அத்தியாயம் -23

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,592
1,191
113
அத்தியாயம் - 23

தனது கோட்டையான துறைமுகத்தின் அருகே இருந்த கோடவுனில் அடியாட்களின் முன்பு முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று ஒவ்வொருவரையும் கூரிய பார்வையால் அளந்தபடி நின்றிருந்தான் ஆதி கேசவன். அவன் அருகே கார்த்திக்கும் ஆட்களின் முகபாவனைகளை ஆராய்ந்தபடி நின்றிருந்தான்.

“முழுசாக நான்கு நாட்கள் எதுவும் செய்யாம அமைதியா இருந்தது உங்களுக்கு கேள்வியை கொடுத்திருக்கும். இந்த சென்னையில் கேசவனின் ஆட்கள் மீதோ, அவனது பொருட்கள் மீதோ இதுவரை கையை வைத்ததில்ல. ஆனா இப்போ நடந்தது..” என்று கூறிவிட்டு ஒவ்வொருவரின் முகத்தையும் பார்த்தான்.

“நம்ம இடத்துக்கே வர தைரியம் கருணாவுக்கு எப்படி வந்துது தல? நாலு நாள் ஏன் சும்மா இருந்தீங்க?”

முன்னும் பின்னும் நடந்தவன் “நம்மோட கோபத்தை சட்டென்று காட்டிட்டா அதனோட பலன் சரியாக அவனுக்கு போய் சேராது. இந்த நான்கு நாட்களும் நாம என்ன செய்யப் போறோமோன்னு பயந்து பயந்து நேரத்தை கடத்தி இருப்பான். அதோட நாம அடிக்கிற அடி இனி எவனும் இதை செய்ய நினைக்க கூடாது. அதற்கு எனக்கு தேவைப்பட்டது நான்கு நாட்கள்”.

அவ்வளவு தான் அத்தனை பேரும் “என்ன செய்யணும் சொல்லுங்க” என்றனர்.

மெல்ல திரும்பி கார்த்திக்கை பார்க்க, அவன் சற்று முன்னே வந்து தங்களின் ப்ளான் அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தான். அதைக் கேட்டதும் அங்கே ஆரவாரத்துடன் கூடிய வெறி இருந்தது அவர்கள் குரலில்.

“ஒரு விஷயத்தை நல்லா நினைவில் வைக்கணும். கருணா ஆட்களைத் தவிர வேற யார் மீதும் கையை வைக்க கூடாது”.

கூட்டத்தில் நின்றிருந்தவர்களில் ஒருவன் முன்னே வந்து “கருணான்னு ஒருத்தன் இருந்தான் என்பதை இந்த ஊர் மறக்கணும். அப்படி ஒருத்தன் வாழந்ததற்க்கான அடையாளம் இல்லாமல் ஆக்கப்படுவான்” என்றான் கண்களில் வெறியுடன்.

இரு கைகளையும் கட்டிக் கொண்டு அவர்களைப் பார்த்து “எந்த இடத்திலேயும் தடயங்களை விட்டு வைக்க கூடாது. செஞ்சது நாம தான்னு எந்த சந்தேகமும் வரக் கூடாது”.

அவர்கள் அனைவரும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ள, சற்று நேரம் அமைதியாக இருந்த கார்த்தி “நாம இங்கே கூடி இருக்கிறது இந்நேரம் அவங்களுக்கு நியுஸ் போயிருக்கும். நம்ம தாக்குதலை எதிர்பார்த்திருப்பாங்க. இப்போ எல்லோரும் இங்கிருந்து கலைந்து போய் அவங்க அவங்க வேலையை பாருங்க. மதியத்திற்கு மேல் உங்களுக்கான சிக்னல் வரும்”.

கார்த்திக்கின் குரலில் தெரிந்த கம்பீரத்தில், அனைவரும் எதுவும் பேசாமல் அமைதியாக தலையசைத்து விட்டு அங்கிருந்து வெளியேறினர். அவர்கள் அனைவரும் சென்றதும் கேசவனிடம் திரும்பியவன் “என்ன செய்யப் போற கேசவா?”

