அத்தியாயம் - 1

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,414
940
113
ஹாய் பிரெண்ட்ஸ்,

"தோடி ராகம்" முதல் அத்தியாயத்துடன் வந்துவிட்டேன்......இனி வாரம் இரு அத்தியாயங்கள் பதிவிடுகிறேன்....திங்களும், வெள்ளியும் அத்தியாயாங்கள் பதிவிடப்படும்.

அத்தியாயம் – 1

சென்னையின் மிக பரபரப்பான ஆயிரம் விளக்குப் பகுதி. காலை நேர பரபரப்பில் வாகனங்கள் அங்குலம் அங்குலமாக நகர்ந்து கொண்டிருந்தன. மிகப் பெரிய பேருந்துகளிலிருந்து, சிறிய இரு சக்கர வாகனங்களில் இருந்தவர் வரை எப்போதாடா வண்டி நகரும் மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தனர்.

டிராபிக் ஜாமில் சிக்கி ஒருவித எரிச்சலுடன் நின்றவர்களை திடீரென்று கேட்ட சலசலப்பில் தங்களை மறந்து பார்க்க வைத்தது. மாநகர பேருந்திலிருந்து ஒருவன் இறங்கி வண்டிகளுக்கு இடையே ஓட, அவனைத் துரத்திக் கொண்டு நான்கைந்து கரும் தடியர்கள் ஓட ஆரம்பித்தனர்.

இதன் நடுவே எதிர் திசையிலிருந்தும் ஒரு கூட்டம் ஓடிக் கொண்டிருந்தவனை வழி மறித்தது. பொது மக்களுக்கு நடக்கப் போவது என்ன என்று புரிந்து போனதும், இரு சக்கர வாகனங்களில் இருந்தவர்கள் அதை அப்படியே போட்டுவிட்டு தலை தெறிக்க ஓடி விட்டனர். காரிலும், பேருந்துகளிலும் இருந்தவர்கள் சீட்டுக்கடியில் நுழைந்து கொண்டனர்.

இரு பக்கமும் ஆட்கள் சூழ நின்றவன் அனைவரையும் பார்த்து கதறி அழ, அவனை கண்டு கொள்ளாமல், நடுவில் விட்டுவிட்டு இரு குழுக்களும் அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. நடுவில் நின்றவனோ அவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள முயல, அவனை மீண்டும் மீண்டும் உள்ளே பிடித்து தள்ளியபடியே சண்டையிட்டார்கள்.

அப்போது மிக வேகமாக எதிர் திசையிலிருந்து ஒரு ஓபன் ஜீப் ரவுண்ட் அடித்து அவர்களிடையே நின்றது. அந்த ஜீப்பைக் கண்டதுமே ஒரு குழுவினர் அதிர்ந்து போய் மெல்ல பின்னோக்கி நகர ஆரம்பித்தனர்.

“டேய் ஆதிகேசவன் டா” என்றவர்கள் வேகமாக அங்கிருந்து ஓட முயற்ச்சித்தனர்.

அவர்களை ஆதிகேசவனின் ஆட்கள் பிடித்துக் கொள்ள, ஜீப்பிலிருந்து குதித்தவன் கையிலிருந்த காப்பை இறுக்கிக் கொண்டு வேட்டைக்கு போகும் சுடலைமாட சாமி போன்று அழுத்தமான காலடியுடன் நடுங்கிக் கொண்டிருந்தவன் முன் சென்று நின்றான்.

ஆறடி உயரமும், அசத்தலான நிறமும், உடற்பயிற்சி செய்த கற்பாறை உடலும், கண்களில் கருப்பு நிற சன் கிளாசும் அணிந்து எதிரே நின்றவனை தனது கூர்விழிகளால் துளைத்துக் கொண்டிருந்தான்.

“டாகுமென்ட்ஸ் எங்கே?”

