

        “உங்களுக்காவது அவ மகள். ஆனா, எனக்கு அவள் அம்மாங்க! இப்பல்லாம் அவ என்னை எப்படி பொத்தி பொத்தி பாத்துகறான்னு எனக்கு தெரியாதுன்னா நீங்க நினைக்கறீங்க?”

     “ரெண்டு வருஷத்திற்கு முன்னாடி வரைக்கும்தான் நான் அவளுக்கு அம்மாவா இருந்தேன். அது கூட பெயருக்குத்தான் நான் அவ அம்மாவா இருந்திருக்கேன். ஆனா இப்ப அவதான் எனக்கு அம்மாவா இருக்கா. அவ இனியாவது சந்தோஷமா பழைய நித்தியா கவலை இல்லாம இருக்கனுங்க.”

         “நீங்க சொன்னது மட்டும் நடந்தா, அவ கண்டிப்பா நல்லா இருப்பாங்க. அவளை தலையில் தூக்கி வச்சிக் கொண்டாடறவங்க அங்க இருக்காங்க. அவங்ககிட்ட போய்ட்டா அவளுக்கு என்னோட நினைப்பு கூடவராது.” என முதலில் தன் மகளை பெருமையாய் பேசிக்கொண்டிருந்த ஈஸ்வரி, பிறகு ஒரு தாய்க்கே உரிய பொறாமையில் பேசினார்.

        மனைவியின் பேச்சில் இருந்த உண்மையை உணர்ந்தவரும்  அதை ஆமோதிப்பதை போல சிரித்தார்.

         “அப்ப நாம இப்போதைக்கு எதையும் ஆரம்பிக்கவேணாம். எல்லோரும் வந்ததும் பொறுமையா பேசிக்கலாம்ன்னு சஞ்சுகிட்ட சொல்லிடட்டுமா ஈஸ்வரி?”

      “ஆமாங்க, அதான் சரியா வரும். நாம எதை செய்தாலும் எல்லோரும் கலந்து ஆலோசித்து இந்த முறை, பொறுமையா செய்யலாம்” என முடித்தார் ஈஸ்வரி.

 

Categories
On-Going Novels

வாழ்வே நீதானடி! அத்தியாயம் -11

அத்தியாயம் – 11

அங்கிருந்த இரு நாட்களிலும் பெற்றோரிடம் அதிகம் பேசிக் கொள்ளாமல் தனித்தே தனது யோசனையிலேயே மூழ்கி இருந்தான். தம்பியிடம் மட்டும் அன்னைக்கு எப்படி விஷயம் தெரிந்தது என்று கேட்டறிந்து கொண்டான்.

என்ன முயன்றாலும் இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்பதற்கான தீர்வு கிடைக்கவில்லை. அவள் இதை எப்படி எதிர்கொள்வாள் என்று எப்படி யோசித்தாலும் புரியவில்லை. நேரத்தை நெட்டி தள்ளிவிட்டு அங்கிருந்து கல்லூரிக்கு கிளம்பினான். கிளம்பு போது கூட மறைமுகமாக தனது சத்தியத்தை மறந்து விடாதே என்று கூறினார்.

ஹாஸ்டல் சென்று இறங்கியவனின் முகத்தைக் கண்டு திவாகரும், சேகரும் அதிர்ந்து போயினர்.

“மச்சி என்னடா உடம்புக்கு முடியலையா? என்னவோ போல இருக்கியே?”

பையை ஓரமாக வைத்து விட்டு கட்டிலில் அமர்ந்தவன் சலிப்புடன் “மச்…ஒன்னுமில்லடா” என்றான்.

“நிறைய வேலையாடா? ரொம்ப டயர்ட்டா தெரியிற…கொஞ்சம் நேரம் படுத்து தூங்கிட்டு அப்புறமா படிக்க ஆரம்பிடா” என்றான் சேகர்.

அதற்க்கு பதிலேதும் பேசாது இறுக்கி கண்களை மூடி படுத்துக் கொண்டான். அவனது குடும்ப சூழ்நிலையை எண்ணியும், வேலையின் காரணமாகவும் சோர்வாக தெரிகிறான் என்றெண்ணிக் கொண்டனர் நண்பர்கள்.

தான் வந்ததை ஹரிணிக்கு போன் மூலம் தெரிவிக்காது விட்டான். கஷ்டப்பட்டு கவனத்தை படிப்பில் செலுத்திக் கொண்டிருந்தான். தேர்வு நேரமாக இருந்ததால் அவளும் படிப்பில் கவனமாக இருந்ததால் முதலில் அவனிடமிருந்து போன் வராததை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

நாட்கள் ஓடியது அவளது கண்ணில் படாமலே தானுண்டு படிப்புண்டு என்று சுற்றிக் கொண்டிருந்தான். அவன் ஊரிலிருந்து வந்த மூன்றாவது நாள் மாலை நேரம் ஹரிணி அவனது மௌனத்தை கண்டு கொண்டாள்.

‘என்ன ஹச்சு ஊருக்கு போயிட்டு வந்து போன் கூட பண்ணல? அப்படி விழுந்து விழுந்து படிக்கிறானா?’ என்று எண்ணி அவனது போனுக்கு முயற்ச்சித்தாள்.

