அத்தியாயம் - 19

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,659
1,618
113
அத்தியாயம் –19

கணவனின் கையணைப்பில் படுத்திருந்த ரேணுவின் மனம் நித்தியை சுற்றி வந்தது. நேற்று நிச்சயம் உறங்கி இருக்க மாட்டாள். பாட்டிக்கு விஷயம் தெரியுமென்றாலும், நேற்றைய மனநிலைக்கு சற்று முரட்டுத்தனமாகவே நடந்து கொண்டிருப்பாளே எப்படி சமாளித்தார்களோ என்றெண்ணி பயந்தாள்.

மெல்ல எழுந்து நிரஞ்சனின் கைகளை விலக்கி விட்டு ஜன்னலோரம் நின்றவளின் விழிகளில் கண்ணீர். தன்னை காணாது நித்தி பயந்து போயிருப்பாள்...பத்து நாட்கள் தனது பிரிவை தாங்குவாளா? இந்த பிரிவால் அவளது உடல்நிலையில் மாற்றம் ஏதும் வருமோ என பயந்தாள்.

ஜன்னலோரம் சாய்ந்து நின்றபடியே படுத்திருந்த நிரஞ்சனை பார்த்தவளின் கண்களில் அவனது முகத்தில் தெரிந்த நிறைவையும்,இதழ்களில் உறைந்திருந்த சிரிப்பையும் பார்த்தவளின் மனம் அலைபாய தொடங்கியது. ஒருபுறம் நிரஞ்சன், ஒருபுறம் நித்யா...இருவரும் தன்னை தேடுவார்கள். இதில் யாருக்கு இப்போது தான் முக்கியத்துவம் கொடுப்பதென்று புரியாமல் தவித்து போய் நின்றிருந்தாள்.

தெளிந்த வானத்தை சூழ்ந்த கருமேகங்கள் போன்று அவள் மனதில் ஆயிரம் குழப்பங்கள், எப்படி இந்த சூழ்நிலையை சமாளிப்பது என்று யோசித்து நின்றவளின் இடையை சுற்றியது நிரஞ்சனின் கரங்கள். குனிந்து அவளின் தோள்களில் தாடையை வைத்துக் கொண்டு “காலையிலையே என்ன பலமான யோசனை” என்றவனது இதழ்கள் அவளது காதுமடலை தொட்டு குறுகுறுப்பை ஏற்ப்படுத்த, அவன் கைகளை விலக்கி விட்டு தள்ளி நின்றாள்.

அவளது விலகலை கண்டு யோசனையுடன் தோள்களைப் பற்றி தன்புறம் திருப்பியவனின் பார்வையில், கன்னங்களை தாண்டி வழிந்த கண்ணீர் கோடுகள். அதை கண்டு பதறி போனவன் “என்னம்மா? என்ன ஆச்சு?” என்றான்.

அதுவரை தவித்துக் கொண்டிருந்த இதயம் சட்டென்று வெடிக்க, குமுறலுடன் அவனது மார்பில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.

என்ன, ஏதென்று புரியாமல் அவளது அழுகையை கண்டு தடுமாறி நின்றான். தன்னை அறியாமலே அவளது முதுகை வருடிக் கொடுத்து “ஏன் ரேணு பிடிக்கலையா? சாரி-டா” என்றான்.

அவன் சொன்னது காதில் விழுந்ததும் பதட்டத்துடன் கையால் அவனது இதழ்களை மூடியவள் “நித்தி..நி..த்தி..” என்றாள் செருமலுடன்.

“நித்தி? அவளுக்கென்ன?” என்றான் புரியாத தன்மையுடன்.

மேலும் அவன் மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டு “நான் இல்லாம நேத்து நிறைய கஷ்டப்பட்டிருப்பா” என்றாள் அழுகையுடன்.

