அத்தியாயம் - 17

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,683
1,496
113
அத்தியாயம் –17

ரம்யாவின் மேல் இருந்த கோபமெல்லாம் மறைந்து போக, அவளிடம் இன்று பேசிவிட வேண்டும் என்கிற முடிவில் இருந்தாள் நித்யா.

அன்று வேலை அதிகமாக இருந்ததால் ரெண்டு மணி நேரம் வரை வேறு எந்த சிந்தனையுமே இல்லாமல் மூழ்கியிருந்தாள். தேவையானவற்றை முடித்துவிட்டு சற்று ஓய்வாக நாற்காலியில் சாய்ந்தவளின் பார்வையில் பட்டான் விஜேஷ். அவனை பார்த்ததும் தான் வீடு பார்க்க சொன்ன நியாபகம் வர, அவசரமாக எழுந்து அவன் அருகே சென்றாள்.

“விஜேஷ்!”

கணினியிலிருந்து கண்களை அகற்றாமலே “சொல்லு நித்தி!” என்றான்.

அவன் அருகே இருந்த நாற்காலியை இழுத்து போட்டுக் கொண்டு அமர்ந்தவள் “ரெண்டு நாளில் வேற வீடு காண்பிக்கிறேன்னு சொன்ன? என்ன ஆச்சு?” என்றாள்.

அவளை நிமிர்ந்து பார்த்து மீண்டும் கணினிக்குள் தலையை விட்டுக் கொண்டு “ரொம்ப அவசரமா வேணுமா?” என்றான்.

அவனது செயலில் கடுப்பாகி போனவள் டேபிளை தட்டி “அன்னைக்கே சொன்னேன் ரெண்டு நாளில் வேணும்-னு. இப்போ அவசரமான்னு கேட்குற?”

அவளது கோபத்தைக் கண்டு நாற்காலியை பின்னுக்கு தள்ளி நன்றாக சாய்ந்து கொண்டு “ஒன் மினிட்” என்று கூறி போனை எடுத்து யாருக்கோ அழைத்தான்.

“இப்போ இருக்கா? வந்தா பார்க்கலாமா?ம்ம்..சரி..ஒரு அரை மணி நேரத்தில் நாங்க அங்க இருப்போம்” என்று கூறி போனை வைத்தான்.

அவன் பேசியதை கேட்டுக் கொண்டிருந்தவள் “ம்ம்..சரி கிளம்பு. நான் ரெடி போயிட்டு வந்திடலாம்” என்றாள்.

அவளை ஆயாசாமாக பார்த்து “ஹே! நான் பண்ணினதை எல்லாம் சேவ் பண்ண வேண்டாமா? நீ போய் ஒரு காபி குடிச்சிட்டு வா...நான் அதுக்குள்ளே முடிச்சிடுறேன்” என்றான்.

அவனையும், கணினியையும் மாறி மாறி பார்த்துவிட்டு “ம்ம்...ரொம்ப லேட் பண்ணிடாதே” என்று கூறிச் சென்றாள்.

அவள் கேண்டீன் நோக்கி செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவன் வேகமாக எழுந்து ரம்யாவிடம் சென்றான்.

“ரம்ஸ்! இதென்ன உன் பிரெண்ட் வீடு பார்க்க இவ்வளவு தீவீரமா இருக்கா? இப்போவே கிளம்புன்னு என்னை படுத்துறா?”

“என்ன சொல்ற விஜி? என்கிட்டே ஒருவாரமா பேசுறது இல்லை. அதனால என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியலையே”.

“நான் வீடு காண்பிக்க கூட்டிட்டு போயிட்டு உடனே அட்வான்ஸ் கொடுக்கணும்னு குதிச்சா என்ன செய்றது?”

சற்று யோசித்தவள் “இரு! அவங்க அக்கா கிட்ட பேசி பார்த்திட்டு முடிவு பண்ணலாம்”.

தனது போனை எடுத்து ரேணுவை அழைத்தாள்.

பாட்டியும், பேரனும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க அறையில் இருந்த ரேணுவின் அலைபேசி அடிக்க ஆரம்பித்தது.

அந்த சத்தத்தை கேட்டு பதறி போன சுமதி “அம்மா! நித்யா கூப்பிடுறான்னு நினைக்கிறேன்” என்றபடி போனை எடுக்கச் சென்றார்.

