அத்தியாயம் - 13

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,520
1,086
113
அத்தியாயம் – 13

அன்று காலையில் எழும் போதே ஏனோ மனம் சற்று வாட்டத்துடனே இருந்தது. சந்துருவை நினைத்து சோர்வடைந்தாள். உறங்கும் அப்பத்தாவை எட்டிப் பார்த்து விட்டு வாசலை தெளித்து கோலம் போட்டு விட்டு வந்தவள், பின்கட்டிற்கு சென்று பல்லை தேய்த்து முகம் கழுவிக் கொண்டு வந்தாள்.

அதுவரை அப்பத்தா எழவில்லை என்றதும் யோசனையுடன் அருகே சென்றமர்ந்து உறங்குபவரின் முகத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். நடமாட்டமும், வெளிச்சமும் தெரிந்த பிறகும் அவர் எழவில்லை என்றதும் மெல்ல அவர் கை மீது வைத்து “அப்பத்தா” என்றழைத்தாள்.

அப்போதும் அவர் அசையாமல் படுத்திருக்கவும் சற்று வேகமாக அசைத்துப் பார்க்க, மொத்த உடலும் அசைந்தது. நெஞ்சம் தடதடக்க, கண்களில் பயம் எழ, மெல்ல நகர்ந்து அவரின் நெஞ்சின் மீது கை வைத்து பார்த்தாள்.

அந்த நெஞ்சு கூட்டிலிருந்து மூச்சுக் காற்று பறந்து போய் பல மணி நேரங்கள் கடந்திருந்தது. அதை உணர்ந்தவளுக்கு சத்தமாக அழக் கூட முடியவில்லை. இருந்த ஒரே உறவும் தன்னை விட்டு போனதை எண்ணி ஒரு நிமிடம் அவளது இதயம் நின்று துடித்தது.

அடுத்த நிமிடம் “ஐயோ! அப்பத்தா நீயும் என்னை விட்டு போயிட்டியா?” என்று அவள் அலறிய அலறலில் மொத்த கிராமும் அவள் வீட்டின் முன்பு வந்து நின்றது.

அவளது அன்னை தடுத்தும் தேனு ஓடி வந்து அழும் தோழியை கட்டி அணைத்து கதற ஆரம்பித்தாள். ஊரின் பெரிய வீட்டு ஆட்களும் வந்து நின்று அழும் அந்த பெண்ணிற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர்.

அவளுக்கு என்று காரியங்களை எடுத்து செய்ய கூட வீட்டினர் என்று எவரும் இல்லாதிருக்க, பங்காளிகளோ முன்னே சென்று செய்தால் அவளின் பொறுப்பு தங்கள் தலையில் விழுந்து விடுமோ என்று எட்டியே நின்றனர்.

அதற்குள் மூத்த தலைகள் எல்லாம் கூடி பேச ஆரம்பிக்க, “என்னப்பா இது! ஒரு மாசத்துக்குள்ள ராமன் வீட்டுல இப்படி எல்லா இழவும் விழுந்திடுச்சு. இப்போ இதை யார் எடுத்து செய்றது?”.

“ஒத்த புள்ள மட்டும் நிற்குது...பங்காளிகள் தான் முன்னே வந்து செய்யணும்”.

“ஏங்க நாங்க எடுத்து செஞ்சா அந்த புள்ளையோட பொறுப்பு எங்க தலையில் விழுகாதா?”

“உடமைபட்டவங்க நீங்க தானே! வயசு புள்ள பொறுப்பை யாராவது ஏத்து கிட்டு தானே ஆகணும்”.

“என்னப்பா இது! ஆக வேண்டிய காரியத்தை பார்க்காம அடுத்ததை பேசுறீங்க?

“அதானே! சீக்கிரம் எடுத்தா நம்ம சோலிய பார்க்கலாம். ரொம்ப நேரமெல்லாம் வைக்க வேண்டாம். யார் செய்ய போறீங்கன்னு சொல்லுங்க?”

“நாங்க கொள்ளி போடணும்னா அந்த புள்ள பொறுப்பை எங்க கிட்ட விட மாட்டோம்னு சொல்லுங்க. எல்லாத்தையும் நாங்களே செஞ்சிடுறோம்”.

“இதெல்லாம் ஞாயமா சொல்லுப்பா? ஆதரவே இல்லாம போன அந்த பிள்ளை நிலைமையை நினைச்சு பாரு?”

