அத்தியாயம் - 24

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,659
1,618
113
அத்தியாயம் -24

வீட்டை விட்டு வெளியேறிய நிரஞ்சனின் மனமோ கொதித்துக் கொண்டிருந்தது. ஒரு சராசரி ஆணாக நான் இருந்திருந்தால் நான்கு வருடமாக இவள் மேல் வைத்திருந்த அன்பை மட்டுமே சுமந்து கொண்டு காத்திருப்பேனா? என்னுடைய காத்திருப்புக்கும் காதலுக்கும் அவளிடம் கிடைத்திருக்கும் பரிசு இது தானா? என் மீது சிறிதளவு கூட நேசம் இல்லையா? அவர்களுடைய வாழ்வில் நடந்தவைகள் எல்லாம் கொடுமையான விஷயங்கள் தான். அதை அறிந்ததும் எதையும் நினைக்காது என் மனைவிக்காக தோள் கொடுக்க தயாரானேனே...அதை கூட நினையாது ஒற்றை வார்த்தையில் வேண்டாம் என்று கூறி விட்டாளே என்று குமைந்து கொண்டிருந்தான்.

நகரத்தின் மத்தியில் இருந்த அந்த பூங்காவில் அந்த நேரத்தில் அவ்வளவு கூட்டமில்லாத காரணத்தால் காக்கை, குருவிகளின் சத்தம் மட்டுமே நிறைந்திருந்தது. ஓரமாக இருந்த மரத்தடியில் தன் வாழ்க்கையை நினைத்துக் சோர்ந்து போய் அமர்ந்திருந்தான்.

ஒரு நிகழ்ச்சி நிர்வாகியை காண அந்த பக்கம் சென்ற விஸ்வா...பூங்கா வாயிலில் நின்று கொண்டிருந்த வண்டி எண்ணை பார்த்து விட்டு, நிரஞ்சன் இந்த நேரத்தில் எதற்கு அங்கு வந்திருக்கிறான் என்று பார்க்க உள்ளே நுழைந்தான்.

நிரஞ்சனை தேடிக் கொண்டே உள்ளே நுழைந்தவன் பூங்காவின் மையப்பகுதிக்கு வந்த போது அங்கு சோகமே உருவாக ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தவனைக் கண்டதும் யோசனையாக அவனருகில் சென்றான்.

அவன் தோள்களில் கையை வைத்து “அண்ணா!” என்றவனை நிமிர்ந்து பார்த்து “உட்கார் விஸ்வா” என்றான்.

“என்னண்ணா...இந்த நேரத்தில் இங்கே? ஏதாவது பிரச்சனையா?”

நீண்ட பெருமூச்சுடன் “ஆமாம் விஸ்வா...பாட்டி எல்லாத்தையும் உடைச்சு பேசிட்டாங்க நித்யா கிட்ட” என்றான் சோர்வாக.

அதைக் கேட்டு அதிர்ந்தவன் “என்ன சொல்றீங்க? ஏன் பாட்டி அப்படி செய்தாங்க?” என்றான் பதட்டத்துடன்.

அவன் கேட்டதும் வீட்டில் நடந்தவற்றை கூறினான். ரேணுவின் வார்த்தைகளை மட்டும் சொல்லாது மற்றவற்றை சொன்னான். அதையெல்லாம் கேட்டுக் கொண்ட விஸ்வா “அது இருக்கட்டும்...நீங்க ஏன் இங்கே வந்து உட்கார்ந்திருக்கீங்க?” என்றான் சந்தேகமாக.

அவன் கேட்டதும் ஆதங்கம் தாங்காது அவனிடத்தில் கொட்டிவிட்டான்.

