அத்தியாயம் – 18
கடந்தகால நிகழ்வுகளின் தாக்கத்தில் அந்த வேதனைகளின் வலி இருவரையும் தாக்கியதில் வெகு நேரம் அப்படியே அமர்ந்திருந்தார்கள்.
காலையில் ஒரு காப்பிக் குடித்ததோடு வேறு ஒன்றும் சாப்பிடாததால் வழக்கம் போல் நிகிலின் வயிறு சப்தமிட ஆரம்பித்தது.
தன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளின் காதருகே குனிந்தவன் “ஸ்ருதி”என்றான் கிசுகிசுப்பாக.
அவனது உதடுகள் அவளது காதில் உரசியதும், அவனது மூச்சுக் காற்றுக் கழுத்தில் சூடாகப்பட்டதும் சற்று குறுகுறுப்புடன் அவன் முகத்தைப் பார்த்தாள்.
அவனோ லேசாக முகத்தைச் சுருக்கி “பசிக்குது ஸ்ருதி” என்றான்.
என்னவோ சொல்லப் போகிறான் என்று ஆர்வமாக எதிர்பார்த்தவளுக்கு, அவன் பசிக்குது என்றதும் சப்பென்று ஆனது.
அவனிடமிருந்து தள்ளி உட்கார்ந்தவள்,அப்போது தான் சுற்றுப்புறத்தை ஆராய்ந்தாள்.இருள் சூழ்ந்திருந்தது.கையிலருந்த கடிகாரத்தைப் பார்த்தாள்.மணி எட்டு என்று காட்டியது. அவ்வளவு நேரமா பேசிக் கொண்டு இருந்திருக்கிறோம் என்றெண்ணி அவசரமாக எழுந்தாள்.
அவனும் எழுந்து சென்று விளக்குகளைப் போட்டு “நீ போய் முகம் கழுவி டிரஸ் பண்ணிட்டு வா ஸ்ருதி,சாப்பிட்டிட்டு வந்திடலாம்”என்றான்.
அவள் கிளம்பியதும் கதவை பூட்டிக் கொண்டு கிளம்பினர்.மெல்லிய வெளிச்சமும்.இருள் சூழ்ந்த அமைதியும் அவர்களின் மனங்களுக்கு இதமளித்தது.
உணவை முடித்துக் கொண்டு அறை வாயிலுக்குத் திரும்பியவர்கள், அங்கே இருந்த படியிலேயே அமர்ந்து கொண்டனர்.
அவனுக்கு இன்றோடு அவளிடம் அனைத்தையும் சொல்லி முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தான்.அவளோ அதுவரை கேட்டவையே மனதை அழுத்திக் கொண்டிருந்தது.
அவனோ எதிரே தெரிந்த பால் நிலவை வெறித்துக் கொண்டிருந்தவன், நீண்ட பெருமூச்சுடன் “அந்த மூணு வருஷங்கள் என் வாழ்க்கையோட அந்திம காலங்கள்-னு தான் சொல்லணும்.”
அவன் மீண்டும் பழைய கதையை ஆரம்பித்ததுமே “வேண்டாம் நிக்கி! விட்டுடுங்க!அதையே பேசி பேசி மனதை புண்ணாக்கிக்க வேண்டாமே.”
அவள் புறம் லேசாகத் திரும்பி பார்த்தவன் “இல்ல ஸ்ருதி!இன்னைக்கே எல்லாத்தையும் சொல்லி முடிச்சிடுறேன்.அதன் பிறகு பேச மாட்டேன்.”
அவனுடைய மனதை புரிந்து கொண்டவள் அமைதி காத்தாள்.
“கேஸ் முடிஞ்சதும், உடனே இங்கிருந்து கிளம்பத் தயாரானேன். எனக்கு யார் முகத்திலேயும் முழிக்கவே பிடிக்கல.”
“ம்ம்..”
“குடும்பத்தில் இருந்தவங்களும் என்னைப் புரிஞ்சிகிட்டு என்னோட முடிவுக்குத் துணை போனாங்க.ஆனா, நான் மனுஷங்களைக் கண்டு ஓடி ஒளிய நினைச்சனே தவிர, என் மனசை பத்தி சுத்தமா மறந்து போயிட்டேன்.வெளியில் உள்ளவங்க என்னைப் பார்க்கிறப்ப மட்டும் தான் கேலி பேசுவாங்க.ஆனா, என் மனசு எனக்குள்ளேயே இருந்துகிட்டு நடந்த நிகழ்வுகளை ஒவ்வொன்னையும் எனக்கு நியாபகப்படுத்தி எனக்குள்ள இருந்த மென்மையான உணர்வுகளைக் கொன்னு போட ஆரம்பிச்சுது.தனிமை தான் என் ரணத்துக்கு மருந்து-னு நினைச்சது தப்பு.என் உறவுகளோட இருந்திருந்தா நாளடைவில் என் மன காயங்கள் ஆறி இருக்கும்.”
பகல் நேரங்களில் என்னை முழுமையா வேலையில் ஈடுபடுத்திக்கும் போது மறந்திருக்கிற சிந்தனைகள், இரவு படுக்கும் போதும் பேயாட்டம் போடும்.அதிலும் என் மனைவி என்கிற உரிமையில் அவளிடம் பேசிய விஷயங்கள், அவள் அதைப் பற்றி அவனிடம் எப்படிப் பேசி சிரித்திருப்பாள் என்று நினைக்கும் போது அந்த நிமிடமே மாடியிலிருந்து குதித்து விட மாட்டோமான்னு தோணும்.
