அத்தியாயம் - 21

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,592
1,191
113
அத்தியாயம் – 21

ஜன்னலின் வழியே பார்த்துக் கொண்டிருந்தவளின் உடல் நடுக்கமெடுக்க, மடங்கி அப்படியே அமர்ந்து முழங்காலில் முகத்தை வைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள். பூங்காவனமும் அக்காட்சிகளைப் பார்த்துவிட்டு என்ன செய்வதென்று புரியாமல் கைகளை பிசைந்தபடி நின்றார்.

கேசவனின் ஆட்களோ கருணாகரனின் ஆட்களை அடித்து துவைத்து விடும் வேகத்தோடு இருந்தனர். பூங்காவனத்தின் கணவன் மட்டும் எப்படியாவது ஐயாவிற்கு தகவல் தெரிவித்து விட வேண்டும் என்கிற எண்ணத்தில் பதுங்கி பதுங்கி பின்புறம் சென்று கார்த்திக்கை அழைத்தான்.

கையில் கட்டுடன் சாய்வாக படுத்திருந்தவனின் அருகே ரிச்சியும், கேசவனும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது வரும் அழைப்புகளை எடுத்து பேசிக் கொண்டும், லிங்கங்களை எடுத்து வருபவர்களை வழி நடத்திக் கொண்டும் அமர்ந்திருந்தவனை கலைத்தது கார்த்திக்கின் அலைப்பேசி அழைப்பு.

கேசவனுக்கு இங்கிருக்கும் நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், மனதில் சிறு சலனம் இருந்து கொண்டே இருந்தது. அமைச்சர் எப்போது நேரடியாக இறங்க ஆரம்பித்தாரோ, நிச்சயமாக இத்துடன் முடியாது. இன்னும் வேறுவழிகளில் தன்னை நெருங்குவார் என்றே எண்ணிக் கொண்டிருந்தான். அந்நேரம் கார்த்திக்கின் அலைப்பேசி அடித்ததும் “நீ இரு நான் எடுக்கிறேன்” என்று கை நீட்டி எடுத்தவனின் விழிகள் தொடு திரையில் தெரிந்த எண்ணில் பதிந்தது.

நிமிர்ந்து கார்த்திக்கை பார்த்துவிட்டு “தோட்டக்காரன் கூப்பிடுறான்...அனேகமா கருணா இறங்கிட்டான்னு நினைக்கிறேன்” என்றவன் போனை ஆன் செய்து காதில் வைத்தான்.

“ஐயா! இங்கே அந்த கருணாகரன் ஆளுங்க வீட்டை சூழ்ந்துகிட்டாங்க. உள்ளே எம் பொண்டாட்டியும், அந்த பெண்ணும் இருக்காங்க. கேசவன் ஐயா கிட்ட சொல்லுங்கையா” என்றான் பதட்டமாக.

“நீ எங்கே இருக்க? ”

“ஐயா!”

“நான் சொல்றதை கவனமா கேட்டுக்கோ...உன் பொண்டாட்டிக்கு போன் பண்ணி, அந்த பெண்ணை அழைச்சுகிட்டு என் அறைக்குப் போக சொல்லு. அங்கே இருக்கிற ஏசி ரிமோட்டை எடுத்து கீழே ரெண்டாவது பட்டனை அமுக்க சொல்லு. கண்ணாடி அலமாரிக்கு பின்னாடி உள்ள கதவு திறக்கும்”.

“ஐயா! இது..”

“ஷ்...நான் சொல்றதை முழுக்க கேளு. அந்த கதவு திறந்ததும் உன் பொண்டாட்டியையும், அந்த பெண்ணையும் உள்ளே போய் கதவை சாத்திக்க சொல்லு. எந்தக் காரணம் கொண்டும் நான் வரும் வரை அங்கிருந்து வெளியே வர வேண்டாம்னு சொல்லு...சீக்கிரம் போன் பண்ணி சொல்லிட்டு எனக்கு சொல்லு” என்று கூறி போனை கட் பண்ணி விட்டான்.

