அத்தியாயம் -20

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,592
1,191
113
அத்தியாயம் – 20

கார்த்திக்கின் மனம் கேசவனை சுற்றியே சுழன்று கொண்டிருந்தது. அவனறிந்த கேசவனில்லை இவன். சில மாத காலமாகவே அவனது நடவடிக்கையில் லேசான மாற்றத்தை காண்கிறான். முன்னெல்லாம் நினைத்ததை முடித்துக் கொண்டிருந்தவனின் மனம் மக்களுக்காக யோசிக்க ஆரம்பித்திருக்கிறது. அது அவனுக்கு எதிரிகளை மேலும் சம்பாதித்து கொடுக்கும் என்பதை அறிவான்.

ஒற்றை வார்த்தையில் கேசவனின் மனம் தடம் புரளும் என்பதை அறிந்து கொள்ளவில்லை. ஏற்கனவே அந்த பத்திரங்களை வைத்து அரசில்யவாதிக்கு எதிராக ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறான். இப்போது இந்த பெண்ணை உள்ளே இழுத்து மேலும் நிலைமையை சிக்காலக்கி கொண்டிருக்கிறான் என்றே எண்ணிக் கொண்டான்.

ஆதிகேசவனோ சக்தி இருந்த அறையின் வாயிலை ஒட்டியே நடை பழகிக் கொண்டிருந்தான். அவனது பார்வை முழுவதும் அறையில் உறங்கும் அவள் மீதிருந்தாலும், எண்ணம் முழுவதும் கருணாகரனை எப்படி முடிப்பது என்கிற எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு சில காரணங்களுக்காக மட்டுமே அவனை ஆட விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனது ஆட்டம் இப்போது அதிகமாகி கொண்டே இருக்கிறது. அதை வளர விட்டால் ஆபத்து என்பதை உணர்ந்தவனின் மூளை வேலை செய்ய ஆரம்பித்தது.

அதே நேரம் அமைச்சருக்கு கேசவன் தூத்துக்குடி செல்லவில்லை என்கிற செய்தி சொல்லப்பட்டது. அவன் தூத்துக்குடி செல்வான் அங்கு வைத்து அவனை முடித்து விடலாம் என்கிற எண்ணத்தில் இருந்தவருக்கு, அவன் செல்லாதது கோபத்தை வரவழைத்தது.

கார்த்தி காரில் செல்லாமல் விமானத்தில் ஏறி ஒரு மணி நேரத்திற்குள் தூத்துக்குடி துறைமுகத்தை அடைந்திருந்தான். லிங்கங்கள் ஏற்றிக் கொண்டு வந்த லாரிகள் பாதி வழியில் இருந்தன. கேசவனின் வரவை எதிர்பார்த்து காத்திருந்த ரிச்சிக்கு கார்த்திக் வந்தது துளியும் பிடிக்கவில்லை.

“கேசவ் எங்கே?”

“முக்கியமான வேலை...வர முடியல”

“கேசவ்க்கு போனை போடு...அவன் இங்கே வந்தாகணும்”

அவனை அலட்சியமாக பார்த்த கார்த்தி “நீ நினைத்தாலே நான் நினைத்தாலோ அவன் வர மாட்டான். அவனாக வந்தால் தான் உண்டு”.

கார்த்தியின் அலட்சியத்தை கண்டு கோபம் எழுந்தாலும் ஒன்றும் செய்ய இயலாமல் கடுகடுப்புடன் கையிலிருந்த பீர் கோப்பையை வெறித்தான்.

அதே நேரம் சக்தியின் உடலில் லேசான அசைவு தெரிய, நடந்து கொண்டிருந்தவன் அமைதியாக நின்று அவளை கவனித்தான்.

மெல்ல விழிப்பு வர, நடந்தவைகள் எல்லாம் நினைவுக்கு வரவும், உடலில் நடுக்கம் எழ ஆரம்பித்தது. தேனு குத்துப்பட்டு விழுந்த காட்சி கண்முன்னே தோன்ற, வீலென்ற அலறலுடன் எழுந்தமர்ந்தாள்.