ரிங் போய் கொண்டிருந்ததே தவிர எடுப்பதற்கான அறிகுறியே காணவில்லை. யோசனையுடன் ஹர்ஷாவின் எண்ணை விட்டு திவாகரின் எண்ணுக்கு அழைத்தாள்.

“டேய் திவா! எங்கடா உன் பிரெண்ட்? போனும் பண்ணல நான் அடிச்சாலும் எடுக்கல?” என்றாள் கடுப்பாக.

“இங்கே தான் இருக்கான் ஹரிணி. எக்ஸாம் வருதில்ல படிச்சிட்டு இருக்கான்” என்றான்.

அதைக் கேட்டதும் கடுப்பானவள் “ஏன் உனக்கும், எனக்கும் எக்ஸாம் இல்லையா? அவனுக்கு மட்டும் தான் நடக்குதா? கடுப்பேத்தாம அவன் கிட்ட போனை கொடு” என்று அதட்டினாள்.

அவனோ என்னிடம் கொடுக்காதே என்று மறுத்தான்.

இதை உணர்ந்து கொண்டவளோ “திவா! அவன் இப்போ போனை வாங்கலேன்னா நான் ஏறி குதிச்சு உங்க அறையில் வந்து நிப்பேன்னு சொல்லு” என்றாள் மிரட்டலாக.

அவள் சொன்னதைக் கேட்டு கொண்டிருந்தவன் அவசரமாக போனை வாங்கி “என்ன ஹனி? எதுக்கு படிக்கிறப்ப டிஸ்டர்ப் பண்ற” என்றான் ஹர்ஷா.

அவனது குரலில் தெரிந்த தடுமாற்றதிலேயே விஷயம் ஏதோ இருக்கிறது என்பதை உணர்ந்தவள் “புக்கை மூடி வச்சிட்டு உடனே கிளம்பி லைப்ரரிக்கு பின்னாடி வா” என்று கூறி அவனது பதிலை கேட்காமலே போனை அனைத்தாள்.

கையிலிருந்த போனையே வெறித்துக் கொண்டிருந்தவன் நிலைமை கையை மீறி போய் கொண்டிருப்பதை உணர்ந்து ‘இனி சொல்ல வேண்டிய கட்டத்துக்கு வந்து விட்டதை அறிந்து கொண்டான்’ பெருமூச்சுடன் எழுந்து சட்டையை அணிந்து கொண்டான்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்த திவாகர் “என்னடா உங்க ரெண்டு பேருக்குள்ளும் ஏதாவது பிரச்சனையா? நீ கொஞ்ச நாளா சரியில்லையே” என்றான்.

“வந்து சொல்றேன்-டா” என்று கூறி விட்டு கல்லூரி லைப்ரரி நோக்கி நடக்க தொடங்கினான்.

அவனுக்கு முன்பே அங்கு வந்து காத்துக் கொண்டிருந்தவள் அவசரமாக அவன் அருகில் வந்து கையைப் பிடித்துக் கொண்டு “ஹப்பா மூணு நாளாச்சு ஹச்சு. இதுக்கே இப்படி இருக்கே எக்ஸாம் முடிஞ்சு நீ போன பிறகு எப்படி சமாளிக்க போறேன்னு தெரியல” என்றாள் அவன் தோளில் சாய்ந்து கொண்டு.

அவளது பேச்சைக் கேட்டு உள்ளுக்குள் பதறி போனவன் ‘மூணு நாள் பார்க்காமல் இருந்ததற்கே இப்படி பேசுகிறவள் தான் சொல்லப் போவதை எப்படி எடுத்துக் கொள்வாள்’ என்று பயப்பட ஆரம்பித்தான்.

அவனது மௌனத்தைக் கண்டு மெல்ல நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள் “என்னடா ஏன் ஒரு மாதிரியா இருக்க” என்றாள்.

மெல்ல அவளிடமிருந்து கைகளை உருவிக் கொண்டவன் “எக்ஸாமுக்கு ஒழுங்கா படிக்கிறியா ஹரிணி” என்று கேட்டான்.

“ம்ம்..அதை விடுடா! நீ சொல்லு? ஊர்ல அப்பா, அம்மா எல்லாம் எப்படி இருக்காங்க? நீ ஏன் போன்  பண்ணவே இல்ல” என்றாள்.

“எல்லோரும் நல்லா இருக்காங்க” என்றான் சோர்வாக.

அப்போது தான் அவனை ஊன்றி கவனித்தவள் அவனது விலகலான நடத்தையும் கவனித்தாள்.

அவன் முன்னே சென்று நின்று “சொல்லு ஹர்ஷா! என்ன பிரச்சனை?” என்றாள் கைகளை கட்டிக் கொண்டு.

அவளை நிமிர்ந்து பார்க்கவே சங்கடப்பட்டுக் கொண்டு அவளைப் பார்த்தவன் “நான் சொல்றதை சரியா எடுத்துக்கோ ஹரிணி” என்றவனை கையை நீட்டி இடைமறித்தவள் “சொல்ல வேண்டியதை சொல்லு ஹர்ஷா” என்றாள் இறுகிய குரலில்.