கார்த்தி கேசவன் பேசியதைக் கேட்டு பதட்டமாகி “என்ன நடக்குது கேசவா? கருணா நம்ம வீட்டில் கையை வசிட்டானா?” என்றான் கோபமாக.

சீற்றம் கொண்ட புலியென அறையின் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவன் “அமைச்சர் என்னை தூக்க ப்ளான் பண்ணினதும் இவனுக்கு நம்ம வீட்டில் கையை வைக்க தைரியம் வந்துடுச்சு”.

“கேசவா! நீ கிளம்பு நான் இங்கே பார்த்துக்கிறேன்”

“இல்ல! என் ஏற்பாடு சரியா இருந்தா அந்த பெண்ணுக்கு ஆபத்தில்லை. என்ன ஆனாலும் சரி இன்னைக்கு சரக்கு வெளியே போகணும்” என்றான் உறுதியாக. அந்நேரம் சரியாக கார்த்தியின் மொபைல் அழைக்க “சொல்லு”.

“ஐயா! நீங்க சொன்ன மாதிரி அவங்க ரெண்டு பேரும் அந்த அறைக்குள்ள போயிட்டாங்க”.

அதுவரை அவன் உடம்பில் இருந்த இறுக்கம் மறைய “இப்போ நீ என்ன பண்ற நம்ம மோட்டார் ரூமுக்கு போய் மோட்டார் சுவிட்ச்க்கு பக்கத்து சுவிட்ச்சை போட்டு விடு. அதோட நம்ம நாய்கள் எல்லாத்தையும் அவிழ்த்து விட்டுட்டு பின் கதவு வழியா ஏறி குதிச்சு வெளில போயிடு. மற்றது தானாக நடக்கும்”.

“சரிங்கையா” என்றவன் கருணாவின் ஆட்களிடமிருந்து மறைந்து மறைந்து மோட்டார் ரூமிற்கு சென்று அங்கிருந்த சுவிட்சை போட்டுவிட்டான். அதில் கேசவனின் வீட்டைச் சுற்றி ஒளிவெள்ளம்..

திடீரென்று பாய்ந்த ஒளிவெள்ளத்தைக் கண்டு கண்கள் கூச கருணாவின் ஆட்கள் நின்றுவிட, கேசவனின் ஆட்கள் அதுதான் சமயம் என்று படு தீவிரமாக தாக்க ஆரம்பித்திருந்தனர். அப்படியும் கருணாவின் ஆட்களில் ஒரு சிலர் முன் கதவை அடித்து உடைத்துக் கொண்டு உள்ளே சென்றிருந்தனர். அவர்களின் தேவை சக்தி. ஒவ்வொரு அறையிலும் அவளைத் தேடி கிடைக்காமல் வெறியுடன் வெளியே வந்தவர்களை சுமார் இருபத்தைந்து டாபர்மேன் மற்றும் ராஜபாளையம் நாய்கள் பற்களை காட்டியபடி வரவேற்றன.

ஏற்கனவே சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களை ஆங்காங்கே குதறி போட்டுவிட்டு இவர்களின் வரவிற்காக காத்துக் கொண்டிருந்தன. அவற்றை கண்டவுடன் என்ன செய்வதென்று தெரியாமல் பின் வாங்க, அடுத்த நிமிடம் அனைத்தும் அவர்களின் மீது பாய்ந்திருந்தது. அந்த இடமே மரண ஓலமும், ரத்தமும் சதையுமாக போனது. பார்த்துக் கொண்டிருந்த கேசவனின் ஆட்களுக்கே இதயம் படபடத்து போனது.