அவனது வேதனையைப் புரிந்து கொண்டவள் அவனது கைகளை எடுத்து தன்னுடைய கைகளுக்குள் வைத்துக் கொண்டாள்.
என்னைப் பற்றி,என் உணர்வுகளைப் பற்றிக் கொஞ்சமும் சிந்திக்காத அந்தப் பெண்ணை நினைக்காதே என்று மனம் அறிவுறுத்தினாலும், அவளால் அடைந்த அவமானத்தை மட்டும் என்னால மறக்க முடியல.
அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் “நான் ஒன்னு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?”
“ம்ம்..கேளு”
“நீங்க ஏன் மெடிக்கல் டெஸ்ட் எடுத்து, உங்க மேல எந்தத் தவறும் இல்லை-னு நிருபிக்கல?”
அவளது கேள்வியைக் கண்டு இகழ்ச்சியாகச் சிரித்தவன் “என் மேல இந்தக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டவுடனே,நீதிபதி என்னை மெடிக்கல் டெஸ்ட் தான் பண்ண சொன்னார்.”
“அப்போ அதில் தெரிஞ்சிருக்குமே, உங்க மேல குற்றமில்லை-னு.”
அவளைத் திரும்பி பார்த்து “எல்லாத்துக்குமே ஒரு விலையிருக்கு ஸ்ருதி. நீயும், நானும் அப்பாவிகள்.ஆனா, அந்த நந்தனாவும், ராஜ்-ம் அப்படிபட்டவங்க இல்லை.தாங்கள் நினைத்ததைச் சாதிக்க எதை வேணும்னாலும் செய்வாங்க.நீதிபதிக்கு வந்த ரிப்போர்ட்டில் என் மேல குறைன்னு ரிசல்ட் வந்திருந்தது.”
அவன் சொன்னதைக் கேட்டு தன் கைகளால் வாயை மூடிக் கொண்டாள். அவளால் இப்படி ஒரு கேவலமான நடத்தையை எதிர்கொள்ளவே முடியவில்லை.
“ஆகாஷும்,நீரஜும் வேற ரிப்போர்ட் வாங்கலாம்-னு குதிச்சாங்க.எனக்கு அவமானமா இருந்தது.ஆண்மை என்பது எது?குழந்தை பெற தகுதி உள்ளவன் தான் ஆம்பிள்ளையா? இல்ல!எவன் தன்னை நம்பி வருபவளை கண் கலங்காம காப்பாத்துறானோ அவன் தான் உண்மையான ஆம்பிள்ளை.அப்படி பார்த்தா நீ அந்தக் குற்றசாட்டை என் மேல வச்சா அது உண்மையான குற்றசாட்டு.ஏன்னா நான் உன்னை அந்த அளவுக்கு அழ வச்சிருக்கேன்.ஆனா, பெண்மைக்கே கேவலத்தை உண்டாக்கிய அவகிட்ட என்னை நிருபிக்கணும்-னு அவசியமில்லையே.அதனால என் மேல அந்தப் பழி இருந்தா இருந்திட்டு போகட்டும்-னு சொல்லி இன்னொரு டெஸ்ட் எடுக்க மறுத்திட்டேன்.”
அவன் அப்படிச் சொன்னதும் கன்னங்களில் கண்ணீர் வழிய அப்படியே அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள்.
“ப்ளீஸ்..வேண்டாம் இதுக்கு மேல எனக்குக் கேட்க தெம்பில்லை.போனது போகட்டும் அதைப் பற்றிப் பேச வேண்டாமே”.
அவனும் அவளது கூற்றில் பேசாமல் அமர்ந்திருந்தான்.சிறிது நேரம் வரை அப்படியே உட்கார்ந்திருந்தார்கள்.
மெல்ல அவள் முகம் பார்த்து “உள்ளே போகலாமா? ரொம்ப அசதியா இருக்கு.”
அவள் சரி என்றதும், இருவரும் எழுந்து உள்ளே சென்றார்கள். ஹாலிற்குள் நுழையும் வரை மற்றதை எண்ணாமல் இருந்தவள்,எங்கே சென்று படுப்பது என்று விழித்துக் கொண்டு நின்றாள்.
அவள் தயங்கி நிற்பதை பார்த்தவன் “மேலே வா ஸ்ருதி!பேசிகிட்டு இருந்ததில் நேரம் போனதே தெரியல”என்றவன் விரைந்து மாடிப்படியில் ஏற ஆரம்பித்தான்.
தயக்கத்துடனே அவன் பின்னே சென்றாள். அவன் ஒரு புறம் கண்களை மூடி படுத்து விட்டான்.சுவரில்லாத பக்கம் படுக்கப் பயமாக இருந்ததால் யோசித்துக் கொண்டே நின்றாள். மெல்ல கண்ணைத் திறந்து பார்த்து “படுக்கலையா”என்றான்.
அவன் கேட்டதும் அவசரமாகப் படுத்துக் கண்களை மூடிக் கொண்டாள். சிறிது நேரம் வரை ஆடாது அசையாது அமைதியாகப் படுத்திருந்தாள்.அவன் புறமிருந்து மெல்லிய குறட்டை ஒலி கேட்கத் தொடங்கியது.மெதுவாக எழுந்தவள் அவன் உறங்குகிறானா என்று பார்த்து விட்டு அங்கிருந்து பலகையில் சென்று அமர்ந்து கொண்டாள்.