அவள் அப்படி சொன்னதும் மேலும் அவனது நிலை மோசமானது. பேச ‘நா’ எழவில்லை…இதமாக காதற்று வீசிக் கொண்டிருந்த போதும் அவனுக்கு வியர்த்தது. தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டது போல் தவித்தான். எவரிடமும் பயமில்லாமல் பேசவும் சண்டயிட முடிந்தவனால்அவள் முன்பு நிற்கவே பயந்தான்.

சிறிது நேரம் பொறுத்து பார்த்தவள் வேகமாக சென்று அவன் சட்டையின் காலரை பற்றி “இப்போ சொல்ல போறியா இல்லையா?” என்றாள் கோபத்துடன்.

அதற்கு மேலும் அவளது பொறுமையை சோதிக்க மனமில்லாமல் “நம்ம விஷயம் அம்மாவுக்கு தெரிஞ்சிடுச்சு ஹரிணி” என்றான் மெல்லிய குரலில்.

அவனது சட்டையிலிருந்து கையை எடுத்தவள் அவனை கூர்ந்து பார்த்துக் கொண்டே “ஒ…அதுக்கு” என்றாள் கேள்வியாக பார்த்தபடி.

அவள் முகம் பார்க்காது “என் கிட்ட சத்தியம் வாங்கிட்டாங்க”.

அவளோ குழப்பமான சிந்தனையுடன் “புரியல…சத்தியமா? எதுக்கு?”

“அவங்க அனுமதி இல்லாமல் நான் எந்த முடிவும் எடுக்க கூடாதுன்னு சத்தியம் பண்ண சொன்னாங்க. கல்யாண விஷயத்தில் அவங்க அனுமதியில்லாமல் முடிவு பண்ணக் கூடாதாம் ” என்றான்.

அவன் சொன்னதில் இருந்த அர்த்தத்தை சற்று நேரம் உள் வாங்கியவள் “சத்தியம் பண்ணுறதுக்கு முன்னாடி என்னை கேட்கனும்னு தோணலையா?” என்றாள் இறுகிய குரலில்.

“இப்போ இருக்கிற சூழ்நிலையில் காதலா? குடும்பமான்னு பார்த்தா குடும்பத்துக்கு தானே முக்கியத்துவம் கொடுக்க முடியும். அதுதான் சத்தியம் பண்ணிட்டேன். அதனால தான் உன்னை கேட்கல’ என்று கூறி அவள் தலையில் தணலை அள்ளிக் கொட்டினான்.

அதுவரை பொறுமையாக இருந்தவள் “கேட்டு இருக்கணும்! இதுல சம்மந்தபட்டது நீங்க மட்டுமில்ல நானும் தான். சத்தியம் பண்ணுவதற்கு முன்னாடி என்னை கேட்டு இருக்கணும். இது நீயும் உன் குடும்பமும் மட்டும் சம்மந்தபட்டது இல்லை” என்றாள் ஆத்திரமாக.

“இல்ல ஹரிணி!” என்று ஆரம்பித்தவனை தடுத்தவள் “அதெப்படிடா திடீர்ன்னு குடும்ப பாசம் வந்துச்சு. என்னை காதலிக்க ஆரம்பிக்கும் போது, ஹாஸ்டல் சுவரேறி குதிக்கும் போது உனக்கு குடும்பம் இல்லாம அனாதையாவா இருந்த?” என்று கேட்டவளின் கழுத்தை பாய்ந்து பிடித்திருந்தான்.

“இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினாலும் பொல்லாதவனாகிடுவேன்” என்றவனின் கையைப் பிடித்து தட்டி விட்டு “இப்போ மட்டும் நல்லவனாவா இருக்க” என்றவள் அங்கிருந்த கல்லில் சென்று அமர்ந்து கொண்டாள்.

தான் அவளை காயப்படுத்தி விட்டதை உணர்ந்து கொண்டவன் அவசரமாக சென்று அவள் அருகில் அமர்ந்து “என்னோட சூழ்நிலையை புரிஞ்சுக்கோ ஹரிணி. எனக்கு அந்த நேரத்தில் குடும்பம் தான் முக்கியமா பட்டது. அதோட அப்பாவோட நிலைமையும், குடும்பம் இப்போ இருக்கிற சூழ்நிலையும் என்னோட காதலை விட்டுக் கொடுக்க சொன்னது” என்றான்.

வெறுப்புடன் அவனைப் பார்த்தவள் “எப்படி-எப்படி? உன்னோட காதலை குடும்ப சூழலுக்காக விட்டுக் கொடுத்துட்ட. ஆனா, உன் காதல் உனக்கு மட்டும் சொந்தமானதா இருந்தா நீ செய்ததில் தவறில்லை. நானும் சம்மந்தபட்டிருக்கேன். எனக்கும் உயிரும், உணர்வும் இருக்கு. என்னோட சம்மதமில்லாமல் நம்ம காதலை எப்படி நீ விட்டுக் கொடுப்ப?” என்றாள் கத்திப் போன்ற குரலில்.

அவள் விடாது பேசுவதைக் கண்டு எரிச்சலைடைந்தவன் “இவ்வளவு தூரம் சொல்றேன் இதை கூட உன்னால புரிஞ்சுக்க முடியலையா? எங்க அப்பா உடல்நிலை பாதிக்கப்பட்டதும் படிப்பை விட்டுட்டு போக இருந்தவனை எங்க அம்மாவோட தைரியம் தான் இன்னைக்கு என்னை இங்கே உட்கார வச்சிருக்கு. அப்படி இருக்கும் போது அவங்க கேட்பதற்காக காதலை விட்டுக் கொடுத்தா என்ன தப்பு?” என்றான் ஆவேசமாக.

