இவன் வேற மாதிரி - கதை திரி

Status
Not open for further replies.

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,592
1,191
113
அவன் நேரடியாக தனது காதலை சொல்லுவான் என்று எதிர்பார்க்காதவளின் முகம் கோபத்தில் சிவந்து “நித்யா சொன்னதை வைத்து உங்க மேல நல்ல அபிப்பிராயம் வைத்திருந்தேன். அதை ஒரு நிமிஷத்தில் உடைச்சிட்டீங்க. தங்கையின் தோழி கிட்ட இப்படி பேசலாமா? நாளைக்கு நம்ம தங்கையிடம் எவனாவது இப்படி சொன்னா நம்மால தாங்க முடியுமான்னு யோசிசீங்களா? நான் யாருன்னு தெரியாது. என் குணம் என்னன்னு தெரியாது. ஆனா பார்த்தவுடனே என்னுடைய வெளித்தோற்றம் உங்களுக்கு பிடிச்சு போச்சு. உடனே ஓடி வந்து எதையுமே யோசிக்காம காதலை சொல்லிடுவீங்க. நான் ஒத்துக்கலேன்னா என் மேல ஆசிட் அடிக்கவும் தயங்க மாட்டீங்க...இது தானே இன்றைய காதல்” என்றாள் இகழ்ச்சியுடன்.

அவள் பேசபேச இருகைகளையும் கட்டிக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தவன் “பேசி முடிச்சிட்டியா? நீ சொன்னது எல்லாம் ஞாயம் தான். ஆனா பாரு நான் இதில் எல்லாம் சேர்த்தி இல்லை. ஒரு விஷயத்தில் எனக்கு ஈடுபாடு வரதே ரொம்ப கஷ்டம். அப்படி வந்துடுச்சுன்னா, அதை எக்காரணம் கொண்டு விட்டுக் கொடுக்க மாட்டேன். நீ என்ன கேட்ட? உன்னுடைய தோற்றத்தைப் பார்த்து தான் என் விருப்பத்தை சொன்னேன்னா? அப்படி பார்த்தால் நேற்றும், இன்றும் தான் உன்னை நான் பார்த்திருக்கேன். என் தங்கை மூலியமா உருவமில்லாமலே இங்கே வந்து உட்கார்ந்து நாளாச்சு. நான் என் கூட வாழ்வதற்கு ஒரு தோழியை, காதலியை, அன்பை பரிமாறிக் கொள்ள ஒரு துணையைத் தான் தேடினேன். இந்த அழகை பார்த்து உன்னை தேடி வரல” என்றவன் எழுந்து கொண்டு “நான் என் விருப்பத்தை சொல்லிட்டேன். இனி, எக்காரணம் கொண்டும் உன் முன்னாடி வந்து நிற்க மாட்டேன். எப்பாவாவது என்னுடைய அன்பு உண்மையாக தோன்றினால் நீயே என்னை அழைத்து சொல்லு” என்று கூறி அவள் முன்னே தனது கார்டை எடுத்து வைத்து விட்டு விறுவிறுவென்று அங்கிருந்து சென்றான்.

இப்படியொருவனை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சற்று நேரம் வரை அவன் பேசியவற்றை அசை போட்டபடி அமர்ந்திருந்தாள். ஒரு பக்கம் நித்தியாவின் அண்ணன் நல்லவன் தான் என்று மனம் கூப்பாடு போட்டது. ஏனோ மனம் லேசானது போல உணர்ந்தாள். மெல்ல எழுந்து ஒருவித மோன நிலையிலேயே கல்லூரிக்குச் சென்றாள்.

மும்பை சென்றிறங்கிய கிருஷ்ணா தனக்காக காத்திருந்த வண்டியிலேறி ஜுஹுவில் இருந்த தனது வீட்டிற்கு சென்றான். கடற்கரையோரம் இருந்த பங்களா அத்தனை அழகாக வடிவமைக்கபட்டிருந்தது. அங்கு சென்று சற்று நேரம் இளைப்பாறியவன், வழக்கம் போல தனது கம்பனி பணிகளை கவனிக்கச் சென்றான்.

மும்பை வந்ததிலிருந்து அவனது மனம் மிகவும் அமைதியாக இருந்தது. அவன் அங்கிருக்கும் நாட்கள் எல்லாம் சென்னையில் வசிக்கும் ஒரு மாதத்திற்கான ஊக்கமருந்தாக அமையும். அதிலும் கடற்கரையோரம் அமைந்திருக்கும் அந்த பங்களா அவனுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும்.

மும்பை ஆபிசிலிருந்த ஸ்டாப்பில் சுனிதா மிகவும் அழகானவள். கிருஷ்ணாவின் மீது அளவில்லாத காதலை வைத்திருப்பவள். சுனிதாவின் தந்தையும், கிருஷ்ணாவும் பங்குதாரர்கள். கிருஷ்ணா இல்லாத சமயங்களில் மும்பை பிரான்ச்சை கவனித்துக் கொள்வது அவள் தான். சுனிதாவின் தந்தைக்கும் கிருஷ்ணா மாப்பிள்ளையாக வர வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. ஆனால் அவனுக்கு இவை எல்லாம் தெரிந்திருந்தாலும், எதற்கும் இடம் கொடுக்காமல் நடமாடிக் கொண்டிருந்தான்.

அன்று அவன் திடீரென்று வந்து நிற்கவே, சுனிதா மிகுந்த உற்சாகமானாள்.

“கிருஷ்ணா! என்ன திடீர்னு சொல்லவே இல்ல?”

அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல் “ஐ நீட் அ சேஞ். அது தான் கிளம்பி வந்துட்டேன்”

“ஒ...அதை என்னை நிமிர்ந்து பார்த்து தான் சொல்லுங்களேன் கிருஷ்ணா”.

அவளது குழைவான குரலை கேட்டு கடுப்பானவன் “லுக் சுனிதா! நீ உன் மனசில வளர்த்துகிட்டு இருக்கிற ஆசையை விட்டுடு. தேவையில்லாமல் என்கிட்டே இப்படி கொஞ்சி கொஞ்சி பேசுகிற வேலையை வச்சுக்காதே” என்றான் எரிச்சலுடன்.