அவளின் விழிகள் மிரண்டு போய் அங்குமிங்கும் அலைபாய்ந்தது. அதை கண்டதும் வேக நடையுடன் உள்ளே சென்றவன் “ஒண்ணுமில்ல பயப்படாதம்மா” என்றான் தனது அழுத்தமான குரலில்.

அவன் குரல் அவளது உடலை தூக்கிப் போட செய்தது. மேலும் நடுங்க ஆரம்பிக்க என்ன செய்வது என்று தெரியாமல் “பயப்படாதே” என்று மெல்லிய குரலில் கூறினான்.

ஆனால் அவளின் உடலோ தூக்கிப் போட, அவசரமாக எழுந்து கொண்டவள் அவனது கையை இறுகப் பற்றிக் கொண்டு “எனக்கு...என..க்கு பயமா இருக்கு” என்றாள் மிரள மிரள விழித்து இறுகப் பற்றிக் கொண்டாள்.

அந்த செயலில் சட்டென்று அவனது உடல் இறுகிப் போக, பெண்ணின் முதல் ஸ்பரிசம் அவனை அப்படியே ஸ்தம்பித்து போக வைத்தது. அவளோ அவனது அவஸ்தை புரியாது மேலும் நெருங்கி ஒட்டிக் கொண்டு நின்றாள். அதில் சுயநினைவிற்கு வந்தவன் பதறி போய் “பூங்காவனம்! இங்கே வரீங்களா?” என்று தோட்டக்காரன் மனைவியை சத்தமாக அழைத்தான்.

சமயலறையில் அமர்ந்திருந்த பூங்காவனம் அவனது குரலை கேட்டு அடித்து பிடித்து ஓடி வந்து நின்றார்.

“எங்கே போனீங்க? இந்த பொண்ணு கூடவே இருங்க” என்றான் அதட்டலாக.

அவரும் தலையசைத்து விட்டு “வாம்மா” என்று அவளை அழைத்தார்.

ஆனால் சக்தியோ கேசவனின் கரங்களை விடாது மேலும் அழுத்திப் பிடித்துக் கொண்டு “தேனுவை நீங்க தானே தூக்கிட்டு போனீங்க. அவ எங்கே? அவ உடம்பெல்லாம் ரத்தம். எனக்கு பயமா இருக்கு. இங்கேயே இருங்க” என்றாள் உதடுகள் துடிக்க.

கேசவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் மரம் மாதிரி நின்றிருந்தான்.அவனது நிலையை உணர்ந்து கொண்ட பூங்காவனம் சக்தியிடம் “என்னோட வாம்மா...நான் இருக்கேன்” என்று அவளை தோளோடு அணைத்து கட்டிலுக்கு அழைத்துச் சென்றார்.

அதைக் கண்டு நிம்மதியடைந்தவன் அவரிடம் “அவங்களை விட்டு எங்கேயும் போகாதீங்க” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினான். பூங்காவனத்தின் தோளில் சாய்ந்திருந்தாலும் சக்தியின் பார்வை கேசவனின் மீதே இருந்தது. ஏனோ அவனிடம் இருந்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று எண்ணினாள்
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,592
1,191
113
கண்முன்னே தோழி குத்துப்பட்டு விழுந்தது அவள் மனதை அதிகமாக தாக்கி இருந்தது. இந்த உலகத்தில் பாதுகாப்பான இடமில்லை என்கிற பயம் வந்திருந்தது.

அதிலும் இந்த ஊர் அண்ணன், தந்தை மற்றும் தோழி என்று ஒவ்வொருவராக விழுங்கி இருந்தது. குடும்பத்தில் அனைவரையும் இழந்து, ஒரே ஆதரவாக இருந்த தோழியையும் இழந்து விட்டு நிற்பவளுக்கு கேசவன் தன்னை பாதுகாப்பான் என்கிற எண்ணம் அழுத்தமாக பதிந்து போனது. அதற்கு காரணம் அவன் கையில் தாங்கிய தேனுவும், அவள் அண்ணா என்றழைத்து தன்னை பார்த்துக் கொள்ள சொன்னதாக இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டாள்.

