உயிரின் உயிரே - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

சித்ரா அவர்கள் "உயிரின் உயிரே" என்கிற தலைப்போடு போட்டியில் இணைகிறார்கள்.
 
#4
உயிரின் உயிராய் 2


சாரதா கூறியிருந்தபடியே மிக குறைந்த நபர்களையே அழைத்திருந்தார் அந்த பிறந்தநாள் விழாவுக்கு .
உள்ளே நுழைந்த அவர்களை மிக சந்தோசமாக வரவேற்றார் .
பரிசை கொடுத்து ,வாழ்த்தி விட்டு ,சற்று தள்ளி போட்டப்பட்ட ஒரு சேரில் சென்று அமர்ந்துகொண்டாள் வினித்ரா .
மாயா வழக்கம்போல் அங்கிருந்த சிலருடன் சுவாரிஸ்யமாக பேசிக்கொண்டிருக்க ,எப்போதும் போல் இவள் ஒதுங்கி வந்தாள் .
சீக்கிரமே பார்ட்டி முடிந்து வீட்டுக்கு போனால் தேவலாம் என்று இருந்தது இவளுக்கு ..
எப்போதுமே இது போன்ற கொண்டாட்டங்கள் அவளை அதிகம் கவர்ந்ததில்லை ,இப்போதோ இன்னும் அதிகமாகவே கசந்தது .
கவலை இன்றி பேசிக்கொண்டிருப்பவர்களை பார்த்தால் லேசாய் பொறாமை வந்தது .
மாயாவிடம் சொல்லிவிட்டு தான் மட்டும் கிளம்பிவிடலாமா என்றும் தோன்றியது ..
சே சே அது மரியாதை ஆகாது என்பதால் அந்த எண்ணத்தை ஒதுக்கினாள் .
அசுவரிசியமாக பார்த்துக்கொண்டிருக்கும்போது க்ரேய் கலர் பாண்ட் போட்ட கால்கள் அருகில் வந்தது
''என்னை ஞாபகம் இருக்கா ''என்றது ஒரு ஆழ்ந்த குரல்
அவளுக்கு தூக்கி வாரி போட்டது
மறக்க முடியுமா அந்த குரலை
இல்லை அந்த குரலுக்கு சொந்தக்காரனை தான் மறக்க முடியுமா !
அவள் அதிர்ந்து நிமிர
அவனது முழு ஆறடி உயரத்திற்கு நிமிர்ந்து நின்றிருந்தான் தனஞ்சயன் ...அவள் கணவன் !
மிக இயல்பாக அவளுக்கு அருகில் இருந்த சேரில் உட்கார்ந்தான் .
''சொல்லு என்னை ஞாபகம் இருக்குதா ''என்றான் மறுபடியும்
அதிர்ச்சி மாறி இப்போது இவளுக்கு சுறு சுறுவென்று கோபம் வந்தது
எப்படி இப்படி ஒரு கேள்வியை கேட்பான்
மூன்று மாதங்கள் உறவாடியபின் ,ஒரு நாள் விலகி மறைந்தவன் அவன்
இன்று திடீரென்று காட்சி கொடுத்துவிட்டு அந்த அதிர்ச்சி மாறுமுன் கேட்கும் கேள்வியென்ன
ஆனால் இதையெல்லாம் அவளால் வார்த்தையாய் கோர்த்து பேசமுடியவில்லை ,ஆத்திரத்தில் உடல் கிடுகிடுவென்று நடுங்க அவனை முறைத்தாள் !
அவன் முகத்தை மறுபடி பார்க்க மாட்டோமா என்று அவள் ஏங்கிய காலம் ஒன்று உண்டு
பின் முயன்று தன்னை தேத்தி மாற்றிக்கொண்டதும் ,அல்லது மாற்றிக்கொண்டதாய் நினைத்தது தவறு என்று இப்போது புரிந்தது .
மனதில் கோவம் இருந்தபோதும் ,கண்கள் அவனை ஆசையாய் அள்ளி பருகியது
ஒரு கிரே கலர் கோட் ,உள்ளே கிரிஸ்ப் வைட் ஷர்ட் ,டை இன்றி முதல் இரண்டு பட்டன் திறந்து இருக்க ,போர்மல் அண்ட் கேஸுல் இரண்டும் கலந்து இருந்தது அவன் தோற்றம்
முகம் ,அந்த ஆசை முகம் இப்போது வெகுவாக மாறிப்போயிருந்தது
இந்த மூன்று வருடங்களில் முதிர்ந்து ,கடினப்பட்டிருந்தது .
