Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம்- 19 | SudhaRaviNovels

அத்தியாயம்- 19

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,826
113
அத்தியாயம் – 19

வேம்பநாட்டுக் காயலில் அந்தப் படகு வீடு லேசாக ஆடியபடி நின்றிருந்தது.இரு தளங்களைக் கொண்ட படகு வீட்டில் ஒவ்வொருவராக ஏறினர்.ஸ்ருதி ஏறும் போது சிரமப்பட, மற்றவர்களைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாது ஒரு கையால் அவள் இடுப்பை வளைத்து தூக்கிக் கொண்டு தானும் ஏறினான்.

காயத்ரி அவனது செயலைக் கண்டு நிறைந்த மனதுடன் நின்றார். ஆர்த்தியும், அகல்யாவும் தங்களது கணவர்களின் புறம் திரும்பி கண்ணைக் காண்பித்துக் கேலியாகச் சிரித்தனர்.அண்ணன்கள் இருவரும் தம்பியின் செயலைக் கண்டு வெட்கப் புன்னகையுடன் திரும்பிக் கொண்டனர்.

ஸ்ருதிகோ அவன் இப்படிச் செய்வான் என்று எதிர்பார்க்காததால் வெட்கத்தில் முகம் சிவந்து, ஒருவரையும் நிமிர்ந்து பார்க்காது ஓரமாகச் சென்று நின்று கொண்டாள்.

அங்கு நடந்தவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த மதி, திரும்பி சரண்யாவை பார்த்தான். அவளோ ஆர்த்தியுடன் வளவளத்துக் கொண்டிருந்தாள்.பெருமூச்சுடன் ‘எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும்! எனக்கு வாச்சது சரியில்லை!இதுல அடுத்தவங்களைக் குறை சொல்லி என்ன பண்றது’என்று மனதிற்குள்ளேயே புலம்பிக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்துக்கு எல்லோரும் படகு வீட்டை சுற்றி வந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

“எவ்வளோ அழகா பண்ணி இருக்காங்க?இதுக்குள்ளேயே படுக்கையறை,வாஷ் ரூம் எல்லாமே வச்சிருக்காங்களே”என்று அதிசயபட்டுக் கொண்டிருந்தார் காயத்ரி.

எல்லா அறைகளையும் பார்த்துவிட்டு வந்த ஆகாஷ் நிகிலிடம் “நீயும், மதியும் மேலே இருக்கிற அறைகளை எடுத்துக்கோங்க.கீழே இருக்கிற மூணு அறையை நாங்க எடுத்துக்கிறோம்”

அவன் சொன்னதைக் கேட்டதும் நிகில் விரைவாக மாடிக்கு சென்று ஒரு அறைக்குள் நுழைந்தான்.சிறிது நேரத்திற்குப் பிறகு “ஸ்ருதி! என் பெட்டியை கொஞ்சம் எடுத்திட்டு வாயேன்” என்றழைத்தான்.

அவள் பெட்டியை எடுத்துக் கொண்டு மேலே செல்ல, ஆர்த்தி நீரஜிடம் திரும்பி “செம வேகம் தான் என் மச்சினர்”என்று கிண்டலாகச் சிரித்தாள்.

அவளைப் பார்த்து முறைத்து “ஏய்! வெளில வேடிக்கை பாரு! சும்மா அவனை வம்பு வளர்த்துக்கிட்டு”என்று அரட்டி விட்டு சென்றாலும், ஆகாஷுடன் சேர்ந்து மெலிதாகச் சிரித்துக் கொண்டே சென்றான்.

மேலே சென்ற ஸ்ருதி அவன் எந்த அறையிலிருக்கிறான் என்று தெரியாமல் ஒரு அறை வாயிலில் தயங்கியபடி நின்றாள்.சடாரென்று கதவு திறக்கப்பட, அவள் கையைப் பிடித்து உள்ளே இழுத்துக் கொண்டு கதவு சாத்தப்பட்டது. என்ன நடந்தது என்று உணரும் முன்பே அவனது பிடியிலிருந்தாள்.

