அத்தியாயம் - 22

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,592
1,191
113
அத்தியாயம் – 22

நான்கு நாட்கள் பேரமைதி. கேசவன் வெளியில் எங்கும் செல்லவில்லை. போன் தவிர, கார்த்திக்கிடம் பேசும் சில மணித்துணிகள் தவிர அந்த வீட்டிலேயே அடைந்து கிடந்தான். அவனது வாழ்நாளில் ஒரு கூரையின் கீழ் இத்தனை மணி நேரங்கள் இருந்ததே இல்லை. கார்திக்கிற்குமே அவன் ஓரிடத்திலேயே தங்கி இருப்பது அதிசயமாக இருந்தது.

அவள் உறங்கிக் கொண்டிருக்கும் அறையையே அவ்வவப்போது எட்டி பார்த்துவிட்டு அமைதியாக கடந்து விடுவான். மௌனம்! மௌனம்! மட்டுமே அவனது மொழியாக இருந்தது. எந்த நேரமும் அவனது சிந்தனை எதையோ நோக்கி ஓடிக் கொண்டிருந்தது.

அவனது எதிரிகளுக்கு அந்த மௌனமே திகிலை கொடுத்தது. உடனடியாக அவன் தனது எதிர்ப்பை தெரிவித்து விட்டால் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் நேரம் கடத்த கடத்த அவன் என்ன செய்ய போகிறானோ என்கிற பயமே அவர்களை விழுங்கியது.

டாக்டர் அவன் வீட்டிற்கு வந்து போவதும், மளிகை சாமான்கள் வருவதுமாக மட்டுமே அங்கு நடமாட்டம் தெரிந்தது. கண்காணித்து கொண்டிருந்தவர்களுக்கு அலுப்பு தட்டி போனது. என்ன நடக்கிறது இங்கே? என்ன மாதிரி சூழ்நிலையில் இவன் உள்ளே அமர்ந்து கொண்டு சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறானா? என்று கடுப்பாகினர்.

நான்கு நாட்களும் காய்ச்சலில் படுதிருந்தவளுக்கு தேவையானவற்றை பார்த்து பார்த்து செய்ய வேண்டும் என்று பூங்காவனத்திற்கு கட்டளை இட்டிருந்தான். மருந்தின் வீரியமும், உட்கொள்ளப்பட்ட உணவினாலும் நான்காவது நாள் காய்ச்சல் குறைந்து எழுந்தமர்ந்தாள் சக்தி.

சரியாக அந்நேரம் அவளின் அறை வாயிலில் வந்து நின்றான் கேசவன். கார்த்திக்கும் அவன் கூடவே வர, கண்விழித்தவளின் பார்வை கேசவனின் மீது படிந்தது. சிறிதும் கருவிழிகளை அசைக்காமல் அவனையே பார்த்தபடி எழுந்தமர்ந்தாள்.

அவனுக்கோ அவளது பார்வை சங்கடத்தை கொடுக்க, லேசாக தொண்டையை செருமியவன் “எப்படி இருக்கு?’ என்றான்.

ஒருவித அலைபுருதளுடன் அவனது பின்பக்கம் எட்டிப் பார்த்து விட்டு உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டவள் “அவனுங்க எல்லாம் யாரு? ஏன் உங்களை துரத்துறாங்க?” என்றாள்.

அவளது கேள்விக்கு பதிலளிக்காமல் “உடம்பு சரியாகிடுச்சா?” என்றான் அழுத்தமாக.

அவனது குரலில் தெரிந்த கடுமையில் சற்றே உடல் தூக்கிப் போட்டாலும் அவனை விடாது பார்த்தவள் “ம்ம்...நல்லா இருக்கேன்” என்றாள்.

கார்த்திக்கை திரும்பி பார்த்தவன் “நீயே சொல்லு” என்றான்.

“இங்கே பாருங்க! உங்களுக்கு இங்கே இருந்தா பாதுகாப்பில்லை. அதனால எங்களுக்கு தெரிந்த ஒருத்தர் வீட்டுக்கு அனுப்புறோம். நீங்க ரெடி ஆகிட்டீங்கன்னா கிளம்பிடலாம்”.

உடலில் வலுவில்லாட்டாலும் மெல்ல எழுந்து நின்றவள் “தேனுவை கூப்பிடுங்க அவளும் என் கூட வரட்டும்”.