கண்களில் கண்ணீர் தளும்பி நிற்க “ஏன் கிருஷ்ணா இப்படி பேசுற? என் முகம் பார்த்து கூட பேச விருப்பம் இல்லாத உன் கிட்ட மறுபடியும் மறுபடியும் வந்து பேசுறதுனால நான் சீப்பா போயிட்டேனா?”

அதுவரை குனிந்து கொண்டிருந்தவன் சட்டென்று நிமிர்ந்து “சுனிதா! நீயும் நானும் பங்குதாரர்கள் என்கிற எல்லைக்குள்ள இருக்கும் வரை தான் எல்லாம் சுகம். அதை மீற நினைக்காதே” என்றான் மிரட்டலாக.

அவளும் தன்னிலை இழந்து “ஏன் கிருஷ்ணா? நான் அழகா இல்லையா? நீ எதிர்பார்க்கிற என்ன இல்லை என்னிடம்? என்னை மணந்து கொண்டால் உனக்கு தொழிலில் கூட உதவியாக தானே இருப்பேன்?”.

அமைதியாக பதிலளித்துக் கொண்டிருந்தவனின் முகம் கோபத்தின் சாயலை பூசிக் கொள்ள “சொன்னா கேட்க மாட்டியா சுனிதா? எனக்கு திருமண வாழ்க்கையில் நம்பிக்கை இல்லை. என்னிடமிருந்து விலகியே இரு. அது தான் உனக்கு நல்லது”.

“திருமணம் தானே வேண்டாம். லிவிங்கில் இருக்க நான் சம்மதிக்கிறேன் கிருஷ்ணா. உனக்கு ஓகே தானே?” என்றாள் கெஞ்சலாக.

அவளுக்கு முதுகை காட்டி திரும்பி நின்றவனின் உடல் இறுகி போனது. அவளின் வார்த்தைகள் அவனை கோபத்திற்கு உள்ளாக்கியது. மெல்ல திரும்பி அவளை பார்த்தவனின் விழிகளில் என்ன இருந்தது என்று அவளால் கணிக்க முடியவில்லை. பக்கத்திலிருந்த அலைப்பேசியை எடுத்தவன் “அங்கிள்! உங்க பொண்ணு என்கிட்டே....” என்று அவள் பேசிய அனைத்தையும் கூறி “இதுக்கு நான் என்ன பதில் சொல்லட்டும்?” என்று கேட்டான்.

அவன் தன் தந்தையிடம் பேசுவான் என்று எதிர்பார்காதவள் வாயடைத்து நிற்க, அவனோ ஒருவித கேலிப் புன்னகையுடன் அடுத்து கூறிய வார்த்தைகள் அவளது இருதயத்தில் ஈட்டியை காய்ச்சி இழுத்து போன்ற உணர்வை கொடுத்தது.

“கிருஷ்ணா!”

.......தொடரும்....................
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,592
1,191
113
அத்தியாயம் – 4

“உன்கிட்டருந்து இப்படியொரு பதிலை நான் எதிர்பார்க்கல கிருஷ்ணா. உன் மேல விருப்பட்டு சொன்னது தப்பா தெரியுது. ஆண்கள் விருப்பட்டு ஒரு பொண்ணு கிட்ட ப்ரொபோஸ் பண்ணினா அது தப்பில்ல. ஆனா ஒரு பொண்ணு தன் விருப்பத்தை சொன்னா அவ அலையிறவன்னு பேர் கட்டிடுவீங்க”.

“இதோ பார் சுனிதா! உன்னோட வாக்குவாதம் பண்ண எனக்கு நேரமில்லை. எனக்கு விருப்பமில்லேன்னு சொன்ன பிறகும் மேல விழுந்து பழகினது நீ. இப்போ என்னோட ஒரு வார்த்தை உனக்கு தப்பா படுதா?”

“ஷட் அப் கிருஷ்ணா! உன்னை நல்லவன்னு நினைச்சு என் விருப்பத்தை சொன்னது தப்பு. உன் மனசெல்லாம் குப்பையாக இருக்கும்னு இந்த நிமிஷம் தெரிஞ்சுகிட்டேன். இனி, நீ இருக்கிற பக்கம் கூட திரும்ப மாட்டேன். குட் பை” என்று கூறி விட்டு அங்கிருந்து விடுவிடுவென்று சென்றாள்.

அவள் சென்றதும் சற்றும் அலட்டிக் கொள்ளாமல் தனது வேலையை பார்க்க தொடங்கினான். அவள் தன்னிடம் சொல்லி விட்டு சென்றது தனது தொழிலை பாதிக்க வாய்ப்பிருக்கிறது என்று புரிந்தாலும், சிறிதும் கவலைப்படாமல் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது அவனது அலைப்பேசி அடிக்க, ஏடுத்து பார்த்தவனின் இதழில் கேலி புன்னகை. அழைத்தது சுனிதாவின் தந்தை.

“சொல்லுங்க அங்கிள்”

“உனக்கும் சுனிதாவுக்கும் என்ன பிரச்சனை?” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.

அவர் நேரடியாக கேட்டதும் சற்று நேர அமைதிக்கு பின்னர் “அவளுக்கு என் மேல விருப்பமிருக்குன்னு நான் உங்க கிட்ட சொன்னேனே. அதை நான் மறுத்தேன்னு கோபமா போயிட்டா” என்றான்.

“அவ்வளவு தானா? அவள் கோபத்தை பார்த்தா அப்படி தெரியலையே?”

“நல்லபடியா சொல்லி பார்த்து கேட்கலேன்னதும் கொஞ்சம் வார்த்தையை விட்டுட்டேன் அங்கிள்”.

“அவ கேட்ட அதே கேள்வியை நான் கேட்கிறேன் கிருஷ்ணா. உனக்கு என்ன பிரச்சனை? உங்க வீட்டில் சுனிதாவை பற்றி சொன்னா நிச்சயம் சம்மதம் கிடைக்கும். உனக்கும், அவளுக்கும் நல்ல பொருத்தம். பின்னே ஏன் வேண்டாம்னு சொல்ற?”