அவனை பார்த்து லேசான புன்னகையுடன் “அது தான் சொன்னேனே...எல்லோரிடமும் சொன்னது தான்”.

மறுப்பாக தலையசைத்து “இல்ல! நீ வேற ஏதோ ப்ளான் பண்ணி இருக்க? என்னன்னு சொல்லு?”

“மும்பையிலிருந்து சந்தா வந்திருக்கான்”.

“வாட்! சந்தாவா” என்றவனது விழிகள் தெறித்து விழும் போல இருந்தது.

“ம்ம்...நம்ம வீட்டில் ஆள் வந்தது அவனுக்கு நியுஸ் போயிருக்கு. ரெண்டு நாள் முன்னாடி போன் பண்ணினான்”.

“அவன் ரொம்ப டேஞ்சரான ஆள் ஆச்சே”.

“அவனோட எதிரிக்கு மோசமானவன். எனக்கு அவன் நண்பன்”.

“அவன் எதுக்கு வந்திருக்கான்?”

மெல்லிய சிரிப்புடன் “கருணா கிட்ட ஆடி பார்க்கணுமாம்?”.

“அவன் தான் முடிக்க போறானா?”

“ம்ம்...இது எனக்காக அவன் நடத்தப் போகிற விளையாட்டு”.

“நம்ம ஆட்கள் இதுக்கு ஒத்துக்க மாட்டாங்களே கேசவா”.

“அவங்களுக்கு வேற வேலை வச்சிருக்கேன் கார்த்தி. நம்ம வீட்டு பாதுக்காப்புக்கு பாதி பேரை விடு. மீதி உள்ளவங்களை அமைச்சர் வீட்டை, அவர் பாக்டரியை கண்காணிக்க ஏற்பாடு செய்”.

“ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா மெச்செஜ் போகட்டும். இது கேசவனுடைய முடிவு என்று சொல்லி அனுப்பு. அத்தனை பேரும் அமைதியா சொன்னதை செய்வாங்க”.

சற்றே யோசனையுடன் “சந்தா உள்ளே வருவது சரி தானா கேசவா?”

அவன் தோள்களில் கையைப் போட்டுக் கொண்ட கேசவன் “எனக்கும் சந்தாவிற்கும் உள்ள நட்பு நீ அறியாதது. இது நான் கேட்டு வந்திருக்கும் உதவி இல்லை. அதுமட்டுமில்ல! அமைச்சரின் நடவடிக்கை பற்றி அவனுக்கும் தெரிஞ்சிருக்கு. ஆனால் அமைச்சருக்கான பாடத்தை நான் தான் தருவேன். அவனோட ஆட்கள் எல்லாம் உள்ளே இறங்கியாச்சு. இவனுங்க என்னை கண்காணிப்பதில் இருக்கானுங்க. சந்தா இறங்குவான் என்று எதிர்பார்க்க மாட்டாங்க” என்றான் ஒருவித நக்கல் சிரிப்புடன்.

அந்நேரம் சரியாக அலைப்பேசி அழைக்க “சொல்லுங்க அமைச்சரே” என்றான் கேலி குரலில்.

“லிங்கங்கள் எங்கே கேசவா?”

“அது தான் கப்பலில் ஏற்றி அனுப்பியாச்சே. இந்நேரம் போய் இறங்கி இருக்குமே?”

“மரியாதையா சொல்லு லிங்கங்கள் எங்கே?”

“என்ன அமைச்சரே இப்படி கேட்குறீங்க? ஒரு நிமிஷம் இருங்க ரிச்சிக்கு கால் பண்ணி கேட்டுட்டு வரேன்”.

“கேசவா! சும்மா நடிக்காதே! ரிச்சியை தூக்கியாச்சுன்னு உனக்கு தெரியும்”.

“என்ன? ரிச்சியை தூக்கியாச்சா? யாரு? என்றான் உறுமலாக.

