Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 18 | SudhaRaviNovels

அத்தியாயம் - 18

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் – 18

சித்தார்த்தின் வீட்டு வாசலில் பத்திரிக்கையாளர்கள் ஒருபுறம், போலீஸ் ஒருபுறம் கேஷ்வியின் குடும்ப உறுப்பினர்கள் ஒருபுறம் என்று கூட்டம் கூடி இருந்தது. அதைக் கண்டு பயந்து போனவள் நடுக்கத்துடன் தன்னை மீறி அவனது கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள். காரிலிருந்து இறங்கும் முன் அவளை திரும்பி பார்த்தவன் “நான் பார்த்துக்கிறேன் மது! தைரியமா வா” என்றபடி அவளையும் அழைத்துக் கொண்டு கீழே இறங்கினான்.

தான்யாவை மட்டும் காரிலிருந்து இறங்க வேண்டாம் என்று சொல்லி விட்டான். அவன் இறங்கியதுமே அனைவரும் அவர்களை சூழ்ந்து கொண்டனர். போலீசார் பத்திரிக்கையாளர்களை ஒதுக்கி தள்ளிவிட்டு அவனருகே வந்து “சார் உங்க மேல கம்ப்ளைன்ட் வந்திருக்கு” என்றனர்.

அதற்குள் கேஷ்வியின் தந்தை கோபமாக அவன் முன்னே வந்து அடிக்கப் பாய்ந்தார். அதை தடுத்தவர்களை எல்லாம் திட்டிவிட்டு “என் பொண்ணை கல்யாணம் செஞ்சுகிட்டு எப்படி நீ இன்னொரு கல்யாணம் செய்துப்ப?” என்று ஆங்காரமாக கத்தினார்.

கேஷ்வியின் தாயோ கண்ணீருடன் அவனுக்கு சாபம் அளித்துக் கொண்டிருந்தார். இறுகிய முகத்துடன் அனைத்தையும் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் சித்தார்த். அப்போது போலீசாரிடம் அவனை கைது செய்யும்படி கத்தினார் கேஷ்வியின் தந்தை.

அதை கேட்டு அவனருகில் வந்த போலீஸ் அதிகாரி “உங்க மேல அவங்க கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க. அதனால நாங்க உங்களை கைது செய்து அழைச்சிட்டுப் போகலாம்னு வந்திருக்கோம்” என்றார்.

அவரை ஒரு பார்வை பார்த்தவன் “அஞ்சு நிமிஷம் வைட் பண்ண முடியுமா சார்?” என்றான்.

“சரி சார் வெயிட் பண்றோம்” என்று அவனுக்கு அருகிலேயே நின்று கொண்டார்.

அப்போது கருப்பு நிற ஜீப் பூம்-பூம் என்கிற ஹாரனுடன் கூட்டத்தை கலைத்தபடி வந்து நின்றது. அந்த ஜீப்பை பார்த்ததும் யோசனையுடன் நின்றிருந்தான் சித்தார்த். கூட்டம் மொத்தமும் ஒதுங்கி நிற்க, ஜீப்பின் கதவை திறந்து கொண்டு இறங்கி நின்றான் சிவதாஸ். (அடுத்த கதையின் ஹீரோ இவன் தான்)வாயில் சூயிங் கம் மெல்லப்பட்டுக் கொண்டிருக்க, அங்கிருந்த கூட்டத்தின் மீது பார்வையை பதித்தான். அவனைக் கண்டதுமே கண்களில் பீதியுடன் அங்கிருந்து மெல்ல நகர ஆரம்பித்தனர்.

இடுப்பில் இரு கையையும் வைத்தபடி அவர்கள் அருகே சென்றவன் “இங்கே எதுக்கு வந்திருக்கீங்க?” என்றான்.

அவன் எதிரே இருந்த பத்திரிகையாளர் நடுக்கத்துடன் “சித்தார்த் சார் இரெண்டாவது கல்யாணம் செஞ்சிட்டு வந்திருக்கார்னு நியுஸ் வந்துது...அது தான்” என்றான் தடுமாற்றத்துடன்.