“இந்த கேள்விக்கு நிச்சயமா நான் பதில் சொல்லியாகனுமா?”

“பிரச்சனை என்னன்னு தெரிஞ்சிட்டா அதற்கு தகுந்தார் போல் நான் முடிவெடுப்பேன்”.

ம்ம்...........................................................................................................”

“கிருஷ்ணா!”

“இது தான் நான். நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். முடிவு உங்கள் கையில்”.

அவன் சொன்னவற்றை கேட்டு கொதித்து போயிருந்த சுனிதாவின் தந்தை “ரொம்ப தப்பு பண்ணிட்ட கிருஷ்ணா. என் பொண்ணு மட்டுமில்ல எனக்கும் உன்னை மாப்பிள்ளையாக்கிகிற ஆசை இருந்தது. உன்னோட பதிலே சொல்லுது நீ யார்ன்னு. போதும்! இதோட நம்ம பிசினெஸ் பார்ட்னர்சிப்பை முடிச்சிக்கலாம். நானும் உன் வழியில் வர மாட்டேன் நீயும் என் வழியில் வராதே”.

மெல்லிய சிரிப்புடன் “நான் வில்லன் இல்லை அங்கிள். எனக்கு திருமண பந்தத்தில் விருப்பமில்லேன்னு சொன்ன பிறகும் வற்புறுத்தியது உங்க பெண்ணோட தப்பு. இப்பவும் நாம பார்ட்னரா இருப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை”.

“வேண்டாம் கிருஷ்ணா! இனியும் என் பெண்ணை உன் முன்னாடி அனுப்ப எனக்கு விருப்பமில்லை. நாம முடிச்சுக்கலாம்”.

லேசாக தோள்களை குலுக்கி கொண்டவன் “உங்க விருப்பம்...மற்ற பார்மாலிடீஸ் எல்லாம் நீங்களே பார்த்திடுங்க” என்று கூறி போனை அனைத்து தூக்கி போட்டான்.

அன்று நிகழ்ந்த எதுவும் அவன் எதிர்பாராமல் நடந்தது. சுனிதாவிடமும், அவள் தந்தையிடமும் பேசிய வார்த்தைகள் கூட அவனது விருப்பமின்றி தான் வந்தது. எப்பொழுதும் பேசும் வார்த்தைகளில் மிகுந்த கவனத்துடன் இருப்பவன், சற்று எல்லை மீறி பேசி விட்டான். அதற்கு வருத்தமில்லை என்றாலும், தேவை இல்லாத சம்பவம் என்றே எண்ணினான்.

சுனிதாவின் மீது கோபமாக வந்தது. அவளால் தான், அவளின் ஆசையினால் தான் அனைத்தும் பாழாகப் போனது என்று ஜன்னலின் வழியே நின்று பார்த்துக் கொண்டிருந்தவனின் மனம் ஏனோ சற்று பதட்டமானது. இன்று நிச்சயம் தனக்கு மருந்து தேவைப்படும் என்றே தோன்றியது.

உடனே போனை எடுத்து நதிருக்கு அழைத்து “நான் இன்னும் ஒன் அவரில் வீட்டுக்கு வந்துடுவேன். எனக்கு மருந்து ரெடியா இருக்கணும்” என்றான்.

“ஓகே ஜி”

அதை சொல்லி முடித்ததுமே சற்று ஆசுவாசமடைந்தவன் நிம்மதியாக அடுத்த வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான்.
கல்லூரிக்கு சென்ற நதியாவோ பாடத்தில் கவனத்தை செலுத்த முடியாமல் ஒருவித அவஸ்த்தையுடனே இருந்தாள். வந்ததிலிருந்தே அவளை கவனித்துக் கொண்டிருந்த நித்யா மெல்லிய குரலில் “என்னாச்சு நதி? உடம்பு எதுவும் சரியில்லையா?”

“ம்ம்...தலைவலிக்கிற மாதிரி இருக்கு நித்தி”

“அதான் நினைச்சேன் நதி...நீ வந்ததும் லேட். முகமும் சரியில்லேன்னதும் உடம்பு சரியில்ல போலன்னு”.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,592
1,191
113
“என்னால உட்கார முடியும்னு தோனல நித்தி. நான் மேம் கிட்ட சொல்லிட்டு கிளம்பிடவா?”

“சரி வா! நானே கொண்டு வந்து விட்டுட்டு போறேன். காண்ட்டீனில் போய் ஒரு காப்பி குடிச்சிட்டு போவோம்”.

ஆசிரியரிடம் கேட்டுக் கொண்டு இருவருமாக காண்டீனிற்கு சென்று காப்பியை வாங்கிக் கொண்டு அமர்ந்தார்கள். நித்திக்கு தனது அண்ணன் ஏற்படுத்திய குழப்பம் தான் நதியாவின் உடல்நிலைக்கு காரணமாக இருக்குமோ என்று எண்ணினாள்.

ஏதோ சிந்தனையுடனே நிதியுடன் பேசாமல் அமைதியாகவே காப்பியை குடித்தவளை பார்த்து “நதி! எங்க அண்ணன் பண்ணின பிரச்சனை தான் உன் தலைவலிக்கு காரணமா?”

அவள் அப்படி கேட்டதும் சுயநினைவிற்கு வந்தவள் “அதெல்லாம் இல்ல நித்தி! நேத்து பச்சை தண்ணியில குளிச்சிட்டேன். அது ஒத்துக்கல போல” என்றாள்.

அவளது கையை எடுத்து வைத்துக் கொண்ட நித்தி “என் மனசுக்கு புரியுது நதி. நிச்சயமா அண்ணன் பண்ணின வேலை காரணமா தான் உனக்கு இந்த தலைவலி. இப்பவும் சொல்றேன் எங்க அண்ணனுங்க தப்பானவங்க இல்ல. அதிலும் விஷால் அண்ணன் ரொம்பவே நல்லவன். கொஞ்சம் குறும்பு அதிகமே தவிர, யாருக்கும் கெடுதல் நினைக்காதவன். அவன் உன்னை சலனப்படுத்தி இருந்தா நான் மன்னிப்பு கேட்டுகிறேன்”.

