அத்தியாயம் - 7

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,520
1,086
113
நெருப்பு ரதங்கள் - 7

உஷ் என்று சைலன்ஸ் என பிங்க் நிற பிராக் அணிந்த குண்டு கன்னத்தில் குழிவிழுந்த அந்தக் குழந்தை சுவற்றுப் புகைப்படத்தில் குறும்பாய் சிரித்தபடி கண்டித்தும் அதை இலட்சியம் செய்யாமல் மற்றவர்கள் வம்பளந்து கொண்டிருக்க, அழகி சற்று பூசினாற்போல வளர்ந்திருந்த வயிற்றை தன் புடவையில் மறைத்தபடி, கணவனின் கரங்களை ஆதரவாகவும் காதலோடும் பற்றியபடி முகம் நிறைய பூரிப்போடு வரவேற்பரையில் அமர்ந்திருந்த பெண்ணிடம் டாக்டர் சுமதியைப் பார்க்கணும் இன்னைக்கு செக்கப் இருக்கு என்று போனமுறை பார்த்த குறிப்புகளைக் காட்டினாள். டோக்கனைப் பெற்றுக்கொண்டு அவர்கள் வரிசையாய் அணிவகுத்து இருந்த நாற்காலிகளை நோக்கி நகர, அங்கே சிறு பெண்ணை தோளில் அணைத்தபடி நடந்த வந்த சக்தியைக் கண்டதும் முகம் மலர்ந்தாள்.

ஏங்க என் பிரண்ட் சக்தி.....! குதூகலித்தபடியே சக்தி என்று குரல் கொடுத்தாள் அழகி.

அரவம் கேட்டு தோளில் சாய்திருந்த தங்கையை அருகில் அமர்த்திவிட்டு, தோழியிடம் முறுவலித்தாள்.

சுனிதா தானே என்னாச்சு அவளுக்கு உடம்பு ஏதும் சரியில்லையா ? என்று அக்கறையாய் விசாரித்தவளிடம் ஆமாம் என்று தலையசைத்து வைத்தாள் சக்தி. என்னடி உனக்கு இன்னைக்கு ட்யூட்டி இல்லையா ? சுனிதாவுக்காக லீவு எடுத்துயா ? அப்பறம் என் கணவருக்கு போன வருஷம் டிரான்ஸ்பர் ஆகிடுச்சி. பழகினவங்க யாருமே இல்லைன்னு ரொம்ப கஷ்டப்பட்டேன் நீயும் இங்க இருக்கிறது எனக்கு நினைவே இல்லை,

படபடவென பேசிய தோழியிடம் இது எத்தனையாவது மாசம் என்றாள்.

ஆறாவது என்று வெட்கத்துடன். உன் வீட்டு அட்ரஸ் கொடு நான் நேரில் வந்து பார்க்கிறேன் என்றாள். திருவான்மையூர் போலிஸ் குவார்ட்டர்ஸ்தான் என்று சொன்னவள் அழகி சுனிதாவால ரொம்ப நேரம் உட்கார முடியாது நான் இப்போ போறேன் நேரம் இருக்கும் போது வீட்டுக்கு வா என்று சொல்லி இருவரும் எண்களைப் பகிர்ந்து கொண்டு பிரிந்தார்கள். மரியதைக்கு தோழியின் கணவனிடம் ஒரு சிரிப்பை சிந்திவிட்டு உன்கிட்டே ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் சக்தி என்ற தோழியின் ரகசிய வார்த்தைகளை மனதில் வாங்கிக்கொண்டு தன்னைத்தாண்டிச் சென்ற ஆட்டோவை நிறுத்தி ஏறிக்கொண்டாள்.

அழகி அவங்க உன் தோழி சக்திதானே ?!

