அன்றைய பாடல்கள்

sudharavi

Administrator
Staff member
#1
இந்த படத்தில் வரும் பாடல் தோழமைகளின் அன்பை அத்தனை அழகாக காட்டி இருப்பார்கள்......பாடல் வரிகளும் அருமை...

படம் : வட்டத்துக்குள் சதுரம்
இசை: இளையராஜா
பாடல் : பஞ்சு அருநாசாலம்
பாடியவர்கள்: சசிரேகா, ஜானகி
 
Last edited:

sudharavi

Administrator
Staff member
#2
நாளை இந்தவேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா


படம்: உயர்ந்த மனிதன்
இசை :எம்.எஸ்.விஸ்வனதான்
பாடல்: வாலி
பாடியவர் : பி. சுசீலா

 

sudharavi

Administrator
Staff member
#3
படம் : பட்டின பிரவேசம்
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்

கண்ணதாசனின் வரிகள் எப்பொழுதும் நம்மை மயங்க செய்யும்...மெல்லிசை மன்னரின் இசையுடன் இந்த பாடல் மனதை மெல்லிய மயிலிறகாய் வருடிச் செல்லும்...

 

sudharavi

Administrator
Staff member
#4
சிறுபொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் : கல்லுக்குள் ஈரம்
பாடல் இயற்றியவர் : கங்கை அமரன்
இசை: இளையராஜா
பாடியவர் :எஸ்.ஜானகி இளையராஜா

 

sudharavi

Administrator
Staff member
#5
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா?

இந்த படத்தில் கணவன் மனைவிக்கு இடையே வரும் ஈகோ பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டது.


உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்
உன் திறமை இறங்கி வந்தால் நிழலும் மிதிக்கும்

மிகச் சாதரணமாக வாழ்க்கையின் தாத்பரியங்களை எடுத்து கூறி இருப்பார் கண்ணதாசன்.

படம்: சூரியகாந்தி
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: டி. எம்.சவுந்தராஜன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

 

sudharavi

Administrator
Staff member
#6
படம்: ஆண்டவன் கட்டளை
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: டி.எம்.சவுந்தராஜன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

 

sudharavi

Administrator
Staff member
#7
இலக்கணம் மாறுதோ

படம்: நிழல் நிஜமாகிறது
பாடல்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்:எஸ்.பி.பி, வாணி ஜெயராம்

 

sudharavi

Administrator
Staff member
#8
கண்ணன் ஒரு கை குழந்தை பாடல்

படம் : பத்ரகாளி
பாடல்: வாலி
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ், பி.சுசீலா
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

 
#9
இந்த படத்தில் வரும் பாடல் தோழமைகளின் அன்பை அத்தனை அழகாக காட்டி இருப்பார்கள்......பாடல் வரிகளும் அருமை...

படம் : வட்டத்துக்குள் சதுரம்
இசை: இளையராஜா
பாடல் : பஞ்சு அருநாசாலம்
பாடியவர்கள்: சசிரேகா, ஜானகி
எனக்கும் ரொம்ப பிடிச்ச பாடல் ..
ரொம்ப நன்றி கா...
 
#10
நாளை இந்தவேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா


படம்: உயர்ந்த மனிதன்
இசை :எம்.எஸ்.விஸ்வனதான்
பாடல்: வாலி
பாடியவர் : பி. சுசீலா

இதுவும் என் ரொம்ப விருப்பமான பாடல்....
பாடி பாடி பக்கத்துல இருக்கவங்கள ஒரு வழி பண்ணிடுவேன்...
 
#11
இலக்கணம் மாறுதோ

படம்: நிழல் நிஜமாகிறது
பாடல்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்:எஸ்.பி.பி, வாணி ஜெயராம்

Wonderful song.. & Lyrics...
 

sudharavi

Administrator
Staff member
#12
இதுவும் என் ரொம்ப விருப்பமான பாடல்....
பாடி பாடி பக்கத்துல இருக்கவங்கள ஒரு வழி பண்ணிடுவேன்...
ஜஷா நீங்களும் உங்களுக்கு பிடித்த பாடலை இப்படி பதிவேற்றலாம்....
 
#16
வரிகளின் வார்ப்பு எழுத்து என்னமா இருக்கும் என எப்பவும் வியப்புடன் நான் ரசித்த வரிகள் பாசமலர் திரைபட பாடல்...
 

sudharavi

Administrator
Staff member
#17
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா
சுவை எல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா
சுவை எல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா
கன்னி தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லை கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம்
உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா
வண்ண கண்ணல்லவா
இல்லை என்று சொல்வதுந்தன் இடை அல்லவா
மின்னல் இடை அல்லவா
………….கல்லெல்லாம் மாணிக்க………..
கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா
காளிதாசன் சகுந்தலை உந்தன் சேயல்லவா
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி
சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி..


 

sudharavi

Administrator
Staff member
#18
பாடல்: சம்சாரம் என்பது வீணை
திரைப்படம்: மயங்குகிறாள் ஒரு மாது
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: விஜய பாஸ்கர்
சம்சாரம் என்பது வீணை

சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை
சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை
என் வாழ்க்கை திறந்த ஏடு
அது ஆசைக்கிளியின் கூடு
என் வாழ்க்கை திறந்த ஏடு
அது ஆசைக்கிளியின் கூடு
பல காதல் கவிதை பாடி
பரிமாறும் உண்மைகள் கோடி
இது போன்ற ஜோடி இல்லை
இது போன்ற ஜோடி இல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை
சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை
தை மாத மேக நடனம்
என் தேவி காதல் நளினம்
தை மாத மேக நடனம்
என் தேவி காதல் நளினம்
இந்த காதல் ராணி மனது
அது காலந்தோறும் எனது
இதில் மூடும் திரைகள் இல்லை
இதில் மூடும் திரைகள் இல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை
சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை 

sudharavi

Administrator
Staff member
#19
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது...


ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது...


மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க


சங்கமங்களில் இடம் பெறும் சம்பவங்களில் இதம் இதம்

மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன....

[ஒரே நாள்...]

நெஞ்சத்தில் பேர்எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
நெஞ்சத்தில் பேர்எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்


கற்பனைகளில் சுகம் சுகம்
கண்டதென்னவோ நிதம் நிதம்


மழை நீ, நிலம் நான், மயக்கமென்ன...

[ஒரே நாள்...]

பஞ்சனை பாடலுக்கு... பல்லவி நீ இருக்க
பஞ்சனை பாடலுக்கு... பல்லவி நீ இருக்க


கண்ணிரண்டிலும் ஒரே ஸ்வரம்
கையிரண்டிலும் ஒரே லயம்


இரவும், பகலும், இசை முழங்க....

[ஒரே நாள்...]

படம்: இளமை ஊஞ்சலாடுகிறது
இசை: இளையராஜா
பாடியவர்: வாணி ஜெயராம், SP பாலசுப்ரமணியம்
பாடல்: கவிஞர் வாலி
 

sudharavi

Administrator
Staff member
#20
உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனி எல்லாம் சுகமே

உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம் வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நாமும் இணையலாம்

வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம்
நாளொன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெலாம் இன்பம்
சுகராகமே ஆரம்பம்
நதியிலே புதுப்புனல் கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது