Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript நின்னைச் சரணடைந்தேன் - கருத்து திரி | SudhaRaviNovels

நின்னைச் சரணடைந்தேன் - கருத்து திரி

Abirami Mahi

Member
Aug 12, 2020
25
38
13
Chennai
நின்னைச் சரணடைந்தேன்❤

மனதை கவரும் காதலுடன் பல அழகிய குடும்பங்களை சேர்க்கும் காதலின் வலியை சுமக்கும் நெஞ்சில் காதலைப் பூக்க வைக்கும் காதல்கள் இணையும் அழகான காதல் கதை❤

கதைகள் படிக்கத் துவங்கிய ஆரம்ப காலத்தில் எல்லாரும் இந்த கதையைப் படித்து இருப்போம். இந்த கதையைப் படிக்காதவங்களே இருக்க முடியாதுனு சொல்லும் அளவுக்கு நிறைய பேர் படித்த கதை இது. இப்படி தான் கதையை அழகான முறையில் காதல், நட்பு, சேட்டை, சண்டை, ஊடல், குடும்பம், பாசம், வலி, அன்பு என எல்லாமே சரியாக அளவில் எப்படி செதுக்கப் பட வேண்டும் என சொல்லும் ஒரு முன்னுதாரண கதை.

கடந்த காலக் கசப்பான நிகழ்வுகளின் உண்மையை அறியாமல் மதுவை தவறாக நினைத்த சித்தார்த், காலங்கள் பல கடந்து மதுவை பார்க்க நேர்ந்த நேரத்தில் உண்மைகளை அறிந்து கலக்கம் அடைகிறான். அவள் மேல் தான் கொண்ட மாறாத காதலினால் அவளை திருமணம் செய்துக் கொள்ள நினைக்கிறான். சித்தார்த்தின் மீது அளவற்ற மதிப்புக் கொண்ட மது அவன் எண்ணத்தை அறிந்து அவனை வெறுக்கிறாள். யாரையும் மணக்காமல் வாழும் மது, மணந்தால் அது அவளை மட்டுமே என வாழும் சித்தார்த், இருவருக்கும் இடையில் போராடும் மூன்று குடும்பங்கள் என தொடர்கிறது கதை.

மது ஏன் சித்தார்த்தை மறுக்கிறாள்?? மதுவின் மனதில் என்ன உள்ளது?? சித்தார்த் மது இருவருக்கும் இடையில் என்ன நடந்தது?? இருவரின் கடந்த கால வாழ்க்கை என்ன?? இருவரும் எங்கு எல்லாம் தங்கள் காதலைத் தவற விட்டு எங்கு சேர்ந்தார்கள்?? சித்தார்த் மது இருவரையும் இணைத்த விதியின் அடுத்தடுத்த செயல்கள் என்ன?? எல்லா துன்பங்களையும் கடந்து இருவரும் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்ந்தார்களா?? என்பதை கதையில் படித்துத் தெரிந்துக் கொள்ளலாம்.

மதுமிதா❤ :
கடந்த காலத்தில் சிறகடித்து பறவையாகச் சுற்றி திரிந்தவளின் இறக்கைகளை உடைத்ததைப் போல, நிகழ் காலத்தில் அழ வைத்தவள். மனதில் காதலின் வலி குறையாது பல துன்பங்களை சந்தித்தவள். மது, ஹனி, தேனுவாக இருந்து நம்மை ரசிக்க வைப்பவள். அத்தான், நண்பர்களுடன் செய்யும் சேட்டைகள், சித்தார்த்தோடு அடிக்கும் காதல் லூட்டிகள், அர்ஜுன் மதுவின் குறும்புகள் என எல்லாமே இணைந்த அழகான கதாப்பாத்திரம்.

சித்தார்த்🥰 :
தான் ஒரு தலையாக காதலித்து வந்த காதலியோடு தன் வாழ்க்கையை பகிர்ந்துக் கொள்ள ஆசைகள் பல வளர்ந்தவன், மதுவின் மனதை அறிந்து தன் காதலை அவளிடம் சேர்ந்தவன். பெண்களின் கனவு நாயகன் சித்து அப்படினு சொல்லலாம்... நீ என்ன பண்ணாலும் அழகு தான் டா... செம்ம ஸ்வீட்டான ஹீரோ கோவம், வலி, காதல், ஏக்கம், வீம்பு, புரிதல் என எல்லாமே இணைந்த இருக்கும் அக்மார்க் கியூட் ஹீரோ.