அவரது பயத்தைக் கண்டு சிரித்துக் கொண்ட சிவகாமி “பதட்டபடாம பேசு சுமதி...கடைக்கு போயிருக்கான்னு சொல்லு” என்றார்.

நம்பரை பார்த்து புது நம்பர் எனவும் பயந்து கொண்டே “ஹலோ” என்றார்.

ரேணுவின் குரலை எதிர்பார்ந்திருந்தவளுக்கு சுமதியின் குரலைக் கேட்டதும் சற்று யோசனையுடன் “ஆன்டி! எப்படியிருக்கீங்க? நான் ரம்யா பேசுறேன்.. .நித்யாவோட பிரெண்ட்” என்றாள்.

சற்று ஆசுவாசத்துடன் “நல்லாயிருக்கேன் மா! நீ எப்படி இருக்க?” என்றார்.

அவளோ கேண்டீணிற்கு சென்ற நித்யா வந்து விடுவாளோ என்கிற பயத்துடன் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே “ஆன்டி! அக்கா இல்லையா? முக்கியமான விஷயம் ஒன்னு பேசணும்”.

அவளிடம் பேசிக் கொண்டே ஹாலிற்கு வந்தவர் “ரேணு இல்லையேம்மா வெளில போயிருக்கா” என்றார்.

சிவகாமி மகள் யாரிடம் பேசுகிறார் என்று யோசனையுடன் பார்த்தார்.

சுமதி சொன்ன பதிலில் சுரத்திழந்து போனவள் “ஒ..அக்கா வர லேட் ஆகுமா?” என்றாள்.

அவளிடம் பேசிக் கொண்டே அன்னையிடம் மெதுவான குரலில் “நித்தியோட பிரெண்ட் ரம்யா பேசுறா...ரேணு கிட்ட என்னவோ அவசரமா பேசணுமாம்” என்று கிசுகிசுத்தார்.

அதை கேட்டுக் கொண்டிருந்த விஸ்வா அவரிடம் “பெரியம்மா! என்கிட்டே கொடுங்க நான் பேசுறேன்” என்றான்.

அதை கேட்டு முழித்து அன்னையை பார்க்க, அவரோ கொடு என்றார்.

போனை கையில் வாங்கியவன் “ஹலோ” எனவும்...திடீரென்று ஆண் குரல் வரவும், காதிலிருந்து எடுத்து போனை ஒருமுறை பார்த்துவிட்டு “ஹலோ” என்றாள்.

“சாரிங்க! நடுவில் ஆஜராகிரதுக்கு...நான் உங்க நித்யாவை கல்யாணம் பண்ணிக்க போறவன். உங்களை வந்து பார்த்து பேசலாமா?” என்று குண்டை தூக்கிப் போட்டான்.

அதிர்ச்சியுடன் “வாட்! என்ன சொல்றீங்க?”

“உண்மையை தான் சொல்றேங்க...ஆனா இந்த விஷயம் உங்க பிரெண்டுக்கு தெரியாது” என்று அசால்ட்டாக அடுத்த குண்டை வீசினான்.

தன்னை அறியாமல் தலையில் கை வைத்துக் கொண்டு “ப்ளீஸ்! எனக்கு ஒன்னும் புரியல! நீங்க யார் முதல்ல சொல்லுங்க” என்று கடுப்புடன் கேட்டாள்.

“உங்க பிரெண்ட் காவ்யா கல்யாணத்தில் பாடின மியுசிக் ட்ரூப் என்னோடது தான். என் பேர் விஸ்வா”.

அப்போது கேண்டினில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த நித்யாவின் மீது பார்வை பதிய “ஒ...நீங்க ஒரு பதினொரு மணிக்கு வர முடியுமா? நான் அப்போ ப்ரீ தான்”.

“சரிங்க...என்னை மீட் பண்ண ஒத்துகிட்டதுக்கு நன்றி” என்று போனை வைத்தான்.

அதுவரை அவன் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த பாட்டியோ “என்ன பேராண்டி செம வேகத்தில் போற...அந்த பெண்ணை பார்த்து என்ன பேசப் போற?” என்று கேட்டார்.

