அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

"அன்பின் விழியில்" - Full Link

sudharavi

Administrator
Staff member
#1
தோழமைகளே,

தோழி ராஜேஸ்வரி அவர்கள் "அன்பின் விழியில்" கதையின் முழு லிங்க்கும் கொடுத்திருக்கிறார். படித்து விட்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். ஒரு வாரம் வரை மட்டுமே லிங்க் இருக்கும். அதற்குப் பிறகு நீக்கப்படும்.
 
Last edited:

Vethagowri

Member
Staff member
#2
ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும் என்னும் சொல்லடை நம் வாழும் வாழ்க்கைக்கு பொருந்தும் என்பது மறுக்கமுடியாத உண்மை ..நம் பேசாத வார்த்தைக்கு நாம் எஜமான் ,பேசிய வார்த்தைக்கு அவ்வார்த்தைகளே எஜமான் என்பதும் நிதர்சனம் ...
இதை அடிப்படையாக கொண்டு பிரிவு,காதல் ,கொண்டு கதைகளம் அமைத்து அன்பின் விழியால் நம்மை ஊஞ்சலாடும் உள்ளங்களாக கொண்டு செல்கிறார் தோழி ராஜேஸ்வரி சிவகுமார் .
சாதாரண கதைகளம் .ஆனால் அவரின் கதையை கொண்டு செல்லும் நேர்த்தியிலும் ,நகைச்சுவை பாணியிலும் நம்மை கட்டிப்போடுகிறார்...இன்னும் சில எபிசொட் நீண்டு இருக்கலாமோ என்று எதிர்பார்க்க வைக்கிறார் .. வாழ்த்துக்கள் தோழி ...
 
#6
அன்பின் விழியில்!

அக்கா சும்மா சொல்லக்கூடாது உங்களோட வார்த்தை பிரயோகம் அருமை..

ஒவ்வொரு கதாபாத்திரமும் ஆழமா அவங்களோட தனித்தன்மையை மனசில பதிய வைச்சுட்டாங்க..

விதியை மதியால் வெல்லலாம் தான் ஆனாலும் கூட முழுமையா பல நேரத்துல முடியாதுனு அழகா சொல்லியிருக்கீங்க..

நித்யலட்சுமி அழகான பெயர்.. அன்பான பார்வையில் பார்க்கும் போது குற்றங்கள், தவறுகள், உறுத்தல்கள் எல்லாமே பின்னுக்கு தள்ளப்பட்டு சுமூகமான உறவு நிலைக்கும் அப்படின்னு உங்களோட ஸ்டைலில் ரொம்ப அழகா சொல்லிருந்தீங்க..

பல வருடங்கள் கட்டிக்காத்த நட்பும், உறவும் கூட ஒற்றை வரியிலான சொல்லீட்டியால் இரண்டு வருட பிரிவைச் சந்தித்திருப்பது நாவடக்கத்தின் முக்கியத்துவத்தை சொல்லுது..

தனிப்பட்ட முறையில் என்னை நான் மாத்திக்கறதுக்கும் இந்த கதை ரொம்ப ஹெல்ப் பண்ணுச்சு.. ஆங்கிலத்தில் டைம்லி காம்பனென்ட் னு ஒரு சொலவடை இருக்கு.

அன்பின் விழியில் எனக்கான டைம்லி காம்பனென்ட்.

உங்கள் அன்புள்ள....

ஹரிதாரணி சோமசுந்தரம்