அதை கேட்டவனின் மனம் சற்று ஆசுவாசமடைய அவளது முகத்தை பற்றி அவளது விழிகளோடு கலந்தவன் “சமாளிச்சுப்பாடா...நம்ம கூடவே இருக்க முடியாதேம்மா? அவளோட வாழ்க்கையையும் பார்க்கணும் இல்லையா? இப்போ நீ கொஞ்சம் மனசை கல்லா வச்சுகிட்டா தான் அவ வாழ்க்கை நல்லா இருக்கும்”.

மறுப்பாக தலையசைத்து வெடித்து அழ ஆரம்பித்தவள் “நீங்க நினைக்கிற மாதிரியில்ல” என்று கூறி இருகைகளாலும் முகத்தை மூடிக் கொண்டு அப்படியே மடங்கி அமர்ந்து கொண்டாள்.

அவளது நடவடிக்கையை கண்டு பயந்து போய், மெல்ல அவளை எழுப்பி நடத்திச் சென்று கட்டிலில் அமர வைத்தான். அடுத்த நிமிடம் அவனை இறுக்கி அனைத்துக் கொண்டு மடை திறந்த வெள்ளம் போன்று, நித்தியின் வாழ்வில் நடந்தவைகளை கூற ஆரம்பித்தாள்.

அவள் சொன்னதை கேட்டுக் கொண்டிருந்தவனின் நெஞ்சில் பாரமேறியது. கண்கள் தானாக கண்ணீரை பொழிந்தது. சத்தியமாக இப்படியொன்றை அவன் எதிர்பார்க்கவில்லை. நித்தியின் மீது மகள் என்கிற உணர்வோடு இருப்பவனுக்கு, மகளுக்கு நடந்த கொடுமையை அறிந்து தாங்க முடியாமல் போனது.

ரேணுவை சமாதானப்படுத்த கூட இயலாமல் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தான். என்ன சொல்வது, எப்படி தேற்றுவது? சமாதானங்களால் சரியாகி விட கூடியதா இது...கடவுளே! நான்கு வருடமாக கூடவே இருந்தும், அவர்களின் பிரச்னையை அறிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறேனே என்று வருந்தினான்.

உலகமே ஸ்தம்பித்து போன மாதிரி, உணர்வுகள் மரத்து போன நிலையில் அமர்ந்திருந்தான். ஆண்மகனாய் அவனால் கதறி அழ முடியவில்லை என்றாலும், வந்த அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் மனைவியை இறுக்கிக் கொண்டு கண்ணீர் விட ஆரம்பித்தான்.

நிரஞ்சனின் உடல் குலுங்குவதை வைத்து அவன் அழுவதை கண்டுகொண்ட ரேணு, தன்னை சமாளித்துக் கொண்டு அவனை தேற்ற ஆரம்பித்தாள்.

மெல்லிய குரலில் “என்னைத் தவிர அவ யாரையும் நம்ப மாட்டா...என் கூட இருக்கிறப்ப மட்டும் தான் பாதுகாப்பா உணர்வா” என்றாள்.

அவளது பேச்சைக் கேட்டு கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு “பாட்டிக்கு எப்படி தெரியும்?” என்றான்.

“அவளுக்கு வேற எதுவும் பிரச்சனை இருக்கா என்னன்னு அவங்களா கேட்டாங்க”.

கரகரப்புடன் கூடிய குரலில் “நீ என்கிட்ட சொல்லி இருக்கலாமே-டா. தனியா உன் மனசுக்குள்ளேயே வச்சுகிட்டு எவ்வளவு போராடி இருப்ப” என்று கூறி இழுத்தணைத்துக் கொண்டான்.

அவனுடைய கேள்விக்கு அவளிடம் பதிலில்லை என்றாலும், அவனால் அவர்களது நிலையை உணர முடிந்தது. சற்று நிதானத்திற்கு வந்தவன் “விஸ்வாவுக்கு தெரியுமா இதெல்லாம்” என்றான் யோசனையுடன்.

