Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript மௌனம் பேசியதே - ரிலே ஸ்டோரி | SudhaRaviNovels

மௌனம் பேசியதே - ரிலே ஸ்டோரி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் – 13

தீபக்கிடம் பேசி விட்டு வீடு வந்து சேர்ந்தவன் அன்னை தந்தையின் முகத்தை கூட பார்க்காது அறைக்குள் நுழைந்து கொண்டான்.

மகனின் நடத்தையில் காந்திமதிக்கு கவலையாகி போனது.

“என்னங்க இவன் இப்படி இருக்கான்? காது வலிக்க வளவளன்னு பேசிட்டு இருந்தவன் இப்போ ஒரு வார்த்தை கூட பேசாம போறான்?”

மாறனுக்கும் கார்த்திக்கின் நடத்தை கண்டு யோசனையாக தான் இருந்தது. நிச்சயம் மகன் சோர்ந்து போய் இருக்க மாட்டான் என்றும் அவனது மௌனத்திற்கு பின்னே என்ன பூகம்பம் வெடிக்கப் போகிறதோ என்கிற பயமே எழுந்தது.

“நம்ம பையன் அப்படி எல்லாம் கவலைப்படுற ஆள் இல்ல காந்தி...பேசாம இருக்கான்னா ஏதோ வில்லங்கம் வர போகுதுன்னு அர்த்தம்”.

அவரை முறைத்த காந்தி “எப்பவுமே அவனை சந்தேகப்படனுமா? இன்னைக்கு அந்த புள்ளைய பார்க்க கூட உள்ளே வரல. அப்போ அவன் மனசு எந்தளவுக்கு காயப்பட்டிருக்கு...அதை புரிஞ்சுக்காம பேச வேண்டியது” என்று சிடுசிடுத்தார்.

“அப்படியில்ல காந்தி...கார்த்தி அவ்வளவு சீக்கிரம் மனசை விடுறவன் இல்லை...நீ வேணா பாரேன் அந்த பொண்ணு கையில காலில விழுந்தாவது கட்டிக்கிட்டு வந்துடுவான்”.

இவர்கள் இங்கே வழக்கடித்துக் கொண்டிருக்க உள்ளே கட்டிலில் அமர்ந்திருந்தவனோ ‘இதோ பாரு! நியாயத்தை சொல்றேன் அப்படி இப்படின்னு அடிக்கடி எட்டிப் பார்க்க கூடாது’ என்று மனசாட்சியை மொத்திக் கொண்டிருந்தான்.

‘உன் நிலைமை இப்படி ஆகிப் போச்சேடா கார்த்தி! பாட்டுன்னா கார்த்தி! கார்தின்னா பாட்டு! இந்த தொமுகாவால பேச கூட யோசிக்க வேண்டி இருக்கே’ என்று புலம்பிக் கொண்டிருந்தான்.

மகனுக்கு காப்பி கொடுக்கலாம் என்று உள்ளே வந்த காந்தி அவன் தனியே பேசிக் கொண்டிருப்பதை பார்த்ததும் “என்னங்க கொஞ்சம் சீக்கிரம் வாங்க...இவனுக்கு முத்திப் போச்சு...தனியா பேசிகிட்டு இருக்கான்...விட்டா சட்டையை கிழிச்சுக்குவான் போல இருக்குங்க” என்று கத்தினார்.

அன்னையின் அலறலில் சுதாரித்துக் கொண்டவன் “என்னைப் பெத்த ஆத்தா? ஏன் இந்த கொலைவெறி? ஒரு மனுஷன் கொஞ்ச நேரம் மனசாட்சியோட பேசக் கூடாதா? அதுக்குள்ள பைத்தியம்னே முடிவு பண்ணிடுவீங்களா?”

“என்னது மனசாட்சியோட பேசினியா? எப்படி பழைய படத்துல எல்லாம் வந்து வந்து எட்டி பார்க்குமே அப்படியா?” என்றார் கிண்டலாக.

“ஹாஹா...சிரிச்சிட்டேன் உங்க சோக்குக்கு...இந்த கார்த்தியை கலாய்சிட்டாங்கலாமா...மா! நானே என் மௌனி குட்டியை எப்படி கரெக்ட் பண்றதுன்னு பலத்த யோசனையில் இருக்கேன்...நல்ல அம்மாவா பிள்ளைக்கு ஐடியா கொடுக்காம கிண்டல் பண்ண கூடாது”.

