Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 4 | SudhaRaviNovels

அத்தியாயம் - 4

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் - 4

தலைமாட்டிலே வந்து கத்தாதேக்கா ம்மா எல்லாம் அலாரம் வைச்சாச்சில்லே நானே எழுந்து குளிச்சாச்சு, நீ போய் டிபனை தயார் பண்ணு.

நீ போலிஸ்னா அதை ஸ்டேஷனில் தான் காட்டணும் சொந்த தங்கச்சிகிட்டே இல்லை என்று சத்யாவைப் பார்த்து பழிப்பு காட்டினாள் சுனிதா தங்சையின் குறும்பை ரசித்த சத்யா மென்மையாய் சிரித்தாள். டேபிளின் மேல் இருவரின் சீருடையும் தேய்த்து வைக்கப்பட்டு இருக்க, அதை அணிந்து கொண்டே அன்றைய நிகழ்விற்குப் பிறகு மூன்று நாளாக பள்ளிக்கு வராத காவ்யாவிற்காக ஒருமுறை வருத்தப்பட்டாள் பாவம் அவ இன்னமும் அந்த லட்டரையே நினைச்சு கவலைப்பட்டுகிட்டு இருப்பா ஒரு வேளை வீட்டுலே ஏதாவது பிரச்சனையா இருக்குமோ இதைப்பற்றி அக்காவிடம் பேசவேண்டும் என்று சட்டென நினைவுவந்தவளாய் அக்கா நானே உன்கிட்டே ஒரு விஷயம் பேசணுன்னு நினைச்சேன் நீ நேத்து லேட்டா வந்ததால என்னால எதுவும் பேச முடியலை ? என் பிரண்ட் காவ்யா இருக்காளே அவளுக்கு ஒரு பையன் லவ்லட்டர் கொடுத்து டார்ச்சர் பண்றான். தினமும் பின்னாடியே வர்றான் நீ கொஞ்சம் மிரட்டி வைக்கிறாயா என்றாள்.

யாரவன் எப்போது வருகிறான். தொப்பியையும் பெல்டையும் சீர் செய்தபடியே கேட்டாள் அந்த ஆறடி அழகு சத்யா. பெயருக்கு ஏற்றாற்போல மனதிலும் திடம் உள்ளவள்தான். தாய் தந்தை இருவரையும் ஒரே சேர விபத்து ஒன்றில் பலி கொடுத்து தந்தையின் கான்ஸ்டபிள் வேலை அவளுக்கு கிடைத்து நான்கைந்து வருடங்கள் ஆகிறது. ரைட்டராக பிரமோஷன் கிடைத்து இருக்கிறது. நல்ல உழைப்பாளி. மனமுவந்து ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் பெற்றோர்களை இழந்த பின்னும் யாரிடமும் கைகட்டி நிற்க விடாமல் காத்த அந்த வேலை அவளுக்கு மிகவும் பிடித்துத்தான் போயிருந்தது. காக்கி உடுப்பை மாட்டியவுடன் தனி கம்பீரமும் நெஞ்சுரமும் வந்ததைப் போலிருந்தது அவளுக்கு.

ஏன் இத்தனை நாளா சொல்லலை சுனிதா தங்கைக்கு தலைபின்னியபடியே கேட்டாள்.

சின்னபிரச்சனைன்னு நினைச்சேன் ஆனா இப்போ அப்படியில்லைன்னு தோணுச்சி, காவ்யா மூணு நாளா பள்ளிக்கு வரவேயில்லை ஏற்கனவே அவங்க வீட்டுலே ரொம்பவும் கண்டிப்பு அவ வேற ரொம்ப பயந்தாளா அதான் உன்கிட்டே சொன்னேன். ஏன்கா நீ வரமாட்டியா ?

சாயங்காலம் வர்றேன் ஸ்கூல் விட்டதும் கொஞ்ச நேரம் காத்திரு அவன் வர்றானான்னு பாரு வந்தா பேச்சுக்கொடுங்க இரண்டு தட்டு தட்டினா அப்பறம் உங்க பக்கம் வரவே பயப்படுவான் என்று தங்கைக்கு தைரியம் சொல்லிவிட்டு ஸ்கூல் வேன் வந்துடுச்சி நீ கிளம்பு என்று தங்கையின் கைகளில் உணவுப் பாத்திரத்தை கொடுத்துவிட்டு தானும் ஒன்றை எடுத்துக் கொண்டு ஸ்கூட்டியை நோக்கி நகரும் நம்ம சத்யாதான் இந்த கதையின் நாயகி ! மூன்றாவது அத்தியாயத்தில்தான் அறிமுகம் என்றாலும் கதை நெடுக அவளின் ராஜ்ஜியம்தான்.