அதைக் கேட்டதும் மிகுந்த கோபம் அடைந்தவள் எழுந்து அவன் முகத்தில் ஓங்கி அறைந்து “என் பின்னாடி சுத்தி ஹாஸ்டல் சுவரேறி குதிச்சு காதலை சொல்லும் போது இந்த குடும்பம் எங்கே போச்சுடா? அப்பவும் குடும்பம் இருந்துது தானே?” என்றாள்.

அவளது கோபத்தின் அளவைக் கண்டு சற்று பணிந்தவன் “புரிஞ்சுக்கோ ஹரிணி…என்னோட சூழ்நிலை தான் எல்லாத்துக்கும் காரணம்” என்றான்.

அவன் மறுபடியும் மறுபடியும் சூழ்நிலையை காரணமாக காட்ட ஆத்திரமடைந்தவள் அவன் கன்னத்தில் மாறி-மாறி அறைந்து “அப்போ கல்யாணம் பண்ணி இருந்தாலும் சூழ்நிலை சரியில்லேன்னா விட்டு-விட்டு போயிருப்ப…அப்படித்தானே! உனக்கெல்லாம் எதுக்குடா காதல். போடா போ! போய் உங்கம்மா ஒரு கோலிசோடா விக்கிற பெண்ணா பார்ப்பாங்க, போய் கட்டிக்கோ” என்று ஆத்திரம் தீர அவனை அடித்தாள்.

அதைக் கேட்டதும் பொறுமை இழந்தவன் “என்னடி சொன்ன? என் குடும்பத்தை பார்த்தால் உனக்கு கிண்டலா இருக்கா? நல்ல நேரம்-டி இப்போவே உன் குணம் தெரிஞ்சு போச்சு. நான் தப்பிச்சேன்” என்றான்.

அவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்தவள் கொஞ்சமும் அசராது “தெரிஞ்சு போச்சில்ல இடத்தை காலி பண்ணு. காத்தாவது வரட்டும்” என்றாள் ஆத்திரமாக.

அவனுக்கு தான் சொல்ல வந்த வார்த்தைகளை எல்லாம் சொல்ல முடியாமல் அதன் அர்த்தங்கள் மாறி போனதில் அவளின் அதிக கோபத்துக்கு ஆளானான். தான் செய்வது தவறு என்பதால் அவள் பேச்சை எல்லாம் கேட்டுக் கொண்டவன் ஒரு கட்டத்துக்கு மேல் அவளது கைகளைப் பற்றிக் கொண்டு “ஹரிணி! உன்னோட கோபம், வருத்தம் எல்லாமே எனக்கு புரியுது. எதுவுமே இதோட முடிஞ்சு போயிடல. நிச்சயமா எங்க அம்மா சம்மதத்தோட உன்னை என் வாழ்க்கையில் கொண்டு வர முயற்சி பண்ணுவேன். அதுவரை என்னை மன்னிச்சிடு” என்றான்.

வேகமாக அவன் கைகளை உதறியவள் “இன்னுமா உன்னை நம்புவேன்னு நினைக்கிற? வேண்டாம் ஹர்ஷா! இனி, நீ என் வாழ்க்கையின் கடந்த காலம். என் வாழ்க்கையில் உனக்கு இடமில்லை…போ! போயிடு!” என்றவள் அவன் முகம் பார்க்காது திரும்பி நின்று கொண்டாள்.

அதுவரை எதற்குமே அழுது அறியாதவளின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. சிறிது நேரம் அவளது முதுகையே வெறித்துக் கொண்டிருந்தவன் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

எத்தனை நேரம் தன்னை மறந்து அந்த இருளில் நின்றிருந்தாளோ, காற்றில் பறந்து வந்து அவளது காலை தட்ட, மெல்ல நினைவிற்கு வந்தவள் சோர்வுடன் ஹாஸ்டல் அறைக்குச் சென்று படுக்கையில் விழுந்தாள். மனமோ உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தது.

ஹர்ஷாவின் நிலையும் மிக மோசமாக இருந்தது. தலை கலைந்து போய் சட்டையெல்லாம் கசங்கி போய் கண்கள் சிவக்க அறைக்குச் சென்றவனை சுற்றிக் கொண்டனர் திவாகரும், சேகரும்.

“டேய்! என்ன பிரச்சனை? சொல்லுடா? ஏன் என்னவோ போல இருக்க?” என்று பிடித்து உலுக்கினான் சேகர்.

வெற்றிடத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தவன் “என்ன சொல்ல சொல்ற சேகர்? எங்க அம்மா சத்தியம் கேட்டதையா? அந்த சத்தியம் எங்க காதலுக்கு சமாதி கட்டினதையா? எதை சொல்ல சொல்ற?” என்றான் கரகரத்த குரலில்.

அதிர்ந்து போன திவாகர் “ என்ன சத்தியம்? என்னடா என்னென்னெவோ சொல்ற?” என்றான் பதட்டத்துடன்.