தானே வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட அமைச்சரோ “அதை விடு கேசவா...நீ அனுப்பிய பெட்டியில் லிங்கங்கள் இல்லை. எங்கே வச்சிருக்க? என்னை ஏமாற்றணும்னு நினைக்காதே. கருணா அவன் ஆட்களை தூக்கின கோபத்தில் உன்னை போட்டுத் தள்ள ரெடியா இருக்கான். நான் ம்..னு சொன்னா போதும். அதனால மரியாதையா லிங்கங்கள் எங்கேன்னு சொல்லிடு”.

“லிங்கங்கள் என் கிட்ட தான் இருக்கு. அது மட்டுமில்ல ரிச்சியும் என் கிட்ட தான் இருக்கான். உன்னுடைய ஆட்கள்னு நினைத்து நீ கப்பலில் அனுப்பிய ஆட்கள் எல்லாம் என் ஆட்கள். அப்புறம் என்ன சொன்ன? கருணா காத்திருக்கானா? அந்த கருணா மட்டுமில்ல இந்த ஆதி கேசவன் மேல அந்த ஈஸ்வரனே நினைத்தாலும் கை வைக்க முடியாது. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ” என்றவன் அலைபேசியை அனைத்து கார்த்தியிடம் தூக்கி எறிந்தான்.

அடுத்த நிமிடம் வேக நடையுடன் அங்கிருந்து வெளியேற, அவன் பின்னே ஓட்டமும் நடையுமாக சென்ற கார்த்தி ஓடிச் சென்று ஜீப்பில் அமர்ந்து கொண்டான். அடுத்த நிமிடம் ஜீப் அவர்களின் வீட்டை நோக்கிப் பறந்தது. அந்த செய்தியும், அமைச்சருக்கு அனுப்பப்பட்டது. அவர்களது ஜீப் வீட்டின் வாயிலை நெருங்கும் நேரம், கருணாவின் வீட்டை சூறையாட சந்தாவின் ஆட்கள் இறங்கி இருந்தார்கள்.

ஒரே நேரத்தில் அவனது அனைத்து இடங்களிலும் தாக்குதல் நடைபெற ஆரம்பித்திருந்தது. கருணாவின் ஆட்களுக்கு அவர்கள் யாரென்றே தெரியவில்லை. கேசவனின் ஆட்களாக இருக்குமோ என்கிற சந்தேகத்துடன் இருந்தவர்கள், அவர்களின் உருவமும், தோற்றமும் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதை எடுத்துரைத்தது.

தனது பாக்டரி அலுவலகத்தில் இருந்த கருணாவிற்கு செய்தி அனுப்பட, அதே நேரம் அங்கேயும் ஆட்கள் நுழைய ஆரம்பித்திருந்தனர். கருணாவின் ஆட்கள் பின்வழியாக கருணாவை அங்கிருந்து வெளியே கொண்டு சென்றனர். கருணாவின் கார் அங்கு கொண்டு வரப்பட்டு அவன் அதில் எற்றபட்டான்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,592
1,191
113
“டேய்! வந்தவனுங்களை பார்த்தா கேசவன் ஆளுங்களை போல தெரியல. இது ஏற்கனவே நாம இழுத்து வச்சிருக்கிற வேற பிரச்சனைன்னு நினைக்கிறேன். ஒருத்தன் விடாம முடிச்சிடுங்க” என்றபடி காரின் உள்ளே சாய்ந்தமர்ந்தான்.

கார் அங்கிருந்து நகரவும் சந்தாவின் ஆட்கள் அங்கே வந்தடையவும் சரியாக இருந்தது. மிகப் பெரிய கலவரம் அங்கு மூண்டது. கருணாவின் ஆட்களைப் போல ஐந்து பங்கு இருந்த ஒவ்வொருவனும் அசால்டாக அவர்களை அடித்து வீழ்த்தினார்கள்.

அதே சமயம் காரில் சென்று கொண்டிருந்த கருணா பாதையை கவனித்து விட்டு “இந்த பாதையில் எங்கே போற?” என்றான் மிரட்டலாக.

