அத்தியாயம் - 10

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,676
1,400
113
அத்தியாயம் -10

நித்யாவிடம் நக்கலாக பேசிவிட்டு வந்த சிவகாமி பயணக் களைப்பில் ஹாலில் இருந்த சோபாவில் சாய்ந்தமர்ந்து கொண்டார். அவரது களைப்பை கண்டு அங்கு வந்த சுமதி “ரேணுவை காப்பி கொண்டு வர சொல்றேன் குடிச்சிட்டு கொஞ்ச நேரம் தூங்கி எழுந்திரிங்க.” என்று கூறி திரும்பியவரை தடுத்து நிறுத்தினார் சிவகாமி.

“நீ போய் எனக்கு காப்பி கலந்து எடுத்திட்டு வா...நிரஞ்சன் கிளம்பிட்டு இருக்கான். ரேணுவை அங்கே போக சொல்லு” என்றார் அழுத்தமாக மகளை பார்த்தபடி.

அன்னையின் மனதை புரிந்து கொண்ட சுமதி “சரிம்மா” என்று கூறி சமயலறைக்குச் சென்று ரேணுவை நிரஞ்சனுக்கு உதவும்படி கூறி அனுப்பி வைத்தார்.

நித்தியின் மனதை அறிந்து வைத்திருந்த கணவன் மனைவி இருவரும் விலகியே இருக்க தங்களை பழக்கப்படுத்திக் கொண்டனர். அதனால் நிரஞ்சன் எதற்கும் ரேணுவை எதிர்பார்க்காது தனது வேலைகளை அவனே செய்து கொள்வான். திடீரென்று அத்தை அவனுக்கு உதவும்படி கூறவும்...என்ன செய்வதென்று புரியாமல் ஒருவித தவிப்புடன் அவன் அறையை நோக்கி சென்றாள்.

அங்கே அவன் குளியலறைக்குள் இருக்க...மெல்ல அவனது அலமாரியை திறந்து அவன் அணிந்து கொள்ள உடைகளை தேர்வு செய்து கட்டிலின் மேல் எடுத்து வைத்துவிட்டு அறையை ஒழுங்குப்படுத்த தொடங்கினாள்.அப்போது குளியலறையில் இருந்து வெளியே வந்த நிரஞ்சனின் பார்வையில் ரேணு பட்டதும் அதிசயித்து மெல்ல அடியெடுத்து அவளறியாது பின்புறமாக சென்று அணைத்தான்.

ஈரத்துடன் கூடிய கைகள் அவள் மேனியை இருக்கப் பிடித்ததும்..ஒரு நிமிடம் அதிர்ந்து பின் அவன் மார்பிலேயே சாய்ந்து கொண்டாள். அவள் தோள்களில் தாடையை அழுத்திக் கொண்டவன் “என்ன மேடம்! அதிசயமா காத்து இந்த பக்கம் அடிக்குது? நம்ம வில்லி கிளம்பிட்டாளா?” என்றான் குறுஞ்சிரிப்புடன்.

எதிர்பாராமல் கிட்டிய கணவனின் தீண்டலில் மயங்கி இருந்தவள் “ம்ம்..கிளம்பிட்டா. அத்தை தான் உங்களுக்கு உதவ சொன்னாங்க” என்றாள்.

அவளை மெல்ல தன் பக்கம் திருப்பியவன் “அத்தையா இருக்காது பாட்டி தான் இருக்கும். இந்த உதவி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு கண்ணம்மா. இப்படி உதவி பண்ண சொல்லுவாங்கன்னு தெரிஞ்சிருந்தா பாட்டியை முன்னாடியே கூட்டிட்டு வந்திருப்பேன்” என்றான் கிறக்கத்துடன்.

அவனது பேச்சில் வெட்கமடைந்தவள் மேலும் அவன் மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டு “ம்ம்..போங்க” என்றாள்.

மனைவியின் நெருக்கத்தில் இழைந்தவனின் விரல்கள் அவளது இடையில் கோலம் போட தம்பதிகள் இருவரும் தங்களை மறந்து நின்றிருந்தனர்.