“ஐயோ! என்ன இது நித்யா? அந்த சம்பவத்தை நான் அப்போவே மறந்துட்டேன். அதுமட்டுமில்ல உன்னைப் போலவே உங்க வீட்டில் உள்ளவங்களும் இருப்பாங்க என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. இது சாதாரண தலைவலி தான் நித்தி”.

“அப்போ சரி! நான் உள்ளுக்குள்ள பயந்து போயிட்டேன். நேத்து அண்ணன் கிட்ட செம சண்டை தெரியுமா?”

“ப்ளீஸ் எனக்காக இனி இந்த பேச்சை எடுக்காதே நித்தி. நாம கிளம்பலாமா?”

“ம்ம்..”

நதியாவை ஹாஸ்டலில் கொண்டு விட்டு மீண்டும் கல்லூரிக்கு வந்தவள், தோழிக்காகவும் அன்றைய பாடங்களை மிகுந்த கவனத்துடன் குறிப்பெடுத்துக் கொண்டாள்.

அறையில் சென்று படுத்த நதியாவின் மனமோ விஷால் பேசிச் சென்றதையே அசை போட்டுக் கொண்டிருந்தது. அதே சமயம் அவளது அக்கா சொன்ன அறிவுரைகளும் சுற்றி சுழன்று கொண்டிருந்தது. உதவிக்கு ஆள் இல்லாத ஊரில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று படித்து படித்து கூறி இருந்தாள். தாய், தந்தை இல்லாமல் அக்காவின் அரவணைப்பில் வளர்ந்தவள் நதியா. திருமணமாகி கணவனுடன் அவள் மும்பை சென்ற பிறகு, பள்ளிப் படிப்பும், கல்லூரி வாழ்க்கையும் ஹாஸ்டலிலேயே சென்றது. விடுமுறைக்கு மட்டும் அவ்வப்போது அக்கா வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தாள். அக்காள் கணவர் கார்த்திகேயன் மிகவும் தங்கமானவர்.

சங்கரி தங்கையிடம் ஒரு தோழி போல தான் நடந்து கொள்வாள். அதனால் இருவருக்குமிடையில் ஒளிவு மறைவு இருந்ததில்லை. விஷால் பேசிச் சென்றதை சங்கரியிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் எழுந்தாலும், ஏனோ உடனே சொல்லிவிட மனமில்லாமல் போனது.

பலவாறு சிந்தித்து அப்படியே உறங்கிப் போனாள். அவளின் ஒரு மனம் மெல்ல விஷாலின் பக்கம் சாயத் தொடங்கினாலும், அவளது பெண்மை உஷாராக இருக்கும்படி அறிவுறுத்தியது.

அன்றைய பொழுது அப்படியே குழம்பி தவித்து, அக்காவிடம் சொல்லாமா வேண்டாமா என்று யோசித்து, அவன் மேலும் எதுவும் வந்து பேசினால் சொல்லிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து கொண்ட பின் நிம்மதியாக உறங்கினாள்.

மறுநாள் விடியல் மிக அழகாகவே விடிந்தது. முதல் நாள் இருந்த குழப்பங்கள் எல்லாம் மறைந்து போக, வழக்கமான உற்சாகத்துடனே கல்லூரிக்கு கிளம்பினாள். நித்யாவும் தந்தையுடன் தான் கல்லூரிக்கு சென்றாள். விஷாலும் தான் அவளை கொண்டு வந்து விடுகிறேன் என்று கேட்கவில்லை, நித்யாவும் என்னை கொண்டு விடு என்று சொல்லவில்லை. பத்மா தான் இருவரின் முறைப்பையும் கண்டு சிரித்துக் கொண்டிருந்தார்.

பிள்ளைகள் கிளம்பியதும் செல்வநாயகம் “பத்மா இப்படி வந்து உட்கார். உன் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றார்.

டைனிங் டேபிளை ஒதுங்க வைத்துவிட்டு அவர் முன்னே வந்தமர்ந்தவர் “என்னங்க? என்ன பேசணும்?”

சற்றே யோசனையுடன் “நேத்து வாக்கிங் போனப்ப என் பிரெண்ட் ரமணியை பார்த்தேன்”.

“ரமணியா? யார் அது?”

“என் கூட காலேஜில் படிச்சவன். ரொம்ப வருஷம் வெளிநாட்டில் இருந்திட்டு இப்போ தான் இங்கே வந்து செட்டில் ஆகி இருக்கான்”.

“ஒ..அப்படியாங்க?”

“ஆமாம்! அவன் பிள்ளைகள் பத்தியும், நம்ம பிள்ளைகள் பத்தியும் பேசினோம்”.

உடனே ஆர்வமாக “அவர் வீட்டில் எதுவும் பொண்ணு இருக்காங்க?”

லேசான சிரிப்புடன் “இல்ல பத்மா...அவன் தம்பி பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடுறாங்களாம். உனக்கு தெரிஞ்ச நல்ல வரன் இருந்தா சொல்லுடான்னு சொன்னான்”.

“பொண்ணு என்ன பண்றாளாம்? எங்கே இருக்காங்க என்னன்னு விசாரிசீங்களா?”

“படிச்சிட்டு எம்என்சில வேலை பார்க்கிறாளாம்”.

“ஏங்க நம்ம கிருஷ்ணாவுக்கு பார்க்கலாமா? பொண்ணு வயசு என்னன்னு கேட்டீங்களா?”

“இருபத்தெட்டு வயசாகுதாம் பத்மா. பொண்ணு பார்க்கிறது பெருசில்ல. உன் பையன் ஒத்துக்குவானா?”

“அவன் அப்படித்தான் சொல்லிட்டு இருப்பான். இது தான் பொண்ணு நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு தான் ஆகணும்னு சொன்னா வேண்டாம்னா சொல்ல போறான்?”

