என்னை சாய்த்தானே(ளே)- கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

சுபாஷினி அவர்கள் புதிய கதையுடன் நம்மை சந்திக்க வருகிறார். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும், தங்களது கருத்துகளின் மூலம் தெரிவியுங்கள்.
 
#2
எனை சாய்த்தானே(ளே)!!!!

அம்மா பிளீஸ்ம்மா சொல்லும்மா என்றாள் பிரியா.
ஒழுங்க போய்டு இல்ல கொதிக்கிற எண்ணெய்ய மூஞ்சில ஊத்திடுவேன் என்றார் நாயகி.

இப்போ எதுக்கு கடுகடுனு பேசுறம்மா.(பிரியா)
நீ பண்ண வேலைக்கு வெளக்கமாத்தெடுத்து வெளாசமா இருக்கேன்ல இதுவும் பேசுவ இன்னமும் பேசுவ. ( நாயகி)

என்னத்துக்கு இப்ப இந்த குதி குதிக்கிற. (பிரியா)
போடி இல்ல நெசமாவே அடிச்சிற போறேன். ( நாயகி)
அப்போ சொல்ல மாட்ட.(பிரியா)

அருகில் இருந்த தோசை கரெண்டியை அவர் எடுக்க . ( நாயகி)
இப்படி டிசென்டா சொன்னா போக போறேன் என்று சிட்டாக பறந்தாள் பிரியா.

அய்யோ இந்த அம்மாவே இந்த காட்டுக்காட்டுதே ஹிட்லர் என்ன பண்ண போறாரோ தெரியலையே. சரி எதுவாகயிருந்தாலும் ஒரு கை பார்த்துக் கொள்ளலாம். இதுக்கு எல்லாம் பயப்பட்டா நம்ம எப்படி வாழுறது என்று பக்கத்து வீட்டு வாண்டை வம்பிழுக்க சென்றாள் பிரியா.

அவள் போகும் வரை காத்திருந்தவர் பிரியாவின் அன்னையிடம் வந்தார்.
உன் பொண்ணு என்ன சொல்லுறா என்றார் ராஜலிங்கம்.
அவள் உங்களுக்கும் தான் பொண்ணு என்று மறந்திறாதிங்க என அவருக்கு சளைத்தவள் நானில்லை என்பதை போல் பதில் அளித்தார் செளந்திரநாயகி.

இந்த சம்பந்தம் முடிச்சிடுலாமா நாயகி, உங்க மக வாய வைச்சுக்கிட்டு சும்மா இருந்தா முடிச்சிடுலாம் .
எனக்கு வயசாகிட்டே போவுது, ஒத்த புள்ளையா இருந்தாலும் நான் சரியாதேன் வளர்த்தேன் இவ இப்படி வர சம்பந்தயெல்லாம் இப்படி கலைச்சு வைப்பானு நானென்னத்த கனவா கண்டேன் என பொரிந்தார் நாயகி.

நாளைக்கு காலை வர அவக்கிட்ட வாய தொரக்காத , எதாவது கேட்டா என்கிட்ட கேட்க சொல்லு என்று தோளில் துண்டை போட்டு தோட்டத்திற்கு கிளம்பினார் ராஜலிங்கம்.

யப்பா முருகா எம்புள்ளைக்கு ஒரு கல்யாணத்த பண்ணி பார்க்கணும்னு அந்த மனுசன் தவியா தவிக்கிறார். நீ தான் இந்த நல்ல காரித்தை எந்த தடங்கலும் இல்லாம நடத்தி வைக்கணும் என வேண்டி சமையலறைக்கு சென்றார் நாயகி.

ஏன்டி பிரியா, எதுக்கு வர மாப்பிள்ளைங்கள இப்படி ஓட விடுற என்று பக்கத்து வீட்டு வாண்டின் அம்மா கேட்க.
அதுவா மதனி, எனக்கு பிடிச்ச மாப்பிள்ளையே நானின்னும் பார்க்கலை.

அடிப்பாவி போன வாரம் வந்தவனோட 34 பேரு உன்னை பொண்ணு பார்க்க வந்திருக்காங்க டி.
இன்னும் ஹாப் சென்சூரி கூட தொடலையா, ஷோ சேட் மதனி.(பிரியா)

பாவம் டி அத்தையும் மாமாவும், சீக்கரம் உனக்கு ஒரு கல்யாணத்த பண்ணி பார்க்கணும் என ராவுபகல் பார்க்காம வேலை செய்கிறாரு.
நானென்ன பண்ண மாட்டேனா சொல்லுறேன் மதனி. பிடிச்சா தான கட்டிக்க முடியும்..(பிரியா)

சரி எப்படி தான் மாப்பிள்ளை வேணும்டி உனக்கு .
தன்னவன் எப்படி வேண்டும் என்று கூற ஆரம்பித்தாள் பிரியா, அடர்த்தியான தலைமுடி வேணும், நீளமான விரலால் அந்த முடிய கோத வேண்டும்.
கருப்பான புருவம், கோல்குண்டு கண்ணு. முக்கியமா புருவம் பேசணும்.
நல்லா முறுக்கேறுன உடம்பு , கழுத்த ஒட்டின மாறி ஒரு சின்ன தங்க சங்கிலி, கையில ஒரு காப்பு . பேண்ட்டும் போட்டு பழகியிருக்கணும் அதே போல வேஷ்டி கட்ட சங்கட்டமும் படக்கூடாது. கண்ணன் மாறி கருப்பும் வேண்டாம், ராமன மாறி சிவப்பும் வேண்டாம்.
எனக்கு ஏத்த மாறி இருந்தா போதும்.
அப்பறம் என் கண்டிஷனுக்கெல்லாம் ஒகே சொல்லணும் மதனி.