கண்கள் ..அதில் இருந்த நேசம் மறைந்து ,கூர்மையாய் அவளை துளைத்தது .
''ஞாபகம் வந்திடுச்சு போல ...குட் ...என்கிட்டே ஏதும் மாற்றம் இருக்கா ..நீ அப்படியே தான் இருக்கே வினி ''என்றான்
''விட்டுபோனபின் செத்துபோருப்பேன் நினைச்சீங்களா ...நோ சைச் லக் போர் யு ''என்றாள் ஒருவழியாய் தன்னை சமாளித்து
அவன் புருவம் சுருங்கியது
''யார் விட்டுட்டு போனா ,நானா அல்லது நீயா ''என்றான் சீறலாய்
தெய்வமே இது என்ன புதுக்கதை ,அவள் எங்கே விட்டு போனாள் ,இதோ இந்த நிமிடம் கூட அவன் காலடியில் போய் விழுகிறது அவள் மனது ,மானக்கெட்ட மனசு ,ஆனால் அந்த மனது காட்டும் பாதையில் போகும் அன்றைய வினித்ரா இல்லை அவள் இப்போது
சம்மட்டி அடிகளாய் வரிசையாய் நிகழ்த்த நிகழ்வுகள் அவளை வெகுவாய் மாற்றி இருந்தன
மனதை அடக்கவும் ,சுத்தமாய் அதை கொன்று புதைக்கவும் அவள் பழகி இருந்தாள் .
''ஓஹ் திரும்பி வராமலே இருப்பது ,விட்டுட்டு போறது ஆகாதோ ,மை மிஸ்டேக் ''என்றாள் அவளும் கோபமாய்
அதற்கு அவன் பதிலை கேட்கும் முன்
''தனஞ்சயன் .வாட் எ ஸ்வீட் சர்ப்ரைஸ் ''என்றபடியே வந்தார் ஒரு முதியவர்
நொடியில் அவன் முகத்தில் இருந்த கோபத்தை மாற்றி இயல்பாக்கியபடியே எழுத்து நின்றான் அவன்
''ஹலோ அங்கிள் எப்படி இருக்கீங்க ''
''நான் சூப்பரா இருக்கேன் ,நீ வருவ இந்த பார்ட்டிக்கின்னு சொல்லவே இல்லியே சாரதா ''என்றார் அவர்
''இங்க பக்கத்துல மதுரையில ஒரு வேலை ,அப்படியே அத்தையை பார்த்துட்டு போலாம்னு வந்தேன் ''
''ஓஹ் அத்தைக்கே சர்ப்ரைஸ்ன்னு சொல்லு ,குட் வெரி குட்''
அவர் அடுத்து இவள் பக்கம் திரும்பி கேள்வி கேட்கும் முன் நழுவி விடுவோம் ,என்று அவள் எழுந்து மாயாவை நோக்கி போனாள் .
அவளை நெருங்கி ஜில்லிட்டு போன கையால் தொட்டு திருப்பி
''நான் வீட்டுக்கு கிளம்புறேன் ,ப்ளீஸ் ''என்றாள் அவசரமாய்
''ஏன் இவ்ளோ சீக்கிரமா ,இப்போதானே வந்தோம் ,''என்று கூறியபடியே இவளை திரும்பி பார்த்தவள் பேச்சை பாதியில் நிறுத்தினாள் .
அந்த குளிரிலும் முத்து முத்தாய் வேர்த்து சிவந்திருந்த நண்பியின் முகம் அவளுக்கு அதிர்ச்சியை கொடுத்தது .
