உயிர் மெய் நீயே! - கதை திரி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,406
693
113
ஹாய் பிரெண்ட்ஸ்,

ப்ரீத்தி பவி அவர்கள் நமது தளத்தின் புது வரவு. தனது கதையினை உங்களுக்காக இங்கு பகிர வந்திருக்கிறார். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
 
  • Like
Reactions: Anuya

Preethipavi

New member
Jul 3, 2020
9
6
3
ஹாய் பிரண்ட்ஸ்! நா உங்க ப்ரீத்தி பவி. என் உயிர்மெய் நீயே! முதல் அத்தியாயம் போட்டாச்சு.படிச்சிட்டு உங்க கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.. கதைத்திரி அமைத்துக் கொடுத்த சுதா மேம்க்கு மிக்க நன்றி..😍😍

1. என் உயிர்மெய் நீயே!

வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் தலைநகர் சென்னை. காலைப் பொழுதிலும் கூட.. சாரை சாரையாக எறும்புக் கூட்டம் போல மக்கள் கூட்டம் தங்கள் பணிகளை கவனித்தபடி அலைபாய்ந்து கொண்டிருக்க…

சென்னையின் முக்கிய பகுதியிலுள்ள அந்த பெரிய பங்களா வெண்மையின் அடையாளமாக உஜாலா போட்டு வெளுத்தது போல கம்பீரமாக நின்று கொண்டிருந்தது.

பங்களாவின் ஆடம்பரத்திற்கு எந்த விதத்திலும் நான் சம்மந்தமல்ல என்பது போல அமைதியின் உருவமாக..எளிமையின் வடிவமாக..குளித்து முடித்து வெள்ளை வேட்டி,சட்டை..தோளில் துண்டு.. நெற்றியில் விபூதிப் பட்டை.. கழுத்தில் ருத்திராட்ச கொட்டை சகிதமாக எம்பெருமான் ஈசனை வணங்கிக் கொண்டிருந்தார் ரங்கசாமி.

“தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!போற்றி!!”

என்று சிவநாமத்தைக் கூறிய படி வரவேற்பறையிலுள்ள சோபாவில் வந்தமர, பணியாள் கொண்டு வந்த காபி தம்ளரை வாங்கிக் கொண்டவர், ”பாலு நீ காபி குடிச்சிட்டியா?” என்று இன்முகத்துடன் கேட்க,

எத்தனை பேருக்கு இது போன்ற முதலாளி வாய்க்கும் என்ற மகிழ்வுடன் “ இன்னும் இல்லிங்க ஐயா..நீங்க குடிங்க..நா பெறகு குடிச்சிக்கிறேன்” என்று பணிவுடன் நிற்க,

“பாலு ! தம்பி எழுந்தவுடனே ஜூஸ் குடுக்கனுமே ரெடி பண்ணிட்டியா? இன்னைக்கி என் தங்கச்சி புருசனும்,தங்கச்சி மகளும் ஊர்ல இருந்து வர்ராங்க..அவங்களுக்கும் சேர்த்தே காலை டிபனை ரெடி பண்ணிடு” என்றார் ரெங்கசாமி.

“சரிங்கய்யா..இப்போ போய் தம்பிக்கு ஜூஸ் போடுறேன்ங்கய்யா” என்று கூறிவிட்டு அடுக்களைக்குச் சென்றான் பணியாள் பாலு.

தமிழகத்திலுள்ள ஒரு சிற்றூரை தனது பிறப்பிடமாகக் கொண்டவர் ரங்கசாமி.இரண்டு அண்ணன்கள்…ஒரு தங்கை என பெரிய குடும்பத்தில் பிறந்து கஷ்டங்களையே சுமந்து வளர்ந்தவர். தனது 29வது வயதில், தங்கைக்கு நல்லதொரு இடத்தில் உள்ளூரிலே அண்ணன்களுடன் சேர்ந்து திருமணம் முடித்துக் கொடுத்து,தனது மச்சினனின் தங்கை பேச்சியையே திருமணம் செய்து கொண்டார்.

விவசாயமே தொழிலாகக் கொண்ட குடும்பம்.ஒரு ஆண் வாரிசை பெற்றெடுத்து சொற்ப வருடங்கள் மட்டுமே வாழ்ந்து விட்டு பேச்சி மேலுலகம் சென்றுவிட, ஒற்றையாளாக தன் மகனை வளர்த்து வந்தவர் மகனின் பிடிவாதத்தால் அவனை சென்னைக்கு படிக்க அனுப்பினார்.

மகனோ படிப்புடன் சேர்த்து நடிப்பிலும் திறமையாக இருந்தவன்,சினிமாத் துறையில் கால்பதிக்க எண்ணினான். ரங்கசாமி மறுக்கவே அவர் மறுப்பையும் மீறி நடிப்புலகிற்குள் நுழைந்தவன் இன்று வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் பட்டியலில் முண்ணனியில் இருக்கிறான்.
மகனின் விருப்பதிற்கிணங்கவும், அவனை தனியே விடக்கூடாது என்ற தந்தைக்கே உரிய அக்கறையிலும் அவனுடனே சென்னையில் வசித்து வருகிறார்.வாழ்வில் பல கஷ்டங்களை கண்டதாலோ என்னவோ இந்த ஆடம்பரமும்,பணமும் நிரந்தரமற்றது என்பதை உணர்ந்து எளிமையாகவே இருப்பார் ரெங்கசாமி.

காலை இளவெயில் சன்னல் திரைச்சீலைகளைத் தாண்டி முகத்தைத் தீண்ட மெல்ல, விழிகளை சுருக்கியபடியே எழுந்தமர்ந்தான் திருகுமரன். ரெங்கசாமியின் அருந்தவப்புதல்வன். நல்ல உயரம், மாநிறத்திற்கு மேலான சிக்ஸ் பேக் கொண்ட உடலமைப்பு, ஸ்டைலான தலைமுடி என திரைப்பட கதாநாயகன் போல இருப்பான் என்று சொல்லக்கூடாது. ஏனெனில் அவன் திரைப்பட கதாநாயகன் தான்.
காண்போரை ஈர்க்கும் பார்வை கொண்ட காந்தக் கண்ணழகன். இருபத்து ஒன்பது வயதுக்குடைய துள்ளலும்,துடிப்பும் நிறைந்தவன். திரைத்துறையில் தனது அயராத உழைப்பால் பல படவாய்ப்புகளை கைவசம் வைத்திருப்பவன்.

தாயில்லா பிள்ளை எனவே தன்போக்கில் திரிகிறான். இப்படி தன் போக்கில் திரியும் காளையைக் கட்டிப் போட ஒரு கன்னி வரப்போவது தெரியாமல் தனது காலைக் கடன்களை முடித்து விட்டு,ஒரு டி சர்ட், ட்ராக் பேண்ட்டுடன் கீழிறங்கி வந்தவன் தனது தந்தைக்கு காலை வணக்கத்தைக் கூறினான்.

“குட்மார்னிங்ப்பா”என்று புன்னகையுடன் சோபாவில் அமர,”குட்மார்னிங் தம்பி” என்று மகனைப் பார்த்து பதில் முறுவல் பூத்தவர் வழக்கமான சில விசயங்களை பேசிவிட்டு செய்தித்தாளில் மூழ்கி விட,
பணியாளிடம் ஆரஞ்சு பழச்சாறினை பெற்றுக் கொண்டு வீட்டுத் தோட்டத்திற்கு அருகே இருந்த தனது உடற்பயிற்சி கூடத்தை நோக்கிச் சென்றான் திரு.

“பேம்..பேம்”…என்று வாசலில் ஒலித்த ஹாரன் சத்தத்தில் வேகமாக நிமிர்ந்து பார்த்த ரெங்கசாமி..ஆட்டோவையும், அதில் வந்த நபர்களையும் பார்த்து விட்டு முகம் கொள்ளா புன்னகையுடன் வாசலை நோக்கி விரைந்தார்.

அங்கே கரும்பச்சை வண்ண பாவாடை..அதே நிறத்தில் ரவிக்கை..சந்தனநிற தாவணி அணிந்து,பெண்களுக்குரிய சராசரி உயரம்,மாநிற தேகம்,இடைக்கு சற்று மேலே நின்ற ஒற்றைப்பின்னல் என அழகாக வந்திறங்கினாள் தேன்மொழி.பெயரைப்போலவே தித்திப்பானவள்.உடன் அவளது தந்தை குமரகுருவும் வேட்டி, சட்டை,தோளில் துண்டு சகிதமாக ஆட்டோ ஓட்டுனரிடம் பணம் செலுத்திக் கொண்டிருக்க,

“மாப்புள...வாங்க..வாங்க..ஆத்தா தேனு வாடா..” என்று ரெங்கசாமி மகிழ்ச்சியுடன் வரவேற்க,அதற்கு சற்றும் குறையாத மகிழ்வுடன் “மாமா...நா வந்துட்டேன்” என்று துள்ளலுடன் ஓடி வந்து அவர் கையைப் பற்றிக் கொண்ட தேன்மொழி,

”என்ன மாமா…இப்புடி இளைச்சு பொயிட்டீங்க..பார்க்க சோர்ந்து போயி தெரியிறீங்க” என்று கவலைப்பட,

"அதான் நாம வந்துட்டோம்ல தேனு..இனிமே மச்சான் சரியாகிடுவாரு..என்ன மச்சான்?” என்று குமரகுரு கேட்கவும்,”கண்டிப்பா மாப்புள” என்று அவரை தோளோடு அணைத்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றார் ரெங்கசாமி.