அதிர்ச்சியில் உறைந்து நின்றவள், அவனது பிடியின் இறுக்கத்தை உணர்ந்து அவனிடமிருந்து விலக முயற்சித்து முடியாமல் “விடுங்க! என்ன பண்றீங்க?”.

அவளை மேலும் தன்னுடன் இறுக்கிக் கொண்டவன் “இது கூடத் தெரியலையா மக்கு பொண்டாட்டி”என்றவன் அவள் இதழ்களை நோக்கி குனிந்தான்.

அவனது நெருக்கத்தைக் கண்டு அஞ்சி, பிரியாத உதடுகளைக் கஷ்டப்பட்டுப் பிரித்து “நீங்க ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துகுறீங்க. நான் இன்னும் உங்களை மன்னிக்கவேயில்லை.”

“அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?” என்றவன் அவள் இதழோடு இதழ் பதித்தான்.

அதுநாள் வரை இரு மனங்களிலிருந்த சஞ்சலங்கள் நீங்கி, இருவரும் ஒருமனதாக அந்த நெருக்கத்தை அனுபவித்தனர். நீண்டு நெடு நேரம் தொடர்ந்த இதழ் முத்தம் இருவரின் மூச்சுகாற்றை மட்டுமின்றி, மனதையும் நெருங்க செய்தது.

தன்னவனின் நெஞ்சில் சாய்ந்த ஸ்ருதியின் நெஞ்சம் சொல்ல முடியாத மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது.அவளது நிலையை உணர்ந்து கொண்ட நிகிலும், அதுநாள் வரை அனைத்தையும் கண்டு ஓடி ஒளிந்து கொண்டிருந்தவனை ஸ்ருதியின் அன்பு கட்டிப் போட்டிருப்பதை எண்ணி சந்தோஷத்தில் அவள் தலையை வருடிக் கொடுத்தான்.

நிகில் மேலே சென்று ஸ்ருதியை வரவழைத்தது போல் தானும் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்துடன் மதி மாடிக்குச் சென்றான்.

மெல்ல எட்டிப் பார்த்து “சரண் கொஞ்சம் என் பெட்டியை மேலே எடுத்திட்டு வா?” என்று கூப்பிட்டான்.

காயத்ரியுடனும், அகல்யாவுடனும் பேசிக் கொண்டிருந்த சரண்யா அவனது அழைப்பை கேட்டு “இவங்களுக்குச் சரியான நியாபக மறதி” என்றவள் “நாம தான் பெட்டியே கொண்டு வரலியே.உங்களுக்கு மறந்து போச்சா? என்றாள்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த காயத்ரிக்குச் சிரிப்பு வர, அடக்கிக் கொண்டு “அவன் உன்கிட்ட ஏதோ பேசணும்னு கூப்பிடுறான்-மா, போய் என்ன-னு தான் கேட்டுட்டு வாயேன்” என்றார்.

மறுப்பாகத் தலையசைத்தவள் “வீட்டுல தான் அவர் போடுற மொக்கையைக் கேட்க வேண்டியிருக்கு, இங்கேயும் வந்து அதைக் கேட்கணுமா? போங்க ஆன்டி இவரோட செம போர்”.

அவள் சொன்னதைக் கேட்டுச் சிரிப்பை அடக்க முடியாமல் எழுந்த அகல்யா, தன்னறைக்குப் போவது போல் சென்று, சிரிக்க ஆரம்பித்தாள்.

“என்ன அகல்!அபி தூங்கிட்டிருக்கான்னு தெரியுமில்ல!எதுக்கு இப்படிச் சிரிக்கிற?” என்று ஆகாஷ் கடிந்து கொண்டான்.

சிரிப்பை நிறுத்தி விட்டு “இந்த மதியை நினைச்சாலே பாவமா இருக்குங்க”என்று வெளியில் நடந்ததைக் கூறினாள்.

அதைக் கேட்ட ஆகாஷும் சிரித்து விட “வந்த அன்னையிலிருந்து இப்படித்தான் பண்ணுது அந்தப் பொண்ணு. பாவம் தான்.”

“சரி விடுங்க! ஆனா, ஒன்னு நாம இந்த டூர் வந்தது நடந்திடுச்சு போலருக்கு” என்றாள் அகல்யா.

அதைக் கேட்டு சந்தோஷத்துடன் சிரித்தவன் “தேங்க்ஸ் அகல்! தம்பி முகத்துல ஆயிரம் வாட் வெளிச்சம் தெரியுதே.இனி, அவன் வாழ்க்கை நல்லாயிடும்.அந்த மூதேவியைப் பிடிச்சு நல்லா நாக்கை பிடுங்கிற மாதிரி நாலு வார்த்தை கேட்கணும்.”

அவனது சந்தோஷத்தையும்,கோபத்தையும் கண்டவள், அவன் கைகளில் தட்டிக் கொடுத்து “இவங்க நல்லா வாழப் போறதே அவங்களுக்குக் கிடைக்கிற அடிதாங்க.அதுமட்டுமில்ல கடவுள் அவங்களுக்குத் தண்டனை வழங்காம விடாது” என்றாள் ஆதரவாக.



கண்ணுக்கெட்டிய வரை நீர் மட்டுமே தெரிந்த காயலில் மெதுவாகப் பயணித்துக் கொண்டிருந்த படகு வீட்டில், மதிய உணவிற்காக அனைவரும் கூடியிருந்தனர்.

படகு நீண்ட தூர பயணத்திற்குப் பின்னர் ஒரு புறம் வயல்வெளியாக இருந்த இடத்தின் அருகில் சென்று நங்கூரமிட்டு நின்றது. வயலில் ஆட்கள் வேலை செய்து கொண்டிருக்க, படகில் அமர்ந்தபடி நீரின் ஓட்டத்தையும், ,ஆட்கள் வேலை செய்வதையும் வேடிக்கை பார்க்க ரம்யமாக இருந்தது.

படகு வீட்டிலிருந்த சமையல்காரர் கேரள வகை உணவுகளைச் சமைத்து அனைவருக்கும் பரிமாறினார்.

“இது நேந்திரங்காய் தானே? அதைப் போட்டு மோர் குழம்பா?ம்ம்..செமையா இருக்கு” என்றான் நீரஜ்.

“ம்ம்..ஆமாம்” என்றான் ஆகாஷ்.
 
  • Like
Reactions: Chitrasaraswathi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,826
113
நிகிலோ குனிந்த தலை நிமிராது ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.ஸ்ருதி அவர்கள் மூவரையும் அதிசயமாகப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

அதைப் பார்த்த ஆர்த்தி “என்ன பார்க்கிற ஸ்ருதி?எல்லாம் சரியான சாப்பாட்டு ராமன்கள்.நம்ம அத்தை எல்லாத்துக்கும் ஏழு ஊருக்கு நாக்கையும், மூக்கையும் வளர்த்து வச்சிருக்காங்க.சாப்பாட்டை முன்னாடி வச்சிட்டா வேற எதுவும் கண்ணுல தென்படாது” என்றாள் கிண்டலாக.

அதைக் கேட்ட ஸ்ருதிக்குச் சிரிப்பில் புரைக்கேறியது.

உணவை முடித்துக் கொண்டு மீண்டும் படகு நகர ஆரம்பித்தது. உண்ட களைப்பில் அனைவரும் அறையில் சென்று அடைய ஆரம்பித்தனர்.

எல்லோரும் அவரவர் அறைக்குச் செல்ல, சரண்யாவிற்குப் போவதற்கு மனமில்லாமல் படகின் முன்னே இருந்த திண்டிலேயே அமர்ந்திருந்தாள். அதைப் பார்த்த காயத்ரி “சரண்யா! நீயும் போம்மா. யாருமில்லாம இங்கே உட்காராதே”என்றார்.

அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த மதியின் மனமோ குத்தாட்டம் போட்டது.’இப்போ என்ன செய்வ..இப்போ என்ன செய்வ’ என்று குதித்துக் கொண்டிருந்தான்.

வேண்டா வெறுப்பாக எழுந்தவள், மதியை பார்த்து “நான் போய்க் கொஞ்ச நேரம் தூங்க போறேன். நீங்க வராதீங்க.அப்புறம் குறட்டை விட்டு என் தூக்கத்தைக் கலைச்சிடுவீங்க” என்றாள்.

அவள் சொன்னதும் பதட்டத்துடன் “இல்ல சரண்! நான் தூங்க மாட்டேன்.சும்மா உட்கார்ந்திருக்கேன்.வா! நீ நிம்மதியா தூங்கு”.

அவனை மேலும் கீழும் பார்த்தவள் “சும்மா அங்கே ஏன் உட்காருறீங்க.இங்க உட்கார்ந்து வேடிக்கை பாருங்க”என்றவள் விரைந்து மேலே சென்று அவன் வரும் முன் அறையைச் சாத்தி தாழிட்டிடுக் கொண்டாள்.

‘நிகிலுக்கு விவாகரத்து ஆகுதோ இல்லையோ கண்டிப்பா எனக்கு ஆகிடும்’என்று புலம்பிக் கொண்டே திண்டில் அமர்ந்து கொண்டான்.



நிகிலின் அறையில் ஸ்ருதியை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவன் “ஆர்ஜே நிகில் எப்படிக் காதலில் விழுந்தான்-னு தெரியனுமா ஸ்ருதி?”

அவசரமாக எழுந்தவள் “ஆமாங்க! சொல்லுங்க?எப்படி இந்த மாதிரி ஒரு மாற்றம்?”

அவள் கைகளை எடுத்து தன் மார்பில் வைத்துக் கொண்டு “உனக்கு விபத்து நடந்த அன்னைக்கு வந்த முதல் மாற்றம் தான் காரணம் ஸ்ருதி.உன்னை கோவிலில் வைத்து பேசினேன்னே, அந்த வார்த்தைகளை நினைச்சு என்னை நானே கேவலமா திட்டியிருக்கேன். நல்ல குடும்பத்தில் பிறந்த பொண்ணுங்களே தப்பு பண்ணும் போது,உன்னை மாதிரி பிறப்பே தப்பா இருக்கிற பொண்ணுங்க எப்படி ஒழுக்கமா இருந்திருக்கும்-னு, நான் கேட்ட அந்த நிமிஷம் உன் முகத்தில் வந்து போன உணர்வுகள் என்னைப் பலநாள் உறங்க விடாமல் செஞ்சிருக்கு.”

அவள் முகத்தைப் பார்க்க தயங்கி, அவளது கைகளை எடுத்து தன் கண்களில் வைத்துக் கொண்டவன் “இதை உன் காலா நினைச்சுக்கிறேன்.நான் பேசிய வார்த்தைகளை யாராலையும் மன்னிக்க முடியாது.ஆனா, இனி வரப் போகிற காலங்களில் எந்தக் காரணத்தைக் கொண்டும் உன்னைக் காயப்படுத்த மாட்டேன் ஸ்ருதி. என்னை மன்னிச்சிடு.”

கன்னங்களில் கண்ணீர் வழிய அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவள், மெல்லிய விசும்பலுடன் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

அதோட உன்னை ரத்த வெள்ளத்தில் பார்த்த அந்த நிமிடத்திலிருந்து, என் அவமானங்கள் மறைஞ்சு போச்சு, நந்தனா என்கிற ஒருத்தி என் வாழ்வில் இருந்தாள் என்று மறந்து போனது.எப்படியாவது நீ உயிர் பிழைக்கணும்-னு கடவுள் கிட்ட வேண்ட ஆரம்பித்தேன்.நானொண்ணும் பிறப்பிலேயே கெட்டவன் இல்லையே! என்னை மிருகமா மாத்தினது அவள் தானே.ஒரு பெண்ணால் மிருகமான நான்,இன்னொரு பெண்ணால் மறுபடியும் மனிதனாக மாறியிருக்கேன்.

