அத்தியாயம் - 24

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,592
1,191
113
அத்தியாயம் – 24

அமைச்சருக்கு செய்தி சென்றது. கருணாவின் இடங்களில் எல்லாம் தாக்குதல் நடக்கிறது என்று சொல்லப்பட்டது. ஆதி கேசவன் தான் ஆட ஆரம்பித்து விட்டான் என்றெண்ணி, அவனது ஆட்கள் தானா என்று கண்காணிக்க கூறினார். ஆனால் வந்த தகவலோ புது ஆட்கள் என்றும் எங்கிருந்தோ இறக்குமதி செய்திருக்கிறான் என்றே சொல்லப்பட்டது.

கருணாவின் பாதுகாப்பை அறிந்து கொள்ள, அவனுக்கு போன் அடித்தார். அப்போது தான் அவன் தனது தொழிற்சாலையில் இருந்து காருக்கு சென்று கொண்டிருந்தான். அதனால் அமைச்சரிடம் தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறி விட்டான்.

அவனது பாதுகாப்பை அறிந்து கொண்ட பின்னர் தனது கோபத்தை கேசவன் மீது திருப்பினார்.

அலைப்பேசியை எடுத்து அவனுக்கு அழைத்து அவன் காதில் வைத்ததுமே “என்ன கேசவா ஓவர் ஆட்டமா இருக்கு? எவ்வளவு துணிச்சல் இருந்தா வெளியூர் ஆட்களை இறக்கி கருணா மேல கை வைக்க பார்ப்ப?”

அப்போது தான் சக்தியின் பேச்சில் சற்று உற்சாகத்துடன் வந்திருந்தவனின் இதழ்களில் அந்த புன்னகை அப்படியே உறைந்து போயிருக்க “பயங்கர கோபமாயிருக்கீங்க போல இருக்கு தல” என்றான் கிண்டலாக.

“என் கிட்ட ஆடி பார்க்காத கேசவா! அந்த டாகுமென்ட்ஸ் என் கைக்கு கிடைக்கும் வரைக்கும் தான் உன் உசுரு உடம்பில் ஓடும்”.

“நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே தல”.

“வேண்டாம் கேசவா! கருணாவை சீண்டி விட்டுட்ட...அவன் உன்னை சும்மா விட மாட்டான்”.

கார்த்தியின் பக்கம் திரும்பி “ஏன் கார்த்தி கருணா ஆவியா வந்து நம்மள பழி வாங்குவானா?” என்று கேட்டு சத்தமாக சிரித்தான்.

அந்தப் பக்கம் இருந்த அமைச்சருக்கு உள்ளுக்குள் பயந்தாலும் அதை வெளிக்காட்டாது “என் கிட்டேயே உன் தில்லாலங்கடி வேலையை காட்டுறியா? கருணா எங்கே இருக்கணுமோ அங்கே பாதுகாப்பா இருக்கான்.

“ஹாஹா! போனை போட்டு பேசுங்க தல. ஆனா நீங்க சொன்னது சரி தான். எங்கே இருக்கணுமோ அங்கே இருக்கான்”.

“அதை விடு! டாகுமென்ட் எங்கே? லிங்கங்கள் எங்கே? உனக்கு இன்னும் நாலு நாள் டைம் தரேன். எல்லாம் என் கைக்கு வந்தாகணும்”.

“கருணா கிட்ட கேளு தல” என்றவன் போனை அனைத்து டாஷ் போர்டில் போட்டான்.

சற்று நேரம் எதிரே வெறித்தவண்ணம் அமைதியாக அமர்ந்திருந்தான். அந்த டாகுமென்ட்ஸ் அப்படி எங்கு சென்றிருக்கும்? இறந்தவன் மீது கோபமாக வந்தது? யாராலும் கண்டுபிடிக்க முடியாத வகையில் எங்கு மறைத்திருப்பான் அதை? என்று யோசித்தவன் “சக்தி கிராமத்து வீட்டில் நல்லா செக் பண்ணிட்டியா கார்த்தி”.

“ம்ம்...நல்லா செர்ச் பண்ணியாச்சு கேசவா. எங்கேயும் இல்லை”.