சிறிது நேரத்திற்கு பிறகு அன்னையின் அழைப்பை கேட்டவன் சுதாரித்துக் கொண்டு விலகி..அவள் கன்னங்களில் லேசாக தட்டி அவளையும் நிலைப்படுதியவன் “கண்ணமா! அம்மா கூப்பிடுறாங்க..எனக்கும் ஆபிஸ்-கு நேரமாச்சு” என்றான் சோர்வுடன்.

அவனது முகத்தில் தெரிந்த பரிதவிப்பும் அதை மறைக்க அவன் படும் கஷ்டத்தையும் கண்டவள்...கண்கள் கலங்க “என்னால உங்களுக்கு எத்தனை கஷ்டம்” என்றவளின் வாயை அடைத்தவன் “இன்னொரு முறை அப்படி சொல்லாதே ரேணு. ஒவ்வொருத்தர் எத்தனையோ கஷ்டத்தை தாங்கிகிட்டு இருக்காங்க. இதை எல்லாம் ஒரு கஷ்டம்னு நினைக்க கூடாது. நித்திக்கு நல்லதொரு வாழ்க்கை கிடைச்சிடுச்சின்னா நாம நம்ம வாழ்க்கையை வாழ்ந்திட்டு போறோம்” என்றவனின் பதில் கேட்டு அவனது நல்ல உள்ளம் கண்டு மன பாரம் தாங்காமல் விசும்பலுடன் அவன் நெஞ்சிலே சாய்ந்து கொண்டாள்.

அவள் முதுகை வருடி கொடுத்து “கண்ணமா! அம்மாவும், பாட்டியும் நமக்காக ரொம்ப நேரம் காத்துகிட்டு இருக்காங்க” என்றான் மென் குரலில்.

அவன் சொன்னதைக் கேட்டதும் அவசரமாக அவனிடமிருந்து விலகி கண்களை துடைத்துக் கொண்டு வெட்கத்தில் அவனை நிமிர்ந்து பார்க்காது வெளியே சென்றாள்.

சமையலறைக்குச் சென்று மாமியாருடன் வேலைகளை பகிர்ந்து கொண்டவளை வரவேற்பறையில் இருந்தே கவனித்துக் கொண்டிருந்த சிவகாமிக்கு..அவளது அழுத கண்களும், கலங்கிய முகமும் அவளது நிலையை தெள்ள தெளிவாக எடுத்துக் காட்டியது.

அடுத்து, தான் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொண்டு பேரனுக்காக காத்துக் கொண்டிருந்தார்.

அலுவலகம் கிளம்பி தயாராக வந்த நிரஞ்சன் பாட்டியின் அருகில் அமர்ந்து கொண்டான். அவன் தோளில் பாசத்துடன் கையைப் போட்டுக் கொண்ட சிவகாமி “இன்னக்கு லீவ் போடுவேன்னு பார்த்தா கிளம்பிட்டியே” என்றார் கிண்டலாக.
 
  • Love
Reactions: Chitra Balaji

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,676
1,400
113
அவர் வந்ததற்காக தான் லீவ் போடும்படி கேட்கிறார் என்று நினைத்து பதில் சொல்ல ஆரம்பித்தவன் பாட்டியின் விழிகளில் தெரிந்த குறும்பில் லேசான வெட்கத்துடன் “நிறைய வேலை இருக்கு பாட்டி” என்றான்.

அவனது வெட்கத்துடன் கூடிய சிரிப்பை கண்ட பாட்டிக்கு மனம் கனத்து போனது. நான்கு வருடங்களாக மனைவியின் தங்கைகாக தனது வாழ்க்கையை வாழாமல் காத்திருக்கும் இவனுக்காக தான் சீக்கிரம் முடிவெடுக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டார்.

நீண்ட பெருமூச்சுடன் “நிரஞ்சன்! நாங்க ஒரு பதினொரு மணிக்கு அன்பு சித்தப்பா வீட்டுக்கு போயிட்டு வரலாம்-னு இருக்கோம். கார் ஏற்பாடு பண்ணிடு” என்றார்.