''என்ன ஆச்சு ,உடம்பு சரியில்லையா ,கை ஏன் இவ்வளவு ஜில்லுன்னு இருக்கு ,மூஞ்சி வேர்த்திருக்கு ''என்று அக்கறையாய் கேட்க
இங்கே ஏதும் விளக்கம் கொடுக்க முடியாத நிலையில் அவள் கூறியதையே பிடித்துக்கொண்டு கிளம்பி விடுவோம் என்று தோன்ற

''ஆமா மாயா கொஞ்சம் உடம்பு சரியில்லை ,நான் கிளம்புறேன் ,நீ கொஞ்சம் நேரம் இருந்துட்டு வேணா வா ,ரெண்டு பேரும் கிளம்பினா நல்லா இருக்காது ''என்று மெல்ல இவள் இழுக்க
''உனக்கு உடம்பு சரி இல்லைனா எப்படி உன்னை தனியா அனுப்புவேன் ,நானும் வரேன் ''என்று அவளும் கிளம்ப எத்தனிக்க
''அப்படி ஒன்னும் பெருசா இல்லை ,நான் போய்க்கிறேன் ,நீ இருந்துட்டு வா ''என்றபடியே சாரதாவிடம் சொல்லிவிட்டு கிளம்புவோம் என்று அவரை தேட
அவரே அருகில் வந்தார்
இவள் கிளம்பும் விவரம் அறிந்து ,அவர்கள் வீட்டு வண்டியிலே கொண்டு விட சொல்கிறேன் என்று வண்டி ஓட்டுனருக்கு அழைக்க எத்தனிக்க
அங்கே வந்த தனஞ்சயன்
''நான் கொண்டு இறக்கி விடறேன் அத்தை ,நானும் கிளம்ப வேண்டியது தான் ''
''போணுமாப்பா ..சரி ..ஒன்னும் கஷ்டம் இல்லியே உனக்கு ''
''இதென்ன கஷ்டம் ,ஒன்னும் இல்ல ''
''சரிப்பா ''என்றபடியே இவர்களிடம் திரும்பி
''என் தம்பி மகன் தனஞ்சயன் ,அவன் கூட உன்னை அனுப்பினா எனக்கு நிம்மதி ,நீ என்ன சொல்ற ''என்றார் அக்கறையாய்
என்ன சொல்லுவாள் ..
என் நிம்மதியை கெடுத்தவன் இவன் தான் என்றா
பாதுகாப்பாய் நிக்க வேண்டிய நேரத்தில் அம்போ என விட்டு ஓடியவன் இப்போது பாதுகாப்பாய் வருவது பெரிய ஜோக் என்றா
மௌனமாய் அவள் நிற்க அதையே சம்மதமாய் ஏற்று இவர்களை கிளப்பி அனுப்பினார் அவர் .
மறுத்து பேச இடம் இன்றி ,மாயாவிடம் கண்களால் விடைபெற்று கிளம்பினாள்
ஒரு வார்த்தை பேசாமல் இருவரும் கிளம்பி காரில் அமர்ந்தனர் .
வெளியில் இப்போது வெகுவாய் இருட்டு பரவி இருந்தது .
வெளியில் பார்வையை பதிக்க முடியாமலும் ,
அவனை பார்க்க பிடிக்காமலும் தவித்து போனாள் .
அவனுக்கு எந்த தவிப்பும் இருப்பதாய் தெரியவில்லை .
அவள் இருக்கும் இடம் கேட்டு ,சீராய் வண்டியை செலுத்தினான்.
இப்போது ஏன் கேள்விகள் கேட்காமல் மெளனமாக ஓட்டுகிறான் என்று புரியவில்லை .
ஆனால் இந்த மௌனம் அவளுக்கு தேவையாய் இருந்தது .
எதுவும் யோசிக்க தோன்றாமல் அவள் அமர்ந்திருக்க ,கார் அவள் வசிக்கும் வீட்டை அடைந்தது .
இப்படியேமௌனமாய் இறக்கி விட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் சென்றுவிட்டால் போதும் என்று அவள் நினைத்திருக்க
அவனும் சேர்ந்து அவளுடன் இறங்கினான் .
'ஐயோ ,இவன் எங்கே வருகிறான் ... வேண்டாம் ...கூடாது ..என்று எச்சரிக்கை மணி அடிக்க 'அவள் அவசரமாய்
''தேங்க்ஸ் ..நான் உள்ளே போய்க்கிறேன் ''
''கதவு வரைக்கும் வரேன் ''என்றபடியே அவன் நடக்க ஆரம்பிக்க
மறுபடியும் வேறு வழியில்லாமல் அவனை தொடர்ந்தபடியே அவசரமாய் சூர்யா தூங்கி இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை தெய்வத்திடம் வைத்தாள் .
அதை தெய்வம் ஏற்கவில்லை என்று சீக்கிரமே தெரிந்தது .
 
#5
ஹாய் தோழமைகளே ...