கேசவனின் ரகசிய அறையில் இருந்தவர்களோ இது எதையுமே அறியாது பயந்து போய் இருந்தனர். அதிலும் சக்திக்கு காய்ச்சல் வந்து உடல் தூக்கி போட ஆரம்பித்திருந்தது. அவளது உதடுகளோ “அண்ணா! எங்கே இருக்க நீ? தேனு எனக்கு பயமா இருக்கே” என்று புலம்ப ஆரம்பித்திருந்தது.

கேசவனின் வீட்டை விட்டு வெளியில் ஓடிய தோட்டக்காரன் மீண்டும் அவனுக்கு அழைத்து செய்ய சொன்னவற்றை எல்லாம் முடித்து விட்டேன் என்று கூறியதும், அங்கிருந்த மூவருக்கும் நிம்மதியானது. அவனிடம் மேலும் சில தகவல்களை கூறி செய்ய சொல்லி விட்டு போனை அனைத்தவன் கார்த்திக்கை பார்த்துச் சிரித்தான்.

ரிச்சியோ “என்ன மேன் நடக்குது? எனக்கு ஒன்னும் புரியலையே?” என்றான்.

இருவரும் ஒன்று போல் “லோக்கல் பாலிடிக்ஸ்” என்றனர் சிரிப்புடன்.

கார்த்தி சும்மா இராமல் “கருணாவுக்கு போனை போடு கேசவா” என்றான் கடுப்புடன்.

“இப்போ வேண்டாம் கார்த்தி. நேராகவே போய் வச்சுக்குவோம்” என்றான் சிந்தனையுடன்.

அதன்பின் லிங்கங்கள் சரியாக ஹார்பர்க்கு அருகில் வந்து சேர்ந்துவிட, அந்த போலீஸ் அதிகாரியின் உதவியுடன் அனைத்தும் கப்பலில் ஏற்றப்பட்டது. பத்திரிக்கையாளர்கள் அனைவரையும், அங்கிருந்து விரட்டி விட்டாலும், ஒன்றிரண்டு பேர் சரக்கு கப்பலில் ஏறுவதை புகைப்படம் எடுத்து விட்டனர். அதை அறிந்து அவர்களை பிடிக்க செல்ல முயன்ற அதிகாரியை தடுத்த கேசவன் “விடுங்க போகட்டும்” என்றான்.

“என்ன பேசுற கேசவா? இந்த போட்டோஸ் வெளில வந்தா நாட்டில் பெரிய பிரச்சனை ஏற்படும்” என்றார் பதட்டத்துடன்.

மெல்லிய சிரிப்புடன் “அது தான் எனக்கு வேணும். அவங்க போகட்டும். நாளை காலையே தூத்துக்குடி துறைமுகம் அல்லோகலப்படும்”.

அவரோ பதறி போய் “என் பேர் வெளில வந்தா...”

“வராது!” என்றவன் ரிச்சியிடம் மெல்லிய குரலில் சில விஷயங்களை கூறி விட்டு அவனை கப்பலில் கொண்டு விட்டு வந்தான்.

அந்தக் கப்பல் எங்கு போக வேண்டும், அதிலிருந்த லிங்கங்கள் யாரிடம் செல்ல வேண்டும் என்பது அனைத்தையும் முடிவு செய்தவன் அவனே. அமைச்சருக்காக தான் இந்த வேலையை எடுத்தது. ஆனால் என்றைக்கு அந்த பத்திரத்தில் இருந்த தகவல்களை அறிந்து கொண்டானோ, அன்றிலிருந்து அமைச்சருக்கு எதிராகவே மெல்ல காய் நகர்த்த ஆரம்பித்தான். ஆரம்பத்தில் அதை கண்டுபிடிக்க முடியாமல் இருந்தவர், பத்திரம் காணாமல் போனதும் முற்றிலுமாக கேசவனை அறிந்து கொண்டார்.

