நாயகன் :
நீண்ட தூரங்கள் கடக்க
உன் நினைவுகள்..!
ஆயிரம் கவிதைகள் கிறுக்க
உந்தன் சில நொடி வெட்கம்..!
ஒரு நொடியில்
என்னை கொலை செய்ய
உந்தன் அரை நொடி மவுனம்...!
நாயகி :
உந்தன் முகம் பார்க்காத உரையாடல்கள்
பல கற்பனைகளை
விதைத்து செல்கிறது
என் எண்ணப் பெருவெளிகள் எங்கும் !
நாயகன் :
வீட்டின் கூரை
முழுவதும் நமக்காய் ஒரு வானம்..!
தலை நனைக்கும் எப்போதும்
தலை துவட்ட உந்தன் முந்தானை..!
நீ பரிமாறி
நான் உண்ட பின்
கை கழுவ பக்கத்தில் கடல்..!
மேகங்களெல்லாம் ஊஞ்சல் கட்டி விளையாட
உந்தன் ஓரிரு கூந்தல் முடி !
இப்படிப்பட்ட இவர்களின் நினைவுகளும் ,கனவுகளும் நடந்ததா ..?நடக்குமா ..? விடைக்கான எனது இரண்டாவது நாவலான "உயிரோடு உறைந்தாயோ "படித்து தெரிந்து கொள்ளுங்கள்... வாரம் மூன்று பதிவுகளாக வரும் திங்கள் முதல் போட போகிறேன் தோழமைகளே... படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்