உயிரின் உயிரே கதையின் இரண்டாவது அத்தியாயம் பகிர்ந்துள்ளேன்
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும்
நன்றி .
 

Anuya

Well-known member
#6
அத்தியாயம் 3

அவள் அவனை உள்ளே அழைக்க மாட்டாள் என்பது அவன் எதிர்பார்த்தது தான் ,இருந்தும் அவனுக்கு அவளிடம் பேச வேண்டி இருந்தது ,அதனால் உடன் வர
அவளோ அதை அடியோடு தவிர்க்க பார்த்தாள்
டூ லேட் பேபி என்று எண்ணியபடியே ,கார் கதவை மூடிவிட்டு சுற்றிவந்து நடக்க
அவளிடம் இப்போது வெளிப்படையாக அவஸ்தை தெரிந்தது
வெறுப்பு ஓகே ..எரிச்சல் கூட ஒகே ..ஆனால் இவள் நடந்துகொள்வது வினோதமாக இருக்க ,அவளை மேலும் சுவாரஸ்யமாக பார்த்தபடியே கூட நடந்தான் .
''நான் போய்க்கிறேன் ,இனிமே நீங்க போகலாம் ''என்றாள் கதவை நெருங்கிய பின் அதை திறக்காமலே
''இருக்கட்டும் பரவாயில்ல ..நீ திற ''என்று அவன் கை நீட்டி அவள் கைகளில் இருந்த சாவியை வாங்கி திறந்தான் .
'ஐயோ தெய்வமே ..சூர்யா தூங்கி இருக்க வேண்டும்' ,என்று நூறாவது தடவையாக வேண்டியபடி அவள் நிற்க
தெய்வம் அன்று ஒரு முடிவோடு தான் இருந்தது போல
கதவை திறந்துவிட்டு மரியாதையாக முதலில் அவளை நுழையவிட்டு பின்னால் அவன் வர
அவர்கள் இருவரையும் வரவேற்ற ரோசியின் கைகளில் இருந்து சிரித்தபடி அவளிடம் தாவினான் சூர்யா !
அனிசையாய் கைகள் அவனை வாங்க ,கண்கள் அவன் முகத்தை விட்டு அகல மறுத்தது !
சிலை என சமைந்து நின்றவன் முகத்தில் ஒரு நிமிடம் .ஒரே நிமிடம் தான் அதிர்ச்சி தெரிந்தது
அடுத்த நிமிடமே அது கோபமாக மாற
''வினித்ரா ''என்றான் அடி குரலில்
புது முகமும் ,அந்த குரலும் சூர்யாவுக்கு பயத்தை கொடுக்க அவன் கீழ் உதடு பிதுங்கியது அழுகையின் ஆயத்தமாய்
சற்றென்று அவன் நிலையில் மாற்றம் வந்தது
முகத்தில் கனிவுடன் கூடிய புன்னகையுடன் ,இரு கை நீட்டி ,கொஞ்சும் குரலில்
''பயந்துட்டியா செல்லம் ,என்ன பயம் என்கிட்டே ,உன் பேர் என்ன ''என
நீட்டிய அவன் கைகளில் தயக்கமாய் தாவினான் சூர்யா .
நிமிடத்திற்கு நிமிடம் மாறும் அவன் உணர்சிகளை ,அயர்ந்து போய் அவள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே
வெகு சுவாதீனமாக கோட் பாக்கெட்டில் இருந்து ஒரு சாக்லேட் எடுத்து நீட்டினான்
''சூயா ''என்று அவன் பெயரை கூறியபடி குழந்தை அதை வாங்கிக்கொள்ள
அதை சகஜமாக்கிய கையோடு இவள் புறம் திரும்பினான் .
இப்போது அவன் முகத்தில் கோபம் இல்லை ,ஆனால் ஐஸ் கோல்டு மோடில் இருந்தான் .
எந்த கட்டத்தை தவிர்க்க அவள் துடித்தாளோ அது வந்தே விட்டது ,இனி என்ன செய்ய என்று நினைக்கும் போதே ..இனி அவள் கைகளில் ஒன்றும் இல்லை என்பது தெளிவாய் புரிய ..ஓய்ந்து போய் நின்றாள் .