அவளது பதிலில் திடுகிட்ட கார்த்திக் கேசவனை பார்த்து விட்டு “அவங்க வர முடியாது” என்றான்.

“இல்ல! தேனுவுக்கும் இங்கே பாதுகாப்பில்ல. அவளும் என்னோட வரணும்”.

அதுவரை இழுத்துப் பிடித்த கோபத்துடன் “அவ வர மாட்டா. நீ கிளம்பு” என்றான் அதட்டலாக.

அவனது அதட்டலில் கண்களில் மிரட்சியுடன் அவனை பார்த்து “நான் தேனு இல்லாம போக மாட்டேன்” என்றாள் அழுகுரலில்.

அவ்வளவு தான் மிகுந்த கோபத்துடன் “அறிவில்ல! செத்து போனவ எப்படி வருவா? ஏற்கனவே உன்னால நாலு நாள் வேஸ்ட். மரியாதையா கிளம்புறியா இல்லையா?”

அவளது கண்களின் ஓரம் தளும்பி நின்ற கண்ணீர் கன்னங்களில் வழிந்தோட “அவளுக்கு மட்டும் உங்க வீட்டில் இடம் கொடுத்தீங்க? என்னை அவளை விட்டு பிரிக்க பார்க்காதீங்க. நானும் இங்கேயே இருந்திடுறேனே?” என்றாள் கெஞ்சலாக.

அவளது பேச்சில் கேசவன், கார்த்தி இருவரும் திகைத்து விட்டனர்.

கேசவன் தன்னை அடக்கிக் கொண்டு “இங்கே பாரும்மா! உனக்கு இந்த பாதுகாப்பானதில்லை. நீ அமைதியா வாழ்வதற்கு ஒரு இடத்துக்கு கொண்டு விட சொல்றேன். அங்கே நிம்மதியா இருக்கலாம்”.

அவனை நன்றாக நிமிர்ந்து பார்த்தவள் “சரி நான் போறேன். ஆனா எங்கப்பா, தேனு, அப்பத்தா எல்லோரையும் வர சொல்லுங்க” என்றாள்.

அவ்வளவு தான் கடுப்பானவன் “அறிவில்லை!” என்று கையை ஓங்கிக் கொண்டு அவளை அடிக்கச் சென்றான். கார்த்திக் தான் பாய்ந்து அவன் கைகளைப் பிடித்து தடுத்து “என்னம்மா நீ? பேசாம கிளம்பு” என்றான் எரிச்சலாக.

“நான் இங்கிருந்து போக மாட்டேன்”

கார்த்திக்கை தள்ளி விட்டு அவளிடம் பாய்ந்தவன் “உன்னை கொன்னு போட்டுடுவாங்க” என்றான் ஆங்காரமாக.

“நாலு நாள் முன்னாடியும் அப்படித்தானே நடந்துச்சு. ஆனா நான் சாகலையே உயிரோட தானே இருக்கேன்”.

“நீ உயிரோட இருக்கிறது என்னால”

“அப்போ இனியும் உங்களோட பாதுகாப்பிலேயே இருந்துட்டு போறேன்”.

அவளது பதிலுக்கு பதில் பேச்சில் டென்ஷனாகி போனவன் கார்த்திக்கிடம் “பொண்ணாச்சேன்னு பார்க்கிறேன். ஓங்கி ஒன்னு விட்டா வாசலில் போய் விழுந்துடுவா. ஒழுங்கா கிளம்புகிற வழியை பார்க்க சொல்லு”.

இருவருக்கும் இடையே சிக்கிக் கொண்ட கார்த்திக்கின் நிலைமையோ கவலைக்கிடம் அவளிடம் “கிளம்பு மா...அவனுக்கு கோவம் வந்தா தாங்காது” என்று எச்சரித்து பார்த்தான்.