உன்னை ஆஸ்பத்திரியில் வைத்து என்னால் பார்க்கவே முடியல.என் கூட இருந்த பொழுதுகளில், உன்னை அவ்வளவா ஆராய்ந்ததில்லை என்றாலும்,உன்னுடைய நடமாட்டம் அவ்வப்போது எனக்கு உன் இருப்பை உணர்த்திக் கொண்டே இருந்தது.என்னை அறியாமலே நீ என் மனதிற்குள் நுழைந்திருக்கிறாய்.அதனால் நீ காலொடிந்து படுத்திருப்பதைக் கண் கொண்டு பார்க்க முடியாமல் தவித்தேன் என்றவன் அவளது தழும்புகளை வருடிக் கொடுத்தான்.

அம்மா என்னைப் பார்த்து கேட்ட கேள்வியில், என்னை நானே கேவலமாக உணர்ந்தேன். உன்னை எந்த அளவிற்குக் கஷ்டப்படுத்தி இருக்கிறேன் என்று நினைத்து வருத்தப்பட்டேன்.அதோடு நீ ஊருக்குக் கிளம்பு முன் ஏர்போர்டில் என்னைப் பார்த்து அழுதியே, எனக்கு உயிர் போகிற வலியைக் கொடுத்தது.உன் கண்களில் என்னைப் போய் இப்படிக் கேவலமா பேசிட்டியே-னு கேள்வி இருந்தது.

இரெண்டாவது முறையா ஏர்போர்டில் என்னை மறந்து அமர்ந்திருந்தேன். அதன் பிறகு வந்த இரவுகளெல்லாம் எனக்கு நந்தனா தந்து விட்டு போன அவமானங்கள் வரவில்லை,நீ ரத்த வெள்ளத்தில் கிடந்த காட்சி தான் கண் முன்னே வந்தது.ஒவ்வொரு நாளும் என் மனசாட்சியே என்னைக் குத்தி குடைய ஆரம்பிச்சுது.நான் திருமண வாழ்க்கைக்கே தகுதி இல்லாதவன், அப்படின்ற எண்ணம் என் மனதில் பொங்கி எழ ஆரம்பிச்சது.ஒரு பெண்ணோட உணர்வுகளைக் கொஞ்சமும் புரிந்து கொள்ளத் தெரியாதவன் என்று என்னை நானே வருத்திக் கொள்ள ஆரம்பிச்சேன்.இதற்கு முடிவு தான் என்ன என்று யோசிக்கும் போது,உன்னை விவாகரத்து பண்ணி உனக்கு நல்லது பண்ணனும் என்று நினைச்சேன்.அதோட இனி என் வாழ்க்கையில் பெண்களுக்கு இடமில்லை என்று ஒதுங்கிடனும்-னு தப்பா யோசிச்சேன்.

கையோட விவாகரத்துக்கான எல்லா ஏற்பாடுகளையும் மதியை வச்சு செஞ்சு முடிச்ச பிறகு தான் என் மனதில் நிம்மதி பிறந்தது.அதன் பிறகு வந்த நாட்களில் எப்பவும் போல வேலையைத் துரத்திக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தேன்.இரவு நேரங்கள் மட்டும் உன்னுடைய கண்ணீர் படிந்த முகம் என் நினைவுகளில் வந்து ஆட்டம் போட்டது.