“நான் சொல்றதை சொல்லிட்டேன். அந்த புள்ள பொறுப்பு விழுகாதுன்னா நாங்க கொள்ளி போடுறோம். முடியாதுன்னு சொன்னா எங்க பொழப்பை பார்க்க போறோம்” என்று விறைப்பாக நின்றார் அவர்.

வெளியே நடப்பவை எதையுமே அறியாது அப்பத்தா மீது விழுந்து பிரண்டு அழுது கொண்டிருந்தாள் சக்தி. தேனு தான் நடப்பவை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தாள். மனிதர்கள் மீதிருந்த மரியாதை எல்லாம் விட்டு போயிருந்தது அவளுக்கு. ஒருவர் இறந்து கிடக்கும் வீட்டில் மற்றவர்கள் பேசு ஞாயங்களை கண்டு வெறுத்து போனது. அதே சமயம் தோழியின் நிலையை எண்ணியும் மனம் கனத்து போனது.

ஒருவழியாக பேசி முடித்து சக்தியின் பொறுப்பை அவர்கள்ளிடம் கொடுக்க மாட்டோம் என்று ஒப்புக் கொண்ட பின்னர் காரியங்கள் வேகம் வேகமாக நடந்தது. மாலைக்குள் அப்பத்தாவின் உடல் எடுக்கப்பட்டு ஈமக்கிரியை செய்து முடிக்கப்பட்டது.

அதன் பின்னர் அடுத்த பஞ்சாயத்து கூடியது.

“பெத்த அப்பன் சாவுக்கும் வரல, அப்பத்தா இறந்ததை சொல்லக் கூட அவன் எங்கே இருக்கான்னு தெரியாது. இப்போ இந்த பிள்ளையை யாரை நம்பி விடுறது?” என்றது ஒரு பெருசு.

“ஆமாம் தனியா விட முடியாதில்லை. சொல்லுங்கப்பா என்ன பண்றதுன்னு?”

“இப்போதைக்கு துணைக்கு யார் வீட்டு பெருசையாவது அனுப்பி வைப்போம். ஆனா நிதமும் அப்படி அனுப்ப முடியாதில்ல”.

“அப்போ என்ன தான் பண்றது?”

“நான் ஒன்னு சொல்றேன் கேப்பீங்களா?”

“சொல்லுங்கையா!”

“உங்க சாதி சனத்தில இந்த பிள்ளைக்கு ஏத்த மாப்பிள்ளை இருந்தா அடுத்த மாசமே கட்டி பொறுப்பை கழிச்சிடலாம்” என்றார்.

“சொந்த பந்தமே இல்லாத பொண்ணை யார் கட்டுவாங்க ஐயா?”

“அதுக்கு! ஏன்யா பொறகிறவன் எல்லாம் சாகிறவரை சொந்த பந்தங்களோட தான் இருக்கானா? இந்த புள்ளைக்கு ஏத்த மாதிரி அப்படி ஒருத்தன் இருந்தா சொல்லுங்க முடிச்சிபுடலாம். அதுக்கு வேண்டியது எல்லாம் நாங்களே செஞ்சிடுறோம்”.

பங்காளிகளுக்கு விருப்பமே இல்லாத ஒன்றாக இருந்தது அவர் பேச்சு. அந்நேரம் கூட்டத்தில் இருந்த ஒருவர் “ஏன்யா மேக்கால கிடக்கிற நிலமெல்லாம் ராமனோடது தானே? அதை ஒரு விலை போட்டு எடுத்துகிட்டு அந்த புள்ளைக்கு நல்ல இடமா பார்த்து பண்ணி விடலாம் இல்ல?” என்றார்.

அதுவரை அவளது பொறுப்பை ஏற்றுக் கொள்ள தயங்கி கொண்டிருந்தவர்கள் “அது என்ன இடம்? நிறைய இருக்கோ?” என்றனர் மெல்ல.

“அது இருக்கும் பா ஒரு இருபத்தஞ்சு சென்ட்டு. எப்படியும் பத்து லட்சம் வரும்”.

அதை கேட்டதும் அவர்களுக்குள் பேசிக் கொண்டவர்கள் “அந்த புள்ளைய பார்த்துக்க எங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல...கல்யாணம் பேசனும்னாலும் மாப்பிள்ளையோட வரோம்” என்றனர்.

கூட்டத்தில் இருந்த இளந்தாரி எவனோ “பணம்னு சொன்னதும் பொணம் வாயை திறக்குது பாருய்யா” என்றான் சத்தமாக.