அவருக்கு அந்த பத்திரம் அழிந்து போனாலும் பரவாயில்லை. கேசவனிடம் மட்டும் இருந்ந்தால் அது நாட்டில் பேரும் புரட்சியை உருவாக்கி விடும், அதோடு தங்களின் அரசியல் வாழ்வும் முடிவுக்கு வந்துவிடும் என்று பயந்தார். முதலில் அவருக்கு எதிராக இருந்த மற்ற அமைச்சர்களும், கேசவனை எதிர்ப்பதற்காக ஒன்று சேர்ந்தனர்.
 
sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,592
1,191
113
அதன் காரணமாகவே லிங்கங்ககளை அனுப்ப வேண்டும் என்று கூறி, அவனை தூத்துக்குடியில் வைத்து முடிக்க முடிவெடுத்தார்கள். ஆனால் கார்த்தி அவனுக்கு பதிலாக வந்தது ஏமாற்றமாக இருந்தாலும், எப்படியாவது அவனை முடித்து விட வேண்டும் என்று தான் வீட்டிற்கும் ஆள் அனுப்பியது. அதிலும் அந்த பெண்ணையும் அவன் பாதுகாப்பது அவர்களுக்கு சந்தேகத்தை கொடுத்திருந்தது. இவற்றை எல்லாம் யோசித்தவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள். இவர்களின் அரசியல் வாழ்க்கை, இத்தனை நாள் அவனது பாதுகாப்பில் தான் தொழில் நடத்தி அனைத்தையும் சாதித்தோம் என்பதும் அவனும் அனைத்தையும் யோசிப்பான் என்று நினைக்கவில்லை.

தங்களது ப்ளான் அனைத்தும் தோல்வியில் முடிந்து போனதில் பயங்கர கோபத்துடன் நடந்து கொண்டிருந்தார் அமைச்சர். அவரிடம் நெருங்கவே பயந்து கொண்டிருந்தார்கள் அவரின் ஆட்கள்.

“அவன் என்ன அவ்வளவு பெரிய அப்பாட்டக்கரா டா? இத்தனை பேர் நாலா பக்கமும் அடிச்சும் ஒண்ணும் பண்ண முடியல?”

“ஐயா! அது வந்து...”

“கப்பலையாவது நம்ம ஆட்கள் இருக்காங்களா? அந்த ரிச்சியை முடிச்சு கடலில் வீசிட்டு லிங்கங்களை எங்கே சேர்க்கனுமோ அங்கே சேர்த்திடுவானுங்களா?”

“எல்லாமே நம்ம ஆட்கள் தானுங்க ஐயா! லிங்கம் எல்லாம் சரியான கைக்கு சேர்ந்திடும்”

“கிழிச்சீங்க! அங்கேயும் அவன் ஏதாவது பண்ணி வச்சிருக்க போறான்”.

அவரின் கோபத்திற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமைதியாக நின்று கொண்டார்கள். தீவிரமான முகத்துடன் நடந்து கொண்டிருந்தவர் சட்டென்று நின்று “இவ்வளவு நடந்தும் அவன் எனக்கு இன்னும் போன் பண்ணல. நிச்சயமா இதை பண்ண சொன்னது நான் தான்னு தெரிஞ்சிருக்கும். அவன் அமைதியா இருக்கிறது நல்லதில்லை” என்றார் உள்ளுக்குள் உதறலுடன்.

அதே நேரம் கார்த்திக்கும், கேசவனும் விமானம் மூலம் சென்னையை நோக்கி பறந்து கொண்டிருந்தனர். விமான நிலையத்தில் அவர்களை பார்த்தவர்கள் அமைச்சருக்கு தகவல் சொன்னார்கள். அவன் சென்னையில் இறங்கியதுமே தூக்கி விட வேண்டும் என்று கருணாகரன் கொலைவெறியுடன் அமைச்சரின் முன் வந்து நின்றான்.