இரு கைகளையும் உயர்த்தி “நீங்க என்ன கேட்குறீங்கன்னு எனக்கு தெரியல. நீங்க தேடுகிற ஆள் நானில்லை. என்னை விட்டுடுங்க” என்று கதறி அழ ஆரம்பித்தான்.

தடிமனான உதடுகள் மேலும் இறுக, சற்று நேரம் எதிரே இருந்தவனை பார்த்தவன், மெல்ல தனது கைகளை பக்கவாட்டில் நீட்ட, அதை புரிந்து கொண்ட அவனது ஆள் குறுங்கத்தி ஒன்றை வைத்தான்.

கத்தியை பார்த்ததுமே பயந்து அலறி அவன் பாய முற்படும் போது, அவனது தோள்களை அழுத்தமாகப் பிடித்து சரியாக அவனது அடி வயிற்றில் கத்தியை இறக்கி இருந்தான். அதுவரை சின்ன சின்ன சலசலப்புகள் இருந்த இடத்தில் நடந்துவிட்ட கொலையில் மக்கள் தங்கள் வாயில் கையை வைத்து அடைத்துக் கொண்டனர். தங்களை மீறி சிறு சப்தம் கூட வந்துவிடாதபடி இருக்க வேண்டும் என்று பயத்தில் எச்சிலை கூட விழுங்க மறந்தனர்.

ஆதிகேசவனின் கைகள் எங்கும் பச்சை ரத்தம். குத்துபட்டவனின் விழிகள் மேலே செருகுவதை பார்த்தபடி மெல்ல அவனது தோள்களை விடுவித்தான். மெல்ல கீழே சாய்ந்தவனின் உயிர் மூச்சு மெல்ல அவன் உடலை விட்டு விலக ஆரம்பித்தது. அவனது விழிகளோ ஆதிகேசவனையே பார்த்துக் கொண்டிருந்தது.

அவனது இதழ்கள் “நானில்லை! நா...னில்லை..” என்றபடியே தலை தொங்கி போனது.

அவனது மூச்சு பிரிந்ததும் கையிலிருந்த கத்தியை தன் ஆட்களின் பக்கம் வீசிவிட்டு, எதிரே இருந்தவர்களிடம் சென்றான்.

ரத்தம் தோய்ந்த தன் கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு அவர்களைப் பார்த்து ஏளனமாக சிரித்தவன் “ஒவ்வொருவரையும் ஆட விட்டு அடிக்கிறவன் இந்த ஆதிகேசவன். என் கிட்ட விளையாடி பார்க்க வேண்டாம்னு சொல்லு” என்று மிரட்டியவன் வேக நடையுடன் தனது ஜீப்பில் ஏறி அமர்ந்தான். அடுத்த நிமிடம் ஜீப் சீறி பாய்ந்தது. அவனது ஆட்களும் சென்றுவிட, ரத்த வெள்ளத்தில் கிடந்தவனை கண்டு அலறி அடித்துக் கொண்டு பொது மக்கள் ஓடினர்.

அனைத்து செய்தி ஊடகங்களும் அடித்து பிடித்துக் கொண்டு அந்த செய்தியை ஒளிப்பரப்பியது. நகரின் இரு தாதாக்களுக்கு இடையே நடந்த மோதலில் ஒருவன் கத்தியால் குத்தபட்டான் என்று சம்பவம் நடந்த இடத்தை சுற்றி வந்து கொண்டிருந்தனர்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்த எவரும் தாங்கள் பார்த்ததாக சாட்சி சொல்ல முன் வரவில்லை. ஒரு சில இளைஞர்கள் தங்கள் போனில் நடந்த கொலையை வீடியோ எடுத்திருந்தாலும், அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆதிகேசவன் எங்கிருந்தாலும் வந்து வெட்டுவான் என்று பயந்து அதை வெளியிட பயந்தனர்.