“அதற்கு நீ இங்கே வந்து என்ன பண்ணப் போற? முதல் பொண்டாட்டியோட எத்தனை நாள் படு...அடுத்த பொண்டாட்டியோட எத்தனை நாள்னு தெரிஞ்சுகிட்டு எழுதப் போறியா?”.

அவனது கேள்வியில் வெடவெடத்துப் போனவன் “இல்ல சார்...அது” என்றவனை முறைத்து “உங்க எல்லோருக்கும் பத்து செகண்ட் டைம். ஒரு பய இங்கே நிற்க கூடாது” என்றான்.

அவனது பேச்சைக் கேட்டு சித்தார்த் முகத்தை சுளித்தபடி நின்றிருந்தான். சித்தார்த்தின் அருகில் நின்றிருந்த போலீஸ் அதிகாரியோ கடுகடுவென்று நின்று கொண்டிருந்தார். இவன் எதுக்கு வந்தான் என்பது போல மனதிற்குள் அவனை தாளித்துக் கொண்டிருந்தார்.

அவன் சொன்னது போல அடுத்த நிமிடம் அங்கிருந்த அனைவரும் அடித்து பிடித்து அங்கிருந்து கிளம்பி இருந்தனர். மீதம் இருந்தவர்கள் கேஷ்வியின் பெற்றோரும் போலீஸ் அதிர்காரிகள் மட்டுமே. சித்தார்த்தையும் வர்ஷூவையும் பார்த்துக் கொண்டே வந்தவன் அவன் அருகே நின்ற போலீஸ் அதிகாரியிடம் “என்ன கிஷோர்? நீ எதுக்கு இங்கே வந்த?” சூயிங் கம்மில் முட்டை விட்டபடி.

அவன் கேட்டதும் பல்லைக் கடித்துக் கொண்டு “கேஷ்வி மேடமோட பேரெண்ட்ஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க. விசாரணைக்கு வந்திருக்கேன்” என்றான் கடுப்புடன்.

தலையை மேலும் கீழும் ஆட்டியவன் “ஓகே நீ கிளம்பு நான் பார்த்துக்கிறேன்” என்றான் கேஷ்வியின் தந்தையை பார்த்தபடி.

“நோ சார்! என் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் வந்திருக்கு நான் தான் விசாரிசாகனும்” என்றான் அழுத்தமாக.

அவனை மேலும் கீழும் நக்கலாகப் பார்த்துவிட்டு “விசாரணை பண்ணப் போறியா? ஓகே பண்ணு” என்றவன் தன் ஜீப்பின் பானெட்டில் ஏறி அமர்ந்து கொண்டான்.

அவன் சென்று விடுவான் என்று நினைத்திருக்க, அவனோ அங்கேஏ அமர்ந்ததும் ஒருவித டென்ஷனுடன் சித்தார்த்திடம் “முதல் வைப் உயிருடன் இருக்கும் போது இரெண்டாவது திருமணம் சட்டப்படி குற்றம். அதனால உங்களை கைது செய்து சிறையில் அடைக்கலாம். உங்க முதல் வைப்பின் பேரெண்ட்ஸ் உங்களை கைது செய்ய சொல்லி கேட்டிருக்காங்க” என்றான்.

சித்தார்த்தோ நன்றாக நிமிர்ந்து நின்றவன் ஒருவித கிண்டலுடன் “நீங்க சொல்றது சரி தான். ஆனா முதல் வைப்னு நீங்க சொல்றவங்க தான் என்னுடைய இரெண்டாவது மனைவி. என் அருகில் இருக்கும் இவங்க தான் என் முதல் மனைவி” என்றான்.

அப்போது வீட்டினுள் இருந்து வேக நடையுடன் வந்த பிம்லா தேவி கோபத்தோடு “பொய்! அவன் சொல்றது பொய்! கேஷ்வி தான் அவனோட முதல் மனைவி” என்றார்.