ஆமாங்க நம்ம கல்யாணத்திற்கு கூட வந்தாளே நாங்க பள்ளியிலே இருந்தே பிரண்ட்ஸ், ரொம்பவும் நல்லவ, கல்யாணத்திற்கு பிறகு டச் விட்டுப்போச்சு நல்லவேளை இப்போ அவளைப் பார்த்தது ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. ஏங்க இன்னைக்குத்தான் உங்களுக்கு வேற வேலையில்லைன்னு சொன்னீங்க அவ வீட்டுக்குப் போகலாமா ? என்றாள் அழகி.

நாலைந்து மாதங்களுக்கு முன்பு ஒரு இரவு யாரோ முன்பின்தெரியாத ஒருவனின் கொலையைப் பார்த்துவிட்டு பயந்துபோனவள். மறுநாள் ஜீரத்தில் மயங்கி அதிர்ச்சி என்று முதலில் பயந்துதான் போனான் அவன். போலிஸ்லே சொல்லிடலாமா என்ற மனைவியின் பயம் கலந்த கேள்விக்கும். ஏன்டா அவ பேயறைஞ்சமாதிரி இருக்கா என்ற அம்மாவின் கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் தவித்ததவிப்பில் அழகி இரண்டுமாதம் கருவைச் சுமந்திருக்கிறாள் என்ற மருத்துவரின் பதில்தான் ஆசுவாசப்படுத்தியது. அன்றிலிருந்து மருமகளை தரையில் நடக்கவிடவில்லை அம்மா. திடுமென்று அந்த இரவு நேரத்தின் நிழல் அழகியின் முகத்தில் படியும்.

நான்கைந்து வருடங்கள் கழித்து நமக்கு கிடைத்திருக்கும் சொத்து இது உன் அர்த்தமற்ற பயமும் நினைப்பும் அதை கெடுத்துவிடக்கூடாது. இந்நிலையில் உன் மனம் தெளிவாக இருக்க வேண்டும் என்று பேசி பேசி அவளை மாற்றியிருக்கிறானே. ஒருவேளை ஒரு நல்ல நட்பு இருந்திருந்தால் அவள் இன்னமும் சீக்கிரம் தெளிந்திருக்கலாமோ. சரி அழகி செக்கப் முடித்துவிட்டு நான் உன்னை அவங்க வீட்டுலே விட்டுடறேன் எனக்கு பக்கத்திலே ஒருவரை பார்க்கவேண்டியிருக்கு. கணவனின் சம்மதமும் கிடைத்துவிட தோழியிடம் செலவிடப்போகும் நேரத்தினை எண்ணி இப்போதே சந்தோஷிக்க ஆரம்பித்தாள் அழகி.

படுக்கையைத் தட்டிப்போட்டு மீண்டும் போர்வையை மாற்றி சுனிதாவை படுக்கவைத்தாள் சக்தி. அயர்ச்சியாய் இருந்தது. சற்றுமுன் நீரில் ஊறவைத்த போர்வையினை சுமந்திருந்த சுனிதாவின் ரத்தவாசனை இன்னமும் அந்த அறையைச் சுற்றியே வந்தது. நாற்பது நாட்களுக்கு முன் இதே சுனிதா துள்ளிக்குதிக்கும் மானைப் போல புத்தகங்களைச் சுமந்துகொண்டு அழகான பட்டாம்பூச்சியைப் போல வலம் வந்தவள். வழக்கத்திற்கு மாறாக அன்று ஸ்டேஷனில் இருந்து சீக்கிரம் வந்தவள் தன்னிடம் உள்ள சாவியை கதவின் குமிழில் திருக அது தன்னால் திறந்துகொண்டது. இந்நேரத்திலே தங்கை வந்துவிட்டாளா ? கதவைத் திறந்துபோட்டு இருக்கிறாளே ஏதாவது உடல்நிலை சரியில்லாமல் போயிருக்குமோ என்று நினைக்கும்போதே படுக்கையறைப் பக்கம் ஏதோ முனகல் சப்தம்.