“இதெல்லாம் ஓவரு ராசா...பொண்ணை கரெக்ட் பண்றதை பத்தி அம்மா கிட்டேயே பேசுறியே?”

“உங்க பிள்ளை தாய் சொல்லை தட்டாத பிள்ளை மா...நீங்க நல்ல ஐடியாவா கொடுத்து உங்க மருமகளை வீட்டுக்கு கொண்டு வர ஹெல்ப் பண்ணுவீங்களாம்” என்று கன்னம் பிடித்து கொஞ்சினான்.

“என்னடா எலி அம்மணமா போகுதேன்னு நான் கூட தப்பா யோசிச்சிட்டேன்...இந்தா இதை குடிச்சா ஏதாவது ஐடியா கிடைக்கும். அதைப் போல செஞ்சிட்டு மருமக கிட்ட செருப்படி வாங்கு” என்று கடுப்புடன் கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

கொஞ்சமும் அயராமல் அன்னை வைத்துவிட்டு போன காப்பியை எடுத்து குடித்தவன் ‘இந்த உலகம் நம்மளை நல்லா புரிஞ்சு வச்சிருக்கே...தொமுக ரொம்ப தான் மண்டை காய வைக்கிறா’ என்று யோசித்துக் கொண்டே காப்பி கப்பை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான்.

அங்கே மாறன் “நான் தான் சொன்னேன் இல்ல காந்தி...அவன் அமைதியா இருக்கான்னா பின்னாடி வில்லங்கம் இருக்குன்னு” என்றார்.

அவர் முன்னே சென்று கோபமாக முறைத்தவன் “என்னைப் பார்த்தா வில்லன் மாதிரியாப்பா இருக்கு”.

“ச்சே..ச்சே...உன்னைப் போய் அப்படி சொல்வாங்களா கார்த்தி” என்றதும் காலரை தூக்கி விட்டுக் கொண்டவன் “இப்போ தானப்பா நீங்க சரியா என்னைப் பத்தி நினைச்சிருக்கீங்க” என்றான்.

அவரோ சிரிப்பை அடக்கியபடி “காமெடி பீசா வேணா நினைப்பாங்க” என்றார்.

அதைக் கேட்டு காந்திமதி சிரிக்க, தந்தையை கொலைவெறியுடன் பார்த்துவிட்டு “காமெடி பீசாவே நினைங்க...இந்த காமெடி பீசு வில்லன் வேலை பண்ணினதும் புரிஞ்சுபீங்க” என்று வெடுவெடுத்துவிட்டு நகர்ந்தான்.

“போடா...போடா முதல்ல தைரியமா அந்த பொண்ணு கிட்ட லவ்வ சொல்லிடு. அப்புறம் சொல்றேன் நீ காமெடியனா வில்லனான்னு” என்று அவனை மேலும் சீண்டினார் மாறன்.

அவர் தோளில் தட்டி “ஏங்க நீங்க அவனுக்கு அப்பா...பிள்ளை கிட்ட பேசுற பேச்சா பேசுறீங்க?” என்று அதட்டினார்.

“பின்னே என்னடி இவன் பண்ற அலப்பறை தாங்க முடியல...அந்த பொண்ணுக்கும் இவனுக்கும் நிச்சயமா ஒத்தே வராது. அவ அமைதியின் சிகரம்...இது அலப்பறையின் சிகரம்...இது ரெண்டும் எப்படி ஒத்து போகும் சொல்லு?” என்றார் கோபமாக.
 
  • Love
Reactions: Chitra Balaji

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
“அதை அவன் பார்த்துப்பான்...நீங்க பேசாம இருந்தாலே போதும். நீங்க ஏத்தி விட்டு இவன் ஏதாவது ஏடாகூடம் பண்ணி வைக்கப் போறான்” என்றார் கடுப்பாக.

“யாரு உன் புள்ள தானே...செஞ்சிட்டாலும்” என்று கேலியாக பேசிவிட்டு தன்னறைக்குச் சென்றார்.

‘அப்பனுக்கும், பிள்ளைக்கும் இடையில் நான் மாட்டிகிட்டு முழிக்கிறேன்’ என்று புலம்பிக் கொண்டே சமயலறைக்குச் சென்றார்.

அதே நேரம் மரீனாவில் காரை நிறுத்திவிட்டு மக்கள் கூட்டம் அதிகமில்லாத இடமாகப் பார்த்து அமர்ந்தாள் மௌனிகா.