பிம்லா தேவியை கிண்டலாகப் பார்த்து “என் அப்பாவின் மனைவி இவங்க தான் கேஷ்வியை எனக்கு இர்ண்டாவதாக கல்யாணம் செய்து வைத்தாங்க. அதுவும் என்னை கடத்தி, மிரட்டி நடத்தி வச்சாங்க” என்றான் சித்தார்த்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
பிம்லாவை பார்த்த வர்ஷூவோ அதிர்ந்து நின்றாள். அவளுக்கு அன்றொரு நாள் தன்னை காரில் ஏற்றிச் சென்று பேரம் பேசிய பிம்லாவின் நினைவு வந்தது. அவர் தான் சித்தார்த்தின் தாய் என்பது இதுவரை தெரியாத உண்மை. தான் படிக்கும் கல்லூரிக்கே வந்து பேரம் பேசி பார்த்தும் மிரட்டி பார்த்து விட்டு சென்றவர்.

அதிர்வுடன் அவள் நின்றிருக்க, சித்தார்த்தோ அவரை இகழ்ச்சியான முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனிடம் வேகமாக வந்தவர் “என்ன சித்தார்த் பண்ணி வச்சிருக்க? உன்னை நான் இப்படி நினைக்கவே இல்லை” என்றார் எதுவுமே தெரியாத மாதிரி.

அவனோ பதில் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க “ஹலோ மேடம்! நீங்க தானே பிம்லா தேவி. நீங்க வளர்த்தப் பையனை பற்றி உங்களுக்கு தெரியாதா? புதுசா கேட்குறீங்க?” என்றான் சிவதாஸ்.

அவனை முறைத்த பிம்லா சித்தார்த்தின் அருகே நின்றிருந்த போலீஸ் அதிகாரியைப் பார்த்து “நீங்க எதுக்கு வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்றார். அதில் அவர் கடுப்பாகி சிவதாசிடம் “சார் என் வேலையை செய்ய விடுங்க. நான் சித்தார்த் மல்ஹோத்ராவை கைது செய்து அழைத்துப் போகணும்” என்றார் கடுப்பாக.

அவர்கள் அனைவரின் மீது பார்வையை பதித்தவன் “முடியாது! இங்கே சித்தார்த் குற்றவாளி இல்லை. அவர் அருகே இருப்பது அவரோட முதல் மனைவி. அதோட அவருக்கு கட்டாய கல்யாணம் செய்து வைக்க கடத்தல், மிரட்டல் எல்லாம் செய்த அந்தம்மாவை தான் நீங்க கைது செய்யணும்” என்று பிம்லாவை நோக்கி கையை காட்டினான்.

பிம்லாவோ அதிர்ந்து “வாட்?”

சித்தார்த் கேலிச் சிரிப்புடன் அவரின் பக்கம் திரும்பி “நீங்க செய்த எல்லாவற்றிகும் ஆதராத்தை இவரிடம் கொடுத்திருக்கேன். சந்தேகம் இருந்தா நீங்களே கேட்டு வாங்கிப் பாருங்க” என்றான் நிமிர்வுடன்.

இதை எதிர்பார்க்காத பிம்லா திகைத்து நிற்க, அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தினு வேகமாக சித்தார்த்தின் அருகில் சென்று “என்னடா பெற்ற அம்மாவையே கைது பண்ண வைக்க நாடகம் ஆடுவியா?” என்று எகிறினான்.

“யாருக்கு யார் அம்மா?” என்று குனிந்து அவன் காதில் மெதுவாக கேட்க அதை கேட்டு அதிர்ந்து முகம் பார்த்தான் தினு.

“நீங்க அமைதியா இருக்கிற வரை நானும் இருப்பேன். என்கிட்டே வம்பு பண்ண நினைச்சா ஒவ்வொன்னையும் வெளில கொண்டு வருவேன்” என்றான் மிரட்டலாக.

அவனுக்கு ரகசியம் தெரிந்திருக்கிறது என்று புரிந்ததுமே ஓரடி விலகி நின்றவன் அக்காவின் அருகே சென்று “இப்போ புத்திசாலித்தனமா நடந்துக்கோ. இவனை அப்புறமா பார்த்துக்கலாம்’ என்று கூறிவிட்டு தனக்கு சம்மந்தமே இல்லாத மாதிரி ஒதுங்கி நின்றான்.