கலங்கிய கண்களுடனே “ம்ம்..பாட்டி எல்லாத்தையும் சொல்லி தான் சம்மதம் கேட்டேன்னு சொன்னாங்க” என்றாள்.

அதை கேட்டதும் மனதில் நிம்மதி பரவ, அவளை தன்னிடமிருந்து பிரித்தவன் நேரே சென்று போனை எடுத்து விஸ்வாவிற்கு அழைத்தான்.

“சொல்லுங்க அண்ணா...எப்படி இருக்கு பெங்களுர்?” என்றான் தனது சோர்வை மறைத்துக் கொண்ட குரலில்.

“நித்தி எப்படி இருக்கா? ரேணு இல்லேன்னதும் என்ன பண்ணினா?”

நிரஞ்சனின் குரலில் தெரிந்த கரகரப்பு நித்தியை பற்றிய உண்மை அவனுக்கு தெரிந்துவிட்டது என்பதை புரிந்து கொண்டவன் “அண்ணி சொல்லிட்டாங்களா?”.

“ம்ம்..அவ எப்படி இருக்கா-டா?”

முதல்நாள் நடந்தவைகளை முழுவதையும் கூறினான். அதை கேட்டுக்கொண்ட நிரஞ்சன் “நாங்க இன்னைக்கு கிளம்பி வந்திடுறோம் விஸ்வா.” என்றான்.

அதை கேட்ட விஸ்வா சற்று அதிருப்தியுடன் “யாருக்கும் தெரிய வேண்டாம்னு நினைச்சேன். நீங்க எதுக்கு இப்போ கிளம்பி வரீங்க? பத்து நாள் கழிச்சே வந்தா போதும்” என்றான்.

தம்பியின் மனதை உணர்ந்து கொண்டவன், தனக்கு மனைவியாக வரப் போகிறவளை பற்றி யாரும் தவறாக யோசிக்கவோ, பேசிவிடவோ கூடாது என்கிற எண்ணத்தில் இவ்வாறு கூறுகிறான் என்பதை தெரிந்து கொண்டான்.

“அவ எனக்கு மகள் விஸ்வா...எனக்கு கல்யாணம் ஆன நாளில் இருந்தே அவளை தங்கையா கூட நினைக்காம மகளா தான் நினைச்சிருக்கேன். மகளுக்கு ஒரு பிரச்சனை இருக்கிறப்ப அப்பா கூட இருக்கணும்” என்றான் அழுத்தமாக.

அண்ணனின் பாசத்தில் உருகியவன் சூழ்நிலையை இலகுவாக்க “அண்ணா! இப்படி என் தலையில் மண்ணை போடுறியே...உனக்கு மகள்-ன்னா நான் அவளுக்கு சித்தப்பா இல்லையா?” என்றான் சிரிப்புடன்.

அதை கேட்டு சிரித்தாலும் நித்தியின் நிலையேமனதில் சுழன்று கொண்டிருந்தது.

“விசு! நீ இதை உங்க அம்மா கிட்ட பேசு! அவங்களுக்கு கண்டிப்பா இந்த விஷயம் தெரியனும். அவங்களோட ஆதரவு இல்லாம நித்தி அங்கே நிம்மதியா இருக்க முடியாது.”

“இல்லன்னா...இந்த விஷயம் தெரிஞ்சா அம்மா நிச்சயமா ஒத்துக்க மாட்டாங்க.”

“விச்சு! ஒத்துக்க வைக்கிற வகையில் நீ பேசணும். அவளுக்கு உன்னோட ஆதரவு மட்டுமில்ல...முழு குடும்பத்தோட ஆதரவும் வேணும்” என்றான் உறுதியாக.

“அது இருக்கட்டும் அண்ணா! அவளை எப்படி சம்மதிக்க வைக்கிறது?”.