அவளை அதே மோடில் வெட்டும் பார்வை ஒன்று பார்த்தவன் ,அதன் பின் அவள் புறம் திரும்பவில்லை ,அதாவது சற்று நேரம் மகனுடன் கொஞ்சிவிட்டு ,ரோஸி அவனை தூங்க வைக்க வாங்கி செல்லும் வரை .
அதன் பின் ஒரு சேரில் அமர்ந்தவன் எதிரில் இருந்த மோடாவில் அவளை உட்கார பணிந்தான் அவன் வீடு போல கூல்லாக
ஆனால் உள்ளே கொதித்து கொண்டிருந்தது என்பதை அவள் அறிவாள்
நியாயமும் கூட ,இரண்டரை வயது மகனை இப்போது தான் முதல் முதலாக பார்க்கும் தகப்பனுக்கு அதிர்ச்சி இல்லாதிருந்தால் தான் தவறு
''சொல்லு ''என்றான் ஒற்றை வார்த்தையாய்
எதை சொல்லுவாள் ..நிர்கதியாய் நின்றதையா ,அப்போதும் அவன் வருவான் என்று நப்பாசையுடன் இருந்ததையா ,அதுவும் பொய்த்தபின் ,இங்கு அடைக்கலமாக வந்ததையா ..அதன் பின் வாழ்ந்த இந்த சாரமில்லா வாழ்க்கையையா ..எங்கு ஆரம்பிப்பாள் ..எதை சொல்லுவாள் ..
''என்ன சொல்ல ..திரும்பி பார்க்காம போயிட்ட உங்க கிட்ட எதை சொல்லி இருக்கனும்ன்னு எதிர்பார்க்கறீங்க ''என்றாள் சூடாக
''திரும்பி பார்க்காமலா ..யாரு நானா''என்றான் கோபமாக
அப்போதும் இதை தான் சொன்னான் ..இப்போதும் ..அவளுக்கு குழப்பமாக இருந்தது
பிள்ளை பிறந்ததை மறைத்தது குற்றமே என்றபோதும் ,அந்த நிலைக்கு அவளை கொண்டு சென்றவன் அவன் தானே
இருந்தும் இதை எல்லாம் எடுத்து கூறி பேசவும் ஆயாசமாக இருந்தது அவளுக்கு
கடந்து வந்த கசப்பான காலம் மாறப்போவதில்லை ,இனியும் அவனிடம் எதையும் எதிர்பார்க்க அவளுக்கு விருப்பம் இல்லை ,பேசவும் பிடிக்கவில்லை
ஆனால் அப்படி எளிதாக விட அவன் தயார் இல்லை என்பதை உடனே காட்டினான் அவன் .
''உன் பக்கத்து நியாயம் எது வேணா இருக்கட்டும் ,பிள்ளை இருப்பதை மறைத்தது தவறு ,அதை உடனே சரி செய்ய வேண்டும் ,சோ கிளம்பு நாம ஊருக்கு போறோம் ''என்றான்
எது ஊருக்கா ..எங்க ..மறுபடி சென்னைக்கா ..முடியாது ..மறுபடி புண்பட அவளுக்கு சக்தி இல்லை
''நான் எங்கயும் வரல ''என்றாள்
''உன் விருப்பத்தை கேட்கல ,கிளம்பு ,இல்லேன்னா நீ மட்டும் இங்க இருக்க வேண்டி வரும் ''என்றான் அதே கோல்ட் மோடில்
அவள் அதிர்ந்து நின்ராள் ..அப்படியும் செய்வானா ..செய்வான் என்றது அவன் தொனி ..அவனை பற்றிய அவள் கணிப்பு பொய்த்து போவது இது முதல் முறை அல்லவே
அதன் பின் எல்லாம் பாஸ்ட் போர்வேர்ட் காட்சி போல் நடந்தது .
மாயா திரும்பி வர ,மாயா ரோஸி இருவரிடம் சுருக்கமாக விஷயத்தை அவன் சொல்ல
நூறு முறை இவளை கேள்வி கேட்டபின் ,வேறுவழி இல்லை என்பதை அவளும் புரிந்து ஒதுங்க
இதோ மடியில் உறங்கும் மகனுடன் ,ஒரு காலத்தில் அவள் உயிராய் காதலித்த இன்று அந்நியமாய் தெரியும் கணவனுடன் அவள் சென்னைக்கு பயணமானாள் .