அது என்னடி கண்டிஷனு.
என் புருஷனுக்கு மட்டும் தான் சொல்லுவேன் என்று ஓடி விட்டாள் பிரியா.

பிரியதர்ஷினி, ராஜலிங்கம் - செளந்திரநாயகியின் தவப்புதல்வி .
ராஜலிங்கம் ஊரின் முக்கிய உறுப்பினர். வேளாண்மையில் பட்டம் பெற்று இயற்கை முறையில் பயிரிட்டு இப்போ அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
செளந்திரநாயகியும் வேளாண்மையில் பட்டம் பெற்றவர் தான், பிரியதர்ஷினி வளரும் வரை தோட்டத்தை பார்த்து கொண்டார் பின் தான் பெற்ற ரத்தினத்தை வளர்க்கவே நேரம் பற்றவில்லை அவருக்கு.
பிரியதர்ஷினி கணித பிரிவில் இரண்டு பட்டம் பெற்று, நவயுவதியும் அல்லாது கிராமத்து பைங்கிளியாகவும் அல்லாது கலவையான பெண்.

(அவளை பற்றி மீதியை கதையோட்டத்தில் தெரிந்து கொள்வீர்கள்)

###############


லாக்கப்பில் ஒரு குற்றவாளியை வெலுத்துக்கொண்டிருந்தான் ஒரு கட்டுமஸ்தான்.
டேய் அகரா செத்திர போறான் டா என்று ராஜேஷ் அவனிடம் இருந்து பிரிந்த போது அந்த கைதி கிழிந்த நாராக இருந்தான்.
அவனது கோபம் சற்றும் குறையாது சுவற்றை வெறித்து பார்த்தான் அகரன்.

குற்றவாளிக்கு சிகிச்சை அளிக்க கூறி அகரனிடம் வந்தான் ராஜேஷ்.
டேய் எதுக்குடா இவ்வளவு கோவம் உனக்கு என்று கேட்டான் ராஜேஷ்.
அந்த நாயை எதுக்கு டா காப்பத்தின, எனக்கு வர கோவத்தில அவனை அடிச்சே கொன்னுறுவேன் (அகரன்) .

எதுக்கு டா இந்த கொலைவெறி (ராஜேஷ்).
அந்த நாய் பத்து வயசு குழந்தைக்கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தான். நல்ல வேளை அதுக்குள்ள ஆளுங்க வந்துட்டாங்க இல்ல அந்த குழந்தையோட நிலைமை என்னாகும் என்று இன்னும் தனியாத கோபத்தில் இருந்தான் அகரன்.

அவன் மூடை மாற்ற, அவனை அழைத்து கொண்டு காபி ஷாப் சென்றான் ராஜேஷ்.
ராஜேஷ் அகரன் இருவரும் ஒரே கல்லூரி ஆனால் வேறு வேறு துறையில் பயின்றவர்கள். கல்லூரிக் காலத்திலேயே நல்ல நண்பர்கள் கூட .

ராஜேஷ் படித்து முடித்தவுடன் எஸ்.ஐ தேர்வில் தேர்ச்சி அடைந்து பணியில் சேர்ந்துவிட்டான். அகரன் தன் லட்சியமான ஐ.பி.எஸ் பாஸ் செய்து ராஜேஷ் வேலை செய்யும் அதே சுற்றத்திற்கு ஏ.சி.பியாக சார்ச் எடுத்திருக்கிறான்.

மச்சி, நாளைக்கு உனக்கு நிச்சயம் என்று கேள்வி பட்டேன் என்று அவன் மனநிலையை மாற்ற நினைத்தான் ராஜேஷ்.
நீ வேற ஏன்டா எனக்கு காதலிச்சு தான் கல்யாணம் பண்ணும்னு சின்ன வயசில் இருந்து அசைனு உனக்கு தெரியாதா? என்றான் அகரன்.

இந்த டைம் சொதப்பமா பார்க்க போகிற பொண்ணுக்கு ஓ.கே சொல்லிரு இல்லை கணக்கு பிள்ளைக்கிட்ட பெல்ட்டில் தான் அடிவிழும்.
அதையும் தான் பார்க்கலாம் என்று ராஜேஷுடன் காபி அருந்தி நாளை தான் செய்ய வேண்டியதை யோசித்தான் அகரன்.

நந்தகுமார் - கிருஷ்ணவேணியின் ஒரே புதல்வன் அகரன். நந்தகுமார் CA முடித்து பல பெரும் புள்ளிக்களின் கணக்கு வழக்குகளை பார்த்து கொண்டிருக்கிறார்.
கிருஷ்ணவேணி குடும்பத்தை கவனிப்பதில் படும் பிஸி. அகரன் ஏ.சி.பி.யாக தற்போது பணிபுரிகிறான்.கல்யாணத்திற்கு பிறகு
காதல் செய்ய
காத்திருக்கும் நாயகி,
காதல் செய்து தான்
கல்யாணம் செய்யனும் என்ற கொள்கையுடன் நாயகன்.
யார் கனவு நிறைவேறும் ?