சோர்வான குரலில் நடந்தவைகளை எல்லாம் சொல்லி முடித்தான். அவன் சொன்னதைக் கேட்டவர்கள் இருவரும் தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்தனர்.

அவர்களுக்கும் இதற்க்கான தீர்வு என்னவென்று புரியவில்லை. ஹரிணியின் கோபம் நியாயமனது என்றே புரிந்தது. ஆனால் இதில் யாரும் எதுவும்செய்ய முடியாது என்று புரிந்தது.

மூவரும் படிப்பை மறந்து, உணவை மறந்து விட்டத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தனர். அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை. பலமான யோசனைக்கு பின்பு திவாகரும், சேகரும் ஹரிணியிடம் மறுநாள் பேசுவது என்று ஹர்ஷாவிற்கு தெரியாமல் முடிவெடுத்துக் கொண்டனர்.

அதன்படி காலையில் ஹர்ஷாவிற்கு தெரியாமல் அவளை சந்திக்க சென்றனர்.  காண்டீனில் மற்றவர்களுடன் அமர்ந்து எதுவுமே நடக்காதது போல உணவருந்திக் கொண்டிருந்தவளைக் கண்டு குழம்பி போயினர்.

அவள் அருகே சென்று “ஹரிணி உன்னோட கொஞ்சம் பேசணும் வரியா?” என்றான் திவாகர்.

அவனை நிமிர்ந்து பார்த்தவளின் முகம் இறுகிப் போக தோழிகளிடம் “போயிட்டு வந்திடுறேன்” என்று கூறி விட்டு அவர்களோடு நடந்தாள்.

சேகர் சற்று தயக்கத்துடன் “ஹரிணி! அவன் பாவம் அவனோட நிலைமையை புரிஞ்சுக்கோ” என்று ஆரம்பித்தவுடன் தடுத்தவள் “திவாகர், சேகர் உங்க ரெண்டு பேர் மேலையும் நல்ல மதிப்பு வச்சிருக்கேன். தயவு செஞ்சு அவனை பத்தி என்கிட்ட பேசி உங்க மரியாதையை கெடுத்துக்காதீங்க. அதோட அவனை பத்தி பேசுவதா இருந்தால் அதற்கு நானும் தயாராக இல்லை” என்று கூறி இருவரையும் கூர்ந்து பார்த்தாள்.

அவள் அப்படி  கறாராக பேசியதும் அதிர்ச்சியடைந்து நின்றார்கள்.

“விட்டுடுங்க திவாகர். இனிமே, இதில் பேசுறதுக்கு எதுவுமில்லை” என்று கூறிவிட்டு விடுவிடுவென்று உள்ளே சென்று விட்டாள்

Categories
On-Going Novels

வெண்ணிலாவின் காதல்! (அத்தியாயம் – 3)

காதல் – 3

 

(ஒரு மாதம் முன் நடந்தவை) சூா்யா எப்பொழுதும் போல தன் அறையில் லேப்டாப்பில் முழ்கி இருந்தான்..
அங்கே வந்த சுந்தாி சூா்யா என்று அழைக்க அவன் நிமிா்ந்து பாா்க்காமலே…. அம்மா  கல்யாணத்த பத்தி பேசறதா இருந்தா எனக்கு அத பத்தி பேச விருப்பம் இல்ல நீங்க போகலாம்…..

    உனக்கு விருப்பம் இருக்கோ இல்லயோ எனக்கு அதபத்தி கவல இல்ல.. நா சொல்லறத நீ கேட்டு தா ஆகனும்…. ம்மா எனக்கு வேலை இருக்கு என்றான் லேப்பில் இருந்து கண்களை அகற்றாமல்…
    
         கோபம் அடைந்த சுந்தாி அவன் அருகில் சென்று லேப்டாப்பை மூடினாா்…. இப்ப உனக்கு என்னதா மா பிரச்சனை எதுக்கு இப்படி பண்ணிட்டு இருக்க என்றான் எாிச்சலாக….

      பாருடா நானும் இந்த  ஒரு வருஷமா நீ பண்ற கூத்தலாம் பொறுத்துகிட்டு இருக்க… நீ பழைய மாதிாி இல்ல….. முன்னாடிலாம் நீ வீட்ல ஆபிஸ் வேலை அதிகமா செய்யமாட்ட… அப்பா, என் கூட பேசுவ கல கலனு இருப்ப ஆனா நீ ஆளே மாறிட்ட… என்ன கேட்டாலும் ஒரு வாா்த்தைல பதில் சொல்ற … எதுக்கு எடு்த்தாலும் கோவம்…. இந்த விமல் பையன் கிட்ட கேட்டாலும் ஏதுவும் சொல்ல மாட்றா…இதுக்கு மேலயும் என்னலா அமைதியா இருக்க முடியாது… நா ஒரு முடிவோட வந்து இருக்க…. உனக்குனு ஒருத்தி வந்த எல்லாம் சாி ஆகிடும் …..