“ஷிட்!” என்று தனது தொடைகளின் மீது தட்டிக் கொண்டவன் “மறுபடியும் அந்த மேன்ஷனிலிருந்து ஆரம்பிக்க சொல்லு. இந்த முறை சின்ன விஷயங்களை கூட விடக் கூடாது. சீக்கிரம் கண்டு பிடிக்கணும்” என்றான் தீவிரத்துடன்.

“ஓகே கேசவா! அதே மாதிரி இன்னொன்னும் செய்யணும்”.

“என்ன?”

“சக்தியை எத்தனை நாளைக்கு இங்கே வைத்திருக்க முடியும்? அந்த பொண்ணு சொன்னாலும் இங்கே இருக்கிறது நல்லதில்லை”.

சட்டென்று மூண்ட கோபத்துடன் “அவ தான் இங்கேயே இருக்கணும்னு சொல்றா இல்ல. இருந்திட்டு போகட்டுமே. அதை எதுக்கு இப்போ தேவை இல்லாம இழுக்கிற. நமக்கு நிறைய வேலைகள் இருக்கு”.

“இல்ல கேசவா! நம்ம இடத்தில் இருக்கிற ஒரே பெண் சக்தி தான். அதோட நம்ம ஆட்கள் ப்ரீயா வீட்டில் நடமாடிட்டு இருப்பாங்க. இவ இருக்கிறது ரெண்டு பேருக்குமே பிரச்சனை”.

அவன் பேசப்பேச எழுந்த எரிச்சலை அடக்கியபடி “அப்போ வீட்டுக்கு போய் அவளை தூக்கி காரில் போட்டு கொண்டு போய் தள்ளிட்டு வந்துடுவோம்”.

இதழில் எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு “நீ ஏன் இவ்வளவு கோபப்படுற? கல்யாணம் ஆகாத பொண்ணு சக்தி. நாளைக்கு அவளுக்கு ஒரு வாழ்க்கை அமைவதை நாம தடுக்கிற மாதிரி இருக்கு. நம்ம வாழ்க்கை இப்படியே தான் போயிட்டு இருக்கும். இதில் அவள் நுழைந்து அவளோட வாழ்க்கையை கெடுக்கிற மாதிரி இருக்கு. அதனால தான் சொன்னேன்”.

அவன் சொன்னதை கேட்டதும் முகம் லேசாக மாற “நான் இதை யோசனை பண்ணல கார்த்தி. அவ..அவ ..போக மாட்டேன்னு அடம் பிடிச்சா என்ன பண்றது?” என்றான் தடுமாறிய குரலில்.

பட்டென்று “நீயே கல்யாணம் செஞ்சுக்கோ” என்று விட்டான்.

“என்ன!”

“லூசு மாதிரி பேசாதே கார்த்தி! அவ என்ன மாதிரியான பொண்ணு. என்னை மாதிரி ஒருத்தன் அவளை கல்யாணம் பண்றது அவளுக்கு செய்யும் பாவம்”.

“அப்போ அவ ஒத்துகிட்டா உனக்கு பிரச்சனையில்ல” என்றான் சிரிப்பை அடக்கிக் கொண்டு.

“வேண்டாம் கார்த்தி! என்ன நடந்தாலும் அவளை இங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியாகணும். நம்ம கழுத்துக்கு கீழே எந்நேரமும் கத்தி தொங்கிகிட்டு இருக்கு. அவள் வாழ வேண்டிய பொண்ணு. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மாற்றிடுவோம்”.

காரை நிறுத்திவிட்டு கேசவனை பார்த்து “உன் மனசு காத்துல அடிபட்ட பட்டம் மாதிரி அலைபாஞ்சுகிட்டு இருக்கு. உன்னோட ஒவ்வொரு அசைவும் எனக்கு தெரியும் கேசவா. உன்னை அறியாமலே அவளுக்கு உன் மனசில இடம் கொடுத்திட்ட. ஆனா நம்மோட நிலைமை உன்னை யோசிக்க வைக்குது”.