கேசவனோ எதிலிருந்தோ தப்பித்துக் கொள்ளும் வேகத்துடன் அங்கிருந்து வெளியேறி கடல் அலைகளின் அருகே சென்று நின்றான். அலைகளைப் போன்று அவனது மனமும் இதயத்தை முட்டி மோதிக் கொண்டிருந்தது. ஏனோ இந்த பெண்ணை பார்த்ததிலிருந்து அவனது மனதில் சிறு சலனம் எழாமல் இல்லை. அதனால் தான் முடிந்த வரை அவளை பாதுகாக்கும் வேலையை கார்த்தி அறியாமல் செய்தான். அப்படியும் அவனுக்கு சந்தேகம் இருந்தது. அவனிடம் பெண்களுக்கு தன் வாழ்வில் இடமில்லை என்று கூறி விட்டாலும், இந்தப் பெண் மனதினுள்ளே புகுந்து ஆட்டிப் படைக்கிறாள் என்று எண்ணிக் கொண்டு அலைகளினூடே சென்று எதிர்த்து நின்று தனது மனதின் ஆட்டத்தை தகர்த்தெரிய முயன்று கொண்டிருந்தான்.

அந்நேரம் சரியாக அவனது போன் அடிக்க, சற்றே தடுமாறி போனை எடுத்து காதில் வைத்தான். அந்தப் பக்கம் வந்த செய்தியில் அதுவரை இருந்த சஞ்சலங்கள் எல்லாம் மறைந்து போக, முகம் கோபத்தை பூசிக் கொண்டது. அனைத்தையும் யோசித்து செயல்படுபவன் அன்று ஒரு பெண்ணிற்காக நண்பனின் உயிரை பணயம் வைத்திருக்கிறோம் என்று சலனப்பட ஆரம்பித்தான்.

போனில் வந்த செய்தி என்னவென்றால் தூத்துக்குடியில் வைத்து தன்னை முடிக்க ஏற்பாடுகள் நடந்திருப்பதாகவும், தான் செல்லாததால் கார்த்திக்கை முடித்து விட முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்லப்பட்டது.

போனை நெற்றியில் தட்டி யோசித்தவன், கார்த்தியை அழைத்து பேசுவதை விட எதிரிகளின் முயற்சியை தோற்கடிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் சில பல நபர்களுக்கு போன் செய்து நிலவரத்தை கூறி என்னென்ன செய்ய வேண்டும் என்றுரைத்தான். அதன் பின்னர் நிதானமாக கார்த்தியை அழைத்தான் “கார்த்தி!”

“என்ன கேசவா? பிரச்சனை எங்க ஆரம்பம்?”

மெல்லிய சிரிப்புடன் “எனக்கு பதிலா போன உன்னை போடுறதா ப்ளான்”

மறுபக்கத்தில் அவனும் சிரிப்புடன் “நான் என்ன செய்யணும்?” என்றான் கேலியாக.

தான் யார் யாரிடம் பேசினோம், என்னென்ன நடவடிக்கை என்று அவனிடம் கூறியவன் “மற்றதை நீ பார்த்துக்கோ! நான் ஒரு மணி நேரத்தில் அங்கிருப்பேன். எல்லாவற்றையும் விட ரிச்சி பத்திரம்” .

“முடிவு பண்ணிட்ட...தூத்துக்குடியில் இன்னைக்கு சுனாமி தான்”

அவன் சொன்னதை கண்டுகொள்ளாமல் போனை அனைத்தவன் வேக நடையுடன் உள்ளே சென்று பூங்காவனத்திடம் சக்தியை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினான்.

ஜீப் ஏர்போர்ட்டை நோக்கி சீறிப் பாய்ந்தது. ஏர்போர்ட் செல்லும் முன் பல போன் கால்கள் பேசி முடித்தவன், இறுதியாக லிங்கங்கள் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்த ட்ரக் டிரைவரிடம் பேசி, வண்டிகளை துவரங்குறிச்சிக்கு அருகே இருக்கும் வனப்பகுதிக்குள் கொண்டு நிறுத்தி வைக்க கூறினான்.