உங்கள் 😍
சுபாஷினி💞💞💞
 
#3
எனை சாய்த்தானே(ளே)!!!! -2

என்னடா இது, நம்ம வீடு இவ்வளவு அமைதியா இருக்கு. இன்னும் ஹிட்லர் வரலையோ என்று யோசித்தவாறு பதுங்கி பதுங்கி உள்ளே சென்றாள் பிரியா.

எங்கே போய்ட்டு வர என்ற சிங்க குரலில் நடு கூடத்தில் இருந்து வர, அதே இடத்தில் கால்கள் வேறூன்றி சதி செய்ய . ஒன்னும் தெரியாத குழந்தை போல் முகத்தை வைத்து ராஜலிங்கத்தை ஏறிட்டாள்.

அவள் பாவனை அவருக்கு சிரிப்பை வர வைத்தாலும் அதனை கட்டுபடுத்தி அவளை முறைத்தார்.
ஹய்யோ எதுக்கு முறைக்கிறாரு , ஒரு வேளை பக்கத்து தோட்டத்தில் கொய்யாக்காய் திருடுனது தெரிஞ்சிருக்குமோ, இல்லை நாட்டமை வீட்டில் இருக்க கிளவி பக்கத்தில் பட்டாசு வைத்தது தெரிஞ்சிருக்குமோ, இல்லை நம்ம தோட்டத்தில் இருந்த மோட்டார வித்த காசில் அந்த நண்டு சிண்டுகளுக்கு பிரியாணி வாங்கி தந்தது தெரிஞ்சிருக்குமோ என்று தீவிரமாக யோசித்து கொண்டிருந்தவளின் நினைவை மீட்டது ராஜலிங்கத்தின் தர்ஷினி என்ற குரல்.

அப்பா என்று அவரை பார்க்க,
நாளைக்கு நம்ப கோவிலுக்கு போறோம் சாப்பிட்டு சீக்கரம் தூங்கு என்று சென்று விட்டார்.

என்னாடா இன்னிக்கு செம சீன் இருக்கும்னு நினைச்சா இப்படி சப்பையா போயிடுச்சு, சரி முதல் வயித்த கவனிப்போம் அப்பறம் ஹிட்லர் பத்தி யோசிப்போம் என்று முகம் கை கால் கழுவி உணவருந்த போக .

அவளுக்கு உணவை எடுத்து வைத்து கொண்டிருந்த நாயகியை கூர்ந்து பார்த்தாள் பிரியா.
அம்மா என்று அவள் அழைக்கு, கடமையே கண்ணாக அவளுக்கு உணவை பரிமாறினார் சௌந்திரநாயகி.

செளந் என்ன சௌண்ட்ட காணாம் என்று கேட்க, இத்தனை நேரம் இழுத்து பிடித்த கோபத்தை அவள் மீது காட்ட ஆரம்பித்தார் நாயகி.

என்ன தான் டி மனசுல நினைச்சுட்டு இருக்க, நானும் ஒத்த புள்ளைனு அடிக்காம கொள்ளாம வளர்த்தா நீ உடம்பு முழுக்க திமிர வைச்சுக்கிட்டு சுத்துற.
அம்மா இப்போ எதுக்கு இப்படி கத்துற என்னானு சொல்லாம.

ஏன்டி எவ எவன விரும்புனா உனக்கு என்ன டி , அவுகளுக்கு தெரியாதா பெத்த புள்ளைய பார்த்துக்க. நீனு என்னாத்துக்கு அந்த மேற்கு தெரு ராசு வூட்டுக்கு போன என்று நாயகி கேட்க .
இங்க பாரும்மா, என்னால அவங்க பண்ணுறதெல்லாம் அமைதியா பாத்துகிட்டு இருக்க முடியாது, நதியா அருண விரும்புற அவள் விருப்ப படி தானே கல்யாணம் நடக்கணும் அவ மேஜர் சுயமா முடிவெடுக்கிற வயசு வந்திருச்சு என்று அவள் பாட்டுக்கு பேச .
நாயகி விட்ட அறையில் அவள் பேச்சு நின்றது.

சத்தம் கேட்டு வெளியே வந்த ராஜலிங்கம் மனையாளை பார்வையிலேயே கண்டித்து மகளிடம் சென்றார்.
என்ன எதுக்கு முறைக்கிறிங்க அந்த ராசு, என்னவெல்லாம் பேசிட்டு போனா. அவக்கிட்ட ஒரு வார்த்தை கூட ஏன்னு கேட்கலை என்று பிரியாவிடம் இருந்து ராஜலிங்கத்திடம் திரும்பினார் நாயகி.

எம்புள்ளை என்னிக்கும் தப்பு பண்ணாது, கண்ட நாய் பேசுனதுக்கு எல்லாம் என் மகளை வைய மாட்டேன், உனக்கும் சேர்த்து தான் என்ற பொருளுடன் பேசினார்.
கோபமும் அழுகையும் சேர்ந்து தாக்க அவ்விடத்தை விட்டு அகன்றார் நாயகி.