நடந்த படியே வீட்டை சுற்றும் முற்றும் பார்த்து ரசித்த படி சென்ற தேனு… ”மாமா வீடா இது? சந்திரமுகி படத்துல வர அரண்மனை மாதிரியே அவ்வளோ அழகு “ என்று விழிவிரிக்க,

“அதே மாதிரி பங்களா தான்மா..ஆனா அந்த மாதிரி பேய் இங்க இல்ல”..என்று சொல்லி சிரிக்க…

“அதான் எம்மக அதுக்கு பதிலா வந்துட்டாளே மச்சான்” என்று கூறி குமரகுரு கிளுக்கிச் சிரிக்க…”அப்பா உனக்கு வைக்கிறேன் பெரிய ஆப்பா”…என்று தேனு இடையில் கைவைத்தபடி மிரட்ட,

“மாப்பு…உனக்கு வைக்கப்போறாடா ஆப்பு” ..என்று தேனுவை பின்பற்றி ரெங்காவும் கூறிவிட்டு சிரிக்க..

”மாமனாரும்,மருமகளும் ஒன்னு கூடிட்டிங்களா?அப்ப சரி” என்று குமரகுரு வாய்மீது கையை வைத்துக் கொள்ள.. மற்ற இருவரும் கொல்லென சிரித்தனர்.

“மாப்புள என் மருமக வந்த உடனே என் வீடே புதுசா இருக்குற மாதிரி இருக்கு மாப்புள” என்று ரெங்கா உணர்ந்து சிலாகித்தார்.பணியாளிடம் தேநீரை எடுத்து வர பணித்தவர், இருவரையும் சோபாவில் அமர வைத்தார்.

“ஏன் மாமா என் சூப்பர் ஹீரோ எப்புடி இருக்கார்னு நீங்க சொல்லவே இல்ல”..என்று தேனு ஆர்வமாக கேட்க,அந்நேரமாக உடற்பயிற்சியை முடித்து விட்டு வீட்டிற்குள் நுழைந்த திரு.. உள்ளே கேட்ட பேச்சொலியில் ‘யாரு வந்துருக்கா?’ என்ற யோசனையில் வர.. வந்திருந்தவர்களின் முதுகுப்பக்கம் மட்டுமே அவனுக்குத் தெரிந்தது.

“இதோ வந்துட்டானே உன் சூப்பர் ஹீரோ” என்று ரெங்கா கூற,திரும்பி பார்த்தாள் தேனு.

‘ஐயோ இவளா? இம்சை என்னைய டார்ச்சர் பண்ண வந்துட்டாளா?’ என்று அதிர்ந்து நிற்க,

“ஐயோ மாமா உங்க மகன யாரு கேட்டா? தினமும் காலையில நீங்க வாக்கிங் போறப்போ என்னோட ஃபேவரைட் ஹீரோவோட வீட தாண்டிப்போகையில அவர பாப்பேனு சொன்னிங்களே!அவரத் தான் நான் கேட்டேன்” என்றவுடன்,

’டாடிஈஈஈஈ’….என்று கத்தத் துடித்த வாயை அடக்கி விட்டு, “இவள…..” என்று திரு தன் பற்களை கடிக்க…”அப்போ எம்மகன் சூப்பர் ஹீரோ இல்லனு சொல்லவர்றியா?” என்று மகனை ஓரக்கண்ணால் பார்த்து விட்டு..உதட்டில் துடிக்கவிருந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு மருமகளிடம் விடம் ரெங்கா கேட்க,

“ஐயோ நீங்க வேற மாமா…உங்க மகன் சூப்பர் ஹீரோ இல்ல..மர்டர் ஹீரோ”…என்றதும், தந்தையும்,மகனும் புரியாமல் அவளைப் பார்க்க…

“அட கொஞ்ச நாளைக்கு முன்னாடி நம்ம ஊரு மாடெல்லாம் திடீர் திடீர்னு மர்மக்காய்ச்சல் வந்த மாதிரி மயங்கி மயங்கி விழுக ஆரம்பிச்சிருச்சுங்க… என்னாச்சு? ஏதாச்சுனு தெரியாம ஊரே சாமி குத்தமா இருக்குமோ? பில்லி சூனியமா இருக்குமோனு பார்த்தா…” அவள் சொல்ல சொல்ல ஆர்வத்தில் ரங்கா ‘ஆஆவென்று’ அவள் வாயை பார்த்துக் கொண்டிருக்க…'என்ன சொல்ல போறாளோனு' திருவும் பார்த்துக் கொண்டிருக்க,

“கடைசியில ஒரு நாள் ஒன்னு ரெண்டு மாட ஃபாலோ பண்ணி பார்த்ததுல தான் தெரிஞ்சது உங்க மகனோட பட போஸ்டர தின்னுட்டு தான் மயங்கி விழுந்துருக்குதுங்க…அதுல இருந்து உங்க மகனோட பட போஸ்டரே எங்க ஊரு பக்க சுவத்துல ஒட்டுறது இல்லைனா பாத்துக்கோங்களேன்!” என மோவாயில் கைவைத்து அவள் கூறிய விதத்தில் ரெங்கசாமி வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க,

“அடிங்….உன்ன…இந்தா வரேன்டி…என்னையே கலாய்க்குறியா வில்லேஜ் கழுத”..என்று திரு அவளைத் துரத்த…”நா வில்லேஜ் கழுதன்னா…நீ சிட்டி எரும…” என்று தன் மாமனுக்கு பின்னால் வந்து ஒளிந்து கொண்டாள் தேன்மொழி.

“அப்பா இவ வர்ரானு நீங்க ஏன் என் கிட்ட சொல்லவே இல்ல…இவள எதுக்கு இப்ப இங்க வரவச்சிங்க” என்று தன் தந்தையிடம் குதிக்க…

“இப்புடி நீ குதிக்கிறத பார்க்குறதுக்கு தான்டா மகனே!” என்று சிரித்த படி சொல்ல..”இருங்க உங்கள அப்புறம் பார்த்துக்குறேன்” என்றவன், தன் தந்தைக்கு பின்னே நின்றவளின் கையைப் பற்றி முன்னே இழுத்தவன்…

”இங்க மாடு மேய்க்கிற வேலையெல்லாம் இல்ல..அதனால் ஊரப்பக்கம் கிளம்பு”.. என்று கேலி செய்ய..

“மாடு இல்லனா என்ன மாமா நா எங்க மாமா பெத்த அருமை மகன் எருமைய மேய்க்கத்தானே வந்தேன்”..என தேனு கேலியாக சிரிக்க..” என்னடி சொன்ன?”…என்று அவளை கொட்டு வைக்கப் போக..

”அவள விடு தம்பி… உனக்கு உதவியா இருக்க நான் தான் அவள இங்க வரவச்சிருக்கேன்” என்று ரெங்கா கூற..

“யாரு இவ எனக்கு உதவியா? என்று இழுத்தவன்,”அதுவும் சரி தான் என் துணிமணியெல்லாம் துவைச்சி, அயன் பண்ணி, எனக்கு சமைச்சு வைக்கட்டும்”…என்றதும் பொங்கி எழுந்து விட்டாள் தேனு.

“என்ன சொன்ன? துணி துவைக்கவா? போயா லூசு..இனிமே இந்த தேன்மொழி தான் உன்னோட பி.ஏ. புரிஞ்சதா?” என்றதும்,

“எனக்கு நீ பி.ஏ.வா? அத நா முடிவு பண்ணனும்டி பட்டிக்காடு.எனக்கு டச் அப் கேர்ளா இருக்க கூட உனக்கு தகுதியில்ல” என்றதும் தனது சுயமரியாதை தீண்டப்பட்ட ஆத்திரத்தில்,

“மாமா நா இப்பவே ஊருக்குப் போறேன்..அப்பா வா போகலாம்” என தனது பயணப்பையை எடுத்துக் கொண்டு அவள் வாசலை நோக்கிச் செல்ல,

“நில்லு தேனு” என்ற ரெங்கா, மகன் பக்கம் திருப்பி ஒரு கண்டன பார்வையை செலுத்தியவர், “இங்க பாரு தம்பி..உன்னோட விருப்பத் துக்காகவும், பிடிவாதத்துனாலயும் சென்னையில உன்ன படிக்க வச்சேன்..எனக்கு விருப்பம் இல்லைனாலும் உன்னோட ஆசைக்காக நீ சினிமாவுல நடிக்க போனப்பவும் அமைதியா உன்னோட தான் இருக்கேன்..ஆனா கொஞ்ச நாளா உன்னோட போக்கே சரியில்ல”..தந்தையின் கண்டிப்பில் தலைகுனிந்தான் திரு.

“அப்பா..அதுக்காக இவ எனக்கு பி.ஏ.வா? இவளுக்கு என்னப்பா தெரியும்?” என்று தயக்கத்தில் ஆரம்பித்து கோபத்தில் முடித்தான்.

“உனக்கு என்ன தெரிஞ்சது ஆரம்பத்துல..நீயும் ஒரு பட்டிக்காட்டுல இருந்து இங்க வந்து தான் நாகரிகத்தை கத்துக்கிட்டு கை நிறைய சம்பாத்திக்க ஆரம்பிச்ச…அது போல என் மருமகளும் எல்லாத்தையும் கத்துக்குவா. பேரும்,புகழும் கிடைச்ச மயக்கத்துல நீ பழசையெல்லாம் மறக்க ஆரம்பிச்சிட்ட.. ஆனா என் மருமக அப்படி இருக்க மாட்டா” என்றவர்,

“ஆம்பள புள்ளையா இருந்தாலும் ஒழுக்கம் முக்கியம்னு நினைக்குறவன் நானு..கொஞ்ச நாளா உன்னோட போக்கப் பார்த்து எனக்கு சந்தேகமாக இருக்கு..என் வளர்ப்பு பொய்யா போச்சோனு” என்றதும், தந்தை தனது எதிரிக்கு முன்னால் தன்னை அவமானப்படுத்துவதை தாங்க முடியாதவன்,

“அப்பா…போதும் இப்படியெல்லாம் பேசாதிங்க..நா அப்படியெல்லாம் இல்ல”..என்று தன்னை உணர்த்திடும் வேகத்தில் வாயெடுக்க..