அதே நேரம் கார்த்திக் ரிச்சி தங்கி இருக்கும் கப்பலிலிருந்து இறங்கி ஹார்பரை விட்டு வெளியே செல்வதற்காக தனது காரில் ஏற, எங்கிருந்தோ துப்பாக்கி குண்டுகள் அவனது காரை சல்லி சல்லியாக துளைக்க ஆரம்பித்தது. இதை எதிர்பார்த்தே இருந்தவன், முழுவதுமாக காரின் அடியில் படுத்துக் கொண்டு வெளியே இருந்த தங்கள் ஆட்களுக்கு உத்திரவு பிறப்பிக்க ஆரம்பித்தான்.

அதற்குள் ஹார்பரில் பதற்றம் அடைய ஆரம்பித்திருந்தது. வேலையாட்கள் அங்குமிங்கும் ஓட, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட கார்த்திக், காரின் கதவை திறந்து கொண்டு இறங்கி ஓடினான். மக்கள் அங்குமிங்கும் ஓடினாலும், எதிரியின் பார்வை கார்த்திக்கை விட்டு மீளவில்லை. சரமாரியாக சுடவில்லை ஒற்றை குண்டு சரியாக அவன் நெஞ்சை துளைத்திருக்க வேண்டியது, தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் ஆபத்தை உணர்ந்தவன் போல், அவசரமாக கப்பலின் வாயிலை நோக்கி ஓடியவன் சற்றே குனிந்து ஒரு பக்கமாக திரும்ப, அவனது கையை கிழித்துக் கொண்டு உள்ளே சென்றது. உதிரம் கையெங்கும் வழிய, அதை பொருட்படுத்தாது மேலும் வேகத்துடன் கப்பலின் தளத்திற்குள் நுழைந்து விட்டான். அவனுக்காகவே காத்திருந்த ரிச்சி, அவசரமாக இழுத்துக் கொண்டு அங்கிருந்த அறையினுள் நுழைந்து விட்டான்.

எதிரியோ நடந்துவிட்ட தடுமாற்றத்தில் கோபமடைந்து எப்படியாவது தனக்கிடப்பட்ட வேலையை முடித்து விடும் ஆத்திரத்துடன் கீழே இறங்கி கப்பலை நோக்கி ஓடினான். அதற்குள் சுதாரித்துக் கொண்ட கேசவனின் ஆட்கள் அவனை துரத்த ஆரம்பித்தனர். அதே நேரம் ஹார்பரின் போலிஸ் படையும் உள்ளே நுழைய, அங்கு மேலும் கலவரமானது. அதனால் இனியும் கார்த்திக்கை தேடி போவது நல்லதல்ல என்பதை உணர்ந்தவன் தான் தப்பிப்பதே பெரிது என்றெண்ணி, அவர்களின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு அங்கிருந்து வெளியேறினான்.

கேசவன் ஹார்பரில் நுழையும் நேரம் எங்கும் போலிஸ் படை நிறைந்திருந்தது. அவனை தெரிந்த ஆபிசர் மெல்ல வந்து அங்கு நடந்தவற்றை கூறி “என்ன சார்? உங்கள் ஆளுங்களை போட தான் வந்தாங்களா?” என்று கேட்டார்.

கார்த்திக்கிற்கு எதுவும் ஆகவில்லை என்பதை உணர்ந்தவன் சற்றே நிம்மதியுடன் “ஆளுங்களை இல்ல...என்னை போட தான் ப்ளான்” என்றான் சிரிப்புடன்.

அதை கேட்டதும் பதறி போனவர் “சார் அப்போ நீங்க முதல்ல இங்கிருந்து கிளம்புங்க...ஏற்கனவே நடந்த சம்பவத்தை பற்றி தோண்டி துருவ பத்திரிகைகாரனுங்க குமிஞ்சாச்சு” என்றார் பதட்டமாக.

கேசவனோ அதற்கெல்லாம் அசராமல் “இன்னைக்கு இங்கிருந்து ஒரு சரக்கு வெளியே போயாகனும். வண்டி துவரங்குறிச்சி காட்டுல நிற்குது. நீங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது. இன்னும் மூணு மணி நேரத்துக்குள்ள இங்கே எதுவுமே நடக்காத சூழ்நிலை வரணும். எங்க சரக்கு எந்த பிரச்னையும் இல்லாம வெளியே போகணும்” என்றான் மிரட்டலாக.