வர்றேன்கா, காலணிகளை மாட்டிக்கொண்டு வெளியே வரும்போதே எதிர்வீட்டு ஜன்னல் திறந்திருந்திருந்தது. குறுகுறுவென்று இரண்டு விழிகள் குறும்பென வளைந்த இதழ்கள் இவனுக்கு வேற வேலையே இல்லை என்று மனதில் நினைத்தபடியே பார்வையை சட்டென்று திருப்பிக் கொண்டு படியிறங்கினாள் சுனிதா கிட்டத்தட்ட நாற்பது பிளாட் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு சில நாட்களாகவே அந்த எதிர்வீட்டு பையனின் பார்வை இவளின் மேல் படிவதை உணர்ந்து தான் இருக்கிறாள் ஆனால் இது படிப்பை மட்டும் பார்க்க வேண்டிய வயது அதில் தன் கனவுகள் அதிகம் தேவையில்லாத வற்றில் மனதை செலுத்துவதை அவள் விரும்புவதும் இல்லை பள்ளி வேனில் ஏறிவிட்டு சத்யாவைப் பார்த்து கையசைத்த தங்கையை கவனித்தாள் சத்யா இவள்தான் எத்தனை வளர்த்தி அதிலும் வெளிப்பான நிறமும் கருகருன்னு சுருண்ட முடியும் வயசுக்கு மீறின வளர்த்திதான் என்று !

ஏய் எனக்கு முன்னாடியே வந்திட்டியா ? கலைவாணி தன் புத்தகப்பையைச் சுமந்து கொண்டே பள்ளியின் வாசலில் காத்திருந்த தோழி மதுமதியிடம் கேட்டாள்.

இன்னைக்கு மேக்ஸ் ரிவிஷன் இருக்கு கலை அதுதான் சீக்கிரம் கிளம்பிட்டேன் அம்மாதான் க்ளினிக் போகும் போது வந்து விட்டுட்டுப் போனாங்க. சுனிதாவோட வேனுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.

சரி அவ வர்றதுக்குள்ளே வாயேன் கேன்டீன் போயிட்டு வந்திடலாம்

இப்போதானே ஸ்கூலுக்கே வர்றே அதுக்குள்ளே கேன்டீனா நீ படிக்க வர்றீயா இல்லை சாப்பிட வர்றீயா ?

மது இங்கே கிடைக்கிற மாதிரி பர்கரும் சமோசாவும் வீட்லே கிடைக்கிறது இல்லையே அதிலும் அந்த ஸ்மைலி எண்ணெய் பசையோடு மொறுமொறுன்னு என்னைப் பார்த்து சிரிச்சிகிட்டே சாப்பிடச் சொல்றது இருக்கே… .நம்ம ஸ்கூல் வாசல்ல இப்போ ஒரு ஐஸ்கீரிம் கடைபோட்டு
இருக்கான்டி செம்மடேஸ்ட் புதுசா ஆரம்பிச்சிருக்கிறதா எல்லாருக்கும் ஒருநாள் ப்ரியாம் ஒரே கூட்டம் நான்கூட முண்டியடிச்சிகிட்டு நாலு ஐஸ்கிரிம் சாப்பிட்டேன்னா பார்த்துக்கோயேன் வாயில் எச்சில் ஊற இப்போ நீ நீ வர்றீயா இல்லையா ?

எனக்கு வேண்டாம்மா நீயே முழுங்கு நான் கிளாஸூக்கு போறேன். மது சிரிப்புடன் அவளைக் கடந்து போனாள். எதிர்பட்ட ஆசிரியர்களுக்கு வணக்கத்தைத் தெரிவித்தபடியே ?!

சீக்கிரமே வந்துவிட்டதால் வகுப்பில் இருக்கைகள் காலியாகவே இருந்தது.

முதல் பெல் அடிக்கத் தொடங்கியதும் மாணவிகள் வகுப்பிற்குள் வந்தமர மற்ற தோழிகளும் வந்து சேர்ந்தார்கள் காவ்யாவைத் தவிர..... சொல்லி வைத்தாற் போல மூன்று தோழிகளின் கண்களும் காவ்யாவைத் தேடி மூன்றாவது நாளும் அவளின் வருகையின்மைக்கான காரணத்தை அறியவில்லை என பார்வையால் தெரிவித்தன.

அஜய் குரலில் தெரிந்த கடுமை ரஜீவ்வை சுட்டிருக்க வேண்டும். அவன் குரலைத் தணித்தான். இப்போ நீ போட்டுலே தானே இருக்கே நானும் கடலுக்குதான் வர்றேன், நேரில் பேசிக்கலாம்.

