Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript "உன்னையே எண்ணியே வாழ்கிறேன்" | SudhaRaviNovels

"உன்னையே எண்ணியே வாழ்கிறேன்"

Kripnythaa

Moderator
Mar 26, 2018
463
150
63
"உன்னையே எண்ணியே வாழ்கிறேன்"

வாழ்வியலுக்கு வழிவகுத்திடும் விஷயங்களை, விவரமாக, எளிய முறையில் எடுத்துரைத்தமைக்கு எழுத்தாளருக்கு பாராட்டுகள்....

ஈஸ்வரின் எழுச்சியும், அவனடைந்த வீழ்ச்சியும் எங்கோ நடப்பது போன்றில்லாமல் எதார்த்தத்தில் நடப்பது போன்றே தோன்றியது... நண்பர்களை தாயாக இருந்து தாங்கிடும் ரஞ்சனி மற்ற அனைவரையும் விட மிக உயர்ந்தவளாக தோன்றுகிறாள்.

ராபர்ட் ஏதோ ஒரு விதத்தில் பிரேமா ஏற்ற அன்பென்ற அருமையான விஷயத்தை என்னில் பெறவில்லை. ஜெய் நண்பனுக்காக எடுத்தது சுயநல முயற்சியென்றாலும் பாராட்டத்தக்கதே!

மாராவின் ஆளுமையில் அனைத்தையும் அணைய செய்யும் நிம்மதி நிறைமதியாக ஒளிர்ந்தது. பட்டென்று வெட்டி செல்லும் பேச்சுகளில் காலச்சக்கரத்தை சுழல செய்திடும் ஆற்றல் கொண்ட ஹோரஸ் ரஞ்சனிக்கு கூறிய வார்த்தைகள் கண்ணீரை உகுத்தன.

இழப்பிலும் ஈடுகட்டிடாத, இம்மையிலும் அளவில்லாமல் செலுத்தும் அன்பை கொண்டவளின் நேரம் தவறுவது ஒன்றும் பெரிதான விடயமில்லை ...காலன் காலம் முன்னே வந்தாலும், பின்னே வந்தாலும் காற்றான அன்பை அனுபவிக்கும் நொடிகள் இதமானதுதானே!

காயத்ரி எதிர்பார்த்த பாத்திரமாக பரிமாணம் அளித்ததில் மிக்க மகிழ்ச்சி...

நெக்குருகிடும்
நெகிழ்ச்சியை
நெஞ்சமதில்
நிறைத்தது
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்!
 
  • Like
Reactions: sudharavi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113

அருமயான விமர்சனம் தீபி....நானும் படிக்கனும்....வாழ்த்துக்கள் தமிழ்..