என்னைக் கொ(வெ)ல்லும் வெண்ணிலவே! - ஆதிரா

Mar 27, 2018
95
14
18
Coimbatore
என்னைக் கொ(வெ)ல்லும் வெண்ணிலவே!பௌர்ணமி நாளில் ஏகாந்தமான பொழுது சாயுங்காலத்தில் சூரியன் மேற்கே கடலோடு உறவாடச் செல்கையில் அவசரமாய் அந்த சமுத்திரத்தில் இருந்து கிழக்கு வானில் காட்சி தருவாள் வெண்மதியவள்.

அதைப்போலவே ஆதியும் மதியும் சூரியனும் நிலவுமாய் பயணிக்கிறார்கள், அவர்கள் ஒருவரோடு ஒருவர் உருகி விடாத நிமிடங்களில் கூட ஒரு ஏகாந்தம் இருந்தது.

அத்தனை உணர்வுகளையும் அழகாய் வடித்து மதியின் காதலுணர்வையும் அதை தொண்டையில் சிக்கிய மீன்முள்ளாய் அவள் தவித்த நிமிடங்கள் சொல்லப்பட்ட விதம் அழகு.
கரம் மசாலா காபி, நல்ல தண்ணியை விடுத்து வேறொரு தண்ணீரின் விளைவால் புதிதாய் ஆதி கொடுத்த இன்னல்கள். அதை பூமராங் எபக்டில் திருப்பி மதி செய்வதும் சிரிப்பும் சிந்திப்புமாய் அழகாய் இருந்தது.
ஆதிக் எந்தளவுக்கு முக்கியத்துவம் இருந்ததோ அதேயளவு சற்றும் குறையாமல் மதியழகிக்கும் இருந்தது, “மதியலகி” என்று மதி சொல்லும் போதெல்லாம் நீ ஒரு நூறு தடவை சொல்லிட்டே இம்போசிஷன் எழுதும்மா என்று சொல்லத்தோன்றியது.
ராஜ், வதனாமலர்ந்த அழகான காதலை மறைக்கவா சொல்லவா என்று தவிப்பதும் பிறகு ஏன் இப்படி என்று இருவரும் உரிமையெடுத்து சண்டையிடுவதும் என்று மிக அழகாகவே இருந்தது..
இயல்பான குடும்பக் கதையாக கொண்டு சென்ற விதம் அழகு, அதிலும் கோடிஸ்வரன் ஆனாலும் குடும்பம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் வாழ்வியல் நெறிமுறைகள் இதுவே என்று போற்றி வளர்க்கும் பெற்றோர். பணத்தால் எதையும் மூடிமறைக்க விரும்பாத நல்ல உள்ளங்கள்.
அப்புறம் இந்த மினிஸ்டர் ஊழல் கேசில் மாட்டினால் நெஞ்சுவலி வருவது போல காரியம் சாதிக்கவென்று நெஞ்சுவலி வருவதெல்லாம் சிறப்பு. அதிலும் அம்மாவின் நடிப்பு ஆஹா ஓஹோ!
அடடா இங்கே வேணியின் கைப்பிடியில் இயங்கும் தர்மர், அங்கே செழியனின் கண்ணசைவு புரியாமலே முழிக்கும் குழலி இதில் சிறந்ததொரு நம்பிக்கையும் அந்நியோன்யமும் வெளிப்பட்டு இருக்கிறது.
ஆதிரா அவர்களே! ஒரு சிறந்த குடும்பக் கதை என்று சொல்வார்களே அதைப் படித்த நிறைவை கொடுத்தார்கள் இறுதியில் சேட்டையை நுழைந்த ஆருவும் ரிஷியும்.
காதலும், புரிதலும், ஒப்புக்கொடுத்தலும், ஒப்புக்கொள்வதும் இருக்கவேண்டுமே தவிர நான் என்ற அகம்பாவமோ, பழியுணர்ச்சியோ குடும்ப வாழ்க்கையில் இருக்கக் கூடாதென்று மிக அழகாக சொல்லியிருக்கீங்க ஆதிரா வாழ்த்துக்கள்.