போலீசாருக்கும் செய்தது ஆதிகேசவன் தான் என்று தெரிந்தாலும், சாட்சிகள் கிடைத்தால் கூட அவன் மீது கை வைக்க பயந்தனர். ஆளும் கட்சியிலிருந்து, எதிர்கட்சி வரை தன் கைக்குள் வைத்திருப்பவன். அவனுக்கு எதிராக சுட்டு விரல் கூட நீளாது என்பதை அறிந்தவர்கள், தலையை பியித்துக் கொண்டு இருந்தனர்.

அனைவரையும் அலற வைத்துக் கொண்டிருந்தவனோ, தனது வீட்டில் சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவன், கண்களை மூடி சிந்தனையில் இருந்தான். அவனது எண்ணம் முழுவதும் இறந்து போனவனை சுற்றியே இருந்தது. அந்த டாகுமென்ட்சை யாரிடம் கொடுத்திருப்பான்? எங்கு மறைத்து வைத்திருப்பான்? என்று எண்ணிக் கொண்டிருந்தான்.

அப்போது அவனது வலது கையான கார்த்திக் “கேசவா! நீ கேட்ட டீடைல்ஸ் கிடைச்சாச்சு” என்று கூறி அவன் முன்னே ஒரு பைலை நகர்த்தி வைத்தான்.

மெல்ல விழிகளைத் திறந்து எதிரே இருந்தவனை பார்த்துவிட்டு, எதுவும் பேசாமல் அந்த பைலை கையில் எடுத்தான். மௌனமாக அதில் கொடுக்கப்பட்டிருந்த விவரங்களை படித்தவன், பட்டென்று பைலை தூக்கி வீசினான்.

“நான் எல்லா இடத்திலையும் தேட சொல்லிட்டேன். எங்கேயும் கிடைக்கல”.

“ம்ம்...” என்று நெற்றியை நீவி விட்டுக் கொண்டு எழுந்தவன் “கருணாகரன் குழப்பி இருக்கான். அவனை தொடர்ந்து கண்காணிக்க சொல்லு. ஒரு செகண்ட் கூட நம்ம கண்களில் படாமல் இருக்க கூடாது”- ஆதி

“ஏற்பாடு பண்ணிட்டேன் கேசவா”.

தலையை அழுந்தக் கோதிக் கொண்டவன் “வண்டியை எடுக்க சொல்லு! ஈசிஆர் போகணும்” என்றவன் வேகமாக வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

ஆதிகேசவன் ஈசிஆரில் உள்ள தனது பங்களாவிற்கு செல்ல வேண்டும் என்று கூறினாலே, அவன் டென்ஷனில் இருக்கிறான் என்று அர்த்தம். இருநாட்களுக்கு அந்த பங்களாவை விட்டு எங்கேயும் வெளியே வர மாட்டான். அவனது நண்பனும், பிஏ-வுமான கார்த்தி தான் அனைத்தையும் செய்வான். அவன் மட்டுமே கேசவனிடம் நெருங்க முடியும்.

அவன் வாயிலை நெருங்கியதுமே கார் வந்து நிற்க, வேகமாக அதில் ஏறி அமரவும், கார்த்தியும் ஓடிச் சென்று முன்பக்கம் அமர்ந்தான். படுவேகமாக கேட்டை விட்டு கார் சீறிப் பாய்ந்தது.தஞ்சாவூரிலிருந்து இருபது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரத்தநாடு கிராமம் மிக அழகானது. அங்கு ஓடுகள் வேயப்பட்ட ஒரு வீட்டின் தோட்டத்தில் செடிகளுக்கு கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து ஊற்றிக் கொண்டிருந்தாள் சக்தி.

சமையல்கட்டிலிருந்து எட்டிப் பார்த்து “பாப்பா! ஒரு நாளிலேயே ஒரேடியா தண்ணியை ஊத்தி செடியை கொன்னுடாதே” என்றார் பானுமதி. சக்தியின் தந்தைவழி பாட்டி.

குடத்தை கிணத்தடியில் வைத்துவிட்டு பாவடையை இறக்கி விட்டுக் கொண்டவள் “குட்டி குட்டியா புது இலைகள் வந்திருக்கு பாட்டி” என்று கூறியபடி வியர்வை வழிய அவர் முன் சென்று நின்றாள்.