“ஏன் விஸ்வா? என் மேல கொஞ்சம் கூட அன்பில்லையா உன் அண்ணிக்கு? ஆயிரம் வேதனை மனசில் இருக்கட்டும்...விஷயம் என்னன்னு தெரியாதப்பவே அவளோட கஷ்டத்தை தாங்க தயாரா இருந்த என்னை வேண்டாம்னு சொல்ல எப்படி மனசு வந்தது அவளுக்கு? அவ மனசு கஷ்டப்படும்னு நினைச்சு தானே எல்லாத்தையும் பொறுத்துகிட்டேன்...என்னோட நாலு வருஷ வாழக்கை அவளுக்கு வேடிக்கையா போயிடுச்சா? நித்யாவுக்கு அவ பாதுகாப்பு கொடுக்கட்டும், அன்பை கொடுக்கட்டும்...எதை வேணா கொடுக்கட்டும்...அதை என்னோட சேர்ந்து கொடுக்கிறேன்னு சொல்லியிருக்கனுமா வேண்டாமா? அப்போ இவளுக்கும் என் மேல நம்பிக்கை இல்லையா? ரேணு இவ்வளவு சுயநலவாதியா இருப்பான்னு கொஞ்சம் கூட நினைக்கல விஸ்வா. இவளுக்கு மட்டுமா வேதனை? என்னை சுற்றி எழுந்த எத்தனை பேச்சுகளை வலியோட கடந்து வந்திருப்பேன்...அதையெல்லாம் ஒரு நிமிஷம் கூட நினைக்காமல் இந்த உறவை அசிங்கப்படுத்திட்டாளே” என்றவன் வெறுப்பாக முஷ்டியை இறுக மூடித் திறந்தான்.

அவன் பேசுவதை கேட்டு வருத்ததுடன் என்ன பதில் பேசுவது என்று புரியாமல் அமர்ந்திருந்தான் விஸ்வா. அவனது மனமோ அண்ணன் சொல்வது எல்லாம் நியாயம் தானே என்று வாதாடியது. அண்ணி இப்படியொரு வார்த்தையை சொல்லி அண்ணனை காயப்படுத்தியிருக்க கூடாது. இந்த காலத்தில் யார் இப்படி மனைவிக்காகவும், அவளது தங்கைக்காகவும் யோசிப்பார்கள்? என்று நினைத்துக் கொண்டான்.

“அண்ணி பேசியது தப்பு தான்...உங்க மனசு எந்த அளவுக்கு வேதனைப்படும் என்று எனக்கு புரியுது அண்ணா. அவங்க பேசியதை நிச்சயம் அண்ணி உணர்ந்திருப்பாங்க. வருத்தப்படாதீங்க அண்ணா” என்று சமாதானப்படுத்தினான்.

“பச்...பேசுன வார்த்தைகள் இல்லைன்னு ஆகிடுமா விஸ்வா...நான் இந்த நாலு வருஷத்தில் ஒரு முறையாவது இவளை வேண்டாம்னு நினைச்சிருக்கேனா? இவளால இத்தனை பிரச்சனை, இவ என் வாழ்க்கையை விட்டு போகட்டும்னு நினைச்சேனா? இல்லையே...ஒரு நொடி கூட அப்படியொரு எண்ணம் வந்ததில்லை...ஆனா இவ பாட்டி கிட்ட...எனக்கு யாரும் வேண்டாம்னு சொல்லி என் மனசை கொன்னுட்டா”.

அவனது கையை எடுத்து தன் கையில் புதைத்துக் கொண்ட விஸ்வா “அண்ணா! தயவு செஞ்சு நான் சொல்றதை கேளுங்க...அண்ணியும் சரி நித்யாவும் சரி ரெண்டு பேருமே ரொம்ப உணர்ச்சி வசப்படுகிற நிலையில் இருக்காங்க. பதினஞ்சு வயசிலிருந்து ரெண்டு பெண்கள் மட்டும் தனியா போராடிகிட்டு இருந்திருக்காங்க...நித்யாவை விட அண்ணி நாலு வயசு தானே பெரியவங்க...அந்த சூழ்நிலையில் பெரியவங்க துணையில்லாம இத்தனை பெரிய பிரச்னையை சமாளிச்சு வந்த அவங்க ரெண்டு பேர் நிலையையும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க...நித்யா மட்டுமில்லை அண்ணியுமே மனசளவில் பாதிக்கப்பட்டு இருக்காங்க...அவங்க கிட்ட நாம சராசரி பெண்களை போல உணர்வுகளை எதிர்பார்த்தா தப்புண்ணா. ஆண்கள் தனியா வாழ்வதில் எந்த பிரச்னையும் இல்ல...ஆனா, ரெண்டு வயசு பெண்கள் அநாதரவா வாழ்வதில் எத்தனை சம்பவங்களை கடந்து வந்திருப்பாங்க ..கொஞ்சம் யோசிச்சு பாருங்க”.