பாண் பராக் பதிந்த கறைகளுடன் இருந்த சந்தா மெல்ல திரும்பி கேவலாமான ஒரு சிரிப்பை இதழில் படர விட்டு “நீ தான் கருணாவா?” என்றான்.

அவனை யாரென்று அறியாத கருணா “டேய்! நீ யார்? என் கார் உனக்கு எப்படி கிடைச்சுது? மரியாதையா நான் சொல்கிற பாதையில் போ” என்று மிரட்டினான்.

சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் “பேவகூப்! நான் யாருன்னு தெரியாம இத்தனை நாள் தொழில் பண்றியா? ம..த..சோ...” என்று திட்டினான்.

“ஏய்! யார் நீ” என்று கேட்டு அவன் கழுத்தில் கை வைக்க, அடுத்த நிமிடம் பின் சீட்டில் தலைகுப்புற கிடந்தான்.

“இந்த சந்தா மேல கை வைத்த ஒருவனும் பிழைத்தா சரித்திரம் இல்ல” என்று சொன்னதை கேட்டதும் கருணாவின் உடல் நடுங்க ஆரம்பித்தது.

மனமோ ‘இவன் சந்தாவா? இவன் ஏன் நம்மை கடத்தி செல்கிறான்? மும்பையில் இருப்பவன் தன்னுடைய இடங்களை எதற்கு நாசம் பண்ண வேண்டும்?’ என்று எண்ணியவன் மெல்ல எழுந்து “நீ எதுக்கு என் இடங்களை குறி வைக்கிற?”.

அவனை திரும்பியும் பாராது “சந்தா பாய் கிட்டேயே கேள்வி கேட்பியா?” என்று ஓங்கி அவன் மூக்கில் குத்தினான். அதில் மூக்குடைந்து ரத்தம் ஒழுக வலியுடன் நிமிர்ந்து அவனை பார்த்தான்.

எதுவும் பேசாமல் கார் துறைமுகம் நோக்கி சென்றது. எந்தவித தடங்கலுமின்றி துறைமுகத்தில் நுழைந்த கார் நிறுத்தப்பட்டு, கருணாவை காரிலிருந்து தரதரவென்று இழுத்துச் சென்ற சந்தா, நின்று கொண்டிருந்த போட் ஒன்றில் கருணாவை ஏற்றி தானும் ஏறினான்.

அவர்கள் இறங்கியதுமே கருணாவின் கார் அங்கிருந்து அகற்றப்பட்டது. போட்டும் அடுத்த நிமிடம் படு வேகத்துடன் கடலுக்குள் சென்றது. நடுகடல் செல்லும் வரை அமைதியாக இருந்தவன், தனது வழக்கமான பாணியில் கருணாவை துன்புறுத்த ஆரம்பித்தான். தான் எதற்காக துன்புறுத்தபடுகிறோம் என்பதை அறியாத கருணா “டேய்! நீ எதுக்கு என்னை ...”

வாயிலிருந்து பாண் பராக்குடன் சேர்ந்த எச்சில் வழிய “கேசவன்!” என்கிற ஒற்றை வார்த்தையுடன் முடித்துக் கொண்டான்.

அதைக் கேட்டதுமே அந்த நிமிடமே உயிர் உறைந்து போனது கருணாவிற்கு.

அடுத்த நிமிடம் அவனது கை, கால்கள் எல்லாம் துண்டாடப்பட்டது. அதன் பின் சந்தா ஆடிய ஆட்டத்தை சொல்லி அடக்க முடியாது. மொத்தமாக கருணாவை முடித்து போட்டிலிருந்து அள்ளி கடலுக்கு வீசி விட்டு கேசவனை அழைத்தான்.

அந்த நேரம் கேசவனோ சக்தியை தேடி வீடு முழுவதும் சுற்றிக் கொண்டிருந்தான். வீட்டில் எங்கும் அவள் கண்ணில்படவில்லை. எங்கே சென்றாள்? என்று உள்ளுக்குள் பயம் எழுந்தாலும், நிச்சயமாக இங்கிருந்து வெளியேறி இருக்க மாட்டாள் என்கிற எண்ணத்தில் ஒவ்வொரு இடமாக தேடிக் கொண்டு தோட்டத்திற்கு சென்றான்.