அர்ஜுன்😍 :
இவன் வேற மாதிரி...மனது விட்டு சிரிக்க வைத்து இனித்தவன் நம்பல ரொம்ப அழவும் வைப்பான். 15 எப்பிஸ்ல மட்டும் தான் இவன் வரானா அப்படி ரொம்ப ஃபீல் பண்ண வச்சிட்டான்...தேனு, தேனுனு சொல்லி சொல்லியே நம்பலை அவன் பின்னாடி சுத்த வைக்கும் கேடி 50 எப்பில வரும் சித்துக்கு வெறும் 15 எப்பி மட்டுமே வந்து டஃப் கம்பெடிட் பண்ணவன். அட அட அட பெண்களின் மனதை மயக்கும் அர்ஜுனனும் இவனே குரும்புகளின் பிறப்பிடமான கண்ணனும் இவனே.

"எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே" இந்த பாட்டு அர்ஜூனுக்கு தான்.

தீபக் - மேகலா💜, ராஜேஷ் - வித்யா💚, ஆதி - மீரா💞, ஹரி - சுபா💛, நேத்ரா - ஸ்ரீராம்💙, சுரேஷ் - கீதா🖤, சிவா - லதா🧡 ஆகிய இளம் ஜோடிகளின் காதல், மது சித்துவை சேர்த்து வைக்க அவர்கள் செய்பவை, சின்ன சின்ன சண்டைகள், சேட்டைகள், பொறுப்புகள், குறும்புகள் என இவங்க எல்லாருமே கலக்கி இருப்பாங்க.

மூத்த தம்பதிகளான ராஜி - ஈஸ்வரன்💟, விமலா - சந்துரு💓, தேவகி - ராமமூர்த்தி💝 மூன்று ஜோடிகளும் வேற லெவல் இவங்க எல்லாரும் பொறுமை என்றால் சிங்கிளாக சுத்தும் அஸ்வந்த்💯, ஜீவா💘, ரமேஷ்💗 எல்லாரும் வேகம்.

இவங்க எல்லாரும் சேர்ந்து வரும் காட்சிகள் எல்லாமே அவ்வளோ அழகு... படிக்க படிக்க தேன் தித்திப்பு ஊட்டும் கதாப்பாத்திரங்கள். இதுல அஸ்வந்த் பத்தி சொல்ல மட்டும் ஒரு கதையே எழுதலாம் அவ்வளோ சேட்டை... அர்ஜுனுக்கு ஜூனியர்.

எல்லாரையும் ரசிக்க வைக்கும் கதையான நின்னைச் சரணடைந்தேன் Edited Version படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்க.

இதை போன்ற நல்லப் படைப்புகளைத் தந்துக் கொண்டே இருக்க வாழ்த்துக்கள் அக்கா...🥰❣Best Wishes❤❤

❤❤நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
பொன்னை உயர்வை புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாத்தென்று
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன கொன்றவை போக்கென்று
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்❤❤

IMG_20210303_193935.JPG
 
  • Love
Reactions: ஷெண்பா

Anuya

Well-known member
Apr 30, 2019
257
331
63
நின்னை சரணடைந்தேன் - ஷென்பா

காதலும், அன்பும் இந்த இரண்டும் தான் இவ்வுலகையே இயக்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்லுவார்கள். முழுக்க முழுக்க அந்த காதலும், அன்பும் நிறைந்த கதை இது❤

மதுவை பார்த்த முதல் கணத்தில் அவள் மீது காதல் கொண்டு, எதிர்பாரா விதமாக நடந்த நிகழ்வால் மதுவை தவறாக நினைத்து தன் காதல் பொய்த்து போனதாக எண்ணி வெளிவூர் செல்லும் சித்தார்த், திரும்பி இந்தியா வருகையில் அவளை மீண்டும் சந்திக்க நேர்கிறது.

தான் முன்னே பார்த்த சுட்டி தனம் நிறைந்த மது அல்ல இவள், எப்போதும் சிரிப்புடன் வலம் வருபவளின் இந்த சோகத்திற்கான காரணம் என்ன?? என்று சிந்திக்கும் சித்துவிற்கு. அதற்கான காரணம் தெரிய வர.. தான் மட்டும் தன் காதலை அப்போதே கூறி இருந்தால் மதுவின் தற்போதைய துன்பம் நிகழ்ந்திருகாது இல்லையா என்று வருந்துகிறான். தன் காதலை பற்றியும், மதுவின் மீது சந்தேகம் கொண்டு வெளிநாடு சென்றத்தையும் அவள் வீட்டில் கூற. மதுவை சந்தேகிதற்காக அவன் மீது அவர்களுக்கு கோவம் வந்தாலும், மதுவின் மீது அவன் கொண்ட காதலின் ஆழத்தை அறிந்த அவர்கள் மதுவிற்கு, சித்துவிற்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கின்றனர்.