விஸ்வா பேசியதில் உள்ள நியாயம் புரிந்தாலும் நிரஞ்சனால் ரேணு சொன்ன வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சற்று நேரம் இருவரும் அமைதியாக சுற்றுப்புறத்தை ஆராய்ந்து கொண்டு அமர்ந்திருந்தனர். திடீரென்று ஞாபகம் வந்தது போல் “பாட்டிக்கு போன் பண்ணி கேளு விச்சு...என்ன ஆச்சுன்னு?” என்றான்.

அண்ணனை திரும்பி பார்த்துவிட்டு பாட்டிக்கு போன் செய்து பேசினான். அவர் சொன்னவைகளை கேட்டுக் கொண்டவன் “என்ன பாட்டி நீங்க...இப்படி கந்து வட்டிக்காரன் மாதிரி கழுத்து மேல கத்தியை வச்சு மிரட்டி இருக்கீங்க...அண்ணி பாவம்” என்றான் நிரஞ்சனை பார்த்தபடி.

அவரோ “உங்க அண்ணன் கல்யாணம் பண்ணி நாலு வருஷம் காத்திருந்தான்...அவளா சம்மதிப்பான்னு உட்கார்ந்திருந்தா நீ ஒரு பத்து வருஷம் உட்கார்ந்திருக்கனும்...பரவாயில்லையா?” என்றார் நக்கலாக.

‘போன ஜென்மத்தில் சரியான வில்லியா இருந்துருப்பீங்க போல” என்றான்.

“சொல்வ-டா...சொல்வ...உனக்காக அவளுகளை மிரட்டி உருட்டி வச்சதுக்கு இதுவும் பேசுவ இன்னமும் பேசுவ” என்று நொடித்துக் கொண்டார்.

“அதெல்லாம் விடுங்க...என்னோட டார்லிங் ஒத்துக்குவாளா இல்லையா?” என்றான் கேலியாக.
 
  • Love
Reactions: Chitra Balaji

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,659
1,618
113
“ரெண்டு நாள் டைம் கேட்டிருக்கா”.

“ரெண்டு நாளா?...ம்ம்...மாமனோட பாட்டை ரசிச்சு உடனே ஒத்துக்குவான்னு நினைச்சேனே” என்று இழுத்தவனை “அதனால தான் பேராண்டி ரெண்டு நாள் கேட்கிறா” என்று அவனையே கலாய்த்தார்.

அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த நிரஞ்சனின் இதழ்களில் புன்முறுவல் வந்ததது. அதைக் கண்டு அவனை தோளோடு அணைத்துக் கொண்டான். விஸ்வாவிடமிருந்து போனை வாங்கியவன் “நான் வீட்டுக்கு வரலாமா பாட்டி” என்றான்.

அவனது குரலை கேட்டதும் “நீயும் அவன் கூட தான் இருக்கியா? உன் வீட்டுக்கு வரதுக்கு எதுக்கு என்கிட்ட கேள்வி கேட்கிற” என்றார்.

அவனோ பெருமூச்சுடன் “என்னை வேண்டாம்ன்னு சொன்னவ அங்கே இருக்காளே பாட்டி அதுக்காக தான்” என்றான்.

“ஒ...ரோஷம் பொத்துகிட்டு வந்துடுச்சோ...குடும்ப வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் பேராண்டி...உங்க தாத்தனை எத்தனை முறை வீட்டை விட்டு பத்தி விட்டு இருக்கேன்...ஒரு ரெண்டு மணி நேரம் சுத்திகிட்டு இருந்துட்டு சாப்பாட்டு நேரத்துக்கு ஓடி வந்துடுவார் தெரியுமா?” என்றவரின் பதிலில் அதிர்ந்து போய் “பாட்டி...இவ்வளவு கொடுமை பண்ணுணீங்களா எங்க தாத்தாவை” என்றான்.

“ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ...முறைப்போ,கடுப்போ எதுவா இருந்தாலும் உன் பொண்டாட்டிகிட்ட நாலு சுவத்துக்குள்ள வச்சிக்க...உன் மனசு எந்த அளவுக்கு வேதனைபட்டுதுன்னு அவளுக்கு புரிஞ்சா இனியொரு முறை அவ அப்படி சொல்ல மாட்டா...அதை புரிய வைக்க வேண்டியது உன் கையில் தான் இருக்கு...அதை விட்டு உடனே எங்கேயாவது மரத்தடியில் போய் ‘என் பொண்டாட்டி என்னை வேண்டாம்னு சொல்லிட்டா’ன்னு புத்தர் மாதிரி உட்கார்ந்திருந்தேன்னு வை...உன்னை சுத்தி ஆசிரமத்தை அமைச்சு சாமியாரா உட்கார வச்சிடுவானுங்க..சீக்கிரம் கிளம்பி வர வழியை பாரு” என்றார் கேலியாக.