“எனக்கு கொஞ்சம் யோசனையா இருக்கு பத்மா”.

“அவன் கிட்ட சொல்லாம நாம முதல்ல பெண் வீட்டில் பேசுவோம். எல்லாம் திகைஞ்சு வரும் போல இருக்கிறப்ப அவன் கிட்ட பேசி சம்மதத்தை வாங்குவோங்க”.
அதே நேரம் அவர்களின் சீமந்த புத்திரன் மும்பை வீட்டில் தனக்கு வேண்டிய மருந்திற்காக காத்திருந்தான். அவன் எதிர்பார்த்ததை நதிர் கொண்டு வந்து விட்டிருந்தான். அதை பார்த்ததும் தான் அன்று காலையில் இருந்த கோப முகம் மாறி இயல்புக்கு திரும்பினான். மனதில் உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு நதிருக்கு வேண்டிய பணத்தை கொடுத்து அனுப்பி வைத்தான்.

சுமார் ஒரு மணி நேரம் வரை மருந்தின் தாக்கத்திலிருந்தவன் அதிலிருந்து மீள மனமில்லாமல், கடற்கரைக்கு சென்றமர்ந்து கொண்டான். மும்பையில் அவனுக்கு எல்லாமுமாக இருப்பவன் நதிர். இந்த மருந்தை பழக்கப்படுதியவனும் அவனே. சென்னையில் இருக்கும் போது எப்போதடா மும்பைக்கு வருவோம் என்று நாட்களை தள்ளிக் கொண்டிருப்பான்.

மும்பையிலிருக்கும் இந்த நான்கு நாட்கள் தான் மற்ற இருபத்திஆறு நாட்களுக்குமான ஊக்க மருந்து. இந்த நினைவுகளிலேயே மருந்தின் தாக்கத்திலேயே ஒட்டி விடுவான். தனது இந்த வாழ்க்கை முறையை தவறாக நினைக்கவில்லை. ஆனால் இந்த மருந்தை சென்னையில் பயன்படுத்த அவன் விரும்பவில்லை.

தனக்கான ஒரு இடம், தனிமை எல்லாம் அவனுக்கு தேவையாக இருந்தது. அது மும்பையில் தான் கிடைத்தது. சிறுவயது முதலே தனித்தே இருந்து பழக்கப்பட்டவன். பெற்றவர்களிடம் கூட அதிக நெருக்கமில்லாமல் இருந்தவனுக்கு, விஷாலின் நடவடிக்கை அதிசயத்தை கொடுக்கும். வீட்டிலிருக்கும் நேரமெல்லாம் அன்னை, தந்தையுடனோ, தங்கையை வம்பிழுத்துக் கொண்டோ இருக்க எப்படி அவனால் முடிகிறது என்று எண்ணிக் கொள்வான்.

தனது வாழ்க்கை பாதையின் போக்கை தானே தீர்மானித்துக் கொண்டான். அதனால் தான் இன்று வரை அன்னை பல முறை அழுது கேட்டும் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இது தான் நான்! என்று சொல்லும் துணிவு அவனுக்கு உண்டு. ஆனால் அதை கேட்கும் தைரியமோ, ஏற்கும் துணிவோ எதிரே இருப்பவருக்கு வராது என்று அவனுக்கு தெரியும். அதனால் தான் உறவுகளிடம் தள்ளியே இருந்து பழகிக் கொண்டான்.

தங்களின் பிள்ளையை பற்றி அறிந்து கொள்ளாத பெற்றவர்கள் அவனுக்கொரு வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க முடிவெடுத்து காயை நகர்த்த ஆரம்பித்திருக்கிறார்கள். இது எங்கு சென்று முடியும் என்று தெரியவில்லை.

விஷாலோ மிகுந்த உற்சாகத்துடன் இருந்தான். அவனுக்கு ஒன்று உறுதியாக தெரிந்தது. நதியா நிச்சயம் தன்னை தேடி வருவாள். அவளின் மனதில் சிம்மாசனமிட்டு அமருவோம் என்று தெளிவாக இருந்தான். அதனால் வழக்கத்தை விட, ஆட்டமும், பாட்டமுமாக இருந்தான்.

**************************************தொடரும்***********************************************
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,592
1,191
113
அத்தியாயம் – 5

நதியாவிடம் முறைப்பாக பேசிவிட்டாலும் அவள் நிச்சயம் தன்னை தேடுவாள் என்று நம்பினான் விஷால். ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஒருவேளை அவள் நிம்மதியாக ஒதுங்கி விடுவாளோ என்கிற கவலையும் இருந்தது. அதற்கேற்றார் போல் நித்யாவும் அவனை சிறிதும் கண்டு கொள்ளவில்லை. நீ காலேஜில் கொண்டு விடவில்லையா சரி தான் போ என்று விட்டு விட்டாள்.

தோழிகள் இருவரும் தன்னை டீலில் விட்டுவிட்டார்களோ என்று யோசிக்க ஆரம்பித்தான். மும்பை சென்று விட்டு வந்ததிலிருந்து கிருஷ்ணா எப்பவும் போல் இருந்தான். அதே பட்டும் படாமல் தாமரை இலை தண்ணீர் போலவே இருந்தான். இப்படியே இரண்டு வாரங்கள் கடந்தது.

நதியாவும் முதலில் விஷாலின் விலகலை சாதரணமாக தான் எடுத்துக் கொண்டாள். ஆனால் போக போக அவனது காதல் அவ்வளவு தானா என்று யோசிக்க ஆரம்பித்தாள். பிடித்த கிரிக்கெட் மேட்சுகளை ரீப்ளே செய்வது போல அவளது மனம் அவன் பெசிவற்றை ரீப்ளே செய்ய ஆரம்பித்திருந்தது.