“கருணா! அவசரப்படாதே! துறைமுகத்தில் நடந்ததுக்கு காரணம் கேசவனும் நானும் தான்னு இநேரம் உலகத்துக்கே தெரிஞ்சிருக்கும். இந்த நேரம் நாம அவன் மேல கை வச்சா எம்பி சும்மா இருக்க மாட்டார். கொஞ்சம் வெயிட் பண்ணு முடிச்சிடலாம்”.

“அமைச்சரே உங்க வார்த்தைக்காக தான் நிற்கிறேன். நேத்து என் ஆளுங்களுக்கு நடந்ததுக்கு அவனை விமான நிலையத்திலேயே வைத்து தீர்த்திருப்பேன்” என்றான் கண்கள் சிவக்க.

“அவனோட ஒவ்வொரு அசைவையும் கவனிப்போம். சரியான நேரத்தில் நடுரோட்டில் வச்சு செய்றோம். உலகமே திரும்பி பார்க்கணும் அவனோட சாவை”.

“ம்ம்..” என்றான் உறுமலுடன்.

விமானத்திலிருந்து இறங்கியவர்கள் சூழ்நிலையை ஆராய்ந்து கொண்டே வெளியேறினார்கள்.

“என்ன பார்க்கிற கார்த்தி?”

“கருணா வந்திருப்பான்னு நினைச்சேன். இங்கே ஒரு சம்பவம் நடக்கும்னு எதிர்பார்த்தேன்”.

“வர மாட்டான். அமைச்சர் புத்திசாலி. இனி, நம்மோட ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படும்”.

அதற்கு பதிலாக லேசாக சிரித்தவன் ‘யாரை யார் போட போறாங்கன்னு பார்போம். ஆனா இவனுங்க சாவுக்கு முன்னே மக்களுக்கு இவனுங்க சுயரூபம் தெரிஞ்சாகனும்”.

அதை ஏற்றுக் கொள்வது போல தலையசைத்தவன் “அதுக்கு தான் அந்த பத்திரம் நம்ம கைக்கு கிடைக்கணும் கார்த்தி. அது கிடைச்சிட்டா வெளிச்சம் போட்டு காட்டிடலாம்”.

“அந்த பொண்ணு சக்த்தியோட கிராமத்து வீட்டிலும் ஆள் வச்சு தேடியாச்சு கேசவா. அங்கேயும் இல்லை”.

“ம்ம்..” என்றவனின் பார்வை தங்கள் வீட்டு வாயிலை நோக்கியது. எங்கும் போலீஸ் தலைகள். அந்த இடமே அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்தது. மெல்ல வண்டியை விட்டு இறங்கியவன் சுற்றுப்புறத்தை கண்களால் ஆராய்ந்து கொண்டே உள்ளே சென்றான். தோட்டமெங்கும் ரத்தமும், சதை துணுக்குகளும் சிதறி இருக்க, பெரிய போர்கள பூமியில் நுழைந்த மாதிரி இருந்தது. அவனைக் கண்டதும் போலீஸ் உயரதிகாரி வந்து “நேத்து கருணா ஆட்கள் உங்களைத் தேடி வந்து பிரச்சனை பண்ணி இருக்காங்க. உங்க நாய்கள் அவங்களை துவம்சம் பண்ணிடுச்சுங்க” என்றார்.

அதற்கு பதிலேதும் சொல்லாமல் விழிகளாலேயே நோட்டம் விட்டவன் மெல்ல தோட்டத்தின் பின்புறத்திற்கு சென்றான். அங்கு நாய்கள் அடைத்து வைக்கும் பட்டியில் அனைத்து நாய்களும் நின்று கொண்டிருந்தது. அவனைக் கண்டதும் உற்சாகமாக அனைத்தும் குலைக்க ஆரம்பித்தது. கார்த்திக்கோ அங்கிருந்த நிலைமையை கையில் எடுத்துக் கொண்டு தங்களின் ஆட்களை வைத்து நடக்க வேண்டியவற்றை ஏற்பாடு செய்து கொண்டிருந்தான்.