எழுந்து அங்குமிங்கும் ஹாலை அளந்து நெற்றியை தேய்த்துக் கொண்டு “இப்போ நீங்க அண்ணனையும், அண்ணியையும் அவ கிட்ட இருந்து பிரிச்ச மாதிரி, இந்த பெண்ணையும் அவ கிட்டயிருந்து பிரிக்க போறேன் பாட்டி...அப்போ தான் அவ என்னை நெருங்கி வருவா...கல்யாணத்துக்கும் ஒத்துக்குவா” என்றான்.

அவனை பார்த்து கேலியாக தாவங்கட்டையில் கையை வைத்துக் கொண்டு “பத்து நாள் போனா நிரஞ்சனும், ரேணுவும் இங்கே வந்திடுவாங்க...அவளுக்கு இது ஒன்னும் நிரந்திரமான பிரிவு இல்ல பேராண்டி” என்றார்.
 
  • Love
Reactions: Chitra Balaji

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,683
1,496
113
மறுப்பாக தலையசைத்து “அவளை பொறுத்தவரை பத்து நாள் என்கிறது ரொம்ப பெரிய விஷயம். இன்னைக்கு வீட்டுக்கு வந்து விஷயம் தெரிஞ்சு அவ எப்படி ரியாக்ட் பண்றான்னு பார்த்திட்டு அடுத்ததை யோசிக்கணும் பாட்டி”.

அவன் சொன்னதை கேட்ட சுமதி “அதை நினைச்சாலே எனக்கு பயமாயிருக்கு” என்றார்.

பாட்டியும், பேரனும் மட்டும் யோசனையுடன் பார்வைகளை பரிமாறிக் கொண்டனர். இருவரது எண்ணங்களும் ஒரே திசையில் பயணித்தது.

“நான் நினைக்கிற மாதிரி நடந்தா...பத்து நாளுக்குள்ள அவளுக்கு தாலியை கட்டி என்னோட அழைச்சிட்டு போயிடுவேன்” என்றான் உறுதியாக.

அவனது முடிவை ஆதரிப்பது போல் தலையை ஆட்டி சம்மதம் சொன்ன சிவகாமி கண்களை இறுக மூடிக் கொண்டார்.

அவன் பத்து நாட்களுக்குள் அவளை திருமணம் முடித்து அழைத்துச் செல்வேன் என்பதை வாயை பிளந்தபடி கேட்டுக் கொண்டிருந்த சுமதி, அதற்கு அன்னையிடமிருந்து மறுப்பு வராததையும் அதிசயமாக பார்த்தார். ‘நமக்கு தெரியாத ஏதோவொரு விஷயம் நித்தியின் வாழ்க்கையில் இருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டார்.

இருவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பியவன், நேரே ரம்யாவை பார்க்கச் சென்றான்.

நான்கு வருட தவத்திற்கு பின்னர் தேன்னிலவிற்கு கிளம்பிய இளஞ்சோடிகள் மதியம் பெங்களூருவை சென்றடைந்தனர். நண்பனின் உதவியுடன் ஹோட்டலில் புக் செய்திருந்தான் நிரஞ்சன். தங்களது பயணப் பொதிகளை அறையில் இறக்கி வைத்துவிட்டு மதிய உணவை முடிக்கச் சென்றனர்.

அவனுடன் முதன்முறையாக இது போல் தனித்து வருவது சற்று கூச்சத்தை ஏற்படுத்த, அவனை நிமிர்ந்தும் பார்க்காது, சுற்றுப்புறத்தை வேடிக்கை பார்ப்பது போல் நடந்து கொண்டாள்.

அவளது நிலையை உணர்ந்து கொண்டவனோ விஷம புன்னகையுடன் “இந்த ஹோட்டலை நல்லா கட்டி இருக்காங்க இல்ல...ஒவ்வொன்னும் பார்த்து-பார்த்து ரசனையுடன் செஞ்சிருக்காங்க” என்றவனின் பார்வை அவளை ரசனையுடன் தழுவியது.

உண்மையாகவே ஹோட்டலை தான் சொல்கிறான் என்றெண்ணி பேசத் திரும்பியவள் அவனது கள்ளப் பார்வையை கண்டு நாணி தலை குனிந்து கொண்டாள்.

எதிரே அமர்ந்திருந்தவன் எட்டி அவள் கைகளை பற்றிக் கொள்ள, மெல்ல விரல்களை வருடியபடி “இந்த சரீ உனக்கு ரொம்ப அழகா இருக்கு”என்றான்.