தனக்கு கல்யாணம் என்ற ஒன்று வேண்டவே வேண்டாம் என்று மறுக்கும் மது அவள் கடந்த கால நிகல்வுகளால் வருந்த, அவள் கவலைகள், வருத்தங்களை எல்லாம் தன் காதலால் நிக்கி, தன் நீண்ட கால காதலை மதுவிற்கு உணர்த்தி சித்து மதுவை கரம்ப்பிடித்தானா??

மது மீது சந்தேகம் கொண்டு அவன் காதலை அவளிடம் கூறாமல் சென்ற சித்துவை பற்றி தெரிந்த பிறகு மதுவின் பதில் தான் என்ன?? பட்டாம்பூச்சியாக சிறகடித்து திரிந்த பெண்ணின் தற்போதைய சோகத்திற்கான காரணம் என்ன?? என்ற கேள்விகளுக்கு எல்லாம் அழகாகவும், உணர்வுபூர்வமாகவும் பதில் சொல்லி இருக்காங்க ஷென்பா மா❤

சித்து - அவனின் காதலும், மதுவை அவளின் ஒவ்வொரு உணர்வுகளையும் மதித்து அவளை பார்த்துக்கொள்ளும் சித்துவின் காதல் அருமை🤩❤. காதலில் காத்திருப்பும் அந்த காதலின் சுவையை கூட்ட தான் செய்யுமாம். அந்த கூற்று நம் சித்துவின் வாழ்வில் உண்மை.

மது - பாட்டாம்பூச்சியாக சிறகடித்து மகிழ்ந்து திரிந்தவளின் கவலை நம்மையும் கவலை கொள்ள வைத்தது. அவள் சேட்டை செய்கையிலும் சரி, சோகத்திலும் சரி நம்மை வெகுவாக கவர்கிறாள்.

அர்ஜுன் - கதையில் சில அத்யாயங்களே வந்தாலும் நம் மனதில் கம் போட்டு ஓட்ட வைத்தது போல அப்படியே ஒட்டி கொள்கிறான். வாவ்... அவனோட காதல் அழகோ அழகு... அவன் வரும் காட்சிகள் எல்லாம் ஜாலி வைப் தான்🤩🤩 அவனை படிக்கும் போதும் நமக்கும் இழலோரம் சிறு சிரிப்பு நம்மையும் அறியாமல் வருகிறது. ஆனா, அந்த ஹாஸ்பிடல்ல அர்ஜுன் பேசும் போது தான் ரொம்ப கஷ்டமா இருந்தது. அவன் 'சாரி தேனு' சொல்லுறது பார்க்கவும் அவ்ளோ கஷ்டமா இருந்துச்சு. அர்ஜுன் லவ் யூ டா❤❤

அர்ஜுனுடையது ஜாலியான அழகான காதல்னா, சித்துவிடது காத்திருந்த ஆழமான காதல்.
மொத்ததுல இவங்க ரெண்டு பேரும் அவங்க காதலால் நம்ம எல்லாரையும் கட்டி போட்டுட்டாங்க என்று தான் சொல்லணும்❤❤

தீபக்-மேகி, ராஜேஷ் - வித்யா,ஹரி - சுபா, ஆதி- மீரா, சுரேஷ் - கீதா, ஸ்ரீ ராம் - நேத்ரா ... அழகான ஜோடிகள்.. கதைக்கு இன்னும் கூடுதல் அழகு சேர்ந்தது இந்த ஜோடிஸ் தான்😍😍❤.

தீபக், ராஜேஷ், சுரேஷ் எல்லாரும் மது மேல காட்டும் அன்பு அழகோ அழகு🤩🤩 அஸ்வந்த் பண்ணுற காமெடி எல்லாம் வேற லெவல்🤣🤣.

காதல், வலி, பாசம், காமெடினு எல்லாம் கலந்த அழகிய கதை. படிக்க படிக்க நாமளும் அந்த பேமிலியில் ஒரு ஆளாக பீல் பண்ணுவோம்.

ஒரு சில கதைகள் எத்தனை முறை வாசித்தாலும் திரும்ப திரும்ப வாசிக்க வைக்கும். உண்மையா நின்னை சரணைத்தேன் கதையும் அப்படித்தான். வாழ்த்துக்கள் ஷென்பா மா🤩🤩❤❤

Happy reading❤❤
 
  • Love
Reactions: ஷெண்பா