கரையை தொட்டுச் செல்லும் அலைகளைப் பார்த்தவண்ணம் அமைதியாக அமர்ந்திருந்தாள். ஒருசில நாட்களாக அவள் மனதில் அடிக்கடி வெறுமை சூழ்ந்திருந்தது.எதிலுமே ஈடுபாடு ஏற்படாமல் மனம் வெறுமையாக இருந்தது. அது எதனால் என்று புரிபடாமல் பலவாறு யோசித்தாள்.

கண்கள் கடற்கரையில் ஆங்காங்கே நின்று கொண்டிருந்த மக்களை ஆராய்ந்தது. சிலர் குடும்பமாகவும், சிலர் நட்புக்களோடும், சிலர் காதலர்களாகவும் வந்திருந்தனர். குடும்பமாக வந்திருந்தவர்கள் குழந்தைகளை விளையாட விட்டு அதை ரசித்துக் கொண்டிருந்தனர். நண்பர்களோடு வந்தவர்களோ உற்சாகமாக சுற்றுப்புறத்தை மறந்து விளையாடிக் கொண்டிருந்தனர். காதலர்களோ உலகத்தை மறந்து அமர்ந்திருந்தனர்.

அவளைப் போல தனியாக வந்தவர் ஓரிருவரே. தன்னால் எவருடனும் ஏன் ஒன்ற முடியவில்லை என்று யோசித்தாள். பள்ளி கல்லூரி நாட்களிலும் கூட தீபக்கைத் தவிர்த்து வேறு எவரிடமும் அதிகம் நெருங்கியதில்லை. சக மனிதர்களின் மேல் நம்பிக்கையின்மை தான் இருக்கிறது. என்ன முயன்றும் அதை மாற்றிக் கொள்ள முடியவில்லை. யார் வந்து பழகினாலும் இவர்கள் நம்மை எந்தவிதத்தில் ஏமாற்றப் போகிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

இப்படி பல்வேறு எண்ணச் சுழலில் உழன்று கொண்டிருந்தவள் பக்கத்தில் வந்து அமர்ந்தவனைக் கண்டு லேசான புன்னகையோடு வரவேற்றாள். அப்போதும் கூட வாயைத் திறந்து வா-வென்ற வார்த்தை வரவில்லை.

தீபக்கோ “என்ன மௌனி பயங்கரமான யோசனையில் இருந்த போல இருக்கு” என்றான்.

“பெருசா ஒண்ணுமில்லை”

அவளைப் பார்த்து மென்னகையுடன் “உன்னை எதுக்காக வர சொன்னேன்னு கேட்க மாட்டியா?” என்றான்.

மெல்லிய புன்னகையுடன் “சொல்லு” என்றாள்.

அவனோ குறும்புடன் “உன்னை தன் படத்தில் நடிக்க மணிரத்னம் கூப்பிட்டிருக்கார்” என்றான்.

அதற்கும் அலட்டிக் கொள்ளாது “என்னையா?” என்றாள் ஒற்றை வார்த்தையாக.

“ம்ம்..அவர் செலக்ட் பண்ற பொண்ணுங்களுக்கு எல்லாம் கம்மியா பேச டியுஷன் எடுக்க வேண்டி இருக்காம். உன்னை பத்தி கேள்விபட்டு உற்சாகமாகி வர சொல்லிட்டார்” என்றான் கேலியாக.

“கிண்டல் பண்ணாத தீபக்” என்றாள் வெட்கச் சிரிப்புடன்.

“அப்புறம் எப்படி போயிட்டு இருக்கு லைப்?”

“ம்ச்...என்னன்னு தெரியல கொஞ்ச நாளா எல்லாமே வெறுமையா இருக்கு” என்றாள் சலிப்புடன்.

அவளை ஆழ்ந்து பார்த்தவன் “அப்படித்தான் இருக்கும் மௌனி...நமக்குன்னு ஒருத்தர் வந்தா வாழ்க்கை சுவாரசியமா இருக்கும்...அந்தந்த வயதுக்கு நடக்க வேண்டியது நடக்கணும் மௌனி” என்றான்.

மணலை பார்த்தவண்ணம் “என்னால யார் கூடவும் ஒத்துப் போக முடியும்னு தோனல தீபக்” .

“ஏன் அப்படி நினைக்கிற?

“தெரியல தீபக்...நிறைய ஏமாற்றங்களை சந்திச்சு யாரையும் எற்றுக்க முடியாம தவிசிட்டு இருக்கேன்.”

கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் “வாழ்க்கையில் எல்லாமே வேணும் மௌனி. சத்தமே இல்லாத உலகம் வேணும்னு நீ நினைக்கிற...இப்போ சத்தங்களுக்கு இடையில் நீ இருக்கிறதால அப்படித் தோணலாம். ஆனா ஒரு மூணு நாள் இந்த உலகம் அப்படி இருந்தா நிச்சயமா எல்லோருக்கும் பைத்தியம் தான் பிடிக்கும். யோசிச்சு பாரு கருப்பு வெள்ளை மட்டுமே நிறைந்த உலகம் எப்படி இருக்கும்? கொஞ்ச நாளில் மனம் சலிப்படையத் தொடங்கும். பல வண்ணங்கள் நிறைந்த உலகம் தான் அழகு. அது போல தான் மனிதர்கள் எல்லோரும் ஒரே மாதியே இருந்துட்டா வாழ்க்கையில் எந்த சுவாரசியமும் இல்லாம போயிடும்...உனக்கு இப்போ வந்திருக்கிற சலிப்பு கூட அதனால தான். உன்னுடைய வட்டத்திற்குள் நீ யாரையும் அனுமதிக்கல...ஏன்னா உனக்கு பயம்...உன்னுடைய பெரியப்பா ஏமாத்தின மாதிரி ஏமாத்திடுவாங்ன்னு...மனசைத் திறந்து பாரு..அப்போ உனக்கு சின்ன வயசு...ஆனா இப்போ அப்படியில்லை...உன்னால மனிதர்களை இனம் காண முடியும்...நல்லவங்க யாரு கெட்டவங்க யாரு என்று...உனக்கு இன்னும் வயசிருக்கு உன்னோட சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள நிச்சயம் ஒரு தோள் வேணும்...பொறுமையா யோசிச்சு பாரு மௌனி” என்றான்.

“நீ சொல்றதெல்லாம் என் மனசுக்கு புரிஞ்சாலும் செயல்படுத்த முடியல தீபக்”.

அவளை பார்த்து “உன்னால முடியலேன்னா சொல்லு மௌனி...அம்மாவும் நானும் உனக்கான நல்ல வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்க தயாரா இருக்கோம். இன்னைக்கு வர சொன்னதே அதுக்காகத் தான். அம்மா போன் பண்ணி இருந்தாங்க” என்று கூறி அவள் முகம் பார்த்தான்.
 
  • Love
Reactions: Chitra Balaji

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
“ஆண்டி எப்படி இருக்காங்க? என்ன சொன்னாங்க?”

“உனக்கு மாப்பிள்ளை பார்க்கிறதைப் பத்தி தான் பேசினாங்க. உன் கிட்ட பேச சொன்னாங்க. அதோட எனக்கும் ஏதோ ஒரு பொண்ணு ஜாதகம் வந்திருக்காம் ப்ரோசீட் பண்ணவான்னு கேட்டாங்க”.

“என்னை விடு தீபக்...அம்மாவை உனக்கு பார்க்க சொல்லு” என்றாள் உற்சாகமாக.

அவனோ மறுப்பாகத் தலையசைத்து “இல்ல மௌனி...உனக்கு பண்ணிட்டு தான் நான் பண்ணிப்பேன்னு சொல்லிட்டேன்” என்றான் கூர்மையான பார்வையோடு.

அதில் கோபமடைந்தவள் “லூசா நீ! என் வாழ்க்கையோட உன்னோடதை ஏன் சேர்க்கிற? என் மனசு எப்போ சமாதனம் அடையுதோ அப்போ தான் கல்யாணத்தைப் பத்தி யோசிப்பேன்” என்றாள்.

அவனும் விடாப்படியாக “நீ சமாதானம் அடைந்த பிறகு நானும் என் வாழ்க்கையைப் பார்க்கிறேன்” என்றான்.

“தீபக்! ப்ளீஸ்! என்னை என் போக்கில் விடு”

“இதோ பாரு மௌனி! இனியும், உன் இஷடத்துக்கு விடுறதா இல்லை. ஒன்னு நீயா ஒருத்தனை செலெக்ட் பண்ணி சொல்லு...இல்லேன்னா நாங்க சொல்கிற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்கோ” என்றான்.

“ம்ச்..ஏன் தீபக் என்னைப் புரிஞ்சுக்காம படுத்துற?”

“உன்னை புரிஞ்சதுனால தான் சொல்றேன்...என்ன நீயே செலெக்ட் பண்றியா இல்ல நாங்க பார்க்கவா?” என்றான் மிரட்டலாக.