சோபாவிலிருந்து எழுந்தவன் “சரி பாட்டி நான் ஏற்பாடு பண்ணிடறேன்” என்று கூறிவிட்டு சாப்பிட்டு கொண்டிருந்த தந்தையின் அருகில் சென்றமர்ந்தான்.

“அப்புறம் சொல்லுங்கப்பா? எப்படி போகுதுப்பா மில்லு வேலையெல்லாம்?” என்றான்.

தட்டிலிருந்த இட்லியை சுவைத்துக் கொண்டே “ம்ம்..பெருசா ஒன்னும் போகல..ஏதோ எனக்கும் பொழுது போகணுமேன்னு தான் வச்சு ஓட்டிகிட்டு இருக்கேன்” என்றார் மகனை நிமிர்ந்து பார்த்தபடி.

“இங்கே வந்துடுங்கன்னா வர மாட்டேன்றீங்க. அங்க ஏன் தனியா இருக்கணும்ப்பா?”

அவர்களின் பேச்சை செவிமடுத்துக் கொண்டிருந்த சிவகாமி மெல்ல எழுந்து சென்று பேரனின் அருகில் நின்றவர் “நீ ஒரு பேரனையோ பேத்தியையோ பெத்து குடு. அப்புறம் நீயே விரட்டினாலும் போக மாட்டாங்க” என்றார்.

அவரது பேச்சை கேட்டவன் தலையை நிமிர்த்தாது சாப்பிட..ரேணுவோ சமையலறைக்குள்ளேயே நின்று கொண்டாள்.

அவர்கள் இருவரின் நிலையையும் உணர்ந்த பாட்டி “எத்தனை நாளைக்கு பிரச்சனையை கண்டு ஒளிஞ்சுக்கிட்டே இருக்க போற நிரஞ்சன். அதுக்கு என்ன தீர்வுன்னு யோசிக்க வேண்டாமா?” என்றார் கேள்வியாக.

பாட்டியை நிமிர்ந்து பார்த்தவனின் கண்களில் லேசான வலியின் சாயல் தெரிய “நித்தியை நான் பிரச்சனையா நினைக்கல பாட்டி” என்றான்.

அவனது பதிலில் ஆயாசமாக பக்கத்திலிருந்த நாற்காலியில் அமர்ந்தவர் “நீயும் சரி, ரேணுவும் சரி தியாகம் பண்றதா நினைச்சு உங்க வாழ்க்கையை மட்டுமில்ல..அவ வாழ்க்கையையும் சேர்த்து கெடுத்துகிட்டு இருக்கீங்க..அதுவாவது புரியுதா?” என்றார்.

மாமியார் பேச ஆரம்பித்ததும் சாப்பிட்டு முடித்து எழுந்த நிரஞ்சனின் தந்தை சோபாவில் சென்றமர்ந்தார். சுமதிக்கும் அம்மா பேசுவதின் மூலம் ஏதாவது வழி கிடைக்காதா என்கிற ஆவலில் மகன் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

சிவகாமி பாட்டியின் கேள்வியில் அதிர்ந்து போய் “என்ன பாட்டி சொல்றீங்க?” என்றான் பதட்டத்துடன்.

“ஆமாம் நிரஞ்சன்..நீயும் ரேணுவும் ஆரம்பத்தில் இருந்தே அவளுக்கு அதிக இடம் கொடுத்துட்டீங்க. அதனால பிடிவாதம் அதிகமாக போய் கொஞ்சம் கூட சூழ்நிலையை புரிஞ்சுக்கிற தன்மை இல்லாம இருக்கிறா” என்றார் கடுப்புடன்.

“பாவம் பாட்டி! அம்மா கூட இருக்க வேண்டிய வயசில் அவங்களை இழந்திட்டு நிற்கிற பொண்ணுக்கு என்ன தேவையோ அதை தான் நானும் ரேணுவும் செஞ்சோம்”.

நிரஞ்சன் அப்படி சொன்னதும் தன் பேரனை பெருமையாக பார்த்தவர் “நான் அதை குத்தம் சொல்லலபா. ஆனா, எல்லாவற்றுக்குமே ஒரு எல்லை இருக்கு. புரியாத வயசில் உங்களை அவ புரிஞ்சுக்கலேன்னா பரவாயில்லை.இப்போ படிச்சு முடிச்சு வேலை பார்க்கிற பெண்ணுக்கு தன் அக்காவோட மனசு கண்டிப்பா புரிஞ்சிருக்கனும்.அவளா புரிஞ்சுக்கலேன்னா நாம தான் புரிய வைக்கணும். உங்க ரெண்டு பேரையும் நம்பினா நடக்காது. அதனால அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து கட்டி கொடுத்திடலாம்னு முடிவு பண்ணிட்டோம்” என்றார்.

அதுவரை சமையலறை வாசலிலேயே நின்று கேட்டுக் கொண்டிருந்த ரேணு மெல்ல வெளியே வந்து “இப்போ கல்யாணத்துக்கு ஒத்துக்குவாளா பாட்டி” என்றாள் சந்தேகத்துடன்.

அவள் புறம் திரும்பி மெல்லிய சிரிப்பை பரிசாக தந்தவர் “ஒத்துக்க வைக்கணும். அது நீங்க நடந்துக்கிற விதத்தில் தான் இருக்கு” என்றார்.

“நல்ல மாப்பிள்ளையா பாருங்க பாட்டி. அவளை ஒத்துக்க வச்சிடலாம்” என்றான் சந்தோஷத்துடன்.

பேரனின் நல்ல மனதை கண்டு சிரித்துக் கொண்டே “மாப்பிள்ளை எல்லாம் பார்த்தாச்சு. நம்ம அன்பு சித்தப்பா பையன் விஸ்வா தான்” என்றார்.

அதை கேட்டு ஆச்சர்யத்துடன் “பார்த்துட்டீங்களா? விச்சுவா? நல்ல பையன் தான். ஆனா, அவன் மியுசிக் ட்ரூப் வச்சு நடத்திகிட்டு இருக்கானே. இவ அதுக்கு ஒத்துக்க மாட்டாளே பாட்டி” என்றான் யோசனையாக.

எழுந்து நின்று பக்கத்திலிருந்த ஜாடியிலிருந்து தண்ணீரை குடித்தவர் “அதெல்லாம் நான் பார்த்துகிறேன். நாம யாரை காட்டினாலும் அவ கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி பண்ணிடலாம்” என்றவர் “நீ கிளம்பு நிரஞ்சன்” என்றபடி உள்ளே சென்றார்.

பாட்டியின் அதிரடி நடவடிக்கையில் சற்று அதிர்ந்து போயிருந்தவன் மனைவியை பார்த்து தலையசைத்து விட்டு “அப்பா நான் கிளம்புறேன். பதினொரு மணிக்கு காருக்கு சொல்லிடுறேன்” என்று கூறிவிட்டு கிளம்பினான்.

அவனது மனமோ பாட்டி சொன்ன மாதிரி நானும் ரேணுவும் அவளுக்கு புரிய வைத்திருக்க வேண்டுமோ? அதை செய்யாமல் விட்டதினால் தான் அவள் ரொம்ப பிடிவாதக்காரியா மாறிவிட்டாளோ என்று யோசித்துக் கொண்டிருந்தான்.விஸ்வாவின் இல்லம்..

திருநெல்வேலியில் இருந்து திரும்பி இருந்த விஸ்வாவுடன், சுந்தரும் அங்கு வந்திருந்தான்,

ஹாலில் பாயை விரித்து இருவரும் படுத்திருக்க,பக்கத்தில் அமர்ந்து அவர்களுடைய பயணத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார் ரஞ்சிதம்.

“அம்மா! சீக்கிரம் இவனுக்கு கல்யாணத்தை பண்ணி வைங்கம்மா...ஒவ்வொரு கச்சேரியிலையும் பொண்ணுங்க கிட்ட இருந்து இவனை காப்பத்துறதே எனக்கு பெரிய வேலையா இருக்கு” என்றான் கிண்டலாக சுந்தர்.

