இப்படிக்கு மயூரவள்ளி!! - அனி சிவா

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,862
2,051
113
இப்படிக்கு மயூரவள்ளி!! - அனி சிவா


மிக இயல்பான கதை மாந்தர்கள், நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களின் மாற்று கோணத்தை கருவாக எடுப்பதில் அனி வல்லவர்.


இக்கதையை படிக்க ஆரம்பிக்கும் போது சாதாரணமாகத் தானே தோன்றுகிறது என்கிற எண்ணம் எழுந்தது. அதே சமயம் அனியிடம் நிச்சயம் வேறு ஒன்றை எதிர்பார்க்கலாம் என்கிற எண்ணத்தோடு படிக்க ஆரம்பித்தேன்.


மயூரவள்ளி எனக்கு பிடித்தமானவள் ஆனாள். அத்தையின் வளர்ப்பில் வளரும் அவள் தனது நிலையை உணர்ந்திருந்தாலும், விஷ்ணுவின் நட்பு அவளது ஜீவனாகிறது. தனது தோழிக்காக பார்த்து பார்த்து செய்யும் நண்பன் அவளது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறான்.


எதிர்பாராமல் அத்தை மகன் விவேக்குடன் திருமணம் நிச்சயம் நடந்து விட, எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கையில் அவர்களிடையே மன வேறுபாடு வந்து விடுகிறது. திருமணம் தடை படுகிறது.


அவர்களின் மன வேறுபாட்டை சொல்லுமிடங்களில் ஆகட்டும், சம்பவங்களின் அழுத்தத்தை சொல்லும் போதும் அது படிப்பவரின் மனதை பாதிக்காது விஷ்ணுவின் வசனங்களினால் அழகாக கையாண்டிருக்கிறார்.


யதார்த்தமான வசனங்கள், அந்தந்த கதாபத்திரங்களின் உணர்வுகளையும் அவர்களுக்கான வசனங்கள் பிரதிபலிக்கிறது.. அதிலும் நாயகன் விவேக்கின் கோபமும், மயூரவள்ளியின் மீது தனக்கான உரிமையை எதிர்பார்க்கும் இடங்கள் எல்லாம் மிகச் சரியாக சொல்லப்பட்டிருக்கிறது.


மயூரவள்ளி என்னை கவர்ந்துவிட்டாள்! வாழ்த்துக்கள் அனி!