 

Anuya

Well-known member
#7
அத்தியாயம் 4
அவன் முன்னால் அமர்ந்து ஓட்ட
அவள் பின்னிருக்கையில் தூங்கும் மகனை மடியில் கிடத்தி இருந்தாள் .
முன்பக்கத்து சீட்டில் அவன் கழட்டி மாட்டி இருந்த கோட் ,கும்மென்று அவன் பிரத்யோக வாசனையை பரப்பி அவள் நாசியை நிறைத்தது .
வண்டி சீரான வேகத்தில் செல்ல ,வெளியே நன்றாகவே இருட்டிவிட ,அவள் பார்வையை வண்டிக்குள் திருப்பினாள் .
அப்போது தான் அது கண்ணில் பட்டது ,
சீட்டுக்கு நடுவில் இருந்த கியர் ஷிப்ட்டை அவன் இயக்க ,நீண்ட அவன் உறுதியான கைகளில் ,அந்த இடது கை மோதிர விரலில் இன்னும் அந்த எக்கு மோதிரம் இருந்தது ,
அவள் அதிர்ந்து தான் போனாள் ,இவ்வளவு நேரம் அதை எப்படி கவனிக்காமல் போனாள் ,அதற்கு இணையான இன்னோரு அதே போன்ற மோதிரம் அவள் இடது கை விரலிலும் இருந்தது .அதை அவள் கை அனிச்சையாய் தடவி பார்த்தது,எப்போதும் போல அதை தடவும் போதே அதை அவர்கள் வாங்கிய சூழ்நிலையும் ,அவன் அதை காதலுடன் அணிவித்ததும் ஞாபகம் வந்தது .
அப்போது அவர்களிடம் பைசா இல்லை ,ஆனால் இருவர் இடையே நிறைய அன்பு இருந்தது .
ஒற்றை காலை மடித்து ,முட்டி போட்டபடியே ,கண்களில் அபரீதமான காதலுடன் அவள் கையில் இதை அணிவித்ததும் ,இப்போது இதுதான் முடிந்தது ,பின்னாளில் வேறு மாற்றிக்கொள்வோம் என்ற காட்சி கண் முன் விரிந்தது .அதைத்தான் இன்னும் கழட்டாமல் வைத்திருக்கிறான்
இதற்கு என்ன அர்த்தம் ,அவளே வேண்டாம் என்று விலக்கியவன் ,இன்னும் அந்த மோதிரத்தை சுமப்பானேன் !

அது,அவன் அணிந்திருக்கும் மற்ற விலையுயர்ந்த விஷயங்களுடன் பொருந்தவில்லை தான் ,இருந்தும் அணிவானேன் ,அதற்கு அர்த்தம் தான் என்ன ,விடை தெரியாத பல கேள்விகளுடன் இதுவும் சேர அவள் ஆயாசமாக சீட்டில் சாய்ந்து கண்ணை மூடிக்கொண்டாள் .
சற்றே வெளிச்சம் பரவ ஆரம்பித்திருந்த அதிகாலை பொழுதில் அவர்கள் சென்னையை அடைந்தனர் .
மகனும் அதிகம் சிணுங்காமல் தூங்கியபடியே வந்துவிட ,அவர்களிடையே ஒரு வார்த்தை பேசாமல் வந்து சேர்ந்தனர் .
அவன் வீடு இருக்கும் ஏரியாவில் கார் திரும்ப ,அவளுக்கு பதட்டம் தொற்றியது !
அவள் கணவன் வீடுதான் ,ஆனால் இதுநாள் வரை ஒரு முறை கூட அவள் கால் பாவாத இடம் ,அந்த மூன்று மாதங்கள் அவர்கள் இணைத்து வாழ்ந்த அந்த குட்டி வீடு இதோடு ஒப்பிடும்போது மிக சிறியதுதான் ,ஆனால் அவள் அனுபவித்த சந்தோசம் இங்கே கிடைக்குமா ...சந்தோசத்தை விடுங்கள் மரியாதை ...சந்தேகம் தான் ,இருந்தும் மகன் நலன் கருதி அவள் இதை அனுபவிக்க தான் வேண்டும்
ஆனால் ஒன்று மூன்று வருடத்து முந்தைய வெகுளி பெண் அவள் இல்லை இப்போது ,இருக்கும் தெளிவு அப்போது இருந்திருந்தால் அவனை காதலித்து இருக்க மாட்டாளோ ..