அவனது செய்கையில் மேலும் வெட்கமடைந்து கைகளை உருவிக் கொள்ள பார்க்க, அவனோ விடாது பற்றிக் கொள்ள “மச்..என்ன இது! விடுங்க! எல்லோரும் பார்க்கிறாங்க”.

அவனோ சற்று சத்தமாக சிரித்து மெல்ல அவள் புறம் குனிந்து “அப்போ யாரும் பார்க்கலேன்னா பரவாயில்லையா?” என்றான் கிசுகிசுப்பான குரலில்.

அவனது வெட்கமற்ற பேச்சில் முகம் சிவந்து போக, தலையை குனிந்து கொண்டு “ரொம்ப தான் பண்றீங்க” என்றாள்.

அதற்கும் சளைக்காமல் அவள் காதில் குனிந்து ஏதோ சொல்ல, மொத்தமாக சிவந்து போனாள்.

அந்நேரம் அவர்கள் ஆர்டர் செய்திருந்த உணவு வரவும், அவளை சீண்டுவதை விட்டு-விட்டு சாப்பிட ஆரம்பித்தான். நாலரை மணி நேரம் வண்டி ஒட்டி வந்ததில் அவனுக்கு பசி அதிகமிருக்க ரசித்து உண்ண ஆரம்பித்தான். அவளோ அவனது பேச்சிலும், செயலிலும், பார்வையிலும் தடுமாறி இருந்தவள் உண்ண முடியாமல் கொறித்தாள். அவளது கூச்சத்தையும், தவிப்பையும் உணர்ந்து கொண்டவன் வேறு விஷயங்களை பேசி மனதை மாற்றி உண்ண வைத்தான்.

உணவை முடித்துக் கொண்டு அறைக்கு திரும்பியதும், அவளை அறையில் இருக்க சொல்லிவிட்டு “நான் போயிட்டு ஒரு பத்து நிமிஷத்தில் வந்திடுறேன் ரேணு. நீ படுத்து தூங்கு” என்று கூறி அவளின் பதிலை எதிர்பாக்காது கதவை சாத்திவிட்டுச் சென்றான்.

அவன் சென்றதும் அங்கிருந்த நாற்காலியில் உட்காரலாமா என்று யோசித்தவளின் உடல் படு என்று கெஞ்ச, படுக்கையில் படுத்தாள். அசதியில் கண்கள் தானாக மூட, அதுவரை உறங்கிக் கொண்டிருந்த மனம் விழித்துக் கொண்டது. நித்தியின் நினைவு வர, ‘எப்படி மறந்தேன்...இந்நேரம் வீட்டுக்கு வந்திருப்பாளோ..என்னை தேடியிருப்பாளோ?’ என்று யோசித்து போன் செய்து விசாரித்து விடுவோம் என்று போனை தேடினாள்.

பெட்டிகளையும், ஹான்ட்பாகையும் தலைகீழாக புரட்டி போட்டு போன் கிடைக்கவில்லை என்றதும் தான் அங்கேயே வைத்துவிட்டு வந்துவிட்டோம் என்று தெரிந்தது. தன்னையே நொந்து கொண்டு, நகம் கடித்தபடி ‘நித்தி எப்படி நடந்து கொள்வாள்’ என்று பதட்டத்துடன் யோசித்துக் கொண்டிருந்தாள்.

அதற்கு மேல் படுக்கையில் அமர பிடிக்காமல் கண்கள் கலங்க யோசனையுடன் கண்ணாடி ஜன்னல் வழியே தெரிந்த காட்சிகளை வெறித்தபடி நின்றாள்.

அதேநேரம் நிரஞ்சன் லாபியில் நின்றபடி அன்னையிடம் பேசிக் கொண்டிருந்தான்.

“நித்தி வீட்டுக்கு வந்துட்டாளாம்மா? ஒன்னும் பிரச்சனை இல்லையே?”

“இன்னும் அவ வரலப்பா...வந்தா தான் தெரியும்” என்றார் சுமதி கவலையுடன்.

மகளிடம் இருந்து போனை வாங்கிய சிவகாமி “ஏன் ஏதாவது பிரச்சனை பண்ணினா உடனே உன் பொண்டாட்டியை அழைச்சிட்டு திரும்பி வந்துடுவியா?” என்றார் நக்கலாக.