அழுகையுடன் நின்ற பிரியாவை அழைத்து சாதத்தை பிசைந்து அவள் வாய் அருகே கொண்டு செல்ல, இன்னும் அவள் அழுகை அதிகரித்தது.

சாரிப்பா என்பதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை.
எதுவும் வேணாம் தர்ஷு, மொத சாப்பிடு மத்ததை காலையில் பேசிக்கலாம் என்று தட்டில் இருந்த உணவை ஊட்டி முடித்து தான் எழுந்தார் ராஜலிங்கம்.

தன் தந்தைக்கு தன் மேல் பாசமுண்டு என்பதை அறிந்தவள், இத்தனை அன்பை வெளிக்காட்டாது ஒத்த சொல்லில் காட்டியதை எண்ணி வியந்தாள்.

காலையில் முதல் வேலையாக நாயகியை சமாதானம் செய்ய வேண்டும் என்று முனைப்போடு உறங்க சென்றாள் பிரியா.
பிரியா உறங்கியதும் அருகே அமர்ந்து அவள் தலைகோதி நெற்றியில் முத்தமிட்டு சென்றார் நாயகி.

யார கேட்டு இந்த ஏற்பாடு செஞ்சிங்க - அகரன்.
யார கேக்கனும் - நந்தகுமார்
சற்று குரலை தணித்து, அப்பா எனக்கு இப்போ கல்யாணம் வேணாம் கொஞ்ச நாள் போகட்டும்ப்பா என்றான் அகரன்.

நாளைக்கு பொண்ணு பார்க்க வரேன்னு சொல்லிட்டேன். பொண்ணு தானே பார்க்க போறோம் நாளைக்கே கல்யாணம் பண்ண போறது இல்லையில . ஏழு டூ எட்டு ருல்ல நேரம் அதை முடிச்சிட்டு டியூட்டிக்கு போயிடு என்றார் நந்தகுமார்.
இதற்கு மேல் இவரிடம் பேசுவது வீண் என்று கிருஷ்ணவேணியிடம் சென்றான் அகரன்.

அவரிடமும் திருமணம் வேணாம் என்று தொல்லை செய்ய, ஒரே பதிலாக கூறிவிட்டார் . உன் அப்பா முடிவு தான் பைனல் அவர்கிட்ட பேசிக்கோ அகி என்று முடித்து கொண்டார்.

அந்த கோபம் மொத்தமும் காலையில் திருமணத்தை பற்றி பேசிய ராஜேஷிடம் திரும்பியது.

அதே வேகத்துடன் அவனை தொடர்பு கொண்டான் அகரன்.
அவன் அழைப்பை ஏற்ற ராஜேஷை பேச விடாது பச்சை பச்சையாக கழுவி ஊத்தினான் அகரன்.
பாதிக்கு மேல் கேட்க முடியாது போனை கீழே வைத்து வேடிக்கை பார்த்தான் ராஜேஷ்.

எந்த பதிலும் அல்லாது போக, அவன் லைனில் இருக்கிறானா என்று செக் செய்ய, ராஜேஷூம் சரியாக போனை காதில் வைத்து பேசினான்.

படுபாவி காதுல இருந்து இரத்தமே வந்துருச்சுடா , எதுக்குடா கொழந்த பையனு கூட பார்க்காம இப்படி வண்டி வண்டிய கழுவி ஊத்தின.

மவனே நேர்ல மட்டும் இருந்தனால் சாவடிச்சிருப்பேன் என்றான் அகரன்.
ஜஸ்ட் மிஸ் என்று மனதில் நினைத்து கொண்டு, இப்போ எதுக்கு திட்டுறனு சொல்லலை நான் போன்ன வைச்சிடுவேன் என்றான் ராஜேஷ்.

வீட்டிற்கு வந்தவுடன் அப்பா அம்மா கூறிய பெண் பார்க்கும் படலத்தை பத்தி கூறினான் அகரன்.
அட சண்டாள பாவி, இதுக்கா இத்தனை அக்கபோரு - ராஜேஷ்

நான் லவ் மேரேஜ் தான் பண்ணனும்னு லைப் டைம் ஏய்ம் வைச்சிருக்கேன் என்றான் அகரன்.
நாளைக்கு பொண்ணு தான பார்க்க போற , பிடிச்சா பாரு இல்லைனால் பிடிக்கலைனு சொல்லிரு என்றான் ராஜேஷ்.

நான் எப்படியும் பிடிக்கலைனு தான் சொல்ல போறேன் - அகரன்
என்னமோ பண்ணி தொலை ஆனா இப்ப என்னை தூங்க விடு - ராஜேஷ்.

நாளைக்கு நீயும் வாடா என்றான் அகரன்.
சரி மச்சி வந்தறேன் பை என்று வைத்து விட்டான் ராஜேஷ்.

எனக்கு பிடிச்ச மாறி எப்போ ஒரு பொண்ண பார்த்து லவ் பண்ணி அப்பறம் கல்யாணம் பண்ண போறேனோ என்று பெருமூச்சை விட்டு படுக்கையில் விழுந்தான் அகரன்.
இன்று முழுவதும் உண்ண கூட நேரமில்லாது வேலை இருந்ததால் களைப்பில் படுத்ததும் உறங்கி விட்டான்.


