அத்தியாயம் – 6
அதுவரை எந்த பயமும் இன்றி வந்தவளுக்கு இப்போது இருதயம் வாய் வழியாக வந்து விடுமோ என்கிற அளவில் எகிறி குதிக்க ஆரம்பித்திருந்தது.
உயிர் பயத்தில் அவள் வேகமாக ஓட, அவர்கள் மூவரும் முதலில் ஒன்றாக அவளை துரத்திக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் அவளை தப்பிக்க விட்டுவிடுவோமா என்கிற பயத்தில் ஆளுகொரு திசையில் பிரிந்து சுற்றி வளைத்து விட்டனர்.
நால்வரின் நடுவிலும் சிக்கிக் கொண்டவள் பயத்தில் அழுகையுடன் “ப்ளீஸ்! என்னை விட்டுடுங்க!” என்று கெஞ்ச ஆரம்பித்தாள்.
ராஜேஷோ அவளது முகத்தை பார்த்துக் கொண்டே சற்றே முன்னேறி “ஹேய் ரத்னா! பயப்படாதே! இவங்க என்னோட பிரெண்ட்ஸ் தான். உன்னைப் போலவே அவங்களும் அவரை பார்க்க வந்தவங்க தான்” என்றான் மெல்ல நடந்து கொண்டே.
அவளோ பின்னே நகர்ந்து கொண்டே “இல்ல ராஜேஷ். நீ பொய் சொல்ற. எனக்கு பயமா இருக்கு” என்றாள் கண்ணீருடன்.
பட்டென்று எட்டி அவளது கைகளைப் பற்றி இழுத்தவன் “நம்பு ரத்னா! பயப்படாதே! எல்லோரும் உன்னைப் போல வந்தவங்க தான். வா! போகலாம்” என்று அவளது தோளில் ஒரு அழுத்தம் கொடுத்து அழைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
மற்றவர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக அவனை தொடர்ந்தனர். ரத்னாவோ அவன் சொன்னதை நம்பவும் முடியாமல் அவனுடன் செல்ல மனமில்லாமல் சென்றாள். சுமார் பதினைந்து நிமிட நடைக்குப் பிறகு இருளடைந்த நடுப்பகுதிக்கு வந்திருந்தனர். இருளுக்கு நடுவே தூரத்தில் சிறிய வெளிச்சமொன்று தெரிந்தது.
அதை பார்த்ததும் சற்றே பயம் விலகி அவன் சொல்வது உண்மை என்று நம்பி அவனை தொடர்ந்தாள். மௌனமாக அனைவரும் அந்த பாழடைந்த கட்டிடத்தை நோக்கி சென்றனர். உயரமான படிக்கட்டுகள் கொண்ட அந்த கட்டிடத்தின் உள்ளே ஒவ்வொருவராக சென்றனர். அமானுஷ்யம் சூழ்ந்த அந்தப் பகுதி அவளை இன்னும் மிரட்டியது.
அவளது உடலின் வியர்வை நாளங்கள் மொத்தமாக ஊற்றெடுக்க, எதிரே தெரிந்தவற்றை வெறித்தவண்ணம், உமிழ் நீரை கூட விழுங்காது நின்றாள். அப்போது கட்டிடத்தின் மையப் பகுதியில் இருந்து ஒரு வயதான மனிதர் வந்து தலையசைக்க, அனைவரும் அவரை தொடர்ந்தனர்.
கட்டிடத்தின் உள்பகுதியில் தரையின் ஒரு பகுதியை நகர்த்தி ஒவ்வொருவராக இறங்க ஆரம்பித்தனர். அதை கண்டு நகர மறுத்தவளை வலுகட்டாயமாக தூக்கி அதனுள் இறக்கி விட்டு தானும் தொடர்ந்தான் ராஜேஷ்.
எங்கும் இருள் சூழ, வவ்வால்களின் சப்தமும், அதன் கழிவுகளின் நாற்றமும் குடலைப் பிரட்ட, தன்னை அறியாமல் ராஜேஷின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள். அவனோ நேர்கொண்ட பார்வையுடன் எதிரே தெரிந்தவற்றை உற்று நோக்கியபடி சென்று கொண்டிருந்தான்.
மற்றவர்களை மெல்ல திரும்பி பார்க்க அவர்களும் அவனை போலவே நேரே பார்த்து பொம்மை போல சென்று கொண்டிருந்தனர். இருள் சூழ்ந்த பாதையில் பத்து நிமிடங்களுக்குப் பிறகு திடீர் என்று வெளிச்சம் பரவியது.
திடீர் வெளிச்சம் வந்த இடத்தை உற்று நோக்கியபடி மெல்ல அடியெடுத்து வைத்தால். அதுவொரு மிகப் பெரிய மண்டபம். சுற்றிலும் மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருக்க, அங்கு அத்தனை கூட்டத்தை சற்றும் எதிர்பார்க்கவில்லை. நடுநிசி நேரத்தில் அத்தனை பேர் அங்கு என்ன செய்கிறார்கள் என்று அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த திசையை பார்த்தாள். அங்கு மிகப் பெரிய சிம்மாசனம் ஒன்று இருந்தது. அதன் பின்னே இருந்த சுவற்றில் சிலுவை தலைகீழாக மாட்டி வைக்கப்பட்டிருந்தது.
அதை பார்த்ததும் எச்சில் தொண்டையை தாண்டி இறங்க மறுக்க, விழிகளை மீண்டும் கூட்டத்தின் மீது செலுத்தினாள். அங்கிருந்தவர்கள் முகங்கள் அனைத்திலும் முகமூடிகள் இடப்பட்டிருந்தது. அனைவரும் எதையோ ஒன்றை ஜபித்துக் கொண்டிருக்க, பார்க்கவே படுபயங்கரமாக இருந்தது.