அவனது பேச்சில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொண்டுகள் கொல்லென்று சிரித்து விட்டனர். அதில் கடுப்பான நாட்டாமை “எப்பா! யார் அது மருவாதை இல்லாம சிரிக்கிறது” என்று கடுகடுத்தார்.

உடனே சுற்றி இருந்தவர்கள் அமைதியாகி விட, “இன்னைக்கே எல்லாத்தையும் பேசி முடிக்க முடியாது. இப்போ அந்த புள்ள கூட பொண்டுக யாராவது தங்கி இருங்க. மற்றதெல்லாம் ஒரு பத்து நாள் போகட்டும் பேசிக்கலாம்” என்று கூறி பஞ்சாயத்து முடிந்ததற்கு அறிகுறியாக எழுந்து கொண்டார்.

அனைவரும் மெல்ல அங்கிருந்து நகர, சக்தி விட்டத்தை பார்த்தபடி கன்னங்களில் நீர் வழிய அமர்ந்திருந்தாள். தேனுவிற்கு தான் அவர்கள் பேசியதை எல்லாம் வைத்து உள்ளுக்குள் பயம் எழுந்தது. நிலத்திற்காக சக்தியை எவனாவது மோசமானவன் கிட்ட தள்ளிடுவாங்களோ என்று பயந்தாள். தன்னால் அதை தடுக்க கூட முடியாதே என்ன செய்வது என்று புரியாமல் அமர்ந்திருந்தாள்.

அதற்குள் பெண்கள் எல்லாம் கூடி பேசி அன்னம்மா கிழவியை அவளுக்கு துணைக்கு வைக்க முடிவு செய்தனர். அந்நேரம் அங்கே வந்த தேனுவின் அன்னை “தேனு! வரப் போறியா இல்லையா?” என்று சத்தமாக அழைத்தார்.

அந்த சத்தத்தில் சுதாரித்துக் கொண்ட சக்தி அவளின் கையைப் பற்றிக் கொண்டு “தேனு என் கூடவே இருக்குரியா?” என்றாள் கண்ணீருடன்.

அதற்குள் தேனுவின் அன்னை அவளை வசைமாறி பொழிய ஆரம்பித்திருந்தார். தேனுவிற்கு சக்தியுடன் இருக்க வேண்டும் என்று இருந்தது. ஆனால் அன்னை கத்தி கொண்டிருப்பதை எண்ணி எரிச்சலுடன் வெளியே வந்தவள் “என்னமா?” என்றாள்.

“எழாகிடுச்சு இன்னும் இங்கே என்ன பண்ற?”

“அவ அழுதுகிட்டே இருக்கா. அவ கூட தான் இருக்க போறேன்” என்றாள் அழுத்தமாக.

“குடும்பத்தையே முழுங்குனா அழுது தான் ஆகணும். ஒழுங்கா வீட்டுக்கு வா”.

“சொன்னா புரிஞ்சுகோங்க...அவளுக்கு நான் கூட இருந்தா தான் நல்லது”.

வீட்டின் படி ஏறியவர் “அடிச்சேன்னா பல்லு பேத்துக்கும். அனாதையா போனது அவ தலையெழுத்து. நீ எதுக்கு காவலுக்கு இங்கே இருக்கணும்” என்று கைப் பிடித்து இழுத்தார்.

அவர் கையை உதறும் முயற்ச்சியில் இருந்தவள் “இன்னைக்கு ஒரு நாளாவது விடுங்கம்மா” என்றாள் கெஞ்சலாக.

இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மற்ற பெண்கள் “உன் பொண்ணு தானே சக்திக்கு சோடி. ஒரு நாளாவது விடேன் தனம்”.

அடுத்தவர் தனக்கு சொல்லும்படி வைத்துவிட்டாளே என்கிற கோவத்தில் ஓங்கி ஒரு அறை ஒன்றை கொடுக்க, அதில் திகைத்து நின்ற மகளின் கையைப் பற்றி தரதரவென்று இழுத்துச் சென்று விட்டார்.

தேனுவின் அன்னை நடத்திவிட்டு சென்ற கலவரத்தில் பயந்து போன சக்தி,மேலும் உடைந்து போனாள். தோழி அருகே இருந்தவரை தெரியாத தனிமை, அவள் சென்றதும் தெரிந்தது. அப்போது தான் தான் அனாதை என்பதை உணர்ந்தாள். அதண்ணை அறியாமல் அவளது உதடுகள் “அண்ணே! எங்க இருக்க நீ? என்னை இப்படி தனியா தவிக்க விட்டுட்டு எங்க போன?” என்று புலம்ப ஆரம்பித்தாள்.