“நானே கொஞ்ச நாளா டென்ஷனில் இருக்கேன்...நீ வேற புரியாம படுத்துற” என்றாள் எரிச்சலாக.

அத்தனை நேரம் இருந்த பிடிவாதத்தை விட்டு “என்ன மௌனி? யாராவது தப்பா பீகேவ் பண்றாங்களா?” என்றான் பதட்டமாக.

“அந்த அளவுக்கு எல்லாம் சீரியஸ் இல்ல...ஏற்கனவே சொன்னேனே அந்த லூசு தான் டார்ச்சர் தாங்கல” என்றாள் கடுப்பாக.

“எந்த லூசு” என்று ஒன்றும் அறியதவனைப் போல கேட்டான்.

“அது தான் அந்த லவுட் ஸ்பீக்கர்”

அவளை ஒரு மாதிரியாகப் பார்த்து “அவன் தான் இன்னைக்கு அவங்க அம்மாவோட உள்ளேயே வரலன்னு சொன்னியே அப்புறமென்ன?”

“என்னன்னு தெரியல தீபக்? அவன் வந்தாலும் டார்ச்சேரா இருக்கு வரலேன்னாலும் அப்படித்தான் இருக்கு” என்றாள் தன் மனம் புரியாமலே...

தீபக்கோ மனதிற்குள் ‘மச்சான் உன்னை என்னமோ நினைச்சேன் உன் அலப்பரையை வச்சு மௌனியை கவுத்திட்டியே’ என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தான்.

“விடு! விடு! அவனெல்லாம் ஒரு ஆளுன்னு பேசிட்டு” என்றான்.

“ம்ம்” என்று சோர்வாக சொன்னவள் எழுந்து கொண்டாள்.

தானும் எழுந்து கொண்டவன் சட்டென்று “ஏன் மௌனி அவன் உள்ளே வந்து பார்க்கலேன்னு வருத்தமா இருக்கா?” என்றான் கூர்ந்து பார்த்தபடி.

தன்னை சுதாரித்துக் கொண்டவள் “ச்சே..ச்சே..அவன் உள்ளே வராததே நிம்மதியா இருக்கேன்” என்றாள் அவசரமாக.

அவளது பதட்டத்தை அறிந்து கொண்டவனது இதழ்கள் புன்னகையைப் பூசிக் கொண்டது. அவளது மனம் மெல்ல கார்த்திக்கின் பக்கம் திரும்புகிறது என்பதை உணர்ந்து கொண்டான்.

அவளும் ‘தீபக் சொல்கிற மாதிரி அவன் உள்ளே வந்து என்னைப் பார்க்காதது தான் வருத்தமா இருக்கோ?’ என்கிற மனதை அடக்கி ‘அதெல்லாம் இல்ல...அவனைப் போய் நான் பார்க்கலேன்னு வருத்தபடுப்படுவேனா’ என்று தன்னைத் தானே சமாளித்துக் கொண்டாள்.

அவளிடம் விடைப் பெற்றுக் கொண்டு கிளம்பிய தீபக் செல்லும் வழியிலேயே கார்த்திக்கை அழைத்து மௌனியிடம் பேசியதை கூறினான். இறுதியில் அவள் பேசியதைக் கூறாமல் பாதியை மட்டும் சொன்னான்.

அதைக் கேட்டு “டேய்! இந்த தொமுக ரொம்ப தான் படுத்துறா....எங்கப்பா என்னை இவளால ரொம்பவே கேவலப்படுதுறார்” என்று புலம்பினான்.

“அதை விடு கார்த்தி...நீ எப்போ அவ கிட்ட உன் மனசை சொல்லப் போற?”

“உனக்கு எனக்கும் எத்தனை நாள் பழக்கம் மச்சான்? உனக்கு ஏன் இந்த கொலைவெறி? அவ கிட்ட போய் ப்ரொபோஸ் பண்ணிட்டு வாங்கி கட்டவா?”

தலையில் அடித்துக் கொண்ட தீபக் “நீ தேற மாட்டடா...நான் என் பிரெண்டுக்கு வேற மாப்பிள்ளை பார்க்கிறேன்” என்றான் மிரட்டலாக.

அதைக் கேட்டு அலறியவன் “மச்சான்! உன்னை நம்பித்தான் நான் இருக்கேன்...சொல்லு இப்போவே போய் உன் பிரெண்ட் கிட்ட ப்ரொபோஸ் பண்ணிடுறேன்” என்றான் தீபக்கின் ஜவ்வு கிழிய...