கண்களை மூடி இருக்கையில் சாய்ந்தவன் “அதோட அவ அண்ணனையும் நான் தான் கொன்னுருக்கேன். என்னவோ தெரியல கார்த்தி அவளை பார்த்ததிலிருந்து மனசு ஒருவிதமாக தடுமாறிகிட்டு இருக்கு. இது சரி வராதுன்னு தெரிஞ்சும் சின்ன குழந்தை மாதிரி மனசு அடம்பிடிக்குது. அதே சமயம் என்னை போன்ற ஒருவன் அவளுக்கு தகுதியில்லேன்னு சொல்லுது”.

அவனது கைகளைத் தட்டிக் கொடுத்து “நீ சொல்றது சரி தான் கேசவா. உனக்கு விருப்பம் இருந்தாலும் நம்ம நிலைமையை கணக்கில் கொண்டு அவளை அவள் விரும்பும் வாழ்க்கையை வாழ விடுவது தான் நல்லது”.

“ம்ம்...நீ தான் அவ கிட்ட பேசி எப்படியாவது இங்கிருந்து அனுப்பிடு”.

கார்த்திக்கிற்கு உள்ளுக்குள் வருத்தமாக இருந்தது. நண்பனின் இரும்பு மனதை அறிந்தவனுக்கு சக்தியின் மேல் அவன் வைத்திருக்கும் அன்பையும் புரிந்து கொண்டான். ஆனால் அது நடக்காது என்று புரிந்தாலும், நண்பனின் மனது வருத்தபடுகிறதே என்று தான் பேசி பார்த்தான். தனது மனநிலையோடு அவனும் பேசியதை கண்டு, சக்தியை சீக்கிரம் அங்கிருந்து அனுப்பிவிட வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டான்.

அந்த சிந்தனையுடனே துறைமுகத்துக்கு சென்று தங்களின் ஆட்களைப் பார்த்து ஒரு சியா வேலைகளை கொடுத்துவிட்டு, டாகுமென்ட்ஸ் தேட சென்றவர்களிடம் அலசி ஆராய்ந்து மேலும் பல விஷயங்களை கறந்து விட்டு இருவரும் ஏழு மணி வாக்கில் வீடு திரும்பினர்.

கார் போர்டிகோவில் நிற்க, வாயிலை ஒட்டி ஆட்கள் அனைவரும் எட்டி எட்டி பார்த்தபடி நின்றிருந்தனர். என்ன நடக்கிறதென்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நடக்க, கேசவனை கண்டதும் அவசரமாக விலகி வழி விட்டனர்.

அங்கே சமையல்கார மாசி அண்ணனும், ராசிபுரம் முனியாண்டியும் ஓரமாக நின்று கொண்டு “காலை நல்லா அழுத்தி வச்சுக்கிட்டு கையால அழுத்தி பிடிச்சு தள்ளு தங்கச்சி. கொஞ்சமாவது நகரும்” என்று சக்திக்கு சோபாவை தள்ள சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,592
1,191
113
அவளோ பெரிய பயில்வான் மாதிரி இருவரையும் பார்த்து சிரித்து விட்டு “இப்போ தள்ளிடுறேன் பாருங்கண்ணே” என்று தள்ள முயற்சிக்க, கால் வழுக்கிக் கொண்டு குப்புற விழுந்து இடுப்பில் அடிபட்டது.

பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் ஒருபுறம் சிரிப்பு வந்தாலும் பாவமாக இருந்தது.

இடுப்பை பிடித்துக் கொண்டு எழுந்தமர்ந்தவள் கேசவனையும், கார்த்தியையும் கவனிக்காது “இந்த நாற்காலி இரும்பிலையா பண்ணிருக்கு அண்ணே? நான் பாட்டுக்கு ஏதாவது வேலை கொடுங்கன்னு தான் கேட்டேன். உங்க கத்தி முதலாளி என்னை பழி வாங்கிட்டார்” என்றாள் திரும்பி பார்க்காமல்.

மாசி அண்ணன் இருவரையும் கவனித்து விட்டு அவளிடம் சைகை செய்யப் போக, அதை பார்த்த கார்த்தி கண்களால் சொல்லாதே என்று மிரட்டினான்.