அவரோ தயங்கி தயங்கி “அமைச்சர் போன் பண்ணினார் கேசவா. உன்னை முடிக்க உதவ சொன்னார் . இதெல்லாம் என்னோட ஏற்பாடு தான். என்ன காரணம் கொண்டும் சரக்கு ரிச்சி கைக்கு போக கூடாதுன்னு சொல்லி இருக்கார். நான் என்ன செய்யட்டும் சொல்லு?”

லேசாக தாடையை தடவிக் கொண்டவன் “தெரியும்! நீ அவருக்கு உதவினாலும் உன்னையும் முடிச்சிடுவான். அவனுக்கு எங்கேயும் எப்போதும் மிச்சம் வச்சு பழக்கமில்லை. அதனால நான் என்ன சொல்றேன்னா சரக்கு வெளியே போக ஏற்பாடு பண்ணு. உனக்கு வேண்டிய பாதுகாப்பை நான் தரேன். என்னை மீறி உன் மேல எவனும் கை வைக்க முடியாது”.

சற்று நேரம் யோசித்தவர் “சரி நான் என்ன செய்யணும் சொல்லு?”

அடுத்து அவன் மடமடவென்று தனது பிளானை அவருக்கு சொல்லி, அதன்படி ஏற்பாடு செய்ய கூறினான்.

“நான் இப்போ இங்கிருந்து கார்த்திக்கை கூட்டிட்டு பக்கத்தில் இருக்கிற கெஸ்ட் ஹவுசுக்கு போறேன். நான் இல்லேன்னு நினைச்சு அமைச்சருக்கு தகவல் எதுவும் கொடுக்க நினைக்காதே. எங்க ஆளுங்க கண்காநிசிட்டு இருப்பாங்க. மூணு மணி நேரத்தில் வண்டி வரும். சரக்கெல்லாம் கப்பலில் எற்றியாகனும். எந்த குழப்பமும் வரக் கூடாது” என்று மிரட்டிவிட்டு கப்பலுக்கு சென்று கார்த்திக்கை அழைத்துக் கொண்டு ஹார்பரை விட்டு வெளியேறினான்.

அவன் வெளியேறியதும் உடனே அமைச்சருக்கு தகவல் பறந்தது. அவர் பல்லைக் கடித்துக் கொண்டு எப்படியாவது லிங்கங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தார்.

துவரங்குறிச்சியில் இருந்து புறப்பட்ட லிங்கங்கள் காட்டுப்பாதையில் துறைமுகத்தை நோக்கி பயணப்பட ஆரம்பித்தது. அதே நேரம் பூங்காவனத்தின் அணைப்பில் உறங்கிக் கொண்டிருந்த சக்திக்கு விழிப்பு வந்திட, மெல்ல எழுந்து தான் இருந்த அறையை பார்வையிட்டாள்.

அப்போது வெளியே வாயிலில் பயங்கரமான சத்தம் வந்தது. மெதுவாக எழுந்து சென்று ஜன்னல் அருகே நின்று பார்த்தவளின் மேனி நடுங்க ஆரம்பித்தது.

சுமார் பத்து பதினைந்து ஆட்கள் கத்தி, கடப்பாரை போன்ற ஆயுதங்களுடன் கேசவனின் ஆட்களுடன் சண்டையிட்டு கதவை உடைக்க தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

..................................தொடரும்......................................

பிழைகளை பொறுத்துக் கொள்ளவும்.....
 

Chitra Balaji

Member
Feb 5, 2020
57
34
18
Aiyayo kesav rendu பக்கமும் block பண்றாங்களே இவன் அங்க Harbour la சரக்கு poguthaanu paappaana இல்ல வீடு la சக்தி ah kaapaathuvaanaa nu puriyalaye..... O my God..... அந்த மந்திரி seriya naa kedi ah இருப்பான் போல.... Shakthi ah paathathu la irunthe ava mela சின்ன சலனம் இருந்து இருக்கு......karthik vera adipattudichi.... Enna aaga pooguthoo theriyalaye.... Enna panna poraano kesav....
 

lakshmi

Active member
May 9, 2018
335
50
43
கதை லேசா மறந்த மாதிரி இருக்கிறதே என்று நினைத்து படிக்க ஆரம்பித்தேன் ஞாபகம் வந்து விட்டது.