அவன் கத்திய கத்தலில் போனை தவற விட்டவன் “டேய்! இப்படிஏ போய் கத்தி சொல்லு...கதை முடிஞ்சிடும்” என்று கூறி போனை அனைத்தான்.

அவன் போனை கட் பண்ணியதும் சற்று நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தவன் மௌனியின் எண்ணை அழுத்தினான். அவளது அலைப்பேசி அடிக்க, இவனது இதயம் எகிறி குதித்தது. அவள் ‘ஹலோ’ என்றதும் “வணக்கம்...ஹலோ எப்எமிலிருந்து பேசுவது உங்கள் அன்பன் கார்த்திக்” என்றான் கிசுகிசுப்பான குரலில்.

அவனது அழைப்பை ஏற்று காதில் வைத்தவள் அவனது குரல் ஏதோ செய்ய, பதில் எதுவும் கூறாமல் அழைப்பை கட் செய்தாள்.

சுதா ரவி
 
  • Love
Reactions: Chitra Balaji

Chitra Balaji

Active member
Feb 5, 2020
125
68
28
இவன் அடங்க maatengiraane.... வாய் ஓய maatengithu avanuku.... Ava manasula avan vara aarambichitaan... Super Super maa... Semma episode
 
  • Haha
Reactions: sudharavi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் -14

பதினைந்து நிமிடங்களாக போனிலேயே தன்னுடைய இரு கண்களையும் வைத்துக்கொண்டிருந்தவளை, அவன் ஏன் இன்னும் தன்னை அழைக்கவில்லை என்ற எண்ணம் அலைக்கழித்தது.அப்போதும் கூட கார்த்திக்கின் அழைப்பிற்கு பதிலளிக்காமல் தான் போனை கட் செய்ததும் அவன் கோபம் கொண்டு அடுத்து தன்னை அழைக்கவில்லையோ என அவளால் நினைக்கமுடியவில்லை.அந்த அளவிற்கு அந்த மைக்செட்டுக்கு மானம் ரோஷமெல்லாம் இல்லை என இவள் மனம் இவளிடம் கற்பூரத்தை அனைத்து சத்தியம் செய்தது.

அவன் கால் பண்ணலைன்னா என்ன இப்ப? நாமே பண்ணிடலாமா... என இவள் யோசிக்கும்போதே இவளின் மனசாட்சி,’ அவன் எதுக்கு கால் பண்ணன்னு கேட்டா என்ன சொல்வ?’ எனக் குறுக்கு கேள்வி கேட்டது.

‘யாரு... அந்த ஜொள்ளு பார்ட்டி என்னைக் கேள்வியெல்லாம் கேட்டுடுமா? அதுக்கெல்லாம் அதுக்கு எங்க நேரம் இருக்கும்! என்கிட்டே வழியவே அதுக்கு நேரம் போதாது!’ என கார்த்திக்கை முழுமொத்தமாக டேமேஜ் செய்தாள்.

மணித்துளிகள் கூடக்...கூட, எப்படியும் அவன் கண்டிப்பாக அழைப்பான் என்ற இவளின் நம்பிக்கை குறையத்தொடங்கியது.அங்க நெட்வொர்க் ப்ராப்ளமா இருக்கலாம், சடர்னா வந்த பிரெண்ட் கிட்ட பேசிட்டு இருக்கலாம், அவங்க அம்மாகேட்ட ஒரு சாதாரண கேள்விக்கு பதில் சொல்றேன் பேர்வழின்னு இவன் மொக்கை போட்டு இருக்கலாம்.... இப்படி பல இருக்கலாம்களை இவள் எண்ணிக்கொண்டிருக்க, இவளின் மனதோ ஆனாலும்... அவன் இன்னும் அழைக்காது கொஞ்சம் வேற மாதிரிதான் தெரியுது என சொல்லி இவளை தவிப்பில் ஆழ்த்தியது.அதை புரிந்துகொண்டதைப்போல அவளின் கைப்பேசி ‘நினைத்தது யாரோ நீ தானே!’ எனக் குயில் குரலில் கேட்டது.

ஆவலாக போனை எடுத்தவள், ”இப்பதானே மீட் பண்ணிட்டு வந்தேன். அதுக்குள்ள என்ன தலை போகற வேலை வந்ததுன்னு, நினைத்தது யாரோன்னு கேட்டுகிட்டு வந்துட்ட”அழைத்தது தீபக் எனத் தெரிந்ததும் எரிந்து விழுந்தாள்.