அன்னம்மா கிழவி அவளுக்கு வேண்டிய உணவை எடுத்து வந்து முன்னே வைத்துவிட்டு “சாப்பிடு பாப்பா! அழுது அழுதே தாவு தீர்ந்து போயிருக்கும்” என்றார்.

“எனக்கு யாருமே இல்லாம போயிட்டாங்க பாட்டி...எங்கண்ணன் எங்க இருக்குன்னே தெரியல” என்று அழ ஆரம்பித்தாள்.

அவளை இழுத்து மடி மீது போட்டுக் கொண்டவர் “அழாத கண்ணு! கடவுள் யாரையும் அப்படி தனியா விட்டுட மாட்டான். ஒரு வாய் சாப்பிட்டிட்டு கண்ணை மூடு” என்று கூறி தலையை வருடிக் கொடுத்தார்.

அவளோ அவர் மடியிலேயே கண்ணீருடன் படுத்தபடி உறங்கி போனாள். அவளது தலையை இறக்கி வைத்துவிட்டு எழ முடியாமல் எழுந்த பாட்டி மெல்ல சென்று கதவடைத்து விட்டு வந்து தானும் படுத்துக் கொண்டார்.

கவலையுடனும், அழுகையுடனுமே சென்றது பத்து நாட்களும் சக்திக்கு. அந்த பத்து நாட்களும் தேனுவை சக்தியின் வீட்டிற்கு விடவே இல்லை அவள் அண்ணி. சரியாக பத்தாவது நாள் மீண்டும் ஊர் பெரியவர்கள் அனைவரும் சக்தியின் வீட்டு வாசலில் கூடினர். சக்தியின் பங்காளி குடும்பங்கள் அனைத்தும் அன்று மும்மரமாக வந்திருந்தனர்.

அப்பத்தா இறந்த அன்று அங்கு நடந்தவைகளை கவனிக்காது விட்டிருந்தாள் சக்தி. ஆனால் இன்று சற்றே தெளிந்த மன நிலையுடன் இருந்தவள் தானும் ஒரு ஓரமாக நின்று நடப்பவைகளை கவனிக்க ஆரம்பித்தாள்.

பங்காளிகளை பார்த்து “என்னப்பா பேசிடலாமா?” என்றார் ஊர் பெரியவர்.

“சரிங்கையா?”

“சரி சொல்லு? உங்க பக்கம் என்ன தீர்மானம் பண்ணி இருக்கீங்க?அந்த பொண்ணு பொறுப்பை யாரும் எத்துகுறீங்களா? இல்ல மாப்பிள்ளை எதுவும் ஏற்பாடு செய்ய போறீங்களா?”

“மாப்பிள்ளை பையன் ஒருத்தன் இருக்காங்க. அவனையே முடிச்சு வச்சிடலாம்” என்றார்.

அதுவரை பொம்மை போல நின்று கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு உள்ளுக்குள் விதிர்விதிர்த்து போனது. என்ன நடக்கிறது இங்கே? தனக்கென்று எவரும் இல்லாத காரணத்தினால் ஊரே முடிவெடுக்கிறது என்பதை உணர்ந்தவள் பயந்து போனாள்.

நெற்றியை சுருக்கியபடி “யாருப்பா அந்த பையன்? அவனை பத்தி நல்லா விசாரிச்சீங்களா? ஏன்னா இப்போ பொண்ணு பொறுப்பு நம்ம கையில இருக்கு”.

சட்டென்று பக்கத்தில் நின்ற ஒருவனை இழுத்து முன்னே நிற்க வைத்தவர் “இவன் தாங்க மாப்பிள்ளை. நம்ம தோட்டத்தில தான் வேலை பார்க்கிறான். இவனுக்கும் அப்பன் ஆத்தான்னு யாரும் இல்லைங்க. எங்க சாதி தான்” என்றார்.

கண்களில் மிரட்ச்சியுடன் அவனைப் பார்க்க, தலை வழுக்கை விழுந்து, கை காலெல்லாம் சூம்பி போய் இருக்க, ஊர் பெரியவரை பார்த்து ‘ஈ’ என்று இளித்துக் கொண்டே கும்பிடு போட்டான்.