செக்கச்சிவந்த நிறத்தில் மீன் போன்ற விழிகளும், கூர் நாசியும், அதில் சிறியதாக சிகப்பு கல் மூக்குத்தி பளபளக்க, வியர்வை துளிகள் வைர கற்களாக அவள் இதழ்களில் மினுமினுக்க, தன் முன்னே வந்து நின்ற பேத்தியை பெருமிதமாக பார்த்துக் கொண்டார்.

லேசாக சுருக்கிய உதடுகளுடன் “என்ன அப்பத்தா? தண்ணி இறைச்சு ஊற்றினதுல வயிறு பிடிச்சு இழுக்குது சாப்பிடலாமா?” என்றாள் பாவமாக.

அவளது தலையை தடவிக் கொடுத்து “வாடா! அப்படியே உங்கப்பனையும் கூட்டிட்டு வா” என்றபடி உள்ளே நடந்தார்.

தரைக்கு வலிக்குமோ என்கிற அளவில் பாதத்தை அழுத்தப் பதியாமல் நடந்து வாயிலுக்கு சென்றவள், அங்கு வேலிப்படலை இழுத்து கட்டிக் கொண்டிருந்த தந்தையைப் பார்த்து “அப்பா! சாப்பிட வாங்க! அப்பத்தா கூப்பிட்டாங்க” என்றாள்.

அவளை நிமிர்ந்து பார்த்து “நீ போய் உட்காரு பாப்பா. இதை முடிச்சிட்டு வந்துடுறேன்” என்றார்.

அவர் அருகே சென்று நின்று கொண்டவள் “வாங்கப்பா! சேர்ந்தே சாப்பிடலாம்” என்றாள் மெல்லிய குரலில்.

மகள் அழைத்ததும் வேலையை அப்படியே விட்டுவிட்டு, அருகே இருந்த தொட்டியிலிருந்து தண்ணீரை எடுத்து கை, காலை கழுவிக் கொண்டு வீட்டினுள்ளே சென்றார்.

மூவருமாக அமர்ந்து பேசிக் கொண்டே உணவருந்த, அப்போது வீட்டின் வாயிலிலிருந்து யாரோ அழைக்கும் சப்தம் வந்தது. அதுவரை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவள், வெளியில் கேட்ட சத்தத்தைக் கேட்டு “போஸ்ட்மன் அண்ணா வந்திருக்காங்க. அண்ணன் கிட்ட இருந்து லெட்டர் வந்திருக்கு” என்று குதித்தபடி ஓடினாள்.

ராமர் மகளின் உற்சாகத்தைக் கண்டு சிரித்துக் கொண்டவர் “எப்படித்தான் அவனை விட்டுட்டு இருக்குதோ” என்றார் கீரை கடைசலை ருசித்துக் கொண்டே.

போஸ்ட்மனிடமிருந்து லெட்டரை வாங்கிக் கொண்டவள் உடனேயே பிரித்து படித்துக் கொண்டே வந்தாள்.

தந்தையின் அருகில் அமர்ந்து “அண்ணன் வேலையில சேர்ந்திடுச்சாம் அப்பா. செந்தில் அண்ணே கூட தான் இருக்குதாம்” என்றவளிடம் “சாப்பாட்டுக்கு என்ன செய்றான்?” என்றார் கவலையாக.

“தங்கி இருக்கிற இடத்துக்கு கிட்டேயே ஒரு அக்கா கடை வச்சிருக்காங்களாம். அங்கே தான் சாப்பிடுமாம் அப்பா” என்றவள் கண்களை விரித்து “எனக்கு போன் வாங்கித் தரேன்னு சொல்லி இருக்குப்பா” என்றாள் களுக்கிச் சிரித்துக் கொண்டே.