முனியாண்டியோ “நான் வேணா தள்ளவா தங்கச்சி” என்றான் மெதுவாக.

இரு கைகளையும் எடுத்து கும்பிட்டவள் “வேணாஞ்சாமி! கத்தி முதலாளி வந்து அதுக்கும் கத்து கத்துன்னு கத்துவார். அவரு வரதுக்குள்ள நானே தள்ளிடுவேன்” என்றாள் இடுப்பை பிடித்துக் கொண்டே.

அதுவரை பொறுமையாக நின்றிருந்த கேசவன் “அதென்ன கத்தி முதலாளி ?” என்று கேட்டபடி அவள் முன்னே சென்று நின்றான்.

தன் எதிரே வந்து நின்றவனை பார்த்ததும் விழிகள் பிதுங்கிட பார்த்தவள், அவசரமாக திரும்பி கார்த்திக்கை பார்த்தாள். அவனோ அவளை பார்க்காமல் வேண்டுமென்றே மாசியை பார்த்தபடி கேசவனின் அருகே சென்று நின்றான்.

“பதில் சொல்லு” என்று அவள் தள்ள முயன்று தோற்ற அந்த சோபாவில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்து கொண்டான்.

சக்தியோ தலையை டைல்சுக்கு அடியில் புதைத்தபடி நின்று கொண்டு “அ..அது..வந்து”.

“ம்ம்ம்..வந்து”.

“நீங்க கத்தி கத்தி பேசுறீங்களா அது தான் கத்தி முதலாளி” என்று விட்டு அங்கிருந்து ஓடிவிட முயன்றாள்.

இதழில் எழுந்த சிரிப்பை மறைத்தபடி “நில்லு! வேலை கேட்டு வாங்கிட்டு செய்யாம போனா எப்படி?...அதை எப்போ செய்யப் போற?”

மெல்ல நிமிர்ந்து கார்த்திக்கை பார்க்க, அவன் அவசரமாக வேறு பக்கம் திரும்பிக் கொண்டான். வெளியில் நின்றிருந்த ஆட்களுக்கு தங்களின் முதலாளி இப்படி எல்லாம் பேசுவாரா என்று வாயைப் பிளந்து கொண்டு பார்த்திருந்தனர்.

“எனக்கு தள்ள முடியல...வேற ஏதாவது வேலை கொடுங்க செஞ்சிடுறேன்”.

உடனே திரும்பி ஆட்களை பார்த்தவன் “பசிக்குதா டா?” என்றதும் அவர்கள் ஆம் என்று தலையசைக்க, அவள் பக்கம் திரும்பியவன் “எல்லோருக்கும் செம பசி. நல்லா சாபிடுற மாதிரி சமைச்சு வை வரோம்” என்று கூறி எழுந்து கொண்டான்.

அதைக் கேட்டதும் திகைத்துப் போனவள் ‘இவனே குண்டான் சோறு சாப்பிடுவான். இதுல இவன் கூட்டத்துக்கு வேற சமைக்கணும்னா எவ்வளவோ சமைக்க? சக்தி! உன் வாய் இருக்கே...தள்ள முடியலேன்னா முடியலன்னு சொல்லிட்டு விட்டிருக்க வேண்டியது தானே? இப்போ சமைக்க சொல்லிட்டான். நாற்காலியை தள்ளுனதுக்கே இடுப்பு போச்சு. இந்த காலகேய கூட்டத்துக்கு சமைச்சா மொத்தமா போக வேண்டியது தான்.

அப்போது அவளையே சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த கார்த்தி அவள் அருகே சென்று “என்ன பண்ண போற சக்தி?”

அவனை கடுப்புடன் பார்த்தவள் “கால்ல விழ போறேன்”.

“என்னது!”

“பின்னே! இந்த காலகேய கூட்டத்துக்கு நான் சமைக்க முடியுமா? அது சரி உங்களை அண்ணன்னு தானே கூப்பிட்டேன். அதுக்காகவாவது எனக்கு உதவி பண்ணி இருக்கலாமில்ல?”