அங்கு ஒரு மரத்தடியில் சோகமே உருவாக இரு கைகளையும் தாவங்கட்டையில் தாங்கியபடி அமர்ந்திருந்தாள்.

அவளது மனமோ நிலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. அவனிடம் கெஞ்சி அங்கே இருப்பதற்கு அனுமதி வாங்கினாலும், எத்தனை நாட்கள் இப்படி ஒரு கூட்டத்தின் நடுவே இருப்பது? தனக்கென்று ஒருவரும் இல்லாமல் போனதை எண்ணி மனம் நொறுங்கி போய் அமர்ந்திருந்தாள். தான் வாழ்ந்த கிராமத்திற்கே சென்றால், மீண்டும் அந்த பைத்தியகாரனுக்கே திருமணம் செய்து வைத்து விடவும் வாய்ப்புண்டு என்கிற பயமும் எழுந்தது.

தனது வாழ்க்கையே கேள்விக்குறியாகி போனதை எண்ணி அமர்ந்திருந்தவளை கேசவனின் அலைப்பேசி அழைப்பு கலைத்தது. அவசரமாக திரும்பி பார்க்க, அங்கே அவன் அலைப்பேசியில் பேசிக் கொண்டே சென்று கொண்டிருந்தான். அவானது முதுகையே பார்த்துக் கொண்டிருந்தவளின் மனம் அவனை முழு மனதுடன் நம்ப சொன்னது.

மெல்ல எழுந்து ஹாலுக்கு செல்லவும், அங்கே கார்த்தி நின்றிருந்தான். அவனை பார்த்ததும் “அண்ணா!” என்றழைத்தாள்.

வேகமாக அவள் அருகில் வந்தவன் “என்னம்மா?”

“எனக்கு இங்கே ஏதாவது வேலை கொடுங்கண்ணா. சமைக்கலாம்னு சமையலறை பக்கம் போனா, அங்கே சமைக்கிற அளவை பார்த்து பயந்து போய் வந்துட்டேன். வேற என்ன வேலை செய்யுறதுன்னு தெரியல” என்றாள் மெல்லிய குரலில்.

உதட்டில் எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு “அங்கே உட்கார்ந்து பேசிகிட்டு இருக்கானே அந்த அண்ணன் கிட்ட போய் கேளுமா” என்றான் குறும்பாக.

கேசவனும் போனில் பேசிக் கொண்டிருந்தாலும், கார்த்தி பேசுவதையும் அரைகுறையாக கேட்டுக் கொண்டு தான் இருந்தான்.

அவன் அப்படி சொன்னதும் “ஹான்! அவங்க கிட்டேயா? அப்புறம் என்ன சொன்னீங்க? நீங்க தான் அண்ணன். அவங்க இல்ல” என்றாள் உதட்டை கோணி.

கார்த்திக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை “ஏன்?” என்றான்.

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் “அது அப்படித்தான்” என்றவளின் பார்வை போன் பேசிக் கொண்டிருந்தவனின் மீது படிந்து விலகியது.

“சும்மா நீயே போய் கேளு சக்தி” என்று உசுப்பேத்தினான்.

“நானா?”

“ஆமாம்! உனக்கு வேணும்னா நீ தான் கேட்கணும்”.

சற்றே மிரண்ட விழிகளுடன் “அவங்க கத்தி கத்தி பேசுவாங்க. அடிக்க வருவாங்களே” என்றாள்.

அந்நேரம் போனை அனைத்தவனுக்கு அவள் சொன்னது காதில் விழ, மெல்லிய சிரிப்பு இதழோரம் வந்தமர்ந்து கொண்டது.

கார்த்தியும் சிரிப்புடன் “அதெல்லாம் இப்போ கத்த மாட்டான். நீ போய் கேளு” என்றான்.