வரிசையாக இழப்புகளையும், வாழக்கையின் மறுபக்கத்தையும் சந்தித்து கொண்டிருந்த சக்தியின் இயல்புகள் சற்றே மாறி போயிருந்தனர். அதன் காரணமாகவே அத்தனை பிடிவாதம் அவள் மனதில். அதோடு வெளியில் சென்றால் தனக்கு நிச்சயமாக பாதுக்காப்பான வாழ்க்கையில்லை என்பதும் தெரிந்து போனது. அதோடு தேனுவின் அங்கு புதைக்கப்பட்டதிளிருந்து அவளது மனம் வேறு எங்கும் செல்லக் கூடாது என்று அழுத்தமாக உணர்ந்தியது. அதற்கு மேலும், கேசவன் வலுவானவன். அவன் மூலமாக அண்ணனைத் தேடி கண்டு பிடித்து விடலாம் என்கிற எண்ணமும் சேர்ந்து விட பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தாள்.

“முடியாது! நான் எங்கேயும் போக மாட்டேன்”.

படாரென்று கார்த்திக்கை தள்ளிவிட்டு கையை ஓங்கிக் கொண்டு போகவும் அவனது வேகத்தைக் கண்டு மிரண்டு போனவள் மயங்கி அவன் மீதே சாய்ந்தாள். இதை சற்றும் எதிர்பார்க்காதவன் பதறி போய் அவளை அவசரமாக தன்னிடமிருந்து தள்ள, அருகே இருந்த கட்டிலில் மடாரென்று சாய்ந்தாள்.

நடந்து விட்ட குழப்பத்தில் கார்ர்த்திக் பயந்து போய் “என்ன கேசவா இது?”

அவனோ “சை! என்னடா இவ? வாய் மட்டும் நல்லா திருவான்மியுருக்கும் ஆவடிக்கும் போகுது. கையை தூக்கினவுடனே இப்படி விழறா” என்றான் எரிச்சலாக.

“நம்ம ஆளுங்களே நீ கையை தூக்கினவுடனே ஓரடி தள்ளிப் போவானுங்க. இது சின்ன பொண்ணு பயப்படாதா?”

யோசனையுடன் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு “கார்த்தி! இவளை தூக்கிட்டு போய் காரில் படுக்க வை. மயக்கம் தெளிவதற்குள்ள அங்கே கொண்டு போயிடுவோம். இல்லேன்னா ‘னை நைன்னு’ படுத்துவா”.

அதைக் கேட்டு அங்கிருந்த சூழ்நிலையை மறந்து சிரிக்க ஆரம்பித்து விட்டான். அவனால் பேசக் கூட முடியவில்லை.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,592
1,191
113
அதைக் கண்டு ஓங்கி முதுகில் அடி ஒன்று வைத்து “டேய்! எதுக்கு இப்போ சிரிக்கிற? நான் சொன்னதை செய்!”.

“ஆதி கேசவன்னா சென்னையே அலறும். ஆனா அந்த கேசவனையே அலற வைத்த பெருமை இந்த பொண்ணுக்கு” என்றான் சிரிப்பை அடக்கியபடி.

கேசவனுக்கும் அந்த நிலையில் சிரிப்பு வந்துவிட்டது.

“ஆமாம்டா! இருக்கிறது ஆழாக்கு சைஸ் பேச்சு மட்டும் வாய் கிழியுது. சரி! சரி! நேரத்தை கடத்தாம அவளை தூக்கிட்டு போய் வண்டியில் போடு” என்று அவன் முடிக்கும் முன் மெல்ல அசைந்து நெளிந்து எழுந்தமர்ந்தாள்.

இருவரும் ஒருவரை ஆயாசத்துடன் பார்த்துக் கொண்டனர். அவளோ சற்றே பயத்துடன் கேசவனை பார்த்தாலும் அவனை கண்டு கொள்ளாமல் கார்த்திக்கிடம் “அண்ணா! நான் கையில வச்சிருந்த பாக் உங்க கிட்ட தானே இருக்கு” என்றாள் எதுவும் நடக்காத மாதிரி.

“ஆமாம்மா...அதோ உன் கட்டிலுக்கு பக்கத்தில் தான் இருக்கு பாரு”.

மெல்ல திரும்பி ட்ராவல் பாகை விட தனது சற்று சிறிய பாக் இருப்பதை பார்த்துவிட்டு “அண்ணா! என் டிரஸ் பாக் எங்கேயோ போச்சு. நான் போட்டுக்க துணிமணி இல்ல. ஏற்பாடு பண்ணி தர முடியுமா?”