இருவரும் அவளின் உற்சாகத்தில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் “சாப்பிடு பாப்பா முதல்ல. சந்துரு மேல நீ வச்சிருக்கிற பாசமும், அவன் உன் மேல வச்சிருக்கிற பாசமும் ஊர் அறிஞ்சது தானே” என்றார் ராமர்.

அண்ணனின் கடிதத்தை மடித்து தன் கைக்குள் பொக்கிஷமாக வைத்துக் கொண்டு உணவருந்த ஆரம்பித்தாள்.

சிறு விவசாய நிலம் மட்டுமே அவர்களுக்கு வருமானத்தை கொடுக்கிறது. அதை வைத்து சந்துருவை படிக்க வைத்து சென்னையில் வேலைக்கு அனுப்பி விட்டார். சக்தியோ பனிரெண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தாள். அதற்கு மேல் படிக்க வைக்க அவர்களின் வருமானம் இடம் கொடுக்கவில்லை.

எதையுமே அமைதியாக ஏற்றுக் கொள்ளும் குணம் அவளிடம் இருந்தது. தாய் இறந்த பிறகு, அந்த ஸ்தானத்தில் உற்ற தோழனாய், தாயின் இடத்தையும் நிரப்பினான். பணக்கார வாழக்கை இல்லை என்றாலும், வறுமையிலும் வாடவில்லை.

அப்பத்தா, அப்பா, அண்ணனுடன் அவளின் வாழ்க்கை அன்பால் நிறைந்தது. இன்றைய காலகட்டத்தில் போனும், டிவியும் இல்லாத வீடுகளை கிராமங்களில் கூட பார்க்க இயலாது. ஆனால் சக்தியின் வீட்டில் இவை இரெண்டுமே இல்லை. அதனால் அவர்களின் வாழ்க்கை மிக அழகாக சென்று கொண்டிருந்தது.

சந்துரு சென்னைக்கு சென்று எட்டு மாதங்களுக்கு மேல் கடந்திருந்தாலும், வாரம் ஒருமுறை அவனிடம் இருந்து தங்கைக்கு லெட்டர் வந்து விடும். எல்லோர் வீட்டிலும் இருப்பது போல தன் வீட்டிலும் போன் வாங்கி வைத்து விட வேண்டும் என்று அதை கடிதத்தில் தங்கையிடமும் தெரிவித்திருந்தான். அதைக் கண்டு தான் அவள் மனதில் அத்தனை உற்சாகம் வந்திருந்தது.

‘ராதிகா மாதிரி நானும் போன் வச்சிட்டு எல்லோர் முன்னாடியும் கெத்தா பேசுவேனே’ என்று மனதிற்குள் அண்ணன் தனக்கு போன் வாங்கிக் கொடுக்கும் நாளை எண்ணி மகிழ்ந்திருந்தாள்.

அவள் வயதை ஒத்த தோழிகள் பலர் இருந்தாலும், எந்நேரமும் அப்பத்தாவுடனும், தந்தையுடனும் இருப்பதால் அவளுக்கு பழைய பாடல்களில் மட்டுமே நாட்டம் அதிகம். அவளது தோழிகள் எல்லாம் அவளை அதை வைத்தே கிண்டல் செய்வார்கள்.

போன் வரப் போகும் உற்சாகத்தில் அவள் உதடுகள் தன்னை அறியாமல் பாடலை முணுமுணுக்க ஆரம்பித்தது.

உன்னைக் கண்டு நான் ஆட என்னைக் கண்டு நீ ஆட

உல்லாசம் இன்பம் பொங்கும் தீபாவளி

அப்பத்தா திண்ணையில் அமர்ந்து அவளது பாடலைக் கண்டு சிரிக்க, ராமரும் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி சிரித்துக் கொண்டிருந்தார்.

வேகமாக ஓடிச் சென்று அப்பத்தாவின் கைகளைப் பற்றிக் கொண்டு “நானும் இனி கவிதா மாதிரி போனை வச்சிட்டு அலட்டுவேனே” என்று ஆடினாள்.