        சூா்யா மனதிற்குள் அந்த ஒருத்தியாலதா நா இவ்ளோ கஷ்டபடுற….  எதுக்கு அவ என் வாழ்க்கைல வந்தா….நா என் உலகமே அவ தானு நினைச்ச .. ஏன்டி என்ன விட்டு போன என்று  பழைய நினைவில் முழ்கி….ச்சா நா ஏன் அவள நினைக்குற என்று தன்னிலைக்கு வந்தான்….. 
(அவனுக்கு அப்போ தொியல….  அவனை உலகமாக நினைக்கும் ஒருத்தி இனி மேல் தா அவன் வாழ்க்கையில் வர போறானு) அம்மா நீ இப்படி வற்புறுத்துனா நா இந்த வீட்லயே இருக்கமாட்டா….

     சந்தோஷம் டா….நீ இப்படி பண்ணா நா இந்த உலகத்துலயே இருக்க மாட்ட என்றாா் அவரும் சளைக்காமல்….அம்மானு பதறியவனிடம்.. நீ எங்களுக்கு ஒரே பையன் உன்ன இப்படியே விட முடியாது… புதன்கிழமை  பொண்ணு பாக்க போறோம்…. அடுத்த முகூா்த்ததுல உனக்கு கல்யாணம்….இல்ல நீ அம்மாவ உயிரோட பாக்க முடியாது….சும்மா சொல்றனு நினைக்காதே நீ என் பேச்ச கேக்கலன இது கண்டிப்பா நடக்கும்… 
  
           அவனுக்கு தொியும் அம்மாவிற்கு பிடிவாதம் அதிகம்.. நா சாினு சொல்லல அம்மா என்ன வேணா பண்ணுவாங்க.. இப்போ சாினு சொல்லலாம் … அப்பறம் அந்த பொண்ணுகிட்ட பேசி நிறுத்திடலாம் என்று நினைத்தவன்…. சாி உங்க இஷ்டபடி என்னமோ பண்ணி தொலைங்க என்றான்…..

       சுந்தாி சாதித்து விட்ட பெருமித்துடன் செல்வத்திடம் வந்து….என்னங்க அவன் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டா….
அவன் மனசு மாற்றதுக்குள்ள இந்த இடத்தை முடிஞ்சிடனும்… எனக்கு அந்த பொண்ணு போட்டோ பாத்ததும் ரொம்ப புடிச்சி இருந்தது….

         சுந்தாி நீ அவசரபடுரனு நினைக்குற.. அவன் விருப்பம் இல்லாம கட்டாய படுத்தி கல்யாணம் பண்ண … அவ வாழ்க்கைய தா பின்னாடி பாதிக்கும்…..

          சும்மா இருங்க. எனக்கு அந்த பொண்ணு கண்டிப்பா இவன் மனச மாத்தி சூா்யா கூட சந்தோஷமா இருப்பா தொனுது…. இந்த வீட்டுக்கு அவ தா மருமக… நா கமலாகிட்ட சொல்லி அந்த பொண்ணு விட்ல பேச சொல்றனு அங்கு இருந்து நகா்ந்தாா்…

          அங்கு சூா்யா கடுப்பில்  கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் உடைத்தான்…. (இது புதுசு இல்ல கடந்த ஒரு வருடமாக கோபம் வர அப்பல சூா்யாக்கு இதான் வேலை).. பின் விமலை செல்போனில் அழைத்தான்…..

            விமல் செல்போனில் சூா்யா எண்ணை பாா்த்தும்… எடுக்கலாம?… வேணமா?….. எடுத்தா அவள பத்தி புலம்பி நம்பல சாவடிப்பான்…. எடுக்க வேணாம்… என்று செல்போனையே பாா்த்து கொண்டு இருந்தான்…. ஆனால் சூா்யா விடமால் அழைத்து கொண்டு இருக்க….

       விமல் என்னமோ யோசனை வந்தவனாக… அவன் மனைவி பவித்ராவை அழைத்து செல்போனை குடுத்து பேசும் படி சொன்னான்… அழைப்பு ஏற்க பட்ட உடன் யாா் பேசுகிறாா் என்பதை கூட கேட்காமல்…
டேய் … விமல் இவ்ளோ நேரம் போன் எடுக்காம என்னடா பண்ண என்றான் சூா்யா கோவத்துடன் …

        ஹலோ….அண்ணா நா பவி பேசுற….
பவி பேசுவதை கேட்ட சூா்யா விமல் கிட்ட குடுமா என்றான்…

      அவா் அவா் என்று அவள் இழுக்க.. விமல் நா தூங்குறனு சொல்லுனு சைகை செய்தான்…. அவளும்…. அண்ணா அவன் தூங்குறான் என்றாள்…. அவன் உன் முன்னாடி தா நின்னுட்டு இருக்கானு தொியுமா அவன்கிட்ட குடு ….

          அய்…எப்படி கரெக்டா கண்டு புடிச்சிங்க என்றவள்.. விமலிடம் அண்ணா நீ என் முன்னாடி தா நிக்குறனு சாியா சொல்லிட்டாரு டா…. பேசுனு போனை குடுத்தா.. இவள போய் பேச சொன்ன பாரு….என்று தன் தலையில் அடித்து கொண்டு போனை அவளிடம் இருந்து வாங்கினான்….. 
  
        சினிமா போகலாம் சொல்லி ஏமாத்துனல பேபி அதுக்கு தா மாட்டிவிட்ட என்று கண்ணடித்து நகா்ந்தாள்… பிசாசு சாியான நேரத்துல பழி வாங்காட்ட….