நாய்களின் அருகே சென்ற கேசவன் அவற்றை பாசத்துடன் தடவிக் கொடுக்க, அனைத்தும் வாலாட்டிக் கொண்டு அவன் தங்களை கொஞ்சுவானா என்கிற ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தன. அவற்றின் காதருகே குனிந்தவன் “தேங்க்ஸ் டா...உங்களை நம்பி தான் அவளை விட்டுட்டு போனேன். அதே மாதிரி காப்பாத்திட்டீங்க” என்றான் மெல்லிய குரலில்.

அவன் குனிந்து பேசவும் அனைத்தும் அவன் தோள் மீதும், மார் மீதும் காலை வைத்து கொஞ்சி தங்களின் நன்றியை தெரிவித்தது. தனது ஆளை கூப்பிட்டு “இவனுங்களை பத்திரமா பார்த்துக்கணும். கருணாவின் கண் இவனுங்க மேல தான் விழும். சாப்பாடு வைக்கிறதில் இருந்து ரொம்ப கவனமா இருக்கணும்” என்று கூறி விட்டு மெல்ல வீட்டின் உள்ளே நுழைந்தான்.

அனைவரும் வெளியில் இருக்க மெல்ல தனது அறை நோக்கி சென்றவன் அங்கிருந்த ஏசி ரிமோட்டால் கண்ணாடி அலமாரிக்கு பின்னே மறைந்திருந்த கதவை திறக்க, மெல்ல உள்ளே ஏட்டி பார்த்தான். அங்கு பூங்காவனத்தின் தோளின் மீது சாய்ந்து படுத்திருந்தவளின் உதடுகள் “பயமா இருக்கு! பயமா இருக்கு” என்று புலம்பிக் கொண்டிருந்தது. அவனை பார்த்ததும் தான் பூங்காவனத்தின் விழிகளில் ஒருவித நிம்மதி வந்தது.

நாவரண்டு போன நிலையில் “ஐயா! பாப்பாவுக்கு பயங்கர காய்ச்சல்” என்றார்.

அதைக் கேட்டதும் சட்டென்று எதையும் யோசிக்காமல் வேகமாக சென்று அவளை அப்படியே அலேக்காக தூக்கினான். உடலில் கை வைத்ததும் தான் தெரிந்தது. பயங்கரமாக கொதித்துக் கொண்டிருந்தது. வேக நடையுடன் சென்று தனது படுக்கையில் படுக்க வைத்து விட்டு, ஏசியை ஆன் செய்தவன் போனை எடுக்கலாம் என்று நகர முயற்ச்சித்தான்.

அப்போது அவளது கைகள் உயர்ந்து அவனது சட்டையின் அடிப்புறத்தை பற்றிக் கொள்ள, “என்னை விட்டு போகாதீங்க. எனக்கு பயமா இருக்கு” என்று அழ ஆரம்பித்தாள்.

இதை சற்றும் எதிர்பார்க்காதவன் திகைத்து நின்று விட, அவளோ சட்டையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு “போகாதீங்க! எனக்கு பயமா இருக்கு” என்று உளற ஆரம்பித்திருந்தாள்.

அவளது நிலையை புரிந்து கொண்ட பூங்காவனம் ஓடிச் சென்று அவனது போனை எடுத்துக் கொண்டு வந்து அவன் கையில் கொடுத்தார். அவள் அருகிலேயே நின்று டாக்டரை அழைத்துப் பேசியவன் உடனே வரும்படி கூறிவிட்டு வைத்தான்.

சற்று லேசாக நகர்ந்தாலே அவனது சட்டையை அழுத்தமாக பற்றிக் கொண்டாள். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போனவன் பூங்காவனத்திடம் “நீங்க வந்து அவ பக்கத்தில் உட்காருங்க” என்று கூறி மெல்ல அவளது கைகளை தனது சட்டையிலிருந்து விலக்கப் பார்த்தான்.