“அப்படி இல்லைனா கொஞ்ச நேரத்துக்கு முன்ன நீ இவள மட்டமா பேசியிருக்க மாட்ட..நீ என் மருமகள அவமானப்படுத்துறதும், என்ன அவமானப்படுத்துறதும் ஒன்னு தான்” என்றவர், “நீ என் வளர்ப்புனா அவ கிட்ட மன்னிப்பு கேளு” என்றார்.

“என்னால அவகிட்ட மன்னிப்பு கேட்க முடியாது” என்று சுவற்றை வெறித்தவாறு திரு சொல்ல, “அப்போ வா தேனு நாம போகலாம்” என அவளுடன் நடந்தார் ரெங்கா.

“அப்பா..ஏன் இப்புடி என்னைய டார்ச்சர் பண்றிங்க?” என்று அடிக்குரலில் கத்தியவன், “சாரி போதுமா” என்று தேனுவிடம் பட்டும் படாமல் கூறிவிட்டு மாடிப்படி ஏறிச்செல்ல, அவனைப் பார்த்து வெற்றிப்புன்னகை சிந்தினாள் தேன்மோழி.

தனது அறைக்கு வந்த திரு, பால்கனி கைப்பிடிச் சுவரை இறுகப் பற்றியவாறு நின்றவன், “என்னையவே சாரி கேட்க வச்சிட்டல இருடி..உன்ன வச்சு செய்யுறேன்” என சூளுரைத்தான்.
 
  • Like
Reactions: lakshmi

Preethipavi

New member
Jul 3, 2020
9
6
3
அத்தியாயம் 2

அன்று படப்பிடிப்பு இல்லாததால் சற்று வெளியே சென்று வந்தவன், மதிய உணவிற்காக உணவுமேசைக்கு வந்து அமர, அங்கு ஏற்கனவே அவனது தந்தை,மாமன்,தேன்மொழி மூவரும் அமர்ந்திருக்க, ‘போச்சுடா…இப்ப என்ன அக்கப்போரெல்லாம் பண்ணப்போகுதுங்களோ' மனதில் எண்ணியபடியே திரு அமர்ந்திருந்தான்.

“தேனு மீன்குழம்பு அருமையா இருக்குடா..எவ்வளவு நாளாச்சு இந்த மாதிரி சாப்பிட்டு நம்ம ஊருக்கு வந்த மாதிரி இருக்குடா” என்று ரெங்கா புகழ, காதில் புகைவராத குறை தான் திருவுக்கு.

“அப்போ இத்தன நாளா பாலு சமைச்சது நல்லாவே இல்லனு சொல்றிங்களா?” என்று அழுத்தமாக திரு கேட்டு வைக்க, “தம்பி அப்பா அப்புடி சொல்லலையே.. என்ன தான் நாம நல்லா சமைச்சு சாப்பிட்டாலும் நம்ம ஊரு கைப்பக்குவத்த ரசிச்சு சாப்புறப்போ ஒரு சந்தோசம் தான் இருக்கும்..அதைத்தான் ஐயா சொல்றாங்க” என பாலு பெருந்தன்மையாக கூறினான்.

அவனது பெருந்தன்மையில் வியந்த தேனு “அண்ணா நிஜமாவே நீங்க ஒரு ஜென்டில்மேன் தாண்ணே..உங்க இடத்துல வேற யாரு இருந்தாலும் கண்டிப்பா உள்ள கோவப்பட்டிரு ப்பாங்கண்ணே” என்று பாராட்ட, ‘இந்த பாலும் விக்கெட் ஆகிருச்சா” என்ற சலிப்புடன்..”எனக்கு மீன் குழம்பெல்லாம் வேண்டாம்…வேற ஏதாவது இருந்தா வைங்க” என்றான் திரு.

“தம்பி உங்களுக்கு பிடிக்குமுன்னு நாட்டுக்கோழி குழம்பு வச்சிருக்கேன் தம்பி..காலையில நானும்,பாப்பாவும் தான் போயி வாங்கிட்டு வந்தோம்” என்றதும்,

“உங்க பொண்ணு ஸ்கூல் போகலையா? மார்க்கெட்டு க்கெல்லாம் ஏன் கூட்டிட்டு போறிங்க” என்றான் அதட்டலாக. “ஐயோ தம்பி நா சொன்னது நம்ம தேனு பாப்பாவ” என்று பாலு கூறியதும், வாயைப்பொத்திக் கொண்டு சிரித்தவன் “தண்ணி ஊத்தி வைக்குற பீப்பாவ போய் பாப்பானு சொல்றிங்களே பாலு” என்று சரோஜா தேவியின் “கோபால்” மாடுலேஷனில் கூற,அனைவரும் கொல்லென சிரித்தனர்.

“மாமாஆஆஆ” என்று அலறியவளை சிரிப்பை அடக்கிக் கொண்டு திரு பார்க்க, “தம்பி சாப்புடு” என்று ரங்கா கூறவும் அமைதியாக சாப்பிட்டவன், “பாலு உன்னோட குழம்பு சூப்பர்..அந்த மீன் குழம்பெல்லாம் உன்னோட இந்த கோழி குழம்புக்கு முன்னால மொக்கை தான்” என்று தேனை பார்த்துக் கொண்டு கேலிக் குரலில் வினவினான்.

“தேனு பாப்பா நா அப்பவே சொல்லல தம்பிக்கு இந்தக் குழம்பு ரொம்ப பிடிக்கும்னு” பாலு மகிழ்ச்சியுடன் கூற, புன்சிரிப்புடன் சாப்பிட்டு முடிக்கப் போகையில்,

“ பின்ன கோழி குழம்பு வைக்குறதுல சுத்துப்பட்டு எட்டூர்ல எம்மவள அடிச்சிக்க ஆளே இல்ல” என்று குமரகுரு பெருமை பீற்ற, “ என்னாது…இவ வச்சதா” திரு விலுக்கென நிமிர்ந்து பார்க்க,

“ஏமாந்தியா..வவ்வவ்வே” என்று அவனைப் பார்த்து பழிப்பு காட்டினாள் தேனு.


‘சண்டாழி என்னையவே புகழ வச்சிட்டாளே' என்று பொருமிய படி கைகழுவி விட்டு தனதறைக்குச் செல்ல, ரெங்கசாமி தேனுவைப் பார்த்து சிரித்து வைத்தார்.
மாலை வேளையில் தனது காரை எடுத்துக் கொண்டு திரு வெளியே கிளம்புகையில்,

“திரு…நம்ம தேன செத்த காத்தாட கூட்டிட்டு போயி சுத்திக் காட்டிட்டு வா” என்று அவன் தந்தை கூற, “ச்சு..என்னப்பா நா கொஞ்சம் வேலை விசயமா வெளில போறேன்” என்று எரிச்சல் பட்டவன், தந்தை முறைத்த முறைப்பில் “அவ கிளம்பி வரத்துக்குள்ள விடிஞ்சிடும்” என்றான் சலிப்பாக.


“நா எப்பவோ ரெடி மாமோய்”..என்றபடி துள்ளிக்கொண்டு வந்து நின்றாள் தேனு. மருமகளை பெருமையாக பார்த்தவர், ‘பார்த்தியா எம்மருமகள' என்பது போல் மகனைப் பார்க்க,

‘இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல..கண்ணாலயே மிரட்டுறது” என தந்தையை நொடித்துக் கொண்டவன்,”வந்து சீக்கிரம் ஏறு” என்றான் அவளிடம்..அவளும் ஏறிக் கொள்ள காரை கிளப்பினான்.


அவள் முகத்தை பார்க்கப் பிடிக்காமல் வெளியே பார்த்த படி அவன் வாகனத்தை செலுத்த, “மாமா ரொம்ப அமைதியா இருக்கு..நல்ல பாட்டா போடுங்க” என்றாள் தேனு. அவளை முறைத்த படி ப்ளேயரை ஆன் செய்தவன், “ஏன் உங்க ஊரு வயக்காட்டுல மியூசிக் பிளேயர்ல பாட்டு கேட்டுக்கிட்டு தான் வேலை பாப்பிங்களாக்கும்” என்று ஏளனமாக கேட்க,


“எங்க ஊருல இந்த மாதிரி சப்பையா பாட்டெல்லாம் நாங்க கேட்க மாட்டோம்..நாங்களே அழகா பாடுவோம்” என்றாள் பழிப்பு காட்டியபடி.

“ம்க்கும்..கழுதையெல்லாம் செத்துப் போயிரும்” என்று தனக்குள்ளே முனங்கிய படி மெரினா கடற்கரையை நோக்கி காரை செலுத்தினான். இருவரும் கடற்கரைக்கு வந்திறங்க

“ஹே..சூப்பர்..பீச்சுக்கு வந்துட்டோம்” என அவள் கைதட்டி குதூகலிக்க, சுற்றி நின்றவர்கள் அவளைப் பார்த்து சிரிப்புடன் செல்ல ..”பட்டிக்காட்டான் ஏரோப்ளைன பார்த்த மாதிரி குதிக்கிறா பாரு கிறுக்கச்சி” என மானசீகமாக தலையிலடித்துக் கொண்டவன், தன்னை யாரும் அடையாளம் கண்டுவிட்டால் கூட்டம் கூடிவிடுமென கைக்குட்டையை தனது முகத்தில் கட்டிக் கொண்டு நடந்தான்.