நித்யாவிற்கும் தந்தையுடன் கல்லூரிக்கு சென்று வருவது சற்று போர் அடிக்க ஆரம்பித்திருந்தது. அதனால் விஷாலை வம்புக்கு இழுத்து அவனையே கல்லூரியில் சென்று விடும்படி செய்ய வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள். ஆனால் நேரடியாக அவனிடம் கேட்டால் முறுக்கிக் கொள்வான் என்பதால், சீண்டி விட்டு காரியத்தை சாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் சாப்பாட்டு மேஜையில் வந்தமர்ந்தாள்.

கிருஷ்ணா வழக்கம் போல தலையை நிமிர்த்தாமல் அன்னை தந்த தோசைகளை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தான். நேரடியாக விஷாலிடம் செல்லாமல் “என்ன அண்ணா இன்னைக்கு சீக்கிரமே கிளம்பிட்டீங்க?”

அவளின் பக்கம் திரும்பாமலே “கொஞ்சம் வேலை இருக்கு” என்றான்.

பத்மாவோ “என்னைக்கு தான் உனக்கு வேலையில்ல கிருஷ்ணா? உன்னால எல்லோரும் எங்களை தப்பா பேசுறாங்க. புள்ளைக்கு கல்யாணம் பண்ணாம வச்சிருக்காங்கன்னு” என்று படபடத்தார்.

மெல்ல நிமிர்ந்து பார்த்தவன் “அவங்களுக்காக என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது” என்றான் அழுத்தமாக.

“அப்போ உனக்காக பண்ணிக்கோ” என்றார் செல்வநாயகம்.

தந்தையை நிமிர்ந்து பார்த்தவனின் கண்களில் என்ன இருந்ததென்று தெரியவில்லை.

“கல்யாணத்தை பத்தி பேசிட்டே இருந்தா நான் நிரந்தரமா மும்பையிலேயே தங்க வேண்டி இருக்கும்”

அவனது பதிலில் ஒரு நிமிடம் குடும்பமே அதிர்ந்து போனது. அப்போது தான் அங்கு வந்தமர்ந்த விஷாலுக்கு அண்ணனின் நடவடிக்கை பயத்தை கொடுத்தது. என்ன பிரச்சனை இவனுக்கு? ஏன் திருமணத்தை வெறுக்கிறான்? எதுவும் காதல் தோல்வி இருக்குமோ? அப்படி இருப்பதாகவும் தெரியவில்லை. பின் ஏன் இத்தனை வெறுப்புடன் மறுக்கிறான்.

பத்மாவோ அழுகையுடன் “என்ன பேச்சு பேசுற கிருஷ்ணா? பெத்த பிள்ளைக்கு கல்யாணம் பண்ண நினைக்கிறது அவ்வளவு தப்பா? எங்க மனசை எல்லாம் இப்படி உடைக்காதே?” என்று கன்னத்தில் வழிந்த கண்ணீரை புடவை முந்தானையால் துடைத்துக் கொண்டார்.

“எனக்கு பண்ண நினைக்காதீங்க. நான் இப்பவும் சொல்றேன். இன்னொரு தடவை என் கல்யாணத்தை பற்றி பேச்சு வந்தா இங்கே தங்குவதை பற்றி யோசிக்க வேண்டி வரும்” என்றான் அழுத்தமாக.

“ஏண்டா இப்படி சொல்ற?” என்று அழ ஆரம்பித்தவரை “பத்மா! கொஞ்சம் சும்மா இரு!” என்று அதட்டினார் செல்வநாயகம்.

விஷாலும் தன் பங்கிற்கு “ஏன் கிருஷ்ணா? அம்மா தன்னோட ஆசையை தானே சொல்றாங்க? அதுக்கு ஏன் வீட்டை விட்டு போறேன்னு சொல்ற?”

நாற்காலியை பின்னுக்கு தள்ளி எழுந்து கொண்டவன் “என்னோட வாழ்க்கையை அடுத்தவங்களுக்காக வாழ மாட்டேன்...எப்படி இருக்கணும்னு நான் தான் முடிவு பண்ணனும்” என்று கோபமாக சொல்லி விட்டு விறுவிறுவென்று அங்கிருந்து வெளியேறினான்.

“அவனை பெத்த நான் அடுத்தவளா போயிட்டேனாங்க?” என்று அழ ஆரம்பித்தார்.

அனைவரும் கூடி அவரை சமாதானப்படுத்தும் முயற்ச்சியில் இறங்க, ஒவ்வொருவரின் மனதிலும் கிருஷ்ணாவின் பேச்சு அதிர்ச்சியை கொடுத்திருந்தது. பெற்றவர்களிடம் இப்படி ஏன் பேச வேண்டும்? அவனுக்கு என்ன தான் பிரச்சனை? செல்வநாயகம் மட்டும் உள்ளுக்குள் பயந்து போனார். நிச்சயமாக இது சாதாரண விஷயமில்லை. இதுவரை எல்லோரும் அவர் குடும்பத்தை உதாரணமாக காட்டி இருக்கிறார்கள். அவரை போல பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் கிருஷ்ணாவின் நடத்தை இப்படியே சென்றால் நிச்சயம் வேறு மாதிரியான பேச்சுகள் எழும் என்று எண்ணிக் கொண்டார்.

அழும் அன்னையை சமாதானப்படுத்த சொல்லிவிட்டு, நித்யாவை தானே அழைத்துக் கொண்டு கிளம்பினான் விஷால்.

கார் கிளம்பி சற்று நேரம் வரை அங்கு அமைதி மட்டுமே நிலவியது.

“பெரிய அண்ணன் யாரையும் லவ் பண்ணுச்சா?”

“எனக்கு தெரிஞ்சு அப்படி எதுவுமில்ல”

“அப்புறம் ஏன் இப்படி நடந்துகிறாங்க? கல்யாணத்தை பத்தி மட்டும் பேசினா ஓவரா குதிக்கிறாங்க”

“எனக்கும் புரியல. அதுவும் இன்னைக்கு பேசின பேச்சு ரொம்பவே அதிகம். பாவம் அம்மா”.

