அத்தியாயம் - 25

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,592
1,191
113
அத்தியாயம் – 25

கேசவனின் ஆட்களுக்கும் இது பெரிய அதிர்வை கொடுத்தது. அவர்களிடம் மகிழ்ச்சி இருந்ததா என்று கேட்டால் தெரியாது? ஆனால் எந்த பெண்ணையும் தவறான கண்ணோட்டத்தோடு பார்க்காத கேசவனுக்கு இது நல்ல வாழ்க்கை தான். ஆனால் அவனை தொடர்ந்து கொண்டிருக்கும் துரோகங்களும் நன்றாக வாழ விடுமா? என்றும் எண்ணினார்கள்.

கார்த்திக்கும், கேசவனும் இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அடுத்த நடவடிக்கைகளில் இறங்கி இருந்தார்கள். வீட்டிலேயே வைத்து திருமணத்தை முடித்து விடலாம் என்று ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தார்கள்.

சக்தியும் கேசவனிடம் பேசிய பின்னர் அவன் முன்னே செல்லாமல் அறைக்குள்ளேயே அடைந்து கொண்டாள். ஏனோ அவளது உள்மனம் நிம்மதியின்றி தவித்துக் கொண்டிருந்தது. தனது வாழ்க்கை ஓடிய ஓட்டத்தை எண்ணி பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அதே சமயம் தனது அண்ணனுக்கு என்னவாகி இருக்கும் என்கிற எண்ணமும் எழாமல் இல்லை.

அவனை தேடி வந்து தானே அனைத்தையும் இழந்து அமர்ந்திருக்கிறோம் என்றெண்ணிக் கொண்டாள். நல்ல வேலை என்று சொல்லித்தானே வந்து சேர்ந்தான். அவனுக்கு என்னவானது? அவன் தங்கியிருந்த இடத்தின் விலாசமும் தவறு. இங்கு அவன் எங்கிருந்தான்? எங்கிருந்து தங்களுக்கு போன் செய்தான்? எங்கிருந்து கடிதம் எழுதினான்? சின்ன ஈ எறும்பிற்கு கூட கெடுதல் நினைக்காத அவனுக்கு என்ன நடந்திருக்கும்? என்று யோசித்து தலையைப் பிடித்தபடி அமர்ந்து விட்டாள்.

அந்நேரம் கார்த்தி அறைக் கதவை தட்ட, மெல்ல எழுந்து சென்று திறந்தாள். அவளது முகத்தில் தெரிந்த குழப்பத்தை கண்டு யோசனையுடன் “என்ன சக்தி? எதுவும் பிரச்சனையா?”

“ம்ம்...ஒண்ணுமில்ல! அண்ணனை பற்றி நினைச்சிட்டு இருந்தேன். எனக்கு ஒரு உதவி செய்வீங்களா?”

அண்ணன் என்று அவாள் கூறியதுமே உள்ளுக்குள் சுதாரித்துக் கொண்டவன் “சொல்லுமா” என்றான்.

“எங்கண்ணன் படம், விலாசம் வேலை செஞ்ச இடத்தோட விலாசம் எல்லாம் தரேன். அவனுக்கு என்னாச்சுன்னு விசாரிச்சு சொல்றீங்களா?”

ஒரு நிமிடம் யோசித்தவன் “பண்ணிடலாம் சக்தி. அதுக்கு முன்னே உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்துக்கு ஏற்பாடுகள் நடந்திட்டு இருக்கு. நாளைக்கு காலையில் முஹுர்த்தம்” என்றவன் கையிலிருந்த பைகளை அவளிடம் நீட்டினான்.

அவன் சொன்ன செய்தியை கேட்டு ஒரு நிமிடம் அதிர்ந்தாலும் “இவ்வளவு சீக்கிரமா ஏற்பாடு பண்ணிட்டீங்களா?” என்றாள் பைகளை வாங்காமல்.