“ம்க்கும் அப்படியே உன்னைய கண்டுபிடிச்சு…ஐ திரு வந்திருக்கார்னு எல்லாம் வந்து கட்டி பிடிச்சு மேல விழுக போறாங்க பாரு” என கேலிசெய்தவள் அவனது கைக்குட்டையை விலக்கி விட, அவளை தடுத்தவன் “ ஏ விடுடி என் ஃபேன்ஸ் வந்து என்னைய டார்ச்சர் பண்ணுவாங்க” என்றதும்,

“ஓ ஃபேன்ஸ் உனக்கு டார்ச்சரா? அவங்க இல்லன்னா உனக்கு பொழப்பே இல்ல தெரிஞ்சுக்கோ. அப்புறம் எங்க போனாலும் நம்மளோட சுயத்துல நாம சுதந்திரமா இருக்கணும் அதான் சந்தோசம்” என்றவள் அவனது முகமூடியை விலக்கி கைக்குட்டையை தனது இடுப்பில் சொருகிக் கொண்டாள்.
அன்று வார இறுதி விடுமுறை என்பதால் கடற்கரையில் கூட்டம் அலைமோதியது. கரையின் ஒரு ஓரமாக திரு அமர்ந்து விட, தனது தாவணியை அள்ளி சொருகியவள், பாவாடையை கையில் பிடித்துக் கொண்டு..காற்றில் ஆடும் கேசத்தை காதோரம் ஒதுக்கிய படி நீரில் துள்ளும் கயல் போல..அலையுடன் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தாள் தேன்மொழி.

மணல் பரப்பில் அமர்ந்து கடல்காற்றை அனுபவித்த படி
சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வை அவளில் நிலைக்க, “என் சந்தோசத்தை எல்லாம் கெடுத்துட்டு எப்புடி சந்தோசமா விளையாடுறா பாரேன்” என தனக்குத் தானே சொல்லிக் கொண்டவனின் நினைவுகள் பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு நடந்ததை எண்ணிப் பார்த்தது.


அப்போது திருகுமரன் பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவன். பதின்பருவத்தின் மத்தியில் இருந்தான். ஒல்லியாகவும் இல்லாமல் பருமனாகவும் இல்லாமல் சராசரி உடல்வாகுடன், அரும்பி வருகின்ற மீசையும், துள்ளலுமாக பள்ளிச்சீருடை அணிந்து சைக்கிளில் வலம் வருவான்.

பதின்பருவம் என்பது ஈர்ப்பு தோன்றும் பருவமாயிற்றே.நம் திருவிற்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் கனகாவின் மேல் ஒரு ஈர்ப்பு.அதைக் காதல் என எண்ணிய அந்த வயதில் அவள் பின்னே சுற்றிக் கொண்டிருந்தான். கனகாவுக்கும் அவன் மேல் ஒரு ஈர்ப்பு இருக்க.. இருவருக்குமிடையே அழகான ஒரு தென்றல் தழுவுவது போன்ற உணர்வு கடத்தப்பட்டுக் கொண்டிருக்க.. அங்கு தான் நமது வில்லி இடைபுகுந்தாள்…ஆம் நம்ம தேன்மொழியே தான்.

சிறுவயதிலிருந்தே குமரனை உரன்டை இழுப்பதே அவள் வழக்கம். திரு தனது காதலை கனகாவிடம் சொல்ல முடிவெடுத்தவன் ஒரு ரோஜாவும், வாழ்த்து அட்டையும் வாங்கியவன் மதிய உணவு இடைவேளையில் அவள் கைகழுவும் குழாயடிக்குச் சென்று யாரும் பார்க்காத நேரத்தில் அவளது டிபன் பாக்சில் வைத்து விட, கனகா அவனைப் பார்த்துவிட்டாள். வெட்கச் சிரிப்புடன் அதை எடுத்துக் கொண்டு அவள் செல்ல..நம்ம ஆளு வானத்துல பறக்காத குறை தான். (அடக்கிறுக்குப்பயலே நீ பண்ணுன வேலைய பார்த்தது ஹீரோயின் மட்டும் இல்ல..நம்ம வில்லியும் தான்)

திருவின் செயலைப் பார்த்துவிட்ட தேனு,ஒரு திட்டத்துடன் மறுநாள் பள்ளிக்குச் சென்றாள். காலை சிறப்பு வகுப்பில் திரு இருக்க,அந்த நேரத்தில் தன் தோழிகளுடன் கனகாவைப் பார்க்கச் சென்றவள்,

“கனகாக்கா..உங்க்கிட்ட ஒரு விசயம் சொல்லனும்” என்றவுடன்..’எட்டாவது படிக்கிறவ நம்ம கிட்ட என்ன பேசனுமாம்' என்ற யோசனையில் “சொல்லுமா” என்றாள் கனகா.
“நேத்து எங்க மாமா..அதான் குமரன் உங்களுக்கு ரோசாப்பூவும்,லெட்டரும் குடுத்தத பார்த்தேன்” எனவும்,அவள் பயந்து முழிக்க,

“பயப்படாதிங்கக்கா.. அவரு உங்களுக்கு மட்டும் லெட்டர் குடுக்கல…பாருங்க எனக்கும் குடுத்துருக்காரு…எனக்கு மட்டுமில்லாம எங்க வகுப்புல மூனு பேருக்கும்,ஒன்பதாவதுல ரெண்டு பேருக்கும் குடுத்துருக்காரு அவர நம்பாதிங்க..இங்க பாருங்க அந்த லெட்டர பாருங்க” என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு திருவின் கையெழுத்தில் அவள் எழுதிய கடிதத்தை கனகாவிடம் கொடுக்க..அன்று திரும்பிக் கொண்டவள் தான் கனகா.அதன் பிறகு அவனது முகத்தை திரும்பிப் பார்க்கவில்லை என்று சொல்ல முடியாது.

சினிமாத்துறையில் நுழைந்து பிரபலமடைந்த புதிதில் திரு சொந்த ஊருக்கு சென்றிருந்த போது, முன்பை விட அழகாகவும்,கம்பீரமாகவும் இருந்த தோற்றத்தைப் பார்த்து பழசை மறந்து கனகா சொக்கி நிற்க..அதை மீண்டும் நம் வில்லி கவனித்து விட்டாள். ‘ஆஹா இவ பார்வையே சரியில்லையே' என எண்ணியவள் அடுத்த வியூகத்தை வகுத்து விட்டாள்.

கல்லூரிக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் தன் தோழியுடன் நின்று கொண்டிருந்த தேன்மொழி, கனகா வருவதை பார்த்து தனது அலைபேசியை எடுத்தவள், “இங்க பாரேன்டி வேணி”..என்று எதையோ காட்டி திருவின் பெயரைக் கூற,அதைக் காதில் வாங்கிய கனகா என்னவென்று எட்டிப் பார்க்க, ஒரு நடிகையுடன் காதல் காட்சியில் திரு நெருக்கமாக நடிக்கும் வீடியோ அது.அதைப் பார்த்த கனகா முகத்தை சுழிக்க,இதுதான் சமயமென்று அவனைப் பற்றி செய்தித்தாள்களில் வந்த பொய்யான கிசுகிசுக்களை பெரிதுபடுத்தி கூறிவிட்டு,

”நல்லவேளை நீ தப்பிச்ச கனகாக்கா” என்று கூறிவிட்டு சிரிப்பை உதட்டுக்குள் அடக்கிக் கொண்டாள் தேன்மொழி.

இரண்டு வருடங்களுக்கு முன்பு தந்தையின் கட்டாயத்தின் பேரில் ஊர்த்திருவிழாவிற்கு திரு வந்திருக்க, கனகாவும் தன் கணவன், மூன்று குழந்தை சகிதமாக வந்திருந்தாள். கனகாவின் கணவன் திருவைப் பார்த்து விட்டு கனகாவிடம் புகழ்ந்து பேச..அதை காதில் வாங்கியும் வாங்காத மாதிரி திரு திரும்பி நின்றிருந்தான்.

தன் கணவனை முறைத்த கனகா, தனது ஃபிளாஸ்பேக்கை கூறியவள்..தேனு சொன்னதையும் சொல்லிவிட்டு “நல்லவேளை தேனுபுள்ள என்னைய காப்பாத்துச்சு” என்று கூறவும்,அப்பொழுது தான் அது யாரென திரும்பி பார்த்தான். நன்கு உற்று பார்த்த பிறகே அது கனகா என்று தெரிந்தது.

இப்பொழுது அவன் கருத்தில் கனகா கூட இல்லை.தேனுவை எண்ணி பல்லைக் கடித்தவன்..வீட்டிற்கு வந்து அவளை கண்டமேனிக்கு திட்டி சண்டையிட்டு சென்னைக்கு வந்தவன் தான்.திரும்பி ஊருக்கு செல்லவே இல்லை. (,ஆத்தி எவ்வளோ பெரிய பிளாஸ்பேக்..ஆட்டோகிராப் ஐ விட பெரிசு)பழைய நினைவுகளிலிருந்து மீண்டவன்,
“அந்த கனகா என்னைய பார்க்காம போனத பத்தி கூட நா கவலப்படலடி. அவ கிட்ட என்னைய எந்த அளவுக்கு டேமேஜ் பண்ணி வச்சிருக்க” என்று ஆத்திரப்பட்டவன், அலைகளுடன் துள்ளி விளையாடும் அவளருகே சென்று கைகட்டி மௌனமாக நின்றவன், அவள் எதிர்பார்க்காத நேரத்தில் அவள் கால்களுக்குள் தன் காலை வைத்து இடறிவிட,( ஐயோ பாவம் விழுந்தது நம்ம வில்லியாச்சே!)

தடுமாறி விழுந்தவள், அருகில் நின்ற திருவின் காலைப்பிடித்து இழுத்து விட, திருவும் தடுமாறி தண்ணீருக்குள் விழுந்தான்…அலையில் முண்டியடித்து மணலை அப்பிக் கொண்டு இருவரும் மூச்சு வாங்கியபடி எழுந்து வெளியே வந்தனர்.