காலதேவியுடன்
காதல்தேவன்
கைகோர்த்து இவர்களை
படுத்த போவதை
அறியாது
நித்திராதேவியுடன் காதல்
கொண்டனர் இருவரும் .
 
#4
எனை சாய்த்தானே(ளே) -3

சேவல் கூவும் முன் எழுந்து கூடத்தை கூட்டி பெருக்கி, வாசல் தெளித்து . கோலத்தில் ஈடும் சிக்கலை போல் வாழ்வில் வரும் சிக்கலுக்கு எளிதில் வழி உருவாக்குவேன் என்பதை பிரதிபலிக்கும் சிக்கு கோலத்தை இட்டு. உள்ளே வந்து அன்றையை வேலையை செய்ய ஆரம்பித்தார் நாயகி.

நாலரை மணிக்கு வெளியே வந்த ராஜலிங்கம், தோட்டத்துக்கு போய் மோட்டார் போட்டுவிட்டு, மணியை பார்த்து கொள்ள சொல்லிட்டு வரேன் என்று கிளம்பினார்.

சமையலுக்கு தேவையானதை முடித்து வைத்து, காபி போட்டு பிரியாவை எழுப்ப சென்றார் நாயகி. குழந்தையை போல் கள்ளங்கபடமற்ற சிரிப்பை இதழில் தவிழ விட்டவாறு உறங்கிக் கொண்டிருந்தாள் பிரியா.

அவளை கண்களில் நிறைத்து கொண்டு, எழுப்பினார் நாயகி. அம்மா ஒரு ஐந்து நிமிடம் நானே என்று எழுந்து கொள்கிறேன் என்று 15 நிமிடம் கழித்து கண் விழித்தாள் பிரியதர்ஷினி.

அவள் எழுந்து ஆறி போன காபியை எடுத்து குடிக்க போக, அவள் தலையில் தட்டி போய் பல்லை விளக்கு வேற போட்டு தரேன் என்று சென்றார் நாயகி.

செளந்க்கு நம்ப மேல ரொம்ப பாசம் தான் வைச்சுருக்கு ஆனால் அதை விட ஹிட்லர் மேல லவ் வைச்சுருக்கு. நானும் கல்யாணத்துக்கு அப்பறம் இவங்களை மாறியே லவ் பண்ணி இந்த செளந்த்க்கே டஃப்பு கொடுக்கணும் என்று இன்ஸ்டாக இந்த நினைவை விடுத்து, காலை கடனை முடிக்க சென்றாள்.

அவள் வருவதற்குள் புதிதாக குழம்பியை கலக்கி எடுத்து வந்தார் நாயகி.
பிரியாவின் முகம் பார்க்காது காபியை கொடுத்து, குடிச்சுட்டு சீக்கரம் குளிச்சிட்டு வா என்றார் .

சாரிம்மா இனி எந்த பிரச்சனையிலும் தலையிட மாட்டேன் நாட்டாமையோட ஆத்தா அந்த பேச்சியம்மா மேல சத்தியம் என்றவளை பொய்யாக முறைத்து.
போதும் டி இத்தனை வருஷமா எத்தனையோ கிழவிங்க மேல பொய் சத்தியம் செஞ்சு அவங்களை மேல போக வைத்தது போது. என் பெரியம்மாவ விட்டிரு டி என்றார் பாவமாக.
இவ்வளவு தூரம் கெஞ்சரனால பேச்சியம்மா மேல செஞ்ச சத்தியத்தை வாபஸ் வாங்கிறேன் என்றாள் பிரியா.

அடிங்க, அம்மாச்சினு மரியாதையா சொல்லுடி - நாயகி
சரிம்மா என்று அவர் கொடுத்த குழம்பியை குடித்து குளிக்க சென்றாள் பிரியா.

நாயகி சமையல் வேலையை முடித்து, அவரும் கோயிலுக்கு கிளம்பி ராஜலிங்கத்தின் வருகைக்காக காத்திருந்தார்.
சரியாக ஆறு மணிக்கு வந்தவர், குளித்து கிளம்பி பிரியாவின் வருகைக்காக காத்திருந்தார்.

வெகு நேரமாக அவர்கள் காத்திருந்தும் அவள் வரவில்லை. ராஜலிங்கம் தான் அழைத்து வருவதாக கூறி செல்ல, முற்றத்தில் நின்று உதிக்கும் ஆதவனை ரசிக்கும் முழுமதியாக அவர் கண்ணில் தெரிந்தாள் பிரியா.
சாதாரண பாவாடை தாவணியில் எவ்வித ஒப்பனையும் இன்றி தங்கமாக ஜொலிக்கும் தன் மகளை காண அவருக்கு இரு கண்கள் பற்றவில்லை.

அவள் அருகே வந்து, அவள் தலை கோதி என்னடா கிளம்பலாமா என்று கேட்க . மாப்பிள்ளை என்ன பண்ணுறாரு அப்பா என்று பதில் கேள்வியில் தடுமாறி தான் போனார் ராஜலிங்கம்.