எப்போ பேசினாலும் என் முடிவு இதுதான் என்று அஜய் போனை அணைத்துவிட்டு எதிரே நின்றிருந்தவனிடம் போனைத் தூக்கிபோட்ட அந்த விநாடி, கையிலிருந்த சரக்குகோப்பையை முழுவதும் சரித்துக் கொண்டான். முட்டாள் என்று அவன் உதடுகள் முணுமுணுத்தது.

தன் சிறு படகில் இருந்து நூல் ஏணி வழியாக அந்த கப்பலின் மேல் தளத்திற்கு தாவினான் அஜய்யின் கூரிய விழிப்பர்வையில் முகத்தை சாய்த்துக் கொண்டான் ரஜீவ். அவன் பின்னால் பான்பராக் வாசனையோடு அந்த சேட்டும். இவனை ஏன் அழைத்து வந்தாய் என்ற குத்திக் கிழிக்கும் பார்வையை நண்பனை நோக்கி வீசினான். ஒருமாதத்திற்கு ஒரு முறை அவன் ஓய்வெடுக்கும் இடம் இது இங்கே எந்த பேச்சுவார்த்தையும் அவன் வைத்துக் கொள்ளவிரும்புவதில்லை. இதையெல்லாம் அறிந்தும் சேட்டை அழைத்து வந்த நண்பனை வெறித்தான்.

ஸாரி அஜய் நான் எவ்வளோ சொன்னேன் அவர் கேட்கலை ஒருகாலத்தில் நமக்கு ஹெல்ப் பண்ணவர் அதனால தட்ட முடியலை.

அஜய் யார்கிட்டேயும் ஓசியா உதவி வாங்கிக்கிட்டது இல்லை ரஜீவ். சீக்கிரம் பேசிட்டு கிளம்பு என்ன விஷயம் ?! கோபம் கொப்பளித்த அந்த குரலை லட்சியம் செய்யாமல்...!

அஜய்பையா புதுசா நாம தொடங்கியிருக்கிற நெட்வொர்க் பாம்பே மட்டுமில்லை எல்லா ஊர்லேேயும் நிரம்பியிருக்கு. நீ சப்போர்ட் பண்ணா இன்னும்இன்னும் வளரலாம்.

காசுக்காக எதையும் செய்வேன்னு நினைச்சியா சேட். ரஜீவ் சொன்னாமாதிரி ஒருகாலத்திலே உழைப்பை வாங்கிக்கிட்டாலும் சோறு போட்டே தங்க இடம் கொடுத்தே அதுக்காக விஷத்தை விக்கச் சொல்றீயா ?

சேட் இடிஇடியென சிரித்தான். இதென்ன திடீர் ஞானோதயம் அஜய்...! கள்ளக்கடத்தல் மன்னன், காசுக்காக உயிரை எடுக்கிற ஆள் நீ இதுக்கு மட்டும் என்ன தயக்கம்.

அஜய்யின் கண்கள் இடுங்கியது உனக்கு ஒரு நிமிஷம் டயம் தர்றேன். உன் குப்பை வியாபாரத்தை எங்கேயாவது போய் வைச்சிக்க என் ஏரியாவில பொட்டலம் மாறுச்சின்னா உன்னை மாறுகால் மாறுகை வாங்கி இதே கடல்ல சுறாக்கு இரையா போட்டுடுவேன். ஜாக்கிரதை ! என்று விரல் நீட்டி எச்சரித்துவிட்டு ரஜீவ் இன்னும் அஞ்சு நிமிஷத்தில் இந்தாள் இந்த இடத்தை விட்டுப்போகனும் இல்லைன்னா நண்பனின் கோபம் தெரிந்து சேட்டை நகர்த்திக்கொண்டு போனான்.

என்னா ரஜீவ்....

சேட் இப்போ அஜய் கோபமா இருக்கான் நான் நேரம் பார்த்து பேசறேன் சொன்னேன் இப்போ காரியம் கெட்டுப்போச்சு. நீங்க போங்க நான் நாளைக்கு உங்களைப் பார்க்கிறேன் என்று தான் வந்த படகில் அவரை அனுப்பிவிட்டு, அஜய் எத்தனை கோடி கொடுத்தாலும் இந்த தொழிலை செய்யமாட்டான் என்று உணர்ந்து எத்தனை நாளைக்குத்தான் இவனுக்கு தளபதியாகவே இருப்பது என்று மனதிற்குள் சில திட்டங்களை வகுத்தான் ரஜீவ் இது ஏதும் அறியாத அஜய் தன்முன்னால் இருந்த பலகையில் அழகான இரு கண்களை வரைந்து கொண்டு இருந்தான்.