வண்டி நிற்கவும் அவள் தலையை குலுக்கி நினைவுகளை ஒதிக்கினாள் ,எது வந்தபோதும் அதை எதிர்கொள்ள தயாராய் அவள் மகனை சுமந்தபடி இறங்க முற்பட
காரை நிறுத்திவிட்டு இறங்கி வந்த தனஞ்சயன் ,இவளிடம் வந்து மகனை தூக்க முற்பட
''தூக்கம் கலையும் போது சிணுங்குவான் ''என்று மறுத்துவிட்டு மகனுடன் இறங்கினாள் .
மகன் மேல் பார்வை படிய திரும்பி நடந்தான் .
பேசாமல் அவனையே தூக்க விட்ருக்கலாம் என்று அவளுக்கு இப்போது தோன்றியது .
ஒரு பத்து பதினைந்து படிகள் இருந்தது அந்த வீட்டு முன்கதவுக்கு முன்னால் ..
மெல்ல அதை கடந்து உள்ளே செல்ல ,அங்கே அவர்களை வரவேற்க யாரும் இல்லை .
அவள் தயக்கத்துடன் நிற்க
''வா ,நாம வரது யாருக்கும் தெரியாது ,நம் ரூமுக்கு போயிட்டு வந்து பார்ப்போம் ''
எது ரூமுக்கா ..என்று அவள் அசந்து நிற்கும்போதே அவன் நிற்காமல் அந்த பெரிய ஹாலை கடந்து நடுவே இருந்த பெரிய மாடிப்படியில் ஏற ஆரம்பித்தான் .
வேறு வழியின்றி அவசரமாய் அவனை தொடர்ந்தாள் .
ரூம் சென்றபோது அவளை உள்ளேவிட்டு அவன் எங்கோ செல்ல
மெல்ல உள்ளே வந்து தூங்கும் மகனை மெத்தையில் கிடத்தி அவள் முகம் கழுவி வர
அவனும் வந்து சேர்ந்தான் ,பின்னோடே அவர்கள் பெட்டியும் , பால் பிஸ்கெட் காபி என்று வர
காபி குடித்து ,எழுந்த மகனை சமாதானப்படுத்தி உண்ண கொடுத்து ,உடை மாற்றி என்று அனைத்தும் ஒருவழியாய் முடிய ..இதை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவன் ,இப்போது வந்து தூக்க கை நீட்ட
அரிசி பல் தெரிய மகன் சந்தோசமாக தாவ ,
வா கீழே போவோம் என்று அழைத்தான் .
அவளுக்கு எரிச்சலாக வந்தது ,தேவைக்கு மேல் ஒரு வார்த்தை பேச மாட்டாரோ துரை ..
இவர் நீட்டும் விரலுக்கு அவள் துள்ளி குதிக்க வேண்டுமா ,முடியாது போடா ..
ஆனால் அவளுக்கு காத்து நிற்காமல் அவன் விரைய அவளும் எரிச்சலை அடக்கி கொண்டு தொடர்ந்தாள் .
கீழே மறுபடி அந்த ஹாலுக்கு வந்து ,ஒரு பக்கமாய் இருந்த கதவு திறந்து அவன் போக
அது தோட்டத்தில் போய் முடிந்தது ,அங்கே அவன் முழு குடும்பமும் அமர்ந்திருந்தது ,அவனை போலவே உணர்ச்சி துடைத்த முகத்துடன் .
சற்றே முதிர்ந்த தோற்றத்தில் இருந்த பெரியவர்கள் தான் அவன் தாத்தா ,பாட்டியாக இருக்க வேண்டும் ,அடுத்து அமர்ந்திருந்த பெண்மணிக்கு அப்பட்டமாய் தனஞ்சயன் சாயல் இருந்தது .
கூடவே அமர்தலான ஒரு கம்பீரம் இருந்தது எல்லோரிடமும்
அந்த முதிர்ந்த பெண்மணியை நோக்கி ''பாட்டி ...இதுதான் வினித்ரா ,இது சூர்யா ''என்றான் சுருக்கமாக
அவர் கண்கள் லேசாக சுருங்க ,முகத்தில் சோகம் பரவியது
அருகில் நெருங்கிவிட்ட பேரனின் கையில் இருந்த மகனை ,லேசாய் கை நடுங்க தொட்டுவிட்டு
''விவேக் கண்ணு பார்க்கலையே'' என்றார் மிக மெல்லிய குரலில் கண்களில் நீர் நிறைய
விவேக் என்பது விவகானந்தனாக இருக்க வேண்டும் தனஞ்சயனின் தந்தை என்று அவளுக்கு புரிந்தது .
