Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 4 | SudhaRaviNovels

அத்தியாயம் - 4

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
59
45
18
அத்தியாயம் – 4

இருளடைந்த அறை, மூச்சுக்காற்றின் சப்தம் மட்டும் எங்கும் விரவிக் கிடந்தது. கைகள் நாற்காலியோடு கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருந்தவள் மெல்ல நிமிர்ந்து இருட்டில் கண்களை சுழற்றினாள்.

முதலில் இருட்டு கண்களுக்கு பழக சற்று நேரம் எடுத்தது. பெரியதுமில்லாத சிறியதுமில்லாத ஒரு அறை. சிறிய மேஜை ஒன்றும், சிறிய கட்டில் மட்டுமே இருந்தது. அறையின் சுவற்றில் கண்களைப் பதித்தவளுக்கு அது சவுண்ட் ப்ரூப் செய்யப்பட்ட அறை என்பது புரிந்து போனது.

அந்நேரம் கிளிக் என்கிற சத்தம் கதவில் கேட்க, அவசரமாக தலையை தொங்கப் போட்டுக் கொண்டாள்.

உயர்ந்த மனிதன் ஒருவன் உள்ளே நுழைந்தான். அவனது ஆகிருதியிலேயே தெரிந்தது பத்து பேரை சமாளிக்க கூடியவன் என்று. அவள் இருந்த பக்கம் கூட திரும்பாதவன் மேஜை மீது எதையோ வைத்து விட்டு, அறையின் விளக்கைப் போட்டான்.

அவள் அமர்ந்திருந்த நாற்காலியின் எதிரே கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன் “நேராவே பார்க்கலாம். உனக்கு கொடுத்த மருந்தோட அளவுக்கான நேரம் முடிஞ்சு போச்சு. என்னைப் பார்” என்றான் அழுத்தமான குரலில்.

அவன் அப்படி சொன்னதும் சட்டென்று நிமிர்ந்தவள் அலட்சியமான பாவனையுடன் அவனது கண்களை நேருக்கு நேர் சந்தித்தாள்.

இரு கைகளையும் கட்டிக் கொண்டு அவளது முகத்தைப் பார்த்து “அங்கே நீ எப்படி போய் சேர்ந்த? உன்னை எந்த ஆபரேஷனுக்கு தேர்ந்தெடுத்தாங்க?” என்றான்.

இதழை கிண்டலாக வளைத்து தோள்களை குலுக்கி அவனை கேலியாகப் பார்த்தாள்.

சட்டென்று நாற்காலியை பின்னுக்குத் தள்ளி எழுந்த சிவதாஸ் அவளது கழுத்தைப் பிடித்திருந்தான்.

“இந்த சிவதாஸ் கிட்ட சிக்கினவன் உடம்புல உயிர் மட்டும் தான் இருக்கும். உன் மேல இன்னும் கையை வைக்காதது பெண்ணா இருக்கியேன்னு தான்” என்றான் உக்கிரமாக.

தொண்டை வலி எடுத்தாலும் “உன்னால முடிஞ்சதை பார்த்துக்க..”என்றவள் அவன் மேலும் கொடுத்த அழுத்தத்தில் இரும ஆரம்பித்தாள்.

அவளது அலட்சியம் அவனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சிவதாஸ் என்கிற பெயரை கேட்டாலே ஆண்களே பேண்ட்டில் ஒன்றுக்கு அடித்து விடுவார்கள். ஆனால் இவளோ அலட்சியம் காட்டுகிறாள் என்றெண்ணியவன் அவளது கட்டுக்களை அவிழ்த்து இருகைகளையும் மடக்கிப் பிடித்து சுவற்றோடு திருப்பி நிற்க வைத்தான்.

அவன் கைகளைப் பிடித்ததிலேயே வலி உயிர் போனது. அதிலும் இரு கைகளையும் மடக்கி பின்பக்கம் வளைத்துப் பிடித்ததில் உயிர் போனது.