அப்பா நீங்க நினைக்கிற மாறி, கல்யாணத்தை நிறுத்தனும் என்று எந்த பிளானும் நான் செய்யலை. என்னோட தனிப்பட்ட விருப்பத்தை நீங்க பார்க்கிற மாப்பிள்ளைங்க கிட்ட சொன்னேன். அதை ஏற்க முடியாதவங்க என்னை வேணாம்னு சொல்லுறாங்க இதில் என் தப்பு எதுவும் இல்லையே என்றாள் தவிப்பாக.

நீ என் பொண்ணுடா எப்பவும் தப்பு பண்ண மாட்ட உன் மேலை எனக்கு நம்பிக்கை இருக்கு எதுக்கும் கவலைபடாத. உனக்கு பிடிக்காத எந்த விஷயத்தையும் நானும் உன் அம்மாவும் செய்ய மாட்டோம் டா என்று அவளை அழைத்து கொண்டு கோவிலுக்கு சென்றனர்.

கோவிலின் கருவறைக்கு சென்று மூவரும் வணங்கி விட்டு தரகர் சொன்ன மாப்பிள்ளை வீட்டாருக்காக காத்திருந்தனர்.
இவர்களை போனில் தொடர்பு கொண்டு கல் மண்டபத்தில் அவர்கள் காத்திருப்பதாக கூறினார்கள்.

பெண்ணிடம் தனியாக பேச வேண்டும் என்று மாப்பிள்ளை கேட்க பிரியா ராஜலிங்கத்தை பார்க்க அவர் போயிட்டு வா என்று தலையசைத்து அனுப்பி வைத்தார் .

அதே நேரம் அகரன் அவனுக்கு பார்த்த பெண்ணுடன் தனியாக பேச குளக்கரைக்கு வந்தான்.

இருவரும் தன் துணையாக வருபவர்களிடம் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை இவர்களை வேண்டாம் என்று கூறி கும்பிட்டு ஓடிவிட்டனர்.

இருவரும் மூலக்கடவுளிடம் நடந்ததை பகிர்ந்து கொள்ள வந்த போது முட்டி கொண்டனர். அகரன் பிரியதர்ஷினியை விட்டு கண்களை அகற்றாது அவளையே பார்க்க பொறுக்கி என்று திட்டி சென்றாள் பிரியா.

அவள் பின்னே சென்று ஐ லவ் யூ முயல் குட்டி என்றான் அகரன்.
அவனை கேவலமாக அவள் பார்க்க.
பார்த்ததும் பிடிச்சிருச்சு, இப்பவே பதில் சொல்லனும்னு இல்ல சாயங்காலம் வர யோசி ஆறு மணிக்கு இதே இடத்தில் மீட் பண்ணலாம்.
லூசாடா நீ என்று அவள் பேச வர.
அப்பறம் ஆறு மணிக்கு நீ வரலைனால் 6:05க்கு உன் வீட்டில் நான் இருப்பேன் என்று கூறி சென்றவனை வாயை பிளந்து கொண்டு பார்த்தாள் பிரியா.
சரியான லூசா இருப்பானோ என்று நினைத்து அவ்விடத்தை விட்டு சென்றாள் பிரியா.

ஒளிந்து நின்று அவளை புகைப்படம் எடுத்த அகரன் ராஜேஷ்க்கு அதை அனுப்பு இரண்டு மணி நேரத்திற்குள் அதில் இருப்பவரை பற்றி தகவல் திரட்டி கூறுமாறு பணிந்து அவன் பெற்றோரை காண சென்றான்.
 
#5
எனை சாய்த்தானே(ளே) -4

பிரியாவை கண்ட அகரனுக்கு, பார்ததும் பிடித்துவிட. அவள் கூறிய பொறுக்கி ஆண் மகனிற்கு ஏதோ அவார்ட் கொடுத்த உணர்வை கொடுக்க . அதன் விளைவே தன் காதலை அவளிடம் கூற வைத்தது. பின்
அவன் பெற்றோர்களிடம் சென்றவன் இரண்டு மணி நேரம் இங்கேயே இருங்கள் வந்து ஒரு முக்கியமான விஷயம் கூறுகிறேன் என்று ஸ்டேஷன் வந்து விட்டான்.

அகரன் கூறியது போல் பிரியாவை பற்றிய தகவலை சேகரித்த ராஜேஷ், அகரனுக்கு போன் செய்து கூறிவிட்டு, அவளை பற்றி கேட்க.
காலை கோவிலில் அவளை சந்தித்தது பின் அவளிடம் ஐ லவ் யூ கூறியது என்று அனைத்தும் கூற.

டேய் இதெல்லாம் ரொம்ப ஓவர் டா, நான் கூட ஏதோ முக்கியமான கேஸ்னு நினைச்சு டிபன் கூட சாப்பிடலை ஏன்டா இப்படி பண்ண என்று ராஜேஷ் கேட்டதற்கு
முன்னாடியே சொல்லி இருந்தால் கரெக்ட் டைம்க்கு டிடைல்ஸ் கிடைத்திருக்காது மச்சி அதான் சொல்லவில்லை எங்க இருக்க .
அம்மா அப்பா இருக்க கோயிலுக்கு பக்கத்தில் தான் சரி மச்சி என்று சில கட்டளைகளை பிறப்பித்து வீட்டில் விட சொன்னான்.
சரிடா என்று இணைப்பை துண்டித்து அவன் கூறியதை செய்ய ஆரம்பித்தான் ராஜேஷ்.
அதன் பிறகு, பொறுப்பான ஏ.சி.பியாக தன் கடமையை கவனிக்க ஆரம்பித்தான் அகரன்.