இப்படியே பத்து மாதங்கள் ஓடியது.ரெண்டு மாசத்துக்கு முன்னே ஆபீஸ்ஸில் ஒரு பிரச்சனை வந்தது.இந்தியாவில் இருந்து வேலைக்காகத் தொழிலாளிகளை ஒரு சம்பளம் பேசி அழைச்சிட்டு வந்தாங்க.ஆனா, ஆறு மாதத்தில் அவங்க சரியாக வேலை செய்யலேன்னு சொல்லி பாதிச் சம்பளமா குறைச்சாங்க. அதனால முதலில் ஒரு அஞ்சாறு நாட்கள் வேலைக்கு வர மாட்டோம்னு சண்டை போட்டாங்க.நிர்வாகத்துக்கும், அவங்களுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது. நிர்வாகம் இறங்கி வர மறுத்தது.அதனால் கோபமடைந்த தொழிலாளிகள் அடிதடியில் இறங்க ஆரம்பிச்சாங்க. என்னென்னவோ சமரச பேச்சு வார்த்தைகள் பண்ணியும் அவங்க கேட்கல. அதனால ஆபீசர்ஸ் எல்லாம் அவங்க கிட்டேயிருந்து தப்பிச்சு போக ஆரம்பிச்சாங்க.

எனக்குத் தொழிலாளிகள் கிட்ட எப்போதும் நல்ல மதிப்பு உண்டு.அதனால நான் போய்ப் பேசி பார்க்கலாம் என்று நினைச்சு அவங்க கிட்ட போனேன்.ஆனா, அவங்க தங்களோட வாழ்வாதாரத்திற்காகப் போராடிகிட்டு இருந்ததினால் என்னுடைய பேச்சை கேட்கல.ரொம்பக் கோபமா இருந்த ஒன்றிரண்டு பேர் பாய்ந்து என்னைத் தலையிலும், காலிலும் சரமாரியாக அடிச்சாங்க.

அவங்க அடிச்சதில் தலையிலும், காலிலும் நல்ல அடி. நான் மயங்கி விழுந்துட்டேன்.

“ஐயோ! அப்புறம் என்ன ஆச்சு” என்றாள் பதட்டமாக.

அவளை மீண்டும் இழுத்து தன் மார்பில் போட்டுக் கொண்டவன் “காலில் பிராக்ச்சர் ஆகிடுச்சு.தலையில் லேசான அடி தான். ஒரு மாசம் வரை ரெஸ்ட் எடுக்கணும்-னு சொல்லிட்டாங்க.”

“அத்தைக்குத் தெரியாதா உங்களுக்கு அடிபட்டது?”

‘நான் சொல்லல.என்னால ஏற்கனவே ஏகப்பட்ட குழப்பம். இதை வேற சொல்லி அவங்களைக் கஷ்டப்படுத்த வேண்டாம்-னு விட்டுட்டேன்.கம்பனியில் எனக்கு ரெண்டு மாசம் லீவ் கொடுத்து அனுப்பினாங்க. வீட்டுக்கு வந்து ரெஸ்ட் எடுக்க ஆரம்பிச்சேன். முதல் பத்து நாட்கள் சாதரணமா போனது.அதன் பிறகு அந்த வீடே எனக்குச் சிறையா தோன ஆரம்பிச்சுது.ஒரு டம்பளர் தண்ணி வேணும்னா கூட எடுத்துக் கொடுக்க ஆள் இல்லாம ரொம்பவே சிரமப்பட்டேன்.

எல்லாவற்றையும் விட அந்தத் தனிமை என்னைக் கொல்லாம கொன்னுது. அப்போ அந்த நிமிஷம் உன்னோட கஷ்டத்தை உணர ஆரம்பிச்சேன். புது ஊரில் என்னை மட்டுமே நம்பி வந்த நீ,இந்த நாலு சுவத்துக்குள்ள என்னோட முகத் திருப்பலை சகிச்சுகிட்டு, யார் கிட்டேயும் பேச முடியாம எத்தனை கஷ்டப்பட்டு இருப்பேன்னு உணர்ந்தேன்.
 