அவளது முகத்தை பார்த்து “அவன் வாழ்க்கையில் நடக்கிற முதல் நல்ல விஷயம். அதை எவ்வளவு சீக்கிரம் நடத்தி வைக்கனுமோ அவ்வளவுக்கு நல்லது. அதனால தான் உனக்கு எல்லாமே நாங்களே வாங்கிட்டு வர மாதிரி ஆகிடுச்சு”.

நீண்ட நெடிய பெருமூச்சு எழுந்தாலும் உள்ளுக்குள் தான் செய்வது சரியா என்கிற எண்ணமும் எழாமல் இல்லை. அவன் ஒரு ரவுடி என்பதை கண்கூடாக பார்த்திருக்கிறாள். அப்படி இருந்தும் அவனை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்ததை தன்னை மீறி நடந்த ஒன்றாகவே நினைத்தாள்.

அவனிடமிருந்து பையை வாங்காமல் யோசனையுடன் நின்றவளின் கையில் பைகளை திணித்து “இதுல உனக்கு என்ன பிடிக்கலையோ சொன்னா மாத்திக்கலாம். வேற என்ன வேணும்னாலும் சொல்லும்மா வாங்கிடலாம்”.

அவனை நிமிர்ந்து பார்த்தவள் சிந்தனையுடனே “சரிண்ணா” என்றாள்.

சிறிது நேரம் அப்படியே நின்றவன் அங்கிருந்து வெளியேற, கையிலிருந்த பைகளை படுக்கையில் வைத்துவிட்டு அப்படியே அமர்ந்தாள். சற்று நேரம் அப்படியே இருந்தவள் மெல்ல எழுந்து அறையை விட்டு வெளியேறி தேனுவை புதைத்த இடத்திற்கு சென்று நின்றாள்.

அவள் புதைக்கப்பட்ட இடத்தில் ரோஜா செடிகள் வைக்கப்பட்டு பார்க்கவே ரம்மியமாக இருந்தது. மெல்ல கீழே அமர்ந்து அந்த இடத்தை கைகளால் வருடியவள் “தேனு! காலம் முழுக்க என்னோடையும் அண்ணனோடவும் வருவேன்னு நினைச்சேன். ஆனா இப்படி இடையில என்னை மட்டும் தனியா விட்டுட்டு போயிட்டியே? நாம வளர்ந்த ஊரில் இல்லாம எங்கேயோ, யார் வீட்டிலோ அந்நியமா வாழ வேண்டிய நிலையில் இருக்கிறேன். நாளைக்கு காலையில எனக்கு கல்யாணமாம் தேனு. இது நானே உருவாக்கிக் கொண்டது. இங்கிருந்து வெளியே போனா ஒரு நாள் கூட என்னால நிம்மதியா வாழ முடியாதுன்னு தோணுது. அதே சமயம் அவர் மேல அன்பு, காதல் இப்படி எதுவுமில்லை. அண்ணனை தேடி கண்டு பிடிக்கிற வரை எனக்கு ஒரு பாதுகாப்பான இடம் தேவை. அது இங்கே கிடைக்கும்னு நம்பி தான் இந்த ஏற்பாட்டிற்கு சம்மதம் சொல்லி இருக்கிறேன். இதை தவிர மற்ற எதையுமே நான் நினைக்கல” என்றாள் கண்களை மூடியபடி.

அந்நேரம் அங்கே வந்த கேசவன் அவள் தேனுவின் சமாதி அருகில் அமர்ந்திருப்பதை கண்டு மெல்ல அருகே சென்றான். சற்று தூரமாகவே நின்று கொண்டு அவளை சிறிது நேரம் பார்த்திருந்தான். தான் வந்ததை கூட அறிந்து கொள்ளாமல் அப்படியே அமர்ந்திருந்தவளை பார்த்துக் கொண்டே லேசாக செருமினான்.

அவனது சப்தம் கேட்டதும் அவசரமாக எழுந்து நின்றாள். நிமிர்ந்து அவன் முகம் கூட பார்க்காமல் தேனுவின் சமாதியை பார்த்தபடி நின்றிருந்தாள்.

அவளிடம் பேசி விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டு வந்தவனுக்கு என்ன பேசுவதென்று தெரியாமல் சற்று நேரம் அப்படியே நின்றான். பின்னர் தன்னை சமாளித்துக் கொண்டு “சக்தி! நாளைக்கு நமக்கு கல்யாணம்”.

“ம்ம்..”

“என்னைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?”

இந்த கேள்வியை எதிர்பார்க்காது சட்டென்று நிமிர்ந்தவள் “நீங்க...” என்று இழுத்தாள்.

“சொல்லு சக்தி! நான் யார்?”

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தபடி நின்றாள்.

“நான் ஒரு ரவுடி..நிறைய கொலைகளை பண்ணி இருக்கிறேன். இன்னமும் பண்ண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்” என்றான் அழுத்தமாக.

அதை கேட்டதுமே உடல் அதிர்ந்து போக ஒருவித மிரட்சியுடன் அவனைப் பார்க்க, “இந்த ஆதி கேசவன் ஒரு கொலைகாரன். பல குடும்பங்கள் சிதைந்து போக காரணமானவன். அதற்காக நான் வருத்தமோ கவலையோ பட்டதில்லை. சிறு வயதிலிருந்தே இது தான் என் வாழ்க்கை. இப்படிப்பட்ட ஒருவனை திருமணம் செய்து கொள்ள நீ தயாரா?”

கொலை என்கிற வார்த்தை அவளது குலையை நடுங்க வைத்திருக்க “கொலை செஞ்சிருக்கீங்களா? இனியும் செய்வீங்களா?” என்றாள் மிரட்சியுடன்.

“ம்ம்...இது ஒரு வழி பாதை சக்தி. இங்கே நான் ஓடுவதை நிறுத்திட்டா என்னை அவங்க போட்டுடுவாங்க. நான் ஓடும் வரை தான் எனக்கு இங்கே மதிப்பு”.

சட்டென்று அவளது பார்வை தேனுவின் சமாதியின் மீது படிந்து மீள, “அப்போ உங்க மேல உள்ள பழிவெறியில் தான் தேனுவை கொன்னுட்டாங்களா?”

யோசனையுடன் அவளை பார்த்தவன் “அப்படியும் வச்சுக்கலாம்”.

“என்ன சொல்றீங்க?”

“இங்கே பார் சக்தி! தேனு இறந்தது எதிர்பாராமல் நடந்த சம்பவம். நீ தேவையில்லாம குழப்பிக்காதே. நான் என்ன சொல்ல வரேன் என்பதை புரிந்து கொள். இது தான் நான். என் வாழ்க்கை கரடுமுரடான வாழ்க்கை தான். உனக்கு நாளை காலை வரை கூட நேரமிருக்கு. உன் முடிவை மாற்றிக் கொள்ள”.

அவள் அதிர்ந்து போய் விழித்து அவனை பார்த்தாள்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,592
1,191
113
அவனோ இறுகிய முகத்துடனே “நீ என்னை கல்யாணம் பண்ணிக்க சம்ம்திக்கலேன்னாலும் உனக்கு பாதுகாப்பு கொடுப்பது என் கடமை. ஆனா நமக்கு கல்யாணம் நடந்த பிறகு எந்த காரணம் கொண்டும் நீ என்னை விட்டு பிரிந்து போக கூடாது. எனக்கு நீ சத்தியம் செய்து கொடுக்கணும்” என்றான் அழுத்தமாக.

அடுத்தடுத்த அதிர்வுகளை அவன் கொடுத்து கொண்டே போக, அவளுக்கு தலைவலிக்க ஆரம்பித்தது. அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தலையை பிடித்தபடி நின்றாள். அவளையே வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தவன் “நிதானமா யோசிச்சு உன் முடிவை சொல்லு சக்தி. உன்னோட எந்த முடிவும் என்னை பாதிக்காது. நாம இருவரும் சந்தர்ப்ப சூழ்நிலையால மட்டுமே இணைய நினைக்கிறோம். அதனால உன்னுடைய மனசு என்ன சொல்லுதோ அதை கேட்டு முடிவு பண்ணு. உன்னோட பதிலுக்காக காத்திருப்பேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து விறுவிறுவென்று நகர்ந்து விட்டான்.