தனக்கு எந்தப் பக்கமும் ஆதரவு கிடைக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த பிம்லா பின்வாங்குவது புத்திசாலித்தனம் என்பதை உணர்ந்து “ஓகே சார்! இது எங்க வீட்டுப் பிரச்சனை. இதை நாங்க வீட்டிற்குள்ளேயே முடிக்கப் பார்க்கிறோம். அப்படி முடியலேன்னா உங்க கிட்ட வரோம்” என்றார் போலீஸ் அதிகாரியிடம்.

ஜீப் பானெட்டிலிருந்து குதித்த சிவதாஸ் பிம்லா தேவி அருகே சென்று “எப்படி எல்லோரையும் மிரட்டியோ இல்லை கடத்தியோ காரியத்தை முடிப்பீங்களா?” என்றான் கிண்டலாக.

அதைக் கேட்டு பல்லைக் கடித்தவர் கேஷ்வியின் பெற்றோர் அருகே சென்று “ப்ளீஸ்! நீங்க தானே கம்ப்ளைன்ட் கொடுத்தீங்க. நாம இதை நமக்குள்ளேயே முடிச்சுக்கலாம்” என்றார்.

அவர்களோ சித்தார்த்தை முறைத்துக் கொண்டே முதலில் மறுத்தவர்கள், பிம்லா அருகே சென்று மெல்லிய குரலில் அவர்களிடம் எதுவோ கூற அரை மனதாக ஒத்துக் கொண்டனர்.

அவர்களால் வரவழைக்கப்பட்டிருந்த போலீஸ் அதிகாரியோ அவர்களின் பேச்சைக் கேட்டு கடுப்பாகி விட்டார். தன் வேலைகளை எல்லாம் விட்டு விட்டு வந்து உதவ வந்ததற்கு இப்படி செய்து விட்டீர்களே என்று காய்ச்சி எடுத்து விட்டு சென்று விட்டார்.

சிவதாசோ பிம்லாவின் அருகே சென்று “இங்கே எப்பொழுதும் என் கண்காணிப்பு இருந்து கொண்டே இருக்கும். எதுவும் தவறாக நடந்தால் மொத்தமாக சுருட்டி தூக்கிட்டுப் போயிடுவேன்’ என்று மிரட்டி விட்டு சித்தார்த்தை தன்னுடன் கார் வரை வரும்படி அழைத்துக் கொண்டு சென்றான்.

“தேங்க்ஸ் சார். ஷ்யாம் சொன்னதும் நீங்க உதவிக்கு வந்ததுக்கு”.

அவனை கூர்மையாக பார்த்துக் கொண்டே “நான் யார் சொன்னாலும் கேட்கிறவன் இல்ல சித்தார்த். ஒன்னு ஆதாரம் சரியா இருக்கணும். அடுத்து என் மனசு சொல்லணும். இது ரெண்டு இருந்தா தான் நான் கிட்டேயே போவேன். நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோங்க. அந்த லேடி மேல கவனம் வைங்க. பிம்லா தேவி! அந்தம்மாவும் அவங்க தம்பியும் கிரிமினல். முக்கியமா உன் மனைவியை வீட்டுக்குள்ள கவனமா பார்த்துக்கோ. என்ன உதவின்னாலும் என்னை கேளு நான் செய்றேன்” என்று கூறிவிட்டு கூலர்சை எடுத்து மாட்டிக் கொண்டு ஜீப்பை கிளப்பிக் கொண்டு சென்று விட்டான்.

அவன் சொன்னதை யோசித்துக் கொண்டே வர்ஷூ அருகில் செல்ல, அங்கே பிம்லா தேவி அவளிடம் பேசிக் கொண்டிருந்தார்.

“ஏய்! உன்னை அப்போவே அவனை விட்டு விலகிப் போயிடுன்னு சொல்லிட்டுத் தானே வந்தேன். இன்னமும் ஏன் அவன் பின்னாடியே சுத்திட்டு இருக்கே?’ என்று மிரட்டினார்.

சித்தார்த் அவர் பேசியதை எல்லாம் காதில் வாங்கினாலும் அதை கண்டு கொள்ளாமல் சென்று அவள் தோள்களில் கையைப் போட்டுக் கொண்டவன் “வா மது உள்ளே போகலாம்” என்று முன்னேறினான்.