அதைக் கேட்ட அப்பத்தா “எப்படி அலட்டுவ கொஞ்சம் காட்டேன்” என்றார் சிரிப்புடன்.

கையில் போன் இருப்பதை போன்று வைத்துக் கொண்டு அங்குமிங்கும் ஆட்டிக் கொண்டு போன் பேசுவது போல நடந்தவளைக் கண்டு கண்களில் கண்ணீர் வர சிரித்தனர் ராமரும் அப்பத்தாவும்.

அவர்களின் முன்னே அமர்ந்தவள் “எங்கண்ணன் எனக்கு எது செஞ்சாலும் பார்த்து பார்த்து செய்யும் அப்பத்தா. எனக்கு அம்மா இல்லேன்னு ஒரு நாளும் நான் வருத்தப்பட்டதில்லை. அம்மாவுக்கு அம்மாவா, அப்பாவா, சகோதரனா, நண்பனா எனக்கு எல்லாமுமாக இருக்கிறது எங்கண்ணன் தான். நான் எதையும் எங்கண்ணன் கிட்ட எதிர்பார்க்க மாட்டேன். அன்பைத் தவிர” என்றாள்.

ஈசிஆரில் கடற்கரையோரம் மணலில் அமர்ந்திருந்தவனின் முகம் இறுக்கத்தை சுமந்திருந்தது. முக்கியமான டாகுமென்ட்ஸ் இதுவரை கிடைக்கவில்லை. அது மட்டும் கருணாகரன் கையில் கிடைத்தால் நிச்சயம் எத்தனை பேருக்கு ஆபத்தாக முடியும் என்று சொல்ல முடியாது. எங்கும் தேடியும் கிடைக்காமல் போக, அதை வைத்திருந்தவன் எவர் கையிலும் கிடைக்காமல் செய்திருக்கிறான் என்றால் அவன் மிகப் பெரிய கெட்டிக்காரன் என்றே எண்ணத் தோன்றியது.

அவனை அறியாமல் அவனது முஷ்டிகள் இறுகியது. கண்களோ கடலை வெறித்தது. இது ஆடு புலி ஆட்டம். இங்கு பலமுள்ளவன் மட்டுமே ஜெயிக்க முடியும். தன் மேல் உள்ள பயமும், தனது பலமும் மட்டுமே இத்தனை வருடங்களாக ஜெயிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதை எக்காரணம் கொண்டும் விட்டு விடக் கூடாது என்றெண்ணினான்.

சட்டைப் பையில் இருந்த அலைப்பேசியை எடுத்தவன் “கார்த்தி! உடனே கிளம்பி வா” என்று அழைத்து விட்டு வைத்தான்.

அடுத்த முக்கால் மணி நேரத்தில் கார்த்திக்கின் கார் ஈஸிஆர் பங்களாவினுள் நுழைந்தது. விடுவிடுவென்று வேக நடையுடன் உள்ளே சென்றவன், ஆதி எங்கிருக்கிறான் என்று கேட்டறிந்து கொண்டு கடற்கரையை நோக்கிச் சென்றான்.

அவன் அமர்ந்திருந்த இடத்திற்கு பின்னே சென்று நின்றவன் “கேசவா” என்றான் மெல்லிய குரலில்.

அவனை திரும்பியும் பார்க்காது கடலை வெறித்தபடி “நம்ம ஆட்களை கிளம்ப சொல்லு...கருணாகரன் வீட்டுக்குப் போறோம்” என்றவன் பட்டென்று எழுந்து வேக நடையுடன் வீட்டை நோக்கிச் சென்றான்.

அவன் கூறியதில் அதிர்ந்து போன கார்த்தி “கேசவா! அவசரப்படாதே” என்றவாறு பின்னே ஓடினான்.

நிற்காமல் புயலென நடந்தவன் “இது அவசரமில்ல கார்த்தி! நாம துரத்துகிற வரை தான் நமக்கு அதிகாரம். படுத்துட்டோம் என்றால் தூக்கி சாப்பிட்டுட்டு போயிடுவானுங்க”.