  • Like
Reactions: Chitrasaraswathi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,826
113
சத்தமே இல்லாத அந்த வீட்டோட சூழல் என்னைப் பைத்தியம் பிடிக்கும் நிலைக்குத் தள்ளியது.ஒவ்வொரு நாளும் உன்னைப் பத்தி நினைக்க ஆரம்பித்தேன்.இவ்வளவையும் பொறுத்து கிட்டு என்னை விட்டு போகாம, நானா வந்து விவாகரத்து வேணும்ன்-னு கேட்டப்ப கூட, உங்க கூட வாழ தான் நினைக்கிறேன்-னு சொன்ன நீ, தப்பானவளா இருக்க முடியாது என்ற எண்ணம் வலுவடைந்தது.

அப்படி ஒருநாள் உன்னைப் பத்தி யோசிச்சுகிட்டே உன்னுடைய அறைக்குப் போனேன்.உன்னுடைய பொருள் எதுவும் அங்கே இல்லாமல் இருந்தாலும்,உன்னுடைய வாசம் அங்கே சுத்திக் கொண்டிருந்தது.நீயே என் கூட இருக்கிற மாதிரி ஒரு உணர்வை தந்தது.தினமும் அது ஒரு வழக்கமாவே போச்சு.அந்த மாதிரி ஒருநாள் போனப்ப என் காலில் எதுவோ இடறிச்சு,என்னனு குனிந்து பார்த்தப்ப பென்ட்ரைவ் கிடந்தது.

அவன் சொன்னதில் முகம் சிவந்து கேட்டுக் கொண்டிருந்தவள் பென்ட்ரைவ் என்றதும் “அச்சச்சோ! அது உங்க கிட்டவா இருக்கு” என்றாள் தவிப்புடன்.

அவள் முகத்தில் தெரிந்த தவிப்பைக் கண்டு சிரித்து, மெல்ல நெற்றியில் முட்டி “அது தான் எனக்கு உன்னை அடையாளம் காட்டியது”என்றான்.

வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொண்டு “பார்த்திட்டீங்களா?” என்றாள்.

அதை எடுத்திட்டு போய் என்னோட லேப்டாப்ல போட்டேன்.ஏதோ வீடியோஸ் தனித்தனி போல்டர்ல போட்டிருந்தது.தேதி வாரியாகவும் இருந்துது.சரி என்ன தான் இருக்கு பார்ப்போம் என்று நினைத்து முதல் போல்டரை ஓபன் பண்ணினேன்.உன் மனசுல இருந்தது எல்லாம் பேசி ரெகார்ட் பண்ணி வச்சிருந்தியே.

“ஹாய்,எனக்கு உங்க கிட்ட பேசணும்-னு ஆசை.நீங்க போன் பண்ணுவீங்க-னு எதிர்பார்த்தேன்.உங்க கிட்ட பேச நினைக்கிறது எல்லாம் இப்படிப் பேசி சேவ் பண்ணி வச்சுகிறேன்.உங்களை நேரா பார்த்தா பேச முடியுமா-னு தெரியல.

எனக்கு என்ன பேசறதுன்னே தெரியல.ஏன்னா எனக்குக் கல்யாணம் நடக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை.என்னை மாதிரி பொண்ணுங்களுக்குக் கல்யாண வாழ்க்கை என்பது கனவு தான்.அப்படியே மீறி நடந்தாலும் அது நல்லாயிருக்காது.

அதனால எப்படியாவது இந்தக் கல்யாணம் நின்னு போயிடனும்-னு கடவுள்கிட்ட வேண்டிகிட்டு இருந்தேன்.ஆனா, அத்தையைப் பார்த்தவுடனே சந்தோஷமா சம்மதம் சொல்லிட்டேன்.அவங்களைப் பார்த்தவுடனே பிடிச்சுப் போச்சு.அத்தனை அன்பானவங்களுடைய பிள்ளை நிச்சயமா தப்பாயிருக்க மாட்டங்க-னு ஒத்துகிட்டேன்” என்று சொல்லிக் கொண்டு வந்தவன் பாதியில் நிறுத்திவிட்டு அவள் கன்னத்தைக் கிள்ளி “என்னைப் பிடிச்சிருக்கு-னு சொல்லாம அம்மாவை பிடிச்சுருக்கு-னு சொல்ற, உன்னை என்ன பண்ணலாம்”என்று மேலும் நெருங்கினான்.