“இல்ல பாட்டி...” என்றவனை இடைமறித்து “இங்கே பார் நிரஞ்சன்! அவ வாழ்க்கையை பார்க்க அவளுக்குன்னு ஒருத்தன் வந்தாச்சு. ஏற்கனவே நாலு வருஷம் உங்க வாழ்க்கையை அவ கையில் கொடுத்திட்டு வேடிக்கை பார்த்தது பத்தாதா? இனி, பத்து நாள் கழிச்சு நாங்க கிளம்பி வரோம்னு சொல்றதுக்கு மட்டும் போன் பண்ணு” என்றார் அதட்டலாக.
 
  • Love
Reactions: Chitra Balaji

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,683
1,496
113
“சரி பாட்டி...அவளை ரொம்ப கஷ்டப்படுத்தாதீங்க”.

அவரோ சளைக்காமல் “அதெல்லாம் எனக்கு தெரியாது பத்து மாசத்தில் கொள்ளு பேரன் வந்தாகணும்...கிளம்பு..கிளம்பு” என்று கூறி போனை வைத்தார்.

அவர் சொன்னதில் முகம் சிவந்து போனவன்...வெட்கத்துடன் தலையை கோதியபடி அறையை நோக்கிச் சென்றான்.

அவள் தூங்கியிருப்பாளோ என்றெண்ணி மெல்ல அறைக் கதவை திறந்தவனின் பார்வையில் படுக்கை காலியாக இருக்க, அவளைத் தேடி பார்வை அறையைச் சுற்றி சுழன்றது.

அறையின் ஜன்னலோரம் ஓவியப் பாவையாக நின்று கொண்டிருந்தவளை விழிகள் அளவெடுக்க ஆரம்பித்தது. ஆகாய வண்ணத்ததில் ஆங்காங்கே கருநீல பூக்கள் தெளித்திருக்க, அதே வண்ணத்தில் அணிந்திருந்த ரவிக்கையும் அவளது நிறத்தை தூக்கி காட்ட, நீளமான ஜடை இடையை தாண்டி சிறு அசைவிற்கும் நடனமிட நின்றவளைக் கண்டு அவனுள் காதல் தீ கொழுந்து விட்டெரிய ஆரம்பித்தது.

மெல்ல கதவை சாத்திவிட்டு அவள் அருகே சென்றவன் இரு கைகளால் அவளிடையை சுற்றி வளைத்தான். தன்னுடைய எண்ணங்களில் உழன்று கொண்டிருந்தவளுக்கு இந்த திடீர் தாக்குதல் அதிர்ச்சியைக் கொடுக்க, பயத்தில் கண்களை மூடி, உடல் நடுங்க நின்றிருந்தாள்.

அவளது தோள்களில் தாடையை வைத்தவனது இதழ்கள் கன்னங்களில் உரசி மேலும் சிலிர்ப்பை ஏற்படுத்த, மெதுவாக தன்புறம் திருப்பியவனின் பார்வையில் துடித்துக் கொண்டிருந்த இதழ்கள் பட, தனது இணையை அடைந்திட நெருங்கும் நேரம் கண்களை திறந்து “நி..” என்று முடிக்கும் முன்பே முற்றுகை இடப்பட்டது.

தனது கையில் உருகி நின்றவளை கரத்தில் அள்ளிக் கொண்டு படுக்கைக்கு சென்றவன் காதோரமாய் “ரேணு” என்று ஆழ்ந்த குரலில் அழைத்தவன் ஏதோ சொல்ல, அதில் வெட்கமடைந்து அவனது மார்பிலே முகம் புதைத்துக் கொண்டாள்.

தாபத்துடன் அவளை பார்த்தபடி குனிந்து அவளது கழுத்தில் முத்தமிட, உடல் சிலிர்க்க கண்களை இறுக மூடிக் கொண்டாள். அவன் இதழ்கள் முன்னேறி முகமெங்கும் ஊர்வலம் வர, அவனது கரங்களோ வெற்றிடையில் வலம் வர ஆரம்பித்தது.

இரு மனங்களும் நித்யாவை மறந்து, தங்கள் வாழ்க்கை பயணத்தை துவக்க விரும்பி உலகத்தை மறந்தார்கள்...இந்த நாளுக்காக காத்திருந்த இளம் நெஞ்சங்களின் சங்கமம் நிறைவாக அரங்கேறியது...ரம்யாவை பார்க்க அவளது ஆபிசிற்குச் சென்ற விஸ்வா, அவனை கேண்டினில் சந்தித்தான்.