கார்த்தியை பார்த்துக் கொண்டே மெல்ல அடியெடுத்து வைத்து அவன் அருகே சென்றாள். கேசவனும் அவள் வரட்டும் என்று எங்கோ பார்த்தபடி காத்திருந்தான்.

அவன் முன்னே சென்று நின்ற பின்னும் அவன் தன்னை பார்க்காமல் எங்கோ பார்த்துக் கொண்டிருக்க, அவனை எப்படி அழைப்பது என்று தெரியாமல் கார்த்திக்கை பார்த்தாள்.

அவனோ வேறுபக்கம் திருப்பிக் கொண்டான்.

சற்று நேரம் பொம்மையை போல நின்றவள் லேசாக தொண்டையை செருமி, ‘ஏங்க” என்று காற்றுக்கு கூட கேட்காவண்ணம் அழைத்தாள்.

நடக்கும் நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்கிற்கோ அந்த நிமிடமே வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க வேண்டும் போலிருந்தது. கேசவனோ அவள் பக்கம் திரும்பாமலே அமர்ந்திருக்க, என்ன செய்வது என்று தெரியாமல் இருமினாள்.

அந்த சத்தத்தில் சட்டென்று அவன் திரும்பி எழவும், பயந்து போனவள் “ஐயோ! அம்மா!” என்று ஓரடி பின்னே சென்றாள்.

அவளின் பயத்தையும், விழிகளில் தெரிந்த மிரட்சியையும் தன்னையும் மீறி ரசித்தவன் தனது கணீர் குரலில் “என்ன வேணும்” என்றான்.

அந்தக் குரலை கேட்டதுமே உடல் ஒரு நிமிடம் தூக்கிப் போட “எனக்கு..என..க்கு...ஏதாவது வேலை வேணும்” என்றாள் மெல்லிய குரலில் தலையை குனிந்தபடி.

ஒரு நிமிடம் அவளையே ஆழ்ந்து பார்த்தவன் “இங்கே இருக்கிற சோபாவை எல்லாம் நகர்த்தி, மாத்தி போடு. நீ மட்டும் தான் செய்யணும்” என்று கூறிவிட்டு விறுவிறுவென்று சென்று விட்டான்.

அவன் சென்றதும் சற்று நீண்ட மூச்சை இழுத்து விட்டவள் அங்கிருந்த சோபாக்களை பார்க்க, அவள் இதயம் குதிக்க ஆரம்பித்தது. ஆத்தி! இதென்ன ஒவ்வொரு சோபாவும் பொணம் கணம் கணக்கும் போல இருக்கே. நீயே போய் வாயை கொடுத்து மாட்டிகிட்டியே சக்தி என்று திருதிருவென்று விழித்தவண்ணம் கார்த்தியை பார்த்தாள்.


அவனோ அவளின் பார்வை சொன்ன செய்தியில் உள்ளுக்குள் உருண்டு பிரண்டு சிரித்துக் கொண்டிருந்தவன் “ஹாப்பியா! நாங்க வரதுக்குள்ள எல்லாத்தையும் மாத்தி வச்சிடு” என்று சொல்லிவிட்டு வேக நடையுடன் (கிட்டத்தட்ட ஓடினான்) வெளியேறினான்.

*******************************தொடரும்**************************************
 
Last edited:

Jovi

New member
Jan 10, 2019
18
10
3
அடபாவிகளா இப்படி பண்ணுறிங்களேடா
பாவம் சக்தி ஹ ஹா
 
  • Like
Reactions: sudharavi

Chitra Balaji

Member
Feb 5, 2020
57
34
18
😊 😊 😊 😊 😊 😊 😊 கேசவன் ah ithu 🤣🤣🤣🤣🤣... வெளிய அவன் அட்ரா attame vera யா இருக்கு ஆனா சக்தி kita..... Paaru da அண்ணன் illayaa me..... கருணா va போட்டு thalli taanga pola chandtha பெரிய தாதா va..... Super Super maa... Semma semma episode