திருத்தந்தை அவளை முறைக்கு, அவள் இவனை முறைக்க, “ஏன்டி என் காலப்பிடிச்சு இழுத்த…நீ ஏன் என்னைய தள்ளிவிட்ட”…இருவரும் சண்டையிட்ட படி நிற்க, சுற்றி நின்ற சிலர் இவர்களை சிரித்தபடி வேடிக்கை பார்த்த படி சென்றனர்.

இருள் லேசாக கவிழ்ந்திருந்ததாலும், நீரில் விழுந்ததால் திருவின் தலைகலைந்து, கசங்கி இருந்ததாலும் அவனை சரியாக அடையாளம் தெரியவில்லை. தேன்மொழி மடை திறந்த வெள்ளமாக திருவை வசைபாடிக் கொண்டிருக்க, ‘இதுக்குப் பேருதான் சொந்த செலவுல சூனியம் வச்சிகிறதாடா குமரா' என நொந்து கொண்டவன்,

“போதும் இத்தோட நிறுத்திக்குவோம்” என்று வடிவேலு பாணியில் கூறியவன், “சரியான ரவுடி பொம்பளையா இருப்பா போல… பழிவாங்குறேன்.. பழிவாங்குறேனு நம்ம டேமேஜ் ஆகிட்டோமேடா” என மணலில் காலை சாய்த்து,சாய்த்து அவன் நடந்து செல்ல, சிரிப்பை அடக்கிய படி பின்னே சென்றாள் தேன்மொழி.
 
  • Like
Reactions: lakshmi

Preethipavi

New member
Jul 3, 2020
9
6
3
திருவும், தேனும் ஈரமணலை ஒட்டிக் கொண்டு ஈரமாக ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைவதைக் கண்ட ரெங்கா, “என்ன தம்பி இது..ரெண்டுபேரும் இப்புடி நெனஞ்சு போய் வந்துருக்கிங்க” என்க,

“ம்ம்…இந்த மாதிரி ஒரு பி.ஏ. கிடைக்கனும்னு கடல்மாதா கிட்ட வேண்டியிருந்தேன். அதான் வேண்டுதலை நிறைவேத்த அங்க பிரதக்ஷனம் பண்ணிட்டு வரேன்” என்று திரு கேலியாக கூற, “நிஜமாவா மாமா” என்று தேனு பொய்யாக வியந்தபடி அவன் காதருகே கேட்க, “வாயமூடுடி…கிராதகி..எல்லாம் உன்னால தான் “…என்று பல்லைக் கடிக்க…சிரிப்பை அடக்கமுடியாமல் திணறினாள் தேன்மொழி. அவளை முறைத்துக் கொண்டே படியேறி அறைக்குச் சென்றான்.தேன்மொழி உடைமாற்ற தனதறைக்கு சென்று விட்டாள்.

இரவு உணவு வேளையில் மகனிடம் பேச்சைத் தொடங்கினார் ரெங்கா. “தம்பி நாளைக்கு படப்பிடிப்பு எதும் இருக்காப்பா”..
“ஆமாப்பா நாளைக்கு கொஞ்சம் சீன்ஸ் ஸ்டுடியோவில எடுக்கனும்னு சொன்னாங்க…அடுத்த வாரம் கடைசில தான் ஒரு பாடல் காட்சிக்காக சுவிட்சர்லாந்து போற மாதிரி இருக்கும்ப்பா.நீங்க இந்த முறை ஊருக்குப் போய் தங்க வேணாம்..மாமா தான் இங்க இருக்காங்களே..அதனால இங்கயே இருங்க” என்றான் திரு.
எப்பொழுதெல்லாம் அவன் வெளிப்படப்பிடிப்புகளுக்கு செல்கிறானோ அப்போதெல்லாம் ரெங்கா தனது சொந்த ஊருக்கு சென்று தங்கிக் கொள்வார். அதனால் இம்முறை இங்கேயே இருங்கள் என்று திரு கூற,

“அதைப் பத்தி பொறவு பேசிக்கலாம் தம்பி..நாளையில இருந்து நம்ம தேனுவ படப்பிடிப்புக்கு கூட்டிட்டு போ” எனவும், “அப்பா அவ எதுக்கு”..என்று ஆரம்பித்தவன்…”காலையில தானே சொன்னேன்…மறுபடியும் முதல்ல இருந்து என்னால பேசமுடியாது” என்று உறுதியாக பேசிவிட்டு கைகழுவியபடி, குமரகுருவையும் தனதறைக்கு அழைத்துச் செல்ல,
அடக்கப்பட்ட சினத்துடன் மேசை மேலே “ச்ச” என்று தனது கைகளை குத்தியவன்,

கருமமே கண்ணாக குனிந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த தேன்மொழியை பார்த்தவன்,

“ஏய்…இங்க என்ன நடக்குது..நீ என்னடி நல்லா மொக்கிக்கிட்டு இருக்க.. கழுத..கழுத” என்று திரு வசை மொழிய..

“இங்க பாரு..சாப்பிடும் போது திட்டுனா உடம்புல ஒட்டாது தெரியுமா!.. அப்புறம் சாப்பிடும் போது பேசினா தொண்டையில மீன்முள் சிக்கிக்கும்ல அதான் பேசல…ஒரு நிமிசம்” என்றவன் தன் கைகளில் ஒட்டியிருந்த சோற்றுப்பருக்கைகளை லாலிபாப் சாப்பிடுவது போல வாயில் வைத்து எடுக்க,

“கருமம்..கருமம்..எல்லாம் எங்கப்பாவ சொல்லனும்” என்று திரு தலையிலடித்துக் கொள்ள,

”இங்கப்பாரு..இப்ப என்னங்குற என்ன மாதிரி அழகான,அறிவான பொண்ணப்போய் பி.ஏ.வா வேணாம்னு சொல்ற நீ குடுத்து வச்சது அவ்வளவு தான்” என்றவள், “நாளைக்கு உன்னோட வர மாட்டேன்.நிம்மதியா போய் தூங்கு” என்று விட்டு தன் கைகளை கழுவ,

”ரொம்ப நன்றிடி ஆத்தா” என்று கையெடுத்து கும்பிட்ட படி தனதறைக்குச் சென்றான்.
காலைப்பொழுது எப்போதும் போல அழகாக விடிய தனது காலை வேலைகளை முடித்து விட்டு திரு படப்பிடிப்பிற்கு கிளம்பி வர, சிவப்பு வண்ண சேலை,சிவப்பு வண்ண பிளவுஸ்,தலைநிறைய மல்லிகைப்பூ, கைகளில் கண்ணாடி வளையல்கள் சகிதமாக தேனு கிளம்பி நிற்க,

“ஏ! நீ எங்க கிளம்பி இருக்க? அம்மன் கேரக்டர்ல நடிக்க ஆள் இல்லைனு கூப்பிட்டாங்களா என்ன?” என்று திரு கேலி பேச, “மறந்துட்டிங்களா இனிமே நா தான் உங்களோட பி.ஏ.”என்றதும், ”இப்புடியேவா ஷூட்டிங் ஸ்பாட்க்கு வருவ?” என்று திரு அதிர,”ஆமா மாமா” என்று சொன்னாலே பால்க்கலாம் “நோஓஓஓஓ”..என்ற படி திரு கத்த…

“யோவ் மாமா..காலங்காத்தாலே ஏன் கத்திக்கிட்டு கிடக்க எந்திரி!” என்று தேனு அவனை எழுப்ப, தலையை சிலுப்பிய படி எழுந்தவன் எதிரே தாவணி,பாவடையுடன் நின்றிருந்தவளைக் கண்டு,’நல்லவேள கனவு போல' என மூச்சை இழுத்து விட,”என்ன இன்னைக்கு ஷூட்டிங் போக வேண்டாமா? மணி ஆறுக்கு மேல ஆச்சு எழுந்திரி” என்று அவள் அதட்ட,

“நைட் தானே என்னோட வர மாட்டேனு சொன்ன?” என்று கேட்க, “அது ராத்திரி இது காலைல..போய் கிளம்பு” என்றவள் கீழே சென்று விட,

“டேய் திரு! இன்னைக்கு என்ன நடக்கப் பொகுதுனு உன்னோட ஞான திருஷ்டியில தெரிஞ்சிடுச்சு.. எப்புடியாவது தப்பிச்சிக்கடா” என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு கிளம்பியவன் அடுத்த ஒரு மணி நேரத்தில் கீழே வர,
தந்தையும், மாமனும் உணவருந்திக் கொண்டிருந்தனர்.

மெதுவாக தனது பார்வையை சுழலவிட்ட படி தேனுவை தேட, “என்ன யாரையோ தேடிற போல” என்று காதருகே கேட்ட மெல்லிய குரலில் திரு குமரன் திரும்பிப் பார்க்க,

லாவண்டர் நிற முழு பிராக் மாடல் சுடிதார், இரண்டு புறமும் சிறிது முடி எடுத்து கிளிப் குத்தி கூந்தல் விரிந்திருக்க..காதுகளில் சிறிய வெள்ளைக்கல் தோடும், கழுத்தில் ஒரு மெல்லிய தங்க சங்கிலி,ஒரு கையில் வாட்ச், மறுகையில் மெல்லிய வளையல் என பார்ப்பதற்கு எளிமையிலும் அழகாக இருந்தவளைக் கண்டவன், “ம்ம்” என்று புருவம் உயர்த்திப் பார்க்க,

“என்ன மாப்புள திருவிழாவுக்கு போற பட்டிக்காட்டு பொண்ணு மாதிரி எம்மக வருவானு பாத்திங்களா? எங்களுக்கும் கொஞ்சம் நாகரிகம் தெரியும் என்று குமரகுரு கூற,

‘ம்க்கும்’ அத செயல்ல காட்டனுமே’ என்று முணங்கிய படி சாப்பிட அமர்ந்தான்.சாப்பிட்டு முடித்துக் கிளம்பியவன் தனது தாயின் படத்திற்கு முன் கண்களை மூடியபடி வணங்கியவன்,

“அம்மா உன் அண்ணன் பொண்ணு பண்ற அட்ராசிட்டி எல்லாம் என்னால தாங்கவே முடியல..எல்லாம் உம்புருசனால தான்..நீ பேச்சினு பேரு வச்சிட்டு பேசாமலே பொயிட்ட…இந்த மனுசன் என்னடான்னா பேச்சுல மிரட்டியே என்னைய ஒரு வழியாக்கிடுறாரு நீ தான் என்னைய காப்பாத்தனும்” என்ற படி கண் விழித்துப் பார்க்க, அவனருகில் தேன்மொழி நின்று தனது அத்தையை வணங்கிக் கொண்டிருந்தாள்.


இருவரும் கிளம்பி வாசல் வர, தனது மாமன்,தந்தையின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டவள் அவனுடன் காரில் ஏறினாள். சிறிது தூரம் அமைதியாக பயணித்துக் கொண்டிருக்க,தேனு தன்னாலே சிரிப்பதைக் கண்டவன், “ஏ லூசு என்ன மர கழண்டுருச்சா” என்று கோபமாக கேட்க, அவனை முறைத்து விட்டு,

“இல்ல அன்னைக்கு பீச்க்கு போகும்போது கூட மறந்துட்டேன். ஆனா இப்பதான் நியாபகம் வருது” என்று சொல்லவும், ‘என்ன’ என்பது போல அவன் பார்க்க, “பரவாயில்ல வண்டி சூப்பரா தான் ஓட்டுற..” என்ற வளை நன்கு முறைத்துப் பார்த்தான்.

திருவுக்கு பன்னிரெண்டு வயதிருக்கும் அப்பொழுது கோடைக்காலம். சிறுவர்கள் நுங்கு குலைகளை வெட்டி சாப்பிட்டு விட்டு, அந்தக் கூடுகளில், இரண்டு கூடுகளுக்கு நடுவே ஒரு கனமான குச்சியை சொருகி,ஒரு கவண் கம்பினை அதன்மேல் வைத்து தள்ளியபடி நுங்கு வண்டி ஓட்டி விளையாட திருவும் அதே போல செய்து விளையாடினான்.

ஏழு வயதான தேன்மொழி சிறிய சைக்கிள் ஒன்றை ஓட்டக் கத்துக் கொண்டிருந்தாள். “ஏ குமரா ஊருல எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துகிட்டா நீ இன்னும் நுங்கு வண்டியே ஓட்டிக்கிட்டு கெடக்க” என்று சிலர் கேலி பேச, “நா சைக்கிள் என்ன காரே ஓட்டுவேன் போங்கடா” என்று திரு சொல்லி முடிக்கவும், தேனு அவன் பின்புறம் சைக்கிளை கொண்டு விடவும் சரியாக இருந்தது.
சாலையோரமாக ஓடிய சிறிய நன்னீர் வாய்க்காலில் திரு விழுந்து விட, எல்லாரும் கை கொட்டி சிரித்தனர். அதைத் தான் தேனு நினைவூட்ட, அவளை முறைத்தான்.

சாலையோரம் ஒரு கோவில் வர, “மாமா நிறுத்து ..நிறுத்து..கோவிலுக்கு பொயிட்டு வந்துடறேன்..ப்ளீஸ்” என்று கெஞ்ச, “சீக்கிரம் வந்து தொலடி..ஷூட்டிங்க்கு நேரமாச்சு” என்று எரிந்து விழ, வேகமாக இறங்கி இரண்டு நிமிடம் கண்களை மூடி கடவுளை வேண்டிக் கொண்டு திருநீரை பூசியபடி திரும்பி வந்தாள்.


காரில் வந்து அமர்ந்தவள் அவனுக்கு திருநீரை பூசிவிட “ஏ என்ன பண்ற”.. என்று அவனது வாய் கேட்டாலும் மனதிற்கு புதுவிதமான உணர்வாக இருந்தது அந்த தாய் இல்லா பிள்ளைக்கு. கார் சிட்டியை விட்டு சற்று வெளியே பயணித்துக் கொண்டிருக்க,


சிறிது நேரத்தில் “ஃபிலிம் சிட்டி” என்ற பெயர் தாங்கிய பிரம்மாண்டமான பெயர்ப்பலகை அவர்களை வரவேற்க,கார் அந்த ஸ்டுடியோவின் வாசலுக்கு வந்தது. கிட்டதட்ட 500 ஏக்கர் பரப்பளவில் சிட்டிக்கு வெளியே ஒரு ஊரையே வடிவமைத்திருந்தனர்.

“ப்பா..செம்மையா இருக்கு” என்று வாய்விட்டே தேனு சொல்ல..”வாயை கொஞ்சம் மூடிக்கோ…இது கொஞ்சம் தான் இன்னும் இருக்கு..உள்ள போக போக தெரியும்” என்றவன், சிறிது தொலைவில் வந்த பார்க்கிங்ல் காரை நிறுத்தி விட்டு வர,


“குட் மார்னிங் சார்” என்று எதிர்பட்ட முகங்கள் எல்லாம் மரியாதை செலுத்த..திருகுமரனும் புன்னகையுடன் பதில் வணக்கம் செலுத்தினான். திருவிழா கூட்டத்தைக் கண்டு மிரண்டு போன குழந்தை போல தேனு அவனை ஒட்டியபடி ‘திருதிரு’வென விழித்தபடி வருவதைப் பார்த்தவன் நக்கலாக வாய்க்குள்ளே சிரித்துக் கொண்டான்.


தொலைபேசியில் திரு யாரையோ அழைக்க, ஐந்து நிமிடத்தில் வந்து நின்றான் அந்த ஆள். முப்பதுகளின் ஆரம்பத்தில் இருந்த அவன் திருவுக்கு காலைவணக்கத்தை கூறி விட்டு, அன்றைய ஷெட்யூலை கூறியவன்,தேன்மொழியை ‘இவள் யார்?’என்பது போல பார்த்து வைக்க,


“ராம் இவ” என்று திரு இழுக்க…”ராம் அண்ணா நான் தான் இனிமே உங்க சாரோட பி.ஏ.என் பேரு தேன்மொழி “ என்று கூற, ராம் திருவைப் பார்க்க, “இவ ஒருத்தி முந்திரிக் கொட்டை” என்று முணுமுணத்தவன்

“ஆமா ராம்.. இவ தான் இனிமே என்னோட புது பி.ஏ” என்றதும் வில்லியைப் போல அவளை பார்த்து வைத்தான் ராம்.


அவனது பார்வையை புரிந்து கொண்ட திரு, மெலிதாக சிரித்தவன்..”ராம் உங்க வேலைக்கு ஒரு ஆப்பும் வராது..நா விக்ரம் கிட்ட பேசியிருக்கேன். அவனோட பி.ஏகூட வேற வேலைக்கு பொயிட்டாங்கனு அவனுக்கு பி.ஏ வேணும்னு சொல்லிட்டு இருந்தான்.நீங்க கொஞ்ச நாளைக்கு ரெண்டு பேருக்கும் சேர்த்து ஒர்க் பார்த்து கிட்டே இவளுக்கும் வேலைய சொல்லி கொடுங்க.அதுக்கும் சேர்த்து நா பே பண்ணிடறேன்” என்றதும் தான் திருப்தியாக புன்னகைத்தான் ராம்.

“ஓகே வாங்க ராம் நாம ஸ்பாட்டுக்கு போவோம்” என்றவன், திரும்பி தேனுவைப் பார்த்து ‘வா’ என்று தலையசைக்க அவன் பின்னால் சென்றாள்.இரண்டு,மூன்று செட்டுகளைத் தாண்டி தான் செல்லும் படி இருந்தது.


நாம் ஆச்சரியப்பட்டு, ரசித்து ‘எப்புடித்தான் இப்புடிலாம் இடம் ரெடி பண்றாங்களோ' என யோசிக்கும் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களின் ஸ்டேஜ்கள் அங்கே பணத்தை வாரி இறைத்து பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்க மலைத்துப்போய் அவைகளை பார்த்துக் கொண்டே வந்தாள் தேனு.

“ஹே வேடிக்கை பார்த்துக்கிட்டே விழுந்து வச்சிறாத..அப்புறம் என் மானம் தான் போகும்.. வாயைப்பொளந்து கிட்டு பார்க்காம..கொஞ்சம் டீசென்ட்டா பாரு..அப்புறம் அங்க ஸ்பாட்ல நா யாருக்கும் உன்னை இன்ட்ரோ பண்ணி வச்சா தான் பேசணும்..அதுவும் அளவாதான் பேசணும்” என்று மெல்லிய குரலில் அவன் கூற,”ம்ம்” என்று தலையை ஆட்டியவள்,

'ஆமா ஸ்கூல் அட்மிஷனுக்கு போகப்போறாம்…எது சொன்னாலும் மண்டைய ஆட்டிக்கனுமானும் பக்கி' என்று நினைத்துக் கொண்டவள்,”ஹூம்” என்று அவனுக்கு பின்னே பழிப்பு காட்டியபடி சென்றாள்.
 
  • Like
Reactions: lakshmi

Preethipavi

New member
Jul 3, 2020
9
6
3
அத்தியாயம் 4

ராம் உடன் பேசிக்கொண்டே தனது படிப்பிடிப்பு தளத்திற்கு வந்திருந்தான் திரு. கேமரா மேன், இயக்குநர், தயாரிப்பாளர்,ஜூனியர் ஆர்டிஸ்ட் முதற்கொண்டு அனைவரும் அங்கே குழுமியிருந்தனர்.

திருவைப் பார்த்து புன்னகையுடன் வந்த இயக்குநர், ”ஹாய் திரு குட்மார்னிங்!” என்றவர் “யாரிந்த பியூட்டி கேர்ள்”..என்று தேனுவைப் பார்த்து கேட்க, கேஸ் இன்றி,தீ இன்றி நம்ம திருவுக்கு புகைஞ்சதே பாக்கனுமாம்…' இவ பியூட்டியாம்! இந்த டைரக்டருக்கு கண்ணே தெரியல போல..’ என்று முணங்கியவன், வலிந்து சிரிப்பை வரவழைத்துக் கொண்டு,

“இவ பேரு தேன்மொழி.. இனிமே இவதான் என்னோட பெர்சனல் செகரட்டரி” என்று கூற, “சூப்பர்..வாழ்த்துகள்..தேன்மொழி” என்று கூறியவர், பேர் கூட ஸ்வீட்டா தான் இருக்கு” என்றுவிட்டு அவளுக்கு கைகொடுக்க கையை நீட்டினார். தேனுவும் கைகொடுக்க எத்தனிக்க, திரு பார்த்த அனல் பார்வையில் கையெடுத்து கும்பிட்டாள். அவரும் சிரித்து விட்டு நகர்ந்து விட்டார்.

“ராம் விக்ரம்க்கு கால் பண்ணி எங்க இருக்கானு கேளுங்க” என்று அவரை அனுப்பி விட்டு இவள் புறம் திரும்பியவன், ‘நங்’ கென அவள் தலையில் கொட்டு வைக்க, தன் தலையை தடவிக் கொண்டே “ ஏன் மாமா கொட்டு வச்ச?’ என்று திருதிருத்த படி தேனு கேட்க,

“டோன்ட் கால் மீ மாமா..கால் மீ சார்” என்றவனை முறைத்துப் பார்த்துக் கொண்டே “எஸ்ஸ்..சார்” என்று அவள் சல்யூட் அடிக்க, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு மூச்சை எடுத்தவன், “இவள வச்சிக்கிட்டு”..என்று பல்லைக் கடிக்க, சிரிப்பை அடக்கிக் கொண்டாள் தேன்மொழி.

ஷூட்டிங் ஆரம்பமானது.அன்று குடும்பக்காட்சி எடுக்கப்பட,திருவுக்கு அம்மா,அப்பா,தம்பி,தங்கை என அந்த குடும்பம் அமைந்திருந்தது. ஒரு காட்சியே திரும்ப திரும்ப எடுக்கப்படவும்,

“கிழிஞ்சது..என்ன ஒரு சீன ஒன்பது தடவ எடுக்குறானுங்க…தேனு இந்த சீன நம்ம ஊரு அம்மா, அப்பாக்கள நடிக்க சொல்லியிருந்தா ஒரே டேக்ல முடிச்சிருப்பாய்ங்களே!” என்று புலம்பிய படி அமர்ந்திருக்க, டேக் முடித்து விட்டு அவளருகே வந்து நாற்காலியில் அமர்ந்த திரு, “ஏ பேக்ல இருந்து ஜூஸ் பாட்டில எடுடி” என்றான்.

“நாங்க மட்டும் சார்னு சொல்லனுமாம்…இவரு ‘டி’ னு சொல்லுவாராம்! இருடா மவனே இன்னைக்கு செத்த” என்று முணுமுணுத்தவள், ஜூஸ் பாட்டிலை திறந்து அவன் கையில் கொடுக்க,அவன் குடிக்கப் போகும் சமயத்தில் வெடுக்கென பிடுங்கியவன் மடமடவென பாதி பாட்டிலை காலி செய்து விட்டு நிமிர,

“ஏய்…என்னடி பண்ணுன?” என்று திரு பல்லைக் கடிக்க, “பாய்சன் இருக்கானு செக் பண்ணுனேன் சார் நோ பாய்சன்..இப்போ நீங்க குடிக்கலாம்” என்றதும் திருவுக்கு சுவற்றில் முடிக்கொண்டால் என்னவென்று தோன்றியது.

“ஹே..நீ என் பி.ஏ.மட்டும் தான்டி. பாடிகார்ட் இல்ல” என்று திரு கடிந்து சொல்ல, “இருக்கட்டும் சார் அதனால என்ன? நீங்க எவ்வளவு பெரிய்யய ஹீரோ…உங்கள அட்டாக் பண்ண உங்க எதிரிங்க ஜூஸ்ல விசத்தையோ, பேதி மருந்தையோ கலந்தாலும் கலந்துருக்கலாம் சார்.அதான் நா செக் பண்ணுனேன் சார். இனிமே நா உங்களுக்கு பாடிகார்டாவும் இருப்பேன்..நா கடமையில எப்பவும் கண்ணா இருப்பேன் சார்” என்று குடித்த ஆப்பிள் ஜூஸை ஏப்பம் விட, அவளை கொலை வெறியுடன் பார்த்தான் திரு.
அந்நேரமாக அங்கு வந்த டைரக்டர்

“பரவாயில்ல திரு உங்க பி.ஏ. ரொம்ப புத்திசாலி தான்” அவளை பாராட்டிய படி அங்கேயே நிற்க, ‘இந்த மனுசன் வேற நேரங்காலம் தெரியாம காமெடி பண்றாரு' என்று எண்ணியவாறே தேனுவை நிமிர்ந்து பார்க்க, “இந்தாங்க சார் ஜூஸ்” என்று அந்த பாட்டிலை நீட்டினாள் தேனு.
டைரக்டரை பார்த்து மெலிதாக புன்னகைத்தவன் அந்த பாட்டிலை வாங்கி ஒரு முறை பார்த்தவன்,

‘இதுல குடிக்க இனிமே என்ன இருக்குனு குடிக்க சொல்றா..பாவி முக்கா பாட்டில குடிச்சுட்டு ஏப்பம் விட்டுட்டா…இவ எச்சிலெல்லாம் குடிக்கனுமா' என்று நொந்த படி குடித்தவனின் கண்களுக்கு படையப்பா நீலாம்பரியைப் போல தோன்றினாள் தேன்மொழி.

அடுத்த காட்சிக்கு அழைப்பு வர எழுந்து சென்றான் திரு. மீண்டும் காட்சிகளை அடிக்கடி எடுக்க,


”ஆரம்பிச்சிட்டாய்ங்கடா.. இந்த அம்மாவுக்கு அழுகவே தெரியல.. இதெயெல்லாம் எப்புடி நடிக்க கூப்புட்டாங்கனே தெரியல.. எங்கம்மாவா இருக்கனுமாம் இந்நேரம் பயபுள்ள நடிப்புல பிச்சு உதறியிருக்கும்” என்று புலம்பிய படி பார்த்துக் கொண்டிருந்தான்.
ஏனோ ஷூட்டிங் பார்ப்பது அவளுக்கு பிடிக்கவில்லை.

செயற்கை தனம் அப்படமாக தெரிய..சேரிலிருந்து எழுந்தவள் மெல்ல நடந்த படி வேடிக்கை பார்க்கலானாள்.

நூற்றுக் கணக்கான நபர்கள் அங்கே வேலை செய்து கொண்டிருந்தனர்.ஒரு திரைப்படம் இரண்டரை மணிநேரம் என நிர்ணயிக்கப்பட்டு காட்சி அமைக்கப்பட்டது. ஆனால் இங்கே நேர நிர்ணயமின்றி ஆயிரக் கணக்கானோர் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு படம் உருவாக முதல்நிலை ஊழியர்களான நாயகன், நாயகி, இயக்குநர், தயாரிப்பாளர் இவர்களின் பங்கினைப் போல் ஒரு கடைநிலை ஊழியனின் பங்கும் மிக அவசியம் போல என வியந்த படி வந்தவள் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருக்க அதன் அருகே சென்று பார்த்துக் கொண்டிருந்தாள்.


திருவைப் போல அங்கே ஒரு நாயகன் அமர்ந்திருக்க, ஒரு அழகான பெண்ணிற்கு நடனம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.”ஓ இவ தான் ஹீரோயின் போல' என எண்ணிய படி அடுத்த கொஞ்சம் பார்க்கலாம் என நகர எண்ணியவள் திரும்ப,


“ஹேய் மச்சி..பார்த்தியா! கிளி கிராமத்துப் பைங்கிளிடா” என்ற கேலிச்சிரிப்புடன் அவளை மேலிருந்து கீழ்வரை அளவெடுக்கும் பார்வையோடு இரு இளைஞர்கள் நிற்க அவர்களை பார்வையில் அருவெருப்பை தேக்கிய படி பார்த்தாள் தேனு.


பார்ப்பதற்கு பணத்தில் மிதக்கும் கோடீஸ்வர பிள்ளைகள் போல இருந்தவர்கள், அழகு என்று நம் இளைஞர்கள் சிலர் செய்து கொள்ளும் அபத்தமான உடையமைப்புடன் நின்று கொண்டிருந்தனர். காதில் சிறு கடுக்கண், பருவத்தில் வெட்டியது போல ஒரு டிசைன்..விலை உயர்ந்த டீ சர்ட், அங்கங்கே ஸ்டைல் என சற்று கிழிந்த ஜீன்ஸூம்,கண்களில் கூலருமாக நிற்க, ஏனோ அவர்களின் மேல் நல்ல அபிப்ராயம் தோன்றவில்லை தேனுவிற்கு.

திருகுமரனும் ஸ்டைலாக தான் இருப்பான். ஒரு காதில் சிறிய கடுக்கணும் அணிந்திருப்பான். ஆனால் அவனது உடை முதல் பார்வை வரை ஒழுக்கமாக இருக்கும் .சற்று நேரத்தில் இந்த புதியவர்களுடன் திருவை ஒப்பிட்டுப் பார்த்து திருப்தி கொண்டது அவள் மனது.