ஒரு கையால் அவளது கைகளைப் பற்றிக் கொண்டவன் மறுகையால் அவளது போனி டெயிலைப் பிடித்து முகத்தை சுவற்றோடு மோதினான். அதில் மூக்கு நேராக சுவற்றில் அடித்து உள்ளி மூக்கு உடைந்து ரத்தம் ஒழுக ஆரம்பித்தது.

“யார் நீ! எதற்காக உனக்கு அவங்க ட்ரைனிங் கொடுக்கிறாங்க?” என்றான் உறுமலாக.

அவளிடமிருந்து சிறு சத்தம் கூட வரவில்லை. அவன் அடித்த அடியின் வீரியம் அறிந்தவனுக்கு வேறொரு பெண்ணாக இருந்தாள் இந்நேரம் கதறி மயங்கி விழுந்திருப்பாள் என்று தெரியும். ஆனால் இவளோ மேலும் அழுத்தமாக உடல் விறைக்க நின்றிருந்தாள்.

ஒருபக்கம் அவளின் தைரியம் கண்டு ஆச்சர்யமாக இருந்தாலும், தனது ட்ரீட்மென்ட்டில் அலட்சியமாக நிற்பதா? என்றெண்ணி அப்படியே தன் பக்கம் திருப்பியவன் தன் உடலோடு அழுத்திப் பிடித்துக் கொண்டு “சொல்லு! யார் நீ ? அந்த இயக்கத்தில் எப்படி போய் சேர்ந்த?” என்றான்.

அவனது உடல் முழுவதும் அவள் மேல் பட்டதும் அதுவரை இருந்த வலியை மறந்து அவன் மடக்கிப் பிடித்திருந்த கைகளின் முட்டியால் வேகமாக அவன் வயிற்றில் தாக்கி விட்டு, லேசாக அவன் தள்ளடியதும் , அவனிடமிருந்து போராடினாள்.

அவனோ சற்றே சிரிப்புடன் அவள் எதிர்பார்க்கும் முன் அவள் இடையை வளைத்து வெயிட் லிப்டிங் தூக்குவது போல தூக்கி இருந்தான். இதை சிறிதும் எதிர்பார்கவில்லை.

“இந்த சிவதாஸ் கிட்டேயே விளையாடி பார்க்கிறியா?மரியாதையா நான் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லிடு” என்றான்.

“இந்த உயிர் இருக்கிற வரை உன்னோட கேள்விகளுக்கு பதில் கிடைக்காது” என்றாள் முதன்முறையாக வாயைத் திறந்து.

பட்டென்று கீழே போட்டவன் வலியில் சுருங்கிய அவளது முகத்தைப் பார்த்து “இன்னும் என் ட்ரீட்மென்ட்டை ஆரம்பிக்கல. இன்னைக்கே சொல்லிட்டா உனக்கு நல்லது. பொண்ணுன்னு பார்க்க மாட்டேன் பிரிச்சு மேஞ்சிடுவேன்” என்றான் உறுமலாக.

நிமிர்ந்து அவனை பார்த்தவளின் இதழ்களில் ஏளனப் புன்னகை.

அவளின் முகம் நோக்கி குனிந்தவன் முடியை காதோரம் ஒதுக்கி விட்டு “அழகான கண்கள், ஆரஞ்சு சுளை போல உதடுகள், வெண்ணை போன்ற கன்னங்கள் இப்படி இருக்கிற இந்த முகம் அடி வாங்கி கருத்து சிவந்து போகனுமா?” என்றான் மென்மையான குரலில்.

அவனது பேச்சைக் கேட்டு அவளது கண்களும், இதழ்களும் ஏளனமாக சிரித்தது. நீயும் ஆண் தானே? என்று கேலியாக பார்த்தாள்.

சிரித்த உதடுகள் மீண்டும் சுருங்கும் முன்பே அவனது முஷ்டி அந்த உதடுகளை கிழித்திருந்தது.

“மனசுல நினைக்கிறது கூட என்னைப் பற்றி மரியாதையா நினைக்கணும். எனக்கு வேண்டியது உண்மை! இந்த உடல் இல்ல” என்றான் உறுமலாக.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
59
45
18
உதிரம் கொட்டும் உதடுகளுடன் அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் இருந்தது என்ன என்று அவனால் கணிக்க முடியவில்லை.