ரேணுவை பார்த்துக் கொண்டே “அது உன் அண்ணி கையில் தான் இருக்கு. நித்தியை பொறுத்தவரை இந்த உலகத்தில் ஒரே நம்பிக்கையான நபர் ரேணு தான். அவளால மட்டும் தான் முடியும்” என்றான்.

அதை கேட்ட விஸ்வா “அண்ணியை பார்த்து செய்ய சொல்லுங்கண்ணா...என் வாழ்க்கையில் விளையாடிட போறாங்க” என்றான் சிரிப்புடன்.

அதுவரை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த ரேணு நிரஞ்சன் கையிலருந்த போனை வாங்கி “உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல தம்பி. உங்களால மட்டும் தான் நித்தி வாழ்க்கையில் வசந்தத்தை கொண்டு வர முடியும்” என்றாள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில்.

அவனோ பதறி “அண்ணி! தயவு செஞ்சு இன்னொரு முறை இப்படி சொல்லாதீங்க...நான் நித்யாவை மனசார விரும்பி கல்யாணம் பண்ணிக்கிறேன். எந்த காரணம் கொண்டும் அவ மேல பரிதாபப்பட்டு வாழ்க்கை கொடுக்கிற மாதிரி பேச வேண்டாம்” என்றான்.

விஸ்வாவின் பேச்சைக் கேட்டு சற்று தன்னிலைக்கு திரும்பிய நிரஞ்சன் “நீ சொல்றது சரி தான் விச்சு...யாரும் அவ கிட்ட விஷயம் தெரிஞ்ச மாதிரியே காட்டிக்க வேண்டாம். அது இன்னும் அவளோட நிலையை பலவீனமா ஆக்கும்” என்றான்.

அதன்பின் சிலவற்றை அவர்கள் பேசி முடிவெடுத்துக் கொள்ள, நிரஞ்சனும், ரேணுவும் கிளம்ப தயாராகினர்.காலையில் கண் விழித்த நித்யாவோ தனது கைகள் சுமதியின் கைகளை இறுக்கிப் பிடித்திருப்பதை கண்டு அதிர்ந்து போய் எதுவும் பேசாது குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

சுமதியை அழைத்துக் கொண்டு சமையலறைக்குள் சென்ற சிவகாமி “அவ கிட்ட நேத்து நடந்ததை பத்தி எதுவும் பேசாத சுமதி...எப்பவும் போல இரு” என்றார்.

“சரிம்மா” என்றவர் சமையலை பார்க்க ஆரம்பித்தார்.
 
  • Love
Reactions: Chitra Balaji

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,659
1,618
113
குளித்து முடித்து வந்தவள் யோசனையுடனே தனது வேலைகளை செய்து கொண்டிருந்தாள். அக்கா எப்ப வருவாள் என்று கேட்கலாமா? பாட்டியிடம் கேட்டால் நல்லவிதமாக பதில் சொல்ல மாட்டாரே என்றும் எண்ணினாள்.

பல்வேறு எண்ணங்களுடன் ஆபிசிற்கு கிளம்பி அறையை விட்டு வெளியே வந்தவளை தடுத்து நிறுத்தியது சிவகாமியின் குரல்.

“நித்யா வந்து சாப்பிட்டிட்டு போ” என்றார்.

முந்தைய நாளின் நிகழ்வுகள் மனதில் படமாக வலம் வர, காலையில் சுமதியின் கைகளை பற்றி இருந்ததும் நினைவுக்கு வர, முகம் கன்றி போய் வேக நடையுடன் வாயிலுக்கு செல்லவும், கேப் வரவும் ஏறி அமர்ந்து கொண்டாள்.

அவள் சாப்பிடாமல் செல்வதை கண்ட சுமதி அவளை தடுத்து நிறுத்த வாசலுக்கு செல்ல முயன்றார். மகளின் கைகளை பிடித்து நிறுத்திய சிவகாமி “விடு சுமதி! நம்மோட சின்ன அசைவு கூட அவ மனசில் பெரிய காயத்தை உண்டாக்கும்...அவ இஷ்டத்துக்கு விடு” என்றார்.