அவனை பார்த்ததும் பெரியவருக்கு சமாதானம் ஆகவில்லை. மனதிற்குள் ‘அந்த பொண்ணு எப்படி இருக்கு. இவன் எப்படி இருக்கான்? இவனுக்கா கட்டி வைக்கிறது?’ என்று யோசித்தார்.

அதை உணர்ந்து கொண்டவர்கள் அவரை யோசிக்க விடக் கூடாது என்கிற முடிவிற்கு வந்து “இவன் ரொம்ப நல்லவங்க. எந்த கேட்ட பழக்கமும் கிடையாது. அதோட என் தோட்டத்துல தான் வேலை பார்க்கிறான். அதனால என் கண்கானிப்பில தான் இருப்பான். தைரியமா நம்பி பொண்ணை கொடுக்கலாம்” என்றார்.

கூட்டத்தோடு கூட்டமாக நின்று பார்த்து கொண்டிருந்த தேனு “இந்தாளு மண்டையை உடைச்சா சரியா போயிடும். இவன் பொண்ணுக்கு இப்படியொரு மாப்பிள்ளையை பார்ப்பானாமா?” என்று திட்டிக் கொண்டிருந்தாள்.

பெரியவர் முக்கிய முடிவை தான் மட்டும் எடுத்து மாட்டிக் கொள்ள மனமில்லாமல் மற்றவர்களிடம் கலந்து பேசி விட்டு சக்தியை முன்னே வர சொல்லி “இங்கே பாரும்மா! உனக்கு இப்போ துணைக்கு யாரும் இல்லாததுனால உன் பொறுப்பை இந்த ஊர்காரவங்க தான் ஏத்துகிட்டு இருக்கோம். எங்களால உன்னை எப்பவும் காபந்து பண்ண முடியாது. அதனால கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு இருக்கோம்” என்றார்.

அவர்கள் பேசியதிலேயே நடக்க போவதை உணர்ந்து கொண்டிருந்தவளின் கால்கள் நடுங்கி கொண்டிருந்தது. இதை எப்படி மறுப்பது என்று வழி தெரியாமல் அமைதியாக நின்றாள்.

அருகே நின்றவனை காட்டி “உங்க ஆளுங்க இவரை மாப்பிள்ளையா கொண்டு வந்திருக்காங்க. இந்த வாரம் கோவில்ல வச்சு கல்யாணத்தை நடத்திடுவோமா?” என்றார்.

மாப்பிள்ளையாக நின்றவனோ அவளை பார்வையாலேயே துகிலுரித்தான். அவர் கேட்டத்துக்கு வேகமாக தலையசைத்தான். சக்தியோ மடாரென்று அங்கேயே மயங்கி சாய்ந்தாள். உடனே பெண்கள் எல்லாம் கூடிக் கொண்டு அவளது மயக்கத்தை தெளிவித்தனர்.

“அதுவே எல்லோரையும் இழந்திட்டு குழப்பத்துல இருக்கு. அது தான் மயங்கிடுச்சு. நாமலே முடிவெடுப்போம்” என்றவர் மாப்பிள்ளையின் பக்கம் திரும்பி “பொண்ணை நல்லா பார்த்துக்குவியா?” என்றார்.

அவசரம் அவசரமாக ஜொள்ளு வடிய “ஆஅ..ன்..ஆ..ன் பார்த்துக்குவேன்” என்று தலையாட்டினான்.

பங்காளிகள் தங்களுக்குள் பார்வையை பரிமாறிக் கொண்டனர்.

துண்டை உதறி தோளில் போட்டவர் “அப்போ இந்த வெள்ளிக்கிழமை ஊர் கோவிலில் வச்சு கல்யாணத்தை முடிச்சிடலாம். ராமன் இடத்துக்கு வேண்டிய விலையை போட்டு பணத்தை நானே கொடுத்திடுறேன்” என்று எழுந்து கொண்டார்.

சக்தியோ இந்த திருமணம் வேண்டாம் என்று மனதிற்குள் கதறினாளே தவிர வெளியில் எவரிடமும் சொல்லவில்லை. தேனு அவளை முறைத்தபடி நின்றிருந்தாள். வாயை திறந்து சொல்லாம பேய் முழி முழிச்சிட்டு நிற்கிறா பாரு என்று திட்டிக் கொண்டே அவள் அருகில் சென்றாள்.

தோழியை பார்த்ததும் “எனக்கு பயமா இருக்கு தேனு...நான் இங்கே தனியா இருக்க முடியாதா? உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுரியா? எதுக்கு எனக்கு கல்யாணம் ஏற்பாடு பண்றாங்க?” என்றாள் கலங்கிய குரலில்.