தான் இத்தனை பேசியும் அவள் ஒற்றை வார்த்தை கூட பதிலளிக்காமல் இருந்தது அவனது தன்மானத்தை சீண்டியது. முறம் போன்ற தனது கையால் அவளது முகத்தைப் அழுந்தப் பற்றியவன் “பேசு! இனி உன்னோட வார்த்தை எனக்கு கேட்கணும். நீ யார்? எதற்காக அவங்க கூட இருக்க? என்ன ஆபரேஷனுக்காக உன்னைத் தயார் செய்றாங்க?” என்றான்.

வலி! முகமெல்லாம் அப்படியொரு வலி...ஆனாலும் அத்தனை வருட பயிற்சி முகத்தில் எதையும் காட்ட விடாது செய்தது. அமைதியாக அவனது கண்களை நேருக்கு நேர் பார்த்து “கையை எடு பேசுறேன்” என்றாள்.

அவள் சொன்னதும் பட்டென்று கைகளை எடுத்துக் கொண்டவன் சற்று தள்ளி நின்று கொண்டான்.

முகத்தில் விழுந்த முடியை தலையை உலுக்கி தள்ளிக் கொண்டவள் “என்னை எதுக்கு அரசாங்கத்திடம் ஒப்படைக்காம தனியா அடைச்சு வச்சிருக்க?” என்றாள் அழுத்தமான குரலில்.

தன் கேள்விக்கு பதிலளிப்பாள் என்று காத்திருக்க அவளோ அவனிடம் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளது தைரியமும், அழுத்தமும் அவனை உள்ளுக்குள் ஆச்சர்யப்பட வைத்தது.

“லுக் சஞ்சலா! நான் கேட்ட கேள்விக்கு பதில் கொடுக்கணும். உன்னுடைய கேள்விக்கு பதில் தர வேண்டிய அவசியம் எனக்கில்ல” என்றான் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு.

அவனை கூர்ந்து பார்த்தவள் “உனக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்குமில்லை” என்றாள் அலட்சியமாக.

அதுவரை இலகுவாக அமர்ந்திருந்தவனின் முகம் தீவிர பாவத்தைக் காட்ட, மெல்ல எழுந்து கொண்டவன் “என்னோட ட்ரீட்மென்ட் தான் வேணும்னு டிசைட் பண்ணிட்டே. ஓகே..பீ ரெடி” என்றவன் கதவை அறைந்து சாத்திவிட்டு அங்கிருந்து சென்றான்.

அவன் சென்றதுமே முதல் நாளில் இருந்து கை கட்டை அவிழுக்க முயற்சி செய்து கொண்டிருந்தவள் ஓரளவிற்கு அதில் வெற்றியும் பெற்றிருந்தாள். மீதமுள்ளதை இப்போது அவிழ்த்து விடலாம் என்று முயற்சித்தவள் சிறிது நேரம் போராடி அவிழ்த்து விட்டாள்.

அவன் வரும் வரை எதுவும் தெரியாதது போல் அமர்ந்து கொண்டாள். சற்று நேரத்தில் அவன் கையில் ஒரு பெட்டியுடன் உள்ளே வந்து அவள் எதிரே இருந்த மேஜையில் வைத்துவிட்டு நிமிரவும், நாற்காலியை தூக்கி அவன் தலையில் அடித்திருந்தாள்.

தலை உடைந்து ரத்தம் வழிந்தோட நிமிர்ந்தவன், கதவை திறந்து கொண்டு பாய்ந்தவளை இடுப்பை பிடித்து தூக்கி சுருட்டி அடித்திருந்தான். சுருண்டு விழுந்தவளை அவள் மேல் ஏறி அமர்ந்தவன் கை கால்களை மடக்கிப் பிடித்து கயிற்றால் சுருட்டி கட்டி தூக்கிப் போட்டான்.