வெட்கத்துடன் “போங்க”என்று அவனைப் பிடித்துத் தள்ளி “எல்லா வீடியோசும் பார்த்துட்டீங்களா?” என்று கேட்டாள்.

அவளைப் போலவே ராகம் இழுத்து “ஒ..பார்த்துட்டேனே...மேடம் எனக்குச் செல்ல பேர் வச்சது, கொஞ்சினது எல்லாமே பார்த்திட்டேனே”என்றான் கிண்டலாக.

அவன் செய்த கேலியில் அவன் மார்பிலேயே தலையைப் புதைத்துக் கொண்டவள் “ப்ளீஸ்! கிண்டல் பண்ணாதீங்க”என்று கெஞ்சினாள்.

“எப்படி..எப்படி..புஜ்ஜி கண்ணா, என் செல்லமில்ல..ஹாஹா..எங்க என்னைப் பார்த்து சொல்லு”என்று அவள் முகவாயை நிமிர்ந்தினான்.

மேலும் அவன் மார்பில் புதைந்து கொண்டவள் “இப்படி எல்லாம் கிண்டல் பண்ணினா, நான் கீழே போயிடுவேன்”என்றாள்.

அவளை இறுக்கி அணைத்துக் கொண்டு “இனி, உன்னை எங்கேயும் விடமாட்டேன் ஹனி.எங்கே போனாலும் நானும் உன் கூட வருவேன்” என்றவன் அந்த பென்ட்ரைவ் உன்னோட காதலை எனக்கு உணர்த்திச்சு.என் மனசு உன் பக்கம் மொத்தமா சாஞ்து.அதனால தான் உடனே மதிகிட்ட பேசி விவாகரத்தை தள்ளி போட ஏற்பாடு பண்ணினேன்.உன்னை மாதிரி ஒரு பொக்கிஷத்தை எந்தக் காரணம் கொண்டும் இழக்க கூடாது-னு முடிவுக்கு வந்தேன்.அப்புறம் நடந்ததெல்லாம் உனக்குத் தான் தெரியுமே.

“அவங்க ரொம்ப அழகா?”

அவளைத் தன்னிடமிருந்து பிரித்தவன் “உன்னை விட அழகில்லை.உன் மன அழகு எந்தப் பெண்ணுக்கும் இல்லை.சோ தேவையில்லாம யோசிக்காதே ஹனி.”

“எனக்கு அவங்களைப் பத்தி நீங்க ரசிச்சதை சொல்லும் போது ரொம்பக் கஷ்ட்டமா இருந்துது”என்றாள் தலையைக் குனிந்தபடி.

அவள் முகத்தை நிமிர்த்தியவன் “சாரி-டா!உன்னை வருத்தப்பட வைக்கணும்-னு நான் அதைச் சொல்லல.”

“ம்ம்..”

“இப்போ என்ன உனக்கு அதுதான் வருத்தமா? அதை இப்போவே தீர்த்துட்டா போச்சு” எழுந்திரு என்றவன்

வாய் மூடியே வாய பொளந்தேன்

வெறுங்காலில் விண்வெளி போனேன்

விரைப்பா இருந்தாலும் வழிஞ்சேன்

அவ பேஸு அடடா, அவ ஷேப்பு ஐயையோ

துரு பிடிச்ச காதல் நரம்பெல்லாம்

சுறுசுறுப்பாக சீறுதே......

ஆர்ஜே நிகிலாக அவளைச் சுற்றி வந்து பாட, வெட்கத்தில் அவனது தோளிலேயே சாய்ந்தாள்.

கீழே திண்டில் அமர்ந்து நீர் பரப்பினை வெறித்துக் கொண்டிருந்தவன் காதில் நிகிலின் பாட்டு விழுந்தது.அதை கேட்டு கடுப்பான மதி “வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்” என்று பாட ஆரம்பித்தான்.
 
  • Like
Reactions: Chitrasaraswathi