சட்டையிலிருந்து கைகள் விலகியதும் மெல்ல நகரத் தொடங்கியவனின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு “போகாதீங்க! போகாதீங்க” என்று எழுந்து அவன் முதுகில் அப்படியே சாய்ந்து விட்டாள்.

எத்தனையோ கொலைகளை சாதரணமாக செய்தவனுக்கு அந்த சூழலை சமாளிக்க தெரியாமல் திகைத்து நின்றான். அந்நேரம் அங்கு வந்த கார்த்தி அங்கிருந்த சூழலை கண்டு கேசவனின் முகத்தில் தெரிந்த உணர்வுகளை பார்த்து உள்ளுக்குள் எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

ஆண்கள் இருவருக்கும் என்ன செய்வதென்று புரியாமல் நிற்க, வயதில் மூத்தவரான பூங்காவனம் சூழ்நிலையைக் கையில் எடுத்துக் கொண்டு “ஐயா! அவங்க ரொம்ப பயந்து போயிருக்காங்க. அப்படியே திரும்பி அவங்களை படுக்க வச்சிட்டு பக்கத்துல உட்காருங்க. காய்ச்சல் வேற அதிகம் இருக்கிறதுனால நிதானமில்லாமல் நடந்துகிறாங்க” என்றார்.

அவர் சொன்னதும் சுதாரித்துக் கொண்டவன் மெல்ல, அவளின் கைகளைப் பற்றி படுக்கையில் படுக்க வைத்ததும், அவசரமாக அவனை இழுத்து அமர வைத்து அவன் மடியில் படுத்துக் கொண்டாள்.

அவளது உடலின் சூடு அவனது தொடையை தாக்க, இந்த செயலை எதிர்பாராமல் கார்த்தியை பார்த்து “என்னடா இது!” என்றான் எரிச்சலாக.

சிரிப்பை அடக்கிக் கொண்டு “பயத்தில் காய்ச்சல் அதிகமா இருக்கிறதால இப்படி இருக்காங்க கேசவா. காய்ச்சல் சரியானதும் நார்மல் ஆகிடுவாங்க” என்றான்.

“அதுவரைக்கும் நான் இப்படியே இருக்கனுமா?” என்றான் கடுப்பாக.

மெல்ல அவன் அருகே சென்ற கார்த்தி பூங்காவனத்துக்கு கேட்காத வகையில் “அவனவன் இப்படி சான்ஸ் கிடைக்காதான்னு ஏங்கிகிட்டு இருக்கான். நீ என்னடான்னா கடிச்சு வைக்கிற” என்றான் கிண்டலாக.

“இதென்னடா இம்சை! ஏற்கனவே இவளை வச்சு நம்மள தூக்க ப்ளான் பண்றானுங்க. இதுல இவ வேற”.

“விடு! விடு! காய்ச்சல் சரியானதும். யார் கண்ணிலும் படாம இவங்களை எங்கயாவாது அனுப்பி வச்சிடுவோம்”.

அவர்கள் மெல்லிய குரலில் வழக்கடித்துக் கொண்டிருக்க அவளோ அவனது மடியில் படுத்தபடியே “நானும் போக மாட்டேன். நீங்களும் என்னை விட்டு போக கூடாது. எனக்கு யாருமே இல்லை. நீங்க இருந்தா யாரும் என்னை எதுவும் செய்ய மாட்டாங்க” என்றாள் கண்களில் வழிந்த கண்ணீருடன்.

அவள் அப்படி பேசியதுமே இருவரும் ஒருவரை பார்த்துக் கொள்ள, கார்த்தியோ “இவங்க பேசுறதை பார்த்தா காய்ச்சலில் பேசுறது மாதிரி இல்லையே” என்றான் சந்தேகத்துடன்.