அருகே இருந்த நாற்காலியை இழுத்து போட்டுக் கொண்டு அமர்ந்தவனின் முகத்தில் மெச்சுதலான பார்வை. முகத்தில் வழிந்த ரத்தத்தை துடைத்து கொண்டவன் “சோ நீயா தான் வந்து சிக்கி இருக்க. ஆம் ஐ ரைட்?”

அவனை தலை உயர்த்தி பார்த்தவளின் இதழ்கள் நக்கலாக வளைந்தது.

“குட்! என்னை ஆழம் பார்க்க வந்திருக்க? உன்னுடைய தைரியம் எனக்கு பிடிச்சிருக்கு பட் ஒன் திங் இனி நீ நினைச்சாலும் என் கிட்ட இருந்து வெளியே போக முடியாது”

“அப்படியா?”

அவள் அருகே நெருங்கி அமர்ந்தவன் அவளது தாடையை அழுத்தமாகப் பற்றி “லுக் சஞ்சலா! எனக்கு பெண்கள் கிட்ட என்னுடைய ட்ரீட்மென்ட்டை காண்பிப்பது பிடிக்கல. மரியாதையா உங்க இயக்கம் பற்றி எல்லாவற்றையும் சொல்லிடு”.

இறுகிய முகத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள் “இங்கேருந்து போறது எனக்கு பெரிய விஷயமில்லை. நீ என்னவோ பெரிய அப்பாட்டக்கருன்னு ஊரே கொண்டாடுதே அது உண்மையான்னு தெரிஞ்சுக்க தான் வந்தேன்” என்றாள் கிண்டலாக.

அவளது பதிலில் ஆச்சர்யமடைந்தவன் “தெரிஞ்சுகிட்டியா?” என்றான் கூர்மையான பார்வையுடன்.

“எங்க இயக்கத்தை விட நீ கண்டுபிடிக்க வேண்டியது நிறைய இருக்கு. நாங்க ஒருவிதத்தில் உனக்கு உதவி தான் பண்றோம். ஏற்கனவே இருந்தவனுங்க எல்லோரும் அரசியல்வாதிகளின் கைகூலிகள். சோ நல்லா கண்ணை விரிய திறந்து பாரு உன்னை சுற்றி”.

மெதுவாக தலையசைத்தவன் “அதை எல்லாம் தெரிஞ்சுக்க தான் உன்னை தூக்கினேன். உங்க கூட்டத்தை தூக்கினாலே மற்ற எல்லாம் என் கைக்கு வந்துடும்”.

அவனை கிண்டலாக பார்த்துவிட்டு “உன் முயற்சி எல்லாம் வேஸ்ட்! எங்க பின்னாடி நிற்காம உன்னுடைய தேடலை வேற பக்கம் ஆரம்பி”.

“ம்ம்..ஓகே! நீ சொன்னா கேட்கிற ஆள் இல்ல. என்னுடைய ட்ரீட்மெண்டுக்கு தயாராக இரு” என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.

அவன் சென்றதும் அரை கதவை வெறித்தபடி சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தாள். அதே நேரம் வெளியே சென்றவனோ அப்துலை அழைத்து என்னென்ன செய்ய வேண்டும் என்பதை கூறிவிட்டு ஜீப்பில் ஏறி அமர்ந்தான்.

அவளை நினைத்து அவன் மனம் ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருந்தது. அவளின் தெனாவெட்டும், திமிரும் அவனை கவர்ந்திருந்தது. சிறிதளவு பயமின்றி தன்னை எதிர்நோக்கிய விதத்தை எண்ணிக் கொண்டே அமர்ந்திருந்தவனை கான்ஸ்டபில் வேலு திரும்பி பார்த்தார்.

‘சார்! வண்டியை எடுக்கலாங்களா?”
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
59
45
18
அவரின் அழைப்பில் சுதாரித்துக் கொண்டவன் “ம்ம்...எடுங்க” என்றவன் மீண்டும் தனது சிந்தனையில் மூழ்க, அவர் நீண்ட பெருமூச்சுடனும் ஒருவித பயத்துடனும் வண்டியை செலுத்த ஆரம்பித்தார்.