அன்னையை திரும்பி பார்த்து “இல்லம்மா...ஏற்கனவே உடம்பு ரொம்ப பலஹீனமா இருக்கா...சாப்பிடாம போனா மயக்கம் அடிச்சு விழுந்துட்டா என்ன பண்றது?” என்றார் பரிதவிப்புடன்.

சுமதியை நோக்கி புன்னகைத்து “சுயம்புவா எழுந்து நிற்கிறவளுக்கு தன்னுடைய உடம்பை பார்த்துக்க தெரியும்...நீ வந்து நிரஞ்சனுக்கு போனை போடு...எப்போ கிளம்புறான்னு கேளு?” என்றார்.

“நிரஞ்சனா? அவன் பத்து நாள் கழிச்சு தானேம்மா வருவான்?”

சாய்வு நாற்காலியில் சாய்ந்து கண்ணை மூடியவர் “அனேகமா ரேணு எல்லாத்தையும் நிரஞ்சன் கிட்ட சொல்லியிருப்பா...விஷயம் தெரிஞ்சவன் நிச்சயமா அங்கேயே உட்கார்ந்திருக்க மாட்டான்” என்றார்.

சிவகாமி சொன்னதை கேட்டு அதிசயித்து போன சுமதி “எப்படிம்மா..உட்கார்ந்த இடத்திலேயே அடுத்தவங்க என்ன யோசிப்பங்கன்னு கண்டு பிடிக்கிறீங்க?” என்றார்.

“ம்ம்...சீக்கிரம் போனை போடு சுமதி.”

அன்னை சொல்லியபடி நிரஞ்சனை அழைக்க “சொல்லுங்கம்மா” என்றான்.

“உன் பாட்டி நீ எப்போ கிளம்புறேன்னு கேட்டாங்க நீரு.”

பாட்டியின் கணிப்பை நினைத்து அதிசயித்துக் கொண்டே “மதியம் ரெண்டு மணிக்குள்ள வந்துடுவேன்-மா” என்றான்.

“சரிப்பா..வண்டியை பார்த்து ஓட்டிட்டு வா” என்று கூறி போனை அழைத்தார்.

சுமதியின் மனம் குழப்பத்தில் ஆழ்ந்தது. விடியலை நோக்கி சென்றவன் ஒரே நாளில் திரும்பி வருவதை எண்ணி சோர்ந்து போனார். மகனின் வாழ்வு மலராமல் போய் விடுமோ என்கிற பயம் ஆட்கொள்ள சோர்வுடன் சோபாவில் அமர்ந்து விட்டார். அடுத்து என்ன என்கிற எண்ணமே பயத்தை ஏற்படுத்தியது.

மகளையே ஆராய்ந்தபடி படுத்திருந்த சிவகாமி “சுமதி! மனசை போட்டு குழப்பிக்காதே...என்னப் பிரச்சனையின்னாலும் என் பேரன்கள் ரெண்டு பேரும் பார்த்துக்குவாங்க. கூடிய சீக்கிரம் நாம கல்யாண வேலை பார்க்க தயாராகணும்” என்றார்.

அப்பொழுதும் முகத்தில் குழப்பத்தின் சாயல் போகாமல் “ரஞ்சிதம் எப்படி நித்யாவை மருமகளா ஏத்துப்பா?” என்றார்.

மெல்ல எழுந்தவர் மகளின் கையை தட்டிக் கொடுத்து “எழுந்து போய் வேலையை பார்...அதெல்லாம் தானா நடக்கும்” என்று கூறிவிட்டு அறைக்குள் சென்றார்.

ஆபிசிற்கு சென்று இறங்கிய நித்யா யோசனையுடனே தனது இருக்கைக்கு சென்று கொண்டிருந்தாள். அப்போது எதிரே நண்பனுடன் பேசிக் கொண்டு வந்த பிரவீன் நித்யாவை கவனிக்காமல் இடித்து விட, அடுத்த நிமிடம் அவனை அறைந்திருந்தாள்.