அப்போது டாக்டர் வந்துவிட, அவர் செக் செய்வதற்காக அவன் எழுந்து கொள்ள, அவளோ அவனது கைகளை விடாபிடியாக பிடித்துக் கொண்டு “போகாதீங்க! “ என்று அழ ஆரம்பித்தாள்.

அவளின் பயத்தை உணர்ந்த டாக்டர் “நீங்க அப்படியே இருங்க கேசவன். அவங்க நேத்து சம்பவத்தை பார்த்து ரொம்ப பயந்திருப்பாங்க” என்றவர் செக் செய்து விட்டு சில மாத்திரைகளை எழுதி கொடுத்தார்.

“பயத்தில் வந்த காய்ச்சல் தான். நான் கொடுத்த மருந்துகளை கொடுங்க. நாலு நாளில் எழுந்து உட்கார்ந்திருவாங்க” என்றார்.

கேசவனோ “அந்த நாலு நாளும் நான் இப்படியே இருக்கனுமா டாக்டர்?” என்றான் கடுப்பாக.

அவனது கேள்வியில் பட்டென்று இருவரும் சிரித்து விட, அவர்களை பார்த்து முறைத்தான்.

“நான் கொடுத்த மருந்துகள் நல்ல தூக்கத்தை கொடுக்கும். அதனால நீங்க இப்படியே உட்கார வேண்டிய அவசியமில்லை” என்றார்.

கார்த்தி அவரை அழைத்துக் கொண்டு வெளியே சென்றுவிட, பூங்காவனத்திடம் கஞ்சி வைத்து கொண்டு வருமாறு கூறிவிட்டு படுக்கையின் அருகே நாற்காலியை போட்டுக் கொண்டு அமர்ந்தான். அப்போதும் அவனது கைகள் அவளிடத்தில் தான்.

யோசனையுடன் அவளையே பார்த்துக் கொண்ட்டிருந்தவனின் மனது ‘இது நல்லதல்ல. இவள் குணமானதும் எங்காவாது அனுப்பி விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். நம்மை சுற்றி எந்நேரமும் கத்தி சுழன்று கொண்டிருக்க, இவளின் வாழ்கையை பணயம் வைக்க கூடாது என்று எண்ணினான். அதே சமயம் அவனது உள்மனம் அவளது அருகாமையை ரசித்துக் கொண்டிருந்தது. அதை அவன் உணரவில்லை. அப்படியே அவன் உணர்ந்தாலும் தன்னால் அவளுக்கு ஆபத்து ஏற்படுவதை விரும்பவில்லை.

அவர்களின் விருப்பம் இப்படி இருக்க, விதியின் விருப்பம் வேறாக இருக்குமோ?

***************************தொடரும்****************************
 
Jovi

New member
Jan 10, 2019
18
10
3

விதி இரண்டு பேரையும் சேர்க்கும்னா சூப்பர் தான்
 
Chitra Balaji

Member
Feb 5, 2020
57
34
18
Woooooow... Woooooow.... Super Super maa.... Semma semma episode.... Nalavelai avan room la oru secret room இருந்ததது naala thappichaanga..... Namba நாய் gal semma iruthanaiyum vidala vechi செஞ்சி டுட்சி..... அந்த மந்திரி கப்பல் kuda avan ஆளு vechi இருக்கான் போல.. ரிச்சி kita enna sonna கேசவன்.... அவன் plan panna maari லிங்கம் போய் senthudumaa...... Ava avana vida maatengira... அவன் மட்டும் தான் பாதுகாப்பா irupaan nu ninaikira but ivan avanala எங்கயாவது annuppi டனும் nu ninaikiraan avanuku எந்த நேரமும் enna வேணாலும் aagalamnu... Super Super maa
 
lakshmi

Active member
May 9, 2018
335
50
43
கப்பலில் இருப்பது அமைச்சரின் ஆட்களாா கேசவனுக்கு எப்படி தெரியாமல் இருக்கும்.