அமைதியான வாழ்க்கையை மட்டுமே அறிந்தவளுக்கு அவன் கூறியவை அனைத்தும் உள்ளுக்குள் பயத்தை மட்டுமே தந்தது. கொலை என்கிற வார்த்தையை சொல்லவே நடுங்கும் தான் எங்கே? பல கொலைகளை செய்திருக்கிறேன் இன்னமும் செய்வேன் என்று அசால்ட்டாக சொல்லும் அவன் எங்கே? என்று யோசித்து யோசித்து தலை வலிக்க ஆரம்பித்தது.

அங்கேயே தன்னை மீறி அமர்ந்து விட, அவளை சுற்றி எண்ணங்கள் சுழன்று கொண்டே இருந்தது. என்ன முயன்றாலும் இப்போது அவனை விட்டால் தனக்கு ஆதரவளிக்க யாருமில்லை. அதே சமயம் அவன் திருமணம் இல்லாமல் பாதுகாப்பை தர முடியும் என்று சொல்லும் போது தானே சென்று படுகுழியில் விழ வேண்டும் என்றும் யோசித்தாள்.

இரவு முழுவதும் அங்கேயே அமர்ந்திருந்தாள். அவளை யாரும் தொந்திரவு செய்யவில்லை. கேசவனும் ஹாலில் சோபாவில் அமர்ந்தவன் தான் அவளது பதிலிற்காக காத்திருந்தான். கார்த்தி மட்டும் திருமண ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தான். இருவரையும் கவனித்தவனுக்கு மறுநாள் திருமணம் செய்து கொள்ளப் போகும் அவர்கள் சிந்தனையுடனே இருந்ததது கவலையளித்தது. அதிலும் சக்தி தோட்டத்தை விட்டு வராமல் அங்கேயே இருந்தது லேசான பயத்தை கொடுத்தது.

கார்த்தி ஒருவனே அனைத்தையும் பார்த்துக் கொண்டான். விடியலின் நேரம் இருவரிடமிருந்து அசைவு தெரிந்தது. தோட்டத்திலிருந்த சக்தி மரத்து போன கால்களைப் பிடித்தபடி எழுந்து நின்றாள். அவளது முகத்தில் தெளிவு பிறந்திருந்தது. லேசாக விந்தி விந்தி நடந்தவள் ஹாலிற்குள் நுழைந்தாள்.

அவள் வருவதை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான் கேசவன். அவனது கண்கள் அவளை முழுமையாக ஆராய்ந்து கொண்டிருந்தது. அவளது முகத்தில் தெரிந்த தெளிவை கண்டு அவன் இதழ்கள் புன்னகையை பூசிக் கொண்டது.

மெதுவே நடந்து வந்து அவன் முன்னே நின்றாள். நேரடியாக அவன் முகாம் பார்க்க, இருவரது கண்களும் ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டது.

சொல்ல வந்தவற்றை சொல்ல வார்த்தைகள் எழாமல் எச்சிலை விழுங்கி கொண்டு மெல்லிய குரலில் “எனக்கு இந்த திருமணத்தில் சம்மதம்” என்றாள்.

அவள் வருவதை கவனித்துவிட்ட கார்த்தியும் ஒதுங்கி நின்று அவளின் பதிலை எதிர்பார்த்திருந்தான். அவள் சம்மதம் தெரிவித்தவுடன் கேசவன் என்ன மாதிரி உணர்ந்தான் என்றே புரியவில்லை. தானும் எழுந்து நின்று அவளிடம் தனது கையை நீட்டினான்.