நிரஞ்சனிடமிருந்து போனை வாங்கிய விஸ்வா “சரி..சரி...என் டார்லிங்கை நல்லா பார்த்துக்கோங்க...சும்மா வள-வளன்னு பேசிட்டு இருக்காம அவளுக்கு வேண்டியதை செய்ங்க” என்று மிரட்டினான்.

“பிச்சிடுவேன் படவா...நாங்க சீக்கிரம் உன்கிட்ட அனுப்பிடுவோம் உன் டார்லிங்கை நீயே இடுப்பில் தூக்கி வச்சுகிட்டு சுத்து” என்று கூறி போனை வைத்தார்.

பாட்டி சொன்னதை உரு போட்டுக் கொண்டிருந்த நிரஞ்சன், அதுவரை இருந்த சோர்வு நீங்கி தான் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான். பின்னர் விஸ்வாவிடம் திரும்பி “என்ன சொல்றாங்க பாட்டி? நித்யா ஒத்துக்குவாளா?”

“ம்ம்..ஆமாண்ணா! நாம சீக்கிரம் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண வேண்டியது தான்” என்றான்.

“பெரிய அளவில் ஏற்பாடு பண்ண வேண்டாம் விச்சு... அவ விரும்பி இதுக்கு ஒத்துக்க மாட்டா...அதோட உன்னை ஏத்துக்க டைம் எடுக்கும்...அதனால அவளை சங்கடப்படுத்தாம...சிறிய அளவில் கோவிலில் வச்சு பண்ணிடலாமா?” என்று கேட்டான்.

“நானும் அதையே தான் நினைச்சேன் அண்ணா” என்றவனை பார்த்து “சித்தி மனசு கஷ்டப்படுவாங்களே விஸ்வா... ஒரே பையனோட கல்யாணம் சிம்பிளா நடக்கிறதை நினைச்சு” என்று தயக்கமாக கேட்டான் நிரஞ்சன்.

தலையை குனிந்து கொண்டே “நிச்சயமாண்ணா...அம்மாவுக்கு வருத்தம் இல்லாம இருக்காது...எனக்கு வேற வழி தெரியல” என்றான்.

அவனை அணைத்து விடுவித்த நிரஞ்சன் “விடு-டா...எதை பத்தியும் யோசிக்காம...உன் டார்லிங்கை எப்படி சரி பண்றதுன்னு யோசி” என்றான் கேலியாக.

அதை கேட்டு சற்று உற்சாகமானவன் “அதெல்லாம் நாங்க கலக்கிடுவோம் பாருங்க...எண்ணி மூனே மாசம் விஸ்வா-விஸ்வான்னு என் பின்னாடி மேடமை சுத்த வைக்கல நான் விஸ்வா இல்லை” என்றான்.

“ம்ம்..நீ பண்ணுவ-டா...உனக்கு அந்த சாமர்த்தியம் இருக்கு” என்றவனை “அண்ணா! எனக்கு மூனு மாசம் அவளை சுத்த வைக்க தேவைன்னா...உங்களுக்கும் மூனு மாசம் தான் டைம்...என்னை சித்தப்பான்னு கூப்பிட ஆள் ரெடி பண்ணுங்க” என்றான்.

அவனை சோர்வாக பார்த்து “பார்க்கலாம்” என்று கூறி எழுந்தவனை நிறுத்தி “வாழ்வே மாயம் பாடாம...அண்ணி கிட்ட போய் பேசுங்க” என்றான்.

பதிலேதும் சொல்லாமல் தனது வண்டியை நோக்கி நடந்தான். விஸ்வாவும் அவன் மனதின் போராட்டத்தை புரிந்து கொண்டு அமைதியாக சென்றான். பூங்காவின் வாயிலுக்குச் சென்றதும் “நான் கிளம்புறேன் அண்ணா...எனக்கு இங்கே ஒரு வேலை இருக்கு...முடிச்சிட்டு போறேன்” என்றான்.

“சரி-டா! நித்யா சம்மதம் சொன்னதும் மேற்கொண்டு என்ன பண்ணலாம்னு பேசுவோம்” என்று கூறி கிளம்பினான்.