எதிர் எதிரே அமர்ந்ததும் இருகைகளையும் கட்டிக் கொண்டு அவனை ஆராய்ச்சி பார்வை பார்த்தபடியே “சொல்லுங்க...என்ன பேசணும்?” என்றாள்.

“நித்யாவும், நானும் ஒருவிதத்தில் சொந்தம் தான். இப்போ தான் பெரியவங்க பேசி எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணலாம் என்று கேட்டாங்க ...நானும் ஒத்துகிட்டேன்” என்றான்.

இகழ்ச்சியாக இதழ்களை மடித்து “நீங்க ஒத்துகிட்டீங்க...ஆனா அவ ஒத்துக்கணுமே” என்றாள்.

அவனோ அசராமல் “அவ யாரையும் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்க மாட்டா...என்னைத் தவிர” என்றான்.

“உங்களுக்கு ஒன்னு தெரியுமா? நானும் அவளும் இந்த ஒருவாரமா பேசல...அதுக்கு காரணம் நீங்க தான்”.

“நானா?”

“ஆமாங்க! நீங்களே தான்...அன்னைக்கு எங்க பிரெண்ட் ரிஷப்ஷனில் பாட்டு பாடி எங்க பிரெண்ட்சை கவுத்துட்டீங்க. ரெண்டு நாள் கழிச்சும் அதை பத்தி எல்லோரும் பேசும் போது இவ உங்களோட தொழிலை பத்தி மட்டமா பேசினா..அதை நான் கண்டிச்சேன்...அதனால கோபத்தில் இந்த ஒருவாரமா என்கிட்டே பேசல” என்றாள்.

அவள் சொன்னதை கேட்டு புன்னகைத்துக் கொண்டவன் “நீங்க சொன்னதை கேட்ட பிறகு ஸ்ட்ராங்கா சொல்றேங்க...மேடமுக்கு என்னை எல்லோரும் புகழ்வதை பார்த்து பொறாமை...அதனால தான் அப்படி பேசியிருக்கா” என்றான்.

அவனை அதிசய பிறவி போல பார்த்து “எப்படிங்க? அவ பேசினதில் உங்களுக்கு கோபமே வரலையா?”

“குழந்தை மேல கோபம் வருமா சொல்லுங்க? உங்க பிரெண்ட் ஒரு முரட்டு குழந்தை...அவளால யாரையும் காயப்படுத்த முடியாது. தனக்கு தானே வட்டத்தை போட்டுக்கிட்டு அதுக்குள்ளவே அவ சுத்திகிட்டு இருக்கா... அதிலிருந்து அவளை வெளிய கொண்டு வர எனக்கு உங்க உதவி தேவை”.

பேசிய சிறிது நேரத்திற்குள்ளாகவே விஸ்வாவின் இயல்பு புரிந்து போக, அவனை பார்த்து மலைத்து...நிச்சயம் இவன் நித்யாவிற்கு நல்ல வாழ்க்கையை கொடுப்பான் என்று உணர்ந்த ரம்யா ஒரு புன்சிரிப்புடன் “சரி சொல்லுங்க நான் என்ன செய்யனும்?” என்று கேட்டாள்.

அவனோ மெல்லிய சிரிப்புடன் “புதுசா எதுவும் செய்ய வேண்டாங்க...இப்போ என்ன செஞ்சிட்டு இருக்கீங்களோ அதையே கண்டினியு பண்ணுங்க” என்றான்.

“புரியலையே”

“அதுதாங்க உங்க சண்டையை தொடருங்க...அவகிட்ட முகம் கொடுத்து பேசாதீங்க..அது போதும்..மீதியை நான் பார்த்துக்குவேன்”.

அவன் சொன்னதை கேட்டு அதிர்ந்து “என்ன சொல்றீங்க? எதுக்கு அவகிட்ட பேசாம இருக்கணும்...அவளுக்கு இருக்கிற ஒரே பிரெண்ட் நான் தாங்க..நானும் பேசலேன்னா ரொம்ப நொந்து போயிடுவா” என்றாள் படபடப்புடன்.