அகரன் சென்ற பிறகு, ராஜலிங்கத்திடம் பிரியா வர. அவள் கூறும் முன்பே இந்த பையன் வேணாம் டி உனக்கு என்று அவர்கள் பார்க்க வந்த மாப்பிள்ளையை பற்றி கூறினார் நாயகி.
என்ன செளந், எப்பவும் நான் தான் இப்படி சொல்லுவேன் இன்னிக்கு என்ன புதுசா நீ சொல்லுற என்று கேளியாய் ஆரம்பித்து கேள்வியாக முடித்தாள் பிரியா.

அந்த பையனோட ஆத்திகாரிக்கு எம்புட்டு வாயி, என் புள்ளை அப்படி இப்படி என்று சொன்னது மட்டுமில்லாமல் அது வேணும் இது வேணும் என எல்லாத்தையும் கேக்குது.
எங்களுக்கு என இருக்கிறது நீ ஒருத்தி தான் உனக்கு செய்யாமல் யாருக்கு செய்ய போறோம். உனக்காக தான் கல்யாணம் நடக்கணுமே தவிற நீ கொண்டு போற பொருளுக்காக இருக்க கூடாது என்று அவர் மனதில் பட்டதை கூறினார் நாயகி.
சூப்பர் செளந்.

அப்பா நம்ம மணிமேகலைக்கு குழந்தை பிறந்திருக்காம் ஒரெட்டு போய் பார்த்துட்டு, மத்தியான சாப்பாட்டிற்கு வந்திடுறேன் என்று தன்னுடன் பயின்ற தோழியின் மகவை காண சென்றாள் பிரியா.

தங்கள் மகளுக்கு சீக்கரம் நல்ல வரன் கிடைக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டி கொண்டு தங்கள் வீட்டிற்கு சென்றனர்.

தன் தோழியின் மகனை அள்ளி கொஞ்சி வீடு திரும்பியவளின் எண்ணம் முழுவதும் காலையில் சந்தித்த அகரன் மட்டுமே ஆட்கொண்டிருந்தான்.

அவன் சொன்னது போல் வந்து விட்டால் என்ன செய்வது என்றும், அது எப்படி வருவான் அவனுக்கு தான் தனது முகவரி தெரியாதே என்று ஒரு புறமும், வந்துவிட்டால் என்ன செய்வது என்று இன்னொரு புறமும் யோசித்து கடைசியில் தலைவலி வந்தது மட்டுமே மிச்சம்.

பெரும்பாடு பட்டு அவன்பால் சென்ற மனதை பிடித்து இழுத்து வைத்தால் பிரியா.
இப்படியே சென்றாள் பைத்தியம் தான் பிடிக்கும் என்று உறக்கத்தை நாடினாள். சிறிது நேரம் போக்கு காட்டி உறங்கியும் விட்டாள்.

நாயகியிடம் வந்த ராஜலிங்கம் எல்லாம் சரியாக தானே நடக்கும் என்று மீண்டும் தன் சந்தேகத்தை கேட்க அவரது முறைப்பில் நான் தோட்டத்திற்கு போயிட்டு வந்து விடுறேன் என்று சென்று விட்டார்.

உறங்கி கொண்டிருந்தவள் விழித்து கடிகாரத்தை காண மணி 6 : 15 என்றிருந்தது . சொன்னது போல் வருவானா மாட்டானா என்று எழுந்திரிக்க முயல அது எல்லாம் தோல்வியிலேயே முடிந்தது.

கண்னை கசக்கி பார்க்க அவள் முகத்தின் அருகே அவளை அணைத்தப்படி படுத்திருந்தான் அகரன் . ஒரு நிமிடம் தூக்கி வாரி போட்டது பிரியாவிற்கு, ஒரு வேலை கனவு என்று நினைத்து அவளை கிள்ளி அவளுக்கு வலித்தது.

இது கனவில்லை நிஜம் என்று பிறகு தான் அவள் மூளைக்கு உரைத்தது. அம்மா என்று அலற யாரும் வரவில்லை, அவள் தவிப்பை கண்னை மூடி ரசித்தவன். அடியேய் இப்ப எதுக்கு இந்த கத்து கத்துற. வெளிய இருக்கவங்க நான் உன்னை என்னமோ பண்ணிட்டேன்னு நினைக்க மாட்டாங்க என்றவன் வாயில் ஒரு அடி வைத்து .

டேய் பொறுக்கி என்னை விடுடா என்று அவள் திமிற, அவனது நிலைமை தான் படும் மோசமாக இருந்தது. தன்னுணர்வு தன் கட்டுப்பாட்டை மீறுவதை உணர்ந்த அகரம் வேகமாக எழுந்து வெளியேறி விட்டான். என்னை பார்த்து பயந்துட்டான் பொடி பையன் என்று கூறியவள்.மீண்டும் அம்மா என்று அவள் கத்தும் முன் அவள் அறைக்கு வந்தார் நாயகி.

