"உன்னைக் கண்டு உயிர்த்தேன்"

#1
"உன்னைக் கண்டு உயிர்த்தேன்"

பல வருடங்களுக்கு முன் படித்த கதைக்கு விமர்சனம் தர வேண்டும் என்றெண்ணி இப்பொழுதே நேரம் அமைந்தது .

கேரளத்தின் எழில் கொஞ்சும் அழகில் மயங்கியிருக்கும் பொழுது அதனை விட அழகானக் காதல் நம்மை மயக்குகிறது.

பூர்ணிமாவின் பூரண சந்திர உள்ளம் புண்பட்டு, பண்பட்டுள்ளது என்றெண்ணும் வேளையில் ரிஷியின் ரீங்காரமான காதல் அவளுள்ளத்தில் தோற்றுவிக்கும் பேரலையில் நமது விழிச்சாரல் பொங்குகிறது .

வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் வக்கீலை கண்டு கோபம்தான் பெருகியது. நந்தாவின் அறியாமையில் இருக்கும் கள்ளமில்லா காதலும், சட்டென்று நடத்தும் கல்யாணமும் ரிஷிக்கு அந்த திறமை இல்லையே என்று எண்ண வைத்துவிட்டது.

நந்தாவின் காதலை விட ரிஷியின் காதலை இறுதியில் வென்ற பொழுது, அதனை படித்த நானும் அவனது காதலைக் கண்டு உயிர்த்தேன்.