அவன் வேகத்திற்கு நடக்க முடியாமல் தடுமாற்றத்துடன் நடக்க, அதைக் கண்டு “என்ன மது? என்னாச்சு?” என்று கேட்டு நின்றான்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
“நொண்டி பொண்ணுக்கு இந்த அளவுக்கு நடக்கிறதே பெருசு. நாங்க நல்ல அழகான ஊனமில்லாத பெண்ணா உனக்கு பார்த்து வச்சோம். ஆனா நீ தேடி போய் இப்படியொரு நொண்டி பெண்ணை கூட்டிட்டு வந்திருக்க” என்று விஷத்தை உமிழ்தார்.

அவரின் பேச்சில் அதிர்ந்து போனவன் “என்ன சொல்றீங்க?” என்றான் அதட்டலாக.

வர்ஷூவிற்கோ அவனது முகத்தைப் பார்த்து எரிச்சலாக இருந்தது. எப்படி ஒன்றுமே தெரியாத மாதிரி நடிக்கிறான் என்று கடுப்பாக பார்த்தாள்.

தான்யவோ அதை மனதில் வைக்காமல் “என்ன மாமா எதுவுமே தெரியாத மாதிரி கேட்குறீங்க?’ என்று விட்டாள்.

அவனுக்கு எதுவும் புரியவில்லை “நீங்க எல்லாம் என்ன சொல்றீங்க?”

“நீ பொண்டாட்டின்னு கூட்டிட்டு வந்திருக்கிற இவ ஒரு நொண்டின்னு சொல்றோம்” என்றார் கோபமாக.

அவனுக்கு பேரதிர்ச்சி. என்ன சொல்கிறார்கள் இவர்கள் என்று ஒரு நிமிடம் சமைந்து நின்று விட்டான். அடுத்த நிமிடம் எவரும் எதிர்பார்ர்க்கும் முன் குனிந்து அவளது புடவையை விலக்கி கால்களைப் பார்க்க அங்கிருந்ததோ கட்டை கால். அதைக் கண்டதும் அவனால் தாங்க முடியவில்லை. தன்னை அறியாமல் கண்ணீர் கன்னங்களில் வழிந்தோட அந்த நிமிடம் அவள் எப்படி தவித்திருப்பாள் என்றெண்ணி கலங்கிப் போனான்.

அவனது மனநிலையை புரியாத பிம்லா “அவளை இப்படியே திருப்பி அனுப்பிட்டு கேஷ்வியோட வந்து வாழுகிற வழியைப் பார்” என்று வெந்த புண்ணில் வேலை பாய்ச்சினார்.

அதுவரை கலங்கி நின்றவன் அவர் சொன்ன அடுத்த நிமிடம் அவளை அப்படியே அலேக்காக தூக்கிக் கொண்டு தனது வீட்டினுள் நுழைந்தான். அவன் அப்படி செய்வான் என்று எதிர்பார்க்காத தான்யா உற்சாகமாகி ‘சூப்பர் மாமா” என்று கை தட்டியபடி உள்ளே நுழைந்தாள்.

பிம்லா தேவியோ அதிர்ச்சியுடன் “சித்தார்த்! அவ இந்த வீட்டுக்குள்ள இருக்க கூடாது. அவளை வெளியே அனுப்பு’ என்று கத்தினார்.

அப்போது சக்கர நாற்காலியில் வந்த பாட்டி “அதை சொல்ல நீ யார் பிம்லா? இந்த வீட்டிற்கு சொந்தக்காரன் அவன்” என்றார் கடுமையாக.

பிம்லா அவரை முறைத்துவிட்டு சித்தார்த்திடம் “அவளை அனுப்பிடு சித்தார்த். நீ அனுப்பலேன்னா விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை” என்றார மிரட்டலாக.

அவளை இறக்கி விடாமல் கையில் வைத்துக் கொண்டே திரும்பியவன் “எனக்கு அடங்கி நடந்தா எதுவும் பிரச்சனை இல்லை. மீறி இவளுக்கு எதுவும் ஆபத்தை உண்டாக்க நினைச்சா நீங்களும் உங்க குடும்பமும் எழவே முடியாதபடி முடக்கிப் போடும் சக்தி என்னிடம் இருக்கு”.

“சித்தார்த்!”