காலை நேர பரபரப்பில் இருந்த அலுவலகம் நடந்து விட்ட சம்பவத்தில் அதிர்ந்து போனது. நடந்த நிகழ்வை பார்த்திருந்தவர்கள் பிரவீன் மேல் தப்பில்லை என்பதை அறிந்து, நித்யாவின் செயலை கண்டு முகம் சுளித்தனர்.

பிரவீனோ அவமானத்தில் முகம் கருக்க “ஏய்! என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசில? கவனிக்காம தானே இடிச்சேன்...அதுக்கு என்னவோ சீன் போடுற” என்று எகிறினான்.

மன உளைச்சலில் உழன்று கொண்டிருந்தவளோ தன் மீது தான் தவறென்பதை ஒத்துக் கொள்ளாமல் தன் பங்கிற்கு எகிற ஆரம்பித்தாள். மாற்றி-மாற்றி இருவரும் பேச, அங்கே எல்லோரும் கூடி விட்டனர். அனைவருமே ப்ரவீனுக்கு ஆதரவாக பேச,இவள் எதையும் பற்றியும் கவலைப்படாமல் பிரவீனை கண்டபடி திட்டினாள்.

அந்நேரம் அலுவலகத்துக்கு வந்திறங்கிய ரம்யாவிற்கு அங்கிருந்த சூழ்நிலை அதிர்ச்சியை கொடுக்க, அனைவரையும் ஆங்காரத்துடன் எதிர்த்துக் கொண்டிருப்பவளின் கைகளை பற்றி தரதரவென்று கேண்டீனிற்கு இழுத்துச் சென்றாள்.

“என்ன பண்ணிட்டு இருக்க நித்தி...அப்படியே இடிச்சிருந்தாலும் அவன் தான் சாரி கேட்டுடானே..அதோட விட வேண்டியது தானே” என்று அதட்டினாள்.

தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவளோ “இன்னைக்கு இடிப்பான்..நாளைக்கு கையை பிடிச்சு இழுப்பான்..அப்புறம்...” என்று அடுத்த வார்த்தை கூறியவளை கண்டு திகைத்து போய் பார்த்தாள் ரம்யா.

அவளது தோளை பற்றி உலுக்கி “ஏய்! என்ன பேசுற? ஒரு சின்ன விஷயத்தை ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிற” என்றாள் பயத்துடன் கூடிய குரலில்.

அவளது கேள்விக்கு பதில் கூறாமல் எழுந்து சென்று பிரட் ஆம்லேட்டும், காப்பியும் வாங்கி வந்து சாப்பிட்ட ஆரம்பித்தவள் ரம்யா என்று ஒருத்தி எதிரே அமர்ந்திருப்பதை அறியாதவள் போல் நடந்து கொண்டாள்.

சாப்பிட்டு முடித்ததும் எழுந்தவள் ரம்யாவை கண்டு கொள்ளாது தன் இருக்கைக்கு சென்றாள்.

அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த ரம்யா அயர்ந்து போய் அமர்ந்திருந்தாள். நித்யாவின் இந்த கோபம், பேச்சு எல்லாம் அவளுக்கு புதிது. வீட்டில் எதுவும் பிரச்சனை இருக்குமோ என்றெண்ணி விஸ்வாவிற்கு அழைத்தாள்.

“பாஸ்..நான் ரம்யா”.

“சொல்லுங்க ரம்யா...என் சண்டி ராணி ஆபிசுக்கு வந்தாச்சா?” என்றான் கேலியாக.

அவளோ அவனது கேலியை ரசிக்காமல் “உங்க சண்டி ராணியால ஆபிசே போர்களமா இருக்கு” என்றாள்.

“என்ன சொல்றீங்க?”