அப்போது அங்கே வந்த கேசவன் “நீ இன்னும் சமைக்க போகலையா? இவன் கூட நின்னு என்ன பேசிட்டு இருக்க?” என்றான் அதட்டலாக.

‘இடுப்பை முறிச்சது பத்தாது போலருக்கு’ என்றெண்ணிக் கொண்டு அவன் என்னவென்று உணரும் முன் காலில் விழுந்திருந்தாள்.

“என்னை மன்னிச்சிடுங்க கத்தி முதலாளி. உங்களுக்கெல்லாம் சமைச்சு போடுகிற அளவுக்கு எனக்கு திறமை இல்லீங்க” என்றாள் மெல்லிய குரலில்.

காலில் விழுந்ததும் பதறி போனவன் “ஏய்! என்ன இது! எழுந்திரு!”

“சமைக்க வேண்டாம்னு சொல்லுங்க எழுந்திருக்கிறேன்”.

“நீ முதல்ல எழுந்திரு. மாசி சமையலை பார்த்துக்குவான்”

இடுப்பை பிடித்தபடி எழுந்தவள் “ஹப்பாடா! நன்றி கத்தி முதலாளி” என்றபடி அங்கிருந்து நகர இருந்தவளை அவனது குரல் நிறுத்தியது.

“நாளைக்கு காலையில நீ இங்கிருந்து கிளம்புற...அதுக்கு ரெடியா இரு”.

இடுப்பை பிடித்துக் கொண்டே தான் தங்கி இருந்த அறையை நோக்கி திரும்பி நின்றவள் அதிர்ச்சியுடன் அவனை திரும்பி பார்த்து “நான் தான் இங்கேயே இருக்கேன்னு சொன்னேனே” என்றாள் பதட்டத்துடன்.

“நீ கிளம்பனும்”

“இல்ல நான் போக மாட்டேன்” என்றாள் மெல்லிய குரலில் அழுத்தமாக.

கார்த்திக்கிற்கு இவன் ஏன் இப்போது இதை பேச வேண்டும் என்று புரியாமல் இருவரையும் பார்த்தபடி நின்றிருந்தான்.

“இங்கே பார்! அதிக நாள் நீ இங்கே இருக்க முடியாது. இது பெண்கள் இல்லாத வீடு. பெண்களுக்கும் இங்கே இடம் கிடையாது”.

கண்கள் தளும்ப “யார் சொன்னா பெண்கள் இல்லாத வீடுன்னு? தேனு இங்கே தான் இருக்கா. நானும் இங்கே தான் இருப்பேன். நான் இருக்கிறதுனால உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்று தைரியமாக கேட்டு விட்டாள்.

அது அவனே எதிர்பார்க்காத ஒன்று. அவளிடமிருந்து இப்படியொரு கேள்வி வரும் என்று முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. தனது முழு ஆகிருதியும் தெரியும் அளவிற்கு நிமிர்ந்து நின்றவன் “இது ஒரு தாதாவுடைய வீடு. இந்த வீட்டைச் சுற்றி இருப்பவங்க எல்லாம் ரத்தத்திலேயே குளிக்கிறவங்க. இங்கே உன்னை போல மென்மையான மனசு உள்ளவங்க வாழுகிற இடமில்லை. அதனால பிரச்சனை பண்ணாம கிளம்புகிற வழியைப் பார்”.

அவளும் பிடிவாதமாக “எங்க அண்ணனைத் தேடி இந்த ஊருக்கு வந்தேன். வந்த இடத்தில் எங்கப்பாவை இழந்தேன். அண்ணனோட உயிரான என்னோட தோழியையும் இழந்துட்டேன். அண்ணன் உயிரோட இருக்கானா இல்லையான்னு தெரியல. ஊரிலேயும் எனக்காக யாரும் காத்திருக்கல. இந்த ஊரில் இதுவரை நான் பார்த்ததில் காவல் காக்கும் ஐயனார் போல உங்களை மட்டுமே பார்த்தேன். இதோ இந்த நிமிடம் வரை எனக்கு எந்த சேதாரமும் இல்லாம நின்னுகிட்டு இருக்கேன்னா அது உங்களால தான். இப்போ சொல்றேன் நல்லா கேட்டுகோங்க! நான் நிரந்திரமா உங்களோடவே தங்கணும்னு ஆசைப்படுறேன். உங்க தொழிலோ, வாழ்க்கை முறையோ என்னை எதுவும் பாதிக்காது. இப்போ எனக்கு தெரிஞ்ச ஒன்னே ஒன்னு தான். உங்களோட இருந்தா எனக்கு பாதுகாப்பு”.