பாட்டி போட்ட அதிர்வேட்டில் அக்கா, தங்கை இருவரும் நிலைகுலைந்து போய் கட்டிலில் அமர்ந்திருந்தனர். ரேணு கண்ணீர் வழிய சுவரோரம் சாய்ந்து அமர்ந்திருந்தாள். நித்யா குழப்பமான மனதுடன் அக்காவை பார்த்துக் கொண்டிருந்தாள். ஒருபுறம் தனக்கு திருமணமா என்கிற கேள்வி...மற்றொரு புறம் தன் மனம் கவர்ந்தவனுடனா... என்று மனதோரம் சிறு சந்தோஷமும் எட்டி பார்த்தது. தன்னால் ஒரு நல்ல மனைவியாக பொருந்தி போக முடியுமா? நிச்சயமாக முடியாது என்றே தோன்றியது...அவளது பார்வை அக்காவின் புறம் திரும்ப, அழுத விழிகளோடு விட்டத்தை வெறித்துக் கொண்டிருப்பவளை நெருங்கி “அக்கா” என்றழைத்தாள்.

அதுவரை அடக்கி வைக்கப்பட்டிருந்த துக்கம் வெடித்துக் கிளம்ப “நான் என்ன செய்வேன் நித்தி! எனக்கு நீயும் முக்கியம்...அவரும் முக்கியம். நான் பண்றது தப்புன்னு தெரிஞ்சாலும் நாலு வருஷமா அவரை கஷ்டப்படுத்துகிட்டு இருந்தேன்...என்னால அவர் வாழ்க்கை நல்லா இருக்கட்டும்ன்னு ஒதுங்கி போக முடியல நித்தி...ஏன்னா என் வாழ்க்கையே அவர் தான்...என் மனசு கிடந்தது தவிக்குது...எனக்கு என்ன பண்றதுன்னே புரியல...அவர் இல்லாம எனக்கு வாழ்க்கையில்ல...அதே சமயம் உன்னையும் விட முடியாது” என்று பாய்ந்து தோளில் சாய்ந்து கதற ஆரம்பித்தாள்.

நித்யாவின் கண்களிலும் கண்ணீர் “அன்னை, தந்தையின் இழப்பிற்கு பிறகு தன்னை விட நாலே வயது மூத்தவளான இவள் என்னை அன்னைக்கு அன்னையாய் மடி தாங்கி எத்தனை பெரிய துன்பத்திலிருந்து மீட்டிருக்கிறாள்...அவளுக்கு நான் செய்ததென்ன...இதோ இத்தனை நாள் தன் மனதை மூடி வைத்து எனக்காக வாழ்ந்த இவளுக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்? மாமாவின் மேல் இத்தனை அன்பும், காதலையும் வைத்துக் கொண்டு எனக்காக தானே ஒதுங்கி இருந்தாள்...அவள் தவிப்பதிலிருந்து தெரியவில்லையா அவர் மீது எத்தனை காதலென்று?

பெற்றோர்களின் இழப்பிற்கு பிறகு எனக்காக மட்டுமே வாழ்ந்தவளுக்கு நான் துன்பத்தை மட்டும் தானே கொடுத்து கொண்டிருக்கிறேன்...ஒருநாள் கூட என் மீது வெறுப்பையோ, கசப்பையோ காட்டாது உள்ளங்கையில் வைத்து தாங்கியவளுக்காக நான் இதை செய்தே ஆக வேண்டும்...

ஆனால், இதில் என் வாழ்க்கை மட்டும் அடங்கவில்லையே அவனது வாழ்க்கையும் அல்லவா இருக்கிறது...அவனும், அவனது பெற்றோர்களும் எத்தனை ஆசையோடு இந்த திருமணத்தை எதிர்பார்ப்பார்கள்...ஆனால் நான்..என்னால் திருமண பந்தத்தை ஏற்க முடியுமா? குற்ற உணர்ச்சியில் செத்து விட மாட்டேனா? ஏன் கடவுளே என்னை இப்படி படைத்தாய்? எனக்கு நேர்ந்த கொடுமைக்கு பிறகு என்னை கொண்டு சென்றிருக்க கூடாதா? என்னோடு இருப்பவர்களை எல்லாம் கஷ்டபடுத்திக் கொண்டிருக்கிறேனே” என்று மனதிற்குள் புலம்பி தள்ளினாள்.