சன்னமாக சிரித்து “நீங்க அவளை ஒதுக்கினா தான் நான் நெருங்க முடியும்...யாருமில்லாம தவிக்கிறப்ப இவன் ஒருத்தன் இருக்கானேன்னு என் மேல பரிதாபப்பட்டு உங்க பிரெண்ட் எனக்கு வாழ்க்கை கொடுக்கலாமில்லையா?” என்றான் கேலியாக.

“அப்படியெல்லாம் நம்பி ஏமாந்துடாதீங்க” என்றாள் அடக்கப்பட்ட சிரிப்புடன்.

அப்போது வீடு பார்த்துவிட்டு களைத்து போய் நேராக கேண்டினிற்குள் வந்தவளின் பார்வையில் இளம் நீலத்தில் சட்டையும், ஆழ்ந்த நீலத்தில் பேண்டும் அணிந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டு கூலரை சட்டையில் மாட்டிக் கொண்டு கம்பீரமாக அமர்ந்து ரம்யாவிடம் பேசிக் கொண்டிருந்தவனிடம் சென்று மீண்டு வந்தது.

அவள் நுழைந்ததுமே பார்த்துவிட்டான் என்றாலும் பார்வையை அவள் புறம் திருப்பாது ரம்யாவிடம் “உங்க பிரெண்டை பத்தி என்னென்னவோ சொன்னீங்க? பாருங்க என்னை எப்படி சைட் அடிக்கிறான்னு” என்றான்.

தண்ணீர் குடிக்க டம்ளரை வாயில் கவிழ்த்தவளுக்கு அவன் சொன்னதைக் கேட்டதும் புரையேற, தலையை தட்டிக் கொண்டு “இருந்தாலும் இப்படியொரு தன்னம்பிக்கை உள்ள மனுஷனை பார்த்ததே இல்லை விஸ்வா சார். அவளை பத்தி சரியா தெரியல உங்களுக்கு...வாங்கி கட்டினா தான் தெரியும்” என்றாள் நக்கலாக.

அவன் சொன்னதை போல நித்யாவின் பார்வை அவனை தாண்டி எங்கும் போகவில்லை. மனதிற்குள் ‘இவன் எங்கே இங்க..அதுவும் ரம்யா கூட இவ்வளவு க்ளோஸா உட்கார்ந்து பேசிட்டு இருக்கான்’ என்றெண்ணி பார்த்துக் கொண்டிருந்தாள். அதற்குள் அவனை அடையாளம் கண்டு கொண்ட ரம்யாவின் மற்ற தோழிகள் ஆர்வமாக அவனிடம் பேச முனைய நித்யாவிற்கு உள்ளுக்குள் எரிய ஆரம்பித்தது.

அவனை சுற்றி நின்ற பெண்களின் மேல் எழுந்த கடுப்பில் டங்..டங்கென்று கோபத்துடன் அவர்களை கடந்து சென்று ஜூசை வாங்கிக் கொண்டு ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டாள்.

பார்வை அவர்களை சுற்றியே வந்தது. எல்லோரும் அவனை சூழ்ந்து கொண்டு பேசுவதை பார்த்து ஏனோ மனம் வெறுமையாக உணர்ந்தது. இவ தான் என்னை வெறுப்பேத்த இவனை இங்கே வரவழைசியிருக்கணும் என்று ரம்யாவை தாளித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவனது பார்வை தன்னவளை சுற்றி சுற்றியே வந்தது. அவளது முகத்தில் தெரிந்த இறுக்கம், பிடிவாதம், நிமிர்வு, தைரியம் அனைத்தையும் தாண்டி கண்களில் ஒட்டியிருந்த சோகத்தைக் கண்டு கொண்டான்.

அதுதான் அவள்...தனது வலியை மறைக்க முகமுடியை போட்டுக் கொண்டு அலைகிறாள். எவரிடமும் சொல்லாது தனது இயல்பை தொலைத்திருப்பவளை நிச்சயம் நான் மாற்றுவேன் என்று எண்ணிக் கொண்டான்.

அவள் மனதை புரிந்து கொண்டவனிடம் தஞ்சம் அடைவாளா இந்த பேதை!!!
 
  • Love
Reactions: Chitra Balaji

Chitra Balaji

Member
Feb 5, 2020
99
40
18
அப்படி என்ன நடந்தது namba நித்தி ku பாட்டி kum விஷ்வா vukum therinji இருக்கு... அவல vishva தான் அதுல இருந்து mittu கொண்டு varanum.... Super Super maa.... Semma semma episode