கார்த்தி அவசரமாக “நீ இப்போ இருக்கும் சூழ்நிலையில் யோசிக்கிற சக்தி. உனக்காக நல்ல வாழ்க்கையை தான் ஏற்பாடு செஞ்சிருக்கோம். நீ பழையபடி நிம்மதியா இருக்கலாம். உன்னை யாரும் தொந்திரவு செய்ய மாட்டாங்க”.

“எப்படி சொல்றீங்க நான் பழையபடி நிம்மதியா இருக்கலாம்னு? எங்கண்ணன் வந்துடுவானா? இல்ல எங்கப்பாவும், தேனுவும் உயிரோட வந்துடுவாங்களா? இல்லேல்ல! அப்புறம் எங்கிருந்து நிம்மதி வரும்?”

இறுகி போய் அவர்கள் இருவரும் பேசுவதை வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தான் கேசவன்.

“இல்லம்மா! இங்கே மட்டும் உனக்கு என்ன கிடைச்சிடும்னு இருக்கேன்னு சொல்ற?” என்று கேட்டவனின் நோக்கம் அவள் வாயாலேயே வெளிவரட்டும் என்பது தான்.

பட்டென்று இருவரும் எதிர்பார்க்கும் முன் கேசவனின் கைகளை அழுந்தப் பற்றிக் கொண்டவள் “இந்தக் கையில தான் என் தேனுவை வாங்கினார். இதே கையில தான் இந்த வீட்டுக்குள்ள தூக்கிட்டு வந்து தன்னோட தோட்டத்தில் புதைத்தார். நானும் இதே கையில என்னை கொடுக்க நினைக்கிறேன். இவருக்கு மனைவியா வாழ்ந்து இங்கே இருக்கிற தோட்டத்திலேயே தேனுவுக்கு பக்கத்திலேயே நானும் புதைக்கப்பட்டா அதை விட வேற சந்தோஷம் எனக்கில்லை” என்று அவள் சொல்லி முடிக்கும் முன் இழுத்து அணைத்திருந்தான்.

அதை பார்த்ததும் கார்த்திக்கு நிம்மதியாக இருந்தது. அவன் எதிர்பார்த்தது இதை தான். கேசவன் அத்தனை எளிதாக யாரிடமும் இறங்கி விடுபவன் அல்ல. அவன் மனதில் சக்தி மீதான நேசத்தை அறிந்து கொண்ட பின், மனதில் இருந்த ஒரே நெருடல் சக்தியின் அண்ணனின் கொலை தான். அது வெளி வருவதற்குள் இருவருக்குமான நேசம் வளர்ந்து விடாதா? என்று எண்ணிக் கொண்டு மெல்லிய சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தான்.

சக்தியின் அறையிலிருந்த பை அவர்களைப் பார்த்து சிரித்தது....இனி, விதியாடப் போகும் ஆட்டத்தில் ஆதி கேசவன் என்னவாகப் போகிறான்?

*************************தொடரும்************************************************
 

Jovi

New member
Jan 10, 2019
18
10
3
சக்திகிட்ட தான் இருக்கா 😳
சூப்பர் எபி 💖
 

Chitra Balaji

Member
Feb 5, 2020
57
34
18
சக்தி oda பை la இருக்கா file.... Enna aaga pooguthoo... அவளே தான் vambadiya இருக்கேன் nu solli இருக்கா avanuku மனைவி ah... Super Super maa... Semma episode
 

lakshmi

Active member
May 9, 2018
335
50
43
பையில் தான் டாக்குமெண்ட் எல்லாம் இருக்குதா.