அவனை நிமிர்ந்து பார்த்தவள் மெல்ல தன் கைகளை எடுத்து அவன் கைகள் மீது வைத்து “எந்த சூழ்நிலையிலும் உங்களை விட்டு போக மாட்டேன்” என்று சத்தியம் செய்தாள்.

இதை சற்றும் எதிர்பார்க்காத கார்த்தி ‘அடபாவி! சரியான கேடி இவன்’ என்றெண்ணிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

இறுகிய உடல் சற்றே தளர்வடைய தன் கையின் மீதிருந்த அவளது கையை மற்றொரு கையால் அழுந்தப் பற்றியவன் “இது போதும் சக்தி! நீ முழு மனதொட சம்மதிக்கணும் என்று தான் உனக்கான நேரத்தை கொடுத்தேன். இனி, உன்னை பாதுகாக்க வேண்டியது என் பொறுப்பு”.

மெல்ல அவனது கைகளிலிருந்து தனது கையை உருவிக் கொண்டவள் நாணத்துடன் அங்கிருந்து செல்லத் தொடங்க “சக்தி! புடவையை பார்த்தியா பிடிச்சிருக்குதா?”

அவன் புறம் திரும்பாமலே “நீங்க கொடுத்தது நல்லா தான் இருக்கும்” என்று கூறிவிட்டு அறைக்குள் ஓடி விட்டாள்.

அவளது இந்த பதிலை எதிர்பார்க்காதவன் முகத்தில் பெருமிதத்துடன் கூடிய புன்னகை வந்தமர்ந்து கொண்டது. அப்போது உள்ளே வந்த கார்த்தி “என்ன கேசவா நடக்குது? உன்னை என்னவோன்னு நினைச்சேன். நீ சரியான கேடி...சரி நேரமாச்சு நீ போய் குளிச்சு ரெடியாகு” என்றான்.

கார்த்திக்கை சட்டென்று இழுத்தணைத்து “தேங்க்ஸ் டா” என்றான்.

அவனை கூர்ந்து பார்த்து “உன்னை இத்தனை சந்தோஷமா என்னைக்கும் பார்த்ததில்லை கேசவா. அந்த டாகுமென்ட்ஸ் கிடைச்சு நம்ம இந்த போராட்டத்தில் ஜெயிச்சிட்டா, எல்ல்லாத்தையும் விட்டுட்டு சக்தியை கூட்டிட்டு போய் அமைதியான வாழ்க்கையை வாழனும் நீ”.

அத்தனை நேரம் இருந்த இணக்கம் மறைய “ம்ம்...அதுக்கு நாம நிறைய போராட வேண்டி இருக்கும் அதோட” என்றவனது பார்வை அவளின் அறைக்கதவை தொட்டு மீள, அவனது எண்ணத்தை புரிந்து கொண்டவன் போல “புரிஞ்சுப்பா! நீ அதை நினைத்து கவலைப்படாதே” என்று கையைத் தட்டிக் கொடுத்தான்.

“கோபப்பட்டாலும் அவளை விட்டுக் கொடுக்கக மாட்டேன் கார்த்தி. பார்த்துக்கலாம்!” என்றபடி தன்னறைக்கு சென்றான்.

**************************தொடரும் ********************************************
 

lakshmi

Active member
May 9, 2018
335
50
43
சக்தி கையில் வைத்திருக்கும் அந்த பையில் தான் டாக்குமெண்ட் எல்லாம் இருக்கிறதோ.:unsure::unsure::unsure::unsure:
 

Chitra Balaji

Member
Feb 5, 2020
57
34
18
Kozhappathula தானே இருந்தா அவசரபட்டு முடிவு pannitamonu avaluku oru paathukaappu vennum nu தானே avana கல்யாணம் pannikanum nu decide panninaa ஆனா அவன் தான் கல்யாணம் pannala naalum பாதுக்காப்பு tharenu solraan appram கல்யாணத்துக்கு எப்படி okay சொன்னா.... Ethu நடந்தாலும் avana vittutu போக maatenu sathiyam panni koduthutaa..... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super maa... Semma episode
 
  • Like
Reactions: sudharavi