அவர்கள் இருவரும் பேசுவதை பார்த்து பல்லைக் கடித்துக் கொண்ட கேசவன் “அதெல்லாம் போகிற இடத்தில் ஏற்பாடு செஞ்சுடுவாங்க. நீ முதல்ல கிளம்பு”.

அவனை நிமிர்ந்து பார்த்தவள் கார்த்திக்கிடம் “அண்ணா! இவருக்கு கத்தவும், அடிக்க வரவும் தான் தெரியுமா? நல்லவிதமா பேச தெரியாதா?”

“ஏய்!” என்று மீண்டும் கத்த, அவளோ அழுகையுடன் “இப்படி கத்தினா எனக்கு சீக்கிரம் காது செவிடா போயிடும். அப்புறம் அதுக்கும் சேர்த்து நீங்க தான் செலவு பண்ணனும்” என்றாள்.

அவள் சொன்னதில் என்ன செய்வதென்று புரியாமல் “என்னடா இவ? என்னால முடியல கார்த்தி. நீயே பேசி கிளப்பிவிடு” என்று வேகமாக அங்கிருந்து வெளியேறினான்.

அறையை விட்டு செல்பவனையே பார்த்துக் கொண்டிருந்தவளை கார்த்தியின் குரல் கலைத்தது.

“என்னை அண்ணன்னு இதுவரை யாரும் கூப்பிட்டதில்லைமா. அந்தவொரு பொறுப்பில் சொல்றேன். இது நீயிருக்க வேண்டிய இடமில்லை. நானும், கேசவனும் நல்ல தொழில் பண்றவங்க இல்லை. எங்களை சுற்றி எந்நேரமும் கத்தியும், ரத்தமுமா தான் இருக்கும். இந்த நிமிஷம் வரை எங்களுக்கு யாருமில்லை. அதனால எந்த பிரச்சனை வந்தாலும் தைரியமா முடிவெடுத்து போராடுவோம். இப்போ நீ இங்கிருக்கிற நாலு நாளில், கேசவன் எந்த பிரச்னையும் பண்ணாம அமைதியா இருக்கான். அவன் இப்படியே இருந்தா அவனோட எதிரிகளுக்கு கொண்டாட்டமா ஆகிடும். அதோட இது உனக்கான இடமில்லை. உன்னை நல்லவொரு இடத்தில் சேர்க்க தான் நானும் கேசவனும் முயற்சி பண்றோம். அதுக்கு ஒத்துழைப்பு கொடுத்து இப்போ கிளம்புமா”.

சிறிது நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் “எனக்கு பசிக்குது அண்ணா. சாப்பிட ஏதாவது கொடுங்க. நான் பாட்டுக்கு ஒரு ஓரமா இருந்துக்கிறேன். அவர் கண்ணுல கூட படமாட்டேன்”.

“ஷ்...இவ்வளவு நேரம் என்ன சொன்னேன். இல்லம்மா இது சரி வராது. இனியும் நீ கிளம்பலேன்னா அவனே வந்து தரதரன்னு இழுத்திட்டு போயிடுவான்”.

“அண்ணா! என் மனசுக்கு அவரோட இருந்தா தான் பாதுகாப்பு என்று தோணுது. என் வாழ்க்கை ஊரில் இருந்தப்ப அமைதியான நீரோடை மாதிரி இருந்தது. என்னைக்கு எங்க அண்ணன் சென்னைக்கு வந்தாங்களோ அப்போதிருந்து ராட்டினத்தில் ஏறுன மாதிரி ஆகிடுச்சு. அடுத்தடுத்து எல்லோரையும் இழந்தேன். எனக்குன்னு இருந்த பிரெண்ட் தேனுவையும் கண்முன்னே பறி கொடுத்தேன். இப்போ போகிறதுக்கு இடமில்லாம அநாதரவா நிற்கிறேன். எனக்கு உங்க ரெண்டு பேரையும் பார்த்தா கெட்டவங்களா தெரியல. இப்போ வாழ்க்கையில் எனக்கு தெரிஞ்ச ஒரே பிடிப்பு நீங்க ரெண்டு பேரும் தான். தயவு செய்து என்னை உங்க பாதுகாப்பிலேயே வைத்துகோங்க”.

