இத்தியாதி காதல் - கருத்து திரி

sudharavi

Administrator
Staff member
#1
கதைக்கான கருத்துக்களை இந்த திரியில் பதியுங்கள்.............
 
#2
அழகான ஆரம்பம் பூரணி! மரம் வளர்த்து பராமரிக்க சட்டம், ராகி கஞ்சி, அடை என பாரம்பரிய உணவகம்... காற்றிலேயே தொடு திரை, அழகாய் ஒரு ரோபோ... என ஹைடெக்காக ஆரம்பித்திருக்கிறீர்கள்! அடுத்த பகுதிக்கு ஆவலைத் தூண்டுகிறது! மீ வெய்டிங் ஈகர்லி!
 
#5
செம்ம எபி மா! ரத்தமும் சதையும் கொண்ட மிஷின்கள்... மிக சரியாக சொன்னாய்! மிஷின்களாக நம் வாழ்வு ஓடுது... சூப்பர்! அடுத்த எபிக்கு மீ வெய்ட்டிங்...
 
#7
பூர்ணிமா கார்த்திக்கின் இத்தியாதி காதல்.
இயந்திர மயமாய் மாறிக்கொண்டிருக்கும் உலகில் ஒரு நாள் ரோபோக்கள் ஆட்சி செய்யும் காலமும் வந்தால் என்ன ஆகும் எனும் கற்பனையே கதை!
2034 ஆம் ஆண்டில் என்ன நடக்கும் என நம்மை வருங்காலத்துக்கு அழைத்து செல்லும் கதை!மனிதர்களின் வேலைகளை ரோபோக்கள் செய்யும் காலம்,அதை எதிர்க்கும் சுனயன் நிரல்யா,அவர்களுக்கு உதவும் ஜீவன் ஜோதி .
ப்ரதீப் ரோபோக்களைஎல்லா பணிக்கும் பயன்படுத்தி மனிதர்களை ஒன்றுமில்லாதவர்களாக் ஆக்கி விடுகிறான்.
குழந்தைகள் சிரிப்பு மறந்து ஜடம் போலவும் ,தனிப்பட்ட வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் ரோபோக்கள் என சர்வம் ரோபோ மயம்!
இதை எதிர்த்து சுனயன் போராட்டம் நடத்துகிறான்.உணர்ச்சிகளை ரோபோக்கள் அடைய காதலில் அவை ஜோடியாக சுற்றுகின்றன!ரோபோக்களை ஸ்தம்பிக்க செய்யும் போராட்டத்தில் சுனயன் க்ரூப் இறங்க நாட்டில் பெரிய குழப்பம் ஏற்பட அதிபர் பிரதீப்பையும் சுனயனையும் அழைத்து பேசுகிறார்.ரோபோக்களை என்ன செய்தார்கள் மக்கள் எப்படி முன்பிருந்த வாழ்விற்கு மாறினார்கள் என்பதுதான் கதை!
ஜேக் ரெக்ஸிக்கு எமோஷன்ஸ் அனுப்புவது,ஜோடிகளாக ரோபோக்கள் சுற்றுவது,அவற்றை அழிக்க இவர்கள் போடும் திட்டம்,எடிபில் காகிதம்,தொடுதிரை,வேலையில் தவறு நடந்தால் குப்பை அள்ளுவது,கெட் லாஸ்ட் ஹியர் காபிஷாப்,ரைஸ் கஞ்சி என வருங்கால சுவாரஸ்யங்கள்!இறுதியில் ஜேக் ரெக்ஸி ஜோடி மிஸ்ஸிங்!காதல் மனிதனுக்கு மட்டும் சொந்தமில்லை!