“கிளி என்னடா சைலன்டா இருக்கு..பார்வை ரொம்ப வைலன்டா இருக்கு” இன்னொரு கூறி சிரிக்க, “ஹே கேர்ள் என் பேரு ரோஹன்..உன் பேரு என்ன?” என்று முதலாமானவன் கேட்க “என்னவா இருந்தா உங்களுக்கு என்ன?” என்று வெட்டும் பார்வையுடன் நகரப்போனவளை இடை மறித்தவர்கள்.

”எங்களுக்கு தெரியணுமே..இந்த கிளியோட பேரு என்னனு?” மேலும் கேலி பேச, ஏதோ கூற தேன்மொழி வாயெடுக்க..


“தேனு”…என்று அவளை அழைத்த படி அங்கு வந்தான் திரு. அவனைப் பார்த்த ரோஹன் கேலிக்குரலில் “பாரு மச்சி நம்ம சூப்பர் ஹீரோ” என்க, அவர்களை முறைத்து விட்டு “வா போகலாம்” என்று அவள் கையை பிடித்தான் திரு.

“பாருடா கையப்புடிச்சி இழுத்து இங்கயே ரொமான்ஸ் சீன் ஓட்டுறான்” என்று இன்னொருவனான கேஷவ் கூற, “இங்க பாருங்க அனாவசியமா பேசுற வேள வச்சிக்காதிங்க இவ என்னோட பி.ஏ.” என்று எச்சரிக்க…

“மச்சி இவனே இப்ப தான் எந்திருச்சு வர்ரான் இவனுக்கு ஒரு அல்லக்கை வேற..அடுத்தடுத்து படம் வருதுல்ல அப்புடித் தான் இருப்பான்..” என்று கேஷவ் கூற,

“ஆமான்டா..அதான் கூட இருந்த ஆம்பள பி.ஏவ விட்டுட்டு இவள வச்சிருக்கான் போல”..என்று இருபொருள்பட ரோஹன் கூற இருவரும் சிரித்துக் கொள்ள,
பற்களைக் கடித்து கோபத்தை அடக்கிக் கொண்டவன்,

“ஹேய் மைன்ட் யுவர் வேர்ட்ஸ்..இவ என்னோட பி.ஏ. மட்டும் தான்..வேற ஏதாவது பேசுனீங்க உங்க மேல கம்ப்ளைன்ட் பண்ணிருவேன்..மைன்ட் இட்” என்றபடி தேனுவை இழுத்துச் செல்ல..அவனது கோபத்தைக் கண்டு நடுங்கிய படி பின்னே சென்றாள் தேனு.

தனது இடத்திற்கு வந்தவன் அவள் கைகளை விடுவித்து விட்டு டைரக்டரிடம் கூறிவிட்டுக் கிளம்ப, அவர் “பை தேன்மொழி நாளைக்கு மீட் பண்ணலாம்” என்று சிரிக்க, ‘இவரு வேற…இவன் இருக்குற கோபம் தெரியாம”..என்று புலம்பியவள், வெளியே லேசாக சிரித்து விட்டு திரும்பிப் பார்க்க, திருகுமரன் கார் பார்க்கிங் நோக்கி சென்று கொண்டிருந்தான். வேகமாக அவன் பின்னே ஓடினாள்.

கார்க்கதவை திறந்து ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவன் ஸ்டியரிங் வீலை அழுந்த பற்றியபடி திரு அமர்ந்திருக்க, நடுங்கியவாறே மறுபுறம் கதவைத் திறந்து உள்ளே அமர்ந்தவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். கோபம் கண்களில் தெரியாமலிருக்க கூலர்ஸ் அணிந்திருந்தாலும், அவனது தாடையின் இறுக்கத்திலே அவனது கோபத்தின் அளவு தெரிந்தது.
சரட்டென வேகமாக காரை ஸ்டார்ட் செய்தவன் அதே வேகத்தில் காரை அவன் செலுத்த பயத்தில் கண்களை இறுக மூடிக்கொண்டாள் தேனு. வீட்டிற்கு வந்து காரை ப்ரேக் அடித்து நிறுத்தியவன் அவளைப் பார்க்க, சட்டென கதவைத் திறந்து இறங்கினாள்.


காரை பார்க் செய்து விட்டு அவன் வரை அவனுக்காக காத்திருந்தவள் “சா.சாரி..மா..மா..” என்று தயக்கத்துடன் கூற, தனது கைகளை உயர்த்தி ‘நிறுத்து’ என்பது போல் சைகை செய்தவன் வேகமாக வீட்டிற்குள் நுழைந்து மாடியேறி தனதறைக்குச் சென்றான்.
நேரம் இரவு பதினோரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. ரெங்காவும், குமரகுருவும் சாப்பிட்டு உறங்கியிருந்தனர். பாலு வண்டி சத்தத்தில் வெளியே வந்தவன் திரு கோபமாக அறைக்கு செல்வதைப் பார்த்தவன் தேனுவை சாப்பிட அழைக்க.. அவள் வேண்டாம் என கூறிவிட்டு திருவின் அறையை நோக்கிச் சென்றாள்.


அறையை நெருங்கியவள் சற்று பயத்துடன் கதவைத் தட்ட “ ஹூ இஸ் திஸ்…லீவ் மி அலோன்” என்று கதவைத் திறக்காமலே அவன் கத்த, “மாமா.. நான் தான் ப்ளீஸ் கதவைத் திற”..என்று தேனு கெஞ்ச,
“இடியட் முதல்ல இங்க இருந்து போடி” என ஆத்திரத்தில் கத்தியவன் எதையோ உடைக்கும் சத்தம் கேட்க, “ப்ளீஸ் மாமா..சாப்பிட வா மாமா”..என்று அவள் மீண்டும் அழைக்க,

வேகமாக வந்து விருட்டென கதவை திறந்தவன் “போடி அவுட்..ஒரு நிமிஷம் கூட இங்க நிக்காத..அவுட்” என்று கத்திவிட்டு “டமாரென” கதவை அறைந்து சாத்தி விட்டான். உடனே அங்கிருந்து சென்றிருந்தால் அவள் தான் நம்ம தேன்மொழி இல்லையே.


“இங்க பாரு மாமா..எம்மேல என்ன கோவமா வேணா இருந்துக்கோ.. சாப்பிடாம இருக்காத..நீ சாப்பிட வரலைனா நானும் சாப்பிடாம விடிய விடிய தூங்காம இங்க தான் இருப்பேன்” என்று வீம்பாக கூறிவிட்டு அங்கேயே கைகளை கட்டியபடி நின்றாள்.


மதியமும் படப்பிடிப்பு தளத்தில் அவன் சரியாக சாப்பிடாததை கண்டவள் இப்பொழுது அவனை சாப்பிட வைத்துவிடும் வேகத்தில் அங்கேயே நிற்க, அவளது பேச்சைக் கேட்டபடி அறையில் சோபாவில் அமர்ந்திருந்தவன், கோபத்தில் பற்களை கடித்தான்.


அரைமணி நேரமாக தேனு அங்கேயே நிற்க, ஒரு மணி நேரம் கழித்து மெதுவாக கதவைத் திறந்தவன் அவள் அங்கேயே நிற்பதை பார்த்து கோபமடைந்தவன், ”உனக்கு என்னடி வேணும்” என்று ஆத்திரப்பட, அமைதியாக அவனை ஏறிட்டவள்

“சாப்பிட வா” என கூறிவிட்டு படியிறங்கி உணவுமேசைக்குச் செல்ல, அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் மெல்ல படியிறங்கிச் சென்று உணவு மேசை நாற்காலியில் அமர்ந்தான்.
இருவருக்கும் தட்டில் உணவை வைத்தவள் சாப்பிடாமல் அவனையே பார்த்துக் கொண்டிருக்க உணவை எடுத்து உண்ண ஆரம்பித்தான்.பிறகு தான் அவளும் சாப்பிடலானாள்.
தேன்மொழியின் இந்த செய்கைகள் அவனுக்கு கோபமளித்தாலும் விசித்திரமான உணர்வாக இருந்தது. அவன் சாப்பாடு வேண்டாம் என்றால் அப்பா மட்டும் ஏன் என்று கேட்பார்..இவன் கோபப்பட்டால் அமைதியாக சென்றுவிடுவார். ஆனால் இதோ இவளைப் போல இதற்கு முன் யாரும் பிடிவாதம் பிடித்து அவனை சாப்பிட வைத்ததில்லை.

‘ஒருவேளை அம்மா இருந்திருந்தால் இப்படித்தான் பிடிவாதம் பிடித்து, சண்டையிட்டு சாப்பிட வைத்திருப்பார்களோ' என எண்ணியவன் முதன்முதலாக தன் தாயின் அன்பை உணர்ந்தான்.
சாப்பிட்டு முடித்தவன் அவள் சாப்பிட்டு கைகழுவும் வரை அமைதியாக அமர்ந்திருந்தவன் அவள் கைகழுவி விட்டு வரவும்,


“ஒரு நிமிஷம் தேனு.. இனிமே என்கிட்ட சொல்லாம எங்கையும் போகாத..புரிஞ்சதா? அப்பா என்னைய பார்த்துக்க சொல்லி உன்ன அனுப்புனாங்க..கடைசியில நா உன்னைய பார்த்துக்கிற மாதிரி இருக்கு..தயவுசெய்து உன்னால இந்த வேலை உனக்கு செட் ஆகும்னா…என் பேச்சைக் கேட்பனு சொன்னா மட்டும் வா..இல்லைனா வராத..அவனுங்க எல்லாம் வேற மாதிரி ஆளுங்க..நா சொல்றது உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்” என அமைதியாக கூறியவன் “குட் நைட்” என்ற படி தனதறைக்குச் செல்ல,

அவனிடம் சொல்லாமல் சென்ற தனது மடத்தனத்தை எண்ணி தன்னையே நொந்து கொண்டாள் தேன்மொழி.
 
  • Like
Reactions: lakshmi
Need a gift idea? How about a breakfast sandwich maker?
Buy it!

Latest