அவள் அண்ணனைப் பற்றி பேசியதுமே சுதாரித்துக் கொண்ட கார்த்திக் “உனக்கு இங்கே மட்டும் தான் பாதுகாப்புன்னு நினைச்சு இங்கேயே தங்கலாம் என்று நினைக்கிற. இதை விட பாதுகாப்பான இடத்தை தான் நாங்க ரெண்டு பேரும் உனக்கு ஏற்பாடு செய்து தரோம். அங்கே உனக்கு பழைய அமைதியான வாழ்க்கை கிடைக்கும்”.

“நீங்க சொல்றது எல்லாம் சரி தான். ஆனா நீங்க ரெண்டு பேரும் இங்கே தானே இருக்கீங்க...அங்கே வர இருக்க மாட்டீங்களே. எனக்கு உங்க கூடவே இருக்கணும்னு தான் எண்ணம். தயவு செய்து என்னை இதுக்கு மேல போ போன்னு சொல்லாதீங்க”.

அவளை ஆழ்ந்து பார்த்துவிட்டு ஹாலில் இறுகி போய் நின்றவனையும் ஒரு பார்வை பார்த்தவன் “நீ இன்னைக்கு எடுக்கிற முடிவு நாளைக்கே தப்பாக தெரியலாம். இங்கே வந்து தங்கிட்டமேன்னு வருத்தமும் ஏற்படலாம். அதெல்லாம் வேண்டாம்னு தான் சொல்றேன்”.

வயிற்றை அழுத்தமாக பிடித்துக் கொண்டு “ரொம்ப பசிக்குது அண்ணா. நிச்சயமா இங்கே தங்குவதை ஒருகாலும் தப்புன்னு நினைக்கமாட்டேன்”.

அவர்கள் பேசுவதையே கவனித்துக் கொண்டிருந்தவன் “பூங்காவனம்! அவளுக்கு சாப்பிட எடுத்திட்டு போய் கொடு” என்றான் சத்தமாக.

நீண்ட பெருமூச்சுடன் கார்த்திக் அறையை விட்டு வெளியேறும் நேரம் “அவர் கிட்ட இருக்கிற இந்த அக்கறை தாண்ணே என்னை இங்கே நிறுத்தி வைக்குது. நீங்க என்னவோ தப்பான தொழில் பண்றேன்னு சொல்றீங்க. ஆனா இந்த நாலு நாளும் அரைகுறை மயக்கத்தில் இருந்த எனக்கே தெரிஞ்சுது அவர் அப்பப்போ எனக்கு தெரியாமல் வந்து வந்து பார்த்திட்டு போயிட்டு இருந்தார்ன்னு. அவர் தப்பானவரா எனக்கு எந்த இடத்திலேயும் தெரியல. நான் முடிவே பண்ணிட்டேன். என்ன ஆனாலும் உங்க ரெண்டு பேரையும் விட்டு எங்கேயும் போக மாட்டேன்”.

கேசவனின் அருகே சென்றவன் “எனக்கு இது சரியாகப்படல கேசவா. அவங்க அண்ணனை நீ தான் கொன்னேன்னு தெரியும் போது, எல்லாமே தப்பா போகும்”.

தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றவன் “அப்போ பார்த்துக்கலாம் கார்த்தி. அந்த ஈஸ்வரன் இந்த கேசவனுக்கு இது தான்னு முடிவு பண்ணிட்டான். நடப்பது நடக்கட்டும். நாம அமைச்சருக்கு கச்சேரியை ஆரம்பிப்போம்” என்று கூறி நகர்ந்தான்.

கார்த்தியோ விழிகளை விரித்து அவன் என்ன சொல்லிவிட்டு செல்கிறான் என்று அயர்ந்து போய் நின்றான்.

***********************************தொடரும்*******************************
 

lakshmi

Active member
May 9, 2018
335
50
43
சக்தி கேசவனுக்கு தான் என்று கடவுள் முடிவு செய்து விட்டாரோ.
 

Jovi

New member
Jan 10, 2019
18
10
3
சூப்பராக போகுது கா
ஆனால் சக்திக்கு உண்மை தெரியும் போது 😱😱
பாவம் இரண்டு பேரும்
 

Chitra Balaji

Member
Feb 5, 2020
57
34
18
Wooooooooow.... Super Super maa.... Semma semma episode..... Semma strong ah anga தான் இருப்பேன் nu sollitaa.. கேசவன் yum ava irukkatum nu sollitaan....