“ஆமாண்ணா...யார் கிட்டேயுமே நெருங்கிக்காம தனியாகவே இருக்காங்க. எனக்கு நினைவு தெரிஞ்சு எண் கிட்ட எல்லாம் அன்பா ஒரு வார்த்தை பேசிக் கூட பார்த்ததில்லை. அது அப்போ தப்பா தெரியல. ஆனா இப்போ கொஞ்சம் வித்தியாசமா தெரியுது”.

“இல்ல நித்யா...அண்ணனை தப்பா நினைக்காதே. நமக்கு தெரியாம அவங்க எங்கேயோ காயப்பட்டிருக்கலாம். அதன் வெளிப்பாடு தான் இது. அதை வெளில கொண்டு வந்துட்டா நார்மலாகிடுவாங்க”.

“நீங்க பேசி பாருங்க”

“ம்ம்...அப்புறம் உன் பிரெண்ட் எப்படி இருக்கா” என்றான் சற்றே குறும்பான குரலில்.

அதுவரை இருந்த குழப்பம் விலக, “ஆரம்பிச்சிட்டீங்களா? இந்த விஷயத்துக்காக தான் நாம ரெண்டு பேரும் சண்டை போட்டுகிட்டோம் நினைவிருக்கா?” என்றாள் முறைப்புடன்.

“நல்லாவே இருக்கே”

“இன்னொரு தடவை என் பிரெண்ட்ஸ் பத்தி பேசினா” என்று கூறி அவன் கையில் ஓங்கி அடித்தாள்.

குறும்பு சிரிப்புடன் “நான் பேச மாட்டேன் ஆனா உன் பிரெண்ட் வந்து என்னை பத்தி பேசினா என்ன செய்வ?”

“நினைப்பு தான் பொழைப்பை கெடுக்குமாம்”

ஒரு கையால் காலரை உயர்த்தி காட்டி “நடக்குதா இல்லையான்னு பாரு” என்று கூறி கல்லூரி வாசலில் கொண்டு நிறுத்தினான்.

காரை விட்டு இறங்கியவள் “ஓவர் காண்பிடென்ஸ் உடம்புக்கு ஆகாதுண்ணே” என்று கிண்டலடித்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

‘ஓவர் காண்பிடென்ஸ் இல்ல தங்கச்சி...என் செல்லம்மா கூடிய சீக்கிரம் வருவா பாரு’ என்று சொல்லிக் கொண்டு வண்டியை எடுத்தான்.

அண்ணனிடம் கிண்டலடித்து விட்டு உள்ளே சென்றவள், அங்கே தனக்காக காத்திருந்த தோழியிடம் ஓடினாள். இருவருமாக பேசிக் கொண்டே செல்ல, வகுப்பறைக்குள் சென்று தங்கள் இடத்தில் சென்றமர்ந்தார்கள்.

சற்றே தயக்கத்துடன் நித்யாவை பார்த்து “நீ இப்போ எல்லாம் அப்பாவோட தான் வரியா?”

அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் “ஆமாம்” என்றாள்.

“ஏன் உங்க அண்ணன் வரதில்லையா?”

ஜெர்க்காகி தோழியை நிமிர்ந்து பார்த்தவளின் மனம் ‘அடேய்! அண்ணா! இப்போ தான் பீலா விட்டுட்டு போன...அதுக்குள்ளேயே உன்னைப் பத்தி கேட்கிறாளே’.

மௌனமாக நதியாவை பார்க்க, “என்ன நித்தி?”
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,592
1,191
113
“நான் தான் அவன் கூட பேசுறதே இல்லையே நதி”

அதிர்ச்சியுடன் “ஏன்?”

உள்ளுக்குள் எழுந்த சிரிப்பை அடக்கியபடி ‘அண்ணே! சாதிச்சிட்ட போல’ என்று சொல்லிக் கொண்டவள் “பின்னே என்ன நதி? உன்னை அன்னைக்கு சங்கடப்பட்ட வச்சிட்டாங்க. என்னால அதை தாங்க முடியல அது தான்”

அவளின் பதிலில் அவசரமாக “அதெல்லாம் இல்ல நித்தி. எனக்காகவா சண்டை போட்டா? நான் அதை அன்னைக்கே மறந்துட்டேனே” என்றாள் பதட்டமாக.

‘சிக்கிட்டியே கைப்புள்ள!’

“நீ ஒண்ணும் கவலைப்படாதே நதி. இன்னைக்கு அண்ணன் தான் கொண்டு வந்து விட்டாங்க” என்று சொல்லி விட்டு அவள் முகத்தை பார்த்தாள்.

அதில் சிறிய நிம்மதி தெரிந்தது. அடுத்து ஏதோ சிந்தனையுடன் பேச்சை நிறுத்திக் கொண்டாள்.

நித்திக்கோ ‘என்ன இது! ரூட் எங்கேயோ போகிற மாதிரி இருக்கே? ஏற்கனவே பெரிய அண்ணனால பிரச்சனை. அடுத்து இவன் ஒரு ஏழரையை இழுத்து வைப்பான் போல இருக்கே. நல்லா வருவீங்கடா! உங்களை எல்லாம் நல்லவன், வல்லவன்னு சொன்னதுக்கு என்னை வச்சு செய்றீங்க’ என்று புலம்பிக் கொண்டாள்.

நதியாவிற்கோ அவன் தன்னை மறந்து விட்டானோ என்று எண்ணினாள். ஆனால் நிச்சயமாக அப்படி செய்யக் கூடியவன் இல்லை என்றே தோன்றியது. அன்று அவன் பேசிய போது உன்னை இனி தொல்லை செய்ய மாட்டேன், உன் மனம் மாறினால் நீயாக தொடர்பு கொள் என்று தானே சொல்லிவிட்டு சென்றான். தானாக அவனை அழைத்துப் பேசவும் தயக்கமாக இருந்தது. என்ன பேசுவது? நீ உன் விருப்பத்தை சொன்ன போது மறுத்த எனக்கு இப்போது உன் மீது ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்று சொல்ல வேண்டுமா? அதை எப்படி சொல்வது? அவன் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டானா?