“ஆனா கருணாகரன் வீட்டுக்குப் போகனுமா?”

“போகணும்! இந்த ஆதிகேசவன் எதையும் செய்வான்னு அவனுக்குத் தெரியனும்”.

ஆதிகேசவன் ஒன்றை முடிவு செய்து விட்டால் மாற்றுவது கடினம் என்பதை புரிந்தவன், வேகமாக சென்று காரின் கதவை திறந்து விட்டான். டிரைவர் இருக்கையில் அமர்ந்ததும், அவசரமாக மற்றொரு புறம் சென்றமர்ந்து கதவை சாத்தினான். அடுத்த நிமிடம் கார் ரேசில் பறப்பது போல ஈசிஆர் சாலையில் சீறி பாய்ந்தது கேசவனின் கார்.

அடுத்து சென்று நின்ற இடம் தேனாம்பேட்டையில் இருந்த கருணாகரனின் இல்லம். அவனது வீட்டைச் சுற்றி ஆட்கள் நின்று பேசிக் கொண்டிருக்க, வேகமாக ‘க்ரீச்’ என்கிற சத்தத்துடன் வந்து நின்ற கேசவனின் காரைக் கண்டு ஒரு நிமிடம் அதிர்ந்து பின் அலறி அடித்துக் கொண்டு வேகமாக உள்ளே ஓடினர்.

காரிலிருந்து சிறுத்தையின் வேகத்துடன் இறங்கியவன் கைகளிலிருந்த காப்பை இறுக்கிக் கொண்டு விடுவிடுவென்று உள்ளே செல்ல ஆரம்பித்தான். அவனை தடுக்க் கூட முயலாமல் சற்றே பதட்டத்துடன் நின்றிருந்தனர் கருணாகரனின் ஆட்கள்.

அதற்குள் கேசவனின் ஆட்களும் மற்றொரு வண்டியில் வந்திறங்க, இரு தரப்பிலும் மோதல் வரும் நிலைமை எழுந்தது. வீட்டின் வாயிலுக்கு சென்றவன் திரும்பி பார்த்து “கருணா கிட்ட சில விஷயங்களை பேச வந்திருக்கேன். என் ஆட்கள் எதுவும் பிரச்சனை பண்ண மாட்டாங்க. நீங்க எதுவும் பண்ண விரும்பினா, நான் ஒருத்தனே பத்து பேரை வெட்டுவேன்” என்றான் கூரிய பார்வையுடன்.

அவனது பார்வை சொன்னதை செய்வான் என்பதை உணர்த்த, கருணாகரன் ஆட்களுக்குள் சலசலப்பு எழ, அந்நேரம் வெளியே வந்த கருணாகரன் “நம்ம ஆட்கள் எதுவும் பிரச்சனை பண்ணாதீங்க” என்றவன் இடிச் சிரிப்புடன் “என்ன கேசவா? காத்து ஏன் இங்கே அடிக்குது?” என்றான் கிண்டலாக.

கருகருவென்று அடர்ந்திருந்த தலைமுடியை கையால் கோதிக் கொண்டே மறுகையால் கருணாகரனின் தோளில் கை போட்டுக் கொண்டு “இந்த நிமிஷம் நான் நினைச்சா உன்னை முடிச்சிட்டு போக முடியும்...ஆனா எனக்கு தேவை நீயில்ல அந்த டாகுமென்ட்ஸ்” என்றான் காதோரம்.

ஆதிகேசவனுக்கு எதிராக தொழில் செய்தாலும் அவனிடம் இருக்கும் அந்த வலிமை, எதிரே இருப்பவரை நடுநடுங்க செய்யும். இப்பொழுதும் அப்படித்தான். அவன் என்னவோ சாதரணமாக கூறியது போல கூறினாலும், அந்த டாகுமென்ட்ஸ் கிடைக்கவில்லை என்றால் உன் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது என்பதை சொல்லாமல் சொன்னது.