அவள் நடந்தவைகளை கூறி “வீட்டில் எதுவும் பிரச்சனையா பாஸ்...அவ என்னவோ ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கிற மாதிரி தெரியுது” என்றாள்.

அவள் சொன்னவைகளை கேட்டவன் நீண்ட பெருமூச்சுடன் “ஆமாங்க! ஒரு சின்ன பிரச்சனை ஓடிட்டு இருக்கு...சீக்கிரம் சரியாகிடும்..அதுவரை அவளை கொஞ்சம் ஜாக்கிரதையா பார்த்துகோங்க” என்றான் தவிப்புடன்.

சற்று இயல்புக்கு திரும்பி இருந்த ரம்யா “சாரி பாஸ்! நான் ஒருத்தருக்கு வாக்கு கொடுத்திருக்கேன். நித்தி கூட பேச மாட்டேன்னு” என்றாள் கேலியாக.

அதை கேட்டு சிரித்து “இப்பவும் அதே தான் சொல்றேன்...அவ கிட்ட பேச வேண்டாம் ஆனா பார்த்துகோங்க” என்றான்.

“அவ என் பிரெண்ட் பாஸ்...நான் பார்த்துகிறேன்” என்று கூறி போனை வைத்தாள்.

தனது இருக்கையில் சென்று அமர்ந்தாலும், நித்யாவால் இயல்பாக இருக்க முடியவில்லை. வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தலைவலி வேறு படுத்த, லீவ் போட்டுவிட்டு சென்று விடலாம் என்று தீர்மானித்தாள்.

அதன்படி கிளம்பியவளுக்கு வீடு செல்ல மனமில்லை. அக்கா இல்லாத இடத்தில் போய் என்ன செய்வது என்கிற யோசனையுடன் வீட்டிற்கு அருகே இருந்த பூங்காவில் சென்றமர்ந்தாள்.

அங்கே சுற்றிக் கொண்டிருந்த ஆட்களை பார்வையிட்ட வண்ணம் அமர்ந்திருந்தாள். ஒரு சில பள்ளி சிறுமிகள் அந்த வயதிற்குரிய பருவ கோளாறுடன், பையன்களுடன் பூங்காவில் சுற்றிக் கொண்டிருந்தனர். நிம்மதிக்காக அங்கு வந்தவளுக்கு அதை கண்டதும் மேலும் தலைவலி எகிறி அடிக்க, இங்கே இருந்தால் நேரே சென்று அந்த பையன்களை அடித்து வைக்க வாய்ப்பிருக்கிறது என்பதை உணர்ந்தவள் வேகமாக எழுந்து வெளியே சென்றாள்.

மிதமிஞ்சிய தலைவலியுடன் வீட்டை அடைந்தாள். அங்கே ஹாலில் காலை நீட்டிப் போட்டு அமர்ந்து கொண்டு கீரையை ஆய்ந்து கொண்டிருந்தார் சிவகாமி. அவள் வந்ததை பார்த்து மெல்ல தலையசைத்துக் கொண்டார்.

அவர் எதுவும் கேட்காததே நிம்மதி என நினைத்து தனது அறைக்குள் சென்று கட்டிலில் விழுந்தாள்.

அவளை அறியாமல் கண்கள் தானாக பொங்கி வழிய ஆரம்பித்தது. மனம் பின்னோக்கி பயணப்பட ஆரம்பித்தது. தனது வாழ்க்கையில் நடந்து விட்ட நிகழ்வுகளை அசை போட்ட நெஞ்சம் சுவாசிக்க இயலாமல் தவித்தது.
 
  • Love
Reactions: Chitra Balaji

Chitra Balaji

Active member
Feb 5, 2020
96
46
28
அப்படி என்ன நடந்தது ava life la.... தெரியாமல் தானே idichaan athuku ஏன் avvallavu சண்டை..... நிரஞ்சன் nuku எல்லா விஷயம் sollitaa ரேணு...