செளந் இப்ப ஒருத்தன் என் ரூம்குள்ள இருந்து போனானே அவனை பார்த்தியா என்றவளை மேலும் கீழும் பார்த்து. என்னடி கனவு கினவு கண்டியா இப்படி பினாத்திட்டு இருக்க என்றார் நாயகி.
ஒரு வேலை அம்மா சொன்னது போல் நம்ம கனவு தான் கண்டிருப்பமோ என்று யோசித்தவளிம். ஒரு கிளி பச்சை நிற பட்டு சேலையை கொடுத்து, சீக்கரம் இத கட்டிக்கிட்டு இந்த நகையெல்லாம் போட்டுட்டு வா என்று அவள் அடுத்து கேள்வி கேட்கும் முன் வெளியேறிய பின் தான் மூச்சே விட்டார்.

என்னாச்சு இந்த செளந்க்கு, என்று யோசித்தவாறு அவர் கொடுத்த சேலையை கட்டி நகை பூட்டி பதுமையாக வெளியே வந்தாள். வெளியே சலசலப்பாக இருக்க, அவள் எட்டி பார்த்த போது ஒரு குடும்பம், அம்மா அப்பா மற்றும் அவர்களது மகன் மேலும் அவர்களை சுற்றி அவர்களது ஊரே அமர்ந்திருத்தது.

என்ன நடக்கிறது எனக்கு தெரியாம எதாவது கல்யாணத்த பேசி முடிச்சுட்டாங்களா என்று கோபமாக தன் அன்னையிடம் செல்ல அவரோ பக்கத்து வீட்டு மதனியிடம் பேசியவாரே தேநீர் கலந்து கொண்டிருந்தார். அவரிடம் பேச போகும் நேரம் ஹாலில் இருந்து பொண்ண கூட்டிட்டு வா நாயகி என்று சிம்ம குரலில் அழைத்தார் ராஜலிங்கம்.

வேற வழி இல்லாது தன் அன்னையிடம் எல்லாரும் போகட்டும் அப்பறம் இருக்கு உனக்கு என்று பல்லை கடித்து கூறி, அவர் கொடுத்த தேநீர் தட்டுடன் வெளியே வந்தாள் பிரியா.
மாப்பிள்ளையின் அன்னைக்கும் தந்தைக்கும் பிரியாவை பிடித்து விட்டது.

ஒருவர் ஒருவருக்காக தேநீரை கொடுத்து கடைசியாக மாப்பிள்ளைடம் வந்தவள், டேய் தேவாங்கு இங்க பாரு இதை குடிச்சுட்டு அப்படியே ஓடி போற , எடாகூடமா எதாவது செஞ்சனா கொன்றுவேன் என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறி சென்றாள்.

அவள் சென்றதும் அருகில் இருக்கும் அம்மாவிடம் , ஏம்மா என்னை பார்த்தா தேவாங்கு மாறியா இருக்கு என்று பாவமாய் கேட்டான்.
இல்லைடா கண்ணா என்னாச்சு என்று அவர் கேட்க .
ஒன்னும் இல்லைம்மா என்று திரும்பிவிட்டான்.

சபையில் பெரியவர் ஒருத்தர், அப்பறம் இதாங்க எங்க பொண்ணு நல்லா பாத்தீங்களா? பிடிச்சிருக்கா என்று அவர் கேட்க.
ரொம்ப பிடிச்சிருக்கு என்றனர் மூவரும்.
அவனை கொலை வெறியாக பார்த்தாள் பிரியா.

அவர்கள் அடுத்து பேசும் முன் அப்பா மாப்பிள்ளைகிட்ட தனியா பேசணும் என்று அவனை பார்த்து கூற.
பயத்தில் நான் மாப்பிள்ளை இல்லைங்க, நான் மாப்பிள்ளை பிரண்ட் , என் பேரு ராஜேஷ் என்று உளற ஆரம்பித்து விட்டான்.
அவன் செய்கையில் அங்கிருந்தவர்கள் சிரிக்கவும் சரியாக அவன் போன் பேசி முடித்து உள்ளே வந்தான். மாப்பிள்ளையே வந்து விட்டார் என்று கூட்டத்தில் ஒரு பெரியவர் கூற ராஜ நடையில், நீல நிற சட்டை, அதற்கு ஏற்றார் போல் நீல கரையிட்ட வேஷ்டி . முறுக்கேறிய கையில் வெள்ளி காப்பு, கழுத்தை ஒட்டினார் போல் தங்க சங்கிலி, நெற்றியில் சிறு கீற்றாக திருநீர் என்று கிராமத்து ஆண் மகனையே தோற்கடிக்கும் கம்பீரத்துடன் நடந்து வந்தான் அகரன்.

அவனையே மெய் மறந்து பார்த்து கொண்டிருந்தாள் பிரியா . உள்ளே வந்தவன் ராஜலிங்கத்திடம் மாமா நான் உங்க பொண்ணு கூட தனியா பேசனும் என்று உரிமையாக கேட்கவும் பிரியாவிற்கு மயக்கம் வராத குறை தான்.