அங்கே பார்த்தகாட்சியில் உறைந்து போனாள் சக்தி. இரண்டாவது தளத்தில் இருக்கும் கல்லூரிமாணவனும் அவனின் நண்பர்கள் இருவரும் சுனிதாவின் உடலை ஆக்கிரமித்து கொண்டு ஆத்திரத்தில் உறைந்து போயிருக்க சட்டென்று சுதாரித்து நிமிட நேரத்தில் அவன் சக்தியைத் தள்ளிக்கொண்டு ஓடினான். கலைந்திருந்த சுனிதாவின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. கண்கள் சொருகியபடி டேய் சாக்லேட்தாடா என்ற மெல்லிய குரலில் முனகியபடியே.....! தன்னை மறந்து அவளின் கையில் ஒரு சரிகைத்தாள்.

பழைய நினைவில் இருந்து தலையை சிலுப்பிக்கொண்டாள் சக்தி. வாசலில் அழைப்புமணி. மயக்கத்தில் உறங்கிக்கொண்டு இருந்த தங்கையின் பக்கம் பார்வையை செலுத்திவிட்டு அறைக்கதவை நோக்கி நகர்ந்தாள் அழகி புன்முறுவலுடன்.

சரிந்திருந்த தொப்பியை சீர்செய்து விட்டு தினசரிகளும், குழந்தைகளின் வயிற்றை பதம்பார்க்கும் பாக்கெட் சமாச்சாரங்களும் தொங்கிக்கொண்டு இருக்க, என்ன சார் வேணும் என்று காக்கி உடுப்பு அணிந்தவனிடம் கேட்டான் எனக்கு சாக்லேட் வேணுன்னு சின்ன குழந்தை ஒன்று அடம்பிடிக்க முதல்ல உன் வசூலைப் பாரு அப்பறம் நம்ம விஷயம் பேசிக்கலாம்.

நின்றிருந்த பெண் ஒருத்தி முக்காட்டை இழுத்துவிட்டபடி பார்சலை வாங்கிக்கொண்டு பைசாவை திணித்தாள். காக்கி உடையைப் பார்த்ததும் இலேசான விதிர்விதிப்பு அவளிடம். சொல்லுங்க சாப்....

ரஜீவ் சொன்னதைப் பற்றி என்ன முடிவு செய்திருக்கே ?

சார் வருஷக்கணக்கா இதே இடத்திலேதான் தொழில் நடத்திட்டு இருக்கிறேன். அந்த சேட்டுகிட்டே வாங்கின சின்ன தொகைக்கு நான் கட்டிய வட்டியே அசலைத்தாண்டி இருக்கும் இடத்தையே எடுத்துகிட்டா நான் என்ன செய்யறது ? வயசுப்பொண்ணையும் கூட்டிட்டு நான் எங்கே போவேன்.

அதெல்லாம் உன் பிரச்சனை சேட்டுகிட்ட இருக்கிறேவரையில் தான் நீ தப்பிச்சே இப்போ ரஜீவ் அடுத்தது அஜய்பையா நீயே முடிவு பண்ணிக்கோ, வயசுப்பொண்ணுன்னு நீயே சொல்லிட்டே நாளைக்கு அதுக்கு ஏதாவதுன்னா ?

சார்....

பதறாதே ரஜீவ்கிட்டே நான் பேசறேன் நமக்கு வேண்டப்பட்டவன்னு சொல்லியிருக்கிறேன். நீதான் சீக்கிரம் ஒரு முடிவு எடுக்கணும் அவங்களை பகைச்சிகிட்டு வாழ முடியாது சபீர் புரிஞ்சிக்கோ நமக்கு தெரிந்த பேக்டரியில் ஸ்டோர் கீப்பர் வேலையிருக்கு வாங்கித்தர்றேன் எடத்தை எழுதிக்கொடுத்திட்டு போ...!

சார்...நீங்க ஏதாவது பண்ண முடியுமா ?


முடிந்ததை சொல்லிட்டேன். அந்த போலீஸ்வாலா சொல்லிக்கொண்டு இருந்தபோதே ரஜீவ்வின் கார் நின்றது. உள்ளே அஜய்யும் !
 
Last edited:
Need a gift idea? How about a funny office flip-over message display?
Buy it!

Latest