ரேணுவோ எதைப் பற்றியும் சிந்திக்காமல் அழுகை..அழுகை என்று அழுதே கரைந்தாள். அவளது நிலையைக் கண்டு பலத்த போராட்டத்திற்கு பிறகு மனதை ஓரளவிற்கு தேத்திக் கொண்ட நித்தி அவளது முகத்தை பற்றி “அக்கா! இங்க பாரு! அழாத...மாமாவை நீ பிரிய வேண்டாம்...நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிறேன்” என்றாள்.

அவளது பேச்சைக் கேட்டு அதிர்ச்சியுடன் நிமிர்ந்தவள் “வேண்டாம்...உன்னால சமாளிக்க முடியாது..எனக்காக நீ ஒத்துக்க வேண்டாம்’ என்று கூறினாலும் அவளால் மனதை கட்டுப்படுத்த முடியாமல் மேலும் அழத் தொடங்கினாள்.
 
  • Love
Reactions: Chitra Balaji

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,659
1,618
113
நித்யாவோ உறுதியான குரலில் “என்னால முடியும்-கா...நான் பார்த்த்துகிறேன். நீ தைரியமா இரு...எனக்காக இத்தனை நாள் நீ வாழ்ந்தது போதும்...இனியாவது உன் வாழ்க்கையை பார்...என்னை நான் சமாளிச்சுக்குவேன்” என்றாள்.

அதை கேட்டு கண்களில் பயத்துடன் “இல்ல...எப்படி?” என்றவளை இடைமறித்து “அக்கா! இப்போ தானே சொன்னேன்...என்னை பத்தி மறந்திட்டு மாமாவை எப்படி சமாதானப்படுதுறதுன்னு பார்...அனேகமா நீ சொன்ன வார்த்தையில் மாமா கோவிச்சுக்கிட்டு இருப்பார்” என்றாள்.

அவளோ தங்கையின் கைகளை பற்றிக் கொண்டு “எனக்காக முடிவெடுக்காத நித்தி...உன்னால எப்படி...?” என்று தயக்கத்துடன் இழுத்தவளை கண்டு கண்களை அழுந்த மூடி திறந்தவள் “எத்தனை நாளைக்கு ஓட முடியும்? என்னைக்காவது ஒருநாள் இந்த பிரச்னையை சந்திச்சு தானே ஆகணும்...நான் பார்த்துக்கிறேன்” என்றாள் அழுத்தமாக.

அக்காவின் வாழ்க்கையை சரி செய்துவிடும் வேகம் எழ, ரேணுவை எழுப்பி தன்னோடு அழைத்துக் கொண்டவள் அறையை விட்டு வெளியே வந்தாள்.

அங்கே சமையலுக்காக காய் அறிந்தவண்ணம் அமர்ந்திருந்த பாட்டி, அக்கா-தங்கை இருவரும் வருவதை கண்டதும் புருவத்தை உயர்த்தினார். அப்போது உள்ளே நுழைந்த நிரஞ்சன் இருவரையும் பார்த்தும் பார்க்காதது போல் சென்று சோபாவில் அமர்ந்தான். அவனது புறக்கணிப்பை கண்டு மனம் சுணங்கி ரேணு தங்கையை பார்க்க, அவளிடம் கண்களால் அமைதியாக இரு என்றாள்.

பாட்டியிடம் திரும்பி “நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிறேன்” என்றாள்.

கீரையை ஆய்ந்து கொண்டிருந்தவர் அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் தன் வேலையை தொடர்ந்தார்.

அவரது செயலில் கடுப்பானவள் “அதுதான் ஒத்துகிறேன் சொல்லிட்டேனே...அப்புறம் என்ன முறைப்பு” என்றாள்.

“என்கிட்டேயா சொன்ன? நீ ஏதோ சுவத்துக்கு கிட்ட பேசிகிட்டு இருந்தேன்னு நினைச்சேன்” என்றார் நக்கலாக.

“ரொம்ப தான் பேசுறீங்க”

“யாரு நானா? நீ சொல்றதை ஒழுங்கா சொல்லியிருந்தா நான் ஏன் இப்படி பேசப் போறேன்...என்கிட்ட சொல்ல வந்தவ என்ன சொல்லியிருக்கனும்? கல்யாணத்துக்கு ஒத்துகிறேன் பாட்டின்னு சொல்லியிருக்கனும்...மொட்டையா சொன்னா என்ன அர்த்தம்” என்று அவளது தவறை சுட்டிக்காட்டினார்.