அந்நேரம் அவனது அலைப்பேசி அவனது சிந்தனையை கலைக்க, போனை எடுத்து காதில் வைத்தவனின் முகம் இறுகிப் போனது.

“நல்லா கவனிச்சியா பிரதீப்? எங்கள் குரல் இயக்கமும் அவளை தொடருது. அதே சமயம் வேறே ஒரு க்ரூப்பும் அவளை தொடர்ந்து கொண்டிருக்காங்க. எனக்கென்னவோ இதுக்கு பின்னாடி பெரிய விஷயம் ஒன்று சிக்கப் போகுதுன்னு தோணுது”.

“எனக்கு அப்படி தோணல தாஸ். அவளுடைய நடவடிக்கை சாதரணமாக தான் இருந்தது. இது ஏதோ காதல் விஷயம் மாதிரி தோணுது”

“நோ பிரதீப்! எந்தவொரு சின்ன விஷயத்தையும் மிஸ் பண்ணிடாதீங்க”.

“கண்டிப்பா தாஸ்! எங்கள் குரல் க்ரூப்பும் சஞ்சலாவை தேட ஆரம்பிச்சாச்சு”.

“குட்! குட்! இன்னும் டூ அவர்ஸ்ல அவ தப்பிச்சிடுவா”.

“வாட்!”

“எஸ்! சோ அவங்களோட ஒவ்வொரு மூவும் எனக்கு வந்தாகணும்”.

“டன்!”

இருட்டு அறையில் இருந்த சஞ்சலா தனது கைகளை விடுவித்துக் கொள்ள போராடிக் கொண்டிருந்தாள். பலத்த போராட்டத்திற்குப் பிறகு அவளது கைகள் விடுபட, மெல்ல நாற்காலியில் இருந்து எழுந்தவள் சப்தம் எழாமல் கதவை நோக்கி நடந்தாள். கதவருகே நின்று வெளியில் இருக்கும் நிலவரத்தை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

அவளை அங்கு தூக்கி வந்தவனை தவிர மேலும் ஒரு பத்து பேராவது இருப்பார்கள். போலீஸ் உடையில் இல்லாது சுற்றுவட்டாரத்தை கண்காணித்த வண்ணம் சுற்றிக் கொண்டிருந்தார்கள். மெல்ல நடந்து வந்து நாற்காலியில் அமர்ந்தவள் தன்னால் இப்போதிருக்கும் நிலையில் பத்து பேரை சமாளிக்க முடியுமா என்று யோசித்தாள். சற்று நேரம் யோசித்தவள் ஒரு முடிவிற்கு வந்து கதவோரம் சென்று நோட்டம் விட்ட பின்னர், படாரென்று திறந்து கொண்டு ஓட ஆரம்பித்தாள்.

எதிர்ப்பட்டவர்களை தாக்கிவிட்டு கண்மண் தெரியாமல் ஓட ஆரம்பித்தாள். அவர்களும் அவளை விட வேகத்தோடு அவளை துரத்த ஆரம்பித்தனர். கையில் கிடைத்தவர்களை தனது பாணியில் அடித்து நொறுக்கிவிட்டு மேலும் வேகத்துடன் அவர்களின் கையில் அகப்படாமல் ஓடினாள்.

ஒருகட்டத்திற்கு மேல் அனைவரையும் தாக்கிவிட்டு அவர்களின் கையில் அகப்படாமல் ஓடிக் கொண்டிருந்த பேருந்தில் ஏறி அமர்ந்தாள். அதுவரை இருந்த பதட்டம் நீங்கி, இதழில் ஒரு புன்முறுவல் எழ “இவ்வளவு தானா சிவதாஸ் நீ! நான் கூட என்னவோ நினைச்சேன்” என்று கேலியாக எண்ணினாள்.

அதே நேரம் பிரதீப் சிவதாசிற்கு அழைத்து “கிளி பறந்துடுச்சு” என்றான்.

“வெல் டன் பிரதீப்! இனி ஆட்டம் க்ளோஸ்!” என்று கைகளை நெட்டி முறித்தபடி கூறிவிட்டு போனை அணைத்தான்.
 
Need a gift idea? How about a tea mug?
Buy it!