படிப்பதற்காக நம்பிக்கை வைத்து அனுமதித்த அக்கா, மாமாவின் நம்பிக்கையை தர்ப்பது போல் ஆகாதா? ஆனால் மனம் அவனை நாடுகிறது. என்ன சொன்னாலும் கேட்க மறுக்கும் மனதை என்ன செய்வது? அவனது நடவடிக்கையில் ஒரு நம்பிக்கை, அவன் மீதான நல்ல எண்ணம் வந்திருந்தது. அதோடு அவனது நேர்மை மனதிற்கு மிகவும் பிடித்திருக்கிறது.

நாமாக செல்லாமல் நிச்சயம் அவன் திரும்பி வரப் போவதில்லை என்று உறுதியாக தெரிந்தது. அதனால் இன்று எப்படியாவது அவனிடம் பேசி விட வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள். அதே போல மதிய நேரம் நித்யாவிடம் சால்சாப்பு சொல்லிவிட்டு மெல்ல நழுவி, லைப்ரரி கட்டிடத்திற்கு பின்புறம் சென்று விஷாலின் எண்ணிற்கு அழைத்தாள்.

வேலையில் பிசியாக இருந்தவன் புதிய எண்ணிலிருந்து அழைப்பு வரவும் யோசனையுடன் எத்து காதில் வைத்தான் “ஹலோ”

அவனது குரல் கேட்டதும் பதிலளிக்க இயலாமல், தயங்கி நின்றாள்.

அவனோ “ஹலோ! யாருங்க? போன் பண்ணிட்டு பேசாம இருந்தா எப்படி?”

அப்போதும் அவளால் பேச முடியவில்லை. அவனது குரலை கேட்டதே போதுமென்று போனை அனைத்து விட எண்ணினாள்.

அப்போது விஷாலின் உள்ளம் விழித்துக் கொள்ள “நதி” என்றான் போனிற்கு வலிக்காத வகையில்.

அதில் மொத்தமாக கரைந்தே போனாள். இது என்ன மாதிரியான அன்பு? அதிகம் பார்த்ததில்லை, பேசியதில்லை, பழகியதில்லை ஆனால் தன்னை உணர்ந்து கொள்ளும் அளவிற்கு அவன் மனதில் நிறைந்திருக்கிறோம் என்பதில் அழுது விட்டாள்.

அவளின் விசும்பல் சத்தம் கேட்டு பதறி போனவன் “என்னமா? என்ன பிரச்சனை?” என்றான்.

மெல்ல கண்களைத் துடைத்துக் கொண்டவள் “என்னை அந்தளவிற்கா மனதில் நிறைத்து வைத்திருக்கீங்க?” என்றாள் கரகர குரலில்.

“ஹே! என்ன இது? இதுக்கா அழுத? நான் என்னவோன்னு நினைச்சு பயந்துட்டேன்”

“இல்ல..நா...நான்...”

அவளை தடுத்தவன் “சில விஷயங்கள் சொல்லித்தான் தெரியனும்னு அவசியமில்லை நதி. காதலும் அப்படித்தான். நம்ம மனசு உணர்ந்தா போதும். ஐ லவ் யு சொல்லிகிட்டா தான் உண்மையான காதல்னு யார் சொன்னா? என்னை நீயும், உன்னை நீயும் மனதார உணர்ந்தாலே போதும்”.

அவன் பேசப்பேச கண்கள் தானாக கண்ணீரைப் பொழிய “எனக்கு உங்களைப் பார்க்கணும்?” என்று விட்டாள்.

அவளது உள்ளத்திலிருக்கும் உணர்வுகளைப் புரிந்து கொண்டவன் “காலேஜ் முடிஞ்சதும் அந்த பார்க்குக்கு வந்துடு. நானும் வரேன்”.

“ம்ம்ம்..நான் போனை வச்சிடவா?”

அவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் தளர, பழைய குறும்புடன் “வரும் போது நல்லா முகம் கழுவி சிரிச்சுகிட்டே வரணும் புரியுதா?” என்றான் சிரிப்பை அடக்கிய குரலில்.

“ம்ம்..” என்றவள் போனை அனைத்து விட்டு சற்று நேரம் அங்கேயே அமர்ந்து விட்டாள்.

இதுவரை அக்காவின் வார்த்தைகளை எதற்கும் மீறியதில்லை. ஒரு சிறு விஷயம் கூட அவளுக்கு தெரியாமல் செய்ததில்லை. ஆனால் வாழ்க்கையின் முக்கிய முடிவை தான் எடுத்து விட்டதை அறிந்தால் அவள் எப்படி உணர்வாள் என்று பயந்தாள். நிச்சயமாக தன்னை கடிந்து கொள்ள போவதில்லை என்றாலும் மனம் வருந்துவாள். அதை எண்ணி வருத்தமாக இருந்தாலும், ஏனோ மனம் விஷாலை நாடியது. அவன் தனக்கானவன் என்கிற முடிவு உறுதியானது.

அவளது யோசனையை கலைப்பது போல அங்கே வந்த நித்தி “என்ன நதி அக்காவுக்கு போன் பண்ண வந்தியா? முகம் ஏன் ஒரு மாதிரியா இருக்கு?”

அவளைப் பார்த்ததும் அவசரமாக தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டவள் மெல்லிய சிரிப்புடன் “ஆமாம் நித்தி! அக்கா கிட்ட எப்போ பேசினாலும் அவங்களை விட்டு இருக்கிறது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். அது தான்”.

அவளை தோளோடு அணைத்துக் கொண்ட நித்தி “உனக்கு நானிருக்கேன் நதி. என்ன கஷ்டம் வந்தாலும் உன் கூடவே இருப்பேன்” என்று கட்டிக் கொண்டாள்.

அவளை லேசாக அணைத்து விடுவித்தவள் “அப்போ எனக்கு கஷ்டம் வரணும்ன்ற?” என்று கேட்டுவிட்டு எழுந்தோட, அவளை துரத்திக் கொண்டே நித்தியும் ஓடினாள்.

***************************தொடரும்******************************************
 
Status
Not open for further replies.