இவர்கள் இருவரும் வழக்கடித்துக் கொண்டிருக்க, ரேணுவின் பார்வையோ நிரஞ்சனையே சுற்றி வந்தது. அவனோ இவள்புறம் திரும்பாது பாட்டியை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தன்னை பார்க்க மாட்டானா என்று ஏக்கத்துடன் அவன் முகத்தை நோக்கினாள். ரேணு தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை அறிந்தும் அவளது வார்த்தையே மனதில் உழல, தனது புறக்கணிப்பு அவளுக்கு தனது வலியை உணர்த்த வேண்டும் என்று உறுதியாக இருந்தான்.

பாட்டியின் நக்கலில் கடுப்பான நித்யா “ஓவரா பண்ணாதீங்க...எங்க அக்காவுக்காக இதுக்கு நான் ஒத்துக்கிறேன்” என்றாள் திமிராக.

“நீ எதுக்காக வேணா ஒத்துக்கோ...ஆனா, என் பேரன் கிட்ட ஒழுங்கா இல்ல நானே வந்து இப்படி வெடுவெடுக்குன்னு பேசுற வாயை இழுத்து வச்சு தச்சுபுடுவேன் சொல்லிட்டேன்” என்று மிரட்டினார்.

“உங்க பேரன் என்ன..எந்த கழுதையோ, குதிரையோ எதுவா இருந்தாலும் எங்க அக்கா வாழ்க்கைக்காக சகிச்சுப்பேன்” என்றாள்.

அவள் திருமணத்திற்கு ஒத்துகொள்கிறேன் என்றதுமே போனில் விஸ்வாவின் எண்ணுக்கு அழைத்துவிட்டு அங்கு நடப்பவைகளை அவன் கேட்கும் படி செய்தான் நிரஞ்சன்.

அந்த பக்கம் கேட்டு கொண்டிருந்தவனோ தன்னை கழுதை, குதிரையுடன் ஒப்பிடும் நித்தியை கண்டு நொந்து போய் ‘அடப்பாவி! ரொம்ப தான் ஓவரா போறா...இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு கவனிச்சுக்கிறேன்’ என்று கருவிக் கொண்டான்.

அவளது பதிலில் கடுப்பான பாட்டி “என் பேரன் என்ன இளப்பமா போயிட்டானா உனக்கு...கச்சேரி பண்ணி சம்பாதிக்கிறவனை கழுதை, குதிரைன்னு பேசுற...அவன் கிட்ட சொல்லி நல்லா நாலு இழுப்பு இழுக்க சொல்றேன்” என்றார்.

“ஹ...தேங்காய் மூடி வாங்கிகிட்டு பாடுற ஆளுக்கு இவ்வளவு பில்ட்டப்பா?” என்றாள் கேலியாக.

அதுவரை பொறுமையாக இருந்த சுமதி “இதோ பாரும்மா...எங்க பிள்ளையை இப்படி எல்லாம் பேசாதே...அந்த தேங்காய் மூடி வாங்குறவன் தான் உன்னை கட்டிக்க சம்மதம் சொல்லி இருக்கான். அதை நியாபகம் வச்சுக்கோ” என்றார் அதட்டலாக.

நிரஞ்சனுக்கு அவர்கள் பேசிக் கொள்வதை கேட்டு சிரிப்பு வர, மெல்ல அங்கிருந்து நழுவி வெளியே வந்து லைனில் இருந்த விஸ்வாவிடம் பேசினான்.

“ஏன் அண்ணா? எல்லோரும் சேர்ந்து என்னை தேங்காய் மூடி வாங்குகிறவனாவே முடிவு பண்ணிட்டாங்களா? இதெல்லாம் டூ மச்...நீங்களாவது எனக்காக பேசக் கூடாதா?” என்றான் பொருமலுடன்.

அதுவரை இருந்த மன சோர்வு நீங்க “ஹாஹா...நான் என்ன-டா சொல்றது...தேங்காய் மூடி பாடகன்னு சொல்றது உன்னோட டார்லிங் தான். இதுல நான் எப்படி தலையிட முடியும் சொல்லு” என்றான் கேலியாக.

“எல்லாம் என் நேரம்! எல்லோரும் சேர்ந்து என்னை வச்சு செய்றீங்க...எனக்கும் நேரம் வரும் அப்போ பார்த்துக்கிறேன்” என்றான்.
 
  • Love
Reactions: Chitra Balaji