“ஹாஹா..அவனுக்கு மட்டுமா பொண்ணு பார்ப்பேன் உனக்கும் சேர்த்து தான் பார்க்கணும்” என்றார் ரஞ்சிதம்.

அவசரமாக எழுந்து உட்கார்ந்து கொண்ட சுந்தர் இரு கைகளையும் கூப்பி “எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்மா. நான் நிம்மதியா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா?” என்றான் பாவமாக.

அவனை முறைத்து “கல்யாணம் பண்ணினவங்க எல்லாம் அடிமையாவா இருக்காங்க? நாங்க எல்லாம் நல்லாயில்லையா என்ன?” என்றார்.

அதற்கும் “நீங்க எல்லாம் அந்த காலத்து மனுஷங்கம்மா. இந்த காலத்து பொண்ணுங்களை நினைச்சாலே பயமாயிருக்கு” என்றவன் விஸ்வாவின் பக்கம் திரும்பி “உண்மை தானே விஸ்வா” என்றான் கண் சிமிட்டியபடி.

அவனது செயலில் கண் முன்னே வந்து போன முகத்தை நினைத்து அசட்டு சிரிப்புடன் அவனை முறைத்தான்.

சுந்தரோ அவனது முகத்தில் வந்து போன உணர்வுகளை படித்தவன் மனசிற்குள் ‘ஒரு நல்ல பெண்ணா இவன் மனசில் பதிஞ்சிருக்க கூடாதா? இத்தனை காதலை பெற அந்த பெண்ணுக்கு தகுதியில்லை’ என்று எண்ணிக் கொண்டான்.

அந்தநேரம் போன் மணியடிக்க ரஞ்சிதம் எழுந்து சென்று எடுத்தார்.அவர் பேசி முடித்துவிட்டு சந்தோஷமான குரலில் “விச்சு! உங்க சிவகாமி பாட்டியும், சுமதி பெரியம்மாவும் இன்னும் கொஞ்ச நேரத்துல வராங்களாம்” என்றார்.
 
  • Love
Reactions: Chitra Balaji

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,676
1,400
113
படுத்துக் கொண்டிருந்தவன் எழுந்தமர்ந்து “சிவகாமி பாட்டியா? ஹப்பா அவங்களை பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு?” என்றவன் எழுந்து ஹாலை கிளீன் செய்ய ஆரம்பித்தான்.

அடுத்த சில நிமிடங்கள் பரபரவென்று கழிய, பதினொன்றரை மணியளவில் கார் வந்து நிற்க சிவகாமி பாட்டி அன்புமணியின் வீட்டில் வந்திறங்கினார்.

சிறிதுநேரம் பாச பரிமாற்றங்களுக்குப் பிறகு ரஞ்சித்திடம் “என்ன ரஞ்சி! என் பேரனுக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டியா இல்லையா?” என்றார்.

அதை கேட்ட விஸ்வா “எங்க பாட்டி பார்த்தாங்க? நானும் தினமும் எதிர்பார்க்கிறேன் ஏதாவது ஒரு பொண்ணு போட்டோவை காட்டுவாங்கன்னு...காட்ட மாட்டேன்றாங்களே” என்றான் கேலியாக.

விஸ்வாவின் பதிலை கேட்டு ரஞ்சிதம் முறைக்க, அன்புமணியோ சத்தமாக சிரிக்க...சிவகாமி பாட்டியோ “அதுக்கு தானே பேராண்டி நான் வந்திருக்கேன்” என்றவர் “அம்மாடி ரேணு உன் தங்கச்சி போட்டோவை பேராண்டி கிட்டு கொடு” என்றார்.

அதை கேட்டவன் அதிர்ந்து போய் திருதிருவென்று முழித்துக் கொண்டே “என்ன பாட்டி சொல்றீங்க? நான் சும்மா அம்மா, அப்பாவை கிண்டல் பண்ணினேன்” என்றான்.

அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே ரேணு போட்டோ உள்ள கவரை அவன் கையில் கொடுத்தாள். அதை வாங்கி கொண்டவன் குழப்பத்துடன் எல்லோரையும் பார்த்தான். அவனது குழம்பிய முகத்தை கண்ட அன்புமணி “விச்சு! பாட்டி எங்களுக்கு முன்னாடியே சொல்லிட்டாங்க. நீ கவரை பிரிச்சு பார்த்திட்டு சொல்லு” என்றார்.

அவர் சொல்வதை கேட்டவனின் மனதில் ஒருநிமிடம் நித்யாவின் முகம் வந்து போக, அவளை அடைய வாய்ப்பில்லை என்று தெரிந்தும் ஏன் நினைக்க வேண்டும் என்று மனதை தேத்திக் கொண்டு மெல்ல கவரை பிரித்தான்.

கைகளில் இருந்த போட்டோவில் கண் பதித்தவனால் தான் காணும் காட்சியையே நம்ப முடியவில்லை. அது அவள் தானா என்று அவனுக்கு நம்பிக்கையே ஏற்படவில்லை. அவனது முகத்தையே ஆராய்ந்து கொண்டிருந்த சிவகாமி பாட்டி அவன் முகத்தில் வந்து போன உணர்வுகளை படித்து விட்டார். உள்ளுக்குள் பெருத்த நிம்மதி எழுந்தது.

சுந்தருக்கோ விச்சுவின் கையில் உள்ள போட்டோவை பார்க்க மனம் பரபரத்தது. எல்லோரும் என்ன நினைப்பார்கள் என்று அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்திற்குள் தன்னை நினதானப்படுத்திக் கொண்ட விஸ்வா பாட்டியை பார்த்து “எனக்கு பிடிச்சிருக்கு பாட்டி” என்றவன் தன் அன்னையிடம் போட்டோவை கொடுத்தான்.

அவனிடமிருந்து போட்டோவை வாங்கி பார்த்துவிட்டு திருப்தியாக தலையசைத்து கணவரிடம் கொடுத்தார். சுந்தருக்கோ எல்லோர் முகத்திலும் தெரிந்த திருப்தியை கண்டு ‘ஹப்பா! அந்த பிடாரி கிட்ட இருந்து தப்பிச்சான் விஸ்வா’ என்று சந்தோஷப்பட்டுக் கொண்டான்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்த விஸ்வாவின் இதழ்களில் புன்னகை தோன்ற “அம்மா! சுந்தர் கிட்ட போட்டோவை காட்டுங்க” என்றான்.

பரபரத்த மனதுடன் போட்டோவை வாங்கி பார்த்தவனுக்கு சுனாமி அலையில் சிக்கி சுழன்று மூச்சு திணறியது போல் ஆனது. இவளா?...இவளா?..எப்படி இது நடந்தது? இது தான் விதி என்பதா? தப்பி விட்டதாக நினைத்தோமே? இனி, அவன் வாழ்க்கை முழுவதும் ஆழி பேரலையுடன் தான் கடக்க வேண்டுமா? பாட்டி இந்த பிடாரியை கட்டி வைக்க தான் ஊர் விட்டு வந்து கிளம்பி வந்துச்சோ? என்று பாட்டியை கொலைவெறியுடன் பார்த்தான்.
 
  • Wow
Reactions: Chitra Balaji

Chitra Balaji

Member
Feb 5, 2020
82
30
18
அவன் friend ku சுத்தமா avala pidikala avala கட்டினா avan vaazhkkai la romba கஷ்டம் padanumnu ninaikiraan ஆனா அது தான் உண்மை அது seriyaana அடங்க பிடாரி...... ரேணு vum நிரஞ்சன் தான் இவ்வளவு நாள் paavam ah இருந்தாங்க ava kita maatikitu இப்போ vishva family paavam... பாட்டி எப்படி avala கல்யாணத்துக்கு samathikka veikka poraangalo... Super Super maa.... Semma episode