அவர் இறந்துவிட்டது தெரியும் ,அதை எப்படி அவள் மறப்பாள் ,அவன் தந்தைக்கு முடியாமல் போனது தானே அவர்கள் பிரச்சனையின் தொடக்கம் ..
''மஞ்சு ..''என்றார் தாத்தா குரலில் அதிகாரத்துடன்
இதில் எல்லாம் தனக்கு தொடர்பு இல்லாதது போல் ஒதுங்கியே இருந்தார் ,அவன் தாய் என்று இவள் ஊகித்திருந்த பெண்மணி
ஏன் அவருக்கு மகிழ்ச்சி இல்லையா மகனின் மகனை பார்க்க ,இல்லைதான் போலும் ,அதனால் தான் அவரை தவிர்த்து பாட்டியை நாடினானோ
வரும்போது யாருக்கும் தெரியாத விசயங்களை ,எப்போது சொன்னான் ,தன்னை ரூமில் விட்டு சென்ற போதுதான் சொல்லி இருக்க வேண்டும்
மகன் வாழ்க்கையில் இருந்து விலகி விட்டவள் ,மறுபடி வந்தது அவருக்கு பிடிக்கவில்லை என்று தெரிந்தது ,அது ஓரளவிற்கு இவள் எதிர்பார்த்தது தான் என்பதால் தொடர்ந்து அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்தபடி நின்றாள்
அம்மா என்றால் அவனுக்கு உயிர் என்று தெரியும் ,எத்தனையோ முறை அவரை பற்றி அவன் ஆசையாக பேச கேட்ருக்கிறாள் ...அந்த அம்மாவிற்கு அவர் பேரனை எப்படி பிடிக்காமல் போகும் ,இவள் தான் அந்நியம் ,சூர்யா அவர்கள் ரத்தம் அல்லவா
ரத்த பந்தம் தான் வேலை செய்ததோ ,அவள் மகன் யாரையும் கண்டு அழவில்லை ,சற்று நேரத்தில் அந்த புல் வெளியில் இறங்கி விளையாட ஆசைப்பட ..எங்கிருந்தோ வந்த ஒரு ஆள் கண்காணிப்பில் அவன் விளையாட அனுமதிக்க பட
நிதானமாய் அவளை சந்தித்து ,அழைத்து வந்த விதத்தை இவன் கூற ,அவர்கள் யாரும் எந்த கேள்வியும் கேட்கவில்லை .
அத்துடன் விஷயம் முடிந்தது போல அவர்கள் கலைந்து செல்ல ,அவளுக்கு அது வியப்பை கொடுத்தது .
என்ன குடும்பம் இது ,என்ன உறவுகள் இது ,இப்படித்தான் இவனாலும் தன்னை சற்றென்று விட்டு விலக முடிந்ததோ ..
ஆனால் அப்படி இருந்தவன் இன்று மகனை கண்டவுடன் இப்படி பொறுப்பு ஏற்றுக்கொண்டதும் முரணாக தெரிந்தது
அவளுக்கு ஒன்னும் தெளிவாக புரியவில்லை ..தெளிவு படுத்த வேண்டிய நபரோ மௌனமே மொழியாக கொண்டிருந்தார் .
ஆனாலும் நாளும் பொழுதும் யாருக்கும் காத்திருப்பதில்லை என்பதற்கு ஏற்ப ,வாழ்க்கை நகர்ந்தது .
அந்த பெரிய வீட்டில் அத்தனைக்கும் ஆட்கள் இருந்தனர் ,அதனால் மொத்தமாக அவள் மகனுடன் கூடவே இருந்து பார்த்துக்கொள்ள முடிந்தது .
தனஞ்சயன் கூடவும் ஒரு நட்பு மறுபடி லேசாய் தலை தூக்கியது .
அப்படியே வாழ்க்கை நகர்ந்தால் அது அவள் வாழ்க்கை அல்லவே
நன்றாக சிரித்து விளையாடிக்கொண்டிருந்த மகன் ஒருநாள் மயங்கி விழுந்தான் .