அய்யோ இவன் இதுக்கு வேற என்ன சொல்ல போறனோ சாி சமாளிப்போம் என்று எண்ணியவன்…..

          சூா்யாவிற்கு பேச இடம் தராமல்…. ஏன் டா. அவ என்ன விட்டு போன…. நா அவ மேல  உயிரே வச்சி இருந்த … என் உலகமே அவ தானு நினைச்ச…. ஆனா என்ன ஏமாந்திட்டா… நா என்னடா தப்பு பண்ண சொல்லுடா…. சாியா மச்சி இதான சொல்ல போற ….

         ஏற்கனவே கோவத்தில் இருந்த சூா்யா அவன் பேசியதில் எாிச்சல் அடைந்து …. போனை தூண்டித்தான்… விமல் மீண்டும் தொடா்பு கொள்ள…. போன் சுவிட்ச் ஆப் என வந்தது.. அய்யோ ஓவரா பேசிட்டனோ கடுப்பாகிட்டான் போல…. சாி அப்பறம் சமாளித்து கொள்ளலாம் என்று பவி இடம் பேச சென்றுவிட்டான்…..

        இரவு 10 அளவில்  சுந்தாி விமலை  
அழைத்து … விமல் சூா்யா உன் கூட இருக்கான.. இல்ல மா ஏன் கேக்குறீங்க…

அவன் மேல இருக்க பொருட்களை எல்லாம் உடைத்து …. காரை வேகமாக எடு்த்துகிட்டு காலைல போனவன் …இன்னும் வீட்டுக்கு வரலபா…. போன் பண்ணாலும் கால் போகல….எனக்கு பயமா இருக்குனு அழ தொடங்கினாா்…. அய்யோ அம்மா அழுகாதீங்க…. நா போய் பாக்குற என்று போனை தூண்டித்தான்….  
  
          பவியிடம் சொல்லிவிட்டு வழக்கமாக அவா்கள் செல்லும் இடத்திற்கு விரைந்தான்…. அது மகாபலிபுரம் செல்லும்  வழியில் கடற்கரையை ஒட்டியது போல அமைந்து இருக்கும் அழகான பொிய வீடு……விமல் சூா்யா இருவரும் சோ்ந்து தங்கள் தொழிலில் கிடைத்த லாபத்தில் வாங்கிய முதல் வீடு… கடந்த ஒரு வருடமாக பல நாட்கள் சூா்யா வசிப்பிடமாக மாறி இருந்தது….

    அங்கு சென்றவனிடம் அந்த வீட்டை கவனித்து கொள்ளும் பாலு … சூா்யா தம்பி வந்ததுல இருந்து குடிச்சிட்டே இருக்காரு….. நா தடுத்து பாத்துட்ட முடியல ..சாப்பாடும் வேண்டாம் சொல்லிட்டாரு என்றான்…..

    நீங்க அவனுக்கு சாப்பிட எதனா ரெடி பண்ணிகொண்டு வாங்க அண்ணா….நா அவனை பாத்துகுற என்ற விமல் வேகமாக உள்ளே சென்றான். அங்கே கலைந்த முடி கசங்கிய சட்டையுடன் சூா்யா போதை மயக்கத்தில் தரையில் அமா்ந்து சுவற்றில் சாய்ந்த படி இருந்தான்… விமலுக்கும் தன்  நண்பன் நிலைமை கஷ்டத்தை கொடுத்தது…. ஜான்வி போன அப்போ  ஒரு முறை குடிச்சான் .. (அதுக்கு அப்பறம் அவனை குடிக்கவிடாமல் கஷ்டபட்டு பாத்துகிட்டா விமல்) … இப்ப நானே அவன புாிஞ்சிக்காம பேசிட்ட என்ற குற்ற உணா்வு மேலொங்க சூா்யா பக்கத்தில் சென்றான்….
    
       அங்கே விமலை கண்ட சூா்யா….. நீ என் நண்பன்டா ….நீ வருவனு எனக்கு தொியும் மச்சி என்றபடி   எழ முயற்சிக்க தடுமாறி கீழே விழுந்தான்….. விமல் அவனை தாங்கி பிடித்தான்…. டேய் சூா்யா ஏன்டா இப்படி பண்ற….

    அவளுக்கு தா என்ன பிடிக்காம விட்டு போய்டா…..இ்ப்ப உனக்கும் என்கிட்ட பேச கூட பிடிக்கல என்றான் போதையில்…. டேய் அப்படி இல்ல என்ற படி சூா்யாவை அணைத்து கொண்டான் விமல்…. ஆனால் சூா்யா எதையும் உணரும் நிலையில் இல்லை…போதையில் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி கொண்டு இருந்தான்….