தன் இடத்திலேயே வந்து தன்னை மிரட்டிப் பார்ப்பவனை இந்த முறை விட்டுவிட தயாராக இல்லை கருணாகரன். இது மிகப் பெரிய சந்தர்ப்பம் என்றெண்ணியவனின் தலையசைய, அடுத்த நிமிடம் ஆதிகேசவனின் முதுகில் குத்த ஒருவன் பாய்ந்தான். என்ன நடந்தது என்று உணரும் முன்பு குத்த வந்தவன் தூரப் போய் விழுந்தான்.

அவனது கைகளில் இருந்த கத்தியானது கேசவனின் கைகளுக்கு இடம் மாறி இருந்தது. அது கருணாகரனின் கழுத்தை உரசிக் கொண்டிருந்தது. இறுக்கமான இதழ்களில் ஏளன சிரிப்புடன் “தப்பு பண்ணிட்ட கருணா! இந்தக் கத்தி கழுத்துல இறங்காம இருக்கிற ஒரே காரணம் டாகுமென்ட்ஸ் மட்டும் தான். எங்கே இருக்குன்னு சொல்லிடு”.

கருணாகரனின் ஆட்களும், கேசவனின் ஆட்களும் அங்கு நடப்பவற்றை கண்டு பதட்டமடைய ஆரம்பிக்க, கருணாகரனோ சிறிதும் அஞ்சாமல் கேலியான சிரிப்புடன் “உன்னால் முடிஞ்சா கண்டுபிடி கேசவா. உண்மையை சொல்லனும்னா எனக்கும் தெரியாது அது எங்கே இருக்குன்னு. இந்த நிமிஷத்தில் இருந்து நம்ம ஆட்டம் தொடங்குது. நீயும் தேடு நானும் தேடுறேன். யார் கையில் கிடைக்குதோ அப்போ அடுத்தவங்க ஆட்டம் க்ளோஸ்” என்றான்.

சட்டென்று கத்தியை எடுத்தவன் மெல்லிய சிரிப்புடன் “உன்னை நம்புறேன்! ஆனா டாகுமென்ட்ஸ் என் கையில் வரும் நாள் உன்னை முடிச்சிடுவேன்” என்றவன் கத்தியை பின்பக்கமாக வீச, அது அவன் முதுகில் குத்த வந்தவனின் வயிற்றில் ஆழமாக இறங்கியது. அவன் அலறலுடன் கீழே விழ, தனது காரை நோக்கி சென்றவன் “ஆதிகேசவன் மேல கையை வச்சவன் எவனும் உயிரோட இருக்க முடியாது” என்று கூறிவிட்டு காரில் அமர்ந்தான்.

அவனது படை பட்டாளங்கள் எல்லாம் அவனைத் தொடர்ந்து ஜீப்பில் ஏற, அங்கு புழுதியை கிளப்பிக் கொண்டு அனைத்து வாகனங்களும் பறந்தது. கருணாகரனின் முகம் இறுக்கத்தை சுமந்தது. தன் இடத்தில் வந்து தன்னையே மிரட்டி விட்டு செல்பவனை அழிக்க வேண்டும் என்கிற வேகம் எழுந்தது.

May 26, 2019
59
3
18
Athiradi start sudhama... Ipdipatta stories than venum.... Adhi, assault ah 2 kolai pandraru... Avarthan Herova.... Karuna villain... Sakthi indha kadhaiyoda pen sakthiya..... Waiting for next UD.....
 
Chitra Balaji

New member
Feb 5, 2020
19
10
3
Woooooow super Super maa.... அதிரடி starting maa.... Enna document 📄 athu.... அதுல appadi enna இருக்கு.... ஆதி கொலை pannathu யாரு avanuku onnume தெரியாது nu solraan.... Shakthi oda அண்ணா yaaru..... Super Super maa....
 
  • Love
Reactions: sudharavi

Jovi

New member
Jan 10, 2019
4
1

Lovely starting
 
Need a gift idea? How about a funny office flip-over message display?
Buy it!