அவளது குமட்டில் குத்தியவள் “இப்போ வந்து வியாக்கியானம் பேசு! அப்போவே என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே?” என்றாள் கோபமாக.

பதட்டத்துடனே “இப்போ என்ன பண்றது தேனு?” என்று உதட்டை கடிக்க ஆரம்பித்தாள்.

அவள் அருகே நெருங்கி நின்று மெல்லிய குரலில் “சென்னைக்கு போகலாமா? உங்க அண்ணனையும் தேடின மாதிரி ஆச்சு. கல்யாணத்தில் இருந்து தப்பின மாதிரியும் ஆச்சு” என்றாள்.

“அங்கே போய் எப்படி?”

“பார்த்துக்கலாம்! இவனை கட்டுறதை விட அங்கே போய் பார்க்கலாம்” என்றாள்.

“நீ எப்படி வருவ? நான் மட்டும் தனியாக போக பயமா இருக்குமே” என்றாள் கண்களில் பீதியுடன்.

அவளது கைகளை அழுந்த பற்றி “பயப்படாதே! உன்னை தனியா விட மாட்டேன். ஏற்பாடு செய்யலாம். இப்போ நான் வீட்டுக்கு போறேன். எப்போ எப்படி போகலாம்னு யோசிச்சிட்டு வந்து சொல்றேன்” என்று அன்னை வரும் முன்பு அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

வீட்டினுள் சென்றமர்ந்தவளின் எண்ணங்களோ எப்படியாவது சென்னைக்கு சென்று அண்ணனை பார்த்து விட்டால் இந்த பிரச்சனையில் இருந்து தப்பித்து விடலாம் என்றெண்ணினாள்.

சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தவள் ஏதோ யோசனையுடன் எழுந்து சென்று சென்னை சென்ற புதிதில் சந்துரு எழுதிய கடிதங்களை எல்லாம் எடுத்து வந்து படிக்க ஆரம்பித்தாள். அவற்றை படிக்கும் போது பழைய நினைவுகளில் கண்ணீர் தானாக வழிந்தோடியது. எத்தனை அன்பை வைத்திருந்தான் தன் மீது. தனது திருமணத்தை எப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று கனவு கண்டிருந்தான். ஆனால் இன்றோ சமம்ந்தமே இல்லாத எவரோ அதை முடிவு செய்கிறார்கள். இதை மட்டும் அறிந்தால் ரத்தக் கண்ணீர் வடிப்பானே.

தனக்காக இல்லா விட்டாலும் தேனுவிற்காகவாவது அவனை கண்டு பிடிக்க வேண்டும். இருவரின் அன்பையும் அறிந்தவளுக்கு, தேனுவின் மனநிலையை நன்றாக உணர முடிந்தது. சென்னை சென்றால் அனைத்தும் சரியாகி விடும் என்று எண்ணத் தொடங்கினாள்.

அடுப்பிற்கு பயந்து வாணலியில் விழுவதற்கு தன் மனதை தயார்படுத்திக் கொண்டாள்.
 

Chitra Balaji

Member
Feb 5, 2020
43
27
18
Very very emotional episode maa.... பாட்டி yum vittutu poitaangala..... யாரு அந்த maapillai இப்படி இருக்கானே காசு kaaga enna வேணாலும் பண்ணுவாங்க la.... Chennai la rendu பொண்ணுங்க eppadi பாதுகாப்பா இருக்க முடியும்.... Romba romba கஷ்டம் ஆச்சே... Enna aaga pooguthoo...
 
May 26, 2019
71
12
18
Nice UD...
Oru Nonjaan mappilai ya....
Sothukaga enna venumnalum seivangala....
Sakthi and Thenu vai Chennai Varaverkirathu...... Ini chennaiyil sandhikkalam....
 

bselva

Active member
Sep 19, 2018
129
25
28
இப்படி எல்லாம் முடிவு எடுத்து யாரு கூடவாவது அனுப்பி வைக்கிறதுக்கு பேரு தான் அக்கறையா?இதுக்கு அந்த பொண்ண தனியாவே விட்ருக்கலாம். இந்த சொம்பு தூக்கிகள்லாம் எப்போ தான் update ஆவாங்க?
 
  • Like
Reactions: Shanbagavalli
Need a gift idea? How about a dinosaur night light?
Buy it!