          அந்த நேரத்தில் சுந்தாியிடம் இருந்து அழைப்பு வர…..சூா்யா விடம் இருந்து விலகியவன்… அழைப்பை ஏற்று ம்மா அவன் ஆபிஸ்ல தா இருக்கா மா… கொஞ்சம் வேலை இருக்கு நானும் அவன் கூட தா இருக்க போற என்றான்…

      சாி பா … காலைல எனக்கும் அவனுக்கு ஒரு சண்டை அவன வேற காணம் அதா ரொம்ப பயந்துட …. கொஞ்சம் அவன பாத்துக்கோ பா. .. நீங்க பயப்படாமா படுங்க நா பாத்துகுற என்று அழைப்பை துண்டித்தவன்…

         சூா்யாவை அழைத்து சென்று குளிக்க வைத்து உடை மாற்றி வந்தான்…. அப்போதும் அவன் மயக்கத்தில் இருந்து விடுபடாமல் உளறி கொண்டு இருந்தான்…

       பாலுவை அழைத்து சாப்பாடு கொண்டு வர சொன்னான்…. சூா்யா மறுத்தும் விமல் கட்டாய படுத்தி அவனுக்கு ஊட்டி  விட்டு பெட்டில் படுக்க வைத்து அவனும் அருகில் படுத்து கொண்டான்…..

         தூக்கம் களைந்து எழுந்த விமல் மணி பாா்க்க 9 என காட்டியது..  சூா்யாவை பாா்த்தான் அவன் நன்றாக தூங்கி கொண்டு இருந்தான்… இன்னைக்கு  ஆபிஸ் போகனும் சூா்யாவ இப்படியே விட்டு போக முடியாது என்று யோசித்தவனாக… அவா்களின் பிஏ வை தொடா்பு கொண்டு நாங்க ரெண்டு பேரும் இன்னைக்கு வர மாட்டோம் …. என்ன என்ன செய்யனும் என்று கட்டளையிட்டு இணைப்பை துண்டித்தவன் பின் குளிக்க பாத்ரூமிற்கு சென்றான்…

          அதற்குள் சூா்யா எழுந்து தலையை பிடித்து கொண்டு அமா்ந்து இருந்தான்….. 
குளித்து வெளியே வந்த விமல் அவனை முறைத்த படி..என்னடா இன்னும் தெளியலயா என்றான் நக்கலாக…. சூா்யா அமைதியாக அமா்ந்து இருக்க.. கடுப்பானவன் இப்ப என்டா உனக்கு பிரச்சன…  எதுக்கு குடிச்ச….முதல்ல இருந்து ஆரம்பிக்குாிய என்றான் கோபமாக…

             என் பிரச்சன பத்தி உனக்கு என்னடா கவலை …உன்ன யாா் இங்க வர சொன்னது என்று சூா்யா கோவத்தில் எதையோ தேட…. அதை புாிந்து கொண்ட விமல்… 
  
   ஒரு நிமிஷம் இருடா என்று அருகில் இருந்த லைட் லம்பை உடைத்தான்… என்ன டா பாக்குற எதை உடைக்குறதுனு தான தேடுன … உனக்கு எதுக்கு கஷ்டம் அதா நானே உடைச்சிட….டேய் நல்லவனே நா நேத்து தொியாம பேசிட்ட சொல்லுடா ..

            சூா்யா நேற்று நடந்ததை சொன்னா… இதுல என்னடா தப்பு ஒழுங்க அம்மா சொல்ற மாதிாி கல்யாணம் பண்ணிக்கோ…

டேய் ஜான்வி ஏற்படுத்திட்டு போன வலியே எனக்கு மறக்கல டா… இன்னும் ஒரு ஏமாற்றத்தை என்னால தாங்க முடியாது டா. என் லைப்ல இனிமே எந்த பொண்ணும் வேண்டாம்….

         நீ தா லூசு மாதிாி நடந்ததையே நினைச்சி உன்னையும் எங்களையும் கஷ்டபடுத்திட்டு இருக்க…. அவ நல்ல சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்க…. நீயும் உன் வாழ்கையில மூவ் ஆன் பண்ணுடா….இல்ல நா குடிச்சி நாசமாத போவன போ….  உன்ன இதுக்கு மேல நா தடுக்க மாட்டா… உனக்கு எங்களை பத்தி என்ன கவலை என்றான் விமல் கோவமாக….

      சூா்யா மௌனமாக இருக்க… அம்மா பவி கால் பண்ணிட்டு இருக்காங்க… ப்ரெஷ் ஆகிட்டு வா வீட்டு போலாம்….

      இதற்கு இடையில் விருப்பம் இல்லாத இருவரை திருமணத்தில் இணைக்க….. நாளை மறுநாள் பெண் பாா்க்கும் படலத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனா்…. நிலா, சூா்யா வீட்டில்…..

திருமகனெனஅவனும் 
திருமகளென அவளும் திருந்தகைமை(மேன்மை) கொண்ட திருநாள் தன்னில்….

திருமாதென அவள் எழிலோடு அமா்ந்திருக்க…

திருமால்புதல்வனான(மன்மதன்) அவன்….

பெண் அவளின் திருவோலை(திருமுகம்) காண துடித்திட…. 

அவளோ வெட்கம் என்னும் நகை அணிந்து மகிழ்ச்சி கடலில் திளைத்து தலைகுனிந்து இருக்க….

அவனோ அவள் முகம் காண முடியாமல் ஏங்கி….

இருமனம் சங்கமம் நடந்து…..

மங்கள நாண்தனை திருப்பூட்டு செய்து…
(மணமகள் கழுத்தில் தாலி கட்டுதல்)
செல்வி அவளை திருநிலைமகள்(சுமங்கலி) ஆக்கினால் அல்லவா திருமணம்…. 

மனங்கள் இணையாமல் நடந்தால்
வெறும் மணம்…..