‘ம்ம்ம்...இதெல்லாம் சரியே இல்ல. ரொம்பதான் மாறிட்ட மௌனி!’ என எண்ணியவன், போனை ம்யுட்டில் போட்டு வேறொருவரை தொடர்பில் இணைத்தான்.

“மச்சான்! நாங்க பேசி முடிக்கற வரைக்கும் இந்த ம்யுட்டை அப்படியே கண்டினியூ பண்ணிக்கோ!” என அதிரடியாய் கார்த்திக் இவளின் இணைப்பில் இணைந்தான்.

அவனின் குரலை போனில் கேட்டவளுக்கு அவளையும் மீறி ஒரு இதம் மனதில் பரவத்தான் செய்தது.தான் போனை கட் செய்ததும் உடனே அழைத்தால் தான் அவனிடம் பேசமாட்டேன் என்பதை புரிந்துக்கொண்டு தீபக்கின் மூலம் தன்னை அனுகியவனின் செயல் இவளின் கல்மனதை அதிரடியாய் அசைத்துப் பார்த்தது.

இவனுக்கு எப்படி தீபக்கை தெரியும்... என யோசித்தவள், இவனுக்கு இருக்கிற வாய்க்கு அதிலேயே வடையை சுட்டு அதை வாஷிங்டன்லையே நூறு டாலருக்கு வித்துட்டு வந்தாலும் ஆச்சரியப்படறதுகில்ல. இதுல தீபக் அப்பாவி எம்மாத்திரம்!’ எண்ணியவளுக்கு புன்னகை தோன்றியது. அது அடுத்து வந்த அவளின் குரலில் அப்பட்டமாய் தெரிந்தது.

“இப்ப நான் போனை கட் பண்ண மாட்டேன்னு என்ன நிச்சயம் மிஸ்டர்.ஓட்டைவாய்!” எனக்கேட்டாள்.

“நம்பிக்கை! உன்மேல இருக்கும் நம்பிக்கை தான் மிஸ். தொமுகா!” அவளின் குரலில் இருந்த துள்ளல் கொடுத்த தைரியத்தில் வழக்கமான தன் வாய் சவடாலைக் காட்டி மாட்டிக்கொண்டான்.

‘இவன் பேசினா நான் கண்டிப்பா கேட்பேன்ற நம்பிக்கையை நான் எப்ப இவனுக்கு கொடுத்தேன்? என்ன நினைக்கிறான் இவன்! எப்படா இவன் பேசுவான்னு நான் காத்துட்டு இருக்கறதை போல இல்ல பேசறான். இருக்கும்... இவன் நினைப்பு இப்படித்தான் இருக்கும். அன்னைக்கு ஹாஸ்பிடல்ல ஐசியூல இருக்கற பேஷன்ட் கூட என்கிட்ட ஆட்டோகிராப் வாங்க லைன்ல நின்னாங்கன்னு ஸீன் போட்டவன் தானே இவன்.ஊரே உன்பின்னாடி வந்தாலும் நான் அப்படி எல்லாம் ஈஸியா உன்பின்னாடி வந்துடமாட்டேன் மிஸ்டர்! எவ்வளவு தைரியம் இருந்தா என்னை இப்படி நினைப்ப!’

பதிலடி கொடுக்க இவள் எடுத்துக்கொண்ட அந்த சிறுமணித்துளி,நேரலையில் பலதரப்பட்ட மக்களை சமாளித்த அனுபவம் மிக்க கார்த்திக்கிற்கு மௌனியின் மௌனத்தை சரியாக மொழிப்பெயர்க்க போதுமானதாக இருந்தது. தன்னைமீறி வாய்விட்டதை எண்ணி நொந்துக்கொண்டவன் எந்த வாயால் மாட்டிக்கொள்ள இருந்தானோ அதே வாயால் தப்பிக்கவும் வழிவகுத்துக் கொண்டான்.

“ஹலோ மிஸ்! எந்த நம்பிக்கைன்னு கேட்கலையே நீங்க” என்றான் கூலாக.

முகத்தில் அறைந்தாற்போல அவனுக்கு பதிலடி கொடுத்து போனைக் கட் பண்ண எண்ணி இவள் வாயை திறந்த நேரத்தில் அவன் இப்படி சொன்னதும் ஏதும் பேசாது குழம்பிப்போனாள். இதை எதிர்பார்த்து காத்திருந்தவனோ,

“இந்த நேரத்தில் நான் உன் வீட்டிக்கு வருவதை நீ விரும்பமாட்டன்ற நம்பிக்கையில் தான் நான் அப்படி சொன்னேன்!” என்றான் கெத்தாக.

என்னைக்கு தான் இந்த லூசு புரியறமாதிரி பேசப்போகுதோ... எண்ணியவள் அதையே வார்த்தைகளாய் வெளியிட்டாள்.

“மௌனி மேடம்! இப்ப தீபக் ஏன் உனக்கு கான்ஃப்ரேன்ஸ் கால் போட்டான்னு தெரியுமா...?“ இவன் இப்படி இழுத்ததும் ‘ஆஹா.. நான் ஒரு கதை சொல்லட்டா சார்! ஸ்டார்ட் பண்ணிட்டான்!’ இங்கே இவள் தலையில் கைவைத்துக்கொண்டு விதியே என அவன் சொல்லப்போவதை கேட்ட தயாரானாள்.

“நான் உன்கிட்ட பேசிட்டு இருக்கும் போதே லைன்ல ஏதோ பிரச்சனை வந்து கால் கட்டாகிட்டது.உன்னோட நெட்வெர்க் சரியில்ல போல. (அடப்பாவி! அவ உன்னை காறித்துப்பி உன்னோட போன்காலை கட்பண்ணத இப்படி கூட சொல்லிக்கலாமா!) நான் திரும்ப திரும்ப உனக்கு போன் பண்ண... திரும்ப திரும்ப அதே நெட்வொர்க் ப்ராப்ளம் வர, நான் என்ன சொல்ல வந்தன்னு தெரியாம நீ வேற இங்க தவிச்சிட்டு இருக்க... எதுக்கு வீணான மனகஷ்டம் உனக்குன்னு உன்னை நேரிலேயே மீட் பண்ணி சொல்லவந்ததை சொல்லிடலாம்னு தீபக்கு போன் பண்ணி உன்னோட அட்ரஸ் கேட்டேன். அதுக்கு அவன், வேணாம் மச்சான்! காலம் கெட்டுக்கிடக்கு. ஒரு கன்னிப்பையன் இந்த நேரத்தில் யாரோட துணையும் இல்லாம மௌனிய பொழுதுபோன வேளையில மீட் பண்ண போறது பெரிய தப்பு. நான் அவளுக்கு இப்போவே கால் பண்ணி நாளைக்கு நீ எங்க சொல்றியோ அங்க உன்னை மீட் பண்ண சொல்றேன்னு என்னை லைன்ல இருக்க வச்சிட்டு உனக்கு கால் பண்ணான்!”

‘கேட்கற எனக்கே மூச்சு வாங்கி கண்ணு கட்டுதே... இவனுக்கு அப்படி எந்த ரியாக்ஷனும் வராதா?’ இவள் அதிசயித்துக்கொண்டிருக்கும் போதே தீபக்,” மௌனி! எதாயிருந்தாலும் பேசி தீத்துக்கோ.எதையுமே தேவையில்லாம வளர்த்துகிட்டே போகறது நல்லதில்ல” என்றான்.

மௌனிக்கும் அவன் சொல்வது சரியாகப்படவே நாளைய சந்திப்பிற்கு கார்த்திக்கிடம் ஓகே சொன்னாள். அவளின் சம்மதம் பெற்றதும் உல்லாசவானில் மிதந்துக்கொண்டே அவன் இவர்களிடம் விடை பெற நண்பர்கள் அடுத்து என்ன பேசுவது என தெரியாது அமைதியாக இருந்தனர்.

இன்றைய சந்திப்பில் கூட கார்த்திக்கை தனக்கு தெரிந்ததை போல தீபக் காட்டிக்கொள்ளாததால் விளைந்த கோபத்தில்,

“அவன் மச்சான்னு சொன்னதும் அவனுக்கு வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டியா தீபக்” என்றாள்.

அவளின் வார்த்தைகள் சுருக்கென்று குத்திய போதும் தீபக்கிற்கு ஒரு புறம் மகிழ்ச்சியாகவே இருந்தது. குத்தூசியாய் பேசும் இவள், சமீபகாலமாக இவன் அறிந்த மௌனி அல்ல. பல வருடங்களாக எண்ணியதை வார்த்தையால் வடிப்பவள் அல்ல இப்போதிருக